இந்த வார வல்லமையாளராக வானியல் விஞ்ஞானி ஜாசிலின் பர்னல் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பல்ஸார் (Pulsar) என்னும் வேகமாகச் சுழல்கிற இறந்துபட்ட நட்சத்திரங்களை முதன்முதலில் கண்டறிந்தவர் பேரா. பர்னல். அவர் மாணவராக இருக்கும்போது நடந்த கண்டுபிடிப்பு ஆனதால், அவரது பேராசிரியர் ஹ்யுயிஷ் நோபல் பரிசை வென்றார்.

இப்போது 3 மில்லியன் $ பரிசான Special Breakthrough Prize ஜாஷ் பர்னலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுப் பரிசுத் தொகையையும் பெண்கள் பௌதீகவியலில் ஆராய்ச்சி செய்ய வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்பரிசைப் பெறும் முதல் பெண்மணி ஜாஸ்லின் பர்னல் ஆவார். இவர்க்கு முன்னர் ஸ்டீபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்புக் குழு, ஈர்ப்புவிசை அலைகள் (Gravity waves) கண்டறிந்தோருக்கு இந்த பிரேக்துரோ பரிசில் வழங்கப்பட்டது.

Professor Dame Jocelyn Bell Burnell, visiting Professor of Astrophysics, University of Oxford, from Bradford-on-Avon, is made a Dame Commander of the British Empire by The Queen at Buckingham Palace, for services to Science. (Photo by PA Images via Getty Images)

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர் (279)

  1. வல்லமையாளர் வானியல் விஞ்ஞானி ஜாசிலின் பர்னல் அவர்களுக்கு வாழ்த்துகள். இயற்பியல் ஆய்வில் ஈடுபடும் பெண்களுக்குத் தம் பரிசுத் தொகை முழுவதையும் அறிவித்திருப்பது, போற்றத் தகுந்தது. இது, பெண்களை ஊக்குவிக்கும். ஆய்வுகள் பெருகி, மேலும் மேலும் இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாக, மகளிர் உழைப்பாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.