மாக்கரீனா….. மாக்கரீனா…..
தேமொழி
மாக்கரீனா (Macarena) என்ற நடனம் 1990 களில் அமெரிக்காவை ஒரு கலக்குக் கலக்கிய நடனம். ஸ்பானிஷ் மொழியில் முதலில் வெளியான ‘ரும்பா’ (rumba) வகையில் அமைந்த இப்பாடல், 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் நாள் ஆங்கில வரிகளுடன் வெளிவந்த பிறகு ஒரு ஆண்டுக்கு எங்கு திரும்பினாலும் இதே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். இப்பாடல் யாரையும், எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு வெளிநாட்டுப் பாடல் அமெரிக்கர்களை அந்த அளவிற்குக் கவர்ந்ததன் காரணம் அதன் எளிய இடை அசைவு கொண்ட நடன பாணியும், ஆடத் தூண்டும் இசையும்தான் (Macarena: a dance performed with exaggerated hip motion to a fast Latin rhythm). முழுப்பாடலையும் 16 நடன அசைவுகளில் ஆடிவிடலாம், அத்துடன் 10 நொடிகள் மட்டும் வரும் இந்த அங்க அசைவுகளை இரண்டு வினாடிகளுக்குள் கற்றும் கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பு.
சரியாக ஒரு பத்து ஆண்டுகளுக்கு அமெரிக்கர்களால் மிகவும் விரும்பப்பட்ட நிலையில் இருந்த இந்த நடனம் விளையாட்டு போட்டிகள், அலுவலகக் கொண்டாட்டங்கள், உல்லாசப் பயணங்கள், பள்ளி விழாக்களை மட்டுமல்ல தேசிய அளவில் நடந்த தேர்தலையும் இந்தப் பாடல் விட்டு வைக்கவில்லை. பிறகு அமெரிக்கர்கள் கொடுத்த கவனிப்பால் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது.
ஸ்பெயினைச் சேர்ந்த ‘லாஸ் டெல் ரியோ’ (Los Del Río) என்ற ஸ்பானிஷ் பாப்பிசை இரட்டையர்களான ‘அந்தோணியோ ரோமிரோ மாங்கே’ என்பவரும் அவரது தோழர் ‘ராஃபியல் ரூயிஸ்’ (Antonio Romero Monge and Rafael Ruiz, Pop duo) என்பவரும் 1962 ஆம் ஆண்டிலிருந்து பாப்பிசையில் பற்பல பாடல்கள் பாடி வந்தவர்கள். ‘லாஸ் டெல் ரியோ’ என்றால் ‘ஆற்றின் மக்கள்’ (மண்ணின் மைந்தர்கள் என்பது போல) எனப் பொருள் கொள்ளலாம். அவர்களை ‘ஸ்பானிஷ் ஃப்லேமன்கோ’ (Spanish flamenco) பாப்பிசைக்குழு என்றும் சொல்வார்கள். இவர்கள் தாங்கள் பாடத்தொடங்கி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களது நடுத்தர வயதை அடைந்த பிறகு தங்களுக்கு உலகளாவிய புகழ் வரும் என்று கனவும் கண்டிருக்க மாட்டார்கள்.
அந்தோணியோவும் ராஃபியலும் வெனிசுலா (Venezuela) நாட்டிற்குக் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தச் சென்றார்கள். அந்த நாட்டின் மொழியும் ஸ்பானிஷ்தான். அங்கு ‘டயானா பாட்ரிஷியா குபில்லன்’ (Diana Patricia Cubillan) என்ற 25 வயது நடனமாடும் பெண்ணை ஒரு விழாவில் நடனமாடுகையில் பார்த்தார்கள். அவரது அழகும் ஆடும் திறமையும் இப்பாடகர்களைக் கவர உடனே அங்கேயே அவரைப் புகழ்ந்து இப்பாடலைப் பாடினார்கள். இப்பாடல் தோன்றக் காரணமானவரே டயானாதான். பிறகு ஓராண்டு கழித்து அவர்கள் மீண்டும் டயானாவை சந்திக்க நேர்ந்தபொழுது, அந்தோணியோவும் ராஃபியலும் தங்கள் பாடலுக்கு அன்று உணவு விடுதியில் நடனமாட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே அவரும் ஒப்புக் கொண்டார். உயர முடிந்த கொண்டையும், அதில் ஒரு பூவும் செருகி, குதிகால் செருப்பும், இறுகத் தழுவிய நடன ஆடையும் அணியும் டயானா அன்று சாதாரண கால்சராய் சட்டையுடன்தான் வந்திருந்தார். ஆனாலும் நடன ஒப்பனைகள் இல்லாததைப் பொருட்படுத்தாது மிகவும் ஆர்வத்துடன் ஆடி முடித்தார். இப்பாடல் தோன்றக் காரணமான இவரே பிறகு ‘மாக்கரீனா; என்றும் அழைக்கப் பாடலானார். இவருக்கும் பிறகு பல வாய்ப்புகள் குவிந்தன.
இப்பாடலில் முதலில் ‘மேக்டலினா’ (Magdalena) என்று அன்னை மேக்டலினாவைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தி இருந்தனர். பிறகு ஏற்கனவே மேக்டலினா என்ற ஒரு பாடலும் இருந்ததால், ‘லாஸ் டெல் ரியோ’ இசைக் குழுவினர் “மாக்கரீனா” (Macarena is a female name which means “Mother of God”)என்று தாங்கள் வசித்த இடத்திற்கு அருகில் உள்ள இடத்தைக் குறிக்கும் வகையில் சொல்லை மாற்றினர். முதலில் “நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் உடலை நாம் மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம், நம் உடலைப் போற்றுவோம்” என்ற பொருளில் இப்பாடல் எழுதப்பட்டது. பிறகு, தன்னைப் பிரிந்த காதலன் மேல் ஒரு பெண் ஊடல் கொண்ட பாணியிலும் பின்னர் பல பாடல்கள் எழுதப்பட்டு பாடப்பட்டது. இப்பாடலை ஸ்பானிஷ் இசைநிறுவனம் 1993 ஆம் ஆண்டு வெளியிட்டது.
அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழி பேசுவோர் அதிகம் உள்ள ஃப்ளோரிடா மாநில வானொலி நிலையமொன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு இப்பாடல் மிகவும் பிடித்தது. இப்பாடலை தங்கள் வானொலி நிலையத்தின் வழி ஒலி பரப்ப விரும்பினார். ஆனால் பிறமொழிப் பாடல்களை ஒலிபரப்பும் கொள்கையை ஏனோ அந்த வானொலி நிலையம் கொண்டிருக்கவில்லை. எனவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் தானே ஆங்கிலத்தில் பாடல் வரிகளை எழுதி, ‘பேசைட் பாய்ஸ்’ இசைக்குழுவுடன் இணைந்து ஆங்கில வரிகளில் (Bayside Boys, Macarena English-language remix or Bayside Boys Mix) இப்பாடலை உருவாக்கி அமெரிக்க ‘பி ஜி எம்’ (BGM) நிறுவனம் மூலம் வெளியிட்டார். 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் நாள் ஆங்கில வரிகளுடன் வெளிவந்த இப்பாடலுக்கு ராயல்டி தொகையின் மூலமே நல்ல வருமானம் ‘லாஸ் டெல் ரியோ’ இசைக்குழுவிற்கு கிடைத்தது. இதுவல்லவோ கனகதாரா சோஸ்திரம். பத்தாண்டுகளில் இப்பாடல் கொணர்ந்த வருமானம் 250,000 அமெரிக்க டாலர்கள். இப்பாடல் தந்த புகழின் காரணமாக அந்த ஊரின் மாநகராட்சியின் நடன அரங்கிற்கும் அப்பெயர் சூட்டி கெளரவிக்கப்பட்டது.
பிறகு இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் பெரிய இசைகுழுவினர்கள், நடன நிகழ்சிகள் என எங்கும் இப்பாடல் முன்னணி வகிக்க ஆரம்பித்தது. ஒருமுறை புகழ் பெற்ற அமெரிக்க யான்கீ (Yankee) பேஸ்பால் விளையாட்டரங்கில் விளையாட்டிற்கு இடையில் 50,000 திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பாடல் ஒலித்தவுடன் எழுந்து நடனமாட ஆரம்பித்தார்கள்.
காணொளி: Macarena dance record set at Yankee Stadium: http://youtu.be/0NpscLUEx0Y
விடாது கருப்பு! என்பது போல நாட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும், கொண்டாட்டமும் இப்பாடல் இன்றி நடக்காது என்ற நிலைக்குப் போனது.
காணொளி: National Down Syndrome Congress: http://youtu.be/gpu–VdIF78
1996 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலுக்காகத் தயாரான டெமாக்ரட் கட்சியின் கருத்தரங்கில் இப்பாடல் பாடி ஆடப்பட்டது. பில் கிளிண்டனும், அல்கோரும் இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடிக்க வாக்காளர்களைக் கவர முயற்சி செய்த கருத்தரங்கம் அது. அப்பாடலுக்கு ஹில்லாரி கிளிண்டன் நடனமாடியும், எப்பொழுதும் கலகலப்பின்றி இருக்கும் அல்கோர் ‘நானும் கூட மாக்கரீனா ஆடுவேனே’ என்று கூறி அசையாது சிறிது நேரம் சிலை போன்று நின்றுவிட்டு ‘மீண்டும் ஒருமுறை என் நடத்தைப் பார்க்க விருப்பமா?’ எனக் கேட்டு நகைச்சுவையுடன் கலாய்த்து மக்களைக் கவர முற்பட்டனர்.
காணொளி: Delegates were shown dancing the Macarena on the convention floor: http://www.c-span.org/video/?74656-1/delegates-macarena-dance
இப்பாடலின் முதல் மூன்று வரிகள் மிகவும் புகழ் பெற்றது.
ஒலி வடிவில்: http://upload.wikimedia.org/wikipedia/en/5/50/Macarena_%28Bayside_Boys_Mix%29_sample.ogg
Dale a tu cuerpo alegría Macarena
Que tu cuerpo es pa’ darle alegría y cosas buenas
Dale a tu cuerpo alegría Macarena
¡Eh,… Macarena! Aaay!
காணொளி: Macarena: http://youtu.be/i1im74-XgYA
“Dale a tu cuerpo alegria, que tu cuerpo es para darle alegria y cosas buenas, Macarena! Aaay” — என்றால் ஆங்கிலத்தில்
“Give your body joy, because your body is for giving happiness and good things, Hey, Macarena! என்று பொருள்.
இப்பாடலின் ஆங்கில வரிகள் …
Give happiness to your body Macarena
’cause your body is for giving happiness and nice things to
Give happiness to your body Macarena
Heeey,… Macarena! Aaay!
இந்தியாவில் பாலிவுட் வழியாக நுழைந்த இப்பாடலின் வரிகள்….
Are Baba Are Baba, Kare Kya Diwana
Ladka Jab Bhi Ladki Dekhe Gaye Yahi Gana
Dil Deke Dena, Dil Le Le Lena
காணொளி: Dil Le Le Lena (Macarena Song): http://youtu.be/0cMfviJD24I
குஷி (2000) திரைபடத்தில் விஜய்யும் ஷில்பா ஷெட்டியும் “மாக்கரீனா….. மாக்கரீனா…..” என்று பாடி ஆடிய ஆட்டத்தில் மாக்கரீனா என்ற பெயரைத் தவிர அசல் மாக்கரீனா பாடலின் மெட்டும், நடன அசைவுகளும் இல்லை.
http://youtu.be/04L4itcCc4Y
காணொளி: Kushi (2000) movie: http://youtu.be/04L4itcCc4Y
எனவே என் சொந்த முயற்சியாக …
நல்லது ஒன்றையே நினைவில்வை
நன்மைகள் செய்வதையே கருத்தில்வை
நல்லது ஒன்றையே நினைவில்வை
ஹே…மக்களே …
என்று புனைந்துள்ளேன்.
பாடல் வரிகளும், எப்படி ஆடுகிறார்கள் என்பதும் தெரிந்துவிட்டது. அடுத்த கட்ட முயற்சியாக நாமே எப்படி ஆடலாம் எனப் பார்ப்போம். படிப்படியாக ஒவ்வொரு அசைவுகளும் பற்றியக் குறிப்பு கீழே:
Dancing the macarena requires you to move with the 16 beats of the music. Here’s what to do:
Beat 1: Put your right arm straight in front of you with your palm down.
Beat 2: Put your left arm straight in front of you with your palm down.
Beat 3: Put your right arm straight in front of you with your palm up.
Beat 4: Put your left arm straight in front of you with your palm up.
Beat 5: Grab the inside of your left elbow.
Beat 6: Grab the inside of your right elbow.
Beat 7: Grab the back of your neck with your right hand.
Beat 8: Grab the back of your neck with your left hand.
Beat 9: Put you right hand on your left front pocket.
Beat 10: Put your left hand on your right front pocket.
Beat 11: Put your right hand on your right rear pocket.
Beat 12: Put your left hand on your left rear pocket.
Beat 13: Move your bottom to the left.
Beat 14: Move your bottom to the right.
Beat 15: Move your bottom to the left again.
Beat 16: Clap and turn to the right.
கணினியை கற்றுக் கொள்ள செயல்முறைப் புத்தகங்கள் எப்படி சுலபமான வழியில்லையோ, அது போன்றேதான் நடனமும், நேரே களத்தில் இறங்க வேண்டியதுதான் சரியான முறை.
அதற்கு உதவியாக இந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள நல்ல காணொளி ஒன்றும் உண்டு…
(எச்சரிக்கை: சுட்டியைச் சொடுக்கி காணொளி மூலம் நடனம் கற்றுக் கொள்ளும் முன், முதல் படியாக அறைக்கதைத் தாழிடவும். கணினியை விட்டு எழுந்து திடீரென ஆடத் தொடங்கினால், அருகில் உள்ளவர்கள் அரண்டு போய் உங்களுக்கு ஏதோ ஆபத்து என்று அவசர உதவி செய்தால், அதனால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், பழி என் மேல் விழுந்து… சட்டம் என் மேல் பாயக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கைதான் இந்த வேண்டுகோளுக்குக் காரணம்)
காணொளி: How To Dance Macarena – http://youtu.be/OzV63IRR8BQ
சிறுவயதில் பள்ளியில் உடற்பயிற்சி வகுப்பில் செய்தது போலவே இருக்கிறதே என்று தோன்றினால் தவறு கிடையாது. அதுவேதான்….அதே அசைவுகள்தான். கொஞ்சம் அப்படி, இப்படி இடையை ஒடித்து, ஒடித்து, அசைத்து நளினமாக செய்தால் அது மாக்கரீனா நடனம். சிறுவர்களுக்கும் நல்வழி என்று கருதி கற்றுக் கொடுக்கலாம். பெரும்பாலும் அவர்கள்தான் நமக்கு இந்த நடனத்தைச் சரியாக ஆடக் கற்றுக் கொடுப்பார்கள்.
காலையில் உடல் நலம் மேம்பட சுக்குக் காப்பி குடிப்பீர்களோ, இல்லை சூரிய நமஸ்காரம்தான் செய்வீர்களோ அது தனிப்பட்டவர் விருப்பம். ஆனால் “நல்லது ஒன்றையே நினைவில்வை, நன்மைகள் செய்வதையே கருத்தில்வை, நல்லது ஒன்றையே நினைவில்வை,ஹே…மக்களே … ” என்று பாடி ஆடினால் உடலுக்கும் மனதிற்கும் நல்லதோர் பயிற்சிதான். எனவே……
அனைவரும் “மாக்கரீனா” நடனம் ஆடி மகிழவும்.
அடியோஸ் அமிகோஸ், ஹஸ்டா லாவிஸ்டா!!!
(Adios Amigos, hasta lavista)
தகவல் மற்றும் படங்கள் சேகரித்த இடங்கள்:
Macarena Dance: https://en.wikipedia.org/wiki/Macarena_%28dance%29#Dance, http://en.wikipedia.org/wiki/Macarena_(song)
“The Macarena” begins its reign atop the U.S. pop charts: http://www.history.com/this-day-in-history/quotthe-macarenaquot-begins-its-reign-atop-the-us-pop-charts
The woman who inspired ‘La Macarena’: http://www.southcoasttoday.com/apps/pbcs.dll/article?AID=/19960909/LIFE/309099959
Song facts – Macarena: http://www.songfacts.com/detail.php?id=2402
Macarena: http://macarena.com/
How to do the macarena: http://www.cnn.com/SHOWBIZ/9608/22/macarena/lessons.html