Category: தொடர்கதை

  • பல்லழகன் – பகுதி 10

    திவாகர்

     

    “சார்.. நீங்க ‘பை’ன்னு சொன்னா போதும்.. எதுக்கு சிரிக்கணும்.. வாயை மூடிண்டு எப்படிப் பேசறதுங்கிறதை நீங்க பழகணும்..”

     

    ஸீரியஸாகப் பேசிவிட்டு அவள் நடந்து போகிறாள். அவன் தன்னைத் தானேக் கேட்டுக்கொள்கிறான். ‘வாயை மூடிண்டு பேசணுமா..? ம்ம்.. என் பல்லைக் கண்டா நிறைய பேருக்குப் பொறாமை’.. என்று சமாதானம் சொல்லிக்கொண்டே வண்டியைக் கிளப்புகிறான்.

     

    அதே சமயம் அனாதை ஆசிரமத்திலிருந்து சுந்தர் கிளம்பிச் செல்வதைப் பார்த்த ரவி ஆசிரமத்துக்குள் நுழைகிறான். அங்கே அந்த வயதானவர் இவனைப் பார்த்து உள்ளேக் கூப்பிட்டு உட்கார வைக்கிறார். ரவி சுற்றுமுற்றும் பார்க்கிறான். பிறகு அவரிடம் சாதாரணமாகப் பேசுகிறான்.

     

    ‘நான் இங்க டொனேஷன் விஷயமா விசாரிக்க வந்தேன். இதெல்லாம் இங்க யார் பாக்கறது? நீங்கதானா.. இல்லே வேற யாராவது டீல் பண்ணுவாங்களா.. பணமெல்லாம் கொடுத்தா இந்தக் குழந்தைகளுக்கு எப்படி செலவழியும்னு அதாவது சரியா அவங்களுக்குப் போகுமா.. ஏதாவது அக்கௌன்ட் கொடுப்பீங்களா?’

     

    ‘ஐய்யோ.. என்ன இப்படி கேட்டுட்டிங்க.. நாங்க இப்படி டொனேஷன் பணத்தைச் சரியா செலவழிக்கறதுக்கு ரொம்ப நியாயமா நடவடிக்கை எடுப்போம் சார்.. கணக்கு வழக்கெல்லாம் ரொம்ப ஒழுங்கா இருக்கும். எங்க ஆசிரமத்துக்கு எல்லா இடத்துலயும் நல்ல மரியாதை இருக்கு.’

     

    ‘அப்படியா..’ ரவி அவரைப் பார்த்து கேட்டவன்.. நீங்களே இதையெல்லாம் கவனிக்கிறீங்களா?’

     

    ‘இல்லே சார்.. இதுக்கெல்லாம் ஒரு ஆள் போட்டுருக்கோம்.. அவர் பேரு சுந்தர். இப்போதான் வெளியே போனார்.. கொஞ்சம் முன்னாடி வந்திருந்தீங்கன்ன அவரைப் பார்த்திருக்கலாம்.. கொஞ்சம் இருங்க.. அவருக்கு ஃபோன் பண்றேன்.. அவர் உடனே வந்துடுவாரு.. இப்பதானே போனாரு.. ‘ என்று கைபேசியை எடுத்தார்.

     

    ரவி அமைதிப்படுத்தினான். ‘இருக்கட்டும் சார்.. நான் விசாரிக்கதான் வந்தேன். நான் டொனேஷன் வாங்கித் தர்ரேன். ஆனா அது சரியா போகறதா தெரியணும் இல்லையா.. இந்த ஆசிரமம் பத்திச் சொல்லுங்க..’

     

    ‘இது ஆந்திரக்காரங்க குடும்பத்தோட தயவுல போகறது சார். இப்போ பதினைஞ்சு சின்னப் பொண்ணுங்க இருக்காங்க.. அவங்க அத்தனை பேரும் அனாதைப் பசங்கதான். வேற புதுசா ஒண்ணுமில்லேங்க..

     

    இப்போ வெளியே போனவர்தாம் எல்லாம் பாத்துக்கிறாரா?

     

    ;இல்லே சார்.. சொன்னேனே.. அவர் பேர் சுந்தர், இங்கே அக்கௌன்ட் ஒண்ணுதான் பாக்கறார். மிச்ச வேலை எல்லாம் நான் பாத்துக்கறேன். உங்களுக்கு என்ன வேணும்? என்ன பதில் வேணும்னாலும் நான் சொல்லறேன் சார்.’

     

    ‘அதுக்கு முன்னாடி உங்க இன்மேட்ஸ்லாம் அதாவது இங்க உள்ளவங்களை நான் பாக்கலாமா?’

     

    அதே நாள் மாலை நேரம் கல்யாணியின் வீடு.

    முரளி வந்திருக்கிறான். அதே சமயம் கோம்டியும் உள்ளே வருகிறாள்.  ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைக்கிறான் கல்யாண். கோம்டி அவனைக் கூர்ந்து பார்க்கிறாள்.

     

    “உங்களை இந்த வீட்டு வாசல்ல ஒரு தடவை பார்த்திருக்கேன். இப்ப ஞாபகம் வரீங்க.. ஒரு மாசம் முன்னாடி ஆட்டோ டிரைவர்கிட்டே சண்டை போட்டீங்க.. அவன் திட்ட நீங்க திருப்பித் திட்ட கொஞ்சம் கும்பல் வந்ததும் ரெண்டு பேரும் சண்டை போடாம போயிட்டீங்க.. ரைட்டா?”

     

    “நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு.. ஆமாம்.. கும்பல் கூடாம இருந்ததுன்னா நாலு சாத்து சாத்தியிருப்பேன்.”

     

    “முரளி இங்கே டெய்லி வருவாரோ?” கல்யாணைப் பார்த்துக் கேட்டாள்.

     

    முரளியே சொன்னான். “டெய்லி இல்லைன்னாலும் ரெண்டு நாளைக்கு ஒருதடவையாவது ராத்திரி நேரத்துல ஒரு ரெண்டு மணி நேரம் மாமா கூட இருந்துட்டு சாப்பிட்டு போவேன்”.

     

    “சாப்பாடுன்னா எடுப்புச் சாப்பாடுதான் இல்லையா.. பொன்னம்மாவோட டெய்லி வேலை இது. சமயத்துல பொன்னம்மா கூட சமைச்சுப் போடுவா இல்லையா?”

     

    “அதுவும் சரிதான்.”

     

    “உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு இல்லையா.. உங்க மனைவியோட வருவீங்களா இல்ல தனியா வருவீங்களா மிஸ்டர் முரளி..”

     

    முரளி ஆச்சரியமாகப் பார்த்தான் அவளை.

    “என்னங்க நீங்க வந்ததும் வராததுமா கோர்ட்ல வக்கீல் மாதிரி கேள்வி கேக்கறீங்க?”

     

    “ஸாரி,, உங்களுக்குத் தெரியாதா? மிஸ்டர் கல்யாண் என்னை அவரோட பிரைவேட் இன்வெஸ்டிகேடிவ் ஏஜெண்டா நியமிச்சிருக்கார்.. ஏன் கல்யாண்.. சொல்லலியா இன்னும் மிஸ்டர் முரளிகிட்டே?”

     

    “யெஸ் முரளி.. போலீஸ் ரொம்ப மெதுவா இன்வெஸ்டிகேட் பண்ணுது. கொஞ்சம் நாமும் நம்மளால முடிஞ்ச அளவு உதவி பண்ணலாமேன்னு பிரைவேட் இன்வெஸ்டிகேடிவ் ஏஜெண்ட் அதுவும் போலீஸ் ஒப்புதலோடதான் ஏற்பாடு பண்ணியிருக்கேன். இவங்க எதிர் வீட்டிலேயே இருந்து செய்யறதுன்னாலே எனக்கும் கொஞ்சம் சௌகரியமா இருக்கு.”

     

    “ஓ.. அதுவும் ஒருவிதத்துல நல்லதுதான். சீக்கிரம் இந்த கேஸ் முடியணும்.. ரொம்பவும் எதிர்பார்க்காத துரதிருஷ்ட நிகழ்ச்சி இது. நீங்க கேட்காமயே ஒரு விஷயம் சொல்லறேன். எனக்கு ஆறு வயசு.. இதோ இவனுக்கு மூணு வயசு. இவனோட அப்பாவும் அம்மாவும் ஒரே நாள்ல அசம்பாவிதமா இறந்துட்டாங்க.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எங்கம்மா  ஒரே கதறல். ரொம்ப நாள் அழுதாங்க.. இவனைக் காமிச்சு ‘அடேய் முரளி இனிமே வாழ்க்கைல இவனைப் பாத்துக்கவேண்டிய பொறுப்பு வந்துடுத்துடா.. அவனை நல்லா பார்த்துக்கோடா’ன்னு சொல்லிச் சொல்லி அழுதாங்க. இவனோட பெரியப்பாவை நான் அப்போலேர்ந்தே மாமா’ன்னு கூப்பிட்டுப் பழக்கம். என் சின்ன சித்தி பிள்ளை சுந்தரும் அப்பப்ப எங்கள்ட்ட ரொம்ப நெருக்கமா இருப்பான். மாமாவும் ரொம்ப ஃபீல் ஆயி யார்கிட்டயும் பேசாம ரொம்ப நாள் அப்படியே இருந்தாரு. இவனைப் பார்த்தா அவருக்கும் அழுகை வரும். இப்படி எமோஷனலாவே இத்தனை வருஷமா நாங்க வளர்ந்தோம். இப்படியே போகிற வாழ்க்கைல இப்போ அந்த அன்பு மாமாவும் போயிட்டாருன்னா எங்களுக்கு எப்படி இருக்கும்? அதுவும் இந்த மாதிரி சாவு ஏன் வரணும்? புரியலே..”

     

    “புரியுது” கோம்டி அவனைப் பார்த்தாள். எந்த உணர்ச்சியும் காட்டவில்லை அவள். “இவர் பெரியப்பாவோட ரொம்ப நெருக்கமா நீங்க இருந்தது அவரோட தனிமையான வாழ்க்கைல அவருக்கு அதிர்ஷ்டம் இல்லையா..?”

     

    “அதுவும் உண்மைதான்” முரளி ஒப்புக்கொண்டான்.

     

    “அதேபோல உங்களுக்கும் ரொம்ப ஆதரவா எப்பவுமே இருந்தார் இல்லையா”

     

    “ரொம்ப கரெக்ட்ங்க”.

     

    “உங்க வீட்டுக்கு சமீபத்துல அவர் எப்போ வந்தார் மிஸ்டர் முரளி.”

     

    “இல்லங்க.. அவர் யார் வீட்டுக்கும் போகமாட்டார். என்னவோ தெரியலே.. அவர் அப்படியே பழகிட்டார்”.

     

    “நீங்க ரொம்ப நெருக்கங்கிறச்சே நீங்க எப்பவாவது ‘வாங்க மாமா என் வீட்டுக்கு’ன்னு அழைச்சிருக்கீங்களா?”

     

    முரளி விழித்தான். என்ன சொல்வதென்பது தெரியவில்லை என்பது போல கல்யாணைப் பார்த்தான். கல்யாண் உதவிக்கு வந்தான்.

     

    “அது வேற ஒண்ணும் இல்லே கோம்டி.. அவனுக்கு ரொம்ப மரியாதை பெரியப்பா மேலே. அவருக்குத் தெரியும் எப்ப வரணும்னு விட்டிருக்கலாம்! அப்படித்தானே முரளி?”

     

    “ஆமாண்டா.. அதுதான் சரியான பதில் கூட. நான் அவரை எதிர்த்துக் கூட பேசினதில்லே. அவர் சொல்லற வேலையெல்லாம் செய்யறது.. அவ்வளவுதான்”.

     

    முரளியை மறுபடியும் முதலில் கேட்ட கேள்வியை ஞாபகப்படுத்தினாள். “நான் முதல்ல ஒரு கேள்வி கேட்டேனே.. நீங்க எப்பவாவது உங்க மனைவியையும் கூட அழைத்து வருவதுண்டா? அல்மோஸ்ட் டெய்லி வரீங்க இல்லையா.. உங்க மனைவி எப்பவாவதும் ஒரு தடவையாவது கூட வந்தாங்களா..  ஜஸ்ட் கேக்கறேன்.. உங்களுக்கு இஷ்டமில்லைன்னா பதில் சொல்லவேணாம்.”

     

    “இல்லை.. மனைவி வரமாட்டா. முதல் காரணம் நான் ஆஃபீஸ்லேர்ந்து போகற வழியிலே கிண்டி இருக்கறதுனாலே நேரா இங்கதான் வருவேன். ரெண்டாவது காரணம் மூணு வருஷமாவே.. இப்படி பெரியப்பாவை பாக்கறதுங்கிறது அப்படியே பழகிப் போச்சு.. ஜஸ்ட் லைக் தட்.”

     

    “இல்லை.. நான் ஏன் கேட்டேன்னா ஒவ்வொரு தடவை பெரியப்பாவைப் பாக்க வரச்சே நீங்க எடுப்புச் சாப்பாடை பங்கு போட்டு சாப்பிடுவீங்க இல்லையா.. வீட்டுக்குப் போனா மனைவியும் எதிர்பார்ப்பாங்க உங்களோடு சாப்பிடணும்னு.. ஆனா நீங்க சாப்பிடறதில்லே.. இல்லையா.. உங்க மனைவிக்கு அதுவும் ‘ஒரு வருஷம் புதுசு’ மனைவிக்கு வருத்தம் இருக்குமே..”

     

    “என்னங்க நீங்க என் பெர்சனல் விஷயம்லாம் கேட்டுண்டு.. இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பலே..”

     

    என்று சொன்ன முரளி கொஞ்சம் கண்ணைத் துடைத்தபடி இருந்தான். கல்யாணிடம் முறையிட்டான், “அடேய்! போலிஸ் கூட இப்படியெல்லாம் கேட்டதில்லே.. இவங்க சொந்த விஷயம்லாம் கேட்கலாமாடா.. இதோ பார்.. என் மேலே ஏதாவது சந்தேகம் இருந்தா டைரக்டா சொல்லுடா.. நான் ஒண்ணும் தப்பா நினைக்கமாட்டேன். ஆனா இவங்க மூலமா இதெல்லாம் கேக்க வைக்காதே.”

     

    “முரளி.. என்னடா நீயே இப்படில்லாம் சொல்லலாமா.. இதோ பார். இதையெல்லாம் ஏன் உங்கிட்டே கோம்டி கேக்கறாங்க தெரியுமா.. உன் மேல யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னுதான், நீ ரொம்ப எமோஷனல்.. ஆனா அந்த எமோஷன் உணர்ச்சி உன்னை ஆபத்துல மாட்டக்கூடாதுன்னுதான் இத்தனை கேள்வியும்.. உனக்கொரு விஷயம் சொல்லறேன்.. என்னைக் கூட இப்படியெல்லாம் பெர்சனல் விஷயம்லாம் கேட்டாங்க.. நான் அசராம பதில் சொன்னேன். ஏன்னா இது கொலை வழக்குடா.. உண்மையான கொலைகாரனை விட்டுட்டு உன்னை மாதிரியான அப்பாவியை போலீஸ் மாட்டிவிடுமேன்னு ஒரு அக்கறைதான்.. நீ எமோஷனல் ஆகாம பதில் சொல்லுடா..”

     

    “ஸோ.. இவங்க என் பெர்சனல் விஷயம் கேட்டாங்கன்னா கூட என்னைக் காப்பாத்தத்தான்னு சொல்லறே.. ஓகேடா.. “மிஸ் கோம்டி.. இங்க பாருங்க.. என் மனைவிக்கு நான் எங்க மாமாவோட பிரியமா இருக்கறது ஆரம்பத்துலேர்ந்து பிடிக்கலே. எதுக்குன்னு கேட்டா என்ன சொல்ல முடியும். மாமியார் மருமகள் எதிரிங்க மாதிரி.. மாமனார் மருமகள்’ன்னு கூட வெச்சுக்கலாம்.”

     

    “வெரிகுட் மிஸ்டர் முரளி.. மாமனார் உங்க மனைவி மேலே மதிப்பு வெச்சுருக்காரா இல்லே அவரும் உங்க மனைவியை எதிரியாப் பார்த்தாரா?

     

    “அப்படில்லாம் பொய் சொல்லக்கூடாதுங்க.. அவர் ஒருவார்த்தை சொல்லமாட்டார்.”

     

    “அப்போ உங்க மனைவி மேலேதான் தப்பு இல்லையா? அவங்கதான் இவரை தப்பா புரிஞ்சுண்டாங்க இல்லையா? நான் அவங்ககிட்ட இதைப் பத்தி பேசலாமா உங்க அனுமதியோடதான்.”

     

    “கோம்டி மேடம் இது பிள்ளையார் பிடிக்க குரங்கா முடியுது. என் பொண்டாட்டியோட விசாரணைக்கெல்லாம் நான் ஒப்புக்கமாட்டேன், ஆமாண்டா கல்யாண் ஐ வில் நாட் அக்செப்ட். ஏன்னா நிச்சயம் எங்க குடும்ப விரிசல்லதான் முடியும். பிரியாவுக்கு கோபம் வந்தா அவ ராட்சஸியா மாறிடுவா”

     

    “ஓ.. ஒருவேளை அப்படி ராட்சஸியா மாறவிடக் கூடாதேங்கிற நல்ல எண்ணத்துலதான் நீங்க உங்க மாமாவை உங்க வீட்டுக்குக் கூப்பிட்டதில்லே.. இல்லையா சார்?”

     

    “நீங்க என்னதான் சொல்ல வர்றிங்க?”

     

    “ஆறு மாசம் முன்னாடி ஒரு சித்ரா பௌர்ணமி நாள்ல இங்க பொன்னம்மா அதான் இந்த வீட்டு வேலைக்காரி மூலமா சித்ரான்னங்கள் பலவகைப்பட்ட ருசியில் செஞ்சிண்டு அதை எடுத்துண்டு உங்க வீட்டுக்கு உங்க மாமா கார்ல வந்தாரு.. அப்போ உங்க வீடு பக்கத்துத் தெருவுலதான் இருந்தது. அதனால பொன்னம்மாவையும் அங்க பாத்திரம் கழுவணும்னு சொல்லி நடந்து வரச் சொன்னாருங்கறதாலே அவளும் கொஞ்சம் லேட்டா வந்தா. அப்போ உங்க மனைவி அழுதுண்டே கிச்சன் உள்ளே இருந்தாங்க.. நீங்க சமாதானப்படுத்தி ஹால் உள்ளே அழைச்சுண்டு போனீங்க.. எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டீங்க.  பொன்னம்மா எல்லா பாத்திரத்தையும் கழுவிட்டு தான் போகலாமா’ன்னு உங்க மாமாவைக் கேட்டுட்டு வெளியே போனா. அப்போ பிரியாவும் வெளியே வந்து அவளைத் தடுத்து நிறுத்தி வெளியேயே ‘பொன்னம்மா என்னையும் அழைச்சுண்டு போ.. இல்லைன்னா நீயும் இங்க நைட்டெல்லாம் இருந்துடணும்’னு அவ காலப் பிடிச்சுக் கெஞ்சினாங்க உங்க மனைவி.. பொன்னம்மாவுக்கு என்ன செய்யறதுன்னுத் தெரியலே.. அவ என்ன பண்ணாள்னா உங்க பொண்டாட்டியை கீழே மயக்கமா விழச் சொல்லியிருக்கா.. அந்தம்மா விழுந்தவுடனே குய்யோ முய்யோன்னு சப்தம் கூட்டி ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு போய் உங்க மனைவிக்கு குளுகோஸ் ஏத்தி அடுத்த நாள் காலைல ஜாக்கிரதையா அழைச்சுட்டு வந்தா. இதுல வேடிக்கை என்னன்னா தன் பொண்டாட்டியைப் பாக்கறதுக்கு ஆஸ்பத்திரிக்கு முரளியோ இல்லே மாமாவோ போகவே இல்லை. அடுத்த வாரமே நீங்க உங்க வீட்டையே இங்க கிண்டியிலிருந்து கொஞ்சதூரம் தள்ளி அதாவது நங்க நல்லூர் பக்கம் மாத்திட்டீங்க.. மிஸ்டர் முரளி.. நான் சொன்னது இப்போ எல்லாம் உண்மைதானே.. இதோ பாருங்க.. பொய் பேசாம நிஜத்தைச் சொல்லுங்க.. அது உங்களைக் காப்பாத்தும்.. இல்லைனா அனாவசியமா உங்க பொண்டாட்டியை போலீஸ் அழைச்சுட்டுப் போய் கேள்வி கேட்கும். அந்தம்மா உண்மையத்தான் சொல்லும். சாட்சிக்கு பொன்னம்மாவும் இருக்கா இல்லையா.. அதனால பயப்படமாட்டாங்க.. இப்போ மாமா வேற உயிரோட இல்லை. சொல்லுங்க மிஸ்டர் முரளி!”

     

    கல்யாண் அவளைப் பார்த்துக்கொண்டே வியப்பின் உச்சத்தில் சென்றான் என்றால் முரளி அழ ஆரம்பித்து விட்டான்.

     

    “கல்யாண்.. நம்ம குடும்ப மானம் போகணும்னு நீ டிசைட் பண்ணிட்டே போலிருக்கு!” என்று சொல்லி விட்டு ஓவென அழுதான். ஆனால் கல்யாண் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. ஒரே வார்த்தைதான் சொன்னான்.

     

    “நமக்குத் தேவை இப்போ எமோஷனல் இல்லை.. உண்மை.. உண்மையைச் சொல்லு. இல்லைனா என்ன நடந்ததுன்னு என்னாலே உன் பொண்டாட்டியிடம் பயமுறுத்திக் கேட்டு பதில் வாங்கமுடியும்.”

     

    “இல்லே என்னால எந்தப் பதிலயும் தரமுடியாது. ஐ டிக்ளைன் டு ஆன்ஸ்வர். நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ.”

     

    “இங்க நடந்தது ஒரு கொலை மிஸ்டர் முரளி..  எனக்குக் கொஞ்சம் விவரம்தான் கிடைச்சுது. ஆனா இந்த விஷயம்லாம் போலீஸுக்கு வெல்லம் மாதிரி. போலீஸ்க்காரங்க துருவித் துருவி அவங்க பாணில கேட்டு, உங்களைத் துன்புறுத்தி இருட்டு ரூம்ல  வெச்சு உங்களை விசாரிச்சாங்கன்னா அப்போ எல்லா விடைகளும் டக் டக்னு சொல்லிடுவீங்க.. இது போலீஸ்கிட்ட போகறதா இல்லே நம்மோடேயே இருந்து சால்வ் பண்ணப் பாக்கலாமா?” கோம்டி அவனைப் பயமுறுத்தினாள்.

     

    “அப்படின்னா போலீஸ் வரைக்கும் போகாது.. இல்லையா?”

     

    கல்யாண் பட்டும் படாமல் சொன்னான். “சொல்லு முரளி.. நீ சொல்றதப் பொறுத்து எல்லாமே இருக்கு.”

     

    கல்யாணிடம் நெருங்கி வந்தான் முரளி. அவன் கைகளைப் பிடித்துக்கொண்டான். அவன் குரலில் துயரம் அதிகம் இருந்தது.

     

    “கல்யாண்.. நீ நினைக்கிற மாதிரி அவ்வளோ நல்லவரில்லே மாமா.. ஐ மீன் உங்க பெரியப்பா. அவருக்குக் கல்யாணம் ஆகலேயே தவிர அவர் இப்போவரைக்கும் பல பொண்ணுங்க வாழ்க்கைல மோசடி பண்ணி ஏமாத்தி இருக்கார். அதுல ஒருத்திதான் என் பொண்டாட்டி.”

     

    “என்னடா சொல்லறே?” கல்யாண் அதிர்ந்து போனான். முரளி தன் தலையில் கைவைத்துக்கொண்டே சோகமாக சொன்னான்.

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 9

    திவாகர்

     

    “சரியா சொல்லறீங்க. இந்த கேஸுலேர்ந்து தப்பிக்கற வழிக்காக அடிக்கடி தன்னை ரிசர்வ்டு டைப்’ன்னு சொல்லறாரோ என்னவோ..

     

    “அதுவும் கரெக்ட்தான் சார்..”

     

    “கோமதி..”

     

    “ஸார் நான் கோம்டி சார்..”

     

    “சரி  கோம்டிதான். கொஞ்சம் இந்த சுமதி விஷயமும் பாருங்களேன்.. எனக்கு ரொம்பவே ஏதோ இங்கே இடிக்குது. அந்தப் பொண்ணு மேலே சந்தேகம் இன்னும் தீரலே.. கல்யாண் ரொம்பவே இரக்கம் காட்டி சப்போர்ட் பண்றார்..”

     

    கல்யாண் நெளிந்தான்.. “அது அப்படியெல்லாம் இல்லே சார்..”

     

    கோம்டிக்கு கோபமே வந்தது.

    “யார் சார் இந்த சுமதி.. எனக்குத் தெரியாத விஷயமா இருக்கு.. எனக்கு கல்யாண் இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலே..”

     

    “சுமதியை சரியா விசாரிங்கன்னு எனக்கு சிபாரிசு பண்ணதே முரளிதான். காரணம் இல்லாம முரளி எனக்கு இவ பேரைக் கொடுத்திருக்கமாட்டாரு. எதுக்குன்னா அன்னிக்கு சுமதி வீட்டுக்கு உங்க பெரியப்பாவை கார்ல டிரைவ் பண்ணிப் போனதே முரளிதான்..”

     

    குழப்பமாகப் பார்த்தாள் கோம்டி. அவளுக்கு அன்று தான் இன்ஸ்பெக்டரோடு சென்றபோது நடந்ததை விவரித்தான். முடிவில் அவள் எப்படி இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தமுடியும் என்று கேள்வியும் எழுப்பினான்.

     

    “ஸார்.. இதைக் கொஞ்சம் தீர்க்கமா யோசிச்சா புரியும். பெரியப்பா எத்தனையோ பேருக்கு இந்த மாதிரி உதவி பண்ணியிருக்கிறார். அதுல ஒருத்திதான் இந்த சுமதி.. இன்னும் உதவி பண்ணக்கூட இல்லே.. அதுக்குள்ளே அவர் போயிட்டார். சுமதியை இதுக்காக எப்படி சந்தேகப்படமுடியும்.?” ஆனால் கோம்டி குறுக்கிட்டாள்.

     

    “நீங்க எதுக்காக அவளுக்கு வக்காலத்து வாங்கற மாதிரி பேசணும்? முரளி சொன்னாருன்னா இதுல ஏதோ விஷயம் இருக்குன்னுதான் அர்த்தம். அவளோட அட்ரஸ் கொடுங்க.. நானே போய் விசாரிக்கிறேன்..”

     

    “கரெக்ட் கோமதி.. சாரி….. கோம்டி..  உங்களுக்கு சுமதி அட்ரெஸ் மெஸ்ஸேஜ் பண்ணிடறேன்.. பார்த்துட்டு வந்து எனக்கும் விவரம் சொல்லுங்க.. இவரோட பார்வை வேற.. உங்க பார்வை வேற இல்லையா..”

     

    அதே சமயத்தில் ஒரு அனாதை ஆசிரமம்.. பாலபாலிகா என்று பெயர்ப் பலகை இருந்தது.  அருகே தன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான் சுந்தர். இவன் அங்கு நுழைந்ததைப் பார்த்துவிட்டு அவன் பின்னே தொடர்ந்து வந்த  ரவியும் தன் வண்டியை வெளியேயே நிறுத்தி விட்டு சுந்தர் உள்ளே சென்றதைப் பார்த்து பின் தொடர்ந்தான். சுந்தர் அங்கே உள்ளே சென்றதும் அங்குள்ள ஒரு வயதானவரிடம் பேசிவிட்டு அவர் அழைத்துச் செல்ல உள்ளே சென்றான்.

     

    இங்கே போலிஸ் ஸ்டேஷனிலிருந்து கோம்டியும் கல்யாணும் கிளம்பினார்கள். காரில் போகும்போது முதலில் ரவிக்கு ஃபோன் செய்தாள். ஸ்பீகர் வாய்ஸ் இல் ஃபோனை வைத்துக்கொண்டாள். அதனால் காரை டிரைவ் செய்துகொண்டிருந்த கல்யாணும் கேட்கமுடிந்தது. சாலை ஓரத்தில் இருந்த ரவி ஃபோனை எடுத்தான்.

     

    ‘கோம்டி! நீ சொன்னது சரி, இப்போ இங்க பாலபாலிகா ஆசிரமத்துக்குள்ளே சுந்தர் நுழைஞ்சிருக்கான். இனிமேதான் நான் உள்ளே போய் விசாரிக்கணும். அவனுக்கு இங்கே என்ன வேலைன்னு தெரியலை.’

     

    ‘நான் எதிர்பார்த்தேன் ரவி.. சரி, நான் அவனுக்கு ஃபோன் பண்றேன்.. நீ அவன் வெளியே வந்தப்பறம் உள்ளே நுழைஞ்சு எதுக்கு அவன் வந்தான்னு கேட்டுக்கோடா.. அவன் உன்னை பாக்கக்கூடாது..’

     

    ‘சரி.. கல்யாண் என்ன பண்றான்..?’

     

    ‘ம்ம்.. பல்லைக் காட்டிக் காட்டி வெறுப்பேத்திண்டிருக்கார்.. வைடா ஃபோனை..’

     

    ‘நீதானே ஃபோன் பண்ணே.. நீயே ஆஃப் பண்ணு..’

     

    சுந்தருக்கு ஃபோன் போட்டாள்..

     

    “மிஸ்டர் சுந்தர்! சாரி.. ஆஃபீஸ்லதானே.. உங்களை டிஸ்டர்ப் பண்றேனா?”

     

    “நிச்சயமா ஆஃபீஸ்லதான்.. ஆஃபீஸ்லதான் இருக்கேன்.. .. எனக்கு நிறைய வேலை பாக்கி இருக்குன்னு சொன்னேனே.. இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க.. என்ன விஷயம்..?

     

    ‘எனக்குத் தெரியும் சார்.. இப்போதானே உங்களை அங்கே பார்த்தேனே.. மீடிங்க் கீடிங்க் போயிட்டீங்களோன்னுதான் கேட்டேன்.’

     

    ‘ஆமாங்க.. உங்க கால்னவுடனே மீடிங்க்லேர்ந்து நடுவுல வந்திருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க.. திரும்பவும் நான் மீடிங்க் போகணும். எல்லோரும் காத்துண்டிருக்காங்க.. என்னோட ப்ரெஸெண்டேஷன் வேற இருக்கு. என்ன விஷயம்?”.

     

    “சார்.. உங்களை கேக்க மறந்துட்டேன்.. உங்க அங்கிள் கொலை செய்யப்பட்ட அன்னிக்கி நீங்க ஊர்ல இல்லே.. முரளி ஃபோன் செய்த உடனே நாலு நாலரை மணி நேரத்துல ஸ்பாட்டுக்கு வந்துட்டீங்க இல்லையா? சுந்தர் நீங்க எந்த ஊர்லேர்ந்து புறப்பட்டு வந்தீங்க?”

     

    அவன் கோபம் அவன் குரலில் தெரிந்தது. “என்னங்க என் மேல ஏதாவது சந்தேகமா? டைரக்டா சொல்லுங்க.. நான் நேரே கல்யாண்கிட்டயே பேசறேன்.. இல்லே போலீஸ்கிட்ட சொல்லிக்கிறேன்.. இல்லே ஒரு வக்கீல் மூலமா கூட பேசுவேன்.”

     

    “ஐய்யய்யோ.. என்னங்க நீங்க இவ்வளோ கோபப்படறிங்க.. விவரம் சேகரிக்கறச்சே நான் சரியா கலெக்ட் பண்ணணுங்க.. இப்போ நான் முடிவுல கல்யாண்கிட்டே ரிப்போர்ட் தரணும்.. மிஸ்டர் சுந்தர்னு வரச்சே நான் சரியா எழுதணும்.. கொலை நடந்த அன்னிக்கி விவரம் கேட்டவுடனே சுந்தர் இந்த ஊரிலேர்ந்து இத்தனை நேரத்துல புறப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்தார்னு சரியா எழுதணுமா இல்லையா.. இன்ஸ்பெக்டர் மோகன் அதான் அந்தப் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட இப்பல்லாம் எங்கிட்டே சும்மாச் சும்மா விவரம் கேட்கிறார். கொஞ்சம் கோஆபரேட் பண்ணுங்க சுந்தர். “

     

    போலீஸ் இன்ஸ்பெக்டர் எனும் வார்த்தையைக் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள் கோம்டி. அது வேலையும் செய்தது. சுந்தரின் குரல் சாந்தமாக வந்தது.

     

    “இப்போ நான் அன்னிக்கு எங்கேயிருந்து கிளம்பி வந்தேங்கிறது வேணும் இல்லையா.. எனக்கு முரளி ஃபோன் பண்ணது ராத்திரி எட்டு மணிவாக்குலதான்.. அப்போ சரியா வைத்தீஸ்வரன் கோயில் மேற்கு வாசல் வீதிலே ஒரு ஓட்டல்ல டிபன் சாப்பிட்டுண்டு இருந்தேன். அப்போ கிடைச்ச செய்தி என்னை உடனடியா கிளம்ப வெச்சது.  ராத்திரி அரௌண்ட் பன்னிரண்டரை ஒண்ணுக்கெல்லாம் பெரியப்பா வீட்டுக்கு வந்துட்டேன். இவ்வளவுதான்.. இதுக்கும் மேல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. நான் மீடிங்க் போகணும்.. ஆனா உங்களுக்குப் பதில்சொல்லிட்டே போறேன். போதுமா..?”

     

    “வைத்தீஸ்வரன் கோயில்ங்கிறது சிதம்பரம் தாண்டினா வரும் இல்லையா?”

     

    “ஆமாங்க.. அன்னிக்கு நான் சிதம்பரம் கூட போயிருந்தேன்.”

     

    “சிதம்பரம் போனீங்களா?” கோம்டி சாதாரணமான குரலில்தான் கேட்டாள்.

     

    “சிதம்பரம்…” என்று சொல்லிவிட்டு அவன் குரல் நிதானித்தது.. “ஆமாங்க..  மத்தியானம் லஞ்ச் டைம்ல அங்க சாமி தரிசனம் பண்ணிட்டு அப்படியே இங்க வைத்தீஸ்வரன் கோயில் போயிட்டு கூடவே..”

     

    “நாடி ஜோஸ்யம் பார்த்துட்டு டிபன் சாப்பிடப் போயிட்டீங்க.. அப்போ கால் வந்தது.”

     

    “எப்படிங்க நாடி ஜோஸ்ய விஷயம்லாம் தெரிஞ்சுண்டீங்க.. கரெக்ட்தான்..”

     

    “ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் சுந்தர்.. இப்போ நீங்க உங்களோட மீடிங்க் போங்க.. அப்புறமா தேவைப்பட்டா கூப்பிடறேன். வெச்சுடட்டுமா?”

    அவன் திரும்ப பதில் சொல்லாமல் கட் செய்தது அவர்களுக்குத் தெரிந்தது.

     

    “எங்கேயோ அனாதை ஆசிரமத்துலேர்ந்து பேசிண்டு தன்னோட ஆஃபீஸ் மீடிங்க்னு சொல்றான் கல்யாண்.. கேட்டீங்களா.. இந்த சுந்தர் சொல்றது எல்லாமே சுத்தப் பொய்! இவன் சிதம்பரத்துக்குப் போனது மட்டும் உண்மை. சிதம்பரத்துல அந்த ரஞ்சிதாவைப் பார்த்திருக்கிறான் என்பது என் ஊகம்…”

     

    சட்டென காரை பிரேக் போட்டு சாலைப் பக்கத்தில் நிறுத்தினான் கல்யாண். அவன் குரலில் ஆச்சரியம் அதிகமாக இருந்தது.

     

    “எப்படி சொல்லறீங்க கோம்டி?.. சுந்தர் இந்தக் கொலைல இன்வால்வாகி இருப்பாங்கிறிங்களா?”

     

    “அது எனக்கு எப்படித் தெரியும்? அதைக் கண்டுபிடிக்கவேண்டியது போலீஸ். ஆனா அவங்களாலே சிதம்பரத்துல விலாசம் இருந்தும் ரஞ்சிதா’ங்கறது யாருன்னே கண்டுபிடிக்கமுடியலியே..”

     

    “அப்போ நீங்க மட்டும் எப்படி சிதம்பரம் விஷயத்துல அவன் பொய் சொல்லறான்னு சொல்லறீங்க?..

     

    “அவன் எங்கிட்டே பேசின விதம் கேட்டீங்களா? சிதம்பரம்ங்கிற வார்த்தையை ரொம்ப கவனமா நிதானிச்சு யூஸ் பண்ணான். ஒருவேளை அவன் சிதம்பரத்துக்குள்ளே போகலே, பைபாஸ்ல வைத்தீஸ்வரன் கோயில் ரோட்ல போனேன்னு சொன்னான்னு வெச்சுக்குங்க.. நானோ இல்லே போலீஸோ சிதம்பரத்துல ரஞ்சிதாவைப் பிடிச்சுட்டோம்னா இவனுக்கு டேஞ்சர் இல்லையா.. அவ நிச்சயமா இவன் பேரைச் சொல்லுவான்னு அவன் பயந்திருக்கலாம். ஆனா சரியா யோசிக்காம தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டான் உங்க சித்தி பையன்.”

     

    “என்ன தப்பு?”

     

    “லஞ்ச் டைம்ல கோயில்ல போயி தரிசனம் பண்ணிட்டு’ன்னு சொன்னான் பாருங்க.. அது தப்பு. கரெக்டா பன்னெண்டு மணிக்கு சிதம்பரம் கோயில் க்ளோஸ் பண்ணிடுவாங்க. ஆனா இவன் சிதம்பரம் போனதும் அந்த பத்து லட்சம் பணத்தைப் பட்டுவாடா பண்ணியதும் உண்மையா இருக்கலாம்.. நாம நிறைய இன்னும் இதுல கண்டுபிடிக்கணும், இதை நாம் இப்போதைக்கு இன்ஸ்பெக்டருக்கு சொல்லவேணாம்!”

     

    “ஹைய்யோ.. உங்களுக்கு எப்படித் தெரியும் கோயில் சரியா க்ளோஸ் பண்ற டைம்லாம்..”

     

    “நாங்க ஒருவாட்டி பன்னிரெண்டு மணி வாக்குல நடராஜர் தரிசனத்துக்காக போயிருக்கோம். கோயில்ல ‘மூடற  நேரம்..’னு சொல்லிட்டு தரிசனத்துக்கு கடகடவென ஓடச் சொன்னாங்க.. இல்லேன்னா சாயங்காலம் நாலு மணி வரைக் காத்திருக்கணும்.. நல்ல வெய்யில் காலத்துல அந்தக் கோயில் வடக்கு வாசல்லேர்ந்து கனகசபை வரைக்கும் வேகவேகமா ஓடிப்போயி பன்னெண்டு மணி அடிக்கறதுக்குள்ள நடராஜரைப் பார்த்துட்டோம். அப்போதான் பூஜை முடிஞ்சு நல்ல அலங்காரத்துல கற்பூர தீபாராதனைப் பார்த்தது எங்க நெஞ்சுல அப்படியே பதிஞ்சுருக்கு. தரிசனம் பண்ணிட்டு இப்படி வந்தோம். சொன்னபடி கோயில் சபையை மூடிட்டாங்க.”

     

    “நீங்க கச்சிதமா சொல்லறதையெல்லாம் பார்த்தா எனக்கு எல்லார் மேலயும் சந்தேகம் வருது கோம்டி. சரி, நீங்க சொல்றபடியே இன்ஸ்பெக்டர்கிட்டே அப்புறமா சொல்லிக்கலாம். ஆனா எங்க பெரியப்பா இந்த பண மேட்டருக்கெல்லாம் முரளியைத்தான் அதிகம் ஹெல்ப் எடுத்துக்குவாரு, முரளியை நீங்க விசாரிங்க.. நான் விசாரிச்சா அவன் என்கிட்டே அழுதுடுவான், கொஞ்சம் வெகுளி. வெளிப்படையா பேசுவான்,, அவனை நான் போய் ஏதாவது கேட்டா என்னை சந்தேகிக்கிறாயாடா’ ன்னு நேரடியா கேட்பான். அத்தோட போலீஸ் கூட அவன் பேருல ரொம்ப சந்தேகம் காட்டுது. ஏன்னா அவன் மட்டும்தான் பெரியப்பாவுக்கு ரொம்ப க்ளோஸ். அதனாலெல்லாம் அவனை சந்தேகப்படலாமா? ஆனா, சுந்தரை நேரா பார்த்து நானே கேட்கிறேனே.. உண்மை எனக்குப் பாதி தெரியுங்கிறப்போ மீதியையும் அவன் சொல்லியாகணும் இல்லையா.. கொலைக்கு இந்த விஷயம் சம்மந்தமில்லேன்னா நிச்சயமா அவன் நடந்ததைச் சொல்லுவான். இல்லேன்னு முழு பூசணிக்காயை மறைச்சான்னா நாம் போலீஸ் வெச்சே டீல் பண்ணுவோம்.. என்ன சொல்லறீங்க.”

     

    “ஆனா இன்ஸ்பெக்டர் மோகன் சிதம்பரம் அட்ரஸ்ல யாரும் அப்படி ஒரு பேருல இல்லேன்னு சொல்றதையும் நாம கணக்குல எடுத்துக்கணும். சுந்தரை நீங்க விசாரிக்கவேணாம்.. உங்கள்ட்ட பேசறச்சே உரிமை எடுத்துக்கலாம். ஆனா நானே பேசறேன். ஒருவேளை இந்த ரஞ்சிதாங்கிற பேரை வெச்சு சுந்தர் ஏதேனும் கோல்மால் பண்ணியிருந்தா?.. ஒரு பேச்சுக்குச் சொல்லறேன். உங்க பெரியப்பாவையே பண விஷயத்துல சுந்தர் மோசம் பண்ணியிருக்கமாட்டாருன்னு என்ன நிச்சயம்? கொலைக்கு இது சம்பந்தப்படாதுதான், ஆனா உங்க பெரியப்பா ஏன் இப்படி இதுதான் கடைசி.. இனிமே கேக்காதேங்கிற மாதிரி எழுதணும்?”.

     

    “அப்போ இது ஒரு தனிக் கேஸா இல்லே மாறும்.  நோ நோ இப்படி நாம திசை மாறக்கூடாது.. இப்போ நம்ம ரூட்டே கொலை ஏன் நடந்தது. யார் கொலைகாரன்.. அவ்வளவுதான். ஒருவேளை ஏதாவது பணமோசடியை சுந்தர் எங்க பெரியப்பாகிட்டே பண்ணான்னா அது அவங்க தலையெழுத்து. எப்படி வேணா போகட்டும் அவங்க..”

     

    எரிச்சலுடன் சொன்னவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

     

    “அப்படியே பணமோசடின்னு தெரிஞ்சாதான் இந்த மாதிரி வேற எங்கயாவது பண்ணியோ அல்லது இவரு ஏமாந்தோ அந்த வஞ்சம் தீர்க்கறதுக்காக இவரை கொலை பண்ணியிருக்கலாம். சுந்தர் ரஞ்சிதா மேட்டர் ஒரு சின்ன லீட் விஷயம். இதை இப்படித்தான் டீல் பண்ணனும் கல்யாண்.”

     

    அவன் ஒப்புக்கொள்வதைப் போல தலையாட்டினான். “சரி,  இப்போ நாம சுந்தரைப் பார்க்கப் போகணுமா? அவன் ஆபீஸ் மீடிங்க்னு அடாவடியா பொய் பேசினானே.. நம்மளைப் பார்க்க வருவானா?”

     

    “சுந்தரை இன்னிக்கு விட்டுப் பிடிக்கலாம். ரவி இப்பவும் அவனோட பின்னாலதான் இருக்கான்? அவனைப் பத்தி ரவி என்ன விஷயம் கொண்டு வர்ரான் என்பதைப் பொறுத்துதான் நாம் டீல் பண்ணியாகணும். நாம ஏதோ சந்தேகப் படறோம்னு அவனுக்குப் புரிஞ்சு போச்சு. அவன் ஃபோன் நம்பரை ட்ராக் பண்ணனும். எங்கிட்டே பேசினதலேர்ந்து அவன் யார்கிட்டயெல்லாம் பேசினான்.. நாளைக்குக் காலை வரைப் பேசப் போறான்னு விவரம் எனக்குத் தெரியணும். இந்த ட்ராக்கிங்க் விஷயத்துல எல்லாம் எனக்கு ஹெல்ப் பண்றவர் ஒருத்தர்கிட்ட  மெஸேஜ் அனுப்பிக் கேட்கிறேன்.. அவர் எனக்கு இதுமாதிரியெல்லாம் நிறைய உதவி செய்யறவர்தான். பொதுவா இந்த விவாகரத்துக்காக எங்கிட்டே நிறைய பேரு வரச்சே இவர்தான் குறிப்பிட்ட கல்பிரிட் ஃபோனையெல்லாம்  ட்ராக் பண்ணி கேஸை ரொம்ப சீக்கிரம் முடிச்சுக் கொடுக்க உதவியிருக்கார்.”

     

    “உங்க பிரதாபங்களையெல்லாம் கேட்கக் கேட்க பிரமிப்பாதான் இருக்கு. பேசாம பல் கிலினிக் மூடிட்டு நிரந்தரமா பெரிய அளவுல இன்வெஸ்டிகேடிவ் ஏஜென்ஸி வெச்சுடலாம். இந்த கேஸ் முடிச்சுக் கொடுங்க.. நானே பெரிய ஆஃபீஸ் வெச்சுக் கொடுக்கறேன்.”

     

    அவர்கள் வீடு இருக்கும் வீதி முனையிலேயே வண்டியை நிறுத்தச் சொல்கிறாள்.

     

    “எதுக்குங்க? நீங்க எனக்காக வேலை பண்ணறிங்க.. உங்களை உங்க வீட்டுல இறக்கி விடறதுதான் முறை.”

     

    “இந்த முறை கிறை எல்லாம் வேண்டாமே.. எங்க வீட்டுல நான் உங்களுக்காக வேலை பண்றது அவங்களுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலே.. நீங்க என்ன பண்ணுங்க உங்க பெரியம்மா பையன் முரளிக்கு ஃபோன் பண்ணி சாதாரணமா வீட்டுக்கு வரச் சொல்லுங்க.. நானும் அப்போ வரேன்.  ஓகே.. பை.,”

     

    “பை.”. என்று சொல்லிவிட்டு தன் எத்துப்பல்லு தெரிய சிரிக்கிறான்.

     

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 7

    திவாகர்

    “மிஸ்டர் கல்யாண் எனக்கு நீங்க ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும். நீங்க எனக்கு இந்த கேஸ் ஹாண்டில் பண்ற அதிகாரத்தை ஒரு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் மூலமா தரணும். சில பேருகிட்டே விசாரிக்கறச்சே என்னை ‘நீ யாருன்னு’ கேக்கறச்சே ஒரு ப்ரூஃப் தேவைப்படுது. அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல நான் உங்க சார்பா வேலை செய்யறேன்னு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துடுங்க.. அது போதும். மிச்சதை நான் பாத்துக்கறேன்.”

    சாந்தியிடம் திரும்பினாள். ‘இல்லடி சாந்தி.. இந்த கேஸ் நாம எடுத்தே ஆகணும்.. எடுக்கறேன்.. இவருக்கு நியாயம் செஞ்சு காமிக்கறேன்.. எனக்குக் கூடவே ரவி வேற இருப்பான்.. அதுக்கப்பறம் அமெரிக்கா விஷயம் பார்த்துக்கலாம். என்னோட கிளையண்ட் வேலை முக்கியம்.”

     

    “அப்போ நான் சொன்னதை கேக்கப்போறதில்லே” என்று கோம்டியைக் கேட்டுவிட்டு கல்யாணைப் பார்த்தாள்.

    கல்யாண் அவளைப் பார்த்து சின்னதாக சிரித்தான். அவன் தெத்துப் பல் அவளைப் பயமுறுத்தியது.

     

    “ஏய் கோம்டி.. என்னைக் கேட்டா நீ இவருக்கு கிளையண்டா இருக்கறதை விட இவரை முதல்ல உன் மெடிகல் க்ளையண்டா மாத்தி அவரோட இந்த ரெண்டு பல்லையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துடுடி பாக்கலாம். என்ன கல்யாண்.. நீங்க பயப்படறீங்களா.. சார்.. எங்க காலேஜ் ஆஸ்பத்திலேயே பல் ஆபரேஷன் விஷயத்துல இவ கோல்ட் மெடல் வாங்கினவ. பெர்ஃபெக்ட்டா பண்ணுவா.. இன்னொண்ணு சொல்லட்டுமா சார்.. தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”

     

    கல்யாண் பதில் எதுவும் சொல்லவில்லையென்றாலும் சாந்தி கவலைப் படவில்லை. அவளே பதில் சொன்னாள்.

     

    “உங்க ரெண்டு பல்லையும் எடுத்துட்டு அங்க ரெண்டு புதுப்பல் கட்டினீங்கன்னா சார்..  சூபரா ஆயிடுவீங்க.. பொண்ணுங்க கூட கிடைப்பாங்க.. அப்பறம் கல்யாணம் கூட சீக்கிரம் ஆயிடும் சார்..”

     

    என்று சொல்லிவிட்டு ‘பை, வரேண்டி கோம்டி, என்று பை சொன்னவள் திடீரென அவள் காதருகே ஏதோ சொல்ல கோம்டியும் தலையாட்ட சாந்தி போகிறாள்.

     

    கல்யாண் சற்று பயப்படுகிறான்.. “என்னங்க அந்த சாந்தி என்னைப் பத்தி என்ன சொல்றா.. ஏற்கனவே ரவி எனக்கு பயமுறுத்தல் பண்ணியிருக்கான் இவளைப் பத்தி.. அவ பல் கிலினிக் ஆரம்பிச்சா நான் அவளோட ஃபர்ஸ்ட் க்லயண்ட்ன்னு’

     

    “அதல்லாம் ஒண்ணும் இல்ல.. ஏன் மிஸ்டர் கல்யாண் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஸெல்ஃபீ எடுத்துக்கலாமா..” ஓ.. தாராளமா..” என்றவன் அவளருகே வந்து உதட்டைத் தன் கையால் மூடிக்கொண்டு போஸ் கொடுக்க, உடனே கோம்டி கிண்டல் செய்தாள். “ஏன் மிஸ்டர் கல்யாண்.. ஒரு பொண்ணோட நின்னு போஸ் தரச்சே சிரிக்கத் தெரிய வேணாமா? சிரிங்க சார்.. உங்க அழகான அதிர்ஷ்டப் பல்லை நல்லா காமிங்க.. பரவா இல்லே.”

     

    அப்படியே சிரித்து போஸ் கொடுத்துவிட்டு அவளிடம் விடை பெறுகிறான். அவன் போனவுடன் தன் ஃபோனில் பதிந்த படத்தை எடிட் செய்து தன் உருவத்தை அதிலிருந்து எடுக்கிறாள். இன்னொரு முறை அந்தப் படத்தைப் பார்த்தாள். தெத்துப்பற்கள் இரண்டும் நன்றாகத் தெரிய போஸ் கொடுத்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

     

    “நம்ம கிளினிக்ல இந்தப் படத்தைப் பெரிசா ஃப்ரேம் பண்ணி நாளைக்கே வெச்சுடலாம். பல் ஆஸ்பத்திரிக்கு பல்லழகன் படம் நல்ல விளம்பரம்தான்.  சாந்தி சொல்லறது கரெக்ட்.”

     

    சுந்தர் அலுவலகம்.

     

    காலை நேர வேளையில் சென்னை அண்ணாசாலையின் கட்டடம் ஒன்றில் இயங்கும் அலுவலகத்தின் காண்டீன் உள்ளே சுந்தர் காத்திருக்க அவன் எதிரே இருந்த இருக்கையில் கோம்டியும் ரவியும் உட்காருகிறார்கள். சுந்தர் கொஞ்சம் எரிச்சலைக் குரலில் காட்டி அவளிடம் பேசுகிறான்.

     

    “எதுக்கு அவ்வளோ அவசரமா என்னைப் பாக்கணும்னு ஃபோன்ல சொன்னீங்க? அங்கிள் சாவுக்கு மூணு நாள் லீவு போட்டதாலே வேலை நிறைய பெண்டிங்க். சீக்கிரம் சொன்னீங்கன்னா நான் வேலையைப் பாக்கப் போயிடுவேன். அஃப்கோர்ஸ்.. கல்யாண் உங்களைப் பத்தி சொன்னான். நீங்கதான் அவனோட சார்பா இந்த கொலை விவகாரத்தை விசாரிக்கிறீங்கன்னு..”

     

    “தேங்க்ஸ் சுந்தர்.. நான் கூப்பிட்டவுடனே வந்ததுக்கு. நீங்க எப்படி உறவு அதாவது உங்க மாமாவுக்கு?”

     

    “அதாவது எங்கம்மாவுக்குக் கூட பிறந்தவங்க ரெண்டு ஸிஸ்டர்ஸ். அதுல எங்கம்மாதான் கடைசி.  அக்கா அதாவது மூத்த பெரியம்மாவோட பையன் முரளி.. என்னோட ரெண்டாவது பெரியம்மாவோட பையன் கல்யாண்..”

     

    “அதாவது கல்யாணுக்கு நீங்க சித்தி பையன். முரளி பெரியம்மா பிள்ளை, ரைட்டா?”

     

    ரவி அவளிடம் முணுமுணுக்கிறான். ~ஆஹா.. எவ்வளோ சரியா கண்டுபிடிச்சே.. நேரா விஷயத்தைக் கேளு.. அது சரிங்க! உங்க மூணு கஸிங்களுக்குள்ளே நெருக்கம் எப்படி? தலயாட்டினான் சுந்தர்.

     

    “நாங்க மூணு பேரும் கிட்டத்தட்ட சினேகிதங்க மாதிரிதான் இருப்போம்.  ஆனா நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். அப்படியே வளர்ந்துட்டேன். . ஆனா முரளி சின்னப்பலேர்ந்து கல்யாண் வீட்டிலியே இருப்பான். கல்யாண் பெரியப்பாவும் சரி, தாத்தா பாட்டியும் சரி, அவனையும் அன்போடு பார்த்தாங்க. முரளியோட அம்மாவுக்கு தன் தங்கை அதாவது கல்யாணோட அம்மா துர்மரணமும் அவன் அப்பா இறந்ததும் ரொம்ப துக்ககரமா இருந்ததுன்னாலே அவங்களும் முரளியை அடிக்கடி கல்யாண் வீட்டுக்கு அனுப்பி கொஞ்சம் ஆதரவும் ஆறுதலும் தருவாங்க. ஆனா நான் கொஞ்சம் சின்னப் பையன் அப்படிங்கிறதனாலே என்னை அவ்வளவா சம்பந்தப்படுத்தலே. அதுக்காக நான் தூரமால்லாம் விலகிடலே.. அதே சமயத்துல கொஞ்சம் டிடாச்டா இருப்பேன்.”

     

    ரவி குறுக்கிட்டான்.

     

    “ஓ.. அப்போ நீங்க கந்தசாமி கூட அவ்வளவா பழகமாட்டீங்களா?”

     

    “அப்படில்லாம் ஒண்ணுமில்லே.. என்னையும் சமமா ஒரு மகனைப் போலத்தான் கந்தசாமி மாமா பார்த்தார். நானும் அப்பப்ப அவர் வீட்டுக்குப் போயிண்டு இருப்பேன். நிறைய பாசத்தை எங்கிட்டே காமிப்பார்.”

    கோம்டி கொஞ்சம் விறைப்பாக கேட்டாள். “சரி, முரளி அவருக்கு கார் ஓட்டுவாரு.. அவருக்காக ஷேர் மார்க்கெட் பார்த்துக்குவாரு. அவரோட பேங்க் விவகாரமெல்லாம் கூட பார்ப்பாரு, அந்தளவு நெருக்கம் உங்களுக்கு இல்லே.. சரியா?”

     

    “நீங்க எந்த ஆங்கிள்ல கேக்கறீங்கன்னு தெரியலே.. ஆனா உண்மை அதுதான். நான் அவன் அளவுக்கு அவரோட நெருக்கம் இல்லை. அதனால மாமாவுக்கு அன்பு என் மேல இல்லைன்னு கிடையாது. அவருக்கு என் மேலயும் அன்பு ஜாஸ்திதான்.”

    என்று சொன்னவன் தன் கைக்குட்டையை எடுத்துத் தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறான்.

     

    “நீங்க கடைசியா எப்போ கந்தசாமியைப் பாத்தீங்க? அவரோட என்ன பேசினீங்க?”

     

    “போன வாரம்.. அதாவது கொலை செய்யப்பட்டதுக்கு நாலு நாள் முந்திதான் பார்த்தேன். அவரோடு பேசிண்டிருந்தேன்..”

     

    “அவர் கூப்பிட்டு போனீங்களா.. இல்ல நீங்களா போனீங்களா?”

     

    “அவர்தான் கூப்பிட்டார். டின்னர் சாப்பிடலாம்னார். அதை அப்பப்ப செய்வார். முக்கால்வாசி யார் கூடவாவது சேர்ந்து சாப்பிட அவருக்குப் பிடிக்கும். அவர் கூட அடிக்கடி முரளி சாப்பிடுவான். முரளி இல்லாத சமயம் என்னைக் கூப்பிட்டுக்கொள்வார். ரொம்ப காலமா எடுப்புச் சாப்பாடுதானே.. பங்கு போட்டு சாப்பிடறதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. ரொம்ப லேட்டாப் போச்சு..

     

    ‘என் காரை எடுத்துண்டு போடா’ன்னார்.. கல்யாண் வரதுக்குள்ளே திருப்பித் தரலாம்னு நினைச்சு நான் அவர் காரை நான் யூஸ் பண்ணிண்டிருந்தேன். இது வழக்கம்தான். அப்பப்ப வந்து அவர் காரை எடுத்துண்டு போகறது வழக்கம்தான்.”

     

    “கார் விஷயம் இருக்கட்டும்.. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா இந்த கொலை வழக்குல..” “நிச்சயமா அப்படி இல்லே. யாரன்னு எப்படின்னு சொல்லமுடியும்? அவருக்கு எதிரிங்களே இல்லன்னுதான் இப்போவரைக்கும் நினைச்சுண்டுருக்கேன்,”  “இந்த ஷேர்மார்க்கெட் விஷயம்லாம் எப்பவாவது உங்ககிட்டே கந்தசாமி பேசியிருக்காரா?”

     

    “இல்ல மாடம்.. பிசினஸ் விஷயம்லாம் முரளிகிட்டே பேசற மாதிரி எங்கிட்டே பேசமாட்டாரு. அதோட ஷேர்மார்க்கெட்ல அவர் புலி. அவரோட கணிப்பு எல்லாமே சூப்பர்னு முரளி சொல்லியிருக்கான்.  நான் போகட்டா? ஆபிஸ் வேலை நிறைய பாக்கி இருக்கு. தேடுவாங்க.” சுந்தர் சொல்லிவிட்டு எழுந்தான்.

     

    ரவி அவளைப் பார்த்தான்.

     

    சரி மிஸ்டர் சுந்தர்.. நான் உங்கள்ட்ட மொபைல்ல விஷயம் ஏதாவது தேவைப்பட்டா கேட்பேன்.. உங்களுக்குத் தெரிஞ்சா எங்ககிட்ட ஷேர் பண்ணிக்குங்க..

     

    அவள் எழுந்து கிளம்பினாள். அதே சமயம் அவன் மொபைல் கால் வந்ததும் எடுத்து வரும் கால் நம்பரைப் பார்த்து பதில் சொன்னான். “நீங்க எனக்கு ஃபோன் செய்தபோதே கல்யாணுக்கு சொன்னேன். அவன் இப்போ ஃபோன் செய்யறான்.”  அவளெதிரே அவனிடம் பேசினான். “இதோ கிளம்பறாங்க.. எதனாச்சும் சொல்லணுமா.. ஒரு நிமிஷம்.. “ என்றவன் தன் கையிலிருந்த மொபைலை அவளிடம் நீட்டினான். “கல்யாண் லைன்ல இருக்கான் மேடம்.. பேசணுமாம்.”

     

    “என்ன கல்யாண்?” என்று கேட்டாள். அவன் அவளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறும் இன்ஸ்பெக்டர் மோகன் அவனை அழைத்திருப்பதாகவும் இவளும் அங்கு இருந்தால் நல்லது என்றும் சொன்னான். அவன் பதிலைக் கேட்டுவிட்டு அந்த மொபைலையும் சுந்தரிடம் உடனடியாக கொடுத்துவிட்டுக் கிளம்பினாள். ரவி பைக்கில் பின்னால் ஏறியதும் ரவியிடம் சொன்னாள்.

     

    ‘ரவி! நீ என்னை இந்தத் தெருக்கோடியிலேயே இறக்கிவிடு. நான் ஆடோவில் ஸ்டேஷனுக்கு போகிறேன். நீ என்ன பண்றேன்னா இப்போ இந்த சுந்தரை ஃபால்லோ பண்ணு.’

     

    ‘அவன் ஆபீஸுக்குள்ள போறான்.. சாயங்காலம் ஆகும் வெளியே வரதுக்கு. அதுவரைக்கும் காத்திருக்கச் சொல்லறியா?’ இல்லே.. இவன் நம்மளை ஏமாத்தறான்.. எப்படியும் கொஞ்ச நேரத்துல வெளிய வருவான் பாரு.. அவன் எங்க போறான்னு பாரு. விசாரி..

     

    அவள் அந்த சாலை முனையிலேயே இறங்குகிறாள். ரவி தன் பைக்கைத் திருப்புகிறான். கோம்டி அங்கே வரும் ஆட்டோவை நிறுத்துகிறாள்.

     

    போலீஸ் ஸ்டேஷன்.

     

    உள்ளே இன்ஸ்பெக்டர் அறையில் கல்யாண், கோம்டி இருவரும் அமர்ந்திருக்க இன்ஸ்பெக்டர் மோகன் ஒரு ஃபைலுடன் வருகிறார். அந்த ஃபைலிலிருந்து ஒரு கசங்கிப்போன பேப்பர் ஒன்றை உருவி அவனிடம் காண்பிக்கிறார்.

     

    “இது உங்க பெரியப்பா கையெழுத்துதானே மிஸ்டர் கல்யாண்?. இது உங்க வீட்ல வேலை செய்யற வேலைக்காரி பொன்னம்மா குப்பைத் தொட்டிலேர்ந்து எடுத்து வந்தா.. அவள் காலைல வந்து ரெண்டு மணி நேரம் வேலை செய்வா இல்லையா.. விசாரிக்கறச்சே அவளிடமிருந்து இது ஒண்ணுதான் உபயோகமுள்ளதா கிடைச்சுது. ஆனா குப்பைக் கூடைல போட்டது கூட முதல் நாள்தான் இருக்கணும். கொலை நடந்த அன்னிக்குக் காலைல இவ பெருக்கறச்சே உங்க பெரியப்பா இன்னும் எழுந்திருக்கலேன்னு பொன்னம்மா சொல்லறா. இன்னொண்ணு என்னன்னா முதல் நாள்தான் இவர் இதை எழுதியிருக்கணும். தினம் குப்பைத் தொட்டியை க்ளீன் பண்ற வழக்கம் உண்டாம். இதை அவளை அடுத்த நாள் விசாரிக்கறச்சே கொண்டு வந்து கொடுத்தா.. கசங்கிக் கிடந்தாலும் அது தேவை இருக்குமோ என்னவோன்னு எடுத்து வெச்சிருந்தாளாம். ஆனா இந்த விவரம் எதையோ சொல்லுது.. ”

     

    அவர்கள் இருவருமே சேர்ந்து படிக்கிறார்கள்.

     

    “ரூ பத்து லட்சம் அனுப்பியிருக்கிறேன்.. இனி இதற்கும் மேலே நமக்குள் ஒன்றுமில்லை – கந்தசாமி.”

     

    விலாசம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அது பேனாவால் அடிக்கப்பட்டிருந்தது. ரஞ்சிதா, கீழ வீதி, சிதம்பரம், அதையும் படித்தான் கல்யாண்.

     

    “சார், இது எங்க பெரியப்பா கையெழுத்துதான். கொஞ்சம் சாய்வா எழுத்து எழுதுவது சின்னப்போலேர்ந்து அவருக்குப் பழக்கம். இதை எழுதிட்டு கசக்கி குப்பைக் கூடைல எறிஞ்சிருக்காரா இல்லே வேற யாராவது எறிஞ்சிருப்பாங்களா.. இந்த ரஞ்சிதா யாரு சார்.. நீங்க விசாரிச்சா தெரியுமே.”

     

    “விசாரிச்சாச்சு கல்யாண்.. அப்படி யாருமே அந்த விலாசத்துல இல்லேன்னு சிதம்பரம் போலீஸ் சொல்லியிருக்காங்க. இது எதுக்காக இப்படி ஒரு தப்பான விலாசம் கொடுக்கணும்.. அத குப்பைக் கூடைல கசக்கி ஏன் போடணும்?”

     

    “ஸார்.. இதை எப்படி விசாரிச்சா இந்த ரஞ்சிதா சிக்குவான்னு தெரியலியே. ஒருவேளை எங்க பெரியப்பா மொபைல்ல ஏதாவது ரஞ்சிதா பேருல இருக்கா? உங்ககிட்டதான் சார் அந்த மொபைல் இருக்கு, துருவிப் பார்த்தா கிடைக்குமே ஸார்.”

     

    இன்ஸ்பெக்டர் வெறுப்போடு பேசினார்.

     

    “அந்த மொபைல்ல உள்ள காண்டாக்ட்ஸ் எல்லாம் அழிச்சிருக்காங்க.. உங்க பெரியப்பா லேடஸ்ட் மாடல் ஃபோன் வெச்சிருந்தா பரவாயில்லே.. ஆனா பழைய கால நோகியா ஃபோன் வெச்சிருந்தார். ஆனாலும் கைரேகையை செக் பண்ணச் சொல்லியிருக்கேன்.. அத்தோட இந்த ஃபோன்லேர்ந்து ஒரு பத்து நாளைக்கு இன்கம் அவுட்கோய்ங்க் கால்ஸ் கேட்டுருக்கேன்.. நாளைக்கு வரும்.  அந்த நம்பர்ல செக் பண்ணச் சொல்லி ஒரு கான்ஸ்டபிளைப் போட்டுருக்கேன்.  பார்ப்போம்.”

     

    “சார் அந்த லிஸ்ட் வந்தா எனக்கும் ஒரு காபி கொடுங்க சார்..”

     

    கோம்டி இன்ஸ்பெக்டரைக் கேட்டதும் சரியென தலையாட்டினார். அவளைப் பார்த்துக் கேட்டார்.   “என்ன மேடம் உங்களுக்குத் தகவல் ஏதேனும் கிடைச்சுதா?”

     

    “தேடிண்டிருக்கேன். இப்போ கூட இவரோட சித்தி பிள்ளை சுந்தரை அவரோட ஆஃபீஸ்ல பார்த்துட்டு வந்தேன்.”

     

    “என்ன சொல்றாரு. அவரு எங்ககிட்டே என்ன சொன்னாரோ.. அதையேதான் உங்ககிட்டயும் சொல்லியிருப்பாரு.”

     

    “சுந்தரை நான் கொலை விஷயமா விசாரணை பண்ணலே சார், இன்னும் கேட்டா அவர் கொஞ்சம்தான் டைம் கொடுத்தார். பெரிசா ஒண்ணும் தெரியலே. அவரோட குடும்பத்தோட தான் கொண்ட டிடாச்மென்ட் பத்தி மட்டும் பெரிசா பீத்தினார். இன்னொருவாட்டி பாக்கணும்.. அப்பறம்தான் எதுவும் சொல்லமுடியும்.”

     

    “சரியா சொல்லறீங்க. இந்த கேஸுலேர்ந்து தப்பிக்கற வழிக்காக அடிக்கடி தன்னை ரிசர்வ்டு டைப்’ன்னு சொல்லறாரோ என்னவோ..

     

    “அதுவும் கரெக்ட்தான் சார்..” “கோமதி..” “ஸார் நான் கோம்டி சார்..” “சரி  கோம்டிதான். கொஞ்சம் இந்த சுமதி விஷயமும் பாருங்களேன்.. எனக்கு ரொம்பவே ஏதோ இங்கே இடிக்குது. அந்தப் பொண்ணு மேலே சந்தேகம் இன்னும் தீரலே.. கல்யாண் ரொம்பவே இரக்கம் காட்டி சப்போர்ட் பண்றார்..”

     

    கல்யாண் நெளிந்தான்.. “அது அப்படியெல்லாம் இல்லே சார்..”

     

    கோம்டிக்கு கோபமே வந்தது.

     

    “யார் சார் இந்த சுமதி.. எனக்குத் தெரியாத விஷயமா இருக்கு.. எனக்கு கல்யாண் இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலே..” “சுமதியை சரியா விசாரிங்கன்னு எனக்கு சிபாரிசு பண்ணதே முரளிதான். காரணம் இல்லாம முரளி எனக்கு இவ பேரைக் கொடுத்திருக்கமாட்டாரு. எதுக்குன்னா அன்னிக்கு சுமதி வீட்டுக்கு உங்க பெரியப்பாவை கார்ல டிரைவ் பண்ணிப் போனதே முரளிதான்..”

     

    குழப்பமாகப் பார்த்தாள் கோம்டி. அவளுக்கு அன்று தான் இன்ஸ்பெக்டரோடு சென்றபோது நடந்ததை விவரித்தான். முடிவில் அவள் எப்படி இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தமுடியும் என்று கேள்வியும் எழுப்பினான்.

     

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 6

    திவாகர்

     

    ரவியும் கலந்துகொண்டான்.

    ஆமாம் சார்.. பாக்கறதுக்கு பரிதாபமா பட்டாலும் தீர விசாரிச்சா பலன் கிடைக்கும்.

     

    காவல் நிலையம் வருகிறது. அங்கே இன்ஸ்பெக்டர் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைப் பத்தி விசாரிக்கிறார்

    ‘என்னய்யா ஆச்சு.. அந்த கந்தசாமி PM ரிப்போர்ட் வந்தாச்சா? ‘வந்தாச்சு சார்.. இப்ப கூட அந்த பொண்ணு பேரு கோம்டி.. என்கிட்டே வந்து உங்க ரெண்டு பேரையும் சொல்லி கந்தசாமி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் காப்பி வாங்கிண்டு போச்சு..’ ‘வாங்கிண்டு போச்சா.. நானே இன்னும் பார்க்கலே.. அதுக்குள்ளே அந்த பொண்ணுக்கு என்ன அவசரம்?’ ‘சார்.. நாங்க ஒரிஜினல் கொடுக்கலை சார்.. ஜெராக்ஸ் காப்பித்தான் கொடுத்திருக்கோம்.. உங்க பேரையும் கல்யாண் பேரையும் சொல்லி கேட்கறச்சே இல்லே’ன்னு சொல்ல முடியுமா சார்..’

    கோம்டி வீடு.

    கோம்டியின் பல் மருத்துவ மனையில், சாந்தி, அவளது தோழி மற்றும் நர்ஸ்.

     

    பல் சுத்தப்படுத்திக்கொள்வதற்காக வந்த ஒரு பெண்ணை அப்படி சுத்தப்படுத்தி முடித்த நர்ஸ்பெண் வெளியே செல்ல அனுமதி கேட்டாள்.

     

    “மேடம், இன்னிக்கு ரெண்டு பேர்தான்.. நாளைக்கு நாலு கேஸ் புக் ஆகியிருக்கு.. இன்னிக்கு வேற எந்த கேசும் இல்லே.. என் வேலை முடிஞ்சுடுச்சு. நான் போவட்டா?” “சரி, நீ நாளைக்கு மறக்காம வந்துடு.. டெண்டல் செக்கிங்க் கேஸ்ங்க வந்தா நீயே பார்த்துடு.. சீரியஸ் கேஸ்ன்னா அப்பாயிண்ட்மென்ட் ரெண்டு நாளைக்கப்பறம் கொடு. அப்போ பாக்கறேன். எனக்கு நிறைய வேலை பாக்கி இருக்கு.. நீதான் எல்லாம் பார்த்துக்கணும்.”

    தலையாட்டிவிட்டு போகிறாள் நர்ஸ். சாந்தியும் கோமதியும் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டனர். சாந்தி வேடிக்கையாகக் கேட்டாள்..

    ‘ஏய்.. இப்படியா டென்டல் கிலினிக்கை வெச்சுருப்பே. கிளாஸ்ல நீதான் முதல்ல வருவே. ஆனா என்ன பிரயோசனம்? கோம்டி.. நீ நல்லா பெரிய கிலினிக் வெச்சு கொஞ்சம் தீவிரமா இந்த பிசினஸ் எப்போ நடத்தபோறியோ? விஸாதான் கிடைச்சுடுச்சு இல்லே.. என்னோட அமெரிக்க வந்துடுடி.. நமக்கெல்லாம் அங்கதான் மௌசு..”‘ ‘எங்கம்மா மாதிரி ஆரம்பிக்காதே.. நான் சொன்னேன் இல்லே? எனக்கு இந்த டெண்டலை விட முக்கியமான வேலை இருக்கு. இந்த கந்தசாமி கொலை கேஸை நான் தீவிரமா கையிலஎடுத்திருக்கேன் இல்லையா.. மேலும் கந்தசாமியோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எப்படியோ ஒரு காப்பி வாங்கிட்டேன்.. என்ன விசேஷம்னா இது தற்கொலை ஆ கூட இருக்கலாம்னு ரிமார்க் பண்ணியிருக்காங்க.”  ‘எப்படி போனா என்னடி, அவன் போயிட்டான்.. நாசமா போகணும்னு தினம் சாபம் போட்டோம்.. அப்படியே போயிட்டான்.. அது சரி, போலீஸ் இந்த பக்கம்லாம் இந்த கேஸ் விசாரிக்க ஏன் வரல்லே? ஆச்சரியம்தாண்டி. ஏய் சாந்தி, உனக்கு ரவி மூலம் இவனைத் தெரியணுமே?’  ‘தெரியுமே.. ரவியும் பல்லழகனும் பார்ட்னர்ஸ்னு நல்லாவே தெரியும்.’ ‘என்னா ஆச்சரியம்னா, நம்ம ரவி இவனுக்கு ஃப்ரெண்ட்’ந்னு வைசாக்கில தெரியறச்ச எப்படி இவன் நம்மளுக்கு தெரியாம போயிடுச்சுன்னு பார்த்தேன்’.  சாந்தி புன்னகைத்தாள். ‘வைசாக்ல இவங்க ரெண்டு பேரும் காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ். எனக்கு இவனை நம்ம காலேஜ் காலத்திலயே தெரியும். ஆனா ரவிக்கு எவ்வளவோ ஃப்ரெண்ட்ஸ்.. அதனால ஆச்சரியமா படலே. வைசாக்’ல இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வியாபாரம் ஆரம்பிக்கறச்சே ஒரு தடவை எங்க வீட்டுக்கு ரவியோட வந்துருந்தான். அப்பவே இவன் நம்ம கிளாஸ்’ல பல்லைக் காட்டி டிஷ்யூ பேப்பர் தின்ன வெச்சது ஞாபகம் வந்தது. ஆனா மரியாதைகாக அவன் முன்னாடி எதுவும் காமிச்சுக்கலே. ஆனா அவன் போனப்பறம் ரவிகிட்ட பல்லழகனோட பல்லைக் காமிச்சு கலாய்ச்சினது கூட இப்போ ஞாபகத்துக்கு வருது’ ‘அதை விடு.. அது எப்படி இந்த கேஸ் தற்கொலை வழக்குன்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சந்தேகமா கூட சொல்லமுடியும்? ரெண்டு குண்டு உடம்புல பட்டுருக்கு. ஒண்ணு நெத்தில.. இன்னொண்ணு மார்புல.. சரி, தற்கொலைன்னே வெச்சுக்குவோம். ஒரு கையாலே அவன் மார்புல சுட்டுருக்கான்? ஆனா உடனே உயிர் போகலேதான்.. இன்னொருவாட்டி அதே துப்பாக்கியாலே அவனே அவனோட  நெத்திப் பொட்டுல குறி வெச்சு சுட்டுருக்கான்.. சரி.. உடனே உயிர் போயிடறது.. இந்த தியரி எப்படி ஒத்து வரும்? ஒருவாட்டி தன்னைச் சுட்டுண்டவுடனே அவன் கீழே விழறதுக்குதான் சான்ஸ் அதிகம்.. அதெப்படி அவன் ரெண்டாவது முறை சுட்டுக்கமுடியும்.. அதுவும் முதல்ல மார்புல அதுக்கப்பறம் சரியா அவன் நெத்திபொட்டுல.. பீரோ ஹாண்டில்ல ரத்தக் கறை எப்படி வந்துச்சு.. இதெல்லாம் தற்கொலைக்கு நோ சான்ஸ்.” ‘ஆமாமா.. தற்கொலை பண்றவனா அவன்? நாலு பேரை அப்படி பண்ணிக்க வெச்சு சந்தோஷமா பாத்துட்டுருப்பான். தற்கொலைன்னு முடிவா சொல்லறதா அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்?’ சாந்தி ஆச்சரியத்தோடு கேட்டாள். ‘இல்லே. துப்பாக்கில அவன் கைரேகையில இருக்கு.. ட்ரிக்கெர் பிடில அவன் விரல் இருக்கு.. ஆனா அவனோட ரத்தக்கறை தரையிலயும் பீரோ கைப்பிடியிலும் இருக்கு. அவன் உடம்பு மேல எந்தத் தடயமும் இல்லை, அந்த ரூம்ல யாருமே இல்லாத சமயம் . இதெல்லாம் பாக்கறச்சே தற்கொலைக்கு நிறைய வாய்ப்பு இருக்கு.. ஆனா இது ஒரு நிச்சயமான கொலைன்னு எந்த ஆங்கிள்ல்ல சொல்லமுடியும்னு தெரியலே.. அப்படின்னு ரிப்போர்ட் எழுதி கொடுத்திருக்காங்க போஸ்ட்மார்ட்டத்துல.’ ‘உன்னோட பல்லழகர் என்ன சொல்லப் போறாரோ?’ ‘எதுக்குடி அந்த ஆளை என்னோட ஆள்னு சொல்லறே? அவனால் எனக்கு என்ன யூஸ்? அவனோட கேஸ் நான் எதுக்கு ஹாண்டில் பண்றேன்னா என்னோட ஒரே நோக்கம் இந்த கேஸ் மூலமா அந்தக் கந்தசாமியோட லீலைகள் வெளியே தெரியணும்னுதான். என்னோட டிரெயின்ல டிராவல் பண்றச்சே என்னமா அவன் பெரியப்பா பத்தி ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துண்டு பீத்திண்டு வந்தான் தெரியுமா.. நானும் உண்மை தெரியாம அம்போ’ன்னு ஆனந்தமா காது கொடுத்துக் கேட்டுட்டு அவன்கூட சேர்ந்து நாலு எக்ஸ்ட்ரா புகழ் வார்த்தைங்களை கந்தசாமின்னு தெரியாமயே சொல்லி வெச்சேன்.. இல்லல்ல.. இந்த பல்லழகன் ஒரு பாசக்கார ஆசாமி.. இவனுக்கு இவன் பெரியப்பா பெரிய நோபிள் பெர்சன்னு நினைப்பு. இந்த கேஸை விசாரிக்க தெய்வமே நமக்கு ஒரு சந்தர்ப்பமா கொடுத்துருக்கு. நாம் சரியா இதை ப்ரூவ் பண்ணி அந்த கந்தசாமி மகா பெரிய அயோக்கியன்னு அட்லீஸ்ட் இந்த வளர்ப்பு மகனாவது தெரிஞ்சுக்கணும்டி, பார்ப்போம். இவ்வளோதான் இவனால எனக்கு உபயோகம்.. வேறென்னடி இவனால எனக்கு பிரயோசனம். வேணுமின்னா இவன் எத்துப்பல்லை அழகா ஒரு க்லிக் பண்ணி ஃப்ரேம் போட்டு இந்த க்லினிக்’ல மாட்டலாம். விளம்பரத்துக்கு உபயோகப்படும்.’ திடீரென எதையோ நினைத்துக்கொண்டவள் போல சாந்தியைக் கேட்டாள். ‘ஏண்டி சாந்தி.. ரவிக்கு கந்தசாமி விஷயம், நாம சம்பந்தப்பட்டது எல்லாம் தெரியுமா? நீ எதுவும் சொன்னியா? ஐய்யய்யோ.. இதெயெல்லாம் வீட்டுல சொன்னா அன்னிக்கே என்னை பேக் பண்ணி அமெரிக்கா அனுப்பியிருப்பாங்க.. ஏண்டி.. உங்கப்பாவும் உங்க அம்மாவும்தானே இத்தோட விட்டுருங்க இந்த விஷயத்தைன்னு சொல்லி நமக்கு அட்வைஸ் பண்ணினாங்களே.. மறந்துட்டியா? ரவிகிட்டே சொன்னா சும்மா இருந்திருப்பானா? இல்லே அவனுக்கும் தெரியாது.. கம்முனு இருப்போம்.. இப்போ கூட நாம் எதுவும் இவங்ககிட்ட அதைப் பத்திச் சொல்லப்போறதில்ல..

    அந்த சமயத்துலே கல்யாண் கதவைத் தட்டுகிறான்

    ‘உள்ளே வரலாமா?’ கல்யாண் குரல் கேட்கிறது. ஒரு சிரிப்பை வேண்டுமேன்றே வரவழைத்துக்கொண்டு அவனை உள்ளே வரவேற்கிறாள். ‘வாங்க வாங்க.. அட, நீங்க எப்படியும் என்னோட டென்டல் கிலினிக் என்னிக்காவது ஒரு நாள் வரவேணும்தான்.. வாங்க உட்காருங்க!!’ ‘இது சாந்தி.. ஹேய்.. எப்படி இருக்கே.. .’ என்று சாந்தியைப் பார்க்கிறான். ‘ஓ.. ரவியோட தங்கை உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் இல்லையா.. எனக்குதான் இதெல்லாம் தெரியாம போயிடுசு.. இவள் என்னோட கிளாஸ்மேட் கூடவே க்லோஸ் ஃப்ரெண்ட். உங்களுக்கு எங்க கிளாஸ்ல நான் அந்த டிஷ்யூ பேப்பரை உள்ள தள்ளறச்சே கூடவே இருந்து அது உங்க வாய்க்குள்ள நல்லா போகறதா’ன்னு பார்த்தவ.. அத்தோட இவளோட அண்ணன் உங்க ஃப்ரெண்ட்ங்கிற விஷயம் இப்போதான் சொன்னா.. இவ சீக்கிரமே யுஎஸ் ல டென்டல் கிளினிக் வெக்க போறா,. எனக்கும் வேலை வாங்கி தர்ரேன்னு அங்க வர சொல்லறா. ஆனால் நான் இன்னும் ஒண்ணும் சொல்லலே..’ ‘ஆமாங்க.. நான் உங்களுக்குப் பெரிய பொறுப்பு கொடுத்திருக்கேன், அதை முடிச்சுட்டு நீங்க எங்க வேணும்னாலும் போகலாம்.’ சாந்தி ஆச்சர்யமாக பார்க்கிறாள். “என்ன பொறுப்பு கல்யாண்?” “ஓ.. உனக்கு இன்னும் சொல்லலியா?” கோமதி சட்டென குறுக்கிடுகிறாள் “சாந்தி, இவர் என் கூட டிரெய்ன்ல வரச்சே எனக்கு சாதாரணமா ரவியோட பார்ட்னர்ன்னுதான் தெரியும். இவங்க பெரியப்பாதான் எதிர்வீட்டுக்காரர்னு தெரியாது. உனக்கு சொன்னேன் இல்லையா எதிரிவீட்டுல கொலை ஒண்ணு விழுந்துடுச்சுன்னு. இப்போ இவரோட பெரியப்பா கேஸ் இன்வெஸ்டிகேஷன்ல நானும் ஒரு பங்கு எடுத்துண்டிருக்கேன்..”

    “உனக்கு எதுக்குடி இந்த பெரிய மர்டர் கேஸெல்லாம்?” வேண்டுமென்றே கேட்டாள் சாந்தி.

     

    கல்யாண் குறுக்கிடுகிறான்.

    “சாந்தி! உன் ஃப்ரெண்ட் இந்த மாதிரி இன்வெஸ்டிகேஷன் நல்லாவே பண்றாங்க.. உங்கண்ணனோட வைசாக்’ல சாகஸ வேலைல்லாம் செஞ்சு ஒரு நல்ல குடிமகனை பிரிச்சு வெச்சிருக்காங்க.. ரவியைக் கூட கொஞ்ச நாள் இங்கயே இருந்து உன் ஃப்ரெண்ட்க்கு உதவும்படி சொல்லியிருக்கேன். பாரு சாந்தி.. எங்க இன்ஸ்பெக்டர் பாக்கறதுக்கு முன்னாடியே போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூட பார்த்துட்டாங்க.. கோம்டி! பி எம் ரிப்போர்ட்ல எங்க பெரியப்பா தற்கொலை பண்ணியிருக்காராம். ஆனா இன்ஸ்பெக்டர் மோகன் நம்பறார். அப்படி ஒரு சந்தர்ப்பம் அதிகம் இருக்குங்கிறார்.” “நான் நம்பலே கல்யாண். பி எம் ரிப்போர்ட்ல கூட ஒரு சந்தேகமாதான் தற்கொலையைப் பத்தி சொல்லியிருக்கு. சான்ஸ் இருக்குன்னு சொல்லிச்சே தவிர தற்கொலைதான்னு முடிவாச் சொல்லலியே.. நீங்க என்ன ஃபீல் பண்ணறீங்க?” “எனக்கும் அவர் தற்கொலை பண்ணியிருப்பார்னு தோணலீங்க. நான் ஏற்கனவே சொன்னமாதிரி முதல்ல அவர் கோழை இல்ல.. தற்கொலைக்கான மோடிவ் கூட அவரைப் பொறுத்தவரை கிடையாது”. “சரியா சொன்னீங்கதான். ரெண்டு குண்டும் வெவ்வேற இடத்துல பாய்ஞ்சுருக்கறதை வெச்சே இதை ஒரு கொலைன்னு நிரூபிக்கலாம். ஆனா கொலைகாரன் யாரு? மோடிவ் என்னங்கறதைத் தெரிஞ்சுண்டாகணும்.”  “ஆமாங்க.. பொட்டுல பாய்ஞ்ச குண்டு ரொம்ப ஆழமா பாய்ஞ்சிருக்கறச்சயே அவர் உயிர் போயிருக்கணும். ஆனா போஸ்ட்மார்ட்டம் ஒரு சின்ன குறிப்பு சொல்றது பார்த்தீங்களா..?” “என்ன குறிப்பு?” “மார்புல உள்ள குண்டுதான் முதல்ல பாய்ஞ்சதுன்னும் அதுக்கடுத்த ரெண்டாவது குண்டு மினிமம் அரை மணி நேரம் கழிச்சுதான் பாய்ஞ்சிருக்குன்னு சொல்றது. அந்த டாக்டர் குழப்பி இருக்காரான்னு தெரியல.. இன்ஸ்பெக்டர் என்ன சொல்றாருன்னா தற்கொலைன்னு வரப்போ இவரே துப்பாக்கியை எடுத்து  முதல்ல தன் மார்புல சுட்டுண்டு இருப்பார். ஆனா அதுல உயிர் போகாம வலியால அவதிப்பட்டிருக்கலாம்.. மயக்கம் வந்திருக்கலாம் அல்லது அரை மணி நேரம் கழிச்சு கொஞ்சம் தெளிஞ்சுபோய் எங்க இந்த துப்பாக்கி குண்டு சரியா பாயலையோன்னு நினைச்சு திரும்பவும் துப்பாக்கியைத் தேடித் துழாவி எடுத்துத் தன் பொட்டுல அழுத்திச் சுட்டுருக்கலாம். அந்த குண்டு கொஞ்சம் ஆழமா உள்ளே போனதாலே உயிரும் உடனடியாக போயிருக்கும்.. இப்படியெல்லாம் வாய்ப்பு இருந்தாலும் அந்த துப்பாக்கி அவரோட கையிலேதான் இருந்ததே தவிர கைவிரல் ரேகை முழுசா இருந்தாலும் அதை யாராவது அவரு கையில கொடுத்திருக்கலாம்னும் ரிப்போர்ட் சொல்றது.. உயிர் போகல்லேன்னு தெரிஞ்சுதும் மார்புல சுட்டவன் மறுபடியும் அரை மணி நேரம் கழிச்சு வந்து இவர் பொட்டுல வெச்சுச் சுட்டிருக்கவும் வாய்ப்பிருக்குன்னும் ரிப்போர்ட் சொல்லுது. கன்ஃபூஷன்.”

    கோம்டி அவனை உற்றுப் பார்த்துக் கேட்டாள்..

    “அந்த அரை மணி நேரம் அங்க ஒரு குழப்பம் நிலவியிருக்கு. அதுக்கப்பறம்தான் அதாவது மார்புல சுட்ட அரை மணி நேரம் கழிச்சுதான் கொலைகாரன் பொட்டுல அழுத்தி வெச்சு சுட்டுருக்கான். யாரா இருக்கும் அவன்?. அப்படின்னா மார்புல சுட்டுட்டு சினிமாவுல வர்ர மாதிரி வசனமெல்லாம் பேசி கேள்வி கேட்டு அதுக்கு அவர் பதில் கொடுத்தவுடனே அதுக்கப்பறம் கோபம் வந்து பொட்டுல துப்பாக்கியை வெச்சு அழுத்தி சுட்டுருக்கான் அந்த வில்லன். சரியா கல்யாண்?..” “இப்போ டோடல் கன்ஃபூஷன்.”

    கோம்டி அவனை சாந்தமாகப் பார்த்தாள்.

    “கல்யாண்.. துப்பாக்கியால சுட்டது உங்க பெரியப்பாவா அல்லது இன்னொருத்தனா என்பதை ஒரு பக்கம் வையுங்க.. ஆனா அதுக்கு முன்னாலே இந்த நிகழ்ச்சி எப்படி ஆரம்பிச்சதுன்னு தெரியணும்.. ஆனா ஒரு குண்டுக்கும் இன்னொரு குண்டுக்கும் உள்ள இடைவெளியே இது தற்கொலை இல்லேன்னு நிச்சயமா சொல்லலாம். போலீஸ் எப்பவுமே கேஸை முடிக்கறதுக்குதான் பாக்கும். அவங்க தற்கொலைன்னு சொன்னாலும் நாம எப்படியும் கொலைங்கற ஆங்கிள்ல பார்த்தாதான் கொலைகாரனைப் பிடிக்கமுடியும். அதனாலே மிஸ்டர் கல்யாண்.. உங்க பெரியப்பா நிச்சயமா கொலை செய்யப்பட்டிருக்கார்.”

    கல்யாண் அவளையே பார்த்துக்கொண்டு தலையசைத்தான். சாந்தி மட்டும் அவளைத் திருப்பிக் கேட்டாள்.

    “கோம்டி.. இது ரொம்ப பெரிய கேஸா போகறமாதிரி தெரியுதுடி.. இந்த கேஸை எடுத்தேன்னா நீ எப்போ அமெரிக்கா வர்றதுடி?.. இதைப் பேசாம போலீஸ் கையிலே விட்டுடு.. அவங்க பார்த்துக்கட்டும்.”  இல்லை என தலையசைத்தாள் கோம்டி.

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 5

    திவாகர்

    கோம்டி இன்ஸ்பெக்டர் போவதை எரிச்சலுடன் பார்க்கிறாள். கோபம் கூட வருகிறது.

    ‘இந்த போலீஸ்காரங்களுக்கே இந்த புத்தி போகாதுதான், அவங்களும் செய்ய மாட்டாங்க. யாரவது ஹெல்ப் பண்ண வந்தா அவங்களையும் பயமுறுத்தி வேலை செய்ய விடமாட்டாங்க.’ ‘சரி விடுங்க கோம்டி.. நீங்க எதிர்வீடுதானா? தெரியாம போயிடுச்சு. இல்லே.. நானே இந்த இடத்துக்கு கொஞ்சம் புதுசு மாதிரித்தான். எப்பவாவது வருவேன்.. இந்த வீட்ல எனக்குத் தெரிஞ்சவங்க ரெண்டு பேர்தான். ஒண்ணு எங்க பெரியப்பா.. இன்னொண்ணு இந்த வீட்ல வேலை செய்யற பொன்னம்மா.. தோட்டத்து பக்கம் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்.. நம்ம ரவி மாதிரி சென்னைல ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் எனக்கு இங்கே கிடையாது.. எல்லாரும் எங்கம்மா வழியில உறவுக்கார பசங்கதான்.. எங்க  அம்மாவோட அக்கா, தங்கை அதான் என் சித்தி பிள்ளை பெரியம்மா பிள்ளைன்னு ரெண்டு பேர் முரளியும் சுந்தரும் இருக்காங்க. அவங்கதான் இன்னிக்குக் காலைல செண்ட்ரல் ஸ்டேஷன் வந்தாங்க. ஆனா பெரியப்பாவுக்கு நெருக்கமான பசங்க.. அதுல எங்க பெரியம்மா பிள்ளை முரளி கொஞ்சம் கூடவே நெருக்கம். ரொம்ப கலங்கிட்டான் அவன். எனக்கே எப்படி அவனை சமாதானப்படுத்தறதுன்னு தெரியலே..’ ‘அதனாலேதான் நான் உங்களை இந்த வீட்டிலே எப்பவுமே கவனிக்கலே.’ ரவியைப் பார்க்கிறாள்.  ‘நீ எப்படா வந்தே?’  ‘மத்தியானம் வந்து நேரா எங்க வீட்டுக்குப் போனேன்.. அங்க சாந்தியும் நீயும் விஸா கலக்ட் பண்ண அமெரிக்கன் எம்பாஸி போயிருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க. உடனே இங்கே கிளம்பி வந்துட்டேன். கல்யாண் வீட்டுக்கு இப்போ வரைக்கும் வந்தது இல்லே. உன் வீட்டுக்கு எதிரேதான்னு கல்யாண் வீடுன்னு அம்மாகிட்ட சாந்தி இன்னிக்கு சொன்னதை எனக்குச் சொல்லி அனுப்பினாங்க. ’அது சரி, கல்யாண், உங்ககிட்ட ஒரு கேள்வி.. இவர் கொலைபட்டு விழறச்சே சப்தம் போடலியா? துப்பாக்கி கிடைச்சதுன்னு டி வில சொன்னாங்களாம்.. அப்படினா கை விரல் ரேகை வெச்சு கொலைகாரனைத் தேடலாமே..’ ‘எங்க பெரியப்பா லைசென்ஸ் துப்பாக்கி வெச்சுருக்கார். சைலன்ஸர் துப்பாக்கி. அதை எடுத்துத்தான் அவன் சுட்டுருக்கான். ஆனா அந்த துப்பாக்கில கைரேகைன்னுப் பார்த்தாங்களான்னு இல்லையான்னு இன்னும் தெரிய வரலே.. துப்பாக்கி கூட எங்க பெரியப்பா அவரோட  கையிலதான் இருந்ததுன்னும் ஒரு விரல் ட்ரிக்கர்ல மாட்டிக்கிச்சுன்னும் இன்ஸ்பெக்டர் சொல்லறாரு. கொலைங்கிற கோணத்துல இந்த கேஸைப் பார்த்தா கொலைகாரன் அவர் கையிலே வெச்சுட்டு எஸ்கேப் ஆகியிருக்கான்னு சொல்றாரு. இது பொதுவாவே எல்லா கொலைகாரங்க இந்த மாதிரி கொலைசெய்யறச்சே அப்படி விக்டிம் கையில வெச்சுட்டுப் போவாங்கன்னு இன்ஸ்பெக்டர் சொல்றாரு. அதனாலேதான் இது தற்கொலைன்னு ஒரு சந்தேகம் கிளப்பமுடியும்னு.. ஆனா பெரியப்பா ஒண்ணும் கோழையுமில்லே அதுக்கான காரணமும் இல்லே…” “இல்லை இல்லை… நாம  எல்லா கோணத்துலயும் பாக்கணும்தான்..” கோமதி அவனை மறுத்தாள். ‘அப்படியெல்லாம் பாக்கணுங்கிறதுக்கு முன்னாடி மோடிவ் ஏதாவது இருக்கான்னு பார்க்கணும். அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. அவர் ஜாலி மனுஷனாதான் எனக்கும் என் கஸின் கண்களுக்கும் பட்டாரு. எதுக்கும் நாளைக்கு வரப் போகிற போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நிறைய க்ளூ கொடுக்கணும்னு நினைக்கிறேன்..”  “ம்ம்.. இந்த போலீஸ்லாம் இங்க பக்கத்து வீட்டுக்காரர்களை கூப்பிட்டு விசாரிச்சாங்களா?” ‘போலீஸ் கான்ஸ்டபிள் கொஞ்சம் பேரு போனாங்க.. ஆமா உங்க வீடு எதிர்வீடாச்சே.. விசாரிக்க யாரும் வரலியா? ‘ ‘இதோ இப்போ உங்க முன்னாடியே ஒரு கேள்வி கேட்கலை?.. அவ்வளவுதான் இவங்க விசாரணை. இப்படியெல்லாம் விசாரிச்சா போலீஸ் ஒண்ணும் கண்டுபிடிக்க மாட்டாங்க. இப்போ எல்லாம் ப்ரைவேட் இன்வெஸ்டிகேஷன்தான் போலிஸ் விசாரணையை விட பெஸ்ட்னு பேசறாங்களே. சரி. இந்த வேலையை நான் தீவிரமாக எடுத்துச் செய்யறேன்.. நீங்க உங்களை பத்தி சொல்லுங்க..”

     

    அவன் அசையாமல் அப்படியே அவனைப் பார்க்கிறான்.

    ‘என்னங்க.. உங்களுக்கு வேலை கொடுத்த என்னையே விசாரிக்கிறீங்க. நீங்க இங்கே உள்ளே எல்லாம் பாருங்க.. எங்க பெரியப்பா வெளியில எப்படி இருப்பார்னு விசாரியுங்க. எல்லா கொலைங்களுக்கும் ஏதாவது ஒரு மோடிவ்’ன்னு ஒண்ணு இருக்கணும்.. அந்த மோட்டிவ் என்னன்னு பாருங்க. எனக்குக் கூட சாதாரணமா பாக்கறச்சே ஒண்ணுமே தெரியலேதான். ஆனா உங்க பார்வை ஒரு இன்வெஸ்டிகேடரோட பார்வை.. அதனாலே வித்தியாஸமா ஏதாவது படலாம்.”

    கோமதி ஆச்சரியமாகப் பேசினாள்..

    “அப்போ இது தற்கொலைங்கிற கோணத்துல கூட நான் கொஞ்சம் ஆராயணும். அதே சமயத்துல ரெண்டு குண்டு வேற வேற இடத்துல பாய்ஞ்சி இருக்குன்னாங்க.. அதையும் பார்க்கணும்..’ ‘ஓ.. ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கீங்க. ரெண்டு குண்டுன்னு எப்படி தெரியும்..’ ‘என்ன சார்.. அதான் ஊரே பேசுதே.. அத வுடுங்க. உங்களைப் பத்தி சொல்லுங்க.’

    கல்யாண் சோகத்துடன் சிரித்தான்.

    ‘என்னை பத்தி என்னங்க சொல்றது? நான் சுதந்திரமானவன். அப்பா இல்லை அம்மா இல்லே.. எங்க பெரியப்பா மேல அன்பு உள்ளவன். அவரும் அப்படித்தான். ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் மதிப்பும் மரியாதையும் வெச்சிருந்தோம். அவர் இப்போ இல்லே. அவர் சாதாரணமா செத்திருந்தா காலைல அழுதேனே, அத்தோடு போயிருக்கும். அவ்வளவுதான். ஆனா அவரை ஏன் கொலை பண்ணி சாகடிக்கணும்’னு எப்படியும் தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அப்படி என்ன வெறி அந்த கொலைகாரனுக்கு,, யார் அந்த கொலைகாரன்?’ ‘அது சரி, அவருக்கு ஏதாவது வித்தியாசமான பழக்கம், யாராவது வித்தியாசமான ஃப்ரெண்ட்ஸ், ஏதாவது அவுட்சைட் பிரெஷர், அல்லது யாராவது அடிக்கடி ஃபோன் செஞ்சு பயமுறுத்தறது அல்லது யாரோடையாவது தகராறு, அல்லது சூதாடறது மாதிரி கெட்ட பழக்கம்.. ஏதாவது பெரிய.. நோய்..  இல்லே..?’

     

    அவள் கேள்விகளைத் தடுத்து நிறுத்தினான்.

    “நிறுத்துங்க கோம்டி.. இதெல்லாம் கண்டுபிடிக்கறதுக்குதான் உங்களை ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. நீங்க கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் எனக்குத் தெரிஞ்சிருந்தா நீங்க எதுக்கு? நானே கொலைக்கான காரணம் என்ன, கொலைகாரன் யாருன்னு கண்டுபிடிச்சுடுவேனே..’

    அவன் மௌனம் சாதித்துவிட்டு மறுபடியும் பேசினான்.

    ‘மனுஷன் எனக்குத் தெரிஞ்சு கடைசி வரைக்கும் நோய்’னு ஒரு நாளும் படுத்தது இல்லே. அவரு டாக்டர்கிட்டே போனதா எனக்குத் தெரியலே..  தினசரி அஞ்சு கிலோமீட்டர் நடப்பார்.. ஏன், நேத்திக்குக் கூட காலைலே வாக்கிங்க் போனார்.. கூடவே எங்க முரளியும்  நடப்பான்.  நேத்துதான் அவங்கிட்டே பெரியப்பாவே சொன்னாராம்.  இந்த தடவை நான் சென்னை வந்தவுடனே அவரோட உயில் என் பேருக்கு எழுதி பதிவு பண்ணிடனும்னு சொன்னாராம்.. சொன்னவர் இன்னிக்கு உயிரோட இல்லை..’ ‘அது எப்படிங்க? உங்க தாத்தா பாட்டி சொத்துதானே இது எல்லாம். அவர் உயில் எழுதினாலும் எழுதாமப் போனாலும் இதெல்லாம் உங்களுக்கு சொந்தம்தானே..’

    அவன் மீண்டும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்

     

    ‘எப்படிங்க இவ்வளோ தூரம் விசாரிச்சீங்க.. நீங்க எப்படியும் இந்த கொலைல துப்பு துலக்கறதுன்னு இங்க வரத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டீங்களா?.

     

    சிறிது நேரம் யோசித்தான். பின்னர் அவனே பேசினான்.

    ‘கரெக்ட்தான்.. முக்காவாசி தாத்தா பாட்டி சொத்து.. மீதி இவரு சுயமா சம்பாதிச்சதுதான். ஆனாலும் நான் இவங்க பணத்தைத் தொடறது இல்லேன்னு முடிவு பண்ணிட்டேனுங்க..’ ‘என்னங்க? ஏன் இப்படி?’ ‘ஏன் பயப்படறீங்க. உங்க ஃபீஸ் கிடைக்குமான்னு பாக்கறீங்களா? இவர்கிட்டே இருக்கற பணத்தை விட என்கிட்டே நிறைய இருக்கு..’

    அவன் முதல் முதலாக தெத்துப்பல் தெரிய சிரித்தான்.

    ‘ஐய்யய்யோ.. நான் அப்படிலாம் யோசிக்கவே இல்லை. நீங்க கொடுக்கற பணத்துக்காக நான் இந்த விசாரணை எடுக்கலை. எனக்கு இது ஒரு விருப்பமான சப்ஜெக்ட்.. இப்போ விசாகப்பட்டினம் வந்தது கூட இந்த மாதிரி ஒரு வழக்குக்காகத்தான்.. என்னடா ரவி.. நீ எதுவும் பேசாம இருக்கே.. ’ ரவி வழக்கமான மூடுக்கு வந்தான்.. ‘அம்மா தாயே.. உன்னோட எனக்கென்ன பேச்சு?. நீயாச்சு, இந்த கேஸாச்சு.. இது ஒரு மர்டர் கேஸ்.. உன்னால எடுத்து விசாரிக்க முடியும். யம்மா.. நேத்துக் காலைல நான் உயிருக்கு பயந்துண்டு அந்த வீடியோவை எடுத்தேனே.. அப்பவே நினைச்சேன்.. உன்னாலே எந்த கேஸையும் ஈஸியா எடுத்துக்கமுடியும். அந்த மாதிரியெல்லாம் தைரியசாலி நீ ஒத்திதான்னு இந்த மடையனுக்குச் சொல்லிடறேன்.. என்னை மட்டும் இந்த கேஸுக்கு உதவி அது இதுன்னு இழுக்காதே.. சொல்லிட்டேன்’. ‘ஓ! அது கூட கொலை வழக்கா? ஐயோ! என்னாங்க நீங்க பயங்கரமான ஆளா இருக்கீங்க..?’ ‘ஐய்யய்யோ.. கொலை வழக்கெல்லாம் இல்லீங்க. ஒரு விவாகரத்து வழக்கு.. இங்கே ஒரு குடும்பம் அங்கே ஒரு குடும்பம்.. அவனோட முதல் மனைவி இங்கத்தான் இருக்கா.. அவளுக்கு சந்தேகம் வந்துச்சு. என்கிட்டே வந்து சொன்னா.. விலாசம் விசாரிச்சேன். நீங்க இப்போ இருக்கற வைசாக் வீட்டு சொந்தக்காரிதான் அவனோட ரெண்டாவது குடும்பம், வீடியோ ஆதாரம் எல்லாம் கொண்டு வந்து இன்னிக்கு அவகிட்டே கொடுத்துட்டேன்.. அவ நிம்மதியா கேஸ் போட்டு விவாகரத்து வாங்கிடுவா.. இப்போ இந்த மாதிரி ரெண்டு கேஸ்ங்க வேற வெயிட் பண்றாங்க, நான் பெண்டிங்க்ல வெச்சிருக்கேன்.. ம்ம்ம்.. கொலை கேஸ்ன்னா நீங்க கொடுத்ததுதான் இன்னிக்குதான் என் முதல் கேஸ். கவலைப் படாதீங்க.. நான் ஒரு டெடிகேடிவ் டிடெக்டிவ்.’

    அவன் அவளை வெறித்துப் பார்த்தான்.

    ‘அப்போ அந்த டெடிகேட்டிவ் டென்டல் பிராக்டீஸ்?.. கஷ்டப்பட்டு படிச்சு டாக்டரேட் வாங்கி இருக்கீங்களே.. க்லினிக் வெச்சிருக்கீங்க,, அது என்னாகும்.?’ ‘அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது.. சரி வரேங்க.. கிலினிக் திறந்து வெக்க சொன்னேன்.. போகணும்..’  “யாராவது நோயாளிகள் வராங்களா என்ன?’ என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் கேட்டான். ‘அதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லே. பல்லு கிளீனிங்னு நிறைய பேரு வருவாங்க. அதுக்குன்னு ஒரு நர்ஸ் வெச்சிருக்கேன்.. அதுலேயே காசு வந்துடும்..  அது பாட்டுக்கு அது போகும்.. இது வீட்டில் முன்னாடி ரூம்லேயே கிளினிக் இருக்கு.. நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம்.. நான் வரட்டுமா?’ என்று சொன்னவள் ரவியைப் பார்த்தாள். ‘டேய்.. போகறச்சே வீட்டுக்கு வந்துட்டு போடா.. சாந்தியும் இப்போ அங்க வருவா..’

    அவள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவள் போனதும் கல்யாண் காதில் கிசுகிசுக்கிறான்.

    ‘இவ கையிலே இந்தக் கேஸைக் கொடுத்திருக்கியா.. பயங்கரமான சுறுசுறுப்பு.. நேத்து பாக்கணுமே.. நம்ம வீட்டுக்கார அக்காவை கிடுக்குப்பிடி போட்டு கேள்வி கேட்க அந்தக்கா எப்படா இவகிட்டயிருந்து ஒதுங்கலாம்னு என்னை அடிக்கடிப் பாக்க ஆரம்பிச்சுடுத்து. கல்யாண தேதி, கல்யாணம் எங்க நடந்தது.. உறவுக்காரங்கள்லாம் வந்தாங்களான்னு ரெண்டு மூணு தடவ கேட்டு கன்ஃபர்ம் பண்ணிட்டுதான் வீட்டை விட்டு வெளியே வந்தா..’ ‘நல்லதுதானே.. ‘ ‘என்னடா நல்லது? நாளைக்குள்ள பாரு.. எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி என்னையும் தன்னோட சேர்த்துக்குவா.. நான் வைசாக் போனா மாதிரிதான்..’ ‘நீயும் சேர்ந்திட்டியானா ரொம்ப நல்லதா போச்சு’.

    கல்யாண் அந்த சோகத்திலும் சிரித்தான்.

     

    இடம்: காவல் நிலையம்:

     

    அடுத்த நாள் காவல் நிலையத்தில் கல்யாணும் ரவியும் இன்ஸ்பெக்டருடன் அமர்ந்திருந்தபோது இன்ஸ்பெக்டரின் மொபைலுக்கு ஒரு போன் வந்தது. மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர், ‘தகவலுக்கு நன்றி’ என்று சொல்லிவிட்டு மூடினார்.

     

    ‘கல்யாண்! இந்த கேஸ் விஷயமா சுமதிங்கற  நர்ஸ் பத்தி ஒரு தகவல் கிடைச்சிருக்கு.. நீங்க ரெண்டுபேரும் என் கூட வாங்க போகலாம். ஆனா உங்க பெரியப்பா உறவு எதுவும் காமிக்காதீங்க. சாதாரணமா வாங்க.’

     

    கல்யாண் ரவி இன்ஸ்பெக்டர் மோகன் மூவரும் போலீஸ் காரை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றனர். பல வீடுகள் கொண்ட ஒரு சிறிய சாலை அது, அவர்கள் போலீஸ் வண்டியை வெகு தொலைவில் நிறுத்திவிட்டு ஒரு வீட்டிற்குச் சென்றார்கள், அங்கு ஒரு வயதான பெண்மணி வராண்டாவுக்கு வெளியே அமர்ந்து சில வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தார், ஆனால் அது சரியாக செவி வரை கேட்கவில்லை. எனினும் உற்றுக் கேட்டான் ரவி.

     

    ‘வரலியே இன்னும்னு பார்த்தேன்.. வந்துட்டாங்க.. இந்த இழவோடு இந்தப் பொம்பளை எப்போதும் கஷ்டப்பட்டே இருக்கணும் போல..’

     

    சட்டென ரவி இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். ‘சார்.. அந்த அம்மா பாவம் சார் ஏதோ வேணும் போல.. நான் அந்தம்மாகிட்ட பேசிண்டிருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க சார்.’

    ‘சரி மிஸ்டர் ரவி..’

    கல்யாண் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆனால் இன்ஸ்பெக்டர் அவளைப் பொருட்படுத்தாமல் அறைக்குள் சென்றார். இருபது இருபத்திரெண்டு வயதுடைய பெண் ஒருவர் சமையலறையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​ஆச்சரியத்துடன் போலிஸாரைப் பார்த்தாள்.

    ‘எதுக்குங்க வந்தீங்க?.. போலீஸ்லாம் வீட்டுக்குள்ள வரலாமா?.. ஊருல என்ன நினைப்பாங்க. சார்.. ஏற்கனவே இங்கே இருக்கற நாங்க மூணு பேரும் பொம்பளைங்க.. இருக்கற வீட்டையும் காலி பண்ணச் சொல்லிட்டா எங்கேன்னு போவோம் நாங்க?’ ‘போலீஸ்ன்னா என்னம்மா ராட்சஸங்களா?  விசாரணைக்கோசரம் எங்கே வேணும்னாலும் வரத்தானே வேணும் சுமதி.. அதானே உன்னோட பேரு?’ ‘ஆமா சார்.. உங்களுக்கு என்ன வேணும்? எதைப் பத்தி பேசணும்?’ ‘கந்தசாமியைப் பத்தி’ ‘எந்த சாமி?’ ‘கந்தசாமி… சுமதி.. உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவரே.. அவரைப் பத்தித்தான்’. ‘கொஞ்சம் இருங்க.. (அவள் பெயரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள்) சார் அடிக்கடி இங்கே ஆம்பளைங்க யாரும் வந்தது இல்லே.. நீங்க சொல்றதைப் பார்த்தா ஒருவேளை இவரைச் சொல்றீங்களா.. ஒரு பெரியவர் ஒருத்தர் நாலு மாசம் முன்னாடி இங்கே வந்தார். இரவு நேரமா மாலையான்னு ஞாபகம் இல்லே. என் தங்கைக்கு கொஞ்சம் மூளைப் பிரச்சனை.. அவளுக்கு நிறைய செலவு பண்ணி ஹாஸ்பிடல்ல சேர்த்து குணம் ஆக்கிடலாம். இந்தப் பெரியவர் இந்த மாதிரி விஷயங்களுக்கு நிறைய பணம் கொடுப்பார். தெரிஞ்சவங்கதான் சொன்னாங்க. இத்தனைக்கும் நான் கேட்கலே.. எனக்குச் சொன்னவங்களே அவங்ககிட்டே போயி ஹெல்ப் கேட்டாங்க.. ஓஹோ அவரு பேரு கந்தசாமியா? தெரியாதுங்க.. நோயாளியை பார்க்க வந்தேன்மா ன்னு சொல்லிட்டுப் பார்த்துட்டுப் போயிட்டாங்க.. நான் உதவி கேட்டது உண்மையான்னு சோதனை பண்ணிருக்காருன்னு அப்போ தோணித்து அவ்வளவுதான்.. எனக்கு இவங்க யாரும் உதவி செய்யலைன்னா என்னங்க. தெய்வம் நம்மகிட்டே கூடவே இருந்து எல்லாம் செய்யும்.. அந்த நம்பிக்கைல தான் சொல்றேன். என்னாச்சு சார் அந்த கந்தசாமிக்கு?’

    கல்யாண் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டர் மோகன் அவனைப் பார்க்கிறார். மெதுவாக அவன் காதில் பேசுகிறார், ‘என்னய்யா.. பொம்பளை அழகா இருக்குதேன்னு அவளையே உத்துப் பார்க்கறியா?.” கிண்டலாகச் சொன்னவர் மறுபடியும் அந்தப் பெண்ணிடம் கேட்கிறார்.

    ‘சுமதி.. உனக்கு விஷயம் தெரியாதா? அந்த கந்தசாமியை யாரோ முந்தா நாள் சாயங்காலம் கொலை பண்ணிட்டாங்க.’ அவள் ஆச்சரியப்பட்டாள். ‘கடவுளே’ இது என்ன சார் இப்படிச் சொல்லறீங்க.. அடப் பாவமே.. அவரே வந்தாரு.. ஹெல்ப் பண்றேன்னு சொன்னாரு.. அப்புறம் எந்தத் தகவலும் இல்லே. நாங்களும் மறந்துட்டோம்.. இப்போ அவரு மேல போயிட்டாரா?’ ‘என்னம்மா.. இவ்வளோ ஈஸியா சொல்றே? உனக்கு ஷாக்கிங்கா இருக்கணுமே..’ ‘எனக்கு எதுக்கு சார் ஷாக்கடிக்கணும்..?  அன்னிக்கு அரை மணி நேரம் அவரைப் பார்த்திருப்பேன். இருந்தாலும் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.’ ‘ஆனா அந்த மனக் கஷ்டம் மூஞ்சில தெரியலியே.. சரி, வேற எந்த விஷயமும் அவரைப் பத்தி உனக்குத் தெரியாதா?’ ‘எந்த விஷயமும்னா?.. புரியலை சார்.. எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்..’

    இன்ஸ்பெக்டர் மோகன் சற்று கோபமாக பேசினார்

    ‘இதோ பாரு சுமதி.. எனக்கு ஒரு செய்தி கிடைச்சது.. கந்தசாமி உனக்கு ஏதோ கெடுதல் பண்ணியிருக்காருன்னு ஒரு இன்ஃபார்மர் சொன்னாரு.. உனக்கு என்ன விஷயத்துல கெடுதல் பண்ணியிருக்கார்னு எனக்குத் தெரியணும்.’

    சட்டென்று அழ ஆரம்பித்தாள்.

    ‘என் சார், எனக்கு அந்த ஆளை அறிமுகமே இல்லைன்னு சொல்லறேன். நீங்க எனக்கும் அந்த கொலைக்கும் லிங்க் பண்ணப் பாக்கறீங்களே.. இது என்ன நியாயம் சார்.. போலீஸ்ன்னா என்ன வேணா சொல்லலாமா சார்?’

    கல்யாண் திடீரென்று இடையில் வந்தான்.

    ‘சார்.. எனக்கும் அப்படித்தான் படறது சார்.. அவங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னும்போது அவங்களை கன்ஃப்யூஸ் பண்ணி ஸ்டேட்மென்ட் வாங்கறது தப்பு இல்லயா சார்..’

    “இன்ஸ்பெக்டர் அவனை அனுதாபத்துடன் பார்த்தார். மெதுவாக அவனிடம் பேசினார். ‘என்னய்யா.. பொம்பளைன்னா கொஞ்சம் இரக்கம் காட்டறியா? பார்த்தா தெரியலே இது பொய் சொல்லுதுன்னு.”

     

    கல்யாண் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

     

    ‘ஏம்மா.. உங்க ஸ்டேட்மென்ட்லாம் வேணாம். ஆனா இந்த விஷயத்துல என்னவெல்லாம் தெரியும்னு கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு கொஞ்சம் உதவியா இருக்கும். அவ்வளவுதான்.’ ‘நன்றி சார், உங்களைப் பாத்தா நல்ல மாதிரியாத்தான் தெரியுது. இருந்தாலும் சொல்றேன் சார்.. எனக்கும் அந்த பெரிய மனுஷனை அரை மணி நேரம் தான் தெரியும்.’ ‘சரிம்மா.. யார் மூலமா இந்தப் பெரிய மனுஷரை பிடிச்சீங்க?’ ‘சார், நான் என் தங்கையை ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு வெளிய காத்திருந்தப்ப ஒரு ஏஜண்டும் இன்னொரு குடும்பமும் அங்கே பேசிண்டு இருந்தாங்க.. பெண் குழந்தைங்க 16 வயதுக்குள்ள இருந்தாங்கன்னா அவங்க ஆபரேஷனுக்கு இந்த மனுஷர் பண உதவி பண்ணறாராம். அந்த குடும்பம் அவங்களுக்காக அன்னிக்கு அவர்கிட்டே போய் ஹெல்ப் கேட்க போறதா சொன்னாங்க. அப்படியே என் தங்கை விஷயத்தையும் சொல்லி ஹெல்ப் கேளுங்க, கிடைச்சா நல்லது.. அதுக்காக உங்க குழந்தை கேஸ் ஐ வுட்டுடாதீங்க.. கடவுள் அருள் இருந்தா என் தங்கைக்கும் கிடைக்கட்டுமே’ அப்படின்னேன்.. அவரு நான் சொன்ன விஷயமெல்லாம் கரெக்டான்னு செக் பண்ணிக்க அன்னிக்கு இங்க வந்தாரு. அவ்வளவுதான். ஆனா இப்படி பொசுக்குன்னு போயிடுவார்ன்னு ஊகிக்கலே.”  கல்யாண் இன்ஸ்பெக்டர் ஐ பார்த்தான். மேலும் விஷயம் அறிய அவனை ஊக்கப்படுத்தினார். “கல்யாண்.. நீங்க கேரி ஆன் பண்ணுங்க.. நீங்க பேசிண்டு இருங்க,, எதுவாவது விஷயம் கிடைக்குதான்னு பாருங்க.. நான் இங்க சுத்துவட்டாரத்துல கொஞ்சம் விசாரிக்கறேன்.. இன்ஸ்பெக்டர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார். அங்கே ரவி அந்த அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து அருகே வந்தார். ‘என்ன மிஸ்டர் ரவி, இவங்களுக்கு ஏதேனும் தெரியுமா?’.  இல்லே சார்.. இவங்க இந்த சுத்துவட்டார வீடுகள் இவங்களைக் கொஞ்சம் ஏளனமா பாக்கறாங்களாம்.. இதுல போலீஸ் வேற வந்து விசாரிச்சா எப்படின்னாங்க? ஏதுக்கு ஏளனமாம்? அவங்க வீட்டுல ஒரு சின்னப் பொண்ணுக்குக் கொஞ்சம் மன வளர்ச்சி இல்லையாமே..  ‘ஆமாமா.. சம் டைம் க்ரூயல் மனசு உள்ளவங்கதான் ஜனங்க..’

    இருவரும் வெளியே வருகிறார்கள்.

     

    வெளியே இருந்த சிலரிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்தார். கடந்த நாட்களில் ஒரு கருப்பு கார் இந்த சாலையில் வந்து இங்கு நின்றதை யாராவது பார்த்தீர்களா என்று இன்ஸ்பெக்டர் அங்கே அருகில் இருந்தவர்களிடம் கேட்டார்.

     

    ஞாபகம் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். அங்கே எதிர் வீட்டுக்காரர்கள் சொன்னார்கள், ‘என் அப்பா கருப்பு கார் மட்டுமே வைத்திருப்பார், ஆனா அவர் ரெண்டு மாதமா அதையே கொண்டு வருவதை நிறுத்திட்டார். ‘என் பொண்டாட்டிக்கு அந்த கருப்பு கார் வேணும்னு அவ டைரக்டா கேட்டதாலே அவர் இங்கே  வர்ரது கிடையாது.’

     

    கொஞ்ச நேரம் கழித்தவுடன் கல்யாண் வெளியே வந்து இவர்களுடன் சேர்ந்தான்.

     

    ‘சார், அது அப்பாவி பொம்பளை’ன்னு தெரியறது. இவள் ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் நர்ஸா வேலை செய்யறா. தன்னோட தங்கை ஆடிஸ்டிக் பொண்ணுன்னவுடனே குணப்படுத்த எல்லா முயற்சியும் எடுக்குறா. அவ்வளவுதான்,  இவளைப் பத்தி யார் இன்ஃபார்ம் கொடுத்தாங்கன்னு நான்  சொல்லட்டுமா?’ ‘சொல்லுங்க’ ‘இந்தப் பெண்ணுக்கு உதவி பண்றேன்னு முதல்ல ஒரு குடும்பம் சிபாரிசுக்கு வந்ததுன்னு சொன்னீங்க இல்லே. அவங்கதான் போன்ல இவங்க நியூஸ் கொடுத்திருப்பான்.’ ‘நீங்கள் கூறியது கொஞ்சம் சரிதான்.. நாங்க கந்தசாமி உதவி செஞ்ச எல்லா ஆட்களையும் விசாரிச்சிருக்கோம் மிஸ்டர் கல்யாண், அதுல சில விஷயம் கிடைச்சுது. உங்க பெரியப்பா கொஞ்சம் டெஸ்ட் பண்ணி உண்மையானவங்களான்னு பார்த்து அப்புறமா பணம் கொடுப்பாரு. அவர் ஆடிட்டர் இதை ஸ்டேட்மென்ட்ல சொல்லி இருக்காரு. ஆனா இன்னொரு ஆளும் இவளைப் பத்திச் சொன்னான். அதனாலதான் கொஞ்சம் ஹார்ஷா பேசினேன். சரி வாங்க ஸ்டேஷனுக்கு போவோம்.. போஸ்ட் மார்ட்டம் ரிசல்ட் வந்துருக்கும். ஏதாவது தகவல் தெரியுதான்னு பார்ப்போம்.’  ‘சரி சார்.. ஆனா இந்த பொம்பளை கேஸ் ரொம்ப பாவம் சார்.. பதினாலோ பதிமூணோ வயசுள்ள ஆடிஸ்டிக் தங்கை இருக்கு.. நான் பார்த்தேன் எத்தையோ பறிகொடுத்த மாதிரி எல்லாரையும் பாக்கறா.. நல்ல டாக்டர் கிடைச்சு சிகிச்சை பண்ணினா அந்த பொண்ணுக்கு சரியாயிடும்’. ‘உங்களை அப்பவே கவனிச்சேன்.. அந்த பொம்பளையை ஒரு மாதிரியாத்தான் பார்த்தீங்க.. ஜாக்கிரதையா இருங்கப்பா.. பொம்பளை, அதுவும் அவ எப்பிடி எதிர்த்து பேசினா பாரு,  உடனே ஒரு அழுகையும் வேற. அவ அழுதுட்டதால நாம இரக்கம் காமிக்க முடியாது மிஸ்டர் கல்யாண். ஆனா எதுக்கு நம்ம ஆளு இந்தப் பொம்பளையைப் பத்தி சரியா விலாசத்தோடு சொல்லணும்? நான் இன்னும் இந்தப் பெண்ணை விசாரணை லிஸ்ட்லயே வெக்கிறேன். மறுபடியும் தேவைப்பட்டா விசாரிக்கலாம்.’ “யார் சார் அந்த இன்ஃபார்மர்.. சொல்லணும்னு அவசியம் இல்லே.. ஒருவேளை கோம்டிகிட்டே சொல்லி இன்னும் ஆழமா என்னால இவகிட்டே அனுப்பி விசாரிக்கமுடியும். லேடீஸ்ங்க்கிறதனாலே கொஞ்சம் விஷயம் ஏதாவது இருந்தா வெளியே வரலாம்”.  “இன்ஃபார்மர் பேருதானே.. சொல்லிட்டா போச்சு. மிஸ்டர் முரளி.. உன்னோட கஸின் முரளி.. ரவி ஆச்சரியமாக கேட்டான். ‘இவன் கஸின் முரளியா?’  ‘அவனேதான். அவன் உங்க பெரியப்பாவை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கான்யா.. திடீர்னு ஞாபகம் வந்தது சார், எதுக்கும் அங்க போயி நீங்க அவளை விசாரிங்க சார்’னு இப்போதான் உன் முன்னாடியே போலீஸ் ஸ்டேஷன்ல  இருக்கறச்சே என் மொபைல்ல பேசி அட்ரஸ் மெஸேஜ்ல கொடுத்தான்”.  “முரளிகிட்டே நானும் பேசறேன் சார்.. என்னை விட பெரியப்பாவை கரைச்சுக் குடிச்சவன். ஆனா நல்லவன் சார். எங்க சொத்து மேல எல்லாம் அவனுக்கு ஆசை இல்லேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.” “போலீஸைப் பொறுத்தவரை எல்லாமே சந்தேகம்தான். முரளி என்ன ஒழுங்கா.. அவனுக்கு ஆசை சொத்துமேலே இல்லேன்னு வெச்சுண்டா கூட அவன் அதிகம் கந்தசாமியோட பழகினான். என்னவேணா நடந்திருக்கும். ஆனா முரளி சுடலேன்னு எனக்குத் தெரியும். அவன் அன்னிக்கு சாயங்காலம் பூரா அவன் ஆபிஸ்லதான் இருந்தான். அதை எல்லாம் விசாரிச்சுட்டோம். ஆனா வெளியாள் வெச்சு கொலை பண்ணி இருக்கலாம்தான்.. என்ன அப்படி பாக்கறே? சான்ஸ் இருக்கா இல்லையா? அந்த சுந்தர், உன்னோட இன்னொரு க்லோஸ் கஸின்.. அவனையும் விசாரிச்சுட்டேன். அவன் ஊரிலேயே இல்லே.. கார்ல புறப்பட்டு அன்னிக்கு நடுராத்திரி வந்தான். எல்லாத்தையும் விசாரிக்கிறோம் கல்யாண்.. எங்கேயாவது எதிலாவது க்ளூ கிடைக்காம போகாது.. பிடிச்சுடுவோம் அந்தக் கொலைகாரனை.’.

     

     

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 4

    திவாகர்

    ‘அவனும் இந்த எதிர்வீட்டுலதான் இருக்கான்.. அவனோட பெரியப்பாவைத்தான் நேத்து சாயங்காலம் கொலை பண்ணி இருக்காங்க..’ “கொலையா?” “ஆமாண்டி.. பகல்லயே கொலை பண்ணியிருக்கான். கொடுமைதான். ஆனா அவனுக்கு ஆண்டவனாப் பாத்துதாண்டி இந்த தண்டனைக் கொடுத்திருக்கார்.” ‘அடக் கடவுளே.. ஆனா அவனை அதான் கல்யாணை இங்கே நான் பார்த்தது கிடையாதே..’ ‘அவன் எப்போவதுதான் வருவான்.. இந்த பெரியப்பா அவனை வேற ஊருலதான் வெச்சு படிக்கவெச்சாரு. அவன் கூட வைசாக்லத்தான் காலேஜ் முடிச்சான். அங்கயே இருக்கான்னு தெரியும்.. அவனைத்தான் நீ பார்த்துருக்கே.. தெத்துப்பல்லன்’னு எல்லாரும் கூப்பிடுவாங்கன்னு அந்த பொன்னம்மா, அவங்க வீட்டு வேலைக்காரி சொன்னாடி.’ ‘அப்படியா.. அப்போ இவன் இங்கேதான் வீடா? கரெக்ட்தான். இந்த கந்தசாமி கூட மூணு  வருஷம் முன்னாடித்தானே இந்த பங்களா வாங்கினான்!.’ ‘ஏம்மா.. அவன் என்கிட்டே பேசறச்சே எங்க பெரியப்பா ரொம்ப அன்பானவரு, ரொம்ப ரொம்ப நல்லவருன்னு பேசினான்.. அவனுக்கு இந்த ஆளைப் பத்தி சரியா தெரியாதா?’ ‘அடி கோமதி, நீ ரொம்ப வெச்சுக்காதே அவங்ககிட்டே.. அந்த கிழவனும் போயிட்டான்.. கொலையோ தற்கொலையோ.. ஒழிஞ்சான் விடுன்னு போவியா.’ ‘அம்மா.. நான் ஒருவாட்டி அந்த தெத்துப்பல்லனைப் பார்த்துட்டு வரட்டுமா.. நம்ம ரவியோட ஃப்ரெண்ட்மா.. நல்லா ஜோவியலா பேசினான்மா. என் கிளாஸ்லாம் மாடலிங் பண்ணிருக்கான், ஒரு ஆறுதல் சொல்லிட்டு வரேனே..’ ‘தறுதல போனதுக்கு ஆறுதல் சொல்லப்போறியா?  அந்த அயோக்கியன் வீட்டுக்குள்ள உன் கால் படக் கூடாது, சொல்லிட்டேன். இப்பகூட அந்தப் பாவியோட பொணம்  எடுக்கலியாம். உங்கப்பா சொன்னார். அவரும் போய். சும்மா பார்த்துட்டு வரேன்னார். ‘ஒண்ணும் வேணாம்’னு சொல்லி நிறுத்தினேன். ‘

     

    அப்பா அவர்களை நோக்கி வருகிறார்.

     

    ‘நான் ஏன் போகணும்னு சொன்னேன் தெரியுமா கோம்டி?. கடைசி நேரத்துல அவன் முகம் எவ்வளோ கோரமா இருக்கும்னு பாக்கற ஆசைதான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே கிடைக்காது நான் சாபம் விட்டுருக்கேன்.. என் சாபம் பலிச்சுடுச்சி.’ அம்மா தலையில் அடித்துக் கொள்கிறாள். ‘ஏய் கோமதி, இவரோட திருவாயை கொஞ்சம் மூட சொல்லுடி. இந்த ஓட்ட வாய் எத்தையாவது உளறிக்கொட்டுமோன்னு பயந்துதான் நான் இவரை போகவேணாம்னு சொன்னேன். கொலைகாரன் யாருன்னு போலீஸ்க்கு தெரியலை. தேடிக்கிட்டுருக்காங்க. உங்கப்பா அங்க போயி எத்தையாவது உளறினாருனு வெச்சுக்கோ…சந்தேகத்தின் பேரிலேயே அரெஸ்ட் பண்ணி உள்ளே வெச்சுடுவாங்க.’ ‘அது எப்படி வெப்பாங்க?  நாம என்ன கொலையா பண்ணோம்? எவன்கிட்டயாவது செமையா ‘மாட்டியிருப்பான்.. சுட்டுத் தள்ளிட்டான்…’ கோமதி அவனை அமைதிப்படுத்தினாள். ‘அப்பா.. நீ கொஞ்சம் திருவாயை மூடிண்டு சும்மா இருக்கணும். உன்னோட கமெண்ட், கோபம்லாம் மூட்டைகட்டி ஓரமா போடு. எப்படியோ போயிட்டான். திருப்தி! அவ்வளவுதான். இனிமே நமக்கு அதுவும் சம்பந்தமில்லாத விஷயம் கூட. ஒருவேளை எதிர்வீடு விசாரணைன்னு உன்னை போலீஸ் விசாரிச்சா கூட அந்தாளு ஏரியாவுக்கே இப்போதான் வந்தான்.. புதுசு.. எனக்கு ‘ஒண்ணும் தெரியாது’ன்னு சொல்லிடு.’ ‘அம்மா.. சாயங்காலமா வீடெல்லாம் அமைதியாயிடும் இல்லியா.. அப்போ போறேன்மா. நான் ஒரு இன்வெஸ்டிகேடிவ் ப்ரொஃபெஷன்ல இருக்கேன். என்னதான் ஆச்சுன்னு, எப்படி போனான்’னு எனக்குத் தெரிஞ்சிக்க ஆசைதான். ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இதை கையாளணும். அவன்கிட்டேயே கேட்கிறேன்.. சரி.. எனக்கு பசிக்குது.. இன்னிக்கு உஷா வீட்டுக்கு போயிட்டு அவ விஷயத்தை முடிச்சுக்கொடுத்துட்டு சாந்தி வீட்டுக்கு போகணும். எங்களோட அமெரிக்கா விசா க்ளியர் ஆயி வந்துடுச்சு.. அதை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துபோய் கலெக்ட் பண்ணிக்கணும்.’ ‘ஆமா.. உனக்கு விஸா வந்து என்ன யூஸ்? உன்கூட படிச்ச சாந்தி புத்திசாலித்தனமா யோசிச்சு அவங்க சொந்தக்காரங்க மூலமா அமெரிக்கா போயி பல் டாக்டரா வேலை பண்ணப்போறா. நீதான்.. விசாரணை.. விவாகரத்து சர்வீஸ்ன்னு சொல்லிட்டு ஊர் சுத்தறே.. பேசாம உங்கப்பா சொல்றமாதிரி கல்யாணம் பண்ணிக்கோடி..’ ‘அட போம்மா.. எதிர்வீட்ல ஒரு கொலையே விழுந்திருக்கு.. இப்போ நீ கல்யாணத்தைப் பத்திப் பேசறே.. போயி டிஃபனை எடுத்து வையு.’

     

    அந்த நாள் மாலை – கல்யாணின் வீடு

     

    இன்ஸ்பெக்டர் மோகன் மெதுவாக கல்யாணுடன் பேசிக்கொண்டிருந்தார். கல்யாணும் ரவியும் அங்கே இருந்தனர்.

     

    ‘கல்யாண்.. நாங்க எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பலமான பகை இருக்கற ஆள் யாருமே இல்லே. ஆனா ஷேர் மார்க்கெட்ல பயங்கரமா பிசினஸ் பண்ணிண்டு இருந்தார். ஒருவேளை ஷேர் மார்க்கெட் பிசினஸ்ல நஷ்டம்ன்னு தற்கொலை ஏதாவது பண்ணியிருக்கலாம்னா அதுவும் அப்பிடி இருக்கமுடியாதுன்னு அவர் ஆடிட்டர் சொல்றார். நல்ல லாபம் பார்த்துதான் பணம் போடுவாராம்.’ ‘ஆமாம் சார், நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டேன்.. அவரோட ஷேர் எல்லாம் ரொம்ப காலமா பெரிய கம்பெனிங்கள்ல இருக்கு. ரிஸ்க் இல்லாத முதலீடு. அத்தோட தற்கொலைன்னு ஏன் பண்ணிக்கணும் அவரு? காரணம் இல்லையே.’ ‘நீங்க சொல்றது சரிதான்.. ஆனா நாங்க அந்த ஆங்கிள்லயும் பார்த்துட்டுதான் சார் விசாரணையை ஆரம்பிக்க முடியும். தற்கொலையா இருந்தா இந்த வழக்கு உடனடியா க்ளோஸ் பண்ணிடலாம்.. ஆனா நாங்க அப்பிடி நினைக்கலே.. எப்படி அவரோட கொலைக்கு மோட்டிவ் கிடைக்கலியோ அவர் தற்கொலைக்குக் கூட மோட்டிவ் இல்லே.’ ‘சார், காலைல வந்ததுலேர்ந்து அவரை நெருப்புல வெக்கற வரை நான் அவரையே பார்த்துண்டு இருந்தேன். சிரிப்பு முகம் சார்.. அவருக்கெல்லாம் கோவம் கூட வராது சார்.. அத்தோட அவர் ரொம்ப தைரியசாலி சார்.. வாழ்க்கைல எதிர்நீச்சல் போட்டு முன்னேறணும்னு சொல்லுவார். என்னை அப்படித்தான் வளர்த்தார்.’ ‘சார் இன்னொரு விஷயம் கவனிச்சேன்..’ ‘சொல்லுங்க கல்யாண்..’ ‘அவரோட பொட்டுல துப்பாக்கி குண்டு பாய்ஞ்ச இடத்துல பெரிய பள்ளம் இருக்கு. இது ஒருவேளை தன் கையாலேயே தற்கொலை பண்ணினால் வரலாம். ஆனா அவர் மார்புலயும் குண்டு பாய்ஞ்சிருக்கு.. ஒருவாட்டி தன் மேலேயே குண்டு போட்டுண்டு சுட்டா கூட கை தடுமாறாதா சார்? மார்புல சுட்டாலும் கை தடுமாறும் அல்லது உயிர் போகிற நிலையிலே ஞாபக சக்தியே போய்டும். அவர் எப்படி பொட்டுலே வெச்சு சுட்டுக்கமுடியும் சார்? எப்படி சார் நடந்துது.. புரியவே இல்லையே சார்.’ ரவி நடுவில் புகுந்தான். ‘ரெண்டு வாட்டி சுட அப்படி என்ன வன்மமோ.. இதை தீர விசாரிக்கணும் சார்.. இது கொலையாதான் என் மனசுக்குப் படுது’. ‘எக்ஸாக்ட்டா எனக்கும் அதுதான் தோணிச்சு கல்யாண். அத்தோட அந்த பீரோ ஹேண்டில்ல ரத்தக் கறை.. அங்க தரையிலயும் ரத்தக் கறை இருக்கு. ஒருவேளை திருட்டுப் போச்சான்னு அதுவும் இல்லே.. காஷ், கொஞ்சம் நகைங்க எல்லாம் அப்படியே இருக்கு. முரளி சொன்னது என்னன்னா அவரோட சொந்த லைசென்ஸ்ட் ரிவால்வர் பீரோலதான் வெச்சிருக்கார்ன்னாரு. எதுக்கும் அந்த ரத்தக் கறையெல்லாம் எடுத்துட்டுப் போயிருக்காங்க.. போஸ்ட் மார்ட்ட்ம் ரிசல்ட் எப்படியும் நாளைக்கு வந்துடும்.. அப்போ பார்த்துக்கலாம், இது கொலையா இல்லே தற்கொலையான்னு. இப்போ நீங்க சொல்லுங்க. உங்க பெரியப்பா எப்படிப்பட்டவரு? யார்கிட்டயாவது தகராறு பண்ணிண்டே இருப்பாரா? அவருக்கு உங்கப்பா ஒரே தம்பியா இல்லே அவருக்கு வேற யாராவது உறவுக்காரங்க இருக்காங்களா? இன்னிக்கு எத்தனை உறவுக்காரங்க வந்தாங்க?.. தூக்கம் விசாரிச்சாங்க?.’ ‘எங்க சொந்த ஊர் திருச்சி சார்.. எங்கப்பாவும் பெரியப்பாவும் சிநேகிதர் மாதிரி பழகினாங்களாம். எங்கப்பா எங்கம்மா ரெண்டு பேருமே நான் குழந்தையா இருக்கறப்பவே ஒரே நாளில் செத்துப்போனாங்க. ஆனா இது நடக்கறச்சா எங்க தாத்தா பாட்டி இருந்தாங்க. வீட்லேயே ஒரு சின்ன விபத்துல போயிட்டாங்கன்னு பாட்டியும் தாத்தாவும் சொன்னாங்க. நான் அப்போ. பள்ளிக்கு கூட போக ஆரம்பிக்கலே. ஆனா எங்க பெரியப்பா ரொம்ப தைரியமா என்னை வளர்த்து வந்தாரு. அப்பா அம்மா இல்லாத குறையை பாட்டி தாத்தா கொஞ்ச வருடம் போக்கினாங்கன்னா அதுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே எங்க பெரியப்பான்னு ஆகி போயிடுச்சு..’ ‘அப்போ பெரியப்பா கல்யாணம் பண்ணிக்காமயே இருந்துட்டாரா?’ ‘சார். எனக்கு தெரிஞ்சு அவருக்கு கல்யாணம் ஆகலை. எங்கப்பா கல்யாணத்துல சந்தோஷமா ஆடி ஓடி வேலை செஞ்சதை எங்க பாட்டி சொல்லிருக்காங்க. நான் பள்ளில படிக்கறச்சே என்னை ஜாக்கிரதையா கொண்டு விட்டு கொண்டு வருவார். நான் வேற ஊருக்கு காலேஜ் படிக்கப் போனதும்தான் அவருக்கு திருச்சில நான் இல்லாம ஊரே பிடிக்கலேன்னு சொல்லிண்டுருப்பார். வைசாக்ல நான் பிஜி படிச்சு முடிச்சேன். சென்னைக்கு என்னை வரவழைச்சு என்னோட இருக்கணும்கிறதுக்காக இந்த வீட்டையே வாங்கினார். ஆனா நான், என் படிப்பு, என் வேலைன்னு வைசாக்லேயே இருந்துட்டு எப்பவாவதுதான் பெரியப்பாவை இங்கே வந்து பார்ப்பேன்.  ஆனா எனக்கு பெரியப்பாவை வந்து சரியா கவனிக்க முடியலே.. இனிமேயாவது நம்ம பக்கத்துலேயே அவரை வெச்சுக்கணும்னு அப்பப்ப நினைப்பேன் சார்.. ஆனா அதுக்குள்ளே…’

     

    கண்களைத் துடைத்துக் கொண்டான் அவன். ரவியும் சேர்ந்து கொண்டான்.

     

    “வைசாக்ல இருக்கறச்சே கூட அப்பப்போ பெரியப்பா பத்திதான் பேசுவான். பெத்த அப்பாவை விட பெரியப்பா மேல இப்படிப் பாசம் வெச்சிருக்கானேன்னு ஆச்சரியப்படுவேன். ஆனா இவங்கப்பா இவன் குழந்தையா இருக்கறச்சயே போயிட்டாரு இல்லையா.. வளர்த்த பெரியப்பா மேல வெச்சிருக்கற பாசம் சரிதான்னு தோணும்”.

     

    கல்யாண் ரவியை கையை ஆறுதலுக்காக பற்றிக்கொண்டான். ‘இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்குத் தெரியும்டா ரவி, . இப்படி அநியாயமா என்னை விட்டுப் போயிட்டாரேடா..’

     

    அப்போது அங்கே கோம்டி வருகிறாள்.

     

    திடீரென்று கல்யாண் எழுந்தான். ரவியும் கூடவே ஆச்சரியத்துடன்.

     

    ‘காலையில நான் உங்ககிட்டே எதுவும் பேச முடியலே கோமதி.. ஸாரி கோம்டி.. இதோ ரவியும் காலைல ஃப்ளைட் பிடிச்சு வந்துட்டான். ஆனா என் வீடு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது? ஓ.. டி.வில கூட இதைப் பத்தி நியூஸ் இன்னிக்கு மார்னிங் பார்த்தேனே.. நீங்களும் பார்த்திருப்பீங்கதான். சென்ட்ரல்ல போகறச்சே சொல்லிக்கொள்ளாம போகறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அதிர்ச்சியான செய்தி இல்லையா?’ ‘பரவாயில்லே! உங்களை இந்த சமயத்துல இப்படி ஒரு நிலைமைல பார்க்கிறோமேன்னு வருத்தம்…. எவ்வளோ அன்பா உங்க பெரியப்பா பத்தி என்கிட்டே ட்ரெயின்ல நேத்து பூரா பேசிட்டு வந்தீங்க? ச்சே.. உலகம் தலைகீழா மாறிப் போன மாதிரி இருக்கு.’

     

    இன்ஸ்பெக்டர் மோகன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தார்.

     

    ‘கோம்டி! நீங்களா.. நீங்க எப்படி இங்கே வந்தீங்க?’ ‘சார்,  நான் எதிர்வீட்டுக்காரி சார்.. கந்தசாமிதான் இவரோட பெரியப்பான்னு எனக்கு தெரியாதுதான். வைசாக்லேர்ந்து நானும் இவரும் பேசிண்டே ஒரே கம்பார்ட்மெண்ட்ல வந்தோம். இன்னிக்குக் காலைலதான் வண்டில இறங்கறச்சே இவரோட பெரியப்பா பத்தி நியூஸ் வந்தது. அதான் பார்த்துட்டுப் போகலாமேன்னு வந்தேன்.” வந்தவள் கல்யாணிடம் திரும்பினாள். “இன்ஸ்பெக்டர் மோகன் எனக்குத் தெரிஞ்சவர்தான். நிறைய விஷயங்களுக்காக அவர்கிட்டே உதவி கேட்பேன். ஆனா உங்க பெரியப்பாவைப் பத்தி எத்தனை அருமையாப் பேசினீங்க.. அவருக்கு இப்படி ஆயிடுச்சே..” ‘கோம்டி.. நீங்க எதிர்வீடுதானே.. கந்தசாமியைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்களேன்.’ “சார்.. என்னோட ப்ரொஃபெஷன் டென்டிஸ்ட்.. வீட்லேயே கிலினிக் வெச்சுருக்கேன்,  ஆனா ஃப்ரீ டைம் நிறையா இருக்கறதுனாலே பார்ட் டைம் ஜாப்ல இன்வெஸ்டிகேடிவ் வேலையை எடுத்துண்டு இருக்கேன் சார்.” “அதுதான் ஏற்கனவே எனக்குத் தெரியுமே.. நான் கேட்டது இவங்க பெரியப்பாவைப் பத்தி என்ன தெரியும்னு?”  “மிஸ்டர் கந்தசாமியைப் பத்தி எனக்கு, எங்க எதிர்வீட்டுக்காரர் என்கிற அளவுலதான் தெரியும். அவரு யார்கிட்டேயும் அவ்வளவு அதிகமா பழகறவர் இல்லேன்னு எங்க வீட்ல சொல்லுவாங்க…’. எனக்கு அவரைப் பத்தி பர்சனல் விஷயம் எதுவுமே தெரியாது சார்.”

     

    திடீரென கோமதியைப் பார்க்கிறான் கல்யாண்.

     

    ‘கோம்டி, நீங்க ஏதோ இன்வெஸ்டிகேஷன் தொழில் பாக்கறேன்னு சொன்னீங்களே.. இது.. இந்த வழக்கை ஒரு சவாலா எடுத்து செய்யுங்க.. எவ்வளோ பணம் செலவானாலும் நான் தரேன். இதோ நம்ம ரவியும் கூடவே இருப்பான். அத்தோட நம்ம இன்ஸ்பெக்டர் மோகன் நான் பழகினவரைக்கும் தங்கமானவர். அவரு உங்களுக்கு ஃபுல் கோஆபரேஷன் தருவார்..’

     

    இன்ஸ்பெக்டர் மோகன் மட்டும் கோமதியை ஒரு மாதிரி பார்த்தார்.

     

    ‘ஆகட்டும்.. செய்யலாம்.. ஆனா இவங்க சாதாரணமா இந்த விவாகரத்து கேஸுங்களுக்கு உதவி கேட்டுதான் வர வழக்கம்.. ஆனா இது கொலை கேஸ்.  போலீஸ்தான் உண்மையான விசாரணை செய்து சட்டப்படி பண்ணணும். இல்லையா கோம்டி?’ “ஆனா எங்களை மாதிரி உள்ளவங்கதான் சார் சரியான வழியிலே போய் விசாரிக்கமுடியும். உங்க சட்டப்படி போகறச்சே கொஞ்சம் இடைஞ்சல் வரலாம் இல்லையா.. நான் இதை எடுத்துச் செய்யறேன் சார்..” “இங்க பாருங்க கோம்டி.. இந்தக் கொலை வழக்குல ஏதாவது தகவல் தெரிஞ்சா நீங்க என்கிட்டே உடனடியா சொல்லணும். சட்டம் உங்களைப் பாதுகாக்கும் எப்போன்னா நீங்க சட்டத்துக்கு மதிப்புத் தரவரைக்கும்.. புரிஞ்சுதா..” என்றவர் கல்யாண் பக்கம் திரும்பினார். ‘சரி.. மிஸ்டர் கல்யாண்.. நான் இன்னும் இரண்டு நாள் கழிச்சு பாக்கறேன். ஏன்,  நீங்களே கூட என்னை ஸ்டேஷன்ல வந்து பாக்கலாம். என் மொபைல் நம்பர் உங்ககிட்டே இருக்கு இல்லே. சி ஐ டி அம்மா.. உங்களுக்கும்தான்.. இது கொலை கேஸுன்னு கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்கணும். மர்ம ஆசாமியால இவரோட பெரியப்பா கொல்லப்பட்டிருக்கலாம்னு சந்தேகம் இருக்கு. அது மட்டும் நிஜமா இருந்தா அந்த ஆள் எப்படியோ.. நீங்க இதுல தலையிடறதுல கோபம் வந்து உங்களையும் போட்டு தள்ளினா?. எங்களுக்குத் தான் ஒரு வழக்கு எக்ஸ்ட்ரா ஆகும்.. ஜாக்கிரதை..!’

     

    அவளை எச்சரித்து விட்டு வீட்டை விட்டு வெளியே போனார்.

     

    தொடரும்

     

     

    Share
  • பல்லழகன் – பகுதி 3

    திவாகர்

    அவள் புன்னகைக்கிறாள்.

    ‘உங்க பொட்டி பத்திரமா இருக்கு சார்! நான் மட்டும் இல்லே.. இதோ (எதிர் சீட்டில் அம்ர்ந்திருப்பவரைக் காண்பித்து) இவரும், யாரோ இருந்தாலும் கூட என்னை விட ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துண்டே இருந்தார்.’

    ‘ஆமாங்க.. யாரா இருந்தாலும் யாரோ ஒத்தர்னு சும்மா யார்தான் விடுவாங்க? அதனாலதான் நீங்க யாரோன்னாலும் கூட அப்பப்ப உங்க பொட்டி மேல கண்ணப் போட்டுண்டுதான் இருந்தேங்க. அவள் காதருகே வந்து கிசுகிசுத்தான் ‘ரொம்ப தேங்க்ஸ்ங்க..பணம் நிறைய வெச்சுருக்கேங்க. எல்லாம் இந்த பல்லால சம்பாதிச்சது.. போய் எங்க பெரியப்பாகிட்டே காமிக்கணும். அவரு முன்னாடி கவுரமா தலை நிமிர்ந்து நிற்கணும். அவரு ரொம்ப சந்தோஷப்படுவாருங்க’. ‘ஓ. பெரியப்பான்னா அவ்வளோ பாசமா?’ ‘இருக்காதா பின்னே.. அன்பா அக்கறையா வளர்த்தவர்.. அத்தோட அவரோட சொத்துக்கெல்லாம் நான் வாரிசு. ஆனா இப்போ வரைக்கும் ஒரு பைசா கூட வேணாம்னு சொல்லிண்டுருக்கேன். பணம் என்னங்க பெரிசு?  மரியாதையா மானத்தோடு வாழணும்.. இல்லீங்க?..’ அவள் புன்னகைக்கிறாள்.‘உங்க பல்லுதான் உங்களுக்கு இடைஞ்சலே தவிர உங்க கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு.. ஆமாம்.. என்ன சாப்பிட்டீங்க?’ ‘இல்லீங்க.. திருவேங்கடகிருஷ்ணமூர்த்திதான் ‘பிரியாணிக்கு ஆர்டர் பண்ணேன்.. சித்த இருடா’ ன்னான்.. ஆனா அதுக்குள்ள இந்தப்பொட்டி விசயம் தெரிஞ்சு ஓடி வந்துட்டேன். பயங்கர பசி.. வண்டியும் கிளம்பிடுச்சு.. அவனைப் பாக்கறதுக்குன்னா திருப்பியும் அத்தனை பெட்டியையும் க்ராஸ் பண்ணிண்டு போகணும்..”’ ‘சரி.. நான் தயிர்சாதம் கொண்டு வந்துருக்கேன்.. மேல பெர்த்ல வெச்சுருக்கேன்.. அதை முதல்ல எடுங்க.. சாப்பிடலாம்..’

    கல்யாண் எழுந்து அவள் வைத்திருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்தான். பிலாஸ்டிக் பை முடிச்சு பலமாக இருந்தது. சட்டென அப்படியே வாயில் வைத்து தன் தன் தெத்துப்பல்லால் கிழித்து அவசர அவசரமாக அந்த முடிச்சை கழற்றிவிட்டு அதே அவசரத்தில் சாப்பிட ஆரம்பித்தான். அவள் காணச்சகியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ‘அவ்வளோ பசியா? காணாததை கண்டமாதிரி சாப்பிடறீங்க.. எனக்கும் சேர்த்துதான் இந்த தயிர்சாதங்க..’ ‘ஓ ஸாரி.. எச்சில் பண்ணிட்டேன்.. வேற ஏதாவது கொண்டு வந்தீங்களா?’

    அவள் எரிச்சலுடன் பதில் சொன்னாள்.

    “நான் ஒருத்தி சாப்பிட நாலஞ்சு பாக்கெட் சாப்பாடு கொண்டு வருவாங்களா? பரவாயில்லே.. சாப்பிட்டு முடிங்க.. நான் வாழைப் பழம் வெச்சுருக்கேன். சாப்பிட்டுக்கறேன்.” ‘அடடா.. விஜயவாடா தாண்டினப்புறம் வர்ற ஸ்டேஷன்ல இனிமே சாப்பாடு கிடைக்காதுங்க.. இதோ பாருங்க.. உடம்பு ஃபிட்னெஸ்க்கு வாழைப்பழம் நல்ல வேலை செய்யணும். நல்லதுதான்!’ ‘போனா போகறதுன்னு பசியோட இருக்கீங்களே.. ன்னு உங்களுக்கு சாப்பாடு கொடுத்தேன் பாருங்க.. என்னைச் சொல்லணும்.” ‘என்ன அப்படி சொல்லிட்டீங்க? தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம்’னு எங்க பெரியப்பா அடிக்கடி சொல்லுவார். நாளைக்குக் காலைல போனவுடனே நீங்க கொடுத்த இந்த அருமையான தயிர்சாத தானம் பத்தி எங்க பெரியப்பாகிட்டே கண்டிப்பா சொல்லுவேன்’

    சாப்பிட்டு முடித்துவிட்டு, அவள் வெறுப்போடு பார்க்க ஒரு ஏப்பமும் விட்டு, இருவரும் எழுந்து உறங்க மேல் பெர்த்துக்கு சென்றனர். படுத்துக்கொண்டே கல்யாண் பேச ஆரம்பித்தான்.

    ‘என்னங்க.. நீங்க பல் டாக்டர்தானே.. எதாவது கிலினிக் பிலினிக் வெச்சிருக்கீங்களா?’ ‘பிலினிக் இல்லே கிலினிக் வெச்சுருக்கேன்’ ‘ஆமாம் நீங்க சென்னைல எங்க தங்கறீங்க?’ ‘சென்னைல.. அது சரி! நீங்க எங்க தங்கறீங்க..?’ ‘எங்க பெரியப்பா வீட்டுலதான். ஆக்சுவலா அந்த வீட்டை என் பேருலதான் வாங்கினார்.’

    அவளுக்கு எரிச்சல் வந்தது.

    ‘அதைத்தான் நூறு தடவ சொல்லிட்டீங்களே.. சென்னைல எந்த இடத்துல உங்க பெரியப்பா வீடு இருக்கு?’

    அப்போது லோயர் பெர்த்திலிருந்து.. ‘ஏன்பா.. எங்களைத் தூங்க வுடுங்க..’ என்ற எரிச்சல் குரல் கேட்டது..

     

    தாழ்ந்த குரலில் கல்யாண் அவளிடம் ‘இந்தப் பெரிசுங்களுக்கே கொஞ்சம் பொறாமை அதிகங்க.. கொஞ்சம் சுமாரான அழகிய பொண்ணு நல்ல அழகான வாலிபன்கிட்டே பேசினா போதும்,

    நொய் நொய்யுன்னு வந்துடுவாங்க..’ என்றான்.

     

    ‘நீங்க எப்பவுமே உங்களை கண்ணாடியிலே பாத்துக்க மாட்டீங்களா?’ என்று தாழ்ந்த குரலில் கேட்டாள்.

    ‘ஏனுங்க?’ ‘உங்களை ரொம்ப அழகானவர் ன்னு சொல்லிக்கிறீங்களே.. அதுதான் கேட்டேன்.. அது சரி, அந்த திருவேங்கடகிருஷ்ணமூர்த்திகிட்டே அவ்வளோ நேரம் என்னதான் பேசினீங்க?’.. ‘அதுவாங்க.. அது வேற ஒண்ணும் இல்லீங்க.. அவன் சின்னப்போ பண்ண சேஷ்டையெல்லாம் ஞாபகம் வெச்சு சொன்னான். நானும் ரசிச்சு கேட்டேன்.. அப்புறம்…’

    அவள் கையைக் குவித்து வாயில் வைத்து ஒரு கொட்டாவி  விட்டு அந்தப் பக்கம் திரும்பிப் படுத்தவள் அப்படி திரும்பும்போது.. ‘நீங்க பாட்டுக்கு அப்படியே நிதானமா சொல்லுங்க. நான் ஃபுல்லா கேட்டுட்டு படுத்துடுவேன்’.

    ‘ஓ.. சின்னப்போ விஷயம்லாம் உங்களுக்கும் பிடிக்குமா? இப்படித்தான்…” என்று சொல்லிக்கொண்டே போக, சடாரென அவளைப் பார்த்தான்.

    அவளிடமிருந்து மெதுவாகவும் சீராகவும் சுவாசம் வந்தது என்று புரிந்தது.. அவள் ஏற்கனவே தூங்கிவிட்டாள். அவன் பேச்சு வீண் என்று புரிந்து கொண்ட கல்யாண் நிறுத்தினான்.

    ‘அடிப்பாவி.. கதை சொல்லி கேட்டு தூங்கற பழக்கம் போல.. அதை எங்கிட்டயே காமிச்சுட்டியா..’

    அவனும் வேறு பக்கம் திரும்பினான். அதி வேகத்தில் அந்த ராத்திரியில் அசைந்துகொண்டே அந்த ரயில் சென்று கொண்டிருந்தது. அடுத்த நாள் அதிகாலை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருவரும் இறங்கத் தயாரானார்கள்.

     

    அவள் அவனிடம் கேட்டாள்,

    “தூங்கினீங்களா.. நான் நல்லா தூங்கினேன். உங்க திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி கதை ஃபுல்லா கேட்டேன்.. ரொம்ப சிரிப்பா இருந்தது.. செம்ம காமெடி மனுஷன் இல்ல அந்த திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி?

    அவன் முறைத்தான்.

    ‘காலங்காத்தாலே ஒரு புத்தம்புது நாளை எதுக்குங்க இப்படி பொய்யோட ஆரம்பிக்கிறீங்க?  நான் பேச ஆரம்பிச்சதுமே நீங்க தூங்கிட்டதை நான் பார்த்தேன்!’

     

    அவள் பேய்முழி முழிக்க ரயில் நிலையம் வர ஆரம்பிக்கும் நிலையில் தன் பெட்டியை எடுத்துக் கொள்கிறான். இறங்கத் தயாராகிறான்..

    ‘ஹெல்லோ நில்லுங்க.. இவ்வளோ தூரம் சிநேகிதமா பழகினோமே.. ஒரு பெண்ணோட சூட்கேஸ் எடுத்துட்டு வெளிய வெக்கலாமுன்னு உங்களுக்குத் தோணலியா?’

    ‘ஆஹா.. எவ்வளோ பெரிய சிநேகிதம்!.. அப்படியே உங்க பெட்டியை தூக்கறேங்க.. ஆமாம் ரயிலில் வரும் சிநேகம் எல்லாம் ரயிலை விட்டு இறங்கினாலே போயிடும்னு சொல்லுவாங்களே… நீங்க யாரோ.. நான் யாரோ.. இதோ இவர் யாரோ’ என தன்னுடை சக பயணியைச் சுட்டிக் காண்பித்தான்.’

     

    ‘அட என்னங்க இப்பிடி சொல்லிட்டீங்க.. நம்மளது சாதாரண ரயில் சினேகமாங்க? எங்க ரவியோட பெஸ்ட் ஃப்ரெண்ட். பெர்சனலா பார்த்தா நம்ம ரெண்டு பேரோட சினேகம் மூணு வருஷத்து சிநேகம். எங்க காலேஜ் கிளாஸ்ல டிஷ்யூ பேப்பர்ல ஆரம்பிச்சுது இல்லயா..?’ ‘ஓ.. அப்படி வரீங்களா? இருங்க! இந்தப் பொட்டியை கீழ வெச்சுட்டு உங்க பொட்டியை வாங்கறேன்.. வேண்டாம்.. இந்த பொட்டியிலே பணம் இருக்கு.. நீங்க உங்க பெட்டியையும் கொடுங்க.. ரெண்டுத்தையும் சேர்த்து எடுத்து வரேன். ‘ ‘நான் கோம்டி..’ ‘என்ன டீஈஈ?’ ‘டீஈஈ இல்லங்க.. டி.. கோம்டி.. ஜிஓஎம்டிஐ..  சரியா சொல்லணும்னா கோமதி’ன்னு எங்க அப்பா பேரு வெச்சாரு.. நான் கொஞ்சம் சிம்பிளா மாடர்னா கோம்டி’ன்னு வெச்சுகிட்டேன், நல்லா இருக்கா..’

    அவன் அவளை பார்த்து சிரிக்கிறான்.. ‘ஆஹா,, பேஷா ரொம்ப நல்லா இருக்கு..’ என்றவன் அவள் பெட்டியைத் தூக்குகிறான்.

     

    ‘சரி வாங்க கோமதி.. சாரி.. கோம்டி. ‘

     

    இருவரும் சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலில் இருந்து வெளியே வந்தனர். திடீரென சிலர் அவனைத் தேடிப் பதற்றத்துடன் வந்தனர். கல்யாணின் கையைப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள்.

    ‘அடேய், நம்ம பெரியப்பா போயிட்டாருடா… உனக்குச் சொல்லலாம்னு மொபைல்ல ட்ரை பண்ணினோம்.. ஹவுரா மெயில்லதான் வரான்னு உன் வைசாக் ஃப்ரெண்ட் ரவி’ன்னு ஒத்தன் சொன்னான்.. உன் மொபைல் நம்பர் ராத்திரி பூரா ட்ரை பண்ணினா கூட கம்ப்ளீட்டா எடுக்கலை டா..’

    இன்னொருவன் அவனிடம் அழுதுகொண்டே சொல்லிக் கொண்டிருந்தான்.. ‘அடேய்.. நேத்து காலைலதான் பெரியப்பா சொல்லிண்டு இருந்தாருடா.. இந்த வாட்டி கல்யாண் வரச்சே இந்த சொத்து விஷயம்லாம் பேசி உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணப்போறேன்னு.. ஆனா இப்படி சடார்னு அவரோட வாழ்க்கை முடிஞ்சுடுச்சேடா…”

     

    அதிர்ச்சியுடன் பிளாட்பாரத்திலேயே முட்டிப் போட்டு அமர்ந்தான் கல்யாண். பின் அதே முட்டியில் தன் தலையைக் குனிந்து வைத்துக் கொண்டான். . அந்த பெண் தன் பெட்டியை எடுத்துக்கொண்டு தன் இன்னொரு கையால் அவனது முதுகில் தட்டினாள், அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றாள், ஆனால் இறுதியில் இருவரும் தங்கள் வழியில் சென்றனர்தாம்.

     

    கோமதியின் வீடு, அதே நாள்

     

    கோமதி குளித்து முடித்து ஒரு டவலால் தலைமுடியை உலர்த்திக்கொண்டு கிச்சனில் அம்மாவிடம் வந்தாள்

    ‘யாராவது என்னை தேடி வந்தாங்களாம்மா?’ ‘ஆமாண்டி, உன் க்லையண்ட் அந்த உஷாவாமே.. அவ வழக்குக்காகத்தானே நீ வைசாக் போனே? அவ நேத்து உன்னைத் தேடி இங்க வீட்டுக்கே வந்துட்டா.. நீ போன காரியம் என்னாச்சு?’ ‘சக்ஸஸ்மா.. உஷாவுக்கு ஈஸியா விவாகரத்து கிடைச்சுடும். அவ புருஷன் அங்க வைசாக்ல ஒரு சின்ன வீடு,  ஓ இல்லே இல்லே பெரிய வீட்டையே வெச்சுருக்கான். நம்ம சாந்தியோட அண்ணன் ரவி கூட அவங்க வீட்டுலதான் கீழே குடி இருக்கான்.   உஷாவோட இந்த ஊர் புருஷன் வைசாக்ல ஒரு பெரிய பணக்கார பொண்ணைக் கல்யாணம் கூட பண்ணிண்டு வீட்டு மாப்பிள்ளையா சந்தோஷமா வாழறான். போட்டோஸ் வீடியோலாம் எடுத்துண்டு வந்திருக்கேன்..   நிச்சயமா உஷாவுக்கு இது ஹேப்பி நியூஸ்தானே.. உடனடியா விவாகரத்து கிடைச்சுடும். போகட்டும் நம்ம மூலமா நாலு பேருக்கு நல்லது நடந்தா போதும்.’ அம்மா அலுப்புடன் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘கோமதி, உன்னை வைசாக் அனுப்பிச்சு பல் டாக்டருக்குப் படிக்கவெச்சு, வீட்டுக்கு முன்வாசல்லயே ஒரு கிளினிக் வெச்சு கொடுத்தா,  உனக்கு எதுக்குடி இந்த அனாவசிய வேலை எல்லாம்! அதுவும் உனக்கு வரும் வேலையெல்லாம் விவாகரத்து பண்ற கேஸாவே வருதா.. அப்புறம் பிராண்ட் விழப் போகுது.. இவகிட்டே விவாகரத்து கேஸ்க்கு போனா அந்தக் கேஸ் சக்சஸ் ஆகிடும்னு’ ‘அம்மா,  நான் என்ன விவாகரத்து வக்கீலா.. இதுதான்மா ஒரு இன்வெஸ்டிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்டோட வேலை. இதோ பார்.. கிலினிக்ல சாயங்காலம் மூணு மணி நேரம்தான் வேலை பாக்கறேன்.. மீதி நேரத்தை இப்படி உருப்படியா செலவழிக்கறேன். பணத்துக்கு பணமும் வருது.. மனசுக்குத் திருப்தியும் கிடைக்குது..’

    இப்படிச் சொல்லிக்கொண்டே பால்கனியில் வருகிறாள். எதிர்வீட்டில் இருந்த கூட்டம் பார்த்து அம்மாவை ஆச்சரியமாக கேட்கிறாள்.

    ‘என்னம்மா.. எதிர்வீட்ல ஒரே போலீஸ் கூட்டமா இருக்கு? அந்த கந்தசாமி போயிட்டானா?‘ ‘சாதாரணமா அவன் போகலடி.. யாரோ ஒருத்தன் கொலை பண்ணிட்டானாம்’.. ‘கொலையா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.. ‘கடவுளே.. எப்படிம்மா?’ ‘ஆமாண்டி.. கொலைதான்.. இப்போ காலம் ரொம்பவே மாறிப்போச்சு. மனுஷனுக்கு சாவு கூட நிம்மதியா வராது இல்லே..’ ‘காலையிலேர்ந்து இது ரெண்டாவது சாவு கேஸ் கேட்கறேன்.. சென்ட்ரல் ஸ்டேஷன்ல வந்து கால் வெக்கறேன்.. என் கூட வந்தவனோட பெரியப்பா  நேத்து சாயங்காலம் போயிட்டாருன்னு இந்த ஆள் வண்டியை வுட்டு இறங்கறச்சேயே வந்து சொன்னாங்க.. பாவம் ரொம்ப. நல்ல மனுஷன்..’ ‘அப்படியாடி.. யாருடி அவன்?’ ‘அம்மா.. அந்த ஆள் நம்ம ரவியோட பார்ட்னர்தான்மா.. அத்தோட எங்க காலேஜ்’ல ஒரு ஆளு பல் மாடலிங் பண்ண வருவாரும்மா.. என் கூடத்தான் வண்டி ஏறினாரு..’ ‘பல் மாடலிங்ன்னா என்னம்மா? ‘அப்நார்மல் பல் உள்ளவங்களை பிடிச்சி எங்க கிளாஸ்ல பிராக்டிகல்ஸ் பண்ணுவோம். இந்த ஆளுக்கு தெத்துப்பல்லு ரெண்டு.. அதை வெச்சு எங்ககிட்ட காமிச்சு மாடலிங் நிப்பான். ஒரு மாடலிங்க்கு பத்தாயிரம் சார்ஜ் பண்றாம்மா.. பல்லைக் காட்டி பொழைக்கிறான்னு பொதுவாச் சொல்லுவாங்க.. ஆனா. இவன் கில்லாடி.. தனக்கு வந்த தெத்துப்பல்லை வெச்சே ஆயிரம் ஆயிரம் சம்பாதிக்கிறான்மா’ ‘இருடி.. அப்போ அவன் பேரு கல்யாண் தானே?’ ‘ஆமாம்மா..’ கோம்டி ஆச்சரியப்பட்டாள்.

     

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 2

    திவாகர்

    “சார்.. சார்.. அப்படியெல்லாம் சொல்லலாம்மா.. நீங்க உங்க லெவலே வேற.. கொஞ்சம் டிக் பண்ணிக் குடுங்க சார்.. நான் என் ஃப்ரெண்டைப் பார்க்க போய்டுவேன்.”

     

    TTE பரிதாபமான உணர்வுடன் அவனைப் பார்த்தார். அவனிடம் இருந்து டிக்கெட்டை பறித்து.. சரி பார்த்தார்.

     

    “சரி! அடையாள அட்டை ஆதார்.. ஆதார் அட்டை காமி?”

     

    “அந்தப் பொண்ணுகிட்டே கேக்கலியே” என்று சொல்லிக்கொண்டே தன் பர்ஸைக் கழற்றி கார்டைக் காட்டினான்.  அதைக்கூட அவர் பார்க்காமல் அலட்சியம் காட்டினார்.

     

    “இருக்கு இல்லே?.. நான் என் கடமை ஐ செய்யணும்.. சரி சரி, நீ போய் உன் சீட்டுல உட்கார்ந்துக்கோ..”

     

    “தேங்க்ஸ் சார்!”

     

    கல்யாண் கம்பார்ட்மெண்ட் உள்ளே சென்று அந்தப் பெண் எதிரில் அமர்ந்தான். அவள் அவனை ஒரு மாதிரியாக லேசாகப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் சிரித்தான். சட்டென்று அந்தப் பெண் அவனது தெத்துப் பற்களைக் கண்டு பயந்து, கைகளைக் கூப்பிக் கேட்டாள்.

    “சார்.. நீங்களும் சென்னைதான் வரீங்க இல்லயா?”

    “ஆமா”

    “சார்.. நாம ரொம்ப தூரம்  சேர்ந்து டிராவல் பண்ணியாகணும். கொஞ்சம் சிரிக்காம..“

    “கொஞ்சம் கஷ்டம்தாங்க.. ஆனா கவலையே படாதீங்க.. வண்டி கிளம்பினதும் நான் என் நண்பன்….”

     

    அவள் உடனே பதிலளித்தாள்.

    திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி. S1 கோச்..

    “ஹய்யோ! நீங்க கவனீச்சங்களா..”

     

    “நான் எதுக்கு கவனிக்கணும்? அதான் ஊரே கேக்கறமாதிரி ரெண்டு பேரும் கத்தி பேசினீங்களே..”

    “ஆமாமாம்.. அவன் குரல் கொஞ்சம் பெரிசு..”

     

    “அது சரி, ரவியை எவ்வளவு நாளா தெரியும்.. என் ஃப்ரெண்டோட அண்ணன் அவன்.. சென்னைக்கு வாடான்னு சொன்னா வரவே மாட்டேங்குறான்..”

     

    “ஓ.. ரவி என் ஃப்ரெண்ட். என் தொழில்ல கூட பார்ட்னர்.  அவனும் நானும் ஒரே வீட்லதான் இருக்கோம்..”

     

    “காலைல அவன் வீட்டுக்கு வரச்சே நீங்க இல்லே.. ஒருவேளை நீங்க இருந்தீங்கன்னா எங்களோட வேலை முடிஞ்சிருக்குமான்னு சொல்லமுடியாது. நல்லகாலம் நீங்க இல்லே..” அவள் புன்னகைத்தாள்.

     

    “இந்த திருவேங்கடகிருஷ்ண மூர்த்தி கூட..” அவன் சொல்லும்போதே இடைமறித்தாள்.

     

    “அவர் இருக்கட்டும்ங்க.. ஆனா உங்களை ஏன் தெத்துப்பல்லன்’னு கிண்டல் பண்ணி கூப்பிடறாரு? ஒருத்தர் குறையை சொல்லி அப்படி கூப்பிடறது தப்பு..”

     

    “அய்யய்ய.. சின்ன வயசுலேர்ந்து இது இருக்கு.. அப்பவே எல்லா ஃப்ரெண்ட்ஸும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. ஒருவாட்டி நான்  திருவேங்கட கிருஷ்ணமூர்த்தியை ‘நொண்டி’ன்னு கூப்பிட்டுட்டேன். அதை எங்க பெரியப்பா ஒருதடவை பார்த்துட்டாரு., அவருதான் எங்க பள்ளிக்கு தினசரி வந்து அழைச்சுண்டு போவாரு, அவரு அப்போ எனக்கு புத்தி சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. நீங்க இப்போ சொன்ன மாதிரியே ‘உடம்புல குறை உள்ளவங்களை அப்படியெல்லாம் கிண்டலா சொல்லிக் கூப்பிடக்கூடாதுடா”ன்னு சொன்னாரு. ஆனா இந்தத் தெத்துப் பல்லுங்க எனக்குக் குறை இல்லையே..”

     

    “பெரியப்பா நல்ல பெரியப்பா..”

     

    ‘ஆமாங்க எனக்கு அவர்தான் எல்லாமே. எங்க அப்பாவும் அம்மாவும் என் சின்ன வயசுலேயே மேல போனதுக்கப்புறம் எனக்கு எல்லாமே எங்க பெரியப்பாதான்.’ “ஓ! ஸாரி, ஆனா சுவாரஸ்யமா பேசறீங்க.. அது சரி, நான் உங்களை எங்கேயோ பார்த்துருக்கேனே.. எங்க எப்படி பார்த்தேன்னு ஞாபகம் இல்லே.. நீங்க வைசாக்ல இருக்கீங்களா?” “இப்போ இல்லே.. சென்னைதான். ஆனா வைசாக்’லதான் பிஜி படிச்சேன்..?” “எங்கே? கீதம் காலேஜ்லயா?  நான் கீதம்தான் படிச்சேன்” “கீதம் காலேஜ்?… ம்.. எனக்கும் பிடிக்கும்.. ஆனா அங்கே இல்லே”. “நான் அப்போ உங்களை எங்கே பார்த்திருக்கேன்?” “கீதம் காலேஜ்லேயே பார்த்திருக்கலாம். எனக்கு அங்கே ஒரு விருது கிடைச்சுது. அதுக்கு வந்திருக்கேன்.. அங்க நிறைய கேர்ள்ஸ் என் கையைப் பிடிச்சுக் குலுக்கிப் பாராட்டினாங்க.. நீங்க கூட அப்படி கையைக் குலுக்கியிருக்கலாம்… அப்போ பார்த்திருக்கலாம்” “ஊம்ஹும்.. ஆஹா.. ஞாபகம் வந்துடுச்சு. நீங்க நான் என் ஃபைனல்ஸ் முடிக்கறபோது என் கிளாஸ்க்கு வந்து இருக்கீங்க. உங்களை நிக்க வெச்சு எங்க ப்ரொஃபசர் பிராக்டிகல்ஸ் சொல்லிக் கொடுத்தாரு”

    //அவள் நினைவுகள் பின்னோக்கி செல்கிறது. கீதம் காலேஜ் மெடிகோஸ் வகுப்பறையில், கல்யாண் மாணவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். பேராசிரியர் கையில் தடியுடன் கல்யாணிடம் கேட்டார்.

    “தம்பி வாயை நல்லா திறந்து வெச்சுக்கோ..”பின்னர் மாணவர்களிடம் பேசினார். “இங்கே நல்லா பாருங்க.. இவரோட ரெண்டு பல்லுங்க அசாதாரணமா முன்னாடி வந்துருக்கு. இதுக்கு இங்க்லீஷ்ல மிஸ்-அலைன்னுட் டூத்.. அல்லது க்ரூகெட் டூத்ன்னுமாங்க ஆனா அது ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபிக்ஸ் ஆகியிருக்கு பார்த்தீங்களா. குழந்தையா இருக்கறச்சயே இந்த மாதிரி பல்லுங்களை  வெளியே எடுத்தா அவருக்கு ஒரிஜினல் பல்லுங்க மறுபடியும் ஈஸியா வளர்ந்துடும். ஆனா குழந்தையா இருக்கறச்சே இந்தப் பல் வளர்ச்சி ரொம்ப ஸ்லொ இல்லையா.. அத்தோட தினம் குழந்தைகளை நாம பார்த்துண்டே வளர்க்கறதுனாலே அந்தத் தெத்துப்பல்லு குறையெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனா வயசு வந்தவுடனே இந்த தெத்துப் பல்லுங்களை எடுக்கணும்னா அது ரொம்ப ரொம்ப கஷ்டமான ஆபரேஷனா மாறி சில சமயம் கண்ணுக்கே அது அபாயமாயிடும்.. அத்தோட வலுவான அடிப்பாகம் இருக்கறதினாலே இந்த ரெண்டு பல்லை எடுக்கும்போது மீதி உள்ள பல்லெல்லாம் ஆட்டம் காண்பிக்கும். இந்த மாதிரி பல்லு அதுவும் தெத்துப் பல்லு  ஆபரேஷன் பண்றது அதாவது க்ரூக்கட் டூத் ஆபரேஷன் எப்படின்னு அடுத்த கிளாஸ்ல பாக்கலாம்  மாணவர்களே!.. வாங்க எல்லாரும் வரிசைல நில்லுங்க. ஒரு வலுவான தெத்துப் பல் எவ்வளோ ஸ்ட்ராங்கா இருக்கும்னு நேர்லயே பார்த்து நீங்கள்லாம் தெரிஞ்சுக்கணும்னுதான் இவரே வந்துருக்கார்.   இதோ டிஷ்யூ பேப்பர் நிறைய வெச்சுருக்கேன். இந்த பல்லுங்களை கொஞ்சம் ஆட்டிப் பாருங்க. எவ்வளோ ஸ்ட்ராங்குன்னு தெரியும்”

    அனைத்து மாணவர்களும் முன்னால் வந்தனர்.  ஒரு மாணவன் கேட்டான்.

    ‘சார், அந்த ஆளு இன்னிக்கு பல்ல தேச்சாரா’ன்னு கேளுங்க சார்!’

    எல்லோரும் சிரிக்க, பேராசிரியர் அவங்களை ‘சைலண்ட்’ன்னு சொல்லிவிட்டு பேசுகிறார்.

    “ஸ்டூடன்ட்ஸ்,  நம்ம ப்ரொஃபெஷனல்ல மாஸ்க் போடணும்கிறது ரொம்ப கட்டாயம். எல்லாரும் அவங்கங்க மாஸ்க் போட்டுண்டு இவரோட பல்ல ஆட்டிப் பாக்கலாம்.”

    எல்லோரும் வருகிறார்கள். இந்த பெண் கோம்டியும் கூடவே அவள் தோழியும் சேர்ந்தே வந்து ஒருத்தி டிஷ்யூ பேப்பரை எடுத்து அவன் பல்லைக் கையால் ஆட்டும்போது இன்னொருத்தியும் சேர்ந்து அதைத் தொடும்போதுதான் டிஷ்யூ பேப்பரின் ஒரு பகுதி அவன் வாய்க்குள் போய்விடுகிறது. அவன் சற்று இருமுகிறான்.

    “ஓ.. மன்னிக்கவும்!”  கோம்டி பரிதாபமாகப் பார்த்து சொல்லிவிட்டுப் போக, மற்ற மாணவர்கள் சிரிக்க கல்யாண் வருத்தப்பட்டுகொண்டே பேராசிரியரிடம் வருகிறான்.

    “பிச்சைக்காசு பாத்தாயிரம் ரூபாய்க்கு எப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கு.. டிஷ்யூ சாப்பிட வைக்கிறாங்க சார்!”

    பேராசிரியர் அவனை உரிமையுடன் பார்க்கிறார்.

    “இதோ பார் கல்யாண்.. அஞ்சு நிமிஷ வேலை. உனக்குப் பத்தாயிரம் வருது.. இன்னும் நிறைய வகுப்பு எடுக்கணும்.. உனக்கு நிறைய பத்தாயிரம் வரும் இல்லே.?. டேக் இட் ஈஸி மை டியர் பாய்!!”

    காட்சி இப்போது ரயில் பெட்டிக்கு மாறுகிறது.

    “ஆஹாங்.. ஞாபகம் வந்துடுத்து. மூணு வருஷம் முன்னாடி நான் ஃபைனல்ஸ் பண்றச்சே எங்க கிளாஸ்ல நீங்க உங்க அழகான பல்லைக் காட்டி மாடலிங் பண்ணீங்க இல்லே.. டிஷ்யூ பேப்பரை உங்க வாயில போட்டவ நான்தான் சார்..” “எனக்கு கூட இப்ப நினைவு வர்றதுங்க.. என் பொழப்பை பாத்தீங்களா.. எங்க பெரியப்பா பெரிய பணக்காரருங்க.. அப்படியும் நானே சுயமா சம்பாதிச்சு என் செலவுக்குப் பாத்துக்கணும்’னு ஒரு ஒரு..கொள்கைங்க.” “ஏன் சார்.. இப்போதான் மாடர்ன் எக்யூப்மென்ட்ஸ்லாம் வந்தாச்சே.. நீங்க சென்னைல என் கிளினிக் வாங்க.. நானே சுத்தமா இந்த ரெண்டு பல்லையும் எடுத்துடறேன்.. அதே சைஸ்ல புதுப்பல்லு ரெண்டும் பெர்மனென்ட்டா கட்டித் தர்றேன்..” “ஐய்யய்யோ.. அது மட்டும் முடியாதுங்க.. இன்னும் ரெண்டு வருஷம் இந்த பல்ல இப்படியே வெச்சேன்ன என்னை மகாலட்சுமி தேடி வருவாள்ன்னு வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியத்துல சொல்லியிருக்கு.. அப்படி வந்த மகாலஷ்மி ஒரு அதிர்ஷ்ட தேவதையை என்னோடயே இருக்கவெப்பான்னு சொல்லியிருக்கான் மேடம். அப்படி அதிர்ஷ்டம் கொடுக்கப்போற பல்லை எவனாவது எடுப்பானா? நீங்களே பாத்தீங்களே.. இந்த பல்லை நான் பல் காலேஜ்ல போயி மாடலிங் ஒரு தடவை காமிச்சா சுளையா பத்தாயிரம் வருது.”

    ரயில் பின்பெட்டியில் யாரோ ஒருவர் ‘அனகாபள்ளி ஒஸ்துந்தி’ எனப் பேசும் குரல் மட்டும் கேட்கிறது. உடனே அவள் சிரிக்கிறாள்.

    “இந்த அனகாபள்ளிங்கிற வார்த்தை மாத்திரம் ரவியும் நீங்களும் ஆயிரம் தடவை இன்னிக்கு சொல்லிட்டீங்க. ரவி கூட அனகாபள்ளி வந்திருப்பான்னு நினைக்கிறேன்.”

    “ஓ!அனகாபள்ளி வந்துடுத்தா?” கல்யாண் ஜன்னல் வழியாகப் பார்க்கிறான்.

    ரயில் அனகப்பள்ளி நிலையத்தை நெருங்குகிறது. சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து அவளிடம் சொன்னான்.

    “ஏங்க,, கொஞ்சம் இந்த பெட்டியை பாத்துக்குங்க.. நான் இந்த எஸ்1 கோச்ல” “திருவேங்கடகிருஷ்ணமூர்த்தியை பாக்க போறீங்க.. போங்க சார்.. உங்க பொட்டியை நான் பாத்துக்கறேன்..”“தேங்க்ஸ்ங்க!”

    அனகபள்ளி வந்ததும்  அவன் அவன் இருக்கையிலிருந்து எழுந்து சென்றதும், வண்டி அதிக நேரம் நிற்காமல் கிளம்பியது. அவள் கையில் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டுப் படிக்க ஆரம்பித்தாள்.. கல்யாண் உடனே வரவில்லை.

    ரயில் போய்க்கொண்டிருக்கிறது. நேரம் போகிறது. பக்கத்தில் இருந்த ஆசாமி இந்தப் பெண்ணிடம் பேசுகிறான்.

    “ஏம்மா நம்ம ஆள் இன்னும் வரல்லே.. பொட்டியை மட்டும் பார்த்துக்கச் சொல்லிட்டு இத்தனை நேரமா?” “நம்ம ஆளா?.. அது சரி, உங்களுக்கு ஏன் சார் அந்தக் கவலை.. பெட்டியைப் பாத்துக்கச் சொல்லியிருக்காரு.. பொட்டி பத்ரமா இருக்கான்னு பாக்கறது மட்டும்தான் நம்மோட பொறுப்பு.. எப்போ வேணாம்னாலும் வரட்டுமே.”. “அதுவும் சரிதான்மா.. மெட்ராஸ் வந்தா நாம பாட்டுக்கு இறங்கிடுவோம்.. உங்க சினேகிதரோட அந்தப்  பொட்டிதான்..”  “யார் சார் சினேகிதர்? இந்த தெத்துப் பல்லு ஆளா? ரயில் சினேகிதம்லாம் ரயில்ல இறங்கற வரைக்கும்தான்..” “ஓ.. அதுவும் சரிதான்” “ஸார் நியாயமா மெட்ராஸ் வரைக்கும்தான் நம்மாலே பாத்துக்கமுடியும்.. அப்பறம் இந்த பொட்டியைப் பத்தி நமக்கென்ன அக்கறை? அது யார்கிட்டே போனா நமக்கென்ன?” ‘ஆமாம்மா! நீங்க யாரோ.. நான் யாரோ.. அவர் யாரோ.. இந்த டிரெயின்ல வர்ர பாஸெஞ்சர்லாம் யார் யாரோ…. ஏதோ ரயில்ல இப்படி கொஞ்சநேரம் உட்கார்ந்து ஒத்தரை ஒத்தர் பாத்துக்கறோம்.. ஸ்டேஷன் வந்ததா.. நாம யாரோ.. அப்படியே இறங்கிப் போய்க்கொண்டே இருப்போம்..’

    ரயில் வேகம் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கோம்டி தன் புத்தகத்தைப் பிரித்து அதில் மூழ்கி  விடுகிறாள். விஜயவாடா வந்ததும், அதுவும் ரயில் நகர ஆரம்பித்ததும்தான் கல்யாண் பதற்றத்துடன் அங்கே வருகிறான்.

    “எங்க,  என் பெட்டி இருக்கா?.. நான் அப்படியே அங்கயே பேசிண்டு இருந்துட்டேன். விஜயவாடா ஸ்டேஷன்ல எனக்காக திருவேங்கிடகிருஷ்ணமூர்த்தி பிரியாணிக்கு ஆர்டர் போட்டான். அப்போதான் பெரிய சப்தம்.. அங்கே யாரோ திருடன் ஒத்தன் யாரோட பெட்டியையோ தூக்கிட்டாங்களாம்.. அப்போதான் இன்னோர்த்தன் சொன்னான்.. இப்போதான் ஏசி கம்பார்ட்மென்ட்ல கூட ஒரு பெட்டியை யாரோ பறி கொடுத்தாங்க’ன்னு சொன்னான். அவ்வளவுதான்.. ஓடி இங்கே வந்துட்டேன்” அவன் மூச்சு வாங்குகிறது.

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 1

     

    திவாகர்

     

    இடம் – வைசாக் கடற்கரை சாலை

     

    இரண்டு அந்தஸ்துள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடி, அந்த மாடியின் விளிம்புச் சுவரில் ரவி எனும் அந்த இளைஞன் மேலே ஏறுகிறான். அவனருகே அந்தப் பெண் கோம்டி கோபத்துடன் ஆனால் பல்லைக் கடித்தபடி நிதானமாக பேசுகிறாள்.

    “டேய் என்னடா பண்றே.. தற்கொலை பண்ணிக்கப் போறியா.. அடச்சீ.. கீழே இறங்கிக் குனிஞ்சு அந்த வேலையைப் பண்ணு..”

    “ஆஹா.. என்ன கரிசனம்.. நான் பண்ற வேலைக்கு தற்கொலை எவ்வளவோ பெட்டர்.!’

    “சரி.. அதை அப்புறமா யோசிக்கலாம்.. வேணும்னா நானே உனக்கு அதுக்கு உதவி பண்றேன். இப்போ முதல்ல அந்தப் பக்கம் குனிஞ்சு ஸெல்ஃபி ஹேண்டில் மொபைல் கேமரா ஆன் பண்ணி சரியா வர்ரா மாதிரி வெச்சுக்கோ, விழுந்துத் தொலைக்காதே”

    “என் காலை சுவத்தோட சாய்ச்சு சரியா கெட்டியா பிடிச்சுக்கோ.. நீ கைவிட்டாதான் நான் கீழே விழுவேன்.”

    வெளிப்பக்கம் குனிந்து கீழே பார்க்கிறான். அவன் காலைக் கீழே பிடித்தபடி அந்தப் பெண் அவனைப் பார்க்கிறாள்.

    “சரி.. அந்தக் காமராவை சரியா ஸெல்ஃபி ஹாண்டில்ல வெச்சுக்கோ.. நல்லகாலம் ஜன்னலைத் திறந்து வெச்சிருக்காங்க.. அவங்க வர்ர டைம்தானே..”

    “உஷ்.. குரல் கேட்குது.. வந்துட்டாங்க போலருக்கு. சத்தம் கேட்குது..”

    அதே சமயம் அவர்கள் இருந்த மொட்டை மாடியின் கீழே இருந்த அந்த அறையில்..

    கணவன் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள மனைவி ஆடி அசைந்தபடி அறைக்குள் வந்து அவனுக்கு காபி கொடுக்கிறாள்.

    “ஏமண்டி! ரோஜு லேட்டேனா? கெட் ரெடி.. ஜி யார் டி ஜெவெல்லர்ஸ் கொத்த ஷோரூம் ஓபன் சேசியாரண்டா.. கம் ஆன்.”

    ‘போலாம் டார்லிங்க்.. கொஞ்சநேரம் இப்படி இங்கே கூர்ச்சு..’

    “நாகு டைம் லேது.. நவ் நோ ரொமான்ஸ்..”

    அவன் பக்கத்தே அமர்ந்தபடி அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளுகிறாள். அவன் அவளை அணைக்கிறான்.

    அதே சமயம் மொட்டை மாடியில் இருந்த பெண் வெளியே இருந்தவனைப் பார்த்து கேட்கிறாள்.

    “டேய்.. என்னடா நடக்குது.. அவ்வளோ உன்னிப்பா கேட்கிறே?”

    “ரொமான்ஸ் டைலக் ஓடுது.. ஓன்லி ஆடியோ லைவ்தான்.. என்னால கேட்கமுடியுது. மொபைல் வீடியோல எடுத்ததைப் பாக்கலாம்… புருஷன் பொண்டாட்டி சிருங்கார லீலை போல இருக்கு.. என்ன? ஃபுல்லா பிடிக்கணுமா.. இல்லே எடுத்துடட்டுமா..”

    முகம் சுளிக்கிறாள் அவள்.

    “முதல்ல காமிராவை வெளியே எடு.. அந்த அசிங்கமெல்லாம் நமக்கெதுக்கு?’

    அவன் வெளியே இருந்து நிமிர்ந்தவன் அந்த ஸெல்ஃபி ஸ்டாண்டில் இருந்த காமிராவை எடுத்துப் பார்க்கிறான்.

    “அடச்சீ.. இதெல்லாம் ஒரு ரொமான்ஸா? இந்தா உன் மொபைல்.. பாவம் இந்த ஆள்..”

    அவளிடம் காமிராவைக் கொடுக்கிறான்.. அவளும் பார்க்கிறாள். முகம் மலர்கிறது.

    “இது ரொம்பவே போதுமே.. இவங்க புருஷன் பொண்டாட்டிதான்னு ப்ரூவ் பண்ணனும்.. அதுக்கு இது போதும்.”

    “இரு.. இப்போ அந்த வீட்டுக்குள்ளே நாம போறோம்.. இல்லேனா நம்மளை தப்பா நினைச்சுப்பாங்க.. நீ எப்படியோ மேலே வந்துட்டே.. அவங்க பார்க்கலை.. நீ மறுபடியும் கீழே போகறச்சே பார்த்துட்டா எனக்குதான் கஷ்டம்.. சரி சரி வா..”

    அவனும் அவளும் கீழே இறங்கி முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவைத் தட்டுகிறான். அறையில் பார்த்த பெண் கதவைத் திறக்கிறாள். இவர்களைப் பார்த்ததும் சிரிக்கிறாள்.

    “ஓ.. கிந்த இண்டி ரவி.. லோனிகி ரா ரவி, ஈவிட எவரு?” என்று அந்தப் பெண்ணைக் காண்பித்துக் கேட்டாள்.

    “அக்கா.. இது என் கஸின், சென்னைல இருக்கா..”

    “ஓ.. தமிளா.. எனக்கும் தமிள் தெரியும்.. எங்க வூட்டுக்காரரு மெட்ராசுல படிச்சு வலர்ந்தவரு.. உல்லே வாங்க..”

    அந்த ரவியின் காதில் கூட வந்த பெண் கிசுகிசுக்கிறாள். “டேய்.. எனக்கும் தெலுங்கு தெரியும்னு சொல்லுடா.. இவளோட தமில் எனக்குப் பயமாயிருக்கு..”

    கொஞ்சநேரம் பேசிவிட்டு வெளியே வரும்போது அந்தப் பெண் அந்த வீட்டை முழுவதும் சுற்றி ஒரு பார்வை விட்டு விட்டு அந்த வீட்டுப் பெண்மணியிடம் சொல்கிறாள்.

    “அக்கா! உங்க வீடு சூபரா இருக்கு. நான் ஒருதடவை கீழே போய் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா.. இஃப் யூ பெர்மிட்..”

    “அட எதுக்கும்மா பர்மிட்.. ஃபேஸ்புக்ல போடு.. இன்ஸ்டாகிராம்லயும் போடு.. ஒன்னு எதுக்கு என்ன ஏளு எட்டு வேணும்னாலும் எடுத்துக்கோ.. பை பை..”

    ரவியும் அந்தப் பெண்ணும் கீழே வரும்போது வீட்டுப் பெண்மணி மேலேயிருந்து பார்க்கும்போதே மொபைல் மூலம் அந்தப் பெண் நிற்பதையும் சேர்த்து ஃபோட்டோ எடுக்கிறாள். பிறகு அவனோடு காரில் ஏறிக் கிளம்புகிறாள்.  கார் சென்று கொண்டிருக்கிறது.

    “டேய்.. பேசாம வைசாக் விட்டுட்டு சென்னை வாடா.. சாந்தி எங்கிட்டே அடிக்கடி சொல்வா.. எப்படியாவது ரவியை கன்வின்ஸ் பண்ணி சென்னைக்கு அழைச்சுட்டு வரணும்டின்னு. உன் தங்கை அமெரிக்கா போகறதுக்குள்ளே உன்னை சென்னையில குடியேற வைக்கிறேண்டின்னு சொன்னேன். இதோ பார்.. எனக்கு கூட ஒரு நல்ல அஸிஸ்டென்ட் தேவையா இருக்கு.. அங்க வந்துடு.. எங்கிட்ட கொஞ்ச நாள் வேலை கத்துக்கோ.. அப்புறம் நீயே சொந்தமா இதைப் பண்ணலாம்..”

    “அம்மா.. தாயே.. நானும் சாந்தியும் படிச்சது வேற வேற..  நீ அவளோட க்ளாஸ்மேட்..  உனக்கும் சாந்திக்கும் எந்த வேலையும் சூட் ஆகலாம்.. ஆனா எனக்கு அப்படில்லாம் இல்லை தாயி.. என்னோட ஃப்ரெண்டும் நானும் சேர்ந்து ஸேண்ட் ப்ளாஸ்டிங்க் கப்பலுக்குப் பண்றோம்.. அதுல வர்ர வருமானமே போதும்.. ஆளை விடு.”

    “அது எப்படி அவ்வளோ சீக்கிரம் விடறது? சாந்தியும் நானும் ரெண்டு கண்கள்னு சொல்லுவே.. அதெல்லாம் முடியாது.. இப்போ ருஷிகொண்டா ஹாஸ்டல்ல இறக்கிவிடு.. கொஞ்சம் பழைய ஃப்ரெண்ட்ஸ்லாம் வரேன்னு சொன்னாங்க.. அப்புறம் சரியா ஒரு மணிக்கு அங்கேயிருந்து கிளம்பி மத்தியானம் ஹவுரா மெயிலுக்கு என்னை வைசாக் ஸ்டேஷன்ல இறக்கி விட்டுட்டா உனக்கு எங்கிட்டேயிருந்து விடுதலை..”

    “வேற வழியே இல்லையா.. இதோ பார்.. எனக்கு என் ஃப்ரெண்டோட வேலையா மத்தியானம் பூராவும் பிஸியாயிடுவேன்.. அனகாபள்ளி போகணும்.. என்னை இப்பவே விட்டுடேன்..”

    “அதெல்லாம் முடியாது.. என்னை ஸ்டேஷன்ல விட்டுட்டு எங்க வேணுனாலும் சுத்து..”

    “அவ்வளவுதானா?”

    “அவ்வளவேதான். ஒரு அன்புத் தங்கை, கஸின்.. ஆசையா கேட்டா செய்யணும் பிரதர்”

    “ம்..” என உறுமிக்கொண்டே காரை வேகமாக ஓட்டுகிறான்..

    அவள் சிரிக்கிறாள்.

    மத்தியான வேளையில் மழை பெய்வதால் ஆட்டோ ஏதும் கிடைக்காமல் கல்யாண் ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே காத்திருக்கிறான். கை காட்டினாலும் எந்த வண்டியும் நிற்கவில்லை. அப்போது ஒரு கார் வந்து அவனருகே நிற்கிறது.

    காலையில் பார்த்த ரவியும் அந்தப் பெண்ணும் இருக்கிறார்கள். ரவியைப் பார்த்ததும் காத்திருந்த கல்யாண் கோபத்துடன் கத்துகிறான்.

    “எங்கடா போய்த் தொலைஞ்சே? யாரோ கஸினோட பிஸி”ன்னியே, அந்தப் பொண்ணுதானா அது?

    ரவி உடனடியாக அவன் கைப்பெட்டியை பின் டிக்கியில் வைத்துவிட்டு அவனை பின்சீட்டில் உட்காரச் சொல்கிறான்.. முன்சீட்டில் உள்ள கோம்டி  ரவியை முறைக்கிறாள்.

    காலைல என் வீட்டுக்கு வரச்சே நீ பாக்கமுடியலே.. இவன் என் ஃப்ரெண்ட் கம் பார்ட்னர். நானும் இவனும் அந்த வீட்டுல ஒண்ணா இருக்கோம்.

    கல்யாண் கோபமாக பார்க்கிறான். “எதுக்குடா இதெல்லாம்.. இப்போ நீ சீக்கிரம் போகணும். அப்புறமா அனகாபள்ளி போகணும்..”

    ரவி கோடியை கல்யாணுக்கு அறிமுகப்படுத்திகிறான். “இவள்தான் அந்த கஸின்..  இவளும்  ஸ்டேஷனுக்குதான் போறோம்.. உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் அனகாபள்ளி போயிடுவேண்டா..”

    “அனகாபள்ளி போகணும்..”

    “ஆமா.. அனகாபள்ளி போகணும்..”

    அவள் திட்டுகிறாள்.

    “அனகாபள்ளி அப்புறமா போய்க்கலாம்.. முதல்ல வண்டியை சீக்கிரமா ஓட்டுடா..”

    ஸ்டேஷன் வந்ததும் இறங்குகிறார்கள். நடுவில் ஏறியவன்

    சொல்கிறான்..’

    “ரவி, நீ வண்டியிலயே இரு..  நாங்க இறங்கிக்கறோம். நீ அனகாபள்ளி போகணும்.”

    “ஆமா.. அனகாபள்ளி போகணும்.. ரைட் பை பை டாடா சீரியோ..”

    இருவருக்கும் சொல்லிவிட்டு அவன் காரை கிளப்புகிறான்.

    விசாகப்பட்டினம் ரயில் நிலையம்

    முதல் நடைமேடை.

    சென்னையை நோக்கி ஹவுரா மெயில் புறப்படத் தயாராகிறது. இரண்டாவது ஏசி பெட்டியின் வெளிப்புற மேடையில் TTE இடம் அந்தப் பெண் கோம்டியும் அவள் கூட வந்த கல்யாணும்.

    கோம்டி TTE-யிடம் தனது டிக்கெட்டை சரிபார்க்கும்படி கேட்டாள். TTE தனது டிக்கெட்டை  சரிபார்த்து அதையே டிக் செய்தார்.

    “அடடா, ஏன்மா மேல் பெர்த்ல இருக்கீங்க.. வேணும்னா கீழ் பெர்த்ல அங்க இருக்கற பாசஞ்சர்கிட்டே பேசி மாத்தி தரட்டுமா?”

    “வேண்டாம் சார்.. எனக்கு டாப் பெர்த் தான் சௌகரியம். யார் தொந்தரவும் இல்லாம தூங்கலாம். தேங்க்ஸ் சார்!”

    இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் டிக்கெட்டைக் காண்பித்தான்.

    “சார்.. என் பெயர் கல்யாண்.. என் டிக்கெட்டையும் சரி பாருங்க சார்..”

    அவனுடைய இரண்டு தெத்துப் பற்கள் மட்டும் வெளியே தெரிய TTE ஐ பார்த்து சிரித்தான். அவன் பற்களைப் பார்த்துப் பயந்து இரண்டடி பின்னால் போனார் டிடிஈ..

    அதே நேரத்தில், காலைச் சற்று சாய்த்துச் சாய்த்து நடந்து வேதனையில் சாமான்களை சுமந்துகொண்டிருந்த மேலும் ஒரு இளைஞன்  மெதுவாக ஆனால் பதட்டமாக தனக்கு ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

    திடீரென்று கல்யாண் அவனை அழைத்தான்.

    “டேய் திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி, என்ன ஞாபகம் இருக்காடா?”

    நிறுத்தி அவனைப் பார்த்துவிட்டு “அட, தெத்துப் பல்லன்” என்று மகிழ்ச்சியுடன் அழைத்தான்.

    “நீ எப்டி இருக்கே? உன்னை எல்லாம் மறக்க முடியுமாடா.. டேய்.. நான் S1 கோச் போகணும். வண்டி கிளம்பற நேரம். அப்பறம் பாக்கறேன்டா.”

    “டேய்.. எஸ்1 தானே.. வண்டி கிளம்பியதும் நானே அங்கே வரேன்.. எவ்வளோ விஷயம் பேசணும் நாம.. நீ என்ன பண்றே திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி, இங்கேயே இந்த கோச்சுக்குள்ளே ஏறி வண்டி உள்ளேயிருந்தே போடா.. ரொம்ப தூரம்டா”.

    “அப்படியேடா.. நான் உனக்காக அங்க வெயிட் பண்றேண்டா..”

    அவன் அந்த இடத்தை விட்டு தான் கிளம்பினான்.

    இன்னும் கோம்டி தனது டிக் செய்யப்பட்ட டிக்கெட்டை திரும்பப் பெற வேண்டும். அவள் TTE யிடம் கேட்கிறாள்.

    “சார்.. என் டிக்கெட்டை டிக் பண்ணிட்டீங்க இல்லே. கொடுங்க சார்.. நான் வண்டிக்குள்ளே போறேன்.”

    அவள் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு தன் பெட்டியை நோக்கி நகர்ந்தாள்.

    கல்யாண் TTE யிடம் தனது டிக்கெட்டையும் அங்கீகரிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான்.

    “சார்.. எனக்கும் செக் பண்ணி கொடுத்துடுங்க.. ஏன்னா நீங்க என்கிட்டே வந்து செக் பண்ற வரைக்கும் நான் காத்திருக்க வேண்டியது இல்லே பாருங்க.  என் நண்பன் திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி கூட அவன் கோச் ல வெயிட் பண்ணிண்டுருக்கான்.”

    TTE அவனை நிராகரித்தார்..

    “போங்க சார் உங்க சீட்டுக்கு.. அனகாப்பள்ளில வந்து செக் பண்ணறேன். எல்லா ஏசி கோச்சுக்கும் நான் ஒருத்தன்தான் டிடிஇ.. அதனால  உங்க சீட்டுக்கே வரேன்.. போங்க,,.”

    “சார் இது நியாயமா. அந்தப் பொண்ணு டிக்கெட்டை எண்டார்ஸ் பண்ணிட்டீங்க.. என் டிக்கெட்டை எண்டார்ஸ் பண்றதுலே என்ன கஷ்டம்.. சும்மா செக் பண்ணி சரிபாக்கணும். அவ்வளவுதானே?”

    “ஓ.. என் வேலயை எனக்குச் சொல்லித் தர்ரியா? அந்த பொண்ணுக்கு செஞ்சா உனக்கும் செய்யணுமோ.. போய்யா..போ.. நான் அப்பறமா வரேன்..”

    கல்யாண் அவனை முறைத்துப் பார்த்தான் ஆனால் தன் தொனியை மாற்றிக் கொண்டான். அவரிடம் கெஞ்சினான்.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 12

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    அவன் பேசி முடித்த போது அவன் உடல் மாறி வெளிச்சத்தால் நிரம்பியது. அவனுடைய குரல் வானிலிருந்து வருவதைப் போல் உரத்த சத்தத்தோடு கேட்டது.

    “எல்லா மனிதர்களும் தங்கள் தேவைகளைத் தாங்கள் பூர்த்தி செய்து கொள்வதால் மட்டும் வாழ்வதில்லை, அன்பினால் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

    “அந்தச் சிறுமிகளின் தாய்க்குத் தன் குழந்தைகளுக்கு எது தேவை என்பது தெரிவிக்கப் படவில்லை. அது போல் அந்தச் செல்வந்தனுக்கும் எது தேவை என்று அறிய முடியவில்லை. ஒருவருக்கும் மாலை வரும் போது தனக்கு அணியப் பூட்ஸ் அவசியமா அல்லது தன் சடலத்திற்குச் செருப்புகள் தேவையா என்று பகுத்தறிய வாய்ப்பு அருளப்படவில்லை”.

    “நான் மனிதனாக இருந்த போது உயிரோடு இருந்ததின் காரணம் ஒரு வழிப்போக்கனும் அவன் மனைவியும் காட்டிய இரக்கத்தாலும் அன்பினாலுமேயன்றி என்னுடைய முயற்சியினால் அல்ல. அந்த அனாதைச் சிறுமிகள் இப்போது உயிரோடு இருப்பது அவர்களின் தாயின் வளர்ப்பல்ல. ஒரு அந்நியப் பெண்ணின் கருணையினாலும் அன்பினாலும் தான்.
    எல்லா மனிதர்களும் வாழ்வதின் காரணம் மனிதனில் காணப்படும் அன்பினால்தான். ஒருவருடைய தனி முயற்சியால் அல்ல. இறைவன் மனிதர்களுக்கு எது தேவை என்று வெளிப்படுத்தவில்லை. மனிதர்கள் தனித்து வாழ்வதை அவர் விரும்பாமல் அன்பினால் ஒன்று சேர்ந்திருப்பதை விரும்புகிறார்.

    அன்பாயிருப்பவனிடத்தில் இறைவன் குடியிருக்கிறார். ஏனெனில் தேவன் அன்பாக இருக்கிறார்”.

    இவைகளைக் கூறி முடித்த பின் அவன் இறைவனைத் துதித்தான். அவனுடைய குரலால் அந்தக் குடிசை நடுங்கியது. கூரை திறந்து அக்னி ஜூவாலை வானை நோக்கி எழும்பியது. தேவ தூதனுக்குச் சிறகுகள் தோன்றி பரலோகம் சென்றான். சைமனும், மனைவியும் குழந்தைகளும் கீழ் விழுந்து அவனை வணங்கினர்.
    சைமன் தன்னிலைக்கு வந்தபோது அந்தக் குடிசை எப்போதும் போலிருந்தது. அவனும் குடும்பத்தினரையும் தவிர்த்து வேறு ஒருவரும் அங்கு இல்லை.

    முற்றும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 12

     லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    அவன் பேசி முடித்த போது அவன் உடல் மாறி வெளிச்சத்தால் நிரம்பியது. அவனுடைய குரல் வானிலிருந்து வருவதைப் போல் உரத்த சத்தத்தோடு கேட்டது. “எல்லா மனிதர்களும் தங்கள் தேவைகளைத் தாங்கள் பூர்த்தி செய்து கொள்வதால் மட்டும் வாழ்வதில்லை, அன்பினால் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
    “அந்தச் சிறுமிகளின் தாய்க்குத் தன் குழந்தைகளுக்கு எது தேவை என்பது தெரிவிக்கப் படவில்லை. அது போல் அந்தச் செல்வந்தனுக்கும் எது தேவை என்று அறிய முடியவில்லை. ஒருவருக்கும் மாலை வரும் போது தனக்கு அணியப் பூட்ஸ் அவசியமா அல்லது தன் சடலத்திற்குச் செருப்புகள் தேவையா என்று பகுத்தறிய வாய்ப்பு அருளப்படவில்லை”.

    “நான் மனிதனாக இருந்த போது உயிரோடு இருந்ததின் காரணம் ஒரு வழிப்போக்கனும் அவன் மனைவியும் காட்டிய இரக்கத்தாலும் அன்பினாலுமேயன்றி என்னுடைய முயற்சியினால் அல்ல. அந்த அனாதைச் சிறுமிகள் இப்போது உயிரோடு இருப்பது அவர்களின் தாயின் வளர்ப்பல்ல. ஒரு அந்நியப் பெண்ணின் கருணையினாலும் அன்பினாலும் தான்.

    எல்லா மனிதர்களும் வாழ்வதின் காரணம் மனிதனில் காணப்படும் அன்பினால்தான். ஒருவருடைய தனி முயற்சியால் அல்ல. இறைவன் மனிதர்களுக்கு எது தேவை என்று வெளிப்படுத்தவில்லை. மனிதர்கள் தனித்து வாழ்வதை அவர் விரும்பாமல் அன்பினால் ஒன்று சேர்ந்திருப்பதை விரும்புகிறார். அன்பாயிருப்பவனிடத்தில் இறைவன் குடியிருக்கிறார். ஏனெனில் தேவன் அன்பாக இருக்கிறார்”.

    இவைகளைக் கூறி முடித்த பின் அவன் இறைவனைத் துதித்தான். அவனுடைய குரலால் அந்தக் குடிசை நடுங்கியது. கூரை திறந்து அக்னி ஜூவாலை வானை நோக்கி எழும்பியது. தேவ தூதனுக்குச் சிறகுகள் தோன்றி பரலோகம் சென்றான். சைமனும், மனைவியும் குழந்தைகளும் கீழ் விழுந்து அவனை வணங்கினர்.
    சைமன் தன்னிலைக்கு வந்தபோது அந்தக் குடிசை எப்போதும் போலிருந்தது. அவனும் குடும்பத்தினரையும் தவிர்த்து வேறு ஒருவரும் அங்கு இல்லை.

    முற்றும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 11

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    சைமனும், மெட்ரீனாவும் தாங்கள் இதுவரையிலும் யாருக்கு உணவும், உடையும், அடைக்கலமும் கொடுத்திருந்தனர் என்று உணர்ந்த போது அளவில்லாத ஆச்சரியமும், மகிழ்ச்சியுமடைந்து கண்ணீர் விட்டனர். மைக்கேல் மேலும் தொடர்ந்து “நான் மனிதனாகித் தனியாகவும் நிர்வாணமாகவும் விடப்பட்டேன். அது வரையிலும் மனிதனுடைய தேவைகளும், பசி பட்டினி, குளிர் ஒன்றும் அறியாதவனாக இருந்தேன். நான் குளிரில் உறைந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற போது எதிரில் ஒரு சிறிய தேவாலயத்தைக் கண்டேன். அங்குச் சென்ற போது ஆலயத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆகவே குளிருக்கு ஒதுங்க ஆலயத்தின் பின்பறம் சென்று அமர்ந்தேன். மாலை வேளை நெருங்கிய போது குளிரும், பசியும், உடல் வேதனையும் அதிகரித்தது. அப்போது திடீரென ஒரு மனிதனின் குரல் கேட்டது. அவன் ஒரு சோடிச் செருப்புகளைக் கையில் ஏந்திக் கொண்டு தனிமையிலே பேசிக் கொண்டு சென்றான். நான் மனிதனாக மாறிய பின்பு பார்த்த முதல் மனித முகம் அவனுடையதுதான். அவன் முகம் மிகவும் விகாரமாகக் காணப்பட்டதால் தலையைக் குனிந்து கொண்டேன். இங்கு நான் பசியிலும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த போது அவன் குளிர்காலத்தில் எப்படித் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றுவது, போஷிப்பது என்று பேசிக் கொண்டு சென்றான். அவன் முதலில் என்னைப் பார்த்து அறுவெறுப்படைந்து அங்கிருந்து விலகிச் சென்றான். எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. சிறிது நேரத்தில் அவன் திரும்பி வரும் சத்தம் கேட்டது. நான் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. மரணக்களையாக இருந்த முகம் இப்போது தெளிவாக இருந்தது. இறைவனின் பிரசன்னத்தை அவனில் கண்டேன். அவன் என்னைத் தூக்கி விட்டு ஆடை அணிவித்துத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குள் நுழைந்த போது ஒரு பெண் எங்களைச் சந்தித்தாள். அவள் முகம் அவனுடைய முகத்தை விட விகாரமாக இருந்தது. அவள் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளில் மரணத்தின் ஆவி நிறைந்திருந்தது. அவளைச் சுற்றியிருந்த மரணத்தின் வாடையால் எனக்கு மூச்சு விட முடியவில்லை. அவள் என்னைக் குளிருக்குள் துரத்த மனமுடையவளாக இருந்தாள். அவள் அப்படிச் செய்தால் மரணமடைவாளென்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

    அந்த நேரத்தில் அவள் கணவன் அவளிடம் இறைவனைப் பற்றி பேசின போது அவள் மனம் மாறியது. அவள் எனக்கு ஆகாரம் கொண்டு வந்து கொடுத்த போது அவள் முகத்தைப் பார்த்தேன். அவளிடமிருந்த மரணக்களை மாறி இறைவன் குடியிருப்பதைக் கண்டேன். அப்போது இறைவன் கேட்டிருந்த முதல் உண்மையைத் தெரிந்து கொண்டேன். “மனிதனுள் வாசம் பண்ணுவது என்ன? “மனிதனினுள் வாசமாயிருப்பது அன்பு”. இறைவன் என்னை மறக்காமல் முதல் உண்மையை வெளிப் படுத்தியுள்ளார் என்று நினைத்து முதல் முறையாகப் புன்னகைத்தேன்.
    நான் உங்களோடு தங்கி ஒரு வருடம் ஆகி விட்டது. ஒரு நாள் ஒரு மனிதன் வந்து தனக்குப் பூட்ஸ்கள் தைக்க வேண்டும், அவை ஒரு வருடம் உருக் குலையாமலும், தையல் பிரியாமலும் இருக்க வேண்டுமென்றான். நான் அவனைப் பார்த்த போது அவன் பின்னால் மரண தூதன் நின்று கொண்டிருந்தான். அவன் என்னுடைய தோழன். வேறு யாரும் அவனைக் காணவில்லை. அன்று மாலைக்குள் அந்த மனிதனின் ஆத்துமாவை எடுத்துச் செல்வான் என்று தெரியும். ஆனால் அது தெரியாமல் அந்த மனிதன் பூட்ஸ்கள் ஒரு ஆண்டு உழைக்க வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான். நான் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது உண்மை “மனிதனுக்கு அருளப்படாதது எது?, மனிதனுக்கு அருளப்படாதது அவனுக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள முடியாதுதான்”. என்னுடைய தோழனைப் பார்த்ததாலும், இரண்டாவது உண்மையை அறிந்து கொண்டதாலும் இரண்டாவது தரம் புன்னகைத்தேன்.

    கடைசி உண்மையைத் தெரிந்து கொள்ள உங்களோடு தங்கியிருந்தேன். ஆறு வருடங்கள் சென்று விட்டன. இன்று அந்த இரட்டைச் சிறுமிகள் அந்தப் பெண்ணோடு வந்த போது அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். அந்தச் சிறுமிகளின் தாயின் ஆத்துமாவை எடுக்கச் சென்ற போது அவள் தன் ஆத்துமாவை எடுக்க வேண்டாமென்று கெஞ்சி, “ தாயும், தந்தையும் இல்லாமல் குழந்தைகள் வாழ முடியாதென்று” சொன்னதை நான் நம்பினேன். ஆனால் அந்த அன்னியப் பெண் சிறுமிகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்துப் பாலூட்டி, அன்புசெலுத்தி வளர்த்த விதமும், அவர்களுக்காகக் கண்ணீர் விட்ட போது அவளிடம் உயிருள்ள இறைவன் இருப்பதைக் கண்டு மூன்றாவது உண்மையை “எதனால் மனிதர்கள் வாழ்கிறார்கள்?” என்பதைப் புரிந்து கொண்டேன். இறைவன் என் பாவத்தை மன்னித்து விட்டார் என்று உணர்ந்ததால் மூன்றாம் முறை புன்னகைத்தேன்.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 10

     

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    அந்தப் பெண்ணும் சிறுமிகளும் போன பின்பு மைக்கேல் தன் இருப்பிடத்திலிருந்து எழும்பி சைமனையும், மெட்ரீனாவையும் வணங்கி, “நான் இப்போது உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். இறைவன் என்னை மன்னித்து விட்டார். இத்தனை ஆண்டுகளும் எனக்கு உணவு, உடை, தங்க இடம் கொடுத்ததற்காக மிகவும் நன்றி. நான் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றான்.

    மைக்கேல் மேலிருந்து வெளிச்சம் பிரகாசிப்பதை கண்ட சைமன் தன் இருப்பிடத்திலிருந்து எழும்பி, “மைக்கேல், நீ சாதாரண மனிதனல்ல. இங்கு உன்னைத் தங்க வைப்பதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ என்னால் முடியாது. ஆனால் இதை மட்டும் சொல். உன்னை நான் சந்தித்த போதும், வீட்டிற்கு அழைத்து வந்த நேரத்திலும் உன் முகம் மிகவும் இருண்டு போயிருந்தது. ஆனால் என் மனைவி, உனக்கு உணவு கொடுத்த போது முதல் தடவையாக அவளைப் பார்த்துப் புன்னகைத்தாய். அதன் பின் அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் தைக்க வந்த போதும், இன்று மூன்றாவது தடவையாக அந்தப் பெண்ணும், சிறுமிகளும் வந்த போதும் புன்னகை புரிந்தாய். மூன்று முறைகளும் உன் முகம் பிரகாசித்தது. இன்று உன் முகம் பகல் வெளிச்சம் போலிருக்கிறது. ஏன் உன் முகம் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது? ஏன் மூன்று தடவைகள் மாத்திரம்தான் புன்னகைத்தாய்? சொல்லமாட்டாயா?” என்று கேட்டான்.

    அதற்கு மைக்கேல், “வெளிச்சம் என் மேல் பிரகாசிப்பதின் காரணம், இறைவன் என் தண்டனையை மன்னித்து விட்டார். மூன்று தடவைகள் புன்னகைத்ததின் காரணம், இறைவன் மூன்று உண்மைகளை அறிந்து கொள்ள என்னை இங்கு அனுப்பினார். நான் மூன்று உண்மைகளையும் அறிந்து கொண்டேன். உன் மனைவி உணவு கொடுத்த போது முதல் உண்மையை அறிந்து கொண்டேன். இரண்டாவது உண்மை, அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் தைக்க வந்த போதும், மூன்றாவது உண்மையை அந்தச் சிறுமிகளைக் கண்ட போது புரிந்து கொண்டேன். ஒவ்வொரு உண்மையும் தெரிய வந்த போது புன்னகைத்தேன்” என்றான்.

    “மைக்கேல், இறைவன் ஏன் உன்னைத் தண்டித்தார்? அந்த மூன்று உண்மைகளும் என்ன? நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று சைமன் கேட்டான்.

    “நான் பரலோகத்திலுள்ள தூதன். இறைவனுக்கு நான் கீழ்ப்படியாததால் தண்டிக்கப் பட்டேன். அவர் என்னைப் பூலோகத்திற்குச் சென்று ஒரு பெண்ணின் ஆத்துமாவை எடுத்துக் கொண்டு போக அனுப்பினார். நான் பூலோகத்திற்கு வந்து அவளைப் பார்த்த போது, அவள் அப்போதுதான் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று மிகவும் பலவீனமாகக் காணப்பட்டாள். அவளால் இரண்டு குழந்தைகளைத் தூக்கிப் பால் கொடுக்கச் சக்தியற்றவளாகக் காணப்பட்டாள். அவள் என்னைப் பார்த்த போது தன் ஆத்துமாவை எடுத்துச் செல்ல இறைவன் என்னை அனுப்பியுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு “இறைவனின் தூதனே, தயவு செய்து என் ஆத்துமாவைக் கொண்டு போகாதே. என் கணவனும் மரம் மேல் விழுந்து நசுங்கி இறந்து விட்டார். எனக்கு உற்றார், உறவினர் எவரும் கிடையாது. நான் இறப்பதற்கு முன்னால் இந்தக் குழந்தைகளுக்குப் பாலுட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகள் தாயும், தந்தையுமில்லாமல் வாழ முடியாது” என்று கூறி அழுதாள்.

    என் மனம் அவளுக்காக உருகியது. நான் ஒரு குழந்தையைத் தூக்கி அவள் பால் கொடுக்கப் படுக்க வைத்து விட்டு, மற்ற குழந்தையை அவள் கரங்களில் கொடுத்து விட்டுப் பரலோகம் சென்றேன். நான் இறைவனிடம் சென்று “அவள் ஆத்துமாவை நான் எடுத்து வரவில்லை. அவள் கணவன் மேல் மரம் விழுந்து நசுங்கி இறந்து விட்டான். அவளுக்கு இப்போதுதான் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அவள் என்னிடம், குழந்தைகள் வளர்ந்து தங்கள் கால்கள் ஊன்றி நிற்கும் வரைக்கும் நான் உயிர் வாழ வேண்டும். பிள்ளைகள் தாயும் தந்தையுமில்லாமல் வாழ முடியாதென்று சொல்லி அழுதாள். ஆகையால் அவள் ஆத்துமாவை நான் எடுத்து வரவில்லை”, என்றேன்.

    அதற்கு இறைவன், ”நீ திரும்பிப் போய், அந்தத் தாயின் உயிரை எடு. அதன் பிறகு மூன்று உண்மைகளைத் தெரிந்த பின் பரலோகம் திரும்பி வா” என்றார். முதல் உண்மை மனிதனுள் வாசம் பண்ணுவது என்ன? இரண்டாவது உண்மை “மனிதனுக்கு அருளப்படாதது என்ன?” மூன்றாவது “மனிதர்கள் எதினால் வாழ்கிறார்கள்?”.

    தொடரும்

    “நான் திரும்பி பூமிக்கு வந்து அந்தத் தாயின் ஆத்மாவை எடுத்தேன். அந்தக் குழந்தைகள் அவள் மார்பிலிருந்து விழுந்தன. அவள் சடலம் படுக்கையில் உருண்டு விழுந்ததால் ஒரு குழந்தையின் கால் நசுங்கி விட்டது. நான் அவள் ஆத்துமாவை இறைவனிடம் கொண்டு செல்லப் பறந்த போது பெருங் காற்று அடித்த வேகத்தில் என் சிறகுகள் தொய்ந்து கீழே விழுந்து விட்டன. அவள் ஆத்துமா தனியாக இறைவனிடம் சென்று விட்டது. நான் பாதையோரம் விழுந்து விட்டேன்”.

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 9

    By
    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    அந்தப் பெண், தன்னிடம் சிறுமிகள் வந்து சேர்ந்ததை விவரித்தாள். “ஆறு வருடங்களுக்கு முன்பு, ஒரே வாரத்தில் இவர்கள் பெற்றோர் இறந்து விட்டனர். தந்தை மரம் வெட்டுபவன். ஒரு நாள் மரம் வெட்டும் போது அவன் மேல் மரம் விழுந்து வயிறு நசுங்கி விட்டது. உடலை வீட்டிற்க்குக் கொண்டு வரும் முன்பே அவன் உயிர் பிரிந்து விட்டது. ஊரார் அவனை அடக்கம் பண்ணினர். மூன்று நாட்களுக்குப் பின் அவன் மனைவி இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவள் மிகவும் ஏழை. அவளுக்கு உற்றார், உறவினர் ஒருவரும் கிடையாது. பிரவசத்தின் போதோ அல்லது மரணத்தின் போதோ ஒருவரும் அருகில் இல்லை.

    நானும் என் கணவரும் அடுத்த குடிசையில் வாழ்ந்து வந்தோம். குழந்தைகள் பிறந்த மறுநாள் காலை அவளைப் பார்க்கச் சென்ற போது அவளுடைய இறந்த உடல் குளிர்ந்து விறைத்துப் போயிருந்தது. அவள் சடலம் குழந்தையின் மேல் உருண்டு கால் நசுங்கி விட்டது.

    ஊரிலுள்ளவர்கள் ஒன்று கூடிச் சடலத்தைக் கழுவி அடக்கம் பண்ணின பின்பு குழந்தைகளை யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி எழும்பியது. எனக்குக் குழந்தை பிறந்து எட்டுவாரங்களாகியிருந்து. ஊரில் நான் மட்டும்தான் பாலூட்டும் தாயாக இருந்ததால் இந்தக் குழந்தைகளுக்கும் பால் கொடுத்து வளர்க்க ஒப்புக் கொண்டேன். ஊர்க்காரர்களும் “இப்போது நீ குழந்தைகளைக் கவனித்துக் கொள், அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிப் பின்பு நாம் ஒரு முடிவெடுக்கலாம்” என்றனர். முதலில் ஊனமுற்ற குழந்தைக்கு நான் பால் கொடுப்பதில்லை. அந்தக் குழந்தை பிழைக்காது என்று நினைத்தேன். ஆனால் ஏன் ஒன்றுமறியாத குழந்தை துன்ப படவேண்டும் என்று நினைத்து அதற்கும் பால் கொடுக்க ஆரம்பித்தேன். நான் இளமையாகவும், நல்ல உடல் பலத்தோடும் இருந்ததால் தேவைக்கு அதிகமாகப் பால் சுரந்தது. இறைவனின் சித்தப்படி இந்தக் குழந்தைகள் நன்றாக வளர்ந்தனர். ஆனால் என் மகனோ இரண்டு வயதான போது இறந்து விட்டான். எங்களுக்குச் செல்வம் பெருகிய போதிலும் எனக்கு வேறு குழந்தைகள் பிறக்கவில்லை. என் கணவருக்கு ஒரு ஆலையில் வேலை கிடைத்தது. நல்ல வருமானம் இருப்பதால் கவலையில்லாமல் வாழ்கிறோம். இவர்கள் இல்லாவிட்டால் என் வாழ்க்கை வறண்டு போயிருக்கும். இந்தச் சிறுமிகள் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்கள். இவர்களை நான் எப்படி நேசிக்காமல் இருக்கமுடியும்?”, என்று சொல்லிக் கொண்டு ஊனமுற்ற சிறுமியை அணைத்துக் கொண்டு மற்ற சிறுமியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள். மெடீனா அவள் சொல்லி முடித்தை கேட்டுத் “தாயும், தந்தையும் இல்லாமல் ஒருவரால் வாழ முடியும். ஆனால் கடவுள் இல்லாமல் வாழ முடியாது, என்ற பழமொழி எவ்வளவு உண்மை” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

    அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது மைக்கேல் உட்கார்ந்திருந்த மூலையிலிருந்து திடீரென்று மின்னலடித்தது போல் வெளிச்சம் தோன்றி அந்தக் குடிசை முழுவதும் பிரகாசமடைந்தது. எல்லோரும் அவனைப் பார்த்த போது மைக்கேல் உட்கார்ந்து கைகளைக் குவித்துக் கால் முட்டுக்களில் ஊன்றி மேலே நோக்கிப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டிருந்தான்.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (8)

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    வருடங்கள் வந்து மறைந்தன. மைக்கேல், சைமன் வீட்டிற்கு வந்து ஆறு வருடங்களாகி விட்டன. மைக்கேலின் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. அவசியத்திற்கு மாத்திரம் பேசினான். இந்த ஆறு வருடங்களில் இரண்டு முறைதான் புன்னகைத்திருந்தான். முதல் முறை மெட்ரீனா உணவு கொடுத்த போதும், இரண்டாவது செல்வந்தர் பூட்ஸ் தைக்க வந்த போதும்தான். சைமன் மைக்கேலிடம் எங்கிருந்து வந்தாயென்று கேட்பதேயில்லை. அவன் தன் வீட்டிலிருந்து போய் விடக்கூடாதே என்றுதான் கவலைப்பட்டான்.

    ஒரு நாள் காலை, என்றும் போல் மைக்கேலும் சைமனும் சன்னல் அருகிலிருந்து செருப்புத் தைத்துக் கொண்டிருந்தனர். சைமனின் பிள்ளைகளும் அருகேயிருந்து விளையாடிக் கொண்டிருந்தனர். தீடிரென்று ஒரு மகன், விளையாடுவதை நிறுத்தி விட்டு, மைக்கேலை அணுகி, “மாமா, கொஞ்சம் வெளியே பாருங்கள். ஒரு அம்மா இரண்டு சிறுமிகளைக் கூட்டிக் கொண்டு நம் வீட்டை நோக்கி வருகிறார்கள். ஒரு சிறுமி நொண்டிக் கொண்டு வருகிறாள்”, என்றான். உடனே மைக்கேல் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டுச் சன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தான். சைமனுக்கு ஒரே ஆச்சரியம். இத்தனை ஆண்டுகளும் மைக்கேல் தெருவைப் பார்த்ததில்லை. சைமனும் தெருவைப் பார்த்தான். ஒரு பெண்மணி இரண்டு சிறுமிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஒரு சிறுமி நொண்டிக் கொண்டு நடந்ததைத் தவிர இரண்டு பேரும் பார்வைக்கு ஒன்று போலிருந்தனர். இரண்டு சிறுமிகளும் உரோமக் கோட்டுகளும் சால்வைகளும் அணிந்திருந்தனர்.

    அந்தப் பெண்மணி, இரண்டு சிறுமிகளோடு சைமனின் குடிசைக்குள் நுழைந்து, மேசை அருகில் உட்கார்ந்தாள். இரண்டு சிறுமிகளும் புதிய மனிதர்களைக் கண்டு பயந்து அந்தப் பெண்மணியின் முழங்கால்களின் அருகே நின்று கொண்டனர். சைமன் அந்தப் பெண்மணியை வாழ்த்தி விட்டு “நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

    “இந்தச் சிறுமிகளுக்கு வசந்தக் காலத்திற்கு அணியச் சப்பாத்துகள் வேண்டும்” என்றாள்.

    “நாங்கள் இதுவரையிலும் இவ்வளவு சிறிய சப்பாத்துகள் தைத்ததில்லை. ஆனால் தைக்க முடியும். எனக்கு உதவி செய்யும் மைக்கேல் இந்தச் சிறுமிகளின் சப்பாத்துகளைத் தைப்பானென்று கூறி விட்டு மைக்கேலைத் திரும்பிப் பார்த்தான். மைக்கேல் அந்தச் சிறுமிகளையே பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு சிறுமிகளும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டார்கள். ஆனால் அவன் அந்தச் சிறுமிகளைப் பார்த்துக் கொண்டிருந்த விதம் அவர்களை அவனுக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும் போலிருந்தது. சைமனுக்குப் புதிராக இருந்தது. அவன் அதை வெளிக்காட்டாமல் அந்தப் பெண்மணியிடம் சிறுமிகளின் காலளவு எடுக்க வேண்டுமென்றான். அவள் ஊனமுற்ற சிறுமியை மடியில் இருத்தி, இவளுடைய கால்களின் அளவுகள் போதும். ஒரு அளவு ஊனமுற்ற காலுக்கும், மற்ற கால் அளவில் மூன்று சப்பாத்துகள் தைக்கலாம். ஏனென்றால் இவர்கள் இரட்டைக் குழந்தைகள். இரண்டு பேருடைய காலளவுகளும் ஒன்றுதான் என்றாள். சைமனும் காலளவுகளை எடுத்துக் கொண்டு “இந்த அழகிய சிறுமி பிறக்கும் போதே இப்படித்தான் பிறந்தாளா?”என்று கேட்டான்.

    “இல்லை, இவள் தாய் காலை நசுக்கி விட்டாள்”.

    இதுவரையிலும் அமைதியாக இருந்த மெட்ரீனா “அப்படியானால் இவர்கள் உன்னுடைய குழந்தைகளில்லையா?” என்று கேட்டாள்.

    “நான் இவர்களின் தாய் அல்ல, சொந்தமுமல்ல”, நான் இவர்களைத் தத்து
    எடுத்திருக்கிறேன்”.

    “அப்படியா, நீ இந்தக் குழந்தைகளிடம் இத்தனைப் பிரியம் வைத்திருக்கிறாயே!”, என்றாள் மெட்ரீனா.

    “எப்படி அன்பு வைக்காமல் இருக்க முடியும்? நான்தான் இவர்களுக்குப் பாலூட்டி வளர்த்தேன். எனக்கு ஒரு மகன் இருந்தான். அவன் இறந்து விட்டான். என் மகனை விட நான் இவர்களை நேசிக்கிறேன்”.

    “அப்படியானால் இவர்கள் யாருடைய குழந்தைகள்?”

    தொடரும்

    Share