அழகப்பா பல்கலைக்கழகத்தில் கோயிற் பண்பாடு என்ற கருப்பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
Blog
-

சுழல்
பாஸ்கர்
மோடி பண்றது ஞாயமா?
நீ எவ்வளவு நோட்டை எக்ஸ்ச்சஞ் பண்ண?
என்ன இந்த வருஷமும் அதே மழை உண்டா?
எட்டாம் தேதி என் ஏ சீ வாசல்ல கூட்டத்தை பாத்தயா?
எவனும் சில்லறை தர மாட்டனுங்க.
என்ன எழுதினான் சோ… இப்ப ஆஸ்பிட்டல்ல பாத்தியா?விஷால் பண்றது மட்டும் சரியா என்ன?
ஜீ டிவி வந்து விஜய்க்கு தண்ணி காட்டுறான் .
அந்த ராயர் கேப் டேஸ்ட் போச்சுடா.
கொஹ்லி இஸ் ப்ராமிசிங், எங் ப்ளட்.
டே, வைகுண்ட ஏகாதேசி பாஸ் மறக்காதே.அரட்டை அழகு சுழல் .வைத்து பாரும் கால்களை …..ஒரே இழு
-

குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1
மீனாட்சி பாலகணேஷ்
(சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்)
ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாம் பருவமாக சிறுதேர்ப் பருவம் அமையும். சிறுதேர் உருட்டுதலானது சிறுகுழந்தை நன்கு நடை பழகுவதற்காகவும், ஓடியாடி விளையாடவும் வகைசெய்யும் விதத்தில் ஊக்குவிக்கப்படும் விளையாட்டாகும். தற்காலத்திலும் குழந்தைகளுக்கு நடைவண்டி என நடை பழகுவதற்காக மரத்தாலான மூன்றுகால் சக்கரவண்டி ஒன்றினைக் கொடுப்பதனைக் கிராமப்புறங்களில் காணலாம். நகரத்துக் குழந்தைகள், நான்கு சக்கர ஊர்தி பொம்மைகளையும், நாய்க்குட்டி பொம்மைகளையும் கயிற்றால்கட்டி இழுத்தவண்ணம் நடப்பதனைக் காணலாம்.
‘பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர்1,’ என்று பட்டினப்பாலை, இச்சிறுதேரினை, சிறு குழந்தைகள் புரவியில்லாது உருட்டி விளையாடும் மூன்றுகால்களாலான சிறுதேர் எனக் கூறும்.
ஐங்குறுநூறு, தலைவனின் உள்ளம் தன்மகன் புன்னகை புரிந்தவாறு தளர்நடை நடந்து சிறுதேர் உருட்டும் அழகினைக்கண்டு தலைவியைவிடப் புதல்வனிடத்தில் அன்புமிகுதியால் ஈடுபட்டதனைக் கூறுகிறது.
‘புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்
……………………………………………………………………
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே2,’ என்பன பாடல்வரிகள்.
பிள்ளைத்தமிழின் ஒவ்வொரு பருவத்திலும் பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியின் சிறப்புகள் கூறப்படும்; சப்பாணி, அம்மானை, சிறுபறை ஆகிய பருவங்கள் கைகளைப் பாடுபொருளாகக் கொண்டமையும்; வருகை, சிற்றில் (ஆண்பால்) ஆகியன கால்களைப் பாடுபொருளாகக் கொண்டு அவற்றின் சிறப்பைப் பேசும். தளர்நடை நடக்கும் ஆண்மகவு இழுத்துச் செல்லும் சிறுதேரைப்பேசும் சிறுதேர்ப்பருவம், தலைவன் செலுத்தும் தேர் தொடர்பான பல செய்திகளைத் தெரிவிக்கும்.
இவையே பிள்ளைத்தமிழின் தனிச்சிறப்பாகும்.
தளர்நடைபயிலும் சிறு ஆண்மகவு நடக்கக் கற்றுக்கொண்டு விட்டதனால் அவனுடைய தாய் அவனுக்கு விளையாட தச்சனிடம் செய்து வாங்கிய ஒரு அழகான சிறுதேரினைக் கொடுத்திருக்கிறாள். இலேசான, கனமற்ற மரத்தால் குழந்தை விளையாடுவதற்காகவே செய்யப்பட்டு, குழந்தை கையிலோ காலிலோ குத்திக் காயம் பண்ணிக்கொள்ளாமலிருக்க முன்னெச்சரிக்கையாக கூர்மையான முனைகள் எல்லாம் தேய்த்து மழுங்கவைக்கப்பட்டு செய்விக்கப்பட்ட விளையாட்டுத்தேர்! சிவப்பு, பச்சை, மஞ்சள் எனக் கண்ணைக்கவரும் வண்ணங்கள் பூசப்பட்டு, சில பட்டுத்துணித்துண்டுகளால் கொடிகளும் பறக்கும்படி அமைந்து மிக அழகாக இருக்கிறது. தாய் தனது ஆசைப்படி அதில் ஒரு அழகான அன்றலர்ந்த தாமரைப்பூவினையும் செருகிவைத்திருக்கிறாள்.
இந்தத்தேரை அழகான ஒரு மணிக்கயிற்றினால் கட்டி, குழந்தை அதனை இழுத்து உருட்டும்போது ஒலியெழும்படியாகச் சில மணிகளையும் அங்கங்கே இணைத்துள்ளான் அதனைச் செய்த தச்சன். மிக்க மகிழ்ச்சியுடன் சிறுகுழந்தை தேரை இழுத்துக்கொண்டு செல்கிறான். தேர்ச்சக்கரங்கள் உருளும்போது மணிகள் இனிமையாக ஒலிக்க அதனை இழுத்து உருட்டும் தன் மகனைக்கண்டு தாயின் மனம் ஆனந்தத்தில் பூரிக்கின்றது. குழந்தையும் புது விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டுத் தெருவெங்கும் தேரினை இழுத்தவண்ணம் நடந்து செல்கிறான்.
இந்தக்குழந்தை நம்மையெல்லாம் காக்கும் செந்தில்வாழ் கந்தன்; சேவற்கொடி கொண்ட குமரன். பக்தியிலும் தாயன்பிலும் திளைக்கும் புலவர் பகழிக்கூத்தர் தாமியற்றியருளிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் குமரன் சிறுதேர் உருட்டுவதனை பரவசமாக வருணிக்கிறார்: குமரன் தேருருட்டுங்காலை மற்றும் பலரும் பலவிதமான தேர்களை உருட்டுகின்றனர் எனக்கூறும் நயம் வியக்கத்தக்கது.
‘தேவர்களுக்கரசன் இந்திரன்; மணம்மிகுந்ததும் தேன்சொரிவதுமான மாலைகளை அணிந்தவன்; ஆயிரம் யாகங்களைச் செய்து இந்திரபதவி பெற்று தக்கதருணத்தில் அரியாசனத்தில் அமர்ந்தவன்; அவனுடைய அழகிய தேரினை ஓட்டுபவன் (தேரினை உருட்டுபவன்) மாதலி எனும் பெருமைமிக்க தேர்ப்பாகன். உலகின் நிலைப்பாடு அழிந்துபட்டதென்று குபேரன் எனும் தேவன் தானும் ஒரு தேரை உருட்டுகிறான். அது என்ன? பழங்காலம்தொட்டே பகைமைகொண்ட அரக்கர்கள் அச்சமடையும்படி, வடவரையாகிய இமயத்தினைப்பொரும் புஷ்பகவிமானத்தினை அவன் செலுத்துகிறான் (புட்பகத்தேரை உருட்டுகிறான்). வெற்றிமிகும்படி உதித்தெழுகின்ற ஆயிரம்கதிர்களைக் கொண்ட கதிரவன் ஆகாயத்தில் ஒளிபரப்பியவண்ணம் கோலம் நிறைந்த அழகான ஒளிவட்டத்தைப் பரிவட்டமாகக் கொண்டு சுடர் வீசுகின்றான்: உலகினைத்தன் ஒளியால் துலக்கி விளக்கமுறச் செய்கின்றான். சூரியனின் தேரோட்டியான அருணன் முட்கோல் எனப்படும் தேரோட்டுபவனின் கைக்கோலை (சாட்டைக்கோலை) எடுத்துக்கொண்டு வலிமைமிகுந்த தேரினை உருட்டிவருகிறான். ஆகவே, செந்தில்பதியில் வாழும் கந்தனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டி வருவாயாக!’ எனப் பகழிக்கூத்தர் வேண்டுகிறார்.
தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி
தரிக்குஞ் சதக்கிருதுசெந்
தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்
தமனியத் தேருருட்டப்
………………………………………………………………………………
கொண்டே உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்
குண்டலந் திருவில்வீசக்
……………………………………………………………………………….
திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே
சிறுதேர் உருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதேர் உருட்டி யருளே3.
புலவரின் ஆவல் இத்துடன் நிறைவுபெறவில்லை! இன்னும் யார்யார் என்னவெல்லாம் உருட்டினார்கள் எனக் குறிப்பிடுவதிலேயே முனைப்பாக இருக்கிறார். இதுவுமொரு அழகிய சொல்நயமும் தமிழ்நயமும் செறிந்த பாடல்!
வாரணிந்த இளமுலைகளைக் கொண்ட இடைச்சியர்கள் (பொதுவியர்) தங்கள் ஆடை மோரினாலும் தயிரினாலும் முடைநாற்றம் வீசும் தகைமையர். தயிரினைக் கடைந்து வெண்ணையையும் உருண்டைகளாக உருட்டி, வெண்தயிரையும் உறிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகளுக்குள் கள்வனைப்போல் மெல்லப்புகுந்து அந்தத் தயிரினை உண்கிறான் ஒருவன்; பின் குடைத்தை உருட்டித்தள்ளி அதிலிருந்து வெண்ணையையும் அள்ளிவாரி (உருட்டி வாயில் இட்டுக்கொள்ளக்கூட அவகாசமின்றி) யாரும் காணும்முன்பு திருட்டுத்தனமாக மிக அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு உண்டுவிடுகிறான்; அதன்பின்பு தனது செங்கனி வாயினையும் துடைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவன் போலச் செல்பவன், ஒரு பருத்த பெரிய சகடத்தைச் சிலம்பணிந்த தனது சிறுகாலால் எட்டியுதைத்து உருட்டி விளையாடிச் சிதைக்கிறான்! யாரிவன்? சகடாசுரனைக் கொன்ற கிருஷ்ணபெருமானே இவன். ‘அந்தப் பச்சைமாலின் மருகனே’ என முருகனைப் புலவர் விளிக்கிறார்: இவ்வாறு மாமனின் ‘சிறப்பைக்’கூறி விளித்த மருகனாகிய முருகனிடம், “உன்னிடம் தீராத பெரும்பக்தி கொண்ட அடியவர்களின் பழவினைகளாகிய கொடுமைகள் தீருமாறு நீ அத்தீமைகளைப் புறந்தள்ளி (உருட்டிவிட்டு) அனுக்கிரகம் செய்கிறாய் முருகா! மேலும் அத்துணை உலகங்களிலும், அண்டபகிரண்டங்களிலும் உனது ஆணை (கட்டளை, அதிகாரம்) எனும் ஆக்ஞாசக்கரத்தை (ஆழியை) உருட்டிக் காக்கிறாய். இவ்வாறு செய்து, உனதடியைச்சேராத/வணங்காத அசுரர்களின் தலைகளாகிய குவடுகளை (மலைகளை) உருட்டுகின்றனை! நீ இந்தச் சிறுதேரையும் உருட்டியருளுக,” என வேண்டுவதாக இப்பாடல் அழகுற அமைகிறது.
‘சேவற்பதாகைக் குமாரகம்பீரனே,’ என ஆசையாக விளிக்கிறார். சேவல்கொடியைக்கொண்டு கம்பீரமாக விளங்குபவனே எனும் இப்பிரயோகம் தனித்துவம்கொண்டு விளங்குகிறது.
வாராரும் இளமுலை முடைத்துகிற் பொதுவியர்
மனைக்குட் புகுந்து மெல்ல
வைத்தவெண் தயிருண்டு குடமுருட் டிப்பெருக
வாரிவெண் ணெயை யுருட்டிப்
பாராமல் உண்டுசெங் கனிவாய் துடைத்துப்
பருஞ்சகடு தன்னையன்று
பரிபுரத் தாளால் உருட்டிவிளை யாடுமொரு
பச்சைமால் மருக ……………………..
……………………………………………………..
அண்டபகி ரண்டமும் அனைத்துலக முஞ்செல்லும்
ஆணையா ழியையு ருட்டிச்
சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ
சிறுதேர் உருட்டி யருளே4
முருகன் உருட்டும் சிறுதேரானது ஒவ்வொரு அடியாரின் உள்ளத்திலும் விதம்விதமான கற்பனைகளை உண்டுபண்ணுகின்றது.
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் சிதம்பர அடிகளார் மனித உடலையே முருகன் எனும் தெய்வக்குழந்தை படைத்து உருட்டும் அற்புதமான தேராக உருவகிக்கிறார். பாதங்களே தேரின் சக்கரங்களாகவும், எலும்பே பெரிய பலகையாகவும், சொல்லும் நாடியே அச்சாணியாகவும், பருத்தமார்பு தேரின் தட்டாகவும், காற்றாடியைப்போல அலமலந்து சுழலும் வஞ்சம் நெருங்கிய ஐம்பொறிகள் சிறப்பான தேர்க்கொடிஞ்சியாகவும் உள்ளன; விருப்பம் பொருந்திய சிகையே தேர்க்கொடிஞ்சியாக அமைய, பேசும் சொற்களே பல வாத்தியங்களின் தொகுக்கப்பட்ட ஒலியாக அமைகின்றது; இவ்வாறு பெரிய வேகம் மிகுந்த பலவகை மாறுபாடுகளையும் கொண்ட உடல் எனக் கூறப்படும் தேரின்மீது பெறுதற்கரிய உயிர் எனப்படும் ஒரு சிறுவனை அமரச் செய்துள்ளாய்! மனம் எனும் குதிரைகளை இருவினைகள் எனும் கயிற்றினால் பூட்டி, உனது திருவருளே பாகனாக இருக்குமாறு அமைத்து குற்றமற நடத்தச் செய்தருளும் குமரேசனே! நீ உனது சிறுதேரினை உருட்டியருளுக, என வேண்டுகிறார் புலவர்.
பாததிகி ரியுமெலும் புப்பெரும் பலகையும்
பகர்நாடி யுருவாணியும்
பரியமரு மத்தட்டும் ………………
……………………………………
காதல்தரு குஞ்சிக்கோ டிஞ்சியும் பலமொழி
கலித்தபல் லியராசியும்
…………………………………………………
பேதமுறு தேர்கள்மீ தாருயிர்ப் பிளையைப்
பிறங்கிட விருத்திவெற்றிப்
பேசரு மனப்புரவி கட்டிவினை வடவழிப்
………………………………
தீதற நடத்திடச் செய்தகும ரேசனே
சிறுதே ருருட்டியருளே5
அழகான உருவகங்களைக் கொண்டமைந்த பாடலிதுவாகும். முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் நாம் செய்த வினைகளின்படிதான் ஆன்மாக்கள் அடுத்தடுத்த பிறவிகளில் உடல் பெறுகின்றன. இதனையே, “கணமொடு மலிந்த உடலென உரைதரும் பெரிய கடுவேகம் உடைய நானாபேதமுறு தேர்கண்மீது,” எனப் பொருத்தமாகக் கூறுகிறார். அவ்வினைப் போகங்களை அனுபவிப்பதற்கு அந்தவந்த உடல்களில் உயிர்களைப் பொருத்திக் கூட்டிவைப்பதனால், “ஆருயிர்ப் பிள்ளையைப் பிறங்கிட இருத்தி,” எனும் தத்துவமும் விளக்கப் பட்டுள்ளது.
இத்தகைய பெரும் வேதாந்த தத்துவத்தை உள்ளடக்கிய பாடல்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவாகும்.
***
வேறொரு அடியாரின் சிந்தையில் உலகில் இயற்கை நியதிக்கேற்ப நடைபெறும் பலவிதமான செயல்களும் முருகனின் சிறுதேரோட்டத்திற்கு இணையாகக் கூறப்படுகின்றன.
சந்திரன் வானில் பலவேறு நட்சத்திரக் கூட்டங்கள் புடைசூழத் தன் விமானத்தில் உலாவருகிறான்;
ஒளி (சவி) வாய்ந்த இரவி எனும் சூரியன் ஏழு புரவிகளைப்பூட்டித் தனது அழகான தேரில் உலாவருகிறான்;
அரன் எனப்படும் சிவபிரான் தனது விடை வாகனத்தைச் செலுத்தி வர, மாயவனாகிய திருமால் தனது கருடவாகனத்தில் வலம் வருகிறான்; தாமரை மலரில் உறையும் பிரம்மன் தனது அன்னவாகனத்தில் வலம் வருகிறான்;
முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்திடவும், இந்திரனுடைய அழகான தேவமங்கையர் இருபுறமும் கவரிகளைக்கொண்டு வீசிடவும், இளமையான நிலவு வட்டமான வெண்குடையை ஏந்திடவும், இருகொம்புகளையுடைய மலைபோலும் யானைகள் மரங்கள் நிறைந்த மலைகளைச் சுறி வலம்வரவும், நீ உன் சிறுதேரினை உருட்டுக என வேண்டுகிறார் புலவர்.
சந்திரன் பலவேறு தாராக ணங்கள்சூழ்
தரவிமா னத்து லாவச்
சவிபெற்ற ரவிபுரவி யேழ்பூட்டி யேநெடும்
தமனியத் தேர்சே லுத்த
…………………………………….
முளரிப் பொகுட்டயன் புள்ளூர முப்பத்து
முக்கோடி தேவர் வாழ்த்த
………………………………………
…….. ஈரிருமருப் புப்பொ ருப்பு
சிந்துரம் கற்பகா டவிகடவி வலம்வரச்
…………………………….
தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா
சிறுதே ருருட்டி யருளே6.
இது மயிலம் முருகன் பிள்ளைத்தமிழில் நாம் காணும் அழகான பாடல்.
உலகில் அனைத்தும் இலயம் தவறாது இயங்கிடவேண்டுமாயின் இறைவனின் அருளாணை வேண்டும். இதனையே முருகன் உருட்டும் சிறுதேராகக் காண்பார் இவ்வடியார்.
– (வளரும்)
பார்வை நூல்கள்:
- பட்டினப்பாலை
- ஐங்குறுநூறு
- பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
- பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
- சிதம்பர அடிகளார்- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
- திருவாரூர் வைத்தியநாத தேசிகர் – மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்
-

(Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்
நீ.அகிலாண்டேஸ்வரிமுனைவர் பட்ட ஆய்வாளர்அரிய கையெழுத்துச் சுவடித் துறைதமிழ்ப் பல்கலைக் கழகம்தஞ்சாவூர்- 10—————————————————————————————————————————————————-தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்
கதைப்பாடல்கள் வாய்மொழி வரலாறு மட்டுமன்று வாழ்க்கைப் பொருளின் வரலாறு என்பது இன்று நாட்டுப்புறவியலாளர்கள் மட்டும் அல்ல வரலாற்று ஆசிரியர்களாளும் முழுமையாக ஏற்றுக் கொள்கின்ற வகையில் இவை வரலாற்றுப் பெட்டகமாகவும் அமைகின்றன. அவ்வகையில் சிவ விவேகானந்தனின் தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகளை ஆய்கிறது இக்கட்டுரை.
கதைப்பாடலின் தோற்றம்
பெரும்பாலும் கதைப்பாடல்கள் யாவும் பாரம்பரியமாக அந்நாட்டு மக்களால் வாய்மொழியாகப் பாடப்பட்டு வரும் இயல்பு உடையன. இதன் அடிப்படையில் தம்பிமார் கதைப்பாடலும் கோவில்களில் வில்லுப்பாட்டாகப் பாடப்பட்டு வருகிறது. வரலாற்றுக் கதைப்பாடல்கள் பெரும்பாலும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக எழும் போர்கள் பற்றி அமைவனவாகும். இதனடிப்படையில் தம்பிமார் கதை திருவிதாங்கூர் வரலாறு தொடர்பான ஒரு போர் கதைப்பாடலாகும்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம் சங்க காலத்தில் 13 மண்டலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அவற்றுள் பூழி, குடம், குட்டம், வேண் என்ற நான்கு மண்டலங்களும் அரபிக்கடலை ஒட்டி வடக்கிலிருந்து தெற்காக அமைந்து இருந்தன. குட்ட நாட்டிற்குத் தெற்கில் உள்ள வேணாடு குமரிமுனை வரை பரவிக்கிடந்த்து. இந்த வேணாட்டை சங்க காலத்தில் வேள் மன்னர்கள்(குறுநில) ஆட்சி செய்து வந்துள்ளனர்.அவ்வாறு வேள் மன்னர்கள் ஆட்சி செய்த வேணாடு இன்றைய திருவிதாங்கூர் பகுதியாகும்.“ஆய்வேள், எவ்விவேள், பேகன்வேள், வேண்மான், பாரிவேள், நன்னன் முதலியோர் வேள் மன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர்’’.
அரசு உருவாக்கமும் மன்னராட்சியும்
மன்னராட்சி முறை என்பது உலகம் முழுவதும் வாரிசு முறையே இருந்து வந்துள்ளது. மேலும் நாடாலும் உரிமை மன்னனுக்குப் பிறகு வாரிசுகளுக்கும் வலிமையைக் கொண்டு யார் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களும் நாட்டை ஆண்டு இருக்கிறார்கள். இவை உலக நாடுகளில் நடந்து உள்ளன. சேர நாட்டில் வாரிசு உரிமை தாய்வழிச் சார்ந்தது எனவும், சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் தந்தை வழிச் சார்ந்தது எனவும் கருத்து நிலவுகிறது. ஆனால் தொல்காப்பியர் ‘தாயத்தின் அடையாத் தாயம்’1 என்று உலகம் முழுவதுக்குமான ஒரு பொதுவான வழக்கத்தைக் குறிப்பிட்டு உள்ளார். இதன் வழியாக அக்காலச் சமூகம் தந்தை வழிச் சமூகம் என்பது தெளிவாகிறது.

தொல்காப்பியம் சோழர், பாண்டியர் மரபினரில் வாரிசு முறை பின்பற்றப் பட்டது. மேலும் இதிகாச புராணங்களில் பட்டத்து அரசியின் மூத்த மகனுக்கே என்கிறது. சோழர் பாண்டியர் மரபினில் சில சமயங்களில் மூத்த சகோதரனுக்குப் பின்னர் இளையவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற செய்திகளும் சங்க இலக்கியத்தில் உள்ளது.
“பரந்துபடு நல்லிசை எய்தி மற்று
உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்
ஒழித்த மாயம் அவர்க்குரி தன்றெ …’’ 2
என்ற புறநானூற்றுப் பாடல் அரசுரிமை தந்தைக்குப் பின் மகனுக்கே என்பதை உணர்த்துகிறது. மேலும் மன்னர்கள் மரபுகளையும், வழக்காறுகளையும் மதித்தனர். முறைமுதற்கட்டில் என்பது மரபு. தந்தைவழி தாய முறையில் மூத்த மகனுக்கு அரசு உரிமை கிட்டியது என்பதை
“மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிரல் தாயம்….’’ 3
என்ற புறநானூற்றுப் பாடல் வழியாக அரசுரிமை தலைமுறை, தலைமுறையாக அரசின் மூத்த மகனுக்கு வந்துகொண்டிருந்தது என்பதை அறிய முடிகிறது.
சங்க கால ஆட்சிமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆட்சியாக திருவாங்கோட்டு மன்னர் ஆட்சி முறை இருந்தது குறிப்பிடத் தக்கதாகும். இங்கு தந்தை வழிச்சமூகமோ அல்லது தாய் வழிச்சமூகமோ ஆட்சி நடத்தவில்லை. அதற்கு மாறாக மருமக்கள் வழி தாயத்தின் படி ஆட்சி நடந்துள்ளது. என்பதனைத் தம்பிமார் கதைப்பாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதாவது ராம வர்மாவிற்கு அரசாளக்கூடிய தகுதிகளோடு இரு மகன்கள் இருந்தும் அவர் தனது மருமகனான மார்த்தாண்ட வர்மாவிற்கு அரசுரிமையை வழங்குகிறார். இதனை,
“நானிலிருந்து பொறுத்தது போல் நலமாக நீபொறுத்து
முக்காலும் நீ பொறுத்து முடிசூட்டி நீ ஆண்டிடுவாய்
செங்கோலும் முத்திரையும் திருமுடியும் தான் கொடுத்து
திருக் கையினால் கொடுக்க திருவயது குறைந்திடுமாம்…’’4
என்ற கதைப்பாடல் வரிகள் மூலமாக ராமவர்மா நாட்டை எந்தக் குறையும் இல்லாமல் ஆள வேண்டும் என்று மார்த்தாண்ட வர்மாவிடம் கேட்டுக்கொண்டது மட்டுமல்லாமல், நாட்டை ஆள்வதற்கு உரிய செங்கோல், ராஜமுத்திரைமோதிரம் மற்றும் ராஜகிரீடம் ஆகியவற்றை தன் மருமகனிடம் ராமவர்மா அவர்கள் வழங்கினார் என்பதை அறிய முடிகிறது.
மேலும் பொதுவாக மன்னராட்சி முறையில் அரசன் இறந்து விட்ட பிறகு அவனுடைய ஆண்வாரிசு அரசனாக்கப் படுவான். “இந்த வாரிசு உரிமையில் பொது மக்களின் பங்கு எதுவும் இருக்காது. புதிதாக வாரிசு உரிமை ஏற்ற அரசின் நேர்ப்பொறுப்பில் முன்பு இருந்த அரசின் கீழ் உள்ள நிலங்களும், ஊர்களும் அப்படியே தொடர்கின்றன’’5 ஆனால் தம்பிமார் கதைப்பாடலில் அரசனுக்குப்பிறகு அவனுடைய மருமகன் அரசுரிமை ஏற்று ஆட்சி நடத்தினான் என்பதை,
“ஆண்டிருக்கும் நாளையிலே அழகு முடிமன்னவரும்
ஆறிலொரு கடமை தாண்டி அசையாத மணியும்கட்டி
செங்கோலும் முத்திரையும் தேசமதில் சிறந்திலங்க
ஒன்றும் குறைவராமல் உலகமதை ஆண்டிருந்தார்….’’ 6
என மார்த்தாண்டவர்மா ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பின் மக்களின் வருவாயில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே வரியாக வசூலித்தார். மேலும் செங்கோல் வலையாத நிலையில் ஆட்சி புரிந்தார் என்பதை இக்கதைபாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது.
மணமுறை
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’’ 7
என்கிறார். ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தனர். பின் பொய்யும், குற்றமும் மிகுந்த பின்பு இவனுடைய மனைவி இவள் என்று அடையாளப்படுத்தும் விதமாகத் தோன்றியதே திருமணம் என்கிறார் தொல்காப்பியர். மேலும் குறுந்தொகை தலைவி தலைவனுடன் தான் பழகியதற்குக் குருகைச் சாட்சியாக்குகிறாள்.
“யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்தோ
——————————————————-
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஒன்றே…’’8
என்றதன் வழி ஊரார் அறியாமல் நடந்த களவு வாழ்வில் ஆடவனிடம் பொய் தோன்றுமாயின் சாட்சி இல்லை என்ற நிலை அறியலாகிறது. இக்காரணத்தினால் திருமணம் தோன்றியது எனலாம். இதனையே,
“தந்தையும் கொடா அன் ஆயின் – வந்தோர்
———————————————————-
———————————————————-
படை மயங்கி ஆரிடை நெடுநல் ஊரே… ’’9
மணமகள் வீட்டில் பெண் கேட்டு ஊரரிய திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இன்றளவிலும் இருந்து வருவதைக் காணலாம். ஆனால் வேணாட்டின் திருமண முறைகள் சற்று வேறுபட்டு இருந்தன. யாதெனில் திருவாங்கோட்டு மன்னர்கள் யாரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களுடைய வாரிசுகளுக்கு அவருடைய நாட்டில் ஆட்சி செய்யும் உரிமை இல்லாத காரணத்தால் மன்னர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பல பெண்களுடன் வாழ்ந்து வந்தார்கள். மன்னர்கள் பலரும் திருமணம் செய்து கொள்ளாமல் ரகசிய மனைவிகளை வைத்திருந்தனர். ஆனால் மன்னர் ராமவர்மா மட்டுமே ஊரரிய கணிகையர்குலப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு இல்லறம் நடத்துகிறார். அதன் பின் அவருக்கு மூன்று பிள்ளைகளும் பிறக்கின்றன.
பொதுவாக இவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கும், அவளுடைய வாரிசுகளுக்கும் சொத்துரிமைகள், இல்லறக் கடமைகள் என அனைத்து சமூக செயல்பாட்டு உரிமைகளும் மறுக்கப்பட்டன. ஆனால் ராமவர்மா அவர்கள் தன்னுடைய மனைவிக்கும், வாரிசுகளுக்கும் அரசுரிமையைத் தவிர்த்து மற்ற அனைத்து உரிமைகளையும் வழங்கியிருந்தார். இதனை,
“நாலாறு முட்டுச் சந்தையிலே நல்லமுதல் எடுப்புகளும்
கொடுப்பக்குழி பேட்டையிலே கூண்ட முதல் எடுப்புகளும்
கொடுத்தாரே மன்னவரும் கூண்ட….’’10
போரும், போருக்கான காரணங்களும்
மூன்று வேந்த மரபினரும் தங்களிடம் மூன்றினைத் தவறாது வைத்திருந்தனர். அவை குடை, முடி, கோல். வெண்கொற்றக் குடை என்பது காவல் தொழிலையும், மணிமுடி என்பது அரசியல் தலைமையையும், செங்கோல் என்பது நீதியையும் குறிக்கும் குறியீடுகளாகத் திகழ்ந்தன. இவை மூன்றும் தனக்கு நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே போர் மேற்கொண்டனர், சங்க கால வேந்தர்கள். அப்போரானது மண்ணாசைக் காரணமாகவும், பெண்ணாசைக் காரணமாகவும் நிகழ்ந்தன என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. இங்கு நடைபெறுகின்ற போரானது பெண்ணாசையின் காரணமாக நடக்கிறது. அதாவது தம்பிமார்களின் தங்கையை மன்னர் பெண் கேட்டலும் அதற்குத் தம்பிமார்கள் நிபந்தனையின் பேரில் மறுத்தலும் போருக்கு முக்கிய காரணமாகிறது.
மார்த்தாண்டவர்மா அவர்கள் தம்பிமாரின் தங்கையைப் பெண் கேட்கிறார். அப்போது தம்பிமார்கள் துருவத்தில் பிறந்தார்க்கு பெண் கொடுப்பதில்லை என்று கூறி மறுத்து விடுகின்றனர். இதனால் கோபம் கொண்ட மன்னர் மார்த்தாண்டவர்மா தம்பிமார்களுக்கு அவருடைய தந்தை கொடுத்த குமரி நாட்டுப் பகுதிகளையும், அவர்களின் அரண்மனையையும் பறித்துக் கொண்டு அவர்களையும் நாட்டை விட்டுத் துரத்திவிடுகிறான். இதனை,
“வலியதம்பி மன்னவர்க்கு மன்னவனார் கொடுத்திருந்த
வகைதொகையும் கூண்ட மன்னர் தானெடுத்தார்
குஞ்சுதம்பி மன்னவர்க்கு கொடுத்திருந்த வகைதொகையும்
திருவுளக் கோடாக வல்லோ சிறியவர் எடுத்துவிட்டார்…. ’’11
என்ற கதைப்பாடல் வரிகள் மூலம் அறியலாம். மேலும் ஒரு தலைவன் நின் மகளைத் தருக என்று கேட்க அதனை அவனுக்கு எளியவன் ஒருவன் மறுத்துக் கூறுதலை புறநானூற்றின் வழியாக அறிய முடிகிறது.
அரசனின் அறம்
“அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை …’’12
என்று கூறுகிறது வள்ளுவம். அதாவது அறம் செய்வதற்கு காலம், நேரம் பார்க்கவேண்டியதில்லை என்பதுதான் வள்ளுவரின் ஆழமான கருத்தாக இருந்திருக்கின்றது. இந்த அறமானது தனிமனித வாழ்வில் பிரதிபலிக்கின்றது. அதாவது சர்வவல்லமையும், ஆதிக்க மனப்பான்மையும் கொண்டு இருந்தாலும் அறநெறியைப் பின்பற்றி ஆட்சி நடத்தல் வேண்டும் என்று மன்னருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனை
“நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமர் எனக் கோல் கோடாது
பிறர் எனக் குணம் கொல்லாது …’’13
என்று புறநானூறு குறிப்பிடுகின்றது. வலிமையான நான்கு படைகள் கொண்டு இருந்தாலும் அறநெறி வழியாகச் செயல்படுதலே நாட்டின் இறையான்மையைப் பாதுகாக்க முடியும் என்று மருதன் இளநாகனார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மார்த்தாண்டவர்மா இக்கொள்கையினைக் கடைபிடிக்கவில்லை. தான் ஒரு அரசன் என்கின்ற ஆளுகையையும், செல்வாக்கினையும் கொண்டு தம்பிமார்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு நாட்டைவிட்டுத் துரத்தி விடுகிறான். இதன் காரணமாகச் சர்வ வல்லமை பொருந்திய மன்னரைப் பெரும்படைகளைக் கொண்டு தம்பிமார்கள் தோற்கடித்து விடுகின்றன. இதனைக் கீழுள்ள கதைப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
மந்திரவாள் உறை உருவி வலுவுடனே குஞ்சு தம்பி
கைகலந்து வெட்டும் நேரம் கண்டாரே ’’…..14
மன்னிக்கும் பண்பு
முகம் தெரியாத யாரோ ஒருவர் மீதும், இனம் புரியாத ஏதோ ஒரு உயிரின் மீதும் செலுத்துகின்ற அன்பு, நேசம் இவற்றைக் காட்டிலும் எதிரிகள் மற்றும் பகைவர்களை மன்னிக்கும் செயலே உயர்பண்பாகக் கருதப்படுகிறது. பிழை செய்தவர்களை மன்னிக்கும் பண்பு புநானூற்றில்
“நின் யான் பிழைத்து நோவாய்; என்னினும்
நீ பிழைத் தாய் போல் நனி நாணினையே …’’15
என்று கண்ணனார் குறிப்பிடுகிறார். பகைவனே தவறு செய்திருந்தாலும் நான் தான் தவறு செய்தேன் என்று அவன்மேல் சினம் கொள்ளாது சொல்வது என்பது உயர்ந்த பண்பாகக் கொள்ளப்படுகிறது. அதுபோல தம்பிமாரும் மன்னரும் ஒருவருக்கொருவர் தங்களுடைய பகையினை மறந்து சமாதானம் அடையும் படியாக அழகப்ப முதலியார் வேண்டிக்கொண்டதற்கு இணங்க அவர்கள் தங்களது பகையினை மறந்து மனதில் எந்த விதமான வஞ்சகமும் இல்லாமல் மன்னருடன் நட்பு பாராட்டி வந்தனர். அதாவது பகைவனை வெல்ல நண்பனாக்கிக் கொள்வது சிறந்த வழியாகும். அதுபோல தம்பிமார்களோடு மன்னர் மார்த்தாண்டவர்மா நட்பு பாராட்டி வந்தாலும் தம்மை கொள்ள வந்த தம்பிமார்களை எப்படியும் கொன்று விட வேண்டும் என்று அவர்கள் மீது வஞ்சகம் கொண்டு இருந்தார். இதனை,
“மன்னவரும் தன்மனதில் வஞ்சகமாய் தானினைந்து
———————————————————————
———————————————————————
நம்மைக்கொள்ள வந்தவனை தாம் கொலை செய்யவேனும்… ’’16
என்ற கதைப்பாடல் வரிகளால் அறிய முடிகிறது. மேலும் போர்களில் எதிர்ப்படை வீரர்களைச் சிறைபிடித்தல் என்பது பொதுவான வழக்கம் ஆகும். அதுபோல தம்பிமார் கதையிலும் சிறைபிடித்தலுக்கு ஒப்பான இரு காட்சிகள் இடம்பெறுகின்றன. மன்னரைக் காண வந்த தம்பிமார்கள் இருவரையும் சூழ்ச்சியின் காரணமாகத் தனியே பிரித்து அவர்களிடம் உள்ள ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு காவலர்களை ஏவி சிறைபிடித்து விடுகிறார் மன்னர் மார்த்தாண்டவர்மா. பொதுவாக நிராயுதபானியாக உள்ளவர்கள் எதிரியாக இருந்தாலும் கூட அவர்களிடம் போர் செய்தல் என்பது அரச மரபிற்கு அப்பாற்பட்டது. அது அரசனுக்குரிய தர்மமும் கிடையாது. ஆனால் மார்த்தாண்டவர்மா இத்தகைய அரச தர்மத்தை மீறி தம்பிமார்களைச் சிறைபிடித்துக் கொலை செய்து விடுகிறான். இருப்பினும் இது வெற்றியாகக் கருதப்படாது. ஏனெனில் இந்த வெற்றி அநியாயமாகவும், வஞ்சகச் சூழ்ச்சியாலும் பெறப்பட்டது. அதாவது போரின் மீறிப் பெற்றது. ஆதலின் உண்மையில் வெற்றி பெற்றவர்கள் தம்பிமார்களே என்று கூறினால் அது மிகையாகாது.
சான்றெண் விளக்கம்
- தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை,முதல் பதிப்பு – மே 2005, பக்கம் – 329
- .புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 224
- மேலது, பக்கம் – 75
- தம்பிமார் வரலாறு, விவேகானந்தன்.சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு 2012, பக்கம் – 289
- தமிழ் மக்கள் வரலாறு, அறவாணன் க.ப, தமிழ் கோட்டம், சென்னை, முதல் பதிப்பு மார்ச் 2006, பக்கம் – 195
- தம்பிமார் வரலாறு, விவேகானந்தன். சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு 2012, பக்கம் – 290
- தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – மே 2005, பக்கம் 247
- குறுந்தொகை, சுப்பிரமணியன் ச.வே, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – டிசம்பர் 2009, பக்கம் – 45
- புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 331
- தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு -2012, பக்கம் – 275
- மேலது, பக்கம் – 304
- திருக்குறள், பரிமேலழகர் உரை, செண்பகா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – ஆகஸ்ட் 2012, பக்கம் – 20
- புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 77
- தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு – 2012, பக்கம் – 329
- புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 64
- தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் .சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு – 2012, பக்கம் – 334.
———————————————————————————————————–
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
ஆய்வாளர் இக்கட்டுரையை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். தம்பிமார் கதைப் பாடலின் வரலாற்றுப் பின்புலம் நன்றாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மருமக்கள் வழி மாண்மியம், தாய் வழிச் சமூகத்தின் எச்சமாக விளங்கியதை எடுத்துக் காட்டியுள்ளார். துரோகத்தின் அரசியல் வரலாற்றைத் தம்பிமார் கதைப் பாடலும் பெற்றுள்ளதை அறிய முடிகிறது. தொல்காப்பியம் மற்றும் புறநானுற்றுச் சான்றுகள் கட்டுரைக்குக் கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
———————————————————————————————————–
-

நெல்லைத் தமிழில் திருக்குறள்- 82
நாங்குநேரி வாசஸ்ரீ
82. தீ நட்பு
குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிதுமனசால உருக்கமா இருக்கமாரி பசப்புதவங்களோட சேக்கய வளத்துக்கிடதவிட கொறச்சிக்கிடது நல்லது.
குறள் 812:
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்தனக்கு தேவப்படுதப்போ சேக்காளி போல நடந்துக்கிட்டு பொறவு தேவையில்லாத நேரம் பிரிஞ்சுபோவுதவங்களோட சேக்க இருந்தா என்ன. இல்லாட்டி என்ன.
குறள் 813:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்என்ன கெடைக்கும்னு எதிர்பாத்து பழகுத சேக்காளி, தாசி, களவாணி இந்த மூணு பேரும் ஒருத்தருகொருத்தர் சமம் தான்.
குறள் 814:
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலைபோர்க்களத்துல கீழதள்ளி விட்டுப்போட்டு ஓடுத புத்தியில்லாத குதிர கணக்கா இருக்கவங்களோட சேக்க வைக்கத விட தனியா இருக்கது மேல்.
குறள் 815:
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்றுநாம பலவிதமா ஒதவி செஞ்சாலும் நமக்கு பாதுக்காப்பா இல்லாத அல்பங்களோட சேக்கயா இருக்கத விட இல்லாம இருக்கது நல்லது.
குறள் 816:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்கூறுகெட்டவனோட நெருங்கின சேக்காளியா இருக்கத விட புத்திசாலி ஒருத்தனுக்கு பகையாளியா இருக்கது கோடிமடங்கு மேல்.
குறள் 817:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்மொகத்துல சிரிப்பாணியோட சிரிச்சுப் பேசி நடிக்குதவுகளோட சேக்கய விட பகையாளியால வருத துன்பம் பத்துகோடி மடங்கு நன்ம.
குறள் 818:
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்முடியும் ங்குத காரியத்தையும் முடிக்க உடாம கெடுக்கவங்க ஒறவ அவுகளுக்கு தெரியாம பையப் பைய வெலக்கிக்கிடணும்.
குறள் 819:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்புசொல்லுதது ஒண்ணு, செய்யுதது ஒண்ணு னு இருக்கவனோட சேக்க கனவுல கூட துன்பத்தக் கொடுக்கும்.
குறள் 820:
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்புநம்ம வீட்டுக்குள்ளார வந்து நல்லதனமா பேசிப்போட்டு பொறவு பலபேர் இருக்க சபையில பொறளி பேசுதவன் ஒறவ வெலக்கிக்கிடணும்.
-

ஒரு கலைஞனின் வக்கிர புத்தி
நாகேஸ்வரி அண்ணாமலை
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பெயர் வாங்கிய இயக்குநர், நடிகர் ஒருவர் பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் அநீதி குறித்துப் பேசியிருப்பது பெண்ணான எனக்கு நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியதுபோல் இருக்கிறது. இப்படிப் பேசுவதற்குப் பெண்களை இவர் எவ்வளவு தரக்குறைவாக நினைக்கிறார் என்பதை நினைத்தால் இவருடைய சில படங்களைப் போய் ரசித்துப் பார்த்தோமே என்ற நினைப்பு வந்து மனதில் ஒரு குமட்டல் ஏற்படுகிறது.
இல்லஸ்ரேடட் வீக்லி என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த குஷ்வந்த் சிங், ‘ஒரு பெண்ணால் ஒரு ஆண்மகனுக்கு இழைக்க முடியாத கொடுமை ஒன்று உண்டென்றால் அது அவனுடைய கற்பைச் சூறையாடுவதுதான்’ என்று சொல்லியிருக்கிறார். இவரே, rape is not violent expression of sex, but sexual expression of violence’ என்று கூறியிருக்கிறார். ‘ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கற்பழிக்கும்போது அது வன்முறையாகச் செய்யும் பாலுறவு மட்டுமல்ல; தன் ஆதிக்கத்தைப் பாலுறவின் மூலம் காட்டுகிறான்’. இந்தக் கொடுமையை ஆண்களால் மட்டுமே பெண்களுக்கு இழைக்க முடியும். இப்படிப்பட்ட கொடுமையில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்ல இந்த இயக்குநருக்கு எப்படி மனம் வந்தது? ஊசியின் காது இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியுமாம். இது என்ன அபத்தமான உவமை! இவர் உதிர்த்த முத்துக்களில் இதுவும் ஒன்று!
சில வருஷங்களுக்கு முன்னால் டில்லியில் இரவு பதினொரு மணிக்கு நண்பனுடன் தெருவில் போய்க்கொண்டிருந்த பெண்ணை ஒரு வாகனத்திற்கு இழுத்துக்கொண்டுபோய் நான்கு மிருகங்கள் அவளைப் பலாத்காரம் செய்தனவே, அந்தச் சம்பவத்தில் ஊசி என்ன செய்தது, நூல் எப்படி நுழைந்தது என்று வெற்றி இயக்குநர் விளக்குவாரா? சென்னையில் ஆறு வயதுச் சிறுமியை அவள் வசித்த அதே அப்பார்மென்ட் கட்டடத்தில் வசித்த ஒரு மிருகம் சீரழித்ததே, அது எப்படி அந்தச் சிறுமியின் தவறாகும் என்று இவர் விளக்குவாரா? இவை இரண்டே இரண்டு உதாரணங்கள்தான். இன்னும் எத்தனையோ இருக்கின்றன.
அமெரிக்காவில் தொட்டுத் தாலிகட்டிய கணவனே தன் மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முடியாது. அப்படிச் செய்யும் பட்சத்தில் கணவனே குற்றவாளியாகிறான். அப்படியிருக்க ஒரு பெண்ணை எதோ ஒரு மிருகம் பலாத்காரம் செய்யும்போது அதில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என்று சொல்ல இயக்குநருக்கு எப்படி மனம் வந்தது?
பெண்கள் தங்கள் உடல் தெரிய உடை உடுத்துவதால்தான் ஆண்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று ஒரு அதிமேதாவி கூறியிருந்தார். இவர் ஒரு அரசியல்வாதி. பெண்களை ஒரு தாயாக, சகோதரியாகப் பாவிக்க வேண்டும் என்று பாடம் புகட்டப்பட்ட தமிழ்நாட்டில் எப்போது இந்த வன்முறையில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்ல ஆரம்பித்தோம்? ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. மாதவம் செய்து பிறந்த பெண்களையா இப்படிப்பட்ட அவலத்துக்கு உள்ளாக்குகிறீர்கள்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் கீழடியில் கிடைத்திருப்பதாக பெருமை பேசிக்கொள்கிறோம். அப்போதே நாகரிகத்தில் சிறந்து விளங்கிய சமூகத்தில், ஒரு பாதியான பெண்களை இப்போது `இப்படி இழிவுபடுத்த வேண்டுமா?
இன்னொரு உண்மையையும் உதிர்த்திருக்கிறார் இந்த இயக்குநர். ஆண்கள் சின்ன வீடு வைத்துக்கொள்வதில் தவறில்லை என்கிறார். ஆணும் பெண்ணும் சமம் என்று எல்லாச் சமூகங்களும் ஒப்புக்கொண்டாயிற்று. நாகரிகத்தில் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியதாகச் சொல்லும் தமிழர்களாகிய நாம் பெண்களை இப்படிக் குறைத்துப் பேசலாமா? பெண்களை அடக்கி ஆள வேண்டும் என்ற மிருக உணர்ச்சி இன்னும் தமிழ்நாட்டு ஆண்களிடம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
-

சுனாமியில் சிதைந்த ஜப்பானிய அணுமின் நிலையம் மீண்டெழுகிறது
சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா2011 மார்ச் சுனாமியில் சிதைந்த ஜப்பான் “ஓனகவா அணுமின் நிலையம்” செப்பனிடப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் கடந்து, மீண்டும் இயங்கப் போகிறது
Nuclear Watchdog Approves Restart of Onagawa Reactor in Miyagi, Japan Hit by March 2011 Tsunami [Look at the Sea Wall]
++++++++++++++++
கீழே விழுவது இயற்கை, ஆனால்
மேலே எழுந்து மீண்டும் நடக்காமல்
முடங்கிப் போவது மானிட மில்லை+++++++++++++
- https://youtu.be/YIGM_HxfseE
- https://youtu.be/h49OaZ0–Ok
- https://youtu.be/CtYq70-71RI
- https://youtu.be/0rWkMHVEU6Y
- https://youtu.be/CtYq70-71RI [March 13, 2011]
- https://youtu.be/0rWkMHVEU6Y
+++++++++++++

Reactors
Unit Type Start construction First criticality Commercial operation Electric Power Onagawa – 1 BWR July 8, 1980 October 18, 1983 June 1, 1984 524 MW Onagawa – 2 BWR April 12, 1991 November 2, 1994 July 28, 1995 825 MW Onagawa – 3 BWR January 23, 1998 April 26, 2001 January 30, 2002 825 MW It was announced in 2018, that Onagawa Unit 1 which has been idled since 2011 will be decommissioned. Tohoku Electric also plans to resume operations of the Onagawa Unit 2 reactor in 2020-21 following significant safety improvements.

Look at the Great Seawall in the front
2011 மார்ச் 11 ஆம் நாளன்று நேர்ந்த 9 ரிக்டர் பூகம்பத்தாலும், சுனாமிப் பேரலைகளாலும் ஜப்பான் மக்கள் பட்ட மாபெரும் இழப்புகள், இடர்கள், புகுஷிமா அணுமின் உலைகள் பெற்ற சிதைவுகள், கதிரடிப்புகள் உலக மாந்தரைப் பேரளவு அதிர்ச்சிக்குள் தள்ளியது. புகுஷிமா அணுமின் உலைகள் வெடிப்பு, எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீக்கம், கசிவு கதிரியக்கப் பெருக்கம் அனைத்தும் பூகம்பத்தால் தூண்டப் பட்டாலும், அவை இயற்கைப் பேரிழப்பு அல்ல என்பதுதான் என் கருத்து. முழுக்க முழுக்க அவை மனிதரால் உண்டான மாபெரும் தவறுகள், தவிர்க்கக் கூடிய தவறுகள், முன் எதிர்பார்ப்புடன் தடுத்திருக்க முடியும் தவறுகள் என்பது என் முடிவு.– கியோஷி குரோகவா [தலைவர், புகுஷிமா அணுமின் உலை விபத்துகள் தனிப்பட்ட உளவு அறிக்கை]
2011 மார்ச்சில் நேர்ந்த பூகம்பச் சுனாமிப் பேரழிகளால் 20,000 ஜப்பானியர் உயிரிழந்தார் / காணாமல் போனார். அதனால் எழுந்த பூதப் பேரலைகள் எதிர்பாராத உயரம் 30 மீடர் [100 அடி]. புகுஷிமாவில் அணுமின் உலைகள் நிறுத்தம் ஆயினும், வெப்பத் தணிப்பு நீரின்றி எரிக்கோல்கள் உருகின. அதனால் கதிரியக்கம் பெருகிக் கசிந்து சூழ்வெளியிலும், கடல் வெள்ளத்திலும் கலந்தது. ஆனால் பூகம்ப மையத்துக்கு [Epicenter] அருகில் இருந்த ஓனகாவா அணுமின் உலைகள் நிறுத்தமாகி, எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரைத் தொடர்ந்து பெற்றதால், அவை உருகவில்லை. கதிரியக்கம் சூழ்வெளியில் கசியவில்லை. அடித்த சுனாமி அலை உயரம் 14.3 மீடர் [48 அடி].ஓன்காவாவின் இரண்டு அணுமின் உலைகளும் சற்று உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. புகுஷிமா அணு உலைபோல் ஓனகவா அணு உலையும் “கொதிநீர் அணு உலையே [Boiling Water Reactor (BWR)].
அணு உலைகள் முன் கட்டப்பட்ட 800 மீட்டர் நீளம், 29 மீட்டர் உயரம் உள்ள சுனாமி தடுப்புச் சுவர்.
சுனாமிப் பேரழிவுகள் மீண்டும் ஏற்படாவண்ணம், தடுப்பு முறைகள், அபாயத் தவிர்ப்பு ஏற்பாடுகள், அபாய மின்சாரச் சாதனங்கள், எரிக்கோல் வெப்பத் தணிப்பு அமைப்புகள் நிதி செலவழித்து கட்டுமானம் ஆயின. அத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய 3.1 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டது. முக்கியமாக சுனாமி பேரலைத் தடுப்புச் சுவர் நீளம் : 800 மீடர், உயரம் : 29 மீடர் [ 2600 அடி X 90 அடி], கட்டப் பட்டது. ஜப்பான் அணுவியல் கட்டுப்பாடு ஆணைகம் 2019 நவம்பரில் ஓனகவா மீண்டும் இயங்கலாம் என்று அனுமதி அளித்தது.
++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++ புகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்
Posted on March 24, 2019
[ கட்டுரை – 2 ]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
+++++++++++++++++
- http://afterfukushima.com/
tableofcontents - http://afterfukushima.com/
book-excerpt - https://youtu.be/YBNFvZ6Vr2U
- https://youtu.be/HtwNyUZJgw8
- https://youtu.be/UFoVUNApOg8
- http://www.cornell.edu/video/
five-years-after-fukushima- lessons-learned-nuclear- accidents - https://youtu.be/_-dVCIUc25o
- https://youtu.be/kBmc8SQMBj8
- https://www.statista.com/
topics/1087/nuclear-power/ - https://www.statista.com/
statistics/238610/projected- world-electricity-generation- by-energy-source/ - https://youtu.be/ZjRXDp1ubps
- https://www.thinkingpower.ca/
PDFs/NuclearPower/NP_3_2_ Crawford.pdf
முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின. சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை. சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமா வின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, பேரரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன. அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன. அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார். நான்கு அணுமின் உலை களில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் அணு மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.
உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள் என்று கருதியே இயக்கி வருகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை. ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங் கள் தேவைப்படு கின்றன. அதுபோல் ஓர் அணுமின்சக்தி நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.
கட்டுரை ஆசிரியர்
தற்போது முப்பதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் 447 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) மின்சார ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டு களில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது ! ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.
உலக அணு மின்சக்தி இயக்கக் கண்காணிப்புக் கூட்டுப் பேரவை [ WANO -World Association of Nuclear Operators ] விதித்த மேம்பாடு நெறி முறைகள்
2011 புகுஷிமா பெரு விபத்துக்குப் பிறகு, பாடங்கள் கற்று நான்கில் ஒரு தலையகமாக இருக்கும் இங்கிலாந்து லண்டன் வானோ பேரவையில் வடிக்கப்பட்ட மேம்பாட்டு நெறிப்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. அவை சிக்கலானவை, சிரமமானவை, சவாலானவை. அவற்றை நிறைவேற்ற மிக்க நிதிச் செலவும், நேரச் செலவும் ஏற்படும். அவற்றுக்கு மெய் வருந்திய உழைப்பும், குறிப்பணியும் அவசியம் என்று, அவற்றை வெளியிட்ட வானோ ஆளுநர், பீட்டர் புரோசெஸ்கி சொல்கிறார்.
- புகுஷிமா விபத்தில் கற்றுக் கொண்ட பாதுகாப்புப் பாடப் பணிகள் உலக முழுமையாக சுமார் 6000.
- அவற்றுள் முக்கியமானவை : அபாய நிகழ்ச்சி காப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி உதவிகள், அபாய நிகழ்ச்சி பராமறிப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி அறிவிப்பு முறைகள், கதிரியக்க திரவம் சேமிப்புக் கலன்கள், பயிற்சி பெற்ற ஏராளமான பணியாளர், தோழ நாடுகள் முதல் உளவு, அடுத்த உளவு, முழு உளவு, ஆய்வு அறிக்கை வெளியீடு. வானோ உலக நாட்டு உளவு & அறிக்கை வெளியீடு.
As of November 28, 2016 in 31 countries 450 nuclear power plant units with an installed electric net capacity of about 392 GW are in operation and 60 plants with an installed capacity of 60 GW are in 16 countries under construction.
Country

IN OPERATION
UNDER CONSTRUCTION
Number
Electr. net output
MWNumber
Electr. net output
MWArgentina 3
1.632
1
25
Armenia 1
375
–
–
Belarus ––2
2.218
Belgium 7
5.913
–
–
Brazil 2
1.884
1
1.245
Bulgaria 2
1.926
–
–
Canada 19
13.524
–
–
China 36
31.402
20
20.500
Czech Republic 6
3.930
–
–
Finland 4
2.752
1
1.600
France 58
63.130
1
1.630
Germany 8
10.799
–
–
Hungary 4
1.889
–
–
India 22
6.225
5
2.990
Iran 1
915
–
–
Japan 43
40.290
2
2.650
Korea, Republic 25
23.133
3
4.020
Mexico 2
1.440
–
–
Netherlands 1
482
–
–
Pakistan 4
1.005
3
2.343
Romania 2
1.300
–
–
Russian Federation 36
26.557
7
5.468
Slovakian Republic 4
1.814
2
880
Slovenia 1
688
–
–
South Africa 2
1.860
–
–
Spain 7
7.121
–
–
Sweden 10
9.651
–
–
Switzerland 5
3.333
–
–
Taiwan, China 6
5.052
2
2.600
Ukraine 15
13.107
2
1.900
United Arab Emirates –
–
4
5.380
United Kingdom 15
8.918
–
–
USA 99
98.868
4
4.468
Total 450
391.915
60
59.917
Nuclear power plants world-wide, in operation and under construction, IAEA as of 27 November 2016
அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்
புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு. அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு ! பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை. இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60. அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155. எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338. புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய். முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.
- https://youtu.be/CPeN7GhTpz4
- https://www.thegreenage.co.uk/
cos/nuclear-power-in-france/ - https://youtu.be/4YgmCu7dfS4
- https://www.dw.com/en/france-
sticking-with-nuclear-power/ av-38397323 - https://www.businessinsider.
com/countries-generating-the- most-nuclear-energy-2014-3 - https://www.youtube.com/watch?
v=TZV2HRKNvao - https://www.youtube.com/watch?
v=HMrQJoN-Ks4 - https://www.youtube.com/watch?
v=kr4mFLws3BM - https://www.youtube.com/watch?
v=YfulqRdDbsg - https://www.youtube.com/watch?
v=Hn-P3qnlB10
++++++++++++++++++++++++
பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும். அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி. எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.
BBC News (June 23, 2011)


ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங் களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%). அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு. பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்திலும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும். ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.
BBC News (May 30, 2011)
பிரான்ஸ் நாட்டு அணுமின்சக்தி இயக்கத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்.
2018 நவம்பர் அறிப்பின்படிக் கடந்த 50 ஆண்டுகளாக
- பிரான்ஸ் தேசம் தற்போது தேவையான மின்சக்தி உற்பத்தியில் 75% அணுசக்தி மூலமாக பாதுகாப்பு முறையில் வெற்றிகரமாகப் பெற்று வருகிறது. 2035 ஆண்டுக்குள் அது 50% ஆகக் குறைக்கப்படும். அதாவது பிரான்ஸில் 17 பழைய அணுமின்சக்தி நிலையங்கள் 2035 ஆண்டுக்குள் நிறுத்தப் படும்.
- உலகத்திலே பேரளவு மின்சக்தி ஏற்றுமதி தொடர்ந்து செய்யும் நாடுகளில் பிரான்ஸ் முன்னணியில் நிற்கிறது. காரணம் மலிவான நிதியில் மின்சக்தி உற்பத்தியை பிரான்ஸ் செய்ய முடிகிறது. அதலால் ஆண்டுக்கு மூன்று பில்லியன் ஈரோ [ 3.4 பில்லியன் டாலர் : ] பிரான்சுக்கு வருமானம் வருகிறது.
- கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ் அணுவியல் துறை நுணுக்க சாதனங்கள் விருத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அணுவியல் எரிக்கரு உற்பத்தி ஏற்றுமதியில் செல்வாக்கு அடைந்துள்ளது.
- அத்துடன் சுமார் 17% பங்கு மின்சக்தி அணுவியல் எரிக்கரு மீள் சுழற்சியில் [Recycled Nuclear Fuel] கிடைக்கிறது.
+++++++++++++
French nuclear power reactors
பிரான்ஸ் எரிசக்தி உற்பத்தி மூல எருக்கள் [Energy Sources]
2016 ஆண்டில் பிரான்சின் மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 556 TWh [ terra watt hours [Gross].
- அதில் அணுமின்சக்தியின் பங்கு : 72% [403 TWh].
- நீரழுத்த மின்னாற்றல் : 12% [65 TWh],
- இயல்வாயு + நிலக்கரி வெப்ப மின்சக்தி 8% [45 TWh];
- சூரியக்கதிர் + காற்றாற்றல் : 5% [ 31 TWh ]
- அதாவது பிரான்ஸ் மொத்தத் தேவை மின்சக்தி : 442 TWh [6,600 KWh/cappit] : கி.வாட் ஹவர் / காப்பிட்டா.
- 2013 இல் வீட்டு மின்சார விலை அளவு : 8 சென்ட்/கிலோவாட் ஹவர். [cents/Kwh]
French nuclear power reactors
Class Reactor MWe net, each Commercial operation 900 MWE BLAYAIS 1-4 91012/81, 2/83, 11/83, 10/83BUGEY 2-3 9103/79, 3/79BUGEY 4-5 8807/79-1/80CHINON B 1-4 9052/84, 8/84, 3/87, 4/88CRUAS 1-4 9154/84, 4/85, 9/84, 2/85DAMPIERRE 1-4 8909/80, 2/81, 5/81, 11/81FESSENHEIM 1-2 88012/77, 3/78GRAVELINES B 1-4 91011/80, 12/80, 6/81, 10/81GRAVELINES C 5-6 9101/85, 10/85SAINT-LAURENT B 1-2 9158/83, 8/83TRICASTIN 1-4 91512/80, 12/80, 5/81, 11/811300 MWE BELLEVILLE 1 & 2 13106/88, 1/89CATTENOM 1-4 13004/87, 2/88, 2/91, 1/92FLAMANVILLE 1-2 133012/86, 3/87GOLFECH 1-2 13102/91, 3/94NOGENT S/SEINE 1-2 13102/88, 5/89PALUEL 1-4 133012/85, 12/85, 2/86, 6/86PENLY 1-2 133012/90, 11/92SAINT-ALBAN 1-2 13355/86, 3/87N4 – 1450 MWE CHOOZ B 1-2 150012/96, 1999CIVAUX 1-2 1495
1999, 2000Total (58) 63,130Differences in net power among almost identical reactors is usually due to differences in cold sources for cooling
“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை. புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை. இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”
பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)
“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து. அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]
ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.
ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.
நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமை யாக எழுதப்பட்டுள்ளன. அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம். எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக் குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன. அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன. செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.
லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)
“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார். முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து. எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.
விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)
இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும் இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும். அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும். சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும். அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும். தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும். திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம். அல்லது புறக்கணிக்கப் படலாம்.
அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்
21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது. அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப்படும். புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :
புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது. அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.
முடிவுரை: பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.
(தொடரும்)
***************
தகவல்:
1. Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan (March 11, 2011)
2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]
3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)
4. Nuclear {Power in Japan (March 30, 2011)
5. Russia & India Report – Lessons of Fukushima – Expert Opinions. (March 28, 2011)
6 Macleans Magazine – Japan Fearing the Fallout (March 28, 2011)
7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension (May 12, 2010)
8. Fukushima & Chernobyl Compared (April 11, 2011)
9. World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)
10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)
11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)
12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)
13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)
14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)
15 Wikipedea Report : http://en.wikipedia.org/
wiki/Paks_Nuclear_Power_Plant( Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011) 16. Wikipedea Report : List of Civilian Nuclear Accidents (June 4, 2011)
17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)
18. BBC News : Europe, French Nuclear Policy (May 31, 2011)
19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)
20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)
21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)
22 Wikipedea http://en.wikipedia.
org/wiki/List_of_nuclear_ reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011) 23 http://www.world-nuclear.
org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011) 24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)
25. BBC News : New UK Nuclear Plant Sites Named (June 23, 2011)
27. https://www.theguardian.
com/environment/2018/jun/03/ was-fallout-from-fukushima- exaggerated 28. https://www.iaea.org/
newscenter/focus/fukushima/ status-update [March 14, 2019] 29. https://www.fairewinds.
org/fukushima-latest-updates [January 18, 2019] 30. http://www.world-nuclear.
org/information-library/ country-profiles/countries-a- f/france.aspx [November 2018] 31http://www.
nuclearpowerdaily.com/reports/ Glowing_results_for_nuclear_ power_at_Frances_EDF_999.html [February 15, 2019] 32. https://en.wikipedia.org/
wiki/Nuclear_power_in_France [March 10, 2019] 33. http://www.cornell.edu/
video/five-years-after- fukushima-lessons-learned- nuclear-accidents 34. https://www.japantimes.
co.jp/news/2018/03/29/ national/seven-years- radioactive-water-fukushima- plant-still-flowing-ocean- study-finds/#.XJaYFR-JK70 [ February 21, 2018] 35. https://www.statista.com/
statistics/268154/number-of- planned-nuclear-reactors-in- various-countries/ 36. https://www.statista.com/
topics/1087/nuclear-power/ 37. https://www.statista.com/
statistics/238610/projected- world-electricity-generation- by-energy-source/ 38. https://www.iaea.org/
newscenter/news/iaea-releases- country-nuclear-power- profiles-2017 39. https://world-nuclear.org/
getmedia/b392d1cd-f7d2-4d54- 9355-9a65f71a3419/performance- report.pdf.aspx [WANO 2018 REPORT] 40. http://www.world-nuclear-
news.org/RS-WANO-reports-on- post-Fukushima-improvements- 27061803.html [June 27, 2018] 41. https://www.thinkingpower.
ca/PDFs/NuclearPower/NP_3_2_ Crawford.pdf [WANO – WORLD NUCLEAR POWER WATCH DOG] 42. https://www.euronuclear.
org/info/encyclopedia/n/ nuclear-power-plant-world- wide.htm [March 24, 2019] 45. https://en.wikipedia.org/wiki/
Onagawa_Nuclear_Power_Plant [October 12, 2019] 46. http://www.asahi.com/ajw/
articles/AJ201911290036.html [November 29, 2019] ************************
-

(Peer Reviewed) சித்தர் சிவவாக்கியர் ஓர் சமூகச் சீர்திருத்தவாதி
முனைவர் சொ. அருணன்முனைவர் பட்ட மேலாய்வாளர்,தமிழ்ப் பண்பாட்டு மையம்,அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3முன்னுரை
இந்தியத் திருநாட்டின் பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் முழுமுதற் காரணமாக விளங்குவது தமிழ் மரபு. தத்துவ, ஆன்மீக, சமுதாயக் கொடைகளை அது நிறையவே இந்தியாவுக்கும் உலகுக்கும் வழங்கியிருக்கிறது. அதனால்தான் பாரதியார்,
எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும்[1]
எனத் தமிழ்மொழி(வழி)யில் கூறி அறிமுகப்படுத்தினார்.
பாரதியார் குறிப்பிடும் அமரநிலை என்பது சாவாக்கலையாகிய சித்த குணமேயாகும். சித்தர்கள் தமிழ்மரபு வேர்களில் கிளைத்த விழுதுகளாக விளங்குபவர்கள். இந்தச் சித்தநிலை யாவர்க்கும் கிடைக்க வேண்டியது என்பதே சித்தர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அவர்கள் சித்தநெறியைப் பாமரனுக்கும் புரியும்படி எடுத்துரைத்து வழிகாட்டினார்கள். அவர்களுள் சித்தர் சிவவாக்கியர் மிக எளிமையாகவும், மக்களோடு மக்களாகக் கலந்தும் இந்தநெறியைப் போதித்து வந்தார். அவரைச் சமூகச் சீர்திருத்தவாதியாக இக்கட்டுரை அறிமுகப்படுத்துகிறது.
யார் சித்தர்கள்?
சித்தர் என்ற சொல்லுக்கான பொருளை உணர்த்தும் பிறசொற்கள் சங்ககால இலக்கியங்களில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்திலும்[2], திருக்குறளிலும்[3] பயின்று வரும் நிறைமொழி மாந்தர் என்ற தொடர், சித்தர்களையே குறிப்பிடுகிறது.
நிறைமொழி மாந்தர் என்னும் தொல்காப்பியத் தொடருக்கு உரை கூறும் பேராசிரியர், சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையவர்[4] என்கிறார்.
புறநானூற்றுப் பாடலில் பெறப்படும் திறவோர் காட்சி[5] என்ற தொடர் சித்தர் அனுபவம் எனக் கருதப்படுகிறது. சித்து எனப்படும் இயற்கைகடந்த அற்புதச் செயல்களைப் பற்றிய குறிப்பு, குறுந்தொகைப் பாடல்களில் காணப்படுகிறது. நிறைந்த ஆற்றல்களும் இயற்கை கடந்த மீவியல் செயல்களுமான பூமியைத் தோண்டி உள்ளே, புகுதல், ஆகாயத்தின்கண் ஏறுதல், கடல்மேல் காலால் நடத்தல் ஆகியவற்றைச் சித்தர்களுக்குரிய அற்புதங்களாகக் குறிப்பிடுவர்.
தமிழ்மரபு சித்தர்களைப் பதினெண்மராக அடையாளம் காட்டுகிறது. ஆனால் இந்தப் பதினெண்மரும் தொகுப்பிற்குத் தொகுப்பு வேறுபடுகிறார்கள் எனினும் பதினெண்மர் என்னும் தொகையில் மாறுபாடில்லை. ஆனால் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் கடந்து விடுகிறது. இவ்வகையில் சித்தர்களில் போற்றுதற்குரியவராகவும் சிறப்பிடம் பெறுபவராகவும் விளங்குபவர் சித்தர் சிவவாக்கியர் ஆவார். காரணம் அவர் அற்புதங்கள் செய்வதோடு நின்று விடாமல் மானுடச் சிந்தனைகளை முன்னிறுத்திய சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கியதே எனலாம்.
கருவிலே திருவுடையார்
தோன்ற புகழொடு தோன்றியவராகக் கருவிலே திருவுடையவராக அவதரித்தவர் சித்தர் சிவவாக்கியர். சிவசிவா என்ற ஒலியுடன் நிலத்தில் பிறந்தவர்[6] ஆதலால் சிவவாக்கியர் எனப் பெயர் பெற்றார். திருவள்ளுவர் எழுதிய நூலை வள்ளுவம் என வழங்குதல் போலவே சிவவாக்கியர் இயற்றிய பாடல்களைச் சிவவாக்கியம் என்றே வழங்குகின்றனர்.
சிவாயம் என்ற சொல்லை மிகுதியாகப் பயன்படுத்திச் சிவக் கொள்கையும், சித்தநெறியும் பூண்டு நிறைந்தவர் சிவவாக்கியர். ஆனபோதும் பரசிவ வெள்ளத்திலேயே மூழ்கிக் களித்திருந்தாலும் சமூகத்தில் நிலைத்திருந்த மடமைகளைக் கண்டு சாடும் சீர்திருத்தவாதியாகவே சிவவாக்கியர் விளங்கினார்.
பிற்காலச் சமூகச் சீர்திருத்தவாதிகள் மேற்கொண்ட பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்கவழக்கங்கள் சாடல் ஆகியவற்றுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் சித்தர் சிவவாக்கியரேயாவார்.
தீண்டாமைக்கு எதிர்க்குரல்
சமய ஒழுக்கங்களின் மீது படிந்த கறையே தீண்டாமை ஆயிற்று. ஒன்றே குலம் ஒருவனே தேவன்[7] எனத்தோன்றிய சமயக் கோட்பாடுகள் நாளடைவில் அயலார் தலையீடுகளால் தனக்கான தனித்த பக்தர்களைக் கொண்ட சங்கங்களாக மாறத் தொடங்கின. தொடர்ந்து அவை, சாத்திரம் சம்பிரதாயம் என்னும் பெயர்களில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டன. தமிழியத்திற்கும் இந்தியத்திற்கும் இது முரணான சமூக வழக்கு என்பதை,
முன்னேற்றம் அடைந்த வகுப்பார் சில உரிமைகளைத் தமக்கு மட்டுமே உரியதாக வைத்துக் கொண்டனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற கற்பனையில் இறுமாப்புக் கொண்டனர். தகுதியேதுமின்றிப் பிறப்பால் தங்களை உயர்ந்தோர் எனக் கூறிக்கொண்டோர்களின் அறியாமையும் தன்னலப்போக்கும் இறுமாப்பும் சமூக வாழ்வைக் குன்றச் செய்து விட்டன[8] என்கிறார் விவேகானந்தர்.
இதை முன்பே கடுமையாகச் சாடியவர் சித்தர் சிவவாக்கியர் ஆவார். சிவவாக்கியர் மேட்டிமையோரின் தனித்துவமான அடையாளங்கள் சிலவற்றைக் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கியவர். கோவில் வழிபாடு, குடுமி வைத்தல், பூணூல் அணிதல், நீராடல், எச்சில் குறித்த கட்டுப்பாடுகள், புலால் உண்ணாமை, வேதம் ஓதுதல், தீட்டுக் கருத்தியல் ஆகியன தமிழக மேட்டிமையோரின் பண்பாட்டு அடையாளங்களாகக் காட்சி அளிக்கின்றன. இப்பண்பாட்டு அடையாளங்கள் குறித்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிவவாக்கியர் எதிர்க்குரல் எழுப்பியுள்ளார்.[9]
ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
பேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகாள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே[10]
எனச் சிவவாக்கியர் சாதிமுறைகளைச் சாடுவதோடு, சடங்குகளையும் வெறுத்தொதுக்குகிறார். வேதத்தை விலக்குவதோடு மந்திரங்களை மறுத்து, ஆகமங்களையும் ஆகாதென்கிறார். மதவாதங்களையும் புறச்சடங்குகளையும் புறக்கணிக்கிறார். போலிச் செயல்களைக் கடுமையாகக் கண்டித்து, மூடநம்பிக்கைகளுக்கெதிராக முழக்கமிடுகிறார். சாதி ஆவதேதடா[11] என்று வினவும் அவர் சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பதெக்காலம்?[12] எனவும் ஆவல் உறுகிறார். அவர்தம் பாடல்கள் முழுவதும் சமயக் கொள்கைகளை விடவும் இறைவழிபாட்டை விடவும் சமூகச் சீர்திருத்தமே மேலோங்கி நிற்கிறது.
பெண்மை போற்றிய பெருந்தகையாளர்
ஏனைய சித்தர்கள் பெண்மையை வெறுத்தொதுக்கும் பண்போடே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், சித்தர் சிவவாக்கியர் பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளராக விளங்கியிருக்கிறார் என்பதை அவரது வரலாற்றின் வழி உணர முடிகிறது.
குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தனது இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட சிவவாக்கியர், அப்பெண்ணுக்குரிய குலத்தொழிலையே தாமும் செய்து ஏழுபருவம் இன்பம் துய்த்து வந்தார்[13] என்கிறது அவர்தம் வரலாறு.
பெண்மையின் பெருமையை உணர்ந்தவர் சித்தர் சிவவாக்கியர். அதனால் பெண்ணின் உடல்சார்ந்த இயற்கைச் செயலாகிய குருதிப்போக்கைச் சுட்டிக்காட்டி அவளைத் தீட்டு என வெறுக்கும் மடமையைச் சிவவாக்கியர் முற்றிலும் உணர்ந்து எதிர்க்கிறார்.
தூமைநீர் என்று சொல்லப்படும் அக்குருதிப் போக்கின் விளைவே மானுடத்தின் தோற்றக்களன். அதனைத் தீட்டு என்று புறந்தள்ளும் வேதியரை நோக்கி,
மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது
நாதமேது வேதமேது நற்குலங்கள் ஏதடா
வேதமோதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா[14]
எனச் சினந்து சீறுகிறார்.
இவ்வாறெல்லாம் தீட்டின் எதிர்ப்பைத் தீவிரமாக எதிர்க்கும் சிவவாக்கியரிடம் வழக்கமாகப் பிற சித்தர்களிடம் எழும் மாதரைப் பழிக்கும் நிலைப்பாடு காணப்படவில்லை.[15]

வழிபாடு – பூசை – மந்திர மறுப்பு
சிவவாக்கியர் தனது இளமைக்காலத்தில் இறைவனைத் தரிசிக்கவேண்டி, தலங்கள்தோறும் சென்று பூவும் புனலும் சொரிந்து வழிபட்டவரே. ஆனால் சித்தநிலைக்கு எய்தியபின்னர் அவற்றை எண்ணி வருந்துகிறார். இதனை,
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க ளெத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க ளெத்தனை
மிண்டனாய்த் திரித்தபோ திறைத்தநீர்க ளெத்தனை
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை[16]
என்ற பாடல்வழி உணர்த்துகிறார். மேலும் பூவும் புனலும் சொரிந்து வழிபடும் தமிழ்மரபுக்கு எதிரான அபிடேகமும், அருச்சனையும் அவருக்கு எரிச்சலையே ஊட்டியதால்,
மாறுபட்ட மணி துலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே[17]
என்றும் சினந்து பாடுகிறார்.
கருங்கல்லை நட்டு வழிபடும் உருவ வழிபாடு தேவைதான் எனினும், அதனை முறையோடு வழிபடாமல் சாத்திரமாகவும், சம்பிரதாயமாகவும் வழிபடும் வழிபாட்டினால் என்ன பயன் கிடைத்து விடும் என்று வினாவுகிறார்.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் ளிருக்கையில்
சுட்டசட்டிச் சட்டுவக் கறிச்சுவை அறியுமோ?[18]
என்று அரும்பொருள் தந்து உருவ வழிபாட்டின் பயனற்ற தன்மையைப் புலப்படுத்துகிறார்.
உருவநிலையிலும் அருவநிலையிலும் அருவுருவ நிலையிலும் வைத்து இறைவனைப் போற்றும் மரபு சமய உலகினில் உண்டு. அதேபோது, உருவ வழிபாட்டின் மூலமாக மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணுவதும் ஆன்மீகத்திற்குப் புறம்பான தீங்குகள் புரிவதும் ஆகிய நிலை கண்டு வெதும்புவது சிவவாக்கியரின் இயல்பாக இருப்பதைக் காணலாம்.[19]
நிறைவாக
சித்தர் சிவவாக்கியர் தம் பாடல்கள் முழுவதிலும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளயே முன்னிறுத்திப் பாடியுள்ளார். இதற்காக அவர் எளிதான சொற்களையே கொண்டு மொழியாளுமை செய்திருக்கிறார். இயற்கையான எங்கும் காணக்கூடிய இயற்கைப் பொருள்களிலிருந்து வெளிப்படும் அவர்தம் உவமைகள் சமூகத்தின் புரையோடிக் கிடக்கும் இருளின்மீது அனல் வெள்ளமெனப் பாய்ந்து அதை எரிக்கின்றது.
எழுத்தறிவு இல்லாத பாமர மக்களுக்கும் கூட உயர்ந்த யோகச் செய்திகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களது புழக்கத்திலுள்ள எளிய சொற்களையே தம் பாடல்களில் கையாண்டுள்ளார்.
ஐம்புலனை வென்றவருக்கு அன்னமிடச் சொல்லி, பெண்மையைப் போற்றுகிறார். தீட்டு எனப் பெண்களை விலக்கி வைப்போரைத் திட்டுகிறார். இறைவனை வேண்டித் தவமிருக்கும் தவசிகளுக்கு இல்லறம் தடையன்று என்று நேர்மறைச் சிந்தனையை எழுப்புகிறார். சாதி சமய மறுப்புகளைத் துணிந்து கூறி, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பேதத்தை ஒழித்து, மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டித்து, சமூகச் சீர்திருத்தத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அடிகோலுகிறார்.
யோகத்தால் ஞானமெய்தி எல்லோரும் இன்புற்றிருக்க விழையும் சீர்திருத்தச் சிந்தனையாளராக, சமுதாயச் சிற்பியாக சித்தர் சிவவாக்கியர் திகழ்கிறார் என்பது இக்கட்டுரையின் வழி தெளிவுபடுத்தப் பெறுகிறது.
துணைநூற்பட்டியல்
- இராமசுப்பிரமணியம், வ.த., (உ.ஆ) புறநானூறு மூலமும் தெளிவுரையும், திருமகள் நிலையம், சென்னை, மு.ப. 2000,
- கருணாநிதி ஆ., முனைவர், (தொ.ஆ) சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை, பாவை பதிப்பகம், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை மு.ப. 2007.
- குன்றக்குடி அடிகளார், தவத்திரு, (உ.ஆ) திருக்குறள் உரை, அருள்நெறிப் பதிப்பகம், குன்றக்குடி, மு.ப. 2005
- சிவவாக்கியர், சிவவாக்கியம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, மு.ப. 1904
- திருமூலர், திருமந்திரம், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை பிராட்வே, சென்னை – 600108, மு.ப.2004
- தொல்காப்பியர், தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் புத்தக நிலையம், 31. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 1, மு.ப. 1999,
- பாண்டியன், அ., முனைவர், சித்தர் சிவவாக்கியர், 321, மூன்றாம் முதன்மைச் சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி – 8, மு.ப. 2015
- பாரதியார், பாரதியார் கவிதைகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை பிராட்வே, சென்னை – 600108, மு.ப.2011
- மாணிக்கவாசகம், இரா. நம்நாட்டுச் சித்தர்கள், அன்னை அபிராமி அருள் வெளியீடு, ………., 1978.
- விவேகானந்தர் சுவாமி, , விவேகானந்தர் ஞானதீபம், தொகுதி 8, ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் சென்னை, மு.ப. 2001.
அடிக்குறிப்புகள்
[1] . பாரதியார், பாரதியார் பாடல்கள், பாரதசமுதாயம் பாடல்..
[2]. தொல்காப்பியர், தொல்காப்பியம், பாடல். 1484
[3] . திருவள்ளுவர், திருக்குறள், பாடல். 28
[4] . முனைவர் அ.பாண்டியன், சித்தர் சிவவாக்கியர், ப.34
[5] .புறநானூறு 192 8-11
[6]. மாணிக்கவாசகம், இரா. நம்நாட்டுச் சித்தர்கள், ப.173
[7] திருமூலர், திருமந்திரம், பா.300
[8] .சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர் ஞானதீபம் – 8, ப.400
[9] .முனைவர் ஆ.கருணாநிதி, (தொ.ஆ) சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை, பக்.149-150
[10] .சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.112
[11] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.47
[12] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.126
[13]. அ.பாண்டியன், முனைவர், சித்தர் சிவவாக்கியர், பக்.46-47.
[14] சிவவாக்கியர், சிவவாக்கியம், பாடல்36.
[15] அ.பாண்டியன், முனைவர், சித்தர் சிவவாக்கியர், ப. 211.
[16] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.29
[17] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.34
[18] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.520
[19] அ.பாண்டியன், சித்தர் சிவவாக்கியர், ப.205
—————————————————————————————————-
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
தமிழில் சித்தர் மரபு செழுமையான வளர்ச்சியைக் கொண்டு திகழ்கின்றது. பதினெண் சித்தர்கள் என்ற வரையறை ஆய்வாளர்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் பதினெண் என்ற பட்டியல் மாறுபாடு உண்டு. எனினும் சித்தர்களில் சிவவாக்கியருக்கு என்று தனித்த இடம் உண்டு. சிவவாக்கியரின் சிந்தனைகள் பிற சித்தர்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு அமைகின்றன என்பதைக் கட்டுரை விளக்க முற்படுகின்றது. குறிப்பாக மக்களிடையே மண்டிக்கிடந்த பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு எதிரான கலகக் குரலை முன்வைத்ததில் சிவவாக்கியர் எந்தகைய நிலையில் செயல்பட்டுள்ளார் என்பதைக் கட்டுரையாளர் சான்றுகளோடு விளக்கியிருக்கின்றார்.
—————————————————————————————————-
-

வேண்டல்!
ஏறன் சிவாகாலத்தால் அழியாத பொன்னும் வேண்டேன்!கவலைகளே அற்றதொரு நிலையும் வேண்டேன்!சோலைக்கு நடுவேநல் மனையும் வேண்டேன்!துள்ளியங்கு வந்துதொடும் தென்றல் வேண்டேன்!ஆல்போல பல்லாண்டு வாழ்தல் வேண்டேன்!அறிவுலகில் மேதையென புகழும் வேண்டேன்!ஞாலத்தை உயர்த்துகின்ற நற்சொல் ஒன்றைநற்றமிழில் நான்படைக்க வேண்டு மம்மா!கனிச்சாற்றை முப்பொழுதும் சுவைத்தல் வேண்டேன்!கண்ணசைவில் நினைத்ததனை முடித்தல் வேண்டேன்!பனிமலையைக் காலடியில் பணித்தல் வேண்டேன்!படைகொண்டு வெற்றிகளைக் குவித்தல் வேண்டேன்!இனிமையான அழகுடைய பெண்ணி னோடுஇன்புற்றுக் கழிக்கின்ற பொழுதும் வேண்டேன்!நனிசிறந்த புதுக்கருத்தைக் கொண்டு நல்லதமிழ்படைக்கும் நெஞ்செனக்கு வேண்டு மம்மா! -

நெல்லைத் தமிழில் திருக்குறள்- 81
நாங்குநேரி வாசஸ்ரீ
81. பழைமை
குறள் 801:
பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்புபழைமை ங்கது என்னன்னா ரொம்ப நாள் பழகின சேக்காளி உரிமல தப்பா என்னமும் செஞ்சாலும் அதப் பெரிசாக்காம விடுததுதான்.
குறள் 802:
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்சேக்காளிங்க உரிமையாச் செய்யுதத நட்புக்கு உறுப்புனு சொல்லுதோம். அந்த உரிமைய நெனச்சி சந்தோசப்படுதது பெரியமனுசங்களுக்கு கடம ஆவும்.
குறள் 803:
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடைபிடிக்கலன்னாலும் பழைய சேக்காளிங்க செஞ்சத ஒத்துக்கிட்டு தானே செஞ்சது கணக்கா காட்டிக்கிடலேன்னா அம்புட்டு நாள் பழகினதுல என்ன பிரயோசனம்?
குறள் 804:
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்தம்மேல இருக்க உரிமையில சேக்காளி கேக்காமலேயே ஒரு காரியத்த செஞ்சுபோட்டாலும் ஒத்துக்கிட்டு நடப்பாங்க புத்தியுள்ளவுக.
குறள் 805:
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்நாம வெசனப்படுததுமாரி வேலய சேக்காளி செஞ்சுபோட்டாம்னா அதுக்கு அறியாமை மட்டுந்தான் காரணமா. உரிமையுந்தான்னு நெனச்சிக்கிடணும்.
குறள் 806:
எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்புஎல்லையக் கடக்காம வரமொறையோட பழகுதவங்க, தன்னோட பழைய சேக்காளி கெடுதியச் செஞ்சாலும் அதுக்காவ ஒறவ அத்து விடமாட்டாக.
குறள் 807:
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்தன்னோட சேக்காளி அழிஞ்சுபோவுதது கணக்கா கெடுதலச் செஞ்சாலும் ரொம்பகாலம் பழகினவுக அவன் மேல இருக்க நேசத்த விட மாட்டாக.
குறள் 808:
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்சேக்காளி உரிமையா தப்பு செஞ்சத பொறத்தியார் எடுத்துச்சொல்லியும் கேக்காத நல்லவனுக்கு அவுக கூட சேக்க வச்சிருந்த நாளெல்லாம் வீணான நாள் ஆவும்.
குறள் 809:
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகுபலகாலமா பழகின சேக்காளி என்னமாரி நடந்துக்கிட்டாலும் சேக்கைய கைவிடாம இருக்கவர ஒலகம் போற்றும்.
குறள் 810:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்பழைய சேக்காளிக தப்பே செஞ்சாலும் சண்ட போடாம சேக்கயா இருக்கவன பகையாளியும் விரும்புவான்.
(அடுத்தாப்லையும் வரும்…
-
குறளின் கதிர்களாய்…(277)
செண்பக ஜெகதீசன்
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணுங் கொளல்.
– திருக்குறள் -986 (சான்றாண்மை)புதுக் கவிதையில்…
சால்பாம் பொன்னின்
தரமறிய
உரசிப் பார்க்கும் உரைகல்,
தம்மிலும் தாழ்ந்தோரிடத்தும்
தமது
தோல்வியை ஒப்புக்கொள்ளலே…!குறும்பாவில்…
சான்றாண்மையை மதிப்பிடும் உரைகல்,
தம்மைவிடத் தாழ்ந்தோரிடத்திலும் தமது
தோல்வியை ஒத்துக்கொள்வதுதான்…!மரபுக் கவிதையில்…
பொன்னின் தரமதைப் பார்த்திடவே
போட்டே உரசிடும் உரைகல்போல்
நன்றெனச் சால்பை மதிப்பிடவே
நல்லதாய் உரைகல் ஒன்றுண்டு,
தன்னைப் போலே யில்லாமல்
தனக்கும் கீழாய் உள்ளவர்கள்
தன்னையும் மதித்தே அவர்களிடம்
தனது தோல்வியின் ஒப்புதலே…!லிமரைக்கூ..
உரைகல் தரங்காட்டும் பொன்னை,
கீழ்நிலையுள்ளோரிடம் தோல்வியை ஒத்திடும் பண்பு
உரைகல்லாய் மதிப்பிடும் சால்பது தன்னை…!கிராமிய பாணியில்…
தங்கத்தோட தரம்பாக்க
அத
ஒரசிப் பாக்க
ஒரகல்லு உண்டு..
அதுபோல
மனுசனுலயும்
நல்லகொணமுள்ள
சான்றோனான்னு பாக்க
ஒரகல்லு ஒண்ணுண்டு..
அதுதான்,
தன்னவிடவும் தாழ்ந்தவங்கிட்டயும்
தனக்க தோல்விய
ஒப்புக்கொள்ளுற கொணந்தான்…! -

குழந்தைகள் உலகம்!
ஏறன் சிவா
எழுந்து எழுந்து குதியுங்கள்! — உங்கள்
இதழில் சிரிப்பைப் பதியுங்கள்!
விழுந்தும் எழுந்தும் ஓடுங்கள்! — நாட்டின்
வீதி யெங்கும் ஆடுங்கள்!புழுதி மண்ணில் நீந்துங்கள்! — நாற்
பொழுதும் குறும்பை ஏந்துங்கள்!
அழுது அழுது புரளுங்கள்! — ஆட்டம்
ஆடிப் பாடத் திரளுங்கள்!நோயைக் கண்டால் சிரியுங்கள்! — வந்தால்
நொடியில் அதனை முறியுங்கள்!
தாயின் மொழியைப் பயிலுங்கள்! — மொழித்
தாயின் மடியில் துயிலுங்கள்!நிலவில் சென்று உறங்குங்கள்! — முழு
நிலவின் ஒளியில் கிறங்குங்கள்!
மலரைப் போல விழியுங்கள்! — நாளும்
மகிழ்ச்சி மணத்தைப் பொழியுங்கள்!இரவில் கூட மின்னுங்கள்! — வீட்டில்
இன்பத் தொல்லை பண்ணுங்கள்!
மிரட்டும் அன்பர் உடன்வந்தால் — சற்றே
மிரண்ட தைப்போல் நடியுங்கள்!வீணாய்ப் பிறந்தோம் என்றெண்ணி — விதியில்
விழுந்த மனிதர் நிலைகண்டு;
காண்பீர்! இதுவெம் உலகமென — அவர்முன்
கையைக் கொட்டிச் சிரியுங்கள்! -

நெல்லைத் தமிழில் திருக்குறள்- 80
நாங்குநேரி வாசஸ்ரீ
80. நட்பாராய்தல்
குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்குஒருத்தரப் பத்தி சரியா தெரிஞ்சிக்கிடாம சேக்காளியாப் பழகினோம்னா பொறவு விட்டுப்போட்டு போக ஏலாத அளவு சங்கடத்த உண்டாக்கிப் போடும்.
குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்மறுபடி மறுபடி சோதிச்சுப் பாக்காம பழகுத சேக்க(நட்பு) சாவுத அளவு தொயரத்த உண்டாக்கிப் போடும்.
குறள் 793:
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்புஒருத்தனோட கொணம், பொறந்த குடி, செஞ்ச தப்பு, சாதி சனத்தோட தன்ம இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட பொறவு சேக்காளியா இருக்கணும்.
குறள் 794:
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்புஒசந்த குடியில பொறந்து பொல்லாப்புக்கு அஞ்சுதவன ஏதாச்சும் விலையாக் கொடுத்தாது சேக்காளியா ஆக்கிக்கிடணும்.
குறள் 795:
அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்தப்பு செய்ய நெனயுதப்போ மனசு நோவ அழவுட்டு செஞ்சபொறவு கண்டிச்சும் சொல்லுத ஒலக நடப்ப அறிஞ்சவுகளோட சேக்காளியா இருக்கணும்.
குறள் 796:
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்கெடுதல் வருததுனால ஒரு நன்மயும் உண்டு. அது எவன் நல்ல சேக்காளின்னு காட்டிக் கொடுத்துப் போடுத சாதனமா அமைஞ்சுக்கிடும்.
குறள் 797:
ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்கூறுகெட்டவனோட சேக்கய விட்டுப்போடுதது ஒருத்தனுக்கு லாபத்தக் கொடுக்கும். .
குறள் 798:
உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்புஉற்சாகத்தக் கொறைக்குத எந்தக் காரியத்தயும் நெனச்சிப் பாக்கக் கூடாது. அது கணக்கா சங்கடம் வருதப்போ நழுவி ஓடுத சேக்காளிய கூட வச்சிக்கிடக் கூடாது.
குறள் 799:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்சங்கடப்படுத காலத்துல கைவிட்டுட்டுப் போனவுகளோட நெனப்பு, சாவுத நேரத்துல கூட நெஞ்ச சுட்டுப் பொசுக்கும்.
குறள் 800:
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்புமனசுல மாசு இல்லாதவுகளோட சேக்க வச்சிக்கிடணும். ஒத்துப் போவாதவங்களோட சேக்கய, விலை கொடுத்தாது வெலக்கிப் போடணும்.
(அடுத்தாப்லையும் வரும்…
-

(Peer Reviewed) ஊருணி
முனைவர் சே. கரும்பாயிரம்
இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
தரமணி, சென்னை.———————————————————————————-
ஊருணி
மக்கள் குடிநீருக்காகவும் பாசனத்திற்காகவும் பருவ மழையை நம்பி இருக்கின்றனர். அப்பருவமழை வைகாசி, ஆனி (சூன்) மாதங்கள் முதல் ஆவணி, புரட்டாசி (செப்டம்பர்) மாதங்கள் வரை தென்மேற்கிலிருந்து வீசக்கூடிய காற்றிலும் புரட்டாசி, ஐப்பசி (அக்டோபர்) மாதங்கள் முதல் கார்த்திகை, மார்கழி (டிசம்பர்) மாதங்கள் வரை வடகிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றிலும் கிடைக்கிறது. அம்மழை எல்லா இடங்களிலும் பெய்வதில்லை. ஓர் இடத்தில் அதிகமாகவும் மற்றொரு இடத்தில் குறைவாகவும் பொழிகிறது. சில நேரங்களில் பெய்யாமலும் இருக்கிறது. பருவமழை பொய்த்துப் போகும்போதுதான் பஞ்சம் ஏற்படுகிறது. அத்தகைய பஞ்சத்தைத் தீர்க்க பண்டைத் தமிழர் மழைநீரினை வீணாக்காமல் சேகரிக்கும் முறையினைப் பின்பற்றினர்.
பொழிகின்ற மழைநீர் ஓடைகள் பலவாகப் பிரிந்து ஆற்றில் சேர்கிறது. பெருக்கெடுத்து ஆற்றுநீர் ஓடுமிடங்களில் முன்னோர்கள் அணைகளைக் கட்டித் தடுத்து நிறுத்தினர். அணைகளில் வழிந்த நீரை ஏரி, குளம் முதலான நீர்நிலைகளில் நிரப்பினர். ஏரிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. ஓர் ஏரி நிரம்பிய பின் அதன் உபரிநீர் அடுத்த ஏரிக்குச் சென்றது. இவ்வாறு மழை நீரானது வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தேக்கி வைக்கப்பட்டது. எல்லா நீர்நிலைகளும் நிரம்பிய பின் எஞ்சிய நீரே கடலில் கலந்தது. அத்தகைய மழைநீரைப் பண்டைத் தமிழர் சேமித்த முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.
குளம், ஏரி முதலான நீர்நிலைகளில் அவர்கள் நீர் சேமித்தது போல ஊருணி என்னும் நீர்நிலையிலும் நீரினைச் சேமித்தனர். அந்த நீர்நிலை மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். அந்நீர்நிலையை உலகப் பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள், நீலகேசி, கம்பராமாயணம், திருக்கைவழக்கம், திருக்கோவையார், கல்லாடம், திருக்குற்றாலக் குறவஞ்சி முதலான இலக்கியங்களும் திவாகரம் முதலான நிகண்டுகளும் அகராதிகளும் கூறியுள்ளன. தற்காலத்தில் ஊருணி என்னும் பெயரில் ஊர்ப் பெயர்களும் நீர்நிலைகளும் உள்ளன. அவ்வாறான ஊருணியை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
திருக்குறள்
திருவள்ளுவர் உயிரினங்கள் வாழ்வதற்கு இன்றிமையாத நீரின் தேவையை உணர்ந்து கடவுள் வாழ்த்துக்கு அடுத்தாக வான்சிறப்பு என்னும் அதிகாரத்தைக் குறிப்பிடுகிறார். மழை இயற்கை கொடுத்த கொடைகளுள் சிறந்தாகும். மழையைப் பற்றியும் மழைநீர் சேமிக்கக்கூடிய நீர்நிலை பற்றியும் குறட்பாக்கள் ஆங்காங்கே நேரடியாகவும் குறிப்பாகவும் கூறியுள்ளன. அந்த வகையில் ஒப்புரவு அறிதல் அதிகாரத்தின் ஐந்தாவது குறட்பாவில் உலகம் வாழ வேண்டும் என்று விரும்புகின்ற பேரறிவாளனிடம் (ஒப்புரவறிதல் கொண்டவனிடம்) உள்ள செல்வம் எல்லோருக்கும் பயன்படும் என்று கூறுவதற்கு உவமையாக “ஊருணி நீர்நிறைந் தற்றே” (திருக்குறள்.215) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்குறட்பாவில் ஊருணி என்னும் சொல் ஆளப்பட்டுள்ளதற்குப் பழைய உரையாசிரியர்களான மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிமேலழகர் ஆகியோர் உரை தந்துள்ளனர்.
மணக்குடவர்
மணக்குடவர் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊர் உண்கின்ற கேணி” (திருக்குறள்.215, மணக்குடவர் உரை) என்னும் பொருளில் உரையைக் கூறியுள்ளார். அவர் கூறிய ஊர் உண்கின்ற கேணி என்னும் உரை சங்க இலக்கியத்தில் இரண்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இதனை,
“ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க
பாசி யற்றே” (குறுந்தொகை, 399:1,2)
என்னும் பாடலடிகளில் ஊரார் உண்ணும் கேணியில் (சிறுகுளத்தில்) பாசியானது படர்ந்துள்ளது. அதனை நீக்கி உண்ணுவதற்குரிய நீராக்க முயற்சி செய்வர் என்றும்,
“ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை
நுண்ணூற் கலிங்க முடீஇ” (புறநானூறு, 392:13-15)
என்னும் பாடலடிகளில் பெரிய இலையுடைய பாசி ஊரார் உண்ணும் கேணியில் படர்ந்துள்ளது. அதனின் வேர் போல அணிந்திருந்த ஆடையைக் களைந்துவிட்டு, நேரிய கரையும் நுண்ணிய நூலாலுமான ஆடையை அணிந்து கொண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளன. மேற்கூறியவற்றிலிருந்து ஊருணி என்பது ஊரார் உண்ணக் கூடிய சிறிய அளவுடைய நீர்நிலை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அவற்றில் கேணி என்பது எந்த நீர்நிலையை உணர்த்துகின்றது என்பதை அறிய வேண்டியுள்ளது.
கேணி என்னும் சொல்லிற்கு மணலில் தோண்டிய கேணி (மணற்கேணி) (திருக்குறள், 396:1:3) என்றும் சேறாக உடைய நிலத்தில் தோண்டிய பள்ளம் (சுனை) (அகநானூறு,137:2:2) என்றும் அகலமாகத் தோண்டிய கிணறு (நற்றிணை, 92:5:4 ) என்றும் சிறிய அளவுடைய குளம் (சிறுகுளம்) (பட்டினப்பாலை, 51) என்றும் பொருள் தரப்பட்டுள்ளது. தற்காலத்தில் கேணி என்பது நீரூற்று உள்ள இடத்தில் வட்டவடிவமாகத் தோண்டி அதனைச் சுற்றிக் கல்லை அடுக்கிக் கட்டப்பட்டுக் குடிநீருக்காகவும் பிற தேவைகளுக்காகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதற்குக் கிணறு என்னும் வேறு பெயரையும் குறிப்பிடுகின்றனர். கேணி, கிணறு ஆகிய இரண்டும் ஒன்றல்ல. அவை வெவ்வேறானவை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அது மேலும் ஆய்விற்குரியது. குறிப்பாக இந்தக் கேணி பழம்வீடுகளில் இன்றும் உள்ளதைக் காணமுடியும். ஆதலால் பல்வேறு பெயர்களைக் கொண்ட கேணி என்னும் நீர்நிலை தோன்றிய விதத்தை முதலில் காணவேண்டும்.
பூமியின் மேற்பரப்பில் நீரோடுவது போலப் பூமியின் கீழ்ப்பரப்பில் நீரோட்டங்கள் உண்டு. அவ் விடத்தின் மேற்பரப்பில் இயற்கையாக வெளிவரும் நீரை ஊற்று என்பர். அது இயற்கையாக உருவாகும் நீரூற்றாகும். செயற்கை நீரூற்று என்பது மனித முயற்சியால் உருவாக்கப்படுவதாகும். நீரோடிய மேற்பகுதி வறண்ட நிலையில் இருக்கும். அவ் விடங்களின் கீழ்த் தோண்டினால் நீர் ஊறும். அதில் உள்ள நீரை இறைத்தால் மீண்டும் மீண்டும் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். அதனை, “இறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும்” (திருக்குறள், 1161) என்பார் திருவள்ளுவர். நிலத்தில் தோண்டி உருவாக்கப்பட்ட மணற்கேணி, சுனை, கிணறு, சிறுகுளம் முதலான நீர்நிலைகள் நீரூற்றுகளிலிருந்து பெறப்பட்டவை ஆகும். அதாவது மழை நீரினை நேரடியாகப் பெறாமல் ஊற்றிலிருந்து பெறப்பட்ட நீர்நிலைகள் எனப் புரிந்து கொள்ளலாம். நீரூற்றுகளிலிருந்து பெறப்பட்ட மேற்குறித்த நீர்நிலைகளில் கேணி என உரையாசிரியர் கூறும் பொருள் எது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
“வண்டிமிர் பொய்கையும் வாவியுங் கயமும்
கேணியுங் கிணறு நீணிலைப் படுவும்” (பெருங்கதை, 3:3:5,6)
என்னும் பாடலடிகளில் கேணியை அடுத்துக் கிணறு என்னும் நீர்நிலை வந்துள்ளன. அதிலுள்ள கேணி என்பது சிறுகுளம் என்றும் அது இன்றைய மக்கள் பயன்படுத்தும் குட்டையைக் குறிக்கும் என்றும் உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் குறிப்பிட்டுள்ளார். குட்டையானது குளத்தைவிட சிறியதாகவும் மடுவை விட பெரியதாகவும் இருக்கும். அக்குட்டை வான் மழையை மட்டுமே நம்பியுள்ள நீர்நிலையாகும். மேற்குறித்த சான்றுகளின் முடிவாக உரையாசிரியர் மணக்குடவர் கூறியுள்ள கேணி என்னும் நீர்நிலை இன்றைக்குக் குட்டை (சிறுகுளம்) என்று சொல்வதை அறிந்து கொள்ளமுடிகிறது.
பண்டைக் காலத்திலிருந்து கேணி என்று முடிகின்ற ஊர்ப் பெயர்கள் சிறிய நீர்நிலையுடைய குட்டை என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளதா? என்பதை ஆராய்ச்சி செய்வது அவசியமாகிறது. சான்றாகத் திருவல்லிக்கேணியைக் குறிப்பிடலாம். கேணி என்றால் இன்றைய காலத்தில் மக்கள் வீட்டுப் பயன்பாட்டிற்காக உள்ள கேணியோடு ஒப்பிட்டுவிடக்கூடாது என்பதற்காகக் கூறப்படுகிறது. கேணி, குட்டை ஆகிய இரண்டும் நீர்நிலைகளாக இருந்தாலும் வெவ்வேறானவை ஆகும்.
இன்றைய காலத்தில் நவீன சாதனங்களைக் கொண்டு நீரினைப் பெறுவதால் குட்டையானது பல இடங்களில் சிதிலமடைந்தும் தூர்ந்தும் போயுள்ளதை எளிதாகக் காணலாம். அக்குட்டைகளைத் தூர்வாரினால் மழை நீரினைச் சேகரிக்க முடியும். அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீர் பிரச்சனையும் தீரும்.
பரிதியார்
பரிதியார் ஊருணிக்கு “வானேரி” (திருக்குறள், 215, பரிதியார் உரை) என்று குறிப்பிட்டுள்ளார். வானேரி என்பதை வான் + ஏரி எனப் பிரிக்கலாம். வான் என்பது மழையையும் ஏரி என்பது நீர்நிலையையும் குறிப்பதாகும். அதாவது மழையினால் நேரடியாக நீர் பெறக்கூடிய நீர்நிலை என்பதே இதன் பொருளாகும். பொதுவாக ஏரியில் நீர் சேமித்தல் என்பது பண்டைய காலந்தொட்டே இருந்து வருகிறது. ஏரி என்னும் சொல்லில் இரண்டு இணைந்த ஏரிகள் (பட்டினப்பாலை, 39) இருந்ததையும் பரந்த அளவில் நீரினையுடைய ஏரி (சிலப்பதிகாரம், 13:192) இருந்ததையும் பண்டைய இலக்கியங்கள் சுட்டுகின்றன. முன்னோர்கள் ஏரியை ஏற்படுத்துவதிலும் பராமரித்தலிலும் தனிக் கவனம் செலுத்தினர் என்பதற்கு ஏரி வாரியம் அமைத்திருந்ததைச் சான்றாகக் கூறலாம்.
ஏரியைக் குளம் என்றும் குளத்தை ஏரி என்றும் சொல்வது உண்டு. ஏரி, குளம் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்பதை, “பூசல் வன்கரைக் குளங்களு மேரியும் புகுவ” (பெரிய புராணம், 1027:4) என்னும் பாடலடி குறிப்பிட்டுள்ளது. அதாவது குளங்களிலும் ஏரியிலும் ஒரே நேரத்தில் நீர் புகுதலால் இரண்டு நீர்நிலைகளும் வேறானவை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அதோடு மட்டுமல்லாது அவ் வேரி ஆற்றுநீரைப் பெறக்கூடியதாகவும் அது பெரும்பாலும் பாசனத்திற்குப் பயன்படுபவதாகவும் இருந்தது. ஏரிகள் என்று பொதுவாகக் கூறினாலும் ஊருணிக்கு வானேரி என்று பரிதியார் உரை கூறியதை நோக்க வேண்டியுள்ளது.
வானேரி என்பது ஆற்றுநீர் இல்லாத இடங்களில் மழைநீரைச் சேமிப்பதற்காக உருவாக்கப்படுவதாகும். அதாவது மழைப் பொழிந்தவுடன் நீரானது பள்ளத்தை நோக்கி ஓடும். அந்நீர் பள்ளமான பகுதியில் தேங்கும். முன்னோர்கள் அவ் விடத்தில் கரை அமைத்து நீரைத் தேக்கி, மழையினால் அக்கரை உடையாதவாறு காவல் காத்தனர். அவ் வேரிகள் மழைநீரினை மட்டுமே நம்பி இருப்பதால் வானம் பார்த்த ஏரி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பண்டைக் காலத்தில் பெரும்பாலும் அவ்வேரிகளை ஆறு இல்லாத ஊர்களில் உருவாக்கி இருக்க வேண்டும். அது மக்களுடைய குடிநீரின் தேவையை முதன்மையாய்த் தீர்த்திருக்கும். ஆற்றுநீர் ஓடாத இடங்களில் மழைநீரினைச் சேமித்து வைக்கும் பழக்கமுடையவர்கள் முன்னோர்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. எனவே வானேரியைப் பெரிய ஏரி என்று கூறுவாறுமுளர். அவ்வாறு கூறினாலும் அது மழைப் பொழிவை மட்டும் நம்பி இருப்பதால் பெரிய ஏரியாகவோ அல்லது ஏரியைவிடச் சிறியதாக உடைய குளமாகவோ இருக்க வாய்ப்பில்லை. அது ஒவ்வொரு ஊரிலும் மழை பெய்வதற்கு ஏற்றாற் போல அமைந்த ஒரு நீர்நிலை எனப் பொதுவாகக் குறிப்பிடலாம். அதனால்தான் ஊருணிக்கு வானேரி என்று பொருள் பொதிந்த உரையைப் பரிதியார் கூறியுள்ளதை நோக்க முடிகிறது.
காளிங்கர்
காலிங்கரைக் காளிங்கர் என்று அழைக்கும் மரபுமுண்டு. அவருடைய பெயரைத் தண்டபாணி தேசிகர் எழுதிய திருக்குறள் உரைக் களஞ்சியத்தில் காளிங்கர் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆதலால் இக்கட்டுரையில் அவருடைய நூல் எடுத்தாளப்படுவதால் காளிங்கர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. காளிங்கர் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊருணியாகிய பேரேரியும் பெருங்குளமும்” (திருக்குறள், 215, காளிங்கர் உரை) என்று குறிப்பிடுவார். அவர் கூறும் பேரேரியும் பெருங்குளத்தையும் இரண்டாகப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.
பண்டைய காலத்தில் கோட்டகம் (சீவகசிந்தாமணி, 41:3:4) என்னும் பெயரில் ஆழமான நீர்நிலை இருந்துள்ளது. அது பேரேரி என்னும் நீர்நிலையை ஒத்ததாக இருந்திருக்க வேண்டும். பொதுவாக ஏரியைச் சிற்றேரி, பேரேரி என்பர். சிற்றேரி என்பது தற்காலத்தில் தாங்கல் என்னும் பெயரில் வடமாவட்டங்களில் வழங்கப்படுவதைக் காணமுடிகிறது. பேரேரி என்பது பெரிய ஏரியைக் குறிக்கும். அப் பேரேரிகளை அரசர்கள் உருவாக்கியுள்ளனர். சுந்தரசோழப் பேரேரி, குந்தவைப் பேரேரி முதலான பேரேரிகளைச் சான்றாகக் கூறலாம். அரசர்கள் போலவே பேரேரிகளை அரசர்களுக்கு அமைச்சர்களாக இருந்தவர்களும் ஊர் தனவந்தர்களும் உருவாக்கியுள்ளனர். அது வற்றாத கடல் போலக் காட்சி அளித்ததால் சமுத்திரம், கடல், வாரிதி என்னும் பெயர்களையும் பெற்றுள்ளது. அதற்கு அம்பாசமுத்திரம் என்னும் ஊர்ப் பெயரில் நீர்நிலை இருந்துள்ளதைச் சான்றாகக் கூறலாம்.
பேரேரியைப் பேரி என்று சொல்வதும் உண்டு. பேரி என்பது பேரேரியிலிருந்து மருவி வந்த சொல்லாகும். பேரி என்னும் சொல்லில், “சிவலப்பேரி (சீவலப்பேரி), வீரபாண்டியப்பேரி” (முக்கூடற்பள்ளு, 92) ஆகிய பெயர் கொண்ட ஏரிகள் சுட்டப்பட்டுள்ளன. அவ் விரண்டு ஏரிகளும் பேரேரியைக் குறிப்பதாகும். பொதுவாகப் பேரேரிகள் ஆற்றுநீர் இல்லாத காலங்களில் பாசனத்திற்கும் மக்களுடைய தேவைகளுக்கும் உதவியுள்ளன. அது பெரிய கொள்ளளவைக் கொண்ட நீர்நிலையாதலால் ஊரின் புறத்தேதான் அமைந்திருக்கும். முன்னோர்கள் ஊரின் புறத்தே அத்தகைய பேரேரியை அமைத்தது மழைக் காலங்களில் பெருமளவில் சேதத்தைத் தவிர்ப்பதற்காகவே என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
பேரேரியைப் போலவே பெருங்குளமும் பெரிய நீர்நிலைக்கு வழங்கக்கூடிய பெயராகும். பொதுவாகக் குளத்தைச் சிறுகுளம், பெருங்குளம் (பெரிய குளம்) என்று குறிப்பிடுவர். சிறுகுளத்தைப் பற்றி முன்பே மணக்குடவர் உரையில் கூறியதைக் காண்க. பெருங்குளத்தைப் பண்டைய தமிழர் பயன்படுத்தியுள்ளனர். இதனை,
“தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதிரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்
பெருங்குளங் காவலன் போல” (அகநானூறு.252:11-13)
என்னும் பாடலடிகளில் மழை பெய்ததனால் அலைகளையுடைய பெருங்குளத்தின் கரையானது தழும்பியது. அதனால் அக்கரையைக் காவல் செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளன.
பெரிய குளம் என்பதால் கிட்டத்தட்ட ஏரி அளவிற்கு இருந்திருக்க வேண்டும். அப்பெருங்குளங்களுக்குப் பேரேரியைப் போலவே ஆற்றுநீர் பெறப்பட்டதும் அதன் கரை நீர் உடைந்து செல்லாத அளவிற்கு வலிமையாக இருந்ததும் பாசனத்திற்காக மடை திறந்து வாய்க்காலில் விடப்பட்டதும் கீழ்வரும் பாடலில் குறிப்பிடப்படுகிறது.
“அனைய வாகிய நதிபரந் தகன்பணை மருங்கின்
கனைநெ டும்புன னிறைந்துதிண் கரைப்பெருங்
புனையி ருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம்போய்
வினைஞ ரார்ப்பொலி யெடுப்பநீர் வழங்குவ வியன்கால்” (பெரிய புராணம், 1105)
என்பதன் மூலம் அறியலாம். மேற்கூறியவற்றிலிருந்து வற்றாத நீரினைக் கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கும் பாசனத்திற்கும் பேரேரி, பெருங்குளம் ஆகிய நீர்நிலைகள் பயன்பட்டதால் ஊருணி என்னும் சொல்லுக்குக் காளிங்கர் உரையெழுதியுள்ளதை நோக்கமுடிகிறது.

பரிமேலழகர்
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். அவர் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊரின் வாழ்வார் தண்ணீ ருண்ணுங் குளம்” (திருக்குறள், 215, பரிமேலழகர் உரை) என்று குறிப்பிட்டுள்ளார். உரையில் அவர் குறிப்பிடப்படுள்ள குளம் என்னும் நீர்நிலை மிகவும் பழைமை வாய்ந்ததாகும். அதாவது குளம் என்னும் நீர்நிலை நாகரிகக் கால மக்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக உலக நாகரிகங்கள் ஆற்றங்கரையில் தோன்றியது என்பர். ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்த இடம் மட்டுமல்ல. அது மக்கள் ஓர் இடத்தில் நிலைத்து வாழ்வதற்குரிய நீரினை முதன்மையாய்த் தந்த இடமுமாகும். அந்த இடத்தில் அவர்கள் குடிநீருக்காகவும் மற்றும் பிற தேவைகளுக்காவும் நீர்நிலைகளை உருவாக்கினர். அவற்றில் முதன்மையாக அமைவது குளமாகும்.
பண்டைய தமிழர் குளங்கள் உருவாக்குவதைத் தமது கடமையாகக் கொண்டிருந்தனர். தூர்ந்து போன குளத்தைத் தோண்டுதலும் (பட்டினப்பாலை, 282, 83), குளம் வெட்டுவதை அறமாகக் கருதிச் செய்தலையும் (சிறுபஞ்சமூலம், 66) பற்றிப் பண்டைய இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் அவர்கள் பயன்படுத்திய குளம் என்னும் நீர்நிலைக்குக் குட்டம் (சிறுபாணாற்றுப்படை, 180), கயம் (பரிபாடல், 7:23), தடம் (பரிபாடல், 6:87), வாவி (சீவகசிந்தாமணி, 1204:1), படுகர் (திவாகரம், 5:61), அகழ் (மலைபடுகடாம், 214), தடாகம் (பரிபாடல், 9:77) பொய்கை (பெருங்கதை, 3:9:12) முதலான வேறு பெயர்கள் வழங்குவதைக் காணமுடிகின்றது. மேற்கூறிய குளம் தொடர்பாக வழங்கும் வேறுபெயர்களை ஆராய்ச்சி செய்வது மேலும் ஆய்வுக்குப் பயனுடையதாக இருக்கும்.
குளமானது குட்டையை விடப் பெரியதாகவும் ஏரியை விட சிறியதாகவும் இருக்கும். அதன் கரை பெரியதாக இருந்ததை “வியன்” என்று அகநானூறு (42:9:2) கூறியுள்ளது. அக்குளம் பெரும்பாலும் ஊர்க்குள்ளே இருந்துள்ளது. அது மழைநீரை வீணாக்காமல் சேமிக்கக் கூடியதாகவும் ஆற்றுநீரைப் பெறக் கூடியதாகவும் (மதுரைக்காஞ்சி, 244-246) இருந்துள்ளதைக் காணமுடிகிறது. சில நேரங்களில் மழை இல்லாமல் அது நீர் வற்றியும் இருந்தது. அதனை “அறுகுளம்” என்று புறநானூறு (142:1:1) குறிப்பிட்டுள்ளது.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் கருத்து. ஊரில் கோயில் இருந்தால் கட்டாயம் குளம் இருக்கும். ஆதலால் தற்காலத்தில் ஊர்தோறும் குளங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. அத்தகைய குளங்கள் பல உண்டு. அவை திருக்குளம், கோயிற்குளம், தெப்பக்குளம், தளிக்குளம், புதுமுகக்குளம், ஊர்க்குளம், முக்குளம், புதுக்குளம் முதலிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அத்தோடு மட்டுமல்லாது குளங்கள் பெயரால் இன்று பல ஊர்கள் அழைக்கப்படுகின்றன. சான்றாகச் சாத்தான் குளத்தைக் கூறலாம். எனவே பரிமேலழகர் ஊருணிக்குக் குளம் என்று குறிப்பிடுவதனால், அதன் தொன்மையும் ஊரின் கண்ணே இருந்தும் மக்களுடைய தேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
நீலகேசி
ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்றான நீலகேசி ஊருணியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. வாய்க்கால் இல்லாத ஊருணிக்கு மழைநீர் எவ்வாறு புகும் என்பதைக் கீழ்வரும் பாடலடிகள் குறிப்பிட்டுள்ளது.
“யூருணி நீர்நிறை வுண்டே யுறுபுனல்
வாரண வாய்க்கால் வரவில்லை யாக்கால் (நீலகேசி, 614:3,4)
என்பதன் மூலம் ஊருணிக்கு வாய்க்கால் வழியாக நீர் வரவேண்டும் என்பதை அறியமுடிகிறது.
கம்பராமாயணம்
கம்பர் இயற்றிய கம்பராமாயணத்தில் ஊருணி என்னும் நீர்நிலையை அதன் பயன் நோக்கில் காட்சிப் படுத்தியுள்ளார். அவர் ஊரார் உண்ணக்கூடிய ஊருணி நிறைதலும், பலருக்கு உதவக்கூடிய மரங்கள் பழுத்தலும், மழைநீர் பெய்தலும், ஆற்றுநீர் பெறுகுதலும், யார் வேண்டாம் என்று கூறுவார் என்று கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.
“ஊருணி நிறையவு முதவு மாடுயர்
பார்நுகர் பழுமரம் பழுத்த தாகவும்
கார்மழை பொழியவுங் கழனி பாய்நதி
வார்புனல் பெருகவும் மறுக்கின் றார்கள்யார்” (கம்பராமாயணம், 1480)
என்பதன் மூலம் ஊருணி நிறைதல் என்பது ஊருணி நீர் நிறைந்தற்று என்னும் குறளைப் போலவே கூறியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும் திருக்குறளுக்கு உரையெழுதிய வ.உ. சிதம்பரனார் இப்பாடலை மேற்கோளாகக் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருக்கை வழக்கம்
கம்பர் கம்பராமாயணம் பாடியது மட்டுமல்லாது சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கைவழக்கம் முதலான சிற்றிலக்கியங்களையும் பாடியுள்ளார். திருக்கை வழக்கத்தில் ஊருணி என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது.
“- சும்மையார்
ஊருணி நீர்போ லுலகத் தவர்க்கெல்லாம்
பேரறிவா லீயும்ப்ர தாபக்கை” (திருக்கைவழக்கம், ப.20)
என்னும் பாடலடிகளில் ஊருணியானது ஊரில் வாழ்வார் அனைவருக்கும் பயன்படுவது போலப் பிறர்க்கு உதவி செய்யும் உள்ளம் கொண்டவன் செல்வம் அனைவரும் உதவும் என்னும் கருத்தைப் பெறமுடிகிறது. இப்பாடலடிகள் மேற்கூறிய ஒப்புரவு அறிதல் என்னும் குறட்பாவின் கருத்திற்கு ஒப்பாக இருக்கிறது.
திருக்கோவையார்
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் வேண்டினார். அவர் அதன்படியே திருக்கோவையாரைப் பாடினார். அந்நூலில் ஊருணி என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.
ஊருணி யுற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கு மூதியமே” (திருக்கோவையார், 400:4)
என்னும் பாடலடியில் தன்னிடம் வந்தவற்குப் பயனைக் கொடுப்பது ஊருணியாகும். அது போலத் தலைவனும் எல்லோர்க்கும் பயன் உடையவனாக இருப்பான் என்பதைக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறித்த பாடலின் மூலம் தன்னிடம் வந்து சேர்ந்த நீரைப் பிறருக்குக் கொடுத்துப் பயன்தருவது ஊருணி என்று கூறுவதை அறியமுடிகிறது.

கல்லாடம்
சங்கக் காலத்துப் புலவர், தொல்காப்பித்துக்கு உரையெழுதியவர், பாட்டியல் நூல் எழுதியவர் எனக் கல்லாடர் பெயரில் பலர் இருந்துள்ளனர். அவற்றுள் கல்லாடத்தை இயற்றிய கல்லாடரும் ஒருவராவார். அந்நூல் “கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே” எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நூலில் ஊருணி என்னும் சொல் இரண்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது.
“பொய்பல புகன்று மெய்யொழித் தின்பம்
விற்றுணுஞ் சேரி விடாதுறை யூர
னூருணி யொத்த பொதுவாய்த் தம்பல
நீயுங் குதட்டினை யாயிற் சேயாய்” (கல்லாடம், 58:15-18)
என்னும் பாடலடிகளில் புதல்வனே! பல பொய்களைச் சொல்லியும் உண்மைகளைக் கைவிட்டும் இன்பத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட பரத்தையர் வாழுமிடத்தில் உன் தந்தை இருப்பது போல, ஊரார்க்குப் பொதுவாகிய ஊருணியை ஒத்த பரத்தையரின் வாய்த் தம்பலத்தை (வெற்றிலை, பாக்கு) நீயும் மென்றாய் என்று தாய் கூறுவதும்,
“பொன்னணி மாடம் பொலிநகர்க் கூட
லாவண விதி யனையவ ரறிவுறி
ணூருணி யன்னநின் மார்பகந் தோய்ந்தவென
னிணைமுலை நன்ன ரிழந்தன வதுபோன்” (கல்லாடம், 77:24-27)
என்னும் பாடலடிகளில் பொன்னால் அணியப் பெற்ற மாடங்களாலே அழகு பெற்ற மதுரை மாநகரின் கடைத்தெருவினை ஒத்த நின்னுடைய (தலைவனுடைய) பரத்தையரை அறிவாராயின், ஊருணியை ஒத்த நின் மார்பினிடத்தே சேர்ந்த எனது இரண்டு மார்பகங்களும் நன்மை இழந்தது போல ஆகிவிடும் என்று தலைவி கூறுவதும் காணமுடிகிறது. மேற்கூறிய இரண்டு பாடலடிகளிலும் ஊருணி என்பது நீர்நிலை குறித்து வழங்கப்படுவதை அறியமுடிகிறது.
திருக்குற்றாலக் குறவஞ்சி
குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்டதாகும். அந்நூலில் “ஊருணிப்பற்று” (திருக்குற்றாலக் குறவஞ்சி, 81) என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஊருணிப்பற்றை ஊருணி + பற்று எனப் பிரிக்கலாம். ஊருணி என்பது நீர்நிலையையும் பற்று என்பது பயிரிடக்கூடிய நிலத்தையும் (வயலையும்) குறிக்கும். பொதுவாகப் பற்று என்னும் சொல்லில் வழங்கக்கூடிய நிலங்கள் அரசர்கள் காலத்தில் மானியமாக விடப்பட்ட நிலங்களைக் குறிப்பதாகும். அதனால் ஊருணி என்னும் நீர்நிலையைப் பராமரிப்பதற்காக விடப்பட்ட நிலத்திற்கு ஊருணிப்பற்று எனக் கூறுவது பொருத்தமாயிற்று. ஊருணிப்பற்றைப் போலவே ஊருணிப் பராமரிப்புக்காக விடப்பட்ட நிலத்திற்கு “ஊருணிப்புறம்” என்று சொல்வதைத் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி (ப.108) குறிப்பிடுகிறது. எனவே நிலங்கள் ஊருணியைப் பராமரிப்பதற்காக விடப்பட்ட செய்தியை அறிந்து கொள்ளமுடிகிறது.
நிகண்டுகள்
நிகண்டின் தோற்றத்தை ஏழாம் நூற்றாண்டு என்பர். முதல் நிகண்டு திவாகரமாகும். திவாகரம் முதலான நிகண்டுகள் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊர் உணும் பொதுநீர்” (திவாகரம், 5:64), “ஊருளோர் உண்நீர்” (பிங்கலம், 4:165), “உவளகம் (குளம்)” (சூடாமணி, 11:236) பொருள்களைத் தந்துள்ளன. சூடாமணி நிகண்டு உவளகம் என்னும் புதிய பொருளைத் தருகிறது. உவளகம் என்பது நீர்நிலையைக் குறிப்பதாகும். மேற்குறித்த நிகண்டுகள் ஊருணி என்னும் சொல்லுக்கு நீரையும் நீர்நிலையும் குறிப்பதை அறிய முடிகிறது.
அகராதிகள்
அகராதிகள் சொற்களின் அரிய பொருளை அறிவதற்குப் பெரிதும் உதவுகின்றன. அத்தகைய அகராதிகள் ஊருணி என்னும் சொல்லிற்கு “ஊராருண்ணுநீர்நிலை” (தமிழ்ப் பேரகராதி, ப.501) எனவும் “(பெரும்பாலும் கிராமப்புறத்தில் குடிநீருக்கான) குளம்” (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.233) எனவும் பொருள் விளக்கங்களைத் தருகின்றன. மேலும் தற்காலத்தில் ஊருணி என்ற பெயரில் நீர்நிலை இருப்பதும் ஊர்கள் இருப்பதும் அறியமுடிகிறது.
இன்றைய நிலை
இலக்கியங்கள், நிகண்டுகள், அகராதிகள் ஆகியவை ஊருணி என்னும் சொல்லிற்கு ஊரார் உண்ணக்கூடிய நீர், குளம், நீர்நிலை ஆகிய பொருள்களை விளக்கமாகத் தருக்கின்றன. இந்தச் சொல்லை ஊர் + உண் + இ எனப் பிரிக்கலாம். ஊர் என்பது ஊரினர் என்றும் உண் என்பது உண்ணப்படும் நீர் என்றும் இ என்பது விகுதியாகவும் உள்ளது. ஊரினர் என்பது இடவாகுபெயராகவும், உண் என்பது உண்ணுவது, குடிப்பது, பருகுவது முதலானவற்றிற்கு வினையாகவும், இ என்பது செயப்படுபொருள் விகுதியாகவும் பொருள்களைத் தந்து ஊருணி எனக் காரணப் பெயராக அமைகிறது. ஊருணியைப் போலவே “ஊருண்ணி” என்னும் சொல்லைத் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதியும் (ப.108) “ஊரணி” என்னும் சொல்லைத் தமிழ்ப் பேரகராதியும் (ப.500) குறிப்பிட்டுள்ளன. ஊருண்ணி என்னும் சொல்லை ஊர் + உண்ணி எனப் பிரித்து ஊருண்ணியானது தொகுத்தல் விகாரமாகி ஊருணி என ஆயிற்று. ஊரணி என்னும் சொல்லானது ஊர் + அணி எனப் பிரிக்கலாம். அதாவது ‘கோயில் இல்லா ஊர் பாழ்’ என்பது போல ஊருணி இல்லாத ஊரும் பாழாகும். ஆகவே ஊருணி ஊரணி என்று மருவியதும் அது ஊரிலிருந்து அழகையும் தருகிறது. ஊரணி என்று மருவிய சொல்லானது பழம் நழுவி பாலில் விழுந்தது போலாயிற்று. அதனால் ஊரணி என்று கூறுவதும் சாலப் பொருத்தமாம். மேலும் தற்காலத்தில் ஊரணி என்னும் பெயரில் கல்லூரணி என்னும் ஊர் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.
மக்கள் ஊருணியைக் குளம் என்று சொல்வது பெருவழக்காய் இருக்கிறது. திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் ஊருணியைக் குளம் என்று குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத்தக்கது. அதோடு மட்டுமல்லாது பிற்காலத்தில் திருக்குறளுக்கு உரையெழுதிய பெரும்பாலானோர் ஊருணியை நீர் உண்ணக்கூடிய குளம் என்றே குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஊர்க்குடிநீர் மற்றும் பாசனத்திற்குப் பயன்படுத்திய நீர்நிலையை ஊருணிகுளம் என்னும் சொல்லில் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி (ப.108) குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கதாகும். தற்காலத்தில் ஊருணி என்ற பெயரில் மழைநீரினைச் சேமித்து வைக்கும் முறை மழைப் பொழிவு குறைவாக உடைய பகுதிகளில் இருந்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் வறட்சி மிகு மாவட்டங்களில் ஒன்றான இராமநாதபுரத்தில் காணப்படுகிறது. அந்நீர்நிலை குடிநீர்த் தேவைக்கும், மழை இல்லாத வறட்சிக் காலங்களில் பாசனத்திற்கும், கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது. அந்நீர்நிலையின் மைய இடத்தில் கேணி அமைத்திருப்பர். வறண்ட காலங்களில் அக்கேணி நீர் மக்களுக்குப் பயன்படுகிறது.
தொகுப்புரை
- பண்டைய தமிழர் பயன்படுத்தி வந்த ஊருணி என்னும் நீர்நிலை காலந்தோறும் இருந்துள்ளதை அறியமுடிகிறது.
- திருக்குறள் உரையாசிரியர்கள் குறிப்பிடும் கேணி, வானேரி, பேரேரி, பெருங்குளம், குளம் முதலான நீர்நிலைகளின் பெயர்கள் ஊருணிக்குப் பொதுவாய் அமைந்தது.
- பண்டைய மக்கள் ஊரினருக்காகப் பயன்படுத்திய நீர்நிலைக்கு ஊருணி என்று கூறுவது பெயருக்கேற்றவாறு பொருத்தமாக அமைகிறது.
- தென்மாவட்டங்களில் உள்ள சில நீர்நிலைகளை ஊருணி என்று அழைப்பது இன்றும் ஊருணி பயன்பாட்டில் உள்ளதை அறியமுடிகிறது.
- மழைநீரைச் சேமித்துப் பயன்படுத்தும் இப்பண்பாடு பற்றிய அறிவினை இனிவரும் காலங்களுக்கும் தேவையாகும். அது பற்றிய அறிதலையும் புரிதலையும் தமிழ்ச் சமூக அறிவுக் களஞ்சியத்தில் வைப்பது கடமையாக உள்ளது.
துணைநூற்பட்டியல்
- அகநானூறு, (பதி.) பாகனேரி வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாத செட்டியார், கழக வெளியீடு, சென்னை, 1951.
- இராமாயணம் – அயோத்தியா காண்டம் (முதற்பகுதி), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 2010.
- ஏரெழுபது, திருக்கைவழக்கம், ஞானபீடம் சீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் ஆதீன வெளியீடு, காஞ்சிபுரம், 1966.
- கல்லாடம், (பதி.) அருணாசல குருக்கள், லக்ஷ்மீ விலாஸ சாலை, சென்னை, 1932.
- குறுந்தொகை, (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1955.
- சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம், (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1979.
- சிறுபஞ்சமூலம், (உரை.) வித்துவான் பு.சி. புன்னைவனநாத முதலியார், கழக வெளியீடு, சென்னை, 1963.
- சீவகசிந்தாமணி மூலம், நச்சினார்கியருரையும், (பதி.) உ.வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1969.
- திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலநாதசுவாமி கோயில் வெளியீடு, தென்காசி.
- திருக்குறள் உரைக்களஞ்சியம், ச.தண்டபாணி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 2008.
- திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும், (உரை.) ஸ்ரீ.உ.வே.வை.மு. கோபாலக்ருஷ்ணமாசார்யர், ஆனந்தா பார்வதி அச்சகம், சென்னை, 1965.
- திருக்கோவையார், (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1970.
- நற்றிணை நானூறு, (உரை.) அ. நாராயணசாமி ஐயர், கழக வெளியீடு, சென்னை, 1976.
- நீலகேசி, (பதி.) அ. சக்கரவர்த்தி நயினார், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984.
- பத்துப்பாட்டு மூலம் நச்சினார்கினியருரையும், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1986.
- புறநானூறு (201 – 400 பாட்டுகள்), (பதி.) ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, கழக வெளியீடு, 1951.
- பரிபாடல் மூலம் உரையும், (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1975.
- பெரிய புராணம் மூலமூம் தெளிவுரையும், பாகம் – 2, (உரை.) வ.த. இராம சுப்பிரமணியம், திருமகள் நிலையம், சென்னை, 2002.
- பெருங்கதை, – பகுதி – 2, (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளீயிடு, சென்னை, 1970
- முக்கூடற்பள்ளு, (பதி.) மு. அருணாசலம், சாது அச்சுக்கூடம், சென்னை, 1940.
- சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி, சாந்தி சாதனா வெளியீடு, சென்னை, 2004.
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, திருவான்மியூர், சென்னை, 2016.
- தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, சாந்தி சாதனா வெளியீடு, சென்னை.
- தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1982.
***************************************************************************************
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
பண்டைத் தமிழர்கள் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். நீர்நிலைகளை உருவாக்கி விவசாயத்தில் பல புரட்சிகளைச் செய்துள்ளனர். ஆறு, குளம், ஓடை, ஊருணி போன்ற நீர்நிலைகள் விவாசயத்திற்குப் பயன்பட்டன. இக்கட்டுரை ஊருணி என்ற சொல்லையும் அதன் பயன்பாட்டையும் தெளிவாக விளக்குகின்றது. ஊருணி என்ற சொல்லாக்கமும், இலக்கியங்களிலும் உரைகளிலும் இச்சொல் எத்தகைய பின்புலத்தில் கையாளப்பட்டுள்ளது என்பதையும் கட்டுரையாளர் விளக்கியுள்ள திறம் பாராட்டிற்குரியது. ஊருணி குறித்து எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை உரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றி அமைந்துள்ளது. கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.
***************************************************************************************
-

(Peer Reviewed) ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம்
மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா
ஐயப்பனது வழிபாடு இன்று யாவராலும் மேற்கொள்ளப்படும் வழிபாடாக விளங்குகிறது. இந்த வழிபாடு இடைவிட்டு வந்த ஒன்றா அல்லது தொன்று தொட்டு வந்த ஒன்றா என்னும் வாதப்பிரதி வாதங்களும் சர்ச்சைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனாலும் ஐயப்ப வழிபாடு மட்டும் தனது நிலையில் உயர்வு பெற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வழிபாடாக வளர்ந்து வருவதையே காண முடிகிறது. அதுமட்டுமல்ல யாவரும் இந்த வழிபாட்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் பெரிதும் விருப்புடையவர்களாக இருப்பதையும் கண்டுகொள்ள முடிகின்றது.
கந்த புராணம், விஷ்ணு புராணம், பத்ம புராணம், யாவும் ஐயப்ப வழிபாடு பற்றி எடுத்துச் சொல்லுகின்றன. இப்புராணங்கள் தெய்வத்தன்மை மிக்கன. இவற்றில் ஐயப்பன் பற்றிய குறிப்பும் அவரது தோற்றம் பற்றிய விளக்கங்களும் இருக்கின்ற காரணத்தால் ஐயப்ப வழிபாட்டை இடைநடுவில் வந்தது என்று வாதிடுவதோ விமர்சிப்பதோ பொருத்தமற்றதாகி விடுகிறது. இதனால் ஐயப்ப வழிபாடானது தொன்று தொட்டே வந்திருக்கிறது என்றே கருதவேண்டி இருக்கிறதல்லவா!
ஐயப்பனை தர்மசாஸ்த்தா என்றும் பெயரிட்டும் வழிபடுவர். சாத்தன் என்பது காவலுக்குரிய தெய்வமாக விளங்கியிருக்கிறது. சாஸ்த்தா என்பது சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டு, அதுவே தமிழில் சாத்தா என மருவி பின்னர் சாத்தனார் ஆகியது எனவும் வரலாற்றால் அறிய முடிகிறது.
காவல் தெய்வமாக விளங்கினார் என்பதற்கு அவரின் மற்றொரு பெயரான ‘பூதநாதன்’ என்பதும் பொருந்துவதாக இருப்பதாக வரலாறு சுட்டி நிற்கிறது. விநாயகப் பெருமானைக் கணங்களுக்கு அதிபதி என்ற நிலையில் ‘கணபதி’ என்கிறோம். தேவசேனைகளின் அதிபதியாக விளங்குவதால் முருகப்பெருமானைத் ‘தேவசேனாபதி’ என்கிறோம். ஐயப்பன் பூத கணங்களுக்குத் தலைமை தாங்குவதால் அவரைப் ‘பூதநாதன்’ எனப் போற்றுகிறோம். இதில் இன்னுமோர் அர்த்தத்தையும் நாம் கண்டுகொள்ளலாம். இந்த மனித சரீரமானது பஞ்ச பூதங்களால் ஆனது. எனவே பஞ்ச பூதங்களும் எந்த நேரமும் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றிருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட மனிதர்களை அந்தப் பூதங்களிடமிருந்து காத்து இரட்சிக்கும் ஆற்றல் பூதநாதனாகிய ஐயப்பனால் மட்டுமே முடியும் அல்லவா? இதனாலும் பூதங்களை ஆளும் வல்லமை பெற்றவன் என்ற வகையிலும் ‘பூதநாதன்’ என்பது பொருத்தமாகி நிற்கிறதுதானே!
ஐயப்ப வழிபாட்டில் பல முக்கிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் காரணமாகவும் அந்த வழிபாட்டை அனைவரும் கைக்கொள்ளுகின்றனரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஒரு மண்டலம் என்பது சாதாரண விஷயமல்ல. அந்த ஒரு மண்டலமும் எந்தவிதமான கெட்ட பழக்கங்களையும் மனத்தாற்கூட நினையாமல் ஐயப்ப வழிபாடு நடத்தப்படுகின்றது. இங்கு மனம் தூய்மை அடைவதோடு வாழ்வும் வெளிச்சம் பெறமுடிகிறது எனலாம்.
” உற்றநோய் நோற்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை “
என்னும் வள்ளுவர் வாக்கு இங்கு போற்றப்படும் நிலையே காணப்படுகின்றது. கடைப்பிடிப்பார்கள் செவ்வனே கடைப்பிடித்தால் சிறப்பு வந்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இது ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம் எனலாம்.
கடவுளர்களில்- பிரம்மச்சாரியாக ஐயப்பன் இருக்கின்றார். அதுமட்டுமல்ல அவரது கைகளிலே எந்தவித ஆயுதங்களும் இல்லை. இது அற்புதமான அமைப்பு அல்லவா? அவரது குழந்தை வடிவமும் புன்சிரிப்பு தவழும் முகலாவண்யமும் பார்ப்பவர் மனத்தைப் பக்குவப்படுத்திவிடும் அல்லவா!
உலகிலே எங்குப் பார்த்தாலும் சண்டை சச்சரவுகளும் அழிவுகளுமே காணப்படுகின்றன. ஆயுதக் கலாசாரம் என்பது பெருகி அமைதியைக் குலைத்துவிட்டது. இந்த நிலையில் ஆயுதமே கையில் ஏந்தாது அமைதியாயும் சிரிப்போடும் ஐயப்பன் காணப்படுவது அகில உலக அமைதிக்கும் உலகம் தழுவிய சமாதானத்துக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டு அல்லவா! இதனாலும் இந்த வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
காமம் என்பதுதான் யாவற்றுக்கும் மூல காரணமாகும். ஐயப்பன் பிரம்மச்சாரியாக விளங்கும் நிலையும், அவரது வழிபாட்டை மேற்கொள்ளும் நிலையில் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் நிலையும் ‘எம்மிடையே உள்ள சிற்றின்பங்கள் அனைத்தையும் போக்கிவிடும்‘ என்பதையே எடுத்துக் காட்டுகிறது. காம எண்ணங்கள் நம்மைவிட்டுப் போய்விட்டால் உலகிலே காணும் யாவுமே ஆனந்த மயமாகவே தோற்றமளிக்கும். அந்த ஆனந்தமும் அற்பமானதல்ல. அது இறைத் தன்மை மிக்கதாகவே இருக்கும். இவையெல்லாம் ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவங்கள் எனலாம்.
எமக்குள்ளே இறைவன் இருக்கின்றான். அந்த இறைவனை நாங்கள் முயன்றால் கண்டுவிடலாம் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். அதற்கு நல்ல தேடல் வேண்டும்.
“தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடிக் காணொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் “
என்று அருளாளர் ஒருவர் கூறுகின்றார். இது முற்றிலும் உண்மையானதாகும். இந்த அரிய தத்துவத்தை ஐயப்பன் வழிபாடு மிகவும் இலகுபடுத்தி இருக்கிறது.
ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேளை ஒருவராவது மற்றவரைப் பெயர்சொல்லி அழைப்பது வழக்கம் அன்று. ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்றுதான் அழைப்பார்கள். இதுதான் ஐயப்ப வழிபாட்டின் அதியுச்ச நிலை எனலாம். சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் சாமி என்னும் நிலைக்கு வருவதை வேறு எந்த வழிபாட்டிலும் காணவே முடியாது. அதனை ஐயப்ப வழிபாடு ஒன்றே உணர்த்தி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மனிதர்கள் பல பிறவிகளிலும் செய்த பாவங்களும், புண்ணியங்களும் அவர்களுக்குப் பெரும் பாரமாகவே பிறவிதோறும் வந்து கொண்டிருக்கும். இவை இரண்டையும் விடும்பொழுதுதான் பிறவியென்னும் பிணி அகலும். இதனையே சைவ சித்தாந்தம் இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்தினிபாதம் என்றெல்லாம் சொல்லும். இவை எமக்கும் விளங்குவது சற்றுக் கடினம்தான். ஆனால் ஐயப்ப வழிபாட்டில் இதனை இலகுவாக்கி ‘இருமுடி’ கட்டுதல் என்று வைத்துவிட்டார்கள். இருமுடியில் ஒன்றில் இறைவனுக்கான நிவேதனப் பொருட்களும் மற்றையதில் அடியவர்களுக்கான பொருட்களுமே அடங்கியிருக்கும். இங்கே இறைவனுக்கானவற்றை புண்ணிய மூட்டை என்றும் மற்றதைப் பாவ மூட்டை என்றும் கொள்ளலாம் அல்லவா? இந்த ஆன்மா ஆனது பாவத்தையும் புண்ணியத்தையும் சுமந்தபடியேதான் இருக்கும். இறைவனிடம் போகும்பொழுது அதுவும் பக்தியுடன் பக்குவமாகப் போகும்பொழுது பாவத்தின் நிலை குறைந்து புண்ணியம் மேலோங்க, ஆன்மாவின் பாரம் குறைவடையும். இந்த அரிய கருத்தே இருமுடித் தத்துவம் என்று ஐயப்ப வழிபாட்டில் காணப்படுகின்றது என்பது மனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.
பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. ஐயப்ப தரிசனத்திலும் பதினெட்டுப் படிகள் இருக்கின்றன. பாரதப் போரில் அர்ஜுனன் கலங்கிய கலக்கத்தைத் தெளிவாக்கி இறைத் தத்துவத்தையும் வாழ்க்கைத் தத்துவத்தையும் பகவான் கண்ணன் காட்டியதுவே கீதையென்னும் வேதமாக வந்தது.
அதே போன்றதுதான் ஐயப்ப வழிபாட்டிலும் பதினெட்டுப் படிகளின் தத்துவமும். முதல் ஐந்து படிகளும் கர்மேந்திரியங்களாகவும், அடுத்த ஐந்து படிகளும் ஞானேந்தியங்களாகவும், அடுத்த நான்கு படிகளும் அந்தக்கரணங்களாகவும், மிகுதி மூன்று படிகளும் முக்குணங்களாகவும் உருவகப்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கடந்தால் பதினெட்டாம் படியானது இறைதரிசனத்தைக் காட்ட வல்லது என்னும் அதியுன்னதத் தத்துவத்தை, படிகளைக் கொண்டே ஐயப்ப வழிபாடு உணர்த்தி நிற்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
தேங்காயினுள் நெய்விட்டு அதனை ஐயப்ப தரிசனத்தின்பொழுது கொண்டு செல்லும் வழக்கம் இருக்கிறது. தேங்காயில் மூன்று கண்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு கண்ணை மட்டுமே திறந்து நெய்யினை விடுவார்கள். இங்கே கூட மிகச்சிறந்த தத்துவத்தை ஐயப்ப வழிபாடு காட்டி நிற்கிறது. மனிதர்களுக்குப் புறத்தே தெரிவது இரண்டு கண்களே. அதேவேளை மூன்றாவது கண்ணும் இருக்கின்றது. அதனையே அகக்கண் என்கிறார்கள். நெய் என்பது ஆன்ம ஞானம் அதனை உடம்பாகிய தேங்காயினுள் செலுத்த வேண்டுமானால் அதற்கு அகமாகிய கண்ணின் வழியேதான் செலுத்தமுடியும் எனவேதான் தேங்காயின் ஒரு கண்ணைத் திறத்தல் என்பது இங்கே ஏற்படுத்தப்பட்டது. இதனை அனைவரும் விளங்கி வழிபட்டால் நல்லதே.
ஐயப்ப வழிபாட்டில் அரனும் அரியும் இணையும் தன்மை காணப்படுகிறது. அரியும் அரனும் சேர்ந்த வடிவமானதால்தான் அரிகரசுதன் ஐயன் ஐயப்பன் என்று போற்றப்படும் நிலை இந்த வழிபாட்டில் ஏற்பட்டது எனலாம். இதனால் சைவ வைணவ ஒற்றுமையின் வடிவமாகவும் ஐயப்பனும் அவரது வழிபாடும் அமைந்திருப்பதும் இந்த வழிபாட்டின் மிக உன்னதமான முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது என்றும் கொள்ளலாம்.
ஆடுதல், பாடுதல், ஒன்று சேருதல், உணவிட்டு உபசரித்தல், சாதி, மத, ஏற்றத் தாழ்வுகள் பாராமை, சமரசம் என்னும் தரரகமந்திரமே மேலோங்கி இருத்தல், தீவிர வைராக்கியம், இன்முகம் காட்டுதல், இன்சொல் பேசுதல், பெரியவரைக் கனம் செய்யுதல், இப்படிப் பல நிலைகளில் ஐயப்ப வழிபாடு விளங்குகின்ற காரணத்தாலும் இன்றைய உலக நிலையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க வழிபாடாக ஐயப்ப வழிபாடு திகழ்கின்றது.
“சாமியே சரணம் ஐயப்பா ! சாமியே சரணம் ஐயப்பா!”
என்னும் ஒலியானது உலகையே ஒன்று கூட்டும் சக்தி மிக்கதாக விளங்கி ஐயப்ப வழிபாட்டை உலக வழிபாடாக மாற்றிவிடும் சக்திபெற்றதாக இன்று பிரவாகித்து நிற்கிறது என்பது நிதர்சனமாகும்.
“சரணம் சரணம் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா!”
———————————————————————————————————————————————
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
ஐயப்ப வழிபாட்டின் பெருமைகளையும் நுட்பங்களையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. சாத்தனார் வழிபாட்டிலிருந்து பூதநாதன் தோன்றிய விதத்தையும், ஐயப்ப வழிபாட்டில் பொதிந்திருக்கும் அகப்பொருள் உண்மைகளையும் சைவசித்தாந்த, புராணச் சான்றுகளோடு நிறுவுகிறது. ஐயப்ப விரதத்தின் மெய்த்தத்துவங்கள், வைராக்கியக் கொள்கை, இருமுடி கட்டுதல் ஆயுதமின்மை ஆகியவற்றுக்கான விளக்கங்கள் தரப்பெற்றுள்ளன. அற்றே தவத்திற் குரு என்னும் வள்ளுவத்தின் ஈற்றடிகளை வழிபாட்டிற்கான ஒழுகலாறாய்க் கட்டுரை உணர்த்துகிறது. இதனைப் போலவே அமைந்த முருக வழிபாட்டினையும் ஒப்புநோக்கியிருக்கலாம்.
———————————————————————————————————————————————


























