கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-

Krishna - Makhan chor. Oil on canvas.  Keshav
Krishna – Makhan chor. Oil on canvas.
Keshav

’’கண்ணனை நெஞ்சே கருது’’….
———————————————————-

Maricha and Subahu Keshav
Maricha and Subahu
Keshav

பாரீசன் வில்லொடித்து, பத்தினியாள் கைப்பிடித்து,
மாரீச மானால் மனைபிரிந்து, -பேராசை
மன்னனவன் லங்கேசன் மாள,வந்தோன் பின்வந்த,
கண்ணனை நெஞ்சே கருது….

ந்யாபகம் தொல்லை, நினைவு களோசத்ரு,
வ்யாபகம் கர்ம வினைகளாம், -தீபமாய்,
எண்ணத் தகளியில் ஏகாந்த நெய்யூற்றி
கண்ணனை நெஞ்சே கருது….

ஐயம் தகளியாய், அச்சமே நெய்யாக,
அய்யே!நீ ஏற்றுவாய் அஞ்ஞானம், – மையிருள்
வண்ணனை, ஞான வரதனை, வேய்ங்குழல்
கண்ணனை நெஞ்சே கருது….

விரலோடு வீக்கம்போல் வெற்பெடுத்(து) அன்று
திரளோடு தாங்கி, தவிக்க -உரலோடு,
வெண்ணையை உண்டதால், பின்னிப் பிணைந்தவனை,
கண்ணனை நெஞ்சே கருது….

அஞ்சுபுலன் ஓடு அதற்குள்ளே அக்கினிக்
குஞ்சொளிந்து கூவும் குருநாதா!, -அஞ்சன
வண்ணனை, கீதை உரைத்தகுரு நாதனைக்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….

—————————————————————————————————————-

படங்களுக்கு நன்றி:

http://kamadenu.blogspot.in/2013_03_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *