உன் தோழி மலர்விழி எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம். உன் நலம் பற்றி அறிய ஆவல். அம்மா, அப்பா மற்றும் கனிமொழி நலம் குறித்தும் அறிய ஆவல். அனைவரது நலனுக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
கல்லூரி எனும் நந்தவனத்தில் மணம் கமழும் வண்ண மலராய் முகிழ்த்தது நம் நட்பு. அந்த நட்பு எனும் மலரில், இன்பமெனும் தேன் பருகிய கவலையிலா வண்ணத்துப் பூச்சிகள் நாம். நினைவுகளில் பசுமையாய் நிறைந்து நிற்கும் வசந்த காலம் அது. காலங்களும் மாறின. காட்சிகளும் மாறின. நமது வாழ்க்கைப் பயணம் திசைக்கு ஒன்றாய் ஆகிப் போக, வாழ்வு இட்டுச் சென்ற திசையிலேயே நமது பயணத்தைத் தொடர்ந்தோம்.
காலமது நம்மைப் பிரித்தாலும் கடிதங்கள் நம் நட்பை உரமூட்டி வளர்க்கின்றன. தொலைபேசி வழியே குரல் கேட்டு மகிழ்ந்தாலும், காலமும் கட்டணமும் நம் உரையாடல்களை சுருக்கி விடுகின்றன. விலாவாரியாக உன் மனதை என்னிடமும், என் மனதை உன்னிடமும் விளக்கிக் கூறுபவை நாம் அனுப்பிக் கொள்ளும் கடிதங்களே. இன்லேன்ட் லெட்டெர் எல்லாம் நம் எண்ணங்களையும் அன்பையும் கொட்டித் தீர்க்க போதுமானதாக இல்லை. எனவே, முழுநீள தாளில் ஐந்து ஆறு பக்கம் வரை தொடரும் கடிதம்.
இப்படியே நாட்கள் நகர, அவ்வப்போது எவரேனும் உன்னைக் காதலிப்பதாக சொல்லி கடிதத்தில் எழுதுவாய். அதைக் கண்டதும் என் மனதில் பயம் புளியைக் கரைத்திடும். வெ ள்ளந்தியான உன்னிடம் காதல் என்ற பெயரைச் சொல்லி எவரேனும் உன்னை ஏமாற்றி விட்டால், என்ன செய்வதென்று மனம் பதைபதைக்கும். உனக்கோ, உன்னிடம் உண்மையாகப் பழகுபவர் யார், சந்தர்ப்பத்திற்கேற்ப உன்னை பயன்படுத்திக் கொள்பவர்கள் யார் என்பது தெரியாது. உன்னைப் பொறுத்த வரை அனைவரும் நல்லவர்களே. வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கொள்பவள் நீ. உன்னருகே நான் இல்லையே என்றெண்ணி என் மனம் துடிதுடிக்கும். ஒவ்வொரு முறையும் உன்னிடம் “கவனமாய் இரு! கவனமாய் இரு!! “ என்று எச்சரிக்கை செய்து வந்தேன். என்னிடம் எதையுமே என்றுமே மறைத்திட மாட்டாய் என்று மலையளவு உன் மீது நம்பிக்கை வைத்தேன். ஆனால் !
சில மாதங்களாக உன்னிடமிருந்து கடிதங்களும் இல்லை. தொலைபேசி அழைப்புகளும் இல்லை. கடிதம் அனுப்பினால் பதிலேதும் இல்லை. மாதங்கள் வருடங்களாயின. என்னவோ ஏதோ என்றெண்ணி பதறித் துடித்தது மனம். ஒரு நாள் திடீரென்று தொலைபேசியில் அழைத்தாய். மனம் குதூகலித்தது. ஆனால், எனக்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை சொல்வாயென எதிர்பார்க்கவில்லை. ஆம்!
உனக்கு திருமணம் ஆகி விட்டதென்று கூறினாய். பெற்றோர் சம்மதமில்லாமல் நீயே காதல் திருமணம் செய்து கொண்டேனென்றாய். மனம் போல் உனக்கு மாங்கல்யம் அமைந்ததென்று மகிழ்ந்தேன்.
“என்னிடம் சொல்லக் கூட முடியவில்லை உன்னால்?“ என்று சற்று காட்டமாக கேட்க,
“சொல்லியிருந்தால் நீ செய்ய விட்டிருக்க மாட்டாயே ! என்னை எப்படியேனும் தடுத்து நிறுத்தியிருப்பாயே!“ என்றாய்.
கணவரைப் பற்றிக் கேட்க, வானமே என் மீது இடிந்து விழுந்தது போல் ஓர் பதிலை சர்வ சாதாரணமாகச் சொன்னாயே! கணவருடன் வாழ விருப்பமில்லை. அதனால், பெற்ற பிள்ளையுடனும் தாய் தங்கையுடன் வாழ்வதாய் சொன்னாய். உனக்கு ஆதரவளிக்க தாயும், தங்கையும் உன்னுடன் வந்துவிட, தந்தையோ, உனக்கு ஆதரவளித்ததற்காக தாயை பகைத்துக் கொள்ள, இன்று குடும்பமே சின்னாபின்னப் பட்டுப் போய் நிற்கிறதே !
உன் நிலை கண்டு தங்கை கனிமொழியோ மண வாழ்க்கை என்ற ஒன்றையே வெறுத்து ஒதுக்கி விட்டு உனக்காகவும் உன் பிள்ளைக்காகவும் உன்னுடனே வாழ்கிறாள்.
தாயும் தங்கையும் உன் மீது கோபப்படுவதாக மிகவும் வருத்தம் கொள்கிறாயே. இந்நிலைக்குக் காரணம் நீயே தானென்பதை ஏன் உணர மறுக்கிறாய். உனக்காக உன் தாய், தந்தையை பிரிந்து வாழ்கிறார். திருமணத்திற்கு பின் உன் கஷ்டங்களைக் கண்டு உன் தங்கை மணவாழ்வே வேண்டாமென்று இருக்கிறாள். உனக்காகவே வாழும் அவர்களை புரிந்து கொள். அவர்களுக்கு மன நிம்மதியைக் கொடு.
உன் மீது பாசமும் நேசமும் அக்கறையும் கொண்ட உறவுகளை, அவர்களின் உணர்வுகளை, உன்னால் அவர்களுக்கு ஏற்பட்ட வலிகளையும் வேதனைகளையும் புரிந்து கொள். அவர்களது கோபம் என்பது நியாயமானதே. சொல்லப் போனால், அவர்கள் தான் உனக்காக தங்களது இன்பங்களையும் வாழ்வையும் மறந்து நிற்கின்றனர். நீ ஏதும் துன்பம் துயரத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக உனக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள். அடங்காத பிள்ளை மீது என்ன அக்கறை வேண்டியிருக்கிறது என்று உன் தாயும் சகோதரியும் உன் அப்பாவுடனே இருந்திருக்கலாம். ஆனால், உனக்காக அவரது கோபத்திற்கும், சமூகத்தின் கேலிப் பேச்சிற்கும் ஆளாகி நிற்கிறார்கள் உன் தாயும் சகோதரியும். ஒரு நாளும் அவர்களை குறைவாய் எண்ணாதே. கோயில் கட்டி வணங்க வேண்டிய தெய்வங்கள் அவர்கள். நினைவில் கொள்.
காதல் உன் கண்களை மறைக்க, காதலன் என்று வந்தவனின் ஆசை வார்த்தைகள் உன் புத்தியை மழுங்கடிக்க, சிறிதும் யோசிக்காமல், புத்தி கெட்டவளாய் வீட்டிலிருந்த நகை பணம் அனைத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு அவன் பின் ஓடினாயே! இன்று உனக்கு உறுதுணையாய் இருப்பவர் யார் ? நீ நம்பிப் போன உன் காதலனா அல்லது நீ நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு ஓடி வந்த உன் குடும்பமா? நம்பி வந்தவன், உன் கையில் ஓர் குழந்தையை கொடுத்துவிட்டு ஓடி விட்டான். இன்று உன்னைக் காத்து நிற்பது உன்னை நம்பி ஏமார்ந்து போன உன் தாய் தான். அதை ஓர் நாளும் மறவாதே.
கற்ற கல்வியை உறுதுணையாகக் கொள். நல்லதொரு வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டு. நியாயமாக செய்யும் தொழில் அனைத்தும் உயர் தொழிலே. உன் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள். கற்ற கல்வியே என்றென்றும் துணை நிற்கும். உன் பிள்ளைக்கு கல்விச் செல்வத்தை வழங்கிடு. நம்பிக்கையை எந்நாளும் துணை கொள். உன் நல்வாழ்வுக்காய் நாளும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அம்மாவிற்கு என் வணக்கங்களை சொல்லவும். கனிமொழிக்கு என் அன்பை தெரிவிக்கவும். மற்றவை உன் கடிதம் கண்டு.
காலமகள் தந்த கவிதைக் கோமகன் கவியரசு கண்ணதாசன் திருவுருவச்சிலை திறந்துவைத்த பெருமகிழ்வில் .. கலைவாணர் அரங்கில் முழுநாள் வைபவங்கள்! கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், இசைவிருந்து நடைபெற்ற நாள் 11.12.1994. திரைவரலாறுகளைத் தன் விரல்நுனியில் வைத்திருக்கும் திரை அகராதி அருமைக்குரிய பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களின் ஆலோசனையேற்று திராவிடக் கவிஞர்கள் மூவரைத் தேர்ந்தெடுத்து ‘கண்ணதாசன் விருதுகள்’ வழங்கிப் பெருமையுற்ற கவியரங்கில்.. திருமிகு ஆருத்ரா.. தெலுங்குக் கவிஞர் – பின்வருமாறு கூறினார். தமிழ் கலந்த தெலுங்கில் அந்த இனியமகன் செப்பியதாவது..
“நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள்.. அடிக்கடி நேரிலும்..அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு! இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார்.. நான் சொல்லுவேன்.. அதே போல்.. நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும் அறிந்துகொள்வேன். அப்படி ஒரு சமயம்.. நான் கேட்டபோது.. அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன்.
அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா? லட்சுமி கல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய ‘ராமன் எத்தனை ராமனடி’ என்கிற பாடல்தான் அது. கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப்படுத்தினீர்கள் என்று கேட்டேன். எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன். கண்ணதாசன் சொன்னார்.. இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப்பிறகுவரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக.. ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவனன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பியபோது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான்.. அப்போது லக்குவனன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனன்னா.. இது என்ன ? நீங்கள் தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்க..
வெண்ணிற ஆடை நிர்மலா வெள்ளித்திரையில் தோன்றி நடித்த காட்சி இது.. பெண் பார்க்கும் படலத்தில் பெண்மை மென்மையை அள்ளி வழங்கிய பாட்டு!
மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த பாட்டு!! பி.சுசீலா பின்னணி தந்த பாட்டு!
கேளுங்கள் மீண்டும் ஒரு முறை..
ஆருத்ரா அவர்களின் கண்ணதாசன் தரிசனத்திற்குப் பின்னர்!
கவிஞரின் அனுமதியுடன் தெலுங்கில் இப்பாடலை மொழிப் பெயர்த்து மாநில அரசு விருதினைத் தாம் பெற்று நெகிழ்ந்ததையும் நினைவு கூர்ந்தார்!
ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி – அவன் நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன் (ராமன் எத்தனை ராமனடி)
கல்யாண கோலம் கொண்ட – கல்யாணராமன் காதலிக்கு தெய்வம் அந்த – சீதாராமன் அரசாள வந்த மன்னன் – ராஜாராமன் அலங்கார ரூபம் அந்த – சுந்தரராமன் (ராமன் எத்தனை ராமனடி)
தாயே என் தெய்வம் என்ற – கோசலராமன் தந்தை மீது பாசம் கொண்ட – தசரதராமன் வீரம் என்னும் வில்லை ஏந்தும் – கோதண்டராமன் வெற்றி என்று போர் முடிக்கும் – ஸ்ரீஜெயராமன் (ராமன் எத்தனை ராமனடி)
“எம்பிரானும் வேதம் ஓதும் அன்னவாக னாரும் காண மண்ணைவானை மீறு மேனி -கிரிசோணை தன்னில்தேக வாசம் போக அன்றுஆல வாயில் சாவை வென்றுதீர னாக மேவு -ரமணேசர்
கொம்புஞானம் காண காலில் தெம்பிலாத மூடன் வாயில் கொஞ்சமேனும் தேனை சேர -அருள்வாயே கங்கையோடன் தோள்கு லாவி அஞ்சுமானை நீயும் கூட என்றுகூறு தோழ பாவ -ரகுராமா
அண்ணல்சோகம் தீர வானில் பொங்குமாழி மீது தாவி அன்னைவாழும் சேதி கூறும் -அனுமானின், அஞ்சனாவின் சேயின், வாயு மைந்தனாரின், வாசி ஈசன் அம்சனாரின் நேச மான -சகவாசன்
நம்பினோர்கள் நாளில் கோளில் துன்புறாது கோயில் வாசல் அன்பினோடு தாழி டாது -சிலையோடு அம்புறாவும் தோளில் ஆட தம்பியோடு தாரமொடு கும்பகோண ராம சாமி -பெருமாளே” ———————————————————————————————————————
’ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுபதினம் அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்’.
என்றொரு அழகான அர்த்தமுள்ள பாடலை சீர்காழியின் கணீர் குரலில் கேட்டிருப்பீர்கள். அடுத்தவர் நலமாக வாழவேண்டும் என்று எத்தனை பேர் நினைக்கிறோமோ, அந்த நினைப்பிலேயே ஒரு தனி இன்பம் கிடைப்பதை அப்படி நினைப்பவர்கள் அறிவார் என நினைக்கிறேன்.
சுயநலம் இந்த உலகைப் பெரிதும் புகைமண்டி சூழ்ந்துள்ள இந்தக் கால கட்டத்தில் அதைக் குழலெடுத்து ஊதிக் குறைப்பது என்பது சாதாரணமல்ல. சுயநலப் போக்கு இந்த உலகை விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் விரட்டமுடியாது. அப்படித்தான் நினைக்கிறேன். அதே வேளையில் இந்த நகராத பிசாசை எப்போதும் நகர்த்திக்கொண்டே இருக்க நாம் முயலவேண்டும். சுயநலம் நீக்கி பொது நலம் பார்க்க முதலில் மனதில் உறுதி வேண்டும். அந்த உறுதி நிலைத்து நிற்க வேண்டும். முடிவே இல்லாத நிலையில் இந்த முயற்சி இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் அந்த முயற்சியின் நன்மை நாளாக நாளாகப் பலரைச் சென்றடையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லைதான்.
இப்படி பொதுநலனுக்காக எதைத் தேர்ந்தெடுத்துச் செய்வது என்பதில் கூட சிலருக்குக் குழப்பம் வரலாம். ஏற்கனவே மேற்கண்ட பாட்டில் சொன்னது போல ‘அடுத்தவர் நலத்தை நினைத்தாலே போதும்’ இதுவும் கூட பெரிய பொதுநலம்தானே. இப்படி அடுத்தவர் நலத்தை நினைப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர் நலத்துக்காக நாளும் தியானம் செய்து அந்த தியானத்தை செய்தி மூலமாக பரப்பி வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த திரு முத்துசுவாமி அவர்கள். இவர் இந்திய ஆட்சித்துறையில் ரெவின்யூ துறையில் ஆணையராகப் பணி புரிந்துகொண்டே மற்றவர்கள் நலத்துக்காக தினம் சில மணித் துளிகள் ஒதுக்கி பிரார்த்தனை செய்கிறார். அவர் தினம் தரும் செய்தி என்ன தெரியுமா?
“வாழ்க வளமுடன், வாழ்க வையகம்!” உங்களுக்கு எல்லா வகைச் செல்வங்களும் வளங்களும் வந்து சேரவேண்டும், உங்கள் வாழ்வு எல்லோருக்கும் வழிகாட்டும் வகையில் ஒளி மிகுந்ததாக இருக்கவேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை”
இந்தப் பொதுநலப் பிரார்த்தனையை இன்று நேற்றல்ல, பல்லாண்டுகளாக செய்து வருபவர் திரு முத்துசாமி அவர்கள். எனக்காகவும் உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யும் இவர் போன்றவர்களின் பிரார்த்தனையில் நமக்கு நல்லதே விளைகிறது. மேற்கண்ட பாடல் சொல்வது போல திரு முத்துசாமி அவர்களுக்கு என்றும் (நித்தியம்) சுபதினம்தான். மற்றவர் நலத்தை நாடும் திரு முத்துசாமி அவர்கள் வல்லமைக் குழுவினர் சார்பாக இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். என்றும் சுபதினத்தைக் கொண்டாடும் திரு முத்துசாமியின் வழியில் நாமும் செல்வோம். திரு முத்துசாமி அவர்களுக்கு நாமும் சொல்லிக்கொள்வது “வாழ்க வளமுடன்”
கடைசி பாரா: இன்னம்பூராரின் செல்லக் காதல் கடிதத்தில் முகவுரை
அன்பே, ஆரமுதே, ஆயிரம் அடைமொழி மணிமொழியே, பிரியமானவளே, காதலியே, தலைவியே, செல்லமே, என் கண்ணின் கருமணியே, ஸலபஞ்சிகே! கழுதே !
மாக்கரீனா (Macarena) என்ற நடனம் 1990 களில் அமெரிக்காவை ஒரு கலக்குக் கலக்கிய நடனம். ஸ்பானிஷ் மொழியில் முதலில் வெளியான ‘ரும்பா’ (rumba) வகையில் அமைந்த இப்பாடல், 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் நாள் ஆங்கில வரிகளுடன் வெளிவந்த பிறகு ஒரு ஆண்டுக்கு எங்கு திரும்பினாலும் இதே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். இப்பாடல் யாரையும், எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு வெளிநாட்டுப் பாடல் அமெரிக்கர்களை அந்த அளவிற்குக் கவர்ந்ததன் காரணம் அதன் எளிய இடை அசைவு கொண்ட நடன பாணியும், ஆடத் தூண்டும் இசையும்தான் (Macarena: a dance performed with exaggerated hip motion to a fast Latin rhythm). முழுப்பாடலையும் 16 நடன அசைவுகளில் ஆடிவிடலாம், அத்துடன் 10 நொடிகள் மட்டும் வரும் இந்த அங்க அசைவுகளை இரண்டு வினாடிகளுக்குள் கற்றும் கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பு.
சரியாக ஒரு பத்து ஆண்டுகளுக்கு அமெரிக்கர்களால் மிகவும் விரும்பப்பட்ட நிலையில் இருந்த இந்த நடனம் விளையாட்டு போட்டிகள், அலுவலகக் கொண்டாட்டங்கள், உல்லாசப் பயணங்கள், பள்ளி விழாக்களை மட்டுமல்ல தேசிய அளவில் நடந்த தேர்தலையும் இந்தப் பாடல் விட்டு வைக்கவில்லை. பிறகு அமெரிக்கர்கள் கொடுத்த கவனிப்பால் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது.
ஸ்பெயினைச் சேர்ந்த ‘லாஸ் டெல் ரியோ’ (Los Del Río) என்ற ஸ்பானிஷ் பாப்பிசை இரட்டையர்களான ‘அந்தோணியோ ரோமிரோ மாங்கே’ என்பவரும் அவரது தோழர் ‘ராஃபியல் ரூயிஸ்’ (Antonio Romero Monge and Rafael Ruiz, Pop duo) என்பவரும் 1962 ஆம் ஆண்டிலிருந்து பாப்பிசையில் பற்பல பாடல்கள் பாடி வந்தவர்கள். ‘லாஸ் டெல் ரியோ’ என்றால் ‘ஆற்றின் மக்கள்’ (மண்ணின் மைந்தர்கள் என்பது போல) எனப் பொருள் கொள்ளலாம். அவர்களை ‘ஸ்பானிஷ் ஃப்லேமன்கோ’ (Spanish flamenco) பாப்பிசைக்குழு என்றும் சொல்வார்கள். இவர்கள் தாங்கள் பாடத்தொடங்கி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களது நடுத்தர வயதை அடைந்த பிறகு தங்களுக்கு உலகளாவிய புகழ் வரும் என்று கனவும் கண்டிருக்க மாட்டார்கள்.
அந்தோணியோவும் ராஃபியலும் வெனிசுலா (Venezuela) நாட்டிற்குக் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தச் சென்றார்கள். அந்த நாட்டின் மொழியும் ஸ்பானிஷ்தான். அங்கு ‘டயானா பாட்ரிஷியா குபில்லன்’ (Diana Patricia Cubillan) என்ற 25 வயது நடனமாடும் பெண்ணை ஒரு விழாவில் நடனமாடுகையில் பார்த்தார்கள். அவரது அழகும் ஆடும் திறமையும் இப்பாடகர்களைக் கவர உடனே அங்கேயே அவரைப் புகழ்ந்து இப்பாடலைப் பாடினார்கள். இப்பாடல் தோன்றக் காரணமானவரே டயானாதான். பிறகு ஓராண்டு கழித்து அவர்கள் மீண்டும் டயானாவை சந்திக்க நேர்ந்தபொழுது, அந்தோணியோவும் ராஃபியலும் தங்கள் பாடலுக்கு அன்று உணவு விடுதியில் நடனமாட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே அவரும் ஒப்புக் கொண்டார். உயர முடிந்த கொண்டையும், அதில் ஒரு பூவும் செருகி, குதிகால் செருப்பும், இறுகத் தழுவிய நடன ஆடையும் அணியும் டயானா அன்று சாதாரண கால்சராய் சட்டையுடன்தான் வந்திருந்தார். ஆனாலும் நடன ஒப்பனைகள் இல்லாததைப் பொருட்படுத்தாது மிகவும் ஆர்வத்துடன் ஆடி முடித்தார். இப்பாடல் தோன்றக் காரணமான இவரே பிறகு ‘மாக்கரீனா; என்றும் அழைக்கப் பாடலானார். இவருக்கும் பிறகு பல வாய்ப்புகள் குவிந்தன.
இப்பாடலில் முதலில் ‘மேக்டலினா’ (Magdalena) என்று அன்னை மேக்டலினாவைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தி இருந்தனர். பிறகு ஏற்கனவே மேக்டலினா என்ற ஒரு பாடலும் இருந்ததால், ‘லாஸ் டெல் ரியோ’ இசைக் குழுவினர் “மாக்கரீனா” (Macarena is a female name which means “Mother of God”)என்று தாங்கள் வசித்த இடத்திற்கு அருகில் உள்ள இடத்தைக் குறிக்கும் வகையில் சொல்லை மாற்றினர். முதலில் “நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் உடலை நாம் மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம், நம் உடலைப் போற்றுவோம்” என்ற பொருளில் இப்பாடல் எழுதப்பட்டது. பிறகு, தன்னைப் பிரிந்த காதலன் மேல் ஒரு பெண் ஊடல் கொண்ட பாணியிலும் பின்னர் பல பாடல்கள் எழுதப்பட்டு பாடப்பட்டது. இப்பாடலை ஸ்பானிஷ் இசைநிறுவனம் 1993 ஆம் ஆண்டு வெளியிட்டது.
அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழி பேசுவோர் அதிகம் உள்ள ஃப்ளோரிடா மாநில வானொலி நிலையமொன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு இப்பாடல் மிகவும் பிடித்தது. இப்பாடலை தங்கள் வானொலி நிலையத்தின் வழி ஒலி பரப்ப விரும்பினார். ஆனால் பிறமொழிப் பாடல்களை ஒலிபரப்பும் கொள்கையை ஏனோ அந்த வானொலி நிலையம் கொண்டிருக்கவில்லை. எனவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் தானே ஆங்கிலத்தில் பாடல் வரிகளை எழுதி, ‘பேசைட் பாய்ஸ்’ இசைக்குழுவுடன் இணைந்து ஆங்கில வரிகளில் (Bayside Boys, Macarena English-language remix or Bayside Boys Mix) இப்பாடலை உருவாக்கி அமெரிக்க ‘பி ஜி எம்’ (BGM) நிறுவனம் மூலம் வெளியிட்டார். 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் ஆங்கில வரிகளுடன் வெளிவந்த இப்பாடலுக்கு ராயல்டி தொகையின் மூலமே நல்ல வருமானம் ‘லாஸ் டெல் ரியோ’ இசைக்குழுவிற்கு கிடைத்தது. இதுவல்லவோ கனகதாரா சோஸ்திரம். பத்தாண்டுகளில் இப்பாடல் கொணர்ந்த வருமானம் 250,000 அமெரிக்க டாலர்கள். இப்பாடல் தந்த புகழின் காரணமாக அந்த ஊரின் மாநகராட்சியின் நடன அரங்கிற்கும் அப்பெயர் சூட்டி கெளரவிக்கப்பட்டது.
பிறகு இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் பெரிய இசைகுழுவினர்கள், நடன நிகழ்சிகள் என எங்கும் இப்பாடல் முன்னணி வகிக்க ஆரம்பித்தது. ஒருமுறை புகழ் பெற்ற அமெரிக்க யான்கீ (Yankee) பேஸ்பால் விளையாட்டரங்கில் விளையாட்டிற்கு இடையில் 50,000 திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பாடல் ஒலித்தவுடன் எழுந்து நடனமாட ஆரம்பித்தார்கள்.
காணொளி: Macarena dance record set at Yankee Stadium: http://youtu.be/0NpscLUEx0Y
விடாது கருப்பு! என்பது போல நாட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும், கொண்டாட்டமும் இப்பாடல் இன்றி நடக்காது என்ற நிலைக்குப் போனது.
காணொளி: National Down Syndrome Congress: http://youtu.be/gpu–VdIF78
1996 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்காகத் தயாரான டெமாக்ரட் கட்சியின் கருத்தரங்கில் இப்பாடல் பாடி ஆடப்பட்டது. பில் கிளிண்டனும், அல்கோரும் இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடிக்க வாக்காளர்களைக் கவர முயற்சி செய்த கருத்தரங்கம் அது. அப்பாடலுக்கு ஹில்லாரி கிளிண்டன் நடனமாடியும், எப்பொழுதும் கலகலப்பின்றி இருக்கும் அல்கோர் ‘நானும் கூட மாக்கரீனா ஆடுவேனே’ என்று கூறி அசையாது சிறிது நேரம் சிலை போன்று நின்றுவிட்டு ‘மீண்டும் ஒருமுறை என் நடத்தைப் பார்க்க விருப்பமா?’ எனக் கேட்டு நகைச்சுவையுடன் கலாய்த்து மக்களைக் கவர முற்பட்டனர்.
காணொளி: Delegates were shown dancing the Macarena on the convention floor: http://www.c-span.org/video/?74656-1/delegates-macarena-dance
இப்பாடலின் முதல் மூன்று வரிகள் மிகவும் புகழ் பெற்றது.
Dale a tu cuerpo alegría Macarena
Que tu cuerpo es pa’ darle alegría y cosas buenas
Dale a tu cuerpo alegría Macarena
¡Eh,… Macarena! Aaay!
காணொளி: Macarena: http://youtu.be/i1im74-XgYA
“Dale a tu cuerpo alegria, que tu cuerpo es para darle alegria y cosas buenas, Macarena! Aaay” — என்றால் ஆங்கிலத்தில்
“Give your body joy, because your body is for giving happiness and good things, Hey, Macarena! என்று பொருள்.
இப்பாடலின் ஆங்கில வரிகள் …
Give happiness to your body Macarena
’cause your body is for giving happiness and nice things to
Give happiness to your body Macarena
Heeey,… Macarena! Aaay!
இந்தியாவில் பாலிவுட் வழியாக நுழைந்த இப்பாடலின் வரிகள்….
Are Baba Are Baba, Kare Kya Diwana
Ladka Jab Bhi Ladki Dekhe Gaye Yahi Gana
Dil Deke Dena, Dil Le Le Lena
காணொளி: Dil Le Le Lena (Macarena Song): http://youtu.be/0cMfviJD24I
குஷி (2000) திரைபடத்தில் விஜய்யும் ஷில்பா ஷெட்டியும் “மாக்கரீனா….. மாக்கரீனா…..” என்று பாடி ஆடிய ஆட்டத்தில் மாக்கரீனா என்ற பெயரைத் தவிர அசல் மாக்கரீனா பாடலின் மெட்டும், நடன அசைவுகளும் இல்லை.
என்று புனைந்துள்ளேன்.
பாடல் வரிகளும், எப்படி ஆடுகிறார்கள் என்பதும் தெரிந்துவிட்டது. அடுத்த கட்ட முயற்சியாக நாமே எப்படி ஆடலாம் எனப் பார்ப்போம். படிப்படியாக ஒவ்வொரு அசைவுகளும் பற்றியக் குறிப்பு கீழே:
Dancing the macarena requires you to move with the 16 beats of the music. Here’s what to do:
Beat 1: Put your right arm straight in front of you with your palm down.
Beat 2: Put your left arm straight in front of you with your palm down.
Beat 3: Put your right arm straight in front of you with your palm up.
Beat 4: Put your left arm straight in front of you with your palm up.
Beat 5: Grab the inside of your left elbow.
Beat 6: Grab the inside of your right elbow.
Beat 7: Grab the back of your neck with your right hand.
Beat 8: Grab the back of your neck with your left hand.
Beat 9: Put you right hand on your left front pocket.
Beat 10: Put your left hand on your right front pocket.
Beat 11: Put your right hand on your right rear pocket.
Beat 12: Put your left hand on your left rear pocket.
Beat 13: Move your bottom to the left.
Beat 14: Move your bottom to the right.
Beat 15: Move your bottom to the left again.
Beat 16: Clap and turn to the right.
கணினியை கற்றுக் கொள்ள செயல்முறைப் புத்தகங்கள் எப்படி சுலபமான வழியில்லையோ, அது போன்றேதான் நடனமும், நேரே களத்தில் இறங்க வேண்டியதுதான் சரியான முறை.
அதற்கு உதவியாக இந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள நல்ல காணொளி ஒன்றும் உண்டு…
(எச்சரிக்கை: சுட்டியைச் சொடுக்கி காணொளி மூலம் நடனம் கற்றுக் கொள்ளும் முன், முதல் படியாக அறைக்கதைத் தாழிடவும். கணினியை விட்டு எழுந்து திடீரென ஆடத் தொடங்கினால், அருகில் உள்ளவர்கள் அரண்டு போய் உங்களுக்கு ஏதோ ஆபத்து என்று அவசர உதவி செய்தால், அதனால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், பழி என் மேல் விழுந்து… சட்டம் என் மேல் பாயக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கைதான் இந்த வேண்டுகோளுக்குக் காரணம்)
காணொளி: How To Dance Macarena – http://youtu.be/OzV63IRR8BQ
சிறுவயதில் பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் செய்தது போலவே இருக்கிறதே என்று தோன்றினால் தவறு கிடையாது. அதுவேதான்….அதே அசைவுகள்தான். கொஞ்சம் அப்படி, இப்படி இடையை ஒடித்து, ஒடித்து, அசைத்து நளினமாக செய்தால் அது மாக்கரீனா நடனம். சிறுவர்களுக்கும் நல்வழி என்று கருதி கற்றுக் கொடுக்கலாம். பெரும்பாலும் அவர்கள்தான் நமக்கு இந்த நடனத்தைச் சரியாக ஆடக் கற்றுக் கொடுப்பார்கள்.
காலையில் உடல் நலம் மேம்பட சுக்குக் காப்பி குடிப்பீர்களோ, இல்லை சூரிய நமஸ்காரம்தான் செய்வீர்களோ அது தனிப்பட்டவர் விருப்பம். ஆனால் “நல்லது ஒன்றையே நினைவில்வை, நன்மைகள் செய்வதையே கருத்தில்வை, நல்லது ஒன்றையே நினைவில்வை,ஹே…மக்களே … ” என்று பாடி ஆடினால் உடலுக்கும் மனதிற்கும் நல்லதோர் பயிற்சிதான். எனவே……
அனைவரும் “மாக்கரீனா” நடனம் ஆடி மகிழவும்.
அடியோஸ் அமிகோஸ், ஹஸ்டா லாவிஸ்டா!!!
(Adios Amigos, hasta lavista)
தகவல் மற்றும் படங்கள் சேகரித்த இடங்கள்:
Macarena Dance: https://en.wikipedia.org/wiki/Macarena_%28dance%29#Dance, http://en.wikipedia.org/wiki/Macarena_(song)
“The Macarena” begins its reign atop the U.S. pop charts: http://www.history.com/this-day-in-history/quotthe-macarenaquot-begins-its-reign-atop-the-us-pop-charts
The woman who inspired ‘La Macarena’: http://www.southcoasttoday.com/apps/pbcs.dll/article?AID=/19960909/LIFE/309099959
Song facts – Macarena: http://www.songfacts.com/detail.php?id=2402
Macarena: http://macarena.com/
How to do the macarena: http://www.cnn.com/SHOWBIZ/9608/22/macarena/lessons.html
தினம் தினம் பத்திரிக்கைகளில் வரும் தேர்தல் செய்திகளைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கொள்கை அளவில் கொஞ்சமும் ஒற்றுமை இல்லாத கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டாக போட்டி போடப் போகின்றனவாம். எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவான அம்சம் எல்லாக் கட்சித் தலைவர்களும் ஊழல் புரிகிறார்கள் என்பதுதான். இந்த லட்சணத்தில் யார் யாரோடு சேர்வது என்று கூட்டங்கள், விவாதங்கள்.
அரசியல் அனுபவமே இல்லாத ஒருவர் ஒரு கட்சியைத் தொடங்கி யாரோடு கூட்டுச் சேருவார் என்று பல கட்சித் தலைவர்கள் தலைமயிரைப் பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். பல முறை தமிழகத்தை ஆண்டு அரசியல் அனுபவம் பெற்றிருக்கும் ஒரு கட்சித் தலைவர் ஒரு மகனைக் கட்சியிலிருந்து விலக்கித் தேர்தலுக்குத் தயாராகிறார். இது இவர் போடும் நாடகமா அல்லது உண்மையிலேயே மகனைக் கட்சியிலிருந்து விலக்கிவிட்டாரா என்று கணிக்க முடியவில்லை.
தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் இன்னொரு கட்சித் தலைவர் இலவசப் பொருள்களாக (விலையில்லாப் பொருள்களுக்கும் இலவசப் பொருள்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை விலையில்லா ஓட்டுகளை வாங்குவதால் விலையில்லாப் பொருள்களா?) ஏழை மக்களுக்கு வழங்கி அவர்கள் ஓட்டுக்களைப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஈடுபட்டவர்களை விடுவித்து அதிலும் ஆதாயம் தேட நினைக்கிறார். இவர்களை விடுவிக்கும்பொறுப்பு மத்திய அரசின் அதிகாரத்தில் இருக்கிறது என்று நான் நினைத்திருந்தேன். இந்தச் செய்தி வந்த பிறகு இது எப்படி சாத்தியம் என்று நினைக்க ஆரம்பித்தேன். ஆனால் மணலையும் கயிறாகத் திரிக்கத் தெரிந்தவர்கள் எதையும் சாதிப்பார்களோ என்ற எண்ணமும் உண்டாகிறது. இப்போது உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டிருப்பது நாட்டில் சட்டம் இன்னும் ஊசலாடுகிறது என்று கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.
தேசிய அளவில் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் முழு மெஜாரிட்டி வாங்கிவிடுவோம் என்ற நம்பிக்கை இல்லை. யார் யாரைக் கூட்டுச் சேர்க்கலாம் என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். ஊழல் புரிந்த முன்னாள் கர்நாடகா முதல் மந்திரியை பா.ஜ.கா.விலிருந்து வெளியேற்றிய பிறகு அவர் கர்நாடகா பா.ஜ.க. என்று புதுக் கட்சி ஆரம்பித்ததெல்லாம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரோடு சேர்ந்து நின்றுகொண்டு ‘ஜெயிப்போம்’ என்று கைகளைத் தூக்கிக்கொண்டு காட்சியளிக்கிறார். யாரைப் பிரதமராக மக்களுக்குக் காட்டுவது என்பதிலாவது பா.ஜ.கா. உறுதியாக இருக்கிறது. அந்தக் கட்சி காட்டும் தலைவர் கைகளில் இரத்தக் கறை படிந்திருக்கிறது என்பதைப் பற்றி அந்தக் கட்சி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனானப்பட்ட அமெரிக்காவே இவர் இந்தியப் பிரதமராக வந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக எண்ணி, மனித உரிமைகளை மீறியவர் என்பதால் இவருக்கு விசா வழங்க மறுத்ததை இப்போது எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசித்து வருகிறது.
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருக்கு வீசும் அலையைப் பார்த்துப் பயந்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்று இப்போதைக்குத் தெரிவிக்கப் போவதில்லை என்று கூறிச் சமாளிக்கப் பார்க்கிறது. காங்கிரஸ் ஜெயித்தால், இவரால் அல்லவா காங்கிரஸ் ஜெயித்தது என்று பறைசாற்றிக்கொண்டு இந்தியா போன்ற பல முகங்கள் கொண்ட ஒரு நாட்டை நிர்வகிக்க எந்த அரசியல் அனுபவமும் இல்லாத ஒருவரைப் பிரதமர் பதவியில் உட்காரவைக்கப் பார்க்கிறது. ஒரு வேளை தோற்றுவிட்டாலும் காங்கிரஸ் தோற்றதிற்கான பழியைச் சுமக்கத் தேவையில்லை என்றும் கணக்குப் போடுகிறது.
இப்படித் தினம் தினம் கூத்துக்கள் போடும் அரசியல் கட்சிகளோடு – இந்தியாவில்தான் ஒரு ஜாதிக்கு ஒரு கட்சி இருக்கிறதென்று நினைக்கிறேன். அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையில் நாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம் என்று நினைக்கிறேன் – சமீபத்தில் பிரபலமான தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடேயும் தேர்தல் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டிபோட எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் போட்டி போடுபவரின் அரசியல் கொள்கை, பொருளாதாரக் கொள்கை என்னவென்று தெரிய வேண்டுமல்லவா? அவருடைய பலம் எது என்று மக்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா? உத்தம் கோப்ரகடே எந்த பலத்தில் மக்களிடம் ஓட்டுக் கேட்கப் போகிறார்? எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடப் போகிறார் என்று இன்னும் தீர்மானிக்கவில்லையாம். (பல கட்சிகள் தங்கள் வேட்பாளராகப் போட்டி போடும்படி தன்னைக் கேட்டதாகப் பீற்றிக்கொள்ள வேறு செய்கிறார்.) அப்படியென்றால் அவருடைய கொள்கைகள் என்னவென்று அவருக்கே தெரியவில்லை. எந்த முகத்தைக் காட்டி ஓட்டுக் கேட்கப் போகிறார்? அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டு அந்தச் சட்டம் தன்னை சிறையில் தள்ளிவிடும் என்று பயந்து ‘ஆளை விட்டால் போதும்’ என்று அமெரிக்காவுக்குப் புறமுதுகு காட்டிவிட்டு – இந்தச் சலுகையும் இவர் இந்தியத் தூதரகத்தில் துணை அதிகாரியாக இருந்தார் என்ற காரணத்தால் கிடைத்ததுதான் – இந்தியாவுக்கு ஓடி வந்துவிட்ட தன் மகள் பெரிய வீராங்கனை, அப்படிப்பட்ட வீராங்கனையின் தந்தை தான் என்ற பலத்தில் போட்டியிடப் போகிறாரா? அல்லது அமெரிக்காவையே அடிபணிய வைத்தவர் தன் மகள் என்று பறைசாற்றப் போகிறாரா? அப்படிச் செய்தாலும் அவர் கூறுவதை நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற தைரியம் அவருக்கு இருக்கிறது போலும். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்றிருக்கும் என் தாய்த் திருநாடே, இதுவா உன் ஜனநாயகம்?
வாழ்விக்க வந்த காந்தி என்று நம் தேசியக் கவி பாரதியாரால் பாராட்டப் பெற்றார் காந்தி அண்ணல். அவர்தம் வாழ்க்கை மிக உன்னதமாகவும் அவரை நம் தேசத் தந்தை என்று பாராட்டும் தகுதியை அவர் பெற்றதற்கும் அவரது மனைவி கஸ்தூர்பாவின் தியாகம் தான் காரணம். அவர்தம் வாழ்க்கையை நாம் படிக்கும்போது இக்கருத்தை நாம் உணரலாம் “கஸ்தூர்பா எதிலும் எனக்குப் பின்னால் இல்லை; எனக்கு முந்தியே இருப்பாள். அவளுடைய பெருந்துணையில்லையேல் நான் அதள பாதாளத்தில் தள்ளப் பட்டிருப்பேன். என்னை விழிப்புடன் இருக்கச் செய்தவள்; என் உறுதிமொழிகளைப் பின்பற்றி உண்மையாக வாழ்ந்தவள்; எல்லா அரசியல் போராட்டங்களில் என்னுடன் ஈடுபடத் தயங்கியதில்லை; படிப்பறிவில்லாதவள்; ஆனால் உண்மையான கல்விக்கு எடுத்துக்காட்டு. உண்மையான வைஷ்ணவி. ஆனால் சாதி வேறுபாட்டைக் களைந்து அரிஜனக் குழந்தைகளைத் தன் குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக நேசித்தவள். நான் மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்தபோதெல்லாம் மனத் திட்பத்துடன் எனக்கு தைரியம் ஊட்டியவள். எனக்கு சத்தியாக்கிரகத்தைக் கற்பித்த ஆசிரியை.” என்று கூறிய காந்திஜியின் சொற்களிலிருந்து கஸ்தூர்பாவின் வாழ்க்கை எத்துணை சிறப்பாக இருந்தது என்பதை அறியலாம்.
ரமண மகரிஷி அவர்களூக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதிருந்தது. மகரிஷி அவர்கள் தனக்கு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையைப் பார்த்துக் கொண்டு இருந்தார். வலி தெரியவில்லை அதற்கு. காரணம் அவரின் தவ வலிமை; உடலின் மீதுள்ள பற்று அறவே போயிற்று அவருக்கு. ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையிலும் இத்தகையதொரு நிகழ்ச்சி நடந்தது. இம்மகான்களுக்கு ஆன்ம பலம் அவர்களின் கடுந்தவத்தின் பயனால் கிட்டியது. அன்னை கஸ்தூரிபாவின் வாழ்க்கையிலும் இத்தகையதொரு நிகழ்வு நடந்தது என்று அறியும்போது நம் மெய் சிலிர்க்கிறது. புலனடக்கத்தால் வரும் பெரும் பயன் அந்த அம்மையாருக்கு கிட்டியது என்பதை அறிந்து பிரமிப்படைகிறோம்.
கஸ்துர்பா அவர்கள் உடல் நிலை மோசமாக இருந்தது, அவர்களுக்கு மூளையில் இரத்தக் கசிவு இருந்தது. ”அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; அவர் உடல் மயக்க மருந்தை ஏற்கும் தகுதியற்றதாக இருக்கிறது” என்று மருத்துவர் அண்ணலிடம் தெரிவித்தார். காந்திஜி அன்னையிடம் இதைத் தெரிவித்தார். அவர்கள் உடனே, ’’நான் வலியைத் தாங்கிக் கொள்கிறேன். மயக்க மருந்து தர வேண்டாம்” என்று கஸ்தூர்பா அவர்கள் மருத்துவரிடம் தெரிவித்துவிட்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இந்த அம்மையாருக்கு இத்தகையதொரு ஆன்ம பலம் எவ்வாறு கிட்டியது? அவருடைய கர்மயோகத்தின் வலிமையே காரணம். கணவரின் செயல்களை தன் உள்ளத்தில் ஏற்றி உண்மையாகவே அவற்றை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்ததன் பயன் தான் இந்துமதத்தின் அடிபடைக் கருத்துக்களில் அசையா நம்பிக்கை அவருக்கு. படிப்பறிவோ எழுத்தறிவோ கிடையாது. ஆனால் ஞானம் பெற்ற பெண்மணியாக விளங்கினாள்.
அறுவை சிகிச்சை முடிந்தது. எனினும் அவர்தம் உடல்நிலை தேறவில்லை. அன்னைக்கு மாட்டிறைச்சி தேநீர் கொடுத்தால் உடல் தேறும் என்று மருத்துவர் கூறினார். காந்திஜி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, இதை அன்னையிடம் தெரிவிக்க, ”நான் அந்தத் தேநீரைக் குடிக்க மாட்டேன். இவ்வுலகில் மனிதனாய்ப் பிறந்தது அரிது. நான் என் உடலை அசுத்தப்படுத்த விரும்பவில்லை. அதைவிட நான் உங்கள் மடியில் உயிரை விட விரும்புகிறேன்” என்று பதிலளித்துவிட்டார். அவர்கள் வாழ்ந்து வந்த பீனிக்ஸ் பண்ணைக்கு வந்த ஸ்வாமி மாட்டிறைச்சி தெநீர் அருந்துவதில் தவறில்லை என்றும் இந்துமத நூல்களும் இதை ஆதரிக்கின்றன என்றும் தெரிவித்தார். ஆனால் அன்னை அவர்கள் மறுத்துவிட்டார். நூல்கள் கூறினாலும் தன் கொள்கையினின்றும் சற்றும் பிறழாத தன்மைதான் காந்தி-கஸ்தூர்பா வாழ்க்கையின் சிறந்த அம்சமாகும். ஏனெனில் காந்திஜி அன்னையிடம் சொல்லுவார், ”நாம் மக்களுக்காக பணியாற்ற வந்திருக்கிறோம், நாம் செய்யும் செயல்கள் பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்” என்று. அதனால் கஸ்தூர்பா அவர்கள் தான் செய்யும் செயல்கள் தன் கணவரின் நெறிக்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார்.
கஸ்துர்பா சிறந்த பக்தியுள்ளம் படைத்தவர். தினமும் துளசிச் செடிக்கு நீர் வார்த்து வணங்குவார், ஸ்ரீகிருஷ்ணனுக்கு மலர்தூவி வணங்குவார். இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை முதலிய மத நூல்களை தினமும் பாராயணம் செய்வார். இந்துமத வழக்கப்படி பண்டிகை தினங்களிலும் மற்ற முக்கிய தினங்களிலும் தவறாமல் உண்ணா நோன்பு மேற்கொள்வார். உடல்நிலை மிக மோசமாக இருந்தாலும் உண்ணா விரதத்தை நிறுத்த மாட்டார். சிறையிலிருந்த காலத்திலும் இதை மேற்கொள்வார். தியானத்தில் முழுமையாக ஈடுபட்டுவிடும் திறம் அவரிடம் இருந்தது. காந்திஜி அவர்கள் மரணத்தின் பிடியில் சிக்கிய போதெல்லாம் இவருடைய ஆழ்ந்த தியானம்தான் அவரைக் காப்பாற்றியது. காந்திஜி அவர்கள் உண்ணா விரதம் மேற்கோண்ட போதெல்லாம் தீவிரமாக தியானத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு அவர் விரதம் வெற்றிகரமாக முடிய வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுவார். வாழ்க்கையை ஒரு வேள்வியாக எண்ணி வாழ்ந்தவர் கஸ்தூர்பா அவர்கள்.
அனைவரும் கடவளின் குழந்தைகள் என்ற உயர்ந்த கருத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர் கஸ்தூர்பா அவர்கள். 1869 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர், 13 ஆம் வயதில் மோகன்தாஸைக் கைப்பிடித்த கஸ்தூர்பா அவர்கள் தொடக்கத்தில் கொள்கையளவில் காந்திஜியுடன் ஒத்துப் போகவில்லை. சச்சரவுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் நாளடைவில் பா அவர்களே தானாக உணர்ந்து காந்திஜியின் கொள்கைகளே மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். இத்தம்பதிகளுக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன, இரண்டு பிள்ளைகள் இவர்களுடன் வாழ்ந்து வந்தனர். பேரக் குழந்தைகளும் ஆசிரமத்தில் இருந்தனர். முதலில் தன் குழந்தைகளுக்காக அன்பு செலுத்தியும் அவர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தியும் வந்த பாவின் அன்பு ஆலமரம்போல் வளர்ந்து அனைவரையும் அரவணைக்கும் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது. ஹரிஜனங்களை முதலில் வெறுத்த பா அவர்கள் ஹரிஜனக் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக வளர்த்தார்கள். லட்சுமி என்ற ஹரிஜனப் பெண்ணை தன் சொந்த மகளாக வளர்த்துத் தன் மருமகளாக ஏற்றுக் கொண்டார். சமையலறையில் முதலில் அனுமதிக்காத பா அவர்கள் பிறகு அவர்களை அனுமதித்தார். எனவே தீண்டாமை என்ற எண்ணம் பாவின் மனத்தினின்று அறவே நீங்கி அனைவர்க்கும் அன்னையாக திகழ்ந்தார்கள்.
அடுத்து பா அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. இது பா வை காந்திஜியின் உற்ற தோழி என்ற நிலைக்கு உயர்த்திற்று. காந்திஜி அவர்கள் பாவிடம் “நாம் பிரம்மச்சரிய விரத்தத்தை மேற்கொள்வோம்“ என்று தெரிவித்தவுடன் சம்மதம் தெரிவித்துவிட்டார் பா அவர்கள். இந்த ஆத்ம தியாகம் ஆண்களைவிட பெண்களுக்கு இயல்பாகவே இருக்கிறது என்று காந்திஜி குறிப்பிடுகிறார். பிரம்மச்சரிய விரதத்திற்குப்பின் அவர்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டதாக காந்திஜி குறிப்பிடுகிறார். “1901 ஆம் ஆண்டிலிருந்தே எனக்காகவே வாழ்ந்தவர். பெண் என்ற முறையிலும் மனைவி என்ற முறையிலும் என்னில் தன்னை இழந்துவிட்டார். இறுதி மூச்சு வரை என்னைக் கவனிப்பதிலிருந்து சிறிதும் பிறழவில்லை” என்று அண்ணல் எழுதுகிறார். ஞானிகளுக்கு உள்ள உயர்ந்த பண்பு புலனடக்கம் என்பது. அத்தகைய பண்பை தன் வாழ்வில் கடைப்பிடித்து கணவர் மகாத்மாவாக உருவாவதற்கு உறுதுணையாக இருந்த உன்னதப் பெண்மணி பா அவர்கள்.
ஆசிரம நிர்வாகம் இவர் பொறுப்பில் இருந்தது. உழைப்பதில் சளைத்தவர் இல்லை பா அவர்கள். ஆசிரம வாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை சரி வர செய்கிறார்களா என்று கவனிப்பார்கள். தான் ஆற்ற வேண்டிய பணிகளைத் தவறாமல் செய்துவிடுவார். அவர்தம் குடும்பத்தாரும் அவர்களுக்கு இட்ட பணிகளைச் செய்ய வேண்டும். காந்திஜிக்குத் தேவையானவற்றை பா அவர்கள் தான் கவனித்துக் கொள்வார். சமையலறை நிர்வாகம் பா அவர்கள் பொறுப்பில் இருந்தது. வேறு யாரும் சமையலறைக்குள் அவருடைய அனுமதியில்லாமல் நுழையக் கூடாது. எந்த நேரத்தில் விருந்தினர்கள் ஆசிரமத்திற்கு வந்தாலும் முகம் சுளிக்காமல் அவர்கள் நலம் விசாரித்து அவர்களுக்கு உணவு சமைத்து விருந்து அளிப்பார். காலம் தவறாமை, தூய்மை, நல்ல பழக்கங்கள், பொறுப்புணர்ச்சி முதலிய நற்பண்புகள் ஆசிரம வாசிகளிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் பா அவர்கள். காந்திஜியின் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைவாசம் சென்றிருக்கிறார். காந்திஜி சிறையிலிருந்த போதும் தன் உடல்நிலை மோசமாக இருந்தாலும் அவர்தம் பணிகளைச் செய்வார். பெண்கள் போராட்டங்களில் தலைமையேற்று நடத்துவார். கைராட்டை மூலம் நூல் நூற்பார். ஆகையினால்தான் காந்திஜி அவர்கள் “பா வினால் தான் நான் என் பணிகளை சரியாக நிறைவேற்ற முடிந்தது “என்று கூறுகிறார்.
ஆகாகான் மாளிகையில் அவர் இறுதிக் காலம் கழிந்தது. அவர்கள் அங்கே சிறைபடுத்தப்பட்டிருந்தார். அவர் உடல்நிலை மிக மோசமாகிக் கொண்டு வந்தது. பா அவர்கள் காந்திஜியின் மடியில்தான் தன் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்பினார். தன் உடல் மீது காந்திஜி அவர்கள் நூற்ற நூலினால் நெய்யப் பட்ட துணியைத்தான் தன் மீது போர்த்த வேண்டும் என்றும் தன் சமாதி மகாதேவ் தேசாயின் சமாதியின் அருகில்தான் இருக்க வேண்டும் எண்றும் ஆசைப்பட்டார். அவர் ஆசை நிறைவேற்றப்பட்டது. பா அவர்கள் உயிர் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் பிரிந்தது. காந்திஜி வேதனையுடன் கூறினார், ”என்னை என் மூத்த ஆனால் என்னிடம் நம்பிக்கையுள்ள உடனுறை தோழியிடமிருந்து எவ்வாறு பிரிக்க முடியும்? அவள் என்னுடன் பின்னிப் பிணைந்து விட்டாள். அவள் பிரிவு நிரப்ப முடியாத ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.” அவருக்கு வந்த அஞ்சலிகளில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்: ”செல்வம் அறியாள்; பகட்டை ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை; பதவி வகித்ததில்லை; அதிகாரத்தை செலுத்தியதில்லை; ஆனால் அவர்களுடைய வாழ்க்கை முழுமையானதாகவும் வளமாகவும் இருந்தது” பா அவர்கள் உண்மையில் அன்பின் உறைவிடம் தான்.
நீ அங்க சௌக்கியமா? மாப்பிள்ளை எப்படி இருக்கார்? உங்க இரண்டு பேருக்கும் என் ஆசீர்வாதங்கள்.
நீ எங்கிட்ட கோச்சுண்டு போனதிலிருந்து எனக்கு மனசே சரியா இல்லை. குட்டி சூடாமணி அதாண்டி நீ ஆசை ஆசையா சூடின்னு கூப்பிடுவாயே அந்த செல்லக்குட்டி எப்போதும் போல் எங்கிட்ட சமத்தாய் இருக்கிறாள். லோவர் கேஜி போய்ட்டு வராள். உங்குழந்தைய விட்டுட்டு இருப்பது உனக்கு சிரமம் தான். மனசு கஷ்டந்தான். ஆனா என்ன செய்ய? நீ கூப்பிட்டா அவ உங்கூட வர மாட்டேங்கறாளே. நான் என்ன செய்ய? யானை தன் தலை மேல தானே மண்ணை வாரிப்போட்டுண்ட மாதிரி நீயே தான் இந்த நிலைமைக்கு காரணமாயிட்டே. இன்னிக்கு இந்தக்கடிதாசுலே என் மனச கொட்டிடப்போறேன். ஏன்னா எனக்கும் வயசாச்சு. ஒரு நாள் இருப்பது போல் உடம்பு ஒரு நாள் இல்லை. அப்பா இல்லாத பொண்ணாச்சேன்னு உன்னை நன்னா படிக்க வச்சேன். படிப்பு வேஸ்ட் ஆக்காமல் வேலைக்கு போகப்போறேன்னு நீ சொன்னே. எனக்கு என்ன தெரியும் நீ மாடலாகவும் இருக்க போறேன்னு. எனக்கு பிடிக்காத ஒரு பேஷன் கம்பெனில சேர்ந்தே. அங்க சேர்ந்தப்பறம் என்னிடம் வந்து ‘சேரட்டுமா” ன்னு கேட்டே. உன் பிடிவாதம் தான் ஜயிச்சுது. அங்க தான் போனேயே. எப்போதும் பணம் பிசின்ஸ்ன்னு மெஷினப்போல் வேலை செய்யற ஒத்தனை காதலிச்சே. அவன் உன்னை மாடலிங்ல நன்னா யூஸ் பண்ணிண்டான். உன்னால அவனுக்கு வந்த லாபம் கொஞ்சமா நஞ்சமா! இப்படியே விடப்பிடாதுன்னு நினைத்து உங்க இருவருக்கும் கல்யாணமும் செஞ்சு வச்சேன். அப்பறந்தான் எனக்கு நிம்மதி கிடைச்சுது. போதுண்டி இனி இந்த வேலை வேண்டாம்ன்னு சொன்னேனே, உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனா நீ என்ன சொன்னே ‘அம்மா நான் ஒரு குழந்த பெத்துண்டப்பறம் வேலையை விட்டுடறேன்’ன்னு சொன்னே. ஆனா உன் அழகு குலஞ்சுபோய்டும்ன்னு நாளை கடத்திண்டே வந்தே. ஆனாலும் கடவுள் என் பிரார்த்தனையைக் கேட்டுட்டார்.
அன்னிக்கு எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. காலைல பூஜை பண்ணி முடிச்சேன். உம் போன் கால் வந்தது. “அம்மா நான் கன்ஸீவ் ஆயிருக்கேன்.” “ஆஹா மணி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மும்பையில் மழை ரொம்ப ஜாஸ்தி. மழைல எல்லாம் நினையாதே”
“நிறுத்தும்மா .நானே வருத்தமா இருக்கேன். சனியன் பிடித்தது இப்போவே வந்திடுத்து. இன்னும் ஒரு வருஷத்துக்கு மாடலிங் எல்லாம் குளோஸ்” ன்னு சொன்னாயே ஞாபகம் வரதா? அப்பறம் அழகு பிம்பமாக உனக்கு சூடாமணி பொறந்தா. எதோ கடமையேன்னு பெத்துப்போட்டாப்போல் அந்தக் குழந்தைய எங்கிட்ட கொடுத்துட்டே. ஏதோ ஒரு இரண்டு மாசம் பால் கொடுத்தே. அப்பறம் உன் அழகு குலைஞ்சுடுமேன்னு அதையும் நிறுத்திட்டே. எப்போ பாத்தாலும் ஆபீஸ், புகழ் பணம்ன்னு நீங்க இரண்டு பேரும் அலஞ்சீங்க. போறாதத்துக்கு
மாப்பிள்ளைக்கு சிங்கப்பூரில் வேலை கிடைச்சு போனார். நீயும் அங்க அவரோட போவேன்ன்னு அடம் பிடிச்சே. அது சரிதா. புருஷன் இருக்கற இடத்தில தான் நீயும் இருக்கணும். ஆனா உன் குழந்தையும் அழச்சிண்டு போணுமா வேண்டாமா? “சூடி உங்கிட்ட இருக்கட்டும், அவ உங்கிட்ட வளரட்டும். ஏன்னா எனக்கும் வேலைல பிரமோஷன் கிடச்சிருக்கு, எனக்கு குழந்தையோட நிம்மதியா வேலை செய்ய முடியாது. அது வேற ஙொய் ஙொய்ன்னு அழும் . அந்த ஊசி இந்த ஊசின்னு அதெல்லாம் வேற பாத்துக்கணும் என்னால முடியாதம்மா”ன்னு கட் அன்ட் ரைட்டா எங்க்கிட்ட சொன்னாயே, அது ஞாபகம் இருக்கா?
அன்னிலேந்து இந்த எட்டு வருஷமா சூடி எங்கிட்டதான் இருக்கா. வருஷத்தல ஒரு மாசம் வந்து இவளோட இருந்தா எப்படி ஒட்டிப்பா? சொல்லு. ஆபீசில யாரோ குழந்த உங்கிட்ட ஒட்டாம போயிடும் அதனாலே உங்கிட்ட அழைச்சுண்டு வந்திடுன்னு சொன்னதாக நீ சொன்னே. அதனாலே போன மாசம் நீ வந்தவுடனே ஆசையா சிங்கப்பூர்ல வாங்கிய கவுனை காட்டி நீ கூப்பிட்டே. அது என்ன வெறும் பொம்மையா? அதுக்கும் உணர்ச்சிகள் இருக்கே. “உங்கம்மா உன்னை விட்டுட்டு சிங்கப்பூரில இருக்காடின்னு அவ பிரண்டு அவளிடம் சொல்றாளாம். அதான் அன்னிக்கு சூடி தன் மூஞ்சியைத் திருப்பிண்டு இது யாரம்மா இந்த ஆன்டினு சொன்னா. நீயோ விடாமே ‘அட சூடிக்குட்டி! என் செல்லமே! நான் தான் உன் மம்மின்னு சொன்னே. உன் கையை நீட்டி வான்னு சொன்னே. அதுவோ, ‘போ ஆன்டி. நீ என் மம்மி இல்லை. இவதான் என் மம்மி’ன்னு என் கழுத்தை கட்டிண்டா. நீ கூப்பிட கூப்பிட மூஞ்சியை திருப்பிண்டா. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இதுக்காக கோச்சுண்டு ஊருக்குப் போனால் என்ன செய்யறது? உனக்கு குழந்தையா இருக்கச்ச பாத்துக்க முடிலை. இப்ப அழகா எட்டு வயசு சிறுமியா இருக்கச்ச உனக்கு கூட வச்சுக்கணும் போல இருக்கு. எனக்கும் இனிமே இந்தக் குழந்தையை விட்டுட்டு இருப்பது கஷ்டம் தான். நீ என்னையும் அங்கு கூப்பட தயங்கறாய். உன் பிரஸ்டிஜ் என்ன ஆகும்ன்னு உனக்கு தோன்றது!
ரொம்ப நாளா என் மனசில இருக்கறத உங்கிட்ட கொட்டிடணும்னு இருந்தேன். நீ கோபத்தல போன்ல கூட சரியா பேசல. அதனால இந்த லெட்டர் எழுதறேன். குழந்த வளர்ப்பு என்பது சும்மா இல்லை. அது ஒரு வரப்பிரசாதம். கொடுத்து வச்சிருக்கணும். அங்கு பணம் பெரிசில்லை. புகழ் பெரிசில்லை. அந்தஸ்து பெரிசில்லை. இனியாவது புரிஞ்சுக்கோ. நம்மிட்ட நமக்கு வேணுங்கற சொத்து இருக்கு. அதனாலே வேலையை விட்டுட்டு சூடியோட ஒரு இரண்டு வருஷமாவது இரு. அவ உன்னோட ஒட்டிண்டுடுவா. என்ன இருந்தாலும் ரத்த பாசம் ஆச்சே. மேலே எனக்கு என்ன எழுதறதுன்னு தெரிலை. கோபத்தை தூக்கிப்போட்டுட்டு அமைதியா யோசி. உடம்ப பாத்துக்கோ. ராத்திரி வேலைன்னு அலையாதே. சரியான சமயத்ல சாப்பிடு. நேரம் கெட்ட நேரத்ல சாப்பிட்டா அல்சர் வந்துடும். இந்த லெட்டர் வந்தவுடனே எங்கிட்ட பேசு. எல்லாம் ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் சரியாய்டும்.
மறுநாள் அதே இடத்தில் அவனின் எதிர்கால மனைவிக்காக வந்து நின்றான் . இன்று – நேன்றை விட பொலிவாக இருந்தான் . உள்ளத்தில் ஒரு அழகிய உணர்வும் கண்ணில் எதிர்பார்ப்புமாக அந்தரத்தில் நின்றான். படத்தில் பார்த்தவளை நேரில் பார்க்கப்போகிறோம் – என்ற பதைப்பு அவன் கால்களிலும் தெரிந்தது . அவனுக்கு இடப்பக்கமாக ஆட்டோ ஒன்று வந்து நின்றது . அதிலிருந்து ஒரு சட்டை போட்ட சாமரம் இறங்கி வந்தது .மோகனமாக வந்தவள் தன் மோகனாவா என பார்த்தான் . அவளேதான் வந்தாள் . அவன் மோகனா ! அவள் அருகில் வர முன் அவளின் வாசம் சுவாசத்தில் கலந்து வந்தது ‘ அடடா ! நல்ல பெண்ணைதான் தெரிவு செய்திருக்கிறார்கள் . இரண்டு வருடமாய் நம்முடன் இவளா கதைத்தாள்? ‘ என நினைத்தபடி மெய் மறந்து நின்றான்.
“ஜோன் தானே நீங்கள்..? .”
அவன் சிரித்தவாறே வலிந்து வார்த்தைகளை வரவழைத்துக் கொண்டு
“ ஓம் நான் தான் ஜோன் , ஆனால் நான் உங்களை உடனே அடையாளம் கண்டு விட்டேன். “ என்றான் . “ கொஞ்சம் தனிய போய் பேசலாமா..? “என்றபடி தேர்முட்டிக்கு அருகில் சென்றாள். அவன் பரிசுப் பொருட்களையும் எடுக்காமல் அவளை பின் தொடர்ந்தான். அவள் சன நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்ததும் .
” இஞ்ச பாருங்கோ ஜோன் . இனியும் நான் உங்களை ஏமாற்ற விரும்ப வில்லை ! நான் ஒருவரை காதலிக்கிறேன் . இனி நீங்கள் எனக்கு போன் பண்ண வேண்டாம் . இத பெரிசு படுத்தினா என்னை ஏமாத்திப்போட்டார் என்று சொல்லுவன் . பிறகு யாரும் உங்களுக்கு பொண்ணு தர மாட்டார்கள் . இதை இதோட விட்டிருங்கோ ” என்று விட்டு பதிலை எதிர்பாராமல் தோளை சிலுப்பிக்கொண்டு அதே ஆட்டோவில் ஏறிப் போய் விட்டாள்.
தேர் சில்லோடு சாய்ந்து இருந்து விட்டான் . அதன் சில்லு அவன் கழுத்திலும் வயிற்றிலும் ஏறி கடந்து போவது போல் இருந்தது . கண்கள் திறந்திருக்க காட்சிகள் இறந்து கிடந்தன . சில கணங்கள் அவன் இல்லாமல் இருந்தான். கட்டெறும்பு ஒன்று பொலிதீன் துகளை தூக்கிக்கொண்டு தேர் சில்லுக்குள் புகுந்தது .” சீ… ” என்று விட்டு எழுந்தான் . பெருமாள் சன்னிதானத்திற்குள் புகுந்தான். சிம்மை களட்டி எறிந்துவிட்டு போனை பெருமாள் உண்டியலுக்குள் போட்டான். கிணற்று நீரில் அவளோடு பேசிய வாயை கழுவினான். வண்டிக்கு வந்தான். வண்டிச் சீற்றில் இருந்த புதிய பூங்கொத்தை எடுத்துச் சென்று முளங்காலில் நின்றபடி “என்னை திருமணம் செய்து கொள்கிறாயா …?” என்று அந்த பிச்சைக்காறியிடம் நீட்டிக் கொண்டு கேட்டான். அந்த வரிசையில் இருந்த எல்லா பிச்சைக்காரர்களும் தட்டை கீழே போட்டு விட்டு அவனையே பார்த்தனர் . கோயிலுக்கு வந்தவர்கள் வாயிலுக்கு போகாமல் வாயை பிளந்தபடி நின்றனர் . அவள் – அருகில் இருந்த தந்தையை பார்த்தாள். பின் மடியில் இருந்த பிள்ளையைப் பார்த்து விட்டு மீண்டும் தந்தையை பார்த்தாள்.
” நமது கதை எல்லாம் தம்பிக்கு தெரியும். எனக்கு சம்மதம் இனி உன் விருப்பம் ” என்றார் தந்தை .
சுற்றி இருந்தவர்கள். ” ஓம் எண்டு சொல்லு புள்ள… இப்ப நீ வாழும் வாழ்க்கையை விட எதுவும் கேவலமா இருந்து விடாது ” என்றார்கள்.
அவள் தந்தையையே பார்த்துக்கொண்டு இருந்தாள் . அவர் ” நீ என்ன முடிவு எடுத்தாலும் அதில் எனக்கு முழு சம்மதம் ” என்றார். அவளின் ளெமனம் கலைய வில்லை . கண்ணில் இருந்து ஒரு துளி பல காலத்திற்கு பின் கனிந்து தட்டில் கிடந்த வெள்ளிக்காசின் மேல் விழுந்து தெறித்தது. அருகில் இருந்த கால் இல்லாத அம்மா ” தம்பி ! பிள்ளை ஓம் எண்டு சொல்லி போட்டுது நீங்கள் ஆக வேண்டியதை கவனியுங்கோ “ என்றார். அவன் பூச் செண்டை நெருங்கி நீட்டினான். அவள் இரு கையாலும் வாங்கி அந்த பூக்களிடையே முகத்தை புதைத்தாள் . என்ன ஆச்சரியம் அவள் முகமும் ஒரு பூவாக மாறியது . பின் பூச் செண்டை மடியில் இருந்த பிள்ளையிடம் கொடுத்தாள். அது அவளை பார்த்து சிரித்ததுக் கொண்டு வேண்டியது .
வீதியில் நின்ற மினி வான் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி மணப்பெண் , முதியவர் , குழந்தை உட்பட அந்த கோயிலில் இருந்த எல்லா திக்கற்றோரையும் வண்டியில் ஏற்றி தான் தங்கி இருந்த விடுதிக்கு கொண்டு சென்றான். பின் ஒவ்வொருவருக்கும் சுமாரான விலையில் உடுப்பு எடுத்து தந்தான். தான் கொண்டு வந்த திருமண புடவையையும் ஏனைய பரிசுப் பொருட்களையும் அவளிடம் கொடுத்து பதிவுத்திருமணத்திற்கு தயாராகுமாறு கூறினான். யாழ் கச்சேரியில் அந்த முன்னாள் செல்வந்தர்கள் முன்னால் ஆடம்பரமின்றி ஆனால் அழகாக திருமணம் நிறைவேறியது. விருந்து முடிந்த பின் அவளின் சக தொழிலாளிகளை ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விட்டு மனைவி , குழந்தை , முதியவருடன் வீடு சென்றான் .
-சுபம் –
” சரி கதை முடிஞ்சு போச்சு ..! தூங்கம்மா ” என்றபடி மகளை தூக்கிக் கொண்டு அவளின் அறைக்கு நடந்தான் இந்திரன் . அறையின் வாசலிலேயே “ தம்பி என்னிட்ட தாங்கோ நான் தூங்க வைக்கிறேன் என வேண்டிக்கொண்டார் அவனின் மாமா . அவரிடம் கொடுத்து விட்டு கதவை பூட்டிக்கொண்டு திரும்பினான். அவனின் காலை பிடித்துக் கொண்டு அழுதாள் மனைவி நிலானி . “ஏன் என்னத்திற்கு இப்ப அழுறீர் ? உமக்கும் கதை சொல்ல வேணுமோ ? ” என்றான் சிரித்தபடி .
“ நீங்க மட்டும் அண்டைக்கு பெருமாள் கோயிலுக்கு வந்திருக்காட்டி இப்பவும் எத்தனை நாள் பட்டினியோட , எந்த கோயில் வாசல்லயோ…. தெரியாது ” என விம்மி விம்மி அழுதாள். அவளை இரு கையாலும் அள்ளி எடுத்து கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு
.” யோகேந்திரன் எப்படி ஜோன் ஆனேன் தெரியுமா ? ” என்றான். அவள் அழுதபடியே இல்லை என்று தலையை ஆட்டினாள்.
” யோகேந்திரத்தின் , இந்திரன் எல்லாம் பழைய பேரா இருக்கு நல்லா இல்லை எண்டு – யோகேந்திரத்தின் – இல் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நடு -கேந்திர – த்தை வெட்டி சுருக்கி ‘யோன் ‘ எண்டு அந்த ஏமாற்றுக்காறி தான் வைத்தாள் ” என்றான் . முதியவர் அவருக்காக கை ஏந்திய பேத்தி பார்கவியின் கையை முத்தமிட்டுவிட்டு சிரிப்பது கேட்டு நிலானியும் சிரித்தாள்.