ஆனந்தம் விளையாடும் வீடு… ‘நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு’.. நீயில்லை என்றால் தெரியாது கிழக்கு’
காவிரி மைந்தன்
கணவன் – மனைவி என்கிற பந்தமுடன் தொடங்கும் இல்வாழ்க்கை இனிமையானது! இனிதானது! ‘சம்சாரம் என்பது வீணை; சந்தோசம் என்பது ராகம்’ என்பார் கண்ணதாசன்.
பருவகாலங்களில் இருபாலரும் கனவாய்ச் சுமந்திடும் இல்லற வாழ்வு இனிதாய் துலங்கும் திருநாள் வருமே! திருமணம் எனுமே! சுற்றம் சூழ நட்பும் பேண புதிய வாழ்க்கைக் கதவு திறக்கப்படுமே! அவன் என்பது அவளுக்காகவும்.. அவள் என்பது அவனுக்காகவும் என ஒரு அழகிய வட்டம் தோன்றும்.ஒருவருக்கொருவர் புரிந்து அனுசரித்து விட்டுக் கொடுத்து வாழுகின்ற தம்பதியர் மட்டுமே இல்வாழ்க்கையில் முழுமையாக வெற்றி பெறுவார்கள்.
இந்தப் பந்தத்தின் மூலம் ‘தாய்’ என்றும் ‘தந்தை’ என்றும் ஆகின்றனர். நேற்றுவரை ஒருவருக்கொருவராய் இருந்தவர்கள் – இன்று முதல் இருவரும் – தமக்குப் பிறந்த ஓருயிர்க்காக புதியதாய் பிறப்பெடுக்கின்றார்கள். காலச்சக்கரம் சுழல – ஒன்று இரண்டாக .. கணவன் மனைவி என்கிற நிலையிலிருந்து உயர்வு பெற்று – தந்தை.. தாய்.. மகன்.. மகள் என இல்லற வாழ்வு தொடர்கிறது! அன்பினால், நிரப்பப்படும் உள்ளங்கள் அழகுடன் காட்சி தரும்! இன்பமே என்றுமே என இதயங்கள் முழங்கி வரும்! தன்னுயிர் நீயென ஒன்றினை ஒன்று எப்போதும் சார்ந்திருக்கும்! இந்தச் சொந்தங்கள் வாழ்க! வாழ்கவே!! என்றே இறைவனின் அருளிருக்கும்!
‘சந்திப்பு’ என்கிற திரைப்படத்திற்காக அமைந்த பாடலில் ஒன்று! கவிஞர் வாலி வரைந்த கோலமிது! சிறுவயது முதலாகவே உள்ளமும் உதடுகளும் முணுமுணுக்கும் இனிமையான கீதமிது!
ஆனந்தம் விளையாடும் வீடு… நான்கு
அன்றில்கள் ஒன்றான கூடு..
அன்றில் பறவைகள் என்றொரு வகைப் பறவைகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது! ஒன்றைப் பிரிந்து ஒன்று உயிர் வாழாதாம்! அப்படி இந்தச் சொந்தங்கள் கூடி வாழ்கின்றன என்பதற்காக உவமை கலந்து ஊட்டியிருக்கிறார். ‘நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு’.. நீயில்லை என்றால் தெரியாது கிழக்கு’ வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல.. இது வாழ்க்கை வெளிச்சம்! திரைப்படளிது என்று மட்டும் கொள்ளாமல் இல்லற வாழ்க்கையின் அழகிய சூத்திரம் வரையப்பட்டுள்ள வடிவம் இப்பாடல் என்றே மனதில் கொள்ளுங்கள்.. வாழ்வை வெல்லுங்கள்!
ஆனந்தம் விளையாடும் வீடு -இது
ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
இன்பம் நாள் தோறும் பூ பூக்கும் சோலை-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு
அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு
ஆனந்தம் விளையாடும் வீடு -இது
ஆனந்தம் விளையாடும் வீடு
ஆ-மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
எடுத்தாலும் என்ன எழேழு பிறவி
நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி
ஆனந்தம் விளையாடும் வீடு –
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
பெ-நீ தானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
இரு-ஆனந்தம் விளையாடும் வீடு –
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு-இது
ஆனந்தம் விளையாடும் வீடு
http://www.youtube.com/watch?v=pHiqJbj8bFo