கிரேசி மோகன்

பார்அதன் வேருக்கு புல்லாங் குழல்நீரும்,
நூறு’களை’ போக்க நிவாரண, -போருக்கு
கண்ணன்கை காலில், கவசம் அணீந்தாலும்,
எண்ணமது கோதூளி யே’’….கிரேசி மோகன்….
எஸ் வி வேணுகோபாலன்

சீருடையை அணிவித்துச்
சிரிக்க வழியனுப்பிச்
சிங்காரச் செல்லம்கொஞ்சித்
திரும்பிவரக் காத்திருந்தோம்
போருடையைப் போட்டுவந்த
பொல்லாத கும்பலொன்று
பொய்யாக்கும் என்றா
பாவிமக்கள் கனவு கண்டோம்?
கொத்துகொத்தாய்ப் பூத்திருக்கும்
குழந்தைகளைக் கண்டதுண்டு
மொத்தமொத்தமாய்க் கண்ணெதிரே
மடிந்துவிழப் பார்த்ததுண்டா?
ரணமொன்று பார்த்தாலே
பெற்றமனம் பதைபதைக்கும்
பிணமாகப் பிள்ளையுடல்
பார்ப்பதற்கோ உயிர்தரித்தோம்?
மென்குரல்கள் வதிகின்ற
பள்ளிக்கூட வீதியிலே
வன்குரலாய் உலுத்தர்கள்
வழிமறிக்கப் பார்த்ததுண்டா?
கூச்சல் கும்மாளம்
கொண்டாட்டம் கேட்பதுண்டு
தோட்டாவின் சத்தத்தை
வகுப்பறைக்குள் கேட்டதுண்டா
ஆசிரியை அமர்ந்திருக்க
அன்றாடப் பாடமுண்டு
அவரையே கட்டிவைத்து
எரியூட்டக் கேட்டதுண்டா?
புயலுக்குப் பெருமழைக்குக்
கொள்ளைநோய் போன்றதற்கு
ஓயாமல் புதைத்ததுண்டு
பலியான மனிதருடல்
ஆத்திர நெஞ்சினரின்
அறியாமைக் கொடுந்’தீ’க்கு
ஆகுதியாய்ப் போனவுடல்
அள்ளியள்ளிப் புதைப்பதுண்டா?
நோற்றுப் பெற்றெடுத்துப்
போற்றி வளர்த்தவுயிர்
நூற்றுக் கணக்கில்
இடிந்துவிழ சகிப்பதுண்டா ?
தீவிர வாதமென்ன
திடீர் பிறப்பெடுத்ததுவா ?
ஆதிக்க சக்திகளின்
அராஜகத்தில் தழைத்ததுவா
மனிதத்தை மதிக்காத
வெறிக்கென்ன மதத்தின் பேர்?
உயிர்வதைக்கு அஞ்சாத
பேயாட்டமா புனிதப்போர் ?
ஓலங்கள் கதறல்கள்
ஓயாத குமுறல்கள்
கோபங்கள் சாபங்கள்
கொதிகலனாய் உள்ளங்கள்
ஆனாலும் சொல்கின்றார்
அத்தனை பெற்றோரும்
அச்சமில்லை அச்சமில்லை
தோற்றுப்போக விருப்பமில்லை
இறந்துபோன குழந்தைகளை
அழுதே புதைத்துவிட்டு
மிகுந்தோரைப் பள்ளிக்கு
அனுப்பாமல் ஓய்வதில்லை
தீவிர வாதத்தின்
வெறித்தனத்திற் கொருநாளும்
அடிபணியப் போவதில்லை
அடக்காமல் சாய்வதில்லை.
*****************
நன்றி: தீக்கதிர்: டிசம்பர் 19, 2014
டாக்டர். எம்.ஜீவகன். M.B.B.S, M.S, D.N.B
Urologist, Senior Consultant,R.G.Stones,Chennai
டாக்டர். எஸ் லக்ஷ்மி பிரசன்னா ஜீவகன்
M.B.B.S,D.A
Anesthetist, Sankar Nethralaya,Chennai
அன்புடையீர்,

வணக்கம். எங்கள் தந்தையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சீனிவாசன் [கவிஞர் வசந்த ராஜன்]M.A.B.L.அவர்களின் அண்ணாவுமான M.S.P.முருகேசன் என்ற பெயரில் அறியப்பட்ட எழுத்தாளர் வையவன் அவர்களின் 75வது வயது நிறைவு நாள் விழா வரும் 24 டிசம்பரில் [புதன் கிழமை] மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு காந்தி நகர் முதலாவது சாலையில் உள்ள காந்தி நகர் கிளப்பில் நடைபெற உள்ளது.
பல முக்கியப் பிரமுகர்களும் நண்பர்களும் பங்குகொள்ளும் அந்த நிகழ்ச்சியில் நூல்கள் வெளியீடு, அடையாறு தமிழ்ச் சங்கம் துவக்கம், இதயத்துடிப்பு பத்திரிகை விநியோகம், ஆருத்ரா மாத ஏடு துவக்கம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது.
59 ஆண்டுகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வரும் வையவன் அவர்கள் வைரமணிக் கதைகள், மணல்வெளி மான்கள், ஜங்ஷ னிலே ஒரு மேம்பாலம், ஜமுனா , உயிரோட்டம் போன்ற அற்புதமான படைப்புகளைத் தமிழ் உலகிற்கு அளித்து மௌனமாகப் பணியாற்றுபவர்.
தனக்கே உரிய தனித் தன்மை பெற்ற அவரது எழுத்துக்களில் எந்த இசத்தின் தாக்கமும், எந்த அந்நிய மற்றும் தமிழ் எழுத்தாளர் பாதிப்பும் இராது. மானுடமேன்மையும் அன்பின் ஈரமும் நிறைந்தது வையவன் எழுத்துக்கள், கிராம வாழ்வானானும் சரி நகரவாழ்வானாலும் சரி அதன் ஆழத்தைத் தொட்டுச் செல்லக் கூடியது. வையவன் எழுத்துக்கள் குமுதம் கல்கி ஆனந்தவிகடன் இதழ்கள் இவருடைய படைப்புகளை விரும்பி வெளியிட்டன
59 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கிவருகிறா இவருக்கு , அங்கீகாரமோ விருதுகளோ ஒரு பொருட்டல்ல என்றாலும் தரத்தோடும் அறத்தோடும் அதே சமயம் இலக்கிய செழுமையிலும் சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளர்
ஜெயகாந்தன் சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர் வரிசையில் வைத்து மதிக்கத்தக்க வையவன் படைப்புக்கள் கட்டுரை இலக்கிய ஆய்வு, நாடகம் ,கவிதை என்று பன்முகப்பார்வை கொண்ட வை,
இவரது கதைவசனத்துடன் எடுக்கப்பட்ட நம்ம ஊரு நல்ல ஊரு குறும்படம் தமிழ் நாடு முழுவதும் கிராமங்களில் திரையிடப்பட்டது. ஹிந்தி, மலையாளம் , தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கறிந்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் நாவலையும் பிற மலையாள எழுத்தாளர் படைப்பையும் மொழிபெயர்த்தவர் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதி ராஜீவ் காந்தி, மேனகா காந்தி, ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஆளுநர் சுர்ஜீத் சிங் உள்ளிட்ட பல தலைவர்களிடம் பாராட்டுப் பெற்றவர்.எழுதப்படிக்கத் தெரியாதவருக்கான் எழுத்தறிவுப் பணியில் இவர் சேவைக்காக மால்கம் ஆதிசேஷையா விருது பெற்ற இவர் இன்னும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்
அனைத்து மொழிகள் மீதும் ஆர்வமும் நேசமும் கொண்ட இவர் உள்ளம் சாதி மத வேறுபாடுகள்அற்றது. எந்த குழுவிலும் இயக்கத்திலும் சாராமல் தன்னளவில் சரி என்று பட்டதைமட்டும் செய்துவரும் வையவன் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிய அங்கீகாரமோ அடையாளமோகிடைக்கவில்லை என்ற வருத்தம் நமக்கு இருந்தாலும் அதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல தோடர்ந்து செயல்பட்டு வருகிறார், இப்படி எந்த லாபியும் செய்யாமல் ஊடகவெளிச்சம் பட த்தந்திரங்கள் மேற்கொள்ளாமல் அரசியல் பின்புலமோ அதிகாரச் செல்வாக்கோ இல்லாமல், தொடங்கிய பணியை வயது காரணம் காட்டி நிறுத்திவிடாமல் ,காட்டு மலர் போல் பூத்துக்கொண்டே இருக்கும் இவரது படைப்பாற்றலுக்கும் பதிப்பாற்றலுக்கும் ஒரு சிறு நன்றியைத் தெரிவிக்கிற ஒரு வாய்ப்பே இந்த விழா . அன்புகூர்ந்து தாங்கள் வருகை தந்து மகிழ்ச்சியைப் பங்கிட்டுக்கொள்ளவேண்டுகிறோம்
வந்த விருதுகளுக்கு வணக்கம் சொல்லி, வராத விருதுகளுக்கு டாடா கூறி என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தொடரும் அந்த வாழ்வுக்கு ஒரு வணக்கம் சொல்வோம் வாருங்கள்
பவள சங்கரி
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில், கிளப்மெட்ரோ என்ற உடற்பயிற்சி நிலையத்தின் யோகாசனப் பயிற்சியாளர் திருமிகு லிண்டா அவர்களுடன் ஒரு நேர்காணல்!
இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற மிக நல்ல உபாயம் யோகாசனம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை. யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும் ஆசனங்களைக் குறிப்பது . அனுதினமும் முப்பது நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தால் வெகு விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும். தியானம் நம்மை நாமே உணரச் செய்கிறது. மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம். சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடுமின்றி மனதோடு உடலை இணைத்து பயிற்சி செய்வதே யோகம். தியானத்தின் மூலம் பூரண மன அமைதி பெற முடியும். இருதயத்தின் படபடப்பு குறைவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துவதால் வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். இரத்த அழுத்தம், ஆத்துமா போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிவதோடு ஆயுளும் கூடும். ஏற்கனவே உள்ள நோயின் உபாதைகளை படிப்படியாகக் குறைத்து, அதனை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியம் கூடும். நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற உடலின் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும் வாய்ப்பு அதிகரிக்கும். இளமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
5000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் நாட்டுச் சித்தர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஆய்ந்தறிந்த அறிவியல் உண்மை யோகாசனம் என்பது.
ஓகம் என்று சித்தர்களால் வழங்கப்பட்ட சொல்தான் உயிரும் மெய்யும் கூடும் கலை. இச்சொல்தான் மருவி வடமொழியில் யோகம் என்று அழைக்கப்படுகிறது. உடலும் மெய்யும் ஒன்றாக இருப்பினும் உயிரைத் தனியே நம்மால் உணர முடிவதில்லை. ஆனால் யோகக் கலையை உளப்பூர்வமாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நம்மால் அறிய முடியும் என்பது சித்தர்களின் வாக்கு. அதனால் உயிரையும் உடலையும் பாதுகாக்கும் உத்தியை அறிவதும் எளிதாகிறது . தினமும் காலை மற்றும் மாலையிலும், அல்லது காலையில் மட்டுமாவது இப்பயிற்சியை பழகி வந்தால், நம் உடலோடு உயிரும் புத்துணர்வு பெறுவதை அறியலாம். யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்புபவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நலம்.
உலக அளவில் பல நாடுகளில் யோகப்பயிற்சிகள் பரவியுள்ளன. அமெரிக்காவில் யோகாசன வகுப்பில் பயிற்சி பெற பல எதிர்பார்ப்புகளுடன் சென்றபோது சில ஆச்சரியங்களும் காத்திருந்தன. ஆம் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் அமைதியான தியானத்தில் ஆரம்பித்து, ‘சிவாய நம’ என்ற திருமந்திரமும் தொடர, சீன யோக மந்திர மெல்லிசை மற்றும் மேலை நாட்டு மிக மெல்லிய மதுர கீதங்களுடன் மிக இனிய அனுபவங்களாக அமைந்திருந்தது லிண்டா அவர்களின் யோகாசன வகுப்பு!
யோகாசனம் செய்வதற்குரிய பொதுவான நியமனங்கள்:
* பொதுவாக காலை நேரங்களில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததென்றாலும் மாலையில் செய்ய வேண்டிய தேவை வரும்போது, உணவு உண்டு மூன்று மணி நேரத்திற்கு பின்னரே, அதாவது உணவு செரிமானம் ஆன பிறகே யோகப்பயிற்சி செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் அருந்தும் வழமையுடையவர்களாயின் பானம் அருந்திய அரை மணி நேரத்திற்குப் பின்னரே பயிற்சிகளைச் செய்தல் வேண்டும்.
* அன்றாடம் ஆசனங்களைச் செய்வதற்கு ஆரம்பிப்பதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் ஆசனத்தின் முடிவில் இரு முறைகள் மூச்சை நன்றாக இழுத்து விட்டு ஆசுவாசம் கொள்ளல் வேண்டும்.
* ஆசனங்களைச் செய்யும் போது அது உடலுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல், தங்களால் இயன்ற அளவிற்கு மிக இலகுவாகச் செய்யும் வண்ணம் இருத்தல் நலம்.
* அதேபோல ஆசனங்களைச் செய்து முடிக்கும் போது 5 முதல் 10 நிமிடங்கள் வரை சவாசனம் என்ற ஓய்வு ஆசனம் செய்த பிறகே முடிக்க வேண்டும்.
* இறுதியாக பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி செய்து, 10 முதல் 20 நிமிடங்கள் வரை மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது மேலும் நன்மையளிக்கும்.
* தினசரி அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசனப் பயிற்சி செய்வது சிறந்த பலன் அளிக்கக்கூடியது.
* யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம் , அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது. நீர் ஆகாரமாக இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்கு மணி நேரம் கழித்தும் யோகப்பயிற்சிகளை செய்யவும்.
* யோகப் பயிற்சி முடிந்த பின்பு வியர்வை அடங்கிய பின்னால் தான் குளிக்க வேண்டும்.
* யோகாசனப் பயிற்சி செய்து முடித்த பின்பு 15 நிமிடங்களுக்குப் பின்னர் ஆகாரம் எடுத்துக்கொள்வது நலம்.
திருமிகு லிண்டா அவர்களிடம் யோகாசனம் குறித்து கேட்ட செவ்வி மற்றும் அவர் அளித்த விடைகளும் இதோ :
1. Could you please tell me why did you choose ‘Yoga’ as your career in particular?
Linda : I actually chose a career in fitness, which I still love after many years. However, fitness can be rough on the physical body and I became very stiff and sore and decided to try yoga as a means to relieve this. This began my Yoga Journey in 2002. I then enrolled in the American Yoga Academy for my 200 hour teacher training and after that 40 hour training in an Iyengar style and I have been teaching yoga ever since.
2. what is the PHILOSOPHY OF YOGA?
Linda : A simple Philosophy of Yoga is that the Mind, Body and Spirit are all connected.
Yoga is a collection of spiritual techniques and practices; however, most yoga which is practiced in the West is Hatha Yoga and focuses on movement of the body mostly and eventually clearing the mind thru breath.
3. Is yoga a collection of spiritual techniques and practices?
Linda : Spiritual techniques are usually not included, especially in a gym setting.
4. About : The Bhagavad Gita, The Upanishads, Vedas – Is there any connectivity with Yoga?
Linda : Bhagavad Gita, the Upanishads, and Vedas all reference yoga so there is a definite connection between them.
5. Do we need to Practice Yoga at Home?
Linda : Yes, I believe that you should practice yoga at home especially during times of stress or tightness in the body. Those with chronic issues should practice yoga daily if possible. Yoga in general is great for the immune system and overall state of being.
6. whether there is any yoga practice where one can get relief for chronic diseases?
Linda : Yoga certainly can provide relief for chronic diseases. Examples are hip openers for sciatica and backbends to stimulate the kidneys.
7. Sankhya philosophy, one of the oldest and most influential of the six systems (darshans) of Indian thought, has had a profound impact on the beliefs, values and concepts used in… what do you say?
Linda : Sankhya philosophy – I am not familiar with this philosophy and do not know if there is a connection to yoga.
8. What is commonly considered Yoga in the West is in actuality just one of the many paths of Yoga, and is technically called Hatha Yoga. The oldest and most widely used ancient text on the physical practices of Hatha Yoga is the Hatha Yoga Pradipika. Do you agree?
Linda : Yes, the texts of Hatha Yoga Pradipika begin with the physical postures of yoga (Asana) and once strength and flexibility of the body are obtained, thus aiding to rid the body of disease, then breathing techniques begin as a way to bring energy to the body and control the mind and thus release stress (physical and mental stress). From there the Yoga Pradipika can be a guideline to go deeper into Yoga if the participant desires.
9. What is Mudra? can you explain about techniques of the Pranayama :-
Linda : A mudra is like a gesture or a position designed to let energy flow to different areas of the body. It is said that disease is caused by interruption of the flow of energy to the body. The most common mudra is touching the thumb and the index finger. Pranayama is simply breathing and there are many breathing techniques. For example Alternate Nostril Breathing (Nodhi Sodhana) is done to calm the nervous system while Kapalabahti is invigorating. These are breathing exercises in additional to Asana practice. During Asana practice the breath should be full and deep, approximately 6 seconds and used as a way to distract the mind so that you are fully immersed in your Asana practice. During challenging postures, the breath can be used as a means of drawing energy and during relaxing postures, or stretching, the breath can be used as a means of sinking deeper into the posture.
10. The Hatha Yoga Pradipika gives us a valuable map to these deeper practices of yoga, as well as providing the knowledge and tools to travel to these depths if we so choose. Is it correct?
Linda : Yes, the Hatha Yoga Pradipika is like a map of yoga which begins with Asana.
11. What are the moral, ethical and societal guidelines for practicing yoga?
Linda : The moral, ethical and societal guidelines for practicing yoga are the “5 Yamas of yoga” which are like rules of behavior: nonviolence, truthfulness, living without excess gluttony, living without unnecessary possessions and non-stealing. Striving for a healthier and more peaceful life.
Yes, certainly in 2014 we can all use some guidance to live an honest and ethical life and focus less on material possessions and to treat our bodies with respect.
12. Is yoga helpful for those with Scoliosis?
(Scoliosis, a condition that leads to lateral curvature of the spine, affects 6 million people in the U.S., from infants to the elderly. The most common age of onset is 10-15 years, and 85 percent of cases are idiopathic.)
Linda : For those with Scoliosis, especially adolescents, yoga can especially helpful. Side Plank done on only 1 side (the side with the curvature) can help to reduce the curvature without surgery. In severe cases of scoliosis yoga in addition to surgical procedures can be extremely helpful.
உலகம் முழுவதும் ஒரு கிராமமாக சுருங்கிவிட்ட இந்த காலத்தில், நல்ல விசயங்கள் எங்கு இருந்தாலும், நாடு, இனம், மொழி, மக்கள், மதம் என்ற பேதமில்லாமல் அதை ஏற்றுக்கொண்டு தம் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளும் பக்குவம் நம் மக்களிடையே வேர்விட ஆரம்பித்துவிட்டதற்கு ‘யோகாசனம்’ என்ற நம் நாட்டுச் சித்தர்களின் அரிய கலை, அமெரிக்காவில் பரவி, அமெரிக்க மக்களிடையே பெரும் நம்பிக்கையை வளர்த்திருப்பதே அதற்கு சான்றாக அமைந்துள்ளது.
கிரேசி மோகன்
இவை நான்கும் கேசவ் ஓவியம் பார்த்த பரவசத்தில் எழுதியது….
——————————————————————————–

“பச்சை மலையோன் ,பவளச்செவ் வாயனவன்
இச்சை மிகக்கொண்டான் இவ்வையம்- மெச்சிட;
ஆதலால் நின்றான் அழகுக் கிளியேந்தி
கோதையாய்க் கோலம் கொடுத்து”….
“வேண்டாத மூப்பினை வாலிபத்தில் ஏற்றுப்புள்
கீண்டானைக் காதலிக்க கோதையாய் -ஆண்டாளாய்,
ஆனாளோ அவ்வை அதனால்தான் பாசுரங்கள்
தேனாய் இனிக்கின்ற தோ”!….
“ஆடிப்பூ ரத்தில் அவதரித்த ஆண்டாளின் ,
சூடிக் கொடுத்த சுடர்கொடியின், -ஜோடித்து
பாக்களாய் ரங்கமன்னார் பாதத்தில் இட்டநறும்
பூக்களே நம்பாது காப்பூ”….
“சாரங்க மன்னார்க்கு சொல்லித் திருப்பாவை
பாரங்க மன்னாராய் பாதித்து, -சீரங்கம்
தாதை யுடன்சென்று தாரமாய் மாறிய
கோதைமுகம் பூசுமஞ்சள் காப்பு”….
’’ கோதைக் (ஸ்ரீவில்லிபுதுர் நாடகம் போடச் சென்றபோது)காப்பு’’
–————————————————————————————————————————————————————
ஒருநூற்று நாற்பத்தி மூன்றுரைத்த தாயே
கருமூர்த்தி மேல்கொண்டு காதல் -திருவில்லிப்
புத்தூரின் வாழ்வே பெரியாழ்வார் பெண்பிள்ளாய்
கொத்தலர் பூம்பாவாய் காப்பு….(1)
கயிற்றுதரக் கண்ணன்மேல் காதல்கொண்(டு) அன்று
இயற்றினாய் பாடல் எமக்காய் -பயிற்றுவித்த
தாதையுடன் சென்றந்த கீதையோன் கைப்பிடித்த
கோதைக்கை கோகிலமே காப்பு….
….(2)
வினதை மகனும் புனிதர் மகளும்
இனிதாய் இடவலம் ஏள -அணிதிகழ்
அங்கமதில் வில்லிபுதூர் ஆண்டாள் அணிந்ததேற்ற
ரங்கமன்னார் கோலம் ருசி….(3)
கண்ணாடிப் பொய்கையில், கட்டிய மாலையை
முன்னாடி சூடி மகிந்ததற்குப் -பின்னாடி
வில்லிபுதூர் ரங்கனின் வெற்றிக்(கு) அலங்கலிடும்
கிள்ளைகொள் கோதாய் காப்பு….(4)
கிளிப்பிள்ளை போலவள் கீசுகீசு பாட்டை
களிப்புடன் ஓதுவான் கண்ணன் -தளிப்புன்னில்
அக்காரச் சோறுண்ன அந்தரங்கன் கைப்பிடித்து
உக்கார வைத்தோளை உன்னு….(5)
எத்தனுக்(கு) எத்தனந்த ஏரார்ந்த கண்ணியவள்
பெத்தெடுக் காதஅந்தப் பிள்ளையை -முத்துடை
பந்தலுக்குக் கீழே பதியாய்ப் பிடித்திழுத்து
குந்தவைத்தக் கையிரெண்டும் காப்பு….(6)
ஓர்கழி கையேந்த ஆர்குழல் வாயூத
ஊர்வன மேய்த்தோ னுடனொன்ற -தார்குழல்
மார்கழி நீராடி மையிட்(டு) எழுதாத
கூர்விழித் தாமரை காப்பு….(7)
வெப்பறியா மார்கழியில் துப்புரவாய் நீராடி
ஒப்பறியா நோன்பிருந்து உத்தமர்க்கு -சொப்பனத்தில்
இல்விதித்து இங்கிழுத்து வில்லிபுதூர் மண்ணிலம்மிக்
கல்மிதித்த காலிரெண்டும் காப்பு….(8)
எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தோனை
சங்கிருக்கும் கையானை சாரங்கனை -திங்கள்நன்
மார்கழியில் பாடி மணம்புரிந்த ஆண்டாளே
நேர்வழியில் எம்மை நடத்து….(9)
”ஆடிவரும் பூரம் அவதரித்து, மார்கழியில்
பாடிவரும் ஆண்டாளின் பாசுரத்தை -நாடிவரும்
வைகுண்டம் விட்டந்த வில்லிபுதூர் வாழ்வுக்கு
பைகொண்ட பாம்பணைவோன் பார்….(10)
’’தப்பெது வானாலும் தாரா ளமாய்ச்செய்வீர்
முப்பதைத் தப்பின்றி முன்மொழிந்து, -அப்புறம்பார்
குப்பென வேர்த்து குதித்தோடும் வெவ்வினைகள்;
துப்புர வாகும்வுன் தீங்கு’’….(11)
’’ நாச்சியார் ஆண்டாள் நவனீத ரங்கனைக்
காய்ச்சினாள் பாசுரத்தால் காலையில், -பூச்சொரிந்து
சில்லென்று மாலையில் சூடிக் கொடுத்தவள்
இல்லாளாய் ஆனாள் இறைக்கு’’….(12)
’’ஆடிப் பூரத்தின் ஆச்சரிய ஆண்டாள்போல்
பாடிப் பறக்கப் பணித்திடுவாய்; -ஓடிப்போய்
புள்ளேறி ஆனை பரிதவிப்பைப் போக்கியவா
சொல்லேறி சிந்தைக்குள் செல்’’….(13)
“பச்சை மலையோன் ,பவளச்செவ் வாயனவன்
இச்சை மிகக்கொண்டான் இவ்வையம்- மெச்சிட;
ஆதலால் நின்றான் அழகுக் கிளியேந்தி
கோதையாய்க் கோலம் கொடுத்து”….(14)
ஆடிப் பலன்
————–
”ஆடிப்பூ ரத்தாள் அளிக்கின்றாள் தள்ளுபடி
வாடிக்கை யாய்வந்து வில்லிபுதூர் -ஜோடிக்கு
முன்நின்று தப்பாது முப்பதைச் சொல்வோர்க்கு
பின்நின்று வெற்றியளிப் பு’’….(15)….
——————————————————————————
’’ஆடிப் பூரத்தின் ஆச்சரிய ஆண்டாள்போல்
பாடிப் பறக்கப் பணித்திடுவாய்; -ஓடிப்போய்
புள்ளேறி ஆனை பரிதவிப்பைப் போக்கியவா
சொல்லேறி சிந்தைக்குள் செல்’’….கிரேசி மோகன்.
’’ நாச்சியார் ஆண்டாள் நவனீத ரங்கனைக்
காய்ச்சினாள் பாசுரத்தால் காலையில், -பூச்சொரிந்து
சில்லென்று மாலையில் சூடிக் கொடுத்தவள்
இல்லாளாய் ஆனாள் இறைக்கு’’….கிரேசி மோகன்…
’’தப்பெது வானாலும் தாரா ளமாய்ச்செய்வீர்
முப்பதைத் தப்பின்றி முன்மொழிந்து, -அப்புறம்பார்
குப்பென வேர்த்து குதித்தோடும் வெவ்வினைகள்;
துப்புர வாகும்வுன் தீங்கு’’….கிரேசி மோகன்….
போகியன்று ஆண்டாள் திருக்கல்யாணம்….
“ஏகபோகம் ஆகிறாள் ஏரார்ந்த கண்ணியவள்
நாகமிசை நர்த்தன நாரணன் -பாகமாக;
போகியன்று ஆண்டாள் பெருமாளை சேர்கிறாள்
வாகீச பெண்மைக்கு வாழ்த்து”…
“பழயன விட்டு புதியன பூண
மழையன்ன மாலின் மனையாய்-விழைகிறாள்
புள்ளேறி வைகுந்த புக்ககம் போவதற்கு
கள்ளுறும் பாசுரத்தாள் காண்”….
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்
பாடி இடம்பிடித்தாள் பாற்கடலில்; -ஆடிப்பூ
ரத்தாள் பதம்பிடித்து ரங்கன் அழைக்கின்றான்
அத்தாளை அம்மிமிதிக் க “….
“கீதைக்(கு) இணையான ,கோதை திருப்பாவை
போதை தலைக்கேற புள்ளேறி -தாதை
பெரியாவான் இல்லம் பறந்துபோய் கேட்டான்
தரியாஓய்! பெண்ணை தனக்கு”….
I LOVE YOU (143) அன்றே சொல்லிவிட்டாள் அரங்கனுக்கு ஆண்டாள்….
“பட்டர் பிரான்பெண்ணை BUTTER பிரான்கண்ணன்
ட்விட்டரில் காதலுக்கு தூதுவிட்டான் -லெட்டராய்;
நூத்திநாப் பத்திமூணு நூற்றாள் பதிலாக,
ஆத்தியது ஐலவ்யு ஆச்சு”….
———————————————————————————————————————————————————————
நாகினி
பஜனைப் பாடலை
இழுத்துப் போர்த்திக்கொண்டது
மார்கழி குளிர்..
***
வரவேற்கும் புலர்பொழுதை
வாசல் அடைத்து நிற்கும்
வண்ணக் கோலம்..
***
தெருவடைக்க சுண்ணக்கோலம்
வண்ணம் காட்டியும்
எறும்பு பசியாறவில்லை..
***
தட்டி எழுப்பியது
புலராத சூரியனை மார்கழி
பஜனைப்பாடல்..
***
கல்யாண மேடை கோலம்
தெருவை அலங்கரிக்கப் போட்டாள்
முதிர்கன்னி..
… நாகினி
வன்கொடுமை மூச்சடக்க..
உலக விளையாட்டு அரங்கு
நிறையும் வக்கிர செயல்பாடுகளில்
சிக்கித் திணறி நசுங்கும்
புனித மனிதம் காக்கத் தவறும்
வேடிக்கை மனிதர்கள்..
மனிதர்கள் உருவில் உலவும்
மிருகமனம் நடத்தும்
காமவெறி நாடகத்தில் பலியாடாய்
கள்ளமில்லா சிறுமிகளும்
அறுபட்டு உருக்குலையும் பலாத்கார
ஆட்டத்திற்கு மூடுவிழா காணாத
வேடிக்கை மனிதர் நிறைந்த
உலக விளையாட்டு ஆட்சிக்களம்..
களம் நிறைந்த வெள்ளமென
பெருகும் மக்கள் கூடி களிக்கும்
நல்லுறவு மனப்பாங்கு நட்பிலிருந்தாலும்
பெற்று வளர்த்து சீராட்டிய
சொந்த பந்த உறவுகளை
சொத்துக்காக
பிணந்தின்ன வட்டமிடும் கழுகென
கூடயிருந்தே குழி பறித்து
தரையில் தள்ளி மிதித்து நசுக்கும்
வாடிக்கை விளையாட்டு எந்தவீட்டில்
எப்பொழுது அரங்கேறுமென காத்துக்கிடக்கும்
வேடிக்கை மனிதர்களால் நிறைந்த
உலக விளையாட்டு உறவுமேடை..
மேடையேறும் இலக்கிய விரலால்
நசுக்கப்பட்ட சமூக கொடுமைகளில்
நசங்கியும் நசுங்காத அரக்கனாய்
உயிர்த்தெழும் சாதிமத பிரிவினைகள்
உள்ளிட்ட வன்கொடுமை மூச்சடக்க
நன்நடத்தை விரல் நே(கூ)ராக்கிய
கல்வி எழுத்தாணி கொண்டு
வேடிக்கை மனிதர்களைப் பந்தாடட்டும்
உலக விளையாட்டு அரங்கு..!!
… நாகினி
[download id=”அஆஇஈஉஊ”]
முயற்சியை முதலில் தூண்டி
.. முனைந்திடும் நேரம் காட்டி
இயற்கையின் இரும்புத் தாதை
.. ஏந்தியோர் கலத்தில் இட்டு
மயக்குறு நிலையிற் காய்ச்சி
.. மறுவுரு பிறக்கச் செய்யும்
வியத்தகு வாழ்வின் போக்கில்
.. விளைந்திடும் உளியென் காதை (1)
மண்ணெலாம் வென்ற பின்னர்
.. மன்னவன் நெஞ்சில் ஓர்நாள்
விண்ணெலாம் அளந்த தேவன்
.. விந்தையை என்றும் போற்றும்
வண்ணமோர் கோவில் செய்ய
.. வந்தநல் ஆசை அந்த
எண்ணமோ டியைந்து பின்னர்
.. எழுந்ததே பெரிய கோவில் (2)
மலையுடைத் தெறிந்த தும்நான்;
.. மண்ணடி வீழ்ந்த பின்னர்ச்
சிலைகொளும் அளவிற் சீராய்ச்
.. செப்பனிட் டதும்நான்; மெல்ல
தலைநிறை கனத்தி னூடே
.. தஞ்சையை அடைந்த போதும்
கலையெனும் உலகின் ஓங்கும்
.. கற்பனைச் செங்கோல் நானே (3)
கல்லெலாம் என்றன் முன்னர்க்
.. கதறிடும் வண்ணம் என்னால்
சில்லுடைந் தெகிரக் கண்டு
.. சிரித்துநான் இன்பங் கண்டேன்
மெல்லவென் கூர்மை தீட்ட
.. மேனியை வாட்டும் தீயால்
சொல்லொணாத் துயரம் உற்றேன்
.. சுருங்கிடத் தெளிவு கொண்டேன் (4)
கற்பனை ஓட்டங் காட்டிக்
.. கல்லொடு காதல் செய்தேன்;
நற்றிறன் நயத்தை ஊட்ட
.. நாணுமக் கற்கள் என்றன்
விற்பன விந்தை கண்ட
.. வியப்பினில் விரைத்து நிற்க
நிற்பவை நிசமோ என்னும்
.. நிலைதனை ஊட்டி நின்றேன் (5)
உச்சியை நோக்கிக் கற்கள்
.. உயர்ந்துவான் தொட்டு நிற்க
மெச்சிடும் வண்ணம் எங்கும்
.. மேன்மையாய்ச் சிற்பஞ் செய்யும்
தச்சனின் கரத்தார் நூலால்
.. தாவிடும் பொம்மை போலே
இச்சைகள் யாவும் செய்யும்
.. இயந்திரம் ஆகி நின்றேன் (6)
நிலமெழு சுவரின் நீளம்
.. நீண்டிடச் செய்தோன் நானே!
பலவிதத் தூண்கள் தாங்கும்
.. பரப்பினைப் படைத்தோன் நானே!
தலையமர் பெருத்த கல்லைத்
.. தழுவியோன் முதலில் நானே!
உலகினில் உயர்ந்த கோவில்
.. உயர்வினை உணர்ந்தோன் நானே! (7)
திண்ணிய கூர்மை செய்யும்
.. திறன்பல என்னில் கண்டு
நுண்ணிய வேலைக் கெல்லாம்
.. நுகர்வரென் சேவைக் காக;
கண்ணுதல் உருவங் காண
.. கல்லினைக் குடைவ தற்காய்
எண்ணினர் என்னை, அன்றே
.. இவ்வுயிர்ப் பயனைப் பெற்றேன் (8)
சித்தனின் சிந்தை சற்றும்
.. சிதைந்திடா வண்ணம் மெல்லத்
தத்துமென் முனையைக் கொண்டே
.. தேவனின் உருவம் கண்டார்;
கொத்தியென் உயரம் குன்றக்
.. குட்டையாய் போன தாலே
அத்தனின் அகன்ற பாதம்
.. அதனடி முட்டாய் நின்றேன் (9)
ஆனனென் அகந்தை கண்டான்;
.. ஆணவம் அழிக்க நின்றான்;
தானமாய் அமைந்த மெய்யைத்
.. தரையொடு நசுக்கி வென்றான்;
ஊனமாய் அமைந்த வாழ்வும்
.. ஒழிந்தது; மெல்ல மெல்ல
‘நானெ’னைப் பிரிந்த நேரம்
.. நம்பனின் பார்வை என்மேல்! (10)
-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
அதிகாலை எழுந்திடுவார்
அனுஷ்டானம் பார்த்திடுவார்
பூப்பறித்து வந்துநின்று
பூசைசெய்து நின்றிடுவார்!
சிவநாமம் அரிநாமம்
சிந்தனையில் ஓடிநிற்கும்
சிரித்துமே பார்த்தறியோம்
சிடுமூஞ்சி யாயிருப்பார்!
அப்பாவைக் கண்டதுமே
அனைவருமே அடங்கிடுவோம்
அந்தளவு வீட்டிலவர்
அடக்குமுறை காட்டிடுவார்!
அவர்நண்பர் சீனுவரின்
அரைகுறையாய்ப் பேசிடுவார்
அடுத்தகணம் அவர்கையில்
அமர்ந்திருக்கும் செய்தித்தாள்!
சாப்பிடும் வேளையிலே
சத்தம் போடக்கூடாது
சத்தம்யாரும் போட்டுவிடின்
சன்னதமே ஆடிடுவார்!
பண்டிகை வந்துவிட்டால்
பலவற்றைத் தந்திடுவார்
பார்த்துநாம் சிரித்துவிடின்
பளாரென்று அறைகிடைக்கும்!
உனக்குமா இப்படி
எனக்கேட்டோம் அம்மாவை
ஆமெனவே தலையசைத்து
அவர்மெளனி ஆகிவிட்டார்!
பொய்பேசும் பழக்கத்தைப்
பொறுக்க அவர்மாட்டாமல்
எல்லோர்க்கும் எச்சரிக்கை
எப்போதும் விட்டிடுவார்!
குடிப்பழக்கம் கொண்டோரைக்
கொன்றொழிக்க வேணுமென்பார்
குளறுபடிக் காரரொடு
கூடவேணாம் எனச்சொல்வார்!
தானதர்மம் எல்லாமே
தாரளமாகச் செய்வார்
சமயச் சடங்குகளை
சரியாகச் செய்துநிற்பார்!
ஆனாலும் எங்களிடம்
தாராளம் காட்டாமல்
அப்பாவும் இருப்பதற்கு
அடிப்படையை நாமறியோம்!
அம்மாவும் அப்பாவும்
ஆதரவாய்ப் பேசியதோ
அகமகிழ நின்றதையோ
ஆரும்நாம் கண்டதில்லை!
என்றாலும் எங்குடும்பம்
இன்னலின்றி ஓடியது
எல்லோரும் ஒன்றாக
இன்புற்று இருந்தோமே!
காலையிலே எழுந்த அம்மா
காப்பிகொண்டு வருகையிலே
கண்மயங்கி அவ்விடத்தில்
காப்பியுடன் விழுந்துவிட்டார்!
பூசைசெய்த அப்பாவும்
ஓசைகேட்டு ஓடிவந்தார்
ஆசையுடன் அம்மாவை
அரவணைத்து நின்றாரே!
அப்பாவின் செயல்கண்டு
அனைவருமே அசந்துவிட்டோம்
அப்பாவின் உள்ளத்தும்
அன்பூற்று இருக்கிறதா?
மடிமீது தலைவைத்து
மனைவிமுகம் பார்த்த அவர்
தலையிலே கையைவைத்து
”சாவித்ரி” எனவழைத்தார்!
அம்மாவை அணைத்தபடி
அழைத்தாரே அழுதபடி
அம்மாதான் அசையாமல்
அப்படியே மடிகிடந்தார்!
வீட்டிலே எல்லோரும்
வெலவெலத்துப் போய்விட்டோம்
பேசாமல் இருந்த அம்மா
பேசாமலே கிடந்தார்!
அழுதபடி அப்பாவும்
அப்படியே இருந்தாரே
எங்களையும் அருகணைத்து
ஏங்கிநின்று அழுதாரே!
இரக்கத்தை ஒழித்துவிட்டு
எங்களப்பா இருந்ததனை
இப்போது கண்டதும்
இரங்கியவர் முகம்பார்த்தோம்!
உள்ளுணர்வு வெளிவந்து
உலுக்கியே விட்டதனால்
ஒன்றுமே அறியாது
ஓலமிட்டார் எங்களப்பா!
அடக்கியெமை ஆண்ட அப்பா
அடங்கியே இருந்திட்டார்
அம்மாவின் அணைப்பிழந்து
அவரிப்போ அழுகின்றார்!
உணர்வுகள் எப்போதும்
உள்ளுக்குள் இருப்பதில்லை
உயிருள்ள மனிதர்க்கு
உணர்வுகளே உயர்வாகும்!
– கவிஞர் காவிரிமைந்தன்
நீ..
திரையில் எழுதும் பாடல்கள் அவை
மனதில் இன்பம் தருபவை…
போட்டி மிகுந்த உலகினில் – நீ
பொக்கிஷமாகத் திகழ்பவன்!
ஆண்டுகள் பத்துக்கும் மேலாக 
அதிக படங்கள் உனதாமே!
அன்பெனும் யாழினை மீட்டியதால்
மைய அரசின் பரிசு பெற்றாய்!
கன்னல் தமிழை சுவாசித்து
கரும்பென எமக்குத் தருகின்றாய்!
கவிதை மனது உன்னிலே…
எழுத நினைத்தால் போதுமே…
அமுத மழையாய் வழிந்திடும்
வார்த்தைச் சுரங்கம் உள்ளதே…
முனைவர் பட்டம் பெறுகின்றாய்…
முத்தமிழ் தருகின்ற பரிசன்றோ?
நிறைகுடம் போல நீயிருந்து
திரைப்படம்தோறும் நீ எழுது!
கருவில் திருவிருக்கும் சிலருக்கு…
கவிதையில் திருவிருக்கும் உனக்கு..
கர்வம் சிறிதும் இல்லாத
கலைமகள் மகனே நீ வாழ்க!
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
காவிரிமைந்தன் வாழ்த்துகிறேன்…
அன்புடன்…
காவிரிமைந்தன் (மு. இரவிச்சந்திரன்)
&
விவேக் ரவிச்சந்திரன் (பாடலாசிரியர்)
காவிரி மைந்தன்
அன்பின் சங்கமம் – ஆண், பெண் இருவரது உறவில் அடிப்படையானது! தன்னை நேசிக்கம் நெஞ்சமது என்கிற போது, தாமாக ஊற்றெடுக்கம் கங்கையாகிறது! ஊன், உறக்கம் யாவும் மறந்து உறவை நினைக்கிறது! ஏன் எதற்கு என்கிற கேள்விகள் எழுகின்றன! படபடக்கும் நெஞ்சத்தோடு பார்வை தேடி அலைகிறது! துடிதுடிக்கும் இதயத்தில் தூவானம் போடுகிறது! அவனுக்கு அவளென்பதும், அவளுக்கு அவனென்பதும் ஆனந்தப் புதையலாகிறது! சரியாகச் சொல்லப்போனால், வாழ்க்கை சொர்க்கபுரியாகிறது! இந்த நிலை தொடர்கிறதா? பிரிவு வந்து சேர்கிறதா? பாதிப் பாதியென ஆன இருவருமே பரிதவிக்கும் நிலைதானே பிரிவுவரும் வேலைதன்னில்! அழுவதுகூட ஆனந்த சுகமென்றே அடிமனம் நினைக்கும்!
காரணம் தெரியாமல் கதறும் நிலைதன்னில்.. கதாநாயகன் பாடுகிறான்! கதையின் ஓட்டத்தில் கதாநாயகி அவனைப் பிரிகிறாள்! எங்கிருந்தோ வந்தாள் என்கிற திரைப்படத்தில் நடிகர்திலகத்தின் மகோன்னத நடிப்பில் – பிரிவுக்கு ஆயிரம் பொருள் சொல்லும் முகபாவனைகளுடன்.. புலம்பலின் வெளிப்பாடுகளுக்கு வார்த்தைகள் வழங்கிய கவியரசு கண்ணதாசன்! நெஞ்சைப் பிழியும் வண்ணம் இசை அமைத்திருக்கும் மெல்லிசை மன்னர்!!
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
தத்தளிக்கும் மனதின் தவிப்புகளிதுவா? இதயத்தின் வலியை உணர்த்தி நிற்கும் வரிகளா? கண்களிரண்டும் கலங்கித் ததும்பும்..சொல்லும் வார்த்தையில் துயரம் வழியும்! உயிரூட்டியிருக்கிறார் மெல்லிசை மன்னர்! உணர்வூட்டியிருக்கிறார் – டி.எம்.செளந்திரராஜன்.
திரைப்பாடலில் பாவங்கள் காட்டி நடிக்க ஒரு நடிகர் திலகமும் .. பாடிக் கொடுக்க ஒரு டி.எம்.எஸ்-ம் மெட்டமைக்க ஒரு எம்.எஸ்.வியும் பாடல் வடித்துத் தர கவிஞர் கண்ணதாசனும் – தேவன் தந்த வரங்களா?
இதைப்போன்ற பாடல்கள் எத்தனை தந்தாலும் ரசிப்பதற்கு கோடான கோடி இதயங்களும் – பிரிவு என்கிற கடலில் தள்ளப்படும் ஒவ்வொரு உள்ளதிலும் அலைமோதும் பாடலிது!
என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா.. இரக்கம் பிறக்காதா
http://www.youtube.com/watch?v=XNOjcAZJoSM
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
அம்மா.. .. விவரம் புரியாதா
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா.. இரக்கம் பிறக்காதா
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
பாடல் : நான் உன்னை அழைக்கவில்லை
பாடியவர் : டி.எம். சௌந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
திரைப்படம் : எங்கிருந்தோ வந்தாள்
காவிரி மைந்தன்
கணவன் – மனைவி என்கிற பந்தமுடன் தொடங்கும் இல்வாழ்க்கை இனிமையானது! இனிதானது! ‘சம்சாரம் என்பது வீணை; சந்தோசம் என்பது ராகம்’ என்பார் கண்ணதாசன்.
பருவகாலங்களில் இருபாலரும் கனவாய்ச் சுமந்திடும் இல்லற வாழ்வு இனிதாய் துலங்கும் திருநாள் வருமே! திருமணம் எனுமே! சுற்றம் சூழ நட்பும் பேண புதிய வாழ்க்கைக் கதவு திறக்கப்படுமே! அவன் என்பது அவளுக்காகவும்.. அவள் என்பது அவனுக்காகவும் என ஒரு அழகிய வட்டம் தோன்றும்.ஒருவருக்கொருவர் புரிந்து அனுசரித்து விட்டுக் கொடுத்து வாழுகின்ற தம்பதியர் மட்டுமே இல்வாழ்க்கையில் முழுமையாக வெற்றி பெறுவார்கள்.
இந்தப் பந்தத்தின் மூலம் ‘தாய்’ என்றும் ‘தந்தை’ என்றும் ஆகின்றனர். நேற்றுவரை ஒருவருக்கொருவராய் இருந்தவர்கள் – இன்று முதல் இருவரும் – தமக்குப் பிறந்த ஓருயிர்க்காக புதியதாய் பிறப்பெடுக்கின்றார்கள். காலச்சக்கரம் சுழல – ஒன்று இரண்டாக .. கணவன் மனைவி என்கிற நிலையிலிருந்து உயர்வு பெற்று – தந்தை.. தாய்.. மகன்.. மகள் என இல்லற வாழ்வு தொடர்கிறது! அன்பினால், நிரப்பப்படும் உள்ளங்கள் அழகுடன் காட்சி தரும்! இன்பமே என்றுமே என இதயங்கள் முழங்கி வரும்! தன்னுயிர் நீயென ஒன்றினை ஒன்று எப்போதும் சார்ந்திருக்கும்! இந்தச் சொந்தங்கள் வாழ்க! வாழ்கவே!! என்றே இறைவனின் அருளிருக்கும்!
‘சந்திப்பு’ என்கிற திரைப்படத்திற்காக அமைந்த பாடலில் ஒன்று! கவிஞர் வாலி வரைந்த கோலமிது! சிறுவயது முதலாகவே உள்ளமும் உதடுகளும் முணுமுணுக்கும் இனிமையான கீதமிது!
ஆனந்தம் விளையாடும் வீடு… நான்கு
அன்றில்கள் ஒன்றான கூடு..
அன்றில் பறவைகள் என்றொரு வகைப் பறவைகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது! ஒன்றைப் பிரிந்து ஒன்று உயிர் வாழாதாம்! அப்படி இந்தச் சொந்தங்கள் கூடி வாழ்கின்றன என்பதற்காக உவமை கலந்து ஊட்டியிருக்கிறார். ‘நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு’.. நீயில்லை என்றால் தெரியாது கிழக்கு’ வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல.. இது வாழ்க்கை வெளிச்சம்! திரைப்படளிது என்று மட்டும் கொள்ளாமல் இல்லற வாழ்க்கையின் அழகிய சூத்திரம் வரையப்பட்டுள்ள வடிவம் இப்பாடல் என்றே மனதில் கொள்ளுங்கள்.. வாழ்வை வெல்லுங்கள்!
ஆனந்தம் விளையாடும் வீடு -இது
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
இன்பம் நாள் தோறும் பூ பூக்கும் சோலை-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு
அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு
ஆனந்தம் விளையாடும் வீடு -இது
ஆனந்தம் விளையாடும் வீடு
ஆ-மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
எடுத்தாலும் என்ன எழேழு பிறவி
நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி
ஆனந்தம் விளையாடும் வீடு –
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
பெ-நீ தானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
இரு-ஆனந்தம் விளையாடும் வீடு –
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
கடந்த இருபதாண்டுகளாக வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21-ஆவது பாரதி திருவிழா டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவு இல்லத்தில் நடைபெற்றது. பாரதிவிழாவினை தொடர்ந்து சிறப்புற நடத்திவரும் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி அவர்களை கவிஞர் ரவி என்றழைப்பதே அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்பதை வல்லமை வாசகர்கள் அறிவார்கள். வல்லமையில் இதுவரை எண்பதுக்கும் அதிகமான பதிவுகளை ரவி எழுதியுள்ளார். அவற்றில் 50 பதிவுகளுக்கும் மேற்பட்ட “காற்று வாங்கப் போனேன்” என்ற தன்வரலாற்றுப் பகுதியும், சற்றொப்ப முப்பது கவிதைகளும் அடங்கும். ரவி அவரது சுயசரிதையை பொதுவான கோணத்தில் வழங்காமல் இந்தப் பிரபஞ்சத்திற்கும் அவருக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாக அமைத்ததை, “சம்பவங்களாக இல்லாவிட்டாலும், மற்ற சுயசரிதைகளைப் போல வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இல்லாவிட்டாலும், இந்தப் பிரபஞ்சத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாகக் கொஞ்சமேனும் அமைந்திருக்கக் கூடுமானால் அதுவே இதை ஓரளவு பயனுடைய முயற்சியாக உயர்த்த வல்லது” என்று விளக்குகிறார். “கவிதை என் கைவாள் இல்லை; என் கேடயம் இல்லை; என் ஆயுதமோ, கருவியோ, சாதனமோ இல்லை. நானே கவிதையின் கருவி, ஆயுதம், சாதனம். கவிதையே என்னை ஆட்டி வைக்கும் பிச்சி, பேய், பெருந்தெய்வம்!” என்றும், “என் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை,” என்று தன்னைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இவ்வாறு கவிதைகள் மீதும், மகாகவி பாரதியிடம் இவர் கொண்ட ஈடுபாட்டை பாரதி பற்றி அவர் எழுதிய கவிதை மூலமாகவே அறியலாம்.
கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே
காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே
தேடிச் சென்ற திசையெல் லாம்பெருந் தீ வளர்த்தானே
தேகம் எடுத்தத னாலே அவனும் தேய்ந்து விட்டானே
அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா
கனவுக் கொடிகள் காற்றில் ஆடும் காட்சி தெரிகிறது
காட்டு வெளியில் எல்லாம் பாடல் காவல் இருக்கிறது
தினமும் இங்கே தெய்வ நெருப்பு நெஞ்சில் உதிக்கிறது
தேய்ந்து போகும் தேகங் களுக்குத் தெம்பு கொடுக்கிறது
நட்சத்திரங்கள் மண்ணில் விழக்கூடாதா
இந்த ஆண்டின் பாரதி திருவிழா ஜதிபல்லக்கு அழைப்பையும் ரவி கவிதையாக வடித்தே வல்லமை வாசகர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
மான்தாங்கிக் கையில் மழுதாங்கி நிற்கும் மஹேஸ்வரனும்
தேன்தாங்கு செந்தா மரைதாங்கு நாபனும் மாகாளியும்
வான்தாங்கு தேவரும் வாழ்த்தவே யாவரும் பாரதிசீ
மான்தாங்கி யாய்ஜதி பல்லக்கை ஏந்த வருவீர்களே
— கே.ரவி
இவரது பேரார்வத்தின் காரணமாக வானவில் பண்பாட்டு மையம் 1994-ல் பிறந்து, ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளை விமரிசையாக, திருவாரூர் தியாகைய்யர் உத்சவம் போல் இசை விழாவாகக் கொண்டாடி வரப்படுகிறது. முதலாமாண்டு விழாவில், திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியும், திருமதி டி.கே.பட்டம்மாளும் கலந்து கொண்டு பாடியதும், அதில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் சிறப்புரையும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிக்கூறுகள். ஒவ்வோர் ஆண்டும் பாரதி விழாவில் பாரதி கண்ட கனவு மெய்ப்படத் தொண்டாற்றியவர்களுக்கு பாரதி விருது வழங்கப்பட்டு வருகிறது.
குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞானியாக அனைவராலும் பாராட்டப்பட்ட காலத்திலேயே அவருக்கும் பாரதி விருது வழங்கப்பட்டது. பாரதி திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி அம்மையார் 2008 க்கான பாரதி விருதை வாலிபக் கவிஞர் மறைந்த கவிஞர் வாலி அவர்களுக்கு வழங்கியதும் நினைவுகூரத்தக்க நிகழ்ச்சியாகும். பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியின் நிறுவனர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் ஆகியோர் பாரதி விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
வானவில் பண்பாட்டு மையம் 1994 தொடங்கி ஆண்டுதோறும் நடத்தி வரும் பாரதி திருவிழா பற்றியும் அதில் இடம்பெறும் சிறப்புமிகு ஜதிபல்லக்கு நிகழ்ச்சி பற்றியும் ரவி கீழ்வருமாறு கூறுகிறார்:
முதல் ஆறு வருடங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்திலும், நாரத கான சபாவிலும், ம்யூஸிக் அகாடமியிலும் பாரதி விழா நடத்திக் கொண்டிருந்த வானவில் பண்பாட்டு மையம் 2000-ஆம் ஆண்டிலிருந்து திருவல்லிக்கேணியில், துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதி தன் இறுதி மூச்சை விட்ட பாரதி நினைவு இல்லத்தில் அதைக் கொண்டாட முன்வந்தது.
எட்டையபுர ஜமீந்தாருக்கு பாரதி எழுதிய சீட்டுக் கவியில், “சொற்புதிது பொருள்புதிது சுவைபுதிது ஜோதிமிகு நவகவிதை எந்நாளும் அழியாத மாக்கவிதை” தந்த தன்னை ஜமீந்தார் ஊரெல்லையில் எதிர்கொண்டழைத்துத் தனக்குச் சாலுவை, பொற்பை, வயப்பரிவாரங்கள் தந்து ஜதிபல்லக்கில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டிருந்தான். அவன் வாழ்நாளில் அது நடக்கவில்லை. அதனால், அவன் தனக்கென்று கண்ட அந்த ஒரே கனவை அவனுக்குப் பிறகாவது நிறைவேற்றி வைக்க, அவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 11-ஐக் கவிஞர் திருநாளாகக் கொண்டாடி, அன்று அவனுடைய உருவச் சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்தி, பொன்முடிப்புக் காணிக்கை வைத்துச் சிறுவர், சிறுமிகள் ஜதிசொல்லிக் கொண்டு நடனமாடிவர, கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை யானை மிதித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.
உவமைக் கவிஞர் சுரதா உயிருடன் இருந்த வரைக்கும் ஆண்டுதோறும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜதிபல்லக்கைத் தம் தோளில் சுமந்து வந்திருக்கிறார். ஜதிபல்லக்கு முடிந்ததும் பாரதி இல்லத்தில் முழுநாள் கவிப்பொழிவு நிகழ்ச்சி இடம் பெறும். அதில் சுமார் 200 கவிஞர்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல், உணவு இடைவேளை கூட இல்லாமல், கவிதை சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இந்த ஆண்டு விழாவில் பாரதியாருக்கு சால்வை, பொற்பை ஆகியவற்றை சமர்ப்பித்து ஜதிபல்லக்கை காவல்துறை முன்னாள் தலைவர் ஆர். நடராஜ் தொடங்கி வைக்க, திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் “வருவாய் கண்ணா’ ஓவியக் கண்காட்சியை நடிகர் சிவகுமார் தொடங்கி வைக்க, மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின் உருவப் படத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திறந்து வைத்தார். பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ’சேக்கிழார் அடிப்பொடி’ என்றழைக்கப்படும் தமிழறிஞர் முதுமுனைவர் டி.என். ராமச்சந்திரனுக்கு பாரதி விருதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். தொடர்ந்து வந்த மூன்று நாட்களிலும் கலந்துரையாடல், சிறப்புரை, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பாரதியாரைப் போற்றும் வகையில் அமைந்தன.

கவிதை இலக்கியத்திலும், சட்டத்திலும் சிறந்து விளங்கும் ரவி ஒரு பல்துறை வித்தகராகப் பன்முகம் கொண்டவர். இவரது கல்லூரி மாணவப் பருவத்தில் இதழியளாராகாவும் உருவெடுத்து, 1972-ஆம் ஆண்டு ‘மாணவரிஸம்’ என்ற பத்திரிகையை நடத்திஇருக்கிறார்.
திரைத்துறையிலிம் நுழைந்து ‘ஸ்பரிசம்’ என்ற படம் தயாரித்துள்ளார். இசைமைப்பாளராகவும் உருமாறி திரைப்படங்களுக்கும், இசைப்பேழைகளுக்கும் இசையமைத்துள்ளார். இவரது இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது இனிய குரலில் பாடி ‘தெய்வ கானாம்ருதம்’ என்ற இசைப்பேழை 1994 இல் வெளியானது. ‘அமரத்வனி’ என்ற இசைப்பேழையை 1980-களில் வெளியிட்டுள்ளார்.
“பார்வைக்கு என்ன பொருள்” என்ற மேடை நாடகத்தை எழுதி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
“இயல்பியல்” என்னும் தலைப்பில் பல புதிய தனித்தமிழ்க் கலைச் சொற்களோடு ஓர் முன்னோடி வழிகாட்டிப் பாட நூலையும், “இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு” என்ற அறிவியில் நூலையும் எழுதி வெளியிட்ட ரவி, ஆங்கிலத்தில் இரு சட்டநூல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “Law, Logic and Liberty ” என்ற சட்டத் திறனாய்வு நூலைப் படித்துவிட்டு, சமீபத்தில் மறைந்த நீதியரசர் திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர் அது ஒரு சிறந்த குறிப்புதவி நூலாக அவருக்கு உதவும் எனப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
மாணிக்கவாசகர் எழுதியதாக நம்பப்படும் ‘ஞானத் தாழிசை’ என்ற தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விரிவுரையும் எழுதி, ‘வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ (Verses of Wisdom) என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
பிரும்ம சூத்திரத்துக்கான ஆங்கில விரிவுரையை தற்பொழுது “ப்ரும்ம சூத்ரா த காஸ்மிக் கோட்” (Brahma Sutra, the Cosmic Code) என்ற நூலாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கவிஞராக தான்னை முன்னிறுத்திக்கொள்ள விழையும் ரவி, “நமக்குத் தொழில் கவிதை” “உன்னோடு நான்“ என்ற கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரது ‘உன்னோடு நான்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற …
அந்தத்தை எண்ணிநான் அஞ்ச வில்லை
அந்தாதிப் பாட்டொன்றும் புதிய தில்லை
வந்தவரைக் கடைசிவரை வாழ வைக்கும்
வையகமாய் சத்யயுகம் மலர வேண்டும்
என்ற கவிதையை அமரரான அருட்செல்வர், தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் பாராட்டி இவரை வாழ்த்தியுள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர் கல்யாணராமன் அவர்களின் மகன் என்பதும், தொலைகாட்சி புகழ் ஷோபனாரவியின் வாழ்க்கைத் துணைவர் என்பதும் இவரது மற்ற வியக்கவைக்கும் சிறப்புகள். வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவி அவர்கள் தமிழுக்கு ஆற்றி வரும் பங்கினைப் பாராட்டி வல்லமையாளராக சிறப்பு செய்து வல்லமைக் குழுவினர் மகிழ்கின்றோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
படம் உதவி: http://www.dinamani.com/
-எம். ஜெயராம சர்மா- மெல்பேண்
மாந்தோப்பில் அவளிருந்தாள்
மரம்வெட்ட இவன்சென்றான்
தேன் தொட்டுச் சுவைப்பதற்காய்
தினமுமங்கே அவன்சென்றான்!
கறுப்புநிற மென்றாலும்
கட்டழகு நிறைந்தவளாய்
காண்போரைக் கவரும்படிக்
கண்ணம்மா இருந்தாளே!
மரம்வெட்ட வந்த அவன்
மாந்தோப்பில் நின்றவளை
மனதிலே கொண்டதனால்
மாலயிட ஆசைகொண்டான்!
ஆசையினை அவளிடத்தில்
அவன்சொன்ன போதுஅவள்
பேசாமல் ஒருபார்வை
பிரமிப்பாய் பார்த்தனளே!
சாதியேதும் பார்க்காமல்
சடங்கேதும் செய்யாமல்
சந்தோஷத் தோடவர்கள்
தம்பாட்டில் சேர்ந்தனரே!
இனிமையாய் அவர்வாழ்வு
இருந்தவொரு காரணத்தால்
இருவரும் மகிழ்ந்திடவே
இனியகுரல் ஒலித்ததங்கே!
ஆண்குழந்தை பிறந்ததனால்
அகமகிழ்ந்து நின்றார்கள்
ஆனந்தம் மேலிடவே
அதைக் கொஞ்சிநின்றார்கள்!
குழந்தையின் குரல்கேட்டு
குதூகலத்தில் மிதந்தார்கள்
குறையொன்றும் இன்றியே
குடும்பமும் ஓடியதே!
ஆண்குழந்தை என்றதுமே
அந்தரத்தில் அவன்நின்றான்
அதனாலே அவன்போக்கில்
ஆணவமே தோன்றியதே!
மரம்வெட்டி நின்றவனோ
மரக்காலை உரிமைபெற்று
உரம்பெற்ற முதலுடயை
உயர்முத லாளியானான்!
பணம்வந்து விட்டதனால்
பண்புஎலாம் தடம்மாறி
குணமற்ற கூட்டமுடன்
குலவியவன் நின்றிட்டான்!
மனைவியிடம் இருந்த அன்பு
மாறியது மதுவிடத்தில்
மதுவோடு நில்லாமல்
மங்கைகளும் வந்தணைந்தார்!
வெறியோடு வீடுவரும்
விருந்தாளி போலஅவன்
நெறியின்றி இருந்ததனால்
நெடுந்துயரம் அவள்கொண்டாள்!
கண்ணிலே நீர்கொடுத்த
கடவுளையே நொந்துஅவள்
எண்ணியெண்ணி யேங்கியே
இருப்பதையே மறந்துவிட்டாள்!
அருமையாய்ச் சமைத்துவிட்டு
அவள்வாசல் வந்துநின்றாள்
அரையிலே ஆடையின்றி
அவனாடி வந்துநின்றான்!
வாசலிலே நின்றவளின்
வயிற்றில் அவனுதைத்தானே
கைக்குழந்தை யோடுஅங்கே
கதறியவள் வீழ்ந்தாளே!
வெறியோடு அவன்கிடந்தான்
வேதனையால் அவள்துடித்தாள்
விடிந்ததும் அவன்பார்த்தான்
வேரற்ற மரமானான்!
பிஞ்சுக் குழந்தையுடன்
பிணமாக அவள்கிடந்தாள்
பித்துப் பிடித்தவனாய்
பேதலித்து அவன்நின்றான்!
காவல்துறை கைதுசெய்து
காட்டியது தன்பணியை
நீதிமன்ற தண்டனையால்
நீண்டகாலம் உள்ளிருந்தான்!
சிறைச்சாலை சென்றஅவன்
செய்தபிழை தானுணர்ந்தான்
மடத்தனமாய் மனைவிபிள்ளை
மாண்டுவிடச் செய்தேனே!
நெறிதவறி வெறிபோட்டு
நிட்டூரம் பலசெய்து
நீசனாய் நிற்கின்றேன்
எனவெண்ணி அழுதனனே!
காவலர்கள் வந்தவனை
காரணத்தைக் கேட்டார்கள்
கதைகூறி அங்கவனும்
கதறியே அழுதிட்டான்!
குடித்துவிட்டுக் கூத்தடித்தல்
கூடாது என்றான்
குடிப்பதனால் குடிமுழுக்க
அழிந்துவிடும் என்றான்!
குடிஒழிந்தால் நாட்டினிலே
கொலைஒழியும் என்றான்
குப்புறவே விழுந்த அவன்
குப்புறவே கிடந்தான்!
குடித்துவிடும் ஆண்களால்
குடிமுழுகிப் போகும்
குடியொழித்து விட்டாலே
குடும்பம் அதுதழைக்கும்!
குடும்பமெலாம் வாழ்வதற்குக்
குடியொழிக்க வாரீர்
குடிக்காத சமூகமதைக்
குவலயத்தில் சமைப்போம்!