Blog

  • உழைப்பே உயர்வு தரும்…

     

    வளராத பொருளென்று வானுக்குக் கீழ்வாழும்
    .. வகையே தில்லை!
    துளிராக வருகின்ற துளிர்ப்பொன்றே மரமாகித்
    .. தொடரும் தோப்பாய்!
    களராக வாழ்வெல்லாம் கழியுங்கால் விழையெண்ணம்
    .. கனவாய்ப் போகும்!
    தளராத உழைப்புடையார் தாமெண்ணும் உயர்வையெலாம்
    .. தமதாய்ச் சேர்ப்பர்! (1)

     

    வில்லின்றோர் இலக்கடைய விரைகாற்றைக் கிழித்தன்றோ
    .. விலக்கும் அம்பும்!
    கல்லொன்றில் எறும்பூரக் கால்பட்ட இடந்தேய்த்துக்
    .. கரைக்குங் கல்லை!
    அல்லொன்றின் இருளழிக்க ஆதவனில் செந்தீயாய்
    .. அமையுங் கோபம்!
    செல்கின்ற வழியெங்கும் சிறப்பான உழைப்பிருப்பின்
    .. செயந்தான் ஆங்கே! (2)

     

    அலையாடும் கடல்சேரும் ஆற்றுக்குத் துளிநீரால்
    .. அமைந்த ஆதி!
    மலையேறும் போதெல்லாம் மனங்குவித்த முதலடியே
    .. மலைப்பைப் போக்கும்!
    விலையாகும் பொருளெல்லாம் விளைவிக்கும் திறன்கொண்ட
    .. விதையின் வீச்சே!
    தலையான பணியேற்கத் தரநெஞ்சின் முதலூக்கத்
    .. தவிப்பே போதும்! (3)

     

    செய்கின்ற செயலொன்றும் சிந்தனையும் தேர்ச்சியையும்
    .. தெரிதல் வேண்டும்!
    மெய்யொன்றி முனைப்பினையும் முயற்சியையும் ஏற்றாற்றும்
    .. முறைகள் வேண்டும்!
    ஐயங்கள் வரும்போதில் அவைதீர்க்க அறிஞர்கள்
    .. அருகே வேண்டும்!
    தொய்கின்ற மனச்சோகை தொலைத்திலக்கை நோக்கிமனம்
    .. தொடர்தல் வேண்டும்! (4)

     

    விட்டத்தை நோக்கிநிதம் விழித்திருப்பின் விழைகின்ற
    .. விடியல் இல்லை!
    சொட்டுங்கள் மலரறிந்து தொலைதூரம் சென்றளிகம்
    .. தொகுத்தாற் போலே
    திட்டங்கள் வேண்டுமவை தீட்டுதற்காய்த் தெளிவுடைய
    .. திறமை வேண்டும்!
    கட்டங்கள் வரும்போதில் கலக்கிமிலா மனத்திறத்தால்
    .. கடத்தல் வேண்டும்! (5)

     

    துயரங்கள் வரும்போகும்! தொலைதூரம் வழிகாட்டும்
    .. துணிச்சல் ஒன்றே
    பயில்கின்ற மடிநீக்கி பக்கத்தில் வெற்றிதனை
    .. பழகச் செய்யும்!
    அயர்வுக்காய்க் காரணங்கள் ஆயிரமாய் இவ்வுலகில்
    .. அமைந்த போதும்
    உயர்வுக்கோ ஒற்றைவழி! உண்மையுடன் நாமாற்றும்
    .. உழைப்பென் றொன்றே! (6)

    Share
  • சைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது

     
     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    *****************

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=k6eyJ_VMdu8

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=jw92UK1RfQY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=r6zkkQujAlo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-8fnvyM6Rs

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o1RRNiYQAAI

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=IZf6e0ntFrw

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NYuML1eqH0w

    +++++++++++++++++++

    ajay

    சைனாவின் தற்போதைய வேகப் பெருக்கி அணு உலைப் படைப்பியக்கம் உலகில் முதற்படி நிலையில்தான் உள்ளது.   வேகப் பெருக்கி டிசைன், கட்டுமானம், நிறுவகம், சோதனை, இயக்கம் ஆகிய துறைகளில் சைனா ஆளுமைத் திறம் பெற்றுள்ளது.  இந்த அனுபவச் சாதனைகள் வணிக ரீதியாக, வேகப் பெருக்கி அணுமின் நிலையங்கள் நிறுவவும், அணுவியல் எருக்கள் சிக்கனப் பயன்பாடு நுணுக்கத்துக்கும்  அடிப்படையாக உள்ளன.  மேலும் இந்த அடிப்படையில் பெரிய வேகப் பெருக்கி அணுமின் உலைகள் நிறுவ ஏதுவாகவும் இருக்கும்.

    லியூ யோங்கடே [Secretary General ,China Atomic Energy Authority]

    வேகப் பெருக்கி அணு உலைகள் இயக்கச் சாதனை, பேரளவில் வீணாகும் யுரேனியம்-238 ஏறக் குறைய [60% -70%] பேரளவு மின்சக்தி அளிக்கும்  ஆற்றலாகப் பயன்படும்.

    ஸாங் தோங்குயி [Deputy Chief Engineer, China Institute of Atomic Energy]

    China Fast reactor control room

    சைனா வேகப் பெருக்கி ஆட்சி அறை

    சைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முதன்முறை முழுத்திறனில் இயங்குகிறது

    2014 டிசம்பர் 23 ஆம் நாள் அறிவிப்பின்படி சைனா ஆக்கிப் படைத்த புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை [Fast Breeder Reactor or Fast Neutron Reactor] 65 MWt முழுத்திறனில் கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து இயங்கியதாகத் தெரிகிறது.  இந்த அறிவிப்பிலிருந்து, சைனா முதன்முதல் தனது வேகப் பெருக்கி இயக்கத் திறனை நிலைநாட்டியது உறுதியாகி உள்ளது.   உலக நாடுகளில் இதுவரை வேகப் பெருக்கி அணு உலைகள் இயக்கத்தை உறுதிப் படுத்திய நாடுகள் எட்டு : அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ்,  பிரிட்டன், ஜெர்மனி, காஜெக்ஸ்தான், இந்தியா.  இப்போது சைனாவும் சாதித்து ஒன்பதாவது நாடாக அவற்றுடன் சேர்ந்துள்ளது.  இந்த நாடுகளில் இயங்கி வருபவை 20 வேகப் பெருக்கி அணு உலைகள்.  2014 ஆண்டு வரை வேகப் பெருக்கி அணு உலைகள் இயக்க அனுபவம் 400 அணு உலை ஆண்டுகள் [400 reactor-years].  ஒப்பு நோக்கினால் மிதவேக அணுமின் உலைகள் [Thermal Neutron Reactors]  அனுபவம் சுமார் 25,000 அணு உலை ஆண்டுகள்.   உலக வேகப் பெருக்கி அணுமின் உலைச் சோதனைகளின் குறிக்கோள் : 2050 ஆண்டுக்குள் தற்போது இயங்கி வரும் மிதவேக அணு உலைகள் [சுமார் 450], அடுத்தடுத்து நிறுத்தமாகி, வேக நியூட்ரான் அணுமின் உலைகளால் ஈடு செய்யப்படும்.  22 உலக நாடுகள் இந்த எதிர்காலக் குறிக்கோளைப் பின்பற்றி தற்போது சோதனையில் இறங்கியுள்ளன.  சைனாவின் புது வேகப் பெருக்கி, இப்போது 20 MWe மின்னாற்றல் மின்சாரத்தை மின்வடங்களில்  பரிமாறி வருகிறது.

    இந்திய வேகப் பெருக்கி அணு உலைகளுக்கு எதிர்ப்பு !

    2001 ஏப்ரல் 25 ஆம் தேதி ‘ஹிந்து ‘ நாளிதழில், அமெரிக்க மேரிலாந்து சூழ் மண்டலச் சக்தி நிலை ஆராய்ச்சிக் கூடத்தின் அதிபதி, அர்ஜுன் மக்கிஜானி [Arjun Makhijani] என்பவர் பாரதத்தில் தலைதூக்கி வளர்ந்து வரும் அணுசக்தித் துறையகத்தின் இரண்டாவது கட்ட ‘வேகப் பெருக்கி அணு உலைத் ‘ திட்டங்களை வலுவாகத் தாக்கி எழுதி யிருந்தார்! சமீபத்தில் அங்கீகரிக்கப் பட்டு டிசைன் வேலைகள் நிகழ்ந்து வரும் 500 மெகாவாட் வேகப் பெருக்கி மின்சார அணு உலை, இந்தியா செய்யும் மாபெரும் தவறு என்றும் அழுத்தமாக அறிவித்தி ருந்தார்! வேகப் பெருக்கி அணு உலைகளை எதிர்த்துப் பறை சாற்றியவர் அர்ஜுன் ஒருவர் மட்டும் அல்லர் ! பாரதத்தின் பாதுகாப்பு அமைச்சருக்கு முன்னாள் விஞ்ஞான ஆலோசகராகப் [Science Adviser to the Defence Minister] பணி ஆற்றிய டி.எஸ். சுப்ரமணியன், வி.எஸ். அருணாசலம் ஆகியோர் இருவரும், ஏராளமான நிதியையும் காலத்தையும் விழுங்கும் மாபெரும் வேகப் பெருக்கி அணு உலைகளை நிறுவ முயல்வது இமாலயத் தவறாகும் என்று மொம்பை அணுசக்தித் துறையகத்துக்கு [Dept of Atomic Energy] இருவரும் ஆணித்தரமாக எழுதினார்கள்!

     

     

    அந்த வீண் முயற்சிகளைக் கைவிட்டுப் பாரதத்தில் கிடைக்கும் அணுவியல் எருவையும் [Indigenous Uranium], இறக்குமதி அணுஎருவையும் [Imported Enriched Uranium] பயன்படுத்தி அநேக அழுத்தக் கனநீர் அணு உலைகள் [Pressurised Heavy Water Reactors (PHWR)], அழுத்த எளிய நீர் அணு உலைகள் [Pressurised Light Water Reactors (PWR)] பலவற்றை நிறுவனம் செய்யும்படி வற்புறுத்தி யிருந்தார்கள்!

    உலக வேகப் பெருக்கி அணு உலைகளுக்கு நேர்ந்த கதி!

    உலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக 20 பில்லியன் டாலரைச் [2000 நாணய மதிப்பு] செய்து, 100 மெகாவாட் [100 MWt] ஆற்றலுக்கு மேலான 11 வேகப் பெருக்கி அணு நிலையங்களை நிறுவி ஆராய்ந்து வந்துள்ளன! அவற்றில் ஏறக் குறைய எல்லா நாடுகளும் அணு உலையில் அபாயங்களும், பிரச்சனைகளும் மிகுந்து ஒவ்வொன்றாய் அவற்றை நிறுத்தி மூடி வருகின்றன!  1985 இல் ஜெர்மனி கட்டிய SNR-300 என்னும் 300 MWe வேகப் பெருக்கியைச் செம்மைப் படுத்த நிதி இல்லாமையால் 1991 இல் நிறுத்தப் பட்டு மூடப்பட்து! அடுத்துக் கட்டிய ஜெர்மன் வேகப் பெருக்கி KNK-II வெடித்து விடும் என்ற அச்சம் ஆரம்பித்திலே எழுந்ததால், அதுவும் இயங்காமலே மூடப் பட்டது! அணு உலை வெப்பத்தைக் கடத்தும் நீரைப் போல் இல்லாது, சோடியத் திரவ வேகப் பெருக்கி அணு உலைகளில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Accidental Criticality] திடீரென நேர்ந்து, எதிர்பாராது வெடிப்பு விபத்து விளைய வாய்ப்புக்கள் உள்ளன! எஞ்சிய பத்து அணு உலைகளில் மற்றும் ஆறு வேகப் பெருக்கிகள் நிறுத்தம் ஆகிவிட்டன!

     

    ஜப்பானில் 1994 இல் பூரணத் தொடரியக்கம் துவங்கிய 300 MWe மஞ்சு [Monju] வேகப் பெருக்கி அணு உலையில், துவிதத் தணிப்புச் சோடிய திரவத்தில் [Secondary Loop Sodium Coolant] தீப்பற்றி, செப்பணிட முடியாது, அதுவும் 1995 டிசம்பரில் மூடப் பட்டது! ரஷ்யாவின் காஸக்ஸ்தானில் நிறுவப்பட்ட 350 MWe ஆற்றல் கொண்ட BN-350 வேகப் பெருக்கியும் நிறுத்தப் பட்டுச் சாதனங்கள் யாவும் நீக்கப் பட்டன! 1985 இல் கட்டப் பட்ட பிரான்ஸின் பிரசித்துப் பெற்ற, 1200 MWe ஆற்றல் மிகுந்த உலகிலே மிகப் பெரிய ஃபீனிக்ஸ் [Super Phenix] வேகப் பெருக்கி அணு உலையும் 1998 இல் மூடப் பட்டது! 1974 இல் கட்டிய பிரிட்டனின் PFR வேகப் பெருக்கியின் நீராவி ஜனனியில் பிரச்சனை நேர்ந்து, 1980 முடிவில் மூடப்பட்டது! மிச்சிகன் டெட்ராய்டில் 1963 இல் இயங்கத் துவங்கிய 300 MWt ஆற்றல் கொண்ட அமெரிக்கா வின் வாணிபத்துறை வேகப் பெருக்கி அணு உலை [Commercial Fast Reactor] ‘என்ரிகோ ஃபெர்மி ‘, பிரச்சனைகள் மிகுந்து, நிதி செலவாகி லாப மில்லாது 1972 இல் மூடப்பட்டது! இவ்விதம் உலகெங்கும் பேரளவு வேகப் பெருக்கி அணு உலைகள் ஏறக்குறைய எல்லாம் மூடப் பட்டபின், ஆராய்ச்சி நடத்த மட்டும் சிற்றளவு வெப்ப ஆற்றல் கொண்ட [20-60 MWt] வேகப் பெருக்கிகள் இயங்கி வருகின்றன!

     

    Indian Nuclear Power Architects 

    பாரத வேகப் பெருக்கி அணு உலையிலிருந்து மின்சக்தி!

    1997 ஜலை 11 ஆம் தேதி சென்னைக் கல்பாக்கத்தில் உள்ள முதல் சோதனை வேகப் பெருக்கி அணு உலை [Fast Breeder Test Reactor, FBTR] புளுடோனியம்239 எருவைப் பயன்படுத்தி மின்சக்தியைப் பரிமாறிப் பாரதம் டாக்டர் ஹோமி பாபாவின் இரண்டாம் கட்ட அணுசக்தி உற்பத்தித் திட்டத்தை நிலைநாட்டியது! 1985 ஆம் ஆண்டு முதல் சோதனை வேகப் பெருக்கி அணு உலைப் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Criticality] அடைந்து ஆரம்ப மானது ஏற்கனவே உலகுக்கு அறிவிக்கப் பட்டது. உலகத்திலே மூன்றில் ஒரு பங்கு ஏராளமான தோரியம்232 பாரத நாட்டிலே கிடைப்பது ஒரு வரப் பிரசாதம். இயற்கை யுரேனியச் சேமிப்புத் தீர்ந்தவுடன் பாரதம் தோரியத்தை, யுரேனியம்233 பிளவு அணு எருவாக மாற்றி, மூன்றாம் கட்ட அணுசக்தி உற்பத்திக்குப் பாதை விரித்தது!

    பாரதத்தின் அணுவியல் துறையின் பிதா எனப்படும் டாக்டர் ஹோமி பாபா அணுமின் சக்தி ஆக்கத் திற்குத் தனது ‘மூவரங்கு முனைவுத் திட்டத்தை ‘ [Three-stage Approach Program] வகுத்து முதல் அரங்குக்கு அடித்தள மிட்டவர். அத்திட்டப்படி இந்தியாவில் முதற் கட்டத்தில் இயற்கை யுரேனியம், அழுத்த கனநீர் அணு உலைகள் [CANDU Pressurized Heavy Water Reactor (PHWR)] அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில் முதற்படி அணு உலைகளில் கிடைக்கும் கிளை விளைவான புளுடோனியம்239 பிளவு எருவையும், இயற்கை யுரேனியம்238 செழிப்பு உலோகத்தையும் உபயோகித்து, வேகப் பெருக்கி அணு உலைகள் அமைக்கப்படும். அவை ஈன்றும் புதிய புளுடோனியம்239 பிளவு எருவையும், தோரியம்232 செழிப்பு உலோகத் தையும்  வேகப் பெருக்கிகளில் வைத்து, புதிய எரு யுரேனியம்233 தயாரிக்கப் படும்! மூன்றாம் கட்டத்தில் யுரேனியம்233, தோரியம்232 இரண்டும் பயன்பட்டு அணு மின்சக்தியும், தொடர்ந்து யுரேனியம்233 அணு எருவும் உற்பத்தியாகும்!

     

     

    சோதனை அணு உலை 40 MWt [Mega Watt thermal] வெப்ப சக்தித் திறம் கொண்டது. ‘ஊருணி ‘ போன்ற அணு உலையின் [Pool Type Reactor] வெப்ப சக்தியைக் கடத்த பிரதம தணிப்புத் திரவமும், துவித தணிப்புத் திரவமும் சோடியம் [Primary & Secondary Coolant, Sodium] பயன் படுகிறது. அதற்கு எருவாக புளுடோனியம்239 (15%-20%) + யுரேனிய238 (85%-80%) ஆக்ஸைடு உபயோகமாகி, செழிப்பு உலோகம் [Fertile Material] தோரியம்232, அணு உலையைச் சுற்றிலும் கவசமாக வைக்கப் பட்டு, பிளவு உலோகம் [Fissile Material] யுரேனியம்-233 ஆக மாற்றலாம். அது உற்பத்தி செய்த மின்சக்தி 13 MWe [Mega Watt electrical] 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின்சாரம் பரிமாறும் கம்பிகளில் [Grid Lines] அனுப்பப் பட்டது.

    முதல் வேகப் பெருக்கி அணு உலை வெற்றி அடைந்ததும், அடுத்து அதை விட 30 மடங்கு பெரிய 500 MWe முன்னோடி வேகப் பெருக்கி அணு உலையைக் [Prototype Fast Breeder Reactor] கல்பாக்கத்தில் 2001 இல் அமைக்கப் பச்சைக் கொடி காட்டப் பட்டது! 2800 கோடி ரூபாய்ச் செலவில் உருவாகப் போகும் முதல் மாபெரும் முன்னாய்வு வேகப் பெருக்கி அணு உலைக்குப் பொறி நுணுக்க அறிஞர்கள் சிலர் பெரும் எதிர்ப்பைக் காட்டி யிருக்கிறார்கள்!

     

    வெப்ப அணு உலைகள் எவை ? வேகப் பெருக்கி அணு உலைகள் எவை ?

    இயற்கையாகக் கிடைக்கும் தாதுவில் 99.3% யுரேனியம்238, 0.7% யுரேனியம்235 ஆகிய இரண்டும் உள்ளன. அடுத்து யுரேனியத்தை விட இந்தியாவில் ஏராளமாக இயற்கையில் தோரியம்232 தாதுவாகக் கிடைக்கிறது. இம்மூன்றிலும் யுரேனியம்235 உலோகம் ஒன்று தான் தானாகவோ, அன்றி நியூட்ரான் கணைகள் தாக்கியோ இரண்டாகப் பிளந்து வெப்ப சக்தியை வெளியேற்றுகிறது. பிளக்க முடியாத யுரேனியம்238, தோரியம்232 ஆகிய செழிப்பு உலோகங்களை [Fertile Materials], இயங்கும் அணு உலைகளின் மையத்தில் உள்ள எருக்கருவைச் [Fuel Core] சுற்றிலும் வேக நியூட்ரான் தாக்கும் கவச அரண்களாக வைத்து [Blankets], அவற்றைப் பிளவு உலோகங்களாக [Fissile Material] மாற்றலாம். அவ்விதம் புரியும் நியூட்ரான் கதிரூட்டில், அணுக்கருத் தேய்வுகளுக்குப் பின் யுரேனியம்238 பிளவு படும் புளுடோனியம்239 ஆகவும், தோரியம்232 பிளவு படும் யுரேனியம்233 ஆகவும் மாறுகின்றன. அதாவது யுரேனியம்235, புளுடோனியம்239, யுரேனியம்233 ஆகிய மூன்று பிளவு உலோகங் களே, அணு உலைகள் இயக்கத்துக்கு எருக்களாய்ப் பயன்படுத்தத் தேவைப் படுகின்றன. இந்த எருக்களைப் பிளக்க, சில அணு உலைகளில் நியூட்ரான்களின் வேகம் ‘மிதவாக்கியால் ‘ [Moderator: Water, Heavy Water or Graphite] குறைக்கப்பட வேண்டும். மிதவாக்கி யில்லாத சில அணு உலைகளில் வேக நியூட்ரான்கள் அணுஎருக்களில் பிளவுகள் புரியும்.

     

    எவ்வித முறைகளில் யுரேனியம்235, புளுடோனியம்239, யுரேனியம்233 ஆகியவற்றைத் தயாரிக்கலாம் என்பதுதான் உலக நாடுகளின் தலையாய பிரச்சனை! இயற்கைத் தாதுவில் உள்ள 0.7% யுரேனியம்235 எருவைப் பிரித்தெடுக்க, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சைனா போன்ற வல்லரசுகள் ‘வாயுப் பிரிப்பு முறையைக் ‘ [Gaseous Diffusion Process] கையாண்டு,  யுரேனியம்235 எருவின் திரட்சியைச் [U235 Concentration] சேமிக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய டிசைன்களான ‘கொதிநீர் அணு உலைகள் ‘ [Boiling Water Reactors (BWR)], ‘அழுத்தநீர் அணு உலைகள் ‘ [Pressurised Water Reactors (PWR)] ஆகியவற்றில் [3%-4%] திரட்சி யுள்ள யுரேனியம்235 [3%-4% Enriched U235] எரிபொருள் உபயோக மாகிறது.

    கனடாவின் டிசைன் ‘காண்டு ‘ அணுமின் சக்தி [Canadian Deuterium Uranium (CANDU)] நிலையங்களில் இயற்கை யுரேனியமும் [99.3% U238+0.7% U235], வெப்பத்தைத் தணிக்க, நியூட்ரான்களை மிதமாக்கக் கனநீரும் [Heavy Water (Deuterium Oxide)] பயன் படுகின்றன. காண்டு அழுத்தக் கனநீர் அணு உலைகள் [Pressurised Heavy Water Reactors (PHWR)] கனடா, இந்தியா, பாகிஸ்தான், அர்ஜென்டைனா, கொரியா, ருமேனியா, சைனா ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றன. மிதமாக்கப் பட்ட வெப்ப நியூட்ரான்கள் பயன்படும் அணு உலைகள் ‘வெப்ப அணு உலைகள் ‘ [Thermal Reactors] என்று அழைக்கப் படுகின்றன.

     

    BWR, PWR, PHWR ஆகியவை மூன்றும் வெப்ப அணு உலை இனத்தைச் சேர்ந்தவை. வெப்ப அணு உலைகளில், நியூட்ரான் மிதவாக்கியும், வெப்பத்தைக் கடத்தும் திரவமும் [Water or Heavy Water] ஒன்றாகவோ அல்லது தனித்தனி யாகவோ இருக்கலாம். பிரிட்டனில் உள்ள சில அணு உலைகளில், மிதவாக்கித் திரள்கரியாகவும் [Graphite], வெப்பக் கடத்தி கரியமில வாயுவாகவும் [Carbon dioxide Gas] பயன்படுகிறது.

    செழிப்பு உலோகங்களான யுரேனியம்238, தோரியம்232 ஆகியவற்றை அணு உலைகளில் வேக நியூட்ரான்கள் தாக்கினால்தான் பிளவு உலோகங்களான புளுடோனியம்239, யுரேனியம்-233 ஆகியவை உண்டாகும். ஆதலால் அவற்றை மிகையாக உற்பத்தி செய்ய, மிதவாக்கி யில்லாத ஓர் தனிப்பட்ட அணு உலை தேவைப்படுகிறது. மிதவாக்கி யில்லாத அணு உலைகளே வேக அணு உலை [Fast Reactor] என்று அழைக்கப் படுகின்றன. பாரதத்தின் [FBTR, PFR], பிரான்ஸின் [Rapsodie, Phenix, Super Phenix] ஆகியவை யாவும் வேக அணு உலை ரகத்தைச் சேர்ந்தவை!

     

    வேக அணு உலைகளை முதலில் இயக்க முக்கிய பிளவு எரு திரட்சியான யுரேனியம்235 [Greater than 30% Enriched U235] அல்லது புளுடோனியம்239 தேவைப் படுகிறது. மைய எரிக்கோல்களைச் சுற்றிலும் யுரேனியம்238, அல்லது தோரியம்232 உலோகத்தைக் கவச அரணாக வைத்தால், அணு உலையில் உண்டாகி வெளியேறும் வேக நியூட்ரான்கள் அவற்றைத் தாக்கும். தேய்வுத் தொடர்ச்சியில் யுரேனியம்238, புளுடோனியம்239 ஆகவும் தோரியம்232, யுரேனியம்233 ஆகவும் மாறுகின்றன. அதாவது வேக அணு உலை இயங்கும் போது மூல அணு எரு குறைந்து, புதிய அணு எரு தொடர்ந்து கவச அரணில் கூடுகிறது. அதாவது முதலில் இட்ட எருவைவிட, விளைந்த எரு மிஞ்சியாதாகக் காணப் படுகிறது! அவ்விதம் எரிபொருள் பெருகும் அமைப்பே ‘வேக எருப்பெருக்கி அணு உலை ‘ [Fast Breeder Reactor] என்று குறிப்பிடப் படுகிறது. மையத்தில் உள்ள அணுஎரு கரைந்து சிறுக்கும் போது, அரணில் அணுஎரு கூடிப் பெருகுகிறது! சராசரி ‘எருப் பெருக்கும் விகிதம் ‘ [Fuel Breeding Ratio] 1.2! அதாவது ஒரு டன் எருவில் ஆரம்பமாகும் அணு உலை, குறிப்பிட்ட காலத்தில் 20% மிகையாக 1.2 டன் புதிய அணு எருவை ஈன்றுகிறது! அவ்வழியில் புதிய எருவின் அளவு ‘இரட்டையாகும் காலம் ‘ [Doubling Time] 10-15 ஆண்டுகள் என்று கணக்கிடப் பட்டுள்ளது!

     

    அணு உலை இயக்கத்தில் வேக நியூட்ரான் தாக்கும் போது, எரிக்கோல்கள் சிதைவதாலும், வெப்பத்தில் உப்பித் திரிபு அடைவதாலும், கதிர்வீசும் பிளவுக் கழிவுகள் தொடர்ந்து சேருவதாலும், அணு உலை நிறுத்தப் பட்டு எரிக்கோல்கள் மாற்றப் பட வேண்டும். அதே சமயம் கவச அரணில் தேங்கிய யுரேனியம்238 அல்லது தோரியம்232 கூட்டுகள், புதிதாய் உண்டான புளுடோனியம்239, யுரேனியம்233 ஆகிய எருக்களைத் தனியாகப் பிரிக்கவும், கதிரியக்கக் கழிவுகளைச் சுத்திகரிக்கவும் அவை அணு உலையிலிருந்து நீக்கப் பட்டு எருச் சுத்திகரிப்புத் தொழிற்கூடத்திற்கு [Spent Fuel Reprocessing Plant] அனுப்பப்பட வேண்டும்.

    வேகப் பெருக்கி அணு உலைகளின் சிறப்பு மேம்பாடுகள்

    இந்தியாவில் ஏராளமாகப் புதைந்து கிடக்கும் 360,000 டன் தோரியம்232 செழிப்பு உலோகத்தை வேகப் பெருக்கி அணு உலைகள் மூலம் யுரேனியம்233 ஆக மாற்றி, அடுத்து 400 ஆண்டுகளுக்கு 400,000 MWe மின்சக்தியை உற்பத்தி செய்யலாம் என்று இந்தியப் பொறியியல் துறைஞர்கள் கணக்கில் அனுமானிக்கிறார்கள்!

     

    மிகத் துணிவான அம்முயற்சி இமய மலையில் பல முறை ஏறி, மாந்தர் அங்கேயே தங்கி உயிர் வாழ்வதை ஒத்தது! உலகில் வேறு எந்த நாடும் பாரத நாட்டைப் போல் தோரியத்தைப் பயன்படுத்தி வேகப் பெருக்கி அணு உலையை அமைக்க முயன்ற தில்லை!

    இப்போது இயங்கி வரும் 13 வெப்ப அணு உலைகள் மூலம் இயற்கை யுரேனியத்தில் 1%-2% அணுசக்தியைத்தான் பிழிந்தெடுக்க முடிகிறது! அந்த முதற் கட்ட அணுசக்தி உற்பத்தியில் 12,000 MWe ஆற்றலை 30 ஆண்டுகளுக்கு உண்டாக்கலாம்! இரண்டாம் கட்டத்தில் புளுடோனியத்தைப் பிரதம எருவாகவும், இயற்கை யுரேனியத்தைக் கவச அரணாகவும் பயன்படுத்தி வேகப் பெருக்கிகளை இயக்கினால், யுரேனியம்238 புளுடோனியம்239 ஆக மாறி எருவின் அளவு மிகையாகிறது. அம்முறையில் ஒவ்வொரு தரமும் புளுடோனியம்239 சேர்வதால் வேகப் பெருக்கிகளால் யுரேனியத்திலிருந்து 75% அணுசக்தியைப் கறக்க முடியும் என்று பொறியியல் துறைஞர் கணிக்கிறார்கள்! அவ்வழியில் இன்னும் 250,000 MWe ஆற்றல் சக்தி சில நூற்றாண்டுகளுக்கு உண்டாக்கலாம் என்று கணித்துள்ளார்கள்!

     

    அவ்விதம் சேகரித்த புளுடோனியத்தை எருவாகவும் அடுத்து தோரியம்232 செழிப்பு உலோகத்தைக் கவச அரணாக வைத்து, வேகப் பெருக்கிகளில் புதிய எரு யுரேனியம்233 உண்டாக்கலாம்! அம்முறையில் சேகரித்த யுரேனியம்233 பிரதம எருவாகப் பயன்படுத்தி, தோரியத்தைக் கவச அரணாக வைத்துத் தொடர்ந்து அணுசக்தியையும், புதிய எருவையும் ஒரே சமயத்தில் உண்டாக்கலாம்! அவ்விதம் ஆக்கும் மூன்றாம் கட்ட அணுசக்திதான் 400,000 MWe 400 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உற்பத்தி செய்யலாம் என்று அனுமானிக்கப் படுகிறது! தாளில் கணக்கிட்டுக் காட்டுவது ஒன்று! மெய்யாக அந்த மூன்றாம் கட்ட நிலைக்கு முழு முயற்சியில் மூழ்கி வெற்றி பெறுவது வேறோன்று!

    அதாவது யுரேனியம் [U238+U235] + நியூட்ரான் -> அணுசக்தி + புளுடோனியம்239 + கழிவுகள் -> புளுடோனியம்239 + தோரியம்232 + நியூட்ரான் ->அணுசக்தி + யுரேனியம்233 + கழிவுகள் -> யுரேனியம்233 + தோரியம்232 + நியூட்ரான் ->அணுசக்தி + யுரேனியம்233 + கழிவுகள் என்று நடப்பில் கூடுமான சங்கிலித் தொடர் சீராகத் தடம் புரளாமல் தண்ட வாளத்தில் ஓடுமா என்பதுதான் உறுதியாகச் சொல்ல முடியாது!

    வெப்ப அணு உலை மின்சக்தி ஆக்கத்தில் 30% வெப்பத்திற வீதம் [Thermal Efficiency] கிடைக்கும் போது, வேகப் பெருக்கி மின்சக்தி உற்பத்தியில், 40% வெப்பத்திற வீதம் அடையலாம் என்று தெரிகிறது! பாரத அணுத்துறை விஞ்ஞானிகளுக்கும், எஞ்சினியர் களுக்கும் 1956 முதல் 2002 ஆண்டு வரைக் கடந்த 46 ஆண்டுகள் அணுவியல் நுணுக்கத்தில் 200 Rys [200 Reactor Years] மேற்பட்ட அனுபவம் கிடைத் துள்ளது. அந்த மாபெரும் அனுபவத் திறமையால், வேகப் பெருக்கியில் விளையும் சிரமமான, சிக்கலானப் பிரச்சனைகளைத் தீர்க்க வழிகள் உள்ளன!

    வேகப் பெருக்கி அணு உலைத் திட்டத்தில் எழும் குறைபாடுகள்

    1985 இல் முதன் முதல் பூரணத் தொடரியக்கம் புரிந்த வேகப் பெருக்கி ஆய்வு அணு உலை FBTR ஏதோ சில பிரச்சனைகளால் 40 MWt முழு ஆற்றலிலிருந்து குறைக்கப் பட்டு, சிறிய எருக்கருவாக [Smaller Fuel Core] மாற்றப்பட்டு 10 MWt [25% Capacity] ஆற்றலில் இப்போது இயங்கி வருகிறது! ஆய்வு அணு உலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை, டிசைன் போதாமையா, அல்லது அணு உலைக் பாதுக்காப்பில் பிசகா, எதனால் குறைந்த ஆற்றலில் இயங்கி வருகிறது என்னும் காரணம் அறிவிக்கப் படவில்லை!

     

    அடுத்து 40 MWt ஆற்றல் சோதனை அணு உலை அனுபவம் முழுவதுமாக அடையும் முன்பே, அதை விட 30 மடங்கு பெரிய 1200 MWt முன்னாய்வு வேகப் பெருக்கி அணு உலைக்குப் [Prototype Fast Breeder Reactor] பாய்வது, மாபெரும் பகடை ஆடும் துணிச்சலாகத் தெரிகிறது! அவ்விதம் துணிந்து 500 MWt மேல் ஆற்றல் கொண்ட வேகப் பெருக்கிகளைக் கட்டி பகடை ஆடிய பல உலக நாடுகள், அணு உலைகளில் பாதுகாப்புச் சிக்கல்கள் மிகுந்து தொடர்ந்து இயக்க முடியாது, செம்மைப் படுத்த நிதியின்றி, அவற்றை நிரந்தரமாக நிறுத்தி மூடிவிட்டன!

    சோடியத் திரவம் வெப்பம் கடத்தும் வேகப் பெருக்கி அணு உலைகளில் எதிர்பாராது பூரணத் தொடரியக்கம் துவங்கி [Accidental Criticality] வெடிப்பு விபத்துகள் நேர்ந்திட வாய்ப்புக்கள் இருந்ததால், பல அணு உலைகள் மூடப்பட்டதாய் அறியப் படுகிறது! ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கியில் நீராவி ஜனனிக்குள் புகும் துவித சோடியத் திரவத்தில் [Secondary Sodium Loop] தீப்பற்றி, அணு உலை மூடுவதற்கு ஒரு காரண மானது! வேகப் பெருக்கியில் வேக நியூட்ரான் தாக்குதலால் எரு வீக்கம் [Fuel Swelling] அடைந்து, அதனால் சோடிய ஓட்டமும் குறைந்து, எரிக்கோல் ஆக்கும் வெப்பம் கடத்தப் படாமல் சூடேரிச் சிதைந்து, கதிரியக்கக் கழிவுகள் வெளியேறி, அணு உலை எங்கும் தீவிரக் கதிர்த் தீண்டலாகிப் [Severe Radioactive Contamination] பெரும் சிக்கலைத் தூண்ட வாய்ப்புள்ளது!

     

    இயங்கும் வெப்ப அணு உலைகள் 20, கட்டப்படும் அணு உலைகள் அளிக்கும் >4800 MWe ஆற்றலில் ஈன்றும் புளுட்டோனியம்-239 வேகப் பெருக்கி அணு உலைகளின் பசியைத் தீர்க்குமா என்பது சரிவரத் தெரியவில்லை! 1 MWt வெப்ப அணு உலை [1 g Plutonium for 1 MWD(th) operation] ஒரு நாள் இயங்கினால், சுமார் 1 கிராம் புளுடோனியம் கிடைக்கும்!

    சோதனை வேகப் பெருக்கியில் அனுபவம் பெற்ற கார்பைடு எருவில் [70% Pu239 Carbide + 30% Nat.U238 Carbide] பிரச்சனைகள் இருந்ததால், அடுத்து ஆக்ஸைடு எரு [30% Pu239 Oxide + 70% Nat.U238 Oxide] புதிய முன்னாய்வு வேகப் பெருக்கியில் முதன் முதலாகப் பயன்படுத்தி இனிமேல்தான் அனுபவம் பெற வேண்டும். அப்புதிய முற்பாடு ஏராளமான நிதியையும், காலத்தையும் விழுங்கிக் கொள்ளப் போகிறது! கார்பைடு எருவை எரிக்கோலாக அமைப்பது கடினம்! அது தானாகத் தீப்பற்றும் [Pyrophoric] தன்மை உடையது! நீரரிப்பும் ஆக்ஸிஜனால் பாதிப்பும் [Hydrolysis & Oxidation] அடையும் குண முடையது! ஆனால் எருப்பெருக்கும் விகிதம் [Breeding Ratio] ஆக்ஸைடு எருவுக்கு மிகவும் குறைவானதால் [1.1], எரு இரட்டிக்கும் [Fuel Doubling Time] காலம் நெடுங் காலமாய் 15-20 ஆண்டுகள் கூடப் போகலாம்!

     

     

    கதிரியக்கக் கழிவுகளை ரசாயன முறையில் நீக்கி புளுடோனியம்239 அல்லது யுரேனியம் -233 எரு உள்ள விளைவுகளைத் தனித்தெடுக்கும் மூன்று எருச் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகள் [Capacity: 30 Ton/year at Trombay; 100 Ton/year at Tarapur; 120 Ton/yearat Kalpakkam] தொடர்ந்து அணு எருக்கோல்களைத் தயாரிக்க அனுப்ப முடியுமா என்பதும் சரிவரத் தீர்மானிக்க முடியாது!

    சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் டன் கணக்கில் ஏராளமாகச் சேரும் தீவிரக் கதிர்வீச்சுக் கழிவுகளைக் கவசக்கலன்களில் [Shielded Containers] அடைத்து நூற்றுக் கணக்கான மைல் தூரங்களுக்குப் போக்குவரத்து வாகனங்களில் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதும், சுத்திகரிக்கக் கொண்டு வருவதும் மிக மிகச் சிரமமான வேலைகள்! கதிரியக்க சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் ஏராளமான கதிர்வீசும் கழிவுகளைக் கையாள்வதும், மிக மிகக் கடினமான வேலைகள்! அடிக்கடி நேரும் மானிடத் தவறுகளால், தீவிரக் கதிர்வீச்சு, கதிர்த் தீண்டல் [Radiation & Radioactive Contamination] பிரச்சனைகள் மாந்தரையோ அல்லது சூழ்நிலைக் காற்றையோ அடிக்கடிப் பாதிக்க வாய்ப்புகள் உண்டாகலாம்!

    உலகில் இதுவரை இயங்கிய வேகப் பெருக்கிகளில் எதிர்பாராத வெடிப்பு விபத்து நேர்ந்திடும் அச்சம் இருந்ததால், அவை யாவும் இடைநிலை அல்லது குறைந்த ஆற்றல் தகுதியில்தான் [Medium or Low Capacity Factor] மின்சக்தி பரிமாறி வந்துள்ளன! அநேக வேகப் பெருக்கிகள் முழு ஆற்றலில் மின்சக்தியைத் தொடர்ந்து அளித்ததாக இதுவரை அறியப் படவில்லை!

     

     

    வேகப் பெருக்கி அணு உலைகளில் டிசைன், இயக்கம், பராமரிப்புச் சிக்கல்கள்

    1.   வேகப் பெருக்கி அணு உலைகளில் நியூட்ரான் மிதவாக்கி (Moderator) இல்லை.  அந்த அணுமின்  உலைகளில் வேக நியூட்ரான்களால் அணுப்பிளவு நேர்வதால் (Fast Fission) அணு உலை ஆற்றல்  கட்டுப்பாடு, நிறுத்தம், வெப்பத் தணிப்பு முறைகளைக் கையாள் வது வெகு சிரமம் தருபவை.   மிதவாக்கி உள்ள சாதாரண  மித நியூட்ரான் இயக்கும் (Thermal Fission) அணு உலைகள் போல் வேக நியூட்ரான் அணுப்பிளவு இயக்கம் எளிதான தில்லை.  தணிப்புத் திரவம் சோடிய  ஓட்டத்தில் இடைவெளியோ, தடைப் பட்டாலோ  (Loss of Coolant or Interruption of Sodium Flow) மீறும் தொடரியக்கம் (Prompt Critical or Runaway Nuclear Reactions)  ஏற்பட்டு வெப்ப மிகுதியால் அணு உலை வெடிப்பு நேர்ந்திட வாய்ப்புக்கள் எழலாம்.

    2.  தணிப்புத் திரவமான சோடியம் மிகச் சிறந்த தணிப்பு இரசாயனம்.  ஆனால் அது கசிந்தால், நீர், வாயு அல்லது ஆக்ஸிஜன் சூழ்நிலையில் தீவிர வெடிப்பை உண்டாக்குகிறது.

    3.   புளுடோனியம் -239 எருக்கோல்கள் சில வேகப் பெருக்கி அணு உலைகளில் பயன்படுத்தப் படுகின்றன.   யுரேனிய -235 / -233 எருக் கோல்களை விட புளுடோனியம் தீவிர கதிரியக்கத் தீங்கு விளைவிப்பது.

    4.  வேகப் பெருக்கி அணு உலை இயக்கத்தால் யுரேனியம் / புளுடோனியப் பிளவுக் கழிவுகள் மிகுதியாகச் சேமிப்பாகின்றன.    அதனால் இயக்குநருக்குக் கதிரியக்கத் தீங்குச் சூழ்நிலை / வாய்ப்புக்கள்  மிக மிக அதிகம்.

     

     

    வேகப் பெருக்கி அணு மின்சக்தியின் விலை மதிப்பு

    இந்திய அணுசக்தித் துறையகம் ஒதுக்கியுள்ள 3000 கோடி ரூபாயிக்கும் மேலாக 500 மெகா வாட் வேகப் பெருக்கியை அமைக்க நிதி செலவாகும் என்று கருதப் படுகிறது! உற்பத்தி யாகும் மின்சக்தி யூனிட் ரூ 5 முதல் ரூ 10 வரை ஏறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது! அமெரிக்கா, ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணு உலைகள் கட்டி முடிந்தபின் அவற்றின் செலவு செங்குத் தாய் ஏறியதைப் பார்த்தால், கல்பாக்கம் வேகப் பெருக்கியின் இறுதி நிதி மதிப்பும் ரூ 22,000 கோடி முதல் ரூ 46,000 கோடி வரை நீண்டு விடலாம் என்று அஞ்சப் படுகிறது! அவ்விதம் கணக்கிட்டால், மின்சக்தி நிலையத்தின் இயக்க நடப்பின்படி [Plant Performance] மின்சார யூனிட் ரூ 9 முதல் ரூ 50 வரை கூடப் போய்விடலாம்!

    முதலில் சோதனை வேகப் பெருக்கி அணு உலை டிசைன் ஆனபோது, ‘எருத் தீரும் வீதம் ‘ [Fuel Burn-up] 25,000 MWDay/Ton என்று அனுமானிக்கப் பட்டு, மின்சக்தி விலை ரூ 3.20/யூனிட் என்று கணக்கிடப் பட்டது! ஆனால் மெய்யாகச் சோதனை வேகப் பெருக்கி அணு உலையில் [FBTR] புளுடோனியம் கார்பைடு எருவைப் பிளந்து 88,000 மெகா.வாட்.நாள்/டன் [MWDay/Ton] ஆற்றல் அளித்ததைக் குறியாகக் கொண்டு மின்சக்தியின் விலை இன்னும் மலிவாகலாம் என்று கருத வழி யிருக்கிறது!

     

     

    மூன்றாவது முடிவுக் கட்டத்தில் யுரேனியம்233 + தோரியம்232 சுற்று முறையில் உற்பத்தி யாகும் மின்சக்தியில் எரு இரட்டிப்புக் காலம் [Fuel Doubling Time] நீண்டும், கழிவுச் சுத்திகரிப்பு முறையில் [Spent Fuel Reprocessing] சிரமும் மிகுந்து ஆதாய மில்லாமல் இருக்கிறது. அதே சமயத்தில் இரண்டாம் கட்டத்தில் புளுடோனியம்239 + யுரேனியம்238 சுற்றியக்கத்தில் உலோகப் பயன்பட்டால், எரு இரட்டிப்புக் காலம் குறுகியும், கழிவுச் சுத்திகரிப்பு முறை எளிதாகவும் லாபம் ஈன்றுகிறது! அதுவும் Pu239+U238 ஆக்ஸைடு எரு உபயோக மானால், எருப் பெருக்கம் [Breeding Ratio] 1.1 விகிதத்தில் புதிய எரு சிறிது சிறிதாய்ச் சேர்கிறது! ஆகவே எரு இரட்டிப்புக் காலம் 15 -20 ஆண்டுகள் கூட நீண்டு போகலாம்!

    மேலும் இப்போது இயங்கி வரும் 13 இந்திய அணு உலைகளில் உள்ள ஆற்றல் தகுதி விகிதம் [Plant Load Factor (PLF)] 60%-70%, அணு உலைகள் வயதாகி முதுமை அடையும் காலத்தில் இன்னும் சராசரி குன்றிப் புளுடோனிய மூல உற்பத்தி குறைந்து போகும்! முடிவாகக் கூறப் போனால் வேகப் பெருக்கிகளின் மின்சாரத் திட்டம் மெதுவாக முன்னேறும் ஒரு முறைபாடு! மலிவான மின்சக்தியை நாம் எதிர்பார்க்க முடியாத ஓர் வினைப்பாடு!

     

     

    வாணிபத்துறை உற்பத்திக்கு வேகப் பெருக்கி தகுதி பெறுமா ?

    1996 அக்டோபரில் பாபா அணு ஆய்வு மையத்தில் 30 கிலோவாட் ஆற்றல் கொண்ட ‘காமினி ஆராய்ச்சி அணு உலை ‘ [Kamini Research Reactor (30 Kwt)] முதலில் தோரியம்232 ஈன்ற யுரேனியம்233 எருவை பயன்படுத்திச் சிறிய அளவில் வெற்றி அடைந்தது! அடுத்து 40 MWt சோதனை வேகப் பெருக்கி அணு உலை [FBTR] 1985 இல் பூரணத் தொடரியக்கம் துவங்கி, மின்சக்தியைப் பரிமாற [1997] பனிரெண்டு ஆண்டுகள் ஆயின! ஆனால் அந்த அணு உலை ஏதோ சில பாதுகாப்புச் சிக்கலால், எருக்கரு சிறிதாக்கப் பட்டு [Smaller Fuel Core] 10 MWt வெப்ப சக்தியில் 25% ஆற்றல் தகுதியில்தான் இயங்கி வருகிறது!

    40 MWt சோதனைக் கட்ட அணு உலை முடங்கிய நிலையில் இயங்கும் போது, முப்பது மடங்கு பெரிய 1250 MWt முன்னோடி வேகப் பெருக்கி அணு உலைக்கு [PFBR] ஒரே மூச்சில் தாவியது முறையான முடிவா என்பதுதான் தெரியவில்லை! 40 MWt ஆற்றல் உள்ள ராப்ஸோடி [Rapsodie] சோதனை வேகப் பெருக்கி அணு உலையை 1967 இல் துவங்கி, 625 MWt [250 MWe] ஆற்றல் கொண்ட ஃபீனிக்ஸ் [Phenix] முன்னோடி வேகப் பெருக்கியில் மகத்தான வெற்றி கண்ட பிரான்ஸ், தனது வாணிபத்துறை 2900 MWt பூத ஃபீனிக்ஸ் [Super Phenix] வேகப் பெருக்கியை அமைத்து 1984 இல் அதை இயக்க ஆரம்பித்து, 1996 வரை மின்சக்தி அனுப்பி 1997 இல் பெருத்த நிதி நிலையமென்று அரசாங்கத்தால் நிறுத்தமானது!

     

    Japan Monju Fast Reactor

    Japan Monju Fast Reactor

    ஆனால் பூத ஃபீனிக்ஸ் அடுத்து அடுத்துப் பெரும் விபத்துக் குள்ளாகி, எதிர்பார்ப்புக்கும் கீழாக இயங்கி [1985 முதல் 1994 வரை] ஒன்பது ஆண்டுகளில் முழு ஆற்றலில் [1200 MWe (2900 MWt)] ஓடிய நாட்கள் 174 என்று அறியப் படுகிறது! 344 பில்லியன் பிராங்ஸ் (56.5 பில்லியன் டாலர் US) [1994 நாணய மதிப்பு] செலவில் கட்டப் பட்ட பூத ஃபீனிக்ஸ் [1985-1998] 13 ஆண்டு களாக சராசரி இயக்கத் தகுதி விகிதம்: 6.3% [Average Availability Factor]! 2000 டிசம்பர் 31 வரை 7 பில்லியன் பிராங்ஸ் (1.15 பில்லியன் டாலர் US) செம்மைப் படுத்தவும், செப்பணி டவும் செலவாகி, பொது மக்களின் பலத்த எதிர்ப்புக்கு வலுவற்று 1998 பிப்ரவரி 3 ஆம் தேதி நிரந்தரமாக நிறுத்தப் பட்டு மூடப் பட்டது! அதே ஆண்டு முன்பு மூடப்பட்ட 250 MWe ஆற்றலில் சிறப்பாக இயங்கிய சிறிய ஃபீனிக்ஸ் மீண்டும் துவக்கப் பட்டது!

    பிரான்ஸின் வேகப் பெருக்கி அணு உலைகளின் அனுபவம் பாரத நாட்டுக் கூறும் அறிவுரை கள்  என்ன ? 250 MWe ஆற்றலுக்கும் மேற்பட்ட வேகப் பெருக்கிகளால் தொடர்ந்து மின்சக்தி பரமாறுவதில் அடிக்கடி பிரச்சனைகள் நேர்வதாலும், அணு உலைக் கட்டுப்பாடில் அபாயங்கள் நேர வாய்ப்புகள் உள்ளதாலும், முன்னோடி ஆய்வுக்குச் சிறிய அணு உலைகளே வாணிபத் துறை வளர்ச்சிக்குத் தகுதி பெற்றவை என்று தெளிவாகக் கூறுகிறது!

    பாரத அணுசக்தித் துறையகம் 2020 ஆண்டுக்குள் இன்னும் நான்கு 500 MWe ஆற்றல் வேகப் பெருக்கி அணுமின் நிலையங்களையும், அப்புறம் 1000 MWe பூத வேகப் பெருக்கி ஒன்றை நிறுவவும் முற்படுவது, முறையான நிதிமுறைத் திட்டங்களா என்பது இன்றைய உலக அனுபவங்களைக் கொண்டு உறுதியாகக் கூற முடியாது !  மேலும் சமீபத்தில் ஜப்பானில் புகுஷிமாவில் ஏற்பட்ட நான்கு அணுமின் உலைகளில் சுனாமியால் ஏற்பட்ட வெடி விபத்துக்களும், கதிரியக்க வெளியேற்றங்களும் உலக மாந்தருக்குக் பேரதிர்ச்சியும் வெறுப்பும் அளித்துள்ள போது இந்தியா எண்ணற்ற அணுமின் உலைகளைக் கட்டுவது சிந்தனை யற்ற துணிச்சல் திட்ட மாகத் தெரிகிறது.   இதுவரை அனுபவம் பெறாத எண்ணற்ற அந்நிய அணுமின் உலைகளில் பல்லாண்டுகள் பணி செய்ய தற்போது பயிற்சி பெற்ற விஞ்ஞானப் பொறியியல் நிபுணரும் இந்தியாவில் இனிமேல்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ****************

    தகவல்

    1. Nuclear News [June 1995]

    2. Nuclear Issues by T. S. Subramanian [Former Scientific Advisor to Indian Defence Minister]

    3. India ‘s Nuclear Breeders, Technology & Viability by: Rahul Tongia & V.S. Arunachalam, Dept of Engg & Public Policy, Carnegie-Mellon University, Pittsburgh, PA [V.S. Arunachalam Former Scientific Advisor to Indian Defence Minister ] [Current Science, September,25 1998]

    4. Nuclear Power Policy by: Dr. R. Chidambaram [Former Chairman Atomic Energy Commission]

    5. Nuclear Power, India Set to Make it Big by: Radhakrishna Rao [June 2001]

    6. Dept of Atomic Energy Article: Fast Breeder Reactors

    7. Scrap Plans for Fast Reactors by: Arjun Makhijani, President, Institute of Energy & Environmental Research, Takoma Park, Maryland, U.S.A. [Hindu April 25, 2001]

    8. Prototype Fast Breeder Reactor, International Journal of Nuclear Power by: S.B. Bhoje, Director IGCAR, Kalpakkam [2002]

    9. India’s Fast Breeder Nuclear Reactors & Australian Uranium By : Marko Beljac (August 17, 2007)

    10 Nuke Free South Asia – The Safety Inadequacies of India’s Fast Breeder Reactor By : Ashwin Kumar & M. V. Ramana (July 21, 2009)

    11 Fast Breeder Reactor are the least Safe By : S.A. Iyer (March 27, 2011)

    11 [a]  http://www.aec.go.jp/jicst/NC/about/hakusho/white-paper/GENSI.HTM  [Japan Monju Fast Reactor]

    12.  http://www.indiannewsandtimes.com/2013/10/21/kbl-becomes-indian-company-develop-critical-application-sodium-pumps-fast-breeder-nuclear-reactors/   [December 18, 2014]

    13.  http://en.wikipedia.org/wiki/Sodium-cooled_fast_reactor  [August 20, 2014]

    14. http://www.nuclearpowerdaily.com/reports/China_experimental_fast_reactor_runs_at_full_capacity_999.html  [December 23, 2014]

    15.  http://en.wikipedia.org/wiki/Fast-neutron_reactor  [December 24, 2014]

    16.  http://en.wikipedia.org/wiki/Breeder_reactor   [December 30, 2014]

    17.  http://en.wikipedia.org/wiki/Superph%C3%A9nix  [November 1, 2014]

    18.  http://en.wikipedia.org/wiki/Prototype_Fast_Breeder_Reactor  [November 10, 2014]

    19.  http://www.world-nuclear.org/info/Current-and-Future-Generation/Thorium/ [September 2014]

    20.  http://www.energyandcapital.com/report/investing-in-the-future-of-thorium/982  [January 2015]

    21.  http://en.wikipedia.org/wiki/Thorium-based_nuclear_power [December 30, 2014]

    22.  http://en.wikipedia.org/wiki/China_Experimental_Fast_Reactor  [July 27, 2014]

    23.  http://newscontent.cctv.com/NewJsp/news.jsp?fileId=274037  [China Fast Reactor] [December 18, 2014]

    23.  http://www.world-nuclear.org/info/Current-and-Future-Generation/Fast-Neutron-Reactors/   [December 2014]

     

    **************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) January 3, 2015

    Attachments area
    Preview YouTube video NRE project breeder reactors

    NRE project breeder reactors

    Preview YouTube video Thorium reactors and their feasibility: Thomas Drolet on Cambridge House

    Thorium reactors and their feasibility: Thomas Drolet on Cambridge House

    Preview YouTube video Mars & Beyond – Temple of Modern Science: Fast Breeder Reactor

    Mars & Beyond – Temple of Modern Science: Fast Breeder Reactor

    Preview YouTube video Mars & Beyond – Homi J Bhabha: Through his Contemporaries

    Mars & Beyond – Homi J Bhabha: Through his Contemporaries

    Preview YouTube video Inside India’s Fast Breeder Nuclear Reactor Programme [NDTV Report] 01 of 02

    Inside India’s Fast Breeder Nuclear Reactor Programme [NDTV Report] 01 of 02

    Preview YouTube video How Thorium can save the world: Salim Zwein at TEDxBeirut 2012

    How Thorium can save the world: Salim Zwein at TEDxBeirut 2012

    Preview YouTube video Advanced Nuclear Power Systems for Long-term Energy and Climate Security – ANU Lecture

    Advanced Nuclear Power Systems for Long-term Energy and Climate Security – ANU Lecture
    Share
  • மார்கழி மலர்கள் – கல்லுக்கு நன்றி

    இசைக்கவி ரமணன்

     

    கல்லுக்கு நன்றி

    380px-Threejewels.svg

    நேற்றைக்கு நீ என்றன்
    நெற்றியில் எறிந்த கல்
    குறிதவறாமல், முகத்தைக்
    கோணல்சிவப்பாய் ஆக்கிய கல்
    உடனே சிரித்த ஊரார்கள் ஊடே நீ
    தடமின்றி மெல்லக் கடந்து சென்றாய்

    என்மீது விழுந்த கல்
    என்னைக் கடந்து எங்கே செல்லும்!
    உன்போல இன்னும் சிலர்
    உரிமையோடு எறிந்த
    ஒவ்வொரு கல்லையும்
    ஒழுங்காக அடுக்கித்தான்
    உறுதியாக நின்றுகொண்டு
    உங்களுக்கு நன்றிசொல்லிக்கொண்டிருக்கிறேன்!

    ஊட்டி வளர்த்த பலரை விடவும்
    உதைத்து வளர்த்த உங்கள் உதவிக்கு
    மாட்சிமை அதிகமையா
    கல்லெறிந்த மண்ணின் மைந்தர்களே!

    அவமானம், வலி
    அவையேதும் இன்றில்லை
    காறித் துப்பிக் கழுவிய நீரும்
    கங்கையாய் எங்கோ விரைவது போலே
    கல்லெல்லாம் அனுபவமாகிக்
    களைப்பாறிப் பாடுகின்றேன்

    என்
    நெற்றியைப் பார்க்கும் போது
    வரத்தான் செய்யும்
    நேற்றைய நினைப்பு உங்களுக்கு
    தயங்காமல் வருக!
    தழுவக்காத்திருக்கின்றேன்
    கல்லெறிந்த கையைக்
    கனிவோடு தடவிக்
    கண்ணிலொற்றிக் கொள்வேன்

    03.01.2015 / சனி / 9.50

     

    படத்திற்கு நன்றி

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

    Share
  • என்றென்றும் புத்தாண்டு

    சத்தியமணி

    images

    பதினாறு பெறுவதற்கு புவியிலே இன்புறவே

    பதினைந்து வருவதற்கு பல்லாண்டும் பாடுகிறார்

    பதினான்கை புதிப்பிக்க‌ பதினைந்து களிப்புறவே

    பதியாதார் பாடாதார் பதம்போட்டு ஆடுகிறார்

     

    வருடம் ஒன்றேற வயதும் ஒன்றேற

    வருடும் முடிகற்றை மெலிதாய் நிறமாற‌

    வருவதும் அறியாமல்  வந்ததை தெரியாமல்

    வருவாய் முழுவதும் செலவாய் ஆக்குவதா?

     

    சாலமுறு  வாகனத்தில் சன்னலில் தெரிவதுபோல்

    காலங்கள் மாறிவரும் காட்சிகளும் மாறிவிடும்

    கோலமதை மாற்றிதம் குணமதனை மாற்றி

    ஏலமென விடுவதுவோ இவ்வாழ்க்கை! கேளிக்கையா?

     

    கிடைக்கின்ற ஒருநொடியும் அமிர்த துளியெனவே

    படைக்கின்ற  ஈசற்கு நன்றியென நவில்வீரே

    அன்போடும் பண்போடும் நட்போடு  வாழ்ந்தாலே

    இன்னும் பல்லாண்டு என்றென்றும் புத்தாண்டு.

    Share
  • மார்கழி மலர்கள் – புதிய வருடமும் பழைய கோயிலும்

    இசைக்கவி ரமணன்

     

    புதிய வருடமும் பழைய கோயிலும்

    Tamil-Daily-News-Paper_14554560185

    தேதிகள் கிழிந்தன சேதிகள் மறந்தன
    தெருமட்டும்
    களைத்ததுபோல் தென்பட்டாலும்
    சலிக்காமல் கிடக்கிறது
    சதா வளைந்து

    அந்தத்
    தெருவின் முனையில்
    மீண்டுமொரு தொடுவான நெருடல்
    தோதுபடாது என்றே
    தோன்றுகிறது எனக்கு

    திருவிழா இல்லாத வெறும் நாட்களில்
    தேரடியில் சும்மா இருக்கும் மொட்டை ரதம்போல்
    அனுபவ விழைவுகள் அடங்கிவிட்டன
    ஆர்வங்களும் ஆச்சரியங்களும்
    அயர்ச்சியின்றியே ஒடுங்கிவிட்டன
    மூடும்போது உள்ளே
    மூச்சை இழுத்துக்கொள்ளும் சுருதிப்பெட்டி போல

    கால்வைத்ததுமே
    கடந்தகாலக் காட்சிகள், நம்மைக்
    கண்பனிக்க வைப்பதற்கு முன்பே
    நேரே ஆன்மாவை நெருடுகின்ற
    நிலத்தில் வேறெங்கும் இல்லாத வாசனையோடு
    நிகழ்ந்தது நிகழ்ந்தபடி
    நெளிவுகளும் சுளிவுகளுமான சிற்பங்கள்
    நிறைந்திருக்கும் ஒரு
    கோயிலைக் கோருகிறேன்

    பலபேர் நடந்த கடற்கரை மணலை விடவும்
    பலமுகில் திரிந்த பரந்த வானத்தை விடவும்
    பரமும் இகமும் பல்லாங்குழி ஆடும்
    பழைய கோவில் விசேடமானது

    ஒரு
    காய்ச்சல் நேரத்துக் கனவில், அதிலோர்
    காலைப் பனியின் தேவதை நெளிவுகளின் நடுவே
    பாசை நடுவே பளபளக்கும் வெள்ளி மூக்குத்திபோல
    மொத்தமாய்க் கோயிலொன்று
    முளைத்து நிற்கிறது

    நெய்தொட்டுத் திரிவருடி, முத்துச் சுடர்களை
    நிமிர்த்திய விரல்களைத் தரிசிக்க ஆசை, அது
    நிழலிருட்டில் கன்னம் வருடி
    தழலேந்தியவனின் சினமுகத்தில்
    தருவித்திருக்கலாம் புன்னகையை
    யாரோ சிந்திய கண்ணீர்த் துளி
    தீரா விளக்காய் எரிந்துகொண்டிருக்கலாம்
    சிவகாமியின் ஒற்றைச் சதங்கை
    பவசாகரமாய்ப் பதறிக்கொண்டிருக்கலாம்

    கவலைகள் கவலைகளாய்
    களிப்புகள் களிப்புகளாய்
    அமைதி அயராத அமைதியாய்
    களேபரமில்லாத ஒரு கம்பீரத் தனிமையில்
    எம்பெருமான்
    ஓசையின்றி ஒரு களிநடம் புரிந்துகொண்டிருக்கலாம்

    பழைய கோயில்! ஆ!
    பழைய கோயில்!
    தமிழ்தந்த பேரிறைவன் தலையசைத்து ரசிப்பதற்காய்
    தரையிறங்கித் தானமர்ந்த கவிக்காவில்!

    எப்போதுமே யாருமே வராதது போலவும்t3
    இப்போதுதான்
    குந்தவை வந்து சந்தனம் தடவிச் சென்றது போலவும்
    மாயம் செய்கிறது, என்
    மாதேவன் கோயில்

    எட்டுவைத்தால்
    எத்தனை எத்தனையோ கண்கள் என்னை
    உற்றுப் பார்ப்பதுபோல்
    உயிரில் ஒரு மயிலிறகு வருடல்

    மீண்டுவிடவே முடியாத சரிவுகளில்
    மீண்டும் மீண்டும் என்னைத்
    தூண்டித் தள்ளிய துளிமனம்தான்
    மீளவே முடியாத தாளடியை நெருங்குகையில்
    தஞ்சத்திற்கு மிகவஞ்சித் தடுக்கிறது

    திசைகளொடுங்கும் மாடத்தில்
    தியானத்தில் இருந்து திமிர்ந்தெழுந்து
    திரியொன்று சிரிக்கிறது

    அதுவோ? அவளோ?

    சிறிய சிரிப்பில் பெருங்கோயில் மறைந்திருக்கத்
    திரும்பிய வேளையில்
    தொலைந்துபோய் விட்டிருந்தது
    தெரு

    03.01.2015 / சனி / 9.15

    Share
  • ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று

    மூலம் (சிங்களமொழியில்) – தர்மசிறி பண்டாரநாயக்கவின் ‘ஏகா அதிபதி’ நாடகத்தின் ஒரு பகுதி.
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.

    ஏகா அதிபதி நாடகம் குறித்து…

    dharma3

    தர்மசிறீ பண்டாரநாயக்கவினால் எழுதி, இயக்கப்பட்ட ‘ஏகா அதிபதி’ மேடை நாடகமானது 1976 இல் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டு, அவ் வருடத்துக்கான சிறந்த நாடக விருது, சிறந்த நடிகருக்கான விருது ஆகிய விருதுகளை உள்ளடக்கிய 8 விருதுகளை சுவீகரித்துக் கொண்டது. அரசியல் சர்வாதிகாரத்தை விபரிப்பதாக உள்ள இந் நாடகம் 1976 முதல் இன்று வரை 1400க்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்டு வெற்றிகண்டுள்ளது.

    பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று

    dharma1‘ நீ காண்டாமிருகம் போன்ற ஒரு மிருகமென உன்னைப் பார்த்த நாளிலேயே நினைத்துக் கொண்டேன். பால் குடித்து வளர்ந்தாலும் அது மிகப் பயங்கரமான மிருகம். ஆனால் அதன் கொம்பு உடையும் நாளில், அதன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும் என்பது அதற்குத் தெரியாது. இந்தக் கொஞ்ச நாளாக நீ என்ன செய்தாய்?’

    ‘ நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் போலச் செய்தேன்’

    ‘ நாட்டின் உயிரைக் காப்பாற்றவென்று நீ முன்வந்த நாளிலிருந்து போகத்தொடங்கியது எனது ஊர்’

    ‘ நீங்கள் என் மீது குற்றம் சுமத்தினாலும், நாட்டு மக்கள் என் பக்கம்தான் சார்ந்திருக்கிறார்கள்.’

    ‘ அழிவு ஆயுதங்களைக் காட்டினால் அந்த சார்பு நிலையை இல்லாமலாக்க முடியும்’

    ‘ ஆனால் அழிவு ஆயுதங்களால் செய்ய முடியாதவற்றைத்தான் நான் செய்திருக்கிறேன்’

    ‘ஆயுதங்களால் செய்ய முடியாதென்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆயுதத்தை நெஞ்சில் வைத்து எந்தவொரு மனிதனிடமிருந்தும் என்னால் வேலை வாங்க முடியும்’

    ‘ வேலை செய்யும் மனிதனின் நெஞ்சில் ஆயுதத்தை வைத்தவுடன் அது வெகுண்டெழத் தொடங்கிவிடும். வேலை செய்யும் மனிதன், தன் உடலைப் பாவிப்பதற்கு எப்பொழுதும் அவனது மூளை நிதானமாக இருக்க வேண்டும்’

    ‘ மூளை? அதன் அழகைப் பார்த்திருக்கலாமடா எல்லோருடைய மூளையும் வெளியே அமைந்திருந்தால். இருப்பவன் யார், இல்லாவன் யார் என்பதைக் கண்ட உடனேயே என்னால் சட்டென்று பிடித்திருக்க முடியும்’

    ‘ மூளை வெளியே இல்லாது போனாலும், இன்று மனிதனுக்கு வெளியே இருப்பவைகளை வைத்து ஒரு தீர்மானத்தில் இறங்கமுடியாது. நானும் உங்களிடமொரு கேள்வி கேட்கிறேன். என்னைச் சிறைப்படுத்துவதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் சேவை என்ன?’

    ‘கடமையாயிருந்தாலும் அதை அளவுக்கதிமாகச் செய்ய முற்படும் எவனாக இருந்தாலும், அவனைப் பற்றிக் கொஞ்சம் தேடிப் பார்ப்பது என்பது சந்தேகம் நிறைந்த ஒரு நிர்வாகியின் புத்திசாலித்தனமான வேலை’

    ‘ நான் எந் நேரத்திலும் செத்துப் போகத் தயார், செய்ய வேண்டிய சில கடமைகளைச் செய்து முடித்ததன் பின்னர்’

    ‘ தண்ணீர் நின்று விடும்போது, இன்னும் இரண்டு மாதம் கடந்தால், நீ இங்கிருப்பாயா என்ன?’

    ‘ நான் அந்த எதிர்பார்ப்போடு வேலை செய்யவில்லை’

    dharma2

    ‘ எதிர்பார்ப்பொன்றும் இல்லாமல் வேலையில் இறங்குபவனுக்கு, வேலையில் முன்னேற்றம் காணும்போது, தலையால் ஒளிக்கதிர்களைப் பரப்பிட எண்ணத்தோன்றும். ஒருநாளும் நினைக்கவில்லையல்லவா நீ சாவதற்கு?’

    ‘ பிறந்ததிலிருந்தே செத்துக் கொண்டு வாழ்ந்ததால், புதிதாக மரணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமொன்றும் எனக்கிருக்கவில்லை’

    ‘ உன்னைப் போல ட்ரான்ஸிஸ்டர்கள் மூலமாக வேலை செய்த வீரர்கள் உலக வரலாற்றிலும் இருக்கிறார்கள். நீ திடீரென இறந்துவிட்டால், சகோதர மக்கள் ஒன்றாக மோதி மோதி அழுவார்கள். அவர்களது கண்ணீரெல்லாம் சேர்ந்து, திரும்ப வெள்ளப் பிரளயமொன்றை ஏற்படுத்தக் கூடும். சும்மா நாங்கள் அதைப் பரீட்சித்துப் பார்ப்போமா?

    ‘ பரீட்சித்துப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நாங்கள் அழுதாலும் இப்பொழுது கண்ணீர் வருவதில்லை’

    ‘ நரம்புகளெல்லாம் இறுக்கமாகக் காய்ந்திருக்கும்’

    ‘ காயாமல் இருந்தவை எங்கள் நரம்புகள் மாத்திரம்தான்’

    ‘ உங்களது நரம்புகள் காயக் காயத்தான் எனதுடலுக்கு எப்பொழுதும் உயிர் வருகிறது’

    ‘ எங்களுக்கு இல்லாமல் போகவென்று ஏதுமில்லை உத்தமமானவரே’

    ‘ வாயை மூடு. இன்னொரு நாள், சூரியன் மறையப் போகும் மாலை நேரம், நான் உன்னை சந்திப்பேன். அன்றுதான் நீ என்னைப் பார்க்கும் கடைசி நாள். அதுவரை பிரிவுப் பாடல்களைப் பாடிக் கொண்டிரு. இங்கிருந்து எதிர்காலத்திட்டங்கள் செல்லுபடியற்றதாகிறது. இப்போது குந்தியிருந்தவாறு உன் கடந்தகாலத்தை யோசி. வீர மக்கள் அநேகம்பேர் சிறைச் சாப்பாடு நன்றாகச் சாப்பிட்டிருப்பதால், உனக்கும் அவை கஷ்டமளிக்காது என நினைக்கிறேன். செருப்புக்குப் பொருத்தமாக பாதத்தை வெட்டியிருந்தால் இவை எதுவுமே இல்லைதானே’

    தர்மசிறீ பண்டாரநாயக்க

    dharma

    தனது கலையுலக வாழ்வை நாடகங்களில், திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் ஆரம்பித்தவரும் திரைப்பட-நாடக நெறியாளராக அறியப்பட்டவருமான தர்மசிறி பண்டாரநாயக்க (Dharmasiri Bandaranayake : Drama & Film Director Script writer Producer) இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் வேவிற்ற என்ற இடத்தில் 06.10.1949 இல் பிறந்தார். இவரது surname நீலப் பெருமாள் (Kalukapuge)

    இவர், தானே எழுதி இயக்கிய முதல் நாடகமான ‘ஏகா அதிபதி’ 1976 இலிருந்து இன்று வரை 1400 இற்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்டுள்ளது. பிறமொழியில் அமைந்த நாடகங்களின் சிங்கள வடிவத்தினை அனேக தடவைகள் மேடையெற்றி தேசிய நாடகவிழாவில் சிறந்த நாடக இயக்குனர் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இவரது, இறுதியாக வெளிவந்த திரைப்படமான ‘பவதுக்க’ – பௌத்த நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகள் – யுத்தம் குறித்து, அனைத்துமே விதிப்படி என்ற பௌத்த சித்தாந்தத்தின் மீது கேள்வியை எழுப்பியிருந்தது.

    A-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து இதுவரை 4 சிங்களத் திரைப்பட விழாக்களை நண்பர்களின் உதவியுடன் நடாத்தியுள்ளதுடன் அங்கு சிங்களநாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். வட-கிழக்கு கலைஞர்களை, மக்களைச் சந்தித்து தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான நாட்டுக்கூத்து , வில்லுப்பாட்டு, கிராமிய-நாட்டுப்பாடல்கள், இசை, நடனம் இவற்றைப் பார்வையிட்டும் கேட்டும் வியப்படைந்து வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்தில் நாடகத்திற்குரிய மிகவும் வலுவான கூறுகள் (strong theatrical elements) இருப்பதையும் நாட்டார் இசையிலும் நடனத்திலும் வலுமிக்க நாடகத்திற்குரிய உருவங்கள் (strong theatrical images) இருப்பதையும் இனம் கண்டு அவற்றை விடியோ செய்ய ஆரம்பித்தார். பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் நாட்டக்கூத்தையும் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்தான தர்ம யுத்தத்தையும் விவரணப்படமாக்கி ஆங்கில உபதலைப்புக்களுடன் னஎன வடிவில் ஆவணப்படுத்தி தமிழர்கள் செய்திருக்க வேண்டிய ஒரு அரும்பணியை ஆற்றியுள்ளார்.

    தர்மசிறி, இந்தியாவில் நடைபெற்ற இராமாயண நாட்டுக்கூத்துத் திருவிழாவிற்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் கேரளா, தமிழ்நாடு சென்று கலைஞர்களுடன் உரையாடி அங்குள்ள கூத்துவகைகளைப் பற்றி அறிந்ததன் வாயிலாக கதகளியையும் சிங்கள நடனத்தையும் இணைத்து இராமயணத்தை சிங்கள மொழியில் தயாரித்துள்ளார்.

    சிங்கள நடனவகையிலும் இந்தியாவில் உள்ள நடனவகையிலும் காணப்படும் ஒத்த தன்மைகளை இணைத்து ஆசியாவிற்குரிய பாரம்பரியத்தகை கொண்ட கலை படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    தகவல் உதவி – விக்கிபீடியா

    Share
  • ப்ரதோஷ நன்நாள்….

     

    images
    “சந்தியா காலத்தில் சங்கரன் தாண்டவம், –

    நந்தியிரு கொம்பின் நடுவிலே, -தொந்தியார் ,-

    கந்தனார் காண கயிலையில் கற்பகப் –

    பந்தலிடப் பங்கில் படர்ந்து “….கிரேசி மோகன் .,.,

    Share
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி 10-ஆம் நாள்

    HAPPY NEW YEAR

     

    acr

     

    பைகொண்ட பாம்பில் படுத்த பெருமாளின்,
    வைகுண்ட வாசல் விரியும்நாள், -கைகொண்டு
    பத்தாண்ட அச்சுதன் பேரால் வரவேற்போம்
    புத்தாண்டே புண்ணியமாய்ப் போ ….கிரேசி மோகன்….

    crazy

    ரோகிணி மீனமவன், ராப்பகல் பத்தவன்,
    மோகினி கோலம் மதிமயக்கம்: -தாகிநீ!
    கீதை உரைத்தமணி கண்டனின் மாதாவை
    பாதை வகுக்கும்பம் பை ….கிரேசி மோகன்….

    Share
  • நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற – புலவர் புலமைப்பித்தன்

    நீங்கநல்லாஇருக்கோணும் …..

    தமிழக வரலாற்றில் திரைத்துறையும் அரசியலும் இரண்டறக் கலந்திருப்பதற்கு இந்த பாடலும் சாட்சி சொல்லும்! புரட்சித்தலைவர் என்கிற பொன்மனச்செம்மல் மருத்துவமனையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது இந்தப்பாடல் மக்களின் பிரார்த்தனை கீதமானது! இன மதங்களைக் கடந்து எல்லோரும் ஒருமித்த குரலில் இறைவனைத் தொழுதுநின்றார்கள் என்பது ஒன்றிரண்டு அல்ல.. தமிழகமெங்கும்! திரையரங்குகளில் இந்தப்பாடல் எந்தத்திரைப்படம் அங்கே ஓடினாலும் முதலில் இப்பாடல் ஒருமுறை ஒலித்தபின்தான் என்கிற சரித்திரம் எவருக்கு வாய்த்தது.. எம்.ஜி.ஆரைத் தவிர!

    நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்தtms
    நாட்டில்உள்ளஏழைகளின்வாழ்வுமுன்னேற
    நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்த
    நாட்டில்உள்ளஏழைகளின்வாழ்வுமுன்னேற
    என்றும்நல்லவங்கஎல்லாரும்ஒங்கபின்னாலேநீங்க
    நெனச்சதெல்லாம்நடக்குமுங்ககண்ணுமுன்னாலே
    என்றும்நல்லவங்கஎல்லாரும்ஒங்கபின்னாலேநீங்க
    நெனச்சதெல்லாம்நடக்குமுங்ககண்ணுமுன்னாலே

    · பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி என்று பாராட்டப்பெற்ற அவர் நடித்த இத்திரைப்படத்திற்கும் இதயக்கனி என்றே பெயரிட்ட பேறும் அண்ணா அவர்களின் குரலில் இப்படத்திற்கான முன்னுரையும் இடம்பெற்றது.

    · தமிழகத்தைச் செழிப்பாக்க ஓடிவரும் காவிரி நதியின் ஒய்யார அழகை ஒரு திரைப்பாட்டில் தொகையறாவைக் கொண்டு இப்படி வர்ணிக்க முடியும் என்று புலவரின் கைவண்ணம் ஓங்கி ஒலித்திட.. காவிரியின் பெருமைகள் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடிவருவதைப் பாருங்கள்.. அதன் உச்சமாய்.. வாரி வழங்கும் வள்ளல் புகழை ஒப்பிட்டு திரையில் தோன்றிய திருமுகத்தைக் காட்டிய இயக்குனரின் சமார்த்தியம் பாராட்டத்தக்கது!

    தென்னகமாம்இன்பத்திருநாட்டில்மேவியதோர்
    கன்னடத்துக்குடகுமலைக்கனிவயிற்றில்கருவாகி
    தலைக்காவிரிஎன்னும்தாதியிடம்உருவாகி
    ஏர்வீழ்ச்சிகாணாமல்இருக்கசிவசமுத்திர
    நீர்வீழ்ச்சிஎனும்பேரில்நீண்டவரலாறாய்
    வண்ணம்பாடியொருவளர்த்தென்றல்தாலாட்ட
    கண்ணம்பாடிஅணைகடந்துஆடுதாண்டும்காவிரிப்பேர்பெற்று
    அகண்டகாவிரியாய்ப்பின்நடந்து
    கல்லணையில்கொள்ளிடத்தில்காணும்இடமெல்லாம்
    தாவிப்பெருகிவந்துதஞ்சைவளநாட்டைத்
    தாயாகிக்காப்பவளாம்தனிக்கருணைகாவிரிபோல்
    செல்லும்இடமெல்லாம்சீர்பெருக்கித்தேர்நிறுத்தி
    கல்லும்கனியாகும்கருணையால்எல்லோர்க்கும்
    பிள்ளையெனநாளும்பேசவந்தகண்மணியே
    வள்ளலேஎங்கள்வாழ்வேஇதயக்கனி
    எங்கள்இதயக்கனிஇதயக்கனி

    · டி.எம்.செளந்திரராஜன்.. சீர்காழி கோவிந்தராஜன்.. எஸ்.ஜானகி மற்றும் குழுவினரின் கூட்டணியில் மெல்லிசை மன்னர் ஈன்றெடுத்த வெற்றிச்சித்திரமிது!

    · உழைக்கும்தோழர்களேஒன்றுகூடுங்கள்sj
    உலகம்நமதுஎன்றுசிந்துபாடுங்கள்
    மேடுபள்ளம்இல்லாதசமுதாயம்காண
    என்னவழிஎன்றுஎண்ணிப்பாருங்கள்
    அண்ணாசொன்னவழிகண்டுநன்மைதேடுங்கள்

    நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்த
    நாடெங்கும்இல்லாமைஇல்லையென்றாக

    சமத்துவ சமுதாய சிந்தனையை.. தன் பாட்டு வரிகளால் ஒருமிக்க.. அதற்கேற்ற காட்சியை இயக்குனர் அமைத்துத் தர ஒட்டுமொத்தமாய் எம்.ஜி.ஆருக்கு புகழை மட்டுமல்ல.. ஓட்டுக்கள் மொத்தத்தையும் அள்ளித்தந்த பாடலிது என்றுகூட சொல்லலாம்!

    பாடுபட்டு்ச்சேர்த்தபொருளைக்கொடுக்கும்போதும்இன்பம்
    வாடும்ஏழைமலர்ந்தமுகத்தைப்பார்க்கும்போதும்இன்பம்
    பேராசையாலேவந்ததுன்பம்சுயநலத்தின்பிள்ளை
    சுயநலமேஇருக்கும்நெஞ்சில்அமைதிஎன்றும்இல்லை
    பேராசையாலேவந்ததுன்பம்சுயநலத்தின்பிள்ளை
    சுயநலமேஇருக்கும்நெஞ்சில்அமைதிஎன்றும்இல்லை
    அமைதிஎன்றும்இல்லை
    காற்றும்நீரும்வானும்நெருப்பும்பொதுவில்இருக்குதுமனிதன்
    காலில்பட்டபூமிமட்டும்பிரிந்துகெடக்குது
    பிரித்துவைத்துப்பார்ப்பதெல்லாம்மனிதர்இதயமேஉலகில்
    பிரிவுமாறிஒருமைவந்தால்அமைதிநிலவுமே .. அமைதிநிலவுமே
    நதியைப்போலநாமும்நடந்துபயன்தரவேண்டும்
    கடலைப்போலேவிரிந்தஇதயம்இருந்திடவேண்டும்
    வானம்போலப்பிறருக்காகஅழுதிடவேண்டும்
    வாழும்வாழ்க்கைஉலகில்என்றும்விளங்கிடவேண்டும்

    ஒற்றைத்திரைப்பாடலில் இத்தனைக் கருத்துக்களா? விழிகள் விரிகின்றன! இதயக்கனிக்காக புலவரின் இதயம் வார்த்த வார்ப்புகளிது!

    http://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (137)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அவசரமாக ஓடி மறையும் 2014 இலிருந்து பொலிவுடன் புலரும் 2015க்குள் நுழையும் வேளையில் இவ்வருடத்திற்கான முதலாவது மடலுடன் உங்களுடன் உறவாட விளைகிறேன்.

    எத்தனையோ நிகழ்வுகள் சில மகிழ்ச்சியானவை சில துயரமானவை, சில வியப்பானவை, சில விசித்திரமானவை ஆனால் அனைத்தும் நடந்து முடிந்தவையே.

    முடிந்தவைகளுக்குள் எம் மனதைப் புதைத்து அழுந்திக் கிடப்பதை விடுத்து நடந்தவைகளை நல் அனுபவங்களாக்கி அதன் அடிப்படையில் புதிய வருடத்தினுள் புது உணர்ச்சியுடன் , புது வேகத்துடன் செயற்பட எனது அன்பு மிகுந்த வாழ்த்துக்கள்.

    பிறக்கும் 2015 அனுபவங்களையும் அவ்வனுபங்களின் அடிப்படையிலமைந்த வெற்றிகளையும் அனைத்து சகோதர சகோதரிகளும் உறவுகளும் அடைய அனைவர்க்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திக்கிறேன்.

    மறைந்து போகும் ஆண்டில்
    நிறைந்து கிடைத்த அனுபவங்கள்
    பிறக்கும் புதிய ஆண்டில்
    சிறக்கும் வழிகள் தந்திடும்

    மனிதம் என்றொரு வாழ்வில்
    புனிதம் வேண்டி நடத்திடும்
    கணிதம் ஒன்று கண்டிட்டால்
    காலம் கனிந்து உயர்த்திடும்

    அவலங்கள் பலவும் நிகழ்ந்தாலும்
    அனைத்தையும் தாங்கிடும் மனதால்
    கரைந்திடும் கவலைகள் யாவுமே
    சுரந்திடும் இன்பங்கள் வாழ்விலே

    உழைத்திடும் தோழர்கள் ஏக்கங்கள்
    பிறந்திடும் வருடத்தில் மாறட்டும்
    பெருகட்டும் மானிட உணர்வுகள்
    மருகட்டும் சுயநல போக்குகள்

    வளர்ந்திடும் இளைய தலைமுறை
    புலர்ந்திடும் வருடத்தில் பொலிவுடன்
    களையட்டும் சமுதாய கறைகளை
    பொலியட்டும் புதுவழி ஆக்கங்கள்

    நெஞ்சம் நிறைந்திடும் வாழ்த்துக்கள்
    அள்ளித் தெளிக்கிறேன் உங்களுக்கே
    இலட்சியக் கனவுகள் அனைத்தும்
    அடைந்து சிறப்புற வாழ்ந்திடவே

    புதுவருட‌ வாழ்த்துக்கள்
    வாழ்க ! வாழ்க ! வாழியவே !

    அன்புடன்
    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    சக்தி சக்திதாசன் குடும்பம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    சித்தன்ன வாசல் சிலையாய் சமைத்தனை –
    அத்தன் அமுதன் அரங்கனை -ரத்தின வண்ணனை
    கேசவ் வரைந்தாய்விதவிதமாய் –
    கண்ணனுன் கையின்ரே கை “….கிரேசி மோகன் ….

    Share
  • புத்தாண்டே வருக! புதுப்பொலிவு தருக!

    -மேகலா இராமமூர்த்தி

    slogan

     

     

     

     

     

     

     

     

     

    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல என்றிட்ட ஆன்றோர்கள் நெறிப்படி
    ஆண்டொன்று சென்றதே நம்மிடம் விடைபெற்று – புத்
    தாண்டொன்று வந்ததே நம்மில்லம் தேடியே!

    புத்தம் புதுஆண்டில் புத்தொளி பரவட்டும்!
    நித்தமும் மகிழ்ச்சியில் நம்மனம் திளைக்கட்டும்!
    பசிப்பிணி அகலட்டும் பகையுமே நீங்கட்டும்!
    கசப்புகள் நீங்கியே களிப்பது ஓங்கட்டும்!

    மதத்தின் பெயராலே மதங்கொண்டு அலையாமல்
    இனத்தின் பெயராலே இன்னல்கள் இழைக்காமல்
    இதமாய் இன்சொற்கள் யாவரும் பேசிநல்
    விதமாய் நடப்பதே நன்மைகள் விளைத்திடும்!

    உலகத்தை வென்றிட்டோம் தொழில்நுட்ப வளர்ச்சியால்
    கலகத்தை வெல்லலாம் மதிநுட்பச் செயல்களால்!
    வேற்றுமைக் களைதனை வேரோடு அழித்துநாம்
    ஒற்றுமைப் பயிர்தனை வளர்ப்போம் என்றுமே!

    பார்போற்றும் வண்ணமே நம்செயல் அமையட்டும்!
    நேரான பாதையில் நம்முளம் செல்லட்டும்!
    பொங்கிடும் மகிழ்வோடு புத்தாண்டை வரவேற்போம்!
    தங்கட்டும் மங்கலம் எங்குமே இனிதாக!  

     

    Share
  • புத்தாண்டே வருக 2015!

    -ரா. பார்த்தசாரதி

    puththandu

     

     

     

     

     

     

     

     

     

    கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான்
    புலரும் புத்தாண்டாய்ப் புதிதாய் உருவமெடுத்தான்!

    நதியால் இணைந்த  மாநில மக்கள்
    அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே!

    எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே
    மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் புத்தாண்டே!

    சுயநலங்கள்  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல்
    அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே!

    தீவிரவாதம் ஒடுங்கிப்போகாதோ புத்தாண்டே
    வேற்றுமையில் ஒற்றுமை ஓங்காதோ புத்தாண்டே !

    நாட்டுக்கு நாடு மாநிலத்திற்கு மாநிலம்  சமாதானம்  மட்டும்
    தானமாய்க் கிடைக்காதோ புத்தாண்டே !

    ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
    ஏக்கத்தைத்  தீர்க்காதோ  புத்தாண்டே !

    பூமியெங்கும் அமைதி மட்டும்
    ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே!

     

    Share
  • புதுமாற்றம் கொண்டு வாராய்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    happynewyear

     

     

     

     

     

     

     

     

     

    ஏகிவிட்ட இரண்டாயிரத்து பத்தி நா(ன்)கைப்  (2014 )போல 
    இல்லாது! நீ மலர்க! இவ்விரண்டாயிரத் துப்பதி னைந்தே !
    சோக நிலை மாறி யொரு சுகந்தம் வீச!

    சுகம் பொங்க! வளம் பொங்க! வாழ்வில் நல்ல
    மோக நிலை கொண்டே தன் மக்க ளெல்லாம்
    முடிவில்லா இன்பத்தைத் துய்க்கும் வண்ணம் 
    இணையில்லா ஆண்டென்று இகமே போற்ற 
    இரண்டாயிரத்துப் பதினைந்தே  நீ இதமாய் வாராய்!

    கொலை மலிந்து தலைபுரளக் கோபம் கொண்டே!
    கொடுவதைகள் செய்வோர்  தம்உள்ளம் மாறி                       
    வலை போலச் சூழ்ந்துள்ள துயரம் நீங்கி
    வசந்தங்கள் வந்தெம்மை மகிழ் விலாழ்த்த 
    விலையில்லா அமைதியினை உலகுக்கீன்று 
    விதிமாற்றி இருளகற்றி ஒளியைச் சேர்த்து 
    கலை மணக்கும் புத்தகமாய்! அகிலந் தன்னில்
    களிப்பூட்ட நீவாராய்பதி னைந்தே!

    இனமென்றும் மொழியென்றும் மதங்களென்றும்
    இடைவெளியை ஏற்படுத்தும் மடமை நீங்கி 
    மனமொன்று பட்டுலக மாந்தரெல்லாம் 
    மாண்போடு சோதரராய் வாழ்ந்து நிற்கத்
    தினந்தொரும்  ஏழ்மையிலே வாடுவோர்கள் 
    செழிப்போடு வாழுநிலை தன்னை ஆக்கிக்
    கனவெல்லாம் வினையாகிக் கண்டு உய்ய
    கனிவோடு புதுமாற்றம்  கொண்டுவாராய்!

     

    Share