இந்த வார வல்லமையாளர் (280)
இந்த வார வல்லமையாளராக கரிசல் மண்ணின் புதல்வர் கி. ராஜநாராயணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. அரிய படைப்புகளைப் படைத்து இளைய தலைமுறைக்கு வழிகாட்டியுள்ளார். தம் ஊர் இடைசெவல், அங்கே பிறந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமியுடன் சேர்ந்து திருநெல்வேலியில் ‘வட்டத்தொட்டி’யில் இணைந்து தம் கலைரசனைகளை வளர்த்துக் கொண்டவர். சங்கீதத்தை, நாதஸ்வரம் போன்ற கருவிகளை வாசிக்கும் இசைவாணரை வர்ணிப்பதில் கி.ரா. அவர்களுக்கு இணை அவரே தான். சிறுகதைகள் ஆகட்டும், கட்டுரைகள் ஆகட்டும், சுமார் 70 ஆண்டுகளாகத் தமிழில் எழுதிவருகிறார். இப்போது 96 வயது ஆகிறது. செப்டம்பர் 16, 1922-ல் பிறந்த கி.ரா. நூற்றாண்டுக்கு மேல் வாழ வாழ்த்துகிறோம்.
வட்டார வழக்குகளில் தமிழ் இயல்பாக வாழ்கிறது, வளர்கிறது. அகராதிகளிலும், இலக்கியங்களிலும் ஏறாத தமிழ்நடைகள் இன்னும் பல உயிர்ப்போடு உள்ளன எனக் காட்டும் ’முன்னத்தி ஏர்’ அவர். கரிசல்காட்டு இலக்கியத் தந்தை. நல்ல கதைசொல்லி. வட்டார வழக்குச் சொல் அகராதிகளை எப்படி உருவாக்கவேண்டும், அதன் உழைப்பு என்ன என்றெல்லாம் காட்டியவர் கி. ராஜநாராயணன்.
இந்த வாரம் புதுவையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், கி.ரா. தனது உரையை வாசகர்களுடனான உரையாடலாக உலகில் யுத்தம் இல்லையென்றால் எல்லா மக்களுக்கும் அரசே இலவசமாக உணவு ஊட்டலாம் என்றார்.
“காலம் நகர்ந்துபோகுற இந்த வேகத்துல, கரிசல் பூமிக்குக் கதிமோட்சம் உண்டானு வருத்தமும் சந்தேகமும் இருக்குற உங்கள மாதிரியே எனக்கும் இருந்துருக்கு. ஆனா, கொடிய பஞ்சம் வருவதற்கான வாய்ப்பு கெடையாது.
ஒரு காலகட்டத்துல நம்முடைய விவசாயிகளப் பாத்து அரசு, நீங்க விவசாயமே செய்ய வேண்டாம், உங்களுக்குச் சாப்பாடுதான வேணும், நாங்க ரேஷன் கடைல உங்களுக்கு வேண்டியதெல்லாம் கொடுக்குறோம்னு சொன்னுச்சு. ரேஷன் கடையில அரிசி கொடுக்குறது ஒரு அக்கறைதான். சாப்பாட்டுக்கான எல்லாத்தையுமே கொடுக்கலாம்.
கேக்குறதுக்கு ஒரு மாதிரியா இருந்தாலும் அரசாங்கத்தால அது முடியும். அரசாங்கம் ராணுவத்துக்கு எவ்வளவு செலவு பண்ணுது? அது தேவையில்லையே? யுத்தம் செஞ்சா இவனுக்கும் நஷ்டம், அவனுக்கும் நஷ்டம். உலக மகா யுத்தங்கள் ரெண்டு நடந்துருக்கு. புராணங்கள்ல, இதிகாசங்கள்லேயும் நடந்துருக்கு. மகாபாரதத்துலயும் நடந்துருக்கு, ராமாயணத்துலயும் நடந்துருக்கு.
யுத்தங்கள் சொல்கிற விஷயங்கள் என்ன? சாகுறதத் தவிர ஒண்ணுமே கெடையாதே. ஜனங்களுக்கு ஒண்ணு மாத்திரம் சொல்றேன். நல்லவங்களத் தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான்!” https://tamil.thehindu.com/opinion/columns/article24983670.ece
கி.ரா. புத்தகங்கள்:
https://www.youtube.com/watch?v=FMAt2ugz8iQ
கி.ரா. -வின் சில எழுத்துகள்:
இனக்குழு அழகியலின் முன்னோடி: ஜெயமோகன்
https://tamil.thehindu.com/general/literature/article24960385.ece
கி.ரா.- நம் காலத்தின் பெருமிதம் https://tamil.thehindu.com/general/literature/article24960385.ece
வெடித்துக் கிடக்கும் பருத்திக் காடு https://tamil.thehindu.com/opinion/columns/article19689388.ece
கரிசலின் உன்னதக் கதைசொல்லி கி.ரா.
http://azhiyasudargal.blogspot.com/2011/02/blog-post_18.html
https://www.thehindu.com/news/cities/puducherry/rural-dialects-folk-tales-helped-develop-tamil-literature/article19704363.ece
தங்கர் பச்சான் – கி.ரா. உரையாடல்:
https://www.youtube.com/watch?v=mp-6Iiu5cZI
கி. ரா. உரை:
https://www.youtube.com/watch?v=vUAfEiniUhk
கழனியூரன் – நான் கண்ட கி.ரா.:
https://www.youtube.com/watch?v=tflKjUo7cPM
நாஞ்சில் நாடன்:
https://www.youtube.com/watch?v=4EMkVUMjFeA
பவா செல்லதுரை:
https://www.youtube.com/watch?v=PDmR4Z2co0Q
கி.ரா. படைப்புலகம் – எஸ் ராமகிருஷ்ணன்
https://www.youtube.com/watch?v=O8bEt50uGl4
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )
வல்லமையாளர் கி.ரா. அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். பள்ளிப் படிப்பை முழுமை செய்யாத இவர், பல்கலைக்கழகப் பேராசிரியராகச் சிறப்புத் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பெற்றார். எளிமையாக எழுதி, ஒவ்வொரு படைப்பையும் ஆவணமாக்கி, ஒவ்வொரு பாத்திரத்தையும் கண்முன் நடமாட விட்டார். அறுந்த செருப்பைத் தூக்கி வரச் சொன்ன கணவனை எதிர்த்து, அந்தத் திசையைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் தாய்வீடு நோக்கிச் சென்ற மனைவி என்ற பாத்திரம், மறக்க முடியாதது. அவர் நூறாண்டு கடந்தும் நிறைவோடு வாழ்க.