Author: admin

  • கவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் 1

    சக்திசக்திதாசன்

     

    கண்ணதாசன் எனும் பெயர் சினிமா உலகில், இலக்கிய உலகில், அரசியல் உலகில் ஏற்படுத்தி விட்டுப்போன நினைவுத் தடங்கள் அழிக்கப் படமுடியாதவை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கவியரசரின் தாக்கங்கள் ஏதோ ஒரு வடிவில் இருந்து கொண்டுதானிருக்கின்றன.

    கவியரசரின் திரைகானங்கள் அதுவும் பொதுவாக காதல் வரிகளைக் கொண்ட பாடல்களின் மூலம் தமிழின் பால் ஈர்க்கப்பட்ட நான் இன்று அவரது பாடல்களில் உள்ள ஆன்மீக உணர்வுகளை அலசிப் பார்க்கும் நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அது வாழ்வின் அனுபவங்களும், அந்த அனுபவங்களுக்கு கவியரசரின் பாடல்களும், பல்வேறு கட்டுரைகளும் கொடுத்த அர்த்தங்களுமே ஆகும்.

    ஆன்மீகம் என்றால் என்ன? அது சாதாரண மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதா? எனும் பல கேள்விகள் எமது மனங்களிலே எழுவது இயற்கை.

    இல்லை என்கிறார் கவியரசர். மானிடரின் வாழ்க்கையில் அவர்கள் எத்தகைய விகிதாசாரத்தில் மனிதர்களாக வாழுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் மனதின் ஆன்மீக உணர்வுகளுக்கு விழிப்பு ஏற்படுகிறது என்கிறார் கவியரசர்.

    இதை நான் எனது வாழ்க்கையிலேயே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தாய் தந்தையரின் அரவணைப்பிலிருந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறை கொடுத்த அனுபவங்களின் படி ஆண்டவனின் நம்பிக்கையை எதுவித கேள்விகளுமின்றி ஏற்றுக் கொண்ட நான், புலம் பெயர்ந்து என் கால்களில் நிற்கக்கூடிய வேளையில் வாலிபத்துக்கேயுரிய மிடுக்குடன், ஒரு ஆணவச் செருக்குடன் இறைநம்பிக்கையை இடைவிடாது வினாக்கள் மூலம் வினவினேன்.

    ஏன் இதை ஒருவித இளமை நாகரீகம் என்று கூட நான் கருதிய காலங்கள் இருக்கின்றன. வாழ்வில் எம்மால் முடியும் என்னும் இறுமாப்பில் நாம் எடுக்கும் பாதையின் பயணங்கள் எமது கட்டுப்பாடின்றி, எமக்குப் புரியாத வகையில் திசை திருப்பப்படும் சம்பவங்கள் பல நிகழ்கின்றன. இவை அனைத்துமே எம்மை நோக்கி எமக்கு மேலே இருக்கும் ஒரு சக்தி எமக்குக் கொடுக்கும் நினைவுறுத்தல்கள் என்பதைப் புரியமுடியாவிட்டால் இவைகளைக் கடந்து சென்று விடுகிறோம்.

    ஆனால் வாழ்க்கையின் ஒரு சந்தியில் இதைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை எமது மனம் அடைந்து விடும்போது அனைத்துக்கும் ஒரு விளக்கம் கிடைக்கிறது. எமக்குள்ளே ஆழப்புதைந்துக் கிடக்கும் ஆத்மீக உணர்வுகள் விழித்துக் கொள்கின்றன.

    கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றிலும் உள்ளூரத் துலங்கும் உன்னதக் கருத்துக்களின் கனம் எம் மனதில் உறைக்கத் தொடங்குகின்றன.

    அப்படியாக நான் என் மனதில் அவர் பாடல்கள் எழுப்பிய தாக்கங்களின் அடிப்படையில் அவரது பாடல்கள் சிலவற்றை உங்களுடன் சேர்ந்து அலசுவதே இத்தொடரின் நோக்கம்.

    யார் இந்த சக்தி சக்திதாசன்? பெரிய ஆன்மீகவாதி எனும் நினைப்பில் அலசுகிறாரோ ? என்று எண்ணாதீர்கள். கவியரசரின் பாடல்களை மிகவும் ஆழமாக அலசிய அறிஞர்களின் முன்னே நான் வெறும் கற்றுக்குட்டி தான்.

    அவர்களின் முன்னே நுனிப்புல் மேயும் மாடாகத்தான் நான் தெரிவேன். ஆனால் பாமரனின் பார்வையில் கவியரசரின் பாடல்களில் கலந்திருந்த ஆன்மீக உணர்வுகள் எப்படி இருந்தது ? என்பதற்குச் சான்றாகவே எனது தொடர் அமைகிறது.

    சரி இந்த வார அலசலுக்கு வருவோம்,

    ஆன்மீக உணர்வுகளுக்கு வித்து அனைத்துக்கும் மேலான அனைவர்க்கும் பொதுவான அந்த ஆண்டவன் தானே ! அந்த ஆண்டவன் எங்கே வாழ்கிறான்? அவன் கள்ளமில்லா நெஞ்சினில் வாழ்கிறான், மற்றவர்க்கு தீங்கு எண்ணா உள்ளங்களில் கோயில் கொள்கிறான்.

    அத்தகைய உள்ளங்களுக்குச் சொந்தக்காரர் யார்? கள்ளமில்லா வெள்ளை உள்ளங்களின் சொந்தக்காரர்களான குழந்தைகள் தானே !

    அக்குழந்தைகளுக்கு மதம், இனம், ஜாதி எனும் பிரிவினை உண்டா இல்லையே ! அத்தகைய ஒரு குழந்தையை நோக்கிப் பாடுவதாக அமைந்த இந்தப் பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றவர் கவியரசர்.

    “குழந்தைக்காக” எனும் திரைப்படத்தில் ஒலித்த பாடல்,

    ராமன் என்பது கங்கை நதி

    அல்லா என்பது சிந்து நதி

    இயேசு என்பது பொன்னி நதி

    நதிகள் பிறக்குமிடம் பலவாகும்

    அவை எல்லாம் கலக்குமிடம் கடலாகும்

    அனைத்து மதங்களும் ஒன்றே, அனைத்துக் கடவுள்களும் ஒன்றே. நெஞ்சத்தில் தோன்றும் இறையுணர்வுக்கு பாகுபாடு கிடையாது. ஆன்மீக உணர்வு அனைவர்க்கும் பொதுவானதே ! ஆன்மீக உணர்வின் அடிப்படை மனிதாபிமானமே என்பதைத் துல்லியமாக, அழகாக , எளிமையாகக் கவியரசர் எடுத்துச் சொன்ன விதம் அற்புதம்.

    தேவன் வந்தான் , தேவன் வந்தான்

    குழந்தை வடிவிலே – என்னைத்

    தேடித் தேடிக் காவல் கொண்டான்

    மழலை மொழியிலே !

    ஆமாம் இறைவன் எங்கே? எங்கே? என்று மனிதன் தேடியலைந்து கொண்டிருக்க இறைவனோ கள்ளமில்லா குழந்தை இதயத்தினுளல்லவா குடி கொண்டிருக்கிறான் ! அது மட்டுமா? ஓடிக் கொண்டிருக்கும் மனிதனை இறைவன் தேடித் தேடி வருகின்றானாம் அதை மனிதன் தான் புரிந்து கொள்ளவில்லை போலும்.

    இறைவன் பேசுவானா? எழும் கேள்விக்கு அழகாய் விளக்கம் தருகிறார் கவியரசர் . எப்படி? மழலை மொழியில் அவன் எம்மோடு உரையாடுகிறான்.

    பாப்பா தெய்வப் பாப்பா

    பாசம் கொஞ்சும் பாப்பா

    அன்னை மேரி தெய்வ பாலன்

    எங்கள் யேசு தேவதூதன்

    ராஜசபை ஜோதி கண்டேன்

    ஞானக்கோயில் தீபம் கண்டேன்

    இயேசு காவியம் எழுதிய வித்தகர் அல்லவா கவியரசர் ? அன்னை மேரி மாதாவின் மடியில் தவழ்ந்த தெய்வக்குழந்தையை, தேவதூதனை, எங்கே காண்கிறானாம் அம்மனிதன், அக்குழந்தையின் கண்களில் காண்கிறானாம். அது மட்டுமா பிரகாசிக்கும் அவ்விழிகளில் தேவாலயத்தில் ஒளிரும் ஞானதீபங்களையல்லவா காண்கிறான் அம்மனிதன்.

    பாப்பா தெய்வப் பாப்பா

    பாசம் கொஞ்சும் பாப்பா

    அல்லாஹோ அக்பர் என்றான்

    ஆண்டவனே அடிமை என்றான்

    பிள்ளை ஒன்றைப் பேசச் சொன்னான்

    எல்லாமும் இதுவே என்றான்

    இஸ்லாமிய அன்பர்களின் இறையின் மகத்துவத்தை இதைவிட அழகாய் யாரால் கூறிவிட முடியும்? குழந்தையின் மனதில் இருக்கும் தெய்வத்தன்மைக்கு அந்த ஆண்டவனே தன்னை அடிமையாக்கிக் கொள்வான் என்கிறார் கவியரசர். அதுமட்டுமா? பிள்ளைப் பேச்சில், மழலையின் கொஞ்சலில் அனைத்தும் அடங்கி விட்டது என்று விட்டார் கவியரசர்.

    பாப்பா தெய்வப் பாப்பா

    பாசம் கொஞ்சும் பாப்பா

    வேணுகான ஓசை கேட்டேன்

    விஜயன் கேட்ட கீதை கேட்டேன்

    நேரில் வந்த கண்ணன் கண்டேன்

    கண்ணன் என்னும் ராமன் கண்டேன்

    பாப்பா தெய்வப் பாப்பா

    பாசம் கொஞ்சும் பாப்பா

    பகவத்கீதை எனும் அரிய நூலை வில்லுக்கு வீரனான விஜயனுக்கும் கண்ணபிரான் அருளியபோது இருந்த தெய்வீகச் சூழலையொத்தது மழலையின் பேச்சு என்கிறாரோ ? எங்கள் கவியரசர்.

    அக்குழந்தையின் வடிவில் கண்ணனுக்கே தாசனான எம் கவியரசர் நேரிலே கண்ணனைக் கண்டது போல் உள்ளது என்கிறார் போலும். தர்மத்தை நிலைநாட்ட எடுத்த மறுஅவதாரம் ராமன் கூட அக்குழந்தையின் வடிவில் காட்சியளிக்கிறார் என்னும் கவியரசரின் அற்புத வர்ணனை எம்மை ஆன்மீக உணர்வின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.

    அன்பினிய வாசகர்களே ! கவியரசர் தன் பாடல் வரிகளுக்குள் புதைத்து வைத்த பொக்கிஷங்கள் பல. அவைகளை எந்தெந்த அர்த்தத்தில் எந்தெந்த வேளையில் படைத்தார் என்பதை அவரன்றி யாரும் அறிய முடியாது. ஆனால் அவற்றைச் செவிமடுக்கும் அவரது ரசிகர்களின் உள்ளத்தில் அவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மட்டும் உறுதியாக நம்பினார்.

    இப்பாமரன் தன் இதயத்தில் அவர் ஆன்மீக வரிகள் ஏற்படுத்திய தாக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    சக்தி சக்திதாசன்

    லண்டன்

    04.03.2018

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • பசும் தெய்வம்

    பாஸ்கர்

     

    மரங்கள் அலறுவதில்லை மரணம் கண்டு 

    இல்லை எனக்கென அது ஓர் நாளும் புலம்பாது 

    பக்கத்தில் கதை பேசி பல்லிளித்து நில்லாது

    கால் வலி கை வலி என ஓர் நாளும் சொல்லாது 

    அள்ளி வழங்க அது ஓர் நாளும் தயங்காது 

    இல்லை என சொல்லாது நிழல் பூமி தந்தருளும் 

    கிடக்குமது தெருவோரம் அலட்சியமாய் தனை மறந்து 

    கனி கொடுக்க கேட்காது காசும் பணமும் 

    மண் வாசம் வீச நோக்காது நாளும் கிழமையும் 

    வாய் விட்டு கேட்காது நீரூற்றி போ என்று 

    பசும் தெய்வம் இதுவன்றோ தெருக்கோயில் – தினம் வணங்க

    Share
  • நாட்டுப்புறப் பாடல்…

    ஆ. செந்தில் குமார்

     

    சிங்கப்பூரு சீமபோயி… மச்சான்

    சட்டுபுட்டுன்னு சம்பாரிச்சி…

    செட்டிகுளம் கூட்டுரோட்டுல…

    பெட்டிக்கட ஒன்னு போடலாமுங்க..

     

    சிங்கப்பூரு சீமபோயி… புள்ள

    சிக்கித் தவிக்க வேணுமாடி…

    சிக்கனமாக வாழ்ந்தோமுன்னா…

    சொர்கம்தானே நம்ம ஊருமே…

     

    மேலத்தெருவு மணிகண்டனும்… மச்சான்

    மச்சி வீடு கட்டுறாருங்க…

    மஸ்கட்டு போயி சம்பாரிச்சி…

    மணிமணியா வாழுறாருங்க…

     

    மச்சிவீடெல்லாம் வேணாம் புள்ள… நம்ம

    மண்குடிசைக்கு கொறவு ஏதுடி…

    மாடுகன்னு வாங்கிக்கலான்டி… புள்ள

    மணிமணியா வாழலான்டி…

     

    புள்ளகுட்டி பொறந்ததுன்னா… மச்சான்

    பத்தாதுங்க இந்த வீடு…

    இத்துப்போன கூரையிலே… மச்சான்

    பொத்துக்கிட்டு மழ கொட்டுதுங்க…

     

    புதுசா கூரை வேஞ்சுக்கலான்டி… புள்ள

    இதுக்குப்போயி வருத்தம் ஏனடி…

    கருத்தா நாம வாழ்க்கை நடத்துனா…

    கண்டகனவெல்லாம் பலிக்கும் பாரடி…

     

    கெணத்த கொஞ்சம் ஆழப்படுத்துவோம்… புள்ள

    நெலத்த நல்லா உழுதுப்போடுவோம்…

    ஆடி மாசம் மழ பெய்யுமே..

    தேடி வெதச்சி பயிர்பண்ணலாம்…

     

    ஊரு எல்லாம் பசுமையாகுமே… நம்ம

    உறவு எல்லாம் கூட இருக்குமே…

    தன்னா தனனானா தன்னனானா…

    தன்னா தனனானா தன்னனானா…

    Share
  • அக்கரையும் இக்கரையும்

    திருமதி ராதா விஸ்வநாதன்

     

    இலக்கை காட்டி

    வளர்த்தேன் உன்னை

    தனிமரமாக நின்று

     

    இலட்சியத்தோடு

    வளர்ந்தாய் நீயும்

     

    ஈன்ற பொழுதினும்

    பெரிதுவந்தேன்

     

    இறுதி வரை

    இருப்பாய் என்னுடன்

    என்றே இருந்தேன்

    இறுமாப்புடன்

     

    அக்கரையில் தான்

    உன் எதிர்காலமென

    உதறிச் சென்றாய்

    உறவுகள் அத்தனையும்

     

    எண்ணிக் கழிக்கிறேன்

    என் எதிர்காலத்தை

    ஒவ்வொரு இரவின்

    இருட்டின் துணையோடு

    Share
  • நந்திக்கலம்பகத்தில் மெய்ப்பாடுகள்

    க.கவின்பிரியா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி , (தன்னாட்சி), சேலம்-7

    முன்னுரை

    தமிழ்மொழி வரலாற்றில் தொன்மையான நூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியம் மிகச்சிறந்த இலக்கிய, இலக்கண நூலாகத் திகழ்கிறது. பண்டைத் தமிழின் இயல்புகளை இயம்புவதோடு, இன்றைத் தமிழையும் இனிதே வழிநடத்திச் செல்கிறது. தொல்காப்பிய இலக்கணக் கூறுகளுள் ஒன்றான மெய்ப்பாடுகளை, சிற்றிலக்கிய கலம்பக நூல்களுள், காலத்தால் முற்பட்ட இலக்கியமான நந்திக்கலம்பகத்தில் ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

    மெய்ப்பாடு

    உள்ளத்தில் தோன்றும் அக உணாச்சிகள் புறத்தில் உள்ள உடல் உறுப்புகளால் வெளிப்படுத்துவது மெய்ப்பாடாகும். தொல்காப்பியர் எண்வகை மெய்ப்பாடுகளை பின்வரும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார்..

    நகையே அழுகை இளிவரல் மருட்கை

    அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

    அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப (தொல்.மெய்.247)

    நகை, அழுகை முதலிய எண்வகை மெய்ப்பாடுகளையும், அதன் நிலைக்களன்களையும் மட்டுமே இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    நகை

    நகை என்னும் மெய்ப்பாடு பின்வரும் நான்கு பொருண்மைகளில் தோன்றுவதாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

    எள்ளல் இளமை பேதைமை மடனென்று

    உள்ளப்பட்ட நகைநான்கென்ப   (தொல்.மெய்.248)

    நந்திக்கலம்பகத்தில் நகை என்னும் மெய்ப்பாடு எள்ளல், பேதைமை, மடன் என்னும் பொருண்மைகளில் இடம்பெற்றுள்ளது.

     

     

    எள்ளல்

    பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனைத் தலைவியிடம் தூதாக அனுப்புகிறான். பாணன் தலைவனை வரவேற்குமாறு தலைவியிடம் வேண்ட, தலைவி பாணனை இகழ்ந்து கூறும் பின்வரும் பாடல் எள்ளல் எனும் பொருண்மையில் இடம்பெற்றுள்ளது.

    ஈட்டு புகழ்நந்தி பாண! நீ எங்கையாதம்

    வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்

    பேயென்றாள் அன்னை பிறா நாரியென்றனா தோழி

    நாயென்றாள் நீ என்றேன் நான்(நந்தி.பா.101)

    பாணனே, என் தங்கையாரின் வீட்டிலிருந்து விடியும்வரை பாடும் ஓசை கேட்டு, என் அன்னை காட்டில் அழுகின்ற பேயின் குரல் என்றாள். பிறா நாரி ஊளையிடும் குரல் என்றாள். தோழி நாயின் குரைப்பொலி என்றாள், நானோ நீ பாடுகின்ற பாட்டின் குரல் என்று கூறினேன் எனத் தலைவி கூறுவதாக அமைந்த இப்பாடல் நகைச்சுவை ததும்ப பாணனை எள்ளி நகைப்பதாக அமைந்துள்ளது. இதே பொருண்மையில் பின்வரும் அகநானூற்றுப்பாடல் வரிகளும் பாணனை இகழ்ந்து நகைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    நகையாகின்றே தோழி நெருநல்

    மணிகண்டன்ன துணிகயந்துளங்க   (அகம்.பா.56)

    பரத்தை மனைக்குச் செல்லும் வழியில் கன்றீன்ற பசு தன்னை நோக்கிப் பாய்ந்ததால் எதிர்பாராமல் தலைவியின் மனைக்குத் திடீரெனப் புகுந்த பாணனை எள்ளி நகைப்பதாக இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன.

    பேதைமை

    தலைவியின் உடல் மெலிவைக் கண்டு, வெறியாட்டு நிகழ்த்த எண்ணிய செவிலியிடம் வெறிவிலக்குமாறு கூறிய பின்வரும் பாடல் பேதைமை எனும் பொருண்மையில் நகை எனும் மெய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

    மாட்டாதே இத்தனை நாள் மால்நந்தி வரன்வரைத்தோள்

    பாட்டாதே மல்லையாகோன் பாரியானைப் பாரிச்சுவடு

    காட்டாதே கைதைப் பொழிலுலவும் காவிரிநீர்

    ஆட்டாதே வைத்தென்னை ஆயிரமும் செய்தீரே(நந்தி.பா.46)

    வேலனின் குறையெனக் கருதி, வெறியாட்டு நிகழ்த்துவதை விடுத்து, தலைவனின் புகழைப் பாடச் செய்தும், அவன் உலா வந்த யானையின் காலடித்தடத்தை காண்பித்தும், காவிரி நீரைக் கொண்டு வந்துஎன்னை முழுக்காட்டவும் செய்திருந்தால் என் நோய் தீர்ந்து இன்படைந்திருப்பேன் எனத் தலைவி தமாரின் அறியாமையைக் கூறும் இப்பாடல் நகை எனும் மெய்ப்பாடு தோன்ற அமைந்துள்ளது.

    மடன்

    தலைவியின் பேரழகை நினைந்து தலைவன் தன் நெஞ்சோடு கூறுவதாக கீழ்வரும் பாடல் மடன் எனும் பொருண்மையில் இடம்பெற்றுள்ளது.

    மாதா இவரோடுறுகின்றாய் வாழி மற்றென்மட நெஞ்சே(நந்தி.பா.10)

    தலைவியை எண்ணி அவளது நினைவாகவே இருக்கும் அறியாமை உடைய மனமே என்று தலைவன் தன்நெஞ்சிற்கு கூறுவதாக அமைந்த பாடல் மடன் எனும் பொருண்மையில் இடம் பெற்றுள்ளது.

    அழுகை

    அழுகை எனும் மெய்ப்பாடு இழிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கு நிலைகளில் தோன்றும் என கீழ்வரும் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

    இழிவு இழவே அசைவே வறுமையென

    விளிவில் கொள்கை அழுகை நான்கே(தெல்.மெய்.249)

    இழவு

    உயிரானும், பொருளானும் இழக்கும்போது அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றும். நந்திவர்மன் இறந்தபின்பு பாடப்பட்ட கையறுநிலைப்பாடல் அழுகைச்சுவையில் இடம்பெற்றுள்ளது.

    வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

    (நந்தி.பா.108)

    நந்தி மன்னனின் குளிர்ந்த முகம் நிலவிலும், அவனது பெருமை அலைகடலிலும், வீரம் புலியிடமும், கொடைக்கரங்கள் கற்பக மரத்தையும் சோந்தன. இனி நானும் என் வறுமையும் எங்கு செல்வோம் என்று மனமுருகிப் பாடப்பட்ட இப்பாடல் அழுகைச் சுவையில் இடம்பெற்றுள்ளது.

    அசைவு

    தலைவனின் பிரிவை நினைத்து, உடல் மெலிந்து, கூந்தல் சடை திரண்டு, அழுது அழுது கண்ணீரினால் ஆடை நனைந்து தலைவி வருந்திய நிலை பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.

    வனைவர்குழல் வேணியும் வாடை கணீர்

    நனைவர் துகிலும்இவை நாளும் இரா

    வினைவர்கழல் நந்தி விடேல்விடுகின்

    கனையா முரசொத்தது கார்அதிர்வே(நந்தி.பா.13)

    இப்பாடலில் அசைவு எனும் பொருண்மையில் அழுகை எனும் மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது.

    குறித்த கால எல்லை வந்துவிட்டதையறிந்து தலைவன் தேர்ப்பாகனிடம், தலைவி கண்ணீருடன் உடல் மெலிந்து, தெருவில் நின்று நம் தேர் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பாள். ஆகவே விரைவாகத் தேரைச் செலுத்து என்று கூறுவதாகப் பின்வரும் பாடல் வரிகள் அழுகை  என்னும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளன.

    மொழியார் தொண்டைப் பன்மலா முற்றும் தெருவந்து

    விழியாள் என்றும் மேனி வெளுத்துற மெலிவாளே(நந்தி.பா.43)

    இக்கருத்தொடொப்ப, பின்வரும் நற்றிணைப்பாடலில் தலைவன் தோப்பாகனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

    கல்சுடா சேருங் கதிர்மாய் மாலைப்

    புல்லென் வறுமனை நோக்கி மெல்ல(நற்.பா.32)

    இளிவரல்

    இளிவரல் எனும் மெய்ப்பாடு மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கு நிலைக்களன்களில் தோன்றும் என்று தொல்காப்பியர் பின்வரும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

    மூப்பே பிணியே வருத்த மென்மையொடு

    யாப்புற வந்த இளிவரல் நான்கே(தொல்.மெய்.250)

    மூப்பு

    பகைவேந்தன் ஒரு தூதுவனை அனுப்பி தனக்குப் பெண் கொடுக்குமாறு கேட்டதற்கு, ஒரு வீரன் எனது வில் ஒடிந்து தேய்ந்துள்ளது எனக்கருதியும், நான் மூப்பில் தளர்ந்து போயிருக்கின்றேன் எனவும் கருதி, என் மகளை மணம் பேசவந்தாய் என்று வெகுண்டு, தன் தலைவன் நந்திவர்மனின் வீரத்தைக் கூறுவதாக பின்வரும் பாடல்வரி அமைந்துள்ளது.

    அம்பொன்று வில்லொடிதல் நாண்அறுதல் நான்கிழவன் அசைந்தேன்

    (நந்தி.பா.77)

    இப்பாடல்வரி மூப்பின் காரணமாக இளிவரல் எனும் மெய்ப்பாடு தோன்றியதை உணர்த்துகின்றது.

    வருத்தம்

    தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி, தனது ஆற்றாமையை குருகிடம் கூறி தூது விடுப்பதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    பொழுது கண்டாய் அதிர்கின்றது போகநம் பொய்யற்கென்றும்

    தொழுது கொண்டேன் என்று சொல்லு(நந்தி.பா.3)

    தலைவன் கூறிய பொய்மொழிகள், அவன் தகுதிக்கு குற்றமாகும் எனக் கூறி குருகை தூது விடுப்பதாக அமைந்த இப்பாடல் வருத்தம் எனும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

    மருட்கை

    புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கு பொருண்மைகளில் மருட்கை எனும் மெய்ப்பாடு பிறக்கும் என்பதை கீழ்க்காணும் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

    புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

    மதிமை சாலா மருட்கை நான்கே(தொல்.மெய்.251)

    புதுமை

    தலைவனின் அருளையும், நிலவொளியையும் ஒப்பிட்டு தலைவி கூறுவதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    படக்குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பாரறியத்

    துடக்குடையாரையல்லால் சுடுமோ இச்சுடாப்பிறையே(நந்தி.பா.65)

    தன்னைத் தவிர மற்ற அனைவருக்கும் அருள் செய்யும் தலைவனைப்போல, இப்பிறை நிலவும் வெப்பத்தைக் கொடுக்குமோ? என்று தலைவி வியந்து வருந்துவதாக புதுமை எனும் பொருண்மையில், மருட்கை எனும் மெய்ப்பாட்டில்  இப்பாடல் அமைந்துள்ளது.

    பெருமை

    நேற்று, கிழிந்த கந்தல் ஆடையை இடுப்பில் சுற்றி, பல வீடுகளுக்குச் சென்று யாசகம் வேண்டியலைந்த பாணன் இன்று நல்ல மணமிக்க மாலை அணிந்து கொன்றை மரத்தின் புதுமலரைப் போன்ற பொன்னாலான பொன்னாடையும், அணிகலன்களும் அணிந்துகொண்டு யானை மீதேறி வருகிறான். சொல்ல முடியாத புகழுடைய நந்திவர்மனின் வேலின் சிறப்பினை பாடியிருப்பானோ என்னவோ என்று கண்டோர் வியந்து கூறுவதாக பின்வரும் பாடல் வர்ரிகள் அமைந்துள்ளது.

    மாவௌளாற்று மேவலாக்கடந்த

    செருவேல் உயாவு பாடினன் கொல்லோ(நந்தி.பா.23)

    இப்பாடலில் பெருமை காரணமாக மருட்கை எனும் மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது.

    அச்சம்

    அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை எனும் நான்கு நிலைகளில் அச்சம் தோன்றும்.

    இறை

    இறை எனும் பொருண்மையில், நந்திவர்மனின் தோள்கள் வெற்றியுடைய வேந்தர்களின் மனதை அஞ்சச் செய்வன என்று அச்சம் எனும் மெய்ப்பாட்டில் பின்வரும் பாடல் இடம்பெற்றுள்ளது.

    மறமத காரிதிசை நிறுவின மணிநகை யவர்மனம் நகுவன

    விறலரசாகள் மனம் நெகிழ்வன(நந்தி.பா.7)

    விலங்கு அச்சம்

    அச்சம் தரத்தக்க விலங்குகளைக் காணும்போதும் அச்சம் எனும் மெய்ப்பாடு தோன்றும்.

    சென்றஞ்சி மேற்செங்கண்வேழம் சிவப்பச் சிலாதிகைப்ப

    அன்றும் சினத்தார் இனமறுத்தார் போலும் அஃதஃதே

    குன்றஞ்செய்தோள் நந்தி நாட்டம்குறிக் குருக்கோட்டையின்மேல்

    சென்றஞ்சப்பட்டதெல்லாம்படும் மாற்றலா திண்பதியே

    (நந்தி.பா.16)

    குருக்கோட்டை எனுமிடத்தில் நந்தியின் போர் யானைகள்  சினந்து தாக்க மக்களும்,அரசர்களும் அஞ்சியோடினர். நந்திவர்மனின் சினத்திற்கு ஆளாகி அஞ்சியொடுங்கி அடிபணிந்து நின்றவர் நிலை போலவே பகைமன்னர்களின் நிலையும் இருக்கும் என்று கூறுவதாக அமைந்த இப்பாடல் அச்சம் என்னும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

    பெருமிதம்

    கல்வி, தறுகண், புகழ், கொடை என்ற நான்கு பொருண்மைகளில் பெருமிதம் தோன்றும்.

    கல்வி, தறுகண், புகழ், கொடையெனச்

    சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே(தொல்.மெய்.253)

    கல்வி

    நந்திவர்மன் பழமையான இலக்கிய நூல்களின் எல்லைகளை முழுமையாக அறிந்தவன் எனும் பொருளில் பெருமிதம் எனும் மெய்ப்பாட்டில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    தொல்லை நூல்வரம்பு முழுது கண்டான் நந்தி(நந்தி.பா.3)

     

    தறுகண்

    விண்தொடுதிண் கிரியளவும் வீரம் சொல்லும்

    விடேல்விடுகு நீ கடவும் வீதிதொறும்

    திண்தறுகண் மாத்தொழுத பாவைமாக்கு (நந்தி.பா.74)

    வானளவு உயாந்துள்ள வலிமைமிக்க வடவேங்கட எல்லையளவும் தன் வீரச் சிறப்புச் செல்ல ஆள்கின்ற நந்திவர்மன் என்று இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதால் தறுகண் எனும் பொருண்மையில் பெருமிதம் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளன.

    கொடை

    சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களும், வடநாட்டு மன்னர்களும், கப்பப்பொருளாக கொடுத்த யானைகள், குதிரைகள், போன்றவற்றை இரவலாக்கு கொடுத்த கொடையின் பொருட்டு பெருமிதம் எனும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடல் வரிகளில் அமைந்துள்ளது.

    சேர சோழரும் தென்னரும் வடபுலத்தரசரும் திறைதந்த

    வீரமதகாரியிவை பாரியிவை இரவலா கவர்வரே(நந்தி.பா.27)

    வெகுளி

    உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என நான்கின் அடிப்படையில் வெகுளி எனும் மெய்ப்பாடு தோன்றும்.

    உறுப்பறை குடிகோள் அலை கொலை என்றன

    வெறுப்ப வந்த வெகுளி நான்கே(தொல்.மெய்.254)

    உறுப்பறை

    பாண்டியமன்னனின் கோட்டைக்குள் நுழைந்து வாட்போரில் வல்ல பகைவர்கள் உடல்கள் துண்டு துண்டாக வெட்டி இருப்பிடம் சென்ற தொண்டைவேந்தன் எனக் கூறும் கீழ்வரும் பாடலில் உறுப்பறை பொருட்டு வெகுளி எனும் மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது.

    சுரிகைவிஞைப் பகைஞர்உடல் துண்டம்ஆகத்

    துயிலுணர்ந்த வல்லாண்மைத் தொண்டை வேந்தே(நந்தி.பா.எ.4)

    குடிகோள்

    குடிகோள் என்பது கீழ்வர்ழ்வோரை நலிதலாகும். இம்மண்ணுலகில் எங்கும் அரசாட்சி முறையே, ஆகையால் திறைப்பொருளை செலுத்தி, நந்தியின் திருவடிகளில் அடைக்கலம் புகுவதைத் தவிர, வேறுவழியில்லை என்று நந்திவர்மனின் வீரன் ஒருவன் பகைவர்களை நோக்கி வஞ்சினமொழி கூறவதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    துறைவிடுமின் அன்றி உறைபதியகன்று

    தொழுமின் அலதுய்ந்தல் அரிதே(நந்தி.பா.எ.4)

     

    உவகை

    செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கு நிலைகளில் உவகை எனும் மெய்ப்பாடு தோன்றும்.

    செல்வம் புலன் புணாவு விளையாட்டென

    அல்லல் நீத்த உவகை நான்கே(தொல்.மெய்.255)

    புலன்

    தலைவன் தலைவியின் நலம் புனைந்துரைப்பதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    மறிந்துளதே பவளவாய் மருங்கில் ஆகும்

    வல்லியிடை மணிமுறுவல் முத்துச் சால(நந்தி.பா.60)

    பவளவாய், முத்துப்பற்கள், குவளை போன்ற நெடிய கண்கள், மூங்கில் போன்ற தோல்கள், வில் போன்ற புருவங்கள் என்று தலைவன் தலைவியின் அழகை மகிழ்ந்து புகழ்தலால் உவகை எனும் மெய்ப்பாடாகும்.

    விளையாட்டு

    மகளிர் தலைவனைப் புகழ்ந்து பாடி ஊசல் ஆடும் வகையில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்

    ஊத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்(நந்தி.பா.29)

    விளையாட்டு எனும் பொருண்மையில் உவகை எனும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

    முடிவுரை

    உள்ளத்து உணர்ச்சிகளை மெய்யின்கண் வெளிப்படுத்துவதே மெய்ப்பாடு என்றும், நந்திக் கலம்பகத்தில் எண்வகை மெய்ப்பாடுகளும், அதன் பொருண்மைகளோடு இடம்பெற்றுள்ளதையும் இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1.நந்திக்கலம்பகம் – பு.சி.புன்னைவனநாத முதலியார் உரை

    2.தொல்காப்பியம் பொருளதிகாரம் – இளம்பூரணர் உரை

    3.அகநானூறு  வே.சிவசுப்பிரமணியன், உ.வே.சா நூல்நிலையம், சென்னை-90

    4.நற்றிணை மூலமும் விளக்கவுரையும், ஓளவை சு.துரைசாமிப்பிள்ளை, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

    5.திருவருணைக்கலம்பகம், சோம.இளவரசு(உ.ஆ), மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.

     

    Share
  • சிக்கனப்பிடிக்க

    திருமதி ராதா விஸ்வநாதன்

     

    அம்மா சொன்னது

    டிபன் டப்பா பத்திரம்

    அப்பா சொன்னது

    ஸ்கூல் பீஸ் பத்திரம்

    தோழி சொன்னது

    உன் மனது பத்திரம்

    எதையும் இழந்து விடாதே

    என்றனர் உற்றோரும் உறவினரும்

    இறுக பற்றினேன் அனைத்தையும்

    இதனால் இழந்தேன்

    இறைவனை

    தொலைத்தவனைக் காண

    யாவையும் தொலைக்க….

    அவனே என்னிடம் 

    சிக்குவானோ

    Share
  • ஹைக்கூ கவிதைகள்

    வே.மணிகண்டன்

    தமிழ்த்துறை பேராசிரியர்

    விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி

     

    பசும் மர இலைகளில்
    வாய்விட்டுச் சிரிக்கிறது…
    வசந்த காலம்

    பாறை மனம்
    அதில் வந்து அமர்கிறது…
    ஆரவாரமின்றி ஆசை

    இருள் வெளியை கடக்கிறேன்
    ஞானம் வருகிறது…
    மின்மினியின் வெளிச்சத்தில்

    ஆற்றில் கல் எறிந்தேன்
    வளைய வளையமாய்..
    திட்டித்தீர்த்தது

    மழையில் நனைந்த பிறகு
    கரைந்து போனது…
    கல்மனம்

    நீர்குமிழி
    உடைந்து உணர்த்தியது…
    பிரபஞ்ச ரகசியம்

    நிலவுடனும் நிமிர்ந்த மரத்துடனும்
    பேசி முடித்த பிறகு…
    நிம்மதியாக தூங்கிப்போனேன்

    வாய்க்கால் நீர்
    கையில் அள்ளி…
    வானம் பருகினேன்

    மரத்தடியில் வகுப்பு
    அடிக்கடி சொல்லித்தரும்…
    குயில்

    மழைநாள்
    நனைந்து விட்டுச்செல்லும்…
    நினைவுகள்

    தூறல் தொடங்கி
    சாரலாக மாறுவதற்கு முன் கிடைத்தது…
    மழைக்கவிதை

    காக்கை குருவிகள்
    பறந்து செல்லும் வானம்…
    அருகில் தான் இருக்கிறது

    மெய்மறந்து நனைந்து
    கேட்டுக் கொண்டே வந்தேன்…
    மழைப்பேச்சு

    யாருமற்ற மரத்தடி
    என்னோடு பேசும்…
    இலைகள்

    பட்டினி மறந்த
    பரவச நிலை…
    மழை இரசித்த தருணங்கள்

    போதி மரம் எதற்கு
    மழையைப் பருகு வரும்…
    ஞானம்

    மாமதயானை

     

     

    Share
  • சங்ககாலப் பெண்மையைப் போற்றுவோம்!

    -டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி

     “சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கட்கூட்டமாக ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பு. தம் தேவைகளைப் பெறுவதற்காக மக்கள் தங்கள் உறவுகள் இவை என்று முடிவுசெய்து அவை நடைபெற வேண்டிய வழிகளைப் பற்றிய விதிகளை வகுத்துக் கொள்கின்றனர். அவை பொருளாதார அமைப்பு, கல்வி, கலை, சமயம், பொழுதுபோக்கு, சட்டம், சமயச் சடங்குகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் அமைந்து சமூகத்திற்கு நிலைபேற்றை அளிக்கின்றன”என்ற சமூகப் பார்வையுடன் திணைசார் மக்கள் கூட்டத்தின் தொகுதியாகிய சங்ககால மக்கள் வாழ்வியல் பதிவுகளில் பெண்களின் நிலைப்பாடு சுட்டப்பட்டுள்ள சான்றுகளின் வழி அறியவேண்டியதாகின்றன.கலைக்களஞ்சியம் – தொகுதி 4 – தமிழ்வளர்ச்சிக் கழகம் – சென்னை – பக். 477-47.

    காதலானாலும் சரி, காமம் ஆனாலும் சரி கடைசிக் காலம் வரை ஆண்மகனுக்காகவே பிறந்து அவனுக்காகவே அவன் பொருட்டே வாழ்ந்து அவனுக்குள்ளாகவே அடக்கமாகிய பெண்ணைத் தான் சங்க இலக்கியம் காட்டப் போகிறதோ எனும் ஊகத்தினோடே உங்களை அழைத்துச் செல்கிறேன் நேயர்களே! கணவனுக்காக மட்டுமே தன்னை அலங்காரம் செய்துகொண்டு அவனது நலத்திற்காகவே வழிபட்டுச் சாவதற்கு நான் அஞ்சவில்லை. செத்தால் அடுத்த பிறவியில் வேறு ஒருத்தி பிறந்து உன்னோடு சேரமுடியாது போய்விட்டால் என் காதலனை என்னால் எப்படி மறக்கமுடியும் என்று ஒரே காதல் கணவனுக்காக ஏங்குபவளாகவே காணப்படுகிறாள்.

    இம்மைமாறி  மறுமையாயினும்;
    நீயாகியர்  என்  கணவனே
    யானாகியர் நின்  நெஞ்சுநேர்பவளே”(குறுந்.49)     என்ற குறுந்தொகைப் பாடல்              எத்தனை      பிறவி              எடுத்து வந்தாலும்              உன் மனத்துக்குப் பிறந்தவளாக நான் மட்டுமே இருக்க வேண்டும் என்று பெண்களின் தீராத்தாகத்துடன் திகழ்ந்த மனத்தைக் காட்டுகிறது.

    கணவன்       மறுமணம்   புரிந்தபொழுதும்   அவனை              வாழ்த்தி வரவேற்றிருக்கிறாள். பரத்தமையை அவன் நாடியபோதும் வசை பாடாமல் கடவுள் கற்புத்தன்மையால் ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறாள். அப்படி இல்லாமல் எதிர்த்துக் கேள்வி கேட்டால் குடும்பப் பெண்ணுக்குத் தகாது என்பதும் அச்செயல் அவர்களுக்கு வறுமையை உருவாக்கும் என மூட நம்பிக்கையால் முடக்கப்பட்டிக்கிறாள். தனக்காகத் தன் காதலனைக் கடிந்துரைப்போரை              அதற்காகவே           தடுத்தும் இருக்கிறாள். தலைவனுக்குப்  பழி     நேராதவாறு             அவனது பரத்தமை ஒழுக்கத்தைப் பிறருக்கு மறைக்க முயல்வதும் அவள் இல்லறக் கடமைகளுள் ஒன்றாகவே மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. ஐங்குறுநூறு             –  292:2-5;
    குறுந்தொகை–  252ஆம்   பாடல்; அகநானூறு 316-10-117.

    மனைக்கு விளக்கம் மடவாள் என்பதற்கேற்ப சங்ககாலப் பெண்களின் இல்வாழ்க்கை, குடும்ப நலன்முன்னிறுத்தியே செயல்கள் அமைந்திருக்கின்றன.

    ”விருந்து எதிர்கொள்ளவும் பொய்ச்சூள் அஞ்சவும்
    அரும்பெறல் புதல்வனை முயங்கக் காணவும்
     ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது
     அவ்வவ் இடத்தான் அவை அவை காண
    பூங்கண் மகளிர் புனைநலம் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தமை நோவென்     தோழி கடன்நமக்கு எனவே”(கலி.75-27) என்று கலித்தொகைத் தலைவி மேற்சொன்னவை அனைத்தையும் ஆமோதித்துத் தன் தோழியிடம் புலம்பித் தீர்த்திருக்கிறாள் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. சிறு பருவத்திலேயே பெண்கள் இல்லப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். வீட்டுக்குத் தேவையான தண்ணீரைக் கிணறு, ஆறு, குளங்களில் எடுத்துவரல், வீட்டுத் தோட்டம் அமைத்தல், உணவுப் பொருள் தொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துள்ளனர். குறிஞ்சி நிலப்பெண்கள் தினைப்புனக் காவல்புரிந்துள்ளனர். விளைந்த திணையைப் பாதுகாத்துக் காயவைத்துச் சேமித்தும் வைத்தனர். தன் தந்தை தமையன்மார் வேட்டையாடிக் கொண்டுவந்த விலங்குகளின் ஊனினைப் பாதுகாத்து எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கேற்ப பக்குவப்படுத்தி வைத்தார்கள். இவ்வேலைகளினூடே தம் காதலையும் வளர்த்துக் கொண்டார்கள். நற்றிணை – 134-3-6, குறுந்தொகை – 335-1-2, ஐங்குறுநூறு – 365-1.3.

    முல்லை நிலப்பெண்கள் வீடுகளில் உள்ள கறவைப் பசுக்களிடம் தீம்பால் கறந்து கன்றுகளை அவற்றிற்குரிய தாம்புகளில், கழிகளில் பிணைத்து அவற்றைப் பாதுகாத்திருக்கிறார்கள். மாடுமேய்த்தல் தொழிலையும் செய்திருக்கிறார்கள் என்பதை முல்லைக் கலியில் கலித்தொகைப் பாடல் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. கூடுதலாக நாள்தோறும் தயிர்கடைந்து மோராக்கி அதனைப் பிறநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்றுப் பொருளீட்டி வீட்டின் பொருளாதாரத்தை மேம்பாடடையவும் செய்துள்ளனர். (கலித்தொகை – 111, 116).

    மருதநிலப் பெண்கள் விதைத்த போது உடனிருந்து களையெடுத்து விளைந்த கதிர்களைப் பறவைகள் பற்றிச் செல்லாது காத்துப் பின் அறுத்துஇடித்து அரிசியாக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள் என்று அகநானூறு காட்டுகிறது. பூவிற்ற பெண்களையும் நற்றிணையில் இடம்பெறச் செய்துள்ளனர். அகநானூறு–145-16-19,  நற்றிணை  –  97-6-9.

    நெய்தல் நிலப்பெண்கள் கடல்மேற் சென்றவர் வரும்வரைக் காத்திருத்தல் இரங்குதலாக இருந்தபோதும் ஆடவர் கரைவரும்போது கொண்டு வருகின்ற மீன்களைப் பிற இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்றல், விற்றதுபோக மீதம் உள்ள மீன்களை உணக்கல், அதாவது உலரவைத்து கருவாடு        தயாரித்தல், உப்புவிளைத்தல்,         விளைந்த உப்பை நெல்லாகப் பண்டமாற்று              வியாபாரம் செய்தல் ஆகியன அவர்களின் முதன்மைப் பணிகளாக விளங்கின.

    நானிலத்தும் வாழ்ந்த பெண்கள் தம் தந்தையர், கணவர், தமையன்மார் ஆகியோருக்குப் பணியின் இடையே உணவுகொண்டு போய்த் தருதலையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கலித்தொகை – 108-31-32, அகநானூறு – 60-1-6. ஆதரவற்றோருக்  காதரவளித்த செய்தியை,

    “கறை பட்டு  வந்த  நம்  சேரியின்  போகா
    முடமுதிர்  பார்ப்பானைத் தோழி!நீ போற்றுதி என்றி”                        (கலி. 65: 7-9) என்பதாகக் கலித்தொகைப்பாடல் உணர்த்துகிறது.

    உடன்போக்கில் பிரிந்த   மகளை மருமகன் வீட்டில் சென்று காணும் பொறுப்பு தாய்            அல்லது செவிலித்தாய்க்கே இருந்துள்ளது. எனவே பிள்ளைகளின் நடத்தை, திருமணம் முதலானவற்றைக் கவனிக்கும் முழுப்பொறுப்பும் தாய்க்கே இருந்திருக்கிறது. இத்தன்மை தாய்வழித் தலைமையின் ஓர் எச்சமாக விளங்குவதாகக் கொள்ள முடிகிறது.

    முதுமை         அடைந்த       பெண்கள்              இறைவழிபாடு,      விரிச்சிகேட்டல், சகுனம் பார்த்தல்   போன்றவற்றை              நம்பிக்கையுடன் மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். வீட்டில் உள்ள இளஞ்சிறார்களைப் பாதுகாப்புடன் புறத்தே வழிபாடு போன்றவற்றிற்காக அழைத்துச் சென்றும் வந்துள்ளனர். மதுரைக் காஞ்சி – 460-467. வயது முதிர்ந்த பெண்டிரைப் பாதுகாக்கும் பொறுப்பு அவள் மகனுக்கு உரித்தாகியது என்பதைப் புறநானூறு(159-1) சுட்டிக்காட்டுகிறது. யாரும் இல்லாத போது தம் முயற்சியில் தானே பொருளீட்டியும் வாழ்வு நடத்தியிருக்கிறாள் பெண்.

    “பெரும்  பின்னிட்ட  வால்நரைக்  கூந்தலர்
      நன்னர் நலத்தர்    தொன்முது  பெண்டிர்……   
     தாம் வேண்டு  பண்ணியம்
     கமழ் நறும்பூவோடு மனைமனை மறுக”(மது.கா. 408)

     என மதுரைக் காஞ்சி குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. “பெண்டிரும் தம் பதம் கொடுக்கும்”(புறம்.151-5) என்று புறநானூறும் குறிப்பிடுகிறது. “அவளை மாறி யாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ”என எதிர்வாதாடிப் பொருளீட்டிய நிலையும் இருந்துள்ளது. கலித்தொகை – 106, 44-45.

    கள்ளினைக் காய்ச்சித் தயாரிப்பதையும் விற்பதையும் பணியாகக் கொண்டவர்கள் அரியற் பெண்டிர் என அழைக்கப்பட்டனர். கள்ளடு மகளிர் எனப் பெரும்பாணாற்றுப் படையில்(339) குறிப்பு வருகிறது. பிறர் ஆடைகளைத் தூய்மைசெய்யும் பணியையும் பெண்களே மேற்கொண்டிருந்தனர். இவர்கள் புலத்தியர் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் தூய்மை செய்த ஆடைக்குக் கஞ்சி போட்ட குறிப்புச் செய்தியும் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

    சங்க  காலத்திலேயே    சுயஉதவிக்குழுக்கள்              இருந்துள்ளன.         பிறரை மகிழ்வித்தலை              நோக்கமாகக்          கொண்டு      செயல்படும்              விறலி, பாடினி போன்றவரைத் தொழில் மகளிர் என்றே கூறலாம். இவர்களைத்தாம் பிறபெண்டிர் போல் தனித்துப் பணியாற்றாது குழுவினருடன் இணைந்து வினையாற்றியிருக்கிறார்கள். ஆனால் தலைமைப் பொறுப்பு ஆடவரைச் சார்ந்ததாகவே உள்ளது. மலைபடுகடாம் – 568-570. குற்றேவல் மகளிர் செல்வந்தர் இல்லங்களில் வேலை பார்த்துள்ளனர். அரண்மனைப் பணி, அந்தப்புரக் காவல் இவற்றையும் மகளிரே மேற்கொண்டனர்.

    “பீடு கெழு  சிறப்பிற்  பெருந்தகை  அல்லது
      ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்”(நெடு.வா.106-107).

    என்ற நெடுநல்வாடைப்  பாடல்வரி     அதனை உறுதிப்படுத்தி நிற்கின்றது. சங்கச்    சமூகம்              பெண்மைக்குப்      பல      ஏற்றங்களையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.    பெண்             மகவு, பெண்             குழந்தை       மிக்க விருப்பத்துடனேயே              ஏற்றுக்            கொள்ளப்பட்டுள்ளது.      நல்ல வேளையாக கள்ளிப்பால்            சம்பவங்கள்              ஏதும்  நிகழ்ந்ததாக சான்றுகள் இல்லை. சிறுகுடி நல்கூர்ந்தார் செல்வ மகள்”என்றே  கலித்தொகை பெண்பிறப்பைப்  கொண்டாடி மகிழ்ந்துள்ளது.              குறிப்பிட்ட வயது அல்லது பருவம் வரும் வரைப் பெண் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி ஊஞ்சலாடியும், அம்மானை பாடியும், கழஞ்சாடியும் விருப்பம் போல் ஆடிப்பாடிக் களித்துள்ளனர். நீராடல், மலைவளம், சோலைவளம் காணல் முதலானவற்றில் ஆண்களுக்குச் சமமாக மட்டும் அல்லாமல் இணைந்தும் இன்பம் நுகர்ந்து மகிழ்ந்துள்ளனர். பரிபாடல் – 10,19, கலித்தொகை – 27, புறநானூறு -243, குறுந்தொகை – 3. விரும்பிய பெண்ணை மணப்பதற்குத் தடைகள் வந்த போதிலும் தந்தையுடன் சேவகனாகப் பணிபுரிந்தேனும் அவன் மகளை மணந்து கொள்ள முயன்ற செய்திகள் நகைபட விளங்குகின்றன.

    ஆய்தொடிக் குறுமகள் வேண்டும் பொருளைக் கலம்நிறையக் கொண்டுவந்து உன்வீட்டாரிடம் தந்து மணம் முடிப்பேன். மறுத்தால் நான் என் வீடு, சுற்றம் இவற்றை விட்டு நீங்கி உன் தந்தையுடன் அவன் அளத்தில் உப்பு உழுவேன். பெரிய நீர்க் குட்டத்தில் அவன் கீழ்ப்பணிவேன். அவன் இட்ட பணியைச் செய்தேனும் உன்னைப் பெறுவேன் என்று பெறுவதற்காக ஆண் தன்னைத் தாழ்த்தி இரங்கி வருதலும் ஒரு வகையில் பெண்ணை மதிப்புடைய நிலையில் வைத்திருந்தமையையே காட்டி நிற்கின்றது.

    திருமணச்    சடங்குகளில்            பெண்களே              பங்கேற்றுள்ளனர்.              ஆயினும் புதல்வன் பெற்ற மங்கல மகளிர்க்கு மட்டுமே இச்சடங்கின் போது பங்கேற்கும் உரிமை உண்டு எனும்போது ஒருவகையில் பெண்குழந்தை பெற்றவள் இரண்டாம் நிலையில் தான் வைக்கப்பட்டாள் என்பதையும் காட்டுகிறது. அகநானூறு – 86-7-20.

    பதிற்றுப்பத்தின் பழைய உரையில் ஒரு குறிப்பு இடம் பெறுகிறது. அதாவது சேர மன்னர்களைக் குறிக்கும் போது “ஆன்றோள் கணவ, திருந்திய இயன்மொழித் திருந்திழை கணவ, ஒடுங்கீர் ஓதிக் கொடுங்குழை கணவ”என அவரது உரிமைமகளிராம் தேவியரும் சேர்த்துச் சுட்டப் பெறுகிறார்கள். இவ்வாறு சேர்த்துப் பாடப்பட்டதால் பெண்மை பெருமைப் படுத்திவிட்டார்கள் என எண்ணிவிடவேண்டாம். “மகளிரைச் சார்த்து வகையால் பாடுதலின்றித் தனித்துப் பாடுதல் மரபு அன்று. ஆதலில் இங்கே சேரனொடு சார்த்தி அவன் மாதேவியைச் சிறப்பித்தார்”என்ற குறிப்பு தனித்துப் பாராட்டப் படமாட்டாள் பெண். முழுவதும்    புறக்கணிக்கப்படாமல் உரிமை ஆடவருடன் இணைத்தாவது பாராட்டுப் பெற்ற நிலையை பெண் மதிப்புடனே இருந்துள்ளாள் என்பது விளங்குகிறது. பதிற்றுப்பத்தில் மட்டும் சிறப்பாக ஒரு விளக்கம் காணப்படுகிறது. அதாவது மன்னனைக் குறிப்பிடும்போது சேரமன்னனின் மகன் என்று மட்டும் கூறாது “ஆராத்திருவில் சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்றமகன்”(பதிற்.4ம்பத்து, பதிகம்-1-3) எனத் தாயையும் முன்வைத்து அறிமுகம் செய்தலும் பதிவாகியுள்ளது. அரசனை வாழ்த்தும் போது “வேயுறழ் பணைத்தோள் இவளோடு ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே”(பதிற். 21,37-38)எனவும் அவன் தேவியயோடு இணைந்து வாழ்தலையும் எண்ணியே வாழ்த்தியுள்ளனர். மற்றோர் இடத்து அரசன் தாயை,
    “வயிறு மாசிலியர் அவன் ஈன்றதாயே”(பதிற்.20,27)எனவும் போற்றியுள்ளனர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மீது பதிற்றுப்பத்துள்ஆறாம்பத்து பாடிய காக்கைபாடினியார் நச்சௌ்ளையார் அதற்காக அணிகலனுக்கு என்றுஒன்பது துலாம்பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பரிசாகப் பெற்றுள்ளார். இச்சம்பவம் பெண்பாற் புலவர்களும் ஆண்பாற் புலவர்களைப்போலவே ஒன்றாகவே பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறனர். சங்ககாலச்              சமூகப்பெண்கள் நிலையினை சங்க கால              வாழ்வியல் எனும் நூலாசிரியர் ந. சுப்பிரமணியர்பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

    “அக்காலத்துச் சமுதாயம் பெண்ணுக்கு எவ்வளவு கவுரவமும் பெருமையும் தர உடன்பட்டதோ அதற்கு உட்பட்டுப் பெண் ஆணின் உடைமையாகவே கருதப்பட்டாள்”என்ற அவரின் கூற்று சிந்தனைக்குரியது. திருமணத்திற்கு முன் தழையுடை அணிவதில் பெண்கள் காட்டும் விருப்பம் திருமணத்திற்குப் பின் இல்லை.(நற்றிணை – 123, 3.5) தந்தையில்லாவிட்டால் தமையன்மார் பொறுப்பில் விடப்பட்டு வாழ்ந்துள்ளனர். பொழுது போக்குதல் எனத் தனியே இல்லாது தொழிலும் இணைந்தே இடம்பெற்றிருக்கின்றது.(அகநானூறு – 320, குறுந்தொகை– 335) சமூகம்         தமக்கு            விதித்த கட்டுப்பாடுகளை விரும்பிஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை      “கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே     ஆயமகள்”என்றுதான்              கூறிய வரிகளால் மெய்ப்பிக்கிறாள். மணம் புரிவதற்கும், மாலையிடுவதற்கும், மாட்டை ஏர் பிடித்துக் காட்ட வேண்டும் என்மனத்தில் இடம் பிடித்திடல் போதாதா? என எதிர்கேள்வி கேட்டதாக சுவடே இல்லை.(கலித்தொகை – 103,63-64) கருத்து வேறுபாடு காரணமாகப் பெண்கள் கணவனால் புறக்கணிக்கப்பட்டுப் பெற்றோரிடம் திரும்பியிருக்கலாமே என்று தோன்றும் வகையில் மருதத்திணைப் பாடல் அமைந்துள்ளது.

    ”தணந்தனை ஆயின் எம்இல்    உய்த்துக் கொடுமோ”(குறுந். 354)என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். தலைவியைப் பிரிய நினைத்தால் எம்மை எங்கள் பிறந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவாயாக எனப் பரத்தையற்பிரிவின் போது கூறியதாக கயத்தூர் கிழான் எனும் புலவர் பாடல் பாடியிருக்கிறார். பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் வேறுபாடு காணப்படுகிறது. முன்னோர் பெயரைப் புதல்வன் மட்டுமே பெறுகிறான். புதல்விக்கு இச்சிறப்பு வழங்கப்பட்டதாக யாண்டும் காணப்படவில்லை. முன்னோரிலும்      மிகுதியும்     தந்தைபெயரே “மேதக்க       எந்தை பெயரால்”(கலி.81:-35)என்று  கலித்தொகையில் போற்றப்படுகின்றதேயன்றித் தாய்க்கு              அவ்வுரிமையோபெருமையோ இருந்ததாகத் தெரியவில்லை.

    ஆண்பெண் இருவரும் கருத்தொருமித்துக் காதல் வயப்பட்டு மறைவொழுக்கம் கொள்கையில் பிறர் அறிய நேரிடுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் அது அலராகி, அம்பலமாகிப் பெண்ணுக்கு மதிப்புக் குறைவைத் தருகிறது. இற்செறிக்கப்படுகிறாள். தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறாள். அன்னையிடம் அடிவாங்கும் துன்பமும் அவளுக்கு நேர்கிறது.    ஆனால் ஆணுக்கு அலரினால்இத்தகைய    இடர்பாடுகள் இல்லை கூறப்போனால் அவனுக்கு எவ்விதப் பாதிப்பும் இருப்பதாக ஓரிடத்தும் அறிய முடியவில்லை.(கலி. 105:61-69) (குறுந். 373, 1.3)

    தன்னை        விரும்பாத    பெண்ணை            வலிந்து பற்றிக்கொண்டாலும் ஆடவர்க்கு   அது    இழுக்காக    இல்லை. உற்றாரும் ஊரும் ஏதும் கூறுவதில்லை. இதனைப் போலவே பெண்ணை விரும்பியவனும் பெற்றவனும் பெண்ணின் கருத்து என்ன என்பதனைக் கூட அறியாது அவள் கருத்திற்கு இடந்தராது தம்முள் பகை பாராட்டித் திரிந்தும் உள்ளனர். புறநானூறு அதனைப் பதிவு செய்துள்ளது. அப்பாட்டில் தாய் மகளை அழகுடையவளாக வளர்த்தது அறமற்றசெயல் என்று அவளைப் பெற்ற தாய்க்கும் வசைபாட்டு பாடப்படுவது விந்தையே! (நற். 149: 1-5) (புறம். 336).

    தன்னை விரும்பாத பெண்ணின் படத்தை வரைந்து பனைமடலால் குதிரை செய்து அதில் ஊர்ந்து கொடியேற்றி ஊரறியச் செய்து வேறு வழியில்லாமல் ஒரு பெண்ணின் அன்பைக் கட்டாயத்தின் பேரில் வேறுவழியே இன்றி வலுக்கட்டாயமாகப் பெறுதலையும் ஆண்கள் செய்திருக்கிறார்கள்.(கலி. 138:8-13, குறுந். 173). களவுக் காலத்தில் இத்தகைய செயல்பாடுகள். கற்புக் காலத்திலோ இன்னுங் கூடுதல்தான். பெண்களுக்கு கற்பொழுக்கம் வலியுறுத்தப்பட்டது. கற்பென்றால் தலைவியின் மனநிறை-மனத்திண்மை,       தலைவன்மீதுகொள்ளும் அன்பு, விருந்தோம்பல், தலைவனின் பரத்தையர் ஒழுக்கத்தைக் கடிந்து அவனைத் திருத்தி ஏற்றுக்கொண்டு குடும்பக்கட்டுக்கோப்பு கலையாமல் காத்தல் என்றெல்லாம் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

    மேற்சொன்ன விளக்கங்களால் கற்பெனும் சொல் சமூக அறத்தை வலியுறுத்த எழுந்ததே என அறிய முடிகிறது. இத்தகைய கற்பு வாழ்வு வாழ்வதையே சங்கத் தலைவியர் விரும்பினர் என்று வேறு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து பதிவு செய்கிறார்கள்.

    சங்கப் பெண்ணின் உள்ளம் என்னபாடுபட்டு இருக்கும் என்பதை தற்போதைய உளவியல் வல்லுநரும் கணித்துச் சொல்லமுடியாத ஒரு கட்டம். தலைவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருப்பானாம்,“தலைவி பூப்பின் புறப்பாடு நாட்களை    முடித்துவிட்டாள்.              அவள் புதல்வனைப்
    பெறுதற்குத் தயாராக செவ்வணி அணிந்துள்ளான், புதல்வனைப் பெறுதற்குத் தயாராக உள்ளாள்”(பரி. 9: 20-22)என்று ஏவல் மகளிர் செவ்வணியாடை அணிவகுப்பு நடத்துகிறார்கள். இது பெண்மையை மதிப்பிடுதலா மதிப்புக் குறைத்தலா என்பது ஆழமாக நோக்கத்தக்கது. இந்நிகழ்வு சங்கச் சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு வாரிசுகளைப்பெற்றுத்தரும் கருவியாகக் கருதப்பட்டார்களோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது.(பொரு. 85-89).

    ஆனாலும், இந்த ஒரு சான்று தவிர வேறு சங்கப் பாடல்களில் இந்நிகழ்வு மீளவும் சுட்டப் படாமையால் இவ்வழக்கம் அக்காலத்திலேயே கடியப் பட்டிருக்கவேண்டும் என்ற உறுதியையும் கூடவே தருகிறது.

    பெண்கள் ஆண்களின் போகப் பொருளாகவே பெரிதும் கருதப்பட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது. புலவர் தனக்குப் பொருள் வழங்கிய புரவலரை வாழ்த்தும் போது,

    “விலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
     மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
     மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
    விரைந்து நீ  பெற்ற நல்லூழியையே”(மது.கா.778-781)

    என்று வாழ்த்தியிருப்பது மிகவும் சிந்தனைக்கு உரியது. ஆடவரின் களியாட்டிற்குப் பெண் கள்ளெடுத்துஉதவுதல் இயல்பான ஒன்றாகவே காட்டப்பட்டுள்ளது. ஆங்காங்கே காணப்படுகிற பெண்ணைப் பற்றிய எல்லை மீறிய வருணனைகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன.(பொரு. 6-8,       35-41).

    ஆணின் பலதார மணத்தைச் சமூகம் பாராட்டி ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வாறு அவனது வாழ்வில் நுழைந்த பெண்களுக்கு இல்லக் கிழத்தி, காமக்கிழத்தி என்று பட்டங்கள் வேறு வழங்கியுள்ளனர். ஆனால் கொண்ட கணவனால் புறக்கணிக்கப்பட்ட மகளிர் நீர் அருந்தியபின் வீசியெறியப்பட்ட பனை ஓலைக் குடையாக, சூடிய பின் கழிக்கப்பட்ட பூவாக இழித்துரைக்கப்படுவது எண்ணத்தக்கது.(கலித். 23: 8-15).

    ’கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என்ற கூற்றிற்கேற்ப நல்ல உணவுகூட அவள் கண்ணில் காட்டப்படுவதில்லை. சுவையற்ற மிக எளிய உணவை நேரம் தவறிய நேரத்திலேயே அவள் உண்டிருக்கிறாள்.(புறம். 248). “சிறிய வெண்மையான ஆம்பல் செடியின் முன்பு நாம் இளமையுடன் இருக்கும் காலத்தில் தழையாடையாய் இருந்து உதவின. இப்பொழுது பெரியசெல்வத்தை உடைய கணவன் இறந்தபிறகு உண்ணும் வேளை தவறித் துன்பந்தரும் உறங்கும் வேளையில் உண்பதற்கு அவை தம் அல்லியிடத்து உண்டான புல்லரிசியைத் தந்து உதவின”என்று ஒக்கூர் மாசாத்தனார் எனும் புலவர் தம்பாடலில் பதிவு செய்துள்ள தாபதநிலையைப் புறநானூறு குறிப்பிடுகிறது.

    மேலும் கூந்தல்களைந்து, பரல்பொதிந்த இடத்தில்              பாயின்றித்தூங்கும்         துன்பநிலையைக் கண்டு கணவனோடு  தீக்குள்           மாய்த்தாள் என்று பூதப்பாண்டியன்  தேவி  பெருங்கோப் பெண்டு              பற்றிய           ஆனந்தப் பையுள் துறைப்பாடல்              பகர்கின்றது.

    கணவனோடு தீயுள் மாயத்துடிக்கும் பெண்களுக்குக் கைம்மை நோயின் கொடூரம் அவர்களைத் தூண்டி தீயும் பொய்கையும் ஒன்று என்பதைப் போல எண்ணுவராம். “ஓடும் செம்பொன்னும் ஒக்கவேநோக்குவர்”என்று இறையடியார்களின் பற்றற்ற தன்மையைப் பெரியபுராணம் எடுத்துக்கூறியது. தீயும் பொய்மையும் ஒன்றாகவே என்னும்,பரிதாபத் தன்மையை “நன்னீர்ப்பொய்கையின் நளியெரி புகுவர்”என்று மணிமேகலையும் எடுத்து இயம்புகின்றது.(மணி. 2:45).

    கணவனை இழந்தோர் அத்தனை பேரும் தீயுள் மாய்ந்திருப்பது சாத்தியக் கூறுதானா? அப்படி மாயாத பெண்கள் என்ன செய்திருப்பர்? என்ற              வினாக்கள் எழுவது           இயல்பே.              கைம்பெண்டிர்       நூல்நூற்றுக் கழித்துள்ளனர். இக்கட்டாய வாழ்க்கை முறையால் பருத்திப் பெண்டாகின்றனர்.(புறம். 326) (பருத்திப் பெண்டு – பஞ்சினால் நூல் நூற்கும்     பெண்டு)பாதுகாக்க   ஆரும் இல்லாதபோது ஆளில்பெண்டு ஆகின்றாள்.(நற்.353:1-2) இவர்களுக்கு இறந்துபட்ட கணவனே இறந்தபின்பும் வழிபாட்டிற்குரிய துணையாகின்றான். சிறிய இடத்தை மெழுகித் தருப்பைப்புல் பரப்பி அதன்மேல் பிண்டம் வைத்து இறந்தோரை வழிபடும் மரபினை, வேள் எவ்வி இறந்து பின்பு அவன் மனைவி பிண்டமிடக்கண்டு வருந்திப் பாடிய கையறு நிலைப் பாடல் புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.(புறம். 234).

    பகைவரை அவமதித்த பல்வேறு செயல்பாடுகளில் அவரைப் பெண்ணாக உருவகித்தலும் நிகழ்ந்துள்ளது. இச்செயல் பெண் என்றால் இழிபொருள் அல்லது ஆணிற்கு அடுத்த இரண்டாம் நிலை உடையவள் என்பதையே சுட்டிநிற்கின்றது.

    போரிடலுக்கு மகளிர் ஏற்புடையவர்கள் அல்லர். வினையே ஆடவர்க்கு உயிரே; மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே என்றுதான் சங்க கால வாழ்வியல் அமைந்திருக்கிறது. என்றாலும் கூட அதற்குப் பெண்ணை இரண்டாம் நிலைப்படுத்துதல் மட்டும் காரணமா? வேறு ஏதேனும் இருக்கக் கூடுமா என்று எண்ணவும் தோன்றுகிறது. அதற்கு இந்தியப் பண்பாடும் தமிழரும் என்ற தன் நூலில் எஸ் இராமகிருஷ்ணன் அவர்களின் கருத்துரை ஏற்புடையதாக அமைகின்றது.

    “போர்  வீரத்தைப்  போற்றும்  சமுதாயத்தில்  மகளிர்  களம்  புகுந்து  விந்தைநிகழ்த்தும்   உரம்  உடையவரே ஆயினும் போர்களில் பெண்கள்அழிந்தால் வம்சம் விளங்குவதற்கு வாய்ப்புக் குன்றும்         என்பதை மறப்பதற்கில்லை.ஆடவர்பலர் களத்தில்              உயிரிழந்தார் ஆயினும் பலதாரமான முறையினால் அனைத்துப் பெண்களும் இல்லறம் ஓம்பி மக்கட் செல்வத்தை அடைவது சாத்தியம். பெண்களே களம்புகுந்து பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர் எனில் மக்கட்செல்வப்பெருக்கத்துக்கு வழியில்லாது போகும்”என்ற கூற்று பொதுவாக நகையைத் தருவது போலிருப்பினும் ஆழ்ந்து சிந்தித்தற்குரியது.

    சங்ககாலச் சமுதாயத்தில் கல்வியின் பெருமை உணரப்பட்டிருந்தது. சங்க இலக்கியப் புலவர் கூட்டத்துள் முப்பது பெண்பாற் புலவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் ஒளவையார்தான் அதிகமாக ஐம்பத்து ஒன்பது பாடல்களைப் பாடியவர். பூதப்பாண்டியனின் பெருங்கோப்பெண்டு முதலாக வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி வரையார், அரசகுலமகளிர் தொடங்கி        சாதாரணக்              குடிமக்கள்   ஈறாக அமைந்திருப்பது              குறிப்பிடத்தக்கது. ஔவையார் ஆண்களுக்கு இணையான இடத்தையும் சிறப்பையும் பெற்றிருக்கிறார். தாயுடன் இணைத்த மகளாக அஞ்சியத்தை மகள் நாகையார் என்று ஒரு பெண்பாற் புலவர் பெயர் பெற்றிருப்பதும் கவனத்தைக் கவர்கிறது  ஈர்க்கிறது. சங்ககாலச்              சமுதாய வழக்கங்களில் பரந்து காணப்பட்டதொரு குறையாக எதிர்மதிப்புடைய பரத்தமை அமைந்துள்ளது. பரத்தமை காரணமாக தலைவன் வாயில் நேர்தலும் தலைவி அவள் பொருட்டுத் தோழி வாயில் மறுத்தலும் நிகழ்ந்ததைக் காணும் போது பரத்தையர் என்ற தொழில் முறைப் பெண்கள் இருந்துள்ளனர் என உறுதிப்படுகிறது.

    பலதாரமணம் உள்ள தமிழர் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும் கற்புசார் கோட்பாடு புகுத்தப்பட்டபோது உடனடியாக அதனை ஏற்க இயலாத அல்லது விரும்பாத சூழல் நிலவியிருக்கக்கூடும். அதனைப் போலவே ஒருத்திக்கு ஒருவன் என்ற விதிக்குள் அடைபட விரும்பாத மகளிரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டப் பரத்தை என்று அழைத்தும் இருக்கலாம்.

    காலப்போக்கில் அவர்களும் அல்லது அவர்தம் வாரிசுப் பெண்களும் குலமகளிர் போன்று வாழ விரும்பிய நிலையில் தன்னை விரும்பி ஏற்றுக் கொண்ட ஆடவனுடன் மட்டும் வாழ்க்கை நடத்திக் “காமக்கிழத்தியர்”என்ற தகுதியைப் பெற்றிருக்கக் கூடும். இத்தகையோரை ஆண்கள் மணம் செய்து கொண்ட செய்தியினையும் கலித்தொகை (82:9-24) காட்டி நிற்கின்றது. பரத்தமை மறை ஒழுக்கமாக அன்றிப் பலரறிந்த வினையாக நிகழ்ந்துள்ளது. போரில் ஆடவர் மிகுதியும் மடியவே திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு இல்லாத மகளிர் பரத்தையராக மாறும் நிலை உண்டாகியிருக்கக் கூடும் என்று செ. பழனிச்சாமி என்பவர் புறநானூற்றில் தமிழர் பண்பாடு எனும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

    சமூகத்தில் பொருளாதாரத்தில் உயர்வு பெற்றவராக அரசமகளிர் திகழ்ந்துள்ளனர். பொது நிலையில் பிற பெண்களின் நிலைபோலவே இவர்கள் இருப்பதாகக் காட்டப் பட்டிருப்பினும் சில தனித்த மதிப்பிழத்தல் நிகழ்வுகள் இவர்களுக்கு மட்டுமே நிகழந்துள்ளன. அரசன் போரில் தோல்வியடைந்தால் வென்றவர்களால் அரசமகளிரே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பெண்டிரது கூந்தலைக் கொய்து அதில் கயிறு திரித்து, அதனால் யானைகளைக் கட்டியிழுத்து அவமதிக்கப்பட்டனர் என்று பதிற்றுப்பத்து (5-15-17) பதிவு செய்துள்ளது.

    கொண்டி மகளிராக சிறைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாக வெற்றி பெற்றோர் நாட்டுக்கு வலிய அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஊர்ப் பொதுமன்றத்தில், கோயில்களில் விளக்கேற்றுதல் முதலான பணிகளைச் செய்யவும் ஏவல் மகளிராக மாற்றப்பட்டனர். இவையே அரசமகளிரை உடன்கட்டை ஏறத் தூண்டியிருக்க வேண்டும். (பட்டி. 246-249).

    எக்காலச் சமூகத்திலும் ஒரு போக்குத் தன்மை, விதிகள் கடைப்பிடிக்கப் பட்டாலும் விலகிச் செல்லுதலும் விதிமீறல்களும் நிகழ்ந்துதான் இருக்கும். அவற்றால் சில விவகாரமாயும் சில விறுவிறுப்பானதாயும் அமைந்து விளங்குவன. அவ்வகையில் பார்த்தோமேயானால், சங்க கால மகளிர் தம் உள்ளம் கவர்ந்தவனைப் பிறர் அறியக் கூறுவது இல்லை; கூறக்கூடாது என்பது விதி. ஆனால் இச்சூழலில் பெருங்கோழி நாய்கன்மகள்              நக்கண்ணையார் தம் மனம்     கொண்டவன் சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என வெளிப்படுத்தியிருக்கும் துணிவு வியக்கத்தக்கது.(புறம். 84-86) கோசர்,           தன்     வயலில்          பசு      மேய்ந்தது              என்பதற்காக           அப்பசுவின் உரிமையாளரான அன்னிமிஞிலியின் தந்தையின் கண்களைப் பறித்து விடுகின்றனர். தன் தந்தையின் கண்களைப் பறித்த கோசரை அப்பெண் பழிவாங்கியதைச் சங்கப்பாடல் பாராட்டுகிறது. இச்சம்பவம் ஆணுக்குப் பெண் ஆணவத்துக்கு ஆட்படாத அடங்காமையைக் காட்டுகிறது.(அகம். 216:8-11).

    வெள்ளிவீதியார் சுரம்பல கடந்து தன் காதலரைத் தேடிச் சென்றுள்ளார். தன் துணைவன் ஆட்டனத்தியைத் தேடித் தேடி அலைந்து கண்டுபிடித்த ஆதிமந்தியை ஒன்றுக்க மேற்பட்ட பாடல்கள் காட்டுகின்றன. ஆதிமந்தியிடம் ஆட்டனத்தியைக் கண்டு ஒப்படைத்த பெண் மருதியென்றும், அதன்பின் அவள் தன்னைக் கடலுள் புகுந்து மாய்த்துக்கொண்டாள்          என்றும்              அகநானூற்றுவழி (222:5-15) அறியமுடிகிறது. ஆதிமந்தியின் இக்கடும் முயற்சி அரிதாக நிகழக் கூடியது என்ற வகையில் சிறப்புப் பெற்றுள்ளது. இக்கதையே பின்னாளில் மன்னாதி மன்னன் எனும் திரைப்படமாக உருவானது என்பது தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறிந்ததே. (அகம். 236 : 14-20, குறுந். 31).

    தொகுத்துப் பார்ப்பின் சங்ககாலப் பெண்கள் மென்மையானவர்கள்; ஆணின் அன்புக்கு உரியவர்கள்; அறியாமை கொண்டவர்கள்; பொறுமை மிகுந்தவர்;     மக்கட்     பேற்றிற்கு     உரியவர்கள்     என்ற     வகைகளில் ஆண்களால்  பாதுகாக்கப்  படவேண்டியவர்களாகவே  பெண்கள்  விளங்கினர். எனவே   அன்பாலும்,   பரிவாலும்   பெண்டிரை   ஆண்கள்   தம் ஆளுகைக்குஉட்படுத்தினர். கட்டுப்பாடுகளையும், கடமைகளையும் வரையறுத்தனர். இதற்குப் பெண்களிடையே எதிர்ப்புக் குரல் எழவேயில்லை. எனவே இந்த அன்பும் பரிவும் சிறுகச் சிறுக ஆணவம் ஆதிக்கமுமாக மாறிப் பெண்ணை அடிமைப் படுத்தும் ஆணாதிக்கப்போக்கு வளர்வதற்குச் சங்கச் சமூகம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பது தெளிவு.

    *****

    கட்டுரையாளர்
    இணைப்பேராசிரியர்  (ம)  துறைத்தலைவர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி
    மதுரை-625009

     

    Share
  • பெண்ணே…

    திருமதி ராதா விஸ்வநாதன்
     

     

    மறந்து விடுகின்றனர்

    உனக்குமொரு மனமுண்டு

    மரம் என்றே நினைக்கின்றனர்

    உறங்கி கிடக்கும் உன்

    உணர்வுகள் மலர்கிறது

    மணம் வீசும் மலராக

    உன் சாதனைப் படியில்

    ஏற மறுக்கும் சிலர்

    வெட்டிச் சாய்க்க துணியும் போது

    அவருக்கே தெரிவதில்லை

    உன் வேர் வேறு என்று

    கண் கலங்காதே

    கவலை எதற்கு

    உன் விழுதே

    வேராக இருக்கையில்

    உன்னை வெட்டிச் சாய்ப்பது எப்படி

    Share
  • முதுமலையின் வனப்பு..!

    ஆ. செந்தில் குமார்.

     

     

     

     

     

     

     

     

     

     

    குயில்கள் பாட்டு இசைக்க
    மயில்கள் நடனம் புரியும்!
    கிளிகள் கொஞ்சி மகிழ
    கொக்கு ஒற்றைக்காலில் நிற்கும்!
    புலிகள் சீறிப்பாய சிறு
    முயல்கள் பதுங்கி மறையும்!
    காட்டெருமை கரடி இருக்க
    காட்டுப்பன்றிக் கூட்டம் மேயும்!
    ஓநாய் நரியின் ஊளை – இரவில்
    அச்சம் கொள்ள வைக்கும்!
    யானைப்பிளிரல் சத்தம் கேட்க
    வரையாடு ஒன்று கத்தும்!
    மான்கள் துள்ளி ஓட – அதை
    சிறுத்தை பாய்ந்து பிடிக்கும்!
    வானரங்கள் யாவும்
    மரக்கிளைகளில் தாவும்!
    வண்டு தேனை அருந்த
    மலர்கள் பூத்துக் குலுங்கும்!
    வானுயர்ந்த மரங்களனைத்தும்
    காற்றில் அசைந்து ஆடும்!
    இயற்கை எழில் கொஞ்சும்
    முதுமலையைக்காண மனம் கெஞ்சும்!

     

    Share
  • ”தொல்காப்பியகாலப்  பெண்கள் ”

     

    பெண்மையைப் போற்றுவோம்!

     

    டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி

                      இணைப் பேராசிரியர்  (ம)  துறைத்தலைவர்

                      தமிழ்த்துறை

                      தியாகராசர் கல்லூரி

                      மதுரை-625009

     

    பெண்மையைப் போற்றுவோமா? வேண்டாமா? என்ற காரசாரமான விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் தன் கையையும் குரலையும் ஒருசேர உயர்த்தியவன் நம் முண்டாசுக் கவிஞன் பாரதியே! அவன் “பெண்மை வாழ்கவென்று

     

    கூத்திடுவோமடா” என உரக்கச் சொல்லவில்லையெனில் நம் தமிழ்க் குலப்பெண்களை வீடும் நாடும் கொண்டாடியிருக்குமா என்பது ஐயப்பாடுதான்.

     

    “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திரு நாட்டில் மண்ணடிமைதீர்தல் முயற்கொம்பே” என்று தெளிவாகக் குரலெடுத்து “அறிவிலிகள் வீட்டுக்குள்ளே உங்கள் வீட்டுப் பெண்களுக்குச் சுதந்திரம் நீங்கள் தராமல் நம் நாட்டினை அந்நிய ஏகாதிபத்தியம் மட்டும் எப்படி விடுதலை செய்யும் என்று நம்புகறீர்கள்?” என

     

    தமிழ்ச் சாதியின் செவிட்டில் ஓங்கி அறைந்தான். அதுவரை ஓதப்பட்டு அடைத்துப் போயிருந்த ஆணாதிக்கச் சிந்தனை கிழிந்து பெண் பற்றிய நியாயமான கருத்துகள் செவிப்பறைக்குள் எதிரொலிக்கத் தொடங்கின.

     

    “வீட்டுக்குள்ளே  பெண்ணைப்  பூட்டிவைப்போம்

     

    என்ற விந்தை           மனிதர்            தலைகவிழ்ந்தார்”

     

    எனும் அளவிற்கு ஏற்றங்கள் பல கண்டிருக்கின்றது இன்று பெண்மை என்றாலுங்கூட இந்த உயரந் தொடுதற்கு எத்தனை காலமாயிற்று? “கல்தோன்றி மண்தோன்றாக்

     

    காலத்தே       முன்தோன்றிய       மூத்தகுடி” எனத்  தமிழ்க்குடி   செம்மாந்து  பேசிக்

     

    கொண்டிருக்கிறதே! அந்தத் துவக்கப் புள்ளியில் இருந்து போடப்படப் போகின்ற உண்மைக் கோலம் தான் இப்பெண்மையைப் போற்றுவோம் என்னும் தொடர்.

     

    தமிழர்தம்     வாழ்வியல் பதிவுகளை  புரட்டிப்பார்த்து         அதன்                தொடக்கம்   என

     

    சங்ககாலம் என்று                அக்கால          கட்டத்து         இலக்கியத்   தரவுகளைத்               தான்

     

    ஆரம்பப்புள்ளியாக்கிக்     கருத்துரைப்பது       தமிழ் வழக்கமாக  உள்ளது.         ஆனால்

     

    அதற்கு இருநூற்றாண்டுக்கு முந்தைய பதிவான தொல்காப்பிய காலத்துக்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன் வாருங்கள்.

     

    இலக்கியங்கள் மட்டுந்தான் காலங்காட்டும் கண்ணாடியாக முடியுமா? “இலக்கியங்காண்டற்கு இலக்கணங்கூறல்” என்ற அடிப்படையில் தொல்காப்பிய

     

    இலக்கண     நூல்தான்      முதல்               பதிவாக          உள்ளது.         அதனுள்         தொல்காப்பியர்

     

    தமிழர்தம்     அகம்,                புறம்   என்று                இல்லறம்,    சமூகம்            என்ற இருவாழ்வுக்கும்

     

    இலக்கணம் கூறியுள்ளார் அதனுள் சமூகநிலைக் கூறுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.(மெய்தொட்டுப் பயிறல் 1048 நூற்பா)

     

    சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து தொல்காப்பியத்தினின்றும் அறிந்து கொள்ள முடிகிறது. பெண்களின் நிலை, கடமைகள், ஏற்றத்தாழ்வுகள், ஆணின் உயர்வு ஆகியன பற்றிய தரவுகள் ஏராளம் கிடைக்கின்றன.

     

    ஆணும் பெண்ணும் ஒன்று போலவே வைத்து எண்ணப்பட்ட வாழ்வியல் களங்களைக் காணும்போது இருபாலரும் சமநிலையுடன் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற குறிப்பு „பலே‟ சொல்லவைக்கின்றது. ஆணைப்போலவே பெண்ணும் தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேடிக்கொள்ளும் உரிமை பெற்றிருந்ததைக் „களவியல்‟ பகுதி காட்டுகிறது. இக்களவுக்கால வாழ்க்கையில் திருமணத்திற்கு

     

    முன்பே           மெய்யுறு       புணர்ச்சியும்               ஏற்றுக்             கொள்ளப்பட்டிருக்கிறது.(நளற்றமும்

     

    தோற்றமும்               ஒழுக்கமும்                உண்டியும்    செய்வினை                மறைப்பினும்           –                1060வது            நூற்பா)

     

    காதல் கொண்டு களவு வாழ்க்கையைப் பிரரறியத் தொடங்கிய பின்பு திணைவிட்டு திணை சென்று, ஊர்விட்டு ஊர் சென்று ஆறு, குளம் முதலான நீர்

     

    நிலைகள்,     சோலைகள்,               மலை,              குன்று               எனப்  பல்வேறு       இடங்களுக்கும்                சென்று

     

    விளையாடி இன்பம் துய்த்துள்ளனர். சுருங்கக் கூறினால் காதல் வானில் சிறகடித்துப் பறந்திருக்கின்றனர். சமூகமும் அதனை அங்கீகரித்து அனுமதித்தும் இருக்கின்றது.

     

     

    “யாறும்  குளனும்  காவும்  ஆடிப்

     

    பதியிகத்து   நுகர்தலும்    உரிய என்ப”(நூற்.-1137)

     

    அக்கால வாகனங்களாகிய தேர், யானை, குதிரை, கோவேறு கழுதை முதலானவற்றின் மீதமர்ந்து ஊர் சுற்றித் திரிந்து மகிழ்தலையும் (1158) தடை செய்யவில்லை என்பதும் ரசனைக் குரியதாக உள்ளது. துவக்கம் இவ்வாறு குதூகலித்துத் துவங்கியது போலவே வாழ்வின் இறுதிப் பகுதியிலும் இருவரும் இணைந்தே கழித்திருக்கின்றார்கள் என்பது, அன்பின் ஆழ்ந்த உன்னத உயர்வு நிலையினை அகவாழ்வில் எட்டியுள்ளனர் என்றே பறை சாற்றவைக்கின்றது.

     

    பெண் வாழ்க்கையில் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையெல்லாம் முற்றுவித்து முதிர்ந்த வயதில் தன் கணவனுடன் இணைந்து பெண் தவம் மேற்கொண்டு வாழ்வின் இறுதிப்பகுதியைக் கழித்திருக்கிறாள்.

     

    “காமம்  சான்ற  கடைக்கோட்  காலை

     

    ஏமம்  சான்ற               மக்களோடு துவன்றி

     

    அறம்புரி         சுற்றமொடு கிழவனும்    கிழத்தியும்

     

    சிறந்தது         பயிற்றல்       இறந்ததன்    பயனே”(1138)

     

    கலைஞர்களிடையே ஆண், பெண் வேறுபாடின்றி இருவரும் சமமாகப் போற்றப்பட்டிருக்கிறார்கள், நடத்தப்பட்டிருக்கிறார்கள். கூத்தர், பாணர், பொருநர்

     

    இவர்களுடன் விறலியும் இருந்திருக்கிறாள். ஆற்றுப்படுத்தப்பட்டு ஒன்றாகவே பொருளும் புகழும் ஈட்டியுள்ளனர். இருப்பினும் வாழ்வின் ஒரு சில கூறுகளில்

     

    மட்டும் இச்சமநிலைப் போக்கு இருந்ததா இல்லை எல்லாக் கூறுகளிலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டா இனித் தொடர்ந்து காண்போம்!

     

    சூழல் ஒன்றாகவே               அமைந்திருந்தாலும்          கூட     பல்வேறுபாடு           காரணமாக  ஆண்,

     

    பெண் இருவரும் இருவிதமான நடத்தை வரையறைகளில் உயர்வு, தாழ்வு புலப்படும்படியும் நடத்தப்பட்டிருக்கிறார்கள்.

     

    முதலாவதாகத்      தன்      துணையைத்              தேடிக்               கொள்ளும்   உரிமையை                ஆணைப்

     

    போன்று பெண் பெற்றிருந்தாலும் அதற்குப் பல தடைகள் இருந்தமையும் புலனாகிறது.

     

    மெய்யுறு       புணர்ச்சி         திருமணத்திற்கு     முன்பே           நிகழ்ந்தாலு;                தலைவியைப்                பிறர்

     

    பெண் கேட்டு வந்து விடுகின்றனர். தன்னை விரைந்து திருமணம் செய்து கொள்ளும்படி வரைவு கடாவுதல் பெண்ணின் தவிர்க்க இயலாத பொறுப்பாகின்றது. இது தவறும்பட்சத்தில் பெண் உயிர்விடத் துணிதலும் உண்டு. உயிர் செல வேற்றுவரைவு வரல் ஆடவனுக்கு இல்லை.

     

    “பொழுதும்  ஆறும்  காப்பும்  என்று  இவற்றின்

     

    வழுவின்       ஆகிய               குற்றம்            காட்டலும்

     

    தன்னை          அழிதலும்     அவன்               ஊறு   அஞ்சலும்

     

    இரவினும்    பகலினும்     நீவா    என்றலும்

     

    நன்மையும் தீமையும்      பிறிதினைக்                கூறலும்

     

    புரைபடவந்த             அன்னவை   பிறவும்

     

    வரைதல்       வேட்கைப்    பொருள          என்ப”(தொல்.         நூற்.   1156)

     

    தலைவன் தலைவி இருவரது களவொழுக்கம் வெளிப்படும்போது பாதிக்கப்படுபவளும் பெண்ணாகவே உள்ளாள் அலர் எழுகிறது. அதன் காரணமாக

    இச்செறிப்பு  என்ற பெயரில்         வீட்டுக்குள்  பூட்டிவைக்கப்           படுகிறாள்.    அன்றி

    வீட்டைவிட்டுப்      புறம்   வராதபடிக்    கண்காணிக்கப்         படுகிறாள்.    பின்பு வெறியாடல் நிகழ்த்தப்படுகிறது. காத்து கருப்பு அண்டிவிட்டதோ என நினைத்துக் கொலையடித்தல் நிகழும். இவ்வாறாகத் தொடரும் கொடுமைகள் களவில் ஈடுபடும் ஆண்மகனுக்கு இல்லை. எல்லாக் காலத்தும் பெண்ணுக்கு மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.

     

    பெண்ணின் தோழி அறத்தொடு நின்று தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள். அதற்குப் பின்னும் அவளது பெற்றோர் வேறிடத்தில் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். அவளது விருப்பினை ஏற்க மறுக்கிறார்கள். அதன் பின்னரே அவள் தான் விரும்பிய தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள். ஏதோ இன்று நடப்பது போலவே உள்ளதா? அன்று தொல்காப்பியர் காலத்து நிகழ்வு. (தொல்காப்பிய நூற்பாக்கள்-1152, 1060, 1071)

     

    ஆண்மகனது திருமணத்தில் அவன்வீட்டார் தலையிடல் இல்லாததால் அவனுக்குச் சிக்கல்கள் எது? இருந்ததாகத் தெரியவில்லை. தான் உடன் கொண்டு

    செல்லும் பெண்ணை அவன் தன் இல்லறத்திற்குத்தான் அழைத்துச் சென்றிருக்கிறான். இது அக்கால பண்பாட்டு விழுமியத்தைக் காட்டுகிறது. இடையில் வேறிடம் அலைக்கழித்தலோ, அசம்பாவிதங்கலோ சுட்டப்படவில்லை அதுவரை நிம்மதியே.

     

    பெண் தான் விரும்பிய ஆண்மகனுடன் பெற்றோர் முதலான சுற்றத்தாரை விட்டு உடன்போக்கு நிகழ்த்தினாள் என்றால், அதனை அறிந்த அவளது சுற்றத்தார் தொடர்ந்து வந்து இடையூறு செய்திருக்கிறார்கள்.

     

    “இடைச்சுரமருங்கில்  அவள்  தமர்  எய்திக்கடைக்கொண்டு

    பெய்தலிற்    கலங்கு            அஞர் எய்திக்

    கற்பொடு       புணர்ந்த          கௌவை”(தொல்.              –  987)

     

    எனத் தொல்காப்பியம் காட்டுகின்றது. வீட்டைவிட்டுச் சென்ற பெண்ணைத் திரும்ப அழைத்து வருவதற்கு அவளது தாய் மிகுதியும் செவிலித்தாய் தேடிச் செல்கிறாள்.

     

    தகப்பனோ தமையனோ செல்லாததும் வியப்பினை அளிக்கிறது. அன்பற்ற நிலையா? அல்லது போகட்டும் ஒழிந்தது என்ற அலட்சியப் போக்கா? ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது புதிராகவே உள்ளது. (தொல்காப்பிய நூற்பாக்கள் 983)

     

    பெண்ணிற்கு              மறுக்கப்பட்டன      எல்லாம்         ஆணிற்கு      உரியனவாக

    ஏற்கப்பட்டிருக்கின்றன.  பெண்ணுக்கு              வலியுறுத்தப்பட்ட               கைம்மை      வாழ்க்கை

     

    ஆணுக்கு வகுக்கப்படவில்லை. மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறுபெண்ணைக் கணவன் திருமணம் செய்து கொண்டிருக்கின்றான்.(தொல். நூற். 1118)

     

    வேறுசில பெண்களைத் தன் காமத்திற்கு உரியோராக ஆக்கியும் வாழ்ந்திருக்கின்றான். அது காணாதெனப் பின்னும் பரத்தமை ஒழுக்கத்தையும் தவறாது கடைபிடித்து இருக்கிற ஆணின் இச்செயல்களைச் சமூகம் கண்டிக்கவே

     

    இல்லை. அவன் இயல்பாக அவற்றை ஏற்றுக் கொள்வது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. (தொல். நூற். 1179)

     

    பெண்ணின் பயணம் குறிப்பிட்ட வரையறைக்குத் தான் இருந்திருக்கிறது. முந்நீர் வழக்கம் மகடூவொடு இல்லை கடல் கடந்து பெண்கள் அழைத்துச்

     

    செல்லப்படவில்லை.       மடல் ஏறுதல்            அல்லது          ஏறுவதாகக் கூறுதல்         அதனால்

     

    வலிந்து ஒரு பெண்ணைக் கட்டாயமாகக் காதலுக்குள் கொணர்தல் இவை செய்தால் தவறில்லை செய்யலாம் என்று சமூகத்தால் ஒத்துக் கொள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு.

     

    பெண்ணைவிட ஆண் உயந்தவன் என்ற நிலையில் தலைமை என்பது ஆணுக்கு உரியதாகவே இருந்திருக்கிறது. தொல்காப்பியப் பொருள் இலக்கண வரையறைகள் முதலில் ஆணுக்கு உரியனவற்றைக் கூறிவிட்டுப் பின் பெண்ணுக்கு செல்வதனை இயல்பாகவும் வழக்கமாகவும் அமைத்துக்கொண்டுள்ளன. மறந்தும் ஓரிடத்தில் கூட முன்னர் உரைக்கப்பட்டுவிடவில்லை.

     

    ஆடவரும்    பெண்டிரும் தங்களது        வாழ்க்கைத்                துணையினைத்      தேர்ந்தெடுக்கும்

     

    உரிமைபற்றிக் கூறும்போது சமத்துவத்தோடு சொல்லிவிட்டு அடுத்து ஒரு கட்டுப்பாட்டில் வைத்து ஆணை உயர்த்திக் காட்டுவதாகவே அமைகிறது.

     

    “ஒன்றி  உயர்ந்த  பாலதன்  ஆணையின்

    ஒத்த  கிழவனும்    கிழத்தியும்  காண்ப”

     

    என்பதனோடு முடித்துக் கொள்ளாமல் “மிக்கோனாயினும் கடிவரையின்றே” என ஒரு கொக்கி வைப்பது ஆண் பெண்ணைவிட ஒருபடி மேலாக நிற்றலையே சமூகம்

     

    விரும்பியது               என்பதையே               உறுதிப்படுத்துகிறது.         இன்னும்        சரியாகச்                சொல்லப்போனால் ஆடவருக்குக் கீழ் ஒருபடி அவருக்கு அடங்கி நிற்றலையேப் பெண்ணியல்பாகக் கொள்ள வேண்டும் என்பதனையும் கூடவே உணர்த்துகிறது.

    (தொல்.            நூற்.   1039)

     

    புறத்திணையில் காஞ்சித்திணை தவிர பிற திணைகள் அனைத்தும் ஆணைச் சுற்றியே அமைக்கப்பட்டன. பாடாண் திணையும் பாடப்படும் ஆண்மகனின் வெற்றிவீர கொடை முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறுவதாகவே பொருள்படுகிறது. இவற்றில் பெண்மைக்குரிய இடம் துளியும் காட்டப்படவில்லை.

     

    போரில்           புண்பட்ட        ஆண்மகனுக்கு        ஏற்பன              செய்தல்,        துணைவன் மறைவால் பெண் கொள்ளும   அவலம்          என்பனபற்றியே     காஞ்சித்          திணை             பெண்ணுக்கு அளிக்கும்     இடமாக          இருந்துள்ளது.           வீட்டிற்கு       வெளியே       பெண் சிறப்புற்று விளங்கியதாகவோ,           புகழ்ப்பட்டதாகவே              புற        உலகச்             செயல்பாடுகளில் பங்கு கொண்டதாகவோ அன்றைய சமூகம் சித்திரிக்கப்படவில்லை. ஒப்புக் கொள்ளவில்லை என்பதையே இவை பறை சாற்றுகின்றன.

     

    மாயோனைக் காடுறை உலகமாம் முல்லைக்குத் தலைவன், சேயோன் முருகன் மலையுறை குறிஞ்சிக்குத் தலைவன், வேந்தன் இந்திரன் புனல் உலகமாம் மருத நிலத்திற்குத் தலைவன் வருணன், மணல் உலகமாம் நெய்தல் நிலத்திற்குத் தலைவன் என்று திணைப்பாகுபாட்டிலும் ஆண்பால் சார்புத்தன்மை நிலவியதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்.

     

    “மாயோன்  மேயக்  காடுறை  உலகமும்

    சேயோன்      மேய  மைவரை      உலகமும்

    வேந்தன்        மேய  தீம்புனல்       உலகமும்

    வருணன்       மேய  பெருமணல்                உலகமும்

    முல்லை       குறிஞ்சி          மருதம்            நெய்தலெனச்

    சொல்லிய    முறையாற் சொல்லவும்               படுமே”(தொல்.     நூற்.   951)

     

    மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவைநிலை எனப் பெண்தெய்வம் சுட்டப்பட்டாலும் அவளுக்கு நிலவரையறையைத் தொல்காப்பியம் வழங்கவில்லை. பின்னர் வந்த சிலப்பதிகாரம் தான் “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து பாலை என்பதோர் படிவங்கொள்ளும்” எனக்குறிப்பிட்டது. அந்தப் பாலை நிலத்திற்கு தொல்காப்பியர் குறிப்பிட்ட கொற்றவையைத் தலைமையேற்கச் செய்து பாலைத் தெய்வம் கொற்றவை எனப் பின்னர் வழங்கலாயினர்.

     

    கல்வி மற்றும் பிறதொழில் பிரிவு கனைத்தும் ஆணுக்கு மட்டுமே உரித்தாக்கப்பட்டிருக்கின்றன. உரிமையாளன் என்று பொருள் படும். “கிழவன்”

    என்ற ஆண்பால் சொல்லுக்கு இணையாக கிழவி, கிழத்தி, கிழவோள், மனைக்கிழத்தி முதலான சொற்கள் எடுத்தாளப்பட்டிருப்பினும் வழங்கு பொருள் நிலையில் அவை ஆணுக்கு இணையாக இல்லை என்பதனையே பெண் பற்றிய விளக்கங்களும், பெண்ணுக்குக் காட்டப்பட்டுள்ள கடமை மற்றும் வரையறைகளும் புலப்படுத்துகின்றன. பெண் எனப்படுவள் யார்? அவள் தன்னிடம் எத்தகைய பண்புகளைக் கொண்டு கடைப்பிடித்து வாழவேண்டும் என்று அவளது இருப்பு மற்றும் இயல்புகளைப் பற்றித் தொல்காப்பியர் எடுத்துரைக்கும் வரையறைகள் அவர்காலத்துப் பெண்பற்றிய ஒரு சித்திரத்தை நம் மணக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. (தொல். நூற். 971-980)

     

    பெண்ணின்  உயிரை           விட    நாணம்             பெரியது.        ஆதனைவிட             அவளது          கற்பு                மிக உயர்வானது               என்று                கற்பெனும்   பண்பு பெண்டிரின்  தலையான  ஒழுக்கமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. உயிரை விட முதன்மையாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. தன் தலைவனாக ஒருவனைக் களவுக் காலத்தில் ஏற்றுக் கொண்ட உடனேயே அவள் கற்பொழுக்கத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பது “சொல்லெதிர் மொழிதல் அருமைத்தாதலின்” என்பதில் இருந்து உணரப்படுகிறது.

     

    “உயிரினும் சிறந்தன்று நானே, நாணினும் செய்தீர் – காட்சிக் கற்பு சிறந்தன்று எனத் தொல்லோர் கிளவி”(தொல். நூற். 1059)

     

    கற்பு மட்டுமல்லாது அச்சம், நாணம், மடம் என்ற மூன்று குணங்களையும் எக்காலத்திலும் எப்பருவத்திலும் பெண் என்பவள் உறுதியாகப் பின்பற்ற வேண்டும். தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவற்றைப் பின்பற்றும் பெண்தான் பெண்ணாகக் கருதப்படுவாள் என்று மீண்டும் மீண்டுமாக வலியுறுத்தப்பட்டதில் இருந்து இதன் முதன்மைத்தன்மை பெண்மீது சுமத்தப்பட்ட முறைமையை அறிந்து கொள்ளலாம்.

     

    “அச்சமும்  நாணும்  மடனும்  முந்துறுதல்

    நிச்சமும்        பெண்பாற்குரிய       என்ப”(தொல்.         நூற்.   1045)

     

    இவற்றோடு நில்லாது பிறர்பால் அன்பு காட்டுதல், நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல், மென்மைத் தன்மை உடையவளாக இருத்தல், பொறுமை காட்டல்,

    தீயவழியில் நெஞ்சம் செல்லவிடாமல் தடுத்தல் ஆகியனவும் பெண்ணுக்கு இலக்கணமாயின.

     

    இன்னும் பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது. அடக்கம், அமைதி, நேர்மை, அறிவு, தகுவன பேசுதல், அவளின் பண்பு நலன்களாகப் பிறந்ததில் இருந்து கூடவே வளர்ந்து வரவேண்டும்.

     

    “செறிவும்  நிறைவும்  செம்மையும்  செப்பும்

    அறிவும்          அருமையும்               பெண் பாலான”     (தொல்.            நூற்.   1155)

     

    எனும் நூற்பா திரும்பத் திரும்ப அவள் எங்கு திரும்பினாலும் அவள் முன் காட்டப்பட்டு காட்டப்பட்டு அவள் கழுத்தில் மாட்டப்பட்டன.

     

    ஒரு வேளை இவற்றை அல்லது இவற்றில் ஒன்றிலிருந்து அவள் மீறிவிட்டால் என்று வைத்துக் கொள்வோம் அவள் “பெண் மகன்” என்று பழித்தலுக்கு இலக்காகியிருக்கிறாள். “வெண்மையை அடுத்த மகன் என் கிளவி”(தொல். நூற்.

     

    648) தொல்காப்பியரின் பெண்மகன் என்ற இக்கூற்றிற்கு உரை ஆசிரியர் சேனாவரையர் உரை கூறும்போது, “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோகத்தார் இக்காலத்தும் பெண்மகனென்று வழங்கும்” என்று விளக்கம் அளிக்கிறார்.

     

    பெண் ஆடவரின் உடைமைப் பொருள் என்ற முறையிலேயே அவள் பெறப்பட்டாள்@ வளர்க்கப்பட்டாள்@ வாழ்க்கைப்பட்டாள்@ வாழ்ந்து முடித்தாள் ஆனால் வரலாறாக வடிக்கப்படாது மறைக்கப்பட்டாள் என்பதே ஆதங்கம்.

     

    “கொளற்குரி  மரபின்  கிழவன்  கிழத்தியைக்

    கொடைக்குரி             மரபின்             கொடுப்பக்    கொள்வது”(தொல்.           நூற்.1088)

    என்றதன்       வழி     அறியலாம்.

     

    ஆண்மகனின் உடைமைப் பொருள்களான நிலம், பொருள், வீடு போன்ற அஃறிணைப் பொருட்கள் கூட அவனின் மறைவிற்குப் பின் அவன் சந்ததியினருக்கு உடைமைகளாக மாறிப்போயின. ஆனால் ஆணின் உடைமைப் பொருளான உயர்திணைப் பெண் அவன் மறைந்தால் அவனுடனேயே மறைவதும் பலவாறாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

     

    தன் கணவனின் உயிர்குடித்த வேலின் துணை கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாள். கொண்டவனின் தலையைச் சேர்த்தணைத்து உயிர்

     

    விட்டிருக்கிறாள்.   கணவனின் ஈமத்தீயுள்   பாய்ந்து           இன்னுயிரை              இழந்திருக்கிறாள்.

     

    இச்செயலை               “மூதானந்தம்”  என்று  வேறு  போற்றியிருக்கின்றனர்.

     

    “கணவனோடு முடிந்த படர்ச்சி நோக்கி செல்வோர் செப்பிய மூதானந்தம்”(1025@ 22-23)

    “நீத்த  கணவன்  தீர்த்த  வேலின்

     

    பெயர்த்த        மனைவி        ஆஞ்சியும்….

    கொண்டோன்            தலையொடு               முலையும்

    முகனும்        சேர்த்தி            முடிந்த            நிலை…

    நல்லோள்     கணவனோடு            நளி      அழல்                புகிஇ

    இடையிட்ட                பாலை              சொல்                நிலையும்”(தொல்.            நூற்.   1025-12)

    எனுந் தொல்காப்பிய          நூற்பாக்கள் நம்மை            மலைக்க       வைக்கின்றன.

     

    வேல்பட்டு வீழ்ந்தவனுக்கு நடுகல் எடுத்துப் போற்றியுள்ளனர். அவ்வேலை எடுத்துத் தன் மார்பில் தாங்கி மாண்ட எந்தப் பெண்ணுக்கும் நடுகல் இருந்ததாகப் பதிவுகள் இல்லை. ஒருவேளை நடுகல்லுடன் ஒரு கல் என்பதற்குப் பதிலாக ஒன்பது கற்கள் உடன் வைக்க வேண்டியிருக்கும் என்பதனால் விடுத்தனரோ! கல்லாய்ப் போன…. மனங்கல்லாய்போன மக்கள் மாத்திரமே அறிவர்.

     

    அவ்வாறு      உயிர் துறக்காத       சூழ்நிலையில்          பெண் என்பவள்       எவ்வாறு

    நடத்தப்பட்டிருக்கிறாள் என்று அறியும்பொழுது மனம் வேதனைப்படத்தான் செய்கின்றது. விதவைக் கோலம் எனும் கைம்மை நோன்பு மேற்கொள்ளவேண்டும்.

     

    “தாபதநிலை” என்று இந்நிலையைக் குறிப்பிட்டுள்ளனர். கைக்கொள்ளும் முறைமைதானே கைம்மை என்று விட்டு விடமுடியாது. வாய்க்கு ருசியாக சாப்பிடக்கூடாது. பாய்விரித்துக் கூட உறங்க முடியாது. ஆடை ஆபரணங்கள் அணியமுடியாது. பால்ய விவாகம் நடைபெற்ற நிலையில் அப்பெண் ஏழுவயதுப்

    பேதை              என்றாலும்   எழுவது           வயதுடையப்             பேரிளம்          பெண் என்றாலும்   ஓரே முறைதான். பெண் காதலித்தாலும் இற்செறிப்பு, கணவன் இறந்து போலும் இற்செறிப்புத்தான். (தொல். நூற். 1025)

    இவ்வாறான               நடைமுறைகள்      பெண் சமூக அல்லது          ஆணின்          உடைமை     என்ற கொள்கையை அல்லது பெண்ணினத்தின் சார்பு வாழ்க்கையையே உறுதி செய்கின்றன. பெண் தான் விரும்பிய களவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வாழ்ந்தாள் எனக் காணும் முறைமையோடு நேர் எதிரான நிலையினையும் தொல்காப்பியம் காட்டுகிறது. மகள் மறுத்து மொழிதல் என்பதாகப் பெண் கேட்டு வந்தவர்க்கே பெண்ணைப் பெற்றோன் தரமறுத்தல் அல்லது உடன்படல் என்பதும் இவ்வுடைமைக்      கொள்கையின்         பாற்பட்டதே.              இதில்                பெண்ணின்  மனநிலை, பெண்ணைக் கலந்தாலோசித்தல் என்ற சிந்தனையே எழுந்ததாகத் தெரியவே இல்லை. சுவடுகள் தெரியாதபோது பெண்ணின் சுயம் எவ்வாறு வரவேற்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாராட்டப்பெற்று, போற்றப்பட்டு இருக்கும் கூறுங்கள் பார்ப்போம்!

     

    “நிகரித்து  மேல்  வந்த  வேந்தனோடு

    முதுகுடி         மகட்பாடு      அஞ்சிய          மகட்பாலும்”(1025:              14-5)

     

    இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்க, கற்பும் நாணமும் இருகண்களாக, அச்சமும் மடனும் அவற்றிற்கு துணை நிற்க ஆடவரின் உரிமைக்குச் சாட்சியாக, உடைமைப் பொருள்களுள் ஒன்றாக நிற்றலே அன்றை பெண்ணின் இயல்பாக அறிய முடிகிறது. இதில் இருந்து முரண்பாடு கொள்ளும்பெண் பெண்மகன் எனவும் ஒதுக்கப்பட்டுள்ளதையும் உய்த்து உணர முடிகிறது.

     

    பெண்ணின் இல்லற வாழ்க்கையில் அவள் ஆற்றவேண்டிய கடமைகள், நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் என முன்நிற்பன அவள், தனது கணவனின் விருப்பு வெறுப்புகளுக்கு உடன்பட்டு அவனோடு எல்லா நிலைகளிலும் எவ்வித முரண்பாடும் கொள்ளாது ஒத்துழைத்துச் செல்லுதலே ஆகும்.

     

    ஆனால் ஆண்மகன் மட்டும் கட்டிய மனைவி உயிருடன் இருக்கும்போதே பிறிதொரு பெண்ணை மனைவியாக்கிக் கொண்டாலும் அதனை மறுப்புக் கூறாது கைவிடாது தாய்போல் அவனது பிழைக்கு இடித்துரைத்து ஏற்றுக் கொள்ளுதலும் வேண்டும்.

     

    “தாய்  போல்  கழறீஇத்  தழீஇக்  கோடல்

    ஆய்மனைக்               கிழத்திக்கும்              உரித்தென    மொழிப

    கவவொடு    மயங்கிய       காலையான”(தொல்.      நூற்.   1119).

    கற்பு    வழிப்பட்டவள்         பரத்தையை                ஏத்தினும்      என்றதனால்              தலைவன் பரத்தையொழுக்கம்           மேற்கொண்ட           போதிலும்    அதனையும்                ஏற்றுக்             கொண்டு அவனுக்கு உடன்பட்டு வாழ்தலே மனைவியின் குடும்ப அறநெறியாகக் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.

     

    “தாய்  போல்  கழறீஇத்  தழீஇக்  கோடல்

    ஆய்மனைக்               கிழத்திக்கும்              உரித்தெனமொழிப

    கவவொடு    மயங்கிய       காலையான”(தொல்.      நூற்.1119)

     

    கணவன் எத்துன்பத்தாலும் சோர்வு அடைந்துவிடாது காத்தலும் பெண்ணின் பொறுப்பாக இருந்திருக்கின்றது. எனவேதான் பிள்ளை பெறுவதற்காக அமைந்த தனது பேறுகாலம் எனும் வாய்ப்பு கிட்டாத வேளையில் அதனை சமன் செய்யும் விதமாகக் கணவன் மறுமணம் புரிந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு அவன் மொழி கேட்டுப் பணிந்து நடத்தலும் மனைவியின் இன்றியமையாத கடமையாகவும் விளங்கியுள்ளது.

     

    வரும்                விருந்தினரை           வரவேற்று   உபசரித்து,    சுற்றத்தினருக்கு    வேண்டுவன அளித்துப் பாதுகாப்புச் செய்தலும் தலையாய பிறபொறுப்புகளாகவும் கடமைகளாகவும் அமைந்திருக்கின்றன.

     

    “அவன்  சோர்வு  காத்தல்  கடனெனப்  படுதலின்

    மகன் தாய்    உயர்பும்          தன்      உயர்பாகும்

    செல்வன்       பணி   மொழி              இயல்                பாகலான”(தொல்.             நூற்.   1120)

     

    இளையவர்கள் தடம்மாறும் போது அவர்கள் நல்வழிப்படுத்துவதற்காகத் தேவையான அறிவுரைகளைப் பகர்தலும் கடிந்து திருந்துதலும் செவிலித்தாயின் கடமைகளாக            இருந்துள்ளன.          அறிவுடைய               சான்றோர்     போல                அவள் ஆலோசனையையும் தண்டனையையும் வழங்கி அதிகாரி போலவும் செயல் பட்டிருக்கிறாள்.

     

    “விருந்து  புறந்தருதலும்  சுற்றம்  ஓம்பலும்

    பிறவும்            அன்ன              கிழவோள்    மாண்புகள்”(தொல்.          நூற்.   1098-3)

    “கழிவினும்  வரவினும்  நிகழ்வினும்  வழிகொள

    நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரியவாகும் என்ப”(தொல். 1099)

     

    என்ற தொல்காப்பியர்       தம்       கூற்றால்       அந்நிலை      நமக்கு              நன்றாகப்                பெறப்படுகின்றது.

     

    “அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின் மகன் தாய் உயர்வும் தன் உயர்பாகும்

    செல்வன்       பணிமொழி  இயல்பாகலான”(தொல்.             நூற்.1120)

    “விருந்து  புறந்தருதலும்  சுற்றம் ஓம்பலும்

    பிறவும்     அன்ன              கிழவோள்    மாண்புகள்”(தொல்.          நூற்.1098-3)

     

    அகவாழ்வில் மட்டுமல்லாது புறவாழ்வின் போது கணவனுடன் காத்து நின்றிருக்கின்றாள். போரில் புண்பட வந்த கணவனின் புண் ஆறும்பொருட்டுப் பேய் அணு அவனைத் துன்புறுத்தாதவாறு பாதுகாத்தும் வந்திருக்கிறாள். போர் என்பது அக்கால வழக்கெனின் போரின் போது ஏற்படும் இத்தகு நிகழ்வுகளும் அவளுக்குக்

     

    கூடுதலான வழக்கமான கடமைகளாகவே அமைந்து இருக்கக் கூடும் என்பது தெளிவு.

     

    “இன்நகை  மனைவி  பேஎய்  புண்ணோன்

    நுண்ணுதல்                கடிந்த               தொடாக்         காஞ்சியும்”(தொல்.          நூற்.   1025-10-11)

     

    அன்று மனைவியர்தன் கணவனுக்கு ஒரு உளவியல் அறிந்த மருத்துவரைப் போலவே செயல்பட்டிருக்கிறாள். அன்று வீட்டு மருத்துவத்தில் பெண்கள் சிறந்து கைதேர்ந்தும் விளங்கியுள்ளனர்.

     

    மனிதனின் இயல்புணர்வு, அன்றாடம் பசியெடுத்தல் சாப்பிடுவது போல பருவத்தே இனவிழைச்சு என்பதும் அடிப்படை என்பது அனைத்துத் தரப்பும் ஒப்புக்

     

    கொண்ட ஒன்றே. ஆனாலும் பெண் தன்னுடைய பாலுணர்வு வேட்கையைக் குறிப்பினாலோ, நேரிடையாகவோ, தன் கணவனிடம் கூறிவிட முடியுமா? எனில் கூறுதல் கூடாது என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

     

    “தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப் பிறநீர் மக்களின் அறிய ஆயிடைப்

     

    பெய்ந்நீர்         போலும்          உணர்விற்    றென்ப”(தொல்.    நூற்.1064)

     

    அதுபோலவே           திறமைகள்  பல       நிறைந்தவளாகப்   பெண இருப்பினும்                தன்னைப்

     

    பற்றிய பெருமைகளை அவள் பேசுதல் கூடாது. புகழ்மொழியாகவோ தற்புகழ்ச்சியாகவோ தன் கணவன் முன் எப்பொழுதும் கூறுதல் கூடாது. „தற்புகழ்

     

    கிளவி               கிழவன்           முற்கிளத்தல்           எத்திறத்தானும்      கிழத்திக்கில்லை.‟              (தொல்.

     

    நூற்.1126)        என்று                திட்டவட்டமாக      உரைக்கப்பட்டுள்ளது.

     

    ஆனால் இவ்விதியை ஓரிடத்தில் மாத்திரம் சிறிது தளர்த்திக் கொள்ளலாம், எப்போது என்கிறீர்களா? தலைவன் இருக்கிறானே… தலைவன்…. அவன் தனது பாலுணர்வு வேட்கையை தீர்க்கத் தலைவி இருக்கும்போதே அதனோடமையாது

     

    கூடுதலாக பரத்தையொழுக்கம் மேற்கொண்டு மீண்டும் தன் மனைவிடம் திரும்பி வருவான். அப்போது மட்டும் அவள் அவனை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தில் தற்புகழ்ச்சி பேசலாம் எனத் தளர்த்தப்பட்டது கூர்ந்து நோக்குதற்குரியது.

     

    ஒரு குற்றம் செய்த ஒருவனை அதாவது குற்றவாளியை தண்டிக்காது ஏற்றுக் கொள்ள வேண்டியவளாகப் பெண் இருக்கிறாள். எனவே அதற்;குரிய ஒரு சிறு அமைதியாக இந்த இடத்தில் அவள் தன்னைப் புகழ்ந்து கொள்ளலாமே தவிர உண்மையில் அது அவளுக்குச் சிறப்பையோ, உயர்வையோ வழங்குவதற்காக அல்ல என்பதனைக் கவனத்தில் கொள்க.

     

    தன் தலைவனுக்கு மாற்றாக எதுவும் கூறாது அவன் சொற்படி நடக்க வேண்டும். களவுக் காலத்திலேயே தொடங்கிவிடுகிறது இந்நடைமுறை. பெண் எப்பொழுது ஒரு ஆடவனைத் தன் உள்ளத்தில் கணவனாக ஏற்றுக் கொண்டாளோ அப்போதிருந்து அவன் சொற்படிதான் நடக்க வேண்டும். அவன் மனம் போலு; நடந்து அவன் விதித்த வரம்பு மீறாது அவள் போற்றி ஒழுக வேண்டியதே அறம்.

     

    “அவன்  வரம்பு  இறத்தல்  அறம்  தனக்கு  இன்மையின்”(தொல்.1066)

    என்றதன்       வழி     அறியப்            படுகிறது.

     

    இன்னுங் கூடுதலாக தலைவன் சொல்லுக்கு மாற்றாக, மறுமொழி கூறுதலும் கடியப்பட்டது. “சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாதலின்”(தொல்.1056) என்பது சமூக வழக்கே என்றதன் சான்றாகின்றது.

     

    குணவனை வரித்துக்        கொண்டவுடனேயே           தெய்வ             வழிபாட்டைக்           கூட     அவள்செய்தல்         கூடாது            அல்லது          தேவையில்லை    என்ற நிலையும்     காணப்பட்டது.

     

    “வழிபாடு  மறுத்தல்”(தொல்.1057-3)  என்ற  குறிப்பும்  காணப்படுகிறது.

     

    அப்படியே அவள் வழிபாடு செய்தாலும் தனக்குச் சிறந்த கணவன் அமைய வேண்டும் என நினைத்துச் செய்யும் வழிபாடாகவே அது இருக்கும். பெண்ணின்

     

    வாழ்க்கைச் சிறப்பு அவளைக் கொண்டவனைச் சார்ந்தே இருந்ததே தவிர அவளுக்கென சிறப்பாக இருக்கவில்லை.

     

    பெண் வீட்டிற்கு       வெளியே       வந்து செல்லக்கூடிய         பகுதிகளும் ஒரு     குறிப்பிட்ட எல்லையை வரையறையாகக் கொண்டே அமைந்திருந்தன. விரும்பிய காலத்துத்தான் தலைவனை பகற்குறி, இரவுக்குறி என வருமாறு குறியிடம் சுட்டும்

     

    உரிமை தலைவிக்கு இருந்தது. என்றாலும் அவ்விடங்கள் சமூகம் அவள் செல்லுதற்கு ஏற்கனவே அனுமதி இடங்களே அன்றி புதியன அல்ல. எனவே இதுவும் ஒரு கட்டுப்பாடுடன் கூடிய உரிமை என்றே கொள்ள முடிகிறது.

     

    கற்பு வாழ்க்கையின் போது கணவன் மனைவியைப் பிரிந்து நிற்கும் காலத்தில் எவ்வளவுதான் துன்பப்பட்டாள் அவனைத் தேடிச்செல்லும் உரிமை அவளுக்கு இல்லை.

    “உடம்பும்  உயிரும்  வாடியக்கண்ணும்

     

    என்னுற்றன               கொல்               இவையெனின்         அல்லதைக

    கிழவோற்     சேர்தல்           கிழத்திக்கில்லை”(தொல்.         1149)

     

    என்ற நூற்பா              அதனை          வழி     மொழிகிறது.

     

    அரசன் – ஆண்மகன் தன் வெற்றியைக் கொண்டாட ஊர்வலம் வருகிறான். அவ்வாறு அவன் வரும்போது அவனைக் காணும் பெண்கள் அனைவரும் அவன்பாற் வயப்படுகிறார்கள் அல்லது அவன் வசப்படுத்துகிறான். பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என எழுபருவமகளிரும் அதாவது ஆறிலிருந்து அறுபது வயதுவரை உள்ள பெண்கள் அனைவரும் அவன்பால் மயங்கினர் என்பது பெண் இழிவுக்கூறன்றி வேறு யாது?

     

    “ஊரோடு     தோற்றமும்               உரித்தென    மொழிப”(தொல்.1031)      எனக்

     

    கூறப்பட்டிருப்பதற்கு         பேதை              முதல்               பேரிளம்பெண்          ஈறாக                வருவது                என்றே

     

    இளம்பூரணர்              உரை  செய்துள்ளார்.            ஊரோடு          தோற்றமும்               பரத்தையர்க்கன்றிக்

     

    குலமகளிர்க்குக்     கூறப்படாது                என்று                நச்சினார்க்கினியர்                உரை  அமைதி

     

    காட்டியிருக்கிறார். என்றாலும் மாதத்தில் இழிவு படுத்தப்பட்டது என்னவோ பெண்மைதான்!

    ஆண்  தன்      உடல்பசி        தணிக்க           பரத்தையை                நாடிச் சென்றாலும்

     

    மக்கட்பேற்றிற்காக கருக்கொள்ளும் வாய்ப்மைந்த நாட்களில் அவன் தன்மனைவியைக் கூடுதற்கு வந்துவிடவேண்டும் அல்லது தன் மனைவியை விட்டுப் பிரிவாதிருக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறான். இதனை

     

    “பூப்பின்  புறப்பாடு  ஈராறு  நாளும்

    நீத்தகன்று    உறையார்     என்மனார்     புலவர்

    பரத்தையிற்                பிரிந்த               காலையான”(தொல்.      நூற்.1133)

     

    எனும் நூற்பா விளக்கி நிற்கின்றது. இங்கு பெண்ணின் மன உணர்வுகள் சிறுமைப் படுத்தப்பட்டு பிள்ளைப் பேற்றிற்காகவே பெண் என்று வலியுறுத்தி உதாசினப் படுத்தப்பட்டிருப்பதையே காண முடிகிறது.

     

    தொல்காப்பிய காலத்திலும் பெண்கள் ஆண்களால் களவொழுக்கத்தின்பால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். “பொய் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப”(தொல்.1091) என்றதனாற்; பெற முடிகிறது.

     

    பெண் ஒருவனை   உள்ளத்தால்               நினைத்த       மாத்திரத்திலே

    கற்பொழுக்கத்தினைப் பேண வேண்டும். அச்சம், மடம், நாணம் இவற்றைத் தவறாதிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு ஆண் இவ்வரையறைகளைப் பின்பற்ற வேண்டும் வலியுறுத்தப்படாததாலோ அல்லது புறக்கணித்ததாலோ பெண்ணிற்குத்தான் ஏமாற்றப்பட்ட அவலநிலை கிட்டியது ஆண்மகனைப் பழித்துரைக்கப் “பேடி” என்று பெண்மையாளனாக ஏசுதலும் பெண் தாழ்வாக நடத்தியும், கருதப்பட்டும் வந்தால் என்பதைத்தானே காட்டுகிறது?தொல்காப்பியத்தில் பெண்ணைக் குறித்த சொல்லாடல்களாக பெண், பெண்டிர், பெண்டு, பெண்மகள், மகடூ, மகள், மாதர் முதலியன பொது நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

     

    எங்கை, காதலி, காமக்கிழத்தி, கிழத்தி, கிழவோள், கிழவி, செவிலி, தோழி, பெண்டாட்டி, மனையோள், மனைவி என்பன உறவுநிலைச் சுட்டுகள்.

    பரத்தை, விறலி என்பன தொழில் பற்றிய விளிகள். இச்சொற்களுள்ளும் குலப்பிறப்பு, பொருளாதார நிலை என பெண்ணினத்திற்குள்ளேயே வேறுபாடுகளும் அதன் பொருட்டு எழுந்த ஏற்றத்தாழ்வுகளும் பற்றி அறிய முடிகின்றது.

     

    மொத்தத்தில் தொல்காப்பியர் காட்டும் பெண் புற உலகில் குறிப்பிடத்தக்க சிறப்புகள் ஏதும் இல்லாத, அக வாழ்வில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஆண்மகனைச் சார்ந்த வாழ்க்கையையே மேற்கொண்டிருக்கிறாள் என உறுதியாகச் சொல்லத் தொல்காப்பியத்துள் சான்றுகள் ஏராளம் காணக்கிடைக்கின்றன.

     

    தொல்காப்பியப்       பெண்மை

    ஆண்சார்புப் பெண்மையே!

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • தாகம் ……

    ஆ. செந்தில் குமார்.

     

     

     

     

     

     

     

     

     

    ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பேயே

    நீராதாரத்தைப் பாதுகாக்க அல்லும்பகலும்

    பாராதுழைத்து அழகியவோர் கல்லணையை

    பார்போற்ற கட்டினான் கரிகாலன்!

     

    இத்தகு வரலாறு நமக்கிருந்தும்

    மெத்தனப்போக்காய் வாழ்ந்ததனால் திணை

    யத்தனையளவு நீருக்கும் நித்தம்

    எத்தனை எத்தனை போராட்டம்!

     

    தான் வாழ்ந்தால் போதுமென்று

    எண்ணுமிம்ம(மா)க்களாலே கழிவுகள் கலக்கும்

    தேன்சுவை நீர்நிலைக ளெல்லாம்

    வீணில் போவது அவலமன்றோ!

     

    பொழிகின்ற வான்மழையும் சேமிக்க

    வழியின்றி கடலில்போய் கலக்கிறது!

    விழிபிதுங்கும் பல மாசுக்களால்

    வாழ்வாதாரம் மெல்ல அழிகிறது!

     

    தடுப்பணை பலவும் கட்டிடுவோம் – நீர்

    கடலில் கலப்பதை குறைத்திடுவோம்!

    ஏரி குளங்கள் அனைத்தையுமே

    தூர்வாரி நீரை சேமிப்போம்!

     

    நாடெங்கும் மரங்களை நட்டிடுவோம்!

    தடையயற்ற மழையைப் பெற்றிடுவோம்!

    வீடுகளில் மழைநீர் சேகரித்து

    நிலத்தடி நீர்மட்டம் உயர்த்திடுவோம்!

     

    நீர் சூழ்ந்த இவ்வுலகினிலே

    பருகும் நிலையில் இருக்கின்ற

    ஒரு சதவீதத்திற்கும் குறைவான

    நீரைப் பொன்னெனப்போற்றி காத்திடுவோம்!

     

     

    நீரின்றி அமையாது உலகு எனின் யார் யார்க்கும்

    வானின்றி அமையாது ஒழுக்கு

    (குறள்: 20

    Share
  • கவிதையைக் காதலி

    சித்ரப்ரியங்கா

     

    அன்னை – அன்புக் கவிதை

    ஆசான் – அறிவுக் கவிதை

    இயற்கை – எழிற் கவிதை

    ஈகை – கொடைக் கவிதை

    உழைப்பு – முதலீட்டுக் கவிதை

    ஊக்கம் – உயர்த்தும் கவிதை

    எண்ணம் – சிந்தனைக் கவிதை

    ஏற்றம் – வெற்றிக் கவிதை

    ஐயம் – தேவயற்ற கவிதை

    ஒழுக்கம் – உயிர்க் கவிதை

    ஓய்வு-அத்யாவஸ்யக் கவிதை

    இப்படி

    எங்கும் கவிதை

    எதிலும் கவிதை!

    மனிதரே கவிதை

    மனிதருள்ளும் கவிதை!

    கவிதை என்றும் இனியது

    அதைக்

    காதலித்துப் பார்த்த என் உணர்விது!

    Share
  • வரலாற்றை மீளயெழுதலும் மனித மனங்களின் இயல்புகளும் – “ஆடிப்பாவைபோல” பிரதியை முன்வைத்து…

    -செ.ர. கார்த்திக் குமரன்

    முன்னுரை

    சமகாலத் தமிழ்ப் புனைகதைப் படைப்பிலக்கியச் சூழலானது, பல்வேறு விதமான மாற்றங்களுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றது. இதற்குக் காரணம், தற்காலப் புனைகதைகளின் போக்கானது உலகளாவிய தளத்தில் விஸ்தரித்துள்ளதுதான். மரபுவழிப்பட்ட புனைகதைகளானவை குறிப்பிட்ட சட்டகத்துள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுதான் படைப்புகள் வெளிவந்துள்ளன. மேலும், இவ்வகைப் படைப்புகள் பெரும்பாலும் அடிப்படை வடிவக்கூறுகளான காலவரிசையில் கதைகூறல், தர்க்கபூர்வமான நேர்கோட்டுக் கதைபின்னல், தனித்த மொழிநடை, விவரணைகளைக் களமாகக் கொள்ளுதல் என இதன் இயங்கியல் அமைந்துள்ளது. இவற்றையெல்லாம் சமகாலப்  புனைகதைகள் தவிர்த்து, பன்முகப்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபாடான அல்லது முரண்பாடான கருத்தாக்கங்களை ஒரே சமயத்தில் இடம்பெறச் செய்வித்து, அதற்கேற்றாற்போல மாற்றுவடிவங்களையும் உண்டாக்கியுள்ளன. இதன்படி, அதன் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் உத்திகளிலும் புதுவிதமான முறைகளையும் புகுத்தியுள்ளன. புனைவுகள் வெறுமனே கற்பனைக் கதைகளை மட்டுமே வெளிக்கொணரும் என்ற நிலையினைத் தாண்டி, அரசியல், சமூகம், வரலாறு மற்றும் வாழ்வியல் சார்ந்த உளவியல் பிரச்சினைகளைச் சொல்லுக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

     

    மேலும் நவீன புனைகதைப் பிரதிகள், பெரும்பாலும் தற்காலச் சூழலுக்கேற்ப எழுதப்படுவது மட்டுமல்லாமல் அதில் சோதனைகளை நிகழ்த்தியும் உள்ளடக்கப் பிறழ்வோடும் எழுத்தாக்கம் பெறுகின்றன. இத்தகைய பிரதிகளை ஆய்வுக்கு உட்படுத்தும்போது அல்லது வாசிக்கும்போது நம் வாழ்க்கையில் அல்லது தேசத்தில் நிகழ்ந்த/நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலை விளங்கிக்கொள்ள முடிகின்றது. அந்தவகையில், தமிழவனின் ’ஆடிப்பாவைபோல’ பிரதியானது, இந்திய – தமிழகச் சூழலில் நிகழ்ந்த வரலாற்றினையும் நவீன காலத்தில் மனித உணர்வுகளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் தன் எழுத்தினூடாக வெளிப்படுத்தியுள்ளதை ஆராய்வது தற்காலத் தேவையாகும்.

    தமிழவன்

    மேற்கத்திய நவீன கோட்பாடான அமைப்பியலை 1982இல் தமிழில் அறிமுகப்படுத்தியதுடன், புனைகதைகளிலும் நவநவீனக் கோட்பாடுகளை உட்புகுத்தி, மொழியில் சோதனைகளை நிகழ்த்தியவர். இவருடைய எழுத்துகள் பெரும்பாலும் எதார்த்தத்தை மீறிய குறியீட்டுத் தன்மைகொண்ட, தர்க்கபூர்வமான விவாதங்களை எழுப்பவதோடு, சமகாலப் பிரச்சினைகளையும் பேசுகின்றன. “நம்மைச் சுற்றியுள்ள உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அம்மாற்றம் புதுச் சூழல்களைப் படைக்கிறது. உருவாகிவரும் புதுச் சூழல்களில் மனிதன் வாழ வேண்டியவனாகிறான். அந்நிலையில் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டியவனாகிறான். தனது மொழி, மனம், நாகரிகம், வரலாறு போன்றவற்றைப் பலவிதக் கேள்விகளுக்குட்படுத்துகிறான். இங்குதான் அறிவுமுறை ஒன்று மிகக் கவர்ச்சியாக உருப்பெறுவதைக் காண்கிறோம்.” என்று தமிழவன் சமகால சிந்தனைமுறைகள் மாற மாற இலக்கியங்களிலும் மாற்றம்பெறச் செய்யவேண்டும். இவற்றை அறியாமல் இருந்தால் அறிவுசார் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். மேலும், எல்லாச் சிந்தனைமுறைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை உள்வாங்கி ஆராய்ந்து, தமிழ்ச்சூழலில் புதியவகை மாற்றங்களை நிகழ்த்தவேண்டும் எனக் கூறுகிறார்.

    ஆடிப்பாவைபோல

    ஆடிப்பாவைபோல பிரதியானது, அகம், புறமாக இருப்பதோடு, மூன்று வாசிப்புமுறைகளிலும் அமைந்துள்ளது. இதில், மூன்றாவது வாசிப்புமுறையான மரபான வாசிப்பில் வாசிக்க நேர்ந்ததற்கான காரணம், அகம், புறம் என மாற்றிமாற்றி நம் வாழ்க்கை அல்லது தேசம் இயங்கிக்கொண்டிருப்பதால்தான். அகம் என்ற பகுதி நவீனகால அகவுலகில்/அகவுணர்ச்சியில் ஏற்படும் சிக்கல்களை எடுத்துரைப்பதாகவும் புறம் என்ற பகுதி மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல் அரசியல்வாதிகளின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதோடு, சமகால அரசியல் குறித்த பார்வையையும் எடுத்துரைப்பதாகவும் உள்ளது எனலாம்.

    நவீனகாலச் சூழலில் அகவுணர்ச்சிகளில் ஏற்படும் சிக்கல்கள்

    வின்சென்ட், கிருபாநிதி, காந்திமதி, ஹெலன் ஆகிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின்வழி கதை இயங்குகிறது. கல்லூரியில் படிக்கும் வின்சென்ட், காந்திமதி ஆகிய இருவருக்கும் ஏற்படும் மனஉணர்வை இதில் வெளிப்படுத்தியுள்ளார். இவ்விருவரும் மரபான பண்பாட்டுத் தன்மை கொண்டவர்களாகவும் அதனைச் சார்ந்து செயல்படுபவர்களாகவும் இருக்கின்றனர். எந்தச் சூழலிலும் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படுத்துவதில் தயக்கங்கொண்டு, தம்மைத்தாமே பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர். இத்துடன், பிறரிடம் எதார்த்தமாகவோ இயல்பாகவோ இருப்பதுபோல அவர்கள் பாவனை செய்ய நேர்கிறது. இன்றைய சூழலில் தன்மான உணர்வுக்குக் கட்டுப்பட்டு வாழும் மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதை இதன்வழி உணரமுடிகிறது. மேலும், காந்திமதியின் குடும்பச்சூழலானது தமிழ் நாகரிகம்தான் அதனை நடத்திச் செல்கிறது என இப்பிரதியின் வாயிலாகக் கூற வைக்கிறது. இவர்கள் இருவரின் எதிர்கால வாழ்க்கை குறித்து முதல் இயலிலேயே (அகம்: இயல் 1) கதைக்குள் கதையாக சந்திப்பின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். சான்றாக,

    “வின்சென்ட் தன் எதிரில் இருக்கும் கல்லூரி மாணவி எத்தகையவள் என்று அறியும் ஆசையோடு,
    “அந்தப் பாத்திரம் பற்றிச் சொல்ல நீங்க மறந்துட்டீங்க” என்றான்.

    “மங்கையர்க்கரசி பாத்திரம் பற்றி உங்களுக்குத் தெரியாதா? சொல்றேன். சிறு வயதில் ஒரு கனவு வருகிறது இவளுக்கு. அந்தக் கனவில் ஓர் இளைஞனைப் பார்க்கிறாள். பள்ளிப்படிப்பை முடித்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்து ஒரு கிராமத்துக்கு –  யாரும் துணிந்து போகாதபடி தண்ணீர் இல்லாத கிராமம் – அதுக்கு ஆசிரியராகப் போகிறாள்…” …

    …அங்கே ஒருநாள், ஓர் இளைஞன். அவன் வந்த அன்றிலிருந்து அந்த ஊர் சிறுவர்களுக்குப் பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறான். ஊரில் அவன் புகழ் பரவுகிறது. ஊர்ப் பண்ணையாரின் மகள் இவனைக் காதலிக்கிறாள். மங்கையர்க்கரசி அறிகிறாள், அந்த இளைஞன் அவள் சிறுவயதில் கனவில் கண்ட இளைஞன் என்று. இந்த நினைவு அவளை அலைக்கழிக்க ஆரம்பிக்கிறது. இந்தமாதிரி சூழ்நிலையில் ஒருநாள் கிராமத்துப் பண்ணையாரின் மகள் இவள் தங்கியிருக்கும் வீட்டிற்கு வருகிறாள். இவளிடம் தனது காதலைப் பற்றிக் கூறுகிறாள். பண்ணையாரின் மகள் சந்தோஷத்தோடு வீடு திரும்புகிறாள். மறுநாள் என்ன நடக்கிறது தெரியுமா? கிராமத்து ஆசையோடு வந்த இந்த டீச்சர் மங்கையர்க்கரசி யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருக்கிறாள்.”

    “கதை முடிந்ததா?” என்றான்.

    “ஆம்” என்ற காந்திமதி உணர்ச்சிவயப்பட்டவளாகக் காணப்பட்டாள். தான் ஏதும் கிண்டலடிக்கலாம் என்று தோன்றினாலும் அவள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் ஏதும் சொல்லி நோகடிக்கக்கூடாது என்று எண்ணியோ என்னவோ மௌனமாக இருந்தான்…

    வாயை கிளறுவோமே என்று நினைத்ததாலோ என்னவோ வின்சென்ட் காந்திமதியிடம் இப்படிக் கேட்டான்.

    “ஏன் அந்தப் பாத்திரம் பிடிக்கிறது உங்களுக்கு?”

    “தன்னுடையவன் என்று அந்த இளைஞனைப் பற்றி நினைக்காமல் இடத்தைக் காலி செய்கிறாளே. அதாவது எப்போதும் துக்கப்பட தயாராக இருக்கிறாளே.”

    “என்ன துக்கம் அவளுக்கு?” என்றும் “இது வெறும் கதைதானே” என்றும் தன் ஆள்காட்டி  விரலை வாயில் வைத்து அழுத்தியபடியே கேட்டான்.

    “முதலில் கனவில் மட்டும் கிடைப்பவன் அவன் என்று ஏற்படும் வருத்தம், துக்கம்; அதுவும் நிஜத்தில் அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தவுடன் ஏற்படும் சந்தோஷம், அவனுக்காகச் சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஒருத்தி வருகிறாள் என்றவுடன் துக்கமாகிறது. அதற்கும் அடுத்துச் சாதாரணப் பெண்களைப் போல் அல்லாமல் போட்டியிடப் போகாமல் தனக்கும் பெருமை தன் துக்கத்தைத் தானே தாங்கியபடி வாழ்வது என்று முடிவு எடுத்து ஊரைவிட்டுப் புறப்படுகிறாளே… சரி இதெல்லாம் நம்ம வாழ்க்கையில் நடக்காததா? கதைதானே என்று சாதாரணமா சொல்லீட்டிங்களே” என்றாள்.” (ஆடிப்பாவைபோல, பக்.14-16)

    எனக் காந்திமதி சொல்லும் கதையில், மங்கையர்க்கரசி என்ற இளம்பெண்ணுக்கு நிகழ்ந்ததைப் போலவே தனக்கும் இறுதியில் நிகழ்கிறது. “இதெல்லாம் நம்ம வாழ்க்கையில் நடக்காததா?” என்பது தன் அகவுணர்வின் ஏற்பட்ட சிந்தனையின் படியே, இயல்பாகச் சொல்வது போல இருந்தாலும் உண்மையில் தன் வாழ்க்கையில் நடந்துவிட்டது. இதனை இறுதியான இயலில் (இயல் 19) 25 வருடங்களுக்குப் பிறகு இருவரும் ஆம்ஸ்டர்டாம் என்ற இடத்தில்  சந்திக்க நேர்கிறபோது அவர்கள் இணைகின்றதாக முடிகிறது.

    “அடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேட்பவன்போல், “காந்தி” என்று அன்பு ததும்ப அழைத்தான்.

    “ம்” என்று மறுமொழி அவளிடமிருந்து எழுந்ததும் பழைய ஓர் இளமைக்கால ஆனந்த நினைப்பில் திளைப்பவள்போல் கேட்டான்.

    “கவிதை எழுதற பழக்கம் உண்டா?”

    “கவிதை எல்லாம் முழுசா மறந்துபோச்சு. நீங்க ஒங்க கட்டுரைகளைத் தவிர…?” என்று அவன் ஏதாவது வேறு எழுதுகிறானா என்று அறியும் நோக்கத்கோடு அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள். அவன், “ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்” என்றான் வெட்கப்பட்டுக்கொண்டே.

    அப்போது இரண்டு விமானங்கள் மெதுவாக நீலவானில் மிதந்து நிதானமாய் தூரத்தில் மறைந்தன.” (ஆடிப்பாவைபோல, ப.404) நவீன காலகட்டத்தில் இருந்தாலும் அவர்களது அகஉணர்வில் ஏற்பட்ட சிக்கல்களால் தன் அன்பை வெளிக்காட்டாமல், குறிப்பிட்ட பருவத்தில் சேரமுடியாமல் 25 வருடம் காலஇடைவெளிவிட்டு இருவரும் இணைவதை இப்பிரதி தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது. மரபான காப்பிய இலக்கண மரபு (வருபொருள் உரைத்தல்) இந்நவீன பிரதிக்கும் பொருந்தும்படி அமைந்துள்ளது.

    இதற்கு நேர்மாறான தன்மையுடன் இருக்கும் கிருபாநிதி – ஹெலன் ஆகிய இருவரும் நவீன காலத்திற்கு ஏற்றவாறு வெளிப்படையாக இருக்கின்றனர். கிண்டல், கேலி, நகைச்சுவை உணர்வு எனச் சந்தோஷமாக இயங்குகின்றனர். இவ்விருவருக்கிடையே சிக்கல்கள் ஏற்படுவதையும் இப்பிரதி சொல்கிறது. கிருபாநிதி ஹெலன் மீது கொண்ட அதீத காதல் அல்லது உடல்ரீதியான ஆசையினால் ஏற்படும் மனச்சிக்கல் காட்டப்படுகிறது. சான்றாக,

    “காதலி கடிதம் எழுதினா என்ன தப்பு?” கிண்டல் செய்ய ஆரம்பித்தான் கிருபாநிதி.

    “உன்னப் பத்தி.”

    “நான் டெய்லி ஹாஸ்டல்ல போய் நிற்கிறேன். ஹெலன் பயப்படுறா, அப்படித்தானே?”

    “ஆமாடா, ஏன் அங்கே போய் அந்தப் பொண்ணு லைஃபைக் கெடுக்கப் பார்க்கிற. நீ அவள விரும்பினா அதுக்கு இதா வழி? மெதுவா நிதானமா இரு. மெதுவா அவளிடம் பேசி, அவ அப்பா, அம்மா பற்றி எல்லாம் தெரிந்து, அதுபோல் உன் வீட்டிலயும் பேசணும் இல்லியா?” (ஆடிப்பாவைபோல, ப.162) என கிருபாநிதி இளமைக்காலச்சூழலுக்கேற்ற வேகத்துடன், தன் காதலியை அடைய அவசரப்படுவதையும், இதனால் ஹெலனுக்கு சிக்கல்கள் ஏற்படுவதையும் இது காட்டுகிறது.

    “காந்திமதியின் வீட்டுச் சம்பவங்கள் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் உடனடியாகத் தங்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று வின்சென்டும் கிருபாநிதியும் கூறினர் ஹெலனிடம். புறப்பட இருந்த சமயம், “சாரி” என்றான் கிருபாநிதி தயங்கியபடி.

    “எதுக்கு?” என்றாள் ஹெலன்.

    “டெய்லி ஆஜர் ஆனதுக்கு” என்று நகைச்சுவையை மீண்டும் புகுத்தினான் கிருபாநிதி.

    “அதுக்கல்ல எனக்குக் கோபம். தலைமுடி குலைஞ்சு, அழுக்குச் சட்டையும்  போட்டுக் கொண்டு. . .

    இப்படியா ஆட்கள் மாறணும்? ஹாஸ்டல விட்டு வெளியில் வந்தா எல்லாம் போயிடணுமா?” என்றாள் கோபமாக ஹெலன்.” (ஆடிப்பாவைபோல, பக்.173-174)

    நவீன காலச்சூழலில் இவர்கள் செய்யும் காதலானது, மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரிந்தாலும் அதைப்பற்றிய எந்தவிதக் கவலையுமில்லை. ஆனால், தன் காதலன் தன்னைப் பார்க்கவரும்போது, அவன் பிறர் பார்வைக்கு எப்போதும் மிடுக்குடன் மற்றவரைக் கவரும்வண்ணம் நவீன ஆடவனாக இருக்கவேண்டுமென்று அவள் நினைப்பது இதன்வழி தெரிகிறது. அப்படி அவன் இல்லாதபோது அவளுக்கு பெரும் மனச்சிக்கல் ஏற்படுவதை இதில் பார்க்கமுடிகிறது. இறுதியில் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட பின்னரும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நீக்குவதும் நவீன காலப் பிரச்சினையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதேபோல, வின்சென்ட்டின் நண்பன் சந்தோஷம் கீழ்சாதிக்காரனாக இருப்பதால், மேல்சாதிக்காரப் பெண்ணைக் காதலித்த காரணத்தினால் கொலைச் செய்யப்படுவதும், காந்திமதியின் தந்தை விநாயகமூர்த்தி தன் மூத்தமகள் விசாலாட்சி மீது அதிக அன்பு கொண்டதால், அவருக்கு ஏற்படும் மனச்சிக்கல் குறித்தும் அவள் தற்கொலை செய்துகொண்டதால் ஏற்படும் விரக்தி குறித்தும் இப்பிரதி தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறாக, அகம் என்ற பகுதியில் நவீன கால வாழ்க்கையில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நிகழும் அகஉணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். மனித மனங்கள் இயங்கும் சூழலை, தத்துவார்த்தத் தன்மையில் தன் எழுத்தினூடாக சித்திரித்துள்ளார் தமிழவன்.

    மாணவர்களின் போராட்டமும் அரசியல்வாதிகள் செய்யும் அரசியலும்

    அமரன், ஜி.கே.சாமி, நெல்சன், சபாஷ் ராஜ், ஜோசப், ரவி ஆகிய கதாபாத்திரங்களுடன் பொன்வண்ணன் – மலர்க்கொடி, வான்மீகநாதன் – காமாட்சி எம்.எல்.ஏ., சுரேந்திரன், அரங்கநாதன், காம்ரேட் சட்டர்ஜி, வெங்கட்ராமன், கம்யூனிஸ்ட் சுப்ரமணியம், தர்மலிங்கம் ஆகிய அரசியல் கதாபாத்திரங்களையும் கொண்டு புறம் என்னும் பகுதியின் கதை இயங்குகிறது. இதில் அமரன் மற்றும் ஜி.கே.சாமி ஆகிய இருமாணவர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டே இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழ், ஆங்கிலம் நன்கு கற்றதுடன், மேடைகளில் இந்தி எதிர்ப்பு குறித்துத் திறமையுடன் சொற்பொழிவாற்றுகிறான். இருப்பினும், மாணவர்களுக்குத் தலைமையாக இருப்பதால் அரசியலில் அவனுக்கு இடம் கிடைப்பதில்லை. ஆனால், ஜி.கே.சாமி பேச்சுத்திறனில் திறமை சற்றுக் குறைந்திருந்தாலும் அரசியல் தொடர்புடன் இயங்குவதால், அவன் அரசியலில் எளிதாக இடம்பிடித்து விடுகிறான். இம்மாணவ அமைப்புடன் சபாஷ் ராஜ் என்னும் பேராசிரியர், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் மாணவர்களை வைத்து அரசியல் செய்வதையும் எடுத்துரைக்கிறார். இன்றைய சூழலில் மாணவர்கள் அரசியலுக்கு வரத் தயங்குகின்ற அல்லது மறுக்கின்ற வேளையில், நம் முந்தைய வரலாற்றில், மாணவர்கள் போராட்டத்தின் வாயிலாக மேற்கொண்ட அரசியலை இப்பிரதி எடுத்துக்காட்டுகிறது.

    “நகரின் இந்தி எதிர்ப்பு வரலாறு – என்றைக்கும் அடிமைகளைப் போல் அடங்கி ஒடுங்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் கத்தோலிக்கக் கல்லூரி இக்னேஷியஸ் ஹாஸ்டல் மாணவர்களைக்கூட கோபங்கொள்ளச் செய்து – கறுப்புக் கொடி கட்ட வைத்ததோ – அன்றே தொடங்கி விட்டது…!

    …சொற்பொழிவாளன் அமரன், பேச்சில் கொச்சைப் பேச்சுப் பாணியைத் திடீரென்று புகுத்தினான்.

    “ஏங்க, முட்டாள்ள இரண்டு வகை உண்டு” என்று சொல்லி ஜனக்கூட்டத்தை வலது கையால் சுட்டியபடியே நின்றான். முழுக்கைச் சட்டை அவனை அவனுக்கே ஒரு தீர்க்கதரிசி போல் காட்டியது. ஜனக்கூட்டம் அமைதியானது. முட்டாள்களின் அந்த இரண்டு வகைமையைப் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வாய்பிளந்து நிற்கும் ஜனக்கூட்டம்.

    “ஒருத்தன் அடிமுட்டாள்…”

    என்று நிறுத்தினான். பத்து செகண்டுகள் இடைவெளிவிட்டு அடுத்து, முகத்தைக் கைக்குட்டையில் துடைத்துவிட்டுச் சொன்னான். கூட்டத்தில் அப்படி ஒரு மௌனம்.

    “இன்னொருத்தன் வடிகட்டின முட்டாள்…”

    ஜனங்கள் சிரிக்கத் தயாரானார்கள். அவர்களைத் தடுக்க கையைக் காட்டிவிட்டுத் தொடர்ந்தான்.

    “இந்த இரண்டும் சேர்ந்த ஒரு முட்டாள் இருக்கான். யாரு சொல்லுங்க…?”

    என்று ஜனக்கூட்டத்தைப் பார்த்தான். அவர்கள் ஒரு நிமிடம் விழித்தார்கள். எங்கே சொல்லிவிடுவார்களோ என்று கணநேரத்தில் உணர்ந்த பேச்சாளர் அமரன், இரண்டு கைகளையும் வானத்தில் உயர்த்தி, பின் அதே விசையில் கீழே இறக்கும் தறுவாயில் இப்படிச் சொன்னான்.

    “அவன்…

    தான்…

    நமது…

    முதலமைச்சர்…”

    ‘ஓ’ என்ற கூக்குரலும் கைத்தட்டலும் வானத்தைப் பிளந்தன.” (ஆடிப்பாவைபோல, பக்.46-47) என அமரனின் சொற்பொழிவு, அன்றைய அரசியல் தலைவர்களின் நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கிறது. மாணவர்கள் வெகுஜன மக்களோடு இயங்கும்போது, மேடையேறி பேசும்போது யாருக்கும் பயப்படாமல் இருக்கின்ற சூழலை இது எடுத்துக்காட்டுகிறது.

    “பின்பு பேச்சு மொழிப்போர் பற்றித் திரும்பியது. சபாஷ்ராஜ் மிகவும் தெளிவாகக் கூறினார்.

    “இன்றைக்கு நடந்துகொண்டிருப்பது ஒரு சரியான போராட்டம். ஆனால் மாணவர்களுக்கு அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள போதிய பலம் இல்லை. தியாகம் செய்வது அவர்கள்; தீக்குளிப்பது அவர்கள். உங்களுக்குச் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று தெரியாது என்று நினைக்கிறேன். ஒரு ஸ்கூல் பாலகன் சமீபத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து செத்துப் போனான்…” …

    “எரிந்து கொண்டிருந்த பாலகனைக் காப்பாற்றாமல் ஒரு கட்சிக்காரன் என்ன செய்தான் தெரியுமா? எரிந்து கொண்டிருக்கும் தீயில் ஒரு தாளை நுழைத்து, பாதி எரிந்த தாளை எடுத்துப் பத்திரப்படுத்தினான். பின்பு அந்தத் தாள் வேறு ஒரு சிறுவனின் கையில் எழுதப்பட்டது. பத்திரிகைகளில் எல்லாம் செய்தி! என்ன தெரியுமா? தங்கள் கட்சியைச் சார்ந்த சிறுவன் ஒருவனின் தியாகம் என்று, உண்மை திரிக்கப்பட்டது. அந்தச் சிறுவன் தீ வைப்பதற்கு முன் எழுதிய கடிதமாம். அவன் அந்தக் கட்சியைச் சார்ந்தவன் என்று எழுதி வைத்திருந்தானாம்.

    “ஃபிராட்… ஃபிராட்…” என்று ஆங்கிலத்தில் சொல்லி நிறுத்தினான்.” (பக்.52-53) அரசியல்வாதிகள் மாணவர்களைத் தங்களுக்கு ஏதுவாக பயன்படுத்திக்கொண்டு அரசியல் செய்வதை இது எடுத்துக்காட்டுகிறது. மாணவர்கள் தாங்கள் நடத்தும் உண்மையான போராட்டத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அதில் பலன்தேடும் கட்சிகளை நம்பி நம்நாடு இயங்குவதைத் தமிழவன் இதில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக ஒரு போராட்டத்தினைக்கூடத் திசைதிருப்பி விடுவதைச் சமகாலச் சூழலில் பதிவுசெய்வதன் வாயிலாக நம் தேசத்தின் மோசடி நிலையை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

    இதேபோல, நாட்டை ஆளும் ஆளுங்கட்சியினர் தங்களுடைய பதவிகளை நிலைநிறுத்திக்கொள்ளச் செய்யும் அரசியலையும் (282 – 283) எதிர்க்கட்சியினர் பதவியைப்பெறச் செய்யும் அரசியலையும் (272) அழுத்தமாகத் தன் எழுத்தினூடாகப் பதிவு செய்துள்ளார். இத்துடன், வருங்கால அரசியல்நிலை குறித்தும் குறிப்பிடுகிறார்.

    “வான்மீகநாதன்  புதிய ஆட்சியில் முக்கியமான ஆள். நான் அவருடைய காரியதரிசி. படிப்பு வரல்ல. வேற வழி. மாசம்தோறும் முந்நூறு ரூபா வந்திருதில்ல. அப்பா டிரான்ஸ்போர்ட் கம்பெனியிலிருந்து ரிட்டையர் ஆன பின்பு வான்மீகநாதனுடைய ஆபீஸில் வேலை போட்டுக் குடுத்தாரு. அவரும் நல்லா சம்பாதிக்கிறாரு. மெடிக்கல் ஸீட், இன்ஜினீயரியங்க் சீட் எல்லாம் ஊர் பக்கத்தில் உள்ளவங்க இவர்கிட்டதான் வர்றாங்க. எல்லாம் எனக்குத் தெரியும். ரயில்வே ட்ராக் பக்கத்தில பத்து ஏக்கர் இரண்டு துண்டா இரண்டு ஆட்கள் கிட்டயிருந்து வாங்கினாரு. இடையில் ரயில்வே நிலம். அதான் அந்த நிலத்தை வளைச்சு ஒட்டுமொத்தமா பெரிய நிலம் வான்மீகநாதனுக்கு வரும். எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் தான் இந்தியாவில பெரிய பிஸினஸாம். மனைகளாக வருமாமே.”

    “ஆஹா, ஊரில இருக்கிற அயோக்கியன் எல்லாம் எதிர்கால இந்தியா பற்றிச் சரியாகக் கணிக்கிறான் பாரு. சரி, பொன்வண்ணன் எப்படி?”

    “பொன்வண்ணன்தான் வான்மீகநாதனுக்குப் பெரிய நண்பன். அவனும் மனைவி பெயரிலும் பள்ளிக்குப் போகிற குழந்தைகள் பெயரிலும் நிறைய நிலம் வாங்கியிருக்கிறான். கட்சிக்குள்ளே வான்மீகநாதனைக் கொண்டுவந்ததில் பெரிய பங்கு பொன்வண்ணனுக்கு ஸார்.”

    “பின்ன இருக்காதா? வேறு யாரையாவது மேல வரவிடாமலிருப்பதற்காகப் பழனி செய்திருப்பான். அவனும் இந்த அயோக்கிய கும்பலச் சேர்ந்தவன்தானே.” ” (ப.365) அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் தங்களுக்கு வேண்டிய வகையில் பொருளாதார ரீதியில் உயர்த்திக்கொள்ள, ஆட்சியில் இருந்தபோது செய்யும் செயல்களைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும், ஆளுங்கட்சியினரான வான்மீகநாதன், எதிர்கட்சியைச் சார்ந்த பொன்வண்ணனிடம் மறைமுகமாக நட்பு பாராட்டி இருப்பதும், இதனால் இவர்கள் இருவர் கையில்தான் ஆட்சியிருக்க வேண்டும் என்ற தந்திரமும் இதன்வழி வெளிப்படுகிறது. நாட்டின் தேவையையும் பொதுமக்களின் தேவையையும் நிறைவேற்றத் தவறிய ஆட்சியாளர்கள், தம் சுயநலத்தினையே பெரிதாகக் கருதிச் செயல்படுவது அப்பட்டமாக எடுத்தாளப்பட்டுள்ளது. சமகால அரசியல் சூழலும் தற்சமயம் இப்படிப்பட்ட நிலையைத்தான் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத் தமிழவன் தகுந்த சூழலில் இப்பிரதியினைப் படைத்துள்ளார்.

    முடிவுரை

    தமிழவன் படைத்த இந்நாவலின் பெயருக்கேற்றபடி, இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் அறிவு பெற்றிருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்திருந்தாலும் பிறர் ஆட்டிவைக்க, ஆடும் பொம்மைகளாகவே சமகாலத்திலும் இயங்குவதைப் புனைவின்வழி எடுத்துரைத்துள்ளார். இன்றைய நவீன ஊடகங்களாலும் ஸ்மார்ட் ஃபோன் போன்ற பல பொருட்களாலும் நாம் சிந்தனை ரீதியான அடிமைப்பட்டு இருக்கின்ற சூழலில், இப்பிரதி, வரலாற்றினை மீளயெழுதி, எதிர்ப்புநிலை சார்ந்த சிந்தனையைக் கோரும் விதமாக படைக்கப்பட்டுள்ளது. மனித மனங்களின் உணர்வுகள் மற்றும் தேசியத்தின் அரசியலின் இயங்குநிலைகள் ஆகியவற்றைக் கூறுவதன் வாயிலாக உடல்ரீதியாக நாம் எதிர்காலத்தில் அடிமையாகிவிடக் கூடாது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

    இவருடைய பிற பிரதிகளில் உள்ளதைப் போன்ற மொழிநடை, உத்திமுறை, குறியீட்டுத் தன்மை போன்றவைகள் இதில் இல்லாமலிருந்தாலும், இப்பிரதியின் எதார்த்த மொழியானது, 21ஆம் நூற்றாண்டில் இருக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் வாசித்துச் செயல்படவேண்டிய பிரதியாகவும் உள்ளது எனலாம்.

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி
    மதுரை – 625 009
    செல் : 99443 77853,
    70924 44163.

     

    Share
  • விடியலை நோக்கிப் புறப்படு

    ஆ. செந்தில் குமார்.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    இளைஞனே!
    உன்னில் உறங்கும் ஆற்றல் உலகளவு -அது
    உன்னுள் உறங்கிப் பயனென்ன?

    உன்னை
    நசுக்கும் வலியிங்கு ஏராளம் – அதை
    நறுக்கிக் களைந்து வெளியே வா!

    உன்
    நாடு நலிந்து மெலிந்து போவதனை
    வேடிக்கை பார்த்து நிற்காதே!

    உன்
    உள்ளத்தின் அச்சத்தை அறவே தவிர்!
    உலகாளும் வல்லமை உனக்குண்டு!

    நீ
    சோம்பித் தூங்கி கழித்தது போதும்!
    சொக்கும் கண்ணைத் திற!

    நீ
    விட்டில் பூச்சியாய் வீழ்ந்தது போதும்!
    வீரு கொண்டு எழு!

    இளைஞனே!
    விடியலை நோக்கிப் புறப்படு – உலகு
    வியக்கும் வண்ணம் செயல்படு!!

    Share