Blog
-

பராசக்தி சக்தி – நவராத்திரி பாடல்கள்
-விவேக்பாரதிஇரவில் பகலில் எல்லா நேரமும் விழிக்குள் சூழ்ந்திருக்கும் சின்ன இருள், அவள் உருவாகத் தெரிகிறது. மனம் முணுமுணுக்கிறது. அவள் பெயரையே உச்சரிக்கிறது! சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? நெஞ்சின் ஏழ்மை நீங்கவா போகிறது???பராசக்தி சக்திசக்தி பராசக்தி என்றுசொல்லிப்பார்த்திருக்கும் ஏழை நெஞ்சமே! – உள்ளில்வராசக்தி வந்துநின்று தராசக்தி பொழிவதைமறப்பதென்ன ஏழை நெஞ்சமே! – இருள்பராவிடும் அகத்தில்நல்ல பகலவன் உதிப்பகண்டுபடபடக்கும் ஏழை நெஞ்சமே! – கள்விராவுகின்ற கவிதைசொல்லி வீரையெங்கள் இரவைமெல்லவிழுங்குகிறாள் ஏழை நெஞ்சமே!கற்கள்தம்மை மலர்களாக்கிக் காலடியில் தூவினாலும்கண்பனிக்கப் பார்த்திருப்பவள் – வெறும்சொற்களில் பிதற்றுமெங்கள் சோர்வெலாம் அகற்றியுள்ளில்சூரியன் சிரிக்கச் செய்பவள்! – சின்னப்புற்களுக்கும் ஆண்மைதந்து புட்களுக்கும் வானம்தந்துபுதிர்கள்கோடி செய்து வைப்பவள் – நெஞ்சக்கற்பகத்து நிழலில்நம்மைக் காலம்தோறும் வாழவைக்கும்காளியென்று கூவு நெஞ்சமே!அரக்கியென்றும் தோற்றம்கொண்டு அகல்சிமிட்டல் குணமும் கொண்டுஅந்தரத்தில் வாழும் தெய்வதம் – நாம்ஆற்றுகின்ற காரியங்கள் அத்தனைக்கும் சாட்சியாகிஆட்சிசெய்யும் சக்தி மந்திரம்! – நல்லநெருப்பவிழ்ந்து கூந்தலாகி நேரிழையில் ஓடுகின்றநேர்த்தியந்த காளி ரூபமாம் – அதைநெக்குருகக் கண்டுகண்டு சொக்கிசொக்கி யேவியந்துநெஞ்சிலேந்த நாளும் இன்பமாம்!கனகனகன கனகனவென திருநகையினில் ஒலிவரவவள்காற்றிலே சிரிக்கும் காளியாம் – மனம்காமமென்னும் ஏமந்தன்னில் கண்மயங்கி நிற்கும்போதுகாட்சிதந்து மீட்கும் நீலியாம் – தினம்நினைவலைகளில் கனவிருள்களில் புதுப்புதுசுரம் படிப்பவருடன்நிழலினுருவில் ஆடும் ஜோதியாம் – உயிர்நீவிவிட்டு மடியமர்த்தித் தழுவிடாமல் நாடகங்கள்நீட்டுகின்ற மாயக் காரியாம்!மாயம்காட்டும் காளியுருவை மனதுமொத்தம் வைத்தால்சாயம்நீங்கும் மறுகணத்தில் சந்நிதிமுன் தோன்றும்நேயமேறும் நெஞ்சினுக்குள் நினைவழிந்து போகும் – நாம்காயம்மட்டும் இல்லையென்னும் கதைவிளங்கும் கண்டீர்சித்தசுத்தி நேருமதில் நித்தபக்தி ஊறும்கத்திக்கத்தி யேதிரிந்த காட்டுநெஞ்சம் ஓயும்சத்தியங்கள் தோன்றுமங்கு தத்துவங்கள் தோன்றும் -பராசக்திசக்தி சக்திசக்தி சக்தியென்றால் போதும்…-30.09.2019 -

2019 நவராத்திரி கவிதைகள் 5
மரபின்மைந்தன் முத்தையா
எழுதப் படாத ஏடுகளில்- வந்து
எழுது கோல்முனை தீண்டுகையில்
உழுத நிலத்தில் பயிர்போலே-அங்கே
உதித்திடும் எண்ணம் கொடுப்பது யார்?
பழுது நிரம்பிய மனதுக்குள்ளே -உயர்
பாட்டும் இசையும் பிறப்பதெங்கே
தொழுது சொல்வேன் இவையெல்லாம்- தினம்
தருவது வாணியின் கருணையன்றோ!பாரதி சரஸ்வதி பேரெழிலாள்- ஒளி
பொலிந்திடும் வெண்மலர் வீற்றிருப்பாள்
நேருறக் கலைகளை ஆண்டிருப்பாள்- அவள்
நேர்த்தியில் கீர்த்தியாய் நிறைந்திருப்பாள்
சீரிய விரல்களின் கோலங்களில்- எழில்
சித்திரம் தீட்டிடும் தூரிகையில்
காரியம் யாவையும் நிகழ்த்திவிடும்-எங்கள்
கலைமகள் பதமலர் வணங்கிடுவோம்!நான்முகன் படைக்கின்ற உலகமெல்லாம்- எங்கள்
நாயகி கலையின்றிச் சிறந்திடுமோ
வான்வரை வளர்புகழ் பெருமையெலாம்- அவள்
வாரித் தராவிடில் வந்திடுமோ
தேன்மழை அவளது பெருங்கருணை- எட்டுத்
திக்குகள் ஆள்வதும் அவள் அறிவே
மான்விழி நோக்கினில் கலைமகளே -பல
மாண்புகள் நிறைந்திட அருளுகிறாள்!சுவடிகள் தேன்மலர் ஜெபமாலை -அன்னை
சுந்தரக் கரங்களில் தவழ்ந்திடுமாம்
தவம்செய்த பயனாய் ஒரு வீணை- எங்கள்
தேவியின் திருமடி கிடந்திடுமாம்
நவமென ஒளிர்ந்திடும் கலைகளெலாம்- அவள்
நளினத் திருவிரல் நகங்களடா
அவள் விரல் துகள்படக் காத்திருப்போம்- நாம்
அதன்பின்னர் அவனியை ஆண்டிருப்போம்! -

குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.1 (சிற்றில்பருவம்- ஆண்பால்)
-மீனாட்சி பாலகணேஷ்
ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் எட்டாவது அல்லது ஒன்பதாவது பருவமாகப் பாடப்படுவது சிற்றில் பருவமாகும்.
இச்சிற்றில் பருவத்தில் சிறுமியர் மணலால் கட்டி விளையாடும் சிறுவீடுகளைக் காலால் உதைத்து அழிக்கும் செயலைச் செய்யும் சிறுவர்களின் (குழந்தையின்) விளையாட்டு கூறப்படும். எவ்வாறு சப்பாணிப் பருவம் தெய்வக் குழந்தையின் கைகளின் பெருமையைப் போற்றுகின்றதோ, அவ்வறே சிற்றிற் பருவத்தில் பாட்டுடைத் தலைவனாகிய ஆண் மகவின் கால்களின்/ திருவடிகளின் பெருமையும், உயர்வும் சிறப்பும் போற்றப்படுகின்றதனைக் காணலாம். இது ஆண் மகவின் பதினேழாம் திங்களில் பாடப்படும். இரண்டு முதல் மூன்றாண்டு நிறைந்த ஆண் மகவாகவும் கொள்ளலாம். இன்னும் சிறிது வளர்ந்த குழந்தையாகவும் கொள்ளலாம். ஏனெனில் இத்தகைய செயல்களைச் செய்வதற்கு குழந்தை சிறிது வளர்ந்தவனாகவும், ஓடியாடுபவனாகவும் இருத்தல் வேண்டும்.
இவ்விளையாட்டு பெரும்பாலும் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரியது. சிறுபான்மையாகச் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறுமியர் சிற்றிலிழைப்பதனை ஒரு பருவமாகக் குறிப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். இதுவும் பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்கு உட்பட்டதாகும். இதுபற்றி பிறிதொரு கட்டுரையில் காண்போம்.
சிற்றில் விளையாட்டு எனப்படும் பொய்தல் விளையாட்டு ஆண்-பெண் இருபாலரும் சிலசமயம் இணைந்தும், சில பொழுதுகளில் சிறுவர்கள் சிறுமியர் இழைத்த சிற்றிலை அழித்தும் விளையாடும் விளையாட்டாகும். இது ‘பொய்தல் விளையாட்டு’ எனப்படும். அதாவது, பொய்யாக, பாவனையாக, சிறிய ஒரு மணல் வீட்டினைக் கட்டி, கணவன் – மனைவி குடும்பம் நடத்துவது போன்று பாவனையாக, பொய்யாக, கற்பனையாக, சிறுமியர் பாவைகளை வைத்து விளையாடுவது. சிறுசோறும் பாவனையாகவே சமைக்கப்படும்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் பொய்தல் விளையாட்டு பற்றிய குறிப்புகளைக் காணலாம். ஆகவே இது காலகாலங்களாகச் சிறுவர், சிறுமியர்களால் விளையாடப்பட்டுவரும் ஒரு விளையாட்டு எனத் தெளிகிறோம்.
கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்
பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்1.மேலும் சங்க இலக்கியமான பரிபாடலும், ‘ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர்மணல்2,’ என்று சிறுபெண்கள் இழைத்து விளையாடும் சிற்றில்கள் வைகை ஆற்றுமணலை அழகு செய்வதாகக் கூறும்.
இந்தச் சிற்றில் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளைக் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் பாடலொன்றில் விளக்கமாகக் காணலாம். அதில் சிற்றிலிழைத்த சிறுமியர், சிறுசோறாக உண்ணச் சிறுவன் கணேசன் கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களுக்காகக் காத்திருக்கின்றனர். பொய்யாக, மணலையும், சிறுமுத்துக்களையும் பெய்து சிறுசோறு சமைத்த சிறுமியர், மற்ற சிறார்கள் தமது மனைகளிலிருந்து கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வர் என்பது கண்கூடு. சிறுவர்களும் இவர்களுடன் சேர்ந்து விளையாட்டிலும், விருந்திலும் பங்கேற்று மகிழ்வர் என்று இப்பாடலின் பொருள்கொண்டு அறியலாம்.
ஒரு சிறுமியர் கூட்டம்; மண்ணால் சிறுவீடுகட்டி, சிற்றிலிழைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்; மூன்று கற்களை அடுக்கி, ஒரு சிறுமி சிவந்த மாதுளை மலர்களைப் பறித்துவந்து அவ்வடுப்பிலிட்டுப் நெருப்புப் பற்றவைத்தும் விட்டாள். வயதில் சற்றே பெரியவளான மற்றொரு சிறுமி அதன்மீது ஒருசிறு மண்சட்டியை ஏற்றி அதில் நிறைய மணலினையும் இட்டு சோறுசமைப்பதாகப் பாவனை செய்கிறாள். “ஆஹா, வெண்பொங்கலா அக்கா?” என மோப்பம் பிடிக்கின்றனர் மற்ற சிறுமிகள். அனைவருக்கும் பசி வயிற்றை உண்மையாகவே கிள்ளுகின்றது. இப்போது இவர்களுக்கு வேண்டியது எல்லாம் சிறுவர்கள் விரும்பும் விதம்விதமான -உண்மையான- தின்பண்டங்கள்தாம்.
உடனே ஒருசிறுமி, “அதோ பாருங்களடி! நமது நண்பன் கணேசன் தொலைவில் தொந்தியசைய வருகிறான் பாருங்கள்,” என உற்சாகமாகக் கைகளைத் தட்டியவண்ணம் குதூகலிக்கிறாள். எல்லாரும் அத்திசையையே ஆவலாகப் பார்க்கின்றனர்.
கணேசனேதான்! மெல்ல ஆடியசைந்து வருகின்றான்; இடதுபக்கம் இடுக்கிக்கொண்டிருக்கும் பாத்திரம் நிறையத் தின்பண்டங்கள்; வலது கையில் பாதி தின்றதொரு பணியாரம். அதனையும் அவசரஅவசரமாகத் தின்றுகொண்டேவருகிறான்! நண்பர்களை வந்தடையுமுன் முடிந்தமட்டும் தன்னிடமுள்ள பணியாரங்களைத் தின்றுவிடவேண்டும் என்ற பேராசை. சிறிது மிகுந்தால், ‘போனால் போகட்டும்,’ என அவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என்பது அவன் எண்ணம்போலும்!
ஒருவழியாக அவன் பக்கத்தில் வந்து நிற்கிறான். சிறுமிகள் அனைவரும் ஓடோடிச் சென்று ஆவலுடன் அவனைச் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பார்க்கப் பார்க்க அவன் பணியாரங்களை வாயிலிட்டு மென்று சுவைக்கிறானே தவிரப் பகிர்ந்துகொள்வதாகக் காணோம்! வாய்த்துடுக்கு மிக்கவளான ஒரு சிறுமி அவனிடம், “கணேசா! தொந்தியை ஆட்டிக்கொண்டு, மெல்ல வருகிறாயே! இன்று நமது விளையாட்டிற்கு நீ பணியாரம் கொண்டுவருவதாகக் கூறியதை மறந்துவிட்டாயோ? நீ சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தில் மிகுந்ததையாவது எங்களுக்குத் தருவாய் என்று நாங்கள் ஆசையாகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லையா உனக்கு? எங்களுக்குக் கொடுக்காமல் நீயே தின்றுவிடப்போகிறாயா?” என்று கடிந்துகொள்வதுபோலக் கேட்கிறாள்.
கணேசனுக்கு எப்போதும் சினமே வராது. இன்று என்னவோ உண்டமயக்கம் போலும்! அவர்கள் பாடுபட்டுக் கட்டிவைத்திருக்கும் சிறுமண்வீட்டினைத் தன் காலால் விளையாட்டாக எற்றி உதைக்கிறான்; கூரை பிய்ந்து, ஒருபக்கச்சுவரும் உடைந்துவிழுகின்றது. சிறுமிகளுக்குக் கண்களில் நீர்தளும்புகின்றது.
“இடையூறுகள் செய்வதில் மன்னன்’ எனும் பெயரை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதில் உனக்கு என்ன ஆசையோ கணேசா! ஏன் எங்கள் சிற்றிலைச் சிதைத்தாய்? நீ எவ்வளவு நல்லவன்? எங்களுக்கெல்லாம் பெரியவன்; எங்களிடம் மிகுந்த அன்பு கொண்டவன் அல்லவா? தயவு செய்து எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என்று அவன் கரத்தைப்பற்றிக்கொண்டு கெஞ்சுகின்றனர் அச்சிறுமிகள்.
பெருத்த வயிறு தயங்கமெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
பெரும்பண் ணியமு மேந்தியேம்பாற் பேணி வருநின் கரவினைக்கண்
டருத்தி யொடுநீ யுண்டபரி கலசே டத்தை யடியேங்கட்
களிக்க வருவாயென்றுவகை யரும்பி வழிபார்த் திருந்தேமை
வருத்த லழகோ விக்கினஞ்செய் மன்னனெனும்பேர் பேதையரேம்
மாட்டுத் தெரிப்ப தொருபுகழோ மடவாரூடன் மவுணரென்றும்
திருத்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே3சிவஞான முனிவர் இவ்வருமையான பிள்ளைத்தமிழை இயற்றியுள்ளார். சிறுவர்களின் விளையாட்டை நுணுக்கமாகக் கண்டு பதிவு செய்ததாக அமைந்த பாடலிது. கடவுளுக்குப் படைத்து எஞ்சியதனை (சேடத்தை) தாம் உண்ண விரும்புவதாகச் சிறுமியர் கூறுவது கணேசன் என்னும் சிறுவனை அவர்கள் கடவுளெனக் கண்டு தெளிந்ததாலும், ஆயினும் அவர்களுடன் அவன் விளையாட வந்ததனால் அவனைத் தங்களுக்குச் சமதையாகப் பாவித்து சண்டைபோடுவதனையும் இப்பாடலில் ஒருசேரக்கண்டு களிக்கலாம்!
இதே தொனியிலமைந்த இன்னொரு பாடல் குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழில் அமைந்துள்ளது.
சிறுமியர் சிலர் ஆற்றங்கரை மணலில் சிற்றில் எனப்படும் சிறுவீடுகளைக் கட்டி விளையாடிக் கொண்டுள்ளனர். குறும்புத்தனம் நிறைந்த சிறுவன் ஒருவன் அந்தச் சிறுவீட்டைக் காலால் எற்றி உதைத்து அழிக்க ஓடோடி வருகிறான். தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான் இது! இன்றும் சிற்றிலை அழிக்க அவன் ஓடோடி வருவதனைக் கண்டு அச்சிறுமியர் அவனிடம் இனிய மொழிகளைப் பேசி, சிற்றிலை அழிக்காமலிருக்க வேண்டுகின்றனர்.
“உன்னைப் பெற்றெடுக்க உனது தாய் முற்பிறப்பில் பெரிய அரிய தவம் செய்தவளல்லவோ?” என்கிறாள் ஒரு சிறுமி.
“அவ்வாறு உன்னை முயன்று பெற்றவள், எல்லாத் தெய்வங்களையும் அழைத்து உன்னைக் காப்பாற்ற வேண்டிக்கொண்டும் உள்ளாள்,” இரண்டாமவள்.
“நீயும் வளர்ந்து முகத்தினை உயர்த்தி நோக்கித் தவழ்ந்து செங்கீரையாடியவண்ணம் (இவ்வாறு குழந்தை தவழுவது செங்கீரையாடுவது எனப்படும்) பொருளற்ற மழலை மொழிகளைப் பேசினாய்,” முதலாமவள். (‘கீர்’ என்றால் தமிழில் சொல் எனவும் ஒரு பொருள் உண்டு. ஆகவே குழந்தை செங்கீரையாடுவதனை, அது பொருளற்ற குதலைமொழி பேசுவதாகவும் கொள்ளுவர்).
“இவ்வாறு தவழ்ந்துவரும் உனக்குத் தாலாட்டுப் பாடல்கள் பாடி உறங்கவும் வைத்தாள் உன் அன்னை.
“பின் உன்னைக் குந்தி உட்காரவைத்துக் கரங்களைச் சேர்த்துச் சப்பாணி கொட்டி விளையாடப் பழக்கினாள்,” என் இன்னொருத்தி!
“உன்னிடம் தனக்கு ‘முத்தம் தா’வென வேண்டினாள். உன்னைக் கூவி அழைத்து “வருக,” எனக் குறுநடை பழகி வருமாறு வேண்டி, கொஞ்சியும் குலவியும் உன்னை எடுத்து அணைத்துக் கொண்டாள்,” எனப் பட்டியலிடுகிறாள் வேறொரு சிறுமி.
“பின்பு நீ உணவுண்ண மறுத்தபோதெல்லாம் அந்தி சாய்ந்தபின்பு ஆகாயத்தில் வரும் அம்புலியை உனக்கு வேடிக்கை காட்டியும் விளையாட அழைத்தும் உணவூட்டினாள்.
“இவையனைத்தையும் செய்தவள், ‘குழந்தாய், நீ சென்று ஓடியாடி விளையாடுவாயாக!’ என உன்னைத் தெருவில் விளையாட அனுப்பியும் வைத்தாள். நீ என்னடா என்றால் இங்கு வந்து எமது சிறுவீட்டினை அழிக்க முயல்கிறாய். நாங்கள் இதற்காக உன்னை இங்கனுப்பிய தாயையே நொந்துகொள்ள வேண்டும். உன்னை நொந்து கொள்வது முறைமையல்லவே. நீர்நிலைகளால் சூழப்பெற்ற குறுக்குத்துறை எனும் ஊரின்கண் வாழும் முருகா, எங்கள் சிற்றிலைச் சிதைக்காமல் இருப்பாயாக!” என வேண்டுகின்றனர் சிறுமியர்.
‘முந்தித் தவமே புரிந்துன்னை முயன்று பெற்றுக் காப்பாற்றி
முகமே தூக்கிச் செங்கீரை மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
குந்திக் கரத்தால் சப்பாணி கொட்டச் செய்து முத்தமிட்டுக்
கூவியழைத்து வருகவெனக் கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
அந்திப் பொழுதைக் கடந்துவரும் அம்பு லிகாட்டிப் பின்னருனை
ஆடி நீவா எனமறுகில் அனுப்புந் தாயர் தமைவிடுத்து
நொந்திங் குன்னைக் குறைகூறல் நேர்மை யாமோ உணர்ந்திதனை
நீர்சூழ் குறுக்குத் துறைவாழும் நிமலா சிற்றில் சிதையேலே4.’பிள்ளைத்தமிழின் முதல் ஏழு பருவங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் தாய்மார்களின் செயலாதலால் சிற்றிலை அழிக்க வரும் சிறுவனைத் தெருவில் விளையாட அனுப்பியதனையும் அதனால் ‘சிறுவன் சிற்றிலை அழித்தாலும், அது தாயின் தவறே’ என அதனையும் அவளுடைய செயலாகத் தாய்மீதே ஏற்றிக் கூறுகிறார் புலவர். பிள்ளைத்தமிழின் எட்டுப் பருவங்களை ஒன்றுடன் ஒன்று கோர்வையாகத் தொடர்புபடுத்திப் பாடியுள்ள புலமை போற்றற்குரியதாம்.
குமரகுருபரனார் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், செங்கீரைப் பருவத்தில் சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது. ஆச்சரியமாக இருப்பினும், அழகுதிகழ அமைந்த இப்பாடல், சிறு குழந்தைகளுக்கிடையேயான ஒரு விளையாட்டைப் பாடும் முகமாக, உலகியல், மானுட உளவியல், தெய்வத் தத்துவம், உலக உருவாக்கம் எனும் தொடர்ந்து நடக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைச் சுழற்சி முதலியனவற்றை உட்பொருளாகக் கொண்டு திகழ்கின்றது.
சிறு குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில், ஆண் குழந்தைகள் சிலர் முரட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடுவர். மற்றக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை உடைப்பது, அவர்கள் கட்டும் மணல் அல்லது சிறு மண்வீட்டைக் காலால் எற்றி உதைத்துச் சிதைப்பது, அவர்கள் பின்னலைப் பிடித்திழுத்து அவர்களைத் துன்புறுத்துவது என்பன இவற்றுள் சில.
உளவியல் ரீதியாக இதைக் காணப் போனால், நாம் வாழும் மானிட சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டே இவை நிகழ்கின்றன எனலாம். அன்னையர் சமைப்பது, வீட்டிற்குரிய பணிகளைச் செய்து வீட்டை நன்முறையில் பராமரிப்பது, தமது குழந்தைகளைப் பேணுவது போன்றவற்றை நோக்கியே சிறுமியரும் தாய்மாரின் அடிச்சுவட்டில் சிற்றில் இழைத்து மணல் சோறாக்கி, குழந்தைகளைப் பேணும் விளையாட்டை விளையாடுவர். சிறுவர்களும் தந்தை, அண்ணன் முதலானோர் உடல் வலிமை தேவைப்படும் செயல்களைச் செய்வது போலத் தாமும் செய்ய முயல்வர். இவையே, சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழக்குதல், சிறுதேர் உருட்டல், என்ற விளையாட்டுகளாகப் பரிணமித்ததோ என்னவோ!
உலகங்களையே சிறிய வீடாக உருவாக்கி விளையாடும் சிறுமியாக மீனாட்சியன்னை உருவகிக்கப் படுகிறாள். இவ்வாறு அவள் பெருமையைப் பேசுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அன்னை உருவாக்கும் அழகிய சிற்றிலையும் ஒருவன் சிதைக்க இயலுமா? அவ்வாறு செய்யத் துணிந்த அவன் யார்? அவன் ஒரே ஒருவன் தான்- அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்த தலைவனான சிவபிரான்.
இந்தப் பாட்டைக் கண்டு மகிழலாமா?
சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எவ்வாறு? முதலில், நெடிய சக்கரவாள மலையை எல்லா உலகங்களையும் வளைத்து நிற்கும் சுவராக அமைக்கிறாள். எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை இந்தச் சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிவிளக்குகளைப் பொருத்தி விடுகிறாள். முழுதும் எழுந்தெழுந்து மோதும் ஊழிக்கால வெள்ளத்தில் கழுவப்படும் புவனங்களே அவளுடைய பழைய பாத்திரம் பண்டங்கள்; அவற்றை வரிசையாக அடுக்கி வைத்து, புதுக்கூழான இனிய அமுதத்தைச் சமைக்கிறாள். இவ்வாறு பலமுறை தாயாகிய மீனாட்சி சலிப்பின்றிச் செய்து வருகிறாள்.
அவற்றை அழித்த வண்ணமாக இருக்கிறான் பித்தனான சிவபிரான். அவன் ஒரு முற்றவெளியான தில்லையில், சிதம்பரத்தில் திரிகின்றவன்; ஊமத்தம்பூவை அணிந்திருக்கும் பெரும் பித்தன்; கூத்தன் அவன் அழித்ததுடன் நில்லாது மீனாட்சியின் முன் நின்று கூத்தாடுகின்றானாம்!
வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர், “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். அல்லது மேற்காணும் பாடல்களில் கண்டபடி, சினம் கொண்டு கூச்சலிடுவார்கள்; இல்லாவிடில் அழுவார்கள். ஆனால் அம்மை மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்! ‘இவ்வாறு விளையாடுகின்ற ஒப்பற்ற இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடி அருளே!’ என வேண்டுகிறார் குமரகுருபரர்.
சுற்றுநெடு நேமிச் சுவர்க்குஇசைய
………………………………..
இன்னமுதமும் சமைத்து அன்னைநீபன்முறை
இழைத்திட அழித்தழித்தோர்
முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
முன்னின்று தொந்தமிடவும்…………………………………..
சிற்றில்விளை யாடும்ஒருபச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரை ஆடியருளே5தாயான மீனாட்சி (பராசக்தி) உலகத்தை அடிக்கடி ஆக்குதலையும் அவற்றைச் சிவபிரான் அடுத்தடுத்து அழித்தலையும் ஆகிய செய்கைகள் சிறுமியர் சிற்றில் இழைத்தலும், சிறுவர்கள் அவற்றை அழித்தலும் ஆகிய செய்கைகளாக உருவகித்துக் கூறப்பட்டன. மானிடப் பெண்கள் வீட்டிற்கு வேண்டியவற்றைச் செய்வது போல, எல்லா உலகங்களையும் படைக்கும் பராசக்தியும் தன் கடமைகளாக இவற்றைச் செய்கின்றாள். அவற்றைத் திரும்பத் திரும்ப அழித்துத் திருவிளையாடல் புரிகிறான் சிவபெருமான்.
எற்றுபுனல் என்பது அலை மோதும் ஊழிப் பெருவெள்ளமாகும். இதில் அண்டங்களைக் கழுவி எடுத்து அன்னை புதுக்கூழாகிய இன்னமுதைப் படைக்கின்றாள். இவ்வாறாக உலகை உருவாக்குவதையே மீனாட்சி சிற்றில் இழைப்பதாகப் புலவர் கற்பனை செய்கிறார். உன்மத்தம் கொண்டு பித்தனாகிய கூத்தபிரான் மீண்டும் மீண்டும் சிதைக்கிறான். இவ்வாறு உலக உருவாக்கமும் அழிவும் மாறி மாறி வருவது சுட்டப்படுகிறது. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில் உருவாக்கமாகவும் ஈசனின் சிற்றில் சிதைத்தலாகவும் அமைந்துள்ளன.
ஆண்பால் பிள்ளைத்தமிழில் ஒரு தனிப் பருவமாகப் பாடப் பெறும் சிற்றில்பருவம் பெண்பால் பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்தில் விளக்கப்பட்டு, சிவபிரானையே இப்பாடலின் பாட்டுடைத் தலைவனாகவும் கொண்டமைந்துள்ளது. குமரகுருபரரின் தெய்வப்புலமை பணிந்தேத்த வேண்டியதாம்.
இறைவனின் படைத்தலும் காத்தலும் கரத்தலும் அழித்தலும் அருளுதலும் ஆகிய ஐந்தொழில்கள் ஓயாது நடை பெறுவதை தத்துவ விளக்கமாக இப்பாடல் அழகுறக் காட்டுகிறது. அதுவும் சிவபெருமான் தான் செய்யும் திருவருள் தொழில்களைத் தனது திருமேனியாக விளங்கும் சக்தி மூலமாகவே செய்தருள்கிறான் என்பது மறைபொருளாக விளங்குகிறது.
இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. குமரகுருபரனாரின் கருத்தை அவர்கள் வழிமொழிந்திருக்கலாம்.
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் (ஆண்பாற்) சிற்றிற்பருவத்துப் பாடலொன்று சிறுபெண்கள் எவ்வாறு ‘பாவனை’யாக, பொய்யாக விளையாடுகின்றனர் என்பதனை நயமுற விளக்குகிறது.
‘ஒளி பொருந்திய குளிர்ந்த முத்துக்களாலான அரிசியும், அதற்கு உலைபெய்த நறுந்தேனும் கவிழ்ந்து சிதறாதோ? சமைக்கும் பாண்டமாகப் பயன்படுத்தும் (நந்தின் கடமான) சங்கு உடைந்து போய்விடாதோ? மாதுளைமலர்களைப் பெய்து நாம் அமைத்த உலைத்தீ அவிந்து விடாதோ? பவளக்கொடிகளால் எம் சிறுவீட்டிற்கு நாம் ஆசையாக இட்டுள்ள விளக்கு அணைந்துவிடாதோ? நாங்கள் (பாவைத்)திருமணம் எனக்கூறிச் செய்துவைத்துள்ள பலவகை விருந்து வீணாகப் போகாதோ? (பாவனையாக) முலைப்பாலருந்துவித்து உறங்க வைத்துள்ள எமது மகவு (பாவை) தாமரை போன்ற தனது கண்களை விழித்தெழுந்து தேம்பி அழும் அல்லவோ? ஆகவே எமது சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்,’ என வேண்டுவதாக அமைந்த பாடல்.
நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
முகைபபுண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேம் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே.6என்பன பாடல் வரிகள். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழானதனால் சிறுமியர் சிறுவீடு கட்டுவதும், சிறுசோறு சமைப்பதும், பாவை விளையாடலும் (குழமணம் மொழிதல்) ஒருங்கே கூறப்பட்டுள்ளன. இவையே பெண்பால் பிள்ளைத்தமிழில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுப் புலவரின் கற்பனைக்கேற்பப் பாடப்படுகின்றன. இதனைப் பிறிதொரு கட்டுரையில் காணலாம்.
___________&____________
பார்வை நூல்கள்:
- சிலப்பதிகாரம், கானல்வரி
- பரிபாடல்
- கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்- சிவஞான முனிவர்
- குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்-
- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்
-

நதியினில் வெள்ளம்! கரையினில் நெருப்பு!
சக்தி சக்திதாசன்
(இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302)
அக்டோபர் 31! இங்கிலாந்து அரசியல் காலண்டரில், இதுவும் முக்கியமான நாளாக ஐக்கிய இராச்சிய மக்கள் மத்தியில் மட்டும் அல்ல, ஐரோப்பிய ஒன்றிய நாட்டு மக்களின் மத்தியில் மட்டும் அல்ல, உலக மக்கள் அனவரினதும் மனங்களிலேயும் அழுத்தமாகப் பதிந்துவிட்ட தேதி.
ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் எனும் ஒரு கூட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயலும் தேதி .
சுதந்திரமாக, தமது இறைமையைத் தமது கைகளிலே கொண்டுள்ள நாடாக வாழ வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே முடியும் என்று வாக்களித்தோரில் பெரும்பான்மையான ஐக்கிய இராச்சிய மக்கள் எடுத்த ஏகோபித்த முடிவு.
ஐக்கிய இராச்சியம், குறிப்பாக இங்கிலாந்து நாட்டு மக்களின் மனத்தில் கொஞ்சம், கொஞ்சமாகத் தமது நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம், வாழ்க்கை முறை என்பன முற்றாக தமது நாட்டில் மாறி வருகிறது எனும் எண்ணம் வளர்ந்து வந்தது.
அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. சுகாதாரச் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதாவது சிகிச்சைகளுக்காகக் கால அவகாசத்தின் நீட்சி, வைத்தியர்கள், தாதிமாரின் பற்றாக்குறை என்பன.
பாடசாலைகளில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இடப் பற்றாக்குறை. ஒரு இடத்தில் பலகாலமாக வசித்து வந்தவர்களின் குழந்தைகளுக்கே அவர்களது அருகில் உள்ள பாடசாலைகளில் இடம் கிடைக்காத நிலை.
வெளிநாடுகளில், அதுவும் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததும் அந்நாட்டுப் பிரஜைகள் இலகுவாக ஐக்கிய இராச்சியத்தினுள் நுழைந்ததால் உள்நாட்டுப் பணியாளர்களின் ஊதியத்துக்குக் குறைவாகப் பெற்று அவர்களது பணிகளை இவர்கள் பெற்றுக்கொண்டதால் எழுந்த விரக்தி.
இப்படியான காரணங்கள் இங்கிலாந்து மக்களின் மனத்தில் எழுந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான அதிருப்திக்கு வழிவகுத்த காரணங்களில் முக்கியமானவை.
ஐக்கிய இராச்சியப் பிரஜைகளின் இளம் சந்ததியினரில் பலர் வைத்தியத்துறை, தாதித்துறை, மற்றும் சரீர உழைப்பின் அடிப்படையில் அமைந்த பணிகளின் மீதான ஈர்ப்பின்மையால் ஏற்பட்ட அத்தகைய துறைகளின் பணியாளர்களின் பற்றாக்குறையை இக்கிழக்கு ஐரோப்பிய பணியாளர்கள் பூர்த்தி செய்வதும் மறுக்கப்பட முடியாத உண்மை.
இவர்களின் சேவையின் தேவை ஐக்கிய இராச்சியத்துக்கு அத்தியாவசியமானது எனும் ஒரு நிலையே காணப்படுகிறது.
எனது கண் சம்பந்தமான வைத்தியத்துக்காக நான் வைத்தியசாலைக்குச் செல்வது உண்டு. அப்போது அங்கே ஒரு பதாகையில் அன்று அங்கு பணிபுரிவோரின் பட்டியல் (டாக்டர்கள், தாதிமார்) எழுதப்பட்டிருக்கும். அப்பட்டியலில் பத்துப் பெயர்கள் இருந்தால் அதில் இரண்டு அல்லது மூன்று பெயர்களே ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.
இங்கிலாந்து மக்களின் இவ்விரக்தியும் அதற்குக் காரணம் என்று எளிமையாக அவர்கள் கருதும் வெளிநாட்டவரின் வருகை என்பதும் இன்றைய இங்கிலாந்து மக்களின் மனநிலைக்குக் காரணம் என்பதும் உண்மை.
இந்த வெளிநாட்டவர் கட்டுப்பாடின்றி ஐக்கிய இராச்சியத்தினுள் நுழைவதற்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றியம் என்பதுவே பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கிறது.
இங்கு ஒரு விடயம் என்னவென்றால் இந்த வெளிநாட்டவர் வருகை என்பது ஐக்கிய இராச்சியத்தில் குறிப்பாக வெள்ளை இனத்தவரிடையேதான் பிரச்சனையாக இருக்கிறது என்று எண்ணுவதே இயல்பாகும்.
என்னே ஆச்சரியம் !
புலம்பெயர்ந்த மக்கள் பலர் கூட இத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதுவே உண்மை. நான் சந்தித்த ஆசிய இனத்தவர் பலர் கூட இவ்வெளிநாட்டவர் வருகையை விரும்பாததை அறிந்திருக்கிறேன். தாம்கூட ஒரு காலத்தில் இங்கு வந்த வெளிநாட்டவர் எனும் நிலை இருந்தபோதும் இப்போது ஐக்கிய இராச்சிய பிரஜை எனும் நிலைக்குத் தம்மை உயர்த்திக்கொண்டதை உணர முடிந்தது.
அதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் தம்மையும் ஐக்கிய இராச்சியம் எனும் தராசில் அந்நாட்டு மக்களுடன் சரிசமமாக எடையிட்டுக் கொள்வது காலத்துக்கேற்ற மாற்றம் என்பதை மறுக்க முடியாது. அது காலத்தின் தேவையும் கூட .
இந்த ஒரு பின்னணியில் இன்று அதாவது அக்டோபர் முதலாம் தேதி இங்கிலாந்து அரசியல் நிலை என்ன வடிவம் கொண்டுள்ளது?
பிரதமரோ இன்னும் 30 நாட்களில் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது வெளியேறுவதுதான் எனும் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் அசைவதாகத் தெரியவில்லை.
ஆனால் அத்தேதி வெளியேறுவதற்கான ஓர் ஒழுங்கான வெளியேற்றத்துக்கான உடன்படிக்கையை எட்டுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை.
அதேநேரம் அத்தகைய உடன்படிக்கையற்ற வெளியேற்றம் சட்டத்துக்கு முரணானது எனும் வகையில் ஒரு சட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அமுலாக்கியுள்ளார்கள்.
கைகட்டப்பட்ட நிலையில் போர்க்களத்தில் நிற்பதைப் போல நிற்கும் பிரதமர் தனது கைக்கட்டுக்களைத் தளர்த்திக்கொள்ளச் சிறிது அவகாசம் தாருங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்பதுவே கூட்டாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சட்டப் பிரேரணை.
ஒரு சேற்றுக் குழியில் பிணமாக இருந்தாலும் இருப்பேனேயொழிய (சும்மா ஒரு பேச்சுக்காக) அக்டோபர் 31ஆம் தேதி வெளியேறுவதில் எந்தவிதமான அவகாசமும் கேட்கமாட்டேன் என்று சூளுரைத்திருக்கிறார் பிரதமர்.
ஆயினும் ஓர் உடன்படிக்கையை எட்டுவேன் என்று பலதரப்பான ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுகளில் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர்.
உடன்படிக்கை எட்டுவதற்கான பேச்சுகளைத் தாம் இன்னமும் எதிர்கொள்ளவில்லை என்று நம்பிக்கையின்மையோடு பேசுகிறார்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினர்.
தமது அடுத்த கட்ட நகர்வுக்கான தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
இந்த இழுபறி நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள, இது பாராளுமன்றத்துக்கும், மக்களின் ஐனநாயக உரிமைக்கும் இடையிலான போராட்டம் எனவும் இப்போராட்டத்தில் தான் மக்கள் பக்கம் என்று மக்கள் ஆதரவில் குளிர்காய்கிறார் பிரதமர்.
சில பொதுக் கருத்துக் கணிப்புகளின்படி பிரதமருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
எனது நடவடிக்கைகளில் அதிருப்தி என்றால் நான் விடுத்த அழைப்பினை ஏற்று ஒரு பொதுத் தேர்தலை நடத்த ஆதரவு தாருங்கள். மக்கள் யார் பக்கம் என்று பார்த்து விடுவோம் என்று எதிர்க்கட்சிக்குச் சவால் விடுகிறார் பிரதமர்.
தேர்தலுக்கு நாம் தயார் ஆனால் உடன்படிக்கையற்ற ஒரு விலகலை தவிர்த்துவிட்டோம் என்று உறுதிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திடம் கால அவகாசம் பெற்று அக்டோபர் 31ஆம் தேதி வெளியேற்றம் என்பதை அகற்றுங்கள். அதன் பின்னால் தேர்தலுக்கு நாம் தயார் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
போச்சுடா! ஒரு கயிறிழுக்கும் போட்டியைப் பார்ப்பது போலல்லவா இருக்கிறது.
இது இப்படியிருக்க பிரதமர் பொரிஸ் ஜான்சன் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு முனையிலிருந்து சராமாரியாக வீசப்படுகின்றன.
அவரும், அரச தரப்பும் இந்த ப்ரெக்ஸிட் விவகாரத்தில் உபயோகிக்கும் பதங்கள் மக்கள் மத்தியில் துவேஷ உணர்வுகளை வளர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன என்கிறார்கள்.
அத்தோடு ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் ஒரு ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வாக இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு பிரதமரின் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் செயல் சட்ட விரோதமனாது என்று தீர்ப்பளித்ததை அடுத்து பிரதமர் தனது அதிகாரத்தை இழந்து விட்டதனால் பதவி விலக வேண்டும் எனும் கூப்பாடு ஓரத்தில் எழுகிறது.
பிரதமர் லண்டன் நகர மேயராக இருந்த சமயம் அவருக்கும் ஒரு தொழிலதிபரான இளம்பெண்ணுக்கும் இடையில் தகாத உறவு இருந்ததாகவும் அவ்வுறவின் அடிப்படையில் அப்பெண்ணின் நிறுவனத்துக்கு மக்கள் பணத்தில் இருந்து நிதி உதவி செய்தார் என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.
அதே நேரம் 20 வருடங்களுக்கு முன்னால் ஒரு விருந்தின் போது இப்போதைய பிரதமர், தன் மீது கை வைத்தார் என்று அப்போதைய பெண் நிருபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவையெல்லாம் பிரதமர் மீது எதிரிகள் சுமத்தும் அபத்தமான குற்றச்சாட்டுகள். இதை மக்கள் ஒருபோதும் பெரிதுபடுத்தப் போவதில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
தொடர்ந்திருந்து பார்ப்போம் ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம் நெருப்பு இரண்டில் ஒன்றுக்குள் அகப்படப் போகிறாரா? இல்லை தனது புத்தி சாதுரியத்தால் அவ்வெள்ளத்தை அந்நெருப்பை நோக்கித் திசைதிருப்பி நெருப்பை அணைக்கப் போகிறாரா?
-

2019 நவராத்திரி கவிதைகள் 4
-மரபின் மைந்தன் முத்தையா
தோகை விரித்திடும் பொன்மயில் அழகில்
தென்படும் பசுமை அவள்கொடைதான்
வாகைகள் சூடிட நீதியும் எழுகையில்
வெறிகொண்டு தொடர்வது அவள் படைதான்
யாகங்கள் யாவிலும் ஆடிடும் கனல்மிசை
ஏகி நடப்பது அவள் நடைதான்
நாகத்தின் படத்திலும் நாதத்தின் இசையிலும்
நாளும் அசைவது அவள் இடை தான்!சூத்திரம் எழுதிய ஞானியர் நெஞ்சினில்
சூட்சுமம் ஆனவள் பராசக்தி
பாத்திரம் நிரம்பிடும் தானிய வகைகளில்
பவித்திரம் ஆனவள் பராசக்தி
காத்திடும் வலிமையின் காருண்ய ரூபமாய்
கண்ணெதிர் தெரிபவள் பராசக்தி
சாத்திர விதிகளைத் தாண்டிய ரூபமாய்
சாகசம் செய்பவள் பராசக்தி!ஆலய வாயிலில் பூச்சரம் விற்கையில்
அவளே வெய்யிலில் வாடுகிறாள்
காலமும் நேரமும் கருதா உழைப்பினில்
காளி மரநிழல் தேடுகிறாள்
தூலமும் உயிரும் தூளியில் ஆடிடும்
தருணம் அவளே பாடுகிறாள்
காலகாலனின் உடுக்கை அசைவுக்குக்
கால்கள் மாற்றி ஆடுகிறாள்!பிச்சியென் றலைவதும் பெருங்கலை ஆள்வதும்
பிறவியை அறுப்பதும் அவள்தானே
உச்சியில் திலகமாய் சூரியச் சாந்தினைச்
சூடி நடப்பதும் அவள்தானே
அர்ச்சனை வேளையில் ஆதங்கப் பார்வைக்கு
ஆறுதல் தருபவள் அவள்தானே
கர்ச்சனை சிங்கத்தின் முதுகினில் ஏறி
ககனங்கள் ஆள்வதும் அவள்தானே!படத்திற்கு நன்றி – http://www.tantricmoments.nl/shiva-shakti/
-
சிவாஜி – ஒரு சுயம்பு
-சேஷாத்ரி பாஸ்கர்
ஒரு படத்தின் இறுதிக் காட்சி. படப்பிடிப்புக் குழு தயார். இதற்காக அந்த நாயகர் மூன்று நாட்கள் தூக்கத்தைத் தொலைத்து ஒரு வாடிய முகத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்தச் சில நாட்கள் அவர் பேசுவதைக் குறைத்து, அந்தப் பாத்திரத்தின் உணர்வைப் புரிந்துகொண்டு, அதில் லயித்து எப்படிச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். தூக்கம் இழந்த முகம் கொஞ்சம் உப்பியது. கண்கள் கொஞ்சம் பெரிதாகின. பெரும் களைப்பு முகத்தில் தெரிந்தது
இரவு வீட்டுக்குச் சென்ற போதும், அவர் சகஜமாகவில்லை. பின்னர் போட்டுக் கொண்ட ஒப்பனை அந்த பாத்திரத்துக்கு வலு சேர்க்க, பாசமலர் ராஜசேகரன் தயார். கிழிந்து போன கைச் சட்டை , கால் சட்டை, கையில் குழந்தை, பார்வை இழந்த கண்கள், பாசம் பொங்கும் முகம், தெறிக்கும் குரல், கூர்மையான ஆரூர்தாஸ் வசனம், பலம் சேர்க்க சாவித்திரி, தொந்தரவு செய்யாத பின்னணி இசை? நகர்ந்து கொண்ட பீம்சிங், நேரிடையான கழுத்தைச் சுளுக்காத கோணம். What More is Needed? எனக்குத் தெரிந்து இவரைப் போல ஒரு நடிகர் வேறெங்கும் இல்லை. நாடக நடிப்பு, ஸ்த்ரீபார்ட் வேஷம் தாண்டி இப்படி யோசித்துப் புனைந்து ஒரு நடிகன் இப்படித் தன்னை வளர்த்து ஒரு பெரிய பரிமாணத்தைத் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியது பெரும் சாதனை.
சரஸ்வதி சபதம் படத்தில் ராஜசபையில் நடந்து வரும் காட்சிக்குப் பத்து வகையான நடை நடந்து ஏ.பி. நாகராஜனுக்குத் திகைப்பூட்டினார்.
ஆண்டவன் கட்டளையில் விவேகானந்தர் வேஷம். ஒப்பனை போட்டு, படத்தளம் வந்தபோது அரங்கமே எழுந்து நின்றது. அது போன்ற முகவாகு. கண்களை உருட்டிக் கொண்டு ஜப்பான்காரன் குண்டு போட போகிறான் என்று ஒரு எதிரி நாட்டினர்கூட சொல்ல முடியாத முக பாவம். இது அந்த நாள்.
இவர் ஒரு சுயம்பு. எல்லாவற்றையும் உள்வாங்கி அதை எந்த நேரத்தில் எப்படிக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்த கலைஞன், அன்னையின் ஆணை பற்றியும் ராஜாராணி பற்றியும் அவரிடம் பேசியவர்கள் மிகக் குறைவு. அவர் படத்தில் எல்லோருக்கும் ஒரு கனம் இருக்கும். பாடல்கள் இருக்கும். வசனம் இருக்கும். சினிமாவை சினிமாவாகப் பார்த்தவர். பந்துலு இயக்கத்தில் சபாஷ் மீனா படம் ஆரம்ப நிலையில் கணேசனை அணுகிய போது அவர் மெட்ராஸ் பாஷை பேசும் வேடத்திற்குச் சந்திரபாபுவைச் சொன்னாராம். பாபுவுக்கு மகிழ்ச்சி. பதிலுக்குப் பாபு தனக்கு சிவாஜியை விடக் கூடுதலாக ஒரு ருபாய் ஊதியம் வேண்டும் என்றாராம். சிவாஜியிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் சொன்னார். கிறுக்கன். விஷயம் உள்ளவன். அவனையே ஒப்பந்தம் செய்யுங்கள் என்றாராம். இது, பிம்பம் பார்க்கும் கலைஞனுக்கு வராது.
அவரைப் பார்த்து ஒருவர் உங்கள் நடிப்பு முதல் மரியாதையில் சூப்பர் என்றாராம். குரல் வந்த திசையில் அவர் முறைத்துக்கொண்டு திரும்ப, கேட்டவன் ஓடியே போய் விட்டான். எனக்குத் தெரிந்து உலகில் இவரைப் போல ஒரு பெரும் நடிகர் இல்லை. அவர் நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்த்தவர்.
-

2019 நவராத்திரி 3
-மரபின்மைந்தன் முத்தையாவாலை இதழ்களில் வளரும் நகை-அதுவானத்துப் பொய்கையில் மலரும் முகைபாலா விழிகளில் சுடரும் நகை- அதில்பரவும் நெருப்பினில் அழியும் பகைசூலத்தின் முனைகளில் ஒளிர்வதென்ன=விரல்சொடுக்கிடும் முன்னர் ஒளிவதென்னநீல க ண்டத்தில் நெளிவதென்ன -அவள்நீவிய குண்டலி நாகமன்றோசாந்தத் திருமுகம் சிரித்திருக்கும்-அவள்சந்நிதித் தூண்களும் சிலிர்த்திருக்கும்காந்தக் கயல்விழி குளிர்ந்திருக்கும்-நுதல்காட்டிடும் கண்மிசை கனலிருக்கும்கோடையும் பனியும் அவள் அசைவே- பயிர்கொழிப்பதும் காய்வதும் அவள் இசைவேபாடல்கள் அவளது பவனிரதம்-கலைபயில்பவர் அடைவது அவளின்பதம்திக்குகள் அவள்முகம் தேடுவதும்-புவிதிடுக்கிடும் படியவள் ஆடுவதும்இக்கணம் இந்நொடி நிகழ்வதுதான்- இவள்இங்கிதம் எப்படிப் புகழ்வதுநாம்சாம்ப சதாசிவன் மேனியிலே-இடம்ஷாம்பவி ஆள்வது சாஸ்வதமாம்தேம்பி அழுகிற பிள்ளைமுன்னே- தேவதேவியின் பொற்கிண்ணப் பால்வருமாம்வையங்கள் ஆள்கிற வீரையவள் -அந்தவான்முகில் பொழிகிற தாரையவள்;பொய்யிந்த வலியென்று காட்டிடுவாள்-ஒருபொற்கணம் தனில்நம்மை மீட்டிடுவாள் -

பழகிப் போன குரல் – நவராத்திரி பாடல்கள்
-விவேக்பாரதி
ஆயிரம் அலுவல்களுக்கு மத்தியிலும், கிடைத்துவிடும் ஏதோ ஒரு பயணப் பொழுதில், சில நிமிட இடைவெளிக்குள் ஒரு பாடல் நெஞ்சுக்குள் இசைக்கப்படுகிறது. யார் இசைக்கிறார்? எங்கோ கேட்ட குரலாய்…பழகிப் போன குரலில் உள்ளேபாடல் கேட்கிறது! – ஆபாரதி பாடுகிறாள் – மனம்மெழுகாய் மறுகணம் மலையாய்க் கனக்கமெல்லிசை மீட்டுகிறாள்! – அடடாமேனியை மீட்டுகிறாள்!வெள்ளைப் புடைவை தங்கப் புன்னகைவீணை கையளென – அவள்விரலில் தந்துபிகள்! – ஒருபள்ளத்தினில் நிறை வெள்ளத் துகளெனப்பரவிடும் பாடல்களில் – உள்ளேபலவித சங்கதிகள்நெஞ்சில் சொற்களின் தனியரசாங்கம்நேர்வது தெரிகிறது – அவளின்நேர்முகம் தெரிகிறது! – உயிர்தஞ்சம் என்றவள் தாளடி சேர்கையில்தர்மம் தெரிகிறது – அறுபடும்கர்மம் புரிகிறதுகல்விக் கதிபதி காக்கும் குணநிதிகவிதைப் பிரியையவள் – வாசக்கருமைக் குழலியவள்! – எழும்சொல்வித்துக்குள் ககனம் நிரப்பிசொலிக்கும் மாயையவள்! – நேரில்தோன்றும் சாயையவள்!ஒருநாள் தெரிவாள் ஒருநாள் மறைவாள்ஓயா விளையாட்டு! – சற்றுஓய்ந்தால் தலையாட்டு – என்றேதருவாள் பாடலைப் பொழிவாள் அந்தத்தாயின் ஒருபாட்டு – காற்றில்தரைவரும் தாலாட்டு!!-29.09.2019 -

Triumph of all good over all evil
Jayanthi Sankar
As you can notice this is the first time I’ve matched a festival season, though by a mere coincidence. The basic pencil sketches and needed maskings of these two Devis on A1 sized 300mg watercolour papers were ready two months back but I couldnt paint because of a few unexpected jobs that demanded more of my time and attention. And when I revisited them a few days back Navratri / Pooja / Dassera had just begun. As I’d wanted, finally, these paintings helped me break the monotony that was building. Very happy Navratri! The back light in Kali ma taught me certain technics and my learning continues.
-

படக்கவிதைப் போட்டி – 226
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
Yesmk எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் வெள்ளிக்கிழமை (04.10.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
-

படக்கவிதைப் போட்டி 225-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. பிரேம்குமாரின் இந்நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 225க்கு உரியதாக வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள்!
கறையான்களால் தின்னப்படுகின்ற முதிய ஆலமரத்தை அதன் விழுதுகள் வீழாமல் ஊன்றிக் காப்பதுபோல், முதுமைவந்து இரண்டாம் குழந்தைப்பருவத்தை (second childishness) அடைந்துவிட்ட தந்தையைத் தனயன் தாங்கிப்பிடித்தால் அவர் வீழமாட்டார்! தலை தாழமாட்டார்!
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி: 197)இப்படமும் இதன் பின்னாலிருக்கும் அருளப்பரின் அருள்மொழிகளும் எத்தகைய சிந்தனைகளை நம் கவிஞர்களுக்கு அளித்திருக்கின்றது என்று அறிந்துவருவோம்!
*****
முதியவர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதையும், முடிவாகத் தம் பிள்ளைகள் இருக்குமிடமே தமக்கு பிருந்தாவனம் என்று அவர்களை நாடிச் செல்வதையும் இக்கவிதையில் அழகாய்ச் சொல்லியிருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.
வாழ்க்கை
ஆருயிர் தந்தாய் நீ
அடையாளமாய் அம்மை அப்பன்
அன்பை மட்டும் பொழிந்து ஆளாக்கிட
வளர்ந்து நின்றேன் நான்!அன்பாய்ப் பேசிச் சிரித்து
இதயத்தை வென்றாள் அவள்
அத்தனையும் மறந்து மயக்கத்தில்
அவள் கரம் பிடித்தேன் நான்!இதயங்கள் இணைந்தது இல்லறத்தில்
இன்பத்தில் திளைத்திடும் மனம்
பொய்யாய்ப் போகும் மெய்கள் இணைந்திட
நாம் என்று ஆகினோம் அவளும் நானும்!உறவுக்கு சாட்சியாய் ஒன்றுக்கு இரண்டாய்
பிறந்தது ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய்
மகனாய் மருமகளாய் இருந்த எம்மை
தந்தை தாய் என்று உயர்த்தினாய்!எங்கள் இளமை மெல்ல மறைய
இடம் பெயர்ந்து சென்றனர் இவர்கள்
மகள் புகுந்த வீட்டிற்கும்
மகன் தனி குடித்தனத்திற்கும்!ஒருவருக்கு ஒருவர் துணையாய்த்
தனிமையில் இருக்கையில்
பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் பிறந்தது
எங்களைத் தாத்தா பாட்டி என்று உயர்த்தியது!துணை வேண்டி இருவரும்
துணையாய் இருந்தவளைப் பிரித்து
அவளுடன் அவளும் இவனுடன் நானும்
தனித்தனியாய் வேதனையுடன் அவளும் நானும்!உள்ளுக்குள் வேதனையை வைத்து
புன்னகை பூட்டி ஓடி ஓடி உழைத்தவள்
இதயம் இயங்காமல் நின்று போனது
தனியாய் எனைத் தவிக்கவிட்டுச் சென்றது!முதுமை எனை முத்தமிட்டதும்
முத்தமிட்டவள் விட்டுப்போனாள்
கரம் பிடித்தவன் கையால்
கொள்ளிதனை வாங்கிச் சென்றாள்!நிமிர்ந்து நிற்க இயலாமல் முதுமையில்
இனி வரும் காலம்தன்னைத் தனிமையில்
தள்ளுவதை நினைக்கையில்
எதிரே கண்டேன் இந்த வாசகம்
நான் உங்களுக்கு அன்பு செய்தது போல்
நீங்களும் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்யுங்கள்!போகும் திசை அறியாமல் தவிக்கையில்
விட்டுச் சென்றவள் காட்டிய வழியாய் இந்த வாசகம்
கண்களில் நீர் மல்கக் கால்கள் தானாய் நகர்ந்தது
பிள்ளைகள் இருக்கும் பிருந்தாவனம் நோக்கி!*****
வியப்புக்குறியாய் நிமிர்ந்துநிற்கும் கம்பீர மானுடனும் முதுமை வந்தால் வினாக்குறியாய் வளைந்துதான் போய்விடுகின்றான். மூப்புக்கு ஆட்படுவதை யாராலும் தவிர்க்க இயலாது. எனவே, இளைஞர்கள் முதியோரை ஏளனம் செய்யாது அரவணைத்தால் அவர்களின் அன்பும், கூடவே வாழ்க்கைக்கான அனுபவமும் கிட்டும் என்றுரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
உன்னைத்தான் தம்பி…!
முடக்கிவிடுகிறது மனிதனை
முதுமை,
உடலிலும் மனதிலும்
கைவைத்துவிடுகிறது காலம்..வியப்புக் குறியாய்
நிமிர்ந்திருந்த முதுகு
வளைந்து
வினாக் குறியாகித்
தடி எடுத்தவனைத்
தடுமாறித்
தடி பிடிக்க வைத்துவிடுகிறது..ஊனமில்லா உள்ளத்தையும்
முதுமை
ஊனமாக்கிவிடுகிறது
தனிமையில் தள்ளி..உறவுகளின்
உண்மை நிலைகாட்டிப்
பிறக்கவைக்கிறது ஞானம்..தம்பி
துடிக்கும் இளைஞனே,
தடுக்கமுடியாது உனக்கும்
முதுமை வருவதை..அதனால்
தவிக்க விட்டுவிடாதே
முதியவர்களை,
தவிக்கவிடப்பட்டவர்களுக்கு
உதவி செய்து
பரிசாய்ப் பெற்றுக்கொள்-
அனுபவத்தை…!சிந்தனைக்குரிய நல்ல கவிதைகளைப் படைத்துத் தந்திருக்கும் கவிஞர்கள் இருவருக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகுக!
*****
இனி வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
கூடிவாழ்ந்த உறவுகளின்
கூட்டுத் தொகை சில கோடி
கூன்முதுகு குனிந்து சுமந்த சுமைகளின்
கூட்டுநிறை பல கோடி – ஆயினும்கூர் மழுங்கிய ஏர்க் கொழுமுனை இது
கூர்மை மங்கிய விழிகளின் பார்வையோடு
கூடிழந்த பறவையாக இன்று குடியிருக்கக்
கூடு தேடும் இடமோ தெருக்கோடி!ஆலமரம் விழுதிறங்கித் தோப்பாச்சு
ஆன அடிமரம் தான் ஆதரவு இன்றித் தனியாச்சு!
ஆயிரம் உறவுகள் தாங்கிய தோள்களும் கால்களும்
ஆதரவு தேடி ஏதிலியாக எங்கோ போகிறது!ஆண்டவன் கூட அறிவிப்பே செய்கின்றான்
அவனைப் போலவே அன்பு செய்யச் சொல்லி
ஆனலும் அன்பான ஆளைத்தான் காணவில்லை –எல்லா
அம்மா அப்பாவுக்கும் இதுதான் கடைசியா?அன்னைக்கும் தந்தைக்கும் ஆதரவளிப்போமா- நமது
ஆருயிர் தானே அவர்கள் அதை நாம் அறிவோமா?
அமுதூட்டி அகிலம் காட்டிய அவர்களுக்குக் கொஞ்சம்
அன்பு செய்வோமா அதை அன்புடன் செய்வோமா?இளமை மட்டுமே நிலையல்ல
இனி முதுமை என்பது முடிவல்ல
இதயம் அன்பால் நிறைந்தால்
இன்பம் தானே விரியும் எங்கும்!’அன்பின் வழியது உயிர்நிலை’ என்றான் வள்ளுவன். ’நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்’ என்றான் ஆண்டவன். ஆதலால் மூப்பினால் தளர்வுற்றிருக்கும் முதிய பெற்றோரை மதித்துக் காத்தல் பிள்ளைகள் கடனென அறிந்து அன்புகாட்டினால் இன்பம் எங்கும் விரியும் என்று நயமாய் நவின்றிருக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. யாழ். நிலா. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
-

சரியா? தப்பா?
-நிர்மலா ராகவன்
நலம்… நலமறிய ஆவல் (168)
`முன்பெல்லாம் நாடு இவ்வளவு மோசமாகவா இருந்தது!’ என்று பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள் இன்று.
ஆனால், இவர்களில் யாரும் அதை எப்படித் தடுப்பது என்று யோசிப்பதில்லை. முட்டாள்தனத்தாலும், பேராசையாலும் சிலர் நடப்பதால் இந்நிலை ஏற்பட்டுவிட்டது என்று புரிந்தாலும், அதை எப்படி நம்மால் தடுப்பது என்ற பயம்!
தீங்கு இழைக்கிறார்கள் என்று புரிந்தும், அவர்கள் பலத்தைக் குறைக்க எந்த முயற்சியும் செய்யாது இருப்பவர்களே நிறைந்த உலகில் தீமை தழைப்பதில் என்ன அதிசயம்?
தவறு செய்யலாம், ஆனால் அதைப் பிறர் அறியாவண்ணம் செய்தால் தவறில்லை என்பதுபோல் நடக்கும் சிலரைப் பின்தொடர்கிறார்கள் தன்னலம் மட்டுமே கருதுபவர்கள்.
`நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று பெருமை பேசுகிறவர்கள் மட்டும் தெய்வப்பிறவிகளா, என்ன! இப்படிப்பட்டவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள். புதிதாக எதிலும் ஈடுபடும் துணிச்சல் கிடையாது. அதனால்தான் தம்மைப்போல் இல்லாதவர்களை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்.
இது புரிந்தால், இவர்கள் சொல்வதையும் செய்வதையும் அலட்சியம் செய்யலாம்.
கதை
நான் பட்டப்படிப்பு படிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும், என் உறவினர்களில் மூவர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
“எப்படியும், கல்யாணமாகிப் போகப்போகிறவள்! எதுக்கு இன்னும் படிப்பு?” என்று என் தாய்க்குத் தூபம் போட்டார் ஒருவர்.
“அதிகமாகப் படித்துவிட்டால், மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம்,” என்று, கூடுதலான வரதட்சணை கொடுக்க வேண்டிவரும் சிரமத்தை இன்னொருவர் உணர்த்தினார்.
`பெண்களை அதிகம் படிக்கவைத்தால், பிறரை மதிக்கமாட்டார்கள். கட்டுப்படுத்துவது கஷ்டம்,’ என்று ஏதேதோ சொன்னார்கள்.
எனக்கென்னவோ, என் நலனைக் கருதிதான் அந்த ஆண்கள் அப்படிச் சொன்னார்கள் என்று நம்ப முடியவில்லை.
பதின்மூன்று வயதில் வகுப்பில் முதலாவதாக வந்ததற்காக, அதற்கடுத்த வருடம் மைசூர் மகாராஜாவின் கையால் பரிசு பெற்றிருந்தேன். பள்ளி இறுதி ஆண்டில் மாநிலத்தில் குறிப்பிட்ட இடம் பெற்றதற்காக என் பெயரும், பள்ளியின் பெயரும் தினசரிகளில் வந்தன. பேச்சுப்போட்டிகளில் பள்ளியைப் பிரதிநிதித்திருந்தேன். (பிறகு, கல்லூரியிலும்).
“நான் நன்னாப் படிக்கிறேனேம்மா! மேலே படிக்கத்தான் போறேன்!” என்றேன் உறுதியாக.
அம்மாவின் விருப்பமும் அதுதான். “இவள் ஒரு முடிவு எடுத்தால், அப்புறம் யார் எது சொன்னாலும் கேட்க மாட்டாள்!” என்று அந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டினாள்.
அடுத்து வந்த ஆண்டுகளில், நான் படிக்கக்கூடாது என்று நாங்கள் கேளாமலேயே `அறிவுரை’ கூறியவர்கள் தம் பெண்களைக் கல்லூரியில் சேர்த்தார்கள்!
இப்படி — தெரிந்தே பிறரைக் கவிழ்க்க நினைப்பவர்களை — தருணம் வாய்க்கும்போது பழி தீர்த்துக்கொள்ள எண்ணினால் நாமும் அவர்களைப்போல் பலகீனமாக ஆகிவிடுகிறோம். `போகிறார்கள்! அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று விட்டுவிட வேண்டியதுதான்.
பெண்கள் அதிகம் படித்துவிட்டால் அச்சமோ பொறாமையோ கொள்ளும் உலகம் கல்வியில் நாட்டமில்லாது இருப்பவரை `முட்டாள்’ என்று பழிக்கிறது.
படிப்பில்லாவிட்டால் என்ன? ஒருவருக்கு வேறு திறமை இருக்கலாமே!
கதை
கீர்த்தி தன் பதின்ம வயதில் காரோட்டக் கற்றாள். உரிமம் கிடைத்தும், தனியாக காரோட்ட துணிச்சல் இல்லை.
“அண்ணா எவ்வளவு நன்றாக ஓட்டுகிறான், பார்!” என்று யாரோ அவள் மதிப்பைக் குறைத்து ஒப்பிட, நொந்துபோனாள்.
அப்பெண் தற்காப்பு கலையில் தேசிய ரீதியில் பரிசுகள் பெற்றவள். பாட்டு, நடனம், சித்திரம் வரைதல், தானே புதிய சமையல்வகைகளைக் கண்டுபிடித்துச் செய்வது என்று அவளுக்கு இருந்த வேறு பல திறமைகளை நினைவுறுத்தியபின் அவள் தெளிந்தாள்.
பெண்களுக்குப் பேச்சுத்திறமை அளித்த ஆண்டவன், இயந்திரத்திறன்களை ஆண்களுக்குக் கொடுத்துவிட்டார். ஒன்றரை வயதிலேயே பெண் குழந்தைகள் கதை சொல்லும். ஆண் பிள்ளை சிறு காரை வைத்துக்கொண்டு விளையாட, பெண் குழந்தை தனக்கென வாங்கிக் கொடுத்த பொம்மையை மார்புடன் அணைத்துப் பால் கொடுக்கும்.
சமுதாயக் கோட்பாடு பெண்கள் மென்மையானவர்களாக இருப்பது அவசியம் என்று இப்படிப் பழக்கிவிட்டது. இது புரிந்தால், பெண்கள் தம்மால் இயலாதவற்றுக்காக கவலைப்படத் தேவையில்லை.
பிற மனிதர்களோ, சம்பவங்களோ நம் சுயமதிப்பைக் குறைக்கவிடக் கூடாது.
முடியாத ஒன்றை நினைத்து கவலைப்படுவானேன்! `இப்படி ஆகிவிட்டதே!’ என்று நொந்து, அதைப்பற்றியே பேசினால் என்ன ஆகிவிடப்போகிறது!
பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது விஞ்ஞானிகளுக்கு மட்டுமே அவசியமான குணமில்லை. அவ்வப்போது, `ஏன் இப்படி?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால், எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.
கதை
வந்தனாவின் தாய்மொழி தமிழ் அல்ல. தமிழில் பேச மட்டும் கற்றிருந்தாள். அவள் மணந்தவனது குடும்பமோ தமிழிசை, நாடகத்துறையில் சிறந்து விளங்கியது.
ஒரு பொது நிகழ்ச்சியில் அவள் உரையாற்ற வேண்டியிருந்தது. என்னைக் கேட்டு, ஒவ்வொரு வார்த்தையாக ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டாள்.
“அந்தமாதிரி குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டுட்டு, தமிழிலே எழுதப் படிக்கத் தெரியாதா? சும்மா சொல்றா!” என்றார் ஒருவர், ஏளனமாக.
தனக்குத் தெரியாததைப்பற்றி, சம்பந்தமே இல்லாததைப்பற்றி, கேலியாகப் பேசுபவன் அறிவிலி என்று அலட்சியப்படுத்துவோமே!
ஒரு துணுக்கு (எந்தக் காலத்திலோ படித்தது)
வயது முதிர்ந்த தாயிடம் மகள் கேட்கிறாள்: நீ ஏன் உன் வயதுக்கேற்றபடி நடக்காமல், இப்படி குழந்தைபோல் நடக்கிறாய்?
தாய்: எல்லாரும், `நமக்கு வயதாகிவிட்டதே, இப்படித்தான் இருக்கணும்!’ என்று நடப்பதால்தான் உலகம் இந்த லட்சணமாக இருக்கிறது!
அவள் கூறாமல் விட்டது: குழந்தைத்தனமான ஆர்வம் பிறவியிலேயே நம்முள் இருக்கும். இது மறையாது பாதுகாத்துக்கொள்ள இயற்கையை ரசிக்கத் தெரிந்தால் போதும்.
`யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ!’ என்று அஞ்சி, அந்த ஆர்வத்தை அடக்கிவிடுகிறோம். வயதுக்குரிய வியாதிகளும் வருகின்றன.
குதூகலமும் விளையாட்டுப்புத்தியும் மாறாமல் இருப்பவர்களைக் கண்டால் அவர்களுடைய கலகலப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளாதா!
மாறாக, `வயதாகிவிட்டது! இனி என்ன இருக்கிறது வாழ்வில்!’ என அலுப்பால் நம்மையே நாசம் செய்துகொள்ள முயற்சிக்கிறோம்.
தனக்கே குழி பறிப்பவர்கள்
ஒரு சிறிய அமைப்பின் தலைவரை அப்பதவி அளித்த அதிகாரபோதை ஆட்டுவித்தது. தனக்குக் கீழே இருப்பவர்களை மரியாதையின்றி நடத்தினார்.
சீக்கிரமே பலரும் அவரைவிட்டு விலக, குழப்பம் ஏற்பட்டது. தான் எங்கே தவறிழைத்தோம் என்று அவருக்குப் புரியவில்லை.
பள்ளிக்கூடங்களில் சில ஆசிரியர்கள் மாணவர்களைக் கேவலமாக நடத்துவார்கள், ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் மரியாதைக்குறைவாக நடத்துவார்.
எங்கள் தலைமை ஆசிரியர் எல்லா ஆசிரியர்களையும் அடிமைகள்போல் நடத்தினார். பொறுக்கமுடியாது போக, எல்லாருமாகச் சேர்ந்து அவருக்கு எதிராகப் புகார்க்கடிதம் ஒன்றை எழுதி, மேலிடத்திற்கு அனுப்ப, அவர் தொலைந்தார்.
தலைவர் ஒருவர் தன் கீழ் இருப்பவர்கள் எல்லாரும் அடிமைகள் என்றெண்ணி நடக்கலாம். ஆனால், எல்லோரும், எப்போதும், முட்டாள்களாக இருப்பதில்லை.
பதவி இருக்கும்வரைதான் தன் அதிகாரம் செல்லும் என்று புரியாதவர்தான் முட்டாள்.
-

ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது!
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++++நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
உளவிச் சென்று நாசா
துணைக்கோளுடன் தென் துருவத்தில்
ஒளிமறைவுக் குழியில்
பனிப் படிவைக் கண்டது !
நீரா அல்லது வாயுவா என்று
பாரதமும் நாசாவும் ஆராயும் !
சந்திரனில் சின்னத்தை வைத்தது
இந்திய மூவர்ணக் கொடி !
யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
பந்தய மில்லை !
விந்தை புரிந்தது இந்தியா !
இரண்டாம் சந்திரயான் விண்சிமிழ்
2019 செப்டம்பரில்
முதன்முதல் இறக்கும் தளவுளவி
தகவல் இணைப்பு இழந்து,
சரிந்துபோய் விழுந்தது !
இரண்டாம் சந்தரயான் விண்சிமிழ்
நிலவைச் சுற்றி வந்து
ஆராயும் ஏழு வருடம்.
தளவுளவி நேராக அமர
தளவூர்தி, இறங்கி
தவழ்ந்து மெதுவாய் நிலவை
ஆராயப் போகுது
ஈரேழ் நாட்கள் கடந்து.+++++++++++

இந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.
2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.

தொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்
சந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.

1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப்பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.
+++++++++++++++++++++
- https://www.space.com/topics/india-space-program
- https://www.space.com/india-moon-lander-time-running-out.html
- https://www.space.com/lro-fails-see-india-moon-lander-vikram.html
- https://www.space.com/india-chandrayaan-2-moon-south-pole-landing-site.html
+++++++++++++++++

விக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது
சூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.
2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.
ஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப்பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.

விக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.
+++++++++++++++++++
- https://economictimes.indiatimes.com/news/science/nasa-joins-isro-to-track-vikram-calling-home/articleshow/71097087.cms
- https://www.moneycontrol.com/news/india/chandrayaan-2-nasa-helps-isro-to-establish-communication-with-vikram-lander-4432871.html?fbclid=IwAR3zEJRhzpwcwWipD2mgPMutgpMNpCfHXFSbq2-APrec5utl-ucVeEW5VJY
- https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-not-only-isro-nasa-also-sends-messages-lander-vikram-moon/story/378594.html?fbclid=IwAR3aeAO2h152zc0uRLO90Ym7FpPyrmXXHIMpqtJ3jXX1qA145d_NBuz_Pgs
- https://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-landing-failed-isro-loses-contact-with-lander-vikram/story/377813.html?utm_source=recengine&utm_medium=WEB&referral_sourceid=378149&referral_cat=Trends
- https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-vikram-landing-somersault-isro-exlusive-1598882-2019-09-13
- https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14
++++++++++++++++++++++++++++++

சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.
இப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.

WHAT NOW?
It’s been nearly a week since the Indian Space Research Organisation lost contact with the Chandrayaan-2 lander. Since then, Isro, which continues to remain tight-lipped over the matter, has been making constant efforts to re-establish communication with the spacecraft.
A day after losing contact with Vikram, Isro said it had been able to locate the Chandrayaan-2 lander on the Moon. However, communication with the lander remains elusive.
Next week, a lunar orbiter operated by the United States’ National Aeronautics and Space Administration (Nasa) is set to fly over the area where Vikram is located. The orbiter is expected to take pictures and offer clues to Vikram’s fate.
Meanwhile, the Chandrayaan-2 orbiter remains safe in its orbit around the Moon. In fact, it was the Chandrayaan-2 orbiter that, on Sunday, managed to locate Vikram on the lunar surface.
The orbiter’s mission life has been extended from one year to seven years, due fuel savings made during the trip to the Moon. Over the course of its mission life, the Chandrayaan-2 orbiter will perform several experiments, including one to estimate the quantity of iced water on the Moon.

சந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்
தகவல் அனுப்பத் தவறியது.
[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]
++++++++++++++++
- https://youtu.be/q7Omv4EX8RM
- https://economictimes.indiatimes.com/news/science/chandrayaan-2-setback-india-loses-contact-with-vikram-lander-during-descent/articleshow/71018277.cms?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=mlpdaily&ncode=4b749efe6f3285bfc668b352f29b8270
- https://youtu.be/phN5S9cHeWM
- https://frontline.thehindu.com/static/html/fl2619/stories/20090925261913200.htm
- http://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/30/india.moon.mission/index.html
- https://youtu.be/sd6grEvZn1A
- https://youtu.be/ANyg9VGSqbY
+++++++++++++++++++++

நிலவை நெருங்கும் தளவுளவி தகவல் அனுப்பத் தவறியது
இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறிய சந்திரயான் -2 தளவுளவி
சந்திரயான் -2 மகத்தான நிலவுத் திட்டம், விண்சிமிழ் ஏவிய நாள் முதல் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேறி, இறுதியில் தளவுளவி நிலவைச் சுமார் ஒரு மைல் உயரத்தில் நெருங்கிய போது, மின்னலைத் தகவல் அனுப்பத் தவறி இந்திய மக்கள் கண்ணீர் விட்டு ஏமாற்றம் அடைந்தார். ஆயினும் இன்னும் இரண்டு ஆண்டுகட்கு விண்சிமிழ் நிலவைச் சுற்றித் தகவல் அனுப்பி வரும். தளவுளவி நிலவில் விழுந்து நொறுங்கிப் போகாமல் அமர்ந்துள்ளதை, மற்ற கனல் காட்சி [ தெர்மல் இமேஜிங் ] ஏற்பாடு மூலம் தெரிய வருகிறது.

நிலவை நெருங்கும் போது சுமார் ஒரு மைல் உயரத்தில் தளவுளவி மின்னலைத் தொடர்பு இழந்தது.
+++++++++++++++
தகவல் தொடர்பு அறுந்தாலும், தளவுளவி நிலவில் மெதுவாக இறங்கி அமர்ந்திருக்கலாம் என்று யூகிக்க இடம் உள்ளது. மின்னலைத் தொடர்பு கிடைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த முயற்சிகள் வெற்றிகரமாகி, தகவல் பெற்று தளவூர்தியும் அடுத்து நகர்ந்து வரப் போகிறது. 14 நாட்கள் தளவூர்தியும் திட்டமிட்டபடி தகவல் சேர்த்து அனுப்புவதை இந்தியரும், உலக மாந்தரும் காணப் போகிறார் என்று உறுதியாக நம்பலாம்.
++++++++++++++++++++



-

2019 நவராத்திரி 2
-மரபின்மைந்தன் முத்தையா
இடைவெளியே இல்லா இவள்கருணை கிட்ட
தடை – வெளியே இல்லை தனக்குள் – மடையை
அடைக்கும் அகந்தை அடித்தே உடைத்தால்
கிடைக்குமே சக்தி கனிவு .சிறகசைத்துப் பாடுகிற சின்னப் பறவை
உறவென்று வானத்தை உன்னும் _ பிறவியினைப்
பெற்றவர்க் கெல்லாம் பராசக்தி தாய்தானே
உற்றிந்த உண்மை உணர்.உன்னில் ஒரு துளியாய் உள்ளாள் அவளைநாம்
உன்னும் பொழுதே உருத்தெரிவாள் – இன்னும்
தொடரும் பிறவித் துயர்நீங்க தேவி
சுடரடிகள் நீசென்று சூழ்.மாயத் திரைகள் மறைக்கும் மஹாமாயை
தாயென் றழைத்தால் திரை விலகும் – ஓயுமே
எண்ணில் பிறவிகள் எல்லாமே சக்தியை
எண்ணில் நிகழும் இது.தானே வெயிலாகித் தானே நிழலாகி
தானே இயங்குந் தயாபரி _ தேனாய்
சிவக்கூட்டில் நின்றொழுகும் சுந்தரி பாதம்
தவக்காட்சி கண்டு தெளிமும்மலப் பிள்ளையை மோகிக்கும் தாய்மையே
அம்மையே எங்கள் அபிராமி – இம்மையே
எம்மையே ஆளும் எழிலரசி செம்மையாய்
நம்மையே காப்பாள் நயந்து .




