
”ராக சுதாஅரசன் யோகப்பா லாழியெண்ணி
தாகமாய் ஆடுகிறார் தாண்டவம் -ராகமாய்
புல்லாங் குழலின்றி பாடுகிறார் கண்ணபிரான்
பில்ஹார்ம னிக்கிலோர் பாட்டு’’….கிரேசி மோகன்….!
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
http://www.esa.int/
******************
எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம் செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது. நிலவுதான் செவ்வாய்க் கோளை ஆராய ஒரு தளப்படமாய்ப் பயன்படும்.
கிரிஸ் மெக்கே [ ஆசிரியர், புதிய விண்வெளி இதழ் ]
+++++++++++++++++
நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்
கால் வைத்து
நாற்பது ஆண்டுகள் கடந்து
நாசா, ஈசா மீண்டும்
விண்ணிலவுப் பயணத் திட்டம் !
குடியேற்றக் காலனி !
தண்ணீர் உள்ளது !
உயிர் வாயு, எரிவாயு பெறலாம் !
பயிர் விளைவிக் கலாம்.
கூடிய வெப்பம், துருவப் பகுதியில்
நீடித்த சூரிய ஒளி !
நீர், மின்சக்தி சேமிக்க வழி.
தளத்தின் கீழே வெப்பம்.
தரைக்கீழ் இல்லம், வாழ்வு !
மண்ணுளவு செய்யக் கருவிகள் !
வெண்ணிலவில் குடியேறத்
திட்டமிடும் ரஷ்யா, சைனா !
நிலவில் ஓய்வெடுத்து
விண்ணுளவு செய்வ தெளிது. !
செவ்வாய்க் கோள்
தவ்வும் விமானி கட்கு அங்கும்
தங்கக் குடில் அமைத்து
மீண்டும் புவிக்கு மீள, நிலவுக்கு ஏக
நீண்ட காலத் திட்டம் !
++++++++++++
நிலவு ஆய்வுக்கூடச் சாதனங்கள்
2022 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் நிலவிலே நாசாவின் குடியிருப்பு அமைப்பு.
கடந்த 12 மாதங்களாக நாசா விஞ்ஞானிகள் செந்நிறக் கோள் செவ்வாயிக்குப் போகும் பயணத்தைப் பற்றிக் கருத்தூன்றிக் குறிக்கோளுடன் இருந்துள்ளார். முடிவில் நாசாவின் உன்னத விஞ்ஞானிகள் உட்பட மற்றும் சில விண்வெளி நிபுணர் குழு ஒன்றும் சேர்ந்து, இன்னும் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் [2023] நிலவிலே ஒரு மனிதக் குடியிருப்பை நிறுவ வேண்டும் என்று ஒரு சிறப்பு விஞ்ஞான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இச்சிறப்பு வெளியீடு புவிக்கு அப்பால் நிலவை நோக்கிக் குறி வைத்தாலும், அடுத்து அங்கிருந்து செவ்வாய்க் கோளுக்கும் பிற கோளுக்கும் பயணம் செய்ய முதற்படி அதுவே. 2014 ஆண்டில் உன்னத விஞ்ஞானிகள் கூடி ஒரு கருத்தரங்கம் நடந்து நிலவுக் குடியிருப்பு அமைப்பது பற்றி நிதிச் செலவு கணிக்கப்பட்டது. நாசா 2016 ஆண்டு முழுவதற்கும் 19.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, நிலவுக் குடியிருப்புக்குத் திட்டம் வகுத்துள்ளது. நாசாவின் விஞ்ஞானிகள் அலெக்ஸான்ரா ஹால், சார்லஸ் மில்லர் இன்னும் 5 அல்லது 7 ஆண்டுகளில் 10 பில்லியன் [+ or – 30%] டாலர் செலவில் நிலவில் குடியிருப்பு அமைக்க முடியும் என்ற உறுதியோடு உள்ளார்.

நமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம். சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும் உதவி செய்யும்.
ஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே. வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யான் வொர்னர் [Jan Worner, Director, European Space Agency (ESA)]

நிலவிலே பயண நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ? ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது. அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது. அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது. நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.
நாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில் மன ஊக்கம் அடைய வேண்டும். நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான். ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும். மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவு உள்ளது. பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.
இயான் கிராஃபோர்டு [Professor, Planetary Science, University of London]
செவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம். 1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில நாட்களில் முடிந்து பரபரப்பூட்டியவை; பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.
காத்ரீன் ஜாய் [Lunar Scientist, Manchester University]
அடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்
ஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்வெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு, அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.

‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசினார். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.
ஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம். மற்றொரு தொழில்நுணுக்க அமைப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம். அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண வசதிகளை ஏற்படுத்தலாம்.
2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது. நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும். மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும், நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப் பயண முயற்சி செய்யவும், நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.
டெமிட்ரி ரோகோஸின், ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர். [ஏப்ரல் 11, 2014]
அண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony]. ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது. ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது. நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.
ஐவன் மோய்செயவ் [Chief Scientist, Institute of Space Policy]
Moon Research Colony
நிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார் கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது. அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.
ஆன்ரே லொலின் [Russian Academy of Cosmonautics Member]
நிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள்
1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. 1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ் என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை” [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார். ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி, 1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார். 1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது. அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன. பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார். ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார். 1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.


நிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன. 1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன. 2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார். அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது. ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.
“நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன. ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது. நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”
டாட் மே (Todd May, Manager Lunar Presursor Robotic Program)

“நாசாவின் இந்த இரண்டு விண்ணுளவுக் குறிப்பணிகளும் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) நமது அண்டைக் கோளான நிலவைப் பற்றிக் கிளர்ச்சி யூட்டும் புதிய தகவலை அளிக்கப் போகின்றன. தேவையான தளக் காட்சிப் படப் பதிவுகள் (Images), பாதாள தளச் சரிவுகள் (Lunar Landscapes) ஒரு மீடர் துல்லிமத்தில் நோக்கப்படும். அவ்விதத் தகவல் அடுத்து நாசா குறிவைக்கும் தளங்களுக்கு விபரங்கள் தரும். அந்த இரண்டு விண்ணுளவிகளைத் தயாரித்த குழுவினர் உன்னத டிசைன் செய்து சாதனங்களைப் படைத்துள்ளனர்.
டக்ளஸ் குக் (Douglas Cooke, Associate Administrator of NASA’s Exploration Systems)
“நிலவு தள ஆய்வு விண்கப்பல் (LRO) நுணுக்கமான ஓர் உன்னத விண்ணுளவி. அந்த ஏழு கருவிகளின் விண்சிமிழ் நிலவின் தள மண்டலத்தில் எமக்குப் பல்லாண்டுகள் தேவைப்பட்ட தகவலைத் தொடர்ந்து அனுப்பி வரும்.”
கிரெய்க் டூலி (Craig Tooley, LRO Project Manager at NASA)
“நிலவின் குழிகளை நோக்கி உளவும் “லகிராஸ்” துணைக்கோள் (LCROSS) நிலவைக் கோலாகலமாக நெருங்கப் போகும் (அக்டோபர் 2009) காட்சியையும், அதன் அடித்தளத்திலே நீர் உள்ளதா என்று முதன்முதல் ஆராயப் போவதையும் உலகப் பொதுமக்கள் கண்டு களிக்க எதிர்நோக்கி யுள்ளோம்.”
டானியல் ஆன்டிரூஸ் (Daniel Andrews LCROSS Project Manager NASA)
“நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது ! ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக் துணுக்குகளும் அங்கே இருக்கலாம். ஆனால் அவை யாவும் அபூர்வமாகவே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.”
குயிலர்மோ கன்ஸாஸ், பௌதிகத் துணைப் பேராசிரியர் [Guillermo Gonzalez, Iowa State University]
நிலவை நோக்கி மீண்டும் நாசாவின் பயணம்
2009 ஜூன் மாதம் 17 ஆம் தேதி நாசா பிளாரிடா கனாவரல் முனை (Cape Canaveral) விமானப்படை ஏவு தளத்திலிருந்து மனிதரற்ற இரண்டு துணைக்கோள்களை அட்லாஸ்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவை நோக்கி அனுப்பியுள்ளது. அவற்றின் முக்கிய குறிக்கோள்கள் : 2020 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் தடம் வைக்கப் போகும் நாசா விண்வெளி விமானிகள் தங்கும் ஓய்வுக் கூடத்துக்கு இடம் தேடுவது, நிலவின் அடித்தளத்தில் நீர் உள்ளதா, எரிசக்திக்கு ஹைடிரஜன் வாயு இருக்கிறதா என்று ஆய்வுகள் செய்வது. நாசாவின் இரட்டைத் துணைக்கோள்கள் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) அவற்றை இன்னும் ஓராண்டில் கண்டுபிடிக்கும். அந்த இரண்டு துணைக்கோள்களும் ராக்கெட் ஏவிய 45 நிமிடங்கள் கழித்துப் பிரிந்து சென்றன. நிலாவின் விண்வெளிச் சுற்றித் துணைக்கோள் LRO இப்போது நிலவின் ஈர்ப்பாற்றலில் சிக்கி 50 கி.மீடர் (30 மைல்) உயரத்தில் வட்டவீதியில் சுற்றி வருகிறது. இரண்டாவது கட்ட சென்டார் ராக்கெட்டில் (Centaur Rocket) செல்லும் துணைக்கோள் LCROSS நான்கு மாதங்கள் கழித்து (அக்டோபர் 2009) நிலவை நெருங்கித் துருவப் பகுதிகளில் சுற்றி இரு கணைகளால் தளத்தைத் தாக்கித் துளையிட்டு நீருள்ளதா என்று ஆராயும். முதன்முதல் புரியும் இந்த அற்புத இரட்டைச் சோதனைக்கு ஆகும் நிதிச் செலவு சுமார் 583 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) !

சூரிய சக்தி பயன்படும் LRO துணைக்கோள் பயணம் செய்து நாலரை நாட்களில் நிலவின் ஈர்ப்பு மண்டத்தில் சிக்கியது. பிறகு அது நிலவின் துருவப் பகுதிகளில் 2 மணிக்கு ஒருதரம் 30 மைல் (50 கி.மீ) உயரத்தில் சுற்றி வந்தது. நாசாவின் இந்த விண்வெளிப் பயணம் இரண்டு அவசியமான தகவலை அறிந்து கொள்ள உதவும், ஒன்று நிலவின் துருவத்தில் ஆழ்குழி பறித்து அடித்தளத்தில் நீருள்ளதா என்று கண்டுபிடிப்பது; இரண்டாவது எரிசக்தி அளிக்கும் ஹைடிரஜன் வாயு நிலவில் உள்ளதா என்று ஆய்வு செய்வது. விண்வெளித் தேடற் பயணங்களில் சந்திரனுக்கு ஒரு பவுண்டு எடைப் பொருளைத் தூக்கிச் செல்ல நாசாவுக்கு 50,000 டாலர் செலவாகிறது. ஆகவே விண்வெளி விமானிகளுக்குப் பேரளவில் நீர் கொண்டு செல்வதோ, ராக்கெட்டுக்கு எரிசக்தித் திரவத்தை ஏற்றிச் செல்வதோ பெரும் நிதிச் செலவை உண்டாக்கும் தேவைகளாக இருக்கின்றன.
புதிய நிலவுத் தேடலில் கதிர்வீச்சு, ஹைடிரஜன் வாயு ஆராய்தல்
1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது. 1959 ஆண்டு முதல் 2009 வரை ஐம்பது ஆண்டுகளாக உலக நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டு, ஜப்பான், சைனா, இந்தியா) நிலவை நோக்கி 17 பயணங்களைச் செய்திருக்கின்றன. ஆனால் நிலவில் இதுவரைத் தடம் வைத்த எல்லா விண்வெளி விமானிகளும் அமெரிக்கர் ஒருவரே ! அவ்விதம் அமெரிக்க விண்வெளி விமானிகள் இதுவரைக் கால்வைத்த இடங்கள் ஆறு. அந்தத் தளங்கள் யாவும் விமானிகளால் பகலில் மட்டுமே வாகனங்கள் மூலம் தேடப் பட்டன ! 2020 ஆண்டில் மறுபடியும் நாசா தனது விமானிகளை நிலவுக்கு அனுப்ப இதுவரைத் தேடாத இடங்களை இப்போது நிலவில் ஆராயத் திட்டமிட்டுள்ளது.

LRO துணைக்கோள் ஓராண்டு நிலவைச் சுற்றி வந்து 50 குறிப்பிட்ட தளங்களின் தகுதியை எதிர்காலப் பயணங்களுக்கு ஒப்புநோக்கும். “LRO துணைக்கோள் அனுப்பும் உயர் நுணுக்கத் தளப் படங்கள் (High Resolution Maps) எதிர்கால நிலவுப் பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்” என்று LRO திட்ட விஞ்ஞானி ரிச்சர்டு வான்டிராக் (Richard Vondrak) கூறுகிறார். நிலவுக்குச் செல்லும் எதிர்கால விண்வெளி விமானிகளைத் தாக்கும் கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் கருவிகளும், சாதனங்களும் அதில் அடங்கி யுள்ளன, மேலும் ஹைடிரஜன் வாயுச் சேமிப்பு மிக்க பகுதிகளைத் தேடும் கருவிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. LRO துணைக்கோள் (50 கி.மீ.) 30 மைல் உயரத்தில் ஓராண்டு சுற்றி வந்து நிலவின் தளப் பண்புகளையும் சூழ்வெளியையும் தொடர்ந்து ஆராய்ந்து வரும்.
LCROSS துணைக்கோள் நீர் இருப்பை ஆராய்தல்
LRO துணைக்கோள் துரித உந்துகணைகள் மூலம் நிலவை நெருங்க நாலரை நாட்கள் கடந்தன. ஆனால் இரண்டாவது துணைக்கோளான LCROSS மெதுவாக நகர்ந்து நிலவை நெருங்க நான்கு மாதங்கள் எடுக்கும். LCROSS துணைக்கோளில் இரண்டு தனித்தனிப் பாகங்கள் உள்ளன. ஒன்று 41 அடி நீளமுள்ள பளுவான இரண்டாம் கட்ட சென்டார் ராக்கெட் (Second Stage Centaur Rocket). அடுத்தது அத்துடன் இணைக்கப் பட்ட சிறு துணைக் கோள் (Shepherding Spacecraft). 2009 அக்டோபர் மாதம் முதலில் சென்டார் ராக்கெட் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும். முதல் ராக்கெட் தாக்குதல் நிகழ்ந்து 4 நிமிடங்கள் கழிந்து சிறு துணைக்கோளும் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும். அவை உண்டாக்கும் குழிகள் நிலவின் அடித்தளத்தின் தன்மைகளைக் காட்டுவதோடு அடியில் நீர் உள்ளதா என்பதையும் கருவிகள் கண்டுபிடிக்கும்.

சென்டார் ராக்கெட் தாக்குவதற்கு முன்னால் அது நிலவுக்கு மேல் 54,000 மைல் (87,000 கி.மீ.) உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். அது நிலவைத் தாக்கும் போது அதன் பளு குறைந்தது 4958 பவுண்டு (2249 கி.கிராம்) முதல் உச்சம் 5216 பவுண்டு (2366 கி.கிராம்) வரை இருக்கும். சிறு துணைக்கோள் 1369 பவுண்டு (621 கி.கிராம்) முதல் 1909 பவுண்டு (866 கி.கிராம்) வரை இருக்கும். சென்டார் தாக்குதல் நிலவின் தளத்தில் 66 அடி நீளம், 13 அடி விட்டமுள்ள(20 மீடர் நீளம், 4 மீடர் விட்டம்) பள்ளத்தை உண்டாக்கும். அது போல் சிறு துணைக்கோள் உண்டாக்கும் துளை : 46 அடி நீளம் 6 அடி விட்டமுள்ள (14 மீடர் நீளம், 2 மீடர் விட்டம்) குழி. முதல்முதல் இவ்விதம் இரட்டைத் தாக்குதல் செய்து நிலவில் நிகழும் அதிர்ச்சிக் காட்சிகளை நாசாவின் LRO துணைக்கோள், ஹப்பிள் தொலைநோக்கி மற்றமுள்ள துணைக்கோள்களும் தொலைநோக்கிகளும் படமெடுத்து உலக மக்களுக்கு அறிவிக்கும்.
நிலவுத் தளப்பதிவு துணைக்கோளில் உள்ள ஏழு நுட்பக் கருவிகள்
LRO துணைக்கோளில் ஏழு நுட்பக் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன :
1. (CRATER) (Cosmic Ray Telescope for the Effcts of Radiation) : கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் அகிலக்கதிர் தொலைநோக்கி.
விண்வெளி விமானிகள் சந்திர தளத்தில் நடமாடும் போது அவருக்கு ஏதேனும் கதிர்வீச்சுப் பாதிப்புகள் விளையுமா என்பதை அறியும் சாதனம். மனிதத் தசை போன்ற பிளாஸ்டிக் மற்றும் கவசங்கள் கதிர்வீச்சால் தாக்கப்பட்டால் என்ன நேரும் என்பதைக் காணும் சாதனங்களையும் கொண்டது. அதன் மூலம் சிறந்த கவசங்கள் தயாரிக்க நாசாவுக்குத் தகவல் கிடைக்கும்.
2. (DLRE) (Diviner Lunar Radiometer Experiment) : வெப்ப எதிரொளிப்புச் சோதனைக் கருவி

நிலவின் தள வெப்பம், அடித்தள வெப்பம் ஆகியவற்றை சுற்றுவீதியிலிருந்து அறியும் கருவி.
இது குளிர்ந்த பிரதேசங்களில் உள்ள பனிப்படிவு (Ice Deposits) கரடு முரடான கற்பகுதி, பாறைப் பகுதிகளை அறியும். இவை எதிர்கால நிலவுத் தேர் (Lunar Landing Module) இறங்கும் இடங்களைத் தேர்தெடுக்க உதவும்.
3. (LAMP) (Lyman Alpha Mapping Project) லைமன் ஆல்·பா தளப்பதிப்புத் திட்டம்.
புறவூதா ஒளிப்பட்டைக்குக் கடந்த (In the Far Ultraviolet Spectrum) நிலையில் நிலவின் தளம் முழுவதும் நோக்கிப் பதிவு செய்யும் கருவி. துருவப் பகுதிகளில் பனிப்படிவு, பனிப் படர்ச்சியும் (Ice & Frost) காணும் கருவி. நிரந்தரமாய் பரிதி ஒளிவிழாத நிழலில் இருந்து பிறக் கோள் வெளிச்சம், வாயு ஒளிகள் எதிரொளிக்கும் பகுதிகளைப் படமெடுக்கும்.
4. (LEND) (Lunar Exploration Neutron Detector) : நிலவுத் தேடலில் நியூட்ரான் உளவும் கருவி.
நிலவுச் சூழ்வெளியில் ஹைடிரஜன் பரவியுள்ளதைப் பதிவு செய்வது. சந்திரனில் உணரப்படும் கதிர்வீச்சு அரங்குகளில் நியூட்ரான் பரமாணுக்களை அறியும் கருவி. இதன் மூலம் சந்திர தளத்தில் நீர்ப்பனி இருப்பைக் கண்டு கொள்ளலாம்.
5. (LOLA) (Lunar Orbiter Laser Altimeter) : நிலவுத் தேர் இறங்கும் பகுதிகளின் சரிவை (Landing Site Slopes) அளக்கும் கருவி.
தளத்தின் கரடுமுரடான தன்மைகளையும் அறியும். நிரந்தரமாய் வெளிச்சமுள்ள வெளிச்சமில்லா பகுதிகளையும் அடையாளம் காணும் தளக்கருவி. எதிர்கால நிலவுத் தேர் இறங்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தகவல் உதவும்.
6. (LROC) (Lunar Reconnaissance Orbiter Cameras) : நிலவுத் தளப் பரப்பு உளவியின் மூன்று காமிராக்கள்.
ஒரு மீடர் துல்லிமத்தில் கறுப்பு-வெள்ளைப் படமெடுக்கும் இரு நுட்பக் குறுங்கோணக் காமிராக்கள் (Two Narrow-angle High Resolution Cameras) அமைக்கப் பட்டுள்ளன.. 100 மீடர் துல்லிமத்தில் விரிவு கோணக் காமிரா ஒன்று. (One Wide-anglle Camera)
7. (Mini-RF) (Miniature Radio Frequency) (Technology Demonstration) சிறு வடிவு ரேடியோ அதிர்வலைக் காமிரா.
துருவப் பகுதிகளில் நீர்ப்பனி அமைப்பைப் படமெடுக்கும். பிறகு இது பூமியில் உள்ள துணைக் கோள் கட்டுப்பாடு அரங்குகளுடனும் தொடர்பு கொள்ள வசதி அளிக்கும்.

நாசா சந்திரனை மீண்டும் தேடிச் செல்லக் காரணம் என்ன ?
முதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே ! அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது. ஏற்கனவே பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி அளித்து வருகின்றன. குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது..
ஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பிப் பயிற்சிகளைத் தொடர்வது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைப்பது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிப்பது. இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.

நிலவிலிருந்து செவ்வாயிக்குத் தாவும் முயற்சிகள்!
ஒவ்வோர் ஆண்டிலும் இரண்டு முறைகள் நிலவை நோக்கிச் சென்றுவர நிரந்தர நிலவுக் கூடாரத்தை விரைவில் அமைக்கப் போகிறார்கள். பூமியிலிருந்து நிலவுக்குப் போகும் காலம், நாலரை நாட்கள்! நிலவுப் பயணக் குழுவினர் நீண்ட காலம் தங்கிச் சந்திர தளத்தில் கிடக்கும் புதைக் களஞ்சியங்களை ஆராய்வார்கள். நிலவுக்குப் பளு ஏற்றிச் செல்லும் பார வாகனம், பண்டங்களை இறக்கிய பிறகு திரும்பி பூமிக்கு வந்துவிடும். நிலவில் ஆய்வுகள் நடத்தி வரும் ஆராய்ச்சிக் குழுவினர் ஆறாறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் அடைவர். நாசா நிலவின் தென் துருவத்தில் ஹைடிரஜன் எரிவாயு கிடைக்கும் நீர்ப்பனிப் பாறைகளை எதிர்பார்க்கிறது. நிலவில் பரிதியின் ஒளி வெப்பத்தைப் பயன்படுத்திப் பேரளவு மின்சக்தி பெற விமானிகளுக்கு வாய்ப்புள்ளது. அதைக் கொண்டு நிலவுக் கூடாரத்தை ஒளிமயமாக்க முடியும். பனிப்பாறைகளை உருக்கி நீர் பெற்றுக் கொள்ள முடியும். நீரைப் பிரித்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயுக்களைச் சேமித்துக் கொள்ள முடியும். நிரந்தர நிலவுக் கூடார அமைப்பின் முக்கிய காரணம், செவ்வாய் கோளுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் மனிதர் பயணம் செய்து கால் தடம் வைத்து மீள்வது. பிறகு செவ்வாய்க் கோளில் நிரந்தரக் கூடாரம் அமைத்து செவ்வாய்க் கோளை ஆராய்வது. அதற்குத் தேவையான அசுர உந்து சாதனங்கள், விண்வெளி விமானிகளுக்கு வேண்டிய பயிற்சிகள் யாவும் நாசாவிடம் தயாராக உள்ளன.

21 ஆம் நூற்றாண்டில் சந்திரனுக்கு மீண்டும் பயணம் போகும் நாசா !
1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் பாதம் வைத்துப் பாதுகாப்பாய்ப் பூமிக்குத் திரும்பிய பிறகு அமெரிக்கா மேலும் ஐந்து தடவைகள் சந்திரனில் தடம் வைத்தது. 240,000 மைல் தூரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக் கோள் நிலவு ஒன்றுதான். அநேக முறை 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய நாசா மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நிலவுப் பயணத்தை மீண்டும் துவக்கி இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறதல்லவா ? பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன ? சோவியத் ரஷ்யாவின் சந்திரத் தளவுளவி இறங்கி நிலவின் மாதிரி மண்ணை அள்ளி வந்தாலும், ரஷ்ய அகிலவெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் இதுவரைத் தடம் வைக்க வில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் குழுவின் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகள் சந்திரனைத் தேடிச் சென்று தகவலைச் சேமித்தாலும், அமெரிக்கா ஏன் மறுபடியும் ஏராளமான நிதியைச் செலவழித்து மனிதப் பயணத்தை துவங்குகிறது என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது !

************************
http://www.bbc.com/future/
தகவல்:
Picture Credits: NASA, JPL; Time Magazine.
1. Returning to the Moon By: Jeffrey Kluger Time Magazine [March 20, 2006]
2. Apollo Missions (11-17) First Man on the Moon [www.panoramas.dk/]
3. (a) http://www.thinnai.com/
3 (b) http://www.thinnai.com/?
3 (c) http://www.thinnai.com/?
4. Return to the Moon Frequently Asked Questions [www.space-frontier.org/
5. NASA How We will Get Back to the Moon [www.nasa.gov./mission_pages/
6. BBC Science News: Space Agencies Take New Look at Moon [July 27, 2002]
7. The Space Review- Return to the Moon By: Anthony Young [Jan 3 2006]
8. Moon -Astronomical Data [www.amastro.org/at/mo/mod.
9 Space & Earth Explorations : NASA Details Plans for Lunar Exploration Robotic Missions (May 22, 2009)
10 Rocket Launches NEW U.S. Moon Probes By Tariq Malik (June 18, 2009)
11 BBC News – Lift off for NASA’s Lunar Probes By Paul Rincon (June 18, 2009)
12 NASA Lunar Reconnaissance Orbiter Fact Sheets LRO & LCROSS Space Probes (2009)
13 U.S. Lunar Probes Lift off on Mission to Scout Water, Landing Sites (June 22, 2009)
14 http://en.wikipedia.org/
15. http://www.bbc.com/future/
16.http://www.moondaily.com/
19. http://www.news.com.au/
20. http://www.space.com/
21. http://www.sciencealert.com/
22. http://www.spacedaily.
23. http://www.spacedaily.com/
24. http://aero-news.net/
25. http://www.spacedaily.
26. https://www.sciencealert.
27. https://sputniknews.com/
28. https://en.wikipedia.org/
29. https://sputniknews.com/
******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) April 21, 2018 [R-4]
htts://jayabarathan.wordpress.
-செ. செல்வி
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று” -திருக்குறள்
மருத்துவ அறிஞர்கள் கூறிய வாதம், பித்தம் சிலேட்டுமம் இவை கூடினாலே குறைந்தாலோ நாம் நோய் என்கிற துன்பத்திற்கு ஆளாகிவிடுகிறோம் என்பது நோய் குறித்த வள்ளுவரின் கூற்று.
மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலே அவன் பெரிதும் அஞ்சுவது நோய்க்குத்தான். நோயில்லாமல் எந்த ஒரு மனிதனும் வாழமுடிவதில்லை. ஏதாவது ஒருவகையில் மனிதமனம் நோயுற்றிருப்பதாகவே கற்பனைசெய்து கொண்டு நலிவடைந்து அதனை எதிர்கொள்ள தயங்கிக்கொண்டே இருக்கிறது.
இப்படிப்பட்ட நோய்மையை, நோயுற்றவர்களை அவர்களின் உளவியலை எஸ்.ராமகிருஷ்ணன் தன் ‘துயில்’ என்ற நாவலின் வழி விரிவாக எடுத்துரைக்கின்றார். நோய்மையை இதுவரை இந்த அளவிற்கு உற்றுநோக்கி விரிவாகப் பேசியிருப்பவர் இவராகத்தான் இருக்கமுடியும் என்பதில் ஐயமில்லை.
‘துயில்’ என்ற நாவலில் ‘தெக்கோடு’ தேவாலயத் திருவிழாவிற்காக துயில்தரு மாதாவை தரிசிக்க பல்வேறு திசைகளிலிருந்து பலர் வந்துகொண்டிருக்கிறார்கள். நோயாளிகள் தத்தம் இடங்களிலிருந்து கால்நடையாகவே நடந்து திருவிழாவிற்கு வந்து சேர்ந்தால் அவர்களின் தீர்க்கமுடியாத பிணிகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். அவ்வாறு வந்துசேரும் நோயாளிகள் இடையில் தங்கிச்செல்லும் இடமாகவும், ஆரோக்கியம் நல்கும் இடமாகவும் விளங்குவது ‘எட்டூர்மண்டபம்’ என்னும் இடமாகும். அங்கே சேவையாற்றும் ‘கொண்டலு அக்கா’ என்பவர் அன்னை தெரசாவை நினைவூட்டும் வகையில் நோயாளிகளிடம் பரிவும், பாசமும், சேவையும் ஆற்றும் தொண்டுள்ளம் கொண்டவராக விளங்குகிறார். அவர் ஒரு மருத்துவரல்லர், மருந்து மாத்திரைகள் நோயைத் தணிப்பதை விட மனத்திற்கு ஆறுதல் சொல்வதுதான் நோய் தீர்க்கும் ரகசியம் என்பதை அறிந்துவைத்திருக்கும் சமுதாய மருத்துவராக விளங்குகிறார். நோயாளிகளின் உளவியலை, ஏக்கங்களை, தேவைகளை இவர் வாயிலாகவே நமக்கு உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
அதைப்போலவே நோய்மை என்பதை வெறும் பாசமும், பரிவும், மதமும் மட்டுமே சீராக்கி விடாது. அதோடு சரியான சிகிச்சையும் தேவை என்பதை உணர்த்தவே படைக்கப்பட்ட பாத்திரம் ‘ஏலன்பவர்’ என்ற மருத்தவருடையது. அயல்நாட்டிலிருந்த ஞானத்தந்தை லகோம்பாவில் சேவை செய்வதில் மிகுந்த ஆர்வமுள்ள ‘ஏலன்பவர்’ மருத்துவப்பணி செய்வதற்காக தெக்கோட்டிற்கு அனுப்பப்படுகிறார். இவ்விருவரின் பாத்திரத்தின்வழி நோயாளிகளின் உளவியல் மருத்துவத்தின் முக்கியத்துவம், மதத்தின் தலையீடு, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை விளக்க முற்படுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
நமது பிறப்பே ஒரு நோய்மைதான், பின் எப்படி நோய்மையில்லாத மனிதர்கள் இருக்க முடியும்? நோய்மை தவறானதில்லை. அதைக்கொண்டு நாம் பயம் கொள்வதுதான் தவறு. நோய்மை எல்லா மனிதர்களின் வயதையும் கரைத்துவிடுகிறது. நோய்மையின்போது அவனுக்குள் இருந்து ஒரு சிறுவனோ, சிறுமியோ வெளிப்பட்டுவிடுகிறாள். அந்த பால்ய பருவம் பிடிவாதமானது, வலி தாங்கமுடியாமல் புலம்பக்கூடியது. உலகைக் கண்டு பயப்படக்கூடியது, நோயுற்றிருக்கையில் மனம் இடைவிடாமல் எதை எதையோ நினைத்துக்; கொண்டேயிருக்கிறது. தறியில் ஒடும் ஓட்டத்தைப்போல மனது சதா பயத்தை நெசவுசெய்ய ஆரம்பிக்கின்றது.
நாம் நோய்மையுறும்போது அதைப்பற்றி அடுத்தவரோடு பேச விரும்புகிறோம், ஆனால் நோயுற்றவரின் பேச்சை யாருமே செவிகொடுத்துக் கேட்க தயாராக இல்லை, அதனால்தான் நோயாளிகள் தனக்குத் தானே பேசிக்கொள்ளத் துவங்குகிறார்கள். தன்னோடு பேசிக்கொள்ளாத நோயாளி எவருமே இருக்க முடியாது. நோய்மையின் வலியை, வேதனையை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது அது உலர்ந்துபோகத் துவங்குகிறது, பகிர்ந்துகொள்ளப்படாத, பொத்திவைக்கப்பட்ட வேதனைகள் இரணமாக்கி அறுத்துக்கொண்டேயிருக்கக் கூடியது. மனம்விட்டுப் பேசுவதால் மனத்தில் உள்ள துயரம் குறையும்.
ஒவ்வொரு நோயும் ஒரு விசித்திரம், அது எப்படி உருவானது என்பதை யாருமே அறிந்துகொள்வதில்லை. நோயாளி நலமடைவது என்பது மருந்தால் மட்டுமே ஏற்படுவதில்லை. அது ஒரு அக விளைவு, நலமடைய வைப்பதற்கு மருந்து துணைசெய்கிறது. மருந்திற்குச் சமமாக, மருந்தை விடச் சில நேரங்களில் மேலானதாக நோயாளியின் உடனிருப்பவர்கள் அல்லது குடும்பம் அவன்மீது அக்கறை கொண்டவர்களின் நம்பிக்கைகள், பிரார்த்தனைகள், தீராத அன்பு அவனை நோய்மையிலிருந்து நலமடைய செய்கிறது. நோயாளி குணமடைவது பெரும்பாலும் நம்பிக்கையில்தான். அது ஒரு மகத்தான மருந்து, அது எல்லா மருந்துகளையும் விட வலிமையானது, நோயாளியின் மீது எவர் ஒருவர் தீராத அன்பும், பரிவும் காட்டுகிறாரோ அதுவே உன்னதமானது. அந்த அன்பு மட்டுமே நோயிலிந்து விடுபடும் உந்துதலை ஏற்படுத்திவிடக்கூடியது.
நோய்மையுற்றோர் தனது வலி, வேதனைகளை யாரோடும் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்றுதான் ஆதங்கப்படுகிறார்கள்; கண்ணீர் விடுகிறார்கள். ஓர் அரவணைப்பும், ஆறுதலான சொற்களும், உறக்கத்தில்கூட நம்மை யாரோ அருகிலிருந்து கவனித்துக்கொள்கிறார்கள் என்ற நம்பிக்கையும்தான் நோயாளியை முற்றிலும் குணப்படுத்தும்.
நோய்மை என்பது கடவுள்தரும் தண்டனையில்லை, ஆனால் அது கடவுளைப்பற்றி சிந்திப்பதற்கான முதல் வழிகாட்டுதல் என்று எடுத்துக்கொள்ளலாம். மனிதர்கள் தங்கள் உடலை எப்போதும் ஓர் இயந்திரமாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அது செம்மையாக இயங்கிக்கொண்டிருக்கும்வரை அவர்கள் அதை கவனிப்பதே இல்லை. ஆனால் அதில் ஏதாவது கோளாறு என்று வந்துவிட்டால் உடனே பயம் கொள்கிறார்கள்.
ஓவ்வொரு மனிதனும் நோயிலிருந்து நிறையக் கற்றுக்கொள்கிறார்கள். அப்போதுதான் அவனுக்கு உடலின் அமைப்பும், நுணுக்கமும், விசித்திரங்களும் புரியத் துவங்குகிறது. உடல் வெறும் எந்திரமல்ல, அது ஓர் ஆத்மாவின் கூடு என்பதை உணர்த்தவே மதம் தேவைப்படுகிறது. மதம் என்பது நம்பிக்கையை உருவாக்கும் ஒரு மையம். அது மனிதனை துயரத்தில் விழுந்துவிடாதபடி தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை மதம் என்ற அமைப்பே இல்லாமல் போயிருந்தால் மனிதன் மிருக நிலைக்குத்தான் போயிருப்பான்.
ஆனால் உண்மையில் மருத்துவத்தின் முதல் எதிரியாக மதத்தைக் கருதுவதும் ஏற்புடையதாக இருக்கின்றது. மதத்தின் பெயரால்தான் எல்லா நோய்மைகளும் அடையாளப்படுத்தப்படுகின்றன. நோயை சொல்லித்தான் மனிதர்களை மதம் தன்வசம் இழுக்கின்றது. இந்த பயத்தால்தான் அவர்கள் கடவுளை வணங்குகிறார்கள். மனிதனை பயமுறுத்தும் எந்தக் கடவுளும் மனிதர்களுக்குத் தேவையில்லை, அந்த பயத்தை யாராவது திணிக்க முயன்றால் அதற்கு கட்டுப்படக் கூடாது.
மனிதர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவமாகவே அவர்களுக்கு வந்த நோய்கள் கருதப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் கூட குழந்தையின்மைக்கான காரணம் தெய்வக்குற்றமாக கருதப்படும் நிலை உள்ளது. மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டு பிரச்சனைகளை தெரிந்துகொள்ளாமல் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தலைவிதியென பேசாமல் இருந்துவிடுகிறார்கள். மேலும் பலர் பைத்தியங்கள் என அடையாளப்படுத்தப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு முற்றும் தெரிந்த மருத்துவராகக் கருதப்படும் பூசாரியிடம் சவுக்கடிபட்டு அல்லலுறும் நிலையே காணப்படுகிறது. தேவையற்ற பச்சிலைகளை அரைத்துக் குணமாக்குவதாக அவர்கள் கொடுக்கும் சாற்றை உட்கொண்டு மயக்கமடையச் செய்கிறார்கள், இதனால் மேலும் பல உபாதைகள் வருகின்றன. இதைப்பார்த்து பேய் குடிகொண்டுள்ளதென எண்ணி அடித்து வதைக்கின்றனர். இந்நிகழ்வு அவர்களை மேலும் மூர்க்கமடையச் செய்கின்றது. மனச்சிதைவு நோய்க்கும் ஆளாக நேரிடுகிறது.
மனச்சிதைவு நோய் கண்டவர்களை குணமாக்குவது என்பது தேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே இயலும் காரியம். அவர்களை குழந்தைகள் போலக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பரிகாசம் செய்யக்கூடாது. அது ஆழ்ந்த அக்கறையும் ஆறுதலும் காட்டப்படவேண்டிய நோய்மை. அதை அணுகுவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் முறையான மருத்துவம் வேண்டும். மனத்தை அறிந்து மென்மையாகவும், நுட்பமாகவும் வைத்தியம் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களை அதிலிருந்து மீட்கமுடியும்.
நோயாளியின் உளவியலை இவ்வாறு விளக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் மனிதனை நோய்மையிலிருந்து விடுவிக்கச் சமுதாயமும், மருத்துவரும் ஆற்றவேண்டிய கடமைகளையும் கூறுகிறார்.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” -திருவள்ளுவர்.
நோய்களைத் தீர்க்கும் மருத்துவர் தன்னிடம் வரக்கூடிய நோயாளிகளிடம் உள்ள நோயின் தன்மையையும் அந்த நோய் வந்ததற்குக் காரணத்தையும் அந்த நோயைத் தணிக்கும் மருத்துவத்தையும் அறிந்து பின் மருத்துவம் செய்ய வேண்டுமென்பது வள்ளுவர் கூற்று.
நோய் பிடிக்கப்பட்ட மனிதனைக் கையாள்வது சற்றுக் கடினமான காரியம் தான். அதைக் கையாளத் தெரிந்தவரே சிறந்த மருத்துவர். நாம் எல்லோரும் அதிகமாகக் கோபப்படுவது நோயாளிகளிடம்தான். அவர்களது உபாதைகளைத் தேவையற்ற தொந்தரவுகளாகக் கருதுகிறோம். நல்ல மருத்துவர் நோயாளியைத் தோழனைப்போல நடத்த வேண்டும். அவனது அந்தரங்க வலியைத் தொட்டு உணர்ந்து ஆறுதல் சொல்லவேண்டும்.
நோயாளியிடம் பரிவுகொள்ளத் தெரியாத மருத்துவரைப் போலஇந்த உலகில் மோசமானவர் எவரும் இருக்க முடியாது, மருத்துவம் என்பது பணம் சேர்க்கும் தொழில் இல்லை. அது ஒரு கைமாறில்லாத சேவை. அது கறைபடும்போது மனிதன் மீட்சியுறவே முடியாது. நல்ல மருத்துவர் நோயாளியிடம் பேசும் முன்பாக அவனுடன் வந்திருப்பவர்களிடம் பேசி முதலில் அவர்களை ஆறுதல்படுத்த வேண்டும். அவர்கள் நோயாளிகளை விடவும் அதிகம் துயருற்று இருப்பார்கள். அவர்களோடு நல்ல வார்த்தை பேசி கவலையிலிருந்து விடுவித்து அமைதி கொள்ளச்செய்யவேண்டும். அதன்பின்னரே நோயளியிடம் பேசவேண்டும். ஒருபோதும் நோயாளியை பரிகாசம் செய்துவிடக்கூடாது. அது அவனுக்குள் ஆறாத வடுவினை உண்டாக்கிவிடும். பேச்சின் வழியே அவன் இதயத்தைத் தொட முயல்வதுதான் மருத்துவரின் முதல் கடமை. மருத்துவரால் அவன் மனத்திற்குள் செல்ல முடிந்தாலே பாதி மருத்துவம் முடிந்துவிடும்.
மருத்துவரிடம் சென்றால் அற்புதம் நடக்கும் என ஒவ்வொரு நோயாளியும் எதிர்பார்க்கிறான். அந்தக் கனவை வளர்த்துக்கொள்ள, நம்பிக்கையுடன் இருக்க மருத்துவர் உதவி செய்யவேண்டும். அந்த நம்பிக்கைதான் அவனை குணமாக்கும். ஒரே நேரத்தில் இரண்டு நோயளிகளிடம் ஒருபோதும் மருத்துவர் உரையாடக்கூடாது. அது மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும். அதுபோல எந்த நோயாளியையும் மற்றவரோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாது, அதுவும் அவனை பலவீனமாக்கிவிடும். நோயை குணப்படுத்துவதில் மருத்துவரின் தோற்றப்பொலிவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நோயாளியை விசாரணை செய்யும் மருத்துவர் ஆரோக்கியமானவராகவும், பொலிவோடும் இருக்கவேண்டும். மருத்துவரது தோற்றம், கவலையற்ற முகம், மென்மையான பேச்சு இவைகள் தான் நோயாளி மருத்துவரை நம்புவதற்கான எளிய வழிகள். மருத்துவரின் அரவணைப்பில், மருத்துவரின் பலத்தில்தான் ஒவ்வொரு நோயாளியும் நோய்மையிலிருந்து விடுபட முயற்சி செய்கிறான், எனவே மருத்துவர் சஞ்சலமோ, குழப்பமோ கொண்டிருக்கக் கூடாது. அதேசமயம் நோயாளிகளோடு தனிப்பட்ட விதத்தில் நெருங்கிய உறவு கொள்ளவும் கூடாது. அது மருத்துவரை உணர்ச்சிவயமாக்கிவிடும். நோய்மையை அறிவது உன்னதமான கலை, அதை முறையாகப் பயிலாவிட்டால் சிறந்த மருத்துவராக முடியாது.
சில நேரங்களில் மருத்துவர்கள் பொய்யைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. பல நேரங்களில் உண்மை மனிதனைக் கொன்றுவிடும். அந்தச் சூழ்நிலையில் பொய்யான நம்பிக்கையும், பொய்யான ஆறுதலும் நோயாளியைத் தேற்றும் எனும்போது அவனை தொடர்ந்து செயல்பட வைக்க அது உதவும். ஒரு நல்ல மருத்துவர் எல்லா நேரங்களிலும் உண்மையைச் சொல்வதில்லை. இந்த ஒட்டுமொத்த உலகில் தான் மட்டும் எதற்கும் உதவாதவன் என்ற நினைப்பு தலைதூக்கும். அந்த நினைப்பு வந்தவுடன் மனம் கனக்கத் துவங்கிவிடும், யாராவது தன்னுடன் பேசி ஆறுதல் படுத்தமாட்டார்களா என்று ஆதங்கமாக இருக்கும். ஆனால் அவர்களை யாருமே புரிந்துகொள்ள முன்வரமாட்டார்கள். அது அவர்களது தாழ்வுணர்ச்சியை மேலும் மேலும் அதிகப்படுத்தும்.
அந்த உணர்வு தன்னை ஒரு வீட்டுச்செடியாகவும், அதற்கு யாராவது தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கவேண்டும், இல்லையென்றால் வாடிப்போய்விடும் என்பது போன்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது. தன் பலம் தெரியாதவர்களாக பிறருக்கு இருக்கும் திறமை, சமாளிப்பு, சாதுர்யம் போன்ற எதுவுமே தமக்கில்லையே என்று எண்ணவைத்துத் தங்களைத் தாங்களே குறைத்து மதிப்பிடக் காரணமாகிறது.
உடல் குறைபாட்டினால் தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்புகள், புண்படுத்தும் பலரது கேலி மற்றும் மீள முடியாத தாழ்வுணர்ச்சி அவர்களுக்குள் தீவிரமான மன பாதிப்பினை உருவாக்குகிறது. அந்த மன பாதிப்பு அவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் செயல்களை முடக்கத் துவங்குகிறது. தான் ஒரு இறந்துபோன பல்லி, தன்னை எறும்புகள் இழுத்துக்கொண்டு போவதாக எண்ண வைக்கிறது.
தனித்து வாழமுடியாது என்ற எண்ணத்தை நம் சமூகம் உடற்குறைபாடுள்ளவர்கள் மேல் திணித்துள்ளது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை அவர்கள் முழுமையான தோல்வியின் அடையாளமாகவே கருதுகிறார்கள். யாரோ ஒருவரை நம்பித்தான் வாழ்ந்தாகவேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்படும் அவர்கள் தங்களை யாரிடமாவது முழுமையாக ஒப்படைத்துவிட்டு ஒரு வளர்ப்பு நாயைப்போல வாழ்ந்துவிட்டு போகவேண்டியதுதான் என எண்ணுகிறார்கள். தொடர்ச்சியான தோல்விகளையும், அவமானங்களையும் சந்திப்பதால் தங்களுக்கென்று கனவுகளும், சுயமரியாதையும் தேவையில்லை என்ற நினைப்புக்குள் வந்துவிடுகிறார்கள். தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணிக்கொண்டிருப்பதாலோ அவர்களுக்கு அவர்களையே பிடிக்காமல் போகிறது. தன்னைத்தானே நேசிப்பதும், மதிப்பதும் முக்கியமான ஒன்றாக அவர்களுக்கு தோன்றுவதில்லை.
உடற்குறைபாடுடையவர்கள் தங்களைப் பயந்து ஓடும் எலியாக எண்ணிக் குறுகிப் போய்விடக்கூடாது. துரத்தும் ஆளாக எண்ண வேண்டும். அடிக்கிற ஆளே ஜெயிப்பான், பயந்து ஓடுகிறவன் தோற்றுப்போய்விடுவான் என்பதை மனத்தில் கொண்டு எண்ணத்தை நேர்மறையாக மாற்றிக்கொள்ளவேண்டும். உடற்குறைபாட்டை காரணம் காட்டி ஒடுங்கியோ, ஒதுங்கியோ வாழ வேண்டிய அவசியமில்லை. சக மனிதர்களாகவே தங்களையும் எண்ணிக்கொண்டு அனைத்திலும் தன்னை முன்னிறுத்தவேண்டும், இதற்கு எடுத்துக்காட்டாக ஜோசப் என்ற கதாபாத்திரத்தை ‘நிமித்தம்’ என்ற தன் நாவலில் படைத்திருக்கிறார் எஸ்.ரா. அவனுடைய நேரிய செயல்களை விவரிக்கும்போது,
”அவன் தன் உடற்குறைபாட்டினை என்றும் ஒரு பொருட்டாகவே எண்ணமாட்டான், எப்போதும் சந்தோஷமாகவே காணப்படுகிறான், தனது சந்தோஷத்தை உருவாக்கிக்கொள்ள அவன் எதையும் செய்யத் தயாராக இருக்கிறான், அவன் தன்னைப்பற்றி என்றுமே தன்னிரக்கம் கொள்வதில்லை, இந்த உலகின் கேலிகள் எதுவுமே அவனுக்கு ஒரு பொருட்டில்லை, தனது சந்தோஷத்தை அவன் உலகின் மீது பரவ விடுகிறான், உலகை பதிலுக்குக் கேலி செய்கிறான். எற்றி உதைத்து விளையாடுகிறான், இயற்கையை ரசிக்கிறான், மழையில் விளையாடுகிறான், அவனது இம்மனநிலையை ஒவ்வொரு உடற்குறைபாடுடையவரும் வளர்க்க வேண்டும், அப்போதுதான் தன்னம்பிக்கையும், நேரிய எண்ணங்களும் வளரும் என்கிறார்.
உலகில் வாழும் அனைவருக்குள்ளும் ஆச்சர்யம் ஒளிந்துகொண்டுள்ளது. ஆனால் அதை நாம் தேடிப்பார்ப்பதில்லை, வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் புதிதாக எதையாவது ஒன்றைக் கண்டுபிடிக்கவேண்டும். இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு உதவும் வகையில் எதையாவது செய்துவிட்டுப் போகவேண்டும். நமக்குள் இருக்கும் ஆச்சர்யத்தைத் தேடிப்பார்த்து அறிந்துகொள்ளவேண்டும். மனிதன் வயதாவதை என்றுமே தடுக்க முடியாது. வயதாவதைப் பொருட்படுத்தாது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் உபயோகமானதாக மாற்றமுடியும் என்ற எண்ணத்தோடு செயலாற்ற வேண்டும். உடற்குறைபாடுடையவர்களை இங்கு, இவர்களுக்கு, இவர்களுடன்தான் பிறக்க வைக்கவேண்டும் என்று உலகம் நிர்ணயித்துத்தான் பிறக்க வைக்கிறது. அதன் போக்கில் நாமும் அவர்களை ஏற்று வாழவைக்கத் துணைபுரிய வேண்டும். அவர்களை ஒடுக்காமல், அவர்களுக்கு துணையாக இருந்து, உடற்குறைபாடு என்பது என்பது ஒரு பொருட்டல்ல என்பதை உணர்த்தவேண்டும், அவர்கள் வாழ வழிசெய்ய வேண்டும், வினோதங்கள் நிறைந்த இவ்வுலகம் ஏற்ற இறக்கங்கள் நிரம்பியது, அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனுடன் திறமையாகப் பயணிப்பதே நம்முள் உள்ள சவால். அதைத் திறம்படச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும், உலகத்தில் நமக்கெனக் கொடுக்கப்பட்ட தனிஇடத்தைச் செவ்வனே நிறைவு செய்வதே நாம் இவ்வுலகில் பிறந்ததற்கு அர்த்தமுள்ளதாக அமையும்.
இவ்வாறு எஸ்.ரா., உடற்குறைபாடுடையவர்களின் வலியையும், சமூகத்தின் கடமையையும், தீர்வுகளையும் ‘நிமித்தம்’ நாவலின் வழி நமக்கு உணர்த்துகிறார்.
“இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்” -திருக்குறள்
அதிகமாக உணவை உண்பதினால் வரும் துன்பத்தை அறிந்து அளவோடு உண்பவர்களிடம் இன்பம் குடிகொள்ளும், அதுபோல அதிகமாக உணவு உண்பவர்களிடம் நோயானது குடிகொள்ளும் என்ற வள்ளுவரின் கூற்றிற்கிணங்க நோய்வரும் காரணங்களை அறிந்து, அதுவராமல் காக்கும் வழிகளை மேற்கொண்டால் நோய்மை என்ற துன்பத்திற்கு ஆளாக நேரிடாது என்று எஸ்.ராமகிருஷ்ணன் தன் நாவலின் வழி அறிவுறுத்துகிறார்.
மனிதன் நோய்மையை முதலாக உணர்வது, தான் சாப்பிடும் உணவு கசக்கும்போதுதான், அல்லது விரும்பிய உணவை உடல் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கும்போதுதான். நாம் நம் உடலை ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். உடல் ஒரு தேவாலயம் என்று நாம் உணர்வதே இல்லை. எவன் ஒருவன் தன் உடலைத் தேவனின் இருப்பிடமாக உணர்கிறானோ அவனே விழிப்புற்ற மனிதன்.
உள்ள குறைபாடே உடற்குறைபாடு
‘சமுதாயத்தை மாற்ற வல்லது எழுத்து’ என்பதை பல்வேறு அறிஞர்பெருமக்கள் நிரூபித்து வருகின்றனர். அதனடிப்படையில் எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள், இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்பட்டிருக்கிறது. அந்தவகையில் உடற்குறைபாடுடைய ஒருவரின் வலியைச் சமூகத்திற்குத் தெரிவிக்க முயன்றதன் விளைவே எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘நிமித்தம்’ என்ற நாவலாகும்.
உடற்குறைபாட்டால் பலர் தங்கள் வாழ்க்கையையே தொலைத்தவர்களாக காணப்படுகிறார்கள். உடற்குறைபாடு அவர்களுக்கு ஏற்படுத்தும் வலியும், துக்கமும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று. இதை நன்குணர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், உடற்குறைபாட்டினையும், அது கொடுக்கும் வலியையும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் தாழ்வுணர்ச்சியையும், அவர்களைச் சமூகம் நடத்தும் விதத்தையும் அதிலிருந்து மீளும் வழியையும் ‘நிமித்தம்’ நாவலின் முதன்மைப் பாத்திரமான தேவராஜின் எண்ணக் குமுறல்களாக வெளிப்படுத்துகிறார்.
வாழ்க்கை என்பது மனிதர்களுக்கு இறக்கும் வரை போராட்டமாகவே அமைந்துவிடுகிறது. இவ்வுலகில் வாழவும், நிலைபெறவும், மனிதன் சமூகத்தோடும், மனிதர்களோடும், போராடித் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வுலகில் நல்ல உடல்நலத்தோடும், நல்ல பொருளாதாரத்தோடும், உள்ளவர்களே பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் உடற்குறைபாடுடையவர்கள் நிலை கேள்விக்குறிதான்.
உடற்குறைபாடு என்பது அவர்களின் தவறல்ல, உடற்குறைபாட்டை விரும்பி ஏற்றுக்கொண்டு யாரும் இவ்வுலகில் பிறப்பதில்லை. இயற்கை எப்போதுமே சில விதிவிலக்குகளை உருவாக்கி கொண்டே இருப்பது போலவே தான் உடற்குறைபாடுடைய மனிதர்களை இவ்வுலகில் ஜனிக்க வைத்துள்ளது. இவ்வுண்மையை மனிதர்களோ, சமூகமோ உள்ளபடியே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தாங்கொணாத் துயரங்களையும், அவமானங்களையும், அவர்களுக்கு தருகிறது.
உடற்குறை உள்ளவர்களுக்கு எதிலும் முன்னுரிமை மறுக்கப்படுவதோடு இரண்டாம்தர மனிதர்களாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். உடற்குறைபாடுடைய மனிதர்களுக்குச் சமூகம் கொடுக்கும் அவமானங்கள் ஒருபுறமிருக்க ஏன் சொந்தங்களான தாயும், தந்தையும் உடன்பிறப்புகளுமே உதாசீனப்படுத்துகிறார்கள், ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். தங்களது பிள்ளைகளிலேயே ஒருவரைத் தனிமைப்படுத்திப்பார்ப்பது மற்றவரை வேறுமாதிரிப் பார்ப்பது எனப் பாகுபாடு காட்டுகின்றனர். உடற்குறைபாடுடைய குழந்தை ஏதோ அடுத்தவீட்டு குழந்தைபோல நடத்தப்படும் விதமும் அரங்கேறி வருகின்றது. அடியும், உதையும், வசவுகளும் பெறாத உடற்குறைபாடுடைய மனிதர்கள் இருப்பது அபூர்வமாகத்தான் இருக்கிறது. இதுமட்டுமல்லாது வெளியே ஆசிரியரின் வெறுப்பும், சக மாணவர்களின் கேலிப்பேச்சும் என எங்குப் பார்த்தாலும் அவமானங்களையே சந்திக்க வேண்டியுள்ளது.
இதனால் இவர்கள் மனது சித்திரவதைக்குள்ளாகிறது, மறக்க நினைக்கின்ற ஆனால் மறக்கமுடியாத கசப்பான நினைவுகள் அவர்களுக்குள் தங்குகின்றது. தொடர்ந்த புறக்கணிப்பு அவர்களை மற்றவர்களை வெறுக்க தூண்டுகிறது. இவ்வுலகில் ஏன் பிறந்தோம் என்று கடவுள்மேல் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஒருவரை வெறுக்கத்துவங்கிவிட்டால் அது ஒருவகை இன்பத்தை அளிக்கிறது. அந்த இன்பம் தேன்கலந்த இஞ்சிச்சாறு குடிப்பதைப் போல, புண்ணைச் சொறிந்து சுகம் காண்பது போல வேதனையான இன்பத்தை கொடுக்கிறது. வெறுப்பு ஒரு சருமநோய் போன்றது. அடிக்கடி சொறிந்து இன்பம் காணத் தூண்டுகிறது வெறுப்பின் வழியே தான் மனதின் கசப்புணர்வு பொங்கி வழிகிறது. ஒருவரை வெறுக்கத் துவங்கிய பிறகு அவர்களின் எல்லாச் செயல்களையும் நாம் விமர்சிக்கத் துவங்கி விடுகிறோம். அதன்பிறகு அவரிடம் நல்லவை துளிகூட கிடையாது என்ற முடிவிற்கே வருகிறோம். வெறுப்பு சிம்னி விளக்கில் கரும்புகை படிவதைப்போல நம்மை கருமையாக்கி விடுகிறது. மிஞ்சிப்போவது கரும்புகை மட்டுமே.
உடற்குறைபாடுடையவர்களின் கடந்தகாலம் என்பது கசப்பான நினைவுகளின் குவியலால் ஆனது. அவர்களின் கசப்பான நினைவுகள் எளிதில் மறைந்துபோக கூடியதாக இருப்பதில்லை. அந்நினைவுகள் யாவும் மறந்துபோக கூடுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுமளவிற்கு அது அவர்களை வதைக்கிறது. அவமானப்பட்ட நினைவு என்றுமே அவர்களுக்குள் கனன்றுகொண்டே இருக்கிறது. சிறு வயதிலிருந்து பட்ட அவமானங்கள், புறக்கணிப்புகள், அடிபட்ட வலி இன்னும் கூட ஒவ்வொருவருக்குள்ளும் பசுமையாகவே இருக்கிறது. அவர்களது மனது இன்பங்களை எளிதில் மறந்துவிடுகிறது. ஆனால் அவமதிப்புகளையும், புறக்கணிப்புகளையும் மறப்பதேயிலலை. என்றுமே அது அவர்களுக்குள் சுடர்விட்டுக்கொண்டேதான் இருக்கும். இவ்வாறு உடற்குறைபாடுடையவர்கள் உளவியல் குறித்து விளக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
உடற்குறைபாடுடையவர்கள் புறக்கணிக்கப்படுவதால் அவர்களுக்குள் ஏற்படும் தாழ்வுணர்ச்சி பற்றியும் கூறுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். உடற்குறைபாடு ஒருமுறை என்றால் அதைவிட பெரிய குறைபாடு தாழ்வுணர்ச்சி அவர்களுக்குள் பூதாகரமாக உருப்பெறுகிறது. குரங்கு தன் புண்ணை நோண்டிக்கொண்டிருப்பது போல அவர்கள் மனது சதா தாழ்வுணர்ச்சியை கிளறிக்கொண்டேயிருக்கும்.
*****
கட்டுரையாளர்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்களுடன் மற்றொரு வாரத்தில் உங்களுக்கு மடல் வரைவதில் மனம் மகிழ்கிறேன். காலநீரோட்டத்தில் மிதந்து செல்லும் எம் வாழ்க்கைப்படகு எதிர் கொள்ளும் சாவால்கள் எண்ணற்றவை. அவற்றை எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் நாம் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் விலைமதிப்பற்றவை.பெரும்பான்மையான சமயங்களில் அவ்வனுபங்களின் அடிப்படையில் நாம் எடுத்துக்கொள்ளும் முடிவுகள் எமது வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கின்றது. சில சமயங்களில் அம்முடிவுகள் மேலும் பல பாதிப்புகளையும் அதன் மூலம் அனுபவங்களையும் புகட்டுகின்றன. ஆனால் மிகவும் சொற்பமான வேளைகளில் எமது நடவடிக்கைகள் தரும் விளைவுகள் எமது வாழ்க்கையின் முடிவிற்கே எம்மை அழைத்துச் செல்கின்றது.
சமுதாயத்தில் நிகழ்த்தப்படும் பல நிகழ்வுகள் அன்றி எடுக்கப்படும் நடவடிக்கைகள் சட்டத்தின் கண்களில் குற்றமாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் நீதிதேவதையின் முன்றிலில் தீவிர விசாரணைகள் அந்நிகழ்வின் மீது பாய்ச்சும் ஒளி அந்நடவடிக்கையின் மீது செலுத்தப்படும் சட்டத்துக்குப் புறம்பானது எனும் முத்திரையைக் கேள்விக்குறியாக்குகிறது. சட்டப்புத்தகத்தில் குற்றமாகக் விபரிக்கப்படும் செயல்கள் அனைத்து,ம் நீதிமன்றத்தில் குற்றமாக நிரூபிக்கப்படுவதில்லை. எமக்கு இழைக்கப்படும் அல்லது எம்மீது இழைக்கப்படும் தாக்குதல் அன்றி எமது பிரத்தியேக வெளியில் அனுமதியின்றி நுழைந்து பயமுறுத்தும் வேளையில் அதிலிருந்து தப்புவதற்காக நாம் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம். அந்நடவடிக்கை கூடச் சட்ட விரோதமானது என்றோ அன்றி அடுத்தவர் மீது இழைக்கப்படும் தாக்குதல் என்றோ சட்டப்புத்தகத்தில் விபரிக்கப்படலாம் ஆனால் நீதிமன்றத்தில் தீர்ப்புகள் வித்தியாசமாகலாம்.
கடந்த ஏப்பிரல் மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள “ஹிதர் ஹிறீன் ( Hither Green ) “என்னும் இடத்தில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. அப்பகுதியில் வசித்து வந்த 78வயதான முதியவர் ” றிச்சார்ட் ஒஸ்போர்ன்-புறூக்ஸ் (Richard Osborne-Brooks) “என்பவரின் இல்லத்தில் இரண்டு திருடர்கள் நள்ளிரவில் புகுந்தனர். அரவம் கேட்டு விழித்த முதியவர் அவர்களை சமையலறையில் எதிர்கொண்டார். அவரை நோக்கி ஸ்குருட்ரைவர் சகிதம் வந்த ஒரு திருடனுடன் அவருக்குக் கைகலப்பு ஏற்பட்டது தற்காப்புக்காக கைகளில் கத்தியை எடுத்த அந்த முதியவரின் கத்திக்குத்துக்கு அந்தத் திருடன் ஆளானான். அதைத்தொடர்ந்து வெளியே ஒடிய அவ்விருவரில் கத்திக்குத்துக்கு இலக்கான திருடன் தரையில் விழ அவனை இழுத்துச் சென்ற மற்றைய திருடன் அவனை அப்படியே நடைபாதையில் விட்டுவிட்டு தனது வேனில் ஏறித் தப்பித்து விட்டான். தரையில் விழுந்தத் திருடனை அவ்விடத்துக்கு விரைந்த அவசர சிகிச்சை பிரிவினரால் காப்பாற்ற முடியவில்லை. இறந்தவன் 37வயதுடைய ” ஹென்றி வின்சென்ட்(Henry Vincent)” என்னும் மனிதன். மற்றைய 28வயதுடைய “பில்லி ஜீவ்ஸ்(Billy Jeeves) எனும் திருடன் தப்பியோடி விட்டான். அவனை போலிசார் வலைவிரித்துத் தேடுகிறார்கள். அவன் தப்பிச்சென்ற வேன் எரியுண்ட நிலையில் “ஓப்பிங்டன்” எனும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் நடந்த அடுத்தநாளே 78 வயது நிரம்பிய வயதானவர், அத்திருடனைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். அவருக்காக பொதுமக்கள் மத்தியில் பரந்த அனுதாப அலை வீசியது. ஊடகங்கள் பலவற்றிலும்,சமூக வலைத்தளங்களிலும் அவ்வயதானருக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தன. தீவிர விசாரணையின் பின்னால் அம்முதியவர் எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார். இது நடந்ததன் பின்னால் நிலைமை அவ்விடத்தில் கொஞ்சம் சிக்கலானது. உயிரிழந்த திருடனின் குடும்பத்தினர் அவனது அஞ்சலிக்காக அத்தெருவில் அவன் இறந்து விழுந்து கிடந்த இடத்தில் அதன் முன்னால் இருந்த ஒரு வீட்டின் வேலியில் அவனின் அஞ்சலிக்காக,மலர்க்கொத்துக்களைக் கட்டிவிட்டார்கள்.
கொதித்தெழுந்தது சுற்றியிருந்த சமூகம். இறந்தவன் என்ன தியாகியா? இல்லை யாரையாவது காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தவனா? அன்றி ஏதுமறியாத ஒருவன் விபத்தில் அகப்பட்டு உயிரிழந்தானா? அவனுக்காக எதற்கு மலர்க்கொத்துகள் வைக்க வேண்டும்? ஒரு வயதான 78 வயது முதியவரைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அவருடைய இல்லத்துக்குள் நுழைந்த திருடனுக்கா கெளரவம் அளிப்பது ? எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கட்டி வைக்கப்பட்ட மலர்க்கொத்துகளை பிடுங்கி எறிந்தனர் அத்தெருவில் வசிக்கும் அயலவர்கள்.
இறந்தவன் திருடனாக இருந்தாலும் மனிதன் தானே! அவன் எமது மகன், சகோதரன் அவனின் இழப்புக்காக நாம் அஞ்சலி செய்வது எமது உரிமை என்று வாதடியபடி மீண்டும் மலர்க்கொத்துகளை அவ்விடத்தில் வைத்தார்கள் அத்திருடனின் உறவினர்கள். அதை மீண்டும் பிடுங்கி எறிந்தார்கள் அயலவர்களிவர்களுக்கிடையில் நடைபெறும் போராட்டத்தைக் கண்டு தலையிடாது அவர்கள் கைகலப்பில் ஈடுபடாமல் கண்காணித்துக் கொண்டி ருந்தனர் காவற்துறையினர்.
இந்நிலையில் தான் சட்டத்தின் முன்னால் எமது வீட்டில் புகும் கொள்ளையர்களைத் தடுப்பதற்கு நாம் எதுவரை போகலாம்? எனும் கேள்வி எழுகிறது. இங்கிலாந்துச் சட்டத்தின் பிரகாரம் எமது வீட்டுக்குள் புகும் கொள்ளையரிடமிருந்து நாம் தப்பித்துக் கொள்வதற்கு “ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் தற்காப்புத் தாக்குதல்களை பிரயோகிக்கலாம்” என்று கூறப்படுக்கிறது. இந்தக் “குறிப்பிட்ட வரம்புக்குள் தற்காப்புப் தாக்குதல்கள்” என்பதன் விளக்கம் முன்னர் திட்டமிடாமல் அந்தப் பொழுதில் தப்பித்துக் கொள்வதற்காகக் கையில் அகப்படும் ஆயுதத்தைப் பிரயோகிக்கலாம் என்றே கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் அத்தாக்குதல் நடைபெற்ற வேளையில் இருந்த சூழல், குற்றம் யார்மீது இழைக்கப்படுக்கிறதோ அவர் பிரயோகித்த தாக்குதல் நியாயமாகத் தான் தப்பித்துக் கொள்வதற்காகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நிகழ்த்தப்பட்டதுதானா ஆழமாக விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
எது எப்படியிருப்பினும் ஒரு முதியவர் தொடரும் அச்சத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரால் தாக்கப்பட்டு இறந்த திருடனின் நண்பர்களிடமிருந்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது அவர் யாருக்கும் தெரியாத இடத்தில் பொலீசாரின் பாதுகாப்பிலிருக்கிறார். ஒரு தெருவில் உரிமைப் போர் நடைப்பெறுகிறது. பேராசையினால் ஒரு மனிதன் உயிரிழந்திருக்கிறான்.ஒன்றாகக் குற்றச்செயலில் ஈடுபட்டு விட்டு நண்பன் இறந்தாலும் பரவாயில்லை நாம் தப்பித்தால் போதும் என்று ஒருவன் தலைமறைவாகியிருக்கிறான்.
இதனால் தான் “சட்டம் ஒரு இருட்டறை” என்றாரோ அறிஞர் அண்ணா?
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 20.04.2018 வெள்ளிக் கிழமை சித்திரை மாதம் மிருகசீர்ஷ நக்ஷத்திரம், சதுர்த்தி திதியில் அவதரித்த ஸ்ரீமத் ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை 21.04.2018 சனிக்கிழமை சித்திரை திருவாதிர நக்ஷத்திரத்தை ஸ்ரீமத் இராமானுஜருடைய 1001 வது ஆண்டு ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகான் ஆதிசங்கரர்!
எளிய விளக்கங்களாலும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளாலும் இந்து மதத்தை எழுச்சியுறச் செய்த மகான் ஆதிசங்கரர்! சிவபெருமானின் அம்சமாகப் போற்றப்படும் ஆதிசங்கரரின் அவதார தினம் இன்று! கேரளாவின் காலடி என்ற ஊரில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்கு, திருச்சிவபேரூர் என்னும் திருச்சூர் வடக்குநாதப் பெருமானின் அருளால் பிறந்தவர் ஆதிசங்கரர். மகாலட்சுமியை ஸ்தோத்திரங்களால் துதித்து, தங்க நெல்லிக்கனிகளைப் பொழியச் செய்தவர். அந்த ஸ்தோத்திரம்தான் ‘கனகதாரா ஸ்தோத்திரம்.
இவர் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை ஆகியவற்றுக்கு விளக்கம் எழுதிய மகா ஞானி. மாத்ருகா பஞ்சகம், கோவிந்தாஷ்டகம், ஆத்மபோதம், பஜகோவிந்தம், சுப்ரமண்ய புஜங்கம், மனிஷா பஞ்சக ஸ்தோத்திரம், சிவானந்த லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி ஆகிய ஸ்தோத்திரம் மற்றும் சாஸ்திர நூல்களை இயற்றினார்.
ஸ்ரீஆதிசங்கரர் உருவாக்கியதுதான் ஸ்ரீசக்கர வழிபாடு. அம்பிகையை ஸ்ரீசக்கர வடிவில் வழிபடுவது இன்றும் தொடர்கிறது. இதில் விஞ்ஞானமும், துல்லியமான கணிதமும் இருப்பதைக் கண்டு இன்றைய விஞ்ஞானிகளும் வியக்கின்றனர்.
`காலடி’-யில் அவதரித்து, தம் காலடித் தடங்களை புண்ணிய பாரதம் முழுவதும் பதித்த மகான் ஆதிசங்கரர். தம்முடைய 32-வது வயதில் தாம் எங்கிருந்து வந்தாரோ அந்தப் பரம்பொருளிடமே ஐக்கியமாகிவிட்டார். இந்து தர்மத்துக்கு இணையற்ற அரும் பணிகள் ஆற்றிய மகான் ஆதிசங்கரரின் அவதார தினத்தில், அவருடைய திருவடிகளைப் பணிந்து புனிதமடைவோம்!

’’புண்வந்(து) அரித்து புரையோடிப் போனாலும்
தன்வந் திரியிருக்கார் தீர்வுக்கு: -மண்வந்த
எல்லோர்க்கும் உண்டாம் எமபயம், தன்வந்த்ரி
கொள்வார்க்கு என்றுமவர் காப்பு’’….கிரேசி மோகன்
“ஊழ்கையில் சிக்கிடநான் உற்சாகம் குன்றிடாது
வாழ்க்கையில் பூவாசம் வைத்தனை-கூழ்கையில்!-
கூழ்கையில் -ஏந்திடும் ஏழையாய் ஏக்கமுற விட்டிடாது –
நீந்தினை என்னோடு நீ “…..கிரேசி மோகன்….!
எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்திரேலியா
நீதிபற்றி இலக்கியங்கியங்கள்
நிறையவே வந்தவிடம்
போதனைகள் பலபுகன்ற
புனிதர்கள் பிறந்தவிடம்
சாதனைகள் சரித்திரமாய்
தானாக்கிக் கொண்டவிடம்
சோதனைக்கு ஆளாகும்
சோகமது வேதனையே !
இதிகாசம் பலகண்ட
இந்திய தேசமதில்
அதிகாரம் எனுமரக்கன்
அகிம்சைதனை அழிக்கின்றான்
ஆண்டவனை வணங்கிநிற்கும்
ஆலயத்தை அழுக்காக்கும்
அருவருப்பை அரங்கேற்றும்
அவலமதை யார்தடுப்பார் !
இல்லறத்தை வைத்தார்கள்
இனியசுகம் அனுபவிக்க
தொல்லுலுகில் வல்லுறவை
சொல்லவில்லை பெரியோர்கள்
வல்லுறவைத் தேர்ந்தெடுத்து
வாழ்வினையே அழிக்கின்றார்
வாழுவதைப் பாரதத்தாய்
பார்த்தேங்கி அழுகின்றாள் !
சட்டத்தைப் படித்தவர்கள்
இட்டமுடன் திரிகின்றார்
எட்டுணையும் இரக்கமின்றி
எதைஎதையோ செய்கின்றார்
காவல்துறை கண்டாலும்
கருத்ததுலே காட்டாமல்
களவுசெய்வார் பக்கமாய்
கைகொடுத்தே நிற்கிறதே !
காமமெனும் வெறியாட்டம்
கணகின்றி நடந்தாலும்
காசுகொண்டு அத்தனையும்
காணாமலே செய்கின்றார்
காந்திமகான் வாழ்ந்திருந்த
காருண்ய பூமிதனில்
காட்டுத்தனம் பெருகவிட்டால்
நாட்டுநிலை என்னாகும் !
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்காவில் நடந்த ஒரு சோகக் கதை. தன்னால் எங்கும் இருக்க முடியாது என்பதால்தான் இறைவன் தாயைப் படைத்தார் என்று சொல்வார்கள். இது பல சமூகங்களில் வழங்கும் ஒரு பழமொழி என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு தாய்தான் தன் மகனையே நடக்க முடியாமல், பேச முடியாமல் மற்றப் பிள்ளைகளைப்போல் வளரவிடாமல் செய்திருக்கிறாள் என்று அறியும்போது நெஞ்சு கனக்கிறது. ஆனாலும் குற்றம் நடந்த இருபத்தியொரு வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குற்றத்திற்குத் தண்டனையும் கிடைத்திருக்கிறது என்று அறியும்போது மனம் கொஞ்சம் லேசாகிறது.
இந்தச் சம்பவம் நடந்தது 1997-இல் வட கரோலினா மாநில பிரன்ஸ்விக் மாவட்டத்தில். குழந்தை பிறந்து ஒரு வருஷத்திற்குள் அவனுடைய தாயும் அவளோடு சேர்ந்து குடும்பம் நடத்தியவனும் (பார்ட்னர்; அமெரிக்காவில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து குடும்பம் நடத்துபவர்களை இப்படித்தான் அழைக்கிறார்கள்). அந்தக் குழந்தையைப் பலவாறாகத் துன்புறுத்தியிருக்கிறார்கள். அவர்களின் துன்புறுத்தலுக்கு ஆளான அந்தப் பையனைப் பரிசோதித்த மருத்துவர் அவனுக்குக் கபாலத்தில் எலும்பு முறிவு உட்படப் பல காயங்கள், கீழ் உதட்டில் பெரிய கீறல், கால்களில் எலும்பு முறிவுகள், கடும் சுடு தண்ணீரில் குழந்தையை முக்கி எடுத்ததால் ஏற்பட்ட தீக்காயங்கள், பலமாக அழுத்தப்பட்டதால் தலையில் ஏற்பட்ட ஊமைக்காயங்கள் ஆகியவை இருந்ததாகக் குறிப்பிட்டார். அந்த மருத்துவரின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தக் கொடுமைகளைச் செய்த அவனுடைய தாயும் அவளுடைய பார்ட்னரும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை ஆனார்கள்.
இப்படிக் கொடுமைக்கு ஆளான குழந்தை பெத் ஸ்மிட் என்னும் பெண்ணாலும் அப்போதைய அவருடைய பார்ட்னராலும் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டான். இவர்கள் தத்தெடுத்த பிறகு அந்தக் குழந்தையின் பெயர் டேவிட் என்று மாற்றப்பட்டது. டேவிட்டுக்கு இந்தத் துன்புறுத்தலால் வாழ்க்கையே நின்றுவிட்டது. அவனால் நடக்க முடியவில்லை; பேச முடியவில்லை. குழந்தையைப் போன்றே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்த டேவிட் ஒரு மாதத்திற்கு முன்பு தன்னுடைய இருபத்தியொன்றாவது வயதில் இறந்து போனான். அவன் இறந்ததற்குக் காரணம் அவனுடைய தாயும் அவளுடைய பார்ட்னரும் அவன் ஒரு வயதாக இருக்கும்போது அவனைத் துன்புறுத்தியதுதான் என்று குற்றம் சாட்டி அரசு வக்கீல் அவர்களை மறுபடி கைதுசெய்திருக்கிறார்.
பெத் ஸ்மிட் கொடுத்த ஒரு பேட்டியில் டேவிட்டிற்கு உடைலில் பல குறைபாடுகள் இருந்தாலும் அவன் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்ததாகக் குறிப்பிட்டார். இருபது வருஷங்கள் அவன் வளர்ந்து வந்ததை அவர் கவனித்துவந்தார். டேவிட்டிற்கு இசை மீது அலாதிப் பிரியமாம்; இசையைக் கேட்டால் புன்னகை பூப்பானாம். விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகத்தோடு கலந்துகொள்வானாம். ஒரு முறை உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான பேஸ்பால் விளையாட்டில் ல்பங்கெடுத்துக்கொண்டானாம்; அதில் இவனுடைய நண்பன் ஒருவன் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ஓடுவானாம்.
துன்புறுத்தப்பட்டதால் பல உபாதைகளுக்கு உள்ளான டேவிட்டிற்கு. மூச்சுத் திணறல், நிமோனியா போன்ற உபாதைகள் அடிக்கடி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் அடிக்கடி ஏற்படுமாம். ஆனாலும் மருத்துவர்கள் அவன் ஆறு வயதிற்கு மேல் உயிர் பிழைத்து இருக்க மாட்டான் என்று கூறியிருந்தும் அதற்குமேல் அவன் வாழ்ந்ததால் அந்த வருஷங்கள் தனக்கு மிகவும் சிறப்பானவை என்கிறார் பெத் ஸ்மிட். தன்னுடைய முகபாவக்களாலும் கத்தல்களாலும் அவர்களோடு உரையாடுவானாம்.
அரசு வழக்கறிஞர் இப்போது டேவிட் இறந்ததற்கு அவன் ஒரு வயதாக இருந்தபோது துன்புறுத்தப்பட்டதுதான் காரணம் என்று கூறி அவனுடைய தாயையும் அவளுடைய பார்ட்னரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஜாமீன் இல்லாத வாழ்க்கை முழுவதும் சிறை என்ற தண்டனைகள் வழங்கப்படலாம். குற்றம் நடந்து இருபத்தியொரு வருடங்கள் ஆகிவிட்டிருந்தாலும் வட கரோலினா மாநிலத்தில் குற்றம் சுமத்துவதற்கு கால எல்லை எதுவும் இல்லை என்றும் தீங்கிழைக்கப்பட்டவர் இறந்துவிட்டால் தீங்கிழைத்தவர்கள் மீது பல வருஷங்களுக்குப் பிறகும் கொலைக் குற்றம் சுமத்தப்படலாம் என்றும் அரசு தரப்பு வக்கீல் கூறியிருக்கிறார்.
டேவிட் இல்லாத வாழ்க்கைக்குப் பழகிவரும், அவனை தத்தெடுத்து வளர்த்த பெத் ஸ்மிட், “டேவிட் வாழ்க்கை எவ்வளவு அபூர்வமானது, மதிப்பு மிக்கது என்று எங்கள் எல்லோருக்கும் உணர்த்தினான். அவனை வளர்ப்பதில் நிறைய பிரச்சினைகள் இருந்தன; நிறைய வேலை இருந்தது. இருப்பினும் இன்னொரு முறை அதை மறுபடி நான் செய்வேன்” என்றார்.
தன்னுடைய சொந்தக் குழந்தையையே துன்புறுத்தி ஊனமாக்கிய குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து அதில் இன்பம் காணும் ஒரு பெண்ணை அமெரிக்காவில்தான் பார்க்க முடியும்; குற்றம் நடந்து இருபத்தியொரு வருடங்களுக்குப் பிறகு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதும் அமெரிக்காவில்தான் நடக்கும்.
-முனைவர் வீ.மீனாட்சி
தமிழ்க்கவிதை உலகின் வசந்த காலமான இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீனத் தாக்கம் பெற்ற புதுக்கவிதையின் போக்குகள் நாம் அதற்கு முன் கண்டிராத புதிய பரிணாமங்களை உள்அடக்கியவை. இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையை மாற்றிப் பொருளாதாரப் பிடியிலும், சமுதாயச் சீர்கேடுகளிலும் போட்டி நிறைந்த இயந்திர வாழ்வாதாரத்திலும் சிக்கிய மனிதனின் மன வலிகளையும், புற வாழ்வைத் தாண்டி அகவாழ்வைத் தேடும் பயணத்தையும் பிரதிபலிக்கும் கருக்களைக் கொண்ட சிறுகதை, புதினம், கவிதைகள் என்ற இலக்கியப் பரிணாமங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இன்றையக் காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் புதுக்கவிதைகள்
“காலத்துக்குக் காலம் வாழ்க்கை மாறிவரும் போது வாழ்க்கையின் காலடியில் பிறக்கும் சிந்தனைகள் மாற்றமுறும்போது அவை வெளிப்படும்
கலை வடிவங்களும் மாறுகின்றன”
என்ற பாலாவின் வரிகளுக்கு ஏற்ப தன் வடிவ மாற்றத்தோடு பாடுபொருளிலும் பல்வேறு மாற்றங்களை தாங்கி வருகின்றன.
இத்தகைய ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சி சூழ்நிலைகளின் மத்தியில் ‘யாப்பின் சிரமங்களைத் தவிர்ப்பதற்கல்ல புதுக்கவிதை, மரபுக்கவிதை தொடாத உயரங்களைப் புதுக்கவிதை தொடவேண்டும். பழைய வடிவங்கள் தராத வசதிகளை அது தர வேண்டும்’ என்ற, மரபுக்கவிதையில் வேர்பதித்து புதுக்கவிதையில் மலர்பார்த்த கவிக்கோ அப்துல் ரகுமான் தன் சொல்லாடல்களுக்குத் தக்கவாறே தமிழ்க்கவிதை உலகில் மரபுக்கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், வசனக்கவிதைகள் என்று கவிதையின் பன்முகத்தளங்களில் முத்திரைகள் பதித்தவர். இதனால்தான் கலைஞர் ‘வெகுமானம் வேண்டுமென்றால் ரகுமானைக் கேட்பேன்’ என்று பாராட்டியுள்ளார். உருவகம், படிமம், பேச்சு, குறியீடு, தொன்மம், சர்ரியலிசம், கஜல் என்று பல்வேறு கவிதை உத்திகளைக் கையாண்டுப் புதுக்கவிதையில் பரிசோதனை முயற்சி செய்தி வெற்றிக் கண்ட அப்துல்ரகுமானின் பித்தன் என்ற கவிதை தொகுப்பு காட்சிப்படுத்தியுள்ள மனித மனத்தின் உள்வெளி பயணத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.
“அறிவியல் உளவியல் கண்டுபிடிப்புகளால் பிரபஞ்சத்தின் புதிர்களும் மனித இனத்தின் மர்மங்களும் அவிழ்ந்து வருகின்றன. இதனால் வருங்காலக் கவிதை உயரங்களில் பறக்கும் ஆழங்களில் மூழ்கி அதிசயங்களை எடுத்து வரும்.”
என்று சொல்லும் அப்துல் ரகுமான் தன்னுடைய படைப்புகளிலேயே அத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளதைப் பித்தன் கவிதைத் தொகுப்பில் காணமுடிகிறது.
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது மனசக்தியால் ஆட்டுவிக்கப்படுகிறான். புறவாழ்வு, அகவாழ்வு என்ற நிலைகளில் பயணப்படுகின்றான். இதில் எதில் அவன் சிந்தை மீசெல்லுகிறதோ அதனைப் பொறுத்தே அவனது வாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த அகம், புறம் என்ற உள்வெளி இரண்டு நிலைகளிலுமே போராட்டத்தோடுதான் பயணப்பட்டு கொண்டிருக்கிறான் என்பதை,
“எனக்குள் இருவர் / இருக்கின்றனர்
ஒருவன் பாடகன் / மற்றொருவன் பித்தன்
பாடகன் ஏதாவது / ஒரு ராகத்தை
ஆலாபனை செய்து / கொண்டிருப்பான்
அவன் ஸ்வரங்கள் சப்தங்களால் / ஆனவை
அல்ல
பித்தன் ஏதாவது ஒரு நதியில் / எதிர்நீச்சல்
போட்டுக் கொண்டிருப்பான்
அந்த நதிகள் / நீரால் ஆனவை அல்ல
பாடகன் நேர்களின் ரசிகன் /பித்தன்
எதிர்களின் உபாஸகன்
இருவருக்கும் ஒத்துப் போவதில்லை / இருவரும் இரு துருவங்கள்”
என்ற கவிக்கோவின் வரிகள் மூலமே அறியலாம்.
உலகம் ஒரு நாடகமேடை; அதில் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரம் என்ற நிலையையும் தாண்டி இன்று ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரமாக இல்லாமல் ஒவ்வொரு கணமும் ஒரு கதாபாத்திரமாக வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நாடக மேடையில் அந்தரங்கம் என்பது உண்மையின் மறுபக்கமாக இருக்கிறது என்பதை
“அவர்கள் ஏன் உன்மீது / கல்லெறிகிறார்கள்? என்றேன்
‘நான் அவர்களுடைய / அந்தரங்கத்தின் கண்ணாடி
அதனால்தான் என்னை / உடைக்கப் பார்க்கிறார்கள்’ என்றான்
‘ஏன்? என்றேன் / அவர்கள்
வெளிப்படுவதற்கு / பயப்படுகிறார்கள்
அவர்கள் / வேடங்களில்
வசிக்கிறார்கள் / அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது / வேடம் கலைந்தால்
மேடை போய்விடும் / நான் அவர்களுடைய
அம்பலம்” என்கிறான் பித்தன்.
இன்றையப் பொருளாதார நெருக்கடியில் தொலைந்துபோன மனிதன்தான் வாழ்வதற்காக மற்றவனை நோகடிப்பதோடு அல்லாமல் தனது மனம் தவறு என்று சொல்வதையும் நியாயப்படுத்துகிறான் என்பதை
“பித்தன் / தன் சட்டையைக்
கிழித்துக் கொண்டிருந்தான் / சட்டையை ஏன் கிழிக்கிறாய்? என்றேன்
………………………………………………………………………………
பொய்க்குத்தான் /ஆடை தேவை
மெய்க்குத் / தேவையில்லை
உங்கள் ஆடை / விலக்கப்பட்ட கனியைத்
தின்ற பாவத்தால் / நெய்யப்பட்டதல்லவா?
உங்கள் ஆடை / இறந்துபோன
கள்ளமின்மைக்குப் போர்த்திய / சவக்கோடி அல்லவா?
பூக்களும் பறவைகளும் / ஆடை
அணிவதில்லையே?
நீங்கள் / ஆபாசமானீர்கள்
அதனால் உங்களை / ஆடையால் மறைத்தீர்கள்
ஆடையை / முகவரி ஆக்கியபோது
நீங்கள் காணாமல் போனீர்கள்” என்கிறான் பித்தன்.
சாதி, மதம் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு அதனையே உயர்ந்த பீடங்களாகக் கருதி இறந்த காலத்துக் குப்பைகளை சுமந்து கொண்டு பயணப்பட்டுக் கொண்டிருப்பவர்களைச் சங்காரம் செய்பவன் பித்தன் என்பதை
“நீ சீர்திருத்தவாதியா? என்று / பித்தனைக் கேட்டேன்.
‘இல்லை நான் / திருத்துவதற்காக அல்ல
சங்காரத்திற்காக / வந்திருக்கிறேன்
…………………………………………………………………
போதிக்க அல்ல / உங்களுக்குப்
போதிக்கப்பட்டதை / அழிக்கவே
வந்திருக்கிறேன்
………………………………………………………………..
உங்கள் பீடங்கள் / சமாதிகள் என்று
காட்டவே வந்திருக்கிறேன்” என்ற வரிகள் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல”
என்ற வள்ளுவத்தின் வழி ஒருவன் வாழமுற்பட்டாலும் இன்றைய சூழலில் மற்றவரின் சுயநலத்திற்காக அவர்கள் சூறையாடப்படுகிறார்கள் என்பதை
“நீங்கள்
கடைத் தேங்காயாக
இருக்கிறீர்கள்
வழிப் பிள்ளையார்களுக்காக
உடைக்கப்படுகிறீர்கள்” என்கிறான் பித்தன்.
மனிதனின் இத்தகைய மனவெளிப் போராட்டம் தொடர்ந்து பயணிப்பதற்கு காரணம் அவன் சுயத்தை மறந்ததே ஆகவே
“உங்கள் / சுயத்தை நோக்கி
புறப்படுங்கள்
……………………………………….
உங்கள் பயணம் / உங்கள் பாதையில்
நடக்கட்டும் / மற்றவர்கள் போட்ட
பாதையில் அல்ல
……………………………………………..
உங்கள் பயணம் / சப்தத்திலிருந்து மௌனத்திற்குச் செல்லும் / இசையைப் போல்
இருக்கட்டும்” என்கிறான் பித்தன்.
வாழ்க்கை என்பது சூழ்நிலைகளால் செதுக்கப்படுவதாக இருந்தாலும் அதில் சமநிலை தவறாமல் இருந்தால் மட்டுமே வெற்றி காண முடியும் என்பதை
“வாழ்க்கை என்பது
கழைக்கூத்து
சமநிலை தவறுகிறவன்
விழுந்து விடுகிறான்” என்றான் பித்தன்.
தன் வாலையே விழுங்கிக் கொண்டிருக்கும் கால சர்ப்பத்தில் பரமபதம் விளையாடிகொண்டிருக்கும் மனிதர்களுக்கு வாழ்வின் பொருளைப் பித்தன் போதிக்கிறான். சமநிலையற்ற உலகில் பித்தன் சமநிலையோடு வாழ கற்றுத்தருகிறான். உங்கள் உலகம் குழந்தைகள் கிழித்துவிடும் புத்தகங்களை உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் குழந்தைகளே பாடப்புத்தகங்களாக இருக்கிறார்கள் என்பதை மறுத்தும் விடுகிறது. அதனால் தான்
“உங்கள் புத்தகங்கள்
விளக்குகளாக இருக்கின்றன
சூரியனைக் காண
விளக்குகள்
தேவைப்படுவதில்லை” என்கிறான் பித்தன்.
இருட்டில் இருந்து கொண்டு இருட்டைச் சபிப்பதை விட விளக்கை ஏற்றுவது மேல் என்பது போல இருட்டின் உடலில் நட்சத்திரக் காயங்கள் அழகாக இருக்கின்றன என்று பித்தன் சொல்வது வாழ்வின் தவிர்க்க முடியாத இரு பக்கங்களான இருட்டையும் வெளிச்சத்தையும் நம் மனக்கண் முன் நிறுத்துகின்றன. இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் இடையில் வெளிச்சத்தில் வாழ்வதாக எண்ணி இருட்டிலும், இருட்டில் வாழ்வதாக எண்ணி வெளிச்சத்திலும் போலியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் போலித்தனங்கள் தோலுரித்துக் காட்டும் பித்தனே நம் உள்வெளிகளில் உலவும் வெளிச்சமாகவும் இருட்டாகவும் இருக்கிறான் என்பதையே பித்தனின் வாயிலாக அப்துல் ரகுமான் சுட்டுகிறார்.
*****
பயன்பட்ட நூல்கள்:
*****
கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சிராப்பள்ளி-17.
எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா
அசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே
அசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே
பிஞ்சுமனம் பார்க்கார்கள் கெஞ்சினாலும் கேட்கார்கள்
கொஞ்சமேனும் இரக்கமின்றி கொன்றொழிப்பார் பிஞ்சுகளை !
படித்தாலும் பண்பில்லார் பதவியாலும் உயர்வுபெறார்
நினைப்பெல்லாம் கசடாக நித்தமுமே இருந்திடுவார்
தமக்கெனவே வாழ்ந்திடுவார் தலைகுனிவை பொருட்படுத்தார்
நிலத்திலவர் வாழ்வதனால் நிம்மதியை அழித்திடுவார் !
படித்தவரில் பலபேரும் பாமரரில் சிலபேரும்
அடுத்தவரை அழவைக்கும் ஆசையிலே அலைகின்றார்
எடுத்துவைக்கும் அடியனைத்தும் இரக்கமதை மிதிப்பதற்கே
எடுத்துவைக்கும் இவர்களெலாம் ஏனுலகில் பிறந்தனரோ !
காமமெனும் வெறியுடனே கணமெல்லாம் திருயுமிவர்
காணுகின்ற அத்தனையும் காமமுடன் நோக்குகிறார்
மாமியென்றோ மகளென்றோ மலருகின்ற குருத்தென்றோ
காமநிறை கண்ணுடையார் கருதியே நிற்பதில்லை !
கணநேரம் காணுகின்ற காமசுகம் தனைநினைப்பார்
காலமெல்லாம் தவித்தழுவார் காயமதை நினைப்பதில்லை
உயிர்போகும் அவர்நிலையை ஒருகணமும் பொருட்படுத்தா
உணர்வில்லா அசுரர்களாய் உலவுகிறார் உலகினிலே !
அறியாத பிஞ்சுகளை அழித்துநிற்கும் அசுரர்களை
அனைவருமே சேர்ந்துநின்று அகற்றிவிடல் அவசியமே
நெறியிழந்து நிற்பாரை நீழ்புவியில் வாழவிட்டால்
அளவிறந்த ஆவேசம் கொண்டுநிற்கும் அசுரகுணம் !
I had simply to go to the meeting and make NAMASKAR to the audience as NARAYAN and wait and speech would come to me from some other source than the mind, as though it were dictated….And ever since all speech, writing ,thought, and outward activity have to come to me from the same source above the brain -SRI AUROBIDO….!
’’வாக்கும், எழுத்தும்.வரும்பார்,உனக்கது
காகும்நா ராயணர்தம் கைங்கர்யம், -பாக்கொடு,
சுண்ணாம்பும்,பச்சையும்(வெற்றிலை) சேர சிவப்பாகும்,
கண்ணாம்பாள்(கண்ணன் & அம்பாள்-காளி) மேனி கலர்’’….கிரேசி மோகன்….!
திருமதி ராதா விஸ்வநாதன்
போற்றுவதற்குரிய
பெண்மை இன்று
சூரையாடப்படுகிறது
பச்சிளம் சிறுமிகள்
சிதைக்கப்பட்டு
புதைக்கப்படுகிறார்கள்
சில காமுகரால்
துள்ளித் திரியும் வயதில்
கிள்ளி கசக்கி
எறிவது ஏற்றதா
தாயைக் காப்பான்
தாய் மண்ணைக் காப்பான்
பெண்ணைக் காப்பான்
என தன் ஆண் மகவுக்கு
மார் சொரிந்த
தாயின் மார்பகத்தில்
கொட்டுகிறது குருதி
காக்கும் கரங்கள் இன்று
காமத்திற்கெனவே
எழுவதைக்காண
ஈன்ற பொழுதை எண்ணி
வெட்கி தலை குனிகிறது
தாய்குலம்
இதனால் தானோ
பசுமை பூமிக்கு
சுமையாகி விட்டது
மண்மகள் தன்னையே
புதைத்துக் கொண்டாள்
தன் முகத்தை
அடர்ந்த அழகு வனம்
ஆச்சுது இங்கு
பாலை வனம்
தாய் குலத்தின்
மானம் சூரை போவதால்
வானம் கூட மறந்து விட்டது
மழையை
கருணை பாசம் நேசம்
மறந்த நெஞ்சம் போல்
மறந்து விட்டது
நதிகளும் தன் கதியை
எதிர்பார்க்கலாமா
ஏமாறாமல்….
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++
மழைத்துளி ஒழுகும் வீட்டுத்
துளை அடைக்க முனைகிறேன் !
மழைநீர் எங்கு போய்ச்
சேரு தென்று
கவலை யுறும் என்மனம் !
கதவு நெடுவே காணும்
பிளவு அடைக்க முனைகிறேன் !
அது எங்கு போய்
முடியு மென்று
கவலை யுறும் என்மனம் !
எனக்கு கவலை இல்லை ,
என் எண்ணம் தவறாயினும் !
நினைத்தது சரியே
என்னும்
இனத்தினைச் சேர்ந்தவன் !
என் எண்ணம் சரிதான் !
அங்கு நிற்கும் மாந்தரைப் பார் !
அவர் ஒத்துக் கொள்ளார் !
வெற்றியும் அடையார் !
எனது வீட்டு வாசல் வழி
ஏன் நுழையார்
என்று வியப்புறும் என்மனம் !
இல்லத்து அறைகளைப்
பல்வேறு
வண்ணத்தில் மாற்றுகிறேன் !
எங்கு என்மனம் நேராய்ப் போகுதோ
அங்கு நோக்கிச் செல்கிறேன் !
இங்கும் அங்கும் திரியும் அற்ப
மக்கள் பற்றித்
துக்கப் படுகிறேன் !
வரவேற் பில்லை அவருக்
கென் வீட்டு
வாசல் வழியே நுழைந்திட !
நேரம் எடுத்துக் கொள்கிறேன்,
வேண்டாத பல்வேறு
காரியங் களுக்கு .
ஆயினும் அவற்றைத்
தேர்வு செய்யப் போகிறேன்.
மழைத்துளி ஒழுகும் வீட்டுத்
துளை அடைக்க முனைகிறேன் !
மழைநீர் எங்கு போய்ச்
சேரு தென்று
கவலை யுறும் என்மனம் !