கவிஞர் காவிரி மைந்தன்

jaya

சமுதாயத்திற்காக ஆண், பெண் என்கிற உயிரினங்கள் தோன்றிய நாள் முதல் தொடர்ந்து வருகின்ற காதலைப் பற்றி எழுதிக் குவித்த கவிஞர் பெருமக்கள், புலவர் பெருமக்கள் தொகை கணக்கிலடங்காது! இன்னும் இன்னும் எழுதிடவு இனிப்பானது காதலைத்தவிர வேறில்லை! அந்தக் காதல்பற்றிய பாடல்கள் திரைப்படங்களில் இல்லாமலிருக்கவும் வழிகளிலில்லை. ஆனால், கற்பனைகளின் உயரம், கவித்துவச் சொற்களின் தன்மை, புதிய கோணத்தில் தான் வைக்கும் வார்த்தைகள் – அதுவும் இசைக்கோர்வைக்கும் பொருந்திடும் வண்ணம் வரைந்திடும் திறம்.. என பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டு இதோ வருகிறது. .. ‘அரச கட்டளை’ பாடல் ஒன்று! கவிஞர் வாலி அவர்களின் ஈடிலாச் சொற்களின் கூட்டணி நம்மைக் காதல் உலகத்திற்குள் கூடிச்செல்கிறது காணுங்கள்!

புத்தம் புதிய புத்தகமே
உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே
இன்று புதிதாய் வந்த மாணவி நான்
ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
வீட்டு புலவன் நாயகி நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே

வாலிப ராகத்தின் ஆலாபனைகள் அடுத்தடுத்து தொடுக்குக் கவிஞரின் சாதுரியத்தில் சிக்கிடாத மானுட இனமேது? கவிதைச் சரமெடுத்து.. காதல் அம்பெய்து.. எவரும் மயக்கும் வண்ணம் எழுதிக் குவித்திருக்கும் இவரின் வரிகளிங்கே.. அழகு மங்கையைப்போல் அன்னநடை போட்டு வருகிறதென்பேன்! கவிஞனே! உன் எழுதுகோல் கொண்ட மயக்கன்களைக் கூட எப்படித் தெளிய வைக்கிறாயோ தெரியவில்லை! திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இன்னிசை மழையில் இதோ காதல் இதயங்களை நனைப்பதற்கென்றே பிரத்யேக கலவையாய் பாடலும் இசையும் இதம்தரும் டி.எம்.சௌந்தரராஜன் .. பி. சுசீலா குரல்களில்!! களவியல் இன்பத்தை இப்படிக் கவிதையோடு கலந்து அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! மனமகிழும் இன்பம் என்றும் உம்மைத் தொடர்ந்து வரும்!!

arasa

புத்தம் புதிய புத்தகமே
உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே
இன்று புதிதாய் வந்த மாணவி நான்
ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
வீட்டு புலவன் நாயகி நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே

அஞ்சு விரல் பட்டால் என்ன
அஞ்சுகத்தை தொட்டால் என்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
துள்ளும் உள்ளம் பந்தா என்ன
செவ்விதழை கண்ணால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
கொத்து மலர் செண்டா என்ன
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

புத்தம் புதிய புத்தகமே
உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
வீட்டு புலவன் நாயகி நான்
புத்தம் புதிய புத்தகமே

கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்து கொண்டால் என்ன
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்து கொண்டால் என்ன
முத்தமழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
முத்தமழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
வெட்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதை தந்தால் என்ன
வெட்கம் வரும் வந்தால் என்ன
வேண்டியதை தந்தால் என்ன
இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
இன்பம் இன்பம் என்றால் என்ன

புத்தம் புதிய புத்தகமே
உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
வீட்டு புலவன் நாயகி நான்
புத்தம் புதிய புத்தகமே

http://www.youtube.com/watch?v=vLP73tr8x8M

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *