Tag: வெ. திவாகர்

  • பல்லழகன் – பகுதி 25 (நிறைவுப் பகுதி)

    திவாகர்

     

    “உனக்கு யாருடா சொன்னா இது.. அதுவும் நான் அன்னிக்கு எப்பவோ செஞ்ச காரியத்தை உனக்கு இப்போ வந்து யாருடா சொன்னாங்க?”

     

    ““சொல்லு.. உன் தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் சேர்த்துக் கொன்னதையும் பாட்டி எனக்கு எப்பவோ ஒரு கடிதத்துல எழுதி என் பழைய புத்தகத்துல வெச்சிருந்தாங்க.. அதுலேர்ந்துதான் கண்டுபிடிச்சேன்.. அப்போ நீ செஞ்ச கொலையை ஒப்புக்கற இல்லையா?”

     

    “ஆமாண்டா.. ஆமாம்.. நான் பாவம் பண்ணேன்னு யார்கிட்டய்யாவது ஒப்புக்கணுமில்லே.. உன் கிட்டே சொல்லறேன்.. நான் என் தம்பியையும் அவன் பொண்டாட்டியையும் கொன்னது வாஸ்தவம்தான்..”

     

    “எதுக்காக அவங்களைக் கொலை பண்ணினே..எப்படி கொலை பண்ணினே”

     

    கந்தசாமி முனகினார்.. பேச்சு வரவில்லை.. மறுபடி கேட்டான்.

     

    சொல்லு..”

     

    “ஆமாண்டா.. நான் என் தம்பி பொண்டாட்டி மேல ஆசப்பட்டுக் கூப்பிட்டேன். அந்தத் தம்பி பார்த்துட்டு அண்ணன்னு கூட மரியாதை கொடுக்காம என்னைப் பெரிய கம்பாலே அடி அடின்னு அடிச்சான். அந்தக் கோபம் தாங்காம அவங்க வீட்டுல தூங்கறச்சே ரெண்டு பேர் கழுத்தையும் ஒண்ணா கட்டி அதே துணியாலே நெறிச்சுக் கொலை பண்ணி அப்படியே தூக்குல மாட்டி விட்டேன். இதை எங்கம்மா.. உங்க பாட்டி பார்த்தது கூட வாஸ்தவம்.. அது கோபத்துல ஒரு ஆவேசத்துல செஞ்சதுடா.. அதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு ஏன் பழி வாங்கணும்டா.?”.

     

    சட்டென அவன் ஃபோனைத் தன் கையில் எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான்.

     

    “உனக்கு நீ செஞ்சதே ஒரு குற்றமா கூட தெரியலே இல்லே.. உனக்கு சாவு வரக்கூடாதுடா.. இப்போ மார்புல வலதுபக்கம் ஓரமா பாய்ஞ்ச குண்டோட அவஸ்தைப்பட்டு நீ உயிர் வாழணும். நீ யார்கிட்டே போய் கம்ப்ளெயின் பண்ணினா கூட என்னை உன்னால குற்றம் சாட்ட முடியாது.. நான் நாளைக் காலைல வருவேன். ஆஸ்பத்திரில வந்து பார்ப்பேன். உன்னை அப்பப்போ வந்து இப்படியெல்லாம் துன்புறுத்தப் போறேன்.. நீ பண்ண ஒவ்வொரு பாவத்துக்கும் நீ அனுபவிக்கணும்.. உனக்கு சாவு மட்டும் வரக்கூடாதுன்னுதான் வலது மார்ல அதுவும் ஓரமா சுட்டேன்.. அடுத்த தடவை இப்படி வருவேன்.. யாருக்கும் தெரியாம உன் கையை வெட்டுவேன்.. அந்தக் கைதானே இ[ப்படி ஒரு கோரத்தைப் பண்ணினது.. இன்னொரு விஷயம் நீ சொன்ன விஷயத்தை வீடியோ ரிகார்ட் பண்ணியிருக்கேன்.. எப்போ எங்கே யூஸ் பண்ணனுமோ அப்போ அங்கே யூஸ் பண்ணப் போறேன்”

     

    துப்பாக்கியை தன் கைக்குட்டையால் நன்றாகத் துடைத்து விட்டு மறுபடியும் அதை பீரோவில் வைத்துவிட்டுக் கிளம்புகிறான்.. கந்தசாமி மயக்கமாகப் பார்க்கிறார்..

     

    “டே,, கொஞ்சம் தண்ணி குடுடா.. தண்ணி வேணும்டா…”

     

    “இப்படித்தான் அவஸ்தைப்படணும்.. வெறி நாயா நீ செஞ்ச அந்தக் காரியத்துக்கும் நீ அனுபவிக்கணும்.”

     

    “தண்ணீ.. தண்ணீ வேணும்டா. தண்ணீ. “ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்…

     

    அவன் முகத்தில் ஒரு திருப்தி. அவன் பீரோ ஹேண்டிலைத் துடைக்கிறான்.. பிறகு உள்கதவு தாழ்ப்பாளையும் தன் கைகுட்டையால் துடைக்கிறான். தன் கை எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் துடைத்துவிட்டுதான் அங்கிருந்து கிளம்புகிறான். தன் கைக் கடிகாரத்தைப் பார்க்கிறான். சுற்றுமுற்றும் பார்க்கிறான். கிளம்பிப் போய்விடுகிறான்.

     

    மறுபடியும் கோம்டியின் கிலினிக்கில்

     

    “எங்கம்மா எப்படி செத்தாங்கன்னு பெரியம்மா சொன்னதா ஏன் சொல்லலைன்னா அந்தம்மா பேருல இனிமேயும் எந்தக் கறையும் படக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன். அதனால் செத்துப் போன பாட்டி சின்னதா எழுதிப் பழைய புத்தகத்துல வெச்சிருந்தத மாத்திரம் சொன்னேன். அதனாலதான் அவனும் என் பாட்டி இவன் கொலை செஞ்சதை நேரா பார்த்ததை ஒப்புகொண்டான்.”.

     

    “புரியறது.. உங்க பெரியப்பாவுக்கு நீங்கதான் பழி வாங்கறீங்கன்றது நல்லாத் தெரியணும். அதே சமயத்துல அது செஞ்சதே நீங்கதான்னு மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு இத்தனை ரிஸ்க் எடுத்துச் செஞ்சீங்கங்கிறது எனக்கு நல்லாவே புரியுது!”

     

    “என்னோட ஒரே திட்டம் அவன் குண்டடி படணும். ஆனா சாகக்கூடாது. அவனைப் பயமுறுத்தி அவன்கிட்டே ஸ்டேட்மென்ட் வாங்கணும்.. மறுபடியும் இப்படி ஏதாவது அலிபியோட போய் அவனைத் துன்புறுத்தணும்.. அந்த ஸ்டேட்மென்ட் எனக்கு ஒரு பாதுகாப்புக்காகத்தான் வாங்கினேன். எனக்கு முரளியும் சுந்தரும் அந்த நேரத்துல ஆஃபீஸ்ல இருப்பாங்கன்ற விஷயம் கூட நல்லதாப் போச்சு. அப்படியும் ஏடாகூடமா ஏதேனும் ஆகிடுச்சுனா எனக்கு ஒரு புரொடெக்‌ஷன் வேணும். அவ்வளவுதான். அவன் சாகக்கூடாதுங்கிற விஷயத்துல ரொம்பக் கவனமா இருந்துதான் யோசிச்சு சுட்டேன்.. என் திட்டமும் கூட அப்படித்தான். அதனாலதானே நான் ரயில் வண்டி திட்டத்தையே ரெண்டு நாள் யோசிச்சு கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தேன். அடுத்த நாள் காலையிலே அப்பதான் ட்ரெயின்ல வந்தது போல அவனை ஆஸ்பத்திரியிலே பார்க்கணும்.. நமுட்டுச் சிரிப்பு சிரிக்கணும்.. அவன் அவஸ்தையை ரசிக்கணும்.. இவ்வளவுதான்.. எனக்கு இன்னொருத்தரைக் கொலை பண்ணனும்னு தோணலைங்க.. சினிமாவுல வேணா உணர்ச்சிகரமா பேசி அவனை அடி அடின்னு அடிச்சுக் கொல்லலாம். இது நிஜ வாழ்க்கைல நடந்த கோரம். ஆனா அவன் துன்பத்தை அவன் அனுபவிக்கணும். வாழ் நாள் பூரா தான் பண்ண பாவத்தை தானே சிந்திக்கணும்.. அவ்வளவுதான்.. சிம்பிள்.”

     

    “புரியுது இப்போ.. இன்னொண்ணு.. கொலை செஞ்சுட்டு டிரெயினுல நீங்க வந்திருந்தீங்கன்னா உங்களாலே ரொம்ப கேசுவலா என்னோட விஜயவாடாவுல டிரெயின்ல எப்படி பேசியிருக்கமுடியும்?  ஆனா அவன் சாவான்னு நீங்க எதிர்ப்பார்க்கலே இல்லையா?” மெதுவான குரலில் சொன்னாள். முகத்தைத் துடைத்துக் கொண்டான் கல்யாண்.

     

    “நான் எதிர்பார்க்கலைதான். அவன் இதுக்கெல்லாம் அஞ்சமாட்டான்.. கோழை மாதிரி தற்கொலை பண்ணிக்கமாட்டான்னுதான் எதிர்பார்த்தேன்.. ஆனா கடவுள் வேற விதமா நினைச்சிருக்கணும்.. அதனாலதான் சீக்கிரமாவே அவனைக் கொண்டு போய்விட்டார். எப்பவுமே நம்ம திட்டம் சக்ஸஸ் ஆகுமா என்ன?.. பாருங்க.. வேற வழியில்லாம மெதுவா எழுந்து பீரோவைத் திறந்து துப்பாக்கியை எடுத்துத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டான். எனக்கு நீங்க சொல்லறவரைக்கும் சுந்தர் விஷயமோ முரளி விஷயமோ எதுவும் தெரியாது. கந்தசாமியைப் பொருத்தவரை ரெண்டு விஷயம் அந்த நேரத்துல உறுத்தியிருக்கணும். ஒண்ணு எனக்குத் தெரிஞ்சுபோன எங்கப்பா அம்மா கொலை விஷயம் அதனால அடிக்கடி என்னாலே பழிவாங்கப்படுவோம்ங்கிற பயம், இன்னொண்ணு இவன் அந்த விஜயா விஷயத்துல சுந்தர்கிட்டே ஒரு மிகப் பெரிய ஆதாரம் இருக்குங்கிறது அதுவும் தெரிஞ்சு போச்சுன்னா தன்னை யாரும் சும்மா விடமாட்டாங்கன்னு புரிஞ்சுதான் அவன் பீரோ வரைக்கும் நடந்து போய் துப்பாக்கியை எடுத்துத்  தற்கொலை பண்ணியிருக்கான். அதான் பீரோ ஹாண்டில்ல ரத்தக் கறையும் தரையில கூட ரத்தக் கறையும் படிஞ்சிருக்கு.. நான் துப்பாக்கியை நல்லா துடைச்சி பீரொவுல வெச்சுட்டுப் போனேனே.”

     

    கல்யாண் தன் ஃபோனைத் திறந்து மறுபடியும் ஒரு வீடியோவைக் காண்பிக்கிறான். அதில் கந்தசாமி தன் தம்பியையும் தம்பி பெண்டாட்டியை எப்படிக் கொன்றேன் என்று மெதுவாக சொல்லி அழுகிறார். அவருடைய முகம் மட்டுமே இருக்கிறது.

     

    கோம்டி தலையை அசைக்கிறாள்.

    “அன்னிக்கு சாயங்காலம் 5.27க்கு சென்னை ஏர்போர்ட்ல இண்டிகோ கௌண்டர்ல உங்க பேருல விஜயவாடாக்கு உங்க ஃப்ளைட் போர்டிங்க் பாஸ் ரிஜிஸ்டர் ஆயிருக்குன்னு எனக்கு தகவல் வந்தது. சாந்திதான் பார்த்துக் கொடுத்தா. நிச்சயமா நீங்க 5.20 மணிக்கு ஏர்போர்ட்ல் இருந்தீங்கன்னா மினிமம் பதினைந்து இருபது நிமிஷம் முன்னாடியே பெரியப்பா வீட்லேர்ந்து கிளம்பியிருக்கீங்க. ஸோ, நெத்திப் பொட்டுல போட்ட ரெண்டாவது குண்டு அஞ்சறை மணிக்குப் பாயறச்சே நீங்க அங்க இல்லேன்னு ஆதாரம் சொல்லறது. இதையும் நானும் யோசிச்சேன். கொல்லணும்னு இத்தனை பிளான் போட்டவர் ஏன் கொல்லாமல் வலது மார்புல மட்டும் காயப்படுத்திட்டுப் போறார்னு எனக்கு சந்தேகம் இருந்தது. அதை நிவர்த்தி பண்ணிட்டிங்க..”

     

    “அவ்வளவுதாங்க.. எங்கம்மாவுக்கும் எங்கப்பாவுக்கும் நேர்ந்த மரணம் மட்டுமல்லாம சுமதிக்கு நேர்ந்த அவமானங்கள், விஜயாவுக்கு ஏற்பட்ட கொடுமை இதெல்லாம் காரணத்துக்கு வலு சேர்த்திடுச்சு.  இப்படி ஒரு கொடூரமான மனுஷன் கூட வாழ்ந்திருக்கேன்னு நினைச்சுப் பாக்கறச்ச மனசு வலிக்கறதுதான். முரளிக்கு நேர்ந்த அவமானம்லாம் எனக்குப் பெரிசா படலே. அதுபோல சுந்தருக்கு ஏற்பட்ட கவலைங்க கூட என்னைப் பெரிசா அஃபெக்ட் பண்ணலே.. ஆனா சுமதி ஒரு விதத்துல, விஜயா இன்னொரு விதத்துலன்னு நிறைய பேருங்க இவனோட கொடுமைக்கு ஆளாகி இருக்காங்க.. இவங்களைக் காப்பாத்தற பொறுப்பையும் எடுத்துக்கணும் இல்லையா.. அத்தோட எனக்குள்ள இருக்கற மனசாட்சி என்னைக் கொலை பண்ற அளவுக்குக் கொண்டு போய்விடாதுங்க.”

     

    ரவியும் தலையை அசைத்தான். ‘‘ஆமா கோம்டி! கல்யாண் எங்கிட்டே முன்னமேயே இப்படித்தான் செய்யணும்.. இப்படி செஞ்சாதான் கந்தசாமி தன் வாழ்நாள் பூரா தண்டனை கிடைக்கும்னு சொன்னான். அவன் சாகக்கூடாதுடான்னு எங்கிட்டே சொல்லியிருக்கான். அப்படிப்பட்டவன் செத்துட்டான்னு அடுத்த நாள் மார்னிங்க் கல்யாண் ஃபோன் செஞ்சவுடனே நான் இங்கே வந்தேன்.. ஆனா நாம் இந்த கேஸுல உள்ளே போகப்போக இந்த சுந்தர் பேருல சந்தேகம் ரொம்ப டீப்பா போச்சு இல்லையா.. நானும் கல்யாணுமே இந்தமாதிரி இவங்களை அதான் இந்த ரெண்டு கஸின் கதைங்களை எதிர்பார்க்கலே.. ஒரு கட்டத்துல இந்தக் கொலையை சுந்தரே கூட ரெண்டாவதா வந்து பண்ணியிருக்கலாம்னுதான் நாங்களே நினைச்சோம். அதாவது ரெண்டாவது குண்டு கந்தசாமி நெத்தியில சுட்டதைச் சொல்லறேன். ஆனா அவன் பண்ணலேங்கிறது அவன் மகாபலிபுரத்துல இந்த கொலை நடந்த சாயங்காலம் இருந்த ரிசார்ட் பார், அவன் அதுக்கு பே பண்ணின பில்லிங்க் டைம் எல்லாமே சாட்சியா இருந்தது.’ ரவி ஆச்சரியமாக பேசினான்.

     

    திடீரென கோம்டி ஒரு சந்தேகம் கேட்டாள். ‘ஒருவேளை உங்க ஃப்ளைட் டிலே ஆகி விஜயவாடால வண்டியை தவறவிட்டீங்கன்னா என்ன செஞ்சிருப்பீங்க?’

     

    “நான் அதையும் யோசிச்சுப் பார்த்தேன் கோம்டி. அப்படி விமானம் டிலே ஆச்சுன்னாலும் வைசாக்’ல  டிரெயின்ல நான் ஏறியது அலிபியாக இருக்கணும்ங்கிறதுதான் என்னோட பிளான். ஒருவேளை விஜயவாடால ஹவுரா மெயில மிஸ் பண்ணிட்டா கூட நான் அடுத்த டிரெயினைப் பிடிச்சு சென்னை வந்திருப்பேன். நான் கொண்டு வந்த பெட்டில கூட அவ்வளவு துணில்லாம் இல்லே. அதனால அந்தப் பெட்டி போனா கூட எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லைதான். அப்படியே ஏன் ஹவுரா மெயில்ல பெட்டியைத் தவற விட்டு வேற வண்டில வந்தீங்கன்னு போலீஸ் துருவித் துருவிக் கேட்டா கூட வழில விஜயவாடா ஸ்டேஷன் பேரைச் சொல்லி டிஃபன் சாப்பிட இறங்கி வண்டியை தவறவிட்டு அடுத்த வண்டி சர்க்கார் எக்ஸ்பிரஸ் பிடிச்சு வந்தேன்னு சொல்வேன். விஜயவாடால  ஒரு செகண்ட் கிளாஸ் ஆர்டினரி டிக்கெட்  கூட வாங்கி ரெடியா வெச்சிருப்பேன். ஆனா ஹவுரா மெயில்ல வந்தாதான் பக்கா அலிபியா இருக்கும். ஏன்னா ஸ்டேஷனுக்கு முரளியும் சுந்தரும் வந்து மீட் பண்ணனும் இல்லையா.. நாங்க ஏற்கனவே திட்டமிட்டபடி எல்லாக் காரியத்தையும் முடிச்சுதான் வந்தேன். சங்கல்பம் பண்ணித்தானே இந்தக் காரியத்தைப் பண்ணினேன். நிச்சயமா சக்ஸஸ் ஆகும்னு ஒரு நம்பிக்கை’.

     

    கோம்டி அவனை வருத்தத்தோடு பார்த்தாள்.

     

    “அடுத்து என்ன உங்க திட்டம்..?”

     

    “அடுத்து என்ன திட்டம்.. ஒண்ணுமில்லேங்க.. ரவிகிட்டே என் வைசாக் பிஸினஸை முழுசுமா கொடுத்துட்டேன். அவன் வேண்டாம்னு சொன்னாலும் அவனுக்கு கிட்டதட்ட வரதட்சிணை மாதிரி இருக்கட்டுமேன்னு கண்டிப்பா சொல்லிட்டேன்..

     

    ‘வரதட்சிணையா?’

     

    ரவி கொஞ்சம் வெட்கப்பட்டுப் பேசினான்.

     

    ‘அப்படி எல்லாம் இல்லை கோம்டி.. நான் சுமதியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன். சுமதியை அடிக்கடி வந்து பார்த்துண்டேன் இல்லையா.. அப்போவே அவளோட நல்ல குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவகிட்டயே கேட்டேன். கல்யாண் அண்ணாவோட ஃப்ரெண்டாச்சே. .. என்னைக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு சம்மதம்னு சொன்னா. சுமதியும் சம்மதிச்சவுடனேதான் கல்யாண்கிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டான். அத்தோட கல்யாண் விடாப்படியா இந்த பிஸினஸ் பூரா என்னதுன்னு சொல்றான். ஆனா இவனைத் தனியா எல்லாம் நான் விடமாட்டேன்’.

     

    ‘இருக்கட்டுமே கோம்டி. இன்னும் சுமதிக்குச் சேரவேண்டிய சொத்தையும் பணத்தையும் ஒழுங்கா சேர்க்கணும். விஜயாவை சுமதி இனிமே நல்லா பார்த்துப்பா.. முரளிக்கும் சுந்தருக்கும் ஏதாவது பணம் ஏற்பாடு பண்ணனும்.. இதுக்குல்லாம் எப்படியும் ஒரு வாரம் டைம் தேவைப்படும். அவ்வளவுதான்..’

     

    ரவி அவனை அணைத்துக்கொண்டான். ‘ஒண்ணு சொல்றேன் கோம்டி! ஒருவேளை நீயே இவன் கேஸை எடுத்துண்டு போலீஸ்கிட்ட போனாலும் நான் அவனுக்காக எப்படியும் போராடி வெளியிலே கொண்டுவந்துடுவேன். பலமான சாட்சிகளா நான், சுமதி, சுமதியோட அம்மா எல்லாத்துக்கும் மேலே கல்யாண் கந்தசாமிகிட்டேயிருந்து வாங்கிய வாக்குமூலம்.. இவ்வளவு ஏன்.. இவங்கப்பா அம்மா கொலையையும் திரும்ப எடுத்து அது தற்கொலை இல்லே, கந்தசாமி செஞ்ச கொலைன்னு அங்க திருச்சியிலும் கேஸ் போடலாம்னு எனக்கு ஒரு திட்டம் இருக்கு.’

     

    கல்யாண் அவனைக் குறுக்கிட்டான். ‘ஆனா அதை கோம்டி’யே தீர்மானிக்கட்டும் ரவி. நாம் எல்லாத்தையும் இப்போ சொல்லிட்டோம்.’ என்றவன் கோம்டியைப் பார்த்தான்.

     

    “சரிங்க.. இப்ப எல்லாமே தெரிஞ்சுகிட்டீங்க.. எத்தனைதான் நான் செஞ்சதை நியாயப்படுத்தினாலும் சட்டப்படி நான் பண்ணினது கூட ஒரு குற்றம்தான்.. ஆனா நான் சொன்ன கடமைங்க ஒருவாரத்துல முடிஞ்சவுடனே நீங்க சொல்றபடி கேட்கிறேன்.. அதுக்கப்பறம் என்னை என்ன பண்ணப் போறீங்களோ உங்க இஷ்டம்..!”

     

    மறுபடியும் அவனைப் பார்த்தாள்.

     

    “உங்களை நான் என்ன பண்றது? ம்.. சரி, இன்னிக்கு ராத்திரி போகட்டும். நாளைக்குக் காலைல இதுக்கு ஒரு வழி சொல்லறேன்.. நானும் யோசிக்க வேணாமா?”

     

    அவன் அவள் கிலினிக்கிலிருந்து எழுந்து செல்கிறான். அவன் போனவுடன் தன் மொபைலில் இருந்து சாந்தியைக் கூப்பிடுகிறாள்.

     

    “ஹேய் சாந்தி. அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ்க்குத்தானே நாம போகணும்.?”.

     

    “ஓ.. அப்ப நீயும் வர்றே இல்லையா. ஸோ ஹேப்பிடி! அமெரிக்கால இருக்கற எங்க சொந்தக்காரங்களுக்குச் சொல்லி கிலினிக் ஏற்பாடு பண்ணச் சொல்றேண்டி.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து முடிஞ்சவரைக்கும் அமெரிக்காவில இருக்கற அத்தனை பேர் பல்லையும் பிடுங்கலாம். பில்லையும் நிறையப் போடலாம். நாளைக்கே ரெண்டு டிக்கெட் சொல்லிடறேண்டி..”

     

    “ரெண்டு இல்லடி.. மூணு டிக்கெட் சொல்லு..”

     

    “மூணாவது யாருடி?”

     

    “வேற யார்? நம்ம பல்லழகர்தான்..”

     

    “தெத்துப்பல்லனா.. அவன் எதுக்குடி?”

     

    “எப்படியும் நமக்கு அங்கே ஒரு நர்ஸோ இல்லை கம்பவுண்டரோ வேணும்டி.. பல்லழகர்தான் கம்பவுண்டர்..”

     

    ஒருமாதம் கழித்து அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு வீட்டின் முன்னறையில் ‘டெண்டல் கிலினிக்’ என்ற போர்ட் இருக்கிறது. கல்யாண் அந்த வீட்டுக்கு வெளியே ஒரு பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கையில் ஒரு வெள்ளைக்காரன் அங்கு வருகிறான். ஆங்கிலத்தில் பேசுகிறான்.

     

    “எனக்கு இன்று அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்காங்க.. டாக்டர் கோ..ம்..டீ உள்ள இருக்காரா?”

     

    கோம்டி இல்லே.. கோமதி..

     

    நோ நோ.. டாக்டர் கோம்டி.. கோம்டி.. டெண்டல் சர்ஜன்.

     

    “உங்களுக்கு என்ன கம்ப்ளெயிண்ட்?” என்றவுடன் அவர் வாயைத் திறக்கிறார். அவருக்கும் ஒரு தெத்துப்பல் இருக்கிறது. அவரைத் தனியாக அழைத்துச் செல்கிறான்..

     

    “தெத்துப்பல்லை எடுக்கணுமா?”

     

    “ஆமாம்”

     

    “ஏன்?”

     

    “என் பார்ட்னருக்கு பிடிக்கலே..”

     

    “இதோ பார்.. பார்ட்னர்னா பெண்ணா இல்லை ஆணா.. கோவிச்சுக்காதே..

     

    ஹேய்,, பெண்தான்.. கேர்ள் ஃப்ரெண்ட். பியூடிஃபுல் கேர்ல்.

     

    இப்போ புரியுது. நான் எதுக்குக் கேட்டேன்னா இந்தப் பெண்களுக்கு எப்பவுமே தன் பார்ட்னர் தன்னை விட அழகா இருக்கறதுப் பிடிக்காது, அதுவும் ஆம்பிளைக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் வருதுன்னா பிடிக்கவே பிடிக்காது.. தெத்துப்பல் இருந்தாதான் அதிர்ஷ்டம் அதிகமா இருக்கும்.. தெத்துப்பல்லை அப்படியே வெச்சுண்டு அட்ஜுஸ்ட் பண்ணிண்டே போகக் கத்துக்கணும். உனக்கு ஒரு அதிர்ஷ்டம்தான்.. ஆனா என்னைப் பாரு எனக்கு ரெண்டு அதிர்ஷ்டம்.. ரெண்டு தெத்துப்பல்லு. புரியுதா? உனக்கு ஒண்ணுதானே இருக்கு. அப்படியே வெச்சுக்கோ..”

     

    ‘ஓ.. எக்ஸெல்லென்ட். புரியுது.. தெத்துப்பல்லுன்னா ப்யூடின்னு சொல்லறே.. நன்றி!” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் போகிறான்.

     

    பின்னால் நின்று இதைக் கேட்கும் கோம்டி அவனைப் பார்க்கிறாள். திடீரென கத்துகிறாள்..

     

    “சாந்தி.. சீக்கிரம் வா இங்கே..”

     

    சாந்தி ஓடி வருகிறாள்.

     

    “என்னடி ஏன் கத்தறே?” என்றவளிடம் காதில் ஏதோ சொல்ல அவள் தலையாட்டுகிறாள். உள்ளறைக்குள் சென்று வந்து எதையோ அவள் கையில் மறைவாகக் கொடுக்க அவள் வாங்கிக் கொள்கிறாள்.

     

    “கொஞ்சம் உள்ள வர்றீங்களா கல்யாண்..?”

     

    கல்யாண் என்னவென்று புரியாமல் உள்ளே செல்கிறான்.

     

    உள்ளே சென்றவுடன் அவன் பக்கத்தில் ஆசையாக வருவது போல வந்த கோம்டி அவன் கையைப் பற்றுகிறாள். அவன் வெட்கப்படுகிறான்.. அவன் கையை மெல்லத் தடவிக்கொண்டே இருந்தவள் அவன் கண்ணை மூடி ரசிக்கும்போது சட்டென அவன் மேல்கையைப் பிடித்து இன்னொரு கையில் இருந்த இஞ்செக்ஷன் ஊசி மூலம் மயக்கமருந்து செலுத்துகிறாள். இதனை எதிர்ப்பார்க்காத அவன் அவள் மேலேயே சாய்கிறான்..

     

    “சாந்தி சீக்கிரம் வா.. சக்ஸஸ்..” என்று மறுபடியும் சாந்தியைக் கூப்பிட சாந்தி வருகிறாள். அவன் அவள் மேல் சாய்ந்து கிடப்பதைப் பார்த்து அங்கிருந்து போகிறாள்.

     

    “ஓ.. சாரி, ராங்க் டைம்ல வந்துட்டேனா?”

     

    “ஏய்.. ச்சீ.. முதல்ல நான் சொல்றதைச் செய்யுடி!” என்று அவள் சாந்திக்கு சில ஆணைகளைப் போடுகிறாள்.

    “நீ என்ன செய்யு.. முதல்ல அந்த டென்டல் சேரை இவன் சைஸுக்கு சரிபண்ணு.. அதுக்கப்பறம் இவனோட தெத்துப்பல்லை பிடுங்கி எடுக்கறதுக்கான டூல்ஸ் எடுத்து வெச்சுக்கோ.. அப்பறம் இப்போ ரிசெண்டா வந்த அமெரிக்கன் டெக்னாலஜிப்படி பல்லு பிடிங்கின சூட்டோடு சூடா புதுப்பல்லும் பொருத்திடலாம். என் ஹேண்ட்பாக்ல இவன் சைஸா பார்த்து ரெண்டு புது பல்லு வாங்கி ஒரு பிளாஸ்டிக் கவர்ல வெச்சிருக்கேன். அதையும் எடுத்துக்க”

     

    “ஏய்.. எல்லாம் எதிர்பார்த்துதான் ஏற்பாடு செஞ்சு கொண்டு வந்திருக்கியா.. பெரிய ஆளுடி!”

     

    “சரிடி.. நான் சொன்னதைச் செய்யேன்.. இவன்கூட நாலு ஊர் போகறதா இருந்தா இந்த தெத்துப்பல்லோட எப்படிப் போவேன்? இன்னிக்கு சான்ஸ் கிடைச்சுடுச்சு.. விடுவேனா? சரி.. சரி.. இவனை எங்கிட்டேயிருந்து விலக்குடி..”

     

    “இத்தனை நேரம் சுகமா அனுபவிச்ச இல்லே.. அப்படியே கிடக்கட்டும்.. நான் டூல்ஸ் கொண்டு வர வரைக்கும் அனுபவி..”

     

    கண்ணடித்து விட்டுச் செல்கிறாள். சிறிது நேரத்தில் எல்லா டூல்களையும் தயார் நிலையில் வைக்க கல்யாண் அந்த டெண்டல் சேரில் உட்கார வைக்கப்பட்டு சிறிது நேரத்துக்குள் தெத்துப் பல் பிடுங்கப்பட்டு புதுப்பல்லும் பொருத்தப்படுகிறது.. கொஞ்ச நேரத்தில் அவன் கண் விழிக்க, வாயில் வலி சற்றே உணர, அவனுக்குக் கண்ணாடியைக் காண்பிக்கிறாள் கோம்டி.

     

    திடுக்கிடுகிறான். அவன் தெத்துப்பல் பிடுங்கப்பட்டு புதுப்பல்லுடன் பார்க்க அவன் முகம் சோகமாகிறது.

     

    “ஆஹா.. என் அதிர்ஷ்டப் பல்லு போயிடுச்சா?” அவன் சோகத்தைப் புரிந்து கொள்கிறாள் கோம்டி.

     

    “இப்போதுதான் கல்யாண் உங்கள் முகத்தின் அழகு எடுப்பா இருக்கு.. நீங்க என் க்லினிக்ல அன்னிக்கு ராத்திரி உங்க பெரியப்பா எப்படி கொலையானார்ங்கிற உண்மையைச் சொல்லறச்சே ஒரு விஷயம் சொல்லிட்டு ஆரம்பிச்சீங்களே.. நினைவிருக்கா?”

     

    தலையை அசைத்து ‘இல்லை’ என சொன்னான்.

     

    “நல்லா ஞாபகப்படுத்திச் சொல்லுங்க..”

     

    “எதுவும் ஞாபகம் இல்லை கோம்டி..”

     

    “அன்னிக்கு ராத்திரி ரொம்ப சீரியஸ்ஸா என்னைப் பாராட்டிட்டு நீங்க சொன்னீங்களே..”

     

    “என்ன சொன்னேன்”

     

    “உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறவரு ரொம்ப அதிர்ஷ்டக்காரன்னீங்க.. ஞாபகமில்லே?..”

     

    “ஆமாம். சொன்னேன்.. இப்பவும் சொல்வேன்.. அதுக்கென்ன இப்போ?”

     

    “அந்த அதிர்ஷ்டக்காரர் நீங்கதான் கல்யாண்.. பார்த்தீங்களா.. உங்க தெத்துப்பல்லு போச்சு.. நான் அதிர்ஷ்டமா உங்களுக்குக் கிடைச்சிருக்கேன்.. உங்களுக்குக் கிடைச்ச தெத்துப் பல்லு அதிர்ஷ்டமா இல்லே.. நான் அதிர்ஷ்டமா”

     

    “கோமதி.. இல்லல்ல.. கோம்டி.. நிஜம்மாவா சொல்லறீங்க?”

     

    “நிஜம்தான் கல்யாண்.. எப்போ நான் யூ எஸ் வர முடிவு செஞ்சு உங்களையும் கூட வரணும்னு சொன்னேனோ அப்பவே நீங்கதான் என்னோட புருஷன்னும் முடிவு செஞ்சுதான் உங்களை அழைச்சிட்டு வந்தேன்.. உங்க மரமண்டைக்குதான் இன்னும் புரியலே..”

     

    “நிஜம்மாவே நான் இவ்வளோ அதிர்ஷ்டக்காரனா? அப்போ அந்த வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியன் சொன்னது கரெக்ட்தான், கொஞ்ச நாள்ல எனக்கு அதிர்ஷ்ட தேவதை தானாத் தேடி வரும்னு சொன்னான். ஆனா அது அவுராமெயில்ல ஆரம்பிச்சு அமெரிக்கா வரை தொடர்ந்து என்னோடு அப்படியே இருக்கும்னு சொல்லலே..”

     

    அப்போது “நான் உள்ளே வரலாமா?” எனும் குரல் கேட்க அங்கே சாந்தி நிற்கிறாள்.

     

    “இன்னிக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்த அந்த ஆள் வெளியே வெயிட்டிங்க். அந்த தெத்துப் பல்லோட வந்தா அவன் கேர்ள் ஃப்ரெண்ட் இனிமே தொடர்பை கட் பண்ணிடலாம்னு சொன்னாளாம்.. அது அதிர்ஷ்டம் இல்லயாம்.. எப்படியாவது எடுத்துடுங்கன்னு அங்க வெளில வெயிட்டிங்க் பண்றான்.. நாம   இப்போ ஆரம்பிக்கலாமா இல்லே கொஞ்ச நேரம் ஆகுமா..”

     

    சாந்தி சிரிக்கிறாள். கோம்டி புன்னகைத்துக் கொண்டே கல்யாணிடம் சொல்கிறாள்.

     

    “பார்த்தீங்களா.. தெத்துப்பல் போன அதிர்ஷ்டம்.. கையை விட்டுப் போன கேஸ் திரும்ப வந்திடுச்சு..”

     

    சிரிக்கிறாள்.. அவன் அவளை முறைக்கிறான். பின் அவனும் சேர்ந்து சிரிக்கிறான்.. தெத்துப் பல்லு போன சிரிப்பாக இருப்பதை அவனும் உணர்கிறான்.

     

    “என்ன இருந்தாலும் ஒரு தெத்துப்பல்லின் அழகான கதை முடிஞ்சு போச்சு இல்லே..”

     

    சாந்தியும் கூடவே சிரிக்கிறாள்.

     

    சுபம்.

    Share
  • பல்லழகன் – பகுதி – 24

     

     

    திவாகர்

     

    ‘ஒரு நாள் உங்கம்மா எங்கிட்டே வேகம் வேகமா ஓடிவந்தா.. என்னடி ஆச்சுன்னு கேட்டதுக்குதான் சொன்னா.. நிறைய தடவை கந்தசாமி தன்கிட்டே ஆசை வார்த்தை கூறி அடைய வர்றதாகவும் அவனைத் தடுக்கறது எப்படின்னு தெரியலன்னு அழுதா.. எனக்கு அதிர்ச்சிதான். நான் சொன்னேன். எப்படியாவது கந்தசாமியை நான் கல்யாணம் பண்ணிண்டு போயிடுவேன். கொஞ்ச நாள் பொறுத்து அவளைக் கணவனோடு தனிக்குடுத்தனம் போயிடுன்னேன்.. என்னவோ தெரியலே. அடுத்த ரெண்டு நாள்ல புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிகிட்டாங்கன்னு தெரிஞ்சவுடனே அங்க ஓடினேன்.. எனக்கு ஏதோ புரிஞ்சது.. அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் போன பிறகுதான் கந்தசாமி எங்கிட்டே வந்தான். தான் ஏதோ வாழ்க்கைல தோத்துப் போயிட்டதா நாடகம் ஆடினான். நானே கேட்டேன்.. ‘ஏன்யா.. என் ஃப்ரெண்ட் உன் மேல புகார் சொல்லிச்சு.. அது உண்மையா’ன்னு பச்சையா கேட்டேன், அவன் மழுப்பிட்டான்.. ஆனா நான் நம்பலே.. அவனை நான் எங்கிட்டே பழகவே அனுமதிக்கலே.. இப்படி இன்னும் ஒரு வருஷம் கழிச்சுதான் எங்கிட்டே  அழுது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி வசியம் பண்ணி அவன் வலைல நானும் விழுந்து ஒரு குழந்தையும் கொடுத்துட்டு தப்பிச்சுப் போயிட்டான் மகாபாவி. பெண்களை ஏமாத்தி மோசம் பண்றதுக்குன்னே இவன் பொறந்திருக்கான்பா..” பெரியம்மா அழுதாள்.

     

    “ஐய்யோ அம்மா… எப்படிம்மா எங்கம்மா அப்பா அவங்க செத்தாங்க?” தன் தலையில் கை வைத்து அடித்துக் கொண்டான் கல்யாண்.

     

    “ஆனா உங்கம்மாவுக்கும் உங்கப்பாவுக்கு நேர்ந்த கொடுமை ரொம்பப் பெரிசுன்னு அப்பவே தெரிஞ்சுண்டேன். என் கையிலே சுமதி ஒரு வருஷக் குழந்தை. இனிமேலும் இந்த வம்பு பேசும் ஊர்ப் பேச்சைக் காது கேட்க வாழ முடியாதுன்னு வேற வழியில்லாம உங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு கைக்குழந்தை சுமதியோட வந்தேன்பா. வீட்டுக்குள்ளே உங்க பாட்டிதான் இருந்தார். என்னைப் பார்த்தவுடனே ஓ’ன்னு அழுதாரு.. என் குழந்தை சுமதியைத் தூக்கி வெச்சிண்டாரு.. ‘ஆனா நீ இங்கே இருக்காதடி.. உன் தோழிக்கு நேர்ந்த அதே கொடுமை உனக்கு வேண்டாம்’னு அழுதாங்க.. பெரிய மவனே தன் தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் கழுத்தை  நெறிச்சுக் கொன்னு போட்ட கொடுமை உனக்கும் வரவேண்டாம்னு சொன்னாங்கப்பா.. ‘அவன் கொன்னுட்டு தூக்குல போட்டுட்டாண்டி.. எங்கடி போய் சொல்லி நான் அழறது, நீ போடி.. நீ போடி இங்க இருக்காதடி..’ன்னு சொன்னாங்க.. எனக்கு அதிர்ச்சியா இருந்தது.. அப்பதான் அந்த கந்தசாமி வந்தான். என் குழந்தையை பாட்டி வெச்சிருந்ததைப் பார்த்துப் பிடுங்கி எங்கிட்டே தந்தான்.. என்னையும் கழுத்தைப் பிடிச்சு வெளியே துரத்திட்டான்பா.”

     

    பெரியம்மா அழுதாள். ‘அப்புறமா என்னைத் தேடி உங்க பாட்டி எங்க வீட்டுக்கு வந்துதுப்பா. ஒரு டைரிய எங்கிட்ட கொடுத்தாங்க. இந்த டைரில்லாம் நீ படிக்காதடி.. இந்த கல்யாண் பெரிய பையனா ஆனதுக்கப்பறமா இதை எப்படியாவது அவன்கிட்டே சேர்த்துடும்மா.. அப்ப வரைக்கும் உங்கிட்டயே பத்திரமா வெச்சுக்க.. கல்யாண்க்குத் தெரியட்டும்மா.. இப்படி ஒரு ராட்சஸன் இருக்கான்னு அவன் தெரிஞ்சுக்கணும். அவனுக்காக இந்தக் கையாலாகாத பாட்டிக்கிழவி கடைசி காலம் வரை அழுதுண்டேதான் இருந்தான்னு நீ சொல்லு.  இந்த உதவியை நீ செஞ்சாலே போதும்மா.. அவனையும் உங்க ரெண்டுபேரையும் தெய்வம் காப்பாத்தும். கவலைப்படாதீங்க.. அப்படின்னு சொல்லிட்டு அழுதுண்டே போயிட்டாங்க.’

     

    பெரியம்மா ஒரு பெட்டியைத் துழாவி ஒரு பழைய டைரியை எடுத்து வந்தாள். ‘நான் ஒவ்வொருதடவை நீ வரச்சே இந்த டைரியைக் கொடுக்கணும்னு நினைப்பேன்பா.. ஆனா இந்த டைரில என்ன எழுதியிருக்காங்க அந்தம்மான்னு எனக்கு அப்பவே ஒரு ஆசை.. அதுல படிச்சுப்பார்த்தேன். பயந்துட்டேன்பா.. உன் அப்பா அம்மாவை தூங்கறச்சே கழுத்தை நெறிச்சு அவங்களை தூக்குல மாட்டினதை என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்..நு’ எழுதியிருக்காப்பா.. நான் துடிச்சுப் போயிட்டேன். என்னோட உயிர்த்தோழியை இப்படி கொலை பண்ணவன் எங்களையும் இப்படி பண்ணமாட்டான்னு என்ன நிச்சயம்?  யார்கிட்டயாவது சொன்னா உங்க பாட்டி குடும்பம் பாழாகும்.. எங்களுக்கும் அந்த நிலைமைதான் வரும்.. பாட்டி சொல்லறா மாதிரி ஆண்டவன் எப்பவாவது உன்னை என்னைப் பார்க்க அனுப்பினா அப்போ உனக்குக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணேன்பா.. அத்தோட சுமதிக்கு இந்த விஷயம் தெரியாது. ஏற்கனவே இப்படிப்பட்ட அயோக்கியனை அப்பாவா அடைஞ்சிருக்கோம்னு அவளுக்குக் கோபம். அவன் பெரிய கொலைகாரன்னு தெரிஞ்சா அவ தற்கொலையே பண்ணிப்பாப்பா.. இதோ இன்னிக்கு ஒரு அவகாசம் இப்படி கிடைச்சுது. பலவருஷமா எங்கிட்ட இருந்த இந்த டைரியை பாட்டியோட ஆசைப்படி உங்கிட்டே சேர்த்துட்டேன்.  ஆனா இப்போ நீ ஆவேசப்படாதே.. அவசரப்படாதே.. உனக்கு வாழ்க்கை நல்லா அமையணும்னு ஒரு அம்மாவா எனக்கு ஆசை இருக்கு. நிதானமா எடுத்துக்கோ. உனக்கு உண்மை தெரியணும்னுதான் கொடுத்தேன். ஒருவேளை இதைப் போலீஸ்ல கொடுத்து அவனைப் பிடிச்சு தூக்குல போட்டா கூட உனக்கு சாட்சி சொல்ல இந்த அம்மா உன் பக்கத்துலேயே இருப்பாப்பா.. அவன் செத்தா சந்தோஷப்படற முத ஆளும் நான்தான்பா.. அவன் எப்படியும் என் கண்முன்னே துடிதுடிக்க சாகணும்னு அம்மனுக்கு காசு கூட முடிஞ்சு விட்டுருக்கேன்பா” அழுதாள்.

     

    மறுபடியும் தன் நிலைக்கு வந்தான் கல்யாண். கோம்டியின் கிலினிக்கில் கோம்டியைப் பார்த்தான்.

     

    “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்லே கோம்டி.. தன்னோட தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் கொன்னுட்டு நிம்மதியா ஒத்தன் ஊர்ல இருக்கற பெண்களையும் வசியப்படுத்திண்டு தன் இஷ்டத்துக்கு ஜாலியா வாழறதுங்கிறது யாராலதான் பொறுத்துக்க முடியும். இதை ரவிகிட்டே சொன்னதும்  உடனே உடனடியா அவனைக் கொலை பண்ணனும்ன்னு ஆவேசம்லாம் அவனுக்கு வந்தாலும் எனக்கு என் பாட்டி என் கண் முன்னால வந்தாங்க..  போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துத் தண்டனை வாங்கித் தர முடிஞ்சா அவங்க எப்பவோ இல்லே செஞ்சிருப்பாங்க.. சாட்சியையெல்லாம் சுத்தமா அழிச்சுட்டான் ஆனா அதுக்குள்ளே பாட்டியைய்யும் கொலை பண்ணிட்டா?’

     

    ரவி அவன் தோளைத் தட்டிக்கொடுத்தான். ‘அப்படியும் நான் சொன்னது அவங்கிட்டே போலீஸ்கிட்ட போகச் சொல்லித்தான். ஆனா ரொம்பநாள் கழிஞ்ச கேஸ் இல்லையா?’ போலீஸ் எப்படி டேக்கிள் பண்ணும்னு தெரியாது.’ ரவி சொல்லியதும் கல்யாண் ஆரம்பித்தான்.

     

    ‘இப்போ பாட்டியோட டைரியும் சாட்சி சொல்ல பெரியம்மாவும் இருக்கறச்சே இவனுக்குத் தண்டனை அதுவும் சட்டப்படி தூக்குத் தண்டனை வாங்கித் தரலாம்தான். ஆனா ஏற்கனவே பழைய கேஸ் ஆகி ஆறி அவலாகிப் போன இந்தக் கேஸை நிச்சயமா அஞ்சு வருஷமாவது இழுத்தடிப்பாங்க.. நமக்கு மனக்கஷ்டம்தான் மீறும்.  கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். இல்லே.. இவன் பண்ணின குற்றத்துக்கு இவனுக்குக் கொலை தண்டனை உடனே வாங்கித் தரதை விட அவன் சுயமா அனுபவிச்சு சாகணும்…. அதுவும் என் கையால நான் சுயமா அவனைத் தண்டிக்கணும்.. அப்பதான் என்னோட அம்மாவும் அப்பாவும் அவங்களோட  என்னோட பாட்டியோட ஆத்மாவும் நிம்மதியாகும்னு தோணிச்சு.”

     

    கோம்டி அவனை வருத்தத்துடன் பார்த்தாள். அவன் பார்க்காமல் தன் கண்ணில் வந்த நீரையும் துடைத்துக் கொண்டாள்.

     

    “கோம்டி.. நான் அன்னிக்கு வைசாக் டிரெயின் ஏறினதும் சென்னையில் இறங்கினதும் நான் போட்ட திட்டப்படிதான் நடந்தது. என்னை சென்ட்ரல் ஸ்டேஷன்லயே பார்க்க முரளியும் சுந்தரும் வருவாங்கன்னு நான் எதிர்பார்த்து நடந்ததுதான். ஆனா நான் எதிர்பாராதது நடந்தது எதிர்வீட்டுல இருக்கற உங்களை, அதுவும் சாந்தியின் ஃப்ரெண்டான உங்களை வைசாக் ஸ்டேஷன்ல பார்த்ததுதான். முதல்ல கூட வரும் சாதாரண ரயில் பாஸஞ்சர் மாதிரிதானே பழகினோம். நீங்களே எதிரிவீட்டுல குடியிருக்கீங்கன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்தது. ஆனாலும் அதுவும் நம் நன்மைக்கேன்னு விட்டுட்டேன்.. என் கூட பயணம் செஞ்ச ஒரு காரணத்துக்காகவே என் மேல சந்தேகம்கிறது ஒரு துளி கூட வராதுன்னு புரிஞ்சுண்டேன். அத்தோட நான் பண்ணப் போகறது ஒரு மங்களகரமான காரியம். முடிஞ்சவரைக்கும் நம் உணர்ச்சிகளை காமிக்காத மாதிரிதான் இருக்கணும்.. சரி கோம்டி!, உங்களுக்கு என் மேல சந்தேகம் எங்க வந்தது?.. அதைச் சொல்லுங்க.. மீதியையும் நான் சொல்லறேன்..”

     

    “நான் நேத்துக் காலைல போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல திருவேங்கடகிருஷ்ணமூர்த்தியை, அதான் உங்க பள்ளி நண்பர், அவரை எதேச்சையா பார்த்தேன்.. தன் வண்டி ஒண்ணு காணாமப் போனதுக்காக போலீஸ் கம்ப்ளெயின் பண்ண வந்தார்.. அவரான்னு கொஞ்சம் சந்தேகம்தான்.. ஆனா கால் நொண்டி நொண்டிப் போனதால அவராகத்தான் இருக்கும்னு நினைச்சு அவர் வெளியே வந்ததும் அவரோட முழுப்பேரைச் சொல்லிக் கூப்பிட்டேன், அவருக்கு அதுல பயங்கர சந்தோஷம்.  அவர்தான் நீங்க ஹவுரா மெயில்ல அவர் இருந்த எஸ் 1 கோச்சுக்கே வரலைன்னும் வண்டி கிளம்பின கொஞ்ச நேரத்துல தான் தூங்கிட்டதாகவும் விஜயவாடால எழுந்து தன் கையில கொண்டு வந்த டிபனைச் சாப்பிட்டு மறுபடி தூங்கிட்டதாகவும் சொன்னாரு.. அனகாபள்ளி ஸ்டேஷன்ல நீங்க இறங்கிட்டிங்கன்னு நினைச்சேன். அப்பதான் இன்னொண்ணு ஞாபகம் வந்தது..’.

     

    ‘என்னது அது?’ ரவி கேட்டான்.

     

    ‘நீயும் இவரும் என்னை வண்டில வைசாக் ஸ்டேஷன்ல டிராப் பண்ற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் அனகாபள்ளி போகணும் அனகாபள்ளி போகணும்’னு அடிக்கடி சொன்னீங்களே..’ அதுக்கு இப்போதான் விடை கிடைச்சுது. அப்போ வைசாக்லேர்ந்து 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள அனகாபள்ளி ஸ்டேஷன் வெளில நீ கல்யாண்க்காக வெயிட் பண்ணி அவன் இறங்கினவுடனே  அனகாபள்ளிலேர்ந்து  வைசாக் ஏர்போர்ட் வரை அழைச்சிண்டு போகணும். ஏன்னா வைசாக் அனகாபள்ளி நடுவுல ஏர்போர்ட் இருக்கறது இல்லையா.. ரவி ஒருவேளை அனகாபள்ளில காத்திருந்து உங்களை அழைச்சுட்டுப் போயிருக்கணும். இந்த விஷயம் நடந்திருக்கணும்னு ஊகிச்சவுடனே சாந்திக்கு ஃபோன் போட்டு கொஞ்சம் தகவல் கேட்க வெச்சேன். சரியா கிடைச்சுது.. எல்லாம் லிங்க் பண்ணறச்சே நீங்க அனகாபள்ளிலேர்ந்து ரவியோட காருல வைசாக் ஏர்போர்ட் போயி அங்க உடனே இருக்கற ஃப்ளைட் ஏறி சென்னை வந்து உடனடியா கிண்டி வந்து பெரியப்பாவோட துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுட்டு நீங்க மறுபடியும் ஃப்ளைட் பிடிச்சு விஜயவாடா வந்து டாக்ஸி பிடிச்சு ஹவுரா மெயில்ல பிடிச்சு வழக்கப்படி வந்துட்டீங்க.. என்ன ஆச்சரியம்னா இந்த பிளேன் டைம், ட்ரெயின் டைம் எல்லாமே உங்க பிளானுக்கு ஏதுவா வகையா அப்படி அமைஞ்சுது.. அப்படித்தானே?”

     

    “யெஸ்! அனகாபள்ளிக்கு ஹவுரா மெயில் 2.50 க்கு வருது.. ஏற்கனவே அனகாப்பள்ளி ஸ்டேஷன்கிட்டயே ரவி வெயிட் பண்ணினான். அங்கிருந்து பதினைஞ்சு நிமிஷத்துல ஏர்போர்ட் போயாச்சு. ஏற்கனவே போர்டிங்க் பாஸ் செக்கின் பண்ணி போர்டிங்க் பாஸ் பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சதாலே ஸ்ட்றெயிட்டா செக்யூரிடில நுழைஞ்சு சென்னை விமானத்துல ஏறியாச்சு.. ஃப்ளைட் 4.40க்கு சென்னை போகுது.. அஞ்சு மணிக்கு கிண்டில மாமா வீடு.. அதே சமயத்துல சென்னை விஜயவாடா விமானம் 6.15க்கு கிளம்பி 7.15க்கு விஜயவாடா கன்னாவரம் ஏர்போர்ட் வரும். ஹவுரா மெயில் விஜயவாடா வரும் நேரம் சரியா 7.50க்கு வந்து 8 மணிக்கு கிளம்பும். இந்த அஞ்சு மணி நேரத்துல என்னால அனகாபள்ளிலேர்ந்து கிளம்பி சென்னையில வேலையையும் முடிச்சுண்டு திரும்பவும் விஜயவாடா வரமுடியுமான்னு கணக்குப் பார்த்தேன். எங்கம்மாவை மனசுக்குள்ள வேண்டினேன். ஏதோ உத்வேகம்.. செஞ்சுடலாம்னு தோணிச்சு.. ஆனா ரயிலும் விமானமும் சரியா வந்தாலும், ரோடுலதான் பிராப்ளம்.. டிராஃபிக் ஜாஸ்தின்னாலே சரியா எட்டு மணிக்குதான் விஜயவாடா ஸ்டேஷன் நுழைய முடிஞ்சது.. வண்டி நல்ல காலமா ஒண்ணாம் நம்பர் பிளாட்ஃபார்ம்லதான் கிளம்பற நேரத்துலதான் ஏதோ ஒரு கோச்ல ஏறி உங்க கோச்க்கு வந்துட்டேன்.”

     

    அவன் பெருமூச்சு விட்டான். கோம்டி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

     

    “ஆமா.. நீங்க வந்த அவசரமும் என்னோட சாப்பாட்டை காணாததைக் கண்டா மாதிரி கபகபன்னு தின்ன விதானமும் இன்னும் மனசுலேயே ஞாபகமிருக்கு. சரி, எத்தனை மணிக்கு உங்க பெரியப்பாவைப் பாத்தீங்க.. என்ன பேசினீங்க? அவர் எப்படி இருந்தார். உங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சிருப்பாரே.. உங்க ரியாக்ஷன் என்ன?”

     

    “எத்தனை கேள்விங்க.. சரிதான்.. நான் சென்னை ஏர்போர்ட்லயே கையில லக்கேஜ் இல்லாதபடியாலே உடனடியா வெளியே வந்தேன்.. அன்னிக்கு ஃப்ளைட்டே பத்து நிமிஷம் சீக்கிரமா வந்ததாலே 4.40க்கு நான் வெளில வந்தாச்சு. ஒரு டாக்ஸியை உடனடியா பிடிச்சு ரிடர்ன் ஜர்னிக்குமா சேர்த்துப் பேசிட்டேன். அவன் காரை நம்ம வீதி முனைலே நிறுத்திக்கச் சொன்னேன். அஞ்சு மணிக்குள்ளயே கிண்டில வீட்டுக்கு  வந்துட்டேன்.. வீட்ல திடீர்னு வந்த என்னைப் பார்த்துட்டு பயங்கரமா அதிர்ச்சியாகிப் போனார்தான் பெரியப்பா..

     

    கந்தசாமியின் வீடு

     

    பெரியப்பாவின் கண்களில் அதிர்ச்சி.. கல்யாணை எப்படியும் அப்போது எதிர்பார்க்கவில்லை அவர். கல்யாண் தங்கள் வீட்டின் உள் கதவைத் தாள் போட்டுக்கொண்டான்.

     

    “அட கல்யாண்.. நீயாடா.. டிரெயின்ல இல்லே வருவேன்னு சொன்னே.. ஃப்ளைட்ல வந்துட்டியா.. நல்ல வேலை செஞ்சே..’

     

    கல்யாண் எதுவும் பேசாமல் கந்தசாமியின் பீரோவைத் திறந்தான். அவரின் துப்பாக்கியை எடுத்தான். அவர் அருகே வந்தான்.. துப்பாக்கியை அவர் மார்பு அருகே கொண்டு போனான். அவர் பயந்து போனார்.

     

    “கல்யாண்.. வந்ததும் வராதுமா.. என்னடா இது.. என்னை.. என்னை என்னடா பண்ணப்போறே?”

     

    ஒன்றும் பேசாமல் அவர் வலது மார்பில் சுட்டான். உடனடியாக அவர் கீழே விழுந்தார். தரையில் கிடந்தபடியே அதிர்ச்சியோடு மெதுவாகப் பேசினார்..

     

    “கல்யாண்.. அந்த துப்பாக்கியை எங்கிட்டே கொடு.. இதோ பார்.. உனக்கு எதுக்குடா வீண் பழி.. நானே சுட்டுக்கறேன்..”

     

    “இல்லே.. எங்கம்மா அப்பாவைக் கொலை பண்ணியே…  அதுக்காகத்தான் உன்னைச் சுட்டேன்.. எனக்கு அந்த உண்மையைச் சொல்லு.. ஏன் சுட்டே?”

     

    அவர் கையை மார்பருகே பிடித்துக்கொண்டார். அவர் வாயருகே தன் ஃபோனை வைத்து ரிகார்ட் செய்தான்.

     

    “உனக்கு கடைசி சந்தர்ப்பம் தர்றேன்.. அதாவது பாவமன்னிப்பு மாதிரி.. எங்கம்மா அப்பாவை எப்படிக் கொன்னே.. அத மாத்திரம் சொல்லு..”

     

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 23

     

    திவாகர்

     

    “அதுதான் கல்யாண்.. முரளி ஒரு வெகுளிங்கறது எனக்கு முதல்லயே புரிஞ்சு போயிடுச்சு. அதனால அவர் கொலை பண்ணியிருக்க வாய்ப்பும் இல்லை.  சுந்தருக்குக் கொலை செய்ய காரணம் இருந்தாலும் அது அப்படி ஒண்ணும் ஸ்ட்ராங்க் இல்லே.. அதே போல சுமதிக்கும் தன் அப்பாவைக் கொலை செய்யணும்கிற ஐடியாவும் இல்லே.. தன்னை விட்டு தூரம் போனா போதும்னு நினைக்கிறவ.. அப்பறம் கந்தசாமிக்கு உறவுன்னு நீங்க ஒருத்தர்தான்.. ஆனா நீங்களோ சம்பவம் நடந்த அன்னிக்கு ஹவுரா மெயில்ல என்னோட பிரயாணம் பண்ணறிங்கன்னு ஒரு அலிபியை உருவாக்கி இருக்கீங்க.. இப்படி ஒரு அலிபியை நீங்க எதுக்காக உண்டாக்கணும். நீங்க உங்க வாயாலே நடந்ததை சொல்லி நான் கேட்கணும். ஏன் தெரியுமா? நான் ஒருவாரமா பார்த்துண்ட வர்ற என் க்ளையண்ட் கல்யாண், இன்னும் ஒருபடி மேலச் சொல்லச் சொன்னா, என்னைக் கவர்ந்த ஒரு ஜெண்டில்மேன் கல்யாண், இந்தக் கொலையில இன்வால்வ் ஆகியிருக்கார்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும். நான் லா படிக்கலே.. வாதிக்கவும் தெரியாது.. என்னோட ஊகத்தை சாட்சியோடு சொல்ல முடியுமான்னும் எனக்குத் தெரியலே.. ஆனாலும் என்னாலே சொல்லமுடியும்.. கல்யாண் இந்தக் கொலையில மிகப் பெரிய அளவுல இன்வால்வ் ஆகியிருக்கார்.. அதனாலே நீங்களே சொல்லுங்க.. இந்தக் கொலை எப்படிப் பண்ணீங்க கல்யாண்?”

     

    கல்யாண் எழுந்தான். தன் படத்தருகே போய் நின்றான்.. படத்தைத் துடைத்தான்.. அந்த ஃப்ரேமில் உள்ள கல்யாணைக் காட்டினான். “யெஸ்.. இவன் ஒரு குற்றவாளி.. ஆனால் இவன் இந்தக் கொலையைச் செய்யவில்லைங்கிற விஷயத்தை நீங்க நம்பணும்..”

     

    “புரியலே..”

     

    அவன் மறுபடியும் வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

    “கோம்டி! உங்களைக் கல்யாணம் பண்ணப் போறவர் யாராயிருந்தாலும் அவர் மிகப் பெரிய அதிருஷ்டக்காரர்.. ரியல்லி  நீங்க ஒரு மிகப் பெரிய புத்திசாலிதான்.. ஆனா இந்த குற்றவாளிகளின் நல்லகாலம்.. உங்களை மாதிரி புத்திசாலிகள் இந்த மாதிரி டெண்டல் பிராக்டிஸ், இல்லைனா சாஃப்ட்வேர் இஞ்சினீர்’னு போகறதுதான். ஏன்னு கேட்டா நீங்கள்லாம் போலீஸ் டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்சா ஒரு குற்றவாளி வெளில சுத்தமுடியாது. நானும் குற்றவாளிதான்.. குற்றம் செய்யத்தான் வந்தேன்.. ஆனா விதின்னு ஒண்ணு இருக்கு இல்லையா.. அது நல்லவங்க வாழக்கூடாது.. கெட்டவங்க சாகக்கூடாதுன்னு சொல்லிடுத்து போல.. நான் சுட்ட குண்டு அவரைச் சாகடிக்கலே.. ஆனா அவர் சுட்டுகிட்ட குண்டு அவரை சாகடிச்சுடுத்து.. கடைசில எனக்கு வீரன்கிற பட்டம் போய் அவருக்கு கோழைங்கிற பட்டம் கிடைச்சுடுச்சு. அவ்வளவுதான்.”

     

    “கல்யாண்..” என்றவளைத் தடுத்தான் அவன்.

     

    “ரன்னிங்க் ரேஸ்ல கடைசிவரைக்கும் வேகம் வேகமா ஓடி முன்னால ஃபர்ஸ்ட்டா வந்தாலும் வரையப் பட்டிருந்த கோட்டைத் தொடலைன்னா அவன் சேம்பியன் இல்லே. நானும் அப்படித்தான் வேகம் வேகமா ஓடிவந்து கடைசியில கோட்டைத் தொடாமலே திரும்ப வந்துட்டேன்.”

     

    “புரியுது!”

     

    “இந்த கேஸுல நீங்க தெரிஞ்சுகிட்டது கொஞ்சம்தான் கோம்டி.. நீங்க கிட்டத்தட்ட எங்க குடும்பத்தையே அலசியாச்சுன்னு நினைக்கிறீங்க இல்லையா.. அது உண்மைதான்.. ஆனா இந்த ஒரு வாரத்துல நீங்க தெரிஞ்சுண்டதை விட நிறைய இருக்கு. கொஞ்சம் சுருக்கமா சொல்லறேன்.. நல்லகாலம் இங்கே யாருமில்லேன்னு சொன்னீங்க,, அதே போல நான் சொல்லப் போகறது கூட உங்க ஒருத்தருக்கு மட்டும்தான். ரவிக்கு எல்லாமே தெரியும்! இப்போ உங்கள்ட்ட ரிகார்டர்லாம் இல்லேன்னு நினைக்கிறேன்.. இருந்தாலும் வேஸ்ட்..”

     

    “என்ன கல்யாண்.. இந்த ஒரு வாரப் பழக்கத்துல என்னை இவ்வளவுதான் புரிஞ்சிண்டிங்களா.. இல்லே.. நான் ரிகார்ட் பண்றதா இல்லே. நீங்க சொல்லுங்க”

     

    “இல்லே கோம்டி.. ஏன் அப்படிச் சொல்லறேன்னா இது என்னோட சொந்த குடும்ப விஷயம்.. இது யாருக்கும் தெரியக்கூடாதுன்னுதான் நான் நினைக்கிறேன்.. சுமதியை நீங்க பார்த்தீங்க இல்லையா.. இதுவரைக்கும் நீங்க யாருமே என்னை ‘கல்யாண்! நீ எப்போ என்னிக்கு சுமதியை முதன் முதலா பார்த்தாய்’ன்னு கேட்கலை.. கேட்டால் நான் என்ன அப்போ பதில் சொல்லுவேன்னு தெரியாது.. ஆனா இப்போ சொல்லறேன்.. எல்லோருக்கும் நடந்தமாதிரிதான் நான் சொல்றதும் நாலு மாசம் முன்னாடிலேர்ந்து நடந்ததைத்தான் முதல்ல சொல்றேன்.. கேட்டுக்குங்க..”

     

    கொஞ்சம் நிதானித்தான் கல்யாண்.. பின்னர் அதே நிதானம் அவன் குரலில் தெரிய பேசினான்.

     

    “கோம்டி.. நான் வைசாக்’ல இருக்கறச்சே நாலு மாசம் முன்னாடி எனக்கு புதுசா ஒரு பொண்ணு கால் பண்ணினா.. ‘என் பேரு சுமதி.. உங்க வாட்ஸாப்’ல சில தகவல் அனுப்பறேன்.. அதைப் படிச்சுட்டு நீங்க எங்கிட்டே பேசணும்னு நினைச்சா பேசுங்க.. இல்லைன்னா கூட வருத்தப்படமாட்டேன்னு அந்தப் பொண்ணு சொன்னா’. சரின்னு சொல்லி அந்தக் கால் வெச்சுட்டு மெஸேஜ் மாத்திரம் பார்த்தேன்.. இருங்க.. நீங்களும் அந்த மெசேஜ்லாம் பாருங்க..”

     

    அவன் தன் மொபைலை எடுத்து சுமதி அனுப்பிய வாட்ஸாப் மெஸ்ஸேஜ் எல்லாவற்றையும் காண்பித்தான்.

     

    அவள் தமிழில்தான் அனுப்பியிருந்தாள்.. கொஞ்சம் சத்தமாகப் படித்தாள் கோம்டி.

     

    “அண்ணா, என் பேர் சுமதி.. என் வாழ்க்கை கவலைகளைப் பற்றி எதுவும் இங்கே எழுதப் போறதில்லே.. ஆனா உங்களுக்கு உங்க பெரியப்பா பத்தி நிஜம் தெரியணும்.. அவர் ஒரு ராட்சஸ காமாந்தகர். அவரால ஒரு சின்னப் பொண்ணு, 13 வயசுக் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கு. எனக்கு உங்க உதவி வேணும்.. என்னாலே தனியா போராட முடியலே.. நீங்க இங்க வந்தா பல உண்மைகளைச் சொல்லறேன்.. என் விலாசம்.”

     

    கோம்டி படித்தாள். அந்த செய்தியின் மேல் உள்ள தேதி டைம் பார்த்தால் நான்கு மாதம் முந்தையதுதான். அந்த ஃபோன் நம்பரும் சுமதிதான் என்று அவளுக்குப் புரிந்தது.

     

    “கல்யாண்.. இந்த தேதி எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அன்னிக்குதான் நான் சுமதியைப் போய் அவங்க வீட்டுல பார்த்தேன்.. அன்னிக்கு முந்தைய தினம்தான் கந்தசாமி இந்த கிலினிக்குல கலாட்டா பண்ணி சுமதியைப் பிடிச்சு இழுத்துண்டு போன சங்கதி நடந்த தினம்..”

     

    கல்யாண் தலையசைத்தான்.

     

    “ஆமாம். ரவிக்கும் அதைக் காண்பிச்சேன். உடனே ரவியும் தானும் என்னோட புறப்பட்டு வரேன்னு சொன்னான். செய்தி வந்த அடுத்த நாள் நாங்க சென்னை வந்தோம். ரவியை அவன் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டு நான் இங்கே வந்தேன். பெரியப்பாவைப் பார்த்தேன். அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். என்ன கல்யாண் திடீரென வந்திருக்கே’ன்னாரு.. ஆஃபீஸ் வேலையா வந்தேன்னேன். அவர்கிட்டே ரொம்ப பேசலே. ஏன்னா.. அவரைப் பத்தி புகார் வந்திருக்கே தவிர இந்தப் பொண்ணு எதுக்கு என்னை அவசரமா கூப்பிடுதுன்னு தெரிஞ்சுக்கணுங்கிறதுதான் முக்கியம்னு பட்டுது. ஆஃபீஸ் வேலையா போகறதா சொல்லிட்டு நான் ரவிக்குச் சொல்லி, நானும் அவனும் கிளம்பி சுமதி வீட்டுக்குப் போனா எனக்கு எல்லா விவரமும் அதான் உங்களுக்குச் சொன்ன அத்தனை விவரமும் கிடைச்சுது. கோபம்.. என் மேலேயே எனக்குக் கோபம்.. அதுவும் ஒரு சின்னப் பொண்ணு.. பதிமூணு வயசுப் பொண்ணுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை.. அதைவிடக் கொடுமையா அவளைப் படம் பிடிச்சு வெச்சது.. சுமதி என்னோட தங்கச்சிங்கற விவரம் தெரிஞ்சதும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே.

     

    கல்யாண் சுமதியின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்குப் போகிறான். கல்யாண் அதிர்ச்சிக் குரலில் கத்துகிறான்.

     

    “சுமதி.. சுமதி.. திருச்சில இருக்கறச்சயே இதையெல்லாம் எனக்கு ஏன் சொல்லலே? பெரியம்மாவுக்கு பெரியப்பா பெரிய தொல்லையா இருந்தாலும் நானும் அப்படிப்பட்டவன்னு ஒரு எண்ணம் ஏன் வரணும்.. ஏன் எங்கிட்டே சொல்லலே?”

     

    சுமதியும் பெரியம்மாவும் அழுகிறார்கள். அந்த சின்னப் பெண்ணை அருகே கூப்பிடுகிறான். அது பயந்து வர மறுத்தது.. கல்யாணுக்குக் கண்ணில் நீர் வந்தது. துடைத்துக் கொண்டே பேசினான்.

     

    “பெரியம்மா.. நான் உங்களை அப்படிக் கூப்பிடலாமா?”

     

    “ஐயய்யோ.. ஏன்பா அப்படிச் சொல்லறே..”

     

    “இல்ல பெரியம்மா.. எனக்கும் பொறந்ததிலேர்ந்தே இப்படி அம்மான்னு கூப்பிடணும்னுல்லாம் ஆசை.. எனக்குப் பெரியம்மானு ஒருத்தி இருந்தும் எனக்குத் தெரியாமப் போயிடுச்சே..”

     

    “இல்லப்பா.. நீ சின்ன பையன்.. உன்னாலே என்ன பண்ணமுடியும்? சுமதிக்கு ஒரு நல்ல அண்ணா கிடைச்சாச்சுன்னு இப்பதாம்பா நிம்மதி.. அது போதும்பா.. எனக்கு வயசாயிடுச்சு.. இந்த வயசுலயாவது நிம்மதி கொடுக்க வந்திருக்கியேன்னு ஒரு நிம்மதி.. உங்க அம்மா குடும்பம் எனக்குத் தெரிஞ்சவங்கதாம்பா.. ரொம்ப நல்ல தங்கமான பொம்பிளை அவங்க..” என்று சொல்ல ஆரம்பித்தவள் திடீரென அழுதாள். விக்கி விக்கி அழுது அழுது கொஞ்சம் மயக்க நிலைக்கு வந்துவிட்டாள். அவளை ஆசுவாசப்படுத்தினான் கல்யாண்.

     

    “சுமதி.. நீ கவலைப்படாதே.. இதை எப்படி டீல் பண்றதுன்னு யோசிக்கணும்.. எனக்கு மூளையே கலங்கிடும் போல இருக்கு.. சரி, இந்த விஜயாவுக்கு எவ்வளவு ஆபரேஷனுக்குச் செலவாகும்னு நினைக்கிறே..”

     

    “அண்ணா.. நீங்க எதுவும் அங்கயிருந்து கொண்டு வர வேணாம் அண்ணா.. அந்தாளோட ஒவ்வொரு காசும் பாவப்பட்ட பணம்..”

     

    “ஆனா எங்க.. சாரி, நம்ம தாத்தா பாட்டி சொத்துதானம்மா நிறைய வெச்சிருக்காரு.. அவருக்குன்னு தனியா ஒரு அக்கௌண்ட் வெச்சிருக்காருன்னு அவரே எனக்கு சொல்லியிருக்காரு.. அவரோட பணமெல்லாம் அந்த அக்கௌண்ட்ல போட்டுருக்கேண்டா.. தாத்தா சொத்துப் பணமெல்லாம் வழக்கமா எஸ் பி ஐ ல பழைய அக்கௌண்ட்லதான் இருக்குன்னார். போகட்டும். ஆனா நான் கொடுக்கப் போகிற பணம் நானும் ரவியுமா சுயமா  சேர்ந்து கஷ்டப்பட்டு சம்பாதிச்சது.. எவ்வளோ செலவாகும்னு நீ நினைக்கிறே.?”.

     

    சுமதி தயங்கினாள். “ஒரு இருபத்தஞ்சு லட்சம் மினிமம் ஆகும்னாங்கண்ணா. ஏன்னா முக்கால்வாசி மெடிசின் அமெரிக்காலேர்ந்து இம்போர்ட் பண்ணினதாம்.”

     

    “சரி, எனக்கு ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுப்பியா…”

     

    “ஐய்யோ.. எடுத்துக்குங்க அண்ணா.. நாலு மாசமானாலும் பரவாயில்லே..”

     

    “சரி, அப்ப ஒண்ணு பண்ணலாம்.. விசாகப்பட்டினத்துல நானும் ரவியும் நடத்தற ஷிப்பிங்க் பிஸினஸ்ல இருந்து ஏற்பாடு பண்றோம். கலக்ஷனுக்குதான் ரெண்டு மாசம் ஆகும். நான் அர்ரேஞ்ச் பண்ணிடறேன்.. நீ தைரியமா இரு.”

     

    ஆமாங்க.. எவ்வளவு முடியுமோ அதை கலெக்ட் பண்ணமுடியும்! ரவியும் கூடவே சொன்னான்.

     

    “அண்ணா.. எதுக்குண்ணா பிஸினெஸ் பணத்தை செலவு பண்ணிட்டு..”

     

    “இல்லம்மா.. அங்க நான் பண்றது கப்பலுக்கு சாண்ட் ப்ளாஸ்டிங்க் காண்ட்ராக்ட்.. ரெண்டு கப்பல் வேலை பாக்கி இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து நான் இங்க வந்து கூட கண்டின்யூ பண்ணிக்கலாம். அத்தோட என் குடும்பம்னு நீங்க வந்தப்போ உங்களையும் நான் பாத்துக்கணும் இல்லையா.. ரெண்டு மாசம் டைம் கொடும்மா.. அதுவரைக்கும் மருந்து மாத்திரை எல்லாம் சரியா கொடு..”

     

    தன் கையிலிருந்த பேங்க் டெபிட் கார்ட் ஒன்றைத் தருகிறான்..

     

    “இந்த கார்டை இனிமே யூஸ் பண்ணிக்கோ.. மருந்து மாத்திரை மட்டுமில்லே.. இந்த வீட்டுச் செலவுக்குக் கூட இதுதான். அம்மாவையும் பார்த்துக்கோ.. நான் இனிமே வாரா வாரம் வருவேன். நான் இல்லேனா ரவியை அப்பப்ப அனுப்பறேன். இவன் என்னோட க்லோஸ் ஃப்ரெண்ட்மா..  நாங்க வரதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணிட்டுதான் வருவோம்.. நீ எதுக்கும் கவலைப்படாதே.”

     

    பெரியம்மா மிகவும் மெதுவான குரலில் பேசுகிறாள்.. “அடிக்கடி வாப்பா.. உங்கிட்டே நிறைய விஷயம் பேசணும்..”

     

    கோமதியின் கிலினிக், தற்கால நிலைக்கு வருகிறான் கல்யாண்.

     

    “கோம்டி.. எனக்கு முரளியையோ சுந்தரையோ கவனிக்க நேரமே இல்லே.. வாரம் ஒரு முறை நானோ அல்லது ரவியோ மார்னிங்க் ஃப்ளைட் வந்துட்டு சுமதியையும் அம்மாவையும் பார்த்துட்டு ராத்திரி ஃப்ளைட்டுக்கு வைசாக் திரும்பிடுவோம். அப்படி வந்து பார்த்துட்டு போன எனக்கு ஒரு நாள் இடியை விட கொடுமையான நியூஸ் கொடுத்தாங்க பெரியம்மா. அப்போதான் எங்கம்மா விஷயம் பேசறச்சே எதுக்காக இவங்க மயங்கி விழுந்தாங்கன்னும் தெரிஞ்சது. பெரியப்பாவோட இறப்பு சம்பவம் நடப்பதற்கு பத்து நாள் முன்னாடிதான் நான் சுமதி வீட்டுக்கு வந்தேன். சுமதி ஃபோன்லயே சொல்லியிருந்தா. விஜயாவை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போகறதாகவும் மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடறதாகவும் சொல்லிட்டுதான் போனா. நான் காலை விமானத்துக்கே வந்து பெரியம்மாவோட டிபன் சாப்பிட்டுட்டிருந்தேன்.”

     

    சுமதி வீட்டுக்கு அவன் நினைவு திரும்புகிறது. வீட்டில் கல்யாணுக்கு பெரியம்மா டிபன் வைக்கிறாள்.

     

    “பெரியம்மா.. நீங்களும் சாப்பிடலாமே.. என்னோடு சாப்பிடுங்கம்மா.. ஆமா.. அம்மான்னே உங்களைக் கூப்பிடறேனே.. அம்மா’ன்னு கூப்பிடட்டா?”

     

    அம்மா மகிழ்ச்சியோடு தலையாட்டினாள். “இதைவிட எனக்கு என்ன பேறு வேணும்பா.. ஒண்ணு சொல்லட்டா.. உங்கம்மா இருக்கற வரைக்கும் நானும் அவளும் ரொம்ப நெருங்கிய தோழிங்கப்பா.. என்னோட உயிர்த் தோழின்னு கூட சொல்லுவேன். ஆனா அவ தூக்குல அதுவும் உங்கப்பாவோட சேர்ந்து தொங்குவான்னு எதிர்பார்க்கலே கல்யாண்.”

     

    “ஆமாம்மா.. நான் நினைச்சு அழுது ஓய்ஞ்சு போயாச்சு. விடுங்க.. என்னைப் பெத்த அம்மாவின் உயிர்த்தோழியே எனக்கு அம்மாவா கிடைச்சுருக்கான்னா அது நான் செஞ்ச பாக்கியம்தான். அம்மா.. எங்கம்மா எப்படி இருப்பாங்க.. எங்கிட்ட போட்டோ இருக்கு. ஆனா நேருல எப்படி இருப்பாங்க?”

     

    “ரொம்ப அழகுப்பா.. அந்த அழகுதான் ஆபத்தாச்சு. சரி விடுப்பா.. அந்தக் கதையெல்லாம் எதுக்கு இப்போ. காலம் ஓடிப்போச்சு, அத்தோட அவ காலமும் ஓடிப்போச்சு.”

     

    “இல்லம்மா.. எதையோ சொல்ல வந்து எதையோ மறைக்கறீங்க..”

     

    “என்னத்தை சொல்லறதுப்பா.. உங்கம்மாவோட தோழியா நான் உங்க வீட்டுக்குப் போகறச்சேதான் நான் இந்த மகாபாவி கண்ணுல பட்டேன். என் மேலேயும் தப்பு இருக்குப்பா.. எதுக்கு உண்மையை மறைக்கணும்.. தானா வந்து வலைல விழுந்த மீனை அவன் விடுவானா.. உங்கம்மாவோட மூத்த மச்சினர்ங்கிற முறைல நானும் கொஞ்சம் கந்தசாமி கூட நெருங்கிப் பழகினேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னான். தோழியோடயே இந்த வீட்டுல நிரந்தரமா இருக்கலாம்ன்னான்..’

     

    அழுதாள் அந்தம்மாள். கல்யாண் ஆறுதலாகப் பார்த்தான். அவளே கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

     

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி – 22

    திவாகர்

     

    மறுபடியும் கந்தசாமியின் வீடு.

     

    “இதுதான் சார் நடந்தது. இதுதான் உண்மை.. நான் அப்படித்தான் பேசினேன்.. ஆனா துப்பாக்கில சுடப்பட்டு இறந்தார்னவுடனே எனக்கு ஒண்ணும் தோணலே.. ஒருபக்கம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்ததுன்னு நினைச்சு சந்தோஷப்படறதா இல்லே இப்படி எல்லாம் நம்ம வாழ்க்கைல நடந்ததுன்னு வருத்தப்படறதான்னு தெரியலே. ஆனா எங்கம்மா மேல சத்தியமா இதுதான் நடந்தது.”

     

    இன்ஸ்பெக்டர் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

     

    “சரி, இப்போ அந்த மொபைலை நீங்க வெச்சிருக்கீங்களா?”

     

    “ஸார்.. அது ஆசிரமத்துல வெச்சிருக்கேன். என்னோட அக்கவுண்ட் டேபிள் ஒண்ணு இருக்கு.. அங்கதான் வெச்சேன்.”

     

    சட்டென கோம்டி தன் கைப்பையிலிருந்து ஒரு மொபைல் ஃபோனை மேலே வைத்தாள். இன்ஸ்பெக்டர் அதை எடுத்துக் கொண்டார். சுந்தர் கத்தினான்.

     

    “இதுதான்,, ஓ! இது எப்படி உங்க கைக்கு?.. ஆசிரமத்தை சோதனை போட்டீங்களா?”

     

    “அது இருக்கட்டும். இப்போ இந்த கேஸை எப்படி முடிக்கலாம் கோம்டி?”

     

    “ஸார்.. சம்பவம் நடந்த நேரம் சரியா நாலேமுக்காலேர்ந்து அஞ்சு மணிக்குள்ளே.. சுந்தர் ஃபோனை வெச்சவுடனே கந்தசாமி கவலைக்குள்ளாயிருக்கணும்தான். அடுத்த நாள் பொழுதுவிடிஞ்சா கல்யாண் வந்துடுவார்.. இந்த முரளி வெறி பிடிச்சு எல்லா விஷயத்தையும் அவருக்கு சொல்லிடலாம். கல்யாணுக்கு விஷயம் தெரிஞ்சா ரொம்ப அசிங்கமாகும்.. அதுவும் இவங்க எல்லாரும் சேர்ந்து போலீஸ்னு போனா அதை விட அவமானம் இருக்கவே இருக்காதுன்னு கந்தசாமி நினைச்சிருக்கலாம்தான்.”

     

    கோம்டியை இடை மறித்தார் இன்ஸ்பெக்டர் மோகன்.

     

    “நினைச்சிருக்கலாம் என்ன? அதுதான்னு நான் தீர்மானமா சொல்லமுடியும். கல்யாண், இந்த மூணு பேர் விஷயத்திலேயும் சம்பந்தப்படலேங்கிற விஷயம் ஒண்ணு. கல்யாண் தன்னோட பெரியப்பாவை ஏதோ மிகப் பெரிய இடத்துல மரியாதையா வெச்சதெல்லாம் ஒரேயடியா இழந்துடுவோமேன்ற பயம். இன்னொண்ணு. இதோ நீங்க கொடுத்த சுமதிக்கான நாமினேஷன் டாக்குமெண்ட்.. பேங்க்குக்கும் அதை ஏற்கனவே கொடுத்திருக்கார்னும் சொல்லறீங்க.. அப்போ அவரோட தற்கொலைக்கான முடிவை அப்பவே எடுத்திட்டாருன்னுதான் சொல்ல முடியும். அந்தக் கடைசி நேரத்துல சுந்தர் அவர்கிட்டே பயமுறுத்தி தற்கொலை வேண்டுமானாலும் பண்ணிக்கோ.. கல்யாண்கிட்ட எல்லா விஷயமும் சொல்லிடப் போறேன்னு சொன்னவுடனே அந்த தற்கொலைதான் ஒரே வழின்னு அவருக்குத் தெரிஞ்சுடுச்சு.. அவர் தற்கொலைதான் பண்ணியிருக்கவேணும்..”

     

    “ஸார்.. அந்த முடிவை உங்ககிட்டே விடறேன் சார்.. நான் விசாரிக்கறவரைக்கும் விசாரிச்சாச்சு.. எனக்கு மிஸ்டர் கல்யாண் கொடுத்த வேலையை நான் பண்ணியாச்சு. போலீஸ் என்ன பண்ணனுமோ அதை தாராளமா பண்ணலாம்.”

     

    “இதுல போலீஸ் என்ன பண்ணமுடியும்? எங்ககிட்ட இருக்கற டாக்குமெண்ட்ஸ், பிரேதப் பரிசோதனை ரிபோர்ட், இப்போ ரிகார்ட் பண்ணியிருக்கற ஒப்புதல் எல்லாமே ஒரே முடிவுக்குதானே போகறது.. ஒருமுறை துப்பாக்கியை சாய்வா வெச்சு மார்புல சுட்டுருக்கார்.. மார்புல அதுவும் வலது மார்புல பட்டும் படாம ஓரமா சுட்டதாலே கீழே விழுந்திருக்கார். மயக்கம் கூட வந்திருக்கணும்.. கொஞ்ச நேரத்துல நினைவு வந்து அது சரியா சுடலேன்னு தெரிஞ்சு அடுத்த அரை மணிக்குள்ளே தன் நெத்திப் பொட்டுல சுட்டுண்டு இருக்கார். அவ்வளவுதான்.. ஏன் முதல்லயே நெத்திப் பொட்டுல சுட்டுக்கலேன்னா என்ன பதில் சொல்லமுடியும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பிரகாரம் இது ரெண்டாவது தடவையில அதுவும் அரை மணி நேரம் கேப் வெச்சு சுட்டுருக்கார்.. அவர் என்ன ப்ரொஃபெஷனலா சுடர்றவரா என்ன? முதல்தடவை சுடறவங்க நிறைய தடவை இப்படித்தான் தப்பும் ஒப்புமா சுட்டுப்பாங்க.. எங்கிட்டே நிறைய ரிகார்ட்ஸ் இருக்கு. இப்படி முதல் தடவை தப்பா சுட்டுண்டு தப்பிச்சவங்க ரிகார்ட்ஸ் கூட நிறைய இருக்கு.”

     

    கோம்டி குறுக்கிட்டாள்

    “சார்! அப்போ அந்த பீரோ ஹேண்டில்ல அப்பறம் தரையிலே தெரிந்த ரத்தக்கறை இது எப்படி வந்தது?”

     

    “அதுல என்னம்மா.. ஒரு பொருளை பீரோவிலேர்ந்து எடுத்தவுடனே நம்ம கைன்னு இல்லே யாரோட கையுமே பீரோவை மூடத்தான் செய்யும். நம்மளை அப்படியே நம்மைப் பழக்கிண்டோம். கந்தசாமி கூட துப்பாக்கியை பீரோவிலேர்ந்து துப்பாக்கி எடுத்தவர் தன்னை முதல்ல மார்புல சுட்டுண்ட உடன் ரத்தம் குபுகுபுன்னு வந்திருக்கலாம். ரத்தம் பட்ட கையோட பீரோ ஹாண்டிலைப் பிடிச்சு  மூடியிருக்கணூம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், டாக்டர் ரிப்போர்ட் ரெண்டும் கூட இடது கைரேகை பீரோ ஹேண்டில்ல பதிஞ்சிருக்குன்னு சொல்லுது. வலது கையில துப்பாக்கி இருந்துதுல அந்தக் கையில ரத்தக் கறை இல்லே. அவரு சுட்ட உடனே பீரோவை மூடினாலும் அதுக்கும் மேலே தாங்கமுடியாம தள்ளாடி கொஞ்ச ஸ்டெப் நடந்து விழுந்து மயக்கமாயிருக்கணும். அப்படி நடக்கறச்சே ரத்தக் கறை தரைல பறதும் சகஜம். ரத்தக்கறை கூட ஸ்டெப் ஸ்டெப்பா அஞ்சாறு இடத்துல விழுந்திருக்கு.  முதல் குண்டு மார்புல தெளிவா பாயலேங்கிறது அவருக்கு மயக்கம் தெளிஞ்சு புரிஞ்சிருக்கு. அதனாலே இந்த முறை நெத்தி பொட்டுல சரியா வெச்சு சுட்டுண்டிருக்கார். அது பட்டவுடனே மரணம் சம்பவிச்சிருக்கு. விரல்ல துப்பாக்கி டிரிக்கர் மாட்டினது கூட அப்படியே பதிஞ்சிருக்கு. இதை பி.எம் ரிப்போர்ட் கூட உறுதி செய்யுதும்மா. ஸோ.. இது தற்கொலைதான்னு எனக்கு ரிப்போர்ட் வந்த அன்னிக்கே கல்யாண்கிட்டே சொன்னேன். சில தற்கொலை கேசுங்க இந்த மாதிரி ஏற்கனவே ரிகார்ட் ஆகியிருக்கு. அதனால எனக்கு ஒண்ணும் பெர்சா தோணலே.”

     

    இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு சுந்தரைப் பார்த்தார்.

     

    மிஸ்டர் சுந்தர்.. உங்க ஃபைனல் ஸ்டேட்மென்ட் இதுல ரிகார்ட் ஆனாலும் உங்க பேச்சு அவரது தற்கொலைக்குத் தூண்டுதலா இருக்கு. இதுவும் பெரிய குற்றம்தான். ஆனா நீங்க கல்யாண்க்காக வெயிட் பண்ணறீங்க.. அவர் வந்தவுடனே அவரும் நீங்களும் சேர்ந்து போலீஸ்கிட்ட போகப் போறிங்கன்னு நீங்க சொன்னது எப்படியும் கந்தசாமியைப் போலீசுல ஒப்படைக்கவேண்டும்னுதான் உங்க எண்ணம் போனதாலே உங்களை நான் இப்போ விடறேன். ஆனா இந்த கேஸ்ல அவரோட மரண சம்பவத்துல இன்னும் கண்ணால நேரா பார்த்துச் சொல்லறவங்க யாரும் இல்லேங்கிறதும் கந்தசாமி தற்கொலை முடிவுக்கு ஒரு சாட்சியா இருக்கு… மிஸ் கோம.. சாரி, கோம்டி நீங்க இதுதான் ஃபைனல்னு சொல்ல வர்ரீங்களா?”

     

    “ஸார்.. முடிவு எப்பவுமே உங்க கையிலதான்.. நான் பிராபரா விசாரிச்சுக் கொடுக்கதான் முடியும்.. ஐ திங்க்.. நான் சரியாதான் விசாரிச்சுருக்கேன்னு நினைக்கிறேன்…”

     

    இன்ஸ்பெக்டர் புன்னகைத்தார்.

     

    “அதுல என்னம்மா சந்தேகம். கல்யாண் உங்களை இந்தக் கேஸுல இன்வெஸ்டிகேஷன் பண்ணச் சொன்ன முடிவு ரொம்ப சரியான முடிவு. இத்தனை கோர்வையா எங்க டிபார்ட்மெண்ட்ல யாரும் பண்ணியிருக்க மாட்டாங்க. ஹேட்ஸ் ஆஃப் டு யூ. கோம்டி!”

     

    “தாங்க்யூ சார்.  மிஸ்டர் கல்யாண்.. என் வேலை முடிஞ்சுது.. எனக்குக் கொடுக்கவேண்டிய ஃபீஸ் ரெடியா வையுங்க.. இல்லேன்னாலும் எதிர்வீட்லதானே என் க்லினிக்.. அங்க வந்து கொடுத்துடுங்க. நான் கிளம்பறேன்.. சுமதி.. ஆல் தி பெஸ்ட்.. உன் வாழ்க்கையிலே இனிமே துன்பம்ங்க்கிற வார்த்தையே வரக் கூடாது.. ரவி உன்னை ஜாக்கிரதையா அப்படி பார்த்துப்பான்.

     

    ரவி நெளிந்தான். “இதெல்லாம் வெளியெ சொல்லத்தான் வேணுமா கோம்டி!.. எனக்கும் சுமதின்னா ரொம்பப் பிடிக்கும்னு ஏற்கனவே அவளோட அண்ணன் கல்யாணுக்கும் தெரியும்.. ஸோ டோண்ட் வொர்ரி.

     

    கோம்டி முரளியைப் பார்த்தாள்.  “மிஸ்டர் முரளி உங்க வாழ்க்கையில பிரியா கூட இனிமே சந்தோஷத்தை மட்டுமே பாருங்க.. கடந்த காலத்தையெல்லாம் பார்க்காதீங்க.. மிஸ்டர் சுந்தர்.. உங்களுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலே.. அனாதை ஆசிரமத்தை நல்லபடியா கவனிக்கறீங்க..  உங்களுக்கு இரக்ககுணம் இருக்குன்னு தெரியுது.. ஆனா நீங்க அதைப் ப்ரூவ் பண்ணிக் காமிக்கணும்னா விஜயாவை உங்க சொந்த தங்கச்சியா வளர்த்து நல்லா படிக்க வெச்சு அவளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குங்க.. அப்போதான் என்னால் உங்களைப் பாராட்டமுடியும். இன்ஸ்பெக்டர்.. நீங்க என்னை நம்பி என்னை சுதந்திரமா விட்டு இந்த கேஸு எங்கிட்டே கொடுத்ததுக்கு தேங்க்ஸ். நான் வரட்டுமா?”

     

    இன்ஸ்பெக்டர் சிரிக்கிறார். “இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வந்துடுச்சு. ஆனா இது இங்கே ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாடமா எடுத்துண்டு வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கிறது எப்படின்னு கத்துக்குங்க.

     

    இரவு நேரம், கிலினிக்கில் உட்கார்ந்துகொண்டு கோம்டி ஃபோனில் சாந்தியிடம் பேசுகிறாள்.

     

    “சாந்தி இந்தக் கேஸைப் பத்தி இனிமே எதுவும் கேட்காதே.. எல்லாம்  முடிஞ்சுடுத்துதான்.. ஆனா ஒரு மனுஷன் என்னவெல்லாம் குரூரமா செய்யமுடியும்னு கந்தசாமி ப்ரூவ் பண்ணியிருக்கான். என்ன.. நம்ம சுமதிக்குதான் ஒரு நல்ல வாழ்வு வந்துதுன்னு சொல்லலாம்.”

     

    “யூ எஸ் டிக்கெட் புக் பண்ணனும்டி.. அங்க கிலினிக் இடம்லாம் பார்த்தாச்சு.. நாம ஓகேன்னா அவங்களும் அங்கே ஓகேதான்..”

     

    “சரிடி,, நான் இன்னும் அம்மாகிட்டே பேசலேடி.. ராத்திரியே பேசறேன்..”

     

    “இருந்தாலும் இந்த ‘ஆபரேஷன் கந்தசாமி’ல ஒரு விஷயத்துல மாத்திரம் நாம ரெண்டு பேருமே ஃபெயில்தாண்டி..”

     

    “என்னடி சொல்லறே.. ஆபரேஷன் கந்தசாமி’ல நாம எங்கே ஃபெயிலானோம்?”..

     

    “நீ உன் இன்வெஸ்டிகேஷன் கேஸுக்காக ஒரு க்ளையண்ட் பிடிச்ச.. ஆனா உன் க்லினிக்ல அந்த பல்லழகனோட எத்துப் பல்லை மட்டும் நம்மளாலே ஒண்ணும் தொடமுடியலையேடி..”

     

    அவள் சிரிக்கிறாள். “ஏண்டி.. நாம ரெண்டு பேருமே அவன் தெத்துப்பல்லைத்தான் நம்ம காலேஜ்ல,  க்ளாஸ்லயே தொட்டுப் பார்த்தோமேடி,, மறந்துட்டியா?”

     

    கதவு தட்டப்படும் சப்தம் கேட்கிறது. மெதுவான குரலில் கோம்டி பேசுகிறாள். “ஏய்.. எப்ப நீ அவன் பேரை எடுத்தியோ அவன் வர்றான் போல.. பணம் கொண்டு வர்றான் போல..”

     

    சாந்தி உடனே ஃபோனில் கத்துகிறாள்.

    “எதுக்கும் அவனையே அந்த விஷயமும் கேட்டுடுடி”

     

    “கேட்கிறேன்.. கேட்கிறேன்.. அவ்வளோ சீக்கிரம் அவனை விட்டுடுவேனா.. கேட்டுட்டு உனக்கும் நாளைக்குச் சொல்லறேன்.”.

     

    அவள் எதிர்ப்பார்த்தபடியே கல்யாண் வருகிறான். கூடவே ரவி.. அவள் எதிரே உட்காருகிறார்கள். அவன் கையில் அவள் எதிர்ப்பார்த்த செக் இருக்கிறது.. அவளிடம் கொடுக்கவும் செய்கிறான்.

     

    கோம்டி அந்தச் செக்கைக் கையில் வைத்தபடி அவனைப் பார்க்கிறாள். அவள் அவனையே பார்க்கும் பார்வை அவனை ஒரு மாதிரி நெளிய வைத்தது.

     

    “எதுக்குங்க என்னையே பாக்கறீங்க?”

     

    கையில் உள்ள செக்கைக் காண்பித்துப் பேசுகிறாள்.

     

    “இல்லே.. இந்த செக்கைப் பார்த்தேன்,, அதான் உங்களைப் பார்த்தேன்..”

     

    “ஏங்க.. அமௌண்ட் குறைச்சலா இருக்கா?”

     

    “சேச்சே.. நான் என்னிக்குமே காசுக்காக இந்த உத்யோகம் பண்றதில்லே.. எனக்கு இன்வெஸ்டிகேடிவ் ஒரு ரொம்ப ரொம்ப விருப்பமான வேலை.. ஹாபி.. எனக்கு மெயின் ப்ரொஃபெஷன் இந்த பல் கிலினிக்.. பல்லைப் பிடுங்கிப் பணத்தைப் பிடுங்குற வேலைதான். அதுக்குதான் என்னைப் படிக்க வெச்சாங்க.. அவங்க ஆசைப்படி நல்லா படிச்சேன். காலேஜ்லயே ஃபர்ஸ்ட்டா வந்தேன்”.

     

    மறுபடியும் அவனையே உற்றுப் பார்த்தாள். அவன் தலை தாழ்ந்து கொண்டான்,

     

    “கல்யாண்.. நீங்க இங்கே வர்றப்போ இந்தக் கதவை உள்பக்கம் சாத்தினீங்களா.. ரவி! இல்லேன்னா கொஞ்சம் சாத்திட்டு வாயேன்.”

     

    “சாத்தினேங்க..” கல்யாண் சொன்னான்.

     

    “அப்போ இங்கே நாம மூவரையும் தவிர யாருமில்லன்னு நம்பறீங்களா?”

     

    “ஏன் கேக்கறீங்க?”

     

    “எங்கம்மா அப்பாவும் கூட உள் ரூம்ல அதாவது உள்ளே இருக்கற பெட்ரூம்லதான் டிவி சீரியல் பாத்துண்டுருக்காங்க.. ரெண்டு பேருமே கொஞ்சம் சௌண்ட் பார்ட்டிங்க.. காது கேக்காது அதாவது அவங்க ஒத்தருக்கு ஒத்தர் ரகசியம் பேசணும்னா கூட பக்கத்து வீட்டுக்கும் கேக்கறா மாதிரி கொஞ்சம் சப்தம் போட்டுதான் பேசுவாங்க.”

     

    “எனக்கு எதுக்குங்க இதெல்லாம் சொல்லறீங்க..?”

     

    “ஸோ நாம் இங்கே இருக்கறதோ.. பேசறதோ எதுவும் அவங்களுக்குக் கேட்காது.. அதனால”

     

    “அதனால?”

     

    “சொல்லுங்க..”

     

    “எதைச் சொல்லணும்?”

     

    “கல்யாண்..” என்றபடியே அவனை மறுபடியும் உற்றுப் பார்த்தாள்

     

    “என்னங்க அப்படிப் பாக்கறிங்க? .. எதைச் சொல்லணும்? ஓ.. இந்த சுமதியை ரவி எப்போலேர்ந்து லவ் பண்றான்னுதானே கேக்கறீங்க… அது ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி வைசாக்ல..’

     

    ‘ரவி இருக்கட்டும் கல்யாண்.. அவன் நம்ம ரெண்டு பேருக்குமே நெருங்கினவன்.. அவன் சுமதியைக் கல்யாணம் பண்ணினா நாம போய் நல்லா சாப்ட்டுட்டு வாழ்த்தும் சொல்லிட்டு வரலாம். ஆனா’

     

    ரவி சிரித்தான்..’கோம்டி! நீ என்ன சொல்லவர்றே!’

     

    ‘நான் எதுவுமே சொல்லப் போறதில்லே.. கல்யாண்தான் சொல்லணும்..’

     

    ரவி முறைத்தான்.. ‘என்ன சொல்லணும்?’

     

    மறுபடியும் நிதானித்தாள் அவள். பிறகு அதே நிதானத்துடன் பேசினாள்.

     

    “அவர் பெரியப்பாவை அவர் கொலை செய்த விவரங்களை..”

     

    அதிர்ச்சியாகிப் போனான் கல்யாண்.. “அது அது..” என்று தடுமாறினான். ரவி ஏதோ சொல்ல வந்தான். கோம்டி அனனைத் தடுத்து நிறுத்தி கல்யாணைப் பார்த்துப் பேசினாள்.

     

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 21

    திவாகர்

     

    கோம்டி சமாதானப்படுத்தினாள்.

    “போலீஸ் எதையுமே சந்தேகக் கண்ணோடதான் பார்ப்பாங்க முரளி.

    உங்களுக்கு நிறைய விஷயங்க தெரியாதுங்கறது எனக்கும் போலீஸுக்கும் கூடத் தெரியும். சுமதி முதல்ல யாருன்னு நீங்க தெரிஞ்சுக்கணும் இல்லையா.. நான் சொல்லறேன். உங்க மாமா கந்தசாமியோட சொந்த மகள்தான் சுமதி.”

     

    “என்ன நிஜமாகவா.. அப்போ இதை எங்களுக்கு மறைச்சு வெச்சார் மாமா? என்னாலே நம்பமுடியலியே..”

     

    கல்யாண் குறுக்கிட்டான். “பெரியப்பா நிறைய விஷயங்களை மறைச்சு வெச்சிருக்கார் முரளி.. உன் விஷயமே நீ சொன்னப்பறம்தான் எனக்குத் தெரியும்.. இன்னும் சுந்தர் சொல்லப் போகற விஷயமும் நீ கேட்கணும்.. அதுக்கு முன்னாடி இந்த சுமதிதான் பெரியப்பாவோட ஒரே மகள்.. பெரியம்மாவையும் அழைச்சுண்டுதான் வந்திருக்கேன்.. ஆனா இதையெல்லாம் அவர் ஏன் மறைச்சார்னு தெரிஞ்சுக்கணும்னா அப்பறமா நிதானமா பேசலாம்.. பெரியப்பாவுக்கு நான் நேரடி உறவு.. நானே சொல்லறேன்.. இந்த சுமதி பெரியப்பாவின் உண்மையான வாரிசு. அதுக்கான ஆதாரம்னு நீங்கள்லாம் கேட்பீங்கன்னுதான் கோம்டி எப்படியும் ஒரு ஆதாரம் வேணுங்கறச்சே பெரியப்பாவே சமீபத்துல எழுதிக்கொடுத்த வாரிசு பத்திரத்தைக் கேட்டு வாங்கியிருக்காங்க. அதையும் கொண்டு வந்திருக்கேன். அதாவது தன் பேங்க்ல தன் பணத்தைத் தனக்குப் பிறகு தன் பெண் சுமதிக்குப் போய்ச் சேரணும்னு அவரே சுயமா கையெழுத்துப் போட்டு பேங்க்குக்கு ஒரு காபியும் சுமதியோட அம்மாகிட்டே ஒரு காபியும் கொடுத்திட்டுதான் போயிருக்கார் பெரியப்பா.”

     

    முரளி திகைத்துப் போயிருந்தது அவன் குரலில் தெரிந்தது கல்யாண் கோம்டியைப் பார்க்க அவள் தன் கையிலிருந்த பேங்க் பத்திரத்தை இன்ஸ்பெக்டர் மோகனிடம் கொடுத்தாள்.

     

    “பெரியப்பா சமீபத்துல எப்ப கொடுத்தார்?.. நான் இல்லாம பேங்க் கூட போகமாட்டாரே கல்யாண்? எப்ப சுமதி வீட்டுக்கு மறுபடி போனார்.. நான் மட்டுமே அவரை அழைச்சுண்டு போவேன்,, அப்ப சமீபத்துல எப்போ போனார்.?”

     

    “முரளி! மறுபடியும் உன் அப்பாவித்தனத்தைக் காமிக்கறே.. உன் அப்பாவித்தனம்தான் பெரியப்பாவை நல்லா அவர் சுய நலத்துக்காக யூஸ் பண்ண வெச்சது. பெரியப்பாவை நீ நாலு மாசத்துக்கு முன்னாடி ஒருதரம்தான் கார்ல அழைச்சுட்டுப் போனே.. ஆனா அதுக்கப்பறம் பத்துப் பன்னெண்டு தரம் சுமதி வீட்டுக்கு ஆட்டோவுல போயிட்டு வந்திருக்கார் பெரியப்பா. இதெல்லாம் உனக்குத் தெரியாது. இன்னொரு விஷயம்.. பிரியா விஷயத்துனாலே உனக்கும் பெரியப்பாவுக்கும் மனஸ்தாபம் வந்துதனாலே உன்னை அவர் தள்ளியே வெச்சிருக்கார் அவரு.”

     

    இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்.

    “நீ எங்கிட்டே உண்மையைச் சொல்லியிருக்கலாமே சுமதி.. நான் வந்து உன்னைக் கேள்வி கேட்டப்போ அப்ப ஒருமுறைதான் கார்ல உன் தங்கை மெடிகல் விஷயமா வந்தார்ன்னு சொன்னே.. அதுக்கப்பறம் பாக்கலேன்னு எதுக்குப் பொய் சொன்னே?”

     

    சுமதி நிமிர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்தாள்.

    “நான் பொய் சொல்லலே சார். அவரு ஒவ்வொருமுறை வந்ததுமே அந்தப் பொண்ணு  விஷயமாதானே.. அத்தோட என்னோட நிலைமை வேற சார். நான் இப்போ வரைக்கும் அந்த ஆள் என்னோட அப்பான்னு சொல்லிக்கறதுக்கே வெட்கமா இல்லே அசிங்கமா ஃபீல் பண்றேன்.. அதுவும் விஜயா விஷயத்துல அவர் நடந்துகிட்ட விதம் வெறி பிடிச்ச வீதி நாயைப் பாக்கற மாதிரித்தான் அவரைப் பார்த்தோம். அந்த பயங்கரமான அருவறுப்பைச் சொன்னா புரியாது சார். அந்த ஆளை யாரோ அன்னிக்கு கொலை பண்ணிட்டாங்கன்னு சொன்னப்ப வீட்ல ஸ்வீட் வெச்சு நானும் எங்கம்மாவும் சாப்பிட்டோம். அப்படிப்பட்ட ஆளைப் பத்தி எதுக்கு சார் பேசணும்னுதான் பேசலை. இப்போ கூட இந்த வீட்டுக்கு வர்றதுக்கு எனக்கு விருப்பமில்ல சார்.. கல்யாண் அண்ணாவும் டாக்டர் கோம்டியும் கம்பெல் பண்ணினதாலே நாங்க வந்தோம்.’

     

    முரளியைப் பார்த்தாள். ‘முரளி அண்ணா.. உங்களை உறவு முறையில அண்ணான்னு நான் கூப்பிடலே.. வயசுல என்னை விடப் பெரியவருங்கற முறையில கூப்பிடறேன்.. இப்பவும் சொல்லறேன். அந்தாளோட வீடோ பணமோ எதுவும் எங்களுக்குத் தேவையில்ல.. எங்களைப் பொறுத்தவரைக்கும் நான் பொறந்தவுடனேயே அந்தாளு செத்துட்டதா இப்பவும் மனசார நினைக்கிறோம்..”

     

    முரளி வருத்தப்பட்டுச் சொன்னான்.. “இல்லைம்மா சுமதி.. என் பெண்டாட்டிக்கு ஏற்பட்ட கதி உனக்கும் ஏற்பட்டதோன்னு கொஞ்சம் பயந்துதான் சொன்னேன்மா. தப்பா நினைக்காதே”

     

    “கல்யாண்.. உங்களுக்கு சுமதிதான் பெரியப்பாவோட பொண்ணுன்னு தெரியுமா?”

     

    “தெரியும் சார்.. நான் எதுக்காக வெளியில சொல்லலேன்னா சுமதி எங்கிட்டே வாங்கின சத்தியம்தான். பெரியப்பாவோட பொண்ணுன்னு அவ வீட்டுக்கு வர்ற வேலையை வெச்சுக்க வேணாம்னு என்னை அன்னிக்கே சொல்லிட்டா.. ஆனா எனக்கு அப்பாவும் இல்லே அம்மாவும் இல்லே.. ஒரு தங்கச்சி இருக்குங்கிற முறைல வரலாமான்னு கேட்டப்ப அவ அழுதுட்டா சார். பாவம் சார்.. பாசம்ன்னா என்னன்னு தெரியாம வளர்ந்திருக்கற பொண்ணு சார். அதனாலதான் நீங்க கோம்டிகிட்ட சுமதியைப் பத்திக் குறையா பேசறச்சே  பெரியப்பா முறைல உறவு பாக்காம ஒரு அண்ணங்கிற முறையில அவளுக்கு ஆதரவாப் பேசினேன். சுமதியைப் பத்திய விஷயம் கோம்டிக்கு கூடச் சொல்லலே. சுமதியை விட என் பெரியம்மாவைச் சொல்லணும். பொறந்த குழந்தைக்குத் தகப்பன் பேரு தெரியாதுன்னு தைரியமா ஊருல சொல்லி நாலு வீட்டுல வெட்கப்படாம பத்துப் பாத்திரம் தேய்ச்சி அந்தப் பொண்ணை வளர்த்தாங்களாம். சுமதி  அவ பெரியப்பா பொண்ணுங்கறது ஒரு பக்கம் உண்மைதான்னாலும் பிறந்ததிலேர்ந்தே கஷ்டத்தைப் பார்த்தவ. இனிமேயும் எங்களுக்கு பெரியப்பா உறவு தேவையில்லே.. அதுக்குப் பதிலா விஷத்தைச் சாப்பிட்டுச் செத்துப் போறோம்னு எங்கிட்ட சொல்லறச்சே அதையும் மீறி என்னாலே எதுவும் செய்ய முடியல.. அவர் விஜயாவுக்கு செஞ்ச பாவத்துக்கு அந்த விஜயா நல்ல முறைல குணமாகணும்னு நானும் என்னால் ஆன உதவியைப் பண்ண வந்தேன் அவ்வளவுதான்..”

     

    “விஜயா சுமதிகிட்டே இருக்காளா?.. அவளுக்காக நானும் பணம் சேர்த்துவர்றேன் கோம்டி மேடம்!” சுந்தர் மிகக் கவலையுடன் குறுக்கிட்டான்.. கோம்டி அழுத்தமாகக் கேட்டாள்.

     

    “எல்லாம் உங்க மாமாகிட்டேயிருந்து வாங்கின பணம்தானே? எனக்குத் தெரியுமே.. ஆசிரமத்து பேங்க் அக்கௌண்டும் ரசீது புக்கும் எல்லா உண்மையையும் சொல்லிடுச்சே சுந்தர்.  இவ்வளோ பேசறவரு உங்க மேல தப்பு இல்லேன்னா ஏன் இன்னிக்குக் காலைலேர்ந்து வீட்டை விட்டு ஓடிப் போக முயற்சிக்கணும்?”

     

    “நான் தப்பிக்க முயற்சிக்கலே.. இன்னிக்கு இங்க வர்றதை அவாய்ட் பண்ண விரும்பினேன்..  போலிஸ் ஸ்டேட்மென்ட் கூட தயார் பண்ணி ரெடியா வெச்சிருந்து அதை இன்னிக்கு போலீஸ் கேட்டப்ப கொடுத்திருக்கேன்.. ஏன் இன்னிக்கு வரவேண்டாம்னு நினைச்சேன்னா எனக்கு கோம்டி இந்த கேஸ்ல எப்படியாவது என்னை ஃப்ரேம் பண்றா மாதிரி மனசுக்குத் தோணிச்சு.. அதனாலதான் அவங்க விசாரணைக்கு இனிமே ஒத்துழைப்பு கொடுக்கவேணாம்னு வரல்லே.. இதையும் போலீஸ்கிட்ட சொல்லியிருக்கேன்..”

     

    கோம்டி முறைத்தாள்.

    “ஆனா மிஸ்டர் சுந்தர் இதுவரைக்கும் எல்லாமே மாத்தி மாத்தி சொன்னீங்க.. அதையும் நீங்க ஞாபகம் வெச்சுக்குங்க. இப்போ அதை எல்லாம் கூட விடுங்க.. சம்பவம் நடந்த அன்னிக்கு சாயங்காலம் நாலு மணிக்கு நீங்க கந்தசாமிகிட்டே ஃபோன்ல பேசினதையும் மாத்திதான் கொடுத்தீங்க.. அது ஏன்.. அன்னிக்கு நீங்க கரெக்டா என்ன பேசினீங்கங்கறத நல்ல ஞாபகப்படுத்தி நிதானமா எல்லோருக்கும் சொல்லலாமே. இதோ பாருங்க இப்பவாவது உண்மையைச் சொல்லணும். ஏன்னா உங்க ஃபோன் பேச்சு எல்லாம் என்கிரிப்ட் ஆக கந்தசாமி மொபைல்ல இருக்கு.”

     

    இன்ஸ்பெக்டர் சுந்தரைப் பற்றி விவரித்தார். சுந்தருக்கும் கந்தசாமிக்கும் அன்று முதன்முதலாக கம்ப்யூட்டரில் பிரிண்ட் எடுக்கும்போது நடந்த சண்டையை கோம்டியை வைத்துப் பேசச் சொன்னார். கோம்டி விவரித்தாள். தன்னிடம் ஒப்புக்கொண்டதையும் கந்தசாமியின் மன்மத லீலையையும் விவரித்தாள். ஆசிரமத்து விஜயாவுக்கு நேர்ந்த கோரமான நிகழ்வையும் விவரித்தாள்.

     

    விஜயாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க வந்தபோதுதான் கந்தசாமியைப் பற்றி முதன்முதலாக சுமதி தெரிந்துகொண்டதையும் அதன்பின் சிரமம் எடுத்துக்கொண்டு விஜயாவை ஆதரித்த விதம் பற்றியும் நெகிழ்ச்சியுடன் சொன்னாள் கோம்டி.

     

    சுமதி இப்போது வரை அந்த விஜயா மேல் பாசத்தோடு அந்தப் பெண்ணைக் காப்பாற்றி வருவதைப் பாராட்டிச் சொன்னாள்.

     

    “ஆனால் சுந்தர் உங்களுக்கும் அந்த விஜயா மேல் பாசம் இருந்திச்சு.. அந்தப் பாசத்தை வெச்சு கந்தசாமிகிட்டே பணம் பறிச்சீங்க இல்லையா.. என்னதான் இந்தப் பணமெல்லாம் விஜயாவோட ஆஸ்பத்திரி செலவுக்குன்னு நீங்க இப்போ சொன்னாலும் நீங்க அதைக் கொடுக்காதவரை எங்களாலே நம்பமுடியாது. இப்போதாவது சொல்லுங்க அன்னிக்கு சாயந்திரம் என்ன நடந்ததுன்னு.. விஜயா மேல உங்க பாசம் உண்மையான பாசம்னா அன்னிக்கு ஃபோன்ல என்ன பேசினீங்கன்னு அதுக்கப்பறம் என்ன நடந்ததுன்னு அப்படியே சொல்லணும். உங்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ் கூட”

     

    கோம்டி இதைச் சொன்னதும் தலை கவிழ்ந்தான் சுந்தர்.

    “அன்னிக்கு நாலரை மணிக்கு நான் ஃபோன் செஞ்சது வாஸ்தவம்தான்.” கந்தசாமியுடன் தான் பேசின விவரத்தையும் அதற்குப் பிறகு நடந்ததையும் விவரித்தான்.

     

    மாலை 4.30 மணியளவில் கந்தசாமிக்கு சுந்தர் ஃபோன் செய்கிறான், ஃபோனில் கந்தசாமியின் குரல் கேட்கிறது..

     

    “என்னடா சுந்தர் இந்த நேரத்துல நீ பேசறே? நீ நேரே இங்கே வரலாம் இல்லே.. உங்கிட்டே ஒரு விஷயம் கேட்கணுமே..”

     

    “நீங்க என்ன கேட்கப் போறிங்கன்னு தெரியும் மாமா.. குறிப்பிட்ட வஸ்துவைப் பத்திக் கேக்கப் போறீங்க.. வேண்டாம் இனிமே இந்த வேலை.. அதனாலதான் நான் எடுத்து ஒளிச்சு வெச்சுட்டேன். நான் உங்க நல்லதுக்குதான் பேசறேன் மாமா.. இன்னொரு விஷயம்.. அந்த விஜயாவோட நியூஸ் கிடைச்சுதான்னு சொல்லவே இல்லே.”

     

    “டேய் சுந்தர்.. நீ இப்படியெல்லாம் சொல்லலாமா? எனக்கு விஜயா விஷயமே தெரியாதுடா.. அன்னிக்கு பீச்சுல காணாம போனது காணாமப் போனதுதான்.. அந்தப் பொண்ணை விடு.. எனக்கு நீ எடுத்துண்டு போனது கட்டாயம் திருப்பித் தரணும்.. உன்னை வளர்த்து ஆளாக்கியது நான்.. எனக்கே இப்படி நீ துரோகம் செய்யலாமா.. சொல்லுடா?”

     

    “இதுல துரோகமெல்லாம் எங்கே வந்தது? நீங்க செய்துகிட்டுருக்கற விஷயம் வெளியிலே தெரிஞ்சா உங்களோட எப்பவுமே உதவியா இருக்கற நானும் முரளியும்தான் முதல்ல தூக்குல தொங்கணும்.. ஒருவேளை போலீஸ் உங்களைப் பிடிச்சுதுன்னாக் கூட எங்க ரெண்டு பேரையும் கூட விசாரிக்காம ஜெயில்லே போடலாம். நீங்க வளர்த்தீங்கன்ற ஒரு விஷயத்துக்காக நாங்க ரெண்டு பேரு ஜெயிலுக்குப் போகணுமா.. யோசிச்சுப் பாருங்க மாமா.”.

     

    “டேய் மடப்பயலே.. அதுக்குதான் பிராயச்சித்தம் பண்றேன்னு சொல்லி பத்து லட்சம் கொடுத்தேண்டா. அதைக் கூட நீ இன்னும் நான் கொடுத்த அட்ரஸுக்கு கொடுக்கலே.. சரி, விடு.. அந்த பத்து லட்சத்தை நீயே எடுத்துக்கோ, அடேய்.. என் வஸ்துவைக் கொடுத்துடுடா.. என்னை பிளாக்மெயில் பண்ணாதே..”.

     

    “முடியாது மாமா.. நான் கொடுக்க மாட்டேன். நான் இதைப் பத்தி கல்யாண்கிட்ட பேசணும்..”

     

    “டேய் டேய்  கல்யாண்கிட்ட எதுக்குடா. எங்கிட்டே பேசுடா. உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லுடா..?”

     

    “பணம் என்ன மாமா.. அம்பது லட்சம் ஒரு கோடியானாலும் நீங்க கொடுப்பீங்கன்னு தெரியும்.. ஆனா உங்க மன்மத லீலையை கண்டிப்பா கைவிட மாட்டிங்க. விஜயா மாதிரி இன்னும் எத்தனை பெண்களை முன்னமே சீரழிச்சீங்களோ இனிமேயும் எத்தனை சின்னப் பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிக்கப் போறீங்களோ.. யாருக்குத் தெரியும்? அந்த ஆசிரமத்துல இருக்கற சின்னப் பொண்ணுங்களை நினைச்சாலே கதி கலங்குது.. பாவம் அந்த மேனேஜர் பெரியவர். அவருக்குத் தெரியாம நீங்க செஞ்ச அயோக்கியத்தனம் ரொம்ப குரூரமானது. நான் முதல்ல போலீஸ்கிட்டதான் போகலாம்னு இருந்தேன். ஆனா கல்யாணுக்கும் தெரியணும்.. நாங்க ரெண்டு பேரும் சேர்த்து இந்த விஷயத்தைப் போலீஸ்கிட்ட எடுத்துப் போவோம். . கல்யாண் வந்ததும்தான் இது முடிவுக்கு வரும். நான் அவன்கிட்டே சாட்சிக்காக இந்த வஸ்துவை ஒப்படைச்சுட்டு  எல்லா விஷயமும் நானே சொல்லப் போறேன்.”.

     

    கத்தினார் கந்தசாமி  “உனக்கு என்னடா தெரியும் என்னைப் பத்தி.. நான் இப்போ எந்த லீலையிலும் ஈடுபடலேன்னு சொன்னா நம்புவியா.. என் வஸ்துவைக் கொடுத்துடு.. சரி, அம்பது லட்சம் கொடுக்கறேன்.. இங்கே வா.. அந்த வஸ்துவையும் கொண்டு வா.. பேசலாம்..”

     

    “நான் அங்கே வரமாட்டேன். என்னை நேரப் பார்த்தீங்கன்னா என் மேல் இருக்கற ஆத்திரத்துல நீங்க என்னைக் கொன்னுப் போட்டாலும் போடுவீங்க.. அதான் ஒரு சைலன்ஸர் துப்பாக்கி உங்க பீரோவுக்குள்ள மறைச்சு வெச்சுண்டிருந்ததைப் பார்த்தேனே.. நாளைக்கு காலைல கல்யாணை நான் ஸ்டேஷன்லியே பார்த்து எல்லாவிஷயத்தையும் சொல்லிட்டுதான் அழைச்சுண்டு வரப் போறேன்.. அதுக்கப்பறம் அவனாச்சு.. நீங்களாச்சு..”

     

    “டேய்.. டேய்.. அப்படில்லாம் சொல்லாதேடா.. நான் செத்துடுவேண்டா.. என் பொணத்தைத்தான் நீ பாக்கப் போறே.. இதோ பார்.. நேருல வாடா.. பேசலாம்..”

     

    “நான் வரல்லே மாமா.. என் முடிவு இதான். நீங்க எடுத்த படத்தையெல்லாம் பார்க்கறப்போ எனக்கு ரத்தக் கண்ணீர் வந்துச்சு, அதுவும் விஜயாவைப் போயி.. .. அப்படின்னு நினைக்கறச்சயே உங்க மேல ஆத்திரம் ஆத்திரமா வருது.. உங்க அழுகை ஒரு நாடகம், அதுவும் ஆசிரமத்துலேயே பொய் சொல்லி எதுவுமே தெரியாதுமாதிரி அழுதீங்களே.. போதும் மாமா.. உங்க சகவாசம்.. உறவு எல்லாமே போதும்.. இதுக்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா.. அதுதான் நான் கல்யாண் வர்றதுக்காக காத்திருக்கேன்.. உங்களை என் உறவுக்காரர்ன்னு சொல்லறதுக்கே வெட்கமா இருக்கு.. அதுதான் உங்க கையில பணம் வாங்கி உங்க கூட சாப்பிட்டு நான் வளர்ந்தேனே.. ச்சே.. தற்கொலை பண்ணிக்கலாமான்னு இருக்கு.. அது சரி, நான் என்ன தப்பு பண்ணினேன் தற்கொலை பண்ணிக்கறதுக்கு.. நீங்க சொல்லறா மாதிரியே நீங்களே பண்ணிக்குஙக மாமா.. நீங்க தப்பறதுக்கு நீங்க தற்கொலை பண்ணிக்குங்க.. அதுதான் ஒரே வழி.”

     

    ஃபோன் வைக்கப்பட்டுவிட்டது..

     

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி  – 20

     

    திவாகர்

     

    அவள் அன்று நடந்த சம்பவத்தை விவரித்தாள்.

    இதே வீடு  ஒரு கட்டிலில் அந்தச் சின்னப் பெண் விஜயா படுத்திருக்க அவள் பக்கத்தில் சுமதியின் அம்மா உட்கார்ந்திருக்க கந்தசாமி அங்குள்ள நிலைமையைப் பார்க்கிறார்.

     

    சுமதிக்குப் புரிந்தது. வந்தது கந்தசாமிதான்.

     

    கந்தசாமி அவள் அம்மாவிடம் போனார்.

     

    “நீ எப்போ இங்கே சென்னைக்கு வந்தே?”

     

    “எதுக்காக எங்கம்மாவைத் தொந்தரவு பண்றே? நீ யாரு முதல்ல எங்களை வந்து பார்க்க..?”

     

    “நான் உங்க அப்பா.. உன் பேரு சுமதின்னு ஆஸ்பத்திரில விலாசம் கொடுக்கும்போது சொன்னாங்க.. சுமதி.. இதோ பாரு.. நான் இங்கே வந்தது உன்னையோ உன் அம்மாவையோ கூட்டிட்டுப் போகறதுக்கு இல்லே.. அதோ அந்த பொண்ணு எங்க ஆசிரமத்திலேர்ந்து ஓடி வந்திடுச்சு. அவளோட வளர்ப்புக்கு நான் பொறுப்பு.. அதான் கூப்பிட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்.”

     

    “அப்படித்தான்யா ஒரு ஆள் எங்கம்மாவை ஏமாத்திட்டு ஒரு நாள் ஓடிப் போயிட்டான். அவனைக் கூப்பிட்டுப் போகறதுக்காக எங்கம்மா ஒரு காலத்திலே அவன் வீட்டுக்குப் போனாங்க.. அவன் அடிச்சுத் துரத்திட்டான். இதோ பார். அதே நிலைமை உனக்கும் வர வேணாம். இங்கேயிருந்து போயிடு.”

     

    “அன்னிக்கு அப்படி நடந்தது வாஸ்தவம்தான்.. ஆனா அந்தக் கதை முடிஞ்சுபோன கதை.. நீ இப்போ அதுக்காக என்ன கேக்கறியோ அதைக் கொடுக்கறேன். ஆனா சொந்தம்னு என்னால கொண்டாடமுடியாது.”.

     

    கந்தசாமி சுமதி பக்கத்தில் உட்கார்ந்தார். ஆதரவாக அவளைத் தலையைத் தொட்டுப் பேச வந்தார்,. சட்டென அவன் கையை உதறித் தள்ளினாள்.

     

    “அடச்சீ.. உன் பாவக் கையை என் மேல வெக்காத.. நீயெல்லாம் ஒரு மனுஷன்னு உங்கிட்டே வந்து சொந்தம் கொண்டாடணுமா.. மனசால கூட நீ நினைச்சுப் பாக்காதே.. ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னோட ஒரு கனெக்ஷனும் வெச்சுக்க மாட்டோம். க்ரூயல்.. கொடூரம்னு வாழற ஒரு அப்பா எனக்கு வேணுமா?.. அதுவும் வெறி பிடிச்ச நாய் என்னோட அப்பான்னு சொல்லிக்கறதுக்குக் கூட யோக்கியதை இல்லாதவன் நீ போய்யா.. போ..”

     

    கந்தசாமி சாந்தமானார். ~இதோ பாரு சுமதி.. என்ன சொன்னாலும் எப்படி திட்டினாலும் நான் உன்னோட அப்பா.. போகட்டும்.. எங்கிட்டே வரவேணாம். ஆனா நான் உங்களுக்கு மாசா மாசம் பணம் அனுப்பறேன்..”

     

    “யோவ்.. உன்னோட உறவே வேணாம்னு இங்க வந்தேன்.”

     

    “நீ அப்படில்லாம் சொன்னா விஷயம் தெரிஞ்ச நான் விடுவேனா.. என்று சொன்ன கந்தசாமி தன் ஜிப்பா பையிலேர்ந்து ஒரு செக் புக் எடுத்தார். அந்தச் செக்கில் ஏதோ பணம் எழுதினார்.. அப்படி செக் புக்கை எடுக்கும்போது அவர் ஃபோன் கீழே விழுந்துவிட்டதை அவர் கவனிக்க வில்லை….

     

    சுமதிக்கு கோபம் ஏராளமாக வந்தது.. “நீ இங்கேயிருந்து உடனே போகலேன்னா உன் வண்டவாளமெல்லாம் சொல்லி போலீசுக்கு கம்ப்ளெயின் கொடுப்பேன்… போகறியா இல்லையா? நான் போலீஸைக் கூப்பிடட்டுமா?”

     

    இனியும் இங்கு இருக்கமுடியாது என்பதைத் தெரிந்துகொண்ட கந்த சாமி செக்கை மாத்திரம் அங்கே வைத்துவிட்டு கொஞ்சம் சோகத்துடன் எழுந்து போனார்.

     

    அதைத் தூக்கி ஓரத்தில் போட்டாள். அப்போதுதான் தெரிந்தது.. அவர் ஃபோனை அங்கே விட்டு விட்டுச் சென்றது. கந்தசாமிக்கு ஃபோன் செய்யலாமா என்று யோசனை செய்தவள் அவள் அம்மாவிடம் பேசினாள்.

     

    “அம்மா.. நான் அவன் ஃபோனை விட்டுட்டுப் போயிட்டான். அவன் வீட்டுக்கு இதுல அவன் நம்பர் நம்பர் இருக்கான்னு பார்த்து ஃபோன் போடறேன்.. நீ பேசி அவன் ஃபோனை எடுத்துட்டுப் போகச் சொல்லு.. நான் இனிமே அவன் கூடப் பேச மாட்டேன்.”

     

    என்றவள் அந்த ஆபிள் ஃபோனில் பார்த்தாள்.

    ‘இதுல காண்டாக்ட் நம்பரே இல்லையேம்மா.”.

     

    என்றவள் மேலும் அந்த ஃபோனை நோண்டினாள். அவள் முகம் போகப் போகப் சிவந்தது.

     

    “நாசமாப் போகறவன்மா இவன்.. ஐய்யோ எத்தனை படம்? இல்லாம் இதோ இந்த விஜயாவோ படங்கதான்.. இதோ பார்..” என்று அம்மாவிடம் காண்பித்தாள். அதைப் பார்த்து அவள் அம்மா கண்ணை மூடிக்கொண்டாள்.

     

    “அப்படியே உடம்பெல்லாம் புழுத்துச் சாகணும்டி அவன்..” அவள் அம்மா அப்போதே சாபமிட்டாள்.

     

    அவர்கள் இடிந்து போய் உட்கார்ந்திருந்தனர்.

     

    “நான் சொல்லறதை கேளுடி.. பேசாம போலீசுக்கு இவனைப் பத்தி இந்த போனைக் கொடுத்துக் கம்ப்ளெய்ன் சொல்லிடு.. அதுதான் நாம பண்ணமுடியும்.”

     

    “அம்மா.. நாம இப்போ கொஞ்சம் நிதானமா இருப்போம். இதைப் பத்திக் கேட்டா நமக்குத் தெரியாதும்போம். இந்த மாதிரி விஷயத்துலெல்லாம் நமக்குக் கொஞ்சம் துணை வேணும். நாம ஏழை மாத்திரம் இல்லே.. ஆம்பிளை துணையில்லாத வீடு. உறவுன்னு சொல்லிக்கறதுக்கோ யாருமே இல்லை.. ஆனா அதுக்காக இந்த நாய்கிட்டே எல்லாம் பயப்படக்கூடாது,, கல்லாலே அடிச்சுக் காயப்படுத்திண்டே இருக்கணும்.. அவன் திரும்பி வந்து கேட்டானா கூட துரத்தி விடறேன்.. முடிஞ்சவரைக்கும் அவன் அவமானப்படணும்.. மனசுக்குள்ளே தவிச்சுச் சாகணும்.. இந்த சமூகம் இவனை மாதிரி ஆளையெல்லாம் நடுரோட்டுல சுட்டுத் தள்ளணும்.. சரி விடு, அவனைப் பத்தி என்ன பேச்சு. இந்த விஜயாப் பொண்ணுக்கு கொஞ்சம் மூளைல ஆபரேஷன் பண்ணனுமாம். இல்லாகாட்டி அவ உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் பல நாளா ஆசிரமத்துல இருக்கறச்சயே சொல்லியிருக்காராம்… இந்தப் பொண்ணை எப்படிக் காப்பாத்தறதுன்னு நாம் யோசிக்கணும்.”

     

    என்று சொல்லிக் கொண்டே அவள் கைப்பைக்குள் ஃபோனைப் போடுகிறாள். எதிர்பார்த்தது போல கந்தசாமி வருகிறார்.

     

    “இங்கே ஃபோனைக் கீழே போட்டுட்டேன்.. அந்த ஃபோனைக் கொடு.. அதுக்குதான் வந்தேன்.”

     

    “இதோ பார்.. எதையாவது சாக்கு போக்கு சொல்லிட்டு இங்கே வந்தேன்னா உனக்கு செருப்படிதான் விழும். முதல்ல வீட்டை விட்டு வெளியே போ.. இல்லே கூச்சல் போட்டு கூட்டம் கூட்டி போலிஸையும் கூப்பிட்டு உன்னை ஜெயில்லே போடுவேன்.”

     

    கந்தசாமி கத்துகிறார். “ஏய்.. நானும் போனாப் போகுதுன்னு ஏதோ என்னாலே ஒரு தப்பு எப்பவோ நடந்துபோச்சேன்னு அதுக்கு ஏதாவது நல்லது பண்ணலாமேன்னு பாக்கறேன்.. அதுக்காக என்ன ஓரேயடியா என்னை பயமுறுத்தறே.. ஜாக்கிரதை.. சொந்தப் பெண்ணே ஆனாலும் என் வழிலே குறுக்கே வந்தன்னா கொன்னுடுவேன் கொன்னு.. ஜாக்கிரதை.. முதல்ல வீட்டுல தேடு.. அந்த மொபைல் எங்கேயாவது கிடைச்சா ஆஸ்பத்திரியில என் நம்பர் இருக்கு.. சொல்லி அனுப்பு..”

     

    அவர் கத்தி விட்டு வெளியேறுகிறார்.

     

    மறுபடியும் தற்கால நிலைக்கு வருகிறாள் சுமதி

     

    “இதுதான்மா நடந்த விஷயம். அடுத்த மூணாவது நாள் நான் எதேச்சையா உங்க க்லினிக்ல வெளியே வந்ததை அந்தாளு பார்த்துதான் அந்த கலாட்டா நம்ம கிலினிக்ல நடந்தது. நான் எப்பவுமே என் கைப்பைக்குள்ளேயே அந்த மொபைல்லை வெச்சிருந்தேன்.. வீட்ல வெச்சா இவன் எப்படியும் வந்து எடுத்துடுவான்னு தெரியும்.. அந்த ஆளுக்கு என் ஹேண்ட்பேக்லே அது தட்டுப்பட்டிருக்குது.. உடனே அதை எடுத்துண்டு என்னை விட்டுட்டான். அதுக்கப்பறம் உங்களுக்கு எதிர்வீடுதான் அந்தாளோட வீடுன்னதும் என்னாலும் வேலையை கண்டினியூ பண்ணமுடியலே. அதனாலதான் அன்னிக்கு உங்கள்ட்ட அப்படிச் சொன்னது.. என்னத்தையம்மா அப்போ சொல்லமுடியும்? இப்படிப்பட்டவனைப் பத்தி பெருமையா சொல்லறதுக்கோ எங்கப்பன்னு சொல்லறதுக்கோ என்ன இருக்கு. உங்க வீதிலேயே அந்த வெறி நாய் இருக்கறதுனாலே வீதியில இருக்கற அத்தனை பெண்களையும் கடித்துக் குதறி வெக்கக் கூடாதேன்னுதான் நீங்க ஜாக்கிரதையா இருங்கம்மான்னு உங்களுக்கு எச்சரிக்கை பண்ண முடிஞ்சது.”

     

    “நீ இங்கே இன்ஸ்பெக்டரைப் பாக்கறச்சே விஜயா ட்ரீட்மெண்ட்க்காக கந்தசாமிகிட்டே யாரோ ஒரு குடும்பம் மூலம் கேட்டதாகவும் கந்தசாமி வந்து உன்னை இந்த வீட்ல அரைமணி நேரம் பார்த்ததாகவும் சொன்னியாமா.. அது உண்மையா சுமதி?”

     

    “ஆமாம்மா.. அது கூட உண்மைதான். விஜயாவுக்காக நான் பண உதவிக்காக ஏஜன்ஸி மூலம் கேட்டது உண்மைதான். ஆனா இந்த ஆள்தான் அந்த உதவி செய்யறவன்னு தெரிஞ்சதும் வேண்டாம்னு சொல்லிட்டேன்மா.. இன்ஸ்பெக்டர்கிட்டே இந்த உண்மையைதான் சொன்னேன். ஆனா அவர் நம்பலே..”

     

    “ரொம்ப வேதனையா இருக்கு சுமதி. ஆனா கல்யாண் உனக்கு நிச்சயம் நியாயம் செய்வார். அதை நீ ஒப்புக்கறதும் நல்லது. சரி, அதுக்கப்பறம் நான் கேட்டேனே எனக்கு இன்னும் ஸ்ட்ராங்கா உங்கப்பாதான் இவருன்னு எனக்கு ஒரு எவிடென்ஸ் வேணும்.”

     

    “எவிடென்ஸ்னு பார்க்க டி என் ஏ டெஸ்ட்டா இப்போ எடுக்க முடியும்? விடுங்கம்மா.. அந்தாளை நான் பொறந்ததிலேர்ந்தே நம்பலே.. தேவையும் இல்லே.. கடவுள் எங்களுக்கு ஒரு பெரிய நன்மை செஞ்சிருக்கார்மா.. இந்த ஆள் இப்படிப்பட்ட அயோக்கியன்.. குருரமனசும் கொடூரமும் உள்ள ஆளு.. இந்த ஆளோட சம்பந்தமே எங்களுக்கு வேண்டாம்னு நான் பொறந்தவுடனே கடவுள் தீர்மானிச்சுட்டாரும்மா.. கடவுள் எங்களை இப்போ வரைக்கும் காப்பாத்தி வந்திருக்கார்.. பாருங்க இப்போ அவனே போயாச்சு. இனிமே அவனைப் பத்தி ஒரு நினைப்பு கூட வராது எங்களுக்கு.”

     

    கல்யாண் குறுக்கிட்டான். “கோம்டி! எதுக்கு இப்போ அந்த ப்ரூஃப் கேட்கறே.. நான் இருக்கேன்ல. நான் இனிமே இவங்களைப் பாத்துக்கறேன். என்னோட கடமை கூட..!”

     

    சுமதி கல்யாணை அன்போடு பார்த்தாள். கோம்டியிடம் திரும்பிப் பேசினாள்.

    “ஆனா அந்த மொபைல் பத்தி அந்தாளுக்கு சந்தேகம் இருந்திச்சு. அந்தாளு அதுக்கப்பறம் பத்து தடவைக்கு மேலே எங்க வீட்டுக்கு வந்திருக்கான்.. ஒவ்வொரு தடவையும் விஜயா பத்தி கேட்பான். என்னைப் பத்திக் கேட்பான்.. ஏன்.. நான் இல்லாத சமயம் பாத்து வருவான்.. ஏதாவது உதவி வேணுமா கேப்பான். நாங்க ஒவ்வொரு தடவையும் துரத்தி அனுப்புவோம். அந்தாள் செத்துப்போகர்றதுக்கு  மூணு நாள் முன்னாடி ஒருதடவை எங்கம்மாகிட்டே வந்து பேசினான். அவங்க அப்போ கொஞ்சம் மயக்கமா ரொம்ப வீக்கா இருந்தாங்க. நல்ல வேளையா விஜயாவை என்னோடு ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போயிருந்தேன். அப்போ அம்மா கையிலே ஒரு டாகுமெண்ட் கொடுத்தான். அதுல அவனோட பேங்க் அக்கவுண்டல இருக்கற பணத்துக்கு அவனுக்கப்பறம் நாமினியா தன் பொண் சுமதி பேரைக் கொடுத்து. அந்தப் பணம் சுமதிக்குதான் சேரணும்னு நோடரி பதிவு பண்ணி ஒரு டாக்குமெண்ட் கொடுத்துட்டுப் போயிட்டான். நான் வந்ததும். எனக்குக் கொண்டு வந்து அம்மா காமிச்சாங்க. எதுக்கும்மா இதை வாங்கினே? அம்மா சொன்னாங்க.. நான் வாங்கலேம்மா.. அவன் போட்டுட்டுப் போயிட்டான்.. நமக்குப் பாவச் சொத்து எதுக்கம்மா.. யாருக்கு சேரணுமோ அவங்களுக்குக் கொடுத்துடலாம்‘னு சொன்னாங்க.. அதை எடுத்து வெச்சிருக்கேன். இனிமேதான் கல்யாண் அண்ணாவுக்குக் கொடுக்கணும். ஏன்னா எங்களுக்கு அந்தாள் கொடூரமான பாவம் செஞ்சு சம்பாதிச்ச சம்பாத்தியம் வேண்டவே வேண்டாம்.. கொஞ்சம் இருங்க.. அந்த டாகுமெண்ட் எங்கப்பா இவருதான் ப்ரூவ் பண்றதுக்கு சட்டபூர்வமா உதவும் இல்லையா.. நீங்க கேட்டீங்களே..”

     

    அவள் போய் பீரோவைத் திறந்து அந்தப் பத்திரத்தை கோம்டியிடம்  கொடுத்தாள். அவள் ஏற்கனவே சொன்னபடி பத்து ரூபாய் பதிவுத் தாளில் எழுதப்பட்ட பத்திரத்தில் இருந்ததைப் பார்த்தவள் மகிழ்ச்சியடைந்தாள்.

     

    “கல்யாண்.. எனக்கு நிறைய விஷயங்கள் புரியறது.. நிறைய விஷயங்கள் இன்னும் செய்ய வேண்டியது பாக்கி இருக்கு. ஆனால் இப்போ நீங்க உங்க கார்ல நம்மோட இவங்க ரெண்டு பேரும் வரணும். உங்க வீட்ல உங்க தங்கையை வலது கால் வெச்சு உள்ளே அழைச்சுண்டு போங்க” என்று சொன்ன கோம்டி சுமதியிடம் வந்தாள்.

     

    “இன்னிக்கு அங்கதான் வரணும் சுமதி. நீ கவலைப்படாதே.. எல்லாம் உன் நன்மைக்கேன்னு வெச்சுக்கோ. நீ யார் வீட்டுக்கு வர்றே? உங்கண்ணா கல்யாண்கிட்டே வர்றேன்னு வெச்சுக்கோ. என் கூட நீங்க ரெண்டு பேரும் வாங்க.. கிளம்பலாமா கல்யாண்..!”

     

    கல்யாண் தலையசைத்தான்.  “நீங்க சொல்றது சரிதான் கோம்டி.. அந்த வீடு எங்க தாத்தா பாட்டி சொத்தை வித்துட்டுதான் பெரியப்பா என் பேர்லதான் வாங்கினாரு. அது என் வீடுதான்.. எனக்கு என்ன உரிமை அங்கே இருக்கோ அதே உரிமை அந்த தாத்தா பாட்டியோட பேத்தியா சுமதிக்கும் இருக்கு.” சுமதியைப் பாசத்தோடு கை கொடுத்து ஆதரித்தான். பெரியம்மாவையும் ஒரு கை கொடுத்து அழைத்துக் கொண்டான்.

     

    அனைவரும் கிளம்பினர்.

     

    கோம்டியின் வீடு கிலினிக். கோம்டி அங்கு இறங்கியதும் கடகடவென உள்ளே வந்து தன் கிலினிக்கின் கதவை உள்பக்கம் சாத்திக்கொண்டு சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஃபோனில் சாந்தியிடம் பேசுகிறாள்.

     

    “சாந்தி.. இன்னிக்கு ராத்திரிக்குள்ள என் கேஸ் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி எனக்கு ரெண்டு மூணு விஷயங்க நீ உடனே செய்யணும். செஞ்சவுடனே எனக்கு வாட்சாப்ல மெஸேஜ் அனுப்பிடு. நீ என்னென்ன செய்யணும்னு சொல்லறேன்.. நல்லா கேட்டுக்கோ.”

     

    சொல்கிறாள்..

     

    அடுத்தநாள் காலை கல்யாண் வீடு

     

    வீட்டின் டின்னர் மேஜையை சுற்றி நாற்காலிகளை வைத்திருந்தார்கள்.

     

    எல்லோரும் உட்கார அந்த பெரியம்மா மட்டும் ஹால் கூட்டத்தில் இல்லை. சுமதி வந்திருந்தது முரளிக்கும் சுந்தருக்கும் மட்டும் வித்தியாசமாக இருந்தது.  இன்ஸ்பெக்டர் ஆரம்பித்தார். முரளியையும் சுந்தரையும் பற்றியும் அவர்கள் பெரியப்பாவுடன் சண்டை போட்ட விதமும் சொன்னார்.

     

    “மிஸ்டர் கந்தசாமியோட இறப்புல இங்கே உள்ள எல்லோருக்கும் ஏதாவது ஒரு கனெக்ஷன் இருக்கத்தான் செய்யறது.. முதல்ல கந்தசாமியோட எப்பவுமே பிரியாம இருந்த முரளி.. அவர் விஷயம் சுந்தருக்கும் சுமதிக்கும் தெரியாது.. ஆனா இங்க இருக்கற. அவரோட மனைவி பிரியாவை முரளியின் இஷ்டத்துக்கு விரோதமா கல்யாணம் பண்ணி வெச்சதிலேர்ந்து பிரியாவை எப்படியாவது தன் வசப்படுத்தவேண்டும்னு கந்தசாமி செஞ்ச முயற்சியை முரளியும் பிரியாவும் அதைத் தடுத்துண்டே இருந்ததையும் கந்தசாமி கோபமா முரளியைத் திட்டுனதையும் அதுக்குப் பதிலா இவரும் திரும்ப திட்டினதையும் முரளியே சொன்னதை கோம்டி எனக்கு விவரமா சொல்லியிருக்காங்க.. ஆனா சம்பவம் நடந்த நாள்ல அந்த நேரத்துல அதாவது மாலை அஞ்சு மணிலேர்ந்து அஞ்சறை வரைக்கும் அவர் ஆஃபீஸ்ல இருந்ததுக்கான சாட்சிகளை  முரளி கொடுத்துருக்கார்ங்கற ஒரு காரணம் மட்டுமே அவரைக் கொலையாளி பட்டியல்லேர்ந்து நீக்கினாலும் அவர் ஆளை வெச்சுக் கொலை பண்ணியிருக்கலாம்ங்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு.”

     

    முரளி எழுந்தான்..

    “இன்ஸ்பெக்டர்.. இது ரொம்ப அநியாயம்.. என்னோட தகவல் பூரா நான் கொடுக்கணும்னு அவசியமே இல்லேன்னாலும் நான் உண்மையை பரிபூர்ணமா சொல்லியிருக்கேன். நான் அவரோட இறப்புல சம்பந்தப்படலே.. ஆனா சுமதியைப் பார்த்தப்பறம் அவர் ஏன் கோபமா வரணும்னு ஏற்கனவே போலீஸ்ல கம்ப்ளெயின் பண்ணினேன்.. இதோ சுமதியும் இங்க இருக்கறதால சுமதி சொல்லட்டுமே.. அவர் எதுக்காக அத்தனை கோபத்தோடு சுமதி வீட்லேர்ந்து வெளியே வந்தார்னு.. என் மேல மாத்திரம்தான் சந்தேகப்படறீங்களே.. என்ன நியாயம் இது?”

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி – 19

     

    திவாகர்

     

    “சரி, கல்யாண் ஞாபகமிருக்கா?”

     

    “கல்யாண்.. அது யாரு? சாரி, மேடம் உங்களையும் நான் பார்த்ததில்லே.. கல்யாண் யாருன்னும் தெரியாது.!”

     

    “ஓ! அப்போ நீங்க திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி இல்லையா?”

     

    “அது நான்தான்.. என் பேரை அப்படி யாரும் கூப்பிடமாட்டேங்க.. மூர்த்தின்னுதான் கூப்பிடுவாங்க. இப்போ கூட என் தம்பியோட மோட்டார் சைக்கிள் திருட்டு போயிடுச்சு. அதுக்குக் கம்ப்ளயின் கொடுக்க என் பேரை மூர்த்தின்னுதான் கொடுத்தேன்.. எப்படியோ என் முழு பேரு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க.. அதுவும் அழகான பொண்ணு வாயால இப்படில்லாம் கூப்பிடறதுக்கே கொடுத்து வெச்சிருக்கணுங்க.. ரொம்ப தாங்க்ஸ்ங்க.. நான் வரேங்க..”

     

    என்று சொல்லிவிட்டுப் போனவனைத் தடுக்கிறாள்.

     

    “என்ன மிஸ்டர் திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி.. இவ்வளோ சீக்கிரம் மறந்துட்டா எப்படி? கொஞ்ச நாள் முன்னாடி நீங்க விசாகப்பட்ணம் ரயில்வே ஸ்டேஷன்ல ஹவ்ரா மெயில் ஏற வந்தீங்க.. உங்க நண்பர் கல்யாண் ஏஸி கோச்லயும் நீங்க எஸ்-! கோச்’லயும் ட்ராவல் பண்ணீங்களே.. மறந்துட்டீங்களா..”

     

    “ஓ.. நீங்க அங்க இருந்தீங்களா.. ஆமாங்க நம்ம தெத்துப்பல்லன் இருந்தான் இல்லே…. ஓ.. ஆமாம்.. அவன் பேருதான் கல்யாண் இல்லே..ஓகே.. ஓகே.. இப்போ ஞாபகம் வந்துடுத்து.. நீங்க கூட அந்த ஏஸி கோச் கீழே நின்னுட்டிருந்தீங்க.. தெத்துப்பல்லன் மிஸஸா.. நீங்க.. ஓ! சாரிங்க.. அப்போ உங்க எதிருல இனிமே கல்யாண்னுதான் கூப்பிடணும்.. சின்ன வயசுலேர்ந்து திருச்சி ஸ்கூல்லேர்ந்து சினேகிதம் இல்லையா..”

     

    அவன் பேச, அவள் பேச.. பேச்சு வளர்ந்து கொண்டே போகிறது. அவள் அவனிடம் விடைபெறுகிறாள்.

     

    கோம்டி கல்யாண் வீட்டுக்கு வருகிறாள்  அங்கே ரவியும் இருப்பதைப் பார்க்கிறாள்.

     

    “என்ன கோம்டி! சுமதி பத்தி எனக்கு இப்போதான் கல்யாண் சொன்னான். சாந்தி கூட இப்போ வரைக்கு இதுபத்தி வாயே திறக்கலே.. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சுமதி ரொம்ப பாவப்பட்ட பொண்ணுதான்.’

     

    ‘சரிதான்.. பாவப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சுதான் நீ அவ கூட சுத்தறியாடா.. எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதே..’

     

    ரவி ஆச்சரியமாக் அவளைப் பார்க்கிறான்.. ‘ஹேய்.. உனக்கு எப்படித் தெரியும்?  இது சாந்திக்குத் தெரியுமா?’

     

    ‘தெரியுமே.. நானும் அவளும் சேர்ந்துதானே உங்க மூணு பேரையும் பார்த்தோம். சூபர் மால்ல அன்னிக்குக் காலைல மேட்சிங்க் பார்த்துப் பார்த்து டிரெஸ் வாங்கினீங்களே..’

     

    கல்யாண் எழுந்தான். மேலும் கீழும் அவளைப் பார்த்தான். ‘கோம்டி! உங்க மனசுல இன்னும் ஒரு குறை இருக்கு இல்லே!’

     

    “கரெக்ட்! இன்னும் ஒரே ஒரு குறை இருக்கு கல்யாண். அதையும் தீர்த்துட்டோம்னா நாளைக்கு நிதானமா எல்லாத்தையும் முடிச்சுடலாம்.. நாம சுமதியை விசாரிக்கவே இல்லை.. எனக்கு அவளைப் பத்தி தெரியும்.. இருந்தாலும் இந்தக் கொலை நடந்த பிறகு ஒருவாட்டி சந்தேகம் தீர விசாரிச்சுட்டா எனக்கு ஒரு நிம்மதி இருக்கும்.. என்ன சொல்லறீங்க.. நீங்க ரெண்டு பேரும் கூடவே இருக்கணும்?”

     

    “நிச்சயமா கோம்டி.. ஆனா இப்போ சுந்தர் வரணுமே.. நான் அவனுக்காக வெயிட் பண்றேன்..”

     

    “சுந்தர் வரமாட்டான் கல்யாண்.. அவன் எஸ்கேப் ஆகறதுக்கு ட்ரை பண்றச்சே போலீஸ் பிடிச்சாச்சு. நாளைக்கு இன்ஸ்பெக்டர் மோகனோட வருவான்.”

     

    “சுந்தர் தப்பிக்கப் பாத்தானா.. பிடிச்சுட்டாங்க இல்லே.. போகட்டும்.. இப்போ நாம சுமதி வீட்டுக்குப் போகணும்.. வாங்க இப்பவே போலாம். என் கார்லயே போலாம்.”

     

    கல்யாண் காரில் போகிறாள். மூவரும் சுமதி வீடு இருக்கும் சாலையில் காரை நிறுத்தி விட்டு சுமதி வீட்டுக்குள் நுழைகிறார்கள்

     

    சுமதி வீடு

    சுமதி வீட்டின் முன்னறையில் சுமதியின் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். அவள்  முகத்தில் கல்யாணைப் பார்த்ததும் புன்னகை.. கல்யாணும் அவளிடம் அன்பாகப் போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்துகிறான். சுமதி வருகிறாள். இருவரையுமே ஆச்சரியமாகப் பார்க்கிறாள்.

     

    “என்ன டாக்டர்.. எப்படி இருக்கீங்க.. அட கல்யாண் அண்ணா கூட வர்றீங்க..”

     

    சுமதியின் தோளில் தட்டி அன்பாகப் பேசுகிறாள்.

     

     

     

    “இப்போ எப்படி இருக்கே? அம்மா எப்படி இருக்காங்க? நான் லாஸ்ட் டைம் இங்க வரச்சே உங்கம்மா ரொம்ப கோபமா இருந்தாங்க.. ஆனா இப்போ சந்தோஷமா இருக்காங்க.. அன்னிக்கு நாம சரியா பேச முடியலே.. அந்தாளு கந்தசாமிகிட்டே ஜாக்கிரதையா இருக்கச் சொன்னே.. ஞாபகமிருக்கா.. இப்போ அந்த ஆளே போயாச்சு.. கல்யாண் சார்புல இந்த கேஸுல நான் தலையிட்டுருக்கேன். உனக்குதான் தெரியுமே.. இன்வெஸ்டிகேடிவ் வேலையும் நான் பண்ணறேன்னு.. அதனால உன்கிட்டே கொஞ்சம் தகவல் வேணும்னு கல்யாணையும் கூப்பிட்டுண்டு வந்திருக்கேன்.”

     

    “எங்கிட்டே என்ன டாக்டர் தகவல் வேணும்? கந்தசாமிதான் போயாச்சே.. விட்டுடுங்கம்மா.. அந்த ஆளு ரொம்ப ரொம்ப மோசமானவன்மா.. அவன் போனது நல்லதுதான். நீங்களே பார்த்தீங்க இல்லம்மா.. விடுங்க..”

     

    “இல்லே சுமதி! எனக்கு சில விஷயங்கள் தெரியணும்.. இந்த வீட்டுல மூணு பேருன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாரே.. அவரே பார்த்தாரே.. இன்னொருத்தர் எங்கம்மா?”

     

    “ஓ.. என் தங்கையை கேக்கறிங்களா? அவளை இப்போ ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கேன்மா.. அடுத்த வாரம் ஆபரேஷன்மா. இதோ கல்யாண் அண்ணாதான் எல்லா செலவையும் ஏத்துண்டு இருக்கார்.”

     

    “அவ உன் தங்கையா சுமதி.”.

     

    ஆச்சரியமாக பார்த்தாள் சுமதி..

    “டாக்டர்.. விட்டுடுங்க டாக்டர்.. எதுக்கு எல்லாம் மறுபடியும் சொல்லணும்..வேண்டாம்.. விடுங்க..”

     

    “விடமுடியாது சுமதி.. நான் எங்கம்மாகிட்டயே அன்னிக்கு உனக்காக சண்டை போட்டேன் தெரியுமா.. எப்படியும் போலீசுக்குப் போயி தகவல் தெரிவிப்பேன்னு சொன்னப்போ நீ ஒரு விஷயம் சொன்னியாம்.. உனக்கும் கந்தசாமிக்கும் ஏதோ ஒரு உறவுன்னு.. நான் அன்னிக்கு விட்டுட்டேன். ஆனா போலீசுக்கு அன்னிக்கே சொல்லியிருந்தா அந்த ஆள் இன்னிக்கு ஜெயில் களி தின்னுண்டுருப்பார்.. ஒரு கொலையையும் தடுத்திருக்கலாம் இல்லையா..”

     

    அப்போது வரை சும்மா இருந்த சுமதியின் அம்மா இப்போது வந்தாள். சுமதியைத் திட்டினாள்.

     

    “எத்தனை நாளைக்கு மறைச்சு மறைச்சு வெச்சிருப்பேடி.. சொல்லிடு.. ஊருக்கெல்லாம் தெரியணும்.. இதோ கல்யாண் தம்பியும் வந்திடுச்சு இல்லே.. நம்ம மடியில கனமில்லேடி.. நமக்குப் பயமும் இல்லை..டாக்டரம்மா.. நான் சொல்லறேன்.. இதை நீங்க வெளியே சொல்லறதும் சொல்லாததும் உங்களுக்கு விட்டுடறேன்..”

     

    ‘ஆமாம் சுமதி.. எல்லாத்தையும் கோம்டி தெரிஞ்சுகட்டும்னுதான் நான் அவங்களை இங்கே அழைச்சுண்டு வந்தேன். அம்மா சொல்ற மாதிரி நம்ம மடியில என்ன கனம்? உண்மை ஊருக்கும் தெரியட்டுமே. ‘ கல்யாண் சொன்னதும் அவள் அம்மா அழுதாள். சுமதிக்கும் கூடவே கண்ணீர் வந்தது. கல்யாண் அவள் அம்மாவின் தோளைப் பற்றித் தடவிக்கொடுத்தான்.

     

    சுமதி மெதுவாகப் பேசினாள். “டாக்டரம்மா.. இது ரொம்ப வருஷக் கதை.. அந்த கந்தசாமியைப் பத்தி நான் எதுவும் இப்போவரைக்கும் பேச விரும்பலேன்னா காரணம் இருக்கும்மா.. இதோ எங்கம்மா இருக்காங்களே.. இவங்க வேற யாருமில்லேம்மா.. கந்தசாமியோட பெண்டாட்டிதான்.”

     

    கந்தசாமிக்கு கல்யாணம் ஆயிருச்சா? கோம்டி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

     

    சுமதி பெருமூச்செறிந்தாள். ‘அதாவது தாலி கட்டாத பெண்டாட்டி.. அவங்களுக்குப் பிறந்தவதான் நான்.. இதெல்லாம் கல்யாண் அண்ணாவுக்குக் கூட சமீபத்துலதான் தெரியும். எங்கம்மாவை திருச்சியில பார்த்துட்டு அவங்க ரொம்ப அழகா இருந்தாங்கன்னு எப்படியோ வளைச்சுப் பிடிச்சுக் கல்யாணம் கட்டறேன்னு பொய் சொல்லி அங்கயே யாருக்கும் தெரியாம குடும்பம் நடத்திட்டு நான் பொறந்தவுடனே எங்கம்மாகிட்ட வர்றதையே நிறுத்திட்டாரும்மா..

    எங்கம்மாக்கு என்ன பண்றதுன்னு தெரியாம என்னையும் தூக்கிண்டு அவங்க வீட்ல போய் அவங்க அப்பா அம்மாகிட்டே போய் சொல்லணும்னு போனா எங்கம்மாவை அவரே வாசல்ல நிறுத்தி எங்களை திருப்பி அனுப்பிச்சிட்டாரு. அதுக்கப்பறமா பணம் கொடுத்தாராம். எங்கம்மா அந்தப் பணத்தைத் தூக்கி அவரு மேலயே போட்டு தாலி கட்டிட்டு குழந்தைக்கு அப்பனா இருந்தா வா’ன்னு சொல்லிட்டு அவரை துரத்திட்டாங்க.. பாவம்.. அந்தாளோட இருந்த பாவத்துக்காக நான் பொறந்தாலும் எங்கம்மாவுக்கு என் மேல பாசம் அதிகம்.. நாலு வீட்டுல பத்துப் பாத்திரம் தேச்சு அதுல வந்த பணத்துலதான் என்னை வளர்த்தாங்க.. திருச்சிலயே நர்ஸிங்க் பண்ணவெச்சுட்டு வேலை பண்ண சென்னை வந்தோம்மா.. உங்க கிலினிக்லதான் எனக்கு முதல் வேலை கொடுத்தீங்க.. சந்தோஷமா பார்த்தீங்க.. எங்கம்மாவுக்கு மனசு சரியில்லாம இருந்ததாலே அடிக்கடி உடம்புக்கு ஏதாவது வரும்.”

     

    “உங்கப்பாதான் கந்தசாமின்னு உனக்கு இவங்க எப்போ சொன்னாங்க சுமதி?”

     

    “நான் உங்க கிலினிக்ல வேலை செய்யறச்சே முதல்ல தெரியாதும்மா.. எதுக்குன்னா அவரோட முகமே எனக்குத் தெரியாது, அந்த ஆளும் தனக்கு ஒரு குழந்தை பொறந்துருக்கு அது கஷ்டப்பட்டு வளருதுங்கிறது நல்லா தெரிஞ்சாலும் அந்த நினைவே இல்லாம இத்தனை வருஷம் காலம் தள்ளிட்டாரு.”

     

    “அப்போ எப்போதான் இவருதான் உன் அப்பான்னு உனக்குத் தெரிஞ்சுது. நம்ம கிலினிக்ல கிட்டதட்ட ஒருவருஷம் வேலை செஞ்சிருக்கே.. எதிர்வீடு வேறே..  ஐ மீன் என் க்லினிக்ல அன்னிக்கு சண்டை வரச்சே உன்னைத் துன்புறுத்தி எதையோ உன்கிட்டேயிருந்து பிடுங்கினாரே.. அன்னிக்கு அவரு உங்கப்பாதானு தெரியாதா?”

     

    “அன்னிக்குத் தெரியும்.. அதாவது அன்னிக்கு மூணு நாள் முன்னாடிதான் இவரோட உறவும் இவரோட கதையும் தெரியும். நான் உங்ககிட்டே வேலை பண்ணும்போதே மார்னிங்க் சமயத்துல இன்னொரு ஆஸ்பத்திரில பார்ட் டைம் வேலை பண்ணிண்டு இருந்தது உங்களுக்குத் தெரியும். அங்க எங்கம்மாவை ஒரு நாள் அட்மிட் பண்ணிட்டு க்ளூகோஸ் ஏத்திண்டிருந்தேன். அப்பதான் இந்த கந்தசாமி ஒரு சின்னப் பெண்ணைக் கூப்பிட்டுண்டு வந்து அங்க அட்மிட் செஞ்சார். அந்தப் பொண்ணுக்கு உடம்பெல்லாம் காயம். அட்மிட் பண்ணிட்டுப் போனவுடனே எங்கம்மா அவரைப் பாத்துட்டு அந்தக் கடங்காரன் இங்கே ஏண்டி வந்தான்னு என்னைக் கேட்டாங்க. விவரம் சொன்னாங்க. எங்கம்மாவை அந்த ஆள் பாக்கலே. நானும் சரியா பாக்கலே. அவரு போனவுடனே உடம்பெல்லாம் புண்ணாகிப் போன அந்த சின்னப் பொண்ணைப் போய் கேட்டேன். அந்தப் பொண்ணு ஒரே அழுகைதான். என்னம்மா சொல்லும்மான்னு ரொம்பவே பயந்து போய் ஒடுங்கிப் படுத்துடுச்சு. ஆதரவா கேக்கறச்சே அது ஒரு அனாதைப் பொண்ணு.. இங்கே ஆசிரமத்துல இருக்கறச்சே இந்த ஆள் கடற்கரைக்குப் போகலாம்னு சொல்லி கடற்கரைல மயக்க மருந்து போட்டு அப்படியே யாருக்கும் தெரியாம கார் பின்னாடி டிக்கில படுக்க வெச்சிருக்கான். தன்னைக் கடத்திண்டு போய் சின்னஞ்சிறிசுன்னு கூடப் பார்க்காமே வெறி பிடிச்ச நாயாட்டம் குதறிக் கெடுத்துட்டு அத்தோட துணியில்லாம அவளோட உடம்பை கன்னா பின்னான்னு போட்டோ எடுத்துருக்கான். அது அழுது சத்தம் போடுதுன்னு சின்னக் குழந்தைன்னுப் பாக்காம அடிச்சிருக்கான்மா. இந்த ஆஸ்பத்திரி டாக்டர் தெரிஞ்சவர்னு இங்கே வைத்தியம் பண்ணியிருக்கான். ஆசிரமப் பெண்களுக்கு இவருதான் டாக்டராம்.. வாழவேண்டிய பொண்ணும்மா.. சின்னப் பிஞ்சுக் குழந்தைம்மா அது..” என்று சொல்லிவிட்டு சுமதி அழுதாள். சுமதியின் அம்மா கூடவே அழுதாள்.

     

    கல்யாண் தலையில் கை வைத்துக் கொண்டான். “இப்படிப்பட்ட வெறிபிடிச்ச நாய் ஜன்மத்தை என்ன செய்யலாம் கோம்டி?” அவன் கண்ணிலும் கண்ணீர் வந்தது.

     

    கோம்டி கொஞ்சம் அமைதிப்படுத்தினாள்.

    “புரியுதும்மா.. அவருதான் உங்கப்பாங்கிறதுக்கு ஏதாவது அடையாளம் இருக்காமா? தப்பா நினைச்சுக்காதே.. ஒரு லீகலாவும் உலகத்துக்குத் தெரியணும் இல்லையா?”

     

    “இப்போவரைக்கும் அவர் லீகலா இருந்தாரா என்ன? இனிமேயும் அப்படியே இருந்துட்டாப் போச்சு. அதான் எனக்குத் தெரிஞ்சுடுச்சு இல்லையா.. இனிமே இவங்களை பாத்துக்கறது என் பொறுப்பு இல்லையா கோம்டி.””

     

    கல்யாண் சொன்னதை மறுத்தாள் கோம்டி. “எல்லா விஷயங்களுக்கும் சட்டபூர்வமான சாட்சி இருக்கணும். எனக்கு முக்கியமா அது வேணும்.”

     

    “எதுக்கும்மா?”

     

    “எதுக்குன்னு சொல்லறேன்.. அதுக்கு முன்னாடி என்னோட க்லினிக்லேர்ந்து உன்னைத் தர தரன்னு வெளியே இழுத்துண்டு போயி உன் ஹேண்ட்பேக்லேர்ந்து ஒரு சாமானை எடுத்துண்டார் இல்லையா அது என்ன சுமதி?”

     

    “டாக்டர்.. ஆஸ்பத்திரிலேர்ந்து விஜயா, அதுதான் அந்தப் பொண்ணோட பேரு.,. அவளைக் காப்பாத்தணும்னு முடிவு பண்ணோம்.. டாக்டர்கிட்டே பேசினேன். அவர் சொன்னாரு.. அவள் கதையைப் பத்தி.. அனாதைப் பொண்ணும்மா.. அது எங்கே போனாலும் யாரும் கவலைப் படமாட்டாங்க.. நீ அழைச்சுண்டு போய் அவளைப் பாத்துக்கறதா இருந்தா தாராளமா அழைச்சுண்டு போ. ஆனா அந்த கந்தசாமிகிடே ஒரு வார்த்தை சொல்லிடு.: அப்படின்னாரு. எனக்கு கோபம்தான் வந்துது. அந்தாள்கிட்டே போய் நான் ஏன் கேட்கணும்னு நானே அந்தப் பொண்ணை இங்கே அழைச்சுண்டு வந்துட்டேன். விஷயம் கேள்விப்பட்ட கந்தசாமி எங்கவீட்டு அட்ரஸை ஆஸ்பத்திரிலே வாங்கிண்டு தேடிண்டு வந்தார். வந்தார்னு எதுக்குச் சொல்லணும்.. வந்தான்.”

     

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி – 18

     

    திவாகர்

     

    “டாக்டர் கோம்டி’ன்னு போர்ட்’ல பார்த்தேன்.. அது நீங்கதானா..”

     

    “நீங்க யாரு சார்?. முதல்ல க்லினிக்ல வர்றதுக்கு அப்பாயிண்ட்மென்ட் வாங்கணும்னு வாசல்லயே போர்ட் போட்டுருக்கோமே.. பார்க்கலியா..”

     

    “நான் பல் கன்சல்டிங்க்கு வரல்லே.. இங்க ஒரு பொண்ணைப் பார்த்தேன். இப்போ எங்க அவ?”

     

    “மரியாதையா பேசுங்க.. அவ கிவன்னு சொன்னா நான் போலீஸைக் கூப்பிடுவேன். நீங்க யாரு? உங்க பேரு என்ன.. சரி, அதெல்லாம் வேணாம்.. நீங்க முதல்ல வெளியே கிளம்புங்க..”

     

    “இல்ல.. அவ.. அதாவது சுமதியை அந்தப் பொண்ணு உள்ள  நுழைஞ்சு போனதை நான் பார்த்தேன். சுமதி எங்கேன்னு சொல்லறியா.. இல்ல நானா தேடிக்கட்டுமா?”

     

    சாந்திக்குக் கோபம் கூடவே வந்தது.

    “மிஸ்டர்.. ஜாக்கிரதை.. க்லினிக்ல வந்து அநியாயமாப் பேசறதோட இல்லாமல் மரியாதை இல்லாம கத்தறே.. இரு இரு நான் போலீஸைக் கூப்பிடறேன்” என்று சொல்லி ஃபோனை எடுத்தாள். அதற்குள் அந்த ஃபோனைப் பிடுங்கிப் போட்டு சாந்தியின் கையைப் பிடித்து கெட்டியாக முறிக்கப் பார்த்தார்.

     

    “என்னோட சுமதியை ஒளிச்சு வெச்சுட்டு பயமுறுத்தறியா? நான் யார் தெரியுமா.. மரியாதையா சுமதியை உள்ளேயிருந்து கூப்பிடு.. இல்லே.. உங்க ரெண்டு பேரையும் பொம்பளைங்கன்னு பார்க்காம கொன்னுடுவேன்.. ஜாக்கிரதை!” என்று கத்திய கந்தசாமியைப் பார்த்து கோம்டி கத்தினாள்.

     

    “யோவ்.. அவ கையை விடுய்யா.. இப்போ வெளியே போகறியா இல்லே நாங்களே துரத்திடுவோம்.. ஹேய் சாந்தி, உன் கைல கிடைக்கிற பேப்பர் வெயிட்டால அவன் மண்டைல போடு..” இப்படிச் சொல்வதற்குள் கந்தசாமி கோம்டியைப் புறம் தள்ளி பின் கதவைத் திறந்துவிட்டு அவள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். வீட்டுக்குள் இருந்தோர் கத்தினர். அவள் அம்மாவும் அப்பாவும் கந்தசாமியைத் தடுத்தாலும் அவர்களையும் தள்ளி விட்டு இன்னொரு அறைக்குள் பதுங்கியிருந்த சுமதியை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனார். வெளியே தெருவில் இருட்டாக இருந்தாலும் அப்படியே தர தரவென இழுத்துச் சென்றவர் அவளிடமிருந்த கைப்பையைத் திறந்தார். அதிலிருந்து எதையோ எடுத்தவரிடமிருந்து அவர் கையைப் பிடித்து தன் வாயால் கடித்து அவரை விட்டு வெளியேறி சுமதி கடகடவென தெருவில் ஓட்டம் பிடித்தாள்.

     

    “என்ன திமிரு.. போ.. எனக்கு என்ன தேவையோ அது கிடைச்சிடுச்சு.. மறுபடியும் இந்தப் பக்கம் வந்தே காலை ஒடிச்சுடுவேன்.” என்று சொல்லிய கந்தசாமி இவர்களை ஏறெடுத்துப் பார்க்காமல்  தன் வீட்டுக்குள் போய் விட்டார்.

     

    “போலீசுக்கு மொபைல்ல பேசறேன்” என்று கோம்டி சொல்லும்போது அவள் அம்மா தடுத்துவிட்டாள்.

     

    “வேண்டாம்டி.. அவன் நம்மகிட்ட எதுவும் சண்டைக்கு வரவில்லே.. விடு..”

     

    கோபத்துடன் கத்தினாள். “என்னம்மா சொல்லறே.. நம்ம சாந்தியை கையைப் பிடிச்சு முறுக்கிட்டான். ‘வயலென்ஸ் அகைன்ஸ்ட் லேடீஸ்’ சட்டம் இருக்கு.. அத்தோட சுமதி நம்மகிட்ட வேலை பாக்கற பொண்ணு. அவளைக் கையைப் பிடிச்சு தரதரவெனு இழுத்துப் போயிருக்கான்.. நாளைக்கு சுமதி வந்தாள்னா இன்னும் என்னவெல்லாம் செய்வானோ? நாம பாதுகாப்பு கொடுக்க வேணாமா? இவனை சும்மா விடக்கூடாது.”

     

    “கோமதி.. கொஞ்சம் சும்மா இருக்கியா.. சுமதிக்காக அவன் வந்தான். இனிமே சுமதி இங்கே இனிமே வரமாட்டா. எதுக்கும் அவளை அவ வீட்டுல போய்ப் பாரு. அவ நம்ம  வீட்டுக்குள்ள ஓடி ஒளியறச்சே பேசினேன். கடைஞ்செடுத்த அயோக்கியனாம் அவன். ‘வெறி நாய்ம்மா’ன்னு சுமதி அழுதுண்டே சொல்லறா.. நீ ஏன்மா அவங்கிட்டே மாட்டினேன்னு கேட்டேன்.. அப்பறமா சொல்றேன்மான்னு சொல்லறச்ச அந்தக் கடங்காரன் உள்ளயே வந்துட்டான்.. சுமதி சொல்லட்டும். அதுக்கப்பறம் நாம போலீசுக்குப் போகணுமா இல்ல வேற ஏதாவது பண்ணணுமான்னு யோசிப்போம். (சாந்தியைப் பார்த்தாள்) ஏம்மா சாந்தி ரொம்ப வலிக்குதா.. தைலம் தரட்டுமா.. நாசமாதான் போவான்.. பொம்பளைப் புள்ளைன்னு கூடப் பார்க்காம கையை முறிக்கறான்.. புழுத்துச் சாவான் பாரு” அவள் அம்மா சாபம் கொடுத்தாள்.

     

    “இல்லே ஆண்ட்டி.. அவன் பிடிக்கறச்சே வலிச்சுது.. இப்போ இல்லே.. அவன் இந்த மேஜை வெயிட்டுக்கு எஸ்கேப் ஆகிட்டான். இன்னொருதடவை இப்படி வரட்டும்.. நானாச்சு அவனாச்சு..” என்று சாந்தி கையில் அந்த மேஜை வெயிட்டை வைத்தபடியே பேசினாள்.

     

    மறுபடியும் தற்காலத்துக்கு வந்தனர்.

    “ஓ! நம்மாளு இங்க இவ்வளோ ஆட்டம் ஆடியிருக்காரா.. சாந்தி! இது என்னிக்கு நடந்தது?”

     

    கோம்டியே சொன்னாள். “என்ன ஒரு நாலு மாசம் இருக்கும். எனக்கு என்ன சந்தேகம்னா அவன் எதையோ அவ கைப்பையிலிருந்து பிடிங்கிட்டான். காசா கார்டா இருக்கும்னு நினைச்சேன்.”

     

    கல்யாண் தலையை அசைத்து ஆமோதித்தான்.

    “அன்னிக்கு இந்த கோம்டி சொன்னவுடனே அந்த மேஜை வெயிட்டால பலமா அடிக்காம போயிட்டியே சாந்தி.. பொண்ணுங்கன்னா தைர்யமும் உள்ளவங்கதான்னு காமிச்சிருக்கணும். அது சரி, அந்த சுமதியைப் பாத்தீங்களா.. என்ன காரணம் சொன்னா அவ.”.

     

    “கோம்டி!  விடுடி.. அந்த ஆளே போயிட்டான்.. (சட்டென கல்யாணைப் பார்த்தவள்) சாரி, போயிட்டாரு..” சாந்தி வெறுப்புடன் சொன்னாள்.

     

    “என்ன பெரிய காரணம்.. அவ ஏதோ சொல்லி மழுப்பிட்டா.. அந்த ஆள் கைப்பைலேர்ந்து என்ன எடுத்தான்னு கேட்டதுக்கு அது ஒண்ணுமில்லேம்மா. விடுங்க அதைப் பத்தி பேச வேணாம். ஆனா அவங்கிட்டே ஜாக்கிரதையா இருங்க.. அவன் இனிமே வந்தான்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க.. அப்ப நாம் எல்லாமா சேர்ந்து போலீசுல மாட்டிவிடலாம்னு சொன்னா..  ஆனா அன்னிலேர்ந்து அவ என் க்லினிக் வரல்லே.. நானும் வேற ஆள் போட்டுட்டேன்.”

     

    “ஆனா இப்படிப்பட்ட கொடுமைக்காரன் அதுவும் மரியாதையே தெரியாதவன் ஒத்தன் செத்துப் போயிட்டான்னு தெரிஞ்சா அதுவும் உங்க பெரியப்பாவா இல்லாத பட்சத்தில் என்ன நீங்க நினைப்பீங்களோ அதே நினைப்புதான் எங்களுக்கும் இருக்கு,” சாந்தி இப்படிச் சொல்லியதும் கோம்டி தலையை ஆட்டினாள்.,,

     

    “கந்தசாமி.. அதான் உங்க பெரியப்பா கொலையானார்னு வைசாக்லேர்ந்து திரும்பிவந்த அன்னிக்குக் காலைல  எனக்குத் தெரிஞ்சவுடனே நான், சாந்தி ஏன் எங்கம்மா எங்கப்பா கூட கொஞ்சம் சந்தோஷப்பட்டோம்தான். ஆனா எனக்கு உங்களோட பெரியப்பாதான் அந்த ஆளுன்னு தெரிஞ்சவுடனே அன்னிக்கு சாயங்காலம் வந்து துக்கம் விசாரிச்சேன். இந்த கேஸ் எடுத்த மூணாம் நாளே இன்ஸ்பெக்டர் என்னை சுமதியைப் பாக்கச் சொல்லி விசாரிக்கச் சொன்னாரு. ஏன்.. இன்னிக்குக் கூட அதைத்தான் கேட்டாரு. சுமதியை விசாரிக்கணும்னு அவரே ஒருதடவை உங்ககூட போனாரு. ஆனா நான் இப்போ வரைக்கும் போகலே.. எதுக்குன்னா எனக்கு அவ விஷயம் தெரியும். அவ இந்தக் கொலையைப் பண்ணியிருக்க வாய்ப்பே இல்லே. சாதாரணமா அந்த ஆளையே பார்க்கமாட்டேன்னு பிடிவாதமா இருந்தவ துப்பாக்கியாலே இந்த வீட்டுக்கு வந்து ஏன் சுடணும்,, அவகிட்ட போனா பழையபடி ஏதாவது பொம்பளை அவஸ்தப்பட்ட கதைதான் கிடைக்கும்னு தெரிஞ்சுபோச்சு.”

     

    “கோம்டி நீங்க சொல்லறது வாஸ்தவம்தான். சுமதி கொலை பண்ணியிருக்க வாய்ப்பே இல்லைன்னு நானே இன்ஸ்பெக்டருக்குச் சொன்னேன்.”

     

    “நானும் கவனிச்சேன் அதை. ஆனா அதை விட கூடவே இருக்கற இந்த பசங்க முரளி சுந்தரைப் பிடிச்சா நிறைய விஷயம் கிடைக்கும்னுதான் இவங்களை ஃபாலோ பண்ணேன்.. சரி, போஸ்ட் மார்ட்டம் பிரகாரம் சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஒரு குண்டு மார்புலயும் இன்னொரு குண்டு சாயங்காலம் அஞ்சறை மணிக்கு நல்லா ஆழமா நெத்திப் பொட்டுலேயும் போயிருக்கு.. மார்ல பாய்ஞ்ச குண்டு வலது மார்பு ஓரத்துல பட்டதுனாலே இதயத்துக்கு ஆபத்தில்லாம பொழைச்சுப்போக வாய்ப்பிருக்கு இல்லையா.. ஆனா அரைமணி நேரத்துக்கு அப்பறம் பாய்ஞ்ச குண்டு அவர் உயிரைக் குடிச்சுடுச்சு. இது எப்படி நடந்ததுன்னு ப்ரூவ் பண்ணினோம்னா கேஸ் குலோஸ். எல்லா ஆங்கிளும் செக் பண்ணி என்னோட ரிப்போர்ட்டை நாளைக்கு அடுத்தநாள் தர்றேன்.”.

     

    சாந்தி குறுக்கிட்டாள்.

     

    “நாளைக்கு கேஸ் முடிஞ்சுடுமாடி?”

     

    “அது தெரியாது. நாம டீடெயில் ரிப்போர்ட் கொடுக்கவேண்டியது நம்ம கடமை. அதை பூர்த்தி பண்ணி நாம ஒதுங்கிடலாம். பொதுவா என்னோட எல்லா வேலையும் அப்படித்தான் இருக்கும்.  நான் இன்வெஸ்டிகேஷன் மட்டும்தான் பார்க்கிறேன். லாயர் இல்லையே.. முடிஞ்சவரைக்கும் தகவல் திரட்டி ஆதாரத்தோடு பார்ட்டிகிட்ட கொடுத்தா அதுக்கப்பறம் அவங்க நடக்க வேண்டியதைப் பார்த்துப்பாங்க.. நான் என் ஃபீஸை வாங்கிண்டு கழண்டுண்டு வரவேண்டியதுதான்.. இதே முடிவுதான் கல்யாண் பெரியப்பா கேஸ்லயும்… நாளைக்கு நான் என் வேலையை முடிச்சுடறேன். அதுக்கு முன்னாடி கல்யாண் ரெண்டு வேலை பண்ணனும்.”

     

    “என்ன வேலை?”

     

    “நாளைக்குக் காலையில சுந்தர் வந்து ரிப்போர்ட் தருவான்.  அவன் வந்தவுடனே அந்த ஸ்டேட்மெண்டை வாங்கி வெச்சுக்குங்க. நாளைக்கு ஒரு நாள் போகட்டும். நாளன்னிக்கு சுந்தர், முரளியும் பிரியாவையும் வரச் சொல்லுங்க.. பிரியா எதுக்குன்னு முரளி கேட்கலாம். ஒரு சாட்சிக்குதான்னு சொல்லணும். நான் இன்ஸ்பெக்டரையும் ரெடியா வரச் சொல்லறேன்.. ஒரு ஃபைனல் மீடிங்க் போட்டு முடிச்சிடப் பாக்கலாம். என்னோட செக்கையும் ரெடி பண்ணி வெச்சுக்குங்க.. நான் கழண்டுக்கறேன்.. ஓகேவா?”

     

    “எனக்குப் புரியறது.. ஆனா நான் ஃபோன் பண்ணினவுடனே ஒருவேளை சந்தேகப்படறாங்களோன்னு தெரிஞ்சு இவங்க எஸ்கேப் ஆகிட்டா?”

     

    “யாரும் எஸ்கேப் ஆகமாட்டாங்க. நான் நீங்க இங்க வர்றதுக்கு முன்னாடிதான் இன்ஸ்பெக்டர் மோகன்கிட்ட பேசினேன். முரளிக்கும் சுந்தருக்கும் ஒரு இருபத்து நான்கு மணி நேரக் கண்காணிப்பு தேவை.. இப்பவே ஏற்பாடு செய்யுங்கன்னு சொல்லி இருக்கேன்.”

     

    கடைசியில் ஒரு முத்தாய்ப்பாக ஒரு வார்த்தை சொன்னாள்

     

    “யாரு எஸ்கேப் ஆனாலும் ஆகாவிட்டாலும் நான் இந்த கேஸுலேர்ந்து சீக்கிரமே எஸ்கேப்.”

     

    ஏதோ ஒரு ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்தான் கல்யாண்.

     

    அடுத்த நாள் காலை போலீஸ் ஸ்டேஷன்

     

    இன்ஸ்பெக்டர் மோகனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் கோம்டி

     

    “நீங்க கேட்கிறது புரியறது.. இதோ பாருங்க கோமதி..”

     

    “சார்.. நான் கோம்டி.. கந்தசாமி இறந்த நேரம் நிச்சயமா சாயங்காலம் அஞ்சரை மணிக்குத்தானான்னு கேட்டேனே..”

     

    இன்ஸ்பெக்டர் கொஞ்சம் அலுப்புடன் பேசுகிறார். “சரிம்மா கோம்டி.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல அவர் இறந்த நேரம் ஈவ்னிங்க் 5.30 இருக்கணும்னு சொல்லறாங்க.. முதல் குண்டு ஏறத்தாழ அஞ்சு மணிக்கும் இரண்டாவது குண்டு அஞ்சரை மணிக்கும் பாய்ஞ்சிருக்கணும்னு சொல்லறாங்க.. முதல் குண்டு மார்புல அதுவும் வலது மார்புல ஓரத்துல விலா எலும்பு வரைக்கும் கூட ஆழமா இல்லாம பாயறச்சே ரத்த சேதம் மார்புல ரொம்ப அதிகமா இல்லே.. அப்போ அவர் உயிர் போகலே.. அத்தோட மார்பு ரத்தம்தான் அவர் கையிலயும் அதே கைரேகைதான் பீரோ ஹேண்டில்லயும் இருக்கு.. இன்னொண்ணு என்னன்னா ரொம்ப கிட்டக்கலேர்ந்து பிஸ்டல சாச்சு சுடப்பட்டிருக்கவேண்டும். பிஸ்டல்  ஸ்லான்ட் பொஸிஷன்ல சுடறச்சே அதனோட வேகம் ரொம்ப குறச்சலாவே பாய்ஞ்சிருக்கு. ஆனா அரை மணி நேரத்துக்குப் பின்ன பாய்ஞ்ச அடுத்த குண்டு நெத்திப் பொட்டுல துப்பாக்கியை அழுத்தி சுட்டதில அது சரியா சுடப்பட்டு உடனடியா உயிரைக் குடிச்சிருச்சு. இவ்வளவுதான்.. அது நடந்த நேரம் அஞ்சறை மணிக்கு…”

     

    “அது எனக்கு ஓரளவு தெளிவைக் கொடுத்துருக்கு சார். நாளைக்குக் காலைல பதினோறு மணிக்கு  நானும் நீங்களும் கல்யாண் வீட்டுல ஒரு ஃபைனல் மீடிங்க் போடலாம். யாரார் மேலே சந்தேகம் பண்றோமா அவங்கள்லாம் வராங்க.. நீங்க ஃபைனல் அதாரிடி.. அதுக்கப்பறம் உங்க முடிவு என்னவா இருந்தாலும் அதை நீங்க எடுத்துக்கலாம்.”

     

    “ஓகே கோம.. சாரி.  கோம்டி..” என்றவர் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்.

     

    “நீங்க சுந்தருக்கும் முரளிக்கும் கண்காணிப்புப் போடணும்னு கேட்டது ரொம்பச் சரி. காலைலே சுந்தர் அவசரம் அவசரமா வீட்டை விட்டு வெளியே போயிருக்கான். எஸ்கேப் பண்ணப் பாத்துருக்கான் அவனை ஃபால்லோ பண்ணின கான்ஸ்டபிள் அவனை அப்போதான் பிடிச்சிருக்கார். ஸ்டேஷனுக்குக் கொண்டு வரதா சொல்லியிருக்கார். “அவன் தப்பிக்கதான் பார்த்திருக்கான் சார்.. நல்லகாலம் அதுக்குள்ளே பிடிச்சுட்டோம்”னார்.. அதனால சுந்தர் வந்தா இங்கேயே இருக்க வெச்சுடறேன்.. நாளைக்குக் காலைல நான் வரச்சே அவனைக் கொண்டு வர்றேன்..”

     

    “ஓ.. சுந்தர் ஏன் தப்பிக்கப் பாக்கணும்.. இருந்தாலும் நீங்க பிடிச்சது நல்லதுதான்..ஓகே சார்..”

     

    அவள் வெளியேறும்போதுதான் பார்க்கிறாள் அங்கே வெயிட்டிங்க் பெஞ்சில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருப்பதையும் இன்ஸ்பெக்டர் அழைப்பதாகச் சொன்னதும் அவன் எழுந்து நடப்பதையும் பார்க்கிறாள். சற்று கால் ஊனமாக இருந்து மெதுவாக நடந்து செல்வதையும் கவனிக்கிறாள். இருந்தாலும் வெளியே போகிறாள். மனதுக்குள் ஏதோ இடிக்க வெளியே சற்று நேரம் காத்திருக்கிறாள். அங்கே உள்ளே இருந்தவன் வெளியே வந்து அவளைக் கடந்து போகையில் அவனை நிப்பாட்டுகிறாள். மெல்லிய குரலில் கூப்பிடுகிறாள்.

     

    “மிஸ்டர் திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி…”

     

    சட்டென நிற்கிறான் அவன். அவளைப் பார்த்து ஆச்சரியமாக கேட்கிறான்.

     

    “அட, என் முழுப் பேரும் வெச்சுக் கூப்பிடறீங்க.. என்னைத் தெரியுமா?”

     

    “ஓ! உங்களைத் தெரியுமே.. உங்களை நான் பார்த்திருக்கிறேனே.. என்னை ஞாபகம் இல்லையா?”

     

    அவன் முழித்தான்..

     

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 17

     

    திவாகர்

     

    இல்லம்மா.. காரணம் என்னன்னா திருச்சிலேர்ந்து இந்தப் பொண்ணை அனுப்பி வெச்சது கந்தசாமிதான். அவங்களை அடிக்கடி வந்த் பார்க்கறதும் அவர்தான். சுந்தரை அறிமுகம் பண்ணி வெச்சு இங்க வேலை பண்ண வெச்சதும் அவர்தான். சுந்தருக்கு நாங்க எதும் பணம் தர்றது இல்லே.. ஆனா சுந்தர் வந்து எல்லா வேலையும் செஞ்சு கொடுப்பார். அதனால் எனக்கு அவங்க பேசினதுல ஒரு சந்தேகமும் வரல்லைம்மா. அன்னிக்கு அவர் சுந்தர்கிட்ட கெஞ்சினது கூட சந்தேகமா படலே..

     

    “அவ்வளவுதானா நடந்தது?”

     

    “பிராயச்சித்தம்னு சொன்னீங்களே.. அதை இங்கேயே ஆரம்பிக்கலாமேன்னு சொன்னார் சுந்தர். உடனே எங்கிட்டே சொன்னாரு.. அவரோட பிள்ளை கல்யாண் வந்தவுடனே அவரோடு பேசி பத்துலட்சம் ரூபா இந்த ஆசிரமத்துக்கு தரேன்னு எனக்குச் சொன்னார். நான் அதுக்கு, ரொம்ப சந்தோஷம்.. நீங்க சுந்தர் கையில கொடுத்தீங்கன்னா அவர் பேங்க்ல அக்கௌண்ட்ல போட்டுடுவார். ரசீதும் கொடுப்பார்’னு சொன்னேன். அவர் கையைப் பிடிச்சு மெதுவா கார்ல அழைச்சுட்டு சுந்தர் போயிட்டாரு.”

     

    “ஓ! அது சரி, உங்க ஆசிரமத்துக்கு யார் ஓனர்? அதாவது யாராவது முக்கியமானவங்க இதைக் கவனிப்பாங்க இல்லையா.. அவங்க யாரு?”

     

    “பாலபாலிகா’ங்கிறதே தெலுங்குப் பேருதாம்மா..  சிறுவர் சிறுமியர்னு தமிழ்ல சொல்லுவாங்க.  பேருதான் பால பாலிகா.. பசங்க யாரும் சேர்க்கறதில்லே. நெல்லூர்லேர்ந்து சென்னைக்கு வந்த ஒரு ரெட்டிகாரு ஆரம்பிச்சாரு. அவரோட பில்டிங்க்தான். அவரு இப்போ இல்லை. அவரு பசங்க எப்போதாவது வருவாங்க. கொஞ்சம் பேங்க்ல பணம் போடுவாங்க. இங்க இருக்கறவங்க அத்தனை பேருக்கும் விருந்து கொடுப்பாங்க, எனக்கு மாச சம்பளம் கரெக்டா அனுப்பி வெப்பாங்க்க.. இங்க வந்தா சந்தோஷமா எல்லாரும் இருக்கறதைப் பார்த்துத் திருப்தியா போயிடுவாங்க. வருஷா வருஷம் ஆடிட்டர் இவங்களுக்கு பேப்பர் அனுப்பி கையெழுத்துக் கேட்பாரு. அவங்களும் போட்டு அனுப்புவாரு. எல்லாம் சுந்தர் சரியா பார்த்துக்குவாருங்க..”

     

    “ரொம்ப சந்தோஷம் பெரியவரே.. அந்த ரசீது புக் கிடைச்சுதுன்னா நல்லது.. சுந்தர் எப்போ வந்து எப்போ தருவாரோ.. நாங்களே அந்த மேஜை டிராயரை ஓபன் பண்ண டிரை பண்ணலாமா.. ஒரு ஸ்க்ரூ டிரைவர் இருந்தா கொடுங்க..”

     

    “தாராளமா டிரை பண்ணுங்கம்மா.. அதுல அக்கௌண்ட் புக்குங்க,  ரசீது புக் இருக்கும். ஸ்க்ரூ டிரைவர் இருக்கும்மா.. முயற்சி பண்ணிப் பாருங்க..!

     

    என்ற பெரியவர் ஸ்க்ரூடிரைவரைக் கொடுத்தார். அந்த மேஜையின் சாவித் துவாரத்தில் ஸ்க்ரூடிரைவரை வைத்துப் பார்த்துத் திருகினாள். முதலில் முடியவில்லை. சாந்தியும் உதவி செய்தாள். இரு பெண்களும் முயற்சி செய்வதைப் பார்த்து அந்தப் பெரியவர்

     

    “இன்னொரு ஸ்க்ரூடிரைவர் கொஞ்சம் பெரிசா இருக்கா பாக்கறேன்மா..” என்று சொல்லி விட்டு உள்ளே போனார். அவர் உள்ளே போனதும் இன்னொரு முயற்சியை சாந்தி செய்யும்போது மேஜை திறந்து கொண்டது. மேஜைக்குள் துழாவினால் டக்கென்று ஒரு மொபைல் கையில் பட அதை உடனடியாக எடுத்தாள். சாந்தியின் கையிலிருந்து சடக்கென பிடுங்கி தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள் கோம்டி. அதற்குள் இன்னொரு ஸ்க்ரூ டிரைவருடன் வந்தவர் மேஜை டிராயர் திறக்கப்பட்டதைக் கண்டவர், அவர்களை நகரச் சொல்லிவிட்டு ரசீது புத்தகத்தை எடுத்து அவர்களிடம் தந்தார். கோம்டி அவர் கொடுத்த புத்தகத்தைப் புரட்டி கடைசி  நான்கு மாதங்களில் வரவு வைக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்தாள். சில ரசீது காப்பிகளை தன் மொபைல் ஃபோனில் படம் பிடித்துக் கொண்டாள். புத்தகத்தை அவரிடம் கொடுத்து மேஜையை பழையபடி மூடச் சொன்னார். உள்ளே மூடப்பட்டதும் அது மறுபடியும் பழையபடி லாக்காகி விட்டதைச் சொன்னார்.

     

    “நல்லதுதான். எங்களுக்கு சுந்தர் மேல சில சந்தேகம் இருக்கு.. அதனால நீங்க நான் வந்து உங்களை விசாரித்தது பற்றி சுந்தர்கிட்டே சொல்லவேண்டாம். மீறிச் சொன்னீங்கன்னா இந்த வயசுல உங்களை சாட்சிக்காக போலீஸ் ஸ்டேஷன் வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துவாங்க.. உங்க மேல எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லே.. இந்த ரசீதுகளைப் பாக்கறச்சே சுந்தரைத்தான் சந்தேகப்படணும்.. எதுக்கும் உங்க பேங்கர் யாரு? ஸ்டேட் பேங்க்தானே.. அங்க அக்கௌண்ட் நம்பர் மாத்திரம் கொடுங்க.. நான் செக் பண்ணிக்கிறேன்.”

     

    அக்கௌண்ட் நம்பரை வாங்கிக் கொண்டு அவரிடம் ஒரு நன்றியையும் சொல்லிவிட்டு வெளியே வந்தனர். வண்டியில் ஏறுவதற்கு முன் இன்னொரு சிநேகிதிக்கு ஃபோன் செய்தாள்.

     

    “வித்யா.. பேங்க்ல இருக்கியா? ரொம்ப நல்லதா போச்சு. ஒரு கேஸுக்காக ஒரு அக்கௌண்ட் நம்பரைச் செக் பண்ணனும். நான் அக்கௌண்ட் நம்பர் மெஸேஜ் பண்ணறேன். எனக்கு ஒரு நாலு மாச ஸ்டேட்மெண்ட் வேணும்.. இல்லே.. பெரிசால்லாம் இருக்காது, எனக்குத் தெரிஞ்சு ஒரு பக்கம்தான் வரும். என் வாட்ஸாப் நம்பருக்கு அனுப்பேன்.. ரொம்ப தேங்க்ஸ் வித்யா.”

     

    ஃபோனில் மெஸேஜ் செய்தவள் கொஞ்சம் திருப்தியுடன் வண்டியில் ஏறினாள்.

    “சாந்தி, இப்போ பேசினது என் கஸின் வித்யாகிட்டே.. அவ மௌண்ட் ரோடு பிராஞ்ச் எஸ் பி ஐலதான் வேலை பண்றா. சில கேஸுங்கள்ல இந்த பண பரிமாற்றம்னு சொல்லுவாங்க.. அது ஒண்ணே சாட்சியா வேலை பெரிசா உதவும்.. பார்க்கலாம்.”

     

     

    கோம்டி வீட்டின் கிலினிக் (பின் மாலை நேரம்)

     

    சாந்தியும் கோம்டியும் கிலினிக் இல் சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாந்தி கிலினிக்கில் இருந்த கல்யாணின் ஃபோட்டோவைக் காட்டி சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.

     

    “இப்போதாண்டி உன் கிலினிக்குக்கு ஒரு களையே வந்திருக்குடி.. எத்துப்பல்லன் இதைப் பார்த்தா என்ன சொல்வானோ?”

     

    “என்ன சொல்வான்? என் போட்டோவைப் போட்டா தனக்கு மாடலிங்க் ஃபீஸா பத்தாயிரம் கொடுன்னு கேட்பான்..”

     

    “சரியா அவனை எடை போட்டுருக்கே.. பல்லழகன் கேட்டாலும் கேட்பான். சரி, எவ்வளோ தூரம் வந்திருக்குடி இப்போ அவனோட கேஸ்..? இந்த ஆசிரமத்து விசிட்ல ரொம்ப உபயோகமா இருந்தது அந்த ஆப்பிள் ஃபோன் கிடைச்சதுதான் நம்ம லக். சுந்தர் நல்ல சாமர்த்தியக்காரன்தான்.  அவன் வீட்ல ஒருவேளை போலீஸ் சோதனை போட்டா கிடைக்குமேன்னு பயந்து அதை ஆசிரமத்துல ஒளிச்சு வெச்சிருக்கான். ஆனா அந்த ஃபோனை இன்னொரு தடவை எனக்குக் காமிக்காதேடி.. ரொம்ப அருவருப்பா இருக்கு. பாவம் அந்த சின்னப் பிள்ளைங்கல்லாம்.”

     

    “எஸ்.. ஆனா உலகம் இப்படித்தாண்டி இருக்கு. போகப் போக இன்னும் குரூரமா கூட ஆகலாம். பெண்கள்ங்கிறது ஆண்களுக்கு என்னிக்குமே போகப் பொருள்தான்.. ஆண்களோட வக்கிரபுத்திக்கு எப்பவுமே பெண்கள்தான் பலி. இதுக்கெல்லாம் முடிவு கிடைக்குமாங்கிறதெல்லாம் சொல்லவே முடியாது.. சுந்தர் மேல வலுவா இப்போ சாட்சிகள் திரும்பியிருக்கு.. ஆனா அவன் இந்தக் கொலையை ஏன் பண்ணனும்? அவனைப் பொறுத்தவரை மொராலிடி பாக்கறான்னு சொன்னாலும் நாலு மாசமா அவங்க பெரியப்பாகிட்டே காசு வாங்கறான். இப்போ பத்து லட்சம் வாங்கிருக்கான்.. ஆனா ரசீது புக்ல எல்லாமே சரியா இருந்தாலும் ஆசிரம அக்கௌண்ட்லதான் அந்தளவு அமௌண்ட் இல்லே.. ஸோ அவங்க மாமா கொடுத்த பணமெல்லாம் அவன் எடுத்துக்கறான்.. ஆசிரம அக்கௌண்டையும் அவனே பாக்கறதினாலே அதை அட்ஜஸ்ட் பண்ணிடறான்.  இங்க அவன் நிச்சயமா மாட்டுவான். மாமா கொடுமையையையும் குரூர புத்தியையும் இவனுக்கு வரவு, அதாவது வருமானம்தானே? அப்போ இவன் ஏன் கொலை பண்ணனும்.. ஆனா இது சீக்கிரம் முடிவுக்கு வந்துடும். சீக்கிரமே இன்ஸ்பெக்டரை முன் வெச்சே நாம சேகரிச்ச விவரம்லாம் கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் போலீஸ் என்னவேணா ஆக்ஷன் எடுக்கட்டும்.  ஆனா எனக்கு இதுல ஒரு திருப்தி என்னன்னா இந்த கல்யாணுக்கு இப்போ அவன் பெரியப்பாவைப் பத்தியெல்லாம் உண்மை தெரியத் தெரிய வெறுப்பு ஜாஸ்தியாயிருக்கு. டிரெயின்ல வரச்சே என்னவெல்லாம் புகழ்ந்தான் தெரியுமா..”

     

    “அது சரி! அவனுக்குச் சொல்லிட்டியா?”

     

    “எதை?”

     

    “அதாண்டி.. அவங்க பெரியப்பனோட இங்க நடந்த கதையை..”

     

    “சொல்லலே.. இன்னும் அதுக்கு வேளை வரல்லேடி..”

     

    கதவைத் தட்டும் சப்தம் கேட்கிறது. நர்ஸ் வந்து நிற்கிறாள்.

     

    “அம்மா.. நான் கிளம்பட்டுமா.. வெளியே ஒரு ஆள் உட்கார்ந்திருக்கிறார். நீங்க வரதுக்கு முன்னாடி ஒரு தடவை வந்து கூட கேட்டுட்டுப் போனார். அவர் பல் தெத்துப்பல்லுனு பேசினாலே தெரியுது.. பெரிய கேஸ்..” என்று சொல்லியவள் சட்டென அந்த ஃப்ரேம் போட்டோவைப் பார்க்கிறாள்..

     

    “அம்மா.. இந்தாள்தான் வெளியே உட்கார்ந்திருக்காரு. ஒரு ஆள்தான்.. ஆமாம்.. இந்த ஆளுக்கு இன்னிக்கு அப்பாயிண்ட்மென்ட் ஃபோன்ல கொடுத்தீங்களா? மயக்க மருந்து காலி ஆயிடுச்சும்மா.. நாளைக்கு வரச்சே வாங்கிவரேன். நாளைக்கு வரச் சொல்லட்டுமா.. டாக்டர் இன்னிக்கு பிஸின்னு சொல்லிடறேன்..”

     

    “இரு இரு.. அந்தாளை உள்ள அனுப்பு.. அவரு ஆபரேஷனுக்காக வரலே..”

     

    சாந்தி குறுக்கிடுகிறாள். “ஆமா! அதுக்கும் வேளை வரணுமில்லே” என்று சொல்லி விட்டு சிரிக்கிறாள்.

     

    உள்ளே கல்யாண் வருகிறான். நர்ஸ் பெண் மறுபடி உள்ளே வந்து வீட்டுக்குப் போக அனுமதி கேட்கிறாள்.

     

    “சரி, போயிட்டு வா..” என்று கோம்டி சொல்ல அவள் கிளம்புகிறாள். கல்யாண் தன் போட்டோவை அங்கே பார்த்து சிரிக்கிறான். சாந்தி அலறுகிறாள். கோம்டி அவனைப் பார்க்கிறாள்.

     

    “கல்யாண், சிரிச்சீங்களா.. சாந்திக்குக் குழந்தை மனசு.. குழந்தையைப் போலவே பயப்படறா பாருங்க.. தயவு செய்து சிரிக்காம பேசுங்க..”

     

    “அது எப்படி? அன்னிக்கு என்னமோ வாயை மூடிப் பேசு’ன்னீங்க.. இன்னிக்கு என்னவோ சிரிக்காம பேசு’ன்னு சொல்லறீங்க.. இதெல்லாம் முடியுமா? அடச்சே ஒரு மனுஷனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைச்சுதுன்னா ஜனங்களுக்குப் பொறுக்காது..”

     

    “ஸார்.. டைரக்டாவே சொல்லுங்க! மறைமுகமா பேசாதீங்க! என்ன பொறுக்காது எங்களுக்கு? நாங்க ரெண்டு பேருமே டெண்டல் சர்ஜன்ஸ்.. அதுவும் டெண்டல் சர்ஜரில டாப் ஸ்டூடென்ட்ஸ்னு பேரு வாங்கினவங்க.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க.. சாந்தி அடுத்த மாசம் யூ எஸ்’க்குப் போறா.. அவளுக்கும் ஒரு நல்ல சர்ஜரி பண்ண எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்.. என்னடி சாந்தி சொல்லறே?”

     

    “நான் இப்பவே ரெடி.. சாருக்கு வசதி எப்படி?”

     

    “ஐய்யய்யோ.. என்னங்க . நான் உங்க க்ளயண்ட்தான்.. அது இன்வெஸ்டிகேஷன் விஷயத்துலதான்.. டெண்டல் க்ளையண்டோ பேஷண்டோ இல்லே. உங்களுக்கு டெண்டல் கேஸ் கிடைக்கலேன்னா நானா கிடைச்சேன்.. அதுவும் என் அதிர்ஷ்டத்தை இழக்கறதுக்கு சம்மதம் தருவேனா.. (தன் ஃப்ரேம் செய்யப்பட்ட படத்தைக் காண்பித்து) பாருங்க என் பல்லாலே உங்க கிலினிக்கோட களையே எங்கயோ போயிடுத்து. சாயங்காலம் இங்க ஒருதடவை வந்தப்போ கூட பார்த்தேன்.. உள்ளாற ஒரு பேஷண்ட்.. வெளியே மூணு பேஷண்ட் வெயிட்டிங்க்.. எல்லாம் என் படத்தாலே அதுவும் என் பல்லாலே வந்த அதிர்ஷ்டம்.  அந்த அதிர்ஷ்டத்தை நீங்க அடைஞ்சிருக்கீங்க.. நார்மலா இந்தப் படம் கொடுத்ததுக்கு நான் ஃபீஸ் வாங்கணும்.. நீங்க ஃப்ரெண்டாயிட்டிங்க.. ஃப்ரீயா வெச்சுக்குங்க.. ஆமா.. இந்தப்படம் அன்னிக்கு ஸெல்ஃபீ எடுத்ததுதானே.. எங்கூட நீங்களும் இருந்தீங்களே.. உங்களைக் கட் பண்ணி எடுத்துட்டு என்னை மாத்திரம் தனியா என் அதிர்ஷ்டப்பல்லுக்காகப் போட்டிருக்கீங்க.. ஊம்ஹூம்.. இன்னும் நல்லா அழகா பெரிசா சிரிச்சபடி எடுத்துருக்கலாம்.  ஏங்க.. ‘எனக்கு விளம்பரம் வேணும், உங்க போட்டோ சிரிச்சபடி போஸ் கொடுங்க’ன்னா இன்னும் இதை விட சூபரா கொடுத்திருப்பேனே,, இன்வெஸ்டிகேஷன்ல சூபரா இருக்கற உங்க அறிவு இந்த டெண்டல் பிராக்டீஸ்ல போறல.. ம்..”

     

    கோபமாகப் பார்த்தாள் கோம்டி. “போதுமே உங்க பல் புராணம். எங்களுக்கும் இந்த போஸ் போதும்.. இன்னும் நல்லா சிரிச்சீங்கன்னா அதை ஃப்ரேம் பண்ணிப் போட்டோ போட்டோம்னா க்லினிக்குக்கு குழந்தைங்க வந்தா பயப்படுவாங்க.. பெரியவங்க வந்தா எதுக்குங்க இந்த திருஷ்டிப் பரிகார போட்டோ’ன்னுவாங்க.. நாங்க சொல்லறதைக் கேட்டு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்து அந்த எத்துப் பல்லுங்களை ரிமூவ் பண்ணுங்க..”

     

    “முடியாத விஷயத்தை மறுபடி மறுபடி பேசி எதுக்குங்க நமக்குள்ள இந்த விளையாட்டு?  ஆமாம் சாந்தி யூ எஸ் போறாங்களா? எனக்குக்கூட யூஎஸ் பி1 விஸா இருக்குங்க.. நானும் உங்க கூட வரட்டா?”

     

    “கூட வரலாம்.. ஆனா முதல்ல உங்க கேஸ் முடிங்க.. அப்பறம் யூ எஸ் பத்திப் பேசலாம். பாருங்க நான் இவளுக்குக் கூட விஸா போட்டு வாங்கியிருக்கேன்.. ஆனா அவ என்ன சொல்லறா? அவ முதல் பிரெஃபெரன்ஸ் உங்க பெரியப்பா கேஸாம்.. ஆக்சுவலா அது உங்க கேஸ்.. நீங்க நடுவுல விட்டுட்டு என்னோட வரேன்னு சொல்லறீங்க.. ஆனா இவளைப் பாருங்க.. ஒரு டெடிகேடிவ் டிடக்டிவா எப்படி சூபரா வேலை செய்யறா தெரியுமா?”

     

    அதே சமயம் கிலினிக்கில் தான் உட்கார்ந்திருக்கும் இடத்தின் பின்னால் ஒரு மூலையில் இன்னொரு படம் ஃப்ரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். கோம்டியின் கிலினிக்கில் ஒரு நர்ஸ் ஒரு நோயாளியின் பல்லை சுளுவாக எடுப்பதைத் தத்ரூபமாக படம் எடுத்து மாட்டியிருந்தாள் கோம்டி. அந்தப் படத்தைப் பார்த்து முகம் சுளித்தான்.

     

    “என்ன சார் அந்தப் படத்தைப் பார்த்தவுடன் பயம் வந்திடுச்சா? பல் எடுக்கறது ரொம்ப ஈஸின்னு காமிக்கற படம்.. நீங்க பயப்பட வேணாம்.”

     

    சாந்தியை இடைமறித்தான் கல்யாண்.

    “இல்ல..  படத்துல அந்த நர்ஸ்.. அதான் சுமதி.. எப்படி இங்கே?”

     

    கோம்டி புன்னகைத்தாள். “ஸோ. இந்த சுமதியும்  உங்க கேஸ்ல வர சுமதியும் ஒண்ணுதான் இல்லையா?”

     

    “ஆமா..” அவன் தலையசைத்தான். “ஆனா அவள்.. இங்கே.. எப்படி?”

     

    கோம்டி தன் நாற்காலியில் சாய்ந்துகொண்டு விவரித்தாள்.

    “யெஸ்.. சுமதி எங்கிட்டேதான் முதன்முதலா நர்ஸா ஜாயின் ஆயி வேலை செஞ்சா.. ஒரு வருஷம் வரைக்கும் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு அவ இருந்தா.. சாயங்காலம் நாலு மணிக்கு உள்ள வந்தாள்ன்னா ராத்திரி எட்டு ஒன்பது மணி வரைக்கும் அவளுக்கு இங்கே ட்யூடி. இங்கயேதான் இருப்பா.. வாரத்துக்கு ரெண்டு நாள் லீவு வேணும்னு முதல்லயே சொல்லி வீக் எண்ட்ல லீவுல போயிடுவா.. எல்லாம் நல்லபடியா போயிண்டுதான் இருந்தது.. உங்க பெரியப்பா கண்ல படறவரை.”

     

    கல்யாண் சோகமான முகத்துடன் பார்த்தான். கோம்டி அவனைப் பார்த்துக் கொண்டே பேசினாள். “உங்க பெரியப்பா ஒரு நாள் சாயங்காலம் என்னோட கிலினிக் வாசல்ல எதேச்சையா நிக்கற சுமதியைப் பார்த்துட்டு இங்கே வந்தார். உடனே அவர் வர்றதைப் பார்த்த சுமதி என் ரூமுக்கு இங்கதான் வந்தா. அப்போ இதோ சாந்தியும் கூடவே இருந்தா..  மிஸ்டர் கல்யாண் நீங்க அவ கதையையும் அடுத்து நடந்த நிகழ்ச்சியையும் தெரிஞ்சுக்கணுமே.”

     

    நிகழ்ச்சி நான்கு மாதம் முன்பு நடந்ததற்கு மாறுகிறது. அதே இடம்..கோம்டியின் கிலினிக்.

     

    உள்ளே சாந்தியும்  கோம்டியும் உட்கார்ந்தபோது சுமதி பரபரப்பாக வருகிறாள். அவள் கையில் கைப்பை இருக்கிறது. வார்த்தையில் வேகம் தெரிந்தது. கண்களும் அவள் குரலோடு சேர்ந்து கெஞ்சின.

    “அம்மா.. என்னைப் பார்த்துட்டு உங்க எதிர்வீட்டுக்காரன் வரான்மா.. நான் கிளம்பறேன்மா.. ஆனா அவன் போகணும்.. நான் உங்க வீட்டுக்குள்ளே பின் வழியா போயிடறேன்.. என்னைப் பத்தித் தெரியாதுன்னு சொல்லிடுங்கம்மா.. ப்ளீஸ்..” என்று கை கூப்பிக் கெஞ்சியவள் கடகடவென அந்த அறையின் பின் வாசல் வழியே கோம்டியின் வீட்டுக்குள் ஓடி விடுகிறாள்.

     

    கோம்டிக்கு எதுவும் புரியவில்லை.. அதற்குள் அங்கே கந்தசாமி வருகிறார்.. க்லினிக்கை சுற்று முற்றும் பார்க்கிறார். கோம்டியின் அறைக்குள் வருகிறார்.  அங்கும் சுற்றுமுற்றும் பார்க்கிறார். கோம்டியைப் பார்க்கிறார்.

     

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 16

    திவாகர்

     

    கோம்டி கோபமாகச் சொன்னாள். சுந்தர் எழுந்தான்.

    “நான் கல்யாண் என் அண்ணங்கிற ஒரு உரிமைல சொன்னேன். எனக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாம என் மனசுல இருக்கறதை அப்படியே சொல்லிட்டேன். நிஜமாவே என் மன பாரம் இறங்கிடுச்சு இப்போ. நான் ஸ்டேட்மென்ட் இன்னிக்கு ராத்திரிக்குள்ள எழுதறேன். இனிமே என்னால நடந்ததை மறைக்கமுடியாதுதானே.. இப்போ நான் சொன்ன உண்மையை அப்படியே எங்க வேணும்னாலும் சொல்லமுடியும். நான் வரேண்டா கல்யாண்.. நாளைக்கு என் ஸ்டேட்மெண்டோட வரேன். பார்ப்போம் மேடம் கோமதி!”

     

    “நான் கோம்டி!”   என்றாள் அவள் சற்று கோபத்துடன். “இன்னும் ஒரே ஒரு கேள்வி மிஸ்டர் சுந்தர்.. இப்போ மாமாவோட அந்த ஆபிள் மொபைல் யார்கிட்டே இருக்கு.?”

     

    “அது ரொம்ப குழப்பமா இருக்கு மேடம். அதை நான் அப்பறமா மாமா கையிலே பார்க்கவே இல்ல.. நானும் அவரை எத்தனையோ தடவை அதப் பத்தி கேட்கலாம்னு பார்த்தேன். ஆனா மாமா சந்தர்ப்பம் கொடுக்கவே இல்லை.”

     

    “ஓ! ஆச்சரியமா இருக்கே.. அந்த ஃபோனைப் பத்தித் தெரிஞ்சவர் ரெண்டு பேர். ஒருத்தர் உங்க மாமா.. இன்னொண்ணு நீங்க.. ஆனா நீங்க சொன்ன அத்தனை விஷயங்களுக்கு ஆதாரம் அந்த ஃபோன்.. அது வேணுமே. இந்த ப்ரூஃப் இல்லேன்னா மாமா பேருல நீங்க இட்டுக்கட்டின கதையா போயிடும் மிஸ்டர் சுந்தர்.. அந்த ஆபிள் மொபைல் எங்க போச்சுங்கறதைக் கண்டுபிடிக்கணும்.”

     

    அவன் தலையாட்டிக்கொண்டே சென்றுவிட்டான்.

     

    கல்யாண் வெறுப்புடன் சொன்னான்.

    “பாருங்க.. அவனோட மனசு பாரம் இறக்கிட்டானாம். எனக்குத் தலையே வெடிச்சுடும் போல இருக்கு. ”

     

    “முரளியும் சரி, சுந்தரும் சரி, எல்லா விஷயமும் சொன்னாங்க.. ஆனா கொலையைப் பத்தியே சரியாப் பேசலை.. ரெண்டு பேர் மேலயும் தனித்தனியாவே கேஸ் போட்டாக் கூட அவங்க ரெண்டு பேருமே தனித்தனியாவே கொலை பண்ணாங்கன்னு போலீஸால் ப்ரூவ் பண்ணமுடியும். ஆனா இறந்தது ஒத்தர்தானே.. ரொம்ப கன்ஃபூஷன்ல போயிண்டுருக்கே மிஸ்டர் கல்யாண்.”

     

    ‘சரிதான்’ எனச் சொல்லி சிரித்தான் ரவி. “கோம்டி.. நீ ஒண்ணு பண்ணலாம்.. இவங்க ரெண்டுபேருக்குமா டாஸ் போட்டுப் பார்த்துட்டு தலை விழுந்தா அவனே குற்றவாளின்னு சொல்லி ஈஸியா ப்ரூவ் பண்ணிடலாம். இந்த கேஸும் முடிஞ்சாமாதிரிதான்.”

     

    கல்யாண் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தான். அதே சமயம் கோம்டி மொபைலில் நிறைய மெஸேஜ் வரும் சப்தங்கள் கேட்டதால் தன் மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தாள். வந்த மெஸேஜ்களைப் படித்து விட்டு கல்யாணைப் பார்த்தாள்.

     

    “கல்யாண்! இன்னிக்கி லஞ்ச்சுக்கு முன்னாடி நான் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க இன்ஸ்பெக்டர் மோகனோட பேசினேன்..”

     

    போலீஸ் ஸ்டேஷன்.

     

    “சீக்கிரம் இந்தக் கேஸ் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும். நீங்க என்னென்ன கண்டுபிடிச்சிங்க? அந்த சுமதியைப் பாத்தீங்களா? கந்தசாமியோட ஃபோன் ரொம்ப ஓல்ட். அதுல இருக்கற நம்பர்லாம்  நமக்குத் தெரிஞ்சவங்க நம்பர்தான்.. இந்த ஸ்மார்ட் ஃபோன் காலத்துல இப்படியும் ஒரு ஓல்ட் ஃபேஷன் மனுஷனான்னு ஆச்சரியப்பட்டேன். அவர் உலகம் ரொம்ப சிறிசு போல இருக்கு. இந்த ஃபோன் நம்பர்லாம் நமக்கு உபயோகப்படாது. இந்தாங்க சிதம்பரம் ஃபோன் நம்பர். நாங்க இன்னும் பேசல. நாங்க பேசினாலும் சரியா சமாதானம் கிடைக்காது. அந்தம்மா பேரு சூடாமணி. அங்க ரஞ்சிதான்னு யாரும் இல்லே.  நீங்க வேணா பேசிப் பாருங்க..”

     

    “தேங்க்ஸ் சார். நான் பேசறேன். இந்த விவகாரத்துல இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும்னு நான் நம்பறேன். பார்ப்போம்.”

     

    “உங்களுக்கு இதுவரை கிடைச்ச தகவல்ல ஏதேனா லீட் கிடைச்சுதா? இவனாதான் கொலைகாரனா இருக்கலாம்னு சந்தேகப்பட்டா கூட சொல்லுங்க.. நான் அவனை எஸ்கேப் ஆகாம இருக்கறதுக்கு ஒரு போலீஸை அனுப்பிச்சு கண்காணிக்கச் சொல்லிடறேன்..”

     

    “இன்னும் ரெண்டு நாள் போகட்டும் சார்.. நானே கேட்கிறேன். இந்த சூடாமணியும் சரி, வேற யாராக இருந்தாலும் அவங்களை விசாரிக்கறச்சே ஒருவார்த்தை ‘இன்ஸ்பெக்டர் மோகன்’ இந்தக் கேஸ்ல ரொம்ப கவனமா இருக்கார்னு நான் சொல்லலாமா சார்.. போலீஸ்ங்கற ஒரு வார்த்தை அவங்களை பொய்யைக் கம்மியா பேச வைக்கும்.. பொய்யை கம்மியா பேசறச்சே உண்மைங்க கொஞ்சம் ஜாஸ்தி வரும்.. அதனாலதான் கேட்கறேன்”.

     

    “கோமதி..” இன்ஸ்பெக்டர் பேசுமுன் ஞாபகப்படுத்துகிறாள்.

     

    “இல்ல சார்! கோம்டி..”

     

    “கோம்டி! உங்க மேல நம்பிக்கை ஜாஸ்தியா இருக்கு. நீங்க தாராளமா போலீஸ்ங்கிற வார்த்தையையும் இன்ஸ்பெக்டர் மோகன் விசாரிக்கச் சொல்றார்ங்கிற வார்த்தையையும் யூஸ் பண்ணிக்கலாம். ஆனா எனக்கு எல்லாத் தகவல்களையும் அப்படியே சொல்லணும்..”

     

    “நிச்சயமா சார்.. எப்படியானாலும் ஃபைனல் அதாரிடியே நீங்கதானே..?”

     

    “எஸ்.. தேங்க் யூ.!”

     

    மறுபடியும் நிகழ்காலத்துக்கு வருகிறாள் கோம்டி. கல்யாண் வீடு

     

    கல்யாண்! நான் இங்க வரும்போதே சூடாமணிகிட்டே பேசிட்டுதான் வந்தேன். அப்பதான் தெரிஞ்சது.. சுந்தர் அந்தப் பணத்தை அவளுக்குத் தரலேங்கறது.. ஆனா இந்த சூடாமணி திருச்சில குழந்தைங்க ஆசிரமத்தை சூபர்வைசரா பார்த்துட்டு வரச்சே இந்த கந்தசாமி, ஸாரி, உங்க பெரியப்பா அவளோட சினேகிதம் வெச்சிருக்கார். ஆசிரமத்துக்கு நிறைய ஹெல்ப் பண்றவர் போல. சூடாமணியோட பொண்ணு பிரியாவை அவள் இஷ்டத்துக்கு விரோதமா பணிய வெச்சிருக்கார், முரளி சொன்னாப்பல அதே கதையைத்தான் சூடாமணியும் சொன்னாள். ஆனா பிரியா விஷயத்தை விட இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்த சூடாமணியை கன்வின்ஸ் பண்ணி குழந்தைங்க சில பேரை சென்னைல படிக்கவெக்கறேன்னு இங்க பாலபாலிகா ஆசிரமத்துக்கு அனுப்பி வெச்சு படிக்க வெச்சிருக்கார். ஆனா இங்கயும் அந்த ஆசிரமத்துக்கு இவர் டொனேஷங்கிற பேருல கொடுத்து இவரோட காம லீலையை செஞ்சிருக்க வாய்ப்புண்டு.”

     

    “ஆனா சுந்தர்தானே இவர் இங்க வர்றதுக்கு முன்னாடிலேர்ந்து அந்த ஆசிரமத்து விஷயம் இவர் சார்பா பார்த்ததா சொன்னான். இவனுக்கு எவ்வளோ தூரம் சம்பந்தம்னு தெரியலியே கோம்டி!”

     

    ரவி குறுக்கிட்டான். பாலபாலிகா ஆசிரமத்தில் சமீபத்தில் ஒரு பெண் காணாமல் போய்விட்டதாக அந்த மேனேஜர் என்னிடம் சொன்னார். அதன்பின் நான் யார் யார் எப்படி எப்படி அங்கே வருகிறார்கள் யார் உதவி செய்யறாங்க எல்லாம் கேட்கறச்சேதான் இந்த சிதம்பரம் சூடாமணி விஷயம் கிடைச்சுது. இப்போ இந்தம்மா இந்த ஆசிரமத்தோட சம்பந்தம் இல்லேன்னாலும் காணாமப் போன விஜயாவை திருச்சிலேர்ந்து சென்னைக்கு கந்தசாமி, சாரி, கல்யாண் பெரியப்பா வற்புறுத்தி அனுப்பிவெச்சாராம். சூடாமணி இதுக்கு முன்ன திருச்சில ஆசிரமத்துல வேலை பண்றச்சே அங்கிருந்து மேல படிக்க வைக்கிறதுக்காக இந்த பாலபாலிகா ஆசிரமத்திலே ஒரு ஒப்பந்தம் வெச்சிருக்காங்க, அதனால கந்தசாமியும் இங்க நிறைய உதவி பண்ணுவாராம். அப்பப்ப வருவாராம். சுந்தரையும் அழைச்சுண்டுதான் வருவாராம். இதெல்லாம் இந்த பாலபாலிகா ஆசிரமம் மூலமா செரிஞ்சதைத்தான் கோம்டிகிட்டே சொன்னேன்.’

     

    “சுந்தரோட வேலை ஒண்ணும் பெரிசா இங்க இல்லேன்னு நினைக்கிறேன். மனசாட்சிக்குப் பயப்படறவன்னு தெரியுது. ஆனாலும் கொலை நடந்த அன்னிக்கு இவன் சொல்லற விஷயம் கன்வின்ஸிங்கா இல்லே. முரளியைப் போல் இவன் அவராலே ஏதும் பாதிக்கப்படலே என்றாலும் தன்னோட மாமா இப்படிப்பட்டவரான்னு அவனுக்கு அதிர்ச்சி. அதுலயும் திருச்சிலேர்ந்து வந்த ஒரு சிறுமியை ரொம்ப பாசமாப் பார்த்துருக்கான். அவளுக்கு எல்லா உதவியும் செய்திருக்கான். அந்தச் சிறுமியை இவனோட மாமாவே காமலீலைக்கு உபயோகப்படுத்தியது இவனுக்குப் பிடிக்காம போய் இவன் கொலை பண்ணியிருக்க வாய்ப்புண்டு.. சந்தேகம்தான் படலாம். நிரூபிக்க முடியாது.. இப்போ முரளி மேல உள்ள சந்தேகம் இன்னும் அப்படியே இருக்கு. போலீஸ் முரளியையும் ஈஸியா ஃப்ரேம் பண்ணி அரெஸ்ட் பண்ணலாம்.”

    “என் பெரியப்பா கொலைன்னு பார்க்காம, சாதாரண மூணாவது ஆளாப் பார்த்தேன்னா உங்களோட அறிவு பிரமாதமான அறிவு கோம்டி. ஆனா இந்த கொலைச் சம்பவத்தை அப்போது சாயங்காலம்  நடந்த சம்பவத்தை எப்படி இந்த ரெண்டு பேரோடு இணைக்கமுடியும்? எப்படிக் கொலை பண்ணி இருக்காங்கன்னு போலீஸால சொல்லமுடியும்.? இணைப்பு வரல்லியே..”

     

    “நல்ல கேள்வி! இவ்வளோ தூரம் வந்திருக்கோம்.. இன்னும் கொஞ்சதூரம் வந்தோம்னா விடை கிடைக்காம போகாது. ஆனா ஒண்ணு சொல்லலாம் மிஸ்டர் கல்யாண்! எத்தனைதான் உங்க சொந்த பெரியப்பா கொலையாச்சேன்னு நினைச்சாலும் உங்க பரிதாபத்துக்கோ இல்லை பாசத்துக்கோ கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒரு கொடூர ஆத்மா அவர். அதனால உங்க துக்கத்தை விடுங்க.. இந்தக் கேஸுல இன்னும் ரெண்டு மூணு பேரை விசாரிக்கணும். (அப்போது அவள் மொபைலில் ஃபோன் வர எடுக்கிறாள்). அவளே பேசுகிறாள்.

     

    “ஹேய் சாந்தி.. எதிர்வீட்லதான் இருக்கேன்..  நீ எப்போ வரே? ஓ.. வந்துட்டியா.. இரு வரேன்..” என்று சொல்லியவள் கல்யாணிடம் சொல்லிக் கொண்டு கிளம்புகிறாள்.

     

    ரவியோட தங்கை சாந்தி இப்போ வீட்டுக்குதான் வந்திருக்கா.. நான் கிளம்பறேன்..

     

    வீட்டில் காத்திருந்த சாந்தியுடன் அவள் வண்டியில் இருவரும் வெளியே கிளம்புகிறார்கள். உட்கார்ந்துகொண்டே கோம்டி அவளிடம் சொல்கிறாள்.

     

    “சைதாப்பேட்டைல பாலபாலிகா ஆசிரமம் போகணும்.. இதோ இந்த அட்ரஸ்’டி..”

     

    பாலபாலிகா ஆசிரமத்தில் வண்டியை நிறுத்த இருவரும் உள்ளே நுழைகிறார்கள். அங்கு ஒரு வயதானவர் இருக்கிறார். அவரிடம் பேசுகிறார்கள்.

     

    “நாங்க போலீஸ் டிபார்ட்மென்ட்லேர்ந்து வரோம். உங்கள்ட்ட சில கேள்விகள் கேட்கணும், அதுவும் கந்தசாமி விஷயமாதான் பேச வந்தோம். நீங்க பெரியவர். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பீங்கன்னு தெரியும். இந்த மாதிரி பாலபாலிகா ஆசிரமம் இலவசமா நடத்தறதே  இந்த காலத்துல ரொம்ப கஷ்டம்தான். ஆனா நீங்க சக்ஸஸ்ஃபுல்லா நடத்தறது ரொம்ப சந்தோஷம்.”

     

    “உட்காருங்கம்மா.. நேத்து கூட ஒருத்தர் இப்படித்தான் வந்தார்.. ஆனா கடைசிவரைக்கும் போலீஸ்னு ஒரு வார்த்தை சொல்லலே.. நீங்க வந்திருக்கீங்க..எங்க ஆசிரமத்துக்கு ரொம்ப உதவி பண்ணினவர் கந்தசாமி.. ரொம்ப வருஷமா அவர் உதவி பண்ணிண்டு வரார். அவரோட ஏஜண்ட் மூலமா முதல்ல உதவி பண்ணார். இப்ப மூணு வருஷமா அவரே சென்னை வந்துட்டார்.. அப்பப்ப வருவார். பணம் கொடுப்பார்.. நல்ல மனுஷனை யாரோ சுட்டுட்டாங்க.. அதுதான் வருத்தமா இருக்கு.”

     

    “ஏஜண்ட்ன்னு சொன்னீங்களே.. அவர் பேரு சுந்தர் இல்லையா?”

     

    “ஆமாங்க.. அவரு ஆறேழு வருஷமா இங்க ஆசிரமத்துக்கு அக்கௌண்ட் ஃப்ரீயா எழுதித் தருவார். அவரே ஃபைனான்ஸ்லாம் பார்த்துக்குவார். அப்பப்ப டொனேஷன் வாங்கித் தருவார். ஆடிட்டிங்க் செய்து தருவார். இங்க இருக்கற இன்மேட்ஸ் எல்லாருக்கும் ஏதாவது புதுசா அவர் செலவுல ஏதாவது வாங்கித் தருவாரு.! எங்களுக்கும் நம்பிக்கையான ஆளு தேவை இல்லையா.. கந்தசாமியோட உறவு வேற.. காசு வாங்காம செய்யறாரு”

     

    “அது சரி, உங்க ஆசிரமத்து லேடஸ்ட் ரசீது புக் கொஞ்சம் காமிக்க முடியுமா?”

     

    “இருக்குங்க.. ஆனா அந்த மேஜை டிராயர் சாவி சுந்தர்கிட்ட இருக்கு. அவர் வந்துதான் எடுக்கமுடியும்மா.. எல்லாம் பக்காவா வெச்சிருப்பார்மா..”

     

    “சரி, சுந்தர் எப்ப வருவாரு?”

     

    “அவர் ஒரு வாரமா வரல்லேம்மா.. கடைசியா அவங்க மாமா கந்தசாமியை அழைச்சுண்டு வந்தார். அதுக்கப்பறம் வரல்லே.. மாமா போயிட்டாரு இல்லையா.. ரொம்ப பிஸியா இருப்பார்.”

     

    “ஓ! அப்போ கடைசி தடவையா கந்தசாமி வந்தாரு இல்லையா.. அப்ப அவர் கூடவே சுந்தரும் இங்க இருந்தாரு இல்லையா?

     

    “ஆமாம்மா கூடவே இருந்தாரு.”

     

    “அப்போ மாமா எதுக்காக வந்தார் அன்னிக்கு.. பணம் கொடுக்க வந்தாரா? இல்லே வேற விஷயம் பேசினாரா?”

     

    அந்தப் பெரியவர் தயங்கினார். பின்னர் மெதுவாகப் பேசினார்.

     

    “ஒரு நாலு மாசம் முந்தி ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்து போச்சும்மா. விஜயான்னு ஒரு பதிமூணு வயசுப் பொண்ணு. காணாமப் போயிடுச்சு. எப்படிக் காணாமப் போயிடுச்சுன்னா அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் மூளைல ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணினா தெளிவாகிற வியாதி வந்திருக்கு. ஆனா ஆபரேஷனுக்கு அதிகப் பணம் தேவைப்படுது. அன்னிக்கு கந்தசாமி இந்தப் பொண்ணையும் இன்னும்  ஒரு மூணு பொண்ணுங்களை பீச்சுக்குக் கூப்பிட்டுண்டு போனார்மா. அப்பப்ப பண்றதுதான். சுந்தருக்கு இந்தப் பொண்ணு மேலே ரொம்பப் பாசம். அவரும் நிறைய இப்படி செய்வாரு. ஆனா ராத்திரி திரும்ப வரச்சே அந்த விஜயா வரல்லே.. மீதி மூணு பொண்ணுங்களையும் கொண்டு வந்து அழுதாரு. மெரீனா பீச்சுல இந்த நாலு பேரும் விளையாடிக்கிட்டிருந்தாங்க.. கந்தசாமி கடற்கரைல உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்திண்டிருந்தார். நைட் வந்ததனாலே விளையாடற பொண்ணுங்களையெல்லாம் கூப்பிட்டு போதும் வாங்க போகலாம்’னு சொல்லியிருக்கார். மூணு பொண்ணுங்க வந்தாங்க.. நாலாவது விஜயாவை ஆளைக் காணோம். உடனே எல்லாரும் தேடினாங்க.. கிடைக்கலே.. கந்தசாமி ரொம்ப வருத்தப்பட்டாரு.. எங்க போயிடுச்சோ அந்த பொண்ணு.. ஒண்ணுமே தெரியாத பொண்ணாச்சேன்னு அழுதாரு, பாவமா இருந்தது.. நான் அவரை சமாதானப்படுத்தி எங்க போயிடுங்க.. அதுவே வருதான்னு பார்க்கலாம். இல்லைன்னா என்ன பண்ண முடியும்? ஏற்கனவே இப்படி மூணு பேரு இந்த ஆசிரமத்துல காணாமப் போயிட்டாங்க. அத்தோட நாலாவதா சேர்த்துக்க வேண்டியதுதான்னு சொல்லிட்டேன்..”

     

    “ஓ! அப்போ அந்த விஜயாப் பொண்ணு நாலு மாசம் முன்னாடி காணாமப் போயிடுச்சு. மீதி வந்த பொண்ணுங்க அந்தப் பொண்ணைப் பத்தி எதுவும் சொல்லலியா..?”

     

    “அவங்களும் தேடியிருக்காங்கம்மா.. கிடைக்கலே தாத்தான்னு சொன்னாங்க.. பாவம் அந்தப் பொண்ணு..”

     

    தன் மொபைல் ஃபோனைத் திறந்து ஒரு போட்டோவைக் காண்பித்தாள்.

    “பாருங்க.. இந்தப் பொண்ணுதானே விஜயா?”

     

    “ஆமாம்மா.. இந்தப் பொண்ணுதான்.. கந்தசாமி கம்ப்ளெயின் உங்கள்ட்ட கொடுத்தாராம்மா.. அந்தப் பொண்ணுக்கு ஒரு வியாதி.. மூளை சம்பந்தப்பட்டது.. சுந்தர் அந்தப் பொண்ணுக்கு மெடிகல் டொனேஷன் வாங்கணும்னு ரொம்ப முயற்சி பண்றாரு.. அதுக்காக எடுத்த போட்டோ இது.”

     

    “அது இருக்கட்டும். போனவாரம் சுந்தரும் கந்தசாமியும் சேர்ந்து வரச்சே என்னவோ நடந்ததுன்னு ஆரம்பிச்சிங்க இல்லையா.. என்ன நடந்தது?”

     

    “இந்த விஜயா பேருதான்மா அவங்க பேசிக்கிட்டாங்க.. பெரியவர் கோபப்பட்டாரு, அடிக்கடி அந்தப் பொண்ணு பேரைச் சொல்லி எதுக்குடா என்னை மிரட்டறேன்னு சுந்தர்கிட்ட கோபமா கேட்டாரு.. சுந்தர் ஏதோ திருப்பிச் சொன்னாரு. என்ன சொன்னாருன்னு ஞாபகம் இல்லே.. ஆனா நான் சுந்தர்கிட்டே ‘விடுங்க தம்பி.. அவருதான் எல்லா இடத்துலயும் தேடினேன்னு சொன்னாரு இல்லையா அப்படின்னு சொன்னேன். கந்தசாமி உடனே அழ ஆரம்பிச்சுட்டாரு.. போதும்டா எனக்கு இந்த தண்டனை.. எத்தனை பேரைன்னு சமாளிப்பேன் நான்? எல்லாத்துக்கும் நான் பிராயச்சித்தம் பண்ணிடறேண்டா.. நீ அதுக்கு மாத்திரம் ஹெல்ப் பண்ணுடா’ன்னு கெஞ்சினாரு..”

     

    ‘உங்களுக்கு தனிப்பட்ட முறைல கந்தசாமி மேல இந்த விஜயா விஷயமா ஒரு சந்தேகமும் வரலியா?’

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 15

    திவாகர்

     

     

    “டேய்.. இதுல என்னடா பார்த்தே.. நான் என்னத்தைப் பார்த்தேன்னு நீ பார்த்தே?.. சொல்லுடா.. சொல்லு.. என்ன பார்த்தே..”

     

    “மாமா இது அநியாயம். ஃபோன்ல பார்த்துண்டு இருந்தது நீங்க.. ஆனா, என்னைப் போய் எப்படி அப்படி கேட்கலாம். அதுவும் அசிங்கமான படங்க.. அதனால கொஞ்சம் ஷாக்காயிட்டேன். ஆனா கீழே போட்டது நீங்கதானே?”

     

    சட்டென சமாளித்தார்.  “டேய் சுந்தர்.. அது ஒண்ணுமில்லேடா.. இந்த வாட்ஸப்ல ஏதோ அப்படி இப்படின்னு ஃபோட்டோ இமேஜ் வந்தது.. வாட்ஸ் அப்லே இதெல்லாம் சகஜம்.. அதெல்லாம் அழிச்சிட்டிருந்தேன்.. நீ பார்த்துட்டே போலருக்கு. சரி சரி.. இப்போ ஃபோன் உடைஞ்சு போச்சே.. உனக்குத் தெரிஞ்ச ரிப்பேர்க்காரன் இருக்கானா? ஆனா இது ஆபிள் ஃபோன்.. அவன் ஏஜென்ஸிதான் ரிப்பேர் பண்ணுவான். அவனுக்கு ஃபோனைக் கொடுத்தா அவனும் உன்னை மாதிரி ஏதேனா ஏடாகூடமான படத்தைப் பார்த்துட்டு உங்க மாமா இப்படிபட்டவராடான்னு கேட்டாலும் கேட்பானேடா.. அத்தோட ரொம்ப இம்பார்ட்மென்ட் விஷயம்லாம் வெச்சிருக்கேன். சில காண்டாக்ட் நம்பர்லாம் இருக்கு. இந்த ஃபோன் எங்கிட்ட இருக்கறதே யாருக்கும் தெரியாதுடா. இந்த ஃபோன்லேர்ந்து யாருக்கும் ஃபோன் கூட பண்ணமாட்டேன்.. ”

     

    சுந்தர் எதுவும் பேசவில்லை. கன்னத்தைத் தடவியபடி இருந்தான். அவர் சுந்தரின் கன்னத்தின் அருகே வந்து கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.

     

    “நான் எப்பவுமே உன்னை அடிச்சதில்லே.. என்ன இருந்தாலும் இன்னொரு தகப்பன் பெத்த பிள்ளை நீ.. என் சொந்த மகனா நினைச்சு அடிச்சுட்டேன்.. தப்புதான்..”

     

    “மாமா அப்படி சொல்லாதீங்க.. உங்களுக்கு எல்லா உரிமையும் என் மேல இருக்கு. விவரம் தெரியாம வந்து எட்டிப் பார்த்தது என் தப்புதான். மாமா.. இந்த மாதிரி ஆபிள்மொபைல் எல்லாம் நானே ரிப்பேர் செய்வேன் மாமா..  நான் சரி பண்ணிக் கொடுத்துடறேன்.. ரூம்ல இதுக்கான ஸ்பெஷல் டூல்கிட் இருக்கு. எனக்குக் கொடுங்க.. அலுங்காம நலுங்காம மேல கூட ஒரு புது கவர் போட்டு புதுசாவே கொடுத்துடறேன்.”

     

    மாமா யோசித்தார். “சுந்தர்.. இது அப்படியில்லேடா. சில லேவாதேவி கேஷ் கணக்கெல்லாம் அவங்கவங்க பேருல எழுதி ரகசியமா வெச்சுருக்கேன். நாளைக் காலைல ஆடிட்டர் இங்க வருவாரில்லையா.. அவர்கிட்டே இதெல்லாம் காண்பிச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்.” என்றவர் கீழே கிடந்த ஆடிட்டர் பேப்பரையெல்லாம் பொறுக்கி கையில் அடுக்கி வைத்துக் கொண்டு பேசினார்.

     

    “இந்த பேப்பர்லாம் அந்தக் கணக்கோடு பார்த்து ஃபைசல் பண்ணனும்டா.. நீ ஒண்ணு பண்ணேன்.. அடையாறுலதான் உன் ரூம் இருக்கு. போய் அந்த டூல்கிட் கொண்டு வந்துடு. நீ இங்கயே நைட் சாப்ட்டுக்கலாம். அப்படியே இங்கேயே ரிப்பேரும் பண்ணிடு. மேல கவர் நாளைக்கு கடைல வாங்கி புதுசா போட்டுக்கலாம். நாளைக்கு வரச்சே நீயா புதுக் கவரை வாங்கிவந்துடேன்..”

     

    “சரி மாமா” என்று சொன்னவன் கடகடவென தன் பைக்கில் கிளம்பினான்.

     

    மறுபடியும் தற்போதைய நிலைக்கு வந்தான் சுந்தர். அவனையே கல்யாணும் கோம்டியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     

    “நான் என் ரூமுக்குப் போய் ஆப்பிள் ஃபோன் ரிப்பேர் டூல்கிட் எடுத்துட்டு அப்படியே வர வழியிலே ஒரு ஃபோன் சேஃப்டி அப்பர்கவரும் வாங்கிண்டு வீட்டுக்கு வந்தேன். மாமா ரொம்பவே பரபரப்பா வாசல்லியே எனக்காகக் காத்துண்டிருந்தார். இதுக்குப் போய் இவ்வளவு டென்ஷன் ஆகறாரே’ன்னு கூட நினைச்சுண்டேன்.. ஹால்லயே அவர் ஃபோன் எடுத்து ரிப்பேர் பண்ணேன். என் பக்கத்துலேயே இருந்தார்.”

     

    மறுபடியும் அவன் நினைவுகள் வலம் வந்தது. மாமா வீட்டில் அவர் நிம்மதியற்று நின்று கொண்டிருக்க சுந்தர் மொபைல் முழுவதையும் அக்கு வேறாக ஆணி வேறாக கழட்டினான். உள்ளே எதையோ கொஞ்ச நேரம் நோண்டினான். சில பாகங்களைத் துணியால் துடைத்து வாயால் ஊதினான். பிறகு பத்திரமாக அதை வைத்துவிட்டு ஃபோனை மறுபடியும் சேர்த்து வைத்து பழைய நிலைக்குக் கொண்டு வந்து சார்ஜிங்க் செய்து ஆன் செய்தான். கருநிறம் சூழ நடுவில் வெள்ளையாய் ஆபிள் படம் வெளி வர ஃபோன்  திறக்க ஆரம்பித்தது.

     

    “மாமா இதுக்கு ஓபனிங்க் பாஸ்வேர்ட் வெச்சிருக்கீங்களா?”

     

    “எதுக்குடா.. பாஸ்வேர்ட்   நான் அதெல்லாம் வெக்கிறதில்லேடா.. ஓபன் பண்ணா வந்திருமே.. ”

     

    “சரி மாமா.”

     

    “அவன் மொபைலைத் திறக்க முயற்சிக்கிறான்,, முதலில் ஆபிள் படம் சின்னதாக வந்து முழுவதுமாக முடிந்ததும் அதன் மேல் சேஃப்டி கவரை ஒட்டினான். அப்படி ஒட்டும்போதுதான் சடாரென ஒரு வண்ணப் படமாக அந்த ஃபோனில் வர அப்படி வந்தது என்னவோ ஒரு பெண்ணின் முழு நிர்வாணப்படம். அதை ஆஃப் செய்து புதிதாக வாங்கிவந்த பிளாஸ்டிக்கண்ணாடி கவரை ஒட்டிச் சட்டென அந்த ஃபோனை மாமாவிடம் கொடுத்துவிட்டான்.”

     

    “ஆஹா.. ரொம்ப தேங்க்ஸ்டா.. வா வா சாப்பிடலாம்..”

     

     

     

     

     

    இருவரும் சாப்பிடும்போது அவன் மெல்லக் கேட்டான். அவன் கை சோற்றைப் பிசைந்து கொண்டே இருந்தது. சாப்பிடாமல் பேசினான்.

    “மாமா.. தப்பா நினைச்சுக்காதீங்க.. நான் கேக்கறேன்னு.. இப்போ நான் பார்த்த படத்தோட முகம் கொஞ்ச நாள் முன்னாடி நம்ம பால பாலிகா ஆசிரமத்துலேர்ந்து காணாமப் போன ஒரு சின்னப் பொண்ணு முகம் போல இருக்கு.. மாமா எனக்கென்னவோ சோறு ஏறமாட்டேங்குது மாமா.. அது சின்னக் குழந்தை மாதிரி தெரியுது..”

     

    “என்னடா சொல்லறே.. எதுனா கற்பனை பண்ணி மனசுல விபரீதமா நினைக்காதே..”

     

    “விபரீதமா அப்படி எதுவும் இல்லேன்னா ஹாப்பிதான் மாமா.. ஆனா அந்த முகம் மட்டும் அப்படியே அந்த சின்னப் பொண்ணோட முகம்தான்.. நான் அப்பர் கவரை ஒட்டறச்ச நல்லா பார்த்தேனே”

     

    “எதுவும் உளறாதடா”

     

    “உளறல மாமா.. நாலு வருஷமா அந்தப் பொண்ணைப் பார்த்துண்டே வரேனே.. நீங்க திருச்சிலேர்ந்து ஒன்பது வயசுப் பொண்ணா அனுப்பிச்சிங்களே.. சென்னையில நான் இருக்கேன்னு எனக்குதானே சொல்லுவீங்க.. புதுத்துணியெல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கேன்.. எக்ஸிபிஷன் வந்தா அழைச்சுண்டு போவேன்.. குழந்தை மாதிரி வருமே.. நான் கல்யாணம் பண்ணிண்டு குழந்தையைப் பெத்துண்டேன்னா இந்த மாதிரி பொண்பிள்ளையா பிறக்கணும்னு நினைச்சுப்பேன் மாமா..”

     

    “இதெல்லாம் ஏண்டா இப்போ சொல்லறே?”

     

    “இப்போ அந்தப் பொண்ணை இப்படிப் போட்டோவுல பாக்கறது கஷ்டமா இருக்கு மாமா..”

     

    மாமா உறுமினார். “டேய்.. உன்னை நான் இங்க கூப்பிட்டது தப்பா போச்சு.. வெளில போய் எதுனா கன்னா பின்னான்னு இது மாதிரி உளறி வெக்காதே.. எனக்கு நீ பாடம் நடத்துறியா?”

     

    “எனக்கு ஏதோ வித்தியாசமா படறது மாமா.  இந்த மாதிரி படம்லாம் இப்படிப் பாக்கறதுக்குன்னே நிறைய பேர் பணம் கொடுத்துப் பாப்பாங்களாம். சமீபத்துல ஒரு கேஸ் பேப்பர்ல நியூஸா வந்தது. அரபு நாடுகளுக்குக் கூட இந்த மாதிரி போட்டோ அனுப்பிச்சு அந்த சாம்பிள் காமிச்சு அந்தப் பொண்ணையே விக்கறதாவும் அவனை அரெஸ்ட் பண்ணி போஸ்கோ சட்டத்துல உள்ளே தள்ளினதாவும் நியூஸ் படிச்சேன்.”

     

    “இப்போ எதுக்குடா இதெல்லாம் சொல்லறே?”

     

    “இந்த மாதிரி போட்டோ வெச்சிருந்தாலும் அவங்களை அரெஸ்ட் பண்றதுக்கு போலீஸுக்கு உரிமை இருக்கு. அதனால எதுனாச்சும் போட்டோ இருந்தாலும் அதை ரிமூவ் பண்ணிடுங்க மாமா..”

     

    “சுந்தர் எனக்குத் தெரியும். எதை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு. நீ சின்னப் பையன். உனக்கு வேண்டாத விஷயத்துல தலையிடாதே.. புரியறதா?”

     

    “மாமா எனக்கு ஏன் வீண் வம்புன்னு என்னால அப்படி விட முடியலே.. ஏன்னா அதுக்குக் காரணம் அந்தப் பொண்ணுதான்.. வேணாம் மாமா.. இப்போ அந்தப் பொண்ணு கூட ஆசிரமத்துல இல்லே. காணாமப் போனவ திரும்ப வரவே இல்லை. அவளுக்கு  ஏதாவது  ஏடாகூடமா ஆகக்கூடாது மாமா”

     

    அவன் எழுந்துவிட்டான். சாப்பிடவில்லை. மாமா யோசித்தார். தன் அறைக்குப் போனார். பீரோவைத் திறந்து ஒரு கட்டு பணம் எடுத்து வந்தார்.

     

    “இதோ பார்.. இந்த பணம் உனக்கு லஞ்சமா தரலே.. பாசத்தோடு தரேன். உன் மனசு கவலையா இருக்கு. எங்கயாவது கோவா கீவான்னு போயிட்டு வா..  நாம அப்பறமா பேசலாம் இதப் பத்தி.”

     

    “வேணாம் மாமா இந்தப் பணமெல்லாம்..”

     

    “டேய்.. உன்னை வளர்த்தவன் நான். எனக்குத் தெரியும்.. யாருக்கு என்ன கொடுக்கணும்.. எது கொடுக்கக்கூடாதுன்னு.. போடா.. நாலு நாள் லீவு போடு.. மனசுல எந்த விஷயத்தையும் அப்படியே வெச்சுக்காதே..  போய் வாழ்க்கையை நல்லா எஞ்சாய் பண்ணு..”

     

    என்று சொன்னவர் அவன் பாக்கெட்டில் அந்த  நோட்டுக் கட்டைச் செருகினார். அவனைத் தட்டிக் கொடுத்தார்.

     

    திரும்பவும் தற்காலத்துக்கு வந்தான் சுந்தர்.

     

    கல்யாண் தலையில் கை வைத்துக் கொண்டான். கோம்டி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். சுந்தர் சொல்லிக் கொண்டிருந்தான்.

     

    “இப்படித்தான் ஆரம்பிச்சது இந்த விவகாரம். எப்போ மாமா எனக்கு இதெல்லாம் புரிஞ்சு போயிடுச்சுன்னு நினைச்சாரோ என் வாயை மூட அப்பலேர்ந்து எனக்குப் பணமழை பொழிய ஆரம்பிச்சதுடா கல்யாண். முதல்ல நான் மாமாவுக்கு புத்திமதி சொன்னவன். ஆனா மாமா இந்த விஷயத்துல ரொம்ப நல்லா ஊறிப் போனவர்னு தெரிஞ்சவுடனே என்னாலே எதுவும் பண்ணமுடியலே..”

     

    “அப்போ நீங்களும் உடந்தையாதான் பிற்பாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சீங்களா? நல்லா பணக்காரரா மாறியிருப்பீங்களே!”

     

    “சத்தியமா நான் இந்த மாதிரி வேலையெல்லாம் மனசால கூட நினைச்சுப் பண்ணமாட்டேன் கல்யாண். என் தப்பு என்னன்னா நான் இந்த விஷயத்தை வெளியில சொல்லமுடியாத நிலையில இருந்தேன். ஆனா அதுக்குன்னு அவருக்கு நான் உடந்தையா மட்டும் நிச்சயம் இல்லே. மாமா கூட அதுக்கப்பறம் நான் அவர்கூட இருக்கறவரைக்கும் இந்த மாதிரி வேலை செய்யலேன்னுதான் நான் நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சதைத்தான் சொல்றேன்.”

     

    “முரளிக்கும் இந்த விஷயம் தெரியுமோ..” கல்யாண் கோபத்தோடு கேட்டான்.

     

    “இந்த விஷயம் அவனுக்குத் தெரியாது.. ஆனா முரளிக்கும் மாமாவுக்கும் வேற ஏதோ சின்ன தகராறு இருக்குன்னு தெரியும்.. அதை ரெண்டு பேருமே எங்கிட்ட சொல்லாதனதாலே நானும் கேட்டுக்கலே.. ஆனா சமீப காலமா முரளி அடிக்கடி வர்றது இல்லேங்க்கிறதாலே நான் அப்பப்ப மாமாவுக்குக் கார் டிரைவரா மாறினேன். ஆசிரமத்துக்குப் போவோம். ஆனா மாமா எனக்கு மாசம் பொறந்தா ஒரு லட்ச ரூபாய் கொடுத்திண்டு வந்தாரு. எனக்குக் கொடுத்த ஒரு லட்ச ரூபாயும் நான் ஆசிரமத்துக்கே கொடுத்துட்டேன். வேணுமின்னா நீங்க அங்க போய் செக் பண்ணிக்கலாம்.”

     

    ‘ஒஹோ..’

     

    கல்யாணின் குரல் கொஞ்சம் கேலியாக ஒலித்தது.

     

    “இன்னும் அந்த பத்து லட்ச ரூபாய் விஷயம் சொல்லலியே.” கோம்டி ஞாபகமூட்டினாள்.

     

    “அதுவும் சொல்லதான் வரேன். கொலை நடந்ததுக்கு மூணு  நாளைக்கு முன்னாடி  நான் அவரை ஆசிரமத்துக்கு அழைச்சிட்டுப் போயிட்டு வீட்டுக்கு வந்தோம்.  இல்லையா.. என்னை உள்ளே கூப்பிட்டார். பத்து லட்ச ரூபாய் பணக்கட்டு கொடுத்து சிதம்பரத்துல ஒரு விலாசத்துல கொடுக்கச் சொன்னார். இதுதான் கடைசின்னு ஏதோ ஒரு வார்த்தை ஒரு காகிதத்துல எழுதினாரு. விலாசம் கூட எழுதினார்.   ரஞ்சிதான்னு ஒரு பொண்ணு பேரு. எனக்கு மகா கோபம் வந்தது. இவ்வளோ சொல்லியும் அவர் மாறலே.. நான் அவர்கிட்டே அந்த பணம் வாங்கினேன். அந்த அட்ரஸ்ஸை தூக்கிக் குப்பைல போட்டேன். அடுத்த நாள் வண்டியை சர்வீஸுக்கு விடறதுக்கு முன்னாடி அந்த பத்து லட்ச ரூபாய் அப்படியே பாலபாலிகா ஆசிரமத்துக்கு டொனேஷனா பாங்க்ல டெபாசிட் பண்ணிட்டேன். நீங்க போய் அங்க செக் பண்ணிக்கலாம்.”

     

    சுந்தர் மிகவும் ஆயாசமாகச் சொன்னான்.

     

    “அவ்வளவுதான் நடந்தது. நான் கடைசி வரைக்கும் மாமாவைக் காப்பாத்ததான் முயற்சி பண்ணினேன்.. ஆனா முடியலே.. இந்த ஆள் மாறவே மாட்டாருன்னு..”

     

    “அதனால அன்னிக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமாவை கொலை பண்ணிட்டீங்களா?”

     

    நிதானமாகக் கேட்டாள் கோம்டி. உடனடியாக அவன் அழுதான்..

    “இல்லை நான் அவரைக் கொலை செய்யலே.. அவர் எப்படி கொலையானார்னும் எனக்குத் தெரியாது. கொலை நடந்த அன்னிக்கி நான் சென்னைலயே இருந்தேன். பைத்தியக்காரனா பார்க்’லே சுத்திட்டு இருந்தேன்…”

     

    “நான் நம்பமுடியாது சுந்தர்.. நான்னு இல்லே.. போலீசும் நம்பாது.?”

     

    “இல்ல.. ஆசிரமம் போகலாமான்னு கூட பார்த்தேன். ஆனா எனக்கு அங்க போக அப்போ இஷ்டம் இல்லே.. ஏன்னா நான் சிதம்பரம் போயிருக்கணும்னு நினைச்ச வேளையில ஆசிரமத்துக்கு போயிருந்ததைப் பத்தி மாமா கேள்விப்பட்டாருன்னா இன்னும் திட்டுவாரு. பார்க்’லேர்ந்து பஸ்ல காளிகாம்பா கோயிலுக்குப் போனேன். அதுக்கப்பறம் மகாபலிபுரத்துல ஒரு ரிஸார்ட்க்குப் போய் தண்ணியடிச்சு அங்கே போய் உட்கார்ந்து யோசித்தேன், மனசுல மறுபடி மறுபடி அந்தப் பொண்ணு போட்டோ வந்து மனசைக் குழப்பிக்கிட்டே இருந்தது…”

     

    ரவி நிதானமாக கேட்டான். ‘ஸோ.. அப்படிக் குழம்பின மனசோட நேரா வீட்டுக்கு வந்து மாமாவைப் போட்டுத் தள்ளிட்டீங்களா? இப்படித்தான் போலீஸ் முடிவா கேட்டு உங்க மேல குத்தம் சுமத்தி இந்தக் கேஸை முடிச்சுடுவாங்க மிஸ்டர் சுந்தர்.!’

     

    ‘ஐய்யோ.. நான் சத்தியமா அவரைக் கொலை பண்ணலே.. அந்த நேரத்துல நான் அந்த ரிசார்ட்ல இருந்ததுக்கு என் டெபிட்கார்ட் பேமென்ட் ஏன் அங்க இருக்கற சிசி டிவி கேமரா கூட சாட்சியா இருக்கு.’

     

    “ஓ!! அந்தச் சின்னப்பொண்ணுன்னு உங்க மாமா ஃபோன்ல பார்த்தீங்களே.. அந்தப் பொண்ணு இப்போ எங்கே இருக்குது.. சொல்ல முடியுமா?” கோம்டி கேட்டாள்.

     

    “அந்தப் பொண்ணை நானும் தேடறேன்.. யாரோ தெரிஞ்சவங்க கிட்டே கொடுத்து வளர்க்கறாரு மாமா.. அப்படிங்கறது என் யூகம்.

     

    ‘ஆனா ஆசிரமத்து ரிகார்ட்ல அந்தப் பொண்ணு காணாமப் போயிடுச்சுன்னு இருக்கு.” ரவி சொன்னதும் விழித்தான் சுந்தர்.

     

    சுந்தர் மௌனமாக இருந்ததால் கோம்டி இன்னொரு கேள்வி கேட்டாள்.

     

    “சரி.. நீங்க எந்த தைரியத்துல நீங்களா முடிவு செஞ்சு அந்த பத்து லட்சத்தை ஆசிரமத்துக்குக் கொடுக்கலாம். இந்தக் கொலையே நடக்கலே.. ஒருவேளை உங்க மாமா அந்த ரஞ்சிதாவுக்கு ஃபோன்ல பேசி அந்தப் பணம் வந்துதான்னு கேட்டு அது வரலைன்னு தெரியறச்சே அவர் கோபப்படுவார் இல்லையா.. எந்த நினைப்புல அப்படி செஞ்சீங்க.. ஒருவேளை மாமாவோட இந்தக் கொடூர முடிவை நீங்க முன்கூட்டியே எதிர்பார்த்தீங்களா?”

     

    “ஐய்யோ.. அப்படியெல்லாம் இல்லங்க.. இந்த விஷயத்துல அவர் கேள்வி கேட்பாருன்னு நான் எதிர்பார்த்தேன்.. அப்படி கேட்டாருன்னா அந்த ரஞ்சிதா விஷயத்தைக் காமிச்சு அவரைத் திருப்பி நாலு வார்த்தை கேட்டு, நீங்க திருந்தவே மாட்டீங்களான்னு நல்லா திட்டிட்டு அதுக்கப்பறம் பாலபாலிகா ஆசிரமத்துக்கு நான் கொடுத்த பத்து லட்சத்தைக் காமிக்கலாம். அத்தோட இந்த விஷயத்தையெல்லாம் கல்யாண்கிட்டே சொல்லிட்டு அன்னியிலேர்ந்து அவரோட சகவாசத்தையும் உறவையும் ஒரேயடியா அறுத்துக்கலாம்னு மனசுல வெச்சிருந்தேன். ஆனா அவர் கொலையானது எனக்கு அதிர்ச்சிதான்.”

     

    “சரி, நீங்க இந்தக் கொலையைச் செய்யலேன்னு வெச்சுக்கலாம். அப்போ யார் செஞ்சிருக்கலாம்?. இவ்வளோ நெருக்கத்துல உங்க மாமாவைப் படிச்சவர் பழகினவர் நீங்க.. உங்களுக்கு என்ன தொணறதோ அதைச் சொல்லுங்க..”

     

    “எனக்குத் தோணறது என்னென்னா இவரால கொடுமையா அவதிப்பட்ட எந்தப் பொண்ணோ அல்லது பொண்ணோட சொந்தமோ இவரைக் கொலை பண்ணியிருக்கலாம்னுதான் மனசுல பட்டது..”

     

    “நீங்க அப்புறம் மாமாகிட்ட பேசலியா?”

     

    “நான் கடைசியா அவருக்கு ஃபோன்ல பேசினப்போ கொலை நடந்த அன்னிக்கு நாலு மணிக்குப் பேசினேன். அவர் கொடுத்த பத்து லட்சம் கொடுத்தாச்சுன்னு சொன்னவுடனே ‘சுந்தர் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ன்னு கொஞ்சம் வருத்தமான குரல்ல சொன்னார். அதுதான் கடைசி.”

     

    “அதாவது அவரோட  நோகியா பழைய ஃபோன்ல பேசினீங்க இல்லையா?”

     

    “ஆமாம். அது இப்போ போலீஸ் கையிலதான் இருக்கு. செக் பண்ணிக்கலாம்.”

     

    “சரி மிஸ்டர் சுந்தர்.. நீங்க இதுவரை சொன்னதை நான் ரிகார்ட் பண்ணியிருக்கேன். அதனால நீங்க புதுசா ஒரு போலீஸ் ஸ்டேட்மென்ட் தயார் பண்ணி அதுல உண்மையை அப்படியே எழுதுங்க..  இன்னும் கொலையாளி யார்னு தெரியலே.. கொலைக்கான மோடிவ் கூட தெரியலே.. பார்ப்போம்.”

     

    “கொலைகாரன் யாரா இருந்தா என்ன? அவன் செஞ்சது சரின்னு தெரிஞ்சிடுத்து இப்போ. இப்படிப்பட்டவரெல்லாம் உயிரோடு வாழத்தான் வேணுமா?”

     

    “எங்கிட்டே இப்படிச் சொன்னதை போலீஸ்கிட்ட சொல்லாதீங்க மிஸ்டர் சுந்தர்.”

     

    தொடரும்

     

     

    Share
  • பல்லழகன் – பகுதி – 14

     

     

    திவாகர்

     

    கோம்டி கொஞ்சம் யோசனை செய்துவிட்டு பேப்பரை எடுத்துக்கொண்டு குறிப்புகள் எழுதிக் கொண்டாள். பிறகு தன் கைப்பையோடு எதிர்வீடான கல்யாண் வீட்டுக்குக் கிளம்பினாள். அவள் அம்மா எதிரே வந்தாள்.

     

    “ஏண்டி கோமதி? இன்னிக்கும் கிலினிக் பங்க் அடிக்கப் போறியா?”

     

    “பாக்கலாம்மா.. எதிர்வீட்டுக்குதான் போறேன்.. வேலை இல்லேன்னா வந்துடறேன்.. ஆனாலும் என்ன உனக்குக் கிலினிக்லேர்ந்து கலக்ஷன் வந்துடறது இல்லே..”

     

    “அது சரிடி.. அந்த கல்யாண் போட்டோவை ஏண்டி இங்க க்லினிக்ல மாட்டி வெச்சுருக்கே..”

     

    “கல்யாண் போட்டோவை கல்யாண்னு ஏன் பாக்கறே? அவன் பல்லைப் பாரும்மா.. பல் ஆஸ்பத்திரிக்கு பல்லழகன் போட்டோ இல்லையேன்னு தேடிண்டிருந்தேன்.. இவன் மாட்டினான். இப்பதான் கிலினிக்குக்குக் களையே வந்திருக்கு.”

     

    “ஆனாலும் ரொம்ப மோசம்டி நீ.. சீக்கிரம் வந்து சேரு.”

     

    கல்யாண் வீடு. சுந்தர் கையைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருக்கிறான். கல்யாண் முகம் சற்று கோபமாக இருப்பதை அங்கு வந்த கோம்டி பார்க்கிறாள்.

     

    “என்ன கல்யாண்.. இவர் என்ன சொல்றார்.. ஏதாவது புதுத் தகவல் கொடுக்கிறாரா? அது சரி, இன்னிக்கு வொர்க்கிங்க் டே ஆச்சே.. ஆஃபீஸ் இருக்குமே.. ரொம்ப பிஸியான ஆளாச்சே..”

     

    அவளின் கிண்டல் வார்த்தைகள் புரிந்தாலும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. கல்யாண் பேசினான்.

     

    “கோம்டி! இன்னிக்கு இன்ஸ்பெக்டர் மோகன் இவனை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி இருந்தாராம். போயிருக்கான். (சுந்தரைப் பார்த்து) சுந்தர்! நீயே சொல்லுடா அங்க என்ன நடந்ததுன்னு.”

    சுந்தர் ஸ்டேஷனில் நடந்ததை விவரிக்கிறான்.

     

    போலிஸ் ஸ்டேஷன்

    இன்ஸ்பெக்டர் மோகன் சாந்தமாகத்தான் விசாரிக்கிறார்.

     

    “மிஸ்டர் சுந்தர்.. நீங்க முதல்ல உங்களை விசாரிக்கறச்சே உங்க மாமாவை கொலை செஞ்ச நாள்லேர்ந்து ஒரு வாரம் முன்னாடி வரைக்கும் பார்க்கலேன்னு சொன்னீங்க.. ஆனா அவர் கார்ல நீங்க அந்தக் குழந்தைங்க ஆசிரமத்துக்கு கொலை நடந்ததுக்கு இரண்டு நாள் முன்னாடி அழைச்சிட்டு வந்ததாக அந்த ஆசிரமம் மேனேஜர் தகவல் கொடுத்திருக்கார். பாலபாலிகா ஆசிரமம் இல்லையா அத்தோட பேரு. இதை ஏன் எங்களுக்குச் சொல்லலே?”

     

    சுந்தர் அசரவில்லை. அவனும் நிதானமாகவே பதில் சொன்னான்.

    “கரெக்ட்தான் சார். ஆனா எங்க மாமா எங்கிட்ட ஒரு சத்தியம் வாங்கி இருக்காரு சார். அதாவது பாலபாலிகா ஆசிரமத்துக்கு அவர் நிறைய நிதிஉதவி பண்றார் சார். ‘இதை ரகசியமா வெச்சுக்கணும்டா சுந்தர்.. தருமகாரியமெல்லாம் வெளியில தம்பட்டம் அடிச்சுக்கக்கூடாது. ஒரு கை செய்யறது இன்னொரு கைக்குத் தெரியக்கூடாது.. அதனால யார்கிட்டயும் எந்த சமயத்துலயும் சொல்லக்கூடாதுடான்னு சத்தியம் வாங்கினார். நான் தர்மகாரியம் பண்றது ஊருலகத்துக்குத் தெரியணுங்கறது அவசியம் இல்லடா.. அதனாலதான் சொல்றேன்.’ அப்படின்னார். நீங்க சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.. நான் சத்தியத்தை மீறமுடியாம அப்படி சொன்னேன். ஆனா இதுல ஒண்ணும் பெரிய பொய்யோ அல்லது பெரிய விஷயமே இல்லையே சார். அதனாலே நானும் பெரிசா எடுத்துக்கலே.”

     

    “சரி, உங்களுக்குப் பெரிய விஷயம் இல்லேதான் சார். ஆனா கொலைங்கிறது ரொம்பப் பெரிய விஷயம்.”

     

    சுந்தர் கெஞ்ச ஆரம்பித்தான்.

     

    “சார் அது பெரிய விஷயம்தான் சார்.. ஆனா என் நிலைமையைப் பாருங்க சார்.. மாமா சத்தியம் வாங்கினது எப்படி எல்லார் முன்னாடியும் சொல்லறதுன்னு தெரியலே.. அதனால அந்த சமயத்துல அப்படிச் சொல்லிட்டேன்.”

     

    “ஏன் மிஸ்டர் சுந்தர்.. தரும காரியத்தை வெளில சொல்லறதுல என்ன இருக்கு? போகட்டும்.. நீங்க எத்தனை மணிக்கு அங்க போனீங்க? எத்தனை மணிக்கு அவரை வீட்ல விட்டுட்டு அவர் காரை எடுத்துப் போனீங்க எங்கிற விவரமெல்லாம் ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுங்க.. ஆசிரமம் விஷயம் தவிர வேற எங்கேயாவது போனீங்களான்னு கூட அதையும் எழுதுங்க. அதாவது நீங்க சம்பந்தப்பட்டது, அல்லது வேற யார் சம்பந்தப்பட்டதா இருந்தாலும் எழுதுங்க.. அப்பறம் உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?”

     

    “ஸார்.. எனக்கு யார் மேலயும் சந்தேகம்லாம் இல்லே சார்..”

     

    “சரி, அன்னிக்குக் காலைல வைத்தீஸ்வரன் கோயில் போனேன்னு சொன்னிங்க இல்லையா.. இங்கிருந்து எத்தனை மணிக்குக் கிளம்பினீங்க.. உங்களுக்கு எத்தனை மணிக்கு கொலை பத்திய முரளி கால் வந்தது வைத்தீஸ்வரன் கோயிலிலேர்ந்து எத்தனை மணிக்குக் கிளம்பினீங்க.. இந்த டீடெயிலும் ஸ்டேட்மென்ட்ல கொடுத்துடுங்க..”

     

    சுந்தர் எழுதிக்கொடுத்து வந்தான்.

     

     

    கல்யாண் வீடு

     

    அதை வீட்டுக்கு வந்து கல்யாணிடம் சொல்லுகையில் அவனுக்குக் கோபம் வந்தது. இந்த விஷயத்தை ஏன் முன்னமே தன்னிடமோ இல்லை கோம்டிக்கோ சொல்லவில்லை என்று கோபமாக சொல்லிக் கொண்டிருந்தான்.

     

    “சுந்தர் போலீஸ் ஸ்டேஷன் வந்தது பற்றி இன்ஸ்பெக்டர் மோகன் என்னிடம் பேசினார் கல்யாண். இவர் கொடுத்த ஸ்டேட்மென்ட் விஷயம்லாம் எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டர் எங்கிட்டே என்ன கேட்டார்னு எவ்வளோ தூரம் சுந்தரோட ஸ்டேட்மென்ட் உண்மைன்னு விசாரிக்கணும்னு சொன்னார். நானே இன்னிக்கு சாயந்திரம் இவர் ஆஃபீஸுக்குப் போகலாம்னு இருந்தேன். எனிஹவ், நீங்க இங்கே வரவழைச்சது கூட நல்லதுதான். ஏன்னா இங்கதானே கொலை நடந்தது?”

     

    சுந்தர் கோபமாகப் பார்த்தான்.

    “அப்போ நான் இந்தக் கேஸுல இன்வால்வ் ஆகியிருக்கேன்னு சொல்லறிங்களா மேடம்.?. நான் உங்கள்ட்ட கொஞ்சம் மாத்திச் சொன்னது உண்மைதான். ஆனா மாமா எங்கிட்டே சத்தியம் வாங்கினதாலே இதெல்லாம் வெளியே சொல்லமுடியலே.”

     

    அவள் சிரித்தாள்.

    “என்ன சுந்தர்.. வெளியே சொல்ல வெட்கப்படவேண்டிய விஷயமா இது? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா.. நீங்க ஆரம்பத்திலேர்ந்து அதிகம் பொய்தான் பேசறிங்க..  அதனால உங்க மேலே சாதாரணமாகவே இன்ஸ்பெக்டருக்கு ஏற்பட்ட மாதிரி எனக்கும் சந்தேகம் ஏற்படுது..”

     

    “பொய்யா.. அப்போ நான் சொன்னது எல்லாமே பொய்னு குற்றம் சொல்லறிங்களா.. கல்யாண்! அநியாயம்டா இது!”

     

    “ஏண்டா  ஏற்கனவே பொய் சொல்லிதானே இப்போ வரைக்கும் மாட்டிண்டு இருக்கே? இதோ பார்.. எனக்கு உண்மை தேவை. அதனால இன்ஸ்பெக்டருக்கும் கோம்டிக்கும் ஏற்படற அதே சந்தேகம் எனக்கும் இருக்குடா..”

     

    கோம்டி புன்னகையை விரிவு செய்தாள்.

    “சரி, கொலை நடந்த அன்னிக்கு நீங்க எங்க இருந்தீங்க?”

     

    “நான் உண்மையைத்தான் சொல்லறேங்க.. நான் வைத்தீஸ்வரன் கோயில்லதான் இருந்தேன். மாமா காருலதான் போனேன்.”

     

    “சரி, அதுக்கும் முதல் நாள் அதாவது கொலை நடந்ததுக்கு முதல் நாள் எங்க இருந்தீங்க?”

     

    “மாமா கார் சர்வீஸ்க்கு விட்டுட்டு ஆஃபீஸ் போனேங்க.. மறுபடியும் மத்தியானம் கூட அங்கேதான் போனேன். அவங்க கொடுத்த சர்வீஸ் ரசீது கூட கார் உள்ஷெல்ஃப்ல வெச்சுருக்கேன். நீங்க வேணுமின்னா செக் பண்ணிக்கலாம்”

     

    ரவியிடம் திரும்பினாள்.

    “ரவி அந்த சர்வீஸ் ரசீதைக் கொஞ்சம் எடுத்துவரமுடியுமா?” என்று கேட்டவள் அவனருகே காதில் இன்னொன்றையும் சொன்னாள்.

     

    “சரி, கார் சரியாக சர்வீஸ் பண்ணாங்களா.. மிஸ்டர் சுந்தர்?”

     

    “அடுத்த நாள் ரொம்பதூரம் போயிட்டு வரணுமேன்னு ஒரிஜினல் சர்வீஸ் டீலர்கிட்டே விட்டுட்டுதான் நானும் நல்லாவே சர்வீஸ் பண்ணனும்னு சொன்னேன். வண்டி சூபரா இருந்தது.”

     

    “ஓகே மிஸ்டர் சுந்தர்.. கொலை நடந்த நாளுக்கு முதல் நாள் காரை சர்வீஸுக்கு விட்டீங்க. அதுக்கும் முதல் நாள்தான் கந்தசாமியை அழைச்சிண்டு பாலபாலிகா ஆசிரமம் போனீங்க இல்லையா?!”

     

    “ஆமா.. ஆமா.. நீங்க சொல்லறது அப்படியே கரெக்ட்..”

     

    “இதையும் ஸ்டேட்மென்ட்ல எழுதி போலீஸுக்குக் கொடுத்தீங்க இல்லே?”

     

    “ஆமா.. அவங்க எல்லாத்தையும் கேட்டாங்க.. எதுக்கு வம்புன்னு கார் சர்வீஸ் ஒரு சில்லி மேட்டர்னா கூட அதையும் சேர்த்துதான் ஸ்டேட்மெண்ட்ல எழுதினேன்.”

     

    ரவி உள்ளே வருகிறான். கையில் உள்ள பேப்பரை கோம்டியிடம் தருகிறான்.

     

    “சுந்தர் சொன்னது உண்மைதான் கார் சர்வீஸ் பண்ணது வாஸ்தவம்தான். ரசீதை நல்லா பாரு கோம்டி.” என்று ஒரு நம்பரைக் காண்பித்தான்.

     

    “மிஸ்டர் சுந்தர்.. இப்பதான் சொன்னீங்க.. கார் சர்வீஸ்லாம் சில்லி மேட்டர்தான்.. இருந்தாலும் போலிஸ் ஸ்டேட்மென்ட்ல அப்படியே அதைப் பத்தியும் எழுதியிருக்கேன்னு.. ஆனா மிஸ்டர் சுந்தர்.. கார் சர்வீஸ் மேட்டர் சில்லி மேட்டர் இல்லன்னு நான் சின்ன ப்ரூஃப் தரட்டுமா? நீங்க எதையுமே சீரியஸா எடுத்துக்கலே..”

     

    சுந்தர் பயந்தான் சற்று. அவளை பரிதாபமாகப் பார்த்தான். அவள் குரல் கொஞ்சம் கடுமையாக வந்தது.

     

    “சென்னைலேர்ந்து வைத்தீஸ்வரன் கோயில் போயிட்டு வர கிட்டதட்ட 500 கி.மீட்டராவது ஆகும் இல்லையா.. ஆனா இந்தக் கார் இப்போ வரைக்கும் அதாவது சர்வீஸ் பண்ண தினத்திலேர்ந்து இன்னிக்கு இப்போது வரைக்கும் இந்த ஒரு வாரத்துல நூறு கிலோ மீட்டர் கூட ஓடல. இத்தனைக்கும் இந்தக் காரை நேத்து ஒரு தடவை கல்யாண் யூஸ் பண்ணி முப்பது கிலோமீட்டராவது போயிருப்பாரு.. சர்வீஸ் பண்ணின போது உங்க கார் ஸ்பீடோ மீட்டர்ல உள்ள கார் ரன்னிங்க் ரீடிங்க் இந்த ரசீதுல பேனால அழகா தெளிவா எழுதியிருக்கான். அந்த ரீடிங்க்லேர்ந்து நூறு கிலோமீட்டர் கூட அதிகமா இந்த கார் ஓடலேன்னு இப்போ கல்யாண் கார்ல பார்த்த அதே ரீடிங்க் மார்க் சொல்லுது. ஸோ நீங்க கொலை நடந்த அன்னிக்கு வெளிலே ரொம்ப தூரம்லாம் போகலே.. ஆனா அப்படி போனா மாதிரி பொய் ஸ்டேட்மென்ட் போலீஸ்கிட்ட கொடுத்திட்டு அதையே எங்க காதுலயும் சொல்லி போலீஸுக்குக் கொடுத்த பூவையும் எங்களுக்கும் சேர்த்தே சுத்தியிருக்கீங்க.. நீங்க இனிமேயும் பொய் சொல்லாம உண்மையை சொன்னீங்கன்னா நீங்க எப்படி தப்பிக்கலாம்னு வழியை நாங்க சொல்லுவோம். இல்ல.. முயலுக்கு மூணு கால்தான்னு முரண்டு பிடிச்சீங்கன்னா இதோ இப்படிப்பட்ட ப்ரூஃப் உங்களை அழகாக் காட்டிக் கொடுத்துடும். ஏற்கனவே உங்கமேல சந்தேகத்துல இருக்கற போலீஸ்கிட இந்த மாதிரி சின்ன விஷயம் ப்ரூஃபா கிடைச்சிடுச்சுன்னா அதை வெச்சுண்டு அவங்க அடிக்கற அடியில நீங்கதான் கொலையாளிங்கறதும் அவங்க  வெளிக்கொண்டு வந்துடுவாங்க.. அப்புறம் உங்க இஷ்டம்..”

     

    கோம்டி சொல்லச் சொல்ல ஆச்சரியம் அதிக அளவாய்க் காண்பித்து கல்யாண் அவளைக் கையைப் பிடித்துக் குலுக்கினாலும் சுந்தர் தன் தலையைப் பிடித்துக் கொண்டே அப்படியே சோபாவில் சாய்ந்தான். ரவி இப்போது சுந்தரைப் பார்த்தான். அருகே சென்றான்.

     

    “இப்போ இன்னொரு உண்மையும் சொல்லணுமே.. கல்யாணோட பெரியப்பா கொடுத்த அந்த பத்து லட்சம் ரூபாயை சிதம்பரத்துல நீங்க கொண்டு போய் கொடுக்கலியே.. அந்தப் பணத்தை எங்கே வெச்சிருக்கீங்க.. அதையும் சொல்லணும்..”

     

    சுந்தர் தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்..

    “கல்யாண்.. நான் என்னவெல்லாமோ நினைச்சு உங்கிட்டே எல்லா விஷயமும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்லயே உன்னைப் பாக்கறச்சே சொல்லலாம்னுதாண்டா இருந்தேன்.. இந்தக் கொலை நடந்த முதல் நாளே நான் தீர்மானம் பண்ணது என்னன்னா அடுத்த நாள் காலைல ஸ்டேஷனுக்கு வந்து அங்கேயே உன்னை உக்காத்தி வெச்சு எல்லா விஷயத்தையும் சொல்லிட்டுதான் இங்க மாமா வீட்டுக்கு அழைச்சுட்டு வரணும்னுதாண்டா.  உனக்குப் பெரிய துரோகம் பண்ணிட்டார்டா.. உனக்கு மட்டுமில்லே.. எனக்கும் சேர்த்துதாண்டா சொல்லறேன். ஐய்யோ.. வேணாம் வேணாம்னு நான் எத்தனையோ முறை சொல்லியும் மாமா கேட்கலியேடா.. அவருக்கென்ன? செய்யறதெல்லாம் செஞ்சிட்டு அவர் பாட்டுக்கு போய்ச் சேர்ந்துட்டார்.. இப்போ யாருடா அவர் செஞ்ச பாவத்துக்கெல்லாம் அனுபவிக்கறது..” அழுதான் அவன்,

     

    கல்யாண் கடுமையாகப் பேசினான். “பச்சதாபப்பட்டு அழுதா போதுமா சுந்தர்.. இப்போ வரைக்கும் நீ பொய் சொல்லித்தான் வந்திருக்க.. இன்னும் கூட நீ என்ன நடந்ததுன்னு சொல்லறதுக்கு மனசு உனக்கு வரல்லே..”

     

    “இல்லடா.. இல்லே.. நான் சொல்லப் போகறது கொஞ்சம் டெலிகேட்டான விஷயம்டா.. வெளியில தெரிஞ்சா ரொம்ப கேவலமா நினைப்பாங்க.. (கோம்டியை காட்டி) இவங்க முன்னாடி சொல்லறதுக்குக் கூட கூச்சமா இருக்கு.. ஆனா இப்போ வேற வழி தெரியலே.. கல்யாண்.. உன்னோட மாமா ஒரு குரூரமான மெண்டாலிடி உள்ளவர்டா.. ரொம்ப ரொம்பகாலமா இப்படித்தான் இருக்கார். குரூரம்னு சொன்னா கூட அதுக்கு அர்த்தம் இல்லை. இன்னும் மேல.. உனக்கு எப்படி சொல்லறதுன்னு தெரியலே..”

     

    கோம்டி சற்று நிதானமாகவே கேட்டாள். “ உங்க மாமா பெரிய பெண் பித்தர்.. அதத்தானே சொல்ல வரீங்க..”

     

    தலையை அசைத்தான். “சாதாரண ஸ்த்ரீ வெறியன் இல்ல மேடம்.. எப்படிச் சொல்றதுன்னே தெரியல. அவர் ஒரு சைகோபாத் செக்ஸ் வெறியர்.”

     

    “உங்களுக்கு எப்போ தெரிய வந்தது இந்த விஷயம்?”

     

    “நாலு மாசமாவே தெரியும் மேடம். ஒரு நாள் சாயங்காலம் ஆஃபீஸ்லேர்ந்து கிளம்பறச்சே மாமா ஃபோன் வந்தது.  ஆடிட்டர் அர்ஜெண்டா சில பேப்பர் டைப் பண்ணனும்னு சொல்லி சில அப்ளிகேஷன் ஃபார்ம் லிங்க் அனுப்பிச்சிருந்தார். அதை கம்ப்யூட்டர்லயே பார்த்து சரியா அந்த காலம்ன் பார்த்து டைப் செய்யணும். இதெல்லாம் முரளியும் செய்வான். ஆனா ரெண்டு மூணு நாளா அவன் வரல்லே.. ஆளும் கிடைக்கலே. அப்போ என்னைக் கூப்பிட்டார். நான் இங்க வந்தேன்.  கம்யூட்டரைக் காமிச்சு அந்த லிங்க் எடுத்து ஃபார்ம் ஃபில் பண்ணி ப்ரிண்ட் அவுட் எடுக்கணும்டா.. அதைப் பண்ணு.. பேப்பர்ல சைன் பண்ணினா ஆடிட்டர் நேரயே  நாளைக்காலைல இன்கம்டாக்ஸ் ஆஃபீஸ்ல கொடுத்துடுவார்டா’ன்னு எனக்குச் சொன்னார். நானும் கம்ப்யூட்டர்கிட்டே உட்கார்ந்து இதையெல்லாம் செஞ்சுண்டுருக்கறச்ச இவர் ஹால்ல தன் ஃபோனை   நோண்டிண்டிருந்தார். நான் முதல்ல அத சரியா கண்டுக்கலதான். கம்ப்யூட்டர் வேலை முடிச்சு பிரிண்ட் அவுட்லாம் எடுத்து அவர்கிட்ட கையெழுத்து வாங்கணும்னு கொஞ்சம் அவர்கிட்டே நிதானமாத்தான் போனேன்.”

     

    அவன் நினைவுகள் அந்த நாளிரவு நிகழ்ச்சிக்குத் தாவின. இதே ஹால்தான். மாமா சோபாவில் வெகு சீரியஸாக ஃபோனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார். சுந்தர் கையில் பேப்பர்களுடன் மெதுவாக ‘என்ன போட்டோ அது’ என்று ஒரு ஆவலில் அவர் பின்னால் நின்று அவருக்குத் தெரியாமல் எட்டிப் பார்த்தான். எல்லாமே பெண்களின் நிர்வாணப் படங்கள். அதிர்ச்சியில் நிலைமை தெரியாமல் கத்தி விட்டான். அவன் கைகளிலிருந்த பேப்பர்கள் சிதறி கீழே விழுந்தன.

     

    “மாமா! என்ன இதெல்லாம்? அதுவும் நீங்களா இப்படி?”

     

    மாமாவும் இவன் திடீரென வந்து கத்திக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். அந்த அதிர்ச்சியில் அவசரமாக எழுந்து கொள்ளும்போது தடாலென அவர் கையிலிருந்த ஃபோன் ஏடாகூடமாக கீழே விழுந்து இரண்டாக விரிந்து போனது. அவசரமாக கீழே விழுந்த ஃபோனை எடுத்து அந்த இரண்டுப் பகுதிகளையும் சேர்க்கையில் அது வேலை செய்யாமல் ரிப்பேரானது தெரிய வந்தது. ஆத்திரம் வந்தது மாமாவுக்கு. சுந்தர் பக்கத்தில் வந்து ஆத்திரத்துடன் ‘பளாரென’ அவன் கன்னத்தில் அறைந்தார். சுந்தர் கன்னத்தைத் தடவியபடி அப்படியே நின்றான்.

     

    மாமா கொஞ்சம் நிதானத்துக்கு வந்தார். ஒரு கையில் ஃபோனைப் பார்த்துக் கொண்டே அவனைப் பார்த்தார்.

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 13

    திவாகர்

     

    கோம்டி வீடு

     

    “கல்யாண்! இன்னும் தூங்கலியா?”

     

    அவன் பெருமூச்சு விடுவது அவளுக்குக் கேட்கிறது. “தூங்கறது இருக்கட்டும். இன்னும் சாப்பிடக்கூட இல்லே.”

     

    “முரளி அங்கே இருக்காரா?”

     

    “இல்லே அவன் நங்க நல்லூர் அவன் வீட்டுக்குப் போயிட்டான். அவனுக்கென்ன.. அவன் மனசுல இருந்த அத்தனைக் கஷ்டத்தையும் இறக்கி எனக்குக் கொடுத்துட்டு போயிட்டான். அது இருக்கட்டும்.. உங்களுக்கு முரளி சொல்றதெல்லாம் எப்படி படறது?”

     

    “ம்ம்.. சொல்றேன்.. நீங்க என்ன பண்ணுங்க முதல்ல போய் சாப்பிட்டுட்டு வந்து பேசுங்க..

     

    “இல்லல்ல.. என் எதிர்லயேதான் சாப்பாட்டை வெச்சிருக்கேன்.. ஆனா ஏறத்தான் மாட்டேங்குது.. நீங்க பேசுங்க கோம்டி. உங்க பேச்சைக் கேட்டுண்டே சாப்பிடறேன். ஆனா ஒண்ணுங்க உங்க மூளை அபாரமா வேலை செய்யுது.”

     

    “சரி, சாப்பிட்டுண்டே கேளுங்க. முரளி கொலை செய்ய வாய்ப்பிருந்தும் சரியான காரணங்கள் இருந்தும் அவன் கொலை செய்யலேன்னுதான் நினைக்கிறேன். ஆனா முரளி சித்ரா பௌர்ணமியன்னிக்கு நடந்ததுன்னு சொன்னது உண்மையாக இருந்தாலும் அதுக்கப்பறம் துப்பாக்கியை உங்க பெரியப்பா எடுத்தது.. வாய்ச்சவடாலா பேசினது.. சுட்டாலும் சுடுங்க ஆனா.. இனிமே பிரியாவை சந்திக்க கண்டிப்பா வீட்டுக்கு அவரை வரவேணாம்னு சொன்னதெல்லாம் கொஞ்சம் இடிக்குது. உங்க பெரியப்பா அவ்வளோ ஈஸியா எந்த விஷயத்தையும் விடறவர் கிடையாது ”

     

    கல்யாண் பதில் ஏதும் சொல்லவில்லை.. ‘ம் ம்’ என்று மட்டும் சொன்னான்.

     

    “சரி, பெரியப்பாவோட இந்த மாதிரியான பொம்பிளை ஃபோபியோ இன்னும் எங்கெல்லாம் பரவி இருக்குன்னு கண்டுபிடிக்கணும்.. அதே போல சுந்தர் எதுக்காக சிதம்பரம் போய் பிரியா வீட்டுல பத்து லட்சம் கொடுத்து இதுல இன்வால்வ் ஆனான்.. அவனுக்கு இந்த பெரியப்பாவோட லீலைகள் எவ்வளோ தூரத்துக்குத் தெரியும்.. அல்லது ஜஸ்ட் பெரியப்பாவோட கோரிக்கை மேலே பணம் கொரியர் மூலமா கொடுக்கறது போல போனானான்னும் தெரியணும்.. அவன் இந்தக் கொலைல சம்பந்தம் இருக்கான்னு பாக்கணும்.. எதுக்குன்னா அவன் டிடாச்மென்ட் எங்கிற பேருல அவனை இந்த விசாரணை சர்க்கிள்லேர்ந்தே தவிர்க்கப் பாக்கறான். அதனாலதான் சந்தேகம் வருது. ஆனா அவனோ அந்த சமயத்துல ஸ்பாட்’ல இல்லங்கறது எவ்வளோ தூரம் உண்மை.. அவன் முதல்லயே சிதம்பரமோ வைத்தீஸ்வரன் கோயில் போகாம இங்கேயே இருக்கறதுக்குக் கூட சான்ஸ் இருக்கு. அப்படியே சிதம்பரம் போனா கூட அவன் பணத்தைக் கொடுத்தானாங்கறது கூட கண்டுபிடிக்கணும். அதனால முரளிக்குத் தெரியாம சிதம்பரம் போகணும். அப்படி போகறதுக்கு முன்னாடி காலைல நான் சுந்தர்கிட்டே பேசணும்.. எப்படி பொன்னம்மாவோட சித்ரா பௌர்ணமி விஷயம் முரளியைப் பேச வெச்சதோ அதுமாதிரி சிதம்பரம் ரஞ்சிதாவோட அம்மாவும் பெரியப்பா கொடுத்த பத்துலட்ச ரூபாய் விஷயமும் சுந்தரைப் பேசவைக்கும்னு நினைக்கிறேன். இன்னும் ரவி வேற என்னன்ன விஷயம்லாம் சொல்லப் போறானோ.. அவன் சுந்தரை ஃபால்லோ பண்ணிட்டிருக்கான்.  கல்யாண்.. நீங்க சாபிட்டுட்டுப் படுங்க..  நாளைக்கான விஷயத்தை நாளைக்குப் பாத்துக்கலாம்.. ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயம் கிடைச்சாலும் கொலைக்கான நேரடியான விவரம் கிடைக்கலே. முரளிகிட்டே கொஞ்ச நாள் ஜாக்கிரதையா பழகுங்க..”

     

    அவன் உம் உம் என சொன்னதிலிருந்து சாப்பிடுகிறான் என்பது புரிந்தது.

     

    “சரி சாப்பிடுங்க.. நான் நாளைக்கு மத்யானமா உங்களைப் பாக்கறேன்.. குட் நைட்.”

     

    என்று சொல்லிவிட்டு ஃபோனைக் கட் செய்தாள். “பாவம்.. பெரியப்பா இவ்வளோ பெரிய காமாந்தகன்னு தெரிஞ்சவுடனே அப்செட் ஆயிட்டான்.. சாதாரண காமாந்தகன் இல்லடா மகா அயோக்கியத்தனமான காமப் பிசாசுன்னு தெரிஞ்சா இவன் என்ன செஞ்சுப்பானோ.. அடடா.. இந்த சுமதியைப் பற்றி கல்யாண்கிட்ட கேட்கலையே.. சரி, நாளைக்குப் பார்த்துப்போம்.. ஆனா முரளி சுமதியைப் பத்திப் பேசறச்சே ஒண்ணும் சொல்லலியே.. பார்க்கணும் நாளைக்கு..”

     

    என வாய்விட்டுச் சொன்னவள் கண்ணை மூடிப் படுக்க ஆரம்பித்தாள். அதற்குள் இன்னொரு ஃபோன் வந்தது. ரவிதான் பேசினான். அவன் அவளிடம் ஏதோ சொல்லச் சொல்ல நிதானமாகக் கேட்டாள்.

     

    ‘தேங்க்ஸ்டா ரவி, எனக்கு எப்பவுமே சுந்தர் மேல சந்தேகம் உண்டுதான்.. நீ சொன்னபடி அந்தம்மா பேரு என்ன சொன்னே சூடாமணி இல்லே.. அவங்க நம்பர் அனுப்பு. நான் பேசறேன், அத்தோட அந்த ஆசிரமத்துப் பெயர் சொல்லமாட்டேன்.. இந்த போலீஸ் பேரைச் சொல்லி பேசவெச்சுட்டா போச்சு. எதுக்கும் இன்ஸ்பெக்டர் மோகன்கிட்ட சொல்லி சுந்தர்கிட்டே பேசச் சொல்றேன். ஆனா போலீஸ் ரொம்ப விசாரிக்காது. அவங்களுக்கு இந்தக் கேஸ் எப்போ முடிக்கலாம்னுதான் இருக்கு,,  டோண்ட் வொர்ரி.. குட் நைட்.’ ஃபோனை வைத்தாள்.

     

    அடுத்த நாள் காலை பதினோறு மணியளவில் எக்ஸ்ப்ரஸ் மால் இரண்டாவது மாடி.. கூடவே தோழி சாந்தியுடன் ஒரு கடையில் நுழையப் பார்த்தவள் சட்டென அந்தக் கடை வாயிலில் நின்று நிதானித்தாள். சாந்தி கவனித்தாள் அவளை.

     

    “என்னடி அப்படியே நின்னுட்டே..”

     

    “இருடி.. உள்ளே கல்யாண் இருக்கான்”

     

    “யாரு அந்த பல்லழகனா? இருக்கட்டுமே.. பார்த்தா நல்லதுதானே.. சிரிச்சாதான் கஷ்டம்..”

     

    “இல்லடி.. நீ கொஞ்சம் பின்னாடி வா.. உள்ளே போகாம வெளியே கண்ணாடி மூலமா பாருடி.. அவன் கூட யாருன்னு பாக்கணும்.. அந்த பொம்பிளை யாருடி.. இன்னும் மூஞ்சியைக் காமிக்கலே,, பின்னாலே திரும்பிப் பார்த்தாதான் தெரியும்.. ஒருவேள இவதான் பிரியாவா.. அவன் அண்ணின்னு நினைக்கிறேன்..”

     

    “யாரு.. அந்த முரளி பொண்டாட்டின்னு சொன்னியே.. அவளா இவ..?”

     

    “இருக்கலாம்.. ஆனா இவன் எதுக்காக இவளை அழைச்சுண்டு வரணும்? ஹேய் அவ திரும்பிப் பாக்கறா.. இவளா.. இவ நம்ம சுமதி இல்லே.? அட, அதோ பாருடி உங்கண்ணன் ரவி கூட அவன் கூட  எதையோ டிரெஸ் எடுக்கிறான். அட, ரவி எவ்வளோ உரிமையோட அவளைத் தொட்டு டிரஸ் மேட்ச் பண்றான் பாருடி! ”

     

    “ஆமாண்டி நம்ம சுமதியேதான்.. ரவியும் கல்யாணும் சுமதிக்குத் ஏற்கனவே தெரியுமா?”

     

    “பார்த்து ரொம்ப நாளாச்சு. எஸ்.. திஸ் இஸ் சுமதி.. அட இவளா.. அவங்க பெரியப்பா இந்தப் பொண்ணை இன்னும் விடலியா? இவ விஷயம் எவ்வளோ தூரம் கல்யாணுக்குத் தெரியும்? இவளோட விஷயம் தெரியும்னா இவனுக்கு அப்போ நம்ம கிலினிக்ல நடந்த விஷயம் தெரியுமா? ரவிக்கு எவ்வளோ விஷயம் தெரியும்? அல்லது தெரியாதது மாதிரி நம்மகிட்டயே நடிக்கிறாங்களா? இவகிட்ட இன்ஸ்பக்டர் வேற போகச் சொல்லி பேசச் சொன்னாருடி.. அது வேற யாரோ சுமதின்னு நினைச்சுண்டிருந்தேன். இவளுடைய கதைதான் நமக்குத் தெரியுமே.. கல்யாண்கிட்டே சுமதி எப்படி மாட்டினா.. அன்னிக்கு இன்ஸ்பெக்டர் இவளை சந்தேகமா பேசறச்சே கல்யாண் சுமதிக்கு சப்போர்ட்டா பேசினானே..  (அப்போது அவர்கள் மூவரும் பில் கவுண்டர் அருகே வருகிறார்கள்) “யேய் சாந்தி!. பாருடி நிறைய வாங்கியிருக்காங்க.. அவ பரம்பரைக்கும் மேலே வரும். ஏய் அவன் வர்றாண்டி.. கொஞ்சம் நம்மளை மறைச்சுக்கலாம். கல்யாணுக்கு மட்டுமில்லே.. சுமதிக்கும் நம்மளைத் தெரியுமே.. ரவியையும் கூப்பிடாதே.. நான் இப்போ அவங்களை பார்க்க விரும்பலே.”

     

    என்று சொன்ன கோம்டி தன் தோழியுடன் அடுத்துள்ள கடையின் உள்ளே நுழைந்தாள். கல்யாணும் ரவியும் கூட வந்தப் பெண்மணியும் தன்னைக் கடந்த உடன் அவர்களறியாமல் பின் தொடர்ந்தாள். கீழே வந்தவுடன் அவன் ஃபோனில் அழைக்க சில நிடங்களில் அங்கே ஒரு ஊபெர் டாக்ஸி வந்தது. அதில் மூவரும் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள அந்த வண்டி போகத் தொடங்கியது.

     

    சாந்தியும் கோம்டியும் வேடிக்கை பார்த்தாலும் கோம்டி ஏனோ அவர்களை அதற்கு மேலும் பின் தொடர விரும்பவில்லை.

    “சரிடி.. சீக்கிரம் உன் டிரஸ் செலக்ஷனை முடிச்சுடலாம்.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. போகணும்.”

     

    கோம்டி வீடு (க்லினிக்) மதிய வேளையில் கோம்டி தனியாக உட்கார்ந்து குறிப்பு எடுத்துக் கொள்ளும்போது அவளுக்கு ஃபோன் வருகிறது.

     

    கல்யாண் பேசினான்.

    “கோம்டி! வீட்டுலதானே இருக்கீங்க.. உடனே நம்ம வீட்டுக்கு வந்தால் சுந்தருடன் பேசலாம்! ரவியும் இங்கதான் இருக்கான்.” .

     

    ஒரு நிமிடம் யோசித்தாள். “சரி, இப்போ மணி ரெண்டாகுது.. அரை மணி நேரம் லேட்டானா பரவாயில்லையா? வருகிறேன்..  அவர் அங்க இருப்பாரா.. ஏதாவது மீடிங்க்னு போயிடுவாரா?” என்றாள்.

     

    “இல்லே.. இருக்க வெக்கிறேன்.” ஃபோனை வைத்தான்.

     

    அவள் இன்னொருவருக்கு ஃபோன் செய்தாள். “எப்படி இருக்கீங்க சூடாமணி அம்மா? சௌக்கியமா இருக்கீங்களா? எனக்கு உங்க நம்பரை சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் உங்க ஊர் போலீஸ் மூலமா வாங்கிக் கொடுத்தார். நாம ஃபோன்லயே பேசலாமா.. இல்லே நேர வந்தா பேசுவீங்களா? எப்படி சௌகரியம்? இப்போ நான் தனியா இருக்கேன். என் பக்கத்துல யாரும் கிடையாது.. ஆனா சிதம்பரம் எனக்குத் தெரியாத ஊரு. யாராவது தெரிஞ்ச போலீஸைத்தான் துணைக்கு அழைச்சுட்டு வரணும்..”

     

    “ஐய்யய்யோ இதுக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு தூரம் சிரமத்தோட வரணும்? உங்களுக்கு என்ன தேவையோ சொன்னீங்கன்னா பதில் சொல்லிடறேம்மா.. உங்க பேரு?”

     

    “என் பேரு கோம்டி.. இது வாட்ஸப் கால்தான்.. இதையே வீடியோ காலா மாத்தி பேசலாமா? உங்களுக்கும் என் மேல நம்பிக்கை வரும்..”

     

    வீடியோவில் அந்த சூடாமணி வந்தாள்.

    “சரி, இருக்கட்டும்.. நான் நேரா விஷயத்துக்கு வரேன் சூடாமணி..  உங்களுக்கு கந்தசாமியை எவ்வளோ வருஷமா தெரியும்?”

     

    “எந்த கந்தசாமிம்மா?” அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் சூடாமணி.

     

    “இதோ பாருங்க சூடாமணி.. நான் முடிஞ்சவரைக்கும் உங்களையும் உங்க பொண்ணு பிரியாவையும் காப்பாத்ததான் முயற்சி பண்றேன்.. நீங்க கோ ஆபரேட் பண்ணலேன்னா சிதம்பரம் போலீஸ் துணையோட உங்களை சென்னை அழைச்சுட்டுவந்து போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சுதான் விசாரிப்பாங்க.. உங்க இஷ்டம்..”

     

    அவள் கை எடுத்து கும்பிட்டாள். “அம்மா இல்லேம்மா.. எனக்கு எதுக்கும்மா வீண்தொந்தரவெல்லாம். அந்த கந்தசாமியைப் பத்தி பேசவே வேணாம்னுதான் அப்படிச் சொன்னேன்மா.. நான் திருச்சில இருக்கறச்சே பழக்கம்மா அவர். அங்க ஒரு பெரிய அனாதைக் குழந்தைங்க காப்பகம்னு இருக்கு. அங்க பல வருஷமா வேலை பார்த்தேன்மா. ஏன்னா புருஷன் குடிகாரன்.. அவனையும் பாத்துக்கணும்.. அதுக்காக அந்த காப்பகத்துல கிட்டத்தட்ட மானேஜர் மாதிரி வேலை. அங்க கந்தசாமி அடிக்கடி வருவார். குழந்தைங்க மருத்துவச் செலவையெல்லாம் ஏத்துப்பார். அதுவும் பெண்குழந்தைங்கன்னா அடிக்கடி வெளியே அழைச்சுண்டு போய் ஊரெல்லாம் சுத்திக் காண்பிப்பார்.  அப்போதான் பழக்கம்மா.. அந்தக் காப்பகத்துலேர்ந்து மேல்படிப்பு படிக்க வெக்கிறேன்னு சில பொண் குழந்தைகளை தன்னோட செலவுல மெட்ராஸ்ல தெரிஞ்ச ஹாஸ்டல்ல வெச்சுப் படிக்க அனுப்பி வெச்சாரு. எங்க வீட்டுக்கு வந்து என் பொண்ணைப் பார்த்தார். அடிக்கடி வர ஆரம்பிச்சாரு.. அவருக்கு அப்பவே வயசு அம்பத்து அஞ்சோ அறுபதோ கூட இருக்கும். ஒருதடவை நான் வீட்ல இல்லாதப்ப என் பொண்கிட்ட மயக்க மருந்து கொடுத்து அத்துமீறிட்டார்மா. அவளுக்கு வயசு இருபதுதான்மா.. காலேஜ் ஃபைனல் வருஷம் போயிண்டிருந்தா.. எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சவுடனே சத்தம் போட்டேன்மா.. அவரு பயமுறுத்தினாரு. நாங்கல்லாம் பணக்காரங்க இல்லம்மா.. அடுத்த வாரமே நாங்க வேலையை விட்டுட்டு வீட்டைக் காலி பண்ணிண்டு எங்க ஊரு சிதம்பரம் வந்துட்டோம். ஆனாலும் அவரு விடலே.. என் பொண்ணு ரொம்ப முரண்டு பிடிச்சா.. அழுதாம்மா.. ஆனா பணம் பத்தையும் செய்யும்.. அவரு எங்க மூஞ்சில பணத்தை அள்ளி வீசினார்மா.. நாங்க வேற வழியில்லாம பொறுக்கிக்கினோம்..” அவள் அழுதாள். அழுதபடி இருந்தவள் புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி பேசினாள்.

     

    “புரியுது.. மேலே சொல்லுங்க சூடாமணி”

     

    “இந்த உலகத்துல எப்படி பிறந்தாலும் ஏழையா பொறக்கக்கூடாதம்மா.. அப்படி ஏழை வீட்ல பொறந்தாலும் அழகான பொண்ணா பொறக்கக்கூடாதும்மா.. அதனால் இத்தனையும் அனுபவித்தோம். பணம்தான்மா குற்றம் செஞ்சது. அந்தப் பணம் எங்க வாழ்க்கை சுகமா போறதுக்குத் தேவை. என் பொண்ணு நல்லா படிச்சவ.. ஆனா அவ இவரை மனசார ஏத்துக்கலை. ஆனா இந்த மாதிரி கொடுமை அவளுக்கு பிடிக்கலை.. வேற வழியில்லாம வயசு வித்தியாசம் ஜாஸ்தியானாலும் பரவாயில்லே.. இந்தாளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லச் சொன்னா.. இவரும் அப்படி பண்றேன்னு ஒரு வருஷகாலம் அப்படியே சொல்லிச் சொல்லி ஏமாத்தினாரும்மா. என் பொண்ணு ஒத்துக்காம சண்டை போட்டா.. எழுதி வெச்சுட்டுத் தற்கொலை பண்ணிப்பேன்னு அழுதா.. வேற வழியில்லாம அவரே ஏற்பாடு பண்றேன்னு சொல்லி அவர் உறவுக்கார பையனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சார்மா.

     

    “மிஸ்டர் முரளிதானே அவர் பேரு?”

     

    “ஆமாம்மா.. ஆனா அத்தோட விட்டாரா.. நாலஞ்சு மாசத்துக்கு மாசத்துக்கு முன்னாடி இங்க வந்தாரு. கலியாணம் பண்ணிய பொண்ணைத் திரும்பவும் எங்கிட்டயே அனுப்பறேன்னு சொல்லி அஞ்சு லட்சம் பணம் கொடுத்தாரு. இனிமே பிரியாவைத் தானே பாத்துக்கறேன்னும் சொல்லிட்டுப் போயிட்டாரு. இது நடந்தவுடனே என் பொண்ணுக்கு ஃபோன் போட்டுப் பேசினேன்மா. அந்த ஆள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுன்னு தெளிவா சொல்லிடுத்து. பிரியா இப்போ மகிழ்ச்சியா கல்யாணம் ஆகி முழுகாம இருக்குது.. அதனால அவளே சொல்லிட்டா.. ‘இனிமே அந்தாளு பத்தி எந்தப் பேச்சும் தேவையில்லே.. அந்தாளைப் பத்திப் பேசினா அம்மா பொண்ணு உறவைக் கூட கட் பண்ணிடுவேன். ஜாக்கிரதை.. ன்னு கண்டிப்பா சொல்லிட்டாம்மா’ என் பொண்ணு. நான் அப்படியே சந்தோஷமா இரும்மா’ன்னு சொல்லிட்டேன்மா.. அவ்வளவுதான்.. அதுக்கப்பறம் நாங்க கந்தசாமியோட எந்தத் தொல்லையுமில்லாமதான் இப்போவரைக்கும் இருக்கோம். போனவாரம் அந்த ஆளை யாரோ கொலை பண்ணிட்டாங்கன்னு சொல்லி மூணாம் நாள் போலீஸ்க்காரன் வந்து சொல்லிட்டு ரஞ்சிதான்னு இங்க யாராவது இருக்காங்களான்னு கேட்டாங்க.. அப்படி யாரும் இல்லே.. இந்த கந்தசாமி என் பொண்ணை அப்படித்தான் கூப்பிடுவாருன்னு தெரியும்.. ஆனாலும் ரஞ்சிதா புஞ்சிதா உறவெல்லாம் போனவுடனே அந்தப் பேருல என்ன இருக்குன்னு அப்படி சொல்லிட்டோம்.. இவ்வளவுதான்மா..”

     

    “சூடாமணி! உனக்கு கந்தசாமி போனவாரம் அதாவது கொலை நடந்த அன்னிக்கு மத்தியானம் பத்துலட்சம் அனுப்பிச்சாரா? யாராவது வந்து கொடுத்தாங்களா?”

     

    “ஐய்யய்யோ..  அப்படியெல்லாம் ஒரு பைசா வாங்கல்லம்மா.. எப்போ என் பொண்ணு சொல்லிடுத்தோ.. அப்பவே அந்தக் கந்தசாமி உறவுல்லாம் போயிடுச்சும்மா.. ஆறு மாசம் முன்னாடி கொடுத்த அஞ்சு லட்சம் பணம் கூட அப்படியே வெச்சுருக்கேன்மா.. சந்தர்ப்பம் வரச்சே திருப்பிக் கொடுக்கணும்னுதான். அப்படிப்பட்டவ எதுக்கும்மா அவங்கிட்டே நான் பணம் வாங்கணும்? எங்க குலதெய்வம் சாட்சியா, என் பொண்ணுக்குப் பொறக்கப்போற குழந்தை மேல சாட்சியா சொல்லறேன்மா.. சத்தியமா ஒரு பைசா நான் வாங்கலே.. அப்படி பணம் கொடுக்கவும் யாரும் வரல்லேம்மா” அவள் அழுதுகொண்டே தன் கையை தலைமேல் வைத்துப் பேசினாள்.

     

    “சரி சூடாமணி.. எனக்கு இன்னொரு விஷயம் தெரிஞ்சாகணும். திருச்சிலேர்ந்து பொண்குழந்தைகளை மெட்ராஸ் அனுப்பிவெச்சு படிக்க வெப்பார்னு சொன்னியே.. அந்த இடம் சென்னையில இப்போ எங்க இருக்குன்னு சொல்லமுடியுமா?”

     

    “முடியும்மா.. ஆனா அந்த ரிகார்ட் திருச்சிலதான் இருக்கு. எனக்கு அந்தப் பொண்ணுங்க பேரெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு.  நான் எல்லா விவரமும் கேட்டு வாட்ஸ் ஆப்’லியே கொஞ்ச நேரத்துல அனுப்பறேன்மா.. எதுக்கும்மா.. எல்லாரும் சின்னக் குழந்தைங்கம்மா.. என்னா வயசு 12, 13 இருக்கும் இப்போ..”

     

    “இருக்கட்டும் ஒரு விசாரணைக்குதான்.. நீ விவரம் அனுப்பு.. வேற ஏதாவது கேள்வி கேட்கணும்னா நான் உன்னைக் கூப்பிடறேன். சரி வெச்சுடு..”

     

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 12

    திவாகர்

     

    “மாமா உங்களை எதிர்த்து எப்போதுமே பேசாதவன் நான். நீங்க வந்து இந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டுடா’ன்னீங்க.. நான் யோசிக்காம கட்டினேன். என் எதிர்கால வாழ்க்கையைப் பத்திக் கூட யோசிக்காம நீங்க சொன்னதைத்தான் செஞ்சேன். ஆனா அவளோடு குடும்பம் நடத்தக்கூடாதுன்னு நீங்க ஒரு வார்த்தை சொல்லலே.”

     

    “டேய்.. டேய் என்னடா சொல்லறே?”

     

    “ஆமாம் மாமா.. தாலி கட்டின ஒரு பெண்ணை நான் கூட்டிண்டு வீட்ல ஒத்தரை ஒத்தர் தனியாவா பாத்துண்டிருக்க முடியும்..? பிரியா அழகான பொண்ணு. அத்தோட அறிவுள்ள பொண்ணு.. நான் ஒரு முட்டாள்.. உங்க வளர்ப்புல வளர்ந்தவன் இல்லே.. வேறெப்படி இருக்கமுடியும். நாய் மாதிரி நன்றி உள்ளவனாகத்தான் இருக்கமுடியும். அந்த நாயாதான் அவள் பின்னாடி அன்னிக்குப் போனேன். ஆனா பிரியா படிப்படியா என்னை மாத்தி எனக்குப் புத்திமதி சொல்லி நாயா இருந்த என்னை ஒரு மனுஷனா ஆக்கினா.. ‘

     

    முரளி கொஞ்சம் நிறுத்தினான். பெருமூச்சு விட்டான். கோபம் அதிகமாக இருந்த மாமாவிடம் நெருங்கி கொஞ்சம் நிதானமாகப் பேசினான்.

     

    ‘நீங்க அப்பப்போ இங்க வீட்டுக்கு வரட்டுமா வரட்டுமான்னு கேக்கற போதெல்லாம் நான் வேணாம்.. வேணாம் மாமான்னு தடுத்தேன். ‘இப்போ ரஞ்சிதா இல்லே மாமா அவ பிரியாமுரளி’ன்னு பேரை மாத்திண்டான்னு சொன்னேன். நீங்க கண்டுக்கவே இல்லை.. எந்த எழவானாலும் பேரை வெச்சுக்கட்டுமே..ன்னு அலட்சியமா சொன்னீங்க.. ஆனாலும் குடும்பம்னு வந்துட்டா ஒரு ஆண்மகன் தன் குடும்பத்துக்கு எப்போதுமே விசுவாசமா உண்மையா இருக்கணுமா இல்லையா.. பிரியாவே ஒரு வார்த்தை சொன்னா.. ‘நான் மாமாவோட பலவந்தப்படுத்தப்பட்டு வேறே வழி தெரியாம பைத்தியம் மாதிரி அவஸ்தைப்பட்டேன். வாஸ்தவம்தான். ஆனா இப்போதான் கணவன் மனைவி உறவுங்கிறது என்ன ஒரு அழகான உறவுன்னு புரியுது. இதோ பாருங்க.. உங்களுக்கும் எனக்கும் அது என்ன காரணத்தாலோ கல்யாணம்னு ஒண்ணு நடந்திடுச்சு. இப்போ காலம் மாறிடுச்சு. இரண்டு மனம் ஒத்துப் போறவங்கதான் கணவன் மனைவியா ரொம்ப நாள் வாழமுடியும். அப்படி ஒத்துப் போகலைன்னா டைவோர்ஸ் வாங்கிண்டு அவரவர் பாதைல நடக்கணும். இதுக்கு இப்போ சமூக அங்கீகாரம் கூட பலமா கிடைச்சாச்சு. பெண்களும் பழைய மாதிரி இல்லாம சுயமா சிந்திச்சு மானத்தோட மரியாதையோட செயல் படற காலம் இது. இப்போ என்ன? கொஞ்ச நாள் உங்க மாமா கூட ‘லிவ் இன்’ மாதிரி இருந்தேன். ஆனா கலியாணம் பண்ணிக்காம இருந்தேன். இப்போ பிரிஞ்சாச்சு. அதாவது இது கூட டைவோர்ஸ் மாதிரித்தானே.. ஒரு டைவோர்ஸியான என்னை நீங்க ரிஜிஸ்டர் விவாகம் பண்ணிண்டீங்க.. இப்போ சட்டப்படி கணவன் மனைவி.. நான் என் கணவன்கிட்டே உண்மையா இருப்பேன். அப்படியே நீங்களும் இருந்தீங்கன்னா நம்ம புது வாழ்க்கையை தென்றல் போல ஆனந்தமா கழிப்போம்’ன்னு சொன்னா மாமா.”

     

    “அடேய் பைத்தியக்காரா.. நீ நிஜமாவே லூஸாடா.. அவ அப்படி சொன்னா நம்பிடுவியா? டேய்.. ஒரு தற்காலிகமா அரேஞ்ச்மென்ட் தேவை.. அதுக்காக உன்னை அப்படி அவளுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சேன். இப்போ அவ ஆடற நாடகப் பேச்சைக் கேட்டுட்டு நீ அவ காலடில போய் விழலாமாடா.. டேய்.. பொம்பளை பேச்சை எல்லாம் மதிக்கலாமாடா.. மதிச்சா நம்மை மிதிச்சுடுவாங்கடா.. மடையா.. இப்போ என்ன ஆச்சு.. எங்க போய் ஒளிஞ்சுண்டா.. வரச் சொல்லுடா நான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கறேன். ரெண்டு வேளை சோத்துக்கு வழியில்லாத குடும்பம் அது…. அந்தக் குடும்பத்துக்கு இவளுக்காக லட்சம் லட்சமா செலவு பண்றேண்டா.. வரச் சொல்லுடா அவளை.. இல்லே நான் போய் இழுத்து வரேன்.”

     

    “மாமா.. அவ ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கா..”

     

    “ஆஸ்பத்திரியா.. எதுக்கு?”

     

    “மாமா..“ என்று இழுத்தான். “குடும்பம் நடத்துறேன்னு சொன்னேன் இல்லே.. அதான் அவளுக்கு இப்போ மூணாவது மாசம்..”

     

    “புரியுதுடா.. “

     

    கந்தசாமி கோபத்தோடு பின் கையைக் கட்டிக்கொண்டு அங்குமிங்கும் நடந்தார். கொஞ்ச நேரம் வரை பேசாமல் அப்படி நடந்தவர் ஏதோ முடிவுக்கு வந்தவர் போல முகத்தை வைத்துக்கொண்டு முரளியின் அருகே சென்றார்.

     

    “முரளி, இன்னிக்கு நீ ஆஸ்பத்திரிக்குப் போகாதே.. ஆனா நாளைக்குப் போகற.. போயிட்டு அவளோட வயித்தை க்லீன் பண்ணிடறே.. புரியுதா.. எனக்கும் புரியுது.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா எரியத்தான் செய்யும்.  நான் ஒரேயடியா உங்களை நம்பியது என் தப்புதான். ஆனா இது உனக்கு இது கடைசி எச்சரிக்கை.. இனிமே அவகிட்டே நெருங்காதே.. ஒரு மாசம் போகட்டும். அவ ரெஸ்ட் எடுக்கட்டும். அவளை அவ ஊருக்கே அனுப்பிச்சிடலாம். அவங்கம்மா ஒழுங்கா எங்கிட்டே அனுப்பிடுவாங்க.. நீ என்ன பண்றே.. அவ ஊருக்குப் போன உடனே அதைக் காரணம் காட்டி ஒரு டைவோர்ஸ் அப்ளிகேஷன் போட்டா டைவோர்ஸ் வாங்கித் தரேன். அதுக்கப்பறம் நல்ல குடும்பத்துல பார்த்து உனக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வெக்கறது என் பொறுப்பு.. ஆனா ஒண்ணு இந்த விஷயம் யாருக்கும் அதாவது முக்கியமா சுந்தருக்கோ அல்லது கல்யாணுக்கோ தெரியவே கூடாது.. சரியா?”

     

    முரளி ஒன்றும் சொல்லவில்லை. பெரியப்பா வீட்டை விட்டு வெளியே போனார்.

     

    நினைவுகள் திரும்பின. மறுபடியும் கல்யாண் வீடு

     

    கல்யாண் தலையை ஆட்டினான், “ச்சே.. இதுவும் ஒரு வாழ்க்கையாடா.. டேய் முரளி, பயப்படாம சொல்லு. நீ இதுக்கப்பறம் அவர் எல்லை மீறக்கூடாதுன்னு கொலை பண்ணிட்டியா? சொல்லுடா.. தயங்காம சொல்லு.. அன்னிக்கு ராத்திரி நடந்தப்பறம் அவரால சும்மா இருக்கமுடியாதே.. வஞ்சம் கொண்ட பாம்பு மாறி அலைஞ்சாராடா.. சீச்சீ கேக்கவே அருவறுப்பா இருக்குடா..”

     

    முரளி இதைக் கேட்டதும் காதை மூடிக்கொண்டான்.

    “டேய் கல்யாண்.. நான் ஏண்டா அவரைக் கொலை பண்றேன்.. இல்லைடா நான் ஸத்தியமா எங்கம்மா மேலே சத்தியமா நான் கொலை பண்ணலே..”

     

    “அப்போ பிரியா பண்ணிட்டாளாடா?”

     

    “ஐய்யய்யோ அவ பேரை இழுக்காதேடா.. அவ மனசுல தங்கம்டா.. ரொம்ப ஸாஃப்ட் கூட.. நிஜமாவே சொல்லறேன்.. அவ பழசு எல்லாத்தையும் மறந்து புது வாழ்க்கை வாழணும்னுதானே ஆசைப்படறவ. அவ எதுக்குடா கொலை பண்றா?”

     

    கோம்டி குறுக்கிட்டாள்.

    “அப்போ நீங்களும் இல்லே.. பிரியாவும் இல்லேன்னு கச்சிதமா சொல்லறீங்க.. ஆனா இந்தக் கதையை போலீஸ் கேட்டாக்க இந்த கேஸ் ஃபைலை ஈஸியா மூடிடுவாங்க மிஸ்டர் முரளி.. கொலைப் பழியை உங்க ரெண்டு பேர் மேலயும் போட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் வஞ்சம் வெச்சு செஞ்சுட்டாங்கன்னு எப்படியாவது சொல்லி ஜெயில்ல போட்டுடுவாங்க”

     

    “ஐய்யோ அப்படியெல்லாம் பயமுறுத்தாதீங்க கோம்டி..”

     

    “பின்னே எப்படித்தான் இதை சால்வ் பண்றது? சரி, அதுக்கப்பறம் உங்க மாமா எப்படி பிஹேவ் பண்ணினார். அதைச் சொல்லுங்க உங்க மனைவி இந்த விஷயத்தை எப்படி டீல் பண்ணாங்க?”

     

    “மேடம்! அதுக்கப்பறம் ஒரு மாசம் கழிச்சு என்னை மறுபடியும் இவன் பெரியப்பா பிரியாவைப் பத்தி கேக்கறச்சே நான் கண்டிப்பா சொல்லிட்டேன்.” அவன் நினைவுகள் மறுபடியும் பின்னோக்கிச் சென்றன.

     

    கந்தசாமியின் வீடு.

     

    “இதோ பாருடா முரளி! உனக்கும் எனக்குமுள்ள உறவு ரொம்ப பாசமானது. இதுல பொண்ணுங்க மத்தில புகுந்து குழப்பக்கூடாது. நீ இன்னமும் அவளை ஊருக்கு அனுப்பலே. ஏன் அனுப்பலே? அத முதல்ல செய்யு! அதுக்கப்பறம் எனக்குத் தெரிஞ்ச வக்கீல்கிட்ட நான் பேசறேன்.. டைவோர்ஸ் வாங்கிடணும்.. இந்தக் கல்யாணமே என் சுய நலத்துக்காக ஒரு வியாபாரம் போல பண்ணி வெச்சுட்டேன்.. அதனால உனக்கு இன்னொரு பொண்ணு பார்த்துட்டேன். மாரேஜ் பீரோ மூலம்தான் பார்த்தேன். எல்லாமே நல்லா அமைஞ்சிருக்கு. அவளைக் கல்யாணம் பண்ணிண்டு சுகமா இரு., சரிதானா?”

     

    “மாமா.. இனிமே கல்யாணம் எல்லாம் நான் செஞ்சுக்கறதா இல்லே.. அதோட நான் பிரியாவை டைவோர்ஸ் பண்றதாவும் இல்லே.. இது முடிஞ்சு போன விஷயம். இதைப் பத்திப் பேசி நமக்குள்ள ஒரு பிரச்சினையை உருவாக்கிக் கொள்ள வேணாம் மாமா..”

     

    “என்னடா பெரிய பிரச்சினை..   டேய் மடையா.. உனக்கு எத்தனை தடவை சொல்வேன். அவ என் ஆள்டா.. எனக்காக என்னோட சௌகரியத்துக்காக வேண்டி நீ அதுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பேங்கிற நம்பிக்கையில இந்தக் கல்யாணம் நடந்ததுடா.. இதோ பார்.. நீ என்ன பிரச்சினையை எதிர்பார்க்கறே? ரஞ்சிதா ஏதாவது தற்கொலை பண்ணிக்குவா இல்லே கோர்ட்டுக்குப் போவா.. இப்படில்லாம் பிரச்சினை எதிர்பாக்கறியா? நீ கவலைப்படாதேடா.. நான் அவளை உன் வாழ்க்கைல புகுத்தினவன்.. நானே அவளை வெளியே கிளப்பிடறேன். அப்பறமா நீ புதுக் கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இரேண்டா..”

     

    “இல்ல மாமா! இனிமே எனக்கு லைஃபே என் பிரியா’தான்னு உங்கள்ட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன். இப்பவும் சொல்லறேன்.. பிரியாதான் என் பொண்டாட்டி..  பழசையெல்லாம் ஒரேயடியா மறந்துடுங்க.. அவ வயசு என்ன.. உங்க வயசு என்னன்னு நினைச்சுப் பாருங்க.. சட்டப்படி கூட எங்களுக்குதான் சாதகமா இருக்கு.  நீங்க இந்த விஷயத்தை மறக்கத்தான் வேணும். இல்லன்னா நான் கல்யாண்கிட்டயோ இல்லே வேற இடத்திலயோ ஏன், பிரியாவே சொல்லற மாதிரி போலீஸ்கிட்டயோ மத்யஸ்தம் செஞ்சுக்கப் போவேன்.. சொல்லிட்டேன்.. நீங்க இந்த விஷயத்தைப் பத்தி பேசறதோ இல்லே எங்க வீட்டுக்கோ வரவேணாம்.”

     

    “என்ன மறுபடியும் சொல்லு.. கல்யாண்கிட்ட மத்யஸ்தம் போவியா.. போலீஸ்கிட்ட போவியா? அடேய்.. அடேய்.. என்னையே பயமுறுத்தறியாடா.. என்னைப் பத்தி உனக்கு என்னடா தெரியும்.. இதோ பார்.. யார்கிட்டே பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறியா? நான் பொல்லாதவன்,, ரொம்ப ரொம்ப ரொம்ப பொல்லாதவன்..  நீ கல்யாணைப் பாக்கறதுக்கு இல்லே போலீஸ்கிட்ட போகறதுக்கு முன்னாடியே உன்னை சுட்டுப்போட்டு நம்ம தோட்டத்துலயே புதைச்சுடுவேன்.” என்றவர் கோபத்துடன் தன் பீரோவிலிருந்து கைத்துப்பாக்கியை எடுக்கிறார்.

     

    “சொல்லுடா.. சொல்லு.. இப்போ சொல்லு.. உனக்கு அந்த கேடுகெட்ட ரஞ்சிதா முக்கியமா இல்லே நான் முக்கியமா? சொல்லுடா..”

     

    முரளி கலங்கினாலும் அவரிடம் வருகிறான்.

    “மாமா.. நீங்க வளர்த்தீங்க.. உங்களுக்கு உரிமை இருக்கு.. என்னைக் கொன்னு போட்டுப் புதைச்சுடுங்க.. என்னைக் கல்யாணம் பண்ணின பிரியாவுக்கு கடைசி வரைக்கும் அவ மானத்தை பெருமையை காக்க போராடித்தான் செத்தேன்னு ஒரு திருப்தியும் இருக்கும். உங்க பேச்சைக் கேட்டு கட்டின பொண்டாட்டியையே அதுவும் என் பிரியாவை கூட்டிக்கொடுக்கற கேவலமான வாழ்க்கையே எனக்கு வேணாம்.. அப்படி ஒண்ணு ஆச்சுன்னா நான் தற்கொலைதான் பண்ணிப்பேன்.. அதனால உங்க கையாலே சாகறதுல எனக்குப் பயமே இல்ல.. சுடுங்க மாமா..”

     

    அவன் அழுகிறான். மாமாவுக்கு வெறுப்பு வருகிறது..

     

    “அடச்சீ போடா.. போடா.. என் கண் முன்னால இனிமே வராம எங்கயாவது போடா.. வாழ்க்கையும் வியாபாரமும் ஒண்ணுதாண்டா.. போ.. போ..”

     

    நினைவுகள் மறுபடி கல்யாண் இல்லத்தில்

     

    “நான் அன்னிக்கு அப்படி தைரியமா அப்படி சொல்லிட்டுப் போயிட்டேன். வீட்டையும் காலி பண்ணி நங்க நல்லூர்ல ஒரு வீடு பார்த்து அங்க நாங்க செட்டில் ஆயிட்டோம். பத்து நாள் ஆச்சு.. மாமாவுக்கு ஜுரம் வந்து படுத்துட்டாராம். பொன்னம்மாவை வெச்சு எனக்கு ஃபோன் பண்ணினார். சுந்தரும் வரச் சொன்னான். அவனுக்கு இந்த விஷயம்லாம் கொஞ்சமும் தெரியாதுன்னா கூட மாமா உடல் சுகமில்லேன்னு தெரிஞ்சு வந்திருக்கிறான். நானும் போனேன். கையைப் பிடிச்சுண்டுட்டார். “கல்யாண் வரணும்டா.. அவன் வந்துட்டா அவனுக்கு பொறுப்பெல்லாம் கொடுத்துட்டு நான் பாட்டுக்கு காசி ராமேஸ்வரம் போயிடறேன்’னு சொன்னார். கல்யாண் வர்றவரைக்குமாவது என்னை அடிக்கடி வந்து பாத்துக்கச் சொன்னார். ‘வளர்த்த பாசம் கூப்பிடுதுடா.. வாடா’ அப்படின்னு அழுதார். அவ்வளவுதான்.. நான் வழக்கப்படி எங்க ஆஃபீஸ் விட்டவுடன் சாய்ங்காலம் இங்க கிண்டில வந்து பார்த்துட்டு அவரோட ஷேர் சமாசாரம்லாம் சொல்லுவார்.. அதை இங்க கம்ப்யூட்டர்ல காமிப்பார்.. நானும் சில திருத்தங்களை நோட் பண்ணிட்டுப் போயிடுவேன், ஆனா சாப்பாடெல்லாம் கூட உட்கார்ந்து சாப்பிடறதில்லே.. கொலை நடந்த அன்னிக்கு வாக்கிங்காக அதிகாலைல வரச் சொன்னார். ரெண்டு பேரும் வாக்கிங்க் போனோம். அப்படி போகறச்சேதான் நடந்ததெல்லாம் மறந்துட்டேன்.. கல்யாண் நாளைக்குக் காலைல வர்றான். சுந்தர்கிட்ட கார் இருக்கு.. ரெண்டு பேரும் போய் அவனை அழைச்சிண்டு வாங்க.. அவனோட பேருல தாத்தாவோட சொத்தை எழுதணும்.. உனக்கும் சுந்தருக்கும் கூட என் சொத்துலேர்ந்து கொஞ்சம் பங்கு தரச் சொல்லி கல்யாண்கிட்டே பேசறேன். உங்க மூணு பேரை விட்டா எனக்கு யார் இருக்காங்க..” அப்படில்லாம் பேசினார். இனிமே பிரியா விஷயத்துல தான் குறுக்கே வரமாட்டேன்னு சொன்னாரு. ‘சாயங்காலம் ஆஃபீஸ் விட்டதும் வாடா.. இன்னும் நிறையப் பேசணும் உங்கிட்டே’ அப்படின்னு. தலையாட்டிட்டு நான் வீட்டுக்குப் போயிட்டு டிபன் சாப்பிட்டுட்டுதான் ஆஃபீஸ் போனேன். சாயங்காலம் ஆறரை மணிக்கு சாதாரணமா இங்க வீட்டுக்குள்ளே நுழையறச்சே வீடு உள்ளே தாள் போடாம மூடிண்டிருந்தது. என்னடா இதுன்னு உள்ள நுழைஞ்சு பார்த்தா மாமா ரத்த வெள்ளத்துல ஹால்ல கிடக்காரு. உடனேயே போலீஸ்க்கு ஃபோன் போட்டுச் சொன்னேன். அவ்வளவுதான்.. அவரை யாரோ அஞ்சு அஞ்சறை வாக்குல கொலை பண்ணியிருக்காங்கன்னு போஸ்ட் மார்ட்டத்துல சொல்லறாங்க. நான் ஆறரை மணிக்குதான் இங்கே நுழைஞ்சேன். எனக்கு ஒரே ஒரு உறுத்தல் என்னன்னா இந்த கலியாண ஒப்பந்தமும் பிரியாவோட பழைய கதையும் வெளில தெரிஞ்சா அனாவசியமா எங்க மேல பழி வந்துடுமேன்னுதான் பயந்தேன்.”

     

    “ஸோ.. அந்தப் பழி வராதவாறு சுமதி மேல இன்ஸ்பெக்டர்கிட்ட திருப்பி விட்டீங்க இல்லே? சரி, இந்த சுமதி யாரு?” கோம்டி நிதானமாகவே கேட்டாள்.

     

    “தெரியாதுங்க உண்மையில.. ஆனா எங்க மாமாவை ஒரு தடவை அங்க அழைச்சுண்டு போனேன். என்னைக் காருலயே இருக்க வெச்சுட்டு ஏதோ பேசிட்டு வந்தார்.. வீட்டுக்குத் திரும்பி வர வழியிலே திரும்பவும் சுமதி வீட்டுக்கு காரைத் திருப்பி விடச் சொன்னார். அங்க அவ வீட்ல என்ன நடந்ததோ தெரியலே.. ரொம்ப இறுக்கமான முகத்தோட வந்தார். இன்னும் சொல்லப் போனா சித்ரா பௌர்ணமி அன்னிக்கு பிரியா மேல எவ்வளோ கோபம் இருந்ததோ அந்த கோபமான முகத்தை அவர்கிட்டே அன்னிக்குப் பார்த்தேன். எங்கிட்டயே சொன்னார்.. “இந்த பொம்பளங்க எப்பவுமே இப்படித்தாண்டா..”ன்னு சொன்னார். நான் ரொம்ப விசாரிக்கலே.. திரும்பவும் எங்க பிரியா விஷயம் எடுத்துடுவாரோன்னு பயந்துட்டேன். ஆனா சுமதிகிட்டேயும் இவர் வம்பு வெச்சிருக்கணும்டா கல்யாண்.. அதனாலதான் இன்ஸ்பெக்டர்கிட்ட சொன்னேன். எனக்கு என்னன்னா இந்த மனுஷன் எங்கியாவது அடிபடணும்னு மனசுக்குள்ளயே ஆசை இருக்குடா.. எனக்கும் பிரியா சுமதி மாதிரி பெண்கள் கனெக்ஷன் நிறைய வெச்சுருக்கார்னு சந்தேகம் வந்ததுடா.. யாராவது கோபத்துல சுட்டுப் போட்டுருப்பாங்கன்னுதான் நினைக்கிறேன்.”

    கோம்டி தன் கை வாட்சைப் பார்த்துக் கொண்டாள். எழுந்து கொண்டாள்.

     

    “சரி மிஸ்டர் முரளி உங்க விஷயம் முடிஞ்சவரைக்கும் வெளியே வராம பாத்துக்கறோம். ஆனா வேற எந்த விஷயம் கிடைச்சாலும் எங்கிட்டே முதல்ல சொல்லணும்.”

     

    கல்யாண் சற்று இடிந்துபோன நிலையில் இருந்ததைக் கவனித்தாள் கோம்டி.

     

    “என்ன சார்.. உங்க பெரியப்பா பத்தி யோசிக்கிறீங்களா..  எல்லாத்தையும் எல்லாரையும் விசாரிக்கணும்.. இன்னும் என்னென்ன விஷயம்லாம் வரப் போகுதோ.. நான் வரட்டா?” கொஞ்சம் பரிவோடுதான் சொன்னாள்.

     

    அவன் தலையசைத்தான். அவள் எதிரில் உள்ள தன் இல்லத்துக்குச் சென்றாள்..

     

    இரவு படுக்கப் போகுமுன் ஒருமுறை கல்யாணுக்கு ஃபோன் செய்தாள்.

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 11

    திவாகர்

    “ஆமாண்டா.. ஆமா.. என் பொண்டாட்டி பிரியாவைத்தான் சொல்லறேன். அவர்கிட்ட அவ ஏற்கனவே ஏமாந்து போனவ. அப்படி ஏமாந்தவ இவரைக் கோர்ட்ல இழுப்பேன்.. கேஸ் போடுவேன் இல்லேன்னா தற்கொலை பண்ணிண்டு இவரை மாட்டிவிடுவேன்னு பயமுறுத்தியவுடனே அவளை சமாதானப்படுத்த எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வெச்சாரு.. அது கூட சாதாரண ரிஜிஸ்டர் கல்யாணம்தான். நம்ம உறவுக்காரங்களைக் கூட கூப்பிடலேன்னு உனக்குத் தெரியுமே. நீ வைசாக்ல இருந்தே.. அப்போதான்  உங்க பெரியப்பா உனக்கு ஃபோன் பண்ணி இந்த மாதிரி ‘முரளி அவனே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிண்டு வந்து என் முன்னாடி நிக்கிறாண்டா.. வேற என்ன பண்ண முடியும்.. ஆசீர்வாதம் பண்ணேண்டா’ன்னு என் முன்னாடியே பேசினவரு. சரி, நான் எதுக்காக ஒத்துண்டேன்னா சிம்பிள்.. அவர் எங்கிட்டே உண்மையைச் சொன்னார்.. அவர் சொன்னவிதம் அவருக்குச் சாதகமா சொன்னார். பிரியாவை பெரியப்பா ‘ரஞ்சிதா’ன்னு கூப்பிடுவார். அதாவது இந்த ரஞ்சிதா’ங்கிற பொண்ணுகிட்ட ஏதோ ஒருதடவை தான் மயங்கிட்டுப் போய் அவளோடு இருந்ததாகவும் ஆனா அவ அதைப் பயன்படுத்திக் கல்யாணம் செய்ய இவரை வற்புறுத்துவதாவும் அப்படி இல்லைன்னா தற்கொலை பண்ணிண்டு அதுக்குக் காரணம் இவருதான்னு எழுதிடுவேன்னு பயமுறுத்தினா.. ஆனா நான் கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாதுடா முரளி.. நீ எனக்கு உதவி பண்ணனும். எனக்குப் பதிலா நீ அவளுக்கு தாலி கட்டு. ரிஜிஸ்டர் பண்ணிக்கோ. ரெண்டு வருஷமானா நீ அவளை விவாகரத்து பண்ணிடலாம். நான் ரஞ்சிதாகிட்டே பேசறேன். இது சும்மா ஒரு  ஸ்டாப்-கேப்  அரேஞ்ச்மென்ட்தான். அதுவும் ரஞ்சிதாவுக்கு திருப்திகரமா இருக்கும்னுதான். இதுக்கு நான் உதவி பண்ணினா தான் சுயமா சம்பாதிச்ச சொத்துல  பாதியும் பத்து லட்சம் கேஷும் உடனடியா தர்றதா சொன்னாருடா. அப்போ எனக்கு பணம் ரொம்ப அவசரம்னதாலே அதுவும் பேருக்குதான் நான் ஹஸ்பண்ட் அத்தோட இது டெம்போரரி அர்ரேஞ்ச்மென்ட்கிறதாலே பத்து லட்ச ரூபாய் கேஷ் வாங்கிண்டு இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கினேண்டா..”

    “அடச்சீ.. இது மானங்கெட்ட வாழ்க்கைன்னு உனக்குத் தெரியலியாடா?”

    “தெரியும்டா.. ஆனா ஒரு டிராமா ஆடற மாதிரி கேட்டது என்னை வளர்த்த மாமாடா. எனக்கும் அப்போதைய அவசர தேவை பணம்டா.. இது ஏதோ ஒரு ஸ்டாப் கேப் ஏற்பாடுதானே.. ஆனா இந்த கல்யாணத்துக்கப்பறம் ரஞ்சிதா முழுசா மாறிட்டாடா.. அவ ஒரிஜினல் பேரு பிரியா.. மாமாதான் ரஞ்சிதான்னு புதுசா மாத்தினாராம் ஆனா இனிமே தான் பிரியாமுரளின்னுதான் அவ பேருன்னு சொன்னா. ‘இனிமே உங்களோடதான் என் வாழ்க்கை. தயை செஞ்சு உங்க மாமாவோட சம்பந்தம் இனிமே நமக்குத் தேவையில்லே.. நடந்தது நடந்து போச்சு, விவாகரத்து பண்ணி மறுவிவாகம் பண்ணினா மாதிரி நான் நினைச்சுக்கறேன்.  இனிமே நான் உங்களோட உறுதியான உண்மையான மனைவி நான். இதை உங்க மாமாகிட்டே என் முடிவாச் சொல்லிடுங்க ஆனா அவர் சுலபத்துல ஒப்புக்க மாட்டார்.. அவரு ஒரு மாதிரியான  பொம்பளை பைத்தியம்.. நானே அவர் என்னை விட்டுப் போயிடணும்னு நினைச்சுதான் தற்கொலை அது இதுன்னு சொல்லி பயமுறுத்தப் பார்த்தேன். ஆனா அந்த ஆள் பயப்படலே. நானும் இனிமே ஏன் பயப்படணும்? நாம் கலியாணமான தம்பதிங்க.. நம்ம வாழ்க்கையை நாம அனுபவிப்போம்’ அப்படின்னு  சொல்லிட்டா. போகப் போக நாங்க ரெண்டு பேரும் ஒத்தரை ஒத்தர் புரிஞ்சுண்டு வாழ ஆரம்பிக்கறச்சே மாமா நடுவுல வந்தாருடா.. ‘முரளி, இப்படியெல்லாம் என்னைத் தவிக்க வெக்கலாமா? உன் வீட்டுக்கு அழைச்சுண்டு போடா.. ரஞ்சிதா மேல நான் உயிரையே வெச்சுருக்கே’ன்னு எங்கிட்டே நச்சரிக்க ஆரம்பிச்சாரு. மாமாகிட்ட நான் சொல்லிட்டேன். எப்படியோ கல்யாணம்னு முடிஞ்சுபோச்சுன்னு நானும் அவளும் இப்போதான் நிம்மதியா புருஷன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிச்சிருக்கோம். நீங்க தயைசெய்து தலையிடாதீங்க மாமா’ன்னு சொல்லிட்டேன்.”

    திடீரென கோம்டி குறுக்கிட்டாள்.

    “அது சரி மிஸ்டர் முரளி, உங்க மனைவி பேரு ஒரிஜினலா ரஞ்சிதா இல்லையா அப்போ?.. அவங்க சிதம்பரத்துல கீழவீதில இருந்தாங்களா..”

    “அது பழைய கதை.. என் மனைவியோட பிறந்த ஊர் சிதம்பரம். அவளோட அம்மா அங்கேதான் இருக்கா. ஆமாம். கீழவீதிதான். ஆனா என் மனைவி பேரே பிரியாதான். சர்டிஃபிகேட் எல்லாம் பிரியாதான். ஏன் மேரேஜ் சர்டிஃபிகேட் கூட பிரியா’ன்னுதான் கையெழுத்துப் போட்டா.. மேரேஜ் சமயத்துல நான் இதைப் பெரிசா கண்டுக்கலே.. மாமா பேச்சைக் கேட்டு முதல்ல இதுல நான் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்தேன். ஆனா மாமா கூப்பிடற அந்த ரஞ்சிதா இல்லே இப்போ. பிரியாமுரளியா என்னோட அன்பா குடுத்தனம் பண்றா.. இப்போ அவளுக்கும் அவ குடும்பத்துக்கும் கூட எந்த சம்பந்தமுமில்லே..”

    “சரி, இப்போ பொன்னம்மா கதைக்குப் போவோமா.. அந்த சித்ரா பௌர்ணமி ராத்திரி விஷயத்துக்கு போகலாமா..?”

    கோம்டி கேட்டதும் தலையாட்டினான். அவன் நினைவு அந்த நாள் இரவுக்குப் போனது.

    சித்ரா பௌர்ணமி, முரளியின் வீடு.. இரவு ஆரம்பித்த நேரம். கையில் ஒரு பெரிய காரியருடன் உள்ளே நுழைகிறார் கந்தசாமி.

    “முரளி.. முரளிக் கண்ணா.. என்னடா நீ கூப்பிடாமயே நான் வந்திருக்கேன் அப்படின்னு பார்க்கிறயாடா? பரவாயில்லே.. நீ கூப்பிடாட்டி என்னடா.. நீ யாரு? உன்னை வளர்த்து ஆளாக்கினவனே நான்தானேடா.. வா இன்னிக்கு இங்கதான் நான் சாப்பிடப் போறேன். பொன்னம்மாவை ஹெல்ப்க்கு வரச் சொல்லி இருக்கேன். இப்போ வந்துடுவா”

    பிரியா வருகிறாள்.

    “மாமா.. இங்க ஏன் வந்தீங்க? உங்களை வரவேண்டாம்னு இவர்கிட்டே சொல்லி அனுப்பியிருந்தேனே.. தயை செய்து முதல்ல வெளியே போங்க..”

    “முரளி என்னடா இது என் ரஞ்சிதாவா இப்படியெல்லாம் பேசறா? மாமா’ன்னு கூப்பிடறா.. நான் வெளியே போகணுமாம் என்னடா இது புதுசா இருக்கு? “

    பிரியா சப்தமிடுகிறாள்.

    “இல்லே.. நான் இப்போ அந்த ரஞ்சிதா இல்லே.. அவ செத்துப் போயாச்சு.. நான் பிரியா.. பிரியாமுரளி.. நீங்க வெளியே போய்தான் ஆகணும். இல்லே போலீஸைக் கூப்பிடுவேன்.”

    சிரித்தார் கந்தசாமி.

    “இதோ பாரு ரஞ்சிதா! போலீசு.. அது இது எல்லாம் எங்கிட்டே எதுக்கு பூச்சாண்டி காமிக்கறே.. நம்ம முரளி நாமெல்லாம் இப்போ சேர்ந்து சாப்பிட்டதுக்கப்பறம் அவன் என் வீட்டுக்குப் படுக்கப் போயிடுவான். எனக்கு  மத்தியானம்தான் இன்னிக்கு சித்ரா பௌர்ணமின்னு ஞாபகம் வந்துச்சு.  ரெண்டாம் வருஷம் நம்ம சித்ரா பௌர்ணமி வைபவத்தை சிதம்பரத்துல உங்க அம்மா வீட்ல கொண்டாடினோமே.. எல்லாம் மறந்துட்டியா.. நான் அந்த இன்பமான இரவை மறக்கலே.. மறக்கவும் முடியாது. உங்கம்மாதான் எல்லா ஏற்பாடும் உங்க வீட்டு மொட்டை மாடில கச்சிதமா பண்ணினாளே.. உனக்குத் தெரியுமா உங்கம்மாவுக்கு சமீபத்துல கூட அஞ்சு லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன். எல்லாம் யாருக்காக? என் ரஞ்சிதாவுக்காகத்தான்.”

    பிரியா கத்தினாள்.

    “முரளி.. முதல்ல உங்க மாமாவை நீங்க வெளியே துரத்துங்க.. இதோ பாருங்க மிஸ்டர் கந்தசாமி.. எனக்கும் எங்கம்மாவுக்கும் உறவு எப்பவோ அறுந்து போச்சு. அதேமாதிரி  இனிமே எனக்கும் உங்களுக்கும் எந்த உறவுமில்லே.. நான் உங்க வளர்ப்பு முரளியோட அன்பு மனைவியா வாழ்ந்துட்டிருக்கேன்.. தயை செய்து எங்க குடும்ப வாழ்க்கையைக் கெடுக்காதீங்க..”

    “ஆமாம் மாமா.. நான் ஏற்கனவே நிறைய தடவை உங்களுக்குச் சொன்னதுதான். இப்போ பிரியா என்னோட பொண்டாட்டி. தாலி கட்டியிருக்கேன் நான். அவளைப் பாதுகாக்கவேண்டியது என் பொறுப்பு. எங்களுக்கு நீங்கதான் கலியாணம் செஞ்சு வெச்சிங்க. தயை செய்து பழசையெல்லாம் மறந்து எங்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்து எங்களை வாழவிடுங்க.”

    “மடையா! இவ உன் பிரியா இல்லே.. என்னோட ரஞ்சிதா.. நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டியவ. ஏன் அவளே என்னைக் கல்யாணம் பண்ணிக்கத்தானே சொன்னவ.. இல்லேன்னு சொல்லச் சொல்லு.. முரளி.. நீ குழந்தை.. உனக்கு ஒண்ணும் தெரியாது.. இதோ பார். இது ஒரு காண்ட்ராக்டு, இதுல நீ அந்த காண்டிராக்டர்.. உனக்குப் பணம் கொடுத்தாச்சு. உன் வேலை என்னவோ அதை செஞ்சுருக்கே.. அவ்வளவுதான்.. நீ நகரு சொல்லறேன்!” கந்தசாமி அவளருகே சென்று அவள் கன்னத்தைப் பிடித்தார். அவளோ அவரைப் பிடித்துப் பின்னால் தள்ள அவர் பின்வாங்கினார்.

    அப்போதுதான் பொன்னம்மா கதவைத் தட்டி உள்ளே நுழைந்தாள். அவள் அங்கு நடந்த விஷயங்கள் புரியாததால் அங்குள்ள டைனிங்க் டேபிளில் இருந்த கேரியரை ஒவ்வொரு கப்பாக எடுத்து வைத்துவிட்டு பிரியாவைக் கேட்டாள்.

    “பிளேட்லாம் எடுத்து வையுங்கம்மா.. எங்க வெச்சிருக்கற சொல்லு. நான் கொண்டாறேன்”, என்று சமையலறை பக்கம் சென்றாள். அவளோடு வந்த பிரியாவும் அங்கே வந்து அழுதாள். அவள் கண்ணீர் பெருக நின்ற நிலை பொன்னம்மாவுக்கு இரக்கம் தந்தது.

    “எதுக்கும்மா அழறே.. வாம்மா.. நான் உனக்கு ஹெல்ப் பண்ணறேன்.. ஐய்ய அழுவாதேம்மா..” குரலைக் கேட்டு முரளி உள்ளே வந்தான். பிரியாவிடம் அமைதியாகப் பேசினான்.

    “அழாதே பிரியா.. வா.. சாப்பிடலாம்..பொன்னம்மா பறிமாறுவா..” என்றவன் அவள் காதருகே வந்தவன் மெல்லப் பேசினான். “நான் சாப்பிட்டவுடனே அவரை அனுப்பிச்சுடறேன்.. நீ பயப்படாம வா..”

    மூவரும் டைனிங்க் டேபிளில் சாப்பிடுகையில் மெதுவாக ஆனால் சர்வ சாதாரணமாகப் பேசினார் கந்தசாமி.

    “முரளி! நாம சாப்பிட்டதும் என்ன பண்றே? பொன்னம்மாகிட்டே பாத்திரம் கொடுத்தனுப்பாதே.. அவளையும் சாப்பிடச் சொல்லிட்டு நீ என்ன பண்றேன்னா கீழே என் காரை எடுத்துண்டு நம்ம வீட்டுக்குப் போயிட்டு ஜாலியா படுத்துத் தூங்கு. நான் ராத்திரி இங்க இருக்கேன். காலைல நீ வரச்சே சீக்கிரம் வந்துட்டியானா ரெண்டு பேரும் சேர்ந்து வாக்கிங்க் போகலாம். ஏன் வேணுமின்னா ரஞ்சிதா கூட நம்ம கூட ஜாயின் பண்ணலாம். என்ன ரஞ்சிதா கண்ணு.. உனக்கும் ஓகேயா?”

    பிரியா திடீரென பாதிச் சாப்பாட்டில் எழுந்தாள். கந்தசாமியை ஒரு முறை முறைத்துவிட்டுச் சென்றாள்.

    சாப்பிட்டதும் பொன்னம்மாள் சொல்லிக்கொண்டு வெளியே கிளம்பினாள்.  கூடவே வெளியே வந்த பிரியா, பொன்னம்மாளை கையைப் பிடித்து நிறுத்தினாள்.

    “தயவு செய்து என்னை விட்டுட்டு போகாதே பொன்னம்மா. நீயும் என்னோட இங்க தங்கு பொன்னம்மா ப்ளீஸ்..”

    “ஐய்யய்யோ என்னம்மா நான் எப்படி உங்க கூட தங்கறது?.”

    “இல்லே பொன்னம்மா.. என்னை இப்போ நீதான் இந்த வெறிபிடிச்சவங்கிட்டேயிருந்து காப்பாத்தணும். தயவு செஞ்சி நீ இங்க ஒரு ராத்திரி என்னோட படுத்துக்கோ.. நாளைக்கு நான் எங்க ஊருக்குப் போயிடறேன்.”

    பொன்னம்மா காலைப் பிடித்து அழுதாள் பிரியா. அவளுக்கு ஏதோ புரிந்தது.

    “ஏம்மா ஒரு காரியம் பண்றியா?”

    “எதை நீ சொன்னாலும் கேக்கறேன். இன்னிக்கு ஒரு ராத்திரி உதவி பண்ணு பொன்னம்மா?”

    “நீ கீழ மயக்கம் போட்ட மாதிரி விழு”

    பிரியா உடனே “அம்மா’ எனச் சொல்லிக்கொண்டே கீழே விழுந்தாள். உடனே பொன்னம்மா கூவ ஆரம்பித்து விட்டாள். ‘ஐய்யோ இந்தப் பொண்ணு கீழ வியுந்துடுச்சே.. என்று கத்தினாள். உடனே முரளி வெளியே வந்தான். அவளைத் தாங்கிக் கொண்டே அவள் தலை அவன் தோள் மேல் சாய மெல்ல சாலைக்கு வந்து பொன்னம்மாவையும் அவளையும் சேர்த்து ஆட்டோவில் பக்கத்திலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு போகச் சொன்னான், அவளும் அப்படியே செய்ய ஆட்டோ வேகமாகப் போனவுடன் மேலே வந்தான்.

    மறுபடியும் கல்யாண் வீடு.

    முரளி சொன்ன அத்தனையும் கல்யாணும் கோம்டியும் கேட்டார்கள். கோம்டி புன்னகைத்தாள்.

    “உங்க நிலைமை எனக்குப் புரியுது மிஸ்டர் முரளி. இப்போ வரைக்கும் நீங்க சொன்னதை வெச்சுப் பார்க்கிறபோது பாசவலையில சிக்கித் தவிச்சு வேற வழியில்லாம ஒருவிதமான விசித்திர வாழ்க்கையை அனுபவிச்சிருக்கீங்க.. சரி அதுக்கப்பறம் அன்னிக்கு ராத்திரி ஏன் நீங்க யாரும் பிரியாவைப் பார்க்க ஹாஸ்பிடல் போகலே.. பிரியாவுக்கு ஒரு ஆபத்துன்னா நீங்க ஓடிப்போயிருக்கணுமே.”

    “சரிதான் ஆனா பிரியாவை தூக்கிண்டு போகறச்சேயே அவன் காதுல ஒரு வார்த்தை முனகினா.. அவ சொன்னபடி செஞ்சதினாலே நான் போகலே.”

    மறுபடியும் முரளி பழைய இடத்துக்கு தன் நினைவுகளைக் கொண்டு போனான்.

    முரளி வீட்டின் வாசலறை.

    பிரியாவைக் கஷ்டப்பட்டு தோளில் சாய்த்தபோது அவன் காதருகே மெல்ல முனகினாள்.

    “இன்னிக்கு எப்படியாவது ஹாஸ்பிடல்ல நான் படுத்துண்டு நாளைக்கு வரேன். நீங்க அந்தாளை ஏதாவது சொல்லித் துரத்தி விட்டாதான் என் மூஞ்சில மறுபடி முழிக்கமுடியும்.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்.”

    அவன் தலைய ஆட்டிக்கொண்டே அவளையும் பொன்னம்மாவையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தான். அங்கே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த கந்தசாமி உறுமினார்.

    “என்ன நாடகம்டா இது.. என்னாச்சு அவளுக்கு.. ம்.. நீ கூட நம்மளோட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷனை மறந்துட்டியா.. நானும் போனா போறதுன்னு இவ்வளோ நாள் பொறுத்துண்டிருந்தேன்.. ஏண்டா மடையா.. என் வீக்னெஸ் எல்லாம் சொல்லித்தாண்டா உனக்குக் கல்யாணம் பண்ணேன். உனக்கு அதுக்காக பணமும் கொடுத்தேன், பத்து லட்ச ரூபாய்டா.. சுளையா கேஷாக் கொடுத்தேனேடா.. நீ என்னடான்னா பேரை மாத்திட்டேன் ஊரை மாத்திட்டேன், வாழ்க்கை சுகமா போறது.. அப்படியே விடுங்கன்னு கெஞ்சறே.. நோ நோ.. நீ இந்த பொம்பளைக்கு மயங்கிட்டியா சொல்லுடா.. எனக்குத் தெரிஞ்சாகணும்.”

    முரளி கொஞ்சம் மௌனம் சாதித்து விட்டுப் பேசினான்.

    தொடரும்

    Share