Blog

  • படக்கவிதைப் போட்டி 248-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 248-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பரிதியால் சிவந்த செக்கர் வானத்தின் சீரிய கோலத்தைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு நித்தி ஆனந்த். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு இராமலக்ஷ்மி. மங்கையர் இருவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!

    முகிலூடே எட்டிப்பார்த்துப் பரிதியார் புன்னகை பூத்திருக்க, ஓடங்கள் மௌனமாய்ப் பார்த்திருக்க, காதலியாள் கரம்பற்ற வரம் கேட்கிறானோ இந்த வாலிபன்? கவிஞர்களிடம் கேட்டுத் தெளிவுபெறுவோம் வாருங்கள்!

    *****

    ”கடமை முடித்துக் கதிரவன் விடைபெற, பேச்சிலே காதலர்கள் தமைமறந்து மூழ்கிட என்றும் தொடரும் பயணமிது” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தொடரும் பயணங்கள்…

    இன்றைய கடமை முடிந்ததென
    இனிமேல் ஓய்வெனக் கதிரவனும்
    சென்று கொண்டே வான்வீதியில்
    செம்மை காட்டினான் வனப்பாக,
    என்றுமாய்ப் பேச்சிலே காதலர்கள்
    ஏக்கமாய்ப் படகுகள் கரையினிலே,
    என்றும் தொடரும் பயணமிவை
    என்பதை மனதில் கொள்வாயே…!

    *****

    ”வறுமையே சீதனமாய்க் கொண்டு, நாடோடியாய்த் திரிந்தலையும் இல்லாதோரின் வாழ்வில் காரிருள் நீக்கிப் புது உதயம் தோன்றச் செய்வோம்” என்றுரைக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    புது உதயம்

    காடுவெட்டிக் கழனியாக்கி
    கதிர்நெல்லை விளைவித்தார்!
    பட்டினியே உணவென்று வாழ்கின்றார்…

    பள்ளம் மேடு சீராக்கி
    வீடுகட்டி வாழவைத்தார்!
    நாடோடியாக நாளும் திரிந்தலைந்து நிற்கின்றார்…

    பாடுபட்டு,
    நாளுமிங்கே கரஞ்சிவந்து வேலை செய்தும்
    வறுமையதே சீதனமாய் வாழுகின்றார்…

    நிலையான வாழ்வு
    நிரந்தரமாய் ஊதியம் என்றவரின்
    வாழ்வினிலே காரிருளை நீக்கிக்
    கரம் பற்றி மேலுயர்த்தி வாழவைக்கும்
    புது உதயம் கண்டிடுவோம்!
    புதியதோர் உலகம் செய்வோம்…

    *****
    ”கடல்தேடி ஓடும் நதியாய் இவன் மனம்தேடி வந்த இந்த வஞ்சி, வாழ்க்கையெனும் பாதையில் தொடர்ந்திட அவன் நீட்டிய உதவிக்கரம் பற்றிட முனைந்தாளோ?” என்று வினா எழுப்புகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    அலை கடல்
    ஓடித் திரிந்த களைப்பில்
    கரை ஒதுங்கிய கட்டுமரம்
    கிழக்கில் இருந்து பகலெங்கும்
    பயணம் செய்த அலுப்பில்
    அந்தி சாய்ந்ததோ மேற்கில்
    நிலவு உதிக்க நிழலும் மறைய
    பகலை மெல்ல இரவு விழுங்கிட
    நிறம் மாறியதே நீல வானம்
    மாலை சுடும் முன்னே
    மனதை புரிந்துகொள்ள
    மாலை வரை பேசி நின்ற காதலர்கள்
    கடற்கரையில்

    கூடு தேடித் திரும்பும் பறவைகளாய்
    பிறந்த வீடு சென்று சேர்ந்திட
    துவங்கியதே இவர்கள் பயணம்
    அவன் பாதையைப் பின்தொடர்ந்த
    அவள் கால்கள் இடறிட
    உன்னைத் தாங்கி வழிநடத்திட
    உதவிக்கரம் நீட்டினானோ?
    துணையாய் நீ வருவாயா என
    விழியாலே வினா எழுப்பி
    உதவிக்கரம் நீட்டினானோ?

    மழை பொழிந்து வழிந்தோடும் நதி
    கடல் தன்னைத் தேடியே
    காதல் பொங்கி வழிந்தோட
    கடல் தேடி ஓடும் நதியாய்
    அவன் மனம் தேடி வந்த வஞ்சி இவள்
    இரவு பகல் பாராமல்
    வாழ்க்கை எனும் பாதையில்
    என்றும் தொடர்ந்திட
    உதவிக்கரம் நீட்டிய
    கரங்களைப் பற்றிட முனைந்தாளோ?

    *****

    இனிய இயற்கைக் காட்சியின் பின்னணியில், கரம்கோத்திட விழையும் இளம் உள்ளங்களை அழகாய்ப் பாட்டில் படம் பிடித்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்.

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    செந்தழலாய்ப் பகலவன்
    தங்கநிறச் சந்திரன்
    பாய்ந்தோடும் பரிகளாய்
    வானத்து மேகங்கள்

    நெடுந்தூரக் கருங்கரை
    அதைத் தாங்கும் மணல்தரை
    ஓய்வெடுக்கும் தோணிகள்
    இரவைத் தொடும் வானிலை

    இவையெல்லாம் சாட்சி
    என்னுடனே வா
    என்கின்றானோ காதலன்?

    உயிரே உனக்குத்தான்
    உன்னுடனே வருகின்றேன்
    உலகாளும் உன்னதக் காவியம்
    ஒருங்கிணைந்து படைத்திட
    புகைப்படமே நீயும் சொல்
    காட்சி புனைந்தது நீதானே?

    பகலவனும், முகிலினமும், அம்புலியும் சாட்சிகளாய்க் காட்சிதர என்னோடு வா என்றழைக்கும் காதலனையும், அவனோடு பயணிக்கப் புறப்படும் வஞ்சியையும் வாகாய்க் கண்முன் நிறுத்தியிருக்கும் புகைப்படமிது என்று பாராட்டும் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்து மகிழ்கின்றேன்.

     

    Share
  • எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினித் தமிழ்க் கருத்தரங்கம்

    எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினித் தமிழ்க் கருத்தரங்கம்

    அண்ணாகண்ணன்

    சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், தமிழிணையம் – தேவைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.  மேலும் பலரும் பங்கேற்கின்றனர். அழைப்பிதழ் காண்க, வாய்ப்புள்ளோர் வருக.

    Share
  • மன்னாரில் நாடாளுமன்றத் தேர்தல்

    மன்னாரில் நாடாளுமன்றத் தேர்தல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மன்னார் மாவட்டச் சைவ மக்களுக்குச் சைவ வேட்பாளர் ஒருவர் தருக

    1. நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் உருவாக்கியுள்ளார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    2.   திருக்கேதீச்சரக் கற் கோயிலை உடைத்து மன்னார்க் கோட்டையையும் ஊர்காவற்துறைக் கடல் கோட்டையையும் கட்டிய போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் நேற்று அருவி ஆற்றங் கரையில் மரியாள் சிலையை வைத்த காலம் வரை மன்னார் மாவட்டம் முழுவதையும் கத்தோலிக்க மயமாக்கும் முயற்சியில் வெற்றிபெற்றே வருகின்றனர்சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    3. திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் 1964 வைத்தியநாதன் – எமிலினியாசுப்பிள்ளை உடன்பாட்டை மீறி 2010 தொடக்கம் உலூர்தம்மாள் தேவாலயத்தைக் கட்டினர்சைவர்களின் மனத்தில் ஆறாப் புண் தந்ததே இந்த நிகழ்வுசிங்களவர் ஒப்பந்தங்களை மீறுகிறார்கள் என ஆயர் இராயப்பு மதகுரு இம்மானுவேல் போன்றோர் செனீவா உள்ளிட்ட உலக அரங்குகளில் கூறுவர்மன்னாரில் ஆயரே உடன்பாடுகளை அப்பட்டமாக மீறுவர்சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    4.   கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டார்பின் கல்வி வலயத்தார் தலையிட்டனர்சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    5. மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் ஆதரவுடன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்தார்சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லைசைவ அன்பர் தலையிட்டு நான்கே நாள்களில் பாதையைத் திறந்தார்.

    6. முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர்பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர்சைவக் கோயில்களைத் தாக்கினர்சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லைகளத்துக்கு வந்தவர்சைவருக்கு ஆறுதல் கூறியவர் சைவ அன்பரும் தமிழகச் சைவ அன்பர்களுமே.

    7.   வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினர் கிறித்தவர்சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    8. சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்கக் கோயில் ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச்சென்றாரே காணொளி ஆதாரம் உண்டேசைவர்களைக்கு ஆறுதல் சொல்ல யார் வந்தார்கள்சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    9.   அரசின் நிதி பெற்றுஎந்த அநுமதியும் பெறாமல் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அந்தத் தேவாலயத்தையும் சைவர்களுக்காக ஒதுக்கிய நிலப் பகுதியையும் இணைத்து மதில் கட்டக் கத்தோலிக்கர் முயன்றபோது தடுக்கச் சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    10. ஆள்காட்டிவெளிதள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும்சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பதுமாக மதவெறியர் நல்லிணக்கத்தைக் குலைக்க முற்படுகையில் சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    11. சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள்மகாசிவராத்திரிக்கான வளைவை உடைத்தார்கள். வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கண்டிக்கவிலலைநாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லைஉடைத்த குண்டர்களுக்கு மறைமுகமாக அளித்த ஆதரவும் தமிழர் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் அவர்களைப் பிணையில் எடுத்த சோக நிகழ்வும் மன்னார் மாவட்டச் சைவர்களை, உங்களுக்கு வாக்களித்த சைவர்களைத் துயரத்தில் சோகத்தில் துன்பத்தில் மீறாத அழுகையில் ஆழ்த்தியுள்ளது. சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    12. தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்ட முயன்றார்கள்சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லைவழக்கு நீதிமன்றத்தில்.

    13. திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு ஏ32 வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை வைத்துள்ளார்கள்சைவர்களை அவமதிக்கிறார்கள்சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    14. கற்கடந்த குளம் கற்குளம் எனப் பல ஊர்களில் சைவர்கள் கணிசமாக வாழ்ந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி பெற்று ஏ32 சந்திப்புச் சாலைகளில் கிறித்தவச் சின்ன வளைவுகள் கட்டி உள்ளார்களேசைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    15. செட்டியார்மகன்அருகிலுள்ள கிராமம். 100 சைவக் குடிகள்நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் துணைத்தலைவராக உள்ள மெதடிஸ்த திருச்சபையினர் 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர்செபக் கூடங்களை அமைத்தனர்சைவக் கோயில்களை இடித்தனர்சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

    16. கத்தோலிக்கரும் முகமதியரும் மன்னார் மாவட்டச் சைவர்களைக் குறிவைத்து மதம் மாற்றுகிறார்கள்சைவர்கள் தமக்காகப் பேசகுரல் கொடுக்கத் தலைமை இன்றித் தவிக்கிறார்கள்.

    17. வெற்றி பெற்றபின் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மன்னார் மாவட்டச் சைவர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இழைத்து வரும் கொடுமைகளை அநீதிகளை குற்றங்களை தீமைகளை சைவ வாக்காளர் இப்பொழுது அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள். என் செய்தோம் என் செய்தோம் என உங்களுக்கு வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுகிறார்கள்.

    18. மன்னார் மாவட்டச் சைவ மக்களுக்குத் தலைவராகச் சைவர் நலம் காக்கும் சைவ சமயத்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் சைவர்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகள் குறையும்சைவர்களின் எதிர்ப்புக் குரல் வலுவடையும்.

    19. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மன்னாரைச் சேர்ந்த சைவர் நலம் பேணும் சைவ சமயத்தவரான கட்சி உறுப்பினர் ஒருவரை 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துகஅவ்வாறு அமையாத பட்சத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு வாக்களித்து என் செய்தோம் என் செய்தோம் என வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுவோர் தமக்குத் தலைமை தாங்கித் தம் துயர் தீர்க்கும் மன்னார் மாவட்டச் சைவர் ஒருவருக்கே வாக்களிப்பர்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-123

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-123

    நாங்குநேரி வாசஸ்ரீ

    123. பொழுதுகண்டு இரங்கல்

    குறள் 1221

    மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
    வேலைநீ வாழி பொழுது

    பொழுதே! நீ சாயங்காலமா (மாலைப்பொழுது)  இல்ல. நேசம் வச்சிருக்க பொம்பளப்பிள்ளைங்க உசிரக்குடிக்குத அந்திக் காலமா இருக்க.

    குறள் 1222

    புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
    வன்கண்ண தோநின் துணை

    மயங்கி நிக்க சாயங்காலமே (மாலைப் பொழுதே). நீயும் என்னயப் போல சங்கடப்படுதியோ. உன் தொணையும் என்னைய நேசிக்கவரு கணக்கா ஈவுஇரக்கங்கெட்டதோ.

    குறள் 1223

    பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
    துன்பம் வளர வரும்

    மொத(முன்பு) அவுக என் பக்கத்துல இருக்கையில பசல படர்ந்து இருந்த இந்த சாயங்காலப் பொழுது இப்பம் நான் வெசனப்பட்டு உசிர வெறுக்கது கணக்கா சங்கடத்த அதிகமா கொண்டுவருது.

    குறள் 1224

    காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
    தேதிலர் போல வரும்

    என்னைய நேசிக்கவுக இல்லாத இந்நேரத்துல கொன்னுபோடுததுக்காவ வருத பகையாளி கணக்கா சாயங்காலப் பொழுது வருது.

    குறள் 1225

    காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
    மாலைக்குச் செய்த பகை

    காலப் பொழுதுக்கு நான் செஞ்ச நன்மதான் என்ன? சாயங்காலத்துக்கு நான் செஞ்ச கெடுதி தான் என்ன?

    குறள் 1226

    மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்த திலேன்

    சாயங்கால நேரம் இத்தன செரையக் குடுக்கும்னு என்னைய நேசிக்கவரு என்னையப் பிரிஞ்சுபோவுமுன்ன பக்கத்துல இருக்கையில நான் அறிஞ்சுக்கிடல.

    குறள் 1227

    காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
    மாலை மலருமிந் நோய்

    நேசம் ங்குத இந்த நோய் காலையில மொட்டுவச்சி பகலில வளந்து சாயங்காலம் பூவா பூத்து நிக்கும்.

    குறள் 1228

    அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை

    இடையன் ஊதுத புல்லாங்குழல், தணலா சுடுத இந்த சாயங்கால நேரத்துக்கு தூதா மட்டும் இல்லாம என்னையக் கொல்ல வந்த படைக்கருவியோட  ஓச கணக்காவும் ஒலிக்குது.

    குறள் 1229

    பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
    மாலை படர்தரும் போழ்து

    புத்திய மழுங்கடிக்க சாயங்காலப் பொழுது வருதப்போ இந்த ஊரும் புத்திகெட்டு என்னையப் பொல சங்கடத்தால வெசனப்படும்.

    குறள் 1230

    பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
    மாயுமென் மாயா உயிர்

    பொருள் சம்பாரிக்க அவுக போனப்போ சாவாம நின்ன என் உசிரு மயக்குத இந்த சாயங்காலப் பொழுதுல மடிஞ்சு போவுது.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-14

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-14

    தி. இரா. மீனா      

    கோல சாந்தய்யா

    பசு வளர்ப்பது இவரது காயகம். புகழ் பெற்ற வசனகாரராகப் போற்றப்படுகிறார். ”புண்ணியாரண்ய தகன பீமேஸ்வரலிங்கா” இவரது முத்திரையாகும். பக்தியின் தன்மை, குருவின் உயர்வு, முதலியவற்றை உள்ளடக்கியவை இவரது வசனங்கள். தன் காயகம் தொடர்பான சில வழக்குகளைப் பயன்படுத்தியுள்ளார். ”சென்னபசவபுராண”, “சூத்திரரத்னாகர” முதலான நூல்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

       1. “கோலும் ஓடும் ஏந்தி சிவலீலை செய்து
    உணவின் ஆசைக்கு அலைவது சிறுவர் செயல்
    அது சிவனின் நிலையன்று
    வீண் பேச்சை விட்டு மந்திரத்தின் நிலையறிவாய்
    புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே”

       2. “நீட்டல் மழித்தல் எதுவாக இருப்பினும்
    சொல்லும் செயலும் சீர்பட்டிருந்தால் போதும்
    அவனே பரஞ்சோதி குருவாவான்,நீயறிவாய்
    புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே”

       3. “தூய்மை நீர் இருந்து என்ன பயன்
    கொண்டுவர கலயமில்லாத போது?
    வெற்று மனிதர் அறிவுரைகள் சொல்லி என்ன பயன்
    தனக்கென அடையாளம் ஒன்று இல்லாத போது?
    தன் எல்லையைத் தானறிந்து நடப்பது போல
    உன்னையே நீயறிவாய்
    புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே”

        4. “பக்தரானால் எந்தக் களங்கம் ஏற்பட்டாலும்
    எண்ணங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்
    பக்தனுக்கன்றி பிறருக்குத் துன்பங்கள் வருவதில்லை
    வீரனுக்குத் தடையுண்டே தவிர முடவனுக்கு ஆயுதத்தின்
    வலிமையான தாக்கமேது?
    உன்னையறிந்தவன் தன்னைத் தானறிய வேண்டுமென்பதால்
    உன்னையே நீயறிவாய்
    புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே ”

    5. “செய்ததைச் சொல்வதெதற்கு? காத்துவிட்டுக் கொல்வதெதற்கு?
    ஊன்றியதைப் பறிப்பதெதற்கு? கட்டியதை உடைப்பதெதற்கு?
    செய்து செய்து மனம் வருந்தவோ
    கொடுத்து கொடுத்து உறுதி குறையவோ வேண்டாம்
    அச்செயலால் உன்னையே நீயறிவாய்
    புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே ”

     கஜேஸ மசணய்யா

    நாயகன்  நாயகி பாவனை இவருடையதாகும்.இவர் மனைவி மசணம்மாவும் வசனக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாண் சரணர்களோடு அனுபவ மண்டபத்தில் பங்கேற்றவர். மனஹள்ளி கிராமத்தில் தங்கி அங்கேயே இலிங்கத்தில் ஐக்கியமானவர். அக்கிராமத்தில் இவர் பெயரில் ஒரு கோயிலிருப்பது குறிப்பிடத்தக்கது. “மகாலிங்க கஜேஸ்வரா” இவரது முத்திரையாகும்.

    1. “அவனைப் பார்த்த பொழுதில்
    திசைகளை மறந்தேன் எப்படியானது இது?
    அவன் சொன்னதைக் கேட்க உடலெங்கும்
    வியர்த்தது, இது எப்படி?
    அவன் என் கை பற்றினான்
    சேலையின் கொசுவம் எப்படித் தளர்ந்தது?
    என் மகாலிங்க கஜேஸ்வரனை இன்று அணைக்க
    நினைக்கையில் என்னையே மறந்ததெப்படி?”

    2. “என் கடைக்கண் சிவந்தது
    தோள்கள் சோர்வாயின
    பவளமாலை வெண்மை நிறமானது
    முத்துமாலை என்னையெரித்தது
    இன்று என் மகாலிங்க கஜேஸ்வரன்
    புறத்தை விட்டு அகத்தில் சேர்ந்தானே”

      3. “விரும்பியவரைக் கொல்வதற்கு ஆய்தமெதற்கு?
    உன்னைப் பிடிக்கவில்லை எனச் சொல்வது  போதாதா?
    அவருடனிருந்தால் ஆலங்கட்டி போலக் கரையலாமே
    மணல் பொம்மையினடியில் நீர் ஊற்றியது போல
    அவர் உடனிருந்தால் கரைந்து விடலாமே
    மகாலிங்க கஜேஸ்வரனின் சரணர்களைப் பிரிந்ததால்
    நெய்விட்டு அக்னியை அணைத்தது போலானேனே !”

    4. “மேல் குடியயைச் சேர்ந்தவனின் நிழல்
    கீழ்க் குடியைச் சேர்ந்தவனில் குளத்தில் விழுந்தால்
    அந்நிழல் கீழ்ச்சாதியாகுமோ?
    உலக மனிதர்களோடு கூடிச் சரணர் நடனமாடினால்
    தீட்டு வந்திடுமோ?சம்சாரிகளின் பேச்சை வேரோடு
    நீக்குவான் மகாலிங்க கஜேஸ்வரன் “

    கஜேஸமசணய்யாவின் புண்ணிய ஸ்திரி மசணம்மா

    கஜேஸமசணய்யாவின் மனைவி இவர். பசவேசரின் கொள்கையில் கணவன், மனைவி இருவருக்குமே நிறைந்த ஈடுபாடுண்டு. தங்கள் ஊரான கர்ஜகியை விட்டு கல்யாண் வருகின்றனர். ”மசணய்யா பிரியகஜேஸ்வரா“ இவரது முத்திரையாகும்.

    “பொன்னை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
    பொன்னும் இலிங்கமும் எதிரியா?
    கன்னியை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
    கன்னியும் இலிங்கமும் எதிரியா?
    மண்ணை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
    மண்ணும் இலிங்கமும் எதிரியா?
    மெய்யை மறந்து  இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
    மெய்யும் இலிங்கமும் எதிரியா?
    புலன்களை மறந்து  இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
    புலன்களும் இலிங்கமும் எதிரியா?
    உலகத்தை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
    உலகமும் இலிங்கமும் எதிரியா?
    கோபமடக்கினால் இலிங்கத்தைப் பார்க்கலாம்
    அறிவால் அறியப்படுவது இன்பம்
    மசண்ணய்யப் பிரிய கஜேஸ்வரனே”
    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 71 (ஆதியார்)

    சேக்கிழார் பாடல் நயம் – 71 (ஆதியார்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
    பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி்
    ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்றதனால் மற்றை
    மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன்’ என்றார்.

    திருநீலகண்டர் உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விடத்தையே உண்ட பெருங்கருணையைப் போற்றினார். அதனை எண்ணி எண்ணி வியந்து அச்செயலை உள்ளத்துள்  கொண்டு, ‘’திருநீலகண்டம்” என்ற திருப்பெயரை  வாய் ஓயாமல் கூறி மகிழ்ந்தார். அதனாலேயே அவர் இயற்பெயர் மறைந்து ‘’திருநீலகண்டர்” என்ற திருப்பெயர் அவருக்கு நிலைத்து விட்டது! உள்ளத்தில் இறைவனையே இடைவிடாது நினைத்துக்  கொண்டிருந்த அவர்பால், உடலின்பத்தை வளர்க்கும்  பொருட்செல்வம் பெருகியபின், அதன் விளைவாக   இளமை மீதூர இன்பத்துறையில் எளியர் ஆனார். ஆழ்மனத்தில் இருந்த சிவபக்தியை மீதூர்ந்த உடலாசை,  அவரை மயக்கி விட்டது. உண்மையில் அவர் மனம் பேதியாதிருந்தது. உள்ளமெல்லாம் இறைவனே குடியிருந்த அவர்மனம், அவர் மனைவியார் ‘’எம்மைத் தீண்டாதீர்” என்று கூறக்கேட்டு  விழித்துக் கொண்டது.  திருக்குறள் ,

    ‘’பெண்ணியலார்   எல்லாரும்  கண்ணின்  பொதுஉண்பர்
    நண்ணேன்    பரத்தநின்   மார்பு!’’

    என்ற குறளில், ‘பிற பெண்டிர் கண்ணால் உண்ட எச்சிற்பண்டமாகிய  நின் மார்பை  நெருங்கவும் மாட்டேன்’ என்று கூறித்  தலைவனை விலக்கினாள். அது போலவே நாயனார்  மனைவியாரும்,  ‘பிற பெண்டிரின் எச்சில் உடலைத் தொட்ட  உடலால் என்னைத்  தீண்டாதீர்!’ என்று வெறுத்துப் பேசிய சொல் அவரைச் சுட்டு விட்டது!

    இயல்பாக ஆண்களின் மனத்திட்பம், பெண்ணை  நாடாது. சீதைபால்  உள்ளத்தைப் போக்கிய இராமன், திட்பம் மிக்க தம் உள்ளம் அவளை நாடியதால், சீதையும் கன்னியாகவே  இருக்க வேண்டும்  என்று உறுதியாகக் கருதினார். அந்த மனத்திட்பத்தைக் கம்பர் ,

    “ஆகும்  நல்வழி; அல்வழி  என்மனம்
    ஆகுமோ ? இதற்கு    ஆகிய  காரணம்,
    பாகு  போல்மொழிப்  பைந்தொடி, கன்னியே
    ஆகும்;  வேறுஇதற்கு  ஐயுறவு  இல்லையே !’’

    என்று பாடினார். சீதையின் மனமும் கற்பென்னும் திண்மை படைத்தது. ஆழ்மனத்தில் இறைவனையே எண்ணியிருந்த திருநீலகண்டர் மனைவியின் சொல் கேட்டு விழித்துக் கொண்டார். மனைவியார்  கூறிய, “எம்மைத்  தீண்டாதீர்!” என்ற தொடர் அவருடைய ஆழ்ந்த  மனத்திட்பத்தைத்  தூண்டி விட்டது. இறைவன் மேல் ஆணையிட்ட மனைவியின் சொல், சிவபிரான் பால் அவர் கொண்ட ஈடுபாட்டிலிருந்து சற்றும் விலகாத ஆழ்மனத்தை வெளிக் கொணர்ந்து விட்டது! அவர் மீண்டும் பெருமை பெற்றவர் -”பெரியவர்”  ஆனார். இதனைச் சேக்கிழார்,

    ‘’ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
    பேதியா ஆணை கேட்ட பெரியவர்’’  

    என்று போற்றுகிறார். ஆம், எந்த வகையிலும் இறைவனின் நீலகண்டத்தின் பால் கொண்ட ஆர்வத்திலிருந்து பேதியாத ஆணையை அவர் பெற்றார்.  சிவபெருமா னொருவரையேயன்றிப், பெருந்தேவரும் பிறர் யாவரும் வெல்லுதற்கரிய காமவிச்சையை ஆணையின் வரம்பிலே நின்று வென்றமையால் செய்தற்கரிய செயல் செய்தவராயினார் நாயனார்; அதுபற்றி இங்குப் பெரியவர் என்றார். ஆகவே   அவர் தம் பழைய நிலையிலிருந்து விலகி  நீங்கினார். தம் மனைவி “எம்மைத் தீண்டாதீர்” என்று கூறிய தொடரில்  ‘எம்மை’ என்பது அவர் மனைவியாரையும் அவர் போன்ற பிற மாதரையும் உளப்படுத்தியதால் ‘’இனி எந்த மாதரையும்  என் மனத்தாலும் நினைக்க மாட்டேன்‘’   என்று  கூறும் உறுதிப்பாட்டை உண்டாக்கி விட்டது.   இதனைச் சேக்கிழார்,

    பெயர்ந்து நீங்கி
    ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்றதனால் மற்றை
    மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன்’ என்றார்.

    என்று பாடுகிறார். இங்கே   மனத்தில்  தீண்டுதல்  – நினைத்தல்; தீண்ட நினைத்தலும் தீண்டுதலின் பயனை விளைத்தேவிடும். நினைப்பே கருமமாகி வினைக்கு முளையாகு மென்பது சாத்திரம். ஆலாலசுந்தரர் திருக்கயிலாயத்தில் மாதர் மேன் மனம் போக்கியசெயலே அவர் உலகில் அவதரிக்கக் காரணமாயிற்று என்பது முன்னர்த் திருமலைச் சருக்கத்திற் கூறப்பெற்றது. எனவே, மனத்தாற் றீண்டுதலும் ஆணை கடத்தலேயாமாதலின் அதுவும் செய்யேன் என்பவராய்   இவ்வாறு கூறினார். இப்புராணம்  திருநீலகண்டநாயனார்  புராணம் ஆதலால் மனைவியார் திருத்திய காரணத்தால்தான் இவர் திருந்தினார் என்று கருதக்  கூடாது. ‘’எம்மை” என்ற சொல் அவருள்ளத்திலே ஆழ்ந்திருந்த இறைப்பற்றைத் தூண்டிவிட்டதால், அவர் இறைவன் திருவருளையன்றி வேறெதையும் கருத்தாதவர் ஆனார். இனி முழுப்பாடலையும் பயின்று பயன் பெறுவோம்.

    ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
    பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி்
    ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்றதனால் மற்றை
    மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன்’ என்றார்.

    சேக்கிழாரின் இப்பாடலில் நீலகண்டம் எவ்வாறு உள்ளத்தில் நிலைக்கிறது என்பதை விளக்குகிறது; எம்மை என்ற சொல்லின் பொருள் நயமும்,, மனத்தினும் தீண்டேன் என்ற தொடரின்  ஆழ்ந்த பொருளும் அடியாரின்  ஆழ்மனத்தின் இயல்பைப் புலப்படுத்திப் பாடல்  நயத்தை விளக்குகிறது!

    Share
  • பழங்காலத் திருமண முறை 

    பழங்காலத் திருமண முறை 

     த. அமுதஜோதி
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை,
    பான்செக்கர்ஸ்
    மகளிர் கல்லூரி,
    தஞ்சாவூர்.

    *****

    ஒத்த அன்புடைய தலைவனும், தலைவியும் தம்முள் நுகரும் இன்ப உணர்வு, இவ்வாறு இருந்தது எனப் பிறர்க்கு கூறப்படாததால் அது அகம் எனப்பட்டது. இந்த அகவாழ்வு நிலை தொல்காப்பியர் காலம் முதல் இக்காலம் வரை தொன்றுதொட்டு வழக்கில் இருந்து வருகின்றது.  களவு, கற்பு என இருநிலைகளில் மனிதனின் அகவாழ்வு அமைகின்றது. களவு நிலையில் தொடங்கும் காதலைக் கற்பு நிலைக்குக் கொண்டு செல்வது இல்வாழ்வாகும். மணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள  நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகும். மனிதனால் சமுதாய நலன் கருதிப் படைத்துக் கொள்ளப் பட்டதோர் ஒழுக்கமுறையாகும்.

    ஆரம்ப காலத்தில் திருமணம் செய்யாமலே தலைவனும் தலைவியும் கூடி வாழ்ந்துள்ளனர். செய்யும் செயலை மறைத்த பின்னும், செய்த செயலை முடிக்காமல் தப்பியொழுகும் போதும் திருமணம் என்ற நிலையை முன்னோர்கள் வகுத்துள்ளனர். இதனை
       பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப .  (தொல்.கற்பியல் நூ-143)

    எனும் தொல்காப்பிய நூற்பா மூலம் அறியமுடிகிறது. கரணம், மன்றல், வரைவு, கடிமணம் போன்றவை திருமணம் என்பதையே குறித்துள்ளன. கரணம் என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில்  பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.

    மன்றல்

    மன்றம் என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன்மேல் மணமக்களை அமரச் செய்து மணவினை செய்வித்தல் என்ற  பொருளில்  மன்றல்  என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்பட்டது. இதனை

                  “இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென” (குறிஞ்சிப்பாட்டு – அடி: 21)

    என்பதால்  அறியலாம். மன்றல் என்ற சொல் தொன்று  தொட்டு வழக்கில் இருந்து வருகின்றது.

    வரைவு

    வரைவு  என்பதற்கு  மலை, வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர்  பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குபடுத்துதல்)  என்ற நிலையில்  வரைவு என்பது மணத்தைக் குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் தொல்காப்பியம் வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என இருவகைப்படுத்தியுள்ளது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாகப்  பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம். ஆயினும் வரைவு என்பது பின்னர் வழக்கொழிந்துள்ளது.

    கடிமணம்

    கடிமணம் என்பது பல பொருள் தரும்  உரிச்சொல்லாகும்.  ’கடி’ என்ற சொல்லுக்கு  நீக்குதல், காப்பு  என்று  பொருள் கூறுவர். மணமகளின்  கன்னித் தன்மை நீங்கி கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் தொடங்குதல் என்ற வகையிலும்  கடி என்ற சொல்  திருமணத்தைக் குறித்தது.

    இவ்வாறு பல வகையாகக் கூறப்படும்  திருமணத்தை மணப்பருவம் வந்த பின்பு பல வகையாலும் ஒத்த ஓர் இளைஞனும் இளைஞியும் தாமாகக் கூடியோ அல்லது பெற்றோரால் கூட்டப்பட்டோ கணவனும் மனைவியுமாகி வாழ்வது ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழ்மரபு என்பதை

                  கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
                  கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
                  கொடைக்குரி மரபினோர்  கொடுப்பக் கொள்வதுவே. (தொல் கற்பியல் நூ-140)

    எனும் தொல்காப்பிய நூற்பா வழி அறிய முடிகிறது. கணவனும் மனைவியும் எங்ஙனம் கூடியிருப்பினும் காதல் அவர்க்கு இன்றியமையாததாகும். காதல் என்பது  இறக்கும் வரையிலும் இருவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.இக்காதல் காமம் என்னும் சிறப்பு பெயர் பெறும். அச்சொல் இன்று பெண்ணாசை என்னும் தீய பொருளில் வழங்கி வருகின்றது.

    இல்வாழ்வு

    ஒரு கற்புடைப் பெண்ணை மணந்து இல்லத்திலிருந்து அறஞ்செய்து வாழும் வாழ்க்கை  இல்லறமாகும். இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாக படைத்திருப்பதே அவர் கூடி வாழுதற் பொருட்டே ஆகும். கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழக்கூடிய வாழ்க்கையே இல்லற வாழ்க்கையாக  கருதப்படுகிறது. பாரமேற்றிய ஒரு வண்டியை இரண்டு மாடுகள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இழுத்துச் செல்வதைப் போன்று கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்ந்தால் இல்லறம் சிறக்கும். இல்லறத்தாலும் ஒருவர் வீடுபேற்றை அடையமுடியும் என்பதை திருவள்ளுவர்,

                  அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
                  போஓய்ப் பெறுவ தெவன்                               (குறள்-46)

     

                  அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
                  பிறன்பழிப்ப தில்லாயின் நன்று                         (குறள்-49)

    எனும் குறட்பாக்களில் எடுத்துரைக்கின்றார்.

    தமிழ்ப் பண்பாட்டில் குடும்பம் என்பது அச்சாணியாகும்.சமூக அமைப்பில் குடும்பம் என்பது அடிப்படை அலகாகும். இவ்வமைப்பு இல்லையேல் சமுதாய  கட்டுக்கோப்பே நொறுங்கிப் போகும்.ஆக மானுட வாழ்வுக்கு அடிப்படை குடும்பமாகும். இக்குடும்ப வாழ்க்கை சீராக அமைய முன்னோர்கள் வகுத்துள்ள நெறியைப் பின்பற்றி வாழ்ந்தால் நன்மை பயக்கும்.

    இல்லறமல்லது நல்லறமன்று” என ஒளவையாரும் இல்லறத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார். உலக வாழ்க்கைக்கு இன்றியாமையாத் துணையாக  இருப்பதால் மனைவிக்கு வாழ்க்கைத்துணைவி என்று பெயர். இத்தகைய வாழ்க்கைத்துணைவி அமையும் நிலையை  குறுந்தொகைப் பாடல் மிக அழகாக எடுத்தியம்புவதனை,

                                 யாயும் ஞாயும் யாரா கியரோ
                                 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
                                 யானும் நீயும் எவ்வழி அறிதும்
                                 செம்புலப் பெயல்நீர் போல
                                 அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.  (குறுந்- 40) 

    எனும் பாடலில் காணலாம். இல்லறம் எனும் பந்தத்தில் செம்மண்ணும்  நீரும் கலந்தால்போலத் தலைவனும் தலைவியும் அன்பால் கலந்த நிலையை  அறியமுடிகின்றது.

    அறத்தொடு நிற்றல்

    தலைவியின் கற்பு நெறிப்பட்ட காதலைத் தோழி தன் தாயான செவிலியிடமும், செவிலி நற்றாயிடமும், நற்றாய் தமரிடமும்  எடுத்துரைக்கும் நிலையே அறத்தொடு நிற்றலாகும்.

    தலைவி தன்னுடையச் சுற்றத்தினரைப் பிரிந்து தலைவனுடன் உடன்போக்கு  மேற்கொள்ளும் நிலையிலும் திருமணம்  நடைபெறும் என்பதைத்  தொல்காப்பியர்,

    கொடுப்போர் இன்றியுங்  கரண முண்டே
    புணர்ந்துடன் போகிற காலை யான”       (தொல் கற்பியல் நூ-141)

    மேலும்,
    ”வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்
    குரவர்
    முதலோர் கொடுப்பவும் கொடாமையும்
    கரணமொடு
    புணரக் கடிஅயர்ந்து கொளலே”

      (நம்பி-வரைவியல்-171)

    எனும் நூற்பாக்கள் மூலம்  அறியமுடிகிறது.

    பழங்காலத்தில்  உடன்போக்கு  தவறாகப் பேசப்படவில்லை. கண்டிக்கப்படவும் இல்லை. உடன்போக்கு  போகிய தலைவியைத் தேடிச் செவிலியிடம் கண்டோர் நும் மகள் தெரிவு செய்த தலைவன் அவளுக்கும் அவள் குடும்பத்தார்க்கும்  மிக நல்லவனாகக்  காட்சியளிக்கிறான். நீவிர் கவலைப்படாமல் நும் இல்லம்  செல்க  என்ற கூறுவதனை,

    வில்லோன் காலன கழலே தொடியோள்
    மெல்லடி
    மேலன சிலம்பே நல்லோர்
    யார்கொல்?  (குறுந்-7)

    எனும் சங்கப் பாடல் மூலம் அறியமுடிகிறது.

    பறையும், சங்கும் மங்கல நாளில் முழங்குவன. பலர் கூடுதற்கு  ஏற்ப நிழலும் இடமும் உடைமையால் ஆலமரத்தின் அடியில் பொதுமக்கள் கூடும் மன்றங்கள் இருந்தன. மணநாளில் பலரும் விருந்துண்டு செல்வதற்கு ஏற்ற வளமனையுடையவன் தலைவன் என்பதைச் செவிலித் தாய் நற்றாயிடம்  எடுத்துரைத்து அறத்தொடு நின்ற நிலையை,

    பறைப்படப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
    தொல்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
    நாலூர்க் கோசர் நன்மொழி போல
    வாயாகின்றே தோழி யாய்கழற்
    சேயிலை வெள்வேல் விடலையொடு
    தொகுவளை முன்கை மடந்தைநட்பே       (குறுந்-15) 

    எனும்  சங்கப் பாடல் மூலம்  காணமுடிகின்றது. பழங்காலத்தில் உடன்போக்கு மேற்கொண்ட தலைவனையும் தலைவியையும் பார்த்த செவிலித் தாய் தலைவன் நல்ல வளமுடையவன், வீரமிக்கவன் எனவே கவலைப் பட தேவையில்லை  என நற்றாயிடம் எடுத்துரைக்கின்றாள்.  இதன் மூலம்  குழந்தைகளின் நலம் ஒன்றையே பெரிதாக  பெற்றோர்கள் கருதியதைக் காணமுடிகிறது.

    சடங்கு முறை

    சங்க கால திருமணச் சடங்கு முறையில் பார்ப்பனர்கள் வேதம் ஓதுதல், தீ ஓம்புதல், தீ வலம் வருதல் ஆகிய ஆரியக் கலப்பு  முறைகள் எதுவும் காணப்படவில்லை.  ஆனால் நாள், கோள் பார்க்கும் வழக்கம் இருந்தது. வீட்டில் பந்தல் போடுதல், முரசு முழங்குதல்,  மணம் காண வந்தவர்களுக்கு உழுந்த சோறு அல்லது கொழுத்த இறைச்சி படைத்தல், முருகக் கடவுளை வழிபடுதல், சுமங்கலிப் பெண்கள் மணமக்களை வாழ்த்துதல் போன்றன வழக்கில் இருந்தன  என்பதை,

    உழுந்து தலைப் பெய்த கொழுங்களி மிதவை
    பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரைகால்
    தண்பெரும் பந்தர் தருமணல் ஞெமிரி
    மனைவிளக்கு உறுத்து மாலைதொடரிக்
    கனை இருள் அகன்ற கவின்பெறு காலை
    கோள் கால் நீங்கிய  கொடு வெண் திங்கள்
    கேடுஇல் விழுப்புகழ் நாள் தலைவந்தென   (அகநானூறு-86) 

    எனும் பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது. திங்களும் உரோகிணியும் சேரும் நாள் திருமணத்திற்குச்  சிறந்த நாள் என்பதை இப்பாடல் வரிகள் தெளிவுப் படுத்துகின்றன.

    அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
    சகட மண்டிய துகள்தீர் கூட்டத்துக்
    கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்
    படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ
    வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
    பூக்கணும் இமையார் நோக்குபு மறைய       (அகநானூறு-136-4-9)

    இடமகன்ற அழகிய பெரிய வானம்  விளக்கமுறத் திங்களை உரோகிணி கூடிய நன்னாளில் மணமனையினை  அழகுபடுத்தித்  திருமணம் நடைபெற்றமையைக் காணமுடிகின்றது. நெடுநல்வாடையில் பாண்டிமாதேவியின் கட்டிலின் மேற்கூரையில் திங்கள்  உரோகிணியை  சேர்வது  போன்ற காட்சி  ஓவியமாகத் தீட்டப் பெற்றிருந்தமையைக்  காணலாம். சிலப்பதிகார காலத்திலும் இதே முறை காணப்பட்டது. ஆனால் பார்ப்பனர்கள் வேதம் ஓதுதல், தீவலம் வருதல் ஆகியவற்றைக் காணமுடிகின்றது.

    மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
    தீவலம்
    செய்வது  காண்பார்கண் நோன்பு என்னை.  (சிலம்பு. மங்கல வாழ்த்து) 

    கோவலன் கண்ணகியின் திருமணம் திங்கள் உரோகிணியைச் சாரும் நேரத்தில் பார்ப்பனர்கள்  வேதங்கள் ஓத தீவலம் வந்து நடைபெற்றது என்பதைக் காணமுடிகின்றது. இவ்வாறு நம்முன்னோர்கள் அடியைப் பின்பற்றியே காலம் காலமாக வந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதனைத் தக்க சான்றாகக் கொள்ளலாம்.

    பண்டைக் காலத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லை. காலப்போக்கில்தான் அது நடைமுறைக்கு வந்துள்ளது. திருமண மரபுகள் காலத்திற்கேற்பச் சில மாற்றங்களைப்  பெற்றுள்ளன. உணவு, உடை, அலங்காரம், பரிசமளித்தல், போன்றவற்றை  அவரவர் வசதிக்கேற்ப  மாற்றியமைத்துக் கொண்டுள்ளனர்.

    *****

    மேற்கோள் நூல்கள்

    1. தொல்காப்பியம் (இளம்பூரணர் உரை)
    2. அகநானூறு (பின்னத்தூர் நாராயணசாமி உரை)
    3. சிலப்பதிகாரம் ( புலியூர்க்கேசிகன் உரை)
    4. திருக்குறள் ( பரிமேலழகர் உரை)

     

     

     

    Share
  • இஸ்ரேலில் 2021இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்திட்டம்

    இஸ்ரேலில் 2021இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்திட்டம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    சூரியக்கதிர் மின்சக்தி பரிமாற

    முந்நூறு மெகாவாட் ஆற்றல் உள்ள
    ஓரரும்பெரும் மின்சார நிலையம்
    தாரணியில் உருவாகி வருகிறது,
    வாணிபப் படைப்புச் சாதனமாய் !
    தட்டாம்பூச்சி போல் பறக்க
    வானூர்திக்குப் பயன்படப் போகுது !
    பரிதி சக்தியால் பறக்கும் !
    எரிவாயு இல்லாமல் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமை மீள்பயன் புரட்சியில் பிறக்கும்  !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பன்னிரண்டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி ஊட்டும்  !
    ஒற்றை விமானி ஓட்டுவார் !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்களில்  உலகைச் சுற்றியது.
    சூரியக்கதிர் தட்டுகள்  அனுதினம்
    பராமரிக் கப்பட வேண்டும்.  
    நூறாண்டு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    +++++++++++++++++++++++

    Image result for solar power commercial installations

    2021 ஆண்டில் இஸ்ரேல் கட்டப்போகும் மிகப்பெரும் 300 மெகாவாட் சூரிய கதிர்ச்சக்தி மின்சார நிலையம்

    இஸ்ரேல் எரிசக்தி நிதிவள அமைச்சு 2021ஆம் ஆண்டில் கட்டப் போகும் மிகப்பெரும் 300 மெகாவாட் சூரிய கதிர்ச்சக்தி மின்சார நிலையம், அங்குள்ள அரவா பாலைவனப் பகுதியில் 100 சதவீதப் பங்கீட்டைப் பெறும். அது முதன்முறையாக, சூரிய மின்சக்தியைச் சேமிக்கும் சாதனத்தை அமைத்து இரவு நேரங்களில் மின்சாரம் தொடர்ந்து பரிமாறும் தகுதியை நிலைநாட்டும். கட்டுமானத் திட்டம் 2021இல் துவங்கி 2023 இல் முடிந்து மின்சாரம் அனுப்பும். மேலும் சூரிய மின்சக்தி சேமிப்பு சாதன அமைப்புத் திட்டமும் நிறைவேறி 2025 ஆண்டு முதல் இரவிலும் மின்சார வசதிகள் அரவா பகுதியில் தொடர்ந்து கிடைக்கும். அரவா பகுதி செங்கடல் முதல் செத்தகடல் வரை 100% பங்கீடாக சூரிய கதிர்ச்சக்தி மின்சாரம் தொழிற்சாலைகள், வீடுகள், ஹோட்டல்கள், குளிர்ச்சாதன வசதிகள், வணிகக் கூடங்கள், கலை, கல்விக் கூடங்கள் ஆகிய அனைத்துக்கும் பகல் இரவு 24 நான்கு மணிநேரம், வாரம் முழுவதும் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

    இந்த சூரியக் கதிர்ச்சக்தி மின்சார நிலைய உறுப்பு சாதனங்கள் இஸ்ரேலில் உள்ள திமோனா [Dimona in the Negev under a Public-Private] அரசு தனியார் துறையகம் கண்காணிக்கும். அந்த நிறுவகம் கடந்த மூன்றாண்டுகள் குறைந்தது 87 மில்லியன் டாலர் நிதியை ஓராண்டு புறட்டிப் பயன்பாடு செய்திருக்க வேண்டும். மிகப்பெரும் இந்த சூரிய கதிர்ச்சக்தி மின்சார யூனிட் விலை மதிப்பு : [ $ 0.025 per kwh]. இதுதான் இஸ்ரேல் நாட்டில் மிகவும் மலிவான மின்சார யூனிட் விலை.

    ++++++++++++++++++++++++++++++++++

    அமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்

    Posted on December 15, 2019

    Public Utility Commission Nevada, Approves 1190 MW of New Solar Energy and 590 MW of Additional Energy Storage [December 9, 2019]

    Renewable energy developer offers 125MW and 300MW solar farm projects in Texas [December 10, 2019]

    image

    https://us.sunpower.com/commercial-solarhttps://www.youtube.com/watch?v=ZkR6Mb17Iu0

    ++++++++++++++++++

    +++++++++++++++++++++++

    Image result for solar power commercial installations

    COMMERCIAL SOLAR INSTALLATION ACROSS CHICAGO LAND

    Related image

     

    Image result for solar power commercial installations

    https://solarpowernetwork.ca/மெரிக்க நகரங்களில் சூரியக்கனல் மின்சார நிலையங்கள்அமைக்கத் திட்டங்கள்நெவேடா மின்சார வாரியம் மேலும் இணைக்க 1190 மெகா வாட் சூரியக்கனல் மின்சக்தித் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.  இந்த மேலடுக்கு மின்சாரம் சுமார் 230,000 வீடுகளுக்குப் பயன் படும்.  அடுத்து மேலும் மின்கலத்தில் சேமித்து வைக்க  590 மெகா வாட் அபாய / அவசர நிலைத் தேவைகளுக்கு அமைக்கப் படும்.வாரியத்தின் குறிக்கோள் 2030 ஆண்டுக்குள் 50% மின்சாரத் தேவையை மீள் பயன்பாடு, பசுமை எரிசக்தி [Renewable Green Energy]  பரிமாறி வரும். இத்திட்டங் கள் நிறைவேற 3000 பேருக்கு வேலை கிடைக்கும்.ஜிங்கோ சூரியசக்தி நிறுவகம் [JinkoSolar Holding Company]  சைனா வில் உள்ள கிங்கை மாநிலத்தில் [Qinghai Province]  300 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையம் கட்டப் போகிறது.  முதன் முதல் திட்டமிடும் அந்த அசுர நிலையத்தில் சூரிய சக்தியின்திறனாற்றல் [Module Efficiency]  20.4%.டெக்சஸ் நகரம் 2020 ஆண்டில் 125 மெகாவாட் சூரிய சக்தி நிலையம் ஒன்றையும், அடுத்து 2021 இல் மாபெரும் 300 மெகாவாட் நிலையம் ஜோன்ஸ் மாவட்டத்தில் [Jones County] நிறுவப் போகிறது.

    Image result for solar power commercial installationsRelated image

    Trina Solar Company Supplies Solar Power Modules toUkraine’s Largest Solar Power Planthttps://youtu.be/ouh2h19zXLQhttps://youtu.be/lJgr1IwGark

    See the source image

    இந்திய சூரியக்கதிர் மின்சக்தி விருத்திக்கு வெளிநாட்டு நிறுவகங்கள் சாதனங்கள்  உற்பத்தி செய்யும்.

    2022 ஆண்டுக்குள் மொத்த 100,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மிகப்பெரு சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் இந்தியாவில் நிறுவ, வெளிநாட்டு சூரியக்கதிர் நிறுவகங்கள் பங்கெடுக்கும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 2015 ஜூன் முதல் தேதி டெல்லியில் அறிவித்தார்.   உள்நாட்டு நிறுவகங்கள் தமது தொழிற் சாதனங்களை, மேல்நாட்டு நிறுவகங்கள் மூலமாய் மேம்படுத்த  முன்வந்துள்ளன.  இன்னும் ஓராண்டுக்குள் மூன்று அல்லது நான்கு வெளிநாட்டு நிறுவகங்கள் இந்தியாவில்  ஆரம்பிக்கத் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  2015 நவம்பரில் தற்போதுள்ள சிறு திட்டமான 3000 மெகாவாட் நிறுவகத்திலிருந்து, 100,000 மெகாவாட் பெருந் திட்டத்துக்கு விரிவு படுத்தினார்.

    See the source image

    2015 ஆண்டில் மொத்த சூரியக்கதிர் மின்சக்தி நிலைய நிறுவகம் :  2700 மெகாவாட்.இந்திய  உற்பத்தி தகுதி : 2000 மெகாவாட் சூரியக்கதிர்ச் சாதன தட்டுகள் [Solar Power Modules]சூரியக் கதிர் மூலவிகள் [Solar Power PV Cells]   : 500 மெகவாட்.உள்நாட்டு சூரியக் கதிர் மூலவிகள் [PV Cells], வெளிநாட்டு விலையை விட 15 cents மிகையான விலையில் உள்ளன.  வெளிநாட்டு இறக்குமதி சூரியக் கதிர்ச் சாதனங்கள் நிதிச் செலவு, 7% – 8% குறைவாகவே உள்ளது.   சோலார் எனர்ஜி நிறுவகம் [SunEdison] இந்தியாவில் கட்டுமானம் செய்ய ஆகும் செலவு  [2015 நாணய மதிப்பு]  சுமார் 4 பில்லியன் டாலர்.

    indian solar industry

    Trina Solar Company to Invest $500 Million in Indian Solar Industry[December 4, 2017]

    Source: ET Energy WorldTags: Gaurav MathurIndiaIndian solar industryInternationalJifan GaoShapoorji PallonjiSolar CellsSolar EnergySolar IndustrySolar Marketsolar moduleSolar Panelssolar powerVinay Rustagi

    See the source imageSee the source image

    ராஜஸ்தான் மாது சூரிய கதிர்த் தட்டுகளைத்துப்புரவு செய்கிறார்

    ++++++++++++

    magazine

    https://youtu.be/bliRTUU1il0https://youtu.be/FB625fTHfa8https://youtu.be/Qaq_vTF4cQM

    ++++++++++++++++++++++++++++

    இந்தியச்  சூரிய ஒளிக்கதிர் மின்சக்திச் சாதன ஏற்பாடுகளில் பராமரிப்புக் குறைபாடுகள் 

    சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி விருத்தி செய்து கட்டும்  உலக தொழிற்துறை நிறுவனங்களுக்கு “ஒளிக்கதிர் மின்னழுத்தம்”  [Photovoltaics (PV)] மூலம் இந்திய தேசம், செல்வம் ஈட்டும் ஓர் உயர்ந்த வாய்ப்பளிப்பு நாடாக உள்ளது.  தற்போதைய  பெருத்த அளவு 100 மெகாவாட் ஒளிக்கதிர் மின்னழுத்தச் சாதனங்களை இந்தியாவுக்கு விற்பது ஏதுவானாலும்,  அந்த பாதையில் உலக நிறுவகங்களுக்குக் காலநிலை, சீர்கெட்ட கட்டுமானம், பராமரிப்பு புறக்கணிப்பு  [Climate, Improper Installation, Lack of Maintenance]  ஆகிய வற்றால் எதிர்பார்க்கும் இழப்புகள் [Risks] மிகப்பல !இந்தியக் குறைபாடுகளை உளவி நீக்க ஜெர்மனியிலிருந்து  [National Meteorology Institute of Germany] ஓர் ஆய்வுக்குழு இந்தியத்  ஒளிக்கதிர் மின்சக்தித் திட்டங்களை 2017 ஜூலை 3 தேதி முதல் 14 தேதிவரை  வரை ஆராய்ந்து தீர்வுகள் கூற வந்தது.  ஆறு திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன.  அதற்கு  புதிய & மீள் புதுவிப்பு அமைச்சகம் & தேசீய சூரிய கதிர்ச்சக்தி ஆய்வுக்கூடம்  [Ministry of New & Renewable Energy (MNRE)]  &   [Indian National Institute of Solar Energy (NISE)] உழைக்க உடன்பட்டன.

    ஜப்பான் 28 மெகாவாட் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி தட்டுகள் வரிசை

    +++++++++++++++++++

    உலக நிறுவன அரங்குகளில்  சூரிய ஒளிக்கதிர் மின்னழுத்தத் திட்டங்களில்  [PV Projects] முதன்மையாகப் பருவகால அடிப்புக் கொந்தளிப்புகளான, காற்றில் உப்பு, இரசாயன மாசுகள், மிகையான புறவூதாக் கதிர்வீச்சு, மிகுந்த ஈரடிப்பு, வெக்கை, மணல் படிவு, பெருமழை, புயல்காற்று    [Climatic Stress Factors such as Salt in Air, High Ultra Violet Radiation, High Humidity, Heat, Sand, Heavy Rain, Strong Winds]  யாவும் ஒரே சமயத்தில் பாதிப்பதைத் தவிர்ப்பது பெருஞ்ச வாலாக உள்ளது என்று ஆசியர் உக்கார் [Asier Ukar, Senior Consultant at PI Berlin]  கூறுகிறார்.  குறிப்பாக இந்தியாவில் பெருவெப்ப & பெருங்குளிர் பாலைவன ராஜஸ்தான் மாநிலம் இப்புகாருக்கு முதன்மை இடம் பெறுகிறது.  இந்த இழப்புப் பேரிடர்களைச் சூரிய ஒளிக்கதிர் சாதனங்கள் எதிர்கொள்வது, ராஜஸ்தானில்  சிரமாக உள்ளது.சூரியக் கதிரொளி மின்சார நிறுவகங்களில் அடிக்கடி நேரும் தடைப்பாடுகளைக் குறைக்கவோ, நீக்கவோ, பராமரிக்கவோ, ஆரம்பத்திலிருந்தே நல்வினைச் சாதனங்கள், மின்சாரத் தட்டு இணைப்புகள் / புவிச் சேர்ப்புகள் [Earthing & Normal Cable Connections] துருப்பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கடும் வெயில் அடிப்பு, குளிர்க் காற்றோட்டத்தால் சாதனச் சிதைவுகள் சீக்கிரம் நேராமல் பாதுகாக்க வேண்டும். சூரியக் கதிர் மின்சாரத் தடைப்பாடுக் குறைவே சூரிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டும்.

    கூரையில்’ ஒளித்தட்டுகள் அமைப்பு+++++++++++++https://youtu.be/FB625fTHfa8https://en.wikipedia.org/wiki/Solar_powerhttps://en.wikipedia.org/wiki/Solar_powerhttps://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power1.  https://youtu.be/luN91njPlLM2.  https://youtu.be/RmkCdhW0re8+++++++++++++++++

    •  

    சூரியக்கதிர் மின்சக்திப் பயன்பாடு மிகுந்து வருகிறது.

    2013 -2014 ஆண்டுகட்கு  இடையே சூரியக்கதிர் மின்சக்திச் சாதனங்கள் அமைப்பு 51% அதிகரித்துள்ளதாக சூரிய சக்தி தொழிற்துறைக் கூட்டணி   [Solar Energy Industries Association ]  அறிவித்துள்ளது.  அதாவது கங்கு கரையற்று எங்கும் நிறைந்து வற்றாத சூரிய மின்சக்தி ஆக்கத்துக்கு இப்போது உலகில் பெரு வரவேற்பு கிடைத்து வருகிறது.  மீள் பயன்பாடு கனல் எருவுக்குமத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட அரசு, மற்றும் தனி நபர் ஆர்வமும், முழு மூச்சு முயற்சியும், நிதி உதவி கிடைத்தும்  தொழில் நுணுக்கம் பெருகி, சூரிய மின்சக்தி மலிவாகி வருகிறது.  இதனால் சூழ்வெளிச் சுத்தக் கட்டுப்பாடு ஆவதோடு, மலிவான சூரிய மின்சக்திப் பயன்பாடும் அதிகரிக்கிறது.

     அதற்கு மலிவான சூரியக்கதிர் அறுவடை ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாடு  [Solar-Harvesting Photo Voltaic Cell Arrays (PV System)]  தயாராகி வருகின்றன.  2010 ஆண்டிலிருந்துசூரிய ஒளிச்சக்தி தட்டுகள் ஏற்பாட்டில் விலை 45% குறைதுள்ளது.  பல்வேறு முறை சூரிய சக்தி ஏற்பாடுகளில் இப்போதுள்ள பி.வி. அமைப்பு   [PV Sytem] நேரடியாக கதிர்ச்சக்தியை மின்சக்தியாக மாற்றுவதால் இடைச் சாதனங்கள் குறைவாய்த் தேவைப்படும்.  2000 -2500 சதுரடி வீட்டுக்கு 20 – 40 PV தட்டுகள் போதுமானவை.  அத்துடன் நேரோட்ட மின்சக்தி, எதிரோட்ட மின்சக்திக்கு தேவைக்கு வேண்டிய ஆட்சி / மாற்றிச் சாதனங்கள் [Controllers & Inverters]விலைகளும் சேர்க்கப் படவேண்டும்.

    உதாரணமாக 2013 ஆண்டில்  ஒர் சராசரி அமெரிக்க குடிநபர் ஆண்டுக்கு 11,000 kwh  மின்சார யூனிட் , அமெரிக்க எரிசக்தி ஆணையக  [U.S. Energy Information Administration ] அறிவிப்புப் படி பயன்படுத்தி உள்ளார்.  அப்படி 11 kwh மின்சாரம் அனுப்பு ஓர் இல்லத்துக்கு சுமார் 7 kW – 10.5 kW பி.வி. அமைப்பு வேண்டி யுள்ளது.  அதற்கு விலை மதிப்பு சுமார் 26,000 – 39,000 டாலர் என்று கணிக்கப் பட்டுள்ளது.  அந்த அமைப்புகள் கட்ட மத்திய அரசும், மாநில அரசும் [New England Home in the USA] நிதி உதவி செய்து விலை மதிப்பு 12,000 – 16,000 டாலராகக் குறைகிறது.  அதனால் 25 ஆண்டுகட்டு  சுமார் 70,000 டாலர் சேமிப்பு ஒரு இல்லத்தாருக்கு மிஞ்சுகிறது.

    World’s Largest Lithium Ion Battery Banks

    By Tesla

    ++++++++++++++++++++

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    A close-up of Musk's face while giving a talk

    Elon Musk Space X Falcon Heavy Rocket Pioneer

    BORN Elon Reeve Musk
    June 28, 1971 (age 46)
    PretoriaTransvaal (now Gauteng), South Africa
    RESIDENCE Bel AirLos AngelesCalifornia, U.S.[1][2]
    CITIZENSHIP South Africa (1971–present)Canada (1989–present)United States (2002–present)
    ALMA MATER Queen’s UniversityUniversity of Pennsylvania[3][4]Stanford University[5]
    OCCUPATION Entrepreneurengineerinventor, and investor
    KNOWN FOR SpaceXPayPalTesla Inc.HyperloopSolarCityOpenAIThe Boring CompanyNeuralinkZip2
    NET WORTH US$20.8 billion (October 9, 2017)[6]
    TITLE CEO and CTO of SpaceXCEO and product architect of Tesla, Inc.CEO of NeuralinkChairman of SolarCityCo-chairman of OpenAIFounder of The Boring Company
    SPOUSE(S) Justine Musk (m. 2000; div. 2008)Talulah Riley (m. 2010–div. 2012; m. 2013–div. 2016)[7][8]
    CHILDREN 6
    PARENT(S) Errol Musk (father)Maye Musk (mother)
    RELATIVES Kimbal Musk (brother)Tosca Musk (sister)Lyndon Rive (cousin)
    SIGNATURE
    Image result for Lithium Ion Research
    Image result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை.  2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology
    Image result for Solar Power Fuel Cell

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது.  2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for Lithium Ion Technology
    Image result for Solar Power Fuel Cell

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw battery
    Image result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது.  மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel Cell
    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    ++++++++++++++++++

    Solar Electric Supply can assist you with every step of your commercial solar system project.

    Solar financing assistance, system return on investment reports, solar SREC (PBI) performance-based incentive investigation, installation referral and solar technical training, financial analysis (ROI) solar interconnection, net-metering application assistance and on-site project management.

    Services we offer:

    · Our purchasing volume allows us to offer below factory direct pricing
    · Complete commercial solar system design assistance
    · Electrical engineering design for your project
    · Structural engineering analysis
    · Site-specific solar feasibility studies
    · Single and three-line electrical schematics
    · Solar system installation and project management
    · Wide selection of commercial solar system materials
    · In-depth system performance and financial analysis reports available

    Our commercial grid-tie solar systems include:

    · Solar system array (solar modules or panels)
    · Solar system grid-tie inverter
    · Solar panel mounting system
    · Balance of system components
    · Single and three-line electrical drawings
    · Design assistance and technical support
    · Stamped engineering available from most manufacturers

    +++++++++++++++++++

    SOLAR POWER FEASIBILITY FOR YOUR BUSINESS OR PUBLIC AGENCY BUILDING

    business

    WE HAVE DESIGNED THESE SOLAR GRID-TIE SYSTEMS FOR BUSINESS AND GOVERNMENT.

    We apply years of experience to our custom system details for the commercial property owner, industrial facility manager, solar farm, or homeowner with a business on their property. Good common sense dictates that economic feasibility be a factor in your solar power business decision.

    Grid tie solar electric systems for commercial businesses and government agencies are the fastest growing segment of the solar market worldwide. With net metering programs now approved in most of the U.S. states, thousands of businesses, schools, and government agencies are now experiencing the benefits of solar electricity.

    With a 30% Federal tax credit for solar power grid tie systems through 2017, and a new option for a 30% Federal Rebate through 2011, now is the time to invest in a solar power system for your facility. Many states have rebates to further help subsidize the cost of the solar photovoltaic system. With solar panel warranties of 25 years, solar arrays will stabilize your power costs over that period.

    Plus, grid-tie solar systems generate electricity during peak load times, often offsetting higher tier utility rates, enhancing the system’s payback time!

    Give us a toll-free call to review your power requirements, geographical location, and mounting options to ascertain the best system for your needs. We quickly determine the feasibility and economics of installing a solar grid tie system on your building or property. System design, electrical schematics, and installation support are always provided to our valued customers.

    BASIC QUESTIONS YOU MAY HAVE

    WHY SHOULD I INSTALL A SOLAR POWER SYSTEM ON MY BUSINESS?

    Return on Investment
    With the federal tax credit, available state rebates, and a five year accelerated depreciation of the system value, the return on investment of a large solar power system has never been better. Typical ROI’s are 5-8 years. With our financial analysis tools, we can help determine the ROI of a solar power system on your business.

    Stabilize Your Power Costs
    With utility rates rising every year, a solar power system can stabilize your power costs. After the system has paid for itself, you are producing free power, lowering the costs of the remaining power you buy from the utility.

    Green Marketing
    There’s no better way to show your customers that your business cares about the planet than by installing a grid-tie solar system. Many of our customers state the fact that their business is solar powered in all their marketing literature and communications. You can talk about your business minimizing its carbon footprint. If your business is not too power hungry, you can actually become carbon neutral with a solar power system that offsets your carbon footprint 100%.

    Time for a new roof?
    There’s no better time to install a solar power system than when you are putting on a new roof. You can drastically lower the cost of your system by using your roofing contractor to install the solar array supports on your underlying building structure. They will seal the supports and warranty their installation for any leaking. Then it’s easy to install the array on the supports with your facilities staff or a local electrician.

    WHY SHOULD I BUY A COMMERCIAL GRID-TIE SYSTEM FROM SOLAR ELECTRIC SUPPLY?

    Through our purchasing volume, Solar Electric Supply has negotiated the best pricing on solar modules, inverters, and the balance of system equipment.

    We supply a complete custom-designed integrated solar power system for your facility at the lowest possible price. We encourage you to get an installed price for a solar power system and then compare it to our system prices. Look at the dollar per watt offered for a complete, installed system versus the dollar per watt cost for our systems.

    If you can manage the installation with your staff or hire a subcontractor, you can save yourself considerable money and greatly accelerate your Return on Investment.

    SOLAR ENERGY SYSTEMS CAN EARN YOU LEED CERTIFICATION POINTS!

    Solar Electric Supply grid tie commercial solar electric energy systems can contribute 1-3 points for LEED Certification Category EAc2. LEED certifications were set in order to promote a common standard for building design and construction measures that contribute to the energy efficiency and environmental compatibility of a building.

    The U.S. Green Building Council, a US based non-profit organization with experts across the country in the building industry, promotes buildings that are environmentally responsible, profitable, and healthy places to live and work. The LEED certification rating system has become a green building standard, allowing sustainable buildings to be compared and rated. The highest ratings are a mark of prestige, and have been found to increase the desirability of a building by prospective tenant.

    How to become an authorized Solar Electric Supply Contractor

    Cost Effectiveness of a Commercial PV System – How much can I expect to save?

    Our Ideal Customer

    • Building or Property Owner
    • Long Term Lessors
    • Large, open roof or ground space
    • Facilities Manager capable of managing installation or hiring of electrician for installation
    • Newer roof built to UBC code with drawings/blueprints for solar support placements
    • Higher daytime/summertime loads such as manufacturing/production, HVAC

    Commercial Solar Systems

    Our Typical Customer

    • Office Buildings
    • Warehouses
    • Light Manufacturing
    • Hotels / Motels
    • Wineries
    • Golf Resorts & Clubhouses
    • Banks
    • Pharmacies
    • Auto Repair Shops
    • Community Centers
    • Schools
    • Municipal Facilities

    Contact Our Friendly, Knowledgeable Staff

    You can speak with an experienced, knowledgeable and friendly representative with a simple phone call. Contact us toll-free at (877) 297-0014 and someone will be happy to help you with all aspects of the design, system cost and rebate incentives for ground-mounted commercial solar systems.https://www.rikurenergy.com/commercial-projects/

    SYSTEMS ARE AVAILABLE WITH GRID-TIE INVERTERS BY THE FOLLOWING MANUFACTURERS:

    Image result for Lithium Ion Research

    1.  http://www.solardaily.com/reports/PI_Berlin_examines_risks_facing_PV_projects_in_India_999.html  [August 2, 2018]
    2. https://natgrp.wordpress.com/tag/renewable-energy-certificates/  [October 19, 2016]
    3. https://solarpowermanagement.net/home
    4. http://www.solardaily.com/reports/Denver_takes_big_step_on_renewables_999.html [July 18, 2018
    5. http://www.solardaily.com/reports/KYOCERA_TCL_Solar_Completes_28MW_Solar_Power_Plant_in_Miyagi_Prefecture_Japan_999.html [August 2, 2018]
    6. https://www.marketscreener.com/KYOCERA-CORP-6492472/news/Kyocera-finishes-28-MW-solar-power-plant-in-Taiwa-Japan-26991864/ [July 25, 2018]
    7. https://economictimes.indiatimes.com/industry/energy/power/governments-target-to-set-up-100-gw-of-solar-plants-drives-local-foreign-companies/articleshow/47494798.cms [June 1, 2015]
    8.  http://www.saurenergy.com/solar-energy-news/trina-to-invest-usd-500-million-in-indian-solar-industry  [December 4, 2017]
    9. http://www.solardaily.com/reports/Trina_Solar_Supplies_Modules_to_Ukraines_Largest_Solar_Power_Plant_999.html  [October 18, 2018]
    10. http://www.solardaily.com/reports/Renewable_energy_is_common_ground_for_Democrats_and_Republicans_999.html  [October 17, 2018]
    11. https://www.solarelectricsupply.com/commercial-solar-systems
    12. https://www.rikurenergy.com/commercial-projects/
    13. https://www.solarelectricsupply.com/commercial-solar-systems/solar-carport
    14. https://www.kapitalelectric.com/commercial/
    15. https://solarpowernetwork.ca/
    16. https://blogs.scientificamerican.com/observations/the-downside-of-solar-energy/
    17. http://www.solardaily.com/reports/PUCN_approves_1190MW_of_new_solar_energy_and_590MW_of_additional_energy_storage_999.html [Dec 9, 2019]
    18. http://www.solardaily.com/reports/Renewable_energy_developer_offers_125MW_and_300MW_solar_farm_projects_in_Texas_999.html  [Dec 10, 2019]
    19. https://solarquarter.com/2020/01/03/ja-solar-will-supply-490mw-modules-for-huanghe-hydropower-developments-uhv-transmission-project/
    20. https://solarquarter.com/2020/01/16/jolywood-supply-n-type-solar-panel-to-the-biggest-bifacial-solar-plant-in-middle-east/
    21. https://solarquarter.com/
    22. https://solarquarter.com/2020/03/02/week-in-middle-east-tender-issued-for-largest-solar-field-in-israel-arava-region-of-israel-about-to-be-100-solar-powered-vodafone-egypt-expected-to-cancel-tender-for-solar-pv-plant-to-power-its-ins/
    23. https://solarquarter.com/2020/03/06/canadian-solar-sets-a-23-81-conversion-efficiency-world-record-for-n-type-large-areas-multi-crystalline-silicon-solar-cell/
    24. https://solarquarter.com/2020/01/20/longi-sets-another-new-world-record-for-module-efficiency/

    +++++++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathanS@gmail.com]

    Share
  • ஞானக்கண் மானிடன்

    ஞானக்கண் மானிடன்

    சி. ஜெயபாரதன், கனடா

    பூனைக் கண்ணுக்கு 
    தெரியும்
    இரவினில் வெளிச்சம்!
    நரிக்குத் தெரியுது 
    இருட்பாதை !
    கருந்துளை,
    கருஞ்சக்தி, கரும்பிண்டம்,
    கருமை விசைபோல்
    காரிருளில்
    மறைந்திருக்கும் 
    கடவுள், 
    ஊனக் கண்ணுக்கு
    தெரியுதா என 
    பூனையைக் கேட்டேன் !
    “மியாவ்”, என்று
    பாடி விட்டுப் போனது ! 
    கோனார் நோட்சில் நான்
    அர்த்தம் தேடினேன் !

    தூரத்தே 
    கோர சுனாமி 
    பாம்பு போல் நகர்வது
    நாயின் காதில் 
    பட்டு 
    மேட்டுக்கு ஏறுது.

    கருமை நிறக்
    கடவுள்
    பூனைக் கண்ணுக்கு
    தெரியுது ! 
    சொல்ல முடிய வில்லை !
    ஊனக்கண் 
    மானிட னுக்கு கடவுள்
    தெரிவ தில்லை.

    ஞானக்கண்
    வேண்டும்  முதலில்! 
    தோண்டிப் பார் 
    மூளையில்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(291)

    குறளின் கதிர்களாய்…(291)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(291)

    இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர்.
    – திருக்குறள் – 447  (பெரியாரைத் துணைக்கோடல்)

    புதுக் கவிதையில்…

    தவறு செய்யும்போது
    இடித்துரைத்து
    நல்வழி காட்டும் பெரியோரைத்
    துணையாய் கொண்டு
    நல்லாட்சி செய்யும்
    அரசனை,
    அழிக்கும் வகையில்
    ஆற்றலுடை எதிரி
    அகிலத்தில் எவருமிலர்…!

    குறும்பாவில்…

    தவறுகையில் தட்டிக்கேட்கும் பெரியோரின்
    துணைகொண்டே அரசாளும் மன்னனையழிக்கும்
    திறனுடை எதிரி எவருமிலர்…!

    மரபுக் கவிதையில்…

    தவறு செய்யும் போதினிலே
         தட்டித் திருத்தும் பெரியோரை
    அவையில் துணையாய்க் கொண்டேதான்
         ஆட்சி செய்யும் மன்னவனைக்
    கயமைத் தனமது கொண்டேதான்
         கெடுத்தே யழிக்கும் ஆற்றலுடை
    வயவர் எவரு முண்டோவெனில்
         வைய மீதில் யாருமிலையே…!

    லிமரைக்கூ..

    தவறுகளை இடித்துரைக்கும் நிலையே
    கொண்ட பெரியோர் துணையுடனாளும் மன்னவனை
    அழிக்கவல்ல எதிரியாரு மிலையே…!

    கிராமிய பாணியில்…

    வேணும்வேணும் தொணவேணும்
    பெரியவுங்க தொணவேணும்,
    நாட்டையாளுற ராசாவுக்கு
    நல்லவுங்க தொணவேணும்..

    தவறுசெஞ்சாத் தட்டிக்கேட்டுத்
    திருத்துற பெரியவுங்க
    தொணயேட அரசாளுற ராசாவ
    அழிக்கத்தக்கத் தெறமவுள்ள
    எதிரிண்ணு யாருமில்லியே..

    அதால
    வேணும்வேணும் தொணவேணும்
    பெரியவுங்க தொணவேணும்,
    நாட்டையாளுற ராசாவுக்கு
    நல்லவுங்க தொணவேணும்…!

    Share
  • ஏகாந்தம்

    ஏகாந்தம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    நானிருக்கும் இடத்திலேயே இருக்கிறேன்.
    எல்லாம் தானாய் இயங்கிக்கொண்டிருக்கின்றன
    ஊர்திகள் நகர்ந்த வண்ணம் பளிச்சிடுகின்றன
    விண்மீன்கள் மெல்ல நகர்வது போல தோன்றுகிறது
    தென்றல் நில்லாமல் உடல்களைத் தழுவுகின்றது
    மரங்கள் சிலுப்பி, கண் மூடி இருளை ஏற்கின்றன
    நேற்று இருந்தது போல இன்றில்லை நிலவு
    எங்கோ வெளிச்சம் மட்டும் மறையவில்லை
    ஒலித்த ரேடியோ எனக்கு இன்னும் தொடர்ந்தபடி
    மாறி மாறி வந்து போய் வருகின்றன வாசனைகள்
    புலன்கள் இயைந்தாற்போல் உயிர்ப்பு எழுகிறது
    ஒவ்வான்றாய்த் தொலைந்து அமைதி மூடுகிறது
    கண்ட நிஜமெல்லாம் காணாமல் தொலைகிறது
    காலத்தைக் கைப்பிடித்து நான் மட்டும் நிற்கிறேன்
    மெல்ல அதுவும் கை நழுவ, இருப்பு எனக்கு மட்டும்.
    நானிருக்கும் இடத்திலேயே இருக்கிறேன்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-122

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-122

    நாங்குநேரி வாசஸ்ரீ

    122. கனவுநிலை உரைத்தல்

    குறள் 1211

    காதலர் தூதொடு வந்த கனவினுக்
    கியாதுசெய் வேன்கொல் விருந்து

    சங்கடத்தோட ஒறங்கையில என்மேல நேசம் வச்சவரு அனுப்பிவச்ச தூதா எங்கிட்ட வந்த கனவுக்கு நான் என்னமாரி விருந்துவச்சி அனுப்புவேன்?

    குறள் 1212

    கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
    குயலுண்மை சாற்றுவேன் மன்

    என்பேச்சக் கேட்டு என்கண்ணு ஒறங்கிச்சின்னா அப்பம் கனவுல வருத காதலர்கிட்ட நான் உசிரு தப்பிப் பொழைச்சு இருக்கதச் சொல்லுவேன்.

    குறள் 1213

    நனவினான் நல்கா தவரைக் கனவினால்
    காண்டலின் உண்டென் உயிர்

    நெசத்துல வந்து நேசத்தக் காட்டாதவுகள கனவுல காங்க (பார்க்க) முடியறதாலதான் இன்னும் என் உசிரு போவாம இருக்கு.

    குறள் 1214

    கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
    நல்காரை நாடித் தரற்கு

    நெசத்துல வந்து நேசம் காணிக்காதவுகள தேடிக் கண்டுபிடிச்சு காணிக்கதால கனவுல காதல் சந்தோசத்தக் குடுக்குது.

    குறள் 1215

    நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
    கண்ட பொழுதே இனிது

    நெசத்துல பாக்கையில கெடச்ச சந்தோசம் கணக்காவே இப்பம் கனவுல அவுகளப் பாக்கையிலயும் சந்தோசம் கெடைக்குது

    குறள் 1216

    நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
    காதலர் நீங்கலர் மன்

    நெசம் னு ஒண்ணு இல்லாமப் போச்சுதுன்னா கனவுல வந்த காதலர் என்னயவுட்டு போவாம இருந்திருப்பாக.

    குறள் 1217

    நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
    என்னெம்மைப் பீழிப் பது

    நெசத்துல வந்து நேசம் காட்டாத அவுக கனவுல வந்து சங்கடத்தக் கொடுக்குது எதனாலயோ?

    குறள் 1218

    துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
    நெஞ்சத்தார் ஆவர் விரைந்து

    நான் ஒறங்குதப்போ என் தோள்மேல கெடந்துபோட்டு கண்ணுமுழிப்பு வந்த பொறவு வெரசலா என் நெஞ்சுக்குள்ளார புகுந்துக்கிடுதாக.

    குறள் 1219

    நனவினான் நல்காரை நோவர் கனவினான்
    காதலர்க் காணா தவர்

    என் கனவுல வருத என் காதலரப் பாக்கமுடியாதவுக அவரு நேர்ல வரலையேன்னு ஏசுதாங்க.

    குறள் 1220

    நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
    காணார்கொல் இவ்வூ ரவர்

    நெசத்துல என்னைய நேசிக்கவரு உட்டுப்போட்டு போயிட்டாகன்னு ஏசுதாங்களே இந்த ஊர்க்காரவுக, அவுகளுக்கு கனவுல நெதைக்கும் (தினமும்) அவரு வாரது தெரியாதோ?

    Share
  • சாலு மரதா திம்மக்கா!

    சாலு மரதா திம்மக்கா!

    சாமிநாதன் ராம்பிரகாஷ்

    நாம் உயிர் வாழ மரங்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்று நாம் இப்போதுதான் உணர்கின்றோம். மரங்கள் இல்லாமல் இயற்கைக் காற்றும் இல்லை, மழையும் இல்லை. இவ்வளவு ஏன் புவியும் அதிக வெப்பமடைந்து சுவாசக் காற்றிலே நஞ்சும் கலந்து விடுகின்றது. இப்படி நம் வாழ்வின் ஓர் அங்கமான மரங்களை நாம் மிகத் தாமதமாகவே புரிந்துகொண்டுள்ளோம்.

    ஆனால் தனக்கு நினைவு தெரிந்தது முதல் இன்று வரை அதாவது நூறு வயதையும் கடந்து, மரம் நடுவதையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழும், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாதனை நாயகி திம்மக்கா அவர்களைப் பற்றியதே இந்தப் பதிவு.

    1910ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலம் குப்பி தாலுகாவில் பிறந்தவர் இவர். தந்தை, வசதியற்ற விவசாயி.

    சிறு வயதிலேயே திருமணம் முடித்து, கூடூர் என்னும் ஊருக்கு குடிபெயர்ந்தார். திருமணம் முடிந்து ஆண்டுகள் பல ஆகியும் குழந்தைப் பேறு ஏற்படவில்லை. கேட்கவும் வேண்டுமா நம் சுற்றத்தைப் பற்றி… ஆளாளுக்கு வாய்க்கு வந்த வசைகளையும், கதைகளையும் கட்ட, மிகவும் மனம் வருந்தித் தவித்தார்.

    இதிலிருந்து மீள, மீண்டும் தனக்குப் பிடித்த மரங்களை வளர்க்கத் தொடங்கினார்… அவரின் கணவரும் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அங்கே தொடங்கியது சப்தமற்ற ஒரு பசுமைப் புரட்சி. ஆம், கிட்டத்தட்ட ஆயிரம் ஆலமரங்கள் …

    நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு! ஹுள்ளிக்கள் கூடூர் தேசிய நெடுஞ்சாலையில் அரங்கேறியது அந்த அதிசயம்.

    1990ஆம் வருடம் அவரின் கணவர் தவறிவிட்டார். பின்னர் மரம் வளர்ப்பதே இவரின் முழு நேரப் பணி! அவர்கள் நட்ட மரங்களை நடந்தே சென்று பராமரித்து வந்தார். அது தவிர பல்வேறு மரங்களையும் நட்டு வளர்க்கத் தொடங்கினார். திக்கெட்டும் திம்மக்காவின் புகழ் பரவத் துவங்கியது. பல்வேறு சேவை அமைப்புகள், பசுமைப் பணியாளர்கள், தொண்டர்கள் ஆகியோரின் நாயகியாக மாறினார் அவர்.

    பசுமை நிகழ்ச்சிகளில் இவரே தலைமையாகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். பல்வேறு அமைப்பினருடன் சேர்ந்து மேலும் பத்து ஆயிரம் மரங்களை நட்டு நீரூற்றி வந்தார்.

    இப்படி இருக்க… கர்நாடகா அரசாங்கமே அவர் நெடுஞ்சாலையில் நட்ட மரங்களைப் பராமரிக்கத் தொடங்கி, அவருக்கு ‘சாலு மரதா திம்மக்கா’ [Saalumarada சாலுமரதா (வரிசையான மரங்களின்) திம்மக்கா] என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. இந்த ஆண்டு மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ விருது வழங்கிக் கௌரவித்தது.

    இன்றும் அவர் அதே பணிகளைச் செய்துகொண்டு வருகிறார். நூறு வயது கடந்துவிட்டது இவருக்கு! ஆனால் இன்னும் அதே ஆர்வம், சுறுசுறுப்பு, விடாமுயற்சி.

    நம்மால் என்ன செய்ய முடியும் என்போருக்கு இவரின் வாழ்வே ஒரு மிகப் பெரிய உதாரணம். எண்ணத்தில் உறுதி இருந்தால் செயலில் தளர்ச்சி வராது. அமேசான் காடுகள் கருகியதைக் கண்டு மனம் உருகிய நாம், அதற்கு மேல் என்ன செய்துவிட்டோம்? என்ன செய்யப் போகிறோம்?

    வாருங்கள் செயலில் இறங்குவோம்… எண்ணற்ற சேவை அமைப்புகள் உள்ளன, அவர்களுடன் இணைந்து நம்மால் ஆனதைச் செய்வோம்.

    Share
  • பெண் என்னும் பெருவரம்!

    பெண் என்னும் பெருவரம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கண்னுக்குள் மணியாக
    மண்ணுக்கு உரமாக
    விண்ணுக்குள் நிலவாக
    விளங்குபவள் பெண்ணாவாள்
    எண்ணத்தில் இரக்கமதை
    இருத்திவைக்கும் இதயமதை
    மண்ணகத்தில் கொண்டிருக்கும்
    மாப்பிறப்பே பெண்ணாவாள் !

    இறைவனது படைப்பினிலே
    பெண்படைப்பே பெரும்படைப்பு
    தாய்மையெனும் உயர்நிலையை
    தாங்குவது பெண்ணன்றோ
    பொறுமையெனும் இலக்கணத்தை
    விளக்கிநிற்கும் பெருநூலாய்
    பூமிதனில் பார்ப்பதற்குப்
    பெண்தானே விளங்குகிறாள் !

    ஈரமுடை நெஞ்சத்தை
    இறைகொடுத்தான் பெண்ணுக்கு
    பாரமெலாம் தாங்குகின்ற
    பக்குவத்தை உவந்தளித்தான்
    கார்மேகம் பொழிவதுபோல்
    கருணைமழை பொழிந்துநிற்கும்
    பெருவரமாய் பெண்ணன்றோ
    உருவாகி நிற்கின்றாள் !

    Share
  • இன்றைய உலகும் மகளிர் பலமும்

    இன்றைய உலகும் மகளிர் பலமும்

    சக்தி சக்திதாசன்லண்டன்

    2020 சர்வதேச மகளிர் தினம் இன்று. அன்றைய மகாகவி பாரதி காலத்திலிருந்து இன்றைய உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவிட்டது. இம்மாற்றங்களு உள்ளாகியிருக்கும் மனித இனமும் அதனூடு பயணித்து, தம்மைப் பலவித மாற்றங்களுக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும் என்பதே சரியான எதிர்பார்ப்பாக இருக்கும்.

    ஆனால் மனத்தளவில் மானிட சமூகம் அத்தனை மாற்றங்களையும் சரியான வகையில் உள்வாங்கியிருக்கிறதா?

    சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டியது அவசியமா? எனும் விவாதம் பல மேடைகளில் நடைபெறுகின்றது. இவ்விவாதத்துக்குச் சார்பான வாதமும் பல வகைகளில் முன்வைக்கப்படுகின்றது.

    பெண்களுக்கென ஒரு தினத்தைக் கொண்டாடுவது அவர்களை ஆண்களின்றும் பிரித்து வைக்கும் ஒரு செயலாக அமைந்துவிடாதா? ஆணும் பெண்ணும் சமமான பலம் கொண்டவர்கள் எனும் வாதத்தை இது மறுதலிக்காதா என்றொரு வாதமும் பெண்கள்தான் அனைத்திலும் ஆண்களுக்குச் சமம் என்றல்ல அவர்களை விட முன்னேறிவிட்டார்கள் இன்னும் இத்தினம் தேவையா என்றொரு வாதமும் சில ஓரங்களில் கேட்கிறது.

    ஆண்கள் என்றோர் இனமும் பெண்கள் என்றோர் இனமும் இயற்கையால் பிரித்தே படைக்கப்பட்டிருக்கிறது. மனித இனவளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையிது. அன்றைய காலக்கட்டங்களில் பெண்கள் இனவிருத்திக்கும் இல்லப் பராமரிப்புக்கும் மட்டுமே உகந்தவள் எனும் அடிப்படை எண்ணம், மனித மனங்களில் நிலை கொண்டிருந்தது உண்மை. அன்றைய உலகின் வளர்ச்சி அந்த எல்லைக் கோட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது.

    ஆனால் மாறிக்கொண்டு வந்த காலக்கட்டத்தில் மனித அறிவின் வளர்ச்சியும் புரிந்துணர்வும் அதிகரிக்கத் தொடங்கிய பின்னும் கலாச்சாரம் எனும் விலங்கினைப் பூட்டி, பெண்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதும் உண்மையே.

    இக்கலாச்சாரப் பூட்டினைத் தகர்த்து பெண்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கடமையில் படைப்பாளிகள் பாரிய பங்கினை வகித்துள்ளார்கள். இந்தக் கலாச்சார வட்டத்தினுள் அடைபட்டுப்போன மகாகவி பாரதியார், நிவேதிதா அம்மையாரின் சந்திப்புக்குப் பின்னரே பெண்களின் சமுதாயப் பங்கின் முக்கியத்துவத்தினை உணர்ந்தார் என்பது வரலாறு காட்டும் உண்மை.

    இத்தகைய விழிப்புணர்வு பலருக்கு அக்காலத்திலே தோன்றியிருந்தாலும் கூட எத்தனை பேருக்கு இவ்வட்டத்தினை உடைக்கும் அளவுக்கு, தமது கருத்தினை உரக்கக் கூறும் அளவுக்கு துணிச்சல் இருந்தது என்பது கேள்வியே!

    இங்கேதான் எமது பாரதியார் உயர்ந்து நின்றார். அனைவருக்குள்ளும் தம்மை வேறுபட்டவராகக் காட்டுவதிலும் உணர்ந்துகொண்ட உண்மைகளை உரக்கக் கூறுமளவுக்கு துணிச்சல் கொண்டிருப்பதிலும் தனித்து விளங்கினார்.

    ஒரு சமுதாயம் முன்னேறிவிட்டது என்பதையோ, நாகரிகம் அடைந்துவிட்டது என்பதனையோ எடுத்துக்காட்ட அணிந்துகொள்ளும் ஆடைகளை மாற்றிக்கொள்வதோ, அன்றி தோற்றத்தை மாற்றிக் கொள்வதோ ஆதாரமாகிவிடாது. இது ஆண்கள், பெண்கள் இரு சாராருக்கும் பொருந்தும். கலாச்சார முன்னேற்றம், நாகரிக முன்னேற்றம் என்பன பற்றிய தவறுதலான புரிதலுக்கு இன்றைய இளைய தலைமுறை ஆளாகிவிட்டதோ எனும் ஓர் அச்சம் எழாமலில்லை.

    பெண்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அத்தகைய ஒரு வளர்ச்சியை இன்றைய உலகின் மாற்றங்கள் எந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கின்றது என்பது விவாதத்துக்குரிய விடயம்.

    முன்னேற்றம், நாகரிகம் என்பவற்றை மேற்குலக நாடுகளின் வளர்ச்சி எனும் எடைக்கல்லிலே நிறுத்துப் பார்க்கும் மனோபாவமே இன்றைய எமது பின்புல இளைய தலைமுறைகளிடம் பெரும்பான்மையாக குடிகொண்டிருக்கிறது போன்ற ஒரு நிலையே காணப்படுகிறது…

    இன்றைய உலகில் பெண்களின் நிலையை, பெண்களை ஒரு ஆபாசப் பொருளாகப் பார்க்காமல், சக மனித வர்க்கமாகப் பார்க்கும் மனோபாவத்தைப் பெரும்பான்மையான ஆண்கள் கொண்டிருக்கிறார்களா? என்பதும் கேள்வியே!

    நாம் கடந்து வந்த காலப் பகுதி தனக்குள் புதைத்துக்கொண்ட, தம்மைப் பலமிக்க ஆண்களாக எண்னிக்கொண்டவர்களின் செய்கைகள் பல இன்று தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன “நானும் கூட (மீ டூ)” எனும் ஒரு இயக்கத்தினூடாக இன்று சமுதாயப் பெரிய மனிதர் பலரின் செய்கைகள் சமூக ஊடகங்களில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன…

    இதன் மூலம் இன்றைய சமூகம் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் பலவுள்ளன. இன்றைய உலகில் பெண்களின் சம உரிமை நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று கூறும் அதேவேளை திறமையிருந்தும் உயர்நிலையை அடையப் பல பெண்கள் வலிமை மிக்க பெரிய மனிதர்களுக்குத் தம்மை இழக்க வேண்டிய நிலையில் இருப்பது வெளிக்கொணரப்பட்டிருக்கிறது..

    அதே சமயம் இந்தச் சூழ்நிலையை தமக்குச் சாதகமாக்கி, சில பேர்களின் கெளரவத்தைக் குலைக்கும் வகையில் சில பெண்கள் நடந்துகொள்வதும் உண்மையே! எது எப்படி இருப்பினும் பெண்களின் வளர்ச்சிக்கான காரணிகளுக்குப் போடப்படும் முட்டுக்கட்டைகளின் அளவு குறைந்திருக்கிறதே தவிர முட்டுக்கட்டைகள் குறையவில்லை,

    இன்றும் தமது திறமைகளை வெளிக்காட்டியும் பெண்கள் எனும் ஒரே காரணத்தினால் முன்னேற முடியாமல் தவிக்கும் பலரை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாகத்தான் உள்ளது. இன்று நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஐக்கிய இராச்சியத்திலே பெண்கள் வாக்குரிமை பெற நடத்திய போராட்டங்கள், சரித்திரப் பிரசித்தி பெற்றவை. அத்தனை பலமிக்க போராட்டங்களின் மூலம் வாக்குரிமைகளைப் பெற்றும் கூட இன்றுவரை பல சூழல்களில் தமது திறமைக்கேற்ற தகுதிகளைப் பெறுவதற்குப் போராடும் நிலையே இன்றும் உள்ளது.

    இதற்கு இன்றைய தமிழுலகப் படைப்பாளிகளாக எமது கடமைகள் என்ன? இத்தகைய ஒரு நிலையை இளைய தலைமுறைகளின் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடமை அனைத்துப் படைப்பாளிகளுக்கும் உண்டு. தமிழிலக்கிய படைப்புகளொரு புதுப்பரிமாணம் எடுக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்திலே இருக்கும் இச்சமயத்தில், பெண்ணியக் கண்ணோட்டத்தில் ஆண் எழுத்தாளர்களின் பார்வைகள் அமைய வேண்டிய தேவையைச் சர்வதேச பெண்கள் தினம் எமக்கு நினைவூட்டுகின்றது.

    இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக, பாரதியார் முதற்கொண்டு என் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன் வரை எத்தகைய முயற்சிகளை எடுத்துள்ளார்கள் என்பது நான் சொல்லிப் புரிய வேண்டிய ஒன்றல்ல.

    சர்வதேசப் பெண்கள் தினம் ஏன் எனக் கேட்பதை விடுத்து பெண்களுக்கான உரிமைகளில் உள்ள விரிசல்களை வெளிக்காட்டும் படைப்புகளை வெளிக்கொணர முயல்வோம். இதுவே இச்சர்வதேச பெண்கள் தினத்தில் அனைத்துப் பெண்களுக்காகவும் நாம் செய்யும் கடமை.

    Share