திருமால் திருப்புகழ் (67)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்….
——————————————-
’’கண்ணனை நெஞ்சே கருது’’
————————————————

கேஷவ்
கனவு, தனைமறந்து கண்மூடும் தூக்கம்,
நனவிவை, மூன்றிலும் நான்யார், -வினவிட,
எண்ணவலை ஓய்ந்து, எழுந்திடும் பாற்கடல்
கண்ணனை நெஞ்சே கருது….
பாட்டிசைத்தக் கம்பனைக், கேட்டிசைந்து கொக்கரித்த
மேட்ட ழகியசிங்கன் மாலோலன், -சேட்டையாய்
பின்அணங்கு கள்சேலைப் பொய்கை பறித்தவன்,
கண்ணனை நெஞ்சே கருது….
கடல்கடைந்த போதாமை காயம் எடுத்து,
வடவரையைத் தாங்கும் வரதன், -இடையனை,
அண்ணனுடன் சேர்ந்தாயர் ஆநிரை மேய்த்தவனைக்,
கண்ணனை நெஞ்சே கருது….
நாடாய் விரக்தியை, கூடாய்வை ராக்கியத்தை,
தேடாய் தெளிவான்ம தத்துவத்தை, -வாடாய்நீ,
விண்ணகர் வைகுந்த வாய்ப்புண்டு, வேய்ங்குழல்
கண்ணனை நெஞ்சே கருது….
கோஹம் விசாரித்து, சோஹத்தின் சன்னிதியில்,
நாஹமித் தேஹமில்லை நன்குணர்ந்து, -மோஹமாய்,
பிண்ணனியில் மேயும் பசுபாசம் ஓட்டிட,
கண்ணனை நெஞ்சே கருது
———————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html