நிறைகுடம் போல நீயிருந்து திரைப்படம்தோறும் நீ எழுது!
– கவிஞர் காவிரிமைந்தன்
நீ..
திரையில் எழுதும் பாடல்கள் அவை
மனதில் இன்பம் தருபவை…
போட்டி மிகுந்த உலகினில் – நீ
பொக்கிஷமாகத் திகழ்பவன்!
ஆண்டுகள் பத்துக்கும் மேலாக
அதிக படங்கள் உனதாமே!
அன்பெனும் யாழினை மீட்டியதால்
மைய அரசின் பரிசு பெற்றாய்!
கன்னல் தமிழை சுவாசித்து
கரும்பென எமக்குத் தருகின்றாய்!
கவிதை மனது உன்னிலே…
எழுத நினைத்தால் போதுமே…
அமுத மழையாய் வழிந்திடும்
வார்த்தைச் சுரங்கம் உள்ளதே…
முனைவர் பட்டம் பெறுகின்றாய்…
முத்தமிழ் தருகின்ற பரிசன்றோ?
நிறைகுடம் போல நீயிருந்து
திரைப்படம்தோறும் நீ எழுது!
கருவில் திருவிருக்கும் சிலருக்கு…
கவிதையில் திருவிருக்கும் உனக்கு..
கர்வம் சிறிதும் இல்லாத
கலைமகள் மகனே நீ வாழ்க!
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
காவிரிமைந்தன் வாழ்த்துகிறேன்…
அன்புடன்…
காவிரிமைந்தன் (மு. இரவிச்சந்திரன்)
&
விவேக் ரவிச்சந்திரன் (பாடலாசிரியர்)