சென்னை, இராணி சீதை மண்டபம். சங்கரதாச சுவாமிகள் நினைவு மன்றம் நாடக மேதைகள் டிகேஎஸ் சகோதரர்கள் மக்களா கலைவாணன் புகழேந்தி இருவரும் உழைத்து நடத்திய விழா. ஆண்டுதோறும் நடைபெறும் விழா.
இந்த ஆண்டுக்கான விழா 26.04.2014 சனிக்கிழமை மாலை 1830 மணி முன்பு சாதனைச் செம்மல் விருதுபெற்றவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் கமலகாசன். இந்த ஆண்டு சாதனைச் செம்மல் விருது நமது மதிப்பிற்குரிய ஐயா மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஐயாவிற்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர்.
கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் பேராசிரியர் பணியாற்றியவர்.
23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.
கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.