Category: திருமால் திருப்புகழ்

பெருமாள் திருப்புகழ்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    தவ சிவன்….Friend Philosopher and Guide….

    crazy

    “உத்ரக் கிரியை உலகில் முடிந்ததும்
    பித்ருக்கள் போவர் பரமகுரு -மித்ரன்
    மகாதேவன் கைக்குள் மறுஜென்மம் காண;
    சகா,தேவன், தெய்வம், சிவம்”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    ’’கந்தனுக்கு  வேல்கொடுக்கும்,  காளிகாம்  பாசக்தி,

     வந்தனம் வந்தனம் வாராஹி, -தந்தனத்,

    தோம்ஈசர்  வாமத்து  தேவி  உமையாளே

    காமேஸ்  வரிநீயே  காப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    “ஊதியது போதும் உடனே எழுந்துவா
    பாதியில் நிற்குதாம் பாரதப்போர் -சேதிசொன்ன
    COURIERரை மேய்க்காத காரணத்தால் உண்டுவிட்டேன்
    WARRIORகள் காத்துள்ளார் வா”….கிரேசி மோகன் ….

    crazy

    கண்ணன் குழலூதும் சுவாரஸ்யத்தில் பாரதப்போரை ,பசுக்களை மேய்ப்பதை மறந்து விட மாடும் கன்றும் நினைவு படுத்துவதாகக் கற்பனை….

    COURIER தின்ற மாடு -துவாபர யுகத்திலேயே பேப்பர் உண்ணும் பழக்கம் பசுக்களுக்கு வந்து விட்டது போலும் ….கலியுகத்தில் போஸ்டர் ….நன்றி கேசவ்ஜி….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “இம்மி அசையா(து) இமையோன் அகந்தை
    DUMMYயா கும்வரை தூக்கினான் -MUMMYயை;
    COUNT -DOWN கர்வபங்கம் காணும் வரைநின்றான்
    MOUNT -BATTLE FEILDல் மணி”….கிரேசி மோகன்….

    MUMMY -கோவர்த்தன கிரி PYRAMID….
    இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….
    The Last Word “மணி ” Represents “ஸ்யமந்தக” மணி….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “மகோதரன் அன்னை, மகாதேவர் பாகி,
    சகோதரன் கண்ணனின் சார்பாய், -சகாய,
    எருதேறி வந்தாள், இமவான் குமாரி,
    திருநாள் நவராத் திரி”….கிரேசி மோகன்….

    Share
  • படமும் பாடலும்

    கிரேசி மோகன்

    crazy

     

    “பால்கொடுத்தாய் சம்பந்த பிள்ளைக்குப் பண்ணிசைக்க,
    வேல்கொடுத்தாய் மைந்தனுக்கு வெற்றிபெற, -தாள்கொடுத்தாய்
    அய்யன் இடமிருந்து அய்யோ பதியோட;
    பையன் எனக்களிவாய்ப் பாக்கு”….கிரேசி மோகன்….

    மார்கண்டேயனுக்காய் ஈசன் எமனை(அய்யோ பதி) உதைத்தது அம்பாள் இருக்கும் இடது கால்….
    காளிதாசனுக்கும், காளமேகத்துக்கும் தன் திருவாய் தாம்பூலம்(பாக்கு)….

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    அம்மாடை விட்டால் அடிமேயும், ஆதலால்,
    சும்மாடாய் தோளில் சுமக்கிறான் -ப்ரும்மாண்டன்;
    நாத பிரும்மத்தின் ,பாதக் கவலைபார்,
    தூதுக்கு வேண்டுமே தாள்!’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இன்று கேசவ் கண்ணன் போர்க்கோலத்தில்”
    ———————————————————————–

    crazy

    “பேரெழில் பச்சைமால், நீரலை விட்டாயர்
    சேரியில் சென்றுப சுக்களுடன், -ஒரினமாய்,
    Forever வாழ்ந்தாலும், பாரதம் செய்வதற்கு,
    தேரவர் ஓட்டத் தயார்”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    புருஷனும் ப்ரக்ரிதியும் பின்னிப் பிணைந்த
    தரிசன தாமோ தரனுக்(கு ) -ஒருஷணத்தில்
    INஏங்கும் ராதைக்கு OUTடோடும் கீதைக்கு
    IN-YANGசை னீஸ்வரன் இன்று”….கிரேசி மோகன் ….

    சைனா +ஈஸ்வரன் =சைனீஸ்வரன்
    ying-yang tao philosophy….

    “அன்னத்(து) அயனும் ,அணியும் புலித்தோலர்
    அண்ணா மலைஅரனும் ,அன்பர்கள் -கன்னத்தில்
    முத்தமிட்டு காக்கும் முகுந்தனும்,சேர்ந்ததில்
    தத்தகுரு இந்தியாங்கில் தாவ்….
    தத்தகுரு IN -YANGகில் TAO”….கிரேசி மோகன் ….

    The dove and the tiger. The delicate balance of opposites. Yin-yang Krishna.

    Share
  • மலரும் நினைவுகள்

    கிரேசி மோகன்

    1984 என்று நினைக்கிறேன்….கிரேசி குழுவினருக்கு ‘பாம்பே ஷண்முகானந்தா’ சபையில் நாடகம் போடும் வாய்ப்பு கிட்டியது….அன்நாளில் பாம்பேயில் நாடகம் போடுவதென்றால் மதராஸ் குழுக்களுக்கு அமரிக்காவில் போட அழைப்பு கிடைத்த அளவுக்கு பிரசித்தம்….அவர்கள் மேஜர் சுந்தர்ராஜன் போன்ற மேஜர் குழுக்களைத்தான் கூப்பிடுவார்கள்….மைனர் குழு எங்களுக்கு கிடைத்தது தெய்வாதீனமே….அந்த சமயம் பார்த்து எங்கள் லேடி-ஆர்டிஸ்ட் திருமணம் செய்து கொண்டு விலக, புதிதாக வேறு ஒரு நாயகி….சுந்தரத் தெலுங்கி….பார்க்க சுந்தரம்(அழகு)….பேச்சு அவந்தரம்….அவளுக்கு வீடியோ பிரமாதம்….ஆடியோ அபத்தம்….

    நாடகத்திற்கு 2 நாட்கள் முன்பு அவளுக்கு தமிழ் வசனம் ரிகர்சல்….கடைசி வரை மாதுவை தாய் பாஷையில் லேது என்றுதான் கூவிக் கொண்டிருந்தாள்….3000 பேர் அமரும் ஷண்முகானந்தாவில் ஒரு சிறுவன் மட்டும் அமர்ந்து எங்கள் ரிகர்ஸலை ரசித்துக் கொண்டிருந்தான்….குறிப்பாக அவன் குஷியாகி சிரித்தது , அந்த நாயகியின் ‘மாது-லேது’ மாற்றத்திற்குத்தான்….அந்தச் சிறுவனின் தாய் பாஷை தெலுங்காம்…அதனால்தானோ ‘லேது மாது’ பன்னை(PUN) வெகுவாக ரசித்தான்….சாயங்காலம் தினமும் சூறாவளி கச்சேரி செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரத்யேகமாக(கிருஷ்ணருக்கு கீதை சொல்ல ஒரே ஒரு அர்ச்சுனன் கிடைத்தது போல) மேடை அலங்காரம் செய்து எங்கள் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’’ நாடகத்தைப் போட்டு அந்தக் குழந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்….”குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’….ஒருவேளை அந்தக் குழந்தையைக் கொண்டாடி, அதன் ஆசீர்வாதத்தைப் பெற்றதாலோ என்னவோ இன்று எங்கள் குழு தெய்வத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது (சாக்லேட் கிருஷ்ணா)….அந்த தெய்வக் குழந்தை யார் என்பதை ‘கேசவ்’ சித்திரத்தில் காட்டியுள்ளார்….பார்க்க….கிரேசி மோகன்….

    crazy

    ‘MANDOLIN கேட்க மகாவிஷ்ணு வுக்காசை
    ஆண்டவன் கட்டளை ஆதலால் -மாண்டலின்(அமரராகி)
    ஆனாரே, வாசிக்கப் போனாரே வைகுண்டம்,
    ‘ஈநாடுக்(கு) இங்கே இழப்பு’….கிரேசி மோகன்….

    ‘மலரும் மாண்டலின் நினைவுகள்’…..

    ‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாசன்’….வைகுந்தத்தில் வாசித்து அவர் ஆத்மாவும் சாந்தி அடையும், அந்தப் பரமாத்மாவும் சாந்தி அடைவார்….

    பின்குறிப்பு -எங்கள் ‘ஜுராஸிக் பேபி நாடகத்தில், பிறந்த குழந்தை ‘நர்ஸரி ரைம்’ பாடும்….அப்போது குழந்தையின் தந்தை மாது- என்ன ! அச்சப்பன் குழந்தை பாடறது….!

    அச்சப்பன் -அவனுக்கு ‘மாண்டலின்’ கத்துக் கொடுங்கோ….யார் கண்டா பிற்காலத்துல ‘ஸ்ரீனிவாசன்’ மாதிரி ‘பிராடிஜியா’ பிரபலம் ஆகலாம்….(பலத்த கைத்தட்டலோடு நாடகம் நிறைவு பெறும்)…..
    —————————————————————————————————————

    ———————————————————————————————————————–

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy1

    பூபாரம் போக்கவந்த கோபாலன் கொண்டையில்,
    பூ,பார கோபியர் பெண்கள்பார்: -வ்யாபார,
    ஷேமமும், யோகமும், ஷேத்ரஞ்ஞன் கண்ணனே,
    நாமமும் ரூபமும் நாம்’’….கிரேசி மோகன்….

    பூ பார கோபியர்-மலர் சூடிய கோபியர்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    அருச்சுன உவாச….குந்தி மகன் கேள்வி…..
    ———————————————————————————–

    சுருதி ஒலிக்குள், பரிதி ஒளிக்குள்
    இறுதிமுதல் இல்லா இறைக்குள் -கருதி
    துதிக்கும் முனிவர்தம் தேடலுக்கு எட்டா
    ஸ்திதிக்குப் புகன்றேன் சரண்….

    பசுக்களை மேய்த்தோய் வசுதேவன் மைந்தோய்
    விசுவமாய் எங்கும் விரிந்தோய் -அசையும்
    அசையா பொருள்களுக்கு ஆதார மான
    இசையே வணக்கம் உனக்கு….

    படைத்துப் பறிமாறி பாதுகாத்(து) ஆவி
    கடைத்தேற வைத்திடும் கண்ணா -துடைத்து
    உலகேழை உண்டன்(று) உமிழ்ந்தோய் உனக்கிங்(கு)
    இலையேகாண் ஓர்சக்தி ஈடு ….

    அயனுக்கு வேதம் அறிவித்(து) அவன்தன்
    வியனுலகில் மாயை விதைத்து -பயனுற
    ஞானகர்ம பக்தியென்ற நாட்டம் அளித்தெம்மை
    வானமர வைத்திடுவோய் வாழ்த்து….

    பேருண்மை, மாயப் பெரும்பொய் பிரகிருதி
    வேரொன்றும் இல்லா விருக்ஷம்நீ, -யாரென்று
    கேட்டால் விளம்பிடுவோம் கேசவன் தானந்த,
    சேட்டை புரிகின்ற சேய்….

    crazy

    ஸ்ரீபகவான் உவாச….கிருஷ்ணன் பதில்…..
    ————————————————————————————————

    ”கலக்கம் உறாதே விலக்கொணா கர்மம்
    நிலத்தில் பிறப்பும் இறப்பும் -இலக்கணம்
    பார்க்க இதுகவிதை இல்லைகாண் பார்த்தனே
    பார்த்தால் புசிக்கும் பகை”….

    ”தீண்டும் இயற்கையின் தூண்டுதலால் வந்துபொகும்
    யாண்டும் குளிர்,வெப்பம் இன்ப,துன்பம் ! -பாண்டு
    மகனே பொறுப்பாய், மனதால் பொருப்பாய்
    புகழாம் போரில் புகு”….

    ”வியப்பென பார்த்து, வியப்பென கூறி
    வியப்பென கேட்டும் விளங்கா -வியப்பாம்
    விவரிக்க ஒண்ணா விசித்திர ஆன்மா
    எவருக்கும் எட்டா எழில்”….

    ”நாணை இழுத்திட நாணாதே நண்பனே
    ஆனை படுத்தால் அசுவமட்டம் -சேனைக்
    களம்நீங்க செல்லாத காசாவாய், வேந்தருன்
    உளம்நோக வைப்பார் உவந்து”….

    ”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
    மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
    சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுந்திரு
    தர்கம் புரிதல் தவிர்”….

    ”சுகதுக்கம், பேறு, இழப்பு, பெரும்வெற்றி
    புகும்தோல்வி யாவினையும் போற்றி -நிகராக
    ஏற்றிடுவாய் வேற்றுமையை, நூற்றினைக்கொல் கூற்றனென
    தோற்றிடும்பார் பாவம் தொலைந்து”….

    ”ஈங்கிதனைக் கேட்டோய் இதன்பெயர் கேண்மக்கள்
    சாங்கியம் என்போர், இனியடுத்து -தாங்கிய
    கர்மத் தளைகளின் கட்டவிழ்க்கும் யோகத்தின்
    மர்மம் உரைப்போம் உமக்கு”….

    ”வீணாகிப் போகா விடாமுயற்சி யோகமிது
    தானாக மீறாது தன்வரம்பை -வாநாளில்
    எள்ளளவு செய்வோரை எப்பயம் சூழ்ந்தாலும்
    உள்ளிருந்து காக்கும் உரை”….

    ”விண்ணென்று நானொத்து திண்ணென்ற புத்திக்கு
    கண்ணொன்று காணுமது கட்டுறுதி -என்னென்றும்
    ஏகா கிரகமாம் இவ்வுறுதி அற்றமனம்
    சாகா வரம்பெற்ற சத்ரு”….

    ”விரையற்ற பூக்கள் விரயமாதல் போலே
    உரையற்ற சொற்கள் உதிர்ப்பர் -மறையுற்ற
    வாசகத்தில் மேம்போக்காய் மீதுலாவி கற்றோரைப்
    பேசுவார் கேலி புரிந்து’….

    ———————————————————————————

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy1

    “பூவைக் குமிடத்தில் பொன்வைப்போன் வள்ளலென்றால்,
    பூவைக்கும் பாதத்தில் பிள்ளையை -நீவைத்தாய்;
    கர்ண மகாப்பிரபு கேசவ் கலக்கும்நீ
    வர்ண மகாப்பிரபு வே”…..கிரேசி மோகன் ….

    “எதிர்காத்(து) இருப்பவர்க்கு ஏமாற்றம் தந்து
    எதிர்காத்தாய் வீசும் எவர்க்கோ -மதில்மேலே
    பூனைக்கீ டாமிரெண்டும்; பிள்ளை அழைத்தாலோ
    தூணைப் பிளந்துதெய்வம் தொப்….

    குழந்தை தெய்வமும் கேசவ் கொண்டாடும் தெய்வமும்….
    நம் நலம் பேணும் தாயும் சேயும் நலம் ….

    “ஓணமும் ஆதிரையும் ஒன்றிக் கலந்திட
    கானில் பிறந்தமணி கண்டனே ,-ஞானமே,
    தாய்மோ கினியவள் தாளில் பசித்திராய்
    போய்வன் புலிப்பால் பருகு”….கிரேசி மோகன் ….

    ஓணம் -அரி , திருவாதிரை -அரன்
    கானில் -காட்டில்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    நெட்டிப் பிள்ளையார்

    crazy

    “லேசிகனாய் ஆனான்பார் லம்போ தரந்தனது
    மூஷிக வாகனர்க்காய்; முத்தமிழ் -தேசிகன்
    “வித்யா ததாதி வினயம்” உணர்த்துதிங்கு
    சித்யானைக் குட்டி சிறுத்து”….கிரேசி மோகன் ….

    வினயம் வித்தைக்கு அடையாளம்….
    சித்தானைக் குட்டி -சித் + யானைக் குட்டி….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”புள்ளி மயில்சூடி, புள்ளாழ்வான் போலிறகை,
    புள்ளாண்டான் போர்த்திப் பறப்பது, -மல்லாண்டு,
    மாமனைக் கொல்லல், மகாபா ரதம்செய்தல்,
    பூமனையாள் இட்ட பணி’’….கிரேசி மோகன்….

    பூமனையாள்- மனைவி பூமாதேவி….
    புள்ளாழ்வான் -கருடாழ்வார்….

    Share