Category: கவியுள்ளம்

கவியுள்ளம்

  • உன் கன்னங்களில்!

     

    கே.ரவி

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%99%E0%AE%95/[/mixcloud]

     

    நங்கையுன் கன்னங்களில்South Indian Beautiful Girls Wallpaper7

    பொன்னந்தி வண்ணங்களில்

    நாணவில்லை வரைந்த பின்னே

    வானவில்லைக் காணவில்லையடி ஹோ!

    தங்கத் தடாகத்தில் தாமரைபோல் என்

    நெஞ்சத் தடாகத்தில் அழகு முகம்

    பேரொளியாக மலர்ந்த பின்னே

    வேறொளி இங்கே தேவையில்லையடி ஹோ!

    (நங்கை உன் கன்னங்களில்)

     

     

    கங்கையைப் போலுன் அங்கமெலாம் ஒரு

    காதல் நதிபுரள – என்

    கண்ணசைவில் ஒரு மின்விசையாய் உன்

    சின்ன இடைதுவள – உன்

    தோள்களிலே ஒரு தூளியமைத்துத்

    தூங்கட்டுமா அழகே – உன்

    வேல்விழிகள் என் மேல்படும் போதின்ப

    வேதனைதான் உயிரே

    (நங்கை உன் கன்னங்களில்)

    Share
  • அணையாத சுடரேற்றுவேன்!

    -கே. ரவி

    அணையாத சுடரேற்றுவேன் – நெஞ்சில்
    அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக்
    கணையாக உருமாற்றுவேன் – இமைக்கும்
    கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில்
    அணையாத சுடரேற்றுவேன்!

    விண்மீன்கள் சிறுதுளிகளாய் – வான                             flame-symbol
    விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற
    எண்ணற்ற உயிர்க்குலங்கள் – வாழும்
    விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் களிகொள்ள
    அணையாத சுடரேற்றுவேன்!

    பொய்சூழும் நெஞ்சங்களைத் – துளைத்துப்
    போகின்ற ஒளியுலகில் இல்லையே என்றமொழி
    பொய்யாகிப் போய்மறைய – எந்தப்
    பொல்லாங்கும் இல்லாமல் எல்லாரு மேமகிழ
    அணையாத சுடரேற்றுவேன்!

    மாயை விரித்த வலையோ – ஜனன
    மரணத்தி லேசுழலும் புரியாத மர்மமோ
    தீயை உமிழும் சொற்கள் – பட்டுத்
    தீப்பற்றி எரியட்டும் சூழ்ச்சிகள் முறியட்டும்
    அணையாத சுடரேற்றுவேன்!

    சொற்களைத் தோய்தெடுக்கக் – கோடி
    சூரியப் பிழம்பொன்று தேடிச் சென்றேன் – அன்று
    கற்பிலே கனல்விளைத்த – தெய்வக்
    கண்ணகித் தாயிடம் வேண்டி நின்றேன் – இருட்
    பட்டினிப் பாழ்க்குகையில் – கிடந்து
    பதறுமோர் ஏழையின் கண்ணீர்த் துளியிலொரு
    சிட்டிகை எடுத்து வைத்தாள் – அதில்
    சீறிப் புறப்படும் தீயில்சொல் தோய்த்தெடுத்(து)
    அணையாத சுடரேற்றுவேன் – இந்த
    அகிலமெல்லாம் உண்மை ஒளிகூட்டுவேன்!
    அனைவர்க்கும் ஒருநீதியே – என்ற
    அருளாட்சி மலரநான் அறைகூவியே
    அணையாத சுடரேற்றுவேன்!

     

    Share
  • தோகமயில் ஒண்ணு!

    கே. ரவி

     

    “(சிற்றுந்தில் பயணம் செய்த போது, என் தோளில் சாய்ந்த படி அவள் தூங்கிவிட்டாள். என் மனம் பாடியது. ஓ! அது நிகழ்ந்தது ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!)

     

    தோகமயில் ஒண்ணு!

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%A3%E0%AE%A3/[/mixcloud]

     

    imb5

     

    தோகமயில் ஒண்ணு தோள்மேல சாஞ்சு தூங்குதடீ
    எட்டநின்னுக் காத்தும் ஏக்கப்பெரு மூச்சு வாங்குதடீ
    பூங்குயில் கூவுது ஆராரோ பொன்வண்டு பாடுது தாலேலோ

    காத்தாச் சிலுக்குறா கண்ணத் தொறந்தா
    கனவா மொதக்குறா நெஞ்சில் சொமந்தா
    ஆத்துமணல் எல்லாம் அள்ளித் தெளிச்ச – ஒரு
    வெள்ளிநெலவா என் மேல படர்ந்தா – என்
    உள்ளத்துல சூரியனப் போல எழுந்தா
    (தோகமயில் ஒண்ணு)
    ஓட தூங்க இந்த ஊர்தூங்க
    ஓசையில்லாம காத்தும் தூங்க
    மானம் தூங்கப் பச்ச வயல் தூங்க – என்
    மார்பில் சாஞ்சபடி அவ தூங்க – என்
    மனசு மட்டும்தான் தூங்கலடீ – அதில்
    பாட்டுச் சத்தம் இன்னும் ஓயலடீ
    (தோகமயில் ஒண்ணு)

    ஓவியத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • மாண்டலின் ஶ்ரீநிவாஸ்

    கே. ரவி

     

    மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா1003782_724156124316453_5089466817522433708_n

    மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா

     

    வேண்டலின் வேண்டாமை வித்தாகும் முக்திக்கு

    காண்டலின் கேட்டலே கருத்துக்கு விருந்தாகும்

    மாண்டலின் என்பதோர் கருவியா அருவியா

    ஆண்டவ னேவியந்து அழைத்துவரச் சொன்னானோ

     

    மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா

    மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா

     

    நரம்புகள் மீட்டினான் ரசிகர்க ளின்நாடி

    நரம்புகள் மீட்டினான் நாதப் பிரளயத்தின்

    வரம்புகள் உடைந்தன வானமே அதிர்ந்ததாம்

    திறம்புகல் வதற்கின்னும் தேடுவோம் சொற்களே

     

    மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா

    மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா

     

    தூண்டிலின் முனையிலே துடிக்கும் புழுவென

    கூண்டிலே அடைபட்டுக் குமுறும் கிளியென

    தோண்டியைப் போட்டுடைத் தாண்டியென் றாடவா

    மாண்டிலன் ஶ்ரீநிவாஸ் என்றுதான் பாடவா

     

    கே.ரவி

    19-09-2014

    Share
  • பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

    கே. ரவி

     

    ஆதிசங்கரர்இன் பஜகோவிந்தம் பாடல் எப்பொழுதும் என் மனத்துக்கு நெருக்கமான பாடல். அதன் ஈர்ப்பில் நான் எழுதிய ஒரு தமிழ்ப்பாடலை, ரெஹான் இசையில், சுஜாதா குரலில் கேட்கலாமே:

     

    பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

     

    Meerabai_1

     

    பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

    பாடல்களில் உயர் பாடலிதே

    நிஜமும் நிழலும் நிதர்சன மாகும்

    நித்யா னந்த கீதமிதே

     

    உடலும் உயிரும் உறவென் றெண்ணும்

    மடமை அழிக்கும் மார்க்கமிதே

    கடவுள் நாமம் கடவுள் த்யானம்

    கதிவே றில்லை மானிடனே

     

    ஆசைகள் ஆகும் ஓசைகள் யாவும்

    அடங்கிடும் தேவ மந்த்ரமிதே

    பாசச் சுழலில் மோகத் தழலில்

    பரிதவிக் காதே மானிடனே

     

    மறுபடி ஜனனம் மறுபடி மரணம்

    மதியில்லை யாசொல் மானிடனே

    உறுதுணை அவனே உயிர்நிலை அவனே

    உணர்ந்திடு வாயா நீயுடனே

     

     

     

    Share
  • அண்ணாச்சி

    கே. ரவி

     

    [ஒரு சொல் போதும் ஒரு பாடல் பிறக்க. ‘உலகெலாம்’ என்று இறைவனே ஒரு சொல் எடுத்துக் கொடுக்க, அதிலிருந்து பெரியபுராணக் காவியமே உதித்தெழவில்லையா? அப்படிப் பலமுறை ஒரே சொல் என் நெஞ்சில் பாடல் ஊற்றெடுக்க வைத்துள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்னால், சபரி மலையில் இருந்து இறங்கிப் பம்பைக் கரையில் என் குழுவினரோடு நடந்து வரும் போது, ஒலிபெருக்கியில் யாரோ இருவர் பேசிக் கொண்டது சத்தமாகக் கேட்டது. “என்ன நராஜகோபால் அண்ணாச்சி வரலியா?” “சாமி, அண்ணாச்சி பழனிலே இருக்கார்.சாயந்தரம் புறப்பட்டு வரார்.”

    அண்ணாச்சி பழனியிலே என்ற சொல் போதும். அப்பொழுதே, என் குழுவினரோடு பாடிக் கொண்டே திரிவேணி பாலத்தை அடைந்தேன். நீங்களும் இங்கே சொடுக்கிக் கேட்கலாம்.]

    download

    அண்ணாச்சி பழனியிலே தம்பி அத்வானக் காட்டினிலே

    ஒண்ணாக வைத்துக் கொண்டாடுவோம் ரெண்டு கண்ணாக வீட்டினிலே

    புள்ளி மானத் தேடி வேட்டைக்குப் போயி

    வள்ளிமானக் கொண்டுவந்தான் – அண்ணங்காரன்

    வள்ளிமானக் கொண்டுவந்தான்

    புலிப்பால் தேடிக் காட்டுக்குப் போயி

    புலிமேல் ஏறிவந்தான் – சின்னத்தம்பி

    புலிமேல் ஏறி வந்தான்

    கோவத்தி லேவெறுங் கோவணத் தோடே

    குன்றேறி நின்று கொண்டான் – அண்ணங்காரன்

    குன்றேறி நின்று கொண்டான்

    யோகத்தி லேதவக் கோலத்தி சபரி

    மலைமேல் அமர்ந்துகொண்டான் – மணிகண்டன்

    மலைமேல் அமர்ந்துகொண்டான்

    காமனை எரித்த கண்ணில் இருந்து

    கனல்வடி வாயுதித்தான் – கந்தசாமி

    கனல்வடி வாயுதித்தான்

    மோகினி சுதனாய் அவதரித் தேநம்

    மோகம் எரித்திடுவான் – ஐய்யப்பன்

    மோட்சம் அளித்திடுவான்

    ‘சரவண பவ’வெனும் மந்திரத் தில்வேத

    சாரம் உரைத்திடுவான் – வேதாந்த

    சாரம் உரைத்திடுவான்

    சரணமென் றேமனம் உருகி யழைத்தால்

    தரிசனம் தந்திடுவான் – ஐய்யப்பன்

    ‘தத்வமஸி’ என்பான்.

    Share
  • மந்த்ர ரூபம்

    கே. ரவி

     

    பாடியிருப்பவர்  : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

    மந்த்ர ரூபம்

    {கேட்டு மகிழ சொடுக்குங்கள் மேலே}

    sivan5

    மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்

    மன்மதனை வென்ற சிவ வைராக்யம் – மணி

    கண்டனே உந்தன் மலர்ப்பதம் – துணை

    கொண்டவர்க்கு வழி புலப்படும்

     

    தென்றலோடொரு செந்தழலெழுந் தன்று செய்தது

    நர்த்தனம் – சிவ

    நர்த்தனம் – அந்தச்

    சங்கமத்தில் வந்த சந்திரன் – ஒளி

    பொங்கித் ததும்பும் எழில் பாலகன்

    மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்

     

    தன்னையிழக்கும் சரணாகதி அதில் வந்துசிரிக்கும் முகம் முழுமதி

    தேகமேயொரு யோகசாதனம் உணர வைக்குமுன்

    பெருவழி

    தத்வமஸி என்ற தத்துவம் – உன்

    சன்னிதிக்குள் வரும் அனுபவம்

    மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்.

     

     

    Share
  • கண்ணபிரான்

    கே. ரவி 

    பாடியவர் : ராஜகோபால்

    கண்ணபிரான் பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

    images (3) 

    என்
    நாவிலே பொன்வீணை நீ – என்
    ஆவியே உந்தன் ஸ்ருதி – என்
    நாவிலே பொன்வீணை நீ

    கண்ணாவுன் மேனி கார்முகில்
    மின்னல்களே உன் பூந்துகில்
    ககனமே உந்தன் நிழல் – என்
    கண்களே உன் பாற்கடல் – என்
    கவிதைகள் உந்தன் குரல்
    என்
    நாவிலே பொன்வீணை நீ

    பார்வையில் கலாபம் நீ – என்
    பாடலில் சுநாதம் நீ
    மாயையில் மெய் தோன்றும் இந்த
    வாழ்விலே வினோதம் நீ
    கருணை மார்கழிப் பனி
    கலந்த ஞான பானு நீ
    என்
    நாவிலே பொன்வீணை நீ

     

    Share
  • பெருமாள் பெருமாள்

     

    கே. ரவி

    பா டல் : உன்னி மேனன்

     

    பெருமாள் பெருமாள் பாடலைக் கேட்க சொடுக்குங்கள்

    images (1)

    கலிதீர்க்க வந்தவன் தான் கலிய பெருமாள்
    வினைதீர்ப்பவன் வெங்கடேசப் பெருமாள்
    திருமண் ஒளிவீசும் கரிய பெருமாள்
    தினம்தோறும் நாம்வணங்கும் பெரிய பெருமாள்
    — கலிதீர்க்க

    நின்றதிருக் கோலத்திலே உள்ள பெருமாள்
    நித்தம்நம்மை வாழவைக்கும் நல்ல பெருமாள்
    சொர்ணகவ சத்துக்குள்ளே சோதிப் பெருமாள் – நம்மைச்
    சோதித்துப் பார்க்குமிந்த ஆதிப் பெருமாள்
    — கலிதீர்க்க
    வரம்தருவ தோடுசரி மத்த பெருமாள்
    வட்டிபோட்டு வாங்குபவன் பெத்த பெருமாள்
    மார்பில்மஹா லட்சுமியை வைத்த பெருமாள்
    மந்திரங்களில் ஜொலிக்கும் முத்துப் பெருமாள்
    — கலிதீர்க்க

    சரணங்களைக் காட்டிநிற்கும் கோலப் பெருமாள்
    சங்குச்சக்ரம் ஏந்திநிற்கும் மூலப் பெருமாள்
    மரணத்தை வெல்லும்வழி சொன்ன பெருமாள்
    மங்களங்கள் தங்கவைக்கும் நம் பெருமாள்
    — கலிதீர்க்க

     

    Share
  • கைகள் குவிக்கும்

    கே. ரவி

     

    கைகள் குவிக்கும்

    பாடல் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

    DSC02611 sRI lANKAN ....SHORT SWORD ON GOD
    கைகள் குவிக்கும் போதெல்லாம் வடிவேல் – விழிக்
    கமலம் திறக்கும் போதெல்லாம் கதிர்வேல்
    நினைவுத் திரை விலகிப் புலனடங்கி
    ஒரு முனைப்பில் மனம் திளைக்கும் தவம் கூர்வேல்

    முளைத்த நிலவுப் புன்முறுவல் – ஆறு
    முகங்கள் ஞானத் தீப்பொறிகள்
    பனித்த சடையன் பக்கம் அமர்ந்து
    பாடம் சொன்ன செவ்விதழ்கள் – கரை
    மோதித் திரும்பும் கடலலைகள் – தினம்
    ஓதித் துவளும் ப்ரணவத்தில் –
    ஆடிக் களிக்கும் பாதங்கள் – நுரை
    யாகித் தெறிக்கும் சதங்கைகள்

    கந்தா கடம்பா கதிர்வேலா – எனக்
    கதறி அழுதால் வழிபிறக்கும்
    கருணை மனமே மயில்வாகனமாய்க்
    கண்டால் ஞான விழிதிறக்கும்
    குருவாய் நினைவில் வருவாய் முருகா
    எனவே இதயம் குரல்கொடுக்கும்
    குழந்தை வடிவம் குலுங்கிச் சிரிக்கும்
    வேலாயுதமே நிழல்கொடுக்கும் – சக்தி
    வேலாயுதமே நிழல்கொடுக்கும்.

    கே.ரவி

    Share
  • எங்கெல்லாம் இராம நாமம்..

    எழுதியவர் : கே.ரவி

     

    பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

    எங்கெல்லாம் ராம நாமம் அங்கெல்லாம் ஆஞ்ச நேயம்images (1)
    எங்கெல்லாம் ஆஞ்ச நேயம் அங்கெல்லாம் நாத யோகம்
    ஆஞ்ச நேயம் ஶ்ரீ ஆஞ்ச நேயம்
    நெஞ்செல்லாம் பக்தி பாவம் நித்ய ப்ரும்மச் சாரி ரூபம்
    அஞ்சனா தேவி பாலன் அன்பினால் ராம தூதன்
    ராம தூதன் ஶ்ரீ ராம தூதன்
    சஞ்சலம் என்று சொன்னால் சஞ்சீவி யாக வருவான்
    நெஞ்சுரம் கொண்ட வீரன் சிரஞ்சீவியாம் ஹனுமான்

     

     

     

     

     

    Share
  • சாஹஸ மோஹினி நீ

    கே.ரவி

     


    10365964_1412031469078978_5027039259935012318_n

     

    =========================================

    பாடலைக் கேட்க:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/06/Saahasa-Mohini_new2.mp3

    =========================================

     

    சாஹஸ மோஹினி நீ – என்
    மானஸ வீணையின் நாள நரம்புகள்
    ராகம் இசைத்திட ராஜஸம் பயில்
    சாஹஸ மோஹினி நீ

    காலையிலே செந்தாமரை நீ – பகல்
    வேளையிலே பொன்னோவியம் நீ – அந்தி
    மாலையிலே நீலோத்பலம் நீ – பின்
    இரவினிலே வரும் பேரமைதி
    சாஹஸ மோஹினி நீ

    கண்களிலே நீ ஒளிவடிவம்
    பண்களிலே நீ களிநடனம் – என்
    எண்ணமெல்லாம் ஒரு ஜீவநதி – அதன்
    ஒவ்வொரு துளியுமுன் சலங்கையொலி
    சாஹஸ மோஹினி நீ

    காதலர் நடுவே காற்றாக – நல்ல
    கவிதையிலே அமுதூற்றாகப்
    புன்னகையில் இளம் கீற்றாகப்
    புயல் இடி மழையென்று கூத்தாடப்
    புதுப்புது வடிவம் எடுப்பவளே – ஒன்றும்
    புரியாததுபோல் நடிப்பவளே
    சாஹஸ மோஹினி நீ

    Share
  • அமரத்வனி

    கே. ரவி

     

    (35 ஆண்டுகளுக்கு முன் ஷோபனா எழுதி என் இசையமைப்பில் எங்கள் இனிய நண்பர் ராஜு என்ற திரு.கே.எஸ்.ராஜகோபால் பாடிய ஒரு பாடல் இது. 1980-களில் வெளியான ‘அமரத்வனி’ என்ற இசைப்பேழையில் உள்ளது. ராஜு ஒரு பெரிய வங்கியின் மேலாளராகப் பணியில் இருந்தார். திரைப்படங்களிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பாடிய பாடல்களில், “கீரை அறுக்கையிலே கிழக்கு வெளுக்கையிலே” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சந்தியா ராஜகோபாலின் கணவர் இவர்.)

    பாடலைக் கேட்க:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/04.Layame-Sivame.mp3

     

    ஷோபனா ரவி

    shiv2_800x600

     

    லயமே சிவமே தயங்காத காருண்யமே
    மயனால் பிறந்த த்ரிபுரங்களை வெல்ல
    பாணம் தந்த சிலையே
    காலம் வென்ற நிலையே
    (லயமே சிவமே)

    பனியில் பூத்த தழலே – வெண்ணீறு
    கனவு காணும் நிழலே
    மதியும் அரவமும் நதியும் உலவிடும்
    கானகக் குழலே
    முகிலுலாவும் நுதலே
    (லயமே சிவமே)

    தீம் தோம் தீம் தோம் தீம்திரனதீம் தீம் தோம்
    தவம்கலைந்ததும் தாண்டவம் தீம் தோம் – புயல்
    நிமிர்ந்ததைப்போல் நர்த்தனம் தீம் தோம்
    இமை விரிந்து சடை பிரிந்து – இசை
    சிலிர்த்துத் தாளம் தெறிக்க
    வீழ்ந்தோம் எனத் தீமைகள் நடுங்கும்
    வாழ்ந்தோம் என வேதங்கள் முழங்கும்
    கண் பனிக்க மனம் துடிக்கக் – கை
    குவித்த படிவான் திகைக்க
    வந்தோம் எனத் துந்துபி பாடிவரும்
    தந்தோம் எனத் தாண்டவம் ஆடும் சிவம்
    (லயமே சிவமே)

     

     

    Share
  • பொன் மழையெனத் தா கவிதைகளே!

    கே. ரவி

     

    (23-05-2014 வல்லமை இதழில் “வாணியைச் சரண்புகுந்தேன்” என்ற தலைப்பில் வெளியான இசைக்கவி ரமணனின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் கவிதையும், சிந்தனையைத் தூண்டும் கட்டுரையும் அற்புதம்.
    1993-ல் என் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இனிய குரலில் பாடி வெளிவந்த ‘தெய்வ கானாம்ருதம்’ இசைப்பேழையில் இடம்பெற்ற என் கலைமகள் கவிதையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.)

    பூமலர்வது போலுயிரிடை நீமலர்வதனால்goddess-saraswati-learning
    நீமலர்ந்ததும் மனமுழுவதும் தீவளர்வதனால்
    தீமலரென நானழைத்ததும் வாகலைமகளே
    தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே
    தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே

    நீர்நிலைகளில் மீன்புரள்வது போல்நினைவிடையே
    கார்முகில்களும் தாரகைகளும் தாமுலவிடவே
    வெண்ணிலவென வேயெழுந்திடும் புன்னகையொளியே
    புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே
    புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே

    புல்நுனிகளில் வெண்பனித்துளி வந்தமர்வதுபோல்
    என்னுணர்விலும் உன்சதங்கைகள் நின்றசைந்திடுமே
    கண்மணிகளில் விண்மணிகளின் நிழல்விரிவதுபோல்
    உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே
    உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே

    15-11-1990
    கே.ரவி

    Share
  • வெடித்துப் பிறந்தவள்

     

    கே. ரவி
    எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்large_276238
    தங்கும் வரையித் தரையே நிச்சயம்

    ஒவ்வோர் அடியாய்த் தாங்கிக் கொண்டு
    ஓலமெல் லாமுள் வாங்கிக் கொண்டு
    வெவ்வே றான மரஞ்செடி கொடிகள்
    விதவித மான காய்கனி வகைகள்
    வளர விரிந்து தன்மடி தந்து
    மெளன மேவடி வாக இருக்கும்
    பூமித் தாய்க்கிங் கீடிணை யுண்டோ

    காற்று வந்து புழுதி வாரித்
    தூற்றி னாலும் பொறுமை யாக
    ஏற்றுக் கொள்ளும்
    தென்றல் வந்து
    சீண்டி னாலும் சிரித்துக் கொள்ளும்
    தேசங்க ளாகப்
    பிரித்துக் கொண்டு போர்புரிந் தாலும்
    ஒரேமு னைப்பில் ஒரேஏ கதியில்
    சுழன்று கொண்டேஇருக்கும்
    சூரியத் தேவனைச் சுற்றிச் சுற்றியே

    அவளே சற்று நடுங்கும் வண்ணம்
    அமைதி இழந்து குலுங்கும் வண்ணம்
    என்ன நடந்தது யாரழு தாரோ
    எங்கோ ஒருகண் ணகியா இல்லை
    இரணியன் மீண்டும் வந்துவிட் டானா
    தேவகு மாரனைச் சிலுவையில் அறைய
    யாரோ திட்டம் இடுகின் றாரோ
    மாமுனி வர்தவம் கலைப்ப தற்கே
    மீண்டும் ஊர்வசி ஆடுகி றாளோ
    குழந்தை பசியில் கதறிய ழத்தாய்
    கையில் சல்லிக் காசும் இன்றிக்
    கலங்கி நிற்கும் காட்சியோ இந்த
    நிலநடுக் கத்துக் கென்ன காரணம்
    ஊழிக் கூத்துக் (கு) ஒத்திகையோ
    பாழில் வெடித்துப் பிறந்தவள் தானே

    எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்
    தங்கும் வரையித் தரைதான் நிச்சயம்.

    21-05-2014

    Share