Blog

  • மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

     

    மலர் சபா

     
    கொடும்பாளூரை அடுத்த நெடுங் குளக்கரையில் வழி முப் பிரிவாகப் பிரிதல்

    அங்கே இருக்கின்றmalar
    கொடும்பாளூர் நெடுங்குளம் என்ற
    இரு ஊர்களுக்கு இடையே உள்ள
    கோட்டகத்துக்குள் புகுந்து சென்றால்
    அந்த அரிய வழி
    பிறை நிலவதனைத் தன் தலையில் சூடிய
    பெருமை வாய்ந்த இறைவன் சிவபெருமான்
    கையில் ஏந்தியுள்ள
    மூன்று தலை கொண்ட திரிசூலம் போல்
    மூன்றாகப் பிரிந்து செல்லும்.

    வலப் பக்கம் செல்லும் வழி

    அங்ஙனம் காணப்படும் மூன்று வழிகளுள்
    நீங்கள் வலப்புறம் உள்ள வழியில் செல்ல விரும்புவீராயின்
    விரிந்து அகன்ற தலையை உடைய வெண்கடம்ப மரமும்
    காய்ந்து உலர்ந்த தலையை உடைய ஓமை மரமும்
    அடைப்பகுதியாகிய தாள்கள் பொரிந்து காணப்படும் வாகை மரமும்
    காய்ந்த தண்டுடன் விளங்கிடும் மூங்கில் மரமும்
    நீர் வற்றியதால் சுருங்கி வரிகளுடன் விளங்கிடும்
    சப்பாத்திக் கள்ளிகள் கரிந்து கிடக்கும் இடங்களையும்..

    நீர் பருக விரும்பி வேட்கையாலே
    மான்கள் அலைந்து திரிந்து சத்தமிடும்
    காட்டினையும் இடையிடையே
    பாலைவாழ் மக்களாகிய எயினர் வசிக்கும்
    பாலை நிலங்களைக் காண்பீர்கள்.

    அவற்றைக் கடந்து சென்றபின்,
    ஐவனம் என்னும் நெற்பயிர்கள் விளையும் கழனி,
    இலையற்ற கணுக்களையுடைய கரும்புச்சோலை,
    கொய்யும் பருவம் அடைந்திட்ட அழகிய திணைப்புனம்,
    கொழுவிய கொல்லையில் விளைந்திட்ட வரகு,
    வெள்ளுள்ளி மஞ்சள்
    அழகிய கொடியுடைய கவலைக் கிழங்கு,

    வாழை கமுகு,
    தாழ்ந்த குலையாகத் தொங்குகின்ற தென்னை,
    மா பலா இவை யாவும்
    அடுத்தடுத்துச் சூழ வளர்ந்திருக்கும்
    பாண்டிய மன்னனுடைய
    ‘சிறுமலை’ எனும் ஊரைக் காணலாம்.

    அம்மலை உங்கள் வலது புறமாக வரும்படி
    நீங்கள் சென்றால்
    அகன்ற நகரான மதுரை மாநகரை அடையலாம்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 71 – 86

    படத்துக்கு நன்றி:
    Share
  • சிறுகை அளாவிய கூழ் (18)

     

    இவள் பாரதி

     

    இரையள்ளித் தூவியதும்ival
    கூட்டமாக நீந்திவரும்
    தொட்டிமீன்களைப் போல
    வீட்டுக்குள் நுழைந்ததும்
    கைகளையும், தலையையும் அசைத்து
    தத்திவந்து
    தாவியேறுகிறாய்
    ஆடைகளைப் பற்றி
    என்னுடல்மீது

    —————

    வெற்றிடம் நோக்கி விரையும்
    திரவத்தைப் போல
    அம்மாகுட்டி ஓடுகிறாள்..

    ஓடிப்பிடிக்க முடியாமல்
    தடுமாறும் பாட்டி
    குரலில் கடுமை காட்டுகிறாய்..

    திரும்பிப் பார்த்துச் சிரித்து
    மேலும் வேகமெடுத்து ஓடுகிறாள்
    பின்னால் விரையும் பாட்டி
    எட்டிப் பிடிக்குமுன் மாடிப்படியேறி
    மேலே போய் நின்றபடி
    இருகையையும் நீட்டுகிறாள்

    பதறும் பாட்டி
    முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு
    மெதுவாக படியேறி குட்டியைப்
    பிடித்தபின் மூச்சுவாங்கி
    கீழிறங்குகிறார்கள் இருவரும்
    வழிகாட்டிச் செல்கிறது
    இருவரது நிழலுக்கும் நடுவில்
    எறும்பொன்று

    Share
  • கடவுளின் குதிரை !

    சி. ஜெயபாரதன்image

    காலமே கடவுளின் கடிவாளக்
    குதிரை !
    கண்ணுக்குத் தெரியா தோடும்
    விண்வெளிக் குதிரை !
    முடிவும் முதலு மற்ற
    வடிவிலாக் குதிரை !
    ஓயாது ! சாயாது ! ஓடாமல்
    உறங்காது !
    முற்காலம், பிற்காலம், தற்காலம்
    கொண்ட
    கற்காலக் குதிரை !
    முன்னே பாயும் ! பின்னே பாராது !
    நேராகச் செல்லும் !
    பாதை மாறாது ! பயணம் கோணாது !
    வேகம் மாறாது !
    விந்தை தீராது ! புதிர் தேராது !
    திசை மாறிப் போயினும்
    விசை மாறாது !
    விண்வெளியில் பல்கோடி
    ஒளிமந்தையை இழுத்துச் செல்லும்
    கருங்குதிரை !
    காலத்தை நிறுத்தி வைக்கக்
    கடவுளுக்கும்
    முடிய வில்லை !
    காலத்தின் மூச்சு நின்றால்
    ஞாலமும் சுழலாது !
    ஆதி முதல் தோன்றி
    ஊதி உப்பிடும்
    காலவெளிப் பலூனும் சப்பி
    வேலி யற்றுப் போகும்

    Share
  • அன்பு மணிமொழிக்கு …

    அன்பு மணிமொழிக்கு,

    உன் அக்கா தேமொழியின் அன்புக் கடிதம். ‘அன்பு மணி’ என்றுதான் எழுத நினைத்தேன்…ஆனால் நான் உன்னை ‘மணி’ என்றழைத்தால், “மணி என்று நாய்க்குட்டிக்குத்தான் பெயர் வைப்பார்கள், நான் என்ன நாய்க்குட்டியா? மணிமொழி என்று கூப்பிடு” என்று நீ அதட்டுவதும் நினைவு வந்தது.

    letter to manimozhiநமக்குள் ஒரு வயதே வித்தியாசம் (சரியாக எனக்குப் பிறகு 500 நாட்கள் கழித்துப் பிறந்தவள் நீ) என்ற காரணத்தால் நம்மிருவருக்கும் சகோதரிகள் என்பதைவிடத் தோழிகள் என்ற அளவிற்கும் உறவு இருந்தது.

    எத்தனை எத்தனை இனிய நினைவுகள் நாம் வளர்ந்த காலத்தில்… என்னை நீ “ஏய்…தேமொழி” என்று அழைப்பதைக் கேட்டு நம் பாட்டிக்கு வருமே கோபம் அதையும் நான் மறப்பதற்கில்லை. அந்தக் கோபத்தில் தனது பொக்கை வாயில் இல்லாத பற்களை அவர்கள் கடிக்கும் பொழுது, அதைப் பார்த்து உனக்கு வருமே சிரிப்பு, அதையும் நான் மறப்பதற்கில்லை. அவர்களுக்கு கோபம் வரவழைக்கவே நீ மீண்டும் மீண்டும் “ஏய்.. தேமொழி” “ஏய்.. தேமொழி” என்றழைத்து அவர்களுக்கு எரிச்சலூட்டுவாய்.

    அவர்கள் எதிர்ப்பை நீ பொருட்படுத்தியதே இல்லை. அவர்கள் மட்டுமா நீ அவ்வாறு அழைப்பதை மாற்ற முயன்றார்கள். அப்பாவும்தான் முயன்று பார்த்தார்கள். அதற்காக அப்பாவும் முன்னுதாரணமாக இருக்க விரும்பி என்னை “அக்கா” என்று கொஞ்ச காலம் கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஆனால் நீயோ அல்லது தம்பியோ அவ்வாறு என்னை “அக்கா” என்று அழைக்காமல் பெயர் சொல்லித்தான் அழைத்தீர்கள். கடைசியில் “அக்கா” என்றழைத்தது அப்பா மட்டுமே என்ற ஒரு நிலை வந்ததும் அப்பாவும் அவர்களது முயற்சியை கைவிட்டு விட்டார்கள்.

    முதல்வர் ஜெயலலிதாவை எல்லோரும் ‘அம்மா’ என்றழைப்பது போல, உனது தோழிகள், நம் தம்பியின் நண்பர்கள், கல்லூரியிலும் பள்ளியிலும் பயின்ற காலத்தில் என்னைவிட இளைய மாணவர்கள் பலரும் அந்த நாட்களில் என்னை “அக்கா” என்றுதான் அழைத்தார்கள். பிறகு இப்பொழுது கூகிள் குழுமங்களிலும் என்னைப் பலர் அப்படி ‘அக்கா’ என்றுதான் அழைக்கிறார்கள்.

    இப்பொழுதெல்லாம் நாம் வளர்ந்தபொழுது நிகழ்ந்த பல இளம் பருவ நினைவுகளை அசைபோடுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது. அம்மாவுக்கு இருந்த ஆசையில் நமக்கு ஒரே துணியில் சீருடை போன்று அணிவித்த கவுன்கள், பாவாடை சட்டைகளில் உலாவந்தது நினைவிற்கு வருகிறது. என்னதான் ஒரே போன்ற ஆடை உடுத்தினாலும் பம்ப்ளிமாசாக இருந்த…இருக்கும் நானும், காற்றில் பறந்துவிடும் அளவிற்கு எலும்பு மேல் தோல் போர்த்திய அளவிற்கு மெல்லிய உருவமான நீயும் ஒரே போன்று என்றுமே இருந்தில்லை. விவேகானந்தர் பாறைக்கு நாம் சென்ற பொழுது பலமாக வீசிய காற்றில் நீ தள்ளாடுவதைப் பார்த்த அப்பாவின் நண்பர், “மணி, அக்கா கையப் பிடிச்சிக்கோம்மா, காத்தில பறந்திடப் போற” என நம்மிருவரையும் ஒரே சமயத்தில் கலாய்த்ததும் நினைவு வருகிறது.

    உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் நாம் இருவரும் என்றுமே இரு துருவமாகத்தான் இருந்திருக்கிறோம். அம்மா என்னுடைய மனம் கல் என்று என்னைத் திட்டுவார்கள், கண்ணில் சுலபமாக கண்ணீர் வரவே வராது, அப்படியே உனக்கு உன் அப்பாவின் குணம் என்று சொல்வார்கள். ஆனால் நீ அம்மா இறந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தால் பொசுகென்று அழுதுவிடுவாய், பொல பொலவென்று கண்ணீர் வரும், அம்மாவைப் போலவே மென்மையான, இளகிய மனம் உனக்கு.

    எத்தனை எத்தனை சுவையான இனிய இளம் பருவ நினைவுகள் நமக்கு. இருவரும் செவன்த் கிராஸ் முக்கில் இருக்கும் பாய் கடைக்கு ஓடிப் போய் பட்டம் வாங்குவோம். எனக்கு எப்பொழுதும் வயலெட் வண்ண பட்டம்தான் வாங்குவேன். உனக்கு “என்ன பாப்பா உனக்கு ருக்குமிணி கலர் பட்டமா?” என கடைக்கார பாயே கேட்டு சிரித்துக் கொண்டே வெளிர் நீலவண்ணப் பட்டத்தை உனக்குக் கொடுப்பார். அவருக்கும் உன் விருப்பம் நன்கு தெரியும். “ருக்குமணியே பர பர” என்றப் பாட்டு பிரபலமான காலம் அது. “அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா” என்று நாமிருவரும் சேர்ந்து நடனம் ஆடுவோம். டர்க்கி டவலை முந்தானை போல தோளில் போட்டுக் கொண்டு டீச்சர் விளையாட்டும் விளையாடுவோம்.

    உனக்கு எப்பொழுதும் நீதான் கடைசி வார்த்தை சொல்ல வேண்டும். எந்த விவாதம் என்றாலும் நீ சொல்வதுதான் கடைசி வார்த்தையாகவும் இருக்கும், last word freak என்று ஆங்கிலத்தில் அழைப்பார்களே, அது போல என்று நினைத்துக் கொள்வேன். அது போலவே நீதான் முதலில் வரவேண்டும் என்று செயல்படுவதைப் பலமுறை பார்ததுண்டு. ஒருமுறை, சிறுமியாக நீ பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது எதிர் திசையில் வேலையிலிருந்து அப்பாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். உடனே நீதான் முதலில் வீட்டிற்குப் போக வேண்டும் என்று வீட்டை நோக்கி ஓட, அப்பாவும் பதிலுக்கு விளையாட்டாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பிக்க, தெருவில் போனவர்கள் அந்தப் போட்டியைப் பார்த்து சிரிக்க, அது நல்ல வேடிக்கையாக அன்று இருந்தது.

    அது மட்டுமா, பள்ளி செல்லும் பொழுது வக்கீல் வீட்டுப் பெண் சித்திராவை வழியில் பார்த்தால் நீ ஓட்டமும் நடையுமாக முந்தப் பார்ப்பாய், அந்தப் பெண்ணும் சளைக்காமல் வேகமெடுக்க, பிறகு பள்ளிக்குச செல்வது உங்களிருவருக்கும் ஓட்டமும் நடையுமாகத்தான் இருக்கும். ப்ளஸ் டூ படிக்கும் பொழுது, உன் தோழி வாசுகிக்கு ஃபோன் போடுவாய். அந்தப் பக்கம் வாசுகி இந்த இந்தப் பாடம் படித்தேன் என்றால், உடனே போட்டி தொடங்கிவிடும். நீயும் முந்துவதற்ககாக விழுந்து விழுந்து படிப்பாய். அந்த ஆரோக்கியமான போட்டியினால் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கும் சென்றாய்.

    ஒருமுறை அம்மா என்னிடம், இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்ததே என்று நீ பிறந்த பொழுது கொஞ்சம் வருத்தமாக இருந்ததென்றும், ஆனால் நீ அப்பாவுக்கு அசிஸ்டெண்ட் போல ஸ்டெத்தஸ்கோப் அணிந்து அப்பாவுடன் ஹாஸ்பிட்டல் வார்டில் சுற்றி வருவதைப் பார்த்துப் பிற்காலத்தில் பெருமையாகவும் இருந்தது என்றும் சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு நம்மூவரிலும் அம்மா உயிருடன் இருக்கும்பொழுது அவர்களைப் பெருமைப்பட, மனம் மகிழ வைத்தது நீதான். இவ்வாறு மருத்துவம் படிக்க உனக்கு உதவியது படிப்பில் முந்த வேண்டும் என்ற உனது மனப்பான்மை.

    ஆனாலும் மணி, எல்லாவற்றிலும் முந்த வேண்டும் என்ற எண்ணம் உனது குணமாகிப் போனதில், இப்படி எங்கள் அனைவருக்கும் முன்னரே உலகை விட்டு மறையவும் முந்துவாய் என நான் நினைத்தும் பார்த்ததில்லை. மனம் ஒப்புக் கொள்ள இயலாத அதிர்ச்சிதான் இது. அயல் நாட்டில் வாழ்பவர்களின் இயலாமைகளில் ஒன்று வீட்டில் நடக்கும் பல நிகழ்வுகளில் பங்கு பெற இயலாமல் போவது. நான் உனது பட்டமளிப்பையும் பார்த்ததில்லை, திருமணத்திற்கும் வந்ததில்லை, உனது மகன் பிறந்தபொழுதும் செய்திதான் கேட்டேன், சென்ற 2013 அக்டோபரில் நீ இறந்த பொழுதும் வரமுடியாது போனது.

    வல்லமையில்’சிறுகதைப் போட்டி’ முடிந்து அதைத் தொடர்ந்து ‘புத்தக மதிப்புரை’ போட்டி பற்றிய அறிவிப்பு வந்த நேரம் அது. உன் நினைவாக வல்லமை இதழில் நானும் ஒரு கவிதைப் போட்டியை அறிமுகப்படுத்தி அதற்குப் பரிசு வழங்கினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. புத்தக மதிப்புரை போட்டி முடிவுக்கு வந்த பிறகு (அதில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது, ஆனால் அதை உன்னிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு வாய்ப்பில்லாது போனது ஒரு சோகம்) வல்லமை இதழின் ஆசிரியர் பவள சங்கரியையும், நிறுவனர் அண்ணாகண்ணனையும் அணுகி என் வேண்டுகோளை வைத்தேன்.

    போட்டியை எனது எண்ணப்படி கவிதைப் போட்டியாக வைக்கலாமா? அதற்கு இசைக்கவி இரமணன் நடுவராக இருக்க சம்மதிப்பாரா? போட்டியில் மணிமொழி என்ற தலைப்பு இருக்க வேண்டும் என்று நான் வைக்கும் வேண்டுகோள் கவிதை எழுதுபவர்களில் சிந்தனை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாதா? ஏற்கனவே கதை, கட்டுரை போன்ற போட்டிகளை அறிவித்தாகிவிட்ட நிலையில் மீண்டும் அது போன்ற போட்டிகளையே தேர்ந்தெடுக்கத் தேவையா? என்றுப் பலப்பல கேள்விகளை வல்லமையின் நிர்வாகக் குழு அலசி ஆராய்ந்து, அதற்கு பல யோசனைகளும் முன் வைக்கப்பட்டன. அதில் அண்ணாகண்ணன் முன் வைத்த ‘கடித இலக்கியப் போட்டி’ குழுவினருக்குப் பிடித்துப் போய்விட அந்த வழியிலேயே தொடர்ந்து போட்டியும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் சொன்னால் நீ நம்ப மாட்டாய் மணி, அறுபதுக்கும் மேற்பட்ட “அன்புள்ள மணிமொழிக்கு” கடிதங்கள் போட்டிக்காக அனுப்பப்பட்டன. r u ok? LOL, how r u? என்று குறுஞ்செய்திகளில் பழகிப்போன நம் மக்கள் ஆர்வத்துடன் கடிதங்கள் எழுதினார்கள். கடித இலக்கியப் போட்டி என்ற ஒன்றை அறிவித்ததற்காக எனக்குப் பல பாராட்டுகளும் கிடைத்தன. ஆனால் அத்தனைப் பாராட்டிற்கும் உரியவர் நிறுவனர் அண்ணாகண்ணன் அவர்கள்தான். அவர் முன்மொழிந்த ‘கடித இலக்கியப் போட்டி’ என்ற யோசனை ஒரு நல்ல யோசனைதான். நானும் வல்லமை நிர்வாகக் குழுவினர் போட்டியை முன்னின்று நடத்தும் பொழுது இடையில் உண்மை விளம்பியாக, இதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர் அண்ணாகண்ணன் என்று அறிக்கைகள் விட்டுக் குளறுபடி செய்யக் கூடாது என்று பொறுமை காத்தேன்.

    போட்டியின் முடிவுகள் வெளியாகிவிட்டன. இனி இந்தத் தகவலை, பாராட்டிற்கு உரியவர் அண்ணாகண்ணன்தான் என்று நான் சொல்லிவிட்டால் எனக்கும் நிம்மதி. சிறந்த கடிதங்களை நடுவர் இசைக்கவி இரமணன் தேர்ந்தேடுத்தார். நான் நினைத்தது போலவே, அவரும் இத்தனை அருமையான கடிதங்களில் எவ்வாறு சிறந்த கடிதங்கள் என்று மூன்றையும், ஆறுதல் பரிசுகளுக்கு என்று மேலும் ஒரு மூன்றையும் மட்டும் தேர்ந்தெடுக்க முடியும், அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாக இல்லையே என்று கருதி அவரும் மேலும் ஆறு சிறப்புப் பரிசுகளை வழங்கிவிட்டார். இதற்கும் மேல் போட்டிக்கு வந்த கடிதகளின் சிறப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

    ஆனால் நீ எதையும் படிக்கப் போவதில்லை மணி, அதனால் அதற்காக நான் வருந்தப் போவதுமில்லை. பள்ளி நாட்களில் உனக்கு தமிழ் இரண்டாம் தாளில் கற்பனைக் கட்டுரையாக ‘இரயில் தனது வரலாறு கூறுதல்” பற்றி எழுதச் சொன்னாலே உனக்கு கற்பனை வராமல் அழுகைதான் வரும் என்பது எனக்குத் தெரியும். இது போன்ற இலக்கியப் போட்டிகளில் என்றும் உனக்கு ஆர்வம் இருந்ததில்லை. கதை படிக்கும் பொழுது, பெரிய பெரிய பத்திகளாக இருந்தால், அவற்றைத் தவிர்த்துவிட்டு, தாவித் தாவி மேலே படிப்பாய். பின்னர் முடிவைப் படித்த பிறகு கதை உனக்குப் புரியாமல் போகும். நானும் தம்பியும்தான் உனக்குக் கதையினைச் சொல்லி விளங்க வைக்க வேண்டி வரும், எனக்கு அது மறக்குமா?

    நீண்ட கட்டுரைகள், கடிதங்கள் உனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் நான் எழுதும் மிக நீண்ட கடிதம் இது. நீதானே சொல்லுவாய், “சும்மா நீள நீளமாகப் பேசிக்கொண்டே இருக்காதே, நீ சொல்ல வேண்டியதை எல்லாம் எழுதி ஒரு புத்தகமாகப் போடு, எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது படிக்கிறேன்,” என்று அதுவே என் நினைவில் இப்பொழுதும் இருக்கிறது. அதனால் நான் நினைப்பதை நீண்ட கடிதமாகவும் எழுதிவிட்டேன், நான் ஒரு சிறுகதைப் புத்தகமும் எழுதி வெளிவந்துவிட்டது, ஆனால் உனக்குத்தான் இப்பொழுது இவற்றையெல்லாம் படிக்க நேரமில்லாது போய்விட்டதே என்ற ஆற்றாமையும் வருகிறது. என்றும் என் நினைவில் நீங்காதிருப்பாய் என் அன்பு மணிமொழி.

    உன் அன்பு அக்கா,
    தேமொழி

    Share
  • ஆண்டுவிழா போட்டி வசந்தம் கவிதை

    விசாலம்

    20100922_3887

    இயற்கை அன்னையே !
    நீ தந்தாய் ஒரு வசந்த காலம் .
    காலங்களின் ஒரு சிறந்த காலம் .
    சின்னஞ்சிறு செடியின் தளிர்ப்பு,
    காணுகின்றேன் பூவின் மலர்ப்பு ,
    அருகே நடக்க வீசும் நறுமணம்
    அடுத்தடுத்து மலர்கள் பல வண்ணம் ,

    மலர்கள் மலர்ந்தது எப்படி ?
    மணம் வந்தது எப்படி?

    மலரைக்கண்டு வந்த வண்டு ,
    வண்ணக்கலவை பலவும் கண்டு ,
    சுற்றிச்சுற்றி ரீங்காரம் கொண்டு
    மகரந்தத்தின் சுவையைக் கண்டு
    தேனைக்குடித்த மயக்கம் என்ன?
    ஆனந்தத்தின் எல்லைத்தான் என்ன ?

    அந்தத் தேன் வந்தது எப்படி?
    அதில் இனிப்பு வந்தது எப்படி?

    சூரியகாந்தி மலர் கண்ட சூரியோதயம்
    கிழக்கு திசையில் சிவந்த பொன் உதயம்,
    சூரியனின் வழியில் தியானப் பார்வை
    அழகு புறாக்கள் பறக்கும் கோர்வை ,
    நிலவைப்பார்த்து நிற்கும் அல்லிமலர்,
    மகிழ்ந்து இதழ் விரிக்கும் வெள்ளை மலர்.

    காலையில் தாமரை மலர்வது எப்படி?
    இரவில் அல்லி மலர்வது எப்படி?

    பச்சை நிறத் தளிர்ச்செடிகள்,
    கம்பளம் போல் நிறைந்த புற்கள்,
    தென்றல் வீச அசையும் மரங்கள்,
    சிட்டுக்குருவி கட்டும் கூடுகள்,
    சிற்பிகளுக்கு எட்டாத வினோதங்கள்,
    வண்ணாத்தியின் வண்ணக்கலவைகள்.

    அந்த வண்ணக்க்லவை வந்தது எப்படி?
    வசந்தமே உன்னைப்படைத்தது எப்படி?

    Share
  • காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது

    காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது – கவிஞர் வாலி

    1975ல் வெளிவந்த மன்னவன் வந்தானடி திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலியின் கைவண்ணம்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மஞ்சுளா நாயகியாக திரையில் எழுதப்பட்ட இனிய காதல் கவிதையிது! கொஞ்சும் தமிழெடுத்து காதலியைக் கொஞ்சும் வண்ணங்கள்.. குளிர்நீரில் நீந்தும் பனிக்காற்றில் பொங்கும் எண்ணங்கள்! தமிழின் இனிமை என்னவென்று தாராளம் காட்டும் பாடலில் ஏற்ற இசை கொடுத்து இனிய குரல்களின் சங்கமம் இதோ டி எம். சௌந்தரராஜன் மற்றும் பி.சுசீலா..

    hqdefault

    காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
    இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது
    கண்ணான கண்மணி வனப்பு கல்யாணப் பந்தலின் அமைப்பு
    தேவ தேவியின் திருமேனி மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு
    காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
    இது மன்னன் மாடத்து நிலவு என் மார்பில் நீ வந்து உலவு

    ராஜராணியின் காதல் உலா இது. கற்பனைகள் வரிசையாய் உற்சவம் நடத்தும் உன்னதம் இங்கே.. காதலர் இருவருக்காக.

    திங்கள் ஒரு கண்ணில் குளிர் தென்றல் மறு கண்ணில் தாலாட்டும் பெண்மை இது
    வைகை மலர்ப்பொய்கை என மங்கை மணிச் செங்கை நீராட்டும் நேரம் இது
    தென்பாண்டித் தேவனின் அணைப்பு குற்றாலத் தென்றலின் நினைப்பு
    ராஜ லீலைகள் இதுதானோ உள்ளம் பொல்லாத ஆனந்தத் தவிப்பு

    (காதல்)

    வாலி எந்த நூற்றாண்டுக்குள் நுழைந்து தந்த தமிழோ? உற்சாகம் ஊற்றெடுக்க.. உள்ளம் குதூகலிக்க எண்ணம் சிறகு விரித்து எங்கோ பறப்பது போல்.. இந்த இன்பத் தமிழ் காண இதயம் என்றும் விரும்புமே!

    கொஞ்சும் தமிழ் மூன்றும் தரும் சந்தம் அதில் தோன்றும் தானாகப் பாடல் வரும்
    தத்தும் கிளி நித்தம் மணி முத்தம் இடும் சத்தம் தேனாகக் காதில் விழும்
    சிங்காரப் பொன்மகள் சிரிப்பு சங்கீத வீணையின் படைப்பு
    அழகு தேவதை அலங்காரம் கம்பன் சொல்லாத காவியச் சிறப்பு

    (காதல்)

    அன்பின் சந்தம் அள்ளி எடுத்து அதையே பாடல் வரிகளாக்கிக் கொடுக்கும் திறம் அன்னவருடையது என்பதை பறைசாற்றுகிறார்.
    பொங்கி வரும் சந்தம் முத்தமிடும் இசை.. இரண்டையும் சிந்தாமல் சிதறாமல் ஏந்திவந்து நம் இதயம் நிறைக்கும் குரல்கள்.
    வாழ்க்கையில் அவ்வப்போது இனிமை சேர்க்க இதுபோன்ற பாடல்களில் சரணடைவோமே!

    Kadhal Rajiyam Enadhu

    Share
  • வார ராசி பலன் 28.04.14-04.05.14

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்:மாணவர்கள் உங்கள் கருத்துக்களை கோர்வையாகச் சொன்னால், எவரிடமும் நல்ல பெயரை பெற்றுவிடலாம். பெண்கள் பேச்சில் இனிமை இருந்தால், உறவுகளும் இனிமை யாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். கலைஞர்கள் கடுமையாக உழைத்தால், தடை என்ற சொல்லுக்கு இடமின்றி வெற்றி கள் வந்து குவியும். பொது வாழ்வில் இருப்போர்கள் பிறருக்காக கடன் பட நேரிடும் . எனவே எதிலும் அளவாக இருப்பது நல்லது. பெண்கள் பணியிடத்தில் கோபதாபங்களுக்கு இடம் கொடாமல் இருந்தால், உங்கள் கௌரவம் சிறப்பாகவே இருக்கும். முதியவர்கள் மனதில் சிலசமயம் எதிர்மறையான எண்ணங்கள் ஓடும். அதனை மற்ற தியானம்,மூச்சுப் பயிற்சி மற்றும் நல்ல பொழுது போக்கு அம்சம் ஆகியவற்றில் தங்கள் கவனத்தை திசை திருப்புவதே புத்திசாலித் தனம்.
    ரிஷபம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு ஏமாற்றமாய் இருந்த விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். வியாபாரிகள் பண விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. மாணவர்கள் உங்கள் அமைதி, கடும் வார்த்தைகளாலும், அவசர செயல்களாலும் பாதிப்படையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அலுவலக அளவில் நட்புகளை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொண்டால்,மன சஞ்சலம் குறைவதோடு அதிக இழப்புகளும் இராது. சுய தொழில் புரிபவர்கள் ஆரம்ப முயற்சிகளில் சுணக்கம் காட்டாமலும் இருந்தால், வெற்றி வரும் வழி, லாபம் இரண்டும் உறுதியாகும்.
    மிதுனம்: வாடிக்கையாளர்களின் வரவால், வியாபாரிகள் மகிழ்வர். இந்த வாரம் தந்தை வழி உறவுகளுடன் மோதல், அதிருப்தி அன்று அங்கலாய்த்துக் கொள்ளும் நிலை இருந்தாலும்,பக்குவமாக நடந்து கொள்வது புத்தி சாலித்தனமாகும். கலைஞர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். பணி சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகலாம். பணியில் இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் சில சலுகைகளை அளிப்பது, விதிமுறைகளைத் தளர்த்துவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கௌரவம் குலையாமலிருக்கும்.

    கடகம்: பெண்கள் தங்களின் உயர்வான எண்ணங்கள் ஈடேறுவதற்கு ஆரோக்கியம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் ஈடுபாடோடு எந்த செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும். பிள்ளைகள் பெற்றோர்களின் மனதிற்கேற்ப நடந்து கொள்ள முன்வருவார்கள். நண்பர்கள் பிணக்கை மறந்து இணக்கமாக நடந்து கொள்வர் . பணியில் உள்ள ஒரு சிலருக்கு தேவையில்லாத இடமாற்றம் உண்டாகும். கலைஞர்கள் உங்கள் புகழைக் கண்டு பொறாமைப் படுபவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். மறைமுக எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட மன உறுதி தேவைப்படும்.
    சிம்மம்:. பங்கு தாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் வீண் சண்டைகளைத் தவிர்த் தால், வெற்றிக்கான வாய்ப்பு கை நழுவாமல் உங்கள் வசம் இருக்கும். எடுத்தகாரியம் யாவும் நன்கு முடிவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் தன்னம்பிக் கையுடன் செயலாற்றுவார்கள். கலைஞர்கள் கடன் தொல்லைகளிலிருந்து பெருமளவு விடுபடுவர். எனினும் எந்த சூழலிலும் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாமலிருப்பது அவசியமாகும். பிள்ளைகள் வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் அவர்களின் நடவடிக்கையை கவனித்து வருவதோடு இதமாக புத்தி சொல்லித் திருத்தினால், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.
    கன்னி: முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவர்கள், சிந்தனையை பணியில் செலுத்தி எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும்,வியாபாரிகள் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். கவனக் குறை வாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களு க்குச் செல்பவர்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் பெண்கள் இல்லத்தை அழகு படுத்தும் பணிகளை விருப்பத்துடன் செய்வார்கள்.

    துலாம்: நாணயத்தின் அடிப்படையில் செயல்பட்டால் எந்த ஒப்பந்தமும் எளிதில் கலைஞர்கள் வசமாகும். பணியில் இருப்பவர்கள் அதிகமாகப் புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப் பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசி தமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். குற்றம் சொல்லும் உறவினரின் தேவைகளை பெண்கள் முதலில் பூர்த்தி செய்தால், இல்லம் அமைதியாக இருப்பவும், உறவுகள் வலுவாகவும் திகழும். மாணவர்கள் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகளை சண்டைக்குக் காரணமாக்குபவர்களிமிருந்து விலகி இருங்கள். பாதி பிரச்னைகள் தானே குறைந்து விடும்.
    விருச்சிகம்:மாணவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். கலைஞர்கள் வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுப்பதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் பெண்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புக்களையும் நழுவ விடாமல் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும்.கடினமான பணிகளில், மூத்த அதிகாரிகளின் ஆலோச னையை பின்பற்றுதல் நலம் .
    தனுசு: வீடு,மனை விஷயங்கள் உங்களுக்கு சாதகமாய் முடிய, சமாதானமாய் போவது புத்திசாலித் தனமாகும்.மாணவர்கள் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் இருப்பது அவசி யம். வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருப்பதால், வியாபாரிகள் கட்டட விரிவாக்கம் ஆகியவற்றை சற்று ஆறப் போடுவது நல்லது. பெண்கள் உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் ரகசியங்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் அதனைத் தீர்க்கும் நபரிடம் பொறுப்புக்களை அளிப்பது அவசியம்.
    மகரம்:கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சலுகையை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலி ருக்கும். சுய தொழில் புரிபவர்கள் காலத்தின் மதிப்பும் அருமையும் உணர்ந்து செயல்பட்டால், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். வியாபாரிகள் சுகமான வாழ்க்கைக்கு ஆசைபட்டாலும்,இந்த வாரம் அங்கும், இங்கும் சுற்றித்திரியும் நிலைதான்
    கும்பம்: வண்டி வாகனங்களை வாங்கி விற்பவர்கள் முறையான வழியைக் கடைப்பிடித்தால், எந்த சிக்கலும் தோன்றா மலிருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய கொள்கைகளைக் கட்டிக்காக்க போராட வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில், பங்குதாரர் விலகினாலும், புதியவர் சேர்க்கையால் தொழில் வளம் சீராக இருப்பதால், வியாபாரிகள் தெம்புடன் திக்ழ்வார்கள். பொது வாழ்வில் இருப்போர்கள் வந்து சேரும் பொறுப்பு களை சுமப்பதற்கு அதிக உழைப்பை போட வேண்டியிருக்கும். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொற்படி நடந்தால், மனக் கவலையின்றி சிறகடித்து பறக்கலாம்.
    மீனம்:  பெண்கள் நினைக்கின்ற விஷயங்களில் வெற்றி பெற உங்கள் வாக்குச் சாதுர்யம் கை கொடுக்கும். மாணவர்கள் சஞ்சலங்கள் வளர இடம் கொடாதாவாறு மனத் திடத்துடன் இருந்தால், மகிழ்வுக்கு குறைவிராது. முதியவர்கள் நோய்களுக்கு நீங்களே மருந்துகளை தேடாமல், தகுந்த மருத்துவரை அணுகுதல் நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய அளவிற்கு வியாபாரிகளுக்கு மன வலிமையும், உடல் வலிமையும் கூடும். பணியில் இருப்பவர்கள் புதிய ஊழியர்களிடம் உங்கள் வாதத் திறமையை காட்டாமல் எளிய முறையில் பழகி வந்தால், நல்ல நட்பு உருவாகும். சரளமான பணப்புழக்கம் தனித் தெம்பைத் தரும்.

    Share
  • சாதனைச் செம்மல் விருது

    சென்னை, இராணி சீதை மண்டபம். சங்கரதாச சுவாமிகள் நினைவு மன்றம் நாடக மேதைகள் டிகேஎஸ் சகோதரர்கள் மக்களா கலைவாணன் புகழேந்தி இருவரும் உழைத்து நடத்திய விழா. ஆண்டுதோறும் நடைபெறும் விழா.

    இந்த ஆண்டுக்கான விழா 26.04.2014 சனிக்கிழமை மாலை 1830 மணி முன்பு சாதனைச் செம்மல் விருதுபெற்றவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் கமலகாசன். இந்த ஆண்டு சாதனைச் செம்மல் விருது நமது மதிப்பிற்குரிய ஐயா மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஐயாவிற்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    1

    2

    3

    Share
  • திருமால் திருப்புகழ் (68)

    கிரேசி மோகன்
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-

    Krishna - Makhan chor. Oil on canvas.  Keshav
    Krishna – Makhan chor. Oil on canvas.
    Keshav

    ’’கண்ணனை நெஞ்சே கருது’’….
    ———————————————————-

    Maricha and Subahu Keshav
    Maricha and Subahu
    Keshav

    பாரீசன் வில்லொடித்து, பத்தினியாள் கைப்பிடித்து,
    மாரீச மானால் மனைபிரிந்து, -பேராசை
    மன்னனவன் லங்கேசன் மாள,வந்தோன் பின்வந்த,
    கண்ணனை நெஞ்சே கருது….

    ந்யாபகம் தொல்லை, நினைவு களோசத்ரு,
    வ்யாபகம் கர்ம வினைகளாம், -தீபமாய்,
    எண்ணத் தகளியில் ஏகாந்த நெய்யூற்றி
    கண்ணனை நெஞ்சே கருது….

    ஐயம் தகளியாய், அச்சமே நெய்யாக,
    அய்யே!நீ ஏற்றுவாய் அஞ்ஞானம், – மையிருள்
    வண்ணனை, ஞான வரதனை, வேய்ங்குழல்
    கண்ணனை நெஞ்சே கருது….

    விரலோடு வீக்கம்போல் வெற்பெடுத்(து) அன்று
    திரளோடு தாங்கி, தவிக்க -உரலோடு,
    வெண்ணையை உண்டதால், பின்னிப் பிணைந்தவனை,
    கண்ணனை நெஞ்சே கருது….

    அஞ்சுபுலன் ஓடு அதற்குள்ளே அக்கினிக்
    குஞ்சொளிந்து கூவும் குருநாதா!, -அஞ்சன
    வண்ணனை, கீதை உரைத்தகுரு நாதனைக்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_03_01_archive.html

    Share
  • 1969 ஆம் ஆண்டு நிலவில் முதன்முதல் மனிதத் தடம் பதிக்க ஆழ்ந்து திட்டமிட்ட அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்.

    John Houbolt -4

    Apollo Moon Mission Leader

    John  C. Houbolt

    (1919 – 2014)

    சி. ஜெயபாரதன், கனடா

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4Ch0OgkkJKI

    September 12, 1962.ogg
    Author: NASA    Date: 12 September 1962

    மனித இனம் முதன்முதல் வைக்கும் மாபெரும் முன்னடி!

    ‘இது மனிதன் வைக்கும் ஒரு சிறு காலடி! ஆனால் மானிட இனத்துக்கு மாபெரும் பாய்ச்சல்! [One Small Step for a Man; One giant leap for Mankind] ‘ என்று பறை சாற்றி அருகில் இருக்கும் அடுத்த அண்ட கோள மான சந்திர மண்டலத்தில் முன்னடி வைத்தார் முதல் விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங். இருபதாம் நூற்றிண்டில் புரட்சி ஏற்படுத்திய நூதன மாபெரும் மகத்தான சாதனைகளில் உச்ச இடத்தைப் பெறுவது இது ஒன்றுதான்! பூத ராக்கெட் சனி 5 விடுதலை வேகத்தில் [Escape Velocity] மீறிப் பிரமாண்டமான புவி ஈர்ப்பை மண்டலத்தைத் தாண்டி, சந்திர ஈர்ப்பு மண்டலத்தை வட்டமிட்டு, நிலவுத் தேரை இறக்கி, இரு விண்வெளி வீரர்கள் தரையில் நடமாடி, பாதுகாப்பாய்ப் பூமண்டலத்துக்கு மீண்ட விஞ்ஞானப் பொறியல் சாதனையே முதல் இடம் பெறுகிறது! மனிதர் கற்பனையில் உதித்துக் கவிதையிலும், கதைகளிலும், காவியங்களிலும் இயற்றிப் புகழ்ந்த வெண்ணிலவை நேரில் கண்டு, கருநிலவு என்று கண்டு பிடித்தது மாபெரும் மானிட சாதனையே!

     

    American Commitment

    அமெரிக்கா அடுத்தடுத்து வெற்று விண்கோள்களை அனுப்பியும், ஒற்றை மனிதன் ஓட்டும் பல ‘புதன் ‘ விண்சிமிழ்களை [Mercury Spacecraft] ஏவியும், பிறகு இரட்டை மனிதர் இயக்கும் பல ‘ஜெமினி ‘ விண் குமிழிகளைச் [Gemini Spacecraft] சுற்ற வைத்தும், இறுதியில் மூவர் முடுக்கும் ‘அபொல்லோ ‘ விண்குறித் திட்டங்களை [Apollo Space Missions] அமுலாக்கியும், மனிதனைச் சந்திர தளத்தில் நடமிட, இமாலய முயற்சிகள் 12 ஆண்டுகள் 22 பில்லியன் டாலர் செலவில் செய்யப் பட்டன.

    1961 மே மாதம் 24 ஆம் தேதி அமெரிக்கா ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, சந்திர மண்டலப் பயணத்துக்கு அழுத்தமாக அடிகோலி, ’1970 ஆம் ஆண்டு முடிவுக்குள் மனிதன் ஒருவனைச் சந்திர மண்டலத்தில் இறக்கி நடமாடி அவன் பாதுகாப்பாய் பூமிக்குத் திரும்பும் ஒரு குறிக்கோளைச் சாதிக்க, இந்த தேசம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் ‘ என்று கட்டளை யிட்டுக் கடிகாரத்தை முடுக்கி விட்டார்.

     

    John Houbolt -3

     

    நிலவில் மனிதன் முதன்முதல் தடம் வைத்துப் பாதுகாப்பாய் மீள 1960 ஆண்டுகளில் திட்ட மிட்டு வெற்றிகரமாய் நிறைவேற்றியவர் நால்வர் : அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி, ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரௌன், அமெரிக்க பொறியியல் நிபுணர் ஜான் ஹௌபோல்ட், நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் ஆகியோர்.  முக்கிய இந்த நால்வரில் தெரிந்தும், தெரியாமல் மறைந்து போனவர் இஞ்சினியர், ஜான் ஹௌபோல்ட்.   நாசா நிலவில் தடம் வைக்க ஏவிய  மனிதர் இயக்கும் அபொல்லோ விண்வெளித் திட்டக் குறிப்பணிகள் யாவும் ஜான் ஹௌபோல்ட் மேற்பார்வையில் வெற்றிகரமாக நடந்தேறின.   அபொல்லோ -11 பயணமே முதன்முதல் தீரர்  நீல் ஆர்ம்ஸ்டிராங்கை நிலவில் இறக்கியப் பாதுகாப்பாய் தூக்கி மீண்டது.   அடுத்து  நிகழ்ந்த ஆறு அபொல்லோ மனிதப் பயணங்களில் அபொல்லோ -13 தோல்வியைத் தவிர, ஐந்து பயணங்கள்  மேலும் வெற்றி அடைந்து, 12  அமெரிக்க விண்வெளித் தீரர்கள் சந்திரனில் கால்தடம் பதித்து பல மாதிரி மண்ணுடன் மீண்டார்.  பொறியியல் நிபுணர் ஜான் ஹௌபோல்ட், தன் 95 ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு 2014 ஏப்ரல் 15  ஆம் தேதி காலமானார்.

     

    Wernher von Braun

    முதல் சந்திர யாத்திரை முடித்த மூன்று விண்வெளித் தீரர்கள்

    பல்லாண்டுகள் பயிற்சி பெற்ற விண்வெளி விமானிகள் நீல் ஆர்ம்ஸ்டிராங் [Neil Armstrong], மைக்கேல் காலின்ஸ் [Michael Collins], எட்வின் அல்டிரின் [Ediwin Aldrin] மூவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். நீல் ஆர்ம்ஸ்டிராங் ஓஹையோ வாபகொனிடாவில் [Wapakoneta, OH] 1930 ஆகஸ்டு 5 ஆம் தேதி பிறந்தார். நீல் ஆறாவது வயதில் ஆகாயத்தைப் பார்த்து விமானத்தில் பறக்க அழைத்துச் செல்லும்படி தந்தையை வற்புறுத்தினார். அவரது கனவு நிரந்தரமாய் நிறைவேறி தனது 16 ஆம் வயதில் விமான ஓட்டுநர் அனுமதி [Pilot License] பெற்றார். 1947 இல் கடற்படை ஆகாயப் பயிற்சி [Naval Air Cadet] மாணவரானார். பர்தேவ் பல்கலைக் கழகத்தில் [Purdue University] அவர் விமானவியல் பொறியியல் துறைப் [Aeronautical Engineering] படிக்கும் போது, 1950 இல் தடைப்பட்டு கொரியன் யுத்தத்தில் பங்கெடுக்க நேரிட்டு போரில் காயப் பட்டார். ஒலிமீறிய [Supersonic] வேகத்தில் ஓடும் ஜெட் சண்டை விமானங்களை 1100 மணி நேரம் ஓட்டியும், X-15 ராகெட் விமானங்களை இயக்கியும் மிக்க அனுபவம் பெற்றவர்.

     

    jay

    ‘தேசீய விண்வெளிப் பயண ஆணையகம் ‘ [National Aeronautics & Space Administration] நாசாவில் [NASA] சேர்ந்து, ஜெமினி 8 [Gemini 8] விண்சிமிழ் ஆட்சி விமானியாக [Command Pilot], டேவிட் ஸ்காட்டுடன் [David Scott, Co-Pilot] மனிதர் அற்ற அஜினா ராக்கெட் [Agena Roket] சிமிழுடன் விண்வெளி இணைப்புக் கையாட்சியை [Space Docking Maneuver] முதன் முதல் செய்து காட்டினார். அப்போது ஒரு ராக்கெட் எஞ்சின் பழுது பட்டு இடையூறு செய்கையில், ஜெமினிச் சிமிழைத் துரிதமாய்ப் பிரித்து, ஆட்சி ஏற்பாட்டைக் கட்டுப் படுத்தி, அபாயத் தப்புவிக்கும் [Emergency Splashdown] முறையில் பசிஃபிக் கடலில் பாய்ந்து காப்பாற்றினார். 1969 ஜூலை 20 இல் கரி நிலவில் முதலில் கால் வைத்த உலக மனிதனாகி, விண் வெளிப் பயணச் சரித்திரத்தில் நிரந்தர இடம் பெற்றார். நாசாவிலிருந்து வெளியேறி, 1971 முதல் 1979 வரை ஓஹையோ சின்சினாடிப் பல்கலைக் கழகத்தில் அண்ட வெளி விமானப் பொறியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

     

    Apollo -11 Crew Astronauts

     

    விண்வெளி விஞ்ஞானத்தில் நிபுணர் எனப்படும், எட்வின் யுஜீன் அல்டிரின் [Edwin Eugene Aldrin] நியூ ஜெர்ஸி மான்ட்கிலைரில் 1930 ஜனவரி 20 தேதி பிறந்தவர். நியூ யார்க், வெஸ்ட் பாயின்ட் [West Point, N.Y.] அமெரிக்காவின் படைத்துறைக் கழகப் [Military Academy] 1951 பட்டதாரி. கொரியா யுத்தத்தில் 66 தடவைப் பறந்து போர்க்குறித் [Combat Missions] தாக்குதலில் பங்கெடுத்த, அமெரிக்க விமானப்படை விமானி. 1963 இல் கேம்பிரிட்ஜ் M.I.T. பொறிக் கூடத்தில் விண்வீதி யந்திரவியலில் [Orbital Mechanics] Ph.D. பட்டம் பெற ஒரு நியதி [Dissertation] எழுதியவர். 1966 நவம்பர் 11 இல் ஜெமினி 12 விண்வெளிப் பயணத்தில், ஜேம்ஸ் லோவெல் [James Lovell] விமானியுடன் பறந்து, 5.5 மணி நேரம் ‘அண்டவெளி நீச்சல் ‘ [Space Walk] செய்து, சூன்ய விண்வெளியில் மனிதன் பாதுகாப்பாக பணி செய்ய முடியும், என்று இயங்கிக் காட்டினார். அபொல்லோ 11 பயணத்தில் சந்திரனில் நடமாடிய இரண்டாவது மனிதன் என்று விண்வெளிச் சரித்திரப் புகழ் பெற்றவர்.

     

    Apollo Spacecraft

     

    Apollo -11 Spaceship

     

    ரோமாபுரியில் 1930 அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்த மைக்கேல் காலின்ஸ் [Michael Collins] வெஸ்ட் பாயின்ட் படைத்துறைக் கழகத்தில் பயிற்சி பெற்று விமானப்படை விமானி ஆனவர். ஜெமினி 10 அண்ட வெளிப் பயணத்தில் ஜான் யங் [John Young] விமானியுடன் பறந்து, அஜினா விண்வெளி வாகனத்துடன் 475 மைல் உயரத்தில் இணைப்பு [Rendezvous] செய்து காட்டியவர். 1969 இல் முதல் சந்திரப் பயணத்தில் ஆட்சிக் கூடகம் [Command Module] தன்னை சந்திர வீதியில் 60-75 மைல் உயரத்தில் சுற்றி வந்து, ஆர்ம்ஸ்டிராங், அல்டிரின் சந்திர தளத்தில் நடமிடும் போது, கண்காணித்துக் கொண்டு வந்தவர்.

    Moon Mission Path

     

    சந்திர மண்டலம் நோக்கி விண்வெளிப் போட்டிகள்

    மனித விண்வெளித் திட்டங்களை [Manned Space Programs] ரஷ்யாவும், அமெரிக்காவும் 1961 ஆண்டு முதல் நிறைவேற்றிச் சந்திரப் பயணத்திற்கு அடிகோலின. ஏப்ரல் 12, 1961 இல் ரஷ்யாவின் அகில விமானி [Cosmonaut] யூரி ககாரின் [Yuri Gagarin] வாஸ்டாக் [Vostok 1] விண்சிமிழில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்சிமிழ் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப் [Focus] படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது. அடுத்து அமெரிக்கா 1961 மே 5 இல் தனது முதல் விண்வெளி விமானி [Astronaut] அலன் செப்பர்டைப் [Alan Shepard] புதன் விண்சிமிழில் [Mercury Spacecraft] பறக்க விட்டது. வாஸ்டாக், புதன் திட்டங்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் வாஸ்கோடு [Voskhod], அதே சமயம் அமெரிக்கா வின் ஜெமினித் [Gemini] திட்டங்கள் நடத்தப் பட்டு, பல விண்வெளி விமானிகள் அண்டவெளி நீச்சலையும் [Space Walk] நெடுநாள் சுற்றுக்களையும் செய்துக் காட்டினார்கள். 1965 முதல் 1966 வரை அமெரிக்கா பத்து ஜெமினி விண்வெளிப் பயணங்களை முடித்து, சந்திர மண்டல யாத்திரைக் குரிய, இறுதி அபொல்லோத் [Apollo] திட்டங்களை ஆரம்பித்தது. 1966 நவம்பர் முடிவு வரை அமெரிக்கா அண்டவெளிப் பயணத்தில் 2000 மனித-கால [Man Hours] அனுபவத்தைப் பெற்றுச் சந்திர யாத்திரைப் போட்டியில் முன்னணியில் இருந்தது. அதே சமயம் ரஷ்யாவின் மனித விண்வெளிப் பயிற்சியளவு 12 மணி நேரங்களே!

     

    Apollo 11 Towards the Moon

     

    அபொல்லோத் திட்டத்தை 1961 மே 25 ஆம் தேதி ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி ஆரம்பித்து வைத்தார். அத்திட்டம் ‘மனித விண்வெளி நிலவுத் திட்டம் ‘ [Manned Lunar Space Program]. அதன் குறிப்பணிகள் [Mission] இரண்டு: முதலாவது, மனிதன் ஒருவனை சந்திரனில் நடமிட விட்டு, அவனைப் பாதுகாப்புடன் மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவது. இரண்டாவது, ரஷ்யாவுக்கு முந்தி அந்தச் சாதனையை முடித்துக் காட்டி, அண்டவெளிப் படையெடுப்பில் அமெரிக்காவை முன்னணியில் நிற்க வைப்பது. அசுரப் பணியான அபொல்லோ திட்டத்தில் [1965 உச்ச காலத்தில்] வேலை புரிந்தோர் 36,000 பொதுப் பணியாளர் [Civil Servants], ஒப்பந்த ஊழியர் [Contractor Employees] 376,700 பேர். 1961-1973 இல் ஆண்டு ஒதுக்குத் தொகை [Budget] 5.2 பில்லியன் டாலர். நாசாவின் [NASA] பதினேழு அபொல்லோக் குறிப்பணிகளின் [Apollo Missions 1 to 17] மொத்தச் செலவு தொகை மட்டும், 25.4 பில்லியன் டாலர்.

     

    Apollo

     

    அபொல்லோ முயற்சிகளில் மனித உயிர்ச் சேதமும், பெரும் பொருட் சேதமும் இல்லாமல் போகவில்லை! 1967 ஜனவரி 27 ஆம் தேதி முதல் அபொல்லோ 1 விண்சிமிழ்ச் சோதனையின் போது, உள்ளே தீக்கனல் விளாசி [Flash Fire] விண்வெளி விமானிகள், விர்ஜில் கிரிஸ்சம், எட்வெர்டு வொயிட், ராஜர் சாஃபி மூவரும் உயிரோடு எரிந்து, ஏவு தளத்திலே [Launching Pad] சிமிழ் சிதைந்து நாசமாகிப் பெரும் பின்னேற்றத்தைக் [Setback] கொடுத்தது. யோக மற்ற அபொல்லோ 13 பயணம் துவங்கி இடை வழியிலே முடமாகிச் சந்திரனைத் தொட முடியாமல் திரும்பிட வேண்டியதாயிற்று.

    அபொல்லோத் திட்டங்களில் செய்து முடிக்க வேண்டியவை: 12 மனித விண்வெளிக் குறிப்பணிகள். இரண்டு பணிகளில் [அபொல்லோ 7,9] மூவர் பூமிச் சுற்றி வந்து பயிற்சி பெறுவது. இரண்டு பணிகளில் [அபொல்லோ 8,10] மூன்று மனிதர் சந்திரனைச் சுற்றி வந்து விபரம் அறிவது. மூன்று பணிகளில் [அபொல்லோ 11,12,14] சந்திர தளத்தில் நடமாடி மண்டலத்தை ஆராய்வது. கடேசி மூன்று பணிகளில் [அபொல்லோ 15,16,17] சந்திர மண்டலத் தேர்வுகள் [Lunar Exploration] நடத்துவது.

     

    Final Descent

     

    கென்னடி விண்வெளி மையத்தில் கிளம்பிய அபொல்லோ 11

    எட்டு நாள் பயணத் திட்டமிட்ட அபொல்லோ 11 முதல் சந்திர யாத்திரை 1969 ஜூலை 16 ஆம் தேதி தயாரானது. சந்திரப் பயண ஏவு ராக்கெட் சனி 5 [Saturn V] ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன் [Wernher Von Braun] டிசைன் செய்தது. 363 அடி உயரமுடன் மூன்றடுக்காய் [Three Stage] தொடுக்கப் பட்டு, 2800 டன் எடை கொண்டு, 3500 டன் உதைப்புத் [Thrust] திறமுடைய, அந்த அசுர ராக்கெட் ரதம் கென்னடி விண்வெளி மையத்தில் [Kennedy Space Center] இழுத்துக் கொண்டு வரப் பட்டது. ராக்கெட் முனையில் ஆட்சிக் கூடகம்

    [Command Module], பணிக் கூடகம் [Service Module] இணைக்கப் பட்டிருக்க, நிலாக் கூடகம் [Lunar Module] மூன்றாம் அடுக்கு ராக்கெட் நுனியில் பொருத்தப் பட்டிருந்தது. விண்வெளிச் சிமிழ் [ஆட்சி, பணி, நிலாக் கூடகத் தொடுப்பு] மட்டும் 45 டன் எடை உள்ளது. ஆட்சி-பணிக் கூடகத் தொடர் சந்திரனைச் சுற்றி வரவும், நிலாக் கூடகம் சந்திர மண்ணில் இறங்கி ஏறவும் தகுதி பெற்றவை.

     

    Apollo 16 Lunar Module

    12 அடி உயரம், 13 அடி விட்டமுடன் கூம்பு [Cone] வடிவுள்ள ஆட்சிக் கூடகம், விமானிகள் கையாளும் பொறிகளும், கண்காணிப்புக் கருவிகளும் கொண்டது. பூவாயு மண்டலத்தில் மீண்டும் நுழையும் போது, புவி ஈர்ப்பு விசை இழுக்க, அதி வேகத்தில் உராய்வு வெப்பக்

    ​ ​

    கனல் [Frictional Heat] எரித்துச் சிதைத்து விடாதபடி ஆட்சிக் கூடகத்தின் வெளிப்புறம், நன்கு கவசம் பூணப் பட்டுள்ளது. கூடக முனையில் சேர்க்கும் இணைப்பு வாயிலும், கதவும் [Docking Parts] உள்ளன. 22 அடி நீளம், 12.75 அடி விட்டமுடன் உருளை [Cylinder] வடிவுள்ள பணிக் கூடகத் தில் எரிபொருள், சிறு ராக்கெட் எஞ்சின், மெதுவாய்ச் சந்திரனில் இறங்க எதிர்-உதைப் பாணம் [Retro-Rocket], மின்சக்தி யந்திரம், உணவு, நீர் ஆகியவை அடங்கி யுள்ளன. 20 அடி உயரம், 11 அடி விட்டமுடன் 13 டன் எடையுள்ள நிலாக் கூடகத்தில் இணைப்பு நுழைவாயில் கதவும், இறங்கி ஏற இரண்டு ராக்கெட்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தளவியல் [Geology] சாதனங்களும் மற்றும் பிற சோதனைக் கருவிகளும், மலைக் கற்கள் மணல் மாதிரிகளைக் கொண்டு செல்லக் கலன்களும் கொண்டது.

     

    Second Astronaut Landing

    தரையில் ராக்கெட் சுடப்பட்டு ஏவப்படும் போது, மூன்று விண்வெளி விமானிகளும் ஆட்சிக் கூடகத்தில் ஒருங்கே அமர்ந்திருப்பர். 138 அடி நீளம், 33 அடி விட்ட முள்ள முதல் அடுக்கு, திரவ ஆக்ஸிஜன் + கெரோஸின் [Liquid Oxygen, Kerosene] எரியும் ஐந்து ராக்கெட் எஞ்சின்களைக் கொண்டு இயங்கி 41 மைல் உயரத்தில் விட்டு அது துண்டித்துக் கொண்டது. அடுத்து 81 அடி உயரம், 33 அடி விட்டமுள்ள இரண்டாம் அடுக்கு, திரவ ஆக்ஸிஜன் + திரவ ஹைடிரஜன் [Liquid Hydrogen] எரியும் ஐந்து ராக்கெட் எஞ்சின்கள் சுடப்பட்டு விண்சிமிழ் 116 மைல் உச்சியை அடையவும் அது துண்டித்துக் கொண்டது. இறுதியில் மூன்றாம் அடுக்கு 58 அடி நீளம், 22 அடி விட்டமுள்ள ஒற்றை ராக்கெட் சுடப்பட்டு விண்சிமிழ், பூமண்டல வீதியில் [Earth ‘s Orbit] சிறிது தூரம் சுற்றத் தொடங்கியதும் எஞ்சின் நிறுத்தப் பட்டது. பூகோள ‘ஓய்வு வீதியில் ‘ [Parking Orbit] சுற்றும் போது, விண்சிமிழ் ‘எடையிழப்பு ‘ [Weightless] அடைகிறது. அப்போது ஓய்வு வீதியில் சுற்றும் விண்சிமிழின் வேகம் 17,400 mph.

     

    Apollo Command Service Module

     

    அமெரிக்கக் கழுகு நிலவின் அமைதித் தளத்தில் இறங்கியது.

    அச்சமயம் தரை ஆட்சி [Ground Control] மின்கணணிகள் காலத்தையும், தூரத்தையும் துள்ளியமாய்க் கணித்து, மூன்றாம் அடுக்கு ராக்கெட் எத்துணை அளவு உதைப்புக் [Thrust] கொடுக்க வேண்டும் என்று விண்வெளி விமானிகளுக்கு அறிவுரை எட்டியதும், ராக்கெட் மீண்டும் முடுக்கப் பட்டு ‘விடுதலை வேகத்தை ‘ [Escape Velocity 25,000 mph] நெருங்கி, பூமியின் பிரமாண்டமான ஈர்ப்பு விசையை மீறி சந்திர மண்டல ஈர்ப்பில் சிக்கிக் கொள்கிறது. விடுதலை வேகம் என்பது ஓர் விண்வெளி அண்டத்தின் ஈர்ப்பு விசையைக் கடக்கும் குறைந்தளவு வேகம். அவ்வாறு விடுதலை அடைந்த ராக்கெட், ஒருவித உந்து சக்தி இழப்பின்றி தொடர்ந்து செல்லும். பூமியின் ஈர்ப்பை விட்டு விண்சிமிழ் விடுதலை பெற, வினாடிக்குச் சுமார் 7 மைல் வேகம் [25,000 mph] தேவைப் படுகிறது.

     

    Man on the Moon

     Second Astronaut Buzz Aldrin on the Moon

     

    Lunar Module touchdown

     

    மூன்றாவது அடுக்கு ராக்கெட் எரிந்து, சந்திர ஈர்ப்பு மண்டலத்துள் அகப்பட்டதும், ஆட்சி-பணிக் கூடகம் பிரிவு பட்டு 180 டிகிரி திரும்பி மூன்றாவது அடுக்கின் முனையில் உள்ள நிலாக் கூடகத்தை இணைத்து வெளியே அகற்றியதும், மூன்றாம் அடுக்கு ராக்கெட் அறுந்து கொள்கிறது. பிறகு ஆட்சி-பணி-நிலாக் கூடகத் தொடர் நிலாவை வட்ட மிட்டு, இறங்க வேண்டிய ‘அமைதித் தளத்தைக் ‘ [Tranquility Base] கண்டு பிடித்து நெருங்கியதும், ஆர்ம்ஸ்டிராங், அல்டிரின் இருவர் மட்டும் ஆட்சிக் கூடகத்தி லிருந்து சந்திரக் கூடகத்தில் இடம் மாறிக் கொண்டார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு கூடகம் பிரிந்து, சந்திர ஈர்ப்பு விசையால் வேகமாய்க் கீழே இழுக்கப்பட, கூடக ராக்கெட் மேலே இயங்கித் தடுத்து மெதுவாகக் கட்டுப்பாட்டு முறையில் இறங்கியது. அச்சமயம் விண்ணில் கண்காணிப்பாக ஆட்சி-பணிக் கூடகத்தில், 70 மைல் உயரத்தில் விமானி மைகேல் காலின்ஸ் ‘சந்திர ஓய்வு வீதியில் ‘ [Lunar Parking Orbit] நிலவைச் சுற்றி வந்தார்.

     

    Buzz Aldrin on the Moon

    Return to Earth

     

    புறப் பட்ட மையத்திலிருந்து 102:45 மணி நேரம் கழித்துச் சரியாக மாலை 4:17 EDT மணிக்கு [1969 ஜூலை 20] அமெரிக்கக் கழுகு, ‘சந்திரத் தேர் ‘ அமைதித் தளத்தில் இறங்கி சந்திரதள சாம்பல் தூசியைக் கிளப்பி, ஒரு சரித்திரச் சம்பவத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியது. முதலில் இறங்கி முன்னடி வைத்தவர், நீல் ஆர்ம்ஸ்டிராங். ‘இது மனிதன் வைக்கும் ஒரு சிறு காலடி! ஆனால் மானிட இனத்துக்கு இது மாபெரும் பாய்ச்சல்! ‘ என்று ஆர்ம்ஸ்டிராங் பறை சாற்றியதை 250,000 மைல் தொலைவில் கோடான கோடி பூகோள மக்கள் செவிமடுத்து, தொலைக் காட்சியில் முதல் மனிதர் சந்திரனில் இறங்கி நடமாடித் தீரச் சாதனை புரிவதைக் கண்டு களித்தார்கள்.

    நிலவின் அமைதித் தளத்தில் சேகரித்த மாதிரிகள், செய்த பணிகள்

    ஆர்ம்ஸ்டிராங், அல்டிரின் இருவரும் புவியின் ஈர்ப்பில் ஆறில் ஒரு பங்குள்ள நிலவின் ஈர்ப்பில் ‘அமைதித் தளத்தில் ‘ [Tranquility Base] எவ்விதச் சிரமமும் இல்லாமல், இரண்டரை மணி நேரம் 160 அடி தூரம் நடமாடினார்கள். அப்போது 49 பவுண்டு பாறைக் கற்கள், மண் மாதிரிகள் சேகரித்தனர். சூரியக் காற்று [Solar Wind] நகர்ச்சியை ஆராய ஒரு லேசர்க் கதிர் எதிர்பரப்பியை [Laser Beam Reflector] சந்திர தளத்தில் அமைத்தனர்.

     

     

    Entering the Atmosphere

     

    அடுத்து நிலவின் தள அதிர்வை [Seismic] அறியக் கருவிகளும் நிர்மானிக்கப் பட்டன. அமெரிக்கக் கொடியைத் தரையில் நட்டு வைத்தனர். ‘பூகோள மனிதர் சந்திர தளத்தில் முதலில் இங்குதான் முன்னடி வைத்தார். நாங்கள் சகல மனித இன சமாதானத்திற்காக வந்தோம். 1969 ஜூலை ‘ என்று அழுத்தி எழுதி, நிக்ஸன், மற்றும் மூன்று விமானிகள் கையெழுத்திட்ட ஓர் உலோகத் தகடை அங்கே ஊன்றினார். அடுத்து 250,000 மைல் தொலைவில் இருக்கும் வெள்ளை மாளிகையில், ஜனாதிபதி நிக்ஸனுடன் [Nixon] விண்கோள் தூரத் தொடர்பில் [Satellite Communications] இருவரும் போனில் உரையாடினார்கள். அத்துடன் சந்திரனில் எண்ணற்ற வண்ணப் படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

     

    Parachute drop

     

    விண்வெளி விமானிகள் சந்திரனை விட்டு பூமிக்கு மீட்சி

    சந்திரக் கூடகம் நிலவின் தரையில் 21:36 மணி நேரம் தங்கியது. சந்திரனில் நடமாடிச் செய்பணிகளை முடித்துக் கொண்டு 60 மணி நேர மீட்சிப் பயணத்துக்குத் தயார் செய்தனர். இரு விமானிகளும் சந்திரக் கூடகத்தின் மேற் சிமிழில் ஏறிக், கீழ்த் தாங்கும் நாற்காலியைத் தரையில் துண்டித்து விட்டு, சிறு ராக்கெட் எஞ்சினை எரித்து மேல் எழும்பி, ஆட்சி-பணிக் கூடகத்தோடு இணைந்து கொண்டது. அடுத்து விமானிகள் இருவரும், ஆட்சிக் கூடகத்தில் மாறிக் கொண்டதும், சந்திரக் கூடகம் துண்டிக்கப் பட்டு, ஆட்சி-பணிக் கூடகம் மட்டும் பிரிந்து, ராக்கெட் 5400 mph விடுதலை வேகத்தில் சந்திர ஈர்ப்பை மீறி, பூமி நோக்கி மீண்டது.

     

    Spacecraft Recovery

     

    பூவாயு மண்டலத்தருகே வந்ததும், சரியான சமயத்தில் பணிக் கூடகம் துண்டிக்கப் பட்டது. ஆட்சிக் கூடகம் மட்டும் மூன்று விமானிகளுடன் ஊர்ந்து, புவி ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டுத் தானாக வளர் வேகத்தில் [Acceleration due to Gravity] பாய்ந்து, உராய்வு வெப்பக்கனலின் ஊடே எரி நட்சத்திரம் போல் தீப்பறக்க வந்து இறங்கியது. பசிஃபிக் சமுத்திர மட்டத்தை அணுகும் முன்பே, மூன்று பாராசூட் [Parachute] குடைகள் தானாக வெளியேறி, ஜலை 24 ஆம் தேதி ஆட்சிக் கூடகம் பாதுகாப்பாகக் கடலில் விழுந்து மிதந்தது. விமானி

    ​ ​

    களைக் கண்டு பிடித்துக் கரை சேர்க்க அமெரிக்காவின் கப்பல் U.S.S. ஹார்னெட் [U.S.S Hornet] தயாராக ஹவாயிலிருந்து [Hawaii] 950 மைல் தென்மேற்குத் திசையில் காத்திருந்தது. மூன்று விமானிகளும் தீட்டு நீக்கப் [Decontaminated] பட்டு, 14 நாட்கள் சூழ் அரணில் [Quarantined] அடைக்கப் பட்டு அண்ட வெளிக் கிருமிகள் எவையும் பூமியில் பரவா வண்ணம் கிருமித் தடுப்பு ஆடை [Biological Isolation Garments] அணிந்து தனியாக வைக்கப் பட்டனர்.

     

    Three Astronauts in Chamber

     

    நாசாவின் எதிர்கால விண்வெளித் தேடல் படையெடுப்பு

    நாசா முதன்முதல் வெற்றிகரமாகச் செய்த விண்வெளிச் சந்திரப் பயணம் ஓர் அடிப்படை மாடல் அதிதீரச் சாதனையாய்ப் பின்வந்த  அகில நாட்டு வானியல் விஞ்ஞானிகளுக்கும், பொறி நுணுக்க வல்லுநர்களுக்கும் அண்டவெளித் தேடலில் வழி வகுத்தது.   அடுத்து நாசா, ஐரோப்பாவில் ஈசா [European Space Agency] செவ்வாய் [Mars], வெள்ளி [Venus], பூதக்கோள் வியாழன் [Jupiter],  சனிக்கோள் [Saturn], புதன் [Mercury] போன்ற கோளங்களின் தேடல் படையெடுப்புக்கு விதையிட்டது. அவற்றைப் போல் வால்மீன், வக்கிரக் கோள்கள் [Asteroids] ஆய்வு களுக்கும் வழி வகுத்தது.  2014 இல் நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] பல மில்லியன் மைல்கள் கடந்து நமது பரிதி மண்டலம் தாண்டி அடுத்த சூரிய மண்டலத்தில் பயணம் செய்கிறது..

     

    Earth seen from the Moon

     

    ++++++++++++++++++

    தகவல்:

    படங்கள் : நாசா விண்வெளி மையம்.

    1.  http://www.nasa.gov/mission_pages/apollo/missions/#.U1nVUnC_gcF  [Apollo Missions to the Moon]

    2.  http://en.wikipedia.org/wiki/Wernher_von_Braun  [German Rocket Designer]

    3.  http://www.space.com/21809-john-c-houbolt.html   [John Houblt]

    4.  http://nssdc.gsfc.nasa.gov/planetary/lunar/apollo.html  [Apollo Program (1963-1972)]

    5.  http://en.wikipedia.org/wiki/Apollo_program  [Apollo Program (April 22, 2014)]

    6.  http://en.wikipedia.org/wiki/John_Houbolt  [April 26, 2014]

    7.  http://en.wikipedia.org/wiki/Moon_landing   [April 25, 2014]

    8. http://www.kidport.com/reflib/science/moonlanding/moonlanding.htm [2012]

    9.  http://en.wikipedia.org/wiki/Apollo_11  [April 26, 2014]

     

    ++++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  April 26, 2014

     

    Wernher Von Braun, documentary, “Missile to the moon”, PBS, 2012
    Landing on the Moon :July 20, 1969

    First Moon Landing 1969 – The Greatest Day Ever

    First Moon Landing 1969
    Share
  • திருமால் திருப்புகழ் (67)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்….
    ——————————————-
    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    ————————————————

     

    Madhuradhipathy - oil on canvas. Let 2014 be full of Madhuram, sweetness.  கேஷவ்
    Madhuradhipathy – oil on canvas. Let 2014 be full of Madhuram, sweetness.
    கேஷவ்

    கனவு, தனைமறந்து கண்மூடும் தூக்கம்,

    நனவிவை, மூன்றிலும் நான்யார், -வினவிட,
    எண்ணவலை ஓய்ந்து, எழுந்திடும் பாற்கடல்
    கண்ணனை நெஞ்சே கருது….

    பாட்டிசைத்தக் கம்பனைக், கேட்டிசைந்து கொக்கரித்த
    மேட்ட ழகியசிங்கன் மாலோலன், -சேட்டையாய்
    பின்அணங்கு கள்சேலைப் பொய்கை பறித்தவன்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    கடல்கடைந்த போதாமை காயம் எடுத்து,
    வடவரையைத் தாங்கும் வரதன், -இடையனை,
    அண்ணனுடன் சேர்ந்தாயர் ஆநிரை மேய்த்தவனைக்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    நாடாய் விரக்தியை, கூடாய்வை ராக்கியத்தை,
    தேடாய் தெளிவான்ம தத்துவத்தை, -வாடாய்நீ,
    விண்ணகர் வைகுந்த வாய்ப்புண்டு, வேய்ங்குழல்
    கண்ணனை நெஞ்சே கருது….

    கோஹம் விசாரித்து, சோஹத்தின் சன்னிதியில்,
    நாஹமித் தேஹமில்லை நன்குணர்ந்து, -மோஹமாய்,
    பிண்ணனியில் மேயும் பசுபாசம் ஓட்டிட,
    கண்ணனை நெஞ்சே கருது

    ———————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

    Share
  • திருமால் திருப்புகழ் (66)

     

     

    கிரேசி மோகன்

    acrylic on canvas by Keshav
    acrylic on canvas by Keshav

    கண்ணன் திருப்புகழ் (வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    —————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    சூர்பணகை ஆனாலும், சுந்தரி ஆனாலும்,
    பார்ப்பன எல்லாம் பரம்பொருளே – தாற்பரியம்
    தன்னை உணர்ந்து தவறா(து) இருந்திட,
    கண்ணனை நெஞ்சே கருது!

    சதிரிள மாதர் சகவாச தோஷம்,
    உதிரிலைக் காலம் உணர்வாய் – மதிளரங்க
    மன்னனை, மாயனை, மண்புகுந்த ஆயனை,
    கண்ணனை நெஞ்சே கருது!

    பண்டரி எங்குளான், பாலன் புகன்றிட,
    விண்டதிரத் தூண்வாய் வெளிப்பட்ட – பண்டரியில்
    தன்நினைவு தப்பத் துதிப்போர்க்(கு) அருள்புரியும்,
    கண்ணனை நெஞ்சே கருது!

    பட்டதெல்லாம் பாழாகும், தொட்டதெல்லாம் தூளாகும்
    எட்டிய(து) ஏதும்வாய்க்(கு) எட்டாது – அட்டமியில்
    விண்ணகன்று தாய்மாமன் வெஞ்சிறைக்கு வந்தவனை
    கண்ணனை நெஞ்சே கருது!

    வானிருந்த, கீழிறங்கி தூணிருந்த, தந்தவர
    வானிருந்த, தாம்பு வடமிருந்த – மாவிருந்தை
    உண்ணுதற்(கு) ஆகா(து), உறியேறும் ஆகாயக்
    கண்ணனை நெஞ்சே கருது!!
    ————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2011_12_01_archive.html

    Share
  • தமிழ்நாட்டில் சுபமாக முடிந்த தேர்தல் திருவிழா!

    பவள சங்கரி

    தலையங்கம்

    தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா சுபமாக முடிந்துள்ளது. அடுத்த வானவேடிக்கை தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கோலாகலமாகத் தொடரும்! சென்ற முறையைவிட இந்த முறை தேர்தலில் பங்களிப்புகள் அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 14 சதவிகிதம் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. பின் தங்கிய மாவட்டங்களில்தான் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 81 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. தனித் தொகுதிகளிலும் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. வட மாவட்டங்கள் என்று குறிப்பிடப் படக்கூடிய சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வாக்குப் பதிவுகள் குறைந்துள்ளன. குறிப்பாக படித்த மத்தியதர மக்கள் அதிகம் வாழக்கூடிய தென் சென்னையில் தமிழ்நாட்டிலேயே மிகக் குறைவான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இது படித்த சமுதாயத்தின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. பல்வேறு ஊடகங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவைகளின் தனிப்பட்ட முறையிலான வேண்டுகோள்களுக்குப் பிறகும் இந்த அளவிற்குக் குறைவான வாக்குப் பதிவுகள் தென் சென்னையில் நடைபெற்றுள்ளது வெட்கத்திற்குரிய விசயம்.

    இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சமாக அதிகப்படியான வாக்குப் பதிவுகள் இளைய சமுதாயத்தினரிடமிருந்து வந்துள்ளது என்பதுதான். நல்லதொரு மாற்றமான இதனால் தேர்தலின் கணிப்புகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகும் பணப் பரிமாற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மக்கள் தெளிவான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதும் விளங்குகிறது. முடிவுகளும் அவ்வாறே வரும் என்று நம்பலாம். மும்பையில் நடைபெற்ற தேர்தலில் எல்லோரும் பாராட்டும் வகையில் 55 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதுவரை 40 முதல் 44 சதவிகித வாக்குப்பதிவுகளே நடைபெற்றிருக்கிறது. இதுவும் அவமானகரமான விசயம். பாண்டிச்சேரியில் 82 சதவிகிதமும், மேற்கு வங்காளத்தில் 80 சதவிகிதமும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் என்று 100 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றதோ அன்றுதான் அது நமது ஜனநாயகத்திற்குக் கிடைத்த முழு வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியும். பணப் பரிமாற்றங்கள் அறவே இல்லாத ஒரு தேர்தலாகவும் அது இருக்க வேண்டும். இன்றுவரை அது சிம்ம சொப்பனமாகவே இருந்து வருவதும் வேதனைக்குரிய விசயம். வாழ்க ஜனநாயகம்!

    ஜனநாயகம் வேரூன்ற வேண்டுமென்றால் வாக்களிப்பதில் இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது போலவே அரசியலிலும் அவர்களுடைய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!

    ஜெய்ஹிந்த்

    Share
  • சிறுகை அளாவிய கூழ் (17)

     

    இவள் பாரதி

     
    ஒரு பக்கத்தை வாயில் சுவைத்தபடியும்nivi
    மறுபக்கத்தை கையில் பிசைந்தபடியும்
    விளையாடி
    ஏதோ நினைவு வந்ததைப் போல
    பக்கங்களை மாற்றி
    முகம் பார்த்து
    முலைப்பாலருந்தியபடி
    தாயின் சிரிப்பிற்கு
    சிவப்பு உதடு விரித்து
    அதில் இரண்டு பால்பற்கள் தெரிய சிரித்து
    குடிப்பதை நிறுத்திவிட்டுக்
    காம்பைக்கிள்ளி விளையாடி
    அடடா.. ஆஹா..
    ஏழு வண்ணத்திலும் வடித்துவிட முடியாத ஓவியம்
    எந்த மொழியிலும் எழுதிவிட முடியாத கவிதை

    ———————-

    வெடி வெடிக்கும்போதும்
    இடி இடிக்கும்போது
    அயர்ந்துறக்கும்
    அம்மாகுட்டி
    பேனா மூடி விழும்போதும்
    பேப்பரைத் திருப்பும்போதும்
    எழும் ஓசைக்கு
    தூக்கம் கலைந்துவிடுகிறாள்
    பெருஞ்சத்தங்களை
    பொருட்படுத்தாது
    சிறுசத்தங்களுக்கு
    செவிசாய்க்கிற விசித்திரம்
    குழந்தைக்கு மட்டுமே சாத்தியம்

    ———————-

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை

     

    முக்கோணக் கிளிகள்
    image

    படக்கதை – 1 ஆரம்பம்

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    +++++++++++++++++

    jay1

    jay2

    jay3

    jay4

    Share