Blog

  • சிவபூமி காத்தோர் பட்டியல்

    சிவபூமி காத்தோர் பட்டியல்

    இலங்கையைச் சிவ பூமியாகக் காத்தோர் பட்டியல்                   

    தொகுப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    இலங்கைத் தீவு சிவ வழிபாட்டின் தாயகம் = சிவ பூமி. இலங்கைத் தீவைச் சிவ பூமியாக நீடிக்க, ஆண்டோர், தளபதியானோர், புரவலர், புலவர், நாயன்மார், சான்றுகள் கூறியோர் எனப் பட்டியல் நீளும். அகத்தியர் தொடக்கம் இரண்டாம் சங்கிலியன் வரையான காலப் பகுதியின் 145 பெயர்களின் பட்டியல். வரலாற்றாசிரியர், தொல்லியல் அறிஞர் இலக்கியப் படைப்பாளிகள் இதுநாள் வரை எடுத்துக் கூறிய பங்களிப்பாளரின் பெயர்ப் பட்டியலைத் தொகுத்தேன். இப்பட்டியல் முழுமையானது அல்ல. சேர்க்கை, நீக்கம், திருத்தம் தேவையான பட்டியல்.

    1. புலவர் அகத்தியர் (திமு. தமிழ் மொழி தோன்றிய காலம்)
    2. அருளாளர் துவட்டர் (திமு. 25000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
    3. சிற்பி விசுவகன்மா (திமு. 25000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
    4. அரசன் இராவணன் அரசி வண்டோதரி (திமு. 10,000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
    5. அரசன் இராமன் அரசி சீதை (திமு. 10,000 ஆண்டுகளுக்கு முன் என்பர்)
    6. அரசன் சிவ நாகன் (திமு. 554-505)
    7. புலவர் ஈழ நாகனார் (திமு. 543-205)
    8. புலவர் நன்னாகனார் (திமு. 543-205)
    9. புலவர் பொன்னாகனார் (திமு. 543-205)
    10. புலவர் வெண்ணாகனார் (திமு. 543-205)
    11. புலவர் முப்பேர் நாகனார் (திமு. 543-205)
    12. அரசன் மால நாகன் (திமு. 545-514)
    13. அரசன் குல நாகன் (திமு. 545-514)
    14. அரசன் மணி இயக்கன் (திமு. 515-485)
    15. அரசன் விசயன் (திமு. 452-414)
    16. அரசன் பாண்டிய வாசுதேவன் (திமு. 413-383)
    17. அரசன் அபயன் (திமு. 382-362)
    18. அரசன் மண்டு நாகன் நாகர்முனை மட்டக்களப்பு (திமு. 362)
    19. அரசன் மூத்த சிவன் (திமு. 362-276)
    20. அரசன் மீட்ட சேனன் மட்டக்களப்பு (திமு. 282)
    21. புலவர் ஈழத்துப் பூதன்தேவனார் (திமு. 276-228)
    22. அரசன் கூத்த நாகன் மட்டக்களப்பு (திமு. 275)
    23. அரசன் கோவேந்தன் ஆனைக்கோட்டை (திமு. . 228-200)
    24. புலவர் மாமூலனார் (திமு. 200-140)
    25. வணிகன் ஈழக் குடுமிகன் (திமு. 150-100)
    26. வணிகன் ஈழப் பரதவன் (திமு. 150-100)
    27. அரசன் சேனன் (திமு. 146-133)
    28. அரசன் குடிகன் (திமு. 133-124)
    29. அரசன் எல்லாளன் (திமு. 134-70)
    30. அரசன் புலவர் கல்லாட நாகன் (திமு. 78-71)
    31. அரசன் புலத்தியன் (திமு. 13-10)
    32. அரசன் வாகையன் (திமு. 11-9)
    33. அரசன் பனை மாறன் (திமு. 9-2)
    34. அரசன் பாண்டிய மாறன் (திமு. 1- திபி.1)
    35. அரசன் பிள்ளை மாறன் (திபி. . 1-2)
    36. அரசன் சோழ நாகன் (திபி. 28-40)
    37. அரசன் கோட்டையன் திருகோணமலை (திபி. 39)
    38. அரசன் சிவன் (திஇபி. 43-44)
    39. அரசி ஆடகசவுந்தரி திருகோணமலை (திபி. 109)
    40. அரசன் சோழ அபயன் (திபி. 124-125)
    41. அரசன் சிவ சேனன் (திபி. 125)
    42. அரசன் ஈழ நாகன் (திபி. 126-131)
    43. புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் (திபி. 150-220)
    44. அரசன் சந்திரமுக சிவன் அரசி தமிழ்த்தேவி (திபி. 150-220)
    45. பயணி கிரேக்கத் தாலமி (திபி. 158-182)
    46. அரசன் கரிகாலன் (திபி. 185-200)
    47. காவியத் தலைவி கண்ணகி (திபி. 190-270)
    48. அரசன் சேரன் செங்குட்டுவன் (கிபி. 190-270)
    49. அரசன் கயவாகு (திபி. 202-234)
    50. அரசன் மாமல்ல நாகன் (திபி. 224-231)
    51. புலவர் தீவதிலகை (திபி. . 240-250)
    52. காவியத் தலைவி மணிமேகலை (திபி. . 250-280)
    53. அரசன் சாவகத்துப் புண்ணியராசன் (திபி. 260)
    54. அரசன் கொட்டியாறன் திருகோணமலை (திபி. 269)
    55. வணிகன் வீரவராயன் செட்டியார் (திபி. 270-330)
    56. அரசன் குச்ச நாகன் (திபி. 272-274)
    57. அரசன் குஞ்ச நாகன் (திபி. 275-279)
    58. அரசன் நாக திலகன் (திபி. 280-306)
    59. அரசி பால்வள்ளி என்ற பீலிவளை (திபி. 280-306)
    60. அரசன் மேக வண்ணன் (திபி. 331-359)
    61. அரசன் குணசிங்கன் (திபி. 340-400)
    62. அரசன் அரசசேனன் மட்டக்களப்பு (திபி. 395)
    63. அரசி கலிங்க உலகநாச்சி மண்முனைப் படிகலிங்கர் (திபி. 390-430)
    64. அரசன் நல் நாடன் சேரன் (திபி. 420-460)
    65. அரசன் முகல்லன் (திபி. 528-546)
    66. அரசன் சிவ நந்தி (திபி. 600-680)
    67. அருளாளர் திருஞானசம்பந்தர் (திபி. 630-650)
    68. அரசன் வங்காலடன் மட்டக்களப்பு (திபி. 664)
    69. அரசன் மானவர்மன் (திபி. 690-725)
    70. அரசன் பல்லவன் நரசிம்ம வர்மன் (திபி. 690-725)
    71. அருளாளர் சுந்தரர் (திபி. 790-820)
    72. அரசன் உக்கிரசிங்கன் (திபி. 810-850)
    73. அரசி மாருதப்புரவிவல்லி. 810-850)
    74. அரசன் பாலசிங்கன் – யாழ் மணற்றிடர் (திபி. 851-900)
    75. அரசன் முதலாம் சேனன் – சிவ சேனன் (திபி. 910-950)
    76. அருளாளர் மாணிக்கவாசகர் (திபி. 891-920)
    77. அரசன் முதலாம் பராந்தகச் சோழன் (திபி. 938-986)
    78. அரசன் ஆரியச் சக்கரவர்த்தி சேதிராயன் (திபி. 938-986)
    79. அருளாளர் திருமூலர் (திபி. 951-1040)
    80. அரசன் அருளாளர் கண்டராதித்தர் (திபி. 986-996)
    81. அரசன் அரிஞ்சயன் (திபி. 997-1007)
    82. அரசன் சுந்தர சோழன் (திபி. 1008-1014)
    83. அரசன் ஆதித்த கரிகாலன் (திபி. 1015-1016)
    84. அரசன் முதலாம் இராசராச சோழன் (திபி. 1016 -1045)
    85. தளபதி தாழிக்குமரன் (திபி. 1016 -1045)
    86. வணிகன் நான்கு நாட்டார் (திபி. 1016 -1045)
    87. வணிகன் குமாரகணத்துப் பேரூரார் (திபி. 1017 -1045)
    88. வணிகன் சேக்கிழான் (திபி. 1018 -1045)
    89. வணிகன் அஞ்ஞூற்றுவர் (திபி. 1019 -1045)
    90. வணிகன் மணிக்கிராமத்தார் (திபி. 1020 -1045)
    91. அரசன் முதலாம் இராசேந்திர சோழன் (திபி. 1043-1075)
    92. தளபதி செயங்கொண்ட மூவேந்த வேளார் (திபி. 1043-1075)
    93. அரசன் இராசாதிராச சோழன் (திபி. 1075-1086)
    94. அரசன் இரண்டாம் இராசேந்திர சோழன் (திபி. 1082-1094)
    95. இளவரசன் பாண்டியன் மாறவர்மன் (திபி. 1089-1121)
    96. அரசன் பாண்டியன் முதலாம் விசயபாகு (திபி. 1096-1151)
    97. தளபதி குருகுலத்தரையன் (திபி. 1096-1151)
    98. இளவரசி அயோத்தி இலீலாவதி (திபி. 1096-1151)
    99. இளவரசி கலிங்கத் திரிலோகசுந்தரி . 1096-1151)
    100. இளவரசன் வீரப்பெருமாள் இளவரசி சோழச் சுத்தமல்லி ஆள்வார் (திபி. 1110-1171)
    101. இளவரசி மித்திரை இளவரசன் குலசேகர பாண்டியன் (திபி. 1080-1141)
    102. அரசன் சிங்கை பரராசசேகர ஆரியக் கோமான் (திபி. 1140-1174)
    103. வள்ளல் சடையப்பர் (திபி. 1149-1174)
    104. புலவர் புகழேந்தி (திபி. 1149-1174)
    105. அரசன் விக்கிரமபாகு (திபி. 1152-1161)
    106. அரசன் இரண்டாம் கயவாகு (திபி. 1162-1171)
    107. அரசன் முதலாம் பராக்கிரமபாகு (திபி. 1195-1228)
    108. அரசன் மாகோன் மட்டக்களப்பு (திபி. 1246)
    109. அரசன் கலிங்க மாகன் (திபி. 1229-1299)
    110. இளவரசன் குளக்கோட்டன் – சோழ கங்கன் (திபி. 1229-1299)
    111. அரசன் இரண்டாம் பராக்கிரமபாகு (திபி. 1271-1306)
    112. தளபதி காலிங்கராயன் (திபி. 1298)
    113. அரசன் குலசேகரச் சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1315-1347)
    114. அரசன் நான்காம் பராக்கிரமபாகு (திபி. 1326-1350)
    115. அரசன் குலோத்துங்க சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1347-1352)
    116. அரசன் விக்கிரம சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1352-1364)
    117. அரசன் வரோதைய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1364-1382)
    118. பயணி அரபு இபன் பற்றுற்றா (திபி. 1375)
    119. அரசன் மார்த்தாண்ட சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1382-1397)
    120. அரசன் குணபூசண சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1397-1422)
    121. அரசன் விரோதைய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1422-1441)
    122. அரசன் சயவீர சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1441-1448)
    123. அரசன் ஆறாம் பராக்கிரமபாகு (திபி. 1441-1493)
    124. அரசன் குணவீர சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1448-1470)
    125. தளபதி சீனச் செங்கோ (திபி. 1445)
    126. புலவர் நல்லுருத்திரனார் அழகியவண்ணன் (திபி. 1450-1530)
    127. அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1470-1482)
    128. அரசன் செண்பகப் பெருமாள் புவனேகவாகு யாழ்ப்பாணம் (திபி. 1482-1498)
    129. அரசன் கனகசூரிய சிங்கை ஆரியன் யாழ்ப்பாணம் (திபி. 1498-1509)
    130. அரசன் பரராசசேகரன் யாழ்ப்பாணம் (திபி. 1509-1550)
    131. அரசன் சங்கிலி யாழ்ப்பாணம் (திபி. 1551-1591)
    132. அரசன் எதிர்மன்னசிங்கன் மட்டக்களப்பு. 1569)
    133. அரசன் காசிநயினார் யாழ்ப்பாணம் (திபி. 1591-1617)
    134. அரசன் பெரியபிள்ளை யாழ்ப்பாணம் (திபி. 1617-1620)
    135. அரசன் புவிராச பண்டாரம் யாழ்ப்பாணம் (திபி. 1621-1628)
    136. அரசன் எதிர்மன்னசிங்கம் யாழ்ப்பாணம் (திபி. 1628-1637)
    137. அரசன் சங்கிலிகுமாரன் யாழ்ப்பாணம் (திபி. 1637-1650)
    138. அரசன் வீதியபண்டாரம் (திபி. 1646)
    139. தளபதி மலையாளக் குஞ்சலி வீரர் (திபி. 1647)
    140. தளபதி நாயக்க வருண குலத்தான் (திபி. 1648)

    Share
  • கண்கள் இரண்டும் இன்று உம்மைக் கண்டு பேசுமோ!

    கண்கள் இரண்டும் இன்று உம்மைக் கண்டு பேசுமோ!

    பாஸ்கர் சேஷாத்ரி

    “எக்ஸ்கியூஸ் மீ மேடம் / சார்.” முன்னால் கருப்புக் கண்ணாடியுடன் கையில் குச்சி வைத்துக்கொண்டு ஒருவர் இருந்தார்.

    “சார் என்ன வேணும் சொல்லுங்க” என்றேன்.

    “சார் என்னை அந்த பஸ் ஸ்டாண்டுகிட்ட விட்டுட முடியுமா?”

    “நிச்சயம்” எனச் சொல்லி அவர் கையைப் பிடித்துக்கொண்டேன்.

    “நான் குச்சியை வச்சுக்கலாமா?”

    “நோ பிராபளம், எனக்கு அதுதான் பலம்” என்றார்.

    “நீங்க எங்க போகணும்?”

    “பாண்டி பஜார்.”

    “பக்கத்துல தான் ஸ்டாண்ட். நாம நெருங்கிட்டோம்ல?”

    “ஆமா! எப்படிச் சரியா சொன்னீங்க?”

    “இல்லை மல்லிப்பூ வாசனை வந்தது” என்றார்.

    “உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன்”

    “அதெல்லாம் ஒண்ணுமில்லை”

    “இல்லை உங்க வேலை கெட்டுப் போயிடும் இல்லையா?”

    “இப்ப ஒன்னும் வேலை இல்லை”

    “உங்களுக்கு சுமார் நாற்பது வயசு இருக்குமா?”

    “அறுபது நெருங்கப் போகிறது” என்றேன். “எதுக்கு கேட்டீங்க?”

    “இல்லை கை மிருதுவா இருக்கு. அதான் கேட்டேன்.”

    “ஒங்களை ஒன்னு கேக்கலாமா?”

    “ம்” என்றார்

    “ஆர் யு பார்ன் விஷன்லஸ்?”

    “இல்லை. நாற்பது வயசுல ஆச்சு. ஒரு நாள் சாயந்திரம் பளிச்செனு ஒரு வெளிச்சம். என் இடது கண்ணுல அன்னிலேந்து பார்வை இல்லை.”

    “ஹௌ அபௌட் ரைட்?”

    “அதுல ஒன்னும் அப்ப பிரச்சனை இல்லை.”

    “பட் மூணு வருஷம் முன்னாடி ஒரு நாள் தூங்கி எழுந்த போது ஐ லாஸ்ட் தி ரைட் ஐ டூ .”

    “எல் ஐ சி ல இருந்தேன். கருணை அடிப்படையில் கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டார்கள். பிறக்கும்போதே கண் இல்லேன்னா விஷயமே வேற சார். எனக்கு மரம் செடி கொடி சினிமா வண்ணம் எல்லாம் தெரியும் . அதைத் தெரிஞ்சு அனுபவிச்சு, கண் போறது பெரிய வேதனை சார். பை தி வே . உங்க பேரு”

    “பாஸ்கர்”

    “நான் சந்துரு . எல் ஐ சி சந்துரு என்றால் இங்க கொஞ்சம் பேருக்குத் தெரியும்.

    “உங்களைக் கஷ்டப்படுத்தறேனா கேள்வி கேட்டு?”

    “இல்லை சார். எங்க உலகத்தை புரிஞ்சிக்க முயற்சி பண்ண வேண்டாம்.”

    “ஏன் சார்? அது நரகம். எனக்கு நல்ல பார்வை உண்டு. நாற்பதைத் தாண்டியும் கண்ணாடி போடலை.

    “கேரம் போர்ட் சாம்பியன். பாடவும் செய்வேன் குட் அட் டைப்பிங். பார்வை இல்லை என்றவுடன் இட் வாஸ் ஆல் லாஸ்ட். மெண்டலி ஐ வாஸ் டௌன்.”

    “உங்களை ஒன்னு கேக்கலாமா?”

    “ம்” என்றார்

    “கண்கள் மூடி இருப்பது சுகம் எனும்போது அது பெரிய வலியில்லை எனக் கடந்து போக முடியாதா?”

    “சார். சுகம் என்ற விஷயம் கண்கள் திறந்த பின் பார்வை உண்டு என்ற ரீதியில் சொல்லப்பட்ட விஷயம். கண்களே இல்லை எனும் போது அதில் சுகம் காண முடியுமா?”

    “கண்கள் மனசோட வாயில். அதுதான் புத்தியைத் தீர்மானிக்கும். நல்லது கெட்டது என்கிற விஷயத்துக்கு அது காரணி.”

    “சார் உங்க பஸ் வரது”

    “என்னோட கொஞ்ச நேரம் இருக்க முடியுமா?” எனக் கேட்டுக் கைகளைத் தேடினார்.

    “நிச்சயம். இதில் என்ன. – பிளெஷர் இஸ் மைன்.”

    “உங்க ரொட்டீன் என்ன சார்?”

    “தேடுவது தான்!” எனச் சொல்லிச் சிரித்தார்.

    “எல்லா உருவத்தையும் நான் மனுசுல வாங்கிண்டாச்சு. நிஜம் கூட எனக்குக் கற்பனை உலகம். புரியறதா?”

    “இல்லை!”

    “எனக்கு எம் ஜி ஆர் என்றவுடன் ஒரு பிம்பம் தெரியும். ஆனால் பாஸ்கர் எப்படி என என்னால் கற்பனை பண்ண முடியாது. ஒரு உருவம் கொடுக்க முடியும் . ஆனால் அது ஒரிஜினல் இல்லை.”

    இது ஒரு வலியா எனக் கேட்க முற்படுவதற்குள் அவரே சொன்னார் .

    “இது கண்ணு உள்ளவங்களுக்கு ஒரு ரிலீப். எனக்கு இல்லை”

    “ஈர மண் வாசம் வருது இல்லை. மேகம் மூடி இருக்கா?”

    “கொஞ்சம் இருட்டா இருக்கு . அவ்வளவு தான்”

    “இதுக்குத் தீர்வே இல்லையா?”

    “எல்லாம் பார்த்தாச்சு. சாரி எல்லா டாக்டர்கிட்டயும் காட்டியாச்சு. நோ வே என்று சொல்லிவிட்டார்கள்.”

    “என் உலகம் இருட்டு. அதுல நான் யாரைத் தேடுவேன்?”

    கொஞ்சம் கழிவிரக்கம் தான். ஆனாலும் முடியல.

    “எப்படி நீங்க உலகத்தைப் பாக்கறீங்க?”

    “தெரிந்த பிம்பமோ இல்லையோ, எல்லோருக்கும் இதே சிரிப்பு தான்.”

    “ஏன்?:

    “என்னை சந்தோஷமா வச்சுக்க?”

    இனி பார்வை இல்லை என்றவுடன் நான் தயாராக இல்லாமல் போனது என் தப்பு. இப்ப கொஞ்ச நாளா என் அகக் கண் தெளிந்து போனது. இறுதி வரை இது தான் உலகம் எனத் தெரிந்துகொண்டேன். பட் ஆல் லேட்.

    ஏன் சார்? உண்மை ஒரு ப்ளாஷில் வரும் என்பதை நான் புறக்கணித்தது பெரிய தப்பு. புலன் போனா முதிர்ச்சியும் போகஸ் வரும்னு நினைக்கிறது தப்பு. எளிமையாக இதைப் பார்க்கத் தவறிவிட்டேன். இப்ப கஷ்டப்படறேன்.

    “சாரி.”

    “ஒன்னு தெரியுமா? என் பார்வை போன பின்பு என் கோபமும் அகந்தையும் அதிகமாகிப் போனது.”

    “அப்படியா சொல்றீங்க?”

    “உண்மை சுடும். உண்மையை நேசிக்கிறவங்க சூட்டைப் பொறுத்துக்க வேண்டும். நான் தப்பிக்கப் பார்த்தேன்- கைகளை விலக்கிக்கொண்டேன். ஐ ஆம் பேயிங் நவ்.”

    “திரும்பவும் எனக்குப் பார்வை தெரியுறா மாதிரி கனவுகள் வருது. இப்ப கொஞ்ச நாளா எனக்குக் கண்ணு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறேன்.”

    “ஐயோ?”

    “இந்தக் கண்ணில்லாத உலகத்தோட நான் உண்மையில் ஐக்கியம் ஆகியிருந்தா நான் சந்தோஷமா இருந்து இருப்பேன். இப்ப எனக்கு முக்கியம் சந்தோஷம். கண்கள் இல்லை.”

    “உங்க கிட்ட மொபைல் இருக்கா?”

    “இருக்கு. ஆனா போட்டவுடன் உங்கள் பெயரைச் சொல்லிப் பேசுங்கள் பாஸ்கர்.”

    “சரி சார். பஸ் வருது சார்.”

    “சீ யு” எனச் சொல்லிச் சிரித்தார் .

    என் பெயரை நினைவு வைத்துக்கொள்ளுங்கள் என அவரைப் பேருந்துக்குள் ஏற்றினேன்.

    “பாஸ்கர். உங்களுக்கு நான் ஏதோ உருவம் கொடுத்து கை கால்களை அமைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். டூப்ளிகேட் தான். ஆனால் உங்கள் பொறுமை பெரிய அழகு .

    “கிரேட் பெர்சன்” என நான் சொன்னது அவர் காதில் விழவில்லை.

    அவர் காற்றுக்குக் கையாட்டிக்கொண்டிருந்தார்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-108

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-108

    நாங்குநேரி வாசஸ்ரீ

    108. கயமை

    குறள் 1071

    மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்

    கொணத்துல மோசமானவரா (கயவரா) இருக்கவுக பாக்கதுக்கு நல்ல மனுசன்கணக்காத்தான் தெரியுவாக. மனுசங்களத் தவித்து வேற எந்த இனத்திலயும் இப்டி ஒப்பும கண்டதில்ல.

    குறள் 1072

    நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
    நெஞ்சத் தவலம் இலர்

    எப்பமும் நல்லதையே நெனைச்சி ரோசன பண்ணுதவங்களவிட எதையும் மனசுல போட்டுக்கிடாம அலையுத மோசக்காரங்க ஒருவகையில குடுத்துவச்சவகதான்.

    குறள் 1073

    தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்

    பொறத்தியார் கட்டுப்பாடு இல்லாம தம் மனசுக்குத்தக்கன ஆட்டம்போட்டு வாழுத மோசக்காரங்களும் தேவர்கள் கணக்காதான்.

    குறள் 1074

    அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

    கொணங்கெட்ட மோசக்காரங்க தன்னையக்காட்டிலும் கேடுகெட்டவனப் பாத்தா, தாங்க ஒசந்தவுகனு நெனச்சி மண்டக்கனம் புடிச்சி அலையுவாங்க.

    குறள் 1075

    அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது

    மோசக்காரங்க ஒழுக்கசீலனா காணிச்சிக்கிடுதது பயத்தால மட்டுந்தான். அதையும்மீறி தான்  ஆசப்படுதது கெடைக்கும்னு தெரிஞ்சுக்கிட்டாலும் கொஞ்சம் ஒழுக்கமா இருக்காமாரி நடிப்பாங்க.

    குறள் 1076

    அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க் குய்த்துரைக்க லான்

    மோசக்காரங்க தான் தெரிஞ்சிக்கிட்ட ரகசியத்த வலியபோய் ஊர் முழுக்க பறை அடிக்கதால அவுங்க அடிக்கப்படுத பறைக்கு சமானம் தான்.

    குறள் 1077

    ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
    கூன்கையர் அல்லா தவர்க்கு

    கைய மடக்கி கன்னத்துல ஓங்கிகுத்தி மூஞ்சியப் பேத்துஎடுக்கவனத் தவித்து மத்தவங்களுக்கு எச்சிக்கையக்கூட ஒதற மாட்டாங்க மோசக்காரங்க.

    குறள் 1078

    சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
    கொல்லப் பயன்படும் கீழ்

    கிட்ட அண்டி சங்கடத்த சொல்லுத நேரமே இரக்கப்பட்டு ஒதவுவாக பெருமக்க. மோசக்காரனுவள கரும்பு கணக்கா சக்கயா பிழிஞ்சா தான் நாம கேட்ட ஒதவி கெடைக்கும்.

    குறள் 1079

    உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்

    மோசக்காரனுவ மத்தவங்க திங்கதையும் உடுக்கதையும் பாத்து வயித்தெரிச்சப்பட்டு வேணும்னே குறை சொல்லிக்கிட்டே இருக்குத தெறம உள்ளவனுவ..

    குறள் 1080

    எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
    விற்றற் குரியர் விரைந்து

    சங்கடம் வருத நேரம் அதிலேந்து தப்பிச்சிகிட தன்னையே பொறத்தியார்கிட்ட விலைக்கு வித்துப்போடுத தகுதிதான் மோசக்காரங்களோட தகுதியாவும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(286)

    குறளின் கதிர்களாய்…(286)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(286)

    உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
    -திருக்குறள் -592(ஊக்கமுடைமை)

    புதுக் கவிதையில்…

    உள்ளத்தில்
    ஊக்கமுடைமையே ஒருவனுக்கு
    உண்மையான நிலையான
    உடமையாகும்,
    செல்வம் உடைமை என்பது
    சென்றுவிடும்
    நிலைக்காமல் நீங்கி…!

    குறும்பாவில்…

    ஊக்கமுடைமையே உண்மையில் உடைமை,
    ஒருவன் சேர்த்த செல்வ உடைமையெல்லாமவனிடம்
    நிலைக்காமல் நீங்கிச் சென்றுவிடும்…!

    மரபுக் கவிதையில்…

    உலக வாழ்வில் உடைமைகளில்
    உண்மை உடைமையாய் நிலைப்பதுதான்
    நலமுடை நெஞ்சின் ஊக்கமதே
    நடைமுறை உண்மை இதுதானே,
    பலவகைப் பொருட்கள் உடைமையாகப்
    பாடு பட்டுச் சேர்ப்பதெல்லாம்
    நிலைத்தே நம்மிட மிருப்பதில்லை
    நீங்கிச் சென்றிடும் நமைவிட்டே…!

    லிமரைக்கூ..

    உண்மை உடைமைமன ஊக்கம்,
    சேர்க்கும் செல்வவுடைமை நிலைக்காது நீங்கி
    அதனால் இலையே ஆக்கம்…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    ஊக்கம் வேணும்,
    ஓலக வாழ்க்கயில
    மனுசனுக்கு
    மன ஊக்கம் வேணும்..

    ஒலகத்துல உண்மயா
    நெலச்சி நிக்கிற ஒடம
    நம்ம மன ஊக்கம்தான்..

    அதுயில்லாம நாம சேக்கிற
    சொத்துசொகம் செல்வமெல்லாம்
    உண்மயான ஒடமயில்ல,
    அதெல்லாம் நெலைக்காம
    நம்மவிட்டு நீங்கிப்போயிடுமே..

    அதால
    வேணும் வேணும்
    ஊக்கம் வேணும்,
    ஓலக வாழ்க்கயில
    மனுசனுக்கு
    மன ஊக்கம் வேணும்…!

    Share
  • Annakannan Ideas – 38

    Annakannan Ideas – 38

    How mosquitoes are biting us, little away from the reach of our hands? Mostly in back body, back arms, legs, thighs, forehead, neck… etc? I was wondering & observing this so long. If it is in front of us, we will kill them on the spot. Now, before we reach the spot, they will flee & stay safe.

    Yesterday I found the reason, when a mosquito was biting me. It’s similar to Newton discovered Gravity when he saw a falling apple .

    Mosquitoes have an ability to sense human eyes. They have a sensor to detect our vision in microseconds. Also whether the eye is active or sleepy, the direction and the concentration. So, it’s avoiding the focus point of eyes. You may notice, if we look or concentrate somewhere else, it will sit straight on top of the nose. In normal, it will prefer to bite, where we are not looking.

    How are mosquitoes able to sense the vision?

    I remember an unique feature of eyes. If someone look us from anywhere, from any distance, even we look in the opposite side, we will turn to them immediately. There is a connection / contact in between eyes.

    This eye contact exists even with animals including snakes, dogs, elephants. In general, we understand this as a power of human eyes. Humans  make eye contact with other animals. Now we have to look in reverse. Animals and other species make eye contact with one another & also with humans. This research will be really an eye opener.
    In this background, mosquito is reading human eyes to select the safe spot to bite. But, human beings don’t have the ability to read a mosquito’s eyes.

    Quote from Orkin.com:

    Male and female mosquitoes see by using their two compound eyes for vision. Compound eyes are located on each side of the adult mosquito’s head and each eye is made up on hundreds of small lenses called ommatidia. The multitude of ommatidia enables the mosquito to see from many directions at once.

    We need to create a device or sensor to detect mosquito eyes; also to create an artificial vision to send signals to mosquitoes that the human vision is active and following / focusing mosquito. If we make this, there is a chance to restrict mosquitoes.

    In another way, we can detect mosquito eyes and send a nano laser light with more blink or bright or sound; if it happened, they will not come close to the object and surrounding. This should be only observed by mosquitoes; not by human or any other species. An artificial intelligence system can easily detect mosquito eyes by it’s unique design. If we blind that eye with a sharp light, that will be the end of mosquito.

    I request biomedical scientists to take this research forward.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 1

    பழகத் தெரிய வேணும் – 1

    நிர்மலா ராகவன்

    பெண் என்றால் தியாகியா?

    ஆண் என்பவன் அடக்கி ஆள்பவன். பெண் அவனுக்கு அடங்குபவள்.

    பல்லாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நியதி.

    ”இது இக்காலத்திற்கும் பொருந்துமா?” என்ற யோசனை எழுகிறது.

    ’காலம் மாறினால் என்ன, நாங்கள் மாற மாட்டோம்!’ என்று விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர் ஆண்கள். ஏனெனில் அடக்குவது அவர்களுக்குத்தானே சாதகமாக அமைந்திருக்கிறது!

    எப்படியெல்லாம் அடக்குகிறார்கள்?

    தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்மணி ஒருத்தி கூறினாள்: ”நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. என் கணவருக்குப் பிடிக்காது”.

    “விதவிதமான ஜாக்கெட் அணிவீர்களா?”

    “கிடையாது. அவருக்குப் பிடிக்காது”.

    “நான் திருமணத்திற்குப்பிறகு படிப்பைத் தொடரலாம், வேலை பார்க்கலாம் என்றார். ஆனால் விடவில்லை”.

    இப்படியாக, கணவருடைய விருப்பங்களுக்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து நடக்கும் பெண்ணுக்கு வெளிப்படையாக எதிர்ப்பது அழகாகுமோ என்ற குழப்பம். குடும்பத் தகறாறுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும் தயக்கம்.

    நாளடைவில், தன் சுயவிருப்பங்களை மறைத்து, மறந்ததுபோல் நடந்துகொள்ள முற்படுகிறாள். கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும் நாள் முழுவதும் செலவிடுவதுதான் தான் பெண்ணாகப் பிறந்ததன் பயன் என்பதுபோல் நடக்கிறாள்.

    அவளை எவர் பாராட்டுகிறார்களோ, என்னவோ, அவளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஒருவித அயர்ச்சிதான்.

    ’நான் என் வாழ்க்கையைப் பிறருக்காகத் தியாகம் செய்துவிட்டேன்!’ என்று சொன்னால் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். அந்தத் `தியாகி’யின் மனப்போராட்டம் எவருக்குப் புரியும்?

    சில ஆண்கள் நான்குபேருக்கு முன்னிலையில் மனைவியை அவமரியாதையாகப் பேசித் திட்டினால், தமது கௌரவம் உயர்ந்துவிட்டதென நம்புகிறார்கள். பிறரைத் தாழ்த்தினால், நாம் உயர்ந்துவிடுவோமா?

    மனைவி எதிர்ப்பு காட்டாமல், `அவர் குணம் அப்படி!’ என்று விட்டுக்கொடுக்கிறாள். இதனால் துணிச்சல் பெருக, பிற பெண்களிடமும் அப்படியே நடந்துகொள்ள முற்படுகிறார்கள் சிலர்.

    பல குடும்பத்துடன் ஒன்றாக வெளியே செல்லும்போது, தன் அனுமதி பெற்றுத்தான் ஒவ்வொரு பெண்ணும் செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள் இப்படிப்பட்டவர்கள்.

    அனேகமாக, எல்லாப் பெண்களும் அடங்கிப்போய்விடுவார்கள். அபூர்வமாக ஒரு பெண் எதிர்த்தால், முதலில் கோபமும், பிறகு அச்சமும் எழும். இத்தகைய ஆண்களுக்குத் தாம் செய்யும் தவறு என்னவென்று புரிவதில்லை.

    மிருக இனங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

    கதை

    ஓர் அறுவை சிகிச்சை முடிந்து நான் வீடு திரும்பியபோது, எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி நான் அமர்ந்திருந்த நாற்காலியின்மேல் பத்திரமாக ஏறி, ஊசி குத்தியதால் மிகவும் வலித்த பாகத்திற்குச் சற்று கீழே அருமையாக நக்கிக் கொடுத்தது. (அதற்கு எப்படித் தெரியும், எங்கு ஊசி குத்தப்பட்டதென?)

    குட்டியாக இருக்கையில் என் மடியிலேயேதான் உட்கார்ந்திருக்கும். இடி இடித்தால், பயந்து ஓடிவந்து, என் மடியில் புகல் தேடும். நான் பாடும்போது, பூனையின் முதுகில் தாளம் போட, அதன் வாலும் தாளத்திற்குச் சரியாக ஆடும்! நன்றாகத் தமிழ் புரியும். `விஷமம் பண்ணினா அடி!’ என்று நான் மிரட்டியதில் புத்தகங்களைக் கிழிப்பதில்லை.

    நான்தான் தினமும் இரு பூனைகளுக்கும் (இப்போது மூன்று) ஆகாரம் போடுவேன். அது எனக்குப் பெரிய விஷயமில்லை. ஆனால், அவற்றுக்கு முக்கியம். பரஸ்பர அன்பை வளர்க்கும் ஒரு செயல். அதைவிட முக்கியம் அன்பாகப் பேசி நடத்துவது. ஒரு சிறு காகிதத்தைச் சுருட்டி தரையில் போட்டால், மிகுந்த மகிழ்ச்சியுடன் `கால்பந்து’ விளையாடும்.

    இப்போது, ’பூனை’ என்ற இடத்தில் மனைவியை வைத்துப் பாருங்கள். அவளிடம் அருமையாக நடந்துகொள்ளாது, `நான் சம்பாதித்து உனக்குச் சாப்பாடு போடுகிறேன். அதனால் நீ எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்,’ என்பதுபோல் நடத்தி, பிற ஆண்களிடம், `என் மனைவி நான் சொல்வதைத் தட்டமாட்டாள்!’ என்று பெருமை பேசுவார்கள் சிலர்.

    பெண்ணுக்கென தனி மனமே இருக்காதா? அப்படியே இருந்தாலும், அதை அடக்கினால்தான் நல்லவளா?

    வாய்ப்பு கிடைக்கும்போது, மனைவி நெருக்கமான ஓரிருவரிடம் தன் ஏக்கங்களைக் கொட்டக்கூடும். அதனால் நிலைமை என்னவோ மாறப் போவதில்லை.

    குழந்தைகளுக்காகத் தியாகம்

    ’எனக்குத்தான் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கவில்லை. என் குழந்தைகள் கஷ்டமே படக்கூடாது.’

    நடக்கிற காரியமா?

    எவ்வளவுதான் கவனமாக வளர்க்கப்பட்டிருந்தாலும், மனிதனாகப் பிறந்த எவருமே கஷ்டமே இல்லாமல் வாழ்க்கை நடத்திவிட முடியாது.

    ’என் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக என் ஆசைகளை ஒடுக்கிக்கொண்டுவிட்டேன்!’

    இந்த மனப்பான்மையால் ஒரு தாயின் மகிழ்ச்சி குன்றிவிடும். ஏதோ ஒரு வகையில், குழந்தைகளையும் பாதிக்கும்.

    ’நான் உனக்காக எவ்வளவு செய்கிறேன்!’ என்று சுட்டிக் காட்டியபடி இருந்தால், அதுவும் ஒருவகையான வதைதான் – உணர்ச்சிபூர்வமான வதை.

    பயந்த குழந்தை குற்ற உணர்ச்சியுடன், தாய் சொல்லைத் தட்டாது நடக்க முற்படுகிறான். இதனால் தாய், மகன் இருவருக்குமே சுதந்திரம் கிடைப்பதில்லை. அவள் எண்ணியதுபோல் அவன் சிறப்படையாது போய்விட வாய்ப்புண்டு. இருவருக்குமே ஏமாற்றம்தான்.

    தியாகம் எதற்கு?

    எழுத்தாளர்களான பெண்கள் பலர், திருமணத்திற்குப் பிறகு எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் கூறும் காரணம்: `குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது! எழுதினால் என்ன கிடைக்கிறது!’

    இது தம்மையே சமாதானப்படுத்திக்கொள்ளும் முயற்சி.

    நமக்குப் பிடித்த காரியங்களைச் செய்யவும் சிறிது நேரத்தை ஒதுக்கினால், முதலில் ’சுயநலம்’ என்று நமக்கே தோன்றலாம். அல்லது, பிறர் அவ்வாறு பழி சுமத்தலாம்.

    ஆனால், ஒருவர் தன் சொந்த விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்காது நடப்பதால் சிரிப்பையே இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்படியே சிரித்தாலும், அது பிறரிடம் குறைகண்டு, அதனால் ஏற்படும் அற்ப மகிழ்ச்சியால் இருக்கும்.

    ஒப்பீடும் நிம்மதியும்

    நாம் ஒவ்வொருவரும் தனிப்பிறவி. வெவ்வேறு திறமைகளைக் கொண்டு பிறக்கிறோம். பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்ளும்போதுதான் வேண்டாத குழப்பங்கள் எழுகின்றன.

    பெரிய படிப்பு படித்தால்தான் மதிக்கத்தக்கவர் என்பதில்லை.

    பெரும்பாலும், ’தான் அதிகம் படிக்கவில்லையே, பெரிய உத்தியோகத்தில் அமரவில்லையே!’ என்ற ஏக்கத்தை உள்ளடக்கி வைத்திருக்கும் ஆண்கள் வீட்டிலிருக்கும் பெண்களை அடக்கியாள்வார்கள். தங்கள் நிலையை உள்ளபடி ஏற்றால் வருத்தம் எழாது.

    இக்குணத்தைப் பெண்களிடமும் காணலாம்.

    கணவர் கல்வித் தகுதியிலோ, செல்வச் செழிப்பிலோ தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரை ஆட்டி வைப்பார்கள்.

    இருப்பினும், ஆண்கள் வீட்டில் கழிக்கும் நேரத்தைவிட அதிகமாக வெளியில் செலவிடுவதால் அதிக உளைச்சலுக்கு ஆளாகிறார்களோ, என்னவோ! நிலைமையை மாற்றமுடியாது என்று புரிந்தபின், அதை மாற்றும் வழி தெரியாது, ’உத்தியோகமே கதி!’ என்று சிலர் காலத்தைக் கழிக்கிறார்கள். இதனால் நஷ்டம் பெண்ணுக்குத்தான். கணவர் தன்னைவிட்டு ஏன் விலகுகிறார் என்று புரியாது, மனஉளைச்சலுக்கு ஆளாவாள்.

    கல்யாணமும் உல்லாசமும்

    ’அவர் எப்போதும் சிரித்த முகத்துடன், ஜாலியாக இருக்கிறார்! காரணம் — அவர் கல்யாணமே செய்துகொள்ளவில்லை!’ என் சக ஆசிரியர் ஒருவரைப்பற்றி நாங்கள் கணித்தது.

    முட்டாள்தனமாக மணவாழ்க்கையில் சிக்கி, பலரும் திண்டாடுகிறார்களே என்று பயந்து, எத்தனைபேர் ’கல்யாணமே வேண்டாம்’ என்று வைராக்கியமாக இருக்கிறார்கள்!

    இல்லறத்தில் எப்போதும் ஒருவர் கை மட்டுமே ஓங்கி இருந்தால் இன்னொருவருக்கு கசப்புதான் மிஞ்சும். இல்லையேல், எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ்க்கையைக் கடத்தும் வெறுமை.

    அன்பு என்பது…

    ’சாப்பிட்டாயா? தூங்கினாயா?’ என்று விசாரிப்பதுடன் அன்பு நின்றுவிடுவதில்லை.

    கணவனோ, மனைவியோ, மற்றவருடைய தனிப்பட்ட ஆசைக்கும் மதிப்பு கொடுத்து, இயன்றவரை தானும் அதற்கு உறுதுணையாக இருந்தால்தான் அன்பும் மரியாதையும் நிலைக்கும்.

    (தொடரும்….

    Share
  • அமெரிக்காவுக்கு அக்கினிப் பரீட்சை

    அமெரிக்காவுக்கு அக்கினிப் பரீட்சை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கா என்ற நாடு நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 350 வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவுக்கு இப்போது ஒரு அக்கினிப் பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. இந்த அக்கினிப் பரீட்சையில் அமெரிக்கா தேறுமா அல்லது இதுவரை அதற்கு இருந்துவந்த உலகிலேயே ஒரு சிறந்த ஜனநாயக நாடு என்ற பெயரை இழந்துவிடுமா என்ற கேள்வி அமெரிக்கர்கள் பலர் மனதில் இப்போது இருக்கிறது.

    2016-இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே அந்த முடிவு அமெரிக்க மக்களின் உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்று பலர் குரல் எழுப்பினர். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அமெரிக்கத் தேர்தல் விதிகளின்படி இரண்டு கட்சி வேட்பாளர்களில் (அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான் இருக்கின்றன; எப்போதாவது தனிப்பட்ட ஒருவர் கட்சி ஒன்றை ஆரம்பித்து அந்தக் கட்சிச் சார்பில் போட்டியிடுவதுண்டு;  அவர்களில் யாரும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் ஓட்டுக்களைப் பிரிப்பதற்குத்தான் அவர்கள் பெற்ற ஓட்டுக்கள் உதவியிருக்கின்றன) யாருக்கு electoral college-இல் அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவர்தான் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.  இந்த electoral college என்ன என்று பார்ப்போம்.

    ஒவ்வொரு மாநிலத்தின் ஜனத்தொகையைப் பொறுத்து அந்த மாநிலத்திற்கு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க தேர்தல் ஓட்டுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஜனத்தொகை அதிகம் உள்ள கலிஃபோர்னியா மாநிலத்திற்கு 55 தேர்தல் ஓட்டுக்கள்; அளவிலும் ஜனத்தொகையிலும் சிறியதான நியூஹேம்ஷையர் மாநிலத்திற்கு 4 தேர்தல் ஓட்டுக்கள்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கட்சிக்கு மக்களின் பெரும்பான்மை ஓட்டுக்கள் கிடைக்கின்றதோ அந்தக் கட்சி வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் அத்தனை தேர்தல் ஓட்டுக்களும்  கிடைக்கும். அடுத்த கட்சிக்கு எதுவும் இல்லை. ஒரு சில மாநிலங்களில் இரு கட்சிகளுக்கும் போட்டி தீவிரமாக இருக்கும்.  அங்கு ஒரு கட்சிக்கு மிகச் சிறிய வித்தியாசத்தில் பெரும்பான்மை கிடைத்தாலும் அந்த மாநிலத்தின் எல்லா தேர்தல் ஓட்டுக்களும் அந்தக் கட்சிக்குக் கிடைத்துவிடும். 2016-இல் இப்படித்தான் நடந்தது.  ட்ரம்ப்புக்கு electoral college தேர்தல் ஓட்டுக்களில் ஹிலரியைவிட அதிக ஓட்டுகள் கிடைத்தன; ஹிலரிக்கோ பொதுமக்கள் வாக்குகளில் ட்ரம்ப்பைவிட முப்பது லட்சம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன. இருந்தாலும் ட்ரம்ப்தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி ஆனார். இதனால்தான் இந்தத் தேர்தல் விதியை மாற்றி நாடு முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் ஓட்டுக்களில் பெரும்பான்மை யாருக்குக் கிடைக்கிறதோ அவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் எழும்பும்.  ஆனாலும் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.

    இப்படி மொத்த ஜனங்களின் ஓட்டுக்களில் பாதிக்குமேல் பெறாமல் பதவிக்கு வந்த ட்ரம்ப்பின் மேல் பலருக்கு அதிருப்தி நிலவி வருகிறது. இருந்தாலும் அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை 40% சதவிகிதத்திலிருந்து குறையவில்லை என்கிறார்கள். ஒபாமா ஏழைகளுக்காகவும் அமெரிக்காவின் பிம்பத்தை நல்லபடியாக உயர்த்துவதற்காகவும் என்னென்ன செய்தாரோ அவை எல்லாவற்றையும் ஒபாமா செய்தார் என்பதற்காகவே மாற்றிவருகிறார் ட்ரம்ப். அமெரிக்க நாடு வெள்ளை இனத்தவருக்கே என்ற வாதத்தை மறைமுகமாகக் கூறி வருகிறார். வெள்ளை இன அமெரிக்கர்களுக்கு இந்த வாதம் மிகவும் பிடிக்கிறது. அமெரிக்கா இப்போது பொருளாதாரத்தில் உலகிலேயே முதன்மை நிலையில் இருப்பதற்கு முதலில் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக இங்கு கொண்டுவரப்பட்ட அடிமைகளின் உழைப்பும் அதன் பிறகு உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் பங்களிப்பும் காரணம் என்பதை இந்த வெள்ளை இனவாதிகள் மறந்துவிடுகிறார்கள். வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் அமெரிக்காவை விட்டுப் போய்விட்டால் அமெரிக்காவின் வளம் அனைத்தும் தங்களுக்கே என்று இவர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்காவின் பன்மைத்தனம்தான் அமெரிக்காவின் சிறப்பம்சம், அதன் வலிமை என்று இவர்கள் நினைப்பதில்லை. அமெரிக்காவில் வெள்ளை இன மக்களின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவருவார் என்று ட்ரம்ப்பின் பின்னால் இவர்கள் கானல் நீரை நோக்கி ஓடுபவர்கள்போல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு தலைமுறையில் வெள்ளை இனத்தவர் சிறுபான்மையினராக ஆகிவிடுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது.

    இவர்கள் கொடுக்கும் தைரியத்தில் ட்ரம்ப்பும் தான்தோன்றித்தனமாக, தான் அமெரிக்காவுக்கே அரசன்போல் நடந்துவருகிறார். ரஷ்யாவின் புதின் போல், சீனாவின் ஷி போல், துருக்கியின் எர்டோவன் போல், இந்தியாவின் மோதிக்கு இருக்கும் வாய்ப்பு போல், சவூதி அரேபியாவின் சல்மான்கான் போல், வட கொரியாவின் கிம் ஜாங்-அன் போல் தான் வாழ்நாளுக்கும் அமெரிக்காவின் அதிபராக இருந்துவிட முடியாதா என்று ஏங்குகிறார். உலக அரங்கிலும் அமெரிக்காவின் பல நட்பு நாடுகளுடன் எதையும் சிந்திக்காமல் மனதில் தோன்றுவதைப் பேசி வருகிறார், நடந்து வருகிறார். அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு,  ராணுவ பலம் வாய்ந்த நாடு என்பதால் பல நாட்டுத் தலைவர்களும் ட்ரம்ப்பைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் நடந்துகொள்கிறார்கள். உள்நாட்டிலும் 40 சதவிகித மக்களின் ஆதரவு இருப்பதாலும் வெளிநாடுகளிலும் அமெரிக்காவின் பலத்திற்குப் பயந்து பல தலைவர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டிருப்பதாலும் ட்ரம்ப்பின் அட்டகாசங்களுக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

    இதற்கிடையில் 2020 தேர்தலில் தன்னை எதிர்க்கக்கூடிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஜோ பைடன் முதலிடம் வகிக்கலாம் என்று பயந்த ட்ரம்ப் அவர்மேல் எப்படியாவது சேற்றைப் பூசிவிட வேண்டும் என்று நினைத்தார். துணை ஜனாதிபதியாக இருந்த பைடனின் மகன் உக்ரைன் நாட்டின் ஒரு ஊழல் மலிந்த, எரிசக்தி கம்பெனியின் உயர்பதவியில் இருந்தார்; அந்தக் கம்பெனியில் வேலை பார்த்தாலும் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை.  பைடனையும் அவரையும் விசாரிக்க வேண்டும் என்றும், அப்படி விசாரித்தால்தான் உக்ரைனுக்குக் கொடுப்பதாக அமெரிக்கப் பாராளுமன்றம் தீர்மானித்த 391 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அளிப்பதாகவும் 2019 ஜூலை மாதம் 25-ஆம் தேதி உக்ரைன் அதிபர் ஸெலின்ஸ்கியைத் தொலைபேசியில் கூப்பிட்டுக் கூறியிருக்கிறார்.  அமெரிக்கப் பாராளுமன்றம் அனுமதி கொடுத்த பிறகு அந்நிய நாடுகளுக்கு ராணுவ உதவியை பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே நிறுத்திவைப்பது அமெரிக்கச் சட்டப்படி குற்றம்.  நிறுத்திவைத்தது எப்படியோ உள்தகவலாளி (whistle blower) ஒருவர் மூலம் வெளியே வந்துவிட்டது.

    ஏற்கனவே ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்கப் பல முறை முயன்ற ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் இப்போது ட்ரம்ப்பின் இந்த அடாவடிச் செய்கையை முன்வைத்து அவரைப் பதவி இறக்க விசாரணை (impeachment) செய்து எப்படியாவது பதவியிலிருந்து இறக்கிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள்.  இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்றால் அமெரிக்கா சட்டப்படி நடக்கும் நாடு, ஜனாதிபதியானாலும் சட்டத்திற்கு மேற்பட்டவர் அல்ல என்பது நிரூபணமாகும். இதுதான் அமெரிக்காவுக்கான இப்போதைய அக்கினிப் பரீட்சை.

    முதலில் ட்ரம்ப் உக்ரைன் அதிபரோடு தான் பேசவேயில்லை என்றார். பிறகு பேசியதாகவும் பைடனைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் விசாரிக்கச் சொல்லவில்லை என்றும் விசாரித்தால்தான் ராணுவ உதவி என்று நிபந்தனை போடவில்லை என்றும் கூறிவந்தார்.

    இப்போது எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிட்ட பிறகு இந்தச் செய்திகள் எல்லாம் பொய்ச் செய்திகள் (fake news) என்று சொல்லிவருகிறார். (இவரிடமிருந்துதான் இந்திய அரசியல் தலைவர்களும் fake news என்ற வார்த்தையைக் கற்றிருக்கிறார்கள்.)  தான் மட்டுமே உண்மை பேசுவதாகவும் மற்றவர்கள் எது கூறினாலும் அது பொய் என்றும் ட்விட்டரில் கூறுவது ட்ரம்ப்பின் பொதுவான வழக்கம்.  இப்போதும் அதைத்தான் செய்துவருகிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையால் இதைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. சில தினங்களுக்கு ஒரு முறை ‘உண்மை எப்போதும் வெல்லும்’ என்று விளம்பரம் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.

    எப்படியாவது ட்ரம்ப்பின் இந்தக் குற்றத்தை நிரூபித்துவிட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சிக்காரர்கள் முயன்றுகொண்டிருக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவின் கீழவையில் ஏற்கனவே ட்ரம்ப் பதவி இறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  இருந்தாலும் மேலவை அங்கத்தினர்கள் 100 பேரில் 67 பேர் ஓட்டுப் போட்டால்தான் ஜனாதிபதியைப் பதவி இறக்கம் செய்ய முடியும்.

    செனட்டில் 47 ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்களும் 53 குடியரசுக் கட்சி அங்கத்தினர்களும் இருக்கிறார்கள்.  47 ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் ஓட்டுப் போடத் தயாராக இருக்கிறார்கள்; குடியரசுக் கட்சியில் இப்போதைக்கு யாரும் பதவி இறக்க ஓட்டைப் போடத் தயாராக இல்லைபோல் தெரிகிறது.  இத்தனைக்கும் இன்று (ஜனவர் 27, 2020) ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த போல்ட்டன் என்பவர் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி (இது இன்னும் வெளியாகவில்லை; மார்ச் 17 அன்று வெளியாகிறது.) ஒரு பத்திரிக்கைக்குக் கிடைத்து ட்ரம்ப்பிற்குப் பாதகமான செய்திகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. அப்படியும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் யாரும் பதவி இறக்கத்திற்கு ஓட்டுப் போடத் தயாராக இல்லைபோல் தெரிகிறது. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் ட்ரம்ப்பை எப்படியாவது இறக்கிவிட வேண்டும் என்று தங்களாலான எல்லா முயற்சிகளையும் செய்துவருகின்றன. கீழவையின் பதவி இறக்கத் தலைவர் தன் வாதங்களை முடிக்கும்போது, ‘இப்போது உலகம் முழுவதும் அமெரிக்காவைத்தான் ஜனநாயகத்திற்கு உதாரணமாகப் பார்க்கிறது. அதனால் இப்போது ட்ரம்ப் மட்டுமல்ல, அமெரிக்காவே விசாரணைக்குள்ளாகி இருக்கிறது’ என்று முடித்தார். பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர், ‘உலகிற்கே ஜனநாயக வழிகாட்டியாக இருந்த, உண்மை அதிகாரம் மக்களிடம் இருந்த,  அமெரிக்கக் குடியரசு இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்துவிடும் அபாயம் இருப்பதுபோல் இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார்.

    அமெரிக்காவுக்கு இது சோதனைக் காலம். ட்ரம்ப்பை குடியரசுக் கட்சி செனட்டர்கள் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்த பிறகும் பதவியிலிருந்து இறக்கவில்லையென்றால், இந்த அக்கினிப் பரீட்சையில் அமெரிக்கா தோற்றுவிட்டால் உலகிற்கே இது நல்ல சகுனமில்லை.

    Share
  • திருப்பூர் இலக்கிய விருது 2020  

    திருப்பூர் இலக்கிய விருது 2020  

    திருப்பூர் இலக்கிய விருது 2020  (Tiruppur Literary Award  2020)

    படைப்பிலக்கியம், கலை இலக்கிய, சமூக மேம்பாட்டுப் பணிக்காக, சிறந்த படைப்பாளிகளுக்கு திருப்பூர் இலக்கிய விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர். 2020ஆம் ஆண்டு விழாவில்  28 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    விழா நாள் : 9/2//20  ஞாயிறு, பிற்பகல் 3–6  மணி.

    இடம்: திருப்பூர் புத்தகக் கண்காட்சி அரங்கம்,  கேஆர்சி செண்டர், டைமண்ட் திரையரங்கு எதிரில், மங்கலம் சாலை , திருப்பூர்

    2020 திருப்பூர் இலக்கிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்:

    கோவை முனைவர் சித்ரா

    ஈரோடு செழியன் கோ. (கலைக்கோவன்)

    திருப்பூர் கனல்

    பொள்ளாச்சி வாமனன்

    சக்திமங்கலம்  உமையவன்

    சென்னை கணேச குமாரன்

    செஞ்சி தமிழினியன்

    கம்பம் மானசீகன்

    ஈரோடு சந்திரா மனோகரன்

    கோவை  கா சு வேலாயுதம் -பத்திரிகையாளர்

    கோவை மு. வேலாயுதம் –பதிப்பாளர்

    திருநெல்வேலி ராமபாண்டி-பேராசிரியர்/ செயல்பாட்டாளர்

    திருப்பூர் ஓவியர் பித்தன் நடராஜன்

    கோவை கவிஜி

    சென்னை கு. விநாயகமூர்த்தி

    அயலகம் :

    சிங்கப்பூர் சித்ரா ரமேஷ்

    ஆஸ்திரேலியா ஆ சி கந்தராஜா

    இலங்கை ஜே. வஹப்தீன்

    புதுவை எழுத்தாளர்கள்

    சுந்தர முருகன் 

    தெ. குப்புசாமி

    டேவிட் பிரபாகர்

    கு.அ. தமிழ்மொழி

    கு. சிவமணி

    வளவ துரையன்

    திருப்பூர் இலக்கிய   விருது 2020 குழுவுக்காக:  (துருவன் பாலா  99941 49922). தபால் முகவரி : 44, ராமையா காலனி பிரதான சாலை , திருப்பூர் 641 602/ email: tiruppurawards@gmail.com

    திருப்பூர் இலக்கிய   விருது 2020 குழு. (துருவன் பாலா, எஸ்.ஏ காதர் , சுப்ரபாரதிமணியன்)

    Share
  • ஆகாயப் பந்தலிலே

    ஆகாயப் பந்தலிலே

    பாஸ்கர் சேஷாத்ரி

    ஊஞ்சல் எழுப்பும் கிறீச்சிடும் சப்தங்களுக்கு
    என் சுவாசம் இசையே கை கொடுக்கும்
    மேலே சென்று கால் தேய்த்து முன்னே சென்றாலும்
    தானாய் தன்னிச்சையாகப் பின்செல்லும் சுகத்தின் உச்சம்
    பழைய நினைவு அசை போட பின் பக்கமே கண்
    ஒரே சீரான பயணம் -தூக்கத்தின் ஒரே கனவு போல
    கட்டிலும் மேஜையும் சுற்றி ஆட்டம் போடும்
    குதூகலம் கண்களை மூட, அறையே நடுங்கியோடும்
    ஆட்டங்களே இங்கு கோலோச்சும் ராஜ்ஜியம்
    எதிரில் வரப் பூனையும் நடுங்கும், எலியும் பம்மும்
    ஊஞ்சல், கவலைகளுக்குக் கல்லறை
    இலவச இன்பச் சுற்றுலா
    ஆடி ஆடி ஓய்ந்த பின்னர் சப்தம் என்றும் ஓயாது
    செவிகள் தீர்மானிக்கும் வாழ்வு இது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 107

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 107

    நாங்குநேரி வாசஸ்ரீ

    107. இரவச்சம்

    குறள் 1061

    கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்

    இருக்கத ஒளிச்சிவையாம குடுக்குத கொணம் ஒடையவங்ககிட்ட கூட, ஒண்ண குடு னு கையேந்தாம இருக்குதது கோடி மடங்கு நல்லது.

    குறள் 1062

    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்

    இந்த ஒலகத்தப் படைச்சவன் சிலபேர பிச்சை எடுத்துதான் வாழணும்ங்குத நெலமையில வச்சிருந்தாம்னா அவனும் அதே நெலைமையில கெட்டொழிஞ்சி திரியட்டும்.

    குறள் 1063

    இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
    வன்மையின் வன்பாட்ட தில்

    வறுமையால வருத சங்கடத்த ஒழைக்காம கையேந்தி போக்கிக்கிடலாம்னு நெனையுததக் காட்டிலும் கொடும வேற இல்ல.

    குறள் 1064

    இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு

    பொழைப்புக்கு வழியத்துப் போனாலும் மத்தவங்கிட்ட கையேந்த நெனையாத கொணம் இந்த ஒலகமே கொள்ளாத அளவு பெருமயக் கொண்டது.

    குறள் 1065

    தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
    துண்ணலின் ஊங்கினிய தில்

    நீத்த கஞ்சி யின்னாலும் சொந்த ஒழைப்புல சம்பாரிச்ச துட்டுல குடிச்சா அதக் காட்டிலும் சந்தோசம் வேற ஒண்ணுமில்ல. ‘

    குறள் 1066

    ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
    கிரவின் இளிவந்த தில்

    பசுமாட்டுக்கு தண்ணிவேணும்னு கையேந்தி நின்னாலும், அப்டி கேக்குத நாக்குக்கு அதவிட கேவலம் வேற ஒண்ணுமில்ல.

    குறள் 1067

    இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
    கரப்பார் இரவன்மின் என்று

    கையேந்திதான் நிக்கணும்னாலும் ஒளிச்சிவச்சிக்கிட்டு இல்லைன்னு சொல்லுதவன்கிட்ட கையேந்தி நிக்காதீகன்னு கையேந்தி நிக்கவங்க எல்லாரையும் கையேந்தி கேட்டுக்கிடுதேன்.

    குறள் 1068

    இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்தாக்கப் பக்கு விடும்

    இருக்கத ஒளிச்சுவச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுத கல்நெஞ்சுக்காரன் மேல கையேந்துதல்னு சொல்லுத தோணி மோதிச்சுன்னா அது ஒடைஞ்சு நொறுங்கிப் போவும்.

    குறள் 1069

    இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்

    கையேந்தி நிக்குதவங்கள நெனச்சா மனசு உருகுது. ஒளிச்சுவச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுதவங்களப் பாத்தா உருகுத மனசு இல்லாம அழிஞ்சே போவுது.

    குறள் 1070

    கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
    சொல்லாடப் போஒம் உயிர்

    மனசில்லாதவனோட இல்லைங்குத சொல்ல கேக்குத நேரமே கையேந்துதவன் உசிரு போவுதே அப்டி சொல்லுதவன்உசிரு மட்டும் எங்ஙன ஒளிஞ்சுகிட்டு கெடக்குமோ?

    Share
  • படக்கவிதைப் போட்டி – 243

    படக்கவிதைப் போட்டி – 243

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரேம்நாத் திருமலைச்சாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 242-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 242-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. அய்மான் பின் முபாரக்கின் புகைப்படக்கருவி எழிலாய்ப் பதிவுசெய்திருக்கும் இந்தப் படத்தைப் படக்கவிதைப் போட்டி 242க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    ”அன்பின் வழியது உயிர்நிலை” என்று பேராசான் வள்ளுவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் அன்பில் பி(இ)ணைந்திருக்கும்  கவிக்குலங்கள் நம்மை நெகிழவைக்கின்றன!

    கவிஞர்களே! இந்தக் கவிக்குலத் தோழர்களைப் பாடுக பாட்டே என்று சொல்லி உங்களை அன்போடு அழைக்கின்றேன்!

    *****

    ”கடுவனே! வெட்கங்கொண்ட மந்தியினை நீ வேட்கையுடன் சேர்ந்து குறிஞ்சிக் காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்” என்று குறிஞ்சிப்பண்ணில் கவிதை பாடுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    குறிஞ்சிப் பண்

    வண்டு சுழன்றிடும் சோலைமிடைக் காதல்
    கண்டு உயிர்வாழ்ந்து பரிணமிப்பாய்
    வெட்கங் கொண்ட கொடிச்சியினை – கடுவனே
    வேட்கையுடனே சேர்ந்திருப்பாய்!

    கொட்டும் சாரல் வெக்கைத் தவிர்க்கக்
    கானவன் தோள்களில் சாய்ந்திடுவாய் – அது
    வானவர் உலகையே காட்டுமென்ற
    வள்ளுவன் வாக்கை மெய்ப்பிப்பாய்!

    நேற்று இன்று நாளையின்றி
    நித்தமும் நிலைக்க வைத்திடுவாய்
    காற்றிடை நுழையாக் காதல் கொண்டு – குறிஞ்சிக்
    காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்

    *****

    நல்ல கவிதையை யாத்தளித்த தோழருக்கு நன்றி!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    மனிதன் மட்டும்…

    குரங்கி லிருந்து பிறந்தவன்தான்
    குணமதில் மனிதன் மாறிவிட்டான்,
    மரத்தை உறைவிடம் ஆக்கியேதான்
    மனம்போல் வாழ்ந்திடும் குரங்கினமே,
    மரத்தின் கிளையி லிருந்தாலும்
    மரத்தை யழிக்க நினைப்பதில்லை,
    தரத்தி லுயர்வாம் மனிதனவன்
    தாழ்கிறான் மரங்கள் தனையழித்தே…!

    தம் மனம்போல் வாழ்ந்திடும் குரங்கினங்கள் மரத்தினை அழிப்பதில்லை. ஆனால் பகுத்தறிவு பெற்றதால் குரங்கினும் தரமுயர்ந்துவிட்ட மனிதனோ மரங்களை அழித்தொழிக்கின்றான் என்று மனிதனின் மடமையைச் சுட்டிக்காட்டும் கடமையைச் சரியாய்ச் செய்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • (Peer Reviewed) பேரரசுச் சோழர்களின் நீர் மேலாண்மை உத்திகள்

    (Peer Reviewed) பேரரசுச் சோழர்களின் நீர் மேலாண்மை உத்திகள்

    மு. கயல்விழி
    உதவிப்  பேராசிரியர், தமிழ்த் துறை, பச்சையப்பன்  மகளிர்  கல்லூரி, காஞ்சிபுரம்.
    மின்னஞ்சல்: kayalarul22@gmail.com

    திட்டச்சுருக்கம்

    சோழர்கள் வேளாண் நலன் சார்ந்த ஆட்சியாளர்கள். இவர்கள் காலத்தில் வேளாண்மையில் பெரும் புரட்சி ஏற்பட்டது. காவிரிக் கரையின் இரு மருங்கும் நன்கு உயர்த்தப்பட்டன. காவிரி நதிகளிலிருந்து பல புதிய வாய்க்கால்கள் வெட்டப்பட்டு அவை மூலமாக ஆற்று நீர், ஏரிகளிலும் குளங்களிலும் பாய்ச்சப்பட்டன. சோழர் காலத்தில் ஏரிகளிலிருந்து புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன, பழைய கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. நதிகளின் குறுக்கே பல புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டன. குளங்ளும் தூர் வாரப்பட்டன.   சோழர்கள் நன்னீரைத் தேக்கி வைத்து விவசாயம் செழிக்கப் பாடுபட்டனர் “சோழ நாடு சோறுடைத்து” என்பதற்கு சோழர்களின் நீர்ப் பாசன உத்திகளே காரணங்கள் ஆகும்.

    முன்னுரை 

    “மேழிச் செல்வம் கோழைபடாது” என்பார்கள் பெரியோர். இம் மேழிச் செல்வத்தை மையமாகக் கொண்ட மக்கள் வாழ்ந்த நாடு சோழ நாடு. இது வளமையும் செழுமையும் தன்னகத்தே கொண்டது. இது வற்றாத காவிரி நதி பாய்ந்து வளப்படுத்தும் பூமி. நைல் நதி   எவ்வாறு எகிப்து நாட்டுக்கு உயிராய்த் திகழ்ந்ததோ அவ்வாறே காவிரி நதியும் சோழ நாட்டுக்கு உயிராய்த் திகழ்ந்தது. இதனால் காவிரியைப் புகழப் போந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் தன் பட்டினப்பாலையில் “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” என்று புகழ்கின்றார். பொங்கிப் பாய்ந்த இந்தக் காவிரியை ஆற்றுப்படுத்தி இதை நன்முறையில் விவசாயத்துக்குப் பயன்படுத்திய பெருமை சோழ மன்னர்களைச் சாரும். அவர்கள் பல்லாற்றானும் முயன்று இந்நீரைக் கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கும் குளங்களுக்கும் பாய்ச்சி நன்முறையில் நீரைத் தேக்கி வேளாண் வளம் செழிக்கப் பாடுபட்டனர்.

    சோழ மன்னர்கள், சோழ நாடு மட்டுமன்றி பருவ மழையை மட்டுமே நம்பியிருந்த தொண்டை நாட்டிலும் விவசாயம் செழிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு நீர் நிலைகளைக் காத்தனர். சோழ நாடு வளமுடன் திகழ்ந்ததற்குச் சோழ மன்னர்களின் சிறப்பான திட்டமிட்ட நீர்ப் பாசன உத்தியே காரணமாகும். நீரை நன்முறையில் தேக்குவதிலும் அதை முறையாகப் பயிர்களுக்குப் பயன்படுத்தச் செய்வதிலும் சோழ மன்னர்களுக்கு இணையாக இந்தியாவில்  வேறு  அரசர்களைக் காணவியலாது (சோழர்களின் சமகால ஆட்சியாளர்களான சாளுக்கியர்கள் போர்களில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டினர். சேரநாடு, இயற்கையாகவே நீர் வளம் நிறைந்த பகுதியாகும். பாண்டிய நாடு, வானம் பார்த்த பூமி என்பதால் அவர்கள் வேளாண்மைக்கு அதிக அக்கறை  காட்டவில்லை. எனவே சோழரைப் போன்று பிற அரசர்கள் வேளாண்மைக்கு அதிகம் முக்கியத்துவம் நல்கினாரில்லை). சோழர்களின் சிறந்த நீர் மேலாண்மை முறையால் வேளாண்மை செழித்தது, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது, நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது, மக்கள் நிம்மதியாய் வாழ்ந்தனர்.

    நீர்ப்பாசன நிர்வாகம் 

    நீர்ப் பாசன மேலாண்மை என்பது நன்னீரை  ஒரு துளியேனும் வீணாக்காமல் நன்முறையில் வேளாண்மைக்குப் பயன்படுத்தி வேளாண் வளம் செழிக்கச் செய்தலாகும். நீர்ப் பாசன மேலாண்மையை நன்கறிந்த சோழர்கள், அதை நன்முறையில் செயல்படுத்தி வெற்றி கண்டனர். இயற்கையாய்க் கிடைக்கும் நீரை நன்கு பயன்படுத்தி வேளாண்மை வளம் பெறச் செய்வதில் சோழர்களுக்கு ஈடு இணை ஒருவரும் இலர். சோழர் காலத்தில் அவர்களின் ஆட்சியின் கீழ் தொண்டை நாடு இருந்தது. சோழ நாடு ஆற்று நீர்ப் பாசனத்தை மையமாகவும், தொண்டை நாடு கிணறு மற்றும் ஏரி நீர்ப் பாசனத்தையும் நம்பியிருந்தன. சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் யாவற்றிலும் பாரபட்சம் பாராமல் விவசாயத் திட்டங்களைச் செயல் படுத்தி வந்தனர்.

    அக்காலத்தில் ஏரிகள், குளங்கள், கிணறுகள், கால்வாய்கள், ஆறுகள் யாவற்றையும் முறையே பராமரிப்பது இன்றியமையாததாயிற்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏரி வாரியத்தவர், இப்பணியைச் கிராமங்களில் செய்து வந்தனர். பல பகுதிகளில் இந்நீர் பாசனத்தைக் கண்காணிப்பதற்காக பிரத்தியேக வரிகளும் விதிக்கப் பட்டன. இதற்காகப் பொது மக்களும் நன்கொடையைத் தாராளமாக வழங்கினர் (SII.Vol:6.No:294).  இது தவிர்த்து 1 மா நெல் விளைச்சலுக்கு, 2 மரக்கால் நெல்லும் இதற்கு பொதுமக்கள் ஏரி வாரியத்துக்கு வழங்கினர். இவ்வாறு வழங்கப்பட்ட வரிக்கு “ஏரி ஆயம்” என்று பெயர் (SII.Vol:7.No:805). குளங்களைப் பராமரித்தல், ஏரிகளின் கரைகளைக் கண்காணித்தல், கால்வாய்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை ஏரி வாரியத்தவர் முறையுடன் செய்து வந்தனர். இதனால் நீர் வீணாகாமல் முறையாக நிலங்களைச் சென்றடைந்தது. விவசாயத்துக்குத் தொண்டு செய்வதில் சோழ மன்னர்கள் மிகவும் முனைப்புடன் செயல்பட்டனர். மன்னர்கள் தவிர அரசு அலுவலர்களும் ஊர் பிரமுகர்களும் தன்னார்வலர்களும் நீர்ப் பாசன உத்திக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர் என்பதற்குச் சான்றுகள் உள.

    ஆற்றுநீர்ப் பாசனம் 

    தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்ட நீர்ப் பாசன முறை, ஆற்று நீர்ப் பாசன முறையாகும். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, சேயாறு, வேகவதி போன்ற ஆறுகள் பாய்ந்து நிலங்களை வளப்படுத்தின. அக்காலத்தில் காவிரி ஆற்றின் கரைகள் நன்கு பலப்படுத்தப்பட்டன காவிரிக் கரையின் இரு மருங்கும் நன்கு உயர்த்தப்பட்டன. (ARE.No:11/1911). பல புதிய கிளை ஆறுகளும் இக்காலத்தில் வெட்டப்பட்டன. வீரசோழன் வடவாறு, மதுராந்தகன் வடவாறு, மண்ணியாறு போன்ற ஆறுகள் புதியதாக வெட்டப்பட்டன, தஞ்சாவூருக்கு வடக்கே ஓடும் வீரசோழன் வடவாறும், திருப்பனந்தாளுக்கு வடக்கே ஓடும் மதுராந்தகன் வடவாறும், முதலாம் பராந்தகனால் (கி.பி.907-53) வெட்டப்பட்டன.

    இது தவிர திருவைக்காவூர், திருப்புறம்பியம், திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள், பந்தணைநல்லூர் வழியாகப் பாய்ந்தோடும் மண்ணியாறு, முதலாம் பராந்தகனால் திருத்தி அமைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மற்றும் கோனேரிராஜபுரம் வழியாக ஓடும் கீர்த்திமான் ஆறு, முதலாம் இராஜராஜனால் (கி.பி. 985-1014) வெட்டப்பட்டது. குடமுருட்டியில் பிரியும் முடிகொண்டான் ஆறு, முதலாம் இராஜேந்திர சோழனால் (கி.பி.1012-44) வெட்டப்பட்டது (ARE.No:75/1927-28). திருவாரூர் மாவட்டம் திருமணஞ்சேரிக்கு அருகிலுள்ள வீரசோழன் ஆறு, வீரராஜேந்திரனால் (கி.பி.1063-70) வெட்டப்பட்டது (SII.Vol:8.No:243). மேலும் குத்தாலத்துக்கு அருகிலுள்ள விக்கிரமனாறு, விக்கிரம சோழனால் (கி.பி.1118-36) வெட்டப்பட்டது. இவை தவிர தடுப்பணைகள் பல கட்டப்பட்பட்டு, நீர் தேக்கப்பட்டது. திருவரங்கத்துக்கு அருகிலுள்ள கோவிலடியில் காவிரிக்கு குறுக்கே ஒரு பேரணை, வீர இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

    ஆற்றுக் கால்வாய்கள் 

    நதிகளிலிருந்து பல புதிய வாய்க்கால்கள் வெட்டப்பட்டு, அவை மூலமாக ஆற்று நீர் ஏரிகளிலும் குளங்களிலும் பாய்ச்சப்பட்டன. சோழர் காலத்தில் பழைய கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. பொதுவாக வற்றாத ஜீவ நதியாகத் திகழ்ந்த காவிரி நதியிலிருந்து கால்வாய்கள் பல வெட்டப்பட்டு, நீர் கொண்டுவரப்பட்டன. இந்தக் கால்வாய்கள் ஆண்டு முழுவதும் ஏரி வாரியத்தால் முறையாகப் பராமரிக்கப்பட்டன. பல கால்வாய்கள் அவற்றை வெட்டிய சோழ மன்னர்கள் பெயரிலே அழைக்கப்பட்டன. இராஜராஜன் வாய்க்கால், திருச்சி மாவட்டம் திருமழபாடியில் வெட்டப்பட்டது (SII.Vol:15No:644).  அவரது மகனான இராஜந்திர சோழன் வாய்க்கால், இதே மாவட்டத்திலுள்ள கீழ்ப்பழுவூரில் வெட்டப்பட்டது. (SII.Vol:3.No:71).  மேலும் அன்பில் என்ற கிராமத்தில் இவனது பெயரிலே மற்றொரு வாய்க்காலும் வெட்டி, நீர் கொண்டு வரப்பட்டது (SII.Vol:8.No:192).  சோழன் மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-56) காலத்தில் திருச்சி மாவட்டம் திருவானைக்காவில் பிள்ளைக்கொல்லி வாய்க்கால் வெட்டப்பட்டது (SII.Vol:3.No:76).  ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருச்சானூரில் வேள்குல பீமன் வாய்க்கால் வெட்டப்பட்டது. (SIIVol:13.No:36).

    இவை தவிர  பல புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907), ஆதிச்ச வாய்க்காலை வெட்டி, நீர் கொண்டு வந்தான். முதலாம் பராந்தக சோழன் காலத்தில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உத்தமசீலி வாய்க்கால் வெட்டப்பட்டது (SII.Vol:3.No:133). முதலாம் இராஜராஜன் திருச்சியில், புகழ் மிக்க உய்யக்கொண்டான் வாய்க்காலை அமைத்தான். (ARE.No:24/1925). திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசத்தில் பராந்தக சோழன் பரமேஸ்வர வாய்க்காலை வெட்டி, பாலாற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்தான் (ARE.No:160/1940). இதே மாவட்டம் உக்கலில் இரண்டாம் இராஜேந்திர சோழன், பராக்கிரம சோழ வாய்க்காலை வெட்டினான் (ARE.No:160/1940). முதலாம் இராஜராஜன், வேலூர் மாவட்டம் திருமால்பூரில் விமலாதித்த வாய்க்காலை வெட்டினான் (SIIVol:13.No:30).  திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ள பெருவள வாய்க்கால் மற்றும் இதே ஊரில் பைங்கணி வாய்க்கால்களும் இவன்  காலத்தில்தான்  வெட்டப்பட்டன (SII.Vol:2.No:5).

    ஏரிப் பாசனம் 

    சோழர் காலத்தில் ஏரிப்பாசனம் சிறப்புற்றது. மற்ற பாசன முறைகளை விட ஏரிப்பாசன முறை சிறப்பானது, பாதுகாப்பானது, எளிதானது. எனவே சோழ மன்னர்கள் நாடு முழுவதுமுள்ள பல ஏரிகளைப்  புதுப்பித்தும் தேவைப்படும் இடங்களில் புதிய ஏரிகளை வெட்டுவித்தும் சிறப்பாகப் பணியாற்றினர். சோழ மன்னர்கள் பலர், தம் பெயரில் புதிய ஏரிகளை அமைத்தனர். விழுப்புரம் மாவட்டம் உலகபுரத்தில் கண்டராதித்த ஏரியைக் கண்டராதித்த சோழன் (கி.பி.950-57) வெட்டினான் (ARE.No:140/1919).   திருச்சி மாவட்டம் திருமழப்பாடியில் செம்பியன் மாதேவ ஏரியை செம்பியன் மாதேவி என்ற அரசி வெட்டினாள் (SII.Vol:5.No:644). காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலுள்ள ஏரியை மதுராந்தக சோழன் (கி.பி.970-85)  வெட்டினான். இதே மன்னன் பாண்டிச்சேரியிலுள்ள திருபுவணியிலும் தன் பெயரில் ஓர் ஏரியினை வெட்டுவித்தான் (ARE.No:192/1919). திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசத்தில் சுந்தரப் சோழப் பேரேரி, குந்தவைப் பேரேரி என்ற இரு ஏரிகளை குந்தவை என்ற சோழ இளவரசி வெட்டினாள் (SII.Vol:3.No:147).  முதலாம் இராஜேந்திர சோழன் தன் வட இந்திய வெற்றியை நினைவுகூருமுகமாய் பெரம்பலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ கங்கம் என்ற ஏரியை ஏற்படுத்தினான்.

    முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120) சித்தூருக்கு அருகிலுள்ள புங்கனூரில் இராஜேந்திர சோழப் பேரேரியை வெட்டினான். (SII.Vol:3.No:205).  இதே மன்னன் பாபநாசத்துக்கு அருகே முனியூரில் ஒரு ஏரியை வெட்டினான் (ARE.No:540/1906). சிதம்பரம் வட்டம் வீராணத்தில் தமிழகத்தின் மிகப்  பெரிய வீராணம் ஏரியை முதலாம் பராந்தகன் வெட்டினான். (ARE.No:615/1920). இவன் காலத்தில் வேலூர் மாவட்டம் சோளிங்கபுரத்தில் சோழவாரிதி ஏரி வெட்டப்பட்டது (Epi.Gra.Ind.No:3.P:91). இதே மன்னன் விண்ணமங்கலம் ஏரியையும், (SIIVol:2.No:380). திருவண்ணாமலை மாவட்டம் சோதியம்பாக்கம் ஏரியையும் வெட்டினான் (SII.Vol:3.No:11).   இவன் காலத்தில் குளித்தலைக்கு அருகேயுள்ள நங்கவரம் ஏரியும் (SII.Vol:8.No:651), திருக்கோவிலூரில் புத்தேரியும் வெட்டப்பட்டன (SII.Vol:7.No:798). முதலாம் இராஜராஜன் புதுக்கோட்டை மாவட்டம் திருவேழ்ப்பூர் ஏரியை வெட்டினான், பாண்டிச்சேரியிலுள்ள பாகூர் ஏரியும் இக்காலத்தில்தான் வெட்டப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் கீழ்ப்பழுவூரில் உள்ள பன்மகேஸ்வரப் பேரேரி இக்காலத்தில் வெட்டப்பட்டது (SII.Vol:5.No:724). முதலாம் இராஜராஜன் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஏரியை வெட்டுவித்தான் (ARE.No:355/1917). புகழ்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரி மூன்றாம் இராஜராஜன் காலத்தில் வெட்டப்பட்டது (ARE.No:191/1930). பிற்காலச் சோழர்கள் காலத்தில் சித்தூருக்கு அருகேயுள்ள மேகலாசப் பல்லி ஏரியும், யோகி மல்லாவரத்து நாராயண புத்தேரியும் வெட்டப்பட்டன.

    சோழர் காலத்தில் ஏற்கெனவே இருந்த பல ஏரியின் கரைகள் உயர்த்தப்பட்டன. முதலாம் இராஜராஜன் காலத்தில் பரமேஸ்வரப் பேரேரியின் கரையை அம்பலக்கூத்தன் என்பவன் உயர்த்தினான் (ARE.No:191/1977). மேலும் நரசிங்க மங்கலத்து ஏரியை அருணிதிக் கலியன் என்ற அரசு அதிகாரி புனரமைத்தான் (SII.Vol:3.No:106). புயலால் உடைந்த திருக்காஞ்சி ஏரிக்கரையை இவ்வூர்த் தலைவனே தன் சொந்தச் செலவில் புனரமைத்தான் (ARE.No:215/1919). ஏரிகள் மூலம் நல்ல பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காகப் பல ஏரிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதற்காகும் செலவை அந்தந்த ஊர்க் கோயில்களே ஏற்றுக்கொண்டன. சான்றாக திருவள்ளூர் மாவட்டம் திருக்கச்சூரில் உள்ள ஏரியைப் புனரமைக்கும் பணியை அவ்வூர்க் கோயிலே ஏற்றுக்கொண்டது (ARE.No:295/1909).

    சில சமயங்களில் ஏரிகளிலிருந்து புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. இது நிலங்கள் அதிக பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சான்றாகத் திருவாய்ப்பாடி கிராமத்தில்  உள்ள ஏரியிலிருந்து புதிய வாய்க்கால் வெட்டப்பட்டது. அதற்காகும் செலவை ஈடுகட்ட, அவ்வூர் தரிசு நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. இதன் மூலம் புதிய நிலங்கள் பாசன வசதி பெற்றன (ARE.No:88/1931-32).  சோழர் காலத்தில் அரசும் அரசு அலுவலர்களும் தவிர, தனி மனிதர்களும் நீர்ப் பாசனத்திற்குத் தொண்டுகள் பல புரிந்துள்ளனர். சான்றாகப் பதக்கம் என்ற ஊரில் ஏரியின் குமிழியை அவ்வூர்ப் பிரமுகன் புஷ்ப மாணிக்க செட்டி    என்பவன் கட்டுவித்தான் (ARE.No:171/1942). விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் கிராமத்தில் உள்ள ஏரியின் தூம்பைக் காக்கு நாயகன் என்பவன் கட்டுவித்தான். வேலூர் மாவட்டம் ஒழுகூர் ஏரியின் தூம்பை மாவலி வாணராயன் என்ற சிற்றரசன் கட்டுவித்தான். காவேரிப் பாக்கத்தில் உள்ள ஏரியின் தூம்பை வீர வினோதச் சம்புவராயன் கட்டுவித்தான் (ARE.No:390/1905).   ஏரிகளில் உள்ள தூம்புகள் கல்லிலே அமைக்கப்பட்டன. அவை நீர் வெளியேறுவதைத் தடுத்தன. மேலும் வெளியேறும் நீரின் அளவையும் கட்டுபடுத்தின. சோழர் காலத்தில் ஏரிப் பாசனம், உள்ளூர் ஏரி வாரியத்தின் மூலம் செம்மையான முறையில் நிர்வகிக்கப்பட்டது.

    குளத்து நீர்ப் பாசனம் 

    சோழர் காலத்தில் குளத்துப் பாசன முறை சிறப்புடன் காணப்பட்டது. பல ஊர்களில் ஆற்று நீர்க் கால்வாய்கள் மூலம் குளங்களை  அடைந்து அவை விவசாயத்துக்கும் கால்நடைகளுக்கும் பொதுமக்கள் நீர் அருந்தவும் பயன்பட்டன. குளங்களில் இருந்து நீர் வெளியேறுவதைத் தடுப்பதற்காக “மாண்டுகள்” (தடுப்புகள்)  அமைக்கப்பட்டன. சோழர் காலத்தில் பல புதிய குளங்கள் வெட்டப்பட்டன. சான்றாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருவெறும்பூரில் முதலாம் பரந்தக சோழன் கவிர் குளம் என்ற குளத்தை வெட்டினான் (SII.Vol:17.No:336). பல குளங்களுக்கு மதகுகளும் மாண்டுகளும் அமைக்கப்பட்டன. ஏரிகளுக்குத் தூம்பு போல், குளங்களுக்கு மாண்டுகள் செயல்பட்டன. சான்றாக மூன்றாம் இராஜராஜன் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் துரிஞ்சம் பூண்டியிலும், சிறுவாங்கூரிலும் உள்ள குளங்களில் புதிய மாண்டுகள் அமைக்கப்பட்டன. அவை தடுப்புகள் போன்று செயல்பட்டன.

    குளங்களிலிருந்து நீரை வெளியேற்றும் கால்வாய்கள் கற்களால் கட்டப்பட்டன. இவை குழாய்கள் போன்று காணப்பட்டன. இந்த குளங்களை முறையாகப் பராமரிக்க, அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர் (SII.Vol:8.No:652). பொதுவாக ஏரி வாரியத்தவர்களே இக்குளங்களை நிர்வகித்தனர். குளங்களில் உள்ள வண்டல்களை அகற்ற, தனிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். சான்றாக திருவண்ணாமலை மாவட்டம் காப்பளூரில் குளத்து வண்டல் எடுக்க. பராந்தக சோழன் காலத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர் (ARE.No:284/1939).  இப்பணிக்காக அவர்களுக்குக்  கருவிகளும் ஓடங்களும் வழங்கப்பட்டன. கோடைக் காலங்களில் குளங்களில் நீர் வற்றிய பின் அவற்றின் அடியில் தேங்கும் வண்டல்கள் எடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டன. இதற்குக் “குளவடை” என்று பெயர்.

    கிணற்றுப் பாசனம் 

    கிணற்றுப் பாசனம் தொண்டை மண்டலத்தில் அதிகம் காணப்பட்டது. பருவ மழையை மட்டும் நம்பிய பகுதிகளில் கிணற்றுப் பாசனம் காணப்பட்டது. கிணற்று நீர்மட்டம் உயர வேண்டும் என்பதற்காக ஏரிகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டது. சால்கள் மூலம் நீர் இறைக்கப்பட்டுப் பயிரிடப்பட்டன. ஏற்றம் இறைக்கும் வழக்கம்  நாடு முழுவதும்  பரவலாகக் காணப்பட்டது.

    முடிவுரை 

    சோழர் காலம், தமிழகத்தின் ஈடு இணையில்லாப் பொற்காலமாகும். பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை மக்களை அண்டாமல் சோழ மன்னர்கள் காத்தனர். நாட்டின் வளர்ச்சிக்கு வேளாண்மையே அடிப்படை என்பதால் அதை வளர்ப்பதில் அதிக முனைப்பு காட்டினர். வேளாண்மைக்கு அடிப்படையான நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கக் கூடாது என்பதற்காக ஏரிகள், குளங்கள் வெட்டி, அவற்றைப் பாசனத்துக்கு நன்முறையில் பயன்படுத்தினர். சோழர்கள் நீர்ப் பாசன உத்தியைப் போன்று சிறப்பான முறையை வேறு எந்நாட்டிலும், எக்காலத்திலும் காணவியலாது. சோழர்கள் அரசு வேளாண் நலன் சார்ந்த அரசாகத் திகழ்ந்தது. சோழ மன்னர்கள் கால வெள்ளத்தில் மறைந்தாலும், அவர்கள் வெட்டிய ஏரிகளும் கால்வாய்களும், குளங்களும் இன்றும் நிலைத்து நின்று அவர்கள் புகழைப் பறைசாற்றி வருகின்றன. சோழர்களின் அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு (Benevolent Government) என்பதற்கு அவர்களின் நீர் மேலாண்மை உத்தியே சாலச் சிறந்த சான்றாகும்.

    சுருக்கம் (Abbreviations)

    1.ARE-Annual Report on Indian Epigraphy

    2. SII-South Indian Inscriptions

    3. Epi.Gra.Ind-Epigraphica Indica

    பார்வை நூற்பட்டியல்

    1. Neelakanta Sastri.K.A,(1975), The Cholas, University of Madras, Chennai.

    2. Neelakanta Sastri.K.A,(1939), Studies in Cola History and Administration, University of Madras, Chennai.

    3. Appadorai. A. (1990).Economic Conditions in South India (1000-15000), University of Madras, Chennai.

    4.பிள்ளை.கே.கே. (1977) ,சென்னை,தமிழ் நாட்டு வரலாறு- மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    5.சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை,( 2008), பிற்காலச் சோழர் சரிதம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

    6.பிள்ளை.கே.கே. (1997) ,சென்னை, சோழர் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    7.பாலசுப்பிரமணியம்.மா (1979), சென்னை, சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சோழ மன்னர்களின் நீர் மேலாண்மை முறைகள் குறித்த செய்திகளை ஆய்வாளர் சிறப்புற எடுத்துரைத்துள்ளார். மேலும் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட ஏரிகள், கால்வாய்கள் முதலியனவற்றையும் வரிசைப்படுத்தியுள்ளார். சோழர்கள் காலத்து நிர்வாகம், வாழ்வியல் முதலியனவற்றை ஆய்வு செய்வோருக்கும் இக்கட்டுரை துணைநிற்கும்.  


     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 8

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 8

    தி. இரா. மீனா                            

     அமுகே ராயம்மா

    அமுகே தேவய்யாவின் மனைவி அமுகே ராயம்மா. இவருக்கு வரதாணியம்மா என்றொரு பெயருமுண்டு. இவர்களது தொழில் ஆடை நெய்வதாகும். அமுகேஸ்வர இலிங்கா என்பது இவரது முத்திரையாகும். சமூக விமர்சனம், மனிதர் நடத்தை ஆகியவற்றை முதன்மைப்படுத்தி இவர் வசனங்கள் அமைகின்றன.

    1.“இகசுகத்திற்காக இலிங்கத்தை மறந்து அலைகின்ற
    பிறவிகளை என்னென்பது ஐயனே?
    இலிங்கத்தில் நம்பிக்கையில்லை
    ஜங்கமத்தில் அன்பில்லை மனவுறுதியில் தெளிவில்லை
    சிவனைக்  கண்டேனெனச் சொல்லும் மூடரின் முகம்
    பார்ப்பதும் அவர்வழிச் செல்வதும் பெரும்பிழை அமுகேஸ்வரனே”

    2.“அறிய முடிபவரை பற்றற்றவரென்பேன்
    ஒழுக்கமறிந்தவரை வெல்லுதற்கு அரியவரென்பேன்
    போற்றுதல் தூற்றுதலுக்கு அப்பாற்பட்டவரை மகிழ்வாளனென்பேன்
    தத்துவமறிந்தும் குழந்தை போலானவரை
    சிவஞானி என்பேனய்யா அமுகேஸ்வரனே“

    3.“விண்ணில் சஞ்சரிப்பவனுக்கு கம்பின் தயவெதற்கு ஐயனே?
    மண்ணைத் தொடாமல் நடப்பவனுக்கு பூமியின் தயவெதற்கு ?
    தன்னை அறிந்தவனுக்கு ஞானியரின் உரையெதற்கு ?
    துறவிக்கு மங்கையரின் தயவெதற்கு ?
    அமுகேஸ்வரனை அறிந்தால் மற்றவரின் தயவெதற்கு ஐயனே?”

    4. “ஞானமென்பது தெருவின் பொருளா?
    பையில் நிரப்பிக் கொள்ளும் கொள்ளா?
    பையில் இருக்கும் சீரகமா?
    செக்கினுள் இருக்கும் புண்ணாக்கா?
    ஞானமென்பது வெளிப்படையாக அறிய இயலாதது
    வெற்றி தோல்வியில் வெற்றி பேசப்படக் கூடாதது
    இது பற்றற்றவரின் பண்பென்பேன்
    அமுகேஸ்வர இலிங்கனென்பேன்”

    5. “மூக்கிழந்தவன் கண்ணாடியைப் பார்ப்பதேன்?
    கையற்றவனுக்கு குதிரை ஏற்றமெதற்கு?
    முடவன் ஏணியில் ஏறலாமா?
    பக்தி, ஞானம், பற்று ஆகியவை அற்றவருக்கு
    இஷ்டலிங்கமெதற்கு் அமுகேஸ்வரனே?”

    6. “வேடமேற்று உணவிற்கு அலையும்
    வேடதாரிகளைக் கண்டு மனம் வெட்கும்
    இலிங்கமறியாது அதோடு இணைந்தோம் என்பவரைப்
    பார்க்க விரும்பாதென் மனம்
    உபசரித்தேனெனும் அறிவற்றவரைச் சரணர் வி்ரும்புவாரோ?
    அமுகேஸ்வரரின் இலிங்கம் அறியாதவரை இலிங்கம்
    உணர்ந்தவரென எப்படிச் சொல்வேன் ஐயனே ?”

    அநாமிகா நாச்சய்யா

    மாருடிகே என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவர் செக்காட்டும் தொழில் செய்தவர். ’நாச்சய்யபிரிய சென்னராமன்” என்பது இவரது முத்திரையாகும்.

    “பசிக்கு அழிவில்லை புலனிச்சைக்குக் குலமில்லை
    இறப்பிற்கு மதிப்பில்லை,ஆசைக்கு அளவில்லை
    அநாமிக நாச்சய்யாபிரிய சென்னராமய்யன்
    அனைத்திலிருந்தும் விலகியவன்”

    அங்கசோகினலிங்கதந்தே

    இவருடைய முத்திரை “போக பங்கேஸ்வர லிங்கா” என்பதாகும். தத்துவப் பார்வை, அருவ-உருவ நிலை இணைப்பு என்ற தன்மையில் இவர் வசனங்கள் அமைகின்றன.

    “மரத்திற்குள்ளிருக்கும் அக்னி தானே எரிவதுண்டா?
    கல்லினுள்ளிருக்கும் ஒளி தானே சுடர் தருவதுண்டா?
    வஞ்சகனின் பக்தி இழிவானவனின் பற்றுறுதி
    அறியாமல் மெய்யை அறிய இயலாது
    உண்மை, பொய் சாட்சி அறியாமல்
    மெய்யை அறிய இயலாது
    குரு, இலிங்கம், ஜங்கமம் அறியாமல் காட்டும் பக்தி
    ஓட்டைப் பாத்திரத்தின் நீர்,கயிரற்ற பொம்மை
    கண்களற்ற பார்வை போல வீணானது.
    உச்சியில் வேருள்ள செடிக்கு நீர் விட இயலுமா?
    எண்ணத் தெளிவு வேண்டும் போக பங்கேஸ்வரனுடைய
    ஐக்கியம்தான் சரணரின் இன்பம்”

    அறிவின மாரிதந்தே

    பசவேசரின் சீடரான இவர் சிவசாரணர் கூட்டத்தில் மிக்க மதிப்புடையவராகப் போற்றப்பட்டவர். இவருடைய பெயருடன் கூடிய அடைமொழியைப் போலவே இவர் வசனங்கள் அறிவு பற்றியதிகம் பேசுகின்றன. குரு, இலிங்கம், ஜங்கமம், சைவம், வீரசைவம் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. ’சதாசிவ மூர்த்திலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    1. “உருவம் நிலைத்துத் தெரியும் சலனமற்ற நீரில்,
    பிரதிபிம்பத்திற்கு இடமுண்டோ நீர் அசைந்தால்?
    அறிவு அலைபாய்ந்தால் அதிலுறையும்
    உருவத்திற்குக் கட்டுப்பாடு இருக்குமோ?
    இந்த இருநிலையின் விடுகதை தெரியும்
    ஒளியான சதாசிவமூர்த்திலிங்கத்தில்”

    2. “மனதின் செயலின்றி கல், மரத்திற்குப் பின்னால்
    வழிபடுவது கடவுளாகுமா?
    சதாசிவமூர்த்தியின் லிங்கமாக
    இருப்பதை அறிகின்ற அறிவுதான் மெய்”

    3. “மணமுடைய மலரைப் பறிப்பதன்றி
    மணமான தென்றலைப் பறிக்க முடியுமா?
    ஆன்மாவைக் கொண்ட உடலை அறியலாம்
    உடலை உள்ளடக்கிய ஆன்மாவை?
    கடவுள் அங்கமெடுப்பின் அறியலாம்
    அங்கமே கடவுளானால்?
    முதல், இடை, கடை என்பது மலருக்குண்டு, மணத்திற்கு?
    அறிவதற்கும் அறிந்ததற்கும் இட்டலிங்கம்
    அடையாளமாக சதாசிவமூர்த்தி இலிங்கவடிவமுண்டு”

    4. “கூர்முனை மழுங்கினால் வாளின் உடலென்ன செய்யும்?
    அறிவு மழுங்கினால் செயல்பாடு என்ன செய்யும்?
    ஒழுக்கம் தவறினால் உயர்வு அடையாளமென்னசெய்யும்?
    மனம், வாக்கு, மெய் தீயசெயல்
    செல்வத்துக்கும் பக்திக்கும் கேடு.
    இது போல சதாசிவமூர்த்திலிங்கம் அறியவேண்டும்”

    5. “பாலற்ற பசுவிடம் கன்றை விட்டால்
    உதைக்குமேயன்றி பால்புகட்டுமா?
    அறிவற்றவனால் செயல்பட முடியுமா?
    செயலென்பது பசு,அறிவென்பது பால்
    வேட்கையென்பது கன்று
    இம்மூன்றையும் உணர்ந்தவன் சதாசிவமூர்த்தி இலிங்கம்.”

    –  [தொடரும்]

    Share
  • குத்தாலம் குமார்

    குத்தாலம் குமார்

    பாஸ்கர் சேஷாத்ரி

    நேற்று நான் வாசுவைப் பார்த்தேன். பெரிய நட்பில்லை என்றாலும் ஒரு பத்து வருடப் பழக்கம் உண்டு.

    வேகத்துக்குப் பேர் போனவர். சமையல் கலையில் கெட்டி. அவனுக்கு உள்ள வியாதி பேசிப் பேசி எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும் என்பதுதான். அவனுக்கு அது குறை இல்லை. ஆனால் பலருக்கு அவன் பேச்சு பிடிக்காது. கேட்கப் பொறுமையும் இருக்காது. அந்தக் கல்யாண வீட்டில் அவன், பெண்ணுக்குக் கொஞ்சம் தள்ளிய உறவாம்.

    பக்கத்து இலை. அவனுக்குப் பொறுமையில்லை.

    “சிங்கப்பெருமாள் கோயில்ல ஒரு காபி சாப்பிட்டேன், முடியல!” என்றான்

    இப்ப பாஸ்ட் வண்டி டயத்தை மாத்திட்டான் தெரியுமா?

    நேற்று இரண்டு மாடு அடிபட்டுப் போச்சு

    “சார், உங்க இலை கிழிஞ்சிருக்கு”.

    “பரவாயில்லை. டிபன் தானே!” என்றேன்

    இப்பல்லாம் பிளாஸ்டிக் இலையாமே?

    “அப்பிடியா?” என்றேன்

    சரி. அப்பிடியே எதனா கல்யாண காண்ட்ராக்ட் சொல்லேன். நார்த் இந்தியனும் செய்வேன் கரண்டி பிடிச்ச கை. சும்மா இருக்க முடியல. பணமும் இல்லை, பையன் ஏதோ சம்பாதிக்கிறான்.

    நிச்சயம் சொல்றேன். உன் நம்பரைச் சொல்லு.

    தரேன். உனக்கு ரொட்டிக்காரன் தெரு சம்பத் ஞாபகம் இருக்கா?

    கொஞ்சம் யோசிச்சா தெரியும்.

    அவனும் என்னை மாதிரி. ஆனால் கை நீளம். நடுவுல கொஞ்சம் வீட்டு புரோக்கர் வேலையும் செய்றேன். இப்பல்லாம் ஒரு பெர்சென்ட் கமிஷன். ஆனா பார்டிங்க ரொம்ப கெட்டி. கழட்டி விட்டுட்ரானுங்க.

    ஆமா செல் போன் ரிப்பேர் பண்றவன் யாரானா தெரியுமா?

    தெரியும். நம்பர் வேணுமா?

    அப்புறம் வாங்கிக்கறேன்.

    ஆமா வாசு சார், உன் ஒய்ப் லக்ஷ்மி என்ன பண்றா?

    அவ போய் எட்டு வருஷம் ஆச்சு. ஹை சுகர். அவ அப்பன் சொத்து.

    சரி உங்க ஊர்ல எங்கயோ பிளாஸ்டிக் ரோடு போடறங்காளமே. எந்த தெரு?

    அவன் பேசிக்கொண்டு இருந்தான். நான் அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

    அவனை ‘வாட்டர்பால் வாசு’ என்பார்கள் எங்கள் தெருவில்.

    அவன் பேசுவது அவனை மறக்கத்தான் என்பது இப்போது புரிந்தது.

    வாசு சார் என அவர் முதுகில் கை வைத்தபோது அவர் சிலிர்த்ததில் நான் அவரை வாங்கிக்கொண்டேன்.

    Share