கவிஞர் காவிரிமைந்தன்.

இதய வானின் உதய நிலவே …

கவிஞர் விந்தனின் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் வேதா, 1950ல் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்திற்காக ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் இணைந்து பாடிடும் இப்பாடல் அமைதியாக ஆனந்தமாகக் கேட்கப்பட வேண்டிய ஜீவராகம்!

மனதில் தோன்றியதெல்லாம் பாடலில் சொல்லப்பட்ட விஷயங்களாய் ஆரம்போல் கோர்த்துநிற்கும் அழகிய பாடல்!

                     itayavanil uthaya nilavae4     itayavanil uthaya nilavae2     itayavanil uthaya nilavae3

காட்சியமைப்பில் இயல்பாய் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் தாரகையாய் வைஜயந்தி மாலா எழிலான முகத்தில் ஏக்கங்களைக் காட்டும் தலைவியாக ஒருகரையில் தவிக்க, தலைவன் மறுகரையில் தலைவியின் வினாக்களுக்கு விடை தருகின்றான்.

கண்டும் காணாதேங்கும் கண்கள் காதல் கண்களோ? காதல் கண்களோ? என்கிற இடம் அருமை!

பறந்துவந்த உன்னைத் தழுவ
பாழும் சிறகு இல்லையே பாழும் சிறகு இல்லையே
என்கிற பரிதவிப்பைப் படம்பிடிக்கும் வரிகள்…

தக்கதோர் இசையில் மனதை வருடும் பாடலிது. மறக்காமல் கேட்பது சுகம்தரும்! பார்த்திபன் கனவிற்காக…

இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?
ஒளியிலாத உலகம் போல
உள்ளம் இருளுதே என் உள்ளம் இருளுதே

கண்கள் செய்த பாவம் உன்னை
கண்டும் காணாதேங்குதே கண்டும் காணாதேங்குதே
பாய்விரித்துக் கப்பல் செல்ல
பாவி நெஞ்சம் துடிக்குதே பாவி நெஞ்சம் துடிக்குதே
இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?

இருளகற்றும் ஒளியென்றென்னை
எண்ணும் நீ யாரோ எண்ணும் நீ யாரோ ?
கண்டும் காணாதேங்கும் கண்கள்
காதல் கண்களோ காதல் கண்களோ ?
இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறேன் நான் எங்கே போகிறேன் ?

ஆசை நெஞ்சின் நேசக் கரங்கள்
அணைக்க உன்னை நீளுதே அணைக்க உன்னை நீளுதே
பறந்து வந்து உன்னைத் தழுவ
பறந்து வந்து உன்னைத் தழுவ
பாழும் சிறகு இல்லையே பாழும் சிறகு இல்லையே
இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய் நீ எங்கே போகிறாய்?

பாடல்: இதய வானின்
திரைப்படம்: பார்த்திபன் கனவு (1950)
இயற்றியவர்: விந்தன்
இசை: வேதா
பாடியவர்: பி.சுசீலா, ஏ.எம். ராஜா
காணொளி: https://youtu.be/OxB4mWC3vQo

https://youtu.be/OxB4mWC3vQo

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இதய வானின் உதய நிலவே …

  1. உண்மையாகவே காதலர் உள்ளத்தவிப்பை அழகுற விளக்கும் மிக இனிய பாடல். பாடல் வரிகளின் நயத்தை வியப்பதா அல்லது வைஜயந்திமாலா -ஜெமினி கணேசன் நடிப்பைச் சொல்வதா அல்லது இசையைக் குறிப்பிடுவதா எனக் குழம்புவோம். திரு கல்கி அவர்கள் எழுதிய ஒரு அருமையான புதினத்தை, அதைத் திரும்பத் திரும்பப் படித்து ரசித்த என் போன்றவர்களைக் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் அழகிய பாடல். இதனைப் பற்றி எழுதிய தங்களுக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *