க. பாலசுப்பிரமணியன்

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ” என்பது பழமொழி. மனித சமுதாயங்கள் உருவான காலம் தொட்டே ஒரு தனி மனிதனின் பார்வைகளும் தேவைகளும் அந்தத் தனிமனிதனின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகக் கருத்தப்பட்டதால் அந்தத் தேவைகளை அடைவதற்காகவும் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் சண்டைகளும் போர்களும் துவங்கின. காலப் போக்கில் இந்தத் தனியான போராட்டங்கள் எவ்வாறு அழிவுக்கு ஆதாரமாகின்றன என்ற அறிவு முதிர்ச்சியினால் கூடி வாழும் சமுதாய நோக்கும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழும்நோக்கும் மேலோங்கத் தொடங்கின. இதன் வழி வந்ததே கூட்டுக குடும்ப நோக்கமும் வாழ்க்கை முறைகளும். இந்த உறவுகள் விரிந்து சமூக அளவிலே மற்றவர்களுடன் எப்படி உறவாடுவது என்ற உணர்வுநிலையில் மனித இனத்திற்கு பல நுண்ணறிவுகள் மேலோங்கி வந்தன. இன்றைய காலக்கட்டத்தில் மீண்டும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில்  ஏற்பட்ட விரிசல் சமுதாய சிந்தனைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே. ஆகவே மீண்டும் உறவு சார்ந்த நுண்ணறிவின் அடிப்படைக் கருத்துக்கள் தனி மனிதருக்கும் சமுதாயத்திற்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

இந்த உறவு சார் நுண்ணறிவின் சில முக்கிய அடிப்படைகளாக கருதப்படுவது:

  1. உறவுகளின் அமைப்பு, தேவைகள் மற்றும் நிலைப்பாடுகளை அறிதல்
  2. உறவுகள் பாராட்டுதலில் அளவு, மேன்மை மற்றும் காலங்கள்
  3. உறவுகளை வலுப்படுத்துதல், மேன்மைப்படுத்துதல்
  4. உறவுகளை தேவைகள் காலங்களுக்கேற்ப உபயோகித்தல்
  5. உறவுகளின் அடிப்படைகள் அழிந்துவிடாமல் பாதுகாத்தல்
  6. உறவுகளின் உணர்வுகளை அறிதல், பாராட்டுதல் பாதுகாத்தல்
  7. உறவுகளோடு உள்ள தொடர்பில் பேச்சு மற்றும் உடல் மொழிகளின் பங்கு
  8. உறவுகளின் தொடர்புகளால் பொருளாதாரம் மற்றும் மனநலன்களை வளர்த்தல்

இந்த நுண்ணறிவு அநேகமாக எல்லாவிதமான தொழில்களுக்கும் சமுதாய உறவுகளுக்கும் தேவையானதாகக் கருதப்படுகின்றது.  அவற்றில் சில

  1. ஆசிரியர் -மாணவர் உறவுகள் (Teacher-student Relationships)
  2. மருத்துவர் – நோயாளி உறவுகள் (Doctor-patient Relationships)
  3. வியாபார உறவுகள் (Business Relationships)
  4. அரசியல் உறவுகள் (Political Relationships)
  5. வெளிநாட்டு உறவுகள் (Foreign Relations)
  6. மனிதவள மேம்பட்டுப் பணிகள் (Human Resource Management)
  7. வெகுஜன உறவுகள் (Mass Relationships and Management)
  8. தொழிலாளி- முதலாளி உறவுகள் ( Management relationships)
  9.  மனநலம் பாதுகாப்போர் உறவுகள் (Counselling)
  10. கூட்டுக்குடும்ப உறவுகள் (Family Relationships)

ஆகவே இந்த நுண்ணறிவு விளம்பரம், விற்பனை, சந்தை வாய்ப்புக்களில் உறவாடுவோர், வழக்கறிஞர்கள் முதலாளிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள், வரவேற்ப்பாளர்கள்  தூதர்கள் போன்ற பல தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது. இவர்களை “மக்கள்சார்  நுண்ணறிவில்” (People Smart) வல்லுனர்களாக கருத்தப்படுகின்றனர்

இவர்களுக்குத் தேவையான சில குணங்கள

  1.  பொறுமை  (Patience)
  2. சகிப்புத் தன்மை (Tolerance)
  3. இடம் அறிந்து அளவாகப் பேசுதல் (Communication skills)
  4. நேரம் காத்தல் (Time management)
  5. காலந்தவராமை (Punctuality)
  6. அயல்நோக்கு (Extrovertness)
  7. ஒத்துழைப்புத் தன்மை (cooperation)
  8. காது கொடுத்துக் கேட்கும் திறன் (Listening skills)
  9. மற்றவர்களின் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை (Respect for others feelings)
  10. 10 நட்புப் பாராட்டுதல் (Celebration of friendship)

கற்றலில் பள்ளிகளிலும்  கல்லூரிகளிலும் மேற்கண்ட திறன்களை வளர்ப்பதற்கான  பல்நோக்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பொதுவான வகுப்பறை பாடத்திட்டங்களுக்குள் மாணவர்களை சிறைப்படுத்தி அவர்களின் வாழ்க்கை வளத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்துதல் கல்வியின் நோக்கத்தையே சிதைப்பதாக அமையும் .

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *