கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கிரேசி மோகன்

crazy
பார்அதன் வேருக்கு புல்லாங் குழல்நீரும்,
நூறு’களை’ போக்க நிவாரண, -போருக்கு
கண்ணன்கை காலில், கவசம் அணீந்தாலும்,
எண்ணமது கோதூளி யே’’….கிரேசி மோகன்….

Share

Comments

2 responses to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”

  1. கிரேசி மோகன் அவர்களுக்கு வணக்கமும் பிரியங்களும்,

    பாடலில் நூ -று -களை என்று  “தளை” வருகிறது  தோழர் 

    இதுபோல் பல வெண்பாக்களில் கனிச்சீர் / மாமுன் நேர் காண முடிகிறது

    எது/ரா/வென  – புளிமாங்கனி  
    வாய்க்/ குள்/  … மாதா –  மாமுன் நேர் 
    மூளியாய் மூழ்க அவன் – கனிச்சீர்

    இது உங்கள் கவனத்திற்காக மட்டும்….

    விரைவில் துபையில் சந்திக்கலாம் …கிரேசி சார்

    அப்துல் வதூத்  
     

  2. அப்துல் வதூத்

    அன்பு கிரேசி அவர்களுக்கு 

    என் முந்தய கருத்தை திரும்பப்பெருகிறேன்.மேற்கண்ட வெண்பாவின் வாக்கிய அமைப்பில் ஏற்பட்ட சிறு குழப்பமே காரணம்.நூறு’களை’ என்று குறிப்பிட்டிருந்தது.

    ஆகையால் நூ- றுக- ளை என்று பிரிப்பதற்கு பதிலாக நூ -று -களை என்று பிரித்து பார்க்க நேர்ந்தது. எழுத்தை மேற்கொளிட்டதால் ஏற்பட்ட குழப்பம் அது.

    பார்அதன் வேருக்கு புல்லாங் குழல்நீரும்,
    நூறு’களை’ போக்க நிவாரண, -போருக்கு
    கண்ணன்கை காலில், கவசம் அணீந்தாலும்,
    எண்ணமது கோதூளி யே
     
    வெண்பா மார்கண்டேயரின் ( கிரேசி மோகன் ) மேற்கண்ட வெண்பா சரியே …!

    *சுட்டிக்காட்டிய “வல்லமை” ஆசிரியருக்கு நன்றி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *