கைகள் குவிக்கும்
கே. ரவி
கைகள் குவிக்கும்
பாடல் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
கைகள் குவிக்கும் போதெல்லாம் வடிவேல் – விழிக்
கமலம் திறக்கும் போதெல்லாம் கதிர்வேல்
நினைவுத் திரை விலகிப் புலனடங்கி
ஒரு முனைப்பில் மனம் திளைக்கும் தவம் கூர்வேல்
முளைத்த நிலவுப் புன்முறுவல் – ஆறு
முகங்கள் ஞானத் தீப்பொறிகள்
பனித்த சடையன் பக்கம் அமர்ந்து
பாடம் சொன்ன செவ்விதழ்கள் – கரை
மோதித் திரும்பும் கடலலைகள் – தினம்
ஓதித் துவளும் ப்ரணவத்தில் –
ஆடிக் களிக்கும் பாதங்கள் – நுரை
யாகித் தெறிக்கும் சதங்கைகள்
கந்தா கடம்பா கதிர்வேலா – எனக்
கதறி அழுதால் வழிபிறக்கும்
கருணை மனமே மயில்வாகனமாய்க்
கண்டால் ஞான விழிதிறக்கும்
குருவாய் நினைவில் வருவாய் முருகா
எனவே இதயம் குரல்கொடுக்கும்
குழந்தை வடிவம் குலுங்கிச் சிரிக்கும்
வேலாயுதமே நிழல்கொடுக்கும் – சக்தி
வேலாயுதமே நிழல்கொடுக்கும்.
கே.ரவி
Ithu naNban KA.RAVIYUM SPB UM sernthu vazhangiya DEYVA GAANAAMRUTHAM,!
Thanks for sharing this.. I want you to publish YAR MANATHTHIL.. BOTH LYRICS N IASI VADIVIL
Su.Ra
அழகுதமிழ் அருட்கடவுள் முருகன் எனும்
மூலமதை அடிமனதில் ஏந்தியவொரு
இதயமது எழுதியதோ இப்பாடல்!
பெருமைமிகு பாலசுப்பிரமணியனே.. பாடி
பரவசத்தைத் தருகிறார் கேளுங்கள்!
உருகிவிடும் இதயத்தை தருவிக்கும்பாடலை
உருவாக்கித் தந்தவர்க்கு எந்தன் நன்றி!
அன்புடன்
காவிரிமைந்தன்
நன்றி காவிரி மைந்தன் அவர்களே. இருபதாண்டுகளுக்குப் பிறகும் பழைய வாடை வீசாமல் புதுமெருகோடு இருக்கும் பாடல் உருகவும் வைக்கிறது என்பதையறிந்து மகிழ்கிறேன். இப்பாடலை ஈன்றெடுக்க என்னத் தேர்ந்தெடுத்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். “உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி. மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி”!
நண்பன் சு.ரவியின் கட்டளையை நாளையே நிறைவேற்றி வைக்கிறேன். கே.ரவி