தீபாவளி
மக்களுக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த பண்டிகை,
எல்லோரும், ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை
வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,
சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!
விடியற்காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து ,
மகிழ்வுடனே புத்தாடை உடுத்தி, இனிப்பினை பகிர்ந்து,
பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று
ஊர் எங்கும் ஒன்றாய் கலந்து கொண்டாடும் தீபாவளி!
நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி
வடக்கே விளக்கு பூஜை, துர்கா பூஜை என் கொண்டாடும் தீபாவளி,
முதியோர் இல்லத்திற்கும், அநாதை இல்லங்களுக்குச் செல்வோம்
இல்லாதவர்களுக்கு இருப்பதை கொடுத்து உதவி கரம் நீட்டுவோம் !
அசுரன் மரணித்த நன்னாளை தீபாவளியாக கொண்டாடுகின்றோம்
வெடிகளும், பட்டாசுகளும் வெடித்தால் மட்டும் போதுமா?
மதவெறி, இனவெறி, தீவிரவாதம் இம்மூன்றும் தவிர்த்தே
இணக்கமான மொழி பேசி வாழ்ந்திடுவோம் !