பல்லவன் பல்லவி பாடட்டுமே …
— கவிஞர் காவிரிமைந்தன்.
கலங்கரை விளக்கம் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இசைஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தமுதல் திரைப்படம் இது! கருப்பு வெள்ளைத் திரைப்படம் எனிலும் அனைத்துப் பாடல்களும் அற்புத ராகமாய் அமைந்தன.இறையருள் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பில், எம்.ஜி.ஆர். – சரோஜா தேவிநடிப்பில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் பாடல்கள்.
டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பல்வேறு பாடல்களில் இப்பாடல் தனித்துவம் பெற்றது என்று டி.எம்.எஸ்.அவர்களின் பரம ரசிகர் திரு. துளசி (சென்னை) என்னிடம் குறிப்பிட்டார். என்ன தனித்துவம் என்றபோது ஒரே பாடலில் ஏற்றஇறக்கங்கள் இத்தனை அதிகமாய் அமைந்தது குறிப்பாக ஒரு சில பாடல்களில் மட்டும்தான். அன்பே வா திரைப்படத்தில்.அன்பே வா திரைப்படத்தில் ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா’, கலங்கரை விளக்கம்திரைப்படத்தில் ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே என்று பட்டியலிட்டுக் காட்டினர். அதன்பின் இப்பாடலைக்கேட்டுப்பார்க்கும்போது அவர் சொன்ன உண்மை தெரிந்தது.
எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த ஒரு பாடலில் மட்டும் எத்தனை முக பாவங்கள் நடனம் எனப் பரிணமிக்கிறார் பாருங்கள்.அவரும் நாடகத் துறையில் இருந்து வந்தே திரை உலகில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் என்பதை இப்பாடல் காட்சிநினைவூட்டுகிறது. கவிஞர் வாலி அவர்களின் நாடகப் பின்புலமும் திரைக்கதைக்கேற்ப இப்பாடல்களுக்கு வடிவம்கொடுத்திட ஏதுவாக அமைய மெல்லிசை மன்னர் தனது ராஜ பாட்டையில் வெற்றி பவனியை மீண்டும் தொடங்கியதிரைப்படம் என்பதற்கு எல்லாப் பாடல்களும் சாட்சி சொல்லின!
பல்லவன் பல்லவி பாடட்டுமே
ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…
ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஓ …
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே …
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே …
பல்லவன் பல்லவி பாடட்டுமே… ஏ…
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாளப் பேதங்கள் ஆடலில் விளங்க
ஹோ… ஹோ…ஹோ… ஹோய்…
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாள பேதங்கள் ஆடலில் விளங்க
ராஜ சபையினில் மன்னவர் மயங்க
ராஜ சபையினில் மன்னவர் மயங்க
தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
தத்தோம் தரிகிட தகதிமி தரிகிட தா …
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…
ஓ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஓ …
மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
அன்னம் என்பதை நடையினில் காட்ட
மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
அன்னம் என்பதை நடையினில் காட்ட
காதல் வீணையைக் கண்களில் மீட்ட
காதல் வீணையைக் கண்களில் மீட்ட
காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே
ஹோய் ஆரிரோ …ஹுஹு …ஆரிரோ ஹுஹு…
ஆரிரோ ஓ….
ஆரிரோ ஹுஹு… ஆரிரோ ஹுஹு…
ஆரிரோ ஓ….
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
காணொளி: https://www.youtube.com/watch?v=gFmetxJOhR4
https://www.youtube.com/watch?v=gFmetxJOhR4