Blog

  • படக்கவிதைப் போட்டி 218-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 218-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பார்கவ் கேசவின் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 218க்கு வழங்கியிருப்பவர் சாந்தி மாரியப்பன். புகைப்பட நிபுணர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

    மகிழுந்தின் கதவோரம் அமர்ந்து இனிய கதைபேசும் அழகிய பொம்மைகளை வைத்துப் புதுக்கவிதைகள் படைத்து நம்மை மகிழ்விக்க வருகின்றார்கள் நம் கவிஞர்கள்! அவர்களை வரவேற்போம்!

    *****

    ”விடுமுறையன்றும் தொடுதிரையே கதியாயிருக்க வேண்டாம்! ஊர்வலம் போவோம் மகிழுந்தில் மகிழ்ச்சியாய்!” என்று உயிர்பெற்ற பதுமைகள் தமக்குள் பேசிக்கொள்வதை நம் காதில் போட்டிருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    பதுமைகள் உயிர் பெற்றால்…

    சில்லென்ற சாரலும்..
    வெண்பனித் தூரலும் கண்டேன்..!
    உள்ளத்தைக் கிள்ளிடும்..
    உன்னதச் சூழ்நிலை கண்டேன்..!
    ஊர்வலம் போவோம்.. வா.. வா..!!
    உள்ளது மகிழுந்து.. வா.. வா..!!

    விடுமுறை நாளன்றும்..
    தொடுதிரையே உலகாக வேண்டாம்..!
    வண்ணத்துப் பூச்சியாய்..
    எண்ணத்தில் மகிழ்ச்சியே கொள்வோம்..!
    சோம்பலைப் புறந்தள்ளி.. வா.. வா..!!
    ஆம்பலைப் போல்மலர.. வா.. வா..!!

    குறிக்கோளில் வென்றிட..
    நெறியுடனே நாமென்றும் உழைப்போம்..!
    தறிகெட்டுத் திரிந்தாலே..
    தடம்மாறும் வாழ்வென்று அறிவோம்..!
    தடைகளைத் தாண்டிட.. வா.. வா..!!
    விடைகளைத் தேடிட.. வா.. வா..!!

    *****

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…

    ஏக்கம்…

    செப்பு வைத்து விளையாடிய
    சிறுவர் சிறுமி யெல்லோரும்
    ஒப்பனை செய்த பொம்மைகளுடன்
    ஒன்றாய்ச் சேர்ந்தே ஆடியதெலாம்
    இப்போ திங்கே நடப்பதில்லை
    இவர்கள் கைகளில் தொடுதிரையே,
    எப்போ திவர்கள் நமைத்தொடுவார்
    ஏங்கித் தவிக்கும் பொம்மைகளே…!

    ”செப்புவைத்துக் குழந்தைகள் விளையாடிய காலமெல்லாம் கப்பலேறிப்போய்விட்டது. தொடுதிரையிலேயே தொலைந்துபோன குழந்தைகள் எப்போது நம்மை(யும்) தொடுவர் என்று ஏங்கித் தவிக்கின்றன பொம்மைகள்” என்று இன்றைய மழலையரின் மனநிலையைத் தன் கவிதையில் சரியாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • குடும்பம் ஒரு தாம்புக் கயிறு

    குடும்பம் ஒரு தாம்புக் கயிறு

    -நிர்மலா ராகவன், மலேசியா

    நலம்… நலமறிய ஆவல் (164)

    “இன்னுமா இந்தியாவுக்குப் போறீங்க? நீங்க இப்போ மலேசியன். அதை மறந்துடதீங்க!” மருத்துவ மனையிலிருந்த அந்த தாதி நான் ஏதோ பெரிய குற்றம் புரிந்துவிட்டதைப் போல் பேசினாள்.

    `பிறந்தகம், புக்ககம் இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடு!’ என்றால் எப்படி? கல்யாணமானதும், பெற்றோருடன் மற்ற உறவினர்களையும் ஒதுக்கிவிட வேண்டுமா?

    அப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்!

    கதை

    பணக்காரக் குடும்பத்தின் ஒரே பெண் மாலினி. திருமணத்தின்போதே நிறைய நகை போட்டிருந்தார்கள். தந்தை இறந்ததும், தாய் வீட்டுக்கு வந்து, இருக்கிற மிச்சத்தையும் சுருட்டிப் போனாள்.

    தாயிடமிருந்து சுரண்ட இனி ஒன்றுமில்லை என்று புரிந்ததும், அங்குப் போவதை நிறுத்திவிட்டாள் மாலினி.

    இத்தனைக்கும், சென்னையில் அவர்கள் இருவரின் வீடுகளுக்கும் இடைய இருந்த தொலைவு ஐந்தே கிலோமீட்டர்கள்தாம்!

    யாரால் நன்மை கிட்டுகிறதோ, அவர்களிடம் மட்டும் விசுவாசம் காட்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவள் அவள்.

    சற்றே உயர்ந்த நிலையில் இருக்கும் சிலருக்கு இப்படிப்பட்டவர்களின் மனப்பான்மை புரிவதேயில்லை. தம்மைப் பற்றி மிக உயர்வாக எண்ணி, பிறகு ஏமாற்றம் அடைகிறார்கள்.

    கதை

    அரசியல்வாதி ஒருவர் நடத்திய பத்திரிகையின் ஆசிரியரான சாரங்கன், எங்கே சென்றாலும், அவருடைய நட்பை விரும்புவது போல் பலரும் நடந்துகொண்டனர். அவருக்குத் தன் மகிமையில் பெருமை ஏற்பட்டது.

    `இவரைப் பிடித்தால், பத்திரிகையில் நம் படைப்புகளும் வருமே!’ என்று இரு பெண்மணிகள் அவர் வீட்டுக்கே சென்று கூடை கூடையாகப் பழங்கள் கொண்டு கொடுத்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டு, “ரொம்ப நல்லவங்க!” என்று சிலாகித்தார்.

    அவர்கள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. விரைவிலேயே, அவர்களின் படைப்புகள் அப்பத்திரிகையில் வெளியாக ஆரம்பித்தன.

    ஏதோ காரணத்தால் சாரங்கனுக்கு வேலை போயிற்று. ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் வழக்கம்போல் யாருமே சாரங்கனைக் கண்டுகொள்ளவில்லை.  தாமே வலிய, “ஹலோ, ஹலோ!” என்றபடி அவர் அங்குமிங்கும் நடக்க, `கூடை கூடையாக’ப் பழங்கள் கொடுத்தவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

    `இனி இவரால் என்ன உபயோகம்!’ என்ற நினைப்பு எழ, அலட்சியப்படுத்தியிருப்பாள். பிழைக்கத் தெரிந்தவள்!

    பள்ளிக்கூடங்களில் விசுவாசம்

    மாணவர்கள் பிரச்சினைக்கு உரியவர்களாக இருந்தால், ஆசிரியர்கள் இணைவார்கள் என்பது நியதி. ஆசிரியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டாலோ, தலைமை ஆசிரியர் அவர்களைப் பாடு படுத்துவது எளிது.

    வெகு சில பள்ளிக்கூடங்களில்தான் மாணவர்களும் ஒழுங்காக, அதிக பிரச்சினைகள் கொடுக்காது இருப்பார்கள், ஆசிரியர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்நிலை ஏற்பட, நல்ல தலைமைத்துவம் அமைய வேண்டும்.

    பள்ளியோ, குடும்பமோ, நாடோ எதுவாகிலும், அது சிறக்க ஒரு தலைவரானவர் தன்னைச் சார்ந்தவர்களைப் பாரபட்சமின்றி நடத்துபவராக இருக்க வேண்டும். இத்தகையவர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, தன்னைச் சார்ந்தவர்களின் நலனையே பெரிதாகக் கருதிச் செயல்படுவார்.

    ஒன்றாக இணைய வேண்டியவர்கள், தமக்குத் தோன்றியதைச் செய்துகொண்டிருந்தால், ஒற்றுமையோ, நன்மையோ எப்படிக் கிடைக்கும்?

    தேவையானபோது, தனித்து இயங்குவதற்கான துணிச்சலும் அவர்களுக்கு அவசியமாகிறது.

    ஓயாது சண்டைபோடும் பெற்றோர்

    என்னிடம் படிக்க வந்தார்கள் பதின்ம வயதுப் பையன் ஒருவனும், அவனுடைய தங்கையும். பையன் பரம சாது. மரியாதையாக நடப்பான். தங்கை சோபனாவோ நேர் எதிரிடை.

    ஒரு முறை, பாடத்தில் நான் ஏதோ கேள்வி கேட்க, சற்றும் யோசியாது, ஒரு பதிலை அளித்தாள் சோபனா.

    “தவறு. நன்றாக யோசித்துச் சொல்,” என்றேன், நல்ல விதமாக.

    அவளிடமிருந்து பதிலே இல்லை. விறைப்பாக உட்கார்ந்திருந்தாள்.

    பல நிமிடங்கள் பொறுத்துவிட்டு, “நான் காத்துக்கொண்டிருக்கிறேன். எங்கே உன் பதில்?” என, “I gave you an answer!” என்று கத்தினாளே பார்க்க வேண்டும்!

    `மூத்தவர்களிடம் மரியாதையாக இருக்க வேண்டும்!’ என்று போதிக்கும் எனக்குப் பெரும் அதிர்ச்சி.

    வீட்டுக்குப் போய், ஓர் அறையை உள்ளே தாளிட்டுக்கொண்ட சோபனா, `அவள் என்னைக் கண்டபடி திட்டுகிறாள். இனி நான் அங்கு போகமாட்டேன். நீங்கள் சரியென்று சொல்கிறவரை வெளியே வரமாட்டேன்,” என்றாளாம்.

    அவளுடைய தந்தை என்னிடம் வந்து, “நீங்கள் அவளை pig-headed என்று திட்டியது ரொம்ப சரி,” என்றார்.

    எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றுகூட அப்போது எனக்குத் தெரியாது. தானே அளந்திருக்கிறாள். எப்படியோ, `பிடிவாதம்’ என்பதை இப்படியும் வர்ணிக்கலாம் என்று அறிந்தேன்!

    என்னிடம் வருவதற்குமுன் ஒரு பாடத்தில்கூட தேர்ச்சி பெற்றிருக்காத பையன் நான் போதித்த கணக்கு, விஞ்ஞானம் இரண்டிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றான். ஆயினும், அவன் `மிக மிக’ச் சிறப்பான மதிப்பெண்கள் வாங்கவில்லையே என்று தந்தைக்குக் குறை.

    பெற்றோர் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாது, ஓயாது விவாதித்துக்கொண்டே இருந்தால், யார் பக்கம் சாய்வது என்ற குழப்பம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அது அவர்கள் வளர்ச்சியைப் பாதித்து, எடுத்த காரியத்திலெல்லாம் பிடிப்பே இல்லாது செய்துவிடும். மகன் பிரகாசிக்காதது ஏனென்று அவருக்குப் புரியவில்லை.

    (நிம்மதியே இல்லாத சூழ்நிலையில் வளர்ந்த அந்த இரு குழந்தைகளின் விவாகங்களும் சொற்ப காலத்திலேயே முறிந்து போயிற்று).

    பாரபட்சமான குடும்பம்

    ஒரு குடும்பத்தில் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். மற்றவரது கண்ணோட்டத்தைப் புரிந்து, அதைப் பிறருக்கும் விளக்குவது குடும்பத் தலைவியின் பொறுப்பு. அப்போதுதான் பரஸ்பர மரியாதை உண்டாகும்.

    ஒரு மகனை மிக அருமையாக நடத்தி, இன்னொருவனைக் காரணமின்றி தண்டிப்பதையும் காண்கிறோம். சகோதரர்களுக்குள் எப்படி ஒற்றுமை வரும்? வளர்ந்தபின், இருவருமே பெற்றோரிடம்தான் குறை காண்பார்கள்.

    செல்ல மகனாக வளர்ந்தவன் உலகில் எல்லாருமே தன்னைக் கொண்டாடுவார்கள் என்றெண்ணி ஏமாறுகிறான். உலகின் போக்கு புரியாத விதமாகத் தன்னை வளர்த்தவர்களின் மீது வெறுப்புகூட வரும்.

    மற்றவன் பயந்தவனாக வளரலாம். இல்லையேல், அடக்கி வைத்திருந்த திறமையையும் ஆத்திரத்தையும் படிப்பிலும் உத்தியோகத்திலும் காட்டி உயரக்கூடும்.

    இந்த நிலையில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர் பெற்றோர்தாம். எங்கே தவறிழைத்தோம் என்று புரியாது குழம்புவர்.

    குடும்பம் ஒரு தாம்புக் கயிற்றுக்கு ஒப்பானது. பலகீனமான ஒருவரை (அவருடைய சொந்த நலனைக் காரணம் காட்டி) குடும்பத்தினரிடமிருந்து பிரிப்பது தாம்புக் கயிற்றின் பிரிகளைச் சிறிது சிறிதாகப் பிரித்து, அதை அறுக்க முயல்வதுபோல்தான். வெற்றி கிட்டும்.

    ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருந்தால் குடும்பத்திலுள்ள எல்லாருமே பலமாக உணர்வார்கள். அவர்களை எளிதில் பிரிப்பது இயலாத காரியம். அதனால், அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவருமே தம் திறமைகளை முழுமையாக வெளிக்காட்டவும் முடியும்.

    Share
  • நம் பிரதமரின் கவனத்திற்கு

    நம் பிரதமரின் கவனத்திற்கு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றுதான் நம் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.  ஆனால் அது எழுத்தளவில் மட்டும் தானா என்ற சந்தேகம் பா.ஜ.க பதவிக்கு வந்த பிறகு பலருக்கு வந்திருக்கிறது.  ஆட்சியில் இரண்டாவது முறையாக அமர்ந்திருக்கும் பா.ஜ.க நடந்துகொள்வதைப் பார்த்தால் அந்தச் சந்தேகம் அப்படியொன்றும் ஆதாரமற்றதல்ல என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

    சில நாட்களுக்கு முன்னால், ஜார்கண்டில் ஒரு அப்பாவி முஸ்லீமை அவன் மோட்டார் சைக்கிளைத் திருடினான் என்று ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி, ஒரு மரத்தில் 24 மணி நேரம் கட்டிவைத்து அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.  காவல்துறை அதிகாரிகள் மிகவும் தாமதமாக வந்திருக்கிறார்கள். அவர்களும் உடனடியாக அந்த அப்பாவியை மருத்துவமனையில் சேர்க்கவில்லை. நான்கு நாட்கள் கழித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன் இறந்துபோனான். அவனைத் துன்புறுத்தியபோது அவனை ”ஹே ராம், ஹே ஹனுமன்” என்று இரண்டு இந்து தெய்வங்களின் பெயரை உச்சரிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார்கள் இந்துத்வவாதக் குழுவைச் சேர்ந்த வன்முறையாளர்கள்.  இவர்கள் வணங்கும் ராமனுக்கும் அனுமானுக்குமே இது அடுக்காது.

    அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆபிரஹாம் லிங்கன் கருப்பர்களுக்கு விடுதலை அளித்த பிறகு தென் மாநிலங்களில் வெள்ளையினவாதிகள் இப்படித்தான் அவர்களுக்குக் கொடுமை இழைத்தார்கள்.  அடிமைகளாக இருந்த கருப்பர்களுக்கு வெள்ளையர்களுக்குச் சமமான உரிமைகளா என்று வெள்ளையினவாதிகள் கருப்பர்களைப் பல கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள். செய்யாத குற்றங்களை அவர்கள் மேல் சுமத்தி அவர்களைத் தூக்கில் போட்டார்கள்; அவர்கள் வீடுகளை எரித்தார்கள்; சொத்து வாங்க முயன்றவர்களை அனுமதிக்கவில்லை.  Ku Klux Klan போன்ற வெள்ளையினவாதக் குழுக்கள் தோன்றி இப்படிச் செய்தன.  அவர்களின் சொந்த நாடுகளிலிருந்து அவர்களைத் திருட்டுத்தனமாகக் கூட்டிவந்து கடுமையாக வேலைவாங்கி துன்புறுத்தியதையெல்லாம் மறந்துவிட்டார்கள் இந்த வெள்ளையினவாத வெறியர்கள்.  இது வெள்ளையின ஆதிக்கம்; நம் நாட்டில் நடந்துகொண்டிருப்பது இந்துமத ஆதிக்கம்.

    நம் இந்துத்வவாதிகளுக்கு முஸ்லீம்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு என்று தெரியவில்லை.  இந்தியாவில் அவர்களுக்குச் சம உரிமைகள் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.  முஸ்லீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக, அவர்கள் அப்படிச் சாப்பிடாத பட்சத்திலும் சாப்பிட்டதாகக் கூறி அவர்களைக் கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள்.  இது இந்துமதத் தலைவர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தெரிந்தேதான் நடந்திருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேயில்லை அல்லது பெயருக்குத் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள்.  இந்தியாவில் அப்பாவி முஸ்லீம்கள் இந்துத்வவாதிகளால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி அமெரிக்கப் பத்திரிக்கையான நியூ யார்க் டைம்ஸிலும் வந்தது. பிஜேபி பதவிக்கு வந்த பிறகு இது அதிகரித்திருக்கிறது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறை ஆண்டுதோறும் வெளியிடும் நாடுகளில் மத நல்லிக்கண நிலைமை பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை இந்தியாவைச் சாடியிருக்கிறது. எங்களைச் சொல்ல நீ யார்?’ என்பதுதான் பிஜேபியின் பதில். 

    சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த யார் துன்புறுத்தப்பட்டாலும் நம் பிரதம மந்திரி அதைக் கண்டுகொள்வதேயில்லை.  வங்காள மாநிலத்தில் ஒரு வயதான கிறிஸ்துவப் பெண் துறவி மானபங்கப்படுத்தப்பட்டபோது கொதித்தெழ வேண்டிய நம் பிரதமர் சாவதானமாக பத்து நாட்கள் கழித்துத் தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.  இப்படித்தான் பல தடவைகளிலும் நடந்துகொண்டிருக்கிறார். முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் இந்தியக் குடிமக்கள் இல்லையா?  அவர்களுக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அதற்குக் காரணமானவர்களைக் கண்டித்து அதைத் திருத்துவது ஒரு பிரதமரின் கடமை அல்லவா?

    தலித்துக்களுக்கும் இதே கதிதான்.  அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்பதுதான் அவர்களைக் கொடுமைப்படுத்துவதற்கும் முக்கிய காரணம் என்று பேசப்பட்டாலும் மற்ற ஜாதி இந்துக்களுக்குச் சமமாக அவர்களுக்கு உரிமைகள் வழங்க நம் சமூகம் மறுக்கிறது.   அவர்களை இந்து வர்ணாஸிரமத்திற்குள் விட மாட்டோம்; ஆனால் அவர்கள் இந்துமதக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் இந்துமத வெறியர்கள்.  இதை அவர்கள் வழிபடும் இறைவனே அனுமதிக்க மாட்டார். 

    ஜார்கண்டில் நடந்த நிகழ்ச்சி தன் மனதில் வலியை ஏற்படுத்தியிருப்பதாகப் பிரதமர் பேசியிருக்கிறார்.  உண்மையிலேயே அவர் மனதில் வலி ஏற்பட்டிருந்தால் இனியாவது அந்த மாதிரிச் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வாரா?  இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.  இந்தக் குற்றம் புரிந்தவர்களை உடனடியாகக் கைதுசெய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.  இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டால் இனி இம்மாதிரிக் குற்றங்கள் புரிய நினைப்பவர்கள் அப்படி நடந்துகொள்ளத் தயங்குவார்கள் என்று நம்பலாம்.  இதுவரை இம்மாதிரிக் குற்றங்கள் புரிந்தவர்கள் கைதுசெய்யப் படுவதில்லை; அப்படியே கைதுசெய்யப்பட்டாலும் பெயருக்குத் தண்டிக்கப்படுவார்கள்.  இந்த நிலை மாற வேண்டும். தாங்கள் செய்த குற்றங்களுக்குக் கண்டிப்பாகத் தண்டனை கிடைத்தே தீரும் என்று இவர்களை  பயப்பட வைப்பதுதான் இனி அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். செய்வாரா நம் பிரதமர்?  அவரைச் செய்யவிடுவார்களா இந்த இந்துமத வெறியர்கள்?

    Share
  • சென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்

    சென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    [ கட்டுரை : 3 ]
    +++++++++++++++

    சூரிய வெப்ப உப்பு நீக்கி நிலையம்,
    சீரிய முறையில் 
    கடல்நீரைக் குடிநீராக்கும் !
    தமிழகக் கடற்கரை  நீளம்
    குமரி முதல் சென்னை வரை 
    நானூறு மைல் மேற்படும். !
    ஏரி இல்லா,  ஆறில்லா 
    நீரில்லா ஊர் பாழ் !  
    பேரளவு நிதி அரசுக்கு தேவை. 
    ஊராட்சி, நகராட்சி மாநில ஆட்சி 
    பாரத தேசத் திட்ட நிபுணர் 
    வேர்வை சிந்தி, நிதி திரட்டி  
    போர் வினைபோல் புரியக் கிளம்புவீர்.  
    பேரு ழைப்பே  பெரும்பயன் தரும்.
    புவிக்கடல் சூடேறி 
    வறட்சி ஒருபுறம்  எரிக்குது. 
    தவிக்கும் மக்கள் இன்று கேட்பது :   
    தண்ணீர் !  தண்ணீர் ! தண்ணீர் !
    கடல் நீரைக் குடிநீர் ஆக்க
    மீள்நுழை ஆஸ்மா சிஸ் முறை உளது.

    +++++++++++++++++++++++

    Image result for third desalination plant in chennai
    சென்னைக்கு மூன்றாவது உப்பு நீக்கி குடிநீர் ஆக்கும்  நிலையம்
    2019 ஜூன் 27 ஆம் தேதி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மூன்றாவது உப்பு நீக்கி நிலைத்துக்கு நெம்மேலி கடல் உப்பு நீக்கி நிலையத் துக்கு  அருகில் அடிக்கல் நாட்டினர்.  அந்த நிலையத்தின் குடிநீர் உற்பத்தித் தகுமை :  நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர்.  அதைக் கட்டி முடித்து இயக்கத் தேவையான நிதி : சுமார் 1260 கோடி ரூபாய். சென்னையில் ஏற்கனவே  இரண்டு நிலையங்கள், தனியே 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் தகுமை  பெற்றவை, 10 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கி, இயங்கி வருகின்றன.  வரப் போகும் புதிய நிலையம் 2021 இல், துவங்கி 9 லட்சம் பேருக்குக்  குடிநீர் அனுப்பும்.  இதைக் கட்டி முடிக்கும் பொறுப்பேற்ற ஜெர்மன் கம்பேனி 700 கோடி ரூபாய் கடன் கொடுக்கும்.  மீதத் தொகையை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.  அத்துடன் சென்னைப் பெருநகர் நீர் அனுப்பு வாரியம், மூன்று சிறிய எதிர்நுழை ஆஸ்மாசிஸ் உப்பு நீக்கி நிலையங்களைக் கட்டத் திட்ட மிட்டுள்ளது,   அவை ஒவ்வொன்றும் தினம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் அனுப்பும் தகுமை  கொண்டவை.
    Related image
    சென்னைக்குத் தற்போது உள்ள குடிநீர் தட்டுப்பாடு நீங்க, தினம் 830 மில்லியன் தேவைப்படுகிறது.  இயற்கை மழை பெய்து, நீர் சேமிப்பு ஏரிகள் நிறையா விட்டால், சென்னை  மூன்று உப்பு நீக்கி நிலையங்கள்தான் குடிநீர் தடங்கலின்றி உற்பத்தி செய்து அனுப்ப வேண்டும்.  அடுத்து 2024 இல் இயங்கப் போகும் நான்கா வது உப்பு நீக்கி நிலயத்துக்குத் தமிழகம் இப்போதே திட்டமிட் டிருக்கிறது. நான்காம் நிலையம் தினம் 400 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும்.  நான்கு உப்புநீக்கி நிலையங் களும் மொத்தம் நாள் ஒன்றுக்கு 750 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும்.
    singapore, singapore desalination plant, best desalination plant, desalination plant technology , desalination technology, desalination plant jobs, water desalination plant, seawater desalination plant
    சிங்கப்பூர்  உப்புநீக்கி நிலையம்
    புவிச் சூழ்வெளி காப்பாளர் சென்னையின் புதிய உப்புநீக்கி நிலையங்கள் பேரளவு கடல்நீரைக் கரைப்பகுதிக்குக் கொண்டு நீக்கிய உப்புக் கழிவு நீரைக் கடலில் மீண்டும் கலப்பதால், சூழ்வெளி பாழாகிறது என்று கூச்சல் போடுகிறார்.  மீன்வளம் பாதிக்கப் படுவதாக அலறி, செலவு மிக்க புதிய உப்பு நீக்கி நிலையத்தைக் கட்டாதே என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  சில ஆண்டுகட்கு முன்னர், சென்னையில் நீர்ப்பஞ்சம் ஏற்பட்டு, முதல்வர் ஜெயலலிதா பட்ட பாட்டை எதிர்ப்பாளர் நினைத்துப் பார்க்க வேண்டும்.  தமிழகத்தில் மக்கள் தொகை பெருகி க் கொண்டே போகிறது.  பூகோளச் சூடேற்றத்தால் தேவையான இடத்தில் மழை பெய்யாமலும், தேவையற்ற பகுதிகளில் மழை பெய்து, நகர்ப்புற வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவதும் நாம் தினம் காணும் காட்சிகளாய் உள்ளன.  தற்போது தினம் ஒரு மில்லியன் லிட்டர் கடல்நீரில் உப்பு நீக்கி குடிநீர் ஆக்க , ரூபாய் 15.30 கோடி செலவாகிறது.  அதைப் பராமறித்து இயக்க நாள் ஒன்றுக்கு 68,000 மேலும் செலவாகிறது.  இந்த விலைமிக்க உப்புநீக்கிக் குடிநீர் உற்பத்தி தேவையா, என்று சூழ்வெளிக் காப்பாளிகள், புதிய நிலையங்கள் முன்பாக மறியல் செய்தாலும்  வியப்படைய
    வேண்டாம்.
    singapore, singapore desalination plant, best desalination plant, desalination plant technology , desalination technology, desalination plant jobs, water desalination plant, seawater desalination plant
    ++++++++++++++++++
    எதிர்நுழை ஆஸ்மாசிஸ் முறையில் உப்பு நீக்கி மிஞ்சூர் குடிநீர் உற்பத்தி நிலையம்.
    [ Kattupalli, Tiruvallur Dt, Tamil Nadu ]
    ++++++++++++++++
    Image result for Minjur Desalination Plant near Chennai in India
    Minjur Desalination Plant
    Tamil Nadu
    [Click to Enlarge]
    +++++++++++++++++++++
    ++++++++++++++++++++++++
    Image result for Minjur Desalination Plant near Chennai in India
    நெம்மேலி, சென்னை உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையம்
    [ Nemmeli Desalination Plant, Chennai, Tamil Nadu ]

    +++++++++++++++++++++++++++++++++

     

    எதிர்நுழை ஆஸ்மாசிஸ் உப்புநீக்கி நிலையம்
    [ ஸ்பெயின் ]
    ++++++++++++++

    தமிழகத்தில்  கடல்நீரைக் குடிநீராக்கும்  மாபெரும்  மிஞ்சூர் உப்பு நீக்கி நிலையம்

    சென்னை நகருக்கு  வடக்கே இருக்கும் மிஞ்சூர் உப்பு நீக்கி  நிலையம் காட்டுப்பள்ளி கிராமத்தில் 2010 ஜூலை முதல் எதிர்நுழை ஆஸ்மாசிஸ் [ Reverse Osmosis Process ] முறையில்  இயங்கி வருகிறது.  இது வங்கக் கடல் நீரை வடிகட்டி,த் தட்டு [Membrane]  மூலம் உப்பை நீக்கிக் குடிநீர் ஆக்கி வருகிறது.  இந்தியாவிலே மிகப்பெரும் நிலையமாகக் கருதப்படும்  இந்த மிஞ்சூர் உப்புநீக்கி நிலையத்தைக் கட்டிய இருபெரும் நிறுவகங்கள் : Indian Company IVCRL & Spanish  Company Abengoa.  இதன் உற்பத்தித் தகுமை : நாள் ஒன்றுக்கு 100 மெகா லிட்டர் [10 கோடி லிட்டர்].  2010 ஜூலை 25 முதல் இது இயங்கி வருகிறது. இது ஒரு மில்லியன் [10 லட்சம்] சென்னை வாசிகளுக்கு உப்பு நீக்கிய நீர் அளிக்கக் கூடியது.  இந்த ஒரு நிலையத்தைக் கட்டி இயக்க 5.15 பில்லியன் ரூபாய் [ 515 கோடி] செலவாகி உள்ளது.
    இந்த நிலையம் பயன்படுத்தும் முறை எளியது, சிக்கன மானது. எந்த வித  வெப்பசக்தி இல்லாமல் இயங்குவது.  இது கடல்நீரில் உப்பை வடிகட்ட மிக நுண்ணிய துளைகள் உள்ள 8600  எதிர்நுழை ஆஸ்மாசிஸ் தட்டுகள் [Reverse Osmosis Membranes] கொண்டது.  மிக அழுத்த முறையில் வடிகட்ட, 248 அழுத்த கலன்களும், [Pressure Vessels] 23 அழுத்த மாற்றிகளும், [Pressure Exchangers] 5 பேரழுத்த பம்புகளும் [High Pressure Pumps], 16  அழுத்த வடிகட்டிகள் [Pressure Filters] உள்ளன.   மிஞ்சூரிலிருந்து குடிநீர் ரெட் ஹில் சென்றடைய 20 மைல் [33 கி.மீ]  நீள நீண்ட குழல்கள் இணைக்கப் பட்டுள்ளன.
    சென்னை நகர் நீர் பரிமாற்ற நிறுவகம்  ஒரு கிலோ லிட்டருக்கு ரூபாய் 48.66 சென்னை உப்பு நீக்கி நிறுவகத்துக்குக் கட்டுகிறது.
    நீர் வெள்ளத் தேவைக் கம்பேனிகளுக்கு கிலோ லிட்டர் ரூபாய் 60  விற்கிறது.  அடுத்து ஓர் உப்பு நீக்கி நிலையம், நாள் ஒன்றுக்கு 200 மில்லிய கிலோ லிட்டர் உற்பத்தித் தகுமை உடையது பட்டி புலத்தில்  கட்டுவதாகத் திட்டம் உள்ளது.
    இரண்டாவது உப்பு நீக்கி நிலையம்  சென்னைக்கு அருகில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் [10 கோடி] குடிநீர் அளிக்கும்  தகுதி உடைய நெம்மேலி எனப்படும்.  இது  5 .3 பில்லியன்  [5.33 கோடி] ரூபாய்ச் செலவில் கட்டப் பட்டது. 2013 பிப்ரவரி 22  முதல் இயங்கி வருகிறது.  உப்பு நீக்கச் செலவு : ஒரு கிலோ லிட்டர் ரூபாய் 30.  அடுத்து ஓர் உப்பு நீக்கி நிலையம் அதன் அருகில்  150 மில்லியன் லிட்டர் உற்பத்தித் தகுமை கொண்டது, 1000 கோடி ரூபாயில்  கட்டப் போவதாய்த் திட்டம் உள்ளது.

    Related image

    “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோ கித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

    “2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

    டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

    Schematic of a multistage flash desalinator

    A – steam in       B – seawater in       C – potable water out
    D – brine out (waste)       E – condensate out       F – heat exchange
    G – condensation collection (desalinated water)       H – brine heater
    The pressure vessel acts as a countercurrent heat exchanger. A vacuum pump lowers the pressure in the vessel to facilitate the evaporation of the heated sea water (brine) which enters the vessel from the right side (darker shades indicate lower temperature). The steam condensates on the pipes on top of the vessel in which the fresh sea water moves from the left to the right.

    ++++++++++++++++++++

    Related image

    Image result for solar thermal power plants pros and cons

    நீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்

    2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்கனலைப் பயன் படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக் கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.

    +++++++++++++++++++++++++++

    DESALINATION PROCESSES BENEFITS
    MULTI-STAGE FLASH
    (MSF)
    – Used in many desalination plants, suitable for large-scale installations
    – Performance efficiency and output water quality is relatively unaffected by fluctuations in input seawater quality (such as salt concentration and turbidity)
    MULTIPLE EFFECT DISTILLATION
    (MED)
    – Good heat transfer efficiency; uses 40% less energy than reverse osmosis membrane method
    – Performance efficiency and output water quality is relatively unaffected by fluctuations in input seawater quality (such as salt concentration and turbidity)
    REVERSE OSMOSIS
    (RO)
    – The most energy-efficient process
    – Simple configuration can be installed relatively quickly

    Starting with the first desalination plant in 1971, Hitachi Zosen has installed 42 plants to date, mainly in Japan and the Middle East, with a combined output of 1.2 million cubic meters per day.

    +++++++++++++++++++++++++

    நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

    ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.

    கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 16,000 இப்போது [2018] இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

    +++++++++++++++++

    Latest technology: trials of solar heat power generation and desalination system

    A trial will be conducted of a new type of solar-powered desalination system that uses solar heat power generation technology. Solar-powered desalination uses sunlight as the heat source for distilling seawater.

    The trial is due to run from November 2012 to October 2013 in Saudi Arabia, with a view to commercialization of the system from FY 2014.

    +++++++++++++++

    இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்பு நீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனிமம் நீத்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப் படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன் படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராம நாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.

    WATER DESALINATION


    METHODS
    +++++++++++++
    2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப்படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெரு நிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”
    ++++++++++++++++++

    கல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளி வரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளள வாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.

    2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னை யின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்!

    +++++++++++++++++

    Posted in சூரியக்கதிர் கனல்சக்திபொறியியல்விஞ்ஞானம் Leave a reply

    Attachments area

    Preview YouTube video 2015 Fujairah 2 Reverse osmosis plant

    Preview YouTube video Mojave Solar Project- The Future of solar project

    Preview YouTube video Solution: Hitachi solar-powered desalination plants, Abu Dhabi – Hitachi

    Preview YouTube video Making Desalination More Sustainable

    Preview YouTube video Desalination Myths and Misconceptions

    Preview YouTube video Solar Power, panels, charge regulator controller, battery…

    Share
  • மணி சார்

    சேஷாத்ரி பாஸ்கர் 
    —————

    கே ஜே எஸ் மணி பற்றி சொல்ல வேண்டும் . எல்லோர்க்கும் அவர் மணி சார் . நான் பணி புரிந்த காலத்தில் ஏற்பட்ட சிநேகம்.முதல் நாள் வேலை விஷயமாய் பார்க்க போன போது அவர் தான் என்னை அழைத்து உட்கார சொன்னார் . முதல் நாள் ஒரு அலுவலகத்தில் உட்காரும்போது மிக பூரிப்பாகா இருந்தது .அவர் நெற்றியில் பெரிதாய் பழனி சித்தநாதன் விபூதி . அவர் பேச பேச கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்து அவர் கருப்பு ப்ரேம் கண்ணாடியில் விழுந்தது .அவ்வப்போது துடைத்து பேச வாசனை அந்த அறை முழுதம் வியாபித்தது .

    எங்கேந்து வர ?
    மயிலாப்பூர் சார்
    இங்க என்ன வேலைன்னு சொன்னாங்களா ?
    இல்லை சார்
    இந்த டிப் டாப் டிரஸ்லாம் கொஞ்சம் இந்த வேலைக்கு அதிகம் . அதென்ன பெல்ட்ல கழுகு?
    ஜுக்னு சார் .
    அப்படினா ?
    சினிமா சார் .
    என்ன கருமமோ .
    கார்த்தால ஒன்பது மணிக்கு டாண்ணு வரணும்
    சைக்கிள் ஓட்டுவியா ?
    ம் தெரியும் சார்
    முதல்ல எல்லார்க்கும் காப்பி கொடுக்கணும்.உனக்கும் உண்டு
    பத்து மணிக்கு மேல லாரி ஆபிசுக்கு போகணும்
    ஏதான சரக்கு இருந்தா கொண்டு வரணும்
    கமிஷன் ஏதும் அடிக்க கூடாது .
    சரி சார்
    நடுவில் பேங்க் வேலை பாக்கணும்
    பேரு என்ன சொன்ன ?
    பாஸ்கர்
    முதல்ல கௌரவம் பாக்க கூடாது .சாயந்திரம் நான் சொன்னபுறம் தான் போகணும்
    கையில என்ன .
    சர்டிபிகேட் சார் .
    பேப்பர் மாதிரி இருக்கு
    ஆமா சார் . எக்ஸ்பிரஸ் பேப்பர் .அதுவுள்ள வச்சிருக்கேன் .
    பேப்பர்லாம் படிப்பியா ?
    ஆமா சார். எக்ஸ்பிரஸ் ..நான் வாங்கிடுவேன் .
    சம்பளம் என்ன தெரியுமா , இரு நூத்தி எழுபத்தி அஞ்சு .
    சரி சார் .
    அப்புறம் பாகிங் பண்ணனும்.செக்போஸ்ட்ல ஏதான பிரச்சனைனா போகனும் .இன்னொன்னு இங்க கட்டை வண்டி இருக்கு . வண்டிக்காரனுக்கும் ஹெல்ப் பண்ணனும் . கூட மாட தள்ளனும் .
    செய்வேன் சார் .
    உன் வயசு என்ன
    இருப்பத்தி அஞ்சு .
    வீட்ல போன் இருக்கா ?
    இல்ல சார் .எப்ப சார் சேரனும்
    இன்னிக்கே ?
    சார் நாளைக்கு தீபாவளி .
    ஏன் வெடிக்கனுமா ?
    இல்ல சார் . வெடிக்கரத பாக்கணும் .
    சரி .அப்ப்ளிகஷேனை எழுதி கொடு.
    தோ சார்
    .கச்சேரி ரோட்ல சாரதா ப்ளாஸ்க் தெரியுமா ? .
    தெரியும் சார் . பழைய போஸ்ட் ஆபிஸ் பக்கத்துக்கு அடுத்த பில்டிங்.
    சரி போய் உட்கார் .
    சரியாக ஒரு மணி கழித்து அவர் திரும்ப வந்தார் .
    இந்தா . இந்த பிளாஸ்கை அங்கு கொடுத்துட்டு ரிப்பேர் பில் வாங்கிக்கோ
    அஞ்சு ரூபாய் வச்சுக்கோ .ஏதான பப்பிர்மின்ட் வாங்கி சாப்பிடு .நாளான்னைக்கு வா .
    வெளியே வந்து சைக்கிளை எடுத்து பிளாஸ்கை தோளில் மாட்டிய பிறகு எனக்கு எந்த வெடி சப்தமும் கேட்கவில்லை .

    Share
  • குறளின் கதிர்களாய்…(261)

    குறளின் கதிர்களாய்…(261)

    செண்பக ஜெகதீசன்…

    ஈன்றாள் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி.

    -திருக்குறள் -922(கள்ளுண்ணாமை)

    புதுக் கவிதையில்…

    எது செய்தாலும்
    மகிழும் தாய்முன்னே
    கள்ளுண்டு களித்தல்
    இனிதல்ல,
    பெருந் துன்பமாகும்..
    இந்நிலையில்
    குற்றமற்ற சான்றோர்முன்
    கள்ளுண்ணல்
    பெருங் கொடுமையன்றோ…!

    குறும்பாவில்…

    எதற்கும் மகிழும் தாய்முன்னே
    கள்ளுண்ணலே பெருந்துன்பமாயிருக்கையில்,
    சான்றோர்முன் குடிப்பது பெருங்குற்றமாம்…!

    மரபுக் கவிதையில்…

    பிள்ளை வந்தே எதுசெய்யினும்
    பெரிதும் விரும்பும் தாய்முன்பிலும்
    கள்ளைக் குடித்துக் களித்தாடுதல்
    காணச் சகிக்கா பெருந்துன்பமே,
    எள்ளின் அளவும் குறையில்லா
    ஏற்ற மிக்க சான்றோர்முன்
    கள்ளின் போதையில் போய்நிற்றல்
    கொடுமை மிக்கக் குற்றமதே…!

    லிமரைக்கூ..

    விரும்புவாள் தாய், எதுசெய்யினும் பிள்ளை,
    அவள்முன் குடித்தாடும் பெருந்துன்பத்திலும் கொடுமை
    சான்றோர்முன் குடித்தாடினால் கள்ளை…!

    கிராமிய பாணியில்…

    குடிக்காதே குடிக்காதே
    குடியயே கெடுக்கும்
    கள்ளைக் குடிக்காதே..

    புள்ள தப்பு செஞ்சாலும்
    பெருசா எடுக்காத தாய்முன்னே
    கள்ளக் குடிச்சி போய்நின்னா
    கொஞ்ச மில்ல துன்பமதே..

    அதவிட பெருங்கொடும,
    குத்தங்கொறயே இல்லாத
    நல்லவுங்க முன்னாலபோயி
    குடிச்சிட்டு நின்னு ஆடுறதே..

    அதால
    குடிக்காதே குடிக்காதே
    குடியயே கெடுக்கும்
    கள்ளைக் குடிக்காதே…!

     

    Share
  • My dear tiger

    My dear tiger

    Art by Jayanthi Sankar, Singapore

    While the eyes, tongues, mouth obviously demanded much, the teeth on the other hand required special attention – for details. Masked the teeth to work separately in the end. The two close-ups, on A3, 300 mg watercolour papers, were recommended images by my nephew Arun, London. Every time, I observe with interest- how my interactions with water colour bless me with the inner spiritual progress with better tolerance, endurance, acceptance, and empathy, also bringing a better understanding of my skills. 🙂

    Share
  • ஐயப்பன் காவியம் – 2

    ஐயப்பன் காவியம் – 2

    -இலந்தை சு. இராமசாமி 

    ஆற்றுப்படலம்

    பொதிகையில் சாரல் வீழப்
    பொழிந்திடும் அருவிக் கூட்டம்
    விதவித ஓசை யோடே
    வீழ்ந்திடும், மூலி கைகள்
    பதமுடன் தூக்கி வந்து
    பாய்ந்திட, என்றென்றைக்கும்
    புதுமையாய் ஓடும் ஆறு
    பொருநையைப் பாடு கின்றேன். (12)

    விண்ணினை வாரி வந்து
    வீறுடன் விளங்க , இந்த
    மண்ணிலே தருவன் என்றே
    மனத்திடைக் கொண்டதைப்போல்
    கண்ணிலே நல்ல வண்ணம்
    காணவே பொதிகை மேட்டில்
    பண்ணினைப் பாடிக்கொண்டு
    பாய்ந்திடும் பொருநை வெள்ளம் (13)

    பச்சைமா மலையின் வண்ணம்
    பளிச்சிடும் திருமா லைப்போல்
    உச்சிமேல் வெள்ளை நீத்தம்
    உணர்த்திடும் அரனின் தோற்றம்
    இச்சையாய் இரண்டு பேரும்
    இணைந்தருள் செய்து நிற்க
    விச்சையோ என வியக்க
    மேவிடும் பொருநை வெள்ளம் (14)

    தொன்மையால் பொருள்கள் ஏற்றுச்
    சுமப்பதால், பாசம் காட்டும்
    தன்மையால், மக்கள் தாகம்
    தணிப்பதால், தெளிவு கொண்ட
    நன்மையால், காலம் தாண்டி
    நடப்பதால், உரம்கொ டுக்கும்
    வண்மையால் தமிழைப் போல
    வழங்கிடும் பொருநை வெள்ளம் (15)

    கன்றெனக் குதிக்கும் , சட்டை
    கழற்றிய அரவம் ஊர்ந்து
    சென்றென நடக்கும், பின்னர்
    சினைப்பசு வென்னப் போகும்
    குன்றினை வளைக்கும், மக்கள்
    கும்பியை நிறைக்கும், வாழ்வில்
    ஒன்றிய உறவாய் நெஞ்சில்
    உறைந்திடும் பொருநை வெள்ளம் (16)

    தேடிடும் எதையோ காணச்
    செல்வது போல வேகம்
    ஓடிடும், வரவு கூறி
    ஓமெனக் குரலெ டுத்தே
    பாடிடும், பளிங்கு போலப்
    பரிந்திடும், கரைகள் எங்கும்
    கோடிடும், மக்கள் நெஞ்சில்
    குழைந்திடும் பொருநை வெள்ளம். (17)

    தத்தள தளத ளென்றே
    தாளமும் போடும் ஓர்பால்
    மத்தளம் இசைக்கும் ஓர்பால்
    மௌனமே காட்டும் ஓர்பால்,
    வித்தைகள் காட்டிக் கீழும்
    மேலுமாய்க் குதிக்கும் ஓர்பால்
    இத்தனை வயதென் னாத
    இளமையே பொருநை வெள்ளம் (18)

    மூலிகை தடவி மோந்து
    முன்வரும் நாற்றி லெல்லாம்
    பாலிகை தெளித்துப் பொங்கி
    பாய்ந்திடும் நதியின் பக்கம்
    நாலுகைக் கொண்ட வேழம்
    நற்றுணைத் தாகம் தீர்க்கும்
    சாலிகள் நீர் குடிக்கத்
    தழைத்திடும் பயிர்கள் கூட்டம் (19)

    வீழினும் நன்மை செய்யும்
    மேலவன் போல, மண்ணில்
    தாழினும் நன்மை செய்யத்
    தழைத்திடும் பொருநை நீத்தம்
    பாழினைக் கூட நல்ல
    பசுமையாய் மாற்றி, வாழக்
    கூழினை நல்கி, மக்கள்
    கும்பிடப் பொங்கி ஓடும் (20)

    பயிர்களில் ஜீவன் தூவிப்
    படைப்பதால் பிரமன், பின்னர்
    உயிர்த்தவை காப்ப தாலே
    ஓங்கிடும் திருமால், பொங்கும்
    துயர்தனை மாய்த்து நன்மை
    சூழ்வதால் சிவனார் என்றே
    செயத்தகும் முத்தொழில்கள்
    செய்துமும் மூர்த்தி ஆகும் (21)

    தமிழொடு பிறந்த நீத்தம்
    சரித்திர மாகும், உண்ணும்
    அமிழ்தென ஊட்டம் நல்கும்
    அதன்வழி பசுமை ஆக்கும்
    குமிழியிட் டோடும், தென்றல்
    கூடவே சிந்து பாடும்
    இமிழ்திரைக் கடலில் கூடி
    எல்லையைக் கடந்து போகும் (22)

    Share
  • தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்

    தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    ++++++++++++++++
    [ கட்டுரை : 2 ]
    Image result for Minjur Desalination Plant near Chennai in India
    Minjur Desalination Plant
    Tamil Nadu
    [Click to Enlarge]
    +++++++++++++++++++++
    ++++++++++++++++++++++++
     
     
    Image result for Minjur Desalination Plant near Chennai in India
    நெம்மேலி, சென்னை உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையம்
    [ Nemmeli Desalination Plant, Chennai, Tamil Nadu ]
     

    +++++++++++++++++++++++++++++++++

    சூரிய வெப்ப சக்தி நிலையம்,
    சீரிய முறையில் 
    கடல்நீரைக் குடிநீராக்கும் !
    தமிழகக் கடற்கரை  
    குமரி முதல் சென்னை வரை 
    நானூர் மைல் நீண்டது !
    மாநிலத் துக்கு தேவை நீர் வெள்ளம் 
    பரிதி  வெப்பம் பயன்படும்  
    பெரு முயற்சி அரசிடம் வேண்டும். 
    ஊராட்சி, நகராட்சி மாநில அரசு 
    பாராளும் மன்றத் திட்ட நிபுணர் 
    வேர்வை சிந்தி, நிதி திரட்டி  
    போர் வினைபோல் புரியக் கிளம்புவீர்.  
    பேரு ழைப்பே  பெரும்பயன் அளிக்கும்.
    புவிக்கடல் சூடேறி 
    புரட்சி துவங்கி விட்டது. 
    தவிக்கும் மக்கள் இன்று கேட்பது :   
    தண்ணீர் !  தண்ணீர் ! தண்ணீர் !
    கடல் நீரைக் குடிநீர் ஆக்க
    மீள்நுழை ஆஸ்மா சிஸ் முறை உள்ளது.

    +++++++++++++++++++++++

    மீள்நுழை ஆஸ்மாசிஸ் உப்புநீக்கி நிலையம்
    [ ஸ்பெயின் ]
    ++++++++++++++

    தமிழகத்தில்  கடல்நீரைக் குடிநீராக்கும்  மாபெரும்  மீஞ்சூர் உப்பு நீக்கி நிலையம்

    சென்னை நகருக்கு  வடக்கே இருக்கும் மீஞ்சூர் உப்பு நீக்கி  நிலையம் காட்டுப்பள்ளி கிராமத்தில் 2010 ஜூலை முதல் மீள்நுழை ஆஸ்மாசிஸ் [ Reverse Osmosis Process ]முறையில்  இயங்கி வருகிறது.  இது வங்கக் கடல் நீரை வடிகட்டி,த் தட்டு [Membrane]  மூலம் உப்பை நீக்கிக் குடிநீர் ஆக்கி வருகிறது.  இந்தியாவிலே மிகப்பெரும் நிலைய மாகக் கருதப்படும்  இந்த மீஞ்சூர் உப்புநீக்கி நிலை யத்தைக் கட்டிய இருபெரும் நிறுவகங்கள் : Indian Company IVCRL & Spanish  Company Abengoa.  இதன் உற்பத்தித் தகுமை : நாள் ஒன்றுக்கு 100 மெகா லிட்டர் [10 கோடி லிட்டர்].  2010 ஜூலை 25 முதல் இது இயங்கி வருகிறது. இது ஒரு மில்லியன் [10 லட்சம்] சென்னை வாசிகளுக்கு உப்பு நீக்கிய நீர் அளிக்கக் கூடியது.  இந்த ஒரு நிலையத்தைக் கட்டி இயக்க 5.15 பில்லியன் ரூபாய் [ 515 கோடி] செலவாகி உள்ளது.
    இந்த நிலையம் பயன்படுத்தும் முறை எளியது, சிக்கன மானது. எந்த வித  வெப்பசக்தி இல்லாமல் இயங்குவது.  இது கடல்நீரில் உப்பை வடிகட்ட மிக நுண்ணிய துளைகள் உள்ள 8600 மீள்நுழை ஆஸ்மாசிஸ் தட்டுகள் [Reverse Osmosis Membranes] கொண்டது.  மிக அழுத்த முறையில் வடிகட்ட, 248 அழுத்த கலன்களும், [Pressure Vessels] 23 அழுத்த மாற்றிகளும், [Pressure Exchangers] 5 பேரழுத்த பம்புகளும் [High Pressure Pumps], 16  அழுத்த வடிகட்டிகள் [Pressure Filters] உள்ளன.   மிஞ்சூரிலிருந்து குடிநீர் ரெட் ஹில் சென்றடைய 20 மைல் [33 கி.மீ]  நீள நீண்ட குழல்கள் இணைக்கப் பட்டுள்ளன. சென்னை நகர் நீர் பரிமாற்ற நிறுவகம்  ஒரு கிலோ லிட்டருக்கு ரூபாய் 48.66 சென்னை உப்பு நீக்கி நிறுவகத்துக்குக் கட்டுகிறது.
    நீர் வெள்ளத் தேவைக் கம்பேனிகளுக்கு கிலோ லிட்டர் ரூபாய் 60  விற்கிறது.  அடுத்து ஓர் உப்பு நீக்கி நிலையம், நாள் ஒன்றுக்கு 200 மில்லிய கிலோ லிட்டர் உற்பத்தித் தகுமை உடையது பட்டி புலத்தில்  கட்டுவதாகத் திட்டம் உள்ளது.
    இரண்டாவது உப்பு நீக்கி நிலையம்  சென்னைக்கு அருகில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் [10 கோடி] குடிநீர் அளிக்கும்  தகுதி உடைய நெம்மேலி எனப்படும்.  இது  5 .3 பில்லியன்  [5.33 கோடி] ரூபாய்ச் செலவில் கட்டப் பட்டது. 2013 பிப்ரவரி 22  முதல் இயங்கி வருகிறது.  உப்பு நீக்கச் செலவு : ஒரு கிலோ லிட்டர் ரூபாய் 30.  அடுத்து ஓர் உப்பு நீக்கி நிலையம் அதன் அருகில்  150 மில்லியன் லிட்டர் உற்பத்தித் தகுமை கொண்டது, 1000 கோடி ரூபாயில்  கட்டப் போவதாய்த் திட்டம் உள்ளது.

    Related image

    “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக் குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன் படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோ கித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

    “2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவமடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

    டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

    Schematic of a multistage flash desalinator

    A – steam in       B – seawater in       C – potable water out
    D – brine out (waste)       E – condensate out       F – heat exchange
    G – condensation collection (desalinated water)       H – brine heater
    The pressure vessel acts as a countercurrent heat exchanger. A vacuum pump lowers the pressure in the vessel to facilitate the evaporation of the heated sea water (brine) which enters the vessel from the right side (darker shades indicate lower temperature). The steam condensates on the pipes on top of the vessel in which the fresh sea water moves from the left to the right.

    ++++++++++++++++++++

    Related image

    Image result for solar thermal power plants pros and cons

    நீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்

    2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக் குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்கனலைப் பயன் படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங் களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக் கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.

    +++++++++++++++++++++++++++

    DESALINATION PROCESSES BENEFITS
    MULTI-STAGE FLASH
    (MSF)
    – Used in many desalination plants, suitable for large-scale installations
    – Performance efficiency and output water quality is relatively unaffected by fluctuations in input seawater quality (such as salt concentration and turbidity)
    MULTIPLE EFFECT DISTILLATION
    (MED)
    – Good heat transfer efficiency; uses 40% less energy than reverse osmosis membrane method
    – Performance efficiency and output water quality is relatively unaffected by fluctuations in input seawater quality (such as salt concentration and turbidity)
    REVERSE OSMOSIS
    (RO)
    – The most energy-efficient process
    – Simple configuration can be installed relatively quickly

    Starting with the first desalination plant in 1971, Hitachi Zosen has installed 42 plants to date, mainly in Japan and the Middle East, with a combined output of 1.2 million cubic meters per day.

    +++++++++++++++++++++++++

    நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

    ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.

    கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 16,000 இப்போது [2018] இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

    +++++++++++++++++

    Latest technology: trials of solar heat power generation and desalination system

    A trial will be conducted of a new type of solar-powered desalination system that uses solar heat power generation technology. Solar-powered desalination uses sunlight as the heat source for distilling seawater.

    The trial is due to run from November 2012 to October 2013 in Saudi Arabia, with a view to commercialization of the system from FY 2014.

    +++++++++++++++

    இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்படாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்பு நீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனிமம் நீத்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப் படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன் படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராம நாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.

    WATER DESALINATION


    METHODS
    +++++++++++++
    2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப்படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெரு நிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”
    ++++++++++++++++++

    கல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளி வரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளள வாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.

    2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 217-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 217-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    எழிலாய்க் குந்தியிருக்கும் நந்தியைப் பாங்காய்ப் படமெடுத்து வந்தவர் கீதா மதிவாணன். படக்கவிதைப் போட்டி 217க்கு இதனைத் தெரிவுசெய்து தந்தவர் சாந்தி மாரியப்பன். மாதர்கள் இருவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!

    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள. (குறள்: 527) என்று காக்கையைப் போற்றினார் பொய்யில் புலவர்.

    உறவுபேணுவதில் உயர்ந்த காக்கை இங்கே நந்திக்குத் துணையாய் அமர்ந்து அதனைச் சிந்துபாடி மகிழ்விக்கின்றதோ?

    கவிஞர்களை அழைத்து அவர்தம் கருத்துக்களைக் கேட்டறிவோம்!

    *****

    பறந்துவந்த களைப்பு ஒருபுறமிருப்பினும் நந்தியின் நீண்ட வாழ்க்கையின் இரகசியம் அறியும் ஆவலில் அருகமர்ந்திருக்கும் காகத்தை நமக்கு அறிமுகம் செய்கிறார் முனைவர் ம. இராமச்சந்திரன்.

    காலமும் கரைத்துத் தான் பார்த்தது
    கடந்து நிற்கும் சிலையும்
    மறைந்து நிற்கும் வரலாறும்!

    மனிதச் சிந்தனைக்கு எட்டாத அறிவில்
    சற்று முயற்சிக்கத் துணியும் பறவை

    ஏதேனும் உணர்ந்து விட்ட துணிவில்
    பறந்த களைப்பு காற்றோடு போனாலும்
    வரலாற்றுத் தடத்தில் தன் சிந்தை
    விலக மனமற்று அமர்ந்திருக்கும் அது!

    மன்னனின் ஆசையில் முகிழ்த்த சிலை
    அவன் மறைந்தும் தான் வாழும்
    மகத்துவத்தை உலகுக்குக் காட்டும் விந்தை!

    நீண்ட வாழ்தலின் ரகசியம் கேட்டு
    ஒரு பறவையின் நீண்ட நிற்றல்
    வெற்றிகிட்டும் என்ற நப்பாசையில்!

    *****

    ”கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்டு, காற்றும் வெயிலும் காக்கை குருவியின் எச்சமும் பட்டு அவதியுறும் இக்கற்சிலை உணர்த்துவது, வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்பதே!” என்று வாழ்க்கைத் தத்துவத்தை நவில்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இன்றே நன்று…

    காலக் கறையான் அரிப்புக்குக்
    கோவில் சிலையும்
    விதிவிலக்கல்ல..!

    கும்பிடும் சிலையும்
    கைவிடப்படுகிறது
    ஊனம் உடலில் வந்துவிட்டால்,
    கருவறைப் பாதுகாப்பிலிருந்து
    வெளியேற்றப்பட்டு
    கடும் வெயில்
    காற்றுமழைப் பாதிப்பிலும்
    காக்கை குருவி எச்ச
    அவமதிப்பிலும் அவதிப்படுகிறது..!

    கற்றுக்கொள் மனிதா
    நிரந்தரமல்ல எதுவும்,
    நடப்பு வாழ்வில்
    கிடைப்பதை வைத்து
    நன்றாய்ச் செய்,
    அதுவும்
    இன்றே செய்…!

    *****

    ”பலரின் குறைதீர்த்த ஈசனின் வாகனம் இன்று கண்கூசும் வெயிலில் காய்வதுகண்ட காகம் மனம்வருந்தி, ”உன் துயர்தீர்க்கும் நபர்தேடிச் செல்வேன்; அவர் காதுகளில் உன் துன்பம் சொல்வேன்!” என்றெண்ணிக் கரைவதாய் உரைக்கிறார் திரு. சுந்தர்.

    தூதுவனின் தூதுவன்!

    ஈசனின் வாகனமாம்
    காலனின் தோழனாம்
    இன்புற்றோரின் யாசகங்களை
    மகேசனின் செவிமடிக்குக்
    கொண்டு சேர்க்கும் தூதுவனே!
    நந்தி கேசவனே!
    குறைதீர்க்கும் மகேஸ்வரனே…!
    கற்சிலைக்கும் கேட்கும் திறனுண்டு
    இப்பூவுலகில் பரவிக்கிடக்கும்
    மாந்தர் கூட்டமே!
    உன் மனக்குறைகளையும், பேராசைகளையும்
    குறைவில்லாமல் கொட்டிவிடு
    மனநோய்க்கு வேறு சிறந்த மருந்தில்லை
    (கடவுள்)நம்பிக்கையைத் தவிர
    என்ற சான்றோரின் சிந்தனைக்கு
    உன் சிற்பமும் ஒரு சான்றுதானே?
    முயலாமை என்னும் ஆற்றைக்
    கடக்காமல்
    முயற்சி என்னும் கடலில் நீந்த முடியாது
    என்பதறியா மடவர் தான்
    குறுக்கு வழியில் யாசகம் செய்வாரோ?
    அவர்கள் பெற்ற யோகத்தின் சாபம் தான்
    உன் சிதலடைந்த சிற்பமோ?
    பலரின் குறைதீர்த்த உன் நிலமை
    இன்று படுமோசமோ?
    எனக்கும் செவியுண்டு பேசும் திறனுண்டு
    பறக்கும் சிறகுண்டு அதுவல்லாத்
    தன்னலமில்லா மனமுண்டு!
    நீ படும்துயரினை
    எவரொரருவர் தீர்ப்பாரோ
    அவர் செவிகளுக்கு
    நான் சென்றுரைக்கிறேன்…..!

    *****

    காகத்தையும் காளையையும் மையமாய் வைத்துத் தம் கற்பனைச் சிறகுகளை அற்புதமாய் விரித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு உரித்தாகின்றது.

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…

    ஒரு பறவையின் பெருந்தன்மை…

    ஈசனுக்கு அடியானே.. உனை இதயம் கவர
    வடித்த சிற்பி இன்றில்லை.. இருந்திருந்தால்..
    அவன் இதயமே நின்று போயிருக்கும்..
    பொலிவிழந்த உன் நிலை கண்டு..!!

    தமிழன் ஓர் அடிமுட்டாள்.. தான்
    வாழ்ந்த வரலாற்றை பாதுகாக்கத் தெரியவில்லை..
    வெள்ளையனால் வீழ்ந்ததைப் போற்றிக் காக்கிறான்..
    பூம்புகாரைப் போற்றவில்லை.. கீழடியைக் காக்கவில்லை..!!

    கயவர் கூட்டத்தாலும்.. கால வெள்ளத்தாலும்..
    மறைந்த திரவியங்கள் ஏராளம்.. ஏராளம்..!
    இருக்கின்ற சிலவற்றையேனும் பேணாமல் தனது
    வரலாறு அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறான்..!!

    நல்லதை விட்டுவிட்டு நாகரிகமென்ற பெயரில்
    நரகத்திற்கு ஒப்பான பண்பாடுகளில் திளைக்கிறான்..
    தாய்மொழி கற்றுத்தராததை வேற்று மொழிகள்
    தந்திடுமென நம்பி ஏமாந்து போகிறான்..!!

    நந்தியே..! சிதிலமடைந்த உன்னைத் தமிழன்
    நட்டாற்றில் விட்டுவிட்டதாய் நீ எண்ணிவிடாதே..
    நானிருக்கிறேன்.. வானவில்லின் வண்ணங்களைக் கொணர்ந்து
    என் சிறகுத்தூரிகையால் உன்னை மெருகேற்றுகிறேன்..!!

    தன் வரலாற்றை ஆவணப்படுத்தாது அலட்சியமாய் விட்ட தமிழன் தன் கலைகளையும் புரக்காது விட்டான். விளைவு? அரிய கலைப்படைப்பான நந்தி காப்பின்றி வெட்டவெளியில் வாடிக்கிடக்கின்றது. ”கவலாதே நண்பா! உனக்கு என் சிறகுத் தூரிகையால் வண்ணந்தீட்டி மகிழ்விப்பேன்!” என்று அதன் காதோரம் கிசுகிசுக்கும் காகத்தை நயமாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • Obituary: Dr. Ayyadurai Dhamotharan (1935-2019)

    Obituary: Dr. Ayyadurai Dhamotharan (1935-2019)

    Dr. A. Dhamotharan, a Tamil scholar and former Lecturer of Tamil at  Heidelberg University, passed away on Friday, the 14th of June 2019, at the age of 84 in his hometown Thirumoolasthanam, Kattumannarkoil, Tamil Nadu.

    Dhamotharan completed his schooling in and around his native town and  went to Annamalai University for higher studies. There, he earned his  B.A. (Honours) in Tamil literature (1956-59). Then, serving as a lecturer of Tamil in a college for two years, he enrolled for Ph.D. under the guideship of Prof. V.I.Subramoniam, Department of Tamil, University of Kerala. His topic of research was “The Language of Thirukkural”, a well-known classical text in Tamil. To which he applied the syntactic theory, Tagmemics, expounded by the American linguist Kenneth L. Pike, who was all helpful in sending research materials related to theoretical and applied Tagmemics. Dhamotharan submitted his Ph.D. thesis in 1966. The external examiner for his thesis was Prof. Kamil V. Zvelebil, who highly commended it. While Dhamotharan was working as a lecturer (1967-68) at the Centre for Advanced Studies in Linguistics in Annamalai University, his alma mater, he got an invite from the South Asia Institute to join the language faculty.

    In 1969, Dr. Dhamotharan was appointed as Lecturer of Tamil at the South Asia Institute of Heidelberg University, Germany, by the then head of the Department of Indology Prof. Hermann Berger on the recommendation of the great Tamil and Dravidian scholar Kamil V. Zvelebil. With the appointment of Dr. Dhamotharan at Heidelberg University and Dr. P.R. Subramanian, Lecturer at Institute of Indology, University of Koeln (1972-83), Tamil Studies in Germany made a progress.

    Dr. Dhamotharan worked at Heidelberg University for the next 30 years. He mastered the German language very quickly. During the ensuing three decades he taught Tamil to German students in the medium of German on all levels of the then Master’s program of Indology. While teaching Tamil in a German environment for so many years, Dr. Dhamotharan developed a fine sense of Tamil and German lexicality. He put this linguistic acquisition in use in many Tamil-German translation classes with texts of his favourite Tamil author Jeyakanthan for the great benefit of his students. He also started working on a German-Tamil dictionary. Unfortunately, this project could not be completed.

    During his time at Heidelberg University, Dr. Dhamotharan co-supervised all Tamil Ph.D. projects done at the South Asia Institute; for instance, the theses on Tamil guardian deities by Eveline Meyer, on Tamil reduplication by Thomas Malten, on the grammar of Old Tamil by Thomas Lehmann, and on the Tamil verbal participle and infinitive by Jacques Deigner.

    His main research interest was the editorial work of the medieval Tamil grammatical text Naṉṉūl and its various commentaries. But, first he painstakingly collected the Thirukkural quotes employed by various commentators. He classified those quotes according to the purpose for which they were cited, and his work got published in 1970. Having published also his Grammar of Thirukkural (South Asian Studies No.5, University of Heidelberg, 1972) and a Bibliography of Tamil dictionaries in 1978, Dr. Dhamotharan prepared two fine editions of the Tamil grammatical text Naṉṉūl with the commentary by Kūḻaṅkaittampirāṉ (considered lost, till he found the mss at British library and copied it in his own, highly legible handwriting and published it as it is) in 1980 and with the Viruttiyurai commentary by Caṅkaranamacivāyar (with additions of Civañāṉa Muṉivar) in 1999. In his editorial work he was highly accurate and meticulous and showed his high degree of exact scholarship. In his 1999 edition of Naṉṉūl, Dhamotharan introduced a new feature in Tamil text editing and the format was well received in Tamil Nadu.

    In the year 2000, Dr. Dhamotharan retired from Heidelberg University at the age of 65 and one year later in 2001 he returned to Tamil Nadu. Known for his great expertise in Tamil text editing, he was invited by the Central Institute of Classical Tamil, Chennai, to participate in their project of preparing definite (critical) editions of classical Tamil texts.

    The task of preparing a critical edition of the 8th century text Iṟaiyaṉār Kaḷaviyal was entrusted to him, which he did diligently by comparing the available palm-leaf manuscripts (published in 2013). He worked as a consulting editor for the Tamil Lexicon revision project by Madras University and also for the revised and enlarged edition of Cre-A’s Dictionary of Contemporary Tamil (2008). He served as Honorary Professor at the International Institute of Tamil Studies (2001) and as a trustee of Mozhi, A Trust for Resource Development for Language and Culture, Chennai (2003–07). He brought out another edition of Kūḻaṅkaittampirāṉ’s commentary on Naṉṉūl with additions and notes (Cre-A, 2010).

    Though he had a good grounding in modern descriptive linguistics, his outlook and approach were more historical which helped him delve into the grammatical traditions of Tamil medieval commentaries.

    Because of illness he lived the last few years of his life secluded at his native place in Tamil Nadu. He will always be remembered as an excellent and patient teacher, a fine and erudite scholar and a good friend to many Tamil students and scholars both in Germany and India. He is survived by his wife and two sons. He has been blessed with granddaughters and grandsons.

    Dr. Thomas Lehmann
    South Asia Institute, Heidelberg

    Dr. P.R. Subramanian
    Mozhi Trust, Chennai

    ========================================================

    A Grammar of Tirukkural – e-book

    http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU2lJhy&tag=#book1/

    Share
  • சாதித்துக் காட்டிய சாரா ப்ளேக்லி (Sara Blakeley)

    சாதித்துக் காட்டிய சாரா ப்ளேக்லி (Sara Blakeley)

    நியாண்டர் செல்வன்

    12ஆவது முடித்தபின் சட்டப் படிப்பில் சேரலாம் என நினைத்தேன். மதிப்பெண் குறைவாக இருந்தது. அதனால் டிஸ்னிலாண்டில் வாடிக்கையாளரை வரவேற்கும் வேலையில் சேர்ந்தேன். ஸ்டாண்ட் அப் காமடியை முயன்றேன். அதன்பின் பேக்ஸ் மெசின் விற்கும் கம்பனியில் சேர்ந்து கடை, கடையாக ஏறி பேக்ஸ் மெஷின் விற்றேன். அது நிலையான வேலை இல்லை. விற்பனையைப் பொறுத்துத் தான் வருமானம்.

    பெண் என்பதால் விரைவில் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிடுவேன் எனத்தான் வீட்டில் நினைத்தார்கள். காதலனும் விரைவில் திருமணம் செய்யலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

    இந்தச் சூழலில் ஒரு நாள் பார்ட்டி ஒன்றுக்கு சீ த்ரூ வெள்ளை ஸ்கர்ட் அணிந்து போக வேண்டும். அதற்கு டைட்டான கருப்பு உள்ளாடை அணிந்து போனால் பின்புறம் எடுப்பாகத் தெரியும் என நினைத்தேன். சந்தையில் அப்படி எந்தப் பொருளும் இல்லை. நாமே தைத்தால் என்ன என யோசித்து பார்ட்டிக்குக் கூட போகாமல் உட்கார்ந்து தைத்தேன். நல்ல எடுப்பாக இருந்ததாக எல்லாரும் சொன்னார்கள்.

    இந்த உள்ளாடையைச் சந்தைக்கு கொண்டுவந்தால் என்ன எனத் தோன்றியது. ஆனால் கையில் பணம் இல்லை. தொடர்புகள் இல்லை. நான் ஒரு சாதாரண பேக்ஸ் மெசின் விற்பனைப் பிரதிநிதிதான். பொருளை உற்பத்தி செய்யக்கூட ஒரு பாக்டரி அவசியம். கையில் விதவிதமான சாம்பிள்கள் இல்லாமல் எப்படி துணிக்கடைகளை அணுக முடியும்?

    வார இறுதி நாட்களில் துணி உற்பத்தி செய்யும் மில்களுக்குப் படையெடுத்தேன். என் ஐடியாவை உட்கார்ந்து கேட்கக்கூட யாரும் முன்வரவில்லை. அதன்பின் அந்த ஸ்பின்னிங் மில் முதலாளிகள், உணவு இடைவேளையில் வெளிவரும் நேரம், ஆபிஸில் காரில் ஏறும் நேரம் எனப் பார்த்துப் பிடித்து என் ஐடியாவை விளக்க நேரம் கேட்டேன். பத்து நொடிகள்தான் கிடைக்கும். அந்த 10 நொடிகளுக்குள் அவர்களைச் சிரிக்கவைத்தால் இன்னும் 10 நொடி கூடுதலாகக் கிடைக்கும். ஐடியாவை கேட்ட அனைவரும் உதட்டைப் பிதுக்கினார்கள். “இதெல்லாம் மிக எளிமையான உள்ளாடை. விற்காது. விற்றாலும் யார் வேண்டுமானாலும் காப்பியடித்து எளிதில் போட்டிக்கு வந்துவிடுவார்கள்” என்றார்கள். அவர்கள் அனைவரும் ஆண்கள். பெண்களுக்கு இம்மாதிரி உருவத் தோற்றத்தை மேம்படுத்தும் பொருள்கள் எத்தனை முக்கியம் என அவர்களுக்குத் தெரியவில்லை.

    பல மாதங்கள் முயன்றபின் ஒரு மில் முதலாளியைச் சந்தித்தேன். அவருடன் 1 நிமிடம் மட்டுமே பேசினேன். முதலாளி ஐடியாவைக் கேட்டுவிட்டு, முடியாது என்றார். விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். காரில் ஏறுகையில் அழுகையாக வந்தது…. அப்போது அவர் பின்னால் வந்தார். “எனக்கு மூன்று பெண்கள். உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. உனக்கு சாம்பிள்கள் தயாரித்துக் கொடுக்கிறேன். அதன்பின் உன் அதிர்ஷ்டம்” என்றார்.

    அதன்பின் கையில் இருந்த $750 போட்டு சின்னதாக கம்பனி ஒன்றைப் பதிவு செய்தேன். ஸ்பான்க்ஸ் எனும் பிரண்டு பெயரையும் பதிவு செய்தேன். துணிக்கடை ஒன்றில் சாம்பிள்களைக் காட்டிச் சின்னதாக ஆர்டர் ஒன்றை வாங்கினேன். அது மிகப்பெரும் செயின். உள்ளூரில் உள்ள ஒரு கடையில் இதை விற்க முன்வந்தார்கள். பொருளைக் கொடுத்ததுடன் கடமை முடிந்தது என இருக்காமல் கடைக்குப் போய் அங்கே வரும் வாடிக்கையாளரிடம் என் பொருளை நானே டெமாண்ஸ்ட்ரேட் செய்து விற்றேன்.

    கொஞ்சம், கொஞ்சமாக விற்பனை சூடு பிடித்தது. அதன்பின் என் வேலையை விட்டுவிட்டு, துணிக்கடையில் தவமிருந்து பொருளை விற்றேன். விற்பனை சூடுபிடிக்க, பிற கிளைகளில் விற்க முன்வந்தார்கள். அங்கெல்லாம் சென்று பொருளை நானே கடையில் நின்று விற்றேன். முதலாண்டு $4 மில்லியன் அளவுக்கு விற்பனை.

    அதுவரை வீட்டில் நான் இதை எல்லாம் செய்ததே யாருக்கும் தெரியாது. நண்பர்களுக்குத் தெரியாது. காதலனுக்குத் தெரியாது. சொல்லியிருந்தால் “எதுக்கு வெட்டி வேலை? இருக்கும் வேலையைப் பார். கல்யாணம் செய்துகொள், இது எல்லாம் உருப்படாது” எனத்தான் சொல்லியிருப்பார்கள்.

    ஆனால் முதலாண்டில் $4 மில்லியன் விற்பனையைச் சாதித்தபின் வீட்டில் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தாலும், அதன்பின் அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு உதவ முன்வந்தார்கள். கையில் இருக்கும் பணத்தைப் புரட்டிக் கொடுத்தார்கள். காதலன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரம் என் கம்பனியில் பணியாற்றினார். இரண்டாமாண்டு $10 மில்லியன் விற்பனை. பிராண்டு வளர்ந்தது. விளம்பரம் செய்தோம். பல கடைகளை அணுகினோம். ஏழாம் ஆண்டில் என் 30ஆவது வயதில் என் முதல் பில்லியன் டாலரைச் சம்பாதித்தேன்.

    போர்ப்ஸ் பத்திரிகை, என்னை உலகின் 93ஆவது வலிமை வாய்ந்த பெண்ணாகத் தேர்ந்தெடுத்தது. இன்று என் கம்பனி, விற்பனையில் சக்கைபோடு போடுகிறது. எனக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    டிஸ்னிலாண்டில் வாடிக்கையாளரை வரவேற்கும் பணியில் இருந்த, பள்ளி இறுதியை மட்டுமே தொட்ட ஒரு பெண்ணால் 30 வயதில் பில்லியனர் ஆக முடிகிறது என்றால் உங்களால் ஏன் நீங்கள் விரும்பும் உயரத்தைத் தொட முடியாது?

    Share
  • (Peer Reviewed) சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு

    (Peer Reviewed) சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு

    முனைவர் சு. சரவணன்
    ஆய்வறிஞர்,
    பிரெஞ்சு ஆசியவியல் நிறுவனம், புதுச்சேரி.

    சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு

    எதிர்மறை என்பது உடன்பாடான கருத்திற்கு மறுதலையான கருத்தினை வெளிப்படுத்துவதாகும். இது வினைச்சொல்லமைப்பில் வெளிப்படுவதாகும். சங்கத் தமிழிலக்கியங்களில் அமைந்துள்ளதன்படி எதிர்மறையினை மொழியியல் அடிப்படையில் இருவகையில் ஆய்வு செய்யமுடியும். 1. உருபனியல் ஆய்வுமுறை, 2. தொடரியல் ஆய்வுமுறை. உருபனியல் ஆய்வில் எதிர்மறையானது ஒரு சொல்லுக்குள்ளேயே எதிர்மறை உருபால் உணர்த்தப்படுகின்றது (செய்யலன், சூழேன், செய்யான், செய்யாதான், வாரல் போன்றவை). தமிழ் மரபிலக்கணங்கள் சிலவும் அதற்கான எதிர்மறை உருபுகளைத் தந்துள்ளன.

    தொடரியல் ஆய்விலும் எதிர்மறை ஒரு சொல்லுக்குள்ளேயே எதிர்மறை உருபினால் உணர்த்தப்பட்டாலும் அச்சொல் மட்டுமின்றி இன்னொரு சொல்லும் எதிர்மறையை உணர்த்துவதில் பங்குகொள்கிறது. இதனாலேயே இது உருபனியல் ஆய்விலிருந்து வேறுபட்டுத் தொடரியல் ஆய்வினை மேற்கொள்ள இடந்தருகின்றது. ஆயினும், பல்வேறு வகையில் தொடரியல் நிலையில் பெயர்ச்சொற்களைத் தொடர்ந்து எதிர்மறை, பழந்தமிழில் காணப்பட்டாலும் அவையெல்லாம் இங்கு எடுத்துக்கொள்ளப்படாமல் வினைச்சொற்களைத் தொடர்ந்து வருகின்ற ஒருசில தொடர்களே எடுக்கப்படுகின்றன. குறிப்பாகச் சொல்லப் போனால் எதிர்மறையை ஒருசொல்லால் பதிலீடு செய்யக்கூடிய இடங்களில் தொடர்நிலையில் எதிர்மறை வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களே பெரும்பான்மையாகக் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.

    இக்கட்டுரையில் எடுத்தாளப்படும் எதிர்மறைத் தொடர்கள் சிறப்பாகச் செய்யுள் வழக்கிற்கு உரியவை என்றும் குறிப்பிடலாம். இவை தற்காலத்தில் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படவில்லை. ஆனாலும் மாற்று இலக்கண வடிவங்களில் தொடர்நிலையில் இவைபோன்ற தொடரமைப்புகள் தற்காலத் தமிழில் பேசுபவரின் மனநிலைக்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றன. அவை கீழே சுட்டப்படும். இக்கட்டுரையில் குறிப்பிடப்படாத ஏனைய எதிர்மறைத் தொடர்களும் பழஞ்செய்யுட்களில் பயின்றுவந்துள்ளன என்றாலும் அவை பெரும்பாலும் இன்று பேச்சுவழக்கிலும் அவ்வாறே காணப்படுகின்றன. அதனாலேயே அவை இங்கு எடுக்கப்படவில்லை.

    இங்குச் சுட்டிக் காட்டப்படுபவை; இரண்டு சொற்களில் இரண்டும் எதிர்மறையினை உணர்த்தும் வகையில் அமைவது (உண்ணேன் அல்லேன் – இவ்வாறு இரண்டு எதிர்மறை வடிவங்கள் அமைந்து பொருளளவில் உடன்பாட்டுப் பொருளினைத் தருகின்றது). இரண்டு சொற்களில் முன்னது உடன்பாடாகவும் பின்னது எதிர்மறை வடிவத்திலும் அமைந்து எதிர்மறைப் பொருளைத் தருவது (உண்பேன் அல்லேன்). இவ்விருவகையில் வரும் சொற்களிலும் பாலியைந்து எதிர்மறையை உணர்த்துவதை அறியலாம். இவ்வாறன்றித் தொழிற்பெயரைத் தொடர்ந்து அதே சொற்பொருள் வடிவமுடைய சொல் எதிர்மறையில் வருவது (உண்ணலும் உண்ணேன்). தொழிற்பெயரை அடுத்து வேறு வடிவத்துடன் எதிர்மறைச்சொல் வருவது (எடுக்கல் செல்லாது) என்று நால்வகையில் அமைந்த எதிர்மறைகளைத் தொடரியல் அணுகுமுறையில் சங்கத் தமிழிலக்கியத்திலிருந்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    இரண்டு சொற்களும் எதிர்மறை வடிவத்தில் வருவது

    ’அறியேம் அல்லேம்; அறிந்தனம் மாதோ! -ஐங். 240

    ’காணேம் அல்லேம், கண்டனம், கடத்திடை’-கலி. 9: 9

    மேற்கண்ட தொடர்களில் இரண்டு சொற்களும் எதிர்மறையில் வந்துள்ளன. ஆயினும் இரண்டு சொற்களும் சேர்ந்து பொருளுணர்த்தும்போது அப்பொருள் உடன்பாட்டில் வருகின்றது. ’அறியேம் அல்லேம்’ என்னுஞ் சொற்கள் எதிர்மறை வடிவங்களில் அமைந்து ‘அறிந்தோம்’ என்னும் உடன்பாட்டுப் பொருளைத் தருகின்றன. மேலும் அத்தொடரில் ‘அறிந்தனம்’ என்ற உடன்பாட்டுச் சொல்லும் எதிர்மறை வடிவங்களைத் தொடர்ந்து வந்துள்ளது. இச்சொல் இல்லாமலும் அவ்விரண்டு சொற்களும் உடன்பாட்டினை உணர்த்துவதை அறியலாம். ஆயினும் உரையாசிரியர்கள், தேற்றத்திற்காக ‘அறிந்தனம்’ என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று விளக்குகின்றனர். இதே நிலையினைத் தான் இரண்டாவதாக உள்ள ’காணேம் அல்லேம்’ என்ற எதிர்மறைச் சொற்கள் இடம்பெற்ற தொடரிலும் காணமுடிகின்றது. இதுபோன்ற இரட்டை எதிர்மறைச் சொற்கள் இடம்பெற்று உடன்பாட்டினை உணர்த்தும் வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பது உரையாசிரியர்கள் கூறியதுபோல் தேற்றம் என்னுங் காரணமுமாகலாம் என்று கொள்ள முடிகின்றது. இவற்றை இரட்டை எதிர்மறை என்றும் அவை இரண்டும் சேர்ந்து உடன்பாட்டை உணர்த்துகின்றன என்றும் சுசீலா (2001: 43) குறிப்பிடுகின்றார்.  இரட்டை எதிர்மறையால் உடன்பாட்டுத் தேற்றம் உணர்த்தப்படுகின்றது என்கிறார் ஏவா வில்டன் (2018: 153).

    தற்காலத் தொடர்களுடன் இவற்றை ஒப்பிடும்போது பேசுபவரின் மனநிலையால் தேற்றப் பொருளை உணரமுடிகின்றது. பழந்தமிழ்த் தொடர்களில் முதற்சொல் வினைமுற்றமைப்பாக வும் இரண்டாவது சொல் குறிப்பு எதிர்மறை முற்றாகவும் அமைகின்றன. தற்காலத் தொடரமைப்புகளில் முதற்சொல் வினைமுற்றமைப்பில் வராமல் இலக்கண வடிவங்களில் வேறுபட்டு வருகின்றது.

    நான் அவனிடம் பேசாதவன் இல்லை – பேசுகிறவன் (பேசுறவன்)

    நான் அவனிடம் பேசாதவன் கிடையாது – பேசுகிறவன் (பேசுறவன்)

    மேற்கண்டவற்றுள் வினையாலணையும் பெயரமைப்பில் ஒருசொல்லும் குறிப்பு வினை முற்றில் ஒருசொல்லும் எதிர்மறையில் வந்து பாலியைபிலும் வேறுபடுகின்றன. ஒற்றைச் சொல்லாக வருகின்ற உடன்பாட்டுச் சொல்லும் வினையாலணையும் பெயராகவே வருகின்றது. இங்குத் தேற்றப்பொருளே வெளிப்படுகின்றது. இப்பொருளையே பழந்தமிழ்த் தொடரமைப்புகள் வெளிப்படுத்தும் பொருளாகக் கருதலாம். மேலும்,

    நான் அவனிடம் பேசாமல் இல்லை பேசுகிறேன்

    எனத் தற்காலத் தமிழில் வினையெச்ச அமைப்புடன் சேர்ந்தும் இரட்டை எதிர்மறை வந்து உடன்பாட்டுப் பொருளைத் தருகின்றது.

    மேலும், ராஜம் (1992: 763) தொடரமைப்பில் எதிர்மறைக்காக,

    தோன்றாது இருக்கவும் வல்லன்’    -புறம். 315: 5

    என்னும் புறநானூற்று வரிகளை எடுத்துக்காட்டி வினையெச்சத்தில் எதிர்மறை வந்துள்ளதைச் சுட்டுகின்றார் (எதிர்மறை வினையெச்சம் + செயவெனெச்சம்). ஆயினும் இத்தொடரை வினையமைப்பில் ஒற்றைச் சொல்லினால் பதிலீடு செய்யமுடியாது.

    தற்காலத் தமிழிலும்,

    வராமல் இருக்க வேண்டும்,

    பேசாமல் இருக்க வேண்டும்

    என்னுந் தொடர்களின் பயன்பாட்டைக் காணமுடியும்.

    ஒருசொல் மட்டுமே எதிர்மறை வடிவத்தில் வருவது

    இரண்டில் ஒருசொல் மட்டுமே எதிர்மறை வடிவத்தில் வர ஒருசொல் உடன்பாட்டில் வந்து இரண்டும் சேர்ந்து எதிர்மறையை உணர்த்துவதாகும்.

    செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே -குறும். 43:1

    விலங்கிரு முந்நீர் காலிற் *செல்லார் -குறும். 130:2

    ஈயாய் ஆயினும் இரங்குவேன் அல்லேன் –புறம். 209: 13

    செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்    -புறம். 31:11

    ’செல்வார்’ என்னும் உடன்பாட்டுச்சொல் ’அல்லர்’ என்னும் எதிர்மறைச் சொல்லுடன் இணைந்து ’செல்லமாட்டார்’ என்னும் எதிர்மறைப் பொருளைத் தருகின்றது. ஆயினும் ’செல்வார் அல்லர்’ என்ற இரண்டு சொற்களுக்குப் பதிலாகச் ’செல்லார்’ என்ற ஒற்றைச் சொல்லாலும் எதிர்மறையை உணர்த்தும் வகையில் பதிலீடு செய்ய முடியும். மேலும் அந்த ஒற்றை எதிர்மறைச் சொல்லும் குறுந்தொகையில் இடம்பெற்றிருப்பது மேலே காட்டப் பட்டுள்ளது. இதுபோலவே ‘இரங்குவேன் அல்லேன்’, ’செல்வேம் அல்லேம்’ என்ற தொடர்களையும் கொள்ள வேண்டியுள்ளது. எதிர்மறையை உணர்த்தத் தொடர்ச்சொற் களுக்குப் பதிலாக ஒற்றைச் சொல்லால் எதிர்மறை சில இலக்கியங்களில் பதிலீடு செய்யப்பட்டிருப்பதைக் காணும்போது தொடர்ச்சொற்கள் யாப்பமைதிக்காகவேயன்றிப் பேசுவோரின் பல்வேறுபட்ட மனநிலையை வெளிப்படுத்தும் நோக்கிலுங்கூடச் சங்க இலக்கியத்தின் சிலவிடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை ஊகிக்க முடிகின்றது. மேற்கண்ட இரண்டு வகைகளிலும் இரண்டு சொற்களும் பாலியைபு கொண்டனவாக அமைந்து எதிர்மறையை உணர்த்துவதைக் காணலாம். இவ்வகையில் வருகின்ற எதிர்மறைத் தொடர்களை ‘இறப்பல்லாக்கால உடன்பாட்டுத் தொடர்கள் + அல் எனப் பகுப்பாய்வு செய்கிறார் சுசீலா (2001: 31).

    தற்காலத் தமிழிலும் இவைபோன்ற எதிர்மறைத் தொடர்களை வேறுபட்ட இலக்கணக் கூறுகளுடன் பாலியைபு இல்லாமல் காணமுடியும். வினையாலணையும் குறிப்புவினை முற்றுடன் முடியுமாற்றைக் காணமுடியும்.

    அவன் படிப்பவன் இல்லை

    அடித்தாலும் அவன் திருந்துபவன் இல்லை

    பணம் கொடுத்தாலும் அவர் பொய்சொல்பவர் இல்லை.

    போன்ற தொடர்கள் சூழலுக்கேற்பச் சொல்வோரின் பல்வேறு வகையான மனநிலையைக் காட்டுகின்றன. இந்த நோக்கில்கூட பழந்தமிழிலும் மனநிலைகளை வெளிப்படுத்தப் புலவர்கள் இவைபோன்ற சிலதொடர்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருத முடியும்.

    மேலும், கோதண்டராமன் (2010: 275) ”இறப்பு அல்லது இறப்பல்லா உடன்பாட்டு வினைமுற்று அமைப்புடன் அல்லன், அல்லள், அல்லர் போன்றவை இணைந்து வரும். ஆனால் செய்யும் வாய்பாட்டுடன் வாராது” எனக் குறிப்பிடுகின்றார். ’செய்யும்’ என்னும் சொல்லுடன் ’அல்லது’ என்னுஞ் சொல் இணைந்து வரும்போது (செய்யுமல்லது) அந்த இணைவு பெற்ற வடிவம் எதிர்மறையை உணர்த்தாமல் செய்வதல்லது என்பது போல் ‘தவிர’ என்ற பொருளை உணர்த்துவதனால் அவர் செய்யும் வாய்பாட்டின் விடுபாட்டினைக் குறிப்பிட்டுள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

    இரண்டு சொற்களும் ஒரே சொற்பொருளில் வந்து இரண்டாவது சொல்லில் எதிர்மறை

    இரண்டு சொற்களும் வடிவத்திலும் பொருளிலும் ஒற்றுமைப்பட்டு இரண்டாவது சொல் எதிர்மறையாக வந்து இரண்டும் சேர்ந்து எதிர்மறைப் பொருளை உணர்த்தும் நிலையைச் சங்கத்தமிழில் காணமுடியும். இவற்றில் முதற்சொல் –’உம்’ சேர்ந்த தொழிற்பெயராகவும் இரண்டாவது சொல் திணை-பால் உணர்த்தும் எதிர்மறைச் சொல்லாகவும் அமைந்து வருகின்றன.

    ’இனியான்

                            உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன்’ -கலி. 23: 6-7

    ’உண்ணலும்’ என்று உடன்பாட்டுத் தொழிற்பெயராகவும் ‘உண்ணேன்’ என்று எதிர்மறை முற்றாகவும் வந்து இரண்டும் இணைந்து எதிர்மறைப் பொருளான ‘உண்ணமாட்டேன்’ என்பதை உணர்த்துகின்றன. இதே முறையினைப் பின்னர் உள்ள ‘வாழலும் வாழேன்’ என்பதற்கும் பொருத்த வேண்டும். ஆயினும் ‘உண்ணேன், வாழேன்’ என்னும் வினை வடிவங்கள் ‘செய்’ என்னும் வாய்பாட்டு வடிவமாக வந்து ’உண்ணலைச் செய்யேன், வாழலைச் செய்யேன்’ என்று வரவேண்டும் அல்லது ’உண்ணல், வாழல்’ என்னும் வினைகளின் உண்மையான வினைவடிவ முற்றுகளான ’உண்ணேன், வாழேன்’ என்றும் வரலாம் என நச்சினார்க்கினியார் குறிப்பிடுகின்றார். ”வனைந்தான் என்பது ‘குடத்தை வனைதலைச் செய்தான்’, என்று பொருள் தந்துழிச் ’செய்தான்’ என்றதன் தகரங் காலங் காட்டித் தொழிலைத் தோற்றுவித்தவாறும், ‘வனை’ என்னும் வினை காலங் காட்டாமல் நின்றவாறும், ‘வனைதல்’ என விரிந்துழியும் புடைபெயர்ச்சி மாத்திரம் அன்றிக் காலங் காட்டாமல் நின்றவாறும் உணர்க. காரியத்திற்கு யாண்டுங் காலங் காட்டும் எழுத்துக்களோடு கூடிய ‘செய்’ என்பதே வாசகம் என்று உணர்க. இக்காரிய வாசகம், இவ்வாறன்றி ஒருசொல் முழுவதும் தானாய் நிற்பனவும் உள. அவை, ‘கறைமிட றணியலும் அணிந்தன்று’ (புறம். 1:5) என்புழிக் ‘கறை மிடற்றை அழகு பெறுதலையுஞ் செய்தது’, எனவும், ‘இனியான் உண்ணலும் உண்ணேன்’ (கலி. 23:7) என்புழி, ‘இனி யான் சோற்றை உண்ணுதலையுஞ் செய்யேன்’, எனவும், ‘வாழ்தலும் வாழேன்’ (கலி. 23:7) என்புழி, ‘இனியான் உயிரை வாழுதலையுஞ் செய்யேன்’, எனவும் வந்தவற்றுள் ‘அணிந்தன்று, உண்ணேன், வாழேன்’ என்பன முழுதும் காரிய வாசகமாயே நின்றவாறு காண்க” (நச். வே. மயங்கியல். 29).

    அவர் கூற்றுப்படி இங்கே ’உண்ணல்’ என்பதும் ’வாழல்’ என்பதும் ’உண்ணுதல், வாழ்தல்’ என அகநிலைச் செயப்படுபொருளாக அமைந்து ’உண்ணுதலைச் செய்யேன்’ எனவும் ’வாழ்தலைச் செய்யேன்’ எனவும் வந்துள்ளன. மேற்கண்ட தொடரமைப்பை உருபனியல் அடிப்படையில் ‘வினையடி + சூனிய உருபு என்று சுசீலா (2001: 30) பகுக்கின்றார்.

    இவ்வாறு இத்தொடரமைப்பு எதிர்மறையில் வருவது போலவே எவ்வித மாறுபாடுமின்றி உடன்பாட்டிலும் வருவதைச் சங்க இலக்கியத்தில் காண முடிகின்றது.

    தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான் -கலி. 55: 20

    அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்    –நற். 106:1

    உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே           -ஐங். 36:3

    மேற்கண்டவற்றுள் இரண்டாவதாக வருகின்ற தொழுதான், தொட்டான், அறிதி, அமைகுவம் என்பன ‘செய்’ என்னும் வாய்பாட்டில் அடங்குவனவாகும்.

    மேற்கண்டவற்றினைப் போலவே’

    ’பெரியோரை வியத்தலும் இலமே

    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’            -புறம். 192: 12-3

    என்னுந் தொடரினையும் அவற்றுடன் இணைக்க முடியும். ஆனால், முன்னர் குறிப்பிட்டவை ஒரே வகையான சொல்லமைப்பினை உடையவை. இத்தொடர்களில் அமையும் வடிவங்கள் வேறுபட்டவை. ஆயினும் இவற்றையும் ‘வியத்தலும் செய்யோம்’ ’இகழ்தலும் செய்யோம்’ என்று பதிலீடு செய்ய முடியும். மேலும் ஒற்றைச் சொற்களாக ‘வியந்திலம், இகழ்ந்திலம்’ எனவும் பதிலீடு செய்ய முடியும். இவைபோன்ற வடிவங்களும் இவற்றிற்கு இணையான வடிவங்களும் தற்காலத் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும்,

    அனுப்பவும் செய்தான் (அனுப்பினான்)

    அனுப்பவும் இல்லை (அனுப்பவில்லை)

    அனுப்பவும் மாட்டான் (அனுப்பமாட்டான்)

    என்று வினையெச்சத்தைத் தொடர்ந்து உடன்ப்பாட்டு எதிர்மறைத் தொடர்கள் காணப்படுகின்றன. இவற்றுள் அமையும் உடன்பாட்டுத் தொடர் வட்டாரவழக்கு மொழி யாகும். பொதுவாகப் பயன்படுத்துவதில்லை.

    இரண்டு வேறுபட்ட வடிவங்கள் வந்து இரண்டாவது சொல்லில் எதிர்மறை

    இரண்டு சொற்களில் முதற்சொல் தொழிற்பெயராகவும் இரண்டாவது சொல் ’செல்’ என்னும் வாய்பாட்டில் அமைந்த எதிர்மறைச் சொல்லாகவும் அமைந்து இரண்டும் இணைந்து எதிர்மறையினை உணர்த்துகின்றன.

    இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் –புறம். 143: 13

    (அப்பொழுது இன்னாதாகச் சொரியப்பட்ட கண்ணீரை; ஒழித்தல் மாட்டாளாய்)

    எடுக்கல் செல்லாது உழப்பவன் போல        -கலி. 38: 5

    (கைகளையும் எடுக்க முடியாமல் அலறியது போல)

    பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்-நற்.308: 5

    (தான் தாங்கமாட்டாமே பெய்தொழித்த வளவிய மழையை)

    எதிர்மறையினை உணர்த்துஞ் சொல்லானது வினைமுற்றாகவும் வினையெச்சமாகவும் அமைந்து வந்துள்ளது. இங்கெல்லாம் ’செல்’ என்னும் வினை தன் இயல்பான பொருளை இழந்து ’முடிதல்’ அல்லது ’இயலுதல்’ என்னும் பொருளில் வந்து எதிர்மறையை உணர்த்துகின்றது. தற்காலத் தமிழில் இதன்பயன்பாடு வேறு இலக்கணக்கூறின் மூலம் நிகழ்கிறது.

    எடுக்க முடியாது

    பொறுக்க முடியாது

    எனப் பழந்தமிழில் முதற்சொல்லாக அமையுந் தொழிற்பெயர் தற்காலத் தமிழில் வினை யெச்சமாக மாற்றமடைந்து ’முடியாது’ என்னும் எதிர்மறையைத் தழுவுகின்றது. தொழிற் பெயரின் தன்மை வினையெச்சத்திற்கும் உண்டு என்பது ஆராய்ச்சியாளர் சிலரின் கருத்தாகும். மீனாட்சிசுந்தரன் (1974: 127) ’செய வேண்டும் செயல் வேண்டும் என மாறாட வருவதால் செய என்பதும் தொழிற்பெயரே எனக் கொள்ள இடமுண்டு’ என்கிறார்.

     எதிர்மறைப்பெயரெச்ச அடுக்கு

    பெயரெச்சமும் பெயரடையும் உடனே பெயர்ச்சொல்லினைத் தழுவி வருவதே பெரும்பான்மை யாகும். ஆனால் வினையெச்சமும் வினையடையும் இவ்வாறன்றிச் சிலசொற்களை இடையிட்டுப் பின்னர் வினைச்சொற்களைத் தழுவிவரும். அருகிய நிலையில் பெயரெச்சமானது இன்னொரு பெயரெச்சத்தினைத் தழுவி அதன்பின்னர் பெயரினைத் தழுவுவதைத் திருக்குறளில் காணமுடிகின்றது.

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பா ரிலானுங் கெடும்                -குறள். 448

    இங்கு ’இல்லாத ஏமரா’ என்னும் இரண்டு எதிர்மறைப் பெயரெச்சங்கள் ’மன்னன்’ என்னும் பெயரைத் தழுவும் வகையில் அமைந்துள்ளன.

    எதிர்மறை –பொருள் மாற்றம்

    ஒரே தொடரில் சொல்லானது எதிர்மறை வடிவத்திலும் உடன்பாட்டு வடிவத்திலும் வந்து எதிர்மறையில் இருக்கின்ற வடிவம் எதிர்மறையை உணர்த்தாமல் வேறுபொருளை உணர்த்துவதைக் காண முடிகின்றது.

    ‘பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி’ -சிலம்பு. 26: 50

    இங்குப் ’பூவா வஞ்சி’ என்பது ‘கருவூர்’ என்று அரும்பத உரையாசிரியரால் பொருளுரைக்கப்படுகின்றது. எனவே அது ‘பூவாத’ என்னும் எதிர்மறைப் பொருளைத் தரவில்லை. இவ்வகையிலமைந்த வடிவங்களை உரையாசிரியர்கள் குறிப்பு, வெளிப்படை என்று குறிப்பிடுகின்றனர். இதுபோன்ற வடிவங்கள் பழந்தமிழில் பரவலாகக் காணப்படுகின்றன.

    முடிவாகச் சில

    பல்வேறு வகையான எதிர்மறைத் தொடர்கள் சங்க இலக்கியத்தில் காணக் கிடப்பினும் சிறப்பாகச் செய்யுள் வழக்கிற்கே உரிய, தற்காலத் தமிழில் பயன்பாட்டில் இல்லாத அல்லது இலக்கண வடிவங்களில் மாற்றம்பெற்று வருகின்ற ஒருசில தொடர்களே இங்கு எடுத்துக் காட்டப்பெற்றன. மேலும், எதிர்மறையை உணர்த்த ஒரு சொல்லே போதும் என்ற நிலையிலும் தொடரமைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்தியிருப்பதைச் சங்க இலக்கியத்தில் காண முடிகின்றது. குறிப்பாக, மேற்கண்ட இடங்களில் எதிர்மறையை உணர்த்தத் தொடர்களைப் பயன்படுத்தியிருப்பது உயர்நிலைச் செய்யுள் வழக்கு என்று கொள்ள முடிகின்றது. மேலும் புலவர்களின் சிறந்த அறிவுத் திறத்தையும் காட்டுகின்றது. ஏனெனில் பொதுவான எதிர்மறைத் தொடர்களிலிருந்து இத்தொடர்கள் வேறுபட்டு அமைவது மேற்கண்ட அனுமானங்களுக்கு இடந்தருகின்றது. தற்காலத் தமிழ்த் தொடர்களுடன் இவற்றை ஒப்பிடும்போது மக்களின் பல்வேறு வகையான மனநிலைகளை வெளிப்படுத்துவதற்கு இத்தொடர்களின் பயன்பாடு அமைந்திருக்கலாம் என்றும் ஊகிக்க இடமுண்டு. பெயர்ச்சொற்களையன்றி, வினையையும் தொழிற்பெயரையும் உள்ளடக்கி வருகின்ற எதிர்மறைத் தொடர்களை ஒரு சொல்லால் பெரும்பாலும் பதிலீடு செய்ய இயலும். அவ்வகையில் தொடருக்கு இணையான ஒற்றைப் பதிலீட்டுச் சொற்கள் சில, சங்க இலக்கியத்தில் பயின்று வந்துள்ள நிலையையும் மேலே கண்டோம்.

    தொடரில் இரு சொற்களும் எதிர்மறை என்ற நிலையில் பயன்படுத்தியிருப்பது செய்யுள் நடைக்காக என்பதையும் உரையாசிரியர்களின் கருத்துப்படி தேற்றத்திற்காக என்பதையும் இவைபோன்ற தொடர்கள் பழங்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருந்திருக்கலாம் என்பதையும் உணர முடிகின்றது. இரண்டு சொற்களில் ஒன்று எதிர்மறை என்று இருக்கின்ற நிலையில் அதற்கு யாப்புச் சீர்மையும் ஒரு காரணமாக அமையலாம் என்பதையும் அறிய முடிகிறது. ஆயினும் ‘உண்ணலும் உண்ணேன்’ என்பதுபோல் ஒரே வாய்பாட்டில் உள்ள சொற்களைப் பயன்படுத்தியிருப்பது பிற செயல்களன்றி ஒரே செயலில் கவனத்தைச் செலுத்தும் வெளிப்பாட்டின் அழுத்தமுங் காரணமாக இருக்கலாம்.

    இவ்வாறு சங்க இலக்கியத்தில் காணப்படும் பல்வேறு வகையான எதிர்மறைத் தொடரமைப்புகளன்றி மேற்கண்ட தொடரமைப்புகளின் வாயிலாகவும் எதிர்மறையை வெளிப்படுத்திருப்பது சங்க இலக்கியத்தில் புலவர்களின் மொழிப்பயன்பாட்டு, கட்டமைப்புச் சிறப்புகளுள் ஒன்றாகக் கருத முடியும்.

    துணைநூல்கள்

    1. மீனாட்சிசுந்தரன், தெ.பொ. 1974, ‘உரிச்சொல்’ இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் (பதி. அ.அகத்தியலிங்கம், பாலசுப்ரமணியன்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
    2. Kothandaraman, R. 2010, Dynamics of Tamil Finite System, Central Institute of Classical Tamil, Chennai.
    3. Rajam, V.S. 1992, A Reference Grammar of Classical Tamil Poetry, American Philosophical Society, Philadelphia.
    4. Suseela, M. 2001, A Historical Study of Old Tamil Syntax, Tamil University, Thanjavur.
    5. Wilden Eva, 2018, Grammar of Old Tamil for Students, Ecole francaise d’Extreme-Orient.

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பழந்தமிழில் எதிர்மறை வினை வடிவங்களைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. இந்த வடிவங்களில் இரண்டு வகை உண்டு: உருபால் எதிர்மறைப் பொருளைக் குறிப்பது (synthetic), சொல்லால் எதிர்மறைப் பொருளைக் குறிப்பது (analytic). இவற்றில் இரண்டாவது வகை சங்க காலத் தமிழில் பயன்படுவதைப் பற்றியது இந்தக் கட்டுரை. இன்றைய தமிழிலும் இந்த இரண்டு வகையும் உண்டு: வராது, வரவில்லை. மற்றைய திராவிட மொழிகளிலும் இரண்டாவது வகை உண்டு. இந்தக் காரணங்களால் இந்த வகை சங்க இலக்கியத்தில் யாப்பு காரணமாக வருகிறது என்னும் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. வரலாற்று நோக்கில் இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த ஒரு நூலைத் தவிர வேறு எந்த ஆராய்ச்சியையும் இந்தக் கட்டுரை கவனத்தில் கொள்ளவில்லை. ஒரு சில ஆராய்ச்சிகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

    • P. Meenakshisundaran, A History of Tamil Langauge
    • S. Rajam, A Reference Grammar of Classical Tamil
    • Sanford Steever From Analysis to Synthesis (This covers all Dravidian languages)
    • Thomas Lehman has published a book in German on the grammar of old Tamil, a summary of it can be found in English in a chapter by him in the book Dravidian Languages edited by Sanford Steever

    There ae so many publications of grammars of individual Sangam works.

    இவற்றில் எதையும் கட்டுரை மேற்கோள் காட்டவில்லை. ஆய்வில் ஆய்வுப் பொருள் தொடர்பான ஆய்வு வெளியீடுகளைத் தேடல் முதல் படி. அதன் பிறகு வெளிட்டுள்ள முடிவுகளை வெட்டியோ, ஒட்டியோ, திருத்தியோ புதிய கருத்துகளைச் சொல்வதுதான் ஆராய்ச்சி.

    இந்தக் கட்டுரையின் ஒரு பிழை மேலே சொல்லப்பட்டது. இன்னொரு பிழை இது. தவிர என்ற பொருளில் வரும் செய்வது அல்லது, செய்வான் அல்லான் என்பது போல் வினை-வினை அமைப்பு அல்ல. செய்வது வினைப்பெயர்; பெயரும் இந்த இடத்தில் வரலாம்: நல்வினை அல்லது இரண்டையும் ஒன்றுபோல் விளக்குவது பிழை. உண்ணலும் உண்ணேன் என்பது போன்ற வடிவங்களை உண்ணலும் செய்யேன் போன்ற வடிவங்களுக்கு இணையாகப் பார்க்கும்போது இன்றைய தமிழிலும் இப்படியான இணைவடிவங்கள் இருப்பதைக் காட்டலாம்: அடிக்கவும் அடிப்பான், அடிக்கவும் செய்வான்.

    மேற்கண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தக் கட்டுரை திருத்தி எழுதப்பட்டிருக்கிறது.

    =======================================================

    Share
  • பல்கலை வல்ல நல்லறிஞர் – மயிலை சீனி வேங்கடசாமி

    பல்கலை வல்ல நல்லறிஞர் – மயிலை சீனி வேங்கடசாமி

    மேகலா இராமமூர்த்தி

    செவ்விலக்கியங்களையும் ஒல்காப் புகழுக்குரிய இலக்கண நூலான தொல்காப்பியத்தையும் படைத்தளித்த பண்டைத் தமிழர்கள் தமிழ்நாட்டு வரலாற்றை ஏனோ முறையாகத் தொகுத்து  ஆவணப்படுத்தவில்லை. அதனால் அவ்விலக்கிய இலக்கண நூல்களிலுள்ள பாடல்களைக் கொண்டே அன்றைய தமிழகத்தை நாம் ஊகித்தறிய வேண்டியிருக்கின்றது.

    பிற்காலப் பல்லவர் காலந்தொடங்கிக் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் போன்றவற்றில் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளைப் பொறித்து வைக்கும்  வழக்கம் அரசர்களால் தொடங்கப்பட்டதாகத் தெரிகின்றது. பிற்காலச் சோழர்கள் காலத்தில்  மேலும் அதிக எண்ணிக்கையிலான கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் பொறித்து வைக்கப்பட்டன.

    நம் வரலாற்றை அறிய, இக்கல்வெட்டுகளும் பட்டயங்களும் பேருதவி புரிகின்றன என்பதில் ஐயமில்லை. எனினும், இவற்றைப் படித்தறிய இன்றைய தமிழ் எழுத்துகளை மட்டும் ஒருவர் அறிந்திருந்தால் போதா. அன்றைய தமிழ் எழுத்துமுறைகளையும் நன்கு அறிந்திருத்தல் அவசியம். அவ்வகையில் தம்முடைய ஆழங்காற்பட்ட தமிழிலக்கியப் புலமையாலும், கல்வெட்டுகளைப் படித்தறியும் பயிற்சியாலும், பன்மொழித் திறத்தாலும் அன்றைய தமிழகம் குறித்த பல அரிய தகவல்களைத் தமிழ்கூறு நல்லுலகுக்கு அளித்த பெருமைக்குரியவர் மயிலை சீனி வேங்கடசாமி எனும் ஆய்வியல் அறிஞராவார்.

    சென்னையிலுள்ள மயிலாப்பூரில் 1900, திசம்பர் 16-இல் பிறந்தார்  வேங்கடசாமி. அவருடைய தந்தையார் ஒரு சித்த மருத்துவர்; அத்தோடு பழந்தமிழ் ஓலைச் சுவடிகளையும், நூல்களையும் தேடித் தேடிச் சேகரித்து வாசிக்கும் பழக்கம் கொண்டவராகவும் அவர் இருந்திருக்கின்றார். ஆகையால், ’தந்தையர் ஒப்பர் மக்கள்’ எனும் நன்மொழிக்கேற்ப இளமையிலேயே வேங்கடசாமிக்கும் தமிழில் அளவற்ற பற்று ஏற்பட்டுவிட்டது. வேங்கடசாமியின் உடன்பிறப்புகளில் அவருடைய மூத்த அண்ணன், தந்தையைப் போலவே சித்த மருத்துவரானார். இரண்டாவது அண்ணனான சீனி. கோவிந்தராசன் நல்ல தமிழறிஞராய்த் திகழ்ந்தார். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை அவர் எழுதியதாகத் தெரிகின்றது. தொடக்கத்தில் தம் தமையனார் கோவிந்தராசனிடம் தமிழ் பயின்ற வேங்கடசாமி, பின்னர் மகாவித்துவான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் கற்றார். தமது இருபதாவது அகவைக்குள்ளாகவே தமிழிலுள்ள இலக்கண இலக்கிய நூல்களையெல்லாம் தாம் அறிந்துகொண்டுவிட்டது பற்றித் தம்முடைய 19ஆம் நூற்றாண்டில் தமிழிலக்கிய வரலாறு” எனும் நூலின் முகவுரையில் மயிலையாரே குறிப்பிட்டிருக்கக் காண்கிறோம்.

    ஓவியக் கலையிலும் ஈடுபாடுகொண்டிருந்த அவர் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். பின்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். நீதிக் கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய வேங்கடசாமி, குடிஅரசு, ஊழியன், செந்தமிழ், ஆனந்த போதினி, ஈழகேசரி உள்ளிட்ட பல இதழ்களில் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்

    தமது விடுமுறை நாள்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த மயிலை வேங்கடசாமி,  தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்து, பிராமி, கிரந்தம், தமிழ் என எந்த எழுத்துமுறையில் அமைந்த கல்வெட்டையும் படித்தறியும் திறன்பெற்றார். தமிழோடு ஆங்கிலம், கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், பாலி எனப் பலமொழிகளும் பயின்று பன்மொழி வித்தகரானார்.

    பிற வரலாற்றாய்வாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, பௌத்தக் கோயில்களையும், அவை சார்ந்த தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தவர் மயிலையார் என்பது எண்ணத்தக்கது. இவருடைய படைப்புகளாக 33 தமிழ்நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்கின்றன. பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும், கிறித்துவமும் தமிழும், மறைந்துபோன தமிழ்நூல்கள், களப்பிரர் ஆட்சியில் தமிழகம்,
    கொங்குநாட்டு வரலாறு, சமயங்கள் வளர்த்த தமிழ், பழங்காலத் தமிழ் வணிகம், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் போன்றவை அவற்றில் சில. இவற்றில் ஒவ்வொரு நூலும் அருங்கருத்துகளைத் தாங்கி நிற்கும் பெருந்தகவல்களஞ்சியம் எனில் மிகையில்லை.

    “மறைந்துபோன தமிழ்நூல்கள்” எனும் தம் நூலில் இருபதாம் நூற்றாண்டில் கிட்டாமற்போன தமிழ்நூல்கள் பலவற்றின் பட்டியலையும் அவற்றில் இடம்பெற்றிருந்த சில பாடல்களையும் அரிதின் முயன்று திரட்டித் தந்துள்ளார் வேங்கடசாமி. அவ்வாறு அவர் தேடித் தந்திருக்கும் அற்புதமான ஒருநூல் தகடூர் யாத்திரை. இன்றைய தருமபுரி மாவட்டமே அன்றைய தகடூர். அதனைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த குறுநில மன்னனான அதியமான் நெடுமானஞ்சிக்கும், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் தகடூரில் நடைபெற்ற போர்குறித்த செய்திகளைச் சிறப்பாக பேசும் நூல் இது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்நூலில் நூற்றுக்கணக்கான பாடல்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது நமக்குக் கிடைப்பவையோ 48 செய்யுட்கள் மட்டுமே. அரிசில்கிழார், பொன்முடியார் போன்ற சிறந்த புலவர்களின் பாடல்கள் இதில் உள்ளன.

    பண்டைத் தமிழகத்தின் சமூக நிலையையும், வரலாற்றையும், அரசியல் அமைப்பையும் அறிந்துகொள்ளப் பெரிதும் உதவக்கூடிய செய்யுள் வடிவிலிருந்த சாசனங்களையும், செப்புப் பட்டயங்களையும், கல்வெட்டுகளையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றுக்கு விளக்கங்களும் குறிப்புகளும் எழுதி ”சாசனச் செய்யுள் மஞ்சரி” எனும் நூலாக ஆக்கி அதனைச் சாகித்திய அகாதமியின் ஆதரவோடு மயிலையார் வெளியிட்டிருப்பது மகத்தான பணியாகும்.

    ”பௌத்தமும் தமிழும்” எனும் தம்முடைய ஆய்வு நூலில் பௌத்த மதமானது அசோகர் காலமான கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த வரலாற்றையும், அசோகருடைய உறவினராகிய மகேந்திரரும் அவரோடு வந்த பிக்குகளுமே அதைப் பரப்பியவர்கள் என்றும் குறிப்பிடும் மயிலை வேங்கடசாமி, அதே காலக்கட்டத்தில் வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த பிற சமயங்கள் பூரணனை வழிபட்டொழுகும் ஆசீவகம், அருகனை ஏத்தும் ஆருகதம் எனப்படும் ஜைனம், பிராமண சமயம் எனப்படும் வைதிகம் ஆகியன என்று குறிப்பிடுகிறார்.

    பௌத்தத்தை உருவாக்கிய சாக்கிய புத்தரும், ஜைனத்தைத் தோற்றுவித்த வர்த்தமான மகாவீரரும், ஆசீவகத்தைத் தோன்றச் செய்த மக்கலிபுத்திரரும் சம காலத்தவரே. இம்மதங்கள் உருவான அதே காலத்தில் வைதிக மதமும் செல்வாக்கோடு இருந்தது. வடநாட்டைச் சேர்ந்த இந்த நான்கு மதங்களும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் தமிழகத்துள் நுழைந்தன என்கிறார் மயிலையார்.

    அப்போது இவற்றினின்றும் வேறான மதத்தைத் தமிழ்நாட்டுத் தமிழர் மேற்கொண்டிருந்தனர். தமிழகத்துள் நுழைந்த இந்நான்கு மதங்களும் ஒன்றையொன்று இழித்தும் பழித்தும் பேசி, சமயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் வாழ்ந்துவந்த தமிழர்களிடையே சமயப் பூசலைக் கிளப்பிவிட்டன. தமிழக மக்களிடையே செல்வாக்குப் பெறும் போட்டியில் முதலில் வெற்றிபெற்றது பௌத்தமே ஆகும். ஏனைய மதங்களோடு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பத்திலேயே பின்னடைவைச் சந்தித்த மதம் ஆசீவகம். எனவே வைதிகம், ஜைனம், பௌத்தம் எனும் மும்மதங்களுக்கிடையே மட்டும் சில காலம் சமயப்போர் நிகழ்ந்துவந்தது.

    இந்த மும்முனைப் போட்டியில் அடுத்து தோல்வியைச் சந்தித்தது பௌத்தம். அதற்கான முதன்மைக் காரணம் பௌத்தம் தனது புறப்பகையான ஜைனத்தையும், வைதிகத்தையும் எதிர்த்துவந்த வேளையில் அதற்குள்ளேயே  ஈன யானம், மகா யானம் எனும் பெரும் பிரிவுகளும், அவை சார்ந்த உட்பிரிவுகளாகச் சிராவகயானம், மகாயானம், மத்திரயானம் போன்றவையும் தோன்றியதே. ’ஐயுறும் அமணரும், அறுவகைத் தேரரும்’ எனும் திருஞானசம்பந்தர் தேவாரத்தால் பௌத்தத்தில் ஆறுவகைப் பிரிவினரான தேரர்கள் (தேரர்கள் = பௌத்த பிக்குகள்) இருந்ததை அறிகின்றோம். இந்த உட்பிரிவினர் தமக்குள்ளும் ஓயாது வாதுசெய்து போரிட்டனர். புறப்பகை போதாவென்று ’உடன்பிறந்தே கொல்லும் வியாதி’யான அகப்பகையும் சேர்ந்ததால் பௌத்தம் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது.

    அன்றியும் பொதுமக்களிடமிருந்தும் அரசிடமிருந்தும் கிடைத்த அளவற்ற செல்வத்தால் பௌத்த விகாரைகளில் வசித்த பிக்குகளும் தங்கள் தூய கடமைகளை மறந்து செல்வத்தின் இன்பங்களைத் துய்க்கத் தொடங்கினர். தம் நெறிதவறிய நடத்தையால் மக்களிடமிருந்த நன்மதிப்பையும் செல்வாக்கையும் இழந்தனர் அவர்கள். இக்காரணங்களால் தமிழகத்தில் நன்கு வளர்ந்துவந்த பௌத்தம் வீழ்ந்துபட்டது என்கிறார்.

    ஈதொப்பவே, ”சணமும் தமிழும்” எனும் தம்முடைய மற்றோர் ஆராய்ச்சி நூலில் தமிழகத்தில் சமணத்தின் வளர்ச்சி வீழ்ச்சி குறித்துப் பரக்கப் பேசுகின்றார் சீனி வேங்கடசாமி. தென்னாடு வந்த பத்திரபாகு எனும் சமண முனிவரின் சீடரான விசாகமுனிவர் மூலமாகவே தமிழகத்தில் சமணம் பரவியது என்பதையும் ஜினர்களைக் கடவுளாகக் கொண்ட மதம் என்பதால் இது ஜைனமதம் என்றானதையும் நமக்கு அறியத் தருகின்றார் அவர்.

    சமண சமயம் பிற்காலத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிவுண்டது. சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என்பன அவை. சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்று பொருள். எனவே இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வெண்ணிற ஆடை உடுத்துவர். இவர்தம் ஆலயங்களிலுள்ள தீர்த்தங்கரர்களுக்கும் வெண்ணிற ஆடை அணிவிப்பர். திகம்பரம் (திக்+அம்பரம்) என்பதற்குத் திசைகளே ஆடை என்று பொருள். அதற்கேற்ப இப்பிரிவைச் சேர்ந்தவர்களும் திசைகளை ஆடையாக அதாவது எவ்வித உடையும் அணியாமல் அம்மணமாகவே இருப்பர். இவர்கள் கோவணம்கூட உடுத்துவதில்லை. இவர்களின் ஆலயங்களிலுள்ள தீர்த்தங்கரர்களுக்கும் இவர்கள் உடைகள் ஏதும் அணிவிப்பதில்லை. ஸ்தானவாசிகளுக்கு உருவ வழிபாட்டில் உடன்பாடில்லை. ஆதலால், அவர்கள் சமண ஆகம நூல்களையே அருகக் கடவுளாய்ப் பாவித்து வணங்குவர். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தோர் திகம்பர சமணர்களே!

    சமணர்கள் அனைவரும் துறவுநெறி மேற்கொண்டோர் அல்லர். அவர்களில் இல்லறவாசிகளும் உண்டு. அவர்களை சிராவகர் (சாவகர்) என்று குறிப்பர். இல்லறத்தை மேற்கொள்பவர் ஆயினும் அவர்களுக்கும் கடுமையான நெறிமுறைகளைச் சமணம் விதித்தே இருந்தது.

    சிராவகர் பத்து ஒழுக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும். அவை: கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறன்மனை நயவாமை, பொருள் ஈட்டுவதில் வரையறை எனும் அணுவிரதம் ஐந்து. கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவு நேரத்தில் உண்ணாமை எனும் உண்ணாமைக் கொள்கைகள் நான்கு. பெரியோரை வணங்குதல் எனும் உயர்பண்பு; ஆகமொத்தம் பத்து ஒழுக்கங்கள்.

    நன்னெறிகளும் நல்லொழுக்கங்களுமே இரு கண்களாகக் கொண்டு சமைக்கப்பட்ட சமணம், தமிழ் இலக்கிய இலக்கணத்துக்கும் அருந்தொண்டாற்றியிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழகத்தில் பெருவளர்ச்சி கண்ட சமணம் வீழ்ச்சியடைந்ததற்கான கரணியங்களையும் நுட்பமாய் ஆய்ந்திருக்கும் மயிலையார், பண்டைத் தமிழர் மதமும், வடநாட்டு வைதிக மதமும் கடவுளர் விஷயத்தில் சில கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தித் தம்முள் சமரசம் செய்துகொண்டன. அத்தோடு அவை ஒன்றுபட்டு தமிழகத்தில் ’பக்தி இயக்கத்தை’ முன்னெடுத்தன.

    கிபி 7, 8-ஆம் நூற்றாண்டுகளில் பெரு வளர்ச்சிகண்ட இவ்வியக்கத்தை மக்களிடையே மகத்தான வெற்றிபெறச் செய்த பெருமை சைவ சமய நாயன்மார்களையும், வைணவ சமய ஆழ்வார்களையுமே சாரும். அவர்கள் வெகுமக்கள் கடைப்பிடித்தற்கேற்ற எளிய வாழ்வியல் நெறிகளையும், இல்லறத்திலிருந்தபடியே பக்தி வாயிலாய் முக்தி அடைவதற்கான எளிய வழிகளையும் தாம் போகுமிடமெல்லாம் தம் பாடல்கள்வழிப் பரப்புரை செய்யவே, அவற்றால் ஈர்க்கப்பட்ட மக்கள், கடைப்பிடிப்பதற்குக் கடினமாயிருந்த பௌத்த சமணக் கோட்பாடுகளைக் கைவிட்டு, சைவ வைணவ சமயங்களைப் பின்பற்றுவாராயினர்.

    அக்காலச் சூழலில் சமண பௌத்தர்களில் பலருங்கூட சைவ வைணவ மதங்களைப் பின்பற்றி ஒழுகத் தலைப்பட்டனர்… ஏன் நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்று சொல்வது பொருத்தம். இவ்வாறு புதிதாகச் சைவ வைணவ சமயங்களில் தம்மை இணைத்துக் கொண்ட சமணரும் பௌத்தரும் தம்முடைய அவைதிக நெறிகள், ஒழுக்கங்கள் போன்றவற்றைச் சைவ வைணவ மதங்களில் கலந்தனர். அவ்வாறு கலந்தவையே இப்போது ’இந்து மதத்தில்’ காணக் கிடைக்கும் சமண பௌத்தப் பண்பாடுகளும் அவற்றின் கூறுகளும் என்பதையெல்லாம் தம் நூலறிவாலும் தமிழகமெங்கும் பயணப்பட்டுத் திரட்டிய பட்டறிவாலும் நன்குணர்ந்த மயிலை சீனி வேங்கடசாமி, அக்கருத்துகளை இவ்விரு நூல்களிலும் பதிவுசெய்திருக்கின்றார்.

    ”களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” எனும் மற்றொரு நூலில், களப்பிரர் என்றும் களப்பாளர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவோர் வடநாட்டார் அல்லர்; அவர்கள் கன்னட வடுகரே என்கிறார். இவர்கள் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். இவர்களில் பெரும்பாலோர் சமண சமயத்தை ஆதரித்தோராகவும், சிறுபான்மை பௌத்த ஆதரவாளர்களாகவும், ஓரிருவர் சைவ வைணவ நெறிபற்றி ஒழுகியோராகவும் இருந்தனர் என்று கூறும் ஆசிரியர், இந்நூலில் திரட்டித் தந்திருக்கும் செய்திகள் களப்பிரர் காலம் இருண்ட காலமன்று நீதிநூற்களையும் தமிழில் பாடல்கள் இயற்றுவதற்குப் புதிய பா வகைகளையும் அறிமுகப்படுத்திய ஒளிமிகு காலமே என்பதை நிறுவுகின்றன.

    இவ்வாறு தம் வாணாள் முழுவதையும் இலக்கிய, வரலாற்று ஆராய்ச்சியிலும் அவை சார்ந்த நூல்கள் எழுதுவதிலுமே செலவிட்ட மயிலை சீனி வேங்கடசாமி, 1980-இல் தம் எண்பதாம் அகவையில் பொன்னுடல் நீத்துப் புகழுடல் கொண்டார்.

    இப்பேரறிஞரைப் ப(போ)ற்றிப் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பாடல் இவரின் நிகரற்ற தமிழ்த்தொண்டுக்குக் கட்டியம் கூறுவதாகும்.

    ”தமிழையே வணிகமாக்கித்
    தன்வீடும் மக்கள் சுற்றம்
    தமிழிலே பிழைப்பதற்கும்
    தலைமுறை தலைமுறைக்குத்
    தமிழ் முதலாக்கிக் கொண்ட
    பல்கலைத் தலைவன் எல்லாம்
    தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
    கால்தூசும் பெறாதார் என்பேன்”

    மயிலை தந்த மகத்தான அறிஞரான சீனி வேங்கடசாமியின் தன்னேரிலாத தமிழ்ப் பணிகளும், அருமையான ஆராய்ச்சி நூல்களும் அவருடைய பல்துறைத் திறனையும், நுண்மாண் நுழைபுலத்தையும் அறிவுலகில் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பது துணிபு.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. சமணமும் தமிழும் – பதிப்பு வீ. அரசு
    2. பௌத்தமும் தமிழும் – பதிப்பு வீ. அரசு
    3. மறைந்துபோன தமிழ் நூல்கள் –பதிப்பு வீ. அரசு
    4. தமிழ் இலக்கிய வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டு – பதிப்பு வீ. அரசு
    5. https://ta.wikipedia.org/wiki/மயிலை_சீனி._வேங்கடசாமி

    Share
  • சேக்கிழார் பா நயம் – 42

    சேக்கிழார் பா நயம் – 42

    திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ———————————————–

    சுந்தரர் தில்லைத் திருத்தலத்தில் கூத்தப் பிரான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் . அப்போது தூக்கிய திருவடியை உடைய கூத்தப் பிரான் திருவருளால் வானில் ஓர் ஒலி எழுந்தது! அவ்வொலி சிவபிரான் வழங்கிய அருளொலியே யாகும் ‘’முத்துக்களை அலைத்து வரும் காவிரியால், பெருகிய வளமுடைய வயல்கள் சூழ்ந்த திருவாரூரிலே நம்மிடம் வருக!’’ என்ற நாதத்தைக் கேட்டதும், அதனை உணர்ந்து கொண்டு எழுந்தார். இதனைச் சேக்கிழார்,

    ‘’எடுத்தசே வடியா ரருளினார் ‘தரளம் எறிபுனன் மறிதிரைப் பொன்னி
    மடுத்தநீள் வண்ணப் பண்ணை ஆ ரூரில் வருகநம் பா’லென வானில்
    அடுத்தபோ தினில்வந் தெழுந்ததோர் நாதங் கேட்டலும் அதுவுணர்ந் தெழுந்தார்.’’

    என்று பாடினார். அதன்பின்னர் சுந்தரர் கொள்ளிடம் , திருக்கோலக்கா, திருப்புன்கூர் ஆகிய தலங்களைக் கடந்து திருவாரூரின் எல்லைப் புறத்திலே வந்து நின்றார்! அந்த நேரத்தில் ஆழித் தேரால் புகழ்பெற்ற திருவாரூரில் வாழ்ந்த அடியார்களை நோக்கிச் சிவபெருமான், ‘’என்றும் குறையாத பக்தியுடைய நம் ‘’ ஆரூரன்’’ என்ற சிறப்புப்பெயர் பெற்ற சுந்தரர், நாம் அன்புடன் அழைக்கக் கேட்டு , இவ்வூருக்கு வந்துள்ளான்! அவனை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவருக!’’ என்று கட்டளையிட்டார்! இதனைச் சேக்கிழார்,

    ‘’தேராரும் நெடுவீதித் திருவாரூர் வாழ்வாருக்கு
    ஆராத காதலின்நம் ஆரூரன் நாம்அழைக்க
    வாராநின் றான்அவனை மகிழ்ந்தெதிர் கொள்வீர் ‘’

    என்று பாடினார். அவ்வாறே அடியார்கள் சுந்தரரின் சிறப்புக்களைப் போற்றி , அவர் முன் சென்று அவரை எதிர் கொண்டு வரவேற்று வணங்கினர்! அவர்களை நம் வன்றொண்டராகிய சுந்தரர் தாமும் கரங்களைக் குவித்து வணங்கியவாறே , அத்திருவாரூர்த் திருவீதியில் ஆலயம் நோக்கிச் சென்றார். அப்போது அவர் தம்மை எதிர்கொண்டழைத்த சிவனடியார்களை நோக்கி, ‘’ எம் தந்தையாகிய பெருமான் எழுந்தருளிச் சிறப்பிப்பதும் இந்தத்திருவாரூரோ? அப்பெருமான் மிகவும் எளியவனாகிய என்னையும் ஆட்கொள்வாரோ? ‘’ என்பதை அவர் திருமுன் சென்று கேட்டுச் சொல்க!’’ என்றுவேண்டினார்! இந்த வேண்டுகோளையே ஈற்றடிகளில் அமைத்து பதிகம்பாடினார்.

    ‘’வாயிற்புறத்துத் தம் முன் வந்து தம்மை யெதிர்கொண்டு வணங்குபவர்களாகிய திருவா ரூரின் அடியவர்களை, அவர் தம்மை வணங்குதற்கு முன்னரே தாம் கை குவித்து வணங்கி அவர்களுடன் கலந்து வந்து இருதிறத்தார்க்கும் மனமகிழச்சி பொங்க முன்னே சொன்ன வாறு தம்மை வரவேற்க அலங்கரிக்கப்பெற்று விளங்கும் திருவீதியினுள்ளே செல்வாராய நம்பிகள்; திருத்தொண்டர் … பாடி – இறைவன் ஆணையின் படி தம்மை வரவேற்க வந்த அந்த அடியவர்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு, “எமது பெருமான் விரும்பி எழுந்தருளியிருப்பது இத்திருவாரூரேயாகும்; அப்பெருமான் எம்மையும் ஆட்கொண்டருளுவரோ? கேளுங்கள்!“ என்ற கருத்துக் கொண்ட மகுடத்தையுடைய சந்தமும் இசையும் பொருந்திய காந்தாரப்பண்ணிலமைந்த திருப்பதிகம் பாடிக் கொண்டே – தமக்கும் அவர்கட்கும் பெருமானாகிய புற்றிடங்கொண்டாரது கோயில் திருவாயிலை அடைந்தார்.இதனையே, வந்தெதிர் கொண்டு வணங்குவார்முன் வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்து சிந்தை களிப்புற வீதி யூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி “யெந்தை யிருப்பது மாரூ ரவர் எ ம்மையு மாள்வரோ கேளீ“ ரென்னுஞ் சந்த விசைப்பதி கங்கள் பாடித் தம்பெரு மான்றிரு வாயில் சார்ந்தார். என்று பாடுகின்றார்.

    இப்பாடலில் சிந்தை களிப்புற – என்றதொடர் கூத்தப் பெருமான் ஆணையிட்ட திருஆரூர்த் தலத்தை யடைந்தோம் எனவும், ஆரூர்ப் பெருமான் ஆணையின்படிப் போந்த இவ்வடியவர்களை வணங்கப்பெற்றோம் எனவும் நம்பிகள் மனமகிழ்ந்தார். “நம்பிரானாராவார் அவரே“ என்று துணிந்து எதிர் கொண்ட அடியவர்கள் இந்த நம்பிகளைக் கிடைத்து வணங்கப்பெற்றோம் என்று சிந்தை களிப்புறுமாறு என்பதுமாம். மிகக் கடையேனாய், ஆட்கொள்ளப் பெறும் தகுதிபெறாத என்னையும். என்னையும் என்போல்வாரையும் என்று உளப்படுத்தி எம்மை எனப் பன்மையாற் கூறினார்.

    கேளீர் – நீங்கள் பழ அடியீர்கள். திருவாரூரிலே பிறக்கும் பெருமைத் தவமுடையீர்கள்; . எனது தகுதியின்மை நோக்கி இகழாது, உங்கள் உரிமையாலே உங்களது விண்ணப்பத்திற் கிணங்கி,இறைவன் என்னை ஆள்வரோ? அதைப் பழகிய நீங்கள் அவரிடம்கேட்டுச் சொல்லுங்கள் என்ற குறிப்பாம். அடியார் மூலம் ஆண்டவன் திருவருள் கிட்டும். அல்லவா?

    இவ்வாறே திருஞான சம்பந்த சுவாமிகள் திருவாரூரைத் தரிசிக்க எழுந்தருளியபோது தம்மை எதிர்கொண்ட அடியார்களை நோக்கி, உங்கள் இறைவனாகிய “திருவாரூரான் வருந்தும் போதெனை வாடல் எனுங் கொலோ“ என்று வினவித் திருப்பதிகம் பாடியருளினர். அப்பர் சுவாமிகளும் இவ்வாறே அடியவர்களை வினவி “நமக்குண்டு கொலோ … ஆரூர் அவிர்சடையான் …
    தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே“ என்று பாடியருளினர். அடிமைத் திறத்தின் சிறப்புப் பொருந்திய தலம் திருவாரூர் என்பது இங்கே. “திருத்தொண்டத் தொகை“ பாடியருளப் பெற்றமையாலும், “நிலவு தொண்டர்தங் கூட்ட நிறைந்துறை“யத் தேவர்கள் வணங்கி நிற்கும் தேவாசிரியன் விளங்குகின்றமையாலும் காணப்பெறும். இத்தலத்தே வாழ்வாராம் அடியார்களின் சிறப்பாவது இறைவனால் முன்னமே ஆட்கொள்ளப் பெற்று இனியுமோர் பிறப்பில்லாத பக்குவான்மாக்களே இங்குப் பிறக்கும் பெரு பெறுகின்றார் என்பதாம்.இங்குப் பிறப்பிற் செலுத்துகின்றமையாலே இறைவன் இவர்களை முத்தியிற் செலுத்துகிறான். இதனாலேயே ,

    ‘’திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்’’

    என இவர்கள் திருத்தொண்டத் தொகையில் தனியாகத் துதிக்கப் பெற்றனர்.

    ‘’ஆரூர்ப்பிறக்க முத்தி ‘’ என்பது பழமொழி . ‘’பிறந்தவர் பிறவாப் பெரும்பதி யகத்தும் ‘’ என்றார் கல்லாடனாரும். இவர்கள் முன்னமே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற முத்தான்மாக்கள் ஆதலின் மேலே காட்டியபடி, மூன்று ஆசாரியன்மார்களும் இந்த அடியவர்களை வினவிப் பதிகம் பாடிப் பின்னரே தலத்தினுள் சென்று ஆண்டானைப் பாடியருளினர் என்க !

    Share