Blog

  • பாரினில் பாரதப் பெண்கள் (4)

    சுலோசனா

    இல்லறம் எனும் நல்லறம்

    இந்து தருமம் கூறும் நான்கு நெறிகளில் முதலான நூல் பிரம்மச்சரியம் என்பது பாலகனாக இருந்து வாலிபப்பருவத்தின் நுனழவாயிலில் முதல் படியில் மட்டும் அன்றி ,மகான்களால் வகுத்துக் கூறப்பட்ட அறநெறி நூல்கள் முதலான பலகலைகளையும் ஆழ்ந்து கற்க முற்படும் முன்னேற்றமான காலம்.சாண்றோர்களால் சாண்றோன் என அழைக்கும்படி வாழ்வது.,என்பது எவ்வாறு என்றும் அறிகின்ற பொற்காலம்.அறிந்த அறிவை தரும நெறிகளை அவரவர் குணநலன்களுக்கு ஏற்ப வாழ்வில் வாழ்ந்து பார்க்கும் காலம்.நாயன்மார்கள் வரலாற்றில் சுந்தரர் இரண்டு திருமணம் புரிந்து வாழ்கின்றார். ஊழ்வினையின் பயனாக அந்த காலகட்டத்தில் அது முற்போக்குத் திருமணம்.சங்கிலி நாச்சியார்- பரவை நாச்சியார் என இருவர். ஒருவர் கோவில் தாளா குலத்தை சார்ந்தவர். இன்னொருவர் கணவனை இழந்தவர் .இந்த சீர் திருத்த மனம் புரிந்தவர் திருநீலக்கண்டரின் வாழ்வும் அறிந்து கொள்ளத்தக்கதே.கணவரின் நடத்தை பிடிக்காத அவரின் துணைவியார் எம்மை தீண்டாதீர் என ஆணை இட இருவரும் முதிய நிலை வரை விலகியே இல்லறம் தொடர்ந்தனர்.ஒரு சோதனைக்கு பின்பு இறைவன் மீண்டும் இளமை அருளினார்.இல்லறம் எனும் நல்லறத்தை நடத்த முற்படும் காலம் என இந்து தர்மம் கூறுகிறது.இல்லறம் எனும் இனிய மலர்வனத்தில் அழகை தங்களின் தூய்மையான அழகான வாழும் முறையினால் இன்னும் கூட அழகூட்டவும் செய்யும் அற்புத காலம் .ஒரு சன்யாசி இவ்வாறு கூறுகின்றார்.எந்த நிலையும் உயர்வே .சன்யாசமே உயர்ந்த நிலை .மற்றவை அதைவிட குறைவு.என என்னம் கூடாது. இல்லற நெறி என்பது முறப்படி சரியாக கடைபிடிக்கப்பட்டால் அதில் எவ்வளவு கடமைகள் தெரியுமா?ம்ற்ற மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் வேண்டுவன செய்ய கடமைபட்டவன் இல்லறத்தவனே ஆவான்.

    பாரினில்-பாரதம்2

    மனித இனம் என்பதே ஆண் பெண் எனும் பிரிவு சார்ந்ததே . எனினும் இரண்டு இனமும் சேர்ந்து வாழ்தலே வாழ்க்கை என்பது. விதிவிலக்காக தனியே வாழ்பவர்களும் உள்ளனர். அவர்கள் தனக்குத்தானே நிறை வேற்றும் வகையில் மனப்பக்குவம் வாய்ந்தவர்கள்.ஆணோடு நல்லமுறையில் சேர்ந்து பெண்ணும் பெண்ணோடு நல்ல முறையில் இணைந்து வாழும் பொழுதே ஆணும் பரஸ்பரம் நிறைவேற்றுகின்றனர்.என இந்து தர்மம் கூறுகின்றது. சந்தர்ப்ப சூழ்நிலையால் மணம் என்ற பந்தத்தில்,திருமண வாழ்வில் ஈடுபட இயலாதவர்கள் எத்தனைப்பேர்?அவர்களில் பலருக்கு மனதில் எதையோ இழந்தது போன்ற ஆதங்கம் இருக்கின்றது.இப்படி இருப்பது இயல்புதான் என்கின்றனர்.மன நல நிபுணர்கள்.பெற்றோரின் அன்பும் கரிசனமும் அரவணைப்பும் குறிப்பிட்ட வயது வரைக்கும்தான்.குறிப்பிட்ட ஒரு பருவத்தில் ஆணுக்குப் பெண்ணின் அனுசரிப்பும் பெண்ணுக்கு ஆணின் அனுசரிப்பும் தேவையாக இருக்கின்றது.இயற்கைக்கு இது இயல்புதான். இந்த தேவைகளும் உணர்வுகளும் என்கின்றனர்.அப்படி இன்றி இயற்கைக்கு எதிராக தனித்து வாழும் பொழுது சில சமயம் ஒழுக்ககேடான நிகழ்வுகள் சமூக நலனுக்கு கேடு விளைவிக்கின்றனர் என்கின்றனர் வாழ்வியல் நிபுணர்கள்.மனம் புரிந்தும் மனம் பொருந்தாது பிரிவதும் அல்லது சகித்துக்கொண்டு மனமின்றி வாழ்பவர்கள் எவ்வளவோ பேர்கள் துறவிக்கான பக்குவம் இல்லாதவர்களுக்கு திருமணம் தேவை. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

    நல்லாற்றின் நின்ற துணை, என வள்ளுவம் கூறுகின்றது. இந்து சமயம் மனித வாழ்வை நான்கு பகுதிகளாகப் பிரிக்கின்றது. முறையே பிரம்மச்சரியம் இல்லறம், வானப்ரஸ்தம் சந்யாஸம் என்று . இதில் இல்லறநெறி யில் இருப்பவர்கள் மற்ற மூன்று தர்மத்தில் இருப்பவர்க்கு உதவ கடமைப்பட்டவர்கள்.என்பதை திருவள்ளுவம் கூறுகின்றது.பிறப்பில் இருந்தே உலக மாயையில் இழுபடாமல் துறவு நெறியை பின்பற்றுபவர்கள் எங்கோ ஒரிருவர் தானே . மற்றபடி கல்விக்கற்று நியாயமான வழியில் பொருள் ஈட்டி ஈட்டிய பொருளை வீட்டிற்கும் நாட்டிற்கும் உதவுமாறு செலவுசெய்து வாழ்வதே இல்வாழ்வர்கள் கடன் வீட்டிற்கும் நாட்டிற்கும்கடமை.,முடிந்து பின் நான் யார் எனும் ஆன்மத்தேடலில் ஈடுபட்டு ஞானம் பெறும் மார்க்கத்தில் செல்வது வானப்ரஸ்தம் எனப்படுகிறது. அற்றது பற்றெனில் உற்றது வீடு.,எனும் நிலையை அடைவதே பாரத தாயினுடைய புதல்வனின் குறிக்கோள். ஐம்புலன்களுக்கும்சுகமளிக்கும் விதத்தில் படைக்கப் பெற்றிருக்கும் இவ்வுலக சுகங்களை தக்க துனையான மனையாளோடு மகிழ்ந்து வாழவேண்டும்.(எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந் நாடே _பாரதியார்) அனுபவித்து வாழ்ந்து நன் மக்கட் பேற்றை அடைவது

    “ஈன்று புறந்தறுதல் தாயின் கடனே அவனை
    சான்றோர் ஆக்குதல் தந்தையின் கடனே”

    என்பதே பழந்தமிழர் கோட்பாடு . பாரதம் முழுதும் அனேகமாக அதுவேதான் கோட்பாடு எனலாம். ஆனால் இன்றைய பாரதத்தில் சான்றோனாக்குதலிலும் தாயின் பங்கு சமமாகவே இருக்கிறது..எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை .இந்து சமயம் கூறும் மகத்தான விஷயங்களின் இல்லறனெறி யும் ஒன்று.நான்கு நிலைகளும் மனிதனை படிப்படியாக முன்னேற்றுகின்றது.ஆனால் மஹாபாரதத்தில் வரும் யயாதி போன்றவர்களும் உண்டு.யயாதிக்கு ஒரு சாபத்தின் காரணமாக விரைவிலேயே மூப்பு வந்து அனுபவிக்க ஆசைகளின் வேகம் அடங்கி அமைதியுராமல் எரியும் தீயில் எண்ணெய் வார்த்தார்ப்போல் ஆசைகளின் அனுபவ சுகத்தின் தாகம் இன்னும் அதிகமாயிற்று.யயாதிக்கு உடம்பின் மூப்பு அதிகமாகியும் மனதின் இளமையின் உணர்வுகள் அப்படி இருந்தன.தன்மேல் அனுதாபம் உற்ற தன் இளைய மகனின் இளமையைதான் வாங்கிக்கொண்டு தன் முதுமையின் துன்பங்களை மகனுக்கு அளித்தவர் யயாதி.எவ்வளவுதான் இன்பங்களை அனுபவித்தும் தனக்கு திகட்டவில்லை.என்பதை யும் அதே நேரம் தன் இளவயது மனதுடன் தந்தைக்காக அவரது முதிர்ந்த முதுமையை ஏற்றுக்கொண்டு அதன் இயல்பான வேதனைகளை சகித்துக்கொண்டு வாழும்ன் அன்பு மகனைக் கண்டு வேதனையும் மனம் மாறுதல் அடைந்த யயாதி தன்முதுமையை திருப்பிக் கொடுக்கின்றான்.தவம் புரிந்து நலம் எய்து வனத்தை நோக்கி செல்கிறான்.என்கிறது மஹாபாரதம்.எந்த நிலையிலும் மனித மனத்திற்கு போதும் என்ற நிறையுணர்வே அவனை அடுத்த மேல் நிலைக்கு எடுத்துச் செல்லும். என்பதைபிரம்மச்சரியம் இல்லறம் _வானப்பிரஸ்தம் .சந்யாஸம் என்ற வரிசை அருமையாக அன்பாக கூறுகின்றது.

    இந்திய திருமணங்களின் நோக்கமும் மிக உயர்ந்தது. ஆனால் அது அந்தக் கால கட்டத்தில் எவ்வாறெல்லாம் மறக்கப்பட்டது. அல்லது மறுக்கப்பட்டது என்பதே சிந்தனைக்கு உரியது. அரசர்கள் நிலையில் அரசாங்க விஷயங்களின் பொருட்டு திருமணம். இராஜியங்கள் விஸ்தரிக்க திருமணம். பகை முடிக்கத் திருமணம்.இன்னும் பற்பல காரணங்கள் திருமணத்திற்கு சுயம்வரம் என்பது ஒருவகை.பல நாட்டின் அரசகுமாரர்களை அழைத்து அவர்களைப் பற்றிய விஷயங்களை அரச குமாரிக்கு அதாவது மணமகளுக்கு எடுத்துச் சொல்வார்கள்.அவற்றை எல்லாம்கேட்டுக் கொண்ட அரசகுலத்தை சார்ந்த மண்மகள் தனக்கு விருப்பமான மணமகன் தேர்ந்து எடுத்து மாலை சூட்டுவாள் சில நேரம் அங்கு வந்த மற்ற அரச்ர்கள் வெற்றி அடைந்தவனை போருக்கு அழைப்பதும் உண்டு. அவரை வென்ற பிறகே இருவருக்கும் திருமணம் .இம்மாதிரி திருமணமண்டபத்தில் தான் ப்ருதிவிராஜன் சம்யுக்தையை சிறை எடுத்தான்.ஆனால் அந்த செயல் மணமகளின் சம்மதத்துடன் நடந்தது.சில இடங்களில்மனமகளின் சம்மதத்துடன் நடந்தது.சில இடங்களில் மணமகளின் ஒவியத்தை அனுப்புவார்கள். நாடு நாடாக கொண்டு செல்லும் பொழுது விருப்பப்பட்ட அரசகுமாரி படத்திற்கு மாலையிடுவாள்.சில இடங்களில் அரசனின் வாளை கொண்டு செல்வார்கள்.வாளுக்கு உரிய வீரனை மணக்க விரும்பும் பட்சத்தில் அவனால் அனுப்பப்பட்ட வாளினுக்கு மாலை சூட்டினாலே திருமணம் முடிந்த மாதிரிதான்.அந்நாட்களில் வீரத்திற்கே முதலிடம் தரப்பட்டது .இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை.என்பது வள்ளுவர் வாக்கு. இதனை இயற்றிய வள்ளுவர் பெருந்தகை வாசுகி எனும் மங்கை நல்லாளுக்கு மனமுவந்த மணவாழ்வு நடத்தினார் என செவி வழி செய்தியாக பல கதைகள்ருக்கின்றன.அவர் முழுமையான பேணும் உணர்வு கொண்ட பெண்ணையே முன்னிறுத்தி வாழ்க்கைத்துனை நலம் எனும் ஒரு முகவை இயற்றியிருக்கின்றார்.தன்னையும் பாதுகாத்துக்கொண்டு தன்னை மணந்து கொண்டவனையும் பேணி காப்பாற்றி தகை சான்ற சொற்களையும் காப்பாற்றி இத்தனை கடமைகளையும் ஆற்றியும் புத்துணர்வு கொண்டவளாக திகழும் சக்தி படைத்தவள் பெண் என தெய்வப்புலவர் நினக்கின்றார் போலும்.இயற்கையே பெண்படைப்பை தகமைவாய்ந்ததாக கருதியதால்தான் மக்கட்பேறை அவள் வசம் ஒப்படைத்திருக்கின்றதோ என்னவோ? தமிழகத்தில் சங்கக் காலத்திலேயே காதல் திருமணங்கள் பழக்கத்தில் இருந்தது என தெரியவருகிறது.திருமணத்திற்கு முந்தய காதல் புரிந்த காலம் களவியல் எனவும் திருமணத்திற்கு பிறகு கற்பியல் எனவும் அழைக்கப்படுகிறது.காதல் புரிந்த காலத்திலே தலைவி தலைவனோடு தனிவழி சென்றிட கூடவே தோழியும் சென்றிடுவாள்.தலைவியை வளர்த்த செவிலித்தாயோ தோழியோ திரும்ப அழைத்து வந்து பெற்றோரிடம் சொல்லி திருமணம் முடித்து வைப்பர்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடே பெரும்பாலும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவந்தது. ஆனால் வள்ளுவப் பெருமானே பொருளின் பால் பிரிவு பரத்தையர் பால் பிரிவு என பிரிவை வகைப்படுத்துகின்றனர்.மனைவியை விட்டு கணவன் காசுக்காக கணவனைவிரிக்கும் மங்கையர்பால் செல்வது எவ்வளவு இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது.கற்புனிலை என்பதை வீரமும் ஈகையுமேப் பெண்களைக் கவரும் ஆற்றல் உள்ள விஷயங்களாக கருதப்பட்டது.புலியை அடக்கி அதன் பல்லை கொண்டு வந்து தாலியாக கட்டுவதும்.மணமகள் வளர்க்கும் காளை மாட்டை அடக்கி அவளை மணப்பதும் பழகத்தில் இருந்திருக்கிறது.(வீரனோடு வீரன் போரிடாமல் மிருகங்களோடு ஆறு அறிவு உள்ள மனிதன் ஏன் போர்புரிந்து அடக்கினான் எனத் தெரியவில்லை.

    நளாயினி எனும் ரிஷிபத்தினி தன் கணவர் அவர் ஆசை பட்ட பெண்ணின் வீட்டிற்கு கூடையில் வைத்துத் தலையில் சுமந்து சென்றாள் என்பது புராணக்கதை. அவள் சூரியனையே ஒரு நாள் உதிக்காதவாறு தடுத்து நிறுத்தும் வாக்கு பலம் உள்ளவளாக சித்தரிக்கப்படுகிறார். வள்ளுவரின் தெய்வத் தொழா(அல்)கொழுநன் தொழுதெழுவாள்,பெய்யெனப் பெய்யும் மழை.தன்னைப் படைத்த தெய்வத்தையே இரண்டாம் இடத்திலும் ,தன் கணவனாக மணந்தவனை முதல் இடத்திலும் வைத்துப்பார்ப்பவள் நல்ல மனைவி என்றும் அவள் பெய்யென பெய்யும் மழை என்று அவள் சொல்வாக்கு குறித்து கூறுகிறார் வள்ளுவர்.பெண்ணை எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி வைத்து புகழ்கின்றார்.

    இன்னும்கூட சில கதைகள் உண்டு `தவ வலிமையில் ஒரு கொக்கை எரித்து விட்ட ஒரு முனிவர் பிட்சை வேண்டி ஒரு இல்லத்தின் முன் நிற்கின்றார். சற்றே தாமதித்து வந்த இல்லத்தரசியைக் கண்டு கோபத்துடன் கடுமையான நோக்குடன் நோக்க அந்த மனைக்குரியவள் கொக்கென்று நினனைத்தாயோ கொங்கணவா” என வினவ முனிவர் அதிர்ச்சி அடைகின்றார்.வனத்தில் தவம் செய்து முனிவர் பெற்ற சக்தியை இல்லத்தில் தனக்குறிய கடமைகளை சகிப்புத்தன்மையுடன் செவ்வனே செய்யும் இல்லாலும்பெறுகிறாள் என்பது நாம் புரிந்துக் கொள்ளவேண்டிய ஒன்றாக உள்ளது. ஆனால் பெண்னின் விருப்பம் எனன?ஆணைக் குறித்தே அனைத்து விருப்பங்களும் கூறப்படுகின்றன.அதற்கு அவனுக்கு வசதியாக சகித்துக் கொண்டு பொறுமையுடன் விட்டுக் கொடுத்து வாழ்கிறாள்.பார்வைக்குப் புலப்படாமல்வனங்களுக்கும் மலைகளின் இடையே சலசலத்து ஒடி நதிபோன்றது தூய இல்லறம் .ஒருவர் பால் ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொண்டு இவரோடு சேர்ந்து வாழ்வேண்டும் என்பதற்காக அவளும் அவரும் அன்புக்கொண்டு மனதிற்காக நடக்கும் அரிய மணங்களின் ஒன்றாக திருமணங்கள் நிகழ்ந்ததாக ரிஷிகள் ரிஷிபத்தினிகள் என அழைக்கப்படும் இவர்கள் வனத்தில் நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து அதில் வாழ்ந்தனர். காயும் கனியும் உண்ணும் உணவு.

    மலர்களே மனம் கவரும் அணிகலன்கள, மக்கட் பேறு வேண்டினால் மட்டுமே அதற்குறிய வாழ்வு.மற்ற காலங்களில் எல்லாம் இறையை தொழுவதும் இலக்கிய பணியுமே. அற நூல்களை அறியாப்பிள்ளைகளுக்கும் புகட்டுவதுமே ஆகும்.அங்கு ஆடம்பர மாளிகைகள் இல்லை .படோடபமான ஆடை ஆபரணங்கள் இல்லை. சமாதானமும் அமைதியும் ஆட்சி புரிந்தன. புலியும் மானும் ஒர் துறையில் நீர் அருந்தி தாகம் தீர்த்தன.இங்கேயே பற்பல அரசரின் அன்பை அடைந்த ஜயதேவர் அரண்மனை வாசம் கிட்டியும் தன் மனைவி பத்மாவதி ஆஸ்ரம வாசத்தையே விரும்பி சென்றுவிட ,ஜயதேவர் அரண்மனையைத் துறந்து அன்பு மனைவியுடன் தங்களுக்கு இயல்பான ஆஸ்ரம வாசத்தையே தொடர்ந்தனர்.ஜயதேவர் பத்மாவதி போன்ற தெய்வீக தம்பதிகளின் படைப்பினை கீதகோவிந்தம் எனும் அஷ்டபதி ச்ருங்காரகாவியமாக மலர்ந்து மணம் வீசுகிறது.ஆசாரியார்களின் மகா இலக்கியங்களுக்கு உரை எழுதுதல் போன்ற இலக்கிய பணிகள் இனிது நடைபெறும்..தங்கள் வாழ்நாள் முழுதும் இது போன்ற பணிக்கே அர்ப்பணித்த ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் உண்டு.பரசுராமனின் தந்தை ஜமதக்கனி முனிவர் ,தமது பத்தினி வாளில்சென்ற கந்தர்வனின் அழகை வியந்து ரசித்தாள்.தான் ஈடுபட்டிருந்த பணியில் கவனம் குறைந்தாள்.அதனால் அந்த பணிகுறைவு பட்டது என்பதற்காக தன் மகன் மூலமே மனைவியை கடுமையாக கண்டித்தார் என்றும் அறிகிறோம். கெளதம முனிவர் தன் பத்தினி அகல்யாவோட வாழும் காலத்தில் இந்திரன் அகல்யை மீதுகொண்ட மையலால் கெளதம முனிவரின் உருவில்வந்து ஏமாற்றுகிறான்.ஏமாந்த அகல்யாவை முனிவர் சினத்துடன் சபிக்கின்றார்.வந்தது யார் ?தன் பதியா அந்நியனா என அறியும் உள்ளுணர்வு இல்லாத நீ கல்லாக கடவாய் என்று சபித்தார்.

    ஸ்ரீராமனின் பாதம் பட்டு ஜடமாகக் கிடந்த அகலிகை மீண்டும் பெண் ஆனாள்.அவளின் தண்டனைக்காலம் முடிந்ததும் முனிவரும் அவளை ஏற்கின்றார்.அரச குமாரிகள் கூட முனிவரை மணந்தனர் அகத்திய முனிவரின் பத்தினி லோப முத்ரா அரச குமாரி ஆவார் .அத்திரி மகரிஷி அனுசூயா தேவி வசிஷ்டர் அருந்ததி போன்ற ரிஷிகள் தார்மீக இல்லறம் அமைதியான வாழ்விற்கு எடுத்துக்காட்டல்லவா? தான் ஏற்றுக் கொண்ட இலக்கியப் பணி முடிந்த அன்று முனிவர் இவ்வுலக நினைவில் இருக்கும் பொழுது ,ஒரு முதிய மாது தனக்குப் பணிவிடைகள் செய்வதப் பார்த்தார். தான் எழுதிய ஏடுகளை பாதுகாத்து எடுத்து வைக்கும் அவளைக் கண்டு வியப்புற்றவராக ,நீங்கள் யாரம்மா என வினவுகின்றார்.அவளோ மெளனமாகவே நின்றாள். மறுபடியும்முனிவர் வினவ அந்த அம்மையார் சுவாமி நான் உங்கள் பத்தினி ஆவேன் என்கின்றார்.வியப்பும் அதிர்ச்சியும் உற்ற முனிவர் நினைத்துப் பார்த்தார். தாம் பல ஆண்டுகளுக்கு முன்னால் மணந்துக் கொண்ட இளம் மனைவியே இவளாவாள்.தாம் புத்தகத்திற்கு உரை எழுத ஆரம்ப காலத்தில் அவள் இருந்த இளமைத் தோற்றம் நினைவில் வந்து நின்றது.தாம் தம் பணியில் ஆழ்ந்து ஈடுபட்டு விட்டதில் ஆண்டுகள் உருண்டோடி இளமை கழிந்துவிட்டது. தமக்குத் தொண்டாற்றி தம் பணிக்கு பெறும் உதவியாக இருந்த சகதர்மினியை மிக்க அன்புடனும் நன்றியுடனும் நோக்கினார்.தாம் எழுதிய உரைக்கும் பாமதி எனும் தன் பத்தினியின் பெயரையே சூட்டினார்.பாரதத்தின் மிகப் பெரிய செல்வமான ஆன்ம ஞானம் என்பது,அதை அடைவதே இந்த பதி பத்தினிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது .இத்தகைய ஒரு இல்லறம் உலகின் வேறு எந்த நாடுகளிலும் இருந்ததா என்பது ஐயத்திற்கு உரியதே ஜனக மன்னரின் சபையில் யாக்ஞ வல்கியர் என்ற முனிவர் சபையில் முதன்மை ஸ்தானத்தில் இருந்தார்.பெரும் ஞானி ராஜரிஷி ஆனதால் ரிஷிகளின் செல்வமான ஆநிரைகள் (பசுக் கூட்டங்கள்) முதலிய செல்வங்கள் அவரிடம் மிகுந்திருந்தது. அவருக்கு துனைவியர் இருவர்.அவரின் இரண்டாவது துனைவியர் மைத்ரேயி என்பவர்.அவர் முனிவருக்கு மனவியாக மட்டும் அன்றி சிஷ்யையாகவும் அமைந்திருந்தார். ஒரு கால் கட்டத்தில் யாக்ஞ வல்கியர் மனம் திரல் குறையை உணர்ந்தார்.அவர் மனம் இருந்த நிலையில் இருந்து இன்னும் உள்ளுக்குள் நான் யார் எனும் ஆன்ம விசாரித்திற்காக அவா உற்றது.ஞான விசாரத்திற்கு தனிமைத் தவமே உற்ற வழி என தீர்மானித்தவராய் அரசபையில் இருந்து பிரிந்து வந்து தன்னிடம் உள்ள செல்வங்களை பத்தினிகளுக்கும் குமாரர்களுக்கும் வழங்கினார்.இரண்டாவது துனைவி மைத்ரேயின் மனம் ஒப்பவில்லை.தன் பதியிடம் கேட்கிறார் .இவைகளை எங்களுக்கு அளித்துவிட்டு தாங்கள் எந்த செல்வத்தை நாடி செல்கின்றீர்கள். என வினவுகின்றாள்.தன் மன நினைவையும் தன் தனிமைத் தவத்தின் அவாவினையும் ரிஷி விளக்கமாக எடுத்துரைக்கின்றார். ஆன்ம ஞானவிழைவு மைத்ரேயிக்கு மிக அதிகமாக இருந்ததால் பதியிடம் இவ்வாறு கூறுகின்றார்.ச்வாமி தாங்கள் எந்த உயரிய செல்வத்தை நாடி செல்கின்றீர்களோ அதை அடையவேஉன் மனமும் விழைகின்றது.அதை நாடியே நானும் தங்களை பின் தொடர்ந்து வருகின்றேன்.

    இந்த வார்த்தைகளைக் கேட்டு ரிஷி மிகவும் மனம் மகிழ்ந்து பிரியே அவ்வாறே ஆகட்டும் என்றாராம். பிருகதாரண்ய உப நிஷத்தில் இந்த பகுதி வருகிறது.பகவான் ஸ்ரீராம கிருஷ்ணர் மிகவும் பரந்து விரிந்த மனதை உடையவர் பிறவி ஞானி எப்பொழுதுமே மிக உயரிய நிலையில் நின்ற அவர் மனம் சர்வ சமய சமரச கோட்பாட்டைக் கொண்டது. அவர் இயல்பிலேயே சந்நியாசி. ஆனால் அவர் இல்லறத்தில் இருந்தவர்.மிகச் சிறிய வயதிலேயே ஸ்ரீசாரதா தேவியை அவருக்கு மனம் முடித்திருந்தனர்.ஆனால் அவர்கள் சராசரி சரீர சம்மதப்பட்ட இல்லறம் நடத்தவில்லை.அந்த தெய்வீக தம்பதிகள் இடையே நிகழ்ந்த ஒரு கேள்வி பதில் ஆன்மீக அளவில் சரித்திர புகழ் பெற்றது.சாரதா என் மனம் எப்பொழுதுமே அல்லும் பகலும்துறவிலேயே நிலைப்பெற்றதாக இருக்கின்றது.உனக்கு விருப்பமானால் அதை உதறியாக வேண்டும்.உனக்கு ,உனக்கே சொந்தமான குழந்தை வேண்டுமா?அல்லது ஆயிரக் கணக்கான பிள்ளைகளுக்கு அன்னையாக வேண்டுமா? உன் விருப்பத்தைச் சொல் ஸ்ரீ சாரதையோ மனம் நெகிழ்ந்தவாறு நான் உங்கள் நிலையில் இருந்து உங்களை கீழே இழுக்க ஒரு நாளும் வரவில்லை.அனைவருமே என் குழந்தைகளாக இருக்கட்டும்.எனும் பதில் சொல்லி தன் தெய்வீகத் தன்மையை நிலைநிறுத்தினார்.பரம ஹம்சரின் முதல் சிஷ்யையும் அன்னையரே ஆவார்.இது போன்ற ஞானத்தின் உச்சியில் நின்ற இல்லறத்தை இந்தியாவைத் தவிர எங்கு காண முடியும்.,என்ற சிந்தனயே தோற்றுவிக்கிறது.நல்லவர்கள் இருவர் _பொருத்தமானவர்கள் இருவர் வாழ்வில் இனையும் வாய்ப்பு ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் எவ்வளவு உயர் நிலையை எட்டுகின்றனர்.அப்படிபட்ட தம்பதிகள் நாயன்மார்களிலும் உள்ளனர்.பாரதத்தில் உருவ வழிப்பாட்டு தத்துவத்தில் சிவ சக்தி ஐக்கியம் என்பது ஒரு பெரும் தத்துவம் அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும் ஆண் பெண் இணைப்பே உலக இயக்கம்.சராசரியாக வாழந்து பிளைக்குட்டிகளைப் பெற்றெடுத்து எதோ தங்களால் இயன்றவரை வாழ்ந்தோம் என்றில்லாமல் அதே வாழ்வை எவ்வளவு தெய்வீகமாக வாழ்ந்து இறைவனையே அடையலாம்.என பழங்கால நூல்கள் மட்டுமே அல்ல நவீன உலகின் ஞானியான ஓஷோ தன்னுடைய காமத்தில் இருந்து கடவுளுக்கு எனும் புத்தகத்தில் விளக்கி இருக்கின்றார்.

    மனப் பக்குவம் வாய்ந்த மனித இனத்தை சேர்ந்த ஆண் பெண்கள் இருவரும் வாழ்வில் இனை சேரும் பொழுது யாரிடம் குணநலன்கள்மிகுதியாக உள்ளதோ .அவர் வழிக்கு மற்றவர் சென்று இனைந்து விட்டால் இனிய இல்லறம் .ஆண் அவ்வாறு இருக்கும் பொழுது பெரும்பான்மையாக பெண்கள் தான் என்பது இல்லாமல்இணைந்து விடுகிறார்கள்.அவ்வாறின்றி பெண் குணநலன்கள் மிக்கவளாக இருந்து விட்டால் ஆண் என்பவன் தான் என்பதாலேயே தாழ்வு மனப்பான்மையுற்று அவளுக்கு ஒத்துழைப்பு தராததோடு,அவளிடம் கடுமையாக நடந்துக் கொள்ளவும் கூட முற்படுகின்றனர் .இருவருமே சமம் என்ற மனப்பான்மை இருவருக்குமே வாய்த்து விட்டால் வாய்த்தது வாழ்வு என்கின்றனர் உள நல ஆராய்ச்சியாளர்கள்.

    பரதம் பயில மிக விரும்பி கிட்டத்தட்ட 20 வயது வரை பரதம் கற்க வாய்ப்பேகிடைக்காமல் பிறகு மிகவும் சிரமப்பட்டு அனுமதி பெற்று அருண்டேல் என்ற ஆங்கிலேயரை மணந்து அவரின் ஒத்துழைப்போடு பரதம் பயின்றுதொடர்ந்து பாரதத்தின் சிறந்த நடன மணிகளில் ஒருவராக மிளிர்ந்தார்.அவரால் ஆரம்பிக்கப்பட்ட கலாஷேத்ரா எனும் பள்ளி அடையாரின் ஆலமரம் போல் தழைத்துஅருகு போல் வேரூன்றிபல கலைகளும் ப்யிலும்பண்பாட்டுக் கூட மாக செயல்பட்டு வருகிறது,தமிழ்செல்வி சாரதா நம்பி ஆருரான் அவர்கள் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவருமே மறைமலைஅடிகார குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் ஆவார்கள்.பொருத்தமாக அமைந்தவர்கள்.

    புதுமைப் பெண்ணிவள் சொல்லும் செய்கையும்பொய்மை கொண்ட கலிங்கம் புதிது. என்ற பாரதியின் பொருள் பொதிந்த வார்த்தைகளுக்கு நடமாடும் விளக்கமாக வாழ்ந்து வருகின்றார்கள். சாஸ்தரங்களும் சம்பிரதாயங்களும் மிகுந்த பிராமண குலத்தில் பிறந்து பால்ய விவாகம் எனும் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டும் விதிஅதோடு விடாமல் கைம்பெணெனும் வெறுமைக்கும் ஆளாக்கியது தாய் வீட்டிற்கே திரும்பிய அச்சிறுமியானவள் வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்குச் செல்லும் தன் தாயோடு சேர்ந்து அவளும் செல்ல த் துவங்கினாள்.அவர்கள் சென்றவீட்டிற்கு உரியவர் நாடகக் கம்பெணி நடத்தி வந்தார்.இந்த சிறுமியின் துறுதுருப்பான முகமும் புத்திசாலித்தனமான செயல்களும் அந்த நாடககம்பெணியின் முதலாளியினுடைய கலைக் கண்களுக்குவிருந்தளித்தன,அதே நேரம் அவள் ந்டிப்புத்துறையில் ஈடுபட சிறுமியின் தாயிடம் திறம்பட பேசி தன்னுடைய நாடகக் கம்பெணியில் நடிக்க அனுமதி வாங்கினார்.நடிப்பில் பிரவேசித்த சிறுமி திறமையை வெளிக்காட்டி புகழ் பெற்று திரை உலகிலும் நுழைந்து கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு பெற்றார்.திரைஉலகில் வெற்றிகரமான கதா நாயகியாக இடம் பெற்று புகழ்பெற்ற அந்த நடிகை தானே தயாரிக்கவும் செய்தார். அந்த படமும் வெற்றி பெற்றது.அவரின் கலை வாழ்வோடு,இளம் விதவையான அந்த சிறுமியின் வாழ்விலும் மாறுதல் வந்தது .வாய்ப்பு கிடைத்தது. படிபடியாக முன்னேறினார். தான் ஈடுபட்ட திரைத்துறையில்பல விதங்களிலும் தன் திறமையை

    காட்டி புகழ் பெற்றார். அது மட்டுமின்றி தன்னுடன் நடித்துக் கொண்டிருந்த வரையே மனந்து நல்லதொரு குடும்பத்தின் தலைவியும் ஆனார். அவர்தான் திரைதுறையில் முதன் முதலில் தயாரிப்பு தொழில் செய்த பெண் தயாரிப்பு நடிகை டி.பி. ராஜலஷ்மி ஆவார்.

    தெய்வீக இசை என்பார்கள் .தன் குரலில் பலரையும் கவர்ந்தவர் இசைக் குயில் திருமதி எம்.எஸ்.சுப்பு லட்சுமி அவர்கள். திரைப்படத்திலும் நடித்த இவர், நடிகை என்ற பெயரைவிட பாடகி என்ற பெயரிலேயே உலக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.பல சிரமங்களைக்கடந்து கல்கி சதாசிவம் அவர்களை துணைவராக அடைந்து அவரின் துனையோடு புகழின் உச்சிக்குசென்றவர்.இசை நிகழ்ச்சியின் மூலம் பல ந்ல்ல காரியங்களுக்கு சேவை புரிந்தும் பல நிறுவணங்களுக்கு பொருள் உதவி அளித்தவர். ஒரு முரை இந்திய பிரதமர் நேரு இவரை நான் வெறும் மந்திரி நீ இசை உலக ராணி என பகழ்ந்து கொளரவித்தார்.செய்யும் தொழிலே தெய்வம் என்று உணர்ந்து அதில் திறமை எனும் செல்வத்தை மிகுதியாகவே பெற்றிருந்தார்.உலக புகழ் வாய்ந்த இவர் குரல் ஒலிக்காத விடுகளே இல்லை.இவரின் வெங்கடேசப்ரபாதமும் விஷ்னு சகஸ்சர நாமமும் ஒலிக்காத வீடுகளே இல்லை.பக்தமீரா என்ற படத்தில் மீராவாகவே வாழ்ந்தவர்.இவரின் குரல் கேட்பவரின் இதயத்தில் ஆன்மீகத்தேடலை உண்டாக்கியவர்.

    அஷ்டாவதான என புகழ் பெற்ற டி.பானுமதியும் சொந்தக் குரலில் பாடி நடித்ததோடு அன்றி படம் தயாரிக்கவும் செய்தார். குதிரை ஏற்றமும் பயின்றவர்.திரை உலகில் ராணி போல் தான் நடந்துக் கொள்வாராம்.கே பி. எஸ். என்று அழைக்கப்பட்டு பெறும் புகழ் பெற்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற தெய்வீக இசைக்கலைஞர். இவரின் கணீர் என்ற குரல் காதுகளின் வழியே சென்று இதயத்தை தொடவல்லது.யாரோடும் துனை சேர்ந்து நடிக்காதவர் .அப்படி நடிப்பதை அடியோடு விரும்பாதவர் அவரின் சொற்களின் உச்சரிப்பும் கம்பீரமும் அவருக்கு மட்டுமே உரித்தானவை
    மகா ஞானி ஓளவையாக நடிக்கும் பாக்யம் பெற்ற மாதரசி ஆவார்.

    சிறு பெண்ணாக இரயிலில் பாடிக் கொண்டிருந்த இவரை குரலின் வளமையை கேட்டு ஏழ்மை நிலையில் இருந்து மீட்டார் .பிற்காலத்தில் இருவரும் தம்பதிகள் ஆனார்கள் என்று இவரின் வாழ்க்கை குறிப்பு கூறுகிறது.மக்களின் மனதில் ஒளவை என்றாலே இவரின் உருவம் தான் தோன்றும்.
    அந்த அளவு அந்த பாத்திரமாகவே வாழ்ந்து காட்டியவர்.வறுமையின் காரணமாக ரயிலில் பாடி பிழைத்துக் கொண்டிருந்தவர் தன் உழைப்பினாலும் திறமையாலும் அக் காலத்தில் 50-60 வருடங்களுக்கு முன்பே ஊதியமாக லட்சம் வாங்கியவர்.

    ஆந்திர தெலுங்கு நடிகை சிறுமி ஜானகி அவர்கள் சினிமா கதைகளில் வருவதைபோன்ற சம்பவங்களையே சொந்த வாழ்விலும் கண்டவர்.அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.மிகச் சிறுவயதிலேயே கல்யாணம் செய்து வைக்கப்பட்டவர்.கணவரோ சிறிதும் பொறுப்பில்லாதவர். மூன்று குழந்தைகளுக்கு தாயாகி விட்ட ஜானகி அவர்கள் குழந்தைகலின் முன்னேற்றத்திற்காக நடிப்புல்கில் பிரவேசித்தவர்.ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி விடுவதற்கே தன் வாழ்கையை தத்தம் செய்திருப்பவர்.தாயாகவே வாழ்ந்து வருகின்றார்.வாழ்வின் பல படிநிலைகளை தன் வாழ்வில் கண்ட திருமதி சௌகார் ஜானகி அவர்கள் . ஒன்றாகவே இருந்த ஒன்று இரண்டாகப் பிரிந்து ஆண் என்றும் பெண் என்றும் பெயர் கொண்டது.மனித குல வளர்ச்சிக்காகவே இந்த பிரிந்தது பின் இணையும் செயல்கள் எல்லாம் மனித குலத்தின் வளர்ச்சியின் பொருட்டு உலகில் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.ஆணும் பெண்ணும் தனித்தனியே வாழ்வதில் நிறைவு இல்லை என சமூக நலன் விரும்புகின்றனர்.

    தட்டச்சு உதவி : உமா சண்முகம்

    Share
  • விதவையின் முதல் இரவு….

     

    வண்ணங்களை 
    தொலைத்த
    விதவை என்பவள் 
    எண்ணங்களை 
    தொலைப்பது சாத்தியமா….?
    அறை முழுக்க 
    அலங்கோலமாய் 
    கிடக்கும்
    அவன் வாசம் 
    நுகராமல் இருப்பது 
    எப்படி?
    அவன் 
    அழுந்த பதித்த 
    முத்தங்களை 
    துடைத்து விட்டு 
    விடியலை எதிர்நோக்க
    அவளால் முடியுமா?
    அவனுக்காய் 
    தேய்த்து அடுக்கிய 
    அவன் ஆடைகளை 
    அவள் நிர்வாணம் 
    என்னதான் செய்யும்?
    அழுது ஓய்ந்து 
    மூடாத ஜன்னலில் 
    சிறைப்பட்ட 
    பார்வையோடு, 
    அவள் நகரும் 
    பின்னிரவில் 
    தோள் தொட்டு
    திருப்பிடாத அவன் மரணம் 
    அவளை சாந்தபடுத்துமா?
    அவள் கண்மூடித் 
    தொலையத் துவங்கும் 
    நேரம் 
    உடைந்து அழுகிறது, 
    வண்ணங்களில் 
    தீராத கண்ணீர்….
    கவிஜி 
    Share
  • படக்கவிதைப் போட்டி 19 – முடிவுகள்

    கவிக்கோ ஞானச்செல்வன்

    படக்கவிதைப் போட்டி (19)

    மதிப்பீடும் முடிவுகளும்.
    —————————–

    11124265_850423111678556_1461065741_n

    வணக்கம். வல்லமை மின்னிதழ் வளர்ச்சியை ஊக்கும் நல்லிதழ்.
    நல்லமைப் பண்பினர் நயந்து போற்றும்மெல்லிதழ்.

    பத்தொன்பதாம் படக்கவிதைப் போட்டிக்கு14 கவிதைகள் வந்துள்ளன.எல்லாம் முகமூடிக் கவிதைகள்.

    பொய்ம்முகத்துப் போலிகளும் புகழ்முகங்கள் ஆகிவர
    மெய்ம்முகத்தார் வனவாசம் மேவுகின்ற காலமிது.

    என்று ஒரு கவியரங்கில் நாம் குறிப்பிட்ட வரிகள் நினைவில் தோன்றுகின்றன.

    முழுமையும் மரபு வழுவாத இலக்கணத்தோடு அமைந்த கவிதைகளோ,புதுக்கவிதையின் வீச்சும் படிமங்களும் சிறப்பாக அமைந்த கவிதைகளோ இல்லையாயினும்,சிந்தனை மாட்சியும் சீர்த்திமிகு கருத்தும் கவிதை வரிகளில் விரவி நிற்பதைப் பாராட்ட வேண்டும்.பங்கேற்ற அன்பர் அனைவரையும் வாழ்த்திப் பாராட்டிமகிழ்கிறோம்.

    நாடகமே உலகம்-தலைப்பில்
    சிலமனிதர்கள்
    சிலநேரங்களில் மட்டும்
    கழற்றிய
    நிழல்மூடிகள்……என்று தொடங்கி,
    முகமூடி அணியாத
    கலியுக
    மாந்தர் உண்டோ?- என்று முடித்து ள்ளார்,திரு. ஜெயபாரதன்.

    உருவங்கள் மாறினாலும்எண்ணமும் குணமும் மாறாது
    பொய்முகம் என்றும் உண்மைமுகம் ஆகாது.
    மனிதனே வாழ்க்கையில் பலவுருவம் எடுக்கிறான்
    பசுத்தோல் போத்திய புலிபோல். வாழ்கிறான். என்று திரு.பார்த்த சாரதி பகர்கிறார்.

    கவிஜி என்ற கவிஞரோ,
    கருவிழிகளற்ற
    வெள்ளை தேசம்
    காணுவதாக அவர்கள்
    திரிகிறார்கள்.
    பூனைகளும் புதையல்களும்
    புனைவுகளால்
    ஆளப்பட்டாலும்,
    புதிர் விதைத்து
    மறைக்கிறார்கள்.——என்று புதுக்கவிதை உத்தியைப் புரட்டிப் பார்த்துள்ளார்.

    க கனத்தின் உள்ளே கரந்துறையும்
    நாகத்தின் விசம்போலக் கொல்லும்
    மிக க் கொடிய முகமூடித்தனங்கள்
    இகத்திலே மிகமலிந்து விட்டதே. என வேதனைப்படுகிற புனிதா கணேசன்,
    முகமூடி மாயைக்குள் முகம் நுழைத்தே
    அகத்தழகை இழக்காமல் சிறப்போமே. என்று முடித்துள்ளார்.

    உறவெல்லாம் தொடர்கதை
    தொடர்வதில்லை புதுக்கவிதை
    காரணம் மனங்களிடை
    மாயையின் திரையிடை –
    வேசம் போட்ட வாழ்க்கை
    நாசமாகும் நம்பிக்கை
    வேண்டாமே நிஐவாழ்வில்
    உறவுகளில் வேசங்கள். என்கிறார் …கருப்பையா துஷ்யந்தி.

    மேடையில் அடுத்தவர்
    முகத்தைத் தரித்தவன்
    பாடையில் சொந்த முகத்தோடு
    கிடக்கிறான்!
    யாருக்கும் அடையாளம் தெரிய வில்லை
    வந்தவர்கள் தேடுகிறார்கள்
    கலைஞனை,
    சுவரில் அவன்களைந்து போட்ட
    முக ஒப்பனைகள் !——————இது,கனவுதிறவோனின் சில வரிகள்.

    வீட்டிலும் நாட்டிலும்
    பொய்முகங்கள்காட்டி
    வளையவருகிறார்பலர்
    சிரித்துக் கெடுப்பார்சிலர்
    நடித்துக் கெடுப்பார்சிலர் சிலர்
    கடன்கேட்க ஒருமுகம்
    கழிக்கப் பார்ப்பது ஒருமுகம். எனத்தொடர்கிறார் சரஸ்வதி இராசேந்திரன்.

    அகம்மூடிச் சிரிப்பு
    முகம்மூடிப்பேச்சு…….
    திருட்டில் ஒட்டும் நண்பன்
    உருட்டும் தலைக்குள் வஞ்சம்
    இருட்டைப்போல் பற்றிக் கவலை யில்லை
    வெருட்டென மருட்டும் முகமூடி.-இது வேதா இலங்காதிலகம் வரிகள்.

    ஆணாதிக்கத்சைச் சாடி அழகிய கவிதை தந்துள்ளார் இலட்சுமி.
    மெய்யன் நடராசன் வரிகள் மெச்சத்தக்கவை.
    அன்பின் முகவரியை அடையாளப் படுத்தி யுள்ளார். கார்த்திகா.

    இறுதியாக வந்துள்ள(புதுக்கவிதை போன்ற)தமிழ்முகில் என்பார்தம்கவிதையை முதல் இடத்திற்கு உரியதாக நாம் அறிவிக்கின்றோம்.அறிவில் ஓங்கிய மனிதாம் அறமற்ற அனைத்தும் துணிந்து செய்கிறார்கள் முகமூடிக்குள் மறைந்து எனும் கருத்தை ஏற்றுப் பாராட்டுகிறோம். கவிதை காண்க:

    பூனை புலி

    நாய் நரி
    பாம்பு பட்டாம்பூச்சி
    உருவங்கள் பல
    அறிவென்னவோ ஐந்தே
    இவைதம்
    உளந்தனில் வஞ்சகமில்லை
    தம்மினத்தைத் தாமே அழிப்பதில்லை!
    பகுதறிவுள்ள மனிதர்களே
    துவேஷம் சுமந்து
    தம்மினத்தையே கொன்று குவிக்கிறார்!

    ஒரேமுகம்-ஆனால்,
    முக மூடிகள் பல
    உளந்தனில் மண்டிக் கிடக்கும்
    அழுக்குகள் பல!
    யாரை நம்ப, யாரைநம்பாது போக,
    உலகமே உண்மைமுகம் மறைத்ததோ?

    இனி,இரண்டாம் இடத்தில் பாராட்டுப்பெறும் கவிதை பெரிதும் மரபு யாப்பமைந்த ஒன்று.
    இரண்டு எண்சீர் விருத்தங்கள்? அவற்றுள் ஒன்று:

    விதவிதமாய் மனிதர்பலர் நம்மிடையே இருக்கின்றார்
    விசித்திரமாய் நாய் புலி மான் சிங்கமொடு நரியாக
    நிதமொரு விதமான விலங்காய் வலம்வந்தே
    நடமாடித் திரிகின்றார் மனிதமுக மூடிகளாய்!
    முதலையாய்க் கடித்து யானை சாய்த்திடுவார் விழுங்கிடும்
    மலைப்பாம்பாய் மாறிடுவார் நன்மை தான் மிகச்செய்து
    உதவுகின்றது நாக்கினிலே உறவாடித் திரிந்திடுவார்
    உலகினில் உய்யவே உண்மையைக் கண்டுணர்வீர்!
    (உலகத்தார் உய்ந்திடவே). (சில திருத்தங்கள் செய்யப்பட்டன)

    பங்கேற்ற அனைவரையும் மீண்டும் பாராட்டி வாழ்த்துகிறோம்.வல்லமை இதழாசிரியர்,எம் அன்பு மாணவர் அண்ணாகண்ணன் ஆகியோர்க்கு நன்றி.வளர்க பொலிக வல்லமை!a

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”பித்தேறும் பார்த்தனைப், போரில் புகுத்திட,
    கித்தார் மரத்தடியில் கீதைக்கு, -வித்தார
    பாகவதர் ஒத்திகை, பார்த்தன் கருமமேகண்,
    ஆக,வதம் நூறழிந்(து) அஞ்சு’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”ஞானப்பால் ஊட்ட நவநீத புத்தனுக்கு,
    வானப் பசுவிரைந்து(காமதேனு) வந்தது, -கானத்தால்,
    தன்னை மறந்தது தாமோ தரன்தாளில்,
    அன்னைக்கே ஆரா அமுது”….கிரேசி மோகன்….a

    Share
  • பூகோள நாள் சுழற்சி மணி நேரம் அணுத்துவ வடிவப் புரோட்டீனில் உயிரியல் குறிப்பதிவு ஆகியுள்ளது

    Earth daily rotation period encode
    பிரபஞ்ச அரங்கமே
    பிரம்மா படிப்படியாத் திட்டமிட்டு
    விரியும் பெருங் குமிழியே !
    தானாய் எதுவும் உதிக்க வில்லை !
    வீணாய் இந்தப் பேரண்டம்
    தோன்ற வில்லை !
    ஒன்றி லிருந்து ஒன்று சீராகி
    உருவாகி வந்துள்ளது !
    இல்லாத ஒன்றிலிருந்து, எதுவும்
    இயக்காத ஒன்றின் மூலம்,
    திட்ட மிடப் படாமல் எதுவும்
    கட்டப்பட வில்லை !
    பிரபஞ்சப் படைப்புகள் அனைத்தும்
    காரண-விளைவு
    நியதியால்
    சீரொழுங்கு இயக்க முறைகளில்
    நேரான தொடர்ச்சியில்
    வேராக நிலைத்து வளர்பவை !
    தாறு மாறாக எதுவும்
    உண்டாக்கப் பட வில்லை !
    தேனெடுக்கும் தேனீக்கள்,
    அணி வகுக்கும் எறுப்புகள்,
    கூடு கட்டும் தூக்கணாம் குருவி,
    பறக்கும் கழுகு,
    நீந்தும் திமிங்கலம்,
    ஊர்ந்திடும் இலைப்புழு, அது மாறிப்
    பறந்திடும் பட்டாம் பூச்சி,
    மரம், காய் கனிகள்,
    மனிதம், விலங்கினம் எல்லாம்
    கணித விஞ்ஞான முறைகளில்
    திட்ட மிடப் பட்டவையே.
    +++++++++++++++++++++
    Earth rotation period encode
    கேய்சியும் [KaiC] மற்ற புரோட்டீன் மூலக்கூறுகளும் இம்மி நேர வினாடி அளவீடுகளில் நகரக் கூடும்.  இந்த ஆய்வுகள் முதல் முறையாக அணுத்துவ வடிவ  அமைப்பு முடிவாக, நுண்ணியப் புரோட்டீன் மூலக் கூறுகளில் 24 மணிநேரப் பூமிச் சுற்றியல் சீரிசைவுகளை  [24 Hour Circadian Rhythm] உண்டாக்க முடியும். அதுவே மூலக்கூறு அமைப்பைக் கட்டுப் படுத்தவும், இயக்கவும் வல்லது.       
    பேராசிரியர் சுஜி அகியமா [CIMoS Director & Lab Head, Center of Integrative Molecular System]
     ஜப்பானிய ஆய்வுக் குழுவினர் புரோட்டீனில் நாள் மணி நேரக் குறிப்பதிவு [Biological Time Encode] கண்டுபிடிப்பு
     2015 ஜூன் 28 இல் ஜப்பானிய ஆய்வுக் குழுவினர் பூமியின் சுழற்சி நாள் மணி நேரக் குறிப்பதிவு “கேய்சி” [KaiC] என்னும் ஒருவிதப் புரோட்டீனில்
    அணுத்துவ வடிவில் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்.  அதன் நுண்ணிய உயிரியல் மூலக்கூறு விட்ட அளவீடு 10 nm  [10 nano meter diameter Biomolecule in cynobacterial cells]. [1 nm is one billionth of a meter].  அந்தக் குழுவினர் : டாக்டர் ஜூன் அபே, பேராசிரியர் அட்சுஸி முகையமா, பேராசிரியர் சுஸி அகியமா ஆகியோர்.  அவர் ஸைமாஸ் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர். [CIMoS -Research Center of Integrative Molecular Systems, Japan] .  மேலும் பேராசிரியர் ஷினி ஸைட்டோ  [Dept of Theoretical & Computational Molecular Science] என்பவரும் சேர்ந்துள்ளார்.
    இந்தக் கூட்டாய்வு காலநேர உயிரியல் விஞ்ஞானத்தில் [Chronobiology] வெகு காலமாய் எழுந்த வினாவுக்குத் தகுந்த விளக்கம் அளிக்கும். எப்படி உயிரியல் கடிகார மணிநேரம் [Circadian Period of Biological Clocks] கணிக்கப் படுகிறது ?  அதன் விளைவுகள் அடிப்படை உயிரியல் கடிகார மூலக்கூறு இயக்கத்தை அறிய உதவுகிறது.  இந்த ஆய்வு பயிற்சி சிகிட்சை முறை களில் [Therapies] ஏற்பாடும் காலமணிச் சீர்மை முரண்பாடு [Abnormal Circadian Rhythms] செம்மைக்கு உதவும் என்று அறியப் படுகிறது.
    Modified program

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofFhHcvasHA

    http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NJQ4r81DZtY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-FLa0RKo5c

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qoERVSWKmGk

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=W4mYwsr9gGE

    Origins of life 1

    இந்த சோதனைகள் மூலாதார மூலக்கூறுகளான கொய்னொலோன் & ஐசோகொய்னோலோன்  [Quinolone & Isoquinolone] இரண்டும் சூட்டுச் சூழ்வெளியில் பின்னிப் பிணைந்து சூரியப் புயலில் வீசி எறியபடலாம் என்று அழுத்தமான சான்றுகளைக் காட்டுகின்றன.  குளிர்ந்து போன மூலக்கூறு முகில்களில் இவை விழுந்த பின்பு குளிர்ந்த அண்டெவெளி நுண்துகள்களில் படிந்து இயற்கை நிகழ்வுகளில் ஈடுபடும்.  அவை மேலும் சிக்கலான உயிர்ச்சார்புள்ள மூலக்கூறுகளை உண்டாக்கி டியென்ஏ & ஆரென்ஏ உருவாக்க உதவும் [Biorelevant Molecules like Nuclebases to create DNA & RNA]. 

    ரால்ஃப் கெய்ஸர், இரசாயனப் பேராசிரியர், ஹவாயி பல்கலைக் கழகம்  

    Solid Evidence of DNA Existance

    இதுதான் முதன்முறையாக எவரும் விண்மீன்கள் வெப்ப இயக்கத்தை உள்நோக்கியது.  நைட்டிரஜன் கலந்துள்ள வளையத்தை கார்பன் அணுக்கள் உண்டாக்குவது அத்தனை எளிமை இல்லை.  இப்புதிய ஆய்வு அந்த சூட்டு வாயுத் தோற்ற வாய்ப்பு இருப்பை மெய்ப்பிக்கிறது.  அதை அகிலவெளிக் கனல் சமைப்பு [Cosmic Barbeque] என்று சொல்லலாம். ஆனால் அந்த இயக்கம் நிகழ்வதற்கு ஒரு சக்தி அரண் [Energy Barrier] உள்ளது. அந்த வரையறை ஓர் விண்மீன் அருகில் அல்லது ஆய்வகச் சோதனையில் மீறலாம்.  அதாவது இந்த உயிரின மூல மூலக்கூறுகளை இப்போது நாம் விண்மீன்களைச் சுற்றி இருப்பதைத் தேடலாம்.

    முகஸகீத் அஹமத், பெர்க்கிலி ஆய்வுக்கூட விஞ்ஞானி 

    PROTEIN

    உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை டியென்ஏ 
    பல ஆண்டுகளாக உயிரின மூலாதார இரட்டை நெளிவு இழை [Double Helix] எனப்படும் டியென்ஏ ஆக்கும் மூலக்கூறுகள் பிரபஞ்சத்தில் எப்படி உருவாகி வருகின்றன என்னும் கேள்வி கேட்கப்படுகிறது.  அதற்கு மூலாதார மூலக்கூறுகள் : நைட்டிரஜன் அணுக்கள் பதிந்துள்ள கார்பன் வளைய அமைப்புகள் [Key Components of Nucleobases] எப்படித்
    தோன்றுகின்றன என்று முதலில் அறிய வேண்டும்.
    முதன்முறையாக அமெரிக்காவில் பெர்க்கிலி தேசீய ஆய்வகம், ஹவாயி பல்கலைக் கழகம் இரண்டும் சேர்ந்து ஆராய்வுகள் நடத்தி, பிரபஞ்சத்தில் விண்மீன்களுக்கு அருகில் உள்ள சூட்டுத் தளங்களில் தகுந்த சூழ்நிலை அமைந்து இவ்வகை மூலக்கூறு நைட்டிரஜன் படிந்த கார்பன் வளையங்கள் [Quinolone] உருவாக நிகழ்வுகள் நேர்கின்றன என்று கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்கள்.

    fig-1b-genome-of-the-species

    “உயிரினம் எதுவுமே இல்லாமல் எளியதாய்ப் பிரபஞ்சம் வெறும் பௌதிகம், இரசாயனத்தோடு, கால வெளியைத் தோற்றுவித்த அகில வெடிப்புத் தூசியோடு (Dust of Cosmic Explosion) இருந்திருக்கலாம்.  உண்மையில் அப்படி நேரவில்லை ! பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப்  படுத்துவது பைத்தியகாரத்தனம்.  “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை !  அந்த மகத்தான நிகழ்ச்சியை உளவி அறிந்து கொள்ளும் மனிதரை உண்டாக்கவும் செய்திருக்கிறது.”

    ரிச்சர்டு டாக்கின்ஸ் உயிரியல் விஞ்ஞானி (Richard Dawkins)

    “உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

    மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

    Earth Spectrum

    உயிரினத் தோற்றம் பற்றி விளக்கம் கூறிய உலக மேதைகள்: 

    பெரும்பான்மையான  உயிர்த்துவ இம்மிகள் [Living Organisms] மனிதர் கண்ணுக்குப் புலப்படா.   உயிர்த்துவ மூல நுண்ணுருக்கள் [Microbes] சேர்ந்தவையே உயிரினங்கள்.  80% நுண்ணுருக்கள் பூமிக்கு அடியிலே வசிக்கின்றன.  அவற்றின் அளவீடுகளைக் கணிப்பது சிரமமானது.   நோயை உண்டாக்கு வதும் அவையே.  நோயைக் குணப்படுத்துவதும் நுண்ணுருக்களே.  நமது பசுமைச் சூழ்வளம் [Ecosystem] ஏற்பாட்டுக்கும் நுண்ணுருக்களே  அடிப்படைக் காரணமாய்ப் பங்கேற்கும்.   யூதக்  கிறித்துவ, இஸ்லாமிய மத நூல்கள்,  கடவுளே பிண்டத்தில் உயிரை ஊதி உட்செலுத்தியது என்று கூறுகின்றன.

    Comets Gifts for Earth

    [384-322 ] B.C.  ஆண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸ்  “நியுமா” [Pneuma] என்னும் ஒரு தெய்வீக மூலமே [Divine Matter] விலங்கினத்தை உருவாக்கியது என்று கூறுகிறார்.   உயிரின மலர்ச்சி தொடர் இயக்கத்தில் மனித ஆத்மா பூரணத்துவம் அடைய,  நியுமா என்பது ஒர் இடைநிலை அரங்கம்.  மனித உடலுக்கும், ஆத்மாவுக்கும் இடையே, அல்லது  விலங்கினத்தின் உடம்புக்கும் உயிருக்கும் உரிய “இருமுகப்பு”  [Duality] பற்றி அவரது குருநாதர் சாக்ரடீஸ் பள்ளியில் கருத்தாடல்கள் நடந்துள்ளன.  அதில் ஒரு மாணவரே அரிஸ்டாடில்ஸ்.   குருநாதர் கூற்றுபடி உயிர் மூச்சு மனிதன் போன்ற உயர்ந்த விலங்கினங்களுக்கு பிறப்பாக்கத் தொடர்பு மூலம் [Procreation] வாரிசுகளுக்கு வழங்கப் பட்டது.   பிறப்பு விதை யில்லாமலே சிற்சில பூச்சிகள், சிப்பிகள், கடல்நீர் ஜந்துகள் சுயமாய் உருவாகின என்பது கிரேக்க மேதை அரிஸ்டாடில்ஸின் கருத்து. சாக்ரடீஸ் குழுவினருக்கு முன்பே “தானாய் நேரும் பிறப்பு”  [Spontaneous Generation]  கோட்பாடுக் கருத்து இருந்துள்ளது.  தானாய் நேரும் பிறப்புகளைப் பற்றி சைனா, இந்தியா, பாபிலோன், எகிப்திய ஏடுகளும் கூறியுள்ளன.

    Growth of Organisms

    லூயி பாஸ்டர் [1822-1895] செய்த ஒரு சோதனை மூலம் “தானாய் பிறக்கும் கோட்பாடுக்கு” முற்றுப் புள்ளி வைத்தார்.  அவருக்குப் பிறகுதான் “உயிரே உயிரை பிறப்பிக்கும்” கோட்பாடு நிலையானது.   ஆனால் இந்தக் கோட்பாடு முதலில் தோன்றிய உயிர் வடிவத்துக்கு ஒவ்வாது என்றும் பாஸ்டர் கூறினார்.   அதாவது “தானாய் உருவாகும்” கோட்பாடு முதல் உயிர் வடிவுக்கு மட்டும் தகுதி பெறும்.

    சார்லஸ் டார்வின் [1809-1882]  உயிர்த் தோற்ற உற்பத்தி, அம்மோனியா, ஃபாஸ்ஃபரஸ் உப்புக்களோடு, ஒளி, வெப்பம், மின்சக்தி இயங்கிய  ஒரு பூர்வக் குழம்பில்  [Primeval Soup] நேர்ந்தது என்று நம்பினார். இந்தக் கூட்டுக் குழம்பு ஒருவிதப் புரோட்டீனை உண்டாக்கி, சிக்கலான இரசாயனக் கலவைகளாகி, அவற்றிலிருந்து உயிரினம் தோன்றின என்று கருதினார்.   உயிரியல் இரசாயன இயக்க விருத்தியில் [Biochemical Reactions Evolution] உயிரின மலர்ச்சி நேர்ந்தது என்னும் புதியதோர் கருத்தை நிலை நாட்டியவர் அலெக்ஸாண்டர் இவனோவிச் ஓபரின் [Alexander Ivanovich Oparin] [1894-1980].

    the-origins-of-life

    “கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு  ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது!  சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர்!  அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும்.  அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

    ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

    1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர்.

    Miller Urey Experiment

    அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது.  காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது.  அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

    பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

    பூமியின் பூர்வீக உயிரினங்களின் மூலத் தோற்றங்கள்

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியின் முதல் 700 மில்லியன் ஆண்டுகளாக வால்மீன்கள், விண்பாறைகள் போன்ற சூரிய மண்டலத்தின் அண்டத் துணுக்குகள் பூமியை மிகத் தீவிரமாய் தாக்கி வந்திருக்கின்றன.  அவற்றில் பேரடித் தாக்குதல்களால் வெளியான அதிர்வு சக்தி, கடல் வெள்ளத்தையும் ஆவியாக்கும் பேராற்றல் கொண்டிருந்தது. அப்போது தழைத்திருந்த உயிரினத் தோற்றங்களையும் பூமித் தளங்களில் அழிக்க வல்லது.  3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தடம் விட்டுச் சென்ற முதல் உயிரினத் தோற்றத்தின் புதைவடிவுப் பழஞ்சின்னச் சான்றுகள் (Fossil) இப்போது காணக் கிடைத்துள்ளன !

    fig-1a-the-earths-biosphere1

    கலியுகத்தின் சிக்கலான உயிரனங்களின் அமைப்புகள் பூகோளத்தின் பௌதிக இரசாயனச் சூழ்வெளியில் (Environmental Globe) சீரான முறையில் படிப்படியாக பல கோடி ஆண்டுகளாகப் பரவி வந்துள்ளன.  பூமியின் ஆக்ஸிஜன் சொற்பமான “சிறுத்திடும் சூழ்வெளி அழுத்தத்தில்” (Reducing Atmosphere with Traces of Oxygen) உள்வெளி அல்லது விண்வெளி ஒளிமந்தைகளின் ஆர்கானிக் மானோமெர்கள், பாலிமர்கள் (Terrestrial Organic Polymers or Extra-Terrestrial Organic Monomers) நியமித்த நிபந்தனைகளில் வளர்ச்சிச் சூழகத்தை நிலைநிறுத்தி இருந்தன.  ஆகவே ஆக்ஸிஜன் வேண்டாத உயிரினங்கள் இரசாயனப் பந்தங்களைத் (Chemical Bonds) தாக்கும்.  ஆகவே பூர்வீகப் பூமியில் (Primitive Earth) ஏற்கனவே இருந்த ஆர்கானிக் மானோமெர்கள் அவற்றை விடச் சிக்கலான ஆர்கானிக் பாலிமர் உண்டாக வசதியான எரிசக்திச் சூழ்நிலைகள் உண்டாயின.  ஆர்கானிக் மானோமெர்கள் இருவிதச் சேமிப்புகள் மூலம் உருவாகின்றன :  1. உள்வெளி ஒளிமந்தை இணைப்பு முறைகள் (Terrestrial Synthetic Pathways).  2. விண்வெளி ஒளிமந்தையிலிருந்து (Extra-Terrestrial) சூரிய மண்டலம் பெற்ற மூலங்கள்

    fig-1-the-beginning-of-life

    பல்லாண்டு காலங்களாக எளிய மூலக்கூறுகள் மிகச் சிக்கலான உயிரியல் மூலக்கூறுகளாக விருத்தி யாகி முடிவில் “உயிரணுக்கள்” (Cells) ஆயின !  அவை மீண்டும் பல்வேறு வடிவாக விருத்தி யாகி “ஒளிச்சேர்க்கையில்” இரசாயன முறை மலர்ச்சி (Metabolically Capable of Photosynthesis) பெறும் உயிரணுக்களாக மாறின.  அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயிரியல் பூதள இரசாயனச் சுழல் இயக்கங்களால் பின்னிய மீளா நிகழ்ச்சிகள் (Cascade of Irreversible Events Interconnected by Bio-Geochemical Cycles) நேர்ந்தன.  அப்போது பூகோளத்தின் சூழ்வாயு அழுத்தம் ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளியாகி (Oxidizing Atmosphere) “ஓஸோன்” அடுக்கு (Ozone Layer) உண்டானது.  ஓஸோன் அரங்கமானது பாதிக்கும் சூரியனின் புறவூதாக் கதிர்களை வடிகட்டும்.  ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளி பூர்வீக நுண்ணுயிர் அணுக்களை (Early Micro-Organisms) உயிரியல் விருத்தி செய்யும் மூல வாயுவாக இருந்து வந்தது.  இவ்விதப் படிப்படி அரங்க மாறுதல்களால் பூமியானது தற்கால உயிரியல் கோளமாய்ப் (Present Day Biosphere) பின்னால் உருவானது.

    Fig 3 Comet Falls on Earth

    பூதளச் சூழ்வெளியில் உயிரியல் கோளத்தின் அடுக்கான அமைப்பாடுகள்

    நாமறிந்த பிரபஞ்சத்திலே உயிரினங்கள் பல கோடி ஆண்டுகள் வசித்து விருத்தியடைந்த ஓர் அண்டக் கோள் பூமியைத் தவிர வேறொன்றை இதுவரை யாரும் அறிந்திலர்.  சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் கொள்ளும் உயிரினங்கள் பூமியில் மத்திய வேனல் தளங்கள் முதல், துருவக் கூதல் பிரதேசங்கள் வரை நீடித்து வாழ்ந்து வருகின்றன.  பூமியின் ஒவ்வொரு தளமும் நேரிடையாகவோ அன்றி மறைமுகமா கவோ உயிரின நீடிப்பு வளர்ச்சிக்கு வசதி செய்து வருகிறது.  கடல் மட்டத்துக்குக் கீழ் 10 கி.மீடர் ஆழத்திலும் (6 மைல்), கடல் மட்டத்துக்கு மேல் 20 கி.மீடர் உயரத்திலும் (12 மைல்) உயிரினங்கள் உலவி வருகின்றன. கடலிலும், வானிலும், பாலைவனத்திலும், வட தென் துருவங்களிலும் உயிரினங்கள் பிழைத்துத் தழைத்து வருகின்றன.  கனடாவின் ஆர்க்டிக் குளிர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் பனிக்குகைகளில் எஸ்கிமோ இனத்தார் குடிவாழ்வு நடத்தி வருகிறார்.  வேனற் பகுதிகளில் பேரளவு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறன.

    fig-1f-amphiphilic-molecules

    சூழ்வெளியின் அடுக்கடுக்கான வாயு அழுத்தம் குன்றிய அமைப்பாடு

    1. பூதளத்திலிருந்து 8 முதல் 18 கி.மீடர் வரை: டோப்போ கோளம் (Toposphere)

    2. பூதளத்திலிருந்து 18 முதல் 50 கி.மீடர் வரை: ஸ்டிராடோ கோளம் (Stratosphere)

    3. பூதளத்திலிருந்து 50 முதல் 85 கி.மீடர் வரை: மெஸோ கோளம் (Mesosphere)

    4. பூதளத்திலிருந்து 85 முதல் 450 கி.மீடர் வரை: தெர்மோ கோளம் (Thermosphere)

    5. பூதளத்திலிருந்து 450 முதல் 10,000 கி.மீடர் வரை: எக்ஸோ கோளம் (Exosphere)

    Establishment of life on Earth

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமில வாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து பசுமைக் குடில் சூட்டு  வாயுக்களையும் [Greenhouse Gases] CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    fig-2-signs-of-extra-terrestrial-life1

    உயிரின நீடிப்புக்கு வாயுச் சூழ்வெளியின் இயக்கப்பாடுகள்

    பரிதியின் ஒளிக்கதிர்கள் எரிக்காதவாறு உயிரினங்களுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலத்தின் பயன்கள், இயக்கப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா ?  அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே !  செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே !  வாயுக்குடை தங்காமல் போனதும் பரிதியின் கொடிய தீக்கனல் செவ்வாய்த் தளத்தின் நீர்வளத்தை ஆவியாக்கி நீர்வற்றிய பாலைவனமாக்கி விட்டது !

    பூமியின் வாயுக்குடை உயிரனத்துக்கு என்ன செய்கிறது ?

    1.  பரிதியின் கொடிய புறவூதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், பாதிக்கும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பகற் பொழுதில் தடுத்து எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பது.

    2.  பரிதியின் அவசியமான ஒளிச்சக்தியைக் கடல் மீதும் பூதளத்தின் மீதும் ஊடுருவிப் பாயும்படிச் செய்வது (எரிசக்தி மூலம்).

    Origins of life

    3.  இராப் பொழுது துரிதக் குளிர்ச்சியில் பூதளத்தைக் கணப்புடன் வைத்திருப்பது.  பகற் பொழுது துரித வெப்பத்தில் பூமியை மிதமாய் வைத்து மிகையாக்குவது.  வாயு அழுத்தக் குடையால் புவியின் சராசரி தள உஷ்ணம் : +15 டிகிரி C. வாயுச் சூழ்வெளி இல்லையெனில் -18 டிகிரி C

    4.  பூமத்திய ரேகைப் பகுதிகளிலிருந்து மிதப்பகுதி & உயர்ப்பகுதிகளுக்கு வெப்பக்கனல் சக்திக் கடப்பாடு (Transport of Energy from Equtorial Regions to mediuam & Higher Altitudes) நிகழ்வது.

    5.  ஆவிநீர்க் கடப்பாடு (Transport of Water Vapour) கொந்தளிக்கும் பொதுநிலைக் காற்றோட்டத் தளங்கள் மூலமாய்ப் பரவி நீராகப் படிதல்.

    6.  பூகோளத்தின் வாயு மண்டலத்தில் பேரளவு தாவரப் பயிர்களுக்குத் தேவையான நைடிரஜன் (78%) வாயு சேமிப்பு.  அத்துடன் ஆக்ஸிஜன் (21%), ஆவிநீர் (Moisture upto 4%) & கார்பன் டையாக்ஸைடு (0.036%) சேமிப்புக் களஞ்சியம்.

    7.  உயிரினங்கள், பயிரினங்கள் நீடித்து உயிர்வாழத் தேவையான வாயுக்கள் சூழ்வெளி எங்கும் இருப்பது.

    8.  இயற்கையாலும், மனிதச் செய்கையாலும் நிகழும் இரசாயன இயக்கங்களை (Oxidation, Reaction with Radicals & Photosynthesis) கடக்கச் செய்வது & பிரித்து விடுவது.

    9.  விண்வெளியிலிருந்து பூமியின் சூழ்வெளியில் வீழும் விண்கற்களைக் கடும் உராய்வு வெப்பத்தால் எரித்துச் சாம்பலாக்கி உயிரினங்கள் மீது படாது பாதுகாப்பது.

    ajay

    கரியமில வாயுவைக் கணிக்க நாசா ஏவப்போகும் துணைக்கோள்

    2009 பிரவரியில் நாசா ஏவப்போகும் துணைக்கோள் “ஓகோ” என்னும் “புவி சுற்றும் கரி நோக்ககம்” [Orbiting Carbon Observatory (OCO)] சூழ்வெளியில் பூதளத்துக்கு அருகில் சேரும் கார்பன் டையாக் ஸைடையும், அந்தப் பகுதியையும் பதிவு செய்து வரும்.  அதைப் பின்பற்றி ஜப்பான் “கோஸாட்” என்னும் “கிரீன்ஹௌஸ் வாயுக்கள் நோக்கும் துணைக்கோளை” (GOSAT Greenhouse Gases Observing Satellite) அடுத்து ஏவப் போகிறது.  மூன்றாவதாக ஐரோப்பாவில் ஈசா “ஏ-ஸ்கோப்” [Advanced Space Carbon & Climate Observation of Planet Earth (A-Scope)] என்னும் துணைக்கோளை 2016 இல் அனுப்பும்.  பூமியின் சூழ்வெளியில் தாவர இனங்களுக்குத் தேவையான கார்பன் டையாக்ஸைடின் கொள்ளளவு இயற்கை நிகழ்வாலும், மனித வினையாலும் ஏறி இறங்குகிறது.  அதே சமயத்தில் அது பேரளவு சேமிப்பானால் பூகோளம் சூடேறித் துருவப் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது.  அத்துடன் கடல் நீரின் உஷ்ணமும் உயர்கிறது.  அதனால் பேய் மழைகளும், பயங்கச் சூறாவளிகளும், ஹர்ரிகேன்களும் எழுந்து உயிரினத்துக்கும், பயினத்துக்கும் பேரின்னல்களை விளைவிக்கின்றன.  அவற்றை வரும் முன் தடுக்கவும், வரும் போது எச்சரிக்கை செய்யவும் இந்தத் துணைக்கோள்கள் பேருதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Building Blocks of life

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24.  BBC News – Milky Ways’s Sweetness Throughout [Nov 25, 2008]
    25. BBC News : Sugar in Space Sweetens Chances of Life By : Dr. David Whitehouse [June 16, 2000]
    26 NASA’s Genesis Space Mission – Life from Space Dust ? [Aug 15, 2001]
    27 BBC News : Life’s Origin Among the Stars – A Salt Inclusion in a Meteorite is Evidence for Water By : Dr. David Whitehouse [March 27, 2002]
    28 The Beginning of Life & Amphiphilic Molecules By: Janet Woo [August 2004]
    29. The Biological Universe – A Galaxy Insight [Nov 20, 2008]
    30. The Daily Galaxy – Could Cold “Super Earths” Potentially Support Life ?  [Dec 16, 2008]
    31. BBE News : NASA Set to Launch CO2 Hunter Satellite By : Jonathan Amos [Dec 18, 2008]

    32.  http://www.scientificamerican.com/article/a-simpler-origin-for-life/   [February 2007]

    33.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/rna-dnas-messenger-or-the-origin-of-life-on-earth.html [February 23, 2013]

    34.  http://www.ncbi.nlm.nih.gov/books/NBK26876/

    35. http://alma.mtk.nao.ac.jp/e/aboutalma/outline/06.html

    36.  http://www.scielo.br/scielo.php?pid=S0103-40142007000100022&script=sci_arttext&tlng=en  [April 2007]

    37. http://www.independent.co.uk/news/science/found-the-origin-of-life-1684584.html [May 14, 2009]

    37. http://en.wikipedia.org/wiki/RNA_world_hypothesis  [June 6, 2014]

    38.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/03/secrets-of-extreme-continent-building-discovered-a-key-to-life-on-earth-and-beyond.html [March 31, 2015]

    39. http://www.dailygalaxy.com/my_weblog/2015/05/cosmic-hotspots-near-stars-yield-buiding-blocks-of-dna.html  [May 6, 2015]

    40  http://www.sciencedaily.com/releases/2015/05/150506095248htm  [May 6, 2015]

    41.  https://en.wikipedia.org/wiki/Nanometre  [Nano meter Size] [February 11, 2009]

    42.  http://www.sciencedaily.com/releases/2014/07/140710141632.htm  [July 10, 2014]

    43.  http://www.sciencedaily.com/releases/2015/06/150625145232.htm

    44.   http://phys.org/news/2015-04-discovery-protein-capable-dna-sperm.html  [April 24, 2015]

    45. http://www.terradaily.com/reports/Earths_daily_rotation_period_encoded_in_an_atomic_level_protein_structure_999.html [June 28, 2015]

    46.  http://www.asianscientist.com/2015/07/in-the-lab/circadian-kaic-protein-structure/  [July 2, 2015]

    47.  Abe et al. (2015) Atomic-Scale Origins of Slowness in the Cyanobacterial Circadian Clock. Read more from Asian Scientist Magazine at: http://www.asianscientist.com/2015/07/in-the-lab/circadian-kaic-protein-structure/

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [July 3, 2015]

    Attachments area
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”முழங்கால் முடிச்சேறி, மொட்டையிட்டு மாலை
    தொழுங்கால் துயரம் தொலையும் -விழுங்கிஆல்
    தன்னில் மிதந்த தவசுப்ர பாதனவன்
    முன்னில் அவிழும் முடிச்சு”….

    ”அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
    அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு
    கீதை, அடியார்தம் கண்ணீர் திவலைக்கு,
    தாதை அளிப்பான் துடைப்பு”….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

     

    பழமொழி: கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல்

     

    கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
    எடுத்துமேற் கொண்டவ ரேய வினையை
    மடித்தொழிதல் என்னுண்டாம் மாணிழாய்! கள்ளைக்
    குடித்துக் குழைவாரோ இல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
    எடுத்து மேற்கொண்டு அவர் ஏய வினையை
    மடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக்
    குடித்துக் குழைவாரோ இல்.

    பொருள் விளக்கம்:
    கொடி பறக்கும் வலிமை பொருந்திய தேரினை கொண்ட மன்னவனின் தயவில், அவனது பொருளைக் கொண்டு தங்களது வாழ்வை நடத்தும் நிலையில் உள்ளவர், மன்னர் ஒரு செயலைச் செய்ய முடிவெடுத்து அதைச் செய்துமுடிக்க இட்ட கட்டளையை, தனது சோம்பலின் காரணமாக விரைவாகச் செய்யாமல் போவதால் என்ன பயன் உண்டாகும்? மாட்சிமை பொருந்திய அணிகலன்களை அணிந்தவரே, கள்ளைக் குடித்தபின்னர் துவண்டிருப்பவர் ஒருவரும் கிடையாது (கள் தரும் போதையினால் குடித்தவர் துணிகரச் செயல்களையும் செய்தல் போல அதிகாரத்தில் உள்ளவர் இட்ட கட்டளையை செயல்படுத்துவீராக).

    பழமொழி சொல்லும் பாடம்: அதிகாரமுடையோர் இடும் கட்டளையை அவரை அண்டிப் பிழைப்போர் சோம்பலின்றி விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டும். இப்பழமொழியின் சுட்டும் அதிகாரம் உடையவரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை வள்ளுவர்,

    போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது. (குறள்: 693)

    ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், தம் பங்கில் குற்றங்கள் நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அப்படி நேர்ந்து விட்டால், பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல என்ற குறள் வழி விளக்குகிறார்.

    Share
  • வளவன் கனவு-5

    சு.கோதண்டராமன்

    களப்பிரர்

     vallavan-kanavu11

    நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
    ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்
    பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
    சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே

    -சம்பந்தர்

     

    கி.பி. 250 முதல் 575 வரை உள்ள காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. அப்பொழுது தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கக் கூடிய கல்வெட்டுகளோ, பட்டயங்களோ, இலக்கியங்களோ இல்லை. கருநாடகத்திலிருந்து களப்பிரர் என்னும் கூட்டத்தார் படையெடுத்து வந்து சேர சோழ பாண்டிய அரசர்களை வென்று அடிமைப்படுத்தினர் என்பது மட்டு்ம் தெரிகிறது.

    அப்பொழுது சோழ நாட்டின் நிலப்பரப்பு பெரிதாக இருந்தது. சோழன் மீண்டும் வலிமை பெறக் கூடாது என்பதற்காக அந்நாட்டின் பல பகுதிகளைக் களப்பிரர்கள் பல குறுநில மன்னர்களுக்குப் பிரித்துக் கொடுத்துக் கப்பம் கட்டம் செய்தனர். கரிகால் சோழன் தலைநகராகக் கொண்டு ஆண்ட உறையூர் சோழர்கள் கையை விட்டுப் போய் விட்டது. தஞ்சாவூருக்குக் கிழக்கே உள்ள சிறு பகுதி மட்டும் சோழநாடு என்ற பெயருடன் இருந்தது. எனவே சோழர்கள் தங்கள் குல முன்னோனான மனுநீதிச் சோழன் ஆண்ட ஆரூரைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கடந்தன. சோழநாடு முழுமையையும் மீட்டுப் பழைய பெருமையை மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்ற ஏக்கம் மட்டும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது.

    சிறு பகுதியாக இருந்தாலும் காவிரியால் வளம் பெற்ற சோழநாட்டில் செல்வத்திற்குக் குறைவில்லை. ஒரு பெரிய படை திரட்டிக் குறுநில மன்னர்களைத் தன் வசப்படுத்திக் களப்பிரர்களிடமிருந்து விடுதலை பெறத் தேவையான செல்வம் சோழ மன்னர்களிடம் இருந்தது. ஆனால் அதற்குத் தேவையான மக்கள் ஒத்துழைப்பு இல்லை.

    சமண சாக்கிய சமயங்கள் தமிழ்நாட்டில் நுழைந்து கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. துவக்க காலத்தில் அவை மகாவீரர், புத்தரின் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றுவோரைக் கொண்டிருந்தன. கடவுள் என்று ஒன்று உண்டு என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவை  உண்மை, அகிம்சை, பேராசையின்மை, புலனடக்கம், கள்ளுண்ணாமை ஆகியவற்றைப் பரப்பி மக்களைப் பண்படுத்தின. இவ்வுலகில் அறநெறியைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலம் மறு பிறவி இல்லாத நிலையான முத்தியை அடையலாம் என்று போதித்தன. சமண சாக்கியத் துறவிகளை மக்கள் போற்றி ஆதரித்தனர்.

    நாத்திகத்தையும் அறநெறியையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது பண்பட்ட மனிதர்களுக்கே சாத்தியம். பெரும்பாலான மக்களை அறநெறியில் நிலைக்கச் செய்வது இறைவன் தண்டிப்பான் என்ற அச்சம்தான். அச்சமே கீழ்களது ஆசாரம் என்றார் வள்ளுவரும்.

    சில நூற்றாண்டுகளுக்குப் பின் நாளடைவில் மக்களுக்கு அறநெறி நாட்டம் குறைந்தது. கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு முத்தி என்ற நிலை உண்டு என்பதிலும் சந்தேகம் வந்தது. இருக்கிறதோ இல்லையோ என்று ஐயத்திற்குள்ளான மறு உலகுக்காக இன்று நம்மை நாம் ஏன் வருத்திக் கொள்ள வேண்டும், இன்றைய ஆசையை இன்றே நிறைவேற்றிக் கொள்வோம் என்று எண்ணம் ஓங்கியது.

    மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய துறவிகளே ஒழுக்கம் தவறி வாழத் தலைப்பட்டனர். உழைக்க விருப்பம் இன்றிப் பிச்சை எடுத்து வாழ்வதும், ஆடையின்றித் திரிவதும், குளிக்காமல், பல் துலக்காமல் உண்பதும், தவம் என்ற பெயரில் போதை தரும் காடியைக் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பதுமான குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தனர்.

    புத்தரும் மகாவீரரும் வகுத்த கொள்கைகள் இத்தகைய நாகரிகமற்ற வாழ்க்கை முறையைப் போதிக்கவில்லை. சமுதாயக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு மனம் போன போக்கில் வாழ விரும்பிய சிலர் இச்சமயங்களைப் போர்வையாகப் பயன்படுத்தி அவ்வாறு நடந்து கொண்டனர். இந்தக் கலாசாரம் பரவியதால் சமுதாயம் முழுமையும் நாகரிகத்தில் பின்னடைவு கொண்டது.

    அறநெறியைக் கடைப்பிடித்த சமணர்களும் இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இல்லாமல் மறு உலக வாழ்வில் நாட்டம் செலுத்தியதால் போர் புரியும் மனப்போக்கு மக்களிடையே இல்லாமல் போயிற்று. இதனால் வீரமுள்ள ஒரு படையை உருவாக்குவது என்பது மன்னர்களுக்கு இயலவில்லை. தமிழ் மன்னர்கள் களப்பிரர்களிடம் அடிமைப்படுவதற்குக் காரணமான இப்பண்பு அவர்கள் மீண்டும் தலைதூக்குதலையும் தடுத்துக் கொண்டிருந்தது.

    முந்திய காலங்களில் சோழியப் பிராமணர்கள் இறை உணர்வையும் அற உணர்வையும் போதித்து மக்களை நல்வழிப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போதோ, பிராமணர்களிலேயே பலர் சமண சாக்கிய சமயத்தைத் தழுவினர். எஞ்சி இருந்தவர்கள் சிறுபான்மையர் ஆகிவிட்டபடியால் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தான் உண்டு தன் வழிபாடு உண்டு என்று இருந்தனர்.

    எனவே இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு சமுதாயக் கட்டாயமாக இருந்தது. இதை முதலில் உணர்ந்தவர்கள் சோழர்கள்தாம். பல்லவ, பாண்டிய மன்னர்களில் சிலர் சமணத்தைத் தழுவியிருந்தனர். ஆனால் சோழர்கள் சமணத்தின் சிறந்த பண்புகளைப் போற்றினாலும் கூட முழுமையாகச் சமணத்துக்கு மாறாமல் தங்கள் பழைய சமயக் கொள்கையில் உறுதியாக நின்றனர்.

    அம்மையாரின் பாடல்களில் மனதைப் பறிகொடுத்த செந்தீ வளவனுக்குச் சோழநாட்டை மீண்டும் பெருமையுறச் செய்வதற்கான வழி அதில் இருப்பதாக உள்ளுணர்வு கூறியது.

    செந்தீ வளவன் அம்மையாரின் பாடல்களை முழுவதும் கேட்டார். அவற்றின் இலக்கியச் சுவையை ரசித்தார். ஆழ்ந்த பக்திச் சுவையை மெச்சினார். ஆனால் அம்மையார் குறிப்பிடும் தெய்வம், பனித்த சடையும் பால் வெண்ணீறும் அணிந்த தெய்வம் எது என்பது அவருக்குத் தெரியவில்லை. மாரியம்மன், ஐயனார் போன்ற தொல் பழம் கிராமியத் தெய்வமாக இருக்குமோ என்றால் அதுவும் இல்லை. அதை வேதநாயகன்  என்று அம்மையார் குறிப்பிடுகிறார். அவர் அறிந்தவரை வேதத்தில் சுடுகாட்டில் நடனமாடும் தெய்வம் எதுவும் இல்லை. அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வர வர மிகுந்து வந்தது.

    அறிவானும் தானே அறிவிப்பான் தானே என்று அம்மையார் கூறுவது போல, அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை மனதில் ஏற்படுத்திய இறைவனே அறிவிப்பானாகவும் வந்து உபதேசம் செய்வார் என்று வளவன் நம்பினார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

    தொடரும்

    Share
  • அவன், அது , ஆத்மா (19)

    ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 19

    பசு தேவதை”

    அவனுக்கு அப்பா வழித் தாத்தா விஸ்வநாதையர் இரவுச் சாப்பாட்டுக்குப் பின்பு வீட்டு வாசலில் ஒரு கயிற்றுக்கட்டிலை போட்டு அமர்ந்து கொள்வார். அவனைத் தன்பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு சின்னச் சின்னக் கதைகள் சொல்வார். சிலநேரங்களில் அவன் அந்தக் கட்டிலில் இரவு ஆகாயத்தைப் பார்த்தபடி படுத்துக் கொண்டே கதைகளைக் கேட்பான். அவனுக்கு தைரியம் வரவேண்டும் என்பதற்காக அவனைத் தனியாக பக்கத்துத் தெருவான “பாட்டநயினார் புர”த்தின் கடேசிவரைப் ஓடிப் போய்வரச் சொல்லி, அவன் போவதையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி ஒருநாள் இரவில் அவன் ஓடிச் சென்று ராமச்சந்திரபுரம் தெருவின் முதல் வீடான நீலகண்டன் சத்திரத்தின் வாசலில் படுத்திருந்த ஒரு கருப்புநிற பசு மாட்டைப் பார்த்து பயந்துபோய்த் தலைதெறிக்கத் தாத்தாவை நோக்கி ஓடியே வந்தான். அப்பொழுதெல்லாம் தெருவிளக்குகள் அதிகம் இல்லாத காலம். மூச்சிரைக்க வந்து நின்ற அவனை அவனது தாத்தா அணைத்துக் கொண்டு,” ஏண்டா கண்ணா ….இப்படி மூச்சிரைக்க ஓடிவரே…” என்றார். “தாத்தா..அங்க ஒரு கருப்புப் பசுமாடு படுத்துண்டிருக்கு…அதப் பாத்தா எனக்கு பயமா இருந்துது..” என்றான். அதற்கு,” இதுக்குப் போயி இப்படி பயப்படறே…வா எங்கூட” என்று அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த மாடு படுத்துக் கொண்டிருந்த இடத்தின் அருகில் சென்று அதைத் தடவிக் கொடுத்தார். நல்ல இருட்டு வேளை. அவனுக்கு உள்ளூர பயமாகவே இருந்தது. அவனது பயத்தைப் போக்க,” இங்கவா…நீயும் இதோட கழுத்தத் தடவிகொடு..ஒண்ணும் செய்யாது” என்று அவனது வலது கையைப் பிடித்து அந்த பசு மாட்டின் கழுத்தில் தடவிக்கொடுக்கச் சொன்னார். அவனும் மெதுவாகத் தடவிக் கொடுத்தான். அது தன் தலையைத் தூக்கி நன்றாகத் தன் கழுத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. “நீ இத இருட்டுல பாத்துட்டு கருப்புப் பசுமாடுன்னு சொன்னாய்…இப்பநன்னாப் பாரு…இது கருப்பா…இல்லைடா..இது சந்தனநிறம். நம்மத்துக்குக் காலைல வருமே அதே பசுமாடுதான்…இத “கோமதி”ன்னு கூப்பிடுவோம்…” என்று அவனுக்குச் சொல்லிக் கொண்டே மீண்டும் வீட்டு வாசலில் போட்டிருந்த காயிற்றுக் கட்டிலின் அமர்ந்து கொண்டார். அவனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, “பசுமாடு தேவதை. அதோட ஒடம்புல எல்லா தேவதைகளும் இருக்கறதாச் சொல்லுவா.” என்றார். “ஏன் பசுமாட்டோட நெத்தியையும், பின்புறத்தையும் தொட்டுக் கண்ணுல ஒத்திகாரா?” என்ற அவனது கேள்விக்கு அவர் அழகாக ஒவ்வொரு அங்கத்திலும் என்னென்ன தேவதைகள் இருக்கிறார்கள் என்று சொன்னது இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது.

    “பசுவோட தலைல சிவனும், நடு நெத்தில பார்வதியும்,..இரண்டு கொம்போட அடில பிரும்மாவும், விஷ்ணுவும் இருக்கா..ரெண்டு கொம்பு நுனிலையும் கோதாவரி போன்ற நதிகள்லாம் இருக்கு..ரெண்டு கண்ணும் சூரிய சந்திரா, ரெண்டு காதுலயும் அஸ்வினி தேவர்கள் இருக்கா …யமன் இதயத்துல இருக்கார்…வருணன் நாக்குலயும், வாயு பல்லிலையும், இந்திரன் கழுத்திலையும் இருக்கார்.. பசுவோட மூத்திரத்தில கங்கையும், அது போடற சாணில யமுனையும் இருக்கு…வயத்துல பூமாதேவியும், பசுவோட பின்புறத்துல லெஷ்மிதேவியும் இருக்கா…அது மட்டும் இல்ல..இன்னும் எல்லா தேவர்களும் பசுவாட உடம்பு பூராவும் இருக்கா..அதனாலதான் பசுவ நாம தேவதைன்னு சொல்லறோம். கன்னுக் குட்டி பால் குடிச்ச அப்பறம்தான் நாம பால் கறக்கணும். அது குடிக்காம நாம கறந்து குடிச்சா மகா பாவம்….. அதுக்கு ஆத்திக் கீரை, அருகம்புல் எல்லாம் கொடுத்தாப் புண்ணியம்…நம்மாத்துல வாசல்ல வருமே அந்த பசுமாட்டுக்கு கோமதின்னு பேரு. நீ நாளைக்கு அது வரும்போது அத “கோமதின்னு” கூப்புடு அது ஒன்னத் திரும்பிப்பாக்கும்…அதத் தொட்டுக் கண்ணுல ஒத்திண்டு பிரதக்ஷிணம் பண்ணு…நீ ரொம்ப நன்னா இருப்பாய்..” இப்படி அவனுக்கு தாத்தா சொன்னது அவரது குரலிலேயே இன்றும் அவனது காதுகளில் ஒலிக்கிறது. பசுக்களைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குத் தாத்தாவின் நினைவு வரும். இப்பொழுதும் அவனுக்கு முடியும் பொழுதெல்லாம் ஆத்திக்கீரையும், கொஞ்சம் வெல்லமும் எடுத்து, மனதில் பிராத்தனை செய்துகொண்டே பசுவுக்குக் கொடுக்கிறான். அவள் “அவனது” மனக்கவலைக்கு மருந்தாகிறாள். சாந்தி தருகிறாள்.

    “கோலாட்டப் பல்லக்கு”

    aaaஅவனுக்கு நினைவு தெரிந்து கோலாட்டப் பல்லக்கை அவன் முதலில் பார்த்தது தொந்திவிளாகம் தெரு நீங்கலாக மற்ற தெருக்காரப் பெண்களும், சிறுமியர்களும் சேர்ந்து நடத்தியதுதான். அதனை முறைப்படுத்தியவர்கள் “வராகசீதாலட்சுமி” என்ற “சிண்டா” மாமியும், (எம்.ஆர்.ஆதிவராகன் மாமாவின் தாயார்), “வள்ளியம்மாள்” என்ற “பிசுக்குட்டி” மாமியும் (கே.எஸ்.சங்கரலிங்கம் ஐயரின் மனைவி) என்று அவனுக்கு அக்கா பாலா சொன்னாள். கிராமத்துப் பெரியவர்கள் எல்லோரும் அதற்கு நிதி உதவி செய்வார்கள். “கண்ணா… சிண்டாமாமி இருக்கும் போது, ஒரு முறை யானை மீது பசுவன் பிள்ளை அமர்ந்து, மடியில் “பசுவும், கன்றையும்” வைத்துக் கொண்டு கம்பீரமாக நடந்த கோலாட்டப் பல்லக்கு அற்புதம்டா” என்று அவனுக்கு அக்கா ரொம்பவும் பூரிப்போடு சொன்னாள். தொந்திவிளாகம் தெருக் காரர்கள் தனியாகக் கோலாட்டப் பல்லக்கு நடத்துவார்கள். அதுவும் சிறப்பாக இருக்கும்.

    மழையை வேண்டிப் பிரார்த்தனை செய்து “தீபாவளி அம்மாவசை” அன்று வயல்காட்டிற்குச் சென்றுakicha மண் எடுத்து வருவார்கள். அந்த மண்ணில் ஒரு பசுவும், கன்றும் செய்து பூஜை செய்வார்கள். கோலாட்டப் பல்லக்கு விழாவுக்கு ஒரு நல்ல நாளும் குறிப்பார்கள். கிராமத்தில் உள்ள சிறுமியர்கள் முதல், வயதானவர்கள் வரை ஒவ்வொரு குழுவாக அமைத்துக் கொள்வார்கள். மண்ணெடுத்துச் செய்து பூஜை செய்துவருகின்ற “பசுவும் கன்றும்” இருக்கும் இடத்தில் தினமும் நல்ல நல்ல பாடல்களால் கோலாட்டம் அடித்து மகிழ்வார்கள். அதைப் பார்க்கவே ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் சென்று கோலாட்டம் அடித்துப் பண்டிகைக்காக பணம் வசூல் செய்வார்கள். அதில் ஒரு பாட்டு மிகவும் முக்கியமானது. அதன் அழகான வரிகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதை யார் எழுதினார்கள் என்பது தெரியவில்லை. தலைமுறையாகப் பாடப் பட்டு வருகிற அந்தப் பாடலே “கோலாட்டப் பல்லக்கு”ப் பாட்டு என்றுதான் சொல்லுவார்கள். அந்தப் பாடலை அவனுக்கு நண்பன் “கிச்சாபூ” ( கிருஷ்ணன் என்ற பெயர்) பாட்டுடீச்சர் திருமதி. லலிதா அவர்களிடம் கேட்டு வாங்கி அவனுக்குச் சொன்னான். மேலும் இப்பொழுது நடக்கும் கோலாட்டப் பல்லாக்கிற்கு வயற்காட்டில் மண்எடுத்து, பசுவனை அதே வயற்காட்டில் கொண்டு வைக்கும் வாய்ப்பும் தனக்குக் கிடைகிறது என்றும் அவனிடம் “கிச்சாப்பூ” சொல்லி மகிழ்ந்தான்.

    “கோலேனாக் கோலே
    பாலா லீலானாக் கோலே
    பாலவிலோச்சன லீலா விலோசன
    பால பிரபஞ்ச கோலே ….

    பசுவா பசுவையா
    உனக்குப் பணம்தர யாருமில்லை
    இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று
    ஏய்கிறாளே பசுவா..

    மழை ரொம்பப் பெய்யவேண்டும் – சுவாமி
    குளங்கள் பெருக வேண்டும்
    பூமியில் போட்டதெல்லாம்
    பொன்னாய் விளைய வேண்டும்
    பொதி ரொம்பக் காணவேண்டும்…

    எட்டடிக் குச்சுக் குள்ளே – சுவாமி
    எத்தனை நாளிருப்பீர்
    மச்சு வீடு கட்டித் தாரேன்
    குச்சு வீடு காட்டித் தாரேன் –சுவாமி
    மலையாளம் போய்வாரும்…. (கோலேனாக் கோலே)

    ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வட்டமாக நின்றும், குதித்துக் குதித்தும் அவர்கள் அடிக்கும் கோலாட்டம் இசையோடு கேட்கவே சுகமாக இருக்கும்.

    “ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த தியாகி டாக்டர் லக்ஷ்மி அம்மாள் வீட்டில் கோலாட்டம் அடிக்கும் குழந்தைகளை வரவழைத்து கோலாட்டம் அடிக்கச் சொல்லி மிகவும் ரசித்து ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்கள் தருவார்கள் (அந்தக் காலத்தில் அது பெரிய தொகை) என்று அவனுக்கு அக்கா பாலா சொன்னாள். மேலும் கிராமத்தை விட்டு வெளியில் மெயின் ரோட்டில் உள்ள நடேசையர் வீட்டிலும் இரண்டு இடங்களில் கோலாட்டம் அடிக்கச் சொல்லி பணம் தருவார்கள் என்றும், குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்காக ஏதேனும் பக்ஷணமும் தருவார்கள் என்றும் அவனுக்கு அக்கா சொன்னாள்.

    adeஇப்படிப் பாடிப் பிரித்த பணத்தில் கோலாட்டப் பல்லக்கு விழா நடத்துவார்கள். ஒரு பிரும்மசாரிப் பையனுக்குப் புதிய வேஷ்டி, அங்க வஸ்திரம் தந்து, மிக அழகாகப் பூக்களால் அலங்கரிக்கப் பட்ட வண்டியில் அந்தப் பையனை அமரச் செய்து , அவனது மடியில் “பசுவும் கன்றும்” பொம்மையைத் தருவார்கள். கோலாட்டமடிக்கும் பெண்கள் வயதிற்கு ஏற்றார்ப்போலக் குழுக்களாக , வட்டமாக நின்று கொள்வார்கள். மாலையில் நல்ல நேரத்தில் பல்லக்கு ஊர்வலம் புறப்படும். வண்ண விளக்குகள் மின்ன, நாதஸ்வர மேளத்துடன், கோலாட்டப் பாடலும் காற்றில் மிதந்து வந்து அனைவரது காதுகளிலும் ஆனந்தக் களிப்பூட்டும். அதை அவன் நன்றாக அனுபவித்திருக்கிறான். அத்தனை தெருக்களுக்கும் அந்த ஊர்வலம் செல்லும். நல்ல நல்ல பாடல்களை தேர்வு செய்து பாடுவார்கள். கிராமத்துப் பெரியோர்களும், வாலிபர்களும் ஊர்வலத்தின் இரண்டு பக்கமும் ரசித்தபடி வருவார்கள். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

    ஊர்வலம் முடிந்து புறப்பட்ட இடத்திற்கு வந்த பின்பு “பசுவனை” அலங்கார வண்டியில் இருந்து இறக்கிவைத்து அனைவரும் கோலாட்டம் அடித்துக் கொண்டே, அந்த “பசுவையும், கன்றையும்” எந்த வயற்காட்டில் இருந்து மண்எடுத்துச் செய் தார்களோ அதே வயற்காட்டில் கொண்டு வைத்து விட்டு வருவார்கள். அப்படி வரும் பொழுதே இடியும் மின்னலுமாக மழை கொட்டும். மழையில் நனைத்தபடியே அனைவரும் வருவார்கள். இந்த அனுபவத்தை அவன் நிறைய முறை அனுபவித்திருக்கிறான். கோலாட்டப் பல்லக்கில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் ஒரு பெரிய வீட்டில் வைத்து “இனிப்பு, தாளகம், பொங்கல், வடகம்” என்று அன்னதானம் நடைபெறும். அனைவரும் வயிறாரச் சாப்பிடுவார்கள்.

    akol

    இப்பொழுதும் அந்த அருமையான கோலாட்டப் பல்லக்கு விழாவை முன் நின்று நடத்தி வருகிறார் திருமதி கிருஷ்ணவேணி அம்மாள் (வேணி மாமி என்றால்தான் அனைவருக்கும் தெரியும்). அவர் கே.எஸ்.காசிவிஸ்வநாத ஐயரின் மனைவி. கிராமத்துக் குழந்தைகள், பெரியோர்கள் என்று அனைவரிடமும் மிகவும் வாஞ்சையாக இருந்து இந்த விழாவை, கிராம மக்களின் முழு ஆதரவோடு தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இது தவிர பெண்களுக்கும், சிறுமியர்க்கும் பாடல்கள், ஸ்லோகங்கள் என்று கற்றுத் தருகிறார்கள். புதிய பாடல்களுக்கு நல்ல இசையமைத்துப் பாடக்கூடிய திறமை வாய்ந்த திருமதி. லலிதா அவர்களின் பங்கை கிராமமே பாராட்டும். தொந்திவிளாகம் தெருவில் இருந்த ஸ்ரீ ரங்கநாத வாத்தியாரின் மனைவிதான் (ரெங்கவாத்தியாராத்து மாமி) அந்தத் தெருவின் கோலாட்டப் பல்லாக்கிற்க்கு “பசுவும் கன்றும் ” பொம்மையைச் செய்வார்கள். நல்ல குரலில் பாடவும் செய்வார்கள். அந்தத் தெருவில் நடக்கும் பல்லாக்கு விழாவும் வெகு விமர்சையாக இருக்கும். அந்தக் கிராமத்தில் நல்ல ஒற்றுமை உண்டு. மற்ற கிராமங்களுக்கு அது இன்றும் ஒரு முன் மாதிரியாகத்தான் திகழ்கிறது. அவன் அந்தத் தெருவில்தான் பிறந்தான் என்பதில் அவனுக்குத் தனிப் பெருமை உண்டு.

    எல்லோருக்கும் பெய்யும் மழையாக இந்தக் கோலாட்டப் பல்லாக்கு உற்சவம் நடைபெருகிறது. முன்காலப் பெரியோர்கள் கலாசாரத்தை எப்படிப் பாதுகாத்து வந்தார்கள் என்பதற்கு அவனது கிராமம் ஒரு நல்ல உதாரணம்.

    Share
  • தோள் மீது உன்னை சுமப்பேன்

    _______________________________

    தோள் மீது உன்னை சுமப்பேன்
    தொலைதூரம் நான் நடப்பேன்

    என் கவலைகளை உன்னால் மறப்பேன்
    தொலைவானில் நான் பறப்பேன்

    உறவுகள் இன்று நம்மைத் தள்ளும்
    ஒரு நாள் தானாக வந்து அள்ளும்

    ஊர்க் கதைகள் ஆயிரம் சொல்லும்
    நம் உயிர்க் காதல் என்றும் வெல்லும்

    #றியாஸ்முஹமட்

    Share
  • வாழத் தகுதியுண்டோ!

     

    துஷ்யந்தி
    **************************

    ஒரு விரல் சுட்டிக்காட்ட
    மறு விரல் தன்னைக்காட்ட
    குற்றங்கள் சொல்வாரடி- கிளியே
    குற்றம் நிறைந்தாரடி.!

    கண்கள் இரண்டிருந்தும்
    காணும் திறனிருந்தும்
    பிறர் பசியை உணராரடி- கிளியே
    உவமானம் இவர்க்கேதடி.!

    பெண்மை வாழ்க என்றே
    பெரிதாய் சட்டங்கள் அமைத்தும்
    வன்புணர்வில் இன்பம் காண்பாரடி -கிளியே.!
    மன்னிப்பு இவர்க்கேதடி..!

    கூட்டம் கூட்டி வைத்து
    தோற்றமாய் மேடையேறி
    சாட்டையாய் கருத்துரைப்பாரடி-கிளியே
    அடுத்த கனம் மறப்பாரடி..!

    அடுக்கடுக்காய் மாடி கட்டி
    ஆடம்பரப் பொருள் சேர்த்து
    செல்வந்தராவாரடி- கிளியே
    கல் நெஞ்சம் கொண்டாரடி..!

    பச்சிளம் குழந்தையொன்று
    பசியினால் பிச்சை கேட்க
    துஷ்பிரயோகம் செய்தாரடி- கிளியே
    பேசிப் பயனென்னடி..!

    அல்லும் பகலுமாய்
    ஆண்டவன் கோயில் சென்று
    பூஜைகள் செய்வாரடி- கிளியே
    பிறர்கு உதவ மறந்தாரடி.!

    பெற்றவரை மற்றவருக்காய்
    அலட்சியம் செய்துவிட்டு
    காப்பகத்தில் கைவிட்டாரடி- கிளியே
    உண்மை அறியாரடி..!

    போதைக்கு அடிமையாகி
    போகும் பாதை தெரியாது
    வாழ்வை வீண் செய்வாரடி- கிளியே
    வாழ்வில் உயர்வேதடி..!

    மாறும்உலகத்திலே
    மனிதத்தை மறந்துவிட்டு
    வாழப் பழகினாரடி – கிளியே
    இவருக்கு வாழத் தகுதியுண்டோ???

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 5

    சி. ஜெயபாரதன்.

    kahlil-gibran

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    “உன் சேமிப்புக் களஞ்சியத்திலிருந்து நீ கொடுக்கும் போது உன் கொடை அளவு சிறிதே ! உன்னை முழுவதும் நீ எப்போது அர்ப்பணம் செய்கிறாயோ அதுதான் உண்மையான பெருங் கொடை.”
    – கலில் கிப்ரான்

    “வெளிப்படையாகத் தெரியும் பரிவன்புடன் செய்யும் ஒரு பணி. பரிவன்பு இல்லாது நீ வெறுப்போடு பணி செய்ய நேர்ந்தால் அந்த வேலையை விட்டு விலகி ஆலயத்தின் முன்னமர்ந்து பரிவோடு பணிபுரிவோர் இடும் பிச்சையை நீ பெற்றுக் கொள்ள வேண்டும்.”
    – கலில் கிப்ரான்

    முடிவில்லா நீடிப்புள்ள ஆத்மா பூர்த்தி பெறுவதில்லை ! அது பூரணத்தைத் தேடி எப்போதும் செல்கிறது ! பிறகு என்னிதயம் எழில்மய வாழ்வை நோக்கிக் கேட்கிறது : “நீயே எல்லா ஞானக் களஞ்சியம் ! பெண்ணின் மர்மத்தை எனக்குத் தெளிவு செய் !” அது பதில் அளித்தது. “ஓ மனித இதயமே ! பெண் என்பவள் உனது மனப் பிரதிபலிப்பே ! நீ எப்படி உள்ளாயோ அவள் அப்படி இருக்கிறாள் ! எங்கெல்லாம் நீ வசிக்கிறாயோ அங்கெல்லாம் அவள் வாழ்கிறாள் ! அறிவில்லாதவர் விளக்காத மதத்தைப் போன்றவள் அவள் ! முகில் மறைக்காத ஒரு நிலவைப் போன்றவள் ! மாசில்லாத் தென்றலைப் போன்றவள் !”
    – கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter)

    “அனுதினம் நீ வாழும் வாழ்க்கையே உனது ஆலயம் ! உனது மதம் !
    – கலில் கிப்ரான்

    “துயர்களை ஒருபோதும் நேராக நோக்காதவன், மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்.”
    – கலில் கிப்ரான் (Tears & Laughter)

    “எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மேற்தளக் காற்றில் பறந்து நான் கற்பனை உலகில் மிதந்தேன் ! ஆங்கே தெய்வீக ஒளிவீசும் வட்டாரத்தோடு நெருங்கி இருந்தேன் ! இங்கே நான் பொருளாயுதச் சிறையில் கிடக்கிறேன்!
    – கலில் கிப்ரான்

    என்னிதயம் நடந்து சென்று அன்புக்கும் அழகு மயத்துக்கும் மகளான ஞானக் களஞ்சியத்தைக் கேட்டது : “எனக்கு ஞானத்தை அளித்திடு, பிற மக்களுக்கு நான் அதைப் பகிர்ந்து கொள்ள.” அதற்குப் பதில் கிடைத்தது : “ஞான மென்று சொல்லாதே ! ஆனால் சொத்தென்று கேள் ! எனென்றால் மெய்யான சொத்து வெளிச் சூழலிருந்து வருவதில்லை ! புனிதத்திலும் புனிதமான வாழ்விலிருந்து ஆர்ம்பமாகிறது. உன் அனுபவத்தை மற்ற மக்களோடு நீ பகிர்ந்து கொள்.”
    – கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter)

    “நீ மௌன நதியிலிருந்து நீர் அருந்துகிற போதுதான் மெய்யாகப் பாட முடியும். நீ மலைச் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போதுதான் நீ மேலேறத் துவங்குகிறாய். இந்தப் பூமித் தளம் உன் பாதங்களை உரிமை கொள்ளும் போதுதான் நீ மெய்யாக நாட்டியம் ஆட முடியும்.”
    – கலில் கிப்ரான்

    “மனிதரை, அவரது சந்ததிகளை, மனிதரின் விதிகளை, அவரது உபதேசங்களை, கருத்துகளை, அவரது ஆரவாரத்தை மற்றும் புலம்பலைத் தவிர்ப்பதற்கே அல்லாமல், நான் மதத்தின் பொருட்டு ஏகாந்தத்தைத் தேடவில்லை.”
    – கலில் கிப்ரான் (From A Treasury of Kahlil Gibran 1951)

    அலையின் கீதங்கள்
    உறுதியுள்ள கடற்கரை
    _______________________________________________
    என்னரும் நாயகன் !
    நானவள் ஆசை நாயகி !
    இறுதியில் இருவரும் இணைந்தோம் காதலால் !
    நிலவென்னை இழுக்கும் அவனிடமிருந்து !
    நெருங்கிப் பிறகு பிரிவேன்
    வெறுப்புடன் பிரியா விடை
    பெறுவேன் சிறிது சிறிதாய் !விண்ணீலத் தொடுவானின்
    பின்புறம் ஒளிந்து விரைவேன்
    என்னுடை வெண்ணிற நுரைகள் அவன்
    பொன்னிற மணல்மேல் தெளிக்கும் !
    பின்னிக் கலப்போம் ஒன்றாய்
    உருகிக் குவிந்த சுடர் ஒளியில் !அலைகளின் தாகத்தைத் தணித்து
    அதனுடை மோகத்தைத் தீர்ப்பேன் !
    எனது குரல் ஒலி மிதமாகும்
    எனது கோபம் அடங்கிப் போகும் !
    பொழுது வெளுத்ததும் காதல் விதிகளைப்
    பூஜித் திடுவேன் அவன் காதில் !
    தழுவிடு வான் அவன் என்னை
    நீடித்த இச்சை யோடு !மாலையில் நம்பிக்கைக் கீதம் இசைப்பேன்
    மெல்லிய முத்தம் அவனுக்கு முத்திரையாய்
    முகத்தில் இட்டுப் பயந்து நகர்வேன் !
    அமைதியாய் பொறுமையில் அவனோ
    சிந்தித் திடுவான் ! என் சீற்றத் துக்கு
    அடைக்கலம் தரும் அவன் பரந்த மார்பு !அலைகள் மீளும் போது நாமிருவர்
    தழுவிக் கொள்வோம் ஒருவரை ஒருவர் !
    அலைகள் நீங்கும் போது அவன் கால்
    அடியில் வீழ்வேன் நான் பூஜித்து !

     
    அலையின் கீதங்கள்
    நடனம் ஆடினேன்
    _______________________________________________
    நடனம் ஆடினேன்
    நான் பன்முறைக்
    கடற் கன்னிகளைச் சுற்றி வந்து
    ஆழ்கடல் உள்ளிருந்து
    மேலேறி !
    பாறை மீதமர்ந் தேன்
    தாரகைகள் நோக்கிட !
    என்னிடம் காதலர்
    பன்முறைப் புகார் செய்வதைக்
    கேட்டுளேன்
    தாம் குள்ளமாய் உள்ளதை !
    ஆறுதல் கூறுவேன்
    அவர்க்கு மனச்
    சோர்வுகள் நீங்கிட !

    பாடுபடுத்துவேன் பாறைகளைப்
    பன்முறை !
    புன்முறுவ லோடு
    தடவிக் கொடுப்பேன் !
    ஆயினும் அவை
    நன்றியுடன் எனைக் கண்டு
    நகைப்ப தில்லை !
    மூழ்கிடும் ஆத்மாக்களைத்
    தூக்கி வந்து
    பன்முறைப் பரிவுடன்
    அன்புக்கரை சேர்த்தேன் !
    ஆத்மாக் களுக்கு
    மன உறுதி அளிக்கும்
    கடற்கரை என்
    உடற் சக்தி எடுத்து !

    விலை மதிப்பில்லா
    ஒளிக் கற்களைக் களவாடிப்
    பன்முறை
    அன்புக் கரைக்குப்
    பரிசாய் அளித்தேன் !
    மௌன மாக
    எடுத்துக் கொண்டான் !
    நானின்னும் கொடுத்தாலும்
    வாங்கிக் கொள்ள
    தயக்க மில்லை
    எப்போதும் !

    நடுநிசிப் பொழுதில்
    உயிர்ப் பிராணிகள் எல்லாம்
    ஆழ்ந்த உறக்கத்தை நாடி
    மூழ்கிப் போன வேளையில்
    அமர்ந் திருந்தேன் நான்
    பாடிக் கொண்டு
    ஒரு சமயம் !
    பெரு மூச்சை விட்ட படி
    மறு சமயம் !
    உறக்க மில்லை எப்போதும்
    எனக்கு மட்டும் !

    எழுப்பி விட்ட தென்னை
    ஐயகோ ! எனது
    விழிப்புத் தன்மை !
    ஆயினும்
    மனித நேயன் நான்
    சத்தி யத்தைக்
    காதலிக்கும்
    சித்த வலு பெற்றவன் நான் !
    களைத்துப் போயினும்
    ஒருபோதும்
    மரண மில்லை
    எனக்கு !

    Share
  • காலம் (12)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x15011111
    நினைவுச் சுமைகள் நிறைந்த மனமே
    வினையைச் சுமக்கும் ; விரைந்து முனைந்து
    எதையும் மறக்கும் இதயம் இருந்தால்
    அதுவேதான் முக்தி அறி. . (111) 20.04.2015

    என்ன குறையுள்ளே எல்லாமே ஆனந்தம் !
    தன்னை அறிந்த தனிஒருவன் என்றும்
    வெளியே திரியாதான் ! வெந்த பொருளாய்
    எளியோனாய்க் காண்பா(ன்) எதிர். (112) 21.04.2015

    புகழும் ஒருவித போதை விஷமே !
    இகழும் செயலுள் எளிதாய் நுழைந்து
    அதனுள் எதையோ அசைபோட்டுப் பார்க்கும்
    அதனால் அதனை அழி. (113) 22.04.2015

    கோபத்தில் மேனி கொதிக்கிறது ! வீணான
    வாதப் பிரதிவாதம் வம்பெனவே ஏதேதோ
    பேதம் வளர்ந்து பிரிகிறது நெஞ்சங்கள் !
    சேதமிலாச் சொல்லே சிறப்பு. (114) 23.04.2015

    புல்லருக்கும் கண்ணால் புரிந்தான் கருணையே !
    நல்லுரையே நாரணன் ஞானமாய் எல்லோர்க்கும்
    வில்லடித்தான் கோபுர மீதேறி என்பதன்றோ
    கல்லில் பதிந்த கவி. (115) 24.04.2015
    (இன்று ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி தினம்)

    கோடை மழைபோல் கொடுக்கும் குணம்வரவும்
    ஆடை அணிகலனில் ஆசை உடைபடவும்
    ஓடுகிற எண்ணம் ஒடுங்கி அடைபடவும்
    கூடுகிற நாளே குறி. (116) 25.04.2015

    திருவிழாக் கொண்டாட்டம் தேரோட்ட மெல்லாம்
    ஒருவராய் எல்லோரும் ஊரில் பெருமையாய்
    வாழத்தான் வைத்தார்கள் ! மாறுபா டெல்லாமே
    பாழ்மனத் தீமைப் பசி. (117) 26.04.2015

    பூகம்பம் வந்து பொலபொலெனப் போனதே
    வேகமாய்க் கட்டிடங்கள் ! வீடிழந்து பாவமாய்
    மக்கள் தவிக்க மதமாற்றக் கூட்டமோ
    இக்கணமும் செய்யுதே ஏய்ப்பு . (118) 27.04.2015

    முடிந்தவரை நல்ல முறையில், தமிழைக்
    கடித்துக் குதறாமல் கற்றுப் படித்தாலே
    காலமெலாம் வாழுமே கற்பூரச் செந்தமிழ்!
    ஞாலத்தில் தாய்மொழியே நன்று. (119) 28.04.2015

    கூட்டைத் திறந்து குதித்துப் பறக்கின்ற
    காட்டுக் குருவிக்குக் கட்டளைகள் போட்டே
    அடக்க நினைக்கிறாய் ! ஆசை மனமோ
    மடக்க நிமிரும்நாய் வால். (120) 29.04.2015

    தொடரும்

    Share
  • உடலியல் உளவியல் அராஜக அரசியல்

    எஸ். வி. வேணுகோபாலன்.

     

    யோகாவை முன்னெடுக்கும்
    உடலியல் உளவியல் அராஜக அரசியல்

     

    modi doing yogaஉடலினை உறுதி செய் என்றார் மகாகவி பாரதி. ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்ற சித்த மரபில் அவரது புதிய ஆத்திச்சூடியில் வந்து விழுந்த வாக்கு அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பது காது அறுந்து விழும் வண்ணம் பெரியோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றது. நாம் அடுத்த தலைமுறைக்குக் கையளித்துக் கொண்டிருப்பது. உடற்பயிற்சி என்பது தொடக்கநிலை பள்ளிக்கூடங்களிலிருந்தே சொல்லித் தரப்படும் ஒரு முக்கியமான வளர்ச்சி சூத்திரம்.

    எல்லாவற்றையும் விற்பனைப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் நவீன தாராளமய பொருளாதாரத்தின் காலத்தில், குழந்தைகளே, நமது அடுத்த பாடம், யோகா என்று கரும்பலகையில் எழுதிப் போடுகிறார் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி. உடனே அமைச்சரவை, அதிகார வர்க்கம், தொடர்புள்ள மற்றும் தொடர்பே இல்லாத துறைகள், ஊடக அலைவரிசைகள், வரிசையில் நிற்கும் ஊதுகுழல்கள் எல்லாம் மைதானத்திற்கு விரட்டுகின்றனர் மக்களை.

    தலைநகரில் நீண்டகாலம் தடை செய்து வைத்திருந்த ராஜ்பாத் எனப்படும் ராஜபாட்டையில் ஜூன் 21 அன்று காட்சிப்படுத்தப் படுகிறது யோகா பயிற்சி. ‘நமது பாரம்பரியக் கலை, நமது ஆன்மிக மரபு, நமது புனித பயிற்சி, இதோ, சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது’ என்ற உற்சாகக் கூச்சல்களோடு திரை விழுகிறது. எல்லாம் அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம் என்று வழக்கம்போல் மீள்கிறது எதையோ தேடிப்போன சமூகம்.

    யோகாவுக்கு இப்போது என்ன வேலை என்று ஒருவர் கேட்டல், ஏன், யோகா செய்தால் உடம்புக்கு லாபம்தானே எதற்கு விதண்டாவாதம் என்கிறது வேறொரு குரல். யோகாவை மதக் கண்ணோட்டத்தில் நாங்கள் அறிமுகப் படுத்துவோம், மதக் கண்ணோட்டம் இன்றிப் பார்க்க உங்களுக்கு அறிவில்லையா என்றும் கேட்கப்படுகிறது.

    யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல என்பதை, யோகா நிபுணர்களே உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். யோகாவின் அடிப்படைக் கூறுகளாகப் பேசப்படும் எட்டு அம்சங்களில் ஒன்றுதான் உடற்பயிற்சி. அதையும் இப்படி ஊரைக் கூட்டிவைத்துக் கொண்டு மேடையில் இருந்து கற்பித்துப் பயிற்சி கொடுப்பது அதன் இயங்கியல் விதிக்கே புறம்பானது என்ற அவர்களது கூற்றும், ஜூன் 21 எழுப்பப்பட்ட கூச்சலில் அமுங்கிப் போனது.

    நாம், யோகாவைப் பற்றி இப்போது விவாதிக்கப் போவதில்லை. அதை நிபுணர்கள் பார்த்துக் கொள்ளட்டும். யோகா கலையைக் குறித்தோ, உடற்பயிற்சி குறித்தோ பொதுவாக யாரும் மாறுபட்டுப் பேசப் போவதுமில்லை. சங் பரிவாரத்தின் நோக்கமும் யோகா இல்லை. இன்று காவிக் கூடாரம் கையில் எடுத்திருக்கும் உடலியல் உளவியல் அரசியல் விஷயங்களைத் தான் நாம் உற்று நோக்க வேண்டி இருக்கிறது.

    அதற்குமுன் வரலாற்றின் இரண்டு முக்கிய செய்திகளைப் பார்ப்போம். ஒன்று சர்வாதிகாரி இட்லர் தொடர்பானது. இரண்டாவது, முசோலினி குறித்தது. அழித்தொழிப்பு கொள்கையையும், கோட்பாட்டையும் தனது அடிப்படை இயக்குவிசையாகக் கொண்டிருப்பது ஆர் எஸ் எஸ். இந்த அமைப்பை நிறுவியவர்கள், வளர்த்தெடுத்தவர்கள் ஆகியோர், வரலாற்றில் படு பயங்கரங்களை நிகழ்த்தியவர்களாக பேசப்படும் இந்த இரண்டு பேரின் தத்துவங்களால், நடைமுறை அரசியலால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை பல அறிஞர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளனர்.

    ஜெர்மனியில் நாசிசத்தைப் பரப்பிய இட்லர், சாதாரண மக்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கக் கையாண்ட அம்சம், உடற்பயிற்சி. உடற்பயிற்சியின் வேகக் கற்பித்தலின் ஒரு கட்டத்தில், இளைஞர்களிடையே இனவாத நஞ்சைக் கலந்து ஊட்டினான் இட்லர். இனவெறிக்கு அவர்களைத் தூண்டினான். யூதர்களுக்கு எதிராக இரத்த அணுக்களே கொதித்தெழும் வண்ணம் ஜெர்மானிய இளைஞர்களைத் திரட்டியது நாஜிக் கொள்கை. இட்லரின் சின்னம் தங்களது ஸ்வஸ்திகா சின்னத்தை ஒட்டியது என்று பேசிக் கொள்ளும் சங் பரிவாரம், இட்லர் வைத்த வணக்கம் போன்றே தங்களது வணக்கம் வைக்கும் முறையையும் வைத்திருக்கிறது. ஆரிய இரத்தம், ஆரிய இனம் இவையே தூய்மையானது என்று இவற்றின் பெருமையைத் தாங்களும் கொண்டாடிக் கொள்ளும் வழக்கத்தை ஆர் எஸ் எஸ் கைக்கொள்கிறது.

    இத்தாலியின் ஃபாசிசக் கொள்கையாளன் முசோலினியும் உடற்பயிற்சியைத் தான் முன்னெடுத்தான். ஆர் எஸ் எஸ் இயக்கத்தை நிறுவிய கேசவ் பலிராம் ஹெட்கேவாருடைய நெருங்கிய நண்பர் பி எஸ் மூஞ்சே, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்தார். மார்ச் 19, 1931 அன்று நேரடியாக முசோலினியை சந்தித்து உரையாடியதைத் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். தங்களது தேசத்தில் இப்படியான ஒரு இராணுவப் பயிற்சி முறையைத் தங்களது தொண்டர்களுக்குத் தர இருப்பதாக அவரிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். மூஞ்சே என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளர் ஏ ஜி நூரானி.

    உடற்பயிற்சி என்பது இங்கே உடலைப் பேணிக் காத்தல் என்பதைக் கடந்து ஓர் அணிதிரட்டலைக் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எந்த மாதிரியான நோக்கத்தைக் கொண்டது இந்த அணிதிரட்டல் என்பதைத் தனியே விளக்க வேண்டியதில்லை.

    உடற்பயிற்சியை ஏற்கெனவே தங்களது ஷாகா (ஷாகா என்றால் கிளை) நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கும் ஆர் எஸ் எஸ், இப்போது யோகா என்ற பெயரில் ஒரு சமூக அங்கீகாரத்தோடு இந்த அணி திரட்டலுக்கான ஒத்திகை பார்க்கிறது. ஆன்மீக அடிப்படையைச் சொல்லி அதை அரங்கேற்றும் இந்த வேலையில், இந்து மதத்தைச் சாராதவர்கள் வந்தாலும், வராவிட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லை. வராது போனால், இன்னும் வசதி அவர்களுக்கு.

    மதரீதியான ஒரு படையைத் திரட்டும் தங்களது உள்நோக்கத்திற்கு உகந்த முறையிலான ஒரு பயிற்சியை, மிக சாதுரியமான முறையில் சர்வதேச தினம் என்கிற கூச்சலை எழுப்பி நாடு முழுவதும் ஒரே நாளில் மக்களை இதில் ஈடுபடுத்தும் நோக்கத்தை பா ஜ க அனாயாசமான முறையில் நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

    அடுத்து கவனிக்க வேண்டியது, வாழும் கலை, யோகா பயிற்சி என்று மிகப் பெரிய வர்த்தக உலகைக் கட்டியாளும் நபர்கள் திடீரென்று பன்மடங்கு உற்சாகத்தோடு சர்வதேச யோகா தினத்தையொட்டி தங்களது கடைகளை விரிக்கத் தொடங்கியதைப் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு யோகா தெரியுமா தெரியாதா என்ற சாதாரண கேள்விக்குப் பின்னால், கணக்கிட முடியாத அளவு காசுக்கான அடிக்கோல் இடப்படுகிறது. விலை போட்டு அறியாத படி கார்பொரேட் சாமியார்கள் தங்களது பரவசமிக்க யோகா முகாம்களை இதோ கடை விரிக்கத் தொடங்கிவிட்டனர்.

    yogisசர்வதேசக் கிளைகளை அவர்கள் ஏற்கெனவே வைத்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பயிற்சிகளின் உடலியல், உளவியல் நோக்கம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். எதையும் கேள்விக்கு உட்படுத்தாதே, உன் வாழ்க்கையின் பிரச்சனைகள் உன்னிலிருந்து புறப்படுபவை, உன்னைத் திருத்திக் கொள், உனது எண்ணங்களே எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் என்று மெல்ல மெல்ல போதனைகளை பயிற்சிக்கு வருவோர் ஏற்கும் வண்ணம் மிக நுட்பமாக இந்த வேலைகள் கட்டமைக்கப்படுகின்றன.

    நவீன தாராளமயம், மனிதர்களை ஒற்றை ஒற்றை ஆட்களாகப் பிரிக்கிறது என்கின்றனர் சமூக விஞ்ஞானிகள். இது குறித்து பொருளாதார மேதை பிரபாத் பட்நாயக் விரிவாக எடுத்துச் சொல்வதுண்டு. உலகமயத்தின் தீங்குகளுக்கு எதிராகத் திரண்டெழ வேண்டிய மனிதத் திரளை இப்படி மழுங்கடித்துத் தங்கள் விதியென்று எல்லாக் கொடுமைகளையும் தின்று செரிக்கப் பழக்கும் மோசடி ஏற்பாடுதான் இந்த ஜகஜ்ஜால கில்லாடி காவியுடை சாமியார்களது பயிற்சி மையங்கள்.

    ஜூன் 21 கொண்டாட்டம், இத்தகைய தகிடுதத்த ஆசாமிகளுக்கு ஒரு சமூக மதிப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் சங் பரிவாரம் சர்வதேச தினமாக யோகா தினத்தை ஐ நா அவையில் தீர்மானம் நிறைவேற்ற வழிவகை செய்தார் என்று நரேந்திர மோடியைக் கொண்டாடுவதன்பின் இத்தனை அராஜக சிந்தனை இயங்குகிறது.

    மூன்றாவது அம்சம் இன்னும் ஆபத்தானது. அதை, நரேந்திர மோடி அரசு மிகத் திறமையாகச் செய்து கொண்டிருக்கிறது. அதுதான் திசை திருப்புதல்.

    ஒரு பக்கம் மோடியின் ஓராண்டு ஆட்சியை எடை போட்டு எழுதிக் கொண்டிருந்த ஊடகங்கள், கொடுத்த வாக்குறுதிகள் எந்த அளவுக்குக் கை கழுவப்பட்டன என்பதைப் பேசிக் கொண்டிருந்த பத்திரிகைகள் அந்த அலசலை அப்படியே ஓர் ஓரத்தில் எடுத்துப் போட்டுவிட்டு, ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டன. நீ யோகாவை ஆதரிக்கிறாயா, எதிர்க்கிறாயா இதுதான் இப்போதைய விவாதப் பொருள். யோகா ஆன்மிக விஷயமா, உடற்பயிற்சி விஷயமா இதுதான் இப்போதைய விவாதக் களம். யோகாவை மத ரீதியாகப் பார்ப்பது யார் – இந்துக்களா, இஸ்லாமியரா, கிறித்துவரா என்பதுதான் இப்போதைய ஊடக அலசல்.

    நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை, பொதுத் துறையைச் சீர்குலைக்கும் சீர்திருத்தங்களை, இயற்கை வளங்களை பன்னாட்டு மூலதனத்தின் வேட்டைக்குத் திறந்து கொடுக்கும் சட்ட திருத்தங்களை, தொழிலாளர் நலனை ஒட்டுமொத்தமாகக் காவு கொடுக்கத் துடிக்கும் திருவிளையாடல்களை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் காட்டிலும் வேகமாக நிறைவேற்றி வருகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. தன்னை விட சிறந்த விற்பனை பிரதிநிதி நரேந்திர மோடி என்று மன்மோகன் சிங் மனதார வாழ்த்தி சான்றிதழ் வழங்கி இருப்பதைக் காட்டிலும் வேறென்ன ஆதாரம் வேண்டும்!

    பகவத் கீதை தேச நூலாக அங்கீகரிக்கப் படவேண்டும் என்கிறார் அமைச்சர் ஒருவர். இந்துத் தாய்மார்கள் பத்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறான் துறவி என்று சொல்லிக் கொள்பவன் ஒருவன். இந்த அராஜகத்தைக் கண்டிப்பதற்குப் பதில் அதன் மீது விவாத மேடை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். மாட்டுக் கறியைத் தடை செய்துவிட்டால், ஒரு மாதத்திற்கு அது சரியா, தவறா என்ற விவாதத்தைத் தேசம் முழுக்க நடத்தவிட்டுத் தடையை ஓசைப்படாமல் அமலாக்கிக் கொண்டிருக்கிறது மராட்டிய மாநில பா ஜ க – சிவசேனா அரசு. உயிர்க்காட்சி சாலையில் சிங்கங்களும், புலிகளும் கோழிக் கறியைக் கொத்தி உயிர் தரிக்க விடப்பட்டதை அதிகம் கண்டு கொள்ளவில்லை ஊடகங்கள். சாதாரண மக்களுக்கு மலிவான உணவு மாட்டுக்கறி என்பதை மத வெறியர்கள் வீதியில் பேசும் பொருள் ஆக்கிவிட்டுத் தங்கள் வேலைக்குப் போய்விட்டனர்.

    indias poorஇப்போதைய மிகப் பெரிய திசை திருப்பலாக யோகா எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க எல்லா சாத்தியங்களும் உண்டு. அடுத்த மாதம் யோகாவை யாரும் கண்டு கொள்ளாமலும் போகலாம். அப்போது விவாதப் பொருளாக, வேறொரு விஷயத்தைத் தூக்கி எறிவார்கள் ஆட்சியில் இருப்பவர்கள். வெறும் திசை திருப்பல் மட்டுமல்ல, தொடர்புள்ள விஷயங்களைத் தமது நிகழ்ச்சி நிரல்படி நடைமுறைப் படுத்திக் கொண்டே செல்பவர்கள், இணை கோட்டில் இந்த விவாதங்களை யாரோ நடத்திக் கொண்டிருப்பதை ஓர் எள்ளல் புன்னகையோடு பார்த்தபடி தங்களது அடுத்தடுத்த அராஜக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

    வயிற்றுக்குச் சோறிட வேணும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றான் மகாகவி. வாழ்வாதாரம் மறுக்கப்பட்ட அல்லது பறிகொடுத்த மக்கள் கோடிக்கணக்கில் உள்ள தேசத்தில், உடற்பயிற்சிக்கான தெம்பு அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? அன்றாடப் பாட்டுக்கு அதிகாலையில் எழுந்து ஓடிக் கொண்டிருப்பவர்கள் சோர்ந்து திரும்பும் மாலைப் பொழுதின் இடையே எந்த நல்ல வேளையில் அவர்களது யோகப் பயிற்சி நடைபெறும்?

    பசியோடிருக்கிறாயா, வேலை கிடைக்கவில்லையா, பிணி போட்டு வருத்துகிறதா, எல்லாவற்றுக்கும் யோகாவில் நிவாரணம் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வதைவிடவும் வன்முறை வேறு என்ன இருக்க முடியும்?

    மனித வளர்ச்சிக் குறியீட்டில 187 நாடுகள் வரிசையில் 135வது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. பட்டினிக் குறியீட்டில் 76 நாடுகள் வரிசையில் இந்தியா 55வது இடத்தில் இருக்கிறது. வயிற்றுப் போக்கினால் மரணம் அடையும் குழந்தைகளின் எண்ணிக்கையில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. 1000 குழந்தைகளுக்கு 388 குழந்தைகள் என்பது அந்த விகிதம். பிறந்த முதல் நாளே இறக்கும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம். அந்த எண்ணிக்கை மூன்று லட்சம்! தப்பி வாழ்கின்ற குழந்தைகளில் சரிபாதி எண்ணிக்கை ஊட்டச் சத்தற்றவர்கள்.

    இதுதான் சுதந்திர இந்தியாவின் ராஜபாட்டை. இந்த ராஜபாட்டையில் நின்றுகொண்டு இந்த அவமானகரமான புள்ளிவிவரங்களைப் புரட்டிப் போடும்வண்ணம் மக்களுக்கான கொள்கைகளை வடிவமைக்க வேண்டியவர்கள், உணவு, உறைவிடம், தண்ணீர், கல்வி, சுகாதாரம் உறுதி செய்ய வேண்டியவர்கள் யோகா தினத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்தியாவை உலக நாடுகள்முன் பெருமைக்குரியதாக ஆக்குவதாகக் கதை விடுவது, கதியற்ற குடிமக்களை இழிவு செய்வதன்றி வேறொன்றுமில்லை.

    யோகா உடற்பயிற்சியில் ஒரு தவறுமில்லை. அதற்கான வலு உள்ளவர்கள் அதைச் செய்வதும், மேலும் வலுப் பெறுவதும் மறுக்கத் தக்க .விஷயமே இல்லை. ஆனால், யோகாவைத் தங்களது உடலியல் உளவியல் ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் நடத்துவோரை மன்னிப்பதற்கில்லை. அதன் ஆபத்தான உள்ளடக்கத்தை, அபாயகரமான வரலாற்று சாட்சியங்களை, அராஜகமான கட்டமைப்பை அம்பலப்படுத்தாமல் – எதிர்த்துக் குரல் கொடுக்காமல் கடந்து போவது நல்லதற்கில்லை.

     

     

    நன்றி: செம்மலர்:ஜூலை 2015

    Share