Blog

  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு

     

     Ganymede -1



    பூதக்கோள் வியாழனின் துணைக்கோள்
    கானிமிடுவில்  ஓர் அடிக்கடல்,
    நீர்மயமாய் உள்ளது சூடாய் !
    வேறோர் துணைக்கோளில் சீறியெழும்
    வெந்நீர் ஊற்றுக்கள்  !
    சேர்ந்தெழும் நீர்முகில் வாயுக்கள் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும், மீண்டும் திறக்கும் !
    எழுச்சியின் வேகம் தணியும் !
    பிறகு விரைவாகும் !
    பனித்தட்டுகள் உருகித்
    தென் துருவத்தில் வெப்பத்தால்
    திரவமானது எப்படி ?
    ஊற்றுகள் வெடித்தெழ
    உந்துவிசை அளிப்பது எது ?
    விந்தை நீர்மயம் பூதக்கோள் வியாழனின்
    சந்திரன்களில் !  புரியாதது
    பூமியில் நீர் சேர்ந்த முறை  !

    ++++++++++++++

    Ganymede Polar Aurorae

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cun34JQPfxM

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OLLbaoYJDuo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PKc6CaI9ZcQ

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2YVb0EmpgcU

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=En_Fe7QY-3E

    ++++++++++++++++++++++

    Hubble Telescope -1

    கானிமீடு [Ganymede] அடிக்கடலின் ஆழம் 200 மைலுக்கு [330. கி.மீ.] மேலிருக்காது. அதற்கு மேலாக இருந்தால் எங்கள் கணிப்புக்கு ஒத்து வராது.  எங்கள் கணிப்பு இலக்கங்கள் [Data] ஒரு சிறிதளவு [5 gram/liter] உப்புள்ள, 60 மைல் [100 கி.மீ] ஆழம் உள்ள ஓர் கடலுக்கு ஒத்து வருகிறது.

    ஜோவசிம் சௌர் [தலைமை விஞ்ஞானி, கொலோன் பல்கலைக் கழகம், ஜெர்மனி]

    கானிமீடு அடிக்கடல் இருப்புக்கு அழுத்தமான சான்றை ஹப்பிள் தொலை நோக்கித் தகவல் இப்போது தந்துள்ளது.  காலிலியோ விண்வெளிக் கப்பல் பெருங்கடல் இருப்பை 2000 இல் அறிவித்தாலும், தற்போது ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்த துருவ நிறத் தோரணங்கள் [Aurora] கானிமீடு ஒரு காந்தக் கோளம் என்றும் காட்டியுள்ளது.

    ஹெய்தி ஹாம்மல் [வானியல் ஆராய்ச்சி பல்கலைக் கழகம், வாஷிங்டன். D.C.]

    Image Gallery

    சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய சந்திரன் கானிமீடு [Ganymede] ஒரு பெரும் அடிக்கடலைக் கொண்டுள்ளது.

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி தற்போது [மார்ச்சு 12, 2015] அனுப்பி யுள்ள தகவல் மூலம், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் கானிமீடுவின் இரண்டு துருவங்களில் நடனமிடும் ஒளிநிறத் தோரணங்களைக் [Aurorae] காண முடிகிறது. 1997 இல் பூதக்கோள் வியாழனைச் சுற்றத் தொடங்கிய காலிலியோ விண்கப்பல் அதன் துணைக்கோள் கானிமீடுவில் அடித்தளக் கடலிருப்பை அறிவித்தாலும், தற்போதைய ஹப்பிள் தகவல் துருவத் தோரணங்களே, அடிக்கடல் இருப்புக்கு அழுத்தமான சான்று அளித்தது.  அந்தக் கடல் நீர் இருப்பே கானிமீடு அடிக்கடலில் ஊர்ந்திடும் உயிரின இம்மிகளைப் பற்றி ஊகிக்க இடம் தருகிறது.  இப்போது ஐரோப்பிய விண்வெளிப் பேரகம் [European Space Agency ESA ] கானிமீடு துணைக்கோளைச் சுற்றி வந்து ஆராய சுயயியக்கி “ஜூஸ்” விண்ணுளவிக் கப்பலை [Robotic JUICE Probe] [JUICE – Jupiter Icy Moon Explorer] அனுப்பப் போகிறது. அது 2030 இல் பூதக்கோள் வியாழனைச் சுற்றத் துவங்கி, துணைக்கோள்களையும் ஆராயும்.

    ESA JUICE Explorer

    சூரிய மண்டலத் துணைக்கோள்களில் மிகப் பெரிதான கானிமீடு ஒன்று தான் தனித்துவ முறையில் ஒரு காந்தக் கோளாகத் தெரிய வருகிறது.  அதன் விட்டம் சுமார் 3000 மைல் [5300 கி.மீ.].  ஹப்பிள் விண்ணோக்கி முதன்முதல் துணைக்கோளின் துருவப் பகுதிகளில் ஓவியம் போன்ற ஒளித் தோரணங்களைக் [Aurorae] காட்டியுள்ளது.  கானிமீடுவின் காந்த கோளம் விண்வெளித் துகள்களை ஈர்த்து உண்டாக்கிய நாட்டியத் தோரணங்களைப் படம் எடுத்துள்ளது.  கணினிப் போலி மாடல்கள் மூலமே கானிமீடுவின் உட்தளக் கடல் இருப்பு ஊகிக்கப் பட்டுள்ளது. பூதக்கோள் வியாழனின் காந்த தளமே கானிமீடுவின் அடிக்கடல் உப்பு நீரில் துவித்துவ காந்தக் களத்தை [Secondary Magnetic Field] உண்டாக்கி, வியாழக் கோளோடு சமப்படுத்திக் கொள்கிறது.  கானிமீடு அடிக்கடல் நீரிருப்பு உயிரின இம்மிகள் உலவ வாய்ப்பு அளிப்பதால் விஞ்ஞானி களிடையே பேரார்வம் உண்டாக்கி யுள்ளது.

    Ganymede Sea water

     

    பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீரெழுச்சி ஊற்றுகள்

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன் முறையாக பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்தி லிருந்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயு முகில் பேரளவில் நீராவியாகப் பீறிட்டு எழுந்ததைக் கண்டு பிடித்துள்ளது.  கணனி மாடல் மூலம் கணித்ததில் நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கிராம். என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.  இது  மாபெரும் கண்டுபிடிப்பு.  இவ்வித ஆவிநீர் முகில் எழுச்சி காணப் பட்டால் , அங்கே திரவ நீர் பேரளவில் தள மட்டத்துக்குக் கீழே சிறிது ஆழத்தில் இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம்..

    ஸிந்தியா ஃபிலிப்ஸ் [SETI Institute in Mountain View, California] [December 12, 2013]

    Relative Sizes

     

    முதன்முதல் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா நீர் ஆவி முகிலைப் பீறிட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

    2013 டிசம்பர் 12 ஆம் தேதி நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன் முதலாகப் பூதக்கோள் வியாழனின் பனிக்கோளான துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்திலிருந்து பேரளவு நீர் ஆவி முகில் எழுச்சி வெளியேறியதைக் கண்டுபிடித்தது. இது மாபெரும் ஒரு கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு பனிக்கோள் ஈரோப்பாவின் மேல்தட்டுக்குக் கீழே திரவ நீர்க் கடல் இருப்பது வலுவாகிறது.   அதன் நீரில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனவா என்னும் வினாவுக்குப் போதிய விடை கிடைக்கலாம்.

    Enceladus Erupts

    Jupiter and Europa

    1995 முதல் 2003 வரை பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றி உளவிய காலிலியோ விண்கப்பல் ஈரோப்பாவின் தளத்தில் பிளவுகள் இருப்பதைக் கண்டிருக்கிறது.  ஆனால் அதிலிருந்து பீறிடும் நீர் எழுச்சிகளைக் கண்டதில்லை.   இப்போது  நீர் எழுச்சி கண்டு பிடிப்பு, தரை மேற்தட்டு மெலிந்த தென்றும், மென்மை ஆனதென்றும் தெரிவித்துள்ளது.  மேலும் தரைக்கடியில் பெரியதோர் நீர்க்கடல் இருப்பதையும் ஊகிக்க வழி வகுத்தது.   இதுபோல் சனிக்கோளின் பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸிலும் [Enceladus] நீர் எழுச்சிகள் எழுவதை 2005 இல் காஸ்ஸினி விண்ணுளவி காட்டியுள்ளது.   கணனி மாடல் மூலக் கணித்ததில் ஈரோப்பா நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கி. என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

    முந்தைய காலிலியோ விண்ணுளவி முயற்சிகளில் இவ்வித நீர் எழுச்சிகளைக் காணாது போயிருக்கலாம் என்று லாரென்ஸ் ரோத் கூறுகிறார்.  அவர் டெக்ஸஸில் உள்ள ஸான் அன்டானியோ தென் மேற்கு ஆய்வகத்தைச் சேர்ந்தவர்.

    unnamed

    பூதக்கோளின் வலுத்த ஈர்ப்பு விசைக்கு எதிர்ப்புறம் வரும் போது ஈரோப்பா துணைக் கோளிலிருந்து நீர் பீறிடுகிறது என்று கூறுகிறார் லாரென்ஸ்.   தற்போது ஹப்பிள் விண்ணோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நீர் எழுச்சிக் காட்சி  7 மணிநேரம்  நீடித்து இருந்து கண்டுபிடிப்பை உறுதிப் படுத்துள்ளது.

    ஈரோப்பா துணைக்கோள் நீர்க்கடலில் உயிரின வளர்ச்சி இருந்திருப்பதை ஒருவேளை விஞ்ஞானிகள் காணலாம்.   தற்போது பூதக்கோள் வியாழனை நோக்கிப் போகும் ஈசாவின் ஜீயிஸ் [JUICE] விண்ணுளவித் திட்டமும், நாசாவின் ஜூனோ [JUNO]  திட்டமும் நீர் எழுச்சிக் காட்சியை நெருங்கிக் கூர்ந்து நோக்கும்.   தரைக்கடியில் நீர் இருந்தால்,  அடியில் தோண்டாமலே நீர் எழுச்சியில் உயிரின வளர்ச்சித் தடங்களைக் விஞ்ஞானிகள் காண முடியும்.

    fig-1c-europa-internal-structure

    சனிக்கோளில் எழுந்த பூதப்புயலில் நீர்ப்பனி முகில்கள், அம்மோனியா பனித்தூள்கள் அருகிலே காணப்பட்டன.   அந்தக் கலப்பில் நீர்ப்பனியின் பரிமாணம் சுமார் 22%, அம்மோனியா பனி 55%, மீதி அளவில் ஓரளவு அம்மோனிய ஹைடிரோ ஸல்ஃபைடு இருந்தது.   இதுவரை [2013 செப்டம்பர்]  இவ்விதம் பரிமாண அளவீட்டில் நீர்ப்பனி முகில், வாயுப் பனி கலவையைத் துல்லியமாக யாரும் சனிக்கோள் சூழ்வெளியில் இருப்பதை வெளியிட்டதில்லை.

    லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]

    “சனிக்கோளின் இந்தப் பூதப்புயல் முகில் மூட்டத் துகள்கள் எரிமலை போல், [200 கி.மீ.] ஆழ்தளத்தி லிருந்து மேல்நோக்கி வீசி எறியப்பட்டு,  சூழ்வெளி மண்டலத்தில் முதன்முறை நேரே தெரியும்படிக் காட்டியுள்ளது.   நீர் மயத் துளிகள் சனிக்கோளின் ஆழ்தளத்திலிருந்துதான் இழுக்கப் பட்டு ஆற்றல் மிக்க வெப்பச் சுழற்சியால் [Powerful Convection], சூழ்வெளி மேலே வீசப்பட்டிருக்க வேண்டும்.  ஆவியான நீர்மை குளிரில் குவிந்து பனியாக மாறி உறைகிறது. ”

    லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]

    Fig 1B Galileo Spaceship Launch

    2010-2013 ஆண்டுகளில் அடித்த சனிக்கோளின் பூதப்புயலில் முதன்முறையாக நீர்ப்பனி முகில்களும், அம்மோனிய வாயுப் பனித்தூள்களும் தூக்கி எறியப்பட்டதை நாசா அனுப்பிய காஸ்ஸினி விண்ணுளவி பரிமாண அளவில் காட்டியுள்ளது.   இது விஞ்ஞானிகளுக்கு சனிக்கோளின் முகில் மூட்டத்தின் கீழே என்ன உறைந்துள்ளன என்று தெளிவாய் எடுத்துக் காட்ட அரியதோர் வாய்ப்பை அளித்துள்ளது.   அத்துடன் சனிக்கோளின் சூழ்வெளியில் நடக்கும் இயக்கத்தைப் புரியவும், கலந்துள்ள இரசாயன மூலக்கூறுகளை அறியவும் முடிகிறது. சனிக்கோள் பரிதியை 30 ஆண்டுகட்கு ஒருமுறை சுற்றி வருகிறது.   இத்தகைய பூதப்புயல் 30 ஆண்டுக்கு ஒருமுறையே சனிக்கோளின் வட புறத்துக் குமிழில்  நேர்கிறது.   2010 ஆண்டில் நிகழ்ந்த பூதப்புயல் மானிடர் கண்ட ஆறாவது பெரும் புயலாகக் கருதப்படுகிறது.   இது அடிக்கத் துவங்கி பூதப்புயலாகி சீக்கிரம் 15,000 கி.மீ. [9300 மைல்] நீளத்தைத் தொட்டது. முக்கிய கண்டுபிடிப்பு என்ன வென்றால்,  பூதப்புயலில் தெரிந்தமுகில் மூட்டத் துகள்கள், மூன்று பண்டங்களின் கலவையாக அறியப்பட்டன:  நீர்ப்பனித் துகள்கள், அம்மோனியா பனித் தூள்கள், அடுத்து ஒருவேளை அம்மோனிய ஸல்ஃபைடாக இருக்கலாம்.   மேலும் அவ்வித பூதப் புயல்கள் வெளித் தெரியும் முகில் மட்டத்திலிருந்து சுமார் 200 கி.மீ. ஆழத்திலிருந்து கிளம்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  பூதப்புயலின் வேகம் சுமார் மணிக்கு 300 மைல் தூரத்துக்கும் மேற்பட்டது.

    Encyladus

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

    “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

    fig-2-hot-giant-geysers-in-enceladus-south-pole


    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)] ”

    சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    american-yellowstone-park-geysers

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris] ”

    பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    Cassini Space Probe -1

    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றி வரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக் கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.

    fig-1a-geysers-in-saturns-moon-enceladus1

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப் படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.Cassini Image of Water

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசை யால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன. பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ?

    fig-3-greenland-ice-cold-land

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத் துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.   காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென் துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித் தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.

    fig-1c-how-the-geyser-does-function

    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக் கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக் கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.
    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறு களும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒரு வேளை அமைந்திருக் கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    fig-4-hot-geysers-jump-upon-friction

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?

    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html (Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32  http://www.wired.co.uk/news/archive/2013-09/04/saturn-hurricane-water-ice [September 4, 2013]

    33  http://www.universetoday.com/104488/massive-storm-reveals-water-deep-within-saturns-atmosphere/ [September 3, 2013]

    34.http://www.saturndaily.com/reports/Massive_storm_pulls_water_and_ammonia_ices_from_Saturns_depths_999.html[September 13, 2013]

    35. http://www.lpi.usra.edu/education/explore/ice/background/iceSolarSystem/  [October 9, 2009]

    36. http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/spectacular-water-plumes-reaching-heights-of-200-kilometers-discovered-on-europa-.html  [December 13, 2013]

    37.  http://www.newscientist.com/article/dn24743-first-water-plume-seen-firing-from-jupiter-moon-europa.html?full=true&print=true#.Ur9Kr6i_gsU  [December 12, 2013]

    38.  http://en.wikipedia.org/wiki/Galileo_(spacecraft)  [December 28, 2013]

    39.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/nasa-captures-1st-natural-color-images-of-saturn-and-organic-rich-enceladus-one-of-the-most-accessib.html  [December 30, 2013]

    40. http://www.universetoday.com/111630/ganymedes-subsurface-ocean-is-like-a-club-sandwich/   [March 1, 2015]

    41.  http://www.bbc.com/news/science-environment-31855395 [March 12, 2015]

    42. http://www.spacedaily.com/reports/Hubble_observations_suggest_underground_ocean_on_Jupiters_largest_moon_999.html  [March 16, 2015]

    43.  http://en.wikipedia.org/wiki/Ganymede_%28moon%29  [March 20, 2015]

    44. http://article.wn.com/view/2015/03/13/Ganymede_oceans_on_Jupiter_s_moon_could_have_been_home_to_al/

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [March 21, 2015]

     

    Attachments area
    Preview YouTube video Hubble finds ‘best evidence’ for Ganymede subsurface ocean

    Hubble finds ‘best evidence’ for Ganymede subsurface ocean

    Preview YouTube video Large Salty Ocean Discovered on Jupiter’s Moon Ganymede

    Large Salty Ocean Discovered on Jupiter’s Moon Ganymede

    Preview YouTube video Hubble Observations Suggest Subsurface Ocean on Jupiter’s Largest Moon Ganymede

    Hubble Observations Suggest Subsurface Ocean on Jupiter’s Largest Moon Ganymede

    Preview YouTube video Largest liquid ocean in the Solar System – Liquid Universe

    Largest liquid ocean in the Solar System – Liquid Universe

    Preview YouTube video (History Channel) The Universe: Jupiter – The Giant Planet 1080p (Space Documentary)

    (History Channel) The Universe: Jupiter – The Giant Planet 1080p (Space Documentary)
    Share
  • இனிதினிது

    அண்ணாகண்ணன்
    Annakannan

    இனிதினிதினிதினிதினிதினிதினிது
    எமதெமதெமதெமதெமதெமதெமது
    அமுதமுதமுதமுதமுதமுதமுது
    எமதெமதெமதெமதெமதெமதெமது

    சரிசரிசரியென,சரிவரும்உலகு
    சிரிசிரிசிரியென,சிரிநலம்பழகு
    வரிகளுக்கிடையினில்படிப்பதும்அரிது
    அரிதரிதரிதரிதரிதரிதரிது

    சிறுதிரிவிரியொளிசெறிசுடரழகு
    சிறுதுளிவிரிகடல்புரிதொழிலழகு
    சிறகினில்திசைகளையளப்பதுமழகு
    சிறகெனத்திசைகளைவிரிப்பதுமழகு

    கருவுறுதிருதருவரகவிமதுரம்
    துருதுருசுறுசுறுவிழிநடம்மதுரம்
    பெருகிடும்வியர்வையில்பெருமிதம்மதுரம்
    மெருகிடும்உருகிடும்அருளதிமதுரம்

    கடகடபடபடமடமடவெனவே
    சடசடதடதடகிடுகிடுவெனவே
    உடனுடனுடனுடனுடனுடனுடனே
    முடிமுடிமுடிமுடிமுடிமுடிசெயலே.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    யுகாதி தின நல்வாழ்த்துகள்!

    crazy

    ”சுகாதிதுக் கங்களால் சூழ்ந்த உலகில்,
    தகாது தவிர்த்து தெலுங்கு, -யுகாதியில்,
    காமதேனு கண்ணனே காளையென் நெஞ்சடக்க,
    சாமதான பேததண்டம் செய்’’….கிரேசி மோகன்….

    Share
  • அவன், அது, ஆத்மா (4)

    மீ விசுவநாதன்

    அத்தியாயம் : நான்கு

    தாத்தா பாட்டி உறவு

    நன்றி:கே.வி. அன்னபூர்ணா
    நன்றி:கே.வி. அன்னபூர்ணா

    அவன் வாழ்ந்த சூழல் மிகவும் அன்பு மயமாக இருந்தது. அவன் , அவனுக்குத் தாய்வழித் தாத்தாவை “மாமாத் தாத்தா” என்று தான் அழைப்பான். பாட்டியை “மாமாம்மை”, அதாவது மாமாவின் அம்மா என்றும் , தந்தைவழித் தாத்தாவை , அவர் செங்கோட்டையில் வேலை செய்து வந்ததால் “செங்கோட்டைத் தாத்தா” என்றும், தந்தை வழிப் பாட்டியை “பெரியம்மா” என்றும் அழைப்பான். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் அவனுக்கு அவன் அப்பாவுடன் பிறந்த ஒரு தம்பி, அவரது ஒன்றுவிட்ட இரண்டு தம்பிகள், அவர்களது மூன்று சகோதரிகள் என்று அனைவருமே “பெரியம்மா” என்று அழைத்ததால் அவனும், அவனுக்கு அக்காவும் பாட்டியைப் “பெரியம்மா” என்றுதான் அழைத்து வந்தனர்.

    அப்பாவின் கூட்டுக் குடும்ப வீட்டு எண்: 58- 57, வடக்கு ரதவீதியில் இன்றும் இருக்கிறது. இப்பொழுதும் அவன் அந்த ஊருக்குச் சென்று “தாமிரபரணி” நதியில் ஆனந்தமாகக் குளித்து விட்டுத் தான் வருகிறான். அவனுக்கு அந்த வீட்டில் இரண்டு தாத்தாக்கள், இரண்டு பாட்டிகள், மூன்று சித்தப்பாக்கள் என்று வீடே கல கல வென்று இருக்கும். அவனுடைய சின்னத் தாத்தா இராமலிங்கம் ஐயருக்கு அவனிடம் மிகுந்த பாசம் உண்டு.

    அவனுக்கு நான்கு , ஐந்து வயது இருக்கும். அவனை சின்னத்தாதா தன் மடியில் வைத்துக் கொண்டு , அவர் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு கவளம் எடுத்து அவன் வாயில் தருவார். ” உங்க எச்சில கொழந்தைக்குக் கொடுப்பாளா” என்று அவரது மனைவியும், அவனுக்குப் பாட்டியுமான “சித்தியம்மா” கேட்ப்பாள். “சரிதான் போடி நீ…..அவன் என் செல்லம்” என்று அவனை அணைத்துக் கொள்வார். அவனுக்கு மூத்த சகோதரி “பாலா”. அவள்தான் அந்த வீட்டின் முதல் குழந்தை ஆனதால் அனைவருக்குமே அவள் செல்லக் குட்டிதான். சின்னம்பிச் சித்தப்பா, பெரிய சித்தப்பா, ரமணிச் சித்தாப்பா என்று வீட்டில் அனைவருக்கும் அவள்தான் முதல் செல்லம். ஒன்று விட்ட சித்தப்பா, ஒன்று விட்ட அத்தை என்ற உணர்வே இல்லாமல் எல்லோருமே ஒருதாய்ப் பிள்ளைகளாக வளர்ந்ததால் கிடைத்த பலமான உறவு அது.

    “ஆடிச்செவ்வாய்”

    ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையையும் “ஆடிச்செவ்வாய்” என்று அந்த கிராமமே கொண்டாடும். ஆடி மாதக் காற்று சுகமாக வீசிக் கொண்டிருக்கும். கன்னடியன் கால்வாயில் தண்ணீர் “ஸ்படிகமாக” நடந்து கொண்டிருக்கும். உள்ளே ஆழத்தில் நீந்தி விளையாடும் மீன்கள் நம் கண்களுக்கு மிக அருகில் இருப்பது போல இருக்கும். வயல் வெளிகளில் பசுமை தாண்டவமாடும். அப்படியே சிவன்கோவில் வழியாகத் தாமிரபரணி ஆற்றுக்குச் செல்லும் வழியில், வயலுக்காகப் பாய்கின்ற ஓடைத் தண்ணீரும் , அதன் வரப்பில் மெத்து மெத்தென்றிருக்கும் பசும் புற்களின் அழகும், அதன் மீது மின்னிக் கொண்டிருக்கும் வெண்பனி முத்துக்களும், நடை பாதை ஒரத்தில் வரிசையாகத் தானாக வளர்ந்த தும்பைப்பூ பூத்திருக்கும் சிறிய செடிகளும், கால்களில் செல்லமாகக் குத்தும் நெருஞ்சி முட்ச்செடிகளும், வயலுக்குள் களைபறிக்கும் ஆண்களும், பெண்களும் பேசிக் கொள்ளும் ஊடல் மொழியும் , சில சமயங்களில் அவர்களது சில்லரைச் சண்டைகளின் ஓசைகளும், குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும் மைனா, வால்குருவி, நாரை, கொக்கு, காக்கைகளின் மந்திர ஜாலக் குரல்களும், சிவன் கோவில் அரச மரத்தில் கூத்தடிக்கும் குரங்குகளின் “கிரீச்..கிரீச்” குரல்களும், மேற்கே ரயிவே பாலத்திற்கு அருகில் உள்ள “வடபத்திர காளிக்” கோவிலிலோ அல்லது வேறு எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்து காதில் நுழைகின்ற T.M.S. , சுசீலா , சுந்தராம்பாள் பாடல்களும் இன்றும் நினைவுகளுக்கு சுகமோ சுகந்தான்.

    ஆடிச் செவ்வாய்க் கிழமைக்கு முதல் நாள் இரவில், சிறுமிகளும், பெண்ளும், எந்த வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று மஞ்சளை வாங்கிக் கொண்டு வந்து நன்றாக மணக்க மணக்க மெழுகு போல அரைத்து வைத்துக் கொள்வார்கள். அன்று மாலை ஏழு மணிக்குள்ளாக அந்த அரைத்த மஞ்சளைத் தங்கள் தோழிகளின் வீட்டிற்குச் சென்று கொடுத்து, அவர்களை அடுத்த நாள் காலையில் ஆத்தங்கரைக்கு வருமாறு அழைப்பார்கள்.

    மறுநாள் காலையில், தங்களது தாயார் துணையுடன் ஆற்றங்கரைக்குச் சென்று குளித்து விட்டு “ஆடிச் செவ்வாய்க்காக” வாங்கப் பட்ட புதிய பாவாடை, சட்டைகளை அணிந்தும், ஆடிச் செவ்வாய்த் தலைச் செண்டு என்ற வட்ட வடிவில் உள்ள பூங்கொத்தினையும், மல்லிகை, கனகாம்பரம் போன்ற மலர்களை அணிந்தும், புதிய வளையல்கள் குலுங்கவும், மஞ்சள் பூசிய முகத்தில் அழகான வண்ணப் பொட்டுமாகச் சிறுமியர்கள், நடுவயதுப் பெண்கள் என்று வயதுக்கு ஏற்றார்ப் போல பத்து பத்து பேர்களாகக் கூடி நின்று கொள்வார்கள்.

    அதன் பிறகு , அந்த கிராமத்தில் உள்ள எதேனும் ஒரு ஏழைச் சிறுமிக்கு மற்றவர்கள் எல்லோரும் தாங்கள் கொண்டு வந்த மஞ்சள், வளையல், வண்ண வண்ணப் பொட்டுகள், கொஞ்சம் தின்பண்டம் எல்லாம் தந்து அந்தக் குழந்தையின் தலையில் வயற்காட்டில் இருந்து கொண்டு வந்த ஒருபிடி இளங்கதிர்களை வைத்து இறைவனை நினைத்தும், ஆடி மாதச் சிறப்பினைப் பற்றியும் ஒரே குரலில் அழகாகப் பாடிக் கொண்டே வருவார்கள்..அது என்ன பாட்டுத் தெரியுமோ ?

    “ஆடிச் செவ்வாய்த் தேடிக் குளி,
    அரைச்ச மஞ்சளப் பூசிக் குளி,
    அரையாத மஞ்சள எனக்குத் தா…
    தொடுத்த பூவ நீ வச்சுக்கோ
    தொடுக்காத பூவ எனக்குத் தா..
    மாடப் புறா மஞ்சள் அரை
    கோவில் குளத்தில் குளித்து வா
    கோவிந்த ராயனை ஜபித்து வா “

    இப்படிப் பாடிக் கொண்டே கன்னடியன் கால்வாய் ஆண் பிள்ளைகள் குளித்துக் கொண்டிருக்கும் படித்துறை பக்கம் வரும் பொழுது,

    “ஆத்தங்கரைல குளிச்சவாளுக்கு
    ஆயிரம் தோசை
    வாய்க்கால்ல குளிச்சவாளுக்கு
    வாரிக்கட்டைப் பூசை “

    என்று உரத்த குரலில் பாடிச்செல்லும் அழகைக் காணக் கண்கள் கோடி இருந்தாலும் போதாது.

    அதன் பிறகு அவரவர்கள் வீட்டில் ஆடிச்செவ்வாய்க் கென்றே செய்திருக்கும் பொங்கலையும், தாளகக் குழம்பு, வடகம் போன்ற தின்பண்டங்களையும் சிவன் கோவில் கன்னடியன் கால்வாய்ப் படித் துறைக்குக் கொண்டு வருவார்கள். அங்கு, அன்றைக்கு முக்கியமாகத் தலையில் பசுங்கதிர் வைத்தழைத்து வந்த பெண்ணிற்குத் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த பொங்கல், தாளகக் குழம்பு, வடகம், பட்சணங்கள் என்று அவரவர்களுக்குத் தகுந்த அளவில் தந்து மகிழ்வார்கள். வாய்க்காலில் மீனுக்கும் உணவிடுவார்கள். இவை அனைத்தும் காலை எட்டு மணிக்குள் முடிந்து விடும். அதன் பிறகு அந்தச் சிறுமியர்களும், பெண்களும் பள்ளிக்கூடம் சென்று விடுவார்கள்.

    ஆடிச் செவ்வாய்க்கு , அவன் அக்காவுக்கு சித்தப்பாக்களும் பாவாடை, சட்டை, இனிப்புகள் எல்லாம் வாங்கித் தருவார்கள்.

    அன்று மாலை ஆறு மணிக்கு மேல், விளக்கு ஏற்றிய பிறகு, கிராமத்தில் ஏதேனும் ஒரு வீட்டில் அந்தப் பெண்ணை ஒரு நாற்காலியில் அமர வைத்து அனைவரும் பாடுவார்கள். இறைவனுக்கு சுண்டல் நிவேதனம் செய்து விட்டு, அதை விநியோகம் செய்வார்கள். அது ஆண் குழந்தைகளுக்கும் கிடைக்கும்.

    அக்கா, இவைகளை எல்லாம் நன்றாக ரசித்துச் செய்வாள். அம்மாவுக்கும் எதையும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்ற கவனிப்பும், கண்டிப்பும் உண்டு. அவளது தோழிகளான கங்கா பாகீரதி, சாரதா, லெஷ்மண வாத்தியாராதுப் பாப்பா, திரிபுரசுந்தரி இன்னும் பலர் இந்த கோஷ்டியில் உண்டு. இந்தக் குழந்தைகளை எல்லாம் குஷிப் படுத்தி, ஒழுங்கு படுத்தக் கூடிய வராக, எல்லோராலும் அன்போடு “சிண்டாமாமி” என்றழைக்கப் பட்ட “வராக சீதாலட்சுமி” அம்மாள், 52, வடக்கு ரதவீதியில் இருந்தார்கள். அவரது கணவர் இராமலிங்க அண்ணாவி என்ற மிராசுதார். அவர்களுக்கு M.R.ஆதிவராகன், M.R.ராமநாராயணன் என்ற மகன்களும், சுப்பலக்ஷ்மி (சுப்பம்மா), பர்வதம், கோமதி என்ற மூண்று பெண்களும் இருந்தனர்.

    அவனப்பாவுக்கு ஆதிவராகன் பள்ளி தோழர். சித்தப்பா கணபதி சுப்ரமணியத்திற்கு ராமநாராயணன் நெருங்கிய தோழர். அவனும், அவனுக்கு அக்காவும் அந்தக் குடும்பத்துக் குழந்தைகளைப் போலவே அவர்களை “சித்தப்பா” என்றும், அத்தை என்றும்தான் இன்றுவரை அழைத்து வருகின்றார்கள். அவர்களது மகன்களான சங்கர், ரகு, சுரேஷ் அனைவருமே அவனுக்கு மிக நெருக்க மான நண்பர்கள்தான். அவனை, அந்த நண்பர்களின் குழந்தைகள் “கண்ணன் சித்தப்பா, கண்ணன் பெரியப்பா” என்றே அழைக்கின்றனர்.

    அப்படி ஒரு சினேக உறவை அந்த கிராமம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தது.

    அவனுக்குத் தாய்வழித் தாத்தா “கணபதி லிங்கம் அப்பளம் டிப்போவில்” வரவு, செலவு கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை “கணக்கையர்” என்றுதான் அந்த டுண்டிவிநாயகர் தெருவில் அழைப்பார்கள். மிகவும் அமைதியான சுபாவம். அவனது சிறுவயதில் அவர்தான் அவனுக்குச் சின்னச் சின்ன சுலோகங்கள் கற்றுக் கொடுத்தார். மாலையில் அந்தத் தெருவில் அவன் வயதுத் தோழர்களான சுப்பாமணி (L .M. சுந்தரம் ஐயரின் மகன்) , ரங்கநாத வாத்தியாரின் மகன் இராமகிருஷ்ணன் என்ற கண்ணன் அகியோர்களுடந்தான் விளையாடுவான். சரியாக ஆறு மணிக்கு “விஸ்வம்…விளையாடினது போரும்..நமச்சிவாயா சொல்லணும்..” என்று அவன் கைகளை அன்போடு பிடித்துக் கொண்டு, பிள்ளையார் கோவிலுக்குப் பின்னல் ஓடுகிற வாய்க்காலில் அவனது கால்களையும், கைகளையும் நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்வார். அதன் பிறகு மாலை நேர மானதால் மேற்கு நோக்கி நிற்கவைத்து அவன் நெற்றியில் மூன்று முறையும், கைகளிலும், மார்பிலும், கழுத்துப் பகுதியிலும், இடுப்பின் இருபுறத்திலும் விபூதி இட்டு விட்டு, அவனிடம் “இங்க இந்தப் படில மேற்கப் பார்த்து கையக் கும்புட்டுண்டு இந்த சுலோகத்த நான் சொன்னப்பறம் மூணு தரம் நீ சொல்லு” என்று ,

    “கஜானனம் பூத கணாதி சேவிதம்
    கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
    உமா சுதம் சோக விநாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் “

    “குருப்ரும்மா குருர்விஷ்ணு குருத்தேவோ மகேஸ்வர:
    குருசாஷ்ஷாத் பரம்ப்ரம்மா தஸ்மைஸ்ரீ குரவே நம : “

    அவனுக்கு விபரம் தெரிந்த நாளில் அவன் மனதில் அந்தத் தாத்தா சுப்ரமணிய ஐயர்தான் ஆன்மிக விதையை அவன் மனதில் ஆழமாகப் பதிய வைத்தார்.

    அவனுக்கு அம்மா அவனைச் செம்மைப் படுத்த, பள்ளிக் கூடம் அனுப்ப எண்ணினாள். அந்த நல்ல நாளும் வந்தது. அவனுக்குப் புதிய சட்டை, டிராயர் அப்பா வாங்கித் தந்தார். அவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அவனை வீட்டில் உள்ள பெரியவர்களுக் கெல்லாம் நமஸ்காரம் பண்ணச் சொன்னாள் அம்மா. அவனும் ரொம்ப ஆசையோடு அதைச் செய்தான். அனைவரும் அவனை ஆசீர்வதித்தார்கள். அம்மா அவனைக் கட்டிக் கொண்டாள்.

    வீட்டுப் பெரியோர்களைக் கலந்து கொண்டு ஒரு நல்ல நாளில் கோடை விடு முறைக்குப் பிறகு 1960ம் வருடம் ஜூன் மாதம் அவனுக்கு அப்பா அவனை அன்போடு கையைப் பிடித்துக்கொண்டு மேல மாடத் தெரு, வடக்கு மாடத்தெரு வழியாக பஜனை மடம் ஸ்ரீ ராமரை வழிபட்டு, ஸ்ரீ லக்ஷ்மீபதி (ஆதிவாரகர்) கோவில் வாசலுக்கு வந்தார். அவனிடம் கைகூப்பி கும்பிட்டு நமஸ்காரம் செய்யச் சொன்னார். அவனும் அப்படிதான் செய்தான். பிறகு அவர் கோவில் வாசலில் பரந்து கிடக்கும் கருங்கல்லில் “மூல கருடரை” நினைத்துத் தேங்காய் வடல் போட்டார்…அப்படியே நேராக தெற்கு மாடத் தெரு முனையின் உள்ளே இருக்கின்ற “லக்ஷ்மீபதி நடுநிலைப் பள்ளியில்” முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக அவனை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்றார். சேர்த்தார். தந்தைக்குக் கடன் மகனைச் சான்றோனாக்குதல்.

    அவனைப் பார்த்து,

    “அம்பி …ஒன்னோடு பேர் என்ன ? என்றார் தலைமை ஆசிரியர்.

    “விஸ்வநாதன்” என்றான் அவன்.

    “நன்னாப் படிக்கணும்,….”

    ” அவன் தலையசைத்தான்”

    அந்தத் தலைமை ஆசிரியர்தான் ஒழுக்கத்திறக்கும், கண்டிப்புக்கும் பெயர் பெற்ற
    H. வேங்கட்ராமையர். அவனுக்கு அந்தத் தலைமை ஆசிரியரையும், பள்ளிக் கூடத்தையும்
    மிகவும் பிடித்திருந்தது.

    இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • சாப்பிடுபவர்கள் பலவிதம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    images (2)

    இந்தியாவில் நான் வளர்ந்துவரும்போது ‘எனக்குச் சாப்பிடப் பிடிக்கும் என்று சொல்பவர்கள் யாரையும் சந்தித்ததில்லை. நிறையச் சாப்பிடுகிறார்கள் என்று நினைப்பவர்களை மற்றவர்கள் வேண்டுமானால் – அவர்கள் நிறையச் சாப்பிடுகிறார்களோ என்னவோ மற்றவர்கள் அப்படி நினைத்துக்கொண்டால் – கொஞ்சம் இளக்காரமாகக் குறிப்பிடுவார்கள். இந்தியாவில் யாரையும் ‘சாப்பாட்டு ராமன்’ என்று எளிதில் கூறிவிடுவார்கள்.

    ஒரு முறை நான் பதின்ம வயதினளாக இருந்தபோது நெருங்கிய உறவினர் வீட்டிற்குக் கிருகப்பிரவேச (அப்போது புதுமனை புகுவிழா என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள்) வைபவத்திற்குச் சென்றிருந்தோம். விசேஷம் முடிந்துவிட்டாலும் நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷம் என்பதால் அன்று இரவு அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டு மறு நாள் எங்கள் ஊருக்குத் திரும்புவதாக ஏற்பாடு. கிருகப் பிரவேசத்திற்குச் சமைத்த சாப்பாடு நிறைய மிஞ்சிவிட்டது. வீட்டுச் சொந்தக்கார அம்மாள் மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி அதைப் ‘பழைய சாதமாக’வும் மிஞ்சிய சாம்பார், ரசம் மற்றும் பொரியல்களை ‘சுண்டக் குழம்பாகவும்’ மாற்றிவிட்டார். மறு நாள் பெண் விருந்தினர்களுக்கு அதைக் காலை உணவாகக் கொடுப்பது என்று முடிவாகியது. (இந்தியாவில் ஏழைகளுக்கா பஞ்சம். மிஞ்சிய உணவைக் கொடுப்பதற்கு எத்தனையோ பேர் கிடைத்திருப்பார்கள். ஏன் அப்படிச் செய்யவில்லை என்று தெரியவில்லை.) விருந்தினர்களில் கூட ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதமாக நடத்தியிருக்கிறார்கள். ஆண் விருந்தினர்களை வீட்டுச் சொந்தக்காரர் காலை உணவிற்கு ஓட்டலுக்குக் கூட்டிப் போவதாக ஏற்பாடு. அப்படிச் சென்ற உறவினர்களில் ஒருவரைப் பற்றி என் தந்தையிடம் வீட்டுச் சொந்தக்காரர் ‘இவன் நிறையச் சாப்பிடுவான். அதிலும் ஓட்டல் பலகாரங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும்’ என்றாராம். அந்த உறவினருக்கு நிறையச் செலவழிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு என் தந்தைக்கு மனதில் பெரிய சுமையை ஏற்றியதுபோல் இருந்திருக்கும் போலும். அதை ஆற்றிக்கொள்ள என்னிடம் சொன்னார். எனக்கும் அதைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருந்தது. நிறையச் சாப்பிடுவதாகச் சொன்ன அந்த உறவினர் வசதியில்லாதவர். பிறர் வாங்கிக் கொடுத்தால் நன்றாகச் சாப்பிடுவார் போலும். அது உண்மையாகவே இருந்தாலும் அந்தப் பணக்கார உறவினர் – கிருகப்பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர் – அதைக் குறையாகச் சொல்லலாமா? தன் வீட்டு விசேஷத்திற்கு அத்தனை செலவு செய்திருந்தார். இன்றளவும் நான் இதை மறக்கவில்லை. வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

    அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று நான் யாரையும் எப்போதும் விமர்சித்ததில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினர் நான் சமைத்ததை ரசித்துச் சாப்பிட்டால் மனதிற்கு நன்றாக இருக்கும். நான் சமைப்பது அவர்களுக்குப் பிடிக்கிறது என்றால் மறுபடி அவர்களை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உண்டாகும். என் கணவர் மத்திய அரசின் அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்தபோது அவருடன் வேலை பார்த்தவர்களில் யார் வீட்டிற்காவது விருந்திற்குப் போவோம் அல்லது யாரையாவது வீட்டிற்கு அழைப்போம். யார் வீட்டிற்குப் போனாலும் எனக்குப் பிடித்த உணவாக இருந்தால் எல்லோருக்கும் தேவையான அளவு இருந்தால் எந்த ‘பிகு’வும் பண்ணாமல் நன்றாகச் சாப்பிடுவேன். நிறையச் சாப்பிடுகிறார்கள் என்று விருந்திற்கு அழைத்தவர்களோ விருந்திற்கு வந்த மற்றவர்களோ நினைப்பார்களே என்று நினைப்பதில்லை.

    என் கணவரோடு வேலைபார்த்த ஒரு பெண் எனக்கு நல்ல தோழி. அவருடைய கணவர் வேறு ஊரில் வேலைபார்த்தார். அவர் தனியாக இருந்ததால் அடிக்கடி என்னை அவர் வீட்டிற்குக் கூப்பிடுவார். நானும் என் மகள்களும் போவோம். அவருக்குப் பொதுவாகச் சமைக்கவே பிடிக்காது. ஆனால் நாங்கள் போகும்போதெல்லாம் ஏதாவது எங்களுக்காகச் சமைப்பார். நாங்கள் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு வருவோம். ஆனால் அவர் நிறையச் சாப்பிடுவதில்லை. எப்போதாவது என் கணவர் உடன் வந்தால் நாங்கள் மட்டும் போகும்போது சாப்பிடுவதைவிடக் குறைவாகவே சாப்பிடுவார். என் கணவரின் அலுவலகத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‘pot luck’ விருந்து நடத்துவோம். எல்லோரும் அவரவர் வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டுவர வேண்டும். பின் எல்லோரும் எல்லார் உணவுகளையும் உண்டு மகிழ்வோம். அந்த விருந்தில் மேலே குறிப்பிட்ட என் தோழி கடைசியாக இனிப்பிற்காக வைத்திருக்கும் சிறிய தட்டில் உணவுகளைக் கொஞ்சமாக எடுத்துக்கொள்வார். மறு முறை போய் ஏதாவது பிடித்திருந்தாலும் அதை எடுத்துச் சாப்பிடுவது என்பது கிடையாது. பலர் முன்னிலையில் தான் மிகவும் கொஞ்சமாகச் சாப்பிடுபவர் என்று காட்டிக்கொள்வதுபோல் எனக்குத் தோன்றும். இவர் தனியாகத் தன் வீட்டில் இருக்கும்போது உண்ணும் உணவின் அளவுதான் இவர் நார்மலாகச் சாப்பிடும் அளவு என்று நினைக்கிறேன்.

    இந்த ‘pot luck’ விருந்தை என் கணவரின் அலுவலகத்தில் முதலில் ஏற்பாடு செய்ததே நானும் என் கணவரும்தான். (அமெரிக்காவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்து கற்றுக்கொண்ட பழக்கங்களில் ஒன்று.) அன்று அலுவலகத்தின் இயக்குனர் முதல் தோட்டவேலை செய்பவர்கள் வரை அனைவரும் அன்று சமம். எல்லோரும் வரிசையில் நின்று மேஜை மேல் பரப்பப்பட்டிருக்கும் உணவுகளில் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு சாப்பிடலாம். இந்த உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலர் ‘கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் முதலில் வந்து எடுத்துக்கொள்கிறார்களே’ என்பார்கள். அவர்களும் ஒரு நாள் நன்றாகச் சாப்பிடட்டும் என்பதற்காகத்தானே இந்த விருந்தையே ஏற்பாடு செய்தது என்பதைப் பலர் புரிந்துகொள்வதில்லை.

    அமெரிக்காவில்தான் நான் முதல் முதலாக எனக்குச் சாப்பிடப் பிடிக்கும் (‘I love to eat’) என்ற வார்த்தைகளைக் கேட்டேன். அமெரிக்காவில் உணவு அபரிமிதமாகக் கிடைப்பதும் எல்லோரும் வேண்டிய அளவு சாப்பிடலாம் என்பதும் (அமெரிக்காவிலும் சிலர் பசியோடு படுக்கப் போகிறார்கள் என்கிறார்கள். எனக்கு ஒருபோதும் இது எப்படி என்று புரிந்ததில்லை.) காரணங்களாக இருக்கலாம். இந்தியாவில் ‘எனக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சாப்பிடப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நான் சந்தித்ததில்லை. நண்பர்கள் வீட்டிற்கோ உறவினர்கள் வீட்டிற்கோ விருந்திற்குப் போனால் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத அயிட்டங்களையும் சமைத்தவர்களுக்கு நன்றாக இருக்கும் என்பதால் சாப்பிட்டுவைப்பேன். அமெரிக்கர்கள் அப்படியில்லை. பிடிக்கவில்லை என்றால் அப்படியே வைத்துவிடுவார்கள். உணவு உட்பட எதையும் வீணாக்கும் பழக்கம் அமெரிக்கர்களிடம் அதிகம் இருப்பதால் இப்படிச் செய்கிறார்கள் போலும்.

    ஒரு முறை ஒரு அமெரிக்கத் தோழி என்னை ஒரு பீட்ஸா ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். பீட்ஸாவை ஆறு துண்டுகளாகக் கொடுக்கும்படி சர்வரிடம் கூறினார். எனக்கு மூன்று, அவருக்கு மூன்று. எனக்கு பீட்ஸா பிடிக்கும் என்பதாலும் என் பற்கள் ஆரோக்கியமாக இருந்ததாலும் விரைவாகச் சாப்பிட்டேன். அவருக்கோ செயற்கைப் பற்கள். அதனால் பீட்ஸாவை மென்று தின்பதற்கு அதிக நேரம் எடுத்தார். ‘நீங்கள் நன்றாகச் சாப்பிடுகிறீர்கள்’ (You are a good eater) என்று எனக்கு நற்சான்று வழங்கினார். கூடவே ‘நான் இதைப் பாராட்டாகத்தான் சொல்கிறேன்’ என்றும் சொல்லிக்கொண்டார். நான் இந்தியன் என்பதால் தவறாக எடுத்துக்கொள்வேனோ என்று நினைத்திருக்கலாம்.

    அமெரிக்காவில் ஒரு இடத்தில் கூடுபவர்களிடையே உணவைப் பரிமாறிக்கொள்வது அவ்வளவாகக் கிடையாது. இந்தியாவில் என் மகள்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய பள்ளித் தோழிகளுக்கு என் சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காகவே என் மகள்களுடைய லஞ்ச் பாக்ஸில் அவர்களுடைய தேவைக்கு மேலேயே கொடுத்துவிடுவதுண்டு. அமெரிக்காவில் அப்படிக் கொடுப்பவர்களும் இல்லை; அதைப் பெற்றுக்கொள்பவர்களும் இல்லை.

    இந்தியாவில் தின்பண்டங்கள் விற்கும் கடைகள் போன்ற பேக்கரிகளுக்கு முன்னால் நிறையத் தெருநாய்கள் நின்றுகொண்டிருக்கும். பேக்கரிக்கு வருபவர்கள் அவற்றைக் கொஞ்சம் கூட கண்டுகொள்வதில்லை. நாய்களை விடுங்கள். அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கே இவர்கள் எதுவும் கொடுப்பதில்லை. மற்றவர்கள் சாப்பிடும்போது அதை ஏக்கமாகப் பார்க்கும் ஏழைகள் இந்தியாவில் அதிகம். அமெரிக்காவில் அப்படி ஒரு வகை ஜனங்கள் இல்லாதது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். Junk food என்னும் மலிவான உணவை உண்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பசிக்கும்போது சாப்பாட்டிற்குப் பிறர் கையை எதிர்பார்ப்பவர்கள் இல்லை.

    அமெரிக்கா வந்தபிறகு என் மகள் மற்றும் மூன்று மாணவிகளோடு ஒரே அறையில் சேர்ந்து வாழ்ந்துகொண்டு படித்துக்கொண்டிருந்தபோது எல்லாரும் பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற பாடத்தை அவர்கள் பெற்றோர் கற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை. ‘இவ்வளவு இருக்கிறது. அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் இருப்பதில்லை. கூட்டுக் குடும்பங்களிலும் இப்படிப் பகிர்ந்து உண்ணாமை சிலரிடம் இருக்கும். முதலில் சாப்பிடுபவர்கள் வேண்டிய அளவு சாப்பிட்டுப் பின்னால் வருபவர்களுக்குக் குறைவாக வைத்துவிடுவார்கள். குழந்தைகள் வளர்ந்து வரும்போதே பெற்றோர்கள் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

    உணவைத் தானே உண்பதிலும் பகிர்ந்து உண்பதிலும் இப்படிப் பல வகை.

    Share
  • கருக்கலைப்பு

     

    மீ. லதா

    unnamed
    உன் கருவறையில்
    சிறைப்பட்ட என்னை
    பத்துமாதம் சுமக்க
    முடியாமல் பாதியிலே
    விடுதலை செய்தாய்

    கைமுளைத்து
    கால்முளைத்து
    பாதி உருவம்
    வந்த என்னை
    வேண்டாமென
    தள்ளிவிட்டாய்

    உன்னை
    பார்க்கவில்லை
    என் உறவை
    பார்க்கவில்லை
    இவ்வுலகை
    பார்க்கவில்லை
    கருவறையின்
    இருட்டறையில்
    என் காலம் முடிந்தது

    பனிக்குடத்தில்
    முழ்கியிருந்தேன்
    மூச்சிமூட்டவில்ல
    தத்தளித்து சுத்திவந்தேன்
    தாய் வயிற்றில் உள்ளே

    உன் உறவினிலே
    உருவான என்னை
    விலகி போன உறவாலே
    வெறுக்கிறாயே என்னை

    அரைக்குறையாய்
    அழித்துவிட்டாய்
    அரைநொடியில்
    அழித்துவிட்டாய்
    கருக்கலைப்பு
    செய்துவிட்டாய்
    கனவையும்
    கலைத்துவிட்டாய்

     

    Share
  • கண்போல் பக்தரைக் காக்கும் காளிகாம்பாள்!

     
    கவியோகி வேதம்

    images
    பாரதியார் தினம்வணங்கிச் சிலிர்த்த தேவி!
    .. பாடல்களை அவர்நாவில் வழங்கித் தேனின்
    சாரம்போல் தான்இருந்த அன்னை! பக்தர்
    …சன்னதியில் நெகிழ்ந்துநின்றால் தானும் ‘சூஷ்ம’ப்
    பாரமுடை மனம்கொண்டே கனியும் அன்னை!
    ….பலவரங்கள் தரும்அம்மா! மலடி என்ற
    சாரமில்லாத் திட்டுகளால் நொந்த பெண்கள்
    …தாய்மைபெற்றார்!.. அருள்வாளே “காளி” காம்பாள்!

    கடற்கரையில் முதன்முதலாய்த் தோற்றம் கொண்டாள்!
    …கனிந் (து)இங்கே தம்புசெட்டித் தெருவில் தானே
    இடம்பெயர, விஸ்வகர்மாக் குலத்தோர், “தாயே!”
    ….எனப்போற்ற, அவராலே கோவில் கொண்டாள்!
    படைவாளைச் சத்ரபதி “சிவாஜி”, முன்னால்
    … பணிந்துவைத்தார்! “இவள்”போரில் வெற்றி தந்தாள்!
    அடையாளம்,(?)- இவண்‘சிலை’யில் காண்பீர்! பாட்டால்
    … ஆர்ப்பரிப்பீர்! அருள்பெறுவீர்! உணர்ச்சி கொள்வீர்!

    சென்னியம்மன் பேரு(ம்)இவள் கொண்டாள்! லக்‌ஷ்மி
    …சேர்ந்தகண்ணும், வலது-‘சரஸ் வதி’யும் கொண்டாள்!
    உன்னிவந்த கலைஞர்க்கே பொருளும், கல்வி
    …ஒப்பில்லா நலம்யாவும் தந்த தாலே
    ‘சென்னியம்மா!’- எனப்பலரும் இவளைப் போற்ற
    .‘சென்னை’இதே எனநகர்ப்பேர் மாற லாச்சே!
    கன்னியர்கள் திருமணம்தான் நடக்க வேண்டிக்
    …கால்நடையாய்ச் சுற்றிவந்தால் ‘அது’ந டக்கும்!

    காலையிலே வாருங்கள்! நாத்தி கர்கள்
    ..கண்பனிக்க வேண்டுவரே! சிரித்தே அம்மா
    பாலையுமே தான்கொடுத்துப் பலதும் ஈவாள்!
    .. பதவிகளை இவளருளால் பெற்ற பேர்கள்
    மாலைகொண்டு நெகிழ்ந்(து)அழுவார்! பார்த்துள் ளேனே!
    .. மாயை,மன மாச்சர்யம் இவள்முன் நில்லா!
    சூலம்தான் எதற்காகக் கையில் கொண்டாள்?
    ..சூறைபோல் ‘மனம்’பெயர்க்க!.-. தெளிவீர் நீரே!

     

    Share
  • உலகத்தில் சிறந்தது தாய்மை …

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    ulagaththil...

    எத்தனையோ பாடல்கள் எழுதப்படுகின்றன… எல்லாப் பாடல்களும் நம் நெஞ்சைத் தொடுவதில்லை… இதோ இந்தப் பாடல் நெஞ்சைத் தொடுவது மட்டுமல்ல… நெஞ்சில் நிறைகிற வகையைச் சார்ந்தது! அன்பின் தொடக்கம் அன்னையிடமே… இதை எந்தப் பிள்ளையும் மறப்பதில்லையே!

    Pattanathil-Bhootham

    பட்டிணத்தில் பூதம் திரைப்படத்தில் நடைபெறும் போட்டிப் பாடல் ஒன்று தருகின்ற விளக்கங்கள் கேட்டுப் பாருங்கள்… முதலில் நாகேஷ் அவர்கள் வட்டிக்காக வாங்குகிற வக்காலத்து.. அட.. இது சரிதானே என்று சொல்ல வைக்கும்! அடுத்து வருகிற கே.ஆர்.விஜயா … காதலை முன்மொழிந்து சபையில் கரவொலி வாங்கும்போது… அட… ஆமாம் என்றே நமக்குப்படும்! முத்தாய்ப்பாக ஜெய்சங்கர் மேடையேறி… தாய்மைக்காக வாதிடுகிற ஒவ்வொரு வரியும் கோபுரவாசல்போல உயர்ந்துநிற்கும்! இத்தகு எளிமையான வரிகளிட்டு தாய்மைக்கு ராஜகோபுரம் கட்டிவைத்திருப்பவர் கவியரசு கண்ணதாசன்! ஆர். கோவர்த்தனன் இசையில்…. டி எம்.சௌந்தரராஜன் பி.சுசீலா மற்றும் ஏ.எல்.ராகவன் குரல்களில்…

    வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
    காணத் துடிப்பது அது…
    சிலர் எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்தாலும்
    இதயத்தில் இருப்பது அது…
    இதயத்தில் இருப்பது அது.. .

    அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது
    அகிலத்தின்பெருங்கதை அது
    அன்று ஆதாம் ஏவாள் அடிக்கல் நாட்டிய
    ஆனந்த மாளிகை அது
    உலகத்தில் சிறந்தது காதல்…
    அந்தக் காதல் இல்லையே சாதல்…
    உலகத்தில் சிறந்தது காதல்…

    அன்பின் உன்னதம் எங்கு அதிகமாக மிளிர்கிறது என்று பார்க்கும்போது வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும்தான்… ஆனால் அது தாய்மையிலன்றோ கோவில் கொண்டிருக்கிறது!

    உலகப் பொருளாதாரத்தின் மூலகாரணியாய் விளங்கும் பணம்… ஆதாம் ஏவாளில் தொடங்கி இன்றும் தொடரும் அற்புத உணர்வு காதல்… இவையிரண்டையும் மிஞ்சி நிற்கும் தாய்மை! பாட்டுமன்றத்தில்கூட ஒரு பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பையும் இனிதே வழங்கியிருக்கும் பெருமை எல்லாம் கவியரசே உனக்கே கைவந்த கலை! உன் கவிதைகள்… பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழர்களுக்காக நீ வடித்த அர்த்தமுள்ள சொல்லோவியங்கள்!!

    இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் …
    தன் தாய் தனக்காக பட்டபாடுகள் நெஞ்சில் எழாதவர் எவரிங்கே?
    கண்ணில் நீர்சொரியும் கருணை மேகம் அவள்தானே..

    கவியரசின் வரிகளில் உள்ள அர்த்தபுஷ்பங்களை ஆராதிக்காமல் இருக்க முடியுமா? கவிதா தேவியின் தலைமகனே உன்னிடத்தில் பூத்த உணர்வுப்பூக்கள் இன்றும்கூட உதிராமலிருக்கின்றன! இந்த பூமியில் இன்னும் கலப்படமாகாதது… அப்பழுக்கற்றது தாய்ப்பால் என்பார்கள்… அந்தத் தாய்ப்பாலுக்கு இணையான வரிகளாகவே இவற்றை நான் காண்கிறேன்… கேட்கும்போதெல்லாம் ஜீவன்வரை நனைகிறேன்!!

    உள்ளே உயிர் வளர்த்து…உதிரத்தால் பால் கொடுத்து
    அள்ளி இடும்போதெல்லாம்… அன்பையே சேர்த்தெடுத்து
    தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும்
    சொல்லாமல் சொல்லிடும் தேவதையின் கோவிலது
    பண்பு தெரியாதமிருகம் பிறந்தாலும்
    பால்தரும் கருணை அது – சிலர்
    பசித்தமுகம் பார்த்து பதறும்நிலை பார்த்து
    பழம் தரும் சோலை அது
    இருக்கும்பிடி சோறு தனக்கென எண்ணாமல்
    கொடுக்கின்ற கோவில் அது – தினம்
    துடிக்கும் உயிர்கண்டு தோளில் இடம்தந்து
    அணைக்கின்ற தெய்வம் அது

    அண்மையில் ஓரிடத்தில் படித்தேன்… ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. ஒரு ஆண்… ஒரு பெண் … என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஆண் குழந்தை உயிருடனும் பெண் குழந்தை இறந்தும் என்று மருத்துவர்கள் சொல்ல… அந்தத் தாய் இறந்த பெண் குழந்தையை எடுத்து தன் மார்போடு அணைத்து இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக அழுகிறாள்… ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்… இறைவனின் காதில் அந்தத் தாயின் குரல்கேட்டதுவோ என்னவோ… அந்தப் பெண் குழந்தை சிணுங்கத் தொடங்குகிறது… மருத்துவர்களே அதிசயத்த இந்த நிகழ்வில் நாம் அறிந்துகொள்வது… அந்தச் சிசுவுக்கு மீண்டும் உயிரூட்டியது தாயின் அரவணைப்புதானே… தாய்மையைின் மேன்மைக்கு நிகராக இத்தரணியில் ஏதுமில்லை… ஏதுமில்லை… ஏதுமில்லை…

    படம்: பட்டிணத்தில் பூதம்
    பாடல் : கண்ணதாசன்
    இசை: கோவர்த்தனன்
    குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா, ஏ.எல்.ராகவன்
    நடிகர்கள்: ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, நாகேஷ்
    _______________________________________________

    உலகத்தில் சிறந்தது எது?
    எது.. எது.. எது?
    உலகத்தில் சிறந்தது எது – ஓர்
    உருவமில்லாதது எது
    ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும்
    அனுபவமாவது அது.. (உலகத்தில்)

    ஆளுக்கு ஆளு தருவதுண்டு
    அசலுக்கு மேலும் வளர்வதுண்டு
    நாட்டுக்கு நாடு பெறுவதுண்டு
    நல்ல நல்ல திட்டங்களும் வருவதுண்டு

    அது இல்லையென்றால் எதுவும் இல்லை
    தொழில்லை… முதலில்லை… கடனுமில்லை
    சொல்லப்போனால் உலகமெங்கும்
    வரவில்லை… செலவில்லை… வழக்குமில்லை…
    அதன் ஆயுள் கெட்டி …
    மெல்லப் பார்க்கும் எட்டி …
    அதன் பேர்… …டி..
    தெரியல்லே.. ..ட்டி…
    இன்னுமே தெரியலே…
    . . . . வட்டி..

    வட்டி… உலகத்தில் சிறந்தது வட்டி
    ஒர் உருவமில்லாதது வட்டி…
    உலகத்தில் சிறந்தது வட்டி
    வட்டி.. வட்டி.. வட்டி (உலகத்தில்)

    வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
    காணத் துடிப்பது அது…
    சிலர் எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்தாலும்
    இதயத்தில் இருப்பது அது…
    இதயத்தில் இருப்பது அது… (உலகத்தில்)

    அறிவையும் கெடுப்பது அழகினில் பிறப்பது
    அகிலத்தின்பெருங்கதை அது
    அன்று ஆதாம் ஏவாள் அடிக்கல் நாட்டிய
    ஆனந்த மாளிகை அது
    உலகத்தில் சிறந்தது காதல்…
    அந்தக் காதல் இல்லையே சாதல்…
    உலகத்தில் சிறந்தது காதல்…

    வட்டி கொடுப்போரும் வாங்கி முடிப்போரும்
    மறக்க முடியாதது – காதல்
    கட்டி அணைப்போரும் கலந்து மிதப்போரும்
    மறக்க முடியாதது – காதல்!

    உள்ளே உயிர் வளர்த்து… உதிரத்தால் பால் கொடுத்து
    அள்ளி இடும்போதெல்லாம்… அன்பையே சேர்த்தெடுத்து
    தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும்
    சொல்லாமல் சொல்லிடும் தேவதையின் கோவிலது
    பண்பு தெரியாதமிருகம் பிறந்தாலும்
    பால்தரும் கருணை அது – சிலர்
    பசித்தமுகம் பார்த்து பதறும்நிலை பார்த்து
    பழம் தரும் சோலை அது
    இருக்கும்பிடி சோறு தனக்கென எண்ணாமல்
    கொடுக்கின்ற கோவில் அது – தினம்
    துடிக்கும் உயிர்கண்டு தோளில் இடம்தந்து
    அணைக்கின்ற தெய்வம் அது

    அது தூய்மை…
    அது நேர்மை…
    அது வாய்மை…
    அதன் பேர் தாய்மை…
    உலகத்தில் சிறந்தது தாய்மை… அதை
    ஒப்புக் கொள்வதே நேர்மை…

    உலகத்தில் சிறந்தது தாய்மை..
    உலகத்தில் சிறந்தது தாய்மை..
    உலகத்தில் சிறந்தது தாய்மை..

    காணொளி : https://youtu.be/c0toeUW9fEs

    https://youtu.be/c0toeUW9fEs

    Share
  • அடங்கினால் நன்மை அன்றோ !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டு
    பருகத் தந்த அம்மா
    காலைத் தூக்கிக் கண்ணில்வைத்து
    கட்டிக் கொஞ்சிய அம்மா
    வேலைவேலை என்று சொல்லி
    வெளியில் தினமும் போனால்
    பாலகரின் நிலையைச் சற்றுப்
    பார்த்தல் நன்று அன்றோ!

    வேலைக்கார அம்மா வந்து
    வீட்டைப் பொறுப்பு எடுப்பார்
    பாலைக் காய்ச்சும் அம்மாவப்போ
    படுக்கை விட்டு எழுவார்
    ஓடியெழுந்து  அங்கு வந்து
    உடையை எடுத்து மாட்டி
    ஓடிடுவாரே காரை நோக்கி
    உரத்துக் கத்திக் கொண்டே!

    ஆடியாடி ஐயா வந்து
    அரை குறையாய் நின்று
    ஆங்கிலத்தில் முணு முணுத்து
    அங்கு மிங்கும் திரிவார்
    மேசையிலே வைத்த ரொட்டி
    மெது மெதுவாய் ஆறும்
    வெளியில் செல்ல வந்த ஐயா
    வெறுப்புக் கொண்டு முறைப்பார்!

    வேலைசெய்ய வந்த  அம்மா
    மூலை ஒதுங்கி நின்று
    வாலைச் சுருட்டும் நாயைப்போல
    மெளனம் ஆகி நிற்பார்
    சத்தம்போட்டு சத்தம் போட்டு
    காரை எடுக்கும் ஐயா
    சப்பாத்தை விட்டு விட்டுச்
    சலித்துக் கொண்டே செல்வார்!

    தூங்கியெழுந்த பிள்ளை அங்கு
    துவண்டு வந்து நின்று
    தாங்க வொணாத் தாகத்தோடு
    தாயை நினைந்து நிற்கும்
    வேலைக்கார அம்மா அங்கே
    விரைந்து வந்து நின்று
    பாலைக் கையிற் கொடுத்துவிட்டுப்
    பருகு என்று சொல்வார்!

    பாலைப் பருக விருப்பமின்றி
    பார்க்கும் ஒரு பார்வை
    வேலைக் கார அம்மாவுக்கு
    விசரை ஊட்டி நிற்கும்
    கையைக் காட்டி கண்ணையுருட்டி
    பாலைப் பருக வைக்க
    வேலைக் கார அம்மாதானும்
    வேர்த்துக் களைத்துப் போவார்!

    பள்ளி செல்ல விருப்பமின்றி
    துள்ளி ஓடும் பிள்ளை
    கையைப் பிடித்து கூட்டிச்செல்ல
    களைத்துப் போவார் அவரும்
    மெல்ல ஏதும் சொல்லிவிட்டால்
    விக்கி விக்கி அழுதே
    பள்ளிசெல்லும் பாதைவிட்டு
    தள்ளி ஓடி நிற்கும்!

    வீடுவந்து சேர்ந்த பின்னர்
    வெறித்து வெறித்து பார்த்துத்
    தாறுமாறாய் சேட்டை செய்து
    சண்டை செய்தே நிற்கும்
    கூறுகெட்ட பிள்ளை என்று
    குறைகள் கூறி நின்று
    கோபங் கொண்டு கையெடுத்து
    குட்டி நிற்பார் மீண்டும்!

    ஆறு மணி ஆனதுமே
    அம்மா வந்து நிற்பார்
    தாறுமாறாய் இருக்கும் வீட்டை
    தானே பார்த்துக் கொதிப்பார்
    வேலைக்கார அம்மா உடனே
    வேலை விட்டுச் செல்வார்
    வீட்டுக்கார அம்மா அப்போ
    விறகில் தீயாய் நிற்பார்!

    பிள்ளையை அம்மா பாரார்
    பேயெனக் கத்தி நிற்பார்
    பிள்ளையோ தாயைப் பார்த்து
    பெரும் பயம் கொண்டேநிற்கும்
    அள்ளியே அணைக்கும் பிள்ளை
    அலமந்து அங்கே நிற்கும்
    அனுதினம் நடக்கும் கூத்து
    அடங்கினால்  நன்மை அன்றோ !

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (5)

    வையவன்

    சிவா வீட்டுக்குத் திரும்பிய போது தெரு முனையிலேயே திஷ்யா கதையைப் படித்திருப்பாள் என்று நினைத்தான்.
    அவளைப் பார்க்க வேண்டும் என்று மனசு துடித்தது. படி ஏறி வரும்போதே அவர்கள் வீட்டில் கூச்சலும் கும்மாளமும் கேட்டன.

    எதிர்ப்பட்ட சீதாவிடம் விசாரித்தான்.
    “பெங்களூர் அத்தை வந்திருக்காங்க.”
    அவனுக்குத் தபாலில் ‘நந்தவனம்’ வந்திருந்தது.

    இரண்டு நாட்கள் தன் மகிழ்ச்சியின் எதிரொலியை திஷ்யாவிடம் கண்டு அனுபவிக்க அவன் தவித்துப் போனான்.
    அதற்கு நேரம் வாய்க்கவில்லை. குழந்தைகளும் பெரியவர்களுமாக பெங்களூர் அத்தையையே சுற்றினார்கள். திஷ்யாவோடு தனித்துப் பேச வசதிப் படவில்லை.

    அந்த பெங்களூர் அத்தையிடம் அவனை திஷ்யா அறிமுகம் செய்த போது எழுத்தாளர் என்று கூடச் சொன்னாள். அவன் கதை வந்த ‘நந்தவனம்’ இதழை அத்தையிடம் காட்டினாள்.

    எனினும் அந்த மகிழ்ச்சி அதன் முதல் கிளர்ச்சி எல்லாம் சூபர் எக்ஸ்பிரஸில் கடந்து செல்லப்பட்ட சின்ன ஸ்டேஷன் மாதிரி புறக்கணிக்கப்பட்டு விட்டது.

    அந்த இரண்டு நாட்களிலும் அவனுக்குத் தான் மாப்பிள்ளையோ தலைவரோ ஆன ஒரு சுயதிருப்தி. அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டான்.

    தாமு இல்லாததால் சமையலில் விமரிசை செய்து கொள்ளத் தோன்றவில்லை. மீண்டும் ஒருமுறை பிரீதாவைப் பார்க்கலாமா என்று யோசித்தான். பஸ் ஏறி எலியட்ஸ் ரோடில் அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கினான்.

    திடீரென்று மனசு மாறி மைலாப்பூர் பீச்சுக்கு அங்கிருந்து நடந்தான். லைட் ஹவுஸின் மீது ஏறினான். கட்டு மரமும் கயிற்றுச் சுருணையையும் காவல் காத்த கரையோரத் தனிமையில் பொங்கி வந்த அலைகளில் தன் குதூகலத்தைக் கரைத்தான்.

    நிலா உதித்தது.
    வெளிர் நீலக் கடல் கறுத்தது.
    அப்புறம் பாதரசம் கொட்டிய மாதிரி கடற் பரப்பு பளபளத்தது.

    ஆங்காங்கே வெள்ளைக் குதிரைகள் நுரைத்துக் கொண்டு உதறிச் சிலுப்பி மேலெழுந்தன.
    அந்த அலைகளில் பிரீதாவின் வாக்கு கேட்டது.
    “எப்படி வாழ்ந்தாலும் அது நிலையற்றது தான்”
    சிவா அலை முழக்கத்தை உற்றுக் கவனித்தான்.

    ஒரு வழக்கை ஆர்ப்பரித்துக் கொண்டே அலைகள் அவனிடம் சொல்ல வந்தன.
    அவன் உற்றுக் கேட்டான்.
    ஜனனம். மரணம். உதயம். அஸ்தமனம். எழுச்சி, வீழ்ச்சி; முடிவற்றது. முடிவற்றது.

    பெரிய அலை ஒன்று சீறிக் கொண்டு வந்து அவன் பாதம் வரை வந்து நனைக்காமல் பின் வாங்கிற்று.
    அவன் பார்வை தொட்ட நடுக்கடல் விளிம்பில் லட்ச தீபம் ஏற்றிய மாதிரி ஒளிப் பாலம் மிதந்தது.
    அங்கே நிர்ச்சலனம்.

    கண்ணுக்குத் தெரியவில்லை. போனவர்கள் சொல்லக் கேட்டு மனசு கற்பித்தது.
    உற்று அலைகள் பேசுவதை சிவா கேட்டான். நடுக்கடல்.
    எங்கும் அமைதி இருக்க முடியாது. அங்கேயும் அமைதி போல் தென்படும் ஓர் இயக்கம்தான் இருக்குமோ?
    இயங்கு, இயங்கு எழுந்து வீழ்ந்து உதித்து அஸ்தமித்து, பிறந்து மரித்து இயங்கிக் கொண்டே இரு. கரை கடக்க முயன்று கொண்டே இரு.

    சிவா யோசித்தான். கரை.. எது கரை? எங்கே கரை?
    எட்டு மணிக்கு வீடு திரும்பியபோது சிவா பதமுற்றிருந்தான்.
    வெளியே ஒரு கார் நின்றிருந்தது. டோயோடா.
    வாசலில் தெருப்பக்கத்துப் போர்ஷன்காரர் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார்.
    “ஒங்களைத் தேடிட்டு யாரோ வந்திருக்காங்க”

    “யார்?”
    “ஒரு யங்மேன். மேலே இருக்கார்”
    சிவா அவசரமாகப் படியேறினான்.
    நேர் எதிரே கூடத்தில் எரிந்த விளக்கொளியில் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும், வெற்றிவேல் தெரிந்தான். அவன் கையில் ‘நந்தவனம்.’

    உயரமாக நிமிர்ந்த முதுகோடு வெற்றிவேல் உட்கார்ந்திருப்பது வினோதமாயிருந்தது.
    ஒரு குங்ஃபூ சாம்பியன் மாதிரி…சேச்சே…ஒரு புத்தபிட்சு மாதிரி. ஊஹூம்… ஒரு யோகி மாதிரி…கரெக்ட்.
    உட்கார்ந்திருக்கிற வெற்றிவேலுக்குத் தலைப்பாகை கட்டி விட்டால் அவன் அசப்பில் விவேகானந்தர் மாதிரி இருப்பான்.
    காலடி ஓசை கேட்டு அவன் நிமிர்ந்தான்.

    மின் சக்தி பாயும் கண்கள்.
    “எங்கே போயிருந்தே?”
    “எப்போ வந்தே?”
    “ஒரு மணி நேரம் ஆச்சு”

    ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக் கொண்டார்கள்.
    வெற்றிவேல் உட்கார்ந்து கொண்டே கை நீட்டினான். சிவாவின் கரம் அதைச் சந்தித்தது. ஒரு குலுக்குக் குலுக்கியதுமே உடம்பில் உரம் ஏறிற்று. தான் பாதி பிரிந்து மீண்டும் வந்து இணைந்த பலம்.
    “எதற்கு?” என்று கேட்டான் சிவா.

    “இதற்கு” என்று தன் கையிலிருந்த ‘நந்தவனத்’தை உயர்த்திக் காட்டினான் வெற்றிவேல்.
    “என்னை ரொம்ப காக்க வச்சுட்டே!” என்று கையை விடுவித்துக் கொண்டே குற்றம் சாட்டினான்.
    “நீ வருவேண்ணு தெரியுமா என்ன?”

    “இதைச் சொல்லலே. உங்கிட்டே இருந்து தபாலை எதிர்பார்த்தேன்!”
    “எந்த விலாசத்துக்கு எழுதட்டும்? நீ தான் ஆறு மாசத்துக்கு ஒரு தரம் ஊருக்குப் போறியே!”
    அவன் கிண்டலாக சிவாவைப் பார்த்தான்.
    “அது பாதி உண்மைதான் இல்லியா?”

    அவனிடம் இவனும் இவனிடம் அவனும் உண்மையை ஒளிக்க முடியாது.
    உதட்டை மூடிக்கொண்டு சிவா மெதுவாகத் தலையை அசைத்தான்.
    “நீ எங்கே போய்ட்டே சிவா… இவர் வந்து ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிகிட்டிருக்காரே” என்று கையில் இரண்டு ஷர்பத் டம்ளருடன் வந்தாள் திஷ்யா.

    “பீச்சுக்குப் போயிருந்தேன்”
    டம்ளரைக் கொடுத்து விட்டு உள்ளே போனவள் வெற்றிவேல் மறைகிற மாதிரி சுவர் ஓரம் போய் நின்று கையை அசைத்து அவனைக் கூப்பிட்டாள் திஷ்யா.

    அவன் டம்ளருடன் அவளருகில் போனான்.
    “சப்பாத்தி பண்ணிகிட்டிருக்கேன். ரெண்டு பேரும் இங்கேயே சாப்பிடுங்க”
    “இரு… கேட்டுச் சொல்றேன்”

    சிவா வெற்றிவேலிடம் வந்தான்.
    “சாப்பிடுவோமா?”

    ஷர்பத்தைக் குனிந்து ஒருமுறை பார்த்துவிட்டு ஒரே மூச்சில் குடித்துவிட்டு டம்ளரை கைப்பிடிச் சுவரின் மீது வைத்தான் வெற்றிவேல்.

    “நோ… நாம டெங்கனிக்கோட்டா போறோம்.”
    “எப்ப…”
    “இப்போ….”
    “இப்பவேவா?…”
    “ஏன்… எதாவது வேலையிருக்கா?”

    “இல்லே…” அவன் இழுத்தான்.
    “ஸால்வ் தி ப்ராப்ளம்” என்று திஷ்யாவிற்குக் கேட்காத மாதிரி அவள் நிற்கிற திசைக்குத் தலையைத் திருப்பிக் காட்டினான் வெற்றிவேல்.

    தன் ஷர்பத்தைக் குடித்துவிட்டு சிவா திஷ்யாவிடம் போனான்.
    “ஸாரி… திஷ்யா… நாங்க அவசரமா டெங்கனிக் கோட்டா போறோம்…”
    “எப்ப வருவே?” அவள் கண்களில் ஒரு புதிய உணர்வைக் கண்டான் சிவா.

    ஏக்கம்!
    அந்நியமானது, அவளுக்கு, அவனிடம் அவளுக்கு.
    “தெரியலியே… இரு கேட்டு…” இழுத்தான்
    அவன் நாக்கைக் கடித்தான்.

    வெற்றிவேலைக் கேட்டு அவளிடம் திரும்பி வருகிற நாளைச் சொல்ல நினைத்ததன் அசட்டுத்தனத்தை எண்ணி அவன் கண்ணை மூடிச் சிரித்தான்.

    அந்தச் சிறிய கணத்தில் அவர்கள் இருவருக்குமிடையே இருந்த மானசீக இடைவெளி சட்டென்று குறைந்ததை அவன் உணர்ந்தான்.

    வெளியே வெற்றிவேல் காத்திருக்கிறான். சிவா வந்தான்.
    “சரி… கிளம்பு… நான் ஏதாவது டிரஸ் எடுத்துக்கணுமா?”
    “வேண்டாம்…”

    “எத்தனை நாள் அங்கே இருப்போம்?”
    “ரெண்டு நாள். நாளை மறுநாள் ஒன்னைக் கொண்டு வந்து இங்கே விட்டுடறேன்.”
    திஷ்யாவுக்குக் கேட்டிருக்கோம். கேட்க வேண்டும் என்று உரக்கச் சொன்னானோ?
    வெற்றிவேல் எழுந்தான்.

    “ஒரு லுங்கியாவது எடுத்துக்கறேனே…”
    “லுங்கி… பனியன், வேஷ்டி, சட்டை எல்லாம் காரிலே ரெடியா இருக்கு. கௌம்பு”
    மறு வார்த்தை பேசாமல் காத்திருந்த திஷ்யாவுக்கு சிறிதாகத் தலையசைத்து விட்டு வெற்றிவேலின் பின்னால் படியிறங்கினான் சிவா.

    காரில் உட்கார்ந்து கதவைச் சாத்தும் போது அது மூடும் ஓசை கூட மெல்லத்தான் வந்தது. சொன்ன சொல்லைக் கேட்கிற மாதிரி கார் ஸ்டார்ட் செய்ததும் புறப்பட்டது.

    பின்னால் பார்த்து விட்டு ரிவர்ஸ் எடுத்தான் வெற்றிவேல்.
    சந்து திரும்பி சாலை வந்ததும் பேச்சை ஆரம்பித்தான்.
    “என்னடா?”

    “சொல்லுடா”
    “தேசீயப் பொழுதுபோக்கில் ஈடுபட்டிருக்கியா?”
    வெற்றிவேல் குத்தலாகக் கேட்டான்.

    “எதைச் சொல்றே… வேலை தேடறதையா?”
    “இல்லே. ‘லவ் பண்றதை”

    “ஓ… அந்தப் பொண்ணை வச்சு சொல்றியா? டோண்ட்பி ஜெலஸ், அது சும்மா பரிச்சயம்”
    “ஒரு நண்பனை காதலி முதலில் பங்கு போடறா. அப்புறம் முழுசா கபளீகரம் பண்ணிடறா…”
    “எனக்கு இன்னும் அனுபவமில்லே”

    “நம்பறேன். உன் நந்தவனம் கதை…” என்று வெற்றிவேல் இடது கைப் பெருவிரலை உயர்த்திக் காட்டினான்.
    சிவாவுக்கு மார்பு விம்மிற்று.

    “ஆனா எனக்கு வருத்தமா இருந்தது”
    “ஏன்..”
    “ஹீரோயிஸம் இல்லாத ஹீரோ. இன்னிக்கு ஓடிட்டிருக்கிற லட்சியம் இல்லாத வாழ்க்கை மாதிரி…”

    வெற்றிவேல் ஒரு சைக்கிள்காரருக்கு ஹார்ன் செய்தான்.
    “எதிர்மறையா அணுகியிருக்கேன். ஹீரோயிஸம்…நீ சொல்றியே அந்த லட்சியம், அது குற்றுயிரா இருக்குண்ணு காட்டியிருக்கேன்.”

    “எதிர்மறை எதிர்மறையைத் தான் தோற்றுவிக்கும்.”
    “இங்கே எதுவும் எதையும் தோற்றுவிக்காது. ஓயாமே குடுமிபிடிச் சண்டை நடக்கும். ஒரு விஷயம் கிடைச்சா கொஞ்ச காலம் வெறும் பேச்சுப் பேசுவாங்க. அப்புறம் சென்ஷேனலா வேற ஏதாவது கெடைக்குமானா அதை விட்டு நகந்துடுவாங்க.”

    “ஊருக்குப் போயிருந்தேன். நண்பர்களைப் பாத்தேன் எல்லாரும் ஒன் கதைண்ணு தெரிஞ்சுகிட்டாங்க.”
    “என்ன சொன்னாங்க?” சிவா ஆவலோடு கேட்டான்.

    “டர்ஜனீவ் மாதிரி இல்லேண்ணா ஒருத்தன். டால்ஸ்டாய் மாதிரி இல்லேண்ணா இன்னொருத்தன். புதுமைப்பித்தன் ‘பவர்’ இல்லேண்ணான் வேற ஒருத்தன்.”

    “நீ என்ன சொன்னே?”
    “நன்றி சொன்னேன். அத மாதிரி இது மாதிரிண்ணு சொன்னா அவமானப்படுத்தற முயற்சி. இது பரவால்லே நீ ஒன் மாதிரி எழுதியிருக்கேண்ணு மறைமுகமான சர்ட்பிகேட்.”

    சிவாவுக்கு வருத்தமாக இருந்தது.
    “ஸோ…தே டோன்ட் லைக் இட்!”
    “யூ டோன்ட் பாதர்… ஒனக்குப் புடிச்சிருக்கு இல்லே, எழுது.”

    “என் அம்மாவைப் பார்த்தியா?”
    “உன் அப்பாவைப் பார்த்தேன்.
    சிவா நிமிர்ந்து உட்கார்ந்தான்.
    “எங்கே?”

    “டெங்கனிகோட்டா பக்கத்திலே. அண்செட்டி என்கிற சின்ன ஊரிலே. ஒரு சிவன் கோயில்லே. நேத்து வரிக்கும் அங்கே தான் இருந்தார்… அவருக்கு என்னை அடையாளம் தெரியலே…நான் புரிஞ்சுகிட்டேன். ஒடனே ஒனக்குத் தெரிவிக்கணும்னு.. நோ ஒன்னைக் கூட்டிட்டுப் போயி காட்டணும்னு தோணிச்சு.”

    “தாங்க் யூ…” என்று அவன் தோளைத் தொட்டான் சிவா. அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.
    “எப்படி இருக்கார்?”

    “பெரிய ரிஷி மாதிரி தாடி வச்சிருக்கார். தலை நரைச்சு தாடி நரைச்சுப் போயிருக்கு… மீதி எல்லாம் நேரிலே பார்.”
    வெற்றிவேல் ஒரு பெரிய அசைவ ஹோட்டல் எதிரே காரை அதற்காக அனுமதித்திருந்த இடத்தில் நிறுத்தினான்.
    அது அசைவம் என்று தெரிந்தும் வெற்றிவேலுக்காக சிவா ஆட்சேபிக்கவில்லை.

    “கார் வாங்கினயா வெற்றி?”
    “இல்லே… ஒரு பந்தயத்திலே ஜெயிச்சேன்.”
    “பந்தயமா?”

    “ஆமா…” அவன் கதவை மூடிப் பூட்டிக் கொண்டே சொன்னான்.
    “அண்செட்டியிலிருந்து பெங்களூர் போற ரோட்லே என் மோட்டார் பைக்லே இந்தக் காரை ஓவர்டேக் பண்ண முடியாதுண்ணு ஒரு கோடீஸ்வரன் சொன்னான். இந்தக் காரே பந்தயம்ணு கட்டினான். தட் வாஸ் எ சாலஞ்ச்..ஜெயிச்சுட்டேன்.”

    “காரை எப்படி வாங்கிக்கிட்டே? இது ஒன்னாலே முடியாதே!”
    வெற்றிவேல் கம்பீரமாகப் புன்முறுவல் செய்தான்.

    “யூ ஆர் கரெக்ட்… இதை எவன் எடுத்துக்கப் போறான்? ஆனா அந்தக் கோடீஸ்வரனுக்கு இது ரொம்ப அற்ப விஷயம்.. அவன் ஒரு அமெரிக்கன். டெட்ராயிட்லே மோட்டார் கம்பெனி மானேஜிங் டைரக்டராம். கேம் ஈஸ் எ கேம்னு சொன்னான்.”
    இருவரும் சாலையைக் கடந்து கொண்டே பேசிச் சென்றனர்.

    “போட்டி, யந்திரத்துக்கும் மனுஷனுக்கும் தான், பரிசுக்காக இல்லேண்ணு சொன்னேன். யூ… ப்ரீக்ணு சொன்னான். ஆல்ரைட்… இதை நான் ஜெயிச்சேண்ணு ஓர் அடையாளத்துக்காக மெட்ராஸுக்கு எடுத்துட்டுப் போறேன், ஒரே ஒரு ட்ரிப் மட்டும் அப்புறம் திருப்பி எடுத்துக்கோண்ணு சொல்லிக் கொண்டு வந்திருக்கேன்…”
    அவர்கள் ஹோட்டலிற்குள் நுழைந்து கையலம்பினர்.

    வெயிட்டர் வந்ததும் வெற்றிவேல் ஆர்டர் சொன்னான்.
    “ரெண்டு தந்தூரி சிக்கன்…”

    வெற்றிவேலை சிவா இடைமறித்தான்.
    “ஒரு தந்தூரி சிக்கன். ஒரு ப்ரெட் பட்டர் ஜாம்.”

    “மறந்துட்டேண்டா சிவா… நீ இருக்கறப்ப இந்த கசாப்புக் கடைக்கு வந்திருக்க வேண்டாம்.”
    “இட்ஸ் ஆல் ரைட்… நீ எழாதே உட்கார்”
    வெயிட்டர் ஆர்டர் எழுதிக் கொண்டு போனான்.

    இருவரும் காத்திருக்கும் வேளையில் வெற்றிவேல் ஒரு கேள்வி போட்டான்.
    “வேலை கெடைச்சிருச்சா?”
    “கெடைச்சிருந்தா சொல்லியிருப்பேன்.”

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(144)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இந்தவார மடலிலே உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

    மனித சமூகமானது காலம் காலமாகப் பல மாறுதல்களுக்கு ஏற்ப தமது வாழ்வு முறைகளை மாற்றியமைத்துத் தம்மை ஒரு நாகாரீகமான சமுதாயம் என்று குறிப்பிடுமளவிற்கு மாற்றமடைந்திருக்கிறது என்பதுவே ஒரு பொதுவான கருத்தாகிறது.

    மனிதராய் நாம் பிறந்து, மனிதராய் நாம் வாழ்வதென்பது நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ள வேண்டும்.

    வாழ்க்கையில் எத்தனையோ விதமான நோய்களுடன், எத்தனையோ விதமான அங்கவீனங்களுடன் பலர் பல கடுமையான போராட்டங்களினூடு மிகவும் துணிச்சலாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டமிது.

    பையிலே நாலணா காசு கூட இல்லாமல் மற்றவர்களின் கருணை மனதை தமது மூலதனமாகக் கொண்டு தம் நாளை ஆரம்பிக்கும் எத்தனையோ ஆயிரம் மக்கள் இவ்வகிலத்தில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

    அவர்கள் யாரும் தமது இல்லாமையின் ஏக்கத்தினால் தமது வாழ்வை முடித்துக் கொள்ள எண்ண மாட்டார்கள். அப்படி எண்ணுவதும் தவறு. நமது உயிரை மாய்த்துக் கொள்ளும் அதிகாரம் நம் ஒருவருக்கும் கிடையாது.

    அதுகூட ஒரு வகையான கொலையாகவே கருதப்பட வேண்டும்.

    என்ன! எதை நோக்கி சக்தியின் இவ்வார மடல் பயணமாகிறது என்று எண்ணுகிறீர்களா ?

    இங்கிலாந்திலே கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் ஒன்று என் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணியதால் தான் இம்மடலின் கருவாக அது அமைகிறது.

    TF2இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள “டெல்ஃபோர்டு’ ( Telford) என் னும் இடத்திலே கடந்த சனிக்கிழமை ஒரு துயரகரமான சம்பவம் நிகழ்ந்தது.

    வயதில் நாற்பதுகளில் உள்ள ஒரு மனிதன் கார் பார்க் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்து தன் வாழ்வை மாய்த்துக் கொண்டான்.

    அம்மனிதன் அத்தகைய ஒரு முடிவையெடுக்க அவன் வாழ்வில் அவன் எத்தகையதோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்க வேண்டும் என்று எண்ணும் போது அது மிகவும் ஆழமான மனவருத்தத்தையே உருவாக்குகிறது.

    அது ஒருபுறமிருக்கட்டும் …

    நாககரீகமான உலகில் நாகரீகமடைந்த மனிதர் என்று கூறிக் கொள்வோர் இந்த 22ம் நூற்றண்டிலே மற்றொரு சக மனிதனை நோக்கி நடந்து கொண்ட முறையே என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

    TF3அக்கட்டடத்தின் உச்சியில் ஏறத்தாழ 2 மணிநேரம் குதிப்பதற்குத் தயாரான நிலையில் நின்றிருந்த அம்மனிதனை பாதுகாப்பாகக் கீழே கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அந்நகர பாதுகாப்புப் படையினரும், தீயணைக்கும் படையினரும் முயன்று கொண்டிருந்தனர்.

    தன் உயிரைப் போக்கிக் கொள்ள முயற்சிக்கும் ஒரு மனிதனை வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் கூடியது.

    இக்கூட்டத்தில் இருந்த பலர் தமது ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளில் அவனது துர்ப்பாக்கிய நிலையை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

    “எதற்காகத் தயங்குகிறாய் குதித்து விடு நேரமாகிறது ” என்றும் …

    TF1“மேலிருந்து குதித்தால் உன் உடல் எவ்வளவு தூரத்திற்கு துள்ளப்போகிறது பார்க்க வேண்டும் குதித்து விடு” என்றும் பலவகையான கோஷங்களில் அம்மனிதனைக் குதிப்பதற்குத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது ஒரு கும்பல்.

    பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோளையும் புறக்கணித்து இக்கோஷங்கள் தொடர்ந்தன.

    விளவு! அக்கட்டடத்தில் இருந்து பாய்ந்து தன் உயிரைப் போக்கிக் கொண்டான் அம்மனிதன்.

    இவ்வாறு கூச்சல் போட்டுக் குழப்பியவர்கள் காட்டுமிராண்டிகளே, அவர்களை அடையாளம் கண்டு போலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 50,000 பேர் இணையத்தளம் வாயிலாக கையொப்பமிட்டு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    அவ்வாறே கூச்சலிட்டவர்களில் ஒருவரை தாம் கிடைக்கப்பெற்ற புகைப்படங்களின் மூலம் அடையாளம் கண்டு விட்டதாகப் போலிசார் கூறுகின்றனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ, இல்லையோ? அது ஒருபுறமிருக்க மனிதர் என்று கூறிக்கொள்வோர்கள், அடுத்தவர்களின் அழிவில் ஆனந்தம் காணும் இவ்வகையான மனோபாவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

    இத்தகையோர் பெரும்பான்மையான எண்ணிக்கையில் இல்லை என்பது ஒருவகையில் ஆறுதலாக இருந்தாலும், இப்படியானவர்கள் இத்தனை பகிரங்கமாக தமது மிருக உணர்வினை வெளிக்காட்டுமளவிற்கு எமது சமுதாய உணர்வு மழுங்கி விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது.

    உலகின் பல பாகங்களிலும் மதங்களின் பெயராலும், மொழிகளின் பெயராலும் அநியாமகப் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.

    வேறு பலபாகங்களில் தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் பலபுதுவிதமான நோய்கள் பலரைத் தமக்கு இரையாக்குகின்றன.

    இவைகளைத் தடுக்க உலகின் பல நாடுகளில் உள்ள பல அமைப்புகள் தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றன.

    இந்தச் சூழலில் ஒரு உயிர் அநியாயமாகப் போகப் போகிறதே எனும் உணர்வு இல்லாமல், அவ்வுயிரைக் காப்பாற்றத் தம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்காமல் அவ்வுயிரைப் பறிக்கக்கூடிய வகையில் நடந்து கொள்ளும் இம்மக்களும் நான் வாழும் இதே நாட்டில் வாழ்கிறார்கள் என்று எண்ணும்போது என் உடலே கூசுகிறது.

    ஆனாலும்,

    கடந்த வாரம் நடைபெற்ற “காமிக் ரிலீவ் (Comic Releif)” எனும் பீ.பீ.சி தொலைக்காட்சி நடத்திய வறியநாடுகளுக்கு உதவுதற்கான நிதிசேகரிப்பு நிகழ்வில் ஒரு பில்லியன் பவுண்ஸ் அளவிற்கு நிதியுதவி ஈந்த கருணை மிக்க மக்களைக் கொண்ட நாடு இது எனும் நினைப்பு என்னைப் பெருமை கொள்ள வைக்கிறது.

    “மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா” என்று புரட்சித் தலைவரின் படத்தில் வரும் பாடலின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது.

    நாம் வாழ்வது 21ம் நூற்றாண்டு, ஆனால், அதற்கேற்ற வகையில் நமது உள்ளங்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றனவா ?

    சிந்திக்க வேண்டிய கேள்வியுடன் விடைபெறுகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில் …

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • பொல்லாத சமுதாயம் புண்ணானது என் இதயம்!

    ஆர். எஸ். கலா

    ஒட்டிப் பிறந்தோம்
    வெட்டிப் பிரித்து
    ஒன்றாக வளர்ந்தோம்.
    தாய்  தந்தைக்கு இரு
    பிள்ளையென வாழ்ந்தோம்.
    அன்புக் கடலில் ஆழமாக
    புதையுண்டு மகிழ்ந்தோம்.
    குறை இல்லாச் செல்வத்தில்
    புரண்டே வந்தோம், படிப்பில்
    இருவரும் பட்டம் பெற்றோம்.
    அன்புக்கு இலக்கணமாகத்
    திகழ்ந்தோம்; தாயின் பாசத்துக்கும்
    அரவணைப்புக்கும் பணிந்து அடங்கி
    நடந்தோம்; குறை சொல்ல ஏதும் இல்லை
    எங்களைப்  புகழ்ந்து கூற விரும்புவதில்லை.
    பெற்றோர் பிறரிடம் தன் புகழ்ச்சியை
    அவர்கள் விரும்புவதும் இல்லை.
    இருந்தும் எங்களின் நேர்மையான
    உழைப்பு ஊருக்குள் அடையாளம்
    காட்டியது; பல பத்திரிகையிலும்
    வானொலியிலும் முகநூலிலும்
    தொழிலாளர் தினம் அன்று வெளியாகி
    எங்களுக்குப் பெருமையைப் பெற்று
    தந்தது; அனைத்து ஊடகங்களும்
    இதைப் பார்த்த பல தொழில்அதிபரின்
    வீட்டில் இருந்து எங்களை மாப்பிள்ளை
    கேட்டு வர ஆரம்பித்தனர்; அம்மா
    முடிவை எங்களிடமே விட்டு விட்டார்.
    ஆஹா! இது  நமக்குச் சரி வராதுடா
    தம்பி என்றான் அண்ணா;  நாங்கள்
    இருவரும் ஒரு சிறு மாற்றத்துக்காக
    அண்ணா தம்பி என்று அழைப்போம்.
    மற்றபடி இருவரும்  ஒட்டியவர்கள்தானே!
    நானும்  ’ம்ம்’  என்று தலை அசைத்தேன்.
    திடீரென அப்பாவை பார்த்துக் கூறினான்,
    ”அப்பா நீங்களே பாருங்கள் எங்களுக்கு
    அது போதும்!” என்று கூறி என்னை நோக்கினான்.
    நானும்  ”சரி” என்பது போல் தலைஅசைத்தேன்.
    அப்பா வேறு வழி இல்லாமல் தானே  தன்
    மருமகளைத் தேடத் தயார் ஆனார்; அம்மா
    அப்பாவை அவர் இளமைக் கால நினைவைச்
    சொல்லி ஏதோ கேலி செய்தார்;  பல
    நாள் சென்று அப்பா இரு படம் கொடுத்துச்
    சொன்னார், ”இவைதான் நான் பார்த்த
    மருமக்கள்!”  என் பெயர்  ’தீபக்’, அண்ணா
    பெயர் ’திலிப்’;  எங்கள் பெயரைக் கூறி
    அடையாளம் சொன்னார், எந்தப் பெண்
    யாருக்கு என்று; எனது வருங்காலதேவதை
    ஒரு அதிபரின் மகள்; திலிப்பின் தேவதை
    ஒரு தொழில்அதிபரின் மகள்; இருவரும்
    இரு புகைப்படங்களையும் பார்த்துச்
    சம்மதம் தெரிவித்தோம்;  பிறகு என்ன?
    அம்மா சும்மா இருப்பாரா? ஓடி ஓடி
    வேலைகளை ஆரம்பித்தார்;  ஜாதகம்
    பார்ப்பதும் அவை சரியெனக் கூறியதுமே
    பெண் பார்க்கும் படலம்; இப்படி எல்லா
    சடங்கு சம்பிரதாயமும் முடிந்து  தாலி
    கட்டுவதுதான்  இனி வேறு ஒரு தடையுமே
    இல்லை;  சில வாரங்களில் அதுவும் பல
    பெரியோர் மதிப்பு நிறைந்த மனிதர்கள்
    சொந்தம் பந்தம் என்று  திருமண மண்டபமே
    பத்தாத அளவு மக்கள் கூட்டம்! சும்மாவா
    பின்னே? இரு வீட்டுச் சொந்தங்கள் உறவுகள்
    தெரிந்தோர்  ’ம்ம்’  சொல்லவே முடியாத
    அளவு பட்டியல் நீளும்;  மங்கள வாத்தியத்தின்
    ஓசையுடன் இருவருக்கும் இனிதே திருமணம்
    நடந்து முடிந்தது; அமைதியான வாழ்க்கை
    நிறைவான இல்லற இன்பம் என்று வாழ்ந்து
    வந்தோம்;  வேறு வேறு வீட்டுப் பெண்ணாக
    இருந்தாலும் அவர்களும் எங்களுடன் சேர்ந்து
    ஒற்றுமையாகப் பழகியே வந்தனர்; அம்மா
    அப்பா அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே
    இல்லை;  ஒரு நாள் சும்மா சுத்திப் பார்க்கச்
    சென்றோம்  நான்கு பேரும்; அன்றுதான்
    எங்கள் பின்னாடியே வந்தான் எமன்!
    ஒரு குடிகாரனின்  லாரி மோதியதில்
    எங்கள் வண்டி விபத்தானது; சில மணி
    நேரம் சென்று நான் கண் திறந்தேன்.
    அருகில் எங்கள் உறவினர் இருந்தார்
    அவரிடம் மற்றவர்களைப் பற்றி வினா
    எழுப்பவே, அவர் சிறு சிறிதாக எனக்கு
    எடுத்து உரைத்தார்; இறுதியில் கூறிய
    வார்த்தை என் தலையில் இடி விழுந்தது
    போல் இருந்தது; ”ஐயோ!” என்று கதறினேன்.
    என்ன பயன்? எமன் அழைத்து விட்டான் என்
    மனைவியையும் சகோதரனையும்! இரு
    உயிர் போய் இரு உயிர் எஞ்சியது; அம்மா
    என்ன ஆனாரோ என்று ஏங்கியவாறு
    ஓடி வந்தேன்; அம்மா உயிர்உள்ள பிணமாக
    இருந்தார் சகோதரன் இறந்த உடல் அருகே.
    அதற்குப் பக்கவாக்கில் என் மனைவி அமைதியாக
    உறங்குகிறாள்; என் கரம் கட்டிய தாலிதான்
    முன் இருக்கு; நான் ஒரு ஆண் என்றதையும்
    மறந்து கதறினேன், துடித்தேன், தவித்தேன்!
    உடன் பிறப்பா? மனைவியா? யார் அருகில்
    இருப்பேன்?  என் சகோதரன்  மனைவிக்கு
    இன்னும் நினைவு திரும்பவில்லை; அவள்
    வந்து கேட்டால் எப்படி பதில் உரைப்பேன்?
    இப்படியே அழுது அழுது ஓடாகத் தேய ஆரம்பித்த
    நான் ஓராண்டு வரை அழுதேன்; அண்ணா
    மனைவியும்  அழுது அழுது ஓய்ந்து போய்
    அவள் உடல் நோய்க்குத் துணையாகப் போனது
    பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்; நேரம்
    இருக்கும் போது போய் வருவேன்; அதிகம்
    போவது இல்லை; என்னைக் கண்டால்
    அவர் கணவன் ஞாபகம் வரும்; பாவம்!
    எனப் போவதைக் குறைத்து விட்டேன்; நானும்
    இப்போது கொஞ்சம் கவலையில் இருந்து
    நீங்கி வேலையில் கவனத்தைச் செலுத்திக்
    கொண்டு இருக்கின்றேன்;  இந்த நேரத்தில்
    தான் அம்மா எனக்கு மறுமணம் செய்யத்
    தயாரானார்; இதைஎன்னால் ஏற்றுக் கொள்ள
    இயலவில்லை; என் மனைவி புன்னகையுடன்
    புகைப்படத்தில் என் கட்டில் அருகே இருக்க,
    கட்டிலில் இன்னொருத்தியா மனம் இடம்
    கொடுக்கவில்லை;  அப்போது ஒரு கேள்வியை
    அம்மாவிடம் கேட்டேன்; சகோதரன் மனைவிக்கு
    ஏன் இதைச் செய்ய நீங்கள் நினைக்கவில்லை
    என்று! உடனே அம்மா பொங்கி எழுந்தார்! அவள்
    விதவை, மறு மணமா? அது எப்படி சாத்தியம்?
    வெள்ளை உடையுடன்தானே இருக்க வேண்டும்?
    அது தமிழன் கலாச்சாரம் என்றார்;  ஒரே மேடையில்
    தாலி கட்டியது;  ஒரே நாள் இருவரும் துணையை
    இழந்தது; ஆனால் எனக்கு மட்டும் மறுமணம்,
    அவர் வீட்டுக் கைதி! என்ன ஞாயமடா இந்தப்
    பொல்லாத உலகத்தில்?  நான் மறுத்து விட்டேன்.
    அம்மா பிடிவாதம்  பிடித்தார்; உடனே ஒரு
    ஆலோசனை கூறினேன்; ”நான் மறுமணம்
    செய்வதாயின் ஒரு விதவையைப் பாருங்கள்;
    இல்லை என்றால் எனக்கு வேண்டாம், விடுங்கள்!”
    என்றேன்;  அம்மா ஆடிப்போனார்; பொல்லாத
    சமுதாயத்தின் போலி வாழ்க்கையைப்  பின்
    பற்றும் வரை பெண்ணுக்கு முழுமையாக இல்லை
    எதிலும் சுதந்திரம்! நினைத்தாலே இதயம்
    கனக்கிறது; ஐயோ பாவம் சகோதரன்
    மனைவி!!

     

    Share
  • உழைப்புக்குத் தேவை துடிப்பு!

    -ஆர். எஸ். கலா

    எடுத்த காரியத்தை இறுதிவரை
    தொடர்ந்திட உறுதி பூண்டு விடு
    எதிர்காலத்தில் எதிலும் வெற்றி                       தொழிலாளி
    பெறுவேன் என்று நெஞ்சில்
    நிறுத்திவிடு!

    செய்வன திருந்தச் செய்
    கவலையை விட்டொழி
    காலத்தை வென்று நிரந்தர
    வெற்றியைக் கண்டிடு!

    முன்னேற்றத்தையே விரும்பு
    முறையுடன் அதை நிறைவேற்றிடு
    கல்விக் கண்ணோடு பெரியோர்
    சொல்லையும் கேட்டிடு, ஒளி
    விளக்காய்ச் சுடர்விடு நின்று!

    சோம்பேறியாகாதே
    துவண்டு விடாதே
    எதிர்காலக் கனவை
    கலைய விடாதே தொலை
    நோக்கி போல்  துல்லியமாகக்
    கணித்திடு உன் வெற்றியை
    புத்தியின் துணையோடு!

    உழைப்பில் முன்னேறு
    உழைப்பை முழுமையாக நம்பு
    உடல் வருத்தி உழைத்திடு
    உனக்குள் இருக்கும் திறமையை
    மடமை என்னும் திரையால்
    மூடாதே!

    உன் தொழிலை நம்பு
    அதையே நேர்வழியில்
    தொடங்கு, வரும் வருவாயை
    விரையம் செய்யாதே
    கறைபடிவது  கையானாலும்
    சிறைவாசம் செல்லாத்
    தொழிலைத் தேர்ந்தெடு!

    மேலே மேலே உயர்ந்திடு
    குணத்திலும் தொழிலிலும்
    தினமும் மேலோங்கும்
    சிந்தனையை வளர்த்திடு!

    சிகரம் தொட்டிடு சிறப்பாக
    வாழ்ந்திடு  தட்டிப் பறிக்காதே
    பிறரிடம்
    விட்டுக் கொடுக்காதே
    உன் நியாயமான கோரிக்கையை!
    கேளிக்கை வாழ்வை ஒதுக்கிடு
    வாழி வாழி என்று வாழ்ந்திடு
    உன் துடிப்பான உழைப்பைக்
    கொண்டு!

    பெற்றோர் போற்ற மற்றோர்
    வாழ்த்த உலகில் உன் புகழ்
    பறக்கட்டும், நீ சிந்திய வியர்வைத்
    துளிகளும் புகழாக மணம் பரப்பட்டும்
    உண்மையான உன்னதமான
    உழைப்பையே நம்பித் துடிப்போடு
    நீயும் இறங்கு!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”வெல்வெட்டு வண்ணத்தில், வேய்ங்குழல் ஊதுகிறான்
    கல்வெட்டுச் சிற்பம்போல் கண்ணபிரான், -புள்கொட்டும்(பறவைகள் கூவும்)
    போததி காலையில் பூபாள பூபாலன்,
    யாதவனைக் காண எழு”….கிரேசி மோகன்….

     

    Share