Blog

  • அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி!

    ‘அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி

    தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி’

    என்னும் மூலமந்திரத்தை உலகிற்கு உபதேசித்து சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய அருளாளர் வள்ளலார் ராமலிங்கபிள்ளை சுவாமிகள் தமிழ் நாட்டில் சிதம்பரத்தையடுத்துள்ள மருதூரில் வேளாளர் (பிள்ளை) வகுப்பில் 1823 இல் பிறந்தார். வடலூரில் அவரால் நிறுவப்பட்டுள்ள சமரச சன்மார்க்க நிலையம்; அவரைச் சார்ந்த பிள்ளை வகுப்பினரின் ஆதரவோடும் ஏனைய வகுப்பு மக்களின் வரவேற்போடும் இன்றும் இயங்கி வருகின்றது.

    வள்ளலார் பாடிய அருட்பாக்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை 5818 பாடல்களைக் கொண்டவை. பதிகங்களாய் வகுப்பின் 399 ஆகிறது. இவ் ஆறு திருமுறைகளிலும் முதல் ஐந்து திருமுறைகளும் சமயம் சார்ந்த உருவ வழிபாட்டிற்கு உடன்படுவனவாகவும், ஆறாம் திருமுறை இறைவனை ஒளிவடிவில் உணரும் சமயாதீத ஞானத்தை உணர்த்த முற்படுவதாகவும் அறிஞர் கருதுகின்றனர். அதாவது முதல் ஐந்தும் தோத்திரம் மிகுந்தனவாகவும் ஆறாவது சாத்திரக் கருத்துக்கள் மிகுந்தனவாகவும் உள்ளன. மேலும் கூறுவதானால் சமய சன்மார்க்கத்தைப் போதிப்பனவாக முதல் ஐந்தும் காணப்பட, ஆறாவது திருமுறைப் பாடல்கள் சமரச சுத்த சன்மார்க்க நெறியினைப் புகட்டுவனவாகக் காணப்படுகின்றன.

    வள்ளலாரின் அருட்பாக்களுக்குப் பலர் உரையெழுதியிருந்தாலும் ஆறு திருமுறைகளுக்குமான முழுமையான உரையை பேராசிரியர் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் செய்துள்ளார். அதனை பத்துப் பாகங்களாக வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தினர் வெளியிட்டுள்ளனர். வள்ளல் டாக்டர் பொள்ளாச்சி மகாலிங்கமவர்களின் வேண்டுகோளின் பேரில் அவரது இல்லத்திலிருந்து ஏழு வருடங்கள் உழைத்து பேராசிரியர் இவ்வுரையைச் செய்து முடித்ததாகத் தெரியவருகிறது.

    வள்ளலாரைப் போலவே ஆறுமுகநாவலரும் பிள்ளை வகுப்பைச் சேர்ந்தவராவார். அருட்பாவை திருமுறைகளாக வகுத்தமையை அக்காலத்தில் ஆறுமுகநாவலர் எதிர்த்து அதனை மருட்பாவென இழிந்துரைத்தது மட்டுமன்றி அப்பிரச்சனையைக் கோட்டுவரை கொண்டு சென்றார். அருட்பாவென்னும் பெயர் வாபஸ் பெறப்படவேண்டுமென்பதே நாவலரின் கோரிக்கையாகும்.

    வழக்கு மஞ்சக்குப்பம் மாவட்ட நீதிமன்றிற்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டது. வள்ளலார் கோட்டுக் கூண்டில் ஏற்றப்பட்டார். வள்ளலார் கூண்டிலேற வந்த சமயம் அவரது அருட்திரு முகத்தைக் கண்டு நீதிபதி (மாவட்ட முன்சீப்) முத்துசாமி ஐயர் எழுந்து நின்றாரென்றும், நாவலரும் வள்ளலாரை வணங்கியபடி எழுந்து நின்றாரென்றும் கூறப்படுகின்றது. இதுபற்றி நீதிபதியிடம் கேட்டபோது அவர் தன்னையறியாமலேயே அச்செய்கையைச் செய்ய நேரிட்டதென்றும், அதுபற்றித் தன்னால் மேலதிகமாக எதுவும் சொல்வதற்கில்லையென்றும் கூறியதாகச் சொல்லப்படுகின்றது. இவர் பின்னர் சென்னை ஹைக்கோட் நீதிபதியாகப் பதவிவகித்தார். அவருக்காக ஒரு சிலையும் சென்னை ஹைக்கோட் வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கின்றது.

    வழக்காளியான நாவலரிடம் வள்ளலாருக்கு அவர் செய்த மரியாதையைப் பற்றிக் கேட்டபோது அறிவும் அருளும் நிரம்பப் பெற்று இறைவனருளால் அதீத சக்தியைக் கொண்டிருப்பவராக வள்ளலார் உள்ளார் என்று நாவலர் கூறியதாகவும் தெரிய வருகின்றது.

    வழக்குத் தீர்ப்பு வள்ளலாருக்குச் சாதகமாக அமைந்ததோடு அவரது அருட்பாக்கள் புனிதமானவையாகவும் தமிழுலகில் இலக்கியச் செழுமை மிக்கதோர் பெட்டகமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

    உசாத்துணை:

    http://thiruvarutprakasavallalar.blogspot.com/2008/03/8-appearance-in-judicial-court.html

    நாவலர் அறிவாளியாகவன்றி ஓர் அருளாளராக இருந்தாரில்லை. அதனால் சகலவுயிர்களையும் குறிப்பாக மனிதர்களை ஒரே ஆன்மாவின் வடிவமாகப் பார்க்கும் பரஞானமற்றவற்றராக இருந்தார். வைதீக நெறியை அவர் பின்பற்றினாலும் ஆன்ம ஞானம் சித்திக்காததனால்; சாதீயம் அவரைத் தடுத்தாட்கொண்டு விட்டது. அதனால் தான் அமைத்த பாடசாலைகளிலேயே தாழ்த்தப்பட்ட குழந்தைகளைக் கல்வி கற்கச் சேர்க்க விடாமற் பண்ணிவிட்டது.

    மாறாக வள்ளலாரோ அனுபூதிமானாக, எல்லாவுயிர்களிடத்தும் இறைவனைக் கண்டுதெளியும் ஆத்மாஞானத் தெளிவுடையவராய் இருந்தார். அதனால் அவரிடம் சனாதன வைதீகக் கொள்கைகளுக்கு மாறாகப் புரட்சிகரமான கொள்கைகள் உருவாயின. சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயமொன்றை அவர் உருவாக்கப் பாடுபட்டார். இறைவனின் படைப்பில் அனைவரும் சமமேயென்ற மெய்யறிவு சிதம்பரம் தீட்சிதர்களுட்படப் பல சனாதனிகளை அவர்மீது எரிச்சலடையச் செய்தது. பலரின் பகையையும் சம்பாதித்துக் கொண்டார்.

    தமிழ் என்னும் சொல்லுக்கான வள்ளலாரின் விளக்கம் வடமொழிச் சொற்கள் மிகுந்து எளிதில் புரியமுடியாததாகவுள்ளது. இருப்பினும் அவ்விளக்கத்தின் முடிவுரை இங்கே தரப்படுகிறது:

    ‘மருளியற்கை மலஇருளைப் பரிபாக சத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சித்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர ககன, நடன அருட்பெருஞ்சோதியென்னும் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீதவியலால் அனுபவிக்கும் இயற்கையுண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க. இதன்கருத்து யாதெனில்: தமிழ் பாஷையே அதிசுலபமகச் சுத்த சிவானு பூதியைக் கொடுக்குமென்பதாம்.’ – இதுவே அவரது வார்த்தைப் பிரயோகம் – பக்கம் 306 திரு அருட்பா உரைநடைப் பகுதி – நான்காம் பதிப்பு, பாரதி அச்சகம் சென்னை.

    மேற்கண்ட வள்ளலாரின் கூற்றின்மூலம் தமிழில் பூசை வழிபாடுகள் இயற்றுதல் மூலமே அனு பூதியை இலகுவாகப் பெறமுடியுமென்பதை உணர முடிகின்றது.

    அவரின் விளக்கத்தின்படி: திருவாசகம், தேவாரம், திருமந்திரம் ஆகியன பரமார்த்த ரகசியங்களையுடையன வாகவும், அத்தகைய கருத்துக்களைக் கொண்ட ஆரிய, ஆந்திர, மகாராஷ்டிர மொழிப் பாஷ்யங்களுக்கான பொருள் விளக்கம்பெற அந்தந்த மொழிப் பண்டிதர்களைத் தேடித்திர வேண்டியுள்ள தென்றும், தேடினாலும் கிடைப்பதில்லையென்றும் ஆகவே தமிழிலேயே வழிபாடியற்றல் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்றும் அறிய முடிகின்றது.

    இதன் மூலம் தமிழிலேயே வழிபாடியற்றல் வேண்டுமென்னும் கருத்தானது வள்ளலார் காலத்திலேயே தோற்றம் பெற்றுவிட்டது என்பது தெளிவாகின்றது.

    வள்ளலாரின் இத்தகைய போக்கு சிதம்பரம் தீட்சிதர்களின் பிழைப்பைக் கெடுக்கும் போக்காகக் காணப்பட்டதால் அவர்களாலேயே வள்ளலார் கொலை செய்யப்பட்டார் என்று கூறுவோரும் உளர். ஆனால் வள்ளலாரைப் பின்பற்றுபவர்களோ, வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் அவர் கட்டிய சித்திவளாகத்தில் 1874 தைப்பூசத்தன்று ஓர் அறைக்குள் சென்று அதனைச் சிலகாலம் திறக்க வேண்டாமென்று கூறிக் கதவைப் பூட்டிவிட்டு உள்ளேயே சோதியில் கலந்தார் என்று நம்புகின்றனர். அதன் பிறகு அவர் அங்கு காணப்படவில்லை.

    வள்ளலாரின் அருட்பாக்கள் சில :ஈழத்தில் கிழக்கு மாகாணத்தில் கோயில்களில் பாடப்படுவது வழக்கமாகும். குறிப்பாக ‘அம்பலத்தரசே அருமருந்தே…’ (ஆறாம் திருமுறை பாடல்: 2256 பக்கம்: 430)

    என்னும் பாடல் அங்கு கூட்டுப் பிரார்த்தனைகளில் பஜனைப் பாடலாகப் பாடப்படுகின்றது.

    ‘ஒருமையுடன் உனது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

    பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க் வேண்டும்

    பெரு நெறிபிடித் தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்

    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்

    மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்

    தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே

    தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே’

    பாடல்: 2938 பக்கம்: 554

    என்னும் பாடலும் மிகப் பிரபலமானது. கொஞ்சும் சலங்கை என்னும் படத்தில் சாவித்திரி பாடும் பாடல் காட்சியொன்றில் இப்பாடல் இடம்பெறுகின்றது.

    வள்ளலாரின் பாடல்களில் பெரும்பாலானவை எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடிய பாடல்களாயிருந்தாலும், யோக ஞான சாதனைகளை உட்பொருளாக்கி அவர் பாடிய பாடல்கள் சித்தர் பாடல்களைப் போல் சற்று ரகசியப் பொருள் பொதிந்தனவாகக் காணப்படுகின்றன.

    ‘கையறவில்லாத நடுக் கண்புருவப் பூட்டு கண்டு களிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு

    ஐயர்மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவதென்றே மறைகள் பாடுவது பாட்டு’

    ஆறாம் திருமுறை: பாடல் – 2242 பக்கம்: 428.

    என்ற பாடல் அதற்கு ஓர் உதாரணமாகும். நடு நெற்றிக்குச் சற்றுக் கீழேயுள்ளதான புருவ நடுவில், புலனைச் செலுத்தி அவ்விடத்தை விட்டு கவனம் அகலா வண்ணம் பூட்டிடுவதால்; மூன்றாம் கண்ணான நெற்றிக்கண் திறந்து ஒளிவெள்ளம் பாயும். யோகியர் அதில் லயித்திருப்பார். அந்த விளையாட்டினால் வரும் ஞான வெளிப்பையே வேதங்களும் பாடுகின்றன. என்பதே அதன் கருத்தாகும்.

    இங்கே கையறவில்லாத என்பதன் மூலம் எம்மைக் கைவிட்டுவிடாத சாதனை என்ற பொருளைப் பெறமுடியும், மாறாக அதனைக் கையுறவில்லாத என்றும் கொள்ளலாம். கைவிரலினால் நெற்றிப் பொட்டில் தொட்டபடி புருவ நடுவில் கவனத்தைச் செலுத்துவதையே அது குறிக்கும். சிலர் அவ்வாறு அந்தச்சாதனையை செய்வதுண்டு. விவேகானந்தருக்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் நெற்றிப்பொட்டில் ஓர் வில்லுக்கத்தியால் சற்றுக் கீறி அதிலே கவனத்தைப் போடுமாறு காண்பித்தபோது விவேகானந்தர் உடனடியாக நிர்விகற்ப சமாதிநிலையை அடைந்தாரென்றும். பரமஹம்சர் அதுபற்றி விவேகானந்தரிடம் பாராட்டிப் பேசியபோது நான் பலவருடங்களாக முயன்று அடைந்த அந்த சமாதி நிலையை நீ சில நிமிடங்களிலேயே அடைந்து விட்டாய் என்று மெச்சியதாகவும் வரலாறுண்டு. அந்த நெற்றிக்கண் யோகத்தையே வள்ளலார் இங்கே குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

    இந்த மூடுமந்திரமான பாடலுக்கு அடுத்ததாக வரும் பாடல்கள் அந்தத் தியான சாதனையினால் வரும் இன்பானுபவத்தை எளிமையாக விளங்கப்படுத்துகின்றன.

    ‘சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு

    இற்சமய வாழ்விலெனக்கென்னை இனி ஏச்சு என்பிறவித் துன்பமெல்லாம் இன்றோடே போச்சு’

    பாடல் 2243 பக்கம் 428.

    என்ற பாடல் வரிகளில் புருவமத்தியில் துலங்கும் ஒளிப்பிரமத்தின் லயிப்பில் தான் பெற்ற இன்பத்தினால் சித்தானுபவமாகிய சிற்றம்பலமும் கண்முன்னே தோன்றும் பொன்னம்பலமும் சொந்தமாகிவிட்டதான ஞானானுபவத்தைப் பெறுவதோடு, தேவர்கள், திருமால், பிரமன், உருத்திரன் ஆகியோரின் ஞான பாசையும் விளங்குவதாயிற்று, இல்லறத்திலிருந்தே இனி நான் நல்லறமியற்ற முடியும், என்பிறவித் துன்பமெல்லாம் இன்றோடே போய்விட்டது என்கிறார் வள்ளலார். வள்ளலார் தனது தமக்கையாரின் மகளைத் திருமணம் செய்து திருமணபந்தத்தில் சிலகாலம் வாழ்ந்தவரென்பதும் பின்னர் தனது இல்வாழ்வை வெறுத்து துறவையே மேற்கொண்டாரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

    ‘அருள் சோதித் தெய்வமெனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்.

    பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வமுயர் நாதாந்தத் தெய்வம்

    இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம் எண்ணியநான் எண்ணியவா றெமக்கருளும் தெய்வம்

    தெருட்பாடலுவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்’

    ஆறாம் திருமுறை. பாடல்: 737, பக்கம்:179

    என்ற மற்றோர் அழகிய இசைப்பாடலும் திரையிசையாக இசைக்கப்படுகின்றது.

    வள்ளலாரின் பாடல்களில் பல்வேறுபட்ட செய்யுள்வகைகளைக் காணக்கூடியதாயுள்ளது. இவை மரபு வழிச் செய்யுள்களை யாக்க விரும்புவோருக்குச் சிறந்த உதாரணங்களாக அமைந்துள்ளன. அச்செய்யுள் வகைகளின் பட்டியல்:

    1.வெண்பா

    1. வஞ்சித்துறை
    2. நேரிசை வெண்பா
    3. வஞ்சி விருத்தம்
    4. நாலடித் தரவுக் கொச்சகக்கலிப்பா
    5. கலிநிலைத் துறை
    6. கலிவிருத்தம்
    7. கலிச்சந்த விருத்தம்
    8. கலித்துறை
    9. கலிவண்ணத்துறை
    10. கட்டளைக் கலித்துறை
    11. வண்ணவிருத்தம்
    12. கட்டளைக் கலிப்பா
    13. கலிநிலை வண்ணத்துறை
    14. கொச்சகக் கலிப்பா
    15. குறள் வெண் செந்துறை
    16. தரவுக் கொச்சகக் கலிப்பா
    17. அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
    18. ஆசிரியத் தாழிசை
    19. எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
    20. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

    போன்றனவாம். மேற்கண்ட பட்டியலிருந்தே வள்ளலாரின் புலமை புலனாகின்றது. மிகவும் சிறப்பான சந்த நடைகளுடன் எழுதப்பட்டுள்ள இந்தச் செய்யுள்களில் தனியே இலக்கியச் சிறப்பு மட்டுமன்றி பக்திப் பெருக்கும் அப்பக்தியினால் கிடைத்த ஞானானந்த உணர்வு வெளிப்பாடும் காணப்படுகின்றன. புலமை தெய்வீக சக்தியின் ஓர் விளைவென்பது வள்ளலாரின் பாடல்களிலிருந்து புலப்படுகின்றது. அதனாலேயே வள்ளலாரை ஓர் சிறந்த அனுபூதிமானாகப் பலரும் போற்றி அவர் வழியைப் பின்பற்றுகின்றனர்.

    தேவார முதலிகள் மணிவாசகர் உட்பட பிற்காலத்துப் பட்டினத்தடிகள் தாயுமானவர் போன்றவர்களுக்கு அடுத்தததாக வந்த இடைவெளிக்குப்பின்னர் வள்ளலாரே தமிழ்நாட்டில் பக்திச்சுவையை மீண்டும் கொண்டு வந்து சமய மறுமலர்ச்சிக்கு உயிரூட்டினார் என்பதை மறுப்பதற்கில்லை.

    தெய்வீகப் பாடல்களால் இறைவனைத் தமிழ் செய்தது மட்டுமல்லாது மக்கட் சேவையிலும் ஈடுபட்டு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் உட்பட பலவகை நன்மைகளையும் வள்ளலார் செய்யத் தொடங்கினார். வடலூர் சன்மார்க்க நிலையத்தில் உள்ள தர்மசாலையில் வள்ளலாரின் காலத்திலிருந்தே மூட்டப்பட்ட அடுப்பு இன்றும் அணையாது பாதுகாக்கப்பட்டு எழை எளியவர்களுக்காக அன்னதானம் செய்யப்படுகின்றது.

    வள்ளலாரின் திருவருட்பா ஆறு திருமுறைகள் மட்டுமல்லாது அவரது உரை நடைப்பகுதியும் உள்ளது. அதனையும் திருவருட்பா உரைநடைப் பகுதியென்றே கூறுவர். வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்தினால் அவ் வுரைநடைப்பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் உரைநடை நூல்கள், வியாக்கியானங்கள், மருத்துவக் குறிப்புகள், உபதேசங்கள், வள்ளலார் எழுதிய திருமுகங்கள், அழைப்பிதழ்கள், விண்ணப்பங்கள் என்று பல பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    வள்ளலார் காட்டிய சன்மார்க்க நெறிகள் சுருக்கமாயப் பின்வருவனவாகும்:

    • கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி வடிவினர்
    • சிறுதெய்வ வழிபாடுகளைத் தவிர்த்தல் வேண்டும், தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி செய்தலாகாது
    • பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல், அதுவே கடவுள் வழிபாடு
    • உலக அமைதிக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டைக் கடைப்பிடித்தல் வேண்டும்
    • மது மாமிசம் உண்ணலாகாது
    • எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி நடத்தல் வேண்டும்
    • சாதி, இனம், சமயம் முதலிய வேறுபாடுகளின்றி இருத்தல் வேண்டும்
    • எக்காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்
    • இறந்தவர்களை எரிக்காது புதைத்தல் வேண்டும். கருமாதி, திதிச் சடங்குகளைத் தவிர்த்தல் வேண்டும் என்பனவாம்.

    வைதிகரான மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் சிதம்பர சுவாமிகள் அருளிய கீழ்வரும் வெண்பா வள்ளலாரின் அருட்பாவின் மகிமையைக் கூறுவதாகவுள்ளது.

    தண்ணீர் விளக் கெரித்த தன்மை போன் மாந்தர்கள்தம்

    உண்ணீர் சிவம் விளங்க ஓங்குவிக்கும் – கண்மணியாம்

    நங்கள் இராமலிங்கன் நல்ல அருட்பாமுறையைத்

    துங்கமுற மாணா தொழு

    இக்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.

    Share
  • படக்கவிதைப் போட்டி 178-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்த நிழற்படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது. 

    விண்ணில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் கதிரவனின் எழிற்பிம்பம் கடல்நீரிலும் தன் முகங்காட்டி நம் அகங்கவரும் அழகு அற்புதம்; இதுவொரு புனையா ஓவியம்!  

    அதோ… அந்த இணையரும் இணையில்லா இவ்வியற்கை எழிலில் மனங்கரைந்து நிழற்படம் எடுத்துக்கொண்டிருக்கக் காண்கின்றோம்.

    இந்த இயற்கைச் சித்திரத்துக்கு உங்கள் எண்ணத் தூரிகையால் வண்ணந் தீட்டுங்கள் வண்டமிழ்க் கவிஞர்களே! 

    ******

    ”வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்து இவ்வெழிலோவியத்தை வானில் வரைந்து அதன் நிழலை மண்ணில் விழவைத்த வித்தகன் எவன்? அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமான அவனை ஆரறிவார்?” என வினவுகின்றார் திரு. அ. இராஜகோபாலன்.

    மண்ணில் தெரியுது வானம்!

    வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்திதை
    வானில் வரைந்தவர் யார்?
    மண்ணில் அதன்நிழல் நீரில் விழும்படி
    மாண்புறச் செய்தது யார்?
    கண்ணைக் கவர்கிற காட்சியின் மாட்சியைக்
    காட்டி மறைப்பவர் யார்?
    எண்ணில் அவரிங்கு எங்கும் நிறைந்துளார்
    என்பதை யாரறி வார்?

    *****

    கருமையும் வெளுப்புமாய், இருளும் ஒளியுமாய் நிழலற்று நிற்கும் நிறங்கடந்த காதலை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திரு. எஸ். கிரிதரன்.

    உதயமா? இல்லை
    ஒருநாளின் முடிவா?
    கருமையும் வெளுப்பு
    இருளும் ஒளியுமாய்
    நிறம் கடந்த காதல்
    நிழலற்று நிற்கிறது!

    *****

    ”அடிநாதமாய் பூமிப்பந்தை அசைவிக்கும் கதிரோனே அப்பட்டமான இறைரூபம்” என்று ஒளிவடிவாய் அந்த ஒப்பிலாமணியைக் காண்கின்றார் திரு. ஏ.ஆர்.முருகன், மயிலம்பாடி 

    அகிலத்தின் ஆன்மா!!

    அதிகாலை வரவோ?
    அந்திவேளைமறைவோ?
    அழகிய கிரகணங்களால்
    அரும்பிடும் வெளிச்சம்
    அகிலத்தின் இயக்கம்!!
    அனைத்தையும் படைத்து
    அரவணைக்கும் பேரொளி!
    அணுவளவும்‌ பிசகாமல்
    அடிவானில் எழுந்து வந்து
    அள்ளித்தரும் ஆற்றலின்
    அற்புதத்துக்கிணையேது??
    அடிநாதமாய் பூமிப்பந்தை
    அசைவிக்கும் கதிரவனே
    அப்பட்டமான இறைரூபம்!!
    அலைகடல் ஓரம் நின்று
    அவன் எழிலை தரிசிப்பது
    அளவில்லாப் பேரானந்தம்!!
    அனுபவிக்கும் போதுதான்
    அதன் அர்த்தம் புரியும்!!
    அண்டசராசரம் முழுதையும்
    அவதானிப்பவனை எண்ணி
    அடிபணியும்பிரார்த்தனையில்
    அந்த ஆதவனைசரணடைந்து
    அளப்பரிய வளம் பெறுவோம்!!!

    ***** 

    ”அடக்கமாய்த் தெரியும் கடல் ஆர்ப்பரித்தெழுந்தால், அது கண்டு வெம்பாது அதனோடு போராடி மீள மீனவர்க்கு வேண்டும் தெம்பு!” என்று தண்ணீரில் பிழைக்கும் மீனவரின் கண்ணீர்க் கதையை கவிதையாய் விவரிக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    கடலால் சூழ்ந்த கலையுலகம்
    ……….கணக்கே இலாத ஆழமுண்டு.!
    அடக்க மிருந்தும் ஆபத்தாம்
    ……….ஆர்ப்ப ரிக்கும் அதனலையே.!
    இடமும் கொடுத்து ஏகமாக
    ……….ஈந்த ருளுமே உணவையுமே.!
    கடல்வி ளையும் அமுதங்கள்
    ……….கொடுப்ப தாலே வள்ளலாமே.!

    கம்பு கொண்டு தள்ளுகின்ற
    ……….கட்டு மரமும் கடலினுள்ளே.!
    அம்பு போன்று சீறுகின்ற
    ……….அலைகள் நடுவே மீனவர்கள்.!
    வெம்பு மனமும் கொந்தளிக்க
    ……….வேத னையை உண்டாக்கும்.!
    தெம்பு வேண்டும் கடல்சார்ந்து
    ……….தம்மு யிரையும் காப்பதற்கே.!

    ஓடும் கப்பல் கடல்நடுவே
    ……….ஓடி ஆடும் ஒர்வாழ்க்கை.!
    ஆடும் ஓடம் அதிலுண்டு
    ……….அடுத்த நொடிநிச் சயமில்லை.!
    பாடும் பாட்டும் பண்ணாகும்
    ……….படும் துன்பம் அளவில்லை.!
    தேடும் மீன்கள் அதிகளவில்
    ……….திண்டா டியபின் கிடைக்குமாமே.!

    இந்தக் கவிதையோடு, பகலவனைப் போற்றியும், அன்பை வாழ்த்தியும், அலைகடலின் ஆர்ப்பரிப்பை ஆராதித்தும் மேலும் சில கவிதைகளை ஆர்வத்தோடு படைத்தளித்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதிக்கு என் தனிப்பட்ட பாராட்டு! 

    கவிஞனின் காதல்

    கவிதை எழுதக் கருவாக வந்தாய்.!
    கவிஞரின் நெஞ்சைக் குலைத்தாய்! – புவிதனில்
    உன்னழக் கின்னோர் உவமையும் இல்லையே
    நின்னையே சுற்றுமே நெஞ்சு.!

     *****

    அன்பான காதலர்கள் அங்கே படமெடுக்க
    இன்பமாய் இன்று இணைந்தார்கள் – அன்பால்
    எவரும் எதைச்செய்ய எத்தனித் தாலும்
    எவருக்கும் வெற்றி எளிது!

     *****

    அலைகடல் ஆர்ப்பரிக்கும் அற்புதக் காட்சி
    அலைபேசி உள்ளே அமர்ந்து – தலைமுறை
    போற்றுகின்ற நல்ல படமாய் அமைந்தது
    மாற்றம் விரும்பும் மனது. 

    *****

    ”இதயம் இணைந்த சதிபதியை வாழ்த்திச் சிவந்த கதிரவன் இவன்!” என்று கதிரோனின் செம்மைக்குச் சிறந்ததொரு காரணம் பகர்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    சந்திப்பு…

    இதயம் இணைந்த காதலர்கள்
    இணைந்தே வந்த கடற்கரையில்
    உதய நேரக் கதிரவனும்
    உவந்தே வந்தான் இணைகாண,
    புதிதாய் வாழ்வைத் தொடங்குமிவர்
    பகலவன் வரவில் மகிழ்கின்றார்,
    சதிபதி யிவர்களை வாழ்த்தியேதான்
    சிவந்தது வானின் முகமதுவே…!

    ***** 

    காதலியை வருணிக்கும் காதலனையும், கடல் குளித்தும் நிறம் மாறாச் சூரியனையும், மேற்கே புதைந்தாலும் கிழக்கே சிலிர்த்தெழும் அதன் விடாமுயற்சியையும் குறும்பாக்களில் அருமையாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. வசந்திமணாளன்.

    குழப்பம்

    தூரத்தில் சூரியன்
    அருகினில் நிலவு
    எதை ரசிப்பது
    குழப்பத்தில் அவன்!

    *****

    கண்ணாடி

    அடி பெண்ணே
    சூரியனுக்கு நீர்தான்
    கண்ணாடி
    அந்த சந்திரனுக்கு
    நீதான் கண்ணாடியோ
    ஆம் உன்முகத்தில்
    நிலவு தெரிகிறதே!

    *****

    நீலக்கடலில்
    குளித்த பிறகும்
    நிறம் மாறவில்லை
    சூரியன்!

    *****

    சுடும் நிலா

    உன்னருகில் சந்திரனை
    வைத்துக்கொண்டே
    விண்வெளியின்
    சூரியனை விரும்பிப்
    படம் எடுக்கின்றாயே
    அந்தச் சூரியனைவிடவா
    சுடுகின்றாள் உந்தன் நிலா?

    *****

    விடாமுயற்சி

    நேற்றுமாலை
    மேகக்கூட்டம் அழைத்துச்சென்று
    மேற்கில் புதைத்தன
    இன்றுகாலை
    அதன் சோகம் மனதில் சிறிதுமின்றி
    கிழக்கில் உதித்தது!

    *****

    இயற்கை அழகைப் போற்றியும், இணையரை வாழ்த்தியும் கவிதைகள் வரைந்து குவித்திருக்கும் கவி வலவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக!

    அடுத்து இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    செம்பொற் சோதி

    அந்திச் சிவப்பழகா அதிகாலைச் சூரியனா
    செந்தீ உமிழுகின்ற சிவனது நெற்றிக் கண்ணா
    பரிதியாய் அடிவானத்தில் பளிச்சிடும் செம்பொற் சோதி
    விரிதழலன்ன முன்னே விளங்கிடும் காட்சியென்னே?

    புவியினில் மாந்தர் செய்யும் புன்மைசேர் செயல்கட்காக
    ரவியவன் சினக்கின்றானா? ரம்மியமூட்டி மண்ணை
    அன்பொடு நோக்கும் நோக்கா அல்லது வெறுக்கும் போக்கா
    இன்பமாய் வாழ்வீரென்றே எமக்கவன் அளிக்கும் வாக்கா

    மேழியர் போற்றும் செய்ய விரிகதிர் தொலை தூரத்து
    ஆழியின் விளிம்பிற் தோன்றும் அற்புதக் காட்சியோடு
    ஆழியினீரமண்ணில் ஆதவன் விம்பம் வந்து
    வீழ்வதும் அழகுக் காட்சி விரைந்தததை இருவர் சேர்ந்து
    தோழமையோடு நின்று சொடுக்கியே கமராவுக்குள்,
    வீழவைக்கின்ற காட்சி மேலும் பேரழகு அந்தத்
    தோழரின் பின்னே மெல்லத் தொடர்ந்தொரு படஞ்செய்திட்டார்.
    வாழ்வினில் இன்பஞ்சேர்க்கும் வழிகளிலிதுவு மொன்றே.

    செம்பொற்சோதியாய்ச் சுடர்விட்டு விரிதழலன்ன காட்சி நல்கும் சூரியனின்  தோற்றம் கண்டு,
    ”புவியினில் மாந்தர் செய்யும் புன்மைசேர் செயல்கட்காக
    ரவியவன் சினக்கின்றானா?” என்று வினவுகிறது இக்கவிதை.
    இவ்வரிகள் எனக்கு,

    மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
    வறியராம் உரிமை கேட்டால்
    புண்மீதில் அம்பு பாய்ச்சும்
    புலையர்செல் வராம்இ தைத்தன்
    கண்மீதில் பகலி லெல்லாம் 
    கண்டுகண்டு அந்திக் குப்பின்
    விண்மீனாய்க் கொப்ப ளித்த
    விரிவானம் பாராய் தம்பி!” என்று எளியோரின் இழிநிலைகண்டு அறச்சீற்றங்கொண்டு பாவேந்தர்  எழுதிய வைர வரிகளை நினைவூட்டின.

    வானிடைதிகழ் ஆதவன் ஆழியின் ஈரமண்ணிலும் தன் பிம்பம் பதிக்கும் எழிற்காட்சியை, அதனழகில் திளைக்கும் தோழர்கள் படமெடுக்கும் மாட்சியை, தேர்ந்த வரிகளில் விவரிக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180918-New Forever-wcol 10×14-lr

    அளித்திடுவார் உச்சியை, ‘ஆ’போல் உனக்கும்
    களித்திரு கண்ணன் கலப்பில் -பளிச்சென
    நாக(ம்)(குண்டலினி) ஏறா மல்நாம்உச்சி, நாம சஹஸ்ரத்தால்(சஹஸ்ரஹார சக்ரம்-விஷ்ணு சஹஸ்ர நாமம்-சக்ரம் சுதர்ஸனம்)
    வேகமாய் நித்ரை விழிப்பு….!

    அந்தரங்க சுத்தியுடன் அந்த(அ)ணங்கு(கோமாதா பெண்தானே) ‘ஆ’போல,
    அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
    வைகுண்டம் வாவென்று கைகொடுத்து உச்சிமுகர்
    பைகொண்ட நாகமுற்ற பொற்பு(அழகு)….!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 179

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • இந்த வார வல்லமையாளர் (279)

    இந்த வார வல்லமையாளராக வானியல் விஞ்ஞானி ஜாசிலின் பர்னல் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பல்ஸார் (Pulsar) என்னும் வேகமாகச் சுழல்கிற இறந்துபட்ட நட்சத்திரங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் பேரா. பர்னல். அவர் மாணவராக இருக்கும்போது நடந்த கண்டுபிடிப்பு ஆனதால், அவரது பேராசிரியர் ஹ்யுயிஷ் நோபல் பரிசை வென்றார்.

    இப்போது 3 மில்லியன் $ பரிசான Special Breakthrough Prize ஜாஷ் பர்னலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுப் பரிசுத் தொகையையும் பெண்கள் பௌதீகவியலில் ஆராய்ச்சி செய்ய வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்பரிசைப் பெறும் முதல் பெண்மணி ஜாஸ்லின் பர்னல் ஆவார். இவர்க்கு முன்னர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்புக் குழு, ஈர்ப்புவிசை அலைகள் (Gravity waves) கண்டறிந்தோருக்கு இந்த பிரேக்துரோ பரிசில் வழங்கப்பட்டது.

    Professor Dame Jocelyn Bell Burnell, visiting Professor of Astrophysics, University of Oxford, from Bradford-on-Avon, is made a Dame Commander of the British Empire by The Queen at Buckingham Palace, for services to Science. (Photo by PA Images via Getty Images)

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180916_Yashoda -wcol-lr 10×14

    பள்ளிதனைக் கொள்வதால், பிள்ளை பெறுவதால்,
    வெள்ளலைப் பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்
    கார்மேக வண்ணனும் கண்ணிநுண் அன்னையும்
    நேர்நிகர் ஆவார் நமக்கு….கிரேசி மோகன்….!

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 125

    நிர்மலா ராகவன்

     

    கடவுள் நம்பிக்கை – மூட நம்பிக்கை

    `ராத்திரி வேளையில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளாதே. அடுத்த ஜன்மத்தில் மோசமான பிறவி வாய்க்கும்!’

    `செவ்வாய், வெள்ளி, அமாவாசை ஆகிய நாட்களில் சவரம் செய்துகொள்வதும், நகம் வெட்டிக்கொள்வதும் ஆகாது!’

    நடுத்தர வயதான சாம்பு இப்படியெல்லாம் ஓயாது தம் குழந்தைகளை விரட்டிக்கொண்டிருப்பார். அவர் கூறியது அறிவுரையா, அச்சமுறுத்தலா?

    தந்தையைத் தட்டிக்கேட்டால் மரியாதையாக இருக்காதே! அதனால் அவருக்குக் கீழ்ப்படிந்தனர் அவர் பெற்ற மக்கள். இந்த சர்வாதிகாரத்தில் வளர்ந்த (வளைந்த?) குழந்தைகள் புதிதாக எந்த காரியம் செய்வதற்கு முன்னரும், `இப்படிச் செய்தால் ஏதாவது கெடுதல் வந்துவிடுமோ?’ என்று தமக்குத் தாமே தடை விதித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

    புத்திசாலிகள் அவர்கள் நன்றாகச் செய்யக்கூடிய காரியத்தில்கூட சிறிது சந்தேகத்துடன் ஈடுபடுவர். அதற்கு எதிர்மாறாக, `நாம் சொல்வதும் செய்வதும் சரிதானா, தவறாகவும் இருக்கலாமே!’ என்று நினைத்துப்பார்க்கவும் விரும்பாது, வெறி பிடித்தவர்கள்போல் நடப்பர் சாம்புவைப் போன்றவர்கள்.

    பயம் ஏன் எழுகிறது?

    எந்த நாட்டினர் ஆனாலும், ஒரு சூழ்நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றுக்கு (அதாவது, கிராமம் அல்லது சிற்றூர்களிலிருந்து பெரிய நகர்ப்புறத்திற்கு) குடிபெயர்ந்தால், தம் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் பிறர் ஏற்க மறுப்பார்களோ என்ற அச்சம் எழுகிறதாம் சாம்புவைப் போன்றவர்களுக்கு. (உளவியலில் படித்தது).

    `நான் சொல்வதும் செய்வதும்தான் சரி!’ என்ற பிடிவாதம் மிகும் அவர்களுக்கு. புதிதாக எதையும் ஏற்க மறுப்பார்கள். கூட இருப்பவர்களும் தம்மைப்போல்தான் நடக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள்.

    கதை: அதிகாரத்தால் பயம்

    எங்கள் குடும்ப நண்பர் வேல்முருகன் சமீப காலமாக தன் தங்கைக்கு மனநிலை சரியில்லை என்றும், சிகிச்சைக்கு அழைத்துப்போவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

    “உங்களிடம் உண்மையைச் சொல்லிடறேன்,” என்று மேலும் கூறினார்: “என் தந்தை ரப்பர் தோட்டப்புறத்தில் வளர்ந்தவர். அங்கேயே காலத்தைக் கழித்துவிட்டு, கோலாலம்பூருக்கு வந்தவர். இங்கும், `வீட்டுக்குள் நுழையுமுன் கால்களை வாசலிலேயே கழுவிவிட்டுக்கொள்!’ என்று அதிகாரம் செய்தால் எப்படி!”

    இது ஒரு சிறிய காரணம்தான். இதைப்போல் பலவும் இருக்கும்.

    காலத்திற்கும் இடத்திற்கும் ஒவ்வாது, `இப்படி நட, அப்படிச் செய்!’ என்று மூத்தவர் ஒருவர் ஓயாமல் விரட்டிக்கொண்டே இருந்தால், எல்லா பாதையும் தடைப்பட்டுப்போகின்றனவே! சுய சிந்தனைக்கே இடம் கொடுக்காத நிலையில், புத்தி தடுமாறாமல் என்ன ஆகும்!

    மரண பயம்

    புதிய காரியங்கள் செய்வதிலிருந்து, மரணம்வரை எது எதற்கோ பயம் மனிதர்களுக்கு. சிறுவர்களுக்கு இறப்பு என்றாலே கொள்ளை பயம். ஆனால், வயோதிகர்களோ, பலகீனம், பல்வித நோய்கள், தனிமை என்று அவதிப்படும்போது, மரணத்தை வரவேற்கும் மனநிலையைப் பெறுகிறார்கள்.

    (சிலர், `எனக்குச் சாவதற்குப் பயமில்லை. ஆனால், பிடித்தவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டுப் போகவேண்டுமே என்றுதான் வருத்தம்!’ என்று சொல்வதையும் கேட்டுள்ளேன்).

    சுயநலவாதி

    தன்னைப்பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கும் ஒருவன் அச்சம், தனிமை, ஆத்திரம் போன்ற குணங்களுக்கு அடிமையாகி அல்லல்படுகிறான்.

    காலம் கடந்தபின்னரும்

    கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு, அதிலிருந்து வெளிவராது, `இனி என்ன நடக்குமோ!’ என்று எதிர்காலத்தை எண்ணி அஞ்சுபவர்கள் பலர். தற்காலத்தில் ஒன்றுமே செய்யாமல் இருந்தால், `நம்மால் முடியுமா!’ என்ற அவநம்பிக்கையும், அச்சமும் பிறந்துவிடுமே!

    அச்சத்தை எதிர்கொள்!

    அச்சத்தை முறியடிக்க ஒரே வழிதான் உள்ளது: தைரியம்!

    தைரியம் என்றால் எதற்கும் அஞ்சாமல் இருப்பது என்பதில்லை. அச்சத்தை எப்படி எதிர்கொள்வது என்று புரிந்து நடப்பது.

    கதை

    “எனக்கு நாட்டியம் கற்றுக்கொள்ள ஆசை. சிறு வயதில் கொஞ்சம் கற்றேன். ஆனால் இப்போது குண்டாக இருக்கிறேனே!” என்று முதலில் தயங்கினாள் மனோகரி.

    அக்கலையின்மீதிருந்த விருப்பம் வென்றது. `பிறர் சிரிப்பார்களோ, என்ன சொல்வார்களோ!’ என்ற வீண்யோசனையைக் கைவிட்டாள். உடல் வலியை அலட்சியம் செய்தாள். சிறுமியான மகளுடன் தானும் கற்றாள்.

    ஆடும்போது தவறு ஏற்பட்டால், மனோகரி கூனிக் குறுகுவதோ, அசட்டுச்சிரிப்பு சிரிப்பதோ கிடையாது. மேடையில் ஆடும் அளவுக்கு சிறப்பாளோ, என்னவோ! ஆனால், `துணிந்து செய்திருக்கலாமோ!’ என்று என்றாவது வருந்த வேண்டாம். ஆடும்போதே மகிழ்ச்சி பொங்குகிறது. இதுவரை இல்லாத தன்னம்பிக்கையும், சுதந்திர உணர்வும் வந்துவிட்டன மனோகரிக்கு. இது போதாதா!

    யாருக்குப் பயமில்லை?

    அது எப்படி, சிலபேருக்கு மட்டும் நிமிர்ந்து நடக்க முடிகிறது என்று எப்போதாவது உங்கள் யோசனை போனதுண்டா?

    அவர்கள் நேர்மையானவர்கள். தாம் கூறியதை அடிக்கடி மாற்றிச் சொல்லவேண்டிய அவசியம் அவர்களுக்குக் கிடையாது. அதனால், `இவரிடம் என்ன சொன்னோம்?’ என்று நினைவு வைத்துக்கொண்டிருக்க வேண்டாம். இதனாலேயே இவர்களுக்குப் பயமுமில்லை, `தவறாகச் சொல்லிவிட்டோமோ?’ என்ற குற்ற உணர்வும் கிடையாது.

    மூடநம்பிக்கைகளால் அச்சம்

    மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறவர்கள், `கடவுள், மதம்’ என்று போலிச்சமாதானங்களை முன்வைத்து வெல்கிறார்கள்.

    அச்சமுறுத்தும் மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞானம்தான் எதிரி என்று கூறலாம். ஏன், எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் விஞ்ஞானம் விடை அளிக்கிறது.

    இப்படிப்பட்டவர்கள் தாம் சொல்வதே சரி என்று சாதிப்பார்கள், அதில் அவர்களுக்கே சந்தேகம் இருந்தாலும்! தம்மைப்போல் இல்லாதவர்களைப் பொறுக்கமாட்டார்கள். சிலர் – ஹிட்லரைப்போல – வன்முறையில் இறங்குகிறார்கள். இன்றும் உலகெங்கும் காணப்படுகிறார்கள்.

    இந்த வெறித்தனம் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டது. ஆயினும், தீயவைதாமே எளிதாகப் பரவுகின்றன!

    கதை

    ஸால்மா என்ற பதின்ம வயதுப் பெண் காதில் இரு துளைகளைக் குத்திக்கொண்டு, அவைகளில் சிறிய தோடுகளை அணிந்து பள்ளிக்கூடத்திற்கு வந்தாள்.

    `இது நம் மதத்திற்கு எதிரானது,’ என்று கட்டொழுங்கு ஆசிரியை மிரட்டினாள்.

    மாணவி முதலில், `அம்மா அப்படிச் சொல்லவில்லையே!’ என்று சமாளித்தாலும், பலரும் சேர்ந்து மிரட்டியபோது, தாளமுடியாது கதறினாள்.

    மதம் கடவுளை அடைய வழிகாட்டுகிறது என்றால், இந்தச் சிறிய விஷயத்தில் எல்லாம் கடவுள் தலையிடுவாரா?

    மதம் என்பதின் குறிக்கோளே ஒருவனை நல்ல வழியில் செலுத்துவதுதானே?

    காதில் இருக்கும் துளைக்கும், நற்குணத்திற்கும் என்ன சம்பந்தம்?

    “சில மதகுருமார்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது நல்ல செய்தி. மூட நம்பிக்கைகளைப் பரப்ப அடுத்த தலைமுறை எழுவதில்லையே!” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்கரான கார்ல் ஸேகன் (CARL SAGAN). 1996-ல் மறைந்த இவர் ஒரு வானியல் நிபுணர். பாமரருக்கும் புரியும்படி விஞ்ஞானத்தைப் பரப்பியவர்.

    “பயத்தை எதிர்கொள்ளும்போது ஞானம் பிறக்கிறது!” என்கிறார் தத்துவ ஞானி.

    கடவுளை நம்புவதே மூடநம்பிக்கை என்றில்லை. கடவுள் பெயரால், தமக்குத் தோன்றியபடியெல்லாம், தமக்குச் சாதகமாக ஏதேதோ நம்பிக்கைகளைப் பரப்பி, பக்தர்களை பயப்படவைப்பதுதான் ஒப்புக்கொள்ளக்கூடியது இல்லை.

    கதை

    “நான் எது ஒன்று செய்யும்போதும் கடவுளை நினைத்துத்தான் ஆரம்பிப்பேன். நல்லபடியாக முடிந்ததும், கடவுளுக்கு நன்றி சொல்வேன்”. (சமைக்கும்போது அம்மன் பாடல் ஒன்றை நினைத்தபடி இருந்தாலே ருசி கூடுகிறது என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்தேன்).

    நான் இப்படிச் சொல்லக் கேட்ட என் பேரன், “செய்வதையெல்லாம் நாம் செய்துவிட்டு, `கடவுளால்தான்!’ என வேண்டுமா?” என்று சந்தேகம் கேட்டான். அப்போது அவனுக்குப் பதின்மூன்று வயது.

    “சில சமயம், ஒரு போட்டிக்குப் போகுமுன்னர் எதிர்பாராது உடல்நிலை கெட்டு, போட்டியில் கலந்துகொள்ளவே முடியாமல் போய்விடுகிறதே! அது யார் செயல்?”

    அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

    “கடவுள் நம்முடனேயே இருந்தால், நம்மை யார், என்ன செய்துவிட முடியும்!” என்று நம்பிக்கையுடன் இருந்தால், பயமே எழாது என்று எங்கோ படித்தேன்.

    நீங்களும்தான் பரீட்சை செய்து பாருங்களேன்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(225)

     

     

    நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்      

    முந்து கிளவாச் செறிவு.                                                

           -திருக்குறள் -715(அவையறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    அறிவுமிக்கோர் அவையில்

    அவர் பேசுமுன்பு

    முந்திச்சென்று பேசாமை,

    அடக்கம்..

     

    அது

    நற்குணமென்று

    சொல்லப்படுவனவற்றிலெல்லாம்

    தலைசிறந்த

    நல்ல குணமாகும்…!

     

    குறும்பாவில்…

     

    அறிவுமிக்கோரிடம் முந்திச்சென்று             

    பேசாத அடக்கம்,

    நற்குணங்களிலெல்லாம் மிகநல்லதே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அறிவு மிக்க சான்றோர்தம்

         அவையில் சென்றே பேசமுந்தா

    பொறுமை காக்கும் குணமதுதான்,

         பூமி தன்னில் உயர்வான

    நெறிகளி லெல்லாம் மேலான

         நல்ல குணமது யென்றேதான்

    அறியப் படுவ தென்பதாலே

         அவைய டக்கம் கொள்வீரே…!

     

    லிமரைக்கூ..

     

    பேசாதே அறிவுமிக்கோரை முந்தி,    

    அடக்கமிதுதான் நற்குணங்களிலெல்லாம் நல்லது                  

    என்பதை நீயும் சிந்தி…!

     

    கிராமிய பாணியில்…

     

    பேசுபேசு தெரிஞ்சிபேசு

    பேசுற சபய தெரிஞ்சிபேசு..

     

    அறிவுநெறஞ்சவர் சபயினிலே

    அவரமுந்தி பேசாத

    அடக்ககொணந்தான் நல்லகொணம்..

     

    அது

    ஒலகத்தில ஒயர்ந்த கொணமுண்ணு

    சொல்லுற நல்லகொணத்திலெல்லாம்

    ரெம்ப ஒயர்ந்த கொணமாவும்..

     

    அதால

    பேசுபேசு தெரிஞ்சிபேசு

    பேசுற சபய தெரிஞ்சிபேசு..!

     

    செண்பக ஜெகதீசன்…

     

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 18

    -மேகலா இராமமூர்த்தி

    அறிவுடைய நல்லோரை நாடி அவர்தம் நன்மொழிகளைக் கேட்டு வாழ்வின் தன்மையுணர்ந்து உயர்வோர் உளரெனினும், பேதைமையின் பாற்பட்டு வாழ்வின் இயல்புணராது, தேவையற்ற செருக்காலும் தருக்காலும் நிலைதடுமாறி, வாழ்வைப் பொருளற்றதாக்கிக் கொள்ளும் மருள் நெஞ்சினோர்க்கும் வையத்தில் பஞ்சமில்லை.

    எவ்வளவுதான் பொருள்வசதி படைத்திருந்தாலும் அறச்செயல்களில் ஈடுபடாது அவற்றைப் பின்னாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வருவர் சிலர். அவர்களின் நிலைக்கிரங்கி அவர்கட்கு வாழ்வின் நிலையுணர்த்தும் நாலடியார்ப் பாடலிது.

    பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
    ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
    இற்செய் குறைவினை நீக்கி அறவினை
    மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு
    .    (நாலடி – 332)

    குடும்பத்துக்குச் செய்யவேண்டிய கடன்களைச் செய்து தீர்த்து, அறச்செயல்களைப் பின்பு கருதுவோம் என்று காலத்தை எதிர் நோக்கியிருப்பாரது இழிதகைமையானது, பெரிய கடலில் நீராடுதற்குச் சென்றவர், முழுதும் ஒருசேர அலையொலி அடங்கியபின் நீராடுவோம் என்று கருதினாற் போன்றது.

    அலை அடங்கிக் கடலில் குளிப்பது எப்போது? எப்போதுமில்லை!
    ஆதலால் நடவாத தொன்றை நினைவதும் நம்புவதும் பேதைமையே.

    ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்தபின்னும் பொருள் படைத்தவனைப் பேதையார் சுற்றிவருவதை நிறுத்தமாட்டார். ஏன்? அவனிடமிருக்கும் வைப்புநிதியில் சிறிதளவேனும் பெற்றுவிட மாட்டோமா எனும் நைப்பாசையால். இவ்வாறு உடையாரின்பின் பயனின்றிச் சுற்றுவோரின் அறிவற்ற செயலை ஓர் இனிய உவமைகொண்டு விளக்குகின்றது நாலடி.

    தமக்குக் கிடைக்காதெனினும் குடத்துள் நெய்யிருக்குமாயின் எறும்புகள் போகாமல் குடத்தையே சூழச் சுற்றுவது போல, யாதும் கொடாரெனினும் உடையாரைச் சூழ்ந்துகொண்டு பேதை மாக்கள் விடமாட்டார்.

    ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
    போகா தெறும்பு புறஞ்சுற்றும் – யாதுங்
    கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
    விடாஅர் உலகத் தவர். 
    (நாலடி – 337)

    பேதைமை என்பது தெளிவிலா அறியாமையும் வீண்முயற்சியும் உடையது என்பதை மேற்கண்ட பாடல் விளக்குகின்றது.

    ஒருவர் தம்மை விரும்பி மதித்து அளவளாவ, அவரை விரும்பிலேம் என்று புறக்கணித்திருக்கும் நுண்ணுணர்வில்லாப் பேதையரிடத்து உண்டாகுந் தொடர்பு, ஒலிக்குங் குரலோடு பாயும் அலைகளையுடைய கடல்சூழ்ந்த உலகத்தைப் பயப்பதாயினும் இனியதாகாது என்கிறது நாலடி. 

    விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
    விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை – தழங்குகுரல்
    பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
    ஆய்நலம் இல்லாதார் மாட்டு. 
    (நாலடி – 339)
     

    பொருட்படுத்த வேண்டியவற்றையும் புறக்கணித்துக் கிடப்பது பேதையரின் பண்பு என்பது இதன்வழிப் புலப்படுகின்றது.

    அடுத்து, கீழ்மையின் நீர்மையை விளக்கும் நாலடியார்ப் பாடல்கள் சிலவற்றை நோக்குவோம்!

    பொன்னாற் செய்த கலத்தில் உணவூட்டிப் பாதுகாத்தாலும் நாயானது பிறர் எறியும் எச்சிற்சோற்றுக்குக் கண்ணிமையாமல் விழித்துக்கொண்டு காத்துக் கிடக்கும்.  அத்தன்மையாக, பெருமைக்குரியவனாகப் போற்றினாலும்  கீழ்மக்கள் செய்யும் செயல்கள் அந்நிலைமைக்கு மாறாகவும் வேறாகவுமே இருக்கும். 

    பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
    எச்சிற் கிமையாது பார்த்திருக்கும் – அச்சீர்
    பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யுங்
    கருமங்கள் வேறு படும்.  
    (நாலடி – 345)
     

    இதைத்தான் நம் மக்கள் ”நாய் வாலை நிமிர்த்த முடியாது” என்று எளிமையாய்க் கூறியிருக்கின்றனர். 

    கீழ்மையின் இயல்பு, எவ்வளவு திருத்தினாலுந் திருந்தாதது என்பதை நாம் உணர்ந்து அவர்களைத் திருத்தும் வீண்முயற்சியில் நம்மை வருத்திக்கொள்ளா திருத்தலே நன்று!

    உயர்ந்தோரின் இயல்பையும் கீழோரின் குணத்தையும் மிகத் துல்லியமாக விளக்கும் ஓர் நாலடியார்ப் பாடல்!

    சக்கரச் செல்வம்பெறினும் விழுமியோர்
    எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல் – எக்காலும்
    முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
    இந்திரனா எண்ணி விடும். 
    (நாலடி – 346)

    ஆட்சிச் செல்வம் பெற்றாலும் மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்லமாட்டார்கள்; ஆனால் முந்திரியளவுக்குமேல் காணியளவாகச் செல்வம் மிகுவதானாலுங்கூடக் கீழ்மகன் தன்னைத் தேவர்கோன் இந்திரனாக எண்ணி இறுமாந்து உரையாடுவான். (முந்திரி, காணி போன்றவை அன்று புழக்கத்திலிருந்த நில அளவைகள். முந்திரி என்பதை 1/320 என்றும் காணி என்பதை 1/80 என்றும் கணிதத்தில் குறிப்பர்.)

    அரசாட்சியே கிடைத்தாலும் மேன்மக்கள் அடக்கமாயிருப்பர் எனும் நாலடியின் கருத்தைக் காணும்போது,

    ”நாட்டாட்சி நினது” என்று தந்தை தயரதன் சொன்னபோதும், ”இல்லை! காட்டாட்சியே நினது” என்று சிற்றன்னை கைகேயி மாற்றிச் சொன்னபோதும் ஓவியத்தில் அலர்ந்த செந்தாமரையைப் போலவே வாட்டமின்றிப் பொலிந்தது இராமனின் முகம் என்று அசோகவனத்துச் சீதை அந்நிகழ்வை எண்ணி வியக்கும் காட்சியை ஒப்பிட்டுப் பாராதிருக்க இயலவில்லை.

    மெய்த்தி ருப்பதம் மேவுஎன்ற போதினும்
    இத்தி ருத்துறந்து ஏகுஎன்ற போதினும்
    சித்தி ரத்தின் அலர்ந்த செந்தா மரை
    ஒத்தி ருக்கும் முகத்தினை உன்னுவாள்.
    (கம்ப – காட்சிப்படலம்)

    நாடோ காடோ எல்லாம் ஒன்றே; ஓடோ செம்பொன்னோ எல்லாம் ஒரு தரத்தனவே எனும் சமநோக்கு விவேகிகளுக்கு மட்டுமே வாய்க்கக்கூடியது; சாமானியர்க்குச் சாத்தியப்படாதது. அப்படியிருக்க, திடீரென்று வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபிடித்து அலையும் அற்பரைப் பற்றிக் கேட்பானேன்!

    கீழ்மகனின் குணங்களை வரிசையாய்ப் பட்டியலிடும் நாலடியார்ப் பாடலிது!

    கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்
    இடுக்கண் பிறர்மாட் டுவக்கும் – அடுத்தடுத்து
    வேகம் உடைத்தாம் விறன்மலை நன்னாட
    ஏகுமாம் எள்ளுமாம் கீழ்
    .  (நாலடி – 348)

    ஆற்றல் வாய்ந்த மலைகளையுடைய சிறந்த நாடனே! கீழ்மகன், கடுமையாகப் பேச வல்லவன்; கண்ணோட்டம் என்று சொல்லப்படும் கருணை இல்லாதவன்; பிறருக்கு நேரும் இன்னல் கண்டு மகிழ்பவன்; அடிக்கடிச் சீற்றங் கொள்பவன்; கண்ட விடங்கட்கும் செல்லக் கூடியவன்; பிறரை இகழும் இயல்புடையவன்.

    மொத்தத்தில், தன் சொல்லாலும் செயலாலும் பிறருக்கு இன்னல் விளைவிப்பதில் இன்பம் காண்பவன் கீழ்மகன் என்பது தெளிவு.

    அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
    ஐந்துசால் பூன்றிய தூண்.
    (983) என்று சான்றோரின் குணங்களை வி(வ)ரிப்பார் வள்ளுவர். கீழோரின் குணமோ அதற்கு நேர்மாறாய் இருக்கின்றது.

    என்ன செய்வது? இருவேறாய் இருப்பதுதானே உலகத்து இயற்கை!

    [தொடரும்]

    *****
    துணைநூல்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 34

    க. பாலசுப்பிரமணியன்

     

    நாம் யாரோடு போட்டிபோடலாம்?

    கூட்டமைப்புக்களில் நாம் ஒன்றாக இருக்கும் பொழுதும் வேலைபார்க்கும் பொழுதும் நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கக்கூடிய காட்சி – ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டுப்பார்க்கும் மனப்பான்மை. இந்தச் செயல் ஒருவரை மற்றவரோடு போட்டி போடவும், காரண காரியங்களை அலசாமலும், கால நேரங்களின் மதிப்பீடுகளை மனதில் கொள்ளாமலும், சரி நிகரில்லாத இரு செயல்களையோ அல்லது மனிதர்களையோ ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஒரு போக்கை வளர்க்கின்றது. இப்படிப்பட்ட ஒப்பீடுகளை மனதில் கொண்டு நாம் சில மனிதர்களையோ அல்லது அவர்களின் செயல்களையோ நியாயப்படுத்துவது மட்டுமின்றி மற்றவரை தாழ்த்தியோ அல்லது குறைத்து மதிப்பீடு செய்தோ ஒரு அசாதாரணமான நிலையை உருவாக்குகின்றோம். அது மட்டுமல்ல அதன் விளைவாக  சிலருக்கு மன அழுத்தம். மன உளைச்சல் மற்றும் தாழ்வு மனப்பான்மையே வளர்க்கின்றோம். இது ஒரு மிகவும் தவறான செயல். எந்த ஒரு குழந்தையையும், மனிதரையும். வேலையாட்களையும் மற்றவர்களோடு ஒப்பிடுவதைத் தவிர்த்தல் மிக அவசியம். இது அந்தத் தனி மனிதரின் மற்றும் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் உகந்ததல்ல.

    குடும்பங்களும் நிறுவனங்களும் மற்றவர்களை பற்றிய மதிப்பீடுகளைக் கருத்தாக்கி வெளிப்படுத்துமுன் அவர்களின் தனிப்பட்ட சமுதாயப் பொருளாதார மற்றும் மனவளர்ச்சியின் சூழ்நிலைப் பரிமாணங்களை அறிதல் அவசியம். அந்தச் சூழ்நிலைகளின் பின்னணியிவ் தான் அவரை மதிப்பீடு செய்யவேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மட்டுமே அவர்களின் வளர்ச்சி மற்றும் செயல் பரிமாணங்கள் துல்லியமாக வெளிப்படும். அவ்வாறு இல்லாமல் மற்றவர்களோடு அவர்களை ஒப்பிடும் பொழுது பலவிதமான நிறை குறைகள் நிச்சயமாக இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    இப்படிப்பட்ட மதிப்பீடுகளின் காரணமாக அந்தக்கூட்டமைப்பில் உள்ளவர்களிடம் போட்டி மனப்பான்மைகள் எளிதில் உருவாகும். இப்படிப்பட்ட போட்டிகளில் சில நேரங்களில் நல்ல வளர்ச்சிக்கான ஆதாயங்கள் கிடைக்கலாம். அதே நேரத்தில் அது மனநலத்தை பாதிக்கக்கூடிய அளவில் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, கோபம். பொறாமை, வெறித்தனம் போன்ற பல ஆரோக்கியமில்லாத மன உணர்வுகளை விதைக்கவும், வளர்க்கவும், மற்றும் செயலாக்கம் செய்வதிலும் செய்யும். இது எந்தக் கூட்டமைப்பிற்கும், அது குடும்பமாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி காலப்போக்கில் விரும்பத்தகாத சூழ்நிலைகளை உருவாக்கும். பல கூட்டமைப்புக்களில் அதன் தலைவர் அல்லது மற்ற ஒருவரின் ஆதிக்க மனப்பான்மையும் மற்றவர்களுக்கு விருப்பமில்லாத சூழ்நிலைகளை உருவாக்கித் தாழ்வு மனப்பான்மைகளை உருவாக்க காரணமாக அமைகின்றது.

    தற்காலச் சமுதாயத்தில் பல இடங்களில் இது போன்ற விரும்பத்தகாத போட்டிகள் குறைவின்றி காணக்கிடைக்கின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு அதற்கு பலியானவர்கள் பல நேர்மையற்ற வழிகளையும் பண பலத்தையும் தரமற்ற தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தனிப்பட்ட மனநலம் கெடுவதுமட்டுமின்றி இது அந்தக் கூட்டமைப்பின் அடிப்படை அஸ்திவாரங்களை அசைக்கின்றது. மேலும் இந்தப் போட்டி மனப்பான்மையினால் நல்லுறவுகள் பாதிக்கப்பட்டு விவாதங்கள், வழக்குகள் மற்றும் சண்டைகள் உருவாகுகின்றன.

    அது மட்டுமல்ல, இந்தப் போட்டிகளில் வெற்றி பெற முடியாதவர்களும், இந்தப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களும் தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகி மனநல மருத்துவர்களை சந்திக்கும் நிலைகளுக்கு வந்து விடுகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு ஒரு அமைப்பினால் செய்யப்பட ஆராய்ச்சியில் இந்தத் தாழ்வு மனப்பான்மை தற்கால இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இது உண்மையிலேயே கவலைக்குரிய செய்தி.

    காரணம்? பல குடும்பங்கள் தங்களுடைய வாரிசுகளுக்கு தேவையற்ற விருப்பமில்லாத மற்றும் உண்மைக்குப் புறம்பான பல இலக்குகளை நிர்ணயித்து விடுகின்றனர். மேலும், அதை அடைவதற்க்க்கான அழுத்தங்களை பல நிலைகளிலும் பல வழிகளிலும் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். இதனால் அந்த அடையமுடியாத இலக்குகளை நோக்கிப் பயணம் செய்பவர்களில் பலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தாழ்வு மனப்பான்மைகள் வளர்ந்து அவர்கள் தங்களைத்தாங்களே தோற்கடித்துக் கொள்கின்றனர்.

    ஆகவே ஒருவரை எவ்வாறு ஒப்பிடவேண்டும்? யாரோடு ஒப்பிடவேண்டும்? என்ற வினாக்கள் பல நேரங்களில் எழுந்த பொழுது அதற்குக் கிடைத்த ஒரு சரியான பதில் – ஒரு மனிதனை அவனுடைய வளர்ச்சி மற்றும் கற்றல் பாதையில் முன்னால் எப்படி இருந்தான்? இப்பொழுது எப்படி இருக்கின்றான்? அவன் வளர்ச்சிப்பாதையில் செய்யப்பட சாதனைகளுக்கான குறியீடுகள் என்ன? அவன் உள்ளுணர்வுகள் எந்த நலத்தோடு இருக்கின்றன? – என்பவைகளே குறிப்பீடுகள். ஆகவே, ஒரு மனிதன் தன்னைத் தன்னோடு மட்டும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

    ஒரு ஆங்கிலப் பேரறிஞர் எழுதுகின்றார் : “ Life is not a competition. Find the stuff that makes your soul sing and be your own uniquely beautiful self.”

    வாழ்க்கை என்பது ஒரு போட்டியல்ல. நீ உன்னுடைய ஆன்மாவின் கீதத்தைக் கேட்கவேண்டும் மேலும் உன்னுடைய அழகான தனித்தன்மையோடு இருக்கவேண்டும்..”

    நாமும் இந்த முயற்சியோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

    10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 3 முதல்  7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

    பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம்.

    10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். மற்றைய மாநாடுகள் போல, இந்த 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) துணையோடும், சிறப்பாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடும் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழ் மக்களின் சமூக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இம்மாநாடு சிறப்புற நடக்க, வட அமெரிக்காவிலும் உலகெங்கும் உள்ள பிற தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்;  பிற அரசாங்க அமைப்புகளின் உதவிகளையும் நாடி ஏற்றுக்கொள்ளவும் விழைகின்றோம்.

    அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் (IATR)

    உங்களில் பலருக்கு இந்த ஆய்வு மன்றத்தின் வரலாறு தெரிந்திருக்கலாம். இது 1964-ஆம் ஆண்டு புது டெல்லியில் உலகெலாம் அறிந்த தமிழ்ப் பேரறிஞர், மறைந்த தனிநாயக அடிகளாரின் பெரும் முயற்சியால் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு உலகக் கீழ்க்கலை அறிஞர்கள் (Orientalists) மாநாடு புது தில்லியில் நடந்தது. அதற்குப் பிரான்சைச் சேர்ந்த அறிஞர் முனைவர் பீலீயோசா,  செக்கசுலோவிக்கியா அறிஞர் பெருமான் கமில் சுலபில், அறிஞர்கள் ஆசர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த அறிஞர் பெருமக்கள் பரோ, எமனோ, தமிழகத் தமிழ் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், முனைவர் வி.ஐ.சுப்ரமணியன் ஆகியோர் தனிநாயக அடிகளோரோடு இணைந்து இந்த ஆய்வு மன்றத்தைத் தொடங்கினர். இது ஒரு அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம் ஆகும். இதன் தலை சிறந்த நோக்கம்: “பொதுவாகத் திராவிடம் பற்றியும் குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிறதுறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்குகொள்ளுதலும் ஆகும்.”

    இது வரை ஆய்வு மன்றம் நடத்திய மாநாடுகள்:

    ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும், அப்போது மலேயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாயக அடிகளார் 1966-ஆம் ஆண்டு, முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னையில் அன்றைய தமிழக முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தொடர்ந்து பின் வந்த மாநாடுகள் பாரிசு நகர் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடைபெற்றன. ஆய்வு மன்றத்தின் நோக்கத்திற்கு இணங்க, இம் மாநாடுகள் தமிழ்ப் பேரறிஞர்கள் பலரை வரவழைத்து, தமிழ் மொழி, இலக்கியம், நாகரிகம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் செய்த ஆய்வுகளை மாநாட்டில் படைக்க வாய்ப்பளித்தன.

    10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

    இம்மாநாடுகளை, அரசியல் தலையீடு இன்றி, தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்துதல் சிறந்தது என மன்றத்தின் அலுவலர்களும், தமிழ் அறிஞர்கள் பலரும் பல காலம் எண்ணி வந்தனர். இக்கருத்தை முன்னெடுத்துச் சென்று, இனி வரும் ஆராய்ச்சி மாநாடுகளைத் தமிழ் ஆராய்ச்சிக்கு முதல் இடம் கொடுத்து நடத்த வேண்டும் என்று துணிந்து ஊக்கம் அளித்தவர், முன்னாள் அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணைத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பெரும் தமிழ் அறிஞரும், கவிஞரும் ஆன மறைந்த உயர்தனித் தமிழ்மகன், முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள். அவரே அமெரிக்கா வாழ் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்து அடுத்த ஆராய்ச்சி மாநாட்டை இந்தப் புது வகையில் நடத்த வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்; இக்கருத்தை உலகளாவிய ஆய்வு மன்ற அலுவலர்களிடமும் தெரிவித்தார். அவர் உந்துதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினரும், சிகாகோத் தமிழ்ச் சங்கத்தினரும்  இணைந்து 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைப் புதுமுறையில் நடத்த முன்வந்தனர்.

    2015-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 9-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கு கொண்ட தமிழ் ஆர்வலர் மருத்துவர் சோம. இளங்கோவன் உதவியோடு, மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கியும், தலைமை தாங்கியும் பங்கு கொண்ட தமிழ்ப் புலவர் முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள், அடுத்த மாநாட்டை வட அமெரிக்காவில் நடத்த வேண்டும் என்றும் அதற்கு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலும் ஊக்கமும் அளித்தல் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை  அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றமும், அதன் தலைவர் முனைவர் மாரிமுத்துவும், துணைத் தலைவர் முனைவர் பொன்னவைக்கோவும் ஏற்றுக்கொண்டனர். எனவே 2019-ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    பெரும் தமிழ் ஆர்வலரும், முன்னாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவருமான  மருத்துவர் சோம. இளங்கோவன், மாநாட்டின் ஒருங்கிணைப்புக் குழுவின் (Organizing Committee) தலைவராகப்  பணிபுரிந்து வருகிறார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் உயர்திரு சுந்தர் குப்புசாமி அவர்களும், சிகாகோத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உயர்திரு மணி. குணசேகரன் அவர்களும் பொறுப்பேற்றுள்ளனர். புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து அவர்கள் ஆய்வுக் குழுவின் (Academic Committee) தலைவராகவும், தற்காலத்தில் மிகச்சிறந்த தமிழ் ஆய்வாளராக விளங்கி வரும் பன்மொழிப்புலவர், முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் ஆய்வுக்கு குழுவின் இணைத்தலைவராகவும் பொறுப்பேற்று உள்ளனர். உலகத் தமிழ்ப் பேரறிஞர் பலர் அறிவுரைக் குழுவிலும் (Advisory Panel), மாநாட்டின் ஆய்வுக் குழுவிலும் (Academic Committee) பங்கேற்றுள்ளனர். ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஐம்பெரும் தமிழ் அறிஞர்கள் ஆய்வுக்கு குழுவின் துணைத் தலைவர்களாகப்  பணிபுரிகின்றனர்.

    மைய ஆய்வுப் பொருளும் (Theme) ஆராய்ச்சித் தலைப்புகளும் (Topics)

    அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மை நோக்கத்திற்க்கு ஏற்ப இந்த மாநாட்டின் மைய ஆய்வு பொருள் அமைந்துள்ளது.

    “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.”

    இந்த மாநாடு சிறப்புற அமைய அறிஞர் பெருமக்கள் சிறந்த ஆராய்ச்சித் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வுகள் செய்யவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்த மாநாட்டில் வழங்கவும் அழைக்கிறோம்.

    ஆராய்ச்சித் தலைப்புகளைப் பற்றியும், “ஆராய்ச்சிக் கட்டுரைச்  சுருக்கத்தையும்” (ABSTRACT), “ஆராய்ச்சி விரிவுக்  கட்டுரையையும்” (RESEARCH PAPER) அனுப்பும் முறை,  அனுப்பவேண்டிய தேதி, ஆகியன பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பின் வரும் இணையதள முகவரியைப் பார்க்கவும்:

    http://www.iatrnew.org

    E.mail: iatr2019@fetna.org

    இந்த மாநாட்டிற்கு வருகை தந்து பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

    அன்புடன்

    புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து

    பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்

    தலைவர், ஆய்வுக் குழு

    10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

    மருத்துவர் சோம.  இளங்கோவன்

    தலைவர், ஒருங்கிணைப்புக் குழு, 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

    பிற செய்திகளுக்கு:

    திரு. சுந்தர் குப்புசாமி

    தலைவர், தமிழ்ச் சங்கப் பேரவை

    மின்னஞ்சல்:president@fetna.org    / www.fetna.org

    திரு. மணி. குணசேகரன்

    தலைவர், சிகாகோ தமிழ்ச் சங்கம்

    மின்னஞ்சல்:president@chicagotamilsangam.org www.chicagotamilsangam.org

    செய்தி: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி, இந்தியா muelangovan@gmail.com

    ஆராய்ச்சிக் கட்டுரை எங்கும் இதுவரை வெளியிடப்படாத முழுமுதல் ஆராய்ச்சிக் கருத்துக்கள் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

    ஆராய்ச்சியாளர்கள் “ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையை” அனுப்பும் முன்னர் அதன் சுருக்கத்தினை முதலில் அனுப்ப வேண்டும். இந்தச் சுருக்கம் “மைக்ரோசாப்ட்” சொல் செயலியில் (Microsoft Word) இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் “யுனிகோடு” முறையில் (unicode format) இருத்தல் வேண்டும்.

    ஆராய்ச்சிச் சுருக்கம் நவம்பர் 30, 2018 ஆம் தேதிக்குள் பின்வரும் மின்னஞ்சல் வழியாக அனுப்புதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி “academic-committee@icsts10.org”. பெறப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைச் சுருக்கங்கள் ஆய்வறிஞர் குழுவினரால் (academic committee) சீராய்வு செய்யப்பட்டு அந்த கட்டுரைச் சுருக்கம் ஏற்புடையதா இல்லையா என்ற முடிவுகள் டிசம்பர் 31, 2018 தேதிக்குள் அறிவிக்கப்படும்.

    ஏற்கப்பட்ட ஆராய்ச்சிச் சுருக்கத்தின் ஆசிரியர்கள் தங்களது ஆராய்ச்சி விரிவுக் கட்டுரையை மார்ச் 31, 2019 ஆம் தேதிக்குள் அனுப்புதல் வேண்டும். இந்தக் கட்டுரை “மைக்ரோசாப்ட்” சொல் செயலியில் (Microsoft Word) முப்பது பக்கங்களுக்கு மிகாமல், “யுனிகோடு” முறையில் (unicode format), எழுத்தளவு 12-ஆக இருத்தல் வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைச் சுருக்கம், ஆராய்ச்சி விரிவுக் கட்டுரை ஆகிய இரண்டும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருத்தல் வேண்டும்.

    ஆராய்ச்சியாளர்கள் தங்களது வாழ்க்கைக் குறிப்பினை (biodata/resume), 200 சொற்களுக்கு மிகாமல் ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கத்தோடு இணைத்து அனுப்புதல் வேண்டும்.

    ஆய்வரங்கில் படைக்கப்படுகின்ற கட்டுரைகளின் எண்ணிக்கை, ஆராய்ச்சியாளர்கள் விவரங்கள் ஏப்ரல் 30, 2019 ஆம் தேதிக்குள் தெரியப்படுத்தப்படும். கட்டுரையாளரின் அனுமதிக் கட்டணம், தங்கும் செலவு, உணவுச் செலவு, மாநாட்டின் போது ஏற்படுகின்ற உள்ளூர் போக்குவரத்து செலவு ஆகியவற்றை விழாக் குழுவினர் ஏற்றுக்கொள்வர்.

    ஆய்வரங்கில் பங்கேற்கும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது சொந்த செலவிலோ அல்லது அரசு, கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முதலியன தரும் பொருள் உதவியால் தங்களது பயணச் செலவிற்கான ஏற்பாடுகள் செய்து கொள்வதை வரவேற்கின்றோம். பயணம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

    ஆராய்ச்சியாளர்கள் தங்களது கடவுச் சீட்டினை (Passport) ஏப்ரல் 30, 2019 ஆம் தேதிக்குள் பெற்று வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் குறித்த நேரத்தில் அமெரிக்காவின் நுழைவுச்சான்றினைப் (Visa) பெற உதவியாக இருக்கும்.

    ஆராய்ச்சியாளர்கள், மாநாட்டின் போது தேவைப்படும் எதிர்பாராது வரக்கூடிய மருத்துவச் செலவிற்குத் தேவைப்படும் விதமாக, தங்களுக்கான மருத்துவக் காப்பீட்டினை (Insurance) முன்னரே வாங்கி வைத்திருக்க வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மாநாட்டின் இணையத் தளத்தில் வெளியிடப்படும். ஆய்வரங்கில் படைக்கப்படுகின்ற கட்டுரைகள் மட்டும் மாநாட்டு மலரில் இடம் பெறும்.

    2019-ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் சிகாகோவில் நடைபெற உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் சிறப்பு நோக்கங்கள்; தமிழில் உள்ள செவ்விலக்கியங்களை உலகிற்கு அறிமுகப் படுத்துதல்; தமிழர், தமிழ் மொழி, இலக்கியங்கள், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் பழமையும், தனிச்ச்சிறப்பையும் ஆய்வு செய்தல் ஆகியவை ஆகும். அத்துடன் தமிழ் அறிஞர் பெருமக்கள் தற்கால தமிழ் உரைநடை, பாடல்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என இந்த மாநாடு ஊக்குவிக்கின்றது. இந்நோக்கங்கள் சிறப்புற, வெற்றிபெற, கீழ்கண்ட தலைப்புகளில் ஆழ்ந்த ஆய்வோடு அழகுற எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், இம்மாநாட்டில் இடம்பெற வரவேற்கப்படுகின்றன.

    செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்)
    தமிழ்ச் செவ்விலக்கியங்களும் பிறமொழிச் செவ்விலக்கியங்களும்: ஒரு ஒப்பீடு
    புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு முதலிய பிற தமிழ்ச் செவ்விலக்கியங்கள் தமிழர்ப் பண்பாட்டுக் கருவூலங்கள்
    செவ்விலக்கியங்களில் இயற்கை
    தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பெண்கள்
    தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பண்டைத் தமிழகத் தாழ்நிலைக் குடிமக்கள்
    தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பழங்காலக் கல்விநிலை
    இலக்கியமே வரலாறு அல்லது வரலாறே இலக்கியம்; இக்கோட்பாட்டினைப் புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய செவ்விலக்கியங்கள் மூலம் ஆய்வு செய்தல்
    தமிழ் நாகரிகத்தின் பழமையும் அது உலகெலாம் பரவிய வகையும்
    தமிழர்த் தோற்றத்தையும் அவர் உலகெலாம் பரவிய வகையும் மரபியல் மூலமும் (genetics) மரபியல் காட்டும் வழிமுறை வகையிலும் (genographics) ஆய்வு செய்தல்
    தமிழ்ச் சங்கங்களும் தமிழர் நாகரிகமும் வளர்ந்த குமரி நாடு அல்லது குமரிக் கண்டம் ஒன்று இருந்தமையை, வரலாறு, இலக்கியம், அகழ்வாய்வு (archeology), நிலவியல் (geology) போன்ற அறிவியல் சான்றுகளோடு நிறுவ ஆய்வு செய்தல்
    பழந்தமிழர்ப் பாண்பாட்டினைக் கீழே காணும் பழம்பெரும் பண்பாடுகளோடு ஒப்பாய்வு செய்தல்
    எகிப்தியர் பண்பாடு
    எபரேயர் பண்பாடு
    கிரேக்கர் பண்பாடு
    ரோமையர் பண்பாடு
    சீனர் பண்பாடு
    உலகத்தின் பழம்பெரும் நாகரிக வளர்ச்சியில் தமிழர்ப் பங்கீடு (contribution); கீழுள்ள நாகரிகம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்க
    சிந்துவெளி நாகரிகம்
    சுமேரிய நாகரிகம்
    மெசபட்டோமியா, அக்கேடின் நாகரிகம்
    எகித்திய நாகரிகம்
    மத்தியதரைக்கடல் நாகரிகம்
    பழந்தமிழர் நாகரிகம் குறித்து இராசு அடிகளாரின் (Rev. Fr. Heras S.J.) கண்டுபிடுப்புகள்
    பழந்தமிழர் நாகரிகம் குறித்து பேராசிரியர் அசுகோ பொர்போலாவின் (Asko Parpola) கண்டுபிடுப்புகள்
    பழந்தமிழ் நாகரிகம் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் இராசன் அவர்களின் அகழ்வாய்வு கண்டுபிடுப்புகள்
    தென்னிந்தியாவில் ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி முதலிய பிற இடங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள்
    தொல்காப்பியம்
    தொல்காப்பியமும் தற்கால மொழியியலும்
    தொல்காப்பியர் காலம்
    தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள்
    ஐந்திணைக் கருத்தும் தமிழின் அகப்பொருள் மரபும்
    தொல்காப்பியமும் கீழே காணும் பிறமொழி இலக்கண நூல்களும்: ஒரு ஒப்பாய்வு. இவற்றில் ஒன்றினை தேர்வு செய்து ஆய்வு செய்க
    கிரேக்க இலக்கண நூல்கள்
    இலத்தீன் இலக்கண நூல்கள்
    எபரேய இலக்கண நூல்கள்
    வடமொழி இலக்கண நூல்கள்
    கன்னட இலக்கண நூல்கள்
    தெலுங்கு இலக்கண நூல்கள்
    மலையாள இலக்கண நூல்கள்
    பிறமொழி இலக்கண நூல்கள் (மொழியைக் குறிப்பிடுக)
    தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை: தொடர்ந்துவரும் தமிழ் இலக்கண மரபுகள்
    திருக்குறள்
    திருவள்ளுவர், “உலக மக்களின் அறநூல் புலவன்” (‘The Bard of Universal Man’ Dr. G U Pope)
    திருக்குறள் பண்டைத்தமிழர்தம் பண்பாட்டு நாகரிகக் கருவூலம்
    திருக்குறளும் வாழும் வழிமுறைகளும் (the art of living)
    திருக்குறள், தற்கால வாழ்க்கைக்கும் வழிகாட்டும் அறநூல்
    திருக்குறளும் கீழே காணும் பிற அறநூல்களும்: ஒப்பாய்வு. கீழுள்ள ஒன்றினைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்க
    கிரேக்க அறநூல்கள்
    இலத்தீன் அறநூல்கள்
    வடமொழி அறநூல்கள்
    பிறமொழி அறநூல்கள் (குறிப்பிடுக)
    திருக்குறளுக்கு பிற நாடுகளில் இருக்கும் வரவேற்பு: ஆய்வு
    அறிஞர் பெருமக்களைப் பற்றிய ஆய்வு
    கீழ்கண்ட அறிஞர் பழங்கால, இடைக்கால, மற்றும் தற்காலத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகிய இவற்றின் ஆய்வுகளுக்குத் தந்த பெரும் பங்களிப்பு (ஒவ்வொருவர் பங்களிப்பையும் தனிப்பட ஆய்வு செய்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதவும்)
    மறைமலை அடிகளார்
    விபுலானந்த அடிகளார்
    தனி நாயக அடிகளார்
    பரிதிமாற் கலைஞர்
    தேவநேயப் பாவாணர்
    கமில் சிலபில் (Kamil Zvelebil)
    ஏ கே இராமநுசன் (A K Ramanujan)
    ஆர் கு அசர் (R K Asher)
    சார்சு ஆர்ட் (George Hart)
    பிற அறிஞர் பெருமக்கள் (யார் என்று குறிப்பிடுக)
    தமிழ் இசையும் கலைகளும்
    தமிழ் இசை, கலைகள்; இவற்றின் பழமை
    கருநாடக இசையில் தமிழ் இசையின் தாக்கம்
    பழங்காலத்தில் வழங்கிய தமிழ் இசைக் கருவிகள்
    தற்காலத் திரைப்படப் பாடல்களில் சங்க இலக்கியப் பாடல்களின் தாக்கம்
    தற்காலத் தமிழ் இலக்கியங்கள்
    தமிழ் உரைநடை, செய்யுட்கள் (பாடல்கள்); இவற்றின் தற்கால போக்கு
    தற்கால நாவல்களும் சிறுகதைகைளும்; இவற்றின் புதிய போக்கு
    தமிழ்க்கல்விக்கும் ஆய்வுக்கும் கணினி பயன்படும் வகைகள்: ஒர் ஆய்வு
    தமிழ் மொழியும் மொழியியலும்
    தொல்காப்பியம்: அதில் பொதிந்துள்ள மொழியியல் நுணுக்கங்களும் இலக்கியக் கோட்பாடுகளும்.

    Share
  • தி ஐடல் தீஃப்

    புத்தக விமர்சனம்: திவாகர்

     

    தி ஐடல் தீஃப், ஆசிரியர் விஜயகுமார்

     

    தெய்வமென்றால் அது தெய்வம்

    வெறும் சிலை என்றால் அது சிலைதான்

    கவியரசரின் தத்துவார்த்தமான உயிர்வரிகள். நம் கண்களுக்குத் தெய்வமாகப் பட்டது, திருடர்கள் கண்களுக்கு சிலையாகத் தென்பட்டு. அது சிலையே ஆனாலும் அது தெய்வம், அழகு என்று நாம் கொண்டாடுவதால் விலையே மதிக்கமுடியாத அந்த சிலைக்கென ஒரு விலையை நிர்ணயித்து வெளிநாடுகளில் கொள்ளை கொள்ளையாக பணம் பறிக்கும் ஒரு நீசக் கூட்டத்தின் நாற்பதாண்டு காலச் செய்கை ‘தி ஐடல் தீஃப்’ புத்தகம் மூலம் அப்படியே ஒரு திகில் திரைப்படம் பார்க்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் எழுதப்பட்டது என்பது  சாதாரணமாக மற்றவர்களின் போற்றுதலை பாராட்டைப் பெறும் செயல் அல்ல. இப்புத்தகத்தின் மூலம் ஏற்படப்போகும் பயன்கள் நம் நாட்டின், போற்றுதலுக்குரிய பண்பாட்டின் கலைச் சிற்பங்களை நாம் திரும்பப் பெறவேண்டுமே என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது என்பது கண்கூடு. இந்த ஒரு விஷயத்துகாகவே ஆசிரியரான விஜயகுமாரை நான் மனமாறப் போற்றுகிறேன்.

     

    விஜயகுமாரின் எழுத்து நம்மை வசீகரம் செய்கிறதென்றால் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்துக்குமாக அவர் உழைத்திருக்கும் உழைப்பு, அடேயப்பா, மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஏறத்தாழ வீரதீர சாகஸம் செய்தால் மட்டுமே இன்று வரை அவர் மூலம் நம் மண் திரும்பப் பெற்ற சிலைகள் நம்மை அடைந்திருக்கமுடியும். ஐடல் விங் புத்தகத்தில் அவர் விவரித்த ஒவ்வொரு அத்தியாயமும் அவர் பட்ட கஷ்டங்களை உணரவைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் அவரின் மிகப் பெரிய உழைப்பையும், சிலைகள் மீது கொண்ட பற்றினையும், அவற்றை எப்பாடுபட்டாவது திரும்பக் கொணரவேண்டுமே என்ற கவலையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

     

    இந்தப் புத்தகத்தின் ஹீரோ ’இண்டி’ என்ற பெயர் கொண்ட அந்த அமெரிக்க சிலைத் தடுப்புக் காவல் அதிகாரிதான் என்றாலும் அவருக்கு பக்கபலமாக செயல்பட்ட நம் தமிழகத்து வீரரான விஜயகுமாரை இண்டியுடன் சேர்த்தே கொண்டாடவேண்டும். சிலை கொள்ளையன் சுபாஷ் கபூர் இன்று புழல் சிறையில் களி தின்று கொண்டிருந்தாலும் அவனால் ஆயுளுக்கும் சிறை தண்டனையில் இருந்து மீளவே முடியாத வகையில் அவன் செய்த சிலை திருட்டு செயல்கள் இருந்திருக்கின்றன என்பதை ’ஐடல் தீஃப்’ புத்தகம் மூலம் விஜயகுமார் குறிப்பிட்டிருந்தாலும், இந்த தண்டனைகள் எல்லாம் அவனுக்குப் போதுமா அல்லது அவன் அடைந்திருக்கும் இந்த தண்டனைகள் அடுத்த சிலை கொள்ளைக்காரனுக்கு ஒரு பாடமாக அமையுமா என்பதெல்லாம் காலம் செல்லச் செல்லத்தான் தெரியும். ஏனெனில் சுபாஷ் கபூர் இன்னமும் கோர்ட்டில் நிரூபிக்கப்படாத ‘அக்யூஸ்ட்’ என்ற நிலையில்தான் இருக்கிறான் என்பதை நினைவில் கொண்டு நாம் இன்னமும் விழிப்புடன் இருந்து அவனை முழுமையாக தண்டிக்க உழைக்க வேண்டும்.

    ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ‘ஐடல் தீஃப்’ என்கிற இந்த ஒரு புத்தகமே ‘எந்த ஊர் நீதிமன்றத்திலும்’ சாட்சிப் புத்தகமாகப் பயன்படும் என்பதுதான்.

    சிங்கப்பூரில் உள்ள ஆசிய அருங்காட்சியகத்தில் ‘உமாதேவி’யின் சிலையை நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்து ரசித்து அவள் எப்படி இங்கு கொண்டு வரப்பட்டாளோ என்று வருந்தியவர்களில் நானும் ஒருவன். இந்த சிலை எப்படி திருடப்பட்டது என்பதையும் எப்படி நம் தேசத்துக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டது என்பதை மிக ஆழமாக விவரிக்கிறார் விஜயகுமார். நான் செல்லும் இடங்களில் குறிப்பாக அயல்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள நம் கோயில் சிலைகளில் எல்லாம் பார்த்துக் கண் கலங்கி வணங்கியதை நான் மட்டுமே உணர்வேன்.  நம் கோயில்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிற்பி தன் கலைத் திறன் முழுவதையும் காண்பித்து சிலை வடித்து அந்த சிலைகள் அத்தனைக்கும் நம் சாத்திரப்படி மந்திரம் ஓதி பிராணம் கொடுத்து அவைகள் தெய்வம் என்று உணரப்பட்டு நாம் வணங்குவதற்காக ஏற்பட்ட சிலைகள் அவை என்பது நான் ஒவ்வொரு சிலையைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். இவரைக் களவாடி, கஸ்டம்ஸை ஏமாற்றி கடல் தாண்டி கண்டெய்னரில் வெளியூர் கொண்டுவந்து மிகப் பெரிய கட்டடங்களில் கண்ணாடிச் சிறைக்குள் சிறைப்படுத்தி இருக்கிறார்களே! எங்கள் ஊர்க் கோயிலில் மட்டும் இவர் களவாடப்படாமல் இருந்திருந்தால் இவருக்கு தினம் அலங்காரம் செய்து மாலை அணிவித்து மந்திரம் ஓதி பூசித்து மனமெல்லாம் ஆனந்தக் களிப்போடு வீதிகளில் ஊர்வலம் எடுத்துச் சென்று ஊர்மக்கள் அனைவரையும் சொல்வதறியா ஒரு ஆத்ம திருப்தியில் ஆழ்த்தும் இந்தச் சிலைகளா இங்கு சிறையிலிருப்பது என்றுதான் தோன்றும்.

     

    பொதுவாக நம் தெய்வச் சிலைகள் எல்லாமே மந்திரசக்தியால் உயிர்க்கப்பட்டு வணங்கத்தக்கவை. சாட்சி பூதம் என்பார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சாட்சியாக இருக்கிறது. தவறு செய்தால் தண்டனையும் நல்லதைக் கேட்டால் நல்லதையும் தரும் அன்புத் தெய்வங்கள். அவைகளைத் துன்புறுத்தினால் அவதிப்படப்போவது சிலைகள் அல்ல. நம் தேசமும் இந்த தேசத்தில் வாழும் மக்களும்தான். இது ஒரு யதார்த்தமான உண்மை.

     

    நம் மக்கள் ஒன்றை ஞாபகம் வைத்திருக்கவேண்டும். உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருக்கும் அருங்காட்சியகத்தில் உள்ள நம் தெய்வச்சிலைகள் அத்தனையும் ஒவ்வொன்றும் களவாடப்பட்டதுதான். நமக்கு ஆத்ம திருப்தியைத் தரும் தெய்வச்சிலைகளை நாம் யாருமே ”சும்மா எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி இருக்கவே முடியாது. எந்தக் கோவிலிலும் அப்படித் தூக்கிக் கொடுத்திருக்கவும் முடியாது. பின் எந்த தைரியத்தில் அந்தந்த அருங்காட்சியகங்கள் ‘இவரிடமிருந்து வாங்கப்பட்டது அல்லது இன்னாரிடமிருந்து கொடையாகப் பெறப்பட்டது என எழுதுகிறார்கள்?.. உள்ளூர் கொள்ளையர்களை ஊக்குவித்து சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திருடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் இவை. உலகத்து அருங்காட்சியகங்கள் மூலம் திருடப்பட்ட நம் தெய்வச் சிலைகள் வெளியுலகப் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பது என்பது அவர்கள் வெளிப்படையாகவே தைரியமாகவே அந்தந்த அரசாங்கங்கள் ஆதரவுடன் செய்யும் குற்றப்பணி. இதுதான் உண்மை.

     

    இந்த உண்மையை இந்த ’ஐடல் தீஃப்’ புத்தகத்தின் மூலம் ஆதாரத்துடன் உலக அரங்கத்துக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் விஜயகுமார். இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியது மிகவும் பொருத்தம் என்று கூடச் சொல்வேன். இந்தப் புத்தகம் உலகத்தில் உள்ள அத்தனை மியூசியங்களுக்கும் சென்றாக வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் அவர்கள் மனம் மாறவேண்டும். தங்களிடம் உள்ளவை தெய்வீகச் சிலைகள். அவைகள் வணங்குவதற்காக வடிக்கப்பட்டவை. அலங்காரத்துகாகவோ அல்லது அழகு பார்க்கவோ அல்லது ரசித்து மகிழ்வதற்காகவோ செய்யப்பட்டவை அல்ல என்பதையும் அவர்கள் உணர்ந்து தாமாக முன்வந்து இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும். சாதாரணமாகப் பார்த்தால் களவு போன பண்டம் காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டால் அதை உரியவர்களிடம் சேர்ப்பிப்பது என்பது தார்மீகச் செயல். தர்மம் வெல்லவேண்டும். நம்மைச் சேர்ந்த சிலைகளெல்லாம் திரும்பவரவேண்டும்.

     

    விஜயகுமார் இந்தப் புத்தகம் எழுதியதன் மூலம் இந்தப் பணி நிறைவேறினால் அதைவிடப் பெரிய வெற்றி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அந்தப் பெரிய வெற்றியை இறைவன் விஜயகுமாரின் ’ஐடல் தீஃப்’ புத்தகம் மூலம் பெற்றுத்தரவேண்டும் என வேண்டுகிறேன்.

     

    விஜயகுமார் எழுதிய முதல் அத்தியாயத்தின் கடந்த கால சிற்பி மறுபடி திரும்பி வந்து இவரை வாழ்த்துவான். வாழ்த்தவேண்டும். இப்புத்தகத்தைப் படித்து முடித்தபின் இப்படித்தான் நான் நினைத்தேன்.. நான் மட்டுமல்ல, படித்த அனைவருமே அப்படித்தான் நினைப்பார்கள். நம் கடவுள், நம் சிற்பி, நம் நாடு நம் நாட்டின் பண்பாடு உயர்ந்தது என்ற பூரண உணர்வோடு நாம் இருந்தால் அத்தனை சிலைகளும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை இப்புத்தகத்தைப் படித்தபின் பிறக்கிறது.

     

    தி ஐடல் தீஃப் (ஆங்கிலம்)

    ஆசிரியர் : விஜயகுமார்

    விலை ரூ 499.

    Jaggernaut Books, KS House, 118, Shapur Jat,

    New Delhi 110049

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180915 Mayadheesh icam 10×14 wcol -lr

    பாரீசன்(சிவ தனுசு) வில்லொடித்து பத்தினியாள் கைப்பிடித்து
    மாரீச மானால் மனைபிரிந்து -பேராசை
    மன்னனவன் லங்கேசன் மாளப்பின் வந்தமாயன்,
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • பூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு

    Rare Binary Asteroid Discovered Near Earth

    An Artist’s Depiction of Rare Asteroid 2017 YE-5, Discovered is Actually Two Separate Pieces of Rock, Each 3000 feet across, Circling Each Other, Every 20 -24 ?Hours.

    Credit: NASA/JPL-Caltech

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    https://www.space.com/41154-rare-binary-asteroid-discovery-near-earth.html

    https://www.space.com/40943-nasa-asteroid-defense-plan.html

    ++++++++++++++++++++++

    பூமிக்கு அருகில் அபூர்வமாக ஒன்றை ஒன்றைச் சுற்றும் இரட்டை முரண்கோள் அமைப்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

    விஞ்ஞானிகள் மூன்று வானலைத் தொலைநோக்கிகள் [Radar Telescopes] மூலமாக இரண்டு முரண்கோள்கள் [Asteroids] ஒன்றை ஒன்று சுற்றிவரக் கண்டார்.  அந்த இரட்டை முரண்கோள் அமைப்பின் பெயர் : முரண்கோள் [2017 YE-5].  2018 ஜூன் மாதம் கண்டுபிடிக்கப் பட்ட  அந்த முரண்கோள், ஒரு புதிராகவும், புதுமையாகவும், புல்லரிப்பை உண்டாக்குவதாகவும் உள்ளது.   சுற்றும் அந்த இரட்டை முரண்கோள்களில் ஒன்று, மற்றொன்றை விடச் சற்று பளபளப்பாய்க் காணப் படுகிறது. அவை சுற்றும் காலம் 20 முதல் 24 மணிநேரம்.  அவற்றின் அகலம் சுமார் 3000 அடி [900 மீடர்].   இதுவரை விஞ்ஞானி கள் இம்மாதிரி மூன்று இரட்டை ஒருமைப்பாடு உடைய அமைப்பு களைக் கண்டுள்ளார்.  நமது பூமிக்கு அருகில் அவை 3.7 மில்லியன் மைல் [6 மில்லியன் கி.மீ.] கடக்கும் போது, விஞ்ஞானி களின் கவனத்தைக் கவர்ந்தது.  முரண்கோள் [2017 YE-5]  அடுத்து பூமிக்கு அருகில் இதே போல் நெருங்க 170 ஆண்டுகட்கு மேல் ஆகலாம்.

    பூமியை நெருங்கும் முரண்கோள் பூமியில் வீழ்ந்து தாக்கிப் பேரிடர் விளைவிக்கும்.

    2018 ஜூன் 30 ஆம் தேதி நாள் “முரண்கோள்” தினமாக எச்சரிப்பு நாளாக நினைக்கப் படுகிறது.   அன்றைய தினத்தில் உலக வானியல் ஆய்வு விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து, முரண்கோள் வீழ்ச்சிகள் பூமிக்குப் பேரிடர் தருவதால், பூமியை நெருங்கும் முரண்கோளைக் கண்காணித்து, அதன் தூரம், வேகம், அளவு, திசை, தாக்கும் பூதளம் அறிந்து, அதை எதிர்த்துத் தடுக்கவோ,  தகர்க்கவோ ராக்கெட்  [ஏவு கணை] தயாரிப்பு, திசை திருப்பும் முறை, வழிகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறார்.

    60 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு வீழ்ந்து, பூமியில் அனைத்து டைனோசார்ஸ்களும் கொன்ற  அசுர முரண்கோள் போன்று வரப் போகிறது என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை.   ஆனால் சிறு முரண்கோள்கள் பூமியில் விழுந்து பேரிடரும், பெருங் குழியும் விளைவிக்கலாம்.  2013 இல் ரஷ்யாவின் தளமாகிய செலையாபின்ஸ்க் [Chelyabinsk, Russia] நகரில் 1200 பேர் காயமடைந்தார்.  58 மைல் [93 கி.மீ.] தூரத்தில் இருந்த கட்டடங்கள் நேர்ந்த வெடிப்பால் தகர்ந்தன.  நாசாவின் மதிப்பீடு :  பூமியை நெருங்கியுள்ள முரண்கோள்களின் எண்ணிக்கை சுமார் 10 மில்லியன் !   அவற்றில் 95% பூகோளப் பேரிடர் தருபவை ஆயினும், அவற்றால் எதிர்பார்ப்பு இன்னல் இல்லை என்று நாசா அச்சத்தை நீக்குகிறது.

    ++++++++++++

    +++++++++++++++

    1. https://youtu.be/0MElgqjgJ5M
    2. https://youtu.be/hP45Xd_IplM
    3. https://gizmodo.com/asteroids-really-could-have-brought-water-to-earth-exp-1825532121
    4.  https://www.space.com/27969-earth-water-from-asteroids-not-comets.html
    5. https://www.space.com/30582-asteroid-mining-water-propulsion.html
    6. https://www.space.com/8305-water-ice-discovered-asteroid-time.html
    7. https://www.bing.com/videos/search?q=asteroids+water&&view=detail&mid=434FF06AA6245CD80B77434FF06AA6245CD80B77&&FORM=VRDGAR

    ++++++++++++++++++

    [Click to Enlarge]

    பாரெங்கும் நோக்கினும் நீருண்டு

    பாலை வனத்தில் பசுஞ்சோலை !

    தாரணியில் கடல், நதிகள், ஏரிகள்.

    நிலவின் இருட் துருவத்தில் பனிக்குழிகள். 

    செந்நிறக் கோளில் பனிநீர்ப் பள்ளம். 

    வால்மீன் தலையில்  பனித்த நீர்க்கட்டி.

    வக்கிரக்கோள் வயிறு குளிர்நீர்த் தொட்டி !

    +++++++++++

    Origin of water

     

    பூமிக்குப் பேரளவு நீர் வெள்ளம் எப்படி வந்தது ?

    பூர்வ காலத்தில் பூமியைப் பன்முறை வால்மீன்கள் தாக்கியதால்  கடலிலும், ஏரிகளிலும் நீர் வெள்ளம் நிரம்பியது என்பது பழைய  கோட்பாடு.  2018 ஏப்ரல் 25 இல் வெளியான புதிய விஞ்ஞான வெளியீட்டின்படி,  அதிவேக முரண்கோள்கள் [Asteroids] பன்முறை பூமியைத் தாக்கிப்  பேரளவு நீர் வெள்ளம் சேர்ந்தது என்று பாம் கேணன்  சோதனை மூலம் [BAM Cannon Experiment] ஆய்வு செய்து அறிவிக்கப் பட்டது.  சோதனை நடத்திய இடம் : காலிபோர்னி யாவில் உள்ள நாசாவின் ஆமெஸ் ஆய்வு மையம் [Ames Research Center].   சோதனையில் பங்கெடுத்த குழு விஞ்ஞானி  டெரிக் டாலி [Terik Daly] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டப் படிப்பாளி]   .

    See the source image

    செய்த சோதனை என்ன ? எரிமலைப் பாறை மீது, அதிவேக  எறிவிண்கற்கள் ஏவி [Shooting Meteorite-Like Projectiles on Volcanic Rocks], விளைந்த தாக்கல்களால் நீர் வெள்ளம் சேர்ந்தது என்று அறிந்தனர்.  அதற்குச் செய்த சிறு மார்பிள் கணைகளின் வேகம் 11,200  mph [18,000 kmh]. ஏவிய மார்பிள் கணைகள் பூர்வீக நீர்செழித்த, தாதுக்கள் நிரம்பிய பழைய முரண்கோள்கள் போன்று, [Carbonaceous] இருந்தன.  அந்த மோதல்களில் 30% கொள்ளளவு நீர் வெள்ளம்  தாக்க பீடத்தில் அடைபட்டு இருக்கும்.  இம்முறையில்தான் முரண்கோள்கள் தாக்கி, நிலவிலும், செவ்வாய்க் கோளிலும், மற்ற சூரிய மண்டலக் கோள்களிலும் நீர்வெள்ளம் சேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்.

    வால்மீன்களில் உள்ள தண்ணீர் ஆவியைச் சோதித்ததில், அதிலுள்ள கனநீர் [Heavy Water Molecule], பூமியில் கிடைக்கும் கனநீர் போலில்லை.  ஆனால் முரண்கோள் [Asteroid] பெற்றுள்ள கனநீர், பூமியில் உள்ள கனநீர் போல், அளவிலும், ஏகமூலப் பண்பாட்டி லும் ஒத்திருந்தது. ஆகவே விஞ்ஞானிகள் கூறும் புதிய கோட்பாடு :  பூகோளத்தின் கடல் நீர்வெள்ளம் முரண்கோள்கள் பன்முறை தாக்கியதால் சேர்ந்தது என்பதே. இவற்றை விளக்க மாக யூடியூப்  ஒளி திரைகளில் காணலாம்.

    +++++++++++++

    See the source image

    பூதக்கோள் வியாழனுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் 

    இடையே சூரியனைச் சுற்றும் பல்கோடி முரண்கோள்கள்

    ++++++++++++++++++

    https://youtu.be/BvrzM-BavDg

    https://youtu.be/PoV4qSwg7nc

    https://youtu.be/j1sFidXtKIU

    https://youtu.be/NAbcmtwyxgg

    https://youtu.be/t90lVO1JkGc

    https://youtu.be/W-gp5lapzi0

    https://youtu.be/vy6dj_ZWOos

    https://youtu.be/Idtk16T-cyY

    ++++++++++

     

    பூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள்
    கோளுக்குள்
    கோளின் குடலுக்குள்
    பாறைக்குள்,
    உறங்கும் படு பாதாள
    ஊற்றுக்குள் நெளிந்தோடும்
    ஆற்றுக்குள்,
    நிலையான ஏரிக்குள்
    நிரம்பியது எப்படி
    நீர் வெள்ளம் ?
    எப்போது தோன்றியது ?
    நூறு கோடி
    ஆண்டுகட்கு முன்பா ?
    பூர்வப் பிரபஞ்சத்தில் தோன்றியதா ?
    படிப்படி வளர்ச்சியில்
    வடித்ததா ?
    மூலகங்கள் இணைந்தா ?
    மூலக்கூறுகள் பிணைந்தா ?
    மின்னல் அடித்து இரசாயனங்கள்
    பின்னியதா ?
    தோல் அடியில் நீர்ப்பனி சுமக்கும்
    வால்மீன்கள் தாக்கி
    கோளில் கொட்டியதா ?
    ஆழ்ந்து உளவினும் இந்தக்
    கேள்விக்கு விடை
    கிடைப்பது எக்காலம் ?

    ++++++++++

    Earth's water -1

    கனடா வடதுருவப் பனித்தளத்தில் உள்ள பாஃபின் தீவின் [Baffin Island, Canada] பாறைகளுக்கிடையே உறைந்த நீர் வெள்ளம் பூமி தோன்றிய துவக்க காலத்துப் பூர்வீக நீர் என்பது முதன்முறையாக அறியப் பட்ட சான்றாகக் கருதப் படுகிறது. அந்தப் பாறை நீர் மாதிரிகள் 1985 ஆண்டில் சேமிக்கப்பட்டவை. அவற்றைப் பல்லாண்டுகளாய்த் துருவிச் சோதிக்க வாய்ப்புக்கள் இருந்தன.  அவை பூமியின் ஆழ்தட்டிலிருந்து [Earth’s Deep Mantle] வெளி வந்த பூமி அங்கமாய்க் கருதப்படும் உட்சாதனத்தைக் கொண்டிருந்தது.  அவை மேற்தளப் பாறையிலிருந்து [Crustal Rocks] உதிரும்  வண்டல் படிவுகளால் [Sediments] பாதிக்கப் படவில்லை. இதுவரை நாங்கள் பாராத பூர்வ படிவுப் பாறை [Primitive Rocks] என்பது எங்கள் முடிவு. அவற்றின் நீர் பூமியின் பூர்வீகத் துவக்க நிலை நீராகக் கருதுகிறோம். அவை பூமியின்  தோற்ற வரலாற்றையும், ஆரம்ப நீர்மயம் எங்கிருந்து எப்படி வந்தது என்று அறியவும் உதவுகிறது.

    டாக்டர் லிடியா ஹால்லிஸ் [Astrobiology Institute, University of Glasgow, Scotland] 

    cover-image-swas-probe-1

    கனடா வடதுருவப் பாறை நீரில் மிகச் சிறிதளவு டியூட்டிரியம் [Deuterium] உள்ளதை அறிந்தோம்.  அதனால் அழுத்தமாய்த் தெரிவது : அந்த நீர்மயம் பூமி தோன்றிக் குளிர்ந்த பிறகு புறத்திலிருந்து வீழ்ந்து நிரம்பிய தில்லை என்பதே. அதாவது கோள்கள் தோன்றி உருவாவதற்கு முன்பே, நமது சூரியனைச் சுற்றி இருந்த தூசி, துணுக்குகள் நீர் மூலக்கூற்றை ஏற்கனவே ஏந்தி வந்திருக்கலாம்.  பல யுகங்களாய் இந்த நீர்மயம் செழித்த தூசி, துணுக்குகள் மெதுவாகச் சேர்ந்து நீர்க்கோள் பூமி வடிவாகி இருக்க வேண்டும்.  ஆரம்ப காலத்தில் பேரளவு நீர் வெள்ளம் பூதள வெப்பத்தில் ஆவியாகி இழக்கப் பட்டாலும், மிஞ்சி இருந்தது போதுமான அளவு கடலில் நிரம்பியுள்ளது.

    டாக்டர் லிடியா ஹால்லிஸ் [Astrobiology Institute, University of Glasgow, Scotland] 

    பூமியின் உட்தட்டில் பூர்வக் கால நீர்த் தேக்கம் கண்டுபிடிப்பு

    2015 நவம்பர் 13 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில்  [Journal Science] காரி ஹூஸ், கஸுஹைடு நாகசீமா, ஜெஃப்ரி டெய்லர், மைக்கேல் மோட்டில், காரென் மீச் [NASA Astrobiology Institute, University of Hawaii] ஆகியோர் முதன்முதல் வெளியிட்ட ஆய்வறிக்கை :  கனடாவின் வடதுருவப் பகுதியில் உள்ள பாஃபின் தீவுப் பாறைகளில் பூர்வக் கால நீர்த் தேக்கம் இருந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.  அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் : அகிலவியல் இரசாயன விஞ்ஞானி, [Cosmochemist] டாக்டர் லிடியா ஹால்லிஸ் என்பவர். [Astrobiology Institute Fellow, University of Glasgow, Scotland]

    Deuterium content

    பூகோளப் பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி கடல் பரவியுள்ளது.  ஆனால் அந்தப் பேரளவு நீர்த் தேக்கம் எப்போது, எங்கிருந்து பூமியில் சேர்ந்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.  பூமி தோன்றிய போது சேர்ந்ததா, அல்லது தோன்றிய பிறகு நேர்ந்ததா என்பது இதுவரை விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை.  இப்போது கனடா பாறை மாதிரிகள் பூமியில் நீர்மயம் ஆரம்ப காலத்திலே உருவானது என்பதற்குச் சான்று தெரிவிக்கும். அதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்திய கருவி அயான் நுண்ணுளவி [Ion Michroprobe].  அந்த பாறைகளுக்கிடையே இருந்த பனிக்கட்டி நீர்த் துளிகள் ஒப்பு நோக்க எத்தனை பங்கு டியூடிரியம் [Deuterium] கொண்டது என்று ஆராய்ந்தனர்.

    டியூட்டிரியம் என்பது ஹைடிரஜனின் ஏகமூலம்.  [Deuterium is an Isotope of Hydrogen]. ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் பரமாணு உள்ள போது, டியூட்டிரியம் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்டிரானும் சேர்ந்துள்ளது.  அதாவது ஹைடிரஜனின் அணுநிறை : 1 டியூட்டிரியத்தின் அணுநிறை : 2.  சூரியக் கோள்களின் வெவ்வேறு நீர் மாதிரிகளைச் சோதித்ததில், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதத்தைக் கொண்டிருந்தன.  [Different Hydrogen / Deuterium Ratio] கொண்டிருந்தன. சமீபத்தில் இரசாயன ஆய்வு செய்த நமது சந்திரனின் பாறை மாதிரிகள் மூலம், பூமியானது நீர்த் தேக்கமுடன் ஆரம்பம் முதலே இருந்தது என்பது உறுதியானது. அப்பெல்லோ -15 & 17 நிலவுப் பயணங்களில் நாசா விண்வெளி விமானிகள் சேகரித்த பாறை மாதிரிகள் காட்டிய டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதம் [Deuterium to Hydrogen (D/H) Ratio] பூமியில் இருக்கும் நீரைப் போன்று இருந்தது.

    D-H Ratio in Mars water

    பூமியை நீர்ப்பனி கொண்ட வால்மீன்கள் தாக்கியதால் நீர்த் தேக்கம் உண்டானதா, நீர்ச் செழிப்புள்ள முரண்கோள்கள் [Water Rich Protoplanets, or Asteroids] மோதியதால் நீர்மய அமைப்பு தோன்றியதா என்னும் வினாக்கள் விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளன !  வான்மீன்களின் பனிநீர் மாதிரிகள் காட்டும் [D/H Ratio] நமது பூமியின் கடல் நீர் [D/H Ratio] போல் இரட்டிப் பானது.

    “வெகு தூரப் பிரபஞ்சத்தில் ஈர்ப்பாற்றல் பெரிது படுத்திய அண்டத்தில் (Gravitationally Magnified Object) நீர்மயத்தை நாங்கள் கண்டுபிடித்தது விந்தையான ஓர் நிகழ்ச்சியே.  நாம் முன்பு நினைத்தது போலின்றி நீர் மூலக்கூறுகள் பூர்வத் தோற்ற பிரபஞ்சத்தில் செழிப்புடன் இருந்ததை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.  மேலும் இதைப் பல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள பேரசுர நிறையுடைய கருந்துளைகள், ஒளிமந்தைகள் ஆகியவற்றின் படிப்படி வளர்ச்சியை (Supermassive Black Holes & Galaxy Evolution) அறிய அடுத்த கட்ட ஆய்வு நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”

    ஜான் மெக்லீன், மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம், ரேடியோ வானியல் [டிசம்பர் 29, 2008]

    fig-1a-water-life-in-universe

    “மற்றவர்கள் நீரைக் காண முயன்று தோற்றுப் போயினர்.  மிக மங்கலான சமிக்கையைக் காண்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.  ஆகவே வெகு வெகு தூர அண்டத்தை நோக்கவும், அழுத்தமாகப் பதியவும் அகிலப் பெரிதுபடுத்திக் கண்ணாடியாக (Cosmic Magnifying Lens) முன்னுள்ள காலாக்ஸியைப் பயன்படுத்தி நீர் ஆவி (Water Vapour) துள்ளி எழுவதைக் கண்டுபிடித்தோம்.”

    வயலட் இம்பெல்லிஸெரி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர் [டிசம்பர் 29, 2008]

    “நீர் மேஸர் (Water Maser) கதிர்கள் அண்டையில் உள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன !  காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.”

    ஜான் மெக்லீன்.

    “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது.  மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கி விடுகிறது.  அடுத்த பிறவி புது முறை ரேடியோ தொலைநோக்கிகள் மூலமும் தேட எமக்கு வழி திறந்துள்ளது.”

    வயலட் இம்பெல்லிஸெரி

    fig-1b-water-abundance-in-the-universe“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]

    “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    fig-1e-formation-of-watery-earth1

    பிரபஞ்சத்தின் வெகு வெகு தொலைவில் நீர்மயமா ?

    2008 டிசம்பரில் ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று 100 மீடர் எஃபெல்ஸ்பெர்க் ரேடியோ தொலைநோக்கியில் (Effelsberg Radio Telescope) இதுவரை காணாத பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் உள்ள ஓர் அண்டத்தில் நீர்மயம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.  11 பில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் நீர் ஆவி (Water Vapour) இருப்பதைக் கண்ட தளம் : குவஸார் (Quasar MG J0414 + 0534 at Redshift 2.64) (Redshift 2.64 means 11.1 Billion Light Years Distance).  அதாவது “சிவப்பு நகர்ச்சி 2.64” என்றால் அந்த தளம் பிரபஞ்சமானது ஐந்தில் ஒரு பங்கு வயதில் (13.7 பில்லியன்/5 =2.74 பில்லியன் ஆண்டு வயது) இருந்த போது உண்டான பூர்வத் தோற்ற அமைப்பு !  இந்த அரிய நிகழ்ச்சியைக் காண வானியல் விஞ்ஞானிகள் சுமார் 14 மணிநேரம் எடுத்தனர்.

    fig-1f-what-controls-the-abundance-of-water

    பூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர் இருந்த கண்டுபிடிப்பைக் காண முடிவதற்கு ஒரு நிபந்தனை : பல்லாயிரம் கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள குவஸாரும் (MG J0414 + 0534) அதற்கு முன்னால் அதை மறைக்கும் ஒளிமந்தை காலாக்ஸியும் நேர் கோட்டில் இணைந்திருக்க வாய்ப்பிருக்க வேண்டும் !  முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது !  காலாக்ஸி புரியும் அத்தகைய “ஈர்ப்பாற்றல் பெரிதுபடுத்தி” (Gravitational Lensing) இல்லை யென்றால் இந்த விந்தையான நிகழ்ச்சியைக் காண ஆய்வாளர்கள் 100 மீடர் ரேடியோ தொலைநோக்கி மூலம் தொடர்ந்து 580 நாட்கள் கண்காணித்து வந்திருக்க வேண்டும் !

    fig-2-molecular-clouds

    வெகு தொலைவில் நீர் ஆவி எழுச்சி எப்படிக் காணப்பட்டது ?

    நீர் ஆவி எழுச்சி லேஸர் ஒளிக்கதிர்போல் “மேஸர்” கதிரலையாக (Maser -Microwave Amplification by Simulated Emission of Radiation) நுண்ணலை அலைநீளத்தில் தெரிந்தது.  அந்த சமிக்கையானது பரிதியின் ஒளிக்காட்சி போல் (Luminosity) 10,000 மடங்கு வெளிச்சத்துக்கு ஒப்பானது.  அத்தகைய வானியல் பௌதிக மேஸர் கதிர்கள் அடர்த்தியான துகள், வாயு எழுகின்ற வெப்ப அரங்குகளைக் காட்டுகின்றன என்பது முன்பே அறியப் பட்டது.  அதாவது பெரு வெடிப்பு நேர்ந்து 2.5 பில்லியன் ஆண்டுகள் கடந்த பிரபஞ்சத்தின் பிள்ளைப் பிராயத்தில் இருந்த குவஸாரின் அடர்த்தி வாயுக்கள் அந்தச் சூழ் நிலையில் சேர்ந்து நீர் மூலக்கூறுகளை உண்டாக்கி உள்ளன என்பது அறியப்பட்டிருக்கிறது.

    Mars brine water flow

    நீர் மேஸர் கதிர்கள் நெருங்கியுள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன !  காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.  “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது.  மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கம் ஊட்டுகிறது.  அடுத்த பிறவி புதுயுக ரேடியோ தொலை நோக்கிகள் மூலமும் தேட வழி திறந்துள்ளது,” என்று மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர், வயலட் இம்பெல்லிஸெரி கூறினார்.

    fig-5-swas-space-probe-in-orbit

    பிரபஞ்சத்தில் நீர் மயத்தைத் தேடும் சுவாஸ் விண்ணுளவி

    வானியல் விஞ்ஞானிகள் ஊகிக்கும் பகுதிகளைத் தவிரப் பிரபஞ்சத்தில் எப்புறத்தில் நோக்கினாலும் அங்கே நீர் இருப்பது தெரிந்துள்ளது.  இந்த அறிவிப்பு 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நாசா ஆய்வகத்தார் ஏவிய சுவாஸ் விண்ணுளவி (SWAS – Submillimeter Wave Astronomy Satellite) கண்டுபிடித்த விளைவுகளில் அறியப்பட்டது.  பூமியைச் சுற்றிய சுவாஸ் விண்ணுளவியின் குறிக்கோள்: விண்மீன்களின் வாயு முகில்களில் உள்ள இரசாயனக் கூட்டுப் பண்டங்கள் (Chemical Composition of Intersteller Gas Clouds) யாவை என்று அறிவது.  சுவாஸின் பிரதான தேடல் நீர் !  பிறகு விண்மீன் தோன்றும் காலாக்ஸி அரங்குகளில் ஆக்ஸிஜன் மூலக்கூறு, கார்பன், ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு ஆகியவற்றின் இருப்பைக் காண்பது.

    fig-6-swas-instrumentation

    1998 டிசம்பர் 5 இல் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் பெகஸஸ் ராக்கெட் (Pegasus-XL Launch Vehicle) மூலம் 288 கி.கி. எடையுள்ள சுவாஸ் துணைக்கோள் ஏவப்பட்டது.  அதுமுதல் சுவாஸ் ஏது பழுதின்றி ஒழுங்காய் பூமிக்கு மேல் 600 கி.மீடர் (360 மைல்) உயரத்தில் இயங்கி வருகிறது.  சூரியத் தட்டுகள் உதவியால் வெப்ப சக்தியை இழுத்து 230 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறது.  அது கொண்டுள்ள கருவிகள் கீழ்க்காணும் மூலக்கூறுகளை காலாக்ஸிகளில் காணும் திறமையுடையவை :

    1.  நீர் (Water H2O at 556.936 GHz)

    2.  ஆக்ஸிஜன் மூலக்கூறு (Molecular Oxygen O2 at 487.249 GHz)

    3.  நடுநிலைக் கார்பன் (Neutral Carbon C at 491.161 GHz)

    4.  ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு (Isotopic Carbon Monoxide 13CO at 550.927 GHz)

    5.  ஏகமூல நீர் மூலக்கூறு (Isotopic Water 2H18O AT 548.676 GHz)

    fig-swas-space-probe-mission

    நீரைக் கண்டுபிடிப்பதுடன் விண்மீன்களின் மூலக்கூறு முகில்களில் சுவாஸ் விண்ணுளவி மற்ற மூலகங்களைக் (Elements) காணவும் டிசைன் செய்யப் பட்டுள்ளது.  சுவாஸ் ஐயமின்றி நமது சூரிய மண்டலத்தில் வால்மீன்கள் தாக்கிய வாயுக் கோள்களான வியாழன், சனிக் கோளை காட்டியுள்ளது.  மேலும் சுவாஸ் செவ்வாய்க் கோளின் வாயுக் கோள் மண்டலத்தில் 100% ஒப்பியல் நீர்மையைக் (Relative Humidity) காட்டியுள்ளது.  செவ்வாய் வாயுத் தளத்தில் நீர்ப் பரவல் 10 முதல் 45 கி.மீடர் உயரம் வரை 100% பூர்த்தி நிலையில் (100% Saturation) இருப்பதைக் காட்டியுள்ளது.

    சுவாஸ் விண்ணுளவி கண்டுபிடித்த விந்தைகள்

    மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் சுவாஸ் விண்ணுளவி இதுவரை அறிவித்துள்ளது.  அண்ட வெளி விண்மீன் பகுதிகளில் நீர்மயச் செழிப்பு பல்வேறு விதங்களில் மாறியுள்ளதைக் காட்டுகிறது.  அநேகப் பேரசுர மூலக்கூறு முகில்களில் காணப்பட்ட நீர்மயச் செழிப்பு அண்டக் கோள் விண்மீன் பகுதிகளை விட ஓரளவு குறைவாகவே உள்ளது என்று காட்டியிருக்கிறது.  மேலும் புதிதாக உருவாகும் விண்மீன்களிலும், செவ்வாய், வியாழன், சனிக் கோள்களின் வாயு மண்டலத்திலும், “வால்மீன் லீ” யிலிம் (Comet Lee) நீர் இருப்பதைச் சுவாஸ் காட்டியுள்ளது.

    (தொடரும்)

    1.  https://www.space.com/27969-earth-water-from-asteroids-not-comets.html

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html(Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html  (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html  (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Scientific American – Secrets of Saturn’s Moon-Icy Enceladus Has Active Geysers & Perhaps a Hidden Sea that could Harbour Life [December 2008]
    25. NASA Exobiology & Terraforming By : Steven Lin
    26.  The Primate Diaries – Parsimony & the Origin of Life in the Universe (Sep 5, 2007)
    27. Water in the Universe : Abundant ? Yes – But Not Where We Thought it Would Be ! By : Keith Cowing (Aug 20, 2000)
    28. University of Honolulu Astrobiology Team Studies Water & Life in the Universe By : Karen Meech & Eric Gaidos (June 2003)
    29. BBC News Astronomers Should Look for Life in Nearby Planetary Systems Where Comets Swirl Aound Blazing Stars, Releasing Vast Amounts of Water. By : Dr. David Whitehouse (July 12, 2001]
    30 Highlights of the SWAS Mission By : Gary J. Melnick (2003)
    31. Daily Galaxy – New Discovery Shows Water Abundant in Early Universe By : Jason McManus [Dec 29, 2008]

    32.  http://science.nationalgeographic.com/science/space/solar-system/early-earth.html  [December  2006]

    33.  http://www.smithsonianmag.com/ist/?next=/science-nature/how-did-water-come-to-earth-72037248/  [May 2013]

    33(a)  http://www.titech.ac.jp/english/news/2013/024238.html  [November 12, 2013]

    34. http://regator.com/p/269926483/origin_of_earths_water_part_of_our_planet/

    35.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/-origin-of-earths-water-part-of-our-planet-from-the-beginning.html  [November 13, 2015]

    36.  https://en.wikipedia.org/wiki/History_of_Earth  [December 15, 2015]

    37.  https://en.wikipedia.org/wiki/Origin_of_water_on_Earth

    38.  http://www.huffingtonpost.com/entry/earths-water-old_56460271e4b08cda348867ea [November 17, 2015]

    39.  http://karmaka.de/?p=6245  [November 13, 2015]

    40.  http://cnmnewz.com/water-has-been-on-earth-all-along-study-of-volcanic-rocks-reveals/

    41.  http://www.hngn.com/articles/150356/20151113/earths-water-probably-didnt-come-comet-here-beginning.htm  [November 13, 2015]

    42.   https://en.wikipedia.org/wiki/Deuterium  [December 12, 2015]

    43. https://www.space.com/27969-earth-water-from-asteroids-not-comets.html  [December 10, 2014]

    44.  https://www.space.com/30582-asteroid-mining-water-propulsion.html %5BSeptember 18, 2015]

    45. https://gizmodo.com/asteroids-really-could-have-brought-water-to-earth-exp-1825532121  [April 25, 2018]

    46. https://www.space.com/41502-earth-has-minimoons-asteroid-science.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20180816-sdc [August 15, 2018]

    47.  https://theconversation.com/new-telescope-will-scan-the-skies-for-asteroids-on-collision-course-with-earth-97975  [2018]

    48. https://www.whitehouse.gov/wp-content/uploads/2018/06/National-Near-Earth-Object-Preparedness-Strategy-and-Action-Plan-23-pages-1MB.pdf  [June 2018]

    49.https://www.space.com/41046-asteroid-day-2018.html [ June 29, 2018]

    50.  https://www.space.com/40943-nasa-asteroid-defense-plan.html  [June 20, 2018]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] ( September 8, 2018) [R-1]

    Posted in அண்டவெளிப் பயணங்கள்பிரபஞ்சம், <a hre

    Share