சாஹஸ மோஹினி நீ
கே.ரவி
=========================================
பாடலைக் கேட்க:
https://www.vallamai.com/wp-content/uploads/2014/06/Saahasa-Mohini_new2.mp3
=========================================
சாஹஸ மோஹினி நீ – என்
மானஸ வீணையின் நாள நரம்புகள்
ராகம் இசைத்திட ராஜஸம் பயில்
சாஹஸ மோஹினி நீ
காலையிலே செந்தாமரை நீ – பகல்
வேளையிலே பொன்னோவியம் நீ – அந்தி
மாலையிலே நீலோத்பலம் நீ – பின்
இரவினிலே வரும் பேரமைதி
சாஹஸ மோஹினி நீ
கண்களிலே நீ ஒளிவடிவம்
பண்களிலே நீ களிநடனம் – என்
எண்ணமெல்லாம் ஒரு ஜீவநதி – அதன்
ஒவ்வொரு துளியுமுன் சலங்கையொலி
சாஹஸ மோஹினி நீ
காதலர் நடுவே காற்றாக – நல்ல
கவிதையிலே அமுதூற்றாகப்
புன்னகையில் இளம் கீற்றாகப்
புயல் இடி மழையென்று கூத்தாடப்
புதுப்புது வடிவம் எடுப்பவளே – ஒன்றும்
புரியாததுபோல் நடிப்பவளே
சாஹஸ மோஹினி நீ
மோகனம் பாடிடும் கானம்
மூன்றாம் தமிழே சரணம்..
கண்களிலே நீ ஒளிவடிவம்
பண்களிலே நீ களிநடனம் – என்
எண்ணமெல்லாம் ஒரு ஜீவநதி – அதன்
ஒவ்வொரு துளியுமுன் சலங்கையொலி
சாஹஸ மோஹினி நீ
அற்புத வரிகள் கண்டேன்..
ஆனந்த லஹரியில் நின்றேன்..
சொற்களின் சலங்கையில்
கொஞ்சிடும் தமிழமுது..
பற்பல லீலை செய்ய
படைத்தவன் திறமையன்றோ?
வாழ்த்துகள்… பாராட்டுகள்..
காவிரிமைந்தன்
http://www.thamizhnadhi.com
மிக்க நன்றி காவிரி மைந்தன். நான் உங்கள் ரசனையின் ரசிகன். கே.ரவி