Tag: அவ்வைமகள்

  • எழுவகைப் பெண்கள் – 17: பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்

    எழுவகைப் பெண்கள் – 17: பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்

    அவ்வைமகள்

    பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்  

    தலைமுடியைப் பற்றிய அறியாமை, அறிவியல் நூற்றாண்டான இந்த நூற்றாண்டில் மிகுந்திருப்பது வருத்தமே! இன்று பெண்கள், மாபெரும் வணிகப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கேசப்பொருட்கள் வர்த்தகம் பெண்களின் புத்தியை மழுக்கி, அவர்கள் அவசர முடிவு எடுக்குமாறு வணிகக் கவர்ச்சிகள் காட்டி, வெகு வசமாய் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

    இன்று, கேசப்பொருள் வணிகம் பில்லியன் டாலர் வணிகமாகக் கொழித்துச் செழித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குப் பெண்களே மூல காரணம். பெண்களின் ஆதரவினால் மட்டுமே இந்த வணிகம் நடக்கும் என்பதால் என்னென்ன வியாபாரத் தந்திரங்கள் உண்டோ அவையனைத்தும் பிரயோகிக்கப்படுகின்றன.  கேசப்பொருள் வணிகத்தின் ஒரே குறிக்கோள் என்னவென்றால், பெண்களை இந்த வணிகத்தில், தொடர் வாங்குவோர்களாக, தொடர் நுகர்வோர்களாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே.

    பெண்கள், ஆண்களின் சார்பின்றி சுயமாக இயங்கும் திறனை. சுயமாகக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும் திறனை வெகு சாதுரியமாய் கேசப்பொருள் வணிகம் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. வறுமையில் வாடுபவர்கள் கூட, கணிசமான தொகையை, கேசப்பொருட்களுக்காகச் செலவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று என்பது உலகளாவிய விஷயமாய் நிலைபெற்றிருக்கிறது.

    இந்நிலையில், தலைமுடியின் நுண்ணமைப்பு மற்றும் அதன் பண்புகளை அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு செய்வது நமது தலையாய கடமையாயிருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கு, தலைமுடியின் அமைப்பு, அதன் தன்மைகள் ஆகியன அத்துப்படியாகத் தெரியவேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைமுடி பற்றிய ஞான வெளிச்சம் உண்டானதென்றால், அவளது குடும்பமே கேச ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடும்! ஏனெனில், ஒரு  குடும்பத்தின் ஒட்டுமொத்த உடல்நலப் பாதுகாப்பும் பெண்ணின் கையில் தான் இருக்கிறது.

    எனவே அதுபற்றி நாம் முதலில் பேசுவது நல்லது என்றார் – தொடர்ந்தேன்.

    சுமார் 100 மைக்ரான் அளவு சராசரி தடிமன் மட்டுமே கொண்டது, மனிதத் தலைமுடி (17 முதல் 181 மைக்ரான் வரை  தடிமன் மாறுபடும்); அதன் புறப்பரப்பு மிக அதிசயமான  அமைப்போடு காணப்படுகிறது. தடவிப் பார்க்க வெகுசன்னமாய்த் தெரிகிற தலைமுடியின் புறப்பரப்பு உண்மையில் ஒரு செதிலடுக்காகும். தலைமுடியின் புறப்பரப்பு Cuticle எனப்படும் தலைமுடிக் கவசத்தால் ஆனது.

    ஆம்! ஒன்றின் மீது செருகப்பட்ட எண்ணிறந்த நுண்ணிய செதில்களை, தலைமுடியின் புறப்பரப்பில் காணலாம். தலைமுடியின் புறப்பரப்பில் உள்ள செதில்களின் அடுக்கு முறை, ஓட்டு அடுக்கு முறை பாணியில் அமைந்துள்ளது. வீட்டின் கூரைமீது ஓடுகள் வேயப்படும்போது, இவ்வாறுதான் ஓடுகளை அடுக்குவார்கள். வீட்டின் கூரையின் ஓடுகள் கீழ்நோக்கி அமைந்திருப்பதைப் போலவே, தலைமுடியின் புறப்புரச் செதில்களும் கீழுநோக்கியே அமைந்துள்ளன.

    By Nicola Angeli/MUSEThis file was uploaded by MUSE – Science Museum of Trento in cooperationwith Wikimedia Italia. – MUSE, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=48293053

    இவ்வாறான செதிலடுக்கு கொண்ட புறப்பரப்பு, தலைமுடிக்கு மினுமினுப்பைத் தருவதோடு, நம் மீது விழும் ஒளி மற்றும் வெப்பத்தை வலுவாக எதிரொளிப்பதற்கான ஏற்பாடாகும். இவ்வகையில், homeostasis எனப்படும் உடல்வெப்பத் தகவுசீரமைப்பில் தலைமுடி முக்கியமான பங்காற்றுகிறது.

    தலைமுடியின் புறப்பரப்பு செய்யும் கூடுதல் பணி என்னெவென்றால், அது, சூழலிலிருந்து நம்மீது விழும் தூசு தும்புகள் மற்றும் நச்சுகள் யாவற்றையும் தன் மீது சேகரித்துத் துப்புரவு செய்கிறது. மேலும், அது முடியின் உள்பாகங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாய் இருக்கிறது. குறிப்பாக, தலைமுடியின் ஈரப் பதத்தைப் பாதுகாக்கிறது.

    தலைமுடியின் புறத்தோற்றம் ஓர் அதிசயம் என்றால், உட்தோற்றம் இன்னுமோர் அதிசயம். பார்க்கப் போனால், புறத்தைவிட, அகத்தின் அதிசயம் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் தொடர் அதிசயமாய் விரிகிறது. ஆம்! ஒவ்வொரு மயிரிழையும் ஒரு அற்புதச் சுரங்கம். வெளியிலிருந்து உள்நோக்கில், தலைமுடிக்குள் சென்று பார்த்தால், அதிநுட்பமான, அடுக்கடுக்கான புதையல் களஞ்சியத்தை அங்கே நாம் பார்க்க  முடியும். கீழே தரப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள் (https://www.mdpi.com/1420-3049/25/9/2143/htm) [1].

    தலைமுடியின் உள்கட்டமைப்பு பற்பல அடுக்குகளைக் கொண்டதாக இருப்பதை, படம் 2 ஐயும் படம் 3 ஐயும் சேர்த்துப் பார்த்தால் விளங்கும்.

    படம் 2: மனிதத் தலைமுடியின் படிநிலை உள்கட்டமைப்பு; Mullner , Alexander , R. M ., Ruben, Pahl, Doris, Brandhuber, Herwig Peterlik (2020)Porosity at Different Structural Levels in Human and Yak Belly Hair and Its Effect on Hair Dyeing, Molecules25(9), 2143; https://doi.org/10.3390/molecules25092143

    படம் 3. தலைமுடியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.
    https://biomedicalephemera.tumblr.com/post/66493115496/hair-cross-section-diagrams-and-representations/embed; A Treatise on the Diseases of the Skin. Dr. Henry W. Stelwagon, 1923

    தலைமுடியின் நெடுக்குவெட்டுத் தோற்றத்திலும், தலைமுடியின் அழகிய உள்ளமைப்புக் கட்டமைப்பைக் கூடுதலாக அறிந்துகொள்ள முடியும். இந்த நெடுக்குவெட்டுத் தோற்றத்தில், அடியிலிருந்து நுனி நோக்கிச் செல்வதான  அமைப்பு தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பின்னாலும் நாம் உபயோகப்படுத்திப் பேசவிருக்கிறோம்.

    படம் 3. தலைமுடியின் நெடுக்குவெட்டுத் தோற்றம்.

    https://biomedicalephemera.tumblr.com/post/66493115496/hair-cross-section-diagrams-and-representations/embed; A Treatise on the Diseases of the Skin. Dr. Henry W. Stelwagon, 1923

    முதலாவதாக, க்யூட்டிகிள் எனப்படும் தலைமுடியின் கவசத்தின் தன்மையையும் அதன் செயல்களையும் அறிந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். ஏனெனில். தலைமுடியின் தலையாய பிரச்சினைகள் க்யூட்டிகிளில்  தான் தொடங்குகின்றன.  “எனக்கு அறிவியல் ஞானம் இல்லை” “எனக்கு அறிவியல் ஆர்வம் இல்லை“ என்று எவரும் சொல்லிவிடக் கூடாது. சிறிது  நேரத்தை  இதற்கென  ஒதுக்கி,  ஒவ்வொருவரும், மிகக்  குறிப்பாகப் பெண்கள், இதனை நன்கு அறிந்து புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

    க்யூட்டிகிளின் செதில்கள் புரதத்தால் ஆனவை. இந்தச் செதில்களுக்கு இடையில் க்யூட்டிகிள் – க்யூட்டிகிள் செல் இழைக்  குழம்பு (Cuticle-Cuticle Cell Membrane Complex)  எனும் பொருள் இருக்கிறது. இதனை CCMB என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். CCMB-யில் என்னென்ன அடக்கம் என்றால்: டெல்டா மற்றும் பீட்டா புரதங்கள், 18- மீத்தைல் எய்க்கோசனாயிக் அமிலம் (18-methyl eicosanic acid), மற்றும் கட்டில்லாத அமிலங்களாக, ஒலியிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் ஆகியன உள்ளன.

    இதில், 18- மீத்தைல் எய்க்கோசனாயிக் அமிலம், சுருக்கமாக 18-MEA என்று அழைக்கப்படுகிறது.

    CCMBயில், 18MEA எவ்வாறு அமைந்திருக்கிறது என்றால், அது  பீட்டா புரதங்களோடு,  கொவேலன்ட் பிணைப்புகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. கோவலன்ட் பிணைப்புகள் வெகு உறுதியான பிணைப்புகள் ஆகும்.

    CCMB குழம்பு என்ன செய்கிறதென்றால் முடிகளின் செதில்களுக்கு இடையே, ஒரு மெத்தை போன்று, சிமெண்ட் போன்று செயல்பட்டு, செதில்களைப் பிணைத்தும் அவற்றிற்கு இடையே ஒரு உயவு எண்ணெய் ஆகவும்  ஒரே நேரத்தில் செயல்பட்டு,  முடியின் செதில்கள் பிரியாமல் –  விரியாமல் காக்கிறது. முடியின் செதில்கள்  பிரியாது விரியாது இருப்பது தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு, மிக முக்கியமானது.  இதில் 18MEA செய்கிற பணி அதிமுக்கியமானது. முடியின் மிருதுத் தன்மைக்கும், வளைந்து நெளியும் இசைவுத்தன்மைக்கும், மினுப்புத் தோற்றத்திற்கும்   எது காரணமாகிறது என்றால், அது 18MEA தான்.

    மேலும், முடிக்கு Hydrophobicity எனப்படும் நீர் எதிர்ப்புத் திறனை 18MEA  தருகிறது. இதனால் தலையில் நீர் பட்டதென்றால், தாமரையிலையில் தண்ணீர் பட்டாற்போல், நீர் துளித்து நிற்கும் – முடியை நனைக்காது. இதனால், எந்தச் சூழலிலும் வெளியிலிருந்து அதிக நீரை முடி உறிஞ்சாதவாறு 18MEA காக்கிறது.

    நவீனம் – மாடர்னிசம் – என்றாகியிருக்கிற இந்த காலக்கட்டத்தில், ஏறக்குறைய அனைவருமே, 18MEA சிதிலம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், ஷாம்பூ, கண்டிஷனர், சாயம், ஸ்டைலிங் ஜெல், என்று பல்வேறு வேதிப்  பொருட்களைப் பயன்படுத்துவதும், மற்றும் தலைமுடியை அயர்ன் செய்வது, போன்ற பழக்கங்களால்.

    ஷாம்புக்கள், ஆல்கலைன் பி. எச் எனப்படும் அளவீடு கொண்ட காரவகைப் பொருட்களால் ஆனவை. இவை 18-MEA உடன் வேதிவினை புரிந்து 18-MEAஐ அழித்துவிடுகின்றன. கண்டிஷனர்கள் தேவையற்ற ஒரு பூச்சை க்யூட்டிகிளின் மேல் இட்டு, தேவையற்ற எடையை முடியின் மீது ஏற்றி க்யூட்டிகிளைப் பிய்த்து இழுத்து முறிக்கின்றன. இதற்கு மேலாக, கூடுதல் சிதைவு, ஹேர் ட்ரையர் எனப்படும் உஷ்ண உலர்த்திகளால் நடைபெறுகிறது.  உஷ்ண உலர்த்திகள், க்யூட்டிக்கிளின் செதில்களை அகட்டி விரித்து, செதில்களுக்கு அடியில் இருக்கிற CCMB குழம்பை, துரத்தி வெளியேற்றி, வறள வைக்கிறது.

    இதனால், முடி உலர்ந்து, உறுதி இழந்து, பலவீனமாகி அறுந்து போகும் தன்மையை அடைகிறது; பல நேரங்களில் முடி, வேரோடு உதிரும் நிலையம் உண்டாகிறது. இருக்கும் முடிகளும் கூட நுனி வெடித்துப்  பிளந்து கதிர் கதிராய் விரியும்.

    க்யூட்டிகிள் பாதிக்கப்பட்டால், வேரறுபடுவது புரியவில்லையே என்று நீங்கள் கேட்கலாம்.

    முடியின் நெடுக்கு வெட்டுத் தோற்றத்தைப் பார்த்தால் க்யூட்டிகிளுக்கும், வேருக்கும் உள்ள தொடர்பு புரியும். க்யூட்டிகிள் வேரிலிருந்து தொடங்குவது, எனவே வேருக்கும் க்யூட்டிகிளுக்கும்  நேரடித் தொடர்பு உள்ளது. க்யூட்டிக்கிள் பாதிக்கப்பட்டதென்றால் வேரும் பாதிக்கப்படுகிறது. கியூட்டிகிள் பலவீனமாகும் ஒவ்வொரு தருணத்திலும் வேரும் பலவீனமாகிறது.

    இங்கு நாம் வேர் என்று குறிப்பிடுவது முடியின் அடியில் உள்ள குமிழி போன்ற பகுதி; இது Hair Bulb எனப்படுவது. இந்த, வேர் எனப்படும் முடியின் அடிக்குமிழி, உண்மையில் ஸ்கால்ப் (Scalp) எனப்படும் மண்டைத் தோலுக்கு உள்ளே, அடியில் இருக்கிறது. இதனை, படம் 5இல் பார்க்க முடியும்.

    படம் 5. முடியின் வேர்;  https://link.springer.com/protocol/10.1385/0-89603-441-0:101

    நாம் ஏற்கனவே பார்த்தது போல 1900 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட கொள்ளை நோய்களுக்கு முடி ஒரு ஊடகமாக இருந்தது என்கிற காரணத்தால், தலைமுடியில் தொற்றிக்கொள்ளும் நோய்க்கிருமிகளைக் களைந்து, முடியைக் கழுவி எடுப்பதற்கான முயற்சிகளில் உருவானதே ஷாம்பூ. அதைத் தொடர்ந்து அது நம்மிடையே நின்றுவிட்டதன் காரணம் விளம்பரங்கள் மட்டுமே. விளம்பரங்களின் மாய வலையில் மாட்டிக்கொண்ட பின் – அதிலேயே நாம் நின்றுவிட்டோம். ஷாம்பூவால் மண்டைத் தோலுக்கும், தலைமுடிக்கும் ஏற்பட்டுள்ள கேடுகள் ஒன்றா இரண்டா?  ஒவ்வாமை வியாதிகள் எத்தனை?

    நல்ல தலைமுடி ஆரோக்கியத்திற்குப் பேர்போனவர்களான கிழக்கு நாடுகளிலுள்ள மக்கள் யாவரும் முன்னெப்போதும் காணா தலைமுடி உதிர்வு, சொட்டை விழுதல், வழுக்கை ஆகிய வியாதிகளால் தாங்கொணா மன உளைச்சலும் பணச் செலவுமாக இன்று அலைந்து வருந்தி வருவது தலைமுடிக்காக விற்கப்படும் பொருட்களால் தான் என்றால் அது மிகையில்லை.

    அது மட்டுமல்ல, ஷாம்பூ, கண்டிஷனர், கேசச் சாயம், போன்ற வேதிப் பொருட்கள், குளியலறையிலிருந்து வெளியேறிப் பொதுக்கழிவில் கலந்து, வாய்க்காலோடி, நீர்நிலைகள் யாவற்றிலும் கலந்து, எத்தனை எத்தனையோ உயிரினங்களைக் கொன்றுள்ளன. இன்னமும் கொன்றுகொண்டே இருக்கின்றன.

    ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களில் உள்ள நுரை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள், Eutrophication அல்லது Algal Bloom எனும் ஒரு கெடுதல் நிகழ்வை நீர் நிலைகளில் ஏற்படுத்தி, நீர்ப் பரப்பில் நஞ்சு மிகுந்த களைகளையும் பாசியையும் ஆல்காக்களையும் வளர்த்து. நீரில் கரைந்துள்ள உயிர்வாயுவான ஆக்சிஜனைக் கபளீகரம் பண்ணி, தவளை, தேரை, மீன், நண்டு, உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ இயலாதவாறு செய்கின்றன.

    ஷாம்பு  கேசச் சாயம் போன்றவற்றில் உள்ள பிற வேதிமங்களோ  உண்மையில் நச்சுத் தன்மை உடையன. அவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்வதுபோல் சேர்ந்து, சிறுதுளி பெருவெள்ளமாய், அளவு கூடி நிறைத்த நச்சூட்டலை நீர்நிலைகளில் நிகழ்த்திவிடுகின்றன. இவ்வாறான நீர்நிலைகளில் அற்ப சொற்பமாக வாழ்கிற மீன், நண்டு ஆகியன நச்சூட்டப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. இவற்றை நாம் உணவாக உண்ணும்போது நாம் நஞ்சையும் சேர்த்துத்தான் உண்ணுகிறோம். கழிவுநீர்க் கால்வாயின் இருமருங்கிலும், நீர்நிலைகளின் கரைநெடுகிலும் நிலமும் நச்சூட்டப்படுகிறது, இந்நிலையில், அங்கு வளரும் தாவரங்கள் எவ்வாறு நச்சூட்டம் ஏற்படாமல் தப்பிக்க முடியும்?

    ஆக, நாலு சுவருக்குள் நாம் செய்கிற மதியீனமான செயல்கள் எத்தனை பெரிய சமுதாய அழிவை உண்டாக்குகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

    ஷாம்பு, கண்டிஷனர், சாயம், இத்யாதிகள் வருகின்ற பாட்டில்கள், குப்பிகள், முதலியன சேர்க்கும் குப்பைகளுக்கு அளவுண்டா? இவற்றையும் நாம் காசு கொடுத்துத் தான் வாங்குகிறோம்! அவற்றைக் குப்பையில் வீசி, அந்தக் குப்பையை அள்ளவும் கூட நாம் தான் பணம் தருகிறோம். என்ன வேதனை இது? இந்தக் குப்பைகள் யாவும் அழியாக் குப்பைகள். பூமியின் பாரத்தைத் தெடர்ந்து ஏற்றுவதோடு – பூமியின் வெப்பமிகுதிக்கும் காரணமாகின்றன. என்ன வேதனை இது?

    மேற்கத்திய நாடுகள் தாம் அறியாமையாலும் ஆணவத்தாலும் தவறு செய்கின்றன என்றால், கிழக்கும் இத்தவறுக்கு உடந்தையானது ஏன்?

    பூர்வீகமான சுதேசி ஞானத்தை விடுத்து, நவீனத்தைத் தழுவியதால்தான், கேச ஆரோக்கியத்தில் இன்று துர்பாக்கியமான நிலைமையைக் கிழக்கு நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன! கிழக்கத்திய நாட்டு மக்கள்,  பொதுவாகவே, பாதுகாப்பு உணர்வு கொண்டவர்கள். இயற்கைப் பொருட்களில் நாட்டம் கொண்டவர்கள். இயற்கைப் பொருட்களாலான சிறப்புக் கலவைகளால் கேசம் கழுவும்  பழக்கம் கொண்டவர்கள். அதனை அவர்கள் மறந்ததும் துறந்ததும் துர்பாக்கிய நிலையே.

    இதில், இந்தியா, தலைசிறந்த விஞ்ஞான அறிவியல், தொன்மை உடையது. இந்தியர்களுக்கு இருக்கிற தாவரவியல் ஞானம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதது. அதுவும், “Phytochemistry” எனப்படுகிற தாவரவேதியியலில் இந்தியர்களுக்கு இணை உலகில் எவருமில்லை என்றே சொல்லலாம். பி. ராமச்சந்திரன் பய், டி. ஆர். கோவிந்தாச்சாரி போன்ற புகழ்மிக்க தாவர வேதியியல் விஞ்ஞானிகளை உலகிற்கு வழங்கிய பெருமை, தமிழகத்திற்கு  உண்டு. இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற எஸ். பி. தியாகராஜன் – கீழாநெல்லியிலிருந்து மஞ்சள் காமாலைக்கு மருந்து கண்டுபிடித்து உலகம் முழுமைக்கும் வழங்கியிருக்கிற பெருமையை நாமறிவோம்.

    தமிழ் மருத்துவ முறை என்று பெருமையாகச் சொல்லப்படும் சித்த மருத்துவ முறை முழுக்க முழுக்கத் தாவரப் பொருட்களையும் பூமியில் உள்ள இயற்கைத் தாதுக்களையும் மட்டுமே பயன்படுத்துவது. அதர்வண வேதம், ரிக் வேதம், மற்றும், சுஷ்ருத  ஸமிதா ஆகியவற்றில். எண்ணிறந்த தாவரங்களும், அவற்றில் இருக்கிற மருந்துப் பொருட்கள் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவ முறை, இம்மூன்று நூல்களும் தரும் ஞானத்தின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட மருத்துவ முறையாகும்.

    “Wealth of India” என்று தலைப்பிடப்பட்டு பதினொரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் புத்தகத் தொகுப்பில், பாரத நாட்டின் பொக்கிஷங்களான தாவரங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் நாம் மறந்தது எப்படி?

    எங்கள் மக்கள், சிகைக்காய்ப் பொடி என்னும் ஒரு  அதியற்புதமான பொடியை, தேர்ந்தெடுத்தப் பல தாவரப் பொருட்களைச் சேர்த்து அரைத்துத் தயாரிப்பர். அதனைச் சோறு  வடித்த கஞ்சியில் கரைத்து.  அந்தப் பசையைக் கொண்டு, எண்ணெய்க்  குளியலில், தலையில் வைத்த எண்ணெய்ப் பூச்சை, இதமாய்க் கழுவி எடுப்பர், கேசம் துளியும் கெடாது, மெருகுடனும் வளத்துடனும், பட்டு போன்ற மிருதுத் தன்மையுடனும், ஒவ்வொரு பெண்ணும் பாதுகாத்து வாழ்ந்த மண்ணில் இன்று ஞானப் பஞ்சம் ஏற்பட்டு, மதியீனம் ஓங்கி வளர்ந்திருக்கிறது என்றால் இந்தத் துர்பாக்கிய நிலையை என்னென்று சொல்வது?

    சிகைக்காய்ப் பொடி என்பது நம்மவரின் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு. சரியான pH சமநிலை, சரியான conditioning – ஈரப் பதனம், மிகச் சரியான போஷாக்கு, மிகச் சரியான கொரகொரப்புத்தன்மை, அற்புதமான வாசனை, நேர்த்தியாய்ச் சேர்த்த பாதுகாப்பான தொற்று நீக்கிகள், மிகச் சரியான நுரை வளம், நீர் நிலைகளுக்குப் பாதுகாப்பு, நிலத்துக்குப் பாதுகாப்பு எனச் சிகைக்காயின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    பார்த்துக்கொண்டே இருங்கள் இந்த நூற்றாண்டிலேயே இதற்கு அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ பேடண்ட் வாங்கிவிடுவார்கள். நாம் எவ்வெவற்றையெல்லாம் நமது பொக்கிஷம் எனப் பேணிக் காக்கத் தவறுகிறோமோ, அவையெல்லாம் இவ்வாறு தான், அடுத்தவன் அள்ளிக்கொண்டு போவதில் முடிவடைகின்றன.

    தலைமுடியின் வெளி உறையை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம்.  உறைக்கு உள்ளே இருக்கிற, தலைமுடியின் உள் கட்டமைப்பின் முத்தாய்ப்பான விஷயங்களை அடுத்து நாம் கவனிக்க இருக்கிறோம்.

    (மேலும் பேசுவோம்)

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 21

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 21

    அவ்வைமகள்

    21. ஞானோதயக் காலம் 

    இந்தியாவில், மக்களிடையே காணப்பட்ட சுதந்திரம் மிகுந்த சமயப் பழக்கங்களும் பயிற்சியும் மற்றும் மன்னர்களின் மூன்று தட்டு, தர்மபரிபாலனத்தில், அன்று காணப்பட்ட  செம்மையான முறைமைகள் ஆகியன  ஐரோப்பாவில் உதித்த, Age of Enlightenment எனப்படும் ஞானோதயக் காலம் பிறக்க முன்னோடிகளாக இருந்தன. ஞானோதயக் காலத்தின் நோக்கம் என்னவென்றால், ஆட்சிமுறைமை மூன்று தட்டுகளாக (சட்டம், நீதி, நிர்வாகம்) இருக்கவேண்டும் என்பதும், சமயம் என்பது  ஆட்சியாளர்கள் கையில் இல்லாமல், மக்கள் வாழ்வியலில், அவர்களது பரிபூரண மனச் சுதந்திரத்தில், சனாதனமாகப்   பொருந்தியிருக்க வேண்டும் என்பதாகும்.

    இந்நிலையில், சனாதனம் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல் நலம். சனாதனம் என்பது, இனம், நிறம், குலம், சாதி, பிறப்பிடம், வாழுமிடம், பேசும் மொழி, சமயம் சார்ந்த பழக்கங்கள், பொருளாதார  ஏற்றத்  தாழ்வுகள், இவற்றையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கவேண்டிய இன்றியமையா நல்லொழுக்கங்கள்  (virtues) ஆகும். இந்த நால்லொழுக்கங்கள் யாவன என்றால்:  தூய்மை, நேர்மை, ஜீவகாருண்யம், நற்சிந்தை, கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, சுயக் கட்டுப்பாடு, பெருந்தன்மை, விரதம் ஆகியன. இங்கு விரதம் என்பதைத் தியாகம் என்றும் கொள்ளலாம். அவரவர் வாழும் வாழ்முறை மற்றும் சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் இந்த நல்லொழுக்கங்களை அவர்களால் இயன்ற வகையால் ஆற்றுதல்  வேண்டும் என்பது தான் சனாதனத்தின் சாராம்சம். சமயத்தைவிட சனாதன தர்மம் தான் முக்கியமானது.

    சமுதாயம் என்பது தோப்பு; இதில் தனி மனிதர்கள், தனித்தனி தாவரம் போன்றவர்கள். தனி மனிதர்கள் சேர்ந்து சமுதாயம் எனும் தோப்பை உருவாக்கும்போது, தனிமனித ஒழுக்கங்கள் மற்றும் தனிமனித வளம் ஆகியனவற்றைப் பொறுத்தே, சமுதாயமெனும்  தோப்பின் ஒழுக்கமும் வளமும் அமைகிறது. எனவே, நல்லொழுக்கப் பண்புகள் யாவையும் உடைத்தவராய் தனிமனிதர்கள் உருவாக்கப்பட வேண்டும்  என்பது மட்டுமே சனாதன தர்மத்தின் நோக்கம்.

    இத்தகைய உன்னத  மார்க்கமான சனாதன தர்மத்தை அடைவதே, ஐரோப்பிய ஞானோதய காலத்தின் தலையாய நோக்கமாக இருந்தது. எனவே, ஞானோதய  கால முன்னோடிகளின் சித்தாந்தம் என்னவென்றால் – அவர்களால் வேண்டப்பட்டது, என்னவென்றால்: சனாதன தர்மம் கூறும் நல்லொழுக்கங்கள், தமக்கும், தம் சந்ததிகளுக்கும், பயிற்றுமாறு, பயிற்சிக்குமாறு அவரவர் தமக்குத் தோதான சமயப் பண்பாட்டு முறைமையை மேற்கொள்ளும் சுதந்திரம் வேண்டும் என்பதே. சமயம் என்பது தனிமனிதர்களின் கையில் இருக்கவேண்டிய கருவியே தவிர, ஆட்சியாளர்கள் கையில் இருக்கவேண்டிய ஆயுதம் இல்லை

    சமயத்தை ஆட்சியாளர்கள் தம் கையில் எடுத்துக்கொண்டு மனிதர்களையும் சமயத்தையும் ஆளக்கூடாதுசமயத்தை ஆளவேண்டியவர்கள்  மனிதர்களே தவிர, ஆட்சியாளர்கள் அல்லர்.

    இவ்வாறாக, ஞானோதய காலத்தில், ஐரோப்பா முழுவதும், சமயத்தை ஆட்சியாளர்களிடமிருந்து விலக்கப் போர்களும் போராட்டங்களும் நடக்க, அதே காலக்கட்டத்தில், மதவெறி பிடித்த, மதம் மூலம் மட்டுமே ஆட்சி நடத்தவேண்டும் என்கிற குறிக்கோள் கொண்ட ஐரோப்பியக் காலனி  ஆட்சியாளர்களோ,  தமது குடியேற்ற நாடுகளில், தமது ஆட்சிபலத்தின் முலம் கிறித்துவ மதத்தை, வன்முறையாக நிலைநாட்டலானார்கள். துரதிருஷ்டவசமாக, அன்று நம் தாய்நாடு காலனியாளர்கள் கைப்பிடியில் இருந்தது.

    புண்ணிய பூமி, ஞான பூமி, என்று ஆதி காலந்தொட்டே ஞானோதயக்  களஞ்சியமாக இருந்து வரும் பூமியாக நம் நாடு இருப்பினும், ஐரோப்பிய ஞானோதய காலத்தில், அந்த ஐரோப்பிய ஞானோதயத்துக்கே நம் நாடுதான் முன்மாதிரி நாடாய்க் கருதப்பட்டது என்றாலும் கூட, நம் நாட்டில், சுதேசி சமயமான இந்து சமயம், காலனி ஆதிக்க மதவெறியாளர்களால் கடுமையான சமய நெருக்கடிக்கு இலக்காகிறது.

    எனவே, அக்காலக்கட்டத்தில், இந்து சமயம்,  முன்னெப்போதும் இல்லாத முனைப்போடு எழுந்து நின்று, தனது கால்களைத் தன் சொந்த பூமியில் நிலைநாட்ட வேண்டிய  நிர்ப்பந்தம்  எழுந்தது.

    இந்தக் காலக்கட்டத்தை, இந்தியாவின் புதிய ஞானோதய காலம் என்று அழைப்பது பொருந்தும். சொல்லப்போனால், அது, மிகவும் சிக்கலானதொரு காலக்கட்டம். வரலாறு காணாத, இடர்ப்பாடு மிகுந்த காலம் அது. வெளியிலிருந்து வந்தவன், ஆட்சியைப் பிடித்தது மட்டுமில்லை;  தன் சமயத்தைப் பலம்கொண்டு பரப்பியது மட்டுமில்லை;  சுதேசி இந்து சமயத்தைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் புளுகினான் – இழித்துரைத்தான் – கேலி செய்தான் – கிண்டலடித்தான், தண்டித்தான், இந்துசமய தெய்வங்களை “Demons” பேய்கள் என்றான்,  இந்து சமயத்தில் இருப்பவர்கள் காட்டுமிராண்டிகள் – நாகரீகமற்றவர்கள் என்றான் – கோயில்களை, வழிபாட்டுத் தலங்களை இடித்தொழித்து, சர்ச்சுகளைக் கட்டினான். மக்கள் புத்தி பேதலித்தாற்போல் ஆகி, உண்மையெது பொய்யெது என்று புரியாமல் திணறலானார்கள். எனினும், ஆட்சியாளனை எதிர்த்துக்கொண்டு வாழ்வது சுலபமில்லை என்று சிலர் பய உணர்விலேயே  மதம் மாறிப் போயினர். வெகுபலரோ, ஆட்சியாளர்கள் மற்றும் கிறித்துவ மதக்கருவிகள் தந்த வெகுபல சலுகைகளினால் மதம் மாறினர், பிறரையும் மதம் மாற்றினர்.

    இந்நிலையில்தான், இந்து சமயப் பண்பாட்டு இயக்கங்கள் தோன்றுகின்றன. 1828இல் பிரம்ம சமாஜம்; 1857இல் பிரார்த்தனை சமாஜம்; 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம்; 1875இல் பிரம்ம ஞானசபை; 1897இல் ராமகிருஷ்ணா  மிஷன் என்று தொடர் சங்கிலியாய் ஒரு எழுச்சி நடக்கிறது.

    இவற்றுள், வள்ளலார் நிறுவியது: சமரச வேத சன்மார்க்க சங்கம்; 1872இல்.  சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் என்று பெயர் திருத்தம் செய்து வள்ளலார் இந்தச் சமயப்  பண்பாட்டு  இயக்கத்தை, அவ்வமயம்  நடாத்திச் செல்கிறார்.

    வங்காளத்தில் தோன்றிய பிரம்ம சமாஜம், மஹாராஷ்டிராவில் தோன்றிய பிரார்த்தனை சபை ஆகியவற்றிலிருந்து வள்ளலாரின் சமரச வேத சன்மார்க்க சங்கம் (சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம்) எவ்வாறு வேறுபட்டது? ஏற்கெனவே இரண்டு இயக்கங்கள் எழும்பி நிற்க, அவற்றுடன் சேர்ந்து இயங்காமல், தான் தனியாக ஒரு இயக்கம் துவங்க வேண்டிய தேவை வள்ளலாருக்கு ஏன் ஏற்பட்டது என்கிற இரண்டு கேள்விகள் இப்போது நம்முள் எழுகின்றன.

    விந்திய சாத்பூரா மலைத்தொடருக்குக் கீழே தெக்கணத்தில் தோன்றிய முதல் சுதேசி சமயப் பண்பாட்டுப் புரட்சி எதுவென்று பார்த்தால்,  அது வள்ளலாருடையதுதான்.

    விந்திய சாத்பூரா மலைத்தொடருக்கு மேலே வட இந்தியாவில், மிகக் குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவில், வங்காளத்தில்,  கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) தோன்றியது பிரம்ம சமாஜம், வடமேற்கில், மகாராஷ்டிரத்தில், குறிப்பாக, பாம்பேயில் (இன்றைய மும்பை) தோன்றியது பிரார்த்தனை சமாஜம்.

    இவை இரண்டுமே நடப்பில் இருப்பதான சுதேசி சமயமான இந்துசமயப் பண்புகளை ஆதரிக்காது அவற்றை எதிர்த்தவை. இரண்டிற்குமே அரசியல் சார்பு இருந்தது.

    இதிலே, பிரம்ம சமாஜம் என்பது, முழுக்க முழுக்க ஆங்கிலேயரின் கைக்கூலி இயக்கமாகும். இதனை பிரமோ சமாஜ் என்ற பெயரில், முதலில் தொடங்கியவர் ராம் மோகன் ராய். இவர் ஒரு செல்வந்தச் சீமான். குலின் எனப்படும் அரசகுல பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி அவ்வப்போது இந்தியச் செல்வந்தர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்குவதுண்டு. ராம் மோகன் ராய் இவ்வாறு, கிழக்கிந்திய கம்பெனிக்கு  வட்டிக்குப் பணம் தந்து உதவி வந்தார்; இவ்வாறான பழக்கத்தில் தான்,  ராம் மோகன் ராயின்  கணக்குப் போடும் துல்லியத்தையும், கில்லாடிக்குக் கில்லாடியாய் அவர் நடந்துகொள்ளும்  சாமர்த்தியத்தையும்,  பேச்சுச் சாதுரியங்களையம்  கிழக்கிந்திய கம்பெனி கவனிக்கிறது. இந்தியாவில், தான் வேரூன்றி நிலைநிற்க வேண்டுமென்றால்,  இவனைக் கூட்டாளியாக்கிக் கொள்ளுவது வேண்டும் என்கிற எண்ணம் கிழக்கிந்திய கம்பெனிக்குத் தோன்றுகிறது. எனவே, ராம் மோகன் ராயை, கிழக்கிந்திய  கம்பெனியில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு வர இயலுமா எனக் கேட்க,  அவரும் ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு,   கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பந்தியாகிறார் ராம் மோகன் ராய்.

    ஏற்கெனவே, முகலாய அரசர், இரண்டாம் அக்பருக்கும் இவருக்கும் கொஞ்சம் நெருக்கம் இருந்து வந்தது. கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தர் பணி என்ற பதவி. கம்பெனியின் கணக்கு வேலை, வழக்குகளுக்கு எனக் கோர்ட்டுக்குத் தேவையான எழுத்துவேலை செய்வது, இந்தியர்கள் தொடர்பான பிரச்சினைகளில் வாய்ச் சவடால் செய்து பஞ்சாயத்துப்  பேசுவது, இந்துச் சட்டம் என்ற பெயரில், ஆவணங்களை எழுதி அவற்றை ஒரு சட்ட நூலாக கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களுக்கு எதிராகப் பயன்படுத்துமாறு செய்வது போன்ற வேலைகளைக் கிழக்கிந்தியக் கம்பெனிக்காக, ராய் செய்துவந்தார்.

    இத்தோடு, கிழக்கிந்திய கம்பெனியின் சொற்படி, கிறித்துவ மதத்தை உயர்த்தியும் சுதேசி மதங்களைத் தாழ்த்தியுமான நூல்கள் எழுதுவதும் அவர் வழக்கம். ஆங்கிலேயர்களும் கிறித்துவ மதமும் உயர்வானவை என்பதைத் தொடர்ந்து ருசுப்படுத்துவதற்காக, ஆங்கிலக் கிறித்துவ மதபோதகர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு, அவ்வப்போது, சுதேசி மக்களிடையே மறைமுகமாக, சமய பண்பாட்டுப்  பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அவற்றிற்கு, தான் முன்னின்று, ஆங்கில அரசின் மூலம், கிறித்துவர்கள் மூலம், கிறித்துவக் கொள்கைகள் மூலம்  தீர்வு காணுவதுபோல நாடகமாடுவது என்பதெல்லாம் ராம் மோகன் ராயின் வேலைகள்.

    இவை ஒவ்வொன்றுக்கும் அவருக்கு ஆங்கிலேயர்களால் சம்பளத்தைத்  தாண்டி, கூடுதல் சன்மானம் வழங்கப்பட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு, இந்து சமயத்தில் குழப்பம் விளைவித்து அதன் ஸ்திரத்தைக் குலைக்கமுடியுமோ முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருக்குச் சன்மானம் வழங்கப்பட்டது. ஏனெனில், அவ்வாறான ஒவ்வொரு நிகழ்விலும், ஆங்கிலேயர்கள் அப்பிரச்சினையில் தலையிட்டு, தீர்வு காண்பதற்கான ஒரு சூழல் ஏற்படும்; ஆங்கிலேயர்கள், புதுப் புதுச் சட்டங்கள் இயற்றி, ஒரு பக்கம் நற்பேரும் மற்றோர் பக்கம், இந்திய மக்களை ஆள – பிரித்தாள வசதியும்  ஏற்படும் – பொய் வழக்கு போட்டு அவர்களைத் தண்டித்து அடக்கி ஆள வழி பிறக்கும். கிறித்துவ மதமாற்றத்தையும் அப்படியே சுலபமாக நடத்தி விடலாம்.

    ஆக, ராம் மோகன் ராய்க்கு வழங்கும் சன்மானம் என்கிற ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து வீழ்த்திக் கொண்டுவிட முடியும் என்பது தான் ஆங்கிலேயரின் கணக்கு.

    1803இல் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்த ராம் மோகன் ராய், அதே ஆண்டில், வேலையில் சேர்ந்த ஒரு சில மாதத்திற்குள்,  கம்பெனியின் ஆதிக்கம் ஓங்கவும், கிறித்துவ மதம் ஓங்கவும் ஓர் அற்புதமான சதித்  திட்டம் தீட்டிவிடுகிறார் – அதை நடைமுறைப்படுத்தியும் காட்டுகிறார். அதனால், ஆங்கிலேயர்களின் கிறித்துவ மதமாற்றம் செய்வோரின் மிகுந்த நம்பிக்கைக்கும் நெருக்கத்துக்கும் உள்ளாகிறார். அந்த நிகழ்ச்சிதான்  “சதி” எனும் உடன்கட்டை ஏறுதல் எனும் நிகழ்ச்சி.

    1803இல் திடீரென்று வில்லியம் கேரி என்பவர் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்: “கல்கத்தாவைச் சுற்றிய  30 மைல் சுற்றுவட்டாரத்தில் 1803இல் மட்டும் 438 உடன் கட்டை ஏறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன – இந்து சமயத்தில் நிகழும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது” என்று.

    இந்த வில்லியம் கேரி யாரென்று பார்த்தால், அவர் ராம் மோகன் ராயின் நண்பர்;  கிறித்துவ மதபோதகர்;  மதமாற்ற வித்தகர்; ஏற்கெனவே, இவ்விருவரும் வித்யா வாகிஷ் எனும் ஒரு சம்ஸ்கிருத பண்டிதரும் சேர்ந்து, “மஹா நிர்வாண தந்த்ரா”எனும் நூலை வடமொழியாம் சமஸ்கிருதத்தில் எழுதி வெளியிட்டார்கள் (வடமொழி அறியாத கேரி இந்நூலை எழுதியிருக்க வாய்ப்பே  இல்லை என்பது உலகோர் கருத்து – பின்னாளில் வித்யாவாகிஷ் கேரியை தம் நட்பு வட்டத்திலிருந்து விலக்கிவிட்டார் என்பதும் இந்நூலை எழுதியது வித்யாவிகாஷ்  என்பதற்குச் சான்று. இந்நூல், வித்யாவிகாஷால் எழுதவைக்கப்பட்டது என்பதும் கூடத் தகும்). வில்லியம் கேரி, கிழக்கிந்திய கம்பெனியின் தொடர்பில் 1803இலிருந்து இருந்து வந்ததையும் நாம் அறிகிறோம்.

    1803க்குப் பிறகு,  சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும், உடன்கட்டை ஏறுதல் பற்றிய சேதி, மீண்டும் வருகிறது: 1815-1818 காலக்கட்டத்தில் உடன்கட்டை ஏறுதல், வங்காளத்தில் இரட்டிப்பாகிவிட்டது என்று.

    ஆக, பொய்யுரையும், பணம் கொடுத்துத் தூண்டிவிடப்பட்ட நிகழ்வாகவும் தான் உடன்கட்டை ஏறுதல் அன்று ஆங்கிலேய ஆட்சியில் நடந்திருக்கிறது என்பதை நம்மால் ஊகிக்கமுடிகிறது.

    கேரியும், மோகன் ராயும், ஆங்கிலேயர்களும் நடத்திய இந்த நாடகத்தில், அடுத்த கட்ட அரங்கேற்றம் என்னவென்றால். ராம் மோகன் ராய், இவ்விஷயத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்து, இந்து சமயத்தில் இவ்வாறு நடக்கும் இழிவான செயல்களில் தலையிட்டு – அவற்றைச் சட்டத்தின்  மூலம் தடுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறார். உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம் வருகிறது. ராம் மோகன் ராய், இந்து சமயத்தின் சீர்த்திருத்தவாதி என்று  மிகப்பெரிய புகழை அடைகிறார்.

    இவ்வாறு, ராம் மோகன் ராய், இந்தியர்கள் சார்பான விஷயங்களில், ஆங்கிலேயர்கள் தமக்கு வசதியான முடிவெடுக்க, ஆலோசனை தரும் உயர்நிலை ஆலோசகராகவும், இந்திய மக்கள் பிரதிநிதியாகவும் ராம் மோகன் ராய்,  பல விஷயங்களில் பகிரங்கமாகவே செயல்படலானார். இவற்றுள், பால்ய விவாகம் எனப்படும் குழந்தைகள் திருமணத் தடையும் அடக்கம்.

    இவையாவும், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித்  தந்திரமே தவிர, எந்த ஒரு இந்திய பிரஜையும், ராம் மோகன் ராயைத் தம் தலைவராக கிழக்கிந்திய கம்பெனியிடம் மொழிந்துரைக்கவில்லை. ஆக, கைக்குள் கையாக ஆங்கிலேயருக்காகச் செயல்பட்டவர் ராம் மோகன் ராய். அதனால் தான் அவருக்கு அத்தனைப் பெரும் புகழும் பதவிகளும் அந்தஸ்தும் செல்வாக்கும் கிடைத்தன.

    ஒரு பக்கம், கிழக்கிந்திய கம்பெனிக்கு இத்தனை நெருக்கமாக இயங்கிய அதேவேளையில், இன்னொரு பக்கம்,  இரண்டாம் அக்பருக்கும் அவர் நெருக்கமாகவே நடந்துகொள்ளலானார். கிறித்துவ மதத்தை உயர்த்திப் பேசும் நூல்களை எழுதுவது போலவே, இஸ்லாமியத்தை உயர்த்தும் சில நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டார். “மீரட் உல் அக்பர்” என்று இஸ்லாமியர்களுக்கான ஒரு செயதித்தாளையும்  பெர்சிய மொழியில் வெளியிட்டு வந்தார்.

    பிரிட்டிஷாரின் வலு பெருகப் பெருக, முகலாய மன்னர்கள் தாக்குப்பிடிக்க இயலாமல் போன நிலையில், பிரிட்டிஷாருக்கு நெருக்கமாயிருந்து  தேர்ச்சி பெற்ற  ராம் மோகன் ராயின் தயவு, இரண்டாம் அக்பருக்கு மிகவும் தேவைப்பட்டது. ராம் மோகன் ராய் அவ்வப்போது காட்டி வந்த இஸ்லாமிய வாஞ்சையும் இந்தத் தயவுத் தேவையில் அடக்கம். இரண்டாம் அக்பரிடம் ராய்க்கு இருந்த நெருக்கத்தை, கிழக்கிந்திய கம்பெனியும், இந்திய மக்களிடையே தமது “இமேஜ்” வளர, மிக அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

    சுதேசி சமயப் பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவதைக் குறைகூறும் அதிருப்தியாளர்களின் வாயை அடைப்பதற்காகத் திட்டம் தீட்டப்படுகிறது. ராம் மோகன் ராய் பிறருக்காகப் பாடுபடுவதாகக் காட்டவும், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் சமயப் பண்பாடுகளைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது என்று மக்கள் நம்புமாறும் ஒரு தந்திர அரசியல் செயல் வடிவம் பெறுகிறது.

    இரண்டாம் அக்பர், தமது பணச்செலவில், ராம் மோகன் ராயை, தமது தூதுவராக பிரிட்டனுக்கு அனுப்புகிறார். அனுப்புமுன், ராம்  மோகன் ராய்க்கு ராஜா என்ற பட்டத்தைச் சூட்டி, இவரே இந்திய நாட்டு மக்களின் மானசீக ராஜா என்பதாக,  “ராஜா ராம் மோன் ராய்” பிரிட்டன் செல்கிறார்.

    உடன்கட்டை ஏறுதலைத் தடை செய்து,  வில்லியம் பென்டிங்க் இயற்றிய Bengal Sati Regulation of 1829 மறுக்கப்படாமல் உறுதி செய்யவேண்டும் என்றும், இரண்டாம் அக்பருக்கான உதவித் தொகையை (Stipend) அதிகரிக்க வேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகளுடன் பிரிட்டன் சென்ற ராஜா ராம் மோகன் ராயின் கோரிக்கைக்கு ஏற்ப, பிரிட்டிஷ் அரசும் இரண்டாம் அக்பருக்கான உதவித் தொகையில்  30,000 பவுண்டுகள் சேர்த்து அதிகத் தொகையாக அளிக்க ஆணையிடுகிறது.

    “ராஜா” பட்டத்துடன், ராம் மோகன் ராயின் புகழ் இன்னமும் பெருகுகிறது.

    ராம் மோகன் ராய் கெட்டிக்காரத்தனம்  நிறைந்த அரசியல்  தந்திரவாதி, பணம், புகழ், அந்தஸ்து மட்டுமே அவருக்கு முக்கியம், சுதேசி சமயப் பண்பாடுகளோ, நாட்டின் சுயமரியாதையோ அவருக்கு முக்கியம் இல்லை என்பதற்குப் பற்பல எடுத்துக்காட்டுகள் உண்டு. அவற்றைத் தரவுகள் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்தக் கேரியுடன் அத்தனை நெருக்கமாகப் பழகினாரோ, பின்னாளில், அதே கேரியுடன் பிணக்கு ஏற்படுகிறது, கேரியின் பாப்டிஸ்ட் கிறித்துவம் தாழ்ந்தது என்றும்  “Unitarianism” எனப்படும் நவீன யூத மதமே உயர்ந்தது என்றும் கேரியைப் பழித்து அதனை ஆதரிக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனியைத் தாண்டி, ஐரோப்பியர்கள் இந்தியாவில் குடியேற்றம் செய்ய – விவசாயம் செய்யவும் ஆதரிக்கிறார். (கிழக்கிந்திய கம்பெனியில்  வேலை பார்த்த வகையில், அவர்கள் இந்தியாவில் ஈட்டிய பெரும் செல்வம் கண்டு பொறாமை பட்டவராக இதைச் செய்ததாக உணர்கிறோம்).

    குழந்தைகள் திருமணத் தடைச் சட்டத்தைக் கொண்டவர் என்ற புகழை ஈட்டுவதில் மட்டுமே அவருக்கு ஆசை இருந்தது; அதனைப் பின்பற்றும் நோக்கம் அவருக்கு இல்லை என்பதும் உண்மை. இவருடைய மகளை, குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்தவர்.

    ஆத்மீய சபா, யூனிடேரியன் கம்யூனிட்டி ஆகியனவற்றையும் தொடங்கி பல்வேறு வகைகளில் தம்மை பிரபலப்படுத்திக்கொண்டவர்.

    இன்று, நம்மிடையே இருக்கும் பல அரசியல்வாதிகளின் தந்திரங்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக அன்றே ராம் மோகன் ராய் பரிமளித்தார்.

    ஆக, பணம், புகழ், அந்தஸ்துக்காக, அந்நியர்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் இச்சைக்காய் எதனையும் செய்யத் தலைப்பட்டவராகவே ராம் மோகன் ராய் இயங்கி வந்தார்.  சுதேசி சமயம், சுதேசி மொழிகள், சுதேசிப் பண்பாடுகள், பற்றிய அக்கறை இல்லாத அவர்,  அந்நியரைக் குளிரவைத்து, அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றை அவர்களுக்காகச் சாதித்துத் தரவேண்டும் என்கிற ஒரே நோக்கம் கொண்டவர்.  சர்ச்சுகளின் கைக்கூலியாகச் செயல்பட்டு சுதேசி சமயப் பண்பாட்டுக்கு அவர்  செய்து போந்த நாசவேலைகள் பற்பல.

    சொந்த மக்களையும், சுதேசிப்  பண்பாடுகள், மொழி, இலக்கியம், கலை, காவியங்கள், கல்வி என எதனையும் பழிக்கவும் அழித்தொழிக்கவும் அவர் துணிந்தவரானார்.

    துரதிர்ஷ்ட வசமாக, அந்நிய ஆட்சியாளர்களுக்குக் கைக்கூலியாகச் செயல்பட்டவர்கள் மட்டுமே அன்று கவுரவிக்கப்பட்டார்கள். பட்டம், பதவிகள் தந்து உயர்நிலையில் வைத்து,  ஆராதிக்கப்பட்டார்கள் என்ற நிலையில் பிரம்ம சமாஜம் மற்றும் அதனை அடுத்துத் தோன்றிய பிரார்த்தனை சமாஜம் போன்றவற்றின்  சுதேசி சமயப் பண்பாட்டுச் சேவைகள் என்று சொல்லும்படியான விஷயம் இல்லை என்பது தெளிவு.

    இங்கு தான் வள்ளலார் எனும் தனிமனிதர், ஒரு சுதேசி சமயப் பண்பாட்டுப் பாதுகாவலராக எழுகிறார். அவரது  சுதேசி சமய இயக்கம் தோன்றுகிறது. ஆன்மீக உலகில், அது ஒரு விடிவெள்ளிக் காலம்.

    (மேலும் பேசுவோம்)

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20

    அவ்வைமகள்

    20. இந்து சமயம் எனும் சிகரம்  

    பிரெஞ்சு நேசம் பற்றி நாம் பேசிக்கொண்டுவரும் வேளையில், அன்றைய காலனி ஆதிக்க நாளில், காலனி ஆதிக்க நாயகர்களுக்கு இடையே பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, தீவிரமான காலனி வெறியின்றியும் , மதத் திணிப்பு – மதமாற்ற  நோக்கமின்றியும் நடந்து கொண்டதோடு, அவர்கள் இந்தியருடன் நட்பு பாராட்டி உதவிகள் செய்தத் தருணங்களை நாம்  நினைவு கூர்ந்து வருகிறோம்.

    இந்திய மக்கள் பால் அவர்கள் காட்டிய இந்த நேசமும் உதவியும், பற்பல  நெருக்கடிகளுக்கிடையே நெஞ்சார்ந்து வழங்கப்பட்ட உதவிகள் என்பதை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம். ஏனெனில், உலக அரங்கில் மற்றும் தன்  உள்நாட்டில் அன்று பிரெஞ்சு பட்ட சிரமங்கள் போலவே, அந்நாளில், காலனி  ஆதிக்கக் காலகட்டங்களில்,  இந்தியாவில் பிரான்ஸ் இருக்கிறபோது அவர்கள் பட்ட சிரமங்கள் ஒன்றிரண்டல்ல. ஒருபுறம் போர்ச்சுக்கீசிய மற்றும்  டச் (நெதர்லாந்து) தந்த பிரச்சினைகள்  மற்றொருபுறம் மிகப்பெரிய அளவில் பிரிட்டிஷ் தந்த பிரச்சினைகள்  என பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில், உண்மையில், படாத பாடுபட்டது.

    அன்று இந்தியாவை அபகரித்துக் குடியேற,  ஐரோப்பிய நாடுகள் கடுமையாய் முயன்றன – காரணம், இந்தியா, அந்நாளைய உலக வர்த்தக மார்க்கத்தின் (Silk Road) வழித்தடமான பட்டுவழிப் பாதை அல்லது பட்டுச் சாலை எனப்படும் பிரதான வணிகப் பாதையில் நடுநாயகமாக விளங்கியது.

     

    பட்டுச் சாலை (Silk Road) என்பது உலகில் இருந்த ஆதிகாலத்து வணிகப்பாதை. மேக்கிற்கும் கிழக்கிறகும் இடையேயான வாணிகம் பட்டுச்சாலை வழியாகத்தான் நடைபெற்று வந்தது. கடல்வழிப் பட்டுச்சாலை  நீல வண்ணத்திலும். தரைவழிப் பட்டுச் சாலைசிவப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளது. https://en.wikipedia.org/wiki/Muziris

    முப்புறம் கடலும் வடக்கே பிறநாடுகளுடன் நிலவழித் தொடர்பும் கொண்டதாய், மிகக்கணிசமான நிலப்பரப்புடன், மிக சாதகமான சீதோஷ்ண நிலையுடன், கள்ளம் கபடமற்ற நெஞ்சமும் தர்மசிந்தனையும் உள்ள மக்கள் கொண்ட ஒரு வசதியான தீபகற்பமாக விளங்கும் இந்தியாவைப் போல தோதான நாடு உலகில் இல்லவே இல்லை. எனவே, அன்று, அனைவர் கழுக்குப் பார்வையிலும் இந்தியா விழுந்தது! இவ்வாறான சூழலில், இந்தியாவைக் குடியீரம் செய்து அபகரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று விஞ்சிவிடக்  கடுமையாய் முயன்றன. எத்தனை எத்தனை கொடூரமுண்டோ, நயவஞ்சகம் – தந்திரம் உண்டோ அத்தனையும் பிரயோகப்படுத்தப் பட்டன.

    படைபலம் மற்றும் தந்திர சூழ்ச்சிகளில், பிரெஞ்சுப் படைகள்  பலசமயங்களில் பிறரைவிட பலமாக இயங்க இயலவில்லை என்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. அதில் பொருளாதாரப் பிரச்சினைகளும் அடக்கம். பல தருணங்களில், பிரெஞ்சு, தான் ஆக்கிரமித்தப் பகுதிகளை பிரிட்டிஷிடம் இழந்தும் கூட போனது. (உலக அரங்கில், நெப்போலியனின் போர் வெற்றிகளுக்குப் பிறகு இப்பகுதிகளை, பிரிட்டிஷ் மீண்டும் பிரெஞ்சுக்குத் தரவேண்டியும் நேரிட்டது).

    இவ்வாறான, நெருக்கடிகள், இப்போது நாம் மீள்பார்வையாகப்  பேசுவதற்கு எளிதாகத் தெரியும் ஆனால், நிதர்சனமாக இந்த நெருக்கடிகளைக் கடந்து அவர்கள் சென்ற காலம் அவை எத்துணைக் கடினமானவையாய் இருந்தன என்பதையும் நாம் எண்ணுதல் வேண்டும்.

    பொதுவாகவே, நெப்போலியன் காலத்திலிருந்து, பிரான்சின் வரலாற்றைப் பார்த்தால், விடுதலை பெறவிரும்பும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டித் துணைபுரியும் சார்பு புரியும். அமெரிக்க விடுதலையில் பிரெஞ்சின் பங்கு மகத்தானது என்பதை நாமறிவோம். உலக மக்கள் எவரேயாயினும் அவர்கள் விடுதலைக்காகப் போராடும்போது அங்கே முதலில் குரல் கொடுப்பதும் உதவிக்கு வருவதும்  பிரான்ஸ் தான் என்கிற கீர்த்தி பிரான்சுக்கு எப்போதும் உண்டு. அமரிக்காவின் மிகமுக்கிய வரலாற்று அடையாளமான சுதந்திரதேவியின் சிலை (Statue of Liberty) பிரான்சால் அமரிக்காவுக்கு வழங்கப்பட நினைவுப்பரிசு என்றால், விடுதலை என்பது உலக அரங்கில் முதன்மைப் பொருளாய் இருக்கவேண்டும் என்று தீராத ஆவல் உடைத்த ஒரு நாடாய் பிரான்ஸ் விளங்கிவந்திருப்பது புரியும்.

    காலனி வெறியோடு மதவெறியும் கலந்துதான் நம் நாட்டை, போர்ச்சுக்கீசிய, டச்சு மற்றும், பிரிட்டிஷ் ஆகியோர் நெருங்கினர். இவர்களின் ஒருமித்த கொள்கை யாதென்றால்,இந்தியாவில், சுதேசி சமயங்களை இழித்துரைப்பதும் – கோவில்களை – வழிபாட்டுத்தலங்களை, அழிப்பதுமாகும். சுதேசி சமயக்   கோயில்களை அழித்துத் தரைமட்டமாக்கி அங்கே கிறித்துவ தேவாலயங்களை நிறுவுவது சாமர்த்தியமான செயலாக, வெறித்தன்மையுடன் அரங்கேறி வந்தது.

    முன்பு வந்து, முகலாய ஆதிக்கம் சுதேசி சமயங்களுக்கு செய்த கெடுதல் போதாதென்று, இவர்கள் வந்து, வரிந்து கட்டிக்கொண்டு செய்த நாசவேலைகள் ஏராளம் ஏராளம். கிறித்துவ மதம், சுதேசி சமயங்களை விட உயர்வானது என்பதாகக்  கூறிக்கொண்டு சுதேசி சமயங்களை இழிப்பதும், பொய்யுரைத்தும், போலிக் கவர்ச்சி காட்டியும், பலவகைகளில் மனிதர்களுக்கு மனநெருக்கடியும், புத்திக்குழப்பமும் ஏற்படுத்தியும், ஏன் மிரட்டியும், துன்பறுத்தியும் கூட, பலவகையானும் யுத்திகள் செய்து, சுதேசி சமயங்களிலிருந்து மக்களை கிறித்துவ மதத்தின் பால் இழுத்து, மதமாற்றம் செய்வது, ஒரு தொழிலாகவே நடைபெற்று வந்தது.

    முகலாய மன்னர்களின் ஆட்சி சரியத் தொடங்கிய காலத்திலிருந்தே, பிரான்சின் சிந்தை என்னவென்றால், மெல்ல மெல்ல இந்தியர்களுக்கு இந்தியவிடுதலையில் ஒத்தாசை செய்வது என்பதுதான்.

    எனவேதான், காலனி ஆதிக்கத்தின் போது, இந்தியர்களுடன், குறிப்பாக, தமிழர்களுடன் பிரெஞ்சு மக்கள் நெருங்கிப் பழகத் தொடங்குகின்றனர்.  பிரெஞ்சின் தலைமை பாண்டிச்சேரி என்பதால், தமிழர்கள்  மிகவும் நெருக்கமானவர்கள் ஆகிறார்கள் .

    தமிழர் பண்பாடுகளை  அவர்கள் வெறுமனே கவனிப்பதோடு நின்றுவிடாது,  அவற்றை  அணுகி ஆய்ந்து, அவற்றில் பொதிந்துள்ள உண்மைகளை – பின்னணிகளை  அறிந்து கொள்ளவும் செய்தனர்.  இவ்வாறான, தமிழர் பற்றிய ஞான வளர்ச்சியினால், பிரெஞ்சுக் குடியேற்றம் இருந்த அந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் பெருமைகள் – தமிழர்களின் பெருமைகள் யாவும் பிரான்சில் பேசப்பட்டன. பார்க்கப்போனால், 1731லேயே ரிக் வேதம் பாரிஸின் ராயல் நூலகத்தில் இடம் பெற்றுவிட்டது. அடுத்ததாக,  இந்திய நாகரீகத்திற்கான துறை பல்கலைக் கழகங்களில் உருவானது.  வடமொழி, தமிழ் மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆய்வு செய்யும், மொழிபெயர்ப்பு செய்யும், தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட கருத்துகளைத் தாங்கியதான இலக்கியங்களை பிரெஞ்சு  மொழியில் ஆக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பிரான்ஸ் மேற்கொண்டது.

    பிரான்சின் புகழ்பெற்ற தமிழ் வித்தகரும் தமிழ் எழுத்தாளருமான கோர் சொல்லுவதைப் பாருங்கள்: “என்னுடைய நாடி நரம்புகளில் பரிபாடல் வரிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.  தமிழ் எனக்கு வாய்க்கப்பெற்ற மொழி – இம்மொழியின் மூலமாக, தமிழகத்தின் கலாச்சாரத்தைப் பார்க்கிறேன்” https://www.livemint.com/Specials/JBdbjIeHpi8wwyAkjz592H/Francois-Gros-Explorations-in-classical-Tamil.html

    பிரான்சில் தமிழும் தமிழர்களும் அதிகம் அறிப்பட்டதன் காரணம் தமிழ் மண்ணான பாண்டிச்சேரி பிரெஞ்சுக் குடியேற்ற்றத்தின் தலைமைப் பீடமானதால் தான் என்று ஏற்கனவே பார்த்தோம்.  தமிழ் பற்றி தமிழகம் பற்றி, இங்குள்ள மக்களின் பண்புகள்  பற்றி பிரான்ஸில்  மிக அதிகமாகவே இன்றும் அறியப்படுகிறது பேசப்படுகிறது என்பதன் தொடக்கம் அன்றே நிகழ்ந்தது எனலாம்.

    அதே போன்றே, பாண்டிச்சேரித் தமிழர்கள் மட்டுமல்லாது இன்னபிற தமிழர்களுக்கும் பிரான்ஸ் பற்றி – அம்மக்கள் பற்றி, அதிகமாகவே தெரிய ஆரம்பிக்கலானது அன்றே ஏனென்றால் பாண்டிச்சேரிக்குள் தமிழர்கள் அனுமதிக்கப்பட்டது தான்.

    இவ்வாறன நேசவுணர்வால் உந்தப்பட்ட பிரெஞ்சு மனிதர்கள், கிறித்துவ மிஷினரிகள் வேரூன்றிப் பெருகுவது மட்டுமல்லாது இந்துமதத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும், இந்துக்களின் பழக்கவழக்கங்களி இழிவாகப் பேசுவதையும் கண்ணுற்றவாறு இருந்த  அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள இந்து சமயத்தில் இருக்கிற, செம்மார்ந்த சமய உணர்வுகள், ஆன்மீகச்  சிந்தனைகள், இழித்துப் பேசப்படும் தன்மையல்லாதன என்பதை அவர்கள் முழுதாய் உண்ரகிறார்கள்.

    இந்துமதத்திற்கு எதிராக பிரிட்டிஷ், டச்சு, போர்ச்சுக்கீசிய ஆட்களால்   பரப்பப்படும் பொய்யான கருத்துக்களை அவர்கள் புறந்தள்ளிவிட்டு, இந்து சமயத்தில் இருக்கிற ஆன்மீகப் பயிற்சிகளை, ஆன்மீகச் செழுமையை – ஆன்மீகத்தில் காணப்படுகிற தன்னேரில்லாச் சுதந்திரத்தை ஆராதிக்கிறார்கள்.

    இந்து சமயத்தில் உள்ள உள்சமயங்களில் இருக்கிற வித்தியாசங்களில் பொதிந்திருக்கிற குடியாண்மையை, மனித மதிப்பை, தனிமனித உரிமைகளை பிரெஞ்சு மக்கள் மிக அதிகமாகவே தெரிந்து கொள்கிறார்கள். அவர்களை அன்று இந்துசமயத்தின் பெருமைகளாகப் பார்த்த விஷயங்கள் இதோ:

    இந்து சமயம்   எத்தனை பெருந்தன்மையானது – எத்தனை சுதந்திரமாக எவரொருவரும் இந்த சமயத்தில் இயங்க முடியும் என்பது அவர்களால் வாயாரப் புகழப்பட்டது. பரம்பொருள் எனும் ஒப்பற்ற சக்தியை அவரவருக்குப் பிடித்த உருவத்தில், அவரவருக்குத் தோதான வழிபாட்டுமுறைகளோடு, அவரவர்க்குத் தோதான நேரத்தில் வணங்கிகொள்ளமுடியும்.  அல்லது வெறுமனே மனதாலும் எண்ணிக்கொள்ளமுடியும். இயன்றபோது கோவிலுக்குப் போகலாம், போகாமலேயும் இருக்கலாம். விட்டு விட்டும் போகலாம். ஒரு நாள் ஒரு கோவிலுக்குப் போகலாம் – இன்னொரு நாள்  வேறொரு கோவிலுக்குப் போகலாம். பூசலார் போல் மனதுக்குள்ளேயே கோவில் கட்டிக் குடமுழுக்கு செய்யலாம் – தனிமனிதருக்கு ஏற்றார் போல் சமயம் என்பது எளிவந்து நற்கிற  வசதியோ வசதி. இங்கு சமயம், வாழ்வோடு இணைந்த சுயம்புவான சங்கதி! இங்கே – சமயம் என்பது பாரமான புறத்திருந்து திணிக்கப்படுகிற சுமை இல்லை.

    இங்கே, வழிபாட்டுத்  தோத்திரத்துக்கு எந்த தோத்திரத்தை வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி எடுத்துக் கொள்ளலாம். சிறுதெய்வங்களை நினைத்துக் கொள்ளலாம் – கிராம தேவதைகளை கும்பிட்டுக்கொள்ளலாம் – எதுவுமே வேண்டாமென்று வெறும் தீபத்தை  ஏற்றி வைத்து வணங்கிக்  கொள்ளலாம். சூரியனை வணங்கலாம் – குளத்தை, –  நதியை – கடலை – காற்றை – நெருப்பை –  மலையை – ஆகாயத்தை  வணங்கலாம்.

    ஆடம்பரப் பதார்த்தங்கள் செய்து  தடபுடலாய் வணங்கலாம் – வெறுமனே ஒரு சொட்டு நீரை  அர்ப்பணம் செய்து  வணங்கலாம்.

    இங்கே சமயத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும், தங்கு தடையற்ற வசதி வாய்ப்புக்கள்! சுதந்திரமான  எண்ண எழுச்சிகள் – செயல் திறங்கள் !!

    தனிமனித உரிமைகள் – விருப்பு வெறுப்புக்கள் யாவற்றையும் அனுமதிக்கிற ஒரே சமயம் – இந்து சமயம்.

    இச்சமயத்தில், கடவுளை எப்படி வேண்டுமானாலும்  விளிக்கலாம் – தோழனாக -வேலைக்காரனாக – எஜமானனாக – காதலனாக -காதலியாக – குழந்தையாக – ஆணாக  – பெண்ணாக – அலியாக – பிசாசாக – பேயாக – முனியாக – காட்டேரியாக – அன்னபூரணியாக, – பாம்பாக, பசுவாக, பன்றியாக!

    கடவுளை, பாடி  வணங்கலாம் – நடமாடி வணங்கலாம், கூத்தாடி வணங்கலாம் – திட்டியும் வணங்கலாம்!

    வேறெந்த சமயமும் அளித்திராத எண்ணிலா தனிமனித சுதந்திரங்கள் தந்திருக்கிற – தந்து கொண்டிருக்கிற ஒரே சமயம்!

    இந்த சமயம் தரும் பேச்சுரிமை – எழுத்துரிமை – சிந்தனை உரிமைகள் ஒன்றா இரண்டா?  இங்கே எவரும் இந்து  மதத்தை விவாதிக்க முடியும் –  குறைகாணமுடியும் – செப்பனிடமுடியும் – காலத்திற்கேற்ப மாறுதல்களை ஏற்படுத்தி சமயத்தை தகவமைப்பு செய்து அதனை வளர்க்கமுடியும்.

    இங்கே சமயத்தில் இவருக்கு எத்தனை தூரம் எத்தனை ஆழமாகப் பயணிக்கமுடியுமே அத்தனை அளவு பயணிக்கமுடியும். வேதங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் என்று எண்ணிலடங்கா சமய இலக்கியங்களின் நவரசத்தை நுகரமுடியும் – அத்தகு இலக்கியங்களை உருவாக்கவும் முடியும்.

    புதுப் புது சீர்திருத்தவாதிகள்   புதுப் புது கிளைகள் – புதுப்புது  பூக்கள் என்று ஒய்யாரமாய் –  என்றும் பசுமையாய் ஜீவிக்கும் சமயம் இந்து சமயம்.

    சமயம் என்பது ஜீவனுள்ள விஷயம் என்பதால் அது பரிணாம வளர்ச்சி  கண்டேயாகவேண்டும் என்பதனை இயல்பாய் எடுத்துக்காட்டும் எளியமதம். இங்கே மதகுருமார்களுக்கு ஒவ்வொரு குடிமகனும், தனது வருவாயில்   பத்து சதவீதம்  மாதம் செலுத்தவேண்டும் என்கிற வற்புறுத்தல் இல்லை – இங்கே மதக்குருமார்களுக்கு அடிமைகளாக அவர்கள் இடும் வேலையைச் செய்து  பிழைப்பு நடத்தும் தேவை எவருக்கும் இல்லை.

    இந்த சமயத்தைப் போல் எந்த சமயமும் இல்லை  என்பதான பேச்சுக்களை அந்நாளிலேயே பிறநாட்டார் பேசம் ஒரு நிலையம் மெல்ல மெல்ல மவுனமாய் வளர்ந்தது என்றால் அதற்கு, பிரெஞ்சு மக்களின் பங்கு இன்றியமையாதது. (இன்னுமும் இந்தக் கணிப்பில் எவ்விதக் குறைவும் மாறுதலும் இல்லை).

    அதுபோலவே, பிரான்சிலும் இந்துமதக் கோட்பாடுகளைஅன்று  வெகுவாக ஆராதித்தார்கள் – இன்று ஆராதிக்கிறார்கள்.

    பின்னாளில் (1914), உலகப் பிரசித்தியான  விஷயம் ஒன்று நிகழ்ந்ததை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மிர்ரா அல்பாஸா எனும் பிரெஞ்சுப் பெண்மணி, இந்துமதம் தழுவுகிறார்;  பாண்டிச்சேரி வருகிறார் அரபிந்தோ கோஷுடன் இணைந்து  ஆன்மிகம் வளர்க்கிறார் – அரபிந்தோ ஆசிரமமும் ஆரோவில் சமுதாயமும்  உருவாகின்றன – நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆல்போல் வளர்ந்து  அருகுபோல் வேரூன்றி அவையிரண்டும் இன்றும் நின்று மனித குலத்திற்குத் தொண்டு செய்து கொண்டு இருக்கின்றன – இவை நமக்குத் தெரிந்த சேதிகளே. அன்னை என்று நாம் அனைவரும் அன்புடன் அழைக்கும் அப்பெண்மணி பிரஞ்சு தேசத்திலிருந்து இங்கு வந்து நம்முடன் வாழ்ந்து நம் மண்ணில் கலக்க, அவாமிகக் கொண்டு நம்மிடம் வந்தவள்!!

    அன்றைய நாளில், பிரெஞ்சு மக்கள் இந்தியாவைப் பற்றி அறிந்துகொண்ட இன்னொரு விஷயம் தர்மபரிபாலனம். குற்றரசர்கள், சிற்றரசர்கள், பேரரசர்கள் என இந்தியாவில் மன்னராட்சி நடந்து கொண்டிருந்த அக்காலகட்டத்தில், ஒவ்வொரு மன்னனும், தர்ம பரிபாலனம் நடத்தியது  அவர்கள் அறிவுக்கு எட்டியது . ஒவ்வொவொரு மன்னனும் மூன்று தட்டு ஆட்சியமைப்பை நிலைநாட்டி, வெகுசெம்மையாக , தமது நிலப் பகுதியை ஆண்டுவந்தான்.

    இந்த மூன்று தட்டு ஆட்சி என்னவென்றால், சட்டம், நிர்வாகம், நீதி என்பது. ஒவ்வொரு மன்னனும் தெளிவான சட்டங்களை இயற்றி வைத்திருந்தான். ஒவ்வொருவனும் அமைச்சு சார்ந்த நேர்மையான நிர்வாகம் இயற்றினான். ஒவ்வொரு மன்னனும் மிகத் தேர்ந்த நீதித்த துறையை வைத்திருந்தான். முடியாட்சி தான் எனினும் குடியாட்சியின் மாட்சிமையோடு மன்னர்கள் ஆண்டுவந்த  இந்தியா உலக அதிசயமாக – முன்னோடியான  கலாச்சாரப் பண்புகள் கொண்ட ஒரு நாடாக அன்று உலகில் வியக்கப் பட்டது. இத்தகைய மூன்று தட்டு ஆட்சிமுறைமையைக் கொண்ட நாடுகளை அந்நாளில் மேற்கில்  காண இயலவில்லை.

    பிரெஞ்சு -இந்திய வாஞ்சை எத்தனை  வலிமையானது என்பதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

    முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், மற்றும் ஏனைய பிரெஞ்சுப்  போர்களிலும் இந்தியச்  சிப்பாய்கள் ஈடுபட்டுபி போரிட்டு, பிரெஞ்சுக்கு ஒத்தாசை செய்கிறார்கள்.

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னெவென்றால், பிரெஞ்சுக்காகப் போராடிய இந்திய  சிப்பாய்களின், இந்திய அதிகாரிகளின் மத உணர்வுகள் மதிக்கப்பட்டன. தலைப்பாகை மற்றும் தமது இஷ்ட மதத்தின் சின்னங்களைத் தரித்தபடி – தனது மதத்தின் வழிபாட்டு முறைகளை போர்க்களத்திலும்  அவர்கள்  பின்பற்றமுடியும் அதற்கு எந்தத் தடையும் இல்லை. மாட்டுக்கொழுப்பாலான குண்டு உறைகளை வாயில் கடித்து உடைக்குமாறு சிப்பாய்கள் துன்புறுத்தப் படவில்லை. போர்முறைகளை தர்மசிந்தையோடு மட்டுமே செய்யவேண்டும் என்கிற இந்திய போர்வீரர்களின் நற்சிந்தனைக்கும் எவ்வித எதிர்ப்புமில்லை.

    போரென்றால் போர்வீரர்கள் இறப்பது தவிர்க்கவியலாதது அல்லவா? இந்தப் போர்களில், எண்ணிறந்த இந்தியச் சிப்பாய்கள் இறக்க நேரிடுகிறது. அவர்களின் சடலங்களில் யாவும் அவரவர் சமய ஒழுக்கத்தின் படி நேர்த்திக்கடன்களோடு எரிக்கப்பட்டது.

    ஆனால், நாம் ஏற்கனவே பார்த்தபடி, பிரிட்டிஷ் அரசு, கிறித்துவ மதத்தைப்  பகிரங்கமாகவே புகுத்தியும் – இந்து மதப் பழக்கவழக்கங்களைக் கொச்சைப் படுத்தியும் – இந்திய சிப்பாய்களையும், அதிகாரிகளையும் அவர்களது மதஉணர்வு புண்படுமாறு நடத்தியும், அதர்மமான போர் முறைகளை அவர்கள் மேற்கொள்ளுமாறு, அவர்களை வலுக்கட்டாயம் செய்தும் துன்புறுத்தியது. பிரிட்டிஷின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த இந்திய சிப்பாய்களும் அதிகாரிகளும் மனிதாபிமானம் இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர்.

    மண்ணாசை மட்டுமே கொண்டு இவ்வுலகைத் தனது  ஆளுகையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்கிற பேராசையும் ராட்சஸத் தன்மையும் கொண்ட பிரிட்டிஷாரின் நாடு பிடிக்கும் வெறி, எத்தனை எத்தனை சாகசங்களைச் செய்து நாடுகளை அடிமைப் படுத்தும், கிறித்துவ மதத்தை அங்கே திணிக்கும் என்பதை அப்பட்டமாய் நேரடியாய் இந்திய மண்ணில் பிரான்ஸ் புரிந்து கொண்டதுபோன்ற நேரடி அனுபவம் வேறு எங்கும் அதற்குக் கிடைக்கவில்லை.

    நேர்மை என்றால் அது ஆங்கிலேயர்களிடம் இல்லாதது. சூழ்ச்சிகள் செய்வது – மக்களுக்கிடையே பேதத்தை உண்டு பண்ணி – அவர்களுக்குஎதிராக அவர்களையே பயன்படுத்துவது என்பதெல்லாம் பிரிட்டிஷின் கைவந்த கலையாக இருப்பதை, பிரெஞ்சு இந்தியாவில் மிகநன்றாகவே புரிந்துகொண்டது ஆக, பிரெஞ்சு அரசுக்கு, இந்தியா என்பது பிரிட்டிஷை, மிக அருகில் நின்றபடி  அறிந்து கொள்ளும் ஒரு கல்விப் பணிமனை  – கற்றல் பணிமனை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதே கற்றலில், ஒரு நாட்டின் சாதாரண குடிமக்களின் – பிரயாசைகள், ஆசைகள், தேவைகள், எதிர்பார்ப்புக்கள், அவர்களது வாழ்வியல் ஆதாரங்கள், அவர்களது நம்பிக்கைகள், அவர்களுக்கு இருக்கிற ஞானம், விடுதலை வேட்கை, சுதந்திர தாகம் ஆகியனவும் பிரெஞ்சுக்குப் புரிகின்றன.

    வேறு எவரும் செய்யத்துணியாத செயலான பிரிட்டிஷை எதிர்ப்பது மற்றும்  சொந்தநாட்டில் மதவெறியை ஒடுக்குவது  என்கிற துணிச்சலை பிரெஞ்சு செய்தது என்றால் அதற்கு இந்தியாவில் பிரிட்டாஷாரிடம் இந்தியர்களும் – இந்தியர்களோடு தாங்களும் பெற்ற நேரடி அனுபவங்களும்  கூட ஒரு காரணம் என்று கருதுவதும் தகும்.

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 19

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 19

    அவ்வைமகள்

    19.  நெப்போலியனுக்குப் பிறகு  சமயப் புரட்சி   

    பிரெஞ்சுப் புரட்சியின் பிரபலமும் தாக்கமும் உலகெங்கும் பரவியது நிதர்சனமான உண்மையே.

    பிரெஞ்சுப்புரட்சியின் தன்னேரில்லாத தலைவனான, நெப்போலியன் போனப்பார்ட்டின், வீரம், தைரியம், சாதுரியம், அச்சமின்மை , உள்ளிட்ட அபார குணாதிசயங்கள் எல்லாம் அன்று உலகின் ஒவ்வொவொரு மூலையிலும் ஆராதிக்கப்பட்டன – இன்னமும் ஆராதிக்கப் படுகின்றன.

    “வீரன் என்றால் இவனன்றோ வீரன்!” என்று நெப்போலியனின் பகைவர்கள் கூட வாய்விட்டுப் புகழ்ந்தனர் – இன்றும் புகழ்ந்தவண்ணமே இருக்கின்றனர்.

    பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, ஒரு புது உத்வேகம் மக்களிடையே பிறந்தது – தனக்குப் பிறக்கும் ஆண்குழந்தைக்கு நெப்போலியன் எனும் பெயரைச் சூட்ட உலகெங்கிலும் இளம் தாய்மார்கள் விரும்பினர்.

    அப்போது, விடுதலைக்காகப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்த இந்தியாவில் நெப்போலியன் அதி தீவிரமாக ஆராதிக்கப்பட்டான். அக்காலகட்டத்தில் இந்தியாவில் பிறந்த ஏகப்பட்ட ஆண் குழந்தைகளுக்கு நெப்போலியன் எனும் பெயர் சூட்டப்பட்டது.

    இன்றும், இந்தியாவில், ஏன் தமிழகத்தில் கூட ஏகப்பட்ட ஆண்களுக்கு நெப்போலியன் என்கிற பெயர் இருப்பதை நாம் அறிவோம். எதிர்வரும் காலங்களில் கூட பற்பல நெப்போலியன்கள் இங்கே உருவாகுவார்கள் – பெயரளவிலாவது! ஏனெனில் நெப்போலியன் இந்தியாவில் மிகவும் நேசிக்கப்பட்டவன், நேசிக்கப்படுகிறவன், தொடர்ந்து, நேசிக்கப்படப்போகிறவன். என்றும் சிரஞ்சீவியான நெப்போலியனுக்கு, இன்று சர்வதேச அளவில் இயங்கி வருகிற உலக நெப்போலியனிக் சொஸைடி (International Nepoleonic Society) உள்ளது. அதன் கிளை ஒன்றை இந்தியாவிலும் காணமுடிகிறது. பேராசிரியர் நெப்போலியன் விஜயகுமார் என்பவர் நெப்போலியன் பற்றி கன்னட மொழியில் நூல்கள் சில எழுதியிருப்பதையும் அறிகிறோம்.

    நெப்போலியன் தனது வலது கையை சட்டையின் பொத்தான்களுக்கு இடையில் விட்டு,  தனது மார்பைத் தடவிக்கொள்வது வழக்கம். இந்த மேனரிசம் அந்நாளில் பற்பல இளைஞர்களுக்கு இந்தியாவில் இருந்தததையும் அறிகிறோம்.

    நெப்போலியன் மிக எளிமையான உணவு மட்டுமே உண்ணுவான். மது அருந்துவது அவர்கள் வழக்கம் என்றாலும் – மதுவை நீர் சேர்த்து விளாவி – வெகு நீர்த்த மதுவைமட்டுமே அவன் பருகுவான். சாவதானமாக அமர்ந்து தட்டு தட்டாய் உணவை உள்ளே  தள்ளும்  பழக்கம் அவனிடம் கிடையாது. நின்றபடி குறைத்த அளவேயான  உணவை அவன் சீக்கிரமாகவே சாப்பிட்டு முடித்து விடுவானாம். பெரிய விருந்தே என்றாலும் மொத்தம் பதினைந்து நிமிடத்திற்குள் சாப்பிட்டுவிடவேண்டும் என்று உறுதியுடன் இருப்பானாம். அந்தப் பதினைந்து நிமிடங்கள் கூட, அரட்டைப் பேச்சு – வெட்டிப் பேச்சுப் பேசாமல் – சாப்பிடும்போதே தன கால அட்டவணையைப் பார்த்து அடுத்துள்ள விஷயங்களை மனதில் அசைபோடுவது  – குறிப்பெடுத்துக் கொள்வது – சகாக்களிடம் நுண்ணிய திட்டங்களை அறிந்து கொள்வது எனப் பல்வேறு முக்கிய பணிகளை முடித்துக்  கொள்வானாம்.  போர்நிலையில் எவரெவர் எங்கெங்கு நிலை கொள்ளவேண்டும் – எவரெவருடன் எவரெவர் இணைப்பில் – பார்வையில் இருக்கவேண்டும் என்று யுக்திகளை அறிவிப்பானாம்.

    ஒருநேரத்தில் பலவேலைகளைச் செய்யும் திறனில் அபாரத்தன்மையுடன் விளங்கியவன் நெப்போலியன்.

    நெப்போலியனின் தனித்துவத் தோற்றமும் உலகில் பலரை அவன்பால் கவர்ந்திழுக்கச் செய்தது – அவன் இன்னபிற இராணுவ வீரர்களை போல ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவன்  அல்லன்.

    கடுகடுப்பான  முகம் கொண்டவனல்லன், பரபரப்புடன் அதிகார தோரணையில் பேசும் முறைப்பு அவனிடம் இருக்காது; அதிக உயரமில்லாத சிறிய உடம்பு கொண்டவன் – இராணுவ உடையில் கூட அவன் தோற்றம் கடுமை கொள்ளாது – கனிவுடன் எப்போதும் காணப்படுகிற தனித்துவ உடல்மொழி நயம் அவனுக்கிருந்தது. ஆரவாரமற்ற முறையில் அமைதியாய் வலம் வருவது அவனது எளிமைப் பண்பாடு.

    சொல்லப்போனால் அவன் ராணுவ உடையோ ராஜாங்க உடையயோ அணியவில்லயென்றால், நெப்போலியனை ஒரு போராளி என்றோ – அரசின் தலைவன் என்றோ எவரும் சொல்லவியலாத  சாந்தத் தன்மையோடு இருப்பான். தெய்வ கடாட்சம் நிரம்பிய சாதுக்களுக்கு இருக்கும் அருள் ஒளி முகம் அவனுடையது. அபயம் என்று எவரும் வந்துவிட்டால், அஞ்சேல் எனக் காக்கும்  கருணை அவனிடம் இருந்தது. போராளிகளுக்குள் பூத்த ஒரு  அலாதிப் பூவாக – எளிமை இயம்பியாக நெப்போலியன் இருந்தான்.

    அந்நாளில்,  போர் பற்றிய இடஞ்சுட்டிப் பொருள்விளக்கங்களில் மட்டுமல்ல – அன்றாட வீட்டு விஷயங்களில் கூட, எளிமைக்கும், அமைதிக்கும், அவதானத்தன்மைக்கும் எடுத்துக் காட்டாக  நெப்போலியன்  பேசப்பட்டானாம். “நெப்போலியனைப் போல வா” என்று பெரியவர்கள் இளைஞர்களை ஆசிர்வதிப்பார்களாம்.

    இந்நிலையில், 1815ல் வஞ்சம் மிகுந்த பிரிட்டாஷாரால் பிடிக்கப் பட்டு, நாடு கடத்தப்பட்டு, தொலை தூரத்தில், தெற்கு அட்லாண்டிக்  மகாசமுத்திரத்தில் உள்ள தனிமையான தீவான, புனித ஹெலெனா தீவில், நெப்போலியன் கடுங்காவலில், சிறைவைக்கப்படுகிறான்.

    இவ்வாறாக தனிமைச்சிறையில், தனித்தீவில் நெப்போலியன் இருந்த நிலையில், இடிபோல் ஒரு செய்தி  வருகிறது – மே 5, 1821 அன்று  – நெப்போலியன் மரணமடைந்தான் என்று.

    புனித ஹெலெனா சிறையில் வைக்கப்பட்ட நிலையில் – ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு இறக்கிறான் நெப்போலியன். அவனுக்கு காய்கறிகள் பழங்கள் அற்ற போஷாக்கு இல்லாத உணவு வழங்கப்பட்டதும் – மெல்ல மெல்ல வேலைசெய்து மவுனமாய்  – குடற்புண்ணையும் குடற் புற்றுநோயையும் உருவாக்கி – இதயத்தில் இரத்த ஒழுக்கை ஏற்படுத்தி – மனிதரைக் கொல்லும் ஆர்சனிக் நஞ்சு அவனுக்கு உணவின் முலம் வழங்கப்பட்டும், அவன் நஞ்சூட்டப்பட்டான் என்று சொல்லப்படுகிறது (இவ்விஷயம் பின்னாலில் கண்டுபிடிக்கப்பட்டது).

    ஆக, நெப்போலியன் குடற்புண் மற்றும் குடற்புற்றுநோய் கண்டு,  நாடு கடத்தப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், ஆ்றாண்டு காலத்தில் இறந்துபோனான் என்பது அன்று பிரிட்டிஷார் வெளியிட்ட அதிகார பூர்வ செய்தி.

    நெப்போலியனின் மரணம் உலகை உலுக்கியது என்பது உண்மை. மக்கள் கொதித்தெழுந்தனர் – பல்வேறு  ஆர்ப்பாட்டங்கள் – கொந்தளிப்பு சம்பவங்கள் எழுந்ததை அறிகிறோம்.

    1823 ல் நெப்போலியனின் இரண்டாம் நினைவு அஞ்சலி ஒரு குறிப்பிட்ட நாளாகக் காணப்பட்டது. அத்தருணம் தான் ஸ்பெயின் தனது உள்நாட்டு மதமுடியாட்சி தொடர்பான போராட்டத்திற்கு பிரான்சின் உதவியை நாடுகிறது. பிரான்சும் அதற்கு உதவி செய்கிறது. இதனை, பிரெஞ்சுப் புரட்சியின் நாடு கடந்த விரிவாக்கம் எனலாம். பிரான்சின் உள்நாட்டுப் போரான பிரெஞ்சுப் புரட்சி அண்டை நாட்டிலும் வேண்டப்படுகிறது.

    நெப்போலியன் பிரான்சில் செய்த பிரெஞ்சுப் புரட்சி பிற நாட்டிலும் வேண்டப்படுவதை நினைக்கும்போது நெப்போலியனின் நினைவும் அவனது பெருமைகளும்  பிரெஞ்சு மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டலுக்கு வருகின்றன. நெப்போலியன் இல்லாத வெறுமையை பிரெஞ்சுதேசம் வெகு வலுவாக  உணர்கிறது. நெப்போலியன் நினைவு அத்துணை வலித்தது – பிரெஞ்சு மக்கள் உணர்ச்சி மீதுற்று கலங்குகிறார்கள்.

    இவ்வேளையில் தான்,  “நீ துவண்டுவிடக்கூடாது – நம்முடன் நெப்போலியன் இருக்கிறான்”” என்று நெப்போலியனைப் பற்றிய 19 வாசகங்களைக்  கொண்ட ஒரு வீரப் பாடல் இயற்றப்பட்டு முழங்கப்படுகிறது – லோட் இட கோரனா (Lot-et-gornna) என்ற நகரத்தின் நகராட்சி மன்றத்தின் கட்டிடத்தின் மீது இப்பாடலின் வாசகங்கள் பலகையாக வைக்கப்பட்டு மக்கள் உணர்ச்சிப் பிரவாகமாய் இப்பாடலை  முதலில் முழங்குகிறர்கள். இப்பாடல், காட்டுத்தீ போல் பிரெஞ்சு தேசம் முழுதும் பரவுகிறது. தொடர்ச்சியாக, இப்பாடல் பிரெஞ்சுதேசத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் – நகரங்களிலெல்லாம் முழங்கப்படுகிறது – இரவு பகல் பாராது – தொடர்ந்து முழங்கப்படுகிறது. பிரெஞ்சு தேசத்தில் அன்று முழங்கப்பட்ட இந்த வீரப் பாடலின் வீர வாசகங்கள் – உலகெங்கிலும் – வானெங்கிலும் எதிரொலிக்குமாறு உணர்ச்சி பொங்க முழங்கப்பட்டது என்றால் அது மிகையில்லை.

    இவ்வாறு  நெப்போலியன் மீதான உணர்ச்சி மீதூறல் உலகெங்கும்  ஒலித்து – மனித நேயனாய் – எளிமையாய் – நம்பிக்கைத் தோழனாய், கருணை உள்ளவனாய் நெப்போலியனைப் போல ஒருவன் மீண்டும் வாரானோ என்று இறைஞ்சும் வேளையில் – அக்டோபர்  5, 1823, வள்ளலார் இங்கு நம்மிடையே அவதரிக்கிறார். நெப்போலியனைப்போலவே, 51 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து வள்ளலார் மறைகிறார். நெப்போலியனைப்போலவே, மறைவுக்குப்பின்னரே வள்ளலார் மிகவும் புரிந்துகொள்ளப்படுகிறார், ஆராதிக்கப்படுகிறார். அவரது மறைவுக்குப்பின் தொடர்ந்து அவர் புகழ் ஓங்கிக் கொண்டேயிருக்கிறது.

    சொல்லப்போனால் நெப்போலியன் மற்றும் வள்ளலார் மறைவுகள் இன்னமும் ஆய்வுக்கு உரியவாய் இருக்கின்றன. நெப்போலியன் நச்சூட்டலில் மரணித்த விஷயம் 1970ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

    நெப்போலியனுக்கு வள்ளலாருக்கும்  தோற்றம், குணாதிசயம், பழகுபாங்கு, மனித நேயம், மொழி நயம், கருணைச் சிந்தை முதலியனவற்றில் பொருத்தங்கள் உண்டு. இவற்றிற்கெல்லாம் மேலாக,  வள்ளலாருக்கும்  நெப்போலியனுக்கும் உள்ள மிகத் தலையாய தொடர்பு என்றால் இருவருமே மதப் புரட்சியாளர்கள்.

    https://pixabay.com/images/search/napoleon/   https://www.pinterest.co.kr/pin/743797694680188510/

    நெப்போலியன் பிரிட்டனுக்கு எதிராக செய்த போர்கள் மற்றும் இன்னபிற போர்கள் யாவற்றையும் விட மிக மிக முக்கியமானதாகக்  கருதப் படுவது பிரெஞ்சுப் புரட்சி.

    நெப்போலியன் வாழ்ந்தபோது அவனுக்கு இருந்த புகழை விட, அவன் இறந்த பிறகு அவனது  புகழ் பலநூறு மடங்கு உயரலாகிறது என்பதற்காண காரணங்களில், பிரெஞ்சுப் புரட்சி மிகவும் முதன்மையானது. பிரெஞ்சுப் புரட்சியால் விளைந்த நன்மைகளை உலகு இன்றும் கூட எடைபோட்டுப் பார்க்கிறது. பிரெஞ்சுப் புரட்சி எனும் புரட்சியின் மூலம், நெப்போலியன் என்பவன் மனிதகுலத்திற்கு ஆற்றிய அற்புத சேவைகளை உலகே இன்று  பாராட்டுகிறது – பறை சாற்றுகிறது.

    சரி , அப்படி என்னதான் பிரெஞ்சுப் புரட்சியில் நடந்தது என்று கேட்கத்  தோன்றுகிறது அல்லவா?

    பிரெஞ்சுப்  புரட்சி உண்மையில், உலக அரங்கில், முதன்மையாய் நடந்த ஒரு முக்கியமான மதப் புரட்சியாகும். மதம் என்பதனை மனித வாழ்வில் மற்றும் சமுதாய வாழ்வில், எங்கு நிறுத்தவேண்டும், அதனை எவ்வாறு மனிதகுலத்துக்காய்ப்  பயன்படுத்தவேண்டும் என்பதனை உலகிற்கு அறிவித்த  தலைமைப் புரட்சிதான் பிரெஞ்சுப் புரட்சி என்பதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

    வரலாற்று  எழுத்தாளரான பிராங்கோயிஸ் அவ்லார்ட் (Francois Aulard) கூற்றின்படி, சமுதாய்ப் பார்வையில் பார்க்கிறபோது, பிரெஞ்சு புரட்சி, என்பது நெப்போலியன் எடுத்த  மனித குலத்துக்கான  உயரிய புரட்சி  -இது நாடு பிடிக்கும் போரல்ல . குடியேற்றம் அமைத்து  வாணிகம் நடத்த  பிறநாட்டார் மீது நெப்போலியன் எடுத்த போரல்ல . தன்னுடைய சொந்த நாட்டில்  மதத்தின் பேரால் நடந்துவந்த  அட்டூழியங்களை , அராஜகத்தை , ஊழலை,  வேரறுத்து, தன்  சொந்த மண்ணில்  மக்கள் விடுதலை பெற அவன் செய்த அசாத்திய புரட்சி

    “கடவுளின் பிரதிநிதிகள்   நாங்களே ! எனவே, உயர்குடிமக்கள் நாங்களே!  பிரபுக்கள் நாங்களே!” என்று கூறிக்கொண்டு, நிலத்தையும், பொன்பொருள் அத்தனையையும், செல்வம் அத்தனையையும் தம் வசம் வைத்துக்கொண்டு, அதற்கும்  மேலாக,  மக்களிடம்  மதம்  மற்றும் சர்ச்  என்ற பெயரில்  , பணம் வசூலித்துக் கொண்டும்  வாழ்ந்த, கத்தோலிக்க மதகுருமார்கள்   – அனுபவித்து வந்த தனித்துவ உரிமைகளை மற்றும் சலுகைகளை வேரறுக்கவும், சமத்துவத்தை நிலைநிறுத்தி, மனிதர்களின் தினசரி வாழ்வை எளிமைப் படுத்தவும் எழுந்ததே பிரெஞ்சுப் புரட்சி —–பிரெஞ்சுப் புரட்சி மற்ற புரட்சிகளிலிருந்து வேறுபட்டது – இது வெறும் தேசிய புரட்சி அன்று – இது மனிதகுலப் புரட்சி – மனித குலம் கண்ணியம் கொண்டு வாழ்வதற்காக எழுந்த புரட்சி”   என்று

    இப்போது, தன்  சொந்த நாட்டில், மதம் தொடர்பான புரட்சி ஒன்றை நடத்த இராணுவ வீரனான நெப்போலியனுக்கு எண்ணம் உதித்தது ஏன்  – இதில் இந்திய  மத – கலாச்சார  சிந்தனைகளுக்கு ஏதேனும்  பங்கு உண்டா? அதிதீவிரமாக, நெப்போலியன் இந்தியாவில் ஆராதிக்கப் படுவதன் உண்மையான காரணம் தான்  என்ன என்றெல்லாம் நமக்குக்  கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

    முதலில், பிரெஞ்சுப் புரட்சியைச்  சுற்றிய   காலக்கட்டத்தில் இந்தியாவின் நிலையைச் சற்று பார்ப்போம்: பிரெஞ்சுப் புரட்சி  (மே 5 May 1789 – நவம்பர் 9 1799 – பத்து வருடங்கள், ஆறு மாதங்கள், நான்கு நாட்கள்)  நடந்த காலகட்டத்தில், பிரான்ஸ் இந்தியாவில் குடியேறிவிட்டது; பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் அப்போது, ஏற்கனவே இந்தியாவில்  ஊடருவியாயிற்று.

    இங்கு, நெப்போலியன் உண்மையிலேயே நெஞ்சார்ந்த அளவில் இந்தியருக்கு மிகவும் நெருக்கமானவனா அல்லது நெப்போலியக் கவர்ச்சி வெறும் சினிமாக் கவர்ச்சி போன்றதா என்பது நம் முதல் கேள்வி.

    நெப்போலியன் இந்தியர்களின் கவனத்தில் நின்றதன் முதல் காரணம் அவன் பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான் என்பதே என்று சில பலர் கூறுகிறர்கள். இதனை மறுப்பதற்கில்லை என்றாலும் இதுமட்டுமே ஒற்றைக் காரணமல்ல. வீரன் – அச்சமற்றவன்  என்கிற பரிணாமங்களைத் தாண்டி இந்தியாவைப் பற்றிய அவனது சித்தம் என்னவாய் இருந்தது என்று பார்த்தால். இந்தியாவை அடிமை கொள்ளவேண்டும் என எண்ணம் கொண்டவனாக அவன் என்றுமே தெரிந்ததில்லை. எங்கும் சொல்லியதில்லை. மாறாக, “இந்தியாவிற்கு உதவி செய்யவேண்டும்!” என்று சொல்லியிருக்கிறான்; மேலும், “தெற்கு ஆசியாவுடன், ஐரோப்பாவை இணைக்கவேண்டும்” என்று சொல்லியிருக்கிறான்.

    ஒரு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த வீரனுக்கு, தெற்கு ஆசியாவை ஐரோப்பியவுடன் இணைக்கவேண்டும் என்று தோன்றாமல், ஐரோப்பாவை தெற்கு ஆசியாவுடன் இணைக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றியதன் காரணம் என்னவென்று பார்த்தால், தெற்கு ஆசியாவின் கலாச்சார பண்பாடுகள் ஐரோப்பியரைவிட உயர்ந்தவை என்பதை  அவன் அறிந்து வைத்ததன் காரணம் தான். தெற்காசிய நாடுகள் எனும்போது இந்தியா தான் திலகம் – எனவே இந்தியாவை பாருக்குள்ளே நல்ல நாடு எனும்படியாக, பாரதிக்கு முன்னேயே தனது கண்ணில் பார்த்தவன் நெப்போலியன்.

    நெப்போலியனுக்கிருந்த சிறப்புமிக்க  மனித அன்பு தான், மனித  நேயத்திலும் பண்பாட்டிலும் சிறந்த இந்திய மக்களை – “இந்தியர்கள் மிகவும் நல்லவர்கள்  அவர்களுக்கு விடுதலையில் நாம் உதவவேண்டும்” என்று சொல்லவைத்தது.

    நெப்போலியன் போனபார்ட் என்பவன் என்றும் உலக சரித்திரத்தில் இறவாது வாழுமாறு அமரத்தன்மையை உண்டாக்கியது அவனுக்குள் இருந்த மனிதநேயமே என்பதை விளக்க பல்வேறு இதரசம்பவங்கள் உண்டு. நெப்போலியனுடைய அத்தகைய  மனித அன்பின்  பரிமாணங்களை பின்னால் வள்ளலாருடன் நாம் விவாதிக்க இருக்கிறோம்.

    இங்கு, முதலில், நெப்போலியன் கொண்டிருந்த  மனித அன்பின் ஒரு பரிமாணத்தை மட்டும் பார்ப்போமாக ; அதுதான் மனிதர்களை மதத்தின் கோரப்பிடியிலிருந்து  விடுவித்து அவர்களுக்கு, சமயம் எனும் சுதந்திரம் வழங்கிய அவனது பேராண்மை.

    பிரான்சில், கத்தோலிக்க மதகுருமார்கள், கொடுங்கோன்மையான  முடியாட்சியை ஏற்படுத்திக்கொண்டு,  அவர்கள், சாதாரண குடிமக்களை, சர்ச் எனும் – மதமெனும்  ஆயுதத்தால் நசுக்கி நாசம் செய்து, சூறையாடிக் கொண்டிருந்தனர்.  அந்தக்  கத்தோலிக்க மதகுருமார்களின் மமதையை ஒடுக்கி, மதத்தின் பெயரில் மதகுருமார்கள்  செய்துவந்த ஊழலை, கொள்ளையை, அதர்மமான அதிகாரத்தை வேருடன் பிடுங்கி எறிந்த அவனது வீரமே அவனது ஏனைய வீரதீரச் செயல்களிலெல்லாம் தலையானது என்பது எவரும் ஏற்றுக்கொள்ளும்  உண்மை.

    இப்போது, பிரெஞ்சு மக்கள் பால் இந்தியருக்கு, இந்தியர்களின் பால் பிரெஞ்சு மக்களுக்கும்  இடையே அன்றே நிலவி இருந்த வாஞ்சையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதற்காக,  உலக வரலாற்றை, இந்திய வரலாற்றைச் சற்றே  சிந்திப்போமாக. நமக்கு இன்று கிடைத்திருக்கிற  வரலாற்றைக் கொஞ்சம் கவனித்தாலே, இந்திய-பிரெஞ்சு உறவுகளின் தொன்மை புரியும். நாம் இதை அறிந்துகொள்ள அதிகம் சிரமப்படத் தேவையில்லை.

    இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும், பிரெஞ்சு மக்களுக்கும் பரஸ்பர அன்பு – வாஞ்சை தொன்று தொட்டு இருந்து வந்த ஒன்றே. நெப்போலியனது  பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு இந்த வாஞ்சை இன்னமும் பல்வேறு மடங்கு வளர்ந்தது. ஏனெனில், நான் ஏற்கனவே கூறியபடி, இப்புரட்சி மனிதகுலத்திற்காக்க நெப்போலியன் எடுத்த ஒருபோர். முடியாடிச்சியாளிர்களின் பிடியில் அகப்பட்டு விழித்த தன்  சொந்த மக்களுக்கு, விடுதலை வகுத்தப் போர்.  அதுவும் அது எத்தகைய முடியாட்சி? செல்வந்தர்களும் மதக்குருமார்களுமான அந்தஸ்தில் இருந்தபடி, அயோக்கியம் செய்துவந்த கயவர்களின் முடியாட்சி. இந்தக் கயவர்கள் பழம்பெருச்சாளிகள் – சாமர்த்தியசாலிகள் – அபரிமிதமான பலம் உள்ளவர்கள்! – அதே நிலையில் இந்தியா அன்று இருந்தது என்பது பிரெஞ்சின் மனோநிலையை இந்தியர் அறியுமாறு செய்தது.

    பார்க்கப்போனால், பிற ஐரோப்பிய நாடுகளைப்போல, பிரெஞ்சும் இந்தியாவில் வணிகமும் குடியேற்றமும் நிகழ்த்த விரும்பிய நாடுதான். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியைப் போல, கிழக்கிந்திய பிரெஞ்சுக் கம்பெனி என்ற கம்பெனிதான் இந்தியாவில் பிரவேசம் செய்தது.

    எனினும், பிரஞ்சுக்கு இருந்த வித்தியாசம் என்னவென்றால், தொடக்க காலத்திலிருந்தே, பிரிட்டிஷைப் போன்ற கொடிய உள்ளம் பிரான்சுக்கு இல்லை – பேராசை இல்லை – மாறாக,  இந்தியர்களுடன் புரிதலுடன் பழகும் உள்ளமும், தோழமை பாராட்டும் – நட்புக்கரம் நீட்டும் நேசமும் பிரான்ஸிடம்  இருந்தன.

    ஐரோப்பியக் குடியேற்றத்தின் கீழ், பெரும்பகுதி இந்தியா பிரிட்டிஷ் வசம் இருந்தபோதும் சில பகுதிகள்  பிரெஞ்சிடம் இருந்தது என்பதை அறிவோம்.

    அக்காலகட்டங்களில், பிரான்சின் இயக்கங்களை, நடவடிக்கைகளைப் பார்க்கப்போனால், எத்தனையோ வழிகளில், இந்தியர்களின் பிரிட்டாஷாருக்கு எதிரான போராட்டத்திற்கு பிரெஞ்சு உதவி செய்திருக்கிறது என்பதை அறிகிறோம். எத்தனையோ இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத்  தஞ்சமும் புகலிடமும்  தந்து அவர்கள் பிரிட்டிஷாரிடம் சிக்காமல் காப்பாற்றிய பெருந்தகை உள்ளமும் பிரெஞ்சிடம் இருந்தது என்பதையும் நாமறிவோம்.

    மெத்தப் படித்தவரும், பரோடா மகாராஜாவின் கீழ் பற்பல அரசாண்மைப் பதவிகளை வகித்தவரும், விவேகியும், பிரிட்டிஷ் எதிர்ப்பு விழிப்புணர்வு எழுத்துத்  தந்தையுமான அரபிந்தோ கோஷ் அவர்களை நாம் அறிவோம். அவர், பிரிட்டிஷாரால் பல்லாற்றானும் தொந்தரவு செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு, பொய்யான  வெடிகுண்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, என அலைக்கழிக்கப்பட்டுத் துன்புறத்தையும்  நாமறிவோம்.

    அவர், இறுதியில், அரசியல் துறவு பூண்டு, ஆன்மீக வாழ்வில் ஈடுபட, பிரெஞ்சின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாண்டிச்சேரியை அன்றோ தேர்ந்தெடுத்தார்?

    ஆங்கிலேயர்கள் தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என்று எண்ணம் வந்த நொடியில், நெல்லையப்பருடன், பாரதி விரைந்தடைந்தது பண்ணடிச்சேரிதான் அல்லவா? பாண்டிச்சேரியின் கருவடிக்குப்பம் சிவானந்தா கோவிலின் மாந்தோப்பில் அவன் பெற்ற  அப்புதுகாப்பு உணர்வில் தானே இந்தியா முழுமையும் பாதுகாப்பின்மையிலிருந்து அடிமை வாழ்விலிருந்து விடுபடவேண்டும் என்று சுத்ந்திரக் கனல் தெறிக்கும் பாடல்களை இயற்றினான்? குயில்பாட்டும் பிறந்தது  அங்கேதான் அல்லவா?

    இந்தியச் சுதந்திரப்  போராட்ட வீரர்களை பிரெஞ்சு அரசு  பாதுகாப்பு தந்து உதவியது எதோ எளிமையான விஷயம் என்று எண்ணாதீர்கள். ஆங்கிலேயர்க்ளுக்கு எதிராக இயங்கிவந்த இந்தியர்களை, தம் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பதில் பிரெஞ்சு அரசுக்கு நிறைய சிரமங்கள் இருந்தன. பல சமயங்களில், பிரிட்டிஷ் அரசு, போராளிகளைத் தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்று பிரான்ஸ் தலைமையில் புகார் செய்து – மிரட்டியுருட்டி – போராளிகளை பிரெஞ்சுப் பகுதியிலிருந்து எடுக்கவும் செய்தது. எனவே மிகுந்த சமயோஜித புத்தியுடன் எச்சரிக்கை உணர்வுடனும் தான் நம்மவர்க்குப் பாதுகாப்பை வழங்கியது பிரெஞ்சு அரசு.

    இவற்றையெல்லாம் நான் நினைவு கூறுவது எதற்காக என்றால், இந்த நாடு செய்த – இந்நாட்டு மக்கள் செய்த நல்லூழின் பயனாக, ஆங்கிலேயர் கொடுங்கோலாட்சி செய்த அதே காலகட்டத்தில், பிரெஞ்சும் இங்கே இருந்தது என்பதை நினைவு கூறுவதற்காகத்தான்.

    சொல்லப்போனால்,  பிரான்சுக்கும் தென்னிந்தியாவுக்கும் – குறிப்பாகத் தமிழகத்துக்கும் நீண்ட காலத்து நெருங்கியத்  தொடர்பு உண்டு. பிரெஞ்சு மக்கள் வணிக ரீதியாக இந்தியாவில் குடியேற்றம் செய்யத் தொடங்கும் முன்பே  கூட  இந்தியாவில் அவர்கள் தொடர்பு வைத்திருந்ததற்கு அடையாளங்கள் உண்டு – ஆதாரங்கள் உண்டு. காலனிக்குடியேற்றத்துக்கு முன்பு இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் காலத்தில் கூட இங்கே பிரெஞ்சுத் தொடர்பு செழிப்பாக இருந்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, ஜீன் பாப்டிஸ்ட் தாவெர்னியர் என்ற பெயரையுடைய பிரான்சின் வைர வியாபாரி 1600 களில், மூன்று முறை இந்தியா வந்து, இங்கு தங்கியிருந்து, அந்நாளில் இங்கிருந்த முகலாய  மன்னர்களைச் சந்தித்தச்  சென்றிருக்கிறார் என்பதோடு – இந்தியா பற்றிய பற்பல செய்திகளை, தமது பயணக் கட்டுரைகள் நிரம்பியதான  நூல்களில் பதித்துச் சென்றார் (https://en.wikipedia.org/wiki/Jean-Baptiste_Tavernier).

    முகலாய மன்னன் அவுரங்கசீப், தனது தனிப்பட்ட மருத்துவராக ஒரு பிரெஞ்சு மருத்துவரை (பிரான்சிஸ் பெர்னியர்) பணியமர்த்தி இருந்ததும் தெரியவருகிறது.

    கிமுக்களிலேயே  தமிழகம், கிரேக்கம், எகிப்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பண்டம் ஏற்றுமதி செய்தும் – பண்டமாற்றம் செய்தும் வாழ்ந்ததாகவும் அறிகிறோம். பிரான்ஸை பிரத்தியேகமாகக் குறிப்பிட்டு எதுவும் தெரியவில்லை என்றாலும், பிரான்ஸ் ஒரு ஐரோப்பிய நாடு என்ற வகையில், கிமுக்களில் குறைந்த பட்சம், இந்தியாபற்றிய ஞானம் பிரான்சுக்கு இருந்திருக்க வேண்டும் என்றே நாம் வைத்துக் கொள்ளலாம். நான் ஏற்கனவே சென்ற பகுதி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததை போல, இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், வெகு தூரம் உலகில் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு, நெடுந்தொலைவில் உள்ள நாடுகளில் குடியேற்றம் செய்திருப்பதை இப்போது பலரும் ஆய்ந்துவருகின்றனர். ஆக, பிரெஞ்சு தேசத்தினர் நமக்குப் பரிச்சயமானவர்கள் என்பது வெளிப்படை.

    பிரெஞ்சு இந்தியாவின் இரு வரைபடங்கள் – இரண்டு கால கட்டங்களுக்கு, இங்கே கீழே வழங்கப்பட்டுள்ளன.

     

    https://www.pinterest.com/pin/339669996877541115/

    By Lubiesque – Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=24978446

     

    பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியாவின்  பரப்பளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பிரெஞ்சு வசம் இருந்த இந்தியாவின் பரப்பளவு சிறியதுதான். ஆனால், மூர்த்தி  சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பது போல, இந்தியர்களின் பால் பிரெஞ்சுக்கு வாஞ்சை இருந்தாமையால், இந்தியர்களும்  பிரெஞ்சின்பால் வாஞ்சையுடன் இருந்தனர்.

    பிரெஞ்சின் நேரடி ஆட்சியில் இல்லை என்றாலும், பல இந்திய பிராந்தியங்களில், பிரெஞ்சுக்கு விசுவாசம் கொண்ட மக்கள் இருந்ததை, முதல் வரைபடத்தில்,  நீலவண்ணப் பிராந்தியத்தில் காட்டியிருக்கிறார்கள்.

    பிரெஞ்சினர்பால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட வாஞ்சைக்கும் நேசப்பிணைப்பிற்கும் முக்கிய காரணமாக நாம் கருதுவது, பிரெஞ்சினர் இந்திய மக்களின்  அருமைப்  பெருமைகளை  அறிந்து கொண்டதும், அவற்றை மதித்ததும் தான்.

    (மேலும் பேசுவோம்)

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 18

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 18

    அவ்வைமகள்

    18. மொழியும் உடையும், கொடியும்  

    புரட்சியாளர்கள் பொதுவாக, மூன்று விஷயங்களில் தம் புரட்சியை போதிக்கின்றனர்; ஒன்று: மொழி, இரண்டு: உடை, மூன்று: கொடி. புரட்சியியலில், மொழியும், உடையும், கொடியும் புரட்சியின் கருவிகள்  என்று கூறப்படுவது வழக்கம் [1].

    மொழியும்,  உடையும், கொடியும்  மனித சமூகத்தின்  மிகப்பெரும் அடையாளங்கள் – எனவே இவை மூன்றும், புரட்சிக்கு முக்கிய அடையாளங்களாக எடுத்துக் கொள்ளப்படுவது புரட்சியாளர்களின் வழக்கமெனவே தெரிகிறது.

    எடுத்துக்காட்டாக, பிரெஞ்சுப் புரட்சியை (மே 5, 1789 – நவம்பர் 9, 1799) எடுத்துக் கொள்வோம். பிரெஞ்சு மொழியில் அதுகாறும் து (tu) என்பது (vous) என்று மாறி, பிரெஞ்சு மொழியின் இலக்கணத்தையே மாற்றியது  பிரெஞ்சுப் புரட்சியே.

    அதுபோன்றே, பிரெஞ்சுப் புரட்சியில், ஆண்-பெண் இருபாலரின் உடைகளும் – அவற்றின் மூவண்ணங்களும் கோடுகளும், ரிப்பன்களும் ஆண்டானின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுயஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதுமானதாக அணிந்து கொள்ளப்பட்டன. அவ்வாறே, பிரெஞ்சுப் புரட்சியின் கொடியும் மூவண்ணப் புரட்சிக் கொடியாக வடிமைக்கப்பட்டு ஏற்றப்பட்டது – ஏந்தப்பட்டது.

    பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு நெருங்கும் தறுவாயில்தான், இங்கே, வள்ளலார், ஆன்மீகப் புரட்சி விளைக்கிறார்.  தம் புரட்சிக்கு அவர் தெரிந்தெடுத்தது, மொழியும், உடையும், கொடியுமே.

    வள்ளலாரின் தமிழ் வெகு எளிமையானது – இலகுவானது – இசைநயம் உடையது – பொருளாழம் பொதிந்தது. “பருகியும் அறியேன் – விழுங்கியும் ஆறேன்” என்று ஆற்றா இன்பமாய் ஊற்றுப் பெருக்கெடுக்கும் சுவை பொதிந்தது.

    வள்ளலாரின் உடை  என்பது ஆன்மீக உலகத்தில் புதுப் புரட்சி. முன்னெப்போதும் அவரைப்போல உடைத் தோற்றத்தை ஒரு புரட்சிப் பொருளாய் எவரும், ஆன்மீகத்தில் எடுத்தாளவில்லை.

    அவர் உருவாக்கி அளித்த வெண்மை- மஞ்சள் இருவண்ண ஆன்மீகக் கொடி மகத்தான அறிவியல் – உடலியல் தத்துவம். வள்ளலாரின் மொழி, உடை, கொடி ஆகியன அவரது ஆன்மீகப் புரட்சியின் கருவிகளாக இயங்கிய தன்மை பற்றி விரைவில் விரிவாக விவாதிக்க இருக்கிறோம்.

    அதற்கு முன், ஸ்டீவ் ஜாப்ஸின் உடைப் புரட்சி பற்றி சிந்தித்துவிட்டு, வள்ளலாருக்குச் செல்வோம்.

    கணிணிப் பொருட்களில் தொழில்நுட்பப் புரட்சி செய்த ஸ்டீவ் ஜாப்ஸும் கூட, தனது மொழியில் புரட்சி செய்ததைப் போல, தனது  உடையிலும்  புரட்சியை விளைத்தவரே. ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு (1980க்குப் பிறகு), அவர், ஆமைக்கழுத்துச் சட்டை எனப்படும் உயர்கழுத்தும் நீள்கைகளும் கொண்ட பனியன் துணியாலான கருப்பு நிறச் சட்டையை மட்டுமே அணியத் தொடங்கினார் – அதனுடன் எப்போதும்  அவர் அணிந்தது  நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மட்டுமே – இறக்கும் வரையில் இதுவே அவர் உடையானது.

    சொல்லப் போனால்,  முதலில்,  இதனை ஆப்பிள் நிறுவனத்தின் சீருடையாக்கும் எண்ணமும் கூட அவருக்கு இருந்தது. அந்த முதல்படிகளில் ஆப்பிள் நிர்வாகத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும்  இவ்வுடையின் சிறப்புத் தெரியவில்லை போலும். அதற்கு அவர்கள் ஆதரவு அளிக்கவில்லை. அதனால், ஜாப்ஸ் தளர்ந்தாரில்லை. இந்த உடையைத் தனது சீருடை என்றே அழைத்து, ஜாப்ஸ் அதனையே தொடர்ந்து அணிந்து வரலானார்.

    உடையின் எளிமை, உடையின் கண்ணியம், செய்யும் பணிக்கு ஏற்ப உடை தரும்  வசதி,  அதன் தனித்துவ   அடையாளம், மற்றும் அது பிறருக்குச் சொல்லும் ஒட்டுமொத்தச் சேதி, ஆகிய  ஐந்தையும் கருத்தில் கொண்டே ஜாப்ஸ் இந்தச் சீருடையைத்  தனக்காகத்  தெரிந்தெடுத்துக் கொண்டார்.

    ஜாப்ஸ் தெரிந்தெடுத்த உடை, தொழிலாளியின் உடை (Workman attire) – முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்தது. தொழிலாளிதான் தொழிலகத்தில் முதன்மையானவன் என்பதை இடையறாது எடுத்தியம்பும் ஊடகமாக ஜாப்ஸ் தெரிந்தெடுத்த சீருடை அமைந்தது.

    “இந்த நிறுவனத்திலே – பணியாளர்களே முக்கியம்” என்னும் அதே நேரத்தில் பணியாளர்கள் செய்யும் பணிதான் இந்த நிறுவனத்தின் ஜீவநாடி என்று முரசறைவைது போல உரைப்பதாய், ஆனால் மவுனமாய் எடுத்தியம்புவதாக அவரது உடை அமைந்தது.

    பின்னாளில், எவ்வித அறிவுறுத்தலுமின்றி, தன்னியல்பாய்த் தன்னாலேயே  இவ்வுடை  ஆப்பிளின், வலியுறுத்தப்படாத சீருடையானது.

    ஒருவர்பின் ஒருவராக, ஜாப்ஸ் அணிந்து கொண்ட உடைக்கு அனைவரும் மாறலானார்கள்.

    காலர் வைத்த சட்டைகளை ஒதுக்கிவிட்டு, பாமரமான – எளியோர்களும் சர்வ சாதாரணமாய் அணிந்து கொள்வதுமான பனியன் துணி உயர்க்கழுத்துச் சட்டைகளைத் தம் அடையாளமாகக் கொள்வதை,  ஆப்பிள் நிறுவனத்தில் உள்ளோர் பெருமிதமாய்க் கருதத் தொடங்கினர்.

    கீழே உள்ள புகைப்படத்தில், இடப்புறம் உள்ளவர் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி குக் என்பவர்;  வலப்புறம் உள்ளவர்  ஸ்டீவ் ஜாப்ஸ் .

    சீருடை, ஜாப்ஸைத் தாண்டி இன்ன பிறர்க்கும் பரவி நிற்பதைக் காண்க.

    https://nypost.com/2015/03/13/5-people-who-famously-were-super-committed-to-their-bosses/

    மனித சமுதாயத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பவர்கள்  சாதாரண மனிதர்களின் சாயலில் இருப்பதை, தொழில்ரீதியாகவும், வியாபாரரீதியாகவும் சாதகமான அடையாளம் என்று  ஆப்பிளில் உள்ளவர்கள் உணர்ந்தது சுயவெளிச்சமே தவிர எவ்வித வற்புறுத்தலாலும் இல்லை.

    புரட்சியாளர்களின் எளிவந்த புரட்சியின் வலிமையை உண்மையான சான்றாக அறிவிக்க, இந்த உண்மை நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

    புரட்சியாளர்கள் தம் புரட்சிக்கான வித்துகளை,  பிறரது வெற்றி எடுத்துக்காட்டு களிலிருந்து ஆய்ந்து தெரிவு செய்துகொள்கிறார்கள் என்றால் அது உண்மையே.

    ஜாப்ஸிற்குச் சீருடை பற்றிய எண்ணம் எவ்வாறு தோன்றியது என்றால், அது அவருடைய ஜப்பானியப் பயணத்தின் போதுதான். 1980இல் ஜப்பானில் உள்ள சோனி நிறுவனத்திற்குச் சென்றபோது அங்கே அனைவரும் சீருடை அணிந்திருப்பதைப் பார்த்த ஜாப்ஸ், சோனி நிறுவனத்தின் தலைவரான, அகியோ  மொரிட்டாவிடம் அதுபற்றிக் கேட்கிறார்.

    அப்போது ஜாப்ஸிடம் அகியோ சொன்னதாவது: “போருக்குப் பிறகு எங்கள் மக்களுக்கு உடுத்திக்கொள்ள உடை இல்லை. எனவே நாங்கள் எங்கள் நிறுவனத்திலிருந்து, எங்கள் பணியாளர்களுக்கு தினப்படி அணிந்துகொள்ள உடை வழங்கி உதவினோம். நாங்கள் அவர்களுக்குத் தந்த உடையின் வடிவமைப்பு அவர்களுக்கு வெகுவசதியாக இருப்பதை அவர்கள் பாராட்டியதோடு, போரின் தாக்கத்திலிருந்து மீண்டு, பொருளாதாரம் சற்று மேம்பட்ட பிறகும்கூட, அவர்கள், நாங்கள் வழங்கிய எளிய உடையையே தினப்படி விடாமல், அணிந்து வந்தார்கள்! எங்கள் பணியாளர்களுக்கும், எங்கள் நிறுவனத்திற்கும் இடையே ஒரு நிலைத்த  பாசப் பிணைப்பை இந்த உடை உருவாக்கியது என்றே சொல்லவேண்டும்.”

    “அதன்பிறகு, காலப்போக்கில், இதேஉடையே  சீருடையாகியது; உடை வடிமைப்பாளர் ஐஸீ மியாக்கே என்பவரிடம் சொல்லி, சிறுமாறுதல்களை ஏற்படுத்தி, கூடுதல் வசதியுடன் எங்களது சீருடைகள்  தயாராகின!”

    அகியா, இதனைச் சொன்ன மாத்திரத்தில், ஐஸீ மியாக்கேவை ஜாப்ஸ் சந்திக்கிறார். தனது ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்றாற்போல் உடை ஒன்று வடிவமைத்துத் தர முடியுமா என்று கேட்கிறார். அவரும்  சில மாதிரிகளைத் தயார் செய்து கொடுக்கிறார். அந்த மாதிரிகளை  எடுத்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியவர், சோனி நிறுவனத்தில் தான் கண்ட  சீருடை பற்றி ஆப்பிளில்  பேசுகிறார். ஆப்பிளிலும், இவ்வாறு உடுத்திக்கொள்ளலாமா என்று கேட்கிறார். ஆனால், நான் ஏற்கெனவே சொன்னது போல, ஆப்பிளில் எவரும் சீருடையை எண்ண அளவில் கூட முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை.

    ஆனால், ஜாப்ஸ், பணியாளர் சீருடையில் மட்டுமே, தான் எப்போதும் அலுவலகத்தில் தோன்றுவேன் என உறுதி செய்துகொண்டு ஜப்பானில் மியாக்கேவைத் தொடர்பு கொண்டு,  தன்னுடைய அளவுக்கு, கருப்பு நிறத்தில் ஆமைக்கழுத்து கொண்ட நீள் கைவைத்த பனியன் சட்டைகளைத் தயாரித்து அனுப்ப முடியுமா எனக்கேட்க, அவரும் நூறு சட்டைகளை ஜாப்ஸின் அளவுக்குத் தயாரித்து அனுப்பி வைத்தார். அதை நித்தமும் தவறாமல், தான் இறக்கும்  வரையில் அணிந்தார் ஜாப்ஸ்.

    அவர் இவ்வாறு நேரடியாய், வெட்ட வெளிச்சமாய் எளிய உடையில் வாழ்ந்து காட்டிய வாக்கில் மெல்ல மெல்லப் பணியாளர்கள் தாமே முன்வந்து அவ்வுடையைப் பின்பற்றினர் என்பதோடல்லாது, கணினித் தொழில்நுட்பத் துறையிலும் இன்னபிற துறையிலும் இருக்கும் நிர்வாகத் தலைவர்கள்  எவரும் ஜாப்ஸ் போன்றே உடையணிய ஆரம்பித்தனர்.

    சொல்லப் போனால், ஜாப்ஸ் ஏற்படுத்திய உடைப் புரட்சி, இன்னும் ஒருபடி மேலே போய் – வெற்றியாளர்களாக விரும்புபவர்கள்  யாவரும் தினமும் ஒரே உடையை அணியவேண்டும் – உடை வடிவத்தில் மாற்றம் நிகழ்த்திக்கொள்ளக் கூடாது என்கிறதான ஒரு கொள்கை உலகில் உருவாகி, அது ஜீவிதமாய் நிற்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

    சீருடை என்பது பணியாளர்களுக்கிடையிலும், பணியாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலும் பாசப் பிணைப்பை ஏற்படுத்துகிறது என்று சோனி தலைவர் கூறியது ஆப்பிள் நிறுவனத்தில் நிதர்சனமாய் நிகழ்ந்தது.

    கணையத்தில் புற்றுக்கட்டி ஏற்பட்டு, மருத்துவமனையில், ஜாப்ஸ் கிடக்க, அவருக்கு  மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முகமாகக் கொடையாளியாக “நான் வருகிறேன்” “நான் வருகிறேன்” என்று போட்டி போட்டுக்கொண்டு, ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளரும் இசைவு தெரிவித்தனர். அவர்களுள் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொடையாளிக்கான பொருத்தம் அமைகிறது. அவர் தான் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரியான குக். அவரது  இரத்தம்  மற்றும் கல்லீரல், ஜாப்ஸின்  மாற்றுக் கல்லீரல் அறுவைச் சிகிச்சைக்குத் தோதாக இருப்பதாக அறியப்படுகிறது.

    குக் தனது கல்லீரலின் ஒரு பகுதியை ஜாப்ஸிற்குத் தர ஆர்வத்தோடும் முழு மனதுடனும் முன்வருகிறார். இந்த நெகிழ்ச்சியை விட நெகிழ்ச்சியான தருணம் என்னெவென்றால் ஜாப்ஸ் அதை மறுத்தது.

    “உங்கள் உழைப்பைத் தந்து என் நிறுவனத்தை உயிருடன் வாழவைத்துக் கொண்டிருக்கிற  நீங்கள் நீடூழி வாழவேண்டும் – என் உயிர் என் நிறுவனத்தில் தான் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று குக்கிடம் ஜாப்ஸ் கேட்டு, அவரது கல்லீரல் கொடையைப் பெருந்தன்மையாய் மறுத்துவிட்டார்.

    அதற்குப் பிறகு, சிறிது காலத்திற்குப் பிறகு, இறந்த ஒருவரின் உடலிலிருந்து பெறப்பட்ட கல்லீரலைக் கொண்டு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்படுகிறது. இருப்பினும், ஜாப்ஸ் அதிக நாட்கள் உயிர் வாழ முடியவில்லை என்பது இறைவனின் சித்தம் என்றே கொள்கிறோம்.

    ஆப்பிள் நிறுவனத்திற்கு, கொடி இல்லை – கொடி தேவையில்லை என்றாலும், ஆப்பிள் என்ற எளிமையான ஜனரஞ்சகமான பெயரும் – ஒருவாய் கடித்துச் சுவைத்த ஆப்பிள் என்பதான அதன் சின்னமும் ஜாப்ஸின் புரட்சியின் மௌனமான முத்தாய்ப்புகள். அதிக சிரத்தையும், அதிக வார்த்தைகளும் இன்றி ஆப்பிள் நிறுவனம் புரட்சிகரமாய் மண்ணில் வேரூன்றப்பட்ட சாகசத்தை இன்று எவருமே வியந்து – வியந்து போற்றியவண்ணம் இருக்கிறார்கள்.

    (மேலும் பேசுவோம்)     

    துணை நின்றவை

    [1] Frey L., Frey M. (2018) Instruments of the Revolution: Language and Dress. In: The Culture of French Revolutionary Diplomacy. Studies in Diplomacy and International Relations. Palgrave Macmillan, Cham

    Share
  • எழுவகைப் பெண்கள் – 16

    எழுவகைப் பெண்கள் – 16

    அவ்வைமகள்

     தலைமுடியைப் பற்றிய அறியாமையும் அறிவுப்பிழையும்   

    சீப்பு பற்றி நாம் பேசிவருகிற வேளையில், அமெரிக்கர்களுக்கு தலைமுடி பற்றிய கவலையும் கரிசனமும் இப்போதுள்ளபோல முற்காலங்களில் இல்லை என்று தான் நான் சொல்லுவேன் என்றார் அந்த இராணுவ அதிகாரி.

    ஏன் அப்படிக் கூறுகிறீர்கள் என்று கேட்டேன். அவர் விளக்கினார்:

    200 ஆண்டுகளுக்கு முன்புவரையில், தலைக்குக் குளிப்பது என்பது என்னவென்றே தெரியாதவர்களாகத்தான் அமெரிக்கர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், குளிப்பது என்ற பழக்கம் கூட அவர்களுக்கு இல்லாமல் தான் இருந்திருக்கிறது.

    வாஷிங்க்டன் டீ.சி. யில் உள்ள புராதன வரலாற்று அருங்காட்சியகமான ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் பண்டைய சீப்புகள் உள்ள பிரிவில், இந்த வாசகங்களை நான் பார்த்திருக்கிறேன்.

    ஸ்மித்சோனியன்  அருங்காட்சியகத்தின் வெளியீடு  ஒன்றிலேயும்  கூட இதே வாசகத்தை நீங்கள் பார்க்கமுடியும். இந்த இணைப்பைப் பாருங்கள் என்று தனது கணினியில் காண்பித்தார் https://www.si.edu/spotlight/health-hygiene-and-beauty/hair-care

    நீங்கள் முன்பு சொன்னது போல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே தான் குளியலின் முக்கியத்துவமே தெரிந்திருக்கிறது – அதன் பின் தலைமுடியின் பால் கவனம் மிகுந்திருக்கிறது என்றார்.

    மிகச்சரியாகவே ஆய்ந்து சொன்னீர்கள். நன்றி குறித்த தொடர்ந்தேன்.

    பார்க்கப் போனால், இங்கு உள்ள உண்மை கொஞ்சம் அறுவறுப்பான உண்மைதான்! ஆங்கிலேயர்களைப்போல சுத்தமில்லாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை என்பது பலருக்கும் தெரிந்த ரகசியம். தொற்று வியாதிகளின் மொத்தச் சொந்தக்காரார்கள் ஆங்கிலேயர்களே என்பதும் கூட உலகறிந்த ரகசியம்.

    ராட்சத்தனத்தைப் பயன்படுத்தி, எல்லோரையும்  மிரட்டியும், காயப்படுத்தியும்,  கொன்றும், போரிட்டும்,  அடக்குமுறை செய்து ஆங்கிலேயர்கள் பிறரை அடிமை செய்து வாழ்ந்த காலம் முழுதும், அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் தொற்று நோய்களை – அதுவும் கடுமையான தொற்றுநோய்களை – கொள்ளை நோய்களைப் பரப்பினார்கள்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகம் முழுமையுமே தொற்றுநோய்களின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தது என்பதற்கு ஆங்கிலேயர்களே முக்கிய காரணம்.

    ஆமாம்! இது சத்தியம் –  என்று அவர் தொடர்ந்தார்: எங்கள் நாட்டின் பூர்வீகக் குடிகளான அமெரிக்க இந்தியர்கள், அதாவது செவ்விந்தியர்கள் ஆங்கிலேயர்கள் பரப்பிய தொற்று நோய்களால் கொத்து கொத்தாய் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே மாண்டு வீழ்ந்தனர். அவர்கள் போரிட்டு எங்கள் இந்தியர்களை அழித்ததைக் காட்டிலும்,  மிக அதிக எண்ணிக்கையில் தொற்று நோய்களைப் பரப்பியே கொன்றனர். எங்கள் பூர்வீகச் செவ்விந்தியர்கள் குலமே இன்று அழிந்துபோய், சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே அவர்கள் இருப்பதன் காரணமே ஆங்கிலேயர்கள் தாம்!

    இவ்வாறெல்லாம், மனிதகுலத்தை பல்லாற்றானும் நாசம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள் அல்லவா? இந்தப்  பாவத்தை அவர்கள் எப்படித் தீர்க்கப் போகிறார்களோ? என்றார்.

    நாம் இப்போது தலைமுடி மீது நம் கவனத்தை திசை திருப்பலாமா என்று கேட்க, மீண்டும் தலைமுடியில் எங்களுடைய பேச்சு தொடர்ந்தது.

    ஆங்கிலேயர்கள் பரப்பிய தொற்றுவியாதிகளில் தலைமுடியே  – தொற்றுச் சேமிப்பு வங்கியாக, தொற்று ஊடகமாக, தொற்றால்  பாதிக்கப்பட்டப்  பிரதான உடற்பொருளாக இருந்தது என்று நான் சீப்பு பற்றிப் பேசும்போதே சொன்னேன் அல்லவா – பத்தொன்பதாம் நூறாண்டின் துவக்கத்தில் கொள்ளை நோய்களின் போது, ஊரெங்கும் மனிதர்களின் தலையிலிருந்து உதிர்ந்த முடியைச் சேகரித்து – எரிப்பது என்பது முக்கியமான துப்புரவுப் பணியாக உலகம் முழுவதும் இருந்தது என்றால்  நீங்களே தலைமுடியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.

    நிச்சயமாக உணர்கிறேன் – உலகில் பலபேர் இக்காலகட்டத்தில் வழுக்கையாகிப் போனார்கள் என்று கூடப் பார்த்தோமே – என்றார்.

    ஆக, உடம்பின் உள்ளீடாகவோ – வெளியீடாகவோ எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் – முடி முதலில் பாதிக்கப்படுகிறது என்று புரிகிறது அல்லவா?

    சரி, நம் மனநிலை பாதிக்கப்பட்டாலும் லும் கூட நம் தலைமுடி பாதிக்கப்படுமா? என்றார்.

    நம்முள் ஏற்படும்  சிறு சிறு உணர்ச்சிப் பிறழ்வுகள் கூட, தலைமுடியைச் சென்றடைகின்றன என்றால், மனநிலை பாதிப்பு எவ்வாறு தலைமுடியை பாதிக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

    பிரிவாலும், தனிமையாலும் வருந்துபவர்களுக்கு பொடுகு உண்டாகும். மனக்குழப்பம் ஏற்பட்டால் – முடி கொட்டும் – பிறரது அடக்குமுறைக்கு ஆட்பட்டவர்களுக்கு சொட்டை விழும். தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தீண்டாடுபவர்களுக்கு வழுக்கை உண்டாகும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுபோன்றே பாலியல் உணர்ச்சிகள் மிகினும் குறையினும், முடி அதனை வெளிக்காட்டிவிடும். பெண்மை மிகுந்த ஆண்களும் ஆண்மை மிகுந்த பெண்களும், சிலபல முடிப்பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதும்  கூட, ஒரு பொது அறிவாகவே நம்மிடையே விளங்கி நிற்கிறது.

    தலைமுடியைப் பற்றி பல்வேறு பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள் இருக்கின்றனவே என்றேன்.

    தலைமுடியை நம் உடலின், First Responders – முதன்மைப் போராளிகள் – அல்லது  முதன்மை பதிலிருப்பான்கள் என்று சொல்வதே தகும் – எனலாமா என்றார்.

    ஆம்! அது  தலைமுடிக்கு மிகப்பொருத்தமான பெயர்ச்சூட்டல் – நன்றி எனத்தொடர்ந்தேன்.

    நம் உடலைப் பாதுகாக்க நம் தலைமுடி ஓவ்வொரு நொடியும் மிகுந்த பிரயத்தனம் செய்கிறது – தொடர்ந்து போராடுகிறது – நாம் விழித்திருக்கும்போது மட்டுமல்ல – நாம் உறங்கும் போதும் கூட.

    நம்முள் ஏற்படும் அனைத்துத் தாக்கங்களையும் நம் தலைமுடி தாங்கி, அந்தத் தாக்கங்களையெல்லாம், கழிவாக்கித் தன்னுள்  சேகரித்து, வெளித்துப்பும் அற்புதமான பணியை நம் தலைமுடி செய்து கொண்டு வருகிறது.

    அதுபோன்றே புறத்திலிருந்து ஏற்படும் அனைத்துத் தாக்கங்களையும் தான் தாங்கி வெளித்துப்பும் அற்புதமான பணியையம் நம் தலைமுடி ஓயாமல் செய்துகொண்டிருக்கிறது.

    ஆக, தலைமுடியை, இருபுறமும் கூர்மை கொண்ட கத்திபோன்றது எனலாம் – உள்கிளம்பும் அரக்கரையும், புறத்திருந்து வரும் அரக்கரையும் ஒரே நேரத்தில் சளைக்காமல் தாக்கும் மாபெரும் ஆயுதமாக,  ஒவ்வொரு தலைமுடியும் செயல்படுகிறது.

    தலைமுடிக்கு பராக்கிரம பலம் இருக்கிறது போல் தெரிகிறதே என்றார்.

    ஆமாம் – அப்படியேதான் – எங்கள் நாட்டின் புராதன மருத்துவமுறைகளுள் ஒன்றான ஆயுர்வேத மருத்துவம் தலைமுடியை – எலும்பும் – தசையும் சேர்ந்த தனித்துவ உறுப்பு என்கிறது.

    இது ஏறக்குறைய, தலைமுடி நரம்புகளின் தொடர்ச்சி எனும் செவ்விந்தியக் கோட்பாட்டுக்கு ஒத்துப் போவதாகவே உள்ளது. ஏனென்றால், எலும்பு, தசை, நரம்பு ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து இயங்குவன. இயக்கத்தில், ஒன்றை விட்டு இன்னொன்றைப் பார்க்கமுடியாத அளவிற்கு ஒருங்கிணைந்த பணியை எலும்பும், தசையும், நரம்பும் செய்கின்றன.

    ஆங்கில மருத்துவமுறை தலைமுடியை, உடல் ரோமத்தை, நகத்தை, தோலின் ஓட்டுமானம் (Appendage) என்று சொல்லுகிறதே என்றார்.

    ஓட்டுமானம் என்று மேலோட்டமாகச் சொல்லிவிட்டால் பொறுப்பு கழிகிறது அல்லவா?  தலைமுடி இல்லாமலும் உயிர் வாழமுடியும் என்பதால் ஆங்கில மருத்துவம் தலைமுடி பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், பிறந்த எவரொருவரும் நல்லவிதமாக, ஆரோக்கியமாக, சுயமதிப்புடன், அழகாக, மரியாதைத் தோற்றத்துடன் வாழவேண்டும் என்பது முக்கியமல்லவா? – நல்ல ஆரோக்கியமான தலைமுடி இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும்? என்றேன்.

    ஆமாம்! அழகான – கண்ணியமான – ஆரோக்கியமான – தோற்றம் அதி முக்கியம். அதற்காகத்தானே அனைவருமே ஓயாமல் பிரயாசைப் படுகிறோம்!  தோற்ற  அழகு என்றால் தலைமுடி தானே பிரதானம். எனவே, தலைமுடியை, தோலின் ஓட்டுமானம் என்னும் ஆங்கில மருத்துவ சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லையே! என்றார்.

    ஆங்கில மருத்துவ முறையின் பலவீனமே அதன் அணுகுமுறை சித்தாந்தமே. நோயின் குறிகளை மட்டுமே குணப்படுத்துவது என்கிற நோக்கில் செயல்படுவதால் பெரும்பாலும், ஆங்கில சிகிச்சை முறைகள், நோயைத்  தணிப்பதில்லை. மாறாக நோயாளி, தொடர்ச் சிக்கல்களுக்கும் தொடர் சிகிச்சைக்கும்  இட்டுச் செல்லப்படுவார்.

    புராதனமான இந்திய மருத்துவ முறைகள் கொண்டுள்ள சித்தாந்தம் வேறானது – நோயின் குறிகளை நீக்குவது இம்முறைகளின்  குறிக்கோளல்ல. நோயை முற்றிலுமாகத்  தணிப்பது தான் குறிக்கோள். எனவே, பாரம்பரிய மருத்துவச்  சிகிச்சைகளின்  வழிமுறைகள் வேறானவை.

    பாரம்பரிய முறைகளில், முதன்மையாக, நோய் வராமல் தடுப்பதில் மட்டுமே மேலார்ந்த கவனம் செலுத்தப்படுகிறது.  எனவேதான் மருத்துவம் என்பது வாழ்வியல் முறையானது.

    எனவேதான், அன்றாடப் பழக்க வழக்கங்களும் உணவும் அவரவர் பாரம்பரிய சமூகப் பண்புகளுக்கு ஏற்புடையதாய் – பெண்-ஆண் என்கிற வேறுபாட்டுக்குரிய விகிதாச்சாரத்தில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது.

    தலைமுடி என்பது ஒரு பாதுகாப்புக் கவசமாய் – நல்லரணாய்  நம்மைக் காப்பது என்பதால் – தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளை எவரும் எழுப்பிக்கொண்டுவிடக்கூடாது என்பது எவரொருவருக்கும் தெரிந்திருந்த சூழல் எங்கள் நாட்டில் எல்லோருக்குமே இருந்தது.

    தலைமுடிக்கு பழுது ஏற்படக்கூடாது என்றால் – அதை ஒவ்வொருநாளும் கண்ணும் கருத்துமாய்ப் பராமரித்துப் பாதுகாக்கவேண்டும் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது.

    எனவேதான், தலைமுடியை நன்கு  பராமரித்து, பலப்படுத்தி, வெகு ஆரோக்கியமாய் அதனைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் நித்திய கட்டளையானது. இந்த நித்தியக்  கட்டளை குடும்ப வாழ்வில் நிலை நிறுத்தப் பட்டது.

    தலைமுடிப் பராமரிப்பு முறயை எங்கள் முன்னோர்கள் மிகுந்த அறிவியல் நுணுக்கங்களோடு, வெகு கவனத்தோடு, தயாரித்து அதனை தினசரிப் பழக்கத்தில் ஏற்றினார்கள்.

    ஒரு செயல்பாடு பழக்கமாக மாற எத்தனை முயற்சி தேவை – என்பதை  எண்ணிப் பார்க்கிறேன் – உங்கள் மூதாதையர்களுக்கு என் மானசீகமான வந்தனங்கள் என்றார். நன்றி சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.

    அவரவர்களே அவர்களது தலைமுடியைப் பராமரித்துக் கொள்ளுவது கூடாது என்பது எங்கள் நாட்டில் தலையாய நியதியாக இருந்தது. இதற்கு இரு காரணங்கள் உண்டு, ஒன்று: நம்மால் நம் தலைமுழுவதையும் பார்க்கமுடியாது – பெரும்பாலான சிக்கலான மற்றும் தீவிரமான தலைமுடிப் பிரச்சினைகள்  தலை உச்சியிலும், சுழியைச் சுற்றியும் ஏற்படுவனவே ; இரண்டு: தலைமுடி என்பது இரத்த சம்பந்தம் உடையது.

    இரத்த சம்பந்தம் என்கிறீர்களே – புரியவில்லை – விளக்கமுடியுமா என்றார் – தொடர்ந்தேன்.

    நான் ஏற்கனவே சொன்னபடி, நம் தலைமுடி என்பது நம்  குடும்பத்தின் பாரம்பரியத் தன்மையைக் கொண்டு தான் உருவாகிறது. ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த குழந்தைகள் முடியில், ஒன்றேயான மரபணுச் சங்கேதத்தோடு பிறக்கிறார்கள். இதுதான் முடியின் இரத்த சம்பந்தம் என்பது. இந்த மரபணுச் சங்கேதத்தை வைத்துத்தான் தடவியலில், முடியை வைத்த்துக் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

    இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கு  அடிப்படையில் பாச உணர்ச்சி இருப்பது இயல்பு. நம் தலைமுடி நுண்ணிய உணரி – இரத்த சம்பந்தம்  உள்ளவர்கள் தொடும்போதும் கையாளும்போதும் நம் தலைமுடி குதூகலம் அடைகிறது, பாதுகாப்பை உணர்கிறது.

    இரத்த சம்பந்தம் உள்ளவர்கள் ஒருவர் மற்றொருவர்  தலையைத் தொடுவது அல்லது  வருடுவது சொந்த உரிமையாகும். ஆனால்,  பிறர் நம் தலையைத் தொடுவதோ வருடுவதோ உரிமை மீறல் என்று பொதுவாகக் கருதப்படுவது உண்டு.

    பெண்களைக் காதல் வலையில் சிக்க வைப்பவர்கள், பெண்களின் தலை மற்றும் தலைமுடியை முதலில் குறி வைப்பார்கள் என்றும் கூறப் படுகிறது. இதுபோன்றே தலையைத் தொட்டும் தலைமுடியைத் தொட்டும் பிறரைத் தன் பால் கவர்ந்திழுக்கும் வசியமுறைகள் கூட தாந்த்ரீக வழிமுறைகளில் காணப்படுவதினை அறிகிறோம்.

    கணவன் – மனைவிக்கிடையே அன்பு உருவாக்கம் மற்றும் கூடல் முன் விளையாட்டுக்களில் தலைமுடியின் வேர்க்காலில் சுரக்கும் சிலநுட்ப திரவியங்கள் தூண்டல் ஊடகங்களாகச் செயல் படுவதையும் அறிகிறோம்.

    குடும்பத்தில் ஒருவர் மற்றொருவரின் தலைமுடியை வாருவது, பராமரிப்பது, அழகு படுத்துவது எல்லாம் – பாசப்பிணைப்பை மேலும் பிணைப்பதோடு குடும்பத்தின் ஒட்டுமொத்த தலைமுடி ஆரோக்யத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

    சிறியவர்களின் தலையை  தினந்தோறும் எண்ணெய் தடவி வாருவது என்பது பெரியவர்களின் அன்றாடக் கடைமையானது இக்காரணத்தால் தான்.

    அன்றாட வேலைப் பட்டியலில், ,தலை வார, கட்டாயமாகக் கணிசமான நேரம் ஒதுக்கப்படும். பாட்டியோ, அம்மாவோ, மூத்த சகோதரியாயோ, எவரோ ஒரு பொறுப்பான மூத்த பெண்மணி, தலைவாரும் பணியை சிரத்தையுடன் மேற்கொண்டு செய்வார்.

    இந்தப் பழக்கத்தினால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் தலைமுடியும்  ஒவ்வொரு நாளும் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதோடு அல்லாது – முடி சம்பந்தமான எந்த ஒரு சிறிய பிரச்சினையும் முளையிலே கண்டுபிடிக்கப்படும் அதற்குண்டான சிகிச்சை உடனடியாக வீட்டிலியேயே வழங்கப் பட்டுவிடும்.

    தலைமுடியை உடலின் நுட்பமான உறுப்பாகவே இந்தியர்களின் பண்டைய உலகம் கருதி வந்ததால், வெகு சிறப்பான வீட்டுப்  பராமரிப்பு முறைகளை அது ஆய்ந்து அறிந்து நிலைப்படாக்கியது.

    பராமரிப்பு தான் தலைமுடியின் பாதுகாப்புக்கு முதன்மையானது என்பது இந்தியர்களின் உறுதியான நம்பிக்கை – என்று நான் முடித்தவுடன் அவர் சொன்னார்:

    ஆமாம் ஆமாம்! செவ்விந்தியர்கள் இன்றும் கூட, தனது தலைமுடியை குடும்பத்தினர் அல்லாத எவரையும் தொட அனுமதிப்பதில்லை. சலூன்களைலிருந்து அவர்களை இன்றும் விலகியே நிற்கிறார்கள்.

    சலூன்கள் எல்லாம் தற்கால உற்பத்திகளே. அதுவும் பெண்களின் இன்றைய விரித்துத் தொங்கவிடும் தலைமுடி அலங்காரங்கள் பெரும்பாலும் சலூன்களாலும் விளம்பரங்களாலும் பெருகினவையே. இந்தத் தலைவிரிகோலத்ததால், இன்று ஏற்பட்டிருக்கிற தலைமுடிப் பிரச்சினைகள் ஒன்றா இரண்டா?

    இன்று கடைகளில் விறக்கப்படும் அனைத்து தலைமுடி தொடர்பான பொருட்களிலும் வியாபார நோக்கம் மட்டும் தான் இருக்கிறதே  தவிர தலைமுடி ஆரோக்கியத்தின் நோக்கம் அங்கு இல்லை. மேலும் மேலும் அப்பொருட்களை வாங்கி  உபயோகிக்க வேண்டும் என்கிற தேவையைத் தொடர்ந்து மக்களிடையே (குறிப்பாக பெண்களிடையே) தக்கவைக்கவேண்டும் என்கிறதான நெருக்கடியை ஏற்படுத்தும் சாகசம் நிறைந்த வணிக உலகத்தின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு நம் தலைமுடி இன்று திக்குமுக்காட்டிக் கொண்டிருக்கிறது.

    உங்கள் பெண்களைப் போலவே எங்கள் பெண்களும், இப்போது, தலைமுடி பராமரிப்புக்கென மிக அதிக அளவில் செலவழிக்கிறார்கள்.

    வீட்டிலேயே எளியவழிகளில் தினசரிப் பழக்கமாக, வளமாக தலைமுடியைப் பராமரிக்கும் வழி தெரிந்தும் கண்மூடித்தனமாய், நவீன மோகத்தில் எங்கள் பெண்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

    இதில் அதிர்ச்சி  தரும்  சேதி என்னவென்றால், சலூனில் செய்யப்பட்ட அலங்காரத்தைகே கலையாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற அவாவில் இன்றைய நவீனப் பெண்கள் தலைக்கு குளிப்பதைக்க கூட குறைத்துக் கொண்டுவிட்டார்கள் அல்லது முற்றிலுமாக விட்டுவிட்டார்கள்.

    இன்று, சலூன் பெஞ்சில் படுத்தபடி, சலூன் பணியாளர், தலைமுடியை அலசிவிட்டுப் புது அலங்காரம் செய்யும் நிலையோடு  எங்கள் பெண்கள்  வாழ்க்கை மாறிப்போயிருக்கிறது.

    நெருக்கடிமிக்க சந்து பொந்துகளிலெல்லாம் சலூன்கள் – அழகு நிலையங்கள் –  சுகாதாரக் குறைபாட்டுடனே தான் எல்லாம் அங்கு நடக்கின்றன. இருப்பினும், இன்றைய காலத்தின் கோலம் பெண்களும் ஆண்களும் சலூனில் தஞ்சம்.

    போலிக் கவர்ச்சியும், வேதிப் பொருட்களின் பூச்சுமாக பெண்களும் ஆண்களும், செயற்கை மிகுந்த ஓப்பனையுடன் – ஜீவ உரம் தாழ்ந்தது வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தாழ்மையை என்னென்று சொல்வது?

    வருத்தமாயிருக்கிறது – உங்கள் நாடு ஒரு ஞான பூமி ஆயிற்றே! உலகம் முழுமைக்கும் உடல் நலத்தில் ஞான ஒளி காட்டி வழி நடாத்திச் செல்லும் பெற்றி பெற்ற ஒரு நாட்டில், இவ்வாறான சீரழிவுகள் நேர்வது உண்மையிலேயே என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது என்றார்.

    இன்று தலைமுடியைப் பற்றி அறியாமை மட்டுமல்ல அறிவுப் பிழையும் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் நம் உடல் நலனை, நம்மிடமிருந்து விலக்கி வைக்குமாறு நாம் அனுமதித்திருக்கிற மூடத்தனம் இன்றைய அடையாளமாயிருக்க்கிறது என்றார்.

    (மேலும் பேசுவோம்) 

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 17

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 17

    அவ்வைமகள்

    17. நேர்படப் பேசி எளிவந்து வெகுண்டு

    ஸ்டீவ் ஜாப்ஸின் சரிதத்தை எழுதிய ஐசக்சன், ஜாப்ஸை, நேர்காணல் கண்டே ஒவ்வொன்றையும் உண்மையாக எழுதினார் என்பது அனைவரும் அறிந்த சேதி. இவ்வாறன நேர்காணல்களில், ஐசக்சன் பற்பல கேள்விகளை ஜாப்ஸிடம் கேட்பதுண்டு.

    ஒருசமயம், ஐசக்சன் கேட்கிறார்:

    “நீங்கள் உங்கள் தொழில்நுட்பப் பணியில், உங்களிடம் பணிபுரிபவர்களிடம், கராறாகவும் தயவு தாட்சணியம் பார்க்காமலும், அழுத்தமாகப் பேசுவது ஏன்?”

    இனிமையாகப் பேசினால் இன்னமும் கூட வெற்றி கிடைத்திருக்குமோ என்ற ஆதங்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வியாகவே, ஐசக்சனின் இந்தக் கேள்வி அமைந்திருக்கிறது.

    இக்கேள்விக்கு ஜாப்ஸ் அளித்த பதிலைக் காண்போம்:

    “இது மக்களுக்கான படைப்புப் பணி; சாதாரணப் பொது மக்களின் தேவையை, விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனது அலுவலகத்தில் இருக்கும் அனைவருடைய ஒட்டுமொத்தக் கடமை. அதிலே, எவருக்கும் எவ்விதமான அனுசரிப்பும், விட்டுக்கொடுத்தலும் கூடாது. சமுதாயம் தழுவியத்தான விசாலப் பார்வையோடு பொருட்களை உருவாக்குகிற இடத்தில், தனிப்பட்டவர்கள்,  தங்கள் குறுகிய பார்வையைத் தியாகம் செய்தே ஆக வேண்டும்.

    ஓட்டுமொத்தமாய் அனைவருக்கும் ஒரே இலக்கு, ஒன்றேயான விசாலப் பார்வை எனும்போது இங்கே, ஒட்டுமொத்தமான சிதறலில்லாத கவனம் ஒவ்வொவொரு நபருக்கும் தேவை. அடுத்து, காலவிரயம் இல்லமால் பணிகள் நடக்கவேண்டும். போட்டி நிறைந்த இந்தத் தொழில்நுட்ப உலகத்தில், ஒவ்வொவொரு நொடியும், ஒவ்வொவொரு முயற்சியும் முதலீடு.

    எனவே, செய்யும் வேலையின் எதிர்பார்ப்புக்களை, அதன் நுட்பங்களை, என்னுடன் பணிபுரிபவர்களுக்கு, நான் வெகு நேர்மையாக, உண்மையாக, ஒளிவுமறைவின்றி, தெள்ளத்தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.

    எனவே, நான் நேர்படப் பேசுகின்றேன். தப்பு என்றால் அதை தப்பு என்று வெகுத் தெளிவாக, நேரிடையாக, உடனடியாக அத்தருணத்திலேயே சொல்லியாகவேண்டும் என்பது என் கடமை. அதுவே என் இயல்பு.

    இதைவிடச் சிறப்பாகப்  பேசவேண்டும் என்றால் சொகுசாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும், Gentlemen Club ல் வேண்டுமானால் அதனை எதிர்ப்பார்க்கலாம். அங்கே எல்லோரும் டை கட்டிக்கொண்டு  இருப்பார்கள் –  வெல்வெட் பூச்சு போட்டு பிறர் மனம் நோகாதபடி, நாசூக்கு மொழியில் (Brahmin language) பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு  பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது எனக்குத் தெரியாத ஒன்றும் கூட.

    நான் கலிபோர்னியாவின்  நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்தவன். நேரிடையாக, ஒளிவுமறைவு இன்றி, பிறர் முகத்தில் உறைக்கும்படி பேசுவது மட்டுமே எனக்குத் தெரியும். அதை மட்டுமே  நான் செய்வேன்.

    நான் அழுத்தமாகப் பேசுகிறவன் தான். ஆனால், நான் என்ன பேசுகிறேன் எப்படிப் பேசுகிறேன், எதற்காக அவ்வாறு பேசுகிறேன் என்று தெரிந்து பேசுகிறவன்.

    இது வாழ்வாதாரம். இது தொழிற்கூடம் – இது வியாபாரப் பொருள் செய்யுமிடம் – இங்கு வேலை செய்ப்பவர்கள் எல்லோரும் வேலை செய்யக் கடைமை பட்டவர்கள் – அதுவும் பிறருக்கு, நாங்கள் விற்றுக் காசாக்கவேண்டிய  கணினிக்கருவிகளைத் தயார் செய்கிறவர்கள் நாங்கள் – இங்கே எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் முகமன் செய்ய – முகத்துதி செய்ய என்ன தேவை இருக்கிறது? என்று சாட்டையால் அடிப்பது போல விருட்டெனப் பேசும் ஜாப்ஸின் பதிலில் எத்துணைப் பொருள் பொதிந்திருக்கிறது என்பதை நினைத்து நம்மால் நம்மால் உண்மையிலேயே பெருமை கொள்ளமுடிகிறது.

    இங்கே தான், அரசியல்வாதிகளின் மொழிக்கும் ஜாப்ஸைப் போன்ற அறிவாளிகளின் – அறிவியலாளர்களின் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கிறோம்.

    பொய்யை மெய்யாகத்தோன்றுமாறும், படுகொலைகளை நியாயப்படுத்துவதாகவும், வாக்காளர்களின் கண்களை மறைத்து, அவர்களின்  மதியை மயக்கி மாயா ஜாலம்  செய்து அவர்களை வசியப்படுத்தும் கவர்ச்சிப் பொறிகளான சொற்களைப் பிரயோகிக்கும் அரசியல்வாதிகள் இந்த சமுதாயத்திற்கு எத்துணை பாதகம் விளைக்கிறார்கள் என்பது கண்கூடு.

    அரசியல் பரிபாஷைகள் மற்றும் அரசியல் மொழியின் பொருள் இலக்கணத்தை பலரும் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். இதில், குறிப்பிடத்தக்கவர் ஜுனியர் கீ என்பவர் [1]; அரசியல் மொழி பற்றி கீ என்ன சொல்லுகிறார் என்றால்: ஆண்டான் – அடிமை; அதிகாரம் – அடக்குமுறை ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் போதிப்பதானதுதான் அரசியல் மொழி. அரசியல் மொழி என்பது வெகு கவனத்தோடு உருவாக்கப்பட்டு எடுத்தாளப்படுவது. அரசியல் மொழியைப் பிரயோகிப்போர் – தன்னின் பிடிவாதத் தன்மையிலும் சுயநல வெறியிலும், எந்த மாறுதலையும் ஏற்படுத்திக்கொள்வதைத் தடுத்தும், மாறுதல்கள் பிறரில், குறிப்பாக ஏழை எளியோர்களில்   கட்டாயம் நிகழ்வதை உறுதி செய்வதுமான ஒரே குறிக்கோளோடு வசியமும் நஞ்சும் கலந்த மாயையான மொழியில் பேசுகிறார்கள்.

    சமுதாயத்திலே, பிரிவினை மனப்பான்மையையும், பேதங்கள் நிலைப்பாடுபெறுமாறும் பேசப்படும் கபடமான அரசியல் மொழியை, அலுவலகத்திலே பயன்படுத்தினால் அது சுரண்டலுக்கும், சுயநலத்துக்கும், கொத்தடிமைகளாய் பணியாட்களைப் பயன்படுத்தப்  பயன்படுமே தவிர, அங்கே, பணியாளிர்களின் வளர்ச்சியையோ, அவர்களின் ஊக்கம் மிக்க ஆக்கபூர்வமான கிரியாசக்தியையோ தூண்டவியலாது என்பது வெள்ளிடைமலை. இன்று பல அரசுநிறுவனங்களும் அரசுசார் நிறுவனங்களும் இத்தகைய நிர்வாகக் கோளாறுகளால் சிதிலப்பட்டு, சீரழிவதை நாம் கண்டவாறுதான் இருக்கிறோம்.

    இதுபோன்றே அரசியல்வாதிகள் நடத்துகின்ற. நடிகநடிகையர் நடத்துகிற பல்வேறு நிறுவனங்களும், கல்விக்கூடங்களும் கூட, சமுதாய வளர்ச்சிக்கு உறுதுணை செய்யாத, கவர்ச்சிப் போதையில் மக்களை திசைதிருப்பி சீரழிப்பதையும் நாம் கண்டவாறு இருக்கிறோம்.

    எனவே, நிர்வாகத்த்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் அரசியல் சார்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதோடு அரசியல் பரிபாஷைகளை உபயோகிக்காத பேராண்மை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்  என்பது தெளிவு.

    சொல்லப்போனால், ஜாப்ஸ் அரசியல்வாதிகளைப் பற்றி  அறியாதவர்  அல்லர். அரசியல் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அவர் வெகுவாகவே அறிந்தவர். அதுவும் ஒரு டெக் கம்பெனியை நடத்துவது என்றால் அரசியல் உலகத்தின் பிடியில் சிக்காமல் தப்புவது கடினம். அதுவும் அமெரிக்க அரசியலின் பூடகமும் நெருக்கடிகளும் வித்தியாசனவை. இங்கு, தொழில் நடத்த வேண்டுமென்றால் அரசியல்வாதிகளுக்கு Lobbying செய்தாக வேண்டும். அதாவது, அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கும், அவர்களது ஜீவிதத்திற்கும் என, வாஷிங்டன் டி.சி யில், அரசியல்வாதிகளுக்குப் பணம் மொய் எழுதினாலொழிய, அவர்கள்  தொழிற்கூடங்களின்  பிரச்சினைகளை செவிமடுக்கவும் மாட்டார்கள்.

    இவ்வாறான நெருக்கடி இருக்கும் ஒரு நிலையில், அரசியலை மிக தைரியத்தோடும் உறுதியோடும் எதிர்த்த ஒரே தொழிலதிபர் ஜாப்ஸ்! அரசியல்வாதிகள் வந்துதான் தன் தொழில் நடக்கவேண்டும் என்கிற தேவையை அடியோடு எடுத்தெறிந்த ஜாப்ஸின் அசாத்திய தைரியத்தை இன்றும் என்றும் உலகு புகழ்ந்தபடி இருக்கும்.

    ஜாப்ஸின் வாழ்நாள் வரையில் ஆப்பிள் நிறுவனம் வாஷிங்க்டன் டி.சி. யின் பக்கம் தலைசாய்க்கவில்லை  என்றால் அந்த வீரத்தின் உரத்தை நீங்களே புரிந்து கொள்ளமுடியும்.

    தலைவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் பிறருக்கு அஞ்சி பயந்து நடந்துகொள்ளக்கூடாது. தவறு ஒன்று நடக்கும்போது, அதைத் தவறு என்று சுட்டிக்காட்ட மறுப்பவன் எப்படித்  தலைவனாக முடியும் என்பது ஜாப்ஸின் மிகப்பெரிய வினா.

    அரசியல் தலைமை, அரசின் தலைமை, அலுவலகத் தலைமை, குடும்பத்த தலைமை  என, சிறிதோ பெரிதோ என்ற வித்தியாசமின்றி, தலைமைக்கென சிறப்பு குணாதிசயங்கள் இருப்பதை வெகு தெளிவாகக் கண்டவர் ஜாப்ஸ்.

    தலைமைக்குரிய சிறப்பு குணாதிசயங்களில் அவர் முதலாகக் கருதியது அச்சமின்மையையே!

    அச்சமின்மையை, இறைவனின் குணாதிசயமாக வேதம் கூறுகிறது. அரசனை இறைவனோடு ஒப்பிட்டுப் பேசுவது உலகின் பல நாடுகளிலும் இருப்பதான ஒரு பழக்கம்.

    இது வழி, ஜாப்ஸின், தலைவர்கள் அச்சமற்றவர்களாக  இருக்கவேண்டும் என்கிற கருத்து வேதவாக்கு நடைமுறைக்கானது, வெற்று மொழியாய் நிற்பதற்கானது அன்று என்பதை  வலியுறுத்துகிறது. இவ்வழியில் பார்த்தால், வெளிப்படையாக, உள்ளது உள்ளவாறு – அது பிறரது மனதைப் புண்படுத்தும் எனினும் கூட, தலைவன் சொல்லியாகவேண்டும் என்கிற கடப்பாட்டில் உள்ளான் என்பதை ஜாப்ஸ் வாழ்நாள் முழுதும் நடந்துகாட்டியே சென்றார்.

    சுவாமி சிவானந்தா தனது “Conqest of Fear” எனும் நூலில் [2]  கூறுகிறார்: “அச்சமின்மை என்பது உன் பிறப்புரிமை” என்று.

    இதையேதான், நாவுக்கரசரும், தேவாரப் பதிகத்தில்,

    நாமார்க்கும் குடியல்லோம்நமனை அஞ்சோம்;
    நரகத்தில் இடர்ப்படோம்நடலை இல்லோம்;
    ஏமாப்போம்பிணி அறியோம்பணிவோம் அல்லோம்;
    இன்பமே எந்நாளும்துன்பமில்லை.

    அரசியலிலிருந்து, அரசியல் மொழியிலிருந்து புறத்தே நின்று செய்வதே தொழில் தர்மம் என்பது தான் ஜாப்ஸின் தாரக மந்திரமாய் இருந்தது எனலாம்.

    திருநாவுக்கரசர் சொன்னதுபோல, வீழ்ச்சியைத் தழுவாது, நரக வேதனையில் இடர் படாது, தேங்கி நில்லாது, ஏமாப்பு எய்தாது, மனப் பிணியும் சோர்வும் கொள்ளாது, எவருக்கும் அடிபணிதல் செய்யாது, இவ்வுலகில் தொழிற்கூடங்கள் நடத்தவேண்டுமென்றால் நேர்படப் பேசித் தெளிவுறுத்தும் அச்சமின்மை மட்டுமே தேவை என்பது ஜாப்ஸின் அசைக்கமுடியாத உறுதி.

    இவ்வகையில், அமெரிக்க அதிபர். ஓபாமா பற்றி ஜாப்ஸ் குறிப்பிட்ட சில கருத்துக்களும் கூட வெகு பிரபலம். அவற்றை  நாம் இங்கே சற்று சிந்திப்பதும் பொருத்தமுடைத்ததாய் இருக்கும்.

    ஜாப்ஸ் சொல்கிறார்: “நான் ஒபாமாவின் தலைமை கண்டு மிகுந்த ஏமாற்றம் அடைகிறேன். அவர்  தலைவனாக இருந்து தலைமைப்பொறுப்பில் மற்றவர்களை வழிநடாத்த சிரமப்படுகிறார்.”

    “ஒபாமா எல்லோருக்கும் முகஸ்துதி செய்கிறார், எவரையும் கடிந்துவிடக்கூடாது என்றே நடந்துகொள்கிறார்.”

    ஒரு நாட்டின் தலைவருக்கு எல்லோருக்காகவும் விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஓங்கிக் கேட்கும் ஜாப்ஸின் துணிச்சலான வாசகம் இன்றும் என்றும் வரலாற்று ஏடுகளிலே நிலைத்த பதிவாகவே காலம் வெல்லும்.

    ஒரு மாபெரும் நாட்டின் புகழ்மிக்க அதிபரை பற்றி இப்படிப்பேசுவது சரியா என்றால், “எனக்கு அத்தகைய பயம் ஏதும் இல்லை, நான் என்னுடைய தலைமைப்பணியில் குளறுபடி ஏதும் இல்லாமல் இருக்கிறேன்!”

    “ஆப்பிள் நிறுவனத்திறகு 30,000 உற்பத்திப் பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள் ஆனால் இங்கே அமெரிக்கர்கள் எவரும் பொறியாளர்களாகப் பணிசெய்யும் கல்வித் தகுதியோ அல்லது பயிற்சித்தகுதியோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.” எனவே, Dream Act எனப்படும் ஏற்பாட்டின் மூலம், வெளிநாட்டு பொறியியல் மாணவர்களுக்கு, அமெரிக்காவில் வேலைசெய்ய விசா வழங்கவேண்டும் என்றது ஜாப்ஸின் ஆலோசனை.

    ஆனால், Dream Act க்கு, அமெரிக்காவின் ரிபப்ளிக்கன் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டபோது, ஒபாமா இந்த Dream Act ஐ அவரால் ஏன் அமுலுக்குக் கொண்டு வரமுடியவில்லை என விளக்கம் அளித்தார்.

    ஒபாமாவின் விளக்கத்திற்கு பதிலிறுப்பவராக, ஜாப்ஸ் என்ன சொன்னார் என்றால்: “ஒரு நாட்டின் புத்திசாலியான தலைவராக இருந்து கொண்டு தனது  கையாலாகாத்தனத்துக்கு ஒபாமா விளக்கம் அளிப்பது என்னை நிரம்ப கோபப்படுத்துகிறது!”

    “இந்த அரசு தொழிற்கூடங்களுக்கு நட்பாயில்லை. ஒரு தொழிற்கூடத்தைத் தொடங்கவோ நடத்தவரோ இங்கே, ஆயிரம் முட்டுக்கட்டைகள் – தடைகள் – அனாவசியச் செலவுகள்! ஆப்பிள் நிறுவனத்திற்கு, சீனாவில் 70,000 உற்பத்திப்  பொறியாளர்கள் பணிசெய்து கொண்டிருக்கிறார்கள். நம்மால் வெளிநாட்டிலே வேலை செய்து கொள்ளமுடியும். ஆனால் இங்கு எதுவும் நடக்காது. ஒபாமா ஒருமுறைக்கு மேல் மீண்டும் ஆட்சிக்கு வரவியலாத நிலைக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறார்.”

    ஜாப்ஸ் தன்மீது வீசிய விமரிசனங்களை ஒபாமா எவ்வாறு பொறுத்துக் கொண்டார் என்று  தெரியவில்லை. ஆனால், “அமெரிக்கக் கல்வி பழுதாகிப்போன பயனற்ற கல்வி –  இதனை அமெரிக்க  அதிபர் சீர்படுத்தியாகவேண்டும். இங்கு ஒரு ஆண்டுக்கு பதினோரு மாதங்கள் என்று – ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிவரையிலும், பள்ளிக்கூடங்கள் நடக்கவேண்டும்” என்று ஜாப்ஸ் சொன்ன மாத்திரத்தில் அதனைக் கூர்ந்து கவனித்தவரானார் ஒபாமா, தனது கட்சிக்காரர்களிடம், ஜாப்ஸ் சொல்வதுபோல, 30,000 உற்பத்திப் பொறியாளர்களைப் பயிற்சி தந்து, தயார்படுத்த நாம் ஏதேனும் செய்தாக வேண்டும் என்று பேசினார். அதோடு நின்றாறில்லை, ஒபாமா, ஜாப்ஸிடம் இதுபற்றி தொலைபேசியிலும் இருமுறை பேசினார்.

    ஓபாமா – ஜாப்ஸ் இருவரின் தொடர்பு இன்னமும் கூட அடுத்த நிலைக்குப் போனது – இருவரும் ஒரு முறை நேரிலே சநதித்தனர். ஜாப்ஸும்  கூட ஒபாமாவின் அரசியல் வெற்றிக்குக் கொஞ்சம் உதவவும் கூட விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

    ஒரு நாட்டின் அதிபர், ஒரு சாதாரண தொழிற்கூடத் தலைவரை, நாடி, அறிவுரையும் ஆலோசனையும், உதவியையும் பெற்றது இன்றுவரை, உலக அதிசயமே!

    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

    என்று வள்ளுவர் கூறியது நம் நினைவிற்கு இப்போது வருகிறது. இக்குரலுக்கு பொழிப்புரை தந்திருக்கிற பலரும், இக்குறளைச் சரியாகப் பொழித்த்துரைக்கவில்லை என்றே இப்போது நம்மால் உணரமுடிகிறது.

    நிரந்தினிது என்கிற பதத்தை சுவை பட, இனிமையாக என்று அனைத்துப் பொழிப்புரையாளர்களும் கூறுகிறார்கள்.

    ஜாப்ஸ் என்றும்  ஒருபோதும்  இனிமையான வார்த்தைகளைத் தெரிந்து எடுத்துக் பேசுகிறவர் இல்லை. ஆனால், ஆணித்தரமான, அழுத்தமான, புரிதலும், தெளிவும், ஊக்கமும் தருவதான எளிமையான, நேரடிச் சொற்களை, விரைவாகக் கூறி,  கேட்போருள் சிந்தனை எழுச்சியையும், துரிதமான செயல்முனைப்பையும்  ஊட்டுபவர்.

    சொல்லப்போனால், ஜாப்ஸ் பலசமயங்களில், தனது சகப் பணியாளர்களிடம், ஏன் சில நிருபர்களிடம் கூட, மலிவான, சகஜன, தாழ்வான மொழியாடலைப் பயன்படுத்துபவர் தான். இவ்வாறு, இனிமையில்லாத அழுத்தமான சொல்லாடலைக் கொண்டவராக ஜாப்ஸ் இருந்தபோதும்,  அவரது வாக்கை உலகம், வெறுப்பின்றி உளப்பூர்வமாக இனிதே விரைந்து கேட்டு, செயலாற்ற விரும்பிய தன்மையை நாம் அறிந்தவராதலால், “இனிது” என்பதை சொல்பவரிடமிருந்து விலக்கி, கேட்பவர்களுக்குப்  பண்பாகத் தருவது சிறப்பு தரும் என்றே முடிவு செய்யத் தோன்றுகிறது.

    எனவே, சொல்லுதல் வல்லார்ப் பெறின்நிரந்தினிது விரைந்து தொழில் கேட்கும் ஞாலம” என்று சீர்படுத்தி இக்குறளுக்கு, பொழிப்புரை தருதல் பொருத்தமாக அமையும் என்று உணர்கிறோம்.  ஒரு சொல் செயலாக மாறவேண்டும் என்றால்  அங்கே சொல் இனிமை வேண்டுமா – சொற்கோர்வை வேண்டுமா – எதுகை மோனை நயங்கள் வேண்டுமா என்று பார்த்தால் –  இவையெல்லாம் தேவையில்லை என்றே நம்மால் இப்போது சொல்லமுடியும்.

    சொல்லப்பட்டச் சொற்களுக்கு, கேட்பவரின் இசைவும் ஏற்பும், இவ்வார்த்தைக்கு, நான், செயல் வடிவம் தந்தேயாக வேண்டும் என்கிற உளஎழுச்சியும் உருவாகுமேயானால், அப்போது மட்டுமே  ஒரு சொல் செயலாக மாறும். மறறெப்போதும் அல்ல.

    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்

    என்று பிறிதொரு குறளிலே வள்ளுவர், ஒருவரது சொல்வன்மையை, கேட்டாரைப் பிணிக்கும் தன்மையிலும் – கேளாரையும் கேட்குமாறும்,  கேட்டு நடக்குமாறும்  வேட்கை கொள்ளச் சொல்லும் தன்மையிலும் நிறுத்துவத்தைக் காண்க.

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

    என்றபடியாக, எந்தத் தடையையும் எல்லாத் தடையையும் தகர்த்துத் தாண்டி எளிமையும், சுருக்கமும் கலந்த, நேரடியான துரித சொற்களாலும், சோர்வற்ற உழைப்பாலும், அச்சமென்பதை வீசியெறிந்து விட்டு செம்மார்ந்த சகஜ வாழ்க்கை வாழ்ந்து போனவர் ஜாப்ஸ்.

    எனவே தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பணிசெய்த ஸ்கல்லி ஜாப்ஸை, “செயல்வீரர் – தான் சொல்வதை – தானே நடத்திக் காட்டுபவர் மட்டுமல்ல – அவர் சொல்வதை மற்றவர்களும் ஏற்று, அவர் சொன்னதை திறம்படச்  செயல் வடிவமாக, செய்துகாட்டுமாறு செய்பவர்!”

    (மேலும் பேசுவோம்)  

    துணை நின்றவை

    1. V.O. Key, Jr. (1948).  Politics, Parties & Pressure Groups. New York: Thomas Y. Crowell Company, Second Edition, p. 3.
    2. sri swmai sivananda (1997). Conquest of Fear.  Shivananda Nagar: Divine Life Society, Fifth Edition.

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 16

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 16

    அவ்வைமகள்

     16. தோழமையின் பரிசுத்தம்

    மனித உறவுகள் பலப்பல – அவற்றுள் நட்பு – தோழமை என்னும் உறவு இன்றியமையாத ஒன்று.

    தனிமனிதர்கள், சமுதாயம் என்னும் தோப்பை உருவாக்க வேண்டுமெனில், அதற்கு நட்பே நிலமாக, வித்தாக, நீராக, எருவாக, களைநீக்கியாக, வேலியாக, எல்லாமுமாக அமைகிறது என்பதைத் தெற்றென விளக்கியவர் வள்ளுவர் ஒருவரே.

    செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்குரிய யாவுள காப்பு

    என்று நட்பியலைத் துவங்கும் வள்ளுவர் நட்பின் கூறுகள் ஒவ்வொன்றையும் தனது குறட்பாக்களில் விண்டு விண்டு வைத்து வாக்கியச் சாட்டையால் விளாசித் தீர்க்கிறார்.

    நட்பியலின் பதினாறு அதிகாரங்களில் மட்டுமல்ல; திருக்குறளில் பல்வேறு பிற இடங்களிலும் கூட நட்பின் சிறப்புக்கள் வெளிப்படுகின்றன. அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறன் இல் விழையாமை பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், ஒப்புரவு அறிதல், கல்லாமை, கூடாவொழுக்கம் ஆகிய அதிகாரங்களிலேயும் கூட நட்பின் பல கூறுகள் பேசப்படுகின்றன.

    இவற்றுக்கெல்லாம் மேலாக, வாழ்க்கைத் துணைநலம், இல்வாழ்க்கை, மக்கட்பேறு ஆகிய அதிகாரங்கள் தருகின்ற சித்தாந்தங்களிலே கூட நட்பின் மகத்துவதை, வள்ளுவர் மேம்படுத்துகின்ற பாங்கை நாம் மறப்பது எவ்வாறு?

    நட்பு – தோழமை என்கிற உறவை, வள்ளுவர் இத்துணை விரிவாகப் பேசுவதன் காரணம் அதன் முக்கியத்துவமே.

    வள்ளுவரின் நட்பு பற்றிய கருத்துக்களை ஆராதனை செய்தவன் பாரதி. கண்ணன் என் தோழனில், வள்ளுவரது நட்பியல் பரிமாணங்களை நீளவகலத்தோடு அவன் ஆழமாக ஏன் ஆக்ரோஷணமாகவே  பிரதிபலிக்கிறான்.

    உள்ளத்திலே கர்வம் கொண்ட போதினிலே
    ஓங்கியடித்திடுவான் – நெஞ்சில்
    கள்ளத்தைக் கொண்டொரு வாரத்தை  சொன்னால் அங்கு
    காறி உமிழ்ந்திடுவான் -சிறு
    பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட
    பாசியை எற்றிவிடும் – பெரு
    வெள்ளத்தைப்போல் அருள் வார்த்தை சொல்லி
    மெலிவு தவிர்த்திடுவான்

    வள்ளலாரும் ஸ்டீவ் ஜாப்சும் என்ற தலைப்பின் கீழ், நாம் இருவர் பற்றியும், பேசி வரும் இத்தருணத்தில், நட்புக்கு இங்கே என்ன வேலை என்று எண்ணத் தோன்றும்.

    ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த தொழிற்நுட்பப் புரட்சி, சமுதாயம் தழுவிய உலகளாவியதொரு புரட்சி. இந்தப் புரட்சி, தொழிற்கூடம், தொழிற்பணிகள், பணியார்களுடனான தொடர்பு, அவர்களோடு தோளுடன் தோள் நின்று பணிசெய்வது, இரவு  பகல் பாராமல் பணிசெய்யுமாறு அவர்களை ஊக்கப்படுத்தி   நெறிமுறை செய்வது என்பதோடல்லாது, வணிகம், பண மாற்று லாப நிர்வாகம், மக்கள் தொடர்பு, ஊடகத் தொடர்பு, கூட்டங்களை ஏற்பாடு செய்வது, கூட்டங்களில் பேசுவது, பத்திரிகை யாளர்களுடன் பேசுவது என எத்தனையோ பணிகளை உள்ளடக்கியது.

    இவை எல்லாப் பணிகளிலும் ஒன்று மையமானது – ஆதாரமானது – அதுவன்றி மற்றைவை எவையும் நடக்கா – இயங்கா எனும்படியான ஒன்று உண்டு என்றால் அதுதான் நட்பு – தோழமை. மிகக் குறிப்பாக, ஜாப்ஸின்  நிறுவனமான ஆப்பிளில், பணி செய்தவர்களிடம் அவரது தோழமை என்கிற தலைப்பில் நமது விவாதம் மிக முக்கியமானது.

    இங்கு, முதலில், ஸ்டீவ் ஜாப்சிற்கு நட்பு உணர்வு – தோழமை நேசம் இருந்ததா – இருந்திருந்தால் – அது எவ்வாறு இருந்தது என்பதே நம் சிந்தனை.

    இத்தருணத்தில், மீண்டும் நாம் வள்ளுவனிடம் சென்றாக வேண்டும்.

    அறம், பொருள், இன்பம் என முப்பாலையும் முனைப்புடன் தந்திட்ட வள்ளுவத்தில், பொருட்பாலை ஏழு இயல்களாகப் பிரித்தல் மரபு: அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என்று. இதில், குடியியலுக்கு முன்பாக, படையியலுக்குப் பின்னாக, நட்பியலை வள்ளுவர் வைத்த நேர்த்தி இருக்கிறதே அப்பப்பா! அதனை எண்ணுந்தோறும்  எண்ணுந்தோறும் நம்முள் பரவசம் பெருகும்.

    குடிமைக்கு நட்புதான் முதன்மை – மற்றவை எல்லாம் அப்பால் என்று அநாயாசமாய் வள்ளுவன் சொல்லிப்போன பெற்றியைப் போற்ற வார்த்தைகள் போதா.

    ஆம்! வள்ளுவன் காட்டியது போல, ஒரு நிறுவனம் என்பது குடிமை, அது ஒரு நாட்டின் நிர்வாகம் போன்றது. நிறுவனம் நாடென்பதால், ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் ஒரு நாட்டின் மக்கள் போன்றவர்கள். நிறுவனத்தின் தலைவன் அரசனே போலாகிறான்.

    இந்நிலையில், அரசனைப் பற்றி வள்ளுவன் கூறுவதைக் கவனிப்போம்:

    காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்

    காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும் என்பது இக்குறளின் பொருள்.

    மன்னனின் நிலம் மீக்கூறுவதற்கு இரட்டைக் கட்டளையை விதிக்கிறார் வள்ளுவர். தோற்றத்தில் எளிமை – கடுஞ்சொல் இல்லாமல் இருப்பது.

    தோற்றத்தில் எளிமையானவர் என்பது ஜாப்ஸின் மாபெரும் அடையாளம்தான். அவர் எளிமையை உலகே அறியும் – அதுவும் இன்றைய ஊடகங்களில் வலம் வரும் அவரின் உருவப் படங்கள் மீண்டும் மீண்டும் அவரது எளிமையைப் பறைசாற்றுவதை நாமறிவோம். எனவே அவரது தோற்ற எளிமை நமது விவாதப் பொருளாக இருக்க இயலாது.

    அதேநேரத்தில், தோற்றத்தின் எளிமையால் மட்டுமே ஒருவன் பிரசித்தி பெற்ற நல்ல தலைவனாக மாறிவிட இயலாது என்று வள்ளுவர் ஏற்கனவே சொல்லிவிட்டதால் ஸ்டீவ் ஜாப்ஸின் பிரசித்தத்திற்கு அவர் எளிமைத் தோற்றம் மட்டுமே காரணமாய் இருந்திருக்க வாய்பில்லை என்று கொள்வோம்.

    தோற்றத்தின் எளிமையோடு வாக்குக் கடுமை இல்லாது இருந்தாலொழிய தலைவன் உருவாவதில்லை என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கடுஞ்சொல் அற்றவராய் இருந்தாரா என்பதை நாம் பரிசோதிக்க வேண்டியிருக்கிறது.

    கடுஞ்சொற்கள் ஒருவர் வாயில் –உருவாகுவது எவ்வாறு என்று பார்த்தால், பளிச்சென்று தெரியும் மூன்று காரணங்கள் உண்டு. (1) அதிகாரத் திமிர் (2) தனக்கு எல்லாம் தெரியும் என்பதான தலைக்கனம்; (3) கீழ்மையான பழக்கவழக்கங்கள்/சொல்லாடல் உள்ள குடும்பத்தில் பிறந்திருப்பது அல்லது – கீழ்த்தரமான நண்பர்களுடன் சேர்க்கை வைத்திருப்பது என்று.

    ஒரு மன்னனுடைய – தலைவனுடைய வாயில் கடுஞ்சொற்கள் உருவாவதற்கு மூன்றாவது  காரணம் ஏற்பு இல்லாத ஒன்றாகவே இருக்கும். எனவே பெரும்பாலும், அதிகாரத் திமிரும், தனக்கு எல்லாம் தெரியும் என்கிற தலைக்கனமுமே ஒரு மன்னனை- ஒரு தலைவனைக் கடுஞ்சொல் பேச வைக்கும்.

    ஸ்டீவ் ஜாப்சைப் பொருத்தவரை அதிகாரத் திமிரும், தனக்கு எல்லாம் தெரியும் என்கிற தலைக்கனமும் கொண்டவராக எவராலும் சித்தரிக்கப்படவில்லை என்பதனாலும், அவரும் அவரது நிறுவனமான ஆப்பிளும் பிரசித்தம் அடைந்தவை என்பதனாலும்  அவர் கடுஞ்சொல் பேசாதவர் என்று முடிவு செய்துவிட்டுப் போய்விடலாம்.

    ஆனால், பழகுபாங்கில் ஜாப்ஸின் சொல்லாடலின் தன்மை உண்மையிலேயே எவ்வாறு இருந்தது என்பதை  அறிந்துகொண்டு அதன்பின் இதுபற்றி முடிவு செய்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

    ஸ்டீவ் ஜாப்சின் ஆப்பிள் நிறுவனப் பணியாளர்கள் பெரும்பாலாருடைய ஒருமித்த கருத்து என்னவென்றால், ஜாப்ஸ் பேச்சிலே நெளிவு சுளுவு இருக்காது – கண்டிப்பும் அழுத்தமும் எப்போதும் இருக்கும் – பல தருணங்களில் கேட்பவர்களுக்கு அதைச் சுலபமாய் எடுத்துக் கொள்ளவியலாது!  குறிப்பாக, பணியில், “இதைசெய்வது கடினம்” என்று பணியாளர் எவரேனும் சொன்னால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார் – என்பதே!

    இந்த விமரிசனத்தைக் கேட்ட மாத்திரத்தில், ஜாப்ஸ் தலைக்கனம் பிடித்த தற்குறி, கடுஞ்சொல் உடையவர் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அது அப்படி இல்லை.

    ஜாப்ஸின் அணுகுமுறை எவ்வாறானது என்பதை விளக்க ஒரு எடுத்துகாட்டை  நமக்கு அளிக்கின்றனர் ஆப்பிள் பணியாளர்கள்.

    தமது அலுவலகத்தில், ஜாப்ஸ் ஒருநாள், லாரி கென்யன் என்ற பெயருடைய ஒரு பொறியாளரின் அறைக்குள் நுழைகிறார். நுழைந்து கென்யனிடம், மேகின்டாஷ் இயக்க தளம் (Macintosh Operating System) இயக்கத் துவங்குவதற்கு (booting time) அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதே என்று புகார் செய்கிறார். கென்யன் ஜாப்சிற்கு விடையாக, இயக்கத் துவக்கம் தாமதமாவதற்கான காரணங்களை எடுத்துச் சொல்கிறார்.

    ஜாப்சோ, கென்யன் தந்த விளக்கத்தைக் கேட்கக் கூட விரும்பவில்லை என்பார் போல – கென்யன் பேசிமுடிக்கும் முன்பே குறுக்கிட்டுப் பேசுகிறார். “அது ஒருவரது வாழ்வைப் பாதுகாக்கும் என்பதாக எடுத்துக்கொண்டு, , மேகின்டாஷ் இப்போது இயக்கத் துவக்கத்துக்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசத்திலிருந்து ஒரு பத்து வினாடிகளைக் கத்தரித்து எடுத்து விடமுடியுமா?” என்றபடியே மடமடவென வெண்பலகைக்குச் சென்று   ஒரு கணக்கு போட்டுக் காட்டுகிறார். “ஐம்பது லட்சம் பேர் மேகின்டாஷ் பயன்படுத்துவதாகக் கொள்வோம். ஒருவருக்கு பத்து வினாடிகள் என்று எடுத்துக் கொண்டால், ஆண்டொன்றுக்கு முன்னூறு லட்சம் மனித மணிகளாகும். இது நூறு பேரின் முழு வாழ்நாளாகும்!” என்று சுருக்கென நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லிவிட்டு,  கென்யனின் அறையை விட்டு வெளியேறுகிறார்.

    கென்யனுக்கு, இதனால் ஜாப்ஸின் மீது கோபம் கொப்புளித்ததா? அவர் ஜாப்சை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினாரா? அல்லது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆப்பிளை விட்டு வெளியேறினாரா?

    இல்லை!

    மாறாக – சில வாரங்களிலேயே இருபத்தி எட்டு வினாடிகள் சீக்கிரமாக மேகின்டாஷ் இயக்கத் தொடங்குமாறு செய்தார் ஜாப்ஸ் கேட்டது வெறும் பத்து வினாடிகள்  மட்டுமே.

    ஆட்களைத் தட்டிகொடுத்து வேலை வாங்க வேண்டும் என்று சொல்வார்களே அதைப் போன்றது இது. தட்டிக் கொடுப்பது என்பதனைச் சவால் தருவது என்பதாகக் கொண்டவர் ஜாப்ஸ் என்பது புரியும்.

    சிந்தித்துப் பாருங்கள் – தட்டிக் கொடுப்பது என்பது வேலை செய்யாதவனை வேலை செய்யவைப்பதான பாணி. அங்கே வேலை செய்யா ஒருவனை ஊக்குவிப்பதுதான் நோக்கம் – இங்கே, பணியின் தரம் முக்கியமில்லை – நீ எப்படி செய்தாலும் பரவாயில்லை – நீ வேலை செய் என்பதான நிலை அது. ஆனால், ஜாப்ஸின் துறை முன்னோடியான தொழில்நுட்பத்துறை – ஆப்பிளுக்கு வேலைக்கு வருபவர்கள், வேலை செய்ய விழையாமல் வருவதில்லை – அத்தகைய நபர்கள் தெரிவு செய்யப் படுவதுமில்லை. ஒருவேளை எதோ தவறுதலாக வேலை செய்ய விழையா நபர்கள் எவரேனும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பின், அவர்கள் தக்க வைக்கப்படமட்டார்கள் என்பது ஆப்பிளில் ஒரு நெறி முறை – ஏனெறால் – அது ஒரு தொழில்நுட்ப நிறுவனம்  – இங்கே பொருட்கள் விற்பனையாகி வியாபாரம் நடக்கவேண்டும் அன்றேல் இங்கே பிழைப்பு நடக்காது. உருவாக்கப்படும் பொருட்களின் தரமும் உழைப்பும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு இசைந்தனவாய் இருந்தால்தான் பொருட்கள் விலை போகுமே தவிர வேறெந்த ஒன்றாலும் இல்லை. பொருட்கள் வியாபாரச் சந்தையில் தோற்றதென்றால் ஒரு தொழில்நுட்பப் பணிச்சாலையை நடத்தமுடியாது. எனவே தான், சவால் தந்து ஊக்குவிக்க வேண்டிய நிலைப்பாட்டை ஜாப்ஸ் எடுக்க வேண்டியவராகிறார்.

    ஆப்பிளில், ஒவ்வொரு தொழிலாளிக்கும் சவால் என்றால் அது நித்திய சவால். வினாடிக்கு வினாடி, நிமிடத்திற்கு நிமிடம், மணிக்கு மணி, நாளுக்கு நாள் என்பதான தொடர்ந்த சவால்கள் அவர்கள் முன்னே இருக்கும். உலகின் அதிபிரமாதமான பொருட்களை உருவாக்க வேண்டும் என்று ஓயாத சவால். இதுதான் ஆப்பிளின் நித்தியக் கட்டளை.

    இவ்வாறான தொடர் சவால் நிலையும், அதற்கான தொடர் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய நிலைமையினால், “நீங்கள் பயமுறுத்தப்படுவதாக நினைக்கவில்லையா?” என்று கேட்டபோது , அந்தப் பணியாளர்கள் என்ன சொன்னார்கள்  தெரியுமா?

    “ஜாப்ஸின், உலகின் அதிபிரமாதமான பொருட்களை உருவாக்கவேண்டும் என்கிற ஆவல் உன்னதமான காரணத்திற்கானது. தொழில்நுட்பத்தின் மூலம் உலகை மாற்ற வேண்டும் என்பது ஜாப்ஸின் ஆசை. இதுகாறும் எவையெல்லாம் செய்ய இயலாது என்று உலகமக்கள், நினைத்திருந்தார்களோ, அவ்வகையான அற்புதச் செயல்களை அவர்கள் செய்யுமாறு அவர்களை தொழில்நுட்பத்தின் மூலம் பலப்படுத்தும் புனித நோக்கம் இது!”  (அடிக்குறிப்பு  1 ஐ க் காண்க)

    மீக்கூறும் மன்னன் நிலமாக ஆப்பிள் நிறுவனம் – மன்னனாக ஜாப்ஸ் என்பதற்கு ஜாப்ஸ் தனது  நிறுவனத்தில் பணிசெய்த ஊழியர்களிடம் காட்டிய தோழமையும், அவர்களுக்கு ஜாப்ஸ் தெரிந்தெடுத்துக் கொடுத்த ஊக்கச் சொற்களுமே என்பதை சொல்லாமல் இருக்க எவராலும் முடியுமோ?

    இதைத்தான் பாரதி “பெருவெள்ளத்தைப்போல் அருள் வார்த்தை சொல்லி
    மெலிவு தவிர்த்திடுவான்” என்று சொன்னானோ?

    ஆப்பிள் பணியாளர்களுக்கு, சவால்களோடு  இன்னுமொரு ஊக்க சக்தியும் ஜாப்சிடம் இருந்து வந்தது அதுதான் அவர் நெகிழ்ந்து கண்ணீர் வடிப்பது. செய்யமுடியாத சாதனை ஒன்றைப் பணியாளர்கள், ஆப்பிளில், நிகழ்த்திவிட்டார்கள் என்றால் ஜாப்ஸ் அழுது கரைந்துவிடுவார். அந்த நெகிழ்வில் ஜாப்ஸ் தமக்குத் தந்த சவாலில் தாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்து போக, அடுத்து வரப்போகிற இன்னும் பெரிய சவாலுக்குப் பணியாளர்கள் காத்திருப்பார்களாம்.

    அவரது நெகிழ்ந்து கரையும் தன்மை பற்றி, ஐசக்சன் (ஜாப்ஸின் சரிதையை எழுதியவர்) கேட்டபோது, அப்போதைக்கப்போது நான் பரிசுத்தத்தின் முன்னிலையில் இருப்பதைக் காண்கிறேன் – அது ஆத்மப்  பரிசுத்தம் – அன்பின் பரிசுத்தம்.  (அடிக்குறிப்பு – 2 ஐக் காண்க)

    ஜாப்ஸ் தங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையம் விசுவாசத்தையும் ஆப்பிள் பணியாளர்கள் சிலாகிக்க, பணியாளர்களின் விசுவாசத்தை ஆத்மப்  பரிசுத்தம் – அன்பின் பரிசுத்தம் என்று ஜாப்ஸ் சிலாகித்த  காதல் அடியார்கள் மீது, இறைவன் அன்புறுவதும்; இறைவனின்பால் அடியார்கள் அன்புறுவதுமான காதல் போன்ற அளப்பெரும் தன்மையுடையது.

    காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, நெக்கு உள்ளார்வம் மிகப்பெருகி நினைந்து, நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்   – என்னும் திருஞானசம்பந்தரின் தேவார வரிகள் நம்முள் ஆற்றா இன்பமாய் அலர்ந்து அலைசெய்வதான நெக்குருகும் நேரமிது.

                                                                   (மேலும் பேசுவோம்)

                                                                    

    அடிக்குறிப்பு

    Share
  • எழுவகைப் பெண்கள் – 15

    எழுவகைப் பெண்கள் – 15

    அவ்வைமகள்

     சீப்பு எனும் உடல்நலக் கருவி  

    பெண்களின் உடல் நலம் என்கிற வகையில், தலைமுடி  பற்றி, நானும்  அந்த இராணுவ அதிகாரியும்  பேசிக்கொண்டு வரும் இத்தருணத்தில், அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: பெண்களின் உடல் நலத்தில், தலை வாருவதற்குப் பயன்படுத்தும் சீப்புகளுக்கு  ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா? ஆண்களும் பெண்களும் பொதுவாக வெவ்வேறு விதமான சீப்புகளைப் பயன்படுத்துகிறார்களே அதனால் தான் கேட்கிறேன் என்றார்.

    “ஆம்! சீப்புகளுக்குத் தலைமுடிப் பராமரிப்பிலும் ஆரோக்கியத்திலும், ஏன் ஒட்டுமொத்த, தலை ஆரோக்கியத்திலும் கூட முக்கியப் பங்கு உள்ளது!”

    இந்த முக்கியத்துவத்தை முதலில் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு சீப்பு விஷயத்தில் பெண்-ஆண்  வித்தியாசங்களைப் பார்ப்போமே என்று தொடர்ந்தேன்.

    பார்க்கப்போனால், சீப்பு என்பது மனிதகுல வளர்ச்சியில் இன்றியமையாத அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே சீப்பு மனிதப் பயன்பாட்டில் இருந்ததை வரலாறு காட்டுகிறது என்றால் சீப்பு என்றைக்கோ எப்போதோ உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்த ஓர்  அன்றாட வாழ்க்கைப் பொருள் என்பது விளங்கும்.

    Prehostoric என்று சொல்லப்படுகிற வரலாற்றுக்கு முந்தைய ஆதிகாலத்திலிருந்தே, சீப்பு மனிதனது பிரிவறியாத துணையாக இருந்திருக்கிறது எனலாம். எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததாகச் சொல்லப்படும்  சீப்பைப் போலவே இன்றைய சீப்பும் இருக்கிறது என்பதால், சீப்பு என்பது ஆதிகாலத்திலேயே அதனுடைய முத்தாய்ப்பான பணித்தொழில்நுட்ப வடிவத்தை (Working technical design) அடைந்துவிட்டது எனலாம்.

    புராதன எகிப்தியச் சீப்பு:

    http://phthiraptera.info/sites/phthiraptera.info/files/222%2C%20LouseEggChristmas%20Cave2012.pdf

    பத்தொன்பதாம் நூறாண்டு இந்தியச் சீப்பு

    https://www.atlasobscura.com/articles/some-of-historys-most-beautiful-combs-were-made-for-lice-removal

    தற்காலத்துச்  சீப்பு : inplastico.com/en/1557-double-wooden-comb-for-lice-and-nits.html

    எந்த ஒன்று மனித வாழ்க்கைக்கு, அன்றாட இன்றியமையாத தேவையாகிறதோ அதுமட்டுமே உச்சபட்சத் தொழிநுட்பப் பணித்தொழில்நுட்ப வடிவத்தை  ஆதி காலத்திலேயே பெற்றுவிடமுடியும். இது, அறிவியல் உலகில் ஒரு விதி. எனவே, சீப்பு என்பது தொடக்க நாள் முதலே மனித வாழ்க்கைக்கு எத்தனை அவசியமானதாக  இருந்து வந்திருக்கிறது என்பது உங்களுக்கே புரியும் .

    சீப்பு பற்றிய இன்னுமொரு அதிசயம் என்னவென்றால், உலகில் சீப்புக்கெனவே மூன்று அருங்காட்சியகங்கள் உள்ளன. அலாஸ்காவில் ஒன்றும், பிரிட்டன் கேம்பிரிட்ஜில் ஒன்றும், ஜெர்மனியில் ஒன்றும் என மூன்று சீப்பு அருங்காட்சியகங்கள் உலகில் உள்ளன என்பது  சீப்புப் பயன்பாட்டின் புராதனத் தன்மையைப்  போதுமான அளவு  விளக்கும் என நினைக்கிறேன். சொல்லப்போனால், இன்று நாம் காணும், உலகின் பழங்குடியினரின் புகைப்படங்கள் யாவுமே, பண்டைக்காலந்தொட்டே, தலைமுடியை வாரி முடிப்பது என்பது மனிதர்களின் பழக்கமாகவே இருந்திருப்பதைப்  பறைசாற்றுகின்றன  – என்றேன்.

    https://tribal.nic.in/DivisionsFiles/tribalFaces.pdf

    https://www.akpool.co.uk/postcards/26489518-postcard-ceylon-sri-lanka-kandyan-woman-junge-frau-im-gewand-halsschmuck

    அப்படி சீப்பு என்னதான் நமக்கு உதவி பண்ணுகிறது? என்றார்.

    பறவைகள் தம் அலகால் இறகைக் கோதி மினுமினுக்கச் செய்வது போன்றது, நாம், நம் தலைமுடியைச் சீப்புக்கொண்டு வாருவது. மயிரின் வேர்க்காலில் சுரக்கும் செபத்தை அங்கிருந்து நகர்த்தி, தலைமுடி நெடுகிலும் தீற்றுவதற்ககு, சீப்பால் வாருதல் அவசியம். செபம் நன்கு சுரந்து,  ஆரோக்கியமான தலைமுடி உள்ளவர்கள், பொதுவாகத் தலைமுடியை அழுத்திப் படிய வாரியதும், அவர்களது முடி பளபளப்புடன் ஜொலிப்பதைக் காணலாம். இவ்வாறு சீப்பால் தலையை வாருவதால், செபச்சுரப்பிகள் தூண்டிவிடப்பட்டு, செபம் ஆரோக்கியமாகச் சுரக்கலாகும். நம் மண்டையின் உஷ்ணத்தாலும் சுற்றுச்சூழலின் காற்று மற்றும் உஷ்ணத்தினாலும் செபம் உலர்கிறது என்பதால் சிறுதளவு  எண்ணெய் தடவி  செபத்தை இளக்கி, தலைமுடியை வாருவது அவசியமாகிறது.

    எவரொருவரது  மண்டையும் முடியும் செபத்தின் ஈரப்பதத்தோடும் எண்ணெய்ப் பசையோடும்  இருக்கிறதோ அதுவே ஆரோக்கியமான தலை என்று கருதப்படுவது. எனவே தான் சீப்புக்கொண்டு தலைவாருவது என்பது தினசரிப் பழக்கமானது.

    சொல்லப்போனால், சீப்பு கொண்டு தினமும் வாரப்படாத தலை, வறட்சி கொள்கிறது.

    ஏனென்றால், நாம் ஏற்கனவே பேசியபடி, முடியின் அடியிலிருந்து நீக்கி நீவப்படாத செபம் உறைந்து, புதுச்செபம் சுரப்பதை நிறுத்தி,  மண்டையை வறள வைக்கிறது. மண்டையில் வறட்சி ஏற்படுகிறதென்றால், அங்கே, வெகு பல பிரச்சினைகள் வெகு துரிதமாகத் தோன்றிவிடும்.

    சீப்பால் வாருவதால் ஏற்படும் கூடுதல் நன்மை  என்னவென்றால்,  மண்டையில் இரத்த ஓட்டம் நன்கு தூண்டிவிடப்படுகிறது.  மண்டையில் ரத்த ஓட்டம் பரவியது என்றால், உடல் முழுவதும் உள்ள நாடி நரம்புகள்  புத்துணர்ச்சி இருக்கின்றன. எனவேதான், ஒரு நாளைக்கு இருமுறை சீப்பு வைத்துத்  தலையை அடிமுதல் நுனிவரை வாருதல் அவசியம் என்று கூறப்படுகிறது.

    சீப்பால்  தலைமுடியை வாருவதால் உடலின் மொத்த ஆரோக்கியமும் பெருகும் என்பது எங்கள் குலத்தின் ஞானம் அல்ல. உலகின் பல்வேறு பண்டைய சமூகங்கள் (எடுத்துக்காட்டாக – எகிப்திய – மெசபொடோமியச் சமூகங்கள்) இந்த ரகசியத் தொடர்பை அறிந்திருந்தன எனவேதான் அவை   சீப்பின் உபயோகத்தில் இருந்தன.

    அதிருஷ்டவசமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த ஆரோக்கியப் புரட்சியில்  ஏறக்குறைய உலக மக்கள் அனைவருக்குமே சீப்பின் பயன் பற்றிய  ஞானம் மறுமலர்ச்சி பெற்றது  எனலாம்.

    ஆம்! இன்று நாம் கோவிட்  19 ல் அவதிபடுவது போல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலகம்   பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டது. அம்மை, காலரா, காசநோய் ஆகியன தொற்றுநோய்களாக வெகு அளவில் உலக அளவில் பரவி மனித இழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், இந்நோய்கள் இன்னபிற சங்கடங்களோடு  தலைமுடியையும்  உதிரவைத்தன. அதைவிடக் கொடுமை என்னவென்றால், இவற்றுக்கான மருந்துகளும் தலைமுடியைத் தாக்கின. பலர் முடியின்றி வழுக்கை மண்டையாக மாறினர்.

    இந்நிலையில் தான், அமெரிக்காவில், ஓர் உடல் நலப்புரட்சி நடக்கிறது. ஒட்டுமொத்த உடல் நலப்புரட்சி, Holistic Health Reform of the Ninteenth Century,  என்பதான   இப்புரட்சியில், தலைமுடி நலம் என்பது முக்கியமானதாகக் கருதப்பட்டது.

    எடுத்துக்காட்டாக, 1904இல் நியூயார்க்கிலிருந்து வெளிவந்த ஒரு பிரசித்தி பெற்ற புத்தகமான, How to Care for Hair at All  Times [1]  உடல்நலத்தில் சீப்பின் பங்கை எடுத்துரைக்கிறது. இப்புத்தகம் என்ன சொல்கிறது என்றால், சீப்பால் தலையை வாருவது, தலையில் உள்ள தமனிகளைத் தூண்டிவிடுகிறது – இந்தத் தூண்டுதலால், தலைமுடியின் வேர்க்கால்கள் உறுதியடைகின்றன என்பதோடல்லாது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடல் அங்கங்கள் யாவும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

    இந்தப் புத்தகம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக அளவில் ஏற்பட்ட ஒட்டுமொத்த உடல்நலப் புரட்சியில் ஒரு முக்கிய அங்கம் வகித்ததாக அறிகிறோம் என்கிற அளவில், ஒட்டுமொத்த உடல் நலத்தில்,  தலைமுடியைச் சீப்பால் வாருதல் என்பதன் இன்றியமையாதத் தன்மை பற்றி உலகில் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்பட்டது என்று அறிகிறோம்.   தலைமுடியை வாருவதற்கு மட்டுமல்ல, தலைமுடியை பிரஷ் செய்து தூய்மைப்படுத்தவும் பல்வேறு விதமான சீப்புகள் அமெரிக்காவில் முளைத்த மாபெரும் வணிகக்க காலம் இது.

    வாருவதற்கும் பிரஷ் செய்வதற்கும் மட்டும் சீப்புப் பயன்படுவதில்லை. சீப்புக்கு இன்னுமொரு பங்களிப்பும் உண்டு. தலையில் பேன் பீடித்ததென்றால், பேன்களை அகற்றி ஒழிக்கவும் சீப்புத் தேவைப்படுகிறது. நான் மேலே காட்டியுள்ள மூன்று சீப்புகளுமே பேன் நீக்கும் சீப்புகளே.

    எனவே சீப்பு என்பது நாம் நினைப்பதை விடவும் கூடுதலான சிறப்புக் குணாதிசயங்களைக் கொண்டது என்பது புரிகிறது அல்லவா?

    நாம் பயன்படுத்தும் சீப்பு எந்தப் பொருளினால் செய்யப்பட்டது என்பது சீப்புப் பயன்பாட்டில்  முக்கியமான விஷயம்.

    பண்டை நாட்களில் சீப்பு, மரம், எருமை மாட்டுக்கொம்பு, தந்தம், ஆகியவற்றால் மட்டுமே செய்யப்பட்டது. மரம் என்றால் எல்லா மரத்திலும் சீப்புச் செய்யப்படமாட்டாது. வேம்பு, நுணா, ஜாதிக்காய், கருங்காலி, செம்மரம் (மகோகனி) போன்ற மரங்கள் மட்டுமே சீப்புச் செய்யப் பயன்படுத்தப்பட்டன. சிக்கெடுக்க, மூங்கிலால் ஆன சீப்புகள்  தயாரிக்கப்பட்டன.

    ஈர்க்கொல்லிகள் என்று நீளப் பிடி கொண்ட சீப்பு வகை உண்டு. பேனின் முட்டைகளுக்கு ஈர் என்று பெயர். அந்த ஈர்களை, இழுத்தெடுத்துக் கொள்பவை ஈர்க்கொல்லிகள். ஈர்க்கொல்லிகளின் பற்களும் நீளமானவை என்பதோடு, அப்பற்கள் உறுதியாகவும் உடையாத நெளிவுத்தன்மை உடையதாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான், இழுத்தெடுத்த ஈரை, அப்படியே பற்களுக்கிடையே நெளித்திடுக்கிக் கொல்ல முடியும். எனவே ஈர்க்கொல்லிகள் பெரும்பாலும் உறுதியான கருங்காலி, செம்மரம் போன்றவற்றில் மட்டுமே செய்யப்பட்டு வந்ததாக அறிகிறோம்.

    தந்தச்  சீப்பைப் பொறுத்த மட்டில், எங்கள் நாட்டில்,  யானைத் தந்தத்தால் ஆன சீப்புகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்திருந்ததாக அறிகிறோம். செல்வந்தர்கள் அரச குடும்பத்தினர் ஆகியோர் வசம்,  தந்தச் சீப்பின் பயன்பாடும் தங்கத்தால் ஆன  சீப்பின் பயன்பாடும்  இருந்திருக்கிறது. ஆனால், பிற நாட்டுப் பண்டைய சமூகங்கள், நீர்யானையின்  தந்தம், காட்டுப் பன்றியின் எலும்பு, ஆமையின் ஓடு என இன்னபிற தந்த வகைகளையும் சீப்புச் செய்யப் பயன்படுத்தியதை அறிகிறோம் .

    எங்கள் நாட்டில், ஒரு  சில  இடங்களில் பித்தளையால் ஆன, மிக நெருங்கிய பற்கள் கொண்ட  மிகப் புராதனமான சீப்புகளும் கூடக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இவை கிடைக்கப் பெற்றிருப்பதால்,  ஏதோ விசேடப் பயன்பாடாக மட்டுமே இந்தப்  பித்தளைச்  சீப்புகள் புழக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவ்வாறு எங்கள் நாட்டில் கிடைத்த புராதனப் பித்தளைச் சீப்புகள், மூடியிட்டதான ஒரு திரவக்கலமாக  வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

    https://onedrive.live.com/Edit.aspx?resid=2BBA21C9F3B27084!344&wdPid=7b6ccb36

    திரவக் கலத்தில் வாசனாதி திரவியங்கள் கலக்கப்பட்ட நீரை ஊற்றி மூடி, அந்த பித்தளைச் சீப்புக்களைத் தலைமுடியில் செருகிக்கொள்வார்களாம். சீப்பின் கால்களின் வழியாக, வாசனாதி திரவியங்கள் மயிர்க்கால்தோறும் இறங்கி முடியின் மயிர்க்கால்களை ஈரப்பதத்துடனும் நல்ல மணத்துடனும் வைத்துக்கொள்ள உதவின என்று விக்கிபீடியா குறிப்பினின்று  அறிகிறோம்.

    ஆனால், நன்கு சிந்தித்துப் பார்த்தோமேயானால் இவ்வகையான திரவக் கலன் கொண்ட சீப்புக்கள் மருத்துவச் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டன  என்றே நம்மால்  ஊகித்து உணர முடிகிறது.

    இன்றைய ஆயுர்வேத எண்ணெய் வடி ஊற்றல் முறையான ஷீரோதாரா முறைக்கும் முந்தையதான எண்ணெய் மருத்துவமாகச் சீப்பு வழி எண்ணெய்  வடி ஊற்றல் மருத்துவ முறையம் எங்கள்  வாழ்வியலில் இருந்திருக்கின்றது.

    பித்தளை ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்குக் காரணம் உண்டு. அறிவியல் ஞானத்தின்படி, தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்கள் நம் தலைமுடியில் செறிவு அடைகின்றன. இந்த இரண்டு உலோகங்களும் போதிய அளவில் முடியின் வேர்க்காலில் செறிவு அடையவில்லையென்றால், முடி கொட்டுதல் உள்ளிட்ட, பல்வேறு  விதமான  தலைமுடி மற்றும் மண்டைப் பிரச்சினைகள் தோன்றும், என்பதோடு, ஞாபகமறதி, புத்திமந்தம் போன்ற பிரச்சனைகள் கூடத்  தோன்றும் என்று சொல்லப்படுகிறது. எனவேதான், எல்லாப் பிரசித்திபெற்ற தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களிலும், இன்று தாமிரமும் துத்தநாகமும் கண்டிப்பாக இருப்பதைப் பார்க்கிறோம்.

    தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்களுமே Trace Metals எனப்படும் நுண் அளவில் மட்டுமே உடலில் இருப்பதான  உலோகங்கள். வளர்சிதை மாற்றத்தில் இவை அதிகப் பங்கு வகிப்பவை.  ஆக, உடலில் வளர்சிதை மாற்றத்தில் நேரடிப் பங்கு வகிப்பதால் முடியில் தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்களுமே செறிவதில் வியப்பேதும் இல்லை. ஆக, முடியின் வேருக்கு மிகக்குறைத்த அளவில் தாமிரமும் துத்தநாகம் தேவைப்படுகிறது என்பதை உணர்க.

    பித்தளை என்பது தாமிரமும் துத்தநாகம் சேர்ந்த உலோகக் கலவையாகும். பித்தளை எண்ணையில் கரையவல்லது. எண்ணெய் பட்டால், பித்தளையில்  களிம்பு ஏறுவதை நாமறிவோம். களிம்பு என்பது எண்ணையுடன் பித்தளை நிகழ்த்தும் ஒரு வேதியியல் வினையாகும். அதிகப்படியாய் எண்ணெயில் கரைந்த பித்தளையே களிம்பு. அது  நஞ்சு.

    ஆனால், வெகு  சிறிதளவே பித்தளை எண்ணெய்யில் கரைந்ததென்றால், அந்த எண்ணெய்  முடியின் வேருக்கு ஊட்டச் சத்தாகும். எனவேதான், பித்ததளை சீப்புக்கள் கொண்டு மருத்துவ எண்ணெய்த் தைலங்களை வைத்து, தலைமுடி மற்றும் மண்டைக்கான சிகிச்சைகள் நடத்தப்பட்டன.

    எங்கள் நாட்டில், மரகதக்கல்லில் இழைத்துச் செய்யப்பட்ட சீப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.  பித்தளைச் சீப்புக்களைப் போலவே, மருத்துவ எண்ணெய்த் தைலங்களை வைத்து, தலைமுடி மற்றும் மண்டைக்கான சிகிச்சைகளுக்காகவே மரகதக்கல் சீப்புக்களும்   தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்தன. மரகதக் கல்லில், தாமிரம், இரும்பு, துத்தநாகம், மக்னீசியம் ஆகிய உலோகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  சீனாவிலும் பண்டைய நாட்களில் மரதக்கல் சீப்புக்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அங்கும் இவை, சிகை மற்றும் சிரசு மருத்துவச் சிகிச்சைக்காகவே பயன்படுத்தப்பட்டன.

    சீனாவின் புராதன மரகதக்கல்  சீப்பு:
    https://www.metmuseum.org/art/collection/search/72544

    சீப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு உலகமக்களிடையே பெருகியிருந்த காலகட்டத்தில் தான், பிளாஸ்டிக்  பொருட்கள், 1940 வாக்கில் நம் பயன்பாட்டுக்காக, அறிமுகப்படுத்தப் பட்டன. ஆனால், 1970 கள் தொடங்கி, மிக அதிகமான அளவு பிளாஸ்டிக் பொருட்கள் நம் மீது திணிக்கப்பட்டன.

    பிளாஸ்டிக் சீப்புக்கள்  இவ்வாறு தான் நம் இல்லங்களில்  நுழைந்து – நம் கைகளுக்கு வந்து – நம் தலைக்கும் போய்ச்  சேர்ந்தன.  இதனால், நாம், மரம் மற்றும் எருமைக் கொம்பினால் ஆன சீப்புகளைத் துறந்தோம் – மறந்தோம். பிளாஸ்டிக் சீப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம்.

    ஆனால், பிளாஸ்டிக் சீப்புக்கள் நன்மையை விட தீமையையே அளிப்பவை. ஏனென்றால், நம் தலைமுடி நேர்மின்சாரத்தன்மை கொண்டது, பிளாஸ்ட்டிக்கோ, எதிர்மின்சாரத் தன்மை உடையது, இவ்வாறான இரு எதிர் மின்சாரத் தன்மை கொண்ட பொருட்கள் ஒன்றை ஒன்று உரசும்போது அங்கே, நிலைத்த  மின்சாரம் (Static Electricity) உருவாகும். Triboelectric Series எனப்படும் நிலைமின்சாரத் தன்மை கொண்ட பொருட்களின் பட்டியலைப் பார்த்தால், நம் தலைமுடி நேர்மின்சார அளவில் உயர்ந்தும், பிளாஸ்டிக் எதிர்மின்சாரத் தன்மையில் உயர்ந்தும் நிற்கின்றன.

    https://alisiteblog.wordpress.com/2015/11/08/static-swiffers/

    எனவே, நம் தலைமுடியோடு பிளாஸ்டிக் சீப்பு உரசினது என்றால், தலைமுடியில், வலிமையானதொரு நிலைத்த மின்சாரம் உருவாகி, அது நம் முடியை கிளர்த்தெழச் செய்து, முடியைப் பலவீனப்படுத்துகிறது. முடி சக்தி இழந்து, நுனி வெடிப்பது, வேர் கழன்று விழுவது போன்றவை பிளாஸ்டிக் சீப்பினால் நிகழ்கின்றன.

    https://duux.com/en/static-electricity-explained/

    அதுவும், உலர்ந்த முடியில் பிளாஸ்டிக் சீப்பால் வாரும்போது மிக அதிக அளவில் நிலைத்த மின்சாரம் உருவாகும்: https://www.youtube.com/watch?v=l1FpIbEAsZk

    சலூன்களில், முடி வெட்டும்போதும் இன்னபிற அலங்காரங்களைச் செய்துகொள்ளும்போதும் கூட, நிலைத்த மின்சாரம் உருவாகி, அழகு செய்யும்போதே, முடியும் பலவீனப்படுத்தப்படுகிறது: https://www.youtube.com/watch?v=l1FpIbEAsZk

    மரச் சீப்புக்கள், தந்தச் சீப்புக்கள், கொம்புச் சீப்புக்கள் ஆகியன மிகக் குறைந்த அளவிலான நிலைத்த நேர் மின்சாரம் கொண்டவையாக இருக்கின்றன. எனவே இவற்றால் ஆன சீப்புக்கள் கொண்டு தலைமுடியை வாரும்போது, சீப்பும் தலைமுடியும் எவ்வித மின்சார வினையிலும்  ஈடுபடுவதில்லை. அதனால்,  நம் தலைமுடியில் மின்சக்தி உருவாகுவதில்லை. எனவே, தலைமுடியும் மண்டையும் பலவீனப்படுவதில்லை.

    தந்தச் சீப்புகள் இனிமேல் கிடைக்காது – கொம்பு சீப்புகளைத்  தயாரிக்கும் கலை  மறைந்து விட்டது ஆனால், மரச்  சீப்புகளைச் செய்வோர் இன்னமும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்  – என்றேன். மரச் சீப்புகளுக்கு நாம் மாறிக்கொள்ள இன்னமும் யோசனை செய்யத் தேவையில்லை, ஏனெனில் இது உடல்நலம் சார்ந்த விஷயமில்லையா?  என்றார்.

    [மேலும் பேசுவோம்]  

     

    பயன்பட்ட நூல்கள்

    [1] Juliot Marion Lee (1904). How to Care for the Hair at All Times; Juliot Hair Culture Company, New York.

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 15

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 15

    அவ்வைமகள்  

     15. எளிமையே வலிமையாய்

    ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்புப் பொறியாளரான ஜானதன் ஐவ், ஸ்டீவ் ஜாப்ஸிற்கு மிகவும் பிடித்தவர் – பணியில் ஒரு ஆத்ம நண்பர் போன்றவர் என்றும் கூறப்படுபவர். இவர் ஜாப்ஸின், ஆப்பிள் நிறுவனத்தின் எளிமை விதியைப் பற்றிக் கூறும்போது, எளிமையை அடைய, விடயங்களில் மிக ஆழமாகச் செல்லவேண்டும். எளிமை என்பது குறைத்துக் கொள்ளுவது (minimalist approach) அல்ல. எளிமை என்பது ஒழுங்கீனத்தை (clutter), அகற்றி ஒழுங்குபடுத்துவது அல்ல.

    எடுத்துக்காட்டாக, நாங்கள் உருவாக்கும் பயன்பாட்டுப் பொருட்களில் மறைகள் (screws), பொத்தான்கள் (buttons), தேவையற்ற நகர்திரைகள்  (navigational screens) இல்லாதவையாக அவற்றை எளிமைப்படுத்துவது என்பதைக் கவனிப்போம். இது வெறுமனே மறைகளையும், பொத்தான்களையும், நகர் திரைகளையும் கழற்றி வீசிவிடுவது அல்ல. அவ்வாறு செய்தால் அந்தப் பயன்பாட்டுப் பொருளே, பயன்படுத்தவியலாது போகும்.

    மாறாக, மறை, பொத்தான், இவற்றால் இணைக்கப்படும் பொருட்களின் வடிவம், அமைப்பு, நீள, அகல, தடிமப் பரிமாணங்களோடு அவை எவற்றால் செய்யப்பட்டிருக்கின்றன, அவற்றின் கனம் என்ன, அடர்த்தி என்ன, உறுதித்தன்மை என்ன, மற்ற பாகங்களுடன் அவை இணைந்திருக்கும் பங்கு என்ன, பாங்கு என்ன, அந்த இணைப்பின் உண்மையான தேவை என்ன எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி, சரியாய் ஆழமாக முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.

    அடுத்ததாக, மறையை நோக்கி விட்டால் அதற்கு பதிலாக  என்ன செய்வது, பொத்தானுக்கு பதிலாக என்ன ஏற்பாட்டை செய்வது – எத்தனை நகர்திரைக்ள உள்ளன – அவை ஒவ்வொன்றின் பயனும் என்ன – இதில் எவற்றை நீக்க முடியும் , அதில் எவற்றை  நோக்கினால், கருவி,  எவ்விதப் பிரச்சனையுமின்றி வேலை செய்யும் என ஏகப்பட்ட விடயங்களை ஆழ்ந்து ஆய்வு செய்யவேண்டும்.

    அடுத்து மாற்றுவழிகளாக, பற்பல பரிசோதனை முயற்சிகள் செய்யவேண்டும். கடைசியில் தான், சரியான மாற்றுஏற்பாடுகள் நம் மனத்தில் உதிக்கும்.

    இவை யாவற்றையும் செய்தாலொழிய,  மறைகள்,  பொத்தான்கள், தேவையற்ற நகர்திரைகள் இல்லாதவையாக எங்களின் கருவிகளை  எளிமைப்படுத்துவது முடியாது.

    ஐவ் சொன்னது போலவே, இவ்வாறாக, தங்கள் தயாரிப்பில் உருவாகும் ஒவ்வொரு கணினி சார் பயன்பாட்டுப் பொருளையும் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம் தவம் இயற்றுவது போன்ற ஒரு கடும் சாதனையாக, முழுதான விசுவாசத்துடனும் தான் ஒவ்வொரு பொருளையும் வடிமைத்து வெளியிட்டது.

    iMac, iPod, iPod nano, iTunes Store, Apple Stores, MacBook, iPhone, iPad, App Store, OS X Lion, Pixar film என ஒரு டஜன் பொருட்களை ஆப்பிள் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், “உங்கள் ஆப்பிள் பொருட்களில் உங்களுக்குப் பிடித்த ஒன்று எது என் ஜாப்ஸிடம் கேட்டபோது”, ஆப்பிள் தயாரிக்கும் பொருட்களில் உயர்வு தாழ்வில்லை – எதுவொன்றாயினும் இங்கே எளிமை – பயன்பாட்டு எளிமை என்பது நிரந்தரப் பண்பு என்றார். (Walter Isaacson (2012). Real Leadership Lessons of Steve Jobs,  Harvard Business Review, April 2012, ,https://hbr.org/2012/04/the-real-leadership-lessons-of-steve-jobs)

    இப்போது வாழ்ந்து கொண்டு வருகிற, லியோ பபௌடா கூறுவார்: “எளிமை என்பது இரண்டு விடயங்களில் இருக்கிறது: இன்றியமையாதது எது என்பதை அடையாளம் காணுவதிலும்; மற்றவற்றைப் புறந்தள்ளுவதிலும்” என்று.

    இன்றியமையாததை அடையாளங்கண்டு கொள்வதிலும் மற்றவற்றைப் புறந்தள்ளுவதிலும் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு ஒரு பிரத்யேக ஆற்றல் இருந்தது. அவசியத்தை எந்த விலைகொடுத்தும் நிலைநிறுத்தியும் அநாவசியத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தெறிந்தும் வாழ்ந்த அவரைப் பற்றிய விமரிசனங்கள் பலப் பல.

    ஆனால், ஜாப் தன்மீது வீசப்பட்ட விமரிசனங்களை பயபக்தியோடும் கட்டாயம்  அக்கறையோடும் கவனித்தவராகவே தெரிந்தார்.  விமரிசனங்களில், தனது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவுவதான எந்த ஒன்றையும், எத்தனைக் கடுமையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுவார் என்றே கூறப்ப்டுகிறது. இந்த மனோபாவத்தை அவர் வெகு சீக்கிரமே கற்றுக்கொண்டுவிட்டதாகவே பலரும் கருதுவர். ஆப்பிளில் அவருக்கு ஏற்பட்ட முதல் தோல்விக்குப் பிறகு – சறுக்கல்களையும் – சாடல்களையும் எவ்வாறு எதிர்திசைக்கு மாற்றுவது என்பதே அவரது நோக்கமாக இருந்ததாகவே பெரும்பாலோர் ஜாப்பின் மறைவுக்குப்பின் அவருக்குத் தருகிற மதிப்பீடாக உள்ளது.

    கணினிப் பொருட்கள் புரட்சியில் ஜாப் தம்மீது வந்து விழுந்த விமரிசனங்களை, எத்தனை எளிமையாய் இலகுவாய்க் கையாண்டார் என்பதில் பல சுவாரசியங்கள் – ஆச்சரியங்கள் உண்டு.

    மற்றவர்கள், பெரிய கணினியை சிறிதாக்கிகொண்டிருக்கும்போது, செல் போனைப் பெரிதாக்கிகொண்டு போனவர் ஸ்டீவ் ஜாப்ஸ். சொல்லப்போனால், ஜாப் செல்போனைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் – அப்போதிருந்த செல்போனைவிடச் சிறந்த ஒரு செல்போனைக் கண்டுபிடித்தார் – அதுதான் ஐபோன்.

    புதுசாகக் கண்டுபிடிக்காத ஒன்றை பெரிய கண்டுபிடிப்பைபோல ஏன் அனைவரும் பேசுகிறார்கள் என்றால் – ஐபோன் வெறும் செல் போன் அன்று – அது ஒரு தளம்  (platform). அந்தத் தளம் உருவாகிய அந்தக் கணத்தில், அத்தளத்தில், மற்றவர்கள் தமது அரங்குகளை நிறுவ வந்தார்கள். “App” எனப்படும் அரங்க வாயில்கள் ஐபோனுக்காகவென்றே மடமடவென உலகெங்கிலுமிருந்த பல்லோராலும் உருவாக்கப்பட்டன. சனவரி 9, 2007 ல் வெளிவந்த ஐபோனுக்கு, 2017 மத்தியில், இரண்டு மில்லியன் அரங்க வாயில்கள் உருவாக்கப்பட்டுவிட்டன என்றால், அதன் பிரம்மாண்ட வளர்ச்சியை உய்ந்துணரமுடியும்.

    தன்னைச் சுற்றியுள்ள, கணினி ஜாம்பவான்கள் முதல் – பல்வேறு சிறு – குறு கணினி ஆர்வலர்களும் கூட, கணினி எனும் களத்தில், காற்பதம் ஊன்றி நின்று வளர ஐபோன் ஒரு மாபெரும் உந்துசக்தியாய் விளங்கியது. இத்தகையப் புரட்சி வேறெவருக்கும் நினைந்தும் பாரா விடயமாய் இருந்தது என்பது உண்மையே.

    அதேபோன்று, Digital Music எனப்படும் கணினிசார் மின்னிசையை — ஐடியூன் – வித்திட்ட கர்த்தாவாக, ஸ்டீவ் ஜாப்ஸ் கருதப்படுவதை அறிகிறோம். பார்க்கப்போனால், மின்னிசையைக் கண்டுபிடித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் அல்லர். 1979 லேயே கேன் க்ரேமர் (பிரிட்டிஷ் விஞ்ஞானி) mp3 மின்னிசை இசைப்பானின் முன்னோடியைக் கண்டுபிடித்து வைத்திருந்தார். பிரான்டன்பர்க் எனும் ஜெர்மானிய விஞ்ஞானி 1987 ல், அதை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்ல, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஓரளவு நல்லநிலைக்கு மின்னிசை இசைப்பான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தது.

    இந்நிலையில் மின்னிசை இசைப்பானை ஐடியூனில் (ஏப்ரல் 2003)  போட்டது ஸ்டீவ் ஜாப்ஸின் புரட்சி. ஒரு ஆயிரம் பாடல்களை, கைக்கடக்கமான ஐபாடில் ஏற்றிக்கொண்டு, வேண்டும்போதெல்லாம் இசைவெள்ளத்தில், மிதந்து மகிழும்படியான வசதி இதனால் வந்தது.

    ஆனால், இந்த ஐடியூனின் வசதியை இசை உலகம் வரவேற்கவில்லை. ஜாப்ஸ், இசையுலகின் எதிரியாக விமர்சிக்கப் பட்டார். ஒரு பாடலை ஐடியூனில் இறக்கிக்கொள்ள 99 சென்ட் என்ற விலையை ஜாப்ஸ் நிர்ணயித்திருந்தார். ஒருவர் குறைந்த பட்சம் பன்னிரண்டு பாடல்களை ஐடியூனில் இறக்கிக் கொண்டாலொழிய, இசை உலகு லாபம் காணமுடியாது, பன்னிரண்டு பாடல்களை ஐடியூனில் இறக்கிக் கொள்ள எவரே முன்வருவார் என்பதே இசை உலகின் வருத்தம். ஜாப்ஸோ, வெறும் பன்னிரண்டு பாடல்களா? அதைவிடவும் கூடுதலாகவே பாடல்கள் இறக்கிக் கொள்ளப்படுவது  கண்டிப்பாய் நடக்கும் என்றார். அவர் சொன்னபடியே நடந்தது.

    ஐடியூனால் இசை உலகு நிறைத்த நிறைவை அடைந்ததோடு  மட்டுமல்லாது  இசையில் புதுப்புது பாணிகளும், புதுப்புது பாடல்கள், புதுப்புது பாடகர்கள் என வளரலானது. இன்று, ஆல்பங்களை விட, தனிப்பாடல்கள் அபரிமித வளர்ச்சியை எட்டியுள்ளன. இது ஐடியூனின் சாதனை.

    இந்த ஏற்பாட்டால், ஐடியூனின் லாபமும் வளர்ந்து கொண்டே போகிறது. இவ்வளர்ச்சியால், ஐடியூன், இன்று வணிக உலகின் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

    இசை எனும் சாகாக் கலையை, கணினி எனும் , இன்றியமையாத் தொழில்நுட்பத்தோடு ஜாப்ஸ் சேர்த்தது மிகப்பெரிய ஜாலம். இவ்விரண்டையும் ஒருசேர வளருமாறு செய்த ஜாப்ஸின் புரட்சியை மாபெரும் வெற்றி என்றே வணிக மாறும் தொழில் நுட்ப உலகங்கள் பறைசாற்றுகின்றன.

    ஆனால் இந்த வளர்ச்சி ஒரே நாளில் வந்து விடவில்லை, நிறைய முயற்சிகள் – விமரிசனங்களை எல்லாம் ஜாப்ஸ் கடக்க வேண்டியதாயிருந்தது  ஜாப் முதலில், ஐபாட் (ipod)  வெளியிட்டபோது – அது கனமாக இருந்தது – அதன் கனத்தைக் குறைசொல்லிப் பல்வேறு திசைகளிலிருந்தும்  எதிர்மறை விமரிசனங்கள் வந்தன.

    ஆனால் சீக்கிரத்திலேயே, அவர்கள் வாயடைக்கும்படியாக ஐபாட் நேனோவை வெளியிட்டார் ஜாப்ஸ்.

    அடுத்து, நேனோ நீளமாய் இருக்கிறது என்று விமரிசனம் எழுந்தது – ஜாப்ஸ் ஷஃப்ளை வெளியிட்டு அவர்கள் வாயை அடைத்தார்.

    அதேபோன்று, ஜாப்ஸ், ஐபேடை (ipad) வெளியிட்டபோது – போன், லேப் டாப், டெஸ்க் டாப்   இருக்கிறபோது ஐபேட் எதற்கு என்று கடுமையான விமரிசனம் எழுந்தது. ஆனால் சீக்கிரத்திலேயே, அவர்கள் வாயடைக்கும்படியாக, பர்சுக்குள் வைக்கும்படி மினி ஐபேடை வெளியிட்டார் ஜாப்ஸ்.

    இவ்வாறு ஒவ்வொரு விமரிசனமும் ஒரு புது படைப்பாய் மாறிய விந்தையை உலகே கண்டு வியந்தது என்றால் அது மிகையில்லை.

    பிரபல எழுத்தாளரும் திரைக்கதை வசன கர்த்தாவுமான ரே ப்ரேட்பரி (Ray Bradbury) விமரிசனங்களைப் பற்றிக் கூறும்போது, மனிதர்கள் எவரை  நேசிக்கிறார்களோ, அவர்களை விமரிசிப்பார்கள் என்பார். ஒருவேளை ஜாப், தமது விமர்சனக் கர்த்தாக்களை ப்ரேட்பரியின் பார்வையில் பார்த்தாரோ என்றும்  கூட நம்மை எண்ணவைக்கின்றன அவரின் செயல்கள். ஜாப்ஸின் மறைவுக்குப் பிறகு, அவரைப் பற்றி பேசுபவர்கள், அவர் விமரிசனங்களை மனப்பூர்வமாய் வரவேற்றார் என்றே சொல்கிறார்கள்.

    விமரிசனங்களும் ஜாப்சும் என்று பேசும்போது, நாம் இன்னொரு கண்ணோட்டத்திலும் இதைப் பார்க்க வைப்பதான நிகழ்வுகளும் உண்டு.

    அதனைப் புரிந்துகொள்ள பிராங்க்ளின் ஜோன்ஸ் விமரிசனங்கள் பற்றி என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்பது நல்லது  “விமரிசனங்கள் உறவினர்களிடமிருந்தோ நண்பர்களிடமிருந்தோ, எதிரிகளிடமிருந்தோ வருவதாக இருந்தால், அதை எவரின் மனமும் ஏற்றுக்கொள்ளாது” என்று.

    பொதுவாக, நம்மில் பெரும்பாலோர், இவ்வாறானவர்களே. விமரிசனங்களைக் கண்டு சினமுறுவது – வெகுண்டெழுவது – அல்லது உள்ளுக்குள்ளேயே புகைந்து குமுறுவதுமமான வழக்கம் நம்மில் வெகுபலருக்கு உண்டு. எனவே ஜாப்சிற்கு இவ்வாறான உன்ர்ச்சிக் கொந்தளிப்பு இருந்து, ஒவ்வொரு விமரிசனத்துக்குப் பிறகும், தனது  பதிலாக, தனது திறமையை நிலைநாட்ட எத்தனித்தாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

    நமது இந்தக் கண்ணோட்டத்திற்கு சார்பாக சில செய்திகளும் ஜாப்ஸின் வாழ்வில் உண்டு; அவற்றைக் கவனித்துவிட்டு மேலே தொடர்வோம். ஸ்டீவ் ஜாப்ஸின் சகோதரி, மோனா  சிம்ப்சன்  “He was an intensely emotional man,” என்கிறார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்புப் பொறியாளரான ஜானதன் ஐவ்; “He’s a very, very sensitive guy” என்கிறார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்த ஜான் ஸ்கல்லி, ஸ்டீவ் ஜாப்ஸ் அழுது கரைந்திருக்கிற பல தருணங்களை நினைவு கூர்கிறார். ஸ்கல்லியின் முற்று கீழே தரப்பட்டுள்ளது. (Business Insider, March 31, 2016 https://www.businessinsider.com/steve-jobss-crying-reveals-his-emotional-side-2016-2)

    “He focused his emotions entirely on the products that he was building,” Sculley says. “He took on overwhelming amounts of hard work and was willing to sacrifice things in his personal life because we wanted to create products that people would love and he was very emotional about that.”

    அளவிடமுடியாத கடின உழைப்பு தந்தும், சுய வாழ்வில் பலவற்றைத் தியாகம் செய்தும், கணினிசார் கருவிகளை உருவாக்குவதில் முழுமூச்சுடன் ஈடுபட்ட ஜாப்ஸினுள், பெருத்த உணர்ச்சிப் பிரவாகம், இருந்ததை ஸ்கல்லி உறுதியிட்டுக் கூறுவதை கவனியுங்கள்.

    “இவ்வுலக மக்கள் நேசிக்கும் பொருட்களை மட்டுமே நான் செய்யவேண்டும் என்பதான உணர்ச்சி வேள்வி அது” என்பதை ஸ்கல்லி வாயிலாக நாம் அறியும்போது நம்முள் தோன்றும் புனித உணர்வை நம்மால் விவரிக்க இயலவில்லை.

    சமூக நேசர்கள் மட்டுமே புரட்சியை விளைவிக்கிறார்கள் என்று ஏற்கனவே பார்த்தோம், சமுதாயத்தின் குரலுக்கு, செவிசாய்க்க இசைகிறவன்(ள்) எவனோ(ளோ),  அவர் அச்சமுதாயத்தின்  தேவையை உணர்ச்சி பூர்வமாக அறிந்துகொண்டவராய், அத்தேவையை நிறைவு செய்கிறபோது மட்டுமே சமூக நேசனாகிறார். ஆக சமூக நேசம் என்பது ஒரு புரட்சியாளனுக்கு முதலீடு மட்டுமல்ல – விளைச்சலும் கூட.

    ஊற்றிருந்து உள்ளம் களிப்போராய், சதாசர்வ காலமும், சமூக எண்ணத்துடன் – சமூக நேசகர்களாக, புரட்சியாளர்கள் வாழ்ந்து போவதன் இரகசியம் இதுதான்!

    (மேலும் பேசுவோம்)

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 14

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 14

    அவ்வைமகள்

    14. எளிவந்த எளிமை  

     உலகத்திலேயே மிகவும் சிக்கலான விடயம் ஒன்று உண்டென்றால் அது தான் எளிமை.

    ஆம்! “எளிமை” தான் அத்தனைச் சிக்கல் நிறைந்தது. எளிமையாக எழதுவது, எளிமையாகப் பேசுவது, எளிமையான கருவிகளை – பொருட்களை உருவாக்குவது என்பதெல்லாம் எளிமையின் முத்தாய்ப்பான வெளிப்பாடுகள்.

    இவ்வாறாக எளிவந்து எளிமை படைப்போர்கள் உலகத்தில் எப்போதோ அபூர்வமாய் உதிக்கிறார்கள். வள்ளுவனுக்குப் பிறகு ஒன்றே முக்கால் வரியில் ஒரு இலக்கியத்தை, அவன் போல் எளிவந்து எழுதிப்போந்த ஒருவனை இவ்வுலகம் இதுகாறும் காணவில்லை.

    அவ்வையின், இரண்டே இரண்டு சொற்களைக் கொண்ட “ஆத்திசூடியும்” நான்கே நான்கு சொற்களைக் கொண்ட “கொன்றைவேந்தனும்” நாவை வருடிச் சொடுக்கெடுக்கும் நேர்த்தித் திறன் மிக்க எளிமை கொண்டவை. அவ்வையின் ஆத்திசூடியில் ஆடித்திளைத்த பாரதி, தானும் கூட ஒரு புதிய ஆத்திச்சூடியைப் படைத்து ஆத்திசூடிக்கு ஆத்திச்சூட்டி மகிழ்ந்தான். எளிமையின் அசாத்தியக் கவர்ச்சியை – ஆற்றலை இன்னமும் சொல்லவும் வேண்டுமோ?

    தற்காலத்தில், “ஹைக்கூ” எனப்படும் குறுங்கவிதை வகையை அறிவோம். இன்று, ஹைக்கூ கவிதை எழுதுவோர்கள் உலகிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கையிலேதான் இருக்கிறார்கள்! வெறும் பதினேழு (5-7-5) சொற்கள் போதும் இக்கவிதையை எழுதுவதற்கு. எளிமை என்றால் அத்தனை எளிமை! ஆனால், அதை எழுத ஆளில்லை! காரணம் அதிலுள்ள சவால்!!

    சொல்லப்போனால் இன்றைய ஹைக்கூ பெரிதும் விதிகள் தளர்த்தப்பட்டிருக்கிறதான  கவிதை வடிவமே. “ரெங்கா” (Renga), என்பதான பெயரில், பதினைந்தாம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றியதான  ஒரு கவிதை வகையின் பல்லவி “ஹோக்கு” என்று வழங்கப்பட்டு வந்தது. ஹோக்கு எழுதுவது என்பது வெகுபல நிறைத்த சவால்களை உடைத்ததாய் இருதிருக்கிறது. அடுத்து. “ரெங்கா” என்பது “ரெங்கு” (Renku) வாக மாறி, விதித்தளர்வு பெற்று, படிப்படியாக, இன்னும் கொஞ்சம் எளிமையை இழந்தது. அப்புறம், இன்னமும் கொஞ்சம் விதித் தளர்வு ஏற்பட்டு, பல்லவியான ஹோக்குவையே ஒரு தனிக் கவிதைப் பாணியாகத் எடுத்துக் கொள்ளுவது என்று முடிவு செய்யபட்டது. அது தொட்டு, ஹோக்கூ எனும் பெயரை, ஹைக்கூவாக மாற்றி, பற்பல வகைகளில் மேலும் விதித் தளர்வுகள் ஏற்படுத்திய வகையில், இன்றைய ஹைக்கூ இளைத்து நிற்கிறது. ஆனால், இந்நிலையில் கூட, அதன் எளிமை சவால் நிறைந்த கடினமாய் இருக்கிறது என்றால் எளிமையில் இருக்கக் கூடிய கடினத்தை, சிக்கலை, நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்.

    ஆக, எளிமை என்பது சுலபமானது அன்று என்பது வெள்ளிடை மலை.

    ஆனால், இவ்வுலக வாழ்க்கையில், எளிமை தான் விரும்பப்படுவது – வேண்டப்படுவது – இன்றியமையாதது.

    சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை – சுத்திக்கு மிஞ்சின ஆயுதமில்லை – என்பார்கள்.

    மிகவும் எளிமையான விடயங்களான சுக்கும் சுத்தியலுமில்லாமல் வீடிருக்க வாய்ப்பில்லை அல்லவா?

    ஆக, எளிமையானவை எவையோ அவையே வலிமையானவை – அவையே இன்றியமையாதவை – என்பது விளங்கும்.

    கணினி உலகத்தில் முதல் தலைமுறைக் கணினிகளை தற்போதையக் கணினிகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இன்றைய கணினிகள் எத்தனை எளிமையாகி இருக்கின்றன என்பது புரியும்.

    அதுபோன்றே, கணினிகளில் செருகிப் பயன்படுத்தும் நினைவுப் பெட்டகங்கள் (Memory Storage Devices) எத்தனை எளிதாயிருக்கின்றன என்பதை நினைக்கும்போது மயிர்க்கூச்செறிகிறது. காந்தத் துளை அட்டைகள் (Magnetic Punch Cards), ப்ளாப்பி தட்டுகள். சி டி தட்டுகள், யு எஸ் பி பேனாச் செருகி, மினி யு எஸ் பி பேனாச் செருகி, மைக்ரோ யு எஸ் பி பேனாச் செருகி, நேனோ யு எஸ் பி பேனாச் செருகி என எளிமையை நாம் சேர்த்துக்கொண்டே வந்திருக்கிறோம். இதுபோன்றே எஸ் டி அட்டைகளிலும் தொடர்ச்சியாக எளிமை சேர்ந்து கொண்டே இருக்கிறது.

    காரணம்? இவற்றின் எளிமையே இன்றைய மக்களின் வாழ்வாதாரம் என்பதால்.

    காந்தத் துளை அட்டையிலிருந்து ஒரு மைக்ரோ யு எஸ் பி வருவதற்கு எத்தனை ஆண்டுகள ஆயின என்று பாருங்கள் – ஏறக்குறைய 50 ஆண்டுகள்.

    இந்த 50 ஆண்டுகளிலும் நாம் ஒரு நினைவுப் பெட்டகத்தையோ அல்லது ஒரு கணினியையோ எளிமைப்படுத்துவதற்காக கொடுத்திருக்கிற முயற்சி, உழைப்பு, முதலீடு, ஆகியனவற்றைக் கணக்கில் கொண்டு பார்த்தால், எளிமை என்பது எத்தனைக் கடினமான பணி – காலம் வேண்டுகிற பணி என்பது விளங்கியிருக்கும்.

    ஒரு தொழிநுட்பத் துறயில், எளிமை என்பது சாதிக்கப்படவேண்டுமேன்றால் அங்கே மகத்தான திட்டம் இருக்க வேண்டும். நீண்ட கால மற்றும் குறுகிய கால மைற்கற்கள் விவரம் வேண்டும், ஏற்படக்கூடிய இலாப நட்டங்கள் பட்டியலிடப்பட்டாக வேண்டும்; வெற்றி தோல்விகளுக்கு ஏற்றார் போன்ற தகவமைப்பு வேண்டும், நிதிவேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக, அசைக்கமுடியாத உறுதியும், “இது நடக்கும் – நடந்தே யாகும்” என்கிற நம்பிக்கை வேண்டும் – அதற்கும் மேலாக, விசுவாசமான் ஊழியர்கள் வேண்டும்.

    கணினிகளும் நினைவாற்றல் பெட்டகங்களும் எளிமையாகின பரிணாம வளர்ச்சியில், எளிமை ஏற்றப்பட ஏற்றப்பட, கணினிகளின் – நினைவாற்றல் பெட்டகங்களின் – சக்தியானது (Power) அதிகரித்துக்கொண்டே போவதை நாம் நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருகிறோம் என்பது பேருண்மை.

    நாம் இன்னொன்றையும் கவனிக்கிறோம்: கணினிகள் எளிமையானதால். நினைவாற்றல் பெட்டகங்கள் எளிமையானதால், ஒட்டுமொத்த மனித குலத்தின், திறன் அதிகரித்திருக்கிறது – தொலைத்தொடர்புகள் விரைவு பட்டிருக்கின்றன. உலகமே ஒரு கைப்பிடிக்குள் என்பதான ஏகாந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

    ஆக, எளிமை என்பது மனிதகுலத்தின்  சக்தியை, திறனை, பலத்தை அதிகரிக்கும் சத்தியத்தை நாம் வெகு யதார்த்தமாகப் பார்க்கிறோம்.

    கணினிகளை எளிமைப்படுத்தி, அனைவர் கைகளிலேயும் எளிமையான கணினிகளை ஆனந்தமாய்த் தழுவ விட்ட பெருமை ஸ்டீவ் ஜாப்சிற்கு உண்டு என்றால் சமயத்தை –– எளிமையாக்கி, மக்களின் சிந்தையிலே எளிமையானதொரு சமயத்தை ஆனந்தமாய்த்  தழுவவிட்ட பெருமை வள்ளலாரைச் சேரும்.

    கணினி என்பது மனிதர்களது வாழ்வாதாரம் என்று ஜாப்சும் சமயம் என்பது மனிதர்களது வாழ்வாதாரம் என்று வள்ளலாரும் சொல்லாமல் சொல்லிப்போன பெற்றியை நம் சிந்தையில் பொருத்திப் பார்க்கிற போது – இவர்கள் இருவரும் ஒப்பிலா மணிகள் என்றே நாம் உணர்ந்து கொள்கிறோம்.

    இவ்வாறு நாம் பேசும்போது, கணினியை சமயத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது போல் சிலருக்குத் தோன்றலாம். கணினியையும் சமயத்தையும் ஒப்பிடுவது நம் இலக்கு அல்ல. ஆனால், கணினி என்பது இன்றைய மனிதகுலத்தின் வாழ்வாதாரத்திற்கு எத்தனை முக்கியமானதோ அத்தனை முக்கியமானது சமயமும் என்கிற புரிதல் கிடைக்குமெனில், வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் இரு பெருமனிதர்களை நாம் புரிந்துகொள்ளுவதற்கு அதுவே ஒரு சிறந்த துவக்கப் புள்ளியாகும்.

    ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகளை எளிமைப்படுத்தும்போது நேரிட்ட பல சுவையான நிகழ்வுகள் உண்டு. அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்க இருக்கிற நிலையிலே, எளிமை பற்றிய அவரது பொன்னான கூற்று ஒன்றினை முதலில் பார்ப்போமாக:

    “That’s been one of my mantras – focus and simplicity. Simple can be harder than complex: You have to work hard to get your thinking clean to make it simple. But it’s worth it in the end because once you get there, you can move mountains.”

    “கவனச்செறிவும் எளிமையுமே எனது மந்திரங்கள் – எளிமை என்பது சிக்கலையும் விடச் சிக்கலானது.  உன் எண்ணம் எளிமையாவதற்கு, நீ கடினப்பட்டு முயன்று உனது எண்ண நிலையைத் தூய்மைப்படுத்த வேண்டும். அவ்வாறான, கடின முயற்சி எத்தனை மதிப்புடையது என்பது இறுதியில் விளங்கும் ஏனென்றால், அங்கே (எளிமைக்கு) சென்று விட்டாயென்றால், நீ மலைகளை அசைக்கமுடியும்!”

    எளிமை என்பதற்கு இருக்கிற பராக்கிரம ஆற்றலை ஸ்டீவ் ஜாப்சை விட விவரமாக எடுத்துச் சொல்லியவர்கள் எவருமில்லை.

    அவருக்கு முன் எளிமையைப் பற்றிப் பூடகமாக, சுருங்கச்சொல்லிப் போந்தவர்கள் சிலருண்டு: லியனார்டோ டா வின்சி (ஏப்ரல் 14/15,  1452 – மே 2. 1519); வால்ட் விட்மன் (மே 31, 1819 – மார்ச் 26,1892); ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18,1955)

    “எளிமை என்பது நுட்பத்தின் முத்தாய்ப்பு” (Simplicity is the ultimate sophistication) – லியனார்டோ டா வின்சி.

    “எளிமை வெளிப்பாட்டின் மகிமை” “Simplicity is the Glory of Expression” – வால்ட் விட்மன்

    எந்த ஒன்றையும் எளிமையாக்குங்கள் – எளிதாக்காதீர்கள்  “Make Everythig Simple not Simpler” – ஐன்ஸ்டீன்.

    இக்கூற்றுக்கள் மூன்றும் சங்கமித்து மிளிருமுகமாக அமைவது ஸ்டீவ் ஜாப்ஸின் கூற்று என்று எடுத்துக்கொண்டாலும், எளிமை என்பது யாதென செய்முறையாக   (practical)  ஒரு விளக்கத்தைத் தந்த முதல் மனிதர் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே. ஏனெனில் எளிமையை, கணினியில் தத்ரூபமாக நிலைநாட்ட அவர் தந்த முற்சிகளும், அம்முயற்சிகளுக்கு அவர் தந்த மாபெரும் உழைப்பு என்னும் மூலதனமும் மட்டுமே எளிமையின் செய்முறையைப் பிறருக்குச் சொல்லுமளவுக்கு அவரைத் தயார் செய்தது.

    அவருக்கு முன்னே, எளிமைக்கான எளிமைச் செய்முறையை பிரம்மாண்டமானதொரு தொழிலில், ஒரு தொழில் நுட்பச் சவாலாக எடுத்துக் கொண்டு  நிலை நாட்டவேண்டிய வாழ்க்கைப் பேறு, அதாவது கொடுப்பினை பிறருக்கு இல்லை என்பதும் புலப்படுகிறது.

    இந்நேரத்தில், நம் கவனத்திற்கு இன்னொன்றும் வருகிறது; ஸ்டீவ் ஜாப்சிற்கு அவரது எளிமை மந்திரத்துக்கு அடித்தளம் போடுவதற்கு ஏதுவாக, எளிமையை வேராகக் கொண்டு வளர்ந்தெழுந்த இந்தியச் சிந்தனை அவரிடம் இருந்ததாக நாம் உணர்கிறோம்.

    தியானமுறைகளைப் பயில இந்தியா வந்து, இங்கு தங்கியிருந்து, பயின்று சென்றிருக்கிறவர் என்ற முறையிலும், பொதுவாகவே சிலபல தருணங்களில் இந்தியப் பரிபாஷைகளை எடுத்தாள்கிற மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்பதாலும், எளிமை என்பது கருவிலேயே, எண்ண நிலையில் எழவேண்டிய ஒன்று  என்பதை அவர் துரிதமாகவே அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார் என்றே நம்மால் ஊகிக்க முடிகிறது. இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருமாறு எண்ணிறந்த நேரடியான தனித்தனிச் சம்பவங்கள், இப்போது நம் வசம் இல்லை என்றாலும் “நேர்க் காணல்” முறையில் ஐசக்சனால் எழுதப்பட்ட அவரது வாழ்க்கைச் சரிதத்தில் [1] ஸ்டீவ் ஜாப்ஸின் பல கூற்றுக்களில் உள்ள இந்தியச் சிந்தனையின் சாயலை, நாம் புறக்கணிக்க முடியாது. இதுபற்றி நாம் பின்னால் பேசவும் இருக்கிறோம்.

    இந்தியச் சிநதனை என்பது எளிதானதல்ல ஆனால் எளிமையானது. “எளிமையால் மலைகளை அசைக்க முடியும்”  என்கிற ஸ்டீவ் ஜாப்சின் கூற்று, மலைகளின் தொகுப்பாக, மாவல்லமை பெற்று நின்ற பிரிட்டிஷ் அரசை, தனது எளிமை என்னும் ஒற்றை நெம்புகோலால் அனயாசயமாய்ப்  புரட்டிப்போட்ட அண்ணல் காந்தியடிகளின் (அக்டோபர் 2, 1869 – சனவரி 30,1948) செயல் சாதனையின் வெளிப்பாடே என்று நாம் கொள்ளலாம். இந்த வெளிப்பாட்டை வெறும் வாய்மொழியோடு ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுத்திக்கொள்ளவில்லை. நேரடியாக செய்து காட்டிச் சென்றிருக்கிறார் – அதுவும் அதி சிக்கலான அவரது துறையில்.

    கணினித்துறை என்பது சும்மா அல்பசொல்பமானதல்ல. மிகுந்த போட்டிகளும் வர்த்தகச் சவால்களும், தொழில்நுட்பச் சவால்களும், பல வேலைப் பணியார்களின் மனிதாயுதச் சவால்களும் நிறைந்தது அது. அதுமட்டுமல்ல அது ஒரு உலகாய்ந்த துறை; நொடிப்பொழுதும், “கண்கொத்திப் பாம்பைப்போல்” பிறர் பார்த்துக் கொண்டிருக்கிற பார்வை உள்ளதான துறை. அத்தகையதொரு துறையில், அந்தரத்தில், அப்பட்டமாய் நின்றபடி, வெட்டவெளிச்சமாய், நாட்டவர் மருளவும், கேட்டவர் வியக்கவும், பார்த்தவர்க் கிறங்கவும், எளிமையை எளிவந்து சாதித்துக் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸின் சாதனை உலக வரலாற்றில் நீங்காத இடம் பெரும் தன்மையதுதான்.

    அவருள் இருந்த எளிமைச் சார்பின் தன்மை தான் ஸ்டீவ் ஜாப்ஸின் இந்தச் சாதனைக்கு அடித்தளமாய் அமைந்தது என்பதை நாம் வலியுறுத்த வேண்டிய தேவை இல்லை.

    (மேலும் பேசுவோம்)

    துணைநூற் பட்டியல்

    [1] Walter Issacson (2011). Steve Jobs, Simon & Schuster, 656 pp.

    Share
  • எழுவகைப் பெண்கள் – 14

    எழுவகைப் பெண்கள் – 14

    அவ்வைமகள்

    தலைப்பின்னல் எனும் மருத்துவச்  சூட்சுமம்

    அந்த இராணுவ அதிகாரிக்கு, தலைமுடி பற்றி, சிலபல நல்ல கேள்விகள் இருந்தன. அவற்றுள் முதலாவதாக மிக முக்கியமானதாக எதை எடுத்துகொள்ளலாம் என அவரையே கேட்டேன். “தலைப் பின்னல்” என்றார்.

    அவர் சொன்னார்: நான் பொதுவாகக் கேள்விப்பட்டது அல்லது வலைத்தளத்தின் மூலம் தெரிந்துகொண்டது என்னவென்றால் பின்னல் சடை போடுவது என்பது உங்களது பாரம்பரிய பழக்கம் என்று. ஏறக்குறைய எங்கள் நாட்டுப் பூர்வீக இந்தியர்கள் கூட நீள்முடி உள்ளவர்கள் – அவர்களில் பெண்கள் ஏன் ஆண்களும் கூட, உங்களைப்போலவே பின்னல் சடை போட்டுக் கொள்பவர்கள். உங்கள் இருவருக்கும் இவ்விஷயத்தில் உள்ள ஒற்றுமை ஆச்சரியப்படவைக்கிறது. ஆப்பிரிக்கப் பெண்களும் பின்னல் போட்டுக் கொள்கிறார்கள் – அவை உங்கள் இரு இந்தியர்களின் பின்னலில் இருந்து மாறுபட்டது. அவர்கள், சிறுசிறு பின்னல்களை பல எண்ணிக்கையில் போட்டுக் கொள்கிறார்கள்.

    இந்தத் தலைப்  பின்னலின் பின்னணிதான் என்ன? காரணம் இல்லாமல் பின்னல் ஒரு பண்பாடாக வர வாய்ப்பில்லை என்பது என் கருத்து என்றவர், கொஞ்சம் இழுத்துப் பேசலானார்.

    ஆனால், தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள் உங்கள் பெண்களுக்கு  இப்போது இந்திய சாயல் குறைந்து கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. குட்டைமுடியும் விரித்த கூந்தலும் அதிகம் இருக்கிறது, ஆங்காங்கே சில பின்னல் தலைகள் காணப்படுகின்றன அவ்வளவே. அந்தக் குறைந்த பின்னல் தலைகளில் பிரெஞ்சு மாடல் பின்னல்களை அடிக்கடிக் காணமுடிகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்தியப்பெண்கள் இப்போது ஐரோப்பிய சாயலில் தெரிகிறார்களே தவிர இந்தியர்களாகத் தெரியவில்லையே என்றார்.

    நீங்கள் சரியாகவே எங்களை நோட்டம் விட்டிருகிறீர்கள். Modernism – நவீனம் என்ற பெயரில் எங்கள் சமுதாயம், பாரம்பரிய கலாச்சாரத்திலிருந்து கொஞ்சம் வேகமாகவே விலகுவது வெளிப்படையாகவே தெரிவது உண்மைதான். ஆனால், நன்மை தரக்கூடிய கலாச்சாரப் பழக்கங்களைத் தவிர்ப்பதுதான் வருத்தமான விஷயம் என்றேன்.

    அப்படி என்றால், நான் கருதியது சரிதான்! நீங்கள், தலைப் பின்னல் என்பது நன்மை தரும் வழக்கம் என்று சொல்வதாக உணர்கிறேன் அதைக் கொஞ்சம் விளக்குங்களேன்.

    உங்கள் பூர்விக இந்தியர்களையும் – இந்தியாவின் இந்தியர்களான எங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தது மிகவும் சரியே. பல்வேறு விஷயங்களில் நாங்களும் அவர்களும் ஒருவரே. ஒற்றைப்பின்னல் மட்டுமல்ல; இரட்டைப் பின்னல், எசஸ்கட் மடித்துக் கட்டுதல் என பல்வேறு ஒற்றுமைகள் எங்களுக்கு உண்டு. குழந்தைகள வளர வளர, அவர்களது பருவத்துக்குத் தேவையான படி, பின்னல்கள் மற்றும், கட்டுக்கள் அமைப்போம். அதே போன்ற பழக்கம் செவ்விந்தியர்களிடமும்  இருக்கிறது. பின்னலை, நார் அல்லது பருத்தி நூற்கயிறு,  அல்லது பட்டு நூற்கயிறு போட்டு கட்டும் பழக்கமும் இரு இந்திய வகையினரிடமும் இருக்கிறது (இப்பொழுதெல்லாம் பாலிஎஸ்தர் ரிப்பங்களுக்கும் ரப்பர் பாண்டுகளுக்கும் மாறியாயிற்று) என்று தொடர்ந்தேன்.

    உங்கள் பூர்விகக் குடிகளான இந்தியர்கள் செவ்விந்தியர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்பதற்கு சிலபல விளக்கங்கள் இருந்தாலும், ஒரு சில வரலாற்று நூல்களில், எம் சமுகமான, தமிழ் சமூகத்திற்கும், செவ்விந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது காட்டப்படுள்ளது என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எடுத்துகாட்டாக, வில்லியம் ப்ரெச்காட் (William Prescott ) 1847, எழுதி வெளியிட்டிருந்த “The Conquest of Mexico and Peru” புத்தகத்தில், இதுபற்றிப் பேசியிருப்பதாக நான் அறிந்ததுண்டு. இதனை நினைவு கூர்ந்து, 2014ல் எங்கள் மொழியில் வெளிவந்திருந்த ஒரு முகநூல் (Horror – அமானுஷ்யம்) கட்டுரையும் உண்டு.

    எங்கள் தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைப் பற்றிக் கூறுபவர்கள், “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்குடி என்பார்கள்!”

    அமரிக்க இந்தியர்கள் சுமார் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறியதாகக் கணக்குண்டு. எங்கள் சமூகத்தினர், பன் நெடுங்காலமாகவே, கடல் கடந்து, உலகெங்கும்,  எங்கெங்கோ பரவிப்போய் ஆட்சிகள் அமைத்தும் குடியேறியும் வாழ்ந்ததாகப் பேச்சு உண்டு. இந்த வரலாறுகள் பல எழுதப்படாமலேயே அழிந்ததும், எழுதியும் அழிந்ததும் உண்டு என்பர். வரலாற்றில், பாண்டித்தியம் இல்லாதவள் என்பதால் இதுபற்றி இப்போது அதிகமாகப் பேசும் தகுதி எனக்கில்லை.

    ஆனால், இங்கு நான் கவனித்த, படித்த, மற்றும் கேட்ட விஷயங்களிலிருந்து மிகப்பல்வேறு ஒற்றுமைகள் எங்கள் இரு இந்தியர்களுக்கும் இருக்கிறது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியும்.

     

     

     

     

     

     

     

       Superstock.com, saved by Pinterest

    https://www.pinterest.com/pin/474355773230225719/

    Pinterest saved by Zarina Jenae

    இங்கே, இரண்டு தற்காலப் பெண்களின் படங்களைப் பார்ப்போம். இடது படம் – செவ்விந்தியப் பெண்ணின் பின்புறம்; வலது புறம் உள்ளது தமிழப் பெண்ணின் பின்புறம். தலைமுடியின் நிறம் மற்று அமைப்பு, பின்னும் விதம், ஆகியன ஒன்றே போல் இருக்கின்றன அல்லவா?

    அடுத்து, இரு இந்திய சமூகங்களுக்கும், தலைமுடி பற்றியுள்ள சிந்தனைகள் மற்றும் அவர்களது, தலைமுடி சார்ந்த பழக்கவழக்கங்கள் பால் நம் கருத்தைச் செலுத்துவோமேயானால், ஆச்சரியத்தக்க ஒற்றுமைகள் இருப்பது உண்மையே.

    இரு இந்திய சமூகங்களுக்குமே தலைமுடி என்பது மிகப் புனிதமான பொருள். அது எத்தனைப் புனிதமானது என்றால், கடவுளுக்காகக் காணிக்கையாகத் தரப்படும் மிக உயர்ந்த தகுதியுடைய ஓரே உடற்பகுதி என்பது அவர்களுடைய கருத்து.

    என் அம்மாவின் பாட்டி, நான் சின்னஞ்சிறு பெண்ணாக இருந்தபோது, எனக்குத் தலை பின்னிக்கொண்டே ஒரு நாள் சொல்லியிருக்கிறாள், “தலைமுடிங்கறது – ஒடம்போட முக்கியமான உறுப்பு – ஒவ்வொரு முடிக்கும் தெய்வீக ஆற்றலால, உணர்வு இருக்கு –  கண்ணிருக்கு.  ஒவ்வொரு முடியும் – நீ தூங்கறபோது கூட முழிச்சிகிட்டே இருந்து ஒன்னச் சுத்தி என்ன நடக்குதுன்னு பாத்துக்கிட்டே இருக்கும். தூங்கற போது ஆபத்துலேர்ந்து ஒன்னைக் காப்பாத்தும். நீ தூங்கிக் கிட்டிருக்க, அப்ப, யாரோ வெளி ஆளுங்க உன்னை நோக்கி வராங்கன்னா, நீ திடுக்குனு எழுந்துடுவ – அதுக்கு முடி தான் கரணம்.”

    “அப்ப, நம்ம முடிக்கு நம்ம வீட்டு ஆளுங்க யாரு – வெளி ஆளுங்க யாருன்னு தெரியுமா?” பாட்டி என்று கேட்டேன். ஆமாம், நீ என்ன பண்றே – மத்தவங்க ஒன்னச் சுத்தி என்னென்ன பண்றாங்கன்னு அது போட்டோ பிடிச்சு வச்சிக்கும்! அதனாலத்தான் முடிக்கு மதிப்பு கொடுத்து பத்திரமா பாதுகாத்து வச்சுக்கணும்.”

    “தலையை நல்லப் படிய வாரி, பின்னல்போட்டு நுனியை மடிச்சிக் கட்டணும், இல்லைனா உடம்புல இருக்க சக்தியெல்லாம் உடம்புலேர்ந்து வெளியே போயிடும்!” என்று சொன்னாள் என்றேன்.

    அந்த ராணுவ அதிகாரி குறுக்கிட்டார்: “தலைமுடி ஒரு உடல் உறுப்பு போன்றதா? கேட்கவே வேடிக்கையாய் இருக்கிறது! நகத்தைப் போல வெட்டி வீசக்கூடிய ஒரு பொருள் – உயிரற்ற ஒரு உதிரிப்பாகம் – முடி இல்லாமலேயே உயிர்வாழவும் முடியும் – அதுவே உதிர்ந்து வேறு கொட்டுகிறது. இப்படியிருக்க, தலைமுடியை ஒரு புனிதப்பொருள் என்று நீங்கள் கூறுவது ஒரு மூடநம்பிக்கை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.” அதே போன்று, தலைமுடிக்கு உணர்வு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது என்றார்.

    தலைமுடி பற்றிய சிலவற்றைப் பார்த்து விட்டு தலைமுடி புனிதமானது என்கிற, இந்தியர்கள் கருத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போமே என்றேன். அவரும் உடன்பட்டார். தொடர்ந்தேன்.

    இப்போது, செவ்விந்தியர்களைக் கவனிப்போம்: “தலை முடி என்பது உடலின் மைய நரம்பு மண்டலத்தின் வெளிப்புறத் தொடர்ச்சி” என்கின்றனர் அவர்கள். இந்தக் காணொளிகளைப் பாருங்கள் என்று காண்பித்தேன்.

    https://www.youtube.com/watch?time_continue=18&v=hxl9PgKGTX4&feature=emb_logo

    அவர் அக்காணொளியைக் கண்டபின், செவ்விந்தியர்களின் கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் – அதற்கு முன்பாக, இந்த இரண்டு படங்களைக் காட்டுகிறேன் – அவற்றையும்  பார்த்தபின்பு நீங்கள் உங்கள் முடிவைச் சொல்லல்லாம் என்றேன். நமது மைய நரம்பு மண்டலத்தின் இரண்டு படங்களை, அவருக்கு வலைதலத்திளிருந்து இரண்டு படங்களை எடுத்துக் காண்பித்தேன். (அவை இங்கே தரப்பட்டுள்ளன).


    https://www.aplustopper.com/nervous-system-sense-organs-icse-solutions-class-10-biology/

    https://www.pnas.org/content/107/48/20610

    அந்த இருபடங்களைப் பார்த்த வினாடி, உணர்ச்சி ததும்ப, மொழி மறந்து, கடவுளே! உன் கைவண்ணத்தின் அற்புதம் தான் என்னே (Lord! What a marvelous handiwork!)  என்றார். ஆமாம்! உங்கள் அம்மவின் பாட்டி என்ன சொன்னார் என்று சொன்னீர்களோ, அதையே அந்த செவிந்தியரும் சொல்கிறாரே! நமக்குள்ளே ஏற்படும் உள்ளணர்வுக்கும் தலைமுடிக்கும் தொடர்பு உண்டு என்று அவர் ஆணித்தரமாய்ச் சொல்லுகிறாரே! தலைமுடியை பக்தி சிரத்தையோடு மதிக்கவேண்டும் என்கிறாரே!  என்று பூரித்தார் .

    அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, இப்போது. இந்தக் காணொளியில் இன்னொரு செவ்விந்தியர் கூறுவதைக்  கேளுங்கள் – குறிப்பாக, 9.26 – 11.45 என்றேன்.

    https://www.youtube.com/watch?v=OKZI-4GExQk

    பார்த்தார். உண்மையாகவா? நம் தலைமுடியை, நம் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர, பிறர் தொடுவதை அனுமதிக்கக் கூடாதா? அத்தனை சுயமான விஷயமா முடி? என்றவர். இவ்வாறெல்லாம் சொல்வதைப் பிறர் நம்ப மாட்டர்களே அறிவியல் சான்று இல்லாமல் என்றார்.

    ஒருவரது தலைமுடி, அவருக்கென பிரத்யேகமாக கடவுள் தயாரித்து அனுப்பி இருப்பதை இப்போது அறிவியல் உலகம் உறுதிப் படுத்திவிட்டதே என்றேன்.

    விளக்கமாய் சொல்லுங்களேன் என்றார்.

    குற்றவியல் அறிவியல் தட நிபுணர்கள், தலைமுடியை, மைக்ராஸ்கோப்பின், கீழ் வைத்துப் பார்த்து, அந்த முடி எந்த இனத்தவரின் முடி என்று டக்கென்று சொல்லிவிடுவார்கள். தலைமுடியை வைத்துப் பார்த்தால் உலகத்தில் மொத்தம் மூன்றே மூன்று இனங்கள் தாம் உண்டு: வெள்ளையர்கள், ஆப்பிரிக்கர்கள, மங்கோலிய ஆசியர்கள் (அல்லது ஐரோப்பிய ஆசியர்கள்) என்று.

    இவ்வாறு தலைமுடி, தடவியலில், ஆட்களின் இனத்தை அடையாளம் கண்டு பிடிக்க உதவி வந்து கொண்டிருந்த நிலையில், விஞ்ஞானிகள், இன்னொரு படி மேலே போய் புதியதொரு தலைமுடி உபாயத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால், ஒருவரது முடியின் வேரில் உள்ள டி என் ஏ வைப் பரிசோதித்தால் அந்த நபரது மரபணு புரிந்துவிடும் என்று.

    இதனால் என்ன லாபம் என்று கேட்டீர்கள் என்றால், இனிவரும் காலத்தில் மரபணுப் பரிசோதனைக்கு, இரத்தம் தேவை இல்லை. முடியின் வேர் போதும். (சமீப காலமாக, இரத்த மரபணுப் பரிசோதனைகளில் சில சிக்கல்கள் எழுந்தமையால் மரபணுப் பரிசோதனைக்கென மாற்று வழிகளைக் காணும் நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது). இந்த இணைப்பைப் பாருங்கள் என்று அவரிடம் பகிர்ந்தேன்.

    https://www.mynewlab.com/blog/why-hair-analysis-could-become-an-alternative-to-dna-testing/

    நன்றி தெரிவித்தவர், அதற்கு அடுத்து கேட்டார்: அந்த இரண்டாவது காணொளியில், அந்தச் செவ்விந்தியர் சொன்னது என் கவனத்தை கவர்ந்தது. இனிப்புப் புல் சேர்த்து அவர்கள் தலைப் பின்னல் பின்னிக் கொள்கிறார்கள்  என்று – அது போன்ற பழக்கங்கள் உங்களுக்கும்  உண்டா என்றார்.

    ஆமாம்! வாழைமட்டையில், பூக்களைத் தைத்து, ஜடை தயாரித்து பின்னலின் மேல் தைத்துக் கொள்வது, தாழைமடல்களைக் கொண்டு பின்னலுக்கு மேலே உறை தைப்பது, பின்னலுக்கு மேலே, மூளைப் பகுதியில், நறுமணமும், குளிர்ச்சியும் தரக்கூட்டிய பூக்களையும், தவனம், மரிக்கொழுந்து போன்ற வாசனைச் செடிகளையும் நெருக்கமாகத் தொடுத்து அணிந்து கொள்வது – இவை எல்லாம் எங்களது பழக்கம். நங்கள் வாழும் தட்பவெப்ப நிலை செவ்விந்தியர்களின் தட்பவெப்ப நிலையை விட அதிகம் என்பதால், நாங்கள் இன்னமும் ஒரு படி மேலே போய் தலைமுடியைப் பாதுகாக்கிறோம்.

    மேலும், குஞ்சம் வைத்து, தலைப்பின்னலைப் பின்னி விசேஷ நாட்களில் அணிந்து கொள்வது எங்கள் இளம் பெண்களின் பழக்கம். இவ்வாறு செய்யும்போது, குஞ்சம் சரியாக, இடுப்பில், பிட்டத்திற்கு மேல் இடித்து நிற்கும். முதுகுத்தண்டு வளையாமல், கழுத்துக்கு பலம் சேர்த்து நிமிர்த்தும்  ஒரு எளிய அழகுப் பயிற்சி இது. குட்டையான தலைமுடி உள்ளவர்கள் கூட சவுரி எனப்படும் செயற்கை முடி நீட்பான்களை உபயோகித்து, குஞ்சம் சேர்த்து இவ்வாறு, பின்னலை நீட்டி, பின் இடுப்பின் பள்ளத்தில் இடிக்குமாறு அழகு படுத்திகொள்வார்கள்.  ஒரு தலைமுறைக்கு முன்பு வரையிலும் கூட, இது சர்வ சாதாரண பழக்கமாய் இருந்தது. என்றேன்.

    அப்படியென்றால், உங்கள் பின்னலில் மருத்துவச் சூட்சுமம் உண்டு என்று சொல்லலாமா? என்றார்.

    – (மேலும் பேசுவோம்)

    Share
  • ***கொரோனாவுடன் எங்கள் அன்றாட இல்வாழ்க்கை

    ***கொரோனாவுடன் எங்கள் அன்றாட இல்வாழ்க்கை

    அவ்வைமகள்

    இன்று கொரோனா பற்றிப் பலப்பல தகவல்கள் ஒவ்வொரு நானோநொடிக்கும் வெளிவந்து கொண்டிருக்கும்போது இன்னொரு ரோதனையைத் தருவது நம் நோக்கமில்லை.

    இப்போது சுகாதாரத் தூய்மைப் பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் எங்கும் கிடைக்காத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். இந்நிலையில், தொற்று நம்மைத் தீண்டாத வகையில் தனிமனிதர்கள் தமது சுகாதாரத்தை –எப்படிப்  பாதுகாத்துக்கொள்வது அதுவும் வீட்டில் இருந்தபடியே, ஒவ்வொரு குடும்பமாக, சுகாதார நிலைப்பாட்டோடு – பாதுகாப்பாக இந்தக் காலக்கட்டத்தை எப்படிக் கடத்துவது என்பதே நம் நோக்கு.

    இங்குப் பேசப்படுவது தற்போது எங்கள் இருப்பிடத்தில் நாங்கள் பயன்பாட்டில் பின்பற்றி வருகிற ஓர் எளிமையான தினசரி வாழ்வியல் பயிற்சி. கொரோனாவினால் எங்களுக்கு எந்த இல்லலும் இதுவரை ஏற்படவில்லை. அதனால், எங்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படவே செய்யாது என்று கட்டியங்கூற வரவில்லை. இடர்ப்பாடுள்ள சூழலில், ஒவ்வொருவரும் தொற்றுக்குத் தோதாக, தூதாக மாறாது தம்மை பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற விருப்பமே எமது உளச்சிந்தை.

    இங்குக் கூறப்படுவது மருத்துவ முறையன்று. நான் மருத்துவரும் அல்லள். இது ஒரு அனுபவப் பகிர்வு. நம் இந்தியர்களைப் போலவே, பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட ஜமைக்கா, மெக்சிகோ, கரீபியன், ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூகத்தில், இன்றைய  சூழலுக்கு இது பொருத்தமாய் இருக்கும் என அறிவார்ந்து எண்ணி, அந்த மனிதர்கள் என்ன செய்கிறார்கள் எனபதை அறியும் ஆவல் இருப்போருக்காக இது பகிரப்படுகிறது. விருப்பமிருப்பின்,  உங்கள் சூழ்நிலைக்கு ஏற்பத் தகவமைப்பு செய்துகொண்டு இவ்வாறான வாழ்வியல் வழிமுறையை நீங்களும் பின்பற்றலாம். இதனால் பாதகம் ஏதும் இல்லை.

    மேலும், இங்கு பேசப்படும் வழிமுறை ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நோயாளிகளுக்கானது இல்லை. தற்போது தொற்றில்லாமல் இருந்தபடி, தனக்குத் தொற்று ஏற்படாதவாறு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என விழைவோருக்கு மட்டுமே. (அடிக் குறிப்பு 1 ஐப் படிக்கவும்). தொற்று வந்துவிட்டதென்றால் அரசுக்கு அறிவித்து, மருத்துவ உதவி நாடுவது வேண்டும்.

    காலை மற்றும் இரவுப் பல் துலக்கல்: இருக்கிற பல் பொடி அல்லது பல் பசை – அன்றேல் – உப்பு மற்றும் ஆப்ப சோடா கலந்த கலவை கொண்டு பல்துலக்கி – உப்புநீரால் தொண்டை வரை இறக்கிக் கொப்புளித்து வாய் – மற்றும் உள்நாக்கு – தொண்டைப் பகுதிகளை நன்கு சுத்திகரித்துக் கொண்டுவிட்டு – ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை  வாயிலிட்டு நன்கு கொப்புளித்து – அந்த எண்ணெயை உமிழ்ந்துவிடுதல்.

    காலை மற்றும் இரவு பானம் (இயலுமெனில் காலை மற்றும் மாலை இடைவெளி நேரம் கூட): பாலில் சம அளவு நீர் சேர்த்து – அதில், பூண்டு (2) , இஞ்சி (1), ஏலக்காய் (0.5) , மஞ்சள் தூள் (2), மிளகுத்தூள் (0.25)  சேர்த்து நன்கு காய்ச்சி – அதனுடன் தேன் அல்லது, நாட்டுச் சர்க்கரை, அல்லது சர்க்கரை சேர்த்து – பொறுமையாய்த் தொண்டையில் பரவி இறங்குமாறு அவரவர் தாங்கு திறனுக்கேற்ற சூட்டுடன் பருகுதல் – இங்கே தந்துள்ள எண்கள் –எடை அளவின் விகிதாச்சாரம்.

    இவ்வாறு தயாரிக்கப்பட்ட பால் வெகு சுவையாய் – சிறந்த இனிய மணத்துடன் இருப்பதோடு, பார்க்கவும் வெகு ஜோராய் இருக்கும். அனைத்து வயதினரும் விரும்பிப் பருகக் கூடியது.

    சர்க்கரை வியாதி இருப்பவர்கள், இனிப்பு சேர்க்காமல் குடிக்கிறோம்– பால் விரும்பாதவர்கள் –அல்லது பால் கிடைக்கவில்லை என்பவர்கள் – பாலுக்கு பதில் வெறும்  நீரைப்  பயன்படுத்தியே இந்த பானத்தைத் தயார் செய்து கொள்கிறோம்.

    ஏலக்காய்க்குள்ள நுண்ணுயிர்க் கொல்லித் திறனை அறிய: https://www.sciencedirect.com/topics/food-science/cardamom

    உணவு: எந்த உணவையும் புதிதாகத் தயாரித்து உண்ணுகிறோம். மீந்து போகுமாறு சமைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் கண்டிப்பாய் ரசம் உண்டு; மோர் உண்டு. பெருங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், தணியா, வெந்தயம் சேர்க்க இயலாத எந்த உணவையும் தயாரிப்பதில்லை. தயிரைத் தவிர்க்கிறோம். தயிருக்குப் பதிலாக முறித்த மோரைப் பயன்படுத்துகிறோம். மோரில் நன்கு காய்ச்சிய இரும்புக் கரண்டிக் காம்பைத் தோய்த்து எடுத்துவிட்டு –  வெந்தயத் தூள், பெருங்காயத் தூள், நசுக்கிய இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து மோரைப் பயன்படுத்துகிறோம். (எங்களுக்கு, பச்சை கருவேப்பிலை கிடைப்பது அரிது – காய்ந்த கருவேப்பிலையைத் தான் பயன்படுத்துகிறோம்). எங்களில் சிலர் (இந்தியர்கள்), ஒருபடி மேலே போய் – மஞ்சள் தூள் சேர்த்து – தாளித்தும் மோரைப் பயன்படுத்துகின்றனர்.

    வீட்டில் கைகளைச் சுத்தம் செய்துகொள்ள: வீட்டில் இடையிடையே கையைச் சுத்தம் செய்துகொள்வதற்கென, கீழே குறிப்பிட்டுள்ளபடி தயார் செய்த கழுவு நீரை ஓர் அகலமான பாத்திரத்தில் வைத்துவிடுகிறோம் – குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் – இதில் கை நனைத்து, கைகளை நீருக்குள்ளேயே நன்றாக அலசிக்கொள்கிறோம் பக்கத்தில் சுத்தமான பழைய பருத்தித் துணி – (வேட்டி அல்லது பழைய வாயில் சேலைகள் மிகவும் தோதானவை) கைக்குட்டைகளை வைத்திருக்கிறோம் – அக்கைக்குட்டைகளில்  கை துடைத்துக்கொள்ளச் சொல்கிறோம். துடைத்தபின் அந்தக் கைக்குட்டைகளை ஆப்ப சோடா கரைத்த நீரில் இட்டுவிட்டுச் செல்லுமாறு சொல்கிறோம் – ஒவ்வொரு நாளின் இறுதியிலும் இக்கைக்குட்டைகளைத் துவைத்து  உலர்த்தி – மீண்டும் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கிறோம். இவ்வாறு செய்வதால், கைகள்  எப்போதும் தொற்று நீங்கி இருப்பதோடல்லாது, தோல் பாழாகாமல் – வறட்சித்தன்மை இன்றி, சுத்தமாய்ப் பளிச்சென்று மிருதுவாய் இருக்கிறது. ஒரு நாளைக்கு, மூன்று முறை இந்த நீரை மாற்றிக்கொள்கிறோம்.

    (இரண்டு லிட்டர் நீரை ஒரு புட்டியில் எடுத்துக்கொண்டு அதில் – அரை டீ ஸ்பூன் உப்பு, ஒரு டீ ஸ்பூன் ஆப்ப சோடா, அரை டீ ஸ்பூன் நல்லெண்ணெய், கால் டீ ஸ்பூன் பொடித்த இலவங்கம் சேர்த்து – புட்டியை மூடி – நன்கு குலுக்கிக் கரைத்துக் கொள்ளவும்). கிராம்புக்கு இருக்கிற நுண்ணுயிர்க்கொல்லித் திறனை அறிய: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3074903/

    மூக்கின் உட்சுவரில் பூச: விருப்பமுள்ளவர்கள், மூக்கின் உட்சுவரில் சுத்தமான நல்லெண்ணெய் ஒரே ஒரு இழை தடவிக்கொள்கிறோம். நல்லெண்ணெய்க்கு உள்ள நுண்ணுயிர்க் கொல்லித் திறனை அறிய:

    https://www.prohealth.com/library/discover-the-little-known-uses-of-sesame-oil-6750

    தொண்டையில் வெளிப்புறம் பூச: விருப்பமுள்ளவர்கள், கொத்துமல்லி, துளசி, கற்பூரவள்ளி, தும்பை – இவற்றில் ஏதேனும் ஒன்றின் இலையைப் பறித்துவந்து இரு கைகளுக்கிடையே அழுத்திக் கசக்கிப் பிழிய  வரும் சாற்றை, சிறிது சுண்ணாம்பு கலந்து – தொண்டையின்  வெளிப்புறம் தடவிக்கொள்கிறோம். எங்களுக்குச் சுண்ணாம்பு கிடைப்பது அரிது என்பதால், கால்சியம் மாத்திரையை  உரைகல்லில் இழைத்து – தேவையான சுண்ணாம்பை எடுத்துக்கொள்கிறோம் குழந்தைகளுக்கு – பெரியவர்களுக்கு என எல்லா வயதினருக்கும் ஏற்ற பூச்சு இது. இந்தப் பூச்சினால் எந்தக் கெட்ட வாசனையும் வராது. மாறாக, விறுவிறுப்பான சுகந்தம் தெரியும். இதைத் தினப்படியோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ செய்து கொள்ளலாம். (அடிக் குறிப்பு 2ஐப் படிக்கவும்). பச்சிலைச் சாற்றுக்குப் பதிலாக, மஞ்சள் பற்றும் போட்டுக்கொள்கிறார்கள்.

    மூக்கில் நுகர: விரலி மஞ்சளை – தீபத்தின் ஜ்வாலையில் காட்ட – அது கனன்று இலேசான மெல்லிய புகை  இழையை உருவாக்கும் – அப்புகையை ஒரே ஒரு விநாடி நுகர்வது ஒரு சிலரது பயிற்சியாக உள்ளது. காலை ஒரு முறை – மதியம் ஒரு முறை – இரவு ஒரு முறை நுகர்ந்தால் போதும், மேல் சுவாச மண்டலத் தொற்றுகளை விலக்குவதற்கு எளிமையான வழியாம். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே சென்று வரவேண்டியிருந்தால், வீட்டு வாசலிலேயே – இதைச் செய்துவிட்டு உள்ளே வருவது நலம் என்று அறிந்து கொண்டோம். ஆஸ்துமா உள்ளவர்கள் இதைச் செய்யவேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.

    மூக்கு – வாய் மூடி: மூக்கு -வாய் மூடிகள் கிடைக்காத நிலையில், சன்னமான பருத்தித் துணியை (வேட்டி அல்லது பழைய வாயில் சேலைகள் மிகவும் தோதானவை) மஞ்சள் கலந்த நீரில் நனைத்து உலர்த்தி  – எங்களுக்குத் தேவையான மூக்கு -வாய் மூடிகளை நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம். எங்களுடைய சிறுவட்ட இயக்கங்களுக்கு இது தோதாக இருக்கிறது. மஞ்சளின் வாசம் ஒரு பிளஸ் பாயிண்ட் தான்.

    வீட்டிற்கு உள்ளும் வெளியும் ஆங்காங்கே:  பூண்டையும் வசம்பையும் தட்டி – டிஷ்யுவில் (பழைய வேட்டி அல்லது புடவைத் துண்டுகள் தோதானவை) தளர்ந்த சிறு சிறு மூட்டைகள் போல் செய்து வீட்டைச் சுற்றி ஆங்காங்கே வைத்துவிடுகிறோம். மூன்று நாளைக்கு ஒருமுறை  இதை மாற்றிக்கொள்கிறோம். (அடிக் குறிப்பு 3ஐப் படிக்கவும்). பூண்டு, வசம்பு இரண்டுமே ஒரு சிறந்த நுண்ணுயிர்க் கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லிகளாகும். வசம்பு, மருந்து எனும் நிலையைத் தாண்டி உணவாகப் பயன்படுத்தும் பிரபலத்துவம் இல்லாதது. வசம்பின் குணாதிசயங்களை அறிய: https://www.researchgate.net/publication/266372059_Acorus_calamus_An_overview

    நாள் முழுவதும் தீபம்: நல்லெண்ணெய் விட்டு தீபம் நாள் முழுக்க எரியுமாறு செய்கிறோம். காற்றைத் தூய்மை செய்ய நன்மை பயக்கும் வழி இது என்பது பெரியவர்களால் சொல்லப்பட்டிருக்கிற சேதி. (அறிவியல் ரீதியாகப் பார்த்தால், தீபத்தின் ஜ்வாலை ஒளி பிளாஸ்மாவாகும்; இது பரவு திறன் கொண்ட அயனிகளை உருவாக்குகிறது – இதனால் வீட்டினுள் காற்றுச் சலனம்  சன்னமாய் ஏற்படுவதால் எரியும் தீபம், காற்றைச் சுத்திகரிக்கும் தன்மை உடையதாகிறது.)

    தூபம்: எங்களுக்கு வீட்டில் புகை போடுவது இயலாது (புகை அலாரம் அடித்து ஊரைக்கூட்டி ரகளை பண்ணிவிடும்). எனவே அதிகப் புகை வராதவாறு, மிக இலேசான தூபம் ஒருநாள் விட்டு ஒரு நாள் – ஒரு முறை காலையும் ஒரு முறை மாலையும் போடுகிறோம்– வீட்டிற்கு உள்ளும் வெளியிலும்.

    ஐந்து வெள்ளைக் கடுகு, நாலு உலர்ந்த துளசி இல்லை –ஒரு சிட்டிகை வேப்பிலைத் தூள்   – ஒரு சிட்டிகை நீலகிரி இலைத்தூள், இவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு, இரண்டு பார்பிகியூ கரித்துண்டுகளை வைத்துக்கொண்டு துரிதமாக போடப்படும் தூபம் இது. (அடிக் குறிப்பு 4ஐப் படிக்கவும்). வெள்ளைக் கடுகு இல்லாமலும் இந்த தூபத்தைப் போடலாம். வெள்ளைக் கடுகின் மருத்துவக் குணங்களை அறிய: https://botanical.com/botanical/mgmh/m/mustar65.html

    தூபக் குப்பிகள்: மஞ்சள் தூளில் சிறிது வேப்பிலைத் தூள்   – மற்றும் நீலகிரி இலைத்தூள், சில சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் (நறுமணத்திற்காக) கலந்துப் பிசைந்து சிறு – சிறு கூம்புகள் (மஞ்சள் பிள்ளையார் செய்வது போல) செய்து, வீட்டிலேயே உலர்த்தி எடுத்துக்கொண்டு அவற்றைத் தினசரி தூபமாக ஏற்றி வருகிறோம்.

    யோகா: ஜிம், அதாவது உடற்பயிற்சிக் கூடத்தை நம்பியே வாழும் ஒரு வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை வந்துவிட்டதால் பைத்தியம் பிடித்தால் போல் இருக்கும் நிலை பலருக்கு. அதே நேரத்தில், தொற்றை – நோயை எதிர்ப்பதற்கும் வெளியே செல்லாமல் வீட்டுக்குள் இருப்பதால் நேரும் மந்த நிலையைப் போக்கவும்   – உடலுக்குச் சரியான பயிற்சி தந்தே ஆகவேண்டும். யோகா எனும் நம் பண்டையக் கலை, கருவிகள் சார்ந்த  உடற்பயிற்சிகளைக் காட்டிலும் எத்தனை உன்னதமானது என்று நமக்குப் புரியும்படியான தருணமிது. எனவே நாங்கள் யோகாவை தினசரிப் பயிற்சியாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

    தியானமும் பிரார்த்தனையும்: உலகு இன்று ஸ்தம்பித்து நிற்கிறது. இறையருள் இன்றி எதுவும் நடக்காது என்பதை எம் நட்பு வட்டத்தில், நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்கள் கூட வாய்விட்டுச் சொல்லிவிட்டார்கள். இன்று, கிருமி நம் உடலில் புகுந்தாலும், அது நுரையீரலுக்குள் இறங்காமல், நம் மிடறிலேயே  நின்று விட்டதென்றால் எந்தப் பாதிப்புமில்லை என்பது தான் உண்மை. எனவே, நம் அனவருக்கும் திரு நீலகண்டனே துணை. அன்று நளிர் சுரம் வந்து மக்களை வாட்டியபோது, திருஞான சம்பந்தர் பாடித் தொழுத திருநீலகண்டப் பதிகம் நமக்கு அருள்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிகம் தோன்றிய வரலாற்றை, அறிந்த அந்நொடியில், சமயப் பிணக்கின்றி அனைவருமே அதனைப் படிக்க ஒப்புக்கொண்டது இறைவனின் அருளே – மாலை ஆறு மணிவாக்கில் அனைவரது இல்லங்களிலும் அவரவர் படிப்பது அல்லது ஒலிப்பது (https://shaivam.org/thirumurai/first-thirumurai/1307/thirugnanasambandhar-thevaram-thiruneelakandam-avvinaik-kivvinai) என்று ஒரே நேரத்தில், கூட்டம் போடாமலேயே, கூட்டாகப் பிரார்த்திக்கிறோம். அதிகாலையில் யோகப் பயிற்சிக்கு முன்பு, யோக முத்திரைகளும், தியானமும், சூரிய நமஸ்காரமும் செய்கிறோம்.

    கொரோனாவைத் தாண்டிய பிரச்சனைக்கான ஆயத்தம்: பலபேர் வேலை இழந்திருக்கிறார்கள் – பல பேர் வேலை இழக்கக்கூடும் என்பதாகவும் அறிகிறோம்.  பசியும் ருசியும் வெவ்வேறானவை என்பது வெகு தெளிவாகவே புரிகிற காலமாய் இக்காலம் அமைந்திருக்கிறது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு தலைதூக்க ஆரம்பித்திருகிறது. பொருளாதாரப் பிரச்சனைகள் பகிரங்கமாய் வெடிக்க, அதிகக் காலம் பிடிக்காது என்றே தோன்றுகிறது. இதை உணர்ந்தவர்களாக, எல்லா அத்தியாவசியப் பொருட்களையும், மிகக்  குறிப்பாக, உணவுப் பொருட்களை வெகு எச்சரிக்கையோடு உபயோகப்படுத்துகிறோம். எந்த ஒரு பொருளையும் ஒரு துளியும் வீணடிப்பதில்லை என்ற உறுதியோடு செயல்படுகிறோம். மீடியாக்களில் கவனத்தைச் சிதறவிடாமல், இருக்கிற ஒவ்வொரு உணவுப் பொருளையும் – ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளையும் எப்படிப் பாதுகாத்து – அதன் உபயோக நாட்களை எவ்வாறு நீட்டிப்பது – என்பதான சிந்தனையில் –  செயலில் சிரத்தையுடன்  ஈடுபட்டிருக்கிறோம். கொத்துமல்லி, வெந்தயக்கீரை, புதினா, துளசி ஆகியனவற்றை  வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளும் முயற்சியும் இதில் அடக்கம். குழந்தைகளும் – பெற்றோர்களும் – உள்நாடு – வெளிநாடு என்று பிரிவாலும் – கொரோனாத் திகிலாலும் கலக்கமுற்றுக் கிடக்கிறார்கள். ஏழ்மையில் உள்ளோரின் நிலை பரிதாபகரமாக உள்ளது.  என்று தணியும் இந்தக்  கொரோனா பயம்? என்று உலகோர் அனைவரும் இறைஞ்சும் இவ்வேளையில், தனிமனிதப் பாதுகாப்பும் பலமும் இன்றியமையாத சக்திகளாகும் என்பதை  வலியுறுத்தத் தேவையில்லை.

    அடிக்குறிப்புகள்

    (1) நமக்கு முன்னே உள்ள பிரச்சனையை நாம் முதலில், புரிந்து கொள்ள வேண்டும்: நம்மைச் சுற்றி – நம்முடைய சூழலில் தொற்றுக் கிருமிகள் பரவுகின்றன – அவை நம்மையும் கட்டாயம் வந்தடையும் – அவ்வாறிருப்பினும், ஒவ்வொரு தனிமனிதரும் வைரசிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது தான்.

    இவ்வாறு தனிமனிதர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பொதுவான நெறிமுறைகளை – சட்டங்களை, அரசு அறிவித்திருகிறது – மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் – ஒருவருக்கொருவர் எட்டத்திலே நிற்கவேண்டும்  – முகத்தில் – கண்ணைத் தவிர, பிற ஓட்டைகளை மூடிக்கொள்ளவேண்டும் – சுத்தமாய் இருக்கவேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டியவையே. அவற்றை அலட்சியம் செய்யக் கூடாது.

    அதே நேரத்தில், காற்றை ஊடகமாகக் கொண்டு வரும் ஒன்றை முழுதுமாய்க் கட்டுப்படுத்துவது என்பது அரிது – அதுவும் கிருமிகள், ஒன்றிரண்டாய்ப் பரவுவதில்லை – ஒரு இருமலில் சுமார் 3,000, எச்சிற்துளிகள் இருக்கும், 20,௦௦௦ வைரஸ்கள் இருக்கும்.  தும்மல், இருமலைக் காட்டிலும் கூடுதலான காட்டமுடையது .  தும்மலில் 4௦,௦௦௦ எச்சிற்துளிகள் இருக்கும்; இருமலின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர்; தும்மலின் வேகம் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர்.

    இருமும்போதும் தும்மும்போதும், வெகு நுண்ணிய துளிச் சிதறல்களாய்ச் சளியும் கிருமிகளும் கலந்த மிகப் பொடிதான் எச்சிற்துளிகள் நோயாளியின் வாயிலிருந்து வெளிவந்து காற்றில் கலப்பதால்,  காற்றில் அவை பலமாய் நிற்பவை. (சிறு துளிகளுக்கு வாழ்க்கை அதிகம்). தும்மல் துளிகளின் பலம், இருமல் துளிகளின் பலத்தைவிட அதிகம். ஏனெனில், தும்மல் துளிகள் இன்னமும் பொடிதானவை.

    ஒரு இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு சுமார் ஒரு மணி நேரம், காற்றில் நிலைத்து மிதக்கும் தன்மை உடையவை  இந்த எச்சிற்துளிகள். எச்சிற்துளிகளின் பலத்தால் அவற்றில் உள்ள வைரஸ்களும் காற்றைப் பலமாய்ப் பிடித்துக்கொள்கின்றன

    எனவே நம்மீது தும்மல் அல்லது இருமல் நேரடியாகப் படவில்லை என்றாலும் கூட – அவை நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த எச்சிற்துளிகள் பொருட்களின் மீது படியவல்லவை.

    ஆகையால், சூழலில் உள்ள பொருட்களை நாம் – தொடுதலினாலும் பரவுகிறதான ஒன்றாய் இந்நோய் இருக்கிறது.

    மேலும், வயதாதானலும் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாலும் பலவீனமானவர்களாக இருக்கிறவர்களையே அது குறிவைக்கிறது.  இந்நோய் மனிதர்களை, மரணமுறச் செய்யும் பொறிமுறை (mechanism) மிகுந்த நுட்பமானது – விபரீதமானது ஏனெனில், அது நுரையீரல்களைத் தாக்கி மூச்சினை  நிறுத்திச் சாகடிக்கிறது.

    (2) அமெரிக்காவில் உள்ளவர்கள், நாங்கள் தும்பைக்கு எங்கே போவது என்று கவலைப்படத் தேவையில்லை. இந்தியத் தும்பையை ஒத்த ஏன் இன்னமும் ஒருபடி மேலான தும்பை இங்கு இருக்கிறது. நம்மூர் தும்பையைப் போலவே, இது சர்வ சாதாரணமாக, கால்படாத இடங்களில் எங்கும், முளைத்துக் கிடக்கறது. இதற்கு “Heal All” அல்லது “Self-heal” என்று பெயர் – தமிழில் சொல்லவேண்டுமென்றால் – சர்வரோக நிவாரணி. இது ஒரு சிறு செடி – புல் பூண்டுகளோடு – இயல்பாய் விளைந்து – கொள்ளை  அழகோடு காணப்படுகிறது. ஊதா வண்ணத்தில் உள்ள இதன் மலர்கள் கண்கொள்ளாக் காட்சி – இதை அப்படியே பச்சையாக உண்ணமுடியும் என்று சொல்கிறார்கள்.

    இப்போது இதற்கு சீசன் – சொல்லப்போனால் – இந்த ஆண்டு – சீசனுக்கு முன்னாடியே இது வந்துவிட்டது. நம் கொரோனா போராட்டத்திற்கு ஒத்தாசை செய்ய விரும்புகிறாற்போல.

    பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு “Heal All” செடி பற்றித்  தெரியவில்லை. இதனைக் களை என்று நினைத்து அழித்துவிடுகிறார்கள். ஆனால் சில வர்த்தக நிறுவனங்கள் – “Heal All” பண்ணைகள் வைத்து இதிலிருந்து “Heal All” எண்ணெய் இறக்கி நல்ல விலைக்கு விற்று வருகிறார்கள்.

    அமெரிக்காவில், கற்பூரவள்ளி இல்லை என்று எண்ணாதீர்கள். மெக்சிகன் மின்ட் என்ற பெயரிலும் விக்ஸ் பிளான்ட்  என்ற பெயரிலும் கற்பூரவள்ளி இங்கு கிடைகிறது. விதை அல்லது துண்டங்கள் (cuttings) வாங்கி நாமே வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும்.

    (3) வசம்பு (Sweet Flag) அமெரிக்காவிலும் இருக்கிறது. வசம்புக் கன்றுகள் கூட சில நர்சரிகளில் விற்கப்படுகின்றன.

    நம்மூர் வசம்பு (Acorus calamus)  மற்றும் அமெரிக்காவின் வசம்பு இரண்டுமே இங்கு உள்ளன. அமரிக்க வசம்பு (Acorusamericanus) நம்மூர் வசம்பைப் போலவே இருப்பினும் தாவரவியல் ரீதியாக இது வசம்புக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னோர் உறுப்பினர் அவ்வளவே (வசம்பை, யுரேசிய  வெள்ளையர்கள், அமெரிக்காவில் புகுத்தியதாக வரலாறு). இங்குள்ள பாரம்பரியம் மிக்க வெள்ளையர்கள் பலரும், மருத்துவப் பயன்பாட்டுக்கும் அழகுக்கும் என வசம்புச் செடிகளை வீட்டில் வளர்க்கிறார்கள். (ஆனால், அமரிக்காவின் USDA, உணவுப் பொருட்களில் வசம்பைச் சேர்ப்பதைத் தடை செய்துள்ளது).

    (4) வெள்ளைக் கடுகு விதைகள் இங்கே கிடைக்கின்றன. இங்கு இது வெள்ளைப் பனிக் கடுகு என்று அழைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கு நம்மூர் வெள்ளைக் கடுகு போலவே இருக்கிறது.

    அமெரிக்காவில்  வேப்பமரங்கள் உண்டு என்றாலும் – எல்லா மாநிலங்களிலும் அவை வளரா. புளோரிடா, டெக்ஸாஸ், அரிஸோனா, கலிபோர்னியா, போன்ற சாதகமான தட்பவெப்பச் சூழ்நிலைகள் உள்ள மாநிலங்களில் – சில இடங்களில் வேப்ப மரங்கள் – வேப்பமரப் பண்ணைகள் உள்ளன என்று அறிகிறோம். வேப்ப மரங்களை வளர்க்க அமெரிக்காவில் தடையில்லை என்றாலும், வேம்புக்குத் தேவையான தட்பவெப்ப நிலை இல்லாததாலும்  – வேம்பினால் வணிக இலாபமும் இல்லை என்பதாலும்  அமெரிக்கர்கள் வேப்பமரத்தைப் பயிரிடுவதில் நாட்டம் காட்டுவதில்லை. இப்போதுள்ள சில வேப்பமரங்கள் அல்லது வேப்பம்பண்ணைகள், பெரும்பாலும் இந்திய ஆர்வலர்களால் வந்தவை என்பதாகச் சொல்லப்படுகிறது. அமரிக்காவில், யூகலிப்டஸ் மரங்கள் உண்டு என்றாலும், வெகு பரவலாக எல்லோராலும் வளர்க்கப்படும் மரமாக அல்லது சாலை நெடுகிலும் காணப்படும் மரமாக, சர்வஜனக் காட்சியாக எல்லார் வீடுகளிலும் எல்லா மாநிலங்களிலேயும் இதைக் காண முடிவதில்லை.

    நான் உலர்ந்த வேப்பிலையையும் வேப்பிலைத் தூளையும், மற்றும் யூகலிப்டஸ் இலைத் தூளையும் ஆன்லைனில் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன்.

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 13

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 13

    அவ்வைமகள்

    13. ஆயத்தச் சிந்தையும் புரட்சிப் பிரசவமும்

    புரட்சிகள் எவ்வாறு உருவாகின்றன என்று நாம் சிந்தித்து வரும் இத்தருணத்தில், புரட்சிக்குண்டான காரணங்கள், சமுதாயத்தில் எல்லோரும் அறியும்படியாக், பொத்தம்பொதுவில் நடக்கிறபோது – ஏன் ஒருவர் – ஒரே ஒருவர் புரட்சியாளனாக ஆகிறார் என்று ஒரு வினா வருகின்றது.

    புரட்சியும் அறிவியல் கண்டுபிடிப்பும் ஒன்றே போன்றவை. புரட்சியைப் போன்றே, அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று நிகழவேண்டுமேன்றால் அதற்கு, பல்முகக் காரணங்கள் இருக்கவேண்டும் (அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்கள்); புறத்தே இருந்து வரும் ஊக்குவிப்பான்களும் வேண்டும். இவை அனைத்தும் எல்லாத் தருணங்களிலும் எவருக்கும் கிடைக்கப்பெறுவதாகத்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது. ஆனால் ஒரே ஒருவர் தான் புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார்.

    இது இவ்வாறு நடப்பதன் காரணம் என்னவென்று நோக்கினால், தயார் நிலைச் சிந்தையோடு (prepared mind) எவரொருவர் இருக்கிறாரோ அவர் மட்டுமே அந்த அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார் என்பது புரியும்.

    தயார் நிலைச் சிந்தையை விளக்குவதற்கு. சர் ஐசக் நியூட்டனை ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்வோம். என்றைக்கு ஆப்பிள்  மரங்கள், இந்த பூமியில் உருவாகினவோ அன்றிலிருந்தே ஆப்பிள் பழங்கள் மரத்திலிருந்து கீழே விழுந்து கொண்டு தான் இருந்தன.  ஆனால், தன் முன்னே மரத்திலிருந்து ஆப்பிள் விழுகையில், இப்பழம் ஏன் மேலே செல்லாமல் கீழே விழவேண்டும்? என்கிற முதல் வினாவை – உலகில் யாரெவரும் எழுப்பாத முதல் வினாவை நியூட்டன் எழுப்புகிறான். அந்த வினாதான் புரட்சியின் பொறி – அந்தப்பொறி தான் – அவனை மாபெரும் அறிவியல் புரட்சி ஒன்றை நிகழ்த்தவைக்கிறது. இன்று நியூட்டன் அறிவியலில் ஒரு சகாப்தம்.

    நியூட்டனைப்போன்றே நம்மவரான சர் சி.வி. ராமன், மத்தியதரைக்கடலில் பயணம் செய்யும்போது தன கண்முன் தோற்றம் தந்து கொண்டிருந்த, வானமும் கடலும்  ஏன் நீல வண்ணத்தில் இருக்கின்றன என்று வினவினார். வானம் என்பது வெகு இயல்பாக எப்போதும் எல்லோருக்கும் நீலவண்ணத்தில் தான் காட்சியுறுகிறது ஆனால் அது வினவவேண்டிய விடயமாக. ஆய்வு செய்யவேண்டிய விடயமாக சி. வி. ராமனுக்கு மட்டுமே புலப்பட்டது; அதனால் அவன் மாபெரும் அறிவியல் புரட்சியை நிகழ்த்துகிறவனாயினான். இன்று நியூட்டனைப் போன்றே சி. வி. ராமனும் அறிவியலில் ஒரு சகாப்தம்.

    தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளினால் உந்தப்பட்டு, அந்நிகழ்வுகளின் மூலமாய் நிற்கும் ஆதியை சரிவர அறியும் முகமாக, அதுகாறும் வேறு எவரும் கேட்காத முதல் கேள்வியை ஒருவர் எழுப்புகிறார் என்றால், அவருக்கு ஆங்கே, ஆயத்த உள்ளம் – தயார் நிலைச் சிந்தை – Prepared Mind – வாய்க்கப்பெற்றிருந்தது என்று பொருள்.

    சரி, ஒருவர் தயார் நிலைச் சிந்தையைப் பெற வேண்டுமென்றால்  அதற்கு என்ன தேவை என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது அல்லவா?

    பாண்டித்யம்  அதாவது  ஆழ்ந்த அறிவும் அதனோடு  தம்மைச் சுற்றி நடப்பவற்றைக் காணுகிற இயல்பும், சமூக நேசமும், எளிமையான எண்ணப்போக்கும் ஆகிய நான்முகத் திறன் ஒரே நேரத்தில் தேவை.

    புரட்சி விளைக்கப் போகிற துறை எதுவோ அல்லது உபதுறை எதுவோ அல்லது அத்துறையைச் சார்ந்த சித்தாந்தம் எதுவோ அதிலே மிகவும் ஆழ்ந்து நிறைந்த பாண்டித்யம் ஒருவருக்கு இருக்கிறபோது அவர் ஒரு உண்மையான, சமூகநேசனாக இருக்கிற வகையில், அவருக்கு வாய்க்கப் பெற்றிருக்கிற பாண்டித்யத்தின் நாடிநரம்புகளை மீட்டிக் கிளர்த்துவிடும்படியான  சம்பவம் ஒன்று அவரது சூழலில் நடக்கிறபோது, அக்கணம், அவருள் தடையின்றி, எளியதாய், அனாயாசமாய்க் கிளம்புவதுதான் புரட்சியின் பொறி.

    பொறி கிளம்பியது என்றால் உடனே புரட்சி விளைந்துவிடும் என்று பொருள் இல்லை. நான் ஏற்கனவே கூறியதைப்போல, துரிதப்புரட்சிகள் நிலைத்தவையகா!

    பொருட்கள் உற்பத்தியில், Idea to Product என்கிற வாசகம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிற வாசகம். எண்ணம் செயல்  ஆகிய இரண்டும் தொடர்புடையவை என்றாலும், அவை இருவேறு துருவங்களைப் போன்று எட்டித் தொலைவில்  நிற்பவை. ஒரு எண்ணமானது  செயல் எனும் நிலையை அடைய நிறையப் பாடுபடவேண்டும் – அதற்கு, நிறைய காலம் பிடிக்கும். பட்டுபூச்சியின் வாழ்க்கைச் சுழலில் நடக்கும் உருமாற்ற நிகழ்வுகளைப் போல – பலபடி நிலைகளை எண்ணம் கடந்து சென்றாக வேண்டும். அப்போதுதான் அது  தேவையான பரிமாணங்களையும், பலத்தையும், ஆற்றலுடன் விரைந்தெழும், உத்வேகத்தைப் பெற்றதாய், வெளிக்கிளம்ப முடியும்.

    புரட்சிகள் உருவெடுக்கத் தேவைப்படும், இவ்வாறான காலத்தேவையை, புரட்சிக் கருநிலைக் காலம்  அல்லது புரட்சிக் கர்ப்பக் காலம் (gestation Period of revolution) எனலாம்.

    இந்தக்கட்டுரைத் தொடரின் கதாநாயகர்களான வள்ளலாரும் ஸ்டீவ் ஜாப்சும் இவ்வாறேதான் புரட்சிக் கர்ப்பக் காலத்தினை அனுபவித்து வெளி வந்தவர்கள். அவர்களது புரட்சிகள் நிலைத்தவையாய் நின்றமைக்கு, அவர்கள் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்ட இயற்கையான புரட்சிப் பிரசவமே காரணம்.

    சமயத்தில் பாண்டித்யம் இருந்தமையால், தன்னைச் சுற்றி, சமயம் தொட்டு சம்பவங்கள் நிகழ்ந்த வாக்கில், என் மக்களுக்காய் நான் எளிமையாய் என்ன செய்வது என்ற தீவிர சிந்தையில்  மனமும் உடலும் நெகிழ்ந்து,  வள்ளலார்  சமயப் புரட்சிக் கருவுருகிறார்.

    கணினித் துறையில் பாண்டித்யம் இருந்தமையால், தன்னைச் சுற்றி, கணினி தொட்டு சம்பவங்கள் நிகழ்ந்த வாக்கில், என் மக்களுக்காய் நான் எளிமையாய் என்ன செய்வது என்ற தீவிர சிந்தையில்  மனமும் உடலும் நெகிழ்ந்து,  ஸ்டீவ் ஜாப்ஸ்  தொழிற்நுட்பப் புரட்சிக் கருவுருகிறார். துறை வேறு, கால கட்டம் வேறு என்றாலும், புரட்சியின் கட்டுமானத்தில் இவ்விருப் புரட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை.

    சரி, புரட்சியாளர்களின் வாழ்நாளிலேயே, அவர்களது புரட்சி உச்ச நிலை வளர்ச்சியைக் கண்டுவிடுகிறதா என்று கேட்போமேயானால், இல்லை என்று தான் கூற முடியும். பல புரட்சியாளர்களின் புரட்சி அவர்கள் கண்முன்னாலேயே, தரைமட்டமாய் வீழ்வதுண்டு. சில புரட்சியாளர்களின் புரட்சி அவர்கள் வாழும்போது வளர்ந்து, அவர்கள் மறைவுக்குப்பின் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி நிற்பன.

    நியூட்டனுக்கும் ராமனுக்கும் இதே நிலைதான் – நியூட்டனின் புவியீர்ப்புக் கொள்கை விதியை ஒரு பரிசோதனையாகச் செய்து நிரூபணம் செய்ய 111 வருடங்கள் ஆயின; இது நியூட்டன் இறந்து 71 ஆண்டுகளுக்குப் பிறகு. ராமனின் ராமன் விளைவை ஒரு வணிகக் கருவியாக (Raman Spectrometer) உருவாக்கி வெளியிட 27 வருடங்கள் ஆயின. ஆனால் இந்தக்  கருவி, ராமனின் மறைவுக்குப் பிறகு, பல வளர்ச்சி நிலைகளைக் கடந்து இன்று சிறப்பான மேம்பட்டக் கருவியாக புழக்கத்தில் இருக்கிறது. ராமன் தனது கண்டுபிடிப்பினாலான முதல் நிலைக் கருவியைத் தானே காணும் பேறு  பெற்றார். நியூட்டனுக்கு  அந்த பாக்கியம் இல்லாமல் போனது.

    வள்ளலார் பற்றியும், ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும், தற்காலத்தில் நாம் நித்ர்சனமாக அறியும் உண்மைகளை வைத்து அளவிடும்போது, ஸ்டீவ் ஜாப்ஸ், வள்ளலார் இருவருமே உலகிற்கு, நிலைத்தப் புரட்சியை அளித்தவர்களே என்று இப்போது நம்மால் உறுதியாகக் கூற முடியும்.

    (மேலும் பேசுவோம்)

    Share
  • எழுவகைப் பெண்கள் – 13

    எழுவகைப் பெண்கள் – 13

    அவ்வைமகள்

    தென்னிந்தியத் தலைமுடிக்காய் ஆலாய்ப் பறக்கும் உலகம்

    பெண்களின் உடல்நலம் குறித்து நானும் அந்த ராணுவ அதிகாரியும் தொடர்ந்து செய்து வரும் உரையாடலில் அடுத்த பகுதியாக அமைவது பெண்களின் தலை முடி.

    அவர் சொன்னார்: எங்கள் அமெரிக்கப் பெண்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை இருக்கிறது – அதுதான் தலைமுடிப் பிரச்சினை. முடிப் பராமரிப்புப் பொருட்களுக்காகவும் முடிப் பராமரிப்புச் சேவைக்காகவும் அவர்கள் அதிகப் பணம் செலவிடுகிறார்கள். அதிக நேரம் செலவிடுகிறார்கள். இருப்பினும் சரியான தலைமுடி ஆரோக்கியத்தையோ அல்லது உண்மையான பராமரிப்புச் சேவையையோ அவர்கள் அடைந்ததான நிறைவு அவர்களுக்கு ஏற்படுவதில்லை. எங்கள் பெண்கள் தலைமுடிக்காகச் செலவிடும் பணம் கொஞ்சநஞ்சமல்ல. ஆண்டுக்கு பில்லியன் கணக்கில் போகிறது. நீங்களே வலை தளத்தில் சென்று  பார்க்கலாம். நான் சொல்வது அத்தனையும் உண்மை! தலைமுடிப் பொருட்கள் என்கிற மாபெரும் வணிகத்துறை அமெரிக்கப் பெண்களை வைத்தே எழுந்து கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

    வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணத்தில் முக்கால்வாசி தலைமுடிக்கே போனதென்றால் இந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?  இந்தப் பரிதாப நிலை எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்குக்கிறது என்றவர் மேலும் தொடர்ந்தார்.

    இந்நிலையில் நான் இன்னொன்றையும் அறிந்து கொண்டேன். உலகில் தென்னிந்தியத் தலைமுடிக்கு ஏகப்பட்ட கிராக்கி – டிமாண்ட் இருக்கிறது. எத்தனை பணம் கொடுத்தும் உங்கள் தலைமுடியை வாங்கிச் சிகையலங்காரம் செய்து கொள்ள உலகமே துடிக்கிறது என்றறிந்தேன் என்றார்.

    பொதுவாகவே உங்கள் பெண்களின் தலைமுடி கருப்பழகுடன் நீளமாக, அடர்த்தியாக, ஆரோக்கியமாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. இதற்கு ஜெனிடிக் காரணங்கள் உண்டா அல்லது பராமரிப்பின் இரகசியம் தான் காரணமா?

    ஜெனிடிக் அதாவது மரபு சார் ரீதியாகப் பார்க்கிறபோது, எம் இன மக்களின் தலைமுடி கருப்பு நிறத்தில் சுருளற்று நேரிழைகளாக இருக்கும். முடி அடர்த்தியில் உலகில் நாங்கள் இரண்டாவதுதான் – வெள்ளையர்கள் தான் அடர்த்தியில் முதலிடம்.

    ஆனால் எங்கள்  மண்டை மிகுந்த எண்ணெய்ப் பசையோடு இருக்கும் – முடி வெகு அடர்த்தியாக இல்லையென்றாலும் நல்ல அடர்த்தி இருக்கும். வெய்யிலில் இருந்து மண்டையைக் காப்பாற்றுவதற்காக இயற்கை செய்திருக்கிற ஏற்பாடுகள்தாம்  இவை இரண்டுமே.

    அதே போன்று  கருப்பு நிறமும், வெய்யிலின் கொடை தான். எங்கள் முடியில் மெலனின் நிறமி செரிந்திருப்பதால் தான் கரு நிறம். மெலனின் நிறமிகளில் இரண்டு வகை  உண்டு: யூமெலனின் (eumelanin) மற்றும் பியூமெலனின் (phaeomelanin).

    யூமெலனின் ஆழ்ந்த கருப்பில் உள்ள நிறமி. பியூமெலனின் வெளுத்த கருப்பில் உள்ளது. எங்கள் முடியில், யூமெலனின் அதிகம் இருப்பதால் ஆழ்ந்த கருவண்ணம் கொண்ட முடியாக அது தெரிகிறது. வெய்யில் பிரதேசங்களில் யூமெலனின் தோலிலும் முடியிலும் செறிந்து இருப்பது இயற்கையின் அற்புதமான ஏற்பாடு. எங்களுக்கெல்லாம் தோல் புற்றுநோய் வராது என்பதற்கும் எங்கள் தோலில் யூமெலனின் செரிந்திருப்பதுதான் காரணம்.

    மேலும் எங்களுடைய தலைமுடியின் மயிர் ஒவ்வொன்றும் வட்ட அச்சில் சீராக உருவாகி ஒரு குழல் போல இருக்கும்.

    எங்கள் முடிக்கு சுருள் தன்மை கிடையாது. நேர் மயிரிழைகளான அமைப்பு அதற்கு இருப்பதால், நீளவாக்கில் தங்குதடையின்றி அது அழகாய் அது வளர்கிறது.

    ஆனால், முடியின் ஆரோக்கியமும் நீளமும், அடர்த்தியும் பெரும்பாலும் பராமரிப்பில் தான் உள்ளது.

    உலகின் மிக உறுதியான தலைமுடி எங்களுடையது. எந்தவித சிகை அலங்காரத்துக்கும் எங்கள் தலைமுடி நெளிந்து வளைந்து ஒத்தாசை கொடுக்கும். மேலும், இழுப்புதிறன் அதிகம் உள்ளதால் வெகு சிக்கலான  முடிச்சுகள் – பின்னல்கள் என ஏகப்பட்ட தொந்தரவுகளையும் அது தாங்கி நிற்கும். அறுந்து போகாது – பிடுங்கிக்கொண்டு வராது. மேலும் எங்களது தலைமுடி எல்லா வண்ணங்களையும் அனாயாசமாய் ஏற்றுக்கொள்ளும். உலக மார்க்கெட்டில், தென்னிந்திய முடிக்கு உள்ள கிராக்கிக்கும் போட்டிக்கும் இதுதான் காரணம் என்றேன்.

    ஓ அப்படியா? பராமரிப்பில் தான் உங்கள் முடிவளத்தை நீங்கள் காத்துக் கொள்ளுகிறீர்கள் என்று சொல்லலாமா?

    ஆம்! எங்கள் முடி பராமரிப்பு முறைகள்  மிகவும் பழமையானவை என்பதோடல்லாது மிகவும் அறிவியல் பூர்வமானவை என்று தொடர்ந்தேன்.

    வாரம் இரண்டு நாள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும் என்பது கட்டாய நியதி, என்று நான் சொல்லிமுடிக்கும் போதே குறுக்கிட்டார்.

    ஏற்கனவே எண்ணெய்த்தலை – அதற்கு எண்ணைத் தேய்த்துக் குளிப்பதா? இது சுத்த முட்டாள்தனம் – இதைப் போய் அறிவியல் முறை என்கிறீர்களே – என்றார்.

    இதை நான் பின்னர் விளக்க இருந்தேன் – உங்கள் கேள்வி இதனை முதலிலேயே விளக்க வைக்கிறது – மிக்க நன்றி என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.

    முதலில், மண்டையில் எண்ணெய்ப் பசை எதனால் வருகிறது என்று பார்ப்போம். செபம் (sebum) எனப்படும் ஒரு பிசின் போன்ற கொழுப்பினை, நம் மண்டையின் புறத்தோல் (scalp) ஓயாமல் சுரந்து கொண்டே இருக்கிறது. செபச் சுரப்பிகள் தலை முதல் கால் வரை உடலின் மேல்தோல் முழுவதும்  இருக்கின்றன. ஆனால் சுரக்கப்படுகின்ற செபம் உடல் உறுப்புக்கு ஏற்றார் போல் கொஞ்சம் வித்தியாசப் படுகிறது. மண்டையில், முகத்தில், கழுத்தில், கைகளில், கால்களில் சுரக்கும் செபத்தின் தன்மைகள் வெவ்வேறாய் இருக்கும். உறுப்பின் பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு அவ்வுறுப்பு இலக்காகும் காலம் – அதன் தீவிரம் ஆகியனவற்றைப் பொறுத்து செபம் மாறுபடுகிறது.

    பொதுவாக, செபம் இலேசான மஞ்சள் வண்ணத்தில் உள்ளதொரு பிசினாகும். மண்டையில் சுரக்கும் செபத்தில் என்னென்ன இருக்கின்றன என்று பார்த்தால்:

    • த்ரிக்ளிசரைட் – திடப்பொருள்
    • கொழுப்பு அமிலங்கள் – திடப்பொருள்
    • கொலச்டரால் எஸ்டர்கள் – கூழ்மப் பொருள்
    • கொலச்டரால் – திடப்பொருள்
    • மெழுகு – திடகாத்திரம் இல்லாத திடப்பொருள்
    • ஸ்குவாலீன் எனப்படும் ஒரு சிறப்பு எண்ணெய்

    செபத்தின் பிசின் தன்மைக்கு இந்தக் கலவையின் கூட்டுப் பண்பே காரணம். செபம் என்பது மண்டையையும் முடியின் வேர்க்கால்களையும் உயவுத் தன்மையோடு (lubrication) ஈரப்பதத்தில் வைத்துக் காப்பதற்காக சுரக்கப்படுவது.

    மண்டையின் உள்வெப்பச்சூடு, வெய்யில் மற்றும் வெளிக்காற்றின் தாக்கம் ஆகியனவற்றை எதிர்த்து மண்டையில் சுரக்கும் செபம் ஓயாமல் போராடுகிறது. அதன் விளைவாக, செபம், ஓயாமல் உலர்ந்து வறண்டு போய், கெட்டித்துப் பாளம் பாளமாய் மண்டையின் மீது படிக்கிறது. இவ்வாறு மண்டியில் அது உலர்ந்து படியும்போது, வேர்க்கால்களை இறுகிப்  பிடித்து அமுக்குகிறது. பழைய செபம் மேலே உறைந்து வேர்க்கால்களை அடைத்து நிற்பதால், புதிய செபம் வெளியே வர முடியாமல் உள்ளிருந்து விசையுடன் மயிர்க்காலை வெளித்தள்ளி, தான் வெளிவர எத்தனிக்கிறது. ஏற்கனவே தன்மீது செபம் உறைந்ததால் நெளியமுடியாது விறைத்து நிற்கிற மயிர்க்கால் உள்ளிருந்து வெளிப்புறம் ஒரு அழுத்தமும், வெளியிலிருந்து உட்புறம் ஒரு அழுத்தமும் என்கிறதான இருமுனை அழுத்தத்தை அடைவதால், வேர்க்கால் தளர்ந்து – கழன்று – முடி உதிர  ஆரம்பிக்கிறது.

    எனவே, உறைந்து போகும் செபத்தை வெளியேற்றுவது என்பது முக்கியமாகிறது.

    நம்மைப்போலவே விலங்குகள் பலவற்றுக்கும் செபம் சுரக்கிறது. எடுத்துக்காட்டாக, பறவைகளுக்கு நம்மைப்போலவே தாராளமாக செபம் சுரக்கிறது அவற்றின் இறகுகளின் வேர்க்கால்களில்.  பறவைகள், தம்  அலகால் தம்  இறகை அடியிலிருந்து வெளியீடாகக் கோதிக் கோதி, செபத்தை இளக்கி, இளகிய செபத்தை  தம் சிறகின் மீது தீற்றி தீற்றி இறகின் வேர்க்கால்களை பராமரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு கோதி விட்டவுடன் அவற்றின் இறகுகள் பளபளப்பு ஏறி மின்னுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த மினுமினுப்பு, அவற்றின் மீது படும் சூரிய ஒளியை எதிரொளித்து விடுகின்றன. பறவைகள் வெட்ட வெளியில் சதா இருப்பினும் அவை பாதிப்பு இன்றி இருப்பதன் காரணம் செபம் தரும் பாதுகாப்பு தான்.

    பறவைகளைப் போலல்லாமல் மனிதனுடைய செபம் கொஞ்சம் பிரச்சனைக் குரியதான விடயமாகும்.

    தட்டையான மண்டை உச்சியும், பெருத்தத் தலையுமாக நிமிர்ந்து நிற்க்கக் கூடிய ஒரே விலங்கு மனிதன் எனபதும் அவனுடைய இயக்கங்கள் பிற விலங்குகளை விட வேகத்தில் குறைவு என்பதாலும் – அவனுக்கு வெப்பத்தில் வியர்க்கும் கூடுதல் தகவமைப்பு உள்ளது என்பதாலும் சிக்கல்கள் விளைகின்றன.

    அதனால்,  செபம் கெட்டியாவதும் வியர்வையுடன் சேர்ந்து, அது கசண்டாகி மண்டையில் படிந்து உலர்வதும் வெகு துரிதமாக நடந்துவிடுகிறது – கூடவே மனிதனுக்கு நாள்தோறும் நடக்கும் வளர்சிதை மாற்றத்தால் விலகும் இறந்த செல்களும் இக்கசண்டோடு சேர்ந்து இன்னமும் கெட்டிப் படுகின்றன.

    எனவே, உறைந்து போகும் செபத்தை நீக்கி, மண்டையையும் மயிர்க்கால்களையும் தொடர்ந்து சுத்தமாய் வைக்க வேண்டிய நித்திய கடப்பாடு மனிதனுக்கு உள்ளது. அன்றேல், அவனுக்கு மண்டையின் ஆரோக்கியமும் – முடியின் ஆரோக்கியமும் கெட்டுப்போகும்.

    இங்கு எண்ணெய்க் குளியல் எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம். செபத்தில் உள்ள கொழுப்புப் பொருட்கள் யாவும் பூரிதத் தன்மை (saturated) உள்ளவை – விரைவில் ஆவியாகி மண்டையை விட்டு வெளியேறி விடாமல் இருப்பதற்கான இயற்கை ஏற்பாடு இது.

    எனவே நாம் ஒரு சவால் நிறைந்த செபத்தை மண்டையில் சுரக்கிறோம்.  இங்கு தான் சில எண்ணெய்களின் ஆற்றல் பற்றிய அறிவு மிக முக்கியமாகிறது. திட மற்றும் கூழ்மக் கொழுப்புகளைக் கரைக்கும் ஆற்றல் சில எண்ணெய்களுக்கு உண்டு. அவற்றுள் ஒரு சில எண்ணெய்களுக்குள் மட்டுமே நம் தலையில் பயன்படுத்தக் கூடிய தகுதிகள் உண்டு அவை: நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், இந்த நான்கு எண்ணெய்களுக்குள் இரண்டு எண்ணெய்கள் கொஞ்சம் பழசானால் காரல் (rancidity) எடுப்பவை: ஆலிவ் எண்ணெய் மற்று தேங்காய் எண்ணெய்.

    விளக்கெண்ணெய், அதிக அடர்த்தி உடையது எனவே முழுதாய்த் தனியே தலைக்குப் பயன்படுத்தமுடியாது. ஆக, ஒரு எண்ணெய் மட்டுமே தலைக்கு வைக்க, மிகச்சிறந்த பயன்பாட்டுத் தகுதிகள் உடைத்ததாய்  இருக்கிறது; அந்த எண்ணெய் தான் நல்லெண்ணெய்; நல்ல எண்ணெய் என்பதால் இதற்கு நல்லெண்ணெய் என்று பெயர்.

    தலையில் பயன்படுத்தும் படியான கூடுதல் தனிச்சிறப்பும்  நல்லெண்ணெய்க்கு உண்டு. அது என்னவென்றால், தலையில் சுரக்கும் செபத்தில் இருக்கிற அதே முக்கியப் பொருட்களான த்ரிக்ளிசரைட் மற்றும் கொழுப்பு அமிலங்களை, நல்லெண்ணெய், திரவ நிலையில் வைத்திருக்கிறது – அதுவும் மிக அதிகமான அளவில். மேலும்,  நல்லெண்ணெயிலே, வைட்டமின் K  தாராளமாக இருக்கிறது. இதனால், கொழுப்புத் தன்மை உடைய செபத்தைக் கரைத்தெடுக்கும் ஆற்றல் கொண்ட – ஒரு நேசனாய், நல்லெண்ணெய் விளங்குகிறது.

    இருப்பினும் நல்லெண்ணெயை நாங்கள் தலைக்குளியலுக்கு அப்படியே பயன்படுத்துவதில்லை இஞ்சி, மிளகு, கைக்குத்தல் அரிசி சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணெயை, இளஞ்சூட்டில் தலையில் அழுத்திப் பரபரவெனத் தேய்த்து – எண்ணெய் மயிர்க்கால்களில் இறங்குமுகமாக, ஒரு வாத்தியத்தைத் தட்டுவது போல் லயத்தோடு தட்டி – ஒருமணிநேரம் ஊறிய பின்பு – கவனமாகத் தயாரிகப்பட்ட சிகைகாய்ப் பொடிபோட்டுக் குளித்து எழுவது வழக்கம்.

    இவ்வாறான எண்ணெய்க் குளியலின் போது, தலைக்கு எண்ணெய் வைத்தபின் உடல் முழுவதும் இடு பொருட்கள சேர்க்காத தனி நல்லெண்ணெய், தடவி, உடல் தோல் – தசையை நன்கு உருவிவிடுவார்கள்.

    இவ்வாறாக, தலையும் – உடலும் ஏகமாக ஒரு மணி நேரம் எண்ணையில் ஊறிக் குளிப்பதுதான்  எண்ணெய்க் குளியல்.

    வாரம்  இருமுறை எனும்போது – ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனிதனி நாட்கள், பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளி. ஆண்களுக்கு புதன் மற்றும் சனி.

    இது என்ன புதுப் புதிராய் இருகிறதே – ஆணையும் பெண்ணையும் குளியலில் கூட வேறு வேறாய்ப் பார்க்கிறீர்களே – ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தனி நாட்களா – உண்மையாகவா சொல்லுகிறீர்கள்? என்றார்.

    ஆமாம், ஆணின் உடல் – பெண்ணின் உடல் ஆகியன உட்ற்கூற்றிலும் – வளர்சிதை மாற்ற  வேகத்திலும், உடலின் வெப்ப உற்பத்தியிலும் வேறுபட்டவை என்பதால் அவர்கள் இருவருக்கும் பொருத்தமான கோள் அமைப்பு கொண்ட நாட்கள் தெரிவு செய்யப்பட்டன என்றேன்.

    வெகு சுவாரசியமாய் இருக்கிறது – தலைமுடி விஷயத்தில், நான் உங்களிடம் நிறைய கேட்க வேண்டியதிருக்கிறது என்றார்.

    தொடர்ந்து பேசுவோமே என்றேன்.

                                                     (மேலும் பேசுவோம்)

    Share