Blog

  • காதல் நாற்பது (10) காதல் உணர்வு உன்னதமானது

     

    image

    காதல் நாற்பது (10)

    காதல் உணர்வு உன்னதமானது

    மூலம்: எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    எனினும் காதல், காதல்
    உணர்வு மட்டும்
    எழிலானது மெய்யாக !
    ஏற்றுக் கொள்ளத் தகுதி பெறுவது !
    எரியும் கனல் வெளிச்ச மானது !
    ஆலயம் எரியட்டும் ! நாராய்ப் பிரியட்டும் !

    ஆலமரக் கட்டையோ,
    காய்ந்த இலைகளோ
    கனலில் பற்றின்
    ஒப்பான ஒளியாகி விடும் !
    அதுபோல் காதலும் தீக்கனலே !

    நேசிப்பது உன்னைத் தான்,
    ஆசைப்பட்டு நான் கூறும் போது
    குறித்துக் கொள்,
    நேசிப்பது உன்னைத் தான்,
    உன் கண்ணொளி பட்டால்
    உன்னதம் பொங்கி மாறிடும்
    என் மேனியில் !

    என் முகத்தி லிருந்து
    ஒளிக் கதிர்கள் பூத்து
    உன்னை நோக்கிப் பாயும் !
    பணிவுடன் புரியும் காதலில்
    தாழ்ச்சி, இகழ்ச்சி என்றில்லை !
    ஏழ்மை நிலையினர்
    இறைவனை நாடி நேசித்தால்
    ஏற்றுக் கொள்வார்!

    அசட்டுத் தோற்றங்களில்
    நான் நானே என்னும் உணர்வு
    தானாய் வெளிப்படும் !
    காதலின் உன்னதக் கைத்திறம்
    காட்டி விடும்,
    இயற்கையின் மகத்துவம்
    எத்தகைய தென !

    ********************

    Poem -10

    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing

    Yet, love, mere love, is beautiful indeed
    And worthy of acceptation. Fire is bright,
    Let temple burn, or flax; an equal light
    Leaps in the flame from cedar-plank or weed:
    And love is fire. And when I say at need
    I love thee . . . mark! . . . I love thee–in thy sight
    I stand transfigured, glorified aright,
    With conscience of the new rays that proceed
    Out of my face toward thine. There’s nothing low
    In love, when love the lowest: meanest creatures
    Who love God, God accepts while loving so.
    And what I led, across the inferior features
    Of what I am, doth flash itself, and show
    How that great work of Love enhances Nature’s.

    **********

    Share
  • An Invitation from Jus Drums

     

    Hello,

    Pleased to invite you for the 12th annual concert of Jus Drums on the 6th of July at 6.15 p.m. at Vani Mahal, T. Nagar. Please join us in the celebrations and cheer the young performers.

    Regards,
    Murali

    drums

    Share
  • வேண்டுதல் வெண்பாக்கள்

    கிரேசி மோகன்

    IMG_8997

    கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவினரின் ‘’சாக்லேட் கிருஷ்ணா’’, அரங்கேறி ஐந்தாறு ஆண்டுகளுக்குள் 700 ஷோக்கள் தொட்டு விட்டது….பல வெளியூர்கள் சென்றோம், இந்தியா முழுவதிலும்….அமெரிக்காவில் 500 வது நாடகத்தை ‘’ஹ்யூஸ்டனில்’’ கொண்டாடினோம்….இது தவிர சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மற்றும் வெளிநாடெங்கும் கோபால் பல்பொடி விளம்பரம் போல சுற்றி வந்தோம்….இந்த பிரும்மாண்டமான வெற்றிக்கு காரணம் என்ன….!அடியேன் வசனமா இல்லை….குழுவினரின் நடிப்பா இல்லை….பின்ன….வெண்பா அதுவும் வேண்டுதல் வெண்பாக்கள்….உள்ளூர் நீங்கலாக வெளியூரில் நாடகம் போடும்போது, அந்தக் கண்ணனை வெண்பா வாயிலாக வேண்டிக் கொள்வேன்…ஸோ….இது கண்ணனின் சாதனை….தட்டச்சு செய்த வரையில் ‘’சாக்லேட் கிருஷ்ணாவுக்காக’’ எழுதிய வெண்பாக்களை பகிர்ந்து கொள்கிறேன்….

    Chocalate-Krishna-6-300x300

    ———————————
    சாக்லேட் – கிருஷ்ணா
    —————————–download
    வெண்ணை தயிர்பால் மண்ணை கோபியர்தம்
    கண்ணை உண்ட கிருஷ்ணா -உன்னையென்
    வாக்கிலெட்ட வைத்திடுவாய் வையம்காண் நாடகமாய்
    சாக்லேட் கிருஷ்ணா தலைப்பு….(1)….03-02-2008

    சாக்லேட் கிருஷ்ணா பூஜை அழைப்பு
    ———————————————
    கற்பகாம்பாள் சன்னிதியில்
    ———————————-
    மகோதரன் வேலவன் மாதாவின் சன்னிதியில்
    சகோதரன் சாக்லேட் கிருஷ்ணாவின் -முகாந்திர
    பூசை நடக்குது நாளைமணி ஆறதற்க்கு
    ஆசையுடன் எந்தன் அழைப்பு….(2)….26-4-2008

    பதிலுக்கு சு.ரவி எழுதியது
    ———————————–
    தகவலே போதும் அழைப்பெதற்கு, தட்டா(து)
    அகமகிழ்ந்து நான்வருவேன் தானாய்-முகில்வண்ணன்
    சாக்லேட் கிருஷ்ணா வெற்றி நடைபோட
    வாக்தேவி தந்தாள் வரம்….(3)….26-4-2008
    ———————————————————————————-
    சாக்லேட் – கிருஷ்ணா வெற்றி பெற வேண்டுதல்….
    —————————————————————-
    அரங்கேறி ஆதி அனந்தனின் மீது
    உறங்கா(து) உறங்கிடும் மாலே-அரங்கேறும்
    சாக்லேட் கிருஷ்ணாவை சக்சஸ்ஃபுல் ஆக்கயென்
    வாக்கெட்ட வாராய் விரைந்து….(4)….23-5-2008

    பதிலுக்கு சு.ரவி எழுதியது
    ———————————
    நாடகம் நன்றாய் அரங்கேற, ஊரெல்லாம்
    கூடி மகிழ்ந்து குதுகலிக்க -ஊடகங்கள்
    பாராட்ட சாக்லேட் கிருஷ்ணா பவனிவர
    தார்சூடி வெல்க தழைத்து….(5)….23-5-2008

    சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா
    ——————————————-

    ஞாலத்தை உண்டுமிழ்ந்த காலத்தில் ஆலிலையில்
    பாலொத்தப் பாதம் பருகியவா -சேலத்தில்
    சாக்லேட் கிருஷ்ணாவை மாம்பழத்துக்(கு) ஈடாக
    டாக்-ஃஆப் தி-டவுன் ஆக்கு….(6)….20-7-2008
    கேசவ் சாக்லேட் கிருஷ்ணா ஓவியம் பார்த்து
    ——————————————————-
    இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
    மடிப்பால் நிலத்தில் மணக்க -கடைக்காலை
    கன்றென எண்ணிக் கறவை வருடிட
    நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….(7)….12-9-2008
    ——————————————————

    கேசவ் ஓவியத்துக்கு சு.ரவி எழுதிய கவிதை படித்து எழுதியது
    ————————————————————————

    வாக்கிலெட்டா கண்ணனை வண்ணக் குளிப்பாட்டி
    சாக்கலேட் ஆக்கினான் கேசவன் -பாக்குளிட்டு
    பாலா பிஷேகப் பரவசத்தை சொன்னயிது
    நாலா யிரத்திலொன் று….(8)….9-9-2008

    பாரதி விழாவுக்காக சாக்லேட் கிருஷ்ணா
    போடுவதாக இருந்தது….வானவில் பண்பாட்டு மையத்திற்காக…
    பாரதி வீடு சற்றே சரிந்ததால் போடமுடியவில்லை….வக்கீல் க.ரவிக்கு எழுதியது
    ————————————————————————————————
    கண்ணனென் சேவகன் கண்ணனென் காவலன்
    கண்ணனென் மந்திரி நண்பனென -சொன்னவன்
    கண்ணனென் சாக்லேட் கிருஷ்ணாவாய் ஆக்கினான்
    புண்ணிய மாச்சென் பிறப்பு….(9)….29-9-2008

    க.ரவி பதிலுக்கு எழுதிய வெண்பா
    ———————————————
    அற்புதம் வெண்பா அடடா உனக்கிந்த
    சொற்பதம் வாய்த்ததென்ன சூட்சமமோ -வெற்புக்(கு)
    குடைபிடித்த வன்பேரில் கூத்து நிகழ்த்தத்
    தடையின்றி பொங்கும் தமிழ்….(10)….30-9-2008

    சாக்லேட் கிருஷ்ணா 100வது நாடகப் பூர்த்தி
    ————————————————————-458697-chocolate-krishna-play
    நூறு முடித்திட தேரை விடுத்தவா
    நூறுநா னுறில் நிலைத்தவா -நூறு
    முறையெங்கள் சாக்லேட் கிருஷ்ணா படைத்த
    இறையின்று போலென்றும் இரு….(11)….30-11-2008
    வேலூரில் சாக்லேட் கிருஷ்ணா….
    ——————————————
    கோலோடு, ஊது குழலோடு, கோகுலத்தார்
    தோளோடு தோள்சேர்த்த தோழனே -வேலூரில்
    நாடகம் சாக்லே கிருஷ்ணா நலம்காண
    ஊடகமாய்க் கண்ணா உத்வு….(12)….04-01-2009

    ஈரோடில் சாக்லேட் கிருஷ்ணா
    —————————————–
    நூறோட பாரதத் தேரோட வைத்தவனே
    நூறோடு நாற்பதாம் நாடகமாம் -ஈரோடில்
    சீராட வைத்திடு சாக்லேட் கிருஷ்ணாவை
    நாரோடு பூவாய் நுழைந்து….(13)….24-1-2009

    கோவையில் சாக்லேட் கிருஷ்ணா
    ———————————————

    கோவையில் சாக்லேட் கிருஷ்ணா நாடகச்
    சேவையை செவ்வனே செய்திட -ஆவையும்
    ஆய்க்குலப் பாவையும் மேய்த்தவா மாயனே
    வாய்க்குளே வாக்காக வா….(14)….1-2-2009

    திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா
    ——————————————–
    ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
    கருத்தநிறக் கண்ணா கோட்டை – திருச்சியில்
    மாது பிளஸ்டூவில் சாக்லேட் கிருஷ்ணாவில்
    தாதவிழ் பூவாய் மலர்….(15)….06-02-2009

     
    மெச்சிட பக்தர்கள் மேதினியில் மாலவனை
    குச்சுக் குடித்தனம் கொள்ளவைத்தோய் -உச்சி
    மலைக்கோட்டை பிள்ளாய் மனமுவப்பீர் நாடகக்
    கலைக்கோட்டை காபந்துன் கால்….(16)….07-02-2009

    சாக்லேட் கிருஷ்ணா 150தாவது நாடகம்
    —————————————————–

    சாக்லேட் கிருஷ்ணா’’ 150தாவது ஷோவின் போது ஓவியர் கேசவ்வை அழைத்தேன்….இன்ப அதிர்ச்சியாக இணைத்த கண்ணன் ஓவியத்தை மேடையில் ‘’கமல், நித்யாஸ்ரீ’’ முன்னிலையில் எனக்கு பரிசளித்தார்….மனுஷன் இதற்காக ராவோடு ராவாக பெயிண்ட் பண்ணி இருக்கிறார்….வாத்சல்யத்தில் கேசவ் கண்ணனை விஞ்சி விட்டார்….கேசவ் ‘’சாக்லேட் கிருஷ்ணா’’ வந்த வேளை 150 இப்போது 700 ஆகப் போகிறது

    நூறோடு அம்பதாம் நாடகம் நாளைக்குchocolate
    தேரிடர்ந்த கண்ணன் திருவருளால் -சீரோடு
    சேர்த்து சிறப்பாக்க சாக்லேட் கிருஷ்ணாவை
    பார்த்தனின் சாரதி பார்….(17)….21-2-2009
    கேசவ் ஓவியத்திற்கு நன்றி
    ———————————-
    விழிகள் சொருகிட வேய்ங்குழல் ஊதி
    பொழிகின்ற ஆகாசப் பாலை -எழிலுடன்
    கேசவன் உண்கின்ற கோலம் வரைந்தநீர்
    ஆசுகவி ஓவியன் கேசவ்….(18)….23-2-2009

    கோவையில் சாக்லேட் கிருஷ்ணா
    ——————————————

    பாவைநப் பின்னைக்காய் தாவும் எருதாண்டோய்
    பாவைநப் பின்னைக்காய் ஆவை அடக்கியவா
    தேவை எமக்குன் துணைகண்ணா -கோவை
    நகரிலின்றும் நாளையும் சாக்லேட் கிருஷ்ணாவை
    நிகரிலாத வண்ணம் நடத்து….(19)….11-04-2009

    பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா
    ———————————————–

    அங்குள்ள தூணில் அடங்கிக் குதித்திரண்யன்
    அங்கமதைக் கீண்ட அரியுருவே -பெங்களூரில்
    நாடகம் சாக்லேட் கிருஷ்ணா நடக்கையில்
    மேடையில் காப்பாய் மலர்….(20)….19-04-2009

     

    சாக்லேட் கிருஷ்ணா அப்த பூர்த்தி
    ——————————————

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்சொல்லி
    நாங்கள் நடத்திய நாடகத்தை -பாங்குற
    ஓராண்டு தாண்டியும் ஓயாது ஓட்டுவது
    சீராயர் கண்ணன் சவுக்கு….(21)….23-05-2009

    சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா
    —————————————-

    ஞாலத்தைப் பேரூழி காலத்தில் உண்டுமிழ்ந்து
    ஆலத்தில் தூங்கிய ஆழிவண்ணா -சேலத்தில்
    சங்கடம் இல்லாது சாக்லேட் கிருஷ்ணாவை
    மங்களம் ஆக மலர்த்து….(22)….13-06-2009
    மதுரையில் சாக்லேட் கிருஷ்ணா
    —————————————–
    ராணி லலிதாங்கி ஸ்ரீராஜ மாதங்கி
    மீன்விழியால் சொக்கனை மீறிநிற்கும்-ஆண்மகளே
    கூடலில் எங்கள் குழுவின் பெயர்விளங்க
    நாடகத்தை நன்கு நடத்து….(23)….05-07-2009
    கோயம்புத்தூரில் சாக்லேட் கிருஷ்ணா
    ————————————————-

    கோவை சாரதா அப்பா ”கோபாலன் சார்” எழுதியது….
    ————————————————————————
    காணவே காத்துள்ளேன் கற்பூரச் சொல்லழகா
    நாணேறும் அம்பாஇ நகைச்சுவையை -மாண்புறவே
    செல்ல செலுத்தியெமை சிந்திக்கச் செய்திடும்
    வெல்லப்பா மோஹனமே வெல்….(24)….10-09-2009
    ——————————————————————————images (1)

    தாயன்பில் கட்டுண்ட தாமோ தராநாங்கள்
    கோயம்புத் தூரில் கொடிகட்டி -ஆயனே
    சீரும் சிறப்புகளும் சாக்லேட் கிருஷ்ணாவால்
    நேர நிகழ்வை நடத்து….(25)….12-09-2009

     

    பாண்டிசேரியில் இரு நாடகங்கள்….
    ———————————————-
    கோரியன வாரிக் கொடுக்கும் புதுச்சேரி
    ஊரிலிரு நாடகத்தை ஓகோவாய் -தேரிருந்து
    பாரதம் செய்த பரந்தாமா நீவந்து
    நேரில் இருந்து நடத்து….(26)….03-10-2009

    கோரியன வாரிக் கொடுக்கும் புதுச்சேரி
    ஊரிலிரு நாடகத்தை ஓகோவாய் -தேரிருந்து
    பாரதம் செய்தமன பாரம் குறைந்திட
    சேரில்(CHAIR) அமர்ந்து சிரி….(27)….03-10-2009

    பெங்களூரில் இரு நாடகங்கள்….
    ———————————————-
    மங்களமாய் மார்கழித் திங்களென்ற ஆண்டாளின்
    கண்களுறை காதல் கருமுகிலே -பெங்களூரில்
    எங்களிரு நாடகங்கள் ஏற்றமுற, வந்தமர்ந்து
    பங்குபெற வேண்டுமதைப் பார்த்து….(28)….22-10-2009

     

    பெங்களூரில் குஷா மகள் ஜானும், சு.ரவி மகள் பாரதியும்
    விருந்தோம்பல் செய்ததற்கு நன்றி வெண்பா….
    ———————————————————————–balaji-and-crazy
    சோறும் ரசமும் சுவையான காய்களும்
    மோரும் மணக்கும்மா காளியும் -ஜோராக
    வாரிதி மேகமாய் வற்றாது தந்தது
    பாரதி ஜானின் பரிவு….(29)….25-10-2009

     

    கோவையில் நாடகங்கள்….
    —————————————
    ஏழை குசேலன் இதயம் சிரித்திட
    தோழமைக்குத் தோள்கொடுத்த தெய்வமே -ஆழிவண்ணா
    கோவையில் நாடகங்கள் கோலா கலமாக
    நாவில் நகைச்சுவையாய் நில்….(30)….06-11-2009

     

    காரைக்குடியில் சாக்லேட் கிருஷ்ணா
    ———————————————-

    தேரை நடத்தி தனஞ்சயனைத் தேற்றியன்று
    நூறை முடித்த நவநீதா -காரைக்
    குடியிலெங்கள் சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பு
    வெடிவிருந்தை வந்து வழங்கு….(31)….13-11-2009
    ஹைதராபாத்தில் சாக்லேட் கிருஷ்ணா….
    ———————————————————-
    வைதசிசு பாலனுயிர் கொய்திட சக்கரத்தை
    எய்தனை நூறிகழ்ச்சி ஏற்றன்று -ஹைதரா
    பாத்திலெங்கள் சாக்லேட் கிருஷ்ணா நகைச்சுவையில்
    நூத்திலொன்(று) ஆக நடத்து….(32)….04-12-2009

     

    திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா
    ———————————————

    தோப்புக் கரணமிட்டு , தந்தி சிரித்திட
    சாப்பிட்ட சக்கரத்தை துப்பவைத்தோய்-காப்பாய்
    திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணாவால் மக்கள்
    சிரிச்சு மகிந்திடச் செய்….(33)….20-11-2009

     

    மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா
    ——————————————-

    மாரதரும் மன்னவரும் நூறிடரும் பட்டழிய
    வேரதிர தேரோட்டி வென்றவனே -பாரதத்தில்
    ஷேக்லொட்ட பேகம் சிலிர்த்தல்போல் மஸ்கட்டை
    சாக்லேட் கிருஷ்ணாவால் செய்….(34)….09-02-2010

    வைத்தநெய் பாலை வடிதயிரை வெண்ணையை
    பொய்த்த இடையாள்நப் பின்னையை-துய்த்தவா
    ஷேக்கூர் மஸ்கெட்டை சாக்லேட் கிருஷ்ணாவால்
    ஷோக்காய் சிரித்திடச் செய்….(35)….09-02-2010

    செந்திரு ,சங்கு, சுடராழி, சாரங்கம்
    நந்தகி, வைஜெயந்தி நாற்புறமும் -வந்திருக்க
    மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா மதிப்புயர
    யெஸ்கொட்டு கண்ணா எமக்கு….(36)….09-02-2010

    வலத்துறைய ஆழி ,இடத்துறைய சங்கு
    தலத்திரு நூற்றெட்டு தங்கி -நிலத்திடை
    உஸ்கொட்டும் பாம்பில் உறங்கும் பெருமாளே
    மஸ்கெட்டில் வந்து மலர்….(37)….09-02-2010

     

    தஞ்சையில் சாஸ்த்ரா கல்லூரியில் சாக்லேட் கிருஷ்ணா….
    ————————————————————————–
    வெஞ்சிறை தோன்றி விடிவதற்குள் ஆய்ப்பாடி
    தஞ்சம் புகுந்த திருமாலே -தஞ்சையில்
    சாஸ்திரா காலேஜை சாக்லேட் கிருஷ்ணாவால்
    ஹாஸ்யத்ரா காலேஜாய் ஹாக்கு….(38)….05-03-2010

     

    விக்குருதி ஆண்டு வேண்டுதல்….
    —————————————-
    திக்கிறுதி கண்டதிரு விக்கிரம வாமனனே
    அக்குறத்தி நாயகன் மாமனே -விக்குருதி
    புத்தாண்டில் நாங்கள் புதுநா டகம்போட
    மத்தாண்ட விட்டலா மேய்….(39)….13-04-2010

     

    சேலத்தில் சாக்லேட் கிருஷ்ணா….
    ———————————————
    வேலொத்த கண்மாதர் சேலை பறித்தாண்கள்
    பாலுற்ற பாஞ்சாலி மேலளித்தோய் -சேலத்தில்
    சாக்லேட் கிருஷ்ணா சிறப்பாய் நடத்தஅங்கு
    கோகுலக் குட்டனே GO….(40)….08-05-2010

     

    பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா….
    ————————————————-
    செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
    பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
    சிங்கமே எங்களின் சாக்லேட் கிருஷ்ணாவை
    பெங்களூரில் வந்தமர்ந்து பார்….(41)….15-05-2010

    செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
    பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
    சிங்கமே பெங்களூரில் எங்களிரு நாடகத்தால்
    அங்குளோரை ஆனந்தம் ஆக்கு….(42)….15-05-2010
    கிரேசி கிரியேஷன்ஸ் 31வது ஆண்டில் நுழைந்தபோது
    ——————————————————————

    கண்ணன் அருளால் கிரேசி கிரியேஷன்ஸ்
    முன்னம்கால் வைக்குது முப்பத்தி -ஒண்ணிலே
    இன்னுமோர் நூற்றாண்டு இக்குழு கண்டிட
    எண்ணுவோர்க்(கு) என்நன்றி இன்று….(43)….6-9-2010

    எழுபத்தி ஒன்பதில் ஒன்றாய் இணைந்து
    முழுபக்தி கொண்டு முனைந்து -உழவொத்து
    முப்பத்தி ஓராண்டு முப்போகம் கண்டது
    ஒப்பற்ற நட்பின் உயர்வு….(44)….7-9-2010
    மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா
    ——————————————-

    மாரதரும் மன்னவரும் நூறிடரும் பட்டழிய
    வேரதிர தேரோட்டி வென்றவனே -பாரதத்தில்
    ஷேக்லொட்ட பேகம் சிலிர்த்தல்போல் மஸ்கட்டை
    சாக்லேட் கிருஷ்ணாவால் செய்….(45)….09-02-2010

    வைத்தநெய் பாலை வடிதயிரை வெண்ணையை
    பொய்த்த இடையாள்நப் பின்னையை-துய்த்தவா
    ஷேக்கூர் மஸ்கெட்டை சாக்லேட் கிருஷ்ணாவால்
    ஷோக்காய் சிரித்திடச் செய்….(46)….09-02-2010

    செந்திரு ,சங்கு, சுடராழி, சாரங்கம்
    நந்தகி, வைஜெயந்தி நாற்புறமும் -வந்திருக்க
    மஸ்கெட்டில் சாக்லேட் கிருஷ்ணா மதிப்புயர
    யெஸ்கொட்டு கண்ணா எமக்கு….(47)….09-02-2010

    வலத்துறைய ஆழி ,இடத்துறைய சங்கு
    தலத்திரு நூற்றெட்டு தங்கி -நிலத்திடை
    உஸ்கொட்டும் பாம்பில் உறங்கும் பெருமாளே
    மஸ்கெட்டில் வந்து மலர்….(48)….09-02-2010

     

    விக்குருதி ஆண்டு வேண்டுதல்....
    —————————————-
    திக்கிறுதி கண்டதிரு விக்கிரம வாமனனே
    அக்குறத்தி நாயகன் மாமனே -விக்குருதி
    புத்தாண்டில் நாங்கள் புதுநா டகம்போட
    மத்தாண்ட விட்டலா மேய்….(49)….13-04-2010

     

    பெங்களூரில் சாக்லேட் கிருஷ்ணா....
    ————————————————-
    செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
    பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
    சிங்கமே எங்களின் சாக்லேட் கிருஷ்ணாவை
    பெங்களூரில் வந்தமர்ந்து பார்….(50)….15-05-2010

    செங்கமலத் தாயாருன் சேவடி சாதிக்க
    பொங்கலை பாற்கடல் பள்ளிகொண்ட -செங்கண்மால்
    சிங்கமே பெங்களூரில் எங்களிரு நாடகத்தால்
    அங்குளோரை ஆனந்தம் ஆக்கு….(51)….15-05-2010

     

    ஹைதராபாத்தில் நாடகம்….
    ————————————
    பெய்தவாளி ஏற்றன்று பார்த்தனின் சாரதியாய்
    ஐதரப்பு வெல்லமகா பாரதத்தை -நெய்தவா
    ஹைதரா பாத்தையே ஆனந்த பாத்திலாழ்த்த
    செய்திட வேண்டுமெங்கள் ஜோக்கு….(52)….30-09-2010

    வைதசிசு பாலன் வசைநூறு தாண்டிட
    கைதவழ் சக்கரத்தால் கொன்றவா -ஹைதரா
    பாத்திலெங்கள் நாடத்தைப் பார்த்தவர்கள் நெஞ்சிலே
    பூத்திடச் செய்நகைப் பூ….(53)….30-09-2010

    அயோத்தியார் பக்கமென்ற ஹைகோர்டின் தீர்ப்பால்
    வயோதிகம் காணும் வழக்கு….(54)….30-09-2010

    நேந்திரங்காய் கேரளத்தில் நீகுரு வாயூரன்
    பாண்டுரங்கன் பண்டரியில் பக்தர்க்காய் -ஆந்திராவில்
    ஆவென நாடகத்தால் ஆடியென்ஸ் வாய்பிளக்க
    தேவுடு காமெடியாய்த் தோன்று….(55)….30-09-2010
    கிரேசி கிரியேஷன்ஸ் 31வது ஆண்டில் நுழைந்தபோது
    ——————————————————————

    கண்ணன் அருளால் கிரேசி கிரியேஷன்ஸ்
    முன்னம்கால் வைக்குது முப்பத்தி -ஒண்ணிலே
    இன்னுமோர் நூற்றாண்டு இக்குழு கண்டிட
    எண்னூவோர்க்(கு) என்நன்றி இன்று….(56)….6-9-2010

    எழுபத்தி ஒன்பதில் ஒன்றாய் இணைந்து
    முழுபக்தி கொண்டு முனைந்து -உழவொத்து
    முப்பத்தி ஓராண்டு முப்போகம் கண்டது
    ஒப்பற்ற நட்பின் உயர்வு….(57)….7-9-2010

     

    ஹைதராபாத்தில் நாடகங்கள்….
    —————————————-

    நேந்திரங்காய் கேரளத்தில் நீகுரு வாயூரன்
    பாண்டுரங்கன் பண்டரியில் பக்தர்க்காய் -ஆந்திராவில்
    ஆவென நாடகத்தால் ஆடியென்ஸ் வாய்பிளக்க
    தேவுடு காமெடியாய்த் தோன்று….(58)….30-09-2010
    கோவையில் சாக்லேட் கிருஷ்ணா….
    ———————————————
    அய்யனே, ஆயர்தம் பையனே, ஆழிசங்குக்
    கையனே, அந்தரான்மா காண்போர்க்கு -மெய்யனே
    கோவையில் சாக்லேட் கிருஷ்ணா ஜெயித்திட
    தேவையுன் பக்கத் துணை….(59)….25-12-2010

     

    கோயம்புத்தூரில் நாடகம்
    ———————————-
    தாயன்புக்(கு) உட்பட்ட தாமோ தரனேநீ
    காயம்பத்(து) ஏற்றோய் கலிதீர்க்க -கோயம்பத்
    தூரிலெங்கள் நாடகத் தூறல் மழையாக
    நேரில்வா நீர்வண்ண னே….(60)….07-01-2011

     

    கும்பகோணத்தில் சாக்லேட் கிருஷ்ணா
    ————————————————-
    குடம்குடமாய்ப் பால்வெண்ணெய் கோகுலத்தில் உண்டு
    அடர்ந்தானாய் ஆரா அமுதாய் -கிடந்தாய்
    குடந்தையில் சாக்லேட் கிருஷ்ணா சிரிப்பாய்
    நடந்திட வேண்டும் நகைத்து….(61)….16-01-2011
    டெல்லியில் சேஷாத்திரி சபா ”நாடக ரத்னா”
    விருது தந்த போது….
    ———————————————————-

    தலைநகரில் நாளை தருகிறார்கள் பட்டம்
    கலைநா டகரத்னா கண்ணா -அலைநகரும்
    பாற்கடல் தன்னில் படுத்த பெருமாளே
    நேர்கடன் பட்டேன் நினக்கு….(62)….04-03-2011

     

    (ALTERNATIVE வெண்பா)
    ————————————
    தலைநகரில் நாளை தருகிறார்கள் பட்டம்
    கலைநா டகரத்னா கண்ணா -மலைநகர்த்தி
    சுண்டு விரலில் சுமந்த கடவுளுனை
    விண்டு வழுத்தல் விருது….(63)….04-03-2011

     

    டெல்லி குளிரில் நடுங்கிய போது
    ———————————————
    நாடக ரத்தினாவை நான்பெற டெல்லியில்
    வேடமிட்டேன் கம்பளி ஆடையில் -பாடாய்
    குளிரெனைக் கொல்லுது குன்றேந்தி கண்ணா
    தளிர்விரலால் முன்போல் தாங்கு…(64)….05-03-2011

     

    இரா.முருகன் பதில் வெண்பா
    ————————————-
    தெம்பாய் கரம் கஜர்கா ஹல்வாவும்
    சொம்பில் ருசியான காப்பியும் -நம்பியே
    துளிராக வெற்றிலையும் நாமணக்க மென்றால்
    குளிர்போகக் கொள்வீர் விருது….(65)….05-03-2011

     

    கோவையில் மீசை ஆனாலும் மனைவி….
    —————————————————
    சங்கு சுடராழி சாரங்கம் நந்தகி
    அங்கை தனிலேந்தும் அச்சுதா -கொங்கிலே
    மீசையா னாலும் மனைவிக்குக் கைத்தட்டல்
    ஓசை இடவை உரத்து….(66)….26-03-2011

    ஆவினைக் காக்கவன்று கோவர்த் தனக்குன்றை
    பூவினைப் போல்சுமந்த பாலகா -கோவையில்
    மீசையா னாலும் மனைவியை மக்களின்
    ஓசை சிரிப்பால் உயர்த்து….(67)….27-03-2011

     

    கடலூரில் டாக்டர் விஜயராகவனுக்காக ”சாக்லேட் கிருஷ்ணா”….
    ————————————————————————————
    படம்பத்து நூறுகொண்ட பஞ்சணையில் சாய்ந்துபாற்
    கடலூரில் கண்வளரும் கண்ணனே -கடலூரில்
    கூடியோர் சாக்லேட் கிருஷ்ணாவை உச்சியில்
    சூடிடச் செய்வாய் சிரித்து….(68)….30-03-2011

     

    பெங்களூரில் மதில்மேல் மாது & அல்லவுதீன்….
    ————————————————————
    தோலை வெளுக்கத் திருட்டுத் தயிர்வெண்ணை
    பாலுக்(கு) அலைந்த பரம்பொருளே -நாளைகர்
    நாடகாவில் எங்களிரு நாடகங்கள் வெற்றியை
    நாட அருள்செய்வாய் நன்கு….(69)….15-04-2011

     

    பெங்களூரில் ”மாது பிளஸ் டூ & மீசை ஆனாலும் மனைவி”….
    ——————————————————————————–
    பங்குபெற பாண்டவர்க்காய் பாரதம் செய்தவனே
    சங்குகர சுற்றும்கை சக்கரனே -எங்களிரு
    பெங்களூர் நாடகங்கள் பேஷாகப், பண்டரியில்
    செங்கலேறி நின்றோய் சரண்….(70)….20-05-2011

    உன்நடத்தைக் கண்டன்னை உன்னை உரலிலிட
    முன்னிடந்து சென்று மருதொடித்தோய் -கன்னடத்து
    பெங்களூரில் எங்கள் ”பிளஸ்டூக்கும் மீசைக்கும்”
    பொங்கிடச் செய்வாய்கும் பல்….(71)….20-05-2011

    சங்கர நாரண சங்கம சாஸ்தாக்கு
    கொங்கை அமுதளித்த கோபாலா -எங்களின்
    ஹாஸ்யம் சவுடையா ஹால்வரு வோரினட்ட
    காஸ்ய சிரிப்பாயாக் கு….(72)….20-05-2011

    முன்னூர்ந்து தேரில் மகாபா ரதம்செய்து
    முன்நூறை ஐந்துக்காய் மாளவைத்தோய் -முன்னூறு
    ஐம்பதுக்கும் மேல்தாண்டி ஆடியன்ஸை சாக்லேட்டால்
    மெய்மறக்கச் செய்வாய் மகிழ்ந்து….(73)….23-05-2011

     

    திருச்சியில் சாக்லேட் கிருஷ்ணா….
    ————————————————
    உச்சிமலைக் கோட்டை ஒருகொம்பன் உத்தியினால்
    மச்சுமதில் காவிரிசூழ் மாநகர்வாழ் -கொச்சுரங்கா
    சாக்லேட் கிருஷ்ணா சிரிப்புமழை பெய்திடனும்
    ROCKFORTடில் நாளைக்கு ராவு….(74)….22-09-2011

     

    ஈரோடு, கோவையில் நாடகங்கள்….
    ———————————————–
    போராடும் பாண்டவர்க்காய் பாரதம் செய்தன்று
    நூறோட வைத்த நவநீதா -ஈரோடு
    கோவையில் நாடகங்கள் கோலா கலமாக
    தேவையுன் பேரா தரவு….(76)….07-10-2011

     

    வேண்டுதல் தொடரும்….
    ——————————————————————————————————————–

     

    Share
  • புதுச்சேரியில் தமிழ் இணைய மாநாடு- முதல்வர் ந. ரங்கசாமி தொடங்கி வைக்கின்றார், மு.இளங்கோவன், புதுச்சேரி

    புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு

    புதுவை முதல்வர் ந . ரங்கசாமி தொடங்கி வைக்கின்றார்!

    புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் 2014, செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் பேராளர்களாக வருகைதர உள்ளனர். உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு உலகின் பல பாகங்களிலும் அரசுடனும் பல்கலைக்கழகத்துடனும் இணைந்து தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு புதுவை அரசின் ஆதரவுடன் புதுவைப் பல்கலைக்கழகத்தில்  இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் தொடக்க விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்கின்றார். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்சு, சுவிசர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க்கணினி வல்லுநர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் கட்டுரை படிக்கின்றனர். சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள் கணினி, இணையம், கையடக்கக் கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு குறித்து சிறப்புச் சொற்பொழிவுகள் செய்ய உள்ளனர்.

    புதுவை முதலமைச்சர் ந. ரங்கசாமியை அழைக்க வருகை தந்துள்ள மணியம்(சிங்கப்பூர்), மாநாட்டின் உள்நாட்டுக் குழுத்தலைவர் முனைவர் மு.இளங்கோவன், வாசு ரங்கநாதன்(அமெரிக்கா)
    புதுவை முதலமைச்சர் ந. ரங்கசாமியை அழைக்க வருகை தந்துள்ள மணியம்(சிங்கப்பூர்), மாநாட்டின் உள்நாட்டுக் குழுத்தலைவர் முனைவர் மு.இளங்கோவன், வாசு ரங்கநாதன்(அமெரிக்கா)

    தமிழ் இணைய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவில் கணினி வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கம் நடைபெறும். இரண்டாவது பிரிவில் பொது மக்களுக்குப் பயன்படும் மென்பொருள்கள் (சாப்டுவேர்கள்), இணையம், கணினி குறித்த நூல்கள், கல்விநிறுவனங்கள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள்  கலந்துகொள்ளும் கண்காட்சி அரங்கு இடம்பெறும். மூன்றாவது பிரிவில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கணினி, இணையம், கையடக்கக் கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கம் தரும் தன்னார்வத் தொண்டர்கள் நிறைந்த மக்கள் அரங்கம் இருக்கும்.

    தமிழ் இணைய மாநாடு இதுவரை தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் பன்னிரண்டு முறை நடந்துள்ளது. புதுச்சேரியில் இப்பொழுதுதான் முதல்முறையாக நடைபெறுகின்றது. இந்த மாநாட்டை நடத்துவதில் புதுவை அரசு பெரும்பங்கு வகிக்கின்றது. புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்கு முன்வந்துள்ளார். புதுவையைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பலவும் தமிழ், கணினி ஆர்வலர்கள் பலரும் இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்ய உள்ளனர்.

    உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டுப் பொதுமக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன. சிறந்த வலைப்பூ (BLOG) உருவாக்கும் போட்டி, தமிழ்த்தட்டச்சுப் போட்டி, தமிழ் இணையத்திற்குப் பங்களிப்பு செய்தோர்களை ஊக்குவிக்கும் போட்டிகள் நடைபெற உள்ளன.

    வலைப்பூ உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், உத்தமம் அமைப்புக்கு மின்னஞ்சல் வழியாக எந்தப் பெயரில் வலைப்பூ(பிளாக்) உருவாக்க உள்ளோம் என்பதை சூலை 1 முதல் ஆகஸ்டு 31 க்குள் தெரிவிக்க வேண்டும். தமிழ் மொழி, இனம், நாடு, மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம், தொழில்கள், மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை, கலைகள் சார்ந்த பொருண்மைகளில் உள்ளடக்கம் கொண்ட வலைப்பூக்களை உருவாக்க வேண்டும். குறைந்த அளவு பத்து பதிவுகள் ஒவ்வொரு வலைப்பூவிலும் இடம்பெறவேண்டும். வலைப்பூ உருவாக்கம் குறித்த விதிமுறைகள் உத்தமம் இணையதளத்தில்( infitt.org) வெளியிடப்படும். சிறந்த வலைப்பூ உருவாக்கும் போட்டிகள் மூன்று நிலைகளில் நடைபெறும். பொதுமக்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், பள்ளி மாணவர்களுக்கான பிரிவில்(10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளலாம்) மூன்று பரிசுகளும் வழங்கப்படும்.  பரிசு பெறாத மற்ற சிறந்த வலைப்பூ உருவாக்கும் வலைப்பதிவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

    பொதுமக்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்குப் புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி விருதும், பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் பரிசாக வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் என வழங்கப்படும்.

    கல்லூரி நிலையிலான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்குக் கணிஞர் ஆண்டோபீட்டர் நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் முதல் பரிசும் வழங்கப்படும். இரண்டாம் மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.

    பள்ளி மாணவர்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் சிறந்த வலைப்பூ உருவாக்கி முதல்பரிசு பெறுவோருக்குச் சிங்கப்பூர் ந. கோவிந்தசாமி நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.

    கணினி, இணையம் பயன்பாட்டுக்கு வந்த  பிறகு இவற்றின் வழியாகத் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் சிறந்த செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வல்லுநர் குழு ஒன்று ஐந்து செயற்பாட்டாளர்களை உலக அளவில் தேர்வு செய்து அவர்களின் பெயரை மாநாட்டுக் குழுவிற்கு வழங்கும். அதன் அடிப்படையில் ஐந்துபேர் புதுவைத் தமிழ் இணைய மாநாட்டுக்கு அழைக்கப்பெற்று சிறப்பிக்கப்படுவார்கள். தமிழ் இணையச் செயற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி இதுவாகும், ஆண்டுதோறும் தக்கவர்களை அடையாளம் கண்டு உத்தமம் அமைப்பு தொடர்ந்து இதுபோல் பாராட்டும்.

    உத்தமம் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படிக்க விரும்புவோரும், பேராளராகக் கலந்துகொண்டு பங்குபெற விரும்புவோரும் உத்தமம்(www.infitt.org) இணையதளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துகொண்டு பங்கேற்கலாம். இதற்கான கடைசி தேதி 2014, ஜூலை 15 ஆகும். மாநாடு குறித்த மேலும் விவரங்களை உத்தமம் அமைப்பின் இணையதளத்தில் சென்று பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம். புதுச்சேரியில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.

    உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பில் உத்தமம் அமைப்பின் தலைவர் வாசு ரெங்கநாதன்(பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா), உத்தமம் அமைப்பின் முன்னாள் செயல் இயக்குநர் சிங்கப்பூர் மணியம், உதமம் மலேசியக் கிளையின் தலைவர் இளந்தமிழ், உலகத் தமிழ் இணைய மாநாட்டின் புதுச்சேரிப் பொறுப்பாளர் முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    முனைவர் மு.இளங்கோவன்

    Dr.Mu.Elangovan

    E.Mail : muelangovan@gmail.com

    blog: http://muelangovan.blogspot.com

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? -12

    –சு.கோதண்டராமன்.

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 11

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 13

    மரணத்திலிருந்து அம்ருதத்தை நோக்கி

    vedic pic

    சாதாரண மனிதனாக இருப்பவன் வேள்வி செய்யும் நரன் ஆக உயர்கிறான். மேலும் உயர்ந்து பிரார்த்தனைப் பாடல் இயற்றும் ரிஷி ஆகிறான். அடுத்த நிலையில் தன் அருட்செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்கும் மகோனன் ஆகிறான். கடைசியாக சூரி எனப்படும் நிலையை அடைந்து மக்களுக்கு வழிகாட்டுகிறான். இதற்கு அடுத்த நிலையில் அவன் தேவன் ஆகிறான். இவ்வாறு படிப்படியாக உயர்ந்து மனிதன் தேவன் ஆகிறான்.   

     

    வேதத்தில் ஐந்து வகை மனிதர் என்று பொருள்படும் பஞ்சஜநா:, பஞ்சக்ஷிதய:, பஞ்சக்ருஷ்டய: என்ற சொற்கள் அடிக்கடி காணப்படுகின்றன. (पञ्चजनाः, पञ्चकृष्टयः, पञ्चक्षितयः). இவை பிராமண க்ஷத்ரிய வைசிய சூத்ர சண்டாளர்களைக் குறிக்கும் என்று சாயணர் கூறுகிறார். இது ஏற்கக் கூடியதல்ல. ஏனெனில், ரிக் வேதத்தில் நான்கு வர்ணங்களைப் பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில் பத்தாவது மண்டலத்தில் புருஷ சூக்தத்தில் ஆதி புருஷன் யாகம் செய்வதை வர்ணிக்கும் இடத்தில் விராட் புருஷனின் முகத்திலிருந்து பிராமணன் தோன்றியது முதலான விவரம் வருகிறது. ரிக் வேதம் முழுவதும் வேறு எங்கும் இது பற்றிய மேல் விவரம் கிடைக்கவில்லை. பத்தாவது மண்டலம் காலத்தால் பிற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வர்ண முறை ஏற்பட்ட பிறகு இயற்றப்பட்டு இடைச்செருகலாகப் புகுத்தப்பட்ட பகுதி இது. அதனால் இதை ரிக் வேதத்தின் ஆதாரக் கருத்தாகக் கொள்வதற்கில்லை.

    இதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு, மேலும் ஒரு சான்று தரப்படுகிறது. சாயணர் குறிப்பிடும் சண்டாளர் என்ற சொல் ரிக் வேதம் முழுவதும் இல்லவே இல்லை.
    ராட்சசர்/ தஸ்யு என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டவர்களே பிற்காலத்தில் சண்டாளர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்லக் கூடும். இதுவும் தவறு. ஏனெனில் ரிக் வேதம் ஐவகை மனிதர்களும் நன்றாக வாழ வேண்டுமென்று எல்லா இடங்களிலும் பிரார்த்திக்கிறது. ராட்சசர்களையும் தஸ்யுக்களையும் அழிக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆக ராட்சசர்கள்/ தஸ்யுக்கள் இந்த ஐவகை மனிதர்களில் அடங்கியவர்கள் அல்லர்.

    ப்ரம்ம என்ற சொல் எல்லா இடங்களிலும் மந்திரம் என்ற சொல்லில் தான் வருகிறது. ப்ராம்மண என்ற சொல்லும் மந்திரம் சொல்பவர் என்ற பொருளில் தான் வருகிறது.  க்ஷத்ர என்ற சொல் வீரம் என்ற பொருளில் வருகிறதே தவிர க்ஷத்ரிய ஜாதி அல்லது வர்ணம் என்ற கருத்தைக் காண முடியவில்லை. அரசரைக் குறிக்க ராஜன்ய என்று தான் கூறப்படுகிறது. வைசிய சூத்ரர்களைப் பற்றிய குறிப்பு இல்லவே இல்லை.

    ரிக் வேதம் முழுவதும் ஆழ்ந்து கற்கும்போது ஆங்காங்கு கிடைக்கின்ற குறிப்புகளைத் தொகுத்துப் பார்த்ததில், மனிதன் தேவ நிலையை அடையும் வழியில் உள்ள படி நிலைகளே இந்த ஐவகை மனிதர் என்று கருத இடம் உள்ளது. அவர்கள் 1 மர்த்யர், 2 நரர், 3 ரிஷி, 4 மகோனர், 5 ஸூரி. அந்த ஐவகை மனிதர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

    1 – மர்த்யர்கள்
    இதன் நேர்ப் பொருள் இறக்கக் கூடியவர் என்பது. எல்லா மனிதரும் சாகத்தானே போகிறார்கள். இதற்கு ஏன் சில மனிதரை மட்டும் சாகக் கூடியவர் என்று கூற வேண்டும்? இவர்கள் வாழ்க்கையின் உயரிய விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இவர்கள் ராட்சசர்களைப் போல நாத்திகரோ, யக்ஞங்களுக்கு இடையூறு செய்பவரோ அல்லர். இவர்கள் கடவுளை வணங்குகிறார்கள், யாகமும் செய்கிறார்கள்.

    யக்ஞம் என்பது மேலோரைப் போற்றலும், கீழோரைக் காத்தலும் ஆகும் என்பதை வரவிருக்கும் தலைப்பு ஒன்றில்  விரிவாகப் பார்க்க இருக்கிறோம். மர்த்யர்கள் யக்ஞம் என்பதன் முழுப் பொருளையும் உணராமல் (மேலோரைப் போற்றுவதையும் கீழோரைக் காப்பதையும் செய்யாமல்) தன் சொந்த நலனுக்காக மட்டும் வேள்வி செய்பவர்களாக இருந்திருக்கக் கூடும்.

    உண்பதிலும், உணவிற்காக உழைப்பதிலும், சின்னஞ் சிறு இன்பங்களை அனுபவிப்பதிலும், பிறருக்குத் துன்பம் தருவதிலும்[1], போரிடுவதிலும்[2] அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இன்றி ஒரு நாள் இறந்து போகிறார்கள். இவர்கள் இறப்பதற்கே பிறந்தவர்கள். அதனால் மர்த்யர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    இவர்கள் பாரதியாரின் பின் வரும் பாடலில் குறிப்பிடப்படும் வேடிக்கை மனிதன் போலவே இருக்கிறார்கள்.
    தேடிச் சோறு நிதம் தின்று – பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து – நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
    வேடிக்கை மனிதர் ……………….

     2 –  நரர்
    நரர் என்ற சொல்லுக்குத் தலைவர் என்றும் மனிதர்  என்றும் பொருள். மர்த்யர்களை விட மேம்பட்ட இவர்கள் விழிப்புப் பெற்ற மனிதர்கள். மிருகங்களைப் போல, புழு பூச்சிகளைப் போல, சாவதற்கென்று பிறந்தவர்கள் அல்ல நாம் என்று உணர்ந்தவர்கள். இவர்கள் தேவ நிலையை அடைவதற்கு முதல் அடி எடுத்து வைத்தவர்கள். இந்தப் படியைக் கடந்து தான் ஒருவன் மேல் நிலைக்குப் போக முடியும்.

    இந்த நரர்கள் விழிப்புப் பெற்றார்களே அன்றி என்ன செய்தால் தேவ நிலையை அடையலாம் என்று அறியாதவர்கள். அதனால் தமக்கு மேல் நிலையில் உள்ள ரிஷிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் சொன்னபடி யக்ஞம், பிரார்த்தனை, சோமம் வடித்தல் முதலானவை செய்கிறார்கள். இவர்களுக்கு காரு, வஹ்னி, வாகத, ஸபாத, ஆயு என்ற வேறு பெயர்களும் உண்டு.

    3 – ரிஷி
    இவர்கள் யாகம் செய்யும் நிலையிலிருந்து மேலே உயர்ந்தவர்கள். இவர்கள் தேவர்களைக் குறித்த பிரார்த்தனைப் பாடல்களை அறிந்தவர்கள். முன்னோர்களின் பாடல்கள் மட்டுமன்றி, புதிய பாடல்களையும் இயற்றுவார்கள். இவர்களுக்கு விப்ர, விப, கவி, வித்வான் என்ற வேறு பெயர்களும் உண்டு. “வஹ்னிகள் ருதத்தின் மகனை (அக்னியை) (ஹவிஸ் முதலான) காணிக்கைகளால் நிரப்பும்போது, விப்ரர்கள் ருதத்தைப் பிரார்த்தனைகளால் நிரப்புகிறார்கள்[3] என்பதிலிருந்து விப்ரர் எனப்பட்ட ரிஷிகள், வஹ்னி என்ற நரர் போல் வேள்வி செய்வதில்லை என்றும் அவர்கள் தோத்திரங்களைப் பாடி தேவர்களைத் துதிக்கிறார்கள் என்றும் அறிகிறோம். வேத மந்திரம் முழுவதும் இத்தகைய ரிஷிகள் இயற்றியவை தாம். தன்னை விடக் கீழ் நிலையில் உள்ள மர்த்யர், நரர் ஆகியோருக்காகவும், மேல் நிலையில் உள்ள மகோனர், சூரி ஆகியோருக்காகவும் சேர்த்து இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

    4 – மகோனர்
    இந்தச் சொல்லுக்கு செல்வம் மிக்கவர்கள் என்று பொருள். இவர்கள் அதை மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்கள். அந்தச் செல்வம் எத்தகையது என்பதை பின்னால் வரும் ஒரு பகுதியில் காணலாம். ஓரிடத்தில் மட்டும் இந்திரா, பிறருக்குக் கொடுக்காத மகோனரால் உனக்குத் துன்பம் நேராதிருப்பதாக[4] என்று வருகிறது. எனவே, வாரி வழங்காத மகோனரும் அபூர்வமாக ஓரிருவர் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

    இவர்கள் ரிஷியாக இருந்து உயர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் தனக்காகப் பிரார்த்தனை செய்வதில்லை. ஓரிரு இடங்களில் “மகோனராகிய எங்களுக்கு செல்வம் அருள்க” என்று பொருள் கொள்ளக் கூடிய மந்திரங்கள் உள்ளன. மற்ற இடங்களில், பிரார்த்தனை செய்யும் ரிஷிகள், “எங்களுக்கும் எங்கள் மகோனர்களுக்கும் உணவு, இருப்பிடம், மக்கட் பேறு, செல்வம், புகழ், பாதுகாப்பு, எதிரிகளை வெல்ல வலிமை முதலானவை கிடைக்க வேண்டுமென்று” தேவர்களை வேண்டுகிறார்கள். இவர்கள் ரிஷிகளால் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள்.

    மகோனர்களைப் பற்றிய ஒரு மந்திரத்தில், இவர்கள் பல விதமான எண்ணங்களை உடையவர்கள். வாயிலே எப்பொழுதும் துதிகளைக் காக்கிறார்கள். ஒளியின் முன்னே தர்ப்பைகளைப் பரத்துகிறார்கள். தானே புகழ் அணிந்து கொள்கிறார்கள். மக்களுக்கு நிறைய தானம் செய்கிறார்கள். இவர்களுடைய தேர் தடைபடாமல் செல்லட்டும் என்று ரிஷி வேண்டுகிறார்.[5]

    5 – ஸூரி
    இவர்கள் தன்னைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாதவர்கள். தன்னிடமுள்ள செல்வத்தை மக்களுக்கு வாரி வழங்குபவர்கள். முற்றிலும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியவர்கள். இவர்களுக்கு செல்வம், உணவு மிகுதியாகக் கிடைக்க வேண்டும் என்று ரிஷிகள் தான் வேண்ட வேண்டியிருக்கிறது. இவர்கள் தேவ நிலையை அடைவதற்கு முந்திய படியில் உள்ளவர்கள். இரண்டாவது (தேவப்) பிறப்புக்கு ஆசைப்படும் சூரிக்கு அக்னி மகிழ்ச்சி அளிப்பதாக வேதம் கூறுகிறது.[6] இவர்களும் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள். பிரார்த்தனை செய்வோருக்கு செல்வத்தையும் புகழையும் கொடு,  சூரிகளுக்கு வஸுத்வனத்தையும் அம்ருதத்தையும் கொடு என்று ரிஷி வேண்டுகிறார்.[7] இதிலிருந்து சூரி நிலைக்கு அடுத்த நிலை வஸு என்ற தேவநிலை என்று தெரிகிறது.

    இவர்கள் யக்ஞம் செய்வதாகக் கூறப்படவில்லை. ஆனால் யக்ஞத்தைத் தோற்றுவித்ததாகக் கூறப்படுகிறார்கள்.[8] இவர்கள் யந்தார (வழிகாட்டிகள்) என்று கூறப்படுவதால், இவர்கள் மற்ற மக்களுக்கு தேவர்களின் அருளைப் பெறுவதற்கான வழியாக வேள்வி முறையைச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும் என அறிகிறோம். தேவர்கள் தங்கள் எதிரிகளிடமிருந்து அபகரித்த செல்வத்தை இவர்களுக்கு வழங்குகிறார்கள். அதை இவர்கள் மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்கள். பிறருக்குக் கொடுக்காத சூரி எவரும் இல்லை.

    இவர்கள் மகோனர்களை விட மேல் நிலையில் உள்ளவர்கள் என்பது எதனால் தெரிகிறது என்றால், எல்லா மந்திரங்களிலும் எங்கள் சூரிகளுக்கு செல்வம், புகழ், நீண்ட ஆயுள், நல்ல இருப்பிடம், மக்கட்பேறு, துன்பம் இல்லாத வாழ்வு முதலியவை கிடைக்க வேண்டுமென்று ரிஷிகள் வேண்டுகிறார்கள். சூரிகள் தங்களுக்காக எதையும் வேண்டுவதாக எந்த மந்திரமும் கூறவில்லை.

    ருதத்தின் (தர்மத்தின்) படி நடந்து இவர்கள் மற்ற மக்களையும் நன்னெறிப் படுத்தும் வேலை இவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.

    மனிதன் எப்படி தேவ நிலையை அடைகிறான் என்பதை ஒரு மந்திரம் விளக்குகிறது. ருதத்தைத் (தர்மத்தைத்) தாங்கிக் கொண்டு அதைப் போற்றுவதையே செல்வமாகக் கருதி, பல இடங்களிலும் தேடிக் கொண்டு, வேறு எதிலும் ஆசை வைக்காமல், தங்கள் வேலையைச் செய்துகொண்டு, தேவர்களை மகிழ்வித்துக் கொண்டு, தேவப் பிறப்பை நோக்கிச் செல்கிறார்கள். [9]

    மர்த்யனாக இருப்பவன் இப்படி படிப்படியாக உயர்ந்து தேவ நிலையை அடையலாம். அப்பொழுது அவனுடைய உடல் மடிந்தாலும் அவனுடைய புகழ் மறையாது. அவன் தேவர்களோடு தேவர்களாகச் சேர்ந்து விடுவான். விண்ணில் ஒளியுள்ள உடல் பெற்று அமரனாக வாழ்ந்து கொண்டிருப்பான்.

    இந்த ஐந்தில் நரர், கவி, மகோனர், சூரி ஆகிய அடைமொழிகள் இந்திரன், மருத்துகள், அக்னி, அச்வின்கள், வருணன், சோமன், ரிபுக்கள் ஆகிய எல்லாத் தேவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேவர்கள் எல்லாரும் இந்த நிலைகளைக் கடந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது.

    குறிப்புகள்:
    1    1.27.3
    2    1.27.7
    3    8.6.2
    4.    6.44.12
    5     5.18.3-5
    6     1.31.7
    7     8.13.12
    8     10.66.2
    9    1.71.3

    படம் உதவிக்கு நன்றி: http://swamiindology.blogspot.com/2013/10/mysterious-atharva-veda-part-2.html
    http://cdn2-b.examiner.com/sites/default/files/styles/image_content_width/hash/7e/c6/7ec6f4beb41676c18c52e0c2c5e5ea62.jpg?itok=QP4ZC2sk

    Share
  • குறளின் கதிர்களாய்…(32)

    -செண்பக ஜெகதீசன்

    பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யாற்றிரிந் தற்று.
    (பண்புடைமை: திருக்குறள்-1000)

    புதுக் கவிதையில்…

    அசுத்தமான கலத்தில் வைத்த
    ஆவின் பாலும்
    திரிந்துபோய்,
    தகுதியற்றதாகிவிடும் பருகுதற்கே…!

    இதுபோல்தான்
    பண்பற்றவன் பெற்ற
    பெருஞ்செல்வமும்
    பயன்படாது நல்லதற்கே…!

    குறும்பாவில்…

    அழுக்குப் பாத்திரத்தில் நல்லபாலும் திரிந்திடும்…
    அதுபோல் பயனற்றதாகும்
    பண்பற்றவன் கொண்ட பெரும்பொருளும்…!

    மரபுக் கவிதையில்…

    ஆவின் பாலைக் கறந்தெடுத்து
         அடுப்பில் வைத்துச் சூடாக்கித்
    தேவைக் கேற்பக் குடித்திடவே
         தூய்மை யற்ற கலத்திலிட்டால்,
    நாவில் வைக்க முடியாமல்
         நலமே கெட்டுத் திரிவதுபோல்
    பாவி மனிதனின் பெரும்பணமும்
         பலனே யிலாமல் போய்விடுமே…!

    லிமரைக்கூ…

    பாத்திர அழுக்கில் பால்மாறும் குணம்,
    பயன்தராது அதுபோல்
    பண்பே இல்லாதான் கைநிறை பணம்…!

    கிராமிய பாணியில்…

    பாலுபாலு பசும்பாலு
    கொறயில்லாத நல்லபாலு…

    குடிக்கு முன்னே காச்சிடணும்
    கொவளைல வூத்தி ஆத்திடணும்,
    ஆத்துற பாத்திரம் அழுக்கானா
    அத்துன பாலும் தெரஞ்சிபோவும்…

    பாலு கததான் பணத்துக்கும்,
    பொல்லா மனுசன் பணமெல்லாம்
    நல்லது எதுக்கும் ஒதவாதே
    தெரஞ்ச பாலா வீண்தானே…!

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 25

    -இவள் பாரதி

    அதிலும்… 

    அத்தனை இறுக்கமாகக்
    குழந்தையின் கையைப் பிடித்திருக்கக்கூடாது
    அதிலும் அவளின் பச்சைநிற                                                  nivi-192x3001
    ப்ளாஸ்டிக் வளையல் உடையும் அளவிற்கு
    அதிலும் உடைந்த பின்னும்
    ஒரு சிறுவருத்தம் கூடத் தெரிவிக்காமல்
    ஒரு மன்னிப்பைக் கோரும் முகபாவமின்றி…
    அதிலும் அழுகின்ற சின்னஞ்சிறு கையை உதறிவிட்டு
    அந்த அறையை விட்டு வெளியேறி…
    அதிலும் பசியுற்றிருந்தும் அந்தச் சின்னவள்
    தினைப்பொங்கலைச் சாப்பிட மறுத்தபோது
    பெற்றவள் அருகில் இருக்கிறாளெனத் தெரிந்தும்
    இத்தனை கோபம் கொண்டிருக்கக்கூடாது
    அதிலும் அன்பைச் சிரிப்பிலும்
    அசெளகரியத்தை அழுகையிலும் மட்டுமே
    வெளிப்படுத்தத் தெரிந்த பச்சை மண்ணிடம்! 

    காக்காத் தூக்கிட்டுப் போயிருச்சு!

    எப்போது ஒரு பொருளைக் கேட்டுக்
    குழந்தை அடம்பிடித்தாலும்
    பெரியவர்கள் காக்கைத் தூக்கிப் போய்விட்டதாகக் கூறினர்!
    ஒருநாள் உண்மையாகவே
    காக்கை வந்து குழந்தையிடமிருந்து
    அந்தப் பொருளைத் தூக்கிச் செல்ல,
    குழந்தை காக்கை தூக்கிப்போய்விட்டதாகக்
    கூறிய உண்மையை
    எல்லோரும் பொய்யென்றே நம்பினர்!
    குழந்தை புரிந்துகொண்டது
    முன்னர்ப் பெரியவர்கள் சொன்ன பொய்யெல்லாம்
    உண்மைதான் என்று!!

    அடையாளம்

    உடல் உறுப்புகளில்
    சிலவற்றை அடையாளம் காட்டும் அம்மாகுட்டி
    அம்மா எங்கே என்றாலும்
    அப்பா எங்கே என்றாலும்
    தன்னையே அடையாளம் காட்டுகிறாள்!
    அம்மாவின் அடையாளமும்
    அப்பாவின் அடையாளமும்
    ஒருங்கே கொண்டிருந்த
    அவள் சொல்வதும் உண்மைதான்!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(113)

    –சக்தி சக்திதாசன்.

    bertrand-russell-on-religion

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலிலே உங்களுடன் கலப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.

    வாழ்க்கை எம்மீது பல சமயங்களில் விளக்கமில்லா நிகழ்வுகளை சராமாரியாகப் பொழிகின்றது. இது ஏன் நடந்தது ? எப்படி நடந்தது என்னும் விளக்கம் தெரியாமல் திண்டாடிப் போகும் நிலையில் பலர் பல சமயங்களில் அல்லாடுகிறோம்.

    இன்றைய இந்த காலக்கட்டமானது விஞ்ஞானயுகம் எனும் அடிப்படையோடு தான் வந்த வழியறியாது வெகு வேகமாக முன்னேறிச் செல்லும் சமூகங்களை உள்ளடக்கிய ஒரு கால கட்டமாகிறது.

    காலமாற்றத்தை உள்வாங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். காலத்துக்குக் காலம் மனிதனும் அவன் சார்ந்த சமூகமும் வாழ்வின் மாறுதல்களுக்கு தம்மை உட்படுத்திக் கொண்டிருக்கா விட்டால் மனிதன் இன்னும் கற்காலத்திலேயே உழன்று கொண்டிருந்திருப்பான்.

    மனித வாழ்க்கையை வளம்படுத்துவதற்கு ஆத்திகவாதம் எத்தனைதூரம் உதவியிருக்கிறதோ அதே போல நாத்திகவாதமும் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

    இப்படிக் கூறும் நான் ….முழு ஆத்திக நம்பிக்கை கொண்டவன். பின் ஏனிந்தக் கூற்றை முன்வைக்கிறேன்.

    இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது என்பதை முழுமையாக நம்புக்கிறவன் நான். அப்படியாயின் நாத்திகவாதம் பேசும் ஒருவரால் இவ்வுலத்திற்கு நன்மை பயக்கக்கூடிய அதிவிசேட கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையை தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது ?

    நாம் எவ்வளவுதான் விஞ்ஞானமயப்படுத்த பட்டாலும், மாறுதலை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டாலும், சில அடிப்படை யதார்த்தங்கள் என்றுமே மாறா நிலை கொண்டவை.

    குறிப்பாக ஒரு மனிதனின் வாழ்க்கை உறவுமுறைகள் , ஆன்மீக நம்பிக்கைகள் என்பவை மனிதனின் அடிப்படை மன ஓட்டங்களோடு பின்னிப் பிணைந்தவை. அவற்றை மாற்ற முற்படும் போது சமுதாயத்தின் ஆணிவேர்களே அசைத்துப் பார்க்கப்படுகின்றன.

    நான் இங்கிலாந்து எனும் இந்த மேலைத்தேச நாட்டினுள் முதன் முதலாகக் கால் வைத்த நாளுக்கும் ஏறத்தாழ நாற்பாதவது வருடத்தினுள் காலடி வைத்திருக்கும் இந்த நாளுக்கிடையே உள்ள இடைக்கால  வேறுபாட்டை என் மனத்தாராசினில் நிறுத்துப் பார்க்க விழைகிறேன்.

    இவை ஏதோ சரித்திர உண்மைகளோ அன்றி விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஆதாரங்களோ அல்ல. வெறும் ஒரு சராசரி புலம்பெயர்த் தமிழன் பார்வையில் விழுந்த வித்தியாசமான கோணமே !

    அன்று எவையெல்லாம் பேசப்படுவது சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்படமுடியாது என்று தள்ளி வைக்கப்பட்டனவோ, அவை எல்லாம் இன்று பகிரங்கமாக ஊடகங்களில் விவாதிக்கப்படும் ஒரு நிலை உள்ளது.

    இவற்றில் சில, காலமாற்றத்தின் காரணத்தால் விவாதிக்கப்படவேண்டிய அவசியம் கொண்டவையாக இருப்பினும், வேறு சில மக்களின் அடிமனதில் இழைந்தோடிய ஆன்மீக பலம் குன்றியமையால் ஏற்பட்டதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    காலம்காலமாக இங்கிலாந்து நாட்டில் வாழ்வோரில் பெரும்பான்மையினர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்களே ! ஏன், இங்கிலாந்து நாடு ஒரு கிரிஸ்துவ நாடென்னும் நம்பிக்கையுடனேயே நான் இந்நாட்டினுள் நுழைந்தேன் ஆனால் இன்றோ இந்நாட்டின் அடிப்படை மதத்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை வலுவிழந்து போய்விட்டது போன்றதோர் நிலைமை என்றே எண்ணத் தோன்றுகிறது.

    இந்நிலை ஏன் ஏற்பட்டது ?

    இந்நாட்டினுள் வந்து குடியேறிய ஆசிய ஆப்பிரிக்க மக்களின் தொகை பெருகியதோடு, அவர்கள் தம்மதங்களின் மீதும் தம்முடைய கலாச்சார விழுமியங்களின் மீதும் கொண்ட ஆழ்ந்த பிடிப்பின் அழுத்தம் கூடிக் கொண்டு போவதை அண்மைக் காலங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

    உதாரணமாக இங்கிலாந்தின் ஒவ்வொரு முக்கிய நகரங்களில் ஒன்றல்ல, இரண்டு மூன்று இந்துக் கோவில்கள் இயங்குகின்றன. அவை மக்கள் சென்று வணங்குவதற்குரிய வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. தம்முடைய உற்சவகாலங்களில் தேரிழுப்பது போன்ற திருவிழா வைபவங்களையும் அங்கு கடைப்பிடிக்கிறார்கள்.

    அதே போல இஸ்லாமிய மதத்தவரும் தமது மத அடையாளங்களையும் தமது மத நம்பிக்கைகளையும் மிகவும் அழுத்தமாக இம்மண்ணில் பதித்து வருகிறார்கள். அதே சமயம் இங்கிலாந்தின் சொந்தப் பிரஜைகளான ஆங்கிலேய மக்களோ தமது மத அடையாளங்களாகிய சர்ச்சுகளுக்கு செல்லும் வழக்கம் குன்றிக் கொண்டே போகிறது.

    அவர்களது ஆன்மீக உணர்வுகள் மங்கிக் கொண்டே போகிறது. அளவுக்கதிகமான மற்றைய மத அடையாளங்கள் காலாச்சார விழுமியங்கள் என்பனவற்றின் அதிக விகிதாசாராத்திலான ஆக்கிரமிப்புகள் தான் இவ்வீழ்ச்சிக்குக் காரணமா? எனும் எண்ணம் மேலோங்குவது தவிர்க்கப்படமுடியாத ஒன்று.

    எது எப்படி இருப்பினும் இத்தகைய ஆன்மீக உணர்வுகளின் அடிப்பட வீழ்ச்சி ஒழுங்கான கட்டமைப்புக் கொண்ட சமுதாய உருவாக்கத்தை தடுக்கும் வகையிலமைந்துள்ளது.

    மதம், நிறம் என்ற  வேற்றுமைகள் அதிகமாக மக்கள் மனங்களிடையே துளிர் விடத் தொடங்கியுள்ளது போல் தோன்றுகிறது.

    நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எமது அடையாளத்தை, எமது கலாச்சாரப் பின்னனியை இழந்து விடக்கூடது என்பது முக்கியம்.

    ஆனால் அதற்காக நாம் எம்மை அடையாளப்படுத்தும் முகவரியை நாம் வாழும் நாட்டு மக்களின் மீது திணிக்கும் வகையில் நடந்து கொள்வது எந்தவொரு மாற்றத்திற்குமான முன்னேற்றத்திற்குரிய  அறிகுறியாகாது.

    நாம் எமது ஆன்மீக உணர்வுகளில் கொண்டிருக்கும் வலிமை எமது மதத்திற்குள் எம்மை நல்வழிப்படுத்தும் மார்க்கத்திற்காகவேயன்றி மற்றொருவர் மனதிலிருக்கும் நம்பிக்கையைக் குன்றச் செய்வதற்காக இருக்கக் கூடாது.

    கவியரசரின் வரிகளிலே.

    “பழகும் வகையில் பழகிப் பார்த்தால்
    பகைவன் கூட நண்பனே
    பாசம் காட்டி ஆசை வைத்தால்
    மிருகம் கூட நண்பனே “

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:
    http://zerobs.net/bertrand-russell-on-religion
    [http://zerobs.net/media/bertrand-russell-on-religion.jpeg]

     

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 13

    கே.ரவி

    0 Rநான் மூன்று முறை கவிஞரை நெருக்கத்தில் சந்தித்திருக்கிறேன். எந்தக் கவிஞரை என்று கேட்கக் கூடாது. எப்படி பாரதி என்றதும் எந்த பாரதி என்ற கேள்வி எழாதோ, எழக் கூடாதோ, அப்படியே கவிஞர் என்றால் எந்தக் கவிஞர் என்ற கேள்வியெழ வாய்ப்பே இல்லை. கவிஞர் என்றால் கண்ணதாசனே. அவருடன் நான் நெருங்கிப் பழகாத போதும் ஏனோ அவரிடம் எனக்கு ஓர் ஈர்ப்பு; அதைவிட, அவரை நினைக்கும் போதெல்லாம் ஒரு பாச உணர்வு என் நெஞ்சில் பொங்கியெழும்.

    முதல்முறை அவரை நெருக்கத்தில் சந்தித்தது சென்னை, லயோலா கல்லூரியில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில். 1969-ஆம் ஆண்டு, நான் விவேகானந்தா கல்லூரியில், புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் என் கல்லூரியின் சார்பில் கலந்து கொள்ள நானும் இன்னொரு மாணவரும் தேர்வு செய்யப்பட்டிருந்தோம். யாரந்த இன்னொரு மாணவர் என்று எனக்கு அப்பொழுது தெரியாது. அந்தப் போட்டியில் கலந்து கொள்ள நான் லயோலா கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அங்குதான் கவிஞரை முதன் முதலில் சந்தித்தேன். அவர்தான் கவிதைப் போட்டிக்கு நடுவர்.

    அந்த இடத்தில் அப்போது இரண்டு பெரிய கவிஞர்களைச் சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கவிஞர் ஒரு மாக்கவிஞர்; இன்னொருவர்? ஏன், அந்த இன்னொருவரைச் சந்தித்து வெகுநாட்கள் வரையிலும் அந்த இன்னொருவரை ஒரு சிறந்த கவிஞர் என்று நான் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. அந்த இன்னொருவர்தான் விவேகானந்தா கல்லூரி சார்பில் அந்தக் கவிதைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த இன்னொரு மாணவர். அவர் அப்போது இளங்கலை வகுப்பு, பி.எஸ்.சி தாவரவியல், மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன்.

    நானும் அவரும் முதன்முதலாக லயோலா கல்லூரியில், அதுவும் அங்கிருந்த ஓய்வறையில் சந்தித்துக் கொண்ட போதுதான் ஒருவரை ஒருவர் இன்னார் என்று தெரிந்து கொண்டோம். அன்று கவிதைப் போட்டியின் தலைப்பு ‘அழியா அழகு’. பல கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட அந்தப் போட்டியில் எந்தப் பரிசும் நாங்கள் இருவருமே பெறவில்லை. ஆனால், என் கவிதையிடையே தெறித்த சில வரிகளை, அதுவும் குறிப்பாகக் ‘கலையும் கலையும்” என்றும் “மறையும் மறையும்” என்றும் முடியும் வரிகளைக் கவிஞர் ரசித்துக் கேட்டார் என்ற ஒரு பேறே போதுமென்றாலும், என் சக மாணவராய் வந்திருந்த அந்த இன்னொருவரைச் சந்தித்த பெரும் வாய்ப்புக்கு வேறெந்தப் பரிசுகளும் ஈடாகாது.

    அந்த இன்னொருவரை அதற்குப் பிறகுச் சில ஆண்டுகள் சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மீண்டும், 1970-களில் நாங்கள் சந்தித்துக் கொண்டதும், என்னுள் இயல்பாக இருந்த இசைவேட்கைக்குத் தூண்டுகோலாக அவருடைய பாடல்கள் அமைந்ததும் ஒரு தனி வரலாறு. அவர், ரமணன், நான் ஆகிய நாங்கள் மூவரும் இன்றைய கவிதையுலகின் கவிமூவர் என்று போற்றப் படுவோமோ என்று கூட நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன். கர்வம் யாரை விட்டது?

    இமை வாசலின் ஓரத்திலே – ஏனோ
    முத்துக்கள் பனிக்கின்றன – அவை
    வந்ததும் பூத்ததும் வீழ்ந்ததும் பின்னிழை
    நீர்க்கரை ஆனதும் யார்புகல்வார்

    இப்படித்தான் ஒருநாள் அமிர்தவர்ஷினி ராகத்தில் அவர் பாடினார். அப்போது அவர் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருந்தார். நான் பின்னால் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன். இடம், லஸ் அமிர்தாஞ்சன் எதிரில் விவேகானந்தா கல்லூரி போகும் சாலையில், இசையமைப்பாளர் திரு.ஆர்.சுதர்சனம் அவர்கள் வீட்டுக்கு அருகில். அப்போது ஒரு பொறிதட்டியது. அவர் ஏதோ சாதரணமான கவிஞர் இல்லை. நிச்சயம் ஒரு மிகப்பெரிய கவிஞர் என்று எனக்குள் ஒரு பட்சி சொன்னது.

    vaveesuநாளாக நாளாக எங்கள் கவிதை நட்புச் சுடர் விட்டு வளர்ந்தது. அவர், ஆம், விவேகானந்தா கல்லூரியில் என் சக மாணவர், பின்னாளில் அதே விவேகானந்தா கல்லூரியின் முதல்வராக நற்பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் தாவரயியல் பேராசிரியர், அவரே என் கவிதையார்வம் சரியான தடத்தில் செல்ல உதவ இருப்பவர்களில் ஒருவர் என்று அன்று அவரை அடையாளம் கண்டு கொண்டேன். அவரே வ.வே.சு. என்றும் வி.வி.எஸ். என்றும் நான் அழைக்கும் இனிய நண்பர். ஸ்கூட்டர் தேரில் அர்ஜுனன் போல் நான்…!

    மறுபடியும் கவிஞரிடம் வருவோம்.

    கவிஞரை நான் இரண்டாவது முறை சந்தித்தது விவேகானந்தா கல்லூரியிலே. 1970-ஆம் ஆண்டு விவேகானந்தாimages கல்லூரியில் கவிதைப் போட்டிக்கு அவர் நடுவராக வந்திருந்தார். நானும் போட்டியில் கலந்து கொண்டேன். போட்டித் தலைப்பு ‘வாய்மையே வெல்லும்’. முதலில் அவர் கவிதையாகவே பேசும் போது சொன்னார்: ‘நான் எதையும் மறைப்பதில்லை, என் குடிப்பழக்கம் உட்பட. குடித்தாலும் குடிக்கின்றேன் என்று சொல்லிக் குடிக்கின்றேன். அதனால் நான் வாய்மை தவறாதவன். வாய்மையே வெல்லும் என்ற தலைப்பில் நடக்கும் இந்தக் கவியரங்கத்துக்குத் தலைமை தாங்கும் தகுதியுள்ளவன்’. இப்படியாக அவருடைய முன்னுரை அமைந்தது.

    அன்று இளமைக்கே உள்ள துடிப்போடும், குறும்போடும் கவிதை படித்தேன்; மன்னிக்கவும், இப்பவும் உண்டுங்க. நான் எப்பவும் இளைஞன் தானுங்க. (அடாடா, இந்தப் பல்லவி நல்லா இருக்கே!).

    நான் என் கவிதை படிக்கும் போது சொன்னேன்:

    குடித்தாலும் குடிக்கின்றேன் என்று சொல்லிக்
    குடிப்பதுதான் வாய்மையெனச் சொல்லி விட்டார்
    குடியாலே குழறுகிற நாவில் உண்மை
    குடியிருக்க முடியாது மறந்து விட்டார்
    பிடிவாதம் செய்யாமல் விடச்சொல் கின்றேன்
    பிழைதிருத்த வரவில்லை விண்ணப் பம்தான்

    இப்படிப் படித்த பிறகு நமக்கெங்கே பரிசு தரப் போகிறார் என்று கவிதைப் போட்டி முடியும் வரைக்கும் காத்திருக்காமல் நான் வீட்டுக்குச் சென்று விட்டேன். அப்போது என் வீடு கல்லூரிக்குப் பக்கத்தில், மயிலை பலாத்தோப்பில் இருந்தது. இரவு 9 மணிக்கு என் வீட்டுக் கதவை யாரோ தட்டுகிறார்கள். திறக்கிறேன். என்ன ஆச்சரியம், எங்கள் கல்லூரி மாணவர் பேரவையின் தலைவர், ராஜகோபாலும், சில நண்பர்களும் என் கையைப் பற்றி இழுத்துக் குலுக்கி “உனக்குத்தான் கவிஞர் முதல் பரிசு அறிவித்தார், ஏன் வந்து விட்டாய்” என்றதும் அசந்து போய்விட்டேன். என்ன பெருந்தன்மை. கவிஞர் முதலில் ஒரு மஹா ரசிகர் என்பதைப் புரிந்து கொண்டேன்.

    கவிஞருடன் மூன்றாவது சந்திப்புப் பற்றி நாம் அடுத்த முறை சந்திக்கும் போது சொல்கிறேனே.

    (தொடரும்)

    Share
  • பட்டணந்தான் போகலாமடி……..

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    Capture

    இயக்குனர் அ. சுப்பாராவ்  இயக்கத்தில் வெளிவந்த அன்னபூர்ணா பிக்ச்சர்ஸ் ‘எங்க வீட்டு மகாலெட்சுமி‘ (1957) திரைப்படத்தில் இடம்பெற்ற உடுமலை நாராயணகவியின்  பாட்டு!  ஈ.வி.சரோஜா மற்றும் குழுவினர்தம் நாட்டியத்தோடு ஒரு தெம்மாங்கு பாடல்!  இசையமைப்பாளர் மாஸ்டர் வேணு அவர்கள் அமைத்திருக்கும் தாளஜதிக்கட்டு கலந்த ஒரு மெட்டு!  கேட்கும் நெஞ்சங்களை ஈர்க்கின்ற வர்ணங்கள் பாடல் முழுவதும் நிறைந்திருக்க.. இத்திரைப்படம் வந்த காலக்கட்டத்தில் மக்கள் மனதில் எழுந்த பெரும் வினாவிற்கு விடை சொன்ன பாட்டு!

    udumalai narayana kaviCapture2seerghaziengalveetu..

    பட்டண வாழ்க்கையோடு பட்டிக்காட்டு வாழ்க்கையை ஒப்பிட்டு ஒரு பட்டிமன்றம் பாடலில் நடக்க.. மேலும் இதிலே உண்டாகும் குழப்பங்களுக்கெல்லாம் சரியான பதில் சொல்லித்தந்த பாட்டு!

    கவிஞரின் சாதுர்ய வரிகள் ஒரு சமுதாய பிரச்சினையை மையமாக வைத்து பின்னியிருக்க.. தமிழகத்தின் பிரபலமான தெம்மாங்கு வகையில் இசை வார்க்கப்பட்டு சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுசீலா குழுவினர் பாடிய பாடல்!

    அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொற்களையே அக்கதாபாத்திரங்களின் வாயிலாய் பாடவைத்து ஒரு பாடலுக்குள்ளெ பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார் பாருங்கள்!

    ஆண், பெண் இணைந்த வாழ்வில் ‘புரிதல்’ என்பது எத்தனை அவசியம் என்பதை வெள்ளித்திரையில் விளக்கம்தந்த பாடலாக.. அன்றுதொட்டு இன்றுவரை மக்கள் கேட்க விரும்பும் பாடல்கள் வரிசையில் காற்றலைகளில்  தவழ்ந்துகொண்டிருக்கும் பாடல்!

    கர்நாடக இசையையும் தெம்மாங்கு வடிவத்தையும் கலந்து தரும் வித்தகம் தெரிந்த இசையை – நீண்ட நெடிய இப்பாடலுடன் கலந்து நேர்த்தியாக உருவாக்கித் தந்திருக்கிறார் இசை அமைப்பாளர் என்றே சொல்லலாம்!

    http://youtu.be/9HpNCIItWN8
    காணொளி: -http://youtu.be/9HpNCIItWN8

    பட்டணந்தான் போகலாமடி
    படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி (1957)
    பாடல்: உடுமலை நாராயணகவி
    இசை:எம்.வேணு
    பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா

    ஹ்ஹ்ம் மூட்டயக் கட்டிக்க.. எதுக்கு?

    பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி – நல்ல
    கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

    டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க – அந்த
    டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா

    கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
    கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
    பட்டிக்காட்ட விட்டுப்போட்டுப் பல பேரும் போவதால
    கட்டிச் சோத்தக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
    தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி – நல்ல
    கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

    வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க – அங்கே
    வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க
    காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதான் பிஏ படிப்பு பெஞ்சு தொடைக்குதாம்
    ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
    மேலே போறது நூத்துல ஒண்ணு மிச்சமுள்ளது லாட்டரியடிக்குதாம்

    எப்படி?

    ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே – மாப்பிள்ளே
    ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே
    உன்னாலே என்னாகும் எண்ணமே போனா பின்னாலே கேடு மாமா

    ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
    அம்மா ஒதுங்கு ஒதுங்கு….
    ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
    சினிமா ட்ராமா  சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
    வேத்துப் புடுங்கினா பீச்சுக்குப் போவேன் மீந்தப் பணத்திலே மீனு வாங்குவேன்
    ஆத்தாடி உன் கையில குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்

    மேல ….

    இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி – நான்
    இப்போதே போவணும் உங்கொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி

    மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யற வேலை
    மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யுற வேலை
    கழுத்துக்கு மீறி பணம் வந்த போது மனுஷன சும்மா இருக்க விடாது
    என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்வே துணிஞ்சு
    இரவு ராணிகள் வலையில விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு

    அப்புறம்..

    போலீசு புலி புடிக்கும் மாமா புர்ராவ பேத்தெடுக்கும்
    அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பொஞ்சாதி பேச்சக் கேளு

    அப்படியா ஆஹா …

    நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
    நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
    ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
    ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
    உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது

    பட்டணந்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல
    கட்டாணி முத்தே என் கண்ணத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே

    என்னைத் தனியா விடவே மாட்டேன்னு என் தலைமேல் அடிச்சு சத்யம் பண்ணு

    எங்கப்பனான சத்தியம் சத்தியம் சத்தியம்…

    ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு – நம்ம
    ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
    ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு – நம்ம
    ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்

    Share
  • மன நல ஆலோசனை கேள்வி பதில்கள்

    கார்த்திகேயன்

    கேள்வி : 1

    எனக்கு வயது 17 ஆகிறது. நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்கிறேன். என் வீட்டில் எல்லோரும் என்னை ஒரு வாயாடி என்றும் திமிர் பிடித்தவள் என்றும் சொல்கிறார்கள். நான் அனைவரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பேசுவேன். இதனால் என்னை சந்தேகத்துடன் பார்த்து இவளுக்கு கொழுப்பு என்கிறார்கள். மேலும் நான் சிரித்து சிரித்து பேசுவதால் என்னை அது ஒரு அரைக்கிறுக்கு என்று கூறுகிறார்கள். ஆனால் என் தோழிகளை நல்ல பெண் என்று  கூறுவார்கள். என்னை நல்ல பெண் என்று அனைவரும் சொல்ல வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    பதில் :

    ரொம்ப குழப்பமான மன நிலையாக தெரிந்தாலும் குழப்பம் ஒன்றுமில்லை. அது இயற்கையானது உனக்கு வயது 17 தான். இப்போது சிறுமி பருவத்தில் இருந்து மெச்சுரிட்டி பருவ நிலை வரும் வழியில் வளரிளம் பருவத்தில் நிற்கிறாய். இந்த இரண்டுங்கெட்டான் பருவத்தில் உனக்குள் தோன்றும் ஹார்மோன்கள் மாறுதல்கள் உன்னைக் குழப்பும். அதே நேரம் சமூகமும், நெருக்கமான உன் உறவினர்களும் உன்னை குழப்புவார்கள். எப்படி என்றால் ஒரு சமயம் உடம்புதான் வளர்ந்திருக்கு கல்யாணம் கட்டிக் கொடுத்தால் உடனே பிள்ளை பெத்துக்குவே. ஆனா இன்னும் குழந்தை மாதிரி நடந்துக்கலாம் என்று நினைத்தால் வயதுக்கு தக்கபடி நடந்துக்கிறே, என்பார்கள் ஓகோ அப்படினா நாம் பெரிய பெண் மாதிரி நடந்துக்கலாம் என்று நினைத்தால் வயதுக்கு தக்கபடி நடந்துக்க பெரிய மனுஷி மாதிரி நடந்துக்காதே…….. என்பார்கள். ஒண்ணுமே புரியலையே….. இந்த உலகத்தில் நான் எப்படித் தான் நடந்து கொள்வதாம்? என்ற குழப்பம் உனக்கு மட்டுமல்ல சமூகத்தில் நிறைய 17 வயதுப் பெண்களுக்கு ஏற்படத்தான் செய்யும். இதில் ஒரு பகுவனிலை அடைய வேண்டுமானல் 19-20 வயது ஆக வேண்டும். உன் அக்கா, அம்மா எல்லோரும் உன்னைப் போன்றதொரு குழப்பகால கட்டத்தைத் தாண்டித்தான் வந்திருக்கிறார்கள்.

    நீ பக்கத்துவீட்டுப் பெண் மாதிரி இல்லை தோழி மாதிரி இல்லை என்றெல்லாம் உன்னைச் சொல்கிறார்கள். அப்படித்தானே. நான் கேட்கிறேன் நீ ஏன் உன் தோழி மாதிரி இருக்க வேண்டும்? நீ நீயாக உனக்கென்று தனித்தன்மை வாய்ந்தவளாக இருக்க வேண்டும் ஒருவர் உயரம், இன்னொருவர் குட்டை உயரத்தைப் போலவும் ஏன் ஆக வேண்டும் அது அவரவர் அளவு. உன் அம்மாவே நீ உன் தோழி மாதிரி இல்லை என்கிறார்கள். உன் அம்மாவும் உன் தோழியின் அம்மா மாதிரியா இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும்  எவ்வளவு வித்தியாசம் இருக்கும். இந்த வித்தியாசம் இயற்கை. இதை யாரும் யாருக்காவும் மாற்றிக் கொள்ள முடியாது.

    சுற்றி இருக்கிறவர்கள் எல்லோரும் உன்னை நல்லப் பெண் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய். ஏன் அப்படி எதிர்பார்க்கிறாய்? அனைவரும் சொன்னால் தான் நீ நல்ல பெண்ணா? நீ நல்லதை செய்யும் போது உனக்குள்ளே இருக்கும் நல்லவைகளை நீ உணரும் போதே நீ நல்லப் பெண் தானே மற்றவர்களிடமும் அங்கீகாரம் பெற வேண்டும் என்று நினைத்து உன் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். ஒரு வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக  செய்து முடிக்கும் போது

    • நன்றாக டிரஸ் செய்யும் போது,
    • நன்றாக பேசும் போது,
    •  நன்றாக படிக்கும் போது,
    • மற்றவர்களிடம் நன்றாக நடந்து கொள்ளும் போது.

    என் மனதுக்குள் உன்னையே நீ அங்கீகாரம் செய். மகிழ்ச்சி அடை. நான் நன்றாக நடந்து கொண்டிருக்கிறேன் என பெருமிதம் கொள். இதன் மூலம் உன் சக்தி அதிகரிக்கும். நல்லவைகளைச் செய்யும் ஆற்றல் தோன்றும். அப்போது பலரும் பாராட்டித்தானே ஆக வேண்டும்.

    கேள்வி : 2

    என்னை ஒருவன் காதலித்தான். நானும் அவனைக் காதலித்தேன். என் அப்பாவும் அம்மாவும் அதற்கு சம்மதித்தனர். பிறகு அப்பாவும் அண்ணனும் அவனைப் பற்றி வெளியே விசாரித்தனர். பிறகு அவனைப் பற்றி விசாரித்த தகவல்களை என்னிடம் தெரிவித்தனர். அவன் நடவடிக்கை எதுவும் சரியில்லை எனவும் அவனிடம் இவ்வுலகின் அனைத்து கெட்ட பழக்கங்களும் இருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தனர். இதனால் அவனை மறந்து விடும்படி சொன்னார்கள், நானும் என் பெற்றோரின் சொல்படி அவன் உறவை முறித்து விட்டேன். மேலும் எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவருக்கு திருமணம் முடித்த பின் எனது திருமணம் நடக்கும். நான் காதலித்தவனால் ஏகப்பட்ட பிரச்சனைகள். போன் செய்து நான் கல்யாணம் செய்து கொண்டால் அவனைதான் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறான்.. இதுவரை எந்தத் தப்பான விபரீதமும் நடக்கவில்லை.  நான் என்ன செய்ய வேண்டும் என்று நல்ல பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    பதில் :

    உங்கள் முடிவுக்குத் தெளிவான பாராட்டுக்கள். கண்மூடித்தனமாகக் காதலித்து ஏமாறாமல் சரியான தருணத்தில் முடிவு எடுத்துள்ளீர்கள். இப்படிப்பட்ட மோசமானவனை நீங்கள் சந்தித்தது உங்கள் துரதிர்ஷ்டமே. அவனுடைய மிரட்டலுக்கு நீங்கள் எக்காரணம் கொண்டும் பணிந்து விடக்கூடாது. அவனால் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. உங்கள் பெற்றோரிடம் உங்கள் நிலையை தெளிவாக எடுத்துக் கூறி அவர்கள் மூலம் இப்பிரச்சனையை நீங்கள் கையாள்வதே நல்லது. உங்கள் தைரியத்தை இழக்க வேண்டாம். உங்களைப் போன்ற துணிச்சலான பெண்களால் தான் இப்படிப்பட்டவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்.

    கேள்வி : 3

    என்னுடைய தோழியின் வயது 22. அவள் எப்போதும் வாயில் விரல்களில் வைத்து இரண்டு கைகளையும் மாறி மாறி நகத்தையும் சதையையும் கடித்துத் துப்பிக்கொண்டே இருக்கிறாள். இதை நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இந்த கெட்டப் பழக்கத்தை எப்படி மாற்றுவது? ஆகவே இந்தப் பழக்கத்தை அவள் கைவிடுவதற்கான வழிகளை சொல்லுங்கள்?

    பதில் :

    நகம் கடிக்கும் பழக்கம் உங்கள் தோழிக்கோ உங்களுக்கோ யாருக்கு இருந்தாலும் எளிதாக விட முடியும். அதற்கு முதல் வேலை அதென்ன கெட்டப் பழக்கம் இதை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் தான். இன்று முதல் ஒரு நாள் எத்தனை முறை நகங்களை கடிக்கிறீர்கள் என்று நீங்கள் எண்ண வேண்டும். எவ்வாறான நேரங்களில் கடிக்கிறீர்கள் என்பது தெரிய வேண்டும். ஆனால் எண்ணிக்கை சூழ்நிலை இரண்டையும் குறிப்பெடுக்க முன் வாருங்கள். எண்ணிக் கொண்டிருக்கும் போதே சிலர் அப்பழக்கத்தில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவார்கள். விடுபடாதவர்கள் மொத்த எண்ணிக்கையைப் பார்த்துவிட்டு அந்த செயல் மீதே வெறுப்பு கொள்வார்கள். உங்கள் விரல்களுக்கு சற்று அதிக வேலை கொடுங்கள் எழுதுவது, பெயிண்டிங் செய்வது, மெகந்தி போடுவது, தையல் பயிற்சி பெறுவது இப்படிப்பட்ட வேலைகளில் விரலுக்கு வேலை இருக்கும். கடிக்க விரலும் கிடையாது, ஒய்வாக இருக்கும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்வது இதில் கொஞ்சம் உச்சக்கட்டம்

    பொதுவாக ஒரு விஷயம் நகம் கடிக்கிறவர்களிடம் மனக் குழப்பம் அதிகம் இருக்கும் அமைதி இராது. பதட்டம் அடிக்கடி வரும் பதட்டமான நேரங்களில் அப்படியே விரல்களை வாய்க்குள் கொண்டு போய் நகங்களை கடி கடி என கடிப்பார்கள். மன அமைதி இன்மைக்கு என்ன காரணம் என்று பார்த்து அமைதி தேடுங்கள். இப்படியே அடிக்கடி கடித்தால் அழுக்கும் நகத்துண்டுகளும் வயிற்றுக்குள் போய் வயிற்றுப் பிரச்சனையை உருவாக்கப் போகிறது. வாய்க்குள் சுவையான எதையாவது போட்டு மெல்லவோ, சுவைக்கவோ செய்தால் நகம் கடிக்கும் பழக்கம் குறையும்.

    சிறு வயதில் பெற்றோரிடம் அதிகம் ஒட்டாமலும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் இருக்கும். குழந்தைளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் வருகிறது. கை சுவைத்தல், படுக்கையில் சிறு நீர் கழித்தல் போன்றவையும் இது போன்றதே.

    Share
  • திருமால் திருப்புகழ் (124)

    கிரேசி மோகன்

    Bhagavatha --Ulukala bandhanam - Keshav
    Bhagavatha –Ulukala bandhanam – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    —————————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    எத்தனை நாளுனைக், கற்பனையில் காண்பது,
    கத்தும் கடல்கிடக்கும் கார்முகிலே, -சித்தம்,
    குளிர எதிரே, குதித்து வருவாய்,
    ஒளிரும் இருளோய் உவந்து….(259)

    அலையானை பச்சை, மலையானை, கீதைக்,
    கலையானை, ராதைபேர் கேட்கச், -சிலையானை,
    கஞ்சன் குலயானை, கொன்ற இளையானை,
    நெஞ்சே நிலையாய் நிறுத்து….(260)

    தீதண்டும் நேரம், திருவள்ளூர் செல்வோரை,
    கோதண்டம் காக்கும் கவசமாய், -நீதெண்டம்,
    இட்டு சரணம், இயம்ப வினைகளின்,
    குட்டு வெளிப்படும் காண்….(261)

    அறங்காக்க அன்று, குரங்கோடு சென்று,
    திறங்காட்டிப் பத்தைத் துணித்தோய், -அரங்கேறி,
    உள்ளூறும் யோக, உறக்கத்தில் கண்விழிக்கும்,
    வள்ளூரின் ராகவா வா….(262)

    யாப்புக் கயிற்றில், எதுகையும் மோனையாய்,
    கூப்பிய கைகளில் கொண்டுவந்த, -பாப்பூக்கள்,
    மாலை தொடுத்தந்த, மாலைத் தொழுவோர்க்கு,
    மாலயம் வாழ்வில் மலர்….(263)

    வாடிக்கை ஆனது, வேடிக்கை ஆகவரும்,
    வாடிக்கை ஏந்தி விரையாதீர், -சூடிக்கை,
    மாலை சுமந்தவள், மாலை மணந்தாற்போல்,
    வேலை பொருத்து வேளை….(264)

    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

    Share
  • திருமால் திருப்புகழ் (123)

    கிரேசி மோகன்

    Hayagreevar - Keshav
    Hayagreevar – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    ———————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————-
    எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ‘’செட்டிப் புண்ணியம் அயக்ரீவர்’’ எழுந்தருளியபோது எழுதியவை….
    ——————————————————————————————————

    Dialogues with Arjuna series. #Krishnafortoday Keshav
    Dialogues with Arjuna series. #Krishnafortoday
    Keshav

     

    நிகமாந்த தேசிகன், நாவில் அமர்ந்து,
    புகழ்வாய்ந்த பாதுகையைப் பாடி, -அகமகிழ்ந்த,
    எண்ணியதை நல்கும், ஏற்றம் தரும்செட்டிப்,
    புண்ணியத்தில் வாழும் பரி….(252)

    புண்ணியச் செட்டியில், புண்ணாக்(கு) அளித்தனரோ!,
    நண்ணிய(து) ஏனங்கு நாலுகாலில்!, -கண்ணனே,
    பாரதப் போரில், பழகிய நன்றியோ!
    நீரதைப் போலின் நிலத்து….(253)

    கொள்ளுக்(கு) அடங்காய், கவிதே சிகன்கூறும்,
    சொல்லுக்குள் பாயுமுயர் ஜாதியே, -கல்விக்கு,
    வாய்த்த கடவுளே, வாணி அரிதாரா,
    போய்த்தவம் செய்யப் பழக்கு….(254)

    கட்டுக்(கு) அடங்காது, செட்டிக்குப் புண்ணியத்தை,
    கொட்டுமருள் கல்விக் குதிரையே, -குட்டக்,
    குளம்பால் தலையில், குருவே வருக,
    தளும்பா அறிவினைத் தா….(255)

    புல்லும், படிகநீரும், புண்ணாக்கும், கொள்ளும்நான்,
    அல்லும் பகலும் அளித்திடுவேன், -மெல்லும்,
    தலம்செட்டிப் புண்ணியத்தில், தங்கும் பரியே,
    பலனெட்டெட் ஆயகலை போடு….(256)

    ஊர்செட்டிப் புண்ணியத்தில், உய்யும் அசுவமே,
    மார்தட்டிச் சொல்லும் மடையன்நான், -சீர்கொட்டும்,
    வெண்பாக்கள் யாத்துன்மேல், வாழும் வரமருள,
    பெண்பால் பாரதியே பார்….(257)

    சண்டித் தனமாய், சகத்தில் உழல்கின்ற,
    நொண்டிக் குதிரைநான் நாரணா, -அண்டி,
    வருவாய் அருகே, குருவாகிக் காட்டு,
    பரிமேல் அழகா பரிவு….(258)
    —————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

     

    Share
  • இராணிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – மாணவர் பயிலரங்கம்.

    சொ. வினைதீர்த்தான்

    வணக்கம்.

    boy4
    இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 6.6.2014 அன்று பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்களில் படிக்கும் 130 மாணவர்களுக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு அமைந்தது. 2014 – 15 கல்வியாண்டில் நான் நடத்தும் முதல் பயிலரங்கு இதுவாகும். இராணிப்பேட்டைக்கு என் மகன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது பள்ளியின் முதுநிலை ஆங்கில ஆசிரியர் திரு சரவணன் அவர்களை அணுகி என்னுடைய தன்னார்வப் பணி குறித்து அறிமுகம் செய்துகொண்டேன். தலைமை ஆசிரியை திருமதி சந்தானம் மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த நாளே பயிலரங்குக்கு ஏற்பாடு செய்தார். வாய்ப்பில்லாத அரசுப் பள்ளி மாணவர்க்கு மிகத் தேவையான பயிற்சி எனப் பாராட்டினார்.

    boy

    உயர்நிலைப் பள்ளி 1928ல் தொடங்கப்பட்ட சிறப்புடையது. இங்குள்ள காந்தியடிகள் சிலையின் பீடத்தில் இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட காந்தி சிலை என்ற குறிப்புள்ளது.

    boy2

    boy 5பயிலரங்கு கற்றல், நினைவாற்றல் பெருக்கல் (Registration,Retention,Recall), குறிக்கோள் உணர்தல், குறிக்கோளை நிர்ணயித்தல், அடைதல், காலம் போற்றல், பெரியாரைப் பேணிக்கொளல், மனித உறவுகள் வளர்த்தல் என்ற வகையில் திருக்குறள், சிறுசெய்முறைகள், கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், வாழ்வியல்நெறி முறைகள் வழி அமைந்தது. பெற்ற தாய்க்கும், பிறந்த பொன்னாட்டிற்கும், வளர்த்த நூற்றாண்டு காணப்போகும் பள்ளிக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை மாணவர்க்கு உணர்த்தினேன்.

    வகுப்பறை 130 மாணவர் அமர்வதற்குச் சிறிய இடம் என்ற குறையன்றி நிறைவாகப் பயிலரங்கு அமைந்திருந்தது என்பது மாணவர்கள் எழுதித் தந்த பயிற்சி குறித்த கருத்துப் படிவங்கள் (FEED BACK)மூலம் புலனாகி மனதிற்கு நிறைவு தந்தது.
    நண்பர்கள் பார்வைக்குப் பள்ளி, பங்கேற்ற மாணவர், முதுநிலை ஆசிரியர் திரு சரவணன் படங்கள் பகிர்ந்துள்ளேன்.

    Share
  • விலைபோகும் விளை நிலங்களும், தொடரும் தவறான அணுகுமுறைகளும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    வாய்க்கால் பாசனம் பெறக்கூடிய விளை நிலங்கள் இன்று விற்கப்பட்டு அவைகளில் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்பட்டோ அல்லது மாற்று வழி பயன்பாட்டிற்கோ கொண்டுவரப்படுகின்றன. குளங்களும், வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலை மாறி அவைகள் அழிக்கப்பட்டு மனை நிலங்களாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. நல்ல குளப் பாசனங்கள் பெறும் ஒரு சில விளை நிலங்களும் மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த நிலை பாரபட்சமில்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுகின்றன. இதனை எந்த அதிகாரிகளும், கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு விவசாய விளை நிலங்கள் மாற்று வழிகளுக்குப் பயன்படுத்தப் பட்டால் இன்னும் குறுகிய காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அரசு இதில் கவனம் செலுத்தி விலை நிலங்கள் காக்கப்பட்டு வருங்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. அரசு, இந்த விற்பனையை உறுதி செய்பவர்கள், ஆவண பதிவாளர்கள் போன்றவர்கள் மூலமாகவோ அல்லது கிராம நிர்வாக அதிகாரிகள் மூலமாகவோ விளை நிலங்கள் பாழ்படுவதைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டியது உடனடித் தேவை.

    ரயில்வே நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இன்று பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கட்டணமும் 6.5 சதவிகிதம் கூட்டப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகம் கூறக்கூடிய காரணம் நிதி பற்றாக்குறை என்பதே. ஒவ்வொரு அரசும் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறி பயணிகள் கட்டணத்தையும், சரக்குக் கட்டணத்தையும் உயர்த்துவதே வழமையாகக் கொண்டுள்ளது. பற்றாக்குறையை சரி செய்வதற்கு மாற்று வழியை சிந்திக்க வேண்டியதை விடுத்து கட்டணத்தைக் கூட்டி மக்களின் தலையில் சுமையை அதிகரிப்பது வருத்தத்திற்குரிய விசயம். பயணிகளுக்குப் பயன்படும் தனியார் உணவகங்கள் அனைத்து புகைவண்டி நிலையங்களிலும் கொண்டுவருதலும், அங்கு பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய பரந்த இடங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் கொண்டு வருதலும், மின்சார ரயில் அதிகமாகப் பயன்படுத்தும் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரம் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதலும், நவீன முறையில் விளம்பரங்கள் செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் கிடைக்கும் அதிகப்படியான வருமானம் மூலமாக இந்தப் பற்றாக்குறையை சரி செய்ய முடியும் . இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் அரசு ஈடுபடுவதால் மக்கள் சுமை ஏறாமல் இருப்பதோடு, வேலை வாய்ப்புகளும் கூடுகிறது.

    மற்ற ஆட்சிகளைப் போலவே பாரபட்சமே இல்லாமல் விலை உயர்வுக்கு வரி விதிப்பே இந்த ஆட்சியிலும் காரணமாகியிருக்கிறது. சர்க்கரை ஆலைகளில் 4000 கோடி ரூபாய் வட்டி இல்லாத கடனாக அளித்து விவசாயிகளின் பாக்கிகளை நேர் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுவுமின்றி அவர்கள் கட்ட வேண்டிய சுங்க வரி செலுத்துதலையும் ஐந்து ஆண்டுகள் வரை காலக்கெடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆலைகளுக்கு கரும்பு வந்தவுடன், அதிலிருந்து சர்க்கரை எடுக்கப்பட்டு, ஆலைகளை விட்டு அது வெளியேறும்போது சுங்க வரியுடனும், அவர்களுடைய இலாபத்துடனும், பணமாகப் பெற்றுக்கொண்டு அதற்குப் பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இது ஒரு கிலோ சர்க்கரையாக இருப்பினும் அல்லது 120 மூட்டை (12 டன்) ஏற்றக்கூடிய அளவாக இருப்பினும் ஆலை முதலாளிகள் பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகே சர்க்கரை வெளியேறுகிறது. இப்படி ஒரு நிலையில் 4000 கோடி ரூபாய் வட்டியில்லாத கடன் அளித்தும், சுங்கவரி கட்டுவதற்கும் காலக்கெடுவை நீட்ட வேண்டிய தேவை என்ன என்ற ஐயமும் எழுகிறது. ஏழை விவசாயிகளின் கரும்புக்குத் தர வேண்டிய தொகையைக் கொடுக்காமல் இயங்கக் கூடிய ஆலைகளின் நிர்வாகத்தை சீர் செய்யவேண்டியதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டியதும் அரசின் கடமை. அது போலவே ஆலைகளில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களைக் காப்பதும் அரசின் கடமை. நிர்வாகங்கள் செய்யக்கூடியத் தவறுகளால் வறுமையின் காரணமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளைக் காக்க வேண்டியது அவசியம். திரு மோடி அவர்களின் அரசு மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில் இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தி நம் பொருளாதார நலிவுகளுக்கு முக்கிய காரணமாக இது நாள் வரை இருந்த நிர்வாகச் சீர்கேடுகளை சீர் செய்து வளமான பொருளாதாரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இறக்குமதி செய்யக்கூடிய சர்க்கரைக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியதால், ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் விலை ஏற்றம் மக்களுக்குச் சுமையாகியுள்ளது. விலை ஏற்றத்தைத் தவிர்க்காமல் விலை ஏற்றத்திற்கு அரசு துணை போவதால் பண வீக்கம் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாமல் போகும்.

    Share