Blog

  • காலமெல்லாம் உதவுமன்றோ !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

     

    வசதிபல பெருகுகிறது வாழ்வுநிலை உயர்கிறது

    வள்ளல்குணம் மனதைவிட்டு மறைந்தோடி ஒழிகிறது

    தகுதிபல கொண்டவரும் தனைமறந்தே நிற்கின்றார்

    வெகுமதிகள் தனைநாடி விரைந்தோடி வருகின்றார் !

     

    கல்விகற்ற பெரியவரும் கண்ணியத்தை மறக்கின்றார்

    காசுசேர்க்க நிற்பதிலே கருத்தெனவே இருக்கின்றார்

    புண்ணியத்தை மனமதிலே பொசுக்கிவிட நினைக்கின்றார்

    பூதலத்தில் நடக்குமிது புரியாமல் இருக்கிறது !

     

    மேடையேறிப் பேசிடுவார் மேதையெனக் காட்டிடுவார்

    தலைக்கனத்தை விட்டுவிட தாம்நினைக்க மாட்டார்கள்

    உலகத்துப் பட்டமெலாம் ஒன்றாகப் பெற்றாலும்

    உள்ளமதில் திருப்தியினை உள்நுழைக்க மாட்டாரே !

     

    அன்புபற்றி பேசிடுவார் அறம்பற்றி பலவுரைப்பார்

    துன்பமுடன் இருப்பாரை தூரநின்றே பார்த்திடுவார்

    என்புதசை உடம்பென்று இவ்வுடம்பை இகழ்ந்திடுவார்

    அன்புமட்டும் அவரிடத்தில் அணுகிடவே மறுத்துநிற்கும் !

     

    சாத்திரங்கள் பலவுரைப்பார் சம்பிரதாயம் எனமொழிவார்

    ஆத்திரத்தை அடக்கிவிடார் ஆவேசம் கொண்டிடுவார்

    நேர்த்தியுடன் பாரார்கள் நெறிமுறைகள் தனையொதுக்கி

    நாத்திகராய் ஆத்திகராய் நடித்திடுவார் வாழ்வினிலே !

     

    பட்டங்கள் தேவையில்லை பதவிகளும் தேவையில்லை

    பகட்டுடனே வாழ்வதிலே பலருக்கும் பயனுமில்லை

    கஷ்டமுறும் மக்கள்தமை கருணையுடன் பார்த்துநின்று

    இஷ்டமுடன் பணிசெய்தால் எம்வாழ்வு விடியுமன்றோ !

     

    அன்புபாசம் நேசம்காட்டி அனைவருமே இணைந்திடுவோம்

    அறிவினது துணைகொண்டு அனைவருக்கும் உதவிடுவோம்

    பண்புநிலை தவறாது படிப்பினைநாம் காத்துநின்று

    பலருக்கும்  உதவிநின்றால் படிப்புநிலை உயருமன்றோ !

     

    கற்றதுவும் பெற்றதும் காருண்யம் கொடுக்கவேண்டும்

    கற்றவர்கள் கருத்தெல்லாம் மற்றவர்க் குதவவேண்டும்

    நற்றவத்தால் வந்தகல்வி நாட்டிற்கே உதவிநின்றால்

    கற்றதும் உற்றதுவும் காலமெல்லாம் உதவுமன்றோ !

     

    Share
  • எம்ஜிஆர் எனும் நாமம் !

    எம் ஜி ஆர் நூற்றாண்டு காலமாதலால் எம் ஜி ஆருக்கு சமர்ப்பாணம்

     

     

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    வண்ணத் திரையினில் வலம்வந்தார் நாயகனாய்

    எண்ணமெலாம் எம்ஜிஆர் எனும்நினைப்பை ஊட்டிநின்றார்

    கண்ணுக்குள் பதியும்படி காட்சிகள் பலவமைத்து

    மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் வந்தமர்ந்தார் எம்ஜிஆர் !

     

    ஏழையாய் வாழ்ந்தாலும் கோழையாய் வாழாமல்

    வாழ்நாளை வளமாக்கி வாழ்வதற்கு அவருழைத்தார்

    நாளையதை மனமிருத்தி நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து

    ஆழமுள்ள ஆள்மையுடன் அவர்வாழத் தொடங்கினரே !

     

    தாய்ப்பாசம் அவரிடத்துப் பெருக்கெடுத்து ஓடியதே

    தாய்க்குலத்தின் பெருமைகளை தன்படத்தில் காட்டினரே

    வாய்க்கின்ற தருணமெலாம் மனிதகுல உயர்வினுக்கு

    வடிகாலாய் இருக்கும்படி வகுத்தளித்தார் வசனமெலாம் !

     

    எம்ஜிஆர் படங்களிலே எப்பாட்டு வந்திடினும்

    அப்பாட்டில் பலகருத்தை அவர்புகுத்த முனைந்திடுவார்

    படம்பார்ப்போர் வாழ்க்கையிலே புடம்போட்டு வருவதற்கு

    பாட்டமைத்த எம்ஜிஆர் பாடமாய் ஆகிநின்றார்  !

     

    தானதர்மம் செய்வதுதான் தலைசிறந்த தருமமென

    தன்வாழ்வில் அதைப்புகுத்தி இயன்றவரை உதவிநின்றார்

    பணம்கிடைத்த போதெல்லாம் பலபணிகள் அவர்செய்து

    பாமரரின் தோழமையை பரிசெனவே  பெற்றுநின்றார்  !

     

    வெள்ளித்திரை நாயகனாய் வீதியெல்லாம் வந்தாலும்

    உள்ளமெலாம் உயர்கருத்தை உவந்தேற்ற விரும்பினரே

    நல்லமனம் அவரிடத்து இயல்பாக அமைந்ததனால்

    நாட்டுமக்கள் வாழ்வுபற்றி நாளுமவர் எண்ணினரே !

     

    நடிக்கின்ற காட்சிகளில் குடிக்கின்ற காட்சிகளை

    வெறுத்துவிட்ட  நாயகனாய் வெற்றிநடை போட்டாரே

    குடிப்பழக்கம் தனையொதுக்கி குடிமக்கள் தனைப்பற்றி

    நடிப்பாலும் உணர்த்திநின்ற நாயகனே  எம்ஜிஆர் !

     

    ஆத்திகம் நாத்திகம் அனைத்தையும் அரவணைத்தார்

    அநியாயம் கண்டவுடன் ஆத்திரமும் அவர்கொண்டார்

    ஆதலால் அரசியலை அவசியமாய் ஆக்கிக்கொண்டு

    ஆட்சியினை வசமாக்க ஆக்கமுடன் அவருழைத்தார் !

     

    மக்களது ஆணையுடன் வந்தமர்ந்தார் எம்ஜிஆர்

    மக்களெலாம் அவராலே மறுவாழ்வு பெற்றனரே

    பாமரர்க்கு பயனைநல்கும் பலத்திட்டம் அவர்கொணர்ந்தார்

    பார்த்தவர்கள் வியந்தபடி போற்றினரே   எம்ஜிஆரை !

     

    படகோட்டியாய் இருந்து பலதுன்பம் பட்டாலும்

    எங்கவீட்டுப் பிள்ளையாய் எம்ஜிஆர் இருந்துவிட்டார்

    நாடோடி மன்னனாய் நற்கருத்தை விதைத்தஅவர்

    ஊர்கூடித் தேர்ந்தெடுக்க உட்கார்ந்தார் ஆட்சியிலே !

     

    பட்டிதொட்டி எல்லாமே எம்ஜிஆர் எனும்வெளிச்சம்

    பட்டுத் தெறித்ததனால் பலருமே பயனடைந்தார்

    கிட்டவந்து தொட்டுப்பார்க்க முட்டிமோதி நின்றார்கள்

    அத்தனையும் எம்ஜிஆரின் ஆளுமையின் மகத்துவமே !

     

    புதுக்கட்சி புதுப்பாடம் புதுஆட்சி அத்தனையும்

    புறப்பட்டு வரச்செய்த புரட்சிதான் எம்ஜிஆர்

    நிதம்மக்கள் வாழ்க்கையிலே நெருங்கிநின்ற உறவாக

    உரம்பெற்று வளர்ந்தவர்தான் உணர்வுநிறை எம்ஜிஆர் !

     

    எம்ஜிஆர் எனும்நாமம் இன்றளவும் ஒலிக்கிறது

    எல்லோரும் அவர்பெயரை இதயத்தில் வைத்துள்ளார்

    தமிழ்நாட்டின் விடிவுக்காய் தனைக்கொடுத்த எம்ஜிஆர்

    தமிழர்களின் மந்திரமாய் தானுயர்ந்து நிற்கின்றார் !

    Share
  • என்ன தவம் செய்தேன்..!

     

    பெருவை பார்த்தசாரதி
    Happy-Mother-And-Happy-Baby-In-The-Bed

     

     

     

     

     

     

     

     

    ஒருமித்த கருத்துடனே யொருசேரயிருவரும் கைகோர்த்து..

    ……….ஒப்பற்ற மணவாழ்க்கை…..மகிழ்ச்சிதான் ஆயினும்..

    கருசுமந்து வரும்நாளைக் கருத்துடனே எதிர்பார்த்து..

    ……….கடமை களெதிலுமே மனமிசைய வில்லையம்மா.!

    கருப்பையில் உருவாகுமன் நன்னாளை ஆவலுடன்..

    ……….கன்னத்தில் கைவைத்துக் காத்திருப்பேன் எந்நாளும்.!

    உருவாகும் கருவுக்கேநான் எருவானாலும் பரவாயில்லை..

    ……….கருத்தரிக்க இப்பிறப்பில் என்னதவம் செய்யவேணும்.!

     

     

    வீடுவாசலுடன் தோட்ட மதிலிருந்தால் போதுமா..

    ……….விளையாடிமகிழ அங்கேயோர் மழலை வேண்டாமா.?

    கூடுகட்டி வாழும் உயிரினமுமதன் குடும்பத்துடன்..

    ……….கொண்டாடி மகிழ்வதை ஏக்கத்தோடு பார்க்கிறேன்.!

    துடுப்பில்லா ஓடம்போலே தடமின்றி அலைகிறேன்..

    ……….துணையுடன் கோவில் கோவிலாக குழந்தைவேண்டி.!

    ஆடும் தொட்டிலிலெம் குழந்தையைக் காண்பதற்கே..

    ……….ஆரென்ன தவம்செய்ய வேணுமென்பதை யறியோம்.!

     

     

    இல்லை யிவளுக்குப் பிள்ளை பாக்கியமாமென..

    ……….ஈரெட்டு மாதங்கள் இருநொடிபோல் கடந்ததுவே.!

    சொல்லாலே சுற்றமும் உறவுமெனை மலடியெனவே..

    ……….கொல்லாமல் கொல்லுவார் அன்றாட மொருமுறை.!

    இல்லையொரு பிள்ளையெனும் பெருமேக்கம் கொண்டு..

    ……….இறைவனுக்கே எட்டுமாறு பத்துமாதம் தவம்செய்தேன்.!

    இல்லையென்று ஒருபோதும் சொல்லாத இறைவனுமே..

    ……….எம்தவத்துக் கருளினான் ஈடில்லாச்செல்வ மகவொன்றை.!

     

     

    குழலெடுத்தூதும் கண்ணன் போலயெம் குடும்பத்துக்கே..

    ……….அழகுக்கழகு சேர்த்தானவன் ஆடுமயில் தோகைபோலே.!

    மழலையெந்தன் செல்வம் சிரித்துவிட்டால் போதுமடி..

    ……….மறந்துதான் போகுமங்கேயென் மனக்கவலை எல்லாம்.!

    மழைகாணும் வாடியபயிர்கள் பசுமை காண்பதுபோல..

    ……….மகவைக் காணும்தாய்க்கு வேறென்ன? மகிழ்ச்சிதரும்.!

    தழைக்கும் தன்மகவால் தாய்மைக்கின்பம் கிட்டுமதற்கு..

    ……….தவம்..என்னதவம் செய்தேன்?இம்மகவைப் பெறுதற்கே..!

    ===========================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::20-08-2017

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கண்ணன் -சியமந்தக மணி வண்ணன்….!
    —————————————————————————-

    170824 -Krishna retrieves Syamantaka Mani from Jambavan #Vatsalya -lr

    ”சண்டையிட்ட ஜாம்பவான் சேர்த்தணைக்க வாசத்தால்
    கண்டுகொண்டான் கண்ணனன்று கல்யாண்ராம்: -தெண்டமிட்டு
    அண்ணலே என்றழைக்க, ‘’அண்ணல் அதுதிரேதா
    கண்ணன்நான் த்வாபரயு கம்’’….கிரேசி மோகன்….!

    Share
  • தமிழிசையின் தொன்மை

    THODAR - 76

    தமிழிசைப்பண்கள்
    **************************************************
    உலகின் முதல் இசை
    தமிழிசையே!!
    ***********************************************
    இசைத்தமிழின் தொன்மை – 76
    ***********************************************
     
    பழந்தமிழிசையில் பண்கள்
    **********************************

    கர்நாடக இசையும் தமிழிசையும்
    **************************************************

    சாரங்கதேவர்-2

    கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சாரங்கதேவர் என்பவர் கஸ்மீர நாட்டிலிருந்து தென்னாடு வந்தார்.

    தமிழிசையை ஆராய்ந்தார். ‘சங்கீதரத்னாகரம்’ என்ற நூலை எழுதினார்.

    வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கு இடப்பட்டு, முதல்முதல் வெளிவந்த கர்நாடக இசைநூல், கர்நாடக இசைக்கு முதல்நூல் அதுதான் என்று அறியப்படுகின்றது.

    தேவாரங்களின் பண்களைப் பற்றியும் அந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அந்தச் சாரங்கதேவர் தமிழில் இருந்த ஒலிக்குறியீடுகளுக்கு வடமொழிப் பெயர்களைப் புகுத்தியதோடல்லாமல், அவை வடமொழியிலிருந்தே தமிழுக்கு வந்தன என்ற தவறான கருத்தையும் பொய்யாக விதைத்தார்.

    அக்காலத்தில் அரசியல் மாற்றங்களால் வடமொழியின் செல்வாக்கு தென்னாடெங்கும் வளரத் தொடங்கியது அதனால் இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின.

    வடமொழிப் பெயர்களோடு தமிழிசை கர்நாடக இசையாகத் தமிழ் நாட்டிலும் வழங்கத் தொடங்கியது.

    அராகம் என்ற தமிழ்ச் சொல் – இராகமாயிற்று.
    செம்பாலையை – அரிகாம்போதி என்றார்கள்.
    படுமலைப்பாலையை – நடனபைரவி என்றார்கள்.
    கோடிப்பாலையைக் – கரகரப்பிரியா என்றார்கள்.
    விளரிப்பாலைக்குத் – தோடி என்றார்கள்.
    செவ்வழிப்பாலை – இருமத்திமத் தோடியானது.
    முல்லைத் தீம்பாணி – மோகனம் ஆனது.
    செந்துருத்திக்கு – மத்தியமாவதி என்று பெயரிட்டார்கள்.
    இந்தளம் – மாயாமாளவ கௌளை என்று மாற்றினார்கள்.
    கொன்றையந் தீங்குழலை – சுத்தசாவேரி ஆக்கினார்கள்.
    ஆம்பலந் தீங்குழலை – சுத்த தன்யாசி ஆக்கினார்கள்.
    அரும்பாலைக்குச் – சங்கராபரணம் என்றார்கள்.
    மேற்செம் பாலையைக் – கல்யாணி என்றார்கள்.
    செவ்வழியை – யதுகுலகாம்போதி என்று மாற்றினார்கள்.
    புறநீர்மைக்குப் – பூபாளம் என்றார்கள்.
    தக்கேசிக்குக் – காம்போதி என்றார்கள்.

    இவ்வாறு தமிழ் இசையின் பெயர்களையெல்லாம் மாற்றியமைத்துவிட்டு, அதிலிருந்தே இது வந்ததென்று ஆராய்ச்சிக் குறிப்பும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

    திகட்டாத அந்தத் தீஞ்சுவைப் பாடல்களைக் கேட்டின்புற்று, அப்பரும், சுந்தரரும், ஆளுடைய பிள்ளையும் எப்படிப் பாடியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அப்படியே பின்பற்றி, கன்னட நாட்டுப் புரந்தர தாசரும், தெலுங்கு தேசத்து அன்னமாச்சாரியாரும் கீர்த்தனைகளை அமைத்தார்கள்.

    அந்தக் கீர்த்தனைகளை தலையிலே தூக்கி வைத்துக்கொண்டு எமது தமிழ் வித்துவான்கள் என்று சொல்லப்படுவோர் ஆடுகின்றபோது வேடிக்கையாக இருக்கின்றது.

    பதினாறாம் நூற்றாண்டு முதல் தெலுங்குமொழி பேசும் விஜயநகரத்து வேந்தர்கள் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தார்கள்.

    தெலுங்குமொழிக்கும் தமிழர்கள் அடிமையாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தியாகையரின் காலத்தில் அருணாசலக்கவிராயரின் தமிழிசைப் பாடல்கள் புகழ்பெற்று விளங்கின.

    அந்தப் பாடல்களை நன்கு அறிந்திருந்த தியாகையர் அவற்றின் அடிப்படையிலே கீர்த்தனைகளைத் தெலுங்கில் எழுதினார் என்பதுதான் அறிஞர் கருத்து.

    தியாகையரும், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் என் போரும் தெலுங்கு மொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றை மேடைகளில் பாடினார்கள்.

    தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டன.

    தமிழ் இசை கர்நாடக இசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடு வளர்ந்து கொண்டிருந்தது.

    தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் அந்த இசை தமிழ் இசைக்கு அந்நியமானது என்று மக்கள் எண்ணத் தொடங்கினர்.

    இசையறிஞர்களே மக்களிடம் அந்தக்கருத்தை விதைத்தனர். செந்தமிழ் இசைக்குக் குந்தகம் செய்தனர்.

    இன்றுவரை அந்தநிலை தொடர்கிறது.

    வேற்று மொழிகளிலே பாடுவதில் நமக்கு வெறுப்பு இல்லை. பாடக்கூடாது என்பது நமது கொள்கையுமில்லை.

    தமிழ்மொழிப் பாடல்களைப் புறக்கணிப்பது தகுமா என்பதுதான் நமது கேள்வி.

    தமிழில் பாடுவதைத் தமிழர்களே தவிர்க்கிறார்களே என்பதுதான் நமது கவலை.

    தமிழ்நாட்டிலே உள்ள திருவையாறு என்னுமிடத்தில் ஓருமுறை தியாகராசர் விழா நடைபெற்றிருக்கிறது.

    அந்த விழாவிலே தண்டபாணி தேசிகர் அவர்கள்
    ‘தாமரை பூத்த தடாகத்திலே’ என்ற தமிழ்ப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

    உடனேயே விழாவுக்கு வந்திருந்த வித்துவான்களும், பாகவதர்களும் வெகுண்டு எழுந்திருக்கிறார்கள்.

    தமிழ்ப் பாடல்களைப் பாடியதால் தியாகராசர் வளாகமே தீட்டுப்பட்டுவிட்டதென்று சீறிப்பாய்ந்திருக்கிறார்கள்.

    தீட்டுக் கழிக்கப்பட்டாலன்றி இனிமேல் அந்த மேடையில் பாடமாட்டோம் என்று வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.

    தண்டபாணிதேசிகர் தெலுங்கிலோ, கன்னடத்திலோ பாடியிருந்தால் இந்தக்கண்டனம் எழுந்திருக்காது.

    இது நடந்தது எங்கே? தெலுங்கு தேசத்திலா?
    கர்நாடக மாநிலத்திலா? இல்லை.

    தமிழ் நாட்டில்! எவ்வளவு கொடுமை இது! அந்த அளவுக்கு அந்நியர்களுக்கு தமிழர்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

    தாங்களும் அடிமையாகித் தமிழ் மொழியையும் அடிமையாக்குகிறார்கள்.

    தமிழ் இசையின் பெருமை
    **************************************

    இசையை ஏழுவகையாக பகுத்தவர்கள் தமிழர்களே.
    குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
    என்பனவே அந்த ஏழுவகைகளாகும்.

    இத்தகைய ஏழு சுரங்களும் பண்டைத் தமிழகத்தில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழுகுறியீடுகளாலேயே வழங்கப்பட்டிருந்தன.

    ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்றேழும்
    ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்’ என்று பிங்கல நிகண்டு நூலில் குறிப்பிடப்படுவதிலிருந்து அதை நாம் அறிய முடிகிறது.

    காலத்தினால் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக இசைக் குறியீடுகள் சரிகமபதநி என்று மாற்றப்பட்டன.

    சூழலை அடிப்படையாகக் கொண்டு இசையின் ஒலிக்குறிப்புக்கள் தமிழில் சரிகமபதநி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்பட்டன என்பதை,

    சரிகம பதநி யென்றேலெழுத் தாற்றானம்
    வரிபந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
    ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
    சூழ்முதலாஞ் சுத்தத் துளை

    சிகண்டி முனிவரின் பாடலின் மூலம் அறிய முடிகிறது.

    ;குரல்;’ என்பது வண்டின் ஓசை அதுவே ‘ச’
    ‘துத்தம்’ என்பது கிளியின் கொஞ்சல் ஓசை அதுவே ‘ரி’
    ‘கைக்கிளை’ என்பது குதிரையின் கனைத்தல் ஓசை அதுவே ‘க’
    ‘உழை’ என்பது யானையின் பிளிறல் ஓசை அதுவே ‘ம’
    ‘இளி’ என்பது தவளையின் கத்தல் ஓசை அதுவே ‘ப’
    ‘விளரி’ என்பது பசுவின் கதறல் ஓசை அதுவே ‘த’
    ‘தாரம்’ என்பது ஆட்டின் கத்தல் ஓசை அதுவே ‘நி’
    (சூடாமணி 10-37)

    ஒவ்வொரு வகை இசையும் அவை உடலின் எந்ததெந்தப் பாகத்திலே பிறக்கின்றன என்பதையும் நுணுகி ஆராய்ந்து சொல்லிவைத்திருக்கிறார்கள்.

    மிடற்றிலே பிறப்பது குரல்,
    நாவிலே பிறப்பது துத்தம்,
    அண்ணத்திலே கைக்கிளை,
    சிரசிலே உழை,
    நெற்றியிலே இளி,
    நெஞ்சிலே விளறி,
    மூக்கிலே தாரம்
    என்றிப்படிப் பிறக்கும் இசையைத்தான்
    ஏழுசுரங்களுக்குள் அடக்கிவைத்தார்கள்.

    குரலடு மிடற்றில் துத்தம் நாவில்
    கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே
    இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில்
    தாரம் நாசியில் தம்பிறப்பென்ப’

    என்று பிங்கல நிகண்டு என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

    ஏழுவகைத் தமிழ் இசையினை ஒவ்வோர் இசையின் தகுதிக்கேற்பவும் நான்காகப் பாகுபாடு செய்துள்ளார்கள் நமது பண்டைத் தமிழறிஞர்கள்.

    இடம், செய்யுள், குணம், காலம் என்பனவே அந்த நான்கு தகுதிகளாகும்.

    இடம் என்பது நிலத்தைக் குறிப்பது.
    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஜவகை நிலங்களுக்கும் உரிய பண்களாக முறையே குறிஞ்சிப்பண், சாதாரி, செவ்வழி, மருதம், பாலை என்னும் ஜந்து பண்களும் இடத்துக்குரிய பண்கள் (இராகங்கள்) என்று வகுக்கப்பட்டுள்ளன.

    செய்யுள் என்பது பாடல்பற்றிய இசையைக்குறிக்கிறது.
    எந்தெந்த வகைப் பாடலுக்கு எந்தெந்த இசை பொருத்தமானது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் அமைத்துள்ளார்கள்.

    வெண்பாவிற்கு சங்கராபரணம், அகவப்பாவிற்கும், தாழிசைக்கும் தோடி, கலிப்பாவிற்கு பந்துவராளி, கலித்துறைக்குப் பைரவி, விருத்தப்பாவிற்கு கல்யாணி, காம்போதி, மத்தியமாவதி என்பன,

    உலாப் பாடலுக்கு சௌட்டிரம், பிள்ளைத்தமிழுக்கு கேதாரகௌளம், பரணிக்குக் கண்டாரவம் என்று பல்வகைச் செய்யுள்களுக்கும் இசைவகுத்துள்ளனர்.

    இவ்வாறே குணம் பற்றிய இசையும் வகுக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக துன்பம் அல்லது தக்கத்திற்கு ஆகரீ, நீலாம்பரி, பியாகடம், வராளி, புன்னாகவராளி என்னும் பண்கள் உரியவையாகின்றன.

    இன்பம் அல்லது மகிழ்ச்சிக்கு உரிய பண்கள் காம்போதி, சாவேரி, தன்னியாசி என்பவையாகும்.

    நாட்டை என்பது போருக்குரிய பண்ணாகும்.

    அடுத்ததாகக் காலம் பற்றிய இசை என்பது பல்வேறு காலங்களுக்கும் வேளைகளுக்கும் உரியதான பண்களைவகுக்கின்றது.

    வசந்தகாலத்திற்கு காம்போதி, தன்னியாசி மாலைநேரத்திற்கு கல்யாணி, காபி, காம்போதி, நள்ளிரவுக்கு ஆகரி, அதிகாலையில் இந்தோளம், இராமகலி, நாட்டை, பூபாளம், நண்பகலுக்கு சாரங்கயம், தேசாட்சரி என்று வகுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு முத்தமிழுக்கும் இனிமைசேர்க்கும் இசைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்து, முறைப்படி பகுத்து, சிறப்புறத் தொகுத்து நம்முன்னோர் நமக்கு விட்டுச் சென்றிருக் கிறார்கள்.

    பண்டைத் தமிழகத்தில் அவ்வாறு வகுத்தபொழுது தமிழ் இசைப் பெயர்களே ஒவ்வொரு பண்ணுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

    தமிழிசையைத் தத்தெடுத்த வடவர்களால்
    தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டன.

    மாற்றப்பட்ட பெயர்களையே தென்னிந்திய மொழிகளெல்லாம் வழக்கப்படுத்திக்கொண்டன.

    அரசியல் செல்வாக்கினாலும், வடமொழி மோகங்கொண்ட தமிழர்களாலும் அந்தப் பெயர்களே தமிழ்மொழியிலும் இடம்பிடித்தன.

    தமிழ் இசைப் பெயர்கள் வழக்கொழிந்தன.
    அவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

    தமிழ்மொழியிலேயிருந்து தத்து எடுத்துக்கொண்ட இசை நுணுக்கங்களை வைத்துக்கொண்டு வேற்று மொழியினர் இன்று வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

    அறிந்தவர்களும் அறியாதவர்களுமாக சில தமிழ் இசை வல்லுனர்களும், கலைஞர்களும் அவையெல்லாம் வடமொழியிலிருந்தும், தெலுங்கிலிருந்தும்
    இறக்குமதியானவை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆலாபனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
    தமிழிசையில் தமிழ்ப்பாடல்களைப் பாடத் தயங்குகின்றார்கள்.
    இந்த நிலை மாறவேண்டும்.

    தமிழ் இசையின் மகத்துவத்தைத் தரணியெங்கும் பரப்பிடத் தமிழர்களாகிய நாம் முயற்சிசெய்யவேண்டும்.

    ***********************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    22/08/2017

    Share
  • ’’அட்வான்ஸ் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்’’….!

     

    ”ஆடிவெள் ளிக்கிழமை அம்பாள் தினமதில்
    கோடி மதயானை கும்பிட -ஓடும்
    வினாயகர் தோன்றி வினைகள் அகற்றுவார்
    வினாவிடை, வாழ்த்துமவர் வாக்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_3375
    ’‘என்றும் புதியது, ஏகன் புதியது,
    கன்றும் புதியது , கேசவ்ஜி- நன்றிதை
    ஊரறியச் செய்திடும் உம்கை புதியது,
    FOR-EVER கண்ணன்காப் பார்’’….கிரேசி மோகன்….!

    லவ்லி கேசவ்….மாஸ்டர் ஃபீஸ்….
    ————————————————————————————————————————————–
    மருமகன் வேலனோ தகப்பன்சாமி,
    தாய்மாமன் மாலனோ தாய்ச்சாமி….குழந்தைகளிடமிருந்து INSPIRATION….!
    கண்ணனுக்குப் பிடித மடிகள் ரெண்டு….1) தாய் மடி 2) தாய்ப்பசு மடி ….!
    கண்ணன் புதியது, கன்று புதியது….குழந்தைகள் என்றும் புதியது….!
    ‘’தகப்பன் சுவாமி, தணிகை முருகன்,
    அகப்பட்டு அன்னை அணைப்பு, -சுகம்பெற்றான்:
    வெஞ்சிறை விட்டு, வெளிவந்(து) எசோதையின்,
    மஞ்சம் துயின்றதாய்சா மி’’….கிரேசி மோகன்….

    Share
  • கங்காரு நாட்டின் கண்ணியம் 

     
    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    கங்காருநாடு என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலியா 200 வருட வரலாற்றினைக் கொண்டது. இங்குப் பல நாட்டினர், பல மொழிகளைப் பேசுபவர்கள், பல இன கலாசார பண்பாடுகளைக் கொண்டவர்கள் என 165 இனமக்களை அரவணைத்து அவர்களுக்கு அமைதியான ஆறுதலான வாழ்வினையும் வழங்கிக் கங்காருநாடு கண்ணியம் மிக்க நாடாக உலகில் விளங்குகிறது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

    ஜனநாயகத்தை நூறுசதவிகிதம் நிலைநாட்டி வெற்றியுடன் திகழும்  கண்ணியமும் இங்கு இருக்கிறது என்பது குறிப்பிடப்படவேண்டிய தொன்றேயாகும்.

    இந்த நாட்டின் ஆதிகுடிகள் “அபோர்ஜினிஸ்” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் கங்காரு மண்ணுக்கு உரியவர்கள் ஆவர். ஆனால் பிரித்தானிய ஆக்கிரமிப்பால் நிலைமாறி இப்போது கங்காரு மண்ணின் சொந்தக்காரர் வெள்ளையர் ஆகிவிட்டார்கள். என்றாலும் ஆதிகுடிகள் வரலாறு கங்காரு மண்ணுடன் ஒட்டியே இருக்கிறது. அவர்களின் நிறம், அவர்களின் மொழியில் காணப்படும் சில சொற்கள், அவர்களின் விழாக்கால கொண்டாட்ட அலங்காரம் இவற்றையெல்லாம் உற்று நோக்கும்பொழுது தமிழர்களின் சாயல் அவர்களிடத்துப் படிந்திருப்பதாகக் கருத முடிகிறது. இதனால்தான் தமிழர்களையும் கங்காரு நாடு கைகொடுத்து வரவேற்றதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

    பல்லினக் கலாசாரத்தின் தொட்டிலாகக் கங்காரு நாடு திகழ்கிறது. மதம் கடந்தமக்கள் பலர் இங்கு இருப்பதனால் மதமென்னும் குணத்தை இங்கு காண்பது அரிதென்றே சொல்லலாம். அரசாங்கம் மதம்பற்றி எதுவுமே பேசுவதில்லை. அதே வேளை வழிபடும் சுதந்திரத்திலும் தலையிடுவதும் இல்லை. விரும்பியவர்கள் விரும்பியபடி தங்கள் சமயவழிபாடுகளை நிகழ்த்தும் உரிமையை இந்த நாடு வழங்கியிருக்கிறது. இதனால்  வழிபாட்டில் மக்கள் தாம்விரும்பியவாறு ஈடுபடும்முழுச் சுதந்திரம் இங்கு காணப்படுகிறது. இதனால்தான்  அவுஸ்திரேலிய மாநிலங்களில் பல இந்துக் கோவில்கள் எழுச்சிபெற்று இருக்கின்றன. படிக்கும் பாடசாலைகளிலும் மதம்பற்றிப் பேசப்படுவதில்லை. ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பாடசாலைகளில் அவரவர் மதக்கல்வி ஊட்டப்படுவதற்கும் எந்தவிதத் தடையும் போடப்படுவதும் இல்லை. அவுஸ்திரேலியர்களாக இருக்கின்றவர்கள் தங்களின் பெயர்களை கிறிஸ்தவப் பெயராக வைத்திருந்தும் அவர்கள் தாங்கள் எந்தமதம் என்று சொல்லிக்கொள்வதும் இல்லை. அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. இதனால் மதம் என்னும் பெயரால் இங்கு எந்தவிதச் சிக்கல்களோ மோதல்களோ ஏற்படுவதே இல்லை.

    பல்லினக் கலாசார நாடாக விளங்குகின்ற காரணத்தல் கறுப்பு வெள்ளை என்று பார்க்கும் குறுகிய நோக்கும் இங்கு இல்லை என்றே கூறலாம். இதனால் ஆசியநாட்டவரோ ஆப்பிரிக்க நாட்டவரோ அமைதியாக ஆறுதலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனலாம். மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு இந்த நாட்டின் முக்கியப் பண்பாடாக விளங்குகிறது. அரசியல் பிரமுகர்கள் கூட எதுவித ஆடம்பரமும் இன்றிச் சாதாரண மக்கள் போன்றே சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவார்கள். மந்திரியாக இருந்தாலும் கடைகளில் பொருட்களை வாங்கினால் அதற்குரிய பணத்தைக் கொடுத்தே வாங்குவார். மந்திரிக்கென்று தனியான சலுகைகள் கிடையாது. அவரும் சாதாரண பிரசையாகவே நடந்துகொள்ளும் முறையானது ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

    முன்னேற விரும்பும் யாவருக்கும் இந்த நாடு நூறு சதவிகித ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. விரும்பியதைப் படிக்கலாம். விரும்பிய தொழிலைச்செய்யலாம். படிப்பதற்கு வயது இங்கு ஒரு தடையில்லை.எந்த வயதினரும் விரும்பியதைப் படிக்கும் வசதி இங்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

    வேலைசெய்ய முடியாதவர் எனக் கணிக்கப்பட்டவர்கள், வயதுவந்தவர்கள், வேலையினை இழந்தவர்கள் யாவருக்கும் அவர்கள் அன்றாடம் வாழும் வகைக்கு ஏற்ற பண உதவிகளை இந்தநாடு சிறப்பாக வழங்கியும் வருகிறது. மூத்தோருக்குப் பல சலுகைகளையும் கொடுத்து வருகிறது. பெண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு இந்தநாட்டில் கிடைக்கிறது.  இந்த நாட்டுக்கு வந்த தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நாடு பல்கலாசாரத்தைப் பேணுவதால் தமிழர்தம் பண்பாடு கலாசாரங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சமூக அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள சர்வ சுதந்திரமும் வழங்கி நிற்கிறது என்பது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும்.

    தமிழை அரசாங்க அறிவித்தல்களில் கூட இந்தநாடு இடம்பெறச் செய்திருக்கிறது. தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் கூடத் தமது கருமங்களை ஆற்றுவதற்கு மொழிமாற்றுச் சேவையினையும் இலவசமாகக் கொடுத்து உதவி நிற்கிறது. தமிழ் அமைப்புகளுக்கு பண உதவிகளை வழங்குகிறது. தமிழ்ச் சங்கங்களின் விழாக்ககளுக்கு குறிப்பிட்டளவு பண உதவிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதே.

    கங்காரு நாட்டில் தேர்தலில் இந்தநாட்டின் பிரசையாகிவிட்ட எவருமே வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழர்கள் கலந்து வெற்றியீட்டி அரசியலில் கலந்த சேவையாற்றும் வாய்ப்பும் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்த நாட்டில் இருந்து படித்து தொழில் பார்க்க ஆங்கிலம் அவசியம் என்பதனால் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் அதே வேளை சொந்த மொழியை, பண்பாட்டை விட்டுவிடத்தான் வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. இது இங்கு வந்த யாவருக்கும் பெரும் வரப்பிரசாதம் என்றுதானே எண்ணவேண்டும்.

    இதனால் தமிழ் மொழி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. அவுஸ்திரேலிய அரசின் மொழிக்கொள்கையானது அவுஸ்திரேலியாவில் ஆங்கிலமும் பிற மொழிகளும் வளரப் பெருந்துணையாய் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. 1980ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவுக்கென்று ஒரு மொழிக்கொள்கை தேவை என்ற நோக்குடன் அரசின் மொழிக்கொள்கையை நடுவண் அரசு நான்கு முக்கியக் கோட்பாடுகளுடன் உருவாக்கி, தேசிய அளவில் அதை ஒழுங்குபடுத்தியது. அதில் ஆங்கில மற்ற மொழிகளைக் காத்தல், மற்ற மொழிகளிலும் அரசியல்சேவைகள் கிடைக்கப் பண்ணுதல், இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல்.

    இதன்படி 1987 ஆம் அவுஸ்திரேலியாவின் தேசிய மொழிக்கொள்கை நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கொள்ளை அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் இப்படி ஒரு பன்மொழிக் கொள்கையை வகுத்த முதலாவது நாடாக அவுஸ்திரேலியா விளங்குகிறது என்பது இந்தநாட்டின் கண்ணியமான ஒரு செயற்பாடாக அமைகிறதல்லவா? தமிழை அரசாங்கம் ஒரு மொழியாக அங்கீகரிக்கும் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் முக்கியமான விஷயம் எனலாம்.

    சில நாடுகளில் தங்கள் தாய் மொழியில் பேசவே பயப்படுகின்றனர். உதாரணமாக இலங்கையின் தலைநகரில் வாழும் தமிழ் மக்கள் வெளியிடங்களில் கூடியளவு தமிழில் பேசுவதை தவிக்கின்றார்கள். காரணம் அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர் தங்களை இனங்கண்டுவிடுவார்கள் என்னும் பயத்தினாலே. அப்படி இனங்காணப்பட்டால் தமக்குப் பாதுகாப்பு இல்லாமை வந்து விடலாம் என்று இன்றளவும் அஞ்சும் நிலை காணப்படுகிறது.

    ஆனால் கங்காரு மண்ணில் மட்டும் இந்தப் பயத்துக்கு இடமே இல்லை. வீட்டிலோ, தெருவிலோ, வேலைசெய்யும் இடத்திலோ, போக்குவரவு செய்யும் பஸ்சிலோ, புகைவண்டியிலோ, சந்தைகளிலோ, விமான நிலையத்திலோ எங்கு வேண்டுமானாலும் இன்பத் தமிழில் இனிமையாகப் பேசக்கூடிய சுகம் இந்த நாட்டில் இருக்கிறது. அந்த அளவு வேற்று மொழிக்கும் அவர்களது பண்பாடுகளுக்கும் கெளரவம் வழங்கும் கண்ணியம் மிகவும் தாராளமாக இங்கு இருக்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.

    இதனால்தான் தமிழ்விழாக்களையும், தமிழ் நூல்கள் வெளியீடுகளையும், இசை, நடன அரங்கேற்றங்களையும், தமிழ்ப் பத்திரிகைகளையும், தமிழ்ச் சங்கங்களையும் அமைத்துத் தமிழர்கள் தங்கள் சுயத்தினைத் தொலைக்காமல் கங்காரு நாட்டில் வாழ முடிகிறது என்றால் அதனை கங்காரு நாட்டின் கண்ணியம் என்று போற்றுவது பொருத்தமாக இருக்கிறதல்லவா!

    Share
  • விரல்கள்

    முல்லைஅமுதன்

     

    காயம்படாமல் பார்த்துக்கொள்

    உன் விரல்களை..

    தேவைப்படலாம்.

    யாரையாவது விழிக்க..

    உன் பிள்ளையை

    அழைக்க..

    கட்டளையிட.

    அடிபணியா வாழ்விது

    என…

    புள்ளடியிடவென

    உன் விரல்களை

    வாடகைக்குக் கேட்கலாம்

    மறுத்தால்

    விரல்களையே

    தறிக்கலாம்.

    காலம்

    ஒருநாள் கட்டளையிடலாம்

    விசைகளை அழுத்த…

    விரல்களை

    காயம்படாமல்

    பார்த்துக்கொள்.

     

     

    Share
  •   திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -23

    க. பாலசுப்பிரமணியன்

    அன்பே வழி 

    திருமூலர்-1

    “எவ்வாறு தன் நாபியின் உள்ளிருந்து வருகின்ற மணத்தை அறியாது ஒரு மான் இங்கும் அங்கும் அந்த மணத்தைத் தேடி அலைகின்றதோ அது போல் நான் அலைகின்றேன்” என்று கபீர்தாசர் தன்னுடைய கவிதையிலே அங்கலாய்க்கின்றார். பல நேரங்களில் அன்பின் வடிவாக அந்த இறைவன் நம் உள்ளிருந்து அருள்பாலிக்கின்றான் என்று நாம் அறிந்தாலும், அகத்திற்கும்  புறத்திற்கும் உள்ள இடைவெளி காரணமாக அந்த அன்பின் வடிவானவனை அறியாமல் தவிக்கின்றோம்.

    உள்ளதொருவனை உள்ளுறு சோதியை

    உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை

    உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்

    உள்ளம் அவனை உருவறி யாதே

    என்று திருமூலரும் அந்த நிலையை நம்முன் வைக்கின்றார்.

    இதை அறியாமை என்று சொல்வதா? அல்லது அகத்தில் படிந்த மாசினால் ஏற்பட்ட இருள் என்று சொல்வதா?

    வாழ்க்கையின் மாய வலைகளில் சிக்கி இந்த அன்பின் வடிவை நாம் உணராமல் இருக்கும் நிலையில் என்னென்ன துன்பத்தைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது? வழி தடுமாறிச் செல்கின்ற ஒரு வழிப்போக்கனைப் போல் ஆகிவிடுகின்றோமே! இதிலிருந்து எப்படி மீள்வது? மாணிக்க வாசகருக்கும் ஏற்பட்ட  நிலையன்றோ இது?

    புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து

    இங்கு ஒரு பொய்ந் நெறிக்கே

    விலங்குகின்றேனை விடுதி கண்டாய்

    விண்ணும் மண்ணும் எல்லாம்

    கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்

    கருணாகரனே

    துலங்குகின்றேன் அடியேன் உடையாய்

    என் தொழுகுலமே !

    என்று அவர் வாடும் பொழுது அவர் உள்ளிருக்கும் வேதனையும் இறை பால் இருக்கும் மாசற்ற அன்பும் வெளிப்படுகின்றது.

    இந்த  உயந்த அன்பின் பிணைப்பினை அறியாத நெஞ்சம் எங்கெங்கெல்லாமோ அலையும் பொழுது அதை எப்படி கட்டுப்படடுத்துவது? அதற்கு எப்படி அறிவுரை வழங்குவது? இந்த அவல நிலையிலிருந்து மாற இந்த நெஞ்சம் என்ன செய்ய வேண்டும்?

    பட்டினத்தார் தன் நெஞ்சுக்கு அளிக்கும் அறிவுரை மிகவும் உண்மையானது; சிறப்பானது .. இதை விடச் சிறந்த ஒரு அறிவுரை நெஞ்சுக்குத்தான் கிடைக்குமோ?

    ஒழியாப் பிறவி டுத்தேங்கி தேங்கி யழுகின்றநெஞ்சே

    அழியாப் பதவிக் கவுடதங் கேட்டி  யநாதியனை

    மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்திலுன்னி

    விழியாற் புனல்சிந்தி விம்மி யழுநன்மை வேண்டுமென்றே.

    இந்த அன்பின் வடிவத்தோடு இணைகின்ற முயற்சியில் எங்காவது தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்ற ஐயத்தால்தான் திருவாசகத்தில் மாணிக்க வாசகரோ

    இம்மையே உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன்”

    என்று சிவபெருமானிடம் தன்னுடைய அளவற்ற அன்பை வெளிப்படுத்துகின்றார்.

    இதே கருத்தை வெளிப்படுத்தும் திருமூலரோ எவ்வாறும் அன்பெனும் ஒளியை, சோதியை உள்ளத்தில் ஏற்றி அதிலே நாம் உருக வேண்டும். எவ்வாறு அந்த ஈடில்லா அன்பே இறைவனின் பாதங்களில் நம்மைச் சேர்க்கும் என்பதை எடுத்துரைக்கின்றார்.

    என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

    பொன்போற் கனலிற் பொரிய வருப்பினும்

    அன்போ டுருகி அகங்குழைவார்க்கன்றி

    என்போல் மணியினை யெய்தஒண் ணாதே .

    (தொடரும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170822 -Kaliamardhana - lr

    காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
    காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
    கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
    தூளியில் ஆடித் தூங்க வருகவே….!
    முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
    அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….
    எந்தவேலை செய்தாலும் தொந்தரவாய்த் தோணுதே
    இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா -அந்தநாளில்
    ஆளாள் குறைதீர்க்க ஆதரித்தோய் இன்றுமட்டும்
    வாளா(து)(சும்மா) இருப்பதேன் வா….
    சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
    எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
    தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
    சீராக ஆடிடும் சேய்….

    அற்புதம் செய்ய அவதரித்த ஆய்க்குலத்தோன்
    பொற்பதம் போற்றிப் பணிந்திட -கற்பூரம்
    மூச்சில் மணத்திடும் மூடக் கழுதைக்கும்
    ஆச்சரியம் கண்ணன் அருள்…

    ஒன்பது ஓட்டை உடலே உடனேநீ
    தின்பது தூக்கம் தவிர்த்தாயர் -நண்பனின்
    ஊது குழலாய் உருமாறி என்நாளும்
    கீதகோ விந்தமதைக் கூவு….கிரேசி மோகன்….!

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (236)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக திரைப்பட நடிகர் அல்வா வாசு எனப்படும் வாசுதேவன் அவர்களை தேர்வு செய்கிறோம்.

    1970களில் மதுரையைச் சேர்ந்த வாசுதேவன் எனும் இளைஞர் சும்மா சென்னையை சுற்றிபார்க்கலாம் என சொல்லி வந்து சேர்கிறார். அவரது உறவினர் திரைத்துறையில் இருந்ததால் வந்து சேர்ந்த சில மணிநேரத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு கூட்டி சென்றுவிட்டார். அதன்பின் எடிட்டிங் பயிற்சி எடுத்து பெரிய இயக்குனர் ஆகும் கனவில் இயக்குனர் மணிவண்ணனின் உதவி இயக்குனராக பணியில் சேர்கிறார் அல்வா வாசு.

    இவருடன் மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்தவர்கள் விக்கிரமன், ஆர்.கே.செல்வமணி, சுந்தர் சி, சீமான், சசிகுமார் போன்றவர்கள் பெரிய இயக்குனர்களாக ஜொலிக்க, அவர்கள் பாணியில் தானும் படம் இயக்காது மணிவண்ணனுடன் இருப்பதே போதும் என நினைத்து அப்படியே உதவி இயக்குனராக இருந்துவிட்டார் வாசுதேவன்.

    அமைதிப்படையில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் சிறுவேடத்தில் நடித்ததால் அல்வா வாசு என்ற பட்டம் வந்து ஒட்டிக்கொண்டது. அதன்பின் மணிவண்ணனின் மார்க்கட்டு சரிய, வடிவேலுவுடன் சேர்ந்து சிறு,சிறு காமடி வேடங்களில் நடித்தார் அல்வா வாசு. “எல்லாம் அவன் செயல்” திரைப்படத்தில் “ஜாமீன்” வாங்கப் போகும் வக்கீல் வேடமும் அதில் வரும் “கடல்லெயே இல்லையாம்” வசனமும் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால் அதை பேசிய நடிகர் அல்வா வாசு என்பது யாருக்கும் நினைவிருக்காது.

    1

    துணைநடிகர், அதிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வந்துபோகும் அள்ளக்கை வேடத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் வாழ்வில் வரும் அனைத்து இன்ப துன்பங்களும் வாசுவுக்கும் வந்து போயின. என்றாவது பெரிய நடிகர் ஆவோம், இயக்குனர் ஆவோம் எனும் கனவில் திரையுலகில் தனக்கான இடத்திற்காக போராடினார். சம்பளம் பெரிதாக வரவில்லை, பெயர் யாருக்கும் தெரியவில்லை என்றாலும் அவரது முகம் பலருக்கும் நினைவிருந்தது. சாலையில் அவரை பார்ப்பவர்கள் நிறுத்தி “உங்களை இந்த படத்தில் பார்த்திருக்கிறேன்” என சொல்வதே அவர்களை பொறுத்தவரை ஆஸ்கார் விருதுக்கு சமம்.

    வடிவேலுவே முன்பு இப்படி கவுண்டமணியிடம் அடி வாங்கும் அள்ளக்கை வேடத்தில் நடித்தே பெரிய ஆளானார். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு எல்லாருக்கும் அமைவது இல்லை. அல்வா வாசுவுக்கும் அமையவில்லை. வடிவேலு 2011ல் அரசியலில் சிக்கி வாய்ப்பை இழந்தார். அவரை நம்பி இருந்த அல்வா வாசுவும் வாய்ப்புகளை இழந்தார்.

    அதன்பின் அடுத்த தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடன் அவரால் இணைய முடியவில்லை. புதிய இயக்குனர்களும் 1979ல் இருந்து திரையுலகில் இருக்கும் இவரை கண்டுகொள்ளவில்லை. திரையுலகம் புதியவர்கள் தலைமையில் பயணித்தது. பழைய மனிதரான அல்வா வாசு வாய்ப்புகளை இழந்தார். அத்துடன் கல்லீரல் நோயும் அவரை தாக்கியது. பல சினிமா நடிகர்களை அழித்த கல்லீரல் வியாதி இவரையும் தாக்கியது.

    கடைசிகாலத்தில் நடிகர் சங்கம், பொன்வண்ணன், விஷால், கார்த்தி முதலானோர் உதவிய நிலையிலும், பலனின்றி தன் கனவுகள் நிறைவேறாமல் உயிரிழந்தார் அல்வா வாசு.

    அவரால் ஏன் பொருளாதார ரீதியில் வெற்றிபெற முடியவில்லை எனும் ஆராய்ச்சி நமக்கு அவசியம் இல்லை. ஆனால் ஒரு கலைஞனாக வடிவேலுவுடன் அவர் நடித்த வேடங்கள் காலாகாலத்துக்கும் அவரின் நடிப்பின்வெற்றிக்கான உதாரணமாக விளங்கும், எளிய கிராம மனிதனாக, சாதாரணனாக தான் நடிக்கும் பாத்திரத்தில் ஒன்றி நடித்த அவரின் நடிப்புத்திறனே இவர் யார் என யாரும் கேட்கவாய்ப்பின்றி செய்துவிட்டது. சாலைகளில், கிராம டீக்கடைகளில், சந்தைகளில் காணக்கூடிய எளிய மனிதராக படங்களில் தோன்றினார் வாசு. அந்த எளிமையே இவரை தனிமைப்படுத்தி பார்க்கமுடியாத நிலைக்கு ரசிகனை கொண்டுசென்றுவிட்டது.

    இறந்தபின் இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி, அவர் நடித்த படங்களை ரசிகர்கள் சிலாகித்து எழுதி, வாழும் காலத்தில் அடையாத புகழை தான் இறந்தபின் அடைந்து மறைந்தார் அல்வா வாசு.

    நிறைவேறாத கனவுகளுடன், அவை என்றாவது நிறைவேறும் எனும் ஆவலுடன் ஆண்டுக்கணக்கில் போராடிக்கொண்டிருக்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் செலுத்தும் வணக்கமாக அல்வா வாசு அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து நம் எல்லோரையும் சிரிக்க வைத்த அக்கலைஞனுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறோம்.

    அடுத்த தலைமுறை திரைவிமர்சகர்கள் அல்வா வாசுவின் கதாபாத்திரங்களை ஆராய்ச்சி செய்ய இவ்விருது உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

    Share
  • திருக்குட நன்னீராட்டு

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

     

    அழைக்கிறேன் செந்தமிழ் அருள் விழாவுக்கு, இணைப்புப் பார்க்க

    notice A1

     

    notice B1

    திருப்பணி நிதி அனுப்புவோர்
    If sending direct to the Bank please email details immediately. email: tamilnool@gmail.com
    Sampath Bank PLC, Chavakachcheri, Sri Lanka, Account No. 116 961 000 901, Swift Code: BSAMLKLX
    Name: Arulmiku Vallakkulam Veerakathy Pillaiyaar Koil

    OR

    HDFC Bank ITC Branch Chennai
    Savings Account Number 00041000182519
    IFSC code HDFC0000004
    Name. K. Sachithananthan

    Share
  • பிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி

    ஒரு காலத்தில் காந்தசக்தி இருந்த நிலவு.

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    https://www.space.com/37756-moon-magnetic-field-lasted-billion-years-longer.html

    +++++++++++++++++++++

    பொங்கிவரும் பெருநிலவைப்
    புலவர் புனைந்தார் !
    மங்கிப் போன மதிமுகத்தில்
    மனிதர் தடம் வைத்தார் !
    முழு நிலவுக்கு
    வெள்ளைத் தூள் பூசி
    வேசம் போடுவது
    பரிதி அன்னை !
    அச்சில்லாமல் நகர்வது நிலவு !
    அங்கிங் கெனாதபடி
    எங்கும்
    முகப் பருக்கள் ! பெருங்குழிகள் !
    சுற்றியும் சுழலாத பம்பரம் !
    ஒருமுகம் காட்டி
    மறுமுகம் மறைக்கும் !
    நிலவில்லை யென்றால் புவியில்
    அலையேது, காற்றேது ?
    கடல் நீருக்கு
    ஏற்ற மில்லை  ! இறக்க மில்லை !
    பூர்வ நிலவுக்  காந்தம்
    சீர்குலைந்து
    மரித்த தேனோ  ?
    உருவானது எப்படிக்
    கருநிலவு ?

    ++++++++++++++++++

    நிலவின் மைய அடுக்கில் இடைத்தட்டு [Mantle] என்னும் திணிவுப் பாறை [Solid Rock] தீக்கனல் திரவக் கருவைக் கொந்தளிக்க வைக்கிறது. நிலவின் உட்கருவும் அதன் இடைத்தட்டும் சிறிது வேறுபட்ட அச்சுகள் மூலம் சுற்றி வந்தன.  ஆதலால் அவற்றின் ஒப்பியல் வேக நகர்ச்சி உட்கருத் திரவத்தைக் கலக்கியது. இந்தக் கொந்தளிப்பு புவி-நிலவு இடைத் தூரத்தைப் பொருத்தது. ஏனெனில் புவி-நிலவு ஈர்ப்புகளின் கயிறிழுப்புப் போரில் [Tidal Gravitational Tug of War] நிலவின் உட்கருவும், இடைத் தட்டும் வெவ்வேறு விதத்தில் சுற்றுகின்றன. நிலவு புவியை விட்டுத் [ஆண்டுக்கு 1.5 அங்குலம்] தொடர்ந்து நகர்ந்து வருவதால், இந்தக் கொந்தளிப்புக் குறைந்து கொண்டே வந்து, பின்னர் முற்றிலும் நிலவு ஜனனியின் காந்தசக்தி  நீங்கி விட்டது.

    கிரிஸ்டீனா டையர் [Chrirstina Dwyer, University of Califonia]

    பெருங்காந்த சக்தி தேய்ந்து மரித்தப் போன கரு நிலவு

    1970 ஆண்டுகளில் நிலவில் தடம் வைத்த நாசா விண்வெளி விமானிகள் கொண்டுவந்த பாறை மாதிரிகள் சில காந்த சக்தி உற்றதாகவும், சில காந்த சக்தி அற்றதாகவும் இருந்தன.  நிலவு பூர்வீகக் காலத்தில் காந்த சக்தி கொண்டிருந்தது என்பது, விஞ்ஞானிகளைப் பெரு வியப்பில்  ஆழ்த்தியது !  இப்போது ஏன் காந்த சக்தியை நிலவு இழந்தது என்பது அடுத்த பெரு வியப்பாய் ஆனது !

    ஜெனனியால் காந்த தளம் உண்டாக்கப் படுகிறது.  திரவ இரும்பு போன்ற மின்கடத்தி உலோகம் ஒன்று, தனது திரவ சுழற்சி இயக்கத்தால் காந்த தளத்தை உண்டாக்கும்.  பூமியின் பூகாந்த தளத்தை எடுத்துக் கொண்டால், சுழற்சி இயக்கம், கோளின் வெளிக்கருவில் [Planet’s Outer Core] நிகழ்கிறது.  நகர்ச்சியைத் தூண்டுவது கனல் சக்தி சுழல் ஓட்டம்  [Convection Heat].  ஆனால் நிலவில்  கனல்சக்தி ஓட்டம் நிகழப் போதிய வடிவம் இல்லை.

    கருநிலவின் உட்கருக் கனல்சக்தி வற்றி வெப்பம் தணிந்து போய் வருகிறது.  அதுபோல் அதன் காந்த சக்தியும் தேய்ந்து போய் மறைகிறது.  நிறை குன்றிய நிலவின் ஈர்ப்பு விசை மெலிந்தது. நீர் வளமும்  நிலவில் குறைவு.  ஆகவே சூரிய வெப்பத்தைத் தணிக்கும் வாயுச் சூழ்வெளியோ, காந்த சக்தியோ நிலைபெற முடியவில்லை.  உயிரின வளர்ச்சிக்குத் தேவையான மித வெப்பம் நிலவில் பூமியைப் போல் நிலைபெறாமல் போனது.

    இதுவரை அப்பொல்லோ மாதிரிகள் மூலம் செய்த ஆராய்ச்சி களில் பூர்வத் தோற்ற நிலவின் காந்தசக்தி, 2.7 பில்லியன் – 4.2 பில்லியன் வருடங்களுக்கு முன்பு சுமார் ஒரு பில்லியன் ஆண்டு களாக நீடித்ததாகக் கணிக்கப் படுகிறது.

    Moon Sample, brought by Apollo Astronauts. 

    “பிண்டங்கள் பிளந்து விழுகின்றன, நடுமையம் தாங்க முடியாமல்.” 

    வில்லியம் பட்லர் ஈட்ஸ், ஐரிஸ் கவிஞர் (1865-1939)

    நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

    டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

    காலாக்ஸியிலும், பால்மய வீதியிலும் விண்மீன்கள் தூள்களாய்ச் சிந்திக் கிடக்கின்றன.

    மில்டன், ஆங்கிலக் கவிஞன் “இழந்த சொர்க்கலோகம்” (1608-1674)

    இருள்வெளியின் திமிங்கலப் பற்கள் அப்படியே அதை விழுங்கிவிடும்.

    வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில நாடக் மேதை (1564-1616)

    சூரிய மண்டலத்தில் நூதனப் புதிரான பூகோளம்

    பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது.  அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது !  அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது !  பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது !  ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !

    ++++++++++++++++

    பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

    சூரிய மண்டலத்தில் உள்வட்டக் கோள்களான புதன், வெள்ளி, பூமி (நிலவு), செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் திடப் பிண்டம் (Solid Matter) கொண்டவை.  பூமியில் மட்டும் திடப் பிண்டமும் பெருவாரிக் கடல் நீரும் உள்ளன.  ஆனால் வெளிவட்டக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கும் ஏன் வாயுக் கோள்கள் ஆயின ?  திடக்கோள்கள் பரிதியின் மூர்க்க ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு நெருக்கமான நீள்வட்ட வீதியில் சுற்றுகின்றன.  அதே சமயத்தில் வெளிவட்ட வாயுக் கோள்கள் உள்வட்டக் கோள்களுக்கு அப்பால் வெகு தொலைவில் சுற்றி வருகின்றன.

    அப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிகள்        

    பரிதியின் உள்வட்டக் கோள்களில் புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் எதுவும் இல்லை.  செவ்வாய்க் கோளுக்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக் கோள்கள்.  பூமிக்கு ஒரு துணைக்கோள்.  வெளிவட்டத்தில் உள்ள வியாழனுக்கு 63 நிலவுகள், சனிக்கு 62 நிலவுகள், யுரேனசுக்கு 27 நிலவுகள், நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்பது வியப்பாக உள்ளன. பல ஆண்டுக் காலமாக வானியல் விஞ்ஞானிகள் பூமியும் சந்திரனும் தனித்தனியாகத் தோன்றிப் பிறகு ஈர்ப்பு மண்டலத்தில் சேர்ந்து கொண்டவை என்று கருதினார்கள்.  அதைக் “கூட்டுச் சேகரிப்பு” முறை  (Co-Accretion) என்று வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடுவர்.  கூட்டுச் சேகரிப்பு முறையில் உருவாகும் ஓர் அண்டம் அருகில் பரவிய பிண்டத் துணுக்குகளை ஈர்ப்பு விசையால் தன்வசம் இழுத்து உடல் பெருத்து ஈர்ப்பாற்றலும் மிகையாக்கிக் கொள்வது.  இழுப்பு நியதி (Capture Theory) நிலவு உண்டான பிறகு, பூமி நோக்கி வந்து புவியீர்ப்பு மண்டலத்தில் இழுக்கப் பட்டுச் சுற்றி வருவதாகச் சொல்கிறது.

    பிளவுக் கோட்பாடு (Fission Theory) சொல்கிறது: பரிதி மண்டலத்தில் தோன்றிய இளம்பருவக் காலத்தில் பூமி அரைத் திரவ நிலையில் (Semi-fluid State) இருந்து பிளவு ஏற்பட்டு சிறு கோளொன்று நிலவாகப் பிரிந்து பூமியைச் சுற்றியது.  அடுத்தது “குளிர்த்திண்மை விதி” (Condensation Theory) எனப்படுவது.  அந்த முறையில் பரிதி மண்டலக் கோள்கள் உண்டான “நிபுளாவிலிருந்து” (Nebula) தனித்தனியாக உருவாகிய இரண்டு கோள்களாக பூமியும், நிலவும் அனுமானிக்கப் படுகின்றன.

    1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன.  நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன.  அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன !  அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது !  அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.

    வானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள்.  ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது.  தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது !   அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது.  அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.

    நிலவு தோன்றியதை முடிவு செய்ய மூன்று நிபந்தனைகள்  

    நிலவு எப்படி உண்டானது என்ற கேள்விக்குப் பதில் கூறும் எந்தக் கோட்பாடும் கீழ்க்காணும் மூன்று நிபந்தனை மெய்ப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் :

    1.  நிலவின் கீழான பிண்டத் திணிவு [(Moon’s Density 3.3 gram/c.c) (Earth’s Density 5.5 gram/c.c)] கூறுவது என்ன வென்றால், நிலவின் இரும்பு உட்கரு (Iron Core) பூமியை போல் கனமான தில்லை என்னும் கருத்து.

    2.  நிலவின் பாறைகளில் நீரைப் போல் ஆவியாகும் பொருட்கள் (Volatile Substances) இல்லை.  அதாவது பூமியை விடப் பேரளவில் சூடாக்கப்பட்ட தளத்தைப் பெற்றுள்ளது நிலவு (Baking of Lunar Surface).

    3.  பூமியிலும் நிலவிலும் காணப்படும் ஆக்ஸிஜென் ஏகமூலத் தாதுக்கள் ஒரே ஒப்புமை வீதத்தில் இயற்கையாகப் படிந்துள்ளன (Relative Abundane of Oxygen Isotopes).  அதாவது பரிதி மண்டலத்தில் ஒரே தூரப் பகுதியில் பூமியும், நிலவும் உண்டாகி உள்ளன.

    நிலவு எப்படி தோன்றியது என்பதற்குக் கூறப்படும் கோட்பாடுகள்

    பூமியின் இரட்டைக் கோள்போல் காணப்படும் நிலவு எப்படிப் பிறந்தது என்பதை விளக்க வானியல் விஞ்ஞானிகள் நான்குவிதக் கோட்பாடுகளை அனுமானம் செய்கிறார்.  முதல் மூன்று நியதிகளில் ஓரளவு மெய்யாடுகள் இருந்தாலும், நான்காவது “பூதத் தாக்கு நியதியே” (The Giant Impact Theory) பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    1.  பிளவு நியதி (The Fission Theory) 

    இந்தக் கோட்பாட்டின்படி நிலவு ஒரு காலத்தில் பூமியின் ஒரு பகுதியாக ஒட்டியிருந்து பிறகு  சூரிய மண்டலத்தின் துவக்க காலத்தில் எப்படியோ பிளந்து தனியாகப் பிரிந்தது என்று கருதப் படுகிறது.  தற்போதுள்ள மாபெரும் பசிபிக் கடற்குழியே நிலவுக்குப் பூர்வீக இருப்பிடமாக இருந்திருக்க வேண்டு மென்று யூகிக்கப் படுகிறது !  அந்தப் பகுதியிலிருந்துதான் நிலவு பிரிந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு சித்தாந்தக் கருத்து.  இதற்கு ஒரு காரணம்.  பூமியின் மேற்தளத் தட்டு (Earth’s Mantle) நிலவின் தளப்பகுதி இரசாயனப் பொருட்களை ஒத்துள்ளது.  வேகமாகச் சுழலும் பூமியே, சுழல்வீச்சு விசையால் பிரிந்து போன சிறு கோளை வெளியே தள்ளிச் சுற்ற வைத்திருக்கும்.  அந்தக் கோட்பாடை மெய்யாக எடுத்துக் கொண்டால் பூமியிலும் நிலவிலும் ஏதாவது ஒத்திருக்கும் “பூர்வப் படிவச் சான்றுகள்” (Fossil Evidences) கிடைத்திருக்க வேண்டுமல்லவா ?  ஆனால் அத்தகைய நிரூபணச் சான்றுகள் அப்பொல்லோ பயண விமானிகளுக்கு கிடைக்கவில்லை.  மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    2. இழுப்பு நியதி (The Capture Theory)

    இந்தக் கோட்பாடு மூலம் அறிவது: நிலவு சூரிய மண்டலத்தில் முதலில் வேறெங்கோ தோன்றியது என்றும், பின்னால் அதைப் பூமியின் ஈர்ப்பு விசை இழுத்துக் கொண்டது என்றும் அனுமானம் செய்யப் படுகிறது.  நிலவில் காணப்படும் வெவ்வேறு விதமான இரசாயனப் பொருட்களுக்கு இவ்விதி உதவினாலும் பூகோள ஈர்ப்பில் கவரப்பட்டு, நிலவு சுற்றும் நீள் வட்டவீதிக்கு வந்தது என்பதை விளக்க முடியாவில்லை.  காரணம் பூமியை நோக்கி இழுக்கப்படும் நிலவைக் கட்டுப்படுத்தி மெதுவாக்கும் ஓர் எதிர்ப்பு உந்தாற்றல் எதுவும் இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    3. குளிர்த்திண்மை நியதி (The Condensation Theory) 

    சூரிய மண்டலத்தை உருவாக்கிய மூல “நிபுளாவிலிருந்து” (Nebula) பூமியும், நிலவும் தனித்தனியாகத் தோன்றியவை என்றும் நிலவு பூமியைச் சுற்றும் கோண வட்டவீதியில் தள்ளப்பட்டது என்றும் இந்தக் கோட்பாடு அனுமானம் செய்கிறது !  அந்தக் கோட்பாடு மெய்யென்றால் அவை இரண்டுக்கும் ஏறக்குறைய ஒரே அளவு திணிவுள்ள “கன உலோக உட்கரு” (Same Dense Iron Core) அமைய வில்லை யென்னும் முரண்பாடு உண்டாகுகிறது.  அத்துடன் அவை இரண்டும் ஒரே மாதிரி உட்பொருட்கள் (Composition of Materials) கொண்டிருக்க வில்லை.  மேலும் நிலவில் காணப்படும் பெரும் சூட்டுப் பொருட்கள் (Baked Rock Substances) எப்படி வந்தன என்பதற்கு இதில் விளக்கம் காண முடிவதில்லை.

    தடம் வைத்த அப்பொல்லோ நிலவுப் பயணி 

    4. பூதத் தாக்கு நியதி அல்லது விலக்கு வளைய நியதி(The Giant Impact Theory or The Ejected Ring Theory)

    பெரும்பான்மையான வானியல் விஞ்ஞானிகள் தற்போது ஏற்றுக் கொண்டை கோட்பாடு இது.  இந்தக் கொள்கையின்படி செவ்வாய்க் கோள் அளவான குட்டிக் கோள் ஒன்று, சூரிய மண்டலம் உண்டான இளம்பருவத்தில் பூமியைத் தாக்கியதாகவும், மோதலின் விளைவில் இரண்டு கோள்களின் மேற்தளத் தட்டுப் பொருட்கள் பேரளவில் எறியப்பட்டன வென்று அனுமானம் செய்கிறது.  சிதறிய துணுக்குகள் ஒன்துடன் ஒன்று சேர்ந்து. நிலவாக உருண்டு திரண்டு பூமியைச் சுற்றும் ஒரு கோளானது.  மோதலில் எழுந்த கனல் வெப்பத்தால் நிலவின் பாறைகள் சூடாக்கப் பட்டன !  நிலாவின் பெரும்பகுதி ஏன் பாறைக் குன்றாக உள்ளது, அக்குன்றுகள் எப்படிக் கடுமையாகச் சூடாக்கப்பட்டன என்னும் கேள்களுக்கு விளக்கம் தருகிறது இந்தக் கோட்பாடு.  சூரிய மண்டலம் உருவான பிறகு இத்தகைய மோதல்கள் பெருமளவில் நேர்ந்ததற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

    உறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி

    1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள்.  பூமி மீது மோதிய சிறிய கோள் முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது.  அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.  அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது.

    ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.

    50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூத மோதல் நிகழ்ந்திருக்க முடியுமென்று நம்ப இடமிருக்கிறது !  அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Wikipedia – Inner Structure of the Moon (January 31, 2008)

    12. http://www.dailygalaxy.com/my_weblog/2017/08/nasas-apollo-15-moon-rocks-reveals-death-of-its-magnetic-field-once-1000-times-larger-than-those-in-.html? [August 10, 2017]

    13. https://en.wikipedia.org/wiki/Magnetic_field_of_the_Moon [August 10, 2017]

    14. https://www.space.com/37756-moon-magnetic-field-lasted-billion-years-longer.html  [August 10, 2017]

    15. https://sservi.nasa.gov/articles/mystery-moons-lost-magnetism-explained/

    ******************

    S. Jayabarathan [ jayabarathans@gmail.com ]  [August 19, 2017] [R-1]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ஆலிலையில்
    உண்டுமிழ்ந்த பின்னர் உருப்படியாய் உள்ளது
    உண்டவனும் , உண்ட உலகு

    —————————–

    170820 -Gonakshatra - eka rekha series -watercolor -lr

    “நீலவான் மேனி, நட்ஷத் திரம்பசுக்கள்,
    கோலத்தைக் வையக கோகுலம் : -ஆலிலையில்
    உண்டுமிழந்த பின்னர் உருப்படியாய் உள்ளது
    உண்டவனும், உண்ட உலகு (வையகம் அல்லது பசு )”….!
    பசு கண்ணனை மேய்ந்து உண்டது ….

    Share