Blog

  • காற்று

    ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா )
    காற்றுக்கு மாற்றுப்பேர் நிறையவுண்டு
    கவரும்படி வீசினால் தென்றலாகும்
    சீற்றமுடன் வந்துவிடின் சூறாவளி
    சில்லென்று வீசினால் குளிர்காற்றாகும்
    வடக்கிருந்து வந்துநிற்கும் வாடையாகும்
    வனங்களிடை வீசினால் சேதமாகும்
    அளவோடு வீசினால் இதமேயாகும்
    ஆனாலும் காற்றெமக்கு ஆதாரமே !

    வாகனங்கள் ஓடுவதும் காற்றாலே
    வானூர்தி இயங்குவதும் காற்றாலே
    நாமியங்கி நடப்பதுவும் காற்றாலே
    நல்விளைச்சல் விளைவதுவும் காற்றாலே
    வான்வெளியில் காற்றுநிலை அற்றுப்போனால்
    மண்மீது உயிர்கள்நிலை அற்றுப்போகும்
    கஞ்சியின்று வாழ்நாளைக் களித்திடலாம்
    காற்றின்றி வாழ்ந்துவிடல் அரிதேயாகும் !

    சோறின்றி இருந்தாலும் இருந்திடலாம்
    சொட்டுநீர் அருந்தாதும் வாழ்ந்திடலாம்
    ஆடையின்றி வாழ்ந்தாலும் வாழ்ந்திடலாம்
    ஆனாலும் காற்றின்றி வாழமாட்டோம்
    நீழ்புவியில் வாழ்வார்க்குக் காற்றுத்தேவை
    நிம்மதியாய் வாழ்வதற்கும் காற்றும்தேவை
    ஆதாரம் எமக்கென்றும் காற்றேயாகும்
    ஆதலால் நற்காற்றைச் சுவாசிப்போமே !

    நகரத்தில் நற்காற்றை காணமாட்டோம்
    நகரமெலாம் நரகமாய் ஆகிப்போச்சு
    கட்டிடங்கள் இஷ்டமுடன் எழும்பியாச்சு
    கரியமிலவாயு அங்கே புகுந்துமாச்சு
    சுவாசிக்கும் காற்றெல்லாம் சுத்தமின்றி
    அபாயத்தை கொடுக்கும்நிலை ஆகிப்போச்சு
    சுவாசிக்க நற்காற்றை மக்கள்தேடி
    சுற்றுகிறார் வெட்டவெளி நாடிநாடி !

    தொழிற்சாலைப் புகையெல்லாம் ஒன்றுகூடி
    சுவாசிக்கும் காற்றுக்கு ஆப்புவைக்கும்
    அவலநிலை இப்போது அதிகமாகி
    அநேகம்பேர் நோயிலினிலே மாழுகின்றார்
    இயற்கைதரும் காற்றதனை எமக்குவாரா
    இடையூறு பலவழியில் பெருகிப்போச்சு
    ஆட்சியாளர் எல்லோரும் ஒன்றுசேர்ந்து
    அசுத்தமின்றிக் காற்றுவர வழியைக்காண்பீர் !

    காயமென்னும் பெயர்பெற்ற உடலம்தன்னை
    காற்றதுவே இயக்கி நிற்கும் சக்தியாகும்
    மாயமென உருவம்பெற்ற காற்றுமங்கே
    மறைந்தோடி விட்டுவிடின் மரணமாகும்
    உருவமிலா காற்றுமங்கே உள்ளேநின்று
    ஊனுடம்பை உருவமாக்கி காட்டிநிற்கும்
    அக்காற்றின் அழுக்ககற்ற முனையாவிட்டால்
    அனைவருமே அசைவற்று இருப்போமன்றோ !

    Share
  • ஓம்.சக்தி

    கவியோகி வேதம்

     

     

    amman

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    எவள்என்றன் முடிகோதி  “அஞ்சேல்நீ!” என்றாளோ

    இவளே இவளேஎன் துர்க்கைஅம்மை!

    எவள்என்றன் கவலையெல்லாம்  ‘தன்’கவலை என்றாளோ

    இவளே இவளேஎன் துர்க்கைஅம்மை!…………1

    .

    எவளென்றன் பயமெல்லாம்  தீர்த்தென்னை அணைத்தாளோ

    இவளே இவளேஎன்  அன்பு–அம்மை!

    எவளென்றன் வாழ்வினிலே ஒளிகூட்டி நிற்பாளோ,

    இவளே-   ஆம்என்றன்  கருணை-அம்மை!…….2

    .\

    நாடிக்குள் கசடெல்லாம்  நீக்கிப்பின் பலம்தந்து

    ‘நல்மூச்சால்’ உயிர்ப்பிக்கும்  பெரும்தேவி!

    பாடிநின்றேன், அழுதுவிட்டேன், பரவசத்தில் மிதந்துவிட்டேன்!

    பளீர்என்று  அருள்தந்தாள் சுடர்த்தேவி!! ………..3

     

    அன்று-ஒரு ராட்சசனின்  ஆணவத்தைக் குதிபோட்டு

    அடக்கினையோ என்றதற்குச் சிரிக்கின்றாள்!

    இன்றெதற்குப் பழையகதை? என்னுடைய நாத்திகத்தை

    இளஞ்சிரிப்பால் மாற்றியதைச் சொல்கின்றாள்!….4

     

    எதற்கம்மா ஆயுதங்கள் இத்தனையும் வைத்து-என்னை

    இன்னமும்நீ  பயமுறுத்தல் வேணும்?என்றேன்!

    கதைஇல்லை என்குழந்தாய்!  எளியவனாய்  மாறுமுன்னைக்

    கண்டவர்கள் துன்புறுத்தல் தடுக்கஎன்றாள்! ….5

    ..

    .      எலுமிச்சம்  பழமாலை, தனி-உன்றன் விருப்பமதோ?

    என்றேநான்  கேட்டதற்கும் பெரும்சிரிப்பு!

    கொலுவிருக்கும் அழகினுக்கும், என்மேலுன் பித்தினையே

    குறைப்பதற்கும் வைத்துள்ளேன் எனச்சொன்னாள்!…….6

    .

    எத்தனைதான்  கேள்வியுடன்  துர்க்கையம்மை இவளைநான்

    இம்சித்தால்  கூடஇவள் புன்னகைப்பாள்!

    முத்தனைய  செல்விஇவள்! மோகமதைத் தூண்டுபவள்!

    முழுதுமென்னைத் தந்ததனால் நெஞ்சில்வைத்தாள்!….7

    ….

    அடுத்தஒரு  பிறவியிலும் உரிமையுடைக் குழவியென

    அழகாக  எனை-ஆக்கு துர்க்கையம்மா!!

    எடுத்துவிடு மந்திரச்சொல், கொடுத்துவிடு உன்நேசம்!

    எப்போதும் இடுப்பிலென்னைத் தூக்கம்மா!

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (74)

    நிர்மலா ராகவன்

    பாராட்டு – பொறுமை

    நலம்-2

    வீட்டைச் சுத்தப்படுத்தினாலோ, தோட்டவேலை செய்தாலோ, திறம்பட சமைத்தாலோ, ஏன், எந்த காரியத்தையும் புகழ்ச்சியை எதிர்பார்த்தே செய்வார்கள் சிலர்.

    `பிறர் என்னைப் பாராட்டவேண்டும்!’ என்று மட்டுமே ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தால், அதில் முழு ஈடுபாடு இருக்குமோ, என்னவோ! ஆனால் எதிர்பார்த்த அங்கீகாரமோ, வெற்றியோ கிடைக்காதபோது, ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    கதை

    மாலதியின் தாய் சிறு வயதிலிருந்தே அவளைக் காரணமின்றி திட்டுவாள். தந்தையின் அளவுகடந்த அன்புக்குப் பாத்திரமாக இருந்ததுதான் அவளுடைய குற்றமாகப் போயிற்று.

    `ஏன் அம்மாவுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விட்டது?’ என்று வருந்திய குழந்தை மனம், `நான் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றால், அம்மாவின் முகத்தில் சிரிப்பு வரும்,’ என்று புரிந்துகொண்டது.

    இத்தகைய நடவடிக்கை அநாவசியமான மன இறுக்கத்தில் கொண்டுவிடும். நமக்குப் பிடித்ததைச் செய்யும்போதுதான் மனநிறைவு கிட்டுகிறது. அதையும் நம்மால் இயன்றவரை முயற்சி செய்து பார்க்கவேண்டும். நாம் செய்ய விரும்புவது நம் தகுதிக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டுவதும் முக்கியம். இல்லாவிட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    கதை

    “அம்மா என்னை வீணை கத்துக்கச் சொல்றாங்க, டீச்சர். எனக்குப் பிடிக்கலே,” என்று என்னிடம் அழமாட்டாக்குறையாகத் தெரிவித்தாள் ஓர் இளம்பெண். தந்தையை இழந்தவள். அவளைச் சிறுவயதிலிருந்தே நான் அறிவேன்.

    “எங்கே, பாடு!” என்று ஒரு ஸ்வரத்தை இழுத்தேன்.

    அவள் உடனே பாடிக் காட்டினாள். இரண்டு முறையும் அபஸ்வரம்தான். அப்போது புரிந்தது அவளுக்கு ஏன் இசை கற்பதில் ஆர்வம் இல்லையென்று. அவள் பாடியதற்கும் நான் பாடியதற்கும் சம்பந்தமே இருக்கவில்லை.

    இந்தப் பெண்ணுக்கோ வேறு துறைகளில் அபாரத் திறமை. எதற்காக வராததை எண்ணி முட்டிக்கொள்ளவேண்டும்?

    “ஒங்கம்மாவிடம் கண்டிப்பா சொல்லிடு. நான் என்னால முடிஞ்சதைத்தான் செய்வேன்னு!” என்று சொல்லிக்கொடுத்தேன்.

    அவள் முகம் மலர்ந்தது. தாயின் பேச்சை மீறலாம், மீறினால், அப்படியொன்றும் தான் தகாத காரியம் செய்பவளாக ஆகிவிடமாட்டோம் என்று புரிந்த மலர்ச்சி அது.

    `இப்படிச் செய்யேன்!’ என்று பிறர் வற்புறுத்திச் சொல்லும்போது, `முயற்சி செய்கிறேன்!’ என்றால், அனேகமாக அது நல்லவிதமாக நடைபெறாது.

    விடாமுயற்சி

    பட்டதாரியான என் தோழி அய்னுன் முதல் வகுப்புக்கான பரீட்சைக் கேள்விகளைப் பார்த்துவிட்டு, “எவ்வளவு எளிதாக இருக்கிறது!” என்று அதிசயப்பட, நான் சிரித்தபடி, “அந்த வயதில் உனக்கும் இதெல்லாம் கடினமாகத்தான் இருந்திருக்கும்!” என்றேன்.

    `எதுக்கு ஸ்கூலுக்குப் போகணும்?’ என்று அடம்பிடித்த குழந்தைகளில் நானும் ஒருத்தி. பழகிய சூழ்நிலைதான் பாதுகாப்பு என்று நினைத்த வயது அது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, `படிச்சாதான் புத்திசாலியா ஆகலாம். ஒன்னை எல்லாருக்கும் பிடிக்கும்,’ என்று, அவர்களுக்குப் புரிவதுபோல் எதையாவது சொல்லி சமாதானப்படுத்த வேண்டியதுதான்.

    எங்கள் வீட்டுக் குழந்தைக்கு நான் ஒரு கதை சொல்வேன். ஒருவன் மேசை, நாற்காலிகள் போட்டிருந்த ஒரு கடைக்குப் போய் `காப்பி!’ என்று கேட்க, `ஏய்! வெளியில் போர்டைப் பாக்கலியா? இது ஹோட்டல் இல்லே,’ என்று திட்டி, அடித்தார்கள். அதுவோ, மரச்சாமான்கள் விற்கும் கடை. “பாவம்! அவனுக்குப் படிக்கத் தெரியாதால் அடி வாங்கினான்,” என்று முடிப்பேன்.

    எத்தனையோ கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் படியாத பிள்ளை அக்கதையால் மனம் மாறினான். படிக்கத் தெரியாவிட்டால் அடியும் திட்டும் வாங்க வேண்டுமோ என்று அஞ்சி, அதற்குப்பின் ஒழுங்காக பாலர் பள்ளிக்குப் போனான்.

    `முட்டாள்தனமான கதை!’ என்று பெரியவர்கள் சிரித்தாலும், அவனுக்குப் புரிந்தது.

    பலர் படிப்பையோ, வேறு எந்த காரியத்தையோ அரைகுறையாக விட்டுவிடுகிறார்கள்.

    நாம் கடக்க வேண்டிய பாதையைக் கண்டு முதலில் மலைப்பாக இருந்தாலும், அஞ்சக்கூடாது. முயற்சி திருவினையாக்கும்.

    வெற்றி பெறுபவர்கள் விடாமுயற்சி உள்ளவர்கள். அதுதான் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

    ஒரு காரியத்தை முனைந்து செய்வது `பிடிவாதம்’ என்று பிறர் பழிக்கலாம். ஆனால், சிறுகச் சிறுக நீண்ட காலம் ஒரே காரியத்தைச் செய்தால்தான் வெற்றி கிட்டும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. நீண்ட தூரத்தைக் கடக்க ஒவ்வொரு அடியாக வைத்தால்தானே முடியும்!

    இலக்கை நோக்கி நட

    எந்தக் காரியமும் ஆரம்பிக்கும்போது மலைப்பாக இருக்கும். `இதை நம்மால் செய்ய முடியுமா?’ `பிறர் என்ன சொல்வார்கள்?’ என்றெல்லாம் யோசனை போனால், தயக்கம்தான் மிஞ்சும்.

    புதிய விளையாட்டுகளில் ஈடுபடுகிறவர்களது உடலின் பல பாகங்களிலும் வலி உண்டாகாமல் இருக்காது. அதைப் பொருட்படுத்தாது, உரிய மருந்துகளின் உதவியோடு தொடர்ந்து விளையாடினால், தானே ஆர்வம் பெருகும்.

    நாற்பது வயதுக்குமேல் நாங்கள் – பத்து பெண்கள் – நீச்சல் கற்க ஆரம்பித்தோம். என்னைத் தவிர பிறர் எல்லாரும் சீனர்கள். அவர்கள் எல்லாரும் அரைகுறையாக விட்டுப்போய்விட்டார்கள்.

    காரணங்கள்: உடல் கறுக்கிறது. பசி மிகுந்து, நிறையச் சாப்பிடுவதால் குண்டாகிவிட்டேன். முடி உதிர்கிறது.

    நானோ, எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். `பசித்தால் என்ன!’ என்று அலட்சியப்படுத்தினேன். முடி அதிகம் கொட்டாமல் இருக்க இரு கை நகங்களையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, மேலும் கீழுமாகத் தேய்க்க வேண்டும். (Reflexology – buffing the nails). நல்ல பலனளித்தது.

    உடலெல்லாம் வலிக்கிறதே!’ என்று நான் கூற, `வெந்நீரையும் பச்சைத்தண்ணீரையும் மாற்றி மாற்றி விட்டுக் குளியுங்கள்!’ என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு நாளும் மாறுதல் தெரிந்தது. ஊளைச்சதையும், கையின் வெளியில் தெரிந்த நரம்புகளும் மறைவதைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது.

    தற்காப்புக்கலையை பதினைந்து வருடங்களுக்குமேல் பயின்ற ஒரு இளைஞனைக் கேட்டேன்: “இன்று பயிற்சிக்குப் போனாயே! வலிக்கிறதா?”

    பதில் யோசியாது வந்தது: “வலிக்காவிட்டால், அது முறையான பயிற்சியே இல்லை!”

    தனக்கென ஓர் இலக்கு வகுத்துக்கொண்டு, அதை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தான் – எந்தவிதத் தடங்கலையும் லட்சியம் செய்யாது.

    வெற்றி தொடர

    சிலர் `ஆரம்பசூரத்தினால்’ வெற்றி பெற்றிருப்பார்கள். உடனே, தலையைச் சற்றே நிமிர்த்தி, நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு நடப்பதுதான் தம் `மேலான’ தன்மையை பிறருக்குப் புரியவைக்கும் என்று எண்ணுவதுபோல் நடப்பார்கள்.

    `யாரிவர்?’ என்று பார்ப்பவர்கள் புருவத்தை உயர்த்தினாலும், இதனால் மரியாதை கிடைத்துவிடும் எனபதில்லை. `ரொம்பத்தான் காட்டிக்கறான் (ள்!)’ என்று அவன்(ள்) காதுபடவே சிலர் முணுமுணுக்கும்போது அதிர்ச்சி அடைந்தாலும், அவர்கள் தம்மை மாற்றிக்கொள்வதில்லை.

    இப்படிப்பட்டவர்கள் சிறு வெற்றி அடைந்தாலே திருப்தி அடைந்துவிடுவர். அதனால், அதிக முன்னேற்றத்துக்கு வழியில்லை. பெருங்காயம் வைத்த பாண்டமாக, என்றோ செய்து முடித்தவைகளையேதான் பறைசாற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.

    அதிலும், இளம் வயதிலேயே அதிகமான முன்னேற்றத்தை அடைபவர்களுக்கு தம் நற்பெயரைத் தக்கவைத்துக்கொள்ளும் முதிர்ச்சி இருப்பதில்லை.

    கதை

    அவர் இருபத்தைந்து பிராயத்துக்குள் கலைத்துறையில் பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்தவர். எந்தப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரை அழைத்தாலும், தன்னை உரிய விதத்தில் கவனிக்கவில்லை, தன் மதிப்பை உணராது கால தாமதம் செய்து தன் பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று ஏற்பாட்டாளர்களுடன் வாதிடுவார்.

    முதலில் அவர்கள் அஞ்சினாலும், போகப் போக, தம்மீது தவறில்லை, இவர் பலரிடமும் இப்படித்தான் நடந்துகொள்கிறார் என்று புரிந்துகொண்டார்கள். அதன்பின், அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கத் தயங்கினார்கள்.

    பொறுமை இல்லாததால், திறமை இருந்தும் அவர் சோபிக்கவில்லை. வாய்ப்புகள் குன்ற பொருளாதாரம் ஆட்டம் கண்டது. பொறுமை மேலும் குன்றியது.

    வறுமையிலோ, நோயிலோ வாடும்போதுதான் பொறுமை எல்லை மீறும் என்பதில்லை. எந்த நிலைமை வந்தாலும் பொறுமை இழக்காது, காலம் மாறும், நம் அதிர்ஷ்டத்தை மாற்றிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலே போதும்.

    கதை

    `எனக்குப் பொறுமையே கிடையாது!’

    இப்படி அடிக்கடி சொல்வாள் அவள். தான் பெற்ற குழந்தைகளை சிறு தவற்றுக்குக்கூட அடித்து நொறுக்குவாள். `அப்படிச் செய்யாதே!’ என்று மூத்தவர்கள் அறிவுரை வழங்கும்போது, “எனக்குப் பொறுமையே கிடையாது! அதுக்கு என்ன பண்றது!” என்பாள்.

    அவளைப் பொறுத்தவரை, செல்வச் செழிப்புக்குக் குறைவு கிடையாது. இருந்தாலும், கிடைக்காத எதையோ எண்ணி தானும் நொந்து, பிறரையும் நோகடிப்பாள்.

    தங்களிடம் இருப்பவைகளை மனதில்கொண்டு திருப்தி அடையாது, பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டே நிம்மதி இழப்பவர்களை என்ன சொல்வது! இவர்களால் பிறருக்கு எந்த இழப்புமில்லை. நஷ்டம் இவர்களுக்குத்தான்.

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(185)

    -செண்பக ஜெகதீசன்

    பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர். (திருக்குறள் -187: புறங்கூறாமை) 

    புதுக் கவிதையில்…

    நகைச்சுவையுடன்
    இன்சொல் பேசி
    நட்புகொள்ளத் தெரியாதவர்,
    புறஞ்சொல்லி
    நண்பரையும் நமைவிட்டுப்
    பிரிந்துபோகச்செய்வர்…! 

    குறும்பாவில்…

    நகைமுகத்தொடு பேசிப் பிறரை
    நண்பராக்கத் தெரியாதவர்தான், புறம்பேசிப்
    பிரித்திடுவார் நண்பரையும்…! 

    மரபுக் கவிதையில்…

    இனிய சொற்கள் பேசியேதான்
    -இன்முகத் தோடே பழகிவந்தால்,
    கனியும் நல்ல நட்பதுவும்
    -காலம் காலம் நிலைத்திருக்கும்,
    மனிதர் இதனை அறியாமல்
    -மற்றவர் வெறுக்கப் புறம்பேச,
    புனித மான நட்பழியும்
    -போவர் நண்பரைத் தான்பிரிந்தே…! 

    லிமரைக்கூ…

    நட்பாக்க இன்சொல்லைப் பேசு,
    இதறியாதே புறங்கூறல் நட்பழித்து
    நண்பர்களைப் பிரித்திடும் மாசு! 

    கிராமிய பாணியில்…

    பேசாத பேசாத பொறம்பேசாத
    பொழப்பக்கெடுக்கும் பெறம்பேசாத…
    சிரிச்சமொகத்தோட நல்லதாப்பேசி
    நண்பனச் சேக்கத்தெரியணும்… 

    அது தெரியாதவந்தான்
    பொறம்பேசி போக்கடிசிருவான் நட்பயே,
    பிரிச்சிப்புடுவான் நண்பனயே… 

    அதால,
    பேசாத பேசாத பொறம்பேசாத
    பொழப்பக்கெடுக்கும் பெறம்பேசாத!

     

     

     

    Share
  • குழந்தையின் குரல்

     பெருவை பார்த்தசாரதி

     

    crying-baby

     

     

     

     

     

     

     

     

     

    கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்பர்

    குழந்தையில்லா வீட்டில் குதூகல இருக்காதெனலாம்..!

     

    குடும்பமொன்றில் குழந்தையின் குரலொன்று கேட்கநீ

    கோடி புண்ணியம் செய்திருத்தல் வேண்டுமம்மா..!

     

    பெருஞ்செல்வ மெளிதில் கிடைக்கும் குழந்தையெனும்

    அருஞ்செல்வம் இறையருளால் மட்டுமே கிட்டும்..!

     

    மண்டியிட்டு மண்சோறு உண்டபல நாட்கள்..

    வேண்டியவரம் கேட்டு கும்பிட்டபல கோவில்கள்..

     

    உள்ளம்குளிர நீராடிய புண்ணிய திருக்குளங்கள்..

    பிள்ளை வரம்வேண்டி பித்தாக அலைந்த நாட்கள்..

     

    இவை யனைத்தும் வீணாகவில்லை யொருநாள்..

    அவை யனைத்துப் பலனுமுடன் பலித்தது..!

     

    கும்பிடவந்த சாமியிடம் குழந்தைவரம் கேட்கும்போது..

    குழந்தையின் குரல்கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினேன்..

     

    வேண்டுவோர்க்கு வானத்தில் எழும் அசரீரிபோல..

    வேண்டாமென வீசிச்சென்ற குழந்தையினழு குரலொடு..

     

    அரும்புமலர் சோலைதனில் இறையருட் கொடையால்..

    ஆதரவின்றிக் கிடந்தன்று பிறந்த குழந்தையொன்று..!

     

    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைபோல்..

    பெரிதாக அரியசெல்வமென கிட்டிய தெனக்கும்..!

     

    அன்னையின் பிரசவலிகூட மறக்கும்…குழந்தையின்

    அழுகுரல் கேட்டவுடன்..பட்டதனைத்தும் மறந்தேன்..!

     

    குறையேதும் வலியேதும் இல்லாமல் குழந்தையொன்று..

    இறையருளால் பெற்றதுபெரும் பேறென்றன் பாக்கியமே..!

     

    கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்ததுபோலென்

    குழந்தையின் குரல்கேட்டால் ஓடோடி வருவேன்நான்

     

    குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

    மழலைச்சொல் கேளா தவர் . . . .எனும்

     

    ஐயன் வள்ளுவன் கூற்றுக் கிணையாக

    ஐயமுற வலிமை சேர்த்தோர் ஆருமில்லை

     

    இவ்வுலகில்..!

    ==================================================

     

    தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:: “குழந்தையின் குரல்”

     

    நன்றி கவிதைமணி வெளியீடு::22-05-17

     

    படஉதவி:: கூகிள் இமேஜ்

     

    Share
  • தனிப்பட்ட உறவு சார்ந்த நுண்ணறிவு (Inter-persoal intelligence)

    க. பாலசுப்பிரமணியன்

    “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ” என்பது பழமொழி. மனித சமுதாயங்கள் உருவான காலம் தொட்டே ஒரு தனி மனிதனின் பார்வைகளும் தேவைகளும் அந்தத் தனிமனிதனின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகக் கருத்தப்பட்டதால் அந்தத் தேவைகளை அடைவதற்காகவும் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் சண்டைகளும் போர்களும் துவங்கின. காலப் போக்கில் இந்தத் தனியான போராட்டங்கள் எவ்வாறு அழிவுக்கு ஆதாரமாகின்றன என்ற அறிவு முதிர்ச்சியினால் கூடி வாழும் சமுதாய நோக்கும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழும்நோக்கும் மேலோங்கத் தொடங்கின. இதன் வழி வந்ததே கூட்டுக குடும்ப நோக்கமும் வாழ்க்கை முறைகளும். இந்த உறவுகள் விரிந்து சமூக அளவிலே மற்றவர்களுடன் எப்படி உறவாடுவது என்ற உணர்வுநிலையில் மனித இனத்திற்கு பல நுண்ணறிவுகள் மேலோங்கி வந்தன. இன்றைய காலக்கட்டத்தில் மீண்டும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில்  ஏற்பட்ட விரிசல் சமுதாய சிந்தனைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே. ஆகவே மீண்டும் உறவு சார்ந்த நுண்ணறிவின் அடிப்படைக் கருத்துக்கள் தனி மனிதருக்கும் சமுதாயத்திற்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

    இந்த உறவு சார் நுண்ணறிவின் சில முக்கிய அடிப்படைகளாக கருதப்படுவது:

    1. உறவுகளின் அமைப்பு, தேவைகள் மற்றும் நிலைப்பாடுகளை அறிதல்
    2. உறவுகள் பாராட்டுதலில் அளவு, மேன்மை மற்றும் காலங்கள்
    3. உறவுகளை வலுப்படுத்துதல், மேன்மைப்படுத்துதல்
    4. உறவுகளை தேவைகள் காலங்களுக்கேற்ப உபயோகித்தல்
    5. உறவுகளின் அடிப்படைகள் அழிந்துவிடாமல் பாதுகாத்தல்
    6. உறவுகளின் உணர்வுகளை அறிதல், பாராட்டுதல் பாதுகாத்தல்
    7. உறவுகளோடு உள்ள தொடர்பில் பேச்சு மற்றும் உடல் மொழிகளின் பங்கு
    8. உறவுகளின் தொடர்புகளால் பொருளாதாரம் மற்றும் மனநலன்களை வளர்த்தல்

    இந்த நுண்ணறிவு அநேகமாக எல்லாவிதமான தொழில்களுக்கும் சமுதாய உறவுகளுக்கும் தேவையானதாகக் கருதப்படுகின்றது.  அவற்றில் சில

    1. ஆசிரியர் -மாணவர் உறவுகள் (Teacher-student Relationships)
    2. மருத்துவர் – நோயாளி உறவுகள் (Doctor-patient Relationships)
    3. வியாபார உறவுகள் (Business Relationships)
    4. அரசியல் உறவுகள் (Political Relationships)
    5. வெளிநாட்டு உறவுகள் (Foreign Relations)
    6. மனிதவள மேம்பட்டுப் பணிகள் (Human Resource Management)
    7. வெகுஜன உறவுகள் (Mass Relationships and Management)
    8. தொழிலாளி- முதலாளி உறவுகள் ( Management relationships)
    9.  மனநலம் பாதுகாப்போர் உறவுகள் (Counselling)
    10. கூட்டுக்குடும்ப உறவுகள் (Family Relationships)

    ஆகவே இந்த நுண்ணறிவு விளம்பரம், விற்பனை, சந்தை வாய்ப்புக்களில் உறவாடுவோர், வழக்கறிஞர்கள் முதலாளிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள், வரவேற்ப்பாளர்கள்  தூதர்கள் போன்ற பல தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது. இவர்களை “மக்கள்சார்  நுண்ணறிவில்” (People Smart) வல்லுனர்களாக கருத்தப்படுகின்றனர்

    இவர்களுக்குத் தேவையான சில குணங்கள

    1.  பொறுமை  (Patience)
    2. சகிப்புத் தன்மை (Tolerance)
    3. இடம் அறிந்து அளவாகப் பேசுதல் (Communication skills)
    4. நேரம் காத்தல் (Time management)
    5. காலந்தவராமை (Punctuality)
    6. அயல்நோக்கு (Extrovertness)
    7. ஒத்துழைப்புத் தன்மை (cooperation)
    8. காது கொடுத்துக் கேட்கும் திறன் (Listening skills)
    9. மற்றவர்களின் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை (Respect for others feelings)
    10. 10 நட்புப் பாராட்டுதல் (Celebration of friendship)

    கற்றலில் பள்ளிகளிலும்  கல்லூரிகளிலும் மேற்கண்ட திறன்களை வளர்ப்பதற்கான  பல்நோக்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பொதுவான வகுப்பறை பாடத்திட்டங்களுக்குள் மாணவர்களை சிறைப்படுத்தி அவர்களின் வாழ்க்கை வளத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்துதல் கல்வியின் நோக்கத்தையே சிதைப்பதாக அமையும் .

    தொடரும்

    Share
  • நவராத்திரி 06

    இசைக்கவி ரமணன்

    c740b994503ba63b446525f69a984b73

    வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை
    சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு
    முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக்
    கோலச் சுடர்முனையில் கூடிச் சிலிர்த்ததுண்டு
    வேலைநடு வேவுயிரை வெட்டிப் பறிக்குமின்னின்
    நீல விளிம்பில் நிலைகுலைந்து போனதுண்டு
    சாலையிலே தூலம் கரைந்து மிதக்கையிலே
    பாலை நிகர்த்தநகை வாசம் நுகர்ந்ததுண்டு
    கோலத் தமிழ்நமக்குக் கூடி இருந்தாலும்
    ஏலுமோ இந்த எழிலாள் புதிர்விளக்க?

    இன்றுந்தான் காலை எதிர்ப்பட்டாள்; எப்படியாம்?
    நன்று துயில்நீங்கி நானமர்ந்து மந்திரத்து
    மின்பருகிக் கொண்டிருந்த விந்தைக் கணமொன்றில்
    நின்றெதிரே மாலை நிமிண்டுகிறாள்! ஏதுக்காம்?
    ’உன்னத் தலைப்படுதல் உன்வேலை; உள்ளிருந்தே
    எண்ணுவதோ என்வேலை’ என்கின்றாள்; ’நாமத்தை
    எண்ணயெண்ண எண்ணங்கள் வண்ணமய மாகியிரு
    கண்ணிடையே ஒற்றைக் கனல்புடைத்தல் காணெ’ன்றாள்

    வட்டக் கரியவிழி வண்ணச் சதங்கைக்கால்
    அட்டக் கருப்பி அதிலோர் இளஞ்சாம்பல்
    கிட்ட! மிகக்கிட்டக் கீழ்மூச்சின் வெம்மையினைத்
    தொட்டே சுவைத்திடலாம் போலே மிகவணுக்கம்!
    எட்டேநாள் என்றாள் எவரறிவார் தாய்மழலை?
    கட்டெனக்குப் பாட்டென்றாள்; கட்டிவிட்டேன்; என்னுயிரை
    விட்டுவிட்டேன் கால்கள் விரலிடையில்; ஒன்றுசொல்வேன்
    தொட்டவளைத் தொட்டேன் சுகம்!

    24.09.2017 / ஞாயிறு / காலை 6.18

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (10)

     
    மீ.விசுவநாதன்

     

    பகுதி: பத்து
    பாலகாண்டம்

    தேவர்கள் வானர சேனைகளாக வருதல்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்

    ஜாம்பவான் சுக்ரீவன் வாலி
    தாரன், நளன்,நீலன், வாயு
    தாமெனத் தந்திட்ட பிள்ளை
    தவத்தோன் அறிவனுமன், இன்னும்
    மாபலங் கொண்டிருக்கும் வீரர்
    மண்ணில் வானரராய்த் தோன்றி
    ராவணப் போர்புரிந்து சீதா
    ராமன் சேவைசெய்ய வேண்டி (1)

    நான்முகன் தேவர்கள் பார்த்து
    நல்ல றிவுரையாகச் சொன்னார் !
    வானிலே பாய்ந்துசெல்லும் ஆற்றல்,
    மனத்தில் உறுதியோடு தீயோர்
    மேனியைச் சாய்த்தழிக்கும் எண்ணம்
    மிக்க வரத்துடனே தேவர்
    நானிலப் பிறப்புகொண்டு “ராம
    நாம” பணிக்கென்றே வந்தார் ! (2)

    வேள்வி முடித்து அயோத்தி திரும்புதல்

    யாகமும் முடிந்தவேளை மன்னன்
    அங்கே அந்தணர்கள் கொள்ள
    ஏகமாய்ப் பரிசளித்தார்! யோகி
    ரிஷ்ய சிருங்கராலே உள்ள
    தாகமே தீர்ந்ததாகக் கூறி
    தக்க மரியாதை செய்தார் !
    “யோகமே காண்பாய்நீ” என்றே
    யோகி ஆசிதந்து சென்றார் ! (3)

    “ஸ்ரீராம, பரத, லக்ஷ்மண, சத்ருக்கனன்” பிறப்பு

    பங்குனி நவமியன்று கோள்கள்
    பாங்காய் அமைந்தவேளை அன்பின்
    நங்கையாம் “கோசலைக்கு” ராமன்
    நல்ல குழந்தையாக வந்தார்!
    திங்களை ஒத்த”கை கேயி”
    தேவ குணபரதன் ஈந்தாள் !
    மங்கள “சுமித்திரை”யோ ரெண்டு
    வாய்மைத் திருமகன்கள் பெற்றாள் ! (4)

    குலகுரு வசிட்டர் பெயர் சூட்டினார்

    இலக்குவன், சத்ருக்னன் என்றும்
    இனிய குருவசிட்டர் தானே
    குலத்தினை வளர்க்கவந்த நான்கு
    குழந்தை களுக்கும்பேர் வைத்தார் !
    நிலத்திலே வந்தபிள்ளை தெய்வ
    நிகராய்க் கிடைத்ததாக தர்ம
    பலத்தவன் தானங்கள் செய்து
    பலனை இறைவனுக்கே தந்தார் ! (5)

    விதைகள் கற்ற பிள்ளைகள்

    பிள்ளைகள் வல்லோராய் நன்கு
    பெரிய வீரரென ஆனார் !
    வெள்ளையாம் நெஞ்சுக்குள் நித்தம்
    வேத நெறிசெழிக்கக் கற்றார் !
    அள்ளவே வற்றாத அன்பு,
    அறத்தால் அயோத்தியிலே மக்கள்
    உள்ளனர் என்கின்ற பண்பை
    உலக முணர்ந்திடவே வாழ்ந்தார் ! (6)

    விசுவாமித்திர முனிவர் வருகை

    பாலனாம் ராமனுக்குக் கொஞ்சம்
    பருவம் முதிர்கின்ற வேளை
    காலையில் அரண்மனைக்குள் வந்தார்
    தவசி விசுவாமித் ரர்தான் !
    ஏலமாய் மணக்கின்ற வேத
    தேகம் படைத்திட்ட ஞானி
    சீலத்தை உணர்ந்துள்ள ராஜன்
    சேர்த்த கரத்தோட ழைத்தார் ! (7)

    தயரதன் ரிஷியின் தேவை அறிதல்

    குறையிலாக் கௌசிகரைப் பார்த்து
    “கோவே ராஜரிஷி தேவே”,
    இறையென வந்துள்ள உங்கள்
    எண்ணம் எதுவென்று சொல்க
    நிறைவுடன் தந்திடுவேன்” என்றார் !
    நிமிர்ந்த பார்வையைக் காட்டிக்
    கறையிலா மன்னவரே எந்தன்
    கவலை நீங்கிற்று என்றார் ! (8)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் பதினேழு, பதினெட்டு பகுதிகள் நிறைந்தது)

    Share
  • நவராத்திரி நாயகியர் (6)

     

     

    காளி

    27-1427456108-kali1

    கொட்டும் குருதியினை நாவில் வைத்தும்

    கொய்த தலையினைக் கையில் வைத்தும்

    கூரிட்ட அரக்கத்தைக் காலில் வைத்தும்

    கூப்பிட்ட குரலுக்குக் குறைதீர்க்க வருபவளே !

    ,

    கண்ணில் நெருப்பைக் கக்கியே வந்ததாய்

    கைகளில் ஆயுதம்  ஏந்தியே வந்தாய்

    கபாலங்கள் அணிந்தே காட்சியைத் தந்தாய்

    கருணை மழையே  கண்களில் நிறைந்தாய்!

     

    சந்தனத்தைச் சாத்தியதும் சாந்தமாய் நிற்பவளே

    செங்குருதி நீராட்டல் சிங்காரி உனக்கெதற்கு ?

    செவ்வரளிப் பூவாலே சீருடைகள் செய்திடுவேன்

    சடுதியில் வந்திடுவாய் சங்கடங்கள் போக்கிடவே !

     

    பாலோடு தேனும் பருகிடவே பானகமும்

    பல்சுவை விருந்தோடு பரிமள நறுமணமும்

    எண்ணை விளக்கும் எலுமிச்சை மாலையும்

    என்னவளே தந்திடுவேன் ஏற்றிடுவாய் மனமிரங்கி !

     

    பயந்த பார்வையை பைரவியே விரட்டிடுவாய்

    மருண்ட மனதை மகிடனாய் கொன்றிடுவாய்

    காரிருள் கலக்கத்தை காளியே! விலக்கிடுவாய்

    பாரினில் ஈடுண்டோ பராசக்தி பயங்கரியே !

     

    தாயென அழைத்தேன் தணிந்திடு கோபம்

    சேயென அணைத்திடு சிந்தையில் நித்தம்

    இராத்திரி நேரம் கொலுவினில் வேண்டும்

    இசையுடன் அழைப்பேன் இனிதே வருவாய் !

    Share
  • பூதவலு ஹரிக்கேன் தாக்குவதற்கும் பூகோளக் கடல்நீர்ச் சூடேற்றத்துக்கும் தொடர்புள்ளதா ?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++++++

    http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html

    http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101


    Image result for hurricanes in history

    Image result for hurricanes in history

     

    அழுதாலும் பயனில்லை!

    தொழுதாலும் பயனில்லை!

    கரைமதில் உடைந்து விட்டால்,

    காத தூரம் ஓட வேண்டும் அம்மா !

    குடியிருக்க இடம் ஏதம்மா ,

    கடல் தடுப்பு முறிந்து போனால் !

    உடைந்து போகும் பழைய மதில்

    ஓலமிட்டு மக்கள்

    துயர்ப்படவே  வைக்குதம்மா !

    ஒருநாட் பொழுதில் அடித்த

    சூறாவளிப் பேய்மழை

    நியூ ஆர்லீன்ஸ்  கீழ்த்தளப்

    பெரு நகரை

    வெறு நரக மாக்கிய தம்மா!

    +++++++++++++++unnamed

     

    லெட் ஸெப்பெளின் இசைப்பாடல் [Led Zeppelin Lyrics (1929)]

     

    hurricale-buildup-1

    பூகோளச் சூடேற்றத்தைக் கணிக்க உதவும் புவிச் சூழ்வெளி அறிகுறிகள்.

    பூகோளச் சூழ்வெளியில் கரியமில வாயுவின் திணிவு மிகை ஆவதால் வாயு மண்டலமும், கடல் நீரும் சூடாகி, கிரீன்லாந்தின் பனிக்குன்றுகள், ஆர்டிக் பனி மதில்கள்  உருகிக் கடலில் சேர்ந்து கடல்நீர் மட்டம் உயர்கிறது. பூகோளம் சூடேற்றத்தை அளக்க, முக்கியமாக புவிச் சூழ்வெளியில்  வாயுவின் உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்ட உயர்வு, கடல்நீர் வெப்பக் கொள்ளளவு ஆகிய மூன்று விளைவுகளின் அளவுகள் தேவைப்படும்.  கடல்நீர் மட்ட அளவு உயரும்போது, கடலின் வெப்பக் கொள்ளவு [Heat Content] மிகையாகிறது.  அத்துடன் நீராவி எழும் கடல் பரப்பளவும் அதிக மாகி சூழ்வெளி வாயுவில் நீர்மைத் திணிவு [Moisture Density] சேர்கிறது.  வேனிற் காலத்தில் பேரளவு நீராவி விரைவாகக் கடலில் உருவாகி முகிலில்  கூடுகிறது.

    கரியமில வாயுவையும், மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்களையும், எரிமலை வெடிப்புகள், மின்னல் தூண்டும் காட்டுத் தீக்கள் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளும், மனிதனின் செயற்கை முறைகளும் தொடர்ந்து வெளியாக்கிச் சூரியக் கதிர்கள் சூழ்வெளியைச் சூடாக்கி வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டு, 21 ஆம்  நூற்றாண்டில்  பன்மடங்கு பெருகி புகை மூட்டம் உலகை இருண்ட கண்ட மாக்கி வருகிறது. எத்தனை விரைவில் சூடேற்றம் மிகையாகிறது என்பதை தொழில் நிபுணரும், விஞ்ஞானிகளும், பொது நபரும் கணித்துத் தீர்மானிக்க வேண்டியது.  இப்போது சராசரிக் கடல்நீர்த் தள உஷ்ணக் கணிப்பே பூகோளச் சூடேற்றத்தைக் காண உதவுகிறது.  புது முறைப்படி இன்னும் உயரிய வழிப்படிப் பூகோளச் சூடேற்றம் அறிய கடநீர் மட்ட உயர்வும், கடல்நீர் வெப்பக் கொள்ளளவு மாற்றமும் தெரிய வேண்டும். நவீன உலகில்  இவற்றின் அளவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருபவை :1. சைனா  2.  அமெரிக்கா  3. பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகள்.

    மனித செயற்கை நிகழ்ச்சிகளால் உண்டாகும்,  கரியமில வாயுவால்  எழும் வெப்ப சேமிப்பில் 90% அளவு கடல்நீர் வெப்பம் ஏறச் சேர்கிறது.  கிரீன்லாந்தின் பனிநீர்க் குன்றுகள் மட்டும் உருகி ஆண்டு தோறும் 250 கிகாடன் [250 பில்லியன் டன்] நீர் வெள்ளம் கடலில் சேர்கிறது.  அப்போது கடல் மட்டம் உயர்ந்து கடற்கரை நகரங்கள் மூழ்கும்.  அசுரப் புயல் & பெருமழை ஹர்ரிகேன்கள் உருவாகி, கடற்கரை நகரங்கள் நீரில் மூழ்கும். 2005 ஆண்டில் நியூ ஆர்லின்ஸ் மூழ்க்கிய கேட்ரீனா ஹர்ரிகேன், 2012 ஆண்டில் நியூ யார்க்கை மூழ்க்கிய பூதப்புயல் ஸாண்டி, 2017 ஆண்டில் ஹூஸ்டன், டெக்ஸஸ்  மூழ்க்கிய ஹர்ரிகேன் ஹார்வி குறிப்பிடத் தக்கவை.

    பூகோளச் சூடேற்றத்துக்கும் சூறாவளிப் பெரு மழைக்கும் தொடர்பு உள்ளதா ?

    2017 செப்டம்பரில் அமெரிக்காவைத் தாக்கிய ஹர்ரிகேன்கள் ஹார்வி, இர்மா, மரியா போன்றவை பேரளவு வலுமிக்க அசுரச் சூறாவளிப் பெருமழையாகக் கருதப் படுகின்றன.  வேனிற் கால ஹர்ரிகேன்களின் வலுவும், வேகமும் தற்போது மிகுந்துள்ளதாக அறியப் படுகிறது.  அவற்றின் கணிப்பு :  சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் கடல் நீர் உஷ்ண உயர்வுக்கு & வினாடிக்கு 8 மீடர்  [25 அடி] வேக அதிகரிப்பு  [மணிக்கு 30 கி.மீ] உண்டாகுகிறது !

    மேலும் கடற்தள உஷ்ண ஏற்றத்தால், நீர் ஆவியாகிச் சூழ்வெளி வாயுவில் நீர்மைத் திணிவு [Moisture Density]  ஒவ்வோர் டிகிரி செல்சியஸ் ஏறும் போது 7% அதிகரிக்கிறது. சமீபத்தில் டெக்ஸசைத் தாக்கிய ஹர்ரிகேன் ஹார்வி இவ்விதமே அசுர வலுப் பெற்றுள்ளது.

     

     

    ஆண்டுதோறும் அமெரிக்காவில் அடிக்கும் சூறாவளிப் பேய்மழைகள். 

    ஹர்ரிக்கேன் எனப்படும் அசுரச் சூறாவளி பேய்மழை அடிப்புகள் பருவக் காலம் தவறாது, ஆண்டுதோறும் அமெரிக்கத் தென்னக மாநில நகரங்களைத் தாக்கி, நரகப் புழுதியாக்கி பேரளவு நிதிச் செலவை உண்டாக்கி வருகின்றன. அவற்றுக்கு விஞ்ஞானப் பின்புலமாய் உள்ள காரணங்கள் என்ன ?  ஒவ்வோர் ஆண்டிலும் அவற்றின் தாக்குதல்கள் தவிர்க்க முடியாததாய், எதிர்பார்க்க முடியாததாய், தடுக்க இயலாததாய் மக்களுக்குத் துயர் அளிப்பதாய்த் தெரிகின்றன.  மானிடர் வல்லவராய், அறிவுள்ளவராய், பொறிநுணுக்கத் திறமையாளராய் இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டில், சிறியவராய், அவற்றின் முன்னே ஆற்றலின்றிப் பின்வாங்கிப் போகும் மனித இயலாமை தெளிவாய்ப் புரிகின்றது.  சரி நமக்குப் பருவக் காலப் பேரிடர்களான சூறாவளிப் பேய்மழைத் தடுப்புகள் பற்றி என்ன தெரியும் ?

    hurricane-flooding

    seawater-surging

    2004 அக்டோபரில் கூடிய அமெரிக்க விஞ்ஞானிகள் ஹர்ரிக்கேன் இடர்களை எப்படித் தவிப்பது, தடுப்பது என்று ஆய்வுகள் செய்ய முயன்ற போதிலும், 2016 இல் இதுவரை இந்தக் குறிக்கோள் நெருங்க முடியாதபடித் தூரமாய்ப் போய்விட்டது !  அடுத்த கேள்வி, எங்கே இந்த ஹர்ரிக்கேன்கள் உருவாகின்றன ?  1851 ஆண்டுமுதல் 2012 வரைப் பதிவு செய்தவை ஆக்டபஸ்போல் சுழிவடிவில் உருவானவையே.  2016 ஜூன் வரை அறிந்த விளைவுகளின்படி அவற்றைத் தவிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது, திசை மாற்றவும் இயலாது என்பதே !  2016 அக்டோபரில் உருவான பூதச் சூறாவளிப் பேய்மழை “மாத்தியூ” அமெரிக்கத் தென்னக மாநிலங்களைத் [பிளாரிடா, அட்லாண்டா, தென் கரோலினா] தாக்கிப் பல நகரங்கள் நீரோடத்தில் மூழ்கின.  ஐந்தாம் தகுதியில் [Category : 5] அடித்து ஹெய்தித் தீவில் பேரளவு சேதாரம் விளைவித்தது, மாத்தியூ ஹர்ரிக்கேன்.

    +++++++++++++

    ‘ஹரிக்கேன் கேட்ரினா நியூ ஆர்லியன்ஸ் நகர்ப் புறங்களில் பேரளவு சூழ்நிலைச் சீர்கேட்டை விளைவிக்கப் போகிறது. நகர்ப் பாதுகாப்புக் கரைமதில் ஏற்பாடுகளைத் [The City Levee System] தகர்த்துக் கொண்டு நீர் வெள்ளம் கடல் கீழ்மட்டப் பகுதிகளை நிரப்பி, தெருக்களில் நீர்க்குளங்களை உண்டாகிக் குப்பை, நரகல் கழிவுகளுடன் சேர்ந்து, அபாய இரசாயனத் திரவங்களுடன் கலந்து மக்கள் தப்பி வெளியேற முடியாதபடி அடைத்து விடலாம். ‘

    இவார் வான் ஹீர்டென் [Ivor Van Heerden, Marine Scientist, Louisiana State University]

    hurricane-flooding-4

    ‘பொஞ்சாட்ர்டிரைன் ஏரியுடன் [Lake Pontchartrain] இணைக்கப்பட்ட கால்வாய் கரை மதில்களில் ஏற்பட்டுள்ள இரண்டு உடைப்புகளைச் செம்மைப் படுத்த முயல்கிறோம். அதற்காக வேண்டிய கல், பாறைகள், மணல் போன்றவையும், கட்டுவதற்குத் தேவையான மணல் மூட்டைகள், தூக்கி யந்திரங்கள், டிரக்குகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறோம். ‘

    வால்டர் பெளமி [Walter Baumy, Manager, Army Corps of Engineers (Aug 31, 2005)]

    ‘தேசீயப் பாதுகாப்பாளர் எண்ணற்ற மணற் சாக்குகளை இட்டு மதில் உடைப்பை மூட முயன்றார்கள். ஆனால் அவை யாவும் இருட்குழியில் விழுந்து மறைவன போல் காணாமல் போகின்றன. ‘

    காதிலீன் பிளான்கோ [Louisiana Governor (Aug 31, 2005)]

    hurricane-flooding-1

    உலகிலே நீளமான ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதில்கள்

    2300 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பாம்புபோல் கற்களால் கட்டப்பட்ட, உலக விந்தைகளில் ஒன்றான சைனாவின் பெரும் நெட்டை மதில்சுவர் [The Great Wall of China] 1500 மைல் தூரம் நீண்டு செல்பவை. ஆனால் அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாக் கரையில் இருக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றிலும் எழுப்பியுள்ள குட்டைக் கரை மதில்கள் [Levees] 340 மைல் [560 மி.மீ] தூரம் கட்டப்பட்டு, கடல் மட்டத்துக்குத் கீழாக இருக்கும் பெரும்பான்மையான பகுதிகளை நீர் பாய்ந்து நிரப்பாமல் பாதுகாத்து வருகின்றன. நீளத்திலே சைனாவின் பெரு மதிலுக்கு குறைந்த தாயினும், உலகிலே குட்டை மதில்களில் மிக நீண்டதாக இந்த கரை மதில்களைக் கூறலாம். நியூ ஆர்லியன்ஸ் நகரத்தின் வடக்கே பொஞ்சார்ட்டிரைன் ஏரி [Lake Pontchartrain], கிழக்கே போர்ன் ஏரி [Lake Borgne], தெற்கில் ஊடே செல்லும் மிஸ்ஸிஸிப்பி நதி, பிறகு சிதறிக் கிடக்கும் மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளால் சூழப்பட்டது! கால மாறுபாட்டாலும், எப்போதும் ஹரிக்கேன் சூறாவளிகள் படையெடுக்கும் பாதையில் இருப்பதாலும், அந்த பகுதிகளின் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து நகரின் கீழ்த்தளப் பரப்புகளில் பாய்ந்து நிரப்பா வண்ணம் பாதுகாப்பு மதில்கள் கட்டப் பட்டிருக்கின்றன.

    hurricane-flooding-2

    சென்ற நூற்றாண்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் [St. Charles, St. Bernard, Plaquemines Parishes] நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதப் போகும் ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து விட்டது!

    hurricane-flooding-3

    நியூ ஆர்லியன்ஸ் கரைமதில்கள் சொல்லும் கதை

    சூறாவளிக் காற்று அடித்த ஒருநாள் கழித்து, 2005 ஆகஸ்டு 30 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று இரண்டு மதில் அணைகள் உடைக்கப்பட்டு, நகரின் 80% கடல் மட்டம் தாழ்ந்த பகுதிகளில், கடல் வெள்ளம் நிரம்பியது. முதலில் பேய்க்காற்று மணிக்கு 150 மைல் உச்ச வேகத்தில் தாக்கிக் கடல் வெள்ளத்தால் அடித்து, கரைமதிலில் 200 அடி அகலத்தைப் பெயர்த்து கடலே நகருக்குள் நுழைந்தது! அடுத்து காற்றின் வேகம் மணிக்கு 100 மைலாகத் தணிந்தாலும், கடல் நீரின் வலுவில் மதில் உடைப்பு 500 அடியாக அகன்று கடல்நீர் திமுதிமுவென நகருக்குள் அலை அலையாய் நுழைந்து தெருவெல்லாம் 20 அடி உயரத்துக்கு மேலாக நீர் நிரம்பியது. நாகரீகப் புராண நகரமான நியூ ஆர்லியன்ஸில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், வாணிபக் கட்டடங்கள், வீடுகள், குடில்கள் யாவும் ஒருநாளில் மூழ்கிப் போயின!

    hurricane-matthew-mapping

    ஹரிக்கேன் மாத்தியூவின் போக்கு

    2003 ஆண்டு முதல் ஈராக் போருக்குப் பிறகு கரைமதில் புதுப்பிப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதித்தொகை [Federal Fund] குறைந்து கொண்டே வந்தது. அரசாங்க நிதிவளம் ஈராக் போரைத் தொடரவும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், வரிக் குறைப்பு ஈடுக்கும் பங்கிடவே பற்றாமல் குழி விழுந்தது. 2004 ஆம் ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிக் கரைமதில்களை மேம்படுத்த புஷ் அதிகார வர்க்கம் 20% குறைந்த அளவு தொகையைத் தருவதாகச் சொன்னது.

    1. 2004 ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிப் பகுதி ஹரிக்கேன் பாதுகாப்புக்கு ஒதுக்கிய நிதி யில்லாமையால் 20% [750 மில்லியன் டாலர்] மதிப்பளவே புஷ் அதிகார வர்க்கம் அளிப்பதாய் வாக்களித்தது.

    2. 2005 ஆண்டில் மேற்கண்ட திட்டத்துக்கு 20 மில்லியன் டாலர் தேவைப்பட்ட போது, புஷ் அரசாங்கம், பட்ஜெட்டில் 3.9 மில்லியன் டாலரே ஒதுக்க முன்வந்தது.

    3. காத்திருக்கும் காலம் நீடிக்க நீடிக்க, பிரச்சனைகள் பெருகி நிதிச் செலவை மிகையாக்கும். சில கரைமதில் செப்பனிடும் திட்டங்களை முடித்த கான்டிராக்டருக்கு, இன்னும் 5 மில்லியன் டாலர் தொகை கொடுக்கப் படாமலே இருக்கிறது.

    sheltered-people

    நிரம்பிய வெள்ளத்தை வெளியேற்றுவதில் பிரச்சனைகள்

    அமெரிக்க இராணுவப் படையினர் கரைமதில்களில் உடைபட்ட பகுதிகளைச் செப்பனிட அரும்பாடு பட்டனர். இரட்டைச் சுழலிகள் சுழலும் CH-53 ஹெலிகாப்டர்களில் பறந்து கொண்டு 1360 கிலோ கிராம் சாக்கு மண் பைகளைத் தொப்பென இறக்கி உடைப்பை அடைக்க முயன்றார்கள். அது பலன் அளிக்க வில்லை! அடுத்து பெரும் இரும்புத் தொட்டிகளில் கற்களை நிரப்பி இடைவெளியை மூட முற்பட்டார்கள். அம்முறையும் பலன் தரவில்லை! நகரின் கடல்மட்டத் தணிவுப் பகுதிகளின் தேக்கு வெள்ளத்தை வெளியேற்ற ஆற்றல் மிக்க 22 பூத பம்பு நிலையங்கள் இருந்தாலும், அவை யாவும் நீரில் மூழ்கிப் போனதால் அவற்றை நீர்ப் பாதிப்பிலிருந்து முதலில் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது மூன்று பம்பு நிலையங்கள் செம்மை யாக்கப்பட்டு நீரை வெளியேற்றி வருகின்றன. அத்துடன் அபாய கால தற்காலிய பம்புகளை நிறுவி, நீர் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடல் மட்டத்துக்குத் தணிவான பூதத் தொட்டி போல் நீர் கட்டிக் கிடக்கும் நியூ ஆர்லியன்ஸ் வெள்ளத்தையும், மற்றுமுள்ள சுற்றுப்புறப் பகுதிகளின் தேக்க நீரையும் வெளியேற்ற 24 முதல் 80 நாட்கள் ஆகலாம் என்று ஊகிப்படுகிறது.

    katrina-flooding

    கரைமதில்களைச் செப்பனிடும் பணிகள்

    நியூ ஆர்லியன்ஸ் நகரின் பெரும்பகுதிகள் கடல் மட்டத்திற்குச் சராசரி 6 அடித் தணிவாக உள்ளன. எல்லாவற்றிலும் கீழான தளம் 20 அடி தணிவாகவும், மேலான தளம் ஓரடி தணிவாகவும் இருப்பதாக அறியப்படுகிறது. ஏறக்குறைய நகரின் பாதிப்பகுதி [907 சதுர கி.மீடர்] நீர் மயமாகவும், மீதிப் பாகம் மட்டுமே நில மயமாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே உண்டாகும் நீர் வெள்ளத் தாக்குதலை நியூ ஆர்லியன்ஸ் தவிர்க்க முடியாததால், எஞ்சினியர்கள், கால்வாய்கள், கரை மதில்கள், நீர் வெளியேற்றுப் பம்புகள் கொண்ட மிகவும் சிக்கலான சில முறைகளை அமைத்து, நகரின் வெள்ளத் தேக்கங்களைக் கையாள கட்டி யுள்ளனர். குறைந்த அளவு [2.5 செ.மீ] மழைகூட சில பகுதிகளில் சிறிது நீர்த் தேக்கத்தை உண்டாக்கித் தொல்லை கொடுத்து விடும். நகரின் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 90 செ.மீ.

    new-orleans-1

    நியூ ஆர்லியன்ஸ் நகரை உருவாக்கிய பிரெஞ்ச் நிபுணர்கள் 1718 ஆம் ஆண்டு முதல் கரை மதில்களைக் கட்டி நகரின் கடல் மட்டத் தணிவுப் பகுதிகளைப் பாதுகாத்தனர். அதுமுதல் பிற்காலச் சந்ததிகளும் நகரின் கரை மதில்களைச் செம்மைப் படுத்தி அவற்றின் நீளம், உயரம், வலு போன்றவற்றைத் தொடர்ந்து விருத்தி செய்து வந்துள்ளனர். 1965 இல் ஹரிக்கேன் பெட்ஸி நியூ ஆர்லியன்ஸ் கடற்கரைப் பகுதியைத் தாக்கி நீர் வெள்ளம் தேங்கிப் பாதகம் விளைந்த போது, கரைமதில்களின் உயரம் பல மீடர்கள் அதிகமாக்கப் பட்டன. ஆயினும் தீவிரம்: (4-5) கொண்ட ஹரிக்கேன்களின் அடியைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மதில்களுக்கு அறவே இல்லை. நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றியுள்ள குட்டைக் கரைமதிகள், நாளுக்கு நாள் புதைந்து போய் அவற்றின் உயரங்கள் குன்றி வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து எஞ்சினியர்கள் செம்மைப் படுத்தினாலும், எடுத்த பணிகள் முழுவதும் இதுவரை முடிவடைய வில்லை.

    new-orleans-city-1

    பெருநகரைப் பெருநரக மாக்கிய ஹரிக்கேன் கேட்ரினா

    நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. இப்போது ( செப் 7, 2005) அடித்த கேட்ரினாவில் 10,000 பேருக்கு மேலாக இறந்திருக்கலாம் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து தற்போது நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. நீர் வெளியேற்றிப் பம்புகள் நகரின் அசுத்த வெள்ளத்தை நீக்க இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று எஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.

    new-orleans-3

    நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 400,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை (50-60) பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்பு நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நகர நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க மூன்று அல்லது ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்.

    sheltered-people

    1. https://youtu.be/FY86NrdqoQ4
    2. https://youtu.be/hxRWe58BZHA
    3. https://youtu.be/-Kou0HBpX4A
    4. https://youtu.be/7qym7b-qvkE

    +++++++++++++++++++++++++++++++++

    தகவல்:

    1. New Orleans Levees No Match for Katrina By: David Crary [AP National Writer (Aug 31, 2005)]

    2. Why the Levee Broke By: Will Bunch, Attytood [www.alternet.org/story/24871/] (Sep 1, 2005)

    3. New Orleans Levees Patched, Army Starts Pumping Water, [Update: 2 & 6] (Sep 6, 2005)

    4. Law Enforcement May Forcibly Remove New Orleans Residents By: Scott Gold & Lianne Hart [www.Newsday.com] [Times Staff Reporters (September 7, 2005)]

    5. When the Levee Breaks By: Bill Diskoch, CTV.ca News Writer (Sep 5, 2005)

    6. Mayor of New Orleans Orders Forced Evaquations By: CTV.ca News Staff (Sep 7, 2005)

    7. An American Tragedy, Time Magazine Special Report (Sep 2, 2005) Picture Courtesy: Time.

    8.  http://www.nhc.noaa.gov/  [USA Hurricane Center]

    9.  http://environment.nationalgeographic.com/environment/natural-disasters/hurricane-profile/

    10.  https://en.wikipedia.org/wiki/Tropical_cyclone [October 13, 2016]

    11. https://en.wikipedia.org/wiki/Effects_of_Hurricane_Katrina_in_New_Orleans   [October 14, 2016]

    12. https://en.wikipedia.org/wiki/Hurricane_Matthew  [October 15, 2016]

    13. https://blogs.scientificamerican.com/sa-visual/visualizing-hurricanes/?print=true  [September 1, 2016]

    14.  https://blogs.scientificamerican.com/observations/what-we-know-about-the-climate-change-hurricane-connection/ [September 8, 2017]

    15. http://www.dailygalaxy.com/my_weblog/2017/09/our-planets-vital-signs-china-measures-ocean-warming-a-warning-to-the-world.html? [September 13, 2017]

    16. http://www.dailygalaxy.com/my_weblog/2017/06/ecoalert-greenlands-great-melt-nasa-monitoring-the-massive-ice-sheet-thats-adding-250-gigatonnes-of-.html  [June 27, 2017]

    17.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/09/ecoalert-nasa-sees-marias-hot-towers-intensify-into-yet-another-epic-hurricane.html [September 19, 2017]

    18. http://www.dailygalaxy.com/my_weblog/2017/09/ecoalert-mathematics-predicts-earths-mass-extinction-threshold-reached-in-2100-after-oceans-add-300-.html  [September 20, 2017]

    *****************************

    jayabarathans@gmail.com [S. Jayabarathan] (September 23, 2017)

    Attachments area
    Preview YouTube video Hurricane Matthew Live Coverage – 10/04/2016, 20:00-21:00 EDT

    Hurricane Matthew Live Coverage – 10/04/2016, 20:00-21:00 EDT

    Preview YouTube video Hurricane Katrina Historic Storm Surge Video – Gulfport, Mississippi

    Hurricane Katrina Historic Storm Surge Video – Gulfport, Mississippi

    Preview YouTube video Super Hurricanes and Typhoons

    Super Hurricanes and Typhoons
    Share
  • அவதியுறும் மக்கள் அமைதி பெற 64 பைரவருடன் அஷ்ட பைரவர் வழிபாடு

    Kaala Bhairavar

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி புரட்டாசி மாதம் 26ஆம் தேதி 12.10.2017 வியாழக்கிழமை தேய்பிறை அஷடமியை முன்னிட்டு, உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை பைரவருக்கு சிறப்பானது என்பதால் அவதிப்படும் மக்களுக்கு கை கொடுக்கும் 64 பைரவருடன் அஷ்ட பைரவர் வழிபாடாக மதியம் 12.00 மணி முதல் 03.00 மணி வரை அஷ்ட பைரவர் ஹோமத்துடன் அஷ்ட பைரவருக்கும் சொர்ண பைரவருக்கும் 64 கலசங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. .

    அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் நன்மையாக முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    மேலும் தீராத வியாதிகள் தீரவும், நம்மை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியவும். கெட்ட அதிர்வுகள் விலகவும், மன அமைதியே இல்லாதவர்களுக்கு மன அமைதி கிடைக்கவும் பைரவர் துணையுடன் செல்வவளம் பெருகவும் துன்பம் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகவும் ஆபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடவும் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டவும். சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும், பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வமான பைரவரின் அருள் கிடைத்திட தேய்பிறை அஷ்டமி தினத்தில் மேற்கண்ட 64 பைரவருடன் அஷ்ட பைரவர் யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

    Swarna Bhairavar

    உலகில் எங்கும் இல்லாதவாறு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவர்களான ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி மஹா கால பைரவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும் ஆதிசைவர்கள் வணங்கி வந்துள்ளா 64 விதமான பைரவர்களை நாம் வழிபடும் விதத்திலும் அஷ்ட பைரவர்களே அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள் என்பதால் 64 கலசங்கள் கொண்டு 64 பைரவர்களுக்கு சிறப்பு பூஜையுடன் மிளகு தீபம், கூஷ்மாண்ட தீபம், நெய் தீபம் ஏற்றி பைரவருக்கு விருப்பமான தாமரை, வில்வம், தும்பை, அரளி, மற்றும் செவ்வந்தி, பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெறவுள்ளது.

    நீலநிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம், பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன், கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பலவாறு ரூபம் கொண்டவர். என்று பல திருப்பெயர்கள் பைரவருக்கு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

    எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. வருகிற 12.10.2017 தேய்பிறை அஷ்டமி நாள் அன்று துக்கங்கள் யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை மேற்கொள்ளலாமே? என்கிறார் நமது ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    மேலும் விபரங்களுக்கு…

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
    வாலாஜாபேட்டை – 632513.
    வேலூர் மாவட்டம்.
    Ph : 04172-230033 / 230274 / 09443330203
    Web: www.danvantritemple.org | eMail : danvantripeedam@gmail.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170923 - Bhavani - Devi series 04 -watercolour on papyrus -lr

    சீமந் தசரணியில்(அம்பாளின் நெற்றி வகிடு) சிந்தூரம் பூசிடும்,
    காமம் தனைக்கொல்லும் கற்பக -நாமம்தனை
    நாளும் ஜெபிக்க நவராத்ரி நாட்களில்,
    கோளென்ன கொம்பா!கொக் கா!’’….!

    மாரி, சமயபுரக் காரி, சதுர்வேத
    தாரி, பிரியா அரனர்த்த -நாரி,
    லலிதஅதி காரி, கலிதீர சேரீர்,
    பலித பவானி பதம்….கிரேசி மோகன்….!

    Share
  • நவராத்திரி 05 (பாடல்)

    இசைக்கவி ரமணன்

    NAVA1
    உச்ச மானத்துலே வச்ச நேரத்துலே
    ஊருக்கெல்லாம் வெளக்கா உசுருக்கு உசுரா, அங்க
    ஒய்யாரி ஆடுற ஓரத் தலப்பா
    ஓடை நெளிகையிலே, துள்ளி
    வெள்ளி மினுக்குற கெண்டை இடுப்புல
    வெட்டும் மின்னல் அழகா?

    நீ அம்பலத்து அழகா? இல்ல
    அந்தரங்க நெசமா?

    கள்ளிச் செடிப்பழமே! அடி காசிப் படித்துறையே!
    முள்ளில் எழும் முனையே! அந்த முனையெழும் சுனையே! ஒரு
    சொல்லுக்குள்ள வந்து கண்ணச் சிமிட்டி
    சூனியம் ஆக்குறியே! அந்தச்
    சூனியத்துக்குள்ள சோழி விசிறி
    மானியங் கேக்குறியே, உசுர மானியங் கேக்குறியே!
    நீ வாழ அழெக்கிறியா? இல்ல
    வம்புக் கிழுக்குறியா?

    காலத் திருவோடு, என் காலும் தெருவோடு
    கரை ஒரு கோடு கல கலக்குது ஓடு, இங்க
    பாலமுமில்லே படகுமில்லே பாயுது காட்டாறு, உயிர்
    பதறுது காலோடு, அங்க
    பட்டுன்னு வெட்டுற மின்னலிலே ஒரு
    பட்டைத் திருநீறு, உசுரு
    மொட்டை மரமாச்சு
    இதில் எந்தக் கதை நெசமோ? அதில்
    எந்த முடிவழகோ?

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (5)

    க. பாலசுப்பிரமணியன்

     

    வைஷ்ணவி

    vaishno-devi-wallpaper

    சிங்கத்தின் மேலமர்ந்தாலும் சிங்காரச் சித்திரமே

    அங்கமெல்லாம் ஒளிர்ந்திடுமே ஆனந்தத் திருவுருவே

    மறையேதும் தேவையில்லை மனமுவந்து அழைத்ததுமே

    மனமிரங்கி வந்திடுவாய் மலையாளும் மாதரசி !

     

    பனிமழையிலே அமர்ந்தே பெய்கின்ற அருள்மழையே

    விதிவலியை நீக்கிடவே வான்தந்த அருமருந்தே

    மகிடனைக் கொன்றிடவே பிளிறிட்ட மதக்களிரே

    மனதினில் வைத்தவுடன் தாய்மையின் திருவுருவே !

     

    கண்ணிரண்டும் காந்தமெனக் கவர்ந்திழுக்கும் கற்பகமே

    கையிரண்டில் ஆயுதங்கள் கலியெல்லாம் அழித்திடுமே

    மலையேறி வந்தோரின் மனையெல்லாம் வருபவளே

    மனதினில் நீயிருக்க மாதமெல்லாம் மங்கலமே!

     

    சொல்லுக்குள்ளே உன்புகழைச் சுமைதாங்க வளமில்லை

    சூசகமாய்ச் சொல்லுகின்றேன் சொல்லுவதே நீதானே?

    கல்லாத மனிதருக்கும் கவிபாடும்  திறன்வருமே

    கருவாக நீயிருக்கக் கற்பனைகள் வேறெதற்கு ?

     

    பூவாகப் பொழிலாக புவியெல்லாம் ஆள்பவளே

    புன்னகைக்குப் பொருள்சொல்ல பூமகளே வருவாயோ ?

    பொன்னெதற்கு மண்ணெதற்கு உன்நினைவு இருக்கையிலே

    போதுமென்ற மனம்வேண்டும் புகலிடமே உன்பாதம் !

     

    விண்மீன்கள் அண்டங்கள் விழியினிலே வலம்வரவே

    மின்மினியாய் விண்வெளியில் இன்றிரவே வந்திடுவாய்

    கண்விழியில் நல்வரவை நானெழுதிக் காத்திருப்பேன்

    இன்னிசையில் உன்புகழை நான்பாடக் கேட்டிருப்பாய் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170922 - Mahalaya 03- Chandraghanta -lr
    170922 – Mahalaya 03- Chandraghanta -lr

    ”ஆத்திலே(ஆற்றில்) நீந்தியவள் , ஆத்துக்குள்(நெமிலி வீடு) வந்தனள்
    காத்த வராயன்(கிருஷ்ணர்-காக்கும் கடவுள்)தங் கைபாலா , -மூத்தவள்
    சந்திர(கண்ணன் -சந்திர வம்ஸம்) காந்தாவின் ,சூரிய(ராமர் -சூரிய வஸம்) காயத்திரி
    குந்தினாள்ஸ்ரீ சக்ரசிங் கி(நர சிங்கம்)’’….கிரேசி மோகன்….!

    Share