Year: 2016

  • தன்வந்திரி பீடத்தில் லட்ச ஜப நவக்கிரஹ நட்சத்திர சாந்தி பரிஹார தசாபுத்தி ஹோமத்துடன் காலச்சக்கர பூஜை

    தன்வந்திரி பீடத்தில் 04.11.2016 அன்று மண் வளம், மழை வளம், மக்கள் நலம் வேண்டி லட்ச ஜப நவக்கிரஹ நட்சத்திர சாந்தி பரிஹார தசாபுத்தி ஹோமத்துடன் காலச்சக்கர பூஜை நடைபெற உள்ளது

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 04/11/2016 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் கோபூஜை, யாகசாலை பூஜையுடன் 15க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு நவக்கிரஹங்களில் உள்ள ஒவ்வொரு கிரஹங்களுக்கும் 10,000 ஜபம் வீதம், 9 தசாபுத்திகளுக்கு 10,000 ஜபம் வீதமும் “ஒரு லட்ச நவக்கிரஹ மூல மந்திர ஜபம் செய்து 10,000 ஆவர்த்திகள்” என்ற முறையில் மாபெரும் லட்ச ஜப நவக்கிரஹ நட்சத்திர சாந்தி பரிஹார தசாபுத்தி ஹோமம் நடைபெற உள்ளது.

    இந்த யாகத்தின் பலன்.

    மண் வளம், மழை வளம், மக்கள் நலம் வேண்டி நடைபெறுகிற இந்த, ஹோமத்தில் பங்கேற்கும் பக்தர்கள் நவக்கிரஹக தோஷங்கள் நீங்கி வாழ்வில் எதிர்வரும் தொல்லைகள் நீங்கி நன்மை பெறலாம். திருமணத்தடை விலகவும், சர்ப்ப தோஷம், நாக தோஷம், அகலவும், பித்ருக்களை திருப்திப் படுத்தவும், பஞ்ச பட்சி தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறவும், நிலம், வீடு, மனை, பாக்கியம் பெறவும், தொழில் தடை நீங்கி மேன்மைபெறவும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மழை பெய்து விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சி பெறவும், ஆலயங்கள் அபிவிருத்தி பெறவும், ஆலயங்களில் நடைபெறும் திருப்பணிகள் விரைவாக செய்து முடிக்கவும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த யாகம் நடைபெறுகிறது. யாகத்தின் நிறைவாக காலச் சக்கரமாக பீடத்தில் அமைந்துள்ள, நவக்கிரஹ, ராசி, நட்சத்திர விருட்சங்களுக்கு விருட்ச பூஜை நடைபெற உள்ளது.

    ஜெனனி ஜென்ம சௌக்கியானாம்
    வர்த்தினி குல சம்பதாம்
    பதவி பூர்வ புண்ணியானாம்
    லிக்கியதே ஜென்ம பத்திரிகா..

    என்பதற்கு இணங்க நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரணம் நவகிரஹங்கள் தான் என்பது நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள். என்பது உண்மை.

    இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள். இவர்கள் நம் வாழ்க்கையில் புகுந்து விளையாடுவதால் தான் நாம் பரிகாரம் செய்கிறோம். அதனால் நவகிரஹங்களை வணங்கி பூஜிக்க வேண்டும் என்பது ஜோதிடர்களின் வார்த்தையாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம், காயத்ரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு உண்டு.

    உதாரணமாக மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு சொல்வது. அது ஓம் ஸ்ரீம் ரீம் என்று வரும். வேத மந்திரம் என்பது ஒலி அலைகளால் நன்மை பெறுவது.

    காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை எடுத்துச் சொல்வது.

    பிரார்த்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல்களில் பலிதம் ஏற்பட சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார இறைவனை பிரார்த்திப்பதாகும்.

    நம் இந்து சாஸ்திரப்படி , இறைவனுக்கு எதையேனும் நாம் அளிக்க விரும்பினால், அதை அக்னி மூலம் தான் அளிக்க முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் மிக சிரத்தையுடன் நாம் மேற்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம். நம் வேதங்களில் அக்னிபகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அளிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.

    அக்னிக்கு அளிக்கப்படும் பொருட்கள் பஸ்பம் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம். அது உரிய முறையில் காலத்தே நம்மை வந்து பிரதி பலன்களை அளிக்கும். நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம் என்பதால், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் இதுவரை ஆயிரக்கணக்கான ஹோமங்களை உலக நலன் கருதி செய்து வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இந்த யாகத்தில், அந்தந்த கிரஹத்துகுரிய தானியங்கள், சமித்துக்கள், பழங்கள், புஷ்பங்கள், பட்சணங்கள், நிவேதனங்கள் கொண்டும் தேன், நெய், விஷேச மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 75

    வதை அருங்காட்சியகம், ப்ராக், செக்

    முனைவர்.சுபாஷிணி

    உலகமெங்கும் ஒரு அரசின் கருத்துக்கு எதிர் கருத்து ஒன்று எழும்போது, மாற்றுக் கருத்துகளை உரக்கப் பேசுவோர் ஏதாவது ஒரு வகையில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது என்பது காலம் காலமாக நடந்திருக்கின்றது. உலகெங்கிலும் இவ்வகை நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இத்தகைய வதைகள் எவ்வாறு நிகழ்த்தப்பட்டன? அவற்றை நிகழ்த்துவதற்கு உபயோகித்த வதைக்கும் கருவிகள் என்பன பற்றிய செய்திகளை ஆசிய நாடுகளில் பொதுவாகக் காணமுடிவதில்லை, தாய்லாந்து போன்ற ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர.

    ஆனால் ஐரோப்பாவில் வதை முகாம்கள் பற்றியும், வதை செய்யும்போது பயன்படுத்திய கருவிகள், வதை செய்யப்பட்ட முறைகள் பற்றிய ஆவணங்கள் என்பன சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தனது தேசத்திலேயே தங்கள் மூதாதையர் நிகழ்த்திய கொடுமைகளை இன்று மனம் திறந்து பேசும் சிந்தனைப்போக்கு ஐரோப்பாவில் விரிவாக வந்துவிட்டமைக்கு இது ஒரு சான்று என்றே நினைக்கின்றேன். ஆசிய நாடுகளிலோ, தாமும் தம் மூதாதையரும் என்றுமே நன்மைகளை மட்டுமே செய்தவர்கள் என்றும், குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற சிந்தனையும், பொதுவாகவே எண்ண ஓட்டத்தில் நிறைந்திருக்கும் தன்மையைப் பார்க்கின்றோம். ஆக, தங்கள் மூதாதையர்களின் நிறைகளை மட்டுமே பேசத்துணியும் வரலாற்று ஆர்வலர்களாகவே ஆசிய நாடுகளின் மக்கள் சிந்தனைப்போக்கு இருக்கின்றது என்றே நினைக்கத்தோன்றுகிறது..

    ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளின் சுவடுகளாவன பல்வேறு வகையில் ஆவணப்படுத்தப்படுதல் என்பது நடந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் எதிரிகள், விஞ்ஞானிகள், மாற்றுச் சிந்தனையும் மாற்றுக் கருத்துகளையும் பிரச்சாரம் செய்பவர்கள், தெய்வீக சக்தியைக் கொண்டுள்ளதாகச் சொல்லிக் கொள்பவர்கள் போன்றோர் அரச சக்திகளாலும் அரசு ஆதரவு பெற்றோராலும் கண்டுபிடிக்கப்பட்டு “சமுதாயச் சீரழிவைத்தடுத்தல்” என்று முத்திரைக்குத்தப்பட்டு அத்தகையோர் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் நடந்திருக்கின்றன என்பதை இவ்வகை அருங்காட்சியகங்களில் நாம் காண்கின்ற ஆவணங்களின் வழி அறிய முடிகின்றது.

    நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், பெல்ஜியம் நாட்டின் ப்ரூகஸ், ஜெர்மனியின் ரூடர்ஷைம் அம் ரைன், ரோத்தன்பர்க், இத்தாலியின் சான் கிமிக்னானோ போன்றவை அவ்வகையில் பிரசித்தி பெற்றவை. அந்த வரிசையில் இடம்பெறும் ஒன்றுதான் செக் நாட்டின் தலைநகரான ப்ராகில் இருக்கின்ற வதை அருங்காட்சியகம்.

    ப்ராக் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதி கட்டிடத்தின் வரிசையான கடைகளுக்கு இடையே இந்த வதை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. வதைப்பது என்றாலே அச்சமூட்டும் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வுதானே. ஆக முகப்பிலும் வரவேற்பு பகுதியிலும் நம்மை வரவேற்பனவாக வதை செய்யப் பயன்படுத்தும் சில கருவிகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

    as4

    வதைக்கருவிகள் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என மாறுபாட்டுடன் பயன்படுத்தினாலும் ஒட்டு மொத்தத்தில் ஒரு மனிதரைக் கொல்வதற்கு முன்னர் அவர் எவ்வளவு வதைகளை அனுபவிக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுமை செய்து கொல்வது என்பது வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒவ்வொரு வகை வதைக்கும் என பிரத்தியேகக் கருவிகளைத் தயாரித்து வதை செய்து கொலைகளை நிகழ்த்தியிருக்கின்றனர் என்பதையும் குறிப்புகளின் வழி அறியமுடிகின்றது.

    உதாரணமாக மரத்தை வெட்ட தச்சர்கள் பயன்படுத்தும் ரம்பம் போன்ற ஒரு கருவியைக் கொண்டு மனிதனின் உடலை இரு வேறு பகுதிகளாக வெட்டுவதோ அல்லது சிறிது சிறிதாக மனிதரின் உடலின் பாகங்களை வெட்டி வதைத்துக் கொல்வது என்பது வழக்கில் இருந்திருக்கின்றது.

    as3

    இரும்பு ஆணிகள் பொருத்திய நாற்காலி என்பது ஒரு வகை வதைக்கருவிதான். ஒரு ஆணி நம் உடலில் பட்டாலே எத்தகைய உடல் வேதனை ஏற்படும் என்பதை நாம் அறிவோம். ஆனால் முழுவதும் ஆணிகள் பொருத்தப்பட்ட ஒரு நாற்காலியில் தண்டனைப்பெறுபவரை உட்கார வைத்து கயிற்றினால் கட்டி சிறிது சிறிதாக இறுக்கி வதைத்துக் கொல்வது என்பதை பண்டைய ஐரோப்பாவில் நிகழ்த்தியிருக்கின்றனர். இப்படி வதைக்கும் போது இந்தத் தண்டனை மணிக்கணக்கில் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுமாம். உடலில் இரத்தம் வெளியேறி மனிதர்கள் இறந்து போவது ஒருவகை என்றால் ஒரு சிலரை அச்சமூட்டும் வகையில் மட்டுமே இந்த இரும்பு ஆணி நாற்காலியை பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் அறிய முடிகின்றது.

    as1

    இப்படி ஒவ்வொரு கருவிக்கும் அதனை எவ்வாறு பயன்படுத்தினார்கள். எப்படி தண்டனை கொடுத்தார்கள் என்பதை அறியும் போது மனம் அச்சத்தால் உறைந்து போவதை தடுக்க முடிவதில்லை. ஒரு மனிதர் தன் சக மனிதரை எவ்வாறு வதைக்க மனம் வருகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.

    பொதுவாகத் தண்டனை வழங்குவது என்பது ஒருபுறமிருக்க, போர்க்காலங்களில் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்படுவோர் எதிரி நாட்டு படையினரால் வதைக்கப்படுவது என்பது எல்லா நாடுகளின் வரலாற்றிலும் காணக்கூடிய ஒன்றே. கற்காலத்தில் மட்டும்தான் இந்த நிலை என்பதல்ல. இன்றும் கூட இந்த நிலை தொடர்கின்றது.

    as

    ப்ராக்கில் உள்ள இந்த வதை அருங்காட்சியகம் தொடங்குவது கீழ்த் தளத்தில். பாதையைக் குறுகலாக அமைத்து ஆங்காங்கே சில மாதிரி வடிவங்களைச் செய்து வைத்திருக்கின்றார்கள். வதை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் காட்சிக்கு இருப்பதோடு அவற்றிற்கான விளக்கங்களும் செக், டோய்ச், ஆங்கிலம், பிரென்சு ஆகிய நான்கு மொழிகளில் வழங்கப்பட்டுள்ளன. ப்ராக் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகம் சென்று நேரில் பார்த்து பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். அருங்காட்சியகத்தின் முகவரி :
    Křižovnické nám. 1, 111 00 Praha 1-Staré Město, Czech Republic

    as5
    சரி, அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்தைப் பற்றிய தகவல்களைத் தருகின்றேன். தொடர்ந்து வாருங்கள்!

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 50

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் தோப்புக்காரணமும்

    education-1

    மூளையின் வலது பகுதியும்  இடது பகுதியும் ஒருங்கிணைந்து செயல்படுவது  உடலுக்கும் மூளைக்கும் இன்றியமையாதது என்பது வல்லுநர்கள் கருத்து. இந்த இடது பகுதி உடலின் வலது பக்கத்து உறுப்புகளையும் வலது பகுதி உடலின் இடது பக்கத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்துவதாகவும் ஒருங்கிணைப்பதாகவும் கருதப்படுகிறது. ஆகவே உடற்பயிற்சியின் போது வலது மற்றும் இடது உடல்பாகங்களை அசைக்கும்பொழுதும் அவைகளை வலுப்படுத்தும் பொழுதும் மூளையின் இரு பகுதிகளும் வலுப்பெறுவதாகவும் மற்றும் ஒருங்கிணைத்து செயல்படுவதாகவும் மருத்துவக் கருத்து நிலவுகின்றது. இது பள்ளிகளில் உடற்பயிற்சிக்கும் மூளையின் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்புகளை அறிவதற்கும் மேன்மைப்படுத்துவதற்கும் தேவையானதாக அறியப்பட்டுள்ளது.

    ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தவழும் பருவம் முக்கிய காரணமாக கருதப்படுவதும் இதனால் தான். குழந்தை தவழும் பொழுது அந்தக் குழந்தையின் உடலின் வலப்பக்க அசைவுகள் மூளையின் இடப்பக்கத்தை வலுப்படுத்துவதாகவும் இடப்பக்க அசைவுகள் வலப்பக்கத்து மூளையை வலுப்படுத்துவதாகவும் அமைவது மட்டுமின்றி இவைகளின் தொடர் அசைவு இரண்டு பக்கத்து மூளைசி செயல்களை ஒருங்கிணைத்து சிறப்படையச் செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    சிறிய வயதில் இந்தவளர்ச்சிக்குப் பாதகம் ஏற்படுமென்றால் அந்தக் குழந்தைகளின் ஒருங்கிணைந்த மூளைவளர்ச்சிக்கு சில உணர்வுப்பூர்வமான தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆகவே, வளர்பிராயத்தில் குழந்தைகள் எந்த அளவுக்கு தவழ முடியுமோ அந்த அளவுக்கு அது நன்மை புரிவதாக சொல்லப்படுகின்றது. அது மட்டுமல்ல, நாம் வளர்ந்த பின்பும், வயதின் பரிமாணங்கள் எப்படி இருந்தாலும் தவழுதல் நமது மூளையின் வலிமைக்கு உகந்ததாக மட்டுமின்றி, அல்சமீர் (Alzhmier Disease )மற்றும் பார்க்கின்சன் (Parkinson disease ) ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பதாகக் கருத்து நிலவுகின்றது.

    அமெரிக்காவில் மூளையின் செயல்பாட்டை மேன்மைப் படுத்துவதற்காக நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில்  மிக வியக்கத்தக்க விளைவுகள் கண்டறியப்பட்டன. இந்த ஆராய்ச்சியின் படி “Super Brain  Yoga ” என்று சொல்லப்படும் ஒரு உடற்பயிற்சி மூளையின் வலிமையை 30 விழுக்காடு மேன்மைப் படுத்துவதாக அறியப்பட்டது

    ஆராய்ச்சிகளின்படி இந்தப் பயிற்சியை சுமார் 10 மணித்துளிகள் செய்தபின் அந்த நபருடைய மூளையின் செயல்பாடுகளை MRI மூலமாக கணித்ததில் அவர்கள் மூளை சாதாரணமாக செயல்படுவதைவிட 30 விழுக்காடுகள் சிறப்பாகச் செயல்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் பயிற்சியை பல பள்ளிகளிலும் தனிப்பட்ட பயிற்சி நிலையங்களிலும் துவங்கப்பட்டு மருத்துவர்களால் இதற்கான பரிந்துரையும் அளிக்கப்பட்டது. இதைப்பற்றிய தகவல்களை நாம் ஊடகங்களின்  மூலமாக விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்

    இதில் வியப்பென்னவென்றால் இந்தப் பயிற்சி பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் “தோப்புக்கரணம்” என்ற பெயரில் செய்யப்பட்டுவந்தது. முன்காலத்தில் பள்ளிகளிலே ஆசிரியர்கள் தவறு செய்கின்ற மாணவர்களுக்குத் தண்டனையாகவும் மற்றும் திருக்கோவில்களில் அதை ஒரு வழக்கமாகவும் செய்து கொண்டிருந்ததுதான்! ஆனால், தற்போதைய சூழ்நிலையில் நமது பள்ளிகளில் அதைச் செயல்படுத்துவது தடை செய்யப்பட்ட ஒன்று.

    இந்தத் தோப்புக்கரணம் செய்வதன் மூலம் மூளையின் செயல்பாட்டின் வேகமும் கூர்மையும் அதிகரிப்பது மட்டுமின்றி , கற்றலில் உள்ள கவனச்சிதைவு, குறைபட்ட சிந்திக்கும் திறன், மறதி போன்ற பலவற்றை சரி செய்ய முடியும் என்று தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்ல, மூளை நரம்பியல் வல்லுநர்கள் சில சாதாரண மூளை பாதிப்புகளால் அவதிப்படுவோருக்கும் இது சிறிதளவு வளர்ச்சிக்கு உதவுவதாகவும் கருதுகின்றனர்.

    மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பதிலும் ADHD போன்ற சில கற்றல் சார்ந்த குறைகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் இது உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது. இது சிறு வயதில் மட்டும் செய்யவேண்டிய ஒரு பயிற்சியல்ல , இதை எந்த வயதிலும் செய்யலாம் என்றும் அதற்கான பலன்கள் கிடைப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

    செய்துபார்க்கலாமே ?

    தொடரும் ..

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (28)

    நிர்மலா ராகவன்

    பிறரைச் சமாளிப்பது

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-1-1

    `என்கீழ் வேலை செய்பவருக்கு அசாத்தியக் கோபம் வருகிறது. கோபம் வந்தால், நாற்காலியைத் தூக்கி எதிரிலிருப்பவர்மேல் எறிகிறார். எதுவும் தன் தவறு என்று ஒத்துக்கொள்ளாது, பிறர்மீது பழி போட்டுவிடுகிறார். அவரைக் கண்டாலே எல்லாரும் ஒதுங்கிப் போகிறார்கள்,’ என்று பலவாறாக அரற்றிய மிஸ் லீ ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வகிப்பவள். அறுபது வயதுக்கு மேல் இருக்கும்.

    `நான் எத்தனையோ புத்தி சொல்லிப் பார்த்துவிட்டேன். நீங்கள் பேசிப் பாருங்களேன். உங்கள் மொழியைப் பேசுவதால் நீங்கள் சொல்வதைக் கேட்பார்!’ என்றாள்.
    உடனே அவர் அழைக்கப்பட்டார்.

    `உன் விரல்களைப் பிடித்துப் பார்த்து, REFLEXOLOGY வழி உனக்கு என்ன கோளாறு என்று கண்டுபிடித்துவிடுவார்,’ என்று என்னை மணிமாறனுக்கு அறிமுகப்படுத்தினார் மிஸ் லீ.

    அவரது விரல்கள் ஓயாத தலைவலி, காது வலி, வயிற்றுக்கோளாறு என்று பல உபாதைகளைத் தெரிவித்தன.

    “என் மனைவி எல்லாவற்றிலும் தேங்காய்ப்பால் சேர்த்துச் சமைக்கிறாள்,” என்று மனைவிமேல் பழி சுமத்தி, தப்பித்துக்கொள்ளப் பார்த்தார் அந்த கேமரன் மலைவாசி.

    கோலாலம்பூரிலிருந்து சுமார் மூன்று மணிநேரப் பயணித்தால் கேமரன் மலையை அடையலாம். நூற்று நாற்பது ஆண்டுகளுக்குமுன் CAMERON என்பவர் கண்டுபிடித்து, ஆங்கிலேயர்களின் கோடை வாசஸ்தலமாக இருந்தது. இப்போது, ஒரு மணி நேரம், வளைவுகள் கொண்ட பாதையில் கார்களும் லாரிகளும் போனவண்ணமிருக்கும்.

    இம்மலைத்தலம் கடல் மட்டத்திற்குமேல் 1,500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. தேயிலைத் தோட்டம் பிரசித்தமானது. காய்கறிகள், மலர்கள் (முக்கியமாக, ரோஜா, சாமந்தி) மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் அங்கிருந்து சிங்கப்பூர், தாய்வான், ஹாங்காங் மற்றும் மலேசியா முழுவதிற்கும் அனுப்பப்படுகின்றன.

    பெங்களூரில் வயதானவர்கள் சாயங்கால வேளைகளில் உலவப் போகும்போது, காதில் பஞ்சை வைத்துக்கொண்டு, கழுத்தைச் சுற்றி கம்பளித்துணி போர்த்திக் கொண்டிருப்பார்கள். அப்போதுதான் குளிர் தாக்காதாம். கடும்குளிரில் அலைவதால், கேமரன் மலையில் பலருக்கும் காது வலி. (இந்த எளிமையான பஞ்சு வைத்தியத்தைச் சொல்லிக் கொடுத்தேன்).

    வயிற்றில் எரிச்சல் என்று இதயப் பரிசோதனைக்குப் போனதாகத் தெரிவித்தார் மணிமாறன். `வேளாவேளைக்குச் சாப்பிட மறந்துவிடுகிறது,’ என்றார், சற்று வெட்கத்துடன். `அடிக்கடி கோபம் வருகிறது,’ என்றும் ஒத்துக்கொண்டார்.
    “எதற்கு கோபப்படுவீர்கள்?”
    “வேறு ஒரு இடத்திலும் நான் வேலை பார்க்கிறேன். அங்கு நானும் என் கீழிருக்கும் பத்தொன்பது பேரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைப்போம். ஆனால் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்து, எங்களைப்பற்றிப் பிறரிடம் அவதூறாகப் பேசுவாள் சீனச்சி. அதனால் அடுத்த முறை ஏனோதானோ என்று வேலை செய்வார்கள் அவர்கள்,” என்று சொல்லும்போதே அவர் முகத்தில் ஆத்திரம்.
    “வயதானவளா?”
    ஆமென்றதும், “கிழவி மூளைகெட்டு என்னவோ பேசுதுன்னு விடுங்க,” என்று நான் சொன்னதும் சிரித்தார்.

    நாம் எல்லாரையும் எப்போதும் சந்தோஷப்படுத்த முடியாது. இது புரியாது, பிறர் நம்மை என்ன சொல்லிவிடுவார்களோ என்று பயந்து, பயந்து நம் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் யோசித்துச் செய்தால், நம் நிம்மதிதான் கெடும். நாம் தெரிந்தே பிறருக்குக் கெடுதல் செய்யாதவரை எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

    “அவளுக்கு நீங்கள் செய்வதுபோல் கடுமையான வேலைகளைச் செய்ய முடியாது. வயிற்றெரிச்சலுடன் ஏதோ பேசுகிறாள் என்று உங்கள் ஆட்களிடம் சொல்லிச் சமாதானப்படுத்துங்கள்! தான்தான் மேலதிகாரி என்ற அதிகாரத்தைக் காட்டிக்கொள்ள காரணமில்லாமல் குறை கண்டுபிடிப்பார்கள் சில பேர்!”

    பிறர்மீது நாம் கோபம் கொண்டால், அவர்களுக்கு அதனால் பாதிப்பு எதுவும் கிடையாது. நம் உடல்நிலைதான் கெடும். ரத்த அழுத்தம், மைக்ரெய்ன் தலைவலி, கால்வலி என்று திண்டாட நேரிடும்.

    சிறிது நேரம் பேசியவுடன், “நீங்க ரொம்ப குண்டு. பத்து கிலோ குறைக்கலாம்,” என்றேன் உரிமையுடன்.

    “மனைவி எல்லாத்திலேயும் தேங்காய்ப்பால் போடறாங்க. சாப்பாடு நல்லா இருக்கேன்னு திரும்பத் திரும்பப் போட்டுக்கிட்டு சாப்பிடறேன்,” என்றார்.

    அவர் மனைவி சமையலில் கெட்டிக்காரி. அதுவே தொழிலும்கூட.

    “தேங்காய்ப்பால்,” என்று மீண்டும் ஆரம்பித்தவரிடம், “ஒங்க மனைவிகிட்டேயும் ஒரு வார்த்தை சொல்றேன்,” என, தன் மனைவியையும், இரு குழந்தைகளையும் அழைத்து வந்தார். வீடு அருகில்தான் இருந்தது.

    “எல்லாரும் குண்டு!” என்றேன், என்னையுமறியாமல். அவர்கள் கோபிக்கவில்லை. பத்து வயதான மகனும், சற்றே பெரியவளான மகளும் மட்டும் நெளிந்தார்கள்.

    “என்னைப் பத்து கிலோ குறைக்கலாம்னு சொன்னாங்க!” என்று மணிமாறன் தன் மனைவியிடம் பெருமையாகத் தெரிவிக்க, “நான் எவ்வளவு குறைக்கணும், ஆன்ட்டி?” என்று ஆவலுடன் கேட்டாள் சுபலட்சுமி.
    அவளை நிற்கச் சொல்லி, மேலும் கீழுமாகப் பார்த்தேன். “பதினைந்து!” என்று நிர்தாட்சணியமாகக் கூறிவிட்டு, “ஒரு மாசம் சமையலில் தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டாம். குடிநீரில் ஒரு பிடி சீரகம் போட்டுக் கொதிக்க விட்டு, அதையே குடித்துவந்தால் கொழுப்பு குறையும்.

    “கேமரன் மலையில் காய்கறிகளுக்குப் பஞ்சமில்லைதான் அதற்காக, நிறைய சாப்பாடு போட்டால்தான் குழந்தைகளின்மீது நமக்கு அளவுகடந்த அன்பு என்றில்லை,” என்று கண்டித்தேன்.

    “CHIA SEEDS என்று கடுகு போலிருக்கும் விதைகளில் கால் தேக்கரண்டியை முதல் நாளே ஒரு கோப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் குடியுங்கள். நான் அப்படித்தான் ஊளைச்சதையைக் குறைத்தேன் ,” என்று அடுக்கினேன்.

    இந்த விதைகளில் இரண்டு மேசைக்கரண்டி அளவு நீரில் ஊறவைத்துப் பருகி, போருக்குப் போவார்களாம் பண்டைக்கால மெக்சிகோ வீரர்கள். இதில் புரோதம் முதலான பலவித சத்துக்களும் அடங்கியிருப்பதால், பசி எடுக்காது. களைப்பும் இருக்காது. (`மத்தியானம் தூங்கக்கூட முடியவில்லை!’ என்று ஒரு தூக்கப்பிரியை என்னிடம் புலம்பினார்!).

    “என்னங்க! என்னமோ சொல்றாங்களே, அதை இன்னிக்கே வாங்கிட்டு வாங்க,” என்று கணவனைக் கெஞ்சினாள் மனைவி.

    சிறிது நேரத்துக்குள் ஒரு பாக்கெட் சியா விதைகளுடன் வந்தார் மனிதர்.

    உடல் பருமனாகவோ, நிமிர்ந்து நடப்பதைப்பற்றி நாம் அலட்சியமாகவோ இருந்தால், கூன் விழும். என்னதான் தற்காப்பு கலைகளும் நாட்டியமும் பயின்றாலும், குனிந்து நிமிருவது, வளைவது எல்லாம் கடினம்தானே?

    கடும் உழைப்பாளியும், தன்கீழ் வேலை பார்ப்பவர்களிடம் அன்பும் அக்கறையும் கொண்டவளுமான மிஸ்.லீ தன் தலையில் ஒரு தடிமனான புத்தகத்தை வைத்து நடந்து காட்டினாள். அவர்களால் முடியவில்லை. பக்கவாட்டில் ஆடியது உடல்.

    கண்டிப்பாகப் பேசியதற்கு ஈடு செய்வதுபோல், “நான் அடுத்த முறை வரும்போது, அழகா இளைச்சிருக்கணும்,” என்றேன். ஆனால் குரலில் என்னவோ விளையாட்டுத்தனமான மிரட்டல்.

    “இவங்க தினமும் தேங்காய்ப்பால்..,” என்று ஆரம்பித்தவரிடம் கண்ணைக்காட்டித் தடுத்துவிட்டு, “எந்தக் குடும்பத்திலே புருஷன் மனைவிக்குள்ளே சண்டை இல்லே? ஒங்க சண்டையை வீட்டிலே வெச்சுக்குங்க,” என்றேன்.

    குழந்தைகள் சிரித்தார்கள்.

    Share
  • ஆறுபடை வீடு (1)

    க.பாலசுப்பிரமணியன்

     

    திருவாவினன்குடி (பழனி)

    palani_temple1

    மூத்தோரை வலம்வந்து மூத்தவனும் பழம்பெறவே

    முடிவுக்குத்  தலைவணங்காது  முடிதுறந்த முருகா !

    மூதாட்டி அவ்வையவள் முன்வந்து அழைத்திடவே

    முத்தமிழில் மனம்குளிர்ந்து முக்கனியாய் நிற்பவனே !

     

    அலங்காரம் அணிதுறந்து ஆண்டியாய் நின்றாலும்

    அளவில்லாக கருணைகொண்டு அகிலமெல்லாம் ஆள்பவனே!

    அசைவின்றி நெஞ்சங்கள் பசையாக உனைப்பிடிக்க

    இசைவாக இதயத்தில் குடியேறும் குமரா!

     

    போகங்கள் துறந்த மெய்ஞ்ஞானத் திருவுருவே !

    போகர்தம் கைவண்ண நவபாஷாணக் கருவே !

    பொல்லாத துன்பங்கள் பொடியாக்கும் புனிதா !

    புலனெல்லாம் அரசாளும் பழனிமலைத் தலைவா !

     

    பாலோடு தேன்கலந்து பழச்சாறும் பால்சோறும்

    பசியாறத் தந்தாலும் படியேறி வந்தோரின்

    கசிகின்ற கண்ணீரில் பசியாறி நிற்பவனே

    இசையாலே உனையழைக்க இதயப்பசி தீர்ப்பவனே!!

     

    மலமான எண்ணங்கள் மிதமாக இருந்தாலும்

    வலமாக உனைச்சுற்றி இதமாக அழைத்தாலே

    நலமாக நான்வாழப் பலமாக நீயிருந்து

    குலம்காக்கும் குமரா! குன்றுவாழ் கோவே!

     

    விழிதிறந்து உனைக்காண ஊழ்வினையும் ஓடிடுமே

    பழிபாவம் நீங்கிடுமே பழனியப்பா என்றழைத்தால்

    எழிலான உன்னுருவம் இதயத்தில் குடியிருக்க

    அழியாத புகழ்தந்து ஆட்கொள்வாய் ஆறுமுகனே !

     

     

     

     

    Share
  • ஒளியே வழிகாட்டிடு

    விப்ரநாராயணன்

     

    அகவிருள் விலக்கவே ஆண்டவன் வருவான்

    இகவிருள் விலக்கவே ஆசான் வருவான் இச்

    சகவிருள் விலக்கவே ஆதவன் வருவான்  இச்

    சகத்தினை  நெறிப்படுத்தவே  தீபாவளி வருவாள்

     

    அசுரனை அழித்தான் பீமனும் அன்று நம்

    அசுரத்தனத்தை அழிக்கவே தீபாவளித் திருநாள்

    அச்சத்தை நீக்கவே இத்திருநாள்  நம்மனதின்

    எச்சத்தை கொளுத்தவே தீபாவளித் திருநாள்

     

    மத்தாப்பைக் கொளுத்துவோம் இத்திருநாளில் நம்

    புத்தியையும் தீட்டுவோம் இத்திருநாளில்  நாட்டில்

    எத்திசையிலும் ஒளிவீசும் தீபாவளித் திருநாள்

    சத்தியத்தைக் காக்கவந்த சமத்துவத் திருநாள்

     

    ஆண்டவனின் விருப்பமே இத்தீபாவளித் திருநாள்

    மாண்டவன் விருப்பத்தால் மலர்ந்த திருநா ள் ஊழல்

    தாண்டவத்தை கொளுத்தவந்த அற்புதத் திருநாள்

    தீண்டாமை  நீங்கவே வந்த தீபவொளித் திருநாள்

     

    கூட்டம் கூட்டமாய் கடைக்குச் செல்வர்

    கூட்டத்தில் காணாமல் போகவும் செய்வர்

    பட்டுத்துணியும்  பலவகை இனிப்பும் வாங்குவர்

    கட்டுக் கட்டாய் பட்டாசும் ஆனந்தமாய்  வாங்குவர்

     

    புத்தாடை அணிந்து மத்தாப்பு கொளுத்தி

    தாத்தா பாட்டியுடன் மாமா மாமியுடன்

    சித்தி சித்தப்பா அப்பா அம்மாவுடனும்

    சுத்தி சுத்தி வந்து கொண்டாடும் திருநாள்

     

    ஆனந்தமாய் இருக்கவே வந்த  ஒளித்திருநாள்

    ஆனந்தத்தின் பொருளை உணர்த்தவந்த திருநாள்

    ஆனந்த வாழ்வை நிலைக்கச் செய்யும் திருநாள்

    ஆனந்தமே நோக்கமென்று உணர்த்த வந்த திருநாள்

     

    ஒளியின் வருகை  இருளகல நாம் அறிவோம்

    ஒளிதான் வாழ்வின் விளக்கமெனவும் அறிவோம்

    ஒளிவுமறைவின்றி வாழ்தலே ஒளியின் வருகை

    ஒளியே தீபவொளியே  அழைத்துச்செல் உலகை

    Share
  • குறளின் கதிர்களாய்…(143)

    செண்பக ஜெகதீசன்

    அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை. (திருக்குறள் -1027:குடிசெயல்வகை) 

    புதுக் கவிதையில்…

    களத்தில்
    கடமைக்காகப் போரிடுவோரைவிட,
    வெற்றிக்காகப் போரிடும்
    வல்லவனுக்கே
    வந்துசேரும் பொறுப்பு! 

    குடும்பத்தில்,
    அதன் உயர்வுக்குச் செயலாற்றும்
    நல்லவரை
    நாடிவரும் பொறுப்பு! 

    குறும்பாவில்…

    வெற்றிபெறப் போரிடும் வல்லவரையும்,
    குடும்ப மேன்மைக்குப் பாடுபடும் நல்லவரையும்
    தேடிவரும் பொறுப்பு!
     

    மரபுக் கவிதையில்…

    வீரர் பலரும் போரிடினும்
         -வெற்றியை ஈட்டும் வீரனையே
    சேரும் உரிய பொறுப்பதுவும்
         -சேர்ந்து கிட்டும் புகழதுவும்,
    பாரில் குடும்ப உறவினிலே
         -பணிகள் செய்தால் மேன்மைக்கே,
    சேரும் அவனைப் பொறுப்புக்கள்
         -சேர்ந்தே வந்திடும் நற்பெயரே! 

    லிமரைக்கூ…

    வீரர்பலர் போரிடக் காணலாம் போரில்,
    வெற்றியீடும் வல்லவனுக்கே கிடைக்கும் பொறுப்பு,
    குடும்பமேன்மை தருபவனை நாடுமது நேரில்!       
     

    கிராமிய பாணியில்…

    சண்ட சண்ட பெருஞ்சண்ட
    பலரும் போராடும் பெருஞ்சண்ட,
    அதுல
    சேராது சேராது பெரும்பொறுப்பு
    எல்லாருக்கும் சேராது பெரும்பொறுப்பு,
    செயிக்கவைக்கும் வீரனுக்குத்தான்
    சேரும்நல்ல பெரும்பொறுப்பு! 

    அதுபோல
    குடும்பத்திலயும் கதயிதுதான்,
    எல்லாருக்கும் வராது பெரும்பொறுப்பு
    குடும்ப மேன்ம கொண்டுவரப்
    பாடுபடும் நல்லவனத்தான்
    தேடிவரும் பெரும்பொறுப்பு! 

    அதால,
    நல்லதுசெய் நல்லதுசெய்
    குடும்பத்துக்கு நல்லதுசெய்!

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 226

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – அழற்படு காதை

    கலப்பை துலாம் தால் யாழ்
    கையில் ஏந்தியவன்;
    விளைபொருட்கள் அதிகம் விளையச் செய்து
    விருந்தினர்களை இனிதாக உபசரித்து
    மலைபடு பொருட்கள், கடல்படு பொருட்கள்
    இவற்றைக் கொண்டு வந்து
    வேண்டுவோர்க்கு விலைக்கு அளித்து,
    உழவுத்தொழில் செய்து                                silambu
    நெல் முதலியன விளைவித்து
    உலக மக்களுக்கு உதவும்
    சிறந்த வாழ்க்கை நெறியை உடையவன்.

    ஒளிபொருந்திய தலையில்
    இளம்பிறை அணிந்த கடவுளின் மேனியைப் போல
    ஒளிவீசும் ஒப்பற்ற அழகோடு விளங்கும்
    வணிக பூதங்களுக்குத் தலைமை வாய்க்கும்
    வணிக பூதக் கடவுளும்…

    வேளாண் பூதம்

    கருவிளைப்பூவைப் போன்றவன்;
    பொன் வெள்ளி அணிகலன்கள் பூண்டவன்;
    தெளிந்த கருப்பு நிற உடையை அணிந்தவன்;
    வைரம் பாய்ந்த அகில், சந்தனம்
    இவற்றைக் கலந்து அரைத்த
    சாந்து பூசிய மார்பினன்;
    உயர்ந்த கிளை, கொடி மற்றும்
    நீரில் நிலத்தில் பூத்த பூக்கள் கொண்டு தொடுத்த
    பூமாலையை அணிந்தவன்;
    கைத்திறமை வாய்ந்த கலைஞன் செய்த
    அழகிய வேலைப்பாடமைந்த கலப்பையைக்
    கையில் ஏந்தியவன்;
    கழுவியெடுத்த நீல மணி போன்ற
    மேனியை உடையவன்;
    வெற்றி சார்ந்த வேளாண் கருவிகள் ஏந்தியவன்;
    களத்தின் சிறப்புப் பாடுவோர் பாடும்
    துறைகளில் பயிற்சி உடையவன்;
    அரவம் மிக்க மதுரை நகரில் இருந்து
    வேளாண் மக்கள் இடுகின்ற
    பலிப்பொருட்களைப் பெறுகின்ற
    வேளாண் பூதங்களுக்குத் தலைமையான
    வேளாண் கடவுளும்…

    ***

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 84-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கண்ணைக்கவரும் அணில்களைத் தன் காமிராவில் அள்ளிவந்திருக்கும் திரு. ரகுநாத் திருமலைசாமியும், அவரின் புகைப்படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்வுசெய்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனும் நம் நன்றிக்கு உரியவர்கள்.

    squirrels

    பாலூட்டி இனத்தைச் சேர்ந்த அணில்கள், தம் உணவை முன்பற்களால் கொறித்துண்ணும் அழகே அலாதியானது. அவற்றின் முதுகிலுள்ள மூன்று கோடுகள் இயற்கை தந்ததோ அல்லது இறைவன் தந்ததோ நாமறியோம். ஆயினும் அவை அணில்களுக்கு அளவற்ற அழகைத் தருகின்றன என்பதை நாமறிவோம்!

    சற்றே பயந்த சுபாவம் கொண்ட அணில்கள், ஆளரவமற்ற இடங்களில் ஆனந்தமாய் விளையாடும். அணிலின் இப்பண்பினை ’அணிலாடுமுன்றிலார்’ என்ற சங்கப்புலவர் குறுந்தொகைப்பாடலொன்றில் (குறுந்: 41) பதிவுசெய்திருக்கின்றார்.

    இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம்!

    *****

    விலங்குகளின் தாய்மையில்கூட வியத்தகு தூய்மையிருக்க, மானுடத் தாய்மையோ வேதனைதரும் வகையில் கலப்படமாகி வருவதைக் கழிவிரக்கத்தோடு தன் கவிதையில் குறிப்பிடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அண்ணல் ராமன் அன்றளித்த
    அழகுக் கோடுகள் பார்த்தவற்றை
    எண்ணிப் பார்க்கும் தாயணிலின்
    ஏற்ற மிகுந்த தாய்மையின்முன்,
    கண்ணே யில்லா காமத்தாலே
    கள்ளத் தனமாய் பெற்றபிள்ளையைக்
    கண்ணிய மின்றி கைவிடும்தாய்
    காட்டும் தாய்மை தலைகுனிவே…!
     

    *** 

    பெண் அணில்குஞ்சை நஞ்சென எண்ணி அதன் தந்தை அகன்றுவிட, அன்னை அணிலோ அதனைப் பொன்குஞ்சாய் எண்ணி மாதர்குல மாணிக்கங்களின் மகத்துவம் சொல்வதைக் கவினுறப் படைத்துள்ளார் திரு. சி. ஜெயபாரதன். 

    தவத்திருச் செல்வமே, உனக்குன்
    தாய் தரும் முத்தமிது !
    சேய் நீ, பெண் சிசு!
    ஆண் வாரிசை எதிர்பார்த்த
    அப்பனுக்கு நஞ்சு!
    அன்னைக்குப் பொன் குஞ்சு!
    சித்தம் குளிர்ந்ததடி
    தாய் எனக்கு.
    பித்தம் பிடித்ததடி, உன்னைப்
    பெற்ற தந்தைக்கு!
    நேருவுக்குப் பெண் மகவு
    பாரதப் பிரதமர்!
    அன்னை தெராசா பெண்மணி!
    ஆத்திசூடி
    ஔவை பெண்ணினம்!
    உன்னை, என்னை,
    உலகில் ஆணைப் பெண்ணை
    உண்டாக்கி, உருவாக்கி
    உலவ விட்டவர்
    மாதர் குலம்!
    மங்கையர் குலம்!
    பங்கம் அடைந்து, மனமுடைந்து
    எங்கும், எப்போதும்,
    செய்ந்நன்றி மறக்கப் பட்டுச்
    சாவில் தள்ளப்படும்
    பாவையர் இனம்!

    *****

    மூன்று கோடுகள் கொண்ட அணிலைக் கண்டதும் கவிஞர் திரு. ரா. பார்த்தசாரதிக்குக் ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ எனும் மூன்று கோட்பாடுகள் நினைவுக்கு வந்துவிட்டதை அவர் கவிதை உணர்த்துகின்றது. அறிஞர் அண்ணா அவனிக்கு அளித்த திரிரத்தினங்கள் அல்லவா அவை!

    இறைவன் அளித்த அழகான மூன்று கோடுகள்
    இறைவன் மனித முகத்திற்கு அளித்த மூன்று கோடுகள்
    இவை எல்லாம் நிலையாமையை உணர்த்தும்நெறிகள்
    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என மூன்று கோட்பாடுகள்
    மனித வர்க்கத்திற்கு இன்றியமையாத வாழ்க்கை நெறிகள்
    கடமை என்பது மனிதன் வாழ்க்கையில் ஆற்றவேண்டிய செயல்கள்
    கண்ணியம் என்பது ஓழுக்க நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்தல்
    கட்டுப்பாடு என்பது எதிலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுதல்!
    மனிதனே! என் முதுகிலிருக்கும் மூன்று கோடுகளை பார்!
    மேற்குறிய மூன்று வாழ்க்கை நெறிகளையும் நினைத்துப் பார்!
    உனது கண்ணில் தெரியும் ஏக்கம் என் நெஞ்சைத் தொட்டது
    ஐந்தறிவு உள்ள நமக்கு கட்டுப்பாடு ஏது என நினைக்குது
    மரக்கிளையும், மரமுமே நமக்கு என்றும் சொந்த வீடு,
    ஒற்றுமைக்கும், பகுத்துண்டு வாழ்வதற்கும் ஓர் எடுத்துக்காட்டு! 

    *** 

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து நம் கவனத்துக்கு… 

    அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்!

    அன்பினுள்ளான்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
    அன்பினில் கரைந்து நெஞ்சினில் நிறைந்து
    ஆனந்தக் கூத்தாடி பந்தத்தில் திளைத்து
    ”நேசமது இங்கே
    நிலமாந்தரே காண்!” என்று
    பேதமது மறந்து
    பாங்குடன் பழகிக் களிக்கும்
    பச்சிளம் அணில்கள்
    பூவுலக ஜீவராசிகள்
    நெக்குருகி நெஞ்சுருகி நேசமதை
    என்புருக நித்தம் கொண்டாடி…
    மானுட தேசமது
    மறந்து போன நேயமதை
    மாக்களாகிப் போன மக்களுக்கும்
    மரித்துப் போன உறவுகளுக்கும்
    மனிதநேயம் சிதைத்து நிற்கும் உள்ளங்களுக்கும்
    முன்னறிவிப்பு செய்வன போல்
    கொஞ்சி விளையாடி
    நஞ்சு உள்ளங்களைப்
    பிஞ்சு உயிர்கள் சலித்தெடுக்கின்றன!
    இயற்கையின் பாடமது இயல்பான நேசமது
    மனிதநேயம் தாண்டிய உயிர்நேயம் காணுதல்
    வாடிய உள்ளங்களைக் கண்டபோதெல்லாம் வாடுவோம்
    நாடியே உலகத்து உயிர்களை ஜீவிப்போம்.

    எந்திரத்தனமான இன்றைய வாழ்வில் உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமான அன்பு எனும் மந்திரத்தை மனிதன் மறந்துதான் போய்விட்டான்! மனிதன் மறந்துவிட்ட அன்பதை, இந்த அணில்கள் தம் உண்மை நேயத்தால், மன்பதைக்கு நினைவூட்டுகின்றன எனும் உயர்ந்த கருத்தைக் கருவாக்கித் தன் கவிதையை உருவாக்கியிருக்கும் முனைவர். மா. பத்ம பிரியா இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

     

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! செங்குள்ளி விண்மீனை அண்டக்கோள் உருவாக்கும் பண்டைத் தட்டு சுற்றுவதைக் கண்டுபிடித்தார்

    dwarf-with-disk-2
     
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    ++++++++++++

    comparison-of-star-sizes

    சூரிய குடும்பத்தின் பின்னலில்
    சுழல் கோள்கள்
    சுற்றிடும் விந்தை யென்ன ?
    அண்டத்தில் பூமி மட்டும்
    நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன ?
    நீள் வட்ட வீதியில் கோள்கள்
    மீள் சுற்றும் நியதி என்ன ?
    பூமியில் மட்டும்
    புல்லும், புழுவும், புறாவும்
    ஆறறிவு மானிடமும்
    பேரளவில் பெருகிய தென்ன ?
    அகக்கோள்கள் பாறையாய், புறக்கோள்கள்
    வாயுவாய் பரிதி இடுப்பைச் சுற்றி
    வருவ தென்ன ?
    யுரேனஸ் கோள் அச்சு
    சரிந்து போய்ச் சாய்ந்த தென்ன ?
    பரிதி மண்டலத்தில்
    வக்கிரமாய்ச் சுழன்று
    சுக்கிரன் மட்டும்
    திக்குமாறிச்
    சுற்றுவ தென்ன ?
    தட்டுவடை சுடுவதுபோல் முதலில்
    சுட்டு விரிவ தென்ன ?
    ஈர்ப்பியல் சக்தியால்
    ஆழியில் கோள் குவிதென்ன ?

    ++++++++++++++

    comparison-of-our-sun-and-dwarf-star

    இம்மாதிரித் தோன்றும்  அண்டக்கோள் தட்டுகள் சுமார் 30 மில்லியன் ஆண்டுகளுக்குள் மறைந்து போய்விடும்.  இந்தக் குறிப்பிட்ட செங்குள்ளி [Red Dwarf Star : AW10005x3s] கரீனா விண்மீன் ஐக்கியத்தைச் [Carina Stellar Association] சேர்ந்தது.  அது 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. மேலும் விந்தையாய் அண்டக்கோள் தட்டுடைய ஒரு செங்குள்ளி கொண்ட அது, மிக மிகத் தொன்மையான செங்குள்ளிக் கூட்டமைப்பு.

    ஸ்டீவென் சில்வர்பெர்க் [ஓக்லஹோமா பல்கலைக் கழகம்]

    45 மில்லியன் ஆண்டு தொன்மையான விண்மீன் ஒன்று அண்டக்கோள் தட்டுடன் காணப்படுவது பெரு வியப்பை உண்டாக்குகிறது !  காரணம் இத்தகைய தட்டுகள் ஒருசில மில்லியன் ஆண்டுகளில் மறைந்து போய் விடுபவை.  அந்த செங்குள்ளி விண்மீன் அத்துணைப் பழமையானதா என்று அறிய இன்னும் ஆழ்ந்த கண்ணோக்குகள் அவசியமாகின்றன.  அது மெய்யானால், அந்த செங்குள்ளி தட்டமைப்பு, கோள் தட்டுகள் வயதை அறியப்படும் ஒரு மட்டக்குறி ஏற்பாடாய் [Benchmark System] விஞ்ஞானி களால் ஒப்பு நோக்க எடுத்துக் கொள்ளப்படும்.

    கார்னகி கானே [Carnegie Institution of Science]

    dwarf-with-disk

    விண்வெளியில் பல்வேறு நிறை, வடிவுள்ள விண்மீன்கள்

    நாம் காணும் நமது சூரியனைப் போல்தான் பொதுவாகப் பரிதிகள் பிரபஞ்சத்தில் தென்படுகின்றன.  ஆனால் பெரும்பாலும் தென்படும் விண்மீன்கள் நமது சூரியனை விட நிறை குறைந்தவை. வடிவில் சிறியவை. பிரபஞ்சத்தை நிரப்பியுள்ள அவைதான் செங்குள்ளி விண்மீன்கள் [Red Dwarf Stars].  விஞ்ஞானிகள் வகுத்துரைத்தபடி செங்குள்ளி விண்மீன்கள் நமது பரிதிக்குப் பாதி நிறை கொண்டவை. சில செங்குள்ளிகள், நமது பரிதிபோல் 7.5% நிறை அளவே பெற்று தம் அணுப்பிணைவு இயக்கத்தைத் [Nuclear Fusion Process] தொடர முடியாதபடி, நலிந்து மரித்துப் போனவை !

    red-dwarf-star-1

    செங்குள்ளி விண்மீன்கள் மெதுவாகவே தம் இயக்கங்களைச் செய்து வருகின்றன.  அவை சிறியதாகையால் அவை உற்பத்தி செய்யும் மிகச் சிறிய வெப்ப சக்தி நமது பரிதிபோல் 1 இன் கீழ் 10,000 [1/10,000] அளவு.  மிகப் பெரிய செங்குள்ளி கூட, 10% பரிதி ஒளியைத்தான் [Luminosity]  மீட்டு பிரதிபலிக்கிறது.  செங்குள்ளி விண்மீனுக்கு கதிரியக்க அரங்கம்  [Radioactive Zone] கிடையாது.  அதாவது அதன் வெப்பச் சுற்றுப் பகுதி [Convective Zone] கனலைக் கொண்டு செல்ல உட்கரு வரை வருகிறது.  அது ஹைடிரஜன் எரிவாயுவைக் கலந்து, ஹீலிய வாயு விளைவை எடுத்துச் செல்கிறது.  பொது விண்மீன்கள் தமது உட்கரு ஹைடிரஜனை முற்றிலும் தீர்த்த பிறகுதான் மரிக்கிக்கின்றன.  ஆனால் செங்குள்ளி விண்மீன்கள் தமது ஹைடிரஜன் வாயுக்  கலப்பை வைத்துக் கொண்டு, இறுதித் துளி தீரும்போதுதான் இறக்கின்றன.  செம்மைத் திறனில் பயன்படுத்தி, பரிதிபோல் 10% நிறையுள்ள செங்குள்ளி விண்மீன்கள், 1000 பில்லியன் ஆண்டுகள் கூட நீடிக்கும் !  ஆனால் நமது சூரியன் சுமார் 12 பில்லியன் வரைதான் நீடிக்கும் என்று தெரிகிறது.

    our-sun-and-red-dwarf-with-disk

    அண்டக்கோள் தட்டு சுற்றும்  செங்குள்ளி பற்றிப் புதிய வெளியீடு

    2016 அக்டோபர் 24 இல் பொதுத் தொலைநோக்கி விஞ்ஞானிகளும், விஞ்ஞானத் துறை வானியல் வல்லுநரும் ஒன்றாய் இளைந்து, புவிக்கோள் போன்ற அயற்கோள்களைத் [Exoplanets] தேடிச் செல்லும் போது, பண்டைக் கோள்தட்டு சுற்றும் ஓர் செங்குள்ளி விண்மீனைக் [Red-Dwarf Star] கண்டனர்.  அந்த தட்டு வாயு முகிலும், தூசி துணுக்கும் சுற்றி வரும்  ஒரு பூர்வத் தோற்ற வளையம் [A Primordial Ring of Gas & Dust].  அந்த பூர்வக் குழம்பு மூலமே திரண்டு கோள்களாய் உருவெடுக்கக் காரணமாய் இருப்பது.  தொலைநோக்கி மூலம் பார்த்துக் கண்ட  புறப்பரிதிக் கோள்கள் [Extrasolar Pllanets] யாவும் இம்மாதிரி செங்குள்ளியைச் சுற்றுவரும் கோள் தட்டுகளே.  மேலும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மங்கலான செங்குள்ளி விண்மீனும் [AW10005x3s]  நமது சூரியனுக்கு அருகில் உள்ள  [Proxima Centauri] பரிதி மண்டலத்தைச் சேர்ந்ததே.  இந்த ஆண்டு துவக்கத்தில் அந்த பரிதி ம ண்டலத்தின் ஒரு அயற்கோள் பிராக்‌ஷிமா-B பற்றி அறிவிக்கப் பட்டது.  2014 ஜனவரி முதல் சுமார் 30,000 பொதுத் தொலைநோக்கி விஞ்ஞனிகள், இப்பணியில் ஈடுபட்டு, சுமார் 2 மில்லியன் விண்வெளி அண்டங்களை [Celestial Objects] ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்தனர்.  இந்தப் புதிய வெளியீடு வானியல் பௌதிக இதழ் அறிவிப்பில் [The Astrophysical Journal Letters, October 24, 2016] vawthuLLathu.

    Oigins of Solar System

    எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான சிறப்பு அறிவிப்பில்லை.  அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல.  தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக  முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும்.   அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.

    பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]

    Violant beginning

    பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு

    பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids]  என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது.  முரண் கோள்கள்  சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு  மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு;   அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது,  ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos]  ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

    Hypergiant Star with disks of dust.

    முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள்  [Beads like Chondrules]  எறிகற்களில் காணப்பட்டன.  அவை  இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது.  இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.

    முடிவுகள் இவைதான் :

    1.  முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள்.   அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    2.  உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே.  சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா.  அவையும்  கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

     

    நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

    aj

    பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளி யேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத் தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

    ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html[சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

    19.  http://www.spacedaily.com/reports/A_twist_on_planetary_origins_999.html  [January 15, 2015]

    20. http://www.spacedaily.com/reports/Meteorite_material_born_in_molten_spray_as_embryo_planets_collided_999.html  [January 15, 2015]

    21. http://www.newworldencyclopedia.org/entry/Red_dwarf   [July 6, 2015]

    22.  http://www.universetoday.com/24670/red-dwarf-stars/ [ December 24, 2015]

    23. http://www.dailygalaxy.com/my_weblog/2016/10/-surprising-discovery-red-dwarf-star-found-surrounded-by-oldest-know-planetary-disk.html?  [October 24, 2016]

    24.  http://www.space.com/23772-red-dwarf-stars.html

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 29, 2016  [R-1]

    Attachments area
    Preview YouTube video CIVILIZATION VI – How To Choose a Civilization

    CIVILIZATION VI – How To Choose a Civilization

    Preview YouTube video Brown Dwarf Found With Dust Disk – Possible Planets? | Space Video

    Brown Dwarf Found With Dust Disk – Possible Planets? | Space Video

    Preview YouTube video Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Preview YouTube video The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been

    The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been
    Share
  • “ கங்கா ஸ்னானம்”

    தமிழ்த்தேனீ

                                                உ

     காயத்ரி  அம்மாகிட்டே  பேசிண்டு இருந்தா  எனக்கும் உன் மாப்பிள்ளைக்கும்  சண்டை தெரியுமா? நான் அவர்கிட்டே  சரியா  பேசி  ஒரு மாசமாச்சு  என்றாள்  ,  ஏண்டி  இப்பிடி  மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் ஆச்சே  ,அவர்கிட்டே என்ன  சண்டை  என்றாள் அம்மா  !   ஆமா  உன்  மாப்பிள்ளையை  நீதான் மெச்சிக்கணும் . ஒண்ணுகூட   எனக்கு சாதகமா  செய்ய மாட்டார் , எதுக்கெடுத்தாலும் நாந்தான் அடங்கிப் போகணும்   எதுக்குமே  அவர் எனக்கு ஆதரவா பேசி இந்த ஒரு வருஷத்திலே நான் பாக்கலே.  அவருக்கும் எனக்கும் ஒத்துவராது  அதுனாலே  நாங்க ரெண்டு பேரும்  விவாகரத்து செஞ்சிடலாம்னு இருக்கோம் என்றாள் காயத்ரி.

    என்னடி சொல்றே இதுதான் உங்களுக்கு  தலை தீபாவளி, கல்யாணம் ஆகி  ஒரு வருஷம் கூட  ஆகலே அதுக்குள்ளே  ஒருத்தரை ஒருத்த என்ன புரிஞ்சிண்டீங்க. வாழ்க்கைங்கறது  சினிமா பாக்கறா மாதிரி இல்லே  இடைவேளை விட்டுட்டு  மறுபடியும் பாக்கறதுக்கு,  இப்பிடியெல்லாம் ஒளறாதே  நல்ல நாளும் அதுவுமா எனக்கு பகீர்ங்கறது, அந்த  பகவான்தான்  உனக்கு நல்ல புத்தி குடுக்கணும்  ,முட்டாள்தனமா  ஏதாவது செஞ்சுடாதே  பொறுமை வேணும் பொம்மனாட்டிக்கு  என்றாள் அம்மா. சரி  சரி  சீக்கிரமா வா  இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், எல்லாம் சரியாயிடும். அவசரப்பட்டு எந்த  முடிவுக்கும் வந்துடாதே  . அவசரமா  முடிவெடுத்துட்டு  அப்புறம்  காலம் காலமா வருத்தப்பட்டாலும்  அதெல்லாம் சரியாகாது,  அங்கே கூடத்திலே உங்க அப்பா  மாப்பிள்ளை  எல்லாரும்   நலங்கு இடப்போறோம்னு காத்திண்டு இருக்கா  என்றபடி  காயத்ரியையும்  அழைச்சிண்டு கூடத்துக்கு  வந்தாள். எல்லா  கவலையையும்  மனசுக்குள்ளே  வெச்சிண்டு  ஆனா சிரிச்ச முகமா  அம்மா வந்து  எல்லார் எதிரிலேயும் வந்து உக்கார்ந்தாள் .

    வாங்கோ மாப்பிள்ளை  நீங்களும் வந்து உக்காருங்கோ   காயத்ரி மாப்பிள்ளை பக்கத்திலே  வந்து உக்காரு என்றாள். காயத்ரியும்  அரைகுரை மனசோடு வந்து  உட்க்கார்ந்தாள் ,  எதிரே  தாம்பூலத் தட்டிலே  வெற்றிலை பாக்கு , வரளி மஞ்சள் வாழைப்பழம் அரைத்த  விழுது மஞ்சள், குங்குமம்,   ஒரு கிண்ணத்திலே நல்லெண்ணெய் போன்ற  எல்லாம் நிறைந்து இருக்கிறது.   மணைகளில்  கோலம் போட்டு  வைத்திருக்கிறது, வெளி வாயிலில்   புழக்கடை வாயிலில்  கோலம் போட்டு பளிச்சென்று இருக்கிறது. வீடே  ஒளிமயமாக  இருக்கிறது.

    நல்ல  தூக்கத்திலே  எழுப்பி    பல் தேய்த்து  வந்தவுடன்   காலை  ஒரு  காப்பியைக் கொடுத்து  கொஞ்ச நஞ்சம் இருக்கும்  தூக்கத்தையும் போக்கி  மணையிலே  உட்காரவைத்து  காலை நீட்டு ரெண்டு காலையும்  பக்கத்திலே  பக்கத்திலே சேர்த்து வெச்சுக்கோ  என்றபடி   விழுது மஞ்சளை எடுத்து   புறங்காலிலிலிருந்து  முழுப்பாதத்துக்கும் சேர்த்துப் பூசி    குங்கும விழுதால் புறங்காலிலே  கோலம் போன்ற கோடுகள் வரைந்து அதன் நடுவிலே பொட்டு வைத்து  ஒரு வெற்றிலை கொஞ்சம் பாக்கு சற்றே   சுண்ணாம்பு  வைத்து  அதை வாயிலே போட்டு  கடிச்சு  நல்லா மென்னு முழுங்கு  என்றபடி கொடுத்துவிட்டு    துடையிலே  நல்லெண்ணையால்  ஏழு பொட்டுக்கள்  வைத்து    உச்சந்  தலையிலும்   நல்லெண்ணெய்  தேய்த்துவிட்டு  சீக்கிரம் போயி   குளிச்சிட்டு வாங்கோ , வந்து   வாங்கி இருக்கோமே   அந்தப் புதுத் துணிகளை  போட்டுண்டு  வாங்கோ சீக்கிரம் என்று அனுப்புகிறாள்  அம்மா,     இந்த  வரிசையில் முதலில் நடந்தது  கண்ணுக்கு குளிர்ச்சியான  செயல், அப்பாவை மணையிலே உட்காரவைத்து அவர் காலில்  முதலில்  இந்த  எல்லாம் நடந்து முடிந்து  அவருக்கு வெற்றிலை பாக்கு கொடுத்தாள்  அம்மா  , அதன் பிறகு  அம்மாவை மணையிலே உட்காரவைத்து   அப்பா  அம்மாவின் காலிலே அதே போல்  மஞ்சள் பூசி எல்லாம் குங்குமம் செய்து  இட்டார். அய்யய்யே  அம்மா  காலை அப்பா பிடிக்கிறார்  என்றேன் நான்

    டேய் கண்ணா  இதுக்கு பேரு  காலைப் பிடிக்கறது இல்லே   அம்மா  என்னை மஹா விஷ்ணுவாக  நினைத்து எல்லாம் செய்தாளே  அது மாதிரி  நானும் உங்க  அம்மாவை மஹாலக்ஷ்மியாய்  நினைச்சுண்டு   அவளோட  பாதத்துக்கு  மஞ்சள் பூசி  குங்குமம்  வெச்சு வெற்றிலை பாக்கு குடுத்து  மரியாதை செய்யறது  என்றார் அப்பா.    ஒரு வருஷம் முழுவதும்  உங்க அம்மா  நமக்கெல்லாம்   எல்லாம் செய்யறாளே  அதுனாலே  அதுக்கு மரியாதை  குடுக்கறா மாதிரி  இன்னிக்கு  அம்மாவுக்கு நாமளும்  நல்லதெல்லாம் செய்யணும்  , இன்னிக்கும்   , பெருமாளுக்கு  பூஜை செய்யறதுக்கு  எல்லாம் எடுத்து வெச்சிருக்கா   பண்டிகை  சமையல் செஞ்சு வெச்சிருக்கா, பட்டாசெல்லாம் வெச்சிருக்கா , பக்‌ஷணமெல்லாம் செஞ்சு வெச்சிருக்கா சீக்கிரம் போயி குளிச்சிட்டு  வந்து   , அந்த தட்டிலே  நமக்கெல்லாம் புதுத் துணி எல்லாம் வெச்சிருக்காளே அதையெல்லாம் எடுத்து  போட்டுண்டு  பெருமாளையும்

    லக்‌ஷ்மியையும்  சேவிச்சு  எல்லாரையும் மகிழ்ச்சியா  வையுங்கன்னு   வேண்டிகிட்டு  பட்டாசெல்லாம் வெடிச்சு கொண்டாடுவோம் .   நம்ம பெரியவங்க  எல்லாத்தையுமே  யோசிச்சு ஏற்பாடு செஞ்சு வெச்சிருக்காங்க  உங்க அம்மாவுக்கு  என் மேலே  ஏதாவது கோவம் இருந்தா  அதே மாதிரி  எனக்கு உங்க அம்மா மேலே  எதுக்காவது  கோவம் இருந்தா  வருஷத்துக்கு  ஒரு நாள் இப்பிடி  செஞ்சா  கோவமெல்லாம் போயி  அன்பு வந்துடும் ,பாசம் வந்துடும் அதுக்குத்தான் இதெல்லாம் செய்யறது.   இதுக்கெல்லாம்  விடியற் காலையிலே எழுந்து  இவ்ளோ செஞ்சு வெச்சிருக்காளே  அதுக்காக  நாமெல்லாரும்  அம்மாவுக்கும் நன்றி சொல்லணும். ஐதுக்கு பேரு  நலங்கு இடுறது   காலைப் பிடிக்கறது இல்லே  என்றார்

    அடுத்ததா  மாப்பிள்ளை  பொண்ணு  ரெண்டு பேரையும்   உக்கார வெச்சு  அவங்களுக்கும்   நலங்கு இட சொல்லிக் கொடுத்தாள் அம்மா.   பொண்ணு காயத்ரி மாப்பிள்ளையை  உட்கார வைத்து  அவர் காலுக்கு நலங்கு இட்டாள்,  மாப்பிள்ளை  காயத்ரியை உக்கார  வெச்சு  நலங்கு இட்டு விட்டாள்.   சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ  மாப்பிள்ளை  ,காயத்ரி  நீயும் சீக்கிரம் குளிச்சிட்டு வா   பூஜை பண்ணிட்டு  சாப்படலாம்  பசிக்கறது    என்றார்.  அப்பா  ,

    டே கண்ணா  ஒரு விஷயம்  தெரியுமா  இன்னிக்கு  நாம  வாங்கி வெச்சிருக்கோமே  அந்த  கங்கா ஜலம் இருக்கற  சொம்பை எடுத்து அதிலேருந்து  கங்கா ஜலம் எடுத்து  அதை  மொத்த  தண்ணீரிலே கொட்டி   கங்கா ஸ்னானம் செய்யணும் என்றார்.  உங்களுக்கெல்லாம் ஒரு  விஷயம் சொல்லணும்  எத்தனையோ சாக்கடைகள்  வந்து கலக்கறது நதிகளிலே  .  அதே மாதிரிதான்  கங்கையிலேயும்  பல சாக்கடைகள் வந்து கலக்கறது   அதுக்கும் மேலே  அந்த கங்கையிலே  பல  அழுகிய உடல்கள் மிதக்கறது,  இவ்ளோ மாசுபடுத்தறோம் அந்த  கங்கையை. ஆனா  அந்த  கங்கா நதி இத்தனை அழுக்கையும் சுமந்து கொண்டு  புனித நதின்னு பேர் வாங்கறதே  அது எப்பிடி”  அதுமட்டுமில்லே  அந்த கங்கை நதியோட  தண்ணீரை  ஒரு சொம்பிலே கொட்டி அதை பாது காத்து வெச்சா  எத்தனை வருஷமானாலும்  அதோட  புனிதம்  கெட்டுப் போகாமே  அப்பிடியே இருக்கே  அதான் அந்த கங்கையோட  பவித்ரம், சக்தி  அது மாதிரிதான்  நாமளும்   நம்மோட  வாழ்க்கையிலே எத்தனையோ  கோபதாபங்கள், வெறுப்புகள்  சண்டைகள் ஊடல்கள் , எல்லாத்தையும்  அனுபவிச்சாலும் அடிப்படையான  நம்மோட தரத்தை இழக்காம அப்பிடியே இருக்கணும்  அப்பிடீங்கறதைத்தான் அறிவுறுத்தறது  இந்த  கங்கா  மாதான்னு நம்மாலே வர்ணிக்கப்படற  கங்கை நதி  என்றார்  அப்பா.

    புது ஆடைகள் பொட்டுண்டு  வந்து உக்கார்ந்த  மாப்பிள்ளை நீங்க சொன்னதெல்லாம் உண்மை நாம் எப்பவுமே  நல்லதுக்குதான்  சொல்றோம் நல்லதுக்குதான் செய்யறோம்னு  புரிஞ்சிக்கறவங்களுக்கு  அவங்களோட  தரம் குரையறதே இல்லே  என்றார், காயத்ரியையே பார்த்தபடி.   உள்ளே வந்த  காயத்ரி அம்மா  நீங்க  சொன்னதெல்லாம் யோசிச்சிண்டே  கங்கா ஜலத்திலே  குளிச்சேன் , இப்போ  மனசு தெளிவா இருக்கு, அதோட  அப்பா சொன்னதையெல்லாம் கேட்டேன்,  கவலைப்படாதே  அவரையும்  சரி செஞ்சு  நானும் சந்தோஷமா இருக்கேன், என்றபடி   அந்த  அல்வாவைக் குடு எங்க ஆத்துக்காரருக்கு  ரொம்பப் பிடிக்கும்  என்றபடி அல்வாவை எடுத்துக் கொண்டு போன  காயத்ரியைப் பார்த்து  பெருமாளே  நீதான்  இவளுக்கு நல்ல புத்தியைக் குடுத்தே  , கங்கா மாதா  எல்லாம் உன் அருள்  என்றபடி  சீக்கிரம் பட்டாசு  வெடிச்சிட்டு சாப்பிட வாங்கோ  என்றாள்,

    இந்தாங்கோ உங்களுக்கு  அல்வா பிடிக்குமேன்னு குடுக்கச் சொன்னா அம்மா  என்றாள் காயத்ரி   .மாப்பிள்ளை  அல்வாவை  வாங்கியபடி   நீ ரொம்ப கெட்டிக்காரி  எனக்கே அல்வா குடுக்கறையா  என்று சிரித்தபடியே  எழுந்து  இந்தப் புடவை  உனக்கு ரொம்ப நல்லா இருக்கு  சரி வா  சங்கு சக்கரம் கொளுத்தலாம் என்றார்.

    உங்களுக்கு கூட  இந்த  வேஷ்டியும்  சொக்காயும்  ரொம்ப நல்லா இருக்கு கையிலே  ஒரு  சங்கும் சக்கரமும்தான்  பாக்கி  அப்பிடியே  மஹா விஷ்ணு மாதிரியே  இருக்கும்   என்றாள் காயத்ரி காதலுடன்  அவனையே பார்த்துக் கொண்டு  சிரித்தபடி ..    எல்லோரும்  ஹோ என்று கத்திக் கொண்டே எழுந்து ஓடிப்போய் குளிச்சிட்டு புதுத்துணியெல்லாம் போட்டுண்டு  வாசல்லே போயி  பட்டாசு வெடிச்சிண்டு இருக்காங்க  நீங்க  என்னா செய்யறீங்க   கங்கா ஸ்னானம் ஆச்சா?  சீக்கிரம்  சீக்கிரம் , மகிழ்ச்சியா  தீபாவளி கொண்டாடுங்க.

                                     சுபம்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • ரியாத் தமிழ்ச்சங்கம் – கவிதைப் போட்டி ஓர் அறிவிப்பு

    ரியாத் தமிழ்ச் சங்கம்

    ***முக்கிய அறிவிப்பு***

    ரியாத் தமிழ்ச் சங்கம் அறிவித்திருந்த, கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டியின் கால அளவு நாளையுடன் முடிவடைய உள்ள சூழலில், குறிப்பிட்ட அந்த மடல் முகவரி கெடுமதியோரால் (Hacking) கடத்தப்பட்டுள்ளதை, தற்போது அறிய வந்ததை, ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

    மீட்டெடுக்க முயன்றும் இயலா நிலை. எனினும் விரைந்து செயற்பட்டு புதிய மின்னஞ்சலை உருவாக்கியுள்ளோம்.

    rtskp2016@gmail.com

    இக்கட்டான இச்சூழலில் எங்களின் மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொள்ளும்படியும், மீண்டும் ஒருமுறை (ஏற்கனவே அனுப்பியிருந்தாலும்) போட்டிக்கான உங்கள் கவிதைகளை இப்புதிய மின்னஞ்சல் rtskp2016@gmail.comக்கு அனுப்பித் தருமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    இந்நிலையில் தவிர்க்க இயலாமல் போட்டிக்கான கால அளவு டிசம்பர் 31, 2016 இந்திய நேரம் 23:59 வரை நீட்டிக்கப்படுகிறது.

    இச்சிரமங்களுக்கும், இதன் பொருட்டு ஏற்படும் காலத் தாழ்வுக்கும் எங்கள் வருத்தங்களைப் பதியும் அதே வேளை, தொடரும் உங்கள் ஆர்வத்திற்கும், புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி பலவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    போட்டி குறித்த விவரங்கள், விதிகளை அறிய

    https://m.facebook.com/story.php?story_fbid=10209656479109367&id=1250956727

    நன்றி
    ரியாத் தமிழ்ச்சங்கம்.
    Sheik Mohamed Fakhrudeen Ibnu Hamdun Muthusamy Vetrivel

    Share
  • தீபாவளி

    ரா. பார்த்தசாரதி

     

    மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,

    எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை

    வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,

    சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

     

    விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,

    மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,

    பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று

    ஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

     

    நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி

    வடக்கே விளக்கு பூஜை, துர்கா பூஜை என் கொண்டாடும் தீபாவளி,

    முதியோர் இல்லத்திற்கும், அநாதை இல்லங்களுக்குச் செல்வோம்

    இல்லாதவர்களுக்கு  இருப்பதை  கொடுத்து உதவி கரம் நீட்டுவோம் !

     

    அசுரன்  மரணித்த  நன்னாளை   தீபாவளியாக கொண்டாடுகின்றோம்

    வெடிகளும், பட்டாசுகளும்  வெடித்தால் மட்டும் போதுமா?

    மதவெறி, இனவெறி, தீவிரவாதம்  இம்மூன்றும்  தவிர்த்தே

    இணக்கமான மொழி பேசி   வாழ்ந்திடுவோம் !

     

    Share
  • இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!!

    பவள சங்கரி

    diwali-2013-latest-pictures

    தீபத்தின் திருமுகம் இதமாய் சுடர்க
    தீந்தமிழின் நலம் யாவும் சூழ்க
    வான்நிலவின் ஒளிர் முகம் மலர்க
    தேன்கனியின் நறுமுகை நலம் பகிர்க
    தானெனும் மாயை விலகி ஒளிர்க
    வீணெனும் விகல்பம் நீங்கி நிமிர்க
    வாழ்வெனும் வசந்தம் பரவி மகிழ்க
    தாழ்வெனும் எண்ணம் நிலையா தொழிக

    வரமும் நலமும் நித்தம் தொடரும்
    இகமும் பரமும் நன்மை நிலைக்கும்
    தேவியவள் நேசம் கனிந்து பெருகும்
    கருணை பொழில் வாணியின் அருளும்
    எங்கும் நிறைந்து அறிவொளி படரும்
    பொங்கும் செல்வம் தங்கும் என்றும்
    ஒளிரும் மங்கலம் விலகும் இருளும்
    மலரும் இன்பம் வையகம் முழுதும்!!

     

    Share
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சீதாம்மா!

    பவள சங்கரி

    காலங்கள் மாறுகின்றனdsc_0021-300x298
    ரசனைகள் மாறுகின்றன
    மனிதனின் வாழ்வு முறையும் மாறுகின்றன
    மாற்றங்களில் நீச்சல் அடிக்கின்றோம்
    சிலர் ஓட்டத்துடன் நீந்துகின்றனர்
    சிலர் எதிர் நீச்சல் போடுகின்றனர்
    மாறுதல்களைப் பார்த்து எழும் நெஞ்சக் கொதிப்பையும்
    காலம் ஆற்றிவிடும்
    இதுதான் வாழ்க்கை

    வாழ்க்கையின் நிதர்சனத்தை உள்வாங்கி அதன் போக்கில் எதிர் நீச்சல் போட்டே வாழ்ந்து காட்டியுள்ள துணிச்சலான பெண்மணி இவர்! பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பிறந்து, பாரதி பயின்ற அதே பள்ளியிலேயே தானும் பயின்று, பாரதி வாழ்ந்த வீட்டிலும் சிறிது காலம் வாழ்ந்தவர் திருமிகு சீதாலட்சுமி அம்மையார். இதுமட்டுமில்லை, அந்த காலகட்டத்தில் எட்டயபுரத்தில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த முதல் சுட்டிப் பெண்ணும், கல்லூரிப்பட்டம் பெற்ற முதல் வீரப் பெண்ணும், ‘சீதாம்மா’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் திருமிகு சீதாலட்சுமி. சமூகநலச் சேவகியாக, துணை இயக்குனராக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சீதாம்மா. எட்டயபுர வரலாறு, வரலாற்றுப் பயணம், சீதாம்மாவின் குறிப்பேடு, நினைவலைகள், எண்ணங்கள் ஊர்வலம், முத்தொள்ளாயிரம் ,மலரும் நினைவுகள் என பல்வேறு வரலாற்று ஆவணங்கள் படைத்தவர் இவர்.

    dsc_09761

    திண்ணை மின்னிதழில் பல காலங்களாக இவர் எழுதிவந்த கட்டுரைகள் அனைத்தும் பிரபலமானவை. மிக வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் பேசும் சீதாம்மா இன்றும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டுதலில் பெரும்பங்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற வகையில் நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்பவர். நேற்று 83வது பிறந்தநாள் கண்ட அம்மா இன்றும் தன்னுடைய பல்வேறு உடல் உபாதைகளைக்கூட சட்டை செய்யாமல் எத்தனையோ திட்டங்களையும், ஆய்வுப் பணிகளையும் (குறிப்பாக சித்தர் சக்திகள், அமானுஷ்யங்கள்) முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. முதன்முதலில், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்ச்சியில், தலைவர், தோழி முனைவர் சுபா மூலம் அறிமுகம் ஆனவர் அம்மா. அன்று முதல் எங்கள் நட்பு தொடர்ந்து இன்று எனக்கு ஒரு தாயாகவே உரிமையுடன் கடிந்துகொள்ளும் அளவிற்கு இதய நட்பு கொண்டவர். குறிப்பாக என் அம்மா இறந்தபோது, ‘உனக்கு இன்னொரு அம்மா நானிருக்கிறேனே, ஏன் இன்னும் புலம்பிக்கிட்டிருக்கே’ என்று அதட்டியே என்னை இயல்பாக்கியவர் சீதாம்மா. இத்தனைக்கும் அவர் இருப்பதோ அமெரிக்காவில், நான் இருப்பதோ இந்தியாவில். உலகின் ஆளுக்கொரு கோடியில் இருப்பினும், இடைப்பட்ட தூரம் எங்கள் அன்பிற்கு ஒரு தடையாகவே இருந்ததில்லை என்பதே சத்தியம். மணிக்கணக்காக தொலைபேசியில் பேசினாலும் அத்தனையும் பதிவு செய்து சேமித்துக்கொள்ள வேண்டிய முக்கியமான செய்திகளாகவே இருக்கும். எந்த விசயத்தைப் பற்றி கேட்டாலும் உடனே அது பற்றிய விளக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பார் இவர். அதற்கான வல்லுநர்களின் பெயர்களையும் தடையின்றி குறிப்பிடுவார். என் படைப்புகள் பலவற்றிற்கு அம்மாவிடம் ஆலோசனை பெற்றிருக்கிறேன் என்பதை நன்றியுடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். சென்ற வாரம் சென்னை வந்துள்ள அம்மாவை சந்தித்து வந்தது பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் மீண்டும் அமெரிக்கா கிளம்பிவிடுவார். அடுத்த முறை வரும்போது மேலும் பல சாதனைகள் புரிவதற்கான திட்டங்களும் வைத்திருப்பதுதான் ஆச்சரியம். ‘காலனே நீ வந்தால் காலால் எட்டி உதைப்பேன்’ என்றானே பாரதி, அப்படித்தான் இவரும் இன்று துணிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அம்மா இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல எம் இறையைப் பிரார்த்திக்கிறோம்.

    2014 ஆம் ஆண்டில் சீதாம்மாவிற்கு, நம் வல்லமை இதழ் மூலம் வல்லமையாளர் விருது வழங்கியபோது, தோழி தேமொழி எழுதிய கட்டுரையை இங்கு காணலாம்.

    அன்புடன்
    பவளா திருநாவுக்கரசு

    Share