கே. ரவி

என் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை. அதைக் கொண்டாட வேண்டியதில்லை. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என் வாழ்வில் நான் எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வளவே. நன்றி. கே.ரவி