ஏகாந்தம்

பாஸ்கர் சேஷாத்ரி
நானிருக்கும் இடத்திலேயே இருக்கிறேன்.
எல்லாம் தானாய் இயங்கிக்கொண்டிருக்கின்றன
ஊர்திகள் நகர்ந்த வண்ணம் பளிச்சிடுகின்றன
விண்மீன்கள் மெல்ல நகர்வது போல தோன்றுகிறது
தென்றல் நில்லாமல் உடல்களைத் தழுவுகின்றது
மரங்கள் சிலுப்பி, கண் மூடி இருளை ஏற்கின்றன
நேற்று இருந்தது போல இன்றில்லை நிலவு
எங்கோ வெளிச்சம் மட்டும் மறையவில்லை
ஒலித்த ரேடியோ எனக்கு இன்னும் தொடர்ந்தபடி
மாறி மாறி வந்து போய் வருகின்றன வாசனைகள்
புலன்கள் இயைந்தாற்போல் உயிர்ப்பு எழுகிறது
ஒவ்வான்றாய்த் தொலைந்து அமைதி மூடுகிறது
கண்ட நிஜமெல்லாம் காணாமல் தொலைகிறது
காலத்தைக் கைப்பிடித்து நான் மட்டும் நிற்கிறேன்
மெல்ல அதுவும் கை நழுவ, இருப்பு எனக்கு மட்டும்.
நானிருக்கும் இடத்திலேயே இருக்கிறேன்.