Author: கிரேசி மோகன்

  • திருமால் திருப்புகழ் (74)

     

    கிரேசி மோகன்

    The Udupi Krishna series. #krishnafortoday - keshav
    The Udupi Krishna series. #krishnafortoday – keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ‘’கண்ணன் காப்பு’’
    —————————–

     

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கஷ்டம் கலைந்திடும், நஷ்டம் நகர்ந்திடும்,
    இஷ்டம் நமக்கு இணங்கிடும், – அஷ்டமி
    ரோகினியில் தோன்றிய, லேகிய வண்ணனின்,
    காகநிறக் காலிரெண்டும் காப்பு!

     
    தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை,
    வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்,-பூக்களிட்டு
    அப்பம் , அதிரசம், முப்பழங்கள், அப்பயல்முன்
    கப்பம்நீ கட்டிடக் காப்பு!

    மாதவனை, கேசவனை, மாலொழிய வந்தவனை,
    ஆதவனை, ஆயர் அணிவிளக்கை, -யாதவனை,
    ரோகினி அஷ்டமியாய், ஆகிய கீதையை,
    காகீ எனக்கத்தக் காப்பு!

    நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்,
    கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா,-முடிமிசையில்
    அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல.
    குப்பம் நுழைந்தவனே காப்பு!

    கட்டு மயிற்பீலி, கொண்டை யிலணிந்து,
    பட்டுப்பீ தாம்பரம், பூண்டாவை, -வெட்ட
    வெளிதனில், மேய்க்க வேய்ங்குழல் ஊதும்,
    களிமிகு கண்ணனே காப்பு!!

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_04_01_archive.html

    Share
  • திருமால் திருப்புகழ் (73)

    கிரேசி மோகன்

     

    கண்ணன் திருப்புகழ்….
    ————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    ——————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    “ஈவிரக்க நெஞ்சுக்(கு) இறைத்திடும் பக்திநீர்,
    நாவிறக்க மாய்வாய்ப்பண் ணாகமாறி, – போயிறக்கம்
    விண்நனைய மண்ணில் விழலுக்கும் பாயும்காண்;
    கண்ணனை நெஞ்சே கருது!

    “ஆயர் சகாயன் ,அலேக்நிரஞ்சன், மண்தின்று,
    தாயார் திகைத்திட தன்பவள -வாய்க்குள்ளே,
    வண்ணமதைக் காட்டி, விசுவரூபக் காட்சிதந்த,
    கண்ணனை நெஞ்சே கருது”

    ’’பெண்ணழகைக் கண்டு பரவசிக்கும் போதினில்,
    கண்ணைப் பறிக்கின்ற காட்சியில், -உன்இடர்
    புண்ணை சொறிகையில், பேரின்ப சாட்சியாய்
    கண்ணனை நெஞ்சே கருது’’….

    “பெண்ணொருத்தி பின்னலை பாரதிப் பிள்ளையவன்
    பின்நின்(று) இழுக்கையில் பிய்ந்ததால், -மின்னலாய்,
    சென்னியில் சூடி சிருங்கார கோலமுற்ற,
    கண்ணனை நெஞ்சே கருது”….

    “ஆடா(து) அசங்காது, வாடாது வற்றாது,
    மாடோ, மனிதனோ, மாமுனியோ ,-கூடாமல்
    எண்ணி எதிர்போர்க்கும், முன்னம் குதித்திடும்,
    கண்ணனை நெஞ்சே கருது”

    கூட்டுக் குடும்பமாய் காட்ஷி தருகின்ற,
    பாட்டுக்(கு) ஒருகவி பாரதியின் -வீட்டினுக்கு,
    அண்மையில் நிற்கின்ற, அல்லியூர் சாரதியை,
    கண்ணனை நெஞ்சே கருது!!

    ——————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி

    Share
  • திருமால் திருப்புகழ் (72)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    ——————————————————-

    ஓவியம்  : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

     

    காதுகண்வாய் மூக்குடல், பூதப் புலனைந்தும்,
    ஏது உனக்கென்று எண்ணினையோ, – சூதிலன்று
    பெண்ணவள் பாஞ்சாலி இன்னல் களைந்தவனை
    கண்ணனை நெஞ்சே கருது….

    கரம்தயிர் வெண்ணை கவர்ந்தவர் வீட்டில்,
    அறம்பொருள் இன்பம் அனைத்தும் – தரும்பரம்,
    பின்னிவைகள் எச்சமுற, முன்னிருத்தும் மோட்ஷமதை,
    கண்ணனை நெஞ்சே கருது….

    கிளரொளி இன்பம் இளமையில் தங்கும்,
    தளரளி மூப்பதில் தேயும், – மலரளித்(து),
    உன்னகத்தை பக்தி உணர்வால் உருமாற்ற,
    கண்ணனை நெஞ்சே கருது….

    தூய யமுனைத் துறைவனை, நந்தகோபன்
    ஆயர் குலம்குதித்த ஆரமுதை, -சேயாக,
    இன்னமுதாய் பேய்ச்சி இருமுலை உண்டவனை,
    கண்ணனை நெஞ்சே கருது….

     
    “நாணல், யமுனா நதிநெல் நிமிர்தலாய்,
    கூனல் அர்ஜுனரை கீதையால்,-நாணதிர,
    விண்ணென்று காண்டீப வில்லெடுக்க வைத்தவனை,
    கண்ணனை நெஞ்சே கருது”!!

    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி

    Share
  • திருமால் திருப்புகழ் (71)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ் (வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    —————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    பீலி மயில்கொண்டை, பீதாம் பரஆடை
    காலிகள் மேய்க்கும் கழியுற்றான் -போலிருந்தும்
    எண்ணுதலுக்(கு) எட்டானை, கண்ணுதலான் மைத்துனனை
    கண்ணனை நெஞ்சே கருது….

    சொர்ணமாய் வீசிடும் சூரிய னால்காலம்
    நிர்ணயம் ஆகிடும், நீகும்ப -கர்ணனாய்
    திண்ணமாய்த் தூங்காமல் தூங்கி சுகம்காண
    கண்ணனை நெஞ்சே கருது….

    படுத்த(து) அரவணைமேல், பாண்டவர்க்காய் அன்று
    தொடுத்தது பாரதத் தொல்போர் -கொடுத்தது
    எண்ணிலா செல்வத்தை ஏழை குசேலனுக்கு
    கண்ணனை நெஞ்சே கருது….

    ஓதநீர் வண்ணத்தை ,யாதவ சின்னத்தை
    ஓதுமறை நான்குமுரை உன்னதத்தை -பேதமற
    என்னவென்று சொல்ல எழுத்துக்(கு) அகப்படாத
    கண்ணனை நெஞ்சே கருது….

    எண்திசையை ஏழ்கடலை விண்முகடை விஸ்வத்தை
    கண்ணசைவில் பக்தரைக் காத்திட -முன்னசையும்
    அன்னத்தன் வீற்ற அரவிந்த நாபியோன்
    கண்ணனை நெஞ்சே கருது!!

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2013_09_01_archive.html

     

    Share
  • திருமால் திருப்புகழ் (70)

     

    கிரேசி மோகன்

     

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

     

    ”கண்ணனை  நெஞ்சே கருது’’
    ——————————————–

    Tribhang Krishna - Keshav
    Tribhang Krishna – Keshav

    கடவுள் மடியில் கிடக்கும் வரையில்,
    அட!உள் வெளியேது அஞ்சேல்! -கடலுள்ளே,
    பன்னகத்தில் யோகம் பயிலும் பரம்பொருளாம்,
    கன்ணனை நெஞ்சே கருது….

    சிந்தை வெளிகடந்து, மந்தை வெளிபுகுந்து,
    கந்தல் உடையணிந்து, கன்றுகளைத் – தந்தையாய்,
    அன்னையாய்க் காத்து, அறுகம் அளித்திடும்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    கும்பிடுதல் கர்மம், குதூகலம் கோவிந்தன்,
    தென்படுதல் ஆத்ம தரிசனம், – பண்படுஇவ்,
    வண்ணமந்த, வாரிதி வண்ணனுடன் வாழ்ந்திடக்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    உன்னை அறிதல் உனக்கெதற்கு, உள்ளிருக்கும்
    பொன்னுக்(கு) அணிகலப் போர்வையே, – தொன்னையில்,
    வெண்ணெய் இருக்க, விழுதுநெய்க்(கு) ஏங்குவதேன்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    கழல்தொழுது கைகூப்பி கும்பிட்டு, செய்யும்
    தொழிலுறங்கும் தென்னரங்க தேவன் – சுழல்திகிரி,
    மின்னனைய நந்தகி, வெண்ணிற சங்குற்ற,
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….

    ———————————————————————————————————–

    படத்திற்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_11_01_archive.html

    Share
  • திருமால் திருப்புகழ் (69)

     

    கிரேசி மோகன்
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–

    Dancing to the rhythm of churning, Krishna, who churned the ocean for Amrita, asks for a handful of butter.  Navaneeta Natyam- acrylic on canvas. Keshav
    Dancing to the rhythm of churning, Krishna, who churned the ocean for Amrita, asks for a handful of butter. Navaneeta Natyam- acrylic on canvas. Keshav

    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    —————————————————–

    chocoKrishna blue keshav
    chocoKrishna blue keshav

    நானாக நம்முள்ளே, ஆணாகப் பெண்ணாகத்,
    தானாகத் தோன்றிடும் தத்துவத்தை, – மீனாக,
    எண்ணற்ற வண்ணமாய், மண்காக்க வந்தவனை,
    கண்ணனை நெஞ்சே கருது….

    ஆனந்த சாகரம், ஆத்ம தரிசனம்,
    நானந்த பொய்கையில் நீந்திட – வானம்தன்,
    வண்ணனை, அன்று வரையேந்தி நின்றவனை
    கண்ணனை நெஞ்சே கருது….

    அலுப்பினில் ஆழ்ந்து, சலிப்பினில் சோர்ந்து,
    இலுப்பை மலரை இனிப்பென்(று), -உலுக்குகிறாய்.
    மண்ணினை சர்க்கரையாய் மாற்றவல்ல மாதவனை
    கண்ணனை நெஞ்சே கருது….

    எதையோ நினைந்து அதையே முனைந்து
    பதையாய்ப் பதைத்தது போதும் – கதையாக
    மன்னனுக்கு முன்னம்  முனிசுகர் போதித்த
    கண்ணனை நெஞ்சே கருது….

    குவித்த திரவியம், கொண்டதோர் சுற்றம்,
    தவித்த நிலையில்போம் தூரம் – பவித்திர
    எண்ணமுற்ற மெய்யடியார் ஏகாந்த சேர்க்கைக்கு
    கண்ணனை நெஞ்சே கருது!!

    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_11_01_archive.html

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (68)

    கிரேசி மோகன்
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-

    Krishna - Makhan chor. Oil on canvas.  Keshav
    Krishna – Makhan chor. Oil on canvas.
    Keshav

    ’’கண்ணனை நெஞ்சே கருது’’….
    ———————————————————-

    Maricha and Subahu Keshav
    Maricha and Subahu
    Keshav

    பாரீசன் வில்லொடித்து, பத்தினியாள் கைப்பிடித்து,
    மாரீச மானால் மனைபிரிந்து, -பேராசை
    மன்னனவன் லங்கேசன் மாள,வந்தோன் பின்வந்த,
    கண்ணனை நெஞ்சே கருது….

    ந்யாபகம் தொல்லை, நினைவு களோசத்ரு,
    வ்யாபகம் கர்ம வினைகளாம், -தீபமாய்,
    எண்ணத் தகளியில் ஏகாந்த நெய்யூற்றி
    கண்ணனை நெஞ்சே கருது….

    ஐயம் தகளியாய், அச்சமே நெய்யாக,
    அய்யே!நீ ஏற்றுவாய் அஞ்ஞானம், – மையிருள்
    வண்ணனை, ஞான வரதனை, வேய்ங்குழல்
    கண்ணனை நெஞ்சே கருது….

    விரலோடு வீக்கம்போல் வெற்பெடுத்(து) அன்று
    திரளோடு தாங்கி, தவிக்க -உரலோடு,
    வெண்ணையை உண்டதால், பின்னிப் பிணைந்தவனை,
    கண்ணனை நெஞ்சே கருது….

    அஞ்சுபுலன் ஓடு அதற்குள்ளே அக்கினிக்
    குஞ்சொளிந்து கூவும் குருநாதா!, -அஞ்சன
    வண்ணனை, கீதை உரைத்தகுரு நாதனைக்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_03_01_archive.html

    Share
  • திருமால் திருப்புகழ் (67)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்….
    ——————————————-
    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    ————————————————

     

    Madhuradhipathy - oil on canvas. Let 2014 be full of Madhuram, sweetness.  கேஷவ்
    Madhuradhipathy – oil on canvas. Let 2014 be full of Madhuram, sweetness.
    கேஷவ்

    கனவு, தனைமறந்து கண்மூடும் தூக்கம்,

    நனவிவை, மூன்றிலும் நான்யார், -வினவிட,
    எண்ணவலை ஓய்ந்து, எழுந்திடும் பாற்கடல்
    கண்ணனை நெஞ்சே கருது….

    பாட்டிசைத்தக் கம்பனைக், கேட்டிசைந்து கொக்கரித்த
    மேட்ட ழகியசிங்கன் மாலோலன், -சேட்டையாய்
    பின்அணங்கு கள்சேலைப் பொய்கை பறித்தவன்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    கடல்கடைந்த போதாமை காயம் எடுத்து,
    வடவரையைத் தாங்கும் வரதன், -இடையனை,
    அண்ணனுடன் சேர்ந்தாயர் ஆநிரை மேய்த்தவனைக்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    நாடாய் விரக்தியை, கூடாய்வை ராக்கியத்தை,
    தேடாய் தெளிவான்ம தத்துவத்தை, -வாடாய்நீ,
    விண்ணகர் வைகுந்த வாய்ப்புண்டு, வேய்ங்குழல்
    கண்ணனை நெஞ்சே கருது….

    கோஹம் விசாரித்து, சோஹத்தின் சன்னிதியில்,
    நாஹமித் தேஹமில்லை நன்குணர்ந்து, -மோஹமாய்,
    பிண்ணனியில் மேயும் பசுபாசம் ஓட்டிட,
    கண்ணனை நெஞ்சே கருது

    ———————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2014_01_01_archive.html

    Share
  • திருமால் திருப்புகழ் (66)

     

     

    கிரேசி மோகன்

    acrylic on canvas by Keshav
    acrylic on canvas by Keshav

    கண்ணன் திருப்புகழ் (வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    —————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    சூர்பணகை ஆனாலும், சுந்தரி ஆனாலும்,
    பார்ப்பன எல்லாம் பரம்பொருளே – தாற்பரியம்
    தன்னை உணர்ந்து தவறா(து) இருந்திட,
    கண்ணனை நெஞ்சே கருது!

    சதிரிள மாதர் சகவாச தோஷம்,
    உதிரிலைக் காலம் உணர்வாய் – மதிளரங்க
    மன்னனை, மாயனை, மண்புகுந்த ஆயனை,
    கண்ணனை நெஞ்சே கருது!

    பண்டரி எங்குளான், பாலன் புகன்றிட,
    விண்டதிரத் தூண்வாய் வெளிப்பட்ட – பண்டரியில்
    தன்நினைவு தப்பத் துதிப்போர்க்(கு) அருள்புரியும்,
    கண்ணனை நெஞ்சே கருது!

    பட்டதெல்லாம் பாழாகும், தொட்டதெல்லாம் தூளாகும்
    எட்டிய(து) ஏதும்வாய்க்(கு) எட்டாது – அட்டமியில்
    விண்ணகன்று தாய்மாமன் வெஞ்சிறைக்கு வந்தவனை
    கண்ணனை நெஞ்சே கருது!

    வானிருந்த, கீழிறங்கி தூணிருந்த, தந்தவர
    வானிருந்த, தாம்பு வடமிருந்த – மாவிருந்தை
    உண்ணுதற்(கு) ஆகா(து), உறியேறும் ஆகாயக்
    கண்ணனை நெஞ்சே கருது!!
    ————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2011_12_01_archive.html

    Share
  • திருமால் திருப்புகழ் (65)

    கிரேசி மோகன்
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    ——————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    ———————————————————

    பூமங்கை நாயகனை, பாமங்கை ஆண்டாள்மேல்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    காமங்கொள் காதலனைக், கள்வனை – ஜாமங்கொள்
    வண்ணனை ஆயிரம் வாரணமாய் வந்தவனை
    கண்ணனை நெஞ்சே கருது!

    வாதாடி வம்படித்து வாழ்ந்ததெலாம் வையமெனும்
    தீதாடி பிம்பத் திருக்கன்றோ – சூதாடி
    தன்னனைத்தும் தோற்ற தருமர்க்(கு) உதவிய
    கண்ணனை நெஞ்சே கருது!

    ஆழியை பூமியை நாழிகை நேரத்தில்
    ஊழியில் உண்டுமிழ்ந்த உத்தமனை – தாழியுள்
    வெண்ணையை தான்வளர்ந்த மண்ணையும் உண்ணவரும்
    கண்ணனை நெஞ்சே கருது!

    விடையடக்கி பின்னை இடைபிடித்து கீதை
    விடையளித்தான் வாழும் வகைக்கு – விடைகொடுக்க
    எண்ணிலா ஆசைக்கும் ஏங்கும் நினைப்புக்கும்
    கண்ணனை நெஞ்சே கருது!

    உண்ணும் சுவையும், உணவைச் செரித்திடும்
    வண்ணம் வயிறும், விழிசொருக – திண்ணையில்
    எண்ணமற சாய்ந்திடும் ஏகாந்தம் வேண்டி
    கண்ணனை நெஞ்சே கருது!!

    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2008_07_01_archive.html

    Share
  • திருமால் திருப்புகழ் (64)

     

     

    கிரேசி மோகன்
    ’’கண்ணனை நெஞ்சே கருது”….
    —————————————————–

    Mvc-008f (1)
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ——————————————————–

     

    சீதக் களபமும் ஸ்ரீவத்ஸ மச்சமும்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    போதமர் மங்கையும் பூந்துழாயும் – வாதிடும்
    வண்ணம் இடமின்றி வாய்த்தமணி மார்பனை
    கண்ணனை நெஞ்சே கருது!

    மூவடி மண்கேட்ட சேவடி பொற்சிலம்பு
    மாவலி உச்சி மவுலியில் – தீவெடிக்க
    திண்ணெனத் தாக்க திருவடி சாத்திய
    கண்ணனை நெஞ்சே கருது!

    மத்தினால் மாதாவால் மொத்துண்ட மைந்தனை
    பத்திலோர் பாகவதப் பிள்ளையை – ஒத்தனாய்
    மண்ணினைக் காக்க மகாபா ரதம்செய்த
    கண்ணனை நெஞ்சே கருது!

    தூணிருந்த பல்லியின் துண்டித்த வாலாக
    வீணகந்தை யால்வீழ்ந்து வாடுகின்றாய் – நீநெகிழ்ந்து
    அண்ணனாய் தம்பியாய் ஆன பலராமக்
    கண்ணனை நெஞ்சே கருது!

    திண்தடக்கை நீட்டி தலைகிடத்தி ஆயிரங்
    கண்படுக்கை தன்னில் களைப்பாறும் – தென்னிலங்கை
    அண்ணனைந்(து) ஈறெடுத்து,தம்பியாள தந்தராம
    கண்ணனை நெஞ்சே கருது!!

    ——————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://photos1.blogger.com/img/141/4502/1024/Mvc-008f.jpg

    Share
  • திருமால் திருப்புகழ் (63)

    கிரேசி மோகன்


    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

    நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கனைத்திடக் காமம் கலங்கும் – மணத்துழாய்
    திண்ணிய தோளில் துலங்கும், துவாபரக்
    கண்ணனை நெஞ்சே கருது!!

    காரோத வண்ணனின் பேரோத ஆயிரம்
    நீரோடை போல்தெளிவு நம்வாழ்வில் – ஆராத
    இன்னமுதை தீந்திருக் கண்ணமுதைக், கற்கண்டைக்
    கண்ணனை நெஞ்சே கருது!!

    வேறார்வம் கொள்ளாமல், ஆராப் புலனடக்கி
    நாரா யணனை நினைப்பதே – சாராம்சம்
    அந்நிலைக்குச் செல்ல அனுபூதி தந்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது!!

    சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
    இனம்புகுந்து வாழ்ந்த இடையன் – மணம்குவிந்த
    மண்ணணைநீர் மேகத்து வண்ணனை, மாற்றான்தாய்க்
    கண்ணனை நெஞ்சே கருது!!

    தந்தைசொல் மந்திரம் தப்பென்ற பிள்ளைக்காய்
    அந்தவோர் தூணில் அலமலங்க – வந்தொளிந்து
    மன்னன் இரணியன் மார்பைப் பிளந்தவனைக்
    கண்ணனை நெஞ்சே கருது!!

     

    Share
  • திருமால் திருப்புகழ் (62)

     

    கிரேசி மோகன்

    ———————————————
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ——————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    “கண்ணனை நெஞ்சே கருது”
    —————————————————–

    பாலுக்(கு) அழும்பாலன், பாவை களின்லோலன்,

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன், -மாலுக்குள்

    எண்ணமாய்த் தோன்றி, இடைசாதி வந்தவன்,
    கண்ணனை நெஞ்சே கருது….

    பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
    முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள், -யுக்தியாய்
    கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    அப்பண ஆதி அனந்தனில் தூங்குவோன்
    சொப்பனம் இவ்வுலக சாராம்சம், -அற்பநான்
    எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
    கண்ணனை நெஞ்சே கருது….

    இதுநிஜமாய் ஆகும், அது பொய்யாய்ப் போகும்,
    விதவிதமாய் எண்ணல் விடுத்து, -எதுவரினும்,
    கண்ணணைந்த போதுதிக்கும் காரிருள் வண்ணத்துக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    எங்கரி என்றே இரணியன் கேளும்முன்,
    அங்கொரு தூணில் அதிர்ந்தவன், -சங்கரி
    அண்ணனை, ஆகாய வண்ணனை ஆனந்தக்
    கண்ணனை நெஞ்சே கருது
    ———————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2012_06_01_archive.html

    Share
  • திருமால் திருப்புகழ்…. (61)

     

    கிரேசி மோகன்

    ————————————————————————————————————————
    கண்ணன் திருப்புகழ் (வெண்பா)

    “கண்ணனை நெஞ்சே கருது”
    ————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    காட்டுப் பகுதியில் கீதம் இசைத்திடும்,

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    மாட்டுத் தொழுவத்தில் மண்ணுண்டு -கேட்டிடும்
    அன்னைக்கு வாய்க்குள் அகிலத்தைக் காட்டிடும்
    கண்ணனை நெஞ்சே கருது….

    அட்டைக் கரியாக ஆடை கலைந்திட
    வெட்ட வெளிதனில் வீற்றிருந்து -தொட்டிலில்
    தன்நினைவு இன்றித்தாய் தாலாட்டில் தூங்கிடும்
    கண்ணனை நெஞ்சே கருது….

    பீதாம் பரமாட பீலி மயிலாட
    தோதான தோழர்கள் தோள்கொடுக்க -மீதேறி
    வெண்ணையை வாரி வழங்கிடும் வள்ளலை
    கண்ணனை நெஞ்சே கருது….

    நாணமின்றி யுத்தத்தில் நாலுகால் ஜந்துக்கள்
    சாணமள்லிக் கொட்டும் ஜனார்த்தனனை -ஞானமள்ளி
    உண்ணென கீதையை ஊட்டியதே ரோட்டியை
    கண்ணனை நெஞ்சே கருது….

    சூழ்ச்சி யுடன்வந்த பேய்ச்சி முலைபற்றி
    மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
    கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது

    Share
  • திருமால் திருப்புகழ் (60)

     

    கிரேசி மோகன்

    திருவனந்தபுரம் பத்மநாப பெருமாள்….
    ————————————————-

    Sri-Anantha-Padmanabha-Swamy

    தனனதந்த தனனதான தனனதந்த தனனதான
    தனனதந்த தனனதான -தனதான….

    —————————————————————————-

    DSC07796

    இருளகந்தை ஒளியும்மூல ஒளிதுலங்கு குகைவிசார
    முறைபுகன்ற அருணைவாசி -ரமணேசர்images (4)
    வழிநடந்து மனதையாளும், புலன்களைந்தின் பிடிபடாத,
    சிவனினன்பு சுகவிலாசம் -குடியேற,

    மருளஅன்று சிலையைவீசி விஜயன்கொண்ட மனவிசாரம்,
    ஒழியசங்கு ஒலிஉலாவு -அருள்கீதை
    மொழிபுகன்று, கவுரவாதி படையழிந்து புனிதபூமி
    பளுவடங்க ரதம்கடாவு, -விரைவோடு,

    அருளவந்து, அலையுமாசை கடல்கடைந்து அமுதஞானம்
    அதில்பிறந்து அதனைநானும், -பெறவேணும்.
    குறவணங்கு அமரஆனை மணம்புரிந்து கடலிலாடும்G_T4_565
    சிவன்மகிழ்ந்த சுருதிபாலன் -முறைமாம.

    பொருளுகந்த பழையதோழன், அவலுகந்து தருமதானம்,
    புவிவிளங்க மனிதனாக -அவதார,
    மலையடர்ந்து வளமையான, மழைபொழிந்து பசுமையான,
    திருவனந்த பதுமநாப -பெருமாளே….
    ———————————————————————————–

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.findinsideindia.com/visit-thiruvananthapuram-the-abode-of-lord-vishnu/

    http://thulasidhalam.blogspot.in/2009/05/2009-24.html

    Share