எழுதியவர் : கே.ரவி
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
எங்கெல்லாம் ராம நாமம் அங்கெல்லாம் ஆஞ்ச நேயம்
எங்கெல்லாம் ஆஞ்ச நேயம் அங்கெல்லாம் நாத யோகம்
ஆஞ்ச நேயம் ஶ்ரீ ஆஞ்ச நேயம்
நெஞ்செல்லாம் பக்தி பாவம் நித்ய ப்ரும்மச் சாரி ரூபம்
அஞ்சனா தேவி பாலன் அன்பினால் ராம தூதன்
ராம தூதன் ஶ்ரீ ராம தூதன்
சஞ்சலம் என்று சொன்னால் சஞ்சீவி யாக வருவான்
நெஞ்சுரம் கொண்ட வீரன் சிரஞ்சீவியாம் ஹனுமான்

Leave a Reply