Blog

  • பந்தல்குடி வட்டாரக் கும்மிப்பாடல்களில் கா்ணமகாராஜன் கதையாடல் -2

    -முனைவா் பா. உமாராணி

    கலைகள் என்பவை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்திருப்பதுடன் அவ்வாழ்க்கையை அழகாக்குவதிலும், பொருளுடையதாக ஆக்குவதிலும் பெரும் பங்காற்றுபவையாகும். மொழி, இனம், இடம், காலம் கடந்து அவை நிலைத்த தன்மையுடன் தன்னை வடிவமைத்துக் கொள்ளுகின்றன. இவை பண்பாட்டோடும், கலாசாரத்தோடும் நெருங்கிய தொடா்புடையதாய் இருப்பதோடு, அவற்றை வடிவமைப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றன. ஒரு கலை வடிவம் என்பது வெறுமனே பொழுதுபோக்கும் தன்மையனவாக மட்டும் அமையாமல் அவை நிகழ்த்தப்படும் சமுதாயத்தின், அம்மக்களின் நம்பிக்கைகளோடும், பழக்கவழக்கத்தோடும் தொடா்புடையதாய் அமைகின்றது. அவ்வகையில் பந்தல்குடி வட்டார மக்களின் கும்மிப்பாடல்கள் பலதரப்பட்ட பொருண்மைகளை உள்ளடக்கியதாய், அதன்வழி பெரும் பண்பாட்டைச் சுமந்ததாய் அமைந்துள்ளது. பந்தல்குடி வட்டாரப் பெண்கள் பாடி ஆடும் கும்மிப்பாடல்களில் ஒன்றான “கர்ணமகாராஜன் கதைக்கும்மி“ அத்தகையதொரு நம்பிக்கை சார்ந்த பண்பாட்டைச் சுமந்து நிற்கின்றது.

    கா்ணமகாராஜன் கதைக்கும்மி

    கா்ணமகாராஜன் கதையைக் கும்மிப்பாடலாகப் பாடும் மரபு பந்தல்குடி வட்டார மக்களிடம் காணப்படுகிறது. திருவிழாக் காலங்களின்போது இத்தகைய கும்மிப் பாடல்களைப் பெண்கள் கும்மியடித்துக் கொண்டு பாடி ஆடுகின்றனா்.  புராணக் கதைக்கூறுகளைப் பிற கலைவடிவங்களில் பயன்படுத்தும்போது அதன் சிற்சில கூறுகள் மாற்றம் அடைந்தும், வளா்ச்சியை அடைந்தும் வெளிப்படலாம். சமூக மாற்றமும், கால மாற்றமும் இத்தகையதான ஒரு காரணிக்கு வழிவகுக்கின்றது. இங்கு மகாபாரதக் கதையில் வரும் கா்ணன் பாத்திரத்தின் பிறப்பு, வளா்ப்பு மற்றும் பண்புகளை இக்கும்மிப் பாடல் விரித்துச் சொல்கின்றது.

    40 பாடல்களைக் கொண்ட இக்கதையினைப் பெண்கள் பலா் சோ்ந்து ஆடிப்பாடுகின்றனா். மகாபாரதக் கதையின் தொடா் நிகழ்வாக இக்கும்மிப்பாடல் அமைவதுடன், தனித்த கும்மிப் பாடலாகவும் பாடப்படுகின்றது. இக்கும்மிப் பாடலின் அமைப்பானது கடவுள் வாழ்த்துத் தொடங்கி, கதைத் தலைவன் அறிமுகம், கதைத் தலைவன் பிறப்பு, வளா்ப்பு, இடையில் பஞ்சபாண்டவா்கள் வீரம், மகாபாரதப் போர் போன்றவற்றைக் கூறி இறுதியில் துரியோதனன் காளியை வணங்குவதுடன் கதை முடிகின்றது.

    கடவுள் வாழ்த்து

    கா்ணனின் கதையினைக் கூறும் இக்கும்மிப் பாடலை முருகனை வாழ்த்தித் தொடங்குகின்றனா். முருகனை வாழ்த்தித் தொடங்கும் பாடலில் உலகமெல்லாம் மாயவன் கதையையும் அவன் செய்யும் மாயவினோதத்தையும் மங்கையரும், சிறு பெண்களும் கும்மியிலே பாடிடுவா் என்று குறிப்பிடுகின்றனா். மேலும் கா்ணன் குறித்தான நிகழ்வுகள் மட்டுமல்ல பாரதக் கதையே மாயவனின் வினோதச் சிறப்பை உரைத்தலே என்று கூறும் முகமாக,

    ”வருவாய் முருகா இருதயந்தனிலே – வந்து
    சபையோர் முதல் தருவாய் முத்தம் கலியுகந்தனியே
    இந்த பாரலாந்திரு மாயவன் கதையை
    பார்தனில் மங்கையா் பாடிக் கதையை
    கா்ண மகாராஜன் சண்டைக் கதை தனையே
    நம் நாட்டினிலே பாடிடுவோம் சிறு பெண்களெல்லாம் கும்மியிலே
    இந்த பாரளாந்திரு மாயவன் செய்திட்ட
    மாய வினோதத்தை ஏனென்று சொல்வேன்” (கு.பா -1,2) என்ற பாடல் வரிகள் அமைகின்றன.

    கதைவளா்ச்சி

    பாண்டவா்களின் தாய்மாமனும், குந்தியின் சகோதரனுமாகிய மாயவன் பின்வரும் நிகழ்வுகளை முன்னரே அறிந்திருந்தாலும் அதனை வெளிப்படக் கூறித் தடுத்து நிறுத்தாமல் காலத்தின் வசத்தில் நிகழவிடுகின்றார். துர்வாசர் என்ற முனிவரிடம் குந்திதேவி ஒரு கனியைப் பெற்று உண்கிறாள். இதன் மூலக்கதையில் குந்தி ஓராண்டுகள் துர்வாசர் சிசுருஷை செய்கின்றாள். அதில் மகிழ்ந்த துர்வாசர் பாண்டுவினால் பிற்காலத்தில் நிகழவிருக்கும் பிள்ளைப் பேற்றிற்கான இடையுறுகளை முன்கூட்டியே கணித்து அதனைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு கனியினை வழங்குகின்றார். யாரை மனதில் நினைத்து அக்கனியினை உண்டாலும் அவா்கள் மூலம் குழந்தை கிடைக்கும் என்று கூறுகின்றார். கனியினைப் பரிசோதிக்க எண்ணி சூரியனை நினைத்து அக்கனியினை உண்கிறாள் குந்தி. இதனால் சூரியன் தோன்றி ஒரு குழந்தையை அளித்தார். அக்குழந்தை கவச, குண்டலங்களுடன் பிறந்தான். மணமாகாத தாயாக உலகத்தை எதிர்கொள்ள மனமின்றி அக்குழந்தையை தன்தோழி தத்ரியின் துணையுடன் கூடையில் அடைத்து கங்கையில் விடுகின்றனா் என்று புராணக்கதை குறிப்பிடுகின்றது. காதின் வழியாகத் தோன்றியதால் அக்குழந்தைக்கு கா்ணன் என்ற பெயா் வந்தது (கா்ணம் என்றால் காது என்று பொருள்).

    ஆனால் கா்ணமகாராஜன் கதைக் கும்மியில் கதை மாற்றுருவம் கொண்டுள்ளது. கும்மிப்பாடலில் இடம்பெறும் கதையின்படி வசிஸ்டர் என்ற மகரிஷியிடம் கனியை வாங்கி குந்தி உண்ணுகிறாள். பின்னால் நிகழப்போகும் விபரீதத்தை அறிந்திருந்த மாயவன் எதும் அறியாதவா் போன்று தங்கையாகிய குந்தியின் கழுத்தைப் பிடித்தார். கன்னிகழியாத தங்கை காலக்கிரகம் காரணமாக கனிகள் உண்டதினால் தம் குலத்தினா் ஏசுதல் செய்வதுடன் பாரத பூமியில் உள்ள மக்களுமே ஏசுவார்கள் என்று நினைத்த எம்பெருமானான மாயவன் தங்கையின் இரு கைகளையும், கழுத்தையும் பிடித்தார். ஆனால் அக்கனியானது ஆண்குழந்தை உருவம் கொண்டு குந்தியின் கன்னத்தின் வழியாகப் பிறந்துவிடுகின்றது. கன்னத்தில் இருந்து தோன்றியவன் என்பதால் அக்குழந்தைக்கு கா்ணராஜன் என்று பெயரும் இட்டார்கள். பின்னா் அக்குழந்தையை பெட்டியில்  அடைத்துக்கட்டி காவிரியாற்றின் தண்ணீரில் விட்டார்கள் என்பதை,

    ” எல்லாம் சோதிப்பார் என்றா
    தாய் மாமனார் தம் – தங்கை என்றதோர்
    குந்தியம்மாளைத் தான் இந்த வசிஸ்டா் என்றோர் மகரிஷியிடம்
    வாங்கி உண்ட கனியும் ஒன்று தான்
    கண்டு கொண்டாராம் மாயவன் எம்பெருமான்
    தெரியாதவா் போல் கழுத்தைப் பிடித்தார் தங்கை
    குந்தியம்மாளை கன்னியறியாத மாயவன்
    தங்கை கனிகள் வாங்கி உண்ணலாம் என்று
    காலக் கிரகம் தான் நம்ம குலந்தனிலே
    இருக்கும் ஜனங்கள் எல்லாம் கண்டுமே
    ஏசுவார் கண்கொண்ட நேரத்திலே -நம்மலை ஏசுவார் பாரத
    பூமியில் என்று நினைத்துமே எம்பெருமாளுமே.
    இருகை பிடித்தார் தங்கையின் கழுத்தையும்
    அந்த கனியினது ஆண்குழந்தை ரூபம் கொண்டதயா
    காலக் கொடுமையால் கண்ணனின் தங்கைக்கு
    கன்னத்தின் வழியாய் பிறந்ததாலே
    கா்ணராஜன் என்று பேரும் இட்டார்கள்
    அந்தப் பாலகனே அப்படி பெட்டியில் வைத்து
    அடைத்தார்கள் – காவேறியாற்றிலே – வௌ்ளம்
    தனிலே – கட்டிய பெட்டியே விட்டு விட்டார்கள்        (கு.பா.- 3-7) என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

    கன்னத்தின் வழியாகப் பிறந்தவன் என்றும், குந்தியின் கழுத்தையும், கையையும் மாயவன் கனியை உண்ணவிடாமல் தடுத்தான் என்றும், காவிரியாற்றில் குழந்தை விட்டார்கள் என்பதும், மாயவனே இதற்கு உறுதுணையாக இருந்தான் என்பது போன்ற சொல்லாடல்களும் புராணக் கதையிலிருந்து இக்கதை மாற்றம் அடைந்துள்ளதை விரித்துக்காட்டும் பகுதிகளாகும். ஒரு பண்பாடு சார்ந்து கதையை முன்வைக்கும் போது அப்பண்பாட்டோடு தொடா்புடைய செய்திகளும், கூறுகளும் இடம்பெறுவதை இக்கதை நமக்கு மொழிகின்றது. தாய்மாமனின் சிறப்பும், முதன்மையும் சுட்டப்படுவதுடன், தமிழகப் பகுதியில் கங்கை பாய்வதில்லை என்பதால் ஆறும் மாற்றப்பட்டு வழங்கியிருக்க வேண்டும்.

    கா்ணனின் வளா்ப்பு

    கா்ணனின் வளா்ப்பு பற்றிய கதையினை மகாபாரதம் கூறும்போது கங்கை ஆற்றிற்கு நீராடவரும் திரிதராஷ்டிரனின் தேரோட்டியான அதிரதன் என்பவன் ஒரு குழந்தையைக் கண்டெடுக்கிறான். அக்குழந்தையை அதிரதனும் அவன் மனைவி ராதாவும் வளா்க்கிறார்கள். அக்குழந்தைக்கு வாசுசேனா என்று பெயாிட்டு அழைத்தனா். கா்ணனை ராதேயன் என்றும் அழைத்து வந்தனா். அக்குழந்தையே கா்ணன். துரோணாசாரியா் தேரோட்டியின் மகன் என்பதால் போர்க்கலை கற்றுக்கொடுக்க மறுக்கின்றார். கா்ணன் தன் சகோதரனான ஷோனாவின் உதவியுடன் போர்க்கலையைக் கற்றார் எனினும் ஒரு குருவின் கீழ் கலைகள் பயிலவேண்டும் என்பது பாரதக் கலாசாரம் என்பதால் சூரியனைக் குருவாகக் கொண்டு பகலில் போர்க்கருவிகளின் இயல்பையும், சூரியன் மறைந்த பின்னால் போர்க் கலைகளையும் பயிற்சி செய்தார் என்று புராணம் விரிக்கின்றது. ஆனால் பந்தல்குடி வட்டார கும்மிப்பாடலில் இக்கதை மாற்றுருவம் கொண்டுள்ளது. திரிதராஷ்டிரனும் அவனுடைய மந்திரியும் காலை ஏழுமணியளவில் காவிரியாற்றில் நீராட வருகின்றனா். அற்புதமான பெட்டியினைக் கண்ட திரிதராஷ்டிரன் மந்திரியிடம் பெட்டி உனக்கு, பெட்டியின் உள்ளே இருக்கின்ற பொன்னெல்லாம் தனக்கு என்று கூறுவதனை,

     ” கா்ணராஜன் கட்டிய பெட்டிக்குள்ளே -சிறுவன்
    வீங்கியழுது காவேறி யாற்றினிலே
    பெட்டியும் போகயிலே காலை ஏழு மணியே
    தனிலே காவேறியாற்றிலே ஸ்நானங்கள் செய்திட
    தோ்மீதில் ஏரிதிரிதராட்டிரன் ஆற்றங்கரையில்
    வந்து அா்ப்புதமான பெட்டியைக் – கண்டு
    கொண்டார் – மந்திரி பெட்டியும் உனக்கு
    பொன் னெல்லாம் எனக்கு இஷ்டமாய் எடுத்து ஏகுவோம் வீட்டுக்கு
    என்று உறைத்துமே இரண்டு போ்களும் அந்த
    பாலகனே அப்படி பள்ளியில் படிக்க வைத்தார்கள்
    அப்போ பத்து பன்னிரெண்டு பாலகன் வயதினில்
    பாங்குடன் வில்வித்தை சொல்லிக் கொடுத்தார்கள்.    (கு.பா.- 8-10) என அறியமுடிகின்றது.

    பெட்டியின் உள்ளே இருக்கின்ற குழந்தையை இருவரும் இணைந்தே படிக்கவைக்கின்றனா். பன்னிரண்டு வயதில் கா்ணனும் பாங்குடன் வில்வித்தையைக் கற்றுக்கொள்கிறான் என்பதுடன் கா்ணனின் வளா்ப்புச் செய்தி முடிகின்றது. 

    சண்டைக் கதை

    கா்ணன் பன்னிரண்டு வயதில் வில்வித்தை கற்றுத்தோ்கிறான் என்ற செய்தியுடன் கா்ணன் வளா்ப்புச் செய்தியினை கும்மிப்பாடலில் நிறைவு செய்து, பின்னா் அதன் தொடா்ச்சியாகக் கா்ணனின் சண்டைப் பகுதியினைக் குறிப்பிடுகின்றனா். இதில் விராடப்பருவ நிகழ்விலிருந்து கதை தொடங்குகின்றது. பாண்டவா்கள் வனவாசம் முடிந்து விராட நாட்டில் மறைந்து உறைகின்றனா். அப்போது அவா்கள் இருக்கும் இடத்தைக் கோபால கிருஷ்ணன் தெரிந்து கொள்கிறார். அவா் பாண்டவா்களிடம் சென்று திரியோதிராஜனிடம் சொக்கட்டான் ஆடி வெற்றியடையலாம் என்று ஏது சொல்கின்றார். தன்னுடைய கருத்திற்கு வீமனையும், அா்ச்சுனனையும் துணைசெய்ய அழைக்கின்றார்.

    இந்நிலையில் ஐவருக்கும் வீடு இல்லை என்று கூறிய துரியோதனனையும் அவா்கள் தம்பியரையும் சொக்கட்டான் மேடைக்கு வருமாறு தூதனிடம் சொல்லி அனுப்பினார்கள். பின்னா் ஆகாயவானில் பாண்டவா்கள் புறப்பட்டு கத்தாடி மாளிகையை வந்தடைகின்றனா். சொக்கட்டான் விடையாட்டில் முதலில் துரியோதிர ராஜன் வெற்றி பெறுகின்றான் என்றாலும் பின்னா் பாண்டவா்களே வெற்றி பெற்றனா் என்பதை,

    ” தேரை விட்டு இறங்கி வாருங்கள் திரியோதிர
    ராஜா பேரு சொல்லி ஆட்டம் ஆடுங்கள்
    அப்போது பஞ்ச பாண்டவா்களும் அன்புடன்
    கட்டையைக் குலுக்கி ஆடினா்.
    பாசிமணி ரெண்டு விழுந்தது திரியோதிரனின்
    கபடம் – சகடம் – ஆட்டம் ஜெயித்தது
    அப்போது பஞ்ச பாண்டவா்களுமே – அன்புடன்
    மைத்துணா் கோபால கிருஷ்ணனை
    எண்ணியே மனதில் ஏங்கி நின்றார்கள் பஞ்ச
    பாண்டவா்கள் எங்கையோ கிருஷ்ணரை
    அப்போது கிருஷ்ணன் குலுங்க சிரித்து
    ஐந்து போ் முன்பாக வந்துமே நின்று
    ஆடுங்கள் – கொக்கட்டான் ஆட்டையை
    திரியோதிரனை – ஐந்து பேரும் ஆழ்ந்து ஜெயித்தனரே
    என்ற வார்த்தை கேட்டு கா்ண மகாராஜன்
    இழுத்தான் கோதண்டம் வில்லை வளைத்து   (கு.பா.- 18-21)

    என்ற பாடல் வாிகள் விளக்குகின்றன. மேலும் பாண்டவா் வெற்றி பெற்றனா் என்ற செய்தியினை அறிந்த கா்ணன் தன் கோதண்டம் என்னும் வில்லை வளைத்து போருக்குச் செல்கிறான். இதனை அறிந்த குந்தி பாண்டவா்கள் உன் தம்பியா் என்று கூறிப் படைகளைத் திருப்பிவிடுமாறு வேண்டுகிறாள். இதற்குக் கா்ணன்,

    ” தின்ற வீட்டுக்கு துரோகம் செய்ய மாட்டேன்
    எந்தன் தாயாரே வந்த படைகளை திருப்பிட மாட்டேன்
    என்று சொன்னவுடன் தாயார் குந்தியம்மாள்
    எண்ணிய மனதில் யோசித்துப் பார்த்து”   (கு.பா.- 24) என்று கூறுகின்றார். இதனைக் கேட்ட குந்தி ஒரு கணைக்குமேல் மறுகணை எய்யக்கூடாது என்று உறுதிமொழி பெற்றுக்கொண்டு திரும்புகிறாள். இதனைத் தொடா்ந்து பாண்டவா்கள் பத்துலட்சம் கோடி அம்புகளை எய்தனா். பின்னா், கா்ணனும் வில் வளைத்து நாண் ஏற்றித்தொடுக்கத் தொடங்கியதைக் கண்ட கோபால கிருஷ்ணா் கரத்தால் தேரை கீழே இறக்கினார். இதனால் கா்ணன் விட்ட பாணமானது அா்ச்சுனனின் தேருக்கு மேலே சென்றது. இதனைக் கண்ட அா்ச்சுனன் தயங்கி நிற்பதைக் கண்ட கிருஷ்ணா் கோபத்துடனே பாண்டவா்களின் தேரை சாட்டையினால் அடித்து விரட்டி கா்ணனின் தேரின் முன்னே நிறுத்தினார். உடனே அா்ச்சுனன் இவன்தான் எனக்கு எதிரி என்று சொல்லி அம்பினை எய்ய தருமன் தடுக்கின்றான். இதனை 34, 35 –ஆம் பாடல்கள் விவரிக்கின்றன.

    அா்ச்சுனன் எனினும் வெகுண்டெழுந்து பாணத்தை எய்யத் தொடங்க பீமனும் படையைக் கா்ணன் மேல் மோத விடுகின்றான். “இழிகுலத்தான் எடுத்து வளா்த்திட்ட கா்ணராஜனே சண்டைக்குவாடா“ என்று பீமன் முழங்க வணங்கா முடி தரித்தவனான துரியோதனன் வெகுண்டெழுந்து மந்திரியாகிய கா்ணனிடம்,

    ”வணங்கா முடிதரித்த மன்னவன்
    துரியோதிர ராஜன் வாளெடுத்து தேரில் ஏறினான்
    வருவாய் மந்திரி இருவரும் கூடியே
    தீரமா இப்போது பஞ்சவா்களையும்
    விரட்டி அடிப்போம் இருப்பிடம் விட்டு
    என் அருமை மந்திரி திரட்டி அடிப்போம்
    போர்க்களத்தை விட்டு தோர்க்கடிக்கவும்
    போருக்கு மன்னன் கா்ணனை
    பட்டாக் கத்தியை எடுத்துவா மந்திரி
    தா்மராஜன்  படையை பதர அடித்து விரட்டுவாய் மந்திரி
    நான் பத்திரகாளியின் பாதம் பணிந்துமே
    பாங்குடன் அவள் இருப்பிடம் போயி
    கும்பிட்டு வரம் பெற்று வந்திடுவோம்
    நம்ம காளிதேவி பாதம் தன்னை போற்றி வந்திடுவோம்”   (கு.பா.- 38-40) என்று கூறி போருக்குத் தயாராவதாய் இக்கும்மிப் பாடல் அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்களிடையே வாய்மொழியாகக் காணப்படுகின்ற கா்ணன் பற்றிய கதைப்பகுதியை அடிப்படைப் பொருளாகக் கொண்டு இக்கும்மிப்பாடல் பாடப்படுகிறது. புராணக் கதாபாத்திரங்களையும், பண்புகளையும்  கொண்டிருப்பினும் கதைக்கூறில் பெரும் மாற்றத்துடனே இக்கும்மிப்பாடல் இடம்பெறுகிறது. கா்ணனின் பிறப்பு, கங்கையில்விடும் செய்தி காவிரியாகச் சுட்டப்படுதல், போர்ப்பயிற்சி பெறுதல், சண்டைக் காட்சிகள் போன்ற பல கூறுகள் மாற்றம் பெற்றுக் காணப்படுகின்றன. நாட்டுப்புறக் கதைகள் புராணக் கதைகளைப் போன்று முறையாக வழங்கப்படுபவை அன்று. அவை இடம், காலம், சமூகச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளை உட்கொண்டு வளரும் தன்மையுடையன. இத்தகு கதைவளா்ச்சிப் போக்கிலேயே பந்தல்குடி வட்டார கும்மிப்பாடலில் கா்ணனின் சண்டைக்கதை அமைந்துள்ளது. மேற்கோள் பகுதியில் இல்லாத கும்மிப்பாடல்கள் தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.

    கும்மிப்பாடல்கள் (கு.பா.) 

    கா்ண மகாராஜன் கதை

    இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டாராம்
    கோபால கிருஷ்ணன் எப்படி யோசனை என்று நினைத்தாராம்
    அப்போ ஐவா் பஞ்ச பாண்டவா்களிடம்
    அன்புடன் கிருஷ்ணன் ஏது சொல்வார்.
    கொக்கட்டான் ஆடியே வெற்றியடைந் திடுவோம்
    திரியோதிராஜனை – தேரையும் ஊரையும் விட்டு
    விரட்டிடுவோம் அப்போ வில்லுக்கு ராஜாளி வீமனே
    நீ சொல்லு – அம்புக்கு ராஜாளி அா்ச்சுன நீ சொல்லு.
    என்று உரைத்தாராம் எம்பொருமாளும்
    பஞ்ச பாண்டவா்கள் எப்படி யோசனை என்று நினைத்தாராம்
    ஐவருக்கு வீடு – இல்லை என்று என்ன
    ஆகாத பாவி – திரியோதிரனையும்
    துரியன் தம்பி துா்ச்சாதன்னையும் – எள்ளு
    செடியில் முளைத்த செங்கழனிப்பூப் போலேவே
    தருமரை போல் ஒருவன் இருக்கிறான்
    விகா்ணம் – என்று பேரு பெற்றவன்
    சொக்கட்டான் மேடைக்கு வரும் படி
    நம்ம தூதனிடம் சொல்லியனுப்புங்கள் பாசியும் கையோட
    புறப்படும் ஆகாய வீதியில் கோபால கிருஷ்ணன்
    இருந்திடும் இடம் எங்கள் சொக்கட்டான் 
    மேடையில் என்று உறைத்துமே இரண்டு போ்கள்
    எடுத்தார் வில் அம்பு கத்தி கட்டாரியை
    புறப்பட்டார் ஆகாய வானில் பஞ்ச பாண்டவா்கள்
    இருந்திடும் விளையாட்டு மேடையில்
    காத்தாடி பங்களா வந்துமே சோ்ந்தார்கள்
    கா்ணராஜனைக் கண்டுமே கொண்டார்கள்.
    அந்தச் சமயத்தில் தாயார் குந்தியம்மாள்
    அந்தப் பாலகனை – யார் என்று நினைத்து யோசித்துப் பாரடா
    உன்னுடன் பிறந்த தம்பி மார்களப்பா
    ஐந்து போ் பஞ்ச பாண்டவா்களடா
    அடங்க வேண்டும் கோபங்கள் எல்லாம்
    எந்தன் பாலகனே – மடக்குவாய் உன் சேதுகள் எல்லாம்
    என்ற வார்த்தை கேட்ட கா்ண மகாராஜா ஏது
    சொல்லுகின்றான் தாயாருக்குமே.
    ஒரு கணைக்கு மேல் மறுகணை – எய்தாதடா எந்தன்
    பாலகனே உண்மையைப் போடாதே பஞ்சவா்கள் மேல்
    என்று சொல்லிவிட்டு தாயார் குந்திம்மாள்
    சத்தியம் வாங்கியே திரும்பி விட்டார்.
    கா்ண மகாராஜன் சொன்ன சொல்லைக் கேட்டு
    பஞ்ச பாண்டவருக்கு கடுங்கோபங்கள் அதிகம் மேலிட்டு
    பஞ்ச பாண்டவா்கள் பத்து லட்சம் கோடி அம்புகள் விட்டார்
    கண்கள் சிவந்துமே காந்தால மாகிட
    கா்ண ராஜனும் ஏதுமே செய்யுவார்
    வில் வளைத்துமே நாணி ஏற்றினார்
    கா்ண ராஜனுமே வில்லில் அம்பு எடுத்துப் பூட்டினார்
    விளமுடன் கா்ண மகாரஜன் விட்டார்
    அம்புகள் அா்ச்சுணன் மேலே
    கண்டு கொண்டார் மாயவா் எம்பெருமாள்
    கோபால கிருஷ்ணன் கரத்தால் தேரை இறக்கினார் – கீழே
    கா்ண மகாராஜன் விட்டபானமது அா்ச்சுணன்
     தேருக்கு மேலாகப் போனது
    திடமுடன் தலை நிமிர்ந்துமே பார்த்தார்
    அா்ச்சுன ராஜனுந்தான் விரண்டு தயங்கி ஏறிட்டுப் பார்த்தான்
    அப்போது கிருஷ்ணன் கோபத்துடனே
    ஐந்து போ் பஞ்ச பாண்டவா் தேரை
    சிமிட்ட குதிரை புரவியானது
    கோபால கிருஷ்ணன் அதட்டி அடித்தார் சாட்டையினாலே
    அப்போது பஞ்ச புரவியானது ஆகாய மார்க்கத்தில் ஏறிட்டுப் பார்த்து
    பறந்தோம் ஆகாய வானினில்
    பஞ்ச பாண்டவா் சினந்தாரம்மா கோபால கிருஷ்ணனை
    அப்போது கிருஷ்ணன் கோபத்துடனே
    ஐந்து போ் பஞ்ச பாண்டவா் தேரை
    இறங்கினார் கா்ணன் தேரின் முன்னாலே
    அந்தக் குதிரை இரண்டும் பறந்ததாம் சண்டை கொடிக்கு முன்னாலே
    அப்போது அா்ச்சுணன் வில்லை வளைத்துமே
    அம்புகள் ஏற்றியேக் கா்ணராஜன் மேலே.
    இவன்தான் எனக்கு எதிரி என்றுமே
    அா்ச்சுண ராஜனுமே இழுத்துப் போட்டான் பாணத்தை மேலே
    அப்போது அண்ணன் தா்மராஜன்
    அடடா பொறுங்கள் என்றுமே
    பொறுத்தவா்கள் பூமி ஆழ்வார்கள்
    எந்தன் தம்பிமாரே பொங்கினவர் காட்டை ஆழ்வார்கள்
    என்று சொன்னார் அந்த தா்மராஜனும்
    எழுந்து அா்ச்சுணன் கோபத்துடனே
    பாணப் பிரயோகம் செய்தார் காண்பேன்
    கா்ணராஜன் மேலே படையை விட்டு அடித்தார்பீமன்
    அடே பார்த்து முளிக்காதே பதறித் துடிக்காதே
    படையைக் கூட்டி வருவாய் சண்டைக்கு
    இழிகுலத்தான் எடுத்து வளா்த்திட்டு
    அடே கா்ணராஜா எதிர்த்து வாடா பாணம் தொடுத்திட
    என்று சொல்லி அந்த பீமன் அா்ச்சுணன்
    ஏகதேசமாக வார்த்தைகள் கூறவே.

    பார்வை நூற்கள்

    1. டாக்டா் சா.வே.சுப்பிரமணியம், தமிழ்இலக்கிய வகையும் வடிவும், ப.492, 493
    2. பழமொழி, பா.291
    3. விக்கிப்பீடியா

    தகவலாளா்கள்

    1. பாப்பாத்தி, வயது 72, பந்தல்குடிப் பகுதியைச் சார்ந்தவா்
    2. சரஸம்மாள், வயது 58, பந்தல்குடி.

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியா்
    கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்
    கோயம்புத்தூா் -21.

     

    Share
  • நிறையாய் வளராய்

    இனிய ஆசிரியர் (குரு) தின வாழ்த்துகள்

     

    புவியாய் கதிராய் மதியாய் வெளியாய்
    நிலமாய் நீராய் தீயாய் காற்றாய்
    மலையாய் நதியாய் ஒலியாய் ஒளியாய்
    சகமாய் சுகமாய் மனமாய் வளர்ந்தே!!

    காயாய் கனியாய் கசப்பாய் இனிப்பாய்
    தாயாய் பதியாய் தமிழாய் அணியாய்
    உறவாய் உணர்வாய் உளமாய் இதமாய்
    கறவாய் கவியாய் கனவாய் நனவாய்

    சுரமாய் சுயமாய் சுருதியாய் கிருதியாய்
    தரமாய் சரமாய் வரியாய் சரியாய்
    கரமாய் க்ரமமாய் வரமாய் வருமாய்
    விரியாய் குருவே திரிமேன் ஒளியே!

    மனமாய் குணமாய் இனமாய் மதமாய்
    தனமாய் வளமாய் தினமாய் திறமாய்
    வ‌னமாய் தவமாய் பிறவாய் இறவாய்
    முடிவாய் தருவாய் முதல்வாய் சரணே!!

    சரியாய் உரையாய் விரியாய் வரியாய்
    கரியாய் அரனாய் அரியாய் குகனாய்
    தெரியாய் புரியாய் சுவையாய் அமுதே!
    பெரிதாய் சிறிதாய் கிரியின் அழகே!!

    கருவாய் திருவாய் கனிவாய் மொழியாய்
    தருவாய் தருவாய் ஒருவாய் மொழியாய்
    உருவாய் அறிவாய் அருவாய்த் தெளிவாய்
    குருவாய் வருவாய் விரைவாய் மனதே

    வரவாய் செலவாய் இரவாய் பகலாய்
    முழுதாய் இலதாய் மதியாய் ஒளியாய்
    புதிதாய் முதிதாய் வயதாய் தொடரும்
    விதிதாய் சுழலும் உனதாய் முடியும்

    உருவில் குருவாய் அருளில் தாயாய்
    கருவின் முதலாய் அறிவின் விழுதாய்
    இருளில் ஒளியாய் இறையே அருளாய்
    மறையாய் மலராய் நிறையாய் வளராய்.

    Share
  • அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்

    கணியன்பாலன்

            அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்

    பாரதியும் தமிழும்:

         “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி ” என்றும்

         “வானம் அறிந்தது அனைத்தும் அறிந்த வளர்மொழி” என்றும்

                தமிழ் மொழி குறித்து நமது எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன் பெருமிதத்தோடு பாடுகிறான். அவன் தமிழின் மகாகவிகளில் ஒருவன். பல மொழிகளைக் கற்றவன். நமது தமிழகத்தின் தேசியக் கல்வி குறித்து மிக நீண்டகால நோக்கோடு அந்த மகாகவி பாரதி சொல்லிய சொற்கள் காலத்துக்கும் அழியாதவை. ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியவை.

            “தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாசையை பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாசையாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசீயம்’ என்ற பதத்தின் பொருளுக்கு விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாசையே பிரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை; இதை மறந்து விடக் கூடாது”. (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், பக்:365)

          கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் பாரதி சொல்லிய சொற்கள் இவை. இங்கு தேசம் என்பது தமிழகமே. அன்றே தமிழ் தேசியக் கல்விக் கொள்கை குறித்துப் பாரதி பேசியுள்ளார். தமிழ் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையாகத் தமிழ் மொழிதான் இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் இருக்கக் கூடாது என்றும் தெளிவாகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும் அவர்,“தேச பாசையின் மூலமாகவே இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப் படவேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாசை மூலமாக பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக்கல்வி என்று பெயர் சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ?” என்கிறார்(அதே நூல், பக்;368). ஆக தமிழகத்தின் தேசிய மொழி தமிழ் என்பதையும், அதன் மூலம்தான் அனைத்துப் பாடங்களும் சொல்லித்தரப்பட வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

            மேலும் அவர்,“தமிழ்நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் பாசையில் நடத்த வேண்டும் என்பது பொருள். நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாக கற்பிக்கப்படுவதுமின்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். சிலேட், பென்சில் என்று சொல்லக்கூடாது” என்கிறார்(அதே நூல்,பக்:395). இறுதியாக அவர் சொல்வதைக் கேளுங்கள்,“தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசியக்கல்வி இன்றியமையாதது. தேசியக்  கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்”(அதே நூல், பக்:384). என்கிறார்.

              பாரதி மிகக் கடுமையான வார்த்தைகளால் தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தைச் சாடுகிறார். கவிஞனுக்கே உரிய ஆவேசத்தோடு தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தைப் பிசாசுகள் வாழும் சுடுகாட்டுக்கு ஒப்பிடுகிறார். அதனால் தான் அவர் மகாகவி ஆகிறார். தமிழகத்தில் தேசியக் கல்வி என்பது தமிழ்வழிக் கல்விதான் என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகிறார். அவர் சொல்லிச் சென்று 100 ஆண்டுகளுக்குப் பின், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகியபின் தமிழகத்தில் என்ன நடந்து கொண்டுள்ளது? அந்நிய மொழி மோகம் தலை விரித்தாடுகிறது. ஏன் இந்த நிலை? விஜய நகரப் பேரரசின் நாயக்கர் ஆட்சிகாலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை 700 வருடங்களாகத்  தமிழகம் அந்நியர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், தொடர்ந்து இன்று வரை தமது தவறான சிந்தனைகளின் மூலம் தமிழர்களின் சுய சிந்தனையை மழுங்கடித்து வருவதும் இந்நிலைக்குக் காரணம் எனலாம். அதனால் “அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்” என்பது நமக்குப் பொருந்துகிறது.

    மொழியே நமது அடையாளம்:

                 நமது மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக  வாழ்ந்து வந்த நமது தாய் தந்தையர்களின், நமது முன்னோர்களின் பரந்து விரிந்த அறிவும், நீண்ட நெடிய அனுபவமும், ஆழ்ந்த கருத்துக்களும், உயர்ந்த தத்துவங்களும், சிறந்த பழக்க வழக்கங்களும், விழுமிய பண்பாடும், போற்றத்தக்க அறிவியலும், தொழில்நுட்பமும், புகழ்மிக்க அவர்களின் வரலாறும் இன்னபிறவும் நமது மொழியில் தான் காலங்காலமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டன. நமது மொழியில் தான் தொடர்ந்து அவைகளைப் பாதுகாத்து வைத்தும் வருகிறோம். உலகெங்கும் உள்ள அனைத்து மனித இனங்களும் அதனதன் மொழிகளில்தான் இவைகளைப் பாதுகாத்து வந்தன, தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. மொழி இல்லாது போகும்பொழுது அது பாதுகாத்து வந்த அனைத்தும் இல்லாது போய் விடும். அப்பொழுது அந்தச் சமுதாயமும் இல்லாது போய்விடும். எனவே மொழி என்பது வெறும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் கருவி மட்டுமல்ல. ஒரு மொழி பேசும் சமுதாயத்தின் உயிர் அதன் மொழி தான். அம்மொழியே அச்சமுதாயத்தின் ஆன்மா. அதுவே அதன் ஆளுமையும் ஆகும்.

                அதனால் தான் மொழியை இழந்த சமுதாயம் எளிதில் அடிமையாகி விடுகிறது. அழிந்தும் போய் விடுகிறது. ஒரு சமுதாயத்தை அடிமைப்படுத்த விரும்பும் அந்நிய சக்திகள் முதலில் அதன் மொழியைச் சிதைத்து அழிக்க விரும்புகின்றன. வரலாற்றில் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. பண்டைய எகிப்திய சமுதாயம் இன்று இல்லை. அதன் பிரமிடுகள் மட்டுமே இன்று சாட்சிகளாக நிற்கின்றன. அன்றைய எகிப்திய மக்கள் முழுமையாகக் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டு விடவில்லை. அவர்கள் தங்கள் பண்டைய மொழி அறிவை இழந்து, தங்கள் மொழியை மறந்து அந்நியர்கள் திணித்த அந்நிய மொழியைத் தங்கள் மொழியாக மாற்றிக் கொண்டதால், நாளடைவில் பழைய மொழி குறித்த எந்தவிதத் தடையமும் அவர்களிடம் இல்லாதுபோய் அவர்களின் பண்டைய சமுதாயமே இல்லாது போய் விட்டது. இன்று எகிப்து ஒரு அரேபிய மொழி பேசும் அரேபிய நாடாக ஆகியுள்ளது.

             800 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் தமிழ்தான் இருந்தது. அன்று அவர்கள் தமிழர்களாக இருந்தனர். இன்று அவர்கள் மழையாளிகளாக மாறிவிட்டனர். சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் வரையான உலகளாவிய விழுமியங்களைக் கொண்ட மிகப்பெரிய இலக்கியச் செல்வத்தை அவர்கள் இழந்துவிட்டனர். தாங்கள் ஒருகாலத்தில் தமிழர்களாக இருந்தோம் என்பதையும் மறந்து விட்டனர். அவர்களின் 3000 ஆண்டுகால வரலாறு என்பது 800 ஆண்டுகால வரலாறாகச்  சுருங்கிவிட்டது. தமிழகமும் வேறு ஏதாவது மொழிக்கு மாற்றப்பட்டிருந்தால் தமிழ்மொழியின் பண்டைய இலக்கியச் செல்வம் அனைத்தும் இல்லாது போயிருக்கும் என்பதோடு, தமிழர்கள் என்ற இனமே இல்லாது போயிருக்கும். உலகளாவிய விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியத்தை உலக சமுதாயம் இழந்திருக்கும். ஒருவர் தன் தாய் மூலமே, தான் யார் என்பதை அறிய முடியும். அது போலவே ஒரு சமுதாயம் அதன் மொழி மூலமே தாங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆகவே மொழி என்பது ஒரு தாய் போன்றது. ஒரு சமுதாயம் அதன் மொழியை இழந்தால் அதன் வரலாறு, பண்பாடு, இலக்கியம், இசை, அதன் தொழில்நுட்பம், அறிவியல் என அனைத்தையும் அது இழந்து விடும். நாளடைவில் தான் யார் என்பது அதற்குத் தெரியாதுபோய் அடிமைகளாக, கீழ் மக்களாக ஆகவேண்டிய நிலை ஏற்படலாம். வரலாற்றில் இந்நிலை பல சமுதாயங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

               நாம் யார் என்பதை நமது வருங்காலப் பரம்பரை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நமது மொழியை நாம் பாதுகாப்பது அவசியம். ஒவ்வொருவரும் தனது பெயரைச் சொல்ல வாரிசு வேண்டும் என விரும்புகின்றனர். தனது வாரிசுகளைப் பாதுகாக்கவும் விரும்புகின்றனர். அதற்காகத் தனது காலம் முழுவதையும் செலவழித்துப் பாடுபடுகின்றனர். ஆனால் தனது சமுதாயத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற விருப்பம் அவர்களுக்கு இருப்பதில்லை. தனது சமுதாயத்தைப் பாதுகாப்பதன் மூலமே தனது பரம்பரையைப் பாதுகாக்க முடியும் என்பதை அவர்கள் அறியவில்லை. சமுதாயத்தைப் பாதுகாக்க மொழியைப் பாதுகாப்பது அவசியம் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. ஆனால் வளர்ந்த நாடுகளில் தங்கள் சமுதாயத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற விருப்பம் அவர்களிடம் இருக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் மொழியைப் பாதுகாக்கிறார்கள்.

         இந்தியாவில், தமிழகத்தில் அது சாதியை, மதத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது. மதமோ சாதியோ சமுதாயத்தைப் பாதுகாக்க முடியாது என்பதோடு அவை மனிதனைப் பிளவுபடுத்தி மனிதமாண்புகளைச் சிதைத்து, சமுதாயத்தை முடமாக்கி அழித்து விடுகிறது. மேலும் அதனால் சமுதாயத்தின் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, தொழில்நுட்பம், அறிவியல் முதலியனவற்றை பாதுகாக்க முடியாது. மொழி மட்டுமே சமுதாயத்தை மேம்படுத்தி, இவைகளைப் பாதுகாக்கவல்லது. ஒரு மொழியின் இலக்கியம் (கவிதை, காப்பியம், உரைநடை, கதை போன்றவை) தனி மனிதனைப் பண்படுத்தி,  அவனை ஒரு பொறுப்புள்ள சமுதாய  உறுப்பினனாக மாற்றித்தருகிறது. அவன் நாளடைவில் அச்சமுதாயத்தின், உலக சமூகத்தின் ஒரு சிறந்த பாதுகாவலனாக மாறுகிறான். உலகளாவிய விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியங்கள் உலக மனிதனை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை. எனவே ஒரு சிறந்த மொழியை, செவ்வியல் இலக்கியங்களை உடைய மொழியைப் பாதுகாப்பது என்பது அந்த மொழிச் சமுதாயத்தை மட்டுமல்ல, உலகத்தை உலக மனிதனைப் பாதுகாப்பதும் ஆகும்.

    வளர்ந்த நாடுகளில் மொழி:

            ஒரு சமுதாய மக்களின் மொழி அதன் ஆட்சி மொழியாக, அதன் கல்வி மொழியாக, அச்சமுதாயத்தின் அனைத்துமாக இருக்க வேண்டும். அதன் மூலமே அச்சமுதாயத்தின் வளர்ச்சியை, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். சொந்த மொழியை ஆட்சி மொழியாகக் கல்வி மொழியாகக் கொண்டிராத எந்த நாடும் வளர்ச்சி பெற்றதாக வரலாற்றில் காண முடியாது. ஆசியாவில் நன்கு வளர்ச்சிபெற்ற சீனா, ஜப்பான், கொரியா ஆகிய மூன்று நாடுகளையும், ஐரோப்பாவில் நன்கு வளர்ச்சிபெற்ற ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளையும் எடுத்துக் கொள்வோம். இவைகளின் மொழிகள் முறையே சீனமொழி, ஜப்பான்மொழி, கொரியமொழி, ஜெர்மன்மொழி, பிரெஞ்சுமொழி, இத்தாலிமொழி என்பன ஆகும். இன்னாடுகளில் இம்மொழிகளே ஆட்சி மொழிகளாக, கல்விமொழிகளாக உள்ளன. ஆரம்பக்கல்வியில்   வேறுமொழிகள் சொல்லித்தரப் படுவதில்லை. சில வருடங்களாக உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆங்கிலம்  ஒரு மொழியாகச் சொல்லித் தரப்படுகிறது. கல்லூரிகளில் பிற மொழிகள் மொழி ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் மேலே சொல்லப்பட்ட அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாட்டு மொழிவழிக் கல்வியே ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை உள்ளது.

              ஆக இந்த வளர்ந்த நாடுகள் அனைத்தும் தம் சொந்த மொழிகளிலேயே அனைத்துப் பாடங்களையும் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகம்வரை சொல்லித் தருகின்றன. அதனால் தான் அவை வளர்ந்த நாடுகளாக உள்ளன. இன்றாவது அவை உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கட்டாயம் சொல்லித் தருகின்றன. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவை வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோது பிற மொழிகளில் எதையாவது ஒன்றைக் கற்க வாய்ப்பு இருந்ததே ஒழிய ஆங்கிலம் ஒரு கட்டாய மொழிப் பாடமாக அன்று இல்லை. ஆனால் உலகமயமாக்கல் என்பதன் காரணமாகவும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஆங்கிலம் இருப்பதாலும், வணிக நோக்கிலும், ஏதாவது ஒரு பிற மொழி அறிவு மனித ஆளுமைக்கு நல்லது என்பதாலும் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் அவை கற்றுத்தருகின்றன. அதே சமயம் அவர்களின் மொழியே அனைத்துமாக அங்கு இருந்து வருகிறது.

        சீனா உட்பட பல வளர்ந்த நாடுகள் அனைத்துமே கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பொருளாதார வளர்ச்சியிலும், ஏற்றுமதியிலும் உலகின் முன்னணி நாடுகளாக இருந்து வருகின்றன. இந்நாடுகளில் சொந்த மொழியே அனைத்துமாக இருக்கிறது. மிக அதிக அளவில் அவை ஏற்றுமதி செய்த போதிலும் எந்த ஒரு பிற மொழியும் ஒரு கட்டாய பாடமாகக் கூட இருக்கவில்லை. பிற மொழிவழிக்கல்வி என்பது அறவே அன்றும் இல்லை, இன்றும் இல்லை. அந்த நாட்டின் சொந்த மொழியில் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்வி வரை படிப்பு இருக்கிறது. அதுதான் படிப்பில் தெளிவைத் தந்தது; ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்தது; திறமையானவர்களை மட்டுமல்ல பண்பாளர்களையும் உருவாக்கியது; தன்னம்பிக்கையையும், சுயசார்பினையையும் அதிகப்படுத்தியது; ஒட்டு மொத்தமாக அந்நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு அவை வழிகோழியது. சொந்த மொழிதான் சுய சிந்தனையை, சுய அறிவை வளர்க்கும் என்பதற்கு இந்த வளர்ந்த நாடுகள் சான்றாதாரங்களாக இருக்கின்றன. தமிழகம் சுய சிந்தனையோடும், சுய அறிவோடும் இருக்கவேண்டுமானால் வளர்ந்த நாடுகளைப்போன்று நமது சொந்த மொழியான தமிழில்தான் அனைத்தும் இருக்க வேண்டும். ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்வி வரை படிப்பு அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு கட்டாய மொழிப்பாடமாக வைத்துக் கொள்ளலாம். தமிழே அரசு மொழியாக, கல்வி மொழியாக, வணிக மொழியாக, ஆலய மொழியாக இருக்க வேண்டும். அதுவே தமிழகத்தின் வளர்ச்சியை, வளத்தை உறுதி செய்யும்.

     ஆங்கில மொழிக் கல்வி:

                            தமிழகத்தின் ஒவ்வொரு பள்ளி மாணவ மாணவியரும் ஆங்கிலத்தை நன்கு படிக்க, எழுத, பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆங்கிலவழிக் கல்வி அதற்கு மாற்றாகாது. தன்னம்பிக்கையும், சுயசிந்தனையும், சிறந்த பண்பு நலன்களும் கொண்ட ஒரு தமிழ் தேசக் குடிமகனை உருவாக்கத் தமிழ்வழிக் கல்வி தான் தேவை. தமிழை நன்கு அறிந்திருந்தால்தான் ஆங்கிலத்தை படிக்க முடியும். முதலில் தெரிந்ததை சொல்லித்தந்த பின் தெரியாததை சொல்லித்தருவதே பயன்தரும். குழந்தைகளுக்கு தமிழ் தெரியும். அதனை சொல்லித்தந்த பின் அதன் மூலம் ஆங்கிலத்தைச் சொல்லித்தருவதே ஆங்கில மொழி அறிவை வளர்க்கும். மேலும். ஆங்கிலவழிக் கல்வி தன்னம்பிக்கையை, சுயசிந்தனையை, சிறந்த பண்பு நலன்களைக் கண்டிப்பாக உருவாக்காது. அது திறமையும் அறிவும் சுயநலமும் உடைய மனித இயந்திரங்களைத் தான் உருவாக்கும். அதனைத்தான் இன்றைய ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் செய்து கொண்டுள்ளன. ஆனால் தமிழ்வழிக்கல்வி சிறந்த மனிதனை உருவாக்கும்.

             அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. கல்வியில் தரம் இன்மை, போதிய வசதிகள் இன்மை, ஆங்கில மோகம், வறட்டுப் பெருமை முதலியன அதன் சில காரணங்களாகும். அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு இடங்கள் முதலியவற்றின் தரத்தை ஆங்கிலவழிப் பள்ளிகளுக்குச் சமமாக  உயர்த்த வேண்டும். முக்கியமாக ஆரம்பப் பள்ளிகளுக்கு அதிக வசதிகள் செய்து தர வேண்டும். தனியார்களின் உதவியோடு அரசு அதனைச் செய்யலாம். ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்கள்-மாணவர்கள் விகிதத்தை 1:25 ஆகக் குறைக்க வேண்டும். கற்றுத் தருவதைத் தவிர வேறு பணிகள் அந்த ஆசிரியர்களுக்கு இருக்கக் கூடாது. ஆரம்பப் பள்ளிகளில் துப்புரவு பணிகளுக்காகவும், பிற அலுவலகப் பணிகளுக்காகவும் தேவையான உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆரம்பப்பள்ளிகள் தான் கல்வியின் அடிப்படை என்பதை உணர்ந்து அங்கு அதிக வசதிகள் செய்து தரப்படவேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்துப் பாடங்களிலும் முறையானத் தரமான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப் பட வேண்டும்.

             ஆங்கில மொழி படிப்புக்கு அதிக வகுப்புகளையும் அதிக நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஆரம்பப் பள்ளிகளின் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளது. இங்கு ஆசிரியர்களுக்கு பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு முதல் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை ஐந்து வருடமும்  குறிப்பிட்ட மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் எடுக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அவர் தனது பணியைச் சரியாகச் செய்தாரா என்பதை எளிதில் அறிய முடியும். இதனால் கண்டிப்பாகத் தரம் உயரும். குறிப்பிட்ட 25 மாணவர்களுக்கும் முதல் வகுப்பு முதல் ஐந்தாவது வகுப்பு வரை ஒரு குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் சொல்லித் தந்தும் அந்தக் குறிப்பிட்ட 25  மாணவர்களுக்கும் எழுதப் படிக்கக்கூடத் தெரியவில்லை எனில் அந்த ஆசிரியரிடம் ஏதோ தவறு உள்ளது என்று பொருள். உரிய பயிற்சிகள் வழங்கியும், முறையாகக் கண்காணித்தும் அது போன்ற தவறுகள் நடக்காது பார்த்துக் கொள்ள வேண்டும்.

             தற்போதைய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில அறிவு இல்லை என்றே சொல்லலாம். எனவே ஆங்கிலத்தில் நன்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை ஆரம்பப் பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு நியமிக்க வேண்டும். பிற நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் உள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கும் மிகத் தரமான இலக்கண அறிவுடன் கூடிய ஆங்கிலப் பயிற்சியை வழங்க வேண்டும். இதன்பின் அனைத்துப் பள்ளிகளின் கல்வித்தரத்தைக் கண்காணிக்கத் தனிக் குழுக்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் தரத்தை உயர்த்துபவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கலாம். அரசுப் பள்ளிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி ஆங்கிலப் பாடம் சொல்லித்தரப்பட்டு மாணவர்கள் ஆங்கிலத்தை நன்கு படிக்க, எழுத, பேசக் கற்றுக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

        மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டு வருவது என்பது செருப்புக்காகக் காலை வெட்டுவது போன்றது. பாரதி சொல்வது போன்று அப்பொழுது நாடு பிசாசுகள் வாழும் சுடுகாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. தனியார் பள்ளிகள் பணத்துக்காக பாரதி கூறியபடி பிசாசுகள் வாழும் சுடுகாடுகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. அதனை அரசும் தொடர்ந்தால் என்ன ஆவது? அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்ச ஆங்கில அறிவுகூட இல்லை. அந்த மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவும் இல்லை. தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடங்களைப் படிக்கக் கடுமையாக வேலை செய்ய வேண்டியதுள்ளது. மாணவர்களுக்காக பெற்றோர்களும் சேர்ந்து பாடுபடுகிறார்கள். ஆனால் இறுதியில் மாணவனுக்குத் தமிழும் தெரிவதில்லை, ஆங்கிலமும் தெரிவதில்லை. புரிந்து படிப்பது என்பது இல்லவே இல்லை. எல்லாம் மனப்பாடம் தான். ஆங்கில மோகம் அனைவரையும் பைத்தியமாக்கியுள்ளது. ஆகவே அரசு ஆங்கிலப் பாட நேரங்களை அதிகப்படுத்தி சிறந்த ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க  வேண்டும். இந்த சிறந்த ஆங்கில ஆசிரியர்களைக் கொண்டு, பள்ளிகளில் முன்பே இருக்கும் ஆசிரியர்களுக்கு நல்ல தரமான ஆங்கில இலக்கணப் பயிற்சியை வழங்க வேண்டும். இவைகளின் மூலம் மாணவர்களின் ஆங்கில அறிவை அதிகப்படுத்த முடியும்.

    சங்ககாலம்:

           சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் மொழியே அனைத்துமாக இருந்தது. அதனால் மிகப் பரவலான கல்வி அறிவு தமிழகத்தில் அன்று இருந்தது என்பதைத் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் சான்றுகள் உறுதி செய்கின்றன. சங்க காலத்தில் தொழில்நுட்பமும், உற்பத்தித் திறனும் பெருகி உலகளாவிய அளவில் வாணிகம் நடைபெற்றது. மேற்கே எகிப்து முதல் இரோம் வரையிலும், கிழ்க்கே தாய்லாந்து முதல் சீனா வரையிலும், இடையில் அரேபியா முதலான வளைகுடா நாடுகளிலும் தமிழர்கள் அன்று வணிகம் புரிந்து வந்தனர். எகிப்திலும், தாய்லாந்திலும், வளைகுடா நாடுகளிலும் சங்ககாலத் தமிழி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. ஆகவே தமிழர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல தாங்கள் வணிகம் புரிந்த அயல்நாடுகளிலும் தமிழையே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. பிற மொழி அறிவையும் தேவையானவர்கள் பெற்றிருந்தனர். தமிழகத்து க்கு பல மொழி பேசும் வணிகர்கள் வந்து வணிகம் புரிந்தனர். அதனை கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டாம் கரிகாலனைப் பாடிய பட்டினப்பாலை,

                “மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

                புலம்பெயர் மாக்கள் கலந்துஇனி துறையும்”  என்கிறது.

    புகார்த்துறைக்கு பல நாட்டு வணிகர்கள் வந்து வணிகம் புரிந்தனர் என்பதை இப்பாடல் சொல்கிறது. அன்றைய தமிழகத்தில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, வணிக மொழியாக, கோயில் மொழியாக, மக்கள் மொழியாக என அனைத்துமாக தமிழே இருந்தது. எனினும் உலகளவில் அவர்கள் அன்று வணிகம் செய்தனர். எனவே வணிகம் புரிவதற்காகவோ அல்லது பிறவற்றிற்காகவோ பிற மொழிகளை பள்ளிகளிலேயே சொல்லித்தர வேண்டும் என்பது தேவையற்றது என்பதைப் பண்டைய தமிழகம் நமக்கு உணர்த்துகிறது. ஆங்கிலம் இன்று உலகு தழுவிய மொழியாக உள்ளது. அதனை ஒரு பாட மொழியாக நாம் கற்றுக் கொள்ளலாம். அது போதுமானது. ஆனால் ஆங்கிலவழிக் கல்வி என்பது வேண்டவே வேண்டாம். கல்வி அனைத்தும் தமிழ்வழிக் கல்வியாகவே இருக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே கல்வி மொழியாக இருக்க வேண்டும். அதனைப் படிப்படியாக செயல்படுத்தலாம். முதலில் மேல்நிலைப் பள்ளி வரை(+2 வரை) தமிழ் வழிக் கல்வியை உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும் செயல் படுத்துவது மிகமிக அவசியம்.

    ஜீவானந்தம் – மொழி;

                            இந்தி ஒரு தொடர்பு மொழிதான், ஆட்சிமொழி அல்ல. தொடர்பு மொழி என்றால் மாநிலங்களுக்கிடையேயும் மத்திய அரசிடமும் தொடர்பு கொள்ளவே ஒழிய மக்களிடம் தொடர்பு கொள்ள அல்ல. மக்களிடம் மக்கள் மொழியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் அப்பொழுது தான் ஒரு மக்கள் குடியரசு என இந்தியாவைச் சொல்ல முடியும். அந்நிய மொழியில் தான் மக்களோடு தொடர்பு கொள்வேன் என்பது சர்வதிகாரத்தின் அடையாளம். நம்மைப் பொருத்த வரையில் இந்தி அந்நியமொழி தான். நமக்குத் தெரியாத, நமக்குப் புரியாத, நாம் பேசாத மொழி தான் அந்நிய மொழி ஆகும். இந்தியை நமக்குத் தெரியாது, அது நமக்குப் புரியாது, நாம் அதைப் பேசுவதும் இல்லை. எனவே இந்தி அந்நிய மொழி தான். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

         மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப் பட்டுள்ளது. இங்கு தனி ஆட்சியும் உள்ளது. 7 கோடி மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்களிடம் மத்திய அரசு தமிழ் மொழியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனத்தும் தமிழில் தான் தமிழ் மக்களோடு தொடர்பு கொள்ளவேண்டும். அதுவே அடிப்படை ஜனநாயகம். இதைக்கூட பின்பற்றாத ஒரு அரசை நமது குடியரசாக நாம் எப்படிக் கருதமுடியும்? இது குறித்து எளிமைக்கும் நேர்மைக்கும் அடையாளமாக இருந்த தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

        “ராஜ்யத்தின் சகல துறைகளிலும் சட்ட சபைகளிலும், கல்லூரிகளிலும், தமிழே ஆட்சி மொழியாக விளங்க வேண்டும்; மக்கள் சபையில்(பாராளுமன்றத்தில்) தமிழகப் பிரதிநிதிகள்- இதைப்போன்று ஒவ்வொரு ராஜ்யப்பிரதிநிதிகளும் பிரதேச மொழியில் தங்கு தடையின்றிப் பேச அனுமதிக்க வேண்டும். மக்கள் சபை தஜ்தாவேஜுகளிலும், சுப்ரீம்கோர்ட் தீர்ப்புகள், மத்திய அரசாங்கத்தின் கெஜட்டுகள், மசோதாக்கள், சட்டங்கள் ஆகியவைகளும் சரி ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமின்றி பிரதேச மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள மத்திய அரசாங்கக் காரியலாயங்கள் பொது மக்களுடன் தொடர்புகொள்ளும் தொடர்புகளும் ஆங்கிலம் இந்தி ஆகியவற்றுடன் தமிழிலும் இருக்கவேண்டும்.” என்கிறார் அவர்.(ஆதாரம்: மொழியைப் பற்றி ஜீவா – பக்: 30). சோவியத் இரசியாவில் பின்பற்றப்பட்ட தொடர்பு மொழி குறித்து அவர்,’ஒரு அங்கத்தினர் எந்த தேசிய இனத்தவராயினும் அவருக்கு அவரது சொந்த மொழியில் சுப்ரீம் சோவியத் உட்பட சகல மக்கள் பிரதிநிதித்துவ சபைகளிலும் சகல நீதி மன்றங்களிலும் பேசவும், எந்த அதிகாரியோடும் கடிதப் போக்குவரத்து நடத்தவும் உரிமையுண்டு. சோவியத் யூனியனின் சுப்ரீம் சோவியத் நிறைவேற்றுகிற சட்டங்கள் அனைத்தும் யூனியனிலுள்ள முக்கியமான 16 மொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. சுப்ரீம் சோவியத்தின் கெஜட்டும் மேற்படி 16 மொழிகளிலும் வெளியிடப் படுகின்றது’. என்கிறார்.( ஆதாரம்: மொழியைப் பற்றி ஜீவா – பக்: 26). எனவே இந்தியாவிலும் இம்முறை பின்பற்றப்பட வேண்டும்.

    தமிழ்வழிக் கல்வி – தோழர் ஜீவா.

            நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களும், இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற, வங்காள மகா கவி தாகூர் அவர்களும், உலகப் புகழ்பெற்ற கல்வியாளர்களும், அறிஞர்களும் தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது எனச் சொல்லி உள்ளனர். ஐ. நா. சபை போன்ற உலக நிறுவனங்களும் அதனையே அறிவித்துள்ளன. உலகம் நாடுகள் முழுவதும் தாய்மொழிக் கல்வி மூலமே ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்துப் பாடங்களும் சொல்லித்தரப்படுகின்றன. 1960 வாக்கில் இரசியாவில் உள்ள பின்தங்கிய ஆசிய ஐரோப்பிய தேசிய இன மக்களுக்கு அவரவர்களின் தேசிய மொழியில் தான்  ஆரம்பம் முதல் பல்கலைக்கழகம் வரை கற்றுத்தரப் பட்டது என்கிறார் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள்.

         “இரசியாவில், கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் பிரதேச மொழியில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வியின் ஒவ்வொரு மட்டத்திலும் பொருத்தமான வகையில் பிரதேச மொழி ஊக்குவிக்கப்படுகிறது. ஜியார்ஜியக் குடியரசில் உள்ள பள்ளிக்கூடங்கள், கலைக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய யாவற்றிலும் ஜியார்ஜிய மொழியிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. கசாக் குடியரசில் கசாக் மொழியே போதனா மொழியாக உள்ளது”. என்பது அவரது கூற்று.( ஆதாரம்: மொழியைப் பற்றி ஜீவா-ப. ஜீவானந்தம், பக்: 25, 26)

        நான் முன்பு கூறிய வளர்ச்சிபெற்ற ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகி ஆறு நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் மொழிகளான, ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, சீனம், கொரியன், ஜப்பான் ஆகிய மொழிகளில் தான் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்விவரை கற்றுத்தரப் படுகிறது. இந்த ஆறு நாடுகளில், தென்கொரியா இரண்டாம் உலகப்போர் வரை ஜப்பானுக்கு அடிமையாக இருந்த நாடு; அதற்குப் பின்னரும் வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் நீண்டகாலம் போர் ந்டந்தது. உண்மையில் 1965க்குப் பின் தான் அதன் வளர்ச்சி தொடங்கியது. 25 வருடங்களிலேயே அது ஒரு வளர்ச்சிபெற்ற நாடாக மாறியது. ஒரு பொருளாதார வல்லரசாக தற்பொழுது உள்ளது.

              அதன் வளர்ச்சிக்கான பல காரணங்களில் அதன் கல்வி முறையும், அக்கல்விமுறையில் அதன் சொந்த மொழியான கொரியன் மொழிக்குத் தரப்பட்ட முக்கியத்துவமும் ஒரு மிக முக்கிய காரணமாகும். எனவே சொந்த மொழியைக் கல்வி மொழியாகக் கொண்டிராத ஒரு நாடு வேகமான முழுமையான வளர்ச்சியைப் பெறுவது என்பது இயலாது என்ற உண்மையை நாம் முதலில் புரிந்து கொள்வது அவசியம். சங்ககாலத்தில் நமது சொந்த மொழியான தமிழில் அனைவரும் கல்வி கற்றதும், கல்வி தமிழகமெங்கும் பரவலாக இருந்ததும் தான் பண்டைய தமிழகத்தின் அபரிதமான வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியக் காரணமாகும். சொந்தமொழிக் கல்வி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதற்கு நமது சங்ககாலத்தின் வளர்ச்சியே ஒரு உதாரணமாகும். இஸ்ரேலில் இப்ரு மொழி உள்ளது. அது நவீன மொழி அல்ல. பண்டைய மொழி என்பதோடு, நீண்டகாலமாக மக்களால் பேசப்படாத மொழி. யூத மதத்தின் மொழி. அதில் நவீனச் சொற்கள் இல்லை. எனினும் அது தான் இன்று இஸ்ரேலின் தேசிய மொழியாகவும், கல்வி மொழியாகவும் அனைத்துமாகவும் இருக்கிறது. 1950 வாக்கில் தான் இஸ்ரேலும் இப்ருமொழியும் திரும்ப உருவாக்கப்பட்டது. இன்று இப்ரு ஒரு நன்கு வளர்ந்த நவீன மொழியாக உள்ளது.

              கி.பி 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் முகம்மதிய மதம் பல நாடுகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அப்பகுதிகளில் பழமையும் புகழும் உடைய கிரேக்கமும், பாரசீகமும் ஆட்சி மொழிகளாக இருந்தன. ஆனால் ஆட்சியாளர்களின் மொழியான அரேபியமொழி, ஒரு பின்தங்கிய மொழியாகவும் நாடோடிகளின் மொழியாகவும் இருந்தது. ஆனால் அரேபிய மொழி ஆட்சி மொழியாக ஆக்கப்பட்ட 25 வருடங்களில் அது ஒரு வளர்ந்த மொழியாக மாறியது. ஆகவே 1200 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு பின்தங்கிய மொழியாகவும் நாடோடிகளின் மொழியாகவும் இருந்த ஒரு மொழி, ஆட்சி மொழியாக மாற்றப்பட்ட பின், ஒரு வளர்ந்த மொழியாக ஆக முடிந்தது என்பதை வரலாறு நமக்குப் போதிக்கிறது. எனவே ஒரு மொழியால் ஆகாது எனச் சொல்வது அறியாமை. அதுவும் தமிழ் போன்ற செம்மொழியாகவும், நவீன மொழியாகவும் உள்ள ஒன்றால் ஆகாது எனச் சொல்வது என்பது அறியாமை மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.

            ஆகவே சொந்த தேசிய மொழியைக் கல்விமொழியாகக் கொள்ளாத எந்த ஒரு நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. இந்த நிலையில் தமிழகத்தில் அதனது தேசிய மொழியும், செவ்வியல் மொழியும் ஆன தமிழில் கல்வி கற்பது  என்பது இல்லாது போய்க் கொண்டிருப்பது ஏன்? ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்வி வரை தமிழில் சொல்லித் தருவது என்பது இல்லாமல் ஆரம்பக் கல்வியில் கூட தமிழ்வழிக் கல்வி இல்லை என்ற நிலை ஏன்? பெரும்பாலான மக்கள் அந்நிய மொழியான ஆங்கிலவழிக் கல்வியை விரும்புவது ஏன்? தமிழ், தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களாலேயே தமிழ்வழிக்கல்வி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏன்? இதற்கெல்லாம் காரணத்தைத் தேட வேண்டுமானால் நமது 700 ஆண்டுகால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவேண்டும். இந்த 700 வருட கால அடிமை வாழ்வும், 70 வருட கால சுதந்திர இந்தியாவின் தமிழக அரசியல் வாதிகளும்தான்  நமது ஆங்கில மொழி மோகத்துக்கான அடிப்படைக் காரணமாகும்.   இவைகளை உணர்ந்து தமிழ் மொழியை அரசு மொழியாக, கல்வி மொழியாக, ஆலய மொழியாக அனைத்துமாக ஆக்க முயல்வோமாக.

                                              கணியன்பாலன், ஈரோடு.

    Share
  • அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணம் கூறும் தீர்த்தங்கரர் சிற்பம்

    அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணம் கூறும் தீர்த்தங்கரர் சிற்பம்

    டாக்டர் நா. கணேசன், ஹூஸ்டன், அமெரிக்கா

    (தமிழ்ச் சமணர்களின் ஆய்விதழ், முக்குடையில் மே மாதம், 2018-ல் அச்சான கட்டுரை.)

    1. சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரம் (கரூர்)

    கரூர் இப்பொழுது தனி மாவட்டமாகத் தமிழ்நாட்டில் இருக்கின்றது. சங்க காலத்தில் இந்தக் கரூரின் பெயர் வஞ்சி என்பதாகும். வஞ்சி மாநகர், வஞ்சி மூதூர் என்று 2000 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தில் பாராட்டப் பெறும் சேரர்களின் தலைநகரம் இதுவே ஆகும்.  கரூரைச் சுற்றியுள்ள பல ஊர்களில் நத்தமேடு என்னும் மண்மேடுகளில் சங்கு வளையல்கள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் கிடைக்கின்றன. அவை சங்க காலப் பழமையைப் பறைசாற்றுவதாய் அமைகின்றன [1]. ஆன்பொருநை என்பது அமராவதி ஆற்றின் சங்ககாலப் பெயர். சங்கச் சான்றோரும், இளங்கோ அடிகள் மூன்று இடங்களிலும் ஆன்பொருநை ஆற்றங்கரையில் வஞ்சி நகரம் உள்ளதாகப் பதிவு செய்துள்ளனர்.

    அந்துவன் சேரல் இரும்பொறை வஞ்சியில் இருந்து ஆண்டான். சேரன் எல்லைக்குள் கோப்பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனை மதம் பிடித்த யானை கொணர்ந்தது. முடமோசியார் இதனைப் புறப்பாட்டாகப் பாடியுள்ளார். வஞ்சி மாநகர் சோழ நாட்டு எல்லைக்கு அருகே என்பது இதனால் விளங்குகிறது.

    பாண்டியன் நெடுஞ்செழியன் வஞ்சியை ஆண்ட மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் போரில் வென்றான். ஆனாலும், பின்னர் மீண்டும் அரியணை ஏறினான் அச் சேரன் (புறம் 17). சோழன் நலங்கிள்ளியும் கருவூரைக் கைப்பற்றினான். கோவூர்கிழார் அவன் ‘பூவா வஞ்சியும் தருகுவன்’ எனக் கூறுகிறார். இதைப் பழைய உரையாசிரியர் ‘பூவா வஞ்சி என்பது கருவூருக்கு வெளிப்படை’ எனக் கூறுகிறார்.

    ஆலத்தூர் கிழார் பாடிய புறம் 36 கிள்ளிவளவன் என்னும் சோழன் ஆன்பொருநை நதிக்கரையில் இருந்த கருவூரை முற்றுகையிட்டதைப் பாடுகிறது.

    சிலம்பின் குறுந்தொடி மகளிர் பொலஞ் செய்
    கழங்கில் தெற்றி ஆடும் தண்ணான் பொருநை
    வெண் மணல் சிதைய “ (புறம் 36)

    கடும்பகட்டி யானை நெடுந்தேர்க் கோதைத்
    திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
    தெண்ணீர் உயர்கரைக் குவைஇய
    தண்ணான் பொருநை மணலினும் பலவே” (அகம். 93)

    கடல் பிறக்கோட்டிய குட்டுவன் சிலப்பதிகாரத்தின் செங்குட்டுவனுக்கு முன்னோன் என்பார் பேரா. கா. சு. பிள்ளை. இந்தச் சேரமன்னனைப் பரணர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தாகப் பாடினார். அதில் குடவனாறும், ஆன்பொருனையும், காவிரியும் கலக்கும் முக்கூடல் போன்றவன் என்று போற்றியுள்ளார்.

    செங்குணக்கு ஒழுகும்-நேர் கிழக்காக ஓடும்; கலுழி மலிர் நிறைக் காவிரி யன்றியும்-கலங்கலாகிய நிறைந்த வெள்ளத்தையுடைய காவிரியை ஒப்பதே யன்றி; பூவிரி புனல் ஒரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை-பூக்கள் விரிந்த புனலையுடைய ஆறுகள் மூன்றும் கூடிய முக்கூடலையும் ஒப்பாவாய்.

    செங்குட்டுவனும் செம்மை நெறிக்கண் ஒழுகி நாடு வளம் பெருகத் தண்ணளி சுரந்து இனிது புரத்தல் பற்றி,  “காவிரி அனையை” என்றார். மூன்று ஆறுகள் கூடுமிடத்து மூன்றிடத்துப் பொருள்களும் ஒருங்கு தொகுவதுபோல், கடல்பிறக் கோட்டிக் கடல்படு பொருளும், சேரநாடுடைமையால் மலைபடு பொருளும் பழையன் முதலியோரை வென்று, காவிரி செங்குணக்கு ஒழுகும் நாடுடைமையால் அந்நாட்டுப் பொருளும் என்ற மூவகைப் பொருளும் ஒருங்கு தொக நிற்கின்றனை என்பார். “பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை” என்றார். மூன்றுடன் கூடிய கூடலைப் பழைய உரைகாரர், “அக் காவிரி தானும் ஆன் பொருநையும் குடவனாறும் என இம்மூன்றும் சேரக்கூடிய கூட்டம்” என்பர்.

    எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் வரு புனல், வாயில் வஞ்சியும்” என்கிறது சிறுபாணாற்றுப்படை. இதன் பிரதிபேதமாக “. (பி-ம்.) ‘புனல் வஞ்சி வாயிலும் வறிதே’” என்றும் இருக்கிறது (உவேசா பதிப்பித்த பத்துப்பாட்டு). வரு புனல் வாயில் வஞ்சியும் வறிது – பெருகுகின்ற நீரையும், கோபுர வாயிலையுமுடைய வஞ்சியென்னும் ஊரும் தரும் பரிசில் சிறியதாயிருக்கும் என்பது நச்சினார்க்கினியர் உரை. சேரர்களின் ராஜதானி நகரமாக வஞ்சிக் கருவூர் விளங்கியுள்ளது. அமராவதி ஆற்றின் நீர்வளத்தைக் கொண்டதாக உள்ளது.

    இவ்வாறு பல பாடல்களில் ஆன்பொருனை நதியும், வஞ்சி மூதூரும் இணைத்துச் சங்கச் சான்றோரால் பேசப்படுகின்றன. காவிரியாற்றோடு ஆன்பொருநையும் குடவனாறும் கலக்கும் கூடல் போன்றவன் செங்குட்டுவன் என்று பரணர் பதிற்றுப்பத்தில் பாடுகின்றார். கூடல் என்பது கருவூரின் அருகே உள்ளது. கங்கர், அதியர் போன்ற சேரரின் சிற்றரசரை வென்றவன் இராசசிம்ம பாண்டியன். தன் மகனுக்குக் கங்கர்களிடம் பெண்ணெடுத்தவன். இவர்களை வென்றபின் தெற்கே வந்து சேரருடன் போரிட்டு வென்றிருக்கிறான். இப்போர் காவிரியின் வடகரையில் வஞ்சி நகருக்கு வடக்கே நிகழ்ந்துள்ளது. “”புனற்பொன்னி வடகரையில், பொழில் புடைசூழ் மதில் வஞ்சி கனல்பட விழித்து” என்பது சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டு வாசகம்.

    பின்னர், நடுகல்லில் “ஸ்ரீ வஞ்சி வேள் அடியான் ”என்று பொறிக்கப்பட்டுள்ளது. நெரூர்ப் பெருமாள் கோயில் கல்வெட்டிலும், பசுபதீசுவரர் கோயில் கல்வெட்டிலும் ‘வஞ்சி மாநகரமான கருவூர்’ என்றும், கரூர் ரங்கநாதர் கோயில் கல்வெட்டில் ‘வஞ்சி ஸ்ரீவைஷ்ணவரோம்’ என்றும் 12-ஆம் நூற்றாண்டில் உள்ளது. கரூர் ரங்கநாதர் கோயிலே குலசேகர ஆழ்வார் பாடிய வித்துவக்கோடு என்று மு. ராகவையங்கார் கருதுகிறார். இன்றும் அதன் அருகே உள்ள அக்கிரகாரம் வித்துவக்கோட்டு அக்கிரகாரம் என அழைக்கப்படுகிறது. சோழர்கள் இறையாண்மை மிகுந்த காலங்களில் கரூரை விட்டு வித்துவக்கோட்டைச் சேரர்கள் கேரளாவுக்கு நகர்த்தி உள்ளனர். இது குலசேகர ஆழ்வார் காலத்தின் பின்னர் வந்த நூற்றாண்டுகளில் எனலாம். சோழர் தலைநகர் உறையூருக்கு 50 மைல் தொலைவில் வஞ்சி மூதூர் இருப்பதால், பிற்காலத்தில் பெருவஞ்சி என்ற தாராபுரம் சேரநாட்டுக்கு தலைநகர் ஆகியுள்ளது. அப்போது திருத்தக்கதேவர் அங்கே வாழ்ந்திருக்கிறார். அதற்கும் பின்வந்த நூற்றாண்டுகளில் கேரள மாநிலத்துக்கு சேரர் தலைநகர் வஞ்சி நகர்ந்துவிட்டது. உதாரணமாக, கொச்சி அருகே உள்ள அஞ்சைகளத்தைத் திருவஞ்சிக்குளம்  என்பர். ஆனால், அப் பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுகளில் கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு முந்தைய தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை (கே. வி. ராமன், தொல்லியல் ஆய்வுகள், 1977).

    வஞ்சிக் கொடி (Tinospora cordifolia) தல விருட்சமாக இருப்பது கரூர் ஆனிலையப்பர்  கோவில். வஞ்சிக்கொடிக்குச் சீந்தில் என்றும் ஒரு பெயர் உண்டு. சீந்து/சிந்து மக்களுக்கு முக்கியமான சின்னமாக இருந்ததால் இந்நகருக்குச் சங்கச் சேரர் வஞ்சி எனப் பெயரிட்டனர் போலும். இதனால் ஊரும் பெயர் பெற்றது. தமிழ் தேசியக் காப்பியம் ஆகிய சிலப்பதிகாரம் சமணத் தத்துவங்களைக் கங்க ராஜ்யத்தில் வாழ்ந்த கவுந்தி அடிகள் வாயிலாகப் போதிப்பதாக இளங்கோ அடிகள் எழுதியுள்ளார் [2]. கனக விஜயரை அமராவதி நதியில் அமைந்துள்ள வஞ்சிக் கருவூருக்கு கண்ணகியின் கல்சிலையைக் கொண்டுவந்ததைப் பாடியுள்ளார். சுருளி/சுள்ளிப் பெரியாறு கொடுங்ஙல்லூர் அருகே கடலில் கலக்கிறது. சூர்ணீ என்று வடமொழியில் பெயர்பெற்ற அப் பெரியாற்றுக் கழிமுகத்தில் எங்கேயும் சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி மூதூர் இல்லை. வஞ்சி மாநகர் பற்றி இளங்கோ அடிகளின் முத்தமிழ்க் காப்பியத்தில் மூவிடங்களைப் பார்ப்போம்.

    (i) வாழ்த்துக் காதை

    மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
    நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ,
    வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
    சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே;

    அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன்பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ”மலை அரையன் பெற்ற மடப்பாவை” என்றார். நிலவரசர் – கனகனும் விசயனும்.

    (ii) செங்குட்டுவன் கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றி வஞ்சினம் முடித்தது

    நீர்ப்படைக் காதை

    தண் ஆன்பொருநை ஆடுநர் இட்ட
    வண்ணமுஞ் சுண்ணமும் மலரும் பரந்து

    தண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட-குளிர்ந்த ஆன்பொருநையில் நீராடுவோர் இட்ட, வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து – தொய்யிற் குழம்பும் பொற் சுண்ணமும் மலர்களும் பரவி, விண் உறை விற்போல் விளங்கிய பெருந்துறை – இந்திர வில்லைப்போல் விளங்குகின்ற பெரிய நீர்த் துறைகளில், வண்டுஉண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை –

    ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி
    வால்வளை செறிய வலம்புரி வலனெழ
    மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன்
    வேக யானையின் மீமிசைப் பொலிந்து
    குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள
    வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென்.

    இக் கதையில், இளங்கோ அடிகள் கோப்பெருந்தேவி என்னும் பட்டத்தரசி வாழ்ந்த சேரர்களின் தலைநகர் வஞ்சி மூதூர் அமராவதி பாய்கின்ற தமிழ்நாட்டின்கண் இருந்தது என்றும், அங்கே சேரராசா செங்குட்டுவன் வடபுல ஆரிய மன்னர் கநக-விஜயர் முடித்தலையில் கல்லேற்றிக் கண்ணகி படிமையைக் கொணர்ந்து தானும் தன் தேவியைக் காண, அவள் வளையல்கள் செறிய வஞ்சி நகரில் புகுந்தனன் என்று பாடியுள்ளார்.

    (iii) நடுகல் காதை:

    மண்ணாள் வேந்தே நின் வாணாள்கள்
    தண் ஆன்பொருநை மணலினுஞ் சிறக்க!

    ஆன்பொருநை – சேரநாட்டுள்ளதோர் யாறு; இஃது ஆன்பொருந்தம் எனவும் பொருநை யெனவும் வழங்கும். ஓரரசரை வாழ்த்துங்கால் அவரை அவர் யாற்று மணலினும் வாழ்கவென்றல் மரபாகலான் இங்ஙனங் கூறினான். “சிறக்க நின்னாயுள், மிக்கு வரும் இன்னீர்க் காவிரி, எக்கர் இட்ட மணலினும் பலவே” என வருதலுங் காண்க.

    இனி, வஞ்சி மூதூர் அருகே கிடைத்துள்ள அரிய சமணச் சிற்பம் பற்றிக் காண்போம். ‘ஆ கெழு கொங்கர்’ எனச் சங்க இலக்கியம் புகழும். ஆன்பொருந்தம் என்று பேர்பெற்ற நதிக்கரையில் ஆனிலை அப்பர் என்னும் சிவாலயம் வஞ்சி மாநகரின்கண் அமைந்துள்ளது. இன்றும் தமிழ்நாடு முழுதும் ஜல்லிக்கட்டு என்றால் கொங்குநாட்டின் பொலிகாளைகள் தாம் பங்கேற்கின்றன. வஞ்சி அருகே, ரிஷபநாதர் எனப்படும் ஆதிநாத தீர்த்தங்கரர் தம் மகள்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் காட்சி பெருஞ்சிற்பமாகக் கிடைத்துள்ளது [3]. இது தமிழ்க் காப்பியங்கள் உருவாகிய காலமாக இருக்கலாம். களப்பிரர் ஆட்சிக் காலம்.

        2. ஸ்ரீபுராணம் – மகளிர்க்கு எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆதிநாதர்

    சமண சமயத்தவர் எழுத்து மாத்திரம் இல்லாமல், எண்ணையும் இந்தியர்க்குக் கற்பித்தார்கள். அதனால் தான் வள்ளுவர் ”எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என்றும் ஔவை ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும் பகுத்தனர். இன்றும் 4-9 தமிழெண்களின் வடிவங்களில் வடமொழி எண்ணுப்பெயர்களின் முதல் அட்சரங்கள் இருப்பதைக் காண்கிறோம்.  வடநாட்டுக் குகைக் கல்வெட்டுக்களில் உள்ள எண்களைச் சிரமண சமயத்தவர் மருங்கூர்ப் பட்டினம் போன்ற நகரங்களில் கொணர்ந்து தமிழர்க்குத் தந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் காட்டி நிற்கின்றன. தமிழரின் எண்கணித வரலாற்றுக்கு வையைப் பட்டினம் ஆகிய அழகன்குளம் பானையோடு முக்கியமானது [4].

    ஸ்ரீபுராணத்தில் ரிஷபநாத தீர்த்தங்கரர் எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் மகள்களாக சுந்தரி, பிராமியைக் குறிப்பிடுவது சிற்பமாக தமிழகத்திலேயே வஞ்சி மூதூர் அருகே கிடைத்திருக்கிறது. இது இந்தியாவின் ஜைன சமயக் கலைப்படைப்புகளில் ஒரு சிறப்பு வாய்ந்த சிற்பம் ஆகும்.

    ரிஷபநாத தீர்த்தங்கரர் இரு மக்களை மாணவியராக ஏற்று எழுத்தையும், எண்ணையும் கற்பித்தார். அதில் பிராமி என்ற மாணவிக்கு வலக்கையில் எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்ததால் இடமிருந்து வலமாக பிராமி எழுத்துக்கள் வளர்ந்தன. ஆனால், சுந்தரி என்னும் பெண்ணுக்கு இடக்கையில் எண்களைத் தீர்த்தங்கரசாமி கற்பித்தார். எனவேதான் எண்களை விவரிக்கும்போது வலமிருந்து இடமாக வளர்வதை இந்தியாவில் காண்கிறோம். தொல்லியல், இலக்கியம், கல்வெட்டு மூலமாக ஆய்வுலகம் காட்டும் இந்திய எண்களின் வளர்ச்சியைத் தான் ஸ்ரீபுராணக் கதையும் சொல்லிச்செல்கிறது. பிராமியில் எண்களை எழுத வாமகதித் தத்துவம், அதாவது வலப்புறம் சிற்றெண்ணில் தொடங்கி பேரெண்களை ஒன்றன் பின் ஒன்றாக இடப்புறமாக எழுதிச் செல்லும் வழிமுறை பயன்படுகிறது. இப் பண்டைய வாமகதி முறையை “அங்காநாம் வாமதோ கதி” என்று சிற்றெண்ணை முதலில் வலப்புறம் எழுதி இடப்புறத்தில் அடுத்தடுத்த பெரிய எண்களை எழுதுதலை வடமொழி கணித சாஸ்திரங்களில் குறிப்பிடுகின்றனர். தொல்காப்பியம் (புணரியல்) முதல் நூற்பா:

    மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின்
    இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது
    அறுநான்கு ஈற்றொடு நெறி நின்று இயலும்

    தொல்காப்பியர் காலத்தில் பூஜ்யம் இல்லை. தசமகணித முறையும் கண்டுபிடிக்கப் படாத காலம். ஆனால், 10, 100, 1000 இவற்றுக்குத் தனிச் சின்னங்கள் இருந்தன. 3 (10) 3 = 33. சிறிய எண் 3-ஐ வலப்புறம் அமைத்து (மூன்று தலையிடுதல்), அதற்கு இடமாக 3(10) எழுதுதலைச் சுட்டுகிறார். அதுபோலவே,  2 (10) 2 = 22 என்பதையும் வாமகதி முறையில் தொல்காப்பியர் எழுதிக் காட்டியுள்ளார்.

    ஸ்ரீபுராணம் – ஆதிபர்வம்:

    “அன்னைமீர்! நீங்கள் பாலைகளாக இருக்கின்றீர்களெனினும். சீலவிநயங்களால் பரிணதைகளாக விருக்கின்றீர்கள்; ஈத்ரஸமாகிய ரூபயெளவனாவஸ்தா சீலாசாரங்கள் வித்தையால் அலங்கிருதமாகில் அன்றோ ஸ்ரேஷ்டமாகும்; ஜன்மபலமாவது வித்தையே; எஸஸ்ஸினையும், ஸ்ரேயஸ்ஸினையும் தருவது வித்தையே; கருதியவற்றைத்தரும் சிந்தாமணியாவதும் வித்தையே; தர்மார்த்தகாமங்களுள் சம்பத் பரம்பரையைத் தருவதும் வித்தையே; பந்துவாவதும். மித்திரராவதும், சர்வார்த்தங்களையும் சாதிக்கும் தேவதையாவதும் வித்தையே; ஆகையால், நீங்கள் வித்தையினைக் கைக் கொள்வீர்களாக” என்பனவே.

    பகவான் இவ்வாறு சொல்லி அவர்களை ஆசிர்வாத வசனங்களால் வாழ்த்தித் தமது ஹிருதய கமலத்து எழுந்தருளியிருந்த ஸ்ருததேவியினை ஸ்வர்ணபட்டகத்தின் மிசை பூஜாபுரஸ்ஸரம் அதிவசிப்பித்து, ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.

    அங்ஙனம் காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், அகராதி ஹகாராந்தமாகிய ஸ்வரம் வியஞ்சனமென்னும் இரண்டு பேதத்தினை உடைத்தாகியதும், அயோகவாகங்கள் இரண்டாகவுடையதுமாகிய அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.

    சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணித ஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையு முபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாம ஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. சகலசாஸ்திரங்களும் அக்ஷரங்களின்றி நிகழாவாதலின் பிரஜாபதி முந்துற அக்ஷரங்களை, உபதேசித்தருளிப் பின்னும் இருவருக்கும் வியாகரணமும், சந்தோவிஸ்சித்தியும், அலங்காரமுமாகிய ஸ்பத சாஸ்திரங்களையும் உபதேசித்தருளினர். அவ்விருவரும் பிரக்ஞாபலத்தால் (புத்திவிசேஷத்தால்) பகவானால் உபதேசிக்கப்பட்ட சகலவித்தைகளையும் உணர்ந்தனர்.”

    ஆழ்வார் என்ற சொல்லை தமிழில் தியானத்தில் ஆழ்ந்திருப்பவர் என்ற பொருளில் அருகர்களுக்கு அறிமுகம் செய்தோர் சமணர்களே. ஸ்ரீ என்ற சொல்லின் முத்தியத்துவம், ஆழ்வார்கள் என்னும் பெயர், உரைநடையில் மணிப்பிரவாள நடை என இவற்றையெல்லாம் பின்னாளில் சமணத்தில் இருந்து ஸ்ரீவைஷ்ணவ மரபினர் எடுத்தாள்கின்றனர்.

          3. அரவக்குறிச்சியில் ஆதிநாத தீர்த்தங்கரர்:

    அரவக்குறிச்சி வட்டத்தில் மொட்டையாண்டவர் திருக்கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் முருகன் கோயில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள இடம் ஒரு சிறிய கரட்டுக் குன்று இருக்குமிடம் ஆகும். குன்று நோக்கியுள்ள சிறிய ஏற்றப்பாதையில் மேலே செல்லுமுன் சமதளத்திலேயே  மிகப்பெரியதொரு பாறை காணப்படுகிறது. மதுரை-ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பாறை போலச் சரிந்து பெரிய சுவர் போலத் தோற்றமளிக்கிறது. பாறையில் சற்றேறத்தாழ ஏழு அடி உயரத்துக்கு மூன்று சமணச்சிலைகள் ஒரே இடத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று சிற்பங்களும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றன. நடுவில் ஓர் ஆண் உருவமும், அதன் இரு பக்கங்களிலும் இரு பெண் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன.

    நடுவில் இருக்கும் ஆண் சிற்பத்தின் தலைக்கு மேல் சமணத்துக்கே உரிய முக்குடை அமைப்புக் காணப்படுகிறது. சமணத் தீர்த்தங்கரர் சிலைகளில் இது போன்ற முக்குடை அமைப்பைக் காணலாம். இங்கு, சிற்பத்தில் ஆடை அணியாத சமணத்துறவியின் நின்ற கோலமும், அவரின் தலைக்குமேல் காணப்படும் முக்குடை அமைப்பும் இச் சிற்பம் ஒரு சமணத் தீர்த்தங்கரரின் சிற்பம் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆதிநாதர் என்பவர் ரிஷபதேவர் வஞ்சி மாநகர ஆன்நிலையப்பருக்கு அருகிலே இருக்கிறார். தீர்த்தங்கரர் என்னும் உயர்நிலை பெற்ற இருபத்து நான்கு பேரின் சிற்ப,ஓவிய உருவங்களுக்கு அடையாளமாக அவர்களின் தலைக்கு மேல் முக்குடை அமைப்புக் காணப்படும். ஆத்திசூடி அமரும் பார்சுவ நாதருக்கு மட்டும் முக்குடையும் அதன்கீழே அவரைக் காக்கின்ற நாகமும் தலைமேல் காட்டப்பட்டிருக்கும்.

    சமணத் தீர்த்தங்கரரின் இரு பக்கங்களிலும் இரு பெண்ணுருவங்கள் உள்ளன. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆதி நாதர் என்னும் ரிஷபதேவர் ஆவார். இவர் ஒரு அரசர். இவருக்கு மக்கள் இரு மகன்களும், இரு மகள்களும். பாகுபலி மூத்த மகன்; பரதன் இளைய மகன். பிராமி, சுந்தரி இருவரும் மகள்கள். ஆட்சியை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு ரிஷபதேவர் துறவறம் மேற்கொள்கிறார். சக்கரவர்த்தியாகும் எண்ணத்தில் பரதன், பல நாட்டு அரசர்களை வெல்கிறார் உடன்பிறந்த பாகுபலியையும் கொல்ல நினைக்கிறார். மனம் வெறுத்த பாகுபலி, தன் பங்குக்கான ஆட்சிப்பரப்பையும் உடன்பிறந்தானுக்குத் கொடுத்துவிட்டுக் காட்டுக்கு ஏகித் தவத்தில் ஈடுபடுகிறார். சகோதரிகள் பிராமி, சுந்தரி ஆகிய இருவரும், தவத்தைக் கைவிடுமாறு பாகுபலியை   வேண்டிக்கொள்கின்றனர். உடன்பிறந்த சகோதரிகள் காட்டுக்குச் சென்று அண்ணனைச் சீறாட்டுத் தெளிவிக்கும் இந்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நடுவில் பாகுபலியும், அவரது பக்கங்களில் அவரது சகோதரிகளும் நின்றுகொண்டிருப்பது போன்ற தோற்றத்தில், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

    ஆனால், இதைவிடச் சிறப்பாக இந்தச் சிற்ப அமைப்பை வடிக்கலாம் என்று பெண்கல்வியை வலியுறுத்தும் ஸ்ரீபுராண நிகழ்ச்சியாக அரவக்குறிச்சியில் வடிவமைத்துள்ளனர். கண்ணபிரான் கையில் வெண்ணெய் ஏந்தும் காட்சியாக இந்தியா முழுதுமே சிற்பங்கள், ஓவியங்கள் பல உண்டு. அதனை மாதிரியாக எடுத்து, சம்பந்தர் புராணம் ஏற்பட்டபோது, தனக்கு முலைப்பால் ஊட்டிய உமையாளைக் கோபுரத்தில் காட்டுவதுபோல தமிழ்ச்சிற்பிகள் வடித்துள்ளனர். காரைக்கால் அம்மையார் வடிவம் காளியினதே. அது போல, இங்கே பாகுபலியை எடுத்துவிட்டு, பெண்கல்வியைப் பரப்பும் வகையில் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரம் அருகே ஆதிநாதர் தீர்த்தங்கரர் சிற்பம் அமைந்துள்ளது, பழைய சேரநாட்டின் சிறப்பு. இந்தியாவிலேயே ஒரு புதுமையான ஜைநக் கலைக்கருவூலம். ’குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல’ என நாலடியிலும்,

    இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
    நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்
    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
    எழுத்தின் வனப்பே வனப்பு

    என ஏலாதியிலும், சமண முனிவர்கள் பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்கேற்ற சிற்பம். சமண சமயம் போதிப்பதற்காக, சிலப்பதிகாரத்தில் குடக நாட்டில் தவப்பள்ளிக்குச் சென்று கோவலனும், கண்ணகியும் கவுந்தி அடிகளுடன் காவேரி ஆறு பாயும் நாட்டின் வளம் முழுதும் பாடுவதாக அமைத்ததும் இதன் காரணமாகவே. “இவளோ, கொங்கச் செல்வி, குடமலையாட்டி” என்று அடிகள் கூறுவது காவிரிநாட்டின் முதல்பகுதி குடகும், கொங்கும் கண்ணகியை முதலில் வழிபட்டோர் எனக் கூறிச் சிறப்பித்தார் [2].

    அரவக்குறிச்சி ஜைந சிற்பவமைதியை (iconography) நோக்குங்கால் மூன்று அம்சங்கள் முக்கியமாக வெளிப்படுகின்றன. (1) வள்ளுவர், பாகுபலி, … போன்றவர்களுக்கு இருக்கும் ஒரு குடை இதில் இல்லை. தீர்த்தங்கரருக்கு உள்ள முக்குடை இருக்கிறது. (2) பாகுபலி சிற்பங்கள் எல்லாவற்றிலும் துறவு நீண்ட காலம் மேற்கொண்டமையால் கால்களைச் சுற்றிக் செடி கொடிகள் காட்டப்படும். பாகுபலி திருப்பாதத்தின் அருகிலே புற்றும், நாகமும், தழைகளும், கொடிகளுமாய் இருக்கும். அவை தீர்த்தங்கரர் சிற்பமாகிய இதில் இல்லை (3) சுந்தரி பிராமி தந்தையுடன் நிற்கையில் கைகளில் கல்விக்கான முத்திரை காட்டப்படுகிறது. பனை ஏடும், கையில் எழுத்தாணியும் கொண்டு இரு பெண்களும் நிற்கின்றனர். இந்தப் பெண்டிரின் ஹஸ்த முத்திரை இங்கே வடிக்கப்பட்டுள்ளது ஸ்ரீபுராணக் காட்சி என்பதை ஐயந் திரிபற விளக்குகிறது. பொலிவுடைய இச் சிற்பச் சிறப்புக்கு இரு அட்ட நாகபந்தங்கள் செய்தேன்.

    வஞ்சிமா நகரருகே மாதர் கல்வி
    விஞ்சும் சிலைகாட்டும் சீபுராணம்

        4. ஆய்வுத் துணை

    (i)  கி. ஸ்ரீதரன், கருவூரும் அகழ்வைப்பகமும், தமிழ்நாடு தொல்பொருள்துறை, 1992

    (ii) நா. கணேசன், இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு
    http://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html

    (iii) துரை. சுந்தரம், கரூர் அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு
    http://nganesan.blogspot.com/2018/02/sripurana-sculpture-near-vanji-karur.html

    (iv) நா. கணேசன், வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்.
    http://www.vallamai.com/?p=29153

    இக்கட்டுரை தமிழ்ச் சமணர்களின் ஆய்விதழ், முக்குடையில் மே மாதம், 2018-ல் அச்சானது.

     

     

    Share
  • பாலஸ்தீனம்: அநீதியின் உச்சக் கட்டம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண ட்ரம்ப் ஜனாதிபதியானவுடன் தன் சொந்த மருமகன் ஜேரட் குஷ்னரை நியமித்தார்.  இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேறு எந்த தகுதியும் இல்லாதவர்.  ஆனால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க அவரால் முடியும் என்று ட்ரம்ப் உளறிக்கொண்டிருந்தார்.  எத்தனையோ முறை இஸ்ரேலுக்குச் சென்றுவந்த குஷ்னர் எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை.  இப்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

    லட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி வரும் ஐ.நா. சபையின் அமைப்பு (United Nations Relief Works Agency) ஒன்றிற்கு அமெரிக்க அரசு இதுவரை அளித்துவந்த உதவியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக ஐ.நா.வுக்கு அமெரிக்கா நிதி உதவி அளிக்கும் துறையில் வேலைபார்த்த பழைய அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.  இந்த முடிவை எடுத்ததில் குஷ்னருக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து உலகின் பல பகுதிகளிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் பாலஸ்தீனர்களின் அனுமதி இல்லாமலேயே நுழைந்து அவர்களின் நிலங்களைத் தந்திரமாக வாங்கிப் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரத்தையே குலைத்து, வன்முறைகளால் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து வெளியேற்றி அவர்களில் பாதிப் பேருக்கு மேலானவர்களை அகதிகளாக்கினர்.  அப்படி அகதிகளாகச் சென்றவர்களுக்குத் தங்கள் இடங்களுக்குத் திரும்பும் உரிமை இருக்கிறது என்று கூறிவரும் பாலஸ்தீன அரசியல்வாதிகள் அந்த உரிமை பற்றிப் பேசாதிருக்க வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபையின் அமைப்பு அவர்களுக்குச் செய்துவரும் உதவியை நிறுத்தி அவர்களைப் பணியவைக்க முயன்றுவருவதாக அகில உலக வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தில் வேலைபார்த்த டேவிட் ஹார்டன் என்பவர் கூறியிருக்கிறார்.

    ஒவ்வொரு வருடமும் அமெரிக்க வெளியுறவுத் துறை செப்டம்பர் மாத முடிவில் மேலே குறிப்பிட்ட, பாலஸ்தீன அகதிகளுக்கு, உதவிவரும் ஐ.நா. நிறுவனத்திற்கு பணம் பட்டுவாடா செய்யும். இந்த வருடம் இந்த உதவிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 35 கோடி டாலர் பணத்தில் ஏற்கனவே ஆறு கோடி டாலர் கொடுத்திருக்கிறது.  ஆனால் மீதிப் பணத்தைக் கொடுக்கப் போவதில்லை என்று குஷ்னரும் வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோவும் முடிவுசெய்திருப்பதாக ஹார்டன் கூறியிருக்கிறார்.  அந்தப் பகுதியிலுள்ள ஐம்பது லட்சம் அகதிகளுக்கு ஐ.நா. அமைப்பு உதவிவருவதாகவும் இந்த உதவி நிறுத்தப்படுமானால் அந்தப் பகுதியில் பெரிய கொந்தளிப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

    2017 டிசம்பரில் ஜெருசலேம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்று கூறியதோடு காஸாவுக்கும் வெஸ்ட் பேங்கிற்கும் அமெரிக்க அளித்துவந்த 20 கோடி டாலர் பணத்தையும் ட்ரம்ப் நிறுத்திவிட்டார்.  இப்படி அடி மேல் அடியாக பாலஸ்தீனர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் வன்முறையில் இறங்காமல் என்ன செய்வார்கள்?

    பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த யூதர்கள் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் தாங்கள் வாழ்ந்த தங்களின் புண்ணிய பூமி என்று பாலஸ்தீனத்திற்குச் சொந்தம் கொண்டாடி அதில் தங்களுக்கும் ஒரு நாடு வேண்டும் என்று அப்போது பாலஸ்தீனத்தை நிர்வகித்துவந்த பிரிட்டனின் சூழ்ச்சியோடு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டனர்.  அப்போது பாலஸ்தீனர்களிடமிருந்து முழு பாலஸ்தீனத்தையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் திட்டம் போட்டிருந்தாலும் வெளியில் பாலஸ்தீனத்தைப் பாலஸ்தீனர்களோடு பகிர்ந்துகொள்ளத் தயார் என்பதுபோல் நடந்துகொண்டனர்.  பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் ஐ.நா.வின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத பாலஸ்தீனர்கள் யூதர்களைப்போல் ஐ.நா. தங்களுக்குக் கொடுத்த இடத்தில் பாலஸ்தீன நாட்டை உருவாக்கிக்- கொள்ளவில்லை.  அன்று அவர்கள் செய்த இந்த மாபெரும் தவறு பாலஸ்தீனத்தில் அவர்களுக்கு இடமே இல்லை என்னும் அளவுக்கு அவர்களைக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது.

    இஸ்ரேலிலேயே தங்கிவிட்ட, இப்போது இஸ்ரேலின் ஜனத்தொகையில் இருபது சதவிகிதம் இடம் பெற்றிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு முழு குடிமையுரிமைகளும் இஸ்ரேல் வழங்கும் என்ற நிலையிலிருந்து அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது அவர்கள் இஸ்ரேலின் குடிமக்களே இல்லை நிலைக்கு வந்திருக்கிறது.  சமீபத்தில் இஸ்ரேல் நாட்டுப் பாராளுமன்றம் இஸ்ரேல், யூதர்களுக்கு மட்டுமே உரிய நாடு என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது.

    ஆயிரத்து நானூறு வருடங்களாகத் தாங்கள் வாழ்ந்துவந்த தங்கள் நாடு தங்களுக்கு இல்லை என்று ஆகிவிட்டதோடு அகதிகளாக பாலஸ்தீனத்திலும் அண்டை நாடுகளிலும் வாழ்ந்துவரும் பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ.நா. செய்துவரும் உதவியையும் நிறுத்தி அவர்களை முழுவதுமாகப் பாலஸ்தீனத்திலிருந்தே விரட்டிவிட அமெரிக்கா புதிதாகத் திட்டமிடுகிறது.  எல்லா சமாதானப் பேச்சுக்களிலும் அகதிகளாக வெளியே சென்ற பாலஸ்தீனர்களுக்கு அவர்களுடைய இடங்களுக்குத் திரும்பிச் செல்ல உரிமை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  இப்போது அந்த அடிப்படைக் கொள்கையிலேயே கைவைக்கிறார் குஷ்னர்.  இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண குஷ்னர் வைத்திருக்கும் திட்டம் போலும்.  பாலஸ்தீனர்கள் அனைவரையும் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டிவிடலாம் என்ற பென்-குரியனின் திட்டம் இறுதியில் நிறைவேறப் போகிறதா?  இஸ்ரேல் என்ற நாடு உருவான நாளிலிருந்தே பாலஸ்தீனர்கள் சொல்லவொணா துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.  அவர்களுடைய உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன.  இப்போது அமெரிக்கா பாலஸ்தீன அரசியல்வாதிகளை மிரட்டி அடிபணியவைக்க முயற்சிப்பது  அநீதியின் உச்சக் கட்டம்.

    மனித இனம் இத்தனை வளர்ச்சி அடைந்தும் என்ன பிரயோஜனம்?  ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு அளிக்கும் கொடுமையைத் தட்டிக் கேட்க ஆளில்லை.

    Share
  • சேக்கிழார் பாநயம்  -1

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    —————————————————–

     

      ”மலர் சிலம்படி ”

       ********************

     

     

                          சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அவை மூவர் தேவாரமும் , திருவாசகமும்  ஒன்பதின்மர் பாடிய ஒன்பதாம் திருமுறையும், திருமந்திரமும் பன்னிருவர்  பாடிய பதினோராம் திருமுறையும் , சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்ற பன்னிரண்டாம் திருமுறையும் ஆகும். இவை  சிவபெருமானைத் தோத்திரம் செய்யும் பாடல்களும் , சைவ சித்தாந்த சாத்திரங்களும்  விரவியவை யாகும். இவற்றைப் பொருளுணர்ந்து பயிலுவோர் திருவடிப்பேறடைதல் உறுதி. இவற்றுள் முதல் பதினோரு திருமுறைகள் தோத்திரங்களாய் அமைந்தவை. பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணம் நாயன்மார்களின் அருள் வரலாற்றைக் கூறும் காவிய நூலாகக் கருதப் பெறுகின்றது. இந்தப் பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியருளிய சேக்கிழார் பெருந்தகை, சோழநாட்டாமைச்சராக விளங்கியவர். அவர் அமைச்சுப்பணிகளின் இடையே நாடெங்கும் சென்றார். செல்லும் ஊர்களில் பற்பல சிவத்தலங்களாக விளங்கியதை அவர் கண்டார். அத்தலங்களில் எழுந்தருளிய பெருமானின் சிறப்புக்களை உணர்ந்து பாடிய அடியார்களின் திருப்பாடல்களையும் அவர்களின் அருள் வரலாறுகளைக்  கேட்டறிந்தார்.

     

                        சிவனடியார்களின்  திருத்தொண்டுகளால் மனங்கவரப்பெற்ற சேக்கிழார் பெருந்தகை , அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக ஆக்கக்  கருதினார். அதற்குப் பேருதவி புரிந்த ஒரு நூல் திருத்தொண்டத்தொகை  என்ற நூலாகும். அதன் வழியில் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலும் சேக்கிழாரின் தேடலுக்கு உதவியது. அடியார்களுடன்   இறைவனின் புரிந்த  திருவருள் விளையாடல்களை, தனியடியார் அறுபத்து மூவர் வரலாறுகளுடன், தொகையடியார்கள் பற்றிய அறிமுகத்துடன் அவர் எழுதினர்.

     

                     இறைவன்  பெருமை மற்றும் எளிமை குறித்து சேக்கிழார் சுவாமிகள் அறிமுகப்படுத்தும் கடவுள் வாழ்த்துப் பாடல் தனித்த சிறப்புடன் விளங்குகிறது. இறைவனாகிய சிவபரம்பொருளின் பெருமை தமிழிலக்கியங்களில் பலவாறு பேசப்படுகிறது.அப்பரம்பொருளின்  வடிவத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில், எங்கும் நிறைந்த அந்தப்  பரம்பொருள் பற்றி இப்போது நாம் சிந்திப்போமா? நாம் இருக்குமிடத்திலிருந்து வடக்கே தொடர்ந்து சென்று ,  இமயமலையைக் கடந்து பூமியின் நிலப்பகுதியைக் கடந்து வானில்  நெடுந்தூரம் வெட்டவெளியில் சென்றால் அது எங்கேயும்  முடியாமல் நீண்டுகொண்டே இருக்கும்; அவ்வாறே தெற்கில் சென்றால் நிலத்தின் எல்லை கடந்து வானம் எவ்வளவு தொலைவு நீண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியாது; அவ்வாறே கிழக்கிலும் மேற்கிலும் வெளியின் தொலைவு எவ்வளவென்று அறிந்து கொள்ள வியலாது.

    இப்படியே பூமிக்குக் கீழும் வானத்தின் மேலும் பறந்து விளங்கும் வெளியின் அளவை அறிதல்  இயலாது. ஒருபுள்ளியிலிருந்து மற்றொரு புள்ளி வரை எழுதும் கோடு , நீளம் என்றும்,  அகலம் என்றும்,  அறிந்துள்ளோம்.  ஆனால் பிரபஞ்ச வெளியின் நீளத்தையும்,  அகலத்தையும்,  உயரத்தையும்,  ஆழத்தையும் அளவிடுவது எவருக்கும் எப்போதும்  இயலாததாகும்  இதனை,

        

                     ”யாரறி  வார்இதன்  அகலமும்       நிகளமும்

                       யாரறி  வார்இதன்   அருமையும்  பெருமையும்             

                       பேரறி   யாத   பெரும்பொருள்   நின்னுடை

                       வேரறி   யாமை   விளம்புகின்   றேனே!

                             

    என்று பழம்பாடல் கூறுகின்றது. மேலும் , இந்தப் பெருவெளி தரும் காட்சிகள்  கோடிக்கணக்கானவை!  இதனைத் திருவாசகத்தின்  திருவண்டப்பகுதி,

     

                     அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

                     அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி

                     ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

                     நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன

     

    என்று  விளக்குகின்றது.  அவ்வாறே அந்தப்பெருவெளி எந்தக்காலத்தில் தோன்றியது, என்ற தொன்மையையும்,  எந்தக்காலம்  வரை நிலைக்கும் என்ற எதிர்காலத்தையும்  நம் சிற்றறிவால்  அளந்து விடல் எளிதன்று.   ஆகவே நீளத்திலும்  அகலத்திலும்  அளக்கவியலாத இடத்தையும்  (spece),  தொன்மையையயும் , எதிர்காலத்தையும்   அளக்க வியலாத காலத்தையும்  (time)  கொண்டது அப்பெருவெளி. அப்பெருவெளியே ஈசனின் உடல் என்று நம் சமயங்கள் கூறும்.  இதனைக்

     

                           ” கருதரிய   கருத்ததனுட்   கருத்தாய் மேவிக்

                                    காலமும்   தேசமும் வகுத்துக்   கருவியாதி

                             விரிவினையும்   கூட்டியுயிர்த்    திரளை   ஆட்டும்

                                     விழுப்பொருளே ”

     

    என்பார் தாயுமானவர்.

     

                             ”முன்னைப் பழம்பொருட்கும்  முன்னைப்   பழம்பொருளே

                              பின்னைப்   புதுமைக்கும்   பேர்த்துமப்    பெற்றியனே ”

     

    என்று திருவாசகம் பாடும்.  இத்தகை மிகப்பெரிய , கற்பனை கடந்த பரம்பொருளே சிவபிரான் என்பர் சைவர். இதனை எந்த உலகத்தாராலும்  அறிந்துகொள்ளுதல் இயலாது; ஆனால்  இறைவன் திருவருளால்   உணர்ந்து கொள்ளலாம். ஆகவே ”உலகெலாம்   உணர்ந்து” என்ற தொடரால் சேக்கிழார்  புலப்படுத்துகிறார். இவ்வாறு உணர்ந்துகொண்ட  பரம்பொருளைப்   பற்றிய  விளக்கத்தைக்   கூறுதல் எவருக்கும் இயலாது. ஆகவே,  இதனை ” ஓதற்கு  அரியவன் ” என்ற தொடரால் , விளக்குகிறார்.   இவ்வாறு உணர்தற்கும் ஓதற்கும்  அரிய பரம்பொருளை,  நாம் புரிந்துகொண்டு   வழிபாடு   செய்வது   எவ்வாறு?  என்ற  ஐயம்  உண்டாகும்.  அதனைத் தீர்க்கும் வகையில் புலவர்,   அடுத்த  அடியைப்  பாடுகிறார். அதில் அந்த இறைவனின் திருவுருவத்தை நமக்குச் சற்றே அடையாளம்  காட்டுகிறார். ” நிலவுலாவிய   நீர்மலி வேணியன் ” என்பதே அந்த அடி! அதாவது அந்த இறைவனின் நிலாப்பிறை அணிந்த  சடைமுடி,  அதில் நிரம்பி வழியும் கங்கை நீர்   இவற்றால்   திருமுடியின் திருக்காட்சி விளக்கப் பெறுகிறது.

          

                       ”ஓஹோ!  வானத்து நிலவின்  பிறையைத்  தலையின் ஜடாமுடியில் அணிந்தவரா அவர்?  அந்தச் சடையில் கங்கை நதியையும் அணிந்தவரா?”  என்று நாம் கேட்கும் போதே, ” அவ்வளவு பெரிய  வடிவமா அவர் வடிவம்?”  என்று கேட்கிறோம்.  அந்த கங்கை நதி, வடக்கே  இமயமலையில் அல்லவா  தோன்றுகிறது? என்றெண்ணி,   ” அவ்வளவு தொலைவு நாம் சென்றால் தானே அவரைக் காணுதல் இயலும்?” என்ற அடுத்த வினா நம்மிடம் உண்டாகும்.அங்கே இருந்துஇன்னும்தெற்கே இறங்கி வருவார்அவர் , என்பதை,  ”அலகில் சோதியன்” என்ற தொடரால் சேக்கிழார் புலப்படுத்துகிறார். ஆம்!  செம்பொற்சோதியாய் அவர் திருவண்ணாமலையில் காட்சியளிப்பதை  நம் நினைவுக்குக்  கொண்டு வருகிறார்.

     

                              ”இதோ,   இங்கேதான் அண்ணாமலையாராக அவர் திருக்காட்சி தருகிறாரா? ” என்று சற்றே ஆறுதல் பெறுகிறோம். ” ஆனால் மண்ணின் கீழேயும்  விண்ணுக்கு மேலேயும்  பெருநெருப்பு வடிவில் விளங்கும் அப்பரம் பொருளை, நாம் நெருங்கி வணங்குவது மிகவும் அரிதல்லவா?” என்று நாம் எண்ணித் திகைக்கும் போதே,  ”அம்பலத்து  ஆடுவான்”  என்ற தொடரால் ,  சிவன் இன்னும் அருகில் தில்லையம்பலத்தில் நடனமாடுகிறார்  என்று கூறுகிறார்.  நாம் சென்று   காண்பதற்கரிய நிலாப்பிறை , கங்கை நதி  இவற்றுடன்,    வடக்கே இமய  மலையில்  காட்சி தருபவர்,   திருவண்ணாமலையில் நெருங்க முடியாத நெருப்பாக  உயர்ந்தவர்,  அத்திருவுருவின்   திருவடியைத்   தில்லையில் நாம் சென்று காணும் படி நடனமாடுகின்றார் , என்ற  நம்பிக்கையை அளிக்கிறார்.  அத்திருவடியை,  நாமே   தில்லைக்குச் சென்று,   நம்  கண்களால்  காணலாம். அத்திருவடி மலர் போல் மலர்ந்து,  நாம் தூவும் மலர்களால் நறுமணம்  பெற்று விளக்குகிறது. அப்பெருமான் தம்  திருவடியில் சிலம்பு என்ற அணிகலனை அணிந்து கொண்டு ஆடுகிறார் இதனை , ”மலர் சிலம்படி”  என்ற தொடர் விளக்குகின்றது.

     

                                  கற்பனைகடந்த பேருருவத்தை  அருவமாக நாம் எண்ணுகிறோம். அதனை அருவுருவாக உணர்ந்து ஒதுகிறோம் . அவ்வுருவை நிலாப்பிறை அணிந்து , கங்கை நதியைச் சடையில் தாங்கித்  தில்லையில் நடனமாடும் திருவடியுடன்காட்சியளிக்கும்  உருவமாகக் கண்டு வழிபடுகின்றோம்.   இப்பாடலில்  சிவபெருமானை அருவமாகவும்,  அருவுருவமாகவும், உருவமாகவும் , எண்ணி, உணர்ந்தறிந்து, கண்டு வழிபாடு செய்வதற்குரிய வகையில் இறைவன் புலப்படுவதைச்  சேக்கிழார் பெருந்தகை  இப்பாடலில்  விளக்குகிறார்!  பெருவெளியில்  விளங்கும் பரம்பொருள்,  காலதேசங்கடந்து இமயமலைக்கும், அண்ணாமலைக்கும், சிதம்பரத்துக்கும் இறங்கி வந்து, திருவருள் புரிவதைக்  கால முறைப்படியும், இடத்தின்  வகைப்படியும் விளக்கும் சேக்கிழார் பெருந்தகையின் செய்யுள் திறம் எண்ணியெண்ணி மகிழத்  தக்கதல்லவா ?   இனி முழுப்பாடலையும் படிப்போம்; பாராயணம் செய்வோம்.

     

                                              ”உலகெலா   முணர்ந்   தோதற்   கரியவன்

                                                நிலவு    லாவிய    நீர்மலி     வேணியன்

                                                அலகில்   சோதியன்   அம்பலத்   தாடுவான்

                                                மலர்சி   லம்படி   வாழ்த்திவ   ணங்குவாம்!”

     

    இப்பாடலில்   பெருவெளியில் கற்பனைக்கெட்டாத  நிலையில் விளங்கும் இறைவன் நிலாப்பிறை தோன்றும் சந்திரமண்டல   வான்வழியே , கங்கை தோன்றும் இமயமலை நோக்கி இறங்கி, அண்ணாமலை ஒளியாகித் தில்லையில் திருநடம் புரியும் திருவடிபதித்து,   நாம் மலரிட்டுத் தோத்திரித்து வழிபாடு செய்தற்குரியவனாய்  எளிவந்த அருட் செயலை  விளக்குகிறது.

     

    Share
  • குமரி மாவட்டக் கடலோர மீனவர்களின் வழிபாட்டு முறைகள்

    -அ. மைக்கேல்

    இயேசு கிறிஸ்துவின் சீடரான புனித தோமையார் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவுதற்கு இந்தியாவின் தென் பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.  ஆனால் புனித தாமஸ் மீனவர்களைக் கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றியது பற்றியோ, கடற்கரை பகுதிகளில் அற்புதங்கள் நிகழ்த்தியது பற்றியோ எந்த குறிப்பும் எழுதப்படவில்லை. “மார்க்கோபோலோ தன்னுடைய பயணக் குறிப்பில் புனித தாமசின் (தோமையார்) கல்லறை பற்றியும், புனித தாமஸ் கொலையுண்டது பற்றியும், சென்னை நகரை மலபாரின் மக்கள் தொகை குறைவான ஒரு சிறு நகரம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். என்று கே.ஏ.நீலகண்டசாஸ்திரி   தமது நூலில் குறிப்பிட்டுகிறார். (Nilakanda Sastri. K.A, History of South India – P. 138).

    16-ம் நூற்றாண்டில் வருகை புரிந்த போர்ச்சுக்கல் நாட்டு துறவி பிரான்ஸிஸ் சேவியர் (புனித சவேரியார்) முதன் முதலில் மீனவர்களைக் கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றினார். மலபாரில் இருந்த கேரள முக்குவர் இன மீனவர்களே கிறிஸ்தவ சமயத்தை முதலில் தழுவினார்.  பின்னர் படிப்படியாகக் குமரி மாவட்ட மீனவர், முக்குவர், பரதவர் எனப் பெரும்பான்மையான மீனவர்கள் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார் என்றும் ஸ்டீபன் சாம் தமது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாழ்வியல் பற்றிய ஆய்வில் பதிவு செய்கிறார். (ஸ்டீபன் சாம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாழ்வியல் ஓர் ஆய்வு ப.47)

    மீனவர்களால் வழிபடப்படும் தெய்வங்கள்

    மாதா, வேளாங்கண்ணி மாதா, புனித அந்தோணியார், ஆரோக்கியமாதா கன்னிமரியாள், பனிமயமாதா, புனித சவேரியார், புனித சூசையப்பர், மிக்கேல் சம்மனசுகள், அன்னம்மாள், கப்ரியேல், புனித தோமையார் ஆகிய தெய்வங்களைத் தமிழக மீனவர்கள் வழிபட்டு வருகின்றனர்.  புதிதாக வழிபடக்கூடியதற்கு தகுதியானவர் என ரோமன் கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்ட பின்னரே அவர்களை கிறிஸ்தவ ரோமன் கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றனர்.  குமரி மாவட்ட மீனவர்கள் மேற்கூறப்பட்ட தெய்வங்களில் சிலவற்றை முக்கியத்துவம் கொடுத்தும் மிகவும் பக்தியுடனும் வழிபட்டு வருகின்றனர்.  குறிப்பாக மாதாவின் அருள்பெற்ற வேளாங்கண்ணி மாதா, பனிமயமாதா, கன்னிமரியாள், புனித அந்தோணியார் ஆகிய தெய்வங்களை மிக்க பக்தியுடன் வழிபடுகின்றனர்.  மாதாவைத் தங்கள் தாயாக வழிபடுகின்றனர்.  கடும்புயல் காற்றும் இடி மழையாலும், கலங்கிடும் போது பனிமய மாதா வேளாங்கண்ணி மாதா ஆகிய தெய்வங்கள் கருணையுடன் காப்பதாக மீனவர்கள் பெருமையுடன் நம்புகின்றனர்.

    ‘குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அதிகமாகக் காணப்படும் கோயில்களில் வணங்கப்படும் தெய்வமாக புனித அந்தோணியார் திகழ்கிறார்.  அந்தோணியார் தெய்வத்தை மீனவர்கள் “கோடி அற்புதர்” என அழைக்கின்றனர். (வி.பி. ஞானப்பிரகாசம், பரதகுல மக்கள் தமிழியல் ஆய்வு ப.22) அவர் மீது உள்ள பக்தியின் காரணமாகக் கடற்கரை மீனவக் குழந்தைகளுக்குத் தலைமுடி வெட்டும்போது வட்ட வடிவில் பட்டம் சூட்டியது போன்று வெட்டி வருகின்றனர்.  வருடத்திற்கு ஒருமுறை அந்தோணியார் தெய்வத்திற்கு திருவிழா எடுத்து கொண்டாடுவர்.  ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை நேரங்களில் “நவநாள்“ வழிபாடுகள் நடத்தப்படுகிறது.  இதைக் குமரிக் கடற்கரை மீனவ கிராமங்களில் அதிகமாக காண முடியும்.

    தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் மீனவ கிராமங்களில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  அவர்கள் 100 சதவீதம் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.

    கோவில்கள்

    மத நம்பிக்கை அதிகம் உள்ள மீனவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்குக் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.  கடவுளுக்குக் கோயில் கட்டி வழிபடுவதால் தங்களுடைய தொழிலில் ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்கவும், செல்வத்தை பெருக்கவும் முடியும் என நம்புகின்றனர்.  குறிப்பாகக் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை மீனவ கிராமங்களாக நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை 42 கிராமங்கள் என அரசின் கணக்கெடுப்பில் கூறப்பட்ட போதும், குமரிக் கடற்கரைப் பகுதிகளில் 57 மீனவக் குடியிருப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.  இங்குள்ள ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் எழுப்பப்பட்டுள்ள ஆலயங்கள் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் வானுயர்ந்து காட்சி தருகின்றன.  ஊருக்கு ஒவ்வொரு கோயில் கட்டப்பட்டு உள்ளன.  இவை தவிர ஊரில் உள்ள ஆலயத்தின் துணை அமைப்பாக ஒரு குருசடியும், கிறிஸ்தவக் கடவுள்களின் உருவங்கள் வைக்கப்பட்ட கோயில் போன்ற சிறிய அமைப்பு நிறுவி உள்ளனர். குமரி மாவட்டம் கடற்கரையோரம் உள்ள கன்னியாகுமரியில் உள்ள மாதா ஆலயம், இனையம் புத்தன்துறை ஆலயம் போன்ற கோயில்கள் தங்களது பொருளாதார சக்திக்கு மீறிய செலவில் மீனவர்களால் கட்டப்பட்டுள்ள கோயில்களாகக் காட்சி தருகின்றது.      இனையம் புத்தன்துறை கோவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.  1982-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1992-ல் முடிக்கப்பட்டது.  சிமெண்ட் விலை ரூ. 30-ற்கு விற்கப்பட்டு வந்த வேளையில் இக்கோயிலைக் கட்டிமுடிக்க பொருள்நிதிச் செலவாகியுள்ளதை கோயில் தோற்றத்தை வைத்துக் கூறிவிட முடியும். இதே போன்று கன்னியாகுமரி மாதாகோவில், தூத்துக்குடி அதிசய பனிமாதா கோவில், வேளாங்கன்னி மாதாகோவில் ஆகியவை கடற்கரையில் அமைந்த வானுயர்ந்த  பெரிய கோவில்கள் ஆகும்.

    மக்கள் தொகையில் 700 மற்றும் 800 எண்ணிக்கை கொண்ட கடற்கரை மீனவ கிராமங்களிலும் இவ்வளவு செலவில் கோவில்களை எழுப்பப் போதுமான நிதி இவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பது வியப்பாகவே உள்ளது.  இது பற்றிய ஆய்வின் போது மீனவ மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை கோவில்களுக்கு கொடுக்கின்றனர் என்ற உண்மை தெரிய வருகிறது.

    இனையம் புத்தன்துறை, பள்ளம் போன்ற மிகப் பெரிய கோவில்கட்டும் பணி நடைபெற்று முடியும் வரை அந்த ஊரைச் சார்ந்த மீனவர்கள் தினமும் தங்கள் வருமானத்தில் 5 சதவீதம் கோயிலுக்குச் செலுத்த வேண்டும்.  அதாவது 100 ரூபாயில் 5 ரூபாய் கோயிலுக்குச் செலுத்த வேண்டும் என ஊர் ஆலய நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டது.  தற்போதும் கோயில் கட்டும் மீனவ கிராமங்களில் இம்முறை அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதை அமுல்படுத்த அரசு ஆணைகளோ, காவல் துறையின் ஒத்துழைப்போ, திருச்சபை சட்ட திட்டங்களோ கோயில் நிர்வாகத்திற்கு தேவை இல்லை.  தாமாகவே மீனவர்கள் கோயில் கட்டும் பணி முடியும் வரை நிர்ணயிக்கப்பட்ட தொகையை கோயிலுக்குத் தந்து விடுகின்றனர்.

    குளச்சல் கோயில் கட்டும் பணி முடிவடைந்தது வரை மீனவர்கள் “கூறு” என்னும் முறையை பின்பற்றிக் கோயிலுக்கு நிதி செலுத்தியுள்ளனர்.  “கூறு” என்பது ஏலம் போடும் முறை ஆகும்.  ஓர் ஆண்டிற்குக் கோயில் நிர்வாகத்திடமிருந்து மொத்த ஏலம் எடுத்த நபர் கோயிலுக்கு உண்டான குறிப்பிட்ட தொகையைக் கட்டிவிடுவார்.  ஏலம் எடுத்தவர் குறிப்பிட்ட அந்த ஓர் ஆண்டுக்குள் மீனவர்கள் கடலிலிருந்து மீன் பிடித்து வரும்போது அவர்களிடமிருந்து மீனைக் “கூறு” முறையின் மூலம் ஏலம் விட்டுத் தொகையைப் பெற்று கொள்வார் இதையே ‘கூறு” என்று கூறுவர்..

    உவரி, மணப்பாடு ஆகிய ஊர்களில் “அஞ்சுமீன் குத்தகை” என்ற பழக்கம் இருக்கிறது.  தொழில்முடிந்து கரைக்குத் திரும்பும் மீனவர் தங்கள் மீன்பாட்டிலிருந்து 5 மீன்களை கோயிலுக்கு வரியாக வழங்குவர்.  இதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கோயில் பொறுப்பாளர்கள் விழாச் செலவைக் கவனிப்பர். இன்னும் கோயில்களுக்குச் சொந்தமான கடைகள், மண்டபங்கள், அரங்கங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வாடகை பணம், பிறர் தரும் நன்கொடைகள், வெளிநாட்டுத் தன்னார்வலர்கள் சிலர் தரும் நிதி, மறை மாவட்டம் தரும் நிதி போன்றவையும் இவர்களின் கோயில் கட்டும் நிதிச் செலவிற்குப் பயன்படுகின்றன. இவ்வாறாகப் பல இலட்சம் செலவில் கட்டப்படும் கிறிஸ்தவ ஆலயங்கள் மீனவர்களின் வழிபாட்டிற்கு மட்டுமில்லாது  இயற்கைப் பேரிடர் காலங்களிலும் மீனவர்கள் தங்குவதற்கும் அடைக்கலம் அளிக்கும் அரணாகவும் விளங்குகிறது எனலாம்.

    மீனவர் வழிபாட்டு முறைகள்

    கிறிஸ்தவ மீனவர்கள் தாங்கள் சார்ந்த சமயத்தின் மீது மிகுந்த பக்தியும் பொறுப்பும் உடையவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.  கடற்கரை மீனவ கிராமங்களில் இருக்கும் தாய்ப் பங்கு (பங்குப் பணியாளரை பொறுப்பாகக் கொண்ட) தேவாலயங்களில் தினமும் திருப்பலி நடைபெறுகிறது.  குறிப்பிட்ட பங்கு (கிறிஸ்தவ சபை) சார்ந்த பங்கு பணியாளர் (மத போதகர்) திருப்பலியை நடத்துகிறார்.  இது தினமும் காலை 6.30 மணியிலிருந்து 9 மணிக்கு உள்ளாக நடைபெறுகிறது.  இதில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.  இவை தவிர தாய்ப் பங்கில் திருமணம், ஞானஸ்நானம், புதுநன்மை, உறுதிபூசல் குருத்துவ பட்டமேற்பு விழாக்கள், மதச் சிறப்பு நாட்கள், திருவிழா நாட்கள், இறப்பு, ஞாயிற்றுக் கிழமைகள் ஆகிய நாட்களில் சிறப்புத் திருப்பலி வழிபாடுகள் நடைபெறுகிறது.  ஒவ்வொரு தாய்ப் பங்கிற்கும் துணைப் பங்குகள் 1 அல்லது 2 இணைக்கப்பட்டு வழிபாடு நடைபெறும் துணை பங்குகளில் முக்கிய நாட்களில் திருமணம், திருவிழா, ஞானஸ்நானம், புது நன்மை, உறுதிப்பூசல் குருத்துவ பட்டமேற்பு விழாக்கள், மத சிறப்பு நாட்கள், இறப்பு ஆகிய நாட்களிலும், இதே போன்று முதன் முதலில் கருவுற்ற பெண்ணுக்கு, ஏழு அல்லது ஒன்பதாவது மாதத்தில் “சூல் வளையல்”, அணிவிக்கப்படும் சீமந்தம் அல்லது வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. (ஸ்டீபன் சாம் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வாழ்வியல் ஓர் ஆய்வு ப. 35)

    மீனவ சமய சடங்குகள் அனைத்திலும் நிகழ்வாக, தேங்காய் உடைத்தல், சூடம் பற்ற வைத்துத் தீபம் காட்டுதல், திருநீர், சந்தனம், குங்குமம் ஆகியவை தட்டில் வைத்துக் கொடுத்தல், மலர்மாலைகள் அணிவித்தல் ஆகியவை முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

    திருவிழாவின்போது சிறப்பு மதச் சடங்குகளில் மீனவர்கள் ஈடுபடுகின்றனர். மந்திரம் ஓதுதல், விரதம் இருத்தல், மொட்டை அடித்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றின்போது பல சிறப்புச் சமய சடங்குகளில் ஈடுபடுகின்றனர்.   மாலை அணிந்து விரதம் இருத்தல், புது வீட்டிற்கு அடிக்கல் நாட்டுதல், வெளியூர் பயணம் மேற்கொள்ளும் முன்பாகவும் புது படகு, வலை, கருவிகள் வாங்கி பயன்படுத்தும் முன்பாகவும் பல்வேறு சமய சடங்குகளை செய்கின்றனர்.

    இவை தவிர குமரி மீனவர்கள் பூப்புனித நீராட்டு, திருமணம் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் சமயச் சடங்குகள் செய்கின்றனர்.  திருமணத்தின்போது மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படும் தங்கத்தால் ஆன தாலி மதகுருவால் மந்திரிக்கப்பட்டு (தீர்த்த நீரால் ஆசீர்வதிக்கப்பட்டு) மணமகன் கையில் கொடுக்கப்படுகிறது.  மணமகன், மணமகள் ஆகியோர் அனைவர் முன்னிலையிலும் தேவாலயத்தில் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்.  பின்பு தேவாலயப் பதிவேட்டில் மணமகள், மணமகன் சாட்சிகளுடன் கையெழுத்து இடுகின்றனர்.  கிறிஸ்துமஸ் காலத்தில் சிறுவர்கள் “கிறிஸ்துமஸ் தாத்தா” வேடம் அணிந்து இரவில் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுகின்றனர்.  இதனை “பஜனை” என்பர்.  வீடுகளில் இருப்பவர்கள் காணிக்கை செலுத்துகின்றனர்.  இதில் பெண்களும், ஆண்களும் கலந்து கொள்கின்றனர்.  வீடுகளில் குடில்கட்டி கிறிஸ்தவக் கடவுள்களின் சிறிய உருவங்கள் (சிற்பங்கள்) வைத்து, மின்விளக்கு, நட்சத்திரம் கட்டுகின்றனர்.  கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவு சிறப்பு வழிபாடும், சடங்குகளும் ஆலயத்தில் நடைபெறுகிறது.

    முடிவுரை

    மேற்கண்ட நிலையில் குமரி மாவட்ட மீனவர்களின் தெய்வங்களை வழிபடுகிற போது தனித்த பல நம்பிக்கை மற்றும் சடங்கு முறைகளைப் பின்பற்றி  வழிபடுவதைக் காணமுடிகிறது.

    துணைநூற்பட்டியல்

    1. அமல்ராஜ். ஆர். எஸ். – புனிதர்களின் பாதையில், தமிழ் இலக்கிய கழகம், நாகர்கோவில். 1983,
    2. ஐசக் அருள்தாஸ்.ஜி – குமரி மண்ணில் கிறிஸ்தவம்,  கிப்ற்றோ, 8- 79,  குளத்துவிளை, தெங்கம்புதூர் – 629603, 2010,
    3. சேவியர். ம.பி. – பதுவை புனித அந்தோணியார்,         நாஞ்சில் பதிப்பகம், 67- 1, கோர்ட் ரோடு, நாகர்கோவில் – 1  , 2003
    4. நற்சீசன் . சே.ரா, – குமரி கிறிஸ்தவர்களின் பயணப்பாதை, நாஞ்சில் பதிப்பகம், 67-1, கோர்ட் ரோடு, நாகர்கோவில் – 1, 2000.
    5. ஸ்டீபன் சாம், என், -குமரி மாவட்ட மீனவர்களின் வாழ்வியல் ஓர் ஆய்வு,     தங்கம் பதிப்பகம்,  17- 63, மேற்கு கல்லுக்கூட்டம், 2004.
    6. Nilakanda Sastri. K.A. – History of South India

    ******

    கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,ஸ்காட் கிறித்தவக் கல்லூரி,
    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 176-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    குடத்துநீரைக் கயிறுகட்டி இழுத்துச்செல்லும் சிறுவனைத் தன் காமிராவில் சுமந்துவந்திருக்கிறார் திரு. முத்துக்குமார். இப்படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்!

    நீருக்காக நெடுந்தூரம் பயணித்துத் திரும்பியிருக்கும் இந்தப் பிஞ்சின் அவலம் நம் நெஞ்சைப் பிசைகின்றது. இந்தப் படத்துக்குப் பொருத்தமாய்க் கவியெழுதக் கவிவாணர்களைக் கனிவோடு அழைக்கிறேன்!

    *****

    மரத்தைவெட்டி மழையை நிறுத்திய நம் பிழையால் நீருக்குப் போராடுகின்றான் இந்தச் சிறுவன் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மாறுவானா மனிதன்…

    மரத்தை வெட்டி யழித்துவிட்டே
    மழையைத் தடுத்து நிறுத்திவிட்டோம்,
    தரத்தில் மனிதன் கீழிறங்கி
    தனது குடும்ப நினைவின்றி
    நிரந்தர அடிமையாய் மதுவினுக்கே
    நிலைத்தே விட்ட நிலையினிலே,
    சிரமப் பட்டே நீர்கொணரும்
    சின்னப் பிள்ளையை நினைவீரே…!

    *****

    சிரமப்பட்டு நீர் கொணர்ந்த பிள்ளையைக் கண்டு  அவனை சுமந்துபெற்ற அன்னையின் நீர்க்குடம் குளிர்ந்தது; அவள் கண்களில் நீர் முத்துத் துளிர்த்தது என்று உருக்கமாய்க் கவி வடித்திருக்கின்றார் திரு. கா. முருகேசன்.

    நீர்க்குடம்!

    அதில் நான் என்னைக் காண்கிறேன்
    அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன்!

    ஆனால் ஒரு உண்மை…..
    அது கடைகளுக்கு அல்ல என்பதில்; அது வீட்டிற்கானது!

    வேலைக்குச் சென்று வீடு திரும்பி;
    மீண்டும் தண்ணீர் எடுத்து வந்து;
    அதிலும் குடிக்க நேரமில்லாது;
    உலை வைத்து சோறுண்டு;
    கிடக்கும் போது எடுக்கின்ற தாகத்திற்காகத்தான் இத்தனை ஓட்டம்!

    இதன் வலியை அவர்கள் மட்டுமே உணர்வார்கள் !

    சிறுவயதில் பனையோலையிலும், தென்னையோலையிலும் விளையாடியதின் – புத்திக்கூர்மை!
    மண்ணில் கொஞ்சம்;
    ததும்பி ததும்பி கால்களில் கொஞ்சம்;
    வீடு வந்து சேர்ந்ததும் இரு துளி நீர்;
    குடத்தில் அல்ல!
    என்னைக் கண்ட அம்மாவின் கண்ணில் !
    ஒரு குவளை நீர் தொண்டைக்குழியில் சென்றதும்,
    பூரித்து போனாள் என் அன்னை!
    உன்னை சுமந்த நீர்க் குடம் குளிர்ந்தாயிற்று! எனக்கு இது போதும்!

    இதுதான் இக்காலத்தின் நிதர்சனம்!

    *****

    ’குழந்தைகள் தொழில்செயும் அவலநிலை அழிய, அரசின் பார்வை ஏழைகள்மீது படவேணும்; ஏழைக்குழந்தைகளும் கல்விகற்று வாழ்வில் உயரவேணும்’ எனும் சமூகநலச் சிந்தனையைத் தன் கவிதையில் விதைத்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    குழந்தைத் தொழில்..!

    எண்ணம் பலவும் எழுச்சி பெறும்
    திண்ணம் கொண்ட திறமை வரும்
    போற்ற வேண்டிய பிள்ளைப் பருவம்
    ஆற்றவும் உளது அரிய கடமைகள்
    சிறார் என்னும் சிந்தனை வந்தால்
    பொறாமை உண்டு பொதுவாக நம்மிடம்
    சிரித்து மகிழும் சிறிய வயதில்
    வரித்த சிந்தனை விரியும் பெருகி
    பள்ளி சென்று படிக்கும் பருவம்
    துள்ளும் வயதில் தளும்பும் இன்பம்
    புத்தகம் சுமக்கும் புதிய சூழலில்
    எத்துணை துன்பம் இந்த வயதில்
    பாரினில் ஏழை படிக்க வழியிலை
    யாரிடம் சொல்லி எங்கே போவது
    குழந்தைத் தொழிலது குற்ற மெனவும்
    அழகாய் உணர்ந்து அறிய வேணும்
    சட்டம் என்ன செய்யும் மகனே
    விட்டு வைத்து வேடிக்கை காட்டுது
    எச்சிலை பொறுக்க இளைய வயதில்
    இச்சை வந்திட இனியும் வேண்டா
    அரசின் பார்வை அவர்கள் மீதே
    அரணாய் வந்து அணைக்க வேணும்
    கொஞ்சம் இல்லை முற்றும்
    அஞ்சும் தொழிலிது அறவே அழிகவே

    *****

    சிறுவனின் பரிதாப நிலைக்காகத் ’தாயினும் சாலப்பரிந்து’ பாப்புனைந்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டு!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    கனவுகள்!

    ஜீன்ஸ் பேன்டும்
    ஜிகினா சட்டையுமே
    அவனது கனவு!
    குடிகாரத் தந்தையால்
    எந்தப் பயனுமில்லை.
    அனுதினமும்
    வருமானத்தைச் செலவு செய்து
    அவமானத்தைச் சம்பாதித்தான்.
    குடியால் அவன் வயிறுதான்
    தினமும் எரிந்தது.
    அடுப்பு என்றோதான்
    புகைந்தது!

    அன்றொருநாள்
    அவன் குடித்த சாராயம்
    அவனையே குடித்தது.
    குடும்பமே கதறித் துடித்தது.
    ஐயகோ…!
    அப்பாவின் வேட்டியே
    அம்மாவின் புடவை ஆனது!
    அம்மாவின் புடவையோ
    அக்காவின் தாவணி ஆனது!
    தனது ஜீன்ஸ் கனவை உதறினான்
    குடும்பப் பொறுப்பை
    உடுத்திக் கொண்டான்.
    இதோ பிறர்வீட்டில்
    தண்ணீர் ஊற்றி
    தன்வீட்டு வறுமையைக் கழுவுகிறான்.
    ஆம் அப்பன் தண்ணியடித்துக்
    குடும்பத்தைக் கெடுத்தான்
    மகனோ தண்ணீர் பிடித்துக்
    குடும்பத்தை காக்கின்றான்.
    தண்ணீர் அடித்து
    ஊர்மக்களைக் குடிக்க வைக்கிறான்
    உடன்பிறப்பைப் படிக்க வைக்கிறான்.
    போதையால் அழிந்த
    குடும்பத்தைச் சுமந்து
    புதிய பாதையை நோக்கிப்
    பயணம் செய்கிறான்.

    ”தந்தையின் குடிப்பழக்கத்தால் கெட்ட குடியைத் தன் உழைப்பால் சுமந்து புதிய பாதையில் பயணிக்கும் சிறுவன் இவன்! தண்ணீர் அடித்து ஊர்மக்களைக் குடிக்க வைக்கிறான்; உடன்பிறப்பைப் படிக்க வைக்கிறான்” என்று கல்லும் கசியும் சொல்லெடுத்துச் சிறுவனுக்குப் பா(ராட்டு)மாலை தொடுத்திருக்கும் திருமிகு. வசந்தி மணாளனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிப்பதில் மகிழ்கிறேன். கவிஞருக்கு என் பாராட்டு!

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180904 – Yashoda Krishna – A4 -lr -charcoal (When the entire world inside his stomach starts feeling the love)

    கட்டி அணைக்கின்றாள் .கண்ணிநுண் தாம்பாலே
    கட்டிய மாற்றாந்தாய் கண்ணனை: -ஒட்டி
    உறவாடும் கண்ணபிரான் ஓரிரவில் மஞ்ஞை(மயில்)
    இறகுடைய விஷ்ணு இவர்’’…..கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    KRISHNA FOR TODAY….!(ஹேப்பி கண்ணன் பிறந்தநாள்)….!
    ———————————————
    கடந்த பத்து வருடங்களாக, அடியேன் ’’காலைக் கடன்’’
    கேசவ் அனுப்பும் கண்ணன் ஓவியத்திற்கு வெண்பா வடிக்கும் (திரு)’’மாலைகடன்’’….நன்றி கேசவ்….!தொடரட்டும் நம் பணி….!

    “ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்று” மெட்டில் எழுதியது….!

    180903 – Srijayanthi Vishwaroopa 10×14” lr

    கண்ணன் திருப் புகழ்
    ————————–
    “கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று
    கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
    நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
    நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
    பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
    பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
    காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
    ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….

    இராமன் திருப் புகழ்….!
    “கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
    தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
    கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
    கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
    ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
    வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
    ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
    ஆதிகவி ஒதுமிதி காசபெரு மாளே”….!

    நிவேதனம் கோகுலாஷ்டமி
    ———————————-
    திருக்கண் ணமுது திரள்கின்ற வெண்ணை
    பருப்புதயிர் சாதம் பழங்கள் -உருக்குலைந்து
    அண்டாவில் சாறு அதிரசம் சீடைமுறுக்கு
    உண்டேனுன் நாமம் உரைத்து….!

    மார்கழி மாதத்தில் மாடுகள் மேய்த்திரவில்
    ஓர்கழி ஊது குழலோடு -ஊர்புகும்
    கார்முகில் வண்ணன்மேல் கோதூளி மின்னிட
    பார்மிசை ராப்பக லாச்சு….!

    திருவிருந்த மார்பன் திருத்துழாய் மார்பன்
    மருவிருந்த மார்பன் மகனாய்ச் -சிறையில்
    கருவிருந்த மார்பன் தெருவிருந்த மண்ணை
    பெருவிருந்தாய் உண்ட புதிர்….!

    காலை எழுந்தவுடன் கண்ணன் பெயர்சொல்லி
    மூளை அடுப்பை மூட்டிடு -மாலை
    மலைவனம் சென்றாயர் மாடுகள் மேய்க்க
    அலைபவன் பேரால் அணை(SWITCH OFF)….!

    பூந்தன மாதோடு சாந்தமும் பூசிய
    காந்தனே கண்துயில்ஏ காந்தனே -நான்தினம்
    நின்புகழ், நின்னெழில், நின்கதை, நின்னருள்
    வெண்பாவில் பாட விரும்பு….!

    டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
    —————————————————-

    அங்கை படுக்கையாய் அதரம் தலையணையாய்
    செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய் -தொங்குமெழில்
    புல்லாக்கு மேல்குடையாய் வல்லா னுடன்வாழும்
    புல்லாங் குழலுந்தன் பேறு….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (277)

    இந்த வார வல்லமையாளராக நாடறிந்த தமிழ்க் கவிஞர் வைரமுத்துவை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. கவிஞர் கண்ணதாசனுக்குப் பிறகு, தமிழில் முதுகலைப் பட்டம்பெற்ற கவிஞர் வைரமுத்து பல்லாயிரக்கணக்கில் சினிமாவுக்குப் பாடல்கள் எழுதியவர். அவரது புதுக்கவிதைகள், கள்ளிக்காட்டு இதிகாசம் போன்றவை விகடன், குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியாகி பல லட்சம் தமிழர்களால் படிக்கப்படுபவை. கடவுள்மறுப்புக் கொள்கையைக் கவியரசர் வைரமுத்து ஏற்றவர். அதனை வெளிப்படையாகத் தயங்காமல் அறிவிப்பவர். அதனால் தன் புகழும், வணிக நோக்கத்திற்கும் இடைஞ்சல்களைப் பற்றி அஞ்சாத தமிழ்க்கவிஞர் இவர். பாவேந்தர் பாரதிதாசன் பெரியாரின் அடியாராக வாழ்ந்தார். கலைஞர் கருணாநிதியின் பாதையில் கவிஞர் வைரமுத்து வாழ்கிறார். மூதறிஞர் இராஜாஜி 1946-ல் திரிவேணி என்னும் இதழில் ஆண்டாள் கற்பனை என எழுதினார் [1]. அக்கருத்தை அண்மையில் வெளிப்படுத்திய வைரமுத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் தமிழ்நாட்டில் எழுந்தன. ஆன்மீகம், நாத்திகம் என இருபுறமும் பல வாதங்களை தொலைக்காட்சி, பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் முன்வைத்துப் பரவலான அலசலுக்கு வழிவகுத்தன. தமிழின் நீண்ட, ஆழமான இலக்கிய வரலாறுகளை இன்றைய சமுதாயம் அறிதலுக்கு வைரமுத்து கட்டுரைகள் ஓர் தொடக்கப்புள்ளி. பல தமிழ்ப் புலவர்களைப் பற்றித் தம் கருத்துக்களை தினமணி நாளிதழில் எழுதிவந்த வைரமுத்து இப்பொழுது அத் தொடரை ”தமிழ் இந்து” (The Hindu group) பத்திரிகையில் தொடர்கிறார். இந்த வாரத்தில் வைரமுத்து திருநெல்வேலியில் கால்ட்வெல் பாதிரியாரும் அவரது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் பாரியநூலின் விரிவான மொழியியல், வரலாறு, அரசியல் தாக்கங்களைப் பற்றி எழுதியுள்ளார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், செயங்கொண்டார், கம்பர், அப்பர், ஆண்டாள், திருமூலர், வள்ளலார், உ.வே.சாமிநாதையர், பாரதியார், பாரதிதாசன், கருணாநிதி, மறைமலையடிகள், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஜெயகாந்தன் பற்றி எழுதிய வைரமுத்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ கண்ட கால்டுவெல் பற்றி ஆய்வுக்கட்டுரை இவ்வாரம் தந்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் பாலூற்றி அஞ்சலி செலுத்தினார் வைரமுத்து. https://patrikai.com/its-not-religious-ceremony-this-is-tamil-tradition-the-son-of-vairamuthu-explained-in-memory-of-karunanidhi-milk-poured/
    “இது இந்துமுறை சடங்கு. அதை வைரமுத்த செய்தது தவறு” என்று சிலர் சமூகவலைதளங்களில் பதிந்துவருகிறார்கள்.

    இது தவறு. ‘நீத்தார்க்கு பால் வார்த்தல்’ என்று தமிழ் மரபில் உண்டு. இறந்தவர் இடத்தை ஈரமா வைக்கிறது தமிழ் மரபு. இது இந்து மத சடங்கு அல்ல. எப்படி மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துகிறோமோ அதேமாதிரி பால் தெளித்து வணங்குவதும் நமது மண் சார்ந்த தமிழ் சார்ந்த மரபுதான்.

    இது குறித்து தொல்காப்பியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. என் தாத்தா இறந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்த யாரும் மத ரீதியான சடங்குகள் செய்யவில்லை. பால் தெளிப்பது மட்டுமே நடந்தது. என் அப்பாவின் பூர்வீக கிராமத்தில் இந்தப் பழக்கம் இன்றளவும் உண்டு.

    ஆகவே இதை பாலூற்றுவது மத சடங்கு அல்ல.. நம் மண்ணின் மரபு.. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் கபிலன் கார்க்கி.

    கால்டுவெல்: திராவிட முகவரி – கவிஞர் வைரமுத்து
    https://tamil.thehindu.com/opinion/columns/article24789366.ece
    “சம்ஸ்கிருதம்தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற கருதுகோள் ஐரோப்பிய வெளியெங்கும் ஆணித்தரமாக நம்பப்பட்டது. மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் – பண்பாடு – கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை. திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசிவந்தனர். கோல் புரூக் – காரி வில்கின்ஸ் போன்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் வடமொழியே திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம் என்ற மூளைச் சலவைக்கு ஆளாகிக் கிடந்தனர். இதற்குப் பின்னால் ஒரு ‘மொழிஅரசியல்’ இருந்தது. அதை உடைத்து தமிழ்மொழி என்றொன்று உண்டென்றும் ஞானக் கருவூலங்கள் கொட்டிக்கிடக்கும் ஆதிமொழி அதுவென்றும் எழுத்துருவில் ஐரோப்பாவிற்கு அறிவித்தவர்கள் பைந்தமிழ் பயின்ற பாதிரிமார்களே. கால்டுவெல் என்ற யுக சம்பவம் நிகழ்வதற்குக் கால்கோள் செய்தவர்களைக் காலம் மறக்காது.”

    “தமிழர் சமயம், தனித் தமிழ், இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு, தமிழ் அரசு, முதலிய கருத்தோட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும், எழுச்சிகளுக்கும், கோரிக்கைகளுக்கும் கால்டுவெல் பாதிரியாரது ‘மொழியியல்’ கருத்துரைகள் தோற்றுவாயாக இருந்தன என்பது உண்மைக்குப் புறம்பாகாது. பிற்கால அரசியல், சமூக, சமய இயக்கங்கள் பலவற்றின் ஆன்மீகத் தந்தையாகப் பாதிரியார் விளங்குகிறார். அவ்வாறாயின் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாதிரியாரது ஞானபுத்திரன் ஆவார்: மறைமலையடிகளும் அவர் போன்றாரும் ஞானப் பௌத்திரர் ஆவர்” – பேரா. க. கைலாசபதி, யாழ்ப்பாணம்

    https://www.vikatan.com/news/tamilnadu/135127-vairamuthu-released-article-about-caldwell.html
    ‘கால்டுவெல் இல்லை என்றால் திராவிடம் இல்லை’ கவிஞர் வைரமுத்து பேச்சு
    https://www.dailythanthi.com/News/State/2018/08/26003618/If-not-Caldwell-Dravid-does-not-vairamuthu.vpf
    ”இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பல்லவர் காலத்தில் ‘நமஸ்காரம்’ என்றார்கள். விஜயநகர ஆட்சியின்போது ‘தாசானு தாசன்’ என்று தெண்டனிட்டுக்கொண்டார்கள். நவாப்புகளின் ஆட்சியில் ‘சலாம் அலேகும்’ என்றார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் ‘குட் மார்னிங்’ என்றார்கள். விடுதலைப் போராட்ட இந்தியாவில் ‘வந்தே மாதரம்’ என்றார்கள். விடுதலைக்குப் பின் ‘ஜெய்ஹிந்த்’ என்றார்கள். திராவிட இயக்கம் வளர்ந்த பிறகுதான் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் ‘வணக்கம்’ என்று வாய் மணக்கச் சொன்னார்கள்.

    கால்டுவெல் கண்டறிந்த திராவிடம் என்பது தமிழர்களின் சொல்லை மட்டுமல்ல இனத்தை, நிலத்தை, வரலாற்றை, கலாசாரத்தை மீட்டுக்கொடுத்தது. அயர்லாந்திலே பிறந்து இங்கிலாந்திலே வளர்ந்து தமிழ்நாட்டில் இறங்கி சென்னை முதல் இடையன்குடி வரை கால்நடையாகவே பயணப்பட்டு தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டு செய்து மறைந்து இடையன்குடி ஆலயத்தில் அடக்கமாகிக்கிடக்கும் கால்டுவெல் ‘திராவிட கொலம்பஸ்’ என்று கொண்டாடத்தக்கவர்.

    கால்டுவெல்லின் பெருமையை இலக்கண உலகம் புரிந்துகொள்வதைவிட அரசியல் உலகம் புரிந்துகொள்வதைவிட இன்றைய இளைய உலகம் புரிந்துகொள்ளவேண்டும். கால்டுவெல்லை அறிந்துகொண்டால் உங்களுக்குப் பேரறிவின் பெருங்கதவு ஓசையோடு திறக்கும். கால்டுவெல்லின் தமிழ்த்தொண்டைக் காலம் வணங்குகிறது. பைன் மரங்களுக்கிடையே பிறந்து பனை மரங்களுக்கிடையே உறங்கும் மொழியறிஞனை நாங்களும் வணங்குகிறோம்.” – வைரமுத்து, பாளையங்கோட்டைச் சொற்பொழிவு.

    கால்ட்வெல் தெரிந்தெடுத்த “திராவிட” என்னும் ஆரியமொழிச் சொல் இன்று மொழியியல் துறையில் நிலைத்துவிட்டது: https://en.wikipedia.org/wiki/Dravidian_languages   இன்றைய அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்வதானால், Dravidian = Tamil-like languages எனப் பொருள்படும். பவளம் > ப்ரவாலம், கமுகு > க்ரமுகம், … என்றெல்லாம் ஆதற்போல, சம்ஸ்கிருதத்தில் தமிழ் > தமிட > த்ரமிட/த்ரவிட எனத் திரிந்துள்ளது. பேரா. ஆ. ரா. வெங்கடாசலபதி கால்ட்வெல்லுக்கு முந்தைய பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் சென்னை கலெக்டர் திராவிட மொழிக் குடும்பக் கோட்பாட்டை வெளிப்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான முக்கிய ஆய்வுகள் மிச்சிகன் பல்கலைப் பேரா. தாமஸ் டிரவுட்மன் அவர்களால் செய்யப்பட்டது. பேரா. இராம. சுந்தரம் அழகாக அதனைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். https://tamil.thehindu.com/opinion/columns/article24798085.ece

    இந்திய பழைய வரலாற்றை அறிந்துகொள்ள, சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மூன்று மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன:
    (1) இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் – சர் வில்லியம் ஜோன்ஸ் – 1786.
    (2) தமிழ் அதன் திராவிட மொழிக் குடும்பம் – பிரான்சிஸ் வைட் எல்லிஸ் – 1816.
    (3) சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிப்பு – சர் மார்ட்டைமர் வீலர் – 1924.

    கால்ட்வெல் வாழ்ந்தபோதே வெளியான இரண்டாம்பதிப்பு (1875 CE) பல தகவல்களைக் கொண்டுள்ளது. படித்தருளுக.
    https://archive.org/stream/comparativegramm00caldrich#page/n5
    அறிஞர் கால்ட்வெல் திராவிட மக்களின் சமயம், சமூக அமைப்பை விளக்கினார். அவர் காலத்தில் சங்க இலக்கியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அச்சேறவில்லை. தமிழ்ப்பீடம் அமைந்துள்ள  ஹார்வர்ட் என்றால் அறியாத தமிழர் இன்று இல்லை. ஹார்வர்ட் பல்கலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சங்க இலக்கியத்தை ஜார்ஜ் ஹார்ட் ஆராய்ந்தார். அவரது சங்க காலச் சமயம், சமூகம் பற்றிய ஆய்வுகளும் புதிய ஒளி அளிப்பவை. இந்தியாவில் வேதமொழியாளர் சமயம், சங்கத் தமிழர் சமயம் இரண்டுக்குமான வேறுபாடுகளை இவ்வாய்வுகள் காட்டுகின்றன. ஹூஸ்டன் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியரைப் பதவியில் அமர்த்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

    தமிழ்த் தேசிய வாதங்கள் ஃபேஸ்புக் சமூக தளத்தில் தமிழர்களிடையே பிரபலம். அவ்வியக்கத் தலைவர் பெ. மணியரசன் ஓர் ஆழமான எதிர்வினை வைரமுத்து கட்டுரைக்கு ஆற்றியுள்ளார்.
    http://www.tamizhvalai.com/archives/19353
    ”ஆரியம் வெட்டிய திராவிடப் படுகுழிக்குள் வீழ்ந்தார் கால்டுவெல்” என்கிறார் திரு. பெ. மணியரசன். ஆனால், தொல்திராவிடம் என்னும் முந்துமொழி (Proto-Dravidian) என்று கால்ட்வெல் கருதுகோள் செய்து, அதற்கு பெயர் சூட்டியதில் பிழையேதுமில்லை. மொழியியல் என்னும் விஞ்ஞானத்துறையின் அறிஞர்கள் யாவரும் முந்துதொல்மொழி (Proto-Language) என்ற கருதுகோளை ஏற்பவர்கள் தாம் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட மூலமொழியில் இருந்து சங்கத்தமிழ் மாறியிருக்கிறது. அவை இரண்டும் ஒன்றல்ல. நேற்றைய ‘இந்தியா டுடே’ பத்திரிகையில் சிந்துவெளி மக்கள் முந்துதிராவிட மொழி பேசியிருக்கலாம் என்று மரபணு ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளன. அதாவது, அங்கே சங்கத் தமிழ் பேசவில்லை; ஆனால் தமிழோடு தொடர்புடைய ஒரு பழைய திராவிட மொழி அந்த நாகரீகத்தைக் கட்டியெழுப்பியோர் தாய்மொழி என்பது கருத்து.

    உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு முதல் தமிழ்ச் சங்கம் அமெரிக்காவில் தோன்றிய சிகாகோ நகரில் நடக்க உள்ளது. இந்தியவியல் (Indology) குழுமங்களிலே பல நூற்றுக்கணக்கான அறிஞர்கள் வடமொழி நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை இணையம் வாயிலாகப் பகிர்ந்து வருவதைக் காண்கிறோம். அதேபோல, இன்னும் சில லட்சம் பழைய புத்தகங்கள் (19-ஆம் நூற்றாண்டு, 1970 வரை) இணைய உலாக் காண்பதும், புகழ்பெற்ற, உலகத்தரம் வாய்ந்த ஆய்வேடுகளில் தமிழ், மொழியியல், தொல்லியல் கட்டுரைகளைத் தமிழர்கள் இனிவரும் காலங்களில் செய்வராக! அப்பொழுதுதான் செந்தமிழின் பெருமையும், திராவிட மொழியியலின் வளர்ச்சியும் உலக அறிஞர்களை நம் பக்கம் திரும்பச் செய்யும்.

    நா. கணேசன்

    [1] ஆண்டாள் யார்? – மூதறிஞர் இராஜாஜி, திரிவேணி, சென்னை, செப்டம்பர் 1948.
    ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் – முகநூலில் இருந்து.
    http://viduthalai.in/page-1/156763-2018-02-03-10-03-17.html

    [2] திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் தந்த கால்டுவெல் பாதிரியாருக்கு இந்தியா வெளியிடும் தபால்தலை!
    http://nganesan.blogspot.com/2010/03/caldwell-indian-stamp.html

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • பூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++

    1. https://youtu.be/CE1Q6Iij4rk
    2. https://youtu.be/w7QKVIIWBKg
    3. https://youtu.be/yqvQBQBiAsw
    4. https://youtu.be/yqvQBQBiAsw

    ++++++++++++

    பால்மய வீதி  ஒளிமந்தை
    பற்பல பரிதி மண்டலக் கோள்கள்
    உருவாக்கிப்
    பந்தாடும் பேரங்கு  !
    சிதையும் அசுரக் காலக்ஸி
    ஓடும் விண்மீன் உண்டாக்கும்.
    கோள்கள் சுற்றிவர
    கோடான கோடி பரிதிகள்
    மையக் கருந்துளை
    வட்டமிடும்.
    சுழி மய மான ஒளி மந்தைகள் !
    பூமி சிறியது !
    பூமி சுற்றும் சூரியன் சிறியது !
    சூரியன்கள் சுற்றி வரும்
    நமது பால்வீதி போல்
    பூதக் காலக்ஸிகள் உள்ளன !
    கோடான கோடி
    ஒளிமந்தைகள் விரைவாய்
    உருவாகிச் செல்லும்
    பிரபஞ்சக் குமிழிதான் பெரியது !
    விரியுது விளிம்புடன் !

    +++++++++++

    ‘புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது ‘

    ஜான் ஹெர்ச்செல் (John F. Herschel) (1792-1871)

    தொலைநோக்கியின் அல்மா  [ALMA] கருவி மூலம் நோக்கினால் வெகுதூரக் காலக்ஸிகளைத் துல்லியமாகக் காண முடிகிறது.  12.4 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில்  உள்ள  அசுர ஒளிமந்தை [COSMOS-AZTECH-1]  நமது பால்வீதி ஒளிமந்தையை விட 1000 மடங்கு விரைவில் விண்மீன்களை உருவாக்குகிறது.  அல்மா மூலம் நோக்கியதில் தோன்றும் தட்டுகளில் அடர்த்தியான வாயுக் குவிப்பு இருப்பதையும், அந்த திணிவு வாயுக் குவிப்பு களில் தீவிர விண்மீன்கள் எழுச்சி நேர்வது தெரிகிறது.  இந்த வானியல் அறிவிப்பு 2018 ஆகஸ்டு 29 இல் வெளியாகி உள்ளது.

    கென் – இச்சி தடாக்கி   [Ken-ichi Tadaki, Postdoctoral Researcher, National Astronomical Observatory, Japan] 

    21018 ஆகஸ்டு 29 ஆம் தேதி ஜப்பான் வானியல் விஞ்ஞானி கென் – இச்சி தடாக்கி  இயற்கை வெளியீட்டில் அறிவித்திருந்தார்.  அந்த அறிவிப்பு 12.4 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருந்த ஓர் அசுர ஒளிமந்தை நிகழ்ச்சி பற்றி விளக்கமாகத் தெரிவித்தது. அல்மா கருவி மூலம் [(ALMA) Atacama Large Millimeter Array] ஜப்பான் ஆய்வுக் குழு நோக்கியதில் ஒளிமந்தையில் மூலக்கூறு வாயு முகில்கள் கொந்தளிப்புடன் உள்ளதாகவும், அவையே அண்ட வெளியில் விண்மீன் உருவாக்கத்தைத் தூண்டின என்றும் கூறியுள்ளார்.

    பூர்வீக அசுர காலக்ஸிகளே [ஒளிமந்தைகளே] தற்போதைய பிரபஞ்சத்தின் பேரளவு நீள்வட்ட காலக்ஸிகளின் மூதாதைகள் என்றும் அறிவிப்பு கூறியது.   ஆதலால் ஜப்பானிய ஆய்வுக் குழுவின் வெளியீடே ஒளிமந்தைகள் தோற்ற வளர்ச்சியை அறிய பாதை காட்டியது.

    அசுர காலக்ஸிகளே விண்மீன்கள் தெறிக்கும் காலக்ஸிகள் [Starburst Galaxies] என்ற பெயரில், நமது பால்வீதி ஒளிமந்தையை விட 1000 மடங்கு வேகத்தில் துரிதமாய் விண்மீன்களைத் தோற்றுவிக்கிறது.  ஜப்பான் ஆய்வுக்குழு நோக்கிய அசுர ஒளிமந்தை கொந்தளிக்கும் காஸ்மாஸ் – ஆஸ்டெக்-1 [COSMOS-AZTECH -1].   முதன்முதல் அதைக் கண்டுபிடித்தது ஹவாயித் தீவில் உள்ள ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் தொலஒநோக்கி.  அதன் பின்னர் மெக்ஸ்கோ எல்லெம்டி [] தொலைநோக்கி அந்த ஒளிமந்தையில் ஏராளமான கொள்ளளவு காரன்மானாக்ஸைடு வாயு இருப்பதைக் கண்டுபிடித்தது.

    ஆய்வாளர் காஸ்மாஸ்-ஆஸ்டெக் அசுர ஒளிமந்தையில் விண்மீன்கள் தோற்றுவிக்கும் மூல உபரிகள் இருப்பதை அறிந்தார்.  அசுரக்  காஸ்மாஸ் ஒளிமந்தையின் உபரி மூல வாயுக்கள் முழுவதும் விண்மீன்களாக 100 மில்லியன் ஆண்டு கள் ஆகும் என்றும், மற்ற ஒளிமந்தைகளை விட 10 மடங்கு வேகத்தில்  தோன்றும் என்றும் அறிய வருகிறது.  காஸ்மாஸ் காலக்ஸி ஏன் கொந்தளிக்கிறது என்று விஞ்ஞானிகள் காரணம் கூற முடியவில்லை.  ஒருவேளை வேறோர் ஒளிமந்தை மோதி இணைந்திருக்கலாம்  என்று கருதுகிறார்.

    ++++++++++++++++++++

     

    வில்லியம் ஹெர்ச்செல்

    Our Milky Way Galaxy

    பால்மய வீதியை முதன்முதலில் நோக்கிய விஞ்ஞானி கலிலியோ

    1600 ஆண்டின் ஆரம்ப காலத்தில் இத்தாலிய வானியல் விஞ்ஞான மேதை கலிலியோதான் முதன்முதல் நமது பால்மய வீதி (Milky Way Galaxy) காலக்ஸியைத் தனது தொலைநோக்கியில் கண்டு உளவு செய்தவர். அந்த ஒளி விண்ணரங்கில் எண்ணற்ற விண்மீன்கள் இருந்ததைக் கண்டு வியந்தார். அதற்குப் பிறகு 1755 இல் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவல் கென்ட் (Immanuel Kant) பால்மய வீதி குவியாடி போன்ற விண்மீன்களின் மந்தை (Lens-shaped Group of Stars) என்றும், அதனைப் போல் வேறு விண்மீன்களின் மந்தைகள் உள்ளன வென்றும் கூறினார். பிரிட்டனில் பணிபுரிந்த அடுத்தொரு ஜெர்மன் வானியல் நோக்காளர் வில்லியம் ஹெர்ச்செல்தான் (1738-1822) முதன்முதலில் விஞ்ஞான ரீதியாக பால்மய வீதியைத் துருவி ஆராய்ந்து எழுதியவர். அதற்குப் பிறகு அவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லும் புதல்வர் ஜான் ஹெர்ச்செல்லும் வில்லியத்தைப் பின்பற்ற ஏராளமான காலாக்ஸிகளைத் தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்துப் பதிவு செய்தார்கள்.

    Carina Nebula

    காலக்ஸியும் அதில் சுற்றிவரும் கோடான கோடி விண்மீன்களும்

    காலக்ஸி என்றால் என்ன ? சூரியனைப் போன்ற கோடான கோடி விண்மீன்கள் மையக்கண் ஒன்றைச் சுற்றிவரும் ஒரு பூத வடிவான விண்ணரங்கமே காலக்ஸியாகக் கருதப்படுகிறது. அந்த காலக்ஸியில் விண்மீன்களுடன், விண்மீனைச் சுற்றும் அண்டக்கோள்களும், ஒளிமய நிபுளாக்களும், வாயுக்களும், தூசிகளும் மண்டிக் கிடக்கின்றன ! மேலும் காலக்ஸிகளில் மாபெரும் திணிவும், மையத்தில் அளவற்ற ஈர்ப்பாற்றலும் கொண்ட கருந்துளை (Black Hole: A Single Point of Infinite Mass & Gravity) ஒன்றும் இருக்கலாம். பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான திணிவாகக் (Mass) கருதப்படும் 50 பில்லியனுக்கு மேற்பட்ட காலக்ஸிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் ! கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டம் இல்லாமல், அவையே பிரபஞ்சத்தின் 90% திணிவைக் கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.

     

    காலக்ஸிகள் சில சுருளாக இருப்பவை. சில நீள்வட்ட வடிவில் இருப்பவை. சில கோணலாக இருப்பவை. பால்மய காலக்ஸியும் அதன் அருகே உள்ள அன்டிரோமேடா காலக்ஸியும் சுருளானவை. காலக்ஸி முழுவதும் ஓர் அச்சில் சுற்றுவதால் விண்மீன்களைக் கவ்விக் கொண்டு சுருள் கரங்கள் தோன்றின. நீள்வட்ட காலக்ஸிகளில் சுருள் கரங்கள் எழாமல் பொதுவாகப் பழைய விண்மீன்களும் மிகச் சிறிதளவு வாயுக்களும், தூசிகளும் உள்ளன.

    குடை ராட்டினம் போல் நமது பரிதி மண்டலம் தனித்து ஒரு மையக்கண்ணைச் சுற்றி வருகிறது பால்மய வீதி காலக்ஸியே ! பால்மய வீதியில் பரிதியைப் போல் நூறு பில்லியன் விண்மீன்களும், ஒருவேளை கருந்துளை ஒன்றும் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. நமது பால்மய வீதியில் விண்மீன் முந்திரிக் கொத்துகளும் (Star Clusters) அண்டக் கோள்களும், ஒளிமயமான நிபுளாக்களும், வாயு மேகங்களும், தூசிகளும், வெற்றிடமும் சேர்ந்து உள்ளன. பூர்வீக விண்மீன்களும், நெருங்கி அடர்ந்த கொத்துக்களும் (Denser Clusters), காலக்ஸி மையத்துக்கு அருகிலும், இளைய விண்மீன்களும், தளர்ந்த கொத்துக்களும் (Open Clusters) காலக்ஸி தளத்தட்டில் அமைந்துள்ளன !

    பால்மய வீதி காலக்ஸியின் தனித்துவச் சிறப்புகள்

    நமது பரிதி மண்டலம் சுற்றிவரும் பால்மய வீதி என்பது ஒருவிதச் சுருள் காலக்ஸியே (Spiral Galaxy). தீபாவளி சுருளாழி மத்தாப்பு போல் சுழல்வது. பால்மய வீதியின் விட்டம் சுமார் 100 ஆயிரம் ஒளியாண்டு தூரம் (One Light Year : ஓர் ஒளியாண்டு என்பது தூர அளவு : அதாவது விநாடிக்கு 186,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி ஓராண்டு செல்லும் தூரம்). மையக்கண்ணின் தடிப்பு ஈராயிரம் ஒளியாண்டு தூரம். மையக்கண்ணில் பழைய விண்மீன்களும் ஒரு கருந்துளையும் இருக்கலாம் என்று கருதப் படுகிறது. பால்மய வீதியைச் சுற்றிலும் ஓர் “ஒளிவட்டம்” (Halo) விண்மீன் கொத்துக்களாலும் (Band of Star Clusters), கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்ட மேகத்தாலும் (Cloud of Dark Matter) அமைக்கப் பட்டுள்ளது ! அந்த சுருள் ஆழியில் நான்கு கரங்கள் சுற்றி வருகின்றன. ஆயிரக் கணக்கான விண்மீன்கள் தோரணங்களாய்ப் பின்னிய நான்கு கரங்களைத் தாங்கி பால்மய காலக்ஸி தன் மையத்தைக் கொண்டு சுற்றி வருகிறது !

     

    பரிதி மண்டலம் நான்கு கரங்களில் ஒன்றான ஓரியன் கரத்தில் (Orion Arm) மையத்திலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது ! நமது பூமி சூரியனைச் சுற்றி வருவதுபோல், சூரியனும் பால்மய வீதியின் மையத்தை விநாடிக்கு 137 மைல் வேகத்தில் (220 கி.மீ./விநாடி) சுற்றி வருகிறது. அந்த வேகத்தில் சூரியன் ஒருமுறை முழுவட்டம் சுற்றிவர 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப் படுகிறது !

    விண்முகில் எனப்படும் நிபுளாக்கள் (Nebulae) என்றால் என்ன ?

    1924 இல் அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் முதன்முதல் ஒரு சுருள் வடிவான நிபுளாவைக் கலி·போர்னியா வானோக்ககத் தொலைநோக்கியில் கண்டார். நிபுளா என்றால் முகில் என்பது பொருள். அகிலத் தூசிகள், அண்டவெளி வாயுக்கள் சீர்குலைந்த விண்மீன்களில் சிதறிப்போய்க், காட்சி முறையில் கையாளப்படும் ஒரு சொல் நிபுளா ! சில வாயுக்களாய் எஞ்சிய சிதைவுக் காலக்ஸிகள் ! சில நிபுளாக்கள் பேரொளியுடன் சுருளாக, அண்டங்களாக, கதிர் வீசுபவையாக, பிரதிபலிப்பவையாகவும் (Spiral, Planetary, Emission & Reflection Nebulae) உள்ளன. மற்றவை சூப்பர்நோவா வெடித்துச் சிதறிய துணுக்குகள். அண்ட நிபுளா என்பது (Planetary Nebula) வாயு முகில்களே ! தொலைநோக்கியில் பார்க்கும் போது கோள வடிவில் தெரிவதால் அவை அண்ட நிபுளாக்கள் என்று அழைக்கப்பட்டன. கதிர்வீச்சு நிபுளா (Emission Nebula) என்பதில் ஒளிவீசும் வாயு முகில்கள் உள்ளன. அவற்றின் உள்ளே அல்லது பின்னே சூடாக ஒளிவீசும் விண்மீன் இருக்கிறது. வாயுக்கள் அயனிகளாய்ப் பிரிந்து உயர்சக்தி புறவூதாக் கதிர்களை (High Energy Ultra-Violet Radiation) அவை உமிழ்கின்றன ! உதாரணமாக ஓரியன் நிபுளாவில் (Orion Nebula) ஹைடிரஜன் வாயுள்ள ஒருவிதப் பச்சை நிற முகில் தெரிகிறது.

    பிரபஞ்ச காலக்ஸிகளை ஆராய்ந்த ஹெர்ச்செல் குடும்பத்தார்

    பிரிட்டிஷ் ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல், அவரது தங்கை கரோலின் ஹெர்ச்செல், தனயன் ஜான் ஹெர்ச்செல் ஆகிய மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விந்தையான பல ஒளிமீன் மந்தைகளை விண்வெளியில் கண்டுபிடித்து, வானியல் வரலாற்றில் புரட்சியை உண்டாக்கினார்கள். வில்லியம் ஹெர்ச்செல் யுரேனஸ் புதுக்கோளையும், அதனிரு துணைகோளையும் கண்டவர். தங்கை கரோலின் சகோதரன் வில்லியத்துடன் துணையாகப் பணியாற்றி அவற்றைத் தொடர்ந்து பதிவு செய்து, சில வால்மீன்களையும் கண்டு பிடித்தவர். வில்லியத்தின் மகன் ஜான் ஹெர்ச்செல் வானியல், கணிதம், பெளதிகம் [Physics], நிழற்பட இரசாயனம் [Photochemistry], விஞ்ஞான வேதாந்தம் [Philosophy of Science] ஆகிய துறைகளில் தனது மேம்பட்ட பங்கை முக்கிய பகுதியில் அளித்திருக்கிறார். சார்லஸ் டார்வின், மைக்கேல் ·பாரடே, மேரி ஸோமர்வில் மற்றும் பல உலக மேதைகள் அவருடன் கொண்டிருந்த 7500 தொடர்புக் கடிதங்கள், அவரது நூற் களஞ்சியத்தில் [Archives] பாதுகாப்பாய் சேமித்து வைக்கப் பட்டுள்ளன.

     

    பால்மய வீதி ஒளிமந்தை

    தந்தையைப் பின்பற்றி 20 அடி, 40 அடி குவிநீளத் தொலை நோக்கிகளில் வானைக் கண்ணளாவித் தனயன் ஜான் ஹெர்ச்செல் புரிந்த பணிகள் அநேகம். தென்னாப்பிக்காவின் தெற்குக் கோடியில் உள்ள நன்நம்பிக்கை முனையில் [Cape of Good Hope] பல்லாண்டுகள் தங்கி தென் மண்டல விண்கூரையைத் [Southern Celestical Hemisphere] தொலைநோக்கியில் உளவு செய்து 3347 இரட்டை விண்மீன்களையும் [Double Stars], 2602 நிபுளாக்களையும் [Nebulae] கண்டு பிடித்தார். அவர் வெளியிட்ட முதல் நிபுளா அட்டவணையில் [First Catalogue of Nebulae] காணும் 5079 பால்மய ஒளிமீன் மந்தைகளில் தந்தையார், வில்லியம் ஹெர்ச்செல் கண்டவை 2477. ஜான் கண்டவை: 2602.

    மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நிழற்படத் துறையை [Photographic Works] வளர்ச்சி செய்த முன்னோடிகளில் முக்கிய படைப்பாளியாகக் கருதப்படுவர், ஜான் ஹெர்ச்செல். ‘·போட்டோகிரா·பி ‘ [Photography] என்னும் பெயரைப் படைத்தவ§ அவர்தான். நிழற்படத் துறையில் ‘எதிர்ப்படநிழல் ‘, ‘நேர்ப்படநிழல் ‘ [Negative, Positive Films] என்னும் வார்த்தைகளைப் படைத்தவரும் ஜான் ஹெர்ச்செல்தான்!

    ஜான் ஹெர்ச்செல் புரிந்த மகத்தான விஞ்ஞானப் பணிகள்

    ஜான் ஹெர்ச்செல் 1792 இல் இங்கிலாந்து ஸ்லோவ் [Slough] என்னும் நகரில் பிரிட்டனில் குடிபுகுந்த ஜெர்மன் வில்லியம் ஹெர்ச்செலுக்குப் பிறந்த ஏக புதல்வன். கேம்பிரிட்ஜில் உள்ள புனித ஜான் கல்லூரியில் பயின்று கணிதத் துறையில் 1816 இல் பட்டம் பெற்றார். ஒப்பற்ற வானியல் விஞ்ஞானிகளான தந்தை வில்லியம், அத்தை கரோலின் இருவராலும் ஜான் வளர்க்கப் பட்டார். அவர் இருவது அருகில் வளர்ந்த ஜான் ஹெர்ச்செல் வானியல் துறையில் வல்லமையும், தொலை நோக்கி மூலம் வானோக்கி உளவும் பயிற்சியும் பெற்றார். தந்தையாரைப் பின்பற்றி அவர் கண்டுபிடித்த பால்மய ஒளிமீன்களின் எண்ணிக்கையை மிகையாக்கி ஆயிரக் கணக்கான இரட்டை மீன்கள் [Double Stars], ஒளிமீன் மந்தைகள் [Star Clusters], நிபுளாக்கள் [Nebulae] ஆகியற்றைக் கண்டுபிடித்தார். முதலில் (1864) வெளிவந்த நிபுளா, விண்மீன் திரட்சி பொது அட்டவணையில் [General Catalogue of Nebulae & Clusters] ஜான் ஹெர்ச்செல் மற்றும் தந்தையார் வில்லியம் ஹெர்ச்செல் இருவரும் கண்டவை 3347 இரட்டை விண்மீன்கள்; 2400 நிபுளாக்கள்.

    ஒளிமந்தை -1

    இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்த ஜான் ¦†ர்ச்செல் எவ்விதக் கல்வித் துறையிலும் பதவி ஏற்காமல் வாழ்நாள் முழுதும் வான்வெளி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். அவரது கல்லூரி கணித ஆசிரியர், உட்ஹவுஸ் [Woodhouse] என்பவர். நியூட்டன் ஆக்கிய கால்குலஸ் [Calculus] போலின்றி சற்று எளிதான லெப்னிட்ஸ் [Leibnitz] படைத்த, கால்குலஸ் அணுகுமுறைக் கணிதத்தை ஆங்கிலத்தில் எழுதியவர் உட்ஹவுஸ்! கேம்ப்ரிட்ஜ் கல்லூரிப் பாடத்திட்டத்தில் ஏனோ லெப்னிட்ஸின் கால்குலஸ் அணுகு முறைகள் சேர்க்கப் படவில்லை. ஜான் தனிதாகத் தானாகப் படித்து அவ்வித எளிதான கால்குலஸ் அணுகு முறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1813 இல் கணிதத்தில் முதல்வராகத் தேறி முதல்நிலைப் பட்டம் பெற்றார்.

    ‘கோட்டே தேற்றத்தின் மகத்தான விளைவுப்பயன் ‘ [On a Remarkable Application of Cotes’s Theorem] என்னும் கணித விளக்கவுரையை எழுதி, ராயல் சொஸைட்டியின் ·பெல்லோ [Fellow of Royal Society] ஆனார். 1820 இல் இரண்டு ‘முடிவுறும் வேறுபாடுகளின் பயன்கள் ‘ [Applications of Finite Differences] என்னும் கணிதச் சிறப்பு நூல்களை வெளியிட்டார். 1820 ஆண்டுகளின் முடிவில் கணித ஆய்வுகளிலிருந்து விலகி, ஜான் ஹெர்ச்செல் தன் முழு ஆர்வத்தையும் வானியல் துறையில் [Astronomy] மூழ்க்கினார்.

    ஜான் ஹெர்ச்செல் வானியல் ஆய்வுத் துறையில் நுழைவு

    78 ஆவது வயதில் [1816] தந்தை வில்லியம் ¦†ச்செல் வானியல் பணியில் தளர்ச்சி யுற்றதும், ஜான் ஹெர்ச்செல் அப்பணியை அவர்சார்ப்பில் தொடர்ந்தார். 1822 இல் வில்லியம் காலமானதும்,அத்தை கரோலின் மீண்டும் ஹானோவர், ஜெர்மனிக்குச் சென்றார். அந்த ஆண்டில்தான் ஜான் ஹெர்ச்செல் சந்திர கிரகணத்தைப் புதிய முறையில் கணிக்கும் [Eclipses of the Moon] சிறியதோர் வானியல் விஞ்ஞான முதல் ஆய்விதழை வெளியிட்டார். ஆனால் அவரது முதற் பெரும் பதிப்பு என்று கருதப்படுவது: லண்டன் ராயல் சொஸைடி வெளியிட்ட ‘இரட்டை விண்மீன்களின் அட்டவணை’ [Catalogue of Double Stars (1824)]. வில்லியம் ஹெர்ச்செல்லைப் போல், ஜானும் ஆழ்வெளியில் அதிதூரத்தில் நகரும் விண்மீன்களின் [Deep Space Distant Stars] போக்கை நோக்கி வந்தார். தொலை விண்மீன் ஒன்றின் ‘இணைத்திரிபு இடஅமைப்பைக் ‘ [Parallax of a Star] கணிக்க முயன்றார். அப்போது இரட்டை விண்மீன்கள் யாவும் ஓர் ஈர்ப்பு மையத்தைச் சுற்றி வரக் கண்டு, அவற்றின் சுற்றுவீதிகளைக் [Orbits] கணிக்க, முதன்முதல் கணித முறைகளை வகுத்தார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொஸைடி அப்பணிக்குத் தனது ராயல் தங்கப் பதக்கத்தை அளித்தது.

    பல்வகை ஒளிமந்தைகள்

    1834-1838 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் கோடியில் உள்ள நன்னம்பிக்கை முனையில் [Cape of Good Hope] தங்கி தென்னக விண்கூரையை [Southern Hemisphere] நோக்கி உளவு செய்து, பால்மய விண்மீன்கள், நிபுளாக்கள் ஆகியற்றைப் பதிவு செய்தார். அங்கே தான் கொண்டுவந்த 20 அடி குவிநீளத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வான்குடையை ஆய்வு செய்தார். தென்னாப்பிரிக்க வானில் அவர் கண்ட விந்தைகள்: 1835 இல் திரும்பி பூமி நோக்கி வந்த ஹாலியின் வால்மீன் [Halley ‘s Comet, Edmund Halley (1656-1742)] அவரது தொலைநோக்கியின் கண்ணில் பட்டது. வால்மீன்களின் விந்தை யான போக்குகளை ஆராய்ந்த போது ஈர்ப்பு விசையைத் தவிர வேறு பலதீவிர விசைகளும் அவற்றின் போக்கைப் பாதிக்கின்றன என்று அறிந்தார். பரிதியிலிருந்து வால்மீனை அப்பால் விரட்டும் விசையை அவரால் கணித முறையில் வகுக்க முடிந்தது. அப்போதுதான் ஜான் ஹெர்ச்செல் முதன் முதல் பரிதிக் காற்றைப் [Solar Wind] பற்றிக் கண்டுபிடிக்க ஏதுவாயிற்று! வால்மீனைத் தள்ளும் விலக்கு விசைக்கு [Repulsive Force], பரிதியின் காற்றே காரணம் என்பதை எடுத்துக் காட்டினார். மேலும் வால்மீனின் அண்டத்தி லிருந்து வாயுக்கள் ஆவியாய் வெளியேறுகின்றன என்று முதலில் கண்டுபிடித்தவரும் ஜான் ஹெர்ச்செல்லே! 1847 இல் தென்னாப்பிரிக்காவில்தான் கண்டுபிடித்த வானியல் விந்தைகளை நூலாக வெளியிட்டு, லண்டன் ராயல் சொஸைடியின் இரண்டாவது கோப்லே தங்கப் பதக்கத்தைப் [Copley Medal] பெற்றார்.

    ஆழ்வெளியில் ஒளிவீசும் பால்மய காலக்ஸி, நிபுளாக்கள்

    ஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன! பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை! அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன! ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.

    பல்வேறு ஒளிமந்தைகள்

    ஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது! அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி! நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன! காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம்! நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது! [Light Years -Distance light covers in a year at the rate of 186000 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும்! ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.

    நிபுளாக்கள் என்பவை யாவை ? காலக்ஸிகளை உற்பத்தி செய்யும் மூல ஒளிமய முத்துக்களைக் [Materials that form Galaxies] கொண்ட, அல்லது காலக்ஸி விண்மீன் மந்தைகளைப் பெற்ற ஒளிமுகில் கூட்டம்! அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble (1889-1953)] வெளியிட்ட ‘நிபுளாக்களின் பேரரங்கம் ‘ [The Realm of the Nebulae] என்னும் நூலில் காலக்ஸியானது பில்லியன் கணக்கில் விண்மீ ன்களை கோளத்தில் உள்ளடக்கிக் கொண்டு, பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் இருக்கிறது என்று சொல்கிறார். நமது பால்மய வெளிக் காலக்ஸி பில்லியன் காலக்ஸிகளில் ஒன்றானது! எத்தனை வகையான விண்மீன் ஒளித்தீவுகள் உள்ளன ?’ நிபுளா ‘: நிபுளா [Nebula] என்னும் சொல்லுக்கு ‘முகில் ‘ [Cloud] என்று அர்த்தம். அண்டக் கோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் [Planets, Comets, Astroids] தவிர ஏனைய வானியல் ஒளித்தீவுகள், ஒளி மந்தைகள் யாவும் முதலில் ஒரு சமயம் நிபுளாக்கள் என்று குறிப்பிடப் பட்டன. அப்பழைய அர்த்தத்தில் இன்னும் சில வானியல் நூல்கள் நிபுளா என்னும் பதத்தைப் பயன்படுத்தி வருவதில் குழப்பம் உண்டாகலாம்!

     

    சில சமயம் காலக்ஸிகள் [Galaxies (M51)], விண்மீன் மந்தைகள் [Star Clusters], அகிலவெளி மீனொளி வாயு/தூசி முகில்கள் [Intersteller Gas/Dust Clouds] ஆகியவற்றை நிபுளாக்கள் என்று குறிப்பிடுகிறோம். துல்லியமாகக் கூறப்போனால் விண்மீன் மந்தைகளைக் குறிப்பிடாது ‘நிபுளா ‘என்னும் சொல் வாயுமயம் அல்லது தூசிமயம் கொண்ட ‘முகிலுக்கு’ மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெரும்பான்மை யாக நிபுளாவின் முகிலில் இருப்பது ஹைடிரஜன் வாயு! மில்லியன் விண்மீன்கள் ஈர்ப்பு விசைகளால் கூடிய விண்வெளி மந்தைகள் இவை. பெரும்பாலும் பண்டை விண்மீன்கள் மண்டியவை! அவை சந்தை போன்று அலங்கோலமாய் அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சமாகப் பரவி, காலக்ஸியின் மட்டத்தில் திரண்டு சேராமல் உள்ளன. நமது காலக்ஸியைச் சேர்ந்த அநேக விண்மீன் திரட்சிகள் பொரி உருண்டை போன்றவை! குறிப்பிட்ட ஒரு பொரி உருண்டை ஒருசில ஒளியாண்டுகள் [A few light-years] அகலம் கொண்டது! ‘திறந்த விண்மீன் மந்தைகள் ‘ [Open Clusters (M44)]: சிதறிய முத்துக்களைப் போல் தெரிபவை இவை. நூற்றுக் கணக்கான புதிய விண்மீன்களைக் கொண்டவை. அவை யாவும் ஈர்ப்பு விசைகளால் சேர்க்கப் பட்டு, குறுகிய காலத்தில் பிரிந்து சென்று பிரகாசிப்பவை. காலக்ஸி விண்மீன் Globular Clusters மந்தைகள் [Galactic Clusters] என்றும் அழைக்கப்படுபவை. 50 ஒளியாண்டு தூரத்திற்குக் குறைந்த தொலைவில் இருப்பவை.

     

    பேரளவு உஷ்ண வாயு மண்டிய முகிலே ஒளி உமிழும் நிபுளாக்களாய் மிளிர்கின்றன. அண்டையில் புறவூதா ஒளியை [Ultra-violet Light] வீசும் விண்மீன் ஒன்றால், நிபுளாவின் முகிலில் உள்ள அணுக்கள் சக்தி பெற்றுக் கீழ் நிலைச் சக்திக்குத் தாவும் போது, நியான் மின்விளக்கு [Neon Light] போல வெளிச்சத்தை உமிழ்கின்றன! பெரும்பாலும் ஒளிசிந்தும் நிபுளாக்கள் செந்நிறமாய்க் காட்சி தருகின்றன! அதற்குக் காரணம், ஹைடிரஜன் வாயுவின் ‘ஒளிவீச்சு நாமம் ‘ [Emission Line] சிவப்பு நிறம்! மற்ற நிறங்கள் அருகில் தென்பட்டாலும், ஹைடிரஜன் அணுக்களே மிகுந்திருப்பதால் செந்நிறமே தனித்து மேனி முழுவதிலும் தெரிகிறது! புதிதாய்த் தோன்றிய விண்மீன் அல்லது தோன்றப் போகும் விண்மீன் அண்டவெளித் தளங்களில்தான், பொதுவாக ஒளிசிந்தும் நிபுளாக்களைக் காண முடிகிறது.

    ‘எதிரொளிக்கும் நிபுளாக்கள் ‘ [Reflection Nebulae (NGC 7023)]:

    பொதுவாக நீல நிறத்தில் தோன்றுபவை இந்த வகையான நிபுளாக்கள்! அருகில் பேரொளி வீசும் விண்மீன் ஒன்றின் ஒளியைப் பிரதிபலிக்கும் தூசி முகில்கள் [Clouds of Dust] இவை! பிரதிபலிக்கும் ஒளியில் மிகையாக நீல ஒளியே சிதறப்பட்டுக் கண்ணுக்குத் தென்படுகிறது! பொதுவாகச் செந்நிறத்தில் ஒளிசிந்தும் நிபுளாக்களும், நீல நிறத்தில் எதிரொளிக்கும் நிபுளாக்களும் அண்டவெளியில் இணையாக அருகிலே காட்சி அளிக்கின்றன! ஆதலால் அந்த இரண்டு நிபுளாக்களையும் ‘மலர்ச்சி நிபுளாக்கள் ‘ [Diffuse Nebulae] என்றும் குறிப்பிடுகிறார்கள்.

     

    ‘கரிய நிபுளாக்கள் ‘ [Dark Nebulae (NGC 2264)]:

    பின்புறம் அடிக்கும் ஒளியைத் தடுத்து வருவதால், இந்த நிபுளாக்கள் கரிய நிபுளாக்கள் போலக் காட்சி அளிக்கின்றன! நிழற்படக் கலையில் [Silhouette Photography] ஒளியைப் பின்புலமாக்கி வடிவத்தைப் படமெடுத்தால் கரிய உருவம் முகப்பில் தென்படுவதுபோல், கரிய நிபுளாக்கள் தோற்றம் அளிக்கும்! அவை எதிரொளிக்கும் நிபுளாக்களை ஒத்தவை. ஆனால் ஒரு வேறுபாடு: ஒளியானது நிபுளாவின் முகத்தில் படாது, அதன் முதுகில் படுகிறது! கரிய நிபுளாக்கள் பொதுவாக மலர்ச்சி நிபுளாக்களின் அருகே காணப்படுகின்றன!

    ‘அண்டக்கோள் நிபுளாக்கள் ‘ [Planetary Nebulae (M57)]:

    விண்மீன் தனது இறுதிக்கால நிலையில் வீசி எறிந்த வாயுக் கோளமே, அண்ட நிபுளா வென்று அழைக்கப் படுகிறது! நமது பரிதியும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அதுபோல் ஓர் அண்டக்கோள் நிபுளாவை வீசி எறியலாம்! அவற்றை அண்டங்கள் என்று விளிப்பது பிழையானது. அண்டக் கோள்களுக்கும் [Planets] அவ்வகை நிபுளாக்களுக்கும் எவ்விதப் பண்பும், ஒற்றுமையும் கிடையாது! தொலைநோக்கியில் பார்க்கும் போது அண்டங்கள் போல் தோன்றலாம். அவ்வளவுதான். சாதாரணமான ஓர் அண்டக்கோள் நிபுளா ஓர் ஒளியாண்டு தூரத்துக்கும் குறைவான அகலத்தில்தான் உள்ளது!

    ‘சூப்பர்நோவா மிச்சங்கள் ‘ [Supernova Remnants (M1)]:

    பூத வடிவான விண்மீன் ஒன்று மரணம் அடையும் போது, பேரளவு ஒளிப்பிழம்புடன் பிரகாசித்துப் பரவிச் சிதறும்! அப்போது, அது ‘சூபர்நோவா ‘ என்று பெயர் பெறுகிறது! சில நாட்கள் சூபர்நோவா வெளியேற்றும் சக்தி, முழு காலக்ஸிக்கு இணையான பேரளவுச் சக்திபோல் தெரிகிறது! அம்மாதிரிப் பிரளய வெடிப்புக்குப் பிறகு, சூபர்நோவாவில் எஞ்சுவது, விண்மீனின் ஒரு பெரும் பகுதி! அம்மிச்சப் பகுதியின் அகலம் ஒரு சில ஒளியாண்டுகளே!

    வானியல் மேதை ஜான் ஹெர்ச்செலின் மறைவு

    ஜான் ஹெர்ச்செல் வெளியிட்ட ‘இயற்பியல் வேதாந்தத் தெளிவுரை ‘ [Discourse on Natural Philosophy] என்னும் நூலைப் படித்து, மைக்கேல் ·பாரடே [Michael Faraday (1791-1867)] அவரது ஞான வல்லமையைப் புகழ்ந்து கூறியது: ‘இயற்பியல் வேதாந்த நூலைப் படித்து இன்புற்ற பலருள் நானும் ஒருவன். அந்நூல் வேதாந்த மாணவருக்கு ஒரு பாடப் பதிப்பாக உதவத் தகுதி பெற்றது. அந்நூல் என்னைச் செம்மையான ஓர் ஆராய்ச்சியாளனாய் ஆக்கியது. என் ஒழுக்கப் பண்பாட்டை உயர்த்தியது. சொல்லப் போனால் என்னைச் சிறந்த சித்தாந்த வேதாந்தி யாக்கியது ‘.

    ஜான் ஹெர்ச்செல் காலத்து விஞ்ஞானிகள் அனைவரிலும் அவர் முன்னணியில் நிற்கும் மேதையாகக் கருதப்படுபவர். 1871 ஆம் ஆண்டில் காலமான ஜான் ஹெர்ச்செல் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபேயில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது அடக்கவுரையில் பிரென்ச் கணித நிபுணர் ஷான் பயாட் [Jean Biot (1774-1862)] கூறியது: ‘கணித மேதை லாப்பிளாஸ் [Laplace] 1827 ஆண்டில் மரணம் அடைந்த பின், அவருக்குப் பிறகு இணையாக மதிக்கப் படுபவர், ஜான் ஹெர்ச்செல். பிரிட்டனில் ஸர் ஐஸக் நியூட்டன் மறைவுக்குப் பிறகு, ஜான் ஹெர்ச்செல்லின் மரணமே ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாக நான் கருதுகிறேன்!’

    தகவல்:

    1. Results of Astronomical Observations of John Herschel By: London, Smith, Elder Co.

    2. Letters & Papers of Sir John Herschel from the Archives of the Royal Society [1990]

    3. Types of Nebulae http://seds.lpl.arizona.edu/billa/twn/types.html

    4. William Herschel ‘s Catalogue of Deep Sky Objects

    5. Nebulae http://www.seds.org/messier/nebula.html

    6. Nebulae http://www.enchantedlearning/subjects/astronomy/stars/nebulae.html

    7. John Herschel By: J.J. O ‘Connor & E.F. Robertson

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html(ஜான் ஹெர்செல் கண்டுபிடித்த பால்மய வீதி, காலக்ஸிகள், நிபுளாக்கள்.

    9. The Handy Space Answer Book (1998)

    10. https://www.astroleague.org/content/bright-nebula-observing-program

    11.  https://en.wikipedia.org/wiki/Orion_Nebula  [June 6, 2016]

    12. https://www.verdensalt.dk/2018/08/space-aug-30-2018-unstable-monster.html [August 30, 2018]

    13.   https://www.space.com/41655-unstable-monster-galaxy-runaway-star-formation.html    [August 29, 2018]

    14.  https://newslikethis.com/2018/08/29/unstable-monster-galaxy-hosts-runaway-star-formation  [August 29, 2018]

    15.  https://newslikethis.com/2018/08/30/science-unstable-monster-galaxy-hosts-runaway-star-formation [August 30, 2018]

    16.  https://alma-telescope.jp/en/news/press/aztecone-201808 [ August 30, 2018]  

    ****************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) September 2, 2018 [R-2]

    Attachments area
    Preview YouTube video Unstable Monster Galaxy Hosts Runaway Star Formation

    Preview YouTube video City at World’s End by Edmond Hamilton

    Preview YouTube video Planet Formation Astronomy: Spinning Stardust into Planets NASA Hubble Space Telescope

    Share
  • மழைத்துளியின் சங்கமம்

    பவள சங்கரி

    மழைத்துளி மழைத்துளி மலரில் சங்கமம்
    தேன்துளி தேன்துளி உயிரினில் சனனம்
    விழித்துளி விழித்துளி கலையினில் மனனம்
    கனித்துளியும் கவித்துளியாய் மலருது!

    Share
  • HAPPY GOKULASHTAMY….!

     

    மழைத்துளி மழைத்துளி மலரில் சங்கமம்
    தேன்துளி தேன்துளி உயிரினில் சனனம்
    விழித்துளி விழித்துளி கலையினில் மனனம்
    கனித்துளி கலந்து கவித்துளியாய் மலருது!

    நள்ளிரவில் தோன்றிய கண்ண பெருமாளை நள்ளிரவில் அழைத்தல் தானே முறை….!
    பெருமாள் திருப் புகழ்….!

    காப்பு
    —————
    பெருமாள் திருப் புகழ்….!
    ———————————————————-

    “சிந்தை மகிழ சிவநேசர்செ விதனில்
    மந்த்ர வடிவ உபதேசம ருளிய
    கந்த முருக கதிர்காமம ருகனின் -முறைமாம
    அந்த ரிவயி ரவிவாமமி றைவனின்
    பங்கு திரும யிலைவாழுமை இளைய
    தங்கை வருகை சினமாமனி டம்உரை -சிறைபால
    முந்தை வினைகள் முளையோடுவி டுபட
    சிந்தை வடிவில் பலநாள்பழ கியவ
    கந்தை விலக ரமணேசர்வ ழிதனில்-நடமாட
    எந்தை வருக ரகுநாயக வருக
    என்று அருண கிரியார்புகழ் தமிழின்
    சந்த நடையில் வரவேணும்நெ டிதுயர் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    “மரத்தடி குளக்கரை
    படித்துறை தவத்தினில் -கழியாது
    வலப்புற மனத்திரு
    விரற்கடை புறத்தினில் -நிலையான

    இருப்பினை நெருக்கிட
    மலைப்புற சிவக்கனி -ரமணேசன்
    உரைத்ததை தினப்படி
    உளத்தினில் உறைத்திட -அருள்வாயே

    விரற்கடை பொருப்பினை
    உயர்த்திட இடைக்குடி -மழையாலே
    தவிப்பினை விரட்டிவ
    யிரத்தினை மிரட்டிய -கருநீல

    நிறத்தவ ,விடத்தலை
    நிருத்தியம் நிகழ்த்திய -முலையேறி
    அரக்கியை அழித்தவ
    இடைக்குடி ஜனித்திடும் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180902 -Radha Mala – watercolour-charcoal 10×14” raw -lr

    ஊதா நிறத்தவர் ஊதிக் களைத்தனர்
    ராதை கழுத்தென்னும் சங்கை – போதை
    தலைக்கேற கண்ணனவர் தோளைத் தழுவி
    வளைக்கரத்தால் போரென்றாள் மாது…. !

    ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
    காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
    ராதையித் தோள்சுமந்து காதல்கூத் தாடுகிறார்
    கீதை வரிகள் மறந்து….கிரேசி மோகன்….!

    Share