Blog

  • பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள்

    பூகோள உயிரினத்தைச் சீர்கெடுக்கும் சூடேற்றக் கிரீன்ஹவுஸ் வாயுக்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++

    சூட்டு யுகம் புவியைத் தாக்கி
    வேட்டு வைக்க மீறுது !
    நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !
    பேய் மழைக் கருமுகில் சூழுது !
    நீரை, நிலத்தை, வளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    விரைவில் சிதைக்கப் போகுது !
    கடல் மட்டம், வெப்பம் ஏறி
    கரைப் பகுதிகள் மூழ்குது !
    மெல்ல  நோய்கள் பரவி, நம்மைக்
    கொல்லப் போகுது !
    நிற்காது மூன்றாம் உலகப் போர் !

    ++++++++++++++++

    1. https://www.usatoday.com/story/news/world/2019/05/13/climate-change-co-2-levels-hit-415-parts-per-million-human-first/1186417001/
    2. https://www.nationalgeographic.com/environment/global-warming/greenhouse-gases/
    3. https://www.nationalgeographic.com/environment/global-warming/greenhouse-gases/

    +++++++++++++++++++

    புவி மாந்தருக்கு ஆண்டு முழுதும் இடர் விளைவிக்கும் சூட்டு யுகம்

    சுமார் 800,000 ஆண்டு காலமாக நமது பூர்வ உயிரின மூலவிகள் தோன்றியது முதல் சூடேற்றக் கரிவாயு [கார்பன் டையாக்ஸைடு] தொடர்ந்து சேமிப்பாகி, தற்போது வாயுக் கொள்ளளவு மிகவும் ஏறிவிட்டது என்று  பென்சில்வேனியா பல்கலைக் கழகக் காலநிலைப் பேராசிரியர், மைக்கேல் மான்ன் 2019 மே மாதம் 14 ஆம் தேதி அறிவித்துள்ளார்.   மே மாதம் 11 ஆம் தேதி, கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அளவாகப் 415 ppm [parts per million] பெருகி யுள்ளது.  இந்த அளவைக் கருவி மூலம் அறிந்தது : ஹவாயின் மௌன லோவா தேசீகக் கடற்துறைச் சூழ்வெளி ஆணை  ஆய்வகம் [National Oceanic and   Atmospheric Administration’s Mauna  Loa Observatory, in Hawaii].  1958 முதலாக இந்த ஹவாயி ஆய்வகம் செய்து வருகிறது.

    இம்முறை போக அடுத்துப்  பயன்படும் முறை : பனிப்பாறை வளரும் காலங்களில் [Interglacial Periods] சேர்ந்திருக்கும் பூர்வ வாயுக் குமிழ்கள்  சமீபத்து பனியுக யுகத்தில் நீண்ட குழல் களைச் சொருகி வாயுவின் அளவு  200 ppm என்று  அறிந்தது.  தற்போதைய பனியுகச் சேமிப்பு  அளவுநிலை : 280 ppm. ஒவ்வோர் ஆண்டும் பூமி 3 ppm காரிவாயு மிகையாகப் பதிவு செய்கிறது.  அதே சமயத்தில் 19 நூற்றாண்டு தொழிற் புரட்சி காலத்தில் பூகோள உஷ்ணம்  1.8 டிகிரி F  [1 டிகிரி C ] ஏறியுள்ளது.  இன்னும் பத்தாண்டுகளில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அளவு : 450 ppm அளவைத் தாண்டிவிடும் என்று மைக்கேல் மான்ன் எச்சரிக்கை விடுகிறார்.  பனித் தட்டுகள் சிறிதாக இருந்த போது,  கடல் மட்டம் 65 அடி [20 மீடர்]  உயரத்தில் மிகையாய் இருந்துள்ளன.

    http://www.chicagotribune.com/92378906-132.html

    Added Arctic data shows global warming didn't pause

    Added Arctic data shows global warming didn’t pause

    November 20, 2017

    உலக விஞ்ஞானிகளின் புதியதோர் எச்சரிக்கை

    22 உலக நாடுகளின் 98 விஞ்ஞானிகள் 2000 ஆண்டு காலப் பூகோள உஷ்ணப் பதிவு இலக்கங்களைத் திரட்டி வெளியிட்டு பூகோளம் வெகு விரைவாகச் சூடேறி வருகிறது என்று இப்போது புதியதோர் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.  பல்வேறு விஞ்ஞானக் குழுவினர் சேர்ந்து மூன்று ஆண்டுகளாய் மெய்வருந்திச் செய்த கூட்டு முயற்சி இது.  இந்த வெளியீட்டுத் திட்டத்தின் பெயர் “பதிவுகள் 2000” [PAGES2K].  இத்திட்டம் உலகின் 648 பகுதியில் எடுத்த 692 பல்வேறு காலவெளிப் பதிவுகள்.  இத்தகவலில் நீர், நிலம், கடல் பனிக்குன்றுகள், மரங்கள், கடல் பவழங்கள், கடல் சேர்ப்புப் படிவுகள், பருவக் காலப் பதிவுகள் ஆகியவற்றின் நீண்ட காலத் திரட்டுச் சேமிப்புகள்.  பருவகாலப் பதிவுகள் 2 வாரத்திலிருந்து, 2000 ஆண்டுகள் வரை நீடித்தவை.  இந்த புதிய விஞ்ஞான அறிக்கை 2017 ஜூலையில் “இயற்கை” மின்னியல் [Online Nature] இதழில் வெளியானது.

    இதன் முக்கிய அறிவிப்பு : “பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது, நாம் அஞ்சுவது போல்” என்பதே.   இதை வெளியிட்ட துணைப் பேராசிரியர் : ஜீன் மேரி  ஸெயின்ட் ஜேக்ஸ்.   அவர் கூறுவது :  கால நிலை உஷ்ண மாறுதல்கள் கடந்த 150 ஆண்டுகளாக எடுக்கப் பட்டவை. அதுவும் கனடாவில் கடந்த 50 வருடங்களாகப் பதிவானவை தான்.  அவற்றுக்கு முந்தையப் பதிவுகள் – உஷ்ண அளவீடுகள் எதிர்மறையாகக் கணிக்கப் பட்டவை.

    2015 இல் 195 உலக நாடுகள் நிலக்கரி போன்ற இயற்கைக் கனல்சக்திப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பூமியின் சராசரித் தள உஷ்ணத்தை 2 டிகிரி C [ 3.6 டிகிரி F] கீழ் நிலைநிறுத்த முயன்றன.  அதாவது 1.5 C அளவுக்கு நிலைநாட்ட முடிவு செய்தன.  பூகோளத்தில் 1 டிகிரி C உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்டத்தை உயர்த்தி, வேனிற் காலச் சூறாவளிகளைப் பெருக்கியும், வெப்பப் புயல்களை அடித்தும், காட்டுத் தீக்களைத் தூண்டியும், நில வறட்சியை உண்டாக்கியும், ஹர்ரிக்கேன் தாக்குகளை ஏவியும் மக்களுக்குப் பெருந்துயர் அளித்து வருகின்றன.  சூடேற்றம் 1.5 முதல் 2.0 டிகிரி வரைக் கட்டுப்பாடுக் குள்ளே கொண்டு வர,  எப்படிக் கரிவாயு [CO2] உற்பத்தி குறைய வேண்டும் என்பதுதான் தற்போதைய சவாலாக உள்ளது !

    An Argo float is deployed into the ocean

    3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans

    Image result for oceans are warming rapidly

    கடல் வெள்ளம் விரைவாகச் சூடேறுவதைப் புதிய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

    கடற்பகுதிகளின் பரவலான பதிவுகளில் மாறும் உஷ்ண நிலையைத் தீர்வாகச் சொல்ல முடியா விட்டாலும், கடல் நீர் விரைவாகச் சூடேறுகிறது என்பதில் எதிர்ப்பு எதுவும் இல்லை. அண்டவெளித் தொழில் யுகத்தில் அனுதினமும் மனிதனும், இயற்கைத் தீ மூட்டத்திலும் ஏராளமான புகைமுகில் சூழ்வெளியில் வெளியாகிக் கடல் கனல் சேர்ப்பு [Ocean Heat Content (OHC)] மிகுதியாகி வருகிறது. பூமியின் வெப்பமும் ஏறுகிறது.  இவைதான் பூகோளச் சூடேற்றப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணிகள்.  ஆயினும் இந்தக் கனல்சக்தி எங்கே போகிறது ?  எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது ?  இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது ? பல்லாயிரம் மைல் பரந்த கடற் பகுதிகளில் வெப்ப ஏற்ற இறக்கம் தொடர்ந்து எப்படி நெறிப்படி பதிவாகிறது ?

    Image result for oceans are warming rapidly

    பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய கணக்கீடு கடற் பகுதிகளில் உள்ளது.  மெய்யாக புவிக்கனல் ஏற்றம் என்பது கடற்கனல் ஏற்றமே.  அதற்கு உலகக் கடல் பரப்பு பூராவும் பரவலாக உணர்வுக் கருவிகள் ஆழத்திலும், மேல்தளத்திலும் நிறுவப் படவேண்டும். பல்லாண்டு கால அளவுகள் பலரால் நீண்டு தொடரப்பட்டு சேமிக்கப் படவேண்டும்.  சிக்கலான, சிரமான இப்பணியை மூன்று விதக் கடற்கனல் ஆய்வு வரைக் குழுவினர் [Oceanographers] செய்து வருகிறார்.  அவரின் ஆய்வுப் பதிப்புரை 2017 ஜுன் வெளியீட்டில் [Journal Climate Dynamics] வந்துள்ளது.  அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் காஞ்சி வாங்  [Dr. Gonjgie Wang].

    “எமது ஆய்வுப் பதிப்பு  1970 ஆண்டு முதல் பூகோளக் கடல் நீர்ச் சூடேற்றம் பொங்கி வருகிறது என்று மீண்டும் உறுதி செய்கிறது. ஆயினும் பரவலான கடற்கனல் பதிவுகளில்  பேரளவு ஐயப்பாடு காணப் படுகிறது. சமீபத்தில் வந்த பத்தாண்டு விளைவுகளில் பூகோளச் சூடேற்றத்தில் கடற்கனல் மாற்றங்களில் தணிப்பு நிலை [Slowdown] தெரிகிறது. அதற்குப் பெருவாரியான விளக்க ஆய்வுகள் மதிப்பீடு  [Comprehensive Evaluation] தேவைப் படுகிறது. மேலும் 2000 மீடர் [6600 அடி] கடல் ஆழத்தில் நீரோட்டம் ஆயும் பல்வேறு கடற்கனல் கண்காணிப்புக் கூட்டுப்பணிக் குழு [Ocean Monitoring Network] அமைக்கப் பட வேண்டும்.” என்று சொல்கிறார் டாக்டர் காஞ்சி வாங்.  இப்போது அவர்கள் பயன்படுத்துவது 3800 சுயயியக்கிகள் கொண்ட ஆர்கோ படைக் கப்பல் [ARGO FLEET with 3800 Autonomous Devices].  அது 2005 ஆண்டு முதல் கடற்பணி செய்து வருகிறது.

    Icebergs in the Sea

    கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் 

    21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூழ்வெளிப் பாதிப்புச் சவாலாய் இருப்பது பூகோளக் கடற்கனல் ஏற்றமே , அதற்குக் காரணமான கடல்நீர் மட்ட உயர்வு.  கடல்நீர் மட்ட உயர்வுக்கு இரு முக்கிய காரணங்கள்:  ஒன்று துருவப் பனிக்குன்றுகள், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது, அடுத்து கடல் வெள்ளம் வெப்ப மிகையால் கொள்ளளவு விரிவது.  நாசாவின் குறிப்பணி [Oceans Melting Greenland (OMG) Mission] வான் பறப்பு, கப்பல் பயணக் கண்காணிப்புகள் மூலம் தொடர்ந்து, கரையோரப்  பகுதி பனிக் குன்றுகள் உருகி நீராவதைப் பதிவு செய்வது. ஐந்தாண்டு பணி இது [5 Year Airborne & Ship-Based Mission]. இவற்றின் விளைவு  என்ன ? மேற்தள / அடித்தளக் கடல்நிலைகள் எப்படி நீர் மட்ட உயர்வை மாற்றுகின்றன என்பதை அறிவது.  துருவப் பனி உருகுவதற்கு புவிச் சூடேற்றம் மட்டுமே காரணமாகிறது.

    கிரீன்லாந்தின் பனிச்சேர்க்கை அண்டார்க்டிகாவுக்கு அடுத்தபடி அளவில் பெரியது.  கிரீன்லாந்து பனிமட்டும் உருகினால் கடல் நீர் உயரம் 23 அடி உயரும்.  அந்தப் பயங்கர கடல் உயரம் பல கடற்கரை நகரங்களை மூழ்க்கி விடும்.  அப்படிக் கிரீன்லாந்து உருக  பல நூற்றாண்டுகள் ஆகலாம்.  தற்போது கடலில் சேரும் கிரீன்லாந்து பனியுருக்க நீர் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டன்  என்று  ஓயெம்ஜி மூலம் [OMG MISSION] நாசா கணித்துள்ளது.

    Greenland Ice melting

    Image result for oceans are warming rapidly

    http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I

    http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ]

    ++++++++++++++++++++

    Image result for oceans are warming rapidly

    கடல் சூடேற்றத்தால் விரிவதும், பனிக்குன்றுகள், உறைப் பாறைத் தட்டுகள் உருகிக் கடல் நீர்க் கொள்ளளவு மிகை யாவதும் இப்போது நமக்குத் தெரிந்ததுதான்.  அம்முறைப்படி குறைந்தது சுமார் 3 அடி [1 மீடர்] அல்லது அதற்கும் மிகையான கடல் மட்ட உயர்ச்சி, ஒரு நூற்றாண்டில் நேரலாம் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.  ஆனல் அந்த உயர்ச்சி ஒரு நூற்றாண்டுக்குள் நேருமா அல்லது அதற்கும் அப்பால் ஏறுமா என்பது எமக்குத் தெரிய வில்லை.
    ஸ்டீவன் நீரம் [ தலைமை ஆய்வாளி, கொலராடோ, போல்டர் பல்கலைக் கழகம்]
    பூர்வீகக் காலநிலைப் பதிவு [Paleoclimate Record] மூலம் நாங்கள் அறிந்தபடி ஓரிரு நூற்றாண்டுகளில் 10 அடி [3 மீடர்] கடல் மட்ட உயர ஏற்றம், நிகழக் கூடிய மாறுதல்தான்.
    டாம் வாக்னர் [Cryosphere Program, NASA Headquarters, Washington.D.C]
    Image result for oceans are warming rapidly
    நாசாவின் அறிவிப்புப்படி கடல் மட்டம் மென்மேலும் உயர்ந்து கொண்டு வருகிறது.
    1992 ஆண்டு முதல் 2015 [?] வரை உலகளாவிய கடல் பரப்புகளில் சராசரி 3 அங்குலம் [ 8 செ.மீ.] உயர்ந்துள்ளது.  சில கடல் மட்டப் பகுதிகளில் 9 அங்குலத்துக்கும் [25 செ.மீ.] மேலாக இயற்கை மாறுபாடுகளால் ஏறியுள்ளது என்று நாசா துணைக்கோள் கருவிகள் மூலம் அறியப் பட்டுள்ளது.  இப்போது ஓர் ஆழ்ந்த ஆய்வு முயற்சி நாசா துணைக்கோள் அளப்புகளை வைத்து தவிர்க்க முடியாத பல்லடிக் கடல் மட்ட உயர்ச்சி நேரப் போவதாக எச்சரிக்கை வந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது எழுப்பும் வினா எத்தனை விரைவில் கடல் மட்ட  உயரம்  ஏறப் போகிறது ?
     Image result for oceans are warming rapidly
    கொலராடோ, போல்டர் பல்கலைக் கழக ஆய்வாளர் நாசா துணைக்கோள் 1992 ஆண்டு முதல் 2015 வரை அனுப்பிய 23 ஆண்டுகளின் கடல் மட்ட உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சீரான ஏற்றமில்லாத நிலைக்கு விளக்கம் தேடுவார்.   2013 ஆண்டில் காலநிலை மாறுதலை நோக்கும் ஐக்கிய நாடுகளின் அரசாங்க உட்துறைக் குழுவினர்  [United Nations Intergovernmental Panel on Climate Change]  அறிவிப்புப்படி, உலகளாவிய கடல்களின் நீர்மட்ட உயரம் சுமார் 1 அடி முதல் 3 அடி [0.3 முதல் 0.9 மீ.] இந்த நூற்றாண்டு  இறுதியில் ஏறிவிடும் என்று கூறியுள்ளது.   இதற்குப் பிறகு குறிப்பிடப்படும் ஆய்வுச் செய்திப்படி மிகையாகக் கூறப்படும் 3 அடி [0.9 மீ.] உயரமே உறுதியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.
    Image result for oceans are warming rapidly
    இந்த 3 அடி [0.9 மீ.] உயர ஏற்றத்தில் 1 அடி உயரம் கடல்நீர் சூடேற்றத்தால் உண்டாகுகிறது என்றும், அடுத்த 1 அடி [0.9 மீ.] ஏற்றம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனிப்பாறை உருகுவதால் நேர்கிறது என்றும், மிச்சமுள்ள 1 அடி உலக மலைச் சிகரப் பாறை உருகுவதால் என்றும் மதிப்பிடப் படுகிறது.  கிரீன்லாந்தின் பனித்தளம் 660,000 சதுர மைல் [1.7 மில்லியன் சதுர கி.மீ.] பரப்பு சுமார் 303 கிகா டன் [gigatons] பனிக்கட்டிகளை ஓராண்டு காலத்தில்  உதிர்த்துவிடும் என்று நாசாவின் துணைக்கோள் மூலம் அறிய வருகிறது.  இது கடந்த பத்தாண்டு கணக்கீடுகள்.  அண்டார்க்டிக் துருவப் பனித்தட்டு சுமார் 5.4 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் [14 மில்லியன் சதுர கி.மீ.] உருகி சராசரி 118 கிகா டன் அளவில் கடல் நீர்க் கொள்ளளவு சேர்ந்துள்ளது.
    Greenland Rivers -2

    2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year]  என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது.  அதாவது  2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பானது 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது.  2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர்.  கடைசி  மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.

    Van Den  Broeke [Dutch Researcher Spoke to SPEIGEL ONLINE]

    கிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது !  அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக் குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன.

    Image result for oceans are warming rapidly

    2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்னறிப்பு செய்கின்றன.

    லாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]

    கிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது.  நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது.

    திடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்]

    Arctic Ice Region

    “துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும்,  விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும்  கிடைத்தது.   இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது.   பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய்  நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”

    பேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]

    Image result for oceans are warming rapidly

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன.

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது.  இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில்  [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது.  கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன.   இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில்  ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000  முதல்  46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல்  61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது.

    Arctic Ice Retreat

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!

    Image result for oceans are warming rapidly

    அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    Greenland Iceberg

     

    “பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.

    டாக்டர் எரிக் ஐவின்ஸ் [Co-Leader, NASA Jet Propulsion Laboratory]

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

    Greenland homes

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங் களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    Greenland Location

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

    Melting Days

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது.  கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது.

    2.  20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    Fig 1 Carbon Emissions

    Fig 1 Global CO2 Concentrations

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!  கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது.  அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    Image result for oceans are warming rapidly

    5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

    6.  WHO [World Health Organization]  பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வரட்சி, பஞ்சம்,  கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்]  ஆண்டுக்கு 150,000 பேர் மரிப்பார் என்று எச்சரிக்கிறது.

    டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and  [11 Facts About Global Warming]

    Global Warming Effects

    ஆர்க்டிக் வட்டார பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்  [டிசம்பர் 2012]

    துருவப் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகளும்,  பனிக்குன்று களும் உருகி கடல் மட்டம் உயர்வதும், கடல் நீர் வெப்பம் கூடுவதும் கடந்த 50 ஆண்டுகளாய் இரண்டாம் தொழிற் புரட்சி வலுவாகிக் கடும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் கொள்ளளவு மிகையாகி வருவதை யாரும் புறக்கணிக்க முடியாது.  அதனால் பூமியின் பருவ நிலைக்கோளாறுகள், முரண்பாடுகள்  பேரளவில் தோன்றி உலக மக்கள் நடை வாழ்வு, நாகரீகம் சிதைவாகி இன்னல் அடைந்து  வருகிறார்.   21 ஆம்  நூற்றாண்டில் பயங்கரக் “காத்ரீனா” ஹர்ரிகேன் கடற் சூறாவளி அடித்து நியூ ஆர்லியன்ஸ் நகரம் முற்றிலும் சேதமடைந்து நாசமான ஓர் நரகக் காட்சியை தீட்டியது.   2012 அக்டோபரில் அடித்த பூத ஹர்ரிகேன் “ஸாண்டி”  நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களை நிர்மூல மாக்கியது.   ஹர்ரிகேன் கத்ரீனாவும், ஸாண்டியும் சூட்டு யுகம் தயாரித்த மாபெரும் பயங்கர ஹைடிரஜன் குண்டுகளாகக் கருதப் பட வேண்டும்.

    CO2 Emissions by countries

    சூட்டு யுகத்தில் 2012 ஆண்டில் அறியப்பட்ட சில எதிர்பாரா விளைவுகள்:

    26 ஆய்வகத்தின் 47 சூழ்மண்டல வாதிகள் கூடி 10 துணைக்கோள்  அறிவிப்புகளைத் திரட்டி, துருவப் பனிப்பாறைச் சரிவுகளின் உறுதியான விளைவுகளை வெளி யிட்டுள்னர். 1992 முதல் 2011 ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகளில் ஐரோப்பாவின் தூர இயக்கு உணர்வு துணைக்கோள் [ERS Mission : European Remote Sensing Satellite] அனுப்பிய தகவல்படி, கிழக்குக் கடற்கரை கிரீன்லாந்தின் பனித் தளம் ஐந்து கி. மீடர் [சுமார் 3 மைல்] சுருங்கி விட்டதாக அறியப் படுகிறது.

    துருவப் பகுதி பனித்தளப் பரிமாணத்தைக் கண்காணிக்கும் அந்த ஐரோப்பியத் துணைக் கோள் “பரிதி முகநோக்குத் துருவச் சுற்று வீதியில் [Sun-synchronouspolar orbit] சுற்றி வருகிறது. 1992 ஆண்டு முதல் கிரீன்லாந்து அண்டார்க்டிக் பகுதிகளின் பனித் தட்டுகள் உருகிக் கடல் மட்டம் 11 மில்லி மீடர் உயர்ந்துள்ளதாக அறியப் படுகிறது. 2012 ஆண்டு வெளியீட்டின் படி துருவத்தில் கிரீன்லாந்து, அண்டார்க்டிகா இரண்டின் பனிச்சிதைவு 1990 ஆண்டைப் போல் மூன்று மடங்காகப் பெருகி யுள்ளது.

    சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்

    Antarctica

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    Global ocean mean temperature

    பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

    பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்ட மான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகை யாகிறது!  வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

    Atmospheric CO2

    பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித் தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திர மானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

    Sea Level ChangeImage result for oceans are warming rapidly

    கிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion].  அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது!  பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது.  அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும்.  கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது!  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்ப தாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனி மண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது!  மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

    Fig 1 Arctic Ice Melting

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங் களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்புச் சாலை களிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக் களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக் கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    Image result for oceans are warming rapidly

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.   [11 Facts About Global Warining ]

    7.   http://www.cosmosmagazine.com/news/676/ice-retreat-opens-passage-north-pole  [September 21, 2006]

    8.  http://www.spiegel.de/international/world/a-warming-arctic-greenland-s-ice-sheet-melting-faster-than-ever-a-661192.html  [November 13, 2009]

    9.  http://topics.nytimes.com/top/news/science/topics/globalwarming/index.html#  [December 6, 2012]

    10.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [December 8, 2012]

    11.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Katrina  [Katrina Hurricane Damage in New Orleans] [December 9, 2012]

    12.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Sandy  [Sandy Hurricane Damage in New York, New Jersey etc]

    13.  http://en.wikipedia.org/wiki/European_Remote-Sensing_Satellite  [European Remote Sensing Satellite Mission] [December 7, 2012]

    14.  http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Climate_Experiment  The Gravity Recovery And Climate Experiment (GRACE), a joint mission of NASA and the German Aerospace Center  [Noember 20, 2012]

    15.  EcoAlert :  Forty Seven ESA/NASA Experts Warn of Increasing Ice Melt & Rising Sea Levels  [December 3, 2012]

    16.  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-148   [May 12, 2014]

    17. http://scitechdaily.com/rivers-glacial-meltwater-contribute-rising-sea-levels/  [Jan 13, 2015]

    18.  http://en.wikipedia.org/wiki/Greenland  [May 16, 2015]

    19.  http://www.nasa.gov/jpl/rivers-are-draining-greenland-quickly-nasa-ucla  [May 16, 2015]

    20. http://www.spacedaily.com/reports/NASA_Zeroes_in_on_Ocean_Rise_How_Much_How_Soon_999.html   [August 27, 2015]

    21.  http://www.space.com/30379-nasa-sea-level-rise-model-video.html  [August 26, 2015]

    22.  https://www.theguardian.com/environment/climate-consensus-97-per-cent/2017/jun/26/new-study-confirms-the-oceans-are-warming-rapidly [June 26, 2017]

    22(a)  http://www.dailygalaxy.com/my_weblog/2017/06/ecoalert-greenlands-great-melt-nasa-monitoring-the-massive-ice-sheet-thats-adding-250-gigatonnes-of-.html [June 27, 2017]

    23.   https://phys.org/news/2017-06-oceans-rapidly.html  [June 30, 2017]

    24. http://www.terradaily.com/reports/Oceans_are_warming_rapidly_999.html  [July 3, 2017

    25.  https://www.accuweather.com/en/weather-blogs/climatechange/new-research-confirms-that-global-oceans-are-warming-rapidly/70002053  [July 6, 2017]

    26. http://www.spacedaily.com/reports/Figuring_out_how_fast_Greenland_is_melting_999.html  [July 7, 2017]

    27.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/07/ecoalert-greenlands-ice-melt-doubles-the-planets-canary-in-the-mine-shaft.html  [July 10, 2017]

    28.  https://www.livescience.com/59773-trillion-ton-iceberg-breaks-off-antarctica.html?  [July 12, 2017]

    29. https://phys.org/news/2017-10-paris-climate-goals-recede-geoengineering.html  [October 11, 2017]

    30. http://environmentalresearchweb.org/cws/article/yournews/70191  [October 13, 2017]

    31.  https://www.canada.ca/en/environment-climate-change/services/climate-change/science.html  [November 23, 2015 – 2017]

    32.  //www.livescience.com/19481-ice-age-carbon-dioxide-orbit.html  [April 12, 2012]

    33. https://www.livescience.com/35635-climate-change-health-countdown.html  [April 22, 2019]

    34. https://www.livescience.com/64535-climate-change-health-deaths.html  [January 17, 2019]

    35.  https://www.livescience.com/65469-highest-carbon-dioxide-levels.html  [May 14, 2019]

    ++++++++++++++++++++

    Share
  • சூறையாடி விட்டார்கள் !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

    யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும்
    இதயத்தின் குமுறல்

    ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து
    நாடெல்லாம் நன்மைபெற நல்ல்லுளங்கள் விரும்பியதால்
    ஓடாக உழைத்துநிதம் உருப்படியாய்ச் செய்தமையே
    வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்

    எத்தனைபேர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்,
    எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே!
    நித்தமும்நாம் படிப்பதற்குப் புத்தகமாய் இருக்குமவை
    எத்தனையோ சந்ததிகட் கிருக்கின்ற பொக்கிஷமாம்

    நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
    நூல்நிலையம் அருகிருந்தால் கண்டிடலாம் அறிவையெலாம்
    பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
    நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்

    யாழ்ப்பாண நூலகம்தான் யாருக்கும் மறக்காது!
    வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
    தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
    சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்

    எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
    அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
    சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
    சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்

    கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்தவிடம்
    கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றவிடம்
    பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றஇடம்
    பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்

    கோவிலுக்கு நிகராகக் கொண்டாடும் நூலகத்தை
    கொடுங்கோலர் பலர்சேர்ந்து கொழுத்தியே விட்டார்கள்
    தாவீது எனும்சாது தன்னளவில் தாங்காது
    ஓய்வெடுத்து நின்றதுவே உலுத்தர்களின் செயலாலே

    நூல்நிலையம் எரித்தவர்கள் நூறுமுறை பணிந்தாலும்
    தலைசிறந்த படிப்பாளி தாவீது வருவாரா
    எரித்தவர்கள் மனத்தினிலே இரக்கமே வாராதா
    அரக்ககுணம் இன்னுமே அழியாமல் இருக்கலாமா!

    Share
  • திருப்பூர் சக்தி விருது 2019 விருது

    “பெண்ணுரிமை என்பது கேட்டுப் பெறுவதல்ல. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப் படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடும், வீட்டுக் காரியங்களோடும் சேர்ந்து எழுதுவதையும் செய்து வருகிறோம். பெண்கள் பல துறைகளில் முன்னேறியிருக்கிறோம்.” என்றார் சக்தி விருது 2019 பெற்ற கவிஞர் உமாமகேஸ்வரி. அவரோடு சேர்த்து மொத்தம் 21 பெண்களுக்கு இலக்கியம், கல்வித்துறை, ஓவியம், சமூகப்பணி சார்ந்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வழங்கப்பட்டன.

    “இரு கைதட்டினால்தான் ஓசை கிடைக்கும். பெண், ஆண் என்ற பேதமில்லாமல் படைப்பாளிகள் படைப்புகளில் ஈடுபட்டுச் சமூக மேம்பாட்டிற்கான கருத்துக்களைப் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். வாசிப்பும், புத்தகப் பதிப்பும் இன்றைக்கு பின்னுக்குத் தள்ளப்படும் சூழலில், புத்தகங்களை முன் நிறுத்தி படைப்பாளிகளைக் கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காகவே புத்தகக் கண்காட்சிகளும் இலக்கிய பரிசுகளும் தேவைப்படுகின்றன“ என்றார் விழாவில் கலந்து கொண்ட பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் அவர்கள்.

    திருப்பூர் சக்தி விருது 2019

    திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு 20 ஆண்டுகளாக வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் 2/6/19 அன்று இடம்: பிகேஆர் இல்லம் , மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலையில் விழா நடைபெற்றது .

    இவ்வாண்டு திருப்பூர் சக்தி விருது 2019 விருது பெற்றோர் : உமா மகேசுவரி, கோவை; தனசக்தி, நாமக்கல்; நா. நளினிதேவி, மதுரை; பரிமளாதேவி, திண்டுக்கல்; செல்வகுமாரி, புதுவை; தமிழரசி, விழுப்புரம்; ந.கிருஷ்ணவேணி, காங்கயம்; செல்வசுந்தரி, திருச்சி; நர்கீஸ்பானு, தஞ்சை; பூங்குழலி, பழனி; சிந்துஜா, சென்னை; ஷோபா பன்னீர் செல்வம், அரியலூர்; இரா. மேகலா, காரைக்கால்; ரத்னமாலா புருஷ், நாகர்கோவில்; கமலதேவி, உறையூர்; தீபா, கோவை; ஜி ஏ பிரபா, கோபி; வி. ஆனந்தி, தில்லி; மணிமாலா மதியழகன், சிங்கப்பூர்; மரிய தெரசா, சென்னை; இறை நம்பி, வேலூர்

    தோழர் பி ஆர். நடராஜன் (திருப்பூர் மாவட்ட செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்) தலைமை வகித்தார், வழக்கறிஞர் இரவி பரிசு பெற்றப்படைப்பாளிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார்.எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் திருப்பூர் சக்தி விருதுகளை வழங்கினார். ஓவியக்கண்காட்சியில் இயற்கை ஓவியங்கள் “மரம் அறிய..” .என்றத் தலைப்பில் ஓவியர்கள் தூரிகை சின்ராஜ், ஏ .தர்ஷணி ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றன.

    எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் “திருப்பூர்” (திருப்பூரை மையமாகக் கொண்ட சிறுகதைகள் தொகுப்பு – நிவேதா பதிப்பகம் சென்னை வெளியீடு , ரூ125) நூலினைக் கல்வியாளர் ஜெயா மோகன் வெளியிட பேரா. செல்வகுமாரி, கவிஞர் அம்பிகா குமரன் பெற்றுக்கொண்டனர்.

    பாரதி வாசன், அம்பிகா,கனல் , அருணாசலம், துருவன் பாலா, துசோபிரபாகர் கவிதைகள் வாசித்தனர்

    தோழர் சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை வழங்கினார்.

    படங்கள் கீழே….

     

    Share
  • An idea to Modi

    An idea to Modi

    Dr.Annakannan

    Biometric authentication like thumb impression can be introduced instead of signing ledgers on the stage while swearing in ceremonies. In every successful thumb impression, a green light can appear to the entire audience. This will be a symboilc representation of Digital India to the entire world. This will convey a silent and strong message to every citizen that we are in a new techno era & India is the leader.

    Similarly, when every minister taking the oath, we can keep a large digital screen in the backdrop of stage & display the name, constiuency, state, with map, qualifications & achievements of that minister.

    While taking the oath & making thumb impression, automatically all government websites, apps, name boards can be updated across India with new minister and portfolios; all those can be displayed on the screen live & instant. We can automate this process. This will make a huge positive impact towards governance & goodwill. People will believe the new India born.

    My best wishes to the new ministry led by Shri.Narendra Modi. You all will make us proud, again and again.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    47. தெரிந்து செயல்வகை

    குறள் 461:

    அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

    ஒரு செயலச் செய்யுததுக்கு முந்தி நட்டத்தையும் , நொடிச்சுப் போனா என்ன ஆவும்ங்குத விளைவையும், அதுக்குப் பொறவு கெடைக்கப் போவுத லாபத்தையும் கணக்குப் போட்டுப் பாத்து செய்யணும்.

    குறள் 462:

    தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
    கரும்பொருள் யாதொன்று மில்

    தெளிவா, இனம் கண்டுகிட்ட சேக்காளிங்களோட சேந்து செய்ய வேண்டிய செயல யோசிச்சு ஒருத்தன் செய்தாம்னா அவனால செய்ய முடியாதது னு ஒண்ணும் கெடையாது.

    குறள் 463:

    ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
    ஊக்கா ரறிவுடை யார்

    பொறவு வரப்போகுத லாபத்துக்காக கையில இருக்க முதல தொலைச்சுப்போடுத காரியத்த புத்தியுள்ளவங்க செய்ய மாட்டாக.

    குறள் 464:

    தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
    ஏதப்பா டஞ்சு பவர்

    தனக்கு அவமானம் வரும் னு பயப்படுதவங்க ஆக்கங்கெட்ட செயலச் செய்யத் தொடங்கமாட்டாக.

    குறள் 465:

    வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
    பாத்திப் படுப்பதோ ராறு

    முன்னேற்பாடு இல்லாம பகையாளிய ஒடுக்க முனையுதது அந்த பகையாளியோட வலிமைய நெலச்சு வளக்குத வழியா மாறிக்கிடும்.

    குறள் 466:

    செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்

    ஒருத்தன் செய்யக்கூடாதத செஞ்சாலும் கேடு வரும். செய்ய வேண்டியத செய்யாம விட்டாலும் கேடு வரும்.

    குறள் 467:

    எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
    எண்ணுவ மென்ப திழுக்கு

    ஒரு செயல முடிக்குத வழிய அறிஞ்சிக்கிட்டு தொடங்கணும். தொடங்கின பொறவு ரோசனை பண்ணிக்கிடலாம் னு நெனக்கிதது தப்பு.

    குறள் 468:

    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
    போற்றினும் பொத்துப் படும்

    எத்தன பேர் தொணையா நின்னாலும் மொறையா முனஞ்சி எறங்கி செய்யலேனா கடைசில அந்த செயல் முடங்கி போவும்.

    குறள் 469:

    நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை

    அவுகவுக கொணத்துக்கு ஏத்தாப்போல தான் நன்ம செய்யணும். அப்டி செய்யலேன்னா நன்ம செய்யுததிலும் தப்பு உண்டாவும்.

    குறள் 470:

    எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
    கொள்ளாத கொள்ளா துலகு

    தன்னோட நெலமைக்கு பொருத்தமில்லாத செயலச் செஞ்சா ஒலகம் எளக்காரமா பேசும். ஒலகம் எளக்காரமா பேசாதத தேடிப் பாத்து செய்யணும்.

    (அடுத்தாப்லயும் வரும்..)

    Share
  • (Peer Reviewed) ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்

    (Peer Reviewed) ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்

    முனைவா் சித்தரா.எஸ்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
    அரசு விக்டோரியா கலை அறிவியல் கல்லூரி,
    பாலக்காடு, கேரளா.

    ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்


    நாவலிலும், சிறுகதையிலும் பின்புலம் முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு கதையின் அடிப்படைப் பண்புகளான கதைக்கரு. கதைப்பின்னல், கதைமாந்தர்கள், மொழிநடை, சமூகச் சிந்தனைகள் ஆகியவற்றின் முழுமையான இயக்கநிலைக்கு அடிப்படைக் காரணியாக பின்புலம் விளங்குவதோடு, அவற்றை நெறிப்படுத்தும் சக்தியாகவும் அது விளங்குகிறது. அவ்வகையில் ஆ.மாதவன், தம் கதைகளில் பயன்படுத்தும் பின்புலத்தைப் பற்றி இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

    ஆ.மாதவன் – அறிமுகம்

    ஆ.மாதவன். திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளா். இவர் தற்போது திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ‘சாலை’ எனும் வணிகத் தெருவில் வாணிகம் செய்து வருகிறார். அன்றாட வணிக வாழ்வில் தாம் சந்தித்த அனுபவங்களையும், பாத்திரங்களையும் கருவாகக் கொண்டு, மலையாளம் கலந்த தமிழ் நடையில் இவரது படைப்புகள் அமைந்துள்ளன. இவர் இதுவரையில் 3 நாவல்களையும், 4 குறுநாவல்களையும், 61 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’, 2015ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

    நாவல்கள்: புனலும் மணலும் (1974), கிருஷ்ணப்பருந்து (1980), தூவானம் (1987)

    குறுநாவல்கள் : எட்டாவது நாள், காளை, பாவத்தின் சம்பளம், ஆனைச்சந்தம்

    சிறுகதைத் தொகுப்புகள்: கடைத்தெருக் கதைகள் (1975), மோகபல்லவி(1975), காமினி மூலம் (1978), ஆனைச்சந்தம், மாதவன் கதைகள், அரேபியக் குதிரை.

    பின்புலம்

    மனிதன் வாழ்க்கை நடத்தும் இடம், அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, அரசியல், பொருளாதார நிலை ஆகிய யாவும் அவனது நடத்தையை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவையாகும். சிறுகதை, நாவல் போன்றவற்றில் மனிதர்களை மையமாக வைத்துக் கதை பின்னப்படுவதால் அவர்களும் சூழ்நிலையின் தாக்கத்திற்கு உட்பட்டே செயல்பட இயலும். எனவே கதையைப் புரிந்துகொள்வதற்கு சூழ்நிலை அடிப்படையாக விளங்குகிறது. இந்தச் சூழ்நிலைதான் ‘பின்புலம்’ என்று அழைக்கப்படுகிறது. கதையின் தொடக்கம் முதல் முடிவு வரையில் ஒவ்வொரு நிகழ்ச்சியோடும் ஒன்றியைந்து செயல்படும் பின்புலமானது, பின்னணி, காட்சியமைப்பு, சூழ்நிலை, சூழலமைவு போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பின்புலத்திற்கு Background, Setting போன்ற சொற்கள் வழங்கப்படுகின்றன. அதன் நோ்மொழிபெயர்ப்பாக ‘பின்புலம்’, ‘பின்னணி’ போன்ற சொற்கள் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன. பின்புலம் சிறப்புற அமையப் பெற்றால்தான் அக்கதை, கலைத்தன்மையுடன் விளங்கும். பின்புலம் அல்லது சூழல் சிறப்புற அமைய வேண்டுமானால் அங்கே பின்புலமாகக் கொள்ளப்பட்டிருக்கும் சமுதாயத்தின் பழக்க வழக்கங்களுக்கேற்ற செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் வண்ணம் பாத்திரப் படைப்பு அமைந்திருக்க வேண்டும். “சூழல் நடப்பியலாகச் சிறப்பாக அமைய வேண்டுமானால் காலம், இடம், பாத்திரம் ஆகிய மூன்று கூறுகளும் ஏற்ற முறையில் இயைந்திருக்க வேண்டும் என்கிறார் சுப. சேதுப்பிள்ளை”. சூழல் என்று இங்கு கூறப்படுவது பின்புலமேயாகும்.

    தொல்காப்பியர் கூறும் முதற்பொருளும், கருப்பொருளும் ஐவகை நிலங்களின் பின்புல அமைப்பைச் சுட்டுவனவாக அமைந்துள்ளன. “உரிப்பொருளாகிய ஒழுக்கம் நிகழ்வதற்கு முதல்பொருள் நிலைக்களமாகவும், கருப்பொருள்கள் அதற்கு உதவுமாறும் அகப்பாடல்களில் செய்யுட்கள் செய்யப்பட்டன” எனும் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இங்கே கூறப்படும் முதற்பொருளும், கருப்பொருளும் பின்புலங்களாகவே செயல்படுகின்றன. பின்புலம் என்பது, இயற்கைப் பின்புலம், சமுதாயப் பின்புலம் என்று இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. இயற்கைப் பின்புலத்தில் நிலம், காலம் என இருவகைக் கூறுகள் உண்டு. சமுதாயப் பின்புலத்தில், மக்களின் வாழ்வியல் கூறுகள் வெளிக்காட்டப்படுகின்றன.

    ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்

    மாதவன் தம் கதைகளில் பின்புலத்தை எவ்வாறு பயன்படுத்திக் கதை படைத்துள்ளார் என்பதை இங்கு காண்போம். இயற்கைப் பின்புலம், சமுதாயப் பின்புலம் ஆகிய இரண்டுக்கும் தம் கதைகளில் முக்கியத்துவம் கொடுத்தே அவர் படைத்துள்ளார். அந்த வகையில் அவருடைய கதைகளின் பின்புலமானது, இயற்கைப் பின்புலம், சமுதாயப் பின்புலம் என இருவகையாகப் பிரித்து விளக்கப்பட்டுள்ளது.

    1. இயற்கைப் பின்புலம்

    “ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற காலம், இடம் என்பனவற்றைப் பின்புலம் எனலாம். இதனுள் ஒரு கதையின் முழுச் சூழலுமே அடங்கி விடும். ஒரு சமூகத்தின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகிய யாவும் இதனுள் அடங்கும். எனவே பின்புலத்தைச் சமுதாயப் பின்புலம், காட்சிப் பின்புலம் என இருவகையாகப் பிரிக்கலாம் என்கிறார் ஹட்சன்”. இவர் காட்சிப் பின்புலம் என்று கூறுவது இயற்கைப் பின்புலத்தையாகும். மாதவன் இங்கு இயற்கைப் பின்புலமாகக் கொண்டிருப்பது, கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாவட்டம் ஆகும்.

    1.1. இடப்பின்புலம்

    கதை நிகழும் இடத்தின் இயற்கை அமைப்பு, அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த செய்திகளை விளக்குவதே இடப்பின்புலமாகும். கதையில் வரும் கதைமாந்தர்களின் எண்ணங்கள், செயல்பாடுகள் ஆகிய அனைத்தும் அவா்கள் சார்ந்து நிற்கும் இடத்துடன் தொடர்பு கொண்டதாக அமைவதால் கதையில் இடப்பின்புலத்திற்கு முக்கிய இடம் உண்டு. ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில், “கேரள மண்ணின் ரம்யமான இயற்கை மனோகரம் அம்பலவாசலும், தென்னந்தோப்பும், பறங்கிமா மரங்களும், கமுகின் கூட்டமும், ஒற்றைநாழிக் கிணறும், தண்ணீர் இறைக்கும் பாளையும், செம்பருத்திப் பூச்செடிகளும், நெற்றிப் பூக்களும் குளிர்ந்த சாயங்காலப் பொழுதின் அணைப்பில் துல்லியமாக இருந்தன” என்று வரும் வரிகளில் கேரள மண்ணின் தோற்றத்தை ஆசிரியர் கூற்றாக வெளிப்படுத்துகிறார். ‘மலையாளத்து மழை’ கதையில், “இந்தக் கிழக்குக் கோட்டையின் பஸ் டெர்மினல்ஸூம் சுற்றுப்புறமும் ரம்மியமானவை. பழைய ராஜரீக ஆட்சியின் மிச்ச அழகுபோல வெளேரென்று உயரமாக மெயின் ரோட்டிற்கு வரம்பு கட்டிய கோட்டைச் சுவர், ‘RV’ என்ற ஆங்கில எழுத்தை (ராமவா்மாவின் சுருக்கம்) துதிக்கை உயர்த்திப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் யானை முத்திரைகள். கோட்டையுள்ளிருந்து சிட்டி பஸ்கள் வந்த வண்ணமாகவும், போன துரிசமாகவும் இருக்கும். பஸ்களிலெல்லாம் – பிற மொழிக்காரர்களுக்குப் புரியக் கூடாது என்பதற்காகவோ என்னமோ- மலையாளத்தில் மட்டும் ஊர்ப்பெயர்களைப் பொறித்திருப்பார்கள். வௌ்ளையம்பலம், தைக்காடு, பேரூர்க்கடை, ஊளன்பாறை, கவடியார், ஜகதி ………” என்று வரும் வரிகளில் திருவனந்தபுரம் பேருந்து நிலையம் குறித்தும், அங்குள்ள ஊர்கள் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன.

    கதைமாந்தரின் கூற்றாக இடப்பின்புலம் வெளிப்படுவதை ‘அனந்தபாஸ்கர் என் நண்பர்’ கதையில் காணலாம். “அடடா, பேசிக்கொண்டே எங்கே போயிட்டிருக்கோம் பாத்தீங்களா? ஸ்டேட்ச்யு ஜங்ஷனுக்கில்லா வந்துட்டோம். சிலையா நிக்கிற திவான் மாதவராயர் நம்மளெப் பாத்துச் சிரிக்கிறாற்போல இருக்க.. மெடிக்கல் காலேஜ் வரையிலும் போகணும்னா, வஞ்சியுர் வழியா கலெக்ட்ரேட் பாதையோட போயிருக்கணுமில்லையா…. இப்பொ பரவாயில்லெ… பி.எம்.ஜி வழியா முளவனமுக்குப் போய் அப்படியே நடப்போம்….” எனும் பாத்திரக் கூற்று திருவனந்தபுரத்து இடங்களைப் பற்றிய அறிமுகமாக அமைந்துள்ளது. பதினாலுமுறி கதையில், “கிழக்கேக் கோட்டையிலிருந்து பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகணும். பதினைஞ்சு பைசா பஸ்ஸூக்குக் கொடுத்தால் மாதவராயர் சிலைக்குப் பக்கத்தில் கொண்டு போய் இறக்கி விடுவான். ……………….” என்று பாத்திரச் சிந்தனையாக அமையும் வரிகளில் இடப்பின்புலம் வெளிப்படுத்தப்படுகிறது.

    பதினாலுமுறி கதையில், “பஸ் ஸ்டாண்டில் இன்னும் சலசலப்பு ஆரம்பமாகவில்லை. டுட்டோரியல் காலேஜூக்குப் போகும் அஞ்சாறு சிறுசுகள், கரகுளத்துக்கும், மெடிக்கல் காலேஜூக்கும் போகும் நாலைந்து போ்கள், கப்பலண்டி தட்டுக்காரன் மட்டும்தான். மண்ணில் அங்கிங்காக மொய்த்து மேய்கிறது. ராத்திரி தெரு மாடுகள் வந்து படுத்து கிடக்கிற இடம். நீலச் சேலை அணிந்த கார்ப்பரேஷன்காரா் ஆங்கிலத்தில் ‘ஒய்’ எழுத்து மாதிரியான ஆள் உயர நீண்ட துடைப்பத்தைவைத்துக் கூட்டிக்கொண்டு வருகிறாள். அபேதானந்தாஸ்ரமத்திலிருந்து ‘அரே ராமா அரே கிருஷ்ணா’ மந்திரம் மெதுவாகக் கேட்கிறது” எனும் வரிகள் பேருந்து நிலையத்துப் பின்னணியை மக்கள் வாழ்வியலுடன் எடுத்துக் காட்டுகிறது.

    1.2. காலப் பின்புலம்

    கதை நிகழும் காலம் குறித்த அறிமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமையும் பின்புலமே காலப் பின்புலமாகும். அரேபியக் குதிரை கதையில், “நாலாவது வருஷம் பாஸ்கரனின் ஒரே பந்தமான அம்மாவிக்காரிக்கு அவனிடமிருந்து பணம் வந்தது. நூற்றி அம்பது ரூபா. அஞ்சு ரூபா நோட்டுத் தாளை திருப்தியாக நிமிரக் கண்டிராத கிழவிக்கு நூற்றி அம்பது ரூபா ஊருக்குக் கொடை நடத்தியது போல கொண்டாட்டமாக இருந்தது” என்று வரும் வரிகள் ரூபாயின் மதிப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தை காட்டுகிறது.

    ‘விசுவரூபம்’ கதையில், “ஏக்கியம்மா பரம சாது. வேலையே கண்ணாகச் சமஞ்சு அமா்ந்திருந்து, மத்தியானக் கருக்கலுக்கு முன் நாலு மூடைத் தான்யமாவது மண், கல், தூசு போகப் புடைத்துத் துப்புரவு பண்ணிக் கொடுப்பாள். முக்கால் ரூபா, ஒரு ரூபா வரைக்கும் அன்றாடம் கிடைக்கும். …………… பத்துப் பைசா வெத்தலை பாக்கு, குழந்தைக்குப் பத்துப் பைசாவுக்குத் தின்னத் தீனி – வாங்கிக் கொள்வாள்” என்று கூறப்படும் வரிகள் பத்து பைசா, 75 பைசா போன்ற காசுகள் வழக்கத்திலிருந்த காலக்கட்டத்தைக் காட்டுகின்றன. பறிமுதல் கதையில், “பிளஷா் கார் போகிறது. டிரான்ஸ்போர்ட் பஸ் ஒன்றையும் காணவில்லை. சக்கரத்திற்கு டயா் போட்ட கட்டை வண்டிகள், அங்கிங்காக வெறுமனேக் கிடக்கின்றன” என்று வரும் வரிகளில் பிளஷர் கார், டயா் போட்ட கட்டை வண்டிகள் போன்றவை புழக்கத்திலிருந்த காலகட்டம் காட்டப்படுகிறது.

    2. சமுதாயப் பின்புலம்

    சமுதாயப் பின்புலத்தில் குறிப்பிட்ட நிலவியல் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைநிலை, கலை, பண்பாடு, நம்பிக்கைகள், சடங்குகள், சாதி வகைகள், அரசியல், உறவுமுறைகள் போன்ற செய்திகள் வெளிக்காட்டப்படுகின்றன. மாதவன் கதைகளின் பின்புலம் மலையாள நாடு ஆனதால் மலையாள மக்களின் வாழ்க்கை நிலை குறித்த செய்திகளைச் சமுதாயப் பின்புலத்தில் வெளிக்காட்டியுள்ளார்.

    2.1. தோற்றம்

    “தமிழகத்தின் சொந்தக் கிராமத்து வெறுமையை விட்டு இங்கே வந்தபோது – புதிய உலகம், புதிய பாஷை, குளித்துக் கரையேறி வரும் கோபியர்கள் போலத் துல்ய அழகுடன் பெண்கள், சுத்தமான உடைகளுடன் கட்டைக் கர்வமான மீசையுடன் ஆண்கள்” – ‘மலையாளத்து மழை’ கதையில் வரும் இவ்வருணனையில் நாகரீகமான கேரள மக்களின் தோற்ற அமைப்பு வெளிக்காட்டப்படுகிறது. “ஒற்றை வெண்புடவை அணிந்துகொண்டு, புளியிலைக் கரை ஜரிகை நேரியலை இடைசுற்றி மார்மேல் எறிந்து, வாழைப்பூக் கையுறையில், பட்டு ரவிக்கையில் ஜதைமுலைக்கு முடிச்சிட்டு, நெற்றியில் சந்தனக் கீற்றணிந்து, நுனி முடிச்சிட்ட கூந்தலில் நீர்சொட்ட, குவித்த கரங்களால் அல்லி முத்திரை காட்டி ஸ்ரீமந் நாராயணனை வணங்கி நிற்கிறாள்” ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில் வரும் இவ்வருணனை கேரள நங்கையரின் ஆடை அலங்காரம் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.

    2.2. உணவுமுறை

    “பூஜையும், நமஸ்காரமும், நெற்றிச் சார்த்தும் முடிந்து வந்தபோது, உப்பும், தேங்காய்ப்பூவும் இட்டு – தாளிக்காத சிறுபயிர் அவித்ததும், காபியும் – தாலத்தில் கொண்டு வைத்து, பலகையிட்டாள் சுமங்கலாம்பிகை” (கொச்சு சுந்தரி ). “விடிந்தபோதே விருந்தாளியின் பிரயாணத்திற்கான ஆயத்தங்கள் கலகலத்தன. துல்லிதமான சம்பா அரிசி குழாய்ப்புட்டும், பப்படம் பொரித்து, துணைக்கு வாழைப்பழங்களையும் வைத்து காலை டிபனை மணக்கச் செய்திருந்தாள் பார்வதி” (விருந்து). “அங்கே மலையாளத்தான் ஓட்டல்லே சோறு எப்படியிருக்கும் தெரியுமா? ஒரு பருக்கையை எடுத்து உன்னை விட்டெறிஞ்சா நீ அய்யோ அம்மாதான்” (பூமழை). “மலையாளத்து விருந்து, இலை நிறைய தொடுகறிகள். இஞ்சி, நார்த்தங்காய், தயிர் கிச்சடி, அன்னாசிப் பழப்பச்சடி, வாழைக்காய் துவட்டல், முட்டைக்கோஸ் துவரன், உருளைக்கிழங்கு வடை கூட்டுக்கறி, அவியல், உப்பேரி, நேந்திரங்காய் வறுவல், படற்றிப்பழம், ……….ஆவிபறக்கும் சம்பா அரிசிச் சோற்றை ஒவ்வொரு இலையாகப் போட்டுக்கொண்டே வருகிறார்கள்” (வேஷம்) போன்ற வசனங்கள் மலையாள மக்களின் உணவுப் பழக்கத்தை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

    2.3. நம்பிக்கைகள்

    “மோட்டு வளையில் காகம் ஒன்று கர்ண கடூரமாகக் கரைந்துகொண்டிருக்கிறது. காகம் கரைந்தால் விருந்து வரும் என்பார்கள்” (விருந்து). ‘மலையாளத்துப் பெண்பிள்ளை மனசும் மழையும் ஒரே மாதிரிதான். வெயில் சிரித்துக் கொண்டேயிருக்கும். சட்டென்று ஒரு பக்கம் மேகம் கறுப்புக் கட்டி மழையைப் பொழியத் துவங்கிவிடும். திடீர் திடீர் மாற்றம்….” (மலையாளத்து மழை) போன்ற கூற்றுகள் மக்களின் நம்பிக்கைகள் பற்றிக் கூறுகின்றன.

    2.4. சாதி

    மலையாள இனத்தார் வேற்று இன மக்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்வதை மீசைப் பூனை, மிருதசஞ்சீவினி ஆகிய கதைகளில் காண்கிறோம். நாயர் இனத்து ஆண்கள் பிராமணப் பெண்களை மணமுடிப்பதாக இக்கதைகளில் காட்டப்படுகின்றன. ‘போற்றி’ எனப்படும் கோயில் பூஜை செய்யும் இனத்தார்; தனி மரியாதையுடன் நடத்தப்படுவதை ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில் காட்டப்பட்டுள்ளது. தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்களும், உயர்குலத்தைச் சார்ந்தவர்களும் உறவு கொள்வது விலக்கப்பட்டதை ‘நாலுபேர்’ கதை எடுத்துக் கூறுகிறது.

    2.5. அரசியல்

    கேரளாவில் நிலவும் அரசியல் நிகழ்வுகளின் சாயலையும் தம் கதைகளில் ஆசிரியர் காட்டுகிறார். பறிமுதல் கதையில், “விடிந்தபோது மாபெரும் இரைச்சலோடு ஒரு ஹர்த்தால் தலைவிரி கோலமாக வந்து நிற்கிறது. யாரோ கட்சித்தலைவன் ஒருவனை நடுரோட்டில குத்திக் கொலை செய்து விட்டார்களாம். யுனியன் சகாக்கள் கறுப்புக் கொடிகளும் கூச்சலுமாக வந்து விடியற்காலையில் திறந்த கடைகளை மூடச் சொல்லிவிட்டார்கள். ஏதோ டீக்கடைக்காரன், தயாரித்த பலகாரங்களை எல்லாம் என்ன செய்வது என்று கடை அடைக்க எதிரிப்புச் சொல்லியிருக்கிறான். வந்ததே வினை. அவனும், அவன் வண்டிப் பொட்டியும், மேஜை, நாற்காலிகளும் எல்லாம் தவிடுபொடி. கல்லை விட்டெறிதல், மோதல், கலாட்டா…… பயன் என்ன? இமை மூடும் நேரத்தில் நெடுக கடைத்தெரு பூராவும் பந்த்” (பறிமுதல்)

    “தேர்தல் காலத்தில் புத்தரிக்கண்டம் மைதானத்தில் தினம் தவறாமல் கட்சிக்காரர்களின் பொதுக்கூட்டம் திமிலோகப்படும். வடக்கே இருந்து பெருந்தலைவர்களெல்லாம் வந்து சொற்பொழிவாற்றுவார்கள்” (கோமதி). “ஸ்டேஷனுக்குத் திரும்புற இடத்தில், சட்டசபைக் கட்டடத்துக்கு முன்னாலே நிறைய கூட்டம். ஏதோ வேலை நிறுத்தமும், சத்தியாக்கிரகமும் நடக்கிறாப்பலே. விடிஞ்சதுதான் உண்டும். ‘வேலை கொடு, அல்லது சோறு கொடு’, ‘மானம் விற்றுச் சோறு வேண்டாம்…..’, ‘வேலைக்குக் கூலி கொடு’ என்றெல்லாம் மலையாளத்தில் எழுதிய அட்டைகளைத் தாங்கிய கூட்டம். ஆபீஸ் நேரம் துவங்கியதும், கூட்டத்தில் கோஷம் முழங்கும்” (பதினாலுமுறி)-போன்ற கூற்றுகள் அரசியல் நிலவரங்களை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.

    2.6. கலைகள்

    இலக்கியம், சினிமா, நாட்டியம் போன்ற கலைகளைக் குறித்த செய்திகளையும் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். “மலையாளப் படமாம், பேரென்ன தெரியுமா? ‘காட்ஃபாதர்’. முன்னால நாடகங்கள்ல எல்லாம் நடிச்சு போடு போடுன்னு போட்டுட்டு இருந்தாரே என்.என். பிள்ளைன்னு. அவர்தான் காட்ஃபாதரா நடிச்சிருக்கார். இப்போ 120 நாள் தாண்டியும் கூட்டம் தேரோட்டம் பார்க்க வந்தாப்பிலெ நெரிபடுது பாத்தியா….” (அரேபியக் குதிரை). “மறுநாள் அந்த ரசிகர்கள் வந்தபோது முற்றிலும் புதிய தோற்றத்தில் தெரிந்தான். மலையாள சினிமா நடிகன் மோகன்லால் மாதிரி வௌ்ளைநிற சில்க் ஜிப்பா, இழைய இழைய ஜரிகைப் பட்டு வேஷ்டி…..” (இலக்கியம் பேசி)
    “ரயில் வேகமாகப் போக ஆரம்பித்தபோது – கதகளியில் சபா பிரவேசம் போல டிக்கெட் பரிசோதகர் வந்தார்” (இந்திய குணம்). “படியேறியபோது மேஜை அழிக்கவுண்டார் உள்ளே, கல்லா நாற்காலியில் உட்கார்ந்திருந்தது, அசல் திருவாதிரை ஆட்டக்காரியின் நேரியல் முண்டு, இறுக்க ஜாக்கெட் எழிலே போல நடுவயசுக்காரி நாரி சிரோன்மணி ஒருத்தி….” (சாத்தான் திருவசனம்) போன்ற கூற்றுகளில் மலையாள சினிமா பெயர்கள், நடிகர்கள், கதகளி, திருவாதிரை போன்ற நடனக் கலைகள் போன்றவை குறித்துக் கூறப்பட்டுள்ளன.

    2.7. சடங்குகள்

    ‘வேஷம்’ கதையில் மலையாள முறைத் திருமணம் நடப்பது குறித்து எடுத்துக் கூறப்படுகிறது. “மணமேடையில் பெரிய கதகளி குத்து விளக்கு இரண்டு தேங்காய் எண்ணெய் துல்யத்தில், ஜாஜ்வல்யமாக ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அம்பாரமாக செந்நெல் நிறைந்த ‘பறையும்’, பட்டு சுற்றிய நீள ஆசனப் பலகையும் தயாராக இருந்தன. பிரமுகர்களாக நாலைந்து பேர் வந்து மணமேடைக்கு அருகில் நின்றனா். பட்டு வேஷ்டி, வௌ்ளை கப்கை சட்டை அலங்காரத்துடனிருந்த ‘வரனை’ மைத்துனன் கைப்பிடித்து அழைத்துவர வந்து நின்றான். மறுபக்கத்திலிருந்து ஜரிகை முண்டு, ஜாக்கட்டு அலங்காரத்துடன் ‘வது’வும் அழைத்து வரப்பட்டாள். இருவரும் அந்தப் பிரமுகா்கள் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு மணமேடையில் ஏறினார்கள். எடுத்துக் கொடுத்த பெரிய ரோஜாப்பூ மாலைகளை ஒருவருக்கொருவா் மாற்றிக் கொண்டார்கள். மாலைமாற்றிக் கொண்டதும் சபையோரைப் பார்த்து வோட்டுக் கேட்க வந்த வேட்பாளா்களைப் போல கும்பிட்டார்கள். உடனேயே ஒரு பெரிய மனிதா், பெண்ணிற்கான புடவையையும், ஜாக்கெட்டையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்ததை, ‘மணவாளன்’ கையேந்தி வாங்கி ‘மணவாட்டி’ கையில் தருகிறான். புடவைத் தாம்பாளம் ஏந்திய அவளை மற்ற பெண்கள் உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். இனி அவள் மணமகன் கொடுத்த புடவையை அணிந்துகொண்டு மணமேடைக்கு வருவாள். பிரமுகா்கள் வாழ்த்துவார்கள். முடிந்தது கல்யாணம்” என்று வரும் வருணனை திருமண நிகழ்வைக் குறித்துக் கூறுகிறது.

    ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில் நாகா்பிரதிஷ்டை எனும் சடங்கு நிகழ்வு பற்றிக் கூறப்படுகிறது. “அது மேடமாசத்தின் விஷூக்காலம். ஆலயத்தின் கோட்டை வட்டத்திற்கு வெளியே, கிராமங்களின் நாகா் பிரதிஷ்டை எனும் உற்சவம் கொடியேறியிருக்கிறது. நாகதேவதைகளின் கீர்த்தியினைப் பாடும் புள்ளுவர்கள், மெல்லிய கம்பி நரம்புகள் இழுத்துக் கட்டிய கை வீணைகளை இசைத்தவாறு காவுநடைகளில் கூடியிருக்கிறார்கள். மெல்லிய கொசு ரீங்காரம் போன்ற நரம்பிசை, காற்றில் மிதந்து சலன மனங்களில் ‘கிறுக்கு’ மூட்டுகிறது. சண்டை மேள ஓசைப் பிரளயத்தினிடையே, ஓங்கி வளா்ந்த பாலை மரத்தடியின் நாகா் பிரதிஷ்டை முற்றத்தில் – ரத்தினக் கம்பளங்கள் போல, கரித்தூளும், மஞ்சள்பொடியும் கலந்து எழுதிய கோலங்கள். அதன் நடுவில் கூந்தல் கலைய ஆராசனியல் ஆடும் கன்னிப் பெண்களிடையே கார்த்தியாயினியும் இருக்கிறாள்………… வெயிலின் உக்ரம் ஏற ஏற செண்டை வாத்யத்தின் பிரளய ஓசை திமிலோகப்படுகிறது. பத்மாசனத்தில் நட்டு வைத்த பதுமைகளைப் போன்ற பெண்கள், பிணைந்தாடும் உக்ர நாகங்களாக ஆடி மறிக்கின்றனா். கூந்தலும், மாரிக்கச்சைகளும் கலைகின்றன. கண்களில் சீறும் விஷநாகத்தின் ஆக்ரோஷம். முகத்தில், அநீதியை அறுத்தெறியச் சிவக்கும் உக்ரம். நாகா் மகிமையின் ஆக்ரோஷத்தை நேரில் காணும் பயபக்தியுடன் கிராம ஜனங்களின் கூட்டம் அசையாது நிற்கிறது” எனும் வருணனை நாகா் பிரதிஷ்டை எனும் மலையாளச் சடங்கு பற்றிக் கூறுகிறது.

    முடிவுரை

    ஒரு கதையின் முழு அமைப்பையும், அதன் ஏனைய சிறப்புகளையும் வாசகா்கள் முழுமையாக உணா்ந்துகொள்ள உதவும் கூறு பின்புலமாகும். ஆ.மாதவன் தம் கதைகளில் திருவனந்தபுர மாவட்டப் பின்புலத்தைச் சிறப்பாகப் படைத்துள்ளார்.

    பயன்பட்ட நூல்கள்

    1. நாவல் இலக்கியம், மா.இராமலிங்கம்.
    2. இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் – பி.வல்சலாவின் நெல் ஓர் ஒப்பீடு, ஜீவலதா
    3. புதிய விழிப்பு, அகிலன்.
    4. மாதவன் கதைகள், ஆ.மாதவன்.
    5. வட்டாரத் தமிழ் நாவல்களில் பின்புலம், முனைவா் பட்ட ஆய்வேடு, ஜோசப் சொர்ணராஜ்
    6. தொல். பொருள், இளம்பூரணம்.
    7. தமிழ் இலக்கியத்தின் காலமும், கருத்தும், ஆ.வேலுப்பிள்ளை.

    ====================================================================
    ஆய்வறிஞர் கருத்துரை(Peer Review):

    நவீன இலக்கியவாதிகளில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள சிறந்த படைப்பாளி ஆ.மாதவன். அவரது கதைகள் எல்லோராலும் பாராட்டப் படக் காரணமாக அமைவது அவரது கதைப் பின்புலம் தான். இதனை ஆய்வுப் பொருளாகக் கொண்டு ஆய்வாளர் அருமையாகக் கட்டுரையை ஆக்கியுள்ளார். சங்க இலக்கியங்களின் பின்புலத்தை இங்கு நினைவுபடுத்தியது கூடுதல் சிறப்பு. இயற்கைப் பின்புலத்தையும் சமூகப் பின்புலத்தையும் படைப்பின் வழி ஆய்ந்தது பொறுப்புணர்வோடு வெளிப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் என்றால் ஆ.மாதவன் என்கிற அளவிற்குத் தனது படைப்புப் பின்புலத்தை உருவாக்கியிருப்பார். அதனைச் சிறப்பாக எடுத்துக் கூறிய ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

    ====================================================================

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2
    (நீராடற்பருவம்)

    நீராடத் தேவையானவை வாசனைப் பொடிகளாகிய சுண்ணப்பொடிகளும், எண்ணெய் முதலானவைகளுமாகும். இந்த சுண்ணப்பொடிகளை இடிக்கும் நுணுக்கங்களும், முறைமைகளும் எத்தனை நுணுக்கமானவை! அது அத்தனை எளிதான காரியமல்ல!
    சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் சுண்ணப்பொடி என்பது பெண்கள் நீராடும்போது உபயோகிப்பதற்காகவும், நீராடியபின் இக்காலத்து நறுமணப்பொருட்கள் போன்று உடலில் பூசிக்கொள்வதற்காகவும் பெண்களால் மிகுந்த அக்கறையுடன் வீடுகளிலேயே உரலில் இடித்துத் தயாரிக்கப்பட்டது. சந்தனம், அகில், புனுகு, சவ்வாது, இவற்றைப் பலவிகிதங்களில் கலந்து பலவகைகளாகத் தயாரிப்பார்கள். சிலவகைகளில் பொன்துகள்களையும் சேர்ப்பர். வாசமிகு நறுமலர்களை (தாழம்பூவின் உள்ளிருக்கும் மகரந்தப்பொடி, உலர்த்திய சண்பக மலர்கள், மல்லிகை, காய்ந்தபின்பும் மணம்வீசும் மகிழம்பூ, நிறம்கூட்டச் செம்பருத்திப்பூ, மருத்துவ குணம் செறிந்த மருதோன்றிப்பூ ஆகியனவற்றையும்) உலர்த்திச் சேர்ப்பார்கள்.

    நீராடும்போது உடலில் தேய்த்துக் கொள்வதற்காக (தற்காலத்து நறுமணக் கட்டியான சோப்பு போல) பத்துவகைத் துவர்ப்புப் பொருட்களைக் கலந்து தயாரிக்கப்படும் பொடியினைத் ‘துவர்’ எனக்கூறுவார்கள்.

    ‘பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
    முப்பத்திரு வகை ஓமா லிகையினும்
    ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
    நாறிரும் கூந்தல் நலம்பெற ஆட்டி1..’ என

    மாதவி தன்னை ஒப்பனை செய்து கொள்ளுமுன் எவ்வாறு எத்தகைய நீரில் நீராடினாள் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கியுள்ளார்.

    பத்துத் துவர்களும் நாவல், கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர் என்றும், விரை ஐந்தும் கொட்டம் (நறுமணப்பொருள்), துருக்கம் (கஸ்தூரி), தகரம் (மயிர்ச்சாந்து), அகில், ஆரம் (சந்தனம்) எனவும் அறிகிறோம். இத்துடன் மேலும் முப்பத்திருவகை நறுமணப்பொருள்களையும் ஊறவைத்து நீராடுவர் எனத் தெரிகின்றது.

    மஞ்சளையும் இதில் சேர்ப்பது வழக்கு எனத் ‘திருப்பொற்சுண்ணத்’தில் இருந்து அறியலாம்.

    ‘மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி2,’ என்பன திருவாசகப் பாடல்வரிகளாகும்.

    மகளிர் வைகையில் நீராடுவதற்காக என்னவற்றையெல்லாம் செய்தனர் எனப் பரிபாடல் சுவைபட விளக்குகின்றது.

    சில மகளிர் நீராடுவதற்காக வேண்டி, சிவந்த குங்குமக் குழம்பினையும், சேறுபோன்ற அகிற் குழம்பினையும், பலவகையான கர்ப்பூரங்களையும் இதற்காகவே உண்டான சாந்து அம்மியில் இட்டு அவை தீக்கழங்குகள் போன்று சிவந்து சேர்ந்து ஒன்றாய் ஆகும்படி அரைத்தனராம். இவை நதிக்கரையில் செய்யப்படும் செயல்கள்.

    ‘செங் குங்குமச் செழுஞ்சேறு
    பங்கம் செய் அகில் பல பளிதம்
    மறுகுபட அறை புரை அறு குழவியின்
    அவி அமர் அழலென அரைக்குநர்3′ என்பன

    பரிபாடல் வரிகள்.

    மேலும் சிலர் கூந்தலில் பத்துவகைத் துவர்களையும் கொண்டு செய்யப்பட்ட பொடிகளைத் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகினர்; நறுமண எண்ணெய் தடவிய கூந்தலில் எண்ணெய் போகுமாறு நுண்ணிய அரப்புத்தூளை இட்டுப் பிசைந்தனர். இன்னும் சிலரோ, மாலை, சாந்து, மது, அணிகலன்கள் ஆகியவற்றையும் அந்த வைகை நீரில் இட்டுக் களித்தனர்.

    தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்
    எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்
    மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்
    கோலம் கொள நீர்க்குக் கூட்டுவார்.3…. என்பன

    பரிபாடல் வரிகள்

    இவ்வாறு பலவிதமாக நீராடிக் களிப்பதற்காகவே நதிகளுக்குச் சென்றனர் மகளிர். நறுமணச் சுண்ணங்களும் தேவைக்கேற்பத் தயாரிக்கப்பட்டு பூசிக்கொள்ளப்பட்டன. மகளிர் தமக்குப் பூசிக்கொள்ள மட்டுமன்றி, நெடுநாள் பயணம் சென்ற தலைவன் வீடுதிரும்புவதனை எதிர்பார்த்து, அவனுடைய நீராடலுக்காகவும் வாசனைப்பொடியைத் தயாரிப்பார்கள்.

    பொற்சுண்ணம் இடிப்பதற்குப் பலவிதமான வாசனைப்பொருட்களை அதிகமாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இரண்டு அல்லது நான்குபெண்கள் எதிரெதிராக நின்றுகொண்டு இடிப்பார்கள். உரலில் உள்ள குழியோ சிறியது. ஒரு உலக்கைதான் போகமுடியும்; நான்குபேர் மாற்றிமாற்றி உலக்கைபோட்டு இடிக்க வசதியாக ஒரு தாளகதியை அமைத்துக்கொண்டு, இடிக்கும் சிரமம் தெரியாதிருக்கப் பாடல்களையும் இதற்காக இயற்றிக் கொண்டனர். இதற்குத் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் வள்ளைப்பாட்டு (உலக்கைப்பாட்டு) என்றே பெயர் இருந்தது. இருபெண்கள் நான்கு கைகளால் மாற்றிமாற்றி உலக்கை போடும்போது வளையல்களும் மூச்சும் இழைந்தொலிக்கப் பண்ணிசை உண்டாகுமே அதற்கு வள்ளைப்பாட்டு எனப்பெயர்.

    ஒருவீட்டில் திருமணம் நிச்சயமானவுடன் செய்யும் முதல் மங்கலச்செயல் மஞ்சளை நிறையச்சேர்த்து வாசனைப்பொடி இடிப்பதுதான். தற்காலத்திலும் கூட இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனைக்கண்ணுற்ற மாணிக்கவாசகருக்கு ஈசனுடைய அபிடேகத்திற்கு பொற்சுண்ணம் இடித்துப்பார்க்கும் பேரவா எழுகின்றது. தனது இறையனுபவங்களைச் சுண்ணமிடிக்கும் பாடல்களாக்கி பெண்களுக்காகவே இயற்றுகிறார். அப்பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிவபிரானுக்காகப் பொற்சுண்ணம் இடிக்கின்றனர்.

    ‘அழகான முத்துமாலைகள், மாவிலைத்தோரணங்களல் வீட்டை அலங்கரித்து, நவதானியங்களைக் கிண்ணங்களில் நிரப்பி முளைப்பாரி வைத்து, அதன் நடுவே, தூபம், தீபம் அனைத்தையும் வையுங்கள் பெண்களே! பல்லாண்டு பாடுங்கள், கவரி வீசுங்கள்; அப்பன் திருவையாறனைப் பாடி நாம் பொற்சுண்ணம் இடிப்போம்,’ என்று அனைவரையும் அழைத்துச் சுண்ணமிடிக்கத் தொடங்குகிறார்கள்.

    ‘முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
    முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
    ………………………………………….
    அத்தன் ஐயாறன்அம் மானைப்பாடி
    ஆடப்பொன் சுண்ணம் இடித்தும் நாமே4′

    இந்தச் சுண்ணப்பொடிகள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களிலும் இடம்பெற்றுத் திகழும் அருமையும் ஒரு அழகுதான். அக்காட்சியை நாமும் காணவேண்டாமா?

    சின்னஞ்சிறுமி. விளையாட்டில் முனைப்பாக இருப்பவளை நீராட வரும்படி ஆசைகாட்டுகிறார்கள் தாதியர். “உன் நீராடலுக்காக எத்தனைவிதமான சுண்ணப்பொடிகள் கொண்டுவந்திருக்கிறோம். தேன்சிந்தும் மலர்களைச் சேர்த்துக்கலந்த ஒரு சுண்ணக்கலவை; களபம் எனும் சந்தனம், கஸ்தூரி மஞ்சள் முதலானவை சேர்த்த இன்னொரு சுண்ணம்; பச்சைக் கர்ப்பூரம் சேர்த்த குளிர்ச்சியான ஒரு சுண்ணக்கலவை. தனிச் சந்தனக்கலவை ஒன்று; பலவிதமான சாந்துக்குழம்புகள். வண்டுகள் தேனை அருந்தி ரீங்காரமிடும் மலர்மாலைகள்! வா குழந்தாய்! வந்து பாலாற்றில் துளைந்து நீராடுக!” என ஆதிபுரி (திருவொற்றியூர்) வடிவுடையம்மையை நீராடத் தாயும் சேடியரும் அழைப்பதாகப் புலவரொருவர் பாடியுள்ளார்.

    ‘கள்ளோ டலர்ந்தநறு மென்மலர்ச் சுண்ணமும்
    களபப் பசுஞ்சுண்ணமும்
    கர்ப்புரச் சுண்ணமும் கலவையும் சுண்ணமும்
    கமழ்கின்ற பலசாந்தமும்.5..’

    நாம் உயர்வாக எண்ணும் பலபொருள்களையும் செயல்களையும் இறைவனுக்காகவே அர்ப்பணிப்பதில் உண்டாகும் பேரானந்தத்திற்கு ஈடுஇணையில்லை அன்றோ?

    சிறுமியாகிய அன்னை திருநிலைநாயகி நீராடுவதற்காக மேலே நாம் கண்டவாறு தயாரிக்கப்பட்ட சுண்ணப்பொடியை, தூவினால் நிலத்தில் விழுமுன்பே வண்டுகள் சுழன்று விரைந்துண்ணும் தரம் உயர்ந்த சுண்ணப்பொடியை அரம்பையர்களும், மதுநிறைந்த மலர்களை இந்திராணியும், துகில், காம்பு நேத்திரங்கள் ஆகிய பட்டாடை வகைகளைப் பல மகளிரும் ஏந்தி நிற்கின்றனராம். முகவாசம் எனப்படும் வெற்றிலை, மற்றும் தாம்பூலம், சந்தனம், மானின் கத்தூரி ஆகியவற்றைக் கலைமகளும், இரத்தினம், பவளம் ஆகிய நவமணிகளாலான அணிகலன்களை மலர்மகளான இலக்குமியும் ஏந்தியவாறு உனது ஏவலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்…’ என்பது புலவரின் கூற்று.

    தூவினில மேல்விழ விடாதுவரி வண்டுகள்
    சுழன்று துய்க்குஞ் சுண்ணமொய்
    சுரிகுழ லரம்பையர்கள் மதுமலர்க ளிந்த்ராணி
    துகில்காம்பு நேத்திரங்கள்
    காவிமுக வாசதாம் பூலாதி சந்தனம்
    கத்தூரிமா னின்மதம்
    கலையின்மக ளரதனம் பவளமுதல் நவமணிக்
    கலன்மலரின் மகளேந்தி நின்று
    ஆவலின் ஏவல்வழி நிற்கிறார்6…….  (சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்)

    ஈண்டு புலவர், அன்னைக்காகத் தயாரிக்கப்பட்ட சுண்ணத்தின் தரத்தைப் புகழ்ந்து கூறுவது சீவக சிந்தாமணியில் காணும் கருத்தை ஒத்திருப்பது நயக்கத்தக்கது.

    சீவக சிந்தாமணியின் குணமாலையார் இலம்பகத்தில், அவளுக்கும் சுரமஞ்சரிக்கும் இடையேயான சுண்ணம் தயாரிக்கும் போட்டியில் எவரின் சுண்ணம் தரத்தில் உயர்ந்ததெனக் காணவேண்டியபொறுப்பு சீவகனிடம் அவன் திறமையை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்டது. அவன் இருவரின் சுண்ணப்பொடிகளையும் சிறிது அள்ளி விண்ணில் தூவி விடுகிறான். குணமாலையின் சுண்ணப்பொடி நிலத்தில் விழும்முன்பே வண்டுகள் பாய்ந்தோடிவந்து அதனை உண்ணுகின்றதைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் கூக்குரலிட்டனர். சுரமஞ்சரியின் பொடிகள் நிலத்தில் விழுந்தன. வண்டுகள் அதன் பக்கமே நெருங்கவில்லை! “வண்டுகள் உண்ட பொடி (குணமாலையுடைய பொடி) நல்ல கோடைக்காலத்தில் இடித்துத் தயாரிக்கப்பட்டது; மற்றது (சுரமஞ்சரியுடையது) குளிர்ச்சியுடைய மழைக்காலத்தில் தயாரிக்கப்பட்டது. அதனால் சிறிது தரம் தாழ்ந்தது,” எனச் சீவகன் விளக்கினான்.

    நல்ல சுண்ணம் இவைஇவற் றில்சிறிது
    அல்ல சுண்ணம் அதற்கென்னை என்றிரேல்
    புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ணம்
    அல்ல சீதம்செய் காலத்தின் ஆயவே.7 (சீவக சிந்தாமணி- குணமாலையார் இலம்பகம்)

    இதனையே புலவரும் பிள்ளைத்தமிழ் பாடலில் எடுத்தாண்டுள்ளார்.

    தாயும் தோழியரும் நீராட அழைத்துச் செல்வதென்னவோ சிறு பெண்மகவினைத்தான். ஆனாலும் (இலங்கை) சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் உலகிற்கே அன்னையான பராசக்தியையே அச்சிறுமியிடம் தமது உள்ளுணர்வால் தரிசிக்கிறார்.

    புவனேசுவரியன்னையின் நீராடல் விளையாட்டின்போது, நிகழும் விளையாட்டொன்றினை வருணனையாக்கி, தேவர்கள் அதனை தேவிக்குச் செய்யும் கனகாபிஷேகமாக்கிச் சிறப்பித்துக் கூறுகிறது இப்பாடல். சில சேடிப்பெண்டிர் நீரினுள் மூழ்கி ஒளிந்து கொள்கின்றனர். தாமரையின் அடித் தண்டுகளை அறுத்து அவற்றைத் தமது வாயில் வைத்துக் குழல்போல ஊதி விளையாடுகின்றனர். அவர்கள் ஊதுவதனால் உள்ளிருக்கும் காற்று மேலெழுந்து வெளிப்படும்போது, அவற்றினுள்ளிருக்கும் மஞ்சள்நிற மகரந்தத் தாதுகளை நீராடும் அன்னைமீது பொழியச் செய்கின்றதாம். இது அன்னைக்குக் கனகாபிஷேகம் செய்வது போலுள்ளது என்கிறார். கருத்திற்கினிய நீர்விளையாட்டொன்றினை அன்னை தெய்வத்திற்குச் செய்யும் சீராட்டாகவும் அமையுமாறு கற்பனை செய்தது சிறப்பாக அமைந்துள்ளது.

    சேறாடு செந்நெலம் கழனிசூழ் சுதுவையில்
    சீர்த்தசங் களைப்பதிபெறும்
    திரையாடு தீர்த்திகைச் சீராட விளையாடு
    சேடியர் குதூகலத்தால்
    நீறாடு மகரந்த நிறைகமல நீள்தண்டு
    நீரிடைப் புகுந்தறுத்து
    நிகரில்வாய் வைத்தூத………
    ………………………………………
    பெருமையொடு பொன்தூவி அன்னையை முழுக்காட்டு
    பெரிய கனகாபிஷேக
    வீறாடு விளையாட்டின் மகிழ்வாடும்8……………

    பின்னும் அன்னையை மோன ஞானவெள்ளம் மூழ்கி இருப்பவள் எனவும் வருணனை செய்கிறார்; அதாவது தேவியின் கருணைவெள்ளத்தில் மூழ்கியிருக்கும் யோகியர் தமது மூலாதாரத்தில் மூண்டெழும் குண்டலினியைச் சுழுமுனை நாடி வழி மேலேற்றுகையில் அவர்கள் சிரசினின்றும் ஊற்றெடுக்கும் அமிருதப் பிரவாகம் அமிர்தகங்கை எனப்படும். அது சுழுமுனை வழியே பாய்ந்து ஆறாதாரங்களிலும் தேங்கும். அவையனைத்தும் அடியார் உள்ளத்தே உள்ள தீர்த்தங்களாகும்.

    கள்ளத்த மாயவியல் கைகழுவி நின்னருட்
    கருணைக்கை ஏறுமுரவோர்
    காண்பினிய சுழுனைவழி மேலேறு கடவுண்மாக்
    கங்கைபுகு சுனைகளாக
    உள்ளத்தி னுள்ளபல தீர்த்தங்க ளுறமூழ்கி
    உலவாவின் புறுதம்சரதம்.9.’ (புவனேசுவரி பிள்ளைத்தமிழ்)

    திருமூலரும் இவற்றில் மூழ்குவோர் புண்ணியராவர் என்கின்றார்.

    ‘மறியார் வளைக்கை வருபுனற் கங்கை
    பொறியார் புனல் மூழ்கப் புண்ணியமாமே10′ (திருமந்திரம்).

    புவனேசுவரி அன்னையை அவள் வைதிகத்தின் வேர் எனப் பெருமைப்படுத்துகிறார். இவள் நாம் வழிபடும் பராசக்தியே என உணர்ந்த அடியாரின் நிலையில் நின்றும் இப்புலவர் பரவசமடைகிறார்.

    சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழானது இராமேச்சுவரத்தில் உறையும் அம்பிகைமீது பாடப்பட்டது. பிள்ளைவரம் வேண்டுவோர் இராமேச்சுவரம் சென்று வேண்டிக்கொள்வது மரபு. இப்பிள்ளைத்தமிழ் தேவிகோட்டை ஜமீந்தாரும் பெரும்புகழ் வள்ளலுமாகிய அருணாசலஞ் செட்டியாரவர்களுக்கு ஒரு குழந்தை உதிக்கவேண்டி, மற்றவர்கள் அருணாசலக் கவிராயரை வேண்டிக்கொள்ள, அவரால் இயற்றப்பெற்றது. புலவரின் வாக்கு விசேடத்தாலும், அம்மையின் அருளும் கூடிட, ஜமீந்தருக்கு, அழகான ஆண்மகவு பிறந்தது என அறிகிறோம்.

    இராமேசுவரம் அமைந்துள்ள தீவில் உள்ளும் வெளியிலுமாக அறுபத்துநான்கு புனித தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. கந்தபுராணம் இவற்றுள் இருபத்துநான்கை மிக முக்கியமானவையெனக் கூறுகிறது. இந்தப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வெவ்வேறு விதமான பாவங்களைத் தொலைக்கலாம். இவற்றுள் பல இராமநாதசுவாமியின் திருக்கோவிலின் உட்புறமே உள்ளன.
    சேதுபர்வதவர்த்தனி அம்மையை நீராட அழைக்கும் புலவர், மிகப்பொருத்தமாக, மானிடர்களாகிய நாம் நீராட உகந்த சில புனித தீர்த்தங்களின் கதையை அழகுற இப்பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். அவை என்னவென்று பார்க்கலாமே!

    பறந்து சென்று ஊறு விளைவிக்கும் மலைகளின் இறகுகளை அரிந்தவனின் பிரமகத்திப்பாவம் தொலையுமாறு செய்வது சீதைகுண்டமாகும். கோடி வேதப் பிராமணர்களைக் கொலைசெய்த பாவத்தைக் குறைப்பது பிரமகுண்டம் எனும் தீர்த்தமாகும்; இராமன் பிரதிட்டை செய்த மணல் இலிங்கத்தை வாலினால் ஈர்த்து, முடியாது வாலிற்றுப்போய் அநுமன் வீழ்ந்த இடத்தில் ஊற்றெடுத்தது அநுமகுண்டம் எனும் தீர்த்தமாகும். இதில் ஊற்றெடுக்கும் நீரை எடுத்து அதில் நீராடுவோருக்கு மகப்பேற்றினை அடைவிக்கும் அநுமகுண்டமிதுவாகும். இத்தகைய தீர்த்தங்களிலாடுவோர் எண்ணிய நற்பயன்களைப் பெறுவர் என்று இயம்பும் இராமேச்சுவரத்தில் இராமநாதசுவாமியாகிய ஈசனின் பக்கம் இருக்கும் இளமயில் என அன்னை பர்வதவர்த்தினியை ஏற்றுகிறார். “நீ தமிழ்முனிவனாம் அகத்தியனின் மலையான மலயம் எனப்படும் பொதியமலையில் இருந்து உற்பத்தியாகும் பொருநைவெள்ளத்தில் நீராடியருளுக! உண்மையன்பர் தொழும் பர்வதவர்த்தனியே நீராடுக!” என வேண்டுவதாக அமைந்துள்ள பாடலிது.

    ‘குன்றிற கரிந்தவன் பிரமகத் திப்பவம்
    குறைசெய்த சீதைகுண்டம்
    ………………………………………………
    வென்றிபெறு தமிழ்முனிவன் மலயநின் றெழுபொருநை
    வெள்ளநீ ராடியருளே
    மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
    வெள்ளநீ ராடியருளே.11′

    காஞ்சி காமாட்சியம்மை பிள்ளத்தமிழில் நீராடல் பருவத்தில் புலவரின் கற்பனை அற்புதமாக விரிகின்றது. ‘ஆகாயமே அழகான பட்டுக் கருநீலச் சேலையாகி இருக்கின்றது. அதில் பதித்த நல்வைரங்களாகத் தாரகைகள் மின்னுகின்றன. இந்தச்சேலைக்கு விலைகூறவும் இயலுமோ? இத்தகைய விலைமதிப்பற்ற சேலையினை நீ விரும்பி அணிய வேண்டுமென எட்டு மகளிர்களாகிய அட்ட இலக்குமிகள் ஏந்தி நிற்கின்றனர்.

    ‘ஈரம் நிரம்பிய கடல் நீரை முகந்து கொண்டெழும் கருமுகிலின் கரையாக வானவில் ஒளிர்கின்றது. மழைக்கு இறைவனாகிய இந்திரன், கடற்கடவுள் வருணன், தண்மையான காற்றின் இறைவனெனப்படும் மாருதக்கடவுள் ஆகியோரின் அருமைப் பத்தினிகள் தங்கள் தலைவியாகிய நீ அணிந்துகொள்ள அத்தகைய வானவில் கரையிட்ட மேகமாகிய கருநீலச் சேலையைக் கையில் ஏந்திக்கொண்டு, கச்சி எனும் காஞ்சிமாநகரின் தடாகக் கரையில், நீ நீராடி வருவதற்காகவும் உனது கண்ணசைவின் ஏவலுக்காகவும் காத்திருக்கின்றனர். நீயும் நீராடி அருளுக! முக்கண்ணனின் இடப்பாகத்தைப் பகிர்ந்து கொண்டவளே! நீராடியருளுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடல் மிகுந்த நயம் வாய்ந்தது.

    இயற்கையின் எழிலார்ந்த அமைப்பான கருமுகிலிலும், நீலக்கடலிலும், வானவில், சந்திரன், தாரகைகள் இவற்றிலும் இறைமையைக்கண்டு, அவை இறைமையின் அமைப்புகள், அணிகலன்கள் எனக்கொண்டு இரசனையுடன் வழிபட்டு வந்தனர் நம் முன்னோர்கள். கருமுகிலைக் காமாட்சி அம்மைக்கான அழகானதொரு சேலையாகக் கண்டு களிப்பெய்தும் அடியாரின் கருத்தில் பூத்தவொரு மலர் இப்பிள்ளைத்தமிழ்ப் பாடல். இயற்கையை இறைவடிவாகக் கண்டு போற்றிப்பரவும் வழக்கு இன்றுமே தொடர்கின்றது.

    விண்பட் டாடை யதனுடலில்
    மின்னும் பொறிகளு டுவமைத்த (பொறி- பொட்டு)
    விலையில் தானை உகந்தருள (தானை- சேலை)
    வேண்டு மெனுமெண் மலர்மகளிர்
    ஒண்பா வாடை எடுத்தெழவும்
    ஓதக் கலிங்கக் கருமுகிலின்
    ஒருபால் வானச் சிலையருகிட்
    டும்பர் கோன்மா மழைக்கிறைவன்
    தண்ணென் மாரு தக்கடவுள்
    தங்கள் அருமைப் பத்தினியர்
    தலைவிக் கெனவத் துகில்விரித்துத்
    தழையும் கச்சித் தடக்கரையில்
    கண்ணே வற்குக் கருத்திருத்தக்
    கடிநீர் ஆடி யருளுகவே!
    கண்மூன் றுடையா ரிடம்பகிர்வோய்
    கடிநீர் ஆடி யருளுகவே!12

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதத் தலங்களுள் முதன்மையான தலமாக விளங்குவது காஞ்சி. இங்குறையும் காமாட்சியம்மை மீது இப்பிள்ளைத்தமிழ் நூலானது காஞ்சி இரா. குப்புஸ்வாமி அவர்களால் 1959-ல் இயற்றப்பெற்றது.
    இதுபோன்ற பல பிள்ளைத்தமிழ் நூல்களும், குழந்தைப் பருவத்தைப் போற்றிக் கொண்டாடும் முறைமையில் தமது விருப்பமான தெய்வங்களைக் குழந்தையாகக் கொண்டும், அவர்கள் தெய்வத்தன்மையை மறவாது போற்றியும் கற்பனை வளத்துடன் பாடப்பட்டுள்ளன என்பது வியக்கத்தக்கதாம்.

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம்
    2. திருவாசகம்- திருப்பொற்சுண்ணம்.
    3. பரிபாடல்- பாடல் 10-
    4. திருவாசகம்- திருப்பொற்சுண்ணம்.
    5. ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
    6. திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
    7. சீவக சிந்தாமணி- குணமாலையார் இலம்பகம்
    8. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
    9. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
    10. திருமந்திரம்
    11. சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்
    12. காஞ்சி காமாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • அழகான அபத்தங்கள்

    அழகான அபத்தங்கள்

    -சேஷாத்ரி பாஸ்கர்

    Picture courtesy – star2.com

    இருவரும் வாள் வீச ஆரம்பித்து
    முப்பது வருடங்கள் ஓடிவிட்டன!
    உன் அகந்தை உனக்குக் கேடயம்,
    என் பொய் எனக்கு!

    ஓர் நாள்
    என் வாளும் துருப்பிடித்து உடைந்தது!
    ஆனாலும் சண்டை நிற்கவில்லை!
    ஆதாரம் என்னவென
    இருவரும் யோசிக்கவில்லை
    இளமை எஃகுக் கோட்டை
    சட்டெனச் சரிந்தது!

    துரத்தும் சிந்தனை
    மரணமாய்ப் போனது
    உதிரும் முடியெல்லாம்
    வெள்ளையாய் ஆனது
    சுயம்
    இன்றும் சுழற்றிப் போட்ட
    பம்பரமாய்ப் போனது!
    காலமும் கரைந்து,
    கால்களும் தளர்ந்தன!

    காதலொன்று கனியவில்லை,
    கைப்பிடியும் இறுகவில்லை,
    நாம் அமர்ந்த மரம்,
    இன்றும் நிழல் தருகிறது!
    நீர் அருந்திய சுனையில்,
    இன்றும் நம் தடம் உண்டு!
    அன்றைய தென்றலே
    இன்றும் சுற்றிச் சுற்றி வருகின்றது
    மூளை இடுக்கில் அமர்ந்தன
    தெரியா நினைவுகள்!

    வண்டுகள்தாம் மறைந்துவிட்டன
    ஆனாலும் ரீங்காரம் இன்னும் செவிகளில்…..

    Share
  • அனைவருமே ஆசை கொள்வோம்!

    -மகாதேவஐயர் ஜெயராமசர்மா… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

    பணத்தோடு வாழுகிறார் படிப்போடு வாழுகிறார்
    பட்டம்பல பெறுவதற்கும் திட்டம்பல போடுகிறார்
    இனம்பற்றி பேசுகிறார் எங்கள்மொழி என்கின்றார்
    ஈவிரக்கம் தனையவரும் எண்ணிவிட மறுக்கின்றார்!

    மாநாடு பலசெய்வார் மலர்கள் வெளியிடுவார்
    மேடைதனில் ஏறிநின்று விறுவிறுப்பாய் பேசிடுவார்
    உலகமதில் உன்னதத்தை உருவாக்க வேண்டுமென்பார்
    உள்ளமதில் உண்மைதனை இருத்திவிட மறுக்கின்றார்!

    நீதிநூல்கள் அத்தனையும் பாடமாக்கி வைத்துள்ளார்
    பாடலெலாம் பக்குவமாய் பலருக்கும் காட்டிடுவார்
    ஆதிமுதல் அந்தம்வரை அறங்காக்க வேண்டுமென்பார்
    அழுதுநிற்பார் துயரகற்ற அவரெண்ண மறுக்கின்றார்!

    எத்தனைதான் படிப்பிருந்தும் எவ்வளவு பணமிருந்தும்
    எண்ணமதில் நல்நினைப்பு இல்லாமல் என்னபயன்
    ஆரவாரம் தனையொழிப்போம் ஆணவத்தை அகற்றிநிற்போம்
    அன்புகொண்டு பார்த்துவிட அனைவருமே ஆசைகொள்வோம்!

    Share
  • அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியலாளர் – சர் ஐசக் நியூட்டன்

    அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியலாளர் – சர் ஐசக் நியூட்டன்

    -மேகலா இராமமூர்த்தி

    இயற்கையைக் கூர்ந்து நோக்குவதிலும், ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்குவதிலும், புதிய பொருள்கள் படைப்பதிலும் இளமை முதலே ஊக்கமும் உற்சாகமும் கொண்டவராய்த் திகழ்ந்திருக்கின்றார் புவிபோற்றும் அறிவியல் அறிஞரான சர் ஐசக் நியூட்டன்.

    இங்கிலாந்தின் லிங்கன்ஷையர் (Lincolnshire) எனும் மாகாணத்திலுள்ள உல்ஸ்தோர்ப்பு (Woolsthorpe) எனும் குக்கிராமத்தில் 1642-ஆம் ஆண்டு திசம்பர் 25-ஆம் நாளன்று நியூட்டன் பிறந்தபோது, அளவில் சிறிய பலவீனமான குழந்தையாகவே இருந்திருக்கின்றார். இந்தக் குழந்தை நெடுநாள்களுக்கு உயிரோடு இருக்குமா என்று அனைவரும் கவலைப்பட்ட நிலையில், பின்னாளில் அவர் சர் ஐசக் நியூட்டன் எனும் பெயரோடு அறிவியல் அறிஞர்கள் உலகில் துருவ நட்சத்திரமாக ஒளிர்ந்தார் என்பது வியப்பினும் வியப்பே!

    தாம் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தந்தையை இழந்த நியூட்டன், பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையில்தான் தம்முடைய பள்ளிக் கல்வியை கிராந்தம் (Grantham) நகரிலிருந்த கிங்’ஸ் பள்ளியில் (King’s School) முடித்தார். பிறகு 1661-இல் தம்முடைய 18-ஆவது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டிரினிட்டி கல்லூரியில் (Trinity College, Cambridge University) கல்வியைத் தொடர்ந்தார்.

    1665-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் பிளேக் (Plague) நோய் பரவியதால் டிரினிட்டி கல்லூரியைத் தற்காலிகமாக மூடிவிட்டார்கள். அதனால் சிறிதுகாலம் தம் சொந்த ஊரான உல்ஸ்தோர்ப்பு வந்து தங்கியிருந்தார் நியூட்டன். அப்போது அவர் தோட்டத்தில் உட்கார்ந்துகொண்டு ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தபோது ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு பழம் கீழே விழுந்ததைக் கவனித்தார். இந்த ஆப்பிள் பழம் மேல்நோக்கிச் செல்லாமல் கீழே விழுவானேன்? இதன் காரணமென்ன? என்று சிந்திக்கத் தொடங்கினார். அதன் விளைவாய் அவர் கண்டறிந்தவையே புவியீர்ப்பு விசையும் அதுசார்ந்த விதியும் (Newton’s law of gravitation).

    1669-இல் தம் முதுகலைப் படிப்பைக் கணிதத்துறையில் முடித்த நியூட்டன் பின்னர், தாம் பயின்ற டிரினிட்டி கல்லூரியிலேயே கணிதத்துறைப் பேராசிரியராய்ப் பணியில் அமர்ந்தார்.  ஈருறுப்புத் தேற்றத்தை (binomial theorem) உருவாக்கினார்; அதுவே பின்னாளில் கால்குலஸ் (Calculus) எனும் கணிதப் பிரிவாக வளர்ச்சியுற்றது.  

    விண்வெளி ஆய்வுகளிலும் ஈடுபட்ட நியூட்டன், வெண்மையாகக் கண்ணுக்குத் தோன்றும் சூரிய கிரணத்திலே பல வண்ணமுள்ள கிரணங்கள் நிறைந்திருக்கின்றன என்பதையும் அவற்றில் ஊதா நிறந்தான் அதிக அளவிலே இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தார். எட்டு அங்குல நீளமுள்ள தொலைநோக்கிக் கருவியொன்றையும் (Telescope) அவர் உருவாக்கினார். விண்வெளிப் பொருள்களை மிகத்துல்லியமாக அறிய உதவிய இத்தொலைநோக்கி, பலரையும் கவர்ந்தமையால் அறிவியல் அறிஞர்கள் நிறைந்திருந்த இங்கிலாந்தின் இராயல் சொசைட்டி (Royal Society) எனும் அமைப்பு நியூட்டனை உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டது. நியூட்டனுக்கு முன்பே இத்தாலிய வானியல் அறிஞரான கலிலியோ (Galileo Galilei) தொலைநோக்கியை உருவாக்கி வானியல் ஆய்வுகளை செய்திருந்தார் என்றபோதிலும் நியூட்டனின் ஆராய்ச்சி அதனை மேலும் ஒழுங்குபடுத்தித் துல்லியமாக்கியது எனலாம்.

    தொலைநோக்கி மட்டுமல்லாது வானில் தோன்றி மறையும் வால்நட்சத்திரங்களை (Comets) ஆராய்ச்சி செய்து அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய கருவிகளையும் நியூட்டன் கண்டுபிடித்தார்.

    இயற்கைத் தத்துவத்தின் கணிதக் கொள்கைகள் (The mathematical priniciples of natural Philosophy) எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார். நியூட்டனின் இயக்க விதிகள் (Newton’s laws of motion) இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மிகவும் புகழ்வாய்ந்த அந்த மூன்று விதிகளும் இன்றளவும் பள்ளி, கல்லூரிகளில் இயற்பியலின் முக்கியக் கோட்பாடுகளாகக் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    1689-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு (Parliament) தெரிந்தெடுக்கப்பட்டார் நியூட்டன். சுமார் இரண்டாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்து அமைதியாய்த் தொண்டாற்றியிருக்கின்றார் அவர்.

    மறுதேர்தல் நடப்பதற்காக நாடாளுமன்றம் கலைந்துவிட்டதனால் மறுபடியும் தம்முடைய ஆசிரியப் பணியை டிரினிட்டியில் தொடர்ந்தார். கணிதம் மற்றும் அறிவியல் ஆய்வுகள் தொடர்பாகப் பல அறிஞர்களோடு மடலாடல் நடத்தினார். அவைகுறித்துப் பல குறிப்புகள் எடுத்துவைத்திருந்த நியூட்டன் அவற்றைத் தொகுத்து ஒரு பெரிய நூலாக வெளியிட எண்ணியிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. அரிய குறிப்புகள் அடங்கிய தம் கையெழுத்துப் படியை தம் எழுதுமேசையின்மீது வைத்துவிட்டு எங்கேயோ வெளியில் சென்றிருந்தார் நியூட்டன். அவ்வமயம் அம்மேசைமீது ஏறிய அவருடைய வளர்ப்பு நாயான ‘டார்லிங்’ அங்கே எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியைத் தட்டிவிட, கையெழுத்துப் படி எரியத்தொடங்கியது. பெரும்பகுதி எரிந்தபின்பே உள்ளேவந்த நியூட்டன் அதைக் கண்டு, ”ஐயோ! டார்லிங் என்ன காரியம் செய்துவிட்டாய்?” என்று அலறித் துடித்திருக்கின்றார். பலனொன்றுமில்லை! மீண்டும் அவற்றை அவர் எழுதவேண்டிய அவலநிலையே வாய்த்தது. ஊழிற் பெருவலி யாவுள?

    நியூட்டன் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் சார்ல்ஸ் மாண்டேகு (Charles Montague) என்ற அறிஞருடைய நட்பு அவருக்கு ஏற்பட்டது. மாண்டேகு அரசாங்கத்தின் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்தார். நியூட்டன்மீது தமக்கிருந்த அளப்பரிய அன்பின் காரணமாக அரசாங்கத்தில் அவருக்கு ஓர் நல்ல பணியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று விரும்பிய மாண்டேகு, நாணயங்கள் அச்சடிக்கின்ற சாலையில் (Mint factory) ஓர் பொறுப்பான பதவியில் நியூட்டனை அமர்த்தினார். நியூட்டனும் அப்பதவியை ஏற்று அங்கே பல சீர்திருத்தங்களைச் செய்தார். போலி நாணயங்கள் வெளிவராதபடி தடுத்துநிறுத்தினார்.

    சிறிது காலத்தில் அந்த எந்திர சாலைக்குத் தலைவராகவே நியூட்டன் நியமிக்கப்பட்டார். பொறுப்புமிக்க இப்பணியில் இருந்தபோதும் தம் இயல்புக்கு ஏற்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதையும் நியூட்டன் நிறுத்தினாரில்லை. நாள்காட்டியில் சில திருத்தங்கள் செய்தார்; உலோகங்களை உருக்கிவார்ப்பதில் பல புதிய நடைமுறைகளை உருவாக்கினார். தவிர, எந்திர சாலையில் நீண்ட காலமாக நடந்துவந்த ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். (ஊழல் ஒரு தனிநாட்டுக்குச் சொந்தமானதன்று! அஃது உலகளாவியது என்பது இதன்மூலம் நிரூபணமாகின்றது.)

    இக்காலக்கட்டத்தில் நியூட்டனின் புகழ் உலகெங்கும் பரவத்தொடங்கியது. இராயல் சொசைட்டியார் தங்கள் சங்கத்தின் தலைவராக நியூட்டனைத் தேர்ந்தெடுத்தனர். அரசாங்க ஆதரவும் அவருக்குக் கிடைத்தது. 1705-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஆன் மகாராணியார் (Queen Anne) தம் பரிவாரங்களோடு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்து ‘சர்’ பட்டத்தை நியூட்டனுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

    பேரும் புகழும் எண்ணற்ற கௌரவங்களும் தம்மைத் தேடிவந்தபோதினும் நியூட்டன் மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார் என்று அறிகின்றோம். அத்தோடு, தம் வருமானத்தின் பெரும்பகுதியை ஏழைகளின் துயர் துடைக்கவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், தம் உறவினர்களின் தேவைகளுக்குமே அவர் செலவு செய்திருக்கின்றார்.

    பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையோடு திகழ்ந்த நியூட்டனின் தனி வாழ்க்கையை ஆராய்வோமேயானால், அவருக்குக் காதல் இருந்ததாகவோ யாரையும் அவர் திருமணம் செய்துகொண்டதாகவோ எவ்விதத் தகவலும் இல்லை. இது வியப்பிற்குரிய ஒன்றாகவே இருக்கின்றது!

    எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்பதில் நேர்ந்த இடையூறுகள் அனைத்தையும் தம் விடாமுயற்சியின் துணைகொண்டு கடந்து, அடக்கத்தையும், அயரா உழைப்பையுமே அணிகளாகப் பூண்டு, பல அரிய கண்டுபிடிப்புகளையும் அறிவியல் கோட்பாடுகளையும் உருவாக்கிச் சகம் போற்றும் சாதனையாளராகத் திகழ்ந்த சர் ஐசக் நியூட்டன் 1727-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் நாள் தம்முடைய 85-ஆவது அகவையில் இவ்வியனுலக வாழ்வை நீத்தார்.

    நியூட்டனின் நினைவுச் சின்னங்கள் பல இப்போதும் இங்கிலாந்தின் கல்விநிலையங்கள் பலவற்றை அணிசெய்கின்றன. அவர் உபயோகித்தனவும் கண்டுபிடித்தனவுமான அறிவியல் கருவிகள் பல அவர் பணியாற்றிய டிரினிட்டி கல்லூரியில் இன்றளவும் காணக் கிடைக்கின்றன. அனைத்திற்கும் மேலாய், நியூட்டன் பிறந்த இடமான உல்ஸ்தோர்ப்பு கிராமத்து வீடு பழுதுபார்க்கப்பட்டு ஒரு புனிதத் தலமாகவே கொண்டாடப்பட்டு வருவது, செயற்கரிய செய்த அறிஞர் பெருமக்களை மன்னுலகம் என்றுமே மறப்பதில்லை என்பதற்குச் சான்றாய்த் திகழ்கின்றது. 

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:
    1. https://www.britannica.com/biography/Isaac-Newton
    2. https://en.wikipedia.org/wiki/Isaac_Newton

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

     46. சிற்றினம் சேராமை

    குறள் 451:

    சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும்

    கெட்டவங்க கூட சேருததுக்கு நல்ல மனசுக்காரங்க பயப்படுவாங்க. ஈன புத்தி உள்ளவங்க அவுகள தங்க சொந்தக்காரங்க கணக்கா நெனச்சி பழகுவாக.

    குறள் 452:

    நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
    கினத்தியல்ப தாகும் அறிவு

    தான் இருக்க நெலத்துக்கு ஏத்தாமாரி தண்ணியோட தன்ம மாறிக்கிடுது. அது கணக்கா தான் மனுசனோட புத்தியும் அவன் சேருத கூட்டத்துக்கு ஏத்தாப்போல மாறிக்கிடும்.

    குறள் 453:

    மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
    இன்னா னெனப்படுஞ் சொல்

    ஒருத்தனுக்கு உணர்ச்சி அவன் மனசப் பொறுத்து அமைஞ்சிகிடும். அவன் இப்டி பட்டவன்னு அளந்து சொல்லுதது அவன் சேருத கூட்டாளியப் பொறுத்து அமையும்.

    குறள் 454:

    மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
    கினத்துள தாகும் அறிவு

    ஒருத்தனோட நல்ல புத்தி அவன் மனசுக்குள்ளார இருக்கமாரி தோணிச்சின்னாலும் அது அவன் சேருத சேக்கையிலேந்து வெளிப்படுதது தான்.

    குறள் 455:

    மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
    இனந்தூய்மை தூவா வரும்

    சுத்தமான மனசும், செய்யுத காரியத்துல சுத்தமும் ஒருத்தன் சேருத கூட்டத்தோட தூய்மைய ஆதாரமா கொண்டுதான் பொறக்குது.

    குறள் 456:

    மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
    கில்லைநன் றாகா வினை

    சுத்த மனசுக்காரவுகளுக்கு அவுகளுக்குப் பொறவு அவுகளோட புகழ் சொச்சமா மிஞ்சி நிக்கும். சுத்திவர உள்ள கூட்டத்தார்(இனம்)  நல்லா அமைஞ்சவுகளுக்கு  நல்லா அமையாத செயல் னு எதுவுமே கெடையாது.

    குறள் 457:

    மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
    எல்லாப் புகழுந் தரும்

    நெலச்சு நிக்குத உசிருங்களுக்கு நல்ல மனசு செல்வத்தக் கொடுக்கும். அதோடு நிக்காம நல்ல கூட்டத்தார்(இனம்)  எல்லாப் புகழையும் கொடுக்கும்.

    குறள் 458:

    மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
    கினநலம் ஏமாப் புடைத்து

    மனசு நல்லதா இருக்க பெரிய மனுசங்களுக்கு கூட அவுக சேருத கூட்டத்தப் பொறுத்து தான் வலிம வந்து வாய்க்கும்.

    குறள் 459:

    மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
    இனநலத்தி னேமாப் புடைத்து

    மனசு நல்லதா இருந்தா மறுமையில கூட சந்தோசம் உண்டாவும். அதுவுங்கூட கூட்டத்தாரால வலிம பெறும்.

    குறள் 460:

    நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
    அல்லற் படுப்பதூஉம் இல்

    ஒருத்தனுக்கு நல்ல கூட்டத்தாரப்போல பெரிய தொணை ஒண்ணுமில்ல. கெட்ட கூட்டத்தாரப் போல தீம தருததும் வேற இல்ல.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • சேக்கிழார் பா நயம் – 38

    சேக்கிழார் பா நயம் – 38

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

     

    இதற்கு முன் திருமால் வழிபட்ட திருமாணிகுழி என்ற தலத்தைப் பற்றி நாம் கண்டோம். அதனை சிவக்கவிமணியார் மேலும் விளக்குகிறார்! செங்கணவன் வழிபட்ட திருமாணிகுழி – சிவந்த கண்ணுடைய திருமால் அப்பழி நீங்கும்பொருட்டுச் சிவபூசை செய்த திருமாணிகுழி என்ற தலத்தை. திருமாணிகுழி என்ற தலப் பேரின் காரணமும் முன் வரலாறும் குறிப்பித்த அழகினை நோக்குக. மாணி – பிரமசாரி; குழி – தலம். வாமனனாகிய பிரமசாரி பூசித்த தலம் என்க. உத்தம குணங்களுடையானும் சிவபத்தனுமான மாவலியை யாதொரு குற்றமுமின்றியே, தேவர்கள் வேண்டுதலுக்காக வஞ்சித்து அழித்தமையால் உளதாகும் பழியைப் போக்கிக்கொள்ளத் திருமால் இறைவனை வழிபட்டார் என்பது சிவபுராணங்களிற் கண்டது. குற்றுருவத்தோடு விளைத்த கேட்டினைச் சீர்ப் படுத்திக்கொள்ள அவ்வுருவத்தோடு பூசித்தவகையை,

    ‘நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவும்
    சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம்“

    என்ற ஆளுடைய பிள்ளையாரது இத்தலத் தேவாரத்திற் காண்க.

    அதனையடுத்து, திருத்தினைநகர் என்ற தலத்தைச்சுந்தரர்சென்றடைந்தார். பெரியான் என்ற சிவனடியார் தினைப்புனம் உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அங்குவந்து சோறு கேட்க, அதன்பொருட்டு அவர் ஊருக்குப்போய்த் திரும்புவதற்குள், தினைவித்தி முற்றி விளைந்திருக்கச் செய்த காரணத்தால். இத்திருத்தினைநகர் காரணப்பெயர் பெற்றது.

    அடுத்து சுந்தரர் தில்லையின் எல்லையை அடைந்தார் அங்கே கயல்பாயும் குளத்தையும், மலர்கள்சூழ்ந்த சோலையையும்கண்டார் இவற்றைக் கண்டாரின் மூவகை மலங்களும் நீங்கும்! ‘’ஆணவமாதி மூன்று வலிய பாசங்கள். மும்மலங்கள் அறுதலாவது, கன்ம மலத்திற் சஞ்சிதம் அத்துவ சுத்தியாலும், உடல் முகந்து கொண்ட பிராரத்தம் அநுபவத்தாலும், ஆகாமியம் சிவஞானத்தாலும் அழியவும்; அஃதழியவே, மாயாமலம் ஞாயிற்றின் ஒளிமுன் விளக்குப்போலச் சிவசத்தியிலடங்கவும்; ஆணவமலம் ஞாயிற்றின்முன் இருள்போலச் சிவசந்நிதியின் முன்னர் வலியழிந்து கிடக்கவும் பெற்றுக்கெடுதல். வீடருள் எல்லை என்க. வீடருள் தில்லை என்று கூட்டி யுரைத்தலுமாம்’’. உயிர்கள், இங்கு வருமுன் தமக்கு இருந்த பசுத்தன்மை இங்கு வந்தவுடன் திரியப் பெற்றுச், சிவத்தின் தன்மை அடையும் என்பதை ‘மும்மையா மலங்களற வீடருள்’ என உரைத்தார் . இவ்வாறு விளக்கிய உரையை உணர்ந்துகொண்டால்தான் அடுத்துவரும்பாடலின்நயம்புலப்படும் .அங்கே இறைவனை எப்போதும் அருகிலிருந்து காணக் கடலே அகழியாகிச் சூழ்ந்தது! அங்கே கருவறையுள் நடனமாடும் கழல் மலரின் திருவருள் தேனை நுகரும்விருப்பால், வண்டுகள் தாழம்பூவில் துதைந்து திருநீறணிந்த அடியாராகித் துதித்து முரன்றன! உள்ளே தில்லைப் பதியில் மாடமாளிகைகள் வரிசையாய் உயர்ந்து தோன்றின. அம்மாளிகைகள் பொருட்செல்வத்தின் சிறப்புடன் அருட்செல்வமும் பெற்றுச் சிறந்தோங்கின! இதனைத் திருஞானசம்பந்தர்,

    ‘’செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
    செல்வ மதிதோயச் செல்வம் வளர்கின்ற
    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
    செல்வன் கழல்ஏத்துஞ் செல்வம் செல்வமே!’’

    என்றுபாடுகிறார். இப்பாடலில் ஏழுமுறை செல்வம் என்ற சொல் அமைந்து அம்மாளிகைகளின் பொருட்செல்வம், அருட்செல்வம் ஆகியவற்றின் உயர்வைக் காட்டுகின்றது! அவை போகத்தை வளர்க்கும் பொருட்செல்வம் பெற்ற குபேரனின் பட்டினம் போலக் காட்சியளித்தன! அச்செல்வம் மிக்க மாளிகைகள் வரம்பின்றி வானில் ஓங்கிய கோபுரங்களுடன் காட்சியளிக்கின்றன! அக்கோபுரங்கள் வானையே வளைத்து விழுங்குவன போல வளர்கின்றன! இதனைச் சேக்கிழார்,

    ‘’போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
    மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம்’’

    என்று பாடுகிறார். அங்கே வெண்கொடிகள் வானில் அசைந்தாடுகின்றன. மாளிகைகளின் உள்ளே அந்தணராகிய தவஸ்ரேஷ்டர்கள், ஓமாக்கினியை வளர்க்கும்போதே, உள்ளத்தை ஒடுக்கி தியானமும் பழகுகின்றனர்! அவர்கள் எழுப்பும் யோகப்புகை வானெங்கும் பரவுகின்றது.

    ‘’ஓமப்புகை வானிற்கு அடுப்பன – பொருந்துவன. [பிற புகைகள் (இயந்திரங்களின் புகை) அவ்வாறு அடுக்காதன] ஓமப்புகை ஆகிய மேகம் – புகையின் விளைவாம் மேகம் – என இருபொருளும் கொள்க. ஓமம் மேகத்துக்குக் காரணமாதல் குறித்தவாறுமாம்.

    அங்கே அங்குமிங்கும் பரவியுள்ள மேகங்களின் இடையே வெள்ளிமின்னல்கள் கொடிகளாய்ச்சுடர்கின்றன! இவை யோகசிந்தையின் மலர்ச்சி! தில்லைத்தலம்,இருதயாலயம்எனப்படும்உள்ளத்தலமும், தகராலயம் எனப்படும் யோகத்தலமும் ஆதலால் உள்ளே சிதம்பர ரகசிய வெளியிலும், புறத்தே தகராகாச வெளியிலும், இறைவன் விளங்குகிறார். அவரை அந்தணர்கள் தியானமாகிய தகரோ பாயத்தின் வழியே வெளியிலிருந்து உள்ளே இழுத்துச் சிந்தையில் வைத்துக் கூட்டுகின்றனர். ஆகவே பரவெளியில் கூத்தாடும் இறைவன் கருவறைக்குள் சிதம்பர ரகசிய வெளியாக விளங்குகிறார்! இதனையே புலவர்கள் ‘’தில்லைவெளி’’ என்று சிறப்பித்துப் பாடுவார்கள். இனி முழுப்பாடலையும் பயில்வோம்!

    ‘’போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
    மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகை
    யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப
    மேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்.”

    இப்பாடலில் கொடிகள் மின்னல் போல ஒளிர்கின்றன! சிலப்பதிகாரத்தில் கோவலனை மதுரை மதில்களின் கொடிகள், வராதே என்று கூறுவதாகப் பாடுகிறார்!

    ‘’போர் உழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
    வாரல் என்பன போல மறித்துக் கைகாட்ட ‘’

    என்பது அவர் பாட்டு. வில்லி பாரதத்தில் கண்ணன் வாழும் துவாரகை நோக்கி துரியோதனன் படைத்துணை கேட்க வரும்போது, துவாரகை மதிலின் கொடிகள், எங்கள் கண்ணபிரான், பாண்டவர்க்கே படைத்துணை யாவான், துரியோதனா, நீ மீண்டு போ !’’ என்று கூறுவது போல் பக்கவாட்டில் அசைகின்றன என்று வில்லிப்புத்தூரார் பாடுகின்றார். அப்பாடல் ,

    ‘’ஈண்டுநீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
    பாண்டவர் தங்கட் கல்லால் படைத்துணை ஆகா மாட்டான்,
    மீண்டுநீ போதி! என்று அவ் வியன்மதில் குடுமி தோறும்
    காண்டகு பதாகை ஆடை கைகளால் தடுப்பை போன்ற!’’

    என்பதாகும். கம்பராமாயணத்தில் மிதிலை வீதிகளின் குறுக்கே கயிற்றில் கட்டப் பெற்ற கொடித்துணிகள், ‘’இராமா, சீதை உனக்காக இங்கே காத்திருக்கிறாள்! விரைந்து வா !’’ என்று கைகளை அசைத்து அழைப்பதுபோல மேலும் கீழுமாக அசைகின்றன! என்று கம்பர் பாடுகின்றார்!

    ‘’மையறு மலரின் நீங்கி யாம்செய்மா தவத்தின் வந்து
    செய்யவள் இருந்தாள் என்றச் செழுமணிக் கொடிகள் என்னும்
    கைகளை நீட்டி அந்தக் கடிநகர், கமலச் செங்கண்
    ஐயனை, ‘’ஒல்லை வா !’’ என்று அழைப்பது போன்ற தம்மா!’’

    என்பது அப்பாடல்!

    சேக்கிழாரின் பெரிய புராணப்பாடலில் வரும் தில்லை மாளிகைப் பதாகைகள், மேகங்களின் இடையில் மின்னல்போல் மின்னி, ஒளியின் உருவமாகிய இறைவன் தில்லைக் கருவறைக்குள் ஒளிவெளியாக – ஆகாசமாக- விளங்குகிறான், வந்து தரிசியுங்கள்!’’ என்று நுட்பமாக உணர்த்துவதுபோல் உள்ளது! சேக்கிழார் பாடலின் நயம் இது!

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.1
    (நீராடற்பருவம்)

    பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது, நீராடற் பருவம். நதியில் நீராடும் இனிய அனுபவத்தை, விளையாட்டை, வளர்ந்த சிறுமிகள் ஐந்து முதல் ஒன்பது வயதில் செய்வார்கள். ஆயினும் முதலில் சிறுபெண்களுக்கு வயதில் பெரிய பெண்களும் தாயும் செவிலியருமே நதியில் இறங்கி நீந்தவும், நீராடவும் கற்றுக் கொடுப்பார்கள். பிள்ளைத்தமிழ் இலக்கிய மரபு பெண் குழந்தையின் ஐந்து முதல் ஒன்பது வயதில் இது நிகழும் என்கிறது.

    நதியில் நீராடுவதென்பது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஒரு நல்ல பொழுது போக்காகவும், உடற்பயிற்சியாகவும் அக்காலத்தில் விளங்கியதைக் காணலாம். அது மட்டுமின்றி, நாட்டு நலனுக்காகவும், வீட்டு நலனுக்காகவும் செய்யும் வேண்டுதல்களுக்கும் இதுவொரு களமாக விளங்கியது எனவும் அறிகிறோம்.

    ஆடிமாதம், புதுவெள்ளத்தில் நீராடுவதென்பது நதியைப் போற்றி வழிபட்டு விளையாடி மகிழ்வதற்காக ஏற்பட்டது! புலராத அதிகாலை நேரத்துக்குளிரில், மார்கழிமாதம் நீராடுவது நாட்டில் நல்லமழை பெய்வதற்காகவும் நல்ல கணவனைப் பெறுவதற்கு வேண்டி நோன்பிருக்கவும் ஏற்பட்டது. ஆண்டு முழுவதுமே ஆற்றங்கரையில் தினசரிக் கடன்களைச் செய்தும், துணிமணிகளைத் துவைத்தும், நீரில் துளைந்து விளையாடியும், வாழ்வினைப் பல பொழுதுபோக்குகள் நிறைந்ததொரு இனியபயணமாக அமைத்துக் கொள்வதற்கென்றே ஏற்பட்டது எனலாம்!

    தம் நீர்ப்பெருக்கால் நமக்கெல்லாம், நாம் விதைக்கும் பயிர்களுக்கெல்லாம் உணவளித்து, உயிரூட்டி, அரவணைத்து வளர்த்துவரும் கங்கை, காவேரி, வைகை, இன்னும் பல நதிகளை நாம் தெய்வமெனக் கொண்டாடிப் பூசைகள்செய்து வழிபடுகிறோம். ‘நீரின்றி அமையாது உலகு,’ என்பது நாமறிந்த உண்மை! குழந்தைகள் தாயிடம் விளையாடுவதுபோல, ஆற்றுவெள்ளத்தில் ஆடிப்பாடி நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டுக் களிக்கிறோம். நிலம், நீர் (ஆறு) முதலியன வாழ்வின் இன்றியமையாத தேவைகளாக இருப்பதனால், அவற்றை இயற்கை தெய்வங்களாகக் கொண்டு போற்றுகிறோம். இவை உயர்வான நமது நாகரிகத்தின் வெளிப்பாடுகளே!

    ‘காவேரியே! உன் கணவனுடைய சோழநாடே உன்குழந்தையாகும்; நீதான் அதனை வளர்க்கும் தாயானவள். எத்தனையோ ஊழிக்காலங்களாக இந்தச்செயலைச் செய்துவருகின்றாய். இதற்குக் காரணம், உயிர்களைப் பாதுகாத்து, ஆணைச்சக்கரம் செலுத்துகின்ற சோழவேந்தனின் நடுவுநிலைமை தவறாத ஆட்சியே அல்லவா? நீடூழி வாழ்வாயாக காவேரியே!’ எனத் தலைவி வாழ்த்துவதாக சிலப்பதிகாரத்தில் கானல்வரிகளைக் காண்கிறோம்.
    ‘வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
    ……………..
    ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
    ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.1’
    (சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடு காதை)

    சிவபிரானுக்கு உகந்த திருவாதிரை நாளில் பௌர்ணமி தினமும் கூடியிருந்த முன்பனிக்காலம் எனப்படும் மார்கழிமாதத்து நாளன்று வைகறைப்பொழுதிற்கு முன்பே வைகைக்கரையில் சிறுமியரும் மகளிரும் அந்தணர்களும் சிறுவர்களுமாகக் கூட்டம் கூடியுள்ளது; வைகையின் நீர்ப்பெருக்கிற்கு ஈடாக மக்கள்கூட்டம் கரைபுரண்டோடுகின்றது. வாணி(சரஸ்வதி), யமுனை, கங்கை ஆகிய மூன்று நதிகளின் கலவை எனப் புகழப்படும் வையை எனும் பாண்டியன் குலக்கொடி, மகிழ்ச்சியில் பொங்கிப் பெருகிப் புரண்டோடுகிறாள்.
    அந்தணர்கள் நீராடி முடித்துப் பொற்கலங்களிில் வையையின் நீரை நிரப்பிக் கொண்டு மந்திரங்களை உச்சரித்தவாறு வேள்விக்காக அமைக்கப்பட்ட சாலைகளை நோக்கி விரைந்தனர். வேள்விச்சாலைகளில் தீ வளர்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்கத் துவங்கிவிட்டன. தாய்மார்கள் தங்கள் சிறு மகள்களின் கைகளைப் பற்றிக்கொண்டு நீரில் மெல்ல இறக்கி நீராடவைக்கின்றனர்.

    சிவபிரானை வாழ்த்தி எழும்பும் அந்தணர்களின் மந்திர முழக்கம் வானைமுட்டுகிறது. இன்னும் பல தாய்மார்களும் சிறுமிகளும் இளம்கன்னியர்களும் அவர்களைப்போல் வேள்விக்குண்டங்களைச் சூழ்ந்து நிற்கிறார்கள். பற்களைக்கிட்டிக்கும் குளிரில், ஈர ஆடையில், சிறுமிகளின், ஏன் தாய்மார்களின் உடல்களும்கூட இலேசாக நடுங்குகிறன. ஓங்கியெழும் வேள்வித்தீயின் நாக்குகள் உமிழும் வெப்பத்தில் அப்பெண்களின் ஈர ஆடைகளிலிருந்து நீர் ஆவியாக வெளிப்படுகின்றது. பெண்களும் குளிரிலிருந்து சிறிது ஆசுவாசமடைகின்றனர்.

    ‘இவ்விளங்குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் கூடிநின்று வைகைக்கரையில் நீராடலாகிய இந்தத் தவத்தினைச் செய்வதற்கு, முன்பு என்ன தவம் செய்திருந்தனரோ,’ எனக் காண்போருக்கு எண்ணத்தோன்றுகிறது.*

    அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்,
    முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட,
    பனிப்புலர்பு ஆடி, பருமணல் அருவியின்
    ஊதை ஊர்தர, உறைசிறை வேதியர்
    …………………………………………….
    தீ எரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ,
    தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்?
    நீ உரைத்தி, வையை நதி!2
    (*பரிபாடல்-11- ஆசிரியர்: நல்லந்துவனார்)
    *****

    இனி குமரகுருபரர் காட்டும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழைக் காணலாம்! பொய்யாக் குலக்கொடியான வையை என்னும் நதியின் கரையில் கும்மாளமிடும் இளம்பெண்களின் கூட்டம்! குதூகலம் கொப்பளிக்க பாண்டிய இளவரசி தடாதகை தன் தோழியருடன் நீராட வருகிறாள். பற்பல கதைகளையும் பேசிக் களித்து மகிழ்ந்த வண்ணம் தடாதகையும் தோழிகளாகிய திருமகளும் கலைமகளும் இன்னும் பல பெண்களுடன் வைகைத் துறையை அடைகின்றனர். “பொங்கி வரும் வைகைப் புது நீரில் நீராடுவாயாக அம்மையே,” என்று தடாதகையிடம் கூறுகின்றனர்.

    வைகை நீர் பொங்கிப் புரண்டோடி வரும் அழகைக் கண்டு, மெய்ம்மறந்த பரவசத்தில் ஆழ்ந்து நிற்கிறாள் அங்கயற்கண்ணி. ‘இந்தப்படித்துறை பண்டு எம்பெருமான் பிட்டுக்கு மண்சுமந்த இடமாகும்,’ எனத் தோழியான வாணி சொல்கிறாள். அதனைக் கேட்டவுடன் தடாதகையின் உள்ளம் கசிந்துருகிக் காதலில் கண்களிலிருந்து ஆனந்த வெள்ளம் பொழிகின்றதாம்.

    நீர் பெருகிக் கரையுடைத்துக் கொண்டோடிய வைகையும், பிட்டு விற்கும் வந்திக்கு உதவ வேண்டி, கூடையில் மண்ணை வாரித் தலைச்சுமை எடுத்துக் கரையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காதல் கொழுநனும், அவனைப் பிரம்பால் அடித்த பாண்டியனும் ஆகிய காட்சிகள் அம்மையின் மனக்கண்ணில் படமாக விரிகின்றன. கலைமகளும் தன் வாக்கு வன்மையினால் அந்தக் கதையை சுவைபட எல்லாருக்கும் விவரிக்கிறாள்.

    ‘என் உள்ளங்கவர் காதலர் மண் சுமந்த இடமல்லவா இது?’ என்ற பெருமிதத்தில் மீனாட்சியின் நெக்குருகி, நெஞ்சு விம்ம, கண்கள் சிவந்து ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது. அப்படியே சிலை போல நிற்கிறாள்.

    ‘இழியும் புனல் தண்துறை முன்றில் இதுஎம் பெருமான் மண்சுமந்த
    இடமென்று அலர்வெண் கமலப்பெண் இசைப்பக் கசிந்துள் உருகியிரு
    விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால்3..’

    “இப்படிக் கண்களிலிருந்து வெள்ளத்தைப் பெருகவிட்டுத் திரும்பவும் அப்பெருமானுக்கு வேலை வைப்பது பிழையல்லவா? விரைவில் நீராடுவாய்,” என அழைக்கின்றனர் தோழிகள்.

    ‘விழிநீரை மீண்டும் பெருக விடுத்து அவற்கோர்
    வேலை இடுதல் மிகையன்றே!’ என்கின்றனர்.

    ஆனால் எண்ணங்களில் ஆழ்ந்து அசையாமல் சிற்பமென நிற்கிறாள் இளவரசி தடாதகை. அவளை விரைந்து நீராடவைக்கத் தோழியர் இன்னொரு உபாயத்தைக் கையாளுகின்றனர்!

    “மடங்கி வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய நீரையுமுடைய வைகை நதியில், வண்டல் இடுகின்ற மண்ணைக் கூடையில் அள்ளி வைத்து முன்பே சுமந்தவர் உன் காதலர்தானே? நீரிலிறங்கி ஆடினாயானால் உன் மார்பிலணிந்துள்ள சிவந்த குங்குமச்சேறு கரைந்து வண்டல்மண் போல நீரில் சேர்ந்துவிடும். அதைத் திரும்பக் கூடையில் அள்ள எம்பெருமான் ஆசையாக விரைந்தோடி வருவார் பார்!” எனக்கூறுமுன்பே, மற்றொரு தோழி குறும்பாக, “அவ்வமயம் வெள்ளைப்பிட்டை அள்ளியள்ளிக்கொடுக்க வந்திக்கிழவி வேண்டுமே! பிரம்பினால் அடித்து வேலைவாங்கப் பாண்டிய மன்னன் வேண்டுமே,” எனப் பொய்யாகக் கவலைப்படுகிறாள்.

    ‘………………………. ஒருத்தி
    வெண்பிட் டிடவும் அடித்தொருவன் வேலைகொளவும் வேண்டுமெனக்
    குறிக்கும் இடத்தில் தடந்தூநீர் குடையப் பெறின் 4….’

    “சிவனாரை உன்னிடம் வரவழைக்க இது நல்ல உபாயமல்லவா? இமயமலையிலும் மீன்கொடி பறக்கவைத்த பெண்ணரசியே, நீராடி அருளுகவே, பொருநைத் துறைவன் பொற்பாவாய் புதுநீராடி அருளுகவே,” என்று வேண்டுகின்றனர். இவை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் நீராடல் பருவத்தில் குமரகுருபரர் தீட்டும் அழகான சொற்சித்திரங்கள்! அசதியாடல் எனும் நயத்தை இழைத்து அமைத்த இனிய பாடல்கள்.

    சொன்னயங்களும் கருத்து நயங்களும் பலவிதமாக வெளிப்படும் பாடல்களைக் கொண்டமைந்தது குமரகுருபரனார் இயற்றியருளியுள்ள மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூல்.
    அங்கயற்கண்ணி அம்மை, வேகவதி எனப்படும் வைகையில் நீராடிய போது, அவள் கைகளில் அணிந்துள்ள வெண்மையான வளைகள் ஒலித்தன; பவளம் போன்ற சிவந்த உதடுகள் வெளுத்தன; கருங்குவளை மலர்க் கண்கள் சிவந்து செங்குவளை போன்று காணப்பட்டன; கரிய மணல் போன்று காணப்பட்ட கூந்தல் சரிந்து விழுந்தது. இது, பெருகிடும் கங்கையாறு, சிறு திவலையாகி, ஆனந்தப் பெருங்கடலாக விளங்கும் சிவபெருமானுடன் (மீனாட்சியம்மை) கூடிக்கலந்து விளையாடியதால் உண்டாகிய வேறுபாடுகளை ஒத்திருந்ததாம்.

    ‘செழுந்தரங்கக் கங்கை நுண்
    சிறுதிவலையாப் பொங்கும் ஆனந்த மாக்கடல்
    திளைத்தாடுகின்ற தேய்ப்ப5…’ என்கிறார்.

    குழந்தை மீனாட்சி வளர்ந்து வரும் ஒவ்வொரு பருவத்தையும் சுவைமிகுந்த நிகழ்ச்சிகளால் பாடி வரும் குமர குருபரர் பின்வரும் பாடலில் உலகம் முழுவதுமே உமை அன்னையின் வடிவம் எனக் கண்டு பேரானந்தம் கொண்டு பாடிக் களிக்கிறார்.

    “கிளி பேசுவது போன்ற பண் பொருந்திய சொற்களைப் பேசும் பாவையே! நீராடும் உனது திருமேனி அழகிய பச்சை மரகத நிறத்தைப் பரப்பி ஒளி வீசுகின்றது. இதனால் எல்லாப் பொருள்களும் அந்த நிறத்தைத் தாமும் பெற்று ஒளிர்கின்றன. நதி நீரில் மிதக்கும் குளிர்ந்த பவளக்கொடி, பச்சை நிறம் பெற்று, பேரழகுடன் பசிய இளங்கொடி போலக் காட்சியளிக்கின்றது; பருத்த வெண்மையான முத்துக்கள் மரகத மணிகளாக மாறி விட்டன! நதியின் குளிர்ச்சி மிகுந்த துறைகளில் தங்கி விளையாடும் அன்னப் பறவைகள் பச்சை நிறம் அடைந்து களிப்பு மிகுந்த தோகை மயில்களாக மாறி விட்டன! இது, ‘எல்லாப் பொருள்களும் உனது அழகிய திருவடிவம் தான்,’ என்று வேதங்கள் காலகாலங்களாக முழங்கி வரும் பொருள் முற்றிலும் உண்மையே என நிரூபிப்பது போல உள்ளதம்மா.

    ‘சகலமும் நின் திருச் சொரூபம் என்று ஓலிடும்
    சதுர் மறைப் பொருள் வெளியிட…’ என வர்ணிக்கிறார்.

    அத்தனை பெண்களும் குடைந்து குடைந்து நீராடுவதனால் அவர்கள் தம் மார்பில் அணிந்திருக்கும் சிவந்த சாந்து (செங்களபம்), கருமையான கஸ்தூரிக் குழம்பு, வெண்கற்பூரம் ஆகியவை கரைந்து வைகை நீரில் கலக்கின்றன. இது சரஸ்வதி (வாணி எனப்படும் சிவந்த நிறமுள்ள சோணை நதி), யமுனை (கரிய நிறம் கொண்ட காளிந்தி ஆறு), வெண்மை நிறம் கொண்ட கங்கை எனப்படும் வான் நதி மூன்றும் கலந்து வைகையாற்று நீரில் விளையாடுவது போல உள்ளதாம்.

    ‘……………………………………வாணியும்
    காளிந்தியும் கங்கையாம்
    விண் ஆறும் அளவளாய் விளையாடு புதுவைகை
    வெள்ள நீர் ஆடியருளே
    விடைக் கொடியவர்க்கு ஒரு கயற்கொடி கொடுத்த கொடி
    வெள்ள நீர் ஆடியருளே.6’ என்கிறார்.

    அனைத்துப் பொருள்களும் அவளே! அவளிடம் இருந்தே உற்பத்தியாகி அவளிடமே அனைத்தும் தஞ்சம் அடைகின்றன. அவளை இடைவிடாது சிந்தையில் வைப்பவர்கள் அவளாகவே ஆகி விடுகின்றனர். ‘எங்கும் வியாபித்திருப்பவள், பலவகையான உருவம் கொண்டவள், ‘வ்யாபினீ, விவிதாகாரா7,’ என அம்பிகையை லலிதா சஹஸ்ர நாமம் போற்றுகிறது. (ஸ்லோகம் 87).

    நதிகளைப் பெண்மைக் குணம் கொண்டவர்களாக பெரியோர்கள் வருணித்துள்ளனர். அவற்றின் ஆற்றலும், இயக்கமும், ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுமே இதற்குக் காரணங்கள். கமலைநதி திருவண்ணாமலையருகே ஓடுகின்றது. அந்த நதிப்பெண் உண்ணாமுலையம்மையை நோக்கிக் கூறுவதாக அமைந்தவொரு அழகான பாடல்:

    “குறிஞ்சி நிலத்தில் வாழும் வெற்றி மிக்க வீரனான குமரனுக்கு சேவல்கொடியைக் காட்டிலிருந்து கொண்டு கொடுத்தவள் அன்னை நீதான்!

    “பாலைக்குமரி எனப்படும் பாலைநிலத்து தெய்வமான கொற்றவைக்கு கொடிய சிங்கத்தையும் வாகனமாகக் கொடுத்தாய்!

    “செழித்த முல்லைநிலத்துக் கடவுளான கோவிந்தனுக்கு அழகான மூங்கிலாலான புல்லாங்குழலை அளித்தாய்.

    “மருதநிலத்து இறைவனான இந்திரனுக்கு அவன் மகிழும்வகையில் நீர்வளத்தைக் கொடுத்தாய்.

    “நெய்தல் நிலக்கடவுளான வருணனுக்கு அந்நிலத்தின் புலால் வாசனை தீரும்விதத்தில் (தாழம்புதர்கள் முதலியவற்றிலிருந்து வரும்) நறுமணமும் கொடுத்த அன்னை நீதானே!

    “உனக்கு என்னால் எதனை அளிக்க முடியும்? ஆகவே, அன்னையே, நீயே வந்து என்னில் ஆழ்ந்து நீராடித் திளைக்க வேண்டும்; நான் அதனால் உருகிப்பெருகிப் பேரின்பமான கடலில் சென்று சேர்வேன்,” எனக்கூறுகின்றாள் கமலை எனும் நதிப்பெண்ணாள்,’ என்கிறார் உண்ணாமுலைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியரான சோணாசல பாரதியார்.

    மெய்சிலிர்க்க வைத்து, பக்தியில் திளைக்கும் மிக அருமையான கற்பனை இதுவன்றோ!

    ‘கொற்றக் குறிஞ்சிக் குமரனுக்குக்
    கொடியும் பாலைக் குமரிக்குக்
    கொடுங்கோ ளரியுஞ் செழுமுல்லைக்
    கோவிந் தனுக்குக் குழல்வேயு
    மற்ற மருதப் போகிக்கு
    மகிழ்வு நெய்தல் வருணனுக்கு
    மன்னும் புலவு தீர்மணமும்
    வழங்கு வேனிற் கென்னளிப்பேன்8

    பல தலைமுறைகளாக நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டும், நீரினைத் தெய்வமாகக் கொண்டு போற்றியும், நீர்நிலைகளில் தெய்வ வழிபாடுகளை முறையாக நடத்தியும் வாழும் பண்பாடு – நாகரிகம் நம்முடையது. நீரின், ஆறுகளின் பின்னணியில் புலவர் பெருமக்கள் இயற்றியளித்த இப்பாடல்கள் இனிமை நிரம்பித்ததும்பி நமது உள்ளங்களில் அழகுணர்ச்சியையும், ஆனந்தத்தையும் பக்திப் பெருக்கினையும் நிரப்பி மகிழ்விக்கின்றன அல்லவா?

    _______________&________________

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடுகாதை
    2. பரிபாடல்- பாடல் 11- நல்லந்துவனார்.
    3. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    7. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
    8. உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்

    Share
  • நம்மோடு பிறரும் மகிழ

    நம்மோடு பிறரும் மகிழ

    -நிர்மலா ராகவன்

    நலம்…நலமறிய ஆவல் (159)

    நம்மோடு பிறரும் மகிழ

    இது விந்தையான உலகம். லட்சாதிபதி கோடீஸ்வரனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கோடீஸ்வரனோ, தன்னிலும் அதிகச் சொத்து சேர்த்திருப்பவருடன் போட்டி போடுகிறார். பணத்தால் மகிழ்ச்சியையோ, திருப்தியையோ வாங்க முடியாது என்று இவர்கள் அனைவரும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

    பிறருக்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன், தாம் எண்ணியதைச் சாதித்தவர்களுக்குத்தான் சிலை வைக்கிறார்கள்.

    `என்னால் எதுவும் முடியாது!’ என்று மூக்கால் அழுபவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள். மேலானவர்கள் என்று தோன்றுபவர்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே பின்பற்றுவார்கள்.

    கதை (பார்த்தது)

    சிற்றூரிலிருந்து வந்திருந்த ராதாவுக்குப் பெரிய நகரில் நல்ல வேலை கிடைத்தது. தனக்குப் பிறருடன் பழகத் தெரியவில்லை என்ற குறையும் கூடவே ஏற்பட்டது.

    அதே அலுவலகத்தில் வேலைபார்த்த சுமனா கலகலப்பாகவும், எல்லாருக்கும் பிடித்தமானவளாகவும் இருந்தாள். அவளைப்போல் தானும் ஆகவேண்டும் என்ற வெறியே ராதாவுக்கு வந்தது.

    சுமனா என்ன சாப்பிடுகிறாள் என்று கண்காணித்து, அதையே தானும் வாங்கிச் சாப்பிட்டாள்.

    உடன் வேலைபார்த்த ஒருவன் சுமனாவிடம் மோசமாக நடந்துகொள்ள முயல, அவள் பகிரங்கமாக அவன் மானத்தை வாங்கினாள்.

    `என்னிடம் எந்த ஆணும் இப்படி மயங்கவில்லையே!’ என்ற முட்டாள்தனமான ஏக்கம் உண்டாயிற்று ராதாவிற்கு. அக்கயவன் கவனத்தைக் கவரும் வகையில், புடவைத் தலைப்பை நழுவவிட்டாள். (எதைத்தான் பின்பற்றுவது என்று கிடையாதா!)

    அவள் எண்ணியபடியே அவளை நெருங்கினான். தன் தந்திரம் பலித்துவிட்ட பெருமையில் ராதா மகிழ்ந்து சிரித்தாள்.

    நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்கிறோம், அல்லது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நிறைவு கிடைப்பதில்லை. நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுதான் முக்கியம்.

    ராதாவைப் போன்றவர்கள், `நான் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது. என்னைவிட உயர்ந்தவர்களைப்போல் நடந்தால்தான் பிறர் என்னைப் பார்த்துப் பிரமிப்பார்கள்,’ என்று எண்ணமிடுகிறார்கள்.

    இத்தகைய எண்ணப் போக்கு நேர் எதிரான விளைவைத்தான் தருகிறது. ராதாவின் நடத்தையை எவரும் சிலாகிக்கவில்லை. அவர்களது முகம்தான் சுளித்தது.

    நம்மை நாம் இருக்கிறபடியே ஏற்றுக்கொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். அப்போது கிடைக்கும் நிம்மதியால் நமக்கு நம்மையே பிடித்துப்போகும். அதன்பின் பிறரிடம் அன்பு செலுத்தத் தடையேது!

    மிகப்பெரும் செல்வந்தர்கள் எல்லா உயிர்களிடமும் அன்பு வைத்து, சம்பாதிப்பதில் பெரும் பங்கைத் தான தர்மங்களுக்காகச் செலவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சம்பாதிப்பது ஒரு விளையாட்டு.

    வெற்றி என்பது கொள்ளைப் பணத்தை ஈட்டுவதால் அல்ல. செய்யும் காரியத்தால் திருப்தியும் நிம்மதியும் கூடவே வரவேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் இவர்கள்.

    பில் கேட்ஸ் Bill Gates அமெரிக்காவின் தலைசிறந்த கொடையாளி என்று புகழப்படுகிறார். அப்படி என்ன செய்துவிட்டார்?

    பில் கேட்ஸ் அளித்த அமெரிக்க டாலர் 36 பில்லியன் (3,600 கோடி) உலகின் பல நாடுகளிலும் காணப்படும் ஏழ்மையை ஒழிக்கவும், அங்கெல்லாம் கல்வித்திறனையும் ஆரோக்கியத்தைப் பெருக்கவும் உபயோகப்படுகிறது.

    அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பட்டப்படிப்பு பயிலும், வெள்ளைக்காரர்கள் அல்லாத ஆயிரம் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கும் நற்பணியை மேற்கொண்டிருக்கிறார். இதைத் தவிர, ஊதியம் எதுவுமின்றி, வீட்டு வேலைகளையே செய்துகொண்டிருக்கும் இளம்பெண்கள் கல்வியில் பின்தங்கிவிடுகின்றனர், அதனால் தம் முழுத்திறமையை வெளிக்காட்ட முடியாது போகிறது என்று அந்த நிலைமையை மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

    இந்தியாவிலேயே நடிப்புக்கு அதிகச் சம்பளம் வாங்கும் இந்தி நடிகர் ஓர் இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் கழுத்து நிறைய தங்கச்சங்கிலிகள். நிகழ்ச்சி முடியும் சமயத்தில்தான் தெரிந்தது எதற்காக அப்படி — குண்டர் கும்பல் தலைவரைப்போல் — தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்தார் என்பது.

    நன்றாகப் பாடியவர்களைப் பாராட்டும் விதமாக, தன் கழுத்திலிருந்த சங்கிலிகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அவர்களுக்கு அணிவித்தார்! நடிகர்களிலேயே மிகச் சிறந்த கொடைவள்ளல் இவர்தான் என்று பிறிதொரு நிகழ்ச்சியில் அறிவிக்கக் கேட்டேன்.

    தம்மிடமிருப்பதை பிறருக்கும் பகிர்ந்தளிப்பதால் இவர்களுக்கு நிறைவு கிட்டுகிறது போலும்! சிலருக்கு என்ன கிடைத்தாலும் திருப்தி என்னவோ கிடைப்பதில்லை.

    கதை

    பல வருடங்களுக்குமுன், மலேசியாவிலிருந்து இந்தியா போகும் கப்பலில் பயணித்திருந்தேன். (இப்போது அந்தச் சேவை கிடையாது). கப்பல் ஆடிய ஆட்டத்தில் பலருக்கும் தலைசுற்றல், வாந்தி. கப்பலின் போக்கைப் பழித்தார்கள்.

    `இவங்க காசு மட்டும் வாங்கிக்கறாங்க! சாப்பாடு சகிக்கலே!’ என்றது இன்னொரு கும்பல். யாரோ ஒருவர் மட்டும் கூறினார், `இந்தக் கப்பல் 1,600 மைல் கடந்து, குறைந்த செலவில் நம்மை வேறு நாட்டுக்குக் கொண்டுபோகிறதே!’

    யாரிடம் என்ன குறை இருக்கிறது என்று மட்டுமே ஆராய்ந்து கொண்டிருப்பதால் நாம் உயர்ந்துவிடமாட்டோம். ஆனால், திருத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், குறையையும், அதை நிவர்த்தி செய்யும் வழியையும் எடுத்துச் சொல்லலாம்.

    ஏதாவது நோய்வாய்ப்பட்டு, விரைவில் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவர்கள் தத்துவார்த்தமாகக் கூறுவது: `ஒவ்வொரு நாளையும் இதுதான் நாம் கடைசியாக வாழப்போகும் தினம் என்று நினைத்து வாழ்கிறேன். என்னைச் சுற்றிலும் அன்பானவர்கள் இருக்கிறார்களே என்று நிறைவாக இருக்கிறது’.

    எந்த நிலையிலும் மனம் வெதும்பிவிடாது, இருக்கும் சில நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வது அறிவு.

    ஆனால், தம்மிடம் இருப்பதை எண்ணி திருப்தி அடையாது, எதையோ எண்ணி ஏங்குகிறார்கள் பலரும்.

    கதை

    `நாற்பது வயதிற்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்!’ என்று அடிக்கடி கூறிவந்தவர் அவர்.

    அந்த லட்சியத்துடன், மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்தார். அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார். மனைவி மக்களுடனும் சிறிது நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அவர்கள் தன்னைவிட்டு எங்கே போய்விடப்போகிறார்கள் என்ற அலட்சியம்தான். அத்துடன், ஒவ்வொரு நிமிடமும் காசாயிற்றே!

    ஒரு விபத்தில் அவரது குடும்பமே அழிந்துபோயிற்று. `இனி யாருக்காக சம்பாதிப்பது!’ என்ற விரக்தி ஏற்பட்டது அம்மனிதருக்கு.

    `இப்போது என் குடும்பத்தினர் வந்து வாசற்கதவைத் தட்டினால், அது லட்சத்திற்கும் மேலானது!’ என்று கதறினார். காலம் கடந்து புத்தி வந்து என்ன ஆகப்போகிறது!

    கதை

    சில ஆண்டுகளுக்குமுன், நேபாளத்தில் ஒரு சமூக சேவகியைச் சந்தித்தேன். துருக்கி நாட்டைச் சேர்ந்தவள்.

    `இந்த மலைப்பிரதேசத்தில் பலரும் போலியோ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தகுந்த வைத்தியம் கிடைப்பதில்லை. நான் வருடத்தில் பலமுறை இங்கு வந்து, அதற்கான மருந்துகளை கொடுத்து, பிற தேவைகளையும் கவனித்துப் போகிறேன்,” என்றவளுக்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும்.

    “உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?” என்று நான் கேட்டதும், பத்து வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்தாள்.

    `ஊராருக்கு நல்லது செய்வதெல்லாம் கிடக்கட்டும். உன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாயோ?’ என்று உடனே தோன்ற, “உன் குழந்தைகளுடன் செலவழிக்க நேரம் கிடைக்கிறதா?’ என்று கேட்டேன்.

    பெற்றோர் ஆதரவாக இல்லை என்று வருந்தி, தீய பழக்கங்களுக்கு ஆளான எவ்வளவு மாணவ மாணவிகளின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்! அதனால் அக்கேள்வி தன்னால் பிறந்தது.

    அவள் ஆசியாவைச் சேர்ந்தவள். அதனால், `அதிகப்பிரசங்கி,’ என்று என்னைப் பார்த்து முகம் சுளிக்கவில்லை. இன்னொரு தலைமுறையைச் சேர்ந்த என் கேள்வி நியாயமாகப்பட்டிருக்கிறது.

    “இயன்றவரை, அவர்களையும் என்னுடன் அழைத்துவருகிறேன்,” என்று பணிவாகப் பதிலளித்தாள்.

    கதை

    ஐம்பது வயதான பெண்மணி உமா என்னுடன் பிரயாணம் செய்துகொண்டிருந்தாள்.

    நாலைந்து நாட்களுக்குப் பிறகு, “நீங்கள் ஏன் கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை?” என்று கேட்டேன், பேச்சுவாக்கில்.

    “எங்கம்மா சமூக சேவகி. வீட்டில் இருந்ததே அபூர்வம். என்னவோ, என் அப்பாவுக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு தோணலே!” என்றாள் விரக்தியை மறைக்காது.

    உமா பெரிய உத்தியோகத்தில் இருந்தாள். பிறர் மதித்தார்கள். ஆனாலும், தனிமையிலேயே வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்ற நிதரிசனத்தில் அவளுக்கு நிறைவு கிடைக்கவில்லை. ஏனெனில், பெற்றோர் அவளுடைய நலனைப்பற்றி யோசிக்கவில்லை. அதற்கான அவகாசமோ, ஆர்வமோ அவர்களுக்கு இருக்கவில்லை.

    பிறருக்கு நன்மை செய்கிறோம் என்று, குடும்பத்தைக் கவனிக்காமல் விடலாமா?

    ஒருவர் தன் சொந்த திருப்திக்காக தன்னைச் சேர்ந்தவர்களின் மகிழ்ச்சியைப் பறிப்பது என்ன நியாயம்?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

    45. பெரியாரைத் துணைக்கோடல்

    குறள் 441:

    அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்

    அறம் உணர்ந்த, தன்னைய விட மூத்த அறிவாளியோட நட்பப் பெறுத மொறைய ஆஞ்சு அறிஞ்சு தெரிஞ்சுக்கிடணும்.

    குறள் 442:

    உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்

    வந்த துன்பத்தப் போக்கி இனி துன்பம் வாராம பாத்துக்கிடுத பெரியவங்கள தொணையா வச்சிக்கிடணும்.

    குறள் 443:

    அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்

    பெரிய மனுசங்களுக்கு வேணுங்கது எல்லாம் செஞ்சு அவங்க கிட்ட ஒறவு வச்சுக்கிட்டு அவர் காட்டுல வழில நடக்குதது ரொம்ப ஒசந்த பலம்.

    குறள் 444:

    தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
    வன்மையு ளெல்லாந் தலை

    தன்னைய விட அதிக புத்தியுள்ள பெரியவுகளோட ஒட்டுதலா இருந்து அவுக சொல்லுத வழியில நடக்கது எல்லாத்தையும் விடச் சிறந்தது.

    குறள் 445:

    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

    கண்ணு கணக்கா எல்லாத்தையும் கண்டறிஞ்சு கூறுத அறிவாளிங்கள சுத்திவர வச்சிக்கிடுதது தான் ராசாவுக்கு நல்லது.

    குறள் 446:

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில்

    ஒருத்தனச் சுத்தி தகுதியுள்ள பெரியவங்க இருந்து  அவுக சொல்படி அவன் நடந்தாம்னா பகையாளியாலையும் அவன ஒண்ணுஞ்செய்ய முடியாது.

    குறள் 447:

    இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர்

    குத்தங் கொறைய இடிச்சுக்காட்டி புத்தி சொல்லுத பெரியவங்கள தொணையா வச்சிருக்கவன கெடுக்கதுக்கும் ஆள் இருக்குமா என்ன?

    குறள் 448:

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்

    குத்தங்கொறைய சொல்லிக்காட்டி காவலா இருக்க பெரியவங்க இல்லாத ராசா, பகையாளி இல்லன்னாலும் தானா அழிஞ்சு போவான்.

    குறள் 449:

    முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை

    முதல் போடாம வியாபாரம் செய்யுதவனுக்கு அதுலேந்து வார லாபம் கெடைக்காது. அது கணக்கா தான் பெரியவங்க தொணையில்லாத ராசாவுக்கும் அவகளால வருத பயனப் பெற ஏலாது.

    குறள் 450:

    பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
    நல்லார் தொடர்கை விடல்

    நல்லவங்க கிட்ட ஒட்டுதலில்லாம இருக்கது, பல பேரோட பகையினால வெளையுத தீமய விட பத்து மடங்கு தீமய கொடுக்கும்.

    (அடுத்தாப்லயும் வரும்…..)

    Share