Blog

  • என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ.. நெஞ்சில் ஓர் ஆலயம் கவியரசு கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    நெஞ்சில் ஓர் ஆலயம்

    ans
    இயக்குனர் =தரின் இயக்கத்தில் நம் நெஞ்சில் நிற்கும் ஓர் ஆலயம் என்றைக்கும் நெஞ்சில் ஓர் ஆலயம்தான்! முக்கோணக் காதலை முழுமையான காவியமாய் திரையில் வடித்து வெற்றி பெற்றவர் இயக்குனர் =தர்! இந்தப் பாடல் உருவான கதை இனிமையானது! கதையின்படி இந்தக் காட்சி உணர்ச்சிகரமானது! திரைப்படம் முழுமையாக எடுத்தாகிவிட்டது! படம் முடிவதைக் குறிப்பதற்காக பூசணிக்காய் எல்லாம் சுற்றியாகிவிட்டது! அன்றிரவு இயக்குனர் =தருக்கு திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் ஒரு பாடல் முழுமையாக இல்லையென்றாலும் ஒரு நான்கு வரிகளேனும் வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றிட உடனே, கவிஞருக்கு தொலைபேசி அழைப்புவிடுத்து வேண்டுகோள் வைக்கிறார்.

    கவிஞரோ.. அடுத்த நாள் காலை வெளிநாடு பயணத்தை முன்னிட்டு விமான நிலையம் செல்லவிருப்பதாக சொல்கிறார். அப்போதும் இயக்குனர் =தர் – கவிஞரை, விமான நிலையம் செல்லும் வழியில் அலுவலகத்திற்கு வந்து நான்கே வரிகள் வழங்கிச் செல்லுமாறு அன்புக் கட்டளையிடுகிறார். கண்ணதாசன் வருகிறார்.. இயக்குனர் காட்சியினை விளக்குகிறார்.. மற்றுமொரு முறை கவிதை கங்கை வழிகிறது.. ஆம்.. நான்கு வரிகளில் நின்றுவிடாமல் முழுப் பாடலும் எழுத்தில் வந்து விழுகிறது..

    என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..ans1
    ஏனிந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ..
    முன்னம் இருந்த நிலை மறந்தாயோ..
    முகத்தைக் காட்டிக் கொள்ள துடித்தாயோ..

    வாழ்க்கைக் கனவுகளைக் கலைத்தாயோ ஒரு
    வாசல் திறந்ததென்று நினைத்தாயோ
    மாயப்பறவை ஒன்று வானில் பறந்துவந்து
    வாவென்று அழைத்ததைக் கேட்டாயோ..

    பறவை பறந்து செல்ல விடுவேனா அந்தப்
    பரம்பொருள் கேட்டாலும் தருவேனா
    உன்னை அழைத்துச்செல்ல எண்ணும்
    தலைவனிடம் என்னையே நான் தர மறுப்பேனோ?

    கவியரசர் கூடுவிட்டு கூடுபாய்ந்து தேவிகா பாத்திரமேற்று எழுதினாரோ.. பவித்ரமான அன்பை இதைவிட எப்படி பறைசாற்றமுடியும்??

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் கண்ணதாசன் எழுதிய கவிதைக்கு மகுடம் சூட்டப்படுகிறது பி.சுசீலா அவர்களின் குரலில்!!

    உங்கள் இதயப்பரப்பை அகலமாக்கி இதோ இந்தப்பாடலை வழியவிடுங்கள்! சுமைதாங்கிவரும் சுகம் என்றால் என்ன என்பது புரிந்துவிடும்!

    இயக்குனர் ஸ்ரீதர் போன்ற கலாரசிகர்களால் உருவாக்கப்பட்ட காவியங்களில் நெஞ்சில் ஓர் ஆலயமும் ஒன்று!!

    Share
  • கொடு இல்லை கொண்டு போ

    இசைக்கவி ரமணன்

    Tamil-Daily-News-Paper_20323908330
    அடர்ந்தி ருக்கும் காட்டிலே அமர்ந் திருக்கும் சோதியே
    படர்ந் திருக்கும் அண்ட ரண்டம் பார்த்தி ருக்கும் ஆதியே
    குடங்க விழ்த்த நீரெனத் தடம்பு ரண்ட வாழ்வுதான்
    அடங்க வேண்டி அண்டினேன் அள்ளிக் கொள்க கையிலே

    எனைப்பி றக்க வைத்தனை உனைம றக்க வைத்தனை
    வினைதுளைக்க வைத்தனை விதிக்கு நேர்ந்து விட்டனை
    எனைமறித்த பின்னும்நீ சுனையடைத்த தென்னவோ
    உனைமதித்த என்னைநீ தினம்மிதிப்ப தென்னவோ?

    வெடித்து வீழ்ந்த தொருவிதை புதைத்தெழுந்த தொருவிரல்
    துடித்துநின்ற உயிருளே நுழைந்துகொண்ட தொருதுளி
    வடித்தகஞ்சி வழியவும் சோறுவாயு வானதே
    கடித்த கார மொன்றுதான் கடைவழிக்கு மிச்சமே

    கூட்டிவைத்த என்குரு கூடவந்த என்குரு
    மாட்டிவைத்த தேதுக்கோ மறந்துவிட்ட தென்னமோ
    ஆட்டிவைக்கும் மாயமோ ஆடுகின்ற தாயமோ
    ஈட்டிமுனையில் உயிருடன் ஏழைவாழ்கி றேனடா!

    உற்றதுன்பம் தீர்த்திடு, இல்லை உயிரினைப் பறித்திடு
    உன்றன்சித்தம் என்னும் தங்க ஓடையில் கலந்திடு
    பெற்றவுன்னை அன்றியிந்தப் பிள்ளை வேறும் அறியுமோ
    பேச்சுபோதும் வாழ்வுதா! இல்லை மூச்சைக் கொண்டுபோ

    04.01.2015 / ஞாயிறு / 23.30

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 5, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  எழுத்தாளர் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் 

    Yercaud Elango Profile1

     

    நடுவணரசின் தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் கால்நூற்றாண்டிற்கும் மேலாக அறிவியல் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் இதுவரை எழுதியுள்ள 70 க்கும் அதிகமான நூல்களில், 65 நூல்கள் அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் தொடர்புடைய நூல்களாகும். இந்நூல்கள் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, கல்வியாளர்கள், நோபல் பரிசு பெற்ற பெண்கள், சர்வதேச தினங்கள் குறித்த தகவல் போன்றவற்றை வழங்குபவை. விழிப்புணர்வு தரும் அறிவியல் நூல்கள் மக்களை சென்றடையவேண்டும் என்ற நோக்கில் தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல்கள் நூல்களுக்கு காப்புரிமையை நீக்கி இணையம் வழி பலரும் தரவிறக்கி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலவச மின்நூல்களாக வெளியிட்டு வருகிறார். அறிவியல் செய்திபரப்பும் பங்களிப்பின் மூலம் இவர் மக்களுக்கு ஆற்றும் தொண்டினைப் பாராட்டி வல்லமைக் குழுவினர் இவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரினை பூர்வீகமாக் கொண்ட, 53 வயதை எட்டியுள்ள இளங்கோ அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்றவர். ‘துளிர்‘ என்ற மாணவர்களுக்கான அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஏற்காடு இளங்கோ அவர்களின் அறிவியல் நூலாக்கப்பணிகளை பாராட்டி, சேலம் கே.ஆர்.ஜீ. நாகப்பன் – இராஜம்மாள் அறக்கட்டளயின் சார்பாக நடைபெற்ற இலக்கிய விழா 2010 இல் “அறிவியல் மாமணி” என்னும் விருது வழங்கி கௌரவிக்கபட்டுள்ளார். தற்பொழுது சேலம் அறிவியல் இயக்கத்தின் (Tamil Nadu Science Forum – TNSF, Salem) மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்று அந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறார் இளங்கோ.

    இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் அறிவியல் விழிப்புணர்வு என்பது தேவையான அளவில் மக்களிடம் இல்லை என்று இளங்கோ கருதுகிறார். குறிப்பாக தொலைகாட்சியில் ஃபேர் அண்ட் லவ்லி, கோக்ககோலா போன்ற பல விளம்பரங்களைப் பார்த்து விட்டு அவற்றை பயன்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றின் உண்மை தன்மைகளை பற்றியோ, அறிவியல் பின்னணியையோ யாரும் பார்ப்பதில்லை எனவும் இதுவே அறிவியல் விழிப்புணர்வு சார்ந்த புத்தகங்களை அவர் எழுத துவங்கியதன் காரணம் எனவும் இளங்கோ குறிபிட்டுள்ளார்.

    மேலும், இவர் “ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, அந்தப் படத்தின் கதாநாயகன் யார் எனக் கேட்டால், பதில் சரியாகச் சொல்கிறார்கள். ஆனால் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர் யார் எனக் கேட்டால் பலரும் பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர். ஒரு நடிகருக்கு இருக்கும் புகழை விட விண்வெளிக்குச் சென்று வந்த வீரரின் புகழ் குறைவாகவே உள்ளது. ஒரு நடிகரை நாட்டு மக்கள் எந்தளவிற்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா தெரிந்தவராக இல்லை. இவர் தான் முதன் முதலில் இந்தியாவின் சார்பாக விண்வெளிக்குச் சென்று வந்தவர் எனச் சொல்ல வேண்டிய நிலை இன்று உள்ளது. சினிமாக் கதாநாயகர்களின் புகைப்படங்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரின் புகைப்படம் எங்கும் கிடைப்பதில்லை,” என்று இன்றைய நிலையில் மக்கள் அறிவியலார்களுக்கு தேவையான முக்கியத்துவத்தை வழங்குவதில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறார். இக்குறையை நீக்கும் பொருட்டு இவர் எழுதிய நூல்களில் பல அறிவியல் வளர்ச்சியில் அரும்பங்காற்றியவர்களை இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டும் உள்ளன.

    YSF 2012 Salem Elango2

    ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இளங்கோ அவரது இறப்பிற்குப் பிறகு அவரது உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று அவரது விருப்பத்தை ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராகவும், மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகளைப் பரப்புவதை தனது நோக்கமாகவும் கொண்டுள்ளார். அதன் காரணமாக தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் கொண்ட நூல்கள் பலவற்றிற்குத் தான் கொண்டுள்ள காப்புரிமைகளை நீக்கி இலவச மின்னூலாக அவை அனைவரையும் சென்றடையும் பொருட்டு ‘ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் ‘ துணையுடன் தனது நோக்கத்தை செயல்படுத்தி வருகிறார்.

    சென்னை வாழ் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் திரு. சீனிவாசன் அவர்களும் அவரது நண்பர்களான தொழில் நுட்பக் குழுவினரும் இலவச மின்னூல் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளர்கள். ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் (freetamilebooks.com) என்ற இணைய தளத்தின் வழி இதுவரை 70 எழுத்தாளர்கள் எழுதிய, 125 மின்னூல்களை இத்தன்னார்வக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள்மற்றும் வரலாறு என்று பலவகை நூல்களும் இவற்றில் அடங்கும். பரந்த மனமுள்ள எழுத்தாளர்கள் பலரும் தங்கள் நூல்களுக்கான காப்புரிமைகளை நீக்கி தங்கள் படைப்பை மின்னூலாக்க அனுமதியளித்து, ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் நிறுவனம் தமிழுக்கு செய்யும் தொண்டில் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த எழுத்தாளர்களில் தனி ஒருவராக மற்ற யாவரையும்விட அதிக எண்ணிக்கையில், 13 நூல்களுக்கு காப்புரிமைகளை நீக்கி ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் வழியே வெளியிட்டுள்ளார் ஏற்காடு இளங்கோ. கீழ்காணும் சுட்டிகள் வழி அவற்றைத் தரவிறக்கிப் பயனடையலாம்.

    Aerkadu Ellango

     

    [1] தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள்http://freetamilebooks.com/ebooks/symbols-of-tamilnadu/

    [2] இந்திய தேசியச் சின்னங்கள்http://freetamilebooks.com/ebooks/national-symbols-of-india/

    [3] இந்தியாவின் முக்கிய தினங்கள்http://freetamilebooks.com/ebooks/indiyavin-mukkiya-thinangal/

    [4] உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்http://freetamilebooks.com/ebooks/celebrationdaysinworld/

    [5] விண்வெளிப் பயணம்http://freetamilebooks.com/ebooks/vinveli-payanam/

    [6] விண்வெளியில் ஆய்வு நிலையம்http://freetamilebooks.com/ebooks/space-research-center/

    [7] பூமியின் எல்லையைத் தொட்டவர்கள்http://freetamilebooks.com/ebooks/boomiyin-ellaiyai-thottavargal/

    [8] உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்http://freetamilebooks.com/ebooks/first-women-astranaut/

    [9] முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாhttp://freetamilebooks.com/ebooks/rakesh-sharma/

    [10] விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்http://freetamilebooks.com/ebooks/sunitha-williams-in-space/

    [11] விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண்http://freetamilebooks.com/ebooks/vimanam-ottiya-kaigal-illa-pen/

    [12] தானியங்கள்http://freetamilebooks.com/ebooks/thaniyangal/

    [13] குடிசை – குறுநாவல் http://freetamilebooks.com/ebooks/kudisai-novel/

    ஏற்காடு இளங்கோ மேலும் தனது அறிவியல் செய்திபரப்பும் பணியைத் தொடர வேண்டும் என்றும், தமிழுலகம் பயன்பெறும் வகையில் இன்னமும் பல நூல்களை வழங்க வேண்டும் என்றும் வாழ்த்தி வல்லமைக் குழுவினர் இவ்வார வல்லமையாளரான இவரை பாராட்டி மகிழ்கிறோம்.

     

    இவரைத் தொடர்பு கொள்ள:
    ஏற்காடு இளங்கோ / Yercaud Elango
    (yercaudelango@gmail.com)
    Google Plus: https://plus.google.com/102807648316848870666/

    ஏற்காடு இளங்கோ பற்றிய தகவல் உதவி:
    http://ta.wikipedia.org/s/3pgz
    http://tnsfsalem2009.blogspot.com/
    http://yercaudelango.blogspot.com/
    http://www.noolulagam.com/

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • ஆதிரையான் அருள் பெறுவோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    சிவனுக்குரிய விசேட நாட்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளாகும். ‘ஆருத்ரா’ என்று வடமொழியில் அழைக்கப்படும் இத்திருவாதிரை நட்சத்திர நன்னாளில் சிவனை தரிசிப்பதே ’ஆருத்ரா தரிசனம்’ எனப்படும். சோதிடத்தில் நாள்மீன்கள் என்று அழைக்கப்படுகின்ற நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தேழாகும். இவற்றில் ’திரு’ என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவை திருவாதிரை, திருவோணம் எனும் இரு நட்சத்திரங்களே. இவ்விரண்டில் ஆடல்வல்லானான சிவபெருமானுக்குகந்த நட்சத்திரம் திருவாதிரை; அமரரேறான திருமாலுக்குகந்த நட்சத்திரம் திருவோணம் என்பது அருளாளர்கள் கருத்து.

    natarajarஆதியும் அந்தமுமிலா அரும்பெரும்சோதியாயும், பிறவாயாக்கைப் பெரியோனாயும் திகழ்கின்றவன் சிவபெருமான். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் (omnipresent) அவன். அப்படியிருக்க…’இருபத்தேழு நட்சத்திரங்களும் அவனுக்கு உரியவைதானே? ’திருவாதிரை’ எனும் ஒரேயொரு நட்சத்திரத்துக்கு மட்டும் அவனை உரியவனாக்குவானேன்?’ எனும் ஐயம் நமக்கு எழுவது இயல்பே. நமக்கு ஏற்பட்ட இதே ஐயம் ’முத்தொள்ளாயிரம்’ எனும் நூலின் ஆசிரியருக்கும் முன்பே எழுந்திருக்கின்றது. அதனை அவர் முத்தொள்ளாயிரக் கடவுள்வாழ்த்துப் பாடலில் நயமுடன் பதிவுசெய்திருப்பதைப் பாருங்கள்!

    மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை
    முன்னம்
    படைத்த முதல்வனைப் – பின்னரும்
    ஆதிரையான்
    ஆதிரையான் என்றென்று அயருமால்
    ஊர்திரை
    நீர்வேலி உலகு” (முத்தொள்: கடவுள் வாழ்த்து)

    எல்லா நாள்மீன்களையும், மதி, கனலுமிழும் ஞாயிறு ஆகிய அனைத்தையும் ஆதியிலேயே படைத்த முதல்வன் நம் சிவபெருமான்; ஆனால் கடலால் சூழப்பட்ட இவ்வுலகோ “ஆதிரையான்! ஆதிரையான்!” என்றே அவனை அழைத்து மயங்குகின்றதே…இஃதென்ன விந்தை!” என்கிறார் அவர்.

    உண்மைதான்! எல்லாவற்றையும் படைத்தவனை ஒன்றுக்கு மட்டும் உரிமையாக்குவது பொருந்துமா? என்றால் ”ஆம்! அஃது பொருத்தப்பாடுடைத்தே!” என்கின்றனர் சான்றோர் பெருமக்கள். அஃது எவ்வாறெனின், ஆதிரைமீனுக்கும் சிவனுக்கும் குணங்களின் அடிப்படையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றனவாம்; ஆதிரைமீனும் ஆடல்வல்லானைப்போல எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கின்றதாம் வான்வெளியில்; அத்தோடு அம்மீனும் நம் பெம்மானைப் போலவே சிவந்த நிறம் கொண்டதாய்ச் செந்நிறவொளியைத் தருகின்றதாம்; அனைத்திற்கும் மேலாகப் பிறைநிலாவின் இடையே தோன்றும்போது ஆதிரைமீனும் அரனைப்போலவே தோற்றம் காட்டுகின்றதாம். இத்தகைய இயல்புகளாலேயே ஆதிரைமீனும் இறைத்தன்மையுடையதாய்க் கருதப்பட்டு அரனுக்குரியதாய் ஆராதிக்கப்படுகின்றது என்பதை அறியும்போது நாம் அடையும் வியப்புக்கு அளவேது! நம் முன்னோர்களின் வானியலறிவு பிரமிக்கத்தக்கதே அல்லவா?

    இவ்வாறு ஆதிரை ஒளியில் அரனை வழிபடும் வழக்கம் இன்று நேற்றுத் தோன்றியதல்ல. பல நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்துவரும் வழக்கமே அது! ஆம்…நம் பண்டைத் தமிழரும் ஆதிரைநாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். அதற்கான சான்று எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடலில் கிடைக்கப்பெறுகின்றது.

    ”பனி மிகுதலானே குளிரால் நடுங்குதலையுடைய முன்பனிப் பருவத்தின்கண், ஞாயிற்று மண்டிலம் (சூரியன்) சுடுதலில்லாத குளிர்ந்த கடைமாரியையுடைய மார்கழித்திங்களில், மிகப் பெரிய திங்கள் மண்டிலம் (சந்திரன்) தன்னகத்துள்ள களங்கத்தோடே வளர்ந்து பௌர்ணமியாக நிறைந்த திருவாதிரை நாளின்கண், விரிந்த மெய்ந்நூல்களையுணர்ந்த அறவோர், அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்க, முப்புரியாகிய பூணூலையுடைய பார்ப்பனர் அவ்விழவின்கண் இறைவனுக்குப் பலிப்பொருள் நிரம்பிய பொற்கலங்களையும் பிறவற்றையும் ஏந்தி நின்றனர்” என்று ஆதிரை நாளை அற்புதமாய் விவரிக்கின்றது பரிபாடல்.

    ”…கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்
    பனிப்படு
    பைதல் விதலைப் பருவத்து
    ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
    மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
    விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
    புரிநூல் அந்தணர் பொலங்கல மேற்ப…” (பரிபாடல்:11:74-79)

    ’ஆதிரை முதல்வன்’ என்ற பெயரானும் சிவபெருமான் இதே பரிபாடலின் 8-ஆம் பாடலில் விளிக்கப்படுதல் காண்க.

    மற்றொரு சங்க இலக்கியமான கலித்தொகையில் இடம்பெற்றுள்ள,

    ”…அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
    பெருந்தண் சண்பகம் போல…”(நெய்தற்கலி: 150: 20-21) எனும் இவ்வரிகள், (பெறுதற்கரிய ஆதிரை நாளையுடைய இறைவனின் திருமேனி அழகைப்பெறும்படி மலர்ந்த பெரிய குளிர்ந்த இச்சண்பகம் போல’ என்பது இதன் பொருள்) சிவபெருமான் ’ஆதிரையான்’ என்றே தொன்றுதொட்டு அழைக்கப்பட்டு வந்துள்ளமையை ஐயத்திற்கிடமின்றி நமக்கு அறியத்தருகின்றன.

    சங்க இலக்கியங்களேயன்றித் திருமுறைப் பாடல்களிலும் ஆதிரைநாளின் சிறப்பு விதந்தோதப்பட்டுள்ளது.

    மயிலாப்பூரில், குடத்தில் எலும்பாய்க் கிடந்த பூம்பாவையினைக் கண்ட ஞானசம்பந்தப் பெருமான் அவளை எழுப்புதற்காக, ”பெண்ணே! நீ கபாலீச்சரம் அமர்ந்தானின் ஆதிரை நாளைக் காணாமல் போகலாமா?” என வினவுவதன் வாயிலாய் ஆதிரைத் திருநாளின் சிறப்பினை நமக்கு அருமையாய் உணர்த்துகின்றார்.

    ”…கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஆதிரை
    நாள் காணாதே போதியோ பூம்பாவாய்” (தேவாரம்)

    அப்பர் தேவாரத்தில் திருவாதிரைத் திருப்பதிகம்’ என்று ஒரு பதிகமே இடம்பெற்றிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. திருவாதிரையின் சிறப்பினைக் கூறும் இப்பதிகத்தின் ஒவ்வோரு பாடலின் இறுதி வரியும் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்’என முடிகின்றது.

    அமுதச்சுவைதரு அப்பதிகத்திலிருந்து ஓர் அழகிய பாடல்…

    துன்பம் நம்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
    இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்
    நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
    அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்” (தேவாரம்)

    தியாகேசன் உறையும் ஆரூரிலே ஆதிரை நாள்விழா விமரிசையாய்க் கொண்டாடப் பெறுகின்றது. முத்துவிதானத்தோடும், பொற்காம்புடைய கவரி வீசப்பெற்றும் மிகச்சிறப்பாக அந்நன்னாளில் திருவீதியில் திருக்காட்சி நல்குகின்றான் தியாகேசப்பெருமான். இத்திருக்காட்சியைக் காணவந்த ஆடவரும், பெண்டிரும், பிறரும், ”ஈசனே! உம்மை நாங்கள் தொழாத நாட்களெல்லாம் துன்பம் தரும் நாட்களே; உம்மை நாங்கள் ஏத்தும் நாட்களே இன்பமானவை; எனவே உம்முடைய திருத்தொண்டில் எப்போதும் எம்மை ஈடுபடுத்தவேண்டும்!” என்று உளம்நெகிழ விண்ணப்பிக்கின்றனர் என்கிறார் அப்பர்பெருமான். அடடா! ’வேண்டுதல் வேண்டாமை’ இலாத சிவபெருமானிடம் வைப்பதற்கு இதனினும் சிறந்த கோரிக்கை வேறென்ன இருக்கவியலும் மன்னுயிர்கட்கு?

    ”…பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” எனும் அப்பரின் மற்றொரு தேவாரப் பாடல் இங்கு ஒப்புநோக்கி இன்புறத்தக்கது.

    பிறவியைப் பிணியென்றும், மண்ணுலகில் மீண்டும் மீண்டும் பிறந்துழல்வதையே பாவமென்றும் எண்ணும் அரனடியார்கள்கூட ”ஆடல்வல்லானின் குனித்த புருவத்தையும், சொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும், அதில் தவழும் குமிண் நகையையும் (புன்முறுவல்), குளிர்ந்த அவன் சடையழகையும், பவளம்போல் ஒளி(ர்)விடும் சிவந்தமேனியில் துலங்கும் பால்வெண்ணீற்றையும், தூக்கிய திருவடியுடன் அவன் ஆடுகின்ற அற்புதக்காட்சியையும் காணும்பேறு கிட்டுமானால் இம்மனிதப் பிறவியும் விரும்பத்தக்கதே” என்கின்றனர்.

    குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயில் குமிண்சிரிப்பும்
    பனித்தசடையும்
    பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
    இனித்தம்உடைய
    எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
    மனித்தப்
    பிறவியும் வேண்டுவ தேஇந்த மா நிலத்தே! (தேவாரம்)

    ஆலவாயுடையார் புகழ் பாடப்பெறுவேமேல் வேண்டுவதிம் மனித யாக்கை” என்கிறார் திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவரும்!

    எனவே சிறப்புமிகு இத்திருவாதிரைத் திருநாளில், கண்ணுக்கினியானாய்க் காட்சி நல்கும் கண்ணுதற்கடவுளின் கழலிணைகளைப் போற்றுவோம்! நாமெடுத்த இம்மனிதப் பிறவியைப் புனிதப் பிறவியாய் மாற்றுவோம்!

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 149

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    பெண்களைப் பிரிவதால் உண்டாகும் துன்பமும்
    அவர்களைப் புணர்வதால் உண்டாகும் துன்பமும்
    அவ்வேளைகளில் காமன் தண்டிக்கும் துன்பமும்
    அழகுக் கூந்தல் கொண்ட பெண்களைப் புணர்ந்தவர்க்கன்றி,
    தனித்து வாழும் அறிஞர்க்கு இல்லை.

    இவ்வுலகில் பெண்டிரும் உணவும் மட்டுமே       kovalan
    முக்கியமான பொருளாய்க் கருதும்
    அறிவற்றவர் அடையும் துன்பத்தை உணர்ந்தவராய்
    முனிவர்கள் ஒதுக்கிய காமம் பற்றுக்கோடாய்
    காதலினால் வருந்தி
    கரைக் காணாத் துன்பம் அடைந்தோர்
    இன்று மட்டுமல்லாமல் முற்காலத்திலும் பலராவர்.
    இந்நிகழ்ச்சி தொடர்ந்துவரும் பழைமையுடையதாகும்.

    ஆதலினால், தன் தந்தை ஏவியதால்
    தன் மனைவியோடு கானகம் சென்று
    அம்மனைவி பிரிந்ததால் கொடுந்துன்பத்தை அடைந்தவன்
    வேதம் அருளிய நான்முகனைப்பெற்ற
    திருமால் என்று நீ அறியமாட்டாயோ?
    அது அனைவரும் அறியும் வண்ணம்
    பரவி நிற்கும் சொல்லன்றோ!

    சூதாடும் தாய விளையாட்டால்
    மண் இழந்து அரசு இழந்து
    மென்மைத்தன்மை வாய்ந்த காதலி தமயந்தியுடன்
    காட்டை அடைந்தவன்
    பொருள் மீது கொண்ட அன்பின் காரணமாய்
    அவளைப் பிரிந்தவன் அல்லன்.
    அவள் குற்றம் செய்தவள் என்ற
    இழிவினைப் பெறுவாளும் அல்லள்.

    அடவியாகிய காட்டின் இடத்து
    இருள்நிறைந்த யாமத்தின்போது
    உறக்கம் நீக்குவது
    அவர் முன்செய்த தீவினை அன்றோ!
    அப்பெண்ணின் பிழையே காரணம்
    என்று சொல்வதற்குச்
    சாட்சி உண்டாயின் அதை நீ சொல்வாயாக!

    நீ அவர்களைப் போன்றவனல்லன்.
    ஏனெனில் நீ நின் மனைவியைப்
    பிரியாத வாழ்க்கையினைப் பெற்றவன்.
    இம்மன்னவனின் கூடல் நகரின் கண்
    நீ மனம் வருந்தாமல் சென்று
    விருந்தெதிர் கொள்வாரைக் கண்டுகொண்டு
    அங்கு செல்வாயாக” என்று கவுந்தியடிகள் கூறினார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 35 – 62
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    Share
  • தரணியே காத்திருக்கும் !

         -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

          தைபிறந்தால் வழிபிறக்கும்
          தடைகளெலாம் அகன்றுவிடும்
          மெய்வருந்தி உழைப்போரை
          மேதினியே பாராட்டும்!

          கைநிறையக் காசுவர
          கெளரவமாய் நாமிருக்க
          கடவுளது நினைப்புடனே
          கடினமாய் உழைத்துநிற்போம்!

          பொய்யுரைக்கும் எண்ணமதைப்
          பொசுக்கிவிட முயன்றிடுவோம்
          ஐயனது குறள்வழியே
          அனைவருமே நடந்திடுவோம்!

          செய்கின்ற அத்தனையும்
          சீராகச் செய்துநிற்போம்
          வையகத்தில் வன்முறைகள்
          வரவிடாமல் தடுத்திடுவோம்!

          உறவுநிலை பேணிடுவோம்
          ஊர்போற்ற உயர்ந்திடுவோம்
          அறவழியைத் தேர்ந்தெடுத்து
          அனைவருமே வாழ்ந்திடுவோம்!

          தைமகளை வரவேற்போம்
          தைரியத்தைக் கையெடுப்போம்
          உய்யும்வழி தோன்றிவிடும்
          உவப்புடனே நாமிருப்போம்!

           மார்கழி மறையும்போது
           மலர்ந்துவரும் தைதன்னை
           வாவென்று அழைத்துவிடின்
           வாழ்வெல்லாம் மங்கலமே!

           இழுபட்ட திருமணங்கள்
           இன்பமாய் நிறைவுபெற
           எப்போதும் எங்களுக்குத்
           தைபிறந்தால் வழிபிறக்கும்!

          தைபிறந்தால் வழிபிறக்கும்
          தாலிவரும் வேலைவரும்
          தைபிறக்கும் வேளைதனைத்
          தரணியே காத்திருக்கும்!

    Share
  • காதல் நாற்பது – 30

    அந்த ஒளி மீளுமா ?

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    jay

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    சிந்துமென் கண்ணீர்த் துளிகள் ஊடே
    உந்தன் வடிவம் தெரிகிறது
    இந்த இரவில் ! ஆயினும்
    இன்று நீ
    புன்னகை புரிவதைக் கண்டேன் !
    எப்படிக் குறிப்பிடுவேன் காரணத்தை ?

    இனிய காதலனே !
    நீயா அல்லது நானா
    யாரென்னை நோகச் செய்வது ?
    பரிவோடு அளிக்கும் பூரிப்பு வழிபாட்டில்
    பலிபீடத்தின் முன்னே
    உதவிப் பாதிரி மந்திரம்
    ஓதும் போது
    மட்டமாகத் தெரிந்திடலாம்
    மடத்தனமாய் !
    குழுவினர் ‘ஆமென்’ எனச் சொல்லி
    முடிப்பதைச்
    செவியில் கேளாத பாதிரி போல் நீ
    தலைமறைவாய் இருந்ததால்,
    குழம்பி
    உறுதி யில்லாத
    உன் சபதக் குரல் கேட்டது !

    இனிய காதலனே !
    என்னை நீ நேசிக்கி றாயா ?
    இல்லை யெனில்
    நான் கண்ட கனவு மகத்துவ மெல்லாம்
    காண்பேனா நான் இனிமேல் ?
    என் ஆத்ம விழிகளுக்கு
    வேட்கை ஒளியால்
    எனது வாழ்வின் குறிக்கோள்
    விரிவாகும் சமயம் மயங்கி
    விழுவேனா நான் ?

    இந்த கண்ணீர் துளிகள் மெய்யாக
    வெந்நீராய் விழுந்திடும்
    தருணத்தில் அந்த ஒளி
    வருமா மீண்டும் ?

    ************

    Poem -30

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    I see thine image through my tears to-night,
    And yet to-day I saw thee smiling. How
    Refer the cause?–Beloved, is it thou
    Or I, who makes me sad? The acolyte
    Amid the chanted joy and thankful rite
    May so fall flat, with pale insensate brow
    On the altar-stair. I hear thy voice and vow,
    Perplexed, uncertain, since thou art out of sight,
    As he, in his swooning ears, the choir’s amen.
    Beloved, dost thou love? or did I see all
    The glory as I dreamed, and fainted when
    Too vehement light dilated my ideal,
    For my soul’s eyes ? Will that light come again,
    As now these tears come–falling hot and real?

    **********

    Share
  • திருவாதிரை விண்ணப்பம்

    இசைக்கவி ரமணன்

    scale

    ஆதிரைத் திருநாள் அலர்ந்திடவே
    அம்பலத் தரசே ஆடுகவே
    அண்ட மனைத்தும் ஆட்டத்தில்
    அதிர்ந்த அதிர்வில் உயிர்பெறவே
    பாதி மதிக்கும் முழுமைகதி
    பாயும் கங்கைக்கும் தந்தாய்
    பாரே வியக்கும் படியிந்தப்
    பாவியின் குடிலில் ஆடுகவே!

    அருளை நம்பிப் பிழைக்கின்றேன்
    அறிவுக் கெங்கே நான்போவேன்
    அன்பே உயிரின் இயல்பானேன்
    அமெரிக் கைக்கோ என்செய்வேன்
    இருளைத் துழவிய விழியிடையே
    எதிர்ப்பட் டாயே சுடராக
    இதுவே தருணம் வந்திடுக
    ஏழைக் கொருகதி தந்திடுக

    நம்பீ! உன்னை நம்பித்தான்
    நாளும் இரவும் நடக்கிறது
    நம்பு கின்றாய் என்றேதான்
    நடுநெஞ்சில் உயிர் துடிக்கிறது
    நம்பிக் கிடக்கும் என்னை நீ
    நம்ப மறுத்தால் அம்மம்மா
    நானென் செய்வேன் என்னுயிரே
    நரக மனைத்தும் மயிர்க்காலே

    அருந்தவம் செய்தவர் உனையடைந்தார்
    ஆணவக் காரரும் உனையடைந்தார்
    அன்பால் எளிதாய் உனையடைந்தார்
    ஆலயம் தொழுதே உனையடைந்தார்
    ஒருசிறு தரமும் இல்லாமல்
    ஓரத் தினில்நான் கிடந்தாலும்
    உன்னவன் தானே என்னன்பே
    உதைத்தருள் புரிவாய் என்னுயிரே

    உலக மனைத்தும் உனதன்றோ
    ஒழியெனில் எங்கே நானொழிய? நீ
    ஒன்றே என்றன் உறவன்றோ
    ஒன்றில் என்றும் பிரிவுண்டோ?
    கலக மனதின் நடுமார்பில்
    காலை அழுத்தி வைத்திடுக
    கண்ணைச் சிறிதே திறந்திடுக
    கவிஞனை எரித்துப் பூசிடுக!

    04.01.2015 / ஞாயிறு / 23.00

    Share
  • ஆடுகிறான் நடராசன் ஆடுகிறான்

    சத்தியமணி
    d0614133
    ஆடுகிறான் நடராசன் ஆடுகிறான்
    அருளுடன் பரவசமாய் ஆடுகிறான்
     
    அம்பலத் திறைவன் ஆடுகிறான்
    அமரர் பதிஈசன்   ஆடுகிறான் – திரு
    ஆதிரை நந்நாளில்  பிறந்ததனால்
    ஐம்பூதத் தன்னோடு ஆடுகிறான்()
     
    கசமுகன் கனிமுருகன் நந்தியுடன் – இடக்
    காலினைத் தூக்கியே பதம் பிடித்தான்
    மாதவன் மேளமும்  நாரத கானமும் ஒருசேர
    மங்கள  நாட்டியம் ஆடுகிறான் ()
     
    சிற்சபை பொற்சபை வெள்ளிசபையோடு
    ரத்தின தாமிரச் சபையாவிலும்
    காளி திரிபுர முனி தாண்டவமே மற்றும்
    சந்த்யா ஆனந்த நடமாடினான் ()
     
    மறையவர் மறைஓத மார்கழி குளிரூத‌
    பறையுடன் பம்மலில் ஆடுகிறான்
    கனலொரு கையினில் மறுகைஉடுக்கையில்
    தனக்கெனும் அபினயத்தில் ஆடுகிறான் ()
     
    களியினிப்பு அட்டகாசக் கறிகூட்டு மற்றும்
    களிப்பான அடியார்கள் துதியேற்று
    ஒளியூற்றும் பிறைசூடன் ஆடுகிறான்
    கலிதீயை க‌ங்கையினால் அணைத்துவிட்டான்()
     
    சிவகாம சுந்தரி அதைரசிக்க – சித்த‌
    ரிஷிமுனி பக்தர்கள் பூசிக்க‌
    கயிலாய தரிசனமும் தருகிறான் ஓம்
    நமசிவாய மெனக்காதில் ஓதுகிறான் ()
     
    ஆடுகிறான் நடராசன் ஆடுகிறான்
    அருளுடன் பரவசமாய் ஆடுகிறான்()
    Share
  • மான்யங்களின் காலம்!

    எஸ் வி வேணுகோபாலன் 

    துக்கம் தாளாமல் பழைய ஆண்டை
    வழியனுப்பச் செல்லும் தந்தையும்
    கொண்டாட்டமாகப் புத்தாண்டை
    வரவேற்கக் காத்திருக்கும் மகனும்
    தற்செயலாகச்
    சந்தித்துக் கொள்ளவிருக்கும்
    மதுக் கடையில்
    அவர்களிடம் மான்யம் பெற
    ஆதார் அட்டை வாக்குகளோடு
    பாவம்
    கடை கடையாய்
    தெருத் தெருவாய்
    ஊர் ஊராய்
    மாவட்டம் மாவட்டமாய்
    இரவுபகல் பாராது
    காத்துக் கிடக்கிறது
    நலத் திட்டங்கள் அமல்படுத்துவதாகச்
    சொல்லிக் கொள்ளும் அரசு!

    Share
  • பொன்னாங்கண்ணி

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    பச்சை புல்லொன்று 
    வரப்பிலிருந்து மௌனமாகத் தலையசைத்தது!

    அரக்கொட்டிப் பூச்சியோடு 
    விதைக்கப்படாத தண்டுவொன்று                        ponnanganni-keerai
    சேற்றில் பதியமாகி  
    வயலில் பொன்னாங்கண்ணிகீரையானது! 

    பச்சைப் பசலென்ற நிறத்தோடு  
    நெற் கதிர்களோடு போட்டி போடும்!
    காகம் ,குருவி, கொக்கு ,மைனா கூட்டங்களின்  
    கண்ணில்படாமல்
    ஆடு , மாடு, நாய்களின்
    காலில் மிதிபடாது
    வயற்காரனின் 
    கரங்களுக்குள் நுழைந்து வயிற்றுக்குள் உணவானது…!

    மனதுக்கும் புரிவதில்லை  
    நாவுக்கும் புரிவதில்லை
    வயிற்றுக்கும் புரிவதில்லை
    நோண்டிய கரங்களுக்கும் புரிவதில்லை
    பார்த்த கண்ணுக்கும் புரிவதில்லை
    இறைப் படைப்பின் அற்புதக் கொடைகளில்
    இதுவும் ஒன்றென்று!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(53)

    -செண்பக ஜெகதீசன்

    புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
    மூக்கிற் கரியா ருடைத்து. (திருக்குறள்:277- கூடாவொழுக்கம்)

    புதுக் கவிதையில்…

    குன்றிமணியின் உடலது
    குன்றாத சிவப்பழகு,
    களங்கமாய்க் கறுப்பு முகம்…

    இப்படித்தான் சிலர்,
    இருக்கிறார்கள் துறவறத்தில்-
    புறத்தே தூய தவக்கோலம்,
    அகத்தே
    குன்றிமணியின் கருமைபோல்
    குறைகளுடன்…!

    குறும்பாவில்…

    தவவேடத்தில் தவறு,
    குன்றிமணியின் சிவப்பு உடலில்
    கறுப்பு முகம்…!

    மரபுக் கவிதையில்…

    சொக்கத் தங்கம் எடைபோடச்
    சேர்த்துக் கொள்ளும் குன்றிமணிதன்
    சொக்க வைக்கும் சிவப்பழகில்
    சேர்ந்த குறையாம் கருமுகமாய்,
    பக்குவம் பெற்றுத் துறவுபூண்டு
    பக்தி நெறியில் பணியாற்றும்
    திக்கெலாம் புகழும் தவத்தோர்தம்
    தவறுகள் பெரிதாய்த் தெரியுமன்றோ…!

    லிமரைக்கூ…

    சிவப்பழகு குன்றிமணியின் கறுப்பு குறை,
    மன்பதை போற்றும் தவவேடத்தில்
    மறைத்துச் செய்திடும் தவறுகள் கறை…!

    கிராமிய பாணியில்…

    குன்னிமுத்து குன்னிமுத்து
    காட்டிலுள்ள குன்னிமுத்து,
    செவப்பழகுக் குன்னிமுத்து
    கொறயா
    கறுப்புமூக்குக் குன்னிமுத்து…

    தவசிவேசம் போட்டுக்கிட்டு
    தவறுசெஞ்சா தெரிஞ்சிபோவும்
    தெளிவா தெரிஞ்சிபோவும்,
    குன்னிமுத்து மூக்குப்போல
    கொறயெல்லாந் தெரிஞ்சிபோவும்…

    குன்னிமுத்து குன்னிமுத்து
    செவப்பா
    கறுப்புமூக்குக் குன்னிமுத்து…!

    Share
  • எதிர்காலத் தூண்கள்..

    எதிர்காலத் தூண்கள்..

    இந்தியா வல்லரசாகும்
    சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைக்காத ஏர்கூலர்
    தேசியவிருதுடன் பள்ளி மாணவர்..
    ***
    பொதுநலத் தொண்டில் பள்ளிச்சிறுவர்
    மாற்ற தொழிலாளியாகிறார்
    பிச்சைக்காரர்..
    ***
    செல்போன் திருடினால்
    கண்டுபிடிக்கும் இளைஞர் கண்டுபிடித்த
    செல் ஸ்லீப்பர் சாப்டுவேர்..
    ***
    இழப்புகள் அதிகம்
    குறையவில்லை வீரம்
    வளரும் ஜல்லிக்கட்டு..

    … நாகினி

    Share
  • புத்தம் புதிய புத்தகமே.. – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    jaya

    சமுதாயத்திற்காக ஆண், பெண் என்கிற உயிரினங்கள் தோன்றிய நாள் முதல் தொடர்ந்து வருகின்ற காதலைப் பற்றி எழுதிக் குவித்த கவிஞர் பெருமக்கள், புலவர் பெருமக்கள் தொகை கணக்கிலடங்காது! இன்னும் இன்னும் எழுதிடவு இனிப்பானது காதலைத்தவிர வேறில்லை! அந்தக் காதல்பற்றிய பாடல்கள் திரைப்படங்களில் இல்லாமலிருக்கவும் வழிகளிலில்லை. ஆனால், கற்பனைகளின் உயரம், கவித்துவச் சொற்களின் தன்மை, புதிய கோணத்தில் தான் வைக்கும் வார்த்தைகள் – அதுவும் இசைக்கோர்வைக்கும் பொருந்திடும் வண்ணம் வரைந்திடும் திறம்.. என பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டு இதோ வருகிறது. .. ‘அரச கட்டளை’ பாடல் ஒன்று! கவிஞர் வாலி அவர்களின் ஈடிலாச் சொற்களின் கூட்டணி நம்மைக் காதல் உலகத்திற்குள் கூடிச்செல்கிறது காணுங்கள்!

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    பொதிகை வளர்ந்த செந்தமிழே
    உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
    பள்ளியறை என்னும் பள்ளியிலே
    இன்று புதிதாய் வந்த மாணவி நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    பள்ளியறை என்னும் பள்ளியிலே

    வாலிப ராகத்தின் ஆலாபனைகள் அடுத்தடுத்து தொடுக்குக் கவிஞரின் சாதுரியத்தில் சிக்கிடாத மானுட இனமேது? கவிதைச் சரமெடுத்து.. காதல் அம்பெய்து.. எவரும் மயக்கும் வண்ணம் எழுதிக் குவித்திருக்கும் இவரின் வரிகளிங்கே.. அழகு மங்கையைப்போல் அன்னநடை போட்டு வருகிறதென்பேன்! கவிஞனே! உன் எழுதுகோல் கொண்ட மயக்கன்களைக் கூட எப்படித் தெளிய வைக்கிறாயோ தெரியவில்லை! திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இன்னிசை மழையில் இதோ காதல் இதயங்களை நனைப்பதற்கென்றே பிரத்யேக கலவையாய் பாடலும் இசையும் இதம்தரும் டி.எம்.சௌந்தரராஜன் .. பி. சுசீலா குரல்களில்!! களவியல் இன்பத்தை இப்படிக் கவிதையோடு கலந்து அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! மனமகிழும் இன்பம் என்றும் உம்மைத் தொடர்ந்து வரும்!!

    arasa

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    பொதிகை வளர்ந்த செந்தமிழே
    உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
    பள்ளியறை என்னும் பள்ளியிலே
    இன்று புதிதாய் வந்த மாணவி நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    பள்ளியறை என்னும் பள்ளியிலே

    அஞ்சு விரல் பட்டால் என்ன
    அஞ்சுகத்தை தொட்டால் என்ன
    தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் உள்ளம் பந்தா என்ன
    தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் உள்ளம் பந்தா என்ன
    செவ்விதழை கண்ணால் என்ன
    தேனெடுத்து உண்டால் என்ன
    கொத்து மலர் செண்டா என்ன
    கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    புத்தம் புதிய புத்தகமே

    கையணைக்க வந்தால் என்ன
    மெய்யணைத்து கொண்டால் என்ன
    கையணைக்க வந்தால் என்ன
    மெய்யணைத்து கொண்டால் என்ன
    முத்தமழை என்றால் என்ன
    சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
    முத்தமழை என்றால் என்ன
    சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
    வெட்கம் வரும் வந்தால் என்ன
    வேண்டியதை தந்தால் என்ன
    வெட்கம் வரும் வந்தால் என்ன
    வேண்டியதை தந்தால் என்ன
    இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
    இன்பம் இன்பம் என்றால் என்ன

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    புத்தம் புதிய புத்தகமே

    http://www.youtube.com/watch?v=vLP73tr8x8M

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”ராவுத்தன் தேர்க்குதிரை ரெக்கை விரிக்குது
    ஆயத்தம் ஆகுது ஐந்துக்காய், -தாயத்தை(ரக்‌ஷை கண்ணனை)
    சூதில் மறந்தன்று சொத்திழந்த பாண்டவரை
    மாதவனின் மன்னிக்கும் மாண்பு’’….கிரேசி மோகன்….

    சகுனிக்கு எதிராக சூதாட கண்ணனை தருமன் கூப்பிட மறந்து விட்டான்….

    Share