இனிதினிது

6

இனிதினிதினிதினிதினிதினிதினிது
எமதெமதெமதெமதெமதெமதெமது
அமுதமுதமுதமுதமுதமுதமுது
எமதெமதெமதெமதெமதெமதெமது

அண்ணாகண்ணன்
Annakannan

இனிதினிதினிதினிதினிதினிதினிது
எமதெமதெமதெமதெமதெமதெமது
அமுதமுதமுதமுதமுதமுதமுது
எமதெமதெமதெமதெமதெமதெமது

சரிசரிசரியென,சரிவரும்உலகு
சிரிசிரிசிரியென,சிரிநலம்பழகு
வரிகளுக்கிடையினில்படிப்பதும்அரிது
அரிதரிதரிதரிதரிதரிதரிது

சிறுதிரிவிரியொளிசெறிசுடரழகு
சிறுதுளிவிரிகடல்புரிதொழிலழகு
சிறகினில்திசைகளையளப்பதுமழகு
சிறகெனத்திசைகளைவிரிப்பதுமழகு

கருவுறுதிருதருவரகவிமதுரம்
துருதுருசுறுசுறுவிழிநடம்மதுரம்
பெருகிடும்வியர்வையில்பெருமிதம்மதுரம்
மெருகிடும்உருகிடும்அருளதிமதுரம்

கடகடபடபடமடமடவெனவே
சடசடதடதடகிடுகிடுவெனவே
உடனுடனுடனுடனுடனுடனுடனே
முடிமுடிமுடிமுடிமுடிமுடிசெயலே.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இனிதினிது

 1.           அண்ணா கண்ணனுக்கு வாழ்த்துகளும் ! பாராட்டுகளும் ! 
   ஏன் என்று தெரியுமா ?
    
        ”  மீண்டும் ஒரு  காளமேகம் ”   ஆகி,  தமிழில் விளையாடி , சுவையான
         தமிழ்க் கவிதையினை தந்தமைக்கே.
     தொடரட்டும் கவிதை வெள்ளம் !
         வாழ்கவளமுடன்

       எம். ஜெயராமசர்மா .. அவுஸ்த்திரேலியா. .. மெல்பேண்.

 2. இனிதினிது கவிதை  வித்தியாசமாக உள்ளது 
  மிக நன்று….ரசித்தேன்.
  இது பற்றிய விரிவான விளக்கம் தாருங்களேன்.
  7 தடவைகள் இனிதினிது என்று தொடர்ந்துள்ளீர்கள் 
  வழக்கு முறை இல்லது வாய்ப்பாடு என்று விளக்கங்கள் உண்டா?
  சொல்ல முடியுமா?
  வேதா. இலங்காதிலகம்.

 3. இந்த எறும்பு நகர்ச்சிக் கவிதையின் கருப்பொருள் என்ன ?  வெறும் எதுகை மோனை மட்டும் கவிதை ஆகுமா ?  

  நினைவில் ஒட்டாத இந்தக் கவிதை ஆத்மா இல்லாத கூடாக உள்ளதே !

  சி. ஜெயபாரதன்

 4. “சட்டென்று செய்துமுடி” இதைத்தான் கவிதை சொல்கிறது என்று நினைக்கிறேன்.  மீதி எதுவும் புரியவில்லை.

 5. அழகு தமிழ் மழலை மொழி…
  கவிதை மழை.. கானக் குயில் 
  மீட்டும் யாழ்.. இனிக்கும் தேன் 
  தொடுக்கும் நாண் .. கிடைக்கும் வெற்றி..
  எத்தனை முயன்றாலும் எம்மால்..
  அண்ணா கண்ணன்போல் …
  அசத்தல் கவிதை தரவே முடியாது..
  அருணகிரி நாதர்போல அசரவைக்கும் 
  சரங்களினை உச்சரிக்கும்போது 
  நெஞ்சம் தித்திக்கின்றதே!

  அன்புடன்..
  காவிரிமைந்தன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *