தொடர்பிற்கு
சுந்தரராஜன் – 9442525191
அ இராமச்சந்திரன் 2491 8096

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

-மேகலா இராமமூர்த்தி
திரு. பிரேம்நாத் திருமலைச்சாமியின் நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 243க்குப் பரிந்துரைத்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
சிறுசெடிப் பெருமரமாகிக் கனியும் களைப்பு நீக்கும் நிழலும் தருவதுபோல் மனிதனும் தன் சிறிய உள்ளத்தை அன்பாலும் நற்பண்பாலும் உயர்த்தினால் குமுகாயத்துக்குப் பயனுடையானாய் – நயனுடையானாய்த் திகழ்வான்.
படத்தில் முகங்காட்டும் சிறுசெடி கண்டு எழும் தம் அகத்துணர்வுகளைக் கவிதையாய் வடித்துத்தரக் காத்திருக்கும் பாவலர்களை அன்புபாராட்டி அழைக்கிறேன்.
*****
”மரத்தை அழித்து மாடிகட்டும் மனிதா! வாழ்ந்து மறையப்போகும் சொற்ப காலத்துக்குள் இயற்கையை அழிக்கும் அற்பகுணத்தை விட்டொழிப்பாய்!” என்று இன்னுரை இயம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
மரம் நடுவாய்…
மரங்களை வெட்டி யழித்துவிட்டு
மாடிகள் கட்டும் மனிதாகேள்,
இருப்பது சிலநாள் இவ்வுலகில்
இதற்குள் இயற்கையை அழிப்பதேனோ,
மரங்களால் தானே மழைவந்தே
மன்னுயி ரெல்லாம் பிழைத்திருக்கும்,
கருத்தினி லிதனைக் கொண்டேதான்
காசினி வாழவை மரம்நட்டே…!
*****
”சிறுதுளி பெருவெள்ளமாய் ஆவதுபோல், வீரியம் கொண்ட விதை விருட்சமாய் விண்ணைத் தொடுவதுபோல் நாமும் தடைகள் உடைத்துச் சென்றிடுவோம்; வாழ்வில் வென்றிடுவோம்” என்று ஊக்கமூட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
விளையும் பயிர்
சிறுகடுகு என்றாலும் அதன் காரம் குறைவதில்லை
சிறுமனிதன் என்று எண்ணித் துவளுவதில் ஞாயமில்லை
தீச்சுடரைக் கானகத்தில் இட்ட கதை அறிவோம்
தத்தரிகிட நாதம் நமது நெஞ்சினிலே வைப்போம்!
சின்னத் துளிகள் என்று எண்ணி
துடைத்தழிக்க நினைப்போர் இருந்தாலும்
மடைகள் உடைக்கும் வெள்ளமாய் மாறித்
தடைகள் தாண்டிச் சென்றிடுவோம்!
காரியம் யாவும் செய்திடும் வகையில்
வீரியம் கொண்ட விதையாய் ஆகி
விண்ணைத் தொடும் விருட்சமாய்ப் படர
மண்ணைப் பிளந்து முளைத்திடுவோம்!
*****
சின்னஞ்சிறு செடியை வைத்துச் சீரிய சிந்தனைகளைக் கூரிய வார்த்தைகளில் கவிதைகளாய் வடித்துத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!
அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
விதையாய் விழுந்தாலும்
விண்ணை நோக்கி
மண்ணைப் பிளந்து
முயன்றால் தான்
முளைத்திட முடியும்!
முயலாமையால்
பயனேதும் இல்லை!
வானளாவ உயர்ந்திட
முயற்சி ஒன்று போதுமே!
விதையாய் நெஞ்சில்
விழுந்த யாவும்
திருவினையாய் மாறிடுமே!
விதையாய் விழுந்தாலும்
பழுதாகிப் போகாமல்
மண்ணைப் பிளந்து
முளைத்தெழ
மண்ணில் ஈரம் வேண்டும்!
எழும் எண்ணமும்
கண்ட கனவும்
மெய்ப்படுமே
நெஞ்சில் வீரமும்
ஈரமும் சேர்ந்திருந்தாலே!
விதையாய் விழுந்து
முளைத்துச் செடியாய்
மரமாய் வளர்ந்திட
நீர் வேண்டும்
அன்பெனும் விதையை
நெஞ்சில் விதைத்து
நீர்விட்டு
மனிதநேயமேனும்
மரத்தை வளர்த்திடுவோம்!
நிழல் தரும் மேகமாய்
இதயங்கள் கொண்டாடும் வானமாய்
எதிரியையும் அரவணைத்து
எல்லைகள் கடந்து வாழ்ந்திருப்போம்!
என்றென்றும் புன்னகையுடன்
ஒன்றே குலமென்று
இவ்வுலகுக்கு உணர்த்தி நிற்போம்!
வளமுடன் வாழ்ந்திடவே
நெஞ்சில் விதையாய்
அன்பை மட்டும் விதைத்திடவே!
”விதையாய் விழுந்தாலும் அது பழுதாகாது பக்குவமாய் முளைத்திட ஈரம் வேண்டும்; அதுபோல் மாந்தர்களும் நெஞ்சில் அன்பை விதைத்து வீரமும் ஈரமும் தமதிரு குணங்களாய்க் கொண்டு முயன்றால் வானம் வசப்படும்; கனவு மெய்ப்படும்!” என்று மானுட வெற்றியின் இரகசியத்தைக் கூறிடும் இக்கவிதையின் படைப்பாளி திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்து மகிழ்கின்றேன்.

-விவேக்பாரதி
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நன்னாள்…
உருவுடை யானை உருவமி லானை உளத்தமரத்
தருவுடை யானைத் தமிழுடை யானைத் தனதுடல்மேற்
றிருவுடை யானைத் திரள்சடை யானைத் திசையளந்த
பெருவுடை யானைப் பிடிப்பவர்க் கில்லை பிறப்பினியே!!

காலை மலர்ந்த மலர் மாலையில் உதிர்ந்து சருகாகிறது. தன்னைப் பறிக்கவில்லையே என்று அது தளர்வதில்லை என்று நான் சொல்வதைக் கேட்டுப் புன்னைகைத்தார்கள். அது பொருத்தமான விடையென்று அவருக்குப் புலப்படாமலேயே போயிற்று .
சேலம் தந்த செம்மனத் திலகத்துக்குக் கம்பர் கழகங்கள் பெரிதும் கடன்பட்டவை .
தமது மேடையில் நின்று முழங்கிய நித்திலத்தை என்று காண்போம் என்று ஏங்குவது இயல்பு தான் .

தர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி, Sun Seeds (சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்து மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து என்ற கவிதைக் குடும்பத்தில் இப்போது அவரது மருமகள் மற்றும் மதன் கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞராய் உதயமாகியுள்ளார்.
இருட்டில் இருந்து விடியலுக்கு என்ற இரு வழிப் பயணத்தை மேற்கொள்கிறது இந்த நூல். இயற்கையின் அழகை, மாற்றங்களை ஒரு வழியில் கண்டு களித்து மனதின் மேடு பள்ளங்களில் இன்னொரு வழியில் பயணம் செய்கின்றன நந்தினி கார்க்கியின் கவிதைகள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்து, ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த தன் அனுபவங்களின் சாறு இந்த நூல் என்று நூற்குறிப்பில் நந்தினி கார்க்கி எழுதியுள்ளார். இவர் கடந்த ஓராண்டாக தினமொரு சங்கப்பாடலை பற்றிய விளக்க உரையை இணையவழி பாட்காஸ்ட் செய்து வருகிறார்.
இந்தக் கவிதைத் தொகுப்பை நோஷன் பிரஸ் வெளியிட்டுள்ளது. அமேசான், அமேசான் கிண்டில் போன்ற தளங்களில் வெளியிடப்படும் இந்த நூல் ஆங்கிலக் கவிதை விரும்பிகளுக்கு மட்டும் விருந்தளிக்காமல் மனம் தளர்பவர்களுக்கும் மருந்தளிக்கும் என்று நம்புகிறார் நந்தினி கார்க்கி.

In this talk, Nrithya Pillai discusses her position as a hereditary woman artist from the isai velalar (formerly devadasi) community of Tamilnadu. She will address socio-political issues related to both identity as well as performance, for she understands these to be deeply related. She will talk about issues such as Indian nationalism, “devadasi reform,” the reinvention of dance in Madras in the 1930s, as well as questions around the deeply political nature of today’s Bharatanatyam as both a discourse and a practice. This event will feature a lecture, demonstration, and also short excerpts of performance.
Nrithya Pillai is a dancer, dance composer, singer, writer, speaker, and dance instructor who proudly claims her hereditary nattuvanar-devadasi lineage. Artistic Director of Rajarathnalaya, a bharathanatyam institution founded by her maternal grandfather Swamimalai Rajarathnam Pillai, she consciously preserves and reanimates the rich repertoire and the teaching and choreographic practices of her celebrated ancestors, who include Vaitheeswarankoil Meenakshisundaram Pillai, T.K Swaminatha Pillai and Padmashri Vazhuvoor B. Ramiah Pillai. Epitomizing the teacher-nattuvanar of the hereditary paramparais, and carving out her own space as a performer with impeccable training and vast creativity, Nrithya nevertheless represents a new kind of artistic and intellectual engagement with the troubled history of bharatanatyam in the long 20th century. She vigorously challenges the power relationships and ideologies that made the form unavailable to women of her community, and advocates fiercely for the restoration of credit for bharatanatyam technique, repertoire, and philosophy to the hereditary isai vellala community of practitioners. Her performances and her writings about the upper caste appropriation of this form, which have evoked both enthusiastic accolades and awards on the one hand and resistance on the other, are at once embodied research, political intervention, and a labour of abiding love towards the traditional custodians of the form–especially towards her foremothers, who include the remarkable Tiruvalaputtur Kalyani. Nrithya’s voice, raised against casteism in the contemporary dance world, is unique in the field today, and her message against historical misrepresentation is relevant and powerful.

தி. இரா. மீனா
அப்பி தேவய்யா
“ஈஸ்வரிய வரத மகாலிங்கா“ என்பது இவரது முத்திரையாகும். ”நான்” என்பது அழியவேண்டும். அது அழியாத வரைகுரு- இலிங்கம், ஜங்கமம், பாதோதகம், பிரசாதம் ஆகியவற்றை என்னால் விரும்ப முடியாது என உறுதியாகப் பேசிய தன்மை இவருடையது.
“பொன்பெண் மண்ணை விடுவிக்காத குருவின் நல்லுரை
தேவையற்றது.
கோபம், இன்பத்தை அகற்றாத இலிங்கத்தை வழிபட இயலாது
மாயை என்பதன் இருட்டை அழிக்காத ஜங்கமனுக்கு என்னால்
தாஸோகம் செய்ய இயலாது.
பேரின்பம் தராத புனித நீரை அருந்த மாட்டேன்.
பலன் தராத பிரசாதம் வேண்டாம்
எனது “நான் “என்ற உணர்வை அகற்றாத ஈஸ்வரிய வரத
மகாலிங்கத்தை என்னவென்பேன்?” என்று உறுதியாகப் பேசும் வசனம் இது.
அவசரத ரேக்கண்ணா
“சத்தியோஜாத லிங்கா ”இவரது முத்திரையாகும். தத்துவம், அனுபவம், மறைபொருள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்த இவரது வசனங்களில் பெரும்பாலானவை விடுகதை போலான சிறப்பம்சம் கொண்டவை.
1. “உலகெங்கும் பொன் நிறைந்திருந்தால்
அரசர்களுக்குள் போரெதற்கு?
நடைபெறுபவை அனைத்தும் உண்மையென்றால்
நல்லவர் கெட்டவர் என்ற பேச்செதற்கு?
பொன், வெள்ளி, முத்து, மரம், செடி, கொடி ஆகியவை
ஏற்ற இடங்களில் மட்டுமே உருவாகும், தழைக்கும்
குலமிருக்குமிடத்தில் ஒழுக்கம் இருக்கும்.
ஒழுக்கமிருக்குமிடத்தில் உறுதியிருக்கும்.
உறுதியான இடத்தில் உண்மை இலிங்கமுண்டு.
பக்தியை வளர்த்து அறுத்து,அளந்து வாழ்வது
சத்யோஜாதலிங்கம் என்னும் நெல் குதிருக்குள்ளாம்”
2. “வேம்பு மரத்தில் அமர்ந்து
வெல்லம் தின்றால் கசக்குமா?
அங்ககன் அமுதைச் சுவைத்தால் புளிக்குமா?
பயணத்திற்கான பாதையில்லை என் முடவன் சொன்னால்
அவனைக் கொல்பவர்களுண்டோ?
இந்த உணர்வின் வெளிப்பாடும், ஊக்கமும்
சத்யோஜாத லிங்கத்திற்கே”
3. “கனி கொய்ய முடியுமோ மரமேறாமல்?
மணத்தைச் சூட இயலுமோ மலர்களின்றி?
உண்மையை மெய்ப்பிக்க முடியுமோ சாட்சியின்றி?
ஊக்கமின்றி குரு,இலிங்கம்,ஜங்கமம் அடைய இயலுமா?
குருவிடம் நல்லுறவு,இலிங்கதி யானம்,மூவகை மலவிலக்கு
ஆகியன சத்யோஜாத இலிங்கத்துக்கு நட்பாம்.”
ஆய்தக்கி லக்கம்மா
ஆய்தக்கி மாரய்யனின் மனைவி லக்கம்மா அமரேஸ்வரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர். வீரசைவத்தில் போற்றுதலுக்குரியவரான பசவேசரின் புகழைக் கேட்டு ஆய்தக்கி மாரையாவும் லக்கமாவும்கல்யாண் நகருக்கு வருகின்றனர் கல்யாண் நகர வீதிகளில்அரிசியைச் சேகரிக்கும் தொழில் இவர்களுடையதாகும். “மாரய்யாபிரிய அமரேஸ்வர லிங்கா “இவரது முத்திரையாகும் காயகம், தாசோகம் ஆகியவற்றின் பெருமைகளை விளக்குவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.” சூன்ய சம்பாதனையில்” இத்தம்பதியரின் காயக மற்றும் தாசோக மேன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
1.“உடல் குறையேயன்றி உள்ளக் குறையுண்டோ?
மலை உறுதியாயிருந்தாலும்
உளியின் முனை உடைவது இயல்புதானே?
சரணருக்கு வறுமையில்லை;
உண்மை உடையவருக்குத் தீவினையில்லை.
மாரய்யப்பிரிய அமுகேஸ்வரலிங்கம்
என்னிடமுள்ள வரையில் எவர் தயவும் தேவையில்லை”
2. “ஆசை அரசனுக்கன்றி சரணருக்குண்டோ ஐயனே?
கோபமென்பது காலனின் தூதருக்கன்றி
பிறவியறுத்தவருக்குண்டோ ஐயனே?
இத்துணை அரிசி நமக்கெதற்கு?சிவன் இதை ஒப்பான்
மாரய்யா, இது
மாரய்யப்பிரிய அமுகேஸ்வரலிங்கத்திற்குத் தொலைவாம்.”
3. “காயகம் போற்றும் சரணர் தானம் வாங்கி
தாசோகம் செய்யலாமா?
ஒரு மனதுடன் உழைக்க வேண்டும்
ஒரு மனம் இரண்டாவதற்கு
முன்பே ஒரு மனதுடன் தந்து விடவேண்டும்
மாரய்யா, மாரய்யப்பிரிய அமுகேஸ்வரலிங்கத்திற்கு
உன்னையே அர்ப்பணித்து விடுவாய்”
பாச்சிகாயத பசவண்ணா
இவர் மரத்தச்சன் பணி செய்தவர். காயகம் குறித்த கருத்துகளை அதிகம் வெளிப்படுத்தியவர். ”பசவண்ணப் பிரிய காளிகாவிமல ராஜேஸ்வரலிங்கா ”இவரது முத்திரையாகும்.
1. “குலம் கோத்திரம் சாதி பேசி அழிந்தவர் கோடி
பிறப்பு தீண்டாமையால் கெட்டவர் கோடி
வார்த்தைத் தீட்டால் அழிந்தவர் கோடி முனிவர்கள்
சிவன், திருமால், பிரம்மன் “யத்ருஷ்டம், தன்னஷ்டம்
என்றறியாமல் பதினான்கு உலகங்களும்
மீண்டும் மீண்டும் பிறந்தன.
அழுக்குகளை நீக்காத அறிவற்ற மனிதர்கள்
பரப்பிரம்மத்தை அடைய இயலுமோ?
உணர முடியாத, தொட முடியாத,காண முடியாதவன்
பெயர், வடிவ , உருவங்களில் அகப்படுவதில்லை.
பசவண்ணப்பிரிய விஸ்வகர்மட்ட காளிகாவிமல
ராஜேஸ்வரலிங்கம் அறியாதவரிடத்தில்லை”
2. “பூமிக்குள் மறைந்திருக்கும் புதையல் போல
சிப்பியில் மறைந்திருக்கும் முத்துப் போல
நீரில் மறைந்திருக்கும் நெருப்புப் போல
ஒளியில் மறைந்திருக்கும் சுடர் போல
ஆத்மஞானமெனும் உண்மையறியாமல்
இட்டலிங்கம் ,பிராணலிங்கமெனப் பிரித்தனர்
பசவண்ணப்பிரிய விஸ்வகர்மட்ட காளிகாவிமல
ராஜேஸ்வரலிங்கம் உணர்ந்தவர் அறிவர்”
3. “வைரவுடல் தன்னை ஊசியால் குத்த அனுமதிக்குமா?
ஆடு தன்னைப் பார்த்துப் பிளிற யானை அனுமதிக்குமா?
கோழை தன்னை அச்சுறுத்துவதை வீரன் அனுமதிப்பானா?
புலன்களும் உறுப்புகளும் தனக்கின்னல் தருவதை
உண்மையறிந்த இலிங்கமணிந்தவன் அனுமதிப்பானா?
கையிலிருக்கும் அணிகலனைக் காண கண்ணாடியெதற்கு?
வேண்டியதைக் கண்டபின் பிறரிடம் கேள்வியெதற்கு?
இதனை அறிந்ததால் பசவண்ணப்பிரிய விஸ்வகர்மட்ட
காளிகாவிமல ராஜேஸ்வரலிங்கம் பிறவியழித்தது.”
பால பொம்மண்ணா
“வீரசூர ராமேஸ்வரா” இவரது முத்திரையாகும். சோலாப்பூரில் வசனக்கார்களில் முக்கியமானவரான சித்தராமய்யா சிவாலயம் கட்டி இலிங்க வழிபாட்டிற்கான செயல்களைச் செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னிடம் அவ்வழிபாடு செய்வதற்கான பொருள் இல்லையே என்று பொம்மண்ணா வருந்தினார். சித்தராமய்யன் கடப்பாரையை அவரிடம் கொடுத்து ஆலய வாசலைத் தோண்டும்படி வற்புறுத்தினார். அவர் கட்டளையையேற்றுத் தோண்ட தங்கப் புதையல் கிடைத்தது என்றும் அதைக் கொண்டு பால பொம்மண்ணா ஆலயம் கட்டி வழிபாடு செய்தார் என்றொரு கதையுண்டு. சரணரைப் போற்றுதல், தத்துவ போதனை ஆகியவை வசனங்களில் வெளிப்படுகின்றன.
“பாம்பு புற்றில் கம்பொன்றை நட்டால்
கம்பின் துணையோடு மேலேறும் தன்மை கொண்டது
பாம்பு, இது நன்கறிந்த உண்மை
மெய்ப்பொருளில் அன்பு காட்டுவது மனதில் வேண்டும்,
இருமை நிலை நீக்கவேண்டும்
வீரசூர ராமேஸ்வரலிங்கத்திடம்”
பாதோதகம் : அடியார்கள்,ஜங்கமர்கள் ஆகியோரின் பாதங்களைக் கழுவும் நீர்.
தாஸோகம் : “ நான் “ உழைப்பது; “நாம்” உண்பது என்னும் தத்துவம்.
[தொடரும்]

நாங்குநேரி வாசஸ்ரீ
109. தகை அணங்குறுதல்
குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
நிக்குதது மோகினியா? மயிலா? காதுல பெரிசா தோடு போட்டு நிக்குத அழகான பொம்பளப் பிள்ளையா? எம் மனசு கெடந்து தெவங்குதே.
குறள் 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
எம் பார்வைக்கு அவ நேர் பார்வை பாக்குதது தனியாளா எதித்தாப்ல நின்னு அழிச்சிப்போடுத சக்தி இருக்க மோகினி கூட ஒரு படையையும் சேத்துக்கிட்டு வந்து நின்னா எப்டி இருக்குமோ அப்டி இருந்திச்சு.
குறள் 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
எமன் யாருன்னு முன்ன நான் அறிஞ்சிக்கிடல. இப்பம் புரிஞ்சிக்கிட்டேன். அவன் பொம்பள உருவத்துல இருக்க பெரிய கண்ணுமுழிங்குத அம்பால சண்ட இழுக்கவன் அப்டிங்குத உண்மைய.
குறள் 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்
நல்லதன்மையா இருக்க இந்த பொம்பளப் பிள்ளையோட கண்ணு மட்டும் உசிர எடுக்குதது கணக்கா இருக்கே? ஏன் இந்த மாறுபாடு?
குறள் 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து
உசிர எடுக்க வந்த எமனா? ஒறவு கொண்டாடுத கண்ணா? மிரண்டுபோய் நிக்க பெண்மானா? இந்த பெண்பிள்ளையோட பார்வையில மூணு தினுசும் சேந்தாப்போல இருக்கே.
குறள் 1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்
புருவம் வளைஞ்சி கோணி நிக்காம நேரா நின்னு மறைச்சிக்கிடுச்சின்னா இவ கண்ணு நான் நடுங்குதது கணக்கா சங்கடத்த தாராது.
குறள் 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
மதம் பிடிச்ச யானை மேல இடுத முகபடாம் கணக்கா இருக்கு பொம்பளைங்க சாயாத கொங்கை மேல உடுத்துத சீலை.
குறள் 1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு
போர்க்களத்துல பகையாளிக்கு பீதியக் கெளப்புத எம் பலம் இப்பம் இவ ஒளி வீசுத நெத்தியக் கண்ட பொறவு தோத்து நிக்குதே.
குறள் 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து
பெண்மான் கணக்கா துள்ளுத பார்வையும், வெக்கப்படுத கொணமும் அசப்புல நக நட்டுகணக்கா இருக்கையில பொறவு என்னத்துக்கு செஞ்சுவச்சிருக்க மத்த நகநட்ட பூட்டி உட்டிருக்காக.
குறள் 1090
உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
கள்ளு குடிச்சவனுக்கு மட்டுந்தான் மயக்கத்தக் கொடுக்கும் பாத்தாலே மயக்கத்தக் கொடுக்குதது காதல்தான்.

ராதா விஸ்வநாதன்
அம்மன் கோவில் வாசல்
நிற்கிறார்கள் வரிசையில்
பிள்ளை வரத்திற்காக…
தொட்டிலில் தவழும் கிருஷ்ணனை
கோவில் மரத்தில் கட்டினால்
கிட்டிடும் குழந்தை பாக்கியம்
நம்பிக்கைதான் வாழ்க்கை
நாளை இருப்போம் எனும்
நம்பிக்கையில் தான் சுழல்கிறது பூமி
தொட்டில் கிருஷ்ணன்
தொங்குகிறான் விற்கும் பெண்ணின்
துவண்ட கைகளில்….
எத்தனை தொட்டில் கட்டினாளோ
இப்பெண் இப்படி வரம் பெற
காலைச் சுற்றும் பாலகன் ஒருவன்
இடுப்பில் ஒரு பெண் குழந்தை
இன்னொன்று காத்திருக்கிறது
வெளி உலகை எட்டிப் பார்க்க…
வேண்டும் என்போர் ஒரு பக்கம்
வேண்டாம் என்போர் மறுபக்கம்
இதுவே அவனது தீராத விளையாட்டு

திருச்சி புலவர் இராமமூர்த்தி
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி,
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று,
பொற்பு உடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி! போற்றி்
திருவாரூர் இறைவனின் திருவருளால் சுந்தரேசர் பாடிய திருத்தொண்டத் தொகையின் முதலடியில் போற்றப்பெற்ற தில்லைவாழ் அந்தணர் புராணத்தின் தொடக்கத்தில் தில்லை யம்பலவாணரின் சிறப்புக்களை சேக்கிழார் பாடினார். முதற்பாடல் இறைவனின் நிட்களத் திருமேனியாகும். இனி அடுத்தபாடலில் இறைவனின் சகளத் திருமேனியின் சிறப்பையும், திருவடிப் பெருமையையும் கூறுகிறார்.
இப்பாடலின் சொற்பொருள்
கற்பனை என்பதே சற்று சொல்லைக் கடந்த நிலையாகும். அத்தகைய கற்பனைகளைப் பற்பலவாறு செய்தாலும், அவற்றுக்கு முதற்காரணமாகிய மாயையைக் கடந்த வடிவமும், ஒளியும் கலந்த உருவமுடையவரே இறைவன். அந்த ஒளியும் தானே தோன்றிய ஒளியாகும். இதனைக் ‘’கற்பனை கடந்த சோதி‘’ என்ற தொடரால் சேக்கிழார் குறிக்கிறார். தேவாரத்தில் இதனை,
‘’இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே‘’ என்று அப்பர் பெருமானும் ,
‘’துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரை,
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை ‘’ என்று சுந்தரரும் பாடினர். மேலும் திருமூலர் திருமந்திரத்தில் ,
‘’கதுமெனப் பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே!’’ என்று பாடுகின்றார். உமாபதி சிவாச்சாரியார்,
‘’ஆரணங்கள் முடிந்த பதத்து ஆனந்த ஒளியுலகில்
காரணம் கற்பனை கடந்த கருணைத்திரு உருவாகி‘’ என்றுபாடுகிறார். உயிர்கள் பால் வைத்த கருணையால், அக்கருணையையே திருவுருவம் ஆக்கிக் கொண்டு, தோன்றுகிறார். இதனை சிவஞான சித்தியார்,
உருமேனி, அருமேனி, அருவுருவான திருமேனி ஆகிய மூன்றும், ‘’நந்தம்கருமே னி கழிக்க வந்த கருணையின் வடிவுதானே’’ என்று கூறும்.
இறைவனின் அழகிய கோலம் இன்னதென்று உணரவும் கூறவும் இயலாத இன்பம் தரும் திருவுருவம் ஆகும். இதனைத் திருவிசைப்பா ,
பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்துப்
பருகுதோறு அமுதம் ஒத்து அவர்க்கே
சித்தியா விருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்!’’ என்று போற்றுகிறது. மேலும் திருவுந்தியார் என்ற சாத்திரம் ,
“அகளமாய் யாரும் அறிவறிது அப்பொருள்
சகளமாய் வந்ததென்று உந்தீ, பற!
தானாகத் தந்தது என்று உந்தீ, பற! இப்பாடலில் களம் உருவத்தைக் குறித்தது. அகளம் என்பது உருவமற்றதைக் குறித்தது. சகளம் என்பது தெளிவான உருவத்தைக் குறித்தது.
இறைவன் நடனமிடும் இடம் வேதத்தின் சிரமாகிய உபநிடதம் ஆகும்; அதனையே ஞானாகாசம் என்பர். சொல்லக் கடந்து நிற்கும் ‘’சிற்பரவியோமம்‘’ என்ற வாக்கு அதனை உணர்த்தும். இதுவே சிற்றம்பலம்!
மேலும் மேற்பாட்டில் நடம் போற்றி என்று திருவடியைப் போற்றியவர் இப்பாடலில் பூங்கழலைப் போற்றுகிறார். இக்கழலைச் சிவஞானபோதம், ‘’அயரா அன்பின் அரன்கழல் செலுமே’’ என்று போற்றுகிறது. ஆகவே இப்பாடல்களில் போற்றப்பெற்ற இறைவன் தில்லை மூவாயிரவருள் முதன்மை பெற்ற ஒருவர் என்னும் உண்மை கூறப் பெறுகிறது! தம்மைத் தில்லை வாழ் அந்தணருள் முதன்மையானவர் என்று கருத வைத்து, அவர்தம் அடியார்க்கும் அடியவராக சுந்தர மூர்த்தி சுவாமிகளைக் கருதச் செய்தார்.

-மேகலா இராமமூர்த்தி
கொல்கத்தாவிலுள்ள சிம்லா நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரான விஸ்வநாத தத்தர், புவனேஸ்வரி தேவி இணையருக்குத் தவப்புதல்வராய், 1863ஆம் ஆண்டு, ஜனவரி 12இல் பிறந்தவர் நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர். இளமையில் நரேன் என்ற பெயரில் அவர் அனைவராலும் அழைக்கப்பட்டார்.
குழந்தைப்பருவத்திலேயே மிகச் சிறந்த நினைவாற்றல் கொண்டவராக விளங்கினார் நரேன். சிறுவயதிலிருந்தே அவருக்கு தியானத்தின்மீது மிகுந்த நாட்டம் இருந்தது. பகுத்தறிவுடனேயே எதனையும் அணுகும் போக்கு இயல்பாகவே அவரிடம் அமைந்திருந்தது.
நரேன் சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்விது…
நரேனின் தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த காரணத்தால் அவர்கள் வீட்டுக்குப் பலரும் வருவார்கள்; போவார்கள். அவர்களிடமெல்லாம் சிறுவன் நரேன், எவ்வித வேறுபாடுமின்றிக் கலந்து பழகுவார். வங்காள வழக்கப்படி அவர்கள் புகைக்க புகையிலை அல்லது ஹூக்கா (Hookah) தயாரித்துக் கொடுப்பார். அங்குவரும் பல்வேறு சாதியினரும் புகைப்பிடிக்கத் தனித்தனிக் குழாய்கள் இருந்தன. சாதி என்பது நரேனுக்கு அப்போது புரியாத புதிராகவே இருந்தது.
“ஏன் ஒவ்வொரு சாதியினருக்கும் புகைப்பதற்குத் தனித்தனிக் குழாய்கள்? ஒருவர் புகைத்ததில் இன்னொருவர் புகைத்தால் குழாய் வெடித்துவிடுமா?” என்றெல்லாம் எண்ணமிட்டபடி இருப்பார். இதைச் சோதித்து அறிய, எல்லாக் குழாய்களின் மூலமாகவும் ஒருமுறை புகையிழுத்துப் பார்த்தார். ஒன்றும் ஆகவில்லை! அப்போது அங்குவந்த அவருடைய தந்தையார் ”என்னப்பா செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்க, ”ஒன்றுமில்லை…சாதிப் பிரிவினைகளை உடைத்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்!” என்றாராம் சிறுவன் நரேன். அவருடைய தந்தை சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாராம்.
பள்ளிப்படிப்பை முடித்த நரேன், கொல்கத்தாவிலிருந்த மாநிலக் கல்லூரியில் ஓராண்டு காலம் படித்தார். அடுத்த ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) சேர்ந்தார். அந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் நரேனின் அறிவுக்கூர்மையைக் கண்டு வியந்தனர். கல்லூரி முதல்வரான ஹேஸ்டி (William Hastie) நரேனைப் போன்றதொரு மாணவனை நான் பார்த்ததே இல்லை என்று பாராட்டினார்.
உயர்ந்த கருத்துக்கள் குறித்துத் தம் நண்பர்களிடமும் தம்மைவிட வயதில் பெரியவர்களிடமும் விவாதம் செய்வது நரேனின் வழக்கம். தர்க்கரீதியான வாதங்களை முன்வைப்பதிலும் நரேனுக்கு இணை அவரே. இந்தக் காலக்கட்டத்தில் சமயம் தொடர்பான விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். ”இறைவன் என்றொருவன் இருக்கின்றானா? இல்லையா? இருக்கின்றான் என்றால் யாரேனும் அவனைப் பார்த்திருக்கிறார்களா?’ என்பன போன்ற வினாக்கள் அவர் மனத்தில் எழத்தொடங்கின. அவை குறித்தே அல்லும் பகலும் சிந்திக்கலானார். தம் வினாக்களுக்கு விடைதேடி, அறிஞர்கள் பலரை அணுகியும் நிறைவான விடை அவருக்குக் கிடைக்கவில்லை.
அப்போது தம்முடைய ஆசிரியர் ஹேஸ்டியின் மூலம் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள தக்ஷிணேஸ்வரத்தில் அமைந்துள்ள காளிகோயிலின் பூசாரியான இராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்ட நரேன், அவரைத் தம் நண்பர்களுடன் சென்று சந்தித்தார். நரேனைத் தனியறைக்கு அழைத்துச்சென்ற இராமகிருஷ்ணர் நீண்ட பிரிவுக்குப் பின் நெருங்கிய நண்பரைச் சந்திப்பதுபோல் நரேனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். தம் கையாலேயே நரேனுக்கு இனிப்புகள் ஊட்டிவிட்டார். இராமகிருஷ்ணர் நரேனைத் தொட்டதும் முற்றிலும் புதியதோர் அனுபவத்தை அடைந்தார் நரேன்.
இராமகிருஷ்ணர் நரேன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தம்மை நாடிவரும் பிற பக்தர்களிடம் நரேனைப் பற்றிப் பேசும்போது, ”பக்தர்கள் எல்லாரும் நட்சத்திரத்தைப் போன்றவர்கள்; ஆனால் நரேன் சூரியனைப் போன்றவன். அவன் ஒரு முக்தியடைந்த ஆன்மா; பிறருக்கு உதவுவதற்காகவே பிறவியெடுத்தவன்” என்று பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.
1884ஆம் ஆண்டு தொடக்கத்தில் நரேனின் தந்தையான விஸ்வநாத தத்தர் மறைந்தார். நரேனின் வாழ்வில் அஃது ஒரு சோதனையான காலக்கட்டமாக அமைந்தது. அப்போது, இராமகிருஷ்ணரும் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஆகவே தம் எதிர்காலப் பணிகளை மேற்கொள்ள அவர் நரேனைத் தயார்செய்ய ஆரம்பித்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் நாள் இராமகிருஷ்ணர் மறைந்தார். துக்கத்தில் ஆழ்ந்த நரேன் உள்ளிட்ட இராமகிருஷ்ணரின் சீடர்கள் சில காலம் கழித்துச் காசிப்பூர் எனும் ஊரில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து மடம் அமைத்தனர். அதுதான் இராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் மடமாகும்.
அந்த இளஞ்சீடர்கள் முறையாகத் துறவறம் மேற்கொண்டு புதிய பெயர்களை ஏற்றனர். ஆனால் நரேன் தனக்கென்று பெயர் எதனையும் அப்போது வைத்துக்கொள்ளவில்லை. ஒரே இடத்தில் தங்கியிருக்க விரும்பாமல் காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார்.
ஒரு சமயம் மவுண்ட் அபுவில் (Mount Abu) கேத்திரி (Khetri) சமஸ்தான மன்னர் அஜித் சிங்கைச் சந்தித்தார் நரேன். மன்னரின் விருப்பத்திற்கிணங்க கேத்திரிக்குச் சென்றார். நரேனிடம் ஈடுபாடுகொண்ட மன்னர் அஜித் சிங், நரேனின் சீடரானார். பின்பு அங்கிருந்து புறப்பட்ட நரேன் மைசூர் வந்தார்; அங்கிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர ரகுநாத சேதுபதியைச் சந்தித்தார். நரேனின் அறிவாற்றலைக் கண்டு வியந்த பாஸ்கர சேதுபதியும் நரேனின் சீடரானார்.
அப்போது அமெரிக்காவில் நடைபெறவிருந்த அனைத்துச் சமய மாநாட்டை (Parliament of the World’s Religions) பற்றிய தகவலறிந்தார் நரேன். அதில் தாம் கலந்துகொள்ள வேண்டும் என்பது தம்முள் நிறைந்திருக்கும் குருதேவர் இராமகிருஷ்ணரின் விருப்பம் என்பதை உணர்ந்த அவர், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். இராமநாதபுரத்திலிருந்து குமரிக்கும் அங்கிருந்து சென்னைக்கும் பயணம் மேற்கொண்டார். அங்கே துடிப்புமிக்க இளைஞர்கள் பலர் அவரைப் பின்பற்றத் தயாராக இருந்தனர். அவர்கள் மத்தியில் சொற்பொழிவுகள் ஆற்றினார். அவர் அமெரிக்கா செல்வதற்கு அவ்விளைஞர்கள் நிதி திரட்டத் தொடங்கினர்.
அதே சமயம் கேத்ரி மன்னர் அஜித் சிங்கின் அழைப்பு வந்தது நரேனுக்கு. அமெரிக்கப் பயணத்திற்கான பயணச்சீட்டு வாங்குவது முதற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்தார் மன்னர். ‘விவேகானந்தர்’ என்ற பெயரை நரேனுக்குப் பரிந்துரைத்தவரும் அவரே. அதுமுதல் நரேன் விவேகானந்தர் ஆனார். பின்னர் அந்தப் பெயரிலேயே தம் வாழ்நாள் முழுவதும் அவர் அழைக்கப்பட்டார்.
1893ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி சிகாகோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பம்பாயிலிருந்து கப்பலில் பயணமானார் விவேகானந்தர். கப்பல் கனடாவின் வான்கூவர் (Vancouver) நகரை அடைந்தது; அங்கிருந்து தொடர்வண்டி மூலம் சிகாகோவை அடைந்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் திங்கட்கிழமை அனைத்துச் சமயங்களின் மாநாடு சிகாகோவில் தொடங்கியது. ஹால் ஆப் கொலம்பஸ் (Hall of Columbus) எனும் பெரிய கட்டடத்தில் அது நடாத்தப்பட்டது.
அஃது ஒரு மாபெரும் நிகழ்ச்சியாதலால் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்தது. விவேகானந்தரின் நெஞ்சு இனந்தெரியாத உணர்ச்சியால் அப்போது படபடத்தது. எனவே மாநாட்டுத் தலைவர் அவரைப் பேசப் பலமுறை அழைத்தும் தயக்கத்துடன் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் விவேகானந்தரைக் கேட்காமலேயே அவர் பெயரை மேடையில் அறிவித்துவிட்டார் தலைவர். இனி ஒன்றும் செய்யமுடியாது; பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் பேச எழுந்தார் விவேகானந்தர்.
அரங்கிலிருந்தவர்களைப் பார்த்தார். ”அமெரிக்கச் சகோதரிகளே! சகோதரர்களே…!” என்று பேச்சைத் தொடங்கினார். அவரால் அந்த வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. எப்போதும் “Ladies and Gentlemen!” என்ற விளிப்பையே கேட்டுப் புளித்துப் போயிருந்த மேற்குலக மக்களின் செவிகளுக்கு அவ்வாஞ்சையான அழைப்பு ஓர் பரவசத்தை ஏற்படுத்திவிட்டது. உணர்ச்சிவயப்பட்டவர்களாய் மக்கள் கைதட்ட ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் எழுந்துநின்று உற்சாக ஆரவாரமும் வாழ்த்தொலியும் எழுப்பியதால் அவை அடங்கப் பல நிமிடங்களாயின!
அனைவரும் அமைதியானதும் விவேகானந்தர் கம்பீரமாகத் தம் பேச்சைத் தொடங்கினார். ”எல்லா மதங்களும் உண்மையே! எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்து மதத்தின் கொள்கை” என்ற கருத்தை முன்வைத்தார் அவர். மாநாட்டுக்கு வந்திருந்த மற்ற சொற்பொழிவாளர்கள் அனைவரும் தத்தமது மதத்தைப் பற்றி மட்டுமே பேசினர். ஆனால் விவேகானந்தரோ அனைத்து மதங்களில் இருக்கும் உண்மைகளையும் மதக் காழ்ப்பின்றிப் பேசினார்.
கிறித்தவப் பார்வையாளர்கள் மிகுதியும் கலந்துகொண்ட, பதினேழு நாள்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற, அந்தச் சமய மாநாட்டில் செப்டம்பர் 20 அன்று விவேகானந்தர் முன்வைத்த சில துணிச்சலான கருத்துக்களாவன:
”கிறித்தவர்களாகிய நீங்கள் நல்ல விமரிசனங்களை ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவர்களாகையால் என்னுடைய சிறிய விமரிசனத்தைத் தவறாகக் கருதமாட்டீர்கள் என்றெண்ணி உங்கள்முன் வைக்கின்றேன். நீங்கள் உங்கள் மதத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவுக்கு மதபோதகர்களை ஆர்வத்தோடு அனுப்புகிறீர்கள்! ஆனால் எம் மக்களோ அங்கே கொடும் பஞ்சத்திலும் கடும் பசியிலும் துடித்து ஆயிரக்கணக்கில் மடிந்துகொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் பசிபோக்கவும் பஞ்சம்நீக்கவும் நீங்கள் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, இந்தியாவெங்கும் தேவாலயங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்குத் தேவை பசிதீர்க்கும் உணவு; ஆனால் நீங்கள் தருவதோ பயனற்ற கற்களை! பசியில் துடித்துக்கொண்டிருப்பவனிடம் மதபோதனை செய்வதைவிடவும் பெரிய குற்றம் வேறெதுவுமில்லை; பஞ்சத்தில் அடிபட்டு நெஞ்சுவெந்து கொண்டிருப்பவனிடம் தத்துவத்தைப் போதிப்பதைவிடப் பேரவலம் வேறெதுவுமில்லை!
ஐயன்மீர்! எங்கள் இந்தியாவில் போதுமான மதங்கள் ஏற்கனவே இருக்கின்றன. எனவே எங்களுக்கு மதம் தேவையில்லை. ஆதலால் எங்கள் ஆன்மாவுக்கு நீங்கள் நல்வழிகாட்ட முயல்வதைவிட எங்கள் வயிற்றுப்பசிக்கு உணவிடுதலே உடனடித் தேவையும் நல்ல சேவையுமாகும். நான் இங்குவந்ததுகூட ஏழ்மையில் துயருறும் எம் மக்களுக்கு உங்களிடம் உதவி வேண்டித்தான்! ஆனால் கிறித்தவ பூமியில் வாழுகின்ற கிறித்தவர்களிடம் எம் இந்திய மக்களுக்கு உதவிபெறுவது எத்துணைக் கடினமானது என்பதையும் நான் உணர்ந்தே இருக்கின்றேன்!” என்று மொழிந்துவிட்டு இந்திய வேதாந்தக் கருத்துக்கள் குறித்துப் பேசலானார்.
பத்திரிகைகள் அவரது உரைகளை வெகுவாய்ப் புகழ்ந்து எழுதின. சிறந்த பேச்சாளர் ஒருவருக்கு இருக்கவேண்டிய வெண்கலக்குரல், மொழிவளம், சிந்தனைகளை அழகாய் வகைப்படுத்தி அடுக்கும் திறம் ஆகியவற்றோடு கம்பீரத் தோற்றமும் கொண்டிருந்த இளந்துறவி விவேகானந்தர் உலகம் விரும்பும் பேச்சாளராக மிளிர்ந்ததில் வியப்பேதுமில்லை.
மாநாடு முடிந்த பின்னர், மக்களின் அழைப்பிற்கிணங்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சொற்பொழிவுகள் ஆற்றினார் அவர். 1895 செப்டம்பரில் இங்கிலாந்து சென்றார். அங்கும் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவருக்கு நண்பர்களும் சீடர்களும் பெருகினார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மார்கரெட் எலிசபெத் நோபில் (Margaret Elizabeth Noble) எனும் இளம்பெண். இவர்தாம் பின்னாளில் ’சகோதரி நிவேதிதை’யாக (Sister Nivedita) புகழ்பெற்றவர். மகாகவி பாரதியின் ஞானகுருவாக விளங்கியவரும் இவரே!
இங்கிலாந்து அல்லாமல் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார் விவேகானந்தர். சில ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின் தாயகம் திரும்பினார். 1897 ஜனவரி 15ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்தில் வந்திறங்கினார். அங்கே அந்த வெற்றித் திருமகனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு மக்களால் அளிக்கப்பட்டது. அங்கிருந்து பாம்பனை அடைந்தார். இராமநாதபுரம் அரசர் பாஸ்கர ரகுநாத சேதுபதி உள்ளிட்ட பலர் அங்கே விவேகானந்தரைப் பேரன்போடும் பெருமகிழ்ச்சியோடும் வரவேற்றனர். அவரை இரதத்தில் ஏற்றி, இரதத்தின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு, பாஸ்கர சேதுபதியும் பிறரும் அதனை இழுத்துச் சென்றனர். இவ்வியத்தகு செயலை அறிகின்றபோது விவேகானந்தரின் அறிவாற்றலால் நமக்குப் பெருமிதமும், இராமநாதபுரம் மன்னரின் தன்னடக்கத்தாலும் பணிவாலும் நெகிழ்ச்சியும் ஏற்படுகின்றன!
பிறகு கொல்கத்தாவுக்குச் சென்ற விவேகானந்தர், ஆலம்பஜார் (Alambazar) என்ற இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த இராமகிருஷ்ண மடத்தில் ஏனைய துறவிகளோடு தங்கினார். அப்போது, ஒரு துறவி என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து அவர் மற்ற துறவிகளுக்குப் போதித்தார். வழிபாடு, தியானம், இறைவனை அறியும் முயற்சி இவை மட்டுமே ஒரு துறவிக்குரிய செயல்கள் ஆகா. துறவியானவன் மக்கள் தொண்டில் தன்னைக் கரைத்துக்கொள்வது, பள்ளிகள், மருத்துவமனைகள் நடத்துவது போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்பது விவேகானந்தரின் நெடுநாளைய இலட்சியம். இந்தியப் பெண்கள் நற்குணங்கள் நிரம்பியவர்களாக இருந்தும் கல்வியறிவு பெற்றவர்களாகவும், வெளியுலகில் செயலூக்கத்துடன் இயங்குபவர்களாகவும் இல்லையே என்று வருந்திய அவர், பெண்களுக்குக் கல்வி அளிப்பதன் மூலமே இக்குறைகளைக் களையமுடியும் என்று உறுதிபடக் கூறிவந்தார். சகோதரி நிவேதிதை பெண்களுக்கான பள்ளி ஒன்றைத் தொடங்கி விவேகானந்தரின் இந்த எண்ணத்தை ஈடேற்றினார். இன்று அந்தப் பள்ளி நல்ல வளர்ச்சிபெற்றுப் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல சீரிய பணிகளை ஆற்றிவருகின்றது.
1899இல் மீண்டும் ஒருமுறை மேனாட்டுப் பயணம் மேற்கொண்ட விவேகானந்தர் அங்கே பல இடங்களில் தம்முடைய வேதாந்தக் கருத்துக்களைப் பரப்பினார். ஆயிரத்துத் தொள்ளாயிரமாவது ஆண்டு (1900) டிசம்பர் 9-இல் பேலூர்(Belur) மடத்தை வந்தடைந்தார். அவருடைய உடல்நிலை அப்போதே நலிவுகாணத் தொடங்கிவிட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாது சொற்பொழிவுகளும் சீடர்களுக்கு வகுப்புகளும் தொடர்ந்து நடத்திவந்தார். மக்கள் தொண்டையும் அவர் நிறுத்தினாரில்லை.
தம்முடைய முடிவு நெருங்குவதை அகக்கண்ணில் கண்டார் விவேகானந்தர். தம் மரணத்துக்கு மூன்று நாள்களுக்குமுன் சுவாமி பிரேமானந்தருடன் பேலூர் மடத்தில் உலவிக்கொண்டிருந்த அவர், ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி, “நான் என் உடலை விட்டவுடன் அதை இந்த இடத்தில் தகனம் செய்!” என்று சொல்லியிருக்கின்றார். இன்று அதே இடத்தில்தான் சுவாமி விவேகானந்தரின் திருக்கோயில் எழுப்பப்பட்டிருக்கின்றது என்பது அறியத்தக்கது.
1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள், வீரமும் விவேகமும் மிக்க ஞானத் துறவியான விவேகானந்தர் இம்மண்ணுலகில் வாழ்ந்த இறுதிநாளாகும். அன்றிரவு தியான நிலையிலேயே அவர் தம் பொன்னுடலை நீத்தார். மக்களிடையே ஆன்ம விழிப்பையும் வேதாந்தத்தையும் விளங்கவைக்க வந்த அந்த அறிவுச்சுடர் முப்பத்தொன்பது ஆண்டுகளிலேயே ஒளியவிந்து அடங்கியது இந்திய மக்களின் தவக் குறைவே!
எனினும் அந்த வீரத்துறவி விட்டுச்சென்றிருக்கும் அற்புதமான அறிவுரைகள் நமக்கு, குறிப்பாக, இளைய சமுதாயத்துக்கு நல்வழிகாட்டுவனவாக அமைந்திருக்கின்றன; அவற்றில் ஓரிரண்டை அறிந்துகொள்வோம்!
1. என் அருமை மாணவர்களே! கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மக்கள் தொண்டில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். விலைமதிப்பற்ற செல்வமும் புதையலும் உங்களுக்குக் கிடைத்தால்கூட இந்தத் தொண்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அது ஈடில்லை.
2. நமது குற்றங்களைச் சுமத்துவதற்கு வேறொருவர் இருக்கும்வரை நாம் நம்முடைய பலவீனங்களையும் தவறுகளையும் மெதுவாகத்தான் புரிந்துகொள்கிறோம். மனிதர்கள் பொதுவாகத் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதே தங்கள் குற்றங்களைச் சுமத்துகிறார்கள். இல்லாவிட்டால் விதி என்பார்கள். நம் விதிக்கு நாமே காரணம்! நாம் விதைத்ததைத்தான் நாம் அறுக்கிறோம். நமக்குக் கிட்டும் பழியாகட்டும் புகழாகட்டும், அதற்கு வேறுயாரும் பொறுப்பல்லர்!
அறிவும் ஆற்றலும் துடிப்பும் துணிச்சலும் கொண்ட நூறு இளைஞர்கள் தம்மோடு இருந்தால் போதும்! இவ்வுலகையே புரட்டிப்போட்டு விடலாம் என்று நம்பினார் விவேகானந்தர்.
பொருள்பொதிந்த அருள்வாழ்வை வாழ்ந்துகாட்டியதோடல்லாமல் கருத்தாழமிக்க அறிவுரைகளையும் நமக்கு வழங்கிச் சென்றிருக்கின்றார் விவேகானந்தர். அந்தப் பேரருளாளரின் நன்மொழிகளை – பொன்மொழிகளைக் கற்றுக் கடைப்பிடிப்போம்! வாழ்வில் உயர்வோம்!
*****
கட்டுரைக்குத் துணைநின்றவை:
1. சுவாமி விவேகானந்தரின் வரலாறும் அறிவுரைகளும் – ராமகிருஷ்ண மடம் & ராமகிருஷ்ண மிஷன், பேலூர் மடம்.
2. https://en.wikipedia.org/wiki/Parliament_of_the_World%27s_Religions
3. https://en.wikipedia.org/wiki/Religion_not_the_crying_need_of_India

The white dwarf-pulsar binary system
[PSR J1141–6545.]
Credit: Mark Myers/ARC Centre of Excellence for Gravitational Wave Discovery
Animation depicting a neutron star orbiting a rapidly-spinning white dwarf. The white dwarf’s spin drags the very fabric of space-time around with it, causing the orbit to tumble in space.
+++++++++++
Credit: Mark Myers, OzGrav ARC Centre of Excellence.
++++++++++++++++++++
The precession effect of Gravity Probe B.
Credit: Gravity Probe B Team, Stanford, NASA

இரட்டை விண்மீன் சுற்றமைப்பு
[PSR J1141-6545]
+++++++++++++++++++
2020 ஜனவரியில் ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டுபிடித்த விஞ்ஞானப் பெரு மையத்தின் புதிய அறிவிப்பு
விரைவாய்ச் சுற்றும் நியூட்ரான் விண்மீன் ஒன்று, வெண்குள்ளி விண்மீன் ஒன்றைச், சுற்றும் போது, கால-வெளிப் பின்னல் நாரை இழுத்துக்கொண்டு சுற்றுவதை, உலக நாடுகளின் வானியல் பௌதிக நிபுணர்கள் புதிதாய்க் கண்டுள்ளார்கள். அக்குழுவின் தலைவர் ஆஸ்திரேலியப் பேராசிரியர் மாத்தியூ பைல்ஸ். அந்தச் செய்தி ஜனவரி 31, 2020இல் பிரதான விஞ்ஞானத் தாள்களில் வெளியாகி உள்ளன. சிறப்பு என்னவென்றால், அச்செய்தி நூறாண்டுக்கு முன்பு, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்ட “பொது ஒப்பியல் நியதியை” மெய்பித்துக் காட்டியுள்ளது. அந்த நியதி ஐன்ஸ்டைன் நோபெல் பரிசு பெறவும் வழி வகுத்தது. செய்தி வெளியிட்ட மதிப்புக்குரிய ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டுபிடித்த விஞ்ஞானப் பெரு மையம் : [ARC Centre of Excellence of Gravitational Wave Discovery (OzGrav)]. 2016 ஆம் ஆண்டில் ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் முதன் முதல் கருந்துளை நிழல் படம் வெளியானது அதே ஆண்டில் நமது பால்வீதி மையத்தில் உள்ள மாபெரும் கருந்துளையைச் சுற்றிவரும் விண்மீன்களைப் பற்றி தகவல் அறிவிக்கப்பட்டது.

+++++++++++++++
ஒளியிழந்து முடமான பெரும்பளு நியூட்ரான் விண்மீன்கள் வெண்குள்ளி என்று அழைக்கப்படுபவை. விந்தையான இந்த இரட்டை விண்மீன் சுற்றமைப்பைக் [PSR J1141-6545] கண்டுபிடித்தவர் ஓர் இந்திய விஞ்ஞானி. அவரது பெயர் : டாக்டர் விவேக் வெங்கட்ராமன் கிருஷ்ணன். ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் ஆய்வுக்கூடத்தின் [Max Planck Institute] ரேடியோ வானியல் பகுதியைச் சேர்ந்தவர். இந்தக் குழுவில் [INTERNATIONAL CENTRE FOR RADIO ASTRONOMY RESEARCH (ICRAR)] RAMEESH BHAT என்ற இந்தியரும் பங்கேற்றவர். மையத்தில் இருக்கும் பெரும்பளு வெண்குள்ளி ஒன்றை விரைவாய்ச் சுற்றுவது ஓரிளம் சிற்றெடைத் துடிப்பு விண்மீன் [Pulsor]. கண்டுபிடிக்க உதவியது : [CSIRO Parkes 64 metre Radio Telescope]. மையத்தில் உள்ள வெண்குள்ளி நமது பூமி அளவு, ஆனால் அது பூமியை விட 300,000 மடங்கு திணிவு கொண்டது. விரைவாய்ச் சுற்றிவரும் சிற்றெடை வெள்குள்ளி 20 கி.மீ [12 மைல்] விட்டம் உள்ளது. ஆனால் பூமி போல் 100 பில்லியன் மடங்கு திணிவு கொண்டது.
+++++++++++++++++++++++

நியூட்ரான் விண்மீன் கண்டுபிடிப்பு
2007ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி வானியல் விஞ்ஞானிகள் ராபர்ட் ரூத்லெட்ஜ் & டிரெக் பாக்ஸ் (Robert Rutledge & Derek Fox) இருவரும் தொலைநோக்கிகள் மூலமாகவும், ஜெர்மன்-அமெரிக்க “ரோஸாட்” விண்ணுளவி (ROSAT Space Probe) மூலமாகவும் உளவு செய்ததில் பூமிக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் ஒரு நியூட்ரான் விண்மீனைக் கண்டுபிடித்தார்கள்! அந்தக் கதிர்ப்பிண்டம் உர்ஸா மைனர் (Ursa Minor Constellation) என்னும் விண்மீன் மந்தைக்கு அருகில் காணப்பட்டது. 1990-1999 ஆண்டுகளில் ரோஸாட் இதுவரை விண்வெளியை உளவி 18,000 எக்ஸ்-ரே வீசும் முடத்துவ விண்மீன்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் அந்த விண்ணுளவி ஒளி வீசி வெளிப்புறம் புலப்பட்டு உட்புறச் செவ்வொளி, ரேடியோ அலைகளை (Objects with Visible Light, Infrared Light & Radio Waves) எழுப்பும் விண்வெளிப் பிண்டங்களின் பட்டியலையும் ஆக்க உதவியிருக்கிறது.

அந்த நியூட்ரான் விண்மீனை எட்டாவது எண்ணிக்கையாகக் கொண்டு “கல்வேரா” (Calvera) என்று பெயர் வைத்துள்ளார். இதுவரை ஏழு தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நியூட்ரான் விண்மீன்களில் எதுவும் சிதைவு பெற்ற சூப்பர்நோவா மிச்சத்துடன் (Supernova Remnant) ஒட்டியதில்லை! அதனுடைய இரட்டைத் துணைப்பகுதியும் (Binary Companion) இல்லை! மேலும் அதனுடைய கதிரலைத் துடிப்புமில்லை (Radio Pulsations)! கால்ரா நியூட்ரான் விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டதும், ஹவாயியின் 8.1 மீட்டர் தொலைநோக்கியில் துருவி ஆராய்ந்து அது ஒரு விந்தையான முடத்துவ விண்மீன் என்பது அறியப்பட்டது. நமது பால்மய வீதி காலக்ஸித் தட்டுக்கு மேலாக கால்ரா அமைந்துள்ளது. கால்ரா நியூட்ரான் விண்மீனின் தூரம் 250-1000 ஒளியாண்டுக்குள் இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது !
Pulsar Star
நியூட்ரான் விண்மீன் என்று எதைக் குறிப்பிடுகிறார் ?
பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம். சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன்! பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன! அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னாபின்னம் ஆகச் சிதைகிறது ! அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறுகின்றன. அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.

Structure of a Neutron Star
ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீட்டர் (12 மைல்) விட்டம் கொண்டது. அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது. அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density). நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட, பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும். நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் [2 x 10 to the power of 11 (2 X 10^11)] மடங்கு மிகையானது ! அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி, பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது !
சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் ! தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம்! இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் ! அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது! கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது !

Colliding Neutron Stars
துடிப்பு விண்மீன்கள் (Pulsars) என்பவை யாவை ?
1967ஆம் ஆண்டில்தான் ஜோசிலின் பெல் பர்னெல் (Jocelyn Bell Burnell) என்னும் ஒரு கல்லூரி மாணவி ஒரே அதிர்வு வீதத்தில் விட்டுவிட்டு மின்னும் துடிப்பு விண்மீன்களை ரேடியோ அலைவீசும் மூலப் பிண்டங்களாகக் கண்டுபிடித்தார்! சுழலும் நியூட்ரான் விண்மீன்களே துடிப்பு விண்மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன! அவை ஓர் அச்சில் சுற்றுவதால் விட்டுவிட்டு மின்னுகின்றன! இப்போது நாம் அனைத்து அலை வேகங்களிலும் துடிப்பு விண்மீன்களைக் காண முடிகிறது. ஒளி வேகத்தை ஒட்டிய விரைவில் உந்திச் செல்லும் பரமாணுக்கள் கொண்டு சுழலும் நியூட்ரான் விண்மீனே துடிப்பு விண்மீன் என்று அறியப்படுகிறது. கப்பலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு போல துடிப்பு விண்மீன்கள் வெளிப்படுத்தும் ஒளி விட்டுவிட்டு மின்னுகிறது.
சில துடிப்பு விண்மீன்கள் எக்ஸ்ரே கதிர்களை உமிழ்கின்றன. புகழ்பெற்ற நண்டு நிபுளா எனப்படும் நியூட்ரான் விண்மீன் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் பிறந்ததுதான். கி.பி. 1054ஆம் ஆண்டில் வெறும் சூப்பர்நோவா மட்டும் காணப்பட்டதாக அறியப் படுகிறது! ஐன்ஸ்டைன் எக்ஸ்ரே வானோக்ககத்தில் (Einstein X-Ray Observatory) உளவப்பட்ட நண்டு நிபுளாவின் நடுவில் விட்டுவிட்டு மின்னும் ஒளிமிக்க துடிப்பு விண்மீன் ஒன்று காணப்பட்டது.
இரட்டை ஏற்பாட்டில் ஓர் ஆரோக்கிய விண்மீனும், சிதைவில் தோன்றிய ஒரு நியூட்ரான் விண்மீனும் பின்னிக் கொள்கின்றன. அசுரத்தனமான வலுக்கொண்ட நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பாற்றல் ஆரோக்கிய விண்மீனின் பண்டங்களைத் தன்வசம் இழுத்துக்கொள்கிறது. அந்தப் பண்டங்கள் நியூட்ரான் விண்மீனின் துருவப் பகுதிகளில் புகுந்து செல்கின்றன! இந்த இயக்கமானது “விண்மீன் பிண்டப் பெருக்கம்” (Accretion Process between Binary System Stars) என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பெருக்கம் உண்டாகும் போது நியூட்ரான் விண்மீன் சூடேறி எக்ஸ்ரே கதிர்களை உமிழ்கிறது !

Pulsar Signals
விண்மீன்களின் சிதைவுக் கோலங்கள் !
கோடானு கோடி விண்மீன்களின் பிறந்தகமும், அழிவகமும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பால்வீதி ஒளிமயத் திடலே [Milky Way Galaxy]! தோன்றிய எந்த விண்மீனும் அழியாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்பவை அல்ல! பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று அண்டவெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது! இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம்! சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை! சில வடிவத்தில் சிறியவை! கொதிப்போடு கொந்தளிப்பவை சில! குளிர்ந்து கட்டியாய்த் திரண்டவை சில! ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில! ஒளியிழந்து குருடாகிப் போனவை சில! பல பில்லியன் மைல் தூரத்தில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவெல்லாம், அவற்றின் ஒளித்திரட்சியைப் பார்த்து, ஒளிமாற்றத்தைப் பார்த்து, இடத்தைப் பார்த்து, இடமாற்றத்தைப் பார்த்து, ஒளிநிறப் பட்டையைப் [Light Spectrum] பார்த்துத், தமது பெளதிக ரசாயன விதிகளைப் பயன்படுத்திச் செய்துகொண்ட விளக்கங்களே!

Life & Death of Pulsars
ஒரு விண்மீன் தனது உடம்பைச் சிறிதளவு சிதைத்து வாயு முகிலை உமிழ்கிறது. அப்போது விண்மீன் முன்பு இருந்ததை விட 5000-10,000 மடங்கு ஒளி வீசுகிறது! அது நோவா விண்மீன் [Nova Star] என்று அழைக்கப்படுகிறது. சூப்பர்நோவா [Supernova] விண்மீன்கள் வெடிப்பில் சிதைவுற்றுச் சிறு துணுக்குகளை வெளியேற்றிச் சூரியனை விட 100 மில்லியன் மடங்கு ஒளிமயத்தைப் பெறுகின்றன. சூரிய குடும்பத்தின் அண்டங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் உண்டானவை என்றும், அவற்றைப் பின்னால் சூரியன் கவர்ந்து கொண்டதாகவும் கருதப்படுகிறது!

Pulsar Beams & Spins
பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு [1.4 times Solar Mass] மேற்பட்ட விண்மீன் இறுதியில் ஒரு வெண்குள்ளியை [White Dwarf] உருவாக்குவதில்லை என்று சந்திரசேகர் கூறினார். [வெண்குள்ளி என்பது பரிதியின் பளுவை (Mass) அடைந்து, அணுக்கருச் சக்தியற்றுச் சிதைந்த விண்மீன் ஒன்றின் முடிவுக் கோலம். அது வடிவத்தில் சிறியது! ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகுதியானது!] அதற்குப் பதிலாக அந்த விண்மீன் தொடர்ந்து சிதைவுற்று, சூப்பர்நோவா வெடிப்பில் [Supernova Explosion] பொங்கித் தனது வாயுக்களின் சூழ்வெளியை ஊதி அகற்றி, ஒரு நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] மாறுகிறது. பரிதியைப் போல் 10 மடங்கு பருத்த விண்மீன் ஒன்று, இன்னும் தொடர்ந்து நொறுங்கி, இறுதியில் ஒரு கருந்துளை [Black Hole] உண்டாகிறது. சந்திரசேகரின் இந்த மூன்று அறிவிப்புகளும் சூப்பர்நோவா, நியூட்ரான் விண்மீன் மற்றும் கருந்துளை ஆகியவற்றை விளக்கிப் பிரபஞ்சம் ஆதியில் தோன்றிய முறைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
சில சமயங்களில் இறுதி நொறுங்கல் [Final Collapse] விண்மீனில் ஹைடிரஜன், ஹீலியம் ஆகியவற்றை விடக் கனமான மூலகங்களில் [Heavier Elements] திடீரென அணுக்கரு இயக்கங்களைத் தூண்டிவிடலாம்! பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே சூப்பர்நோவாவாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விடப் பேரொளி வீசக் காரணமாகலாம்! ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது! அம்முகில் பயணித்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும்! எஞ்சிய நடுக்கரு பேரளவுத் திணிவில் [Extremely Dense] இறுகி வெப்பமும் வெளிச்சமும் அளிக்க எரிப்பண்டம் இல்லாது, முடமான நியூட்ரான் விண்மீனாய் [Neutron Star] மாறுகிறது!

தட்டாய் ஆக்கும் முறைப்பாடு
நியூட்ரான் விண்மீன் முதல் நூறாயிரம் ஆண்டுகள் வானலைக் கதிர்க் கற்றைகளை [Beams of Radio Waves] வெளியாக்கி, விண்மீன் சுற்றும் போது கதிர்கள் பூமியில் உள்ள வானலைத் தொலைநோக்கியில் துடிப்புகளை [Pulses] உண்டாக்குகின்றன! ஓர் இளைய நியூட்ரான் துடிப்பு விண்மீன் [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது. துடிப்பு விண்மீனின் குறுக்களவு சுமார் 9 மைல்! ஆயினும் அதன் பளு பிரம்மாண்டமான நமது பரிதியின் நிறைக்கு ஒத்ததாகும்!

+++++++++++++
தகவல்:
1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001
2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.
3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.
4. Internet Article “Stellar Evolution”
5. Majestic Universe By: Serge Brunier (1999)
6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)
7. Possible Closest Neutron Star to Earth Found – Eberly College of Science [ http://www.science.psu.edu ] (August 20, 2007)
8. http://www.natureworldnews.
9. http://nautil.us/issue/31/
10. https://en.wikipedia.org/
11. https://science.nasa.gov/
13. https://www.nanowerk.com/
14. https://www.rt.com/news/

சேசாத்திரி ஸ்ரீதரன்
பதினெண் விஷயத்தார் எனப்படுகின்ற விஸ்வகர்மா சாதியான தச்சர் ஆற்றிய கோவில் பணிகள் பற்றி சில கல்வெட்டுக் குறிப்புகள் உள. இவர்கள் கோவில் அருகிலேயே நான்மாடத் தெருவிலேயே வாழ்ந்ததற்கான சான்றுகளை இக்கல்வெட்டுகள் நம் கண்முன்னே வைக்கின்றன. அவை குறித்த ஒரு பார்வை கீழே.
நாகபட்டினம் மாவட்டம், செம்பியன் மாதேவி ஊரில், கைலாசநாதர் கோவிலின் சண்டிகேசுவரர் சன்னதிக்கு வடக்கு சுவர், 47 வரிக் கல்வெட்டு சாய்வுக் கோடுகளாக.
ஸ்வஸ்தி ஸ்ரீ கோற்சடையபந் / மர்திரிபுவனச் சக்கரவத்திகள் / வீரபாண்டிய தேவர்க்கு 9 ஒ / ன்பதாவது செம்பியன் மா / தேவிச் சருப்பேதி மங்கலத்து / உடையார் கைலாசமு / டையார் கோயில் தான / த்தார் _ _ _ _ / த் தச்சர் சாமுதாயம் பண்ணி / உத்தம வேதப் பெருமா / ஆசாரியனுக்கு இன்னாய / னார் திருமடைவிளாகத்து / தெற்கில் திருவீதியில் உவ / ச்சன் திருவகம்பாம _ _ ராய / ன் மனைக்கு கிழக்கு மனை ஒன் / று விட்டு இதன் கிழக்கு மனை ஒ / ன்றுக்கு
ற் கெல்லை மொண்ணை / நாயகப்பிச்சன் மனைக்கு / மேற்கு நடுவுப்பட்ட மனை ஒ / ன்றுக்கு மனை நீளம் கோல் / மூன்று. இக்கோல் மூன்றுக்கு / ம் இத்தால் உள்ள புழைக்க / டை உண்ணீள மறுதியாக / _ _ _ _ கொண்டு இருக்கும் / _ _ _ _ பாகா / யமும் மற்றும் / எற்பேர்பட்ட / னவும் இவனுக்கு சந்திராதி / த்தவரையும் [விற்]றொற்றித் / திரவியங்களுக்கு மு(ரி)த்தாவு / தாகவும் இப்படி சம்மதித்து / புரட்டாசி மாத முதல் திய / தி இ(ன்)று னூறென்ற பெ / ருமாள் [திருக்கா]_ _ _ _
இருந்து குடுத்தோம் / உத்தம வேதப் பெருமா / ள் ஆசாரியனுக்கு தான / த் தாரோம். இப்படிக்கு / திருச்சிற்றம்பல பட்டன் எ / ழுத்து. இவை வீதிவிடங் / கப்பட்டர் எழுத்து. இக்கோ / யில் ஸ்ரீ மா(ய்)யேசுரக் / கண்காணி / காலகால தே / வர் எழுத்து. இக்கோயி(ல்) க் / கணக்கு பொய்கைக்குடை / யான் கணக்கு பொன்னன் / _ _ _ லக் க[ண]க்கு எழுத்து.
தானத்தார் – ஸ்தானத்தார் ஆகிய கோயில் பொறுப்பாளர்கள்; சாமுதாயம் – சாதியர்; பண்ணி – ஏற்பாடு செய்து, arrange; உவச்சன் – இசைக் கருவிக் கலைஞன்; புழைக்கடை – கொல்லைப்புறம்; அறுதியாக – முடிய; மகேசுவரக் கண்காணி – சிவனடியார் கண்காணி.
விளக்கம்: சடையவர்மன் திரிபுவன வீரபாண்டியனின் 9- ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1345) நாகை மாவட்டம் செம்பியன் மாதேவி என்னும் ஊரில் அமைந்த கைலாசநாதர் கோவிலுக்கு தச்சர் சாதிமார் உத்தமவேதப் பெருமாள் என்னும் தச்சனை கோவில் தச்சு வேலைக்கு ஏற்பாடு பண்ணிக் (arrange) கொடுத்தனர். இக்கோவில் பொறுப்பு அதிகாரிகள் உத்தம வேதப் பெருமாள் ஆசாரிக்கு இக்கோவிலைச் சூழ்ந்த திருவீதியில் இசைக் கலைஞன் திருவகம்பாம__ராயன் வீட்டிற்கு கிழக்கே அமைந்த வீட்டிற்கு ஒரு வீடு தள்ளி கிழக்கே உள்ள ஒரு வீட்டைத் தந்தனர். இந்த வீட்டின் எல்லையை கூறி விட்டு, இதன் நீளம் மூன்று கோல் அளவினது, இதன் கொல்லைப்புற உள் நீளம் முடியும் வரையான இடம் இவனுடையது. இதை இவன் விற்றுக்கொள்ளவோ ஒத்திக்கு (lease) விடவோ செய்யலாம். இதற்கு ஒப்புக் கொண்டு புரட்டாசி மாதம் முதல் நாளான இன்று உத்தம வேதப் பெருமாள் ஆசாரிக்கு கொடுத்தோம் என்று கோவில் பொறுப்பாளர் கையொப்பமிடுகின்றனர். இக்கல்வெட்டு மூலம் கோவிலில் பணி செய்பவருக்கு கோவில் சார்பில் வீடு வழங்கப்பட்டது என்பது தெரிகின்றது. இசைக் கலைஞர் போன்றோர் கோவிலைச் சூழ்ந்த தெருவில் வாழ்ந்த நிலைமையை நோக்கும் போது மேல் சாதிக்காரான பிராமணர், வெள்ளாளர் மட்டுமே கோவில் ஊரில் வாழ்ந்தனர் மற்ற கைவினை சாதியார் பிடாகையான உள்கிராமங்களில் ஒதுக்கப்பட்டு ஏற்றத் தாழ்விற்கு உள்ளாயினர் என்ற சாந்தினி பீ, J.S. கிரேவால் போன்ற சிலரது கூற்றைத் தவறு எனக் காட்டுகின்றது.
பார்வை நூல்: நாகபட்டின மாவட்டக் கல்வெட்டுகள், பக்கம் 85 – 86, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.
தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலம் சோமனாத சுவாமி கோவிலின் முதல் பிரகாரம் கிழக்குச் சுவரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு.
மட அடிமை – மடைபள்ளி அடிமை; புகுந்த – கோவிலை அடைந்த
விளக்கம்: திரிபுவனச் சக்கரவத்திகள் என்ற பட்டம் முதன்முதலாக முதற் குலோத்துங்கனுக்கு ஏற்பட்டதைக் கருதி இது சோழ வேந்தன் மூன்றாம் இராஜராஜனின் 3-ம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி. 1219) அச்சுதமங்கலம் சோமனாதர் கோவிலார் 192 காசு கொடுத்து முளைத்தான் என்ற சண்டேசுர பெருந்தச்சனையும் இவன் மனைவி சொன்னவாரறிவாளையும் மகன் நல்லான் பெருந்தச்சன், இன்னொரு மகன் உலகன், இன்னொரு மகன் அம்பலவன், பெயர் சிதைந்துள்ள இன்னொரு மகன், தங்கை பனை ஆண்டாள் ஆகிய 5 ஆடவரும் 2 பெண்டிரும் மடைப்பள்ளி வேலைக்கு அடிமைகளாக வாங்கப்பட்டு கோவில் புகுந்தனர் என்கின்றது இக்கல்வெட்டு.
கோவில் அடிமைகளாக வாங்கப்பட்ட அடிமைச் செய்திகளை தாங்கிய கல்வெட்டுகள் இது போல சில உள. அவற்றொடு இக்கல்வெட்டை ஒப்பிட்டு ஆய்ந்தால் இத்தச்சன் குடும்ப வறுமை நிலை அல்லது கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு விற்றுக்கொண்டான் என ஊகிக்க முடிகின்றது. மக்கள் ஏன் இப்படி கோவிலுக்குத் தம்மை விற்றுக் கொண்டனர் என்றால் இதனால் கோவிலுக்கு அடிமையாக விற்கப்பட்டவர் கோவில் பணியாளாகிப் போகிறார். அதன்படி அவர்களுக்கு கோவிலில் வழங்கப்படும் இரு பொழுதுச் சோறு கிடைப்பதுடன் தங்கும் வசதி ஆகியனவும் கிட்டுகின்றது. அதோடு பிரிந்து போய்விடாமல் குடும்பத்தாரொடு ஒன்றாக வாழ முடிகின்றது. இந்த அடிமைத்தனம் எவ்வளவு காலத்திற்கு? அதில் இருந்துவிடுபட முடிந்ததா? என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இதுவரை அறியப்பட வில்லை. இந்த அடிமைத்தனம் ஒருவகையில் அவர்களுக்கு கிடைக்கும் உடனடி விடுபாடு (relief) என்பதை நம்மால் உணர முடிகின்றது.
மேலும் சில அடிமைக் கல்வெட்டுகளை அறிய சொடுக்குங்கள்
https://groups.google.com/d/msg/vallamai/TPdzGwj03sw/pgM-gAzyAgAJ
https://groups.google.com/d/msg/vallamai/1Fn_eB9DWKk/MlaXDkXDAgAJ
பார்வை நூல்: நன்னிலம் கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண் 270/1978, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆலந்தூர் சிவன் கோவில் மேற்கு குமுதத்தில் பொறிக்கப்பட்ட 3 வரிக் கல்வெட்டு.
ஸ்ரீவேலி – கோவில் நிலம், புதுக்குப்புறம் – கட்டடத்தை சீர்செய்து புதுப்பித்ததற்கான நிலம்.
விளக்கம்: சோழன் முதற் பராந்தகனின் 36 –ம் ஆட்சி ஆண்டில் (பொ.ஆ. 942) வந்தவாசி ஆலந்தூர் சிவன் கோவிலில் கட்டடம் கட்டியதற்காக இரும்பேடு கிராமத்தின் கிழக்கில் நாற்பேரெல்லையுள் பட்ட நிலத்துள் நாலில் ஒரு கூறை (1/4) ஆடியனமார் கொடையாகவும், கட்டடம் புதுப்பித்ததற்காக பெருந்தச்ச தேவனுக்கும் பலதேவனுக்கும் ஒரு பங்கும், நன்செய் நிலத்தில் பெருந்தச்சனுக்கு 1/4 பங்கும் மூர் தேவனுக்கு ஒரு பங்கும் பலதேவனுக்கு ஒரு பங்கும். இப்படி நாற்பேரெல்லை உடைய விளை நிலத்தில் 4 ல் ஒர் பங்கு இந்த தச்சனுக்கு கொடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது. கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளது எனவே தெளிவான பொருளை கொள்ள முடியவில்லை. இதன் மூலம் தச்சர் விளை நிலங்களையும் கோவில் பணிக்காகப் பெற்றனர் எனத் தெரிகின்றது.
பார்வை நூல்: தமிழ்நாடு கல்வெட்டுகள் தொகுதி XIII, திருவண்ணாமலை மாவட்ட கல்வெட்டுகள் 2, பக். 124. தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.
தச்சர் பற்றி மேலும் சில கல்வெட்டுகளை காண சொடுக்குங்கள்
https://groups.google.com/d/msg/vallamai/arn7n2ljNjc/urDDtXKiCgAJ