கண்ணபிரான்
கே. ரவி
பாடியவர் : ராஜகோபால்
கண்ணபிரான் பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்
என்
நாவிலே பொன்வீணை நீ – என்
ஆவியே உந்தன் ஸ்ருதி – என்
நாவிலே பொன்வீணை நீ
கண்ணாவுன் மேனி கார்முகில்
மின்னல்களே உன் பூந்துகில்
ககனமே உந்தன் நிழல் – என்
கண்களே உன் பாற்கடல் – என்
கவிதைகள் உந்தன் குரல்
என்
நாவிலே பொன்வீணை நீ
பார்வையில் கலாபம் நீ – என்
பாடலில் சுநாதம் நீ
மாயையில் மெய் தோன்றும் இந்த
வாழ்விலே வினோதம் நீ
கருணை மார்கழிப் பனி
கலந்த ஞான பானு நீ
என்
நாவிலே பொன்வீணை நீ