Month: October 2015

  • படக்கவிதைப் போட்டி 32-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ஆதித்யா நாகராஜ் எடுத்த வித்தியாசமான இந்தப் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் வல்லமையின் நன்றி!

    man with ashgourd

    திருஷ்டிப் பூசணியின் முகத்தோடு முகம்வைத்து நிற்கின்ற இந்த மனிதர்தான் அதைத் தயாரித்தவர் போலும்!

    மனிதா! ’கண்ணேறுபடாமல் காக்கும்’ என்று பூசணிமீது வைக்கும்  மூடநம்பிக்கையைத் தூரவீசிவிட்டு உன்மீது மட்டும் நம்பிக்கை வைத்து வாழ்வில் முன்னேறு!

    இனி, இவ்வாரப் போட்டிக் கவிதைகளைப் படித்து இரசிப்போம்!

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவாரைக் கண்டு அஞ்சி ஒதுங்கிய வள்ளலார் பூமியில் இன்று உண்மைமுகம் தொலைத்த முகமூடி மனிதர்களே எங்கெங்கும் தென்படுகின்றனர் என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன்.

    உள்ளொன்று வைத்து
    புறமொன்று பேசுவார்
    உறவு வேண்டாமென்ற
    வள்ளலார் வாழ்ந்த பூமி
    வண்ணப் பூச்சுகளுடன்
    எத்தனை வடிவ மாற்றம்

    வார்த்தைகளுக்கும்
    உள்ளத்திற்குமான
    இடைவெளி
    ஏன் இப்படி நீள்கிறது

    கண்களிலிருந்து வழியும்
    கண்ணீர் கூட
    ஏன் இப்பொழுதெல்லாம்
    உண்மையை உரைப்பதில்லை

    பொய்முகம் அணிந்தணிந்து
    மெய்முகமே பொய்முகமான பின்
    அவரவர் முகம் எதுவென்று
    எவருக்குமே தெரியவில்லை!

    ***

    கண்ணேறு கழிக்கும் இந்தப் பூசணி வியாபாரம் நன்முறையில் நடைபெறாவிட்டால் அந்த வியாபாரியின் வாழ்க்கையில் பசியும் பிணியும் கோலோச்சத் தொடங்குமே என்று கவல்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கண்படும் என்றேதான் காயில் படமெழுதிக்
    கண்களில் காணவே வைக்கின்றார்கண்ணிறைக்
    காயுடன் ஓவியமும் விற்காத போதிலே
    பாயும் பசிப்பிணிதான் பார்…!

    ***

    விஞ்ஞானம் வளர்ந்தாலும் அஞ்ஞானம் அகலாத மக்கள் இன்னமும் திருஷ்டிப் பூசணியில் திருப்திகொள்கின்றனர் என்று கூறும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், பூசணியுடன் அதன் வியாபாரி ஆசையாய் எடுத்துக்கொண்ட செல்ஃபி இது! என்று இப்புகைப்படத்திற்கு விளக்கம் தருகிறார்.

    கல்லடி பட்டாலும்
    கண்ணடி படக்கூடாது
    கண்ணேறு கழித்தல்என்பது
    முன்னோர்கள் வாக்கு
    […]
    புது வீடு கட்டினால்
    புதிதான பூஷணிக்காயில்
    படம் வரைந்து வாசலில்
    திருஷ்டி பொம்மை

    […]
    விஞ்ஞானம் வளர்ந்தாலும்
    அஞ்ஞானம் மாறா மக்கள்
    வரைந்த பூஷணிக்கு
    திருஷ்டி படாமலிருக்க
    வரை படம்போல்
    அழகு காட்டி அதன்
    அழகில் மயங்கி ஆசையுடன்
    எடுத்துக்கொண்டான் ஒரு செல்ஃபி
    ஆசை யாரை விட்டது?

    *** 

    திருஷ்டிப் பூசணி குறித்த உங்கள் எண்ணங்களை எழிலாய்க் கவிதையில் கொணர்ந்திருக்கின்றீர்கள் கவிஞர்களே. பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டறிவோம் இனி!

    திருஷ்டிப் பூசணியாய் உருமாறியிருக்கும் பூசணிக்காயொன்று, சமூக அவலங்களை அறச்சீற்றத்தோடு சாடுவதைப் பாங்காய்ப் பட்டியலிட்டு நம் பார்வைக்கு வைத்துள்ளது ஓர் கவிதை!

    கண்ணேறு படாதிருக்க
    குலத்திற்கு மட்டும் 
    நான் காவல் அல்ல!
    திருஷ்டி கழிக்க
    என்னை எடுத்த மானிடனே!
    சாலையில் உயிரையெடுக்க
    அல்ல என்றே நீயும் 
    புரிந்து வாழ்வாயோ!
    பிறர் மகிழ்ச்சியிலே
    நம் மகிழ்ச்சி உதயமாக
    சுயநலமின்றி வாழ்வாயா!
    நீட்டிய என் நாவினில்
    தாகம் தீர்த்த குளங்களின்
    பிறப்பிடம் எங்கே?
    […]
    வீசுகின்ற தென்றலாய்
    கனி தரு சோலையாய்
    கற்பகத் தருவாய்
    புவனமதில் வாழ
    ஏழைக்கு உணவளிக்க
    என்னை யார் தயார் 
    செய்ய வருவார்?

    […]
    ஆறடி மனிதனுக்கு
    ஆறடி இடம்கூட
    சொந்தமில்லையடா!
    கட்டாந்தரை அடுக்கக உதயங்கள்
    வெற்று வயிற்றை நிரப்பி விடாது!
    வரைந்த நீளக் கொடிகளின்
    கட்டிடப் புதுமனைப் புகுவிழாக்கள்
    வரப்போகும் உணவுப் பஞ்சத்தின்
    எதிரொலி என்பதை யார் அறிவார்? 
    வருகின்ற திருவிழா
    ஏழையின் வசந்தவிழாவாக
    உருவெடுக்க பசுமைச் சமுதாயம்
    உருவாக்கும் இளைஞர் சமுதாயம்
    காணும் ஆவலில் நான்!

    பூசணியின் ஆசைகளைப் பாவாக்கித் தந்திருக்கும் திருமிகு. லட்சுமியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்துள்ளேன். அம்மையாருக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து, “மானுடா! காயாக எனையுண்டால் நோய்தீர்க்கும் மருந்தாவேன்; ஆனால் நீயோ கண்ணேறு கழிப்பதற்கு எனைவாங்கிச் செல்கின்றாய். உன் மடமை கண்டு நான் மனவேதனை கொண்டாலும், என்னாலே பிழைக்கின்ற தொழிலாளியைக் கண்டு உள்ளபடி உவகையே கொள்கின்றேன்” எனப் பகுத்தறிவோடு பேசும் பூசணியைக் கண்டேன் ஒரு கவிதையில்!

    கண்ணேறு கழிப்பதற்கென்றே
    காயாகும் வரம் பெற்றேன்,
    கறிவகையாய் வந்தாலும்
    கண்ணெதிரே தூக்கிலிட்டுக்
    காயும்வரை காத்திருந்து
    கண்டபடி தூக்கி எறிவர்.
    கண்ணேறு கதையெல்லாம்
    காணாத மூடநம்பிக்கை,
    கதைத்தவர் யாரெனக்
    கண்டறியேன் இருப்பினும்
    அமாவாசை நாளிலெல்லாம்
    அவதியாய் கற்பூரம்
    சுமையாக என்மீது
    சுடராக ஏற்றிவிட்டு
    அணைந்ததும் முச்சந்தியில்
    அமர்க்களமாய் போட்டுடைத்து
    கண்ணேறு கழிந்ததாய்க்
    கற்பனையில் திரிகின்றார்.
    […]
    காயாகச் சமைத்தாலோ
    கண்டவர் பசியென்னும்
    நோயதனைத் தீர்த்திருப்பேன்
    கொழுப்பதனைக் குறைத்திருப்பேன்.
    […]
    பரவாயில்லை ஒருவகையாய்
    பசித்திருக்கும் உழவனவன்
    குறைதீர்க்க விற்குமொரு
    குணமதனால் என்பிறப்பில்
    நிறைவொன்று நான்கண்டேன்
    நிற்குமென்பெயர் வெண்பூசணியாமே!

    திரு. இளவல் ஹரிஹரனின் இந்தக் கவிதையைப் பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட விரும்புகின்றேன்.

    பங்குகொண்ட அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள் மீண்டும்!

     

    Share
  • புரட்டாசியில் பூத்த புதுமை மலர்

    சுலோச்சனா

    அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்

    கருணை அருட்பெருஞ்ஜோதி.

    The_vallalar-06-214x300பூமியில் எத்தனையோ விதமான மலர்கள் பூத்துப் பொலிகின்றன. பூமியை அலங்கரிக்கின்றன. சில மலர்களே பூமியை புனிதமாக்க ,பூமியில் பிறந்த மக்களை புனிதமாக்க பூக்கின்றன. அப்படிப் பூத்த மலர்கள் புதுமை மலர்கள் . இவற்றில் ஒன்றுதான் புரட்டாசியில் பூத்த புதுமை மலரான அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்ஜோதி என அடிகளார் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூரில் இராமையா சின்னம்மை இவர்களுக்கு 5-10-1823 புரட்டாசித் திங்கள் 21ம் நாள் மகனாகப் பிறந்து பெற்றோர்களை பாக்கியசாலி ஆக்கினார். சுவாமிகளின் உடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் ஆவர். சிறு வயதினிலேயே சிதம்பரம் நடராஜப் பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி பூண்டவர்.

    பள்ளி சென்று பயிலாத சுவாமிகள் அண்ணன் சபாபதிக்குப் பதிலாக, அவர் பேச வேண்டிய மேடையில் சொற்பொழிவாற்றி அண்ணனை விட மிக நன்றாக சொற்பொழிவு செய்கிறார் என்று புகழப் பெற்றார். அப்பொழுதுதான் அவர் மகிமை வெளிப்பட ஆரம்பித்தது எனலாம். இவருக்கு மிக இள வயதிலேயே வற்புறுத்தி மணம் முடித்தனர். அவர் அன்று இரவு முழுவதும் படிப்பிலேயே ஈடுபட்டிருந்தார். மின்விளக்கில்லாத அந்த காலகட்டம். எந்த விளக்கின் ஒளியில் சுவாமிகள் படித்தாரோ அதில் எண்ணெய் வற்றியது. சுவாமிகளோ அவ்விளக்கில் தண்ணீர் ஊற்றினார். இருந்தும் அவ்விளக்கு சுடர் விட்டு எரிந்தது. சுவாமிகளை மணந்த அந்த அம்மையார் இவரின் அற்புத செயலைக் கண்டு மிக்க மதிப்பு மரியாதை உணர்வுடன் அவரிடம் இருந்து விலகியே நின்றார். கருவிலே திருவுடையார் என்பதற்கேற்ப அவர்பிறவி ஞானியாக இருந்தார். ஆன்ம ஞான அனுபவத்துடனேயே அவர் பிறப்பு நிகழ்ந்திருக்கின்றது. அது மட்டும் அல்லாமல் அவர் வாழ்வில் திடீர் திருப்பங்கள் எதுவும் நிகழவில்லை. இறையருளிலேயே அவர் மனம் இயல்பாகவே பொருந்தி இருந்தது என அவர் வாழ்வின் முறையிலேயே அறிகின்றோம்.

    உயிர் கொல்லாமை, ஊண் உண்ணாமை போன்றவை அவரின் முதன்மை கொள்கையாக இருந்தது. விலங்கினங்களைக் கொன்று அவற்றின் ஊண் உண்டு மகிழ்ந்திருப்பதை எண்ணியும் கண்டும் அவர் நெஞ்சம் நடுங்கிற்று. ஏழைகளின் வயிறு வாடுவதை நினைத்து வாடிய பயிரை கண்ட போதெல்லாம் அவர் முகமும் மனமும் பெரிதும் வாடியே நின்றது. அவரை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்ற பலர் பின்னாட்களில், “ஐயா அவர்களின் முகத்தில் எப்பொழுதுமே சற்று வருத்தக்குறியே இருக்கும். வெண்மையான துணியால் உடல் முழுதும் போர்த்தி இருப்பார் தலையில் முக்காடிட்டும் இருப்பார். ஏதோ சிறிது மற்றவர் கண்களுக்கு தெரியும் பாகங்கள் பொன் போன்று மின்னும்,கைகளை வீசிக்கொண்டு கூட நடக்கமாட்டார். கைகளை இணைத்து வைத்துக்கொண்டு மிகுந்த அடக்கத்துடனேயே நடப்பார். மிகவும் மென்மையான எளிமையானசாத்வீக குணத்தையும் கடந்தவர்” என்று கூறுகின்றனர் .

    இரஜஸ் தமஸ்,சாத்வீகம் இம்மூன்று குணங்களையும் கடந்து நிற்பதே ஞானிகளின் அடையாளம் அல்லவா? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் வீடிதோறிரந்தும் பசியறாவெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்.எனும் வள்ளலார் ஏழைகளின் பசியாற்ற தரும சாலை ஒன்றை நிறுவினார். அதற்கு சத்திய தருமச்சாலை என்று பெயரிட்டார்.அதில் தன்னம்பிக்கையினாலேயே அடுப்பை ஏற்றினார். கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கு அரும் ஏழை பாழைகள் அனைவருக்கும் வயிறாற பசியாற்றப்பட்டது. அன்று அருளாளரான வள்ளலாரால் ஏற்றப்பட்ட அடுப்பு அணையா அடுப்பாக இன்று வரை உணவு தயாரிக்கப்பட்டு ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகின்றது. வள்ளலார் வளம் மிக்க வயலூரில் துவங்கிய சத்திய ஞான தரும சாலையும் மக்களின் வழிப்பாட்டிற்காக சத்திய ஞானசபையும் இன்றும் வடலூரில் சத்ய சன்மார்க்க வழியில் நல்ல முறையில் நடந்து வருகின்றது. வள்ளலார் ஞானவழியில் ஏற்படுத்திய ஒளிமயமான ஜோதி வழிபாடு நடந்து வருகின்றது. மென்மையான மனம் கொண்ட வள்ளலார் கடவுளர் வழிபாட்டில் ஆடம்பரமான வழிபாடுகள் தேவையில்லை. உண்மையான பக்தியுடன் எளிய வழிமுறையில் இறையருளுடன் இசைந்த மனதுடன் அருட்ஜோதி ஆண்டவரை ஜோதிவடிவில் தரிசித்து அந்த ஜோதியை தன் மனதுக்குள் தரிசிக்க வேண்டும் என்பதே அவர் வகுத்த வழிபாட்டு முறை .வள்ளலார் வழிபாட்டில் மட்டும் புதுமையை கூறவில்லை . சமூக அமைப்பில் வாழும் வழிமுறைகளில் புதுமைக் கருத்துக்கள் புகவேண்டும் என விரும்பி “மனிதர் அனைவரும் சமமே சாதி சமய வழக்குகளை விட்டு பேரின்ப வீட்டிற்குள் நுழையும் வழி காண வாரீர்” என்று வடலூர் வட திசைக்கே என்று பாடி அழைக்கிறார் . ஜாதி மத இன சமய வேறு பாடுகளை விட்டு மனிதன் மனிதனாகப் பிறந்து வாழும் முறையால் தேவனாக உயர வேண்டும் என விரும்பி கூறுகின்றார்.

    அவற்றிற்கெல்லாம் என்னென்ன வேண்டுமென்று சென்ன கந்த கோட்டத்துள் உள்ள சண்முகனை நினைந்து கேட்கிறார்.

    ஒருமையுடன் நினது திருமலரடி

    நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்

    உள்ளொன்று வைத்து புறம் ஒன்று

    பேசுவார் உறவு களவாமை வேண்டும்

    பெருமை பெறு நினது புகழ் வேண்டும்

    பொய்மை பேசாதிருக்க வேண்டும்.

    பெரு நெறிபிடித்தொழுக வேண்டும்

    மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.

    மருவு பெண்ணாசையை மறக்கவேண்டும்

    நினை மறவாதிருக்க வேண்டும்.

    மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்.

    நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்.

    வேண்டுவன வற்றையும் வேண்டாதவற்றயும் இறைவனிடம் வேண்டிக் கேட்க வழி சொல்கின்றார். வள்ளலார் வள்ளுவரின்

    “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய் பொருள் காண்பதறிவு”

    என்ற குறளுக்கு ஒரு எடுதுக் காட்டாகவும் இருக்கின்றார். தேர்ந்து தெளிந்த பின்னொரு சில இடங்களில் வேதத்தின் சில பகுதிகளை மறுத்துரைக்கின்றார். மென்மையான மனம் கொண்டவர். திண்மையான மனதுடன் தனக்கு ஒவ்வாத கருத்துக்களை வன்மையுடன் கண்டிக்கின்றார்.

    எவ்வுயிரும் தம் உயிர் ஒத்து இருப்போர் உள்ளமே.சுத்த சன்மார்க்க சங்கம் .என்பது இவரது திடமான கருத்து,பள்ளி சென்று பயிலாத ஞானிகள் அனேகர்.அவர்களில் ஒருவரே அருட்பிரகாச வள்ளலார் என அன்புடன் அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். இறை பக்தியில் தோய்ந்தவரேனும் “அறவால் அறிந்தே உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே”

    எனும் அருணகிரி நாதரின் வாக்கிற்கேற்ப ஞான மயமான பக்தியை உடையவர் நமக்கும் அதை அளிப்பவர். மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்த மக்கள் அனேகர் அவர் கருத்துக்களுக்கு ஒத்து வராதது கண்டு வள்ளலார் “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என அறிவித்தார்.

    வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில்சித்தவளாகத்தில் தம்மை மக்கள் கண்களுக்கு மறைத்துக்கொண்டார். ஒவ்வொரு தைப்பூசத்தன்றும் அவர் நிறுவிய சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது. சுவாமிகள் வகுத்த விதிப்படி பல வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி 7 வது திரையாக சுத்த சத்துவகுணத்தைக் குறிக்கும் வெண்மை நிறமுடைய திரையை விலக்கி “அருட்பெருஞ்ஜோதி” தரிசனம் அனைவருக்கும் கிடைக்கின்றது. பல வருடங்களுக்குமுன் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் திருப்பணி செய்யப்பட்டது. சத்ய ஞானசபை சத்ய தருமசாலை சன்மார்க்க சங்கம் இவைகள் எல்லாம் வாரியார் அவர்களால் திகழ்கின்றது.

    ஒவ்வொரு காலத்திலும் கடவுளின் தூதுவராக மகான்கள் வருகின்றனர்.மூட நம்பிக்கை நம்பிக்கை மிகுந்த காலத்தில் சீர் திருத்த வாதிகளும் புரட்சி சிந்தனை உடையவர்களும் தோன்றுகிறார்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவரே வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஆவார்.

    Share
  • பல்லவன் பல்லவி பாடட்டுமே …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    கலங்கரை விளக்கம் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இசைஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தமுதல் திரைப்படம் இது! கருப்பு வெள்ளைத் திரைப்படம் எனிலும் அனைத்துப் பாடல்களும் அற்புத ராகமாய் அமைந்தன.இறையருள் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பில், எம்.ஜி.ஆர். – சரோஜா தேவிநடிப்பில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் பாடல்கள்.

    டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பல்வேறு பாடல்களில் இப்பாடல் தனித்துவம் பெற்றது என்று டி.எம்.எஸ்.அவர்களின் பரம ரசிகர் திரு. துளசி (சென்னை) என்னிடம் குறிப்பிட்டார். என்ன தனித்துவம் என்றபோது ஒரே பாடலில் ஏற்றஇறக்கங்கள் இத்தனை அதிகமாய் அமைந்தது குறிப்பாக ஒரு சில பாடல்களில் மட்டும்தான். அன்பே வா திரைப்படத்தில்.அன்பே வா திரைப்படத்தில் ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா’, கலங்கரை விளக்கம்திரைப்படத்தில் ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே என்று பட்டியலிட்டுக் காட்டினர். அதன்பின் இப்பாடலைக்கேட்டுப்பார்க்கும்போது அவர் சொன்ன உண்மை தெரிந்தது.

    pallavan pallavi1pallavan pallavi2எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த ஒரு பாடலில் மட்டும் எத்தனை முக பாவங்கள் நடனம் எனப் பரிணமிக்கிறார் பாருங்கள்.அவரும் நாடகத் துறையில் இருந்து வந்தே திரை உலகில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் என்பதை இப்பாடல் காட்சிநினைவூட்டுகிறது. கவிஞர் வாலி அவர்களின் நாடகப் பின்புலமும் திரைக்கதைக்கேற்ப இப்பாடல்களுக்கு வடிவம்கொடுத்திட ஏதுவாக அமைய மெல்லிசை மன்னர் தனது ராஜ பாட்டையில் வெற்றி பவனியை மீண்டும் தொடங்கியதிரைப்படம் என்பதற்கு எல்லாப் பாடல்களும் சாட்சி சொல்லின!

    பல்லவன் பல்லவி பாடட்டுமே

    ஓ… ஆரிரோஆரிரோஆரிரோ
    ஓ… ஆரிரோஆரிரோஆரிரோ… ஓ …

    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே …
    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
    பூ மகள் கண் மலர் மூடட்டுமே …

    பல்லவன் பல்லவி பாடட்டுமே… ஏ…

    ராக பாவங்கள் பாடலில் விளங்க
    தாளப் பேதங்கள் ஆடலில் விளங்க
    ஹோ… ஹோ…ஹோ… ஹோய்
    ராக பாவங்கள் பாடலில் விளங்க
    தாள பேதங்கள் ஆடலில் விளங்க
    ராஜ சபையினில் மன்னவர் மயங்க
    ராஜ சபையினில் மன்னவர் மயங்க
    தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
    தத்தோம் தரிகிட தகதிமி தரிகிட தா …

    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
    பூ மகள் கண் மலர் மூடட்டுமே

    ஓ… ஆரிரோஆரிரோஆரிரோ
    ஓ… ஆரிரோஆரிரோஆரிரோ… ஓ …

    மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
    அன்னம் என்பதை நடையினில் காட்ட
    மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
    அன்னம் என்பதை நடையினில் காட்ட
    காதல் வீணையைக் கண்களில் மீட்ட
    காதல் வீணையைக் கண்களில் மீட்ட
    காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே

    ஹோய் ஆரிரோஹுஹுஆரிரோ ஹுஹு
    ஆரிரோ ஓ….
    ஆரிரோ ஹுஹுஆரிரோ ஹுஹு
    ஆரிரோ ஓ….

    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
    பூ மகள் கண் மலர் மூடட்டுமே

    காணொளி: https://www.youtube.com/watch?v=gFmetxJOhR4

    https://www.youtube.com/watch?v=gFmetxJOhR4

     

    Share
  • ஆன்மீகமும் நானும் -4

    நடராஜன் கல்பட்டு    

     

    1964 68 களில் நான் பங்களூரில் வேலை பார்த்து வந்தேன்.  அப்போது எங்கள் வீட்டுக்காரர் வீட்டிற்கு ……. மடத்தில் இருந்து ஒரு ….. ஆச்சாரியார் வந்திருந்தார்.  வீட்டுக்காரரின் சிற்றன்னை எங்களை வந்து …. ஆச்சாரியாவை நமஸ்கரித்து ஆசி வாங்கிக் கொள்ள அழைத்தாள்.  எனக்கு அங்கு போவதில் ஈடுபாடு இல்லை.  ஆனால் என் மனைவி விடுவதாக இல்லை.

     

    அணிந்திருந்த சட்டை, கால் சட்டையுடன் கிளம்பினேன்.  மனைவி நான் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம் அணிந்து வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.  வேறு வழி இன்றி பெட்டியில் இருந்து என் திருமணத்தின் போது எனக்களிக்கப் பட்ட பட்டு வேஷ்டி அங்க வஸ்திரத்தினை அணிந்து கொண்டேன்.  சுமார் இரண்டு அங்குல ஜரிகை கொண்டவை அவை.

     

    அங்கு நல்ல கும்பல்.  நான் உள்ளே நுழைவதைக் கண்ட …. ஆச்சார்யா, வாங்கோ… வாங்கோ… இப்பிடி முன்னாடி வந்து உக்காருங்கோ.என்று என்னை அழைத்தார்.  என்னுள் எழுந்த முதல் சந்தேகம் மரியாதை எனக்கா அல்லது 2 அங்குல ஜரிகை வேஷ்டிக்கா?

     

    எங்கெ வேலெ பாக்கறேள்?”

     

    பர்மாஷெல் கம்பெனிலெ.

     

    கொழெந்தேள் இருக்கா?”

     

    இருக்கு.

     

    எத்தெனெ?”

     

    மூணு.

     

    எத்தெனெ ஆண் கொழெந்தெ?  எத்தெனெ பெண் கொழெந்தெ?”

     

    மூணும் பொண்ணுகள்.

     

    ஏன் ஆண் கொழெந்தே வாணாமா?  அபேக்ஷை இல்லியா?  எங்க மடத்துக்கு வாரும்.  ஆண் கொழெந்தெ கெடெய்க்கும்.

     

    அவர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் இந்த வார்த்தை களோடு பறந்து விட்டது.  ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் வித்தியாசம் காணும் இவரெல்லாம் ஆன்மீகவாதியா?’ என்ற கேள்வியே எழுந்தது என்னுள்ளே.

     

    சில சமயம் கண் சிமிட்டிக் கொண்டே என் மனைவியைக் கேட்பேன்,  பையன் வேணுமா  …. மடத்துக்குப் போயிட்டு வரெயா?” என்று.

     

    இம்மாதிரியான ஆன்மீகவாதிகள் நம் நாட்டில் ஆயிரக் கணக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  அவ்வப்போது எங்காவது ஒருவரின் முகத்திரை கிழிக்கப் படுகிறது.  இருந்தாலும் அவர்களுக்குச் சேரும் கும்பல் குறைவதில்லை.

    உங்களுக்கு இறைவனைத் துதிக்க வேண்டுமா?  துதியுங்கள்.  ஆனால் இடைத் தரகர்கள் வழியாக அல்ல.  நேரடியாக.  இறைவனோடு நீங்கள் பேசலாம்.  உங்கள் பேச்சு அவர் காதுகளில் விழும்.  காரணம் அவர் எங்கும் இருப்பவர்.  எல்லாம் அறிந்தவர்.  எல்லா சக்தியும் கொண்டவர்.

     

     

    (தொடரும் ….)

    Share
  • கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி முடிவுகள்

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வணக்கம் . நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டியின்  நடுவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் தீர்ப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

    kamarajar

    தமிழருவி மணியன்

    வணக்கம். வளர்க நலம்.

    பெருந்தலைவர் குறித்த கட்டுரைகளின் முடிவுகளை அனுப்பி வைத்துள்ளேன். கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்…

    முதல் பரிசு :

    1. ச. சசிகுமார் – பார்க்கட்டும்… ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்!
    2. ஸ்வேதா மீரா கோபால் – கர்மவீரர் காமராசர்!
    3. ஞா. கலையரசிகர்ம வீரர் காமராசர்!

    இரண்டாம் பரிசு :

    1. இன்னம்பூரான் – “பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்!
    2. வில்லவன் கோதை – “தமிழர்தம் கம்பீரம்” – கர்மவீரர் காமராசர்!
    3. கீதா மதிவாணன்- பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

    மூன்றாம் பரிசு :

    1. தஞ்சை வெ.கோபாலன் – கர்மவீரர் காமராஜர்
    2. ஜெயஸ்ரீ ஷங்கர் – “வான்புகழ் கொண்ட பாரத ரத்தினம்” – கர்மவீரர் காமராசர்!
    3. சரஸ்வதி ராசேந்திரன் – ”கர்மவீரர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

    பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை நெஞ்சில் நிறுத்தி கட்டுரைப் போட்டிகள் நடத்திச் சிறப்பிக்கும் “வல்லமை” இணைய இதழுக்கும் அதற்குத் துணை நின்ற  கவிஞர் திரு. காவிரிமைந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    அன்புடன்,
    தமிழருவி மணியன்

     

    போட்டியை சிறப்பாக நடத்திக்கொடுத்திருக்கும் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கும், கவிஞர் திரு காவிரிமைந்தன் அவர்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து இணைந்திருப்போம். பரிசு பெற்றவர்கள் தங்களுடைய உள்நாட்டு முகவரியை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்து பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது

    Indian Astrosat

    2015 செப்டம்பர் 28 காலை 10 மணிக்கு சிரிஹரிகோட்டா ஏவு தளத்தி லிருந்து சீர்மையாக ஏவப்பட்ட பிறகு, சுமார் 20 நிமிடத்தில், PSLV ராக்கெட் ஆஸ்டிரோஸாட் [ASTROSAT] விண்ணோக்கி ஆய்வகத்தைத், திட்டமிட்ட சுற்றுவீதியில் இட்டு அது பூமியைச் சுற்ற ஆரம்பித்தது.

    பி. ஜெயக்குமார் [ஆஸ்டிரோஸாட் திட்ட ஆளுநர்]

    ajay

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++++

    https://youtu.be/Llv-gTdaoqo

    https://youtu.be/3mJSnc3hpLI

    https://youtu.be/OI-VkHWenRs

    https://youtu.be/VOA_3WkEZNA

    https://youtu.be/3AA4SwwaWUA

    https://youtu.be/8qrE11xFUAo

    ++++++++++++++++

    India's Space observatory

    +++++++++++++++

    நாசாவின் முதல் விண்ணோக்கி
    ஹப்பிள் தொலைநோக்கி !
    இருபது ஆண்டுகளாய்
    முப்பதி னாயிரம் பிம்பங்கள்
    நோக்கி யுள்ளது !
    விண்வெளியில்
    அகிலக் கோள்கள் எழுபதின்
    நகர்ச்சியைக் கண்டது !
    பிரபஞ்ச விரிவை உண்டாக்கும்
    விலக்கு விசையான
    கருஞ் சக்தியின் மறைந்த
    இருப்பைக் கண்டது !
    விரிவு வீதத்தைக் கணித்திடத்
    திரிந்திடும் விண் கழுகு !
    காலக்ஸிகளின்
    ஒளிமந்தை தோற்ற வளர்ச்சியைத்
    தெளிவாகக் காட்டும் !
    ஒளியற்று ஈர்ப்பாற்றல் கொண்ட
    கரும்பிண்டத்தின்
    இருப்பை மெய்ப்பிக்கும் !
    ஹப்பிள் தொலை நோக்கியை
    இப்போது மிஞ்சுவது
    கெப்ளர் விண்ணோக்கி !
    ஏவிய இந்திய விண்ணோக்கி
    ஆஸ்டிரோஸாட் பிரபஞ்சத்தை உளவி
    ஓவியங்கள் வரையும் !

    +++++++++++

    Details os Astrosat

    இந்தியா தனது முதல் விண்ணோக்கி ஆய்வகத்தை அண்டவெளி ஒளிமந்தை, கருந்துளைகள் ஆராய ஏவியுள்ளது.

    2015 செப்டம்பர் 28 ஆம் தேதி இந்தியா தனது உன்னதப் பொறி நுணுக்க விண்ணோக்கி ஆஸ்டிரோஸாட்டை [Space Observatory Astrosat] முதன் முதலாக ஏவி, அது வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றி வருகிறது.  இதற்கு ஓராண்டுக்கு முன்பு ஆசியாவின் முதற்பெரு சாதனையாய் செந்நிறக் கோள் செவ்வாய்க் கோளைச் சுற்றிவர மங்கல்யான் துணைக்கோளை சிக்கனச் செலவில் ஏவி வரலாற்று முதன்மை பெற்று உலக நாடுகள் கவனத்தை இந்தியா கவர்ந்துள்ளது.  மங்கல்யான் ஓராண்டு காலமாய்ச் செவ்வாயக் கோளை ஆராய்ந்து வருகிறது.  இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, ஈரோப்பாவின் சில நாடுகள் இவ்வாறு செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    ஆஸ்டிரோஸாட் விண்ணோக்கி ஆய்வகம் 150 டன் எடையுள்ள ஒரு சிறிய விண்வெளித் தொலைநோக்கி.   அது நாசா 1990 ஆண்டு ஏவியுள்ள ஹப்பிள் தொலை நோக்கியை விடச் சிறியது.  PSLV ராக்கெட் இந்திய விண்ணோக்கியுடன், மற்றும் ஆறு அன்னிய நாட்டுத் துணைக்கோள் களையும் தூக்கிச் சென்று, அவற்றையும் திட்டமிட்ட சுற்றுவீதிகளில் இட்டது.  இந்தியா  ஏவிய விண்ணோக்கியின் சுற்றுவீதி பூமியிலிருந்து 360 மைல் [650 கி.மீ] உயரம். ஆஸ்டிரோஸாட்டில் எக்ஸ்ரே கதிர்கள் இயங்கும் ஒரு தொலைநோக்கியும் உள்ளது.  விண்ணோக்கி ஆய்வகம் தொடர்ந்து விண்வெளியில் உள்ள பிரபஞ்ச ஒளிமந்தைகள், கருந்துளைகள், விண்மீன் களின் காந்த தளங்களை  [Galaxies, Black Holes, Magnetic Fields of Stars] ஆராயும்.  ஐந்தாண்டுகள் இயங்கும் திறனுள்ள இந்திய விண்ணோக்கியை அமைத்த செலவு சுமார் 27 மில்லியன் டாலர் [1.8 மில்லியன் ரூபாய்].

    Launch Rocket PSLV

     

    “ஹப்பிள் தொலைநோக்கி ஐயமின்றி எல்லோருக்கும் தெரிந்த, வரலாற்றில் வெற்றி பெற்ற மகத்தான திட்டங்களில் ஒன்று. சென்ற ஆண்டு (2009) விண்வெளி மீள்கப்பல் குறிப்பணி (Space Shuttle Service Mission) மூலம் நோக்ககத்தை மேம்படுத்தியதில் அது சீராகி உன்னத முறையில் மனித சமூகத்துக்குப் புதிய விஞ்ஞானச் சாதனைகள் புரிந்து வருகிறது.”

    எட்வேர்டு வெய்லர் (Science Mission, NASA Headquarters, Washington D.C.)

    “பேராற்றல் படைத்த இந்த அகற்சி நோக்குக் காமிராவால், ஹப்பிள் தொலைநோக்கி புத்துயிர் அடைந்து மிக்க சூடான அல்லது குளிர்ந்த அண்டக் கோள்களைக் கூர்ந்து நோக்கும் திறமை பெற்றுள்ளது. அதில் அகிலத் தோற்ற மூலத்தை ஆராயும் ஒளிப்பட்டை வரைக் கருவியும் (Cosmic Origin Spectrograph) இணைக்கப் பட்டுள்ளது ! அந்தக் கருவி பிரபஞ்சத்தில் 99% சதவீதம் உள்ள காலக்ஸிகளின் இடைவெளியை ஆய்வு செய்யும்.”

    பேராசிரியர் மைக்கேல் டிஸ்னி (Emeritus Professor Astrophysics Cardiff University)

    “நமது பால்வீதி காலக்ஸி விளிம்பில் நாம் எல்லை அறியாத வேலிகளைக் கெப்ளர் விண்ணோக்கித் தள்ளி வைக்கும் ! கெப்ளர் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் மனிதன் தன்னைப் பற்றி அறிந்த அடிப்படைக் கருத்துக்களை முற்றிலும் மாற்றிவிடலாம்.”

    ஜான் மோர்ஸ் (Jon Morse, Director NASA’s Astrophysics Division) (Feb 19 2009)

    “திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள கோள்களின் சுற்றுவீதியில் “உயிரினத் தகுதி அரங்கம்” (The Habitable Zone) என அழைக்கப்படும் பகுதியில் விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற அண்டக்கோள்கள் இருந்தால் அவற்றைக் கண்டுபிடிப்பது எமது குறிக்கோள். அப்படி யானால் அந்த அரங்கில் உயிரினம் விருத்தி பெறப் பற்பல பகுதிகள் உள்ளன என்று அர்த்தமாகிறது ! கெப்ளர் தொலைநோக்கி அப்படி நூற்றுக் கணக்கில் இருக்கும் அண்டக் கோள்கள் சுற்றுவதைக் கண்டுபிடிக்க டிசைன் செய்யப் பட்டுள்ளது.”

    வில்லியம் பொரூக்கி (Bill Borucki, Kepler Pricipal Scientist) (March 6, 2009)

    “ஹப்பிள் புரிவது வரலாற்று முக்கியக் குறிப்பணியாகும் ! வெறும் விஞ்ஞானக் குறிப்பணி மட்டுமில்லை ! நமது “பிறப்புக் குறியீடுக்கு” (Genetic Code) அடிப்படையாக மனிதரை அசைத்து விடும் கேள்வி : முதல் ஆணோ அல்லது முதல் பெண்ணோ வானத்தை நோக்கி நாங்கள் தனிப்பட்டவரா என்று கேட்கும் வினா !

    டாக்டர் எட்வெர்டு வெய்லர் (Dr. Edward Weiler Associate Administrator NASA Science Mission Directorate) (March 7, 2009)

    “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், அவற்றில் உயிரினச் சின்னங்கள் இருப்பதையும் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

    ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

    பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி ! அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

    பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas)

    “அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

    டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

    “பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா? அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன? அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா? அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா? நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

    டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]


    “தற்போது ஒரு சில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது ! சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது ! மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !”

    மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

    ஹப்பிள் விண்ணோக்கி புரிந்துள்ள அரும்பெரும் சாதனைகள்

    1990 முதல் 2010 வரை இருபது ஆண்டுகளாக ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் பல்வேறு அகிலப் பிம்பங்களைப் படமெடுத்து அரிய விஞ்ஞான விளைவுகளை தெளிவாகக் காட்டி வருகிறது. அண்டவெளிப் பயணங்களுக்கு அதன் விளைவுகள் அடிப்படையாக இருந்து வருகின்றன. 380 ஆண்டுகளுக்கு முன்பு காலிலியோ முதன்முதல் தனது சிறு தொலைநோக்கியில் விண்ணோக்கிப் பூதக்கோள் வியாழனையும், சனிக் கோளையும் அவற்றின் துணைக்கோளையும், சூரிய வடுக்களையும் கண்டு அவற்றின் பண்பாடுகளைக் குறிப்பிட்டார். இப்போது அந்த வானியல் ஆராய்ச்சியை 20 -21 நூற்றாண்டுகளில் தொடர்ந்து விண்வெளியில் பன்மடங்கு நுணுக்கத்தில் ஆய்வு செய்து வருகிறது ஹப்பில் தொலைநோக்கி. பூமிக்கு மேல் 350 மைல் உயரத்தில் சுற்றிவரும் ஹப்பில் தொலைநோக்கி பலமுறை பழுதாகி விண்வெளி மீள்கப்பல் விமானிகள் பழுதுகளைப் பன்முறைச் செம்மைப் படுத்தியுள்ளார்.

    1977 இல் அமெரிக்க அரசு அங்கீகரித்து 1979 இல் 2.4 மீடர் (8 அடி) பிரதமக் குவியாடி தயாரிப்பு ஆரம்பமாகி 1985 இல் விண்ணோக்கி அமைப்பு முடிந்து விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் பெயரைப் பெற்றது. 1986 இல் செலஞ்சர் விண்வெளி மீள்கப்பல் (Challenger Space Shuttle)) வானில் வெடித்து விமானிகள் அனைவரும் மாண்டதால் ஹப்பிள் தொலைநோக்கி ஏவல் தாமதமானது. பிறகு 1990 ஏப்ரல் 24 இல் டிஸ்கவரி விண்வெளி மீள்கப்பல் (Space Shuttle Discovery) மூலம் ஏவப்பட்டது. இதுவரை ஹப்பிள் தொலைநோக்கி நமது பால்வீதி ஒளிமந்தை மையத்தில் 180,000 விண்மீன்களை நோக்கியுள்ளது ! 1991 இல் ஹப்பிள் தொலைநோக்கி முதன்முதல் சனிக் கோளில் நேர்ந்த ஒரு பெரும் புயலைப் பதிவு செய்தது. 1992 இல் காலக்ஸி ஒன்றைச் (NGC 4261) சுற்றியுள்ள தட்டு பேரளவு நிறையுள்ள கருந்துளைக்குத் தீனி ஊட்டிக் கொண்டிருந்தது ! 1993 இல் விண்வெளி மீள்கப்பல் செப்பணிடும் பயணத்தில்தான் பழுதான பிரதமக் குவியாடி மாற்றப் பட்டது.

    1994 இல் வால்மீன் சூமேக்கர்-லெவி 9 பூதக்கோள் வியாழன் மீது விழுந்ததைப் (Comet Shoemaker-Levy 9 falling on Jupitar) படமெடுத்தது. கழுகு நிபுளாவை (Eagle Nebula) 1995 இல் கண்டது. 1996 இல் குவேசார் உள்ள காலக்ஸிகளைப் பற்றித் தீர்வு செய்தது (Resolves Quasar Host Galaxies). 1997 இல் விண்வெளியின் ஆழத்தில் வெகு தொலைவில் உள்ள ஒரு காலாக்ஸியைக் கண்டுபிடித்தது !

    1998 இல் முதன்முதலாக விரைவாக விரியும் பிரபஞ்சத்தைக் கண்டு விலக்கு விசையான “கருஞ்சக்தி” (Dark Energy) இருப்பது நிரூபிக்கப் பட்டது. 1999 இல் விண்வெளி மீள்கப்பல் செம்மைப் பணியில் ஹப்பிள் தொலைநோக்கியின் 6 நேர் நிலைப் படுத்தும் மிதப்பிகள் (Six Gyros) மாற்றப் பட்டன. 2000 இல் வால்மீன் லீனியர் (Comet Linear) சிதைந்து போவதைப் படமெடுத்தது !

    2001 இல் ஹப்பிள் வெகு தூரத்தில் உபோரு சூப்பர்நோவாவைக் கண்டது. 2003 இல் செவ்வாய்க் கோள் பூமிக்கு நேர் எதிராய் நெருங்கும் போது தெளிவாகப் படமெடுத்தது. 2005 இல் புளுடோ கோளின் இதுவரை அறியாத இரண்டு சந்திரன்களைக் கண்டுபிடித்தது. 2006 இல் ஹப்பிள் மூலம் கரும்பிண்டத்தைப் (Dark Matter) பற்றிய விளக்கம் கிடைத்தது. 2007 இல் கரும்பிண்டக் குவியலின் முப்புறப் படங்கள் ஹப்பிள் மூலம் கிடைத்தன. அதே ஆண்டில் ஹப்பிள் தொலைநோக்கி தனது 100,000 முறைப் புவிச் சுற்றை முடித்தது ! 2009 இல் பேராற்றல் படைத்த காமிரா (Camera WFPC2) பழைய காமிரா நீக்கிய இடத்தில் அமைக்கப் பட்டு ஹப்பிள் தொலைநோக்கி 100 மடங்கு கூர்மை நோக்குப் பெற்றது. அப்போது அது பூதக்கோள் வியாழனில் நிகழ்ந்த ஓர் அண்டத் தாக்குதலைப் படமெடுத்தது. 2010 இல் புளுடோவின் வியக்கத் தக்க மேற்தள மாறுதலைத் தெளிவாகப் பட மெடுத்தது காலக்ஸிகளின் செந்நிற நகர்ச்சி எண்ணிக்கை எட்டுக்கு மேற்பட்டது (Redshifts of Galaxies Out Higher than 8) என்று காட்டியது. ஹப்பில் தொலைநோக்கியின் 20 ஆம் ஆண்டுப் பூர்த்தி விழா 2010 ஏப்ரல் 25 ஆம் தேதி நாசா, ஈசாவால் கொண்டாடப் பட்டது.

    ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்த பத்து வியப்பான விண்வெளிக் காட்சிகள்

    இருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளில் வானியல் ஆராய்ச்சிகளுக்குப் பேரளவு உதவிய ஒரு விஞ்ஞானப் பயணச் சாதனம் ஐயமின்றி ஹப்பிள் தொலைநோக்கியே. 2010 மார்ச் மாதம் வரை 20 ஆண்டுகளில் ஹப்பிள் தொலைநோக்கி 30,000 மேற்பட்ட தனித்துவக் குறியிலக்குப் பிம்பங்களைக் (Unique Space Targets) விண்வெளியில் கண்டு படமெடுத்துள்ளது. அவற்றின் கண்டுபிடிப்புகளால் இதுவரை 8700 மேற்பட்ட விஞ்ஞான வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

    1. 1994 இல் வால்மீன் சூமேக்கர்-லெவி 9 வியாழக் கோள் மீது மோதி விழுந்ததைத் தெளிவாகப் படமெடுத்துள்ளது. அடுத்து 2009 ஜூலையில் வியாழக் கோளில் விழுந்த ஓர் அண்டத்தின் கரும்புகை மூட்டத்தைப் படமெடுத்துக் காட்டியது.

    2. புளுடோவின் இரண்டு சந்திரன்களைக் கண்டுபிடித்து புளுடோவின் மிகத் தெளிவான மேற்தளத்தின் படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

    3. சூரிய மண்டலத்தின் விளிம்பில் உள்ள கியூப்பர் வளையத்தில் (Kuiper Belt) திரியும் ஒரு கிலோ மீடர் அகலமுள்ள ஓர் அண்டத்தைக் கண்டுபிடித்தது.

    4. இளைய விண்மீன்கள் அனைத்திலும் பூர்வக் கோள் தட்டுகள் (Protoplanetary Disks of Younger Stars) சுற்றி இருப்பது ஒரு பொது நிகழ்ச்சியே என்பதை ஹப்பிள் தெளிவுபடுத்தியது.

    5. இளைய விண்மீன்களிலிருந்து பாய்ந்தெழும் ஒளிக்கணைகள் (Jets of Younger Stars) சுற்றுத் தட்டின் மையத்தை விட்டுத்தான் வெளியேறுபவை என்று ஹப்பிள் எடுத்துக் காட்டியது.

    6. ஹப்பிள் தொலைநோக்கி விண்மீன்களின் மரணத்தைத் தெளிவான படங்களில் எடுத்துக் காட்டியது. அவற்றுள் ஒன்று முப்பெரும் வளையம் சூழ்ந்த சூப்பர்நோவா (1987A). அடுத்து பல்வேறு நிபுளாக்களைச் சுற்றியுள்ள, யாராலும் விளக்கப்படாத ஒருமையத்து வளையங்கள் (Unexplained Concentric Rings around Nibula).

    7. காலக்ஸிகளின் அருகே உள்ள விண்மீன் ஒளிமந்தைகளை வகைப்படுத்தி, உருவாகும் வரலாற்றை எடுத்துக் காட்டல், அவற்றின் மூலம் காலாக்ஸிகள் கட்டமைக்கப் படுவதை விளக்க உதவுதல்.

    8. அண்டைப் பிரபஞ்சத்திலிருந்து அகிலப் பின்னல் காலக்ஸிகளாய் (Cosmic Web into Galaxies) உருவாக்கும் வாயு முகில் நகர்ச்சியையும், பரவுதலையும் வரைதல்.

    9. காலாக்ஸிகள் சிலவற்றிலிருந்து எழும் காமாக் கதிர் வெடிப்புகளைப் (Gamma Ray Bursts) படமெடுத்துள்ளது. அந்தக் கதிர் வெடிப்புகள் உலோகம் குன்றிய காலாக்ஸிகளில் திணிவு நிறை மிகுந்த விண்மீன்கள் நிரம்பிய பகுதிகளிலிருந்து எழுபவை. இக்கருத்து நீண்ட காலக் காமாக் கதிர் வெடிப்புகள் திணிவு நிறைந்த விண்மீன்களிலிருந்து வருகின்றன என்னும் கோட்பாட்டை மெய்ப்படுத்துகிறது. அத்தகைய விண்மீன்களே பிறகு கருந்துளைகளாக முறிந்து சுருங்குகின்றன.

    10. குவசார் விருந்தாளிகள் (Quasar Hosts) காலக்ஸிகள்தான் என்பதை உறுதிப் படுத்தல். அந்த காலாக்ஸிகள் பொதுவாகப் பேரொளியுள்ள நீள்வட்ட வடிவில் தோன்றுகின்றன. அல்லது அடுத்த காலாக்ஸியுடன் பிணையும் ஈடுபாடு கொண்டவை.

    (தொடரும்)

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Many Planets Surround Other Star Systems ? & Are There Other Planets Like Earth ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 https://jayabarathan.wordpress.com/2007/04/27/earth-like-planet/ [Earth Like Planets-1]
    21 https://jayabarathan.wordpress.com/2008/08/01/katturai37/ [Earth Like Planets-2]
    22 Space.com Other Earths : Are they out There By John G. Watson (Jan 23, 2001)
    23 Spaceflight Now -Did the Phoenix Spacecraft Find Water on Mars ? By Craig Covault (Mar 8, 2009)
    24 The Growing Habitable Zone : Location for Life Abound By Ker Than (Feb 7, 2006)
    25 National Geographic Magazine -Searching the Stars for New Earths By : Tim Appenzeller (Dec 2004)
    26 Astromart Website NASA’s Kepler Mission to Find Earth-Sized Exo-Planets Set to Launch [July 20, 2008]
    27 OrlandoSentinel.com Kepler Begins Mission to Find Other Earths By Marcia Dunn, AP Aerospace Writer (Mar 6, 2009)
    28 The Kepler Mission Design Overview By : David Koch, William Borucki & Jack Lissauer NSA Ames Research Center, CA [June 2008]
    29 Science News : NASA Spacecraft to Seek out Earth-like Planets, Posted By : William Dunham (Feb 19, 2009)
    30 BBC News NASA Launches Earth Hunter Probe (Mar 7, 2009)
    31 Kepler Space Mission From Wikipedia Encyclopedia (Mar 10, 2009)
    31 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40208121&format=html(ஹப்பிள் தொலைநோக்கி)
    31 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903121&format=html(கெப்ளர் தொலைநோக்கி)
    32 BBC News – Hubble Mission is Wonderful News By : Gavin Thomas (Oct 31, 2006)
    33 Astronomy Magazine – Hubble Service Mission : 4 – A New Day Dawns for Hubble (After Upgrading) (September 2009)
    34 NASA News Release – Hubble Site NASA’s Starryieyed Hubble Telescope Celebrates 20 Years Discovery (April 22, 2010)
    35 BBC News Hubble Telescope (May 24, 2010 & June 11, 2010) By Katia Moskvitch
    36 Sky & Telescope Magazine : Hubble’s 20 Years in Space – Hubble’s Greatest Scientific Achievements By : Mario Livio (June 2010)

    37. http://www.spacedaily.com/reports/India_launches_first_space_observatory_999.html [September 28, 2015]

    38.  http://www.starmedia.us/entertainment/india-launches-its-first-space-observatory.html [sEPTEMBER 28, 2015]

    39.  http://economictimes.indiatimes.com/isro-launches-astrosat-first-space-observatory/slideshow/49144508.cms [September 28, 2014]

    40.  http://www.rappler.com/science-nature/earth-space/107395-india-space-observatory-astrosat  [September 28, 2015]

    41.  http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/11896014/Astrosat-India-successfully-launches-its-first-space-observatory.html  [September 28, 2015]

    42.  http://www.ibtimes.com/india-launches-astrosat-countrys-first-dedicated-space-observatory-2116099  [September 28, 2015]

    (தொடரும்)

    ++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) October 2, 2015

    Attachments area
    Preview YouTube video India’s First Dedicated Space Observatory “ASTROSAT” Launched Successfully – Thanthi TV

    India’s First Dedicated Space Observatory “ASTROSAT” Launched Successfully – Thanthi TV

    Preview YouTube video Astrosat, India’s first space observatory launched

    Astrosat, India’s first space observatory launched

    Preview YouTube video ISRO Successfully Launches India’s First Space Observatory Astrosat

    ISRO Successfully Launches India’s First Space Observatory Astrosat

    Preview YouTube video India launches first space observatory

    India launches first space observatory

    Preview YouTube video India launches its first space telescope, joins elite club

    India launches its first space telescope, joins elite club

    Preview YouTube video ISRO Successfully Launched PSLV-C30/ASTROSAT From Sriharikota India | Full Launch Video

    ISRO Successfully Launched PSLV-C30/ASTROSAT From Sriharikota India | Full Launch Video

    Share
  • அக்டோபர் ரெண்டு….

    கிரேசி மோகன்

    12079159_1705160309705765_349487606901100173_n
    —————————————-

    ”ரெட்டைவால் கண்ணனும், ராட்டைநூல் காந்தியும்(பாரத)
    நாட்டை நமக்களித்த நாயகர்கள், -(ராஜ)பாட்டையாம்,
    கீதை வழிபோன காந்தி மகான்நம்
    தாதையாம் தேசப்பி தா”……..

    Share
  • ரயில் சொல்லும் கதை!

    -கவிஜி 

    இதில்…
    இல்லை…அதில்…

    இல்லையில்லை 
    கடைசியில்…
    பனி படர்ந்த 
    அதிகாலையில் 
    படர்ந்திருந்த தண்டவாளங்களில்
    எதில் வரப் போகிறது 
    எங்களுக்கான ரயில்…?
    என்பதோடு கதைமுடிந்த 
    முதல் பாகத்தின் இரண்டாவது 
    பாகம் இப்படித்
    தொடங்குகிறது… 

    எல்லாத் தண்டவாளங்களிலும்
    நிறைந்து நின்றன ரயில்கள்…

    ஊரை விட்டு 
    ஓடிப்போக நின்றிருந்த
    நாங்கள் 
    என்ன ஆனோம்
    என்பதை ஏதாவது
    ஒரு ரயில் சொல்லும்
    திருப்புக் காட்சியாக…!

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (168)

    சக்தி சக்திதாசன்.

    cross
    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.
    நிலவு தன் நிறத்தைச் செந்நிறமாக மாற்றி செந்நிலவாக காட்சியளித்த இவ்வாரத்திலே உங்களுடன் மீண்டும் மடல் மூலம் மனம் திறப்பதில் மகிழ்கிறேன்.

    பல்லினக் கலாச்சார மக்கள் சேர்ந்து வாழும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் மத நல்லிணக்கம் இல்லையானால் மக்களின் புரிந்துணர்வு மிகவும் பாதிக்கப்படுகிறது. மதம் என்பது மனிதனுக்கு அணிகலனேயின்றி ஆடையில்லை. அம்மதத்தை இறுகப் பற்றும் காரணத்தினால் மனிதருக்கு மனிதர் புரிந்துணர்வு அற்றுப் போகும் நிலை ஏற்படுமாயின் அது மிகவும் வலியினை ஏற்படுத்துவது தவிர்க்கப் பட முடியாதது.

    நான் என்னை ஒரு இந்துவாகக் காண்கிறேன். ஆனால் இம்மதத்தை நான் கேட்டு பெறவில்லை. நான் விதையாக விழுந்த நிலம் அம்மதத்திற்குச் சொந்தமானது என்பதுவே உண்மை. குழந்தையாக இருந்து வாலிபனாக மாறி இன்று வயோதிகத்தின் வாயிலில் நிற்கும் நான் வளர்ந்து வந்த பாதையின் வழிகாட்டியாய் இந்து மதம் அமைந்தது என்பதுவே உண்மை. வாழும் வகையின் பல முறைகள் எனது பெற்றோரால் என்னுள் புகுத்தப்பட்டதன் அடிப்படைக் காரணமாக எனது மதம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

    ஆனால் தமக்கென தனிப்பட்ட கருத்துக்களை சுதந்திரமாக வகுக்கக்கூடிய பருவம் வந்ததும் ஒவ்வொருவரும் தமக்கென அபிப்பிராயங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அவ்வபிப்பிராயங்கள் அவர்களை ஆத்திக அல்லது நாத்திக பாதையில் அழைத்துச் செல்கிறது. அதற்காக ஒரு பாதையை விட மற்றைய பாதை எந்த விதத்திலும் சிறந்தது என்று அறுதியாகச் சொல்லக்கூடிய உரிமை ஒருவருக்கும் கிடையாது.

    அதே போல ஒரு மதத்தினை பின்பற்றுவோர் மற்ற மதத்தினை தமது மதத்திலும் கீழானதாக அன்றிப் பிழையானதாகக் கருதுவதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. அடுத்தவரைக் காயப்படுத்தாது, அடுத்தவரின் உரிமைகளை உதறித்தள்ளாது தாம் தமது நம்பிக்கைகளின் படி வாழ்வது எவ்விதத்திலும் தவறாகாது. இந்தக் காலங்களில் கூட சிலர் தமது மதத்தின் மீதுள்ள அதீத நம்பிக்கையால் அதை ஒரு வெறியாக மாற்றி மற்றைய மதத்தினரை இழித்துப் பேசுவது மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயமாகிறது.

    lbcஇன்று காலையில் நான் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது லண்டனில் உள்ள ஒரு முக்கியமான வானொலி அலைவரிசையான எல்.பி.சி எனும் அலைவரிசையின் காலை நிகழ்ச்சியை செவிமடுத்துக் கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சியை நான் விரும்பிக் கேட்பதுண்டு. காரணம் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் நிக் வெராரி என்பவர். இவர் கன்சர்வேடிவ் கட்சியின் பால் ஈர்ப்புக் கொண்டவர். ஆயினும் இவர் தனது நிகழ்வினை நடத்தும் நடுநிலைமையான பாங்கு எனை மிகவும் கவரும்.

    Nick-Ferrari-001இன்றைய நிகழ்வில் அவர் விமர்சித்தது இங்கிலாந்தின் வட பகுதியில் உள்ள “லங்காசையர்” எனும் நகரில் ஏற்பட்ட ஒரு சிறு சர்ச்சையே. அங்குள்ள இறந்தோரைத் தகனம் செய்யும் இடத்தில் 50 வருட காலமாக இருந்த கிறிஸ்தவ மதத்தின் இலச்சினையான சிலுவையை அந்நகரின் நகரசபை அகற்றியதால் ஏற்பட்ட சர்ச்சையே இதுவாகும். அதை அகற்ற அந்நகரசபையினர் கொடுத்த விளக்கம், பல்லின மக்கள் வாழும் நகரில் மற்றைய மதத்தினரும் இத்தகன மையத்தை உபயோகிப்பதால் இச்சிலுவை அவர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதாகும்.

    அதனால் கிறிஸ்தவ மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட அந்நகர மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்து அந்நகர சபைக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினருக்கும் முறையீடு செய்தார்கள். இங்கு மிகவும் விசித்திரமான விடயம் என்னவெனில் இச்சிலுவையைப் பற்றி மற்ற எந்த மதத்தினரும் எதுவிதமான முறையீடு செய்ததாகவோ அன்றி இது தமக்கு எதுவிதமான மனக்கிலேசத்தைக் கொடுத்ததாகவோ கூறவில்லை. இருப்பினும் சில முற்போக்குவாதிகள் என்று கூறிக் கொள்ளும் நகரசபை உறுப்பினர்கள் தாமாக எடுத்துக்கொண்ட ஒரு தேவையற்ற செயலெனவே கருதப்படுகிறது.

    இந்நிகழ்வில் நிக் வெராரி அவர்கள் இச்சிலுவை அங்கிருப்பதை ஆட்சேபிக்கும் மற்றைய மதத்தினர் எவராகிலும் தனது தொலைபேசி அழைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தமது ஆட்சேபனையைத் தெரிவிக்குமாறு கோரியும், அழைத்த மற்றைய மதத்தினர் அனைவரும் இது தமது பெயரால் நடத்தப்படும் ஒரு வீண் செயல் என்றே கருத்துத் தெரிவித்தனர்.

    காலம் காலமாய் கிறிஸ்தவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டிலே இறந்தோரைத் தகனம் செய்யும் இடத்தில் அவர்கள் பின்பற்றும் மதத்தின் அடையாளச் சின்னம் இருப்பதில் என்ன தவறு. அத்தகன மண்டபத்தில் வேற்று மதத்தினர் தமது உறவினரைத் தகனம் செய்கையில் இச்சிலுவை இருப்பதை விரும்பவில்லையானால் அதை அகற்றச் சித்தமாக இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    இதைத்தவிர ஜனநாயகமாக எப்படி நடக்க முடியும் ?

    இங்கிலாந்து நாடு கிறிஸ்தவ மதத்தினை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. இங்கு வாழும் ஏனைய மதத்தினர் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கு வந்து குடியேறியவர்களே! இங்கிலாந்தில் வேற்றுமதத்தினருக்குத் தரப்படும் சுதந்திரம், தனிமனித உரிமைகள் வேறு எந்த நாடுகளிலும் காணமுடியாத வகையில் விசாலமானது.

    இங்கு வாழும் இங்கிலாந்து மக்களின் புரிந்துணர்வு அளவிடமுடியாதது. இங்குக் குடியேறி இந்நாட்டைத் தமது நாடாக்கி வாழும் மற்றைய மதத்தினருக்கு அவர்களது மதங்களையும் கலாச்சாரத்தையும் பின்பற்றி வாழும் சகல உரிமைகளையும் வழங்கியதோடு, அத்தகைய வைபவங்களில் தாமும் பங்குபற்றி கௌரவிக்கும் மனப்பான்மையுடையவர்களே பெரும்பான்மையான இங்கிலாந்து மக்கள் என்பதை நான் எனது நாற்பது வருட அனுபவத்தில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    முற்போக்குச் சிந்தனை எனும் பெயரில் சிலரது நடவடிக்கைகள் சமயங்களில் மக்களிடையே நிலவும் நல்லெண்ண புரிந்துணர்வை எதிர்மறையாக மாற்றி விடக்கூடிய வல்லமை படைத்தது. மதம் எமக்கு நற்சிந்தனையையும், பண்புகளையும் அடுத்தவரைச் சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கும் காரணியாகவே அடிப்படையைக் கொண்டுள்ளது.

    அனைத்து மதங்களும் மக்களுக்கு நன்மையையும், அன்பையுமே போதிக்கின்றன. மதத்தினைக் கண்மூடித்தனமான வகையில் பின்பற்றுவோர் சிலரே அம்மதங்களுக்கிடையிலான பிரிவினைகளுக்குத் தூபமிடுகிறார்கள்.

    மதத்தினை பின்பற்றுவது தவறல்ல மதத்தின் மீது “மதம்” கொள்வதே தவறு.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    படங்கள் உதவி:
    http://www.lbc.co.uk/
    http://www.theguardian.com/media/2010/jun/18/arqiva-commercial-radio-award-winners
    http://www.telegraph.co.uk/news/religion/11902123/Crematorium-cross-removed-to-avoid-offending-non-religious-visitors.html

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • காத்திருக்கேன்

    -ஆர். எஸ். கலா

    கைபேசியைக் கையாளும் ஆண்மகனே…
    கொஞ்சம் காதல்மொழி பேசு கண்ணா!
    புது உறவாய் வரவுதந்த சின்னவனே
    மறுப்புமொழி போடலாமோ மன்னவனே?

    காதலின் நிறம் காட்டவந்தாய்
    இருண்ட இதயவாசல் திறந்து வைத்தாய்
    இறந்த காதலுக்கு உயிர்கொடுத்தாய்
    இதயம் இடம்மாற தடை போடுகிறாய்

    இமயம் போல் உனை நினைத்தேன்
    இமைபோல் காப்பாய் என்று மதித்தேன்
    உன்னால் உலகத்தை மறந்தேன்
    ஊட்டிக் குளிர்போல் உள்ளம்  மகிழ்ந்தேன்

    அன்பே நீ அருகில் இருந்தால்
    ஆவாரம் பூவாய் நான் மகிழ்வேன்
    சிட்டாய்ச் சிறகு விரிப்பேன்
    வட்டமிட்டு நான் பறப்பேன்

    ஆனால் இன்று…
    சோகத்தில் ஆழ்ந்துவிட்டேன்
    இந்துக்கோயில் எல்லாம் வரம் கேட்டேன்
    வங்கக்கடல் போல் கண்ணீர் அள்ளுகின்றேன்
    இறுதியில் இறப்புக்கும் நாள் குறித்துவிட்டேன்!

     

    Share
  • இதய வானின் உதய நிலவே …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    இதய வானின் உதய நிலவே …

    கவிஞர் விந்தனின் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் வேதா, 1950ல் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்திற்காக ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் இணைந்து பாடிடும் இப்பாடல் அமைதியாக ஆனந்தமாகக் கேட்கப்பட வேண்டிய ஜீவராகம்!

    மனதில் தோன்றியதெல்லாம் பாடலில் சொல்லப்பட்ட விஷயங்களாய் ஆரம்போல் கோர்த்துநிற்கும் அழகிய பாடல்!

                         itayavanil uthaya nilavae4     itayavanil uthaya nilavae2     itayavanil uthaya nilavae3

    காட்சியமைப்பில் இயல்பாய் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் தாரகையாய் வைஜயந்தி மாலா எழிலான முகத்தில் ஏக்கங்களைக் காட்டும் தலைவியாக ஒருகரையில் தவிக்க, தலைவன் மறுகரையில் தலைவியின் வினாக்களுக்கு விடை தருகின்றான்.

    கண்டும் காணாதேங்கும் கண்கள் காதல் கண்களோ? காதல் கண்களோ? என்கிற இடம் அருமை!

    பறந்துவந்த உன்னைத் தழுவ
    பாழும் சிறகு இல்லையே பாழும் சிறகு இல்லையே
    என்கிற பரிதவிப்பைப் படம்பிடிக்கும் வரிகள்…

    தக்கதோர் இசையில் மனதை வருடும் பாடலிது. மறக்காமல் கேட்பது சுகம்தரும்! பார்த்திபன் கனவிற்காக…

    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?
    ஒளியிலாத உலகம் போல
    உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே

    கண்கள் செய்த பாவம் உன்னை
    கண்டும் காணாதேங்குதே கண்டும் காணாதேங்குதே
    பாய்விரித்துக் கப்பல் செல்ல
    பாவி நெஞ்சம் துடிக்குதே பாவி நெஞ்சம் துடிக்குதே
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?

    இருளகற்றும் ஒளியென்றென்னை
    எண்ணும் நீ யாரோ எண்ணும் நீ யாரோ ?
    கண்டும் காணாதேங்கும் கண்கள்
    காதல் கண்களோ காதல் கண்களோ ?
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறேன் நான் எங்கே போகிறேன் ?

    ஆசை நெஞ்சின் நேசக் கரங்கள்
    அணைக்க உன்னை நீளுதே அணைக்க உன்னை நீளுதே
    பறந்து வந்து உன்னைத் தழுவ
    பறந்து வந்து உன்னைத் தழுவ
    பாழும் சிறகு இல்லையே பாழும் சிறகு இல்லையே
    இதய வானின் உதய நிலவே
    எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?

    பாடல்: இதய வானின்
    திரைப்படம்: பார்த்திபன் கனவு (1950)
    இயற்றியவர்: விந்தன்
    இசை: வேதா
    பாடியவர்: பி.சுசீலா, ஏ.எம். ராஜா
    காணொளி: https://youtu.be/OxB4mWC3vQo

    https://youtu.be/OxB4mWC3vQo

    Share
  • உழைப்பே உயர்ந்தது!

    -ஆர். எஸ். கலா

    ஏழை என்பதைக் கைவிடு
    ஏழ்மையைக் குறித்து
    அடிமையாவதைத் தவிர்த்திடு
    உழைப்புக்குத்  தகுந்த ஊதியம்
    கொடுப்போருக்குக் கைநாட்டு வைத்திடு

    உறவானாலும் உரிய சம்பளம் பெற்றிடு
    அன்றாடம் வாழ்கையிலே விஷநாகம்
    வந்து முட்டும் தட்டிவிடு
    உன்னைக் கொத்தாமல் தவிர்த்துவிடு

    அதிகாரத்தோரணையில்
    பேசுவதை மறந்துவிடு
    அன்றாட வாழ்வை
    அன்பாகக் கழித்துவிடு

    உள்ளம் குமுறவைக்கும்
    கள்ளச் செயல்களை விட்டுவிடு
    உயர்தர மனிதனாக
    வரம் பெற்றுவிடு

    பரிதாப நிலைகண்டு பதறிவிடு
    பாராமுகமாக இருப்போரை விரட்டிவிடு
    அச்சு வெல்லமானாலும்
    நஞ்சு உண்டு என்று கற்றுவிடு
    அஞ்சா நெஞ்சம் கொண்டவன் என்று
    பெயர் பெற்றுவிடு

    உழைக்கும் கரங்கள் வல்லமை பெற்றவை
    நீயும் உன் கரங்களால் உழைத்துவிடு
    உப்புநீர்க் கண் சிந்துவதை நிறுத்திவிடு
    உப்புநீர் உடலில் சுரக்கும்வரை
    உழைத்துவிடு

    மண்ணுலகில் சிறக்க…பறக்க…இனிக்க
    இன்ப வாழ்வோடு நடைபோடு!

     

     

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 16

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    வாழ்க்கையின் இனிமை இளமைக்காலக் காதலால் மேலும் இனிக்கும்! இயல்பாகக் காதலுணர்வை வெளிப்படுத்தி, தம் இணையுடன் இசைந்து வாழ்வதைப் பற்றித் திருவள்ளுவரைப் போல் எவருமே கூறியதில்லை! புலவர்கள் அனைவரும் காதலின் உயர்வை மிகவும் அழகாகப் பாடியுள்ளனர்!

    ”காதல் போயின் காதல் போயின்
    சாதல்!சாதல்!சாதல்!”

    என்று மகாகவி பாரதியாரும்,

    ”காதல் அடைதல் உயிரியற்கை – அது
    கட்டில் அகப்படும் தன்மை யதோ?”

    என்று பாவேந்தரும் பாடியுள்ளனர்! இந்தக் காதல்தான் உண்மையான இன்பத்தைத் தருகிறது என்று திருவள்ளுவரே கூறுகின்றார்!

    கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
    ஒண்டொடி கண்ணே யுள!(1101)

    என்ற திருக்குறள், ” ஐந்து புலன்களின் வழியே பெறத்தக்க இன்பங்கள் அனைத்தையும் தன் இல்லக்கிழத்தியிடம் மட்டிலுமே உள்ளது!” என்று கணவன் பாராட்டிக் கூறுவதைத் திருவள்ளுவர் கூறுகிறார்! இவ்வாறு கூறியமையால் பிற பெண்டிரிடத்து இவ்வளவு சிறந்த இன்பத்தைப் பெற இயலாது என்பதை வள்ளுவர் மிகவும் நுட்பமாக உணர்த்துகிறார்! இதனால், கணவனும் மனைவியும் இணைந்து பெறும் இல்லற இன்பமே உண்மையான தகுதி வாய்ந்த இன்பம் என்பது புலனாகின்றது!

    முறையாகப் பெறத்தக்க காமவின்பம், பேதைமை மற்றும் புல்லறிவால் முறையை மீறி உருவாதலும் உண்டு. இந்தக் காமம் தம் மனைவியிடத்தும், விலைமகளிரிடத்தும், மாற்றான் மனையாளிடத்தும் முறைமை கருதாமல் பரவும் தன்மை உடையது! அதனாலேயே திருவள்ளுவர், பெண்வழிச் சேறல் , வரைவில் மகளிர், பிறனில் விழையாமை என்ற மூன்று அதிகாரங்களில் இந்த முறையற்ற காமத்தைக் கண்டிக்கிறார்! தன் மனையாளிடம் உருவாகும் முறையற்ற காமம் , தன்னால் அடக்கப்பெறும் தன்மை உடைய மனைவியிடம், தானடங்கி அவள் ஆசைக்கேற்ப நடந்து கொள்ளும் அடிமைத் தனத்தைக் கணவனிடம் சேர்க்கும்! உடலாசையின் தீய விளைவாகப் பிறன் மனையாளிடத்தும், விலை மகளிரிடத்தும் சென்று சேரும் இழிதகைமை ஒருவனிடம் உண்டாக்கும். காமத்தால் தூண்டப் பெற்ற ஒருவன் பிறன் மனையாளிடம் இச்சை கொள்வதை நாலடியார் பெரிதும் கண்டிக்கிறது!

    ”அச்சம் பெரிதால் அதற்கின்பஞ் சிற்றளவால்
    நிச்சம் நினையுங்கால் கோக்கொலையாம் – நிச்சலும்
    கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
    நம்பற்க நாணுடையார்!”

    ”புக்க விடத்தச்சம் போதரும்போ தச்சம்
    துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
    எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
    உட்கான் பிறனில் புகல் ”

    ஆகியவை நாலடியார் பாடல்கள்! அவ்வாறே பெண் ஒருத்தியும் காமவேட்கை மீதூரத் தவறு செய்ததைப் பட்டினத்தாரும் பாடியிருக்கிறார்!

    ”கைப்பிடி நாயகன் தூங்கையி லேஅவன் கையைஎடுத்து
    அப்புரந் தன்னில் அசையாமல் முன்வைத்து அயல்வளவில்
    ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்து உறங்குவளை
    எப்படி நான்நம்பு வேன்இறை வாகச்சி ஏகம்பனே!”

    இது பட்டினத்தார் பாடல்! தன்னிடம் அதிகாரபலம் இருப்பதால் இழிந்த காமம் உடையவனாய் இந்திரன் அகலிகையிடம் நடந்து கொண்ட செயலைத் திரு வள்ளுவரே ,

    ”ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி!”(25)

    என்று பாடுகிறார்! அதே இந்திரன் அமிசமாய்ப் பிறந்த வாலியும் சுக்ரீவன் மனைவியை நயந்தான் என்கிறது வான்மீகம்! வரபலமும் உடலாற்றலும் பெற்ற இராவணன், வேதவதியையும் அவள் மறுபிறப்பாகிய சீதையையும் விரும்பினான்! அந்த இழிவான காமம் பேரரசனாகிய அவனை இராமன் அம்புகளுக்கு இரையாக்கியது! இதையும் திருவள்ளுவர்,

    ”தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று!”(274)

    என்கிறார் இவற்றையெல்லாம் பார்க்கும்போது அறத்துப்பாலின் அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை , கூடாவொழுக்கம் ஆகியவற்றின் வழியே தகாத காமத்தை விளக்கியவர், மீண்டும் பிறனில் விழையாமை என்ற அதிகாரத்தை எழுதியது, இத்தகைய இழிந்த காமம் இல்லறத்தானுடன் துறவறத்தானையும் பற்றி வீழ்த்தும் தன்மையது என்பதை விளக்குகின்றது! பொருட்பாலில் பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர் ஆகியவை இடம்பெற்றது, ஆட்சி, அதிகாரம், செல்வம் இவற்றைப் பெற்றவரையும் முறையற்ற காமம், பற்றிப் பிணித்துக் கீழே வீழ்த்தும் என்பதைக் குறிக்கிறது!

    நமக்கு இன்றும் வியப்பைத்தரும் செய்தி என்னவென்றால் தனிமனிதனின் பிறன்மனை நாடும் தீய காமம், ஒரு சமுதாயத் தீமையாக எப்போது மாறியது? கள் , சூது, விலைமகளிர் ஆகிய பொதுத் தீமைகள் வேறு; பிறனில் விழைதல் என்ற தனிமனிதத்தீமை வேறு! இதனைப் பொதுத்தீமையாக எண்ணி ஓர் அதிகாரம் படைத்ததன் நுட்பம் எனக்குப் புரியவில்லை! கள்ளை யாவரும் உண்பர்; சூதினை எல்லாரும் விரும்புவர்; ஆனால் எல்லாரும் பிறன்மனை நாடுவோரா? அனைவரும் பிறன்மனை நாடுவோரே என்ற எண்ணமே, கள்ளுண்ணாமை, சூதாடாமை, ஆகியவற்றுடன் பிறனில் விழையாமையையும் சேர்த்து எண்ண வைத்தது; இந்த நிலை ஏனென்று எனக்குப் புரியவில்லை! தனி மனிதனின் தீமை பொதுத்தீமையாக மாறியது எப்போது? யாரேனும் விளக்குவார்களா?

    காமம் பொதுவாகப் பற்பல தீமைகளைச் செய்து விடும்! அது மனிதனின் மனத்தைக் கெடுக்கும்; பழி பாவச்செயல்களைக் கூசாமல் செய்ய வைக்கும்! முறையற்ற காமம், கொலையையும் செய்யத் தூண்டும்! அது உடல்நலத்தினைக் கெடுத்துப் பெரிய நோய்களை உருவாக்கிவிடும்! இதனை இக்காலத்தார் ஆராய்ந்து ”எய்ட்ஸ்” என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு பற்பல நாட்டு மக்கள் பலியாகின்றனர் என்று கண்டறிந்து இதனை எதிர்த்துப் போராடித் தடுப்பதற்கு சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்கின்றனர்!

    இங்கு நாம் இப்போது பார்க்கப் போகும் திருக்குறளின் புதிய பொருள், நம்மை வியப்புக்கு உள்ளாக்குகின்றது! எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் முயற்சிகளுள் முதன்மையானது இந்தியக் கலாச்சாரமாகிய ”ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன்!” என்ற கற்புநிலையை மனித குலம் மேற்கொள்ள வேண்டும், என்பதாகும்! இதனை அன்றே திருவள்ளுவர் கூறியுள்ளார் என்பது வியந்து மகிழ்தற்கு உரியதாகும்! அவர், ”எளிய இல்லற வாழ்க்கையின் இன்பங்களை முறையாகத் துய்க்கின்ற ஒருவன், கடினமான துறவு நெறியை நாடிப் போய் என்ன நலத்தைப் பெறப்போகிறான்? ” என்ற பொருளில் ஒரு குறட்பா எழுதியுள்ளார் ! மிகவும் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், இதே குறட்பா, உயிர்க்கொல்லி நோய் பற்றிய விழிப்புணர்வையும் அளிக்கின்றது என்பதுதான்! இனி, அந்தக் குறட்பாவைப் பார்ப்போம்.

    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப்பெறுவ தெவன்? (46)

    என்ற திருக்குறள் மேம்போக்காகத் துறவு நெறியைக் கடைப்பிடிப்பதன் கடினத்தை உணர்த்தினாலும், இல்லறநெறிக்குரிய இன்பத்தை இல்வாழ்வில் துய்க்காமல், வேறு தீய வழிகளில் முறையற்ற காமத்தை அனுபவிக்க விரும்புகிறவன் எதனைப் பெறுவான்? ”உயிர்க்கொல்லி நோயைத்தான் பெறுவான்!”
    என்கிறது அக்குறட்பா! இப்போது அக்குறட்பா அளிக்கும் புதிய பொருள் புலனாகின்றதல்லவா?

    Share
  • அவன்,அது,ஆத்மா (32)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 32

    கருவில் உருவானது

    அவனுக்கு அமைந்த நண்பர்களிடம் உள்ள திறமையைப் பார்த்து அவன் வியந்திருக்கிறான். அதுவும் கிராமத்தில் இருந்து கொண்டு, அந்தக் காலத்தில் இருக்கும் குறைந்த விஞ்ஞான வசதிகளை வைத்துக் கொண்டு அவனுக்கு நண்பர்கள் சிலர் தங்களது திறமையை எப்படி வளர்த்துக் கொண்டார்கள் என்று இன்றும் நண்பர்களுடனும், குடும்பத்தார்களுடனும் சொல்லிப் பெருமை கொள்வான். அப்படி அமைந்த நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ்.வி. என்ற எஸ்.வெங்கடராமன், சங்கர் என்ற ஆ.சங்கரநாராயணன். இவர்கள் இருவரையும் அவன் குறிப்பிடக் காரணம், அவர்களது திறமையை அவர்களது அருகில் இருந்தே கவனித்தவன் என்ற காரணத்தினால்தான்.

    எஸ்.வி. என்ற எஸ். வெங்கடராமன்

    “சீதாராமன் அப்பளம் டெப்போ” நிறுவனர் சீதாராமன் ஐயர், திருமதி. மீனாக்ஷி என்ற சம்பு மாமியின் மூத்த மகன் வெங்கடராமன். அவனும், நண்பர்களும் வெங்கடராமனை “எஸ்.வி.” என்றே அழைப்பார்கள். அவனைவிட “எஸ்.வி.” மூன்று வயது மூத்தவன். அவன் லக்ஷமீபதி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது எஸ்.வி.யும் அங்கு படித்துக் கொண்டிருந்தான். ஒரு வருடம் பள்ளி விழாவுக்கு எஸ்.வி. திருடன் வேடமும், ஆர்.எஸ். என்ற ரமணி பெண் வேடமும் ஏற்று ஒரு நாடகம் நடந்தது. அதற்கு வசனங்கள் சொல்லிக் கொடுத்து இயக்கியவர் “சீதாராமன் சார்”. அந்த நாடகத்தின் ஒத்திகையின் போது அவனும் அங்கிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். போலீஸ் காரர்களால் தேடப் பட்டுக் கொண்டிருக்கக் கூடிய திருடன் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியை சந்திக்கும் காட்சியை சீதாராமன் சார் விளக்கிக் கொண்டிருந்தார்.

    திருடன்: (தன் மனைவியைப் பார்த்து) ” …உஸ்ஸ்…சப்தம் போடாதே..கூச்சல் போட்டாயோ குத்திவிடுவேன் ” என்று சொல்ல அதற்கு மிகவும் பயந்த குரலில் அந்தத் திருடனின் மனைவி,” நாதா..பதட்டப் படாதீர்கள்…இந்தாருங்கள் இந்தப் பாயாசம் குடித்து ஆயாசம் தீருங்கள்” என்று சொல்லுவாள்.

    இந்தக் காட்சிக்கு எஸ்.வி.க்கு கருப்பு நிறத்தில் ஒட்டு தாடி வைத்து, அவனது கையில் ஒரு அட்டைக் கத்தியும் கொடுத்திருந்தார்கள். அந்தக் காட்சியில் மெதுவாகப் பூனையைப் போல தன்னுடைய கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து எஸ்.வி. பேசிய அந்த வசனமும், அதன் உச்சரிப்பும் இன்றும் அவனுக்குப் பசுமையாக இருக்கிறது. எஸ்.வி.க்கு இயற்கையாகவே விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறமை இருந்தது. அவன் நன்றாக விளையாடுவான், நீந்துவான், நகைச்சுவையாகப் பேசுவான், நன்றாகவே படிக்கவும் செய்வான். எஸ்.வி.யுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. அவன் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் P.U.C. படித்துக் கொண்டிருக்கும் பொழுது எஸ்.வி. மூன்றாம் ஆண்டு B.Sc. படித்துக் கொண்டிருந்தான். எஸ்.வி.க்கு பௌதிகத்தில் (Physics) மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே “எஸ்.வி.” தொலைகாட்சிப் பெட்டிக்கான உதிரி பாகங்களை வரவழைத்து, தானே ஒரு தொலைகாட்சிப் பெட்டியைத் தயாரித்து நண்பர்களுக்குக் காட்டினான். அப்பொழுது நம் நாட்டில் தொலைக்காட்சி வராத காலம். எஸ்.வி.யின் பெற்றோர்கள் இது போன்ற திறமைகளை நன்றாக ஊக்குவித்தனர். எஸ்.வி.யின் திறமையைப் பார்த்தது அவனுக்கும், நண்பர்களுக்கும் பெருமையாக இருக்கும்.

    எஸ்.வி.தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், எஸ்.வி.யின் நண்பர்கள் சங்கர், வெங்காச்சம் போன்றவர்களுக்கு B. A .R . C. (மும்பையில்) நிறுவனத்தில் இருந்து வேலைக்கு நேர்காணல் வந்ததில், சங்கர் மாத்திரம் தேர்வாகி விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்துவிட்டதாகவும், மற்றவர்களுக்கு அதில் வேலை கிடைக்கவில்லை என்றும் எஸ்.வி.யின் சகோதரன் குட்டிச் சங்கர் அவனிடம் சொன்னான். அந்த சமயத்தில் நண்பர்களுடன் ஆற்றங்கரைக்குக் குளிக்கச் செல்லும் பொழுது, கிராமத்துப் பெரியவர் ஒருவர் .” என்ன ரமணி ஒனக்கு வேலை கிடைக்கலியா” என்று ஏளனாமாகக் கேட்ட பொழுது,” ஒய்..நான் என்ன ஒங்க வீட்டுலையா சோறு தின்னறேன்..எங்கப்பாதானே சோறு போடறார்..ஒம்ம வேலையப் பாத்துட்டு பேசாமப் போங்கோ ” என்று எஸ்.வி. பளிச்செனச் சொன்னான். இப்படி வம்பு பேசும் ஆட்களுக்கு எஸ்.வி. உடனுக்குடன் “டோஸ்” விடுவதை அவனே பலமுறை பார்த்திருக்கிறான். அவனது திறமைக்கேற்ற வேலை B.S.N.L.ல் கிடைத்து பெங்களூருக்குச் சென்று விட்டான்.

    1987ம் வருடம் ஆதிவராகப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எஸ்.வி. கல்லிடைக்குறிச்சிக்கு வந்திருந்தான். அப்பொழுது கோவிலுக்காக சில மரங்களைக் கொண்டு வருவதற்காக மணிமுத்தாறு காட்டுப் பகுதிக்கு ஒரு ஜீப்பில் சிலர் கிளம்பினார்கள். எஸ்.வி., ” கண்ணா இவாளெல்லாம் போய் மரம் எடுத்துண்டு வரட்டும் நாம ரெண்டுபேரும் அந்தக் காட்ட ரசிக்கலாம்..நீயும் வா ” என்று அவனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது “அருவித் தண்ணீர் ஏன் இப்படி ஜில்லுனு இருக்கு தெரியுமா?” என்று கேட்டு ,”அத்தனை உயரத்தில் இருந்து விழும் பொழுது ஒரு நிலையில் அது “zero degree”க்குக் கீழே போய்விடும். அப்பொழுது தண்ணீர் ஜில்லுனு ஆகிவிடும்.” என்று ஒரு ஆசிரியரைப் போலச் சொல்லிக்கொடுத்தான். மேலும் “ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்..சர்வதேவ நமஸ்கார ஸ்ரீ கேசவம் ப்ரதிகச்சதி” என்ற சந்தியாவந்தனத்தின் மந்திரத்தைச் சொல்லி “கடல் நீர் ஆவியாகி, மழைமேகமாகி, மலைதனில் மழையைப் பொழிந்து இப்படி அருவியாக விழுந்து ஆறாக ஓடி மீண்டும் சமுத்திரத்தில் கலப்பதுபோல, யார் என்ன பெயரைச் சொல்லி அழைத்தாலும் எல்லாப் பெயரும் அந்த ஒருவனையே சேரும்” என்ற கருத்தையும் சொன்னான். “ஆழிமழைக் கண்ணா” என்ற பாசுரத்திலும் ஆண்டாள் இந்த தத்துவத்தைத் தொட்டுக் காட்டுகிறாள் என்று ஆன்மிகமும், இலக்கியமுமாக அவனோடு எஸ்.வி. அந்த மணிமுத்தாறு மலையில் வைத்துப் பேசினான்.

    நீண்ட இடைவெளிக்குப் பின் எஸ்.வி. கல்லிடைக்குறிச்சிக்கு ஒரு விடுமுறை நாளில் வந்திருந்தான். அன்று ஊரில் கோலாட்டப் பல்லக்கு உற்சவம் நடத்தது. எஸ்.வி. அந்த ஊர்வலத்துடன் எல்லாத் தெருவுக்கும் கூடவே வந்தான். தெருவில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை எல்லோரிடமும் தானே சென்று பேசிக் கொண்டிருந்தான். மறுநாள் மதியம் அவனும், எஸ்.வியும் குட்டிச்சங்கரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “கண்ணா…நீ எழுதின “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுப்பை சங்கர் தந்தான். படிச்சேன். நீ ரொம்ப நன்னா எழுதிருக்காய்..அதுவும் எல்லாக் கதையையும் நம்ம கிட்டேந்தே எடுத்து எழுதி இருக்கிறது எனக்குப் பிடிச்சிருந்தது …ஒன்னோடு கவிதைகளும் படிச்சிருக்கேன்..நீ ஒரு “கிரியேட்டிவ் ஆள்டா”..என்று அவன் தோள்களை தழுவிக் கொண்டு பாராட்டினான் எஸ்.வி. அந்த வார இறுதியில் எஸ்.வி. பெங்களூருக்குச் சென்று விட்டான். அதுதான் அவன், “எஸ்.வி.” யைக் கடேசியாகப் பார்த்தது.

    ஒருவாரம் சென்ற பிறகு ஒருநாள் இரவு பத்து மணிக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு,” கண்ணா …நீ சங்கருக்கு வாங்கிகொடுத்திருந்த சுவாமி பரமார்தானந்தாவின் “சந்தியாவந்தனம்” விளக்க உரையைக் கேட்டேன். பிரமாதம். “சந்தியாவந்தனம் செய்யும் பொழுது தண்ணீர் இல்லாத பாலைவனத்தில் இருந்தோம் என்றால் கூட, அங்கிருக்கும் மணலையே கையில் எடுத்து அர்க்கியமாகக் கொடுக்கலாம்” என்று அவர் சொன்னதைப் போலவே என்னுடைய அப்பாவும் சொல்லியிருக்கிறார்”, எனக்கு அந்த உரையின் “ஒரு செட்” உடனே வாங்கி அனுப்பிவை. உன்னுடைய சிறுகதைகளைப் பற்றி என் கொழந்தைகளுக்குச் சொன்னேன். அவர்கள் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். நீ பெங்களூருக்கு என்னுடைய வீட்டுக்கு அவசியம் வா என்று “எஸ்.வி.” பேசினான். எஸ்.வி.யின் ரசனை அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எஸ்.வி. அழைத்தது போலவே அவன் அடுத்த மாதம் பெங்களூருக்குச் சென்றான். ஆனால் எஸ்.வி.யைத்தான் பார்க்கமுடியவில்லை. தனது நாற்பத்தொன்பதாவது வயதில் திடீரென வந்த இதயவலியால் இறந்து போய்விட்டான்.

    எஸ்.வி. இறந்து இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும், ஒரு நாள் மதியம் அவனுக்கு நண்பனும், எஸ்.வி. யின் தம்பியுமான மூர்த்தி அவனைத் தொடர்புகொண்டு,” கண்ணா நீ..இப்ப ஆபீசில்தானே இருக்காய்” என்று கேட்டான். “ஆமாம்” என்று பதில் சொன்னான். ” ரமணியோடு ரெண்டாவது பொண்ணு “வசந்தா” வந்திருக்கா..ஒன்னப் பாக்கணும்னு ஆசைபடறா..கூட்டிண்டு வரேன்” என்றான். சரியாக இரண்டு மணிக்கு அவன் வேலை செய்கிற “காட்பரீஸ்” அலுவலகத்திற்கு மூர்த்தியும், எஸ்.வி.யின் இளைய மகள் வசந்தாவும் வந்தார்கள். அவனும் மூர்த்தியும் பேசிக் கொண்டிருந்தார்கள். எஸ்.வி.யின் பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்னம்மா சொக்கியமா இருக்கயா” என்ற அவனது கேள்விக்கு அந்தப் பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன ஒண்ணுமே பேச மாட்டேங்கரையே” என்றான் அவன்.

    “ஒங்களப் பத்தியும், ஒங்களோடு கதைகள், கவிதைகளைப் பத்தியும் எங்கா அப்பா எங்களோட ரொம்ப நேரம் பேசிண்டிருந்தார்..சில கதைகளப் படித்தும் காட்டினார்…ஒங்களோட எழுத்து எங்களுக்கு பிடித்திருந்தது. அப்பா உங்களப் பத்திச் சொன்னதுலேந்து உங்களப் பாக்கணும் போல இருந்தது. அதுதான் ஒங்களப் பாக்கணும்னு சித்தப்பாட்டச் சொன்னேன். …இப்ப பாத்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று அவனுக்கு நண்பன் எஸ்.வி. என்கிற ரமணியின் பெண் வசந்தா சொன்னது அவன் காதுகளில் “எஸ்.வி.”யின் குரலாகவே ஒலித்தது.

    நண்பன் எஸ்.வி.க்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் மீனாக்ஷி என்ற அகிலா. இரண்டாவது மகள் வசந்தா. இரண்டு பேருமே அப்பாவின் பெயர் போற்றும் புத்திசாலிக் குழந்தைகளாக அமெரிக்காவிலும், ஜெர்மனியிலுமாக வாழ்கிறார்கள். எஸ்.வி. இன்றும் அவர்களை வாழ்த்திக் கொண்டே இருக்கிறான்.

    01.10.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    படம்  உதவி  குட்டி சங்கர்

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 18

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நமது பூமி

     

    நமது பூமி
    ____________________________

    “பலவீனம், கவலை ஆகியவற்றின் மெய்ப்பாடை விட்டுவிட்டு நமது கிழக்காசியர் வற்புறுத்துவதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.”
    “எனது அன்புக்குரிய நாடு பாடுவது மகிழ்ச்சிக்காக இல்லாது, மக்களிடையே பயக் கொந்தளிப்பை உண்டாக்க என்னும் போது நான் வேதனைப் படுகிறேன்.”
    கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)
    ____________________________

    புவியே உனை நாடினேன்
    ____________________________

    ஒருநாள் தெளிவான இரவின்
    அமைதியில்
    உனைக் காண வெளியில் வந்தேன்,
    என் ஆத்மாவின் கதவையும்
    ஜன்னலையும் திறந்து,
    இதயத்தில்
    இச்சையும் மோகமும் மிகுந்து !
    விண்ணை நோக்கி
    புன்னகை புரியும்
    விண்மீன்களைப் பார்த்த
    வண்ணம் நீ
    இருந்தாய் ! என்
    கால்கட்டுச் சங்கிலியை
    கழற்றி எறிந்தேன் !
    ____________________________

    என் ஆத்மா குடியிருக்கும் இடம்
    உன் சூழ்வெளி ! அதன்
    காரணம் நான் அறிந்தேன் !
    என் ஆத்மாவின் ஆசைகள்
    ஒன்றி யுள்ளன
    உன் ஆசைகளில் !
    என் ஆத்மாவின் அமைதி
    ஓய்வெடுக்கும்
    உன் அமைதியில் !
    விண்மீன்கள்
    உன் உடலில் தெளித்திடும்
    பொன் தூசிகளில்
    புதைந்திருக்கும் ஆத்மாவின்
    பூரிப்பு !
    ____________________________

    ஒருநாள் இரவு வானம்
    சாம்பல் நிறத்தில்
    இருந்த போது
    களைத்துப் போனது
    என் ஆத்மா !
    கவலை யுற்றது
    என் ஆத்மா !
    உன்னை நாடி வந்தேன்
    வெளியில் !
    பூத வடிவில் தோற்றினாய்
    நீயே !
    புயல்களை ஆயுதமாய்ப்
    போர்த்திக் கொண்டி ருந்தாய் !
    கடந்த காலத்தோடு
    நிகழ் காலம்
    சண்டை இட்டது !
    பழையவை இடத்தைப்
    புதியவை
    பற்றிக் கொண்டது !
    பலவீனரைத் துரத்திக் கொண்டு
    வாழ்ந்து வந்தார்
    வலுத்தவர் !
    ____________________________

    Share